நண்பர்களே,
வணக்கம்.நிறைய எண்ணச் சிதறல்கள் ; நிறைய அலசல்கள் ; நிறைய பின்னூட்டங்கள் என்று இன்னொரு பதிவு ஓடியிருப்பதில் செம happy ! And வகுப்புக்கு வெளியே நின்று கொண்டிருக்கும் நாயகர்களுக்கு இன்னமும் support இருப்பதைப் பார்த்திடும் போது வியப்பே மேலோங்குகிறது ! இந்த 'உள்ளே-வெளியே' ஆட்டம் சுவாரஸ்யமானதே என்றாலும், 'ரிஜிட்டான பார்ட்டிகளை' மறுபடியும் உள்ளே கொணரும் தீர்மானத்தை ஒரு வண்டி அலசலின்றிச் செய்திட நான் தயாரில்லை ! So பார்க்கலாமே, இங்கு எதிரொலித்துள்ள குரல்களுக்கு இணையத்தினில் இணைந்திருக்கா நண்பர்கள் எவ்விதம் react செய்கிறார்களென்று ! எது எப்படியோ - சமீப அலசல்களின் பலனாய் உங்கள் ரசனைகள் எத்தனை மெருகேறியுள்ளன என்பதும் சரி ; உங்களின் எதிர்பார்ப்புகள் / அளவீடுகள் எத்தனை உசரத்துக்கு எகிறி நிற்கின்றன என்பதும் சரி - பளிச்சென்று புரிகிறது ! இப்போதெல்லாம் Lone ரேஞ்சர் போன்றதொரு நாயகரே நம்மிடையே முத்திரை பதிக்க குட்டிக்கரணம் அடிக்க வேண்டியுள்ளதெனும் போது, ரெம்போ கெடுபிடியான ஜூரிக்கள் நீங்கள் என்பது தெள்ளத் தெளிவு !
அப்புறம் கடைசிப் பதிவினில், நிறைய நாயக அலசல்களோடு, இறுதியாய் நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு வாசிப்பை அறிமுகம் செய்வது குறித்த தலைப்பில் நண்பர் பொடியன் ஆதங்கத்தோடு பதிவிட்டிருந்ததையும் ரசித்தேன் !
Cut to a week ago : சமீபமாய் நண்பர் ஒருவரின் குட்டிப் பெண் நமது "மியாவி" இதழைக் கையில் ஏந்திக் கொண்டு கதை சொல்லும் வீடியோ ஒன்றினை எனக்கு அனுப்பியிருந்தார் ; வசனங்களே இல்லாத அந்த ஒரு பக்கப் பூனைக் கதைகளுக்கு நுணுக்கமாய் ஒரு கதையை அனுமானித்துக் கொண்டே அந்த மழலை பேசியது அத்தனை அழகு !! "அட....நண்பர்கள் கழுவிக் கழுவி காக்காய்க்கு ஊற்றியதொரு இதழுக்கு இப்படியுமொரு பலனா ?" என்று சந்தோஷப்பட்டுக் கொண்ட கணமே, "இதே போல் இன்னமும் ஏதாச்சும் ஆண்டுக்கு ஒருவாட்டியாவது வெளியிடணுமோ ?" என்ற நினைப்பும் உள்ளுக்குள் ஓடியது ! இந்த மியாவி தொடரின் புக் # 2 கூட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னமே அங்கே வெளியாகியிருப்பதும் நினைவுக்கு வர, "சந்தர்ப்பம் அமையுதா பார்ப்போம் !" என்று நினைத்துக் கொண்டேன் !! And ஒரே வாரத்தில் நான் மறந்து போயிருந்த அந்த topic அகஸ்மாத்தாய் இங்கே தலைகாட்டியிருக்க, எனக்கு ரொம்பவே சந்தோஷம் !!
Back to the present : "வாசிப்பை நேசிப்போம் " ; "புத்தகங்கள் நம் தோழர்கள்" என்றெல்லாம் அவ்வப்போது புத்தக விழாக்களில் slogan-களை வாசித்திருப்போம் ; கொட்டாவி விட்டபடிக்கே நகர்ந்தும் போயிருப்போம் ! "ஓட்டம்..ஓட்டம்..ஓட்டம்" என்பதே இன்றைக்கு நமக்கெல்லாம் வாழ்க்கையாய் ஆகிப் போயிருக்கும் சூழலில் நாம் படிக்க நேரம் எடுத்துக் கொள்வதே ஒரு பெரும் பிரயத்தனம் என்றாகிவிட்டது ! 'இந்த அழகில் ஜூனியர்களுக்கு அந்தச் சுவையைப் புகட்ட நேரத்தைத் தேட நானெங்கு போவேன் ?' என்று உள்ளுக்குள் நம் எல்லோருக்குமே ஒரு ஆற்றமாட்டாமை இருக்காது போகாது தான் ! ஆனால் finding the time & the patience for it - சுலபமே அல்ல தான் ! "மனமிருந்தால் மார்க்கபந்து !" என்ற கோலிவுட் பொன்மொழியைத் தான் இங்கே ஒரு தீர்வாய்ச் சொல்லத் தோன்றுகிறது !
நம் பங்குக்கு கருத்துக் கந்தசாமியாய் மாத்திரமே இருந்திடாது - வாண்டுகளுக்குக் கதை சொல்ல ஏதுவாய் ஒரு மினி இதழை, தலா சென்னை & ஈரோட்டுப் புத்தக விழாக்களின் போது இனி வெளியிடலாம் என்றிருக்கிறேன் ! மூத்த புலவரின் நீட்டி முழக்கல்கள் ஜாஸ்தி அவசியப்படா, சிம்பிளான ஆக்கங்களாய்த் தேடிப் பிடித்து, சின்னதொரு விலையில் வெளியிட, 2020 முதல் ஒரு பிள்ளையார்சுழியினைப் போட்டுத் தான் பார்ப்போமே ?! And மியாவியின் புக் # 2-ஐ இந்தப் புது முயற்சிக்கு ஆரம்பமாக்கிட இயல்கிறதாவென்றும் பார்க்கப் போகிறேன் !
அது தவிர, வாண்டுக்களுக்கு சுவாரஸ்யமூட்டக்கூடிய வேறு 2 அழகான / சிம்பிளான கார்ட்டூன் தொடர்களுமே எனது குறிப்புகளில் உள்ளன ! So அவற்றிற்கும் உரிமைகளை வாங்கிவிட்டு, சந்தாவின் அங்கமாக்காது - "விரும்புவோர் வாங்கிக்கலாம்" என்று ஆண்டுக்கு இருமுறை வெளியிட்டுத் தான் பார்ப்போமே ! Oh yes - ஒற்றை ராத்திரியில் இது லோகத்தைப் புரட்டிப் போட்டுவிடப் போவதில்லை தான் ; ஆனால் பத்தே பத்து வாண்டுக்களை வாசிப்பின் பக்கமாய்ச் சுண்டியிழுக்க இந்த முயற்சி வெற்றி கண்டாலும் கூட முட்டுச்சந்துப் புலவர் ஹேப்பி அண்ணாச்சி ! யார் கண்டது - ஏதேனுமொரு தூரத்து நாளில் "சந்தா V for வாண்டூஸ்" என்றொன்று அமைந்திட இதுவே கூட ஆரம்பப்புள்ளியாய் இருக்கக்கூடும் தானே ? மனமிருந்தால் மார்க்கபந்து !!
Bye guys ; see you around !! "சிங்கத்தின் சிறுவயதில்" அழைக்கிறது !!
அப்புறம் கடைசிப் பதிவினில், நிறைய நாயக அலசல்களோடு, இறுதியாய் நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு வாசிப்பை அறிமுகம் செய்வது குறித்த தலைப்பில் நண்பர் பொடியன் ஆதங்கத்தோடு பதிவிட்டிருந்ததையும் ரசித்தேன் !
Cut to a week ago : சமீபமாய் நண்பர் ஒருவரின் குட்டிப் பெண் நமது "மியாவி" இதழைக் கையில் ஏந்திக் கொண்டு கதை சொல்லும் வீடியோ ஒன்றினை எனக்கு அனுப்பியிருந்தார் ; வசனங்களே இல்லாத அந்த ஒரு பக்கப் பூனைக் கதைகளுக்கு நுணுக்கமாய் ஒரு கதையை அனுமானித்துக் கொண்டே அந்த மழலை பேசியது அத்தனை அழகு !! "அட....நண்பர்கள் கழுவிக் கழுவி காக்காய்க்கு ஊற்றியதொரு இதழுக்கு இப்படியுமொரு பலனா ?" என்று சந்தோஷப்பட்டுக் கொண்ட கணமே, "இதே போல் இன்னமும் ஏதாச்சும் ஆண்டுக்கு ஒருவாட்டியாவது வெளியிடணுமோ ?" என்ற நினைப்பும் உள்ளுக்குள் ஓடியது ! இந்த மியாவி தொடரின் புக் # 2 கூட ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னமே அங்கே வெளியாகியிருப்பதும் நினைவுக்கு வர, "சந்தர்ப்பம் அமையுதா பார்ப்போம் !" என்று நினைத்துக் கொண்டேன் !! And ஒரே வாரத்தில் நான் மறந்து போயிருந்த அந்த topic அகஸ்மாத்தாய் இங்கே தலைகாட்டியிருக்க, எனக்கு ரொம்பவே சந்தோஷம் !!
Back to the present : "வாசிப்பை நேசிப்போம் " ; "புத்தகங்கள் நம் தோழர்கள்" என்றெல்லாம் அவ்வப்போது புத்தக விழாக்களில் slogan-களை வாசித்திருப்போம் ; கொட்டாவி விட்டபடிக்கே நகர்ந்தும் போயிருப்போம் ! "ஓட்டம்..ஓட்டம்..ஓட்டம்" என்பதே இன்றைக்கு நமக்கெல்லாம் வாழ்க்கையாய் ஆகிப் போயிருக்கும் சூழலில் நாம் படிக்க நேரம் எடுத்துக் கொள்வதே ஒரு பெரும் பிரயத்தனம் என்றாகிவிட்டது ! 'இந்த அழகில் ஜூனியர்களுக்கு அந்தச் சுவையைப் புகட்ட நேரத்தைத் தேட நானெங்கு போவேன் ?' என்று உள்ளுக்குள் நம் எல்லோருக்குமே ஒரு ஆற்றமாட்டாமை இருக்காது போகாது தான் ! ஆனால் finding the time & the patience for it - சுலபமே அல்ல தான் ! "மனமிருந்தால் மார்க்கபந்து !" என்ற கோலிவுட் பொன்மொழியைத் தான் இங்கே ஒரு தீர்வாய்ச் சொல்லத் தோன்றுகிறது !
நம் பங்குக்கு கருத்துக் கந்தசாமியாய் மாத்திரமே இருந்திடாது - வாண்டுகளுக்குக் கதை சொல்ல ஏதுவாய் ஒரு மினி இதழை, தலா சென்னை & ஈரோட்டுப் புத்தக விழாக்களின் போது இனி வெளியிடலாம் என்றிருக்கிறேன் ! மூத்த புலவரின் நீட்டி முழக்கல்கள் ஜாஸ்தி அவசியப்படா, சிம்பிளான ஆக்கங்களாய்த் தேடிப் பிடித்து, சின்னதொரு விலையில் வெளியிட, 2020 முதல் ஒரு பிள்ளையார்சுழியினைப் போட்டுத் தான் பார்ப்போமே ?! And மியாவியின் புக் # 2-ஐ இந்தப் புது முயற்சிக்கு ஆரம்பமாக்கிட இயல்கிறதாவென்றும் பார்க்கப் போகிறேன் !
அது தவிர, வாண்டுக்களுக்கு சுவாரஸ்யமூட்டக்கூடிய வேறு 2 அழகான / சிம்பிளான கார்ட்டூன் தொடர்களுமே எனது குறிப்புகளில் உள்ளன ! So அவற்றிற்கும் உரிமைகளை வாங்கிவிட்டு, சந்தாவின் அங்கமாக்காது - "விரும்புவோர் வாங்கிக்கலாம்" என்று ஆண்டுக்கு இருமுறை வெளியிட்டுத் தான் பார்ப்போமே ! Oh yes - ஒற்றை ராத்திரியில் இது லோகத்தைப் புரட்டிப் போட்டுவிடப் போவதில்லை தான் ; ஆனால் பத்தே பத்து வாண்டுக்களை வாசிப்பின் பக்கமாய்ச் சுண்டியிழுக்க இந்த முயற்சி வெற்றி கண்டாலும் கூட முட்டுச்சந்துப் புலவர் ஹேப்பி அண்ணாச்சி ! யார் கண்டது - ஏதேனுமொரு தூரத்து நாளில் "சந்தா V for வாண்டூஸ்" என்றொன்று அமைந்திட இதுவே கூட ஆரம்பப்புள்ளியாய் இருக்கக்கூடும் தானே ? மனமிருந்தால் மார்க்கபந்து !!
Bye guys ; see you around !! "சிங்கத்தின் சிறுவயதில்" அழைக்கிறது !!
ஹையா..!
ReplyDelete'சிங்கத்தின் சிறு வயதில் '
ReplyDeleteதலைவரின் நீண்ட நெடிய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி !😌😌😌
எடிட்டர் சொல்லறது இளம்-டெக்ஸ் கதையான 'சி.சி.வ' பற்றியதுங்க GP!
Deleteநம்ம தலீவரின் போராட்டம் அப்படியே வெற்றிக்கொடி நாட்டிட்டாலும்..!!
:-)
Deleteஎடிட்டர் சொல்லறது இளம்-டெக்ஸ் கதையான 'சி.சி.வ' பற்றியதுங்க GP!
Deleteகரெக்ட்தான்.
இருந்தாலும் ஆர்ப்பரித்து அலையும் தலைவரின் கொஞ்சம் அமைதியாகும் என்ற நப்பாசைதான்.
சி.சிறு வயதில் ன்னு ஆசிரியர் கூறும் பொழுது எல்லாம் டக் என்று மகிழ்ச்சியும்...டொடக் என்று வருத்தமும் ஒரு சேர ஏற்படுகிறது..:-(
Delete///வீட்டுப் பிள்ளைகளுக்கு வாசிப்பை அறிமுகம் செய்வது குறித்த தலைப்பில் நண்பர் பொடியன் ஆதங்கத்தோடு பதிவிட்டிருந்ததையும் ரசித்தேன்///
ReplyDeleteநானுமே.
நானும்....
Deleteஆண்டுக்கு இருமுறை என குட்டீஸ்க்கு திட்டமிட்டதை வரவேற்க்கிறேன்.
ReplyDeleteEditor sir warm welcome for your announcement for vaandus.😄😸👌👍🏵️🌸🌷🏵️💐💐
ReplyDeleteWow 6
ReplyDeleteI 7
ReplyDeleteSuperb announcements editor Sir I would just love to have it. It'll help my son to read Tamil. Reading comics is the much easier and effortless way to learn Tamil. Superb sir thanks. Our friend podiyan's post have really an eye opener.
ReplyDelete///வாண்டுகளுக்குக் கதை சொல்ல ஏதுவாய் ஒரு மினி இதழை, தலா சென்னை & ஈரோட்டுப் புத்தக விழாக்களின் போது இனி வெளியிடலாம் என்றிருக்கிறேன்///
ReplyDeleteபாராட்டுக்கள் உங்கள் இந்த புதிய முயற்ச்சிக்கு சார்.
///"மனமிருந்தால் மார்க்கபந்து !"///
ReplyDeleteவாவ் கிரேஸி!!
// மினி இதழை, தலா சென்னை & ஈரோட்டுப் புத்தக விழாக்களின் போது இனி வெளியிடலாம் என்றிருக்கிறேன் ! மூத்த புலவரின் நீட்டி முழக்கல்கள் ஜாஸ்தி அவசியப்படா, சிம்பிளான ஆக்கங்களாய்த் தேடிப் பிடித்து, சின்னதொரு விலையில் வெளியிட, 2020 முதல் ஒரு பிள்ளையார்சுழியினைப் போட்டுத் தான் பார்ப்போமே ?! And மியாவியின் புக் # 2-ஐ இந்தப் புது முயற்சிக்கு ஆரம்பமாக்கிட இயல்கிறதாவென்றும் பார்க்கப் போகிறேன் ! //
ReplyDelete+1 Good move!! I support this!!
வந்தாச்சி.
ReplyDeleteசிங்கத்தின் சிறு வயதில் சூப்பர் சார் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்
ReplyDeleteநானும்....
Deleteஇரு சிங்ககளின் சிறு வயதை..
குட்டீஸ் இதழ் குறித்து கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக கோரிக்கை விடுத்து வரும் நான் உங்களது இந்த முடிவினை மகிழ்வுடன் வரவேற்கிறேன் எடிட்டர் சார்.
ReplyDeleteஎடிட்டர் சார்..
ReplyDeleteபுத்தகத் திருவிழாவுக்கு குட்டீஸுடன் வந்த தாய்மார்கள் பலரும் "சார் கொஞ்சம் பெரிய படங்களா; பெரிய்ய எழுத்துக்களோட காமிக்ஸ் கிடைக்குமா சார்? வசனங்கள் குறைவா இருந்தா பெட்டர்" என்று கேட்டபோதெல்லாம் "பப்ளிஷர்ட்ட சொல்லியிருக்கோம் மேடம்.. கண்டிப்பாய் அடுத்த வருடம் வந்துடும்" என்று சமாளித்திருக்கிறேன்!
தற்போதைய உங்கள் அறிவிப்பு அதை மெய்யாக்கப் போவதில் மகிழ்ச்சி!!
'பெரிய படங்கள் - பெரிய எழுத்துகள் - குறைவான வசனங்கள்' ஆகிய சமாச்சரங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளும்படி அகில இந்திய காமிக்ஸ் குழந்தைகள் கழகம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்!
+111111111+111111...
DeleteYes yes superb EV.
Deleteகுழந்தையின் உள்ளம் குழத்தைக்கு தான் தெரியும்..
Deleteஇதை ஆமோதிக்கிறேன்...:-)
///And மியாவியின் புக் # 2-ஐ இந்தப் புது முயற்சிக்கு ஆரம்பமாக்கிட இயல்கிறதாவென்றும் பார்க்கப் போகிறேன் !///
ReplyDeleteகண்ணுகள்ல ஆனந்தக் கண்ணீர் சார்! மூச்..மூச்!
மிய்யாவ்.....மிமிமிய்ய்ய்யாவ்வ்வ்வ்வ
DeleteSir, Can you publish once again “ Nadodi Remi” for Children?
ReplyDeleteWhen I was studying 4 th std , I read this book and also saw with my Amma , that movie in Delite Theatre, Coimbatore. It was an unforgettable happening. I was impressed by comics better than that movie.
Even now when I get any anger with my mom, thinking the front cover art of Remi with sorrowful face, my angry melted away like ice.
I would like to thank our editor sir and our friend podiyan for making the blog experience an absolute delight and some constructive insights given. I felt really satisfied with the posts.
ReplyDelete// அது தவிர, வாண்டுக்களுக்கு சுவாரஸ்யமூட்டக்கூடிய வேறு 2 அழகான / சிம்பிளான கார்ட்டூன் தொடர்களுமே எனது குறிப்புகளில் உள்ளன ! So அவற்றிற்கும் உரிமைகளை வாங்கிவிட்டு, சந்தாவின் அங்கமாக்காது - "விரும்புவோர் வாங்கிக்கலாம்" என்று ஆண்டுக்கு இருமுறை வெளியிட்டுத் தான் பார்ப்போமே ! //
ReplyDeleteநாங்களும் பார்க்க/வாங்க ரெடியாகத்தானிருக்கோம் சார் 😍😍😍🙏🏼
.
நாம் அனைவருமே வாங்கி ரசித்தாலே வாண்டுகளின் இதழ் வெற்றியே...
Delete// யார் கண்டது - ஏதேனுமொரு தூரத்து நாளில் "சந்தா V for வாண்டூஸ்" என்றொன்று அமைந்திட இதுவே கூட ஆரம்பப்புள்ளியாய் இருக்கக்கூடும் தானே ? மனமிருந்தால் மார்க்கபந்து !! //
ReplyDeleteகண்டிப்பாக சார் 💪🏼
.
// சிங்கத்தின் சிறுவயதில்" அழைக்கிறது //
ReplyDeleteஇப்படி சொல்லி சொல்லியே
எங்களது தலிவரை நீங்கள் உசுப்பேத்திட்டு இருக்கீங்க என்பதை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன் யுவர் ஆனர்
சாரி சாரி எடிட்டர் சார் 🙏🏼
.
நாம பாக்காத ஏரியாவா சிபிஜீ...:-)
Delete///சமீபமாய் நண்பர் ஒருவரின் குட்டிப் பெண் நமது "மியாவி" இதழைக் கையில் ஏந்திக் கொண்டு கதை சொல்லும் வீடியோ ஒன்றினை எனக்கு அனுப்பியிருந்தார் ; வசனங்களே இல்லாத அந்த ஒரு பக்கப் பூனைக் கதைகளுக்கு நுணுக்கமாய் ஒரு கதையை அனுமானித்துக் கொண்டே அந்த மழலை பேசியது அத்தனை அழகு !! ///
ReplyDeleteஎதுசொன்னாலும் சாக்லேட், ஐஸ்க்ரீம் வாங்கித் தந்தாத்தான் ஆச்சு என்று அடிக்கடி ப்ளாக்மெயில் செய்யும் அந்தக் குட்டிச்செல்லத்துக்கு அந்த மியாவி இதழ்களை நான் பரிசளிக்க விரும்புகிறேன்..!
எத்தெனை லட்சம் விலையானாலும் சரியே..!
கீழ்காணும் குறிப்பை எடிட்டர் சாரைத் தவிர மற்ற யாரும் பார்க்கவேண்டாமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..!
(எடிட்டர் சார்..
ஐம்பது ரூபாய்க்கு உள்ளே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்..ஹிஹி:-))
///யார் கண்டது - ஏதேனுமொரு தூரத்து நாளில் "சந்தா V for வாண்டூஸ்" என்றொன்று அமைந்திட இதுவே கூட ஆரம்பப்புள்ளியாய் இருக்கக்கூடும் தானே ? ///
ReplyDeleteஅடடே..
கட்டக்கடைசில எங்களுக்கே எங்களுக்குன்னு ஒரு தனி சந்தா வரப்போகுதா.. சபாஷ்..!
ங்ங்காஆ...
Deleteங்கா.....
ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteஇந்த பதிவில் மாணவர்களின் வாசிப்பைக் குறித்த விவாதமிருப்பதால் நான் ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் என் கருத்துகளைக் கூறலாம் என நினைக்கிறேன்.
பாடப்புத்தக வாசிப்பைக் கடந்து பிற புத்தகங்களை வாசிக்க மாணவர்களின் தேடலை தூண்டும் காரணியாக சித்திரக்கதைகள் உள்ளன என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால் பாடபுத்தக வாசிப்பையே சித்திரக் கதைகள் வாயிலாக ஆரம்பிக்க வேண்டும் என்ற முன்மொழிவை இதுவரையில் பல்வேறு ஆசிரியர் கருத்தரங்களிலும், பணிமனைப் பயிற்சிகளிலும் வலியுறுத்தியுள்ளேன். என் மாணவர்களைக் கொண்டு இதுகுறித்த சிறு செயல் ஆராய்ச்சியையும் செய்துள்ளேன். அப்போது ஏற்பட்ட சில அனுபவங்களை இந்த தளத்தில் சுட்டிக் காட்டி நண்பர்களின் கருத்தை அறிய எண்ணியே இதைப் பகிர்கிறேன், (அதற்கான இடம் இதுவல்ல என்றால் வருத்தமும் தெரிவித்துக் கொள்கிறேன்)
தமிழ் வாசிப்பதில் சிரமம் கொண்ட மாணவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தி மொழியறிவு பெறச்செய்வதில் சித்திரக் கதைகளின் பங்கு என்ற தலைப்பில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வு இது. இதில் நான் ஆய்வுக்கருவிகளாக பயன்படுத்தியது வாண்டுமாமாவின் பலே பாலு, பலே பாலு பாட்டில் பூதம், அழுக்கு அண்ணாச்சாமி, மியாவி, மதியில்லா மந்திரி போன்ற சிறு சிறு துணுக்குச் சித்திரக் கதைகளின் நகல்களே. ஏனெனில் வாசிப்பில் பின்தங்கிய மாணாக்கர்கள் என்பதால் முழுநீளக் கதைகளைத் தவிர்த்தேன். மூன்று மாதங்கள் தொடர்ந்த ஆய்வில் அம்மாணவர்களின் பெரும்பாலானோர் தமிழ் வாசிக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் நான் சுட்டிக் காட்ட விரும்பும் வேறு விபரம் என்னவென்றால் அந்த ஆய்வில் பங்கேற்காத பிற மாணவர்களின் ஈடுபாடுதான். நான் கொண்டு செல்லும் சித்திரக்கதை துணுக்குகளை உணவு இடைவேளையின் போது படிக்க போட்டா போட்டி நடக்கும். இதைக் கண்ட நான் நமது இதழ்களில் லக்கிலூக், ரின் டின் கேன், ஸ்மர்ஃப்ஸ் போன்ற இதழ்களை கொண்டுபோய் கொடுத்த போது அவர்களின் ஆர்வம் வியப்பளிக்கும் வகையில் இருந்தது. எனவே அந்த ஆண்டு திருப்பூர் புத்தகத் திருவிழாவின் போது பெற்றோருடன் சென்று நமது இதழ்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி அவர்களை அனுப்பினேன். 60 மாணவர்கள் கொண்ட என் வகுப்பில் புத்தகத் திருவிழாவிற்கு சென்று திரும்பிய மாணவர்கள் வெறும் 8 பேர், பிறர் கூறிய காரணம் பெற்றோருக்கு நேரமில்லாத காரணத்தால் அழைத்துச் செல்ல இயலவில்லை என்பது. அந்த 8 பேரில் நமது இதழ்கள் ஒன்றிரண்டை வாங்கியவர்கள் 3 பேர். மற்றவர்கள் விலை 75 என்பது அதிகமாக உள்ளதால் பெற்றோர் வாங்கித் தரவில்லை என்று கூறினர் , நம் 20 ரூபாய் முத்து மினி காமிக்ஸ் இதழ்கள் வண்ணத்தில் இல்லாததால் அவர்களைக் கவரவில்லை என்பதையும் அறிந்துகொண்டேன், இப்போது சொல்லுங்கள் மாணவர்களிடம் வாசிப்பை ஏற்படுத்துவதில் பெற்றோர் மற்றும் சமுதாயத்தின் பங்கு எவ்வளவு என்பதை?
மேலும் அவர்கள் tinkle digest போன்ற புத்தகங்களை பார்த்து விட்டு வந்து அவை சிறியதாக நிறைய கதைகள் கொண்டதாக வண்ணத்தில் இருக்கிறதே, அதுபோல தமிழில் இல்லையா என்று கேட்கின்றனர். எனக்குமே வேட்டைக்கார வேம்பு, கபீஷ், காக்கை காளி முதலியவை தமிழில் வந்தால் மாணவர்களின் வாசிப்புக்கு நன்றாக இருக்குமே என்ற எண்ணமும் இருக்கிறது, Tinkle Star என்ற தமிழ் சித்திரக்கதை இதழும் வந்த வேகத்திலேயே நின்று விட்டதே. அது போன்ற பதிப்புகளை நாம் வெளியிட முடியாதா?
200 ரூபாயில் hard bound லக்கிலூக்குகள் கேள்வியே இல்லாமல் விற்றுப் போகும் இடத்தில் 20 ரூபாய் தேடல்களுக்கு விடையென்ன?
முதிர்ந்த இரசனையுடைய கதைகளை வெளியிட்டு நம் தேடலை பூர்த்தி செய்து கொண்டுள்ள நாம் இளம் தலைமுறைக்கான வாய்ப்புகளை வழங்குகிறோமா?
இறுதியாக ஆசிரியரின் சிறுவர்களுக்கான இதழ்கள் வெளியிடும் முடிவிற்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
P.S: அரசுப் பள்ளியின் வாயிலாக மாணவர்களை புத்தகத் திருவிழாவுக்கு அழைத்துச் செல்வதில் நடைமுறை நிர்வாகச் சிக்கல்கள் இருக்கின்ற போதிலும் இந்த வருடம் அதை நடைமுறைப் படுத்தலாம் என எண்ணியுள்ளேன்.
வாவ்!!!!!!! அருமை அருமை அருமை நண்பரே!! உங்களது ஆராய்ச்சி, முயற்சிகள் மற்றும் மெனக்கெடல்களுக்காக எழுந்து நின்று கைதட்டுகிறேன்!!!
Deleteஉங்களது ஆராய்ச்சி, முயற்சிகள் மற்றும் மெனக்கெடல்களுக்காக எழுந்து நின்று கைதட்டுகிறேன்!!!
Deleteசூப்பர் சிலர்....
Deleteசூப்பராவது பலர்...
அருமையான முயற்சி நல்லாசிரியரே. விரைவில், லயன் குழுமம் மூலம் ஒரு சிறுவர்களுக்கான மாத இதழ், 30 இல்லை அதிகபட்சம் 40 விலையில் வெளிவரும் நாள் புலரும் என்று நம்புவோமாக.
Delete//மாணவர்களிடம் வாசிப்பை ஏற்படுத்துவதில் பெற்றோர் மற்றும் சமுதாயத்தின் பங்கு எவ்வளவு என்பதை?//
Deleteமுதலில் உங்களுடைய அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன். மாணவர்களுக்கு உதவ நீங்கள் முன்னெடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகள். இதில் மேற்கொண்டு இங்கே உள்ள நண்பர்களும் உதவ தயராக இருக்கிறோம்.
வாசிக்கும் வழக்கத்தை பெற்றோர் தான் ஊக்குவிக்க வேண்டும். தங்கள் குழந்தைகளின் மேலான பொறுப்பும் அக்கறையும் அவங்களுக்குத்தானே அதிகம் இருக்கனும். தினமும் அரை மணி நேரம் குழந்தைகளுக்கு வாசித்துக் காமித்தாலே போதும். 3 வயதில் இதை ஆரம்பித்தால் 5 வயதில் குழந்தை தானே படிக்க ஆரம்பித்து விடும். டிவியை கட்டிபிடிச்சுட்டு அழறதையும் கிரிக்கெட் பாக்கறதையும் அரைமணி நேரம் நிறுத்தினாலே பாதிக் குழந்தைக படிக்க ஆரம்பிச்சுடும்.
வாசிக்கும் வழக்கத்தை வளர்த்த வசதி தேவையில்லை என்பது எனது கருத்து. நிச்சயமா, இது ஊருக்கு ஊர் கிராமத்திற்கு கிராமம் மாறுபட வாய்ப்பு உள்ளது.
என்னுடைய சிறுவயதில் பெரும்பாலான நேரத்தை நூலகங்களில் தான் செலவிட்டிருக்கிறேன். நூலகத்தில் காமிக்ஸ் தவிர எனக்குக் கிடைக்காத புத்தகங்களே (1980-90) அந்த வருடங்களில் கிடையாது. நான் பிறந்து வளர்ந்தது கோவை என்பதால் பிற ஊர்களின் நிலை தெரியாது.
ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் என்னுடைய புத்தகத் தேவைகளுக்கு லெட்டர்பிரஸ்ஸில் பகுதி நேர வேலை செய்வது; வீட்டு வேலைகளுக்கு கூலி வாங்குவது என்று தான் சமாளிக்க முடிந்தது. எனக்குத் தெரிந்து நிறய பேர் வாசிக்கும் பழக்கத்தை இப்படித்தான் தொடர்ந்தார்கள்.
சமுதாயத்தின் பங்கு: சமுதாயத்துக்கு அக்கறை இல்லை என்பது தான் உண்மை நிலை. பெற்றோருக்கே குழந்தைகளின்வாசிக்கும் பழக்கத்தில் அக்கறை இல்லாத போது சமுதாயம் ஏன் கவலைப்படப் போகிறது 😔.
கருத்து சற்று வேகமாக இருப்பதாகத் தோன்றினால் மன்னிக்கவும் சார். ஆனால் இங்கே முனைவு காட்ட வேண்டியது முக்கியமாக மாணவர்களும் பெற்றோர்களும் என்பது எனது கருத்து. அவர்கள் எதிர்காலத்தில் அவர்களுக்கே அக்கறை இல்லையெனில் சமுதாயம் ஏன் கவலைப்படப்போகிறது.
அருமை சார்...உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள்...மற்றும் வாழ்த்துகள்..
Deleteஷெரீப் அவர்களின் கருத்தும் உண்மையே்...:-(
Deleteஅருமை, உங்களது முயற்சிகள் இன்னும் பல கட்டங்களாக விரிவுபடவேண்டும், நிச்சயம் நடக்கும்!
Deleteடிங்கிள் ஸ்டார் தமிழில் வருவது நின்றுவிட்டதா? அதுவும் விற்பனைச் சிக்கலில் மாட்டியிருக்குமோ?
தமிழ் படிப்பதில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்காக தாங்கள் எடுத்த அறிவியல்பூர்வமான முயற்சியை பாராட்ட வார்த்தைகள் இல்லை நண்பரே. வணங்குகிறேன்...
Deleteதமிழில் படிப்பதையே ஒரு கெளரவ பிரச்னையாக நினைத்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் இதை பாராட்டுகிறேன்.
தங்களுடைய பள்ளியில் நூலக வசதி இருந்தால் மேம்படுத்தவும் அல்லது புதிதாக உருவாக்கவும்... வாரத்தில் 2-3 நாள் நேரம் கொடுத்து படிக்க வைக்கவும்... நான் படித்த அரசு பள்ளியில் எனக்கு மிகவும் பலன் தந்த வழிமுறை இது.
நன்றி...
பார்க்கப்பட்டது.... ராகவன் ஜி ....
ReplyDeleteமார்க்க பந்து....
DeleteDear Editor
ReplyDeleteMake no mistake - Yakari is a super duper hit with my daughter and my friends son. Eagarly awaiting it in Tamizh.
மியாவி புக் 1 எனக்கு வரவில்லை சார்...
ReplyDeleteஅனுப்புகிறேன் சார் என்று சொன்னார்கள்...
அம்புட்டுதே....
வருஷம் ஓடி போச்சி....
எனக்கும் மறந்து போச்சு...
டியர் எடி,
ReplyDeleteவருடம் இருமுறை என்று சிறுவர்க்கான இதர்கள், சந்தாவில் இல்லாத தனி இதழ்களாக வெளியிடுவது சிறந்த முடிவு.
V for VAANDU, வெகு தொலைவில் இல்லை என்று பட்சி கூறுகிறது. காத்திருப்போம்.
சந்தா V for வாண்டூஸ் - காலம் கடந்து கனிந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி sir.
ReplyDeleteV for vanndu wow super கருர் rajasekaran
ReplyDelete45th
ReplyDeleteSuper announcement... waiting
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி சார்..
ReplyDeleteஅப்புறம் ஒரு சந்தேகம் :P
இந்த புத்தகங்கள் எல்லாம் லயன் அல்லது முத்து காமிக்ஸில் வருமா? இல்லை, வாண்டுகளுக்கு புது லோகோ உண்டா?
- சங்கர்
முதலில் நண்பர் பொடியன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...
ReplyDeleteபோன பதிவில் அவரின் கருத்துகள் அனைத்தும் சிந்திக்க வைத்தன ..
எனக்குமே எனது 1.5 வயது மகளுக்கு கதை சொல்ல புத்தகம் தேடுகிறேன்.
ReplyDeleteஉங்களது பார்வை அந்த திசையில் செல்வது குறித்து மகிழ்ச்சி சார்.
Try Yakari - my kids like it so much
DeleteI've ordered the first volume Raghavan. Because of your recommendation will see how my son likes it. 👍
Deleteவாண்டுகளுக்கான புத்தகங்கள் வரும் நாளை எதிர்நோக்குகிறேன்...
ReplyDeleteஎன்னுடைய பையனுக்கும் முயற்சி செய்ய துவங்கலாம் அல்லவா...
வர்ஷாவுக்கு 1
ReplyDeleteஹரிணிக்கு 1 இரண்டு புக்க கணக்குல ஏத்திக்குங்க சார். நாம கேட்டதுதான் கெடைக்கல குழந்தைகளுக்கு கிடைப்பதை வாங்குவோம்..
குழந்தைகள் ஸ்பெசல் என முன்பு ₹.10 விலையில் வந்த லக்கிலூக் கதைகளின் சைசில் ₹30 விலையில் ஒரு பத்து இதழ்களை புத்தகதிருவிழாவிற்க்கு மட்டும் கொண்டுவந்தால் பள்ளிக்குழந்தைகளின் வாங்கும்திறன் பாதிக்காது சார் முடிந்தால் ஈரோட்டில் முயற்சிக்கலாமே சார்...ஏற்கனவே வெளிவத்த கதைகளாக இருந்தாலும் நலம். உதாரணம் ரூ.10 விலையில்வந்த லக்கி சிக்பில் இதழ்களில் தேர்ந்தெடுத்து மலிவுவிலைப்பதிப்பாக....🙂
ReplyDeleteமா டால்டன் மாதிரி சாதா அட்டை சாதாபேப்பர் கலர்..
ReplyDeleteமியாவி மாதிரி டெக்ஸ் மெபிஸ்டோ, யுமா ஜம்போ கதைகளை போடாலாமே.
ReplyDeleteWarm Welcome Sundar.
Deleteகுழந்தைகளுக்காக முத்து மினி காமிக்ஸ் மீள் வருகை சாத்தியமா?
ReplyDeleteவருடத்திற்கு 6 இதழ்களேனும் வெளியிங்கள். தமிழில் ஏறக்குறைய சிறுவர் இதழ்களே இல்லை என்கிற நிலைதான் இன்று. சமீபகாலங்களில் கோகுலம் கூட நிறுத்தப்பட்டு விட்டது. பூந்தளிரின் கட்டமைப்பை உதாரணமாக கொண்டு ஒரு சிறுவர் இதழ் வந்தால் மகிழ்ச்சி!
ReplyDeleteஆசிரியரின் புதிய பதிவு இப்பொழுதே சுடச்சுட ரெடி நண்பர்களே..
ReplyDelete