Powered By Blogger

Saturday, March 21, 2020

தீர்மானமே தீர்வு !

நண்பர்களே,

வணக்கம். கொரோனா எனும் இந்த கொடுங்கோலன் தலைவிரித்தாடும் இந்த நாட்களில், தற்காலிகமாய் காமிக்ஸ் அனுப்பும் வாடிக்கைகளுக்கொரு break தாருங்களேன் என்று சமூக அக்கறையின் பேரில் நண்பர்கள் கோரிக்கை வைத்துள்ளனர் ! நிஜமாக சிந்திக்கச் செய்திடும் அபிப்பிராயம் அது !! ஆனால் வாசகர்களிடம் பல லட்சங்களை முன்பணமாக வாங்கி, அதனை கதைகளிலும், காகிதத்திலும் இருப்பாக்கி வைத்திருக்கும் நிலையில் - நானாய் எடுக்கும் ஒரு தீர்மானத்தை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் என்பது anybody 's guess ! இங்கே வருகை தரும் நண்பர்களையும், அவர்களது கனிவான அணுகுமுறைகளையும்  தாண்டி, வாசகர்களின் கோப முகங்களையும் ரெகுலராய்ப் பார்த்திடும் துரதிர்ஷ்டம் உண்டு எங்களுக்கு ! ஒரு கூரியர் கிடைக்காது போனால் கூட "consumer கோர்ட்டுக்குப் போகப் போகிறேன் !" என்று கண்சிவப்போர் கணிசம் !  ஒரேயொரு புக் மாறிப் போனாலும், போனில் நம்மவர்களைக் காட்டுக்கத்தலோடு காய்ச்சி எடுப்போரும் எக்கச்சக்கம் ! So ஒரு தற்காலிக கடைமூடல் குறித்து நானாய் ஒரு முடிவெடுத்து விட்டு, நம்மாட்கள் நித்தமும் சாத்து வாங்கிடக் காரணமாகிட விரும்பிடவில்லை ! இம்மாத இதழ்கள் ஏற்கனவே அச்சாகி இருக்கும் நிலையில் அவற்றை அடுத்த வாரத்தில் அனுப்பிடுவோம் ! தொடரும் மாதங்களை அணுகிடுவது குறித்து அரசின் வழிகாட்டல்களை பின்தொடருவோம் என்பதே இந்த நொடியில் எனக்குள் தோன்றும் எண்ணம் ! ஆனால் வாசகப் பெரும்பான்மையின் தீர்வு / தீர்மானம் என்னவோ, அதுவே நமதாகவும் இருந்திடும் ! நிச்சயமாய் நாமிப்போது சந்தித்திருப்பது ஒரு சோப்ளாங்கி வில்லனை அல்ல எனும் போது - இயன்ற முன்ஜாக்கிரதைகள் சகலமும் உதவிடும் என்பதில் ஐயமில்லை !  

Given a choice - நிலவரம் சீராகும் வரை அனைத்தையும் hold-ல் போடுவது சரியே என்றே தோன்றுகிறது ; ஆனால் அந்த choice என் கையில் இருப்பதாய் சூழல் இல்லையே என்பதே எனது சிக்கல் ! உங்களின் தீர்ப்பே இப்போதைய தீர்வு guys ! Please do let me know if you are o.k with us announcing a temporary halt to operations ! 

156 comments:

 1. Please do sir..its the need of the hour..the virus lives for 3 days in cardboard and paper

  ReplyDelete
  Replies
  1. even i am scared to get this month's delivery..with the pathetic amount of testing the govt doing we never know whether community transmission has started..its high time to stay indoors and avoid outside objects and people

   Delete
  2. ///.its high time to stay indoors and avoid outside objects and people///

   True true true!!

   Delete
  3. True Sir please hold the books for another 3 months as suggested by our comic lover ராகவன். Please

   Delete
  4. லயன் நிர்வாகம் மற்றும் பணியாளர் நலனும் யோசிக்கையில் அரசின் வழிகாட்டுதலை கடைபிடிப்பதே சரியான செயல் சார்.. கொரோனா கவனம்..

   Delete
 2. // நிலவரம் சீராகும் வரை அனைத்தையும் hold-ல் போடுவது சரியே என்றே தோன்றுகிறது //

  +1

  I support this

  ReplyDelete
  Replies
  1. நம்மால் முடிந்த அளவு இந்த நோய் பரவாமல் இருக்க இது போன்ற சில தியாகங்களைச் செய்யலாம்.

   நமது காமிக்ஸ் காதலை சில காலம் தள்ளி வைத்து இந்த கொரானாவை அழிக்க உதவுவோமே நண்பர்களே.

   Delete
  2. ///
   நமது காமிக்ஸ் காதலை சில காலம் தள்ளி வைத்து இந்த கொரானாவை அழிக்க உதவுவோமே நண்பர்களே.///+1

   Delete
  3. // நிலவரம் சீராகும் வரை அனைத்தையும் hold-ல் போடுவது சரியே என்றே தோன்றுகிறது //

   +1

   Me too support this

   Delete
  4. +100
   எனது ஆதரவும்

   Delete
  5. +1

   நானும் ஆதரவு தருகிறேன்.

   Delete
 3. // நிலவரம் சீராகும் வரை அனைத்தையும் hold-ல் போடுவது சரியே என்றே தோன்றுகிறது //
  +1

  ReplyDelete
 4. உங்களுக்கும் எங்களுக்கும் எது நல்லது எது அத்யாவசியம் என உங்களுக்கு தெரியும்.அரசோடு இணைந்து நாமும் கொரோனாவுக்கு எதிராக கரம்கொடுப்போம் சார்.. எனது ஆதரவு உண்டு...

  ReplyDelete
  Replies
  1. // அரசோடு இணைந்து நாமும் கொரோனாவுக்கு எதிராக கரம்கொடுப்போம் சார். //


   அது. சரியாக சொன்னீர்கள் பழனி

   Delete
  2. அரசோடும் ஆசிரியரோடும் என சேத்துக்கங்க நண்பரே.....

   Delete
 5. நிலமை சகஜநிலைக்கு திரும்பியதும் #GOBACK CORONA SPECIAL ஒன்று போட்டுவிடுவோம் சார்.....

  ReplyDelete
 6. எப்படியிருந்தாலும் எனக்கு ஓ.கே.தான்.

  💐👍

  ReplyDelete
 7. ஹைய்யா புதிய பதிவு.....

  ReplyDelete
 8. ///நிலவரம் சீராகும் வரை அனைத்தையும் hold-ல் போடுவது சரியே என்றே தோன்றுகிறது ; ///

  +1

  ReplyDelete
 9. மார்ச் முடிய இன்னும் 10 நாட்கள் இருக்கும் நிலையில் வரும் நாட்களில் சகஜ நிலை திரும்பும் என்று நம்புவோமாக,நிலைமையை பொறுத்து சற்றே தாமதமாக கூட அனுப்பலாம் சார்......
  ஏப்ரலில் ஏப்ரல் இதழ்கள்.......

  ReplyDelete
  Replies
  1. ஆம் சரியாகச் சொன்னீர்கள் ரவி. மார்ச்31ல் அரசின் வழிகாட்டுதலில் நடப்போம். நிலைமை கட்டுக்குள் இருந்தால் ஏப்ரல் முதல் வாரத்தில் ஏப்ரல் புத்தகங்கள்!

   Delete
 10. வணக்கம் நண்பர்களே!

  ///நிலவரம் சீராகும் வரை அனைத்தையும் hold-ல் போடுவது சரியே என்றே தோன்றுகிறது ; ///

  சரியான நேரத்தில் சரியான முடிவு!

  ReplyDelete
 11. ***நிலவரம் சீராகும் வரை அனைத்தையும் hold-ல் போடுவது சரியே என்றே தோன்றுகிறது***

  ஆமோதிக்கிறேன்
  &
  புக் அனுப்பவில்லை என்றால் என்ன சார் ??
  அப்படியே பொறுமையாக மூன்று நாட்களுக்கு ஒன்றாக சி.சி.வயதோ பெரிய வயதோ பதிவு வந்தால் புத்தகங்கள் வராத குறை தெரியாதல்லவா..

  ReplyDelete
  Replies
  1. ////அப்படியே பொறுமையாக மூன்று நாட்களுக்கு ஒன்றாக சி.சி.வயதோ பெரிய வயதோ பதிவு வந்தால் புத்தகங்கள் வராத குறை தெரியாதல்லவா..///

   சூப்பர் சிவா!!

   இத.. இத.. இதத்தான் எதிர்பார்த்தேன்!!

   Delete
  2. //
   மூன்று நாட்களுக்கு ஒன்றாக சி.சி.வயதோ பெரிய வயதோ பதிவு வந்தால் புத்தகங்கள் வராத குறை தெரியாதல்லவா..
   //

   சிவா @ இது நீங்கள் எழுதிய மாதிரி தெரியவில்லை :-) தலைவர் சொல்லி போட்ட பின்னூட்டம் மாதிரி தெரியுது :-)

   Delete
  3. ///அப்படியே பொறுமையாக மூன்று நாட்களுக்கு ஒன்றாக சி.சி.வயதோ பெரிய வயதோ பதிவு வந்தால் புத்தகங்கள் வராத குறை தெரியாதல்லவா..///- அருமையான ஐடியா! நன்று சொன்னீர்!

   Delete
  4. இந்த ஐடியா ஓகே தான் . எனக்கு பதிவு வரவேண்டும் அவ்வளவு தான் சிங்கத்தின் சிறு வயதில் வாழ்க வாழ்க

   Delete
 12. நீங்கள் புத்தகத்தை 3 மாதம் கழித்து கூட அனுப்புங்கள் சார். ஆனால் ஒரே ஒரு condition வாரா வாரம் பதிவு மட்டும் தவறாமல் வர வேண்டும்.

  ReplyDelete
 13. இதுபோன்ற கடினமான தருணத்தில் அரசாங்கத்திற்கு உதவுவது நமது கடமை மற்றும் நமது பொறுப்பு.

  ReplyDelete
 14. வீட்டுக்கு வெளியே வராதீங்க கும்பல் கூடாதீங்க இங்கே இத்தனை பேருக்கு பாதிப்பு இங்கே இத்தனை பேர் சாவுனு பல செய்திகள் வயிற்றில் புளியைக் கரைப்பதென்னவோ உண்மைதான்! இதையெல்லாம் மறக்கடிக்கும் மருந்தாக (சரக்காக) பலபேருக்கு இருப்பது காமிக்ஸ் மட்டும்தான்!நாளைக்கு என்னாகும் என்று யாருக்கும் தெரியாத நிலையில் இருந்து கொண்டிருக்கும் நேரத்தில் எதற்கு இந்த சின்னச்சின்ன சந்தோஷத்திற்கும் தடை போடுவானேன்! இந்த மாதத்திலேயே வெளியிடுவதற்குப் பதில் ஏப்ரல் பத்து தேதிக்கு வருகிற மாதிரி பார்த்துக் கொள்ளலாம் அதற்குள் ஒரளவுக்கு நிலைமையும் கட்டுக்குள் வந்திடும் என்று நினைக்கிறேன் இது எனது தனிப்பட்ட கருத்து! மேற்கொண்டு என்ன முடிவெடுத்தாலும் எனது ஆதரவு எப்போதும் உண்டு சார்.

  ReplyDelete
  Replies
  1. //இதையெல்லாம் மறக்கடிக்கும் மருந்தாக பலபேருக்கு இருப்பது காமிக்ஸ் மட்டும்தான்//

   //!ஏப்ரல் பத்து தேதிக்கு வருகிற மாதிரி பார்த்துக் கொள்ளலாம் அதற்குள் ஒரளவுக்கு நிலைமையும் கட்டுக்குள் வந்திடும்///-

   ---உண்மை கலீல் ஜி. பெரும்பாலான நண்பர்கள் கருத்தை பிரதிபலிக்கும் எண்ணங்கள். இந்த கடினமான காலத்தில் காமிக்ஸ்ஸே அருமருந்து.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. கலீல் மற்றும் விஜயராகவன் @ உண்மை. ஆனால் இது சமுக பொறுப்பை உணர்ந்து கடமையாற்ற வேண்டிய நேரம். நமது காமிக்ஸ் காதலனுடன் தொடர்ந்து வாழ இந்த காமிக்ஸ் காதலை சில மாதங்கள் தள்ளி வைப்போம் நண்பர்களே.

   ஒரு விஷயம் செய்யாமல் இருந்தால் நன்மை பயக்கும் என்று தெரிந்தபின் அதனை செய்யாமல் இருப்போமே :).

   Delete
  5. ///
   ஒரு விஷயம் செய்யாமல் இருந்தால் நன்மை பயக்கும் என்று தெரிந்தபின் அதனை செய்யாமல் இருப்போமே :).///---நிச்சயமாக! சுவர் இருந்தால் தான் சித்திரமே வரைய முடியுமாம்.

   Delete
  6. ///நமது காமிக்ஸ் காதலனுடன் தொடர்ந்து வாழ இந்த காமிக்ஸ் காதலை சில மாதங்கள் தள்ளி வைப்போம்///---நிதர்சனம்!

   Delete
  7. காமிக்ஸை சில மாதங்கள் Hold la போட்டு வைக்கலாம்னு கருத்து சொல்பவர்கள். இதே அடுத்த மாதம் புத்தகங்கள் வெளிவந்தால் பிரிக்காம பார்க்காம படிக்காம இருந்து விடுவார்களா ஜி? 😜

   Delete
  8. Kaleelji - please be sensitive. Corona cannot be controlled. No government can control it. It is a matter of time before it affects more population. The only way to minimize spread is by not moving objects and people from place to place.

   Friends,

   Please do not be under the wrong opinion that things will be contained by 31st March. It is currently doubling every 5 days!!

   Delete
 15. இனிவரும் மாதங்களைப் பற்றி சற்று சாவகாசமாகவே முடிவெடுப்போம்.. ஆனால் ஏற்கனவே பிரின்ட்டாகி ரெடியாக இருக்கும் புத்தகங்களை என்ன செய்யலாம்?
  அதுபற்றிய உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள் நண்பர்களே!

  ReplyDelete
  Replies
  1. இந்தியா கொரனா வைரஸின் இரண்டாம் நிலையில் உள்ளது... இது மிக முக்கியமான தருணம் நண்பர்களே. எனவே ரெடியான புத்தகங்கள் என்றாலும் இப்போது வேண்டாம் சார்.

   Delete
  2. ///இந்தியா கொரனா வைரஸின் இரண்டாம் நிலையில் உள்ளது... இது மிக முக்கியமான தருணம் நண்பர்களே///---மிக மிக முக்கியமான நேரம். பாதுகாப்புக்கே இப்போது கவனம் தருவோம்.

   Delete
  3. நிலைமை சரியான பின்பே அனுப்பலாம்.. 💪🏼💪🏼💪🏼

   Delete
  4. // ஏற்கனவே பிரின்ட்டாகி ரெடியாக இருக்கும் புத்தகங்களை என்ன செய்யலாம்? //
   இரண்டு வழிகள் உண்டு, உடனடியாக இப்போதே அனுப்பி விடலாம்......
   அடுத்து பொறுமையாக காத்திருந்து நிலைமை சீரான பிறகு அனுப்பலாம்...

   Delete
  5. // மிக மிக முக்கியமான நேரம். பாதுகாப்புக்கே இப்போது கவனம் தருவோம். //

   கரெக்ட்.

   Delete
  6. மெதுவாக 3 மாதங்கள் கழித்து அனுப்புங்கள் சார். பிரிண்ட் ஆன புத்தகங்களையும் சேர்த்து.

   Delete
  7. // மிக மிக முக்கியமான நேரம். பாதுகாப்புக்கே இப்போது கவனம் தருவோம். //

   ஆம்.

   Delete
 16. ஹோல்டு செய்து அனுப்பலாம் சார். பல கைகள் மாறி வரும் நிலையில் வீட்டிற்குள் கிருமிகள் வரும் அபாயம் உண்டு. பெரும்பான்மை கருத்து என்ன என்று பார்ப்போம்.

  ReplyDelete
 17. ஆணியே பி... வேணாம்.

  ReplyDelete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. அதுக்கு பதிலா பதிவா போட்டு தள்ளுங்க...

  ReplyDelete
 20. விஜயன் சார், நீங்கள் அந்த அந்த மாத புத்தகங்களை தயார் (அச்சுக்கு அனுப்பும் வேலையை தவிர) செய்வதை தள்ளி போடாதீர்கள் :-) புத்தகங்கள் வெளிஈட்டை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக இருந்தால் வாரம் இரண்டு பதிவுகளை எழுதுங்கள்!! நீங்க வழக்கம் போல் காமிக்ஸ் உடன் தொடர்பில் இருந்தால் உங்கள் நலத்திற்கு நலம் என்பதால் இந்த கோரிக்கைகள்!

  ReplyDelete
  Replies
  1. // புத்தகங்கள் வெளிஈட்டை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக இருந்தால் வாரம் இரண்டு பதிவுகளை எழுதுங்கள்!! // அதே அதே

   Delete
 21. Flash news; எனக்கு ஒரு பார்சல் அனுப்ப எனது அண்ணன் கொரியர் (professional) அனுப்ப தொடர்பு கொண்ட போது பெங்களூர் மற்றும் பிற மாநிலங்களுக்கு கொரியர்கள் அனுப்புவது இல்லை என சொல்லி விட்டார்கள். இதுதான் மற்ற கொரியர்களின் நிலைப்பாடாக இருக்கும் என நினைக்கிறேன்.

  கூடுதல் தகவல்: தமிழக அரசு கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக எல்லைகளை மூடிவிட்டதாக கேள்விப்பட்டேன்.

  ReplyDelete
 22. அனைத்தும் சரியான பின்பு மொத்தமாக அல்லது 15 நாட்களுக்கு ஒரு பார்சலாக அனுப்பிடலாம்..

  ReplyDelete
 23. பிரச்னைகள் எல்லாம் முடிந்த பின்னர், புத்தகங்களை அனுப்பலாம் சார். எனக்கு முழுமையான சம்மதம்.அது 1 மாதமோ, 3 மாதமோ எதுவாக இருந்தாலும் ஓகே.

  இது ஒரு தேசியப் பேரிடர் சூழல் என்பதை உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்போம்.

  ReplyDelete
  Replies
  1. // இது ஒரு தேசியப் பேரிடர் சூழல் என்பதை உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்போம். //

   உண்மை.

   Delete
  2. நிச்சயமா...நண்பரே...

   Delete
 24. ஒரு வழியா பரணியில இருக்கர புக்க கீழே இறக்க டைம் வந்துருச்சு....

  ReplyDelete
  Replies
  1. 'புலன் விசாரணை'யை நாலு தபா படிச்சுடுங்க பழனி!
   படிச்சுட்டு எங்களுக்கும் கதை சொல்லுங்க!

   Delete
  2. அவ்வளவு தான் பழனி .

   Delete
  3. புலன் விசாரணை பார்ட் 1or2 எது வேணும் ஈவி அவர்களே...?

   Delete
  4. கூடவே XIII THE HISTORY கூட இருக்கு எது வேணும் சொல்லுங்க...

   Delete
  5. எதையாவது சொல்லுங்க பழனி.. கதை கேட்கறதுன்னு ஆகிப்போச்சு.. ஆலையில ஓடுற கரும்புல அடிக்கரும்பென்ன - நுணிக்கரும்பென்ன?!! ;)

   Delete
 25. கொஞ்ச நாளைக்கு புக்கு கிடைக்கலேன்னா கூட பரவாயில்லை. ஆனா புக்குக் கிடைக்கலைன்ற விரக்தில எங்கே 'சூ.ஹூ.சூ.ஸ்'ஜ படிக்க ஆரம்பிச்சுடுவேனோன்னுதான் பயமா இருக்கு!
  அதுக்கு பேசாம கொரோனாவையே தேடிப்பிடிச்சு வாயில போட்டு மென்னு முழுங்கிடலாம்! :D

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் ஆ அது நானும் வெகு நேரமாக யோசித்து கொண்டே இருந்தேன் என்ன இது என்று

   Delete
  2. கொரனோவிட ஸ்பைடர் மோதுர

   Delete
 26. எது எப்படியோ, தினமும் வேலைக்கு போகத் தான் போறோம், கடையில் பொருட்கள் வாங்கத்தான் போறோம், விடுமுறையும் இல்லை.. பொழுது போக்கு அருமருந்து புத்தகங்களும் இல்லையா? So Sad..

  ReplyDelete
  Replies
  1. இல்லை சந்தோஷ் இன்னும் கொஞ்ச நாட்களில் நிலமை தலைகீழாக மாறும். Better safe than sorry

   Delete
  2. பெயரில் சந்தோஷம் வைத்து கொண்டு ஏன் sad Ji.

   Delete
 27. கொரோனா அடுத்த மாத காமிக்ஸுக்கு தந்த ஆடி மாசமாக நினைந்து கொள்கிறேன்.

  என்றைக்கு இருந்தாலும் என் வீட்டுக்கு வந்துசேரும்.

  ReplyDelete
 28. ஆடி மாசமா ஹிஹி....

  ReplyDelete
 29. நிலைமை சரியானவுடன் தொடர்ந்து செயலாற்றலாம்.,தற்போது கொரானா வில்லனை விரட்டுவோம்.,நண்பர்களே விழிப்புடன் இருங்கள்.,நலமுடன் வாழ்க..

  ReplyDelete
 30. Safety first!
  Comics next.
  அரசு மற்றும் ஆசிரியருக்கு உறுதுணையாக இருக்கலாம்.

  ReplyDelete
 31. வாரம் ஒரு புதிய பதிவு.ஏகப்பட்ட வருகிறது விளம்பரம் இது எப்படி இருக்கு?

  ReplyDelete
  Replies
  1. இதை விட வேறு என்ன கேட்க போகிறோம்.

   Delete
 32. இந்த ஒரு பதிவுக்காக மட்டும் மௌன வாசகர்கள் தங்களது மௌனத்தை கலைத்து தங்கள் எண்ணங்களை பதிவிடலாமே? ஆசிரியர் ஒரு சரியான தீர்மானத்தை எடுக்க உதவும் நண்பர்களே.

  ReplyDelete
 33. Replies
  1. அப்படி சொல்லுங்கள் சத்யா

   Delete
 34. நிலவரம் கட்டுக்குள் வருவது, 10 நாட்களில் முடியாத ஒன்று, ஏப்ரல் மாதத்தில் தெரியும், நமது graph ஏற்றத்திலா இல்லை இறக்கத்திலா என்று, so, we can hold until April atleast!!

  ReplyDelete
 35. Replies
  1. ஸ்டீல் வரவர பதிவிட நேரம் இல்லை போல இருக்கு. ரொம்ப பிஸி யா

   Delete
  2. செல்லுலார் பிரச்சினை நண்பர்

   Delete
  3. பையனை பார்க்கிறதுல பிஸின்னு சொல்லுலே :-)

   Delete
 36. Replies
  1. ஒரு கை பாக்க போறேன்...எனக்கு இந்த வாரமே அனுப்புங்க சார்னு பணிவா கேட்கிறேன்

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 37. நிறைய அறிவிப்புகள் பென்டிங்கில் உள்ளது காலியாக உள்ள ஸ்லாட்டுகளுக்கு புத்தகங்கள் அறிவிப்பு என பதிவு மேல் பதிவு போட்டுத்தாக்குங்கள் அதுவே எங்களுக்கு ஜாலியாக இருக்கும் அதுவும் உங்கள் உடல்நிலை பொறுத்தே பதிவுகளின் எண்ணிக்கை இருந்தால் நலம்

  ReplyDelete
  Replies
  1. அருமையாக சொன்னீர்கள் சத்யா பதிவு இடுங்கள் உங்கள் உடல் நிலை பொறுத்தே . Be safe Sir

   Delete
 38. இத்தாலிக்காரர்கள் பிரச்சினையின் பரிமாணத்தை உணராத அறியாமையால் செய்த பிழையினை நாமும் செய்யவேண்டாம்..

  சார்! 3 மாதங்கள் புத்தகம் அனுப்பாமல் இருக்கவேண்டியதன் அவசியத்தை ஏஜன்டுகளுக்கு எடுத்து சொல்லுங்கள்..

  சந்தாதாரர்கள் புரிந்து கொள்வார்கள்..புரிந்து கொள்ளத்தான் வேண்டும்...அவர்களது குடும்ப நன்மைக்காக எடுக்கப்படும் முடிவு..

  ...உங்கள் தொடர் பதிவுகள் நண்பர்களை கட்டுக்குள் வைக்கும்..

  நெடுங்காலமாக பகிர்ந்து கொள்ள நினைத்த விஷயங்களை பற்றி எழுதுங்கள்...

  சமீபத்திய,பழைய காமிக்ஸ்கள் பற்றிய தமது எண்ணங்களை நண்பர்களும் பகிர்ந்து தளத்தை செயல்பாட்டில் வைத்திருக்கலாம்..

  ராகவன்ஜியின் அக்கறை பாராட்டுதலுக்குரியது....

  எச்சரிக்கையாய் இருக்கவேண்டிய தருணம் இது!!!!

  ReplyDelete
  Replies
  1. ஆல் 'நச்' போயிண்ட்ஸ்!!

   Delete
  2. // இத்தாலிக்காரர்கள் பிரச்சினையின் பரிமாணத்தை உணராத அறியாமையால் செய்த பிழையினை நாமும் செய்யவேண்டாம்.. //

   +1

   Delete
  3. //
   நெடுங்காலமாக பகிர்ந்து கொள்ள நினைத்த விஷயங்களை பற்றி எழுதுங்கள்...
   // நிறைய எழுதுங்கள் சார். அதுவே போதும் நண்பர்களையும் கட்டுக்குள் வைக்கும்.

   Delete
  4. //இத்தாலிக்காரர்கள் பிரச்சினையின் பரிமாணத்தை உணராத அறியாமையால் செய்த பிழையினை நாமும் செய்யவேண்டாம்..//

   பெருநகரங்களில் அடைப்புகள் ; பெருங்குழும நிறுவனங்களில் Work from Home என்பனவெல்லாம் நடைமுறையில் இருக்கலாம் சார் ஆனால், இன்னமும் சிறு நகரங்கள் சகலமும் எப்போதும் போலவே இயங்கிக் கொண்டிருப்பது ரொம்பவே நெருடுகிறது ! இன்னமும் வடை-டீ என்று காலங்கார்த்தாலே கூட்டம் கூட்டமாய் ஜனம் நின்று ஒரே பேப்பருக்குள் நாலு பேர் தலை நுழைத்து வருவதும், செல்போன் கடைகளில் வழக்கம் போல் "பாட்டு ஏத்திக் குடு ; சினிமா ஏத்திக் குடு " என்ற மக்கள் திரள் தொடர்வதும், டாஸ்மாக்குகளில் கும்பலாய் நிற்போர் குறையாதிருப்பதும் இன்னமும் அன்றாடம் நிகழ்ந்து வருகின்றன !

   Total Lockdown தவிர்த்து வேறெதுவும் நமக்குத் பலனளிக்குமென்று படவில்லை !

   Delete
  5. ///உங்கள் தொடர் பதிவுகள் நண்பர்களை கட்டுக்குள் வைக்கும்..

   நெடுங்காலமாக பகிர்ந்து கொள்ள நினைத்த விஷயங்களை பற்றி எழுதுங்கள்...///

   +1

   Delete
 39. ஸ்டீல் க்ளாவின் ஜூனியர் வந்து மூன்று வாரங்கள் ஆகிறது; அவருக்கு போட்டியாக டைப்ப ;-) இப்பவே ஸ்பைடரோட புத்தகத்தை காண்பித்து கதை சொல்லி வருகிறார் நமது ஸ்டீல் க்ளா :-)

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கள் ஸ்டீல் மக்கா நீ அப்பாவாக promotion ஆனதற்கு :-)

   Delete
  2. வாழ்த்துகள் ஸ்டீல்!

   Delete
  3. ஆஹா இனிப்பான செய்தி வாழ்த்துக்கள் ஸ்டீல்.

   Delete
  4. யார் அந்த மினி ஸ்டீல்? :-)

   கங்ராட்ஸ்(டீல்)

   Delete
  5. வாழ்த்துக்கள் கோவைக் கவிஞரே !!

   Delete
  6. வாழ்த்துகள் ஸ்டீல் க்ளா..!!

   Delete
 40. கொரியர் டப்பா பல கைகள் மாறி வரும் என தெரிந்தும் தேவை என்று கேட்டால் அது மடமை அல்லவா??? தாக்கம் குறையும் வரை தள்ளிப் போடலாம் சார் 👍👍👍

  ReplyDelete
 41. ஆசிரியர் அவர்களே கொரியர் ஆபிஸ் இருந்தால் அனுப்புங்க இல்லை அனுப்ப வேண்டாம. அவ்வளவுதான்

  ReplyDelete
 42. 1. மொதல்ல நண்பர் ஸ்டீலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

  2 கொர்ரொனா சீரியசான விசயம். காகிதம் கார்ட்போர்ட்ல மூணு மணி நேரமும் ப்ளாஸ்டிக் ஸ்டீல் மேல 3 நாளும் உசிரோட இருக்குமாம். அதனால கேர்புல்லா இருப்பதே நல்லது.
  3. கொஞ்ச நாள் வெயிட் பண்ணி நிதானமாக படிப்போம்.

  ReplyDelete
  Replies
  1. ஷெரீஃப் நாங்களும் Coronaவால் உங்களை போல ஆகிவிட்டோம். முதல் முறையாக 3 மாத புத்தகங்களை சேர்த்து ஒன்றாக. மாற்றம் ஒன்றே மாறாதது

   Delete
  2. ///ஷெரீஃப் நாங்களும் Coronaவால் உங்களை போல ஆகிவிட்டோம். ///

   அவரு கொரோனா'வால தான் அப்படி ஆகிட்டாரா?!! எனக்கு அப்பவே லைட்டா ஒரு டவுட்டு வந்துச்சு!

   Delete
  3. அடப்பாவி நான் சொன்ன அர்த்தமே வேறு ஷெரீஃப் ஜி

   Delete
 43. வீட்டுக்காரம்மா பக்கத்தில் இருக்கும் போது அழகான பெண் வந்து நீங்க சிங்கிளான்னு கேட்கிற மாதிரியான ஒரு கையறு நிலை .. இந்த பதிவை படித்த போது. ஆனால் உடல் நிலை மற்றும் மண்டை ஓட்டின் பாதுகாப்பு ஆகியவற்றை மனதில் கொண்டு இல்லை.. வேண்டாம் .. போன்ற உண்மைகளையே சொல்ல வேண்டியுள்ளது..

  ReplyDelete
 44. பல புத்தகங்கள் படிக்கப்படாமல் பென்டிங்ல இருக்கு! அதோடு மறுவாசிப்புக்கு என்று நோட் பண்ணி வச்சு புக்கெல்லாம் படிக்க வேண்டி இருக்கு!

  எனவே தைரியமாக ஓரிரு மாதங்கள் லீவு விடலாம் சார்!

  எதற்குமே ஒரு இடைவெளி இருக்கும் போது அதன் மீதான காதல் பலமடங்காவதே இயற்கையின் நியதி!!!

  எல்லாம் நன்மைக்கே!
  நோ பிராப்ளம் சார்!!

  ReplyDelete
  Replies
  1. ///எதற்குமே ஒரு இடைவெளி இருக்கும் போது அதன் மீதான காதல் பலமடங்காவதே இயற்கையின் நியதி!!!///

   நூற்றில் ஒரு வார்த்தை!

   Delete
 45. இம்மாத இதழ்கள் ஏற்கனவே அச்சாகி இருக்கும் நிலையில் அவற்றை அடுத்த வாரம் அனுப்பிவிடுவோம்..

  *******

  நெஞ்சில் பாலை வார்த்தீர்கள்...


  #####


  தொடரும் மாதங்களை அரசின் வழிகாட்டல்களை பின் தொடர்வோம்..

  ******

  நல்ல முடிவு சார்...

  கடையை சார்த்த வேண்டாம் என்பதே எனது எண்ணம்..தனி ,தனி நபர்களுக்கு ,தனித்தனியே கிடைக்கும் இந்த புத்தக பார்சல்களாளும் பிரச்சனை என உறுதியாக தெரிந்தால் மட்டுமே வேலை நிறுத்தம் செய்யலாம் சார்..  ----- தலைவரின் பதுங்கு குழியிலிருந்து (அங்கே சிக்னல் சரியாக கிடைக்கவில்லையாம்)

  ReplyDelete
 46. வாழ்த்துக்கள் நண்பர் ஸ்டீல் கிளா!

  ReplyDelete
 47. Dear Edi,

  It could be a different feeling, not to see our regular monthlies, since our return... But, due to the unprecedented situation, holding the stock until April and then taking stock of situation, will be the wiser decision. Let's hope April would be the last of this dealt virus and it will be contained.

  But, at the rate which, corporates and higher powers are dealing with the situation, even June or July does not look safe though. Stay Safe, Friends.

  ReplyDelete
 48. நண்பர் செல்வம் அபிராமி இனுடையது நூற்றில் ஒரு வாரத்தை. இத்தாலியில் நிலைமையின் தீவிரத்தை அறியாமலிருந்தது மடமை. நாமும் ஒத்துழைப்போமே!
  மறுவாசிப்பை கூட்ட வேண்டியதுதான் . ஆசிரியர் பதிவுகளை கூட்டவேண்டும் ஆமா!

  ReplyDelete
 49. Dear Editor please go ahead with dispatch.
  The most handled object by all are rupee notes for which we are not saying no yet.
  We do receive stuffs including milk packets, groceries etc..
  The day govt says no to newspaper and periodicals we can think of stopping comics circulation.
  If needed we shall take off the courier cover outside the house and take the comics alone inside.

  For my dear friends who may think of CoV II scare, please follow the link posted below and be relaxed. It's by WHO the one source we should trust and not from any fb or WhatsApp share

  https://www.who.int/news-room/q-a-detail/q-a-coronaviruses#

  It clearly days we dont need to be afraid of recieving any couriers due to Corona scare.
  Stay safe. Love you all

  ReplyDelete
  Replies
  1. Kindly skip to second last question in the list. That's the one related to our issue. If u wanna read all the remaining questions,pleasure is mine

   Delete
  2. பின்னிட்டீங்க Navaneethan!!

   இதோ அந்த copy-paste :

   ///Is it safe to receive a package from any area where COVID-19 has been reported?
   Yes. The likelihood of an infected person contaminating commercial goods is low and the risk of catching the virus that causes COVID-19 from a package that has been moved, travelled, and exposed to different conditions and temperature is also low. ///

   Delete
  3. But tamilnadu government closed Andra, Kerala and Karnataka borders. Courier guys not taking any bookings to other states. Not sure if they take booking for interstate.

   Delete
  4. It says the risk is LOW Not ZERO ..

   currencies ,milk pockets ,groceries are essential commodities ....

   Especially the last two can be washed before use..

   Newspapers, magazines can be put aside
   Temporarily... However minimal they carry the risk..

   ATM MACHINES too carry considerable risk..

   We can read digital media ,we can pay digitally..

   Even lower middle class are accustomed to digital pay..

   Low socioeconomic status / illiterate / literate with disregard towards the magnanimity the situation will be hard hit..the problem is they can transmit to those are cautious..

   In India like countries where the population is high it's better to keep the risks at zero rather than to find loopholes in official - in this case WHO - GUIDELINES.

   Delete
  5. It is not about just books. In the mandate to deliver the courier person has to travel far and wide. Please do not make others travel for comics. Please with hold and show restraint.

   Delete
  6. செனாஅனா சொல்றதும் சரிதான்!

   அதுவுந்தேன்.. இதுவுந்தேன்!

   ஆனா எதுவுந்தேன்னு நாமதான் முடிவு பண்ணணும்!

   Delete
  7. // low and the risk of catching the virus that causes COVID-19 from a package that has been moved //

   Low risk means risk is there. Lets us hold our book's for sometime. When it becomes zero risk we can start receiving the books.

   Delete
  8. விஜய் #

   // அதுவுந்தேன்.. இதுவுந்தேன்! //

   இது வீடு இல்லை அதனால் உங்கள் மனதில் உள்ளதை தைரியமாக சொல்லுங்கள். பூரிக்கடை எல்லாம் வராது தைரியமாக சொல்லுங்கள் :-)

   Delete
 50. @ ALL : 'நோய் நோயென்று' திரும்பிய திக்கெல்லாம் வாட்ஸப்களும், சேனல்களும் நொய் நொய்யென்று பிடுங்கி எடுக்க - கண்ணாடியில் பிம்பத்தைப் பார்க்கக் கூட பயமாக இருக்கிறது !! ( இந்த கொரோனா கொடுமைக்கு முன்னேயுமே அந்த பயமிருந்தது என்பது வேறொரு விஷயம் !!) இதையெல்லாம் கொஞ்ச நேரத்துக்காவது மூட்டை கட்டி விட்டு, ஜாலியாய் ஒரு பதிவோடு பொழுதைக் கடத்துவோமா guys ? மிடிலே இந்த ரணகொடூர நாட்களை சமாளிக்க !! இயன்றோர் ஒன்று கூடினால் எல்லோருக்குமே கொஞ்சம் உற்சாகமாக இருக்கும் தானே ?

  Try & make time guys - please !!

  ReplyDelete
  Replies
  1. What's up message பார்ப்பதை நேற்றிலிருந்து நிறுத்தி விட்டேன்.

   Agreed with you sir

   Delete
  2. ///What's up message பார்ப்பதை நேற்றிலிருந்து நிறுத்தி விட்டேன்.///

   ஏன்.. வீட்டம்மா ஃபோனை உடைச்சுட்டாங்களா?!! :)

   Delete
  3. அந்த அளவுக்கு சூழ்நிலை இன்னும் மோசமாகவில்லை வீட்டில் :-)

   Delete
  4. ///இதையெல்லாம் கொஞ்ச நேரத்துக்காவது மூட்டை கட்டி விட்டு, ஜாலியாய் ஒரு பதிவோடு பொழுதைக் கடத்துவோமா guys ? மிடிலே இந்த ரணகொடூர நாட்களை சமாளிக்க !! இயன்றோர் ஒன்று கூடினால் எல்லோருக்குமே கொஞ்சம் உற்சாகமாக இருக்கும் தானே ?///

   நான் ரொம்ப அமைதியான டைப்புங்க சார்! ஆனாலும் முயற்சிக்கறேன்!

   Delete
  5. Sure Sir please do chip in with the new post

   Delete
  6. ஆமாங் சார்.. நீங்க சிப்ஸ் சாப்பிட்டுக்கிட்டே பதிவு போட்டாலும் சரிதான்!

   Delete
  7. சிப்ஸ் வீட்டில் போட்டதா :-)

   கொடுத்து வைத்தவர் நீங்கள் சார் :-)

   Delete
 51. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நட்பூஸ்!

  ReplyDelete