Powered By Blogger

Sunday, February 05, 2023

Part 2

 நண்பர்களே,

வணக்கம். ஆங்குலெம் புராணத்தின் இறுதி பாகத்தை ஓவர் வள வள இன்றி முடிக்க முயற்சிப்போமா ? In some ways அது சுலபமே - becos விழா துவங்கிய நாட்களின் முழுமையிலுமே, நமது படைப்பாளிகளுடனான சந்திப்புகளில், பிரெஞ்சு வாசக உத்வேகங்களை தரிசிக்கும் முனைப்பினில் தான்  லயித்துக் கிடந்தேன் ! So "மாங்காய் பறிச்சேனா ? தேங்காய் உடைச்சேனா ?" என்று கதை விட்டுத் திரிய இக்கட வாய்ப்புகளும்,அவசியங்களும் சொற்பம் ! So நேரம் பிரீமியத்தில் உள்ள நண்பர்களுக்கு இங்கே பெருசாய் உதைக்காதென்ற நம்பிக்கையுடன் here goes :

நமக்கான பூத்தில் நமது "லயன்" சூப்பர் ஷார்ப்பாக என்னைப் பார்த்துப் புன்னகைத்து நிற்க எதிர்வரிசை பூத்களில் யாருமே வந்திருக்கவில்லை ! ஒவ்வொரு பதிப்பகத்தின் பெயர் கொண்ட பதாகைகள் மட்டும் கண்ணில் பட்டன & ஒவ்வொரு ஸ்டாலின் முன்னேயும் புத்தக பார்சல்கள் உடைக்கப்படாது கிடந்தன ! சரி, அவர்கள் வருவதற்குள் இங்கே 10 பேர் கொண்ட எங்களது "பிரமுக"அணியினில் இருக்கக்கூடிய மீதப் பேரை தெரிந்து கொள்ள நினைத்தேன் ! And ஒவ்வொருவரையும் தெரிந்து கொள்ளும் சமயம் ஒரு ஆச்சர்யமே மிஞ்சியது - becos நம்மையும், இன்னும் ஒரேயொரு பதிப்பகத்தையும் தவிர்த்த பாக்கி எட்டுப் பேருமே கிராபிக் நாவல் ஸ்பெஷலிஸ்ட்ஸ் ; அல்லது manga ஸ்பெஷலிஸ்ட்ஸ் ! அதிலும் "கி.நா." என்றால் நாம் பரிச்சயப்பட்டிருக்கும் ரகத்திலான dark கதைகள் ; அழுகாச்சி காவியங்கள் மாத்திரமே என்றில்லை ! தினுசு தினுசாய் ஜானர்கள் உள்ளன & நானும் , நம்ம கோவைக் கவிஞரும் படம் வரைந்தால் எவ்விதமிருக்குமோ - அத்தகைய சித்திரங்களுடனுமே ஜெயித்து வருகிறார்கள் ! In fact இந்தாண்டின் ஆங்குலெம் பரிசு வென்றுள்ள ஆல்பம் கூட இது போலான drawings சகிதமே இருந்தது ! And நாம் பழகியிருக்கும் கதை பாணிகள் ; யதார்த்த நிகழ்வுகள் ; நிஜ சம்பவ விவரிப்புகள் என்பது போலான வரையறைகளுக்குள் அடைபட்டுக் கொள்ளாமல், சிக்கிய டாபிக்கிலெல்லாம் கி.நா.க்களை போட்டுத் தாக்குகிறார்கள் ! இங்கே ஒரு இடைச்செருகலாய் ஒரு தகவல் - நாம் வாய் பிளக்க !! 

2019-ல் கேப்டன் டைகரின் புதிய தொடரொன்று துவங்கியுள்ளதென்றும், அதன் முதல் ஆல்பம் புதியதொரு படைப்பாளி டீமின் கைவண்ணத்தில் வெளி வந்திருப்பதாகவும் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம் ! இன்னும் சொல்லப் போனால் அந்த ஆல்பத்தின் இறுதிப் பாகம் மறு வருஷமே ரெடியாகி விடுமென்ற நம்பிக்கையில் அதனை நமது அட்டவணையில் அறிவித்து விட்டு, பின்னர் தாமதமாகின்றதென்று கேள்விப்பட்டு ஜகா வாங்க நேர்ந்து நயமாய் பல்ப் வாங்கியிருக்கவும் செய்திருந்தேன் ! இன்று வரைக்கும் அந்த இரண்டாம் பாகம் உருவான பாடில்லை ! "ஏனோ - இத்தனை தாமதம் ?" என்று நடு நடுவே வினவிடும் போதெல்லாம், அந்த புது கதாசிரியர் வேறு ஏதோவொரு முக்கிய புராஜெக்டில் மூழ்கிக் கிடைப்பதாய்த் தகவல் சொன்னார்கள் ! அது என்னது என்பதை போன வாரம் ஆங்குலெமில் தான் பார்த்தேன் -  தலை கிறுகிறுக்கச் செய்திடும் ஒரு புள்ளி விபரத்தோடு ! "முடிவில்லா ஒரு உலகம்" என்றதொரு தலைப்புடன் இந்த கேப்டன் டைகர் புது author உருவாக்கியுள்ள 190 பக்க நீள மெகா கிராபிக் நாவலானது உலகில் (Climate changes) பருவநிலைகளில் நிகழ்ந்து வரும் மாற்றங்களைப் பற்றிச் சொல்கிறது ! And நம்பினால் நம்புங்கள், இதனில் இது வரைக்கும் 7 லட்சம் பிரதிகள் பிரெஞ்சில் மாத்திரமே விற்றுள்ளனவாம் !! நம்மவர்கள் இந்த ஆல்பத்தைக் காட்டி, தகவலையும் சொல்லிய தருணத்தில் 'பெப்பே..பெப்பே.. என்று முழிக்க மட்டுமே முடிந்தது ! 

இது ஒருபக்கமெனில், இன்னொரு திசையில் MANGA எனும் அந்த கார்ட்டூன் பாணிகள் தெறிக்க விட்டுக்கொண்டுள்ளன - கிட்டத்தட்ட உலகின் சகல மூலை முடுக்குகளிலும் ! ஜப்பானிலும், கீழ்த்திசை தேசங்களிலும் துவங்கிய இந்த ரசனையானது இன்றைக்கு காட்டுத்தீயாய் ஐரோப்பாவை உலுக்கி எடுப்பது பற்றாதென்று, ஆர்ஜென்டினா, பிரேசில் என உலகின் ஏதேதோ கோடிகளைக் கூட விட்டு வைத்த பாடைக் காணோம் !! திரும்பும் திசையெல்லாம் MANGA MANIA ! சொல்லப் போனால் - "நாங்க மாங்கா ஊறுகாய்க்குத் தான் ரசிகர்கள் ; அந்த ஸ்டைல் காமிக்ஸுக்கு அல்ல !" என்று நான் சொன்ன போது என்னை பரிதாபமாய்ப் பார்க்காத குறை தான் ! ஓராண்டின் முழுமையிலும் பிரெஞ்சு மொழியினில் உருவாகிடும் டாப் காமிக்ஸ் படைப்புகளை பல்வேறு பிரிவுகளுக்குள் கொண்டு சென்று, பல கட்டத் தேர்வுகளுக்கு உட்படுத்தி, அதன் பின்னே TOP 10 ; அப்புறம் TOP 5 என்று shortlist செய்து ஆங்குலெம் திருவிழாவின் போது - ஸ்பெஷல் ஜூரிக்களைக் கொண்டு வெற்றி எந்தப் படைப்புக்கெனத் தீர்மானிப்பதுண்டு !  இந்தாண்டு ஒட்டு மொத்தமாய்க் வெவ்வேறு பிரிவுகளிலும், அத்தனை பரிசுகளையும் கொண்டு சென்றிருப்பன - கி.நா.க்களும், மங்காவும் தான் ! நாம் ரசிக்கும் க்ளாஸிக் ரகக் கதைகளை உருவாக்கும் சகல பதிப்பகங்களும், ஆளுக்கொரு குருவி ரொட்டியைக் கையில் பிடித்தபடிக்கே ஊர் திரும்பியுள்ளனர் !  

So ஒவ்வொருவரும் தத்தம் மார்க்கெட்களின் அனுபவங்களை என்னிடம் சொல்லும் போது, எனக்குக் கொஞ்சமாய் குழப்பம் ; "அபியும்..நானும்" படத்து பிரகாஷ் ராஜ் போல மாரை நிமிர்த்திக் கொண்டு நடை போடணுமா ? அல்லாங்காட்டி மண்டையை சொரிந்தபடிக்கே நடை போட்டாகணுமா ? என்று ! Becos இத்தனை variety ; இத்தனை ஜானர்கள், இத்தனை பரீட்சார்த்தங்கள் என்பனவற்றிற்கெல்லாம் அப்புறமுமே, இதோ நடந்து முடிந்திருக்கும் சென்னைப் புத்தக விழாவினில், நமது 300+ இதழ்களின் மத்தியினில் top performer - அரை நூற்றாண்டுக்கு முன்னே நமக்குப் பரிச்சயமான அதே மாயாவிகாரு's "கொரில்லா சாம்ராஜ்யம்" தான் ! Old is Gold என்று கம்பாய் நடை போடும் நமது பழமைக் காதலை எண்ணிப் பெருமிதம் கொள்வதா ? அல்லது - உலகமே ஆறுவழிச்சாலைகளில் 'சர்ர்..புர்ரென்று' லேட்டஸ்ட் புகாட்டி ரக கார்களில் பாய்ந்து கொண்டிருக்கும் வேளையினில், நாம் ஸ்டெடியாய் 60 கி.மீ.ஸ்பீடுகளில் பயணித்து வருவதை எண்ணி குழம்பிக்குவதா ? - தெரிலியேம்மா.....!! 

ஆங்குலெமில் MANGA CITY என்றொரு தனி அரங்கு, ஜப்பானிய ஸ்டைலில் நின்று கொண்டிருக்க, பலாப்பழத்தை ஈ மொய்க்காத குறையாய் உள்ளுக்குள் கூட்டம் ! மங்காவின் ஜாம்பவான்கள் என்று ஆளாளுக்கு ஏதேதோ பெயர்களை பயபக்தியோடு உச்சரிக்க, நானோ திருவிழாவில் தொலைந்த ஆடாட்டம் 'பெ' என்று முழித்துக் கொண்டிருந்தேன் ! உள்ளே - மங்கா படைப்பாளிகளின் பெரிய சைஸ் ஒரிஜினல் சித்திரங்கள் எக்கச்சக்கமாய் display-ல் இருந்தன ; and அதன் ஜாம்பவான்கள் ஷிப்ட் போட்டு நேரில் ஆஜராகி, வாசகர்களுக்கு ஆட்டோகிராப் ; அர்ட்டோகிராப் (ஆமாங்கோ...கையெழுத்துக்குப் பதிலாய் படமே வரைந்து தருகிறார்கள் - வாசகர்கள் நீட்டும் பிரதிகளில் !!) என்று போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தனர் ! 


இன்றைக்கு பிரான்சின் மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் நிறையவே மங்கா ஓவியர்கள் உண்டாம் - மாட, மாளிகை போல வீடுகள் தந்து, கீழ்த்திசை தேசங்களிலிருந்து ஓவியர்களை குடும்பங்களோடு இங்கே நகர்த்திக் கொணர்ந்து தங்கள் மேற்பார்வைகளில் மங்கா படைப்புகளை பிரெஞ்சு பதிப்பகங்கள் உருவாக்கி வருகின்றன - மெகா சம்பளங்களில் ! இதோ - இந்த ஜப்பானிய ஓவியரெல்லாம் இந்தத் துறையில் கிங்காம் ; ஒரு ஹாரர் தொடரை மங்கா காமிக்ஸாக மாத்திரமன்றி, Netflix-ல் கூட வெளியிட்டுள்ளார் போலும் !!  


பிரான்சின் 50 முக்கிய ரயில் நிலையங்களில் ஆங்குலெம் திருவிழா சார்ந்த போஸ்டர்கள் ; விளம்பரங்கள் என இடம்பிடித்திருக்க, அவற்றின் பெரும்பான்மை மங்கா தான் !! இதோ பாருங்களேன் - பாரிசில் ! 

நிஜத்தைச் சொல்வதானால், இன்றைய சர்வதேச காமிக்ஸ் சூழலின் யதார்த்த முகத்தைப் பார்க்கும் போது நாம் கூடுவாஞ்சேரியில் இருப்பது போலவும், மிச்ச ஜனமெல்லாமே கவுஹாத்தியில் இருப்பது போலவும் தோன்றுகிறது ! Of course - அவரவரது ரசனைகளுக்கேற்பவே வாசிக்கிறோம் & மங்கா ; நல்லதங்கா என்ற வாசிப்புகளால் அவர்களெல்லாம் நம்மை விட உசந்து நிற்பதாக நான் எண்ணிடவே இல்லை ! But நம்மைச் சுற்றிய உலகம் வேறொரு ரூட்டில் செம வேகமாய் தட தடத்து வருவதை கருத்தில் கொள்ளாது இருப்பதென்பது தீக்கோழி தரைக்குள் தலையைப் புதைத்துக் கொண்டதற்குச் சமானமாகிடுமோ ? என்ற நெருடல் இல்லாதில்லை ! 

In fact "ஆங்குலெமில் புதுசாய் அதை வாங்கினேன் ; இதை வாங்கினேன்" என்றெல்லாம் நான் பீற்றிட மாட்டேன் - simply becos அங்கே நான் சந்தித்த பதிப்பகங்களின் தொண்ணூறு சதவிகிதம் நமக்கு ஏற்கனவே தெரிந்தவர்களே ! And இரண்டே மாதங்களுக்கு முன்பாகத் தான் அனைவரையும் ஜெர்மனியில் சந்தித்திருந்தேன் ! அது மட்டுமல்லாது, உலகமே இன்றைக்கு Work From Home பாணிக்குப் பழகிப் போயுள்ள நிலையில், முன்னாட்களைப் போல  நேரில் போய் நின்று, கதவைத் தட்டி, காவடி எடுத்துத் தான் கதைகள் வாங்கிட வேண்டுமென்ற நிலவரம் நஹி ! இங்கிருந்தபடிக்கே ஜோ பைடெனுக்குக் கூட யோசனை சொல்ல முடியும் நாட்களல்லவா இவை ?! So ஆங்குலெமில் மறுக்கா பப்லிஷர்களைப் பார்த்து, புதுசாய் ஒரு வண்டிக் கதைகளுக்குள் தலை நுழைத்திட 'தம்' இருந்திருக்கவில்லை ! Moreso because - 2024 க்கான அட்டவணை கிட்டத்தட்ட இப்போதே ரெடி என்பதால் ! (அதுக்காக வெறும்கையோடு திரும்பலாம் இல்லீங்கோ ; இந்தாண்டின்  பயணத்தின் போது நீங்களே சிறுகச் சிறுக உணர்ந்திடுவீர்கள் ! 😉😉) ஆனால் ஆங்குலெம் விழாவினில் எனக்குக் கிட்டிய மிகப்பெரிய பொக்கிஷமாய் நான் நினைப்பது உலக காமிக்ஸ் சார்ந்ததொரு பார்வையே ! கிட்டியுள்ள இந்த திடீர் 'யானைப் பால்' நமக்கு ஒற்றை ராத்திரியில் புதிதாய் போதி மரங்களை எங்கிருந்தாச்சும் பிடுங்கிக் கொண்டு வந்து நம் வாசலில் நட்டி விடுமென்றெல்லாம் நான் சொல்லப் போவதுமில்லை ; எதிர்பார்க்கவுமில்லை ! ஆனால் 51 ஆண்டுகளாய் இந்தத் துறையில் பயணித்து வரும் நாம், நம்மைச் சுற்றிய உலகினை உள்வாங்கிடாது, இன்றைய பாட்டைப் பார்த்தால் போதுமென்று குந்திக் கிடப்பது ஒரு வரலாற்றுப் பிழையாகிடக்கூடும் என்று மட்டும் புரிகிறது ! Maybe எனது ஆங்குலெம் பயணமானது, 10 ஆண்டுகளுக்கு முன்னேயே வாய்த்திருந்தால், அதனில் எனக்குக் கிட்டியிருக்கக்கூடிய அனுபவப் பாடங்களை ஊருக்குத் திரும்பிய முதல் பொழுதிலேயே நான் கடாசியிருக்கக் கூடும் ! ஆனால் இன்றைக்கோ மொழு மொழுவென்ற கபாலத்தின் ஒரு மூலையில் பொக்கிஷமாய்ப் பத்திரப்படுத்தப்படும் ! 

பதிப்பகங்களின் தொழில்முறைச் சந்திப்புக்கான சிறு அரங்குக்கு கொஞ்சம் தொலைவில் முதல் நாளே ஒரு முரட்டுக் கூடாரம் ரெடியாகி வருவதைக் கவனித்திருந்தேன் ! அங்கே தான் காமிக்ஸ் புக் விற்பனை + படைப்பாளிகள் அட்டவணைகளின்படி வருகை புரிந்து, வரிசையில் நிற்கும் வாசகர்களின் பிரதிகளில் ஆட்டோகிராப்போ ; சித்திரமோ போட்டுத் தரும் வைபவங்கள் அரங்கேறிடும் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது ! நமக்கு தந்திருந்த VIP பேட்ஜானதை கழுத்தில் தொங்க வீட்டுக் கொண்டால் எங்கும் தங்கு தடையுமின்றிப் புகுந்திட முடியுமென்பதை ஏற்கனவே சொல்லியிருந்தார்கள் & அதனை புத்தக விற்பனைத் திருவிழா துவங்கிய தினத்தினில் கண்கூடாய்ப் பார்த்தேன் ! ஆஞ்சநேயர் வால் போல ஒரு நெடும் லைன் நிற்க, சைடில் ஒரு கேட் ஆளின்றி இருந்தது ! தயங்கியபடியே அங்கே போனால், எனது பேட்ஜை பார்த்த கணம் 'லொஜக்'க்கென திறந்து உள்ளே அனுமதித்தனர் ! உள்ளே புகுந்தால்....

'பீரோ புல்லிங்' வடிவேல் வீட்டுக்குள் புகுந்து பீரோவைத் திறந்து பார்த்து கூத்தாடிய காட்சியை வாழ்ந்து பார்க்கலாம் போல் தோன்றியது ! நமது பதிப்பகங்கள் ஒவ்வொன்றும் அவரவர் சக்திக்கேற்ப ஸ்டால்களைப் போட்டு, புக்ஸ்களைக் குவித்து அதகளம் செய்து கொண்டிருந்தனர் ! ஒவ்வொரு ஸ்டாலிலும் ஐந்தாறு பில்லிங் கவுண்டர்ஸ் ; ஸ்டாலின்  வெளிப்புறத்திலோ ஐந்தாறு பூத்கள் - ரேஷன் வாங்குவது போல வாசகர்கள் வரிசையில் நின்று, தடுப்புக்கு மறுபக்கமிருக்கும் படைப்பாளிகளின் கையெழுத்தை வாங்கிட ! And ஒவ்வொரு ஸ்டாலின் முன்னேயும் ஒரு நீளமான display - எந்தெந்த நேரத்துக்கு, எந்தெந்த ஆர்ட்டிஸ்ட் / கதாசிரியர் வருகை தரவுள்ளனர் என்பதை குறிப்பிட்டு ! தொடரும் போட்டோக்கள் இனி கதையினைத் தொடரும் folks :




















வந்திருந்த படைப்பாளிகளுள் ரிப்போர்ட்டர் ஜானி தொடரின் புது ஓவியரும் ; லக்கி லுக் தொடரின் புது கதாசிரியரும் தவிர்த்து பாக்கிப் பெயர்களெல்லாம் நமக்கு அந்நியமாகவே இருந்தன ! அங்கேயும் கணிசமான மங்கா படைப்பாளிகளின் பெயர்களே லிஸ்ட்டில் பிரதானமாய் இருந்தன ! கால் கடுக்க அந்தப் புத்தக விற்பனைகளையும், வாசக உற்சாகங்களையும், படைப்பாளிகளின் ஆர்வங்களையும் தரிசித்த பிற்பாடு மீண்டும் நமது பூத்துக்கே திரும்பினேன் - மேற்கொண்டும் சில சந்திப்புகள் இருந்ததால் ! கணிசமான சிறு பதிப்பகங்கள் ; அங்கே ஸ்டால் எடுத்திருக்கா பதிப்பகங்கள் - திடும் திடுமென ஆஜராகி, அவர்களது படைப்புகளை முன்னே நீட்டிய போது கொஞ்சம் கூச்சமாகவே இருந்தது ; 'நாங்கள்லாம் அத்தினி பெரிய ஆளுங்க இல்லீங்கண்ணா !' என்றபடிக்கே அவர்களது புக்ஸைப் பார்த்த போது சகலமும் கிராபிக் நாவல்கள் ! வெவ்வேறு ஜானர்களில் ; வெவ்வேறு தலைப்புகளில், விதம் விதமாய் இருந்த அவற்றுள் நம் ரசனைகளுக்கு ஒத்துச் செல்பன ரொம்பச் சொற்பமே ! So 'ஊருக்குப் போய் கடுதாசி போடறேன்' என்றபடிக்கு அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டேன் ! நிஜத்தைச் சொல்வதானால், நாம் தற்சமயம் அன்னம் தண்ணீர் புழங்கி வரும் முக்கிய பதிப்பகங்கள் தவிர்த்த அடுத்த நிலைப் பதிப்பகங்களின் ஆக்கங்கள் எவையுமே நமக்கு ஒத்துப் போகும் விதங்களில் கிஞ்சித்தும் இல்லை !  அவர்களின் பட்டியலில் தொண்ணூறு சதவிகிதம் கி.நா.க்களே எனும் போது 'திரு திரு'வென முழிக்க மட்டுமே முடிந்தது ! 

Oh yes - புதிதாய் கதைகளை டிக் செய்துள்ளோம் தான் ; ஏகப்பட்ட அவார்டுகள் வாங்கியுள்ள ஒரு நெடும் ஆல்பம் ; ஒரு அட்டகாச கி.நா. ; யாருமே எதிர்பார்த்திட இயலா ஒரு ஜானரிலான ஆல்பம் ; 1 அதிரடி  கௌபாய் தொடர் ; 1 மிரட்டலான ஹாரர் ஆல்பம் ; 1 செம கூல் கார்ட்டூன் தொடர் ; V காமிக்சுக்கென என crisp ஆல்பங்கள் - என ஷாப்பிங் பை இம்முறையும் நிறைந்துள்ளது தான் ! அவற்றை இனி எங்கே நுழைப்பது என்பது தான் சவாலே !! Truth to tell - எனது லேப்டாப் சத்தியமாய்த் திணறிக் கிடக்கின்றது இந்த கோப்புகளை ; மாதிரிகளை உள்ளடக்க இயலாது !! ஒரு hard disk வாங்கினால் கோப்புகளை அடக்கி விடலாம் தான் ; ஆனால் அவற்றை உங்களிடம் கொண்டு சேர்ப்பது எப்போது ? எவ்விதம் ? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியே ! Guys : உங்களின் 'பொம்ம புக் நேசங்களை' இன்னமும் கொஞ்சமாய் தூசு தட்டி freshen up செய்து கொள்ளுங்கள் ; காத்திருக்கும் மாதங்களில் ரவுண்டு கட்டி அடிக்க நாங்க ரெடி !!

மாலை புலர, மறுக்கா பென்ஸ் வேனில் பயணம் ; கோட்டையும், டையையும் கட்டிக்கினு இரவு பார்ட்டிக்குப் போய் ஆளாளுக்கு கோனியாக் மழையினில் நனைந்து, குதூகலிப்பதை கொட்டாவி விட்டபடிக்கே பார்த்தது ; சில பல பிரெஞ்சு டி-வி புரட்யூசர்களுடன் அளவளாவியது ; 2023-ன் முக்கிய படைப்புகளை ஜூரிக்கள் தேர்வு செய்யும் முன்பாக அந்தந்தப் பதிப்பகங்கள் ஐந்தே நிமிடங்களில் தமது படைப்புகளை பற்றி விவரித்தது ; எதிர்பாரா விதமாய் சில மாதங்களுக்கு முன்னே காலமாகியிருந்ததொரு மெகா குழுமத்தின்  நமக்கு ரொம்பவே பரிச்சயமான தலைமை நிர்வாகிக்கு அஞ்சலி செலுத்தியது ;  இன்னதென்றே தெரியாத ; yet சுவையான சில பல வஸ்துக்களை வயிற்றுக்குள் தள்ளி ஏப்பமிட்டது என்று 2 நாட்களும் மின்னலாய் ஓட்டமெடுத்திருக்க, ஊர் திரும்பும் பொழுதும் புலர்ந்திருந்தது ! ஆளாளுக்கு வெவ்வேறு திக்குகளில் புறப்பட வேண்டியிருக்க, "VIP பிரமுக அணி" ஒரு கனவை வாழ்ந்து முடித்த திருப்தியில் விடை பெற்றுக் கொண்டோம் ! ஆங்குலேம் ரயில்வே ஸ்டேஷனுக்கு பெட்டியை தள்ளிக்கொண்டே நடந்த போது, நீல வானம் அந்த காமிக்ஸ் நகரினை புன்னகையோடு போர்த்தியிருந்தது போல் தோன்றியது ! குளிர் மட்டும் பற்களையெல்லாம் திசைக்கு ஒன்றாய் ஆடச் செய்து கொண்டிருக்க, பிளாட்பாரத்தில் ரயிலை எதிர்நோக்கி நின்ற தருணத்தில் மணிக்கட்டைச் சுற்றியிருந்த 2 ஆங்குலெம் அடையாளக் காப்புகள் கண்ணில்பட்டன ! ஒருவித நைலான் போலான துணியில் அச்சிட்டு, ஏதோ ஒருவித பொத்தானையும் அதனில் பொருத்தியிருந்தனர் ! அதைக் கழற்ற முனைந்தால் ஊஹூம்...கழற்ற வழியில்லை ! ரைட்டு...ஊருக்குப் போய் பார்த்துக்கலாம் என்றபடிக்கே, கையில் காப்புக் கட்டியவனைப் போல ரயிலில் ஏறி அமர்ந்து பாரிஸ் விமான நிலையத்தினை சென்றடைந்தேன் !

மறுக்கா பாரிஸ் ; இம்முறை பாரிஸ் to டெல்லி டாட்டா குழுமத்தின் விஸ்தாரா ஏர்லைன்ஸில் பயணம் & அங்கிருந்து சென்னை & அங்கிருந்து சிவகாசிக்கு இரவு ரயில் - என்பதை நினைக்கும் போதே கண்ணைக் கட்டியது ! முந்தைய பதிவை கிடைக்கும் அவகாசங்களிலெல்லாம் டைப்பியே பொழுதை ஒரு மாதிரி ஒட்டி, ஞாயிறு அதிகாலை வீட்டுக்குத் திரும்பிய போது திருவாளர் கழுத்தார் கோபித்துக் கொண்டிருந்தார் ! அதன் பின்னான சமாச்சாரங்கள் தான் உங்களுக்கும் தெரியுமே !! 

வாரமும் புலர்ந்து, பணிகளும் மறுக்கா உள்ளிழுத்துக் கொள்ள, பிப்ரவரி புக்ஸ் ; அடுத்தடுத்த வேலைகள் என்று மெது மெதுவாய் யதார்த்தத்துக்குத் திரும்பியிருந்தேன் ! கையிலிருந்த காப்புகள்  மாத்திரமே ஒரு கனவின்  நினைவூட்டிகளாகத்  தொடர்ந்து கொண்டிருந்தன ! 'ரைட்டு..கத்திரி எடு..கச்சக் என்று வெட்டு' என்று கிளம்பிய நொடியில் போன் 'டிங்' என்றது - புதியதொரு மின்னஞ்சலின் வருகையை உணர்த்தி ! பார்த்தால் ஆங்குலெம் நிர்வாகிகளிடமிருந்து ஒரு ஈ-மெயில் : "விஜயன்....you were an exceptional guest ! thank you !" என்றிருந்தது !! கொஞ்ச நேரத்துக்கு அந்த மின்னஞ்சலையே பார்த்துக் கொண்டிருந்த போது, கனவாய் அந்த 3 ஆங்குலெம் நாட்களும் மனதில் ஓட்டமெடுத்தன ! நம்மை வழிநடத்தும் புனித மனிடோவுக்கும், நம்மைத் தாங்கிப் பிடித்து நிற்கும் உங்களுக்கும் ஒரு மானசீக நன்றியைச்  சொல்லி விட்டு, கையிலிருந்த காப்புக்களை பத்திரமாய் வெட்டியெடுத்து பைக்குள் போட்டுக் கொண்டேன் !  வாழ்க்கைப் பயணமானது நம்மை இங்கிருந்து எங்கே இட்டுச் சென்றாலுமே அந்தக் காப்புகளும், அவற்றின் பின்னுள்ள கதைகளும் நம்மை விட்டு அகலாது தானே - so அடுத்த கனவை எதிர்நோக்கிடும் வேளையினில் இவற்றை வாஞ்சையோடு பார்த்துக் கொள்வேன் ! Bye all...see you around ! Have a relaxed Sunday !



175 comments:

  1. அடடே ஆச்சரியக்குறி

    ReplyDelete
  2. அப்பா ஞாயிறு புண்ணியம் செய்தது பதிவும் வந்தது நன்றி ஆசிரியரே

    ReplyDelete
  3. மீண்டும் எங்களது வாழ்த்துக்கள் சார்....உங்களால் நாங்களும் பெருமைபட்டு கொள்கிறோம்.இன்னும் பல கௌரவங்கள் உங்களுக்கு உரித்தாகட்டும்...மாங்கா ஊறுகாய் மட்டுமல்ல , மாங்கா காமிக்சுக்கும் காத்திருப்போம்...

    ReplyDelete
  4. பயணக் கதைகளை இவ்வளவு சுவாரசியமாக எழுத எல்லோராலும் முடியாது அருமை ஆசிரியரே

    ReplyDelete
  5. எப்போதாவது முடிந்தால், ஜப்பானின் சில சித்திர கதைகளை வெளியிடவும்...புத்தர் கதைகள்...

    ReplyDelete
    Replies
    1. புத்தர் கதைகளா ? அதுக்குள்ளாறவா நண்பரே...? அதுக்கெல்லாம் இன்னும் கொஞ்ச காலம் இருக்கில்லியா ?

      Delete
  6. EDI ji,

    அப்ப எங்களுக்கு வரும் காலங்களில் புதையல் வேட்டை காத்துள்ளது

    ReplyDelete
  7. அருமை சார். நன்றிங்க சார்.

    ReplyDelete
  8. மிகச் சிறந்த சாதனை. தமிழப் பதிப்பாளர்கள் வேறு எவருக்கும் கிடைக்காத அங்கீகாரம்.இன்னும் நன்றாகக் கொண்டாடப்பட வேண்டும்.நாளிதழ்கள் , வார இதழ்கள் மற்றும் மாத இதழ்களில் இச்சாதனை பற்றிய விஷயங்களை போட்டோக்களுடன் ஒரு கட்டுரையாக வெளிவரச் செய்வது காலத்தின் கட்டாயம்.

    ReplyDelete
    Replies
    1. அட...நம் வட்டத்தால் சாத்தியமானது நம் வட்டத்துக்குத் தெரிந்தாலே போதாதா சார் ?

      Delete
  9. அற்புதமான விவரிப்பு சார். இந்த பயணம் உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் மறக்க முடியாத ஒன்று.

    நீங்கள் வாங்கி வந்த கதைகளை விரைவில் பார்க்கும் நாளுக்கு இப்போது இருந்தே...

    ReplyDelete
    Replies
    1. அந்த ஜப்பானியர் junji ito வா சார்?

      Delete
    2. நாமும் ஒரு மாங்காவாவது முயற்சிக்கலாமே சார்.

      Delete
    3. நீங்க எதுக்கும் ஒரு தபா ஜம்ப்பாத தலீவர் கிட்ட பேசிடுங்க சார் - மாங்கா - தேங்கா - பட்டாணி சுண்டல் பற்றி !

      Delete
  10. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  11. Dear Edi Sir...
    January Beginning Surprise V Comics...Jan End Surprise Neenga innum Sollavae illayae...Athu unga France Trip thaana...Super!!! Awaiting for your announcement of New comics intros...from this France trip ...
    Thnx.

    ReplyDelete
  12. @Edi Sir..😍😘😃
    இதோ நானு ஜம்பிட்டேன்..😍😘

    ReplyDelete
  13. என்ன யாரையும் காணம் ? இது என்ன அதிசயம் ?

    விஜயன் சார், நீங்க போயிட்டு வந்து அதை பத்தி எழுதியதை படிக்கும்போது என்னவோ, நானும் உங்க கூட பக்கத்துக்கு சீட்டில் உக்காந்து நீங்க பாத்தது, பேசினது எல்லாம் நேரில் கேட்பது போலவே இருக்கிறது. எப்பவுமே நீங்க எழுதும் அத்தனை Travel Blog க்கும் இதே அனுபவம் தான் கிடைக்கிறது.

    முதல் பாகம் - காமெடி படம் போலவும், இந்த இரண்டாம் பாகம் - சீரியஸ் படம் போல இருந்தது. போட்டோஸ் பாத்து சந்தோஷ பட்டு கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அன்றாடங்களிலிருந்து தள்ளி நிற்கும் பயணப் பொழுதுகளின் போது கிடைக்கும் அந்த அவகாசமும், நிச்சலனமும் எழுத்துக்களில் ஜாலியாய் தொற்றிக் கொள்கின்றன நண்பரே ! Back to the grind என்றான பின்னே எழுத்துக்களும் அதற்கேற்ப சீரியசாகிப் கொள்கின்றன !

      Delete
  14. காணக் கண் கோடி வேண்டும்..
    ஆங்குலெம் காமிக்ஸ் திருவிழா போட்டோக்களை,
    எங்கெங்கு காணினும் காமிக்ஸ்ஸடா என்று கூவ வேண்டும் போலிருந்தது.
    உங்களது செல்ஃபி, நாங்களே அங்கு நின்றிருந்தது போல் ஒரு உணர்வைக் கொடுத்தது.
    A great honor to our comics.
    வாழ்த்த்துக்கள் சார்.

    ReplyDelete
  15. சூப்பர் சார்

    வழக்கம் போல் அருமையான கட்டுரை ஆனால் அவசரத்தில் முடித்துவிடவேண்டும் என்பதுபோல் இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. // ஆனால் அவசரத்தில் முடித்துவிடவேண்டும் என்பதுபோல் இருந்தது. //

      Yes

      Delete
    2. நிஜம் தான் சார் ; உள்ளபடிக்கே ஒரிஜினல் flow-ல் எழுதியிருந்தால் இன்னமும் ஒரு பதிவு நீளத்துக்கு நீண்டிருக்கும் தான் ; ஆனால் வாசிக்க உங்களுக்கும், 'டைப்ப' எனக்கும் பொறுமை இன்னும் கொஞ்சம் தேவைப்பட்டிருக்கும் !

      And 28 நாட்களே கொண்ட இம்மாதத்தினில் SODA ; I.R.$ - என்று பணிகள் பட்டியல் இந்த ஞாயிறுக்குக் காத்திருக்க, அக்கட குதிக்க வேண்டிய அவசியமும் !

      Delete
    3. Hope last month's graphic novel is coming this month sir

      Delete
  16. இந்த 51 வருஷத்தில் உங்களுக்கான பெரிய கௌரவம் & அங்கீகாரமாகவே இந்த பயணத்தை பார்க்கிறேன் சார். மனசுக்கு நிறைவாகவும், குதூகலமாகவும் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. கரம் கூப்பிய நன்றிகள் சார் !

      Delete
  17. Sir,

    As I had twice reminded you about Manga i do think there is more potential for manga in Tamil nadu. Most of our kids are addicted to manga. I had been ordered by my 16 year old son to buy all 8 volumes of spy x family manga books.

    I hope you can bring in the new generation into our lion family if you can bring one perfect manga in Tamil.

    I hope u know better than me about the comics market but asking is my duty and denying ornaccepting is your right.

    But one day I am sure we will release a manga in Tamil.. fingers crossed I am waiting

    ReplyDelete
    Replies
    1. "மாயாவி மங்கா" இருந்தா டபுள் ஓ.கே. !!

      Delete
    2. மாங்கா மாயாவியை கண்டுபிடிப்போம்

      Delete
  18. 50 ஆண்டுகால தமிழ் காமிக்ஸ் பயணத்தில் தங்களின் பயணக்கட்டுரைகளை தொகுப்பாக வெளியிட்டால் தமிழ் அறிஞர்கள் பயணக் கட்டுரைகள் போல் வரலாற்று பதிவாக‌ தமிழ் காமிக்ஸ் உலகில் என்றும் நிலைத்து நிற்கும்..

    ஆங்குலெம் பயணம் வாசகர்கள் எங்களையும் உடன் அழைத்து சென்றது போல் இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. //
      ஆங்குலெம் பயணம் வாசகர்கள் எங்களையும் உடன் அழைத்து சென்றது போல் இருந்தது.//

      நீங்கள் ஒவ்வொருவருமே உங்களின் ஆசிகளின் ரூபத்தினில் என்னோடு பயணிப்பவர்கள் தானே சார் ? No wonder ...!

      Delete
  19. ஆங்குலமை நேரில் பார்த்தது போலிருந்தது. காமிக்ஸ் எனும் பரந்து விரிந்த வனத்தின் பல்வேறு பகுதிகளுக்குள் நமது சிங்க ராஜா கம்பீர நடை போட , எடிட்டர் மற்றும் ஜீனியர் எடிட்ருக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் எல்லாம் வல்ல இறைவன் வழங்கிட ப்ரார்த்தனைகளும், வாழ்த்துகளும்.

    ReplyDelete
  20. Super sir, please try to write singathin siruvayathil

    ReplyDelete
    Replies
    1. இது தானே நண்பரே அது....? அது தானே இது ?

      Delete
    2. Sir try ti write mobthly once about your 80 and 90 visits , if time permits sir. Thank you sir.

      Delete
  21. வணக்கம் ஆசிரியரே
    தங்களுடைய கழுத்து சுளுக்கு சரியாகி விட்டதா?

    ReplyDelete
    Replies
    1. தாக்குப் பிடிக்கும் அளவுக்குத் தேறிடுச்சி ரம்யா ! Thank you !

      Delete
  22. கடைசில VIP டேக்கையும் கடத்திட்டு வந்திட்டீங்க டியர் எடி.. 😍😍

    லக்கி லூக் போஸ்டர் அட்டகாசமா இருக்கு. இது மாதிரி சின்னதா வாசகர்களுக்கு அச்சடித்து தாருங்களேன் ப்ளீஸ் .. (என் மகனார் டெக்ஸ்லிருந்து தாவி இப்போது லக்கி லூக் ஃபேனாகி போனார்) & தாத்தாஸ் போஸ்டர் மெர்சல்.

    ReplyDelete
    Replies
    1. அது போஸ்டர் இல்ல சம்பத் ; லேட்டஸ்ட் ஆல்பத்தின் அட்டைப்படம் !

      Delete
  23. ரி. ஜானி கதைகள் 2.0 இன்னும் சில உள்ளதென சொல்லிருந்தீங்க .. அதை அடுத்த வருடம் உள் நுழைக்க வேண்டுகோள் விடுக்கிறேன் dear edi..

    ReplyDelete
  24. அருமை சார்....விரைவில் என விளம்பரப்படுத்தலாம் அடுத்த இதழ்களில்...முன்பெல்லாம் சுவாரஸ்யத்தை கூட்டும்...இப்ப பொசுக்குன்னு ஒரேமுட்டா அட்டவணைல வந்துடுது...டைகர் ஆர்வத்தை தூண்டுறார்....மங்காவ விட்டு பார்க்கலாமே...

    ReplyDelete
  25. //நம் வட்டத்தால் சாத்தியமானது நம் வட்டத்துக்குள் தெரிந்தாலே போதாதா சார்//இப்படி ஒரு வட்டம். இப்படி ஒரு பெருமைக்குரியஆசிரியர் இருக்கிறார் என்பதாவது தமிழகத்துக்குத் தெரியுமேங்க சார் . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. "அப்டியா ? பொம்ம புக்குக்குலாம் விழாவா ?" என்றபடிக்கே ஜனம் அடுத்த பிரேக்கிங் நியூசில் மூழ்கிடுவர் சார் !

      Delete
  26. என் அண்ணனிடம் தங்களது ஆங்குலெம் பயண நிகழ்வுகளைக் கூறினேன்.
    அவர் ஒரு எழுத்தாளர்.
    ( சென்னை புத்தக விழாவில் காந்தி படுகொலை; வழக்கும் பின்னணியும் என்ற அவரது புதிய புத்தகம் வெளியிடப்பட்டது.
    குருஜி வாசுதேவ் என்ற பெயரில் பல புத்தகங்கள் அவர் எழுதியவையே.)
    தனியொருவராக காமிக்ஸ் மீதுள்ள ஆர்வத்தில் இத்தனை ஆண்டுகளாக செயல்பட்டுவரும் தங்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கௌரவம் இது என மிகவும் சிலாகித்து தங்களைப் பாராட்டினார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. அவருக்கும் , உங்களுக்கும் நன்றிகள் சார் ! 🙏

      Delete
  27. Congrats on 6 Million Views sir ! For a single blog on current Tamil Comics - standing over 10 years - this is a impressive record - fitting that the timing matched your above travel !!

    Expecting a book to mark the same !

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Thanks sir ; இந்த க்ளாசிக் ஹீரோஸ் தொகுப்புகள் Supreme 60's பெண்டைக் கழற்றி விடுகின்றன ; we still have 4 to go ! கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு ஒரு முறை இவற்றுக்குள் மூழ்கி எழுவதற்குள் நாக்கெல்லாம் தொங்கிப் போய் அடுத்த பணி பற்றி நினைக்கவே அவகாசம் தர மறுக்கின்றன !

      பார்ப்போமே சார் !

      Delete
  28. SIR .. Many of NEW generation i saw in salem book fair where asking for MANGA since they are familiar with manga based anime cartoons .. or they were asking DC OR MARVEL HEROES COMICS .. is it possible bring any one of those (MANGA , DC OR MARVEL ) to bring new gen readers to our comics ..

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் சரி தான் சார் ; ஆனால் பசங்களுக்கு புக்ஸை கொண்டு சேர்ப்பிக்க வேண்டியோர் நாம் தானே ? முன்னாட்களைப் போல இன்று தெருமுனைப் பெட்டிக்கடைகளும் நஹி ; அங்கே நமது புக்ஸும் நஹி and பசங்களாக போய் வாங்கிடும் கலாச்சாரங்களும் இன்றைக்குப் பரவலாக இல்லை ! So நாமாய் அதற்கொரு முனைப்பினைக் காட்டாத வரைக்கும் these thoughts are non starters !

      "கதை சொல்லும் காமிக்ஸ்" புத்தக விழாக்களில் விற்றுள்ளன ; ஆனால் சந்தாக்களில் பெரும்பாலான நண்பர்கள் திரும்பிக் கூடப் பார்க்கவில்லையே சார் ?

      ஒரு Young வாசக வட்டத்தை இங்கே உருவாக்கிடல் existing வாசகர்களின் ஒத்தாசைகளின்றிச் சாத்தியமே ஆகிடாது !

      Delete
    2. And தமக்கு ரசிக்காத எதையுமே existing வாசக வட்டம் பெரியளவில் ஆதரிப்பதில்லை என்பதே அனுபவப் பாடம் !

      Delete
  29. Ask junior editor to select some Manga stories. If he likes that, we may also like it and v comic can publish that

    ReplyDelete
    Replies
    1. Does mangas have one shot stories? I will try to find and read..

      Delete
    2. பெட்ரோமாக்ஸ் லைட்களைக் கொஞ்சமாகவேணும் நண்பர்கள் தளர்த்திப் பிடித்தால், யோசிக்கலாம் சார் !

      அடுத்த பதிவு - சென்னை விழாவின் sales stats ; மிரண்டு போகச் செய்துள்ளனர் மாயாவி & க்ளாசிக் பார்ட்டீஸ் !!

      Delete
  30. நாம்ம மார்டீன் மிஸ்ட்ரி அனிமேட்டட் ஸீரிஸ் மாங்கா ஸ்டைலில் தான் இருக்கும், சூப்பரா இருக்கும், அதில் மார்டினுக்கு டயானா சகோதரி. இப்ப கூட Vox Machina என்ற மாங்கா அனிமேட்டட் ஸீரிஸ் அமேசான் ப்ரைமில் நல்லா இருக்கு. நாமும் அந்த கடலில் சில தீர்தங்களை அள்ளி தெளித்த ரசிக்களாமே?!

    ReplyDelete
    Replies
    1. இன்னிக்கி திருப்பூர் & சிவகங்கை சேல்ஸ் ரிப்போர்ட்ஸ் :

      #1 மாயாவி
      #2 Smashing '70s

      😉

      Delete
  31. கண்கள் பணிக்கிறது sir...
    "இது போதும் ஆயுசுக்கும் "
    என்ற திருப்தியும், நிம்மதியும், மகிழ்ச்சியும் மனதை நிறைப்பதை உணர முடிகிறது... ரொம்ப சந்தோசம் sir... ❤️🙏

    ReplyDelete

  32. >>>In fact இந்தாண்டின் ஆங்குலெம் பரிசு வென்றுள்ள ஆல்பம் கூட இது போலான drawings சகிதமே இருந்தது

    நீங்கள் குறிப்பிடுவது "The Arab of future" ah சார்?

    இப்போதுதான் அதன் ஒவியங்களை பார்தேன். நீங்கள் சொல்வது சரிதான்.

    ReplyDelete
    Replies
    1. ஓவிய துல்லியம் ; கதை மாந்தர்கள் அழகாய்க் காட்சி தருவதென்பதெல்லாம் நமது எதிர்பார்ப்புகள் மட்டுமே போலும் சார் ; சரக்கிருந்தால், சித்திரங்களை ஒரு பெரும் பொருட்டாக கருத மாட்டேன்கிறார்கள் தான் !

      Delete
  33. அருமை சார்...

    தங்களின் பயணக்கட்டுரை தங்களுடனே பயணித்த உணர்வு..ஆனால் டக்கென்று முடிந்தது போல ஓர் உணர்வு..

    வாழ்த்துக்கள் சார்..!

    ReplyDelete
  34. திரிஷ்யம்-2 , அவதார்- 2 க்கு கூட இவ்வளவு எதிர்பார்ப்பில்லை.
    அங்குலம்- 2 இவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது.
    காத்திருப்புக்கு ஏற்ற பலன்தான்.

    நவீன கதைகளுக்கு வாசகர் மத்தியில் வரவேற்பு குறைவாக இருப்பது வருத்தமே.

    நீங்களும் முயற்சி செய்யாமல் இல்லை.வேதாளர் கதைகள் அதிகம் விற்பனையாகுமானால் ஒரு விற்பனையாளர் என்ற முறையில் டிமாண்ட்- சப்ளை அணுகுமுறையில் தவறில்லைதான்.( இரண்டாம் வேதாளர் தொகுப்பு இன்னும் பிரிக்கவேயில்லை.)

    கலாச்சாரப் புரட்சி ஏற்படுத்திய ஒரு தேசத்தின் மாபெரும் காமிக்ஸ் விழாவில் சிறப்பு விருந்தினர் என்பது இவ்வளவு காலம் பட்ட சிரமங்களுக்கான ஔஷதம் என்பதில் யாருக்கும் சந்தேகம் தோன்றப் போவதில்லை.
    இன்னுமோர் 30 வருடம் கழித்து விக்ரம் அரவிந்த் இதே போன்றதொரு விழாவில் கலந்து கொண்டு இரண்டே வரிகளில் அதைப் பற்றி எழுதிச் செல்வார் என நம்புகிறேன்.:)

    நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் மகிழ்ச்சியும் சார்!

    மைக் ஹேமர் மற்ற கதைகள் எப்படி எனத் தெரியவில்லை.ஆனாலும் முதல் வெளியீட்டில் பழமை நெடி அடிக்கிறது.நவீன யுகத்தில் உருவான கதைகளை தேடிப் பிடிக்க வேண்டுகோள் வைக்கப்படுகிறது

    ReplyDelete
    Replies
    1. சார் ...மைக் ஹேம்மர் உருவானது 2018 -ல் !

      அவரது கதைக்களம் 1950's நிலைகொண்டிருப்பதால் புராதனம் தோன்றியிருக்கலாம் !

      Delete
  35. வணக்கம் சார். வருகின்ற மார்ச் மாதம் S60 இதழ் உண்டா ? புஷ் சாயர் வருவாரா ? வந்தால் வழக்கமான சைஸில் வருவாரா? இல்லை மாடஸ்டி புக் சைஸில் வருவாரா?

    ReplyDelete
    Replies
    1. வரும் போது பார்ப்பீர்கள் சார் !

      Delete
  36. @ஸாகோர்பேரவை பொருளாளர்..😍😃😘

    ஜி..

    First quarter S60வேதாளர் ஜனவரில வந்தாச்சு..👍

    2nd quarter S60 புஸ்பாபுருசன்..😃
    சாரி புஸ் சாயர் ஏப்ரல்லதான் வருவாரு.😍😘😘

    ReplyDelete
  37. @Edi Sir..😍😘
    *தமிழ்காமிக்ஸ் உலகின் ராஜா தாங்கள்*தான் என்பதை அறிந்து ஆங்குலம் காமிக்ஸ் திருவிழாவில் தங்கள் கையில் RAJA VIP என்று கைப்பட்டையை கட்டியுள்ளார்கள் போல..😘💪👍👌

    ReplyDelete
    Replies
    1. ஜம்பிங் சார் : "RAJA" என்பது ஒரு பிரெஞ்சு குழுமம் ! கடந்த 5 ஆண்டுகளாய் ஆங்குலெம் விழாவின் மெயின் sponsor ஆக இருந்து வருகின்றனர் ! அம்புட்டு தென் விஷயம் !

      Delete
  38. நிறைவான பதிவு.

    சார் வேண்டுகோள்…பதிவுகள் எழுதும் போது அதன் நீளத்தைப் பற்றி கவலைப்படாமல் எழுதுங்கள் சார். Elevator pitch தேவைப்படுவர்களுக்காக முதல் பத்தியையும்(வார்னிங்) கடைசி பத்தியையும் (சம்மரி) ஒதுக்கிவிட்டு என்ன மாதிரி நேரம் இருக்கும் வெட்டிப்பயல்கள் ஆழ்ந்து படித்து ரசிக்க மீதிபத்திகளை நிரப்பி விடுங்கள்.

    ReplyDelete
  39. #1. பிளாக்மெயில் பண்ண விரும்பு

    புலனாய்வு எளிதாக அடுத்தடுத்து நகர்ந்து தொய்வில்லாமல் சென்றது. ஓவியங்கள் மிக அற்புதம் அதை மெதுவாய் ரசித்தபடியே வாசித்தேன், அதற்காகவே மீண்டும் மீண்டும் வாசிக்கலாம்.

    ஒவ்வொரு பக்கத்தை புரட்டும்போதும் இரண்டு பக்கமாய் புரட்டுகிறோமோ என்று சந்தேகம் - காகிதத்தின் தடிமன் சற்று அதிகமாக இருந்ததால் (மிகவும் பிடித்திருந்தது, ஒரு குண்டு புக்கை போல உணர்வு).

    V காமிக்ஸ் விரைவில் போஸ்டர்கள் எதிர்பார்ப்பை தூண்டுகின்றன. மாதம் ஒன்று போதாது. இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.

    #2. பறக்க மறந்த பறவைகள்

    கூலாக நகர்ந்த கதை, பில்லி & ஜோசப்பின் இணை மாட்டி விடுவார்களோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ள வாசிப்பை இடையில் நிறுத்த இயலவில்லை. சுபமான முடிவு, மகிழ்வான வாசிப்பு அனுபவம். ஓவியங்கள் கண்களுக்கு விருந்து.

    #3. பின் விளைவுகள் ஜாக்கிரதை

    குறு நகையோடு கதை முழுக்க வாசிப்பு அனுபவம் இருந்தது. வழக்கம் போல் ஓவியம், வண்ணம் மற்றும் பிரிண்ட் குவாலிட்டி அருமை.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் அலசல் நண்பரே ! And அந்த "unboxing வீடியோவும்" பிரமாதம் !

      Delete
    2. மிக்க மகிழ்ச்சி!
      நன்றி!
      Sir :-)

      Delete
  40. ஔசதம். என்பதன்அர்த்தம் இந்த இடத்தில்"அங்கீகாரம் " என்றுபுரிந்துள்ளேன் .சரிங்களாங்க டாக்டர் சார் . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  41. மாயாவிகாரு's "கொரில்லா சாம்ராஜ்யம்" தான் ! Old is Gold என்று கம்பாய் நடை போடும் நமது பழமைக் காதலை எண்ணிப் பெருமிதம் கொள்வதா ? அல்லது - உலகமே ஆறுவழிச்சாலைகளில் 'சர்ர்..புர்ரென்று' லேட்டஸ்ட் புகாட்டி ரக கார்களில் பாய்ந்து கொண்டிருக்கும் வேளையினில், நாம் ஸ்டெடியாய் 60 கி.மீ.ஸ்பீடுகளில் பயணித்து வருவதை எண்ணி குழம்பிக்குவதா ? - தெரிலியேம்மா.....!//// நிச்சயமாகப் பெருமிதம் கொள்ளலாம் சார். நமக்கு மகிழ்ச்சியளிப்பதைத் தேர்ந்தெடுக்கும் சுய சிந்தனை உடைய வாசகர்கள் நாம். உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுவதாலேயே Coca cola வை சிறந்த பானம் என்று நாம் சொல்லிவிடமுடியுமா? மங்கா புகழ் பெற்ற மாயாவிக்கு அடுத்தது தான் Manga.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. சின்னதாய் மாறுபடுகிறேன் நண்பரே !

      மாயாவி தொடரில் கதைகள் ஏகமாய் இருந்து , அவற்றின் புதியவற்றை நாம் தொடர்ச்சியாய் வெளியிட்டு , அதனை வாசகர்கள் அள்ளிடும் பட்சத்தில், things would be different - as is the case with Smashing '70s books - where they carry new tales of the golden oldies !

      ஆனால் மாயாவி சாருடனோ, அரை நூற்றாண்டாய் அதே 13 கதைகளோடு 'ரிங்கா ரிங்கா ரோஸஸ்' ஆடிக் கொண்டே இருப்பது தானே யதார்த்தம் ?!

      கொக்கோ கோலா கேடானது ; so அதனை நாம் ஓரம்கட்டுவது just fine ! ஆனால் 51 வருஷங்களுக்கு முன்னே இறக்கிய பதநீரை பிரிட்ஜில் வைத்தல்லவா இன்னமும் பருகி வருகின்றோம் ? வியப்பே அது தானே ?!

      Delete
    3. மாயாவி reprints மகிழ்ச்சிக்கான தேர்வாக இருக்க முடியாது - just Nostalgia !

      Delete
    4. இல்லை ராகவரே...அந்த நாயகனை செதுக்கிய விதம் இன்றைய சிறுவர்களையும் ஈர்க்க வல்லதே

      Delete
  42. சார் நமது முத்து காமிக்ஸ் இல் தொடராக வந்த நரகத்தை பார்த்தேன் தொடர் ஒரு Manga தான். அதையாவது ஒரே புத்தகமாக வெளியிடலாமே?

    Barefoot Gen என்ற பெயரில் உள்ள Manga தான் அது.

    பிளீஸ் consider this request Sir.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் பொறுமையாய், நிதானமாய் தேடுவோம் சார் ! கொட்டிக் கிடக்கும் புதியனவற்றுள் நிச்சயமாக எதேனும் நமக்கு ரசிக்கக் கூடியன இல்லாது போகாது ! And ஒரே நாள் ராத்திரியில் ரசனை மாற்றம் கண்டாக வேண்டுமென்பதெல்லாம் கட்டாயமல்ல எனும் போது we'll take our time !

      Delete
    2. கண்டிப்பாக சார் காத்து இருப்போம்

      Delete
  43. சென்னையின் இன்னொரு சர்ப்ரைஸ் performer : Guess who ?

    ReplyDelete
    Replies
    1. முதற் யூகத்திலேயே சரியாக விடை சொல்வோருக்கு அடுத்த மாத சந்தா கூரியரில் ரவுண்டு பன் !

      Delete
    2. ஸாகோர் தான் வேற யாரு

      Delete
    3. @Edi Sir..😍😘
      நம்ப ஸாகோர்தான்..💪👍
      வேற யாரா இருக்கமுடியும்..😍😘

      Delete
  44. டியர் விஜயன் சார்,

    நாற்பத்தி சொச்ச ஆண்டுகளாக தமிழ் காமிக்ஸ் வெளியிடுவது; விற்பனை தேங்கினாலும் மனம் தளராதிருப்பது; தொள்ளாயிரம் தாண்டிய பதிவுகளின் வாயிலாக அறுபத்து நூறாயிரம் பார்வைகளைக் கடப்பது; பதினோரு ஆண்டுகளுக்கும் மேலாக, வழக்கமான பணிகளுக்கு இடையேயும் வாரந்தோறும் சளைக்காமல் பதிவுகளும், பதில்களும் இடுவது - இப்படி எல்லாவற்றிலுமே ஒரு நிலையான தன்மையைக் கடைபிடிக்கும் அந்த ஒழுங்கும் பொறுமையும் அனைவருக்கும் கை கூடுவதில்லை. மீண்டும் ஒருமுறை மனமார்ந்த வாழ்த்துகள் சார்!

    "பதிவு வளவளவென்று இருக்கிறது" என்று கூறி, நான் உள்ளிட்ட சில வாசக அன்பர்கள் அவ்வப்போது உங்களைக் கடுப்படிப்பதன் நோக்கம் - நீங்கள் சொல்ல வந்த தலையாயக் கருத்து எந்தப் பதிவில், எந்த பத்தியில், எந்த வரியில் சிக்கியிருக்கிறதோ என்ற பதட்டத்தில் தானே அன்றி, நேரக் குறைபாட்டினால் அல்ல! ) காமிக்ஸ் படிக்கும் பொறுமையும், ஆர்வமும் மங்கி விட்டாலும், காமிக்ஸ் பற்றியாவது ஏதாவது படித்து வைப்போம் என்ற எண்ணமே உங்கள் பதிவுகளைத் தவறாமல் வாசிப்பதன் நோக்கம்! ஆகவே, கழுத்து சுளுக்கிய காரணத்தினால் பதிவைச் சுருக்கி விட்டு, போகிற போக்கில் பழியைத் தூக்கி எங்கள் மேல் போட வேண்டாமே ப்ளீஸ்?! :D

    ReplyDelete
    Replies
    1. // நாற்பத்தி சொச்ச ஆண்டுகளாக தமிழ் காமிக்ஸ் வெளியிடுவது; விற்பனை தேங்கினாலும் மனம் தளராதிருப்பது; தொள்ளாயிரம் தாண்டிய பதிவுகளின் வாயிலாக அறுபத்து நூறாயிரம் பார்வைகளைக் கடப்பது; பதினோரு ஆண்டுகளுக்கும் மேலாக, வழக்கமான பணிகளுக்கு இடையேயும் வாரந்தோறும் சளைக்காமல் பதிவுகளும், பதில்களும் இடுவது - இப்படி எல்லாவற்றிலுமே ஒரு நிலையான தன்மையைக் கடைபிடிக்கும் அந்த ஒழுங்கும் பொறுமையும் அனைவருக்கும் கை கூடுவதில்லை. //

      100% True!
      +1

      Delete
  45. பின் விளைவுகள் ஜாக்கிரதை - மற்றும் ஒரு உண்மையான யுத்தத்தின் ரணகளத்தை இனிப்பு தடவி ப்ளூகோட் இரட்டையர்கள் ரூபி & ஸுகூபி மூலம் கொடுத்து உள்ளார்கள். இந்த முறை பிளாஷ்-பேக்கில் கதை ஆரம்பிக்கிறது, பொது மக்கள் யுத்தத்தை ஒரு பொழுது போக்காக எடுத்து கொண்டு அதனை பார்க்க வந்தால் என்ன நடக்கும் என்பதை அழகாக சொல்லி உள்ளார்கள்! இதில் ஒரு படைப்பிரிவில் பல நாட்டை சேர்ந்த வீரர்கள் அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர்கள் பாஷையில் பேச வேண்டும், அவர்களை வழி நடத்தும் அதிகாரி அவர்களுக்கு இடும் கட்டளைகளை தெரிந்து சொல்வதற்குள் நடக்கும் விபரீதங்களை காமெடியாக சொல்லி உள்ளார்கள்! மேலதிகாரிகள் தங்களின் சிப்பாய்கள் சொல்லும் யோசனைகளை கேட்க கூடாது என்று பிடிவாதமாக இருப்பது அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம் என்பதை பல காட்சிகள் உணர்த்தின; எப்போதுதான் இது போன்ற அதிகாரிகள் திருந்துவார்களோ என யோசிக்க வைத்தது! ரூபி & ஸுகூபி அடாவடிகள் வழக்கம் போல், ஒருவர் சண்டை போடாமல் சர்வர் வேலை செய்வது மற்றொருவர் யுத்தமே கதி என பின்பக்கம் குண்டடிபட்டு வருவது என கலகல!

    இந்த கதையை முகத்தில் சிரிப்புடன் படிக்க முக்கிய காரணமாக அமைத்தது படங்களுக்கும் அந்த காட்சி அமைப்புகளும், கதையின் காட்சிக்கு என்ன மொழி பெயர்ப்பு தேவையோ அதனை அந்த கண்ணனார் உணர்ந்து சிறப்பாக கொடுத்து உள்ளார்! பாராட்டுக்கள்!

    மொத்தத்தில் "பின் விளைவுகள் ஜாக்கிரதை" மகிழ்ச்சி!

    அடுத்த "ப்ளூகோட் பட்டாளம்" கதை எப்போது?

    ReplyDelete
  46. விஜயன் சார், ஆங்குலெம் கவுரவம் லயன் கிரீடத்தில் கோகினூர் வைரமாகி விட்டது! ஒரு வாழ்நாள் சாதனை! ஆங்குலெம் உங்கள் உழைப்புக்கு கிடைத்த மிக சிறந்த அங்கீகாரம்! வாழ்த்துக்கள் சார்.இதனை ஈரோட்டில் ஒரு பெரிய விழாவாக எடுத்து வாசகர்களாகிய நாம் எல்லாம் கொண்டாட வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பிங்க ஸ்டீல் ஜி..😍😘💪👍👌பட்டைய கிளப்பிடுவோம்..👍

      Delete
    2. @pfb 😍😘😃
      செம்ம ஐடியா ஜி..👍💪

      Delete
    3. அட, ஆங்குலெமெல்லாம் போன மாசம் என்றாகி விட்டது சார் ; ஒரு ஜாலியான அனுபவமாய் எடுத்துக் கொண்டபடிக்கே அடுத்த பணிக்குள் புகுந்திடுவோம் ! And ஒரு லோடு காத்துக் கிடக்கின்றது !!

      ஈரோட்டில் ரவுண்டு பன் + ஸ்பாஞ் கேக் என்று கொண்டாடினால் போச்சு !

      ஸ்டீல் வேற 'வைச்சி செய்வோம்லே' ன்னு சொல்லிக்கிறார் ; so ஜாக்கிரதையா இருந்துக்கணும் !

      Delete
  47. ஆனால் மாயாவி சாருடனோ, அரை நூற்றாண்டாய் அதே 13 கதைகளோடு 'ரிங்கா ரிங்கா ரோஸஸ்' ஆடிக் கொண்டே இருப்பது தானே யதார்த்தம் ?!////
    😂😂😂

    ReplyDelete
  48. விஜயன் சார், 6,001,938 பார்வைகளை கடந்து விட்டோம்! ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல் ப்ளீஸ் சார்!

    ReplyDelete
  49. 60,01,971பார்வைகள் ..ஆகிடுச்சுங்கோ..😍😘😃😀💪👍👌

    ReplyDelete
  50. 6 மில்லியன் பார்வைகளை கடந்ததற்கு என்ன ஸ்பெஷல் என்பதை அடுத்த பதிவில் அறிவிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  51. முதல்யூகத்திலேயே சரியானவிடை.1.ஜேம்ஸ்பாண்ட் 2.o. 2 மாடஸ்டி ப்ளைசி

    ReplyDelete
  52. கவிஞர் வச்சு செய்யறதுன்னா என்னாங்க சார்.மீறிமீறிப்போனா ஒரு ஸ்பெசல் கவிதை வரைவார்

    ReplyDelete
    Replies
    1. ஆங்குலத்தில் ஓர் நாள்
      கனவறையோரம் விசயன் காத்திருந்தாராம் தோழா....விசயன் காத்திருந்தாராம்

      Delete
  53. நாம் வேணாஈரோடு புக் பேரிலேயே "ரவுண்டு பன்னு"ஒண்ணு எக்ஸ்ட்ராவா சாப்டு கொண்டாடிய லாம் சார்.எது எப்படியோ கொண்டாடுவோம்.ஸாகோர் பேரவையின் முதலாம் ஆண்டு பங்கேற்புடன் கொண்டாடலாம் சார்.கரூர்ராஜசேகரன்

    ReplyDelete
  54. LED பிளாஸ்மா , வெப் சீரிஸ் ,இன்டர்நெட் ,சோசியல் மீடியா ,பப்ஜி போன்ற நேரத்தை விழுங்கி ஏப்பமிடும் அரக்கர்களிடம் சிக்காத 70'S,80'S,90'S கிட்ஸ்களின் ரசனையை தாண்டி 2000+ கிட்ஸ்களை காமிக்ஸ் அடையாததின் வெளிப்பாடு நமது மங்கா காமிக்ஸ் அவர்சன்.

    இந்த பயணத்தை ஒரு அலார்ம் பெல்லாக எடுத்துகொண்டு , இந்த தலைமுறை கிட்ஸ்களை கவர, செய்ய வேண்டிய கோர்ஸ் கரெக்சனை மெது மெதுவாக அமல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    ReplyDelete
  55. வணக்கம் சகாக்களே..

    ReplyDelete
  56. கதை சொல்லும் காமிக்ஸ் வந்தாச்சாம்....வெளிய வந்ததால் நாளை தான் பிடிக்கனும்

    ReplyDelete
    Replies
    1. சிறையில இருக்கீயா?

      Delete
    2. உன் ஆட்டம் தாங்க முடியாமல் வீட்டில் உன்னை ரூமில் போட்டு அடைத்து வைத்து விட்டார்கள் போல! கீ வேற வீட்டம்மா கிட்ட இருக்கு ஊரில் வேற கிடையாது போல ! மகனே கிடடா ரூமுக்குள்ள :-)

      Delete
  57. சார் செம கலக்கல்...சான்சே இல்லை...டிஸ்னியெல்லாம் தூக்கி சாப்டுடுச்சி வா/ழ்த்துக்கள்...வெண்மணி இளவரசி செம....என் மகன் நாலைந்து வாரமாக கதை கேட்கும் ஆர்வத்தில் இருக்கிறான்...இன்று இரவு பகிர்கிறேன்....சூப்பர் இது வரை வந்த கதைகள்ள ஸ்பைடரயும் மிஞ்சுமளவு டாப் ஈர்ப்பிதே

    ReplyDelete
  58. பரணி;சிறையில் 'இரு'க்கீயா ? கவிஞர்;இல்லை 'ஒரு'கீதான். -;

    ReplyDelete
  59. வெண்பனி இளவரசி & எல்லாம் அழகே - சூப்பர் கதைகள் சார்! கதையை முழுவதும் படித்து முடித்த பின்னர் தான் கீழ வைத்தேன்! இந்த முறை இத்தகதைகள் படிக்கச் இன்னும் சுவாரசியமாக இருக்க காரணம் மொழி பெயர்ப்பு (ஒரிஜினலில் இது உண்டா என தெரியவில்லை) குழந்தைகள் கண்டிப்பாக விரும்புவார்கள் இந்த மொழி பெயர்ப்பை (நானும் தான்)! எனது பையன் இரண்டு கதைகளையும் படம் பார்த்தே எனக்கு கதையை சொல்லிவிட்டான் :-) படங்கள் வண்ணத்தில் தெளிவாக நன்றாக உள்ளது, என்ன இளவரசியை அழகாக வரைத்து இருக்கலாம் :-) கடந்த இரண்டு புத்தகங்களுக்கு தடினமான அட்டையுடன் கொடுத்தீர்கள், இந்த கதைகளுக்கு அது மிஸ்ஸிங்; இதற்கு கண்டிப்பாக உங்களிடம் ஏதாவது காரணம் இருக்கும்!

    கதை சொல்லும் காமிக்ஸில் இந்த இரண்டு கதைகளும் முதல் இடத்தை பிடிக்கிறது! இது போன்ற வேறு கதைகள் இருந்தால் surprise ஆக புத்தக திருவிழாக்களில் குழந்தைகளுக்கு வெளி ஈடுங்கள்; கண்டிப்பாக வாங்குவார்கள், விலை கொஞ்சம் குறைவாக கிடைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. கொசு முட்டை சைசிலான சந்தா மட்டுமே இந்த வரிசைக்கு சாத்தியப்பட்டுள்ளது சார் ; so வீராவேசமாய் முதல் இதழை மட்டும் கணிசமாய் அச்சிட்ட பின்பாய், பிரிண்ட் ரன்னை பற்பல மடங்கு குறைத்துக் கொள்ள வேண்டிய நெருக்கடி ! ஆனால் அறிவித்த அதே விலைகள் தான் தொடர்ந்தன எனும் போது, கையைக் கடிக்கும் செலவினங்களில் எதையாச்சும் குறைக்கும் முனைப்பில் கெட்டி அட்டைக்கு கல்தா தர வேண்டிப் போனது !

      ஒரு அழகான முயற்சி முதல் சீசனோடு காணாது போகவிருப்பதில் நிரம்பவே வருத்தம் எங்களுக்கு !

      Delete
  60. இரண்டு புத்தகங்களுக்கு தடினமான அட்டையுடன் கொடுத்தீர்கள், இந்த கதைகளுக்கு அது மிஸ்ஸிங்; இதற்கு கண்டிப்பாக உங்களிடம் ஏதாவது காரணம் இருக்கும்!

    Cost cutting?? குறிப்பாக குழந்தைகள் படிப்பது கொஞ்சம் கெட்டியான அட்டையாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. // குறிப்பாக குழந்தைகள் படிப்பது கொஞ்சம் கெட்டியான அட்டையாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.//

      +1

      Delete
  61. Agent Robin 2.0, Newyork Police officer எப்போதும் போல கொலையாளி யார் என்று தெரியாத அக்மார்க் risk இன்வெஸ்டிகேஷன்,
    எப்போதும் போல கூட்டாளிகள் அல்பீ, ஜிம்மி கார்னெட் ,lieutenant ராயன் உதவியுடன் இன்வெஸ்டிகேஷன். மார்வின் மட்டும் missing இந்தக் கதையில்.
    அட்டைப்படம் அருமை ,ஆனால் பின் அட்டையில் உள் பக்கம் இருந்த ராபின், அட்டைபடமாக போட்டு இருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். திக்கான தாள், தெள்ளத் தெளிவான ஓவியங்கள்.
    V காமிக்ஸ்சில் தொடர்ந்து Robin 2.0 கதைகள் வரட்டும்.

    ReplyDelete
  62. வணக்கம் காமிக்ஸ் காதலர்களே..

    ReplyDelete
  63. சார்.மங்கா என்ன final பண்ணியிருக்கீங்க .செலக்டா ரிஜக்ட்டுங்களா . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  64. Surya jeeva .thank you sir.ஆனாக்கா தப்பான பதில்னு நினைக்கிறேன்.கரூர்ராஜசேகரன்

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா அது ஆசிரியர் தந்த பதில் சார்.. கேட்டுகிட்டே இருப்போம்.. ஒரு நாள் கிடைச்சுடும்

      Delete
  65. பிளாக்மெயில் பண்ண விரும்பு!

    இந்த மாத ராபின் கதை, மெய் மறக்கச் செய்யும் கொலைக்களம்!

    இது ராபின் 2.0 என்று முன்னுரை இருந்ததை எத்தனை பேர் கவனித்திருபபீர்கள் எனத் தெரியவில்லை. அதாவது, 50+ வயதான ராபின் தான் நினைவுகளை அசை போடும் தொடர்...

    ராபினுக்கு துப்பு கொடுக்கும் குள்ள மனிதன் அல்பி இந்த கதையில் தான் ராபினுக்கு அறிமுகம் ஆகிறார்.

    கதையை பற்றி சொல்ல வேண்டுமானால், வழக்கம் போல ஒரு கொலை, ஒரு கொலைகாரன், கொஞ்சம் சேசிங், கொலை செய்தவன் இவனாக இருப்பானோ என்று நினைப்பவர் செத்துப் போவது, கடைசியில் லாஜிக் இடிக்காமல் இவர் தான் கொலையாளி என வெளிப்படுத்துவது என எதிலும் குறை வைக்கவில்லை...

    ரேட்டிங் 9/10 தயங்காமல் கொடுக்கிறேன்...

    ❤️

    ReplyDelete
  66. ஒரு நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டோமே. ஆங்குலம் சென்று இன்று தாயகம் திரும்பும் எங்கள் ஆசிரியரை வாழ்த்தி வணங்கி வரவேற்கிறோம்.இவண் தமிழ் காமிக்ஸ் வாசகர்கள்னு எல்லா செய்தித்தாள்களிலும் விளம்பரம் கொடுத்து கொண்டாடியிருக்கலாமே . எல்லாம் போச்சே.மிஸ்பண்ணிட்டோமே.

    ReplyDelete
  67. @Edi Sir.😍😘

    இன்று பதிவுகிழமை..😃👍

    உயிரைத்தேடி காத்திருக்கிறோம்..😃😀🙏

    ReplyDelete
  68. This comment has been removed by the author.

    ReplyDelete
  69. @Edi Sir..😍😃😘😀

    *ஆங்குலம்* சென்று தமிழ் காமிக்ஸ் உலகின் பெருமையை பார்புகழ பறைசாற்றி வந்த வெற்றி விழாவை கொண்டாடும் விதமாகவும்,

    நம Blog 60,05,802.. பார்வைகளை தாண்டிவிட்டதை கொண்டாடும் விதமாகவும்,

    நமது Blogல் ஆசிரியரின் பதிவுகள் 1000 எண்ணிக்கைகளை நெருங்குவதாலும்..

    சிறப்பு வெளியிடாக ஏதாவது 10 பக்கமோ,
    20 பக்கமோ ஏதாச்சும் தருவீங்கன்னு ...
    150 பக்கம் கொடுத்தாலும் சரீங்க.😃...

    என்று காத்துகிடக்கும்

    *லயன் முத்து காமிக்ஸ் குழுமத்தின் அடிவிழுதுகள்*😍🙏
    (7 முதல் 77 வரை)
    👶👦👧👱👩👴👵

    ReplyDelete
    Replies
    1. சரி தான் தலைவரே... ஒரு சிறப்பு வெளியீடு பற்றி சீக்கிரமே சொல்லுங்க சார். இன்று சென்னை, திருப்பூர், சிவகங்கை புத்தக விழாக்கள் பற்றி, அடுத்து வர இருக்கும் ஆன்லைன் புத்தக விழா பற்றி தகவல்கள் தருவீங்களா?

      Delete
  70. Replies
    1. @Steel..😍😃

      //இரும்புக்கை மாயாவி ....சூர்யா நடிக்க....லோகேஷ் கனகராஜ் இயக்க வருதாமே //

      காந்தி செத்துட்டாரா ..moment..😁😁😁😃

      Delete
  71. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  72. சார் இன்று பதிவுக்கிழமை சார்

    ReplyDelete
  73. Replies
    1. சாமி பதிவு இல்ல காமிக்ஸ் பதிவுதான் வரும் 😀😀😀

      Delete
  74. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

    ReplyDelete