Powered By Blogger

Wednesday, March 18, 2020

ஆராய்ச்சியோடு ஒரு காலை !!

நண்பர்களே,

வணக்கம் ! ரூல்ஸை மதிக்க நினைப்பவன் என்பதால் -பின்னூட்ட  எண்ணிக்கை 300-ஐத் தாண்டிவிட்டதால் உபபதிவோடு  கடும் ஆராய்ச்சிக்கு மத்தியிலும் இதோ ஆஜர் !! "அட...அப்புடி என்னப்பா புண்ணாக்கு ஆராய்ச்சி..? கொரோனா வைரசுக்கு மருந்து-கருத்து கண்டுபிடிச்சிட்டு இருக்கியா ?" என்று தோன்றலாம் தான் ; ஆனால் இதுவோ வேறொரு ஆராய்ச்சி !! அதற்கு முன்பாய் பிறந்த நாள் வாழ்த்துக்களை இங்கும், FB-ல் ; வாட்சப்பில் எனச் சொன்ன / சொல்லவுள்ள / சொல்ல மறக்கவிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் அநேக நன்றிகள் !! விடிந்து முழித்து போனைப் பார்க்கவே பயமாகயிருந்து வரும் இந்தச் சமீபத்து நாட்களில், காலங்கார்த்தாலே பூங்கொத்துக்களையும், சாக்லேட்களையும், தடித்தடியான கேக்குகளையும் போனின் ஸ்க்ரீனிலாவது  பார்க்க முடிவதில் ஹேப்பி !!

அப்புறம் அந்த ஆராய்ச்சி மேட்டர் ? என்கிறீர்களா ? வேறொன்றுமில்லை guys - "ஏழு கழுதை வயசாச்சு ; இன்னும் என்ன பிறந்தநாள் வேண்டிக்கிடக்கு ?" என்று 'அன்போடு' வினவிடவும் நண்பர்கள் இல்லாது போக மாட்டார்கள் அல்லவா ? அவர்களது அந்த "வாழ்த்துக்களின்" பின்னணியில் இருக்கக்கூடிய விஞ்ஞானபூர்வ உண்மைகளை ஆராய்ந்தால் என்னவென்று நினைத்தேன் !! அது தான் - 'ஒரு கழுதை வயசு என்றால் எவ்வளவு ?' என்பது !! 

நான் கூட கழுதைகள் எட்டோ, பத்தோ ஆண்டுகளில் மண்டையைப் போட்டு விடும் போலும் ; அதனால் தான் '7 கழுதை' வயதென்ற அடையாளத்தை முதுமையோடு சம்பந்தப்படுத்தியிருப்பார்கள் போலும் என்று நினைத்தேன் ! ஆனால் கூகுளில் தேடினால் surprise ..surprise ...!

*காட்டில் வசிக்கும் கழுதைகள் சராசரியை 25 - 30 ஆண்டுகள் ஆயுள் கொண்டவையாம் !

*வீட்டில் வசிக்கும் (அதாவது சிலபல பிறந்தநாள் போஸ்டர்களை விழுங்கியபடியே ஊருக்குள் சுற்றும் பிரகஸ்பதிகள் ) கழுதைகள் சராசரியாய் 30 - 50 ஆண்டுகள் வாழ்வதுண்டாம் ! இவை செழிப்பான தேசத்துப் பிரஜைகளை இருக்கும் பட்சத்தில் !

*அதே கழுதைகள் கஷ்ட ஜீவன தேசங்களில் வசிக்கும் பட்சம் வெறும் 12 - 15 ஆண்டுகளே ஜீவித்திருக்குமாம் !

*இங்கிலாந்தில் இருந்ததொரு கழுதைசார் 55 ஆண்டுகள் வரைத் தாக்குப்பிடித்து உள்சக சாதனை செய்துள்ளாராம் ! அவருக்கு பெயர் கூட சூட்டியுள்ளனர் Eeyore என்று !!

ஆக மேற்படி ஆழமான ஆராய்ச்சியின் பலனாய் நான் அறிந்த தகவல்கள் இதோ :

இந்தியா இப்போது பொருளாதார வல்லரசு ; Yes பேங்குக்கு 'நோ' சொன்னாலும் தாக்குப்பிடிக்கும் தேசம் என்பதால், இங்குள்ள ஈயோரேக்களுக்கு 30-50 ஆண்டு ஆயுள் என்று எடுத்துக் கொண்டால் - So I am only a touch over one கழுதை's வயசு !! ஹை ஜாலி...ஜாலி..!! 

இங்கிலாந்தின் அளவுகோல்களைக் கையில் எடுப்பதாயின் - எனக்கு இன்னும் ஒரு கழுதை வயசு கூட ஆகலிங்க !! மெய்யாலுமே !! சூப்பரப்பு...சூப்பரப்பு..!! So ஷூகர் ஏறப்போகுதுன்னு பயமின்றி இன்றொரு நாளாவது ஜமாய்க்கலாமோ ? Thinking !!

அறிவுச்செறிவூட்டும் இந்த ஆராய்ச்சியில் நீங்களும் பங்கெடுத்து அவரவரது அகவைக் comparison-களை இங்கே பகிர்ந்திடலாமே ?! இனிங்காட்டி யாராச்சும் "ஏழு கழுதை வயசாகுது...இன்னும் பொம்மை புக் படிச்சிட்டிருக்கியே ?!" என்று சொல்லட்டும் - வைச்சுக்கலாம் கச்சேரியை !! சும்மா ரமணா ஸ்டைலில் "கழுதை stats" எடுத்துவிட்டால் சப்தநாடியும் ஒடுங்கிப் போகாது கேள்வி கேட்போருக்கு ? யாருகிட்ட ..?

Before I sign out - கொசுறாய் : 

வாசகர்ஜி 1 :  ஹைய்யோ... ஹைய்யோ... நினைச்சாலே சிப்பு சிப்பாய் வருது !!

வாசகர்ஜி 2 : யாரை நினைச்சு..? எதுக்கோசரம் ?

ஜி 1 : வேற யாரை ...? இந்த மொசைக்மண்டை  எடிட்டரை நினைச்சுத் தான் !!

ஜி 2 : இப்போ என்ன புதுசா ?

ஜி 1 : அறிவிக்காத "கென்யா' வராததுக்கே ரவா பாயசம் தேறுச்சே....இதோ ஏப்ரலில் அறிவிச்சதொரு புக்குக்குப் பதிலா, புதுசா ஒரு பொம்மை புக்....அதுவும் ஐஞ்சே நிமிஷத்தில் படிச்சு முடிக்கக்கூடியதைப் போடப் போறாராமே...!! பருப்புப் பாயாசமோ ? சேமியாவோ ? நினைச்சேன்..சிர்ச்சென் !! ஏப்ரல் முதல் தேதிக்கு ரெம்போ தூரமில்லையே...!! 

Bye guys !! See you around !! And thanks again !!


மேற்கண்ட எல்லாமே ஆன்லைனில் / நேரடியாக வாங்கிடலாம் guys !! 

194 comments:

  1. இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்..

    ReplyDelete
    Replies
    1. வாவ்.. தலீவரே.. வாட் எ மருத்துவ மிராக்கிள்..!!

      Delete
    2. வாழ்த்துகள் தலைவரே..........

      Delete
    3. வாழ்த்துக்கள் தலைவரே .கண்ணா எப்போ பார்த்தாலும் எங்க தலைவரை வம்பு இழுப்பதே உங்களுக்கு வேலையாக இருக்கிறது ஹிஹிஹி

      Delete
  2. ஆசிரியருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! பதிவுக்கு நன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் நண்பர்களே!!

    ReplyDelete
    Replies
    1. ///அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் நண்பர்களே!!///

      வூட்ல பாதுகாப்பு இல்ல. அதான் கிளம்பி ஆபீஸுக்கு வந்துட்டேன்! :D

      Delete
  3. ஆனாலும் இப்படி ஓர் ஆராய்ச்சி செஞ்சுருப்பீங்கன்னு பதிவை கடைசியா படிக்குறவரைக்கும் நம்பவே இல்லீங் சார்...:-)

    ReplyDelete
    Replies
    1. தலீவரே...திரும்பின திக்கெல்லாம் பீதியை கிளப்பும் செயதிகளும், வாட்சப் பகிர்வுமாய் இருக்கும் நாட்களில், கொஞ்சம் ஜாலியாய் இப்படி கிண்டிப் பார்த்தேன் கூகுளை !!

      Delete
  4. 1 : அறிவிக்காத "கென்யா' வராததுக்கே ரவா பாயசம் தேறுச்சே....இதோ ஏப்ரலில் அறிவிச்சதொரு புக்குக்குப் பதிலா, புதுசா ஒரு பொம்மை புக்....அதுவும் ஐஞ்சே நிமிஷத்தில் படிச்சு முடிக்கக்கூடியதைப் போடப் போறாராமே...!! பருப்புப் பாயாசமோ ? சேமியாவோ ? நினைச்சேன்..சிர்ச்சென் !! ஏப்ரல் முதல் தேதிக்கு ரெம்போ தூரமில்லையே...!!

    ######

    நல்லவேளை சார்..கடைசி வரியை படிச்சுட்டேன்..:-)

    ReplyDelete
  5. ஆ.....



    மறந்துட்டேன்...



    இந்திய காமிக்ஸ் உலக வரலாற்றில் முதல்முறையாக


    முதல் கமெண்ட்...:-)

    ReplyDelete
    Replies
    1. வாவ்...வாழ்த்துகள் தலைவரே!

      Delete
    2. :-))

      நன்றி டெக்ஸ்...:-)

      Delete
    3. கொடுத்து வைத்தவர் நீங்கள் தலைவரே :-) வாழ்த்துக்கள்.

      Delete
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  7. // ஏப்ரலில் அறிவிச்சதொரு புக்குக்குப் பதிலா, புதுசா ஒரு பொம்மை புக்....அதுவும் ஐஞ்சே நிமிஷத்தில் படிச்சு முடிக்கக்கூடியதைப் போடப் போறாராமே...!! பருப்புப் பாயாசமோ ? சேமியாவோ ? நினைச்சேன்..சிர்ச்சென் !! ஏப்ரல் முதல் தேதிக்கு ரெம்போ தூரமில்லையே...!! //


    What book sir? eager to know about the book!! please open the secret!

    ReplyDelete
    Replies
    1. // ஏப்ரல் முதல் தேதிக்கு ரெம்போ தூரமில்லையே...!! //

      Here is the twist!! ஏப்ரல் fool surprise :-)

      Delete
  8. சார்..இந்த பதிவிலியே ஈரோடு புத்தக அறிவிப்பும்..சந்தா தொகையையும் அறிவித்து விடலாமே..:-)

    ReplyDelete
    Replies
    1. // சந்தா தொகையையும் அறிவித்து விடலாமே. //
      குத்து மதிப்பாக அனுப்புங்க தலைவரே என சொன்னால் குத்துக்கு என்ன மதிப்பு என குண்டக்க மண்டக்க கேள்வி கேட்க பலர் ரெடியா இருப்பதால் :-) ஒரு அமௌன்ட்ஐ அனுப்பி வையுங்கள் தலைவரே!

      Delete
    2. அந்த வினாவை நானே கேட்பேனே...:-)

      Delete
    3. தலைவரே நான் கேட்க நினைத்ததை நீங்கள் கேட்டு விட்டீர்களே

      Delete
    4. நீங்க வளர்ந்து விட்டீங்க தலைவரே. காம்ப்ளான் தலைவர் :-)

      Delete
  9. இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.. 💐💐💐

    ReplyDelete
  10. 15..thanks to the whats appgroups nagraj santhan.
    My heartiest wishes to mr.vijayan sir

    ReplyDelete
  11. இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.. 💐💐💐

    ReplyDelete

  12. பிறந்த நாள் வாழ்த்துக்கள் எடி சாப் . ஈரோடு புத்தக கண்காட்சியில் பெரியகேக் வெட்டி கொண்டாடிடலாம். என்ன சொல்றிங்க நண்பர்களே. அப்படியே டெக்ஸ் மெபிஸ்டோ யுமா கதைகளை போடுறதுக்கு அஸ்திவாரம் போட்டுடுடலாம்

    ReplyDelete
  13. ஆசிரியருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! அடுத்த வருட பிறந்த நாளில் சின்னதாக ஒரு 1000 பக்கம் டெக்ஸ் வில்லர் புத்தகம் வெளியீடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. இது இது பேச்சு நண்பரே! ப்ளஸ்ஸோ ப்ளஸ்கள்!

      Delete
  14. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்💐💐💐

    ReplyDelete
  15. இனிய பிறந்த நன்னாள் வாழ்த்துகள்... விஜயன் சார்...

    வீட்டிலேயே... குடும்பத்துடன்... நண்பர்களைத் தவிர்த்து... பிறந்த நாள் கொண்டாடுங்கள்... அடுத்த பிறந்த நாளன்று... அதகளம் செய்யலாம்...

    ReplyDelete
  16. பிறந்தநாள் நாயகரே இந்த நாள் மட்டுமல்ல இனி வரும் எல்லா நாட்களும் உங்களுக்கு மகிழ்ச்சியாக ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்

    ReplyDelete




  17. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அண்ணா!



    (அண்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு மாடஸ்டி குண்டுபுக் ஒன்றை ஆகஸ்ட்டில் வெளியிட அறிவிப்பு செய்வார்!)

    ReplyDelete
    Replies
    1. கொரானாவுக்கு ஸ்பெஷல் புக்கு விட்டாலும் விடுவாரே தவிர அண்ணன் பிறந்த நாளுக்கு எல்லாம் அண்ணன் இதழ் விட மாட்டார் நண்பரே..:-)

      Delete
    2. சூப்பர்...😂😂😂😂

      Delete
  18. ///அறிவிக்காத "கென்யா' வராததுக்கே ரவா பாயசம் தேறுச்சே....இதோ ஏப்ரலில் அறிவிச்சதொரு புக்குக்குப் பதிலா, புதுசா ஒரு பொம்மை புக்....அதுவும் ஐஞ்சே நிமிஷத்தில் படிச்சு முடிக்கக்கூடியதைப் போடப் போறாராமே...!! பருப்புப் பாயாசமோ ? சேமியாவோ ? நினைச்சேன்..சிர்ச்சென் ///


    ப்பா!! என்னாவொரு தில்லு சார் உங்களுக்கு!!! அதுவும் பிறந்தநாளும் அதுவுமா?!!

    அப்பப்போ நம்ம வாசகர்களிடம் வாங்கிக்கட்டிக்கறதுன்னா இப்பல்லாம் உங்களுக்கு அப்படியொரு இஷ்டம்!!

    ReplyDelete
  19. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  20. ஆசிரியர் பெருந்தகைக்கு
    இனியபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. Replies
    1. இந்த பதிவில் உள்ள collectionனுக்கு ஏதாவது discount உண்டு என்றால் அதையும் இந்த விளம்பரத்தில் ஹை லைட் செய்யுங்கள் சார்!

      Delete
  22. 1 : அறிவிக்காத "கென்யா' வராததுக்கே ரவா பாயசம் தேறுச்சே....இதோ ஏப்ரலில் அறிவிச்சதொரு புக்குக்குப் பதிலா, புதுசா ஒரு பொம்மை புக்....அதுவும் ஐஞ்சே நிமிஷத்தில் படிச்சு முடிக்கக்கூடியதைப் போடப் போறாராமே...!! பருப்புப் பாயாசமோ ? சேமியாவோ ? நினைச்சேன்..சிர்ச்சென் !! ஏப்ரல் முதல் தேதிக்கு ரெம்போ தூரமில்லையே...!!

    ######

    நல்லவேளை சார்..கடைசி வரியை படிச்சுட்டேன்..:-)

    ReplyDelete
  23. எடிட்டர் ஸ்பெஷல் என்று உங்கள் பிறந்த நாளன்று ஏன் உங்களுக்கு பிடித்தமான ஒரு கதை கலெக்ஷன் போடக்கூடாது

    ReplyDelete
  24. அந்த எடிட்டர் ஸ்பெஷலில் நீங்கள் களம் இறக்க விரும்பி தயங்கி நின்ற கதைகளை ஏன் வெளியிட கூடாது

    ReplyDelete
  25. நானும் வந்து விட்டேன்

    ReplyDelete
  26. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்..

    ReplyDelete
  27. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  28. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சார்!

    ReplyDelete
  29. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சார்!

    ReplyDelete
  30. ///இதோ ஏப்ரலில் அறிவிச்சதொரு புக்குக்குப் பதிலா, புதுசா ஒரு பொம்மை புக்....அதுவும் ஐஞ்சே நிமிஷத்தில் படிச்சு முடிக்கக்கூடியதைப் போடப் போறாராமே...!!///

    ஆஹா.. இதல்லவோ அறிவிப்பு..ங்ஙே.. ஒரு நிமிசம்.. அது கார்ட்டூனா இல்லை.. மெய்யாலுமே பொம்மை மட்டும் உள்ள புக்கா..!?

    Anyhow..

    Happy birthday Lion ஜி..!😍😍

    ReplyDelete
  31. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.
    என்றும் நல்ல ஆரோக்கியத்தோடு பல்லாண்டு வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...

    ReplyDelete
  32. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சார்!

    ReplyDelete

  33. """""இது சாதனை நேரம்.....!!!""""


    மரியாதைக்குரிய ஆசிரியர் சார் 16வயது இளைஞராக லயன் காமிக்ஸ் ஆரம்பித்ததில் இருந்தே பலவிதமான சாதனைகள் & பரவலான சோதனை முயற்சிகளோடு காமிக்ஸ் பயணத்தை தொடர்ந்து வெற்றிகரமாக செய்து வருபவர் தாங்கள். தங்களது பயணத்தில் எத்தனையோ சாதனை மைல்கற்கள், அசாத்திய சிகரங்கள், கத்தி மீது நடக்கும் நுட்பங்கள், அந்தர்பல்டிகள்...என பல்வேறு அசகாயங்களை அசால்டாக செய்து வருகிறீர்கள். காற்றாற்று வெள்ளமென ஆரம்பித்த தங்களது ஓட்டத்தின் துள்ளல்களில் சிதறிய வெண் சாரல்கள்.......,

    #ரூ2க்கு இதழ்கள் ஆரம்பித்து இருந்த வேளையில் இரு மடங்கிலான ரூ4விலையில் வெளியான அதிரடிகள் இரும்புமனிதன், சதிவலை & கொலைப்படை;

    #ஆர்ப்பாட்டமாக அறிமுகமே ஸ்பெசல் இதழில் கண்ட அரிசோனா "அதிகாரி"-டெக்ஸ் வில்லரின் பல அதிரி புதிரி ஹிட்ஸ்;

    #அசத்தலான சலபன் அட்டைப்படங்கள், அரை டஜன் சூப்பர் ஹீரோக்களின் கதைகளோடு வெளியாகி ரசிகர்களை சொக்கவைத்த ரூ5 விலையிலான பாக்கெட் சைஸ் கோடைமலர்கள் & தீபாவளிமலர்கள்;

    #கனவல்ல நிஜம்தான் நம்புங்கள் என சொன்னாலும் கிள்ளிப் பார்த்துத்தான் இது நிஜம் என உணர வைத்த- தி பாக்கெட் டைனமைட், காமிக்ஸ் கலக்டர்களின் பொக்கிஷம், ரூ2க்கும், ரூ3க்கும் இதர காமிக்ஸ்கள் வெளிவந்து கொண்டு இருந்த வேளையில் ரூ10க்கு வெளியான தி கிரேட் பாக்கெட் சைஸ் இதழ், "லயன் சூப்பர் ஸ்பெசல் ";

    #பெயரைக் கேட்டாவே அதிரச்செய்த தி லயன் 50, "டிராகன் நகரம்";

    #மீண்டும் விலையில் புரட்சி, கதைகளில் ரசிகர்களை கட்டிப்போட்ட-லயன் சென்சுரி ஸ்பெசல் & Top 10 ஸ்பெசல்;

    #ரூ100க்கு ஒரு காமிக்ஸ் இதழா என விலையில் மட்டுமல்லாமல்- தரத்தில், அளவில், கதைத்தேர்வுகளில் என சகலத்திலும் விழிகளை அகல விரியச் செய்த பிரமாண்டங்கள் மெகா ட்ரீம் ஸ்பெசல், ஜாலி ஸ்பெஷல் & கெளபாய் ஸ்பெசல்;

    #15வருட கனவை நனவாக்கி- விலையிலும், கதை நீளத்திலும் புதிய சரித்திரம் படைத்த ரூ200க்கு வெளியான லயன் ஜம்போ கலெக்டர்ஸ் ஸ்பெசல்-இரத்தப்படலம்;

    ReplyDelete
    Replies
    1. மலையில் துவங்கிய காற்றாறின் துடிப்பான துள்ளல் நடை நிலத்தில் விழுந்தபின் நிதானமான நிலையான வேகத்தோடும் அளவில் விரிந்து பரவியும் ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி பயணிக்கிறது. காமிக்ஸ் "காட்டாறு" எடிட்டர் திரு விஜயன் சார்@ தங்களது 2வது இன்னிங்ஸின் தீர்க்கமான ஓட்டத்தில் விளைந்த வண்ண வயல்களாவன....,

      #லயன் கம்பேக் ஸ்பெசல்

      #முத்து நெவர் பிபோர் ஸ்பெசல்

      # லயன் ஆல் நியூ ஸ்பெசல்

      #லயன் மேக்னம் ஸ்பெசல்

      #தங்க தலைவனின் "மின்னும் மரணம்"

      #தல டெக்ஸின் தி லயன்250

      #ஈரோட்டில் இத்தாலி

      #தமிழ் காமிக்ஸ் சிம்மாசனத்தின் உச்சியில் தல டெக்ஸை அமர்த்திய "சர்வமும் நானே!"

      #தன்னிகர் அற்ற வெற்றிகோட்டை "இரத்தக்கோட்டை"

      #காமிக்ஸ் உலகை புரட்டிபோட்ட மறுபதிப்பு "இரத்தப்படலம்"

      #சத்தமின்றி யுத்தம் தொடங்கி, மெளன இடியாய் முழங்கி, விரும்பிய வதம் செய்த, ஆறாத சினத்தான்-"டியூராங்கோ"

      #அரிசோனா புயலுக்கே பிரளயமாகிய டைனமைட் ஸ்பெசல்

      #சிகரங்களின் உச்சியில் ஏறிய "சாம்ராட்" தோர்கல்

      # மார்கோ‘ எனும் மதனமோகன ரூப சுந்தரியின்
      "பிஸ்டலுக்கு பிரியா விடை"

      #இன்னும் லார்கோக்கள், பெளன்சர்கள், வெயின் ஷெல்டன்கள், தனியொருவன்கள், 007கள், உட்சிடி கோமாளிகள் & லக்கியின் சிரிப்பு தோரணங்கள், கிரீன் மேனர்கள், அண்டர்டேக்கர்கள், ஜேசன் பிரைஸ்கள், கிளப்டன்கள், கமான்சேக்கள், ஜீலியா கென்டால்கள்................................!!!

      Delete

    2. ----என இத்தனை சாதனை இதழ்களோடு,

      லயன்-முத்து காமிக்ஸில் ரூ1000 விலையில் வெளியான முதல் நாயகர்-டைகர்;

      மிக நீண்ட கதைக்கு சொந்தக்காரர்-நம்ம மறதிக்கார நண்பர் ஜேசன் ப்ளை;
      (தோர்கல் எல்லா பாகமும் வெளியாகும் நாளில் சாதனை கைமாறிடும்),

      ஒரே தொடர் 3முறை வெளிவந்த நாயகர்-இதுவும் ஜேசனே!

      ஒரே மாசத்தில் விற்று தீர்ந்தவர்-ஸ்பைடர்;

      நிறைய சிறப்பிதழ்களில் இடம்பெற்ற நாயகி-மாடஸ்தி; ..............!!!

      ------என பலப்பல சாதனை நாயகர்களை தங்களது ஒவ்வொரு வயதிலும் வெளியிட்டு வந்துள்ளீர்கள் எடிட்டர் சார். கடந்து போன ஆண்டில் மிக முக்கியமான சாதனை ஒன்றை சத்தமில்லாமல் நிகழ்த்தியுள்ளீர்கள். அது என்னான்னா தமிழ் காமிக்ஸ் உலகில் யாரும் நினைத்துக் கூட பார்க்க இயலா எவரெஸ்ட்,

      """"""ஒரே நாயகரின் 100வது கதை"""

      --- வெளியிட்டு உள்ளீர்கள். வாழ்த்துகள் சார்!!!


      நண்பர்களே, டெக்ஸ் ரசிகர்களே, அரிசோனா "அதிகாரி"யை உள்ளுக்குள் ஆராதிப்பவர்களே@ லயன்-முத்து காமிக்ஸ்ஸின் செஞ்சுரி நாயகன், தமிழ் காமிக்ஸ்ஸின் 100வது கதை கண்ட முதல் நாயகர், சாட்சாத் நம்ம தல---

      """"டெக்ஸ்.....டெக்ஸ்.....டெக்ஸ்... டெக்ஸ் வில்லரே.""""

      Delete
    3. அட... நமது இதழில் வந்த டெக்ஸின் 100 கதை எது?!!!

      Delete
    4. நன்றிகள் பொருளர் ஜி! உங்கள் கேள்விக்கு பதில் கீழே உள்ளது பரணி!

      Delete
    5. அருமை நண்பரே அருமை என்ன ஒரு உழைப்பு என்ன ஒரு வாழ்த்து.

      Delete
    6. சின்ன திருத்தம் சார் ; பதிப்புலகுக்குள் கால் வைக்க எண்ணி, ஏகமாய் மொக்கைகள் போட்ட வேளையில் தான் வயது 16 ..லயனுக்கு பிள்ளையார் சுழி போட்டப்போ வயது 17 !

      Delete
    7. தகவலுக்கு நன்றிகள் சார்.

      Delete
  34. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எடி

    ReplyDelete
  35. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  36. எடிட்டர் சார்.. ஒரு பணிவான விண்ணப்பம்.. நம்ம பழைய இதழ்கள் எல்லாம் மிஸ் பண்ணிட்டமேன்னு நான் வருந்தாத நாள் இல்லை.. உங்களால் இயலுமேயானால் லயன் மெகா டிரீம் ஸ்பெஷல், லயன் ஜாலி ஸ்பெஷல், போன்ற இதழ்களை Soft Copyயா ஆன்லைன்ல விற்க இயலுமா??

    ReplyDelete

  37. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் எடிட்டர் விஜயன் சாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சொல்ல வயது பற்றாததால் வணங்குகிறேன் 🙏🏼

    இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼
    🎂🎂🎂🎂🎂
    🍧🍧🍧🍧🍧
    🍫🍫🍫🍫🍫
    🍭🍭🍭🍭🍭
    💐💐💐💐💐
    .

    ReplyDelete
  38. நண்பர்களே டெக்ஸின் 100வது கதை சென்றாண்டு வெளியானது. 103 கதைகள் இதுவரை வெளியாகி உள்ளது. இந்த "100+++கேக்" அனைத்து டெக்ஸ் ரசிகர்கள் சார்பில் எடிட்டர் சாருக்கு....!!!


    1.தலைவாங்கிக் குரங்கு-1985

    2.பவளசிலை மர்மம-1986

    3.பழிவாங்கும் பாவை-1987

    4.பழிக்குப்பழி-1987

    5.ட்ராகன் நகரம்-1988

    6.இரத்த முத்திரை-1988

    7.வைக்கிங் தீவு மர்மம்-1989

    8.மாய எதிரி-1989(மாடஸ்தியின் நடுக்கடலில் அடிமைகள் புக்கில் இணைந்து வந்தது)

    9.அதிரடிக் கணவாய்-1989

    10.எமனோடு ஒரு யுத்தம்-1990

    11.மரணத்தின் நிறம் பச்சை-1991

    12.சைத்தான் சாம்ராஜ்ஜியம்-திகில் கோடைமலர்1991

    13.பழிவாங்கும் புயல்-1991

    14.கழுகு வேட்டை-1991

    15.இரத்த வெறியர்கள்-1993

    16.இரும்புக் குதிரையின் பாதையில்...!-1994(லயன் சென்சுரி ஸ்பெசல்)

    17.பாலைவனப் பரலோகம்-1995(லயன் டாப்10 ஸ்பெசல்)

    18.மரண முள்-1996

    19.நள்ளிரவு வேட்டை-1996

    20.மரண நடை-1997

    21.கார்சனின் கடந்தகாலம்-1997

    22.பாங்க் கொள்ளை-1997

    23.எரிந்த கடிதம்-1998

    24.மந்திர மண்டலம்-1999

    25.இரத்த நகரம்-1999

    26.எல்லையில் ஒரு யுத்தம்-2000

    27.மரண தூதர்கள்-2000

    28.மெக்ஸிகோ படலம்-2001

    29.தனியே ஒரு வேங்கை, கொடூர வனத்தில் டெக்ஸ்& துரோகியின் முகம்(3பாக தொடர் கதை)-2002

    30.பயங்கரப் பயணிகள் & துயிலெழுந்த பிசாசுகள்(இருபாக தொடர்)-2002

    31.பறக்கும் பலூனில் டெக்ஸ்-2003

    32.ஓநாய் வேட்டை& இரத்த தாகம்(இருபாக தொடர்)-2003

    33.இருளின் மைந்தர்கள்-2003

    34.சாத்தான் வேட்டை-2003

    35.கபால முத்திரை& சதுப்பில் ஒரு சதிகார கும்பல்(இருபாக தொடர்)-2004

    36. சிவப்பாய் ஒரு சிலுவை-2004

    37.இரத்த ஒப்பந்தம், தனியாத தணல் & காலன் தீர்த்த கணக்கு(3பாக தொடர்)-2005

    38.கானகக் கோட்டை-2006

    39.பனிக்கடல் படலம்-2007

    40.மரணத்தின் முன்னோடி, காற்றில் கரைந்த கழுகு& எமனின் எல்லையில் (3பாக தொடர்)-2008

    41.சிவப்பாய் ஒரு சொப்பனம்-2013

    42.பூத வேட்டை-2013

    43.நிலவொளியில் ஒரு நரபலி(டெக்ஸ் முதல் கலர் இதழ்)-2013

    44.நீதியின் நிழலில்-தீபாவளிமலர்2013

    45.மெக்ஸிகோ பயணம்-தீபாவளிமலர்2013

    46.நில் கவனி சுடு-2014

    47.காவல் கழுகு-2014

    48.சட்டம் அறிந்திரா சமவெளி-2014

    49.வல்லவர்கள் வீழ்வதில்லை-2014

    50.ஒக்லஹோமா-தி லயன் 250-2015

    ReplyDelete
    Replies

    1. 51.முகமில்லா மரண தூதன்-தி லயன் 250-2015

      52.பிரம்மன் மறந்த பிரதேசம்-தி லயன் 250-2015

      53.டைனோசரின் பாதையில்...!-தீபாவளி வித் டெக்ஸ்-2015

      54.எமனின் வாசலில்...!-தீபாவளி வித் டெக்ஸ்-2015

      55.சட்டத்திற்கொரு சவக்குழி-2016

      56.திகில் நகரில் டெக்ஸ்-2016

      57.விதி போட்ட விடுகதை-2016

      58.தலையில்லாப் போராளி-2016

      59.டாக்டர் டெக்ஸ்-2016

      60.குற்றம் பார்க்கின்!-2016

      61.ஒரு கணவாயின் கதை-ஈரோட்டில் இத்தாலி இதழ்-2016

      62.துரோகத்திற்கு முகமில்லை-2016

      63.தற்செயலாய் ஒரு ஹீரோ-2016

      64.சர்வமும் நானே!-2016

      65.நீதிக்கு நிறமேது?-2016

      66.ஆவியின் ஆடுகளம்-2017

      67.அராஜகம் அன்லிமிடெட்-2017

      68.இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்-2017

      69.ஒரு வெறினின் தடத்தில்-2017

      70.கவரி மான்களின் கதை-2017

      71.கியூபா படலம்-லயன்300-2017

      72.கடற்குதிரையின் முத்திரை-2017

      73.ஒரு தலைவன் ஒரு சகாப்தம்-தீபாவளிமலர்-2017

      74.அழகாய் ஒரு அராஜகம்-தீபாவளிமலர்-2017

      75.ஒரு கணவாய் யுத்தம்-2018

      76.விரட்டும் விதி-2018

      77.வெண்பனியில் செங்குருதி-2018

      78.பாலைவனத்தில் புலனாய்வு-2018

      79.கடைசிப்பலி-2018

      80.நடமாடும் நரகம்-2018

      81.இரவுக்கழுகின் நிழலில்-2018

      82.காற்றுக்கு ஏது வேலி-2018

      83.மண்ணில் துயிலும் நட்சத்திரம்-2018

      84.புயலுக்கொரு பிரளயம்-டைனமைட் ஸ்பெசல்-2018

      85.தெற்கே ஒரு தங்கத்தேட்டை-டைனமைட் ஸ்பெசல்-2018

      86.காதலும் கடந்து போகும்-2018

      87.புனிதப் பள்ளத்தாக்கு-2018

      88.காலனின் கானகம்-2018

      89.யார் அந்த மரண தூதன்?-2018

      90.சாத்தானின் சீடர்கள்-2019

      91.பாலைவனத்தில் ஒரு கப்பல்-2019

      92.பச்சோந்திப் பகைவன்-2019

      93.வெளிச்சத்துக்கு வந்த நிழல்-2019

      94.சிங்கத்தின் சிறுவயதில்-2019

      95.நட்புக்கு நாட்களேது-2019

      96.தகிக்கும் நியூ மெக்சிகோ-2019

      97.ஒரு ரெளத்திர ரேஞ்சர்-2019

      98.புதைந்து போன புதையல்-2019

      99.சர்க்கஸ் சாகசம்-தீபாவளி மலர்-2019

      100.சூது கொல்லும்-2019

      101.ரெளத்திரம் மற-2019

      102.ஒரு துளி துரோகம்-2020

      103.இருளோடு யுத்தம்-2020



      Delete
    2. குறிப்பு:- நண்பர்களே @ என்னிடம் இருந்த புத்தகங்களை கொண்டு இந்த "100+++"-கேக் தாயார் பண்ணி இருக்கேன். ஏதாவது விட்டு போய் இருந்தால் தெரிவிக்கவும்.

      Delete
    3. // 100.சூது கொல்லும்-2019 //

      நன்றி.

      Delete
    4. அடடே..
      100ஆவது இதழ் சத்தமில்லாமல் சாதாரண இதழாக வந்துவிட்டதே..!
      முன்பே தெரிந்திருந்தால் ஒரு ஆப்பாட்டம், ஒரு எழூச்சி, ஒரு போராட்டம்னு போட்டு நூறாவது இதழை சிறப்பிதழாக வாங்கியிருக்கலாமே..!?

      போண்டா போச்சே..!!

      Delete
    5. ரம்மியின் ஒரு ஸ்பெஷல் பாயாசத்தை வேற மிஸ் பண்ணியாச்சு :-)

      Delete
    6. // 100ஆவது இதழ் சத்தமில்லாமல் சாதாரண இதழாக வந்துவிட்டதே.//
      அதானே,இதுக்கு ஏதாவது பரிகாரம் பண்ணனுமே........

      Delete
    7. ஊய்ய்ய்!!!
      முதல் 50 டெக்ஸ் கதைகள் வெளியாக 30 வருடங்கள்!

      ஆனால், அடுத்த 50 கதைகள் நான்கே வருடங்களில் வெளியாகியிருக்கிறது!!!!
      டெக்ஸுக்கு தமிழ்நாட்டிலும், டெக்ஸால் நமக்கும் - பொற்காலம்!!!!

      Delete
    8. KOK @ //போண்டா போச்சே..!!//

      -ஹி...ஹி..! கடந்த சில நவம்பர்களில் என் வாய்னால சில பல வேண்டாத விவாதங்கள் வந்து போச். சரி இம்முறை அதை தவிர்ப்பமேனு அக்டோபர் 31ம் தேதில குளிர் உறக்கம் போய்விட்டேன். சனவரில முழிச்சி டெக்ஸ் கதைகள் எண்ணி பார்த்தா 100ஆல்ரெடி தாண்டிட்டது தெரிய வந்தது. இதே போல "முட்டை" போண்டா போச்சேனு ஆகிட்டது எனக்கும். 100வது கதைக்கு சிறப்பிதழ்கள் வாய்ப்பை நினைவு படுத்த முடியாத நிலைக்கு நண்பர்களிடம் சன்னமான சாரியை தெரிவித்து கொள்கிறேன்.

      Delete
    9. ///,இதுக்கு ஏதாவது பரிகாரம் பண்ணனுமே........///---எடிட்டர் சார் மனசு வெச்சா போதும். அவருடைய பிறந்தநாள் பரிசாக அந்த அறிவிப்பு இருந்தா ஐசிங் ஆன் த கேக் தான்!

      Delete
    10. ஈவி@ ///டெக்ஸுக்கு தமிழ்நாட்டிலும், டெக்ஸால் நமக்கும் - பொற்காலம்!!!!///---உண்மை!

      ஏப்பா பாயாச பார்டி கேட்டுச்சா...சாச்சா..சா!!!

      Delete
    11. @STV

      டெக்ஸ் 100 கதையை தாண்டியாச்சா? .சத்தியமாக நினைச்சு கூட பார்க்கவில்லை.
      கொஞ்சம் முன்கூட்டியே லிஸ்டை லீக் பண்ணியிருந்தால்,விழாவை சிறப்பித்திருக்கலாம்.!

      Delete
    12. GP@ ஆம், என்னாலும் நம்ப முடியவில்லை. இந்த "கரடி"ன் உறக்கம் தான் முன்கூட்டியே லிஸ்டை லீக் பண்ண முடியாமைக்கு காரணம். எண்ணம் 90தான் வந்து இருக்கும்னு கொஞ்சம் அசால்டாக இருந்துட்டேன். வடை போச்!

      Delete
    13. @ சேலம் டெக்ஸ் விஜய் ராகவன் ஜி....!!!

      என்ன ஒரு அபாரமான உழைப்பு.


      டெக்ஸ் வில்லனர் கதைகள் நூறு இதழ்களை கடந்துவிட்ட தகவல் ஆச்சர்யப்படுத்துகிறது.
      ஒரு ""குண்டு "" சிறப்பிதழுக்கான வாய்ப்பு தவறிவிட்டது.

      Delete
    14. இந்த பட்டியலுக்கும் நான் போட்டுள்ள பட்டியலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளதே......
      சில இதழ்கள் விடுபட்டு விட்டன போலும்,அடடே........
      மறுபதிப்புகள் எதையும் இந்த பட்டியலில் இணைக்கவில்லையே???
      நான் இணைத்துள்ளேன்......
      குண்டு புக்கில் வந்த இரண்டு மற்றும் மூன்று கதைகள் கொண்ட தொகுப்பை ஒரே வெளியீடாக பதிவு செய்துள்ளேன்.......
      அதேபோல் 2000 த்திற்கு முன்வந்த 10/- ரூபாய் இதழ்களை இரண்டு மற்றும் மூன்று பாக இதழ்களை தனித் தனியாக பதிவு செய்துள்ளேன்....
      இந்த பட்டியலில் ஒரே இணைப்பாக உள்ளது.......

      திரும்பவும் சரிபார்க்கனும் போல..........

      Delete
    15. ரவி@ இந்த பட்டியல் டெக்ஸ் கதைகள் எத்தனை வந்துள்ளது என்பது பற்றியது.
      மறுபதிப்புகள் இதில் கணக்கில் வராது.
      எத்தனை முறை ஒரு கதை மறுபதிப்பானாலும் ஒரு கதை என்ற கணக்கில் மட்டுமே நாம் எடுத்து கொள்ள முடியும்.

      எத்தனை இதழ்கள் வந்துள்ளது என்ற பட்டியலில் மறுபதிப்புகளை இணைக்கலாம்.

      இதழ்கள் எண்ணிக்கை கணக்கில் ஒரே கதை 3இதழ்களில் தொடராக வந்தால் அப்போது 3இதழ்கள் என எடுத்து கொள்ளலாம். ஒரே புக்கில் (தீபாளிமலர் போல) 2அல்லது 3கதைகள் வந்தாலும் அதை ஒரே இதழ் எண்ணிக்கையில் வைக்கலாம்.

      இந்த பட்டியலில் ஏதாவது கதைகள் விடுபட்டு இருந்தால் நிச்சயமாக இணைத்துவிடலாம். ஏதாவது கதை விட்டுப் போய் இருந்தால் தெரிவிக்கவும், இணைத்து விடலாம்.

      Delete
    16. 10ரூபாய் இதழ்களில் தொடராக சில கதைகள் வந்து இருப்பவைகளில், 3பாகமாக அல்லது 2பாகமாக வந்து இருந்தாலும் அவைகள் ஒரே கதையின் நீட்சிகள். எனவே ஒரே கதைனு கணக்கில் வைத்து உள்ளேன். இரத்தப்படலம் மற்றும் மின்னும் மரணம் முறையே 18 மற்றும் 11பாகங்கள் இருந்தாலும் ஒரு கதை என்று நாம் எடுத்து கொள்வதை இங்கும் பாலோ செய்து உள்ளேன்.

      Delete
    17. லயன் 250- ஒரே இதழ்! இது இதழ் கணக்கில்=1. கதைகள் கணக்கில் 3தனித்தனி கதைகள் உள்ளன. எனவே கதைகள் எண்ணிக்கையில் 3 இணைத்து உள்ளேன்.

      Delete
    18. 22. பாங்க் கொள்ளை, தனி இதழா.

      Delete
    19. தனி இதழ் அல்ல; லயன் வெளியீடு 133-மிஸ்டர் மகாராஜா- ல் இணைந்து வந்தது நண்பரே!

      Delete
    20. இப்பவும் ஒண்ணும் கெட்டு போகல. முன்தேதியிட்டு வெளியீடு எண். 100 ன்னு மெபிஸ்டோ யுமா கதைகளை கலர்ல்ல மினி டெக்ஸ் சைஸில் ஹார்ட் பவுண்டில் பிரீமியம் விலையில் லிமிடட் பிரிண்ட்டாக போட்டுடலாம். ₹800 பக்கங்கள் வரும் ₹1000விலையில் போட்டு தாக்கிடலாம். மனமிருந்தால் மார்க்கமுண்டு. மனது வைத்து டெக்ஸ் வெறியர்களாகிய நம்மீது நம்பிக்கை வைத்து போடுவாரா நமது ஆசிரியர். போடுங்க தலைவரே பிளாக் பஸ்டர் ஹிட் ஆக்கிடலாம் நம்ம தல டெக்ஸை

      Delete
    21. // இந்த பட்டியலில் ஏதாவது கதைகள் விடுபட்டு இருந்தால் நிச்சயமாக இணைத்துவிடலாம்.//
      பார்த்துடுவோம்.......

      Delete
  39. எடிட்டருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  40. ஹைய்யா புதிய பதிவு........

    ReplyDelete
  41. ஆசிரியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..........
    என்றும் எப்போதும் வளமுடனும்,நலமுடனும் வாழ வாழ்த்துகள்........

    ReplyDelete
  42. Many more happy returns of the day editor sir.Wish you happy birthday sir 💐💐🌱🌹🌹🥀🥀🍡🍡🍧🍧🍨🍨🍨🥣🥣🍩🍩🥮🥮🥮🎂🎂🧁🧁🧁🥤🥤🍿🍿🍪🍪🍪🍩🍫🍬🍬🍭🍦🍔🍔🥘🥘🥙🌮🍕🍟

    ReplyDelete
  43. ஆசிரியருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்✨✨✨✨🎂🎂🎂🎂🎂

    ReplyDelete
  44. சார் உங்கள் பிறந்த நாள் அன்று ஈரோடு புத்தக விழா அறிவிப்பு வரும் என்று எதிர் பார்த்து இருந்தேன். எப்போது சார் முன்பதிவு அறிவிப்பு வரும்?

    ReplyDelete
  45. ஒரு கழுதையின் வயது 30 ஆண்டுகள் என்று தோராயமாக வைத்து கொண்டால் எனக்கு இப்போது 1 ⅓ கழுதை வயது நடக்கிறது

    ReplyDelete
  46. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🎊.. ஆசிரியரே

    ReplyDelete
  47. ////அறிவுச்செறிவூட்டும் இந்த ஆராய்ச்சியில் நீங்களும் பங்கெடுத்து அவரவரது அகவைக் comparison-களை இங்கே பகிர்ந்திடலாமே ?!///

    மன்னிச்சுக்கோங்க எடிட்டர் சார்.. எனக்குத் துளியும் சம்மந்தமில்லாத பிராணியின் அகவையோடு ஒப்பிட மனம் வரவில்லை!
    ஆகவே,
    பூனைகளின் சராசரி ஆயுள் காலம் 15 ஆண்டுகள்! அந்த வகையில் நான் இன்னும் 3 வயதைக்கூட தொடாத பாலகப் புஸிகேட்டாகவே இருக்கிறேன் என்பதைச் சொல்லிக் கொண்டு... வாண்டு ஸ்பெஷலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. EV எப்போதும் போல இப்போதும் அட்டகாசமான பதில்.

      Delete
    2. ஹிஹி.. ம்ம்மியாவ்!!

      Delete
    3. இங்கே கூட 3வயசு ஆகாத குழந்தை பூனைதான்! (ஆனாக்கா நரைச்சி போச்சினு ஒரு வருசமா மீசையை தியாகம் பண்ணிட்டேன், அதை பற்றி பேசப்படாது)

      Delete
    4. https://www.oldest.org/animals/cats-ever/

      இக்கட தேக்கோ !!

      Delete
    5. தேக்குடு'ங்க எடிட்டர் சார்!! என் வயதைக் குறைத்துக் காட்டுவதில் தான் உங்களுக்கு எம்புட்டு அக்கறை!!!

      வாழ்க பர்த்டே பேபீஸ்!!

      Delete
  48. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் saarq

    ReplyDelete
  49. எடிட்டருக்கு பிறந்தநாள் பரிசாக நமது நண்பர் புதுவை செந்தில் வரைந்துள்ள பென்சில் ட்ராயிங்கை பார்க்க "இங்கே கிளிக்குங்க பாஸு!"

    அபாரம் செந்தில்!! கலக்கறீங்க!!

    எடிட்டர் சார்.. உங்களை மாதிரியே இல்லை.. அம்புட்டு அழகு!! :)

    ReplyDelete
    Replies
    1. இந்தப் படத்தில் குறிப்பிடத்தகுந்த அம்சங்களில் ஒன்று - எடிட்டரின் புன்னகை!! அதை அப்படியே சித்திரமாய் வடித்திருப்பது அட்டகாசம்!!

      அ..அப்புறம்... அந்த விழிகளை வரைந்து முடிப்பதற்குள் உங்களுக்கு குளிர்-ஜுரம் கண்டிருக்கணுமே செந்தில்?!!

      Delete
    2. வாவ்..!

      அப்படியே போட்டோ காப்பி மாதிரி இருக்கு.. அபாரமான திறமை..!!

      வாழ்த்துகள் புதுவை செந்தில் அவர்களே..!!

      Delete
    3. அருமை... வாழ்த்துகள் புதுவை செந்தில்..!!!

      Delete
    4. சூப்பர்... வாழ்த்துகள் நண்பரே செந்தில்!

      Delete
    5. செம!


      காமிக்ஸ் சம்பந்தமா எவ்வளவு
      " முடி"வு இத்தனை வருஷத்துல எடுத்து இருக்காருன்னு இந்த படம் துல்லியமா காமிக்குது:-)

      Delete
    6. செனா அனா.. ஹிஹிஹி.. குறும்பு!! :)))

      Delete
    7. அட்டகாசமான தத்ரூபமான ஓவியம் அசத்திடீங்க செந்தில்.

      Delete
    8. ரொம்பவே தத்ரூபமாக வரைந்துள்ளீர்கள்..!

      பாராட்டுகள் செந்தில் சார்.

      Delete
    9. @ செனா அனா

      ஒருவேளை எடிட்டர் காமிக்ஸ் சம்மந்தமா எந்த முடிவுளையுமே எடுக்காம இருந்திருந்தா " இப்படித்தான் " இருந்திருக்குமோ?!!

      (மன்னிச்சூ செந்தில்!)

      Delete
    10. ஈவி@ ஹா...ஹா..ஹா...செம!!!

      மாப்ள கணக்கா இருக்காரு...:-)

      Delete
    11. ரைட்டு! செயலரும் பொருளரும் இன்னிக்கி கும்மி அடிக்காம விட மாட்டாங்க போல...!!! எடிட்டர் சார் உசார்!

      Delete
    12. 1986 -ல் நடந்த கூத்து இது !! பாஸ்போர்ட்டில் இருந்த போட்டோவில் மண்டை நிறைய கேசம் (மெய்யாலுமே !!) அலைமோத - இரண்டாவது ஐரோப்பிய பயணத்துக்கு முன்பாய் கொஞ்சம் ஒட்டவே முடி வெட்டியிருந்தேன் !! பிரான்சிலிருந்து இங்கிலாந்துக்கு கப்பலில் பயணம் & கப்பலுக்குள்ளேயே இங்கிலாந்தின் குடியேற்ற இலாக்காவின் அதிகாரிகள் இருப்பர் - visa on arrival வழங்கிட !! (அந்நாட்களில் commonwealth தேசத்துப் பிரஜைகளுக்கு இங்கிலாந்து போக இங்கேயே விசா எடுக்கும் அவசியங்கள் நஹி !) பாஸ்போர்டையும், என்னையும் முறைத்து முறைத்துப் பார்க்கிறார் மனுஷன் - ரெண்டும் ஒரே ஆளா - இல்லியா ? என்ற சந்தேகத்தில் ! அப்புறமாய் அந்த டிரேட்மார்க் விழிகளை பார்த்தோ என்னவோ சமாதானமாகி 'சப்பக்' என்று விசாவைப் போட்டுத் தந்தார் !!

      Delete
    13. சார்.. உங்க பழைய போட்டோக்களை எல்லாம் ஒரு பதிவாப் போட்டீங்கன்னா நாங்களும் அந்த கப்பல் அதிகாரி மாதிரியே முறைச்சு முறைச்சு பார்ப்போமில்ல?

      தவிர, 'கெக்கபிக்கே'ன்னு சிரிச்சுவச்சா உடம்புக்கும் நல்லது பாருங்க?

      Delete
    14. புதுவை செந்தில், அருமையாக படம் வரைந்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

      Delete
    15. This comment has been removed by the author.

      Delete
    16. விஜயன் சார், எனக்கும் ஜப்பான் போன போது இதே அனுபவம். பாஸ்போர்ட்டில் இருந்த படம் காலேஜ் படிக்கும் போது எடுக்கப்பட்ட படம் ஆனால் விசாவில் இருந்தது லேட்டஸ்ட் படம். இரண்டிற்கும் 12 வித்தியாசங்கள் உண்டு.‌ என்னை ஓரமாக உக்கார வைத்து விட்டு, ஒரு பெரிய ஆபீசர் எனது பாஸ்போர்ட்டில் உள்ள படத்தை எனது முகத்துக்கு பக்கத்தில் வைத்து பலமுறை முறைத்து எனது பெரியகண்களின் ஒற்றுமையை பார்த்து டோக்கியோவிற்குள் நுழைய அனுமதித்தார் :-)

      Delete
    17. ஓவியம் தத்துரூபமாக உள்ளது.

      புதுவை செந்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

      தளத்திற்கு காட்சிப்படுத்திய ஈரோட்டு பூனையாருக்கு நன்றி.

      புதுவை செந்தில் அவர்களே நீங்கள் ஏன் அழகான இயற்கை காட்சிகளை வரையக்கூடாது.ஆசிரியரை ஓவியமாக வரைவது மிக சவாலானது என்பதால் இதை குறிப்பிட வேண்டி உள்ளது.தத்ரூபமாக இதுபோல் பென்சில் ஓவியங்களை தீட்டுவதில் ஐரோப்பாவில் பலரும் உண்டு.ஒரு காபி சாப்பிடும் ,நேரத்தில் குறைந்த கட்டணத்தில் ஓர் சுற்றுலா குழுவினரையே நிஜமாக வரைந்து விடுவர்.

      பிறந்தநாள் காணும் இனிய ஆசிரியருக்கு உங்கள் அன்பை வெளிப்படுத்திய விதம் சிறப்பு.

      Delete
    18. ///மாப்ள கணக்கா இருக்காரு...:////

      மாப்ள நல்லா கணக்காதான் இருக்காரு.. ஆனா அவரு போட்ருக்கும் விக்கு - என்னுது! :D

      Delete


    19. ....... எனக்கும் ஜப்பான் போன போது இதே அனுபவம்.'''


      ///////////////////////////////////////////////////////////////////////////////////////////
      என்னுடைய ஐடி வெரிபிகேஷன் அனுபவமும் ..

      /////////////////////////////////////////////////////////////////////////////////////
      அதற்கு முன்

      ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்தபின் ஒருநாளையும் நேரமும் குறிப்பிட்டு மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வர சொல்வார்கள்
      அங்கு நான்கு கவுண்டர்கள் உண்டு ..
      முதல் மூன்று கவுண்டர்களில் அவர்கள் கேட்கும் ஆவணங்களை கொடுத்தபின் /அல்லது சரிபார்த்தபின் நான்காவது கவுண்டரில் மண்டல பாஸ்போர்ட் துணை அதிகாரி ஏன் வெளிநாடு செல்ல விரும்புகிறீர்கள் போன்ற கேள்விகளை கேட்டு முடிப்பார் ..பின் சுமார் ஐந்நூறு ரூபாய் கட்டினால் (தனியார் கம்பெனி பெண்கள் இதற்கென உண்டு)பாஸ்போர்ட் அட்டை ஒரு வாரத்தில் வந்து சேரும் ..அட்டை மட்டும் ..அதாவது வெறும் கவர் மட்டும் ..
      மறுநாள் போலிஸ் வெரிபிகேஷன் முடிந்தால் மொத்தம் பத்து நாட்களுக்குள் பாஸ்போர்ட் வந்து விடும்
      /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      அனுபவம்

      கவுண்டரில் இருந்த பெரியவரின் தீர்க்கமான கண்கள் என் மீது அழுத்தமாக பதிந்து இருந்தது...

      ‘’என் உயரத்தை பாருங்கள் ‘’ என்றேன்.

      ஆனா வயசு ?? என்றார் ..

      லேசான அலுப்புடன் என்னுடைய ஐடியை நீட்டினேன்

      ஆபிஸ் தரைவழி தொலை பேசி எண்ணை என் கட்டைவிரல் இயல்பாக மறைத்து இருந்தது...


      பெரியவர் என் போட்டோவுக்கு கீழ் இருந்த பிறந்தநாளை சரி பார்க்க குனிந்தபோது பின்பக்கம் திரும்பி பார்த்தேன் ..

      வரிசையில் எனக்கு பின்புறம் நின்று இருந்த மூன்று கல்லூரி மாணவர்கள் தவிர எல்லோரும் நடுத்தர வயதுதான் ..அவர்கள் மூவரும் முகம் மறைக்கும் அளவு சன்கிளாசஸ் போட்டு இருந்தது ஆச்சர்யம்தான்
      .

      எழுபது வயது பெரியவர் ஒருவரும் தலையில் துண்டு போட்டு வரிசையில் நின்று இருந்தார்..துண்டு முகத்தின் முக்கால்வாசியை மறைத்து இருந்தது ..


      முன்புறம் திரும்பினேன் ...கவுண்டர் பெரிசு இன்னமும் தேதியை பார்த்து கொண்டிருப்பது ஒருபுறம் எரிச்சல் ஏற்படுத்தினாலும் மறுபுறம் அவரது நல்ல மனதின் முயற்சி குறித்து உள்ளுக்குள் பாராட்டாமல் இருக்க முடியவில்லை




      பின்னால் நின்று கொண்டு இருந்தவர்களின் உச்ச கொட்டல்கள் பெரிசின் காதுகளை எட்டி இருக்க வேண்டும்


      வேண்டா வெறுப்பாய் டிக்கட்டை கிழித்து கொடுக்க ‘’ அந்த மலையாள பட ‘’ பகல் காட்சிக்கான டிக்கட் கவுண்டரை விட்டு வெளியே வந்தேன் ..

      /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

      Delete
    20. செல்வம் அபிராமி @ கடைசி வரி டிவிஸ்ட் செம.

      Delete
    21. ஹிஹிஹி.. செனாஅனா...
      எதிர்பார்க்கல.. அப்படியொரு ட்விஸ்டை எதிர்பார்கல.. செம தைரியம்தான் உங்களுக்கு!! :)

      (படம் நல்லாயிருந்துச்சுங்களா?)

      Delete
    22. ஓ.. அந்தகாலத்துல பர்த் டேட்டையெல்லாம் செக் பண்ணித்தான் உள்ளே விட்டாங்களா..!?

      எங்க காலத்துல பிரசினையே இல்லை.! லுங்கி கட்டியிருந்தாப் போதும்.! எந்த வயசுல லுங்கி கட்டினேன்னு கேக்கப்படாது..!?

      Delete
    23. லுங்கியை தோளில் போட்டு டிக்கெட் வாங்கிய ஆள் யாராவது உண்டா? :-)

      Delete
  50. 98வது. சூப்பர். த த்துரூபமாக உள்ளது. பாராட்டுக்கள் செந்தில் சார்.

    ReplyDelete
  51. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆசிரியரே

    ReplyDelete
  52. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், விஜயன் சார்!

    ReplyDelete
  53. கார்ட்டூன் கலெக்க்ஷன்ஸ் அறிவித்தால் சிறுவர்களுக்கு வாங்கி அளிக்க இயலும்!

    ReplyDelete
  54. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஆசிரியரே...

    ReplyDelete
  55. இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.
    வாழிய பல்லாண்டு..
    வளமோடும்..
    நலமோடும்..
    காமிக்ஸோடும்..!
    💐💐💐💐💐💐💐
    💐💐💐💐💐💐💐
    🎂🎂🎂🎂🎂🎂🎂
    🎂🎂🎂🎂🎂🎂🎂
    💐💐💐💐💐💐💐
    💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  56. அன்பார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றிகள் all !!!

    ReplyDelete
  57. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஒசார்

    ReplyDelete
  58. பிறந்தநாள் ஸ்பெஷல் என்ன சார்?

    ReplyDelete
    Replies
    1. என்ன பாயாசம் என கேளுங்க :-)

      Delete
  59. இனிய Birthday வாழ்த்துகள் Dear எடி ...

    💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  60. லயன் என்னும் காமிக்ஸ் ராஜாவை எங்களுக்குத தந்த தங்களுக்கு பணிவான பிறந்த நாள் வாழ்த்துக்கள். ..💐💐💐🙏🙏🙏🙏💐💐💐💐

    ReplyDelete
  61. எழு கழுதை' என்பது 'ஏழு கழுதை' என்று மருவியதாக என்னருமைத் தமிழாசிரியர் மங்கலமன்னன் விளக்கியிருக்கிறார். "அய்யா, திட்டுறதோ திட்டுறீங்க பொருள் சொல்லிட்டுத் திட்டுங்க"னு கேட்டுக்கிட்டதுக்கு அவர் விளக்கம் கொடுத்துப் பிறகு திட்டினாரு. இல்லே திட்டின பிறகு விளக்கம் கொடுத்தாரு. ஏதோ ஒண்ணு.

    அதாவது சுமை ஏற்ற ஏற்ற கழுதை எழுந்து நடக்குமாம் ("கழுதை எப்ப உக்காந்துச்சு ஐயா" என்று கேட்டதற்கும் சூடாகப் பதில் கிடைத்தது). குட்டிக்கழுதை என்றால் சுமை ஏற்றியதும் உட்கார்ந்து விடுமாம். பொதி சுமக்கும் நிலை வந்த கழுதை மட்டுமே எழுந்து (அல்லது உட்காராமல்) நடக்குமாம்.

    குடும்பச்சுமைக்குத் தயாரான வயதைக்குறிப்பிட அப்படிச் சொல்லியிருக்கலாம்.''

    ---அப்பாதுரை ---

    ReplyDelete
    Replies
    1. ஓ.. எழுகழுதையா?!!!
      பிறந்தநாளும் அதுவுமா எடிட்டர் பலமணிநேரம் கஷ்டப்பட்டுப் பண்ணிய ஆராய்ச்சியெல்லாம் வேஸ்ட்டா பூடுச்சே.. ஹோ ஹோ ஹோ!! :)))

      Delete
  62. நில் கவனி வேட்டையாடு :

    அடேங்கப்பா.. இது என்ன பொம்மை புத்தகமா இல்லே ஹாலிவுட் திரைப்படமா.!?

    இதென்ன கையால் வரைந்த ட்ராயிங்கா.. இல்லே கேனான் காமிராவில் எடுத்த புகைப்படமா..!?

    செம்ம..

    ReplyDelete
  63. ஏனோ ஜெராமையா புத்தகத்தை மீண்டும் படிக்க தோன்றுகிறது....


    ReplyDelete
    Replies
    1. ஏன்.. எதிர்காலம் எனதேவை முழுசாப் படிச்சதனலேயா..!?

      Delete
    2. முழுசா படிச்சாக்கூட பிரச்சினை இல்லை.. முப்பதுவாட்டி படிச்சா இப்படித்தான் தோணும்!

      Delete
    3. முப்பதுவாட்டியா..!?

      அந்த முதியோர் தோழி கதையையா.!?

      வாய்ப்பே கிடையாதுன்னேன்..!!

      Delete
    4. கண்ணா @ புத்தகத்தை நீங்கள் சாப்பிட்டு ஏப்பம் விட்டதாக ஊருக்குள்ள பேசிக்கிறாங்க? :-)

      Delete
    5. //கண்ணா @ புத்தகத்தை நீங்கள் சாப்பிட்டு ஏப்பம் விட்டதாக ஊருக்குள்ள பேசிக்கிறாங்க? :-)//

      ஒரு பேச்சுக்கு எடிட்டர் நாலு கால் பிராணி பத்தி சொன்னாரு அப்டிங்கறதுக்காக ...??? :-)

      Delete
  64. அன்பு நண்பர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  65. எடிட்டர் சார்

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  66. விஜயன் சார் iii
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  67. உங்களுக்கு பிறந்த நாள் - என்றாலும் மாட ஸ்டிபிளை ஸிதான் ஞாபகம் வருகிறார். ஏன் சார் அப்படி ?i

    ReplyDelete
  68. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  69. Dear Editor
    Belated Birthday wishes!
    Regards
    Arvind

    ReplyDelete
  70. என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விஜயன் சார்

    ReplyDelete
  71. நன்றிகள் நண்பர்களே...!

    ReplyDelete
  72. @ ALL : ஊரடங்கு அமலிலிருக்கவுள்ள ஞாயிறை புதுப் பதிவோடும், புதுக் கச்சேரிகளோடும் செலவிட்டால் என்ன guys ? ஞாயிறு காலை ஏழு மணிக்கு டாணென்று புதுப்பதிவு காத்திருக்கும் !

    ReplyDelete
    Replies
    1. சனிக்கிழமை மாலை புது பதிவு போட்டால் ஞாயிற்றுக்கிழமை உ.பவை ஊரடங்குடன் கொண்டாட நன்றாக இருக்கும் :-)

      Delete
    2. பரணி நான் பேச நினைப்பதெல்லாம் நீங்கள் பேசிவிட்டர்களே. க க க போ

      Delete
    3. சார்..

      முன்னேல்லாம் வெள்ளந்தி மாதிரி இருந்த நீங்க இப்ப ரொம்பவே வெவரமாகிட்டீங்க! சனிக்கிழமை நைட் பதிவு போட்டா விடியறதுக்குள்ள 300க்கு கொண்டுவந்து விட்டுடுவோம்னு.. புத்திசாலித்தனமா காலை 7 மணிக்கு பதிவுன்னு எழுதறீங்க (அதுவும் டாண்னு பதிவாம்!!)

      முடியாத்! வீ வான்ட் பதிவுக்கிழமை* பதிவு!

      (சனிக்கிழமையை 'பதிவுக்கிழமை'ன்னு மாத்திப் பல வாரங்களாச்சு)

      Delete
    4. எதற்கும் ஒரு உ.ப தயார் பண்ணி வெச்சுக்கோங்க.... ஞாயிறு மாலையில் போட தேவைப்பட்டாலும் படும்.

      அடுத்த மாத புத்தகங்கள் டீசரை இந்த வாரமாவது கண்ணில் காண்பிக்க முடியுமா சார்?

      Delete
    5. //
      சனிக்கிழமையை 'பதிவுக்கிழமை'ன்னு மாத்திப் பல வாரங்களாச்சு
      //


      தவறு.... சனிக்கிழமையை 'பதிவுக்கிழமை'ன்னு மாத்திப் பல மாதங்களாகி விட்டது :-)

      Delete
    6. @PfB

      'தளபதி'ல "மாதங்களும் வாரம் ஆகும்
      நானும் நீயும் கூடினால்..." -வரி ஞாபகத்துக்கு வருது! :)

      Delete
    7. விஜய் @ :-)

      நல்லாவே யோசிக்கிறீங்க.

      Delete
    8. அல்லது ரம்மிய கார்சனின் நண்பர் கதையான தலைவன் ஒரு சகாப்தத்தின் பாயாசத்தை சாரி விமர்சனத்தை ஞாயிற்றுக்கிழமை உ.ப ஆசிரியரிடம் சொல்லி போட சொல்லலாம் :-)

      Delete
    9. பதிவு கிழமைக்கு ஜே ஜே. எங்களை பொருத்த வரை சனி கிழமை அன்று தான் பதிவு. அது இரவானலும் சரி நள்ளிரவு ஆனாலும் சரி.

      Delete
  73. Dear Editor

    Came back just once for this message. Please avoid sending comic book couriers for three months. I hope our reader friends can understand and support in this emergent situation. I belong to a family of four generation of doctors and hence this request.

    It is time to practice delayed gratification sir - like getting 12 comics after 3 months together.

    ReplyDelete
    Replies
    1. Not for once Sir you can always come back. This is a valid point you are making. I'm also waiting for our EditoR's view on this.

      Delete
    2. Yes - logic is MORE COURIERS means putting MORE PEOPLE at HEALTH RISKS.

      I personally cancelled all toys and books ordered for vacation for kids !!!

      Delete
    3. இரண்டு நாட்களாக எனக்குள் இந்த எண்ணம் ஓடிக்கொண்டு இருந்தது ஆனால் எப்படி சொல்வது என தயங்கி கொண்டு இருந்தேன் ராகவன்.

      விஜயன் சார், இந்த மாத புத்தக வெளிஈட்டை ஒரு மாதத்திற்கு தற்காலிகமாக தள்ளி வைக்கலாம், அடுத்தமாதமும் சூழ்நிலை சரியாக விட்டால் அதற்கு அடுத்த மாதம் வெளியிடலாம்!

      ஆனால் நீங்கள் அந்த அந்த மாத புத்தகங்களை தயார் (அச்சுக்கு அனுப்பும் வேலையை தவிர) செய்வதை தள்ளி போடாதீர்கள் :-) புத்தகங்கள் வெளிஈட்டை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக இருந்தால் வாரம் இரண்டு பதிவுகளை எழுதுங்கள்!! நீங்க வழக்கம் போல் காமிக்ஸ் உடன் தொடர்பில் இருந்தால் உங்கள் நலத்திற்கு நலம் என்பதால் இந்த கோரிக்கைகள்!

      Delete
    4. I can understand your good intentions Comic Lover ; but whatever I have to say on a sensitive subject like this might get to be the subject of debate ! And at the moment there is quite a bit of stuff flying around all over the place regard this virus menace ! So I will prefer to take a call based on the Government's guidelines !

      Delete
    5. வாங்க காமிக் லவரே!!

      எடிட்டர் சார்.. இந்தவாரப் பதிவினை காமிக்லவர் சொன்னது குறித்த விவாதப் பொருளாக்கி நண்பர்களின் கருத்துகளைக் கேட்டு ஒரு முடிவுக்கு வரலாம்!

      காமிக்ஸ் இல்லாமல் மூன்று மாதங்கள் என்பதை தற்போதைய காலகட்டத்தில் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை! ஆனால் எல்லோருக்கும் நன்மை பயக்கும் முடிவை எடுக்கவேண்டிய தருணமிது என்பதையும் உணரமுடிகிறது!

      உங்களது கருத்துகளுக்காகவும் தடக்தடக் இதயத்தோடு காத்திருப்போம்...

      Delete
    6. அடடே! நான் கமெண்ட்டை டைப்புவதற்குள் எடிட்டர் பதில் சொல்லிட்டாரா?!!

      Delete
  74. இந்த பதிவின் தலைப்பை முதலில் படித்த போது "ஆர்ச்சியின் ஒரு காலை" என படித்து விட்டேன், என்னடா இது ஆர்ச்சியின் காலுக்கு என்ன ஆச்சு என பதிவுக்குள் பரபரவென புகுந்தேன்!

    ReplyDelete
    Replies
    1. நான் இந்தப் பதிவின் தலைப்பைப் படித்தபோது 'ஆருசியாவுடன் ஒரு காலை' என்று படித்துத் தொலைத்துவிட்டேன்! எப்படி ஷாக் ஆகியிருப்பேன்னு கொஞ்சம் யோசுச்சுப் பாருங்க!!

      Delete
    2. ஆன்ட்ரியாவோடு ன்னு படிச்சது நான் மட்டும்தானா..!?

      Delete
  75. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நட்பூக்களே!

    ReplyDelete