Powered By Blogger

Thursday, May 04, 2023

பரபர 10 !!

 நண்பர்களே,

வணக்கம். இப்போதெல்லாம் எல்லாமே fast forward-ல் ஓட்டமெடுப்பது போலவே உள்ளது !! உசிரைக் கொடுத்து பணியாற்றிய ஆன்லைன் மேளாவின் 10 புக்குகளுமே ஏதோவொரு மாமாங்கத்தில் உருவானதாய் உள்ளுக்குள் தோன்றுவதைப் பார்க்கும் போது அந்த உணர்வைத் தவிர்க்க இயலவில்லை ! 

  • "உயிரைத் தேடி" வண்ண இதழ் 
  • குட்டி புக்ஸ் 3 
  • மேகி கேரிசன் 
  • கிராபிக் நாவல் 
  • டெக்ஸ் / மாயாவி / லக்கி லூக் மறுபதிப்புகள் 

என்று ஒரு கத்தை இதழ்கள் கடந்த 3 நாட்களாய் மழைக்கு மத்தியில் நம் ஆபீசுக்குப் படையெடுப்பாய் வந்து சேர, ஜாலியாய் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தேன் ! And நேற்றைக்கு அவற்றினை நம்மாட்கள் பேக் பண்ணி டெஸ்பாட்ச் செய்வதை அதை விடவும் செம ஜாலியாய் ரசித்துக் கொண்டிருக்க முடிந்தது ! ஆன்லைன் மேளாவினில் நீங்கள் ஆர்டர் செய்திருந்த இன்ன பிற இதழ்களும் சேர்ந்து கொள்ள - சுமோ மல்யுத்த வீரர்களின் சைஸுக்கான பார்சல்கள் கூரியர் நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருந்தன ! இன்றைக்கும், நாளைக்குமாய் டெஸ்பாட்ச்சினை நம்மாட்கள் முடித்து விடுவார்கள் ; so கூரியர் பட்டுவாடாக்களுக்கென கொஞ்சமாய் பொறுமை ப்ளீஸ் ! 🙏🙏

And இந்தப் பரபர 10 - குட்டிக்கரண குத்தாலப்பனான நமக்கே ஒரு first ever எனும் போது - புக்ஸை ஏக் தம்மில் பெற்று, பெட்டிகளை உடைத்துப் புரட்டும் உங்களின் அனுபவங்களை இவ்வாரத்தினில் தெரிந்திட ஆவலாய் இருப்போம் ! ஒற்றைப் பிள்ளை பெறுவதே பெரும் பிரயத்தனம் எனும் போது - மீன் குஞ்சுகளாட்டம் பத்தைப் பெற்றுப் போட்டிருக்கிறோம் !! So சொல்லுங்களேன் folks - இந்த ஒட்டு மொத்த அனுபவம் எவ்விதமிருந்ததென்று ? இயன்றால் ஒரு selfie - மொத்த புக்சோடும் ப்ளீஸ் ?

And guess what - "உயிரைத் தேடி" black & white இதழின் ஸ்டாக் நிலவரம் அதற்குள் செம குறைவாயிட்டூ !! கலருமே வெறித்தனமான வேகத்தில் ஆர்டர்களைக் கண்டு வருகின்றன ! மிரண்ட மகிழ்ச்சி !!

Bye all ...see you around ! Have a great week ahead ! And good luck with the couriers !!



263 comments:

  1. அல்லாருக்கும் வணக்கம்

    ReplyDelete
  2. அடடே..
    மொத மொதலா 3 ஆவது கமெண்டு..

    ReplyDelete
  3. நமக்கு வந்து சேர்ற வரைக்கும் சுடு தண்ணிய கால்ல ஊத்திட்டு குதிக்கற மாறியே இருக்கும்...

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  5. இனிய காலை வணக்கம்..
    மு பாபு
    ஆத்தூர்

    ReplyDelete
  6. அதிகம் எதிர்ப்பார்ப்பை கொண்ட இதழ் என்றால் "அது உயிரைத் தேடி" வண்ண இதழ். இரண்டாவதாக கிராபிக் நாவல் ஆனா "கல்கத்தா" மூன்றாவது "மேகி". நான்காவதாக "சிறுத்தை சிறுவன்". ஏனென்றால் இதர காமிக்ஸ் எல்லாம் மறுபதிப்பு தான்.

    ReplyDelete
  7. வந்தாச்சி வணக்கம் சார்..

    ஹாய் நண்பர்களே..

    ReplyDelete
  8. வந்துட்டேன்...

    ReplyDelete
  9. 💞💞💞💞💞💞💞

    ஒரு யுகத்தின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது....

    அசத்தும் வண்ணத்தில் உயிரைத்தேடி வந்து கிடைத்ததுங் சார்..

    அசத்தலான டஸ்ட் கவர்....

    ஒவ்வொரு அத்தியாய ஆரம்பமும் வெவ்வேறு வண்ணங்களில்..

    சிம்ப்ளி மைன்ட் ப்ளோயிங் ஒர்க் பை லயன் காமிக்ஸ் எடிட்டர் திரு Vijayan S sir...& டீம் லயன்....

    வண்ணமாக்கும் பணிகளில் உதவிய நண்பர்கள் ரஃபிக் Rafiq Raja & உதய் இருவருக்கும் பாராட்டுக்கள் & வாழ்த்துகள்....💐💐💐💐💐

    டஸ்ட் கவர் அசத்தல் ரஃபிக்💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. உண்மையிலேயே ஒரு யுகத்தின் காத்திருப்புதான்.

      கிட்டதட்ட 35+ வருடங்கள் 🥰👍

      Delete
    2. // வண்ணமாக்கும் பணிகளில் உதவிய நண்பர்கள் ரஃபிக் Rafiq Raja & உதய் இருவருக்கும் பாராட்டுக்கள் & வாழ்த்துகள். //

      +1 பாராட்டுக்கள் & வாழ்த்துகள் Friends!

      Delete
  10. நீண்ட வருடங்களுக்கு பின்,
    கோடை மலர் குண்டு புக்கை
    பார்த்த திருப்தி இப்போது இந்த வெளீயிடுகள் மூலம் கிடைத்துள்ளது.
    மகிழ்ச்சி சார்.

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு வருஷமும் கோடையில் இந்த மேளாவைத் தொடர்ந்திடலாமா சார் ?

      Delete
    2. கண்ணா..லட்டு தின்ன ஆசையா மொமெண்ட்..

      Delete
    3. How many லட்டூஸ் moment#

      Delete
    4. இப்படி எல்லாம் கேட்கவே படாது...

      Delete
    5. மறுப்பே கிடையாது. திறந்து விடுங்க, காட்டாற்று வெள்ளத்தை. அது உலகெங்கும் பரவி பாயட்டும்.

      Delete
    6. ஆஹா கேட்கும் போதே இனிக்குதே

      Delete
    7. ஒவ்வொரு வருஷமும் கோடையில் இந்த மேளாவைத் தொடர்ந்திடலாமா சார் ?


      தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டிங்க ஒரு லட்டு கிடைக்குறதே கஷ்டம் நீங்கள் பத்து லட்டு தர்றிங்க வேண்டாமுன்னு சொன்னா சாமி கண்னை குத்திரும்

      Delete
    8. // ஒவ்வொரு வருஷமும் கோடையில் இந்த மேளாவைத் தொடர்ந்திடலாமா சார் ? //
      இதெல்லாம் கேட்கனுமா சார்...

      Delete
    9. இந்த விழாவை கோடையில் ஒருக்கா ஆகஸ்ட்ல ஈபுவில ஒருக்கா செஞ்சா நல்லாருக்கும். அப்படி இல்லேன்னா சேலம் புத்தக விழால. வருசத்துக்கு 2 தபா புத்தக விழா கொண்டாடினா லிவருக்கு நல்லது.

      Delete
    10. // ஒவ்வொரு வருஷமும் கோடையில் இந்த மேளாவைத் தொடர்ந்திடலாமா சார் ? //

      கேள்வியே வேண்டாம் .... மே மாதம் இனி கோடை விழா என்று ஒரு கோடை மலர் ஸ்பெஷலோடு போட்டு தாக்கிடலாம். ஒவ்வொரு வருடமும். 🥰👍

      Delete
    11. // ஒவ்வொரு வருஷமும் கோடையில் இந்த மேளாவைத் தொடர்ந்திடலாமா சார் ? //

      Yes sir! We want more!!

      Delete
  11. நம்மளுக்கு மெதுவா பத்திரமாக வரட்டும் 😊😊😊

    ReplyDelete
    Replies
    1. என்ன ஒரு பெருந்தன்மை 🥰

      Delete
  12. அப்போ இன்னைக்கு புக் வந்து விடும்...வாரே வா I'M waiting

    ReplyDelete
  13. நாளை எனக்கு கிடைத்தால் கொண்டாட்டமே...

    இல்லத்திலியே இருக்கை போட்டு அமர்ந்து இருப்பதன் காரணத்தால்..:-)

    ReplyDelete
  14. பார்சல் எனக்கு வந்து விட்டது
    இரவு தான் பார்க்க முடியும்
    மகிழிச்சிகள் பல

    நன்றிகள் ஆசிரியரே
    உங்களுடைய டீமுக்கு ரொம்ப நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. சென்னைக்கு நாளை தான் போல இன்னைக்கு கொரியர் ஆபீஸ்ல விசாரிச்சாச்சு

      Delete
  15. உண்மை தான் சிஸ்டர். இதன் பின்புலத்தில் உள்ள ஒவ்வொருவரின் உழைப்பும் பாராட்டுதலுக்குரியது.
    Hats off our team sir.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இவை ஆர்டர் செய்யும் முகவர்களுக்கு மாத்திரமே அனுப்பப்படும் ! நீங்கள் இருக்கும் நகரிலான முகவர் யாரென்று சொன்னால் - அவர் வாங்குவாரா ? மாட்டாரா ? என்று சொல்ல முடியும் !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. எந்த ஊர் சார் ? எந்தப் பெயரில் ஆர்டர் செய்துள்ளீர்கள் ?

      யாருக்குமே திங்களுக்கு மேலே என்று சொல்லியிருக்க வாய்ப்பே இல்லையே ? திங்கள் and புதன் இங்கே கோயில் திருவிழா விடுமுறைகள் ஆச்சே !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. சென்னையா ? மதுரையா ? புரியலீங்களே ?

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. இது என்ன கூத்து...

      கேள்விகள் கேட்கபட்டு பதில்கள் கிடைத்த பின் தடயத்தையும் காணோம், ஆளையும் காணோம் 😁

      Delete
    11. இல்ல கேள்விகள் குழப்பமாகியதால் நீக்கி விட்டேன். போனில் பேசுவது better

      Delete
  18. Agents மூலமாக வாங்குபவர்களுக்கு புத்தகம் வர காலதாமதம் ஆகிறது...

    ReplyDelete
    Replies
    1. சந்தாக்களோ ; முன்பதிவுகளோ ; ஆன்லைன் ஆர்டர்களோ - அவை நமது கட்டுப்பாட்டில் உள்ளவை நண்பரே !

      முகவர்கள் எப்போது ஆர்டர் செய்வது ? எதை ஆர்டர் செய்வது ? முன்பாக்கிகளை எப்போது செட்டில் செய்வது ? என்று தீர்மானிப்பது நம் கைகளுக்கு அப்பாற்பட்ட சமாச்சாரம் !

      Delete
  19. மே மாத புத்தகம் வேறயா..

    ReplyDelete
  20. வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  21. வணக்கம் ஆசிரியர் சார். மிகப் பெரும் சாதனையை புரிந்துவிட்டீர்கள. நன்றி சார்.

    ReplyDelete
  22. எடிட்டர் அய்யா..
    Courier received today. 🙏

    ReplyDelete
    Replies
    1. வெற்றி வெற்றி வெற்றி...

      Delete
    2. ஜம்பிங் தல ஆனா எனக்கு புத்தகம் வரல ...

      Delete
  23. சார்லி ஸ்பெஷல் - தத்தெடுத்த தறுதலை

    ஒரு அக்மார்க் சார்லி சாகசம். சார்லி ஸ்பெஷலில் ஐந்தாவது கதையாக இருந்தாலும் இந்த கதையே மேலே சொன்ன வரியை எழுத தூண்டியது.

    சிறிய வயதிலேயே அனாதையாகி விட்ட பட்டர் கப் வம்சாவளியின் வாரிசு பிரான்சிஸ் பட்டர் கப், வயது முதிர்ந்த அவனுடைய பெரியப்பா உடன் சேர்ந்து வாழ முடிகிறதா என்பது தான் கதை.

    சிறுவயதில் இருந்தே மோசமான சூழலில் வளர்ந்த ஒவ்வொரு சிறுவர்களுக்கும் ஏற்படும் அனுபவங்களே பிரான்சிசின் பால பாடங்களாக இருக்கின்றன. திருடனாக, அடிதடியில் ஈடுபடுபவனாக, ரவுடியாக, ஜெயிலுக்கு சென்ற கைதியாக என பல்வேறு அனுபவங்களை பெற்று வாலிபன் ஆகிறான் பிரான்சிஸ் பட்டர் கப்.

    ஒரு பக்கம் பிரான்சிஸ் அனாதையாக தறுதலையாக தெரிந்து கொண்டிருக்கும் போது, வயது முதிர்ந்த அவனுடைய பெரியப்பா தனக்கு இருக்கும் ஒரே உறவான பிரான்சிஸ் உடன் உறவை புதுப்பித்துக் கொள்ள சார்லியை துணைக்கு அழைக்கிறார்.

    சார்லி உள்பட அனைத்து கதைமாந்தர்களுமே பிரான்சிஸ் பட்டர் கப் என்ற பிராங்கியின், அன்றைய சூழ்நிலையை எடுத்துச் சொல்லி பாதகமான ஒரு உருவகத்தையே பிரான்சிஸ் பற்றி ஏற்படுத்துகிறார்கள்.

    கூடவே துர் எண்ணம் கொண்ட பிரான்சிசின் முன்னாள் நண்பர்களும் துரத்த, எங்கே பிரான்சிஸ் மீண்டும் போக்கிரி ஆக மாறி விடுவானோ என்ற எண்ணம் வாசகனாக படிக்கும் எனக்கும் எழுந்தது.

    கல்லுக்குள் ஈரம் என்பது போல ஜெயிலுக்குள் சென்ற பிரான்சிஸ் அங்கிருந்த எலிக் குட்டிகளை நண்பர்களாக பாவித்து தன்னுடன் வீட்டுக்கு எடுத்து வந்து வளர்க்கிறான். மாட மாளிகைக்கு வரும் எலிகளை பூனை கபளிகரம் செய்ய, அவனுக்கு ஒரு பேசும் கிளியை வாங்கிக் கொடுக்கிறார் அங்கிள். அந்தக் கிளியும் இறந்துவிட பிரான்சிசுக்குள் இருந்த இளகிய மனம் வெளிப்படுகிறது. கூடவே அங்கிள் பட்டர் கப் வளர்க்கும் நாய் டைகரை பராமரிக்கும் பணியும் அவனுடன் சேர்கிறது.

    ஒரு மனிதன் நல்லவனாகவும், கெட்டவனாகவும் மாறுவதற்கு இடையிலான நூலிழையை கதையாக பின்னி எடுத்துள்ளார் கதாசிரியர்.

    இறுதியாக அந்த கட்டமும் வருகிறது.

    அங்கிள் பட்டர் கப்புக்கு உடல் நலமில்லை.

    மாளிகையில் வேலை செய்பவர்கள் விடுமுறையில் இருக்கிறார்கள்.

    ரகசிய நிலவறையை திறக்கும் சூட்சமம் பிரான்சிஸ் பட்டர் கப்புக்கு தெரியும்.

    இந்த சூழலில் பிரான்சிசின் முன்னாள் நண்பர்கள் நெருக்குதல் கொடுக்க முடிவு என்னவாகிறது என படித்து தெரிந்து கொள்ளுங்கள்!

    இந்த கதையை பொறுத்தவரையில் மென்மையான தனிமனித உணர்வுகளும், குணாதிசயங்களும் இயல்பாகவே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காகவே சார்லி கதைகள் பேணப்பட வேண்டும்!

    Rating: 9/10

    ReplyDelete
    Replies
    1. பூபதி அட்டகாசமான விமர்சனம். இது போன்ற விமர்சனங்கள் தான் இந்த தளத்தின் முதுகெலும்பு... தொடருங்கள்...

      Delete
  24. Replies
    1. வாங்க வாங்க ... 🏃🏃🏃

      Delete
    2. ஸ்டீல் எனக்கு வரலையே...

      Delete
    3. குமார் என்கிற பேருக்கு கிளி நாளைக்குதான் சீட்டு எடுக்குமாம் தம்பி...

      Delete
    4. எனக்கும் வரல உயிரைத் தேடி....நாளை தான் பணமனுப்பனும்...கொரியர் கட்டணத்தை விசாரித்த பின் குமார்

      Delete
  25. காலைல ஒரு தெரியா நம்பர்லருந்து ஒரு கொரியர்.....எஸ்டிலதான வரும் .....புக்கு அடுத்த வாரம்தான் வரும்....சுவாரஷ்யமில்லாம விசாரிக்க....என்னலோ சொல்ல வண்டி இரைச்சல்ல காது கேக்கல...இருந்தாலும் லயன் காமிக்ஸான்னு கேக்க அவர் ஏதோ சொல்ல
    ....சரி வந்து வாங்கிக்கிறேன்...ஆஃபீஸ் எங்கன்னு விசாரிக்க....மாரியாத்தா கோயிலருகேன்னு சொல்ல....சரிதான் டிடிடிசி யேதான்....காலை முதல் இப்ப வர ஓட்டம்....திடுமென லயன தட்ட...பரபர 10...உடனே பர பரன்னு பறந்து ....டிடிசியா மாலை ஏழு மணிக்கு வந்து வாங்கிக்கலாமான்னு கெஞ்ச ..வாங்க சார்....நடு நடுவே பதிவ பாக்கும் முன்னரே பறந்ததால்....பதிவு படிச்சு லயிக்க...எட்டு புக்கா ஆனாலும் பார்சல் கனமால்லயேன்னு ஒரு ஃபீலிங்கு....வீட்டுக்குப் போய் பிரிச்சதும் அள்ளிப் பார்த்து வாசனைகள் பகிர்கிறேன் பகிர்கிறேன் ...கோடை மலர்களை

    ReplyDelete
  26. சார் .இந்தமாதிரி பத்து புத்தகத்துக்கு கோடை வரை ஏன் சார் காத்திருக்கனும். நடுவில் ஈரோடு திருவிழா ,தீபாவளி ,பொங்கல் ன் எத்தனை பெஸ்டிவல் வருது.அடுத்த பத்து எப்பங்கசார்கரூர்ராஜசேகரன்

    ReplyDelete
    Replies
    1. ஆகா ஆகாகாக காகா....

      நிறைய பேரு இப்படி கிளம்பிட்டாங்க போல....

      Delete
  27. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  28. வழக்கமான கூரியரில் விசாரித்ததில் இன்று பார்சல் வரவில்லை என பதில் வர,சரி நாளைக்குதான் போல என்று எண்ணி மாலைப் பணியில் இருந்து வீட்டுக்கு திரும்பிய போது,வேறு கூரியர் மூலம் வந்த பாகுபலி சைஸிலான பார்சல் மிரட்டலாய் வீட்டில் அமர்ந்திருந்தது...

    ReplyDelete
    Replies
    1. அடடே சூப்பர் சூப்பர் அண்ணா...

      Delete
  29. இப்போதுதான் ப்ளாக் பக்கம் வந்து உங்களுக்கு வந்துருச்சானு கேட்கலாம்னு நினைச்சேன்,,,மகிழ்ச்சி

    ReplyDelete
  30. புதிய புத்தங்களின் வாசனை 🥰🥰🥰🥰🥰🥰

    ReplyDelete
  31. குற்ற நகரம் கொல்கத்தா அட்டைபடம் மிக அருமை...

    ReplyDelete
  32. குற்ற நகரம் கல்கத்தா புதுமையாய் இருக்க,மந்திர மண்டலம் வண்ணத்தில் மிரட்ட,அட்டைப்படம் ஜொலிக்க,வாசிக்காத யார் அந்த மாயாவி ஆவலை கிளப்ப,வண்ணத்தில் லக்கி காதலுடன் கசிந்துருக,என்னதான் இருக்கும் என எண்ணவைக்கும் தலைப்புடன் மேகி காத்திருக்க,நாங்க திரும்ப வந்தோட்டுமுல்ல என பாக்கெட் சைஸில் டைகர் கவர்ந்திழுக்க,Black & White இல் வாசித்திருந்தாலும் நாங்க வண்ணத்திலும் மிரட்டோவோமுல்ல என அசத்தும் உயிரைத் தேடியுமாய் எல்லா இதழையும் புரட்டி மகிழ்ந்தாச்சி...
    வார இறுதிக் கொண்டாட்டத்திற்கு இதழ்கள் ரெடி...

    முதல் வாசிப்பிற்கு குற்றநகரம்,அப்புறமா மாயாவி,தொட்டுக்க பாக்கெட் சைஸ்,அடுத்து ம.மண்டலத்தில் எட்டிப் பார்த்துட்டு,லக்கியோட ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு,மேகியை நூடுல்ஸ் பண்ணிட்டு,உயிரை வண்ணத்தில் தேடனும்...
    இப்போதைக்கு இதுதான் பிளானுங்கோ...

    ReplyDelete
  33. மே மாத புத்தகங்கள் இன்னும் வரவில்லை ஐயா

    ReplyDelete
  34. வணக்கம் சார், மறுபதிப்புகளை லயன் லைப்ரரியாக வெளியிட்டு புதிய கதைகளை லயன் காமிக்ஸ் & முத்து காமிக்ஸ் ஆக வெளியிட்டால் நாம் சீக்கிரமே பல மைல் கற்களை அடையலாமே. லயன் & முத்து தலைப்புகளில் தமிழில் தலா 1000 இதழ்கள் வெளியாகிய பெருமையை இந்த ஆயுளுக்குள் / நாம் காமிக்ஸ் படிக்க முடிகிற காலத்திற்குள் பார்க்க ஆசையாக உள்ளது.

    ReplyDelete
  35. மூன்று குட்டிப் புத்தகங்கள் அட்டகாசமா கலக்க....முதல்ல சிறுத்தை சிறுவனப் படிச்சு ஏழு வயது சிறுவனாக முடிவு செஞ்சாச்சு....சிக்கென சிறுவர்கள் கவரும் வண்ணமாய் உள்ளது சூப்பர் சார்....கோடை கொண்டாட்ட ஏக்கங்கள தூண்டிடுச்சு....



    அடுத்த இதழ் குற்ற நகரம் கொல்கத்தா...அட்டைப் படம் தெறிக்க விட...நகாசு வேலைகள் கலக்க புத்தகம் ஏனோ துவள...ஓவியங்கள் அழகு....

    லக்கி அட்டையும் சூப்பர்....
    மேகி ஓகே

    நம்ம மாயாவி நார்மல் பெரிய சைஸ்...புரட்ட புரட்ட இன்பப் பயணம் 80 களுக்கு

    டெக்ஸ் அட்டை தூள் கிளப்ப உள்பக்கங்கள் வண்ணத் திருவிழாதான்...இரண்டு கதைகளும் போட்டி போட...மரண நடை திகைக்கும் செய்யும் வண்ணம்...

    டெக்ஸூம் கல்கத்தாவும் பட்டாசு...



    உயிரைக் தேடி வண்ணத்துக்கு பணமனுப்பவில்லை....மறந்தே விட்டேன்...நாளை அனுப்பினால் சனிக்கிழமை கிடைக்கும்னு செந்தூரான வேண்டிட்டு அனுப்ப வேண்டியதுதான்....


    சூப்பர் சார்....சிறுவன் பாத்துட்டு வரேன்

    ReplyDelete
  36. டியர் எடி,

    பத்து பதிவில் 100 க்குள்ள இடத்த போட்டாச்சி .... 10 ல ஒண்ணு ஏன்... 10ம் நமதேன்னு சொல்லி புத்தகம் அறிவிப்புக்கு முன்னமே முன்பணம் போட்டு வச்சதால, முதல் செட் பார்சல் மாநிலம் தாண்டி வந்து சேர்ந்திருச்சி, ஒரே நாள்ல.

    அயராது உழைத்த நமது லயன் டீமிற்கு ஒரு பலத்த கரகோஷம்.

    கூடவே, நமது இதழ்களில் எனது ஒரு ஆக்கம் ... முதல் முறை எனது பெயருடன், அதுவும் எனது பால்ய கால நண்பர் பட்டாளத்துடன் என்பது ஒரு ஜென்ம சாபல்யம்.

    பார்சல் பிரித்து சுட சுட ஒரு UNBOXING பதிவையும் போட்டு தாக்கியாச்சு. கடைசியாக இப்படி கரை புரண்டு ஓடிய ஆர்வம் XIII மெகா ட்ரீம் ஸ்பெஷல் என்று நினைவு.

    கலக்கிட்டீங்க போங்க .... வார கடைசி இனி இவற்றோடுதான், ஒன்றன் பின் ஒன்றாக... 🥰

    ReplyDelete
    Replies
    1. • 2023 May 2023 ஆன்லைன் புத்தக திருவிழா UNBOXING கானொலி https://youtu.be/PB00yjjNSYI

      Delete
    2. • 2009ல் சிறுவர் மலர் உயிரைத் தேடி பற்றிய என் நினைவு பேழை https://www.comicology.in/2009/03/survival-siruvar-malar-1988-i.html

      Delete
    3. • 2010ல் இப்படி பட்ட கூதுகல தருணம் XIII Collector Edition வுடன் https://www.comicology.in/2010/10/lion-comics-208-xiii-collector-special.html

      Delete
    4. 10 ல் 100 போட்டாச்சு என்ற திருப்தியுடன் உறங்க செல்லும் கோட்டான் 😁🙏

      Delete
  37. சார் பாக்கெட் சைஸ். 3.இனிமாதமாதம் தொடருமா. பாக்கெட் சைஸ் வெற்றிங்களா. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  38. 'பத்து'க்கு பத்து இந்த மாதம் முதல் வாரத்திலேயே..
    கோடைக் கொண்டாட்டம்.

    ReplyDelete
  39. சிறுத்தை சிறுவன் சூப்பர்....சிறுவர்களுக்கான கதை.....என் மகனுக்காக காத்திருக்கிறேன்....

    ReplyDelete
  40. இந்த விலையிலான இந்த புத்தக பாக்ஸ் எனக்கே இலகுவாக உள்ளது.இதை அடிக்கடி தொடரலாம் சார் . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  41. குற்ற நகரம் கல்கத்தா :
    தோலின் நிறங்களை வைத்து தரத்தை மதிப்பிடுவது எவ்வளவு பெரிய அபத்தம்,எவ்வளவு பெரிய முரண்,இக்கதை உணர்த்தும் செய்தியது...

    ஆரிய சிந்தனை,மேட்டுக்குடி மனோபாவம்,உயர்குடியில் இருப்பவர்கள் உயர் சிந்தனை உடையவர்களா,முரட்டுத்தனமான தோற்றமும்,எளிய வாழ்க்கை வாழ்பவர்களும் ஒதுக்கப்பட வேண்டியர்களா,என பல கேள்விகள் நமக்கு தோன்றுகிறது...

    வசனங்கள் சிறப்பு,
    "சில நேரங்களில் வெளித் தோற்றங்கள் முழுக்கதையையும் சொல்லிடுவதில்லை".
    "சில இறக்கைகளை எத்தனை முயன்றாலும் கத்திரிக்க இயலாது".

    தாக்ஜீக்கள் கும்பல்,நரபலி என நகரும் களமானது,வேறொரு கோணத்தில் பயணிப்பது கதைக்கு வலு சேர்க்கிறது...

    குட்டி நாய் வெண்டி,அழகுப் பதுமை ஜேன்,அசத்தலான துப்பறிவாள நாயகனாய் கத்திபேர்ட்,கல்கத்தா போலீஸ் கேப்டன் சர்.ஜான்,யானெஸ்,முரட்டு தோற்ற டைகர் சாண்டோகன்,அன்பான தகப்பனாய் சர்.தாமஸ் என அசத்தலான கேரக்டர்கள்...

    குற்ற நகரம் கல்கத்தா இரணகளம்...

    பெயிண்ட் பாணியிலான ஓவியம் ஈர்க்கிறது...

    முகலாய பாணி எனக் கூறி பிரிட்டிஸ் ராணுவத்தால் செய்யப்படும் "பீரங்கியின் முத்தம்",அதை இந்தியர்கள் சாத்தானின் பெருமூச்சு என்று அழைப்பது,கோபினோவின் நூல் குறிப்புகள் என வரலாறு சார்ந்த தகவல்கள் சுவராஸ்யமூட்டுகிறது...

    சிறு குறையாய் தென்பட்டது மிக மிக லேசான அட்டைப்படம்,கையில் ஏந்தினால் சரியான திருப்தி இல்லை...
    எமது மதிப்பெண்கள்-09/10...

    குற்றநகரம் கல்கத்தா விவாதிக்கப்பட வேண்டிய,அலசப்பட வேண்டிய படைப்பு...

    ReplyDelete
    Replies
    1. அடடே மின்னல் வேக விமர்சனம். சூப்பர் அண்ணா இன்று எனக்கு புத்தகம் வந்து இருக்கும் என்று நினைக்கிறேன். நானும் வரேன்

      Delete
  42. /// சிறு குறையாய் தென்பட்டது மிக மிக லேசான அட்டைப்படம்,கையில் ஏந்தினால் சரியான திருப்தி இல்லை...///
    எனக்கும் அப்படியே.
    மேகி கேரிஸன் புத்தக அட்டையும் அது போலவே உள்ளது.

    ReplyDelete
  43. ****** உயிரைத் தேடி! *** கருப்பு-வெள்ளை *****

    30+ வருடங்களுக்கு முன்பு ஒவ்வொரு வாரமும் காத்திருந்து பரபரப்பாய் திகிலுடன் படித்த கதை! பக்கத்துக்குப் பக்கம் ஏதாவதொரு திடுக்கிடும் சம்பவத்தோடே கதை நகர்ந்தப் பட்டிருக்குமாதலால் ஒவ்வொரு வாரமும் 'தொடரும்' போடும்போதும் அந்நாட்களில் மனது அடுத்தவாரத்திற்காக ஏங்க ஆரம்பித்துவிடும்!

    இப்போது படிக்கும்போது அந்த ஏக்கம் மட்டும் மிஸ்ஸிங்!! மற்றபடி காலம் கடந்து, ரசணைகள் மாறிய பின்பும் அதே பரபரப்புடனும், அதே திகிலுடனும் கதையை நகர்த்த முடிந்திருப்பது நிஜமாகவே ஆச்சரியம் தான்! அன்றைக்கு பிரம்மிப்புடன் கண்கொட்டாமல் ரசித்த பல ஃப்ரேம்களை இன்று காணும்போது ஒரு கணமேனும் டவுசர் போட்ட அந்த நாட்களுக்கே காலப் பயணம் சென்று திரும்பிடுவதைச் சாத்தியமாகிடுகிறது! ஒரு சாகா வரம் பெற்ற படைப்பாக இன்றளவும் நம்மை ஆச்சரியப்படுத்துகிறதென்றால் அந்தப் பெருமையின் பெரும்பான்மை - பக்கத்துக்குப் பக்கம் பரபரப்பை ஏற்படுத்திய கதாசிரியரைவிடவும், அதை தன் அபாரச் சித்திரங்களால் உயிர் கொடுத்த ஓவியருக்கே சென்று சேரும்!! என்னொரு அசாத்திய திறமை!!!

    அட்டைப்படம் அபாரம்! ரூ.200 விலையில் 192 பெரிய பக்கங்களுடனும், கெட்டி அட்டையுடனும், அட்டகாசமான தயாரிப்புத் தரத்துடனும் நமக்குக் கிடைத்திருப்பது ஒரு பொக்கிஷம் கிடைத்தற்கு இணையாகிடும்! நிறைய நிறைய நன்றிகள் எடிட்டர் சார்!

    காமிக்ஸ் பிரியர்கள் தவறவிடக் கூடாத ஒரு பிரம்மாண்டப் படைப்பு!

    10/10

    ReplyDelete
    Replies
    1. உண்மை ஈ.வி,இந்த விலையில் இது பெஸ்ட் கலெக்‌ஷன்தான்...

      Delete
  44. 'உயிரைத் தேடி' வண்ணத்தில் இன்னும் அட்டகாசம். அற்புதமான கலரிங் மற்றும் தயாரிப்புத் தரம். தவற விடக் கூடாத கலெக்டர்ஸ் எடிஷன்.
    தவறவிட்டால்...
    அப்புறம் வருத்தப்படுவீக..
    (இமான் அண்ணாச்சி மாடுலேஷன்)

    ReplyDelete
  45. யார் அந்த சிறுத்தை மனிதன்?

    வேங்கையோடு மோதாதே !

    படித்தேன்

    அற்புதமான கதைத் தேர்வுகள்.

    சிறியவயதினர் படிக்கும் வகையில்
    எளிமையான , சுவாரஸ்யமான கதைகள்.இவ்வளவு சிறந்த கதைகள் சிறார்கள் வாங்கும் வசதிக்கு உட்பட்டு அமைந்திருப்பது நன்று.

    இம்முயற்சி வெற்றியடையும் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை.

    ReplyDelete
    Replies
    1. Very positive review. Good to hear this news sir

      Delete
    2. நன்றி சார் ; இவற்றை தேர்வு செய்ததன் பின்னணியில் இன்னொரு காரணமும் உள்ளது. கதைகள் ஆங்காங்கே நிறைவுற்றாலும், சங்கிலிக் கோர்வையாய்த் தொடர்ந்திடுபவை !

      So தொடர்ச்சியாய் புக்ஸ் வாங்கிட பசங்களை ஊக்குவிப்பது ஒரு பக்கமெனில் , 4 நண்பர்கள் ஒன்றிணைந்தால் ஆளுக்கு ஒரு பாகத்தை வாங்கிக் கொண்டு, அவர்களுக்கு மத்தியில் சுற்றில் விட்டுக் கொள்ளலாம் தானே ?

      வாசிப்புக்கும் சரி, ஒரு காமிக்ஸ் வட்டம் உருவாகுவதற்கும் சரி, இது இம்மியூண்டாவது உதவிடக்கூடும் என்று நினைத்தேன் ! Fingers crossed !

      Delete
  46. ****** தீதும் நன்றும் பிறர் தர வாரா..! *****

    மேகி கேரிஸனின் அசத்தலான அடுத்த ஆல்பம்!!

    முதல் கதையைப் போலவே இதிலும் தன் இயல்பான, நையாண்டியான, ஒரு அன்றாடங்காய்ச்சி இளம் பெண்ணின் உளவியல்பூர்வமான எண்ணவோட்டங்களோடு கூடிய, ரொம்ப ரொம்ப ரசிக்கும்படியான வசனங்கள் சகிதம் - அடிக்கடி நம்மை புன்முறுவலோடு 'அட்ராசக்கை' சொல்ல வைக்கிறாள் - இந்த மேகி கேரிஸன்!

    வசனங்களைப் படித்துப் புரிந்துகொள்வது ஒருபுறமென்றால், சித்திரங்களே உணர்த்திவிடும் சங்கதிகளும் நிறைய உண்டு! அதாவது வசனங்கள் உணர்த்துவது பாதி என்றால் சித்திரங்கள் பூடகமாக உணர்த்திடும் அம்சங்கள் மீதி! ஆகவே ரசித்து ருசித்துக் படிப்பவர்களுக்கு இந்த மேகியும் நம்மூர் மேகி நூடுல்ஸ் போல சுவையாகவே இருந்திடுவாள்!

    மொழிபெயர்ப்பில், வசனப் பிரயோகங்களில், அதை இயல்பாக அமைத்த விதங்களில் இது நிச்சயமாக காமிக்ஸ் வாசிப்பு அனுபவத்தின் அடுத்த பரிமாணம் என்றே நினைக்கத் தோன்றுகிறது!

    கடந்த பாகத்தின் தொடர்ச்சி இதுவென்பதால் முதல் பாகத்தை நினைவிலிருத்திப் படிப்பது சுகமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்திடும்!

    ஆர்ட்பேப்பரிலேயே அட்டையும் போட்டதற்கு 0.5 மார்க் போக

    9.5/10

    ReplyDelete
    Replies
    1. நம்ப சிரமமெனினும் நிஜம் இதுவே சார் - க்ளிப்டனின் "7 நாட்களில் எமலோகம்" கதைக்குப் பிற்பாடு - ஏக் தம்மில் மொழிபெயர்ப்பினை நான் செய்து முடித்தது இந்த இதழுக்குத் தான் ! And கொடுமை என்னவெனில் அங்கே ஆன்லைன் மேளா நடந்து கொண்டிருந்த அதே ஞாயிறில் தான் பேனாவைத் திறக்கவே செய்திருந்தேன் !

      கதையின் சுவாரசியம் ஒரு பக்கமெனில் , deadline pressure மறுபுறம் ! இரண்டுமாய் இணைந்து one sitting முயற்சியாக்கியது இந்த ஆல்பத்தினை ! இலண்டனின் வீதிகளா ? மேகியின் பாத்திரப்படைப்பா ? அந்த நக்கலான பிரிட்டிஷ் ஹியூமரா ? - எனக்கு தம் கட்ட ஆற்றல் தந்தது எதுவென்று சொல்லத் தெரியலை ; but ஸ்டெர்ன் & மேகி தவிர்த்த வேறு யாருமே இந்த றெக்கைகளை எனக்குத் தந்திட இப்போதைக்கு முடியுமென்று தோன்றவில்லை !

      Delete
    2. ஒரு தேர்ந்த, ரசணையான மொழிபெயர்ப்பாளருக்கு வழங்கப்படும் தீனிகள் இந்த மேகி & ஸ்டெர்ன் கதைகள் என்று புரிகிறது எடிட்டர் சார்!! அந்தத் தீனியை நறுக் மொறுக்கென்று கடித்து, மென்று, உறிஞ்சி, ஊதித் தள்ளியிருக்கிறீர்கள்!! இத்தனை அவசரகதியிலேயே இத்தனை ரசித்து எழுதமுடிகிறதென்றால்.. இன்னும் கொஞ்சம் சாவகாசமாய் நேரம் கிட்டினால்?!!

      Delete
    3. சார் மேகி எல்லாம் ரொம்பவே refreshing சார். நீங்க சும்மா பூந்து விளையாடி இருக்கீங்க. பல இடங்களில் சிரித்து விட்டேன். ரொம்ப casual ஆக ஃப்ரீ flowing writing.

      இந்த வேளையில் ஒரு வேண்டுகோள் சார் அந்த 3ஆவது மேகி கதையையும் சீக்கிரமே வெளியிட வேண்டுகிறேன்.

      இந்த கதைக்கு எனது மதிப்பெண் 100/10.

      Delete
  47. 10 புத்தகங்களும் அருமை சார்..
    அதுவும் மரண மண்டலம் மற்றும் உயிரை தேடி (கருப்பு & வெள்ளை மற்றும் கலர் ) 2 புத்தகத்தின் மேக்கிங் அட்டகாசம் சார்....ஆனால் ஒரு சிறு கோரிக்கை சார் , தயவுசெய்து இனிமேல் மெலிதான அட்டையை போடாதீர்கள் சார்...பல காலத்திற்க்கு சேர்த்துவைத்து , திரும்ப ...திரும்ப படிக்க போகும் புத்தகங்கள் சார் நம் லயன்&முத்து இதழ்கள்... அதற்க்காக ஹார்டுபவுண் அட்டைதான் வேண்டும் என்று சொல்லவில்லை.. 15-25₹ அதிகமானாலும் பரவாயில்லை சார் ...நாம் ரெகுலராக உபயோகிக்கும் அட்டையையாவது போடுங்கள் சார்..மேகி மற்றும் கொல்கத்தா இதழ்கள் அட்டைகள் படுமோசமாக உள்ளதுங்க சார்... .பார்ஷலில் இருந்து பிரிக்கும்போதே மேகியின் அட்டைப்படம் கிழிந்துவிட்டது சார்..

    ReplyDelete
  48. வந்து விட்டது எனக்கும் புத்தகம் வந்து விட்டது.... வெற்றி வெற்றி வெற்றி

    ReplyDelete
  49. இன்று சனிக்கிழமை பதிவுக்கிழமை சார்.🙏🙏🙏

    ReplyDelete
  50. நான் முகவரிடம்தான் வாங்குவதால் அ'யாம் (இன்னும்) வெயிட்டிங் ..

    ReplyDelete
  51. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  52. சார் குற்றநகரம் கல்கத்தா.....முதல் பக்கத்த புரட்டியதும் அந்த பிரம்மாண்ட மர அழகும்....அந்த வீடும் வானும் அழகை அள்ளிக் கொட்ட
    ...தொடரும் பக்கங்களை புரட்டினால் பக்கங்களை பார்த்தாலே போதும் போல எனும் ஓவியங்கள்....நிச்சயமா வரைந்ததில்லைன்னு மனம் ஆர்ப்பரிக்க அடுத்து அடுத்து எனப் பாயுது கதை...உயிருள்ள பசு....அந்த மாந்தர்கள் அட்டகாசம் சார்....இது வரை வந்த கதைகள்ல இவ்விதழ் போல ஏதுமில்லை....பத்தாது என்று இதுக்கு முன்னர் எடுத்த லக்கி லூக் ..சுவாரஷ்யமிலாதுதான் வாங்கினேன் இருக்கேன்னு....பாதி படித்தேன்...ஒவ்வோர் ஃப்ரேமும் சுவாரஸ்யத்தை தர நான் இவ்வுலகிலை இல்லை...என் வாழ்வின் சந்தோசப் பக்கங்களை இவற்றையளித்து நீங்களும் உயிரூட்டுகிறீர்கள் அன்று போலவே இன்னுமே...கல்கத்தாவோ வேற லெவல்...விதி தந்த இருளினூடே
    வெளிச்சமாய் போலீஸ்காரர்கள் வர வர போராடி நிறுத்தி விட்டேன்..பொறுமையா ரசியா மடையான்னு.....இரவு வந்து ரசித்துக் கொண்டே தொடர்கிறேன்....வேற லெவல் உணர்வு சார் இது....அருமை

    ReplyDelete
    Replies
    1. லக்கியைத் தொடர....வணக்கம் தல..நீங்க நல்லவர் நாலும் தெரிஞ்சவங்க....யுத்தம்னா பின்னிப்புடுவீங்கன்னு தெரியும்....என லக்கி புகழ...ஹஹஹா...சூப்பர் அழகா சண்டைய நிறுத்திப்புடலாமே...

      Delete
  53. அருமை பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  54. அட்டகாசமான இரு இதழ்கள்

    மேகி, குற்ற நகரம் கல்கத்தா

    இரண்டு அட்டகாசமான கதைகள்

    அதும் கி. நாவல் வேற லெவல் அதை படித்து முடித்ததும் இந்த பதிவு எழுதுகிறேன்.

    அப்படியே பறக்குது கதை முதலில் இருந்தே. தொடர் கொலைகள் நடக்க அதனை கண்டு பிடிக்க இங்கிலாந்தில் இருந்து வரும் ஒரு Rookie Inspector, அவர்கள் ஒரு குழுவை சந்தேகப் பட்டு தேடி பிடிக்க அதன் பின் சில உண்மைகள் வெளி வர....

    கடைசி 38 பக்கங்கள் பரபரப்பானவை ரொம்பவே அசத்தலான திரில்லர் படம் பார்ப்பது போல இருக்கிறது. அதுவும் அந்த கதாநாயகனின் நண்பர்கள் இருவரும் வேற லெவல். ரொம்பவே நெகிழ்ச்சியான ஒரு முடிவு.

    எனது மதிப்பெண் 1000/10.

    ReplyDelete
    Replies
    1. சார் ...ப்ளஸ் டூ தேர்வுகளுக்கு பேப்பர் திருத்தி மார்க் போடற வேலைக்கு நீங்க மட்டும் போனீங்கன்னா, எக்கச்சக்க மாணாக்கரின் வயிற்றிலே பால் வார்த்த மாதிரியிருக்கும் !

      Delete
    2. ஹிஹிஹி நன்றி சார்.

      Delete
  55. அடடே.குமார்சார் .அசத்தலான விமர்சனம்.குற்றநகரம் கல்கத்தா இப்பவே படிக்கத் தோணுதே.இன்னம் புத்தகம் வரவில்லை.குரியருக்காக வெய்ட்டிங்.கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  56. புத்தகம் வந்த சந்தோசத்தில் கடமையை மறந்துவிட்டீர்களே.இன்று பதிவு கிழமை .பதிவு போடலையே

    ReplyDelete
    Replies
    1. மறக்க மாட்டேன் சார். செய்யும் வேலைய எப்போதுமே சரியாக செய்வேன்.

      Delete
  57. மேலே Scroll பண்ணி பாருங்க ஜி.

    ReplyDelete
  58. காலைல 6.34 மணிக்கே பதிவுக்கு reminder போட்டுவிட்டார்.

    ReplyDelete
  59. எஸ்டியிலிருந்து அழைப்பு...இதோ வந்தாச்சு....நேற்றுதான் பணமனுப்பினேன்...அலுவலக நண்பர்களுக்கு நன்றிகள்....கவரை மட்டும் பிரிக்க..கண்ணாடிக் கவருக்குள் வெள்ளை பூத்த கண்கள்....அட்டன்னா இதான்...செம சார்....உள்ள போய்ட்டு வரேன் வேலை முடிஞ்சதும்

    ReplyDelete
  60. அந்த அட்டையின் மிருதுவான தன்மையும்....பச்சை நிற சிறுவனும்....பின்னட்டை மீனும்...கழுகோடு சிறுவனும்...இவற்றை இணைக்கும் வண்ணச் சேர்க்கையும்....அட்டையில் உள்ளே நெடுவாக்கில் உயிரைக் தேடி எழுத்தும்...எதைச் சொல்ல எதை விட ....பிரம்மாண்டம்....டஸ்ட பிரிக்க முன்னட்டையோ வேற லெவல்....சூப்பர் சார்...இதனை மிஞ்ச அட்டைகளும் உண்டோன்னு ஏலம் போட்ட படி உள்ளே பார்க்கப் பார்க்க கலர்ச் சுழல் உள்ளே கண்ணைப் பிடித்து இழுக்குது கை நீட்டி அட்டையை பிடித்த போதிலும்....வண்ணங்கள் பிரம்மாண்டத்தின் உச்சம் நண்பரே....வாழ்த்துகள் கலந்த நன்றிகள்...

    சார் இன்னோர் செட் கலர்லயும் வண்ணத்லயும் பார்சல்

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே...black & white லேது ; ரேஷன் பண்ணும் நிலவரத்துக்குப் போயாச்சு !

      கலரும் சீக்கிரமே அந்த நிலையை எட்டி விடும் போலும் !

      Delete
  61. உதய்...ரஃபீக்....லயன் டீம்...கலக்கிட்டீங்க நண்பர்களே....காலம் கடந்து நிற்கும் படைப்பிற்கு உங்க பங்களிப்பும் காலம் கடந்திருக்கும்

    ReplyDelete
  62. This comment has been removed by the author.

    ReplyDelete
  63. குற்ற நகரம் கல்கத்தா.முற்றிலும் மாறுபட்ட காலகட்டத்தில் வித்தியாசமான கதைக்களத்தில்மிகச்சிறந்த க்ரைம் கதை.கதை இறுதியில் செம விறுவிறுப்பு பரபர ட்விஸ்ட்.கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சார் உங்களுக்கும் புத்தகம் கிடைத்து விட்டதா அருமை அருமை

      Delete
  64. ... குற்ற நகரம் கல்கத்தா...
    1800ம் ஆண்டுகளின் காலகட்டத்தில் கல்கத்தா நகரில் நடக்கும் கதை.
    ஆலன் கத்திபேர்ட் கல்கத்தாவிற்கு வரும் புதிய இன்ஸ்பெக்டர்.
    திடீரென தடயம் ஏதுமின்றி காணாமல் போகும் இளம் பெண்களை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார்.
    அதற்கு துணையாக வரும், யானெஸ், டைகர் எனும் இருவரின் உதவியோடு மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முனைகிறார்.
    காணாமல் போன இளம் பெண்களை சடலமாக கண்டுபிடிப்பதுடன், அந்த கொலைகளின் பின்னுள்ள நபர்களை கண்டுபிடிக்கிறார்.
    இரத்தப்படலத்தில் வரும் கு க்ளக்ஸ் க்ளான் அமைப்பைப் போன்ற ஓர் அமைப்பு கல்கத்தாவில் செயல்படுவதை கண்டுபிடித்து அதன் தலைவனையும் கண்டுபிடிக்கிறார். மொத்த கூட்டமும் பிடி படுகிறது.
    விறுவிறுப்பான கதை, படங்கள். இந்தக் கதை வண்ணத்தில் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
    வாழ்த்துக்கள் சார்.
    (மிகவும் மெலிதான அட்டை சிறிது உறுத்தலே.)

    ReplyDelete
  65. 1. ஒண்ணாந்தேதி புத்தகவிழா வரவேற்பு.
    2. ஆகஸ்ட்ல டின்டினுக்கு துணையா யார் யார் வராங்க.
    3. போனெல்லி டெக்ஸ் 75 க்கு ஸ்பெசலா ஏதாவது விடறாங்களா. அதை அப்படி இங்கேயும் கொண்டாராமா?
    4. மினி காமிக்ஸை மாசம் ரெண்டுன்னு விடப் போறமா இல்லியா?
    5. எங்கே எப்போது பத்தி எங்கே எப்போ அப்டேட் வரும்.

    இப்படி பல கேள்விகளுக்கு விடை இருக்குமா இன்றைய்பதிவில்?

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு ஸ்வி கேட்டுபுட்டு, இனி எடி பதிவு போடுவாருங்கிறீங்க... ?!!! அவர் எஸ்கேப் தான்.... 🫣😁

      Delete
    2. ஏங்க அவரோட பேவரைட் டீம் இன்னிக்கு ஜெயிச்சிருக்கு. அதுக்கு ஏதாவது ஸ்பெசல் கேக்கலாமான்னு நினைச்சேன். சரி பரால்ல…அடுத்த வாரம் கேட்டுக்கலாம்னு விட்டுட்டேன்.

      Delete
    3. தொங்கிக் கிடக்கிற நாக்காரையும் ; தொங்கலில் கிடக்கின்ற மே இதழ்களையும் கரை சேர்த்துக்குறேன் சாரே ; இந்த வாரத்துக்கு ஸ்டீலின் கவியரங்கம் உங்களை entertain பண்ணும் !

      ஸ்டீல் : பொறுத்தது போதும் - பொங்கி எழுங்க !

      Delete
    4. ஸ்டீல் செம்ம செம்ம ROFL...

      Delete
    5. நாங்கள்ளாம் பாவம் இல்லியா சார்..
      கொஞ்சம கருணை காட்டக் கூடாதா?...

      Delete
    6. ஸ்டீல் நம்மளோட வெப்பன்கிறதை எடிட்டர் மறந்துட்டாரு. இன்னிக்கு பதிவு வரலைன்னா ஸ்டீலை சிவகாசிக்கு போன் போட்டு பாட்டா படிக்க சொல்லிடலாம். காதுல தக்காளிச் சட்னியா இல்லே பதிவாங்கறதை ஆசிரியரே முடிவு பண்ணிக்கட்டும்.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. பாட்டை, போன்ல பாடுவதோடு நிறுத்தாமல், எடிட்டருக்கு மெயில் பண்ணிடணும். அப்ப தான் பதிவு சீக்கிரம் வரும்
      (எடிட்டர் மைண்ட் வாய்ஸ்: என்னா ஒரு கொலைவெறி.)

      Delete
  66. April 25 book பண்ணினேன்... இன்னும் எனக்கு புத்தகங்கள் வந்து சேர வில்லை

    ReplyDelete
    Replies
    1. நண்பரே,இதே பெயரில் ஆர்டர் செய்திருந்தால் தவிர சரி பார்க்க வழி ஏது ? விபரங்களுடன் ஒரு மின்னஞ்சலை தட்டி விட்டால் தேவலாம் என்பேன் !

      Delete
  67. நல்லது... மின்னஞ்சல் அனுப்புகிறேன்

    ReplyDelete
  68. ஆகஸ்டில் டின் டின்னுக்கு துணையா யாரு வராங்க?.செரிப்ஜி ஆகஸட்டுக்கு நீங் வரீங்களா மற்றபடி செரிப் ஜியின் 5கேள்விகளையும் வழி மொழிகிறேன்.கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. இல்லீங்க ஜி. 2024 தான் அடுத்து

      Delete
  69. சார்லி ஸ்பெஷல் - ஒரு சாதுவும்... ஒரு கானகமும்...

    இயற்கையை விரும்பும் ஓவியர், தனிமையில் தன்னுடைய நாட்களை கழித்துக் கொண்டிருக்கிறார்.

    அவருடைய நிலத்தை அபகரிக்கும் நோக்கமுடைய கயவர்களால் வில்லங்கம் வருகிறது. நிலத்தை அபகரிக்க நினைப்பவர்கள் நேரடியாக தங்களுடைய முயற்சி தோல்வியுற்றதால், மிஸ்.கிட்டி பர்க்கின் பிராப்ளம் பிக்ஸர்ஸ் நிறுவனத்தினை பணிக்கு அமர்த்துகிறார்கள். நிலத்தின் உரிமையாளரோ சார்லியின டிரபிள் ஷூட்டர்ஸ் நிறுவனத்தினை பணிக்கு அமர்த்துகிறார்.

    இருமுனை போட்டியின் முடிவில் வெல்பவர் யார் என்று பார்த்தால், பெரும்பாலும் சார்லியின் பக்கம் சரிவாகவே இருக்கிறது.

    போக்கிரிகளை பிடிக்க வாய்ப்பு கிடைத்த போது அடி வாங்கி கோட்டை விடுகிறார். நிலத்தின் உரிமையாளரான ஒவியரோ பரிதாபங்களை ஒட்டுமொத்தமாய் அள்ளிக் கொள்கிறார்.

    ஓவியரின் வீட்டை எதிராளிகள் எரித்து விட, சார்லியின் உதவியுடன் உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காண்கிறார் ஓவியர். அவர்களுக்கு பாடம் புகட்ட தானே களமிறங்கி தடாலடியாக முடிவெடுக்கிறார் அவர்.

    அது அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியமாக இருக்கிறது. இதுவரையில் ஓவியர், என்று விளித்த மிஸ்டர்.வில்லாஸன் என்ற அந்த பண்ணை வீட்டுக்காரர் ஒரு முன்னாள் கடற்படை வீரரும் கூட என்பது அவருடைய இறுதிக்கட்ட செயல்களில் தெரிகிறது.

    ரேட்டிங்: 8/10

    ReplyDelete
  70. உங்கள் புதிய பதிவுக்காக காத்திருக்கிறோம் எடிட்டர் ஜி

    ReplyDelete
  71. ஐயா பதிவு இன்னும் வரவில்லை 😁

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க கை கால் எதுவும் ஓடவில்லை சார். பார்த்து பண்ணுங்க...

      Delete
  72. **** எந்தையின் கதை *****

    சமீபத்தில் வெளியான மிகச் சிறந்த படைப்புகளுள் ஒன்று!!

    என்னவொரு நேர்த்தியான பாத்திரப் படைப்பு!!! குறிப்பாய் அந்த 'அமெரிக்க அசகாயர்' - ப்பா!!

    'விரியனின் விரோதி'க்குப் பிறகு வியக்கவைத்த ஸ்பின்ஆஃப் இது!!

    10/10

    ReplyDelete
  73. புத்தகத் திருவிழா புத்தகங்களை தூத்துக்குடிக்கு அனுப்புவதற்கு பதில் பெங்களூருக்கு மறந்து போய் அனுப்பி விட்டார்கள். வாரயிறுதியில் படிக்க ஒன்றும் இல்லை. அதனால் ஒரு புதிய பதிவை போடுங்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. நம்ம PfBக்கு நேர்ந்த அநீதிக்கு பிரதிபலனா ஒரு பெனால்டி பதிவு போட்டுடுங்க எடிட்டர் சார்!
      அப்படியே கை-கால்களெல்லாம் வெலவெலத்துப்போய் கிடக்கும் நம்ம KSக்காண்டியும்!

      Delete
    2. EV ஹிஹிஹி ஆமா ஆமா...

      Delete
  74. அப்போ உங்களுக்காக எதுவும் வேண்டாமா, ஈ.வி.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி பக்கத்து இலைக்குப் பாயாசம்ங்க பத்து சார்!

      Delete
  75. புத்தகங்கள் இன்னும் வரவில்லை... St courier சர்வீஸ் மிகவும் மோசமாக உள்ளது சென்னையில். நீங்கள் கெஞ்சம் விசாரிக்க வேண்டும்...

    ReplyDelete
  76. டைகர் .ஹென்றி உருவாக்கும் சாதனங்களை கொண்டு டைகர் கடைசி நிமிடத்தில் சாகசங்கள்புரிவது ரசிக்க வைக்கிறது.

    ReplyDelete
  77. சிறுத்தைமனிதன். ஸ்பைடர்மேன் உருவானது போன்றே சிறுத்தை மனிதன் உருவாவதும் அமைக்கப்பட்டிருந்தாலும் தன்னை கேலி செய்யும் சக மாணவர்களிடம் தனது சக்தியை வெளிப்படுத்தாமல்சிறுத்தைமனிதன் அடக்கி வாசிப்பதால் அவர்கள் திருந்துவதில்வித்தியாசம்காட்டப்பட்டுள்ளது.சிறுவர்களுக்கானஇந்தப் புத்தகங்களில் நமக்கானரசனையைத எதிர்பார்க்கவேண்டாம் என்று ஆசிரியர்கூறியிருந்தாலும் நாமும் ரசிக்கும் வகையிலேயே மூன்று புத்தகங்களும் அமைந்துள்ளன . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. ராஜசேகர் சார் அழகான விமர்சனம். நானும் சிறுத்தை மனிதன் படித்து விட்டேன். நீங்கள் சொன்னது போல ஸ்பைடர் மேன் கதை தான். நன்றாகவே உள்ளது எனக்கு பிடித்தும் இருந்தது. அடுத்த கதைக்கு வெயிட்டிங்...

      Delete
  78. K.s.சார் நான் லக்கி முடிச்சிட்டு
    அடுத்து மேகி ஆரம்பிச்சிருக்கேன்.நீங்க?

    ReplyDelete
    Replies
    1. நான் சிறுத்தை, மேகி, கி. நா முடித்து விட்டேன். இப்போது மந்திர மண்டலம்...

      Delete
  79. கல்லானாலும் கணவன்...!

    ட்ரபுள் ஷூட்டர் நிறுவனத்தின் அடுத்த சாகசம்...

    2ம திருமணம் செய்த டெல்பர்ட் ரிட்சிக்கும், அவருடைய ஊதாரி மனைவி இரினாவுக்கும் ஏழாம் பொருத்தம். (இரினா என்றாலே வில்லங்கமானவர்கள் தான் போலும்).

    கதையின் துவக்கத்தில் மயாமிக்கு சென்ற தன்னுடைய மனைவி இரினா காணாமல் போய்விட்டதாக சொல்லி அவரை கண்டுபிடிக்க சொல்கிறார் டெல்பர்ட். முதல் மனைவியை சொத்துக்காக மணந்து கொண்டதாக அவர் மேல் பழி ஏற்கனவே விழுந்துள்ளது. அந்த முதல் மனைவியின் மர்மமான மரணத்திற்கு டெல்பர்ட் காரணமாக இருக்கலாம் என்று வதந்திகளும் இருக்கின்றன. இந்த நிலையில் இரண்டாவதாக நடந்து கொண்ட இரினாவும் காணாமல் போய் விட டெல்பர்ட் மேல் மீண்டும் சந்தேகங்கள் எழுகின்றன.

    எனவே சார்லியை அணுகி தன்னால் குற்றவாளியாக கருதப்படும் உணர்வை மேலும் ஒரு முறை தாங்க இயலாது என்று கூறி, தன்னுடைய இரண்டாம் மனைவி உயிருடன் இருப்பதை கண்டறிய சொல்லி கேட்கிறார்.


    பணத்துக்காகவும் சூதாட்டத்திலும் சிகை அலங்காரத்திலும் நாட்டம் கொண்டிருக்கும் இரிணாவோ ஐரோப்பாவில் தன்னுடைய காதலன் மார்ஸல் உடன் சுற்றிக் கொண்டிருக்கிறாள். தான் காணாமல் போய்விட்டதற்கு, தன்னுடைய கணவன் டெல்பர்ட் சந்தேகத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்று அவளுக்குள் ஒரு குரோதம். அதை தெரிந்து கொள்ள அவள் கையாளும் வழிமுறை, சார்லியினால் கண்டுபிடிக்கப்படுகிறது.

    வெகுஜன வாழ்க்கையில் சாதாரணமாக நிகழும் சிறு சம்பவங்களின் கோர்வை தான் இந்த கதை. மனைவியை இழந்த ஒரு மனிதர் மீண்டும் இரண்டாவது மனைவியிடம் ஏமாந்து போவது சோகம்!

    ReplyDelete
  80. இந்த கதையில் சார்லியுன் சமயோஜிதமும், ஹீரோயிசமும் நன்றாக இருக்கும் இரீனா உயிரோடு இருப்பதை கண்டுபிடித்தாலும், அதை போட்டோ எடுத்து நிரூபிக்க முடியாமல் திண்டாடுகிறார். இறுதியில் அவர்களிடமே அடி வாங்கி போலீசில் பெயருடன் புகார் செய்ய வைத்து, கடைசியாக வாங்கிய அடியை திருப்பி கொடுக்கிறார். அதுதான் நான் மிகவும் ரசித்த கட்டம்...

    வாட் எ மேன் மொமண்ட்❤️

    ReplyDelete