Sunday, May 05, 2019

முதலிடம் யாருக்கு ?

நண்பர்களே,

வணக்கம். Once upon a time ...."பதிவுக்கு உபபதிவு" என்பதெல்லாம் அவசியப்பட்டிருந்த நாட்களில் 'உ.ப'.வின் பொருட்டு வாங்கிய Garfield பக்கங்கள் பரணில் துயில் பயில்வது நினைவுக்கு வந்தது ! So இந்த சோம்பலான ஞாயிறினை அந்தச் சோம்பேறித் திலகப் பூனையின் கார்டூனோடு  ஒட்டிட நினைத்தேன் !! 
மே மாதத்து இதழ்கள் நிறையப் பேருக்குக் கைக்குக் கிடைத்ததே லேட் எனும் போது - அவற்றை வாசிக்க / அலசிட எத்தனை பேருக்கு நேரம் கிடைத்ததோ தெரியலை !! தவிர, பள்ளி விடுமுறைகள் எனும் போது குடும்ப விடுமுறைப் பயணங்களும் இருக்கக்கூடும் ! So ஒரு சத்தமிலா மூலையைத் தேடிப்பிடித்து  - 'தனியொருவனாய்' பொம்மை புக் படித்து "இரத்த வைரம்" போலான புதையல்களை ஈட்டும் நினைப்பில் இல்லத்தரசிகளின் "வதம் செய்ய விரும்பும்" வேட்கைகளுக்கு ஆளாகிடாது தப்புவதே இந்த நொடியின் priority ஆக நிறையப் பேருக்கு இருந்திடலாம் !  So அந்தச் சூழல்களில் சிக்கியிரா நண்பர்கள் மே மாதத்து இதழ்கள் பற்றிய தங்களது எண்ணங்களைப் பகிர்ந்திடலாமே ? 

 • DURANGO 
 • BARRACUDA
 • The LONE RANGER
ரேங்குகளில் முதலிடம் யாருக்கு ? மூன்றாமிடமும் யாருக்கு ? சொல்ல நேரம் எடுத்துக் கொள்ளும் நண்பர்களுக்கு முன்கூட்டிய  நன்றிகள் ! Bye guys !! Have a cool Sunday !! 

156 comments:

 1. Yet to get the books in my hands Sir. As soon as I finish them I'll do the ranking. Thank you for the post today.

  ReplyDelete
 2. தற்பொழுது புத்தகங்களை வாசிக்க நேரமில்லை. அடுத்த மாதமாவது நேரம்கிடைத்தால் நல்லது.

  ReplyDelete
 3. நான்கு மாதங்களாக புத்தகங்கள் கனவிலும் ப்ளாக்கிலும்தான் பார்க்கமுடிகிறது.

  ReplyDelete
 4. Replies
  1. 1) பராகுடா ( என்னென்னமோ தாறுமாறா நடந்து கஷார் வைரம் மாதிரியே மனச தகிக்க வைக்குது - கதாசிரியரா ஓவியரான்னு முடிவு பண்ணலாம்னு பாத்தா அந்த மனுசன் சுடு சோறு சாப்டுட்டு கதை எழுதிருப்பாரு போலருக்கு.... படம் வரைஞ்ச மகானுபாவனோ அனாடமி கிளாஸ (" டெக்விலாவும் போர்பானும் சேர்த்தடிச்சிட்டு" )அட்டெண்ட் பண்ணுனா கையோட வரைஞ்சு தள்ளிருக்காரு....

   2) ட்யூரங்கோ....

   3) லோன் அப்பிராணி ரேஞ்சரூ......

   எல்லாத்தையும் விட lateral entry யாகி வெறும் 32 பக்கத்துக்குள்ள பின்னி பெடலெடுக்கிறது வெளிச்சத்துக்கு வந்த (டெக்ஸ்) நிழல்......

   Delete
  2. பராகுடா படிச்சு முடிக்காமல் கீழ வைச்சுடுங்களேன் பாப்போம்...


   ட்யூரங்கோ - வழமை போல்....

   லோன் ரேஞ்சரு - ஏழெட்டு இன்டர்வல் சினிமா படத்துல விட்ட மாதிரி இருந்துச்சு...

   1)டீக்குடிக்க எந்திரிச்சி போயாச்சு

   2) நாயத்துகெழம கரம் மசாலா வாங்க போய்ட்டு வந்து படிச்சேன்.

   3)என்டே பொன்னு ரேஞ்சர்- ஒன்பாத்ரூம் போய்ட்டு வந்நு படிச்சில்லா...ஆயாள் பரைஞ்சோ...

   4) இட்லி திந்தாட்டு பந்துபந்து கலுத்து
   முடிச்சிபேக்காயிடித்தி....

   5) எந்த்தரோ மகானு பாவூலு...
   அந்தரீக்கி வந்தனமூஊஊஊ....

   Delete
 5. இம்மாத புத்தகங்கள் மூன்றுமே ப்ளாக்பஸ்டர் ஹிட்ஸாக அமையுமென நினைக்கின்றேன். ஃபர்ஸ்ட் லுக்ஸ் அட்டகாஷ்!!!!

  ReplyDelete
 6. பராகுடா படித்து விட்டேன்> ஒரே மூச்சில் !! புக்-கை கீழ் வைக்க முடியலை !!! கதை சொல்லப்பட்ட விதம் அருமை! தட தட என்று சதாப்தி எக்ஸ்பிரஸ் மாதிரி !! பிரமிக்க வைத்த சித்திரஙகள் !!! Hats off to எடிட்டர் sir - for selecting this title!!

  I will post my review for remaining 3 titles after reading.

  Tx tx Editor sir!!

  ReplyDelete
 7. Books arrived late.yet to read.

  ReplyDelete
 8. Books yet to come. சென்னையில் இருந்தும் புத்தகம் வந்து சேர்ந்த பாடில்லை. ��

  ReplyDelete
 9. இன்று மாலை இரயிலில் விருதுநகரில் இருந்து பெங்களூர் கிளம்புகிறேன். நாளை காலை புத்தகங்களை பார்கலாம் ஆனால் அவற்றை படிப்பது என்பது குடும்பம் மற்றும் ஆபீஸ் வேலைகளை கவனித்த பின்னரே.

  ReplyDelete
  Replies
  1. காமிக்ஸ் இன்றைக்கு தான் office முகவரிக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

   காமிக்ஸ் படித்த பின்னர் தான் ஆபிஸில் வேலையை பார்ப்பேன்.(வீட்டில் நம்ப ஜம்பம் பலிப்பதில்லை)

   Delete
  2. //காமிக்ஸ் படித்த பின்னர் தான் ஆபிஸில் வேலையை பார்ப்பேன்.(வீட்டில் நம்ப ஜம்பம் பலிப்பதில்லை)//

   :-)))

   Delete
 10. Durango reminds me of Clint Eastwood's Spaghetti Westerns. Nevertheless fantastic like previous albums - the hardcover, colour and script. Made a good weekend read. Sad thing is next album is advertised to come only next year.

  ReplyDelete
  Replies
  1. //Sad thing is next album is advertised to come only next year.//

   மொத்தமே 17 ஆல்பங்கள் கொண்ட தொடர் தான் சார் இது ! நாமிப்போது 10 கதைகளை பூர்த்தி செய்துள்ளோம் எனும் போது - மேற்கொண்டு இரண்டே தொகுப்புகள் தான் (3 + 4 ) இனி சாத்தியமாகிடும் !!

   On the brighter side - கதாசிரியர் & ஓவியரான Yves Swolfs ட்யுராங்கோ ஸ்டைலிலேயே இன்னொரு தொடரை சென்றாண்டு துவக்கியுள்ளார் ! அது அங்கே ஹிட்டடிக்கும் பட்சத்தில் தொடர்ந்திடுமென்று நம்பலாம் !

   Delete
 11. Replies
  1. படிக்காமலேயே

   1. பராகுடா
   2. ட்யூராங்கோ
   3. தனியொருவன்

   ஓகே வா!!??

   😆😆😆😜😜😜

   Delete
  2. படிச்சிட்டே சொல்லுங்களேன்...!

   Delete
 12. First....
  I mean came within twenty for the first time...
  மொதல்ல கதை selection க்கு புடிங்க ஒரு பூங்கொத்து..
  எல்லாம் சீரியசான அதிவேட்டு கதைகள். அட்டகாசமான சித்திரங்கள்.. ஆவேசமான கதைகள், standard ன புத்தக தரத்துடன்..
  இதுக்கு எல்லாம் மகுடமெனில் ஆசிரியரின் மிரள வைக்கும் மொழிபெயர்ப்புகள்..உ.ம் paraguda page 97 ...
  "அக்னி வடித்ததொரு ரௌத்திர கவிதையாய் ..."
  "அலையடிக்கும் நீராலும் அணைக்க இயலா ஜுவாலைகளாய்... "
  Page 98,99 கலர்கள் அட்டகாசம்...Game of throne மாதிரி யாரு எப்ப சாவாங்கன்னே தெரியல... மிக அருமை

  இருந்தாலும்...
  Paraguda + durango + lone ranger = Tex willer..
  (நாங்க ஒதுக்க மாட்டோம் )

  ReplyDelete
  Replies
  1. ஒரிஜினல் வரிகளின் வீரியம் - கஷார் வைரத்தின் ரேன்ஜ் சார் ! அதனால் தான் தமிழாக்கத்திலும் அதன் சுவடுகள் தென்பட சாத்தியமானது ! இங்கே ஓவியருக்கும், கலரிங் ஆர்டிஸ்டுக்கும் கிடைக்கும் credits துளியும் குறைவின்றி கதாசிரியரின் ஸ்கிரிப்ட்டுக்கும் கிட்டிட வேண்டுமென்பேன் !

   // இருந்தாலும்...Baracuda + durango + lone ranger = Tex willer..//

   :-))))

   Delete
 13. I read all stories.

  I found very hard to give ranks to this month books.

  Anyhow Barracuda got first rank.
  Durango got second rank.
  தி லோன் ரேஞ்சர் starts with little boredom but gained it's momentum in the successive stories.
  But still the suspense continues.
  Waiting for the next part.

  Last Tex Willer.

  One more wonder this month.
  That's
  1 Wrapper of Tex Willer is ordinary art paper.
  2 Wrapper of Lone Ranger is shining thick wrapper.
  3 Wrapper of Barracuda is rough thick wrapper.
  4 Wrapper of Durango is hardcover.

  ReplyDelete
  Replies
  1. //I found very hard to give ranks to this month books.//

   :-)))

   Delete
 14. வந்தாச்சுசார் 🙏🏼

  வழமை போல முதலில் படித்தது டெக்ஸே

  கலக்கிட்டாருங்கோ
  தல தலதான்

  அதிரடியாக ஆரம்பித்து
  பரபரன்னு நகர்ந்து
  பட்டாசா பட்டய கிளப்பிடுச்சு
  இந்த 32 பக்கத்துல ஒரு ஃப்ளாஷ் பேக்குக்கும்
  இடம் கொடுத்திருக்காங்கன்னா பாத்துக்கோங்க

  சிம்ப்ளி சூப்பர்ப் 👌🏼💪🏼💪🏼💪🏼

  ReplyDelete
 15. காமிக்ஸ் இன்னும் கைக்கு வரவில்லை. வந்த பிறேக எதுவும் சொல்ல முடியும்.

  ReplyDelete
 16. Barracuda first, Durango second, lone Ranger third👍🏼👏👏

  ReplyDelete
  Replies
  1. இன்னும் கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது, ஒவ்வொன்றையும் சற்றே விரிவாய் அலச முயற்சிக்கலாமே சார் ?

   Delete
 17. மீள்பதிவு

  மே மாத இதழ்கள் கையில் கிடைத்ததும் முதலில் படிக்க ஆரம்பித்தது டியுராங்கோ தான், வருடம் ஒரு முறை வந்தாலும் கதையிலும் ஆக்சனிலும் எவ்வித குறையும் வைப்பதில்லை.

  இந்தமுறை எதிர்பார்ப்பு கொஞ்சம் தூக்கலாக இருந்ததாலும் அதை சற்றும் குறைவில்லாமல் பூர்த்தி செய்து விட்டது இந்த மூன்றாவது இதழ்.
  டியுராங்கோ ஹாட்ரிக் அடித்துவிட்டார். அசத்தல்.

  9.9/10
  0.1 எதற்கு குறைந்தது என்றால் கண்ணு பட்டு விட போகுதய்யா...

  ReplyDelete
  Replies
  1. கமர்ஷியல் நாயகன் ட்யுராங்கோ !!

   Delete
 18. படிச்சுட்டு வாரேன்.....

  ReplyDelete
  Replies
  1. பதிவையா ? கதைகளையா மந்திரியாரே ?

   Delete
  2. கதைகளை தான் ........காமிக் ஆசான்

   Delete
 19. Dear Edi,

  Finished Barracuda... Amazing Art, Stunning Story, and Perfect Translation. This has indeed set a New trend in our Comics, for Mature audience.

  Next on Reading List, Lone Ranger.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் சார் ; இந்தக் கதையின் மொழிபெயர்ப்பு பெரும் சவாலாய் இருந்ததென்றெல்லாம் சொல்ல மாட்டேன் ; ஒரிஜினல் ஸ்கிரிப்ட் அத்தனை அட்டகாசம் எனும் போது, அதன் வாலைப் பிடித்துக் கொண்டே போனதிலேயே கரை சேர்ந்திட முடிந்தது !

   But as a work - நிறைய மனநிறைவைத் தந்த பணியிது !! வாசிக்கவுள்ளோர் நிச்சயமாய் mature audience மாத்திரமே எனும் போது சின்னதாய்க் கூட கோட்டை விடலாகாது என்ற பயத்தோடு செய்த பணியாச்சே !!

   Delete
 20. கார்பீல்ட் செம. நான் பூனை அந்த நாயின் மேல்தான் கடுப்பாக இருக்கிறது போல் என நினைத்தேன்.

  ReplyDelete
  Replies
  1. கார்பீல்ட் என்றைக்குமே ஒரு கலக்கல் பார்ட்டி !!

   Delete
 21. இந்த மாதம் கார்ட்டூன் கிடையாது என்ற குறையை நம்ம Lucky Luke ட்யுராங்கோவுல 62ம் பக்கத்தில் cameo appearance கொடுத்து அதையும் நிவர்த்தி செய்துள்ளார் :)

  ReplyDelete
  Replies
  1. சொல்ல நினைத்திருந்தேன்...மறந்தே போச்சு சார் !!

   Yes ..லக்கி in ட்யுராங்கோ !

   Delete
 22. புத்தகங்கள் கிடைத்து விட்டது. புத்தகங்கள் அனைத்தையும் புரட்டி பார்த்து விட்டேன். தயாரிப்பு தரம் அருமை. அட்டைப் படத்தில்
  மூன்றாம் இடம் "தனியொருவன்"
  இரண்டாம் இடம் "பராகுடா"
  முதல் இடம் "டியூரங்கோ".

  ஜம்போ சீசன்-1 கதைகளை (திரும்பிப்பார்த்தல்) பற்றி எழுதி இருந்தது நன்றாக இருந்தது. அருமையான ஐடியா.

  ReplyDelete
  Replies
  1. //ஜம்போ சீசன்-1 கதைகளை (திரும்பிப்பார்த்தல்) பற்றி எழுதி இருந்தது நன்றாக இருந்தது. அருமையான ஐடியா//

   எழுதியனுப்பிய நண்பருக்கே credit சாரும் !!

   Delete
 23. வணக்கம் ஆசிரியரே 🙏.மேமாத இதழ்கள் நான்குமே அருமை, அட்டகாசம், சிறப்பு,மிகச்சிறப்பு.டெக்ஸ் இதழை தவிர மற்ற மூன்று இதழ்களின் அட்டைப் படமும்,அட்டையின் தரமும் மிகச் சிறப்பாக உள்ளது. தொடர்ந்து இதேப் போல் வழங்குங்கள் ஆசிரியரே. நான்கு இதழ்களின் சித்திரம்,கதை,மொழிப்பெயர்ப்பு எந்த குறையுமின்றி சிறப்பாக அமைந்துள்ளது.இந்த வருடத்தின் மிகச் சிறந்த மாதம் என கருதுகிறேன். டுயூராங்கோ அட்டைப் படம் வேற லெவல்.கோடைமலர் குளிர்ச்சி மலராக அமைந்துள்ளது.முதல் ஆல்பமான வேட்டையாடு விளையாடு நன்றாக உள்ளது. அடுத்த ஆல்பமான ஒரு புதையலின் பாதையில் அதிக ஆக்சன் இல்லாமல் நிறைவு செய்கிறது. மூன்றாம் ஆல்பமான வதம் செய்ய விரும்பு இரண்டு ஆல்பத்தினை விட மிகச்சிறப்பாக அற்புதமாக அமைந்துள்ளது. இந்த இதழ் டெக்ஸ் வில்லரின் காதலும் கடந்து போகும் இதழை நினைவூட்ட வைத்துவிட்டது.தெறிக்கும் ஆக்சன்,மன நிறைவான கிளைமேக்‌ஷ் மௌன ஹீரோ மனதைத் திருடிவிட்டார்.இரத்த வைரம் பல்வேறு கதைத்திருப்பம் மனநிறைவான கிளைமேக்‌ஷ் மனதை அள்ளுகிறது.ரெட் ஹாக்
  அற்புத ஹீரோ.என்ட்ரி அருமை.வாள் வீச்சு அதைவிட அருமை. மரியா மற்றும் எமிலியா ஆகியோரின் இறந்த காலம் துன்பம் மிக்கதாய் இருந்தாலும் எதிர்காலம் மன நிறைவைத் தருகிறது. கடற்கொள்ளையர்களே கதையின் ஹீரோக்கள் என்பதால் கேப்டன் லா லோயா போன்றோரின் மரணம் கவலையூட்டுகிறது.மொத்தத்தில் இரத்த வைரம் அட்டகாச மான இதழ்.இதே போன்ற இதழ்கள் கிராபிக் நாவலில் இடம் பெற்றால் அனைவருமே மகிழ்வோம்.ஆசியருக்கு தல டெக்ஸ் மீது என்ன வெறுப்போ தெரியவில்லை அட்டைபடம் இன்றி வெளியிட்டுள்ளார். இவ்வாறு அவரை நிலைப்படுத்தாதீர் ஆசிரியரே.700 நாட் அவுட் மற்றும் 70 ஆண்டுகள் நாட் நாயகனின் அட்டைப்படம் எப்போதுமே சிறப்பாக வெளியிடுங்கள் ஆசிரியரே. என்ன இருந்தாலும் டெக்ஸ் டெக்ஸ் தான்.கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.டுயூராங்கோ முதல் இடம்.இரத்த வைரம் இரண்டாம் இடம்.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே, போன வருடம் முழுவதும் வெளியான Color TEX விலையில்லா இதழ்களை நீங்கள் பார்த்திருக்கவில்லை என்பது புரிகிறது ! இந்த 32 பக்கக் கதைகளின் template இதுவே தான் ; so இந்தாண்டு தொடர்ந்திடவுள்ள 3 இதழ்களும் இதே பாணியில் தான், தனியாய் அட்டைப்படமின்றியே வெளிவரும். ஒன்று சேர்ந்து ஆண்டின் இறுதியில் ஒரு தொகுப்பாய் வெளியாகும் வேளையில் மட்டுமே அட்டைப்படமிருக்கும் !

   Delete
  2. நன்றி ஐயா.சென்ற ஆண்டு சந்தா கட்டாமல் புத்தகம் வாங்கிப் படித்தேன் ஐயா.மன்னிக்கவும்.

   Delete
 24. Editor sir,

  My Barracuda book has a binding issue. Two pages got folded in the binding :(

  Send a mail to 'office.lioncomics@yahoo.com' id..

  - Sankar

  ReplyDelete
 25. Durango மே மாதத்தின் சரவெடி!

  ReplyDelete
 26. பாரகுடாவால் வீசும் புயல் காற்றை ட்ரோங்கோ மற்றும் லோன் ரேஞ்சரும் தாங்குமா என்பது தெரியவில்லை.

  ReplyDelete
 27. :( பொட்டி வர்லிங்கொ

  ReplyDelete
 28. இன்றும் ஏமாற்றமே சார்...:-(

  ReplyDelete
 29. டியுராங்கோவை அடுத்து வாசித்தது லோன் ரேஞ்சர்...

  ஜம்போ செகண்ட் சீசனை துவக்கி வைக்க வந்த புதிய வரவு எனும் எதிர்பார்ப்பு ஒரு பக்கம், கௌபாய் உலகில் ஒரு புதுமை என்ற விளம்பரம் ஒரு பக்கம்...

  ஆறு அத்தியாயங்கள், முதல் இரண்டு அத்தியாயங்களும் தனித்தனிக் கதைகள், அடுத்த நான்கு அத்தியாயங்களும் தொடர்ச்சியான ஒரே கதை.

  ஒரு கௌபாய் சூப்பர் ஹீரோவை சிருஷ்டிக்க நினைத்திருக்கிறார் கதாசிரியர். முதல் இரண்டு அத்தியாயங்களும் பில்லர் பேஜஸ் போன்று எண்ணம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை, அடுத்த 4 அத்தியாயங்களும் நல்ல வலுவான தளத்தில் நேர்த்தியான கதையோட்டம், ஆனால் இன்னும் முற்றுப் பெறவில்லை...

  இந்த நான்கு அத்தியாயங்களுடன் அதன் இறுதி அத்தியாயங்களையும் இணைத்து வெளியிட்டு இருந்திருக்கலாம். முதல் இரண்டு அத்தியாயங்களை தவிர்த்திருக்கலாம், நன்றாக இருந்திருக்கும், ஒரு முழு கதை படித்த திருப்தியும் கிடைத்திருக்கும்.

  ஓவியங்கள்- அழகு- அதகளம்.
  ரேட்டிங் 6.6/10. (4/6 என்றால் 10க்கு அப்படித்தானே!)

  ReplyDelete
  Replies
  1. மேலே எத்தனை முறை அத்தியாயம் வருகிறதோ அத்தனை இடை வேளைகள் இருக்கிறது கதையில்......

   Delete
  2. அமெரிக்க ஆக்கங்கள் ஒவ்வொன்றுமே ஒரு சுற்றில் நிறைவு பெறுவதில்லை ! கதைகளுக்கிடையே ஒரு மெல்லிய சங்கிலி தொடர்வது வாடிக்கை !

   So இப்போது நாம் வெளியிட்டிருக்கும் 6 பாக story arc-ல் எதையும் நம் இஷ்டத்துக்கு cut செய்திடவோ ; next சுற்றிலிருந்து ஒன்றிரண்டு அத்தியாயங்களை இரவல் வாங்கிக் கொள்வதோ சாத்தியமாகாது சார் ! அவர்களது உருவாக்கம் எவ்விதமோ, அவ்விதமே நமது தமிழாக்கமும் இருந்திடும் !

   Delete
  3. புரிகிறது சார்! ஒருவேளை அது சாத்தியப்பட்டு இருப்பின் இது ஒரு மிகச்சிறந்த கதையாக அமைந்திருக்கும் என்ற ஒரு ஆசை தான். வசன அமைப்பிலும் கதை சொல்லும் விதத்திலும் இது வித்தியாசமான கெளபாய் அனுபவம் தான். சிறுகதை வடிவத்தில் அமையும் போதுதான் ஏனோ ரசிக்க முடியவில்லை.

   இந்த விஷயத்தில் Tex சிறுகதைகள் 32 பக்கம் ஆனாலும் கடுகு போலத்தான்... காரத்தில் குறைச்சல் இல்லை!

   Delete
  4. சரவணன் @ அருமையான விமர்சனம்.

   Delete
 30. தலிழ்நாட்டில் பிறந்த்துக்கு ரொம்ப பெருமை படுகிறேன்.. பாரகுடா, ட்யூராங்கோ, லோன் ரேஞ்சர், தங்க தலைவன், டெக்ஸ் இது போன்ற கதைகளை பிற மாநிலத்தவர்கள் கேள்விப்பட்டிருப்பார்களா என்பது கூட சந்தேகம் தான்.. நன்றி சார்.. இப்படி ஒரு உலகம் கூட உண்டு என்பதை அறிமுகம் செய்ததுக்கு..

  ReplyDelete
 31. நீங்கள் இன்னொரு காமராசர்.. தமிழ் மக்களை இன்னுமொரு பத்து இருவது வருசம் முன்னே கொண்டு சென்ற வகையில்,.நன்றி சார்..

  ReplyDelete
  Replies
  1. பெரும்தலைவருக்கும்,எனக்கும் இருக்கக்கூடிய ஒற்றுமை ஒரே மாவட்டத்தைச் சார்ந்திருப்பது மாத்திரமே் ! மற்றபடிக்கு இந்த ஒப்பீடை படிப்போர் - உங்களையும்
   சரி,என்னையும் சரி - கட்டி வைத்துச் சாத்தக்கூடும் சார் !

   Delete
  2. // உங்களையும்
   சரி,என்னையும் சரி - கட்டி வைத்துச் சாத்தக்கூடும் சார் !//

   ரம்மி அதைதான் விரும்புகிற மாதிரி தெரியுது :-)

   Delete
 32. ஈரோடு புத்தகங்களின் விலை மாற்றம் சற்றே ஏமாற்றம் தான் சார்.

  24 மார்ச் பதிவில் முன் பதிவிற்கு 360 என்று கூறிவிட்டு போன பதிவில் அது ஈரோடு வந்தால் மட்டும் தான் என மாற்றிவிட்டீர்கள்.

  இதற்கு அப்பொழுதே சரியாக கூறி இருக்கலாம் எனக்கு ஏமாற்றமாவது மிஞ்சி இருக்கும்.

  அன்றே 360 அனுப்பிவிட்டேன் இன்று மீதம் 240 அனுப்பிவிட்டேன்.

  ReplyDelete
 33. மற்ற நாட்களை விட இந்த முறை வெகு ஆவலுடன் காத்திருந்து ஏமாற்றமாக போனது ஏனோ தெருய வில்லை...இன்று கொரியர் தகவல் வருமாயின் செயலர் குல தெய்வ ஆத்தாவிற்கு நானும் "கூழ் " ஊற்றி வேண்டுவதாக வாக்களிக்கிறேன்..

  ஆத்தா மகமாயி ஈரோட்ல இருந்து தாரை க்கு சீக்கீரமா ஏதாவது ஒரு பஸ்ஸை பிடித்து வருமாறு மேலும் வேண்டி கொள்கிறேன்...

  ReplyDelete
 34. ட்யுராங்கோவும் ஆகாச் சிறந்த படைப்பு. பட்டாசு.

  ReplyDelete
 35. ஜம்போ இரண்டுடிற்க்கு தற்போது தான் சந்தா கட்டினேன். வந்த பிறகுதான் loan ranger படிக்க

  ReplyDelete
 36. பாதி நண்பர்கள் பாதி புத்தகத்தை படித்து முடித்திருக்க இன்றாவது தகவல் வருமா என நானோ காத்திருக்க இன்றும் வரவில்லை என எஸ்டி நண்பர் தெரிவிக்க இதற்கு மேல் தாங்காது என நமது அலுவலகத்திற்கு தொடர்பு கொள்ள மேடம் அவர்கள் இந்த முறை Dttc கொரியரில் அன்றே அனுப்பி விட்டதாக தகவல் தெரிவித்ததுடன் ட்ராக்கிங் எண்ணையும் கொடுக்க அந்த கொரியர் அலுவலகம் தாரையில் எங்கே உள்ளது என தெரியாமல் போக ,வழக்கமான எஸ்டி கொரியர் நண்பர் மூலம் பொறுமையாக பேசி அவரகளின் இடத்தையும் ,அலைபேசி எண்ணும் பெற...


  அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு சார்...பரணிதரன் ,பங்களா தோட்டம் என்ற முகவரிக்கு ஒரு பார்சல் வந்து உள்ளதா என நான் வினவ ...


  வந்த பதில் ...

  ஆமாங்க சார்..நாலாம் தேதியே வந்துருச்சு வந்து வாங்கி கொள்ளுங்கள் என..... கடுப்புடன் நீங்கள் வந்து கூட கொடுக்க வேண்டாம் அதில் எனது அலைபேசி எண் உள்ளதே சொல்லி இருந்தால் நானே வந்து வாங்கி இருப்பேனே என ..அன்னிக்கே போன் பண்ணினேன் சார்..நீங்க தான் எடுக்கவில்லை என அது பொய்யுன்னு தெரிஞ்சாலும் சரி அடுத்த நாளாவது பண்ணலாமே என்றால் அதற்கும் அதே பதில் வர ..
  கூடவே இப்ப வந்து வாங்கிகிறீங்களா சார் என வினவ இப்ப நான் அலுவலகத்தில் உள்ளேன் மாலை ஆறு மணி அளவில் நானே வந்து வாங்கி கொள்கிறேன் என சொல்ல


  இதை சொல்ல காரணம் ..அங்கே ஒரு நாள் தாமதம் ஆனாலும் பரவாயில்லை சார்..எனக்கு எப்பொழுதும் எஸ்டி கொரியரை மாற்ற வேண்டாம் என மன்றாடி வேண்டிக்கொள்கிறேன் சார்..

  ReplyDelete
 37. பரகுடா...
  இரண்டு தொகுதிகளையும் ஒன்றாக வாசிக்க வேண்டும் என்பதற்காகவே ஜனவரியிலிருந்து காத்திருந்தேன்...

  இரண்டு புத்தகங்களையும் கையில் எடுத்த போதே ஏதோ குறைவது போல இருந்தது. லக்கிலூக் 100 பக்கங்கள் கொண்ட புத்தகத்துக்கு எல்லாம் ஹார்டு பவுண்ட் அட்டை போடும் ஆசிரியர் இதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டது மிகவும் வருத்தமாக உள்ளது...

  கதை: சூறாவளி வழியாய் சுழற்றி அடிக்கிறது. ஒரு திசையில் நகரும் என நாம் எதிர்பார்க்க அதுவோ எதிர் திசையில் கடந்து போகிறது... எதிர்பாராத திடீர் திருப்பங்கள், நிறைய பாத்திரங்கள், ஒவ்வொருவரின் வேறுபட்ட குணாதிசயங்கள், சம்பவங்களை கோர்க்கும் விதம்... ஆசை... வேட்கை... வஞ்சம்...குரோதம்... பகை... ரத்தம்... போர்.... அப்பப்பா.... அட்டகாசம்...!

  நிச்சயம் ரசனைகளில் முதிர்ந்தோருக்கு தான்!

  இறுதியில் அந்த அடிமை வியாபாரி பெர்ராங்கோவை காமெடியனாக ஆக்கி விட்டதுதான் கொஞ்சம் ஒட்டவில்லை...

  ஓவியங்கள்: எழுந்து நின்று கைதட்ட தான் வேண்டும் வார்த்தைகளில் வடிக்க இயலாது. Extreme visualization beyond the limits!!!

  Rating: 9.5/10

  ReplyDelete
  Replies
  1. //ஓவியங்கள்: எழுந்து நின்று கைதட்ட தான் வேண்டும் வார்த்தைகளில் வடிக்க இயலாது. Extreme visualization beyond the limits!!!//

   Oh yes !!

   Delete
 38. 1.டியுராங்கோ - 9.9/10
  2.பரகுடா - 9.5/10
  3.தனி ஒருவன் - 6.6/10

  என் ரசனைக்கு ஏற்ற வகையில் வரிசைப்படுத்தி இருக்கிறேன். டெக்ஸ் வில்லரின் சிறுகதை இந்த வரிசையில் வராது... அது தனி!

  ReplyDelete
 39. தலைவாழைஇலை போட்டு ஆவலுடன் நாவில் ஜலம் ஊர காத்திருக்க... பந்தியில் மற்றவர்கள் பாயாசத்தை முடித்து சப்புகொட்டவது பார்த்து பொறுமுவது போன்றதொரு நிலை இந்த கூரியர் குழப்பத்தால்.ஆபிஸூக்கு போன் போட்டு Tracking number கேட்டால், ST courierரிடமிருந்து தகவல் இல்லை என்றும் நேரில் சென்று ஒருமனிநேரத்தில் வாங்கி தருவதாக சொன்னார்கள். "என்னது பொட்டி கிளம்பவே இல்லையா" என்று மனதில் கிலிகிளம்ப, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் Tracking number SMS வர சப்பா என்றிருந்தது.
  கூரியர் வலைதளத்தில் Tracking numberஐதட்ட பத்து நிமிடத்திற்குமுன் சத்தம் இல்லாமல் டெலிவரி செய்து விட்டார்கள் என அது சொல்ல(எங்கள் அப்பார்ட்மென்ட்டில் பார்சல் களை security வாங்கி வைத்துக்கொள்வார்கள்), இன்னிக்கு விருந்து confirm என்று ஓடி சென்று வாங்கி வந்து கவரை பிரிக்க, இதற்காகதானா உடம்பு சரியில்லை என்று லீவு போட்டீர்களா என்று மனைவி ஷெர்லக் ஹொம்ஸ் மாதிரி கேக்க, இல்லை என்று அசடு வழிந்துவிட்டு புத்தகங்களை புரட்டினேன். முதல் பார்வையில்
  1. Lone Ranger
  சிறப்பான அட்டை படமும், மிக மிக நேர்த்தியான சித்திரங்கள், One of the Best, கதை எப்படி இருந்தாலும் சித்திரங்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டன.
  2. Durango
  Hard cover, Fist full of dollars, For a few dollars more , Good bad and Ugly போன்ற Clint Eastwoodன் வெஸ்டர்ன் கிளாஸிக்கை நினைவூட்டுகிறது. அனால் உள்ளே டியுராங்கோ கொஞ்சம் குள்ளமோ என்ற மாதிரி இருக்கிறது, may be I feel like his upper body is unpropotinate to his legs.
  3. Barracuda
  அட்டை படம் மற்றும் அத்தியா தொடக்கத்தில் உள்ள படங்களபடங்கள் மிரட்டல். கடைசி பக்கத்தில் கடைசி frameல் கப்பலின் முன் கட்டபட்டிருக்கும் அந்த எலும்புகூடூ யாருடையது என்னும் suspense...
  Game of Thrones, Avengers:End game போல இந்த மே மாசத்தில் இன்னும் ஒரு சகாப்தின் முடிவு.
  P.S. நம்ம XIII எப்ப முடிவாரோ????
  4 குட்டி Tex
  சுவையான ஊறுகாயா இல்லை முதலில் வைக்கும் அல்வா'வா என்று படித்து முடித்தபின்தான் தெரியும்

  ReplyDelete
 40. தனியொருவன்: முதல் இரண்டு கதைகள் படித்து முடித்து விட்டேன். சித்திரங்கள் அருமை. கதை இப்போது தான் வேகம் எடுக்க ஆரம்பித்தது உள்ளது. விரிவான விமர்சனம் விரைவில்.

  ReplyDelete
 41. டியுராங்கோ - அருமை (9.8/10)
  பராகுடா - அட்டகாசம் (9.8/10)
  தனிஒருவன் - ஆத்தா நான் பாசாயிட்டேன் (8/10)
  டெக்ஸ் - கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது


  ஆக மொத்தம் அட்டகாசமான மாதம் இது...

  ReplyDelete
 42. I ordered may month issues on 3rd may,still not received books,,pls track my order

  ReplyDelete
  Replies
  1. An e-mail would be better suited to address your issue...

   Delete
 43. http://lioncomics.in/index.php?controller=pdf-invoice?id_order=10503

  ReplyDelete
 44. 1 2 3 டியுராங்கோ

  ReplyDelete
 45. தனி ஒருவன் 10/10- Loved it

  ReplyDelete
 46. தனியொருவன்:-
  நினைவோ ஒரு பறவை: ஒக்லஹோமாவில் முழுநிலவில் கதை ஆரம்பிக்கிறது. அங்கே நேத்தன் தனது துணைவியை இழந்து விடுகிறான்; அங்கே தனது தோழனுடன் வரும் கதாநாயகன் என்ன செய்கிறான்?
  இந்த சிறிய கதையில் ரேஞ்சரின் குழந்தை பருவம் அவனின் தந்தையும் நேத்தன் போல் மனைவியை இழந்து எப்படி குழந்தைகளை வளர்த்தார் என்பது மற்றும் ரேஞ்சருக்கு டோண்டோ நண்பனான விதம் என அனைத்தையும் இணைத்து கதாசிரியர் அழகாக சொல்லி உள்ளது பாராட்டுக்குரியது.

  வனங்கள் தத்துவார்த்தமாக அதே நேரம் இயல்பாக அவை ரசிக்கும் படி இருந்தது. குறிப்பாக "விட்டு சென்றவர்களின் நினைவுகளை மரியாதையோடு போற்றுவது", நன்றாய் வாழ்ந்து காட்டி அவர்கள் விண்ணுலகிலிருந்து பார்த்திடும் போது புன்னகைக்கவொரு காரணம் தருவது".

  சித்திரங்கள் மற்றும் வண்ணங்கள் வேறு லெவல் என சொல்லலாம்.

  தனியொருவன் மிகவும் சரியான தலைப்பு.

  ReplyDelete
  Replies
  1. 6 கதைகளையும் படித்து விட்டேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு.

   Delete
  2. தோட்டாக்கள் ஒரு தொடர்கதை:
   முந்தைய கதையில் அட்டூழியம் செய்த போக்கிரியை கான்சஸ் சிறையில் அடைக்க வந்த தனியொருவன் அதே சமயம் அங்கு வரும் க்ளே உட்சன் என்ற முன்னால் மார்சலுடன் ஏற்படும் மோதல் ஏன் எதற்காக என்ன ஆனது?

   அந்த முன்னால் மார்சலை நேருக்கு நேர் சந்திக்கும் இடம் மற்றும் இருவருக்கும் இடையே நடைபெறும் உரையாடல் மற்றும் துப்பாக்கி சண்டை சூப்பர். இதனை ஈடுகொடுக்க வித விதமான கோணங்கள் மற்றும் முகபாவனைகளில் ஓவியங்களை வரைந்து இதனை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்திய ஒவியருக்கு பாராட்டுக்கள்.

   இந்த கதையில் தனியொருவனை சந்திக்கும் சிறுவர்கள் மூலம் தனியொருவன் பற்றிய சில விஷயங்களை சொல்லிய விதம் அருமை.

   டோண்டோவின் கதாபாத்திரம் நன்றாக உள்ளது. தனியொருவன் மற்றும் டோண்டோவின் flash backகை கொஞ்சம் கொஞ்சமாக கதையில் சரியான இடத்தில் நுழைத்து சொல்லி வரும் கதாசிரியரின் ஐடியா பாராட்டுக்குரியது.

   இந்த கதைகளில் குறை என பார்த்தால் சில எழுத்துப்பிழைகள்.

   Delete
  3. Proofreading செய்து வந்தது ஒரு M.A தமிழ் படித்த பெண்ணே ; தற்போது திருமணம் நிச்சயமாகி பணியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார் ! நிறைவான தமிழ் ஞானம் கொண்டதொரு இன்றைய தலைமுறையை வலை வீசித் தான் தேடி வருகிறேன்....உஹும்...கண்ணில் தட்டுப்பட மாட்டேன்கிறார்கள் !

   Delete
  4. //வசனங்கள் தத்துவார்த்தமாக அதே நேரம் இயல்பாக அவை ரசிக்கும்படி இருந்தது. //

   எல்லாப் புகழும் ஒரிஜினலுக்கே ! செமத்தியான ஸ்கிரிப்ட் ; அதுவும் ஆங்கிலத்திலேயே எனும் போது என் வேலை ஈயடிப்பதாய் மட்டுமே இருந்தது !

   Delete
 47. தனியொருவன் கதை தேர்வு அருமை. ஜம்போவை ஆரவாரமாக ஆரம்பித்து வைத்திருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. Super parani. You always say nice things about anything and everything. I'm very much looking forward to meet you in person at erode if u come.

   Delete
  2. ஈரோட்டுக்கு புத்தக விழாக்கு வந்துடுங்க குமார். இந்த தடவை மீட் பண்ணிடலாம்.

   Delete
  3. Definitely Sheriff. I won't miss this time.

   Delete
  4. வாங்க குமார் சந்தோஷ கடல்ல மூழ்கி நீச்சலடிப்போம்

   Delete
  5. இம்முறை நானும் ஈரோடு புத்தகத் திருவிழாவுக்கு வர உத்தேசித்துள்ளேன்! நண்பர்களைக் காண ஆவலோடு இருப்பேன்!

   Delete
  6. நானும் தான் !

   Delete
  7. இது உலக மகா நடிப்பு சாமீ

   Delete
 48. தனியொருவன் அருமையான கதை.சிறப்பான சித்திரங்கள். விரிவான மொழிப்பெயர்ப்பு. ஜம்போ சீசன் 2 அருமையான ஆரம்பம்.நன்றி ஆசிரியரே.

  ReplyDelete
  Replies
  1. வித்தியாசமான கவ்பாய் கதைக்களம் சார் ! படிக்கப் படிக்க நண்பர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கையுள்ளது !

   Delete
 49. வணக்கம் ஆசிரியரே.
  வணக்கம் நண்பர்களே.

  ReplyDelete
  Replies
  1. சார் வந்துட்டிங்களா

   Delete
  2. ஆமாம் சத்யா.
   வந்துட்டேன்.
   திரும்பி வந்துட்டேன்னு சொல்லுங்க.

   Delete
  3. அடடே.. வாங்க KVG ji! :)

   Delete
 50. Editor Sir it looks like slowly lone ranger has picked up the speed. Positive comments are coming from our friends. Great start to jumbo season 2. Well done sir. This month is a month of heavyweights for sure.

  ReplyDelete
  Replies
  1. // This month is a month of heavyweights for sure.//

   அதனால் தானோ - என்னமோ படிக்க எல்லோருக்குமே நேரம் நஹி !! ஒரே மாதத்தில் மூன்று லட்டு அஜீரணத்துக்கு வித்து போலும் !

   Delete
  2. I strongly disagree Sir. In a month I can eat 10 laddus if you provide me sir. I'll be more than happy

   Delete
 51. Lone Ranger - THANIYORUVAN - was a smashing start to Jumbo COMICS season 2. I am reading Lone Ranger for the first time. I was so impressed that I ordered the 625 page Lone Ranger omnibus available at Amazon :-) :-)

  Now to compare translations and create memes ;-) ;-) :-p :-p

  PS: Why the name JUMBO comics, please ? Mandai poora kodayuthu !!

  ReplyDelete
  Replies
  1. ///PS: Why the name JUMBO comics, please ? Mandai poora kodayuthu !!///

   எனக்கென்னவோ இதற்கான பதில் கடைசிவரைக்கும் கிடைக்கவே போறதில்லைனு தோனறது! ;)

   Delete
  2. //Now to compare translations and create memes ;-) ;-) :-p :-p//

   மீம்ஸ் போடும் ரேஞ்சுக்கு மொழிபெயர்ப்பில் சொதப்பல் தென்பட்டால் - அந்த omnibus செலவை கம்பெனி ஏற்றுக் கொள்ளும் சார் !!

   Delete
  3. /////PS: Why the name JUMBO comics, please ? Mandai poora kodayuthu !!///

   "சிங்கத்தின் பல்செட் வயதில்" எழுத ஏதாச்சும் மிச்சம் இருக்கட்டுமே சார் ?

   Delete
 52. ****** வதம் செய்ய விரும்பு *****

  தன் பதின்பருவ மகளை பணக்காரப் பெரிசுகளின் ஆசைக்கு இரையாக்கிய ஒரு ஊதாரித் தாயாலும் குடும்பத்தை நிர்வகிக்காமல் ஊர்சுற்றிக் கொண்டிருந்த ஒரு பேமானி தந்தையாலும் அந்தச் சின்னபெண்ணின் வாழ்க்கை எப்படியெல்லாம் சீரழிகிறது.. அவளை நம் 'மெளனப்புயல்' ட்யுராங்கோ எப்படி சந்திக்க நேர்கிறது.. சீரழிந்த அவள் வாழ்க்கை ட்யுராங்கோவினால் எப்படி சீர்பெறுகிறது - என்பதே கதை!!
  ஏதோ கி.நா'வுக்கான கதைபோன்று சோகக் காவியமாக இருக்குமோ என நீங்கள் நினைத்தால் தவறு!! அனல் பறக்கிறது - கதை நெடுகிலும்!! ட்யுராங்கோவின் சுடும் திறனில் ஒரு ஸ்டைல் இருப்பதுபோலவே கதை சொல்லும் விதத்திலும், வசனங்களிலுமே கூட ஒரு இனம் புரியாத ஸ்டைல் விரவிக்கிடக்கிறது!!
  அந்த அட்டைப் படம் இருக்கே.. அட்டைப்படம்.. ஆத்தாடிக்காத்தாடியோவ்!!! அழகுன்னா அழகு அம்புட்டு அழகு... அம்புட்டு நேர்த்தி!
  என்னைக் கேட்டால் அட்டைப்பட ஓவியம் + ஹார்டு பைண்டிங் + அட்டைப்பட நகாசு வேலைகள் ஆகியவற்றுக்கே தாராளமாய் புத்தக விலையில் பாதியைத் தருவேன்! மீதமுள்ள பணத்திற்கு மூன்று அட்டகாசமான கதைகள் கிடைக்கிறதென்றால் கசக்கவா போகிறது?!! ஹிஹி.. ஜாக்பாட் தான்!!

  மூன்று பாகங்களில் முதலிரண்டு பாகங்கள் மேற்கூறிய கதையைச் சொல்ல, மூன்றாவது பாகமோ ஒரு அதிரடி ஒன்-ஷாட்!!
  இந்தக் கதையில், செவ்விந்திய இளம் பெண்களைக் கடத்திச் சென்று கள்ளச் சந்தையில் விற்கும் கும்பலிடமிருந்து தன் காதலியை எவ்வாறு மீட்கிறான் ஒரு செவ்விந்திய இளைஞன் என்பதும், நமது 'மெளனப் புயல்' அவனுக்கு எப்படி உதவி செய்கிறான் என்பதும் அனல் பறக்கச் சொல்லப்பட்டிருக்கிறது! ( டைகர் ஜாக்கின் 'காதலும் கடந்துபோகும்' கதையைப் போலவே இருந்தாலும், சொல்லப்பட்ட விதத்தில் இது - வேற லெவல்!) ஒவ்வொரு முறையும் அந்த வீரம் மிக்க செவ்விந்திய இளைஞனுடன் கூட்டணி போட்டுக்கொண்டு நமது மெளனப் புயல் எதிரிகளை நோக்கி துப்பாக்கியைத் திருப்பும் ஒவ்வொரு தருணத்திலும் ஆக்ஷனில் நிஜமான அனல் பறக்கிறது! விசிலடிக்கத் தோன்றியதுகூட உண்மை!! ( எனக்கு விசிலடிக்கத் தெரியாது என்பதும் உண்மை! ;) )

  இவ்வாண்டின் படு ஸ்டைலான ஆக்ஷன் கெளபாய் கதை இது!!

  என்னுடைய ரேட்டிங் : 10/10

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் விமர்சனம்

   Delete
  2. Welcome back EV with a bang. Superb review

   Delete
  3. //இவ்வாண்டின் படு ஸ்டைலான ஆக்ஷன் கெளபாய் கதை இது!!//

   தனியொருவன் (Lone Ranger) இதழையும் படித்து விட்டு ஒரு தீர்ப்பை எழுதலாமே ? My cowboy of the year : முகமூடிக்காரரே !!

   Delete
  4. குருநாயரே..

   பிரம்மநத்தம்..👏👏👏👏

   Delete
 53. @ ALL : நேற்றும், இன்றைக்கும் ஒரு புண்ணியவான் நமது ஒவ்வொரு பதிவின் வாலிலும் SPAM ரக கமெண்ட் ஒன்றைக் கர்ம சிரத்தையோடு போட்டுக் கொண்டே வருகிறார் ! நேற்றைக்கு 227 ; இன்று 100 சுமார் பின்னூட்டங்கள் !

  SPAM என மார்க் செய்தும் அவரால் தொடர முடிகிறது ; என்ன செய்யலாம் என ஏதேனும் techie inputs ப்ளீஸ் ?

  ReplyDelete
  Replies
  1. SPAMனு மார்க் பண்ணியும் கூட அவரால் தொடந்து கமெண்ட் போட முடிகிறதென்றால் அவர் புனித மனிடோவின் அருள்பெற்றவராக இருக்குமோன்னு தோனுதுங்க சார்!! அவரை EBFக்கு வரச் சொல்லி இன்வைட் பண்ணுவோம்! எல்லாரும் வரிசைல நின்னு விபூதி வாங்கிக்கிடுவோம்! :D

   Delete
  2. ///என்ன செய்யலாம் என ஏதேனும் techie inputs ப்ளீஸ் ?///

   பழிக்கு பழி - அதுதான் சரியா இருக்கும் சார்! அந்தப் புண்ணியவானின் blogspotல் நுழைந்து எல்லா பதிவுகள்லேயும் நம்ம காமிக்ஸ் தளங்களின் லிங்கைப் போடுவோம்!! சரமாரியாப் போடுவோம்!! தன் தவறை உணர்ந்து திருந்த வாய்ப்பிருக்கு! அப்படியே நமக்கு இன்னொரு சந்தாதாரர் கிடைக்கவும் வாய்ப்பிருக்கு!! :D

   Delete
  3. ///ஒவ்வொரு பதிவின் வாலிலும் SPAM ரக கமெண்ட் ஒன்றைக் கர்ம சிரத்தையோடு போட்டுக் கொண்டே வருகிறார் ! நேற்றைக்கு 227 ; இன்று 100 சுமார் பின்னூட்டங்கள் ! ////

   மனுசன் தீயா வேலை செய்யறதைப் பார்க்கும்போது ஒரு ஐடியா தோனுது சார்.. உடனே அவர் யார் எவர்னு விசாரிச்சு நம்ம காமிக்ஸ் கம்பெனிலயே 'மார்க்கெட்டிங் மேனேஜர்' வேலைல அப்பாயிண்ட் பண்ணிடுங்க!

   Delete
  4. டூப்ளிகேட் எடிட்டரோட அடுத்த அவதாரமோ என்னவோ...

   Delete
  5. இந்த மாதிரி சைக்கோக்களை முச்சந்தியில் நிறுத்தி , மொட்டை அடித்து ( முடி இருந்தால் ) செருப்பால் அடிக்க வேண்டும் சார் .. நல்ல தாய் தகப்பன் நல்ல முறையில் வளர்த்திருந்தால் இந்த மாதிரி சில்லறை புத்தி வந்திருக்க வாய்ப்பில்லை..
   Rummi XIII
   7871922299

   Delete
 54. தனியொருவன் நிசமாகவே சித்திரங்கள் வித்தியாசமாக உள்ளது. அருமை. கதைதான் தனித்தனியாக உள்ளது. பராகுடா 100/100.
  தனியொருவன் 80/100

  ReplyDelete
 55. வெளிச்சத்திற்கு வந்த நிழல் "விசில்"

  ReplyDelete
 56. ஆரம்ப கதைகள் போரடித்தாலும்
  பிறகு டாப் கியரில் பறக்கிறான்
  தனியொருவன்.அடுத்த பாகம்
  எப்போது.?

  ReplyDelete
 57. மீண்டும் டெஸ்ட்

  ReplyDelete
 58. அனைத்து இதழகளையும் படித்தாயிற்று ..


  பராகுடா ....ஆஹா ஓஹோ..  ட்யூராங்கோ ....ஆஹா ஓஹோ பட்டாசு  லோன் ரேஞ்சர்...முதல் இரண்டு ஆரம்ப கதைகள் ஆஹா இவரும் தாத்தாவிறகு போட்டியாக வந்து விடுவாரோ என்ற எண்ணம் எழ தொடங்கிய வேளையில் பிறகு வந்த சாகஸங்கள் "ஆஹா " போட வைத்து விட்டது..அது வரை மகிழ்ச்சியே..இனி வரும் சாகஸங்களில் தான் இவரின் நெருக்கம் புரியவரும்..மொத்தத்தில் ஏமாற்றம் இல்லை...


  கலர் மினி டெக்ஸ் ..

  ஏற்கனவே படித்த கழுகு வேட்டை சாகஸ சாயல் இருப்பினும் ,மினி பக்கங்களில் சாகஸம் புரிந்தாலும் ,படித்தவுடன் டெக்ஸ் டெக்ஸ் தான் என சொல்ல வைத்து விடுகிறாரே என்ன செய்வது.?!

  ReplyDelete
  Replies
  1. தலீவரே....வன்மேற்கின் மிகைப்படுத்தப்பட்ட முகங்களே நம் மனதில் பதிந்து போய் விட்டதாலோ - என்னவோ , அதன் யதார்த்த மறுபக்கத்தை அவ்வளவாய் நம்மால் ரசிக்க முடியவில்லை போலும் ! கமான்சே ; கார்ட்லேண்ட் & இந்த LONE RANGER துவக்க அத்தியாயங்கள் என எல்லாவற்றையுமே பின்னொரு நாளில் மீண்டுமொருமுறை படித்துப் பாருங்களேன்...!

   Delete
  2. :-)


   கண்டிப்பாக சார்...


   இணைய பிரச்சனையால் இந்த மாத எனது முழு நீள விமர்சனங்கள் " கடுதாசி " வழியில் இன்று அனுப்ப பட்டுள்ளது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன் சார்..:-)

   Delete
  3. சூரியள் படத்துல தலைவர் கவுண்டமணி அவர்கள், பூ மிதிக்கக் கூப்பிடும்போது சொல்வாரே...

   "டெலிகேட் பொஸிஸன் " அப்படீன்னு...


   மேலே இருக்கும் கடுதாசி மேட்டரை படிக்கிறச்சே நம்ம எடிட்டர் சாரோட மைண்ட் வாய்ஸ் அப்படித்தான் இருந்திருக்குமோ..!!:-)

   Delete
 59. ///விடுகிறாரே என்ன செய்வது.?!///

  பழனிக்கு மொட்டை போட்றதா வேண்டிகோங்க..(தலையில் முடி இருக்கும் பட்சத்தில்).😊😊😊

  ReplyDelete
 60. லோன் ரேஞ்சர் வில்லன் தன் பிரதான ஆயுதத்தை விடுத்து துப்பாக்கியையும், கத்தியையும் எடுத்ததனாலையே வீழ்ந்தான்.. இன்னும் சிறிது நேரம் பிரசங்கம் பண்ணியிருந்தாலே லோன் ரேஞ்சர் செத்திருப்பார்.. நானுமே..

  ReplyDelete
 61. //பழனிக்கு மொட்டை போட்றதா வேண்டிகோங்க.//

  அவரை கண்டுபுடிச்சி அவருக்கு போடுங்க சாமியோவ் என்ன வுட்ருங்க....

  ReplyDelete
 62. மே மாத இதழ்கள் 4ம் சூப்பர்.
  1) LONE ரேஞ்சர்
  முதல் இரண்டு கதைகளும் ok. ரகம்.3ல் ஆரம்பித்து 6வது பாகம் வரை கதை நல்ல விறுவிறுப்பு. அசாத்திய சித்திரங்கள். அடுத்த பாகத்தை எதிர்பார்க்க வைத்து விட்டார்.
  2) பராகுடா.
  வேற லெவல் கதை. மிரட்டலான சித்திரங்கள். மிக அருமை.
  3) ட்யுராங்கோ.
  அசாத்திய வேகம்.ெ வெயிட்டிங் அடுத்த பார்ட்.
  4) மினி டெக்ஸ்.
  கடுகு சிறிது. காரம் பெரிது.
  மொத்தத்தில் ேகாடை இதழ்கள் நான்கும் பின்னி பெடல் எடுக்கின்றன. ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 63. இந்த வாரம் எங்கள் பகுதியில் கோவில் திருவிழா தடபுடலாக தொடங்கியது.விஷேசம் என்னவோ நான்கு நாட்கள்தான்.அதற்கு கமாண்டோ அர்னால்ட் போல சர்வமும் தயாராக முழு வாரம் காலியாக தேதியானது ஜாலியாக பத்தை தாண்டிவிட்டது.இந்த நான்கு நாட்களாக பாட்டுச் சத்தமும், திருவிழாவின் வேட்டுச் சத்தமும் சிவராத்திரிகளாக தூங்கவிடாமல் துரத்த , ,சுற்றியுள்ள களேபரத்தை காதில் வாங்காமல் ,கொரியரில் வாங்கிய இம்மாத புத்தகங்கள் அட்டைப்பெட்டியில் அமைதியாகத் தூங்குகின்றன.

  'மலர்களைப் போல் தங்கை உறங்குகின்றாள் 'ஃபீலிங்.

  ReplyDelete
 64. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

  ReplyDelete
 65. Hey, What's up, I'm Abhishek. I'm an application developer living in Noida, INDIA. I am a fan of technology. I'm also interested in programming and web development. You can download my app with a click on the link. Best astrology app
  Astro guru online
  Best astrologer
  Talk to astrologer
  Onlne astrologer
  Online pandit
  Online astrologer in delhi NCR

  ReplyDelete
 66. Astogurutips is the top best Online Astrology website in India with more than 500+ astrologer on the portal. He gives a Best Astrology solutions from the Best Astrologers . You can connect with our astrologer through call or chat and ask you any question about your carrier, health, future, love partner etc. Talk to astrologer

  ReplyDelete