நண்பர்களே,
வணக்கம். Old habits die hard என்பார்கள் ....! அது யாருக்குப் பொருந்துமோ இல்லியோ - நமக்கு அக்ஷர சுத்தமாய்ப் பொருந்தும் என்பேன் ! So வழக்கம் போல பீச்சாங்கைப் பக்கமாய் இண்டிகேட்டரைப் போட்டுக்கொண்டு, சோத்தாங்கையை காட்டிக்கிட்டு, நேராய் ஜிலோன்னு ஓடுது வண்டி !! By now இதெல்லாம் யாருக்குமே ஆச்சர்யம் ஏற்படுத்தும் சமாச்சாரமாக இருப்பதில்லை என்பதால் - ஈரோடு 2020-ன் இதழ் # 2 பற்றித் தான் பேசுகிறேன் என்பது புரிந்திருக்கும் !! ஒருபக்கம் கரோனாவின் கொடூரம் உலகையே உலுக்கிக் கொண்டிருக்க - நாமோ as normal திட்டமிட்டு வருவதை எண்ணி கொஞ்சம் நெருடுகிறது தான் ; ஆனால் ஆண்டவன் அருளோடு இந்தச் சிக்கல் சீக்கிரமே விலகிப் போகுமென்று நம்புவதைத் தாண்டி வேறெதுவும் செய்திட இயலாதே ?! So the show goes on !!
முதலில் கையைக் கொடுங்கள் guys !! ஏனென்கிறீர்களா ? டெக்சின் அட்டைப்படத் தொகுப்பினை (இப்போதைக்காவது) வேண்டாமென்று சொல்லி வைத்த நீங்கள் ஒவ்வொருவருமே ஒரு குட்டியூண்டு நோஸ்ட்ரடாமஸ் தான் !! நாம் அதை வெளியிடத் தேர்வு செய்திருந்தாலுமே சாத்தியப்பட்டிராது போலும் - simply becos மிலன் நகரிலிருந்து செயலாற்றும் போனெல்லி நிறுவனத்திலும் கிட்டத்தட்ட work from home தான் ! ரொம்ப ரொம்ப அத்தியாவசிய வேலைகளைத் தாண்டி வேறெதுவும் அடுத்த கொஞ்ச வாரங்களுக்காவது நடவாது என்பதே சூழல் ! So நாம் எப்படியும் தேடல்களை வேறு பக்கமாய்த் தொடர்ந்திருக்கத் தான் வேண்டிப்போயிருக்கும் ! அந்த மட்டுக்கு உங்களின் பளிச் தீர்ப்புக்கு நன்றி சொல்லிடலாம் !
மாற்றாய் நான் முன்மொழிந்த ஆல்பங்களுள் "கென்யா" வுக்கு கிட்டிய செம ஆதரவு ஒரு pleasant surprise என்றே சொல்லுவேன் ! இங்கே எனது தயக்கங்கள் ஸ்கேன்லேஷனில் சுட்ட வடையின் தரத்தோடு நாம் போட்டியிட இயலுமா ? என்பதே கிடையாது ! As always - நம் பாணியில் ; நம் பணிகள் இருந்திடும் என்ற நம்பிக்கை என்னுள் உண்டு ! ஆனால் ஈரோடு மாதிரியானதொரு உச்ச ஆர்வக்களத்துக்கு அத்தியாவசியப்படக்கூடிய ஒரு freshness factor இங்கே குறைச்சலாகி நிற்குமோ என்ற நெருடலே மாத்திரமே என்னுள் ! நிஜத்தைச் சொல்வதானால், இரத்தப் படல ரிலீஸ் முதலாகவே ஈரோட்டின் மீதான உங்களின் எதிர்பார்ப்புகள் ஒரு notch உசக்கே சென்றிருப்பது அப்பட்டம் ! So ஆண்டுக்கொரு முறை, ஏகப்பட்ட உற்சாகத்தோடு ஆஜராகும் உங்கள் ஒவ்வொருவரையும் கர்ணங்கள் அடித்தாவது திருப்திப்படுத்த வேண்டுமே என்ற பொறுப்பும் நமக்குக் கூடி நிற்பதாய் என்னுள் ஒரு உணர்வு ! So படு ஆர்வமாய் நீங்கள் "கென்யா"க்கு கைதூக்கி நிற்பினும் ; கதை / மொழியாக்கம் என எல்லாமே ரெடியாக இருப்பினும் - எனது மண்டை மட்டும் வேறெங்கெங்கோ பயணித்துக் கொண்டிருந்தது !! அதற்குக் காரணம் இல்லாதில்லை தான் !! புதுசாய்த் தேடல்கள் துவங்கிய நாள் முதலாய்க் கண்ணில் பட்டு வரும் ஆல்பங்கள் - "ஹை...ஜாங்கிரி...அடடே மைசூர்பாகு...ஹைய்யோ...பால்கோவா ! ; ஆத்தாடியோவ் அதிரசம் .." என்ற ரீதியில் கடைவாயோரம் ஜல ஜாலம் செய்து வர, சபலங்களோடு செம லடாய் ! And without more ado - here we go :
"ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா...!"
2015-ன் அட்டவணை என்று ஞாபகம் ; இந்த சாகசத்தை ஆர்வக் கோளாறின் மிகுதியில் அறிவித்திருந்தோம் !! In fact அந்தாண்டின் முதல் க்வாட்டரிலேயே கதையை உங்கள் கண்ணில் காட்டிட வேண்டுமென்ற ஆசையில் ஆங்கில மொழிபெயர்ப்பையும் சூட்டோடு சூடாய்ச் செய்து வாங்கியிருந்தேன் !! ஆனால் அது one shot அல்ல - நீளவிருக்கும் ஒரு தொடரின் முதல் பாகம் மாத்திரமே என்பது புரிந்த போது அசடு வழிய ஜகா வாங்கினேன் !! நாம் கிண்டாத ஆர்வக்கோளாறு அல்வாக்களா ? வழியாத அசடுகளா ? என்றபடிக்கே பணிகளுக்குள் மூழ்கிவிட்டிருந்தாலும், இந்தத் தொடர் மீது ஒரு கண் தொடரவே செய்தது !! ஆண்டுக்கொரு பாகம் வீதம் - இது மூன்றாண்டுகள் ஓட்டமெடுக்கும் என்று படைப்பாளிகள் சொன்னார்கள் ! அப்புறம் திட்டமிடல் மாற்றம் கண்டது ; மூன்று நான்காகி, பின்னே நான்கு ஐந்தாகியது !! So 2018-ல் ஒரு அட்டகாச 5 பாகத் தொடராய் இது நிறைவுற்ற சமயமே எனது ரேடாரினில் இது சல சலத்து நின்றது !! கதையினை முழுமையாய்ப் பரிசீலித்த போது ; இன்டர்நெட்டில் இதற்கான விமர்சனங்களை ஆராய்ந்த போது ; நம் மொழிபெயர்ப்பாளரின் தயவில் கதைச் சுருக்கங்களை தயார் செய்து வாசித்த போது ஒரு டைனமைட் குவியல் கைக்கெட்டும் தொலைவில் பதுங்கிக்கிடப்பது புரிந்தது !! பற்றாக்குறைக்கு அந்த முதல் பாகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை வாசிக்க நேரம் எடுத்துக் கொண்ட போது - அமெரிக்க ஜனாதிபதி ஜான்.F கென்னெடியின் கொலை விவகாரத்தோடு பயணிக்கும் high voltage த்ரில்லர் கதையில், shades of இரத்தப் படலம் கூட தென்பட்டது போலிருந்தது ! So இந்தத் தொடரை நிச்சயமாய் நம் வாசிப்புகளுக்கு சீக்கிரமே உட்படுத்திட வேண்டுமென்ற குடைச்சல் தலைக்குள் குடியேறிக் கொண்டது !! ஆனால் நமது மொழிபெயர்ப்பாளர் சன்னமாய்த் தந்திருந்த பில்டப் மட்டும் உள்ளுக்குள் பட்டாம்பூச்சிகளையும் கட்டவிழ்த்து விட்டிருந்தது !! "இதுவரைக்குமான கதைகளுள் இந்த வீரியத்தில் ஒரு ஸ்கிரிப்ட் நான் பார்த்ததில்லை ; வசன நடையினை பிரெஞ்சுக் கதாசிரியர் செதுக்கியிருக்கும் பாணி லேசு பாசில்லை !! இயன்றமட்டிலும் நான் பணி செய்துள்ளேன் ; தமிழுக்கு எழுதும் நபரையுமே ரொம்பவே கவனமாய்க் கையாளச் சொல்லுங்கள் !!" என்பதே அவர் தந்த அட்வைஸ் !! And அந்த முதல் பாகத்தின் ஆங்கில ஸ்கிரிப்டை வாசிக்கும் போதே நமது மொழிபெயர்ப்பாளரின் புலமையும், ஒரிஜினல் பிரெஞ்சுப் பதிப்பின் வீரியமும் பிடரியில் அடித்தார் போல தென்பட்டது ! இதெல்லாமே கிட்டத்தட்ட நாலைந்து ஆண்டுகளுக்கு முன்பே என்னுள் பதிவாகி விட்டிருந்த நினைவு என்பதால் இந்தத் தொடரின் நினைவு எழும் போதெல்லாமே "HANDLE WITH CARE !!" என்ற அட்வைசும் சேர்ந்தே கைகோர்த்து வரும் ! So 2019-ன் ஈரோட்டு ஸ்பெஷல் இதழினை அறிவிக்கவிருந்த சமயம் "ஒற்றை நொடி.ஒன்பது தோட்டா" தான் முதல் தேர்வாகியிருக்க வேண்டியது !! ஆனால் எனது சுகவீனம் ; அதற்கு முன்பாய் பராகுடாவின் கனத்த களத்தின் பணிகள் ; லோன் ரேஞ்சரின் நூற்றிச் சில்லறைப் பக்கங்களின் பணிகள் என்று நாக்குத் தொங்கி அமர்ந்து கிடந்த வேளையில், இந்த டைனமைட்டின் மீது கைவைக்க பயமாக இருந்தது !! So comparatively easier களமான "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" இதழினைத் தேர்வு செய்ய நேர்ந்தது !! (ஆனால் கொடுமை என்னவெனில் - அதுவும் செம tough பணியாக இறுதியில் அமைந்தே போனது !!) So மொழிபெயர்ப்பினில் ஈடு தந்திடப் பயந்து நான் ஒதுக்கிய இரண்டாவது ஆல்பமாய் "ஒ.நொ.ஒ.தோ" வைச் சொல்லலாம் ! (முதலாவது பற்றி பின்னொரு நாளில்..) So இம்முறை டெக்சின் அட்டைப்பட தொகுப்பெனும் 'நோகா நோன்புக்கஞ்சு'க்கு நீங்கள் "நோ" சொன்ன கணமே - "மாப்பு...செல்லம் கொஞ்சியது போதும் ; மேல் வளைக்கும் நேரம் புலர்ந்து விட்டது !!" என்று உள்ளுக்குள் மணியடித்தது ! So தொடருக்கான உரிமைகளை ஊர்ஜிதம் செய்து கொள்ள இந்த வாரத்தை பயன்படுத்திக் கொண்ட கையோடு - இதோ அறிவிப்போடு ஆஜர் !!
ஓவராய் பில்டப் தருவதைக்காட்டிலும், கதையின் outline பற்றிச் விளம்பரங்களோடே சன்னமாய் தந்துவிட்டால் வேலை சுலபம் என்று நினைத்தேன் !! So மேலுள்ள விளம்பரத்தோடு கதையின் one liner -ம் இருக்கிறது !! நான் மேற்கொண்டு ஏதேனும் சொல்லிக்கொள்வதானால் - ஒரேயொரு விஷயம் மாத்திரமே இருந்திடக்கூடும் : ஜேம்ஸ் பாண்ட் 2 .0 வண்ண அவதாரத்தில் ஆக்ஷனில் கதக்களி ஆடிடுவதாய் நாமெல்லாம் சிலாகிக்கிறோமல்லவா ? இந்த 5 பாக ஆல்பம் மட்டும் நல்லபடியாய் வெளிவந்து, உங்களை எட்டிடட்டும்,,,,அதன் பின்னே " ஆக்ஷன்.....high voltage த்ரில்லர் " என்ற வார்த்தைகளுக்கு ஒரு புது விளக்கமே நாம் தேட வேண்டி வரலாம் !! முதல் பக்கத்தில் டாப் கியரைத் தொடும் வண்டி, அடுத்த 270 பக்கங்களுக்கும் அமெரிக்காவின் காடு..மேடு...பள்ளம்.. பாலைவனம்...பெருநகரம் என்று தெறிக்க விடுகிறது !! கதையின் ஸ்பீட் அசாத்தியமோ அசாத்தியம் தான் ! அப்புறம் அந்த ஓவியங்கள்.....Ufffffffffff !!சான் பிரான்சிஸ்கோ நகரினை இதுவரையிலும் நேரில் பார்த்திரா நண்பர்கள், இந்த கரோனா வேளைகளிலும், அறுநூறு ரூபாய் செலவில் SFO விற்கொரு ட்ரிப் அடித்து விடலாம் என்பேன் !! நகரின் இண்டு இடுக்கையெல்லாம் சித்தரிக்க அசுரத்தனமாக உழைத்துள்ளனர் - ஓவியரும், கலரிங் ஆர்டிஸ்டும் !! அது மாத்திரமல்ல - அமெரிக்கப் பாலைவனங்கள்; சிறு நகரங்கள் என ஓடிடும் கதையோடு, கையில் ஒரு காமராவோடே ஆர்ட்டிஸ்ட் பயணித்திருப்பாரோ என்னவோ - அப்படியொரு தத்ரூபம் !! As a package - "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்கள்" - கதாசிரியர் ; ஸ்கிரிப்ட் writer ; ஓவியர் ; கலரிங் ஆர்ட்டிஸ்ட் - என்ற அதகள ஆற்றலார்களின் கைவண்ணமிது ! So பேனா பிடிக்கும் தைரியத்தை வரவழைத்த மறு நொடியே என்னுள் சந்தேகங்களில்லை - இதுவே இந்தாண்டின் ஈரோட்டு highlight என்று !!
And தொடர்வது உங்களுள் எழக்கூடிய கேள்விகளை யூகித்து பதில் தரும் படலம் - to make it easier for you & on me !!
1 .அமெரிக்க க்ரைம் த்ரில்லர் கொஞ்சம் 'அடல்ட்ஸ் ஒன்லி' கதைக்களத்தோடு இருப்பதால் தயங்குவதாகச் சொன்னியே...அப்புறம் எப்புடி ??
அது இதுவல்ல guys ..and இது அதுவுமல்ல !! நான் குறிப்பிட்ட கதையானது ஒரு அமெரிக்கப் புலனாய்வை மையமாய்க் கொண்டதொரு அமெரிக்கப் படைப்பு !! ஆனால் இதுவோ ஒரு அமெரிக்கப் புலனாய்வை மையமாய்க் கொண்டதொரு பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்பு !! கதை அரங்கேறும் மண் என்னவோ அமெரிக்கா தான் எனினும், இரு கதைகளுக்கும் மத்தியில் பெருவாரியான வேறுபாடுகள் உண்டு ! And the 'other one' is still on the Wait list !!
2 .Why "ஒ.நொ.ஒ.தோ." ?
ரொம்ப காலமாகி விட்டதல்லவா ஒரு டாப் க்ளாஸ் துப்பறியும் ஆல்பத்தை ரசித்து ? சொல்லப் போனால் - ரிப்போர்ட்டர் ஜானியும், CID ராபினும் தம்மால் ஆன மட்டுக்கு இந்த ஜானரின் ரசிகர்களைத் திருப்திப்படுத்த முனைந்து வந்தாலும் - யானைப் பசிக்கு அவை சோளப் பொரிகளே என்பேன் !! And 270 பக்கங்கள் எனும் போது கிட்டத்தட்ட ஒரு 2 மணி நேர சினிமாவுக்கான screenplay இங்குள்ளது & அமெரிக்க போலீசின் யதார்த்த புலனாய்வு பாணிகளைக் கண்ணில் பார்த்த திருப்தி கிட்டுகிறது !! அப்புறம் இந்த இதழைப் படித்த பின்னே நாம் இருப்பது இந்தியாவில் தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள கொஞ்ச நேரம் ஆகிடும் பாருங்களேன் !!
3 .கென்யா ????
2021-ன் அட்டவணையில் for sure !! யாரேனும் existing நாயகர்களை தற்காலிகமாகவாவது அன்போடு வெளியே நிற்கச் செய்து விட்டு - அந்த இடத்தினில் இந்த 5 பாக ஆல்பத்தை நுழைத்து விடுவோம் !! பணமும், உழைப்பும் நிறையவே அதனுள் துயின்று வருவதால் இனியும் தள்ளிப்போட சாத்தியமாகாது !! So "கென்யா" வுக்கென குரல் தந்த நண்பர்கள் அனைவருக்கும் மெகா நன்றிகள் & ஒரு வேண்டுகோள் - கொஞ்சமே கொஞ்சமாய்ப் பொறுமை காத்திட !
4.சரி...ஈரோட்டு Specials-க்கான முன்பதிவு விபரங்களைக் காணோமே ?
"Ars Magna" (ஒரு புதையலின் பாதையில்...!) + "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" எனில் சுமார் ரூ.900 பட்ஜெட் வந்திடும் !! இந்த டைட்டான தருணத்தில் இது கொஞ்சம் ஓவரோ ? என்ற பயம் தலைதூக்குகிறது ! Maybe 'ஒன்றே நன்று !' என்று நீங்கள் அபிப்பிராயப்படுவீர்களெனும் பட்சத்தில் "Ars Magna"வை ஜனவரிக்கு - 2021 சென்னைப் புத்தக விழாவுக்கு மாற்றல் செய்திடலாம் ! ஜனவரி 2021-ல் இரு செம landmarks காத்திருப்பதால் - ஸ்பெஷல் இதழ்கள் அங்கே பொருந்திடும் இயல்பாய் !! உங்களின் தீர்ப்புகள் ப்ளீஸ் ?
'ஒன்றே மதி' என்று நினைக்கும் பட்சத்தில் "எண் ஒன்றை அழுத்தவும்" !!
"ஒன்று மட்டும் பற்றாது" என்று எண்ணும் பட்சத்தில் - "1 + 1 = 2 " என்ற விஞ்ஞானபூர்வ பதிலாகப் பதிவிடலாம் !
பதில்களுக்கேற்ப பதிவுத் தொகையினை அறிவித்திடலாம் ! So your thoughts please ?
5. ஒய் திஸ் தடுமாற்றம் ? அறிவிப்பில் ஏன் வளவள கொள கொளா ?
கரோனாவோ இல்லியோ - பொதுவாய்ப் பணப்புழக்கம் செம மந்தமாய் இருப்பது இன்றைய யதார்த்தம் - at least எனக்குத் தெரிந்த மட்டிலாவது ! நமது புத்தக வசூல்கள் மட்டும் தான் என்றில்லை ; நமது அச்சகத்தில் அச்சிட்டுச் செல்லும் இதர பார்ட்டிகள் ; நம்மிடம் மிஷினரி வாங்கிப் போகும் பார்ட்டிகள் ; வேற்றுத் தொழில்களில் இருக்கக்கூடிய நண்பர்கள் என்று ஒருத்தர் பாக்கியின்றி அத்தனை பேருமே முகாரியில் தான் பாட்டுப் படிக்கின்றனர் ! கோவையில் ஒரு பார்ட்டி சிறு அளவிலான பேக்கரிகளுக்கான ரெடிமேட் டப்பாக்களை ஜூனியரின் பொறுப்பில் அச்சிட்டு வாங்கிப் போவார் ; டாணென்று 30 நாட்களில் அடுத்த ஆர்டரோடு தேடி வருவார் ! ஆனால் இப்போதோ ஜனவரியில் செய்து வாங்கிய டபபாக்களே இன்னும் தேங்கிக் கிடக்கின்றன என்கிறார் !! பொதுவாய் ஜனவரியெனும் போது புத்தாண்டு ; பொங்கல் என பேக்கரிகளிலாவது விற்பனை வேகமாய் இருந்திடுமென்று எதிர்பார்ப்பது இயல்பு தானே ? ஆனால் அதுவே இம்முறை சொதப்பல் என்கிறார் ! இது போல் காதில் விழும் கஷ்ட செய்திகள் கணிசம் ! So இந்த நேரத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்தல் நலமோ ? என்று நினைக்கத் தோன்றியது !! அவ்வளவே !!
தவிர, இன்னொரு சுயநலக் காரணமும் இல்லாதில்லை !! 270 பக்க மொழிபெயர்ப்பு முழியைப் பெயர்க்கக் காத்துள்ள சூழலில், ARS MAGNA-வின் 145 பக்க ப்ராஜெக்டை நமது கருணையானந்தம் அவர்களிடம் ஒப்படைக்க எண்ணியிருந்தேன் ! அவரோ, 'இது எனக்கு சுகப்படாத பாணி ; நீயே இதை பார்த்துக்கோயேன் !' என்று பந்தை என்னிடமே திருப்பிவிட்டார் !! So ரெண்டையும் ஒரு சேர கட்டி இழுப்பதன் மலைப்பும் லைட்டாக என்று வைத்துக் கொள்ளலாம் ! ஆகஸ்டுக்கு இன்னமும் நாட்கள் உள்ளன தான் ; ஆனால் இடைப்பட்ட ரெகுலர் இதழ்களோடும் கட்டி உருண்டு கொண்டே இந்த நானூற்றுச் சொச்சம் பக்கங்களோடும் WWF நடத்துவது சுலபமில்லையே !! Of course - நண்பர்களிடம் ஒரு பணியை ஒப்படைக்கலாம் தான் ; ஆனால் "இது இப்டிக்கா வேணும் ; அது அப்டிக்கா வேணும் ; இதில் இது சரியில்லை ; அதில் அதை மாற்றுங்கோ !! இது இப்போவே வேணும் ; அது நேத்திக்கே வேணும் !" என்று நண்பர்களின் குடல்களை உருவுவதும் சரி ; நீங்கள் ஆண்டாண்டாய்ப் பழக்கப்பட்டுள்ள நடைகளுக்கு நண்பர்களது final ஸ்கிரிப்ட்களை பட்டி-டிங்கரிங் பார்ப்பதும் சரி - பெண்டைக் கழட்டிடும் பணிகளே !! So, ஒரு ஆள்பட வேண்டிய சிரமங்களை இருவர் பட்டது போலாகிடுகிறதே என்ற நெருடல் மேலோங்குகிறது ! ஆகையால் ஸ்பெஷல் இதழ்களின் பணிகளுக்கு மட்டுமாவது இந்த இரண்டு கைச்சமையல் வேண்டாமே என்று நினைத்தேன் !!
5. ஒய் திஸ் தடுமாற்றம் ? அறிவிப்பில் ஏன் வளவள கொள கொளா ?
கரோனாவோ இல்லியோ - பொதுவாய்ப் பணப்புழக்கம் செம மந்தமாய் இருப்பது இன்றைய யதார்த்தம் - at least எனக்குத் தெரிந்த மட்டிலாவது ! நமது புத்தக வசூல்கள் மட்டும் தான் என்றில்லை ; நமது அச்சகத்தில் அச்சிட்டுச் செல்லும் இதர பார்ட்டிகள் ; நம்மிடம் மிஷினரி வாங்கிப் போகும் பார்ட்டிகள் ; வேற்றுத் தொழில்களில் இருக்கக்கூடிய நண்பர்கள் என்று ஒருத்தர் பாக்கியின்றி அத்தனை பேருமே முகாரியில் தான் பாட்டுப் படிக்கின்றனர் ! கோவையில் ஒரு பார்ட்டி சிறு அளவிலான பேக்கரிகளுக்கான ரெடிமேட் டப்பாக்களை ஜூனியரின் பொறுப்பில் அச்சிட்டு வாங்கிப் போவார் ; டாணென்று 30 நாட்களில் அடுத்த ஆர்டரோடு தேடி வருவார் ! ஆனால் இப்போதோ ஜனவரியில் செய்து வாங்கிய டபபாக்களே இன்னும் தேங்கிக் கிடக்கின்றன என்கிறார் !! பொதுவாய் ஜனவரியெனும் போது புத்தாண்டு ; பொங்கல் என பேக்கரிகளிலாவது விற்பனை வேகமாய் இருந்திடுமென்று எதிர்பார்ப்பது இயல்பு தானே ? ஆனால் அதுவே இம்முறை சொதப்பல் என்கிறார் ! இது போல் காதில் விழும் கஷ்ட செய்திகள் கணிசம் ! So இந்த நேரத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்தல் நலமோ ? என்று நினைக்கத் தோன்றியது !! அவ்வளவே !!
தவிர, இன்னொரு சுயநலக் காரணமும் இல்லாதில்லை !! 270 பக்க மொழிபெயர்ப்பு முழியைப் பெயர்க்கக் காத்துள்ள சூழலில், ARS MAGNA-வின் 145 பக்க ப்ராஜெக்டை நமது கருணையானந்தம் அவர்களிடம் ஒப்படைக்க எண்ணியிருந்தேன் ! அவரோ, 'இது எனக்கு சுகப்படாத பாணி ; நீயே இதை பார்த்துக்கோயேன் !' என்று பந்தை என்னிடமே திருப்பிவிட்டார் !! So ரெண்டையும் ஒரு சேர கட்டி இழுப்பதன் மலைப்பும் லைட்டாக என்று வைத்துக் கொள்ளலாம் ! ஆகஸ்டுக்கு இன்னமும் நாட்கள் உள்ளன தான் ; ஆனால் இடைப்பட்ட ரெகுலர் இதழ்களோடும் கட்டி உருண்டு கொண்டே இந்த நானூற்றுச் சொச்சம் பக்கங்களோடும் WWF நடத்துவது சுலபமில்லையே !! Of course - நண்பர்களிடம் ஒரு பணியை ஒப்படைக்கலாம் தான் ; ஆனால் "இது இப்டிக்கா வேணும் ; அது அப்டிக்கா வேணும் ; இதில் இது சரியில்லை ; அதில் அதை மாற்றுங்கோ !! இது இப்போவே வேணும் ; அது நேத்திக்கே வேணும் !" என்று நண்பர்களின் குடல்களை உருவுவதும் சரி ; நீங்கள் ஆண்டாண்டாய்ப் பழக்கப்பட்டுள்ள நடைகளுக்கு நண்பர்களது final ஸ்கிரிப்ட்களை பட்டி-டிங்கரிங் பார்ப்பதும் சரி - பெண்டைக் கழட்டிடும் பணிகளே !! So, ஒரு ஆள்பட வேண்டிய சிரமங்களை இருவர் பட்டது போலாகிடுகிறதே என்ற நெருடல் மேலோங்குகிறது ! ஆகையால் ஸ்பெஷல் இதழ்களின் பணிகளுக்கு மட்டுமாவது இந்த இரண்டு கைச்சமையல் வேண்டாமே என்று நினைத்தேன் !!
Before I sign out, மார்ச் இதழ்கள் வெளியானது ஏதோவொரு யுகத்தில் என்பது போலத் தெரிவது எனக்கு மட்டும் தானா ? என்று தெரியவில்லை ; ஆனால் இம்மாதத்து topsellers லிஸ்டில் "நில்..கவனி..வேட்டையாடு" & "எதிர்காலம் எனதே" இருப்பது மட்டும் தெரியும் !! Modesty - the surprise package !!!! அந்த சைசும், ராப்பரும், சிறிதளவிற்கு உதவியிருக்கக் கூடும் தான் ; ஆனால் சமீப மித வரவேற்புகளை மறக்கடிக்கும் விதமாய் பிளைசி & கார்வின் இம்மாதம் செயலாற்றியிருப்பது 2021-க்கான சீட்டை உறுதி செய்துள்ளது என்பேன் !! காத்துள்ள 2021 தேர்தலில் யாருக்கு சீட்டும், யாருக்கு அல்வாவும் காத்துள்ளதோ தெரியாது ; ஆனால் நம் மட்டில் 1 சீட்டுக்கு டிக் போட்டாச்சு - in emphatic fashion !!
Bye guys ....have a great weekend !! See you around !!
இட்ஸ மீ!!
ReplyDeleteஉள்ளேன் ஐயா 🙏🏼
ReplyDelete.
3
ReplyDelete4
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDelete007
ReplyDelete8
ReplyDeleteGood evening to all.
ReplyDeleteபத்துக்கு பத்து.
ReplyDeleteபெரியதாக உள்ளது
ReplyDeleteஎடிட்டரின் கண்களா?!!
Deleteசேச்சே..!
Deleteமாடஸ்டியின் கண்கள்.
1+1=2
ReplyDelete1+1=2
Delete1+1= 2
Deleteமடஸ்டிக்கு சீட்டு இப்பவே போட்டாச்சா😖. வயதான டாக்டர்கள்/தொழிலதிபர்களை கொட்டம் தாங்க முடியாதே. 😤
ReplyDelete///வயதான டாக்டர்கள்/தொழிலதிபர்களை கொட்டம் தாங்க முடியாதே.///
Deleteஹா ஹா!! உண்மை உண்மை!! காலரை ஒன்னரை மீட்டருக்குத் தூக்கிவிட்டுக்கொண்டு ஒய்யாரமாக உலா வருவார்கள்!! :)))
:-)))
Deleteஇளவரசியா கொக்கா...:-)
Delete///இளவரசியா கொக்கா..///
Deleteதலீவரே,
கொக்கு - தானே மீன் பிடிக்கும்! இளவரசிக்கு - மீன் பிடித்துத்தர சில டாக்டர்கள் உண்டு!
EV hehehe குறும்பு.
Delete///தொழிலதிபர்களை கொட்டம் தாங்க முடியாதே. 😤///
Deleteஎன்னையும் மதிச்சு, தொழிலதிபர்னு சொன்னீங்க பாருங்க.
ரெம்ம்ப பெருமையா இருக்கு.
:-)
"அதுல ஒருத்தன் என்னெ ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான்."
Deleteபத்து சார் ஹிஹிஹி
Deleteஒற்றை நொடி. ஒன்பது தோட்டா'.Really Surprised. ஜூனியர் எடிட்டரின் தேர்வு என்று முன்பே சொல்லியிருந்தீர்கள்.
ReplyDelete1+1=2. My Choice.
இந்த கதையை நீங்கள் தான் ரொம்ப நாட்களாக கேட்டுகொண்டே இருந்தீர்களா?
Deleteவாவ்...
ReplyDeleteஒற்றை நொடி..,
ஒன்பது தோட்டா..,
எதாயிருந்தாலும் முன்பதிவை சீக்கிரமாக அறிவியுங்கள்
ReplyDeleteHai
ReplyDelete1+1 = 2
Deleteஒற்றை நொடிக்குள் ஒன்பது முடிவெடுக்கும் நமது சிவகாசி மய்யம் வாழ்க...
Deleteகென்யா - கொஞ்சம் தூரமாயிருச்சு..
ஜனவரி 21க்கு டைகர் ஸ்பெஷல் என்று சொல்லி இருந்தீர்களே. அப்படியானால் அது இல்லையா. ரூ.1350 என்றும் சொன்னீர்கள்.
ReplyDeleteதற்போதைய இந்த கரோனா பிரச்னை முடிவுக்கு வந்து, சீனாவிலிருந்து பேப்பர் இறக்குமதிகள் தொடர்ந்தாலொழிய கிட்டத்தட்ட 10 மாதங்கள் கழிந்ததொரு சமயத்தில் பேப்பர் & உட்பொருட்களின் விலைகள் எந்தப் புளிய மரக்கிளையில் குந்திக் கிடக்கும் என்றே கணிக்க இயலவில்லை சார் !! தவிர, கடந்த ஒரு வாரத்தில் அமெரிக்க டாலர் & யூரோ கூரையைப் பிய்த்துக் கொண்டு பறந்து வருகின்றன ! So எல்லாமே சற்று நிதானம் காணும் வரை என்னால் எந்தவொரு விலை நிர்ணயமும் செய்திட இயலவில்லை சார் ! இதோ இன்றைக்கு இந்த ஈரோட்டு ஸ்பெஷலை அறிவிப்பதாயின் - அடுத்த வாரமே இதற்கான பேப்பரை வாங்கி கையிருப்பில் வைக்காது போனால் பீ-ப்பீ தான் !!
Delete0K.சார். ஆனால் 2021ல் டைகர் ஸ்பெஷல் கண்டிப்பாக வேண்டும்.
Delete1+2= ரெண்டு
ReplyDelete1+1=2
ReplyDelete1+1=2
Deleteஹைய்யா புதுப் பதிவு.......
ReplyDelete## ஜனவரி 2021-ல் இரு செம landmarks காத்திருப்பதால் - ஸ்பெஷல் இதழ்கள் அங்கே பொருந்திடும் இயல்பாய் !! உங்களின் தீர்ப்புகள் ப்ளீஸ் ? ##
ReplyDeleteஜனவரி 2021-ல் 2+2=4
ஹை..இது என்ன புதுக் கணக்கோ சாரே ?
Delete## ஜனவரி 2021-ல் **இரு** செம landmarks**காத்திருப்பதால் #
Deleteஒரு landmarkக்கு இரண்டு special
இரண்டு landmarksக்கு நான்கு special
வணக்கம் நண்பர்களே!
ReplyDeleteஇனிய வணக்கங்கள் நண்பரே...
Delete( மாலை வணக்கம் சொல்றதா இரவு வணக்கம் சொல்றதான்னு தெரியவில்லையாதலால் வெறும் வணக்கம் மட்டுமே..:-)
1+1=2
Delete'ஒ.நொ.ஒ.தோ'-வுக்கு ஜே!! உங்களது சிலாகிப்புகள் இந்தக் கதையின் மீதான ஆவலை ஏகத்துக்கும் எகிற வைக்கின்றன!! இதன் மொழிபெயர்ப்பும் 'வேற லெவல்' எனும்படியாக இருக்கப்போவதும் ஆவலை எகிறச் செய்கிறது! 'பி.பி.வி'யைப் போல மீண்டும் ஒரு தரமான கதையும், மிரளச் செய்யும் வாசிப்பு அனுபவம் கிடைக்கவிருப்பதும் உறுதியாகத் தெரிகிறது!
ReplyDeleteஎனக்கு 1+1=2 ஓகே தான்!
'கென்யா'வை முடிந்தால் CBF2021ல் இறக்கிவிட முயற்சி செய்யுங்கள் சார்!
கோவையும் , ஈரோடும் வெறும் 10 நாள் இடைவெளியில் இருப்பதே சிக்கல் சார் ! இல்லாவிடின் கோவையை ஒருவாட்டி தாக்கிப் பார்க்கலாம் !
Delete27th
ReplyDeleteஒன்றா ..ஒன்று + இரண்டா
ReplyDeleteபதிவை படித்து முடித்தவுடன் எனக்கே ஒரு குழப்பம்...
எனவே பெரும்பான்மை கருத்தே எனது கருத்தும் சார்..:-)
ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள் உங்கள் முன்னோட்டமே மற்ற இதழ்களை பற்றி மறக்க செய்கிறது..எனவே கென்யா தள்ளி போவதில் வருத்தம் இல்லை சார்..
ReplyDeleteஒற்றை நொடிக்காக காத்திருக்கிறேன்...
காத்துள்ள 2021 தேர்தலில் யாருக்கு சீட்டும், யாருக்கு அல்வாவும் காத்துள்ளதோ தெரியாது ; ஆனால் நம் மட்டில் 1 சீட்டுக்கு டிக் போட்டாச்சு - in emphatic fashion !!
ReplyDelete#########
இளவரசி
இளவரசி
இளவரசி
இளவரசி
இளவரசி...
lone ranger.
Delete////இதுவரைக்குமான கதைகளுள் இந்த வீரியத்தில் ஒரு ஸ்கிரிப்ட் நான் பார்த்ததில்லை ; வசன நடையினை பிரெஞ்சுக் கதாசிரியர் செதுக்கியிருக்கும் பாணி லேசு பாசில்லை !! இயன்றமட்டிலும் நான் பணி செய்துள்ளேன் ; தமிழுக்கு எழுதும் நபரையுமே ரொம்பவே கவனமாய்க் கையாளச் சொல்லுங்கள் !!" என்பதே அவர் தந்த அட்வைஸ் !! And அந்த முதல் பாகத்தின் ஆங்கில ஸ்கிரிப்டை வாசிக்கும் போதே நமது மொழிபெயர்ப்பாளரின் புலமையும், ஒரிஜினல் பிரெஞ்சுப் பதிப்பின் வீரியமும் பிடரியில் அடித்தார் போல தென்பட்டது !////
ReplyDeleteஆவலைக் கிளப்போ கிளப்புனு கிளப்புதுங்க எடிட்டர் சார்!
விசாலக்கிழமையே பேனாவும், நோட்டுமாய் WWF ஆரம்பித்தாயிற்று !! புனித தேவன் மனிடோ தான் ஆற்றலைத் தந்தாக வேண்டும் !! Phew !!
Deleteஏக் + ஏக் = தோ .
ReplyDeleteஏ மேரா ஆப்ஷன் ஹை.
அச்சா ஹை...!
Deleteஏக் காவ் மே ஏக் தலீவர் ரகு தாத்தா !
Delete1+1= 2
ReplyDelete///And 270 பக்கங்கள் எனும் போது கிட்டத்தட்ட ஒரு 2 மணி நேர சினிமாவுக்கான screenplay இங்குள்ளது///
ReplyDeleteஎன்னளவில் இது (குறைந்தபட்சம்) ஏழு மணி நேரச் சினிமாவாக இருந்திடும்!
கண்டிப்பாக திரும்ப திரும்ப பார்க்கப்படும் சினிமா வாக?
Deleteஇப்பொழுதே 1+1= 2 என்பதே முண்ணனியில் உள்ளதால் அவர்களே இறுதியாக ,உறுதியாக அறுதிபெரும்பான்மை பெற்று நாற்காலியில் அமரப்போவது திண்ணமாக தெரிவதால் எனது ஓட்டும்..
ReplyDelete1+1=2 என்பதை தெரிவித்து கொள்கிறேன் சார்..:-)
நீங்கள்லாம் தியானம் பண்ண வேண்டிய தலீவருங்கோ !!
Deleteகொரானோவுக்கு இப்ப மரடோனா மாதிரி வயசாயிருச்சு.
ReplyDeleteஇப்ப முக்கியமான விஷயம் ஈதுன்னா பண புழக்கம் தான்....
எல்லாமே டல்லா இருக்கு...
மாசா மாசம் நமக்கு ச்யவன்பிராஷ் மாதிரி காமிக்ஸ் வர்றது புத்துணர்வு...
எந்த வியாபாரியும் சந்தோஷமா இல்ல...
காரணம் - பணம் புரளல...
ஆனாலும் வேலைக்கி ஆளு கெடக்கல
வரவும் மாட்டேங்கிறாய்ங்கே..
அதே ரேசன் அரிசியை சாப்டுட்டு மன்ரேகா வுல -பொண்டாட்டி சம்பாத்தியத்துல -தண்ணியடிக்கிறாய்ங்கே -
சதாய்க்கிறாங்கே...
என்னதா நடக்குது நாட்ல -புரியல...
காமிக்ஸ் மட்டுமே இப்ப புரியுது...
இது மட்டுமே நிதர்சனம்...
இதுவே வாசிக்க - சுவாசிக்க - சிக்க வில்லா மனசோட ஏக்கம் னு ஆயிருச்சு...
இதுவும் கடந்து போகும்...
//ஆனாலும் வேலைக்கி ஆளு கெடக்கல
Deleteவரவும் மாட்டேங்கிறாய்ங்கே.//
ஆனால் ஆறு மாதங்களுக்கொரு புது செல்போன் கையில் மிளிர்கிறது !! ஆண்டுக்கொரு புது பைக்கும் பளபளக்கிறது !! "அட்வான்ஸ் வேணும் சார்" என்று கேபினைத் தட்டினாலே மறுநாளைக்கு புது சாம்சங் தரிசனமோ ; புது சுசுகி தரிசனமோ நமக்கு உத்தரவாதம் - என்று அர்த்தம் !
அட்டகாசமான முன்னோட்டம் சார் அடி தூள். கென்யா தள்ளி போய்க்கொண்டே இருப்பது வருத்தம் தான். ஆனால் புதிய கதை பற்றிய அறிவிப்பு சும்மா பட்டையை கிளப்பிவிட்டது. ஈரோடு ஸ்பெஷல் இரண்டு புத்தகங்கள் அவசியம் சார். கிராண்ட் stage requires grand entrance so please.
ReplyDeleteஎஸ்...
Delete//ஈரோடு ஸ்பெஷல் இரண்டு புத்தகங்கள் அவசியம்//
Deleteபார்க்கலாமே சார்....நண்பர்களின் பெரும்பான்மை என்ன நினைக்கிறதென்று !
அப்புறம் இந்த இதழைப் படித்த பின்னே நாம் இருப்பது இந்தியாவில் தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள கொஞ்ச நேரம் ஆகிடும் பாருங்களேன் !!
ReplyDelete##₹₹₹₹₹₹₹₹######
So "கென்யா" வுக்கென குரல் தந்த நண்பர்கள் அனைவருக்கும் மெகா நன்றிகள் & ஒரு வேண்டுகோள் - கொஞ்சமே கொஞ்சமாய்ப் பொறுமை காத்திட !
#############
மகிழ்வுடன் காத்திருக்கிறோம் சார்..:-)
1 போதும் சார் பட்ஜெட் காரணம்..
ReplyDelete****ஆனால் நம் மட்டில் 1 சீட்டுக்கு டிக் போட்டாச்சு****
*எதிர்காலம் எனதே*
பேரை கேட்டாலே சும்மா அதிருதில்ல..
//பேரை கேட்டாலே சும்மா அதிருதில்ல//
Delete:-))
விலையைப் பற்றி கவலை இல்லை சார், எப்படியும் வாங்க தான் போகிறோம்.
ReplyDeleteஆனால் ஒ.நொ.ஒ.தோ வின் விலையை 500 என்று நிர்ணயிக்கலாம். ரூ.600 சற்று கூடுதலாக தெரிகிறது.
எனது choice 1+1 = 2
கவனிக்கப்பட வேண்டிய பல நாயகர்கள் வாய்ப்புக்காக காத்திருக்க, விற்பனையில் சொதப்பி வரும் மாடஸ்டிக்கு விடாப்பிடியாக தொடர்ந்து வாய்ப்பளித்து ஓரளவுக்கு தேற்றி அடுத்த வருடத்திற்கும் சீட் இப்போதே கொடுத்து விட்டீர்கள். மாடஸ்டி விசயத்தில் மட்டும் மற்றவர்களிடம் காட்டும் strictness ஐ கடைபிடிக்காதது ஏன் சார்.
பொதுவான காமிக்ஸ் ரசிகன் நான். கதை o.k. என்றால் மாடஸ்டியும் பிடிக்கும். சுமார் என்றால் டெக்ஸும் கசக்கும். மாடஸ்டியின் கதைகள் ஓரளவுக்கு O.K.தான், ஆனால் சித்திரங்கள் படு மோசம். மாடஸ்டிக்கு கொடுக்கும் ஒவ்வொரு வாய்ப்பின் போதும் சான்ஸ் இல்லாமல் புறக்கணிக்கப்படும் மற்ற நாயகர்கள் நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை சார். இதை சற்று கவனிப்பீர்களா.
// மாடஸ்டிக்கு கொடுக்கும் ஒவ்வொரு வாய்ப்பின் போதும் சான்ஸ் இல்லாமல் புறக்கணிக்கப்படும் மற்ற நாயகர்கள் நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை சார். இதை சற்று கவனிப்பீர்களா. //
Deleteயோசிக்க வேண்டிய விஷயம்தான்.........
//விலையை 500 என்று நிர்ணயிக்கலாம். ரூ.600 சற்று கூடுதலாக தெரிகிறது.//
Deleteஉங்களுக்குத் தெரிகிறது...எனக்கும் தெரிகிறது....ஆனால் தெரிய வேண்டிய பேப்பர் வியாபாரிகளுக்கு இப்போதெல்லாம் காதுகள் ஈயத்தால் அடைத்துப் போய்க் கிடக்கிறதே....யாரை நோவது நான் ? இங்குள்ள ஒரு மெகா ஸ்டாக்கிஸ்ட் வசம் சுமார் 10 கோடிக்கு பேப்பர் கையிருப்பு இருந்தது - இந்தச் சிக்கல்கள் தலைதூக்கும் முன்பாய் ! இன்றைக்கு அது முழுக்க முழுக்கவே தங்கத்துக்கு சமானம் !!
//மாடஸ்டிக்கு கொடுக்கும் ஒவ்வொரு வாய்ப்பின் போதும் சான்ஸ் இல்லாமல் புறக்கணிக்கப்படும் மற்ற நாயகர்கள் நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை சார்.//
இருப்பதோ ஒரேயொரு ஜெயண்ட் வீல் ! அதனில் இருப்பதோ 15 இருக்கைகள் தான் !! So யாரேனும் ராட்டினத்திலிருந்து இறங்கினால் மட்டுமே கீழே நிற்கும் குட்டீஸ் உள்ளே நுழைந்திட முடியும் !! எப்படிப் பார்த்தாலும் எந்தவொரு குறிப்பிட்ட தருணத்திலும் யாரேனும் கீழே தேவுடு காத்திருக்கத் தானே வேண்டி வரும் சார் ? அதன் பொருட்டு ரவுண்டு சுற்றும் நபர்களைக் கோபிப்பானேன் ?
சார் ஒரு முறையாவது மாடஸ்டி அக்காவை ராட்டினத்தில் இருந்து இறக்கிப் பார்க்கலாமே சார். தவறாது இடம் பிடித்து விடுகிறார். பதிலுக்கு நன்றி சார்.
Delete//சித்திரங்கள் படு மோசம். ///
Deleteமாடஸ்டியின் சித்திரங்கள் சுமார் என்பதைவிட, நம் எதிர்பார்ப்பு எகிறிவிட்டது எனச் சொல்லலாம்.சித்திரங்களுக்கான அளவுகோல்கள் மாறிவிட்டன எனக் கூறலாம். நம் பார்வையின் தேடல் பரந்துள்ளது எனலாம்.
கால மாற்றத்தில் கதை சொல்லும் முறையிலும் ஓவியபாணிகளும், தம்மை மெருகாக்கிக் கொண்டு அடுத்தகட்டத்திற்கு நகர்கின்றன.விஞ்ஞான வளர்ச்சியும், தொழில் நுட்பங்களும் இதற்கு உறுதுணையாக இருக்கின்றன.
மாடஸ்டி கதைகள் வந்த காலத்தைப் பாருங்கள். 60களில்.அதன் வாசம் இருக்கத்தான் செய்யும்.அப்போதைய ட்ரெண்ட் வெளிப்படத்தான் செய்யும்.அதுவும் ஒருவகையான வசீகரம்தான்.
ஓவியங்கள் பூக்களைப்போல.அவை தன் மணத்தை மாற்றுவதில்லை.நாம்தான் வேறு வேறு பூக்களை, வேறு வேறு மணங்களைத் தேடுகிறோம்.
என்ன ஒரு மனதை தொடும் விளக்கம் ஓவியங்களை ரசிக்கும் ஒருவரால் தான் இவ்வளவு ஆத்மார்த்தமாக விளக்க முடியும். செம்ம GP
Deleteஅருமையான விளக்கம் GP சார்.
Deleteஅந்த பழமைதான் வசீகரிக்கிறது. ரிப் கிர் பியும் - காரிகனும் ரசிப்பது போல் 'அந்த காரணங்களால் தான் டெக்ஸ் வில்லரையும் சில நேரம் பொறுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
நம்ம என்ன படிச்ச கதைகளையே மறு Uதிப்பு கேட்கிறோமா - அல்லது கலரில் கேட்கிறோமா.
புதிய கதை களை தானே வெளியிடுகிறார்.
// இதுவே இந்தாண்டின் ஈரோட்டு highlight என்று !! //
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி சார்,மிக்க ஆவலுடன் ஒரு காத்திருப்பு படலம்.......
சீக்கிரமே பதிவு நன்றி ஆசிரியரே
ReplyDeleteஒற்றை நொடி ஒன்பது தோட்டா இன்னொரு இரத்தப்படலமாக அமைந்தால் மிக்க சந்தோஷம்
ReplyDeleteவரவிருக்கும் ஆண்டுகளுக்கும், இதழ்களுக்கும் "ஒ.நொ.ஒ.தோ" ஒரு முன்னுதாரணமாய் நில்லாது போயின் நான் ரொம்பவே ஆச்சர்யம் கொள்வேன் சத்யா !
Deleteகண்டிப்பாக காமிக்ஸ் வரலாற்றில் உச்சம் பெறும் ஆசிரியரே நான். கிட் ஆர்ட்டின் கண்ணன். தலைவர்.அடிக்கடி உங்களிடம் கேட்ட கதையிது தொடர் நீளுகிறது பார்போமென நீங்கள் சொல்லியிருந்தீர்கள் அதற்க்கு எதிர்பாரா நேரத்தில் கிடைத்த பொக்கிஷமாக கருதுகிறோம் கட்டாயம் வெற்றி பெறக்கூடிய இதழிது
Delete1+1=2
ReplyDelete1+1 :2
ReplyDeleteஎனது choice 1+1 = 2
ReplyDelete// "ஒன்று மட்டும் பற்றாது" என்று எண்ணும் பட்சத்தில் - "1 + 1 = 2 " என்ற விஞ்ஞானபூர்வ பதிலாகப் பதிவிடலாம் ! //
ReplyDeleteகண்டிப்பாக பற்றவே பற்றாது சார்,அதெப்படி சார் நீங்க அப்படி கேட்கலாம்.......
இதுக்கு பரிகாரமா கென்யா ஸ்பெஷலையும் போட்டுத் தாக்குங்க சார்............
1+1+1=3 இது புது கணக்கு சார்.........
அது out of syllabus சார் ! ரிஜிட் !!
Delete1
ReplyDelete1+1=2🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
ReplyDeleteகென்யாவையை எதிர் பார்த்தேன், உங்கள் தேர்வு வருத்தம் அளிக்கிறது.. extremely unsatisfied with your decision. I am skipping erode book fair. Thanks
ReplyDeleteஆளுக்கொரு ரசனை சார் !
DeleteI am going to read the kenya scanlation.. can't wait anymore...
ReplyDeleteOf course - the choice is yours !
Delete1+1=2🤗🤗🤔🤔🤔🤔🤗🤗🤗🤗🤗🤗
ReplyDeleteபிழையில்லா மழலை
ReplyDeleteகுழந்தை இல்லாதவர்களுக்கு செயற்கை முறையில் (வாடகை தாய்) குழந்தை பெற உதவும் நிறுவனத்திற்கு கோடிக்கணக்கில் வருமானம் அவர்களுக்கு பலவகையில் பலரிடம் இருந்து எதிர்ப்பு! உயிர் சேதாரத்தை கொடுத்து மிரட்டும் எதிரி யார் ஏன் என்ற சஸ்பென்ஸ் உடன் நகரும் கதை! இந்த நிறுவன மேலாளர் ஏவா ட்ராயை காக்கும் பொறுப்பு டெமக்லீஸ்! இதில் நடுநடுவே எல்லியின் தனிமையால் ஏற்படும் மனக்குழப்பம் + பிளாஷ்-பேக், கடைசியில் ஷான் உடன் தனது வாழ்க்கையை தொடங்க ஆரம்பிக்க விரும்பும் நேரத்தில் ஏற்படும் திருப்பம் இதற்கு நடுவே ஏவா ட்ராய் டெமக்லீஸில் இருந்து மறைக்கும் ரசியம் என பல பல சென்டிமென்ட்!
இந்த கதை எல்லி என்ற பெண்ணின் தனிமையான வாழ்க்கை போராட்டத்தை மைய கருவாக வைத்து அதனை சுற்றி கொஞ்சும் ஆக்சன் என்று உருவாக்கபட்டது போல் உள்ளது, முதல் பாகத்தில் விறுவிறுப்பான ஆக்ஷன் மற்றும் கொஞ்சம் எல்லியின் சென்டிமென்ட் என்று சென்ற கதை இந்த முறை அதற்கு நேர்மாறாக உள்ளது.
அட்டை படத்தில் புதுமையான துப்பாக்கியுடன் காட்சி தரும் எல்லி கதைக்கு எந்த சம்மந்தமும் இல்லாதது ஏமாற்றம்!
அருமையான கதை தலைப்பு, அருமையான கதைக்கரு, அழகான ஓவியங்கள், அதிகமான சென்டிமென்ட், அதிகமான வசனங்கள், குறைவான ஆக்ஷன், விறுவிறுப்பு இல்லை! பிழையில்லா மழலை ஏமாற்றம் :-(
விஜயன் சார்,
ReplyDeleteகென்யா இதனை நண்பர்கள் கைதூக்கிய பிறகும் மீண்டும் தள்ளி போடுவது மனதை மிகவும் கஷ்டபடுத்துகிறது! மிக பெரிய ஏமாற்றம்!
வழக்கமாக உங்கள் பதிவுகளை படிக்கும் நான் இந்தமுறை பதிவை முழுவதுமாக படிக்காமல் தாண்டி செல்கிறேன்! கென்யா இந்த வருடமும் இல்லை என்பது ஏற்று கொள்ள முடியவில்லை! அடுத்த வருடம் வருவது எந்த என்று அளவு உறுதி இல்லை, அந்த நேரம் இன்னும் சில பல காரணங்களால் அது வருவது தள்ளி போகலாம் அல்லது வராமல் போகவும் வாய்ப்புகள் இருக்கலாம்!!
ஈரோட்டில் எந்த புத்தகம் வந்தாலும் வாங்குவேன்! ஆனால் கென்யா வரவில்லை என்பதால் அவைகளை படிக்கும் ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்பை குறைத்து விட்டது!! இந்த வருடம் ஈரோடு வரும் ஆர்வமும் குறைந்து விட்டது!
கென்யா நமது காமிக்ஸில் வரும் வரை காத்து கொண்டு இருப்பேன்!
Delete'ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" வெளிவரத் தான் போகிறது ; 'கென்யா"வும் வெளிவரத் தான் போகிறது ! இரண்டையுமே என்றேனும் படிக்கத் தான் போகிறீர்கள் ; முந்தி வந்ததன் காரணத்தையும் புரிந்து கொள்ளத் தான் போகிறீர்கள் ! So 'எடுத்தோம்-கவிழ்த்தோம்" பாணியில் நானும் இந்த நொடியில் ரியாக்ட் செய்யப் போவதில்லை சார் !
Delete// 'ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" வெளிவரத் தான் போகிறது ; 'கென்யா"வும் வெளிவரத் தான் போகிறது ! இரண்டையுமே என்றேனும் படிக்கத் தான் போகிறீர்கள் //
Deleteபடிப்பேன். இரண்டையும் கண்டிப்பாக.
This comment has been removed by the author.
ReplyDeleteDear Editor,
ReplyDeleteKenya or new book is okay for me.
But y conduct a poll if u are not considering to publish kenya firmly.As such v respect ur choice but the way you do it doesnt seem ok.
Regards
Arvind
Correct me if I'm wrong...but there was never a poll ! I had just listed out popular options..!
DeleteAnd if you remember, my personal choice was a Cartoon Special !!
DeleteYes Sir
DeleteU asked ppl to choose and ppl hoped that the majority choice would be considered.
Y lead ppl into something when it has no meaning ultimately?
கதைகள் ரெடி ! மொழிபெயர்ப்புமே முழுசுமாய் ரெடி ! எண்ணி ஐந்தே வாரங்களில் அதை புக்காக்கிட இயலும் !
Deleteஆனாலும் அதனிடத்தில் பேனா பிடிக்க மட்டுமே ஒன்றரை மாதங்கள் பிடிக்கக்கூடியதொரு கதையை - எகிறி நிற்கும் யூரோவின் புது விலைகளில் ராயல்டி செலுத்தி வாங்கி, உருண்டு புரண்டு தயாரிக்கத் தயாராகிடுகிறேன்
என்பதை சித்தே கவனங்களுக்கு கொணர முயற்சித்துப் பாருங்களேன் - please !
ஏதேனுமொரு thought process pattern தென்படுகிறதா என்று அப்புறமாய் பார்ப்போமே சார் !
1+1 = 2
ReplyDelete///காத்துள்ள 2021 தேர்தலில் யாருக்கு சீட்டும், யாருக்கு அல்வாவும் காத்துள்ளதோ தெரியாது ; ஆனால் நம் மட்டில் 1 சீட்டுக்கு டிக் போட்டாச்சு - in emphatic fashion !!///
ReplyDelete:-)
1+1=2
ReplyDelete2021 ரெண்டு சீட் கன்பர்ம் ஆயிடுத்து.
ReplyDeleteஒண்ணு இளவரசி.
இன்னொண்ணு கென்யா..!
யாஹு...!
ஆமால்லே ?!
Deleteஏற்கெனவே டைகர் ஸ்பெஷல் ஃபர்ஸ்ட் கம்பார்ட்மெண்ட்ல ஏறிட்டாரே.
Deleteஆர்வத்தை தூண்டிவிட்டுட்டு அல்வா கொடுக்கறதே உங்களுக்கு வேலையா போச்சுங்க
ReplyDeleteடியர் எடி
இன்னும் ஒரு வருசம் காத்திருக்கணுமே 😱😱
ஆகஸ்டுக்கும் ; ஜனவரிக்கும் மத்தியில் ஐந்தே மாதங்கள் தானே சம்பத் ! ஓட்டமாய் ஓடிடும் !
Deleteஇப்போ முதல் 3/4 வருசங்களுக்கு மேல இருக்கே சாரே
Delete3 மாதத்திற்க்கும் 3/4 வருடத்திற்க்கும் உள்ள வித்தியாசம்
உங்க டைப்பிங்கில் வருவதை படிக்க ஆவலுடன்
இந்த தேர்தலில் இப்போது வரை 1+1=2 தான் முன்னணியில் உள்ளது. மீத நண்பர்களும் வந்து தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டுகிறேன்.
ReplyDeleteOnly one
ReplyDelete1+1=2 ..
ReplyDelete1+1=2 or 3 or 4 or anything 🤷🏻♂️🤷🏻♂️🤷🏻♂️
ReplyDelete1+1=2.
ReplyDeleteவிஜயன் சார், இதற்கு முன்னர் இதுபோல் பலமுறை லெப்ட்டில் இன்டிகேட்டர் போட்டு ரைட்டில் கைகாட்டி விட்டு நீங்கள் நேரே சென்ற போது தோன்றாத வருத்தம் இந்த முறை வரக்காரணம், கென்யா ஒவ்வொரு வருடமும் தள்ளிப் போவதை மனதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ReplyDeleteஇனி இதுபோன்ற ஆர்வத்தை கிளப்பும் ஒட்டேடுப்பு(?) அல்லது குரல் வாக்கெடுப்பில் பங்குபெறாமல் நீங்கள் எந்த கதை போட்டாலும் நன்றாக இருக்கும் என்று பொறுப்பை நம்பிக்கையுடன் உங்களிடம் ஒப்படைத்து விட்டு இருந்தால் சந்தோஷமாக இருக்கலாம் என நம்புகிறேன்.
1+1=2
ReplyDeleteஒற்றை நொடி ஒன்பது தோட்டா படங்கள் எல்லாம் படம் போடு கின்றதே. இது இரத்த பூமி. அருமை அருமை
ReplyDelete'எங்கே எந்த ரூபத்துல பாயசம் வந்து சேரப்போகுதோ'ன்னு எடிட்டர் போன வாரம் எதிர்பார்த்துக்கிடந்தப்போல்லாம் ரொம்ப சுமூகமா முடிஞ்சுடுச்சு! ஆனா இன்னிக்கோ - எதிர்பாராதவிதமா விதவிதமான பாயசங்கள்!! ம்.. என்ஜாய் பண்ணுங்க எடிட்டர் சார்!
ReplyDeleteஆனா பாருங்க மக்களே - நாம் பழம் வேணுமின்னு கேட்டோம்.. எடிட்டர் பஞ்சாமிர்தமே தர்றேன்றாரு! நல்லதுதானே?
பழத்தை சாவகாசமா அப்புறம் சாப்பிட்டுக்கிடலாமே..?
பழம் அழுகிப் போய்விட்டால் சாப்பிட முடியாதே :-)
Delete*என்றைக்கேனும் ஒரு நாள் புலரும்..
Delete*அன்றைக்கு நிஜங்களின் முகங்களுக்கு நம்பகத்தன்மை இருக்கும் !
*அபிப்பிராயங்களை மாற்ற நேரிடும் தருணங்களில் பின்னணியில் மெய்யான முகாந்திரமிருக்கும் என்ற நம்பிக்கைகள் துளிர்த்திருக்கும்.
*பெட்ரோமாக்சின் இடத்தினில் LED இடம்பிடிப்பதை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் mindset புலர்ந்திருக்கும் !
*தினத்தின் 16 மணி நேரங்களை பொம்மை புக்குகளோடு செலவிடுபவனுக்கு நிச்சயமாய் basic லாஜிக் மறந்திராது என்ற நம்பிக்கை குடியேறி இருக்கும் !
*அந்த நாளை பார்க்கும் வேளையில் வழுக்கைத் தலையில் எடிட்டர் குல்லா இராது :-):-)
Certainties of life !!
எடிட்டர் நமக்கு 'best among the best' கொடுக்க நினைப்பதால்தான் இத்தனை மெனக்கெடுகிறார்! இந்த சாதாரணமான உண்மையைப் புரிந்துகொண்டாலே போதும் - நம் கோபதாபங்கள் காத தூரம் ஓடிட!
Deleteமற்றபடி, மேலே எடிட்டர் எழுதியிருப்பது கவிதையா, வஜனமா என்று தெரியவில்லை.. ஆனால் 'இன்னுமா என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை நண்பர்களே?' என்று முனகும் ஒரு வலியை உணர்ந்துகொள்ள முடிகிறது!!
My goodness!!!
DeleteSir ! Don't elaborate...
A king may ask opinions but it's entirely upon him to make DECISIONS to suit the situation...
Infact you are the one who are going to suffer for this decision ..
The sufferings are manyfolds..you enumerated these in your various comments..
1) you have to work hard to achieve " freshness factor" at EBF ( ஒ.நொ.ஒ.தோ) ..
Instead of bringing forward Kenya - a project already nearly finished and ready to go, you are putting considerable jeopardy to your health by choosing ஒ.நொ.ஒ.தோ..and it's surprising for me that you are blamed for this by our learned priyatels..
2) the investment on Kenya is at stagnation.. Again the lose is yours yet you are blamed..surprise...
3) you want to do translations for both books while the deadline is threatening to be too short..nobody can surpass your writing skills and you you know that very well and not to bring any disappointment upon readers you decided to pen yourself thereby ensuring many sleepless nights ahead in the oncoming days..yet you are blamed..
It's really a surprise why a man with good intentions - but everything to loose - ought to be blamed or looked upon with raised eyebrows or frowned upon?
sometimes the life is at the height of its mediocrity.. What else one can say?
செனா அனா...
Deleteஅருமை அருமை!!
// *தினத்தின் 16 மணி நேரங்களை பொம்மை புக்குகளோடு செலவிடுபவனுக்கு நிச்சயமாய் basic லாஜிக் மறந்திராது என்ற நம்பிக்கை குடியேறி இருக்கும் ! // உண்மை தான் சார்.
Deleteஆனால் 'இன்னுமா என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை நண்பர்களே?' என்று முனகும் ஒரு வலியை உணர்ந்துகொள்ள முடிகிறது!! // என்னாலும் உணர முடிகிறது விஜய். இவ்வளவு தூரம் இறங்கி வந்து நம்மை சமாதான படுத்த வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை ஆனால் இருந்தும் ஒவொரு முறையும் அவர் அதை செய்கிறார்.
// A king may ask opinions but it's entirely upon him to make DECISIONS to suit the situation... // இது தான் உண்மை. உங்களுடைய முடிவுகள் உங்களுடையது மட்டுமே அது எப்போதும் எங்கள் நலனுக்காக தான் என்று தெரியும்.
கென்யா விற்கு கொடி பிடித்தது நான் தான் இப்போது அதனை கீழே போட்டுவிட்டு ஒற்றை நொடி ஒன்பது தோட்டா வின் பின்னே நிற்கிறேன். அசத்துங்கள் சார் ஈரோட்டில். I'm game
ஐயோ சார் ! இன்றும்,என்றும் - The Customer (in our case, The Reader) is the King ! அவர்களை மகிழ்விக்கும் அரசவைப் புலவரும், விதூஷகனுமே அடியேன் ! தற்போது எடுத்து விட்டிருக்கும் பாடலின் ராகத்தில் சிலருக்கு திருப்தியில்லை என்பதற்காக அவர்களை கடிந்திடுவானேன் சார் ? சீக்கிரமே அவர்களையும் தாளம் போடச் செய்வதும் ஒரு சுவாரஸ்யச் சவால் தானே ?
Deleteபின் குறிப்பு : நானும் புலவனே தான் ; புலவனே தான் !
வியாபாரி என்கிற குல்லா அணியாத காமிக்ஸ் காதலர் நமது ஆசிரியர் விஜயன் சார்
DeleteThis comment has been removed by the author.
Deleteவிஜயன் சார்,இந்த சிறியவனின் பொருட்டு இத்தனை விளக்கங்கள் தேவையில்லை சார்.
Deleteஎனது ஏமாற்றம் கென்யா தள்ளிக்கொண்டே போவது அதேநேரம் அந்த இடத்தில் எந்த கதை எனக்கு பிடிக்காது என்று அர்த்தம் கொள்ள தேவையில்லை.
காமிக்ஸ் என்று எது வந்தாலும் படிக்கும் ரகம் நான் (புலன் விசாரணை மற்றும் தூங்கிப் போன டைம் பாம் தவிர :-))
அதே நேரத்தில் EBF வரவுள்ள புத்தகங்கள் எனக்கு பிடிக்கவில்லை அல்லது அதனை மாற்றுங்கள் என்றும் அர்த்தம் கொள்ள தேவையில்லை சார்.
Deleteஅவ்வாறு எனது பின்னூட்டம் தவறான புரிதலை நண்பர்களுக்கு ஏற்படுத்தி இருந்தால் sorry friends.
என்ன இருந்தாலும் சாத்தானின் சீடர்கள் மாதிரி வருமா??? ம்க்கும்.்
ReplyDeleteரணகளத்திலும் கிளுகிளுப்புப் பாயாசமா ? ஏப்ரலில் அதுக்கு சான்ஸ் நஹி ; 'தல' கலக்குகிறார் !
Deleteஅர்ஸ் மேக்னா & ஒற்றை நொடி ஒன்பது தோட்டா இரண்டுமே நல்ல தேர்வுகள் சார்! இரண்டையும் ஈரோட்டில் களம் இறக்கினால் சென்ற வருடம் சாதித்த பிஸ்டலுக்கு பிரியா விடை & நித்தம் ஒரு யுத்தம் போல இதுவும் விற்பனையில் சாதிக்க வாய்ப்புள்ளது! இரண்டையுமே ஈரோட்டில் களம் இறக்க முயற்சியுங்கள் சார்!கென்யாவை வருகிற 2021 ஜனவரி புக் பேரில் கொண்டு வந்தால் நல்லாயிருக்கும்னு நினைக்கிறேன்! அதே போல 2021 லாவது யுமா அல்லது மெபிஸ்டோ கதைகளில் ஒன்றையாவது களம் இறக்குமாறு ஆவன செய்யுங்கள்
ReplyDeleteஇது..இது பேச்சு!
Delete////அர்ஸ் மேக்னா & ஒற்றை நொடி ஒன்பது தோட்டா இரண்டுமே நல்ல தேர்வுகள் சார்! இரண்டையும் ஈரோட்டில் களம் இறக்கினால் சென்ற வருடம் சாதித்த பிஸ்டலுக்கு பிரியா விடை & நித்தம் ஒரு யுத்தம் போல இதுவும் விற்பனையில் சாதிக்க வாய்ப்புள்ளது///
யெஸ்..யெஸ்.. அதுவேதான்!!
1+1=2
ReplyDelete//ஆனால் இடைப்பட்ட ரெகுலர் இதழ்களோடும் கட்டி உருண்டு கொண்டே இந்த நானூற்றுச் சொச்சம் பக்கங்களோடும் WWF நடத்துவது சுலபமில்லையே //
ஆனால் இந்த ஒரு காரணத்திற்க்காக எனக்கு ஒன்றே போதும்
இல்லை சார் ; தம் கட்டி இழுத்திடுவோம் இரண்டையுமே !
Delete"அர்ஸ் மேக்னா" தள்ளிப் போகுமென்று சொல்லி பின்னே அதுக்கொரு பாயச மேளா அரங்கேறிடக்கூடும் ! ஷுகர் உள்ளவன் இத்தினி பாயசம் குடித்தால் வில்லங்கமாகிப் போகும் !
///ஆனால் இந்த ஒரு காரணத்திற்க்காக எனக்கு ஒன்றே போதும்///
Deleteநல்ல மனம் வாழ்க!
அப்போ 900/- அனுப்பி விடவா சார். ஈரோடு புத்தக விழாவிற்கு?
Delete//So மொழிபெயர்ப்பினில் ஈடு தந்திடப் பயந்து நான் ஒதுக்கிய இரண்டாவது ஆல்பமாய் "ஒ.நொ.ஒ.தோ" வைச் சொல்லலாம் ! (முதலாவது பற்றி பின்னொரு நாளில்..) //
ReplyDeleteஎடிட்டர் சார்,
இது வரை நீங்கள் "பின்னொரு நாளில்" என்று சொன்ன சங்கதிகள் நிறைய உள்ளன. :-)
அனேகமா நம்ம பூனையார் இதுக்கொரு லிஸ்ட் வச்சிருப்பாருன்னு நினைக்கிறேன்.
ஜூனியர் குப்பண்ணாவில் மட்டன் பிரியாணி + பள்ளிப்பாளையம் சிக்கன் ! லிஸ்ட் சுளுவா கைமாறிடும் சார் !
Delete///அனேகமா நம்ம பூனையார் இதுக்கொரு லிஸ்ட் வச்சிருப்பாருன்னு நினைக்கிறேன்.///
Deleteலிஸ்ட் நீளமாகி இப்ப புக்கு போடற அளவுக்கு பெரிசாகிடுச்சுங்க ரட்ஜா! :)
சார் 1+1 = 2 ok.. ஆனால் இதுதவிர ஈரோட்டில் சர்ப்ரைஸ் வெளியீடுகள் நிச்சயம் இருக்கும் என்பதால்பட்ஜெட் அதிகமாவது நிச்சயம். கதை தேர்வுகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுவது போல பட்ஜெட் சார்ந்த விஷயங்களும் ஒவ்வொருத்தருக்கும் கண்டிப்பாக மாறுபடும் என்பதை நிச்சயம் கருத்தில் கொள்வீர்கள். ஆனால் கென்யா மீண்டும் மீண்டும் தள்ளிப் போனது வருத்தமே. கடந்த ஆண்டில் காலனின் கானகம் வெளியிட தயங்கி வெற்றியை ஈட்டியது. அதுபோல் பல வருட அறிவிப்பு-பணிகள் முடித்தும் வெளியிட தயங்கும் "காலவேட்டையரை"யும் ஏதாவது ஒரு தருணத்தில் சீக்கிரமே வெளியிடுங்கள் சார்.
ReplyDelete₹1000/- 2 புத்தகங்கள் ஈரோடு புக் ஃபேருக்கு. ஆனா ஒரு வருத்தமான விஷயம் மூணாவது வருஷமா டெக்ஸ் மெபிஸ்டோ யுமா கதைகளை போடாமா டீல்ல விடுறீங்க. ஐயாம் சோ அன்ஹாப்பி.
ReplyDeleteகென்யா வரவில்லை என்று நானும் தான் அன் ஹேப்பி. But விடுங்க பாஸ். ஆனாலும் நீங்கள் எனக்கு மிகவும் சீனியர் வெகு நாட்களாக நீங்கள் மொபிஸ்டோ யுமா கேட்டு வருவது அனைவருக்குமே தெரியும்
Delete1+1=2
ReplyDelete1+1 = 2
ReplyDelete140
ReplyDelete1+1=2
ReplyDelete1+1=11
ReplyDeleteசார் ஒன்றோ இரண்டோ உங்கள் பார்வை அவற்றின் மீது நன்றாக படிந்து பின்னர் எங்களை அடைந்தால் தான் நன்றாக இருக்கும். அவசரம், கடினமான வேலை பளு உங்கள் பக்கம் இருக்காது என்ற நம்பிக்கையில் எனது சாய்ஸ் As You desire sir. One fine day anyways we will be getting all those presently delayed la??? So No issues sir👍
ReplyDelete1+1=2
ReplyDeleteஉங்களுக்கு proof reading இல்லை வேறு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றால் சொல்லுங்கள் சார். நான் ரெடி
ReplyDeleteநண்பர்களும் கண்டிப்பாக உதவ தயாராகத் தான் இருப்பார்கள்.
DeleteDear விஜயன், My choice is ONLY ONE. JUST DUE TO BUDGET REASON.
ReplyDeleteDear விஜயன் சார் , My choice is ONLY ONE. JUST DUE TO BUDGET REASON. (I LOVE TO read 2 books)
ReplyDelete1+1=2
ReplyDelete1+1=2
ReplyDeleteவாண்டு ஸ்பெஷல்
ReplyDeleteபூந்தளிர் மாதிரி கதம்பமாக ஒரு இதழ்.
டிங்கிள் கதைகள் தரமான தமிழில் வந்தால் அருமையாக இருக்கும்...
163வது
ReplyDeleteஐயாம் பிஸி... இஇஇஇஈஈஈஈ
ReplyDelete1+1=2
ReplyDeleteஎனக்கென்னவோ கென்யாவுக்காக நண்பர்கள் இத்தனை வருத்தங்களை வெளிபடுத்த தேவையில்லை னு தோணுது...
ReplyDeleteஅது கொஞ்சம் ஆறின காப்பி டீ தான்.
அதனால் சுடச்சுட பால் வாங்கீட்டு வந்து நமக்காக கேட்ட காப்பியும் டீயும் போட்டுத்தர்றேங்கிறாரு.
சந்தோஷமா குடிப்போமே...
நாம விருந்தாளிங்க .
காபி டீ தர்றதே பெரிய உபகாரம்...
அந்த கென்யா காபி டீய சுடவச்சி குடிச்சிட்டா போச்சி...
டீ - அர்ஸ் மேக்னா
Deleteகாபி - ஒ நொ ஒ தோ
ஒ நோ ஒ தோ & அ மே மேக்ஸியிலயா....
Deleteஈரோட்ல வந்து தான் காப்பி டீ சாப்ட்றதுன்னு முடிவே பண்ணீட்டேன்....
Delete##எனக்கென்னவோ கென்யாவுக்காக நண்பர்கள் இத்தனை வருத்தங்களை வெளிபடுத்த தேவையில்லைனு தோணுது##
Delete+1
// காபி டீ தர்றதே பெரிய உபகாரம் //
Deleteஉண்மை தான் ஜனா. காபி டீ எது கிடைத்தாலும் குடிக்கலாம் என்ற ரகம்.
காபி எதிர்பார்த்து டீ தான் கிடைக்கும் என்றால் அதற்கு உடனே என்னை adjust செய்து குடித்து பழகியவன்.
///எனக்கென்னவோ கென்யாவுக்காக நண்பர்கள் இத்தனை வருத்தங்களை வெளிபடுத்த தேவையில்லை னு தோணுது...///+1000
Deleteஉண்மையோ உண்மை!
"ஆறிய கஞ்சி பழங்கஞ்சி"---சில நண்பர்கள் ஓவராக ஏமாற்றத்தை காட்டுவது சிரிப்பை தான் வழவழைக்கிறது! இன்றைக்கு
இல்லைனா நாளை...!
அட அப்படியே இல்லைனாத்தான் என்னா??? ஆயிரம் கென்யாகள் கொட்டி கெடக்கு எடிட்டர் சாரை சுதந்திரமாக விடுங்கப்பா!
விஜயசங்கர்:அண்ணா லயன் காமிக்ஸ் வந்திருக்கா?
ReplyDeleteகடைக்காரர்: இல்லப்பா.
விஜயசங்கர்:அண்ணா லயன் காமிக்ஸ் வந்திருக்கா?
கடைக்காரர்: இல்லப்பா.
விஜயசங்கர்:அண்ணா லயன் காமிக்ஸ் வந்திருக்கா?
கடைக்காரர்: இல்லப்பா.
விஜயசங்கர்:அண்ணா லயன் காமிக்ஸ் வந்திருக்கா?
கடைக்காரர்: இல்லை.விஜயசங்கர்:அண்ணா லயன் காமிக்ஸ் வந்திருக்கா?
கடைக்காரர்: வந்தா தொங்க விட மாட்டோமா கடையில.
விஜயசங்கர்:அண்ணா லயன் காமிக்ஸ் வந்திருக்கா?
கடைக்காரர்: உனக்கு என்னதான் வேணும்
...........
இப்ப அதே கடைக்காரரிடம்
அண்ணே மாசத்துக்கு நான்கு புக்கு வருது. அதுவும் வீட்டுக்கு வருது.
கடைக்காரர்: ?????
எங்களுக்கு காமிக்ஸ் வருவதே பெரிய விஷயம்.
நீங்க கென்யா போட்டா என்ன
ஒற்றை நொடி ஒன்பது தோட்டா போட்டா என்ன
எங்களுக்கு தேவை புக்கு தான்.
1+1=2
அருமை!!
Delete1+1=2
ReplyDeleteநண்பர்களுக்கு வணக்கம்
ReplyDelete1+1=2
##மற்றபடி, மேலே எடிட்டர் எழுதியிருப்பது கவிதையா, வஜனமா என்று தெரியவில்லை.. ஆனால் 'இன்னுமா என்னைப் புரிந்துகொள்ள முடியவில்லை நண்பர்களே?' என்று முனகும் ஒரு வலியை உணர்ந்துகொள்ள முடிகிறது!!##
ReplyDelete+1
இளமையான கேப்டன் வருவாரா?
ReplyDeleteமாட்டாரா?
வருவாரெனில் எப்பொழுது?
Deleteஎங்கள் தங்கத் தலைவன் கண்டிப்பாக வருவார்.
Deleteஈரோட்டில் ஒரு புத்தகமா இல்லை இரண்டு புத்தகங்களா எனத் தெரியவில்லை. எனவே முன் பணமாக ₹1000 அனுப்பி விட்டேன்.
ReplyDeleteவழக்கமான ஆர்வத்துடன் காத்திருப்பேன் கென்யா மற்றும் 2020 EBF specialக்கு.
First of all, we should give freedom to editor to choose stories and heroes but what is happening here,we,everybody forces him to choose a story, have you ever heard about this ? Which publishing company and it's editor gives such a freedom to his readers, as a publisher and comics lover, editor has to calculate many things, please don't interfere always, if we give him freedom, we may see many unknown comics diamonds, thank you
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள் சார்.
Deleteவரிக்கு வரி மிக சரி நண்பரே!
DeleteWell said Ganesh
Deleteகென்யா !
ReplyDelete1+1=2
ReplyDeleteவணக்கம் சார்..
ReplyDeleteகென்யாவுக்கு எதிர்பார்ப்பு நீள்கிறது.. பூதவேட்டைக்காக தங்களை தொல்லை கொடுத்த அஞ்சலட்டை காலங்கள் நினைவிலுள்ளது... நண்பர்கள் எதிர்பார்ப்பை கொஞ்சம் கன்சிடர் செய்யுமாறு வேண்டுகிறேன்.. நன்றி.. தமிழ் காமிக்ஸ் டைம்ஸிலிருந்து ஜானி..
This comment has been removed by the author.
ReplyDelete2021ல் இளம் டைகர் கதைகளை ஒரே தொகுப்பாக வெளியிட்டு விடவும்.. பல வருடங்களாக தளபதி அன்பர்கள் காத்திருக்கிறோம்.
ReplyDeleteஈரோடு திருவிழாற்கு கென்யாவிற்கு பதிலாக ஒ.நொ.ஒ.தோ வெளியீடாக தேர்வு செய்தது அதிர்ச்சியாக(இன்ப)உள்ளது.
ReplyDeleteஅந்த கதை குறித்து ஆசிரியர் விவரித்துள்ளதும் சில முன்னோட்டங்களும் குபீரென்று ஆவலை ஏற்படுத்துகிறது.
இது போன்ற கதை களங்கள் மொழிபெயர்ப்பில் மிகுந்த சவாலானது என்பதை பலமுறை உணர்ந்துள்ளோம்.
கம்பி மேல் நடக்கும் சாகசத்தை ஆசிரியர் எப்போதுதான் கைவிடுவார் என்பது புரியவில்லை.
வணிக ரீதியான நோக்கில் செயல்பட முனைந்தால் "நிஜங்களின் நிசப்தத்தை" வெளியிட முனைந்ததுக்கு ;அந்த இடத்தில் இரண்டு டொக்ஸ் கில்லரை களமிறக்கி இல்லா காட்டியிருக்கலாம்தான்.ஆனாலும் இத்தனை ஆண்டுகளாக காமிக்ஸ்ல் முத்திரை பதித்த இதழாக எஞ்சியிருக்க போவது இது போன்ற வெளியீடுகள் தான்.நிச்சயமாக உங்களுடைய பங்களிப்பும்,ஆர்வமும் பலமுறை பிரமிக்க வைக்கிறது.
உறுதியாக காமிக்ஸ்ல் ""லயன் ,முத்து குழுமம்"" மிகப்பெரிய தடம் பதிக்கும் ஓர் உன்னத நாள் வாய்க்கும்.
ஜுனியர் எடிட்டர் பொறுபேற்றுக் கொள்ளும் போது காமிக்ஸ் இதழியல் துறையில் புதிய உச்சத்தை அடைந்திருக்கும்.
ஒற்றை நொடி ஒன்பது தோட்டா ஹவோல்டேஜ் திரில்லர் என்பது முன்னோட்டங்களிலேயே உணர முடிகிறது.ஆகஸ்ட்டுக்குள் இதை சாத்தியப்படுத்த முயன்றால் இந்த வருட புத்தக விழாவும்,வாசகர் சந்திப்பும் ஒரு மறக்க இயலாது தருணமாக இருக்கும்.
பதிவை மீண்டும் ஒரு முறையும்,காம்ரேட்களுடைய பின்னூட்டங்களையும் வாசிக்க வேண்டி உள்ளதால் மீண்டும் சந்திப்போம்.
1+1 = 2
DeleteNice கருத்து ஸ்ரீராம். Very good 1+1=2
Delete1+1=2
ReplyDeleteComic lover நினைவாக I'm 200
ReplyDeleteஈரோட்டில் இரண்டு புத்தகங்களும் களமிறங்குவதே மகிழ்ச்சி
ReplyDelete1
ReplyDelete2 என்று சொல்லலாம் தான்... ஆனால் எடிட்டர்-ன் work load கண்டிப்பாக யோசிக்க வேண்டிய ஒன்று... அவரை relax ஆக செயல் பட விட்டால் நமக்கு நிச்சயம் best ஆக தருவார்... So 1 is my option...
ReplyDelete1+1=2
ReplyDelete1
ReplyDeleteஇரண்டையும் பெற்று கொள்ள ஆசைதான். ஆனால் பட்ஜெட் உதைக்கிறது. ஒன்றே நன்று. அதுவும் சிறப்பு. மற்றொன்றுக்காய் காத்திருப்பு ஜனவரி வரை.
ReplyDelete