Powered By Blogger

Wednesday, March 11, 2020

வாண்டுவா ? பாண்டுவா ?

நண்பர்களே,

வணக்கம்.  உ.ப.வுக்கு  உ.ப. போடும் ரகளையினை ஈரோட்டின் முன்னோட்டங்களே ஏற்படுத்தியுள்ளன என்பதைப் பார்க்கும் போது - சில பல சமாச்சாரங்கள் பளீரென்று வெளிச்சத்தை தமதாக்கி நிற்பது புரிகிறது !!

1 .என்ன தான் மாதாமாதம் வண்டி வண்டியாய் ரெகுலர் இதழ்களை  உங்களிடம் ஒப்படைத்து வந்தாலும், "ஸ்பெஷல்" எனும் சொல்லை உச்சரிக்கும் மறுநொடி உங்களுள் ஒரு சோடியம்  வேப்பர் பிரகாசத்தை அவதானிக்க ஆயிரத்து ஓராவாது தடவையாக  முடிந்துள்ளது !! Something about an occasion...something about a special edition !!

2 .இப்போதெல்லாம் ஒரு மாஸ் ஹீரோ இருந்தால் தான் ஸ்பெஷல் இதழ்கள் எடுபடும் ; விற்பனையாகிடும் என்ற மாயை போயே போச்சு !! ஸ்பைடர் ஓரமாய் நின்று பம்பரம் ஆடிவிட்டுப் போனாலும் பரவாயில்லை ; மாயாவி ஒதுக்குப்புறத்தில் நின்று சோடா குடித்துக் கிளம்பினாலும் பரவாயில்லை ; டெக்ஸ் வில்லர் பீன்சும் வறுத்த கறியும் புசித்துப் புறப்பட்டாலும் போதும் ;  அவர்கள் இல்லாத ஸ்பெஷல் இதழ்கள் பூட்ட கேஸ்கள் தான் என்ற நம்பிக்கை நிலவிய அந்நாட்களை இப்போது நினைவு கூர்ந்தால் - "கதைகளே சூப்பர் ஹீரோக்கள்" என்ற concept நம்மிடையே காலூன்றி நிற்கும் இன்றின் வீரியம் ஸ்பஷ்டமாய்த் தென்படுகிறது ! பராகுடாக்களும் ; பிரியாவிடை தரும் பிஸ்டல்களும் செய்துள்ள மாயமிது என்று சொன்னால் மிகையிராது !

3 .வாசிப்பெனும் புள்ளியில், நாமெல்லாம் இணைந்தாலும் நேரில் சந்தித்துக் கொள்ளும் அந்த சந்தர்ப்பத்துக்கு ; நட்புக்களைப் புதிப்பித்துக் கொள்ளும் அந்தத் தருணத்துக்கு ; அன்றாடத்தின் பிடுங்கல்களை, அந்த ஒற்றை நாளுக்கு ஒத்தி வைக்கும் வாய்ப்புக்கு - இப்போதெல்லாம் ஈடில்லை என்றும் புரிகிறது ! And அந்த வேளையில் கைகோர்க்கும் ஸ்பெஷல் இதழ்கள் தானாய் ஒரு புது மெருகைப் பெற்றிடுவதும் புரிகிறது !! 

'அடங்கொன்னியா !' என்று மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு "கென்யா" ஆதரவு பெற்றிருப்பதை கடந்த பதிவில் ஆந்தை விழி விரிய கவனித்தேன் ! As always சித்தே தொட்டுப் பிடித்து ஆடினால் தானே சுவாரஸ்ய மீட்டர்கள் களை கட்டும் ?! So சற்றே பொறுமை ப்ளீஸ் - தீர்க்கமான அறிவிப்பின் பொருட்டு !! படைப்பாளிகளிடமிருந்து ஓரிரு விஷயங்களில் கொஞ்சம் தெளிவு கிட்டிட காத்துள்ளேன் !

எனது அடுத்த மண்டைக்குடைச்சலோ - ஈரோட்டில் களம் காண வேண்டிய "வாண்டு ஸ்பெஷல்" இதழின் தேடல்களின் பொருட்டே !! அட்டவணையினை அறிவித்த பொழுதினில் என் மனதில் ஒரு குட்டீஸுக்கான தொடர் இடம்பிடித்திருந்தது தான் ! ஆனால் நீங்கள் நாளொரு பில்டப் ; பொழுதொரு LIC என்று உச்சமாக்கிக் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகளுக்கு அந்தத் தொடர் நியாயம் செய்திடுமா ? என்ற நெருடல் சமீப நாட்களில் துளிர் விட்டிருப்பதால் - "ஐயா...தர்மவான்களா... ஏதாச்சும் கார்ட்டூன்கள் இருந்தாக்கா கண்ணிலே காட்டுங்க புளீஸ் !!" என்று பதிப்பகம் - பதிப்பகமாய்க் கதவைத் தட்டாத குறை தான் !! 

இங்கே எனது தலையாய தடையே - பிரான்க்கோ-பெல்ஜிய கார்ட்டூன் படைப்புலகில் மிகுந்து கிடக்கும் ஒற்றைப் பக்கக் கார்டூன்களே !! 44 பக்கம் கொண்ட ஆல்பங்கள் ; 44 ஒற்றைப் பக்க gags சகிதம் - என்ற template-ல் ஏகப்பட்ட தொடர்கள் உள்ளன தான்  ! ஆனால் கார்டூனே ஆயினும் ஒரு ஹீரோ ; ஒரு கதை ; maybe ஒரு டூயட் ; ஒரு க்ளைமாக்ஸ் ; கணிசமான கெக்கேபிக்கே என்று எதிர்பார்க்கும் நமக்கு இந்த ஒருபக்க துக்கடாக்கள் ரசிக்காதே !! ஜூனியர் எடிட்டருடன் இது பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது ஒரு ஆகச் சரியான கேள்வியினை கேட்டிட - மலங்க மலங்கத் தான் முழிக்க முடிந்தது எனக்கு !! "வாண்டு ஸ்பெஷல் எனும் போது Smurfs / பென்னி / ரின்டின் கேன் /சுட்டி லக்கி தொடர்களைத் தாண்டி வேறு எதைத் தான் தேட முடியும் ? வேறு எவை தான் சாதிக்கும் ?" என்ற அந்தக் கேள்விக்கு என்னிடம் பெப்பே..பெப்பே..என்ற உளறலைத் தாண்டி உருப்படியான பதில் இருக்கவில்லை தான் ! நாமோ அவர்கள் அனைவருக்குமே "ரிஜிட்" முத்திரை குத்தியுள்ள நிலையில் - ஜூனியர் எடிட்டரின் கேள்வியின் லாஜிக் sounded right !! (எஞ்சியிருக்கும் சுட்டி லக்கி கதைகள் அனைத்துமே ஒற்றைப்பக்க gags தான் !)

என்முன்னே உள்ள choices இரண்டே ! புதிதாய் ஏதேனுமொரு கார்ட்டூன் தொடரை களமிறக்கிப் பார்க்க வேண்டும் - இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டு !! 

அல்லது...

"அலிபாபாவும் 40 திருடர்களும்" ; "அலாவுதீனின் அற்புத விளக்கு" போன்ற பாணிகளில், குட்டீஸ்களின் பொதுவான கதைகளின் காமிக்ஸ் வார்ப்புகளுள் சிறப்பானதைத் தேர்வு செய்து வெளியிட்டாக வேண்டும் !! 

ஆனால் "எங்க வூட்டிலே அண்ட வாண்டே ஞான் தானாக்கும்  ! என்க்குமே  இண்ட கதை ரக்ஷிக்கணும் அங்கிள் !!"  என்று மழலை பேசவிருக்கும் நண்பர்களே நம்மிடையே மிகுந்திருக்கும் பட்சத்தில் - பற்பல பீச்சாங்கைகள் என் மூஞ்சில் பதிந்து நிற்பது சர்வ நிச்சயம் ! And in any case - அதன் பொருட்டு யாரையும் நான் குறை சொல்லிட மாட்டேன் !! வாசிப்பின் ஒவ்வொரு இதழும் முழுமையாய் திருப்திப்படுத்திட வேண்டும்ன்ற எதிர்பார்ப்புகளில் ஏது பிழை ?  
So தேடல்கள் தொடர்கின்றன - இம்மாத இறுதிக்குள் நிறைவுற்றாக வேண்டிய கட்டாயத்தில் !! 

அது சரி...நீங்க எப்படியோ ஷாமியோவ் ? வாண்டுக்குக் கதை சொல்லவுள்ள டாடியா / அங்கிளா / தாத்தாவா ? இல்லாங்காட்டி அந்த வாண்டுவே நீங்க தானா ? 

Bye all...see you around !!

202 comments:

  1. ஆ வாண்டே ஞான்தன்னே..!!

    ReplyDelete
  2. Lucky Luke வரலியான்னு நச்சரித்துக் கொண்டிருக்கும் வாண்டின் தந்தை...

    ReplyDelete
  3. ///
    என்முன்னே உள்ள choices இரண்டே ! புதிதாய் ஏதேனுமொரு கார்ட்டூன் தொடரை களமிறக்கிப் பார்க்க வேண்டும் - இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டு !!

    அல்லது...

    "அலிபாபாவும் 40 திருடர்களும்" ; "அலாவுதீனின் அற்புத விளக்கு" போன்ற பாணிகளில், குட்டீஸ்களின் பொதுவான கதைகளின் காமிக்ஸ் வார்ப்புகளுள் சிறப்பானதைத் தேர்வு செய்து வெளியிட்டாக வேண்டும் !! ///

    புதிய தொடரை களமிறக்குங்கள் சார்.!

    இல்லையென்றால்..

    அந்த சுஸ்கி விஸ்கிக்கு வாய்ப்பிருக்கும் பட்சத்தில் முயற்சி செய்து பார்க்கலாமே சார்.! வாண்டு ஷ்பெசல் பெயருக்கு பொருத்தமான தேர்வாகவும் இருக்கும். பழக்கப்பட்ட கேரக்டர்ஸ் என்பதால் பயமும் கிடையாது.! நாஸ்டால்ஜியா காரணமாக விற்பனையிலும் கூட்டல் புள்ளி (ப்ளஸ் பாயிண்ட்) இருக்க வாய்ப்பிருக்கும்.!!

    ReplyDelete
  4. அந்தக் குழந்தையே நான்தான்

    ReplyDelete
  5. என்னைக் கேட்டால்..

    குறைந்தபட்சம் இந்த வாண்டு ஷ்பெசலுக்காவது ஸ்மர்ஃப், பென்னியை ஒதுக்கலாம்..!

    காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
    பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி ..

    ReplyDelete
  6. வாண்டு ஸ்பெஷலுக்கு சுஸ்கி விஸ்கி
    அலிபாபா போன்றவைகள் சரியாக இருக்கும் ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. அலிபாபாவும் நல்ல தேர்வு👏👏👏👏

      Delete
    2. பதிவை மறுக்கா படியுங்க சாமீ.....நான் குறிப்பிடும் அலிபாபாவும், நீங்கள் குறிப்பிடும் அலிபாபாவும் ஒரே ஆள் இல்லா !!

      Delete
  7. சுஸ்கி பிராந்...ச்சீ..ச்சீ.. சுஸ்கி விஸ்கி வேண்டும்.

    ReplyDelete
  8. டெக்ஸின் அட்டைபடங்கள் தொகுப்போடு
    மெபிஸ்டோ யுமா கதைகளையும் மினி டெக்ஸ் சைஸில் ஹார்ட் பவுண்டில் பிரீமியம் விலையில் போடுங்க. இரண்டும் சேர்த்து காம்போ ஆபராக ₹777 இல்ல ₹999 விலையில் போட்டு தாக்குங்க. தனி தனியாக விற்காதிங்க. காம்போ ஆபர் கண்டிப்பாக வொர்க் அவுட் ஆகும்.

    ReplyDelete
    Replies
    1. சார்...பஞ்சாயத்தெல்லாம் முடிந்து ஒரு மாமாங்கம் ஆகிப் போய், ஜமுக்காளத்தை லாண்டரிக்கும் போட்டாச்சு ! இதில் காம்போ...அது இதுவென்று கம்பு சுத்திக் கொண்டிருந்தால் நீங்களும், நானும் மட்டுமே ஆலமரத்தடியில் நின்று கொண்டிருப்போம் !

      Delete
    2. 😭😭😭😭😭😭என்ன கொடுமை சார் இது. டெக்ஸ் மெபிஸ்டோவுக்கு சங்கு ஊதியாச்சா. ஐயாம் வெரி அப்செட்.

      Delete
    3. லைட்டாஆஆஆஆ...!! டெக்ஸ் தப்பிச்சாரு! ஐயாம் வெரி மச் ஹேப்பி!

      Delete
  9. அந்த வாண்டுக்கு கதை சொல்ல உள்ள டாடி நான் தான் சார்.

    ReplyDelete
  10. // So சற்றே பொறுமை ப்ளீஸ் - தீர்க்கமான அறிவிப்பின் பொருட்டு !! // I'm waiting

    ReplyDelete
  11. // என்ன தான் மாதாமாதம் வண்டி வண்டியாய் ரெகுலர் இதழ்களை உங்களிடம் ஒப்படைத்து வந்தாலும், "ஸ்பெஷல்" எனும் சொல்லை உச்சரிக்கும் மறுநொடி உங்களுள் ஒரு சோடியம் வேப்பர் பிரகாசத்தை அவதானிக்க ஆயிரத்து ஓராவாது தடவையாக முடிந்துள்ளது !! // அதனால் தான் அது ஸ்பெஷல் :-)

    ReplyDelete
  12. // பராகுடாக்களும் ; பிரியாவிடை தரும் பிஸ்டல்களும் செய்துள்ள மாயமிது என்று சொன்னால் மிகையிராது ! // உண்மைதான் சார்.

    ReplyDelete
  13. // வாசிப்பெனும் புள்ளியில், நாமெல்லாம் இணைந்தாலும் நேரில் சந்தித்துக் கொள்ளும் அந்த சந்தர்ப்பத்துக்கு ; நட்புக்களைப் புதிப்பித்துக் கொள்ளும் அந்தத் தருணத்துக்கு ; அன்றாடத்தின் பிடுங்கல்களை, அந்த ஒற்றை நாளுக்கு ஒத்தி வைக்கும் வாய்ப்புக்கு - இப்போதெல்லாம் ஈடில்லை என்றும் புரிகிறது ! // ஈடுமில்லை இணையுமில்லை

    ReplyDelete
  14. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  15. வணக்கம் நண்பர்களே...🙏🏼🙏🏼🙏🏼

    ReplyDelete
  16. /// இல்லாங்காட்டி அந்த வாண்டுவே நீங்க தானா?///
    பிழையிலா மழலை என்பதால், சர்வமும் நானே.

    ReplyDelete
    Replies
    1. பத்து சார்.. :)))))

      Delete
    2. நம்புங்க ஈவி. இப்பவும் எங்க வீட்டம்மா எனக்கு லஞ்ச் பாக்ஸ்ல பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் தான் வச்சு அனுப்பறாங்க. ஏன்னா அதுல பாலின் சக்தி நெறஞ்சிருக்கு.

      Delete
    3. காலங்காத்தாலயே கெக்கபிக்கேன்னு சிரிச்சுக் கெடக்கேன் பத்து சார்... :))))))

      Delete
    4. பத்து சார் செம்ம செம்ம

      Delete
  17. ஹைய்யா புதுப் பதிவு.......

    ReplyDelete
  18. கம்பேனி ரூல்ஸை கண்டீஸனாகக் கடைபிடித்து, உப பதிவுக்கோர் உப பதிவு அளித்த எங்கள் ஒப்பற்ற எடிட்டருக்கு உப நன்றிகள் பல!

    ReplyDelete
  19. காலை வணக்கம் சார் மற்றும்
    நண்பர்களே 🙏🏼
    .

    ReplyDelete
  20. கென்யா பற்றிய அறிவிப்புக்கு வெயிட்டிங்.

    வாண்டு மலரில் எதுவும் சரியாக செட் ஆகவில்லை என்றால் ஸ்மெர்ப், அல்லது ரின் டின் களமிறக்கலாம்.குழந்தைகளுக்கு செட் ஆகும் கதைகள் இவை. எனது குழந்தைகள் இவர்களை மிகவும் விரும்பினார்கள்.

    ReplyDelete
  21. ரின்டிகேன், ஸ்மர்ப், சுட்டிபென்னி அல்லது இது போன்ற புதிய தொடர். வாண்டுகளுக்கே என்றாலும் நாங்களும் படிக்க வேண்டுமே. மேலும் ஒற்றை பக்க்மெல்லாம் நமக்கு சரிபட்டு வராது சார்.

    ReplyDelete
  22. ரின்டிகேன், ஸ்மர்ப், சுட்டிபென்னி அல்லது இது போன்ற புதிய தொடர். வாண்டுகளுக்கே என்றாலும் நாங்களும் படிக்க வேண்டுமே. மேலும் ஒற்றை பக்க்மெல்லாம் நமக்கு சரிபட்டு வராது சார்.

    ReplyDelete
  23. இரண்டு சுட்டியோட நானும்....

    ReplyDelete
    Replies
    1. கென்யா அட்டைப்படங்கள் ஒவ்வொன்றும் மிரட்டுகிறது! சீக்கிரமாக தயார் செய்யும் வேலையை ஆரம்பிங்கள்!


      எங்கள் வீட்டில் பெரிய மற்றும் சிறிய சுட்டிக் குழந்தைகள் அனைவரும் வாண்டு மலரை படிக்க ஆர்வமுடன் உள்ளோம்! எங்க வீட்டு பெரிய சுட்டி குழந்தைகளுக்கு கார்ட்டூன் கதைகளே ரொம்ப பிடிக்கும்! சந்தோசமான, காமெடியான கதைகளே எங்களுக்கு பிடிக்கும் :-) அதற்கே முன் உரிமை!

      Delete
    2. சார், ஒரு பக்க மற்றும் சிறுகதை தொகுப்பு போல் அல்லாமல் முழுநீளக் கதையாகவே கொடுங்கள். அது புதிய வரவாக இருப்பினும். என்னையும் சேர்த்து மூன்று குட்டீஸ் waiting....

      Delete
  24. எடிட்டர் சார்..

    அப்படி இப்படின்னு எப்படியாவது தேடிப் பிடிச்சு 'வாண்டூஸ் ஸ்பெஷல்'க்கு நச்சுனு ஒரு கதையைப் பிடிச்சுடுவீங்கன்னு தெரியும்!

    ஆனாலும் நாங்களும் ஏதாவது சொல்லியாகணுமில்லீங்களா..? அந்த வகையில் என்னுடைய விருப்பங்களாவன (சார் நானும் குழந்தைதான்.. நம்புங்க)

    1. வாய்ப்பிருந்தால் - வால்ட் டிஸ்னி? (புதிய கதைகள் வாய்ப்பில்லை என்றால் 'ஒரு நாணயப் போராட்டம்' உள்ளிட்ட கதைகள் மறுபதிப்பாகவாவது?)

    2. யகாரி? (நான் எந்த மொழியிலும் படித்ததில்லை)

    வாண்டுகளின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவிருக்கிறோம் என்பதால் கதைத்தேர்வின் போது கீழ்க்காணும் அம்சங்களைக் கணக்கில் கொள்ள வேண்டுகிறேன்...

    * பெரிய படங்கள் - சற்றே பெரிய எழுத்துரு - குறைவான வசனங்கள்!

    * எழுத்து வழக்கில் மட்டுமே பயன்படுத்தப்படும் பழைய தமிழ் சொற்களை முடிந்தவரை தவிர்த்து, அன்றாட பேச்சு வழக்கத்திலிருக்கும் சொற்களைப் அதிகம் பயன்படுத்துதல்!

    தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.. ஆனாலும் ஒரு வாண்டு என்ற வகையில் - சொல்லவேண்டியது என் கடமையில்லீங்களா?!!

    ReplyDelete
    Replies
    1. வழிமொழிகிறேன்..

      Delete
    2. நல்ல கருத்து EV

      Delete
    3. // யகாரி? (நான் எந்த மொழியிலும் படித்ததில்லை) // யாகாரி எல்லாம் வேற லெவல் EV. ஆசிரியர் ஏற்கனவே சொன்னாரே அந்த ராயல்டி தொகை மிக அதிகம் என்று

      Delete
    4. இது எப்போ சார் ? எனக்கே தெரியாமல் ??

      Delete
    5. கார்ட்டூன் என்றாலே சிரிப்புத் தோரணமென்ற எதிர்பார்ப்பு நிலவும் நம் மார்க்கெட்டுக்கு யகாரி ஒத்து வருமா என்பது மில்லியன் டாலர் கேள்வி ! ராயல்டி நிச்சயமாய் இதற்கொரு தடை நஹி !

      Delete
    6. Sorry சார் நீங்கள் டின்டின் மற்றும் astrix kku சொன்னதை yaakaari என்று நினைத்து விட்டேன்

      Delete
    7. இரண்டு கதைகள் வாண்டு ஸ்பெஷல் முயற்சி செய்வதில் தவறு இல்லை சார். யகாரி யை பிளீஸ்

      Delete
  25. Replies
    1. எங்கே தலைவரை காணவில்லையே என்று நினைத்தேன் வந்து விட்டார்.

      Delete
    2. குமார் சார்...நான் எப்ப ,எங்க ,எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது.ஆனா வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வந்துருவேன்...:-)

      Delete
  26. என்னை பொறுத்தவரை பென்னி ஓகே சார்...:-)

    ReplyDelete
  27. நம்மை பொறுத்தவரை ஒற்றைப்பக்க கதைகள் பில்லர் பேஜ்க்கே என பழகிவிட்டதால்

    முழுநீள கதையே தேர்ந்தெடுங்கள் சார்..குறைவான பக்கங்களாக இருந்தாலும் கூட ஓகே ..இரண்டு மூன்று கதைகளாக மதியில்லா மந்திரி போல முயற்சிக்கலாம்..

    ReplyDelete
  28. கென்யா அட்டைப்படங்களே ஒவ்வொன்றும் அசத்துகிறதே..:-)

    ReplyDelete
  29. .என்ன தான் மாதாமாதம் வண்டி வண்டியாய் ரெகுலர் இதழ்களை உங்களிடம் ஒப்படைத்து வந்தாலும், "ஸ்பெஷல்" எனும் சொல்லை உச்சரிக்கும் மறுநொடி உங்களுள் ஒரு சோடியம் வேப்பர் பிரகாசத்தை அவதானிக்க ஆயிரத்து ஓராவாது தடவையாக முடிந்துள்ளது

    #####


    உண்மை...


    உண்மையோ உண்மை ...:-)

    ReplyDelete
  30. என்னைக் கேட்டால்..

    குறைந்தபட்சம் இந்த வாண்டு ஷ்பெசலுக்காவது ஸ்மர்ஃப், பென்னியை ஒதுக்கலாம்..!

    +1234567890

    ReplyDelete
    Replies
    1. எண்பது ரூபாய் template க்கே திணறியவற்றை ரூ.150 க்கு வெளியிட முனைவது கழுத்தில் கல்லைக்கட்டிக் கொண்டு காவேரிக்குள் இறங்குவது போலாகாதா சார் ?

      Delete
  31. ஸ்மர்ஃப்,
    ஃபென்னி
    சுட்டி லக்கி
    ரிண்டின்கேன்

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராமஜெயம்...என்று எழுதுவது போல் இந்தப் பட்டியலிலுள்ள பெயர்களை தொடர்ச்சியாய் எழுதி பார்க்க வேண்டியது தான் போலும் சார் ! ஏதேனும் நல்லது நடக்குமா என்று பார்க்கலாம் ! !

      Delete
  32. வாண்டு ஸ்பெஷல் எனது விருப்பங்களை பரிசீலனை காக சமர்ப்பிக்கிறேன்.

    1. ரின்டின்கேன் ஸ்பெஷல்.

    2. Cine book ல் வெளிவந்த Billy and Buddy 7 complete stories.

    3. Tin Tin சாகசங்கள்.

    இவை தவிர லக்கி லூக்கின் மறுபதிப்பு கதைகளை யும் வாசிக்க ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தண்ணிக் கேன் போடக்கூட ரின்டின் கேன் வாணாமென்று நம்மவர்கள் தான் ரிஜிட் பண்ணிப்புட்டாங்களே ?! இதில் ஸ்பெஷல் இதழுக்கு எங்கே போவது சார் ?

      Delete
    2. // தண்ணிக் கேன் போடக்கூட ரின்டின் கேன் வாணாமென்று நம்மவர்கள் தான் ரிஜிட் பண்ணிப்புட்டாங்களே ? //

      :-( :-(

      அப்படி என்றால் ஏற்கனவே வந்த ரின்-டின் கதைகளை படித்து காலத்தை கடத்திகொள்கிறோம்!

      Delete
  33. Tin Tin rayolty அதிகம் என்று எடிட்டடர் சொல்லியிருக்கிறார்.கைக்கு எட்டாதவர்களை விட நமது பிழையில்லா மழலைகளான சுட்டி லக்கி,பென்னி,ஸ்மர்ப் மற்றும் மதியில்லா மந்திரி - இவர்களுக்கு வாய்ப்பு தரலாம். சிறார்களை காமிக்ஸ் வாசகராக மட்டுமில்லாமல் வருங்காலத்தில் புத்தகப்பிரியர்களாகவும் மாற்றும்

    ReplyDelete
    Replies
    1. உற்றுக் காது கொடுத்துப் பாருங்களேன் - "அந்த சிறார்களே நாங்கதென் !!" என்ற டயலாக் கேட்கும்...!

      Delete
    2. "அந்தக் குழந்தையே நாங்கதான் சார்"

      Delete
  34. // ராயல்டி நிச்சயமாய் இதற்கொரு தடை நஹி ! //

    அப்படி என்றால் யகாரி வாண்டு ஸ்பெஷலில் இறக்கி வெள்ளோட்டம் பார்க்கலாமே! எனக்கு சிரிப்பை விட எளிதான வாசிப்பு மிக முக்கியம்! எனவே ஒகே!

    ReplyDelete
    Replies
    1. இன்னொரு 1499 பேருக்கும் அதே சிந்தனை வேணுமே ?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. என்னுடைய ஆதரவும்

      Delete
    4. வரும் சார்! தைரியமாக களத்தில் இறங்குங்கள்! எங்கள் ஆதரவு உண்டு

      Delete
  35. சார்!

    வாண்டு ஸ்பெஷல்னா வாண்டு ஸ்பெஷல்தான்..அதில் சமரசம் செய்ய வேண்டாம்..

    வளர்ந்தவர்களுக்காக ஒதுக்கியவை இதில் இடம் பெறலாம்

    வளர்ந்தவர்கள் ,வாண்டுகள் இருவரையும் கவரும் வண்ணம் வாண்டு ஸ்பெஷலின் ஆதார நோக்கத்தை அசைத்துவிடும்..

    வாண்டு ஸ்பெஷல் வாண்டுகளுக்கே..

    ஒரு பக்க கேக் சிறு வாண்டுகளுக்கு பொருத்தமானதே..

    மற்ற வாசகர்களுக்கு ..வாண்டு ஸ்பெஷலில் எது வந்தாலும் வாசியுங்கள்..பின் அருகில் உள்ள நூலகத்துக்கு கொடுத்துவிடுங்கள்..அல்லது வாசிப்பில் ஆர்வம் உள்ள அருகில் உள்ள குழந்தைகளுக்கு கொடுத்துவிடுங்கள்..

    மற்றொரு தலைமுறைக்கு காமிக்ஸ் வாசிப்பினை அறிமுகப்படுத்திய மகத்தான புண்ணியம் கிடைக்கும்

    சார்! ஆக்டிவிட்டி,க்ரியேட்டிவிட்டி பக்கங்கள்( பெயிண்ட்டிங்,புள்ளி இணைப்பு போன்றவை) கூட இடம் பெறலாம்.


    Kid's special is to be meant for kids!

    ReplyDelete
    Replies
    1. //வளர்ந்தவர்கள் ,வாண்டுகள் இருவரையும் கவரும் வண்ணம் நீங்கள் முயற்சித்தால் வாண்டு ஸ்பெஷலின் ஆதார நோக்கத்தை அசைத்துவிடும்..//

      Delete
    2. //வாண்டு ஸ்பெஷல்னா வாண்டு ஸ்பெஷல்தான்..அதில் சமரசம் செய்ய வேண்டாம்..//

      ஆசையிருக்கு தாசில் பண்ண...!
      அதிர்ஷ்டம் இருக்கு ................................. !!

      Delete
    3. //வாண்டு ஸ்பெஷல்னா வாண்டு ஸ்பெஷல்தான்..அதில் சமரசம் செய்ய வேண்டாம்..//

      +1

      // வளர்ந்தவர்கள் ,வாண்டுகள் இருவரையும் கவரும் வண்ணம் வாண்டு ஸ்பெஷலின் ஆதார நோக்கத்தை அசைத்துவிடும்..

      வாண்டு ஸ்பெஷல் வாண்டுகளுக்கே.. //

      +1

      Well Said!!! :-)

      Delete
    4. /
      ஆசையிருக்கு தாசில் பண்ண...!
      அதிர்ஷ்டம் இருக்கு ......//

      Sir!Just dare it!! Otherwise your very good intention will be compromised "

      You can't get an omelet and a chicken from the same egg..

      I don't know what others are thinking..

      Give them sometime to ponder over this!!

      Delete
    5. // Sir!Just dare it!! Otherwise your very good intention will be compromised "

      You can't get an omelet and a chicken from the same egg.. //

      +1

      I am echoing the same thoughts!

      Delete
    6. /4Sir!Just dare it!! Otherwise your very good intention will be compromised//
      +1

      Delete
    7. // You can't get an omelet and a chicken from the same egg..//

      Thanks Sena Ana ji for reflecting my thoughts...

      Delete
    8. சார் நீங்கள் வாண்டு ஸ்பெஷல் அறிவித்த காரணத்தை நினைவு கூற கோருகிறேன். குழந்தைகளுக்கான புத்தகம் என்று தான் நாம் வாண்டு ஸ்பெஷல் அறிவித்தோம். இப்போது திரும்பி செல்வது சரியில்லை அல்லவா? Please சார்

      Delete
    9. ////வளர்ந்தவர்கள் ,வாண்டுகள் இருவரையும் கவரும் வண்ணம் வாண்டு ஸ்பெஷலின் ஆதார நோக்கத்தை அசைத்துவிடும்..

      வாண்டு ஸ்பெஷல் வாண்டுகளுக்கே..///

      +100000

      வண்ணம் தீட்டுதல், புள்ளிகளை இணைத்தல், கன்றுகுட்டி தாய்பசுவிடம் போய் சேர வழிகாட்டுதல் - ஆகியவற்றுக்கு நானும் ரெடிதான்! ரொம்ப நாள் ஆச்சில்ல!!

      Delete
    10. யகாரி அருமையான choice சார்.

      Delete
  36. ஸ்மர்ஃப்
    ஃபென்னி
    ரிண்டின்

    கண்டிப்பாக தொடரலாம்! அதுவும் பென்னி பல சிறு குழந்தைகளுக்கு நல்ல வாசிப்பு அனுபவத்தை தரும்!

    வாண்டு ஸ்பெஷல் என்பது நமது குழந்தைகளுக்கு என்பதை பெரிய குழந்தைகள் புரிந்து கொண்டு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குங்கள்! காமிக்ஸ் அடுத்த தலைமுறைக்கு செல்ல பெற்றோராகிய நாமே தடைகல் ஆக வேண்டாமே!

    ReplyDelete
  37. பூந்தளிர் போல வந்தாலும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  38. முதிர் வாண்டு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

    ஆசிரியர் வாண்டு ஸ்பெஷல் என்று குழந்தைகளுக்கான ஒரு சிறப்பிதழை வெளியிடப் போகிறார் என்று அட்டவணை வெளியீட்டின் சமயம் அறிவித்தபோதே மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நாம் வழக்கமாக வாசிக்கும் கார்ட்டூன்களில் இருந்து மாறுபட்ட குழந்தைகள் விரும்பும் வகையிலான இதழாக அது இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இங்கு கி.நா. க்களை வாசிக்கும் வாசகர்களும் நாமே... கார்ட்டூன்களுக்கு கொடி பிடிக்கும் வாண்டுக்களும் நாமே... என்ற நிலையில் நம்மை திருப்திபடுத்தும் வகையில் ஒரு இதழை ஆசிரியர் வெளியிடுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அப்படியிருக்க இது உண்மையான குழந்தைகளுக்கான ஒரு வாண்டு ஸ்பெஷலாக இருக்குமா என்பதில் எனக்கு குழப்பம் இப்போது...

    குட்டிக் குட்டிக் கதைகளையும், ஒற்றைப் பக்க துணுக்குகளையும் இன்று அறவே ஒதுக்கும் நாம் உண்மையான வாண்டுகளாக இருந்த காலத்தில் படித்த / விரும்பிய புத்தகங்களை சற்றே எண்ணிப் பார்ப்போமேயானால் பலே பாலுவும், வேட்டைக்கார வேம்புவும், குட்டிகுரங்கு கபீஷும், காக்கை காளியும் கட்டாயம் இடம் பெற்றிருக்கும் என்றே நம்புகிறேன். ஆனால் இவையனைத்தும் முழு நீளக் கதைகளாக படித்த ஞாபகம் இல்லை எனக்கு. ஆக முதிர் வாண்டுகளான நாம் வளர்ந்த போது கதைகளுக்கான நீளத்தையும் கூடவே வளர்த்துக் கொண்டு இரசனைகளில் வளர்ந்து விட்டோம். நிஜமான வாண்டுகளுக்கும் இது போல குட்டிக் கதைகளும், ஒற்றை பக்க துணுக்குகளும் பிடிக்காது என நாமே முடிவெடுத்து பெயரை மட்டும் வாண்டு ஸ்பெஷல் என்று வைத்துக் கொண்டோம். ஒரு கார்ட்டூன் ஷ்பெஷலுக்கும் வாண்டு ஸ்பெஷலுக்கும் வேறுபாடு வேண்டியதில்லை நமக்கு. மன்னிக்கவும் நண்பர்களே... எனக்கும் இந்த குட்டியான ஒற்றை பக்க குறுங்கதைகள் அவ்வளவாக பிடிப்பதில்லை தான், ஆனால் வாண்டுக்களுக்கான ஸ்பெஷலிலும் நாமே நம் விருப்பத்தை பிரதிபலி(ளி)த்தால் புதிய வாண்டுகளை வாசிப்பு வட்டத்துக்குள் கொண்டு வருவது எவ்வாறு?

    ஏழு முதல் பன்னிரண்டு வயது குழந்தைகளுக்கு முழுநீளக் கதைகளை ஒரே நேரத்தில் வாசிப்பதை பெரும்பாலும் விரும்புவதில்லை என்பதே உண்மை. ஒரு தொடக்கப்பள்ளி ஆசிரியர் என்ற வகையில் நான் என்னளவில் கண்ணெதிரே கண்டு உணர்ந்த உண்மை இது. அவர்கள் விரும்புவது எளிமையான விரைவில் முடியக்கூடிய (முடிவை அறிவதில் அதீத ஆர்வம்) கதைகளையே! நகைச்சுவை, மாயாஜாலம், பேய்க்கதை, சாகசங்கள் என்ற அனத்தும் அவர்களுக்கு பிடிக்கிறது. இவை அனைத்தும் அடங்கிய சிறு கதைகளின் தொகுப்பு டைஜஸ்ட் வடிவில் இருப்பதே உண்மையான வாண்டுகளுக்கான ஒரு ஸ்பெஷலாக இருக்கும் என்பதே என் எண்ணம்.

    இதுபோன்ற கலவையான ஒரு இதழை குழந்தைகளுக்கான செயல்பாடுகளுடன் (புதிர்கள், விடுகதைகள், இன்னபிற...) வடிவமைத்து வெளியிடுவது நிரம்பவே சுமையான ஒரு செயல் தான். ஆனால் அதுதான் குழந்தைகளை நம்மை நோக்கி திருப்பும் ஒரு திசைகாட்டியாக அமையும்.

    நமது பால்யங்களில் இரும்புக்கையாரும், வேதாளரும், ஸ்பைடரும் நம்மை கவர்ந்த காலங்களில் முழுநீளக் கதை படிக்கும் பொறுமை நமக்கு இருந்தது. தற்போதைய சந்ததியின் குறுகிய நேர வாசிப்பிலும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் நாம் சற்றே நிஜமான வாண்டுகளாக மாறவேண்டியது அவசியமே.

    நன்றி நண்பர்களே! நன்றி ஆசிரியரே! வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. எனது மகள் 10 பக்கங்கள் உள்ள பாட புத்தகத்தை படிக்க இரண்டு நாள் வேண்டும் என்கிறாள், இது கதை புத்தகத்திற்கும் பொருந்தும்! இந்த கால குழந்தைகள் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் புதிது புதிதாக ஏதாவது செய்ய விரும்புகிறார்கள்! கையில் மொபைல் கொடுத்தாலும் 1 மணி நேரத்தில் 10 கேம்ஸ் விளையாடவே விரும்புகிறார்கள் :-) இதில் முழுநீள கதைகளை எந்த அளவு குழந்தைகள் பொறுமையுடன் படித்து ரசிப்பார்கள் என தெரியவில்லை! மில்லியன் டாலர் கேள்வி!!

      Delete
    2. அட ...ஆமால்ல...இதுவும் உண்மையே..

      வளந்த வாண்டுகளான எங்களை நினைக்காமல் வளரும் வாண்டுகளுக காகவே இதழை கொண்டு வாருங்கள் சார்...


      அவை எப்படி இருப்பினும்
      ஆதரவு கரம் கொடுக்க தயார்..

      Delete
    3. Saravanakumar @

      அருமையாக சொன்னீர்கள் சார்.!

      நாம் சிறார்களாக இருந்தபோது பெரியவர்களாக இருந்தவர்கள் எல்லோரும் கி.நா தான் படிப்போம், நீஈஈஈளமான கதைகளைத்தான் படிப்போம்னு ஒத்தைக் காலில் நின்று மற்றவற்றை வரவிடாமல் செய்திருந்தால் நாம் இன்று புத்தகம் படிக்கும் பழக்கமே இல்லாத ஜெனரேசன் ஆகியிருப்போமே..

      வாண்டு ஷ்பெசல் வாண்டுகளுக்கே..!!

      Delete
    4. இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம் வாண்டு ஷ்பெசலை வாங்கி வீட்டில் குழந்தைகள் பார்வையில் வைப்பதுதான்..!

      அதை வாங்க மாட்டோம் இதை வாங்க மாட்டோம்னு கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிக்கிட்டே போனோம்னா..

      இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் கதையாக ஆகிவிடும்.!

      நம்முடைய காமிக்ஸ்க்கு நாமே கைகொடுக்கவில்லையெனில் வேறுயார் கொடுப்பார்கள்..!

      ஒரு சினிமாவுக்கு போனா பிடிச்ச சீன் பல இருக்கும் .. ஒன்றிரண்டு போரடிக்கும் சீன்களும் இருக்கத்தான் செய்யும்.. அனைத்தையும் சேர்த்துதானே பார்த்துவிட்டு வருகிறோம்..
      அதேபோல காமிக்ஸிலும் ஒன்றிரண்டு (நமக்கு விருப்பம் குறைவாக இருந்தாலும்) பிடிக்கவில்லையென்றாலும் அதையும் தவிர்க்காமல் வாங்கி உதவினால்தான் நமக்கு பிடித்த விசயங்கள் தொடர்ந்து வரும்..!

      சிவன் இல்லையேல் சக்தி இல்லை.. சக்தி இல்லையேல் சிவன் இல்லை..!

      வாங்குவோமே..!

      Delete
    5. // ஒரு சினிமாவுக்கு போனா பிடிச்ச சீன் பல இருக்கும் .. ஒன்றிரண்டு போரடிக்கும் சீன்களும் இருக்கத்தான் செய்யும்.. அனைத்தையும் சேர்த்துதானே பார்த்துவிட்டு வருகிறோம்..
      அதேபோல காமிக்ஸிலும் ஒன்றிரண்டு (நமக்கு விருப்பம் குறைவாக இருந்தாலும்) பிடிக்கவில்லையென்றாலும் அதையும் தவிர்க்காமல் வாங்கி உதவினால்தான் நமக்கு பிடித்த விசயங்கள் தொடர்ந்து வரும்..! //

      Correct Kanna!

      Delete
    6. @Saravanakumar

      அருமை அருமை அருமை!! ஆழமான சிந்தனையின் தெளிவான வெளிப்பாடுகள்!!

      Delete
  39. //ஆசையிருக்கு தாசில் பண்ண...!
    அதிர்ஷ்டம் இருக்கு ................ !! //

    ஆசிரியர் லியானர்டோ சரியாக போகாததால் ஒற்றைப் பக்க துணுக்குக் கதைகளுக்கு யோசிக்கிறார் என நினைக்கிறேன். ஆனால் இது குழந்தைகளுக்கான இதழ் என்ற அளவுகோலுடன் வரவில்லை. லியானர்டோவால் முதிர் வாண்டுகளை திருப்திசெய்ய முடியவில்லை.

    ஆனால் நிஜ வாண்டு ஸ்பெஷலை சிறப்பான விளம்பரத்துடன் வெளியிட்டால் கண்டிப்பாக புத்தக விழாக்களில் சாதிக்கும். லியானர்டோவை இதனுடன் அளவிட வேண்டியதில்லை! ஈ.பு.வி அருமையான சந்தர்ப்பம்.

    ReplyDelete
    Replies
    1. லியனார்டோ வரைப் போவானேன் சார் ?

      மதியில்லா மந்திரி ? அந்தத் தொடரில் கதையின் நீளம் என்பதைத் தவிர்த்து குறையென்று என் கண்ணில் பட்டது பூஜ்யமே ! ஆனால் நாம் ஒதுக்கியுள்ள தொடர்களில் அதுவும் ஒன்றல்லவா ?

      Delete
    2. தாங்கள் மதியில்லா மந்திரியை அறிமுகப் படுத்தியபோது ஏதாவது ஒரு முழுநீள கதையில் இணைப்பாகவே வெளியிட்டு வந்தீர்கள். அதை பக்க நிரப்பிகளாகவே பார்த்து படித்து பழகிவிட்டேnம். அதை தொகுத்து 48 பக்கங்களில் வெளியிட்டது பலருக்கும் ரசிக்கவில்லை .

      Delete
  40. லியனார்டோ மற்றும் மற்றும் மதியில்லா மந்திரி குழந்தைகள் விரும்புவார்கள்! நீளம் குறைவான மற்றும் நேர்கோட்டு மற்றும் சிரிக்க சிந்திக்க வைக்கும் கதைகள் இவை!

    ReplyDelete
  41. ஆர்டின் ஒரு ஆச்சரியக்குறி
    அரிஸோனா மாநில கவர்னரைக் கொல்ல அவருடைய கஸின் முயற்சி செய்கிறார். இந்த கிரைம் சப்ஜெக்ட்டை உட்சிடிவாசிகளுடன் நகைச்சுவையோடு கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள். மனிதனுக்குள் இருக்கும் பொறாமை, வன்மமாக உருப்பெருவது இந்த கதையில் நன்றாகவே தெரிந்தது. இடை இடையே கிச்சு கிச்சு மூட்டினாலும், கிரைம் ஸ்டோரி களமே பிரதானம் என்று சொல்ல முடியும்.

    9/10 மதிப்பெண்கள் தர முடியும்.

    ReplyDelete
  42. @all friends


    முதிர் வாண்டுகள் என நான் விளித்தது 'Matured Chutties' என்ற பொருளில் தானேயன்றி வயதைக் குறித்து அல்ல.

    யாரும் வம்புக்கு வந்திடாதீங்கப்பா...

    ReplyDelete
  43. 1. Rin Tin Can
    2. Sutty Lucky
    3. Smurf
    4. Benny
    Are my requests for Vaandu Special

    ReplyDelete
  44. வாண்டு ஸ்பெஷல் வாண்டுகளுக்கே..!

    ReplyDelete
  45. ஆனானப் பட்ட ஆர்ச்சியையே தாங்கிகிட்டோமா.


    அதை விட பெரிய வாண்டு ஸ்பெஷல் இருக்கா என்ன...

    ReplyDelete
    Replies
    1. காலங்கள் மாறிடும்...
      காட்சிகளும் மாறிடும்..
      வயதுகள் ஏறிடும்..
      வழுக்கைகளும் கூடிடும்..
      நரை இழையோடும்..
      நடையில் கூன் போடும் !

      ஆனால் அன்றும் இன்றும் என்றும் அண்ணன் ஆர்ச்சியையும் ; பெரியண்ணன் இஸ்பைடரையும் ரசிப்போமே !

      Delete
    2. மூத்த "வாண்டு" J ji@ ஆ..ஆ..ஆர்ச்சி மட்டுமா...!!!மா..மா...மா...!(பேச்சு வர்ல)

      Delete
    3. செம வசனம் எடிட்டர் சார்! :D

      Delete
    4. வஜனமா ? அது கவிதை ஓய் !!

      Delete
    5. மன்னிச்சுடுங்க எடிட்டர் சார்! மொதல்ல கொஞ்சம் எட்டயிருந்து பார்த்தப்போ சரியா அடையாளம் தெரியலை! அப்புறமா மொபைல் ஃபோனை ஸ்லோமோஷனில் முகத்துக்கிட்டே கொண்டுவந்து மூக்குப்பக்கத்திலே வச்சுப் பார்த்தப்போதான் அது கவிதைன்ற உண்மை கணநேரத்துல புரிஞ்சது!
      என்னமா எழுதியிருக்கீங்க!!!

      Delete
  46. சும்மா போடுங்க சார்...

    லியோனார்டோ...
    மந்திரி
    ரின்டின் ரிங்டோன்...
    ஸ்மார் ப்ஸ்ஸூ

    ReplyDelete
  47. சார்.. சீரிய சிந்தனைகள் தோன்றும் அந்த அறையினுள் உதித்த சிந்தனை இது.. வாண்டுகள் ஸ்பெசலில் ஏன் அதிகாரியின் "அந்த" மாதிரி கதைகளை ஏன் போடக்கூடாது??
    வாண்டுகளுக்கும் ஒரு ஜாலியா இருக்கும்.. எனக்கும் ஒரு என்டர்டெயின்மென்டா இருக்கும்..
    ஆவண செய்யுங்கள்..

    ReplyDelete
  48. விச்சு கிச்சு ஸ்பெஷல்
    கபீஷ் ஸ்பெஷல்
    மொட்டைத்தலை மணியன் ஸ்பெஷல்
    காக்கை காளி ஸ்பெஷல்
    இப்படி எல்லாத்தையும் கலந்து வாண்டு ஸ்பெஷலா போடலாமே

    ReplyDelete
    Replies
    1. மொட்டைத்தலை மணியன் கதைக்கு இங்கே ஆள் ரெடி ; விச்சு-கிச்சுவுக்கு தலீவரையும், செயலரையும் ரெடி பண்ணிட்டால் போச்சு ; கபீஷ் கதைக்கு யாராச்சும் கைதூக்கினால் பிடிச்சு அமுக்கிப்புடலாம் ! அப்புறமென்ன சார் - ஈரோட்டில் live ஆக இந்த ஸ்பெஷல் இதழைக் களமிறக்கிவிடலாம் !

      Delete
    2. // ரெடி பண்ணிட்டால் போச்சு ; கபீஷ் கதைக்கு யாராச்சும் கைதூக்கினால் பிடிச்சு அமுக்கிப்புடலாம் ! //

      எனக்கென்னவோ எடிட்டர் சார் என்னை நினைச்சுதான் இப்படி சொல்லியிருக்காரோ ன்னு ஒரு ஃபீலிங்!!!

      வடிவேலு கண்ணாடியை பாத்து ஒரு பொம்மையை பத்தி சொன்ன மொமண்ட்:-)

      Delete
    3. ///எனக்கென்னவோ எடிட்டர் சார் என்னை நினைச்சுதான் இப்படி சொல்லியிருக்காரோ ன்னு ஒரு ஃபீலிங்!!!///

      செனாஅனா.. ஹா ஹா ஹா!! :)))))

      வாய்ப்பே இல்லை!! கபீஷ் - ரொம்ப அழகா இருக்கும்!! :P

      எடிட்டர் தூப்தூப்'பை குறிப்பிட மறந்துட்டார்! :D

      Delete
    4. விச்சு-கிச்சுவுக்கு தலீவரையும், செயலரையும் ரெடி பண்ணிட்டால் போச்சு

      ######

      ஓகே சார்..ஆனா நான் விச்சுவா கிச்சுவான்னு அறிந்தவுடனே மற்றும் எனது ராயல்டி தொகை ஒப்பந்தம் ஆகியவன அறிந்தவுடன் கையெழுத்து இட சம்மதிக்கிறேன்..


      பி.கு: கண்டிப்பாக வாழைப்பூ வடைக்கு சம்மதிக்கப்படாது..:-)

      Delete
  49. யகாரி வேண்டாம் சார்

    ReplyDelete
    Replies
    1. வீட்டில் உள்ள வாண்டுகளுக்கு வாண்டு ஸ்பெஷல்... நாம் வாங்கி மட்டும் கொடுத்தால் போதும் :-) அவர்கள் சொல்லட்டும் படித்த பின்னர் பிடிக்குதா பிடிக்கவில்லையா என நண்பரே :-)

      நிபந்தனை அற்ற ஆதரவை கொடுப்போம் ஆசிரியருக்கு.

      Delete
    2. வாண்டும் நானே
      பாண்டும் நானே

      Delete
  50. I vote for suski wisky if there is any possibility

    ReplyDelete
  51. சுஸ்கி விஸ்கி கதைகளை மறுபதிப்பு செய்யலாமே...
    யகாரியை புத்தகமாக போட்டால் ரசிக்க முடியும். நான் ரெடி சார்

    ReplyDelete
    Replies
    1. பென்னியை ; நீலப் பொடியர்களையே மொத்தியெடுத்தாச்சு ; சுஸ்கி & விஸ்கி பாவம் சார் - தாங்க மாட்டார்கள் நம் சாத்துக்களை !

      Delete
  52. What about scooby doo for vandu spl??

    ReplyDelete
  53. விஜயன் சார்,

    வாண்டு ஸ்பெஷல் / மலர் தொடர்ந்து என்பது ஒரு முறை மட்டும் வர உள்ள புத்தகமா அல்லது ரெகுலராக மற்ற புத்தகங்கள் போல் வர உள்ளதா?

    வாண்டு மலரின் பக்க எண்ணிக்கையை வைத்து கதைகளை மற்றும் அதில் இடம்பெற உள்ள மற்ற விஷயங்களை முடிவு செய்யலாமே?

    உதாரணமாக 50 பக்கங்கள் என்றால் குறைந்த பக்கங்கள் (ம.மந்திரி, லியார்டினோ, ...) உள்ள ஒரு சில கதைகள், விச்சு கிச்சு, பலமுக மன்னன் ஜோ, போன்ற சிரிப்பு பக்கங்கள், நமது வாசக நண்பர்களின் வீட்டில் உள்ள வாண்டுகளின் திறமைகளை படம் பிடித்து காட்ட ஒரு சில பக்கங்கள் என செய்யலாம்.

    ReplyDelete
    Replies
    1. ரெகுலராய் வெளி வரக்கூடிய முயற்சியல்ல சார் இது ! அறிவிக்கப்பட்ட 2 இதழ்கள் மட்டுமே இந்த பாணியில் !

      அப்புறம் 'இதிலே கொஞ்சம்' ; 'அதிலே கொஞ்சம்' என்பதெல்லாம் நடைமுறை சாத்தியங்கள் அல்ல ! எந்தப் படைப்பாளியும் அதற்கு சம்மதிக்கப் போவதில்லை !

      Delete
    2. ஓகே சார். உங்கள் முயற்சிக்கு ஆதரவு உண்டு.

      Delete
    3. ஆஹா...இது வேறயா சார்..

      ஹீம்..:-(

      Delete
    4. ஆஹா...இது வேறயா சார்..

      ஹீம்..:-(

      Delete
  54. மாடஸ்டி..!

    அன்று வந்ததும் இதே நிலா..!

    இன்று வந்ததும் அதே நிலா..!

    சில கதைகள் படிக்கும்போது (எந்த ஹீரோவாக இருந்தாலும்) மனசுக்கு ஆத்மார்த்தத்தை கொடுக்கும்.ஒரு திருப்தி அனுபவத்தைக் கொடுக்கும்.

    அந்த வகையில் மாஸ்டியின் கதை மனசுக்கு நெருக்கமாக அமைந்தது.

    அப்படியென்னாதான் கதையில் இருக்குனு கேட்பது புரிகிறது.ஆனால் என்னவெல்லாம் இல்லை என்று தொடங்க ஆசைப்படுகிறேன்.

    மிரட்டலான வில்லன், கொடூரமான அடியாள் கோஷ்டி இல்லை.மாடஸ்டியையும் கார்வினையும் நாலாபக்கமும் ரவுண்ட் கட்டி திணறடிக்கும் வில்லத்தனம் இல்லை.
    சர் ஜெரால்ட் அவர்களின் இரகசிய பணி நிமித்தமில்லை. நட்புக்காக ஆபத்தை நலம் விசாரிக்கும் வழக்கமான கதையும் இல்லை.
    மாடஸ்டிக்கு உடலுக்கும் மனசுக்கும் சவாலான வேலைகள் இல்லை.
    சத்தமின்றி திறமையைக் காட்டும் வண்ணம், கார்வினுக்கு சுத்தமாக. இல்லை.நெருக்கடி நிலைகளை அநாயசமாக சமாளிக்கும் காட்சிப் பிரவாகம் இல்லை.திக் திக் ரக க்ளைமாக்ஸ் பரபரப்பு இல்லை.
    அவ்வளவு ஏன்?
    மொத்த சண்டைக் காட்சிகளென்று பார்த்தால் மொத்தமாக ஒரு முழு பக்கத்துக்கு கூட இல்லை.இன்னும் சொல்லப்போனால் எசகுபிசகான இடங்கள் துளியும் எங்கேயுமில்லை.

    இத்தனை 'இல்லை'தான் கதையைத் தனித்துவமாகக் காட்டுகிறது

    துண்டு துண்டாக காணப்படும் நிகழ்வுகள் கோர்வையாக நம்மை கட்டிப் போட்டு கூடவே இழுத்துச் செல்கிறது.

    ஆனாலும் துவக்கத்தில் தென்படும் சுவாரஸ்யம், நடுவில் கொஞ்சம் காணப்படும் அறிவியல் புனைவு.மேற்க்கொண்டு நிகழும் காலப்பயணத் தகவல்கள். சட்டென வெளிப்படும் நாடகம். பின்விளைவாக ஒரு மோசடி. திடீரென சூழும் நம்பிக்கை துரோகம்.வழக்கம்போல் க்ளைமாக்ஸுக்குப் பின்னே யாவரும் நலம்.

    . மாடஸ்டி கதையில் மாடஸ்டி ரெம்பவே அடக்கி வாசிப்பது அபூர்வமான நிகழ்வு.
    க்ளைமாக்ஸ் மிகவும் பொருத்தமானதே.கிட்டத்தட்ட இதே போன்ற க்ளைமாக்ஸ் இன்னொரு மாடஸ்டி கதையிலும் வந்துள்ளது.

    அது..,

    'பூமியிலோர் படையெடுப்பு '

    ஆனாலும் இந்த பொண்ணுகிட்டே ஏதோ ஒண்ணு இருக்கு..!

    ReplyDelete
    Replies
    1. சொல்ல மறந்தது..,

      புது சைஸ், ரெம்பவே அழகு.!

      Delete
    2. 'பூமியிலோர் படையெடுப்பு'
      தவறு..

      அது...
      'பூமிக்கொரு ப்ளாக்மெயில் '

      Delete
    3. அருமை நண்பரே...செமயான விமர்சனம்.

      Delete
    4. GP@ உங்க விமர்சனத்திற்கு 10/10.

      Delete
    5. மடிப்பாக்கத்துக்கு இடப்பெயர்ச்சியோ GP சார் ? பின்றீங்க !!

      Delete
  55. Replies
    1. G. P.சார்' M. B பற்றி சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். அருமை. சார்

      Delete
  56. ? பிழையுள்ள மழலை

    அந்த அழகிய பெண் : ( பெர்னாட்ஷாவிடம் ) நாம் இருவரும் சேர்ந்து ஒரு குழந்தை பெற்று கொள்வோம் ..அக்குழந்தை என்னை போல் அழகாகவும் உங்களைப் போல் அறிவுடனும் பிறந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?

    பெர்னாட்ஷா: ( பெண்ணிடம் ) ஒருவேளை அக்குழந்தை என் போன்ற அழகுடனும் உன்னுடைய அறிவுடனும் பிறந்துவிட்டால்??

    ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    இக்குட்டி கதை நினைவில் வந்தது பிழையிலா மழலை வாசித்தபோது

    கதையில் அதிக தனித்துவம் பெற்ற பெண்கள் கருமுட்டை தானமளிப்பவர்களாக காட்டப்படுகிறார்கள் ..ஆணின் உயிர் அணுவில் குறைகள் இருப்பின் பிழையில்லா மழலை வருமா என்பது அநிச்சயமே...
    யாருடைய மரபணு வீரியமுள்ளதாக வெளிப்படுத்திக்கொள்ளும் என்பது
    பெர்னாட்ஷா சொல்வது போலத்தான் –சீரற்ற –ரேண்டம் நிகழ்வுதான் ..
    //////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    எல்லியின் –SOLILOQUY –கள் , மன வெதும்பல்கள் , விறுவிறுப்பான சண்டை தொடர் காட்சி நிகழ்வுகள் , செயற்கை கருதானம் தொடர்பான கதாசிரியரின் பார்வை கோணங்கள் தாண்டி மனதை வசீகரித்தது ஏவா ட்ராயின் தாய்மையும் ஆட்டிசம் உள்ள அவள் குழந்தை ஜோயி -யுமே..

    விசித்திரம் ...பிழையிலா மழலை தலைப்பின் கீழ் உள்ள ஒரு கதையின் ஜீவநாதம் அதிகம் பிழையுள்ள ஒரு மழலை ..
    ஆட்டிசம் பற்றி கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளவும்
    \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

    ReplyDelete
    Replies
    1. செம்ம எப்போதும் போல செம்ம செல்வம் அபிராமி என்றாலே செம்ம தானே

      Delete
    2. ஆட்டிசம் பற்றி ஆல்பத்தின் இறுதியில் எழுத நினைத்தேன் தான் சார் ; ஆனால் கதையால் உந்தப்பட்டு நண்பர்களாய்த் தேடினால் இன்னும் தேவலாமோ ? என்று தோன்றியதால் gave it a skip !

      Delete
  57. வாண்டு ஸ்பெஷலுக்கு வாண்டுமாமா கதைகளை வெளியிட முடியுமா? ரைட்ஸ் வாங்க வெளிநாட்டுக்கெல்லாம் மெனக்கெட வேண்டியதில்லை.
    பவழத்தீவு,
    மூன்று மந்திரவாதிகள்
    வீரவிஜயன்
    வீராதி வீரன்
    பலே பாலு
    007 பாலு
    அம்புலிக்கு அப்பால்
    பலே பாலுவும் பாட்டில் பூதமும்
    சிலையைத் தேடி
    இன்னும் ....

    ...யப்பா.. மூச்சு வாங்குது.
    வாண்டு ஸ்பெஷல் வெளியிட்ட மாதிரி இருக்கும்.
    வாண்டுமாமா அவர்களை கௌரவித்த மாதிரியும் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. பட்டியலுக்கே மூசசு வாங்குதே சார்...சிவனேன்னு மூச்சு வாங்கா தேடல்களைத் தொடருவோம் !

      Delete
  58. ///இல்லாங்காட்டி அந்த வாண்டுவே நீங்க தானா ? ///

    சர்வமும் நானே.

    ReplyDelete
    Replies
    1. குழந்தை கான ஸ்பெஷல் என்பதால் வளர்ந்த குழந்தைகளின் எண்ணங்கள் பற்றி கவலைப்படாமல், குறைந்த பக்கங்கள் கொண்ட காமிக்ஸ் களை ஆசிரியர் தேர்வு செய்ய வேண்டும்.

      Delete
    2. //சர்வமும் நானே.//

      அதிகாரியின் பாதிப்பு !!

      Delete
  59. வயோதிக வாண்டுகளின் பொருட்டு ஏற்கனவே வெளியாகி பாராட்டு/குட்டு பெற்ற கார்டூன் கேரக்டர்களையே திரும்பவும் 'வாண்டு ஸ்பெஷல்' என்ற பெயரில் களமிறக்கி அசிங்கப்படுத்துவதை விட, குழந்தைகளுக்கே குழந்தைகளுக்காகப் படைக்கப்பட்ட ஒரு புதிய கேரக்டரை களமிறக்குவதே சரியானதாக இருக்கும் எ.எ.க!
    அதாவது மீன் குழம்பு வைத்த அதே பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கல் வைப்பது சரியாகாது என்கிறேன்.ஹிஹி!

    ReplyDelete
    Replies
    1. அப்போ யகாரி யை முயற்சி செய்யலாம் என்று சொல்கிறீர்

      Delete
    2. ////அப்போ யகாரி யை முயற்சி செய்யலாம் என்று சொல்கிறீர்///

      என்னோட முதல் தேர்வு - வால்ட் டிஸ்னி'ங்க KS!

      Delete
    3. ///மீன் குழம்பு வைத்த அதே பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கல் வைப்பது சரியாகாது என்கிறேன்///

      எப்புடியெல்லாம் ரோசனை வருது பாரேன் :)

      Delete
    4. ///மீன் குழம்பு வைத்த அதே பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கல் வைப்பது சரியாகாது என்கிறேன்///

      கழுவாமல் என்பதை விட்டுவிட்டீர்கள் செயலரே..:-)

      Delete
    5. **///மீன் குழம்பு வைத்த அதே பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கல் வைப்பது சரியாகாது என்கிறேன்///

      எப்புடியெல்லாம் ரோசனை வருது பாரேன் :)//***

      சூப்பர் ஸ்டாரீன் இப்பத்திய ட்ரெண்டிங்ல இருக்கற கோட் சார் அது!!

      ஹி..ஹி..க்கு அதான் அர்த்தம்!! :-)

      Delete
    6. என் பொருட்டு விளக்கியமைக்கு நன்றிங் செனாஅனா!

      ///ஹி..ஹி..க்கு அதான் அர்த்தம்!///

      எப்படித்தான் கண்டுபிடிக்கறாங்களோ?!! :)

      Delete
    7. ///மீன் குழம்பு வைத்த அதே பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கல் வைப்பது சரியாகாது என்கிறேன்///

      கழுவாமல் என்பதை விட்டுவிட்டீர்கள் செயலரே..:-)

      Delete
    8. ஆக எது ஒண்ணைச் செஞ்சாலும், கழுவி ஊத்தணும்னு சொல்ல வர்றீங்க ?

      Delete
  60. கேள்வி: """வாண்டுக்குக் கதை சொல்லவுள்ள டாடியா / அங்கிளா / தாத்தாவா ? இல்லாங்காட்டி அந்த வாண்டுவே நீங்க தானா ? """

    பதில்: டாடியும் நானே, வாண்டுவும் நானே.

    ReplyDelete
  61. ஏதோ ஒன்னு போடுங்க சார் எப்படியும் புக் வாங்க தான் போறோம்

    ReplyDelete
    Replies
    1. வாங்குறதை ரசிச்சு வாங்கச் செய்வோமே !!

      Delete
  62. கென்யா நாயகியின் சாகஸத் தொடர்ச்சியாகவே நமீபியாவும் அமேஸோனியாவும் இருக்கின்றன. அவற்றை விரைவில் வெளியிடும் உரிமையையும் சேர்த்தே வாங்கி விடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வேகமாய்ப் படித்த போது "கென்யா நாயகி நமீதா" என்று வாசித்து வைத்தேன் !! ஒரு நிமிஷம் அப்டியே ஷாக்காகிப் போச்சு !!

      Delete
    2. எடிட்டர் சார் ஹிஹிஹி செம்ம செம்ம

      Delete
    3. அடடே! நமீதாவின் தமிழ்நாட்டு 'மச்சான்ஸ்'ஸில் நம் எடிட்டரும் ஒருவர் என்பது இத்தனைநாளும் தெரியாமப் போச்சே?!!

      சார்.. சார்... அந்த டீ-ஷர்ட்டை EBFல் நம் நண்பர்களுக்கு அணிவித்துவிட சீஃப் கெஸ்ட்டாக.......

      Delete
  63. ஒருவர் : ஏன்.. அந்தக் காமிக்ஸ் எடிட்டர் அப்படி என்ன சொல்லிட்டார்னு இப்படி மூஞ்சியை உர்ர்ர்ருன்னு வச்சிக்கிட்டிருக்கே?

    மற்றொருவர் : தமிழ்நாட்டு சிறுவர்களிடம் ஒரு எழுச்சி ஏற்படணுமாம்.. ஒரு புரட்சி வெடிக்கணுமாம்.. அப்பத்தான் 'வாண்டூஸ் ஸ்பெஷல்' போடுவாராம்!

    ReplyDelete
    Replies


    1. ஏற்கனவே முட்டுச் சந்து ; மூச்சாச் சந்துன்னு நிறையப் பாத்துப்புட்டாச்சு ; ஆனாலும் இது புது ரூட்டா தெரியுதே ..!

      மஹா ஜனங்களே...அந்த எடிட்டர் சத்தியமா நான் இல்லீங்கோ !!

      Delete
  64. இந்த வாரம் செம்மையாக சென்றது. ஈரோடு ஸ்பெஷல் அறிவிப்பு வரும் வாரம்?

    ReplyDelete
  65. பூந்தளிர் மாதிரி கதம்பமாக ஒரு இதழ்.

    டிங்கிள் கதைகள் தரமான தமிழில் வந்தால் அருமையாக இருக்கும்...

    ReplyDelete
  66. வாண்டு ஸ்பெஷலில் என்ன கதை இடம்பெறலாம் என்று ஒரே குழப்பமாக இருக்கும் போலத் தெரிகின்றதே?

    ReplyDelete
  67. மார்ச் மாத இதழ்கள் பெற்ற மதிப்பெண்கள்............
    1.அ-எதிர்காலம் எனதே 9.9999/10
    ஆ.ஆர்டின் ஒரு ஆச்சரியக்குறி 9.9999/10
    இ.நில் கவனி வேட்டையாடு 10/10
    ஈ.பிழையிலா மழலை 10/10.

    ReplyDelete
  68. "எம்மா "த இதழ்கள் ...

    ஸாரி ...இம்மாத இதழ்கள்


    மாடஸ்டி...9/10

    ஆர்டின் ஒரு ! ...9/10

    பி.மழலை....9/10

    படித்திடு..பதைத்திடு...பறந்தோடு..7/10

    ReplyDelete
  69. சாயந்திரமே புதுப் பதிவோடு சந்திப்போம் guys !! டைப்பிங்...

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சார்!

      வீ ஆர் வெயிட்டிங்....

      Delete
    2. பதிவு சீக்கிரமே வரப்போவுதுன்னா அந்தப் பதிவிலே சொல்லப்பட்டிருக்கும் சாராம்சங்கள் எடிட்டருக்கு சிலபல நாட்களாய் மண்டைக்குடைச்சலை ஏற்படுத்தியவையாத்தான் இருக்கணும்!

      எந்தமாதிரியான apologies கேட்கப்போறாரோ.. எம்பெருமானுக்கே வெளிச்சம்!

      Delete
  70. ஒருவர் : என்ன ரெண்டு நாளா இந்த ப்ளாக் வெறிச்சோடி கிடக்கு! யாரையுமே காணோமே?!!

    மற்றொருவர் : ஹிஹி.. 'பொது இடங்களில் கூடி அரட்டையடிப்பதைத் தவிர்த்தால் கொரோனா பரவுவதையும் தடுக்கலாம்'னு கவர்ன்மென்ட் சொன்னதை தப்பாப் புரிஞ்சுகிட்டாங்க போலிருக்கு!

    ReplyDelete
  71. அடுத்து வரயிருக்கும் கமெண்ட் காமிக்லவர் ராகவனின் நினைவாக...

    ReplyDelete
  72. 860+ கமெண்ட்ஸ்...

    1 மெயின் பதிவு மற்றும் 2 உப பதிவுகள்...

    வளர்ந்த வாண்டுகளின் எண்ணச் சிதறல்கள்...

    வித்தியாசமான கதை விமர்சனங்கள்...

    சிவகாசிக் கவிஞரின் வசனங்கள்...

    கடந்த 7 நாட்களில்!!

    ReplyDelete