நண்பர்களே,
வணக்கம். மசி கூடக் காய்ந்திரா பக்கங்களுடன் ஒன்றுக்கு நான்காய் புக்குகள் (கொஞ்சப் பேருக்காவது) கைகளில் இருக்க - இந்த ஞாயிறை அவற்றோடு செலவிட்டால் நலமென்று நினைத்ததால் பதிவுக்கு ஜூட் விட நினைத்தேன் ! தவிர மாவீரன் நேசமணி ஆசுபத்திரியில் படுத்துக் கிடக்கும் வேளைதனில் நாம் நமது கேளிக்கைகளை அடக்கி வாசித்தல் காலத்தின் கட்டாயமல்லவா ? அப்புறம் இரண்டே மாதத்துத் தொலைவினில் ஒரு அம்பாரம் நிறையச் சுமக்கக்கூடிய இதழ்களைத் தயார் செய்திட வேண்டியிருப்பதால் இப்போதிலிருந்தே ஞாயிறுகளை அந்த 'தம் கட்டல்' படலங்களுக்குச் செலவிட நினைத்தேன் !! இதோ - "நித்தமொரு யுத்தம்" ஒடத் துவங்கிவிட்டது எனது மேஜையில் ! ("எங்களுக்கலாம் அது அனுதினமும் ஓடுதுங்கோ ஊட்டிலே !!" என்றொரு மைண்ட்வாய்ஸ் கேக்குதே எனக்கு ??)
So இந்த ஞாயிறை ரெம்போ நாள் கழித்து மீண்டிடும் caption போட்டிகளோடும் ; சில பல கேள்விகளோடும் பயணிக்கச் செய்யலாமா ? இம்முறை ஒன்றுக்கு இரண்டல்ல - மூன்றாய் captions உண்டு ! And அவற்றிற்கெல்லாம் அழகாய் captions எழுதுவோர்க்கு கன்னடத்துப் பைங்கிளி பயன்படுத்திய சோப்பு டப்பியோ ; தலைவர் கழுத்தில் கட்டிய கர்சீப்போ பரிசாக இருந்திடப்போவதில்லை ! மாறாக அந்த நண்பர் நமது ஈரோட்டுப் புத்தக விழாவுக்குப் பயணம் செய்திடும் ஏற்பாடுகளை நாம் ஏற்றுக் கொள்வதாக உள்ளோம் ! வெள்ளியிரவு கிளம்பி, சனி காலை ஈரோடு வந்திறங்கி, தங்கி, வாசக சந்திப்பில் பங்கேற்று, விலாவைச் சிறப்பித்து அன்றிரவு ஊர் திரும்பிட all arrangements will be done !
முக்கிய...மிக முக்கிய..மிக மிக முக்கியமோ முக்கியமான குறிப்பு : இது ஈரோட்டிலிருந்து 500 மைல் தொலைவுக்குள்ளாற வசிக்கும் வாசகர்கட்கு மாத்திரமே பொருந்தும்ங்கோ ; நீங்க பாட்டுக்கு அமேரிக்கா ; ஆப்ரிக்காவிலேர்ந்து பிட்டைப் போட்டுப்புட்டா கம்பெனிக்கு பொங்கலோ பொங்கலாகிப் போகும் !! So அசல் தேசத்துக்காரவுக தங்கள் செலவிலேயே பிளைட்டிலேயோ ; கப்பலிலேயோ ; தோணியிலேயோ ; மாட்டு வண்டியிலேயோ - ஷ்டாண்டிங்கிலேயோ ; வித் அவுட்டிலேயோ சென்னை வரை வந்துப்புட்டாகா - அப்பாலிக்கா அங்கேயிருந்து இட்டாந்திடுவது நமது பொறுப்பாகயிருக்கும் ! ஈரோட்டில் நமது GUEST OF HONOR என்ற வகையில் வலம் வந்திடுவர் ! And ஈரோட்டில் ஏதேனுமொரு இதழை ரிலீஸ் செய்திடும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்படும் ! So முடிஞ்ச மட்டுக்கு எல்லோருமே கல்லைத் தூக்கிப் போட்டுப் பார்க்கலாமே guys ?(என் தலையில் அல்ல !!)
Here you go :
Caption # 1
Caption 2 :
Caption 3
அப்புறமேட்டுக்கு - "இது எல்லாமே டுபுக்கு ; போங்கு ஆட்டம் சார்....முழியான்கண்ணன் தனக்கு வேண்டப்பட்டவருக்கே வெற்றின்னு அறிவிப்பான்...இது மேரி எத்தினி உல்ட்டா-புல்டா பாத்திருப்போம் நாங்க !!" என்று கடைவாயோரம் புன்சிரிப்பை ஓடவிடுவோருக்கு அந்தச் சிரமத்தை வைப்பானேன் என்று நினைத்தேன் ! So இதன் winner யாரென்று தீர்மானிக்க, நண்பர்கள் காமிக் லவர் & ரஃபிக் பொறுப்பெடுத்துக் கொள்ளட்டுமே என்பது எனது வேண்டுகோள் ! அவர்களே captions எழுந்திடும் பட்சத்தில் கூட அவர்களே ஜட்ஜ்களாய்த் தொடர்ந்திடலாம் ! "ஏன் - எங்களையெல்லாம் பார்த்தாக்கா ஒரு ஜட்ஜ் பீலிங்கு வரலியாக்கும் அப்பு ?: என்ற புதுப் பஞ்சாயத்து நடைபெற்றிடும் வாய்ப்புகளும் ஏகப்பிரகாசம் என்பது புரிகிறது ! அது எந்த ஆலமரத்தடியில் என்று Geo Location Tag எனக்கு அனுப்பிட்டால் அங்கே ஆஜராகிவிடுவேனுங்கோ !
Done with the captions...சில கேள்விகள் தொடரவுள்ள ஆண்டின் அட்டவணையின் பொருட்டு :
1 லக்கி லூக் :
புதுசும் சரி ; மறுபதிப்பும் சரி - சம வேகத்தில் விற்பனை கண்டிடும் இந்த நாயகரின் கதைகளுள் அடுத்த 3 மறுபதிப்புகளுக்கு எவற்றைப் பரிந்துரைப்பீர்கள் ?
2 ALL TIME BEST என்று லக்கியின் கதையொன்றைத் தேர்வு செய்வதாயின் - அது எதுவாக இருக்கோம் ? I repeat - just ONE !!!
3 TEX :
கேள்வி # 1 அப்படியே ரிபீட்டு !! Next 3 மறுபதிப்புகளெனில் - டெக்சில் நிங்கள் தேர்வுகள் ப்ளீஸ் சேட்டா ?
4 "ஆண்டுக்கொன்று" என்ற முறையில் ஒரேயொரு SCIENCE FICTION முயற்சித்துப் பார்ப்பது குறித்த உங்கள் ஐடியா என்னவோ ? நிச்சயமாய் இதனை கிராபிக் நாவல் தடத்தில் கொண்டு பதுக்க எனக்கு விருப்பமில்லை ! வெளியிடுவதாயின் mainstream-ல் கலந்திட அனுமதித்து நம் அனைவருக்குமே அந்த அனுபவத்தின் ஒரு சிறு taste கிட்டிட்டால் மகிழ்ச்சி ! இல்லாங்காட்டி பொறுமை காப்போம் - வேளை புலரும் வரைக்கும் !
5 மாதந்தோறும் இதழ்கள் வரும் வரைக்கும் வீடு கட்டிக் காட்டி, கம்பு சுழற்றும் நமது பயில்வான்களில் பெரும்பான்மை - வெயிட்டாய் கூரியர் டப்பி கிடைத்த பிற்பாடு தொடர்பு எல்லைக்கு அப்பாலிக்காவோ அப்பாலிக்கா போய் விடுவது நடைமுறை தான் ! வீட்டுப் பணிகள் ; ஆபீஸ் பொறுப்புகள் என்று நிமிரும் பெண்டுகளின் நோவு புரிஞ்சூ !! எனது கேள்வி : Maybe தொடரும் காலங்களில் சற்றே light reading என்ற focus தான் முக்கியத் தேவையா நமக்கு ? Light reading - கார்ட்டூன்கள் என்ற அர்த்தத்தில் மட்டுமல்ல ; பக்கம் குறைவான இதழ்கள் ; கனம் குறைச்சலான களங்கள் ; வாசிப்பில் இலகுத்தன்மை....என்ற ரீதியில்...! ஒரு வேளை...ஒரு வேளை.....அல்லாருக்கும் வயசு ஆகுதோ.....?? ரயில்களிலும், பஸ்களிலும் "அந்த அண்ணன் கிட்டக்க போயி உட்கார் பாப்பா" என்று சொல்லி வந்த தாய்மார்கள் இப்போ "அண்ணனை" - அங்கிளாகவும்" ; அங்கிளை -"தாத்தாவாகவும்" மாற்றி உச்சரிப்பதில் மெய்யாகவே விஷயம் உள்ளதோ ? (எங்களுக்குலாம் "அந்த பாட்டையா மடியிலே உட்கார்ந்துக்கோ பாப்பா" தான் !! 😂😂)
Your thoughts please guys ?
இப்போதைக்கு கிளம்புகிறேன் ....நேசமணிக்கோசரம் பிரார்த்திக்க ! See you around folks ...have a breezy Sunday !! bye for now !!
என்னது நானா....
ReplyDeleteபராகுடா - பாற்கடல் அமுதம்!
ReplyDeleteநானே தான்....
ReplyDeleteஅடிடா மேளம் புடிடா தாளம்...இனிமேல் தான் பதிவு படிக்க ஆரம்பம்...:-)
சரியாப் போச்சு
ReplyDeleteபொழுது போணும்ல சார் ?
Deleteகேப்ஷன்1
Deleteடைனமைட்: இந்தாளு எப்ப கெளம்புவாரோ...எப்பிடி கெளப்புவாறோ பட்டைய ..
டெக்ஸு: கெழவன் வரட்டும் சுக்கா சாப்டுட்டு சுருக்க வந்துட்றேன்னுட்டு போனவனன ஆளக் காணோம்...
கேப்ஷன்2)
Deleteடெக்ஸ்: வாயில கடிச்சிட்டு இருக்குற ஸ்ட்ராவ தூக்கி கடாசிட்டு , வாயிலேயே ஃபீரக் குடிப் பெருசு...
கார்சன்: அப்பிடிச் சொல்லு என் ராசா..பின்னாடி தெருவுல தூங்குறவனும் கடைசி டேபிள்ல தூங்கீட்டு இருக்குறவனும் எந்திரிக்கிற வரைக்கும் குடிப்பேன்.... சம்மதமா!!!!
பார்மேன்: இவரு சும்மா இருக்கமாட்டாரோ...போன மாசம் தான் இதே மாதிரி சுமூகமா ஆரம்பிச்சு அப்பறமா கடைய துவம்சம் பண்ணீட்டு பணத்தையும் குடுத்துட்டுப் போனாங்கே.நேத்து தான் கடைய மறுபடியும் தொறந்திருக்கேன்.என்ன நடக்கப் போகுதோ...மறுபடியும் மொதல்லருந்தா.....
கேப்ஷன்3): அடடடா...என்ன ஒரு கண் கொள்ளாக் காட்சி..அப்படியே ஜூம் பண்ணுடா கார்சன்...ஒண்ணுக்கு மூணு..டபுள்லட்டு...
Deleteடெக்ஸ்; பெருசூ! ஜொள் விட்டது போதும்.பின்னால நிக்கிற படகு செனட்டர் ஜேம்ஸோடது.அவரோட சம்சார சமாச்சாரங்கள் இவங்க மூணும்.. ஹாய் லேடீஸ்....
சார்.... கேப்டன் போட்டி சுறுசுறுப்பா நடக்க நீங்க பண்றது சதி....
Deleteபங்கெடுக்குறது எங்க மதி...
புக்க போடாதது உங்க கதி...
பார்க்க முடியாதது எங்க விதி...
Hi edit
ReplyDeleteI want sigappai oru siluvai as tex reprint
Regards
Arvind
முக்கிய...மிக முக்கிய..மிக மிக முக்கியமோ முக்கியமான குறிப்பு : இது ஈரோட்டிலிருந்து 500 மைல் தொலைவுக்குள்ளாற வசிக்கும் வாசகர்கட்கு மாத்திரமே பொருந்தும்ங்கோ ; நீங்க பாட்டுக்கு அமேரிக்கா ; ஆப்ரிக்காவிலேர்ந்து பிட்டைப் போட்டுப்புட்டா கம்பெனிக்கு பொங்கலோ பொங்கலாகிப் போகும்
ReplyDelete#####₹
:-))))))
இதன் winner யாரென்று தீர்மானிக்க, நண்பர்கள் காமிக் லவர் & ரஃபிக் பொறுப்பெடுத்துக் கொள்ளட்டுமே என்பது எனது வேண்டுகோள்
ReplyDelete#######
மனமார்ந்த வாழ்த்துகள் நண்பர்களே...:-)
அருமை பதிவு வந்து விட்டது.
ReplyDeleteஆம்...வந்து விட்டது..:-)
Deleteவினா ஒன்றுக்கான பதில்...
ReplyDeleteA...இதுவரை வந்த அனைத்து லக்கி இதழ்களையும் படித்து விட்டதாலும் ,அனைத்துமே மனம் கவர்ந்தாலும் சமீபத்தில் வெளிவராத ,இதுவரை மறுபதிப்பு காணாத எந்த இதழாக இருந்தாலும் ஓகே சார்..
B.( லக்கி வரும் இடத்தில் டெக்ஸ் என மாற்றி கொண்டால் இரண்டாம் பகுதிகான முதல் வினாவிற்கான பதிலே இதுவும்.)
லக்கி ஆல்டைம் பெஸ்ட்..
ReplyDeleteபுரட்சி தீ
+1
Delete2. சூப்பர் சர்க்கஸ் தான்.
ReplyDelete3. 1. கழுகு வேட்டை
2. பழிக்கு பழி
3. பழி வாங்கும் பாவை
4. எனக்கு sci-fi ok than sir . ஆனால் நண்பர்களுக்கு? Big yes from me
ReplyDelete2. puratchi thee
ReplyDelete4. Yes for Science Fiction
ஜம்போ காமிக்ஸ்
ReplyDeleteடைட்டில் எண் : 09
TEX ன்
சிங்கத்தின்சிறுவயதில்
அட்டகாசமாக இருக்கிறது கதை
டெக்ஸ் அண்ட் கோ வின் சில்லு மூக்கை உடைக்கும்
அதிரடியை யாரும் எதிர்பார்த்து யாரும் இந்த கதையை படிக்க வேண்டாமென்று
காமிக்ஸ் சமூகத்திற்க்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது
பரபரப்பு இல்லாமல்
அடுத்து என்ன நடக்கும் என்று யோசிக்காமல்
இயல்பாக கதையோடு ஒன்றிபோகுதல் நலம்
டெக்ஸ் ன் பிறப்பு / வளர்ப்பு / திறமைகள் வெளிப்படுதல் கதை சொன்ன விதம் மிக மிக அருமை
டெக்ஸ் கதையில் இப்படி ஒரு கதையை நான் எதிர்பார்க்கவேயில்லை / படித்ததும் இல்லை
#மாஸ்
இரண்டாவது கதையிலும் அபார வெற்றி
பையா படம் பார்த்த உணர்வுகள் இக்கதையை படிக்கும் போது
பத்துக்கு / நூறு மார்க்
நானும் படித்து விட்டு பதில் சொல்கிறேன் சம்பத்
Deleteபொம்மை பார்த்த போதே இது ஹிட் தான் என தோன்றியது.
Delete
Deleteகதையில் டெக்ஸ் போலவே இன்னொரு ஹீரோ(க்கள்) னு (நிறைய பேர்) இருக்(காங்க)கார்
படிச்சு இன்புறுங்க. குமார் சேலம்
ஒரு ஷெரீப் பின் சாஸனம்
ReplyDeleteசிரிச்சு மாளலடா சாமி!!
சுவச் பாரத்!
சௌகிதார்!!
டீ மணிட்ரைஷேசன்!!!
இக்கதையை படிச்சுட்டு தான் இந்த காமெடியெல்லாம் பண்ணினாங்களோ!
பேசாம இக்கதைய ஹிந்தில டிரான்ஸ்லேட் பண்ணி வடக்க வெளியிட்டிருகலாம்!!
2.0 அடிவாங்கியிருக்கும்!!!
😜😜😜
மார்க் : 10/10
முதல் விமர்சனம் மிதுன். அருமை
Delete5. மாதத்திற்கு ஒரு புத்தகம் அல்லது இரண்டு லைட் ஆன புத்தகம் என்றால் ஓகே. எனக்கு எப்போதுமே கொஞ்சம் ஹெவி weights தேவை. ஆனால் எல்லா மாதமும் கார்ட்டூன் எதிர் பார்க்கிறேன். மனம் விட்டு சிரிக்க
ReplyDeleteடெக்ஸின் மறுபதிப்புகளில் ..
ReplyDeleteகழுகு வேட்டை...
என்பதுடன் ஒரு சிறிய மனதில் தோன்றிய எண்ணம் ..
இப்பொழுது ஜம்போ காமிக்ஸ் இதழில் டெக்ஸ் ரேஞ்சருக்கு முன் போக்கிரியாய் பார்க்கிறோம்..இப்பொழுது சிங்கத்தின் சிறுவயதில் மூலம் டெக்ஸின் சிறுவயது வாழ்வை பார்க்கிறோம்..இனியும் பார்க்க சாகஸம் காத்து கொண்டு இருக்கிறது எனும் பொழுது டெக்ஸ் தனது மனைவி லிலித் அவர்களை கரம் பிடித்தது ,பின் பரப்ப பட்ட நோயால் இறந்தது ..அதற்கு டெக்ஸ் பழிவாங்குதல் படலமான கதை பத்துரூபாய் விலையில் மூன்று பாகங்களாக வந்த ஒன்று.அந்த மூன்று பாகங்களையும் இணைத்து ஒரே குண்டு இதழாக மறுபதிப்பு செய்தால் நன்றாக இருக்குமே சார்..
படிக்காத நண்பர்களுக்கு இது இன்னும் ஸ்பெஷல் மறுபதிப்பாக இருக்கும் என்பது உண்மை..( படித்தவர்களுக்குமே..)
கடைசி கேள்விகான பதில் சிறுவனான எனக்கு பதில் தெரிய வில்லை சார்..:-)
ReplyDeleteகேப்ஷன்-3 க்கு கொடுக்கப்பட்டிருக்கும் படம் எந்தக் கதையில் வருகிறதென்பது தெரியவில்லை! இயற்கைக் காட்சிகள் நிறைந்த(ஹிஹி) அந்தக் கதையை அடுத்த இருமாதங்களுக்குள் புத்தகமாகப் போடும் எடிட்டர் ஒருவருக்கு, ஈரோட்டு விழாவுக்கு வந்து செல்லும் பயணச் செலவு, தங்கும் செலவு, ரவுண்டுபன்-கட்டன் சாயா செலவு உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் போராட்டக்குழுவின் பொருளாளர் செனாஅனா ஏற்றுக்கொள்வார் என அறிவிக்கப்படுகிறது!
ReplyDeleteவழிமொழிகிறேன்..:-)
Deleteவுட்சிட்டி ஷெரீப் /டெபுடி ஷெரீப் அடிக்கும் கூத்துகளை பாதி படிச்சு சிரிச்ச கையோடு தளத்துக்கு வந்து எடிட்டர் பதிவை படிச்சு விலா நோக சிரிச்ச மாதிரி இருந்தா பூனையார் கமெண்ட்டை படிச்சு சிரிச்சு முடியல ...
Deleteமனசு எம்புட்டு லேசாவுது ....
எப்பா.. சிரிச்சு முடில சாமிகளா.. 😂😂🤣🤣🤣
Deleteடெக்ஸ் வில்லரின் மறுபதிப்புகள்
ReplyDelete1.அதிரடி கணவாய்
2.கழுகு வேட்டை
3.இரத்த வெறியர்கள்
(மரண முள்)
+1
Delete//அப்புறம் இரண்டே மாதத்துத் தொலைவினில் ஒரு அம்பாரம் நிறையச் சுமக்கக்கூடிய இதழ்களைத் தயார் செய்திட வேண்டியிருப்பதால் இப்போதிலிருந்தே ஞாயிறுகளை அந்த 'தம் கட்டல்' படலங்களுக்குச் செலவிட நினைத்தேன் !! //
ReplyDeleteஅப்படியே அவை என்ன என சொல்லிவிட்டால் என் ஆத்மா சாந்தி அடைந்து விடும்.
எதிர்கால கதைகள் ஒரு முறை சாம்பிள் விட்டு பாருங்கள் சார்...அதன் வெற்றி தோல்விகளை பார்த்த பின் தொடருலாமா்.காத்திருக்கலாமா என முடிவு செய்து கொள்ளுங்கள்..
ReplyDeleteஅத்த ஒரு இதழை அடுத்த வருடம் கூட விட்டு பாருங்கள்..:-)
2 - பூம்பூம் படலம்
ReplyDelete4 - A Big YES for science fiction
5 - Lite reading yes... பக்கம் குறைவான இதழ்கள் No No No
1. லக்கி லூக்கின் அடுத்த 3 மறுபதிப்புகளுக்கு நான் பரிந்துரைப்பது :
ReplyDeleteA. மனதில் உறுதி வேண்டும்.
B. கௌபாய் எக்ஸ்பிரஸ்.
C. தாயில்லாமல் டால்டன் இல்லை.
2. லக்கியின் ALL TIME BEST : கௌபாய் எக்ஸ்பிரஸ்.
3. டெக்ஸ் வில்லரின் அடுத்த 3 மறுபதிப்புகளுக்கு நான் பரிந்துரைப்பது :
A. மரண முள்.
B. மந்திர மண்டலம்.
C. சாத்தான் வேட்டை.
4. Science fictional story - OK!
3)A+1
DeleteB+1
C+1
4-1
சயின்ஸ்.பிக் நமக்கு பிடித்தாலும்
பெரும்பாலானவர்களுக்கு பிடிப்பதில்லை
சாத்தான் வேட்டை My Favorite Book too +1
DeleteHi..
ReplyDeleteithu varai marupathipu varatha TEXn peria (BIG) comics
ReplyDeletearamba kala kathaigal
ReplyDeleteவந்தாச்சி.
ReplyDeleteAnswers:
ReplyDelete1) Don't remember old titles much - but there is this Doctor story which is a good comedy. If you can include that among the three !
2) BOOM BOOM PADALAM
3) No history of TEX titles in my mind
4) SCI-FI : One per year is ok but for pre-booking - please do not include in mainstream
5) Instead of 4 'fat' books, 10 'lean' books are OK :-) Not joking - we need perhaps more reading time but shorter stories ?!
//there is this Doctor story which is a good comedy. If you can include that among the three !//
Deleteஎந்தக் கதையென்று யோசிக்கிறேன் ; யாருக்கேனும் ஞாபகம் வருகிறதா ?
//Instead of 4 'fat' books, 10 'lean' books are OK :-) Not joking - we need perhaps more reading time but shorter stories ?!//
DeleteMaybe an open house discussion on this at Erode....
/// Don't remember old titles much - but there is this Doctor story which is a good comedy. If you can include that among the three !///
DeleteMight be..
"மனதில் உறுதி வேண்டும் "
கானகத்தில் கலவரம் என்னும் கேப்டன் ப்ரின்ஸ் கதையின் அட்டையினுள் இருக்கும் முழுநீள லக்கிலூக் சாகசம்..! ப்ரின்ஸோடது சிறுகதைதான்..!
Dear Editor,
ReplyDeleteMay I suggest the following:
Caption A - let Rafiq Raja be the judge
Caption B- I will take up
Caption C - you can be the judge
This way not everyone need to sieve through all caption comments ! Game ?!
Done sir !
Deleteமறுபதிப்புகள் குறித்து எழுத வேண்டுமாயின் பழைய வெளியீடுகள் குறித்து ஞானம் வேண்டும் ..அது இல்லாமையால் அது இருக்கும் வாசகர்கள் கருத்துக்களை ஏற்று கொள்கிறேன் ..
ReplyDeleteசையன்ஸ் பிக்ஷன் கதைகள் ??? ---தாராளமாக போடலாம்
சார் !!! லைட் ரீடிங் புக் மிகவும் அவசியம் .... போன மாதம் இதை மனதளவில் மிகவும் உணர்ந்தேன் ....
//லைட் ரீடிங் புக் மிகவும் அவசியம் .... போன மாதம் இதை மனதளவில் மிகவும் உணர்ந்தேன் ....//
DeleteI sensed it in general sir...
//மறுபதிப்புகள் குறித்து எழுத வேண்டுமாயின் பழைய வெளியீடுகள் குறித்து ஞானம் வேண்டும் ..அது இல்லாமையால் அது இருக்கும் வாசகர்கள் கருத்துக்களை ஏற்று கொள்கிறேன் ..//
Deleteஇதத் தான் நான், எதைப் போட்டாலும் வாங்குவேன்னு பெருமையா சமாளிச்சுகிட்டு இருந்தேன்...������
ReplyDelete3 TEX :
கேள்வி # 1 அப்படியே ரிபீட்டு !! Next 3 மறுபதிப்புகளெனில் - டெக்சில் நிங்கள் தேர்வுகள் ப்ளீஸ் சேட்டா ?
1 : மரண முள்
2 : கழுகு வேட்டை
3 : மந்திர மண்டலம்
பாக்கிக் கேள்விகளுக்கு பதில் யுவா ?
Deleteடெக்ஸ் பழைய கதைகள் ரீப்ரிண்ட் சற்று தள்ளி வைத்து விட்டு போக்கிரி டெக்ஸ் மீது வெளிச்சம் பாய்ச்சலாம் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் சார்.
ReplyDelete:-))
Deleteமேற்கூறிய வேண்டுகோள் லக்கிகும் பொருந்தும்.
ReplyDeleteI expect more stories like Barracuda, absolute beauty.
ReplyDeleteஇவையெல்லாம் ஞாயிறின் கனமான விருந்துகளைப் போலான தொடர்கள் நண்பரே ; அடிக்கடி சாப்பிட நினைத்தால் அஜீரண ஆபத்துண்டு !
Delete//இவையெல்லாம் ஞாயிறின் கனமான விருந்துகளைப் போலான தொடர்கள் நண்பரே ; அடிக்கடி சாப்பிட நினைத்தால் அஜீரண ஆபத்துண்டு !//
DeleteStories like this every quarter will do lot good or atleast half early once.
I didnt read the first book untill the second one was released, it was such a treat, the gripping story and work was a treat to eyes and reading, those characters were revolving around me for some time.
கேப்ஷன்3:
ReplyDeleteகார்சன்: டெக்ஸ் குளிச்சு நாளாச்சு ப்பா...
டெக்ஸ்: இது குமரிக்கோட்டம்.குமரிப் பெண்கள் குளிக்கும் இடம்.
கார்சன்: உனக்கு என் அழகைப் பார்த்துப் பொறாமை.
டெக்ஸ்: உன் அழுக்கைப் பார்த்து போராமை...அவங்க குளிச்ச அழுக்கு தண்ணியில் நாம் ஏன் குளிக்கணும்.
கார்சன்: தானும் அனுபவிக்கமாட்டான்.நம்மளயும் உடமாட்டான் உத்தம லிலித் புருஷன்.பேசாம அத்தை மகளை கட்டிட்டு பண்ணையில குளிச்சிட்டாவது இருந்திருக்கலாம்.
////முக்கிய...மிக முக்கிய..மிக மிக முக்கியமோ முக்கியமான குறிப்பு : இது ஈரோட்டிலிருந்து 500 மைல் தொலைவுக்குள்ளாற வசிக்கும் வாசகர்கட்கு மாத்திரமே பொருந்தும்ங்கோ///
ReplyDeleteசார் ,
அப்டின்னா ஈரோட்லேயே இருக்கிறவங்க. ஒரு நானூறு கி.மீ ட்ராவல் பண்ணிட்டு கம்பேனியோட சலுகைல திரும்பி வரணுமா என்ன ?☺☺☺☺
அட, நான் டைப்பரக்குள்ள முந்தீட்டீங்களே!!
DeleteCaption1:
ReplyDeleteHorse: தண்ணீரை குடிக்கலாமா? வேண்டாமா?... பாஸோட மனநிலை என்னவென்று தெரியல...
Tex: கார்சனை இன்னமும் காணோம்
.அங்கே வறுத்தகறியை பார்த்தமாத்திரத்தில் அதில் மதிமயங்கிவிட்டிருக்கலாகாது....
///இது ஈரோட்டிலிருந்து 500 மைல் தொலைவுக்குள்ளாற வசிக்கும் வாசகர்கட்கு மாத்திரமே பொருந்தும்ங்கோ///
ReplyDeleteஅதெல்லாம் ரைட்டுங்க சார்!
என்னய மாரி 50 கி.மீ.க்குள்ளார இருக்கரவீல என்ன பண்றது!
அட! என்னய உடுங்க! GP மாரி ஈரோட்லயே இருக்கறவியல யெல்லாம் என்ன பண்றதுங்க சார்!
500 மைலுக்கு அந்தல்ல இருந்து கூட்டியாருவிங்களா??
🤔🤔🤔🤣🤣🤣
அட... உள்ளூராவே இருந்தாலும் ஹோட்டலில் ரூம் போட்டுக் கொடுத்து பள்ளிப்பாளையம் சிக்கனை சுவைக்கச் செய்வோமே சார் ; ஒரு நாளாச்சும் சமையல்கட்டுக்கு லீவு போடட்டுமே நம்மாட்களும் ?!
Delete//ஹோட்டலில் ரூம் போட்டுக் கொடுத்து பள்ளிப்பாளையம் சிக்கனை சுவைக்கச் செய்வோமே///
Deleteசொக்கா..
எனக்கு கிடைக்காது..
எனக்கு கிடைக்காது..
நமக்கு எப்பவும் சமையல் கட்டுதான்னு நெத்தில பத்து போட்டு வெச்ச்ட்டியே..
Caption2: TeX.: ஜில்லென்று ஆளுக்கொரு பீர் கொடப்பா.
ReplyDeleteCarson: ஏம்பா டெக்ஸ், வெறும் பீரை குடிக்கனுங்கிறியா.?
Bartender: ஓசிலெல்லாம் ஊறுகா பாக்கெட்
தரமாட்டேன் boys.
TeX reprint: மந்திர மண்டலம்
ReplyDeleteசார் காலையில் 7அரைக்கு ஃபோன் போட்டா எடுக்கல....நேரே ஆஃபீசுக்கு போனா இறை'ந்து கிடக்கும் குவியலுக்கு மத்திலவதேடுனா காணல...சார் கொஞ்சம் இருங்க வரேன் குரல வாங்கிட்டு தவிப்புடன் இருக்க...நண்பரின் கால் ..அண்ணா நா லீவு ...ஆஃபிசுல சொல்லிருக்கேன் குரல ஏற்று..வந்தாச்சு நா இங்னயே என நன்றிய கூறிய படி ...பார்சல எடுத்து வரும் நண்பருக்கு நன்றி மீட்டிய படி....பரணி பய புள்ளைக்கு வாங்கியாச்சென டைப்ப...இப்ப வரை தம்பியாண்டான் மெசேஜ பாக்கல....வேலை ௐட்டத்தால் இரவு பதினொன்னுக்கு புத்தகத்த பாத்தா நம்ம சிசிவ மினுங்க அனைத்து அட்டைகளும் தூள் கிளப்பினாலும் தளபதியாரின் அட்டைதான இது வரை வந்த அட்டைகள்லயே பெஸ்ட் என்ன பந்தயம்னு கேட்ட மனதை கவனித்த படி அசந்து பார்த்த அட்டைய ௐதுக்கிய படி புத்தக பக்கங்கள புரட்டுனா உற்ச்சாகம்...நான் அட்டவணைய பாத்ததுமே ஆர்வத்த தூண்டிய ...மிக மிக மிக...எதிர் பார்த்த நீரில்லை நிலமில்லை ரெகுலர் சைசில் எனவும் தீவுக்குள் திடுக்கிடும் கதை எனும் அறிவிப்பும் சந்தோசத்த கூட்ட...புரட்டினால் தல பக்கங்கள் பின்னியெடுக்க சுறா வேட்டை அறிவிப்பு பால்ய கால நினைவுகள கிண்ட...அடுத்த ஜம்போ லசுயா அறிவிப்பு ஏக்கத்த கூட்ட ...லக்கியின் ஆண்டு மலருக்காயும்...நிமநியூயார்க்காகயும் I AM WAITING...பின் குறிப்பு ...தல பின் அட்டை வரிகள் மனதை ஈர்க்கிறது...கார்சனின் கடந்த காலத்த மிஞ்சும்னு பட்சி சொல்வதால் இத படிக்கவா ...இன்னும் இன்பமாய் காத்திருக்கும் காற்றுக்கு ஏது வேலிய புரட்டவான்னு குழம்பிய படியே டைப்புகிறேன்....பின் பின்னால் குறிப்பு ...படித்த பக்கம் காட்டியாய் தந்த தல தாங்கிய வரிகளும்...படமும் ஈர்க்குது...ஆசிரியரே...நண்பர்களே ..காற்றுக்கு ஏது வேலிய மொத படிக்கவா அல்லது சிங்கத்தின் சிறு வயதிலா என வழி காட்டுங்களேன் ப்ளீஸ்...
ReplyDeleteகா. வே. முதல்.
Deleteசிசிவ அடுத்து படிங்கள்.
இரண்டும் நன்றாக இருக்கும்.
சயன்ஸ் பிக்ஷன் கதைக்கு எக்ஸ்ட்ரா லார்ஸ் 'எஸ் '
ReplyDeleteSci-fi கதைகள் கிராபிக்ஸ் உடன் திரையில் பார்க்க ஓக்கே ஆனால் காமிக்ஸ். ஸாரி சார் நோ கமெண்ட்ஸ்.
ReplyDelete///
ReplyDelete1 லக்கி லூக் :
புதுசும் சரி ; மறுபதிப்பும் சரி - சம வேகத்தில் விற்பனை கண்டிடும் இந்த நாயகரின் கதைகளுள் அடுத்த 3 மறுபதிப்புகளுக்கு எவற்றைப் பரிந்துரைப்பீர்கள் ?///
மனதில் உறுதி வேண்டும்
லக்கிலூக்குக்கு கல்யாணம்
தலைக்கு ஒரு விலை
மேச்சேரி அண்ணன் கண்ணனின் கருத்தை வழிமொழிகிறேன்.
Delete///ALL TIME BEST என்று லக்கியின் கதையொன்றைத் தேர்வு செய்வதாயின் - அது எதுவாக இருக்கோம் ? I repeat - just ONE !!!///
ReplyDeleteபுரட்சித் தீ
அதே,அதே...
Delete///கேள்வி # 1 அப்படியே ரிபீட்டு !! Next 3 மறுபதிப்புகளெனில் - டெக்சில் நிங்கள் தேர்வுகள் ப்ளீஸ் சேட்டா ?///
ReplyDeleteகழுகு வேட்டை
மரண முள்
நள்ளிரவு வேட்டை
1.மரண முள்,
Delete2.கழுகு வேட்டை,
3.நள்ளிரவு வேட்டை.
நோ போட்டிக்காண்டி ஒன்லி லூட்டிக்காண்டி ////
ReplyDelete//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
கேப்ஷன் 1
குதிரை : ( மனதிற்குள் ) ஏதோ தொங்கு பாராளுமன்றம் வரும் ..குதிரை பேரம் நடக்கும்னு பேசிக்கிட்டாங்க ..அப்படி ஒண்ணும் ஆவல ..நல்லவேளை நான் தப்பிச்சேன்
டெக்ஸ் : கார்சனுக்கும் டைகருக்கும் புத்தியேயில்ல .. அவரு கூப்பிட்டா இவங்க போயிடனுமா ? பதவியேற்பு விழாவுக்கு அவருதான் எல்லாரையும் கூப்புடுறாரே ????
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
கேப்சன் 2
பார்மேன் : மிஸ்டர் கார்சன் !! நீங்க கேட்டமாதிரியே சுத்தியல் ஒண்ணு ஆர்டர் குடுத்திட்டேன்
டெக்ஸ் : ஹலோ ஆட்டுத்தாடி !!!! இனிமே உங்க ஆயுதம் வின்செஸ்டர்,ரிவால்வர் இல்லையா ?
கார்சன் : சுத்தியல் இருந்தாத்தான் இப்போதைக்கு ட்ரெண்டிங்ல இருக்க முடியும் !!!!
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
கேப்சன் 3
டெக்ஸ் : அடேய் கிழவா !! நல்ல லெக் பீஸ் இருக்கற இடமா கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு இங்க கூட்டிட்டு வந்துட்டியே ??
கார்சன் : ஹி..ஹி ..விழிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
செனாஅனா!! :)))))))
Deleteஹைய்ய்ய் ...கம்பெனிக்கு நோ பொங்கலோ பொங்கல் ன்னு தோண்றது !!
Deleteநியூட்டனின் புது உலகம்!!
ReplyDeleteபெரிய எதிர்பார்ப்புப்போடு படித்ததினாலோ, என்னவோ கதை அவ்வளவாக ஈர்க்கவில்லை!!
மார்க் : 6/10
கடேசியா "சிங்கத்தின் சிறுவயதில்" மட்டுந்தேன் பாக்கி!!
Deleteலக்கிலூக் மறுபதிப்புகள்
ReplyDelete1.கௌபாய் எக்ஸ்பிரஸ்
2.மனதில் உறுதி வேண்டும்
3.தலைக்கு ஒரு விலை
***** நோ போட்டிக்காண்டி *** ச்சும்மா லூட்டிக்காண்டி ******
ReplyDelete***** கேப்ஷன்-3 ***** (ஏனோ இதுக்கு மட்டுந்தே கேப்ஷன் எழுத வருது)
டெக்ஸ் : "கார்சன்.. நம் குதிரைகளுக்கு ஓய்வு தேவை! அவை இங்கே வயிற்றை நிரப்பிக்கொள்ள பசும்புற்களும், தண்ணீரும் தாராளமாகவே இருப்பது சாதகமான அம்சம்! குதிரையை விட்டிறங்கு.. நாமும் இங்கேயே சற்று இளைப்பாறிச் செல்வோம்"
கார்சனின் மைன்டு வாய்ஸ் : 'அடங்கபா.. கொஞ்ச நேரம் சைட் அடிச்சுட்டுப் போலாம்றதை எவ்வளவு டீசன்ட்டா சொல்றான் பாரு!'
லக்கிலூக் ஆல்டைம் பெஸ்ட்
ReplyDeleteபூம் பூம் படலம்
டெக்ஸ் ஆல்டைம் பெஸ்ட்
ReplyDeleteசாத்தான் வேட்டை
கேப்ஷன் 1. (டைனமைட்) என்ன தல யோசனை
ReplyDeleteடெக்ஸ். உலககோப்பை கிரிக்கெட்ல என்னை செலக்ட் பன்னல அதான்
டைனமைட். செலக்ட் ஆயிருந்தா என்ன பன்னுவிங்க
டெக்ஸ். என் பேரு டெக்ஸ் வைக்க மாட்டேன் டொக்ஸ் ஆக மாட்டேன் டக்ஸ் அடிச்சிகிட்டே இருப்பேன் சிக்ஸ் ஆடியன்ஸ் தட்டுவாங்க கிளாப்ஸ்
டைனமைட். யப்பா இவரு டெக்சா டி.ஆரா
கேப்ஷன் 2: டெக்ஸ் பெருசு என்ன டல்லா இருக்கே
ReplyDeleteகார்சன்: நம்ம காண்டிராக்டர் நேசமணிக்கு அடி பட்டுச்சே அது தலைல மட்டும்தானா இல்ல புபு பூபூ
பார்மேன்: அய்யய்யோ
கார்சன்: யோவ் தலைல மட்டுந்தானா உடம்பு புல்லா அடிபட்டுச்சான்னு கவலையாயிருக்கேன் நீ வேற
டெக்ஸ் : ??
கேப்ஷன் 3: கார்சன்: ஆஹா என்னா அழகான ஆறு என்னா ஜோரான பிகரு
ReplyDeleteடெக்ஸ் : பெருசு அது ஆறு இல்ல நீ உட்ட ஜொள்ளு நிரம்பி வழியுது
super!
Deleteடைனமட் :
ReplyDeleteஎன்ன டெக்ஸ் பலத்த யோசனை..?
இல்ல...தமிழ்நாட்ல எலக்ஷன் வருதாம்..அதான் நிக்கலாமா ன்னு ஒரு யோசனை...
ஐயோ...டெக்ஸ் அதுக்கு நீ இதுவரைக்கும் புடிச்ச அத்தனை பேங்க கொள்ளைகாரங்க அடிச்ச பணத்தை விட அதிகமா செலவு பண்ணனும்..அப்படி பண்ணியும் தலை குப்புற கவுத்தறுவாங்க...ஜாக்கிரதை
டைனமட் :
ReplyDeleteஎன்னப்பா டெக்ஸ்....எம்மேல இருந்து இறங்குறதும் தெரியாது..நீ உள்ளே போறதும் தெரியாது..கலவரகாரனுக ஜன்னலை உடைச்சு வெளியே வர்றதும் தெரியாது...இன்னிக்கு என்னமோ சலுனுக்குள்ள போகவே இப்படி யோசிச்சுட்டு இருக்க...?
இல்ல...எவ்ளோ பெரிய கலவரகாரங்க...போராட்டகாரங்க இருந்தாலும் பரவால...ஆனா உள்ள போராட்டம் பண்றது சிங்கத்தின் சிறுவயதில் போராட்ட குழுவாம்...அவுகளை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்..டைகரும் ,கார்சனும்
இருந்தா கூட வேலைக்கு ஆகாது.அதான் கர்னல் கிட்ட சொல்லி ராணுவ படையை வர சொல்லி இருக்கேன்...
சூப்பர் டெக்ஸ்...கத்தியை விட அதிகமா புத்தியை யூஸ் பண்றீங்க..ஓகே ஓகே.
( இது ஏதும் அறியாத டைனமட்..)
( இது அனைத்தும் அறிந்த டைனமட்..)
ReplyDeleteடைனமட் :
என்னப்பா டெக்ஸ்....எம்மேல இருந்து இறங்குறதும் தெரியாது..நீ உள்ளே போறதும் தெரியாது..கலவரகாரனுக ஜன்னலை உடைச்சு வெளியே வர்றதும் தெரியாது...இன்னிக்கு என்னமோ சலுனுக்குள்ள போகவே இப்படி யோசிச்சுட்டு இருக்க...?
இல்ல...எவ்ளோ பெரிய கலவரகாரங்க...போராட்டகாரங்க இருந்தாலும் பரவால...ஆனா உள்ள போராட்டம் பண்றது சிங்கத்தின் சிறுவயதில் போராட்ட குழுவாம்...அவுகளை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்..டைகரும் ,கார்சனும்
இருந்தா கூட வேலைக்கு ஆகாது.அதான் கர்னல் கிட்ட சொல்லி ராணுவ படையை வர சொல்லி இருக்கேன்...
ஹீஹீ...ஹோஹோ...ஹாஹா...
ஏய்..ஏய்...எதுக்கு இப்ப இப்படி சிரிக்குற ...
இல்ல ....லக்கி ,ஜாலி ஜம்பரை விட நீங்க செமயா காமெடி பண்றீங்க...அதான்..
கேப்ஷன் மூன்றுக்காக :
ReplyDeleteகார்சன்:
டெக்ஸ்..டெக்ஸ்...பாலைவனத்துல அத்துனை தூரம் பயணம் செஞ்சப்ப கூட புழுக்கம் தெரில....இப்ப தான் தெரியுது...உடனே நாம இங்கே குளிச்சே ஆகனும்...
டெக்ஸ்..
ஹலோ ...இளவரசிகளே...நாங்கள் இங்கே நீராடலாமா...?
உம்..தாராளமா நீராடலாம்..நண்பர்களே...ஆனா கண்ணை கறுப்பு துணியால் கட்டி கொண்டு தான் குளிக்க வேண்டும்...
கார்ஸன்..
ஏப்பா டெக்ஸ்...எனக்கு பயங்கரமா குளிருது.இப்ப குளிச்சா ஜலதோசம் புடிச்சுக்கும்...நீ போய் குளி ..நான் இங்கே இருந்தே பாத்துட்டு ச்சே வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்
கார்ஸன் :
ReplyDeleteஹலோ குமரிகளே...இங்கே பக்கத்துல ஏதாவது நீரூற்று உள்ளதா...?
குமரி : ஏய்...பெருசு என்ன நக்கலா...?
டெக்ஸ் : சாரி ...இளவரசிகளே...என் நண்பனுக்கு உங்களை போன்ற பெண்களை கண்டு விட்டால் சுத்தி முத்தி ஒண்ணும் தெரியாது...தப்பா நினைச்சுகாதீங்க...தெரிஞ்சா சொல்லுங்க...தெரிலைன்னா விட்றுங்க..
.
இப்படி கோவப் படாதீங்க...வா கார்சன் போகலாம்..
ReplyDeleteகார்சன் ;
ஓ...இதுதான் தேவலோகமோ...?
டெக்ஸ்...
இல்ல பெருசு...அவுக காதுல விழுந்தா இது தான் பரலோக பயணத்தின் நுழைவு வாசல்..ஒழுங்கா ஓடி வந்துரு
ஐஐஐ... சயின்ஸ் ஃபிக்ஷனா. டபுள் ஓகே..
ReplyDeleteTex Reprint
ReplyDeleteமரணமுள்
Lucky Reprint
பழைய புக் வைத்துள்ளோர் சாய்ஸ்
டெக்ஸ் மறுபதிப்பு request:
ReplyDeleteதனியே ஒரு வேங்கை - கொடூர வனத்தில் டெக்ஸ் - துரோகியின் முகம் series. சிறுவயதில் நான் மிகவும் ரசித்தவை. Please consider!
இவற்றை முன்பு நான் ஒருமுறை கேட்டு இருந்தேன்.
Delete*ஒரு ஷெரீப்பின் சாஸனம்*
ReplyDeleteவாய்விட்டுச் சிரிக்க செய்யும் இடங்கள் ஏராளம்..
*கண்டிப்பு கறாரு நீதிக்காவலன் வரலாறு*
மனுஷன் தலைக்கு உள்ள ஒன்னும் இல்லன்னாலும் தலைக்கு மேல மண்டகனம் ஜாஸ்திதான்...
முதல் பக்கத்தில் இருந்தே அலப்பறைய ஆரம்பிக்கிறார் நம்ம அல்டாப் ஆறுமுகம்..
லாலிபாப் சாப்பிட்டது யாருன்னு யோசிக்கிறதுல இருக்கு நம்ம டாக்புல்லோட புத்திசாலித்தனம் அதுலயும் கிட் வாய்க்குள்ள விரல் விட்டு கண்டிபிடிச்சு 'தொப்பிய' !!
எடுத்து இத்தினி நேரமா தொப்பியவா பயல் சப்பிகிட்டிருந்தான்னு
யோசிக்கிறதெல்லாம் வேற லெவல்...
இன்ஸ்பெக்ஷன் வந்த இன்ஸ் அ பேசவே விடாம வாய்க்குள்ள புகுந்து பேசறதும் ஆள் இன்னாருன்னு தெரிஞ்சதும் கூழை கும்பிடு போட்டு பாட்டாவுக்கு பாலிஷ் போடறதும்
'உலக நடிப்புடா சாமி'..
என்ன சோகம் பாருங்க மக்களே நல்லா இருந்த ஊரும் ரெண்டு போலிஸுக்கும் வந்த சோதனை அடுத்தடுத்து வழிப்பறி பண்ணி இந்த கைப்புள்ள டாக்புல்ல வம்புழுக்கிறதே வில்லன் கட்டதுரைக்கு வேலையா போச்சு ..
ஷெரீப்புக்கு செய்வினை வெக்கறது நம்ம ஆர்டின் ன்னு டாக்புல் நினைச்ச இடத்துல இருக்குது கிட்டோட கெத்து..
(அந்த பயம் இருக்கட்டும்)
வாழ்க்கை ஒரு வட்டம் ன்னு
நாலா பக்கமும் கொள்ளையடிக்க வில்லன் போடுறான் திட்டம்..
நல்ல வேளை இந்த கதை நம்ம மோடி கண்ணுக்கு தெரியல..
தெரிந்திருந்தா
ரூவா நோட்டு செல்லாது ன்னு சொன்னதோட நிப்பாட்டிருப்பாரான்னு தெரியல.
///நல்ல வேளை இந்த கதை நம்ம மோடி கண்ணுக்கு தெரியல..
Deleteதெரிந்திருந்தா
ரூவா நோட்டு செல்லாது ன்னு சொன்னதோட நிப்பாட்டிருப்பாரான்னு தெரியல.///
😆😆😆
@சிவா. அனுபவிச்சு எழுதிருக்கீங்க விமர்சனத்தை. உங்க விமர்சனத்தைப் படிக்க படிக்க புக்கை படிக்கனும் போல இருக்கு.
Delete1. மறு வரவுக்குப்பின் வராத கதைகளையெல்லாம் வரிசையாக போட்டுத் தாக்கவும். வருடத்துக்கு 4 ஆல்பம் வந்தாலும் அருமை.
ReplyDelete2. பயங்கரப்பொடியன்
3. பழிக்குப்பழி, அதிரடிக் கணவாய்.
4. God speed
5. இலகுத்தன்மைங்கறதை விட கதை இன்ட்ரஸ்டிங்கா இருக்கனுமங்கிறதே தேவை. உதாரணம் முடியா இரவு மற்றும் மெல்லத்திறந்தது கதவு, சித்தம் சாத்தானுக்கு சொந்தம். இவை எல்லாம் இலகுவான கதைகள் அல்ல ஆனா எடுத்தா படிக்காம வைக்க முடியாது. நி. நி. மற்றும் ட்ரெண்ட் எனக்கு சிரமமா இருந்தது. பக்கம் குறைவா இருக்கனுங்கறது அவசியமில்லை. காதலும் கடந்து போகும் நீளமான கதை இருந்தாலும் பட்டாசு. புயலுக்கொரு பிரளயம் கூட நல்லா இருந்துச்சு.
Sheriff I agree with you on point no.5
Delete1 லக்கி லூக் REPRINT :
ReplyDelete1.ஜேன் இருக்க பயமேன் ..
2.ஒரு கோச் வண்டியின் கதை ..
2. ALL TIME BEST LUCKY FOR ME " பூம் பூம் படலம் " ..
3.TEX REPRINT:
1.பழிக்குப்பழி
2.மந்திர மண்டலம்
3.மரணமுள்..
4.ஆண்டுக்கொன்று" என்ற முறையில் ஒரேயொரு SCIENCE FICTION ..
A BIG YES ...
5.எனது கேள்வி : Maybe தொடரும் காலங்களில் சற்றே light reading என்ற focus தான் முக்கியத் தேவையா நமக்கு ?
இல்ல சார் .. CURRENT FORMAT S GOOD ..
TEX REPRINT:
Delete1.பழிக்குப்பழி
எந்தக் கதையென்று நினைவுக்கு வரவில்லை சார் ; ஒற்றைக்கு ஒற்றையில் டெக்ஸை ஒருமுறை வீழ்த்தும் சாகசமா ?
அதே தாங்க சார். 87 கோடை மலர்ல வந்துச்சு.
Delete1.பழிக்குப்பழி
Deleteஎந்தக் கதையென்று நினைவுக்கு வரவில்லை சார் ; ஒற்றைக்கு ஒற்றையில் டெக்ஸை ஒருமுறை வீழ்த்தும் சாகசமா ?
எத்தனைமுறை இதை கேட்பீங்கஎடி சார்
இது வரைநான் மூன்று முறைஉங்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளேன்
Yes sir
Deleteஒற்றைக்கு ஒற்றையில் வில்லன் டெக்ஸ் ஸை சுட்டு காயப்படுத்தி டெக்ஸ் ஆஸ்பத்திரியில் படுத்திருப்பாரே ?!!! அதே கதைதான்
லயன் கோடைமலர் 87 ல் வெளிவந்த கதை சார். டெக்ஸ் ஸை கொல்வதற்காக செவ்விந்திய கலப்பினான ரூபி ஸ்காட்டை நியமிப்பார்கள். இருவரும் ஒற்றைக்கு ஒற்றை மோதும் போது ரூபி ஸ்காட் துப்பாக்கியை எடுக்காமலே துப்பாக்கி உறையில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி டெக்ஸை சுட்டு விடுவான். (அவனுக்கு தெரியும் டெக்ஸை இப்படித்தான் சுட முடியுமென்று 😜) தோளில் தோட்டா காயத்துடன் மீண்டும் திரும்ப வந்து தனது இடது கையிலேயே ரூபி ஸ்காட்டை போட்டுத் தள்ளுவார். இப்போதாவது ஞாபகம் வருதா சார் 😞
Deleteபழிக்குப் பழி.
Deleteசும்மா funன்னுக்கு. போட்டிக்கல்ல.
ReplyDeleteகேப்சன் 2.
A. டைகர் வரேன்னு சொன்னான். எங்கே காணோம்? பிகர் ஏதாவது செட் ஆகி தள்ளிட்டு போயிட்டானா?
B. அதுக்கு அவன் சரிப்பட மாட்டான்பா. சீக்கிரம் மட்டை ஆயிருப்பான்?
C. இல்லை. சந்தா V ன்னா வீணாப்போன ஹீரோக்குன்னு நினைச்சுட்டு அதுல வாய்ப்பு கேட்டுருக்கான். அது வாண்டுகளுக்கு, அதுல டெரர் மூஞ்சி எல்லாம் போட முடியாதுன்னு சொல்லி ஆசிரியர் தொரத்தி விட்டுட்டாராம். அந்த சோகத்துல பாட்டிலை எடுத்துட்டு ரூமுக்குப் போய்ட்டான்.
அமெரிக்காவுக்கு ஓலா ஆட்டோ ஒண்ணு புக் ஆகியிருக்கதா தகவல் !
Delete101st
ReplyDelete1 Dont like re prints
ReplyDelete2 Super circus
3 Dragon nagaram
4 Dont like Sci Fi.. If in mainstream, shall skip subscription n buy at stores selectively.. Sorry..
5 More books.. heavy albums..needed
//More books.. heavy albums..needed//
Delete😎😲
கர்சன் சார் மறந்துராதீங்க முப்பது வருசமாச்சு ..
ReplyDeleteசரிசரி மானத்தை வாங்காதேப்பா என்னோட செலவுதான் இன்னிக்கும் ..
என்ன பெருசு என்ன விசயம்?
முப்பது வருசத்துக்கு முன்னாலே என்னோட கல்யாண பார்ட்டி இதே பார்லேதான்நடக்கும்னு இவன்கிட்டே சொல்லியிருந்தேன் பயபுள்ளே மறக்காம நான் இங்கே வர்ற ஒவ்வொரு தடவையும் அதைச்சொல்லி ஆட்டையை போட்டுடறான் .
கேப்சன் 3
ReplyDeleteநாலு மைலுக்கு அந்தாண்டை இருந்து எங்கே சலூனு தண்ணிபோடணும்னு சொல்லிட்டு வந்தியே கார்சன் அந்தா அந்த மு க்கு திரும்புனதும் சலூன் இருக்கு வா போகலாம் ..
ஹிஹி செவாய்க்கிழமை தண்ணிபோடமாட்டேன்னு செத்துப்போன என் பாட்டி மேலே சத்தியம் பண்ணினது இப்பதான் ஞாபகம் வருது டெக்சு ..நீ போவியா ம் நான் இந்த மரத்து நிழல் லே பொழுதை கழிப்பேனாம்..
லக்கிலுக்
ReplyDelete1.தாயில்லாமல் டால்டனில்லை
2.மனதில் உறுதி வேண்டும்
3.பிசாசுப் பண்ணை
டெக்ஸ் வில்லர்
1.மரணத்தின் முன்னோடி (3 பாகக்கதை)
2.கழுகு வேட்டை
3.பழிக்குப்பழி & பழிவாங்கும் பாவை (ஒரே இதழாக)
4.இரத்த ஒப்பந்தம் (டெக்ஸ் மனைவி இறந்து போகும் கதை) போனஸாக 😊
// 3.பிசாசுப் பண்ணை //
Deleteஇந்த கதையை படித்தது இல்லை! கண்டிப்பாக லக்கி லூக் மறுபதிப்பு செய்வதாக இருந்தால் இந்த கதையை வெளியிடுங்க விஜயன் சார் !!
கே ப்சன் 3
ReplyDeleteபெருசு நல்ல கவனிச்சுக்கோ நாம தேடி வந்த எதிரி அந்த போட் லேதான் இருக்கான் ..நீ மெல்ல நீந்திப்போயி படகுலே அவனை மடக்கு . நான் கரையிலே இருந்து அவன் தப்பிச்சுக்காம பார்த்துகிறேன்
ம்ஹ்ம் ..எதிரி படகில் இல்லே ..எதிர்லேயேதான் இருக்கான் .
கேப்சன் 1
ReplyDeleteகிட்டுக்கு பொண்ணு பார்க்க பொண்ணு வீட்டுக்கு போறதுக்கு கார்சன் இங்கதானே காத்திருக்க சொன்னான் இன்னும் ஆளை காணோமே ..
அப்பாடா..வெளியே பொழுது விடிஞ்சா வாசலுக்கும் விடியும் பாங்க .எத்தனை நாளுக்குத்தான் கிழடு கட்டைகளையே சுமந்து காலம் தள்றது ..கி ட்டுக்கு கல்யாணம் ஆனா அப்படியே நமக்கும் ஒரு பொண்ணு பார்ப்பாங்கன்னு நினைக்கிறேன் .
சார் டெக்ஸின் மறுபதிப்பு புத்தகம் பாலைவனபரலோகம் ? என நினைக்கிறேன். சிங்கங்களை பாலைவனத்தில் எதிர்த்து கொல்வாரே அந்த புத்தகம் மற்றும் கழுகு வேட்டை மற்றும் அதிரடி கணவாய் போன்ற இன்னும் சில புத்தகங்கள் சேர்த்து டெக்ஸின் மறுபதிப்பு என வெளியிட்டால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். 19 ஆண்டுகால சந்தா வாசகர் என்ற முறையில் நானே இந்த புத்தகங்களை இதுவரை முழுவதும் படித்ததில்லை என்பது தான் சோகமான விசயம் .🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
ReplyDeleteகேப்சன் 3
ReplyDeleteA பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் ..
B உதைகள் பலவிதம் ..ஒவ்வொன்றும் ஒருவிதம் ..
A சத்தியமா நான் மேலே பறக்கிற பறவைகளை ப்பார்த்துதான் பாடினேன்ப்பா
B நம்பிட்டேன்ப்பா
கேப்சன் 3
ReplyDeleteA எல்லாமே 36 24 36 தானேப்பா
B எனக்கு தெரிஞ்சு 62 இருக்கும்
A அவ்வளவா.. தப்பா சொல்றியோ ன்னு தோணுது
B நான் சொன்னது உன்னோட வயசு பெருசு
லக்கி எதுவாணாலும் ஓ கே. மரணமுள் வேண்டும். சார் டெக்ஸ் கதைகளை பெரிய புக்காக நான்கு கதைகளை போடவும். சை எனக்கு இந்த ஒல்லி புக்கே புடிக்காது
ReplyDeleteSci fi டபுள் ஓ கே
ReplyDeleteDear Edi,
ReplyDeleteDouble OK for Light Reading in Future. It's the demand of changing times. We should change to Special double issues once in a quarter, and for flagship series like Tex - twice in a quarter.
All time Lucky favourite : Puratchi Thee aka The Daily Star.
Tex reprint choice: haven't read all Tamil Tex of yesteryears, so will stop with one which stayed in memory, Marana Mull - a different Tex story from usual.
Science Fiction in Regular Subscription... 1 issue per year always welcome.
//ஒரு வேளை.....அல்லாருக்கும் வயசு ஆகுதோ.....??//
ReplyDeleteவெகு சமீபத்தில் படிப்பதற்கான பிரத்தியேக கண்ணாடியை மாட்டத் துவங்கிய பிறகு தான், புத்தகங்களை கையில் எடுத்துப் பார்க்கவாவது தோன்றுகிறது! நடுவே ஏற்பட்ட காமிக்ஸ் ஒவ்வாமைக்கு இதுவும் ஒரு மறைமுக காரணமாக இருந்திருப்பதை இப்போது அறிகிறேன்! எழுத்துக்கள் சற்றே மசமசவென்று தெரிந்தாலும், கண்களை குறுக்கிப் பார்த்தே சமாளித்து, கண்ணாடி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற ஞானோதயம் ஏற்படுவதை, மூளையின் ஏதோ ஒரு பகுதி தடுத்து வந்திருக்கிறது! ஆக, வாசிப்பை அதிகரிக்க, ஈரோடு வாசக சந்திப்பில், இலவச கண் பரிசோதனை முகாம் ஒன்றை நீங்கள் அமைக்கலாம்! கேப்ஷன் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ப்ரொக்ரெஸிவ் லென்ஸ் கண்ணாடியை பரிசாக அறிவிக்கலாம்! மற்றபடி, டப்பி இன்னும் வரவில்லை...
(பரிசுக்கு அல்ல, பகடிக்கு..!)
Caption #1:
டெக்ஸ் : ஈரோட்டில் கால் வைக்கும் கேப்ஷன் டைகர்களை எனது வின்செஸ்டர் வரவேற்கும்...
டைனமைட்: நானென்ன ஜாலி ஜம்பரா, பன்ச் டயலாக் பேசுவதற்கு? ஓ, தாட் பப்பிளா, அப்ப சரி!
Caption #2: (படத்தில் உள்ளபடி, மூவரும் மைண்ட் வாய்ஸில் பேசிக் கொள்கிறார்கள்)
டெக்ஸ்: போட்டியாளர்கள் பாருக்குள் பதுங்கியுள்ளனரா?
கார்சன்: வறுத்த கறி ரெடி தானே?
பார்டெண்டர்: ஆம், ஈரோட்டில் இன்று வெயில் அதிகம் தான்...
Caption #3:
கார்சன்: நல்லவேளை, கேரளா வழியே ஈரோடு என சுற்ற விடுவதை இவன் இன்னும் கண்டு பிடிக்...
டெக்ஸ்: ஓ, இது தான் உன் "ஈரோட்டுத் தோழன்" கூறிய குறுக்குப் பாதையாக்கும்...? ஜொள்ளுக் கிழடுகளா...
@Karthik
Delete////: ஓ, இது தான் உன் "ஈரோட்டுத் தோழன்" கூறிய குறுக்குப் பாதையாக்கும்...?///
கேள்வி : 'ஈரோட்டுத் தோழன்'ன்னு நீங்க குறிப்பிட்டது நம்ம 'ஈரோடு ஸ்டாலின்'ஐ தானே?
///
ஜொள்ளுக் கிழடுகளா...///
மேற்காணும் எனது கேள்விக்கு உங்களது பதில் 'யெஸ்' என்றால், நானும் இந்த 'ஜொ.கி'க்கு கெக்கபிக்கேன்னு சிரிச்சு வைக்கலாம்னு இருக்கேன்!
ஆனா 'நோ'ன்றது உங்க பதிலா இருத்தால்.. ஜூரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாவது கேப்ஷன் போட்டியில் உங்களை ஜெயிக்கவைத்து ஈரோட்டு விழாவுக்கு வரும்படி செய்துவிடுவேன்!
நீங்க வரணும்! வந்தே ஆகணும்! கிர்ர்ர்ர்...
@ஈரோட்டுத் தோழர் விஜய்:
Deleteநான் நோ என்று சொல்லும் பட்சத்தில், அந்தக் கிழடு நீங்கள் தான் என்ற உடனடி முடிவுக்கு தாவுமளவுக்கு வயதாகி விட்டதா என்ன?! :D இடையில், நண்பர் மற்றும் பேரிளைஞர் ஸ்டாலின் அவர்களை வேறு வம்புக்கு இழுத்து ஆசையை தீர்த்துக் கொண்டிருக்கிறீர்! :P
Karthik. :) :) :)
Delete/// @ஈரோட்டுத் தோழர் விஜய் ///
Deleteமுடிஞ்ச்! எல்லாமே இதுலயே முடிஞ்ச்!
கார்..த்..தி..க்.... ர்ர்ர்ர்ர்ர்...
127வது
ReplyDeleteSci fi வருடத்திற்கு ஒன்று கட்டாயம் தரலாம்.
ReplyDeleteடெக்ஸ் கதைகளை நல்ல குண்டு புத்தகமாகப் போட்டுத் தாக்கலாம்.
ReplyDeleteடெக்ஸ்....
ReplyDelete1.மரணமுள்.2.பழி வாங்கும் பாவை.3.சிகப்பாய் ஒரு சிலுவை.
மூன்றும் இணைந்த க\வெ யில் குண்டாகப் போட்டுத் தாக்கவும்.!
Gd idea.!!
DeleteLite ரீடிங் தான் பிடிக்கும்.பரிசோதனை முயற்சிகளையும் வரவேற்கின்றேன்.
ReplyDeleteகுண்டுப் புத்தகங்களை மிக விரும்புகின்றேன்.ஒல்லிப் புத்தகங்கள் என்றாலே எமக்கு அலர்ஜி!.
ReplyDeleteJuly இதழ்கள் என்னென்ன? புத்தகங்கள் கிடைக்க பெற்ற நண்பர்கள் யாரேனும் please,
ReplyDeleteகுமார் @
Delete1. The லக்கி ஆண்டு மலர் - உத்தம புத்திரன் & பாரிஸில் ஒரு கௌபாய்
2. நீரில்லை ... நிலமில்லை ..
3. நித்திரை மறந்த நியூயார்க்
4. மினி கலர் டெக்ஸ் (சாந்தாதாரர்களுக்கான)
Super parani Nandri
Deleteவிஜயன் சார்,
ReplyDelete1 லக்கி லூக் : மறுபதிப்புக்கு பதில் லக்கி லூகின் புதிய கதைகளை ரெகுலர் (அதிகரிக்கலாமே) வெளியிடலாமே ?
2 ALL TIME BEST: புரட்சி தீ
3. TEX Next 3 மறுபதிப்புகளெனில்: இவரின் புதிய கதைகள் இத்தாலியில் மலை போல் குவிந்து இருக்க மறுபதிப்பு பக்கம் போவது ஏன்? அதற்கு பதில் புதிய கதைகளின் எண்ணிக்கையை சந்தாவில் அதிக படுத்தினால் அனைவரும் சந்தோசப்படுவார்களே ?
4. "ஆண்டுக்கொன்று" என்ற முறையில் ஒரேயொரு SCIENCE FICTION முயற்சித்துப் பார்ப்பது.
அடுத்த வருடம் முயற்சித்து பார்க்கலாம்; அனைவரும் அதனை விரும்பினால் தொடரும் வருடங்களில் வருடம் ஒரு SCIENCE FICTION கதையை தொடரலாம்.
5. மாதந்தோறும் இதழ்கள் வரும் வரைக்கும் வீடு கட்டிக் காட்டி, கம்பு சுழற்றும் நமது பயில்வான்களில் பெரும்பான்மை.
இப்பொது வருவது போல் ஒல்லி மற்றும் குண்டு என கலவையாக தொடர்ந்து வரட்டுமே!
அனைத்து கருத்துகளையும் வழிமொழிகிறேன்..!
DeleteMe too.
Deleteவிஜயன் சார்,
ReplyDeleteமர்ம மனிதன் மார்ட்டின் கதையை எனது துணைவி படித்து முடித்து விட்டார்; அவருக்கு பிடித்து உள்ளது. ஆனால் அவருக்கு சில விஷயங்கள் கதையில் புரியவில்லை, எனவே அந்த கதையை நான் படித்து முடித்த பின் அவருடைய சந்தேகங்களை தெளிவுபடுத்துகிறேன் என்று சொல்லி உள்ளேன்!
நல்லா மாட்டினீங்க.
Deleteதோர்களுக்கு அடுத்து மார்ட்டினா ... சூப்பர்
Deleteதகவல் வந்து விட்டது.....
ReplyDeleteஇதுவே சூப்பர்ப்...:-)
கேப்சன் 3
ReplyDeleteB எதிரி இந்த ஏரியாவிலேயே இருக்க வாய்ப்பு இல்லேன்னு அடிச்சி சொல்றியே கார்சன் .எப்படி?
A இருந்திருந்தா இந்த கண்கொள்ளா காட்சியை விட்டு பயல் வேறே எங்காவது போயிருப்பானா என்ன ..
கேப்சன் 3
ReplyDeleteA இன்னிக்கு என்னோட ராசிபலன் லே நச்சுன்னு போட்டிருந்தது கரெக்ட்டா இருக்குப்பா
B அப்படி என்ன நச்சுன்னு போட்டிருந்தான் ?
A கண்ணா மூணு லட்டுதின்ன ஆசையா னு போட்டிருந்தாம்பா .
Ha ha ha 😃😃😃
DeleteVeeraiyan @ super!
Deleteகேப்சன் 3
ReplyDeleteஜொள்ளு கிழடே ..வயோதிக வாலிபா .தேவையே இல்லாம என்னை ஏன் இங்கே கூட்டிவந்தே?
பொறு டெக்சு பதறாதே ..பத்துவருசம் முன்னேபின்னே எல்லோரும் கிழடுதான் .பதினாறு வயசிலே விடற ஜொள்ளு மண்டையைப்போடற வரைக்கும் இருந்தாதான் அது நார்மல் ..அது இல்லன்னாலோ இருக்கிற ஆளைப்பார்த்து பொறாமைப்பட்டாலோ அது நீ சொன்னமாதிரி வாலிப வயோதிக அன்பர்களே நண்பர்களே கேஸுதான் ..என்ன இது வரைக்கும் ஒரு நாப்பது வருஷம் ஜொள்ளுவிட்டாச்சு ..இன்னொரு நாப்பது வருஷம் விட்டாதான் என்ன தப்புனு கேட்கிறேன்.
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteடெக்ஸ்வில்லர் புதிய கதைகள் ஏராளம் இருக்க ஏன் மறுபதிப்பு பக்கம் அதிகம் ஆர்வம் காட்டுகிறீர்கள். அதற்குப்பதிலாக தாங்கள் தமிழில் வெளியிடாத டெக்ஸ் புதிய கதைகள் பக்கம் கவனம் திருப்பினால் என்ன? தற்போது ஜம்போ காமிக்ஸில் இளம் டெக்ஸ் நன்றாகத்தானே போகிறது. இது மாதிரி ஏதாவது முயற்சித்தால் என்ன?
டெக்ஸ் மறுபதிப்பு - வேண்டாம், புதிய கதைகள் வரட்டும்.
லக்கி லூக் - குழந்தைகள் முதல் பல்போன குழந்தைகள் வரை ஆல் டைம் பேவரைட் ஹீரோ. மறுபதிப்புகள் ஓரளவு வந்துவிட்டது. லக்கி 2.0, சுட்டி லக்கி பக்கம் திரும்பலாம்.
ஆல்டைம் பேவரிட் - கௌபாய் எக்ஸ்பிரஸ்
கிராபிக் நாவல் வடிவில் வாசகர்களின் ரசனை பன்மடங்கு மேம்பட்டுள்ளது. சைன்ஸ் பிக்சன் கதைக்களங்கள் ரெகுலராகட்டும். வருடம் ஒன்று என்பதற்கு பதிலாக இரண்டு வீதம்.
அப்புறம் நமது சமீப இதழ்களில் கௌபாய் நெடி அதிகம். க்ரைம் கதைகள் பக்கம் கவனம் ப்ளீஸ். லார்கோ, வேய்ன் செல்டன், ஜேசன் ப்ரைஸ் இவர்கள் ஏறத்தாழ முடிந்து விட்டது. ரிப்போர்ட்டர் ஜானி, ராபின் வருடம் ஒரு முறையே. இவர்களுக்கு கூடுதல் ஸ்லாட் ப்ளீஸ். ஆங்... அப்புறம் அந்த மாடஸ்டிக்கு (வரப்போவதில்லை) மாற்றாக களம் கண்ட லேடி எஸ் (நன்றாகத்தானே இருந்தது) கமான்சே, ஜூலியா சில கதைகளோடு மூடுவிழா கண்டது ஏன்? வருடம் ஒரு முறையாவது தொடரலாமே?
மாற்றுக் கதைக்களங்களில் மார்ட்டின் மற்றும் ஜூலியா பெஸ்ட். அடுத்த ஆண்டு அட்டவணையிலாவது இவர்களுக்கு (Julia) இடம் உண்டா?
கார்ட்டூன் சிறுகதை தொகுப்புகள் போல் அல்லாமல் முழுநீள கதைகளாக ஆண்டு முழுவதும் தொடரலாமே? எல்லா வயதினருக்கும் ஏற்றவாறு. (பலருக்கு கார்ட்டூன்களில் சிறுகதை தொகுப்பு மற்றும் பொடிபாசைதான் பிரச்சனையாக தெரிகிறது. மற்றபடி ஓ.கே)
சின்னதொரு புரிதலைக் கோரிட இந்தப் பின்னூட்டத்துக்கான பதிலை வாய்ப்பாக்கிக் கொள்கிறேனே சார் ?
Deleteபொதுவாய் நான் இங்கு அபிப்பிராயங்கள் கோருவதற்கோ ; உங்களின் தேர்வுகளை அறிந்திட முயற்சிக்கும் போதோ அதன் பின்னணியில் இருப்பன சில long term சிந்தனைகள் ! அவற்றை அவ்வப்போதே வெளிப்படுத்துவதும் சாத்தியமாகாது ; அவை நடைமுறை கண்டே தீருமென உறுதி சொல்லிடவும் முடியாது ! லக்கி லூக் & டெக்ஸ் மறுமதிப்பில் நான் கோரியுள்ளவையுமே அந்த ரகத்தில் தான் ! So context-க்கு ஏற்பிலா பதில்கள் எனது தேடல்களுக்கு உதவிடாதே ! ப்ளீஸ்.
And எல்லோருக்கும் ஏற்புடைய க்ரைம் கதைகள் & முழுநீள கார்ட்டூன் கதைகள் அவசியமென்பதை மூச்சுக்கு முன்னூறுவாட்டி ஒப்பித்து வருபவனே நான் தானே சார் ? கண்ணில் தென்பட்டால் விட்டு வைப்போமா - என்ன ?
வெளிவரும் நாளுக்காக வெயிட்டிங் sir
Deleteநியூட்டனின் புது உலகம் - 10/10
ReplyDeleteஇளமையில் கொல் - 20/10 😎
தளத்தில் ரொம்ப நாள் கழிச்சு ஒரு நேர்மையான விமர்சனத்தை படிக்கிறேன்..
Delete2/10ஐ தவறா டைப் பண்ணிட்டதா மிஸ்டர் சாத்தான் சொல்ல சொன்னாருங்கோ.
Deleteசொல்லி வாயை மூடலை.. அதுக்குள்ளே தளத்தை இயல்பு நிலைக்கு திருப்பிட்டாங்கப்பா..
Deleteஇல்ல இவருக்கு சிவில் வார்ன்னா என்ன, டெக்சாஸ்ன்னா என்ன இது போன்ற விசயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.. @மகேந்திரன் பரமசிவம் தயவு செய்து அமெரிக்க வரலாற்றையும், அதன் பூகோளத்தையும் கொஞ்சமாவது புரிந்த பின்பு கருத்துகளை பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்.. இந்த விசயத்தில் செல்வம் அபிராமி என்கிற நண்பர சில விசயங்கங்களை உங்களை விட அதிகம் தெரிந்திருப்பதாக அவருடைய பின்னூடங்கள் தெரிவிக்கிறது..
Deleteடெக்ஸ் வில்லரின் மறுபதிப்புகள்
ReplyDelete1.அதிரடி கணவாய்
2.கழுகு வேட்டை
3.இரத்த வெறியர்கள்
4. .மந்திர மண்டலம்
First 3 Ok
DeleteBut மந்திர மண்டலம் !!???????
எடிக்கு மாயாஜாலம் ன்னா கொஞ்சம் பயம் ஏற்படும் ஸோ இனி மெபிஸ்டோ வை இங்கே எதிர்பார்க்க வேணாமே (எடி யின் மெபிஸ்டோ பத்தின பயம் தெளியும் வரை ) எடி தெளிவாக இருப்பதாகத்தான் கேள்விப்பட்டேன் 😉😉😉
***** நோ போட்டிக்காண்டி *** ச்சும்மா லூட்டிக்காண்டி ******
ReplyDelete***** கேப்ஷன்-2 ***** (படைப்பாளியின் [ ஹிஹி.. அது நான்தானுங்க] வசதிக்காண்டி thought bubble இங்கே dialogue bubbleஆக மாற்றப்பட்டிருக்கிறது)
டெக்ஸ் : என் நண்பன் கார்சனின் கடந்த கால மறுபதிப்பை இழுத்துவிட்டமாதிரி பிரின்ட் போட்டு, அவனோட இமேஜை டேமேஜ் பண்ணிய எடிட்டர் ஒருத்தரைத் தேடி இங்கே வந்திருக்கோம், பார்மேன்!
கார்ஸன் : அவரோட உண்மையான பேர் - விஜயன்! அவர் இப்போ தன் உருவத்தை மாற்றியமைச்சுகிட்டு, தற்போது தன்னை 'நேசமணி'னு சொல்லிக்கிட்டு திரியறதா கேள்விப்பட்டோம்! உனக்கு அவரைத் தெரியுமா? உண்மையைச் சொன்னால் பரிசாக பத்து டாலர்கள் கிடைக்கும்.. இல்லாவிட்டால், உன் வாயில் பற்களுக்குப் பதிலாக தோட்டாக்களால் நிரப்பிவிட உத்தேசித்திருக்கிறோம்.. உனக்கு எது வேண்டுமென நீயே சொல், பார்மேன்!
பார்மேன் : ம்... அதுவுந்தே.. இதுவுந்தே!
***** நோ போட்டிக்காண்டி *** ச்சும்மா லூட்டிக்காண்டி ******
ReplyDelete***** கேப்ஷன்-3 *****
டெக்ஸ் : குதிரையை விட்டு கீழே இறங்கு கார்சன்... ஓசைபடாமல் நீருக்கடியில் மூழ்கிச் சென்று ஆளுக்கு ஒன்றாய் பிடித்துக்கொள்ளப் போகிறோம்..!
கார்ஸன் : டெ..டெக்ஸ்... நி..நிஜமாவா சொல்ற?!!!
டெக்ஸ் : அட ஜொள்ளுக் கிழவா... நான் சொன்னது அதோ அந்தப் படகுகளை!
😆😆👏👏👌👌
Deleteகேப்சன்3:
ReplyDeleteகார்சனின் நண்பர்: என்ன நண்பா.. நாளை காலைக்குள் அந்த எத்தனின் சில்லு மூக்கை உடைக்கனும்.. நான் குத்து விடுவேன்.. நீ அவனை தூக்கி நிறுத்தும் வேலையை மட்டும் பாரு
கார்சனின் மைன்ட் வாய்ஸ் ( படத்திலே அப்பிடித் தான் இருக்கு): போனெல்லி கிட்டே மாட்டிக்கிட்டத விட சார்லியர் கிட்டே இருந்திருக்கலாம்.. தங்க தலைவன் இந்த மாதிரி சூழ்நிலையை கையாளும் விதமே தனி தான்.. என்னை மாதிரி சின்ன பசங்களுக்கு அது தான் செட் ஆகும்.
கேப்சன்2: கார்சனின் நணபர்:
ReplyDeleteநாங்கள் இருவரும் ரேஞ்சர் தலமையகத்திலுருந்து வருகிறோம்.. தயங்காமல் அந்த 50 பேர் கொண்ட கும்பலை பற்றி உனக்கு தெரிந்ததை சொல்லு நணபா.. அந்த கும்பலை நாங்களை வேரறுக்கிறோம்..
கார்சன்: என் நண்பன் சொல்வது உண்மை.. அவர்கள் யாராயிருந்தாலும் சரி.. எத்தனை பேராக இருந்தாலும் சரி.. அவர்களை மண்ணுக்கு அடியில்துயிலச் செய்ய நாங்கள் ரெடி..
பார்மேன்: சார்.. அதற்க்கு அவசியமே இல்லை.. நேற்று தான் கேப்டன் டைகர் ஒரு ஆபிசர் இங்கு வந்தார்..அந்த கும்பல் மொத்தமுமே இப்போது மண்ணுக்கு அடியில் இருக்கின்றனர்.. இன்னொரு விசயம் அந்த போக்கிரிகளின் எண்ணிக்கை 50 அல்ல.. 175 பேர்.. வந்தவரும் உங்களை போல இருவர் அல்லல..
கார்சனின் நணபர்: அப்பிடின்னா.. புரியிர மாதிரி சொல்லுய்யா..
பார்மேன்: கேங்கை கூட்டிட்டு வந்தா அவன் பேரு கேங்ஸ்டர்.. தனியா வந்தா அவன் பேரு தங்க தலைவன்..
ஹா.. ஹா.. தல'யை சகட்டுமேனிக்கு நீங்க ஓட்டறீங்கன்னு தெரிஞ்சாலும் கூட சிரிப்பை அடக்க முடியலை!! :))))))
Deleteஅந்த 175 பேரும் டைகர் கதைகளை படிச்சுத்தான் தற்கொலை பண்ணிட்டாங்கங்கற உண்மையையும் அந்த பார்மேன் சொல்லிருக்கலாம். .
Delete@MP
Deleteஹா ஹா! செம பதிலடி!!! :)))))
தங்க தலைவனை எல்லாரும் பார்த்திருக்கலைன்னாலும் எல்லாருக்கும் அவரை பத்தி தெரியும்..
DeleteCaptain Tiger, Since 1843.
Sheriff 😂😁😃😄😀ROFL awesome awesome
DeleteRummi I'm also a big fan of Tiger but this time sheriff got better of you.
Deleteஷெரீப் சார்.
Deleteஹி..ஹி...!
ஹா ஹா ஹா
Deleteடெக்ஸை எப்படியாவது ஓட்டனும்ன்னு நினைக்கிறவங்க பயத்தில ஒளருவது சகஜம் தானே 😝😝😝
கேப்சன்1:
ReplyDeleteகார்சனின் நண்பர்: என்ன நண்பா, நான் எப்பிடி பிரஷ்ஷா இருக்கேனா?? இந்த போஸ் எப்பிடி சூப்பரா இருக்கா??
கார்சனின் நண்பரின் குதிரை: எதுக்கும் கனைச்சு வெப்போம்.. நல்ல வேளை இவருகிட்டே இருக்கோம்..அந்த தங்க தலைவன் கிட்டே இருந்தா ஓடிட்டே இருக்கனும்.. இங்க போஸ் குடுக்கிற வேலை மட்டும் தான்..
புறமுதுகிட்டு ஓடறதுல என்ன பெருமை?
Delete@ ரம்மி
Deleteஹா ஹா! :)))
@MP
ஹோ ஹோ ஹோ!! :))))))))
அப்பாடா பொக்கிஷாங்களை இப்பதான் கைப்பற்றினேன். திறந்து பார்க்கனும்,.
ReplyDeleteஆசிரியரே.்் நீங்கள் என்ன தான் கார்சனின் நண்பரின் கேப்சன் குடுத்தாலும் நாங்கள் தங்க தலைவனை தான் முன்னிறுத்துவோம்.. 2.0 யாரு.. நேசமணி யாருன்னு இப்ப புரிஞ்சுருக்கும்ன்னு நினைக்கிறேன்..
ReplyDelete#We like தங்க தலைவன்
ReplyDelete+12345678910
Deleteநான் இங்கே என்னுடைய கருத்துக்கள் சிலவற்றை பகிர்கிறேன். எனக்கு தெரிந்த வரை எந்த ஒரு ஹீரோவின் முதல் கதையும் Tiger in முதல் கதையை போன்ற தாக்கத்தை இந்நாள் வரை ஏற்படுத்தியது இல்லை. என்னுடைய 35 வருட காமிக்ஸ் அனுபவத்தில் தங்க கல்லறை ஏற்படுத்திய தாக்கம் அலாதியானது. இன்று வரை அந்த கதை பெற்ற முதல் இடத்தை வேறு எந்த கதையாலும் பெற இயலாது. எடிட்டர் ஒரு முறை கேட்டது போல் "நீங்கள் தனியாக ஒரு தீவுக்கு அனுப்ப பட்டால் நீங்கள் உங்களுடன் 5 புத்தகங்களை மட்டும் எடுத்து செல்லலாம். அவை எவை?"
Deleteஎன்னை பொருத்த வரை அதில் முதல் இரண்டு புத்தகங்கள் கேப்டன் டைகர் புத்தகங்கள் தான்
1. தங்க கல்லறை
2. மின்னும் மரணம்.
Rummi நான் உங்கள் கட்சி தான் ஆயுளுக்கும். நன்றி
ஜிம்மி:
Delete175 பேருல ரெண்டு பேரு தப்பிட்டாங்க போல. இவங்களுக்கு அந்த எம்பேரு டவுசர் புக்கைக் குடுத்து கதையை முடிப்பா.
கேப்சன் 1
ReplyDeleteகுதிரை : ஓ... இவருதான் இன்னொரு டெக்ஸ்வில்லரா ?ஏற்கனவே ஆறிலிருந்து அறுபதுவரை டெக்ஸ்வில்லரை பாத்தாச்சி !இவரு எத்தனாவதுனு தெர்லயே.!
டெக்ஸ் (வேடத்திலிருப்பவர்) :தலைல தொப்பியும் ,கழுத்துல கருப்பு ஸ்கார்பும்,கைல ரைபிளோட மஞ்சச்சட்டை போட்டா ,ஒரே நாள்ல உலக பேமஸ் ஆகலாம்னு யாரோ சொன்னாங்கனு நானும் ரெம்ப நேரமா பாக்குறேன்.யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்க..!
1.லக்கின் கெளபாய் எக்ஸ்பிரஸ்
ReplyDelete2.மந்திர மண்டலம்
3.அறிவியல் கதைகளை அப்பப்போ முயற்சி செய்யலாம்.முதலில் கால வேட்டை வரட்டுமே..
ஜட்ஜ் #1 : ஹூம்..!! அந்த மூனாவது கேப்ஷனுக்கு அவரை நாம ஜட்ஜா போட்டிருக்கக்கூடாது!
ReplyDeleteஜட்ஜ் #2 : ஏன்? கேப்ஷனைப் படிக்க அவருக்கு டைம் இல்லாமப் போய்டுச்சா?!
ஜட்ஜ் #1 : க்கும்!! அவரு கேப்ஷனை எங்கே படிக்கிறாரு..!
This comment has been removed by the author.
ReplyDeleteCaption 1:
ReplyDelete1.1)
(அந்த 500 மைலுக்கு அந்ததாண்ட இருக்கும் அப்பாவி ஜீவன்களுக்கு சமர்ப்பணம் :))
டெக்ஸ்:
ஹ்ம்ம் ..500 மைலுக்கு அப்பால இருந்தா பரிசு இல்லையாமே..! ஐயோ நாம இப்போ எத்தன மைலுக்கு அப்பால இருக்கோமோ தெரியலயே!
(குதிரை)
விடு… தல!
இன்னைக்கு தேதில ஜெய்ச்சு கிங் ஆக முடிலைன்னு பதர்றவங்கள விட….
ஜெயிச்சும் கிங் மேக்கர் ஆக முடியலைன்னு கதர்றவங்கதான் ஜாஸ்தி…..
நீ பேசாம கிங் மேக்கர் ஆய்ரு தல…..!
1.2)
டெக்ஸ் : தனிமையே என் துணைவன்… ..தனிமையே என் வாழ்க்கை
(குதிரை)
suituation ஓகே..
சட்ட கலர், pant கலர் எல்லாம் கூட ஓகே!
ஆனா இது நமக்கு செட் ஆகுமா தல..?
நம்ம ஜனங்ங்ங்க…. ஏத்துக்குவாங்களா தல ?
1.3)
(புலி ஸ்பெஷல்)
தல : என்ன அங்க சத்தம்?
தண்ணி தொட்டிக்குள் பதுங்கி இருக்கும் புளி: குருத கூட பேசிட்டு இருக்கோம் தல!
தல : எழுந்துட்டேன்… தோ… வர்ரன் :)
(பதுங்கி இருந்த அந்த புளி …. அழுக்கு ஜீன்ஸ்ச காணோம்! ஒடஞ்ச மூக்க காணோம் என்று ஓடியது )
(குதிரை) நாசமா போறவன் (#*&&#*$#$)! குடிக்கிற தண்ணிய நாஸ்தி பண்ணிட்டு ஓடிட்டான் தல!
Caption : 2
ReplyDelete2.1)
டெக்ஸ் :
நேசமணிக்காக…..!
கார்சன்:
நேசமணிக்காக…..!
பார் மேன்:
நாசமா போச்சு!
(……..இன்னிக்கு குடிக்கிற ஒரு பயலும் காசு குடுக்குற மாதிரி தெரியலையே)
2.2)
(புலி ஸ்பெஷல்)
டெக்ஸ்:
ஏப்பா புலி வந்துச்சா???
கார்சன்:
அட… கிச்சன காட்டாதப்பா !
ஆதான்ப்பா அந்த ஒடஞ்ச மூக்கன்!
(சரிரிரி…சரிரி… மூக்கர் மூக்கர்!.......... நா ….நா…. பயந்துட்டேன்)
பார் மேன்:
ஐயா சாமி! புண்ணியமா போவும்!
இன்னைக்கு எல்லாருக்கும் பிரீ ட்ரிங்க்ஸ் வேண்ணா தரேன் ,
தயவு செஞ்சு அந்த புலிய ஏதாவது கிணத்துல தள்ளிவிடுங்கப்பூ !
அப்பவாவது குளிக்கட்டும் ,
ஐயோ , குடலை பெறட்டுதுடா சாமி !
அவரு இப்பிடிக்கா போய்…. அப்டிக்கா வந்தா….. மொத்த ஜனமும் செத்து போயிருவாங்கப்பா !
(அதான்ப்பா அந்த 165 பேர் செத்த கதை )
இப்பத்தான் அவர எதுக்கு ராணுவத்துல வச்சுருக்காங்கனு தெரியுது!
அவரு கேப்டன் இல்லப்பா …. 'கப்பு'டன்!
2.3)
டெக்ஸ்:
வர வர தளபதி பட்டத்தை விட.. நம்ம தல பட்டத்தை ஆட்டைய போட நெறையா பேரு கிளம்பிட்டாங்க போல.!
கார்சன்:
அட...ஆமாம்பா....போற போக்க பார்த்தா ...
உலக அழகி.......இந்தியா அழகி………தமிழ்நாடு அழகி...... ஈரோடு அழகி.......வலசு அழகி போட்டி ரேஞ்சுல……...இனிமே வீதிக்கு ஒரு தலன்னு இறங்கிருவாங்க போல!
பார் மேன்:
என்னது வீதிக்கு ஒரு தலயா ?
ஆஹா சோசியல் மீடியால நடக்குற தல Fight’அ பத்தி நம்ம ஆளுங்களுக்கு தெரியாது போலயே!
அதுவும் மே ஒண்ணாம் தேதிக்கு அப்புறமா …
அவரோட தீவிர விசுவாசிகள் பல பேர் ….
தோனியாவது , CSK யாவதுனு …, சொல்லி வச்ச மாதிரி அந்த ஒரே நாள்ல தோணியவே வெறுத்து ஒதுக்குனதும்…..
பைனல் மேட்சுல மும்பை ஜெயிச்சதுக்கு ……….
'ஆம்ச்சி மும்பை' ….'ஆம்ச்சி மும்பை' னு சந்தோஷமா துள்ளி குதிச்ச பசங்க கதை எல்லாம் தெரியாம இவங்க இப்படி பேசிகிட்டு இருக்காங்களே ……
இப்போ போய் நான் இவங்ககிட்ட ……. தலன்னா 'அஃது' அவரு ஒருத்தர் மட்டும்தான்னு சொன்னா……?
என்கிட்ட சொல்லிட்டு சுடுவாங்களா ?
இல்ல என்னெ சுட்டபுறம் இங்க இருக்கற மத்தவங்க கிட்ட சொல்வாங்களா!!!!
Caption: 3
ReplyDelete(நம்ம செயலர் சொன்ன மாதிரி இந்த மூணாவது படத்துக்கு தானப்பா கற்பன கரபொரண்டு ஓடுது :) )
3.1)
டெக்ஸ்:
என்னப்பா… கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் ஒருத்தரையும் காணோமே ?
கார்சன்:
ஆஹா …. குணத்துல நீங்க MGR மாதிரி சும்மா தகதகன்னு மின்றீங்க தல!!!!
3.2)
(1960’s நம்ம ஊரு ஏரி கரையில்)
டெக்ஸ்:
அதோ அந்த பறவை போல பாட வேண்டும்.?
கார்சன்:
இதோ இந்த அழகிகள் போல ஆட வேண்டும்
3.3)
டெக்ஸ்:
நிச்சயமா கிட் இந்த பக்கம் வரலையா?
கார்சன்:
ஹ்ம்ம். , ஆமாம்னு சொல்ல அவங்களுக்கு என்ன பைத்தியமா?
எனக்கென்னமோ மூச்சே நின்னாலும் கிட் தண்ணிய விட்டு வெளிய வரமாட்டானு தோணுது!!
3.4)
டெக்ஸ்:
ஆஹா என்ன அழகு எத்தன அழகு வறண்ட பாலைவனம் பார்த்த கண்ணுக்கு இது சோலைவனம் தானப்பா !!!
கார்சன்:
(மனதிற்குள்) ஹ்ம் இவன் எத பார்த்து சொல்லறான்னு புரியலையே ?
இப்போ நாங் கேட்டா ……. யோவ் பெருசு,… வயசுக்கு தவுந்த பேச்சு பேசமாட்டியா நீன்னு என்னையே கலாய்ப்பானே………..
3.5)
டெக்ஸ்:
ஆஹா. , ஈ..ரோடைகளின் சங்கமம்…..
கார்சன்:
ஈ ரோடயா?
எனக்கென்னமோ மூணார் வந்த பீலிங்……..
சாரி ………ஐ மீன்……
இது கூடுதுறையா …..?
டெக்ஸ்:
யோவ் பெருசு ஏன் நாக்கு கொளருது!....
சரி சரி…. வாய மூடி தொலையும் !
நம்ம வந்து ரெண்டு நிமிசத்துல தண்ணி ஜாஸ்தி ஆன ஒடனே நான் யூகிச்சிருக்கணும்
///3.1)
Deleteடெக்ஸ்:
என்னப்பா… கண்ணுக்கெட்டின தூரம் வரைக்கும் ஒருத்தரையும் காணோமே ?
கார்சன்:
ஆஹா …. குணத்துல நீங்க MGR மாதிரி சும்மா தகதகன்னு மின்றீங்க தல!!!///
ஹா ஹா ஹா!! செம்ம! :))))