Powered By Blogger

Saturday, February 25, 2023

மந்தி # 1

 நண்பர்களே,

வணக்கம். மந்தியாட்டம் மரத்துக்கு மரம் தாவும் மனசுகளுக்கு மத்தியில்  ஒரு போட்டி மட்டும் வைத்தால், கோப்பையை சந்தேகமே இன்றி ஒரு முழியாங்கண்ணன் கையில் ஒப்படைத்து விட்டுப் போய்க்கினே இருக்கலாம் ! ஏனென்கிறீர்களா ? பெண்டு நிமிரும் அளவுக்கு வேலைகள் இருக்கும் போது - "ச்சே...கொஞ்சமாச்சும் பிரேக் கிடைச்சா எப்டி  இருக்கும் ?" என்று மனசு ஏங்கும் ! அதே மனசானது, நாலு நாள் அக்கடாவென ஓய்விலிருந்தால் - 'போச்சா சோணமுத்தா ? ரிட்டையர் ஆகிப்புட்டா இப்டி தான் சொரிஞ்சிக்கினு இருக்கணுமா ?' என்று அல்லாடும் ! And இதுவாச்சும் தேவலாம் போலும் - புல் பிசியில் பணிகள் ஓடிக்கொண்டிருக்கும் சமயத்திலேயே திடீரென வேதாளமாய் முருங்கை மரங்களைத் தேடி ஓட்டமெடுக்கிறது ! "ஏனு சமாச்சாரமோ நயினா ?" என்று அதனைக் கேட்டால் என்ன சொல்லுகிறது தெரியுமோ ? "பிசியா இருக்கோம் தான் ! ஆனாலும் குறுக்காலேகூடி இன்னும் ஏதாச்சும் த்ரில்லா திட்டமிட்டு , திரி கொளுத்திப் போட்டாக்கா, செம ஜாலியா இருக்கும்லே ? மொத்த ஆபீசே அல்லோலம் + கல்லோலம் படுமில்லியா ?" என்று சொல்லிவிட்டு பல்லைக் காட்டுகிறது ! இப்போது சொல்லுங்களேன் - மந்தி # 1 பரிசு நமக்குப் பொருத்தமா - இல்லையா என்று ? 

பொதுவாகவே எதையாச்சும் நான் கோக்குமாக்காய் திட்டமிடுவதன் முதற்காரணமே - என்னை நானே தட்டி எழுப்பிக் கொள்ளும் பொருட்டாகவே இருப்பதுண்டு ! கொட்டாவி கிழிந்து கொண்டிருந்ததொரு பின்மதியப் பொழுதினில் என்னை நானே உலுக்கிக் கொள்ளத் திட்டமிட்டது தான் - "மெகா ட்ரீம் ஸ்பெஷல்" ! பாட்டரியில் சார்ஜ் தக்கனூண்டு குறைவது போலாய்த் தோன்றிய தருணத்தில் உதித்தது தான் "ஜாலி ஸ்பெஷல்" ! இரண்டாவது இன்னிங்சில், ஒரு மிடறு கூடுதல் உத்வேகத்தோடு, வீரியமாய்ப் பணியாற்ற என்னை நானே பிட்டத்தில் உதைத்துக் கொள்ளப் பயன்படுத்தியது தான் NEVER BEFORE SPECIAL ! ஆனால் - ஆனால் - முழி பிதுங்கும் லெவலுக்கு வேலைகள் குவிந்து கிடக்கும் பொழுதிலும், இன்றைக்கு ஒரு extra கிக் தேடும் இந்தப் பிராந்தனை என்னவென்பது ? So இதோ, அடுத்த 40+ நாட்களை எங்களுக்கே ஒரு மெகா சவாலாக்கிக் கொள்ள முனைந்திட ஒரு முகாந்திரமாய் - ஆன்லைன் புத்தக மேளா '23 !!

1987-ல் ஒரு தலையணை பருமனில் "தீபாவளி சூப்பர் ஸ்பெஷல்" என out of the blue எட்டோ, பத்தோ கதைகளுடன் ஒரு மெகா இதழின் அறிவிப்பை வெளியிட்ட நாட்களுக்கும், இப்போதைய பொழுதுகளுக்கும் இடையிலுமே கொஞ்சம் ஒற்றுமைகள் இல்லாதில்லை ! பார்த்த கதைகளை எல்லாம் பிசாசாய் வாங்கிக் குவித்திருக்க, அவற்றுள் முடங்கிக் கிடக்கும் டப்பு ரிலீஸ் ஆனால் தேவலாமே என்ற எண்ணம் ஒரு கட்டத்தில் மேலோங்கிய போது பிறந்தது தான் அந்த 1987-ன் மைல்கல் இதழ் ! இன்றைக்கும் கூட அது போலானதொரு சூழல் எனலாம் ! அன்றைக்கு கதைகளால் பீரோ நிறைந்து கிடந்ததெனில், இன்றைக்கு எனது லேப்டாப்பின் hard disk கதைக்கோப்புகளால் நிறைந்து ஓடுகிறது ! 

அப்போதெல்லாம் சாம்பார் ; ரசம், மோர் குழம்பு ; வத்தல் குழம்பு - என சகலத்தையும் ஒரே சட்டியில் கவிழ்த்து சுவையான சுண்டக்குழம்பு பண்ணிட அனுமதி இருந்தது - and ஒரே புக்கில் அல்லாரையும் திணித்திருந்தோம் ! ஆனால் இன்றைக்கோ அது சாத்தியமல்ல எனும் போது - தனித்தனியாய் தான் திட்டமிட்டாக வேண்டியுள்ளது ! So ஏப்ரல் 15 & 16 தேதிகளில் (சனி & ஞாயிறு) நமது ஆன்லைன் புத்தக விழாவினில் ஒரு டிப்பர் லாரி லோடுக்கான புக்ஸை இறக்கிட உத்தேசித்துள்ளோம் !!

*உயிரைத் தேடி - black & white இதழ் !

*உயிரைத் தேடி - கலர் இதழ்

*MINI COMICS - சின்ன விலையில் - பாக்கெட் சைஸ் இதழ்கள் - இரண்டோ / மூன்றோ / நான்கோ ?!

*ஒரு black & white கி.நா.

*ஒரு கலர் டிடெக்டிவ் ஜாகஜம்

*ஒரு க்ளாஸிக் மறுபதிப்பு 

*ஒரு கார்ட்டூன் 

*ஒரு 'தல' க்ளாஸிக் 

*ஒரு எது மாதிரியும் இல்லாத புது மாதிரி 

என்று மொத்தம் ஒரு டஜன் இதழ்களைத் திட்டமிட்டுள்ளோம் ! And please note : "உயிரைத் தேடி" கலர் இதழ் நீங்கலான பாக்கி புக்ஸ் அத்தனை பெரிய விலைகளில் இருந்திடாது ! So கவிஞர் எதையாச்சும் அள்ளி விட்டால், a pinch of salt ப்ளீஸ் !

லட்சியம் ஒரு டஜன்...நிச்சயம் at least முக்கால் டஜன் !! 

என்பதே இந்த புத்தக மேளாவின் அடையாளமாக இருக்கப் போகிறது ! Of course - கையிருப்பில் உள்ள இதழ்களை அதிரடி டிஸ்கவுண்ட்களில், அந்த 2 நாட்களிலும் விற்பனை பண்ணிடவும் உள்ளோம் தான் ! 

So இடத்தைக் காலி பண்ண முனையும் அதே மூச்சில், கிட்டங்கிக்குப் புதியவர்களை ரெடி செய்திடும் மஹா சிந்தனையில் எடிட்டர் # 899 இருக்கான் ; நிம்பள் இந்த மேளாவை support செய்து, நம்பள் மூஞ்சி மேலே சாஸ்தி கரி அப்பாது காப்பாத்துறான் ! முறைச்சிக்கினு நிற்கும் எடிட்டர் # 900 குச்சியை கொண்டு நம்பள் நடுமண்டையிலே ஒரு போடு போடாமலும் நிம்பள் காப்பாத்தறான் !Please !!

Jokes apart, இந்த இதழ்களினில் சகலத்தையும் நீங்கள் வாங்கிட வேண்டுமென்றெல்லாம் நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை ! உங்கள் ஆர்வங்களுக்குத் தீனி போடுபவற்றை மட்டும் இந்த 2 தினங்களில் வாங்கிக் கொண்டு, பாக்கியினை உங்கள் ஊர்ப் பக்கமாய் நமது புத்தக விழா கேரவன் ஜாகை போடும் தருணங்களில் வாங்கிக் கொள்ளவும் செய்யலாம் ! இதோ இப்போது கூட book fair சக்கரங்கள் சுழல ஆரம்பித்து விட்டன - நெல்லையில் பிப்ரவரி 25 to மார்ச் 7 & நாமக்கல்லில் பிப்ரவரி 28 to மார்ச் 10 தேதிகளில் நம்மாட்கள் காத்திருப்பர் அந்தந்த புத்தக விழாக்களில் ! 

புத்தக விழாக்களின் விற்பனைகளுக்கும் உரம் சேர்த்திடவுள்ள இதழ்களாகவும், கையிருப்பில் உள்ள கதைகளைக் கொஞ்சமாய் இறக்கி விடுமொரு முயற்சியாகவும் இந்த திடீர் திட்டமிடல் அமைந்திடும் ! And let's have some fun along the way folks !!

இதற்கென திட்டமிட்டுள்ள தேதிகள் : 

ஏப்ரல் 1 & 2 

(அல்லது)

ஏப்ரல் 15 & 16 

அந்நேரத்து பப்பாசி புத்தக விழாக்களின் அட்டவணைகளுக்கேற்ப, நமது மொட்டைமாடி மேளாவின் தேதிகளை finalize செய்திடுவோம் ! So ஆட்றா ராமா...தாண்ட்றா ராமா all over again !! 





Bye all...see you around ! Have a fun weekend !


நமது நெல்லை புத்தக விழா அரங்கில் !!


254 comments:

  1. Replies
    1. அடடா.. செம்ம விருந்து காத்திருக்கிறது போலவே !!! ஏப்ரலிற்கு waiting....

      Delete
  2. இரவு வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  3. வணக்கமுங்கோ 😍🙏

    ReplyDelete
  4. ////*MINI COMICS - சின்ன விலையில் - பாக்கெட் சைஸ் இதழ்கள் - இரண்டோ / மூன்றோ / நான்கோ ?!

    *ஒரு black & white கி.நா.

    *ஒரு கலர் டிடெக்டிவ் ஜாகஜம்

    *ஒரு க்ளாஸிக் மறுபதிப்பு

    *ஒரு கார்ட்டூன்

    *ஒரு 'தல' க்ளாஸிக்

    *ஒரு எது மாதிரியும் இல்லாத புது மாதிரி
    /////

    வாவ்! வாவ்! வாவ்!!

    இது அல்லாத்திலும் ஒரு செட் பார்சேல்...!!!

    ReplyDelete
    Replies
    1. STV கிட்டே சொல்லி ஒரு ஸ்டீல் பூரி கட்டையும் பார்சல்லல்லல் !

      Delete
    2. எனக்கும் எனக்கும்

      Delete
    3. இதை கேட்கும் போதே எனது கடைவாயில் ஜொள்ளு பிரவாகம் எடுக்கிறதே

      Delete
    4. Kumar ji..க்கு ஜொள்ளை துடைக்க திருப்பூர்ல இருந்து ஒரு டஜன் துண்டு பார்சேல்...👄😍😘

      Delete
    5. // இது அல்லாத்திலும் ஒரு செட் பார்சேல்...!!! //

      Me too

      Delete
    6. //Kumar ji..க்கு ஜொள்ளை துடைக்க திருப்பூர்ல இருந்து ஒரு டஜன் துண்டு பார்சேல்.///

      மாடஸ்டி படம் போட்ட துண்டுன்னா இன்னும் நல்லா அழுத்தி அழுத்தித் துடைப்பாரே உங்க செயலர்?!! ;)

      Delete
    7. அதே அதே விஜய். அப்படியே மேச்சேரி கண்ணன் மற்றும் மகேந்திரனுக்கும் :-)

      Delete
  5. @ஸாகோர் பேரவை..😍😘😃😀

    மக்களே அலைகடலென அணி திரள்வீர்..😘🙏

    நாமக்கல்லில் நமது ஸாகோர் பேரவையின் முதல் மாநில மாநாடு..😍😘

    வருக..வருக..😍😘😃😀

    காமிக்ஸ் பெருந்தகைகள் வருகை தந்து விழாவை சிறப்பிக்க உள்ளார்கள்..💐🌷🌹

    தலைவர் அழைக்கிறார்..😍😘😃😀

    அனைவரும் வருக..👍👌
    ஆதரவு தருக..🙏

    ReplyDelete
    Replies
    1. "கிடா விருந்து இருக்குமாயின் 'விலா'வை சிறப்பிக்கிறது பற்றி யோசிக்கலாம்னு" புகை சமிக்ஞை சொல்லுது சார் !

      Delete
    2. நீங்கள் வருவதாக இருந்தால் எல்லாமே ரெடி தான் சார்

      Delete
    3. நீங்க வர்ரீங்கன்னு சொல்லுங்க சார்..😍😘😃😃😀
      நல்லி எலும்பு ஸ்பெஸல் , போட்டி பொறியல் , தொடைக்கறி துவையல் னு போட்டு அசத்திறலாம்...😍👍👌💪

      Delete
    4. பிழைச்சு போகட்டும் சார் கிடாக்கள் !

      Delete
    5. ///நாமக்கல்லில் நமது ஸாகோர் பேரவையின் முதல் மாநில மாநாடு..😍😘///

      மரியாதைக்குரிய மைக்செட்காரர் அவர்களே..
      சிறப்புக்குரிய சீரியல் செட்காரர் அவர்களே.. ;)

      Delete
    6. ஆடலும், பாடலும் கூட உண்டாமே ?

      Delete
  6. அருமை யான இலட்சியம்.

    ReplyDelete
  7. அடேய்..ஆர்ச்சி இரும்பு மண்டையா..😍

    அந்த காலச்சக்கர மெசினை கொஞ்சம் சீக்கிரம் கொண்டாப்பா..😃

    நேரா..ஏப்ரல் போயி திருவிழாவை என்ஜாய் பண்ணிட்டு திருப்பி கொடுத்திடறேன்பா..😘🙏💛❤

    ReplyDelete
    Replies
    1. எதுக்கு திரும்பி வரணும்?

      Delete
    2. இது கேள்வி...😍😘😃😀

      Delete
  8. @Kumar,சேலம்...😍😘😃😀
    திரும்பி வரோனும்.. மார்ச் புக்ஸ் படிக்கோணும்ல..
    அதான் return back..😍😘😃😀

    ReplyDelete
    Replies
    1. தலைவரே வர வேண்டாம். அந்த புத்தகங்கள் உங்கள் வீட்டில் தானே இருக்கும் ஏப்ரல் மாதம் அப்போதே படித்துக் கொள்ளலாம்.

      Delete
    2. இது "சிகரங்களின் சாம்ராட்" மெரி இருக்கே ?

      Delete
    3. // இது "சிகரங்களின் சாம்ராட்" மெரி இருக்கே ? // ஹிஹிஹி நானும் கொஞ்சம் try பண்ணினேன்

      Delete
  9. // ஒரு black & white கி.நா.

    *ஒரு கலர் டிடெக்டிவ் ஜாகஜம்

    *ஒரு க்ளாஸிக் மறுபதிப்பு

    *ஒரு கார்ட்டூன்

    *ஒரு 'தல' க்ளாஸிக்

    *ஒரு எது மாதிரியும் இல்லாத புது மாதிரி // இந்த ஆறுமே போதுமே ஒரு ரெண்டு மாதம் தாங்கும்

    ReplyDelete
    Replies
    1. மூணு நாள்ல எல்லாத்தையும் படிச்சு முடிச்சுட்டு அடுத்த புக்கு எப்பன்னு கேட்டுட்டு நீங்க வரப்
      போறீங்கன்னு நான் பந்தயம் கட்டறேன்.

      Delete
    2. 3 நாள்ல எல்லாத்தையும் படித்து முடித்து விடுவேன். அதில் சந்தேகம் இல்லை.

      Delete
  10. நாமக்கல் ஆஆஆ.. நம்ப ஜம்பிங் தலீவர் அங்கேயே குந்திக்கிட வாய்ப்புண்டு ....😉😉

    ReplyDelete
  11. Replies
    1. சரியாக சொன்னீங்க சத்யா

      Delete
  12. வணக்கம் நண்பர்களே....

    ReplyDelete
  13. வந்துவிட்டேன்

    ReplyDelete
  14. உயிரைத் தேடி - black & white இதழ் !

    *உயிரைத் தேடி - கலர் இதழ்

    *MINI COMICS - சின்ன விலையில் - பாக்கெட் சைஸ் இதழ்கள் - இரண்டோ / மூன்றோ / நான்கோ ?!

    *ஒரு black & white கி.நா.

    *ஒரு கலர் டிடெக்டிவ் ஜாகஜம்

    *ஒரு க்ளாஸிக் மறுபதிப்பு

    *ஒரு கார்ட்டூன்

    *ஒரு 'தல' க்ளாஸிக்

    *ஒரு எது மாதிரியும் இல்லாத புது மாதிரி ///

    சொக்கா அத்தனையும் எனக்கா மொமென்ட் இங்கே.

    ReplyDelete
    Replies
    1. // சொக்கா அத்தனையும் எனக்கா மொமென்ட் இங்கே. // ஆமா ஆமா

      Delete
  15. வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  16. ஒரு டஜன் கதைகளில் ஒரு ஆறு கதைகளின் பெயராவது சொல்லலாமே ஜி

    ReplyDelete
  17. #நாமக்கல் புக்ஃபேரில் லயன்முத்துகாமிக்ஸ் ஸ்டால்😘 # அறிவிப்பு..

    அய்யோ...ஜாலி.ஜாலி..🤓😁🤪🤪

    எங்கே பேனர் வைக்கிறது..😶

    எங்கங்க பிளக்ஸ் வைக்கிறது..ன்னு..
    பெரிய யோசனை எல்லாம் ஓடுதே..😁😁

    சொக்கா..நான் என்னா செய்வேன்..🫣🫣🫣😘

    ReplyDelete
    Replies
    1. // எங்கே பேனர் வைக்கிறது..😶

      எங்கங்க பிளக்ஸ் வைக்கிறது..ன்னு //

      பேனர் வைக்கிற இடத்தில் பேனர், பிளக்ஸ் வைக்கிற இடத்தில் பிளக்ஸ் ஜி :-)
      ஜம்ப் பண்ணுடா பரணி :-)

      Delete
  18. தங்களின் அறிவிப்பு சூப்பர் சார்! ஒரு கணம் கனவுலகத்தில் இருக்கிறேனா என்று கிள்ளிப் பார்த்தேன். வலிக்கிறது. நிஜம்தான்! அவ்வளவும் எனக்கு ஒரு பார்சல்! நீங்கள் கால் கட்டை விரலை அடிக்கடி வாய்க்குள் திணிப்பது- எங்களுக்கு கொண்டாட்டம் சார்!

    ReplyDelete
    Replies
    1. இது காலில் உள்ள எல்லா விரல்களையும் வாய்க்குள் வைக்கும் வித்தை :-)

      Delete
  19. .இத்தனை புத்தகங்கள்ரிலீஸ்னாஎல்லாரும்குமிஞ்சிர மாட்டோமா.சார் ஈரோடு மாதிரியே ஒரு வாசகர் சந்திப்பும் வேண்டும் சார்

    ReplyDelete
  20. எடிட்டர் சமூகத்திற்கு ஒரு வேண்டுகோள். ஏற்கனவே இந்த கோரிக்கையை நான் ஒரு முறை வைத்திருந்தேன். ஆரம்பத்தில் எங்களை நவஜோ என்று பழக்க படுத்தி விட்டீர்கள் . அதை வாசக ஒருவர் சொன்னார் என்று நவஹோ என்று மாற்றி மனதில் பதியவே மாட்டேங்குது. அதை மாற்ற முடியுமா என்று பாருங்கள். அப்புறம் நிறைய வாசகர்கள் சொன்னார்கள் என்று மேக்சி லயனை நிப்பாட்டி விட்டீர்கள் . ஆனால் தற்போது உங்களிடம் உள்ள ஸ்டாக்கில் எந்த ஒரு மேக்சி லயனும் இருப்பதாக தெரியவில்லை .அதனால் திரும்பவும் மீண்டும் மேக்ஸி லயன் ஃபார்மெட்டில் புத்தகங்கள் வெளியிட வேண்டும் என்று ஒரு கோரிக்கை. அப்புறம் மீண்டும் ஒரு மாடஸ்ட்டி ஸ்பெஷல் பற்றிய கோரிக்கை.

    ReplyDelete
  21. சூப்பர் சார்....உற்சாகப்பதிவு.....80 களயும் தாண்டும் பொற்காலம்....
    ஃபிப்ரவரி புத்தகத் திருவிழா இதழ்கள் என்னன்னு சொல்லலியே

    ReplyDelete
  22. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  23. தித்திக்கும் அறிவிப்புகள்

    ReplyDelete
  24. உயிரைத் தேடி - black & white இதழ் !

    *உயிரைத் தேடி - கலர் இதழ்

    *MINI COMICS - சின்ன விலையில் - பாக்கெட் சைஸ் இதழ்கள் - இரண்டோ / மூன்றோ / நான்கோ ?!

    *ஒரு black & white கி.நா.

    *ஒரு கலர் டிடெக்டிவ் ஜாகஜம்

    *ஒரு க்ளாஸிக் மறுபதிப்பு

    *ஒரு கார்ட்டூன்

    *ஒரு 'தல' க்ளாஸிக்

    *ஒரு எது மாதிரியும் இல்லாத புது மாதிரி

    சொக்கா அத்தனையும் காமிக்ஸ் ஆச்சே !! காமிக்ஸ் ஆச்சே !!

    ReplyDelete
  25. சார் ஈரோடு போலவே நாமக்கல்லிலும் ஒரு வாசகர் சந்திப்பு .

    ReplyDelete
  26. Replies
    1. நான் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்:-)

      Delete
  27. Happy news Sir...One more....no....many more Summer Specials...

    ReplyDelete
  28. ஆஹா.. அறிவிப்புகள் எல்லாம் தூள்.. தூள். அட்டகாசம் போங்கள்.

    ReplyDelete
  29. மந்தி சிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்.

    ReplyDelete
  30. // ஒரு கார்ட்டூன் //

    I jolly jolly:-)

    ReplyDelete
  31. ////கையிருப்பில் உள்ள இதழ்களை அதிரடி டிஸ்கவுண்ட்களில், அந்த 2 நாட்களிலும் விற்பனை பண்ணிடவும் உள்ளோம் தான் ! /////

    One set cartoon books parcel. .

    ReplyDelete
  32. தமிழ் புத்தாண்டை
    முன்னிட்டு
    புத்தக திருவிழா
    விஜயன் Sir.க்கு
    நன்றிகள்

    ReplyDelete
  33. எங்களுக்கும்
    ஏப்ரல் வரும் ஏப்ரல் வந்தால்
    மினியும் வரும் மினியும் வந்தால்
    அனைவரைம் வாங்க
    வைப்போமே (2)

    .

    வளரும் வளரும்
    என்றே காத்திருந்தோம்
    மலரும் மலரும் என்றே
    பார்த்திருந்தோம் (2)

    லயன் முதிா்ந்து
    மினியும் வரும் வளர்ந்தவுடன்
    நிறைய கிடைக்கும் கதைகளெல்லாம்
    கிடைத்தவுடன் மேலும் கேட்போமே

    எங்களுக்கும்
    ஏப்ரல் வரும் ஏப்ரல் வந்தால்
    மினியும் வரும் மினியும் வந்தால்
    அனைவரைம் வாங்க
    வைப்போமே (2)
    .

    லயனும் முத்தும்
    இங்கே நாம் படித்தோம் கதையும் சுவையும் என்றும்
    நாம் வளர்ந்தோம் (2)

    பணம் படைத்த
    மேனாட்டார் போல் பல

    கதைகள் நாம் பெறுவோம்

    குண்டு கலரு
    கதை வாங்கி வாழ்ந்திருப்போமே

    எங்களுக்கும்
    ஏப்ரல் வரும் ஏப்ரல் வந்தால்
    மினியும் வரும் மினியும் வந்தால்
    அனைவரைம் வாங்க
    வைப்போமே (2)

    ப்ளாக்கில்
    ஒரு கதையுமில்லை சொல்லில்
    ஒரு பொய்யுமில்லை



    பஞ்சமில்லா
    காமிக்கையிலே
    தோல்வியுமில்லை

    (2)

    தோல்வியுமில்லை



    எங்களுக்கும்
    ஏப்ரல் வரும் ஏப்ரல் வந்தால்
    மினியும் வரும் மினியும் வந்தால்
    அனைவரைம் வாங்க
    வைப்போமே (2)

    ReplyDelete
    Replies
    1. பிரமாதம் ஸ்டீல்..!

      கொஞ்சம்கூட சுரம் பிசகாமல் அருமையா வார்த்தைகளை கோர்த்திருக்கிங்க..!
      👏👌👌👌👏

      Delete
    2. செம ஸ்டீல் இதனால் தான் நீங்கள் ஆஸ்தான கவி. அருமை

      Delete
  34. அட்டகாசமான அறிவிப்பு. சிங்கம் களத்தில் மீண்டும் இறங்கி விட்டது. சிங்கத்தின் பின்னால் எப்போதும் போல் துணையிருப்போம். வெற்றி நமதே கவலை வேண்டாம்.

    ReplyDelete
  35. விஜயன் சார், பதிவை பாதியில் நிறுத்தியது போல் தெரிகிறது. முழு பதிவையும் போடுங்கள் சார். மந்தி#2 பதிவு எப்போது சார்?

    ReplyDelete
    Replies
    1. வழிமொழிகிறேன்

      Delete
    2. அதே அதே பதிவு #2 எப்போது சார்?

      Delete
  36. // இப்போது சொல்லுங்களேன் - மந்தி # 1 பரிசு நமக்குப் பொருத்தமா - இல்லையா என்று ? //
    அப்படி எனில் மந்தி 1 போல மந்தி 2,மந்தி 3 படலங்கள் உண்டா சார் ?!

    ReplyDelete
  37. // So ஏப்ரல் 15 & 16 தேதிகளில் (சனி & ஞாயிறு) நமது ஆன்லைன் புத்தக விழாவினில் ஒரு டிப்பர் லாரி லோடுக்கான புக்ஸை இறக்கிட உத்தேசித்துள்ளோம் !! //
    அட்டகாசமான அறிவிப்பு சார், ஆவலுடன் ஒரு காத்திருப்பு...

    ReplyDelete
  38. மந்தி2 மந்தி3படலங்கள் ஈரோட்டுக்கு .வெய்ட் டிங்தானேங்க சார்.இன்றுமுதல்ஆசிரியர் #1என்றுஅன்புடன் அழைக்கப்படுவீர்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ராஜசேகர் சார். அவர் எப்போதுமே ஆசிரியர் #1தான்.

      Delete
  39. மெகா ட்ரீம் ஸ்பெஷல் என்றதுமே 2004 என்று நினைக்கிறேன் . அந்த இதழை தேடி சென்னை முழுவதும்
    தேடி அலைந்த பொழுது கிடைக்கவே இல்லை. கடைசியாக சென்னை தேவி theatre பின்புறம் ஒரு பெட்டிக்கடையில் ஒரு வயதான பெரியவர் ஒரு இதழை வாங்கி வைத்திருந்தார் . ஏற்கனவே வேறு ஒருவர் முன்பே சொல்லி வைத்திருந்து இறுதியில் என்ன காரணத்தாலோ அவர் வராமல் போக , விரக்தியின் உச்ச நிலையில் இருந்த எனக்கு அவர் விற்பனை செய்தார். கடவுளுக்கு ஓராயிரம் நன்றிகள் சொல்லி வாங்கிய புத்தகம் என்வீட்டு பீரோ வில் பத்திரமாக உள்ளது. இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதில் உள்ள கதைகளை படித்து வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நமக்கு இங்கிட்டு சேலம் அஸ்தம்பட்டி மண்டல கடைகளில் 10ரூவா புக்ஸ் எளிதாக கிடைத்திடும்.. ஆனா 100ரூவா புக்குலாம் விற்காதுனு அந்த கடைகளில் கிடைக்காது... சேலம் புதிய பேருந்து நிலைய கடையில் மட்டுமே இதுபோன்ற தடாலடி விலை புத்தகங்கள் டீல் பண்ணுவாங்க...

      புக் வந்த மாதத்தில் ஒவ்வொரு கடையாக கிடைக்காதுனு தெரிஞ்சும் கேட்டுகோண்டே சைக்கிளை உருட்டிகிட்டு, 5.கி.மி. தொலைவில் உள்ள புதிய பேருந்து நிலை கடைக்கு போனால், 5, 6புத்தகங்கள் கவர் போட்டு டிஸ்ப்ளேயில் வைத்து உள்ளார்கள்.... ஒரு புக்கை கைப்பற்றி கொண்டாந்தாயிற்று...

      இன்றும் நம்ம இரும்பு பெட்டியில் வாசம் செய்கிறார் ஜாலி& கெளபாய் ஸ்பெசல் உடன்.....

      அதுபோல மீண்டும் புதையல் எடுக்க தமிழ் புத்தாண்டு அன்று மிக்க ஆவலுடன்.


      பேசாம சீன்னமனூர் சரவணன் பணியில சிவகாசி ஆன்லகன்விழா நடக்கும் இடத்துக்கே போயிட்டா என்ன??? நேர்லயே பார்த்து அள்ளிட்டு வந்திடலாம்... ஹூம், ஜம்பிங்கார் டெக்னிக் தெரிஞ்சா கூட மரத்துக்கு மரம் ஜம் பண்ணியே போய் வந்திடலாம்😜

      Delete
    2. // பேசாம சீன்னமனூர் சரவணன் பணியில சிவகாசி ஆன்லகன்விழா நடக்கும் இடத்துக்கே போயிட்டா என்ன??? நேர்லயே பார்த்து அள்ளிட்டு வந்திடலாம்... // ஊம் என்று ஒரு வார்த்தை சொல்லுங்க 14 night பஸ் ஏறிவிடலாம்.

      Delete
    3. 13 நைட்டு ஊட்டில ஊர்வலம்...
      15 நைட்டு மேங்ளூர்ல மாநாடு...
      14 நைட்டு எங்கேருக்கேன்...??? ஆங் டெல்லியில மீட்டிங்...!!!

      (எல்லோரும் கையில் எடுத்த கல்லை கீழே போடுங்க சாமியோவ்.....🏃‍♂️🏃‍♂️🏃‍♂️)

      கொரியர்லயே வாங்குவோம்....!!!

      Delete
    4. online புத்தகத் திருவிழா ஏப்ரல் 15 & 16 இருந்தால் மிகவும் வசதி, 14 & 15 தேதி விருதுநகரில் இருப்பேன், நேரடியாக நமது அலுவலகத்திற்கு சென்று எல்லோருக்கும் ஹலோ சொல்லிவிட்டு நேரில் புத்தகங்களை வாங்கிவிட்டு அப்படியே "விலா" வை சிறப்பித்து விட்டது வந்து விடலாம் :-)

      Delete
  40. மெகா ட்றேஅம் ஸ்பெஷல் வெளியான மார்ட்டின் இன பழி வாங்கும் ரா என்ஜ\க்கு பிடித்த ஆல் டைம் favourite
    கதைகளில் ஒன்று

    ReplyDelete
  41. மீண்டும் காமிக்சின் பொற்காலம் திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது Sir

    Classic மறுபதிப்பு - Mind எங்கெங்கயோ போகுதே 😄😄😄😄

    ReplyDelete
    Replies
    1. அது நமது இரும்புக்கை மாயாவியா?

      Delete
    2. வேறயாரு.... இரும்பார் தான் க்ளாசிக் னா

      Delete
  42. அடேங்கப்பா...

    அட்டகாசமான அறிவிப்பு சார்...

    கோடையில் கோடை மலர்கள்

    ஆனலைனில் அதிகம் மறுபதிப்புகளே வந்த காரணத்தால் அதிகம் அங்கே எட்டிபார்க்காமல் இருந்தேன்...இந்த முறை முதல் ஆளாக வருகிறேன் சார்...

    ஐயம் வெயிட்டிங்..

    ReplyDelete
  43. ///குறுக்காலேகூடி இன்னும் ஏதாச்சும் த்ரில்லா திட்டமிட்டு , திரி கொளுத்திப் போட்டாக்கா, செம ஜாலியா இருக்கும்லே ? மொத்த ஆபீசே அல்லோலம் + கல்லோலம் படுமில்லியா ?" என்று சொல்லிவிட்டு பல்லைக் காட்டுகிறது///

    ஹா....ஹா.. படா குறும்புக்கார்ர் சார் நீங்க....

    சின்ன வயசுல நம்ம சேட்டைகள்லாம் ஞாபகம் வருது....

    பேரன்,பேத்தியை கொஞ்சும் வயசுலும் அதே குறும்புதனங்களை தொடர்றீங்க பாருங்க...அங்க நிக்கிறீங்க.....😜

    ReplyDelete
  44. ///1987-ல் ஒரு தலையணை பருமனில் "தீபாவளி சூப்பர் ஸ்பெஷல்" என out of the blue எட்டோ, பத்தோ கதைகளுடன் ஒரு மெகா இதழின் அறிவிப்பை வெளியிட்ட நாட்களுக்கும், இப்போதைய பொழுதுகளுக்கும் இடையிலுமே கொஞ்சம் ஒற்றுமைகள் இல்லாதில்லை///

    ----எக்ஸாக்ட்லிங் சார்...
    1990களின் மத்தியில் காமிக்ஸ் படிக்க வந்து தேடியலைந்த நாட்களில் சீனியர் வாசகர்கள் நிறைய சொல்வாங்க 1987ஐ பற்றி....
    அப்போலாம் காமிக்ஸ் பொற்காலம்டா தம்பி விஜி, குண்டு குண்டு புக்கா வரும்; பாக்கெட் சைஸ் 5ரூவா தான் விலை, எல்லாம் சூப்பர் ஹீரோஸ்,அது இதுனு சொல்வாங்க...

    சரி என்னதான் வந்திருக்குனு பிற்பாடு தேடினா ஆத்தி அந்த பெரிசுக சொன்னது நெசந்தான்...

    """1987ல மட்டுமே வந்த ஸ்பெசல்கள் மொத்தம் 6...."""

    1.1987ஜனவரி-லயன் பொங்கல் மலர்- பழி வாங்கும் பாவை-டெக்ஸ் வில்லர்

    2.1987ஏப்ரல்-முத்து-தமிழ் புத்தாண்டு சிறப்பிதழ் –சதிவலையில் மாயாவி + கடத்தல் முதலைகள் - மறுபதிப்பு

    3.1987ஏப்ரல்-லயன் கோடைமலர்-324 பக்கங்கள்-6கதைகள்

    4.1987மே-திகில் சம்மர் ஸ்பெசல்-324பக்கங்கள்-9சித்திரகதைகள்

    5.1987ஜூலை-லயன் 3வது ஆண்டுமலர்-அதிரடிப்படை

    6.1987அக்டோபர்-தி ஆல்டைம் கிரேட் "லயன் சூப்பர் ஸ்பெசல்"-532பக்கங்கள்-ஒரு டஜன் கதைகள்-வெறும் 10ரூவா...!!!!

    ---இம்முறை அந்த ரெகார்டை உடைக்கும் அளவு ஸ்பெசல்கள் அதுவும் ஒரே சமயத்தில்..12ஸ்பெசல்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும்போது ஆஹா...அற்புதமான 2வது பொற்காலம்.....
    "தி கோல்டன் 1987 ரிட்டன்ஸ்"

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசமா எழுதியிருக்கீங்க STVR! காமிக்ஸ் ரசிகர்களின் நாவில் அடிக்கடி எச்சில் ஊற வைத்த காலகட்டம் அது!

      அதுமாதிரியான கதம்ப குண்டூஸ்கள் இன்று சாத்தியமில்லாமல் போனது - காலம் செய்த கோலம்!

      Delete
    2. சூப்பர் டெக்ஸ்....ஆஹா இத்தனை இதழ்களுமா ...ஒரே வருடத்தில்....அத்தனையும் ஒரே வருடத்தில் வாங்கிய துதானா...ஆனாலும் அனைத்தயும் மாதந்தவறாது வாங்கியது வசந்தம் தான்..பழி வாங்கும். பாவை சொரசொர அட்டை அசத்தும் டெக்ஸ்..பீளமேடு ரோட்டு கடை
      2. ஹெச் எம் முக்கு முத்து முதல் இரு கதைகள்
      3...தண்ணி டாங்க்
      4...இரும்புக் கை வில்சன்...லயனல்லாத குண்டு தண்ணி டாங்
      5....தண்ணி டாங்.....ஏக எதிர் பார்ப்பதில்
      6.தீபாவளி மலர்....தண்ணி டாங்...முதல் வண்ண ஈகிள் மேன்...பேட் மேற்கு ஈர்த்த நாயகர்கள்...
      ஒரே வருடத்தில் 1987 பொற்காலம் அதே...
      அதை விஞ்ச் 2023...

      Delete
    3. ஆமா ஈவி... 1986, 1987, 1988னு அந்த 3வருடங்களில் தான் ஸ்பெசல்கள் குண்டு குண்டா ரவுண்ட் கட்டி அடித்துள்ளன.... இப்போது புத்தக விவரங்களை பார்க்கும்போதே எச்சில் ஊறுது.

      அப்போது நேரடியாக வாங்கிய ரசிகர்கள் என்னா குதூகலம் அடைந்து இருப்பாங்க...!!!

      பத்து சார், ATR sir போன்ற சீனியர்கள் சொன்னா நாமும் தெரிஞ்சிகிடலாம்...

      Delete
    4. மூத்த அண்ணா ஸ்டீல் க்ளாவுக்கு@ நீங்க இம்புட்டு பெரிய சூப்பர் சீனியர்னு தெரியாமல் "வாய்யா போய்யானு" முன்காலத்தில் அழைத்திட்ட இந்த கடைகுட்டி தம்பியை பொருத்தருள்க...😜

      எவ்ளோ சைனலண்டா குடியிருக்காங்க......எஸ்கேப்.

      அந்த வண்ண ஈகிள்மேன் மட்டுமே அதற்கு முன்பே வந்துள்ளது போல... மீது 5ம் செம்ம.... பர்ஃபெக்ட் டா தாக்கிட்டீக....செம....

      Delete
    5. பரவால்ல தம்பி...நான் படித்ததுல சீனியர்...ரெண்டு பேருக்கும் ஒரே வயதுதான்...

      Delete
  45. ///*உயிரைத் தேடி - black & white இதழ் !

    *உயிரைத் தேடி - கலர் இதழ்

    *MINI COMICS - சின்ன விலையில் - பாக்கெட் சைஸ் இதழ்கள் - இரண்டோ / மூன்றோ / நான்கோ ?!

    *ஒரு black & white கி.நா.

    *ஒரு கலர் டிடெக்டிவ் ஜாகஜம்

    *ஒரு க்ளாஸிக் மறுபதிப்பு

    *ஒரு கார்ட்டூன்

    *ஒரு 'தல' க்ளாஸிக்

    *ஒரு எது மாதிரியும் இல்லாத புது மாதிரி

    என்று மொத்தம் ஒரு டஜன் இதழ்களைத் திட்டமிட்டுள்ளோம்///

    (ரெண்டு பேரா மாமி.? ன்னு வடிவேலு கேப்பாரே... அந்த முகத்தை ஞாபகம் வெச்சிக்கோங்க...)

    "ஒரு டஜனா எடிட்டர் சார்.!?"

    ReplyDelete
  46. "தி கோல்டன் 1987 ரிட்டன்ஸ்"

    Dream special 2.0
    warm welcome.

    ReplyDelete
    Replies
    1. ஆம் சார்.... ஏகப்பட்ட குண்டுபுக்ஸ் முன்போல இப்ப வாய்ப்பு இல்லைனாலும், வீ கால் இட்.... "Dream Special 2.0"

      Delete
  47. ///இது "சிகரங்களின் சாம்ராட்" மெரி இருக்கே ?///---
    ஆமா ஆமா ஆசிரியர் சார்.. இது சி.சா. பார்ட்2.. தோர்கல் போட்டிகள் சீசன்-3 அடுத்த மாசம்... அதிலும் ஒரு காலப் பயண அத்தியாம் உள்ளது. அதற்கு ரெடியாகிட்டு இருக்கோம்...
    தலை காத்த தனயன்"- னு ட்ராவலர் வைச்சி ஜோலன் போறாரு வர்றாரு...!!
    சிகரங்களின் சாம்ராட் மாதிரியே இதுவும் மூளையை அல்வா பதத்துக்கு ஆக்கிடுது....

    ////ஐயா வான்ஹாம் நீர் பெரிய ஜீனியஸ் ஐயா.....//

    ReplyDelete
  48. Sir - have a feeling that going by the sheer number of books, it is a tinge too much for regulars to read. I can understand the commercial pressures though. On one hand am glad that your commerce resumed to healthy levels from 2020 circa - but on the other hand .. way too many books to handle a busy life !

    ReplyDelete
    Replies
    1. வர்றது எல்லாம் வாங்கி வைச்சிகிடலாமுங்க.... ரிட்டையர்மண்ட்டில கூட மெது மெதுவாக வாசித்துகிடலாம் ராக் ஜி....

      Delete
    2. Won't work out like that Salem Tex. Post retirement scenarios will be different. You cannot even imagine now.

      Delete
    3. நண்பரே நல்லதே நடக்கும்....பொக்கிஷங்கள் முடிந்த வரை சேகரிக்கப்படனும் வேகமாய்...காலம் விரைவானது

      Delete
    4. இன்னும் 10 வருட காமிக்ஸ் எல்லாம் சேர்த்து வைத்து retirementக்கு பிறகு படித்து சிலாகிப்பதெல்லாம் நடைமுறை சாத்தியமில்லாதது என்று சென்ற வாரம் வீடு மாற்றும்போது உரைத்தது. எனக்கு வேண்டிய ஹார்ட் பௌண்ட்ஸ் மட்டுமே அடுக்கி விட்டு - plus Astrerix, Tintin, Lucky Luke, Thorgal - மற்றதை மாற்றத்திற்கு விட்டு விட்டேன். வரும் காலங்களில் இந்த harsh reality 40களில் இருக்கும் நம் அனைவருக்கும் ஒரு நாள் உறைக்கும். எனவே இன்னும் 10 ஆண்டுகள் 1000 காமிக்ஸ் சேகரிப்பது என்பதெல்லாம் நடைமுறைக்கு ஏற்கக்கூடியவை அல்ல என்பதே யாம் உணர்ந்தது.

      Delete
  49. அடடே பதிவில் தேதி மாற்றம் உள்ளதே முன் கூட்டியே ஆன்லைன் புத்தக விழா வரவும் வாய்ப்பு உண்டா?

    ஏப்ரல் 1&2 அல்லது ஏப்ரல் 15&16 ஆஹா ஆஹா

    கண்ணா 12 லட்டு தின்ன ஆசையா?

    ReplyDelete
    Replies
    1. ஏப்ரல் மாத ரெகுலர் லட்டுகளையும் சேர்த்து சொல்லுங்க.....

      Delete
  50. வரக்கூடிய online புத்தக விழா புத்தகங்களின் வீடியோக்களை 5 வினாடிகளுக்கு மிகாமல் எடுத்து online listing லோ அல்லது WhatsApp kuzhuvilo அனுப்பி விட்டு புத்தகம் வாங்கும் offer price link-னை இணைத்துவிட வாய்ப்புள்ளதா sir? ஏனெனில் என்னால் இது வரை online bookfair video callil இணைய முடியவில்லை.. அவ்வாறு இணைந்தாலும் புத்தகங்கள் செலக்ட் செய்வதை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க முடியுமா என்று தெரியவில்லை..

    ReplyDelete
  51. Valid point to think sir. It's short times between your busy day makes u creative.

    For me, it's mistakes. I follow a protocol and a routine, and unknowingly we make some mistakes.

    That mistake will open a new door. Evlo thaan intelligent irunthaalum, namakku antha idea thonathu. A mistake done, creates a new path. And for me that path becomes the new normal. So my creative times in my career are times I made mistakes.

    ReplyDelete
  52. மந்தி#2 எப்ப வரும்???

    ReplyDelete
  53. WOW! திரு. சு.வெங்கடேசன் came to our stall! Sir if you could ask him to write his views about comics in any one of our issues, that would be great.

    ReplyDelete
  54. சார் மந்தி 2 புத்தகங்களோடதான் வருமா....ஒரு டசன் கதைகளின் விளம்பரங்கள் இம்மாத டப்பில உண்டா

    ReplyDelete
  55. வரும் காலத்துல மாங்கா காமிக் வர வாய்ப்பிருக்கிறதா சார்

    ReplyDelete
  56. ஐயா விஜயன் அவர்களே மேஜிக் பாண்டஸி கலந்த புத்தகங்களை எதிர்பார்க்கிறேன் . அறிவியல் புனைவு கதைகளையும் விரும்புகிறேன்.புத்தகங்கள் வர
    வாய்ப்பிருக்கிறதா?மாங்கா காமிக் வர வாய்ப்பிருக்கிறதா😀😊😇🥰😍🤤

    ReplyDelete
  57. சார் மார்ச் புத்தகங்கள் கிளம்பிவிட்டதா?

    ReplyDelete
  58. ❤💛💙💚💜
    #NBF 2023#😍😘

    ❤28.02.2023 முதல் 10.03.2023 வரை..

    💛இடம்:
    அரசு மேல்நிலைப்பள்ளி (வடக்கு), திருச்செங்கோடு சாலை..

    💚நாமக்கல்லில் நமது லயன் முத்து காமிக்ஸ் ஸ்டால் எண்:39...👍💪💪

    💐கல்விநகரமான நாமக்கல்லில் நமது ஸ்டாலில் விற்பனை முந்தைய கண்காட்சிகளின் விற்பனைகளை முறியடிக்கும்..💪💪✊🌹

    ReplyDelete
    Replies
    1. வெரிகுட்... ஐ லைக் யுவர் கான்ஃபிடன்ஸ் கோடாலியாரே....💪💪💪
      அத்ரி புதிரி வெற்றி பெற வாழ்த்துகள்💐💐💐💐

      Delete
    2. இப்போதைக்கு நெல்லை லீடிங் ; முட்டை நகரம் கணிசமாய் 'ஜம்ப்' பண்ணத் தேவைபடும் போலும் !

      Delete
    3. நேற்று கன்னியாகுமரியில் இருந்து ஒரு நண்பர் என்னை தொடர்பு கொண்டார். காமிக்ஸ் இப்போதெல்லாம் வருதா என் கேட்டார்!!?

      அவருக்கு சிவகாசி அலுவலக எண்ணை கொடுத்துள்ளேன். மேலும், நெல்லையில் புத்தக கண்காட்சி நடைபெறுவதையும் சொல்லியுருக்கிறேன்.

      நெல்லையில், வழக்கமாக ரத்னா தியேட்டர் அருகில் உள்ள மைதானத்தில் பு.தி. நடக்கும். இப்போதும் அங்கு தானா?

      Delete
    4. @Edi Sir..😍😘🙏

      ஆமாம் Ediசார்.. 🙏

      நாமக்கல்லில் மிகமிக குறுகிய அவகாசத்தில் புத்தக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

      மாவட்ட நிர்வாகம் கிடைத்த அவகாசத்தில் *நாமக்கல்லில் முதல் முறையாக புத்தக கண்காட்சி* என்பதால்
      கடும் உழைப்பை போட்டு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளார்கள்.👍

      இருப்பினும் புத்தக கண்காட்சி நடைபெறும் விபரமே பொதுமக்கள் பலருக்கு போய் சேரவில்லை. நம்மைபோல தன் ஆர்வலர்கள் செய்யும் Whatsapp பரவல் மட்டுமே பலரை சென்றடைந்து இருக்கிறது.

      மாவட்ட நிர்வாகம் தரப்பில் போதிய விளம்பரம் இல்லை.😶

      மேலும் இது தேர்வுநேரம்.
      +2 தேர்வுக்கான ப்ராக்டிகல்ஸ் நடைபெற்று வருகிறது. எனவே பள்ளியிலிருந்து இதர வகுப்பு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்
      அடுத்து வரும் நாட்களில் வருவதை பொறுத்துதான் விற்பனை சூடுபிடிக்கும்..👍

      பார்ப்போம். கல்வி நகரமான நாமக்கல் புத்தககண்காட்சி விற்பனையில் சாதிக்குமா என்பதை..💪👍✊

      Delete
  59. வரலாற்றின் வாடிவாசல்..
    உதிரத்தின் நிறம் கறுப்பல்ல..

    ரெண்டையும் நேத்து ஒரே நாள்ல அடுத்தடுத்து படிச்சேன்..!

    இப்பவரைக்கும் செவ்வாய் கிரகத்துல சாணி வறட்டி தட்டிக்கிட்டு இருக்குற மாதிரியே ஒரு ஃபீலிங்கு..! :-)

    ReplyDelete
  60. பகை பல தகர்த்திடு ;

    அடடா.. அடடா..

    அட்டையில டெக்ஸூம் கார்சனும் ஆளுக்கொரு பிஸ்டலோட சலூனுக்குள் அதிரடியா நுழையுற மாதிரி இருக்குற காட்சியே உற்சாகத்தை தருதே...! அதிலும் ரெண்டு பிஸ்டலில் இருந்தும் சுடசுடப் புகை வேற போயிட்டிருக்கு..!

    ஆஹா.. கார்சனும் டெக்ஸும் போதுமுங்க.. எங்க காமிக்ஸ் காதலை கரைபுரண்டு ஓடவைக்க..!

    இன்றைய வாசிப்புக்கு...!

    ReplyDelete
  61. மார்ச் இதழ்களுடன் S60 இதழும் உண்டுங்களா சார்?

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பில்லை ராசா...😄😃😀

      Delete
  62. வரும் சனிக்கிழமை கிளம்ப வாய்ப்புள்ளது இரும்புகையரே...😍😘😃✊

    ReplyDelete
    Replies
    1. Y சனிக்கிழமை? அதற்கு முன்பு 3 நாட்கள் இருக்கே?

      Delete
    2. இன்றோ நாளையோ பதிவு வரும் பொட்டி கிளம்பி விட்டது என்று.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Why not sending the books on next Monday Kumar:-)

      Delete
    5. // Y சனிக்கிழமை? அதற்கு முன்பு 3 நாட்கள் இருக்கே? //

      Book has to get ready o Kumar; give some time for this :-)

      Delete
    6. எங்கே ஆளை காணோமே என்று நினைத்தேன் வந்து விட்டார் அண்ணன்.

      Delete
    7. எல ஒனக்கு கொரியர்காரர் சுத்தி வந்து குடுப்பார்ல...எங்களுக்கல்லா நாளைக்குதா

      Delete
    8. அவ்வளவு தான் ஸ்டீல். நீங்க வேணா ரெண்டாவது வாரம் வாங்கிக்குங்க பரணி ;-)

      Delete
    9. பயலுக்கு நல்லா வருமாம் குமார்....அடுத்த வருடம் அனுப்புனா நல்லா காஞ்சுராது

      Delete
  63. பகை பல தகர்த்திடு :-

    ஓவியங்கள் சற்று முன்னேபின்னே இருந்தாலும்..(அதாவது டெக்ஸை டெக்ஸ் என்றும் கார்சனை கார்சன் என்றும் யாராவது கூப்பிட்டால் கண்டுபிடித்துவிடலாம்)... பகை பல தகர்த்திடு மிக விறுவிறுப்பாக இருந்தது.!

    மிஸ் லோலா பெரிய லோலாயாக இருப்பாள் என்பதை முன்கூட்டியே கணிக்க முடிந்தது..(உபயம் சிகுவாகுவா சில்க்) .!

    சின்ன சின்ன திருப்பங்கள் கதையை போரடிக்காமல் பார்த்துக்கொண்டன.!
    என்னதான் நேர்கோட்டு கதை.. முடிவு இப்படித்தான் என்று தெரிந்தாலுமே கூட.. டெக்ஸ் கதைகளை ஆரம்பித்துவிட்டால் பாதியில் வைக்க முடிவதே இல்லை.!
    டெக்ஸ் வில்லரின் வெற்றி ரகசியம் இதுதான்.!

    ReplyDelete
  64. ஐயா தோர்கல் எப்ப வரும்..? ஆவலுடன்

    ReplyDelete
  65. 1)ரத்த படலம் எந்த பகுதியில் இருந்து ஸ்டார்ட் பண்றது..?
    2) யுகம் தாண்டியரு யுத்தம் நல்லா இருக்குமா..?
    3) லக்கி லுக் இப்போ available எந்த புக் நல்லா இருக்கும்?
    4)DETECTIVE SPECIAL-(BONELLI’S 3 IN 1) நல்லா இருக்குமா ரேட்டிங் சொல்லுங்க..?
    5) தேவ ரகசியம் தேடலுக்கு அல்ல இந்த புத்தகம் நல்லா இருக்குமா .?
    6) வழி அனுப்ப வந்தவன் புத்தகம் எப்படி..?
    7)LARGO WINCH நல்ல கதையா..? இன்ட்ரஸ்டிங்கா இருக்குமா

    ReplyDelete
    Replies
    1. ரசனை சார்ந்த விஷயம் ; பொதுப்படையான கருத்து சொல்லிவிட்டு அதன் பின்னே விமர்சனத்துக்கு ஆளாகிட யாரும் விரும்பிடப் போவதில்லை நண்பரே !

      தண்ணீர் குளுருதா ? வேகமாக இழுக்குதா ? என்பதை ஆற்றங்கரையில் நின்றபடிக்கே விசாரிப்பது எத்தனை தூரத்துக்குப் பலன் தருமோ - தெரியலியே ?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  66. மார்ச் இதழ்கள் தாமதமாக வந்தாலும் தரமாக வரட்டும். மார்ச் இதழ்களுடன் S60 இதழான சார்லி புஷ்சாயர் வந்தாலும் நன்றாக இருக்கும் சார்.

    ReplyDelete
    Replies
    1. வருவதாக இருந்தால் அறிவித்திருப்போமல்லவா நண்பரே ?

      Delete
  67. வணக்கம் நண்பர்களே. ஏப்ரலில் ஒரு தீபாவளி காத்துள்ளது. எல்லாராலும் ஆன்லைன் விழாவில் சிறப்பிக்க இயலாது. ஸ்டாக்கில் உள்ள புத்தகங்களை தள்ளுபடி விலையுடன் கூடிய பட்டியலைத் தந்தால் நன்றாக இருக்கும் சார்.நன்றிங்க சார்.

    ReplyDelete
  68. ஆசிரியர் வந்துட்டார்....அப்ப புத்தகங்க....கிம்பியாச்சுன்னுதான அர்த்தம்.....நாளை

    ReplyDelete
  69. புத்தகம் கிளம்பியாச் நண்பர்களே ன்னு நாளை தகவல் வரும்....யார் பந்தயத்துக்கு வாரீய

    ReplyDelete
    Replies
    1. நம்ம பரணி வருவாரு....

      Delete
    2. யோவ் க்ளா அவசரபட்டியேய்யா.... இன்னைக்கே அந்த பதிவு வந்துடுமே.....

      KS,பரணி உன்னை வெச்சி செய்யபோறாங்க....!!

      Delete
  70. இணையத்தில் இந்த மாத இதழ்கள் விற்பனைக்கு போட்டாச்சு

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கோ.... அப்ப நாளை நல்ல வெள்ளி.... நம்ம கொரியர் காரவுகளை நினைச்சாத்தான் பீதி கவ்வுது...

      Delete
  71. பொட்டி கிளம்பிக் கொண்டுள்ளனவாம். சந்தோஷமுங்கோ. நன்றிங்கோ.

    ReplyDelete
    Replies
    1. எங்கிங்க உங்க ஜம்பிங் தலீவரு ஒரு 10 முத்தாவோட வருவாரே.....

      Delete
    2. @STV..
      அம்புட்டு ஆசை..
      😘😘😘😘😘..😃

      Delete
  72. ஏப்ரல் To ஜூன் வரையான V காமிக்ஸ் இதழ்களுக்கான சந்தாத் தொகை எவ்வளவுங்க சார் ?

    ReplyDelete
    Replies
    1. @சின்னமச்சான்..😍😘

      3 மாசத்துக்கு ரூ.300+கூரியர் ரூ. 30
      = மொத்தம் ரூ.330/- ங்க ஜி..👍

      Delete
    2. @Edi Sirs ..899😍and 900😘😘

      நம்ப V comics ஆண்டு சந்தா எம்புட்டுனு சொல்லுங்க.😘🙏. ஒரே மூச்சா கட்டிபோடறோம்...😃

      Delete
  73. நாளை திருவிழா ஆரம்பம்.

    ReplyDelete
  74. @Edi Sir...😍😘😘😍

    புத்தகம் கிளம்பிவிட்டதை பற்றிய ஸ்மால் பதிவு ஏதேனும் இன்று உண்டுங்களா 😍😘😃😀

    ReplyDelete
  75. @All..😍😘😃😀

    இன்னைக்கு நல்லமுகூர்த்தநாள்..🙏😃😍

    அதனால நம்ப எடிட்டர் Sirs.. 899& 900😍 ரெண்டு பேருமே ரொம்ப பிஸி..
    அதனால..புக்ஸ் கிளம்பியது குறித்த *ஸ்மால் பதிவு*மதியத்திற்குமேல் வரலாம்..😍

    அல்லது நாளை சனிக்கிழமை ஆல் சமாச்சாரத்தையும் உள்ளடக்கிய *குண்டூஸ் பதிவாக* வரலாம்..👍💪💐

    ReplyDelete
    Replies
    1. நாளைக்கு குண்டு பதிவ வரட்டுங்க ஜம்பிங் தல. இல்லேன்னா புக்கு கிளம்படிச்சுன்னு சொல்லிட்டு விமரசனம் போடுங்கன்னு பதிவை முடிச்சடுவாரு. வர பதிவுல ஆன்லைன் புத்தக விழாக்கு வர 12 புத்தகங்கள் பத்திய விவரம் வேணும்.

      Delete
  76. @Mahi Ji.😍😘

    கரெக்ட்..
    வரட்டும் குண்டூஸ் பதிவு பொறுமையாக ..😍😘

    ஆனா..மார்ச் புக்ஸ் ஒருத்தருக்கு மட்டும் நல்லா காஞ்சி போய் முருகலா லேட்டா மே மாசம் வந்தா போதும்..
    😁😄😷

    ReplyDelete
    Replies
    1. ///மார்ச் புக்ஸ் ஒருத்தருக்கு மட்டும் நல்லா காஞ்சி போய் முருகலா லேட்டா மே மாசம் வந்தா போதும்///

      கடவுள் இருக்குறான் குமாரு!!!!

      ""பார்சலைக் கைப்பற்றியாச்சேஏஏஏஏஏஏஏஏ"""💃💃💃💃

      Delete
    2. No dance..😃😀😀
      April னு அடுத்த மாசத்துக்கு பேரு..😃

      ஞாபகம் இருக்கட்டும்..😏😏😏

      Delete
    3. இவுகளோட ஆட்டத்துக்கு காரணம் உள்ளது ப்ரெண்ட்ஸ் போனமாசம் நம்ம புக்கு அம்புட்டு தாமதமாக கிடைத்தது... "ஒரு பொட்டியின் கதைனு"--- எழுத வெச்சிட்டது...
      ஆனா மார்ச் புக்ஸ் இன்று காலையிலயே கைப்பற்றியாச்சுது....!!

      Delete
    4. @Zagor Shribabu கோடாலி ஜி

      V comics 3வது சும்மா அள்ளது ஜி.... செவ்விந்தியர் ஓவியங்கள்லாம் நேரில் பார்ப்பது போலவே உள்ளது...

      "புரவிகளின் பூமி"- பெயருக்கு ஏற்ப புரவிகளாக இருப்பது ஒரு பக்கம்னா அந்த புரவிகளின் ஓவியங்கள் தான் விசயமே... பக்க எண்8,9ல அந்த டைட்டில் கார்டுல வரும் குதிரைகள்,

      10ன் முதல் பேனல்,
      13ல நடுபேனல்,
      15ல நடு பேனல்,
      18,19-நடு பேனல்கள்,
      23 நடு பேனல்,
      25,26 முழு பக்கம்,
      27ன் செவ்விந்தியர்கள்,
      57ன் முதல் பேனல்
      58 முழு பேஜ்,
      சும்மா பின்னி பெடல் எடுக்கிறது...

      உச்சமாக பேஜ61ல ஓடிவரும் குதிரையின் படம்...ஆஹா...

      வெறும் 70 ரூபாயில் இத்தகைய குவாலிட்டியானு அசந்து போக வைக்கிறது......!!

      500,600க்கு வரும் தீபாவளிமலர் போன்ற குண்டுபுக்குக்கு தான் இப்படி அசத்துவாங்க.. ஆனா V comics ஒரு ட்ரெண்ட் செட்டர்தானுங்க....



      Delete
    5. கோடாலியாரே@ புக் மார்க் கும் ஸோகோர் தானுங்கோ....

      உங்க பார்சல்ல V comicsம் புக் மார்க்கும் மிஸ்ஸிங்காமே....😜

      Delete
  77. மேக்கிங் ஆஃப் ஆல் புக்ஸ் எக்ஸலன்ட் சார்....!!!

    அட்டைப்படங்கள் நேரில் சும்மா அள்ளுது...

    இளம் டெக்ஸ் டாப்,
    V காமிக்ஸ் சும்மா தெறி...
    IRS ம் வெரி நைஸ்....!!

    டெக்ஸ் அட்டையை பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.....

    ReplyDelete
  78. அடுத்த மாதம் ஆறே மாசத்துல தீபாவளி மாதத்தை காலண்டர்ல வெச்சிட்டாங்களாட்டு....😍

    சார்லி க்ளாசிக்--- ஒரு யுகத்தின் காத்திருப்பு முடிவுக்கு வருது....

    டெக்ஸ் vs ஸோகோர்--நவீன யுகத்தின் ஆரம்பம்

    XIII-ஸ்ப்பின் ஆப்- பழைய நண்பன் சந்திக்க வர்றான்

    ஹைலைட்...

    காமிக்ஸ் மேளாவில 1டஜன் புத்தகங்கள்....சரவெடிகள் ஆக வரிசையாக...

    அனைவரும் ஹேப்பி 🥰🥰🥰🥰🥰

    திடீர் தீபாவளிக்கு, ரொம்ப ரொம்ப நன்றிங் சார்🙏🙏🙏

    ReplyDelete