Powered By Blogger

Saturday, June 03, 2023

மூணு விரல்களுள் ஒண்ணைத் தொடுங்கோ !

 நண்பர்களே,

வணக்கம். மாடு மேல் முட்டாமல், ஒழுங்காய்த் தண்டவாளங்களில் ஓடிடும்  'வந்தே பாரத்' ரயில்களின் வேகத்தோடு ஒப்பிடுவதாயின், நமது DTP அணியின் ஸ்பீடை சொல்லலாம் தான் ! நான் மூணு நாள் மாங்கு மாங்கென்று கண்முழிச்சி  எழுதி அனுப்பும் பேப்பர்களை, தோனியின் ஸ்டம்பிங்க் ஸ்பீடில் முக்கால் நாளுக்குள் டைப்செட் செய்து, மேஜையில் கொண்டு வந்து அடுக்கி விடுவார்கள் ! ஆனால்.....ஆனால் முதல்வாட்டியாய், லொடக்கடி..லொடக்கடி என்று நமது DTP வண்டி தவழ்ந்த சம்பவம், நேற்றும் இன்றும் அரங்கேறி வருகிறது and in many ways என்னால் அவர்களின் மெதுவேகத்தினைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது ! 2 தினங்களுக்கு முன்பாய் நான் விவரித்திருந்த ரூபின் கதையின் மண்டை காயச் செய்திடும் பணிகளில் தான் நானும் சரி, அவர்களும் சரி - பிசியாக இருந்து வருகிறோம் ! And மொழிபெயர்ப்பினில் எனக்குப் பிதுங்கும் விழிகள், டைப்செட்டிங்கிலுமே அவர்கட்கு அதே ரீதியினில் பிதுங்கி வருகிறது ! இதோ - பக்கம் 34-ஐ தான் தொட்டிட முடிந்துள்ளது நேற்றும், இன்றுமாய்ச் சேர்த்து பேனா பிடித்ததில் !! So இந்தப் பதிவினை ஒரு நெடும் பதிவாய் அமைக்க 'தம்' லேது folks ; காலத்தில் இங்கே அட்டெண்டன்ஸ் போட்டு முடித்து விட்டு ரூபினை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்திடக் கிளம்பியாக வேணும் ! 

போன பதிவினில் நான் விவரித்திருந்த "ஈரோட்டுச்  சம்பவம்ஸ்" இங்கே வலைப்பக்கத்தினில் ஏற்படுத்திய ரகளைக்குச் சற்றும் குறைச்சலில்லாத ஆரவாரத்தை நமது front desk மத்தியிலும் அரங்கேற்றிக் காட்டியுள்ளன ! வெள்ளி காலை முதலாகவே நம்மாட்களுக்கு சரமாரியான போன்கள் - "மொத்த புக்ஸ் எண்ணிக்கை கித்னா ? அமௌன்ட் கித்னா ?" என்று ! இதில் கொடுமையென்னவெனில் வியாழன் நள்ளிரவுக்கு இங்கே பதிவைப் போட்டுப்புட்டு, கொஞ்ச நேரம் உங்களோடு உரையாட நேரமும்  செலவிட்டு விட்டு, கட்டையைக் கிடத்தக் கிளம்பிய போதே மணி ஒன்றைத் தொட்டு விட்டிருந்தது ! So காலையில் பத்து மணிக்கு ஆபீசுக்கு வரும் நம்மாட்களிடம் இந்த அறிவிப்புப் பற்றி விளக்கிச்  சொல்ல எனக்கு அவகாசம் இருந்திருக்கவில்லை ! As a result, ஆளாளுக்கு "ஈரோட்டு சம்பவம்ஸ்" பற்றிக் கேட்டு, சிவகாசியில் செய்த சம்பவம்ஸில், எதுவுமே தெரிந்திருக்காத நம்மாட்கள் துண்டைக் காணோம், துணியைக் காணோமென்று ஓட்டமெடுக்காத குறை தான் ! But to their credit, இத்தனை காலத்தில் எனது குரங்கு பல்டிகளுக்குப் பழகியும் விட்டார்கள் ! So ஆளாளுக்கு நீங்கள் "சம்பவம்ஸ்" பற்றி விசாரிக்கும் போதே, "நம்ம பிராந்தன்  ராவுக்கு ஏதோ புதுசா அள்ளி விட்டிருப்பான் போல !!" என்பதைப் புரிந்து கொண்டுவிட்டு, மெதுவாய் எனக்கு போன் அடிச்சு விபரம் கேட்டார்கள் ! "திங்கட்கிழமை சொல்லிக்கலாம் ; அதுக்கு முன்னே பதிவில் விபரங்களை நானே போட்டிருப்பேன்" என்று சொல்லி விட்டு, மறுக்கா ரூபினுடன் கரம் கோர்க்கக் கிளம்பி விட்டேன் !  

To recap - ஈரோட்டு சம்பவம்ஸ் பட்டியலில் உறுதிப்படுத்தப்பட்ட ஆல்பங்கள் இவையே :

1 சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் - II 

2 The BIG BOYS ஸ்பெஷல் !

3 கி.நா. - "விதி எழுதிய வெள்ளை வரிகள்" !

4 மர்ம மனிதன் மார்ட்டின் - கலக்கலான கலரில் !

பட்டியலின் முதல் இதழ் கிட்டத்தட்ட ஏகோபித்த thumbsup பெற்றுள்ளது என்பதால் அண்ணாச்சி ஹேப்பி ! 

And இரண்டாம் க்ளாஸிக் ஆல்பமுமே தெறிக்கச் செய்யும் வரவேற்பினை ஈட்டியுள்ளது கண்கூடு ! யுகங்களாய் வெயிட்டிங்கில் இருந்த தானைத் தலீவரின் "கொலைப்படை" & கிட்டத்தட்ட 37 ஆண்டுகளாய்ப் பார்வைகளில் பட்டிருக்கவே செய்திராத இரும்புக்கை நார்மனும் இந்த இதழ்களின் highlights என்றால் அதனில் no மிகை ! And மாயாவியாரின் ஆக்ஷன் த்ரில்லர், கேக் மீதான ஐஸிங்குக்கு சமானம் என்பேன் ! ஒரு iconic இதழினை மறுக்கா ஆரவாரமாய் மறுபதிப்பு செய்திடும் தருணத்தில் அதே அட்டையினை உருவாக்கினால் தேவலாம் என்று பட்டது ! அந்நாட்களில் நாம் பயன்படுத்திய அட்டை டிசைன் Fleetway ஒரிஜினல் & அப்போதைய transparency color negative ஆக வந்திருந்தது ! அதெல்லாம் இயேசு கிறிஸ்து காலத்து டெக்நாலஜி என்பதால் அதனை இப்போது பயன்படுத்த வழி லேது ! So நமது சென்னை ஓவியரைக் கொண்டு உருவாக்கிய டிசைன் இது - வெவ்வேறு நிலைகளில் ! இறுதி output இனி மெருகூட்டலுக்கும், நகாசு வேலைகளுக்கும் போய், ஹார்ட்கவர் இதழாய் உங்களை ஆகஸ்டில் சந்திக்கும் சமயத்தினில், கீர்த்தி சுரேஷுக்கு, கீர்த்தி ஷெட்டிக்கும் செம tough தரவல்ல அழகில் மிளிர்ந்திடும் ! 

Variant கவர் என்பதால், இதே இதழுக்கான மாயாவியின் அட்டைப்படத்தினை அடுத்த பதிவில் காட்டுகிறேன் ! In fact அது கூட, முத்து காமிக்சில் இதே சாகசத்துக்குப் போடப்பட்ட ஒரிஜினல் சித்திரமே ! அதனை தேடிப்பிடித்து எடுத்து, டிஜிட்டலாக improve செய்திடும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம் ! So உங்களுக்கு ஸ்பைடர் அட்டைப்படம் வேண்டாம் என்றால் மட்டுமே நம்மாட்களுக்குச் சொல்ல வேண்டி வரும் ! எதுவும் சொல்லாத பட்சத்தினில், by default ஸ்பைடர் அட்டைப்படத்துடனான ஆல்பம் உங்களதாகிடும் ! 

தேர்வுகள் # 3 & 4 புதுச் சரக்கு என்பதோடு, பெரிய விலைகளும் கொண்ட இதழ்கள் அல்ல என்பதால், "வன்மையாக கண்டிக்கிறேன்" என்ற ரீதியிலான கண்டனங்கள் ஏதும் கண்ணில்படவில்லை ! So ஓ.கே என்ற சாப்பாவை அங்கேயும் குத்தி விட்டு தேர்வு # 5 பக்கமாய்ப் போய் நிற்கிறேன் !! 

வெந்நீர்த்தொட்டிக்குள் பெருசு கார்சன் குளியல் போட்டுக்கினே "பாட்டு ஒண்ணு எடுத்துவிடட்டுமா கண்ணுகளா ?" என்ற கேள்வியை உங்களிடம் முன்வைக்கும் போதே, தேர்வாகிடக்கூடிய இதழ் எதுவென்று யூகித்திருப்பீர்கள் என்றே எண்ணியிருந்தேன் ! But 'பளிச்' என்று அடித்துச் சொல்லாமல், "இதுவா இருக்குமோ ? அதுவா கீதுமோ ?" என்று ஆளாளுக்கு வினாக்களை எழுப்பிய வண்ணமே சுற்றி வந்ததில் எனக்கு லைட்டான ஆச்சர்யமே ! டெக்ஸ் ஆண்டு # 75 என்ற மைல்கல் புலர்ந்த  போதே - இரவுக்கழுகாரின் மெகா கதைக்குவியலினுள் நமக்கும் சரி, பல்வேறு  தேசங்களது டெக்ஸ் ரசிகர்களுக்கும் சரி, "தேர்வு # 1" ஆக இருந்துவரும் "கார்சனின் கடந்த காலம்" இதழுக்கு, நம்ம கோவை கவிஞரிடம் ஒரு கால் கிலோ "கவித" வாங்கிப் போய் Limited Collector's Edition ஆக வெளியிட எண்ணியிருந்தேன் ! கா.க.கா. இதழின் இதற்கு முன்பான வண்ண மறுபதிப்பு வெளிவந்துமே கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் ஆகிவிட்டிருக்க, இம்முறை அழகாய், நேர்த்தியாய் இந்த இதழை ஒரு ஹார்ட்கவர் அட்டகாசமாய் உங்களிடம் தந்திடும் துடிப்பு உள்ளுக்குள் அலையடித்தது ! But  உள்ளுக்குள் இருக்கும் பாரதிராஜா சாருக்கு பக்கத்து வீட்டான், வழக்கம் போலவே - "ஐ வாண்ட் மோர் யமோஷன்ஸ்" என்று ஆர்ப்பரிக்க, லைட்டாய் ஒரு குழப்பம் ! 

என்ன குழப்பம் என்கிறீர்களா ? Simple enough folks :

*336 பக்கங்கள் கொண்ட இந்த ட்ரிபிள் ஆல்ப சாகசத்தினை ரெகுலரான டெக்ஸ் சைசில் (half MAXI) கலரில், ஹார்ட்கவரில், ரூ.450 விலையினில், TEX CLASSICS வரிசையினில் வெளியிடலாம் ! இது நார்மல் version ஆக இருந்திடும் ! 

*But அதே 336 பக்கங்களை, மெகா சைசில்..."தலையில்லாப் போராளி" பாணியில்...சித்திரங்கள் பெருசாய், அழகாய்த் தெரியும் விதத்தில்... கலரில்...ஹார்ட்கவரில் வெளியிட்டால் எண்ணூற்றுச் சொச்சம் விலையாகும் தான் ; but தெறிக்க விடும் Collector's இதழாக அமைந்திடக்கூடுமே என்று மண்டைக்குள் ஒரு மங்குணி மகானின் குரல் ஒலித்தது ! இந்த மைல்கல் ஆண்டினில் திட்டமிடப்பட்டுள்ள புது இதழ்களெல்லாமே கூட நார்மலான அளவினிலேயே இருக்கப் போகின்றன ! இந்தச் சூழலில் இந்த ஒற்றை இதழாவது செம standout இதழாக அமையக்கூடுமே என்றும் மங்குணியார் அபிப்பிராயப்பட்டார் ! So அதுவே குயப்பத்தின் சாராம்சம் ! 

"நார்மலே நலம் !" என்ற நார்மலானந்தாவின் குரலுக்கு செவி சாய்ப்பதா ? 

அல்லது 

"நார்மலிலான சம்பவமெல்லாம் சம்பவமே அல்ல ; மாக்சியில் செய்யும் சம்பவமே அவற்றுள் தலை !" என்று மங்குணியாரின் பொன்மொழிக்கு தலையசைப்பதா ? 

*அல்லது பட்ஜெட் ரொம்பவே உதைக்குமென்று தோன்றும் பட்சத்தில், ரூ.300 விலைக்கு "ஓநாய் வேட்டை" Tex Classics தற்போதைய template-ல் கலரிலேயே ; ஹார்ட்கவரிலேயே நுழைத்துப்புடலாமா ?!

நேக்கு தெரியலீங்கோ - உங்கள் தேர்வே கம்பெனியின் தேர்வாக இருக்கப்போகிறது  !  So சொல்லுங்களேன் அண்ணாச்சி : 

*நார்மலானந்தாவா ? 

*மங்குணியாரா ? 

*பட்ஜெட் பத்மநாபனா ?

எந்தத் தேர்வு டிக் ஆனாலும் நமக்கு ஓ.கே தானுங்கோ ! 

So காரசாரங்களின்றி ; கத்தி, கப்படாக்களைத் தேடி எடுக்கும் அவசியங்களின்றி ; கழுவிக்கழுவி காக்காய்க்கு ஊற்றும் முனைப்புகளுமின்றி, பதில்ஸ்  ப்ளீஸ் ? இங்கே பதிலளிக்க ஏதேனும் நெருடல்ஸ் இருப்பின், நமது மின்னஞ்சல் முகவரிக்கோ ; 73737 19755 என்ற ஆபீஸ் வாட்சப் நம்பருக்கோ உங்களின் தேர்வுகளைத் தெரிவிக்கவும் செய்யலாம் ! 

And FB / வாட்சப் க்ரூப்களின் admins : இதே கேள்வியினை உங்கள் வட்டங்களுக்குள்ளும் சுற்றி விடலாமே - ப்ளீஸ் ? திங்கள் காலையில் ஈரோட்டு சம்பவம் லிஸ்ட் + பட்ஜெட் ரெடியாகிட வேண்டியிருக்கும் என்பதால் ஒரே நாளின் அவகாசம் மட்டுமே ப்ளீஸ் !

தெய்வமே...பெய்த லேசான மழையில் மூ.ச. கொஞ்சம் சுத்தமா இருந்தா தப்பிச்சேன் !! ஜெய் ப்ளீச்சிங் பவுடர் ! Bye all ....see you around !! Have a super weekend ! 

318 comments:

 1. Replies
  1. பின்னுறீங்க பத்து சார் !

   Delete
  2. மீண்டும் மீண்டும் முதலிடம். பத்து சார் வாழ்த்துக்கள்

   Delete
 2. கார்சனின் கடந்த காலம்.. ஒரு கனவு நிஜமாகிறது... நன்றி சார் :)

  ReplyDelete
 3. Sir பட்ஜெட் பத்மநாதன் ok

  ReplyDelete
  Replies
  1. இதுவரையிலும் உங்க கட்சியில் உறுப்பினர்களை காணோம் சார் !

   Delete
 4. நம்ம பிராந்தன் ராவுக்கு ஏதோ புதுசா அள்ளி விட்டிருப்பான் போல !!" என்பதைப் புரிந்து கொண்டுவிட்டு, மெதுவாய் எனக்கு போன் அடிச்சு விபரம் கேட்டார்கள் ! "

  குபீர்னு வாய அகலத் திறந்து சிரிச்சே விட்டனுங்க..

  இவ்வளவு ரணகளத்தலயும் இந்த கிளுகிளுப்பு நல்லாத்தான் இருக்கு வாத்யாரே..

  ReplyDelete
 5. KKK - ok with both Normal and Manguni - can consider this as vote for either of the options to count. Thanks.

  ReplyDelete
 6. கா.க.கா. மேக்ஸி சைஸில் வண்ணத்தில் வருவதே சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாங் சார்.. கலக்டர் எடிசன் நாமளும் வாங்கி தான் பார்ப்போமே

   Delete
 7. //அதே 336 பக்கங்களை, மெகா சைசில்..."தலையில்லாப் போராளி" பாணியில்...சித்திரங்கள் பெருசாய், அழகாய்த் தெரியும் விதத்தில்... கலரில்...ஹார்ட்கவரில் வெளியிட்டால் எண்ணூற்றுச் சொச்சம் விலையாகும் தான் ; but தெறிக்க விடும் Collector's இதழாக அமைந்திடக்கூடுமே என்று மண்டைக்குள் ஒரு மங்குணி மகானின் குரல் ஒலித்தது !//

  உள்ளூரக் கள்ளூருதே..

  ReplyDelete
 8. கா.க.க - நார்மல்

  ReplyDelete
 9. வணக்கம் நண்பர்களே 🙏

  ReplyDelete
 10. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 11. நார்மலானந்தாவா -Yes

  ReplyDelete
  Replies
  1. This price will be easily affordable by me.

   Delete
  2. எல தம்பி ஒனக்கு ஓட்டு போடற வயசு வரல...பையன கூட்டிட்டு வால...போ...பாக்காதல....ஒழுங்கா போயிரு

   Delete
 12. காதல் மன்னரும், சக தோழரும், அந்த வகைநறாவிலேயே எதார்த்த முடிவு எடுப்பவரும், நட்புக்கு இலக்கணமாய் வாழ்பவரும், இயற்கை அழகுகளை ரசிப்பவரும், பாராட்ட மறக்காதவரும், நல்ல சாப்பாட்டுக்கு பிரியரும், சுக்கா ரோஸ்ட்டுகளின் பிரியரும், காப்பி போடுவதில் மன்னரும், எப்பவுமே என்டர்டெயின்மென்ட் டுக்கு குறை வெக்காதவரும், கிட்டதட்ட எல்லா கதைகளிலும் ஒரு மஞ்ச சட்டை அக்கப்போறை கக்கத்திலியே இடுக்கி கொண்டு அலைபவரும், புனித சாத்தான் , கண்ணர் ரவி , விஜயராகவர், செரீப் மற்றும் பல டாக்டர்களின் வகுப்பு தோழரான கார்சனின் கடந்த காலமே வேண்டும்..

  மை பர்சனல் பேவரிட்... எல்லையில் ஒரு யுத்தம்..

  ReplyDelete
  Replies
  1. இன்னா சைசில் வேணும்னு சொல்லலியே பாயாசக்கார் ?

   Delete
  2. தலையில் லா போராளி சைச விட பெரிய சைசாம் சார்....அதும் பக்கத்துக்கோர் பேனலாம்

   Delete
 13. நார்மலிலான சம்பவமெல்லாம் சம்பவமே அல்ல ; மாக்சியில் செய்யும் சம்பவமே அவற்றுள் தலை !" என்று மங்குணியாரின் பொன்மொழிக்கு தலையசைப்பதா ?

  🙋🏼‍♂️🙋🏼‍♂️🙋🏼‍♂️

  ReplyDelete
 14. தலையில்லா போராளி ஒரு true maxi size இல் வந்த அட்டகாசமான product. கருப்பு வெள்ளையில் ஒவ்வொரு பேனல்களும் தெளிவாக அட்டகாசமாக இருக்கும்.. கலரில் அதே பேனல்கள் size இல், அதுவும் கார்சனின் கடந்த காலம், அதுவும் நண்பர்கள் கேட்டுக் கொண்டது போல பழைய வசனங்களுடன் வந்தால் it will truly be a collectors edition. அதனால் எனது ஓட்டு maxi size-ற்கு. Half maxi என்றாலும் மகிழ்ச்சியே.. :)

  ReplyDelete
  Replies
  1. இங்கே maxi க்கு இன்னும் ஒரு வோட்டு

   Delete
 15. கார்சனின் கடந்த காலம் நார்மல்

  ReplyDelete
 16. கா க. கா ....நார்மலே நலம்.

  ReplyDelete
 17. மங்குணி அல்லது நார்மல் சைஸ்

  ReplyDelete
  Replies
  1. அதாவது எந்த சைசுல வந்தாலும் வரவேற்குறேன். எந்த ஓட்டு லீடிங்ல வருதோ அதுல சேத்திக்குங்க.

   Delete
  2. ஷெரீப் மாப்பு தெளிவாக மேக்ஸிலனு குத்துய்யா!

   Delete
  3. தென்னைமரத்தில ஒரு குத்து ; ஏணிச்சின்னத்திலே ஒரு குத்து moment#

   Delete
 18. உள்ளேன் ஐயா.....🙏

  ஹாய் ப்ரெண்ட்ஸ்..💞

  ReplyDelete
 19. கா. க. கா மங்குணியார் ஸ்பெசல் அல்வா தான் வேணும் 😍🤩😁

  ReplyDelete
  Replies
  1. *தலையில்லா போராளி சைஸ்ல ஹார்ட் பவுண்ட் ஓகே.*

   ஒரு கிளாசிக் கதைக்கான மரியாதை.

   *இப்ப விட்டா மறுபடியும் கிடைக்காது & அது பழைய பாடல் & வசனங்களுடன்*

   Delete
 20. முன்னாடி பேமலி போட்டாவும் கிடைக்குங்களா?? நாளாச்சு கஸ்டமைஸ்டு பண்ணி..

  ReplyDelete
  Replies
  1. ஏன்யா ரவுசு பண்றீங்க இருவரும்...🤣

   Delete
  2. வாசகர்களின் கடந்த காலமாக அவர்களின் முன்னாள் காதலி போட்டோஸ் தானே கரெக்ட் !!!

   Delete
  3. ///வாசகர்களின் கடந்த காலமாக அவர்களின் முன்னாள் காதலி போட்டோஸ் தானே கரெக்ட் !!!///


   செம ஐடியா..😍😍😍

   Delete
  4. அப்ப ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனி புக்ஸ் வாங்குங்க, கம்பெனிக்கும் நல்லது..

   Delete
 21. தெறிக்க செய்யும் சம்பவம் 5....


  காதலுக்கு மரியாதை...  போன மாசம் மாதிரி இல்லாமல் ஒரிஜனல் காதலுக்கு மரியாதை்.

  ReplyDelete
 22. பெரும்பாலனவர்களின் தேர்வு நார்மலே என்று இருந்து விட்டால்....

  விருப்பப்படுவோருக்கு மேக்சி சைசில் தர முடியுமா சார்?

  ReplyDelete
  Replies
  1. அல்லாத்தையும் கவர் பண்ணியாச்சுன்னு நெனைச்சா ஆளாளுக்கு சைக்கிள் கேப்பில கெடாவா வெட்டுறீங்களே ?

   Delete
  2. ஒரு விண்ணப்பத்த போட்டு வைப்போமே சார்..
   தேவைப்படறவங்களுக்கு முன்பதிவுக்கு மட்டும்னு போர்டு மாட்டி வைப்போமே..
   ப்ளீஜ்...

   Delete
  3. வாய்ப்பில்ல ராஜா....வாய்ப்பில்ல...! ஏதாச்சும் ஒண்ணு தானுங்கோ !

   Delete
  4. அப்ப மேக்சிதானுங்க..
   அடியேன் விருப்பம்..

   வாட்சப்லயும் மேக்சிக்குத்தான் மெஜாரிட்டி கிட்டியிருக்குங்கோ..

   Delete
 23. "நார்மலிலான சம்பவமெல்லாம் சம்பவமே அல்ல ; மாக்சியில் செய்யும் சம்பவமே அவற்றுள் தலை !"
  💞💞💞💞💞💞


  மங்குணியார் ஸ்பெசல் அல்வா பார்சேல்....

  "மை நேம் ஆல்சோ மங்குணி கா.க.கா. "

  ReplyDelete
 24. ###அதே 336 பக்கங்களை, மெகா சைசில்..."தலையில்லாப் போராளி" பாணியில்...சித்திரங்கள் பெருசாய், அழகாய்த் தெரியும் விதத்தில்... கலரில்...ஹார்ட்கவரில் வெளியிட்டால் எண்ணூற்றுச் சொச்சம் விலையாகும் தான் ; but தெறிக்க விடும் Collector's இதழாக அமைந்திடக்கூடுமே என்று மண்டைக்குள் ஒரு மங்குணி மகானின் குரல் ஒலித்தது####


  மங்குணியாருக்கே என்னோட ஓட்டு ஆசானே..

  ReplyDelete
 25. கார்சனின் கடந்த காலம் நார்மல் சைஸில் வந்தால் ஒரு புது டெக்ஸை கலர்ல, மேக்சில போட்டு விடுங்க.

  ReplyDelete
  Replies
  1. Out of syllabus ; செல்லாது..செல்லாது !

   Delete
 26. கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தையும் பொறந்த பின்னாடி வரவேற்பு வைக்கனும்னு முடிவு பண்ணியாச்சு. அப்புறம் ஏன் பழைய கண்ணாலப் புடவையே கட்டிட்டு வரணும்?
  லெஹங்காலேயே வரட்டும்..

  காககா மேக்ஸியில் கலரில் வர என் ஓட்டு....

  ReplyDelete
  Replies
  1. செம்ம..செ.அ.அவர்களே..
   நல்ல உவமை..ஹா..ஹா..

   Delete
  2. லெஹெங்காவா ? மாக்சியா சார் ?

   Delete
  3. அதான் மேக்ஸினு பட்டுனு சொல்லிட்டாருங்களே சார்...😍😍😍😍😍
   மேக்ஸி..மேக்ஸி..மேக்ஸி.் ஓட்டுங்க சார் இது!

   Delete
 27. தலையில்லா போராளி சைஸில் கலர் & கருப்பு வெள்ளை என இரண்டிலும் வெளியிடலாம் சார் , உயிரை தேடி பாணியில் !

  ReplyDelete
  Replies
  1. கூடவே கால் கட்டை விரல் நாயகன் ஸ்ரீகாந்த் முத்து விஜயன் அதிரடி சாகசம் 'தலையில் ஒரு துண்டு' or 'புதிய புக் rack படலம்' !! :-) :-p

   Delete
  2. சிலபஸிலேயே இல்லாத பதில்களா எழுதுறாங்களே ? தெய்வமே !!

   Delete
  3. ஹி..ஹி.. எல்லாம் உங்க ட்ரெயினிங் தாங்க சார்.

   Delete
 28. சூப்பர் சார்....மங்குனியாரே வரட்டுமே....பெரிய சித்திரங்களில்....போன முறை வந்த புக்க சுருக்கி இழுத்து ஒரு வழியாக்கி விட்டீர்கள்....இம்முறை தலையில்லா போராளி சைஸ் பெரிய சைஸ்....இதுவல்லவோ கொண்டாட்டம்...மெக்சிகன் சிறப்பான இதழுக்கு...இதுவே இறுதி மறுபதிப்பா இருக்கணும்னா மங்குனி சைசே நலம்

  ReplyDelete
  Replies
  1. சூப்பர்..இரும்புக் கரத்தாரே..
   சென்ற முறை வந்த இதழில் பேனல்களை சுருக்கி அழுத்தியதில் ஓவியங்கள் அகல வாக்கில் பிளந்து கிடந்தது..
   இம்முறை தவற விட்டால் அடுத்து கண்டிப்பாய் கிடைக்காது..
   கண்டிப்பாய் மேக்சியிலேயே வர வேண்டும்..

   Delete
 29. Normal size sir. Maxi size is very difficult to handle, read and store.

  ReplyDelete
 30. நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் ...

  நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் நேரம் மேக்ஸி சைஸ் ல் வர உங்கள் ஆதரவை அள்ளி தாருங்கள்...


  பட்ஜெட் காரணம் காட்டி சாதாரண விலையில் வந்தால் அந்த இதழுக்கு என்ன மதிப்பு ???!!?

  ReplyDelete
  Replies
  1. அடடே...பூத் கான்வாஸிங்கா ? நடக்கட்டும்..நடக்கட்டும்...!

   Delete
  2. என் ஓட்டு ஆல்ரெடி மேக்ஸிக்கு போட்டாச்சு

   Delete
  3. ஆமாம் சிவா அது ஏற்கனவே நம்மிடம் இருக்கும் புத்தகம் போலவே ஹார்ட் பவுண்ட் ஆக இருக்கும் அவ்வளவு தான்.

   Delete
 31. But அதே 336 பக்கங்களை, மெகா சைசில்..."தலையில்லாப் போராளி" பாணியில்...சித்திரங்கள் பெருசாய், அழகாய்த் தெரியும் விதத்தில்... கலரில்...ஹார்ட்கவரில் வெளியிட்டால் எண்ணூற்றுச் சொச்சம் விலையாகும் தான் ; but தெறிக்க விடும் Collector's இதழாக அமைந்திடக்கூடுமே என்று மண்டைக்குள் ஒரு மங்குணி மகானின் குரல் ஒலித்தது ! இந்த மைல்கல் ஆண்டினில் திட்டமிடப்பட்டுள்ள புது இதழ்களெல்லாமே கூட நார்மலான அளவினிலேயே இருக்கப் போகின்றன ! இந்தச் சூழலில் இந்த ஒற்றை இதழாவது செம standout இதழாக அமையக்கூடுமே என்றும் மங்குணியார் அபிப்பிராயப்பட்டார் !///////

  பெரிய சைஸ் ஒவியங்கள் என்றால் விலை 1000₹ என்றாலும் ட்ரிபிள் ஓகேங்க சார்...

  ReplyDelete
  Replies
  1. ஆயிரம், ரெண்டாயிரமெல்லாம் அவசியப்படாது யுவா ! 800 ரூபாய் போதுமானதாக இருக்கக்கூடும் !

   Delete
  2. அப்போ போட்டு விடுங்க சாரே

   Delete

  3. ரூ.450 ? ரூ.800 ? ரூ.300 ?
   எது ஓ.கே. என்பதை
   நாளை இரவு வரைக்கும் நண்பர்கள் சொல்லட்டும் சார் !

   Delete
  4. 350 ரூபாய் வித்தியாசத்தில் ஒரு அட்டகாசமான வாய்ப்பு நழுவி போய் விடக் கூடாதே என்ற அங்கலாய்ப்பு தான் சார்.

   Delete
  5. ஆயிரம், ரெண்டாயிரமெல்லாம் அவசியப்படாது யுவா ! 800 ரூபாய் போதுமானதாக இருக்கக்கூடும் !///

   அது பெரிய சைஸ் ஓவியம்னு படிச்சதும் ஏற்பட்ட உச்சகட்ட சந்தோசத்தில் சொன்னதுங்க சார்...

   Delete
 32. எனக்கு மங்குணி தான் வேண்டும். Without a Doubt. It'll be a tribute for Tex 75. Hardcover Maxi Size போட்டு விடுங்க சார்.

  ReplyDelete
  Replies
  1. இதேபோல அடுத்து த.க. வுக்கு நாங்க சப்போர்ட் பண்ணிடுதோம்..😍😍😍

   Delete
  2. நன்றி நன்றி டெக்ஸ்.

   Delete
 33. பெரிய சித்திரங்கள்.. maxi size.. நல்ல choice..
  மு பாபு
  ஆத்தூர்

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா ரியல் கலக்டர் எடிசன்

   Delete
  2. ஆமாம் டெக்ஸ் கனவு இதழ்.

   Delete
 34. டெக்ஸ் இதழை பொறுத்தவரை புதிய கதை,பழைய கதை என்ற காம்போவை எதிர்பார்த்திருந்தேன்,மற்றபடி கா.க.கா மைல்கல் இதழ்,க்ளாசிக் இதழ் என்ற முத்திரைகளை சுமந்து வந்தாலும் ஒரு இதழ் திரும்ப,திரும்ப குறைந்த கால இடைவெளியில் மறுபதிப்பாகி வருவது ஏனோ எனக்கு பெரிதாய் ஏற்புடையதாய் இல்லை,கா.க.காலம் இதழ் எனக்கு பிடித்த இதழ்கள் பட்டியலில் உள்ளதாய் இருப்பினும்....

  இரத்த படலத்திலும் எனது நிலைப்பாடு இதுவே,அதனால்தான் இறுதியாக வந்த ர.ப வை வாங்காமல் ஸ்கிப் செய்தேன்,ஒரு சேகரிப்பாளனாக இருந்து கொண்டு வேறு வழியின்றி எடுத்த கடினமான முடிவது...

  மேலும் மேக்ஸி சைஸ் போன்ற முடிவுகள் கேட்க நன்றாக இருப்பினும் விலையளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்...
  கா.க.கா இதழைத்தான் வெளியிட வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்தால் ரெகுலர் டெக்ஸ் சைஸ் பெட்டர்,ஓநாய் வேட்டை இதழாக இருப்பினும் மகிழ்ச்சியே...

  இது எனது தனிப்பட்ட கருத்து...

  மற்றபடி முடிவு உங்கள் கையில் சார்...

  ReplyDelete
  Replies
  1. Nopes sir....முடிவு என் கையில் நஹி ! மெஜாரிட்டி நண்பர்களின் தீர்மானமே நமது முடிவாக இருந்திடப்போகிறது !

   Delete
 35. என் ஓட்டு மங்குணியாருக்கே..

  ரியல் மேக்ஸி சைசில் முழு வண்ணத்தில் ஹார்ட் கவரில்...

  நினைக்கும்போதே ஆஹா ஓஹோ...

  இதன் வெற்றி கேப்டன் டைகர் கதைகளையும் இது போல் வெளியிட உங்களை தூண்டும் என்று நம்புகிறேன்.. (இப்போதைக்கு இந்த பிட்டு போதும்னு நினைக்கிறேன்)..

  ReplyDelete
  Replies
  1. அடுத்து தங்க கல்லறை maxi hard bound கேக்கலாம்

   Delete
  2. ஐயா...தெய்வமே !!

   Delete
  3. ஆஹா இந்த டீலிங் ரொம்ப பிடித்து இருக்கு.

   Delete
  4. தங்க கல்லறை - Maxi கலரில்.. சும்மா தக தகன்னு மின்னுமே 🤩🤩🤩

   Delete
 36. கார்சனின் கடந்த காலம் Maxi size ல் வருவதே சிறப்பு...

  ReplyDelete
  Replies
  1. அட..டாக்டரும் இன்னும் தூங்கலியா ? அல்லாங்காட்டி STV உங்கள உசுப்பி விட்டு இங்கே கூட்டிகினு வந்துட்டாரா ?

   Delete
  2. எப்பூடி நன்றி டாக்டர்

   Delete
  3. ஐடியாவுக்கு நன்றிங் எடிட்டர் சார்...🙏

   கேன்வாசிங்கை ஆரம்பிச்சிடுவோம்..

   வாட்ஸ்ஆப்ல, FBல...😍😍😍😍

   Delete
 37. //சிலபஸிலேயே இல்லாத பதில்களா எழுதுறாங்களே ? தெய்வமே !!//

  வர வர செம்ம காமெடியா செமத்தியா எழுதறீங்க..

  நான் பாட்டுக்கு உங்க பின்னூட்டத்த பாத்து பாத்து கெக்கே பிக்கேன்னு சிரிச்சுட்டிருக்ககேன் ..

  ReplyDelete
 38. ஸ்பைடர மறக்கடித்து விட்டார் மங்குனி யார்.....
  ஸ்பைடர் சூப்பர் சார்.....முழுசா அனுப்புங்க திருத்தியபின்

  ReplyDelete
  Replies
  1. அட..
   ஸ்பைடரும் மேக்சிதானுங்க..

   Delete
  2. பயந்துராதீங்க நண்பரே...அதேதான்....ஆனா உங்களுக்கோ எனக்கோ ஸ்பைடரே கண்ல தெரியலயே

   Delete
 39. // இந்த மைல்கல் ஆண்டினில் திட்டமிடப்பட்டுள்ள புது இதழ்களெல்லாமே கூட நார்மலான அளவினிலேயே இருக்கப் போகின்றன ! இந்தச் சூழலில் இந்த ஒற்றை இதழாவது செம standout இதழாக அமையக்கூடுமே என்றும் மங்குணியார் அபிப்பிராயப்பட்டார் ! So அதுவே குயப்பத்தின் சாராம்சம் ! // இதையும் படித்துக் கொள்ளுங்கள். இந்த வருடம் எல்லா டெக்ஸ் புத்தகங்களும் நார்மல் Size தான். இது போல ஒரு வாய்ப்பு அதுவும் இது போன்ற அட்டகாசமான கதைக்கு மறுபடி நமது வாழ்நாளில் கிடைக்கவே கிடைக்காது. தயவு செய்து நண்பர்கள் இதை யோசிக்கவும்.

  ReplyDelete
 40. ஆத்தீ ....அதுக்குள்ளாற கமெண்ட்ஸ் எண்ணிக்கை 100-ஐ தொட்டுடுச்சே !! ஸ்டீல் இன்னும் warm up கூட பண்ணலை.... !!

  ReplyDelete
  Replies
  1. இன்று இரவுக்குள் 200 கமெண்டுகள் confirm.

   Delete
  2. எல்லாம் மேக்சி செய்யும் மாயம்...

   Delete
  3. கோவை கவி களம் இறங்கிட்டாரு இனி ஒன் மேன் ஆர்மி யா சுத்தி விளாச போறாரு..

   நான் காலைல வந்து ஆசிரியர் எப்படி இருக்காரு ன்னு பார்க்கிறேன் ..

   Delete
 41. அந்தப் பன்னாக் புல் வெளியையும் & இள வயது கார்சனையும் & அந்த அழகியையும் & அந்த பாழடைந்த பன்னாக் கிராமத்தையும் மேக்ஸியில பார்த்தாக்க எவ்ளோ அழகாக இருக்கும்.

  யோசியுங்கள் மக்களே....

  இப்போது விட்டுட்டு இன்னும் 4-5 வருடங்கள் கழித்து கேட்கறதுக்கு இப்போதைய வாய்ப்ப உபயோகித்துகிறது நல்லது.

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா நினைக்கும் போதே அந்த காட்சிகள் கண் முன்னே விரிகிறதே. செம்ம சிவலிங்கம் அவர்களே

   Delete
 42. கார்சனின் கடந்த காலம் Maxi Sizeலயே வரட்டும்.. வாத்துக்கறிய ரெண்டு வாரத்துக்கு கட் பண்ணிட்டாப் போச்சு.. 😷😷😷

  ReplyDelete
  Replies
  1. இரண்டு வார வாத்து கறி என் செலவு அண்ணே..


   ஒரு ஓட்ட சாய்ச்சாச்சு..

   Delete
 43. இன்னிக்கும் சிவ ராத்திரிதானா??!!

  ReplyDelete
  Replies
  1. குமார் ஜி..
   போனா வராது..
   பொழுதானா கெடைக்காது அப்படீங்கற நெலமை..

   தவிர இது என் அண்ணனோட பேவரைட் இதழ்..

   ஒவ்வொரு பிரேமா ரசிச்சு ரசிச்சு கத சொல்லுவான்..

   மேக்சில வந்ததும் அத பாத்து நான் அவனுக்கு கத சொல்லுவன்ல..

   Delete
  2. கண்டிப்பாக சார் கண்டிப்பாக

   Delete
  3. சட்டுன்னு கலங்கிட்டேன் அண்ணே..🥹

   Delete
  4. சிவா..இந்த மாதிரி க்ளாசிக் கதைங்க மேம்பட்ட தரத்துல வரும் போதெல்லாம் எனக்கு அவன் ஞாபகம்தான் முதல்ல வரும்..
   அவனுக்காகவே கண்டிப்பாக வாங்கி வாசிச்சு காட்டுவேன்..

   Delete
  5. உங்களுக்காக (I mean JSK க்காக) என்னோட ஒட்டை மேக்சிக்கு மாத்தறேன்.

   Delete
 44. Maxi சங்கம் கொஞ்சம் கொஞ்சமாக வலுவாக மாறுகிறது

  ReplyDelete
 45. நார்மல் சார்

  ReplyDelete
 46. கா.க.கா சூறாவளி முன்னாடி ஸ்பைடர் & இரும்பு கரம் எல்லாம் காணாம போயிட்டாங்க...

  அதுக்காக கொலைப்படை மேக்ஸி சைஸ் வேணாம்ன்னு சொல்ல மாட்டேன். .

  ஏன்னா சந்தை மதிப்பு ரெண்டாயிரம் மூவாயிரம் ங்கிறாங்க ..

  ஒரு கிடைக்காத புதுசா வரும்போது வேணாம் ன்னு சொல்ல மனசு வரல. ..

  ReplyDelete
  Replies
  1. நண்பர்களே என்ட வாங்கனு ஸ்பைடருமார்ச்சியும்....முதல் பக்கத்த நின்று கேன்வாசிங் செய்தது போலவேருக்கு

   Delete
 47. விஜயன் சார், காலங்கள் மாறி விட்டன. 27 இன்ச் டிவி போயி 40 இன்ச் டிவி போயி 55 இன்ச் 4K/8K TV காலம் இது.
  Maxi தான் apt ஆக இருக்கும்.
  ஊரோடு ஒத்து வாழலாம் சார்.

  அப்புறம் பொதுவாக எல்லோருக்கும் வருசா வருசம் வயது ஒன்று கூடுவதால் (ஒரு சிலர் விதி விலக்காக இருப்பர்) கண் பார்வையின் துல்லியம் குறைந்து கொண்டே வருவதால் enlarged version தேவைப் படுகிறது.
  To cut the long story short, maxi version is my preference.
  பெட்ரோமாக்ஸ் லைட் தான் வேணும்.

  ReplyDelete
  Replies
  1. செம்ம செம்ம சார் என்ன ஒரு உதாரணம். ஆமாங்க கண் பார்வை யின் துல்லியம் குறைந்து கொண்டு தான் வருகிறது.

   Delete
  2. சார், கார்சனின் கடந்த காலம் தொடர்ச்சி பாகம் உள்ளது என்று சமீபத்தில் கேள்விப் பட்டேன். அதுக்கும் ஒரு teaser விட்டு தெறிக்க விடுங்கள் சார்

   Delete
 48. டியர் எடி,

  Maxi Size படிப்பதற்கு மட்டுமல்ல, சேகரிப்பிற்கும் உகந்தது அல்ல. அது அட்டை மடங்காமல், கோணம் கசங்காமல், பார்த்துக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது.

  கூடவே நடப்பு ஆண்டில், ஏற்கனவே காமிக்ஸ் பட்ஜெட் ரொம்ப அதிகம். அனைத்து புத்தகங்களையும் சேர்க்க வேண்டும் என்று எண்ணும் என்னை போன்ற ஆட்களுக்கு இது கூடுதல் சுமை தான்.

  எனவே எனது ஓட்டு ==========

  ரெகுலர் டெக்ஸ் சைஸ் ஹார்ட்பவுண்ட் மட்டுமே ....

  ReplyDelete
  Replies
  1. இது செல்லாத ஒட்டு அண்ணே..

   இது கள்ள ஒட்டா கணக்கெடுக்க படுகிறது...

   காலையில கன்னத்துல மரு வெச்சுட்டு வந்து நல்ல ஓட்டா போட்டுடுங்க அண்ணே..

   Delete
 49. இந்த மாத டெக்ஸ் கதையை கள்ளக்காதல் கதை என்போரே...

  கார்சனின் உண்மையான காதல் கதை மேக்ஸியில் வர ஆதரவு தாரீர்..

  ReplyDelete
  Replies
  1. அதான் டைக்ரின் கள்ளக் காதலார்....கார்சனின் நல்ல காதலாள் பாயாச அண்டாவ காச்சுறாரே...பழசெல்லாம் ஞாபகம் வந்து டெக்சு டெக்சுன்னு டெக்சாசு பக்கமா பாயாசத்த பாச்சாம இருந்தா சரி

   Delete
  2. வாசகர்களின் கடந்த காலமாக அவர்களின் முன்னாள் காதலிகளின் போட்டோக்களுடன்..<\b>

   Delete
 50. இத்தாலி ரசிகர்களையும் சேத்து ஆசிரியரே ஓட்டுப் போடுமாறு அழைக்கிறோம்....எத்தனை காப்பிகளோ அத்தனை ஓட்டு

  ReplyDelete
 51. #என்ன குழப்பம் என்கிறீர்களா ? Simple enough folks :

  *336 பக்கங்கள் கொண்ட இந்த ட்ரிபிள் ஆல்ப சாகசத்தினை ரெகுலரான டெக்ஸ் சைசில் (half MAXI) கலரில், ஹார்ட்கவரில், ரூ.450 விலையினில், TEX CLASSICS வரிசையினில் வெளியிடலாம் ! இது நார்மல் version ஆக இருந்திடும் !

  *But அதே 336 பக்கங்களை, மெகா சைசில்..."தலையில்லாப் போராளி" பாணியில்...சித்திரங்கள் பெருசாய், அழகாய்த் தெரியும் விதத்தில்... கலரில்...ஹார்ட்கவரில் வெளியிட்டால் எண்ணூற்றுச் சொச்சம் விலையாகும் தான் ; but தெறிக்க விடும் Collector's இதழாக அமைந்திடக்கூடுமே என்று மண்டைக்குள் ஒரு மங்குணி மகானின் குரல் ஒலித்தது ! இந்த மைல்கல் ஆண்டினில் திட்டமிடப்பட்டுள்ள புது இதழ்களெல்லாமே கூட நார்மலான அளவினிலேயே இருக்கப் போகின்றன ! இந்தச் சூழலில் இந்த ஒற்றை இதழாவது செம standout இதழாக அமையக்கூடுமே என்றும் மங்குணியார் அபிப்பிராயப்பட்டார் ! So அதுவே குயப்பத்தின் சாராம்சம் ! #
  சார்! இரண்டுமே சுகப்படாது சார்! இரத்தப்படலம் சைஸ், ஹார்ட் கவர் ஒகே சார்! இரத்தப்படலம் சைசில் சைத்தான் வேட்டை, தலை வாங்கி குரங்கு ஆகியவை மறுபதிப்பு வந்தால் இன்னும் நன்றே.....!

  ReplyDelete
  Replies
  1. மறுபடியும் முதல்ல இருந்தா ?!!

   யம்மாவ் எங்கம்மா போன என்ன விட்டுட்டு ன்னு அந்த சின்ன பையன் கதறினானே அந்த இடத்தில நம்ம ஆசிரியர் வச்சு பார்த்தேன். ...

   Delete
  2. இதுவும் நல்லாருக்குல்ல!
   Wow! Good Idea Boopathi bro.
   விஜயன் சார்,
   please consider this option too!

   Delete
  3. சார் ...பாக்கெட் சைஸை மறந்துட்டீங்களே ?

   Delete
  4. சிவா நம்ம எடிட்டர் சாரை தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கிறோம். எனக்கே பாவமாக தான் இருக்கு.

   Delete
 52. Replies
  1. யார் சார் நீங்க எனக்கே உங்களை பார்க்கணும் போல இருக்கே

   Delete
 53. கார்சன் இன் கடந்த காலம் நார்மல் சைரஸ் . கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. அய்யா தனிச் செய்தியில் வருகிறேன்

   Delete
 54. @முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை 11.50 PM நிலவரம்....

  1.நார்மலானாந்தா?

  12வாக்குகள்

  2.மங்குணியார்?

  22வாக்குகள்

  3.பட்ஜெட்?

  2வாக்குகள்

  ஏர்லி ட்ரெண்ட்:- மேக்ஸி டேக் எ கன்சிடரபிள் லீடிங்..

  ReplyDelete
  Replies
  1. ராகவன், ரம்மி, மஹி மூவரும் மீண்டும் சரியான சைஸை குறிப்பிட்டு வாக்களிக்க வேண்டுகிறோம்... (மேக்ஸி பட்டன்ல அமுக்குங்ப்பா..)

   Delete
  2. ஆமாங்க வாங்க வந்து Maxi kku vote பண்ணுங்க

   Delete
  3. ஓகே. என்னோட ஓட்டு மேக்சிக்கே

   Delete
 55. Replies
  1. அது தான் தெரியுமே

   Delete
  2. 2வது வாக்கு கணக்கில வராதுங்கோ

   Delete
 56. மேக்சி ஹார்டு பவுண்ட் அட்டைல இந்த தடவ நம்ம வெள்ளி முடியாரோட டாவு படத்தையும் பெருசா போடுங்க..

  ReplyDelete
 57. ஞாயித்துக் கெழம பொறந்துடுச்சேய்..

  ReplyDelete
 58. இரண்டாவது நாட்களாகவும் தொடர்கிறது மேக்சியில் ஒரு படலம்!

  ReplyDelete
 59. கா. க. கா. Maxi Size கண்டிப்பாக

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் Mohideen சார்.

   Delete
  2. Obviously Maxi Size தான் இந்த இதழ்க்கு சிறப்பு. பாருங்களேன் Maxi ல வந்து சும்மா தெறிக்க விட போகிறது.

   Delete
  3. உங்கள் வாக்கு பலிக்கட்டும். நீங்க ஈரோடு வருகிறீர்கள் தானே?

   Delete
 60. வாத்யாரோட கண்ணு மேரியே என் கண்ணும் ஆகப் போவுது..

  ReplyDelete
 61. அன்னிக்கு கொலைப் படையல போட்டு முழிக்க வச்சாரு..
  இன்னிக்கு கடந்த காலத்துல லயிக்க வச்சாரு..

  ReplyDelete
  Replies
  1. நாளுக்கு நாள் அவரோட எழுத்து மெருகு ஏறுகிறது.

   Delete
 62. வாத்தியாரு கொளுத்தி போட்டுட்டு சிவனேனு தூங்கப் போயிட்டார் போல..

  இங்க தருமி மாதிரி நம்மள பொலம்ப வுட்டுட்டு..

  ReplyDelete
 63. இனிமே நைட்டு பதிவ பாக்க கூடாது..
  கம்முன்னு காலங்காத்தால பாத்துப்புடனும்..

  ReplyDelete
  Replies
  1. இது மாதிரி நானும் பல தடவை நினைத்து இருக்கேன்.

   Delete
 64. மங்குணியாருக்கே எனது ஓட்டு அப்படியே முதல் பக்கத்தில் நமது புகைப்படம் இடம்பெற வாய்ப்பிருந்தால் டெக்ஸ் 75 இன்னும் கலக்கலாக இருக்கும்

  ReplyDelete
 65. நான் போட்ட கமெண்ட்ல பாதியை காணோமே.

  ReplyDelete
  Replies
  1. என்னோடதும் ரெண்டு காணோம்..
   யாரோ செய்வினை வச்சிட்டாங்க போல..

   Delete
 66. தேர்வாகிடக்கூடிய இதழ் எதுவென்று யூகித்திருப்பீர்கள் என்றே எண்ணியிருந்தேன் ! But 'பளிச்' என்று அடித்துச் சொல்லாமல், "இதுவா இருக்குமோ ? அதுவா கீதுமோ ?" என்று ஆளாளுக்கு வினாக்களை எழுப்பிய வண்ணமே சுற்றி வந்ததில் எனக்கு லைட்டான ஆச்சர்யமே !


  நான் கண்டு பிடித்திருந்தேனே ஆசிரியரே

  ReplyDelete