நண்பர்களே,
வணக்கம். உப பதிவுக்கு உப பதிவு போடும் ரேஞ்சுக்கு நாம் முன்னேறியிருக்க, உங்கள் வேகத்துக்கு நானும் ஈடு தந்திட வேண்டாமா ? இதோ இந்த வாரத்தின் பதிவு # 3 !
Spin-off என்று மறதிக்காரர் XIII சார்ந்த பதிவுக்கு அப்பாலிக்கா எனக்குத் தோன்றியதும் இன்னொரு spin-off பற்றிய சிந்தனையே ! And அது நமது ஒல்லிப்பிச்சான் கார்ட்டூன் நாயகரைச் சார்ந்தது !
பாருங்களேன் - நம்மவர் ஜாலி ஜம்பரின் முதுகில் உப்புமூட்டை போகாது, மாங்கு மாங்கென்று ஒரு சைக்கிளை மிதித்தால் எவ்விதமிருக்குமென்று !! அமெரிக்க பெரும் கண்டத்தின் குறுக்கே சவாரி செய்யுமொரு போட்டியில் புரட்சிகரமான தனது கண்டுபிடிப்பை வலம் வரச் செய்திட எண்ணுகிறார் ஒரு கண்டுபிடிப்பாளர் ! ஆனால் போட்டி நிறுவனமோ சக்கை வைக்க முயற்சிக்க, ஆபத்பாந்தவராய் ஆஜராகிறார் நம்மவர் ! ஜாலிக்கு ஒய்வு தந்து விட்டு, இரண்டு சக்கர வண்டிக்குத் தாவுகிறார் !! பகடியானதொரு ஸ்டைலில் புதியதொரு ஓவியர் உருவாக்கியிருக்கும் இந்த spin-off-க்கு உங்கள் ஆதரவு எவ்விதமிருக்குமோ என்றறிய ஆவல் guys !! சொல்லுங்களேன் - ப்ளீஸ் ! Bye for now !
அட!
ReplyDeleteலக்கி லூக்குக்கு கேள்வியே வேண்டாம் சார்..பகடியோ அல்லது வேறு எந்த பேர்
Deleteவச்சாலும் சரி போட்டு தாக்குங்க!!!
+ 1/0
Delete+10000
Delete+1
Deleteஆனா,,,, இந்த அட்டை படத்துல லக்கி லூக் ஹேர் ஸ்டைல் வேற மாதிரி இருக்கே..
Deleteஆனாலும் எப்படியாவது ஆகஸ்ட்டுக்கு கொண்டு வந்துடுங்க..
Deleteஎந்த ஆகஸ்டுக்கு சாரே ?
Deleteவர்ற ஆகஸ்ட்க்கு தான் சார்..
Deleteநீங்க சொன்ன சஸ்பென்ஸ் இதுவா இருந்தா இன்னும் "ஜாலியே "
லக்கி ஸ்பின்ஆப் வரட்டும்.
Deleteவாவ்
ReplyDeleteசூப்பரு சார்
லக்கி அசத்துறாரே 😍😍😍
.
// உங்கள் ஆதரவு எவ்விதமிருக்குமோ //
ReplyDeleteஉடனடியாக வேண்டும் சார்
We want Lucky..
ReplyDeleteலக்கி லூக் ஆல்வேஸ் வெல்கம் சார்
ReplyDeleteஆகஸ்ட் கார்ட்டூன் ஸ்பெஷலில் சேர்த்துக் கொள்ளலாமே...
ReplyDeleteகார்ட்டூன் வறட்சியும் கொஞ்சம் குறைந்த மாதிரி இருக்கும்!
லக்கி லூக் வந்தா மட்டும் போதும்.
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteநான் ரெகுலராக பிளாக் பார்ப்பேன். பல்வேறு தகவல் வரும். சந்தோஷமடைவேன். ஆனால் திடீரென சென்ற மாதம் பார்த்தால் எனக்கு பிடித்த lone ranger வரவில்லை. நினைத்தே பார்க்கவில்லை.
கேட்டால் 999கட்டு என்கிறார்கள். நான் அல்ரெடி abcde subscriber. 5000என்பது ஒரு சும்மா தொகை இல்லை. இப்போது ஆயிரம் கட்டு என்றால் எங்கே போவது?
2020சப்ஸ்க்ரிப்ஷன் போது ஒரு தொகை சொல்லுங்கள். 5000,6000,10000 என எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. முடிந்தால் கட்டுவேன், கடந்த 7 வருடம் போல. திடீரென ஆயிரம் கட்டு என்றால் நன்றாகவா இருக்கிறது?
கம்மியோ அதிகமோ, ஒரு முறை கேட்கவும், கொடுத்து விடுகிறோம். மூடு வரும்போதெல்லாம் புது காமிக்ஸ் போடுவேன், பணம் கட்டு என்பது வியாபாரத்தில் நல்லதில்லை.
நன்றி
கொஞ்சமாய் மூடு சரியாக இருக்கும் போது இதே பின்னூட்டத்தை மறுக்கா படித்துப் பாருங்களேன் - உங்களது இன்றைய லாஜிக் நாளையும் அதே போல் apply ஆகிறதாவென்று ?
DeleteJUMBO COMICS என்பது ரெகுலர் இதழ்களின் gap காலை நிரப்பிட விழையும் ஒரு வித்தியாசமான தடம் ! மூடு வரும் போதெல்லாம் ஜம்போ காமிக்ஸ் வெளிவருவதில்லை ;அதற்கெனவொரு அட்டவணையும்,. APRIL to MARCH எனும் கால நிர்ணயமும் உண்டு ! So அதற்கேற்பவே அறிவிப்புகளும் இருந்திடுமென்பதில் இரகசியங்களோ, ராக்கெட் விஞ்ஞானமோ ஏது ?
And உங்கள் லாஜிக்படியே (?!!) பார்த்தாலும் நடப்பாண்டில் ABCDE சந்தாக்கள் அறிவிக்கப்பட்ட தருணத்திலேயே "ஜம்போ சீசன் # 2 க்கு தொகை ரூ.999 ; இதை இப்போதே கட்டுவதானாலும் ஓ.கே. ; மார்ச்சில் செலுத்தினாலும் ஓ.கே. " என்றே தெள்ளத் தெளிவாய் அறிவித்திருந்தோம் ! And ஒரு பாதி வாசகர்கள் அந்நேரமே Jumbo விற்கு subscribe செய்யவும் தவறவில்லை ! அதைக் கவனிக்கத் தவறிவிட்டு இன்றைக்கு கண்சிவப்பதில் என்ன பலனோ சார் ?
And "ஈரோடு ஸ்பெஷல்" இதழ்கள் இரண்டுமே முன்பதிவுக்கான பிரத்யேக இதழ்கள் என்பதை இப்போதே நினைவூட்டி விடுகிறேன் - ஆகஸ்டில் இன்னொருமுறை நீங்கள் ரௌத்திரம் கொள்ள அவசியப்படக்கூடாதென்பதற்காக !
தங்களுக்கு பதில் நான் தருவதை தவறாக எண்ணவேண்டாம்
Deleteதெரிந்தவற்றை சொல்லுவது தவறில்லை என்று சொல்லுவார்கள் அதனால் தான் சொல்லுகிறேன்
http://lion-muthucomics.blogspot.com/2018/10/2019-announcements.html
மேற்கண்ட லிங்கில் சென்று பாருங்கள் நண்பரே
ரெகுலர் + ஜம்போ இரண்டிற்குமே தெளிவாக சொல்லியிருக்கிறார்
புரிதலுக்கு முன் கூட்டிய நன்றிகள்
.
சிபீ ஜீ...:-)))
DeleteS Dr Same feeling
Deleteஇவ்வாண்டின் சந்தா தொகை தெரிய blog வரவேண்டிய அவசியமே இல்லை. அனைத்து புத்தகங்களில் வரும் அறிவிப்புக்களை படித்திருந்தால் போதுமானது.
Deleteநாம் செய்ய வேண்டியது ஒன்றே : நம்மிடம் இருக்கும் பட்ஜெட்க்கு ஏற்ப பிடித்த புத்தகங்களை வாங்குவதே. ஒரு புத்தக வெளியீட்டு அதிபரிடம் அடிக்கடி புத்தகம் வெளியிடுவது வியாபாரத்துக்கு ஆகாது என்றால் என்ன செய்வது .. :-) It is his business to decide - அதிலும் ஒரு லியொனார்டோக்கு முன்னர் அவர் இவ்வளவு சிரத்தை எடுத்து வினவ வேண்டியுள்ளது !
///ஒரு புத்தக வெளியீட்டு அதிபரிடம் அடிக்கடி புத்தகம் வெளியிடுவது வியாபாரத்துக்கு ஆகாது என்றால் என்ன செய்வது .. :-) It is his business to decide - ///
Delete+1 செம!!
Lucky Luke spinoff வரவேற்கிறேன்.
ReplyDelete(XIII spinoff வருமென்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்.)
இதிலென்ன ஆச்சரியம் சார்..பலத்த ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். முடிந்தவரை விரைவாக தமிழில்லதரிசிக்க வையுங்களேன்..
ReplyDeleteசார்,
ReplyDeleteலக்கி லூக்,
நன்றாக இருந்தால் வெளியிடலாம்.
ReplyDeleteஅதே போல் எல்லோரும் நமது பிளாக் பார்ப்பார்கள், ஜம்போ காமிக்ஸ் பணம் செலுத்துவார்கள் என நம்ப வேண்டாம். நான் கடந்த மூன்று வாரங்களாக பிளாக் பார்க்கவில்லை. ஆனால் லோன் ரேஞ்சர் வரப்போகிறான் எனத்தெரியும். ஆனால் அது என் abcde சப்ஸ்கிரிப்ஷனில் வரப்போவதில்லை எனத்தெரியாது. மேபி கவனிக்காமல் விட்டிருப்பேன்.
நான் முன்பே சில ஐடியாக்கள் தந்திருந்தேன். அவற்றை எல்லாம் வேலைக்கு ஆகாது என்றீர்கள். பரவாயில்லை. அட்லீஸ்ட் ஜம்போ போன்ற சந்தாக்கள் வரும்போதாவது உங்கள் அசிஸ்டென்ட்டுகளை போன் செய்யவோ, அல்லது ஒரு வாட்சப் பிராட்காஸ்ட் அல்லது ஒரு பல்க் மெயிலோ அனுப்ப சொல்லலாம்.
பிளாக்கை வளர்த்தேன், சந்தா வளர்த்தேன் என நம்பினால், என் போன்ற பிளாக்கில் பேசாத, கவனிக்காத ஆட்களின் சந்தா அதோகதி தான் சார்.
நான் காமிக்ஸ் காதலன், ஆசிரியர் சொல்லும் பணத்தை கட்டுவேன், ஏனென்றால் அதற்குரிய சரக்கு வந்து விடும் எனத்தெரியும். 1993ல் இருந்து நம் வாசகன் நான். காமிக்ஸ் எதிரியல்ல.
இந்த குழப்பங்கள் சமீபகாலமாகவே நிறைய சார். இலவச டெக்ஸ் இதழ்களின் மும்மூன்று தொகுப்பின்போதும் குழப்பமடைந்து அலுவலகத்தைத் தொடர்பியே தெளிவாக்கிக் கொண்டேன் சார்.. அடுத்த ஆண்டில் ஜம்போ சந்தாவை ஏபிசிடிஈ&எப் என ஒரேமுறை கட்டுமாறு செய்யலாம்..அதில் இந்த குழப்பங்கள் குறையும். தவிர ஈரோடு வெளியீட்டை மட்டும் தனித்தனியே ஹைலைட்டலாம்..
Deleteஉங்கள் காமிக்ஸ் நேசம் இந்தத் தளத்துக்குப் புதிதல்ல சார் ; உங்கள் கோபங்களே புதிது !
Deleteஒரு busy schedule -ல் நேரக்கூடிய gaps in communication புரிந்திடக்கூடியதே ; ஆனால் இங்கு வருகை தருவோரெல்லாமே equally busy ; if not more என்பது தெரிந்தது தானே ?! அவர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு குறைபாட்டுக்கும், ஒவ்வொருமுறையும் கண்சிவக்கத் துவங்கினால் - மெட்ராஸ் ஐ பிரவாகமாய்த் தென்பட்டதே பலனாகிடும் !
வாசகர்களை எட்டிப்பிடிக்க நமது blog மாத்திரமே ஒரு கருவியென நான் எண்ணுவதில்லை ; ஒவ்வொரு இதழிலும் ஜம்போ விளம்பரங்கள் ; ஒவ்வொரு ஹாட்லைனிலும் "இது இந்தந்த சந்தாவின் அங்கமென்று" குறிப்பிடத் தவறுவதே கிடையாது ! All you need to do is to take cognizance of those indicators please !
And சின்ன கொசுறு சேதியுமே : நடப்பாண்டில் ரெகுலர் சந்தாவினை விடவும் ஜம்போவின் எண்ணிக்கை தான் ஜாஸ்தி !
DeleteThis comment has been removed by the author.
Deleteமெட்ராஸ் ஐ பிரவாகமாய்த்//
Deleteநல்லவேளை தமிழில் எழுதினீங்க. இல்லன்னே மண்டே ப்ளூஸ் க்கு கதை கட்டின மாதிரி கட்டி விட்டுருப்பாங்க.
சார் இந்த கோடை விடுமுறையில் என் குழந்தைகளுக்கு என்னிடமிருந்த 5 அமர் சித்திரக் கதைகள் (எளிய தமிழ்) வாசிக்க கொடுத்தேன். 2 நாட்களில் படித்து முடித்த அவர்களின் ஆர்வத்தை பார்த்து 6 முத்து மினி காமிக்ஸ்கள் கொடுத்தேன். அதுவும் 2 நாட்களில் படித்து முடித்தனர். பின்னர் ஸ்மர்ப்ஸ் ரின்டின் லக்கி என கொடுத்தேன். ரசித்து படித்தனர். பின்னர் ஜம்போவில் வந்த ஹெர்லக் ஷோம்ஸ் கொடுத்தேன். அதிலும் ஒரு குரங்கு சேட்டையை விரும்பி ரசித்தனர். அவர்கள் விரும்பி கேட்டதால் அமர் சித்திரக் கதைகள் மகாபாரதம் முழு தொகுப்பு வாங்கி கொடுத்தேன். 4 நாட்களில் முதல் புத்தகம் முடியும் தருவாயில் உள்ளது. குழந்தைகளுக்காக மாதம்தோறும் ஒரு கார்ட்டூன் வழக்கமாக்கிடுங்களேன் ப்ளீஸ்...
ReplyDeleteஅருமை..
DeleteSuper..
Deleteசூப்பர் சூப்பர்!! மகிழ்ச்சியாக இருக்கிறது!
Deleteஅப்புறம் என்ன சார் ! காமிக்ஸ் பெட்டியை ஓப்பன் பண்ணி பசங்க பக்கம் தள்ளி விடுங்கள்
Deleteஅட்டகாசம் சார் ; நமது இதிகாசங்களை தமிழில் வாசித்து வளரும் ஜூனியர்கள் நிஜமாய் கைதட்டல்களுக்கு உரியவர்களே !
Deleteசூப்பர். கடந்த பதிவில் ஆசிரியர் அடுத்த வருடம் கார்டூன் கதைகள் (இந்த வருடத்தை விட) அதிகம் வர போகிறது என்று சொல்லி உள்ளார்.
Deleteஅருமை
Deleteநண்பரே...தொடருங்கள்..
வாழ வைக்கும் கார்டூனுக்கு ஜே.!
DeleteAny stories starring Lucky Luke are welcome!
ReplyDeleteஎங்கள் ஆதர்ஷ லக்கிலூக்கை வழுக்கைத் தலையாகக் காட்டியிருக்கும் படைப்பாளிகளுக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
ReplyDeleteஓ.. லக்கிலூக் என்னை மாதிரி இருக்கிறது உங்களுக்கு புடிக்காதோ..
Deleteஎர்வாமேட்டின் எடு.....கொண்டாடு....!
Deleteசெயலரே...
Deleteஒரு வேளை இந்த லக்கி நம்ம லக்கியின்
அண்ணனாக இருக்கலாம்..
ஸ்பின் ஆப் ன்னாவே இது மாதிரி சில தெளிவின்மைகள் வழக்கம் தானே..:-)
லக்கியோட தொப்பி ரகசியம் இது தானோ?
DeleteYep No need to question about publishing Lucky Luke stories i guess.
ReplyDeleteவந்தாச்சி.
ReplyDeleteபோய்ட்டு வாங்க ஆபீசர்
Deleteஎடிட்டர் சார்...
ReplyDeleteமதிப்பிற்குரிய நமது டாக்டர் ஹரிஹரனுக்கு நேரப்பற்றாக்குறை போலத் தெரிகிறது. அதனால் ப்ளாக்கிலும், புத்தகங்களில் ஹாட்-லைன் வாயிலாகவும், விளம்பரங்களின் வாயிலாகவும் நீங்கள் திரும்பத் திரும்ப அறிவிக்கும் சமாச்சாரங்களைப் பார்த்துப் படித்து, மனதில் இறுத்திக் கொள்ள அவரால் இயலவில்லை என்பதும் தெரிகிறது! அவரின் இப்படியாப்பட்ட சூழ்நிலையினூடே ஏதாவதொரு புத்தகம் (example : lone ranger) கிடைக்காமல் போகும் தருணத்தில் (நமது காமிக்ஸ் மீதுள்ள காதலாலும், புத்தகம் கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றத்தாலும்) அது கோபமாக மாறிவிடுகிறது! அந்தக் கோபம் இங்கே வெடிக்கிறது - சற்றே தடித்த வார்தைப் பிரயோகங்களோடு! ///மூடு வரும்போதெல்லாம் புது காமிக்ஸ் போடுவேன், பணம் கட்டு என்பது வியாபாரத்தில் நல்லதில்லை. ///
சந்தாக்கள் குறித்தோ, முன்பதிவில் மட்டுமே கிடைக்கும் சிறப்பிதழ்கள் குறித்தோ நீங்கள் திரும்பத் திரும்ப சொல்லும் விசயங்களைக் கவனித்துப் பின்பற்றிட அவர்களது நேரப்பற்றாக்குறை/கவனக்குறைவு காரணமாகிவிடுகிறது! தவறில்லை - அவர்களது சூழ்நிலைகள் அப்படி இருக்கக்கூடும்!
ஆனால் இந்தப் பிரச்சினைக்கு டாக்டர் ஹரிஹரனே ஒரு தீர்வு தந்துள்ளார்!
////கம்மியோ அதிகமோ, ஒரு முறை கேட்கவும், கொடுத்து விடுகிறோம்///
இவரைப் போன்றவர்களுக்காகவே 'prime members' எனும் குடையின் கீழ் வருடம் ரூ.10,000ஐ செலுத்தச் செய்து - இவர்களுக்கு எல்லாப் புத்தகங்களையும் (ரெகுலர் + ஜம்போ + முன்பதிவு சிறப்பிதழ்கள் என சகலத்தையும்) அனுப்பிவைத்துவிடுவது. 3 அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறை அவர்களுக்கு ஒரு 'detailed account summary'யை தபால்/ஈமெயில் வாயிலாக அனுப்பி வைத்துவிடுவது!
கடந்த வருடங்களில் இதுபோன்று ஏற்கனவே நடைமுறையில் இருந்திருத்தாலும், கணக்கைப் பராமரிப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக நீங்கள் தற்போது இதைக் கைவிட்டிருப்பதாகத் தெரிகிறது! சிக்கல்களைக் களைந்து மீண்டும் இதுபோன்றதொரு prime members account systemஐ நடைமுறைக்குக் கொண்டுவந்தால் டாக்டர் ஹரியைப் போல மற்ற சிலபல நண்பர்களும் பயனடைவார்கள் எ.எ.க!
சிறு ஆலோசனையே! இதிலுள்ள கஷ்ட நஷ்டங்கள் என் சுடும் வரம்பிற்கு அப்பாற்பட்டது! :)
ஐயோ....எனக்கு ஞாபகமிருக்க அப்படியெல்லாம் உருட்டுப் பொதியாய் சந்தா வசூலித்ததெல்லாம் கிடையாது !! ஈமூ கோழிப்பண்ணை மாதிரி யாராச்சும் வடை சுட்டிருப்பார்களா நம் பேரைச் சொல்லி ?
DeleteJokes apart, உண்டான சந்தாத் தொகையை அறிவிக்கவே பயந்து ஒவ்வொருமுறையும் மடக் மடக்கென்று தண்ணீர் குடிப்பவன் நான் ; இந்த அழகில் ஐந்திலக்க வசூல்களெல்லாம் நம் மண்டைக்கு எட்டக் கூடச் செய்யாது !
தவிர எங்கோ, யாரோ ஒரு விஜயன் எழுதிய ர்பெல் புக் தடையானதாய் சேதி கசிந்த மறு நிமிடமே அது நான் தானென்று தீர்மானம் பண்ணி.."பிளாக் முடங்கிப் போகுமா ? நம்ம கட்டுன சந்தா கோவிந்தாவா ?" என்று பொங்கியதும் நடைமுறை தானே ? இந்த அழகில் , நான்பாட்டுக்கு மொத்த மொத்தமாய் வசூலித்து விட்டு ரெண்டே நாள் ஆபீசில் திருவிழாவுக்கு லீவு விட்டால் கூட, "முட்டைக்கண்ணன் காசை தூக்கிட்டு ஓடிட்டாண்டோய் !!" என்று போஸ்டர் அடித்து ஒட்டியே விடுவார்கள் ! இப்போதைய பாணியில் "ஜம்போ 999 : இப்போனாலும் ஓ.கே. ; மார்ச்னாலும் ஓ.கே. " என்றே தொடருவோம் சார் !
/// இந்த அழகில் , நான்பாட்டுக்கு மொத்த மொத்தமாய் வசூலித்து விட்டு ரெண்டே நாள் ஆபீசில் திருவிழாவுக்கு லீவு விட்டால் கூட, "முட்டைக்கண்ணன் காசை தூக்கிட்டு ஓடிட்டாண்டோய் !!" என்று போஸ்டர் அடித்து ஒட்டியே விடுவார்கள் !///
Deleteஹா ஹா ஹா ஹா
ரொம்ப கிச்சு கிச்சு மூட்றீங்க சார் .. 😃😃😃😃😃😃
தவிர எங்கோ, யாரோ ஒரு விஜயன் எழுதிய ர்பெல் புக் தடையானதாய் சேதி கசிந்த மறு நிமிடமே அது நான் தானென்று தீர்மானம் பண்ணி.."பிளாக் முடங்கிப் போகுமா ? நம்ம கட்டுன சந்தா கோவிந்தாவா ?" என்று பொங்கியதும் நடைமுறை தானே ? இந்த அழகில் , நான்பாட்டுக்கு மொத்த மொத்தமாய் வசூலித்து விட்டு ரெண்டே நாள் ஆபீசில் திருவிழாவுக்கு லீவு விட்டால் கூட, "முட்டைக்கண்ணன் காசை தூக்கிட்டு ஓடிட்டாண்டோய் !!" என்று போஸ்டர் அடித்து ஒட்டியே விடுவார்கள் ! இப்போதைய பாணியில் "ஜம்போ 999 : இப்போனாலும் ஓ.கே. ; மார்ச்னாலும் ஓ.கே. " என்றே தொடருவோம் சார் !
Delete#####
:-))))))
தொடருவோம் சார்..:-)
"முட்டைக்கண்ணன் காசை தூக்கிட்டு ஓடிட்டாண்டோய் !!" என்று போஸ்டர் அடித்து ஒட்டியே விடுவார்கள்//
Deleteமுகநூல் காமிக்ஸ் அறிவுஜீவிகளுக்கு உங்களையும் ப்ளாக்ல எழுதறவங்களையும் திட்டினாதான் செரிக்கும். பாவம் கண்டுக்காதீங்க.
Hahaha...செம சார்...
DeleteSuper @Erode Vijay
Delete///முகநூல் காமிக்ஸ் "அறிவுஜீவிகளுக்கு"///
Deleteதிருத்தம்..
"என்று தனக்குத்தானே கற்பனை செய்துகொள்வோருக்கு."
ஜாலி ஜம்ப்பருக்கும் தனியே ஸ்பின் ஆஃப் ஏதாச்சும் இருந்தா பாருங்களேன்.
ReplyDeleteஜாலிக்கொரு ஜூலி ரெடியாகும் வேளையில் maybe ஒரு spinoff வரக்கூடும் சார் !
Deleteஅப்படியே அந்த ரின் டின் கேனைக்கு ஏதாவது....
Deleteசார் ,அப்பிடியே எங்க ஜூலியாவுக்கும் Spin off இருந்தா பாருங்க புண்ணியமா போகும்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஹி ஹி ஹி, சீக்கிரமாக வெளியிடுங்கள் எங்கள் கார்ட்டூன் தளபதியை... லக்கிலூக்கின் சைக்கிளில் லிப்ட் கிடைத்தால் யார் தான் மறுப்பார்கள்
ReplyDelete+1
Deleteலக்கி லூக்கின் இந்த சைக்கிள் கதை வேண்டும். அதுவும் அடுத்த வருடமே.
ReplyDeleteஞாபகம் வருதே ஞாபகம் வருதே என பயணிக்க ஆசை
அதென்ன சார் அடுத்த வருஷம்..வரும் ஆகஸ்டே அப்படீன்னு கேட்டா ஆசிரியர் வேண்டாம் எனவா சொல்ல போகிறார்..
Deleteலக்கி...
லக்கி.....சார்....லக்கி...
( ரம்பா சார் ரம்பா என்ற நடையில் படிக்க வேண்டாம் என்பதை முன்கூட்டியே தெரிவித்து கொள்கிறேன்.)
///அதென்ன சார் அடுத்த வருஷம்..வரும் ஆகஸ்டே அப்படீன்னு கேட்டா ஆசிரியர் வேண்டாம் எனவா சொல்ல போகிறார்..///
Deleteஅதானே.!
லக்கி லூக் எந்த கெட்டப்பில் வந்தாலும், எந்த திக்கில் வந்தாலும், எப்ப வந்தாலும் நாங்க வரவேற்போம்.
லக்கி
ReplyDeleteஸ்பின் ஆப் இதழாகிய இந்த இதழை இரு கை கூப்பி வரவேற்கிறோம் சார்...:-)
I welcome Lucky Luke spin off...
ReplyDeleteAlso, leonardo 500 spl, I do miss light readings every month. Plan a cartoon spl for Erode.
U told us about how publishers are not willing for a combo books, why can't u publish some 6 books and give us a slip case to put them all in one 😉
👍
Delete// பகடியானதொரு ஸ்டைலில் புதியதொரு ஓவியர் உருவாக்கியிருக்கும் இந்த spin-off-க்கு உங்கள் ஆதரவு எவ்விதமிருக்குமோ என்றறிய ஆவல் guys !! சொல்லுங்களேன் - ப்ளீஸ் ! //
ReplyDeleteசுழல் பந்து என்றாலே கொஞ்சம் பயந்து வருது அய்யா....
எனினும்,
லக்கி என்பதால் "லக்" (அதிர்ஷ்டம்) இருக்கும் என்று நம்புவோம்....
// நான் ரெகுலராக பிளாக் பார்ப்பேன். பல்வேறு தகவல் வரும். சந்தோஷமடைவேன். //
ReplyDelete// பிளாக்கை வளர்த்தேன், சந்தா வளர்த்தேன் என நம்பினால், என் போன்ற பிளாக்கில் பேசாத, கவனிக்காத ஆட்களின் சந்தா அதோகதி தான் சார்.//
மருத்துவர் ஹரிஹரன் அவர்களின் இரு தகவல்களும் ஒன்றுக்கொன்று முரணாய் இருப்பது போல் தோன்றுவது எனக்கு மட்டும்தானா ???!!!
எல்லாம் "மாயை"
DeleteXIII
ReplyDeleteஸ்பின்ஆஃப் கேட்டால்
லக்கி ஸ்பின்ஆஃப்
வேணுமான்னு
கேக்குறீங்களே
இது நியாயமாரே.
இங்கேயும் +1
Delete. இப்படியே போனால் ஆசிரியர் ஸ்பின் ஆஃப் காமிக்ஸ்னு பேர மாத்திடப் போறார். அப்படியே தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை ஸ்பின் ஆஃப் அப்டின்னு சொல்லி விடுவார்.
DeleteMay be Edi wanted to change the topic......
DeleteDon't know whether i would like this new lucky luke :(
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம் 🙏. லக்கி லுக் பெயரிலேயே அதிர்ஷ்டத்தை வைத்து பார்த்துக் கொண்டு இருக்கும் ஒல்லிப் பிச்சானுக்கு எப்போதுமே காமிக்ஸ் ரசிகர்களின் ஆதரவு உண்டு ஐயா.
ReplyDelete600+ பதிவுகளை படிக்க மட்டுமே முடிந்த நெருக்கடியான சூழலில், லக்கிலூக்கிற்கு ஸ்பின்ஆப் வரும்போதும், வெறுமனே படிச்சுட்டு ஒரு பதிவு கூட போடாம போனா நம்ம சாதிய விட்டே (கார்ட்டூன்) தள்ளி வச்சிருவாங்க அப்பு!!?? ன்னு மனசு தவிப்பதால் ...
ReplyDeleteஒரெயொரு பதிவு
Deleteலக்கி லூக் மூக்கு குடமிளகாய் மாதிரி இருக்கு; ஒரு வேளை இந்த கதை லக்கி லூக்கை பகடி பண்ணுவது போல உள்ள கதையோ?🤔
ReplyDeleteபதிவைப் படிங்க சார் !
Deleteபகடி பண்ணுவது லக்கியைத்தானா? நான் தவறாத நினைத்து விட்டேன்.
Deleteகருர் rajasekarN இது lucky year total 3 books super super super
ReplyDeleteட்டும் சார்...
ReplyDeleteடியர் எடி, இந்த வாரம் தான் இந்த தகவலே இணையத்தில் பார்த்தேன், நீங்கள் அட்டையுடன் செய்தியே போட்டுட்டீங்க, பலே. இதே வேகத்தில் இந்த கதையும் நம்ம ஜம்போ வரிசையில் சேர்த்திடலாமே...நீங்கள் செய்வீர்களா??:)
ReplyDeleteஜெர்மானிய கதையும் நம் காமிக்ஸ் பயணத்தில் அங்கமாகி விடும்... இல்லை ஏற்கனவே ஜெர்மனிய கதை வரிசை ஏதாவது நமது இதழ்களில் வந்துவிட்டதா??!?!
//ஏற்கனவே ஜெர்மனிய கதை வரிசை ஏதாவது நமது இதழ்களில் வந்துவிட்டதா??!?!//
DeleteYup...சாகச வீரன் சிந்துபாத் - 1987 ஜூலை - ஜூனியர் லயன் !!
இந்தக் குட்டி சிந்துபாத் ஒரு ஜெர்மானியப் படைப்பே !
சிந்துபாத் vowwww ....மீண்டும் வருமா......ஆசான்...
Deleteஇப்போ ஞாபகம் வந்திடுச்சி... சிந்தபாத் கதை மீண்டும் வருமா, உரிமை வாங்கும் பிரச்சனை இல்லை என்றால்..
Delete1987 ல் ப்ரஞ்சு இத்தாலி மொழிமாற்ற நிபுனர்களே அரிது எனும்போது, ஜெர்மனிய மொழியா எப்படிதான் மொழிபொயர்த்தீர்களோ... இதை பற்றி ஒரு பதிவு போடுங்க எடி.
கூடவே வருடம் ஒரு Spoof/Spinoff தனி புக்ஃபேர் ஸ்பெஷலாகவாது வெளியிட முடிவெடுங்கள்... புத்தக வடிவில் இவற்றை இப்படிதான் சேகரிக்க முடியும்.
"சிங்கத்தின் கிழபோல்டு வயதில்" என்றைக்காச்சும் எழுதினால் ஞாபகமூட்டுங்கள் சார் !
Deleteசார்...அதுக்கு சிங்கத்தின் சிறு வயதில் முடியனுமே :-(
Deleteஆமாம், சிறுவயதில விட்ட இடத்திலருந்து தொடரலாமே.... எடி ? மனசு வையுங்க :)
Deleteபாஸ்போர்டுக்கு சிங்கத்தின் சிறு வயதில் அறிவிச்சதுலருந்து அதற்காக, I am Waiting
I also doubt if I would like this Lucky Luke spoof !! Please do not include this either in Jumbo or Regular tracks :(
ReplyDeleteவேண்டும் வேண்டும் நிறைய கார்ட்டூன் கதைகள் வேண்டும்.
ReplyDeleteஇந்த லக்கிலூக் இந்த வருடமே வந்தால் மெத்த மகிழ்ச்சி.
லக்கி ஸ்பின் ஆப் அடுத்த ஆண்டு வந்தால் போதும். சொத்து விற்றுத் தான் காமிக்ஸ் வாங்கணுமோ என்று சிலர் கூறிவிடுவார்கள்.
ReplyDeleteLucky spin off :-) waiting!
ReplyDelete...ட்டும் லக்கி
ReplyDeleteThe reason I will not buy this Lucky is because it is a spoof and not Spin-Off !!! I would hate my super-stars being taken for a ride. I am a Lucky Luke fan and this is a 'no-no' for me !!
ReplyDeleteTime for exploring new avenues...Why not a subscription X for "Spin-offs, Spoofs and Parodies"? ;)
ReplyDeleteEdi sir eagerly waiting for Lucky Luke spin off🤗🤗🤗🏁🏁🏳️🚥🚥
ReplyDeleteஏம்ப்பா.. லோன் ரேஞ்சரு! கண்ணிலே ஒரு ரிப்பனைக் கட்டிக்கிட்டு, வாத்து முட்டை சைசுல கண்களைச் சுத்தி ஓட்டைகளைப் போட்டுக்கிட்டா உன்னை யாருக்கும் அடையாளம் தெரியாதுன்ற நெனப்போ?!!
ReplyDeleteநம்ம DTP டிசைனர் பொன்னர்ட்ட சொல்லி அந்த ரிப்பனை மட்டும் eraser tool வச்சு அழிச்சுட்டா உன்ர பொழப்பு கெக்கபிக்கேன்னு ஆகிடுமேப்பா?!! ஒரு ஐடியா சொல்றேன் கேட்டுக்கோ.. கன்னத்துல ஒரே ஒரு 'மரு'வை மட்டும் ஒட்டிக்கோ.. அப்புறம் உலகத்துல யாராலுமே உன்னை கண்டுபிடிக்க முடியாது!
# தற்போதைய வாசிப்பில் 'லோன் ரேஞ்சர்'
டியர் எடிட்டர்
ReplyDeleteComixology online தளத்தில் முதல் மூன்று பக்கங்கள் படிக்க பிரிவியூ உண்டு. சித்திரங்கள் செம மொக்கை. ஒரு முறை படித்து பார்த்து முடிவு செய்யுங்கள் சார். மூன்று பக்கங்களும் அப்பீல் செய்யவில்லை சார்.
https://www.comixology.com/Lucky-Luke-Saddles-Up/digital-comic/775814?ref=c2VyaWVzL3ZpZXcvZGVza3RvcC9ncmlkTGlzdC9SZWNlbnRBZGRpdGlvbnM
மூன்று பிரிவியூ பக்கங்கள் படிக்க "See whats inside" லிங்கை அழுத்தவும் !!
முழு pdf நம் வசமுள்ளது சார் ; out & out spoof தான் என்பது தெரியும் எனக்கு !
Delete"ஜாலி ஜம்பர் ஒத்துழைக்க மறுத்தால் ?" என்றொரு parody உருவாக்கியிருந்தனர் ஏற்கனவே ; இதுவும் அந்த பாணியில் தான் சார் ! Just curious to know how we'd react to such creations..!
Deleteஅப்ப முழுசா ஒரு இருபது பக்கத்த அடுத்த பதிவுல போடுங்க.. பார்த்துட்டு முடிவே பண்ணீடலாம்...
Delete
Delete///அப்ப முழுசா ஒரு இருபது பக்கத்த அடுத்த பதிவுல போடுங்க.. பார்த்துட்டு முடிவே பண்ணீடலாம்...///
ஆமாங்க சார்.. 20 பக்கத்த அடுத்த பதிவுலயும், மிச்சசொச்ச பக்கங்களை அதற்கு அடுத்த பதிவுலேயே போட்டுட்டீங்ன்னா.. படிச்சுட்டு ஒரு முடிவுக்கு வந்திடலாம்! ஹிஹி!
:-)))
Deleteலக்கி எப்பவுமே எனது பேவரிட். என் மகன்களுக்கும் கூட
ReplyDeleteஆசிரியர் அறிவித்த
ReplyDeleteஇரத்தபடலம் 6 புத்தகம்
அடங்கிய 4 செட் புத்தகம் வாங்கியாச்சு.
115th
ReplyDelete115th
ReplyDeleteநியூ லுக்,,
ReplyDeleteலுக்கை வரவேற்கிறேன்..
எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!
ReplyDelete