Powered By Blogger

Friday, May 31, 2019

ஹல்லோ ஜூன் !

நண்பர்களே,

வணக்கம்...சில பல Bata செருப்புகள் இம்மாதச் செலவுகணக்கில் கூடுதல் ; ஆனால் "பொட்டிகள்" இன்றைக்கு கிளம்புகின்றன என்பது good news !! பள்ளிகளின் துவக்க வேளை கூப்பிடு தூரத்தில் நிற்க, இங்கே சிவகாசியில் அச்சகங்கள் & பைண்டிங் நிறுவனங்களில் - நோட்ஸ் ; கைடுகள் ; டயரி ; பாடப்புத்தகங்கள் என வேலைகள் நிரம்பி வழிந்த வண்ணமுள்ளன ! நமது அச்சகத்திலுமே இதே கதை தான் ! வெளியூரிலிருந்து வந்து காத்திருக்கும் பார்ட்டிகள் தூங்கச் சென்ற பிற்பாடு ராக்கூத்தடித்து தான், எனக்கே நமது புக்குகளை அச்சிடவே முடிந்தது !! 

செவ்வாயிரவே ஜம்போவின் இளம் TEX & மார்ட்டின் கதைகள் அச்சாகி முடிந்து விட்டிருந்தன & பாக்கி 2  கலர் இதழ்களோ 15 நாட்களுக்கு முன்னேவே நிறைவுற்று பைண்டிங்கில் தூங்கிக் கொண்டிருந்தன ! புதன் காலை முதல் பைண்டிங் ஆபீஸ் படையெடுப்பில் Bata-க்கள் தேயத் துவங்கிட - அங்கே மலையெனக் குவிந்து கிடந்த வெளி வேலைகளைப் பார்க்கும் போதே மலைப்பாய் இருந்தது ! பைண்டிங் நண்பருக்கு போன் அடித்துப் பேச முற்பட்டால் - ஊஹூம் அடிக்கும் செல்லை எடுக்க ஆள் நஹி ! நேற்றைக்கு இரவு வரைக்குமே வேலையை எடுக்கவே இல்லை என்ற நிலையில் எனக்கு வெறுத்தே போய் விட்டது ! ஒரு மாதிரியாய் நேற்றிரவு எட்டரை மணிக்கு உரிமையாளரை நேரில் பார்த்த கையோடு மைதீன் போன் போட்டு என் கையில் தந்திட - 'அய்யா..சாமி.தெய்வமே...கவுத்திப்புடாதீங்கய்யா !! மாசம் முடியுது நாளைக்கு !' என்று ஒப்பாரி வைத்தேன் ! 'எப்படியாச்சும் காலையிலே 4 புக்குகளையுமே தந்துடறேன் !' என்று அவர் சொன்ன போது கூட எனக்கு நம்பிக்கை லேது ; ஆனால் வெளியே சுற்றி விட்டு நண்பகல் சுமாருக்கு இன்று ஆபீசுக்குள் நுழைந்தால், வெயிலில் மினுமினுக்கும் கலர் கலரான அட்டைப்படங்களுடன் புக்குகள் லோடு ஆட்டோவிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தன !! "மனுஷன் கில்லாடிய்யா.....!" என்ற எண்ணம் தலைக்குள் ஓட - பேக்கிங் வேலைகள் துவங்கிவிட்டன ! அடுத்த 2 மணி நேரங்களுக்குள் சகலமும் கூரியருக்குக் கிளம்பியிருக்கும் ! இனி அடுத்த பஞ்சாயத்து அவர்களோடு தான் எனும் போது சொம்பைத் தூக்கிக் கொண்டு, ஜமுக்காளத்தைக் கம்மங்கூட்டுக்குள் செருகிக் கொண்டு நடையைக் கட்டுகிறேன் folks அந்தத் திக்கில் !!

DTDC-ல் சிக்கல் இராது ; டாணென்று ரசீதை போட்டுக் கையில் கொடுத்து விட்டு டப்பிக்களையும் அனுப்பி விடுவார்கள் !! ஆனால் ST எவ்வித வரம் தரக் காத்துள்ளனரோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் ! So நாளைய பொழுதை புக்குகளோடு துவக்கிடும் கொடுப்பினை கொண்ட நண்பர்களுக்கு happy reading சொல்லிக் கொள்கிறேன் !! அதே கையோடு - 'உன்னை வெள்ளிக்கிழமை புக் அனுப்பாதேன்னு முன்னமே சொல்லியிருக்கோம்லே ?' என்று தேய்ந்த Bata-க்களால் குமுறக் காத்திருக்கும் இதர நண்பர்களுக்கு happy சாத்திங் !!" எல்லாத் தீர்மானங்களும், எல்லா வேலைகளிலும் என் கையில் இருப்பதில்லையே...!! Thanks for your understanding guys !

Anyways - bye all for now !! பேக்கிங் முடிந்த கையோடு ஆன்லைன் லிஸ்டிங் செய்திடுவோம் ! 

123 comments:

  1. Replies
    1. மாபெரும் வெற்றி...

      Delete
    2. உங்களுக்கும் கம்பேனிகாரவுகளுக்கும் என்னா லிங்கு..!? உங்களுக்கு மட்டும் எப்படி மொதோ கமெண்ட் வருது..!

      Delete
    3. அதானே... உங்களுக்கும் கம்பேனிகாரவுகளுக்கும் என்னா லிங்கு..!?

      Delete
    4. அதானே... உங்களுக்கும் கம்பேனிகாரவுகளுக்கும் என்னா லிங்கு..!?

      Delete
    5. அதானே... உங்களுக்கும் கம்பேனிகாரவுகளுக்கும் என்னா லிங்கு..!?

      Delete
    6. ரொம்ப நாள் கழிச்சு இப்பத்தான் மொத நம்பர் போட வாய்ப்பு கிடைச்சிது. கண்ணு போடாதீங்கப்பா. கண்ண முழிச்சதும் தளத்துக்கு வந்து பார்வையிடறதைத் தவிர வேற எந்தத் தொடர்பும் இல்லீங்கோ.

      Delete
    7. :-))))


      இப்போதைக்கு நம்புறோம் ஷெரீப்..;-)

      Delete
    8. அதானே... உங்களுக்கும் கம்பேனிகாரவுகளுக்கும் என்னா லிங்கு..!?

      Delete
    9. @ MP

      உங்களை வச்சு அமெரிக்காலயும் ஒரு லயன்/முத்து காமிக்ஸ் கம்பேனி ஆரம்பிக்கிறதா கேள்விப்பட்டேனே?
      அங்கேயாவது நம்ம எடிட்டர் தூள்பறத்தும் 'சி.சி.வ'வை புத்தகமாக வெளியிடுவீங்களா இல்லையா?

      Delete
  2. பொட்டிகளை காண ஆவலுடன் காத்திருப்பேன், நாளை... :)

    ReplyDelete
    Replies
    1. டியர் எடி,

      தற்போது ஒவ்வொரு மாதமும், எப்பாடு பட்டாவது, அச்சு வேலைகளை முடித்திட நம் நிறுவன ஆசாமிகளை நம்பிடலாம் என்பது தெளிவு... ஒவ்வொரு முறையும் முட்டி மோதுவது பைண்டிங்கில்தான் என்பதால், இதையும் நாமே நடத்திட முடியாதா, கூடுதல் ஆள் பலத்துடன்?

      இல்லை Opportunity Cost என்பதின் அடிப்படையில், இப்பணிக்கு வேறு நிறுவனம்தான் ஏற்புடையதா?!

      பி.கு.: "மீண்டும் ஒருமுறை சிறுவயது சிங்கம் தொகுப்பு நினைவூட்டல்" :D

      Delete
    2. பி.கு.: "மீண்டும் ஒருமுறை சிறுவயது சிங்கம் தொகுப்பு நினைவூட்டல்" :D

      Delete
    3. பி.கு.: "மீண்டும் ஒருமுறை சிறுவயது சிங்கம் தொகுப்பு நினைவூட்டல்" :

      நோ...D..

      Delete
    4. அச்சகத்தில் நம் பணிகள் தவிர்த்து வெளி வேலைகள் வாங்கிச் செய்திடல் சாத்தியம் சார் ; ஆனால் முழுக்க முழுக்க labor intensive தொழிலான பைண்டிங்கில் நம் வேலைகள் முடிந்த பிற்பாடு என்ன செய்திட முடியும் ? அங்கேயும் வெளி வேலை வாங்குவதெனில், தினமும் நான் காண்டிராக்டர் நேசமணியாகத் தானிருக்க வேண்டிவரும் ; பணிகள் தரும் அத்தனை பேருமே காலில் வெந்நீரை ஊற்றிக் கொண்டு தாண்டவமாடும் பார்ட்டிக்களே - நம்மைப் போலவே !! நான் அந்த இக்கட்டில் மண்டையை நுழைத்தால் சட்னி தான் சார் !

      Delete
  3. ST கூரியரில் எனக்கு மட்டும் வந்துடனும் பெருந்தேவன் மானிடோ அருள வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. என்னையும் கண் தொறத்து பாருங்கள் மானிடோ..

      Delete
    2. ///ST கூரியரில் எனக்கு மட்டும் வந்துடனும் பெருந்தேவன் மானிடோ அருள வேண்டும்///

      பெருந்தேவன் மானிடோவுக்கு ஃபயர் வாட்டர் ஊத்தறேன்னு வேண்டிக்கிட்டீங்கன்னா சீக்கிரமே வந்துடும்! :)

      Delete
  4. ஒரு ஷெரீப்பின் சாகசத்துக்கு ஆர்வங்கா வெய்ட்டிங்கு..!

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆபீசர் ஏன் ஆறு வாரமா வெயிட்டிங்

      Delete
    2. ///ஒரு ஷெரீப்பின் சாகசத்துக்கு ஆர்வங்கா வெய்ட்டிங்கு..!///

      கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க.அவரு ஆகஸ்ட் மாசம் ஈரோடு வருவாரு. அப்ப நேர்லயே பாத்திடலாம்.☺☺☺

      Delete
    3. ஆமா. இந்த ஷெரீப் டாக்புல் வரதே டெபுடி கிட் ஆர்டினை நாலு சாத்து சாத்தத்தான்.

      Delete
    4. இப்பொழுதே வாழ்த்துகள் ஷெரீப்..:-)

      Delete
  5. பெட்டிக்காக காத்திருப்பேன் நானும், மகளின் புத்தகங்களில் ஒட்ட ஸ்டிக்கரும் வரும் என்ற நம்பிக்கையில்

    ReplyDelete
    Replies
    1. ங்ஙே.. இது புது உருட்டால்ல இருக்கு..!?
      நாங்கல்லாம் புத்தகத்துக்கு காத்திருந்தா இவரைப் பாருங்கப்பா.!

      Delete
  6. அதுக்குள்ள 10 ஆ படிச்சுட்டு வந்துடறேன்

    ReplyDelete
  7. எனக்கு பொட்டி திங்கள்கிழமை தா

    ReplyDelete
    Replies
    1. இன்றே கிடைத்து விட்டது Super

      Delete
  8. நாளைக்கு புக்கு - சூப்பரேஏஏஏ!!!

    ஆத்தா..மகமாயி..

    ReplyDelete
    Replies
    1. என்ன வழக்கம்போல் ஆத்தாவுக்கு கூழ் நிலுவை கணக்குதானே....

      Delete
    2. ன்ன வழக்கம்போல் ஆத்தாவுக்கு கூழ் நிலுவை கணக்குதானே....

      Delete
    3. ன்ன வழக்கம்போல் ஆத்தாவுக்கு கூழ் நிலுவை கணக்குதானே..

      Delete
    4. ஆத்தாகிட்ட போட்டுக் கொடுக்கறீங்களாக்கும்? கிர்ர்ர்ர்...

      Delete
  9. ஹைய்யா டாக்புல் & கிட் ஆர்ட்டின் வர்றாங்க ஜாலி

    ReplyDelete
  10. Replies
    1. என்னது புக்கு அதுக்குள்ளே வந்துருச்சா ....

      Delete
    2. பொட்டி இதுவரைக்கும் வரலை,இனி வர வாய்ப்பில்லை,வந்தால் நல்லாதான் இருக்கும், ஆனா வருமான்னு தெரியலை,பொட்டி வந்தாலும் எங்கள் ஊர் கிளைக்கு வருமான்னு தெரியலை,கிளைக்கு வந்தாலும் அழைப்பு வருமான்னு தெரியலை,
      அழைப்பு வந்தாலும் என்னால் போக முடியுமான்னு தெரியலை....

      Delete
  11. மார்ட்டின் மற்றும் (இளம்) தளபதிக்காக waiting ... மத்தவங்க எல்லாம் அந்த பக்கம் போயி விளையாடுங்கப்பா .... :)

    ReplyDelete
  12. எங்கள் நாயகரின் வரலாற்றை அறிய தான் முதல் ஆவல்...

    எனவே சிங்கத்தின் சிறு வயதில் தான் முதல் எதிர்பார்ப்பு...


    ( இதில் கற்பனை நாயகர்..,நிஜ நாயகர் சிறு வயதில் என இரண்டையுமே பொருத்தி கொள்ளலாம்..)

    ReplyDelete
    Replies
    1. சின்னூண்டு திருத்தம் தலீவரே.....! ஒருத்தர் நாயகர் என்பதில் no சந்தேகம்ஸ் ! இன்னொருத்தர் காண்டிராக்டர் நேசமணிக்குப் போட்டிக்காரர் அல்லவா ?

      Delete
    2. காண்ட்ராக்ட்டர் நேசமணிக்கு போட்டீன்னாலெ நீங்க பெரிய ஆளுதான்

      Delete
    3. ஹா ஹா!! செமயா சொன்னீங்க ஷல்லூம்!

      Delete
    4. சரியா சொன்னீங்க ஷல்லும்ஜீ..:-)

      Delete
  13. மஞ்சள் சட்டைக்காரர் இட்லி, கலக்கி ஏதாவது சாப்பிட்டாரா....😊😊😊

    ReplyDelete
  14. நானும் ரொம்ப வருடமா கேக்கனும்னு நெனச்சத நண்பர் ஒருவர் கேட்டே விட்டார். அதாவது புள்ளைகளுக்கு காமிக்ஸ் லேபிள் தான். லக்கி, ஸ்மர்ப் இதுமாதிரி கொடுத்தால் நம்ம காமிக்ஸ் க்கும் விளம்பரம் கிடைக்கும். பார்த்து செய்யுங்க எடி சார்.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே கொடுத்திருக்கிறாரே?!! இரண்டு வருடங்களுக்கு முன்புன்னு நினைக்கிறேன்! நான் என் குழந்தையின் நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி அழகு பார்த்த ஞாபகம் இருக்கிறது!

      Delete
    2. இந்த மாச வேலைப்பளுவில் மண்டைக்கு எட்டவில்லை சார் ; maybe அடுத்த மாத புக்ஸோடு !

      Delete
  15. சூப்பர்.!! நான் இப்போதுதான் இரத்த வைரத்தின் இரண்டாவது அத்தியாயத்தை முடித்துள்ளேன். என்னமாய் இருக்கிறது கதை. நாளை பார்சல் கிடைப்பதற்குள் மே மாத இதழ்கள் அனைத்தையும் பூர்த்தி செய்திருப்பேன் . பராகுடாவை இந்த வருடமே முடித்த விஜயன் சாருக்கு மிக்க மிக்க நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. ///பராகுடாவை இந்த வருடமே முடித்த விஜயன் சாருக்கு மிக்க மிக்க நன்றிகள்!///

      யெஸ்! நன்றிகள்!!

      Delete
  16. கடையில் விற்பனைக்கு வருவதற்காக வெயிட்டிங்.

    ReplyDelete
  17. வணக்கம் 🙏 ஆசிரியரே.நாங்கள் எதிர்பார்த்த மாதிரியே புத்தக வேலைகளை சிறப்பாக முடித்து மாத தொடக்க நாளில் படிக்கும் பொருட்டு புத்தகங்களை வெளியிட்டமைக்கு கோடானு கோடி நன்றி.சொன்னதை செய்த ஆசிரியர் கில்லி அவர்களுக்கு நன்றி,வாழ்த்துகள், பாராட்டுக்கள்....

    ReplyDelete
    Replies
    1. சுற்றியிருப்போரின் பங்களிப்புகள் லேதுவெனில், என்னால் கில்லி கூட ஆடச் சாத்தியப்படாது நண்பரே !

      Delete
  18. கவரைப் பிரிக்கிறேன்.. உள்ளே ரெண்டு 'சிங்கத்தின் சிறு வயதில்' புக்ஸ்!!

    ஒன்னு டெக்ஸாஸ் சிங்கத்தோடது; இன்னொன்னு சிவகாசி சிங்கத்தோடது!!

    உற்சாகத்துல தலைகால் புரியாம வீட்டம்மா பக்கத்திலிருக்கும்போதே கெக்கபிக்கேன்னு சிரிக்கிறேன்!

    #அதிகாலைக் கனவு

    ஆசை ஆசை இப்பொழுது
    பேராசை இப்பொழுது
    ஆசை தீரும் காலம் எப்பொழுது!!

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய கணிப்பு என்னவென்றால் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் ஈரோடு புத்தக விழாவில் சிங்கத்தின் சிறு வயதில் புத்தகம் நமக்கு கிடைக்கும். அறிவிக்க பட்ட ஸ்பெஷல் இதழ்கள் மற்றும் டெக்ஸ் and cartoons. நடப்பது எல்லாம் நன்மைக்கே.

      Delete




    2. நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
      கனவு மெய்ப்பட வேண்டும்,
      கைவசமாவது விரைவில் வேண்டும்;

      - பாரதியார்..

      @ தலீவர்..இனிமே போராட்டம் பண்றதா இருந்தா செயலாளர் சொல்லியிருக்கிறமாதிரி சிசிசிவ -க்காகன்னு பண்ணனும்..சிவகாசி சிங்கத்தின் சிறுவயதில்..சி ஸ்கொயர் இல்ல ..சி க்யூப்..

      Delete
    3. ச்சே...ஆரம்பத்துல நான் நம்பிட்டேன் செயலரே...கனவா....:-(


      பொருளாளரே...டன்..:-)

      Delete
    4. //என்னுடைய கணிப்பு என்னவென்றால் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் ஈரோடு புத்தக விழாவில் சிங்கத்தின் சிறு வயதில் புத்தகம் நமக்கு கிடைக்கும். அறிவிக்க பட்ட ஸ்பெஷல் இதழ்கள் மற்றும் டெக்ஸ் and cartoons. நடப்பது எல்லாம் நன்மைக்கே.//

      அட..நேத்து ராத்திரி கேபிளில் பார்த்த படத்தின் தொடர்ச்சியாக ஜோதிகாவை நினைச்சு மனுஷன் பாடிக்கிட்டு இருக்கார்....நீங்கபாட்டுக்கு அதுக்கு ஏதேதோ அர்த்தம் பண்ணிக்கிட்டு !! ப்ரீயா விடுங்க சார் !

      Delete
  19. சார்,

    சில மாதங்களுக்கு முன்பு பழைய Hero, black & whiteல் மீண்டும் வருகிறார் என்றும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு ரகம் அவர் என்றும் குறிப்பிட்டிருந்தீர்கள். யார் அவர், எப்போது வருகிறார், ஏதும் updates.

    ReplyDelete
    Replies
    1. ரெடியாகும் போது சொல்றேன் சார் !

      Delete
  20. இன்று தகவல் ஏதும் வரவில்லை...:-(

    ReplyDelete
  21. பொட்டி வந்தாச்சு..ஆனா பிரிக்கமுடியல...

    வேலை..வேலை..

    போன மாசம் புக் எல்லாம் ஞாயிறு கசாப்பு கடை பக்கத்துல நின்ன மாதிரி ஒரே ரத்த வாடை..

    முதல்ல கிட் ஆர்ட்டினை பிரிச்சி......

    ReplyDelete
    Replies
    1. இன்னிக்கு சனிவாரம்....நாளைக்கு கிருத்திகை....நாளான்னிக்கி அமாவாசை.. so no ரத்த வாடை இந்தவாட்டி !

      Delete
    2. 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

      Delete
  22. DTDC க்கு ஒரு ஜே.புக்ஸ் கேட்ச்டு.

    ReplyDelete
  23. Box opened. இளமையில் கொல் மூன்று பாகத்தையும் Hard Cover ல் ஒரே புக் ஆக வெளியிட்டிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. 'பட்ஜெட்' எனும் கயிறைக் காலைச் சுற்றிக் கட்டிக் கொண்டு உள்ளூர் சாக்கு ரேஸில் தானே சார் இடம்பிடிக்க முடியும் ?

      Delete
    2. அப்படி இல்லை சார் : இளம் டைகர் ஒரு செட்டா ஹார்ட்பௌண்டா வந்தால் தொகுத்து வைக்க easyன்னு தான் ...!

      Delete
    3. தங்க தலைவன் எப்பவுமே சவலை பிள்ளை தானே..

      Delete
    4. மூன்று ஸ்பெஷல் இதழ்கள் சுமார் 2000 + விலையில் வெளியாகும் ; ஐந்தே ஆண்டுக் காலகட்டத்தினுள் தொடரின் அத்தனை கதைகளும் முழுவண்ணத்தில் வெளியாகுமென்ற உத்திரவாதமெலாம் சவலைப் பிள்ளைகளுக்கு மட்டுமே கிடைக்குமெனில் ஏகப்பட்ட முன்னணி நாயகர்கள் சவலைகளாகிட "நான்...நீ" என்று போட்டி போட்டுக் கொண்டு கை தூக்கி நிற்பர் !

      Delete
  24. டியர் எடிட்டர்

    நேக்கு ஒரு டவுட்டு : XIII போன்ற 18 பாக heavy weight வலம் வந்த சென்ற வருடமே மாதப் புத்தகங்கள் முன்-மாத கடைசி வாரத்தில் வந்தன. இந்த வருஷம் அதெல்லாம் இல்லாமலேயே why கொஞ்சம் schedule jerk? மாசாமாசம் இழுத்து புடிக்கிற மாதிரி இருக்கே ?

    ReplyDelete
    Replies
    1. ஒரு மாதம் நீங்கலாய் இந்தாண்டின் எல்லா மாதங்களுமே முதல் தேதிக்கு இதழ்கள் தவறாது ஆஜராகி விட்டனவே சார் ?

      மாதம் பிறப்பதற்கு முன்பே புக்குகளைத் தயாரிப்பதெல்லாம் எங்களளவிற்குச் சிரமமில்லை தான் ; ஆனால் முதல் தேதிக்கென்றதொரு payment அட்டவணையினை சிறுகச் சிறுக முகவர்க்குப் சமீபமாய்த் தான் பழக்கிட குட்டிக்கரணம் அடித்து வருகிறோம். இந்நேரம் ரொம்ப முன்கூட்டியே சந்தாக்களுக்கு இதழ்களை அனுப்பி விட்டால் - கடையில் கிடைப்பதற்கு ரொம்பவே lag இருக்கத் துவங்கி விடும் ! So முதல் தேதிக்கு சந்தாக்களுக்கு ; மூன்றாம் தேதிக்கு கடைகளுக்கு என்றதொரு template தற்சமயம் நடைமுறையில் !

      Delete
  25. சென்ற மாத இதழ்கள் எனக்கு பிடித்த வரிசை :

    1. டூராங்கோ - மனுஷன் கிளப்பி விட்டார் கிளப்பி - இப்போதைய ஹாட் ஹீரோக்களில் ஒருவர்
    2. தனியொருவன் - எனக்கு பிடித்தே இருந்தது. ஆனால் நான் படித்த omnibus கதைகளில் ஸ்பீட் அதிகம் - நாம் ஒரு slow கதை வரிசையை தேர்ந்தெடுத்துவிட்டோமா ? என் கணிப்பு : இது தோர்கல் போல இன்னும் சில வருடங்களில் ஹிட் அடிக்கும் நிச்சியமாக
    3. BARRACUDA - அருமையான சித்திரங்கள், வர்ணக்கலவைகள் தாண்டி 'much ado about nothing'. கதையினில் எதிர்பார்த்த வேகம் மிஸ்ஸிங்.

    ReplyDelete
    Replies
    1. // BARRACUDA - அருமையான சித்திரங்கள், வர்ணக்கலவைகள் தாண்டி 'much ado about nothing//

      அந்த visual grandeur தான் இத்தொடரின் சாரமே சார் ! எல்லைகளிலா கற்பனை....!

      Delete
  26. இளமையில் கொல்!

    பிரம்மாதம்! ப்ளூபெர்ரியோடு சேர்த்து நம்மையும் கடந்த காலத்திற்கு இட்டுச் சொல்கிறது!

    இம்மாதம் ப்ளூபெர்ரியோடு தொடங்கியாச்சு!!

    மார்க் 9/10

    சார், ஒரு வேண்டுகோள்!

    அடுத்த இரு இதழ்களையும் இதேபோல் தனித்தனி இதழ்களால் வெளியிட்டால் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து பைண்ட் பண்ணி வசதியாக இருக்கும்!

    மாறாக அந்த இரண்டையும் சேர்த்து ஒரே புக்காக பேஸ்ட் பைண்ட் செய்து வெளியிட்டீர்களேயானால் இந்த புக் தனியாக நின்றுவிடும்! மூன்றையும் ஒன்றாக இணைத்து பைண்ட் பண்ணி வாய்ப்பில்லாமல் போய் விடும்!

    ReplyDelete
    Replies
    1. தனியாகவே வரும் சார்....இணைத்துப் போடும் திட்டமெல்லாம் நஹி !

      Delete
  27. இந்த பதிவின் மூலம் தெரிவிக்க வேண்டிய சில விசயங்கள்,.. யாரோ ஒரு போலி டாக்டர் தங்க தலைவனை சீன்டி பார்க்கிறார்.. ஒரு அமெரிக்க மறுபடியும் போலி மாப்பிள்ளை அதுக்கு வக்காலாத்து.. சிவகாசியிலிருந்து ஒரு நண்பர் மீண்டும் மாவு பிசைகிறார் சிறிது வண்ணக் கலவைகளுடன்.. ஆனால் உலகத்துக்கே தெரிந்த ஒரு விசயம்.. Once a தங்க தலைவன் fan.. Always a தங்க தலைவன் fan..

    ReplyDelete
  28. ஆத்தாவின் அருளால் நேற்றே புத்தகங்கள் வந்து சேர்ந்தன! (வீட்டம்மாவால் ஒளித்து வைக்கப்பட்டிருந்த) கொரியர் டப்பாவை நேற்றிரவு கைப்பற்றி, சரக் புரக்கென்று டப்பாவைக் கிழித்து புத்தகங்களை வெளியே எடுத்தால் பிரம்மிக்ச் செய்திடும் அழகிய அட்டைப்படத்துடன் டெக்ஸாஸ் சிங்கம்!! சிங்கத்தின் பிடறி மயிர் சகிதம் நமது ஓவியர் சிகாமணியால் செதுக்கப்பட்டிருந்த எழுத்துரு - தங்கநிற மேற்பூச்சில் டாலடித்தது - கொள்ளை அழகு!! மற்ற புத்தகங்களின் அட்டைப் படங்கள் மீது பார்வையைத் திருப்பினாலும் கண்கள் நம்மையறியாமல் மீண்டும் இந்த டெக்ஸாஸ் சிங்கத்தின் மீதே லயித்திருப்பது ஆச்சரியம்!! அதான் தல!!

    யங் பரட்டை மற்றும் கிட்ஆர்டின் புத்தகங்கள் அட்டைப் படத்திலும், உள் பக்கங்களிலும் வண்ணத்தில் மூழ்கிக் கிடக்க, மார்டினும், சின்னத் தலயும் மிக நேர்த்தியான, துள்ளியமான உட்பக்க சித்திரங்களால் மூச்சை இழுத்துப் பிடிக்க வைக்கிறார்கள்!

    முதலில் படிக்க என்னுடைய தேர்வு - சந்தேகமின்றி வுட்சிட்டி போலீஸ்காரவுக தான்!
    அப்புறமாய் சின்னத் தலயின் சாகஸத்தை ரசிக்க வேண்டும். பிறகு மார்ட்டினோடு சேர்ந்து ஒரு வித்தியாசமான பயணத்துக்கு தயாராகவேண்டும்! கடேசியாய் யங் பரட்டையை என்ன சேதி என்று கேட்க வேண்டும்!!

    ஹாப்பி ரீடிங் ஆல்!

    ReplyDelete
  29. இந்தமாதம் 'லயன் காமிக்ஸ்' வெளியாகாததற்கு பலத்த கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete
  30. யங் பரட்டை - பின்னட்டையில் இரண்டு துப்பாக்கிகளின் நடுவே "வன்மேற்கின் நிகரில்லா நாயகர்.. போர்முனையில் சிப்பாயாக!" என்ற புகழ்ச்சியான வாசகம் இடம்பெற்றிருக்கிறது! இப்படி எழுதச் சொல்லி தான் துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டிருப்பதையே எடிட்டர் சூசகமாக நமக்குத் தெரிவிக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது! ;)

    ReplyDelete
  31. வழக்கமான ஞாயிறு பதிவை உடனே போடவில்லையென்றால், நண்பர் சேலம் குமாரின் துணையுடன் கணநேரத்தில் 300 கமெண்ட்டுகள் இட்டு, உப பதிவுக்கான நெருக்கடியை உங்களுக்குக் கொடுப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் எடிட்டர் சார்!

    ReplyDelete
    Replies
    1. Correct EV Attakasam 😂😆😃

      Delete
    2. ஹீம்...எனக்கு புக்கு தான் வரலைன்னு பாத்தா ...

      இன்னிக்கு பதிவும் வரலையா...


      என்னமோ போங்க செயலரே..:-(

      Delete
    3. அதே ஃபீலிங் தலைவரே. சத்திய சோதனை

      Delete
  32. மேலும் நான் தெரிவித்து கொள்வது என்னவென்றால் தங்களது ஞாயிறு பதிவு இல்லாமல் எனது ஞாயிறு முடியாது என்பதையும் அதற்கு நான் அடிமையாக ஆகி விட்டேன் என்றும் தெரிவித்து கொள்கிறேன் your Honor.

    ReplyDelete
  33. புத்தகங்களும் இல்லாமல் பதிவினை எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கும் தங்களது வாசகன்.

    ReplyDelete
  34. I received the books yesterday. I completed the reading of chick bill story. I liked it and good comedy story.

    ReplyDelete
  35. கேப்டன் டைகரின் இந்த கதையை ஏற்கனவே படித்த மாதிரி இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. ஆனால் அந்த முகத்தின் வசீகரம் இனம் புரியாத ஒன்று. ஒரு வேளை டைகரின் கதையாக்கங்களின் தாக்கமாக இருக்கலாம்.
      அந்த தெனாவட்டு , கற்பூரபுத்தி போன்ற சித்தரிப்பு, அயராத மனம், உத்வேகம் கொண்ட குணாதிசயங்களுடன் படைக்கப்பட்ட கதைகள் அந்த கிரியாவூக்கிகளாக இருக்க வாய்ப்புள்ளது.
      இந்த கதையில் சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை என்றாலும் இவரை ஏன் பிடிக்கிறது என்றால் மேற் சொன்ன காரணங்களாக இருக்கலாம்.

      மனுசன் தங்கக் கல்லறையில் பண்ணிய அலப்பறையைப் பாருங்கள்.

      வில்லன் வைத்த வெடிகுண்டுகளால் தங்க சுரங்க குகை தகர்ந்து நொறுங்கும் இக்கட்டிலிருந்து உயிர் பிழைக்கும் வழியை பார்ப்பார்.

      மின்னும் மரணத்தில் பிணத்தின் கீழ் படுத்து தப்பிப்பார்.

      செங்குறுதிப் பாதையில் பல இடைஞ்சல்களை தாண்டி ஒற்றைக் கண் குவானாவை பழி தீர்ப்பார்.

      பழி வாங்கும் புயலில் பிரசிடெண்டின் ட்ரெய்னை காலியாக அனுப்பி பூம்பூமிலிருந்து தப்பி வில்லனை தண்டிப்பார்.

      சிகுவாகுவா சிலுக்கை தன்வசப் படுத்த
      முடியாத போது அவளது ஷேர் பணத்தை விட்டு மீதியை லவட்டிக்கொண்டு நைசாக கம்பிநீட்டுவார்.

      உல்லி ரெட்டுக்கும் ஜிம்மிக்கும் உரிய பங்கு சேர வேண்டுமென்றார்

      இன்னும் பல சொல்லிக் கொண்டே போகலாம்.

      அதனால்தான் அந்த பாத்திரப் படைப்பு
      மனதில் பதிந்து விட்டது.

      Delete
    2. நன்றிகள் சார் ; சிரமம் பாராது புதுப் பதிவிற்கு இதனை carry forward ப்ளீஸ் ?

      Delete
  36. ஒரு ஷெரீப் பின் சாஸனம்

    சிரிச்சு மாளலடா சாமி!!

    சுவச் பாரத்!
    சௌகிதார்!!
    டீ மணிட்ரைஷேசன்!!!

    இக்கதையை படிச்சுட்டு தான் இந்த காமெடியெல்லாம் பண்ணினாங்களோ!

    பேசாம இக்கதைய ஹிந்தில டிரான்ஸ்லேட் பண்ணி வடக்க வெளியிட்டிருகலாம்!!

    2.0 அடிவாங்கியிருக்கும்!!!

    😜😜😜

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சார் ; சிரமம் பாராது புதுப் பதிவிற்கு இதனை carry forward ப்ளீஸ் ?

      Delete
  37. ஜம்போ காமிக்ஸ்
    டைட்டில் எண் : 09

    TEX ன்
    சிங்கத்தின்சி றுவயதில்

    அட்டகாசமாக இருக்கிறது கதை
    டெக்ஸ் அண்ட் கோ வின் சில்லு மூக்கை உடைக்கும்
    அதிரடியை யாரும் எதிர்பார்த்து யாரும் இந்த கதையை படிக்க வேண்டாமென்று
    காமிக்ஸ் சமூகத்திற்க்கு கேட்டுக்கொள்ளப்படுகிறது

    பரபரப்பு இல்லாமல்
    அடுத்து என்ன நடக்கும் என்று யோசிக்காமல்
    இயல்பாக கதையோடு ஒன்றிபோகுதல் நலம்

    டெக்ஸ் ன் பிறப்பு / வளர்ப்பு / திறமைகள் வெளிப்படுதல் கதை சொன்ன விதம் மிக மிக அருமை

    டெக்ஸ் கதையில் இப்படி ஒரு கதையை நான் எதிர்பார்க்கவேயில்லை / படித்ததும் இல்லை

    மாஸ்
    இரண்டாவது கதையிலும் அபார வெற்றி

    பையா படம் பார்த்த உணர்வுகள் இக்கதையை படிக்கும் போது

    பத்துக்கு / நூறு மார்க்

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் சார் ; சிரமம் பாராது புதுப் பதிவிற்கு இதனை carry forward ப்ளீஸ் ?

      Delete
  38. ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்கள்..:-)

    ReplyDelete