Powered By Blogger

Saturday, May 25, 2019

சின்னவர் vs சின்னவர்..!

நண்பர்களே,

வணக்கம். அநேகமாய் காத்திருக்கும் புது மாதத்து இதழ்களின் preview-களைக் கண்ணில் காட்டாமலேயே இடைப்பட்ட சில பல வாரங்களை ஒப்பேற்றச் சாத்தியமாகியுள்ள முதல் தருணம் இதுவாகத்தானிருக்குமென்று நினைக்கிறேன்! மே மாத மெகா இதழ்கள் ; XIII Spin-offs ; லக்கி லூக் Spin-off (Spoof ?); 'தோற்றோர் பட்டியல்' என்று விதவிதமான வடைகளை வாயால் சுடவொரு வாய்ப்புக் கிட்டியதால் புதுசுகளைக் களமிறக்கிட அவசியமின்றி நாட்களைக் கடத்தியாச்சு ! But இதோ – மாதம் முடிய ஒரே வாரம் எஞ்சியிருக்கும் தருவாயில், all புதுசுகளை ‘ஏக் தம்மில்‘ வலம் வரச் செய்திடத் தயாராகி விட்டேன்!

In some ways, இது “சின்னவர்களின் மாதம்”!! And நம்மளவிலாவது இரு ஜாம்பவான்களாய் உசந்து நிற்கும் இரு அசாத்தியர்களின் face to face மாதமும் கூட ! அதென்ன சின்னவர்களின் மாதம் என்கிறீர்களா ? இம்மாத அட்டவணையின் 2 பிரமுகர்கள் யாரென்று நினைக்கிறீர்கள்?

- இளம் TEX

- இளம் டைகர்

ஆக இரு ஜாம்பவான்களின் சின்ன வயதுச் சாகஸங்கள் பக்கமாய் பார்வை ஓடிடுவது ஒரே வேளையில் எனும் போது, காத்திருக்கும் ஜூன் மாதத்திற்கு – “சி.மா.” என்ற பெயர் சூட்டல் பொருத்தம் தானே?

ஜம்போவின் சீஸன் # 1-ல் அறிமுகமாகிய “சின்ன இரவுக்கழுகார்” ஒரு போக்கிரி அவதாரில் கலக்கிய இளம் பிராயத்து நாட்களைக் கதாசிரியர் மௌரோ போசெல்லியின் கைவண்ணத்தில் (காற்றுக்கு ஏது வேலி ?)ரசித்திருந்தோம் ! அந்த இளம் டெக்ஸ் கதையோட்டத்துக்கு இத்தாலியிலும், இன்னபிற டெக்ஸ் மார்க்கெட்களிலும் வரவேற்பு செமையாக இருந்திட, சற்றே ஆழமாய், அழுத்தமாய் டெக்ஸின் ப்ளாஷ்பேக்கினுள் பார்வைகளைப் பாய்ச்ச படைப்பாளிகள் கச்சைகட்டத் துவங்கினர். அதன் இன்னொரு பரிமாணம் தான் இம்மாத ஜம்போவில் நாம் ரசித்திடவுள்ள “சிங்கத்தின் சிறுவயதில்” 256 பக்க black & white ஆல்பம் ! டெக்ஸின் பெற்றோர்கள் யார் ? அவரது சகோதரர் ? பால்ய சகாக்கள் ? இளவயது அனுபவங்கள் ? என்று தீட்சண்யமாய் நமக்குச் சித்தரித்திட மௌரோ போசெல்லி மீண்டும் முயற்சித்திருக்கிறார் இந்த crackerjack இதழில் ! இத்தாலிய மொழியில் இந்த இதழ் ஈட்டியுள்ள landmark வெற்றி – டெக்ஸின் சகாப்தத்தில் இன்னுமொரு வைரக்கல் ! 

இளையவரின் பாணிக்கும் வாசகர்களிடையே கிட்டிய இந்த தடாலடி வெற்றியானது, புத்தம் புதுசாய் ஒரு டெக்ஸ் மாத இதழையே உருவாக்கும் அளவிற்கு போனெல்லியைத் தயார்ப்படுத்தியுள்ளது என்றால் அதன் impact என்னவென்று புரிந்து கொள்ள முடியும் தானே ? “TEX” என்ற லேபிலில் ஏற்கனவே கதைகள் மாதம்தோறும் களமிறங்கி வரும் நிலையில், போன நவம்பர் முதலாய் "TEX WILLER" என்ற லேபிலில் “போக்கிரி டெக்ஸ்” தனித்தடத்தில் தடதடக்கத் துவங்கியுள்ளார் ! அதே நண்பர்கள் (ரேஞ்சர்கள்) அணி ; அதே செவ்விந்தியக் கிளர்ச்சி ; ஆயுதக் கடத்தல் ; ஊழல்கார உள்ளூர் ஷெரீப் ; மோசடிக்காரப் பண்ணையார் ; என்ற ரீதியில் கதைகளைச் சொல்லி வருவது என்றைக்கேனும் அயர்வுக்கு வித்திட்டு விடக் கூடும் என்று நினைத்தார்களோ என்னவோ – முற்றிலும் புதுசானதொரு திசையில் “சின்னவரின்” வண்டியைச் செலுத்தி வருகிறார்கள் ! And எனக்குத் தெரிந்த வரைக்கும் இந்தப் புது TEX WILLER லேபிலும் சக்கை போடு போட்டு வருகிறது ! ஓவிய பாணிகளில் compromise ஏதுமின்றி, மிக அட்டகாசமான தரத்திலான ராபர்டோ டி ஆஞ்சலிஸின் உயிரோட்டமான சித்திரங்களும் வலு சேர்க்க – இந்த 64 பக்க ஆல்பங்கள் இத்தாலியின் புதிய தலைமுறையையும் சுண்டி இழுத்து வருகிறதாம் ! பெருமூச்சே முஞ்சுகிறது இந்தப் புது ‘புல்லெட் டிரெயின்‘ தடதடப்பதைப் பார்க்கும் போது ! ஏற்கனவே உள்ள தொடரில் அவர்கள் 700+ கதைகளோடு பிய்த்துப் பிடுங்கிக் கொண்டு, பாய்ந்து சென்று கொண்டிருக்க, இப்போது நம்மை உசுப்பேற்ற இந்தப் புது முயற்சியும் இணைந்து கொண்டு விட்டது ! 

நாம் சமீபமாய்ப் பார்த்து வரும் அந்த 32 பக்க மினி கலர் TEX சாகஸங்கள் இந்தப் புது (போக்கிரி) டெக்ஸ் முயற்சிகளுக்கொரு வெள்ளோட்டம் என்பது இப்போது புரிகிறது ! அதாகப்பட்டது, பெரியவர் செர்ஜியோ போனெல்லியின் துவக்க நாட்களில் டெக்ஸ் கதைகள் 75 பக்கங்களிலும் இருந்திடும் ; 100 பக்கங்களையும் ஆக்கிரமித்திடும் ; 160+ ; 190+ ; 240+ என்றும் வெவ்வேறு விதமான நீளங்களில் பயணிப்பது வாடிக்கை ! நம்மைப் போல முழுமையான கதைகளையே ஓரிதழாய் வெளியிடும் அவசியமெலாம் அவர்களது மார்க்கெட்டில் நஹி ! So ஒரு 190 பக்க சாகஸமானது, இதழ் நம்பர் 36-ன் இறுதியில் கொஞ்சமாய் ஆரம்பித்து  ; 37-ல் ஓடி ; 38-ல் முடிவதெல்லாம் சர்வ சாதாரணம்! (எனது கேச அழகு(!!)க்கு இந்த நூல் பிடித்து கதையின் தலையையும்; வாலையும் இனம் காணும் முயற்சிகளுக்கும் பெரும் பங்குண்டு ! போனெல்லியில் ஆண்டுதோறும் கதைத் தேர்வுகளைத் தெரிவிக்கும் வேளையிலேயே அவை எந்த இதழ் to எந்த இதழ் ஓடுகின்றன என்பதைத் தெளிவாகத் தெரிவித்திட வேண்டும் ; 'டெக்ஸ்' எனும் சமுத்திரத்தில் சவாரி செய்யும் அவர்களது records பிரிவு இல்லையேல் தடுமாறிப் போவார்கள்! ) So டெக்ஸ் சிங்கள் ஆல்பங்கள் (110 பக்கங்கள்) ; ஒன்றரை ஆல்பங்கள் (160+ பக்கங்கள்) ; டபுள் ஆல்பங்கள் என்றெல்லாம் கலந்து கட்டி அடித்து வந்தார்கள் துவகத்தில் ! சிறுகச் சிறுக கதாசிரியர்கள் மாற்றம் கண்ட வேளைகளில் கதைகளின் நீளங்கள் சீராகத் துவங்கின! And மௌரோ போசெல்லி அவர்கள் TEX எடிட்டராய் பொறுப்பேற்கத் துவங்கிய பிற்பாடு ஸ்பஷ்டமாய் "220 பக்கங்கள் – டபுள் ஆல்பம்" என்பதே நார்மலான format என்றாகியது ! MAXI டெக்ஸ் என்ற பெயரில் வெளியாகும் ஸ்பெஷல்கள் மட்டும் 330 பக்கங்கள் என்று அமைத்துக் கொண்டார்கள் ! So ஒரு டெக்ஸ் சாகஸத்தை விவரிப்பதென்றால் அதற்குக் குறைந்தபட்சம் 220 பக்கங்கள் அவசியமென்றதொரு அரூப விதி நடைமுறையிலிருக்க, பற்பல கதாசிரியர்களும் அதற்கேற்பவே திட்டமிடத் துவங்கினர் ! அவ்விதமிருக்க, வெகு சமீபமாய் அறிமுகமான COLOR TEX ஸ்பெஷல் ஆல்பங்களில் – 4 அல்லது 5 சிறுகதைகளின் வண்ணத் தொகுப்புகளை இணைத்து வெளியிட்டு ஆச்சர்யமூட்டும் ஹிட்டடித்தனர் ! புதுசாய் ஏ-க-ப்-ப-ட்-ட கதாசிரியர்களை இனம் கண்டு ; புத்தம் புது ஓவியர்களிடம் பொறுப்புத் தந்து இந்த மினி சமோசாக்களை, செம சுவையாய் உருவாக்கிடுவதில் வெற்றி கண்டார் போசெல்லி ! நம்மைப் போலவே இத்தாலியிலும் – “அட… நம்மவரை இது போன்ற சின்னஞ்சிறு களத்திலுமே ரசிக்க முடியுமா? திறமையான கதாசிரியரின் கைவண்ணம் சாத்தியமாயின் கடுகுமே சுவையூட்ட முடியும் போலும் !” என்று வியக்கத் தொடங்கினர் ! பின்நாட்களில் பெருசு பெருசாய், நீள நீளமான சாகஸங்களை வாசிக்கும் பொறுமை வாசகர்களிடையே குன்றிப் போனாலோ ; புதுசாய் ஒரு crisp பாணியைக் கையிலெடுக்க போனெல்லி பதிப்பகம் நினைத்தாலோ – அதற்கான ஏற்பாடுகள் முன்கூட்டியே தயாராக இருந்திட வேண்டுமென்ற தீர்க்கதரிசனம் மௌரோ போசெல்லிக்கு இருந்ததாலேயே இந்தச் சிறுகதை track-க்குத் தனது ஆசீர்வாதங்களை வழங்கியிருக்கிறார் என்பது இப்போது புரிகிறது ! அந்த மினி கலர் சாகசங்களின் வெற்றி அனுபவம் கைகொடுக்க, மௌரோ போசெல்லியே நேரடியாய்க் களமிறங்கி “போக்கிரி டெக்ஸ்” வரிசையின் (இதுவரையிலான) எல்லாக் கதைகளையும் எழுதியுள்ளார் ! இங்கிருந்தபடிக்கே, இத்தாலி இருக்கக்கூடிய மேற்கு திசையை நோக்கிப் பெருசாய் ஒரு வணக்கத்தைப் போடத் தோன்றுகிறது ! போசெல்லி… நீர் தேவுடு !!

Back to the present – இதோ “சிங்கத்தின் சிறுவயதில்” அட்டைப்பட முதல் பார்வை ! 
Of course – ஒரிஜினல் டிசைனே ; வர்ணங்களில் மட்டுமே மாற்றங்களோடு ! And ஜம்போவின் தயாரிப்பில் எப்போதுமே ஒரு notch உசத்தி தென்பட வேண்டுமென்ற அவாவில் – இதழின் பெயரினை மினுமினுக்கச் செய்துள்ளோம் ! புக்கைக் கையில் ஏந்திடும் போது அதனை ரசித்திடலாம் ! And 256 பக்க ஆல்பம் எனும் போது அட்டை to அட்டை கதையிருக்கும் ! ஜம்போவின் இன்னொரு template ஆன – “No நொச-நொச; only கதை!” என்ற ஃபார்முலா இம்முறையும் அமலிலிருக்கும் ! இதன் எடிட்டிங்கை திங்களுக்குள் முடித்து, அச்சுக்குக் கொண்டு செல்லும் பரபரப்பே இந்த நொடியில் எனக்கு !
அடுத்த “சின்னவர்” – நாம் ஏற்கனவே ரசித்துள்ள ஒரு black & white சாகஸத்தை இம்முறை தரமான, வண்ணத்திலான பெரிய சைஸில் நமக்கு நடத்திக் காட்ட முனைந்திடும் இளம் டைகர் ! “இளமையில் கொல்” நமது கௌ-பாய் ஸ்பெஷல் இதழில் வெளியான சாகஸம் என்று ஞாபகம் ! தட்டை மூக்காரின் துவக்க நாட்கள் ; அவர் பட்டாளத்தில் சேர்ந்தது எவ்விதம் ? பிறப்பால் தெற்கத்தியராக இருந்தாலும் வடக்கின் படையில் அவர் நுழைந்தது எவ்விதம் ? சும்மா பீப்பீ ஊதும் பொறுப்பிலிருந்த மனுஷன் அடுத்தடுத்து புரோஷன்களைக் கண்டது எவ்விதம் ? என்றெல்லாம் சொல்ல முனையும் இந்தத் துவக்கப் புள்ளியைக் கலரில் – (சற்றே புராதனமான) அடர் வண்ணங்களில் பார்த்திடவிருக்கிறோம் ! டைகரின் அடையாளமான அந்த அசாத்திய மதியூகம் அவரது ஆயுட்காலத் துணை என்பதை இந்த ஆல்பம் நமக்குச் சொல்லும்! புதுசாய் படிப்போர்க்கு மட்டுமன்றி, தளபதியாரின் ரசிகக் கண்மணிகளுக்கும் இந்த இதழ் நிச்சயமாய் லயிக்குமென்று நினைக்கிறேன்! இதோ இந்த classic மறுபதிப்பின் ஒரிஜினல் அட்டைப்படம் – துளியும் மாற்றமின்றி ! திரு.மோபியஸ் போன்றதொரு ஜாம்பவானின் கைவண்ணம் இந்த அட்டைப்படம் எனும் போது, அதனை நோண்டுவது குசும்பாகிப் போகும் என்பதால், ‘சிவனே‘ என்று ஒரிஜினலை அப்படியே தந்துள்ளோம் ! 
‘சின்னத் தல‘ ஆல்பத்தின் நீளமோ – நவீனமோ ‘சின்னத் தளபதியின்‘ ஆல்பத்தில் நஹி என்றாலும் தற்செயலாய் அமைந்து விட்டுள்ள இந்த ‘நேருக்கு-நேர்‘ நமக்கெலாம் நிச்சயம் சுவாரஸ்யத்தை ஒரு மிடறு ஜாஸ்தியாக்கிடும் என்று நினைக்கிறேன் ! And மக்களே – இது தற்செயலான pairing தான்! பிலீவ் மீ!
Moving on – இம்மாத இதழ்களுள் கலக்கக் காத்திருக்கும் கார்ட்டூன் பார்ட்டிகள் இதோ! அத்தி பூத்தாற் போலவே இப்போதெலாம் கார்ட்டூன் இதழ்கள் தலைகாட்டுகின்றன எனும் போது – உட்சிட்டியின் இந்த ரகளைப் போலீஸாரின் ரவுசுகளை நான் செமத்தியாக ரசித்தேன்! “ஒரு ஷெரீப்பின் சாஸனம்!” நமது ரவுண்ட் பன் மண்டை டாக்புல்லின் ஒரு டெரர் முகத்தைக் கட்டவிழ்த்துக் காட்டுமொரு கெக்கே-பிக்கே மேளா என்பேன் ! நகருக்குள் அராஜகம் தலைவிரித்தாட – அதை அடக்க தனது புஜபல பராக்கிரமத்தை சார்வாள் கடைவிரிக்க, 44 பக்கங்களுக்குக் கூத்து தொடர்கிறது ! ‘கும்-கும்‘ என்று குத்தும் ஆக்ஷன் சாகஸங்களுக்கு இணையாக இந்த கார்ட்டூன் அலப்பரைகளையும் நீங்கள் ரசித்திட மட்டும் ஓ.கே. சொல்லி விட்டால், ஆகா… ஆகாகா… மாதா மாதம் எனது பணிகள் இன்னமுமே ரம்யமாகிப் போய்விடுமே !! நொடிக்கு நூறு தோட்டாக்களை உமிழும் கதைளிலெலாம் லாஜிக் பார்க்காது – இந்தச் சிரிப்புப் பார்ட்டிகளைத் தரத் தணிக்கைகளுக்கு உட்படுத்துகிறீர்களே… இது நியாயமாங்க சாரே ?

இதோ அட்டைப்பட முதல் பார்வை – again ஒரிஜினல் டிசைனோடே! வர்ணச் சேர்க்கைகள் மட்டும் நமது DTP அணியின் கோகிலாவின் கைவண்ணம் ! And எழுத்துருக்கள் ஓவியர் சிகாமணி! தொடர்வது உட்பக்கத்தின் preview-ம்! Enjoy!

Last but not the least – இதோ இம்மாத சந்தா B-ன் ஆல்பத்தின் முதல் பார்வையுமே ! மர்ம மனிதன் மார்ட்டினின் அட்டைப்படங்களை நாமாய் வரைய முற்படும் போதெலாம், கிராமத்தில் கோழி திருடிவிட்டு மாட்டிக் கொள்பவர்களின் லுக்கே சாத்தியப்பட்டு வந்துள்ளது! So வம்பே வேணாம்டா சாமி ! என்ற நினைப்பில் ஒரிஜினல் அட்டைப்படத்தை அப்படியே பயன்படுத்தியிருக்கிறோம் ! “நியூட்டனின் புது உலகம்” அட்டைப்படத்தில் மாற்றமின்றி உட்பக்கச் சித்திரங்களிலும் அட்டகாசமாய் மிளிரவுள்ள இதழ் ! படு ஸ்டைலிஷான சித்திரங்களோடு மார்ட்டின், கதைநெடுக வலம் வருகிறார் !

So சின்ன ஜாம்பவான்கள் இருவர் + ஒரு சிரிப்பு டீம் + ஒரு மர்ம ஜாம்பவான் என்றதொரு கூட்டணி உங்களைச் சந்திக்கக் காத்துள்ளது - எதிர்வரும் மாதத்தில் ! ஏதோ பார்த்துப், பதவிசாய்க், கரைசேர்த்து விடுங்கள் சகோக்களே…! எலெக்ஷன்களில் சில பல கூட்டணிகள் வாங்கியுள்ள தர்ம அடி ஏற்படுத்திடும் கிலியே இந்தக் கோரிக்கையின் பின்னணி ! நாங்க சாத்வீகக் கூட்டணி சாமியோவ் !

மீண்டும் சந்திப்போம் all ! Have a fun weekend ! Bye for now !!

219 comments:

  1. குழந்தைகள் ஸ்பெசல் என முன்பு ₹.10 விலையில் வந்த லக்கிலூக் கதைகளின் சைசில் ₹30 விலையில் ஒரு பத்து இதழ்களை புத்தகதிருவிழாவிற்க்கு மட்டும் கொண்டுவந்தால் பள்ளிக்குழந்தைகளின் வாங்கும்திறன் பாதிக்காது சார் முடிந்தால் ஈரோட்டில் முயற்சிக்கலாமே சார்...ஏற்கனவே வெளிவத்த கதைகளாக இருந்தாலும் நலம். உதாரணம் ரூ.10 விலையில்வந்த லக்கி சிக்பில் இதழ்களில் தேர்ந்தெடுத்து மலிவுவிலைப்பதிப்பாக....🙂

    ReplyDelete
    Replies
    1. நாமாய் அரிசியை ராவே ஊறப் போட்டு ; காலையில் எழுந்து ஆட்டி, அப்பாலிக்கா தேங்காய்ப் பாலும் எடுத்திடுவதாக இருந்தால் - சுடச் சுட, இஷ்டப்பட்ட சைஸ்களில் ; இஷ்டப்பட்ட விலைகளில் ஆப்பங்களாய் சுட்டு கடையில் அடுக்கிடலாம் பழனிவேல் !

      ஆனால் அதே இடத்தில, "நளாஸ் ஆப்பக் கடை" என்று franchise எடுத்து, போர்டு மாட்டி ஹோட்டல் நடத்துவதாயின் - அவர்கள் பரிந்துரைக்கும் ஹோட்டல் decor ; மெனு ; சமையல் பாணிகள் ; விலைகள் என்று நிறைய சமாச்சாரங்களில் ஒரு முன்மாதிரியைப் பின்பற்றிடல் அவசியமாகிடும் !

      நாமும் franchise பார்ட்டிக்களே எனும் போது - "இப்டி ஒரு வெள்ளை ஆப்பம் ; அப்புறமேட்டு சித்தே கருப்பட்டி சேர்த்து ஒரு ஆப்பம் ; அடுத்ததாய் ஒரு கார ஆப்பம் !" என்றெல்லாம் சுட இயலாதே !! கடை நம்மதாய் இருக்கலாம் ; ஆனால் போணி பண்ணிடும் சரக்கு இன்னொருவரின் பொருள் அல்லவா ?! Just not possible !

      Delete
    2. புரிகிறது நன்றி சார்

      Delete
  2. ரூ.30-40க்கு சாதா பேப்பர் சாதா அட்டையில் கலரில் காமிக்ஸ் வர வாய்ப்புள்ளதா சார்...?

    ReplyDelete
  3. இந்த மாதம் மொத்தம் 4 புக்கா சார்..?

    ReplyDelete
  4. அருமையான விருந்து காத்துக்கொண்டு இருக்கிறது. ஆவலுடன்.

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வருடம் டெக்ஸ் வில்லர் லோகோ போக்கிரி டெக்ஸ் வருமா சார்.

      Delete
  5. வாவ்...ரொம்ப நாட்களாக முயற்சி செய்து இன்று தான் பதிவு செய்ய முடிகிறது....ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது....

    ReplyDelete
  6. மறு பதிப்புகள் மீண்டும் வந்தால் நலம்..குண்டு புக் ஆக

    ReplyDelete
  7. தோ வந்திட்டேன் சார் 🙏🏼

    ரெண்டு சின்னவர்களையும் படிச்சிட்டு அப்பாலிக்கா
    வந்திடுறேனுங்கோ 🙏🏼
    .

    ReplyDelete
  8. வாவ் ஜீன் மாத அணிவகுப்பு மாஸா இருக்கு எனக்கு பிடித்த அனைவரும் ஓரே தடத்தில் ����

    ReplyDelete
  9. ஒரே சமயத்தில் மும்முனை அல்ல நான்கு முனை தாக்குதல் நடத்திய தங்களுக்கு நன்றிகள்.
    1.டெக்ஸ்-இவரை பற்றி சொல்ல என்ன இருக்கிறது. ..வார்த்தையை தேடி கொண்டு இருக்கிறேன் .என்ன ஒரு ஆதங்கம் வருடத்திற்கு ஒரு முறையாவது இத்தாலியில் செய்வது போல் 3,4 கதைகளை சேர்த்து ஒரு combo வாக நிலவொளியில் நரபலி சைஸிக்கு கொடுத்தாலும் சந்தோஷம். ..ஆனால்😭😭😭😭😭
    2.இளம் டைகரின் இந்த கதை தொகுப்பு மிக அற்புதமாக சொல்லப் பட்டிருக்கும்..டைகரின் மதிப்பை மீட்டு எழ செய்யும் கதை...தனித்தனியாக வருவது தான் வேதனை அளிக்கிறது.
    3.கார்ட்டூன் கதைகளில் மனது ஈடுபட மறுக்கிறது..சிறுவயதில் படித்த கதைகளின் தரம் இல்லையா அல்லது வயதுகளின் தாக்கமா தெரியவில்லை.ஆனால் லக்கி,சிக்பில்,கர்னல் க்போன்றவர்களின்ஜோர்டன் போன்றவர்களின் கதைகள் என்றால் மனது ok சொல்கிறது...
    4.மார்ட்டின்...குதிரை பசங்களுக்கு அடுத்ததாக நான் விரும்பும் ஹூரோ....வாவ் மர்ம மனிதன் மார்ட்டின்...

    ReplyDelete
    Replies
    1. தனித் தனியாய் படிக்கக்கூடிய சிறுகதைகளைத் தனித் தனியாய் வெளியிடுவதற்கு வேதனை கொள்வானேன் நண்பரே ? முதல் பாகமே 3 தனித்தனிச் சிறுகதைகள் கொண்ட தொகுப்பு தானே ?

      Delete
  10. ஆசிரியர் அவர்களிடம் ஒரு கேள்வி..இவ்வருட தீபாவளி மலரில் டெக்ஸ் ,மார்ட்டின் எத்தனை பக்க கதைகளை கொண்டது.????

    ReplyDelete
    Replies
    1. தீபாவளிக்கு இன்னும் நிறையவே அவகாசம் உள்ளது நண்பரே ; இப்போதைக்கு ஈரோடு ஸ்பெஷல் தான் முதல் இலக்கு !

      Delete
  11. I hope this months books will be enjoyed by all

    ReplyDelete
  12. TEX WILLER லேபிலும் சக்கை போடு போட்டு வருகிறது ! ஓவிய பாணிகளில் compromise ஏதுமின்றி, மிக அட்டகாசமான தரத்திலான ராபர்டோ டி ஆஞ்சலிஸின் உயிரோட்டமான சித்திரங்களும் வலு சேர்க்க – இந்த 64 பக்க ஆல்பங்கள் இத்தாலியின் புதிய தலைமுறையையும் சுண்டி இழுத்து வருகிறதாம் ! பெருமூச்சே முஞ்சுகிறது இந்தப் புது ‘புல்லெட் டிரெயின்‘ தடதடப்பதைப் பார்க்கும் போது !
    சார் தயவு தனி தடத்தில் தடதட்க்க விடுங்கள் மினி ஜம்போவில்.

    ReplyDelete
  13. Sir when will the books be mailed ?

    ReplyDelete
  14. சிங்கத்தின் சிவப்பு சட்டை வயதில் வரட்டும் அயம் வெயிட் ங்க்.

    சின்ன தளபதி புலி வருக வருக.
    ஆகா மாயாஜால மார்டின் வருக வருக.
    ஜுன் மாதம் ஜுப்பர் தான் எங்களுக்கு.

    ReplyDelete
  15. பராகுடா: பக்கத்துக்கு பக்கம் ஆக்சன் பரபரப்பு யாரு உயிருடன் இருப்பார்கள் என்று படித்து முடித்தேன். வித்தியாசமான சிந்தனை விதவிதமான கதாபாத்திரங்கள்.

    முதல் பாகத்தில் இருந்து ஒரு ஈர்ப்பு இந்த பாகத்தில் இல்லை; பக்கத்துக்கு பக்கம் யாராவது ஒருவர் கொல்லப்படுகிறார். அதுவும் கும்பல் கும்பலாக நடக்கும் சண்டை தலைவலியை ஏற்படுத்தியது. ஒரு வேளை சினிமா படமாக இந்த காட்சிகளை எடுத்து இருந்தால் ரசித்து இருந்தாலும் இரசித்து இருப்பேன். கதை இதைவிட குறைந்த பக்கங்களில் முடித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்;
    கதாசிரியர் தேவையில்லாமல் கதையை வளர்த்தது போல் இருந்தது.

    இந்த மாத தரவரிசையில் பராகுடா கடைசி இடம்.

    ReplyDelete
    Replies
    1. ஆஹா...என்னை போல் பலருக்கு

      பராகுடா "முதலிடம் " நண்பரே..:-)

      Delete
  16. ஜூன் மாதம் நவரசங்களின் கலவையாக கதைகளங்கள் காத்திருக்குறது. Waiting sir...

    ReplyDelete
  17. மூன்று கௌபாய்ஸ்..ஒரு மிஸ்டரி மேன்..
    அட்டகாசம்..
    டிடெக்டிவ்...அகதா கிறிஸ்டி கதைகளை காமிக்ஸ் வடிவில்.. சூப்பர் ஹீரோ
    யாரையாவது உள்ளே இழுத்துப் போடுங்க.. 2000
    ஜட்ஜ் ட்ரெட் போன்ற எதிர்காலக்கதைகள்
    ..எனில் இன்னும் சுவாரஸ்யம் கூடும்..டெக்ஸ் சிறுவயது தொடரை முடிந்தவரை தொடர்ச்சியாக கொண்டு வந்துவிட்டால் சிறப்பு...

    ReplyDelete
  18. // And எனக்குத் தெரிந்த வரைக்கும் இந்தப் புது TEX WILLER லேபிலும் சக்கை போடு போட்டு வருகிறது ! ஓவிய பாணிகளில் compromise ஏதுமின்றி, மிக அட்டகாசமான தரத்திலான ராபர்டோ டி ஆஞ்சலிஸின் உயிரோட்டமான சித்திரங்களும் வலு சேர்க்க – இந்த 64 பக்க ஆல்பங்கள் இத்தாலியின் புதிய தலைமுறையையும் சுண்டி இழுத்து வருகிறதாம் ! //

    அப்போ அடுத்த வருட அட்டவணையில் இடமிருக்குமுன்னு சொல்லுங்கோ சார் 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  19. // “ஒரு ஷெரீப்பின் சாஸனம்!” நமது ரவுண்ட் பன் மண்டை டாக்புல்லின் ஒரு டெரர் முகத்தைக் கட்டவிழ்த்துக் காட்டுமொரு கெக்கே-பிக்கே மேளா என்பேன் ! நகருக்குள் அராஜகம் தலைவிரித்தாட – அதை அடக்க தனது புஜபல பராக்கிரமத்தை சார்வாள் கடைவிரிக்க, //

    டீசரே அசத்துதே 😍
    சார் இந்த மாச புக்கெல்லாம் எப்ப அனுப்புவீங்க சார் 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
    Replies
    1. ஆம்...எப்பொழுது இதழ் கைகளுக்கு என தெரிவித்தால் இன்னும் மகிழ்ச்சி சார்..:-)

      Delete
    2. அச்சுக்கு அனுப்பிய பிற்பாடு சொல்கிறேனே ?

      Delete
    3. // சார் இந்த மாச புக்கெல்லாம் எப்ப அனுப்புவீங்க சார் 🙏🏼🙏🏼🙏🏼 //
      அடடே நான் கேட்கலாம்னு நினைச்சதை நீங்க கேட்டுட்டிங்களே சிபி...!!!

      Delete
  20. // “நியூட்டனின் புது உலகம்” அட்டைப்படத்தில் மாற்றமின்றி உட்பக்கச் சித்திரங்களிலும் அட்டகாசமாய் மிளிரவுள்ள இதழ் ! படு ஸ்டைலிஷான சித்திரங்களோடு மார்ட்டின், கதைநெடுக வலம் வருகிறார் ! //

    நம்ம பேவரைட் ஹீரோ சார் 😍

    இந்த முறை வெளி கிரகவாசிகளுடன் கலக்குறாரா சார்
    .

    ReplyDelete
    Replies
    1. பார்க்கத் தானே போறீங்க சார் !

      Delete
    2. // நம்ம பேவரைட் ஹீரோ சார் 😍 //
      நமக்குமே,ஆவலுடன் காத்திருக்கிறேன்...

      Delete

  21. அருமை அருமை அருமை..


    அனைத்தும் அருமை...


    ஆவலுடன் இதழ்களை எதிர்நோக்கி...

    ReplyDelete
  22. Waiting for June month issues.😄🤔🤔🤔🤔😀😀😀😀😀

    ReplyDelete
  23. சார்..தப்பா நினைக்காதீங்க..



    இந்த மாத இதழுக்கு "சிங்கத்தின் சிறு வயதில் "

    அப்டீன்னு தலைப்பு வைக்குறப்ப.. உங்க மனசுல என்ன தோணுச்சுன்னு தெரிஞ்சுக்க ஆசை சார்..

    ( வாசகர்களை ஏமாற்றுவது போல ஓர் எண்ணம் ஏதாவது..என தெரிந்து கொள்ள
    விருப்பம் சார்..)

    ReplyDelete
    Replies
    1. "சுவையான மஸ்க்கோத்து அல்வா செய்வது எப்படி ?" என்று சமையல் புரோகிராம் ஓடுச்சு தலீவரே டி.வி.லே ! ஏனோ அது தான் திடீர்னு மனசிலே ஓடுச்சு !

      Delete

    2. ஹீம்...அது சரி சார்...:-(

      Delete
  24. இங்கி பிங்கி போட்டாலும் எந்த அட்டைப்படம் முதலிடம் என கணிக்க முடியாத காரணத்தால் ஆட்டம் ஒரு வாரத்திற்கு ட்ராப..

    ReplyDelete
  25. அட்டை படங்கள் ஒவ்வொன்றும் சும்மா அள்ளுது.

    ReplyDelete
  26. தல கதையை பத்தி முதலில் சொல்லிட்டு தளபதியை ரெண்டாவது இடத்துக்கு தள்ளியதை வன்மையா கண்டிக்கறேன்.

    ReplyDelete
    Replies
    1. தல கதையை பத்தி முதலில் சொல்லிட்டு தளபதியை ரெண்டாவது இடத்துக்கு தள்ளியதை வன்மையா

      "கண்ணடிக்கிறேன்.."

      Delete
    2. 😁😨😳😖😥😏😌😊😃

      (நவரசத்தையும் அள்ளித் தெளிச்சிருக்கேன்)

      Delete
    3. கண்டிக்குறீங்களோ ; கண்ணடிக்குறீங்களோ ; கல்லடிக்கிறீங்களோ - அதை பதுங்குகுழிக்கு வெளியே வந்து பண்ணுங்க தலீவரே...!

      Delete
  27. அட்டைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அருமையாக இருக்கின்றன. அதிலும் தெனாவட்டாக போஸ் கொடுக்கும் நம் டெக்ஸ் & கோ சூப்பர். கார்ஸன் அங்கிள் இளமையாக பார்க்க சூப்பராக இருக்கிறார்.

    இளமையில் கொல் - அடர் நிறத்தில் அட்டகாசம்.

    ஒரு ஷெரிப்பின் சாகஸம் & நியூட்டனின் புது உலகம் - பார்க்க எளிமையாக இருந்தாலும் கிளாஸிக் ரகம்.

    மே மாதம் போலவே ஜூன் மாதமும் வெற்றிகரமான மாதமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வெண்டாம்.

    புத்தகங்களுக்காக மரண வெயிட்டிங்...

    ReplyDelete
    Replies
    1. அது கார்ஸன் இல்லீங்க.அவரோட பேவரைட் ஆட்டுதாடி இல்லை.என்னதான் தொப்பி போட்டிருந்தாலும் 'கொழுக் மொழுக் 'மண்டைனு நல்லாவே தெரியுது.அது டெக்ஸோட இன்னொரு ப்ரெண்டு (பேரு ஞாபகம் இல்ல.)

      Delete
    2. ஆமாங்க ஒரு ஆர்வத்துல பார்த்து ஏமாந்துட்டேன். இந்த கதையில வருகிற டெக்சோட போக்கிரி டீம் போல

      Delete
    3. Not போக்கிரி டீம்....'தல' தோஸ்துக்கள் !

      Delete
    4. ////புத்தகங்களுக்காக மரண வெயிட்டிங் ////

      ஹா ஹா ஹா!! மிரள வைக்கும் வெயிட்டிங்கால்ல இருக்கு!! :))

      Delete
  28. "சார்...இளம் டெக்ஸ் கதைகளையாவது இத்தாலிக்கு போட்டியாக நாமும் உடனுக்குடன் வெளியிடலாமே...


    ஆவண செய்யுங்கள்..:-)

    ReplyDelete
  29. இன்னுமா உங்களை வெளிய விடல...:-(

    ReplyDelete
  30. டியர் எடி,

    தற்செயலான செயலோ, திட்டமிட்ட காரியமோ, இளம் டெக்ஸ், இளம் டைகர் கூட்டணி இம்மாத இறுதியை அமர்க்களபடுத்த போவது உறுதி. அதுவும் அடர் வண்ண கிளாசிக் பாணிக்கு நான் ஒரு ரசிகன். மற்றவர்கள் கழுவி ஊற்றிய சாக மறந்த சுறாவில் கூட நான் ரசித்தது அந்த அடர் வண்ண பக்கங்களையே.

    இம்முறை, அதற்கு ஜோடியாக வுட்சிடி கோமாளிகளின் கிளாசிக் வண்ண கதை, ட்ரிபிள் ஓகே.

    மார்டின் கதைகள், சப்தம் இல்லாமல் காரியம் சாதிக்கும் வகை.. என்ன இந்த அட்டை நீள வண்ணம் கிட்டதட்ட பாதி இடத்தை ஆக்கிரமித்ததே ஒரே வருத்தம். ஒரிஜினலும் அப்படிதான் என்றால் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

    அதற்கு ஈடுகட்டும் வகையில் டைகர் முன் அட்டை Edge to Edge, Simply Classic.

    பாஸ்போர்ட் பரிசாக, சிங்கத்தின் சிறுவயதில் நீங்கள் அறிவித்த போது, அது உங்கள் தொடரின் புத்தக கலெக்‌ஷன் என்று நினைத்திருந்தேன்... அப்போதிலிருந்து உங்கள் மனதில் இருந்தது இந்த இளம் டெக்ஸ் கதைதானா?!?! அப்போது அந்த தொகுப்பு ?!?!?!

    ReplyDelete
    Replies
    1. //என்ன இந்த அட்டை நீள வண்ணம் கிட்டதட்ட பாதி இடத்தை ஆக்கிரமித்ததே ஒரே வருத்தம். ஒரிஜினலும் அப்படிதான் என்றால் சொல்வதற்கு ஒன்றுமில்லை.//

      ஒரிஜினலில் ஒருவித பழுப்பு நிறமாயிருந்த பெட்டியை நாம் நீலமாக்கியுள்ளோம் சார் ; மற்றபடிக்கு ஒரிஜினல் டிசைனே ! No மாற்றம்ஸ் !

      Delete
    2. சார்...

      நண்பர் கீழே இன்னொரு வினா எழுப்பி உள்ளார்..கவனீத்தீர்களா....? :-)

      Delete
    3. ///சார்...

      நண்பர் கீழே இன்னொரு வினா எழுப்பி உள்ளார்..கவனீத்தீர்களா....? ///

      கவனிக்காம என்னங்க தலீவரே? எல்லாத்தையும் கவனிச்சுக்கிட்டுதான் இருக்கார்.. ஆனா பதில் - அதுவும் குறிப்பா இந்தக் கேள்விக்கு - வரவேஏஏஏஏ வராது!

      Delete
    4. அந்த 'சிங்கத்தின் சிறுவயதில்' கேள்விக்கு மட்டும் பதில் போடாம எஸ்கேப் ஆகிட்டே இருக்கார். முழு தொகுப்பையும் முடித்து,ஒரு புத்தகமாக போடாத வரை கேளவி கனைகளை விட்டுடகூடாது :)

      Delete
  31. மார்டினுக்காக ஆவலுடன் வெய்டிங் சார்...

    ReplyDelete
    Replies
    1. இன்னுமொரு வாரம் தான் யுவா !

      Delete
  32. // நொடிக்கு நூறு தோட்டாக்களை உமிழும் கதைளிலெலாம் லாஜிக் பார்க்காது – இந்தச் சிரிப்புப் பார்ட்டிகளைத் தரத் தணிக்கைகளுக்கு உட்படுத்துகிறீர்களே… இது நியாயமாங்க சாரே ? //

    +1
    நியாயமான கேள்வி. கார்டூன் எனக்கு மாதம் மாதம் வேண்டும்.

    ReplyDelete
  33. அடுத்த மாத கதைகள் நான்கின் அட்டைப் படங்கள் அருமை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் என்னை கவர்ந்துள்ளது. மிகவும் ரசித்தது மார்டின் கதையின் அட்டைப்படம், ஒரு முழு படத்தை முன் மற்றும் பின் பக்கமாக அமைந்துள்ளது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. ஒரிஜினல் ராப்பர் சார் !

      Delete
  34. வணக்கம் காமிக்ஸ சொந்தங்ளே.!

    ReplyDelete
  35. I've read all the 4 books for may. I know it's too late to write a review. But still I'll give my marks for each books.
    Lone ranger - 10/10 that too 5th part just pushed me to the edge of the seat. Donto and lone ranger what a pair. The drawings in this story is too good. As you mentioned editor sir I loved lone ranger. It took first place for me. This month
    Durango- 9/10 as all our friends told he is a commercial hit. Hardbound books are always awesome.
    Barracuda - 9/10 it's just like watching a movie awesome just too good it is. So many twists and turns like GOT.
    Mini Tex -9/10 it's the kind of stories I always love. It's a pocket dynamite. I'm not big fan of Tex but a diehard fan of mini Tex. The drawing,coloring are awesome.
    All five months are hit in my books. From jan to may I'm never disappointed with your work and commitment sir.

    ReplyDelete
    Replies
    1. Review செய்திட நேரமாவது, காலமாவது - எப்போது முடிந்தாலும் ஓ.கே. தான் சார் !

      Delete
  36. மலிவுப் பதிப்பு சாத்தியப்படும் என்று எனக்கு தோன்றவில்லை
    நாம் நமக்காக வாங்கும் காமிக்ஸ் புத்தகங்களில் சிலதை விட்டுக்கொடுத்து குழந்தைகளுக்காக
    ஒன்றிரண்டு புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது நல்லது.
    நமது நேரத்தை குழந்தைகளுக்காக ஒதுக்கி புத்தகத்தை படித்து காண்பிக்க
    வேண்டியது அவசியம்.
    எதிர்காலத்தில் குழந்தைகள் பெரியவர்கள் ஆன பின்
    நமது காமிக்ஸ் புத்தகங்கள் எடைக்கு போகாமலிருக்க இதுதான் ஒரே வழி

    ReplyDelete
    Replies
    1. //நமது காமிக்ஸ் புத்தகங்கள் எடைக்கு போகாமலிருக்க இதுதான் ஒரே வழி//

      :-)))

      Delete
  37. World Cup Special TEX undaa sir ? He He !!!

    ReplyDelete
    Replies
    1. World Cup சகிதம் நம்மவர்கள் வீடு திரும்பட்டும் - ஒரு MAXI டெக்ஸ் போட்டு ஜமாய்த்து விடுவோம் !!

      Delete
    2. world cup இல்லையென்றால் maxi கிடையாத😭😭😭😭😭😭

      Delete
    3. // World Cup சகிதம் நம்மவர்கள் வீடு திரும்பட்டும் - ஒரு MAXI டெக்ஸ் போட்டு ஜமாய்த்து விடுவோம் //

      World Cup ஜெயிக்கிறவங்க எல்லோரும் நம்பவரே :-) எனவே டெக்ஸ் maxi கண்டிப்பாக உண்டு :-)

      Delete
    4. // World Cup சகிதம் நம்மவர்கள் வீடு திரும்பட்டும் - ஒரு MAXI டெக்ஸ் போட்டு ஜமாய்த்து விடுவோம் !! //
      நிபந்தனைக்கு உட்பட்டதே,சரி பரவாயில்லை,இந்திய அணித் தலைவரிடம் பேசிட வேண்டியதுதான்...

      Delete
    5. அணித் தலைவர்கிட்ட வேண்டாம்.அம்பானிகிட்ட பேசுனா போதும் சுளுவா முடிச்சிருவாரு.:-)

      Delete
    6. வடிவேலு தப்பான கப் காசுக்கு வாங்கி ட்டு புல்லட்ல வீட்டுக்கு வந்த கதையாகிட ப் போகுது....

      அங்க என்னப்பா சத்தம்னு எடிட்டர் கேட்டா பயந்துடுவமாக்கும்....

      நாங்கள் ளாம் யாரு ...வடிவேலு படம் பார்த்தே வளந்தவங்கேளாக்கும் ...

      கப்பும் டுபுக்கு....
      ஸ்பெஷலு புக்கும் டுபாக்கூர் டுபுக்காயிடப் போவுது

      Delete
  38. வணக்கம் 🙏 ஆசிரியரே.நாங்கள் ஆவலோடு
    எதிர்பார்த்த ஜீன் மாத இதழ்களின் முன்னோட்டம் மிகச்சிறந்த பதிவாய் உள்ளது. தல டெக்ஸின் தகவல்களை எழுத எழுத சுவாரசியம் குறையாமல் எதிர்பார்ப்புகள் மிகுவது என்ன விந்தையோ?போனெல்லிக்கு மட்டுமே தெரியும்.தளபதி டைகர் இதழும் எங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.மொத்தத்தில் ஜீன் மாதமும் சரவெடி மாதமே.அனைத்து அட்டைப்படங்களுமே பட்டாசு சார். I AM WAITING.... நன்றி.

    ReplyDelete
  39. காமிக்ஸ் சொந்தங்களுக்கு நல்இரவு வணக்கம்!!!.

    ReplyDelete
  40. சிக் பில் குரூப்பின் இந்த கதை வித்தியாசமாக இருக்கும் என டீசரை பார்க்கும் போது தெரிகிறது; எனவே வரும் மாதம் முதலில் படிக்கப் போவது இதுவே.

    ReplyDelete
  41. மொட்டை + மர்மம் = மர்ம மொட்டை
    = மொட்டை மர்மம்
    =மொட்டையாய் ஓர் மர்மம்....


    ReplyDelete
  42. இளம் டெக்ஸ் தொடரில் சின்ன சின்ன கதைகளும் உள்ளது சார். அதையாவது வண்ணத்தில் போட முயற்சிக்கலாம். கருப்பு வெள்ளை கதைகளை விட வண்ணத்தில் வெளியிடப்படும் கதைகளுக்கு வாசகர்களிடம் செம வரவேற்பு (விற்பனையில்) உள்ளதை தாங்களும் அறிவீர்கள். அடுத்த வருட அட்டவணையிலாவது டெக்ஸ் வண்ண இதழ்களுக்கு கொஞ்சம் கூடுதலான ஸ்லாட் ஒதுக்கும்படி இப்பவே துண்டை போட்டு வைக்கிறேன் 😊

    ReplyDelete
  43. எடிட்டர் சார்..

    'சின்னவர்' டெக்ஸ் அட்டைப்படம் படு ஸ்டைலாக, கலர்ஃபுல்லாக - பார்த்துக்கொண்டே இருக்கணும் போலிருக்கு!! அட்டகாசம்!!!!

    ஒரே மாதத்தில் சின்ன டெக்ஸ் + சின்ன டைகர் வெளியாவது ஏக மகிழ்ச்சி!! இந்தப் பதிவின் தலைப்புக்கு 'சின்னவர் Vs சின்னாபின்னமானவர்'னு பேர் வச்சிருந்தீங்கன்னா ரொம்பப் பொருத்தாய் இருந்திருக்கும் ஹிஹி!!

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு வுட்சிட்டி போலீஸ்காரவுகளைச் சந்திக்கவிருப்பது குஷியோ குஷி!!! டாக்புல்லின் நொடிக்கொரு முகபாவமும், கிட்ஆர்டினின் அம்மாஞ்சி முகமும் எத்தனை யுகங்களானாலும் சலிக்காது!!

    மார்ட்டின் கதைகளென்றாலே ஒரு வித்தியாசமான படிப்பனுபவத்திற்கு மனசு தயாராகிவிடுகிறது! புதுப்பாணி ஓவியங்களோடு மார்ட்டினைச் சந்தித்திட மிகுந்த ஆவலாய் இருக்கிறோம்! சீக்கிரம் ஆவனஞ்செய்யவும்!

    ReplyDelete
    Replies
    1. சின்னவர் Vs சின்னாபின்னாமானவர்
      ஹாஹாஹாஹா😂😂😲

      Delete
    2. டைகரை எள்ளி நகையாடியதை கண்ணடிக்கிறேன்.☺☺☺

      Delete
    3. // சின்னவர் Vs சின்னாபின்னாமானவர் //

      :-)

      ஆசிரியர் மேல் என்ன கோபம் விஜய். இப்படி இந்த பதிவிற்கு நீங்கள் சொன்னபடி தலைப்பு வைத்து இருந்தால் ஆசிரியர் தலையில் ஒரு மிருதங்க கச்சேரியே இந்த நேரம் நடந்து முடிந்தது இருக்கும் :-)

      Delete
    4. ///ஆசிரியர் மேல் என்ன கோபம் விஜய். ///

      பின்ன என்னாங்க.. 'சி.சி.வ'வை புத்தகமாக் கேட்டு நாங்க வருசக் கணக்கிலே போராட்டம் நடத்திக்கிட்டிருக்கோம்... ஆனா இதோ இன்னும் சிலநாள்ல 'சி.சி.வ'ன்ற பேர்ல புத்தகமும் வெளியாகப் போகுது.. எப்படி தந்திரமா ஏமாத்தியிருக்கார் பாத்தீங்கள்லே?!!

      Delete
  44. இம்மாதம் எனக்கு மிகவும் பிடித்த டாக்புல்&கிட் ஆர்ட்டின் கோ வருவதால் குஷியாக காத்திருக்கிறேன்

    ReplyDelete
  45. தளபதி அட்டை தலைய விட அற்புதமான இருக்குற மாதிரி பாத்துக்கோங்க......

    ReplyDelete
    Replies
    1. தளபதி வர்றதே ஸ்பெஷல்தானே.

      Delete
  46. அப்புறம் packing பண்ணும்போது....

    தளபதி புக் மொதல்ல வர்ற மாதிரி பேக் பண்ணுங்க...

    ReplyDelete
  47. தளபதி புக்குக்கு...வெல்வெட் துணி பேக்கிங் வேணும்...முடிஞ்சா நாலு மூலையில் மஞ்சள் வச்சுடுங்க......(இன்னொருத்தர் தான் சதா~ சந்தனம் பூசின வினு சக்கரவர்த்தி மாதிரி மஞ்சள் நிறத்தில் இருப்பாரு.....எனக்கு மஞ்சலே பிடிக்காது...)

    முடிஞ்சா தனி பேக்கிங் நல்லது.....மஞ்ச சட்ட குரூப்புடன் சேராமல் அனுப்புவது நலம்......

    கொரியர் ரயிலில் அனுப்புவது நலம்...தளபதிக்கு ரயிலுக்கும் அப்படி ஒரு ராசி

    கூட கொஞ்சம் BLUE BERRY பழங்கள்... கண்டிப்பா அனுப்பனும்....

    இவ்ளோ build up ...தேவையில்லை...நீங்களே நேர்ல தளபதி புக் கொண்டு வந்தா தளபதிக்கு ஒரு மாகுடமாய் அமையும்....train டிக்கெட் நான் போட்டுக்கறன்....பாக்தாத் வரை தான்....return டிக்கெட் உங்க பொறுப்பு....தளபதி புக் கையில் உள்ள வரை தான் உங்களுக்கு மதிப்பு...

    அவ்ளோ தான்..காமிக் ஆசான்...

    ReplyDelete
    Replies
    1. மந்திரியாரே எனக்கென்னவோ ஊத்தாப்பம் கேட்ட வடிவேலு காமெடி தான் நினைவுக்கு வருது...:-)))

      Delete
    2. எனக்கு கூட வினு சக்ரவர்த்தி ஞாபகமாகவே இருக்கு சார்...
      :)

      Delete
    3. ///முடிஞ்சா தனி பேக்கிங் நல்லது.....மஞ்ச சட்ட குரூப்புடன் சேராமல் அனுப்புவது நலம்......///

      அதானே.. ஷ்பெசல் வார்டுல தனியா இருக்கவேண்டிய பேசன்ட்டை ஜெனரல் வார்டுல சேத்தமாட்டாங்களே.. .!

      Delete
    4. அந்த மஞ்சக்காமாலை ஒட்டாமல் இருந்தால் சரி.......☺️☺️☺️

      Delete
    5. @மந்திரி

      ஹா ஹா ஹா!! நீண்ட நாட்களுக்குப் பிறகு மந்திரியின் அதே எழுத்துநடை!! செம்ம!! :)))))

      Delete
    6. ஹி ஹி நன்றி பூனையாரே...

      Delete
    7. எங்க தளபதி வழக்கமா போர்வை போர்த்த மாட்டாரு....அப்படி போர்த்துனா ஒரே அர்த்தம் தான் இருக்கு....

      Delete
    8. ///எங்க தளபதி வழக்கமா போர்வை போர்த்த மாட்டாரு....அப்படி போர்த்துனா ஒரே அர்த்தம் தான் இருக்கு....///

      ஏன்.. உள்ள சட்டை போட்டிருக்க மாட்டாரா.. அவர்கிட்ட அந்த போர்வை ஒண்ணு மட்டும்தான் இருக்குதா.. !?

      காட்டுல மழையா மந்திரியாரே.. :-)

      (ராஜாளி... சஸ்பென்ஸை காப்பாத்தத் தெரியாத பெருச்சாளி..!)
      (ஹைய்யா இந்தக்கட்டடம் என்னுது இந்தக்கட்டடம் என்னுது!)

      Delete
    9. லிலித்துக்கு போர்த்துன போர்வையை மஞ்ச காமலையாருக்கு போர்த்தி இருக்கலாம்.......அப்பவே முடிஞ்சி இருக்கும்......

      Delete
  48. // மௌரோ போசெல்லியே நேரடியாய்க் களமிறங்கி “போக்கிரி டெக்ஸ்” வரிசையின் (இதுவரையிலான) எல்லாக் கதைகளையும் எழுதியுள்ளார் ! //
    இச்செய்திகளை படிக்கும் போது நாவில் தேன் சுரப்பது போல் போன்ற உணர்வு எழுவது எனக்கு மட்டும்தானா ???
    டெக்ஸ் எனும் கடலில் கிடைக்கும் நல்முத்துகளுக்கு எப்போதும் முடிவில்லை.
    என்ன இதெல்லாம் சரியான காலத்தில் நமக்கு கிடைக்கனுமே என்ற கவலை எழுவதையும் தவிர்க்கத்தான் இயலவில்லை...

    ReplyDelete
  49. ஜூன் மாத வரவுகள் அனைத்தும் எதிர்பார்ப்பை எகிறச் செய்கின்றன,இளமையில் கொல் அட்டைப் படம் மற்றும் முன்னோட்டப் பக்கங்களில் வண்ணங்கள் சற்றே தூக்கலாக இருப்பது போல் தோன்றுகிறது,ஒருவேளை கையில் புரளும்போது சரியாக இருக்குமோ என்னவோ...

    ReplyDelete
  50. தங்கள் உடல்நலன் தற்போது பரவாயில்லையா அய்யா.

    ReplyDelete
  51. நான்கு மாத இதழ்கள் நிலுவையில்,எதை முன்னே படிக்கலாம் என்று தீர்மானிக்கும் முன்னர் அடுத்த மாத இதழ்களே வந்துவிடும் போல....

    ReplyDelete
    Replies
    1. அதையும் சேர்த்துவெச்சி அஞ்சி மாசத்துக்கு குழம்புங்கோ ஆப்பீசர்..!

      Delete
    2. நான் கூட அப்படித்தான் சேர்த்து குழம்பு வச்சிருக்கேன்:-)

      Delete
    3. கறிக்குழம்பா காமிக்ஸ் குழம்பா GP..!?

      காமிக்ஸ் குழம்பு முன்னபின்ன இருந்துட்டா பரவாயில்லை.. கறிக்குழம்பை கவனமா வெய்யுங்க.. !
      அப்புறம் ஆகஸ்டுக்கு வீக்கத்தோட வர்ர மாதிரி ஆயிடப்போகுது.. ! :-)

      Delete


    4. ஹீம்..ஷாலியான மனுசன்..

      நாம எல்லாம் புக்கு வந்தவுன ரெண்டு நாள்ல எல்லாத்தையும் படிச்சுட்டு மாசம் எப்படா முடியும்னு காத்துகிட்டு கிடக்கிறதா இருக்குது..:-(

      Delete
  52. உலகக் கோப்பை சிறப்பிதழ் வருகிறதோ இல்லையோ,இவ்வருட இறுதியில் நாற்பது இலட்சப் பார்வைகளுக்கான ஒரு பெரும் சிறப்பிதழை வெளியிட முடிவு செய்து கொள்ளுங்கள் அய்யா...

    ReplyDelete
    Replies
    1. 400 பக்கங்களுக்கு குறையக்கூடாது.. சொல்லிப்போட்டன் ஆம்மா..!

      Delete
    2. Yes 3 million hits ku barracuda mathiri. 4 million hits ku another new series we want.

      Delete
    3. ஏதோ அமெரிக்கா கென்யா ன்னு பீலா உட்டாங்களே....

      Delete
  53. போக்கிரி டெக்ஸ் எப்போது வரும் சார்.

    ReplyDelete
    Replies
    1. அப்படிக் கேளுங்க sridhar!

      Delete
    2. இப்ப மட்டும் என்ன செய்றாராம் tex

      Delete
  54. ஜூன் மாதம் கொண்டாட்டம் தான், டைகர், வுட்சிட்டி இரண்டையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்,

    ReplyDelete
  55. சிங்கத்தின் சிறுவயதில் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது். மற்றொரு "சிங்கத்தின் சிறுவயதில் " புத்தகமாக எப்போது வெளியீடுவீர்கள் என ஆவலாக இருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. ஹூஊஊஊஊம்... (உலகின் மிக நீளமான பெருமூச்சு!)

      Delete
    2. எனக்கென்னவோ மில்லுல சாப்பாட்டுக்கு சங்கு ஊதுன சத்தம்தான் கேட்டுச்சு..! :-)

      Delete
  56. ///நொடிக்கு நூறு தோட்டாக்களை உமிழும் கதைளிலெலாம் லாஜிக் பார்க்காது – இந்தச் சிரிப்புப் பார்ட்டிகளைத் தரத் தணிக்கைகளுக்கு உட்படுத்துகிறீர்களே… இது நியாயமாங்க சாரே?///

    எனக்குள்ளும் நீண்ட நாட்களாகவே இருக்கும் குழப்பம்தான்.!

    ஓரே மாதிரி இருந்தாலும் பரவாயில்லை என்று எத்தனை கௌபாய்கள் வந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம்..

    எங்கே தொடங்கி எங்கே முடியுமோ என்றே தெரியாத நிலையிலுள்ள உள்நாட்டுப்போர் சம்மந்தப்பட்ட இளம் டைகரைக்கூட ஏற்றுக்கொள்கிறோம்..

    புது அவதாரில் வந்தாலும் பாண்ட் ., ஜானியை ஆரவாரமாக வரவேற்கிறோம்..

    பார்த்தேயிராத ஜானரில் பராகுடா..
    உணர்வுப் போராட்டங்களை பிழியும் கி நா க்கள்..
    நாஸ்டால்ஜியா என்ற பெயரில் மறுபதிப்புகள்..
    எத்தனை முறைகள் மறுபதிப்பிட்டாலும் ரத்தப்படலம்..
    எல்லாவற்றிற்கும் மேலாக மாதந்தோறும் டெக்ஸ்..

    ஆனால் கார்ட்டூன்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கெடுபிடிகள்..!?

    நம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல.. நம்மையே குழந்தைகளாகவும் வைத்திருக்கும் கார்ட்டூன்கள்.!

    கார்ட்டூன்கள் சிறுபிள்ளை சமாச்சாரம் என்று நாம் சொல்கிறோம் .. ஆனால காமிக்ஸே சிறுபிள்ளை சமாச்சாரம் என்று வெளியில் சொல்கிறார்களே..!

    எனக்குத் தெரிந்து ஓரிரு தொடர்களைத் தவிர (பென்னி , அலிபாபா, அங்கிள் ஸ்க்ரூட்ஜ் ) வேறு எந்த கார்ட்டூன் தொடரும் சிறுபிள்ளைகளுக்கு "மட்டும்" என்பது அபத்தம்.!

    கார்ட்டூன்ஸ் இல்லாத மாதங்கள் இனம்புரியாத ஒரு வெறுமையை மனைதில் விதைக்கின்றன..

    இனியாவது மாதம் ஒரு கார்ட்டூன் நம் அட்டவணையில் இடம்பெறும் என்ற நம்பிக்கையோடு....

    ReplyDelete
    Replies
    1. ஆதங்கங்களை அப்படியே கொட்டிட்டீங்க கிட்!! அத்தனைக்கும் என் +1

      கார்ட்டூனுக்காக ஒரு போராட்டம் நடத்துவதாய் இருந்தால் - ஐ பஸ்ட்!

      Delete
    2. கார்டூன் பற்றிய அனைத்து கருத்துகளுக்கும் +1.

      போராட்டம் தேவையில்லை. அப்படி நடத்துவதாக இருந்தால் அமைதி வழியில் நடத்துவோம்; மாதம் ஒரு கார்டூன் என்று சந்தாவில் அறிவிப்பு செய்யும் வரை, தளத்தில் பின்னூட்டம் இடாமல் மௌன வாசகர்களாக தொடர்வோம்.

      Delete
    3. வங்குனா வாங்குங்க இப்படி ஒரு சந்தாவில கார்டுன் போடுங்க...V for V சந்தா...

      Delete
    4. // கார்ட்டூன்ஸ் இல்லாத மாதங்கள் இனம்புரியாத ஒரு வெறுமையை மனைதில் விதைக்கின்றன.. //
      தம்பி நல்லா கருத்தா பேசுவாப்ல...

      Delete
    5. ஆசிரியரே அடுத்த வருசம் 12 கார்ட்டூன் உறுதின்னு சொன்ன நினைவு...:-)

      Delete
  57. மார்டின் பின்னட்டையில் 'MARTIN MYSTERE' என்று ஃப்ரெஞ்ச் மொழியிலேயே இருக்கிறதே.. பர்ர்ரால்லிங்களா எடிட்டர் சார்? வேணும்னேதான் அப்படி விட்டு வச்சிருக்கீங்களா?!!

    ReplyDelete
  58. சார் கடந்த முப்பத்தைந்து வருட வாழ்க்கைப் பக்கங்களை புரட்டும் போது சுவாரஷ்ய பக்கங்கள் சந்தோசமாய் நிரம்பிடுவது அதாவது பால்ய விடுமுறை கால சந்தோசங்களுக்கிணையானது நமது காமிக்ஸ் வந்த நாட்களே என்பது தெளிவாய் புலப்படுகிறது .ஸ்பைடர் ...ஆர்ச்சி...மாயாவி...இ.கை வில்சன்...கராத்தே டாக்டர்...ரேம்போ...XIII...தல...தளபதி...லார்கோ...ஷெல்டன்...கிட்...லக்கி....ஸ்மர்ஃப்...தோர்கள்..ப்ரைஸ்...எமனின் திசை மேற்கு....இன்னும் சொல்ல நேரம் போதலை..இவைகளில் மூழ்கி முத்தெடுத்ததே அருமைனாலும் ....இதனுடன் தேடியது கடல் கொள்ளையர் கதைகளை....கடந்த இரண்டரை ஆண்டுகால பக்கங்கள் சந்தோசமான பணியில் நேரமில்லை தற்போதோ இல்லற வாழ்வு என நாற்கால் பாய்ச்சலில் சந்தோச நாட்கள் புயலால் புரட்ட படிச்சே ஆகனும்னு தீர்மானிச்ச பராகுடாவ பாத்து வியந்தத வர்ணிக்க பக்கங்கள் போதாதென ௐரு மாத காலமாய் காத்திருக்கிறேன் எழுதலாம்னு...ஆனா இவ்வார அட்டைப் படங்களும் உங்க துள்ளச் செய்யும் விவரிப்புகளும் அழைத்து வந்து விட்டன அனைத்தட்டைப் படங்களும் சும்மா தூள்...ஆர்ட்டின்...நியூட்டன்....மேலாய் இளம் தல...தளபதியாரின் வண்ணப்பக்கங்கள் ஆரவாரம்...சூப்பர்....இதுவர வந்த அட்டைப்படங்கள்லயே பெஸ்டாய் டெக்சும் அடுத்ததாய் டைகரும் மிளிர்வதுறுதி....பராகுடா நீண்ட பக்கங்களுடன் சிந்திப்போம்...விரைவில்🙂இளமையில் கொல் வேண்டாம்னே நினைத்தேன் கையில் உள்ளதால்...காட்டிய வண்ணமிகு பக்கத்தயும்...அட்டையயும் பாத்ததும் எப்படா வரும்னு ஏங்கச்செய்யுதே வழக்கம் போலவே

    ReplyDelete
    Replies
    1. ஸ்டீல்க்ளாவின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! ;)

      Delete
    2. புது அப்பார்ட்மெண்டா...😊

      Delete
    3. நல்லாருக்கீங்களா ஸ்டீல்.:-)

      Delete
    4. PFB @
      எங்க ஸ்டீல் க்ளா அனுப்பியதை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணுங்க.!

      நீங்க எடிட் பண்றதெல்லாம் வேணாம் பரணி.!
      இப்போ பாருங்க ..
      மேலே இருக்குற கமெண்ட்டுக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படலே..
      எங்க ஸ்டீலோட டச் மிஸ்ஸாகுதுல்ல.. !
      எங்களையும் ஸ்டீல்க்ளாவையும் பிரிக்க சதி பண்றிங்களோன்னு தோணுது..! :-)

      Delete
    5. கண்ணா @ நான் எடிட்டிங் செய்வதற்கு அவர் எழுதியதை முழுவதும் புரிந்தால் தானே முடியும் :-) அவரு குடும்பஸ்தரா மாறிய பின்னர் அவரது எழுத்தும் மாறி விட்டது. :-) மாற்றம் தானே வாழ்க்கை:-)

      Delete
    6. கும்புடுறேன் நண்பர்களே🙏🏻🙂

      Delete
    7. நல்லாருக்கேன் பரணி...அனைத்து நண்பர்களும் நலமா

      Delete


    8. நலமே...


      இப்டி ஆகி போச்சே உங்க நிலைமை...:-)))

      Delete
    9. யாரு பரணி
      யாரு ஸ்டீலு.


      Delete
    10. குடும்பஸ்தரா.....
      ஙே,..


      அவுரு போன் என்னாச்சி...

      Delete
    11. J @ steel claw என்ற பொன்ராஜ் கோயம்புத்தூர்

      Delete
  59. Expecting TexWiller pokkiri tex@2020😄😁😁😃😎😁💐🏵️🏵️🌺🌹🥀🌷

    ReplyDelete
  60. மினி (டெக்ஸ்) அணுகுண்டு,
    வெளிச்சத்துக்கு வந்த நிழல்:
    டெக்ஸின் மேல் வெறுப்பும்,கடும் கோபமும் கொண்ட எல் லிசியடோ என்று அழைக்கப்படும் சைலண்ட் ஷாடோவின் வெறியாட்டமே கதையெங்கும் விரவிக் கிடக்கிறது.
    ஷாடோவின் இரத்தத் தடத்தை பின்தொடர்ந்து செல்கிறது நம் ரேஞ்சர் கூட்டணி,தவறுதலான வழித்தடத்தில் ஷாடோவின் வஞ்சக வலையில் விழுகிறார் கார்சன்,அவரைப் பொறியாக வைத்து வில்லரை பிடிக்க திட்டமிடுகிறான் வெறியன் ஷாடோ.
    அதிரடியாக உள்ளே நுழையும் டெக்ஸ் செய்யும் அதகளத்தில் ஷாடோவின் குழு சின்னாபின்னமாகிறது.
    இறுதியில் ஷாடோ டெக்ஸை ஒற்றைக்கு ஒற்றை யுத்தத்துக்கு அழைக்க,போட்டியில் ஷாடோவை தில்லாக வீழ்த்தி வெற்றிக் கொடி நாட்டுகிறார் டெக்ஸ்.
    32 பக்கத்தில் ஒரு சரசர,விறுவிறு பாணியில் அட்டகாசமான கதை.
    கதைக்கு இத்தலைப்பை விட இரத்தத் தடம்,இரத்த வெறியன் போன்றவை பொருத்தமாக உள்ளது போல் தோன்றுகிறது.
    நிறை-அடர் வண்ணக் கலவைகள்,கதை ஓட்டம்.
    குறை-டெக்ஸை சற்றே முதிர்ச்சியாக காட்டும் ஓவியங்கள்
    எனது மதிப்பெண்கள்-10/10.

    ReplyDelete
    Replies
    1. சின்ன இதழுக்கு பெரிய விமர்சனம் அருமை...:-)

      Delete
  61. ஹைய்யா ஒரு இதழைப் படிச்சாச்சி.😍

    ReplyDelete
  62. நீங்களொரு காமிக்ஸ் 'தல' ரசிகராய் இருக்கும் பட்சத்தில் - இம்மாதம் உங்களுக்கோர் தலைவாழை விருந்து வெயிட்டிங் என்பேன் !! டெக்ஸ் வில்லரின் கம்பீரமான தந்தை கென் வில்லர் ; வீரமான மம்மி மே வில்லர் ; க்யூட்டான குட்டித் தம்பி சாம் வில்லர் என்று கதை விரியும் அழகே அலாதியானது ! Not to mention - நம்மவரும் - பால் வடியும் பாலகனாய் !!

    முதன்முதலாய் குதிரைச் சவாரி செய்யப் படிப்பதென்ன ; வாத்து வேட்டையாடப் போகும் சமயம் ஒரு ஆசாமியின் கபாலத்தைப் பிளக்கப் பார்த்து, பின்னே தெனாவெட்டாய் "யோவ்...நீ தொப்பியில் இறக்கையைச் செருகி வைச்சிருந்தாக்கா அப்புடித் தான் ஆகும்.இப்போ இன்னான்ற ?" என்றபடிக்கே அவனைச் சமாளிப்பதென்ன ; முதன்முறையாக பிஸ்டலைப் பிடித்து போக்கிரிகளை புறம் தள்ளப் பழகுவதென்ன ; சமயோசிதமாய் தம்பியையும் காப்பாற்றி, எதிரிகளையும் சமாளிக்கும் லாவகமென்ன........

    K .P .சுந்தராம்பாள் போல இன்னும் ஏகப்பட்ட "என்ன..என்ன...என்ன" க்களை அடுக்கிக் கொண்டே போகலாம் !!

    சிங்கத்தோடு உலவிடும் அனுபவ moment #

    ReplyDelete
    Replies
    1. ஆஹா....


      படிக்க படிக்க இப்பவே முழுசா படிக்க தோணுது சார்...




      வெகு ஆவலுடன் வெயிட்டிங்..

      Delete
    2. கடுப்பேத்துறீங்களே...

      Delete
  63. சார்

    நண்பர்கள் மே மாதத்து வெளியீடுகளை அலசிவிட்டு ஜூன் மாதத்தினை ஆவலுடன் காத்திருக்க, இதோ எனது படுதாமதமான மார்ச் மாத review,

    இந்த வருடத்தில் கதைகளுக்கிடையே tough fight இருந்த முதல் மாதம் இதுதான். நான்கும் நான்கு விதம். நான்குமே score செய்திருப்பது ஆரோக்கியம் (அட்டைப்படத்தையும் சேர்த்து).

    1. ஹெர்லக் ஹோம்ஸ் - எழுந்து வந்த எலும்புக்கூடு & விற்பனைக்கு ஒரு பேய் - 9.25/10

    மிகத்தரமான தயாரிப்பு. அட்டையில் தொடங்கியது புத்தகம் முழுவதும் மிளிர்கிறது. பெரிய பெரிய சித்திரங்கள், கண்ணை குளிரூட்டும் வண்ணம், நேர்த்தியான அச்சு, அசத்தலான மொழிபெயர்ப்பு, படுஜாலியான கதைக்களம் என்று அடுக்கி கொண்டே போகலாம். வி.ஒ.பே. ஏற்கனவே படித்த கதைதான் என்றாலும் ஹெர்லக் ஹோம்ஸ் நாய் வேடத்தில் அடித்த அளப்பறைகளை கண்டு விலா நோக சிரித்தது உண்மை.

    2. James Bond - நிழலும் நிஜமும் - 9.25/10

    மிரட்டலான படைப்பு. படு ஸ்டைலாகவும் இருக்கிறது. Action sequence எல்லாம் தெறிக்கும் ரகம். அதுவும் வில்லன் வெறும் கைகளாலயே தலையை முறித்து கொல்வது புதுசு. லார்கோ & ஷெல்டன் கதைகள் நிறைவடையும் இத்தருணத்தில் bond மிக சுலபமாக அவ்விடத்தை நிரப்பி விடுகிறார். இது போன்ற சமகால தொடர்கள் இன்னும் தேவை சார்.

    3. பாலைவனத்தில் ஒரு கப்பல் - 9.25

    ஜனவரியில் சிறிது சருக்க, febல் மறுபதிப்பின் மூலம் அதை சரிசெய்ய, மார்ச்சில் அனைத்துக்கும் சேர்த்து வைத்து ஒரு தடபுடல் விருந்து படைத்து விட்டார் டெக்ஸ். க்ளைமாக்ஸில் வரும் சுழல் நீர்வீழ்ச்சி sequence அபாரம்.

    4. முடிவிலா மூடுபனி - 9/10

    Black & white ல் ஒரு சித்திர படையல். அமைதியான ஒரு பொழுதில் படித்து
    நெகிழ வேண்டிய இதழ். அந்த சிறு நகரமும்,கதைமாந்தர்களும் இன்னும் கண்ணைவிட்டு அகலவில்லை.

    இனி கையில் இருப்பது 5 + 3 = 8 கதைகள். ஏப்ரலை முடித்துவிட்டுதான் மே மாதத்திற்கு வரவேண்டும். ஏப்ரலில் விருப்ப நாயகர்களான டெக்ஸ், லக்கிலூக், பிரின்ஸ் என வரிசைகட்டி நிற்க முதல் புரட்டலில் கார்ட்லேண்ட் தான் படிக்க தூண்டுகிறார். பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் விமர்சனம். தாமதம் என்றாலும் அருமை.‌தொடருங்கள்.

      Delete
  64. வெளிச்சத்துக்கு வந்த நிழல்.

    கதை ! திடீரென ஆரம்பிக்கிறது....

    எல்லாமே புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம்....

    கார்சன் கட்டுண்டு கிடக்கிறார்.
    சோதா போக்கிரிகள் இவரை காரணமாக்கி வில்லரை வரவழைக்கும் நாடகமாம்.....
    அதையும் அவர்களே உளறி வைப்பார்களாம்....

    வழமை போல் டெக்ஸ் டைனமைட் சகிதம் வந்து துவம்சம் செய்கிறார்.
    ஆஜானுபாகுவான எல் லிசியடோ ஒற்றைக்கு ஒற்றை சண்டையிடுகிறார்.

    டெக்ஸிடம் கத்தி வாங்கி செத்தேப் போகிறார்.

    டெக்ஸும் வழக்கம் போல் கழுகுகளுக்கு இரையாக விடாமல் அனைவரையும் புதைக்கிறார்.

    கதை திடீரென முடிந்து விடுகிறது( முடிக்கப்படுகிறது)

    32 பக்க கட்டாயம் இதற்குள் எல்லாம் தூவப்படுகிறது....

    வசனம் , அதிரடி சண்டைகள் ,மயிர் கூச்செறியும் ஆக்சன் , பஞ்ச் டயலாக், சென்டிமெண்ட் எல்லாமே மினியில உண்டு.....

    ஹீரோயின் மிஸ்ஸிங்...


    படித்து முடித்த பிறகு வெறுமை மட்டும் தென்படுகிறது...

    எனக்கு தோன்றியது அப்படி...

    ஒரு நிமிடம் டெக்ஸ் என்ற கதை நாயகரைப் பற்றி சிந்தித்தால்

    எல்லா கதைகளும் ஸ்டீரியோ டைப் தான்...
    ஆனால் மினிமம் கேரண்டி படம் மாதிரி ஓட்டம் தான்.

    பிரபல தமிழ் நடிகரின் படம் ஒரு வாரம் ஓடினால் போதும் என்பது போல் தோன்றுகிறது...

    ஆத்மார்த்தமான லயிப்பு இல்லை...



    ReplyDelete
    Replies
    1. May be....

      Everything has its own versions...

      Delete
    2. நியாயமான விமர்சனம் J ji! கிட்டத்தட்ட என்னுடைய எண்ணங்களும் இதுவே!

      Delete
  65. Waiting for June issues. I'm so eagerly waiting for chicbill and Co then mystery Martin he never disappoints. Just this week to go waiting for the books. And only two months for book fair Wowow I'm excited.

    ReplyDelete
  66. Dear editor Sir. Are you gonna release kaala vettayar in July at Coimbatore book fair. Any updates for the same?

    ReplyDelete
  67. மார்டின் வர்றாரு.


    போனெல்லி குருப் தான் பப்ளிஷ் பண்றாங்க...இந்த வரிசையில் எத்தனை கதை உள்ளதோ...

    ReplyDelete
    Replies
    1. நூறு இருக்குன்னே வச்சா கூட நாம் வருஷத்துக்கு ஓன்னூ வீதம் போட்டு ...ஹும்....

      Delete
  68. கருப்பு வெள்ளை கதைகளை விட வண்ணத்தில் வெளியிடப்படும் கதைகளுக்கு வாசகர்களிடம் செம வரவேற்பு (விற்பனையில்) உள்ளதை தாங்களும் அறிவீர்கள்.உண்மை

    ReplyDelete
  69. மே மாத இதழ்கள் !!!

    மினி டெக்‌ஸ் பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன்..


    தனியொருவன்.


    தாக்கங்களை ஏற்படுத்த தவறியவன்.

    முதல் இரண்டு அத்தியாயங்களை படிப்பதற்குள் மூச்சு திணறிவிட்டது..

    அதன்பிறகு பரவாயில்லை...

    பரவாயில்லை ரகம் மட்டும்தான்...


    7.5/10

    ReplyDelete
    Replies
    1. பராகுடா ..

      இன்று அதிகாலை படித்து முடித்தேன்..

      முதல் பகுதியை விட்டேற்றியாக படித்தது என்னவோ உண்மை...

      இரண்டாம் பகுதியை படித்து முடித்தபோது மனதை பிசைந்து என்னவோ செய்தது..

      இக்கதை குறித்து பின்னாளில் நிறைய எழுத வேண்டி வரும்..

      10/10

      Delete
    2. ///இக்கதை குறித்து பின்னாளில் நிறைய எழுத வேண்டி வரும்..///

      அந்தப் பின்னாளுக்காக நாங்கள் இன்னாளிலிருந்தே வெயிட்டிங்!

      Delete
    3. /// 7.5/10 ////

      தனியொருவனுக்கு ஏழரை ஆரம்பமாயிடுச்சுன்னு சொல்லாமச் சொல்ற மாதிரி இருக்கே... ;)

      Delete
    4. ட்யூராங்கோ!!

      இன்னும் சில வருடங்களில் இவருக்கு - கதைகள் மட்டும் இருப்பின் - தனித்தடம் வந்தால் ஆச்சர்யபட வேண்டாம்..

      கதை சொல்லப்படும் விதம் செம!!

      கெட்டப்பய சார் இந்த ட்யூராங்கோ!

      ரெண்டு கையும் இல்லாட்டி கூட புழைச்சுப்பான்..

      9.9/10

      Delete
    5. பொருளாளரின் விமர்சனங்கள் அனைத்தும் அப்படியே எனது அபிப்ராயத்தை பிரதிபலிக்கிறதே..

      அட டே....:-)

      Delete
  70. கார்ட்டூன் அருமை அப்பட்டமாக இந்த மாதம் தெரிகிறது....

    ஏதாவது ஒருவிதத்தில் கார்ட்டூன் மாதாமாதம் இடம்பெறுமாறு ஏற்பாடு செய்யுங்கள் சார்!!!


    ReplyDelete
    Replies
    1. அந்தக் குறையைப் போக்கத் தான் 'ஆட்றா ராமா...தாண்டரா ராமா !!' என்று நான் அவ்வப்போது சுற்றி வருகிறேன் சார் !

      Delete
    2. ஹா ஹா எடிட்டர் சார்...
      ஆனால் உங்கள் 'ஆட்றா தாண்ட்ரா' எல்லாமே கொஞ்சம் ப்ளாக் ஹியூமர் ரகத்திலிருப்பதுதான் பிரச்சினையே!! :)

      Delete
  71. சார்....


    மாத கடைசி ஆனா...


    பல குடும்பத்துல மகிழ்ச்சி காணாம போகும்...


    ஆனா நம்ம காமிக்ஸ் குடும்பத்துல மட்டும் தான் மாச கடைசி ஆனா மகிழ்ச்சி பெருகும்....




    நீங்க ரெடியா சார்...?!

    ReplyDelete
  72. Replies
    1. 300

      "சார்.. உப பதிவு?" - அதானே உங்க ஐடியா? ;)

      Delete
    2. Athe than EV. En idea latchiyam ellame

      Delete
  73. 300 வருவதற்கு முன் புது பதிவு வந்துடும்.

    ReplyDelete