Sunday, May 12, 2019

அண்ணனுக்கொரு ஊத்தப்பம்ம்ம்ம்ம்....!!

நண்பர்களே,

வணக்கம். எல்லோருக்குமே நேரக் கட்டுப்பாடுகள் எத்தனை கழுத்துப் பிடியாக உள்ளன என்பதை இந்த மே முதல் வாரம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது என்பேன்! ஒன்றுக்கு மூன்றாய் மெகா இதழ்கள் இந்த மாதம் உங்கள் வீடு தேடி வந்திருப்பினும் – அவற்றுள் புகுந்திட கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதத்தினருக்கு இன்னமும் அவகாசம் கிடைக்கக் காணோம் ! பள்ளி விடுமுறை நேரங்களுமே எனும் போது, குடும்பத்துக்கு priority தரும் வேளையிது என்பது புரிவதால் maybe நாம் தான் திட்டமிடல்களில் மாற்றங்களைக் கொணர வேண்டும் ! விடுமுறைக் காலங்களைக் கோடை மலர்க் காலங்களாய்க் கொண்டாடியது நீங்கள் பாலகர்களாய் இருந்த நாட்களில் ! இன்றைக்கு உங்கள் இல்லங்களிலேயே பற்பல பாலகர்கள் இருக்கும் வேளைதனில், ஜுன் மாதமோ; ஜுலை மாதமோ தான் வரும் காலங்களின் கோ.ம. தருணங்களாகிட வேண்டும் போலும்! எது எப்படியோ – ஓரிரு விஷயங்களை ஸ்பஷ்டமாய்ப் புரிந்து கொள்ள முடிகிறது !

- "குண்டூஸ் புக்ஸ் ; 1000 பக்கம்; 2000 பக்கம்" என்ற கோஷங்கள் அவ்வப்போது கேட்டாலும், யதார்த்தத்தில் – light reading-களுக்கு மாத்திரமே நம்மில் பெரும்பான்மையினருக்கு நேரம் உள்ளது - இன்றைய ஓட்டமோ ஓட்டமான வாழ்க்கையினில் !

- லக்கி லூக் போலான breezy cartoon reads இதற்கு சூப்பராய் சுகப்படும் என்பது போன மாதத்து முதல் வாரப் பின்னூட்டங்களை நினைவு கூர்ந்திடும் போது புரிகிறது!

- And, சகலத்தையும் விட முக்கியமாய் – the ‘தல‘ factor!! மஞ்சள் சொக்காயில் இந்தியாவின் ‘தல‘ சேப்பாக்கத்தில் களமிறங்கும் போது நமது நாடித்துடிப்புகள் எகிறத் துவங்குவதற்கும், அதே மஞ்சள் சொக்காயுடன் இத்தாலியின் ‘தல‘ நம்மிடையே களமிறங்கும் போது உருவாகும் சுவாரஸ்யங்ளுக்கும் இடையிலொரு ஒற்றுமை இருப்பது போலத் தோன்றுகிறது ! கழுத்துப்பிடியாய் வேலைகள் இருந்தாலுமே – இடையே ஒரு சால்ஜாப்பைச் சொல்லியாவது டெக்ஸ் கதைகளுள் மூழ்கிட நம்மில் பெரும்பான்மைக்கு சாத்தியப்படுகிறது ! Of course – சில நண்பர்கள் இதனை வன்மையாய் எதிர்த்திடக்கூடும் தான் ; ஆனால் அவர்களிருப்பது மிகக் குறைவான பலம் கொண்ட அணியிலே என்பதை அவர்களே மறுக்கப் போவதில்லை ! So ஏதேனுமொரு ரூபத்தில் நம்மவர் தலைகாட்டாது போயின், அந்த மாதம் காற்று வாங்கவே செய்யும் போலும் ! And இதில் பெரிய விந்தையே – நமது முகவர்களின் எதிர்பார்ப்புகளுமே ! “ஆங்… பராகுடா சரி…. கார்ட்டூன் சரி… மறுபதிப்பு சரி… டெக்ஸ் வில்லர் கிடையாதா ? ஒரு புக் கூடக் கிடையாதா?" என்று அவர்கள் கேட்பது இப்போதெல்லாம் ஒரு ரெகுலரான நிகழ்வு ! And இந்தத் தம்மாத்துண்டு COLOR TEX செமயாய் ஹிட்டாவதன் பின்னணியிலும் breezy read என்ற காரணம் பிரதானமாய்த் தென்படுகிறது - at least எனது ஆந்தை விழிகளுக்கு ! 

So இந்த மே மாதம் புரியச் செய்துள்ள சில பல பாய்ண்ட்களை வரும் நாட்களின் திட்டமிடல்களுக்கு முன் எடுத்துச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டே topic தாவுகிறேன்!

ஜுன் மாத இதழ்கள் அடுத்த சில வாரங்களில் என்று காத்திருந்தாலும் நமது பணிகள் ஜுலை ; ஆகஸ்ட் என்று தடதடத்துக் கொண்டுள்ளன ! தற்போதைய முனைப்பே நடப்பாண்டின் ஈரோட்டுப் புத்தகவிழாவில் ஸ்டால் ஒன்றைக் கோரிப் பெறுவதும் ; அதன் தொடர்ச்சியாய் நம் சந்திப்பின் போது உங்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்திடும் முஸ்தீபுகளின் பொருட்டுமே ! For a change – திட்டமிடல்கள் சகலத்தையுமே முன்கூட்டி ஒப்பித்து வைக்காது, வாயில் குளிர பெவிகாலைப் பூசிக் கொள்ளலாமென்றிருக்கிறேன் ! So ஈரோடு வரையிலும் பெப்பே..பெப்பெப்பே ........பெப்பெப்பெப்பே…. தான்!

இந்த மௌன விரத அவதாரிலிருக்கும் போது என்ன எழுதலாமென்று யோசித்த போது தான் சமீபத்தைய “கதை படிக்கும் படலம்” மனதில் நிழலாடியது ! ஒவ்வொரு ஆண்டின் அட்டவணையிலும் இடம் பிடிப்பதென்னவோ பரிச்சயப்பட்ட தோர்கல்களும் ; ரிப்போர்ட்டர் ஜானிகளும் ; லார்கோக்களும் என்றாலும் – விடாப்பிடியாய் புதுசு புதுசாய் ஆல்பங்களைத் தேடிப் பிடித்து, படித்து, ரசிப்பது ஒரு வருடாந்திரப் பொழுதுபோக்கு எனக்கு ! And கிராபிக் நாவல் என்ற களம் தற்சமயமாய் கைவசமிருப்பதால் offbeat கதைகளை விரட்டிப் படிப்பதுமே ஒரு ஜாலியான அனுபவம் !

ஆனால் கனமான களங்களல்ல first up! ரொம்பவே ஜாலியான நமது சோன்பப்டித் தாடிக்கார தாத்தா தான் முதலில் ! இந்தாண்டு சரித்திரப் பிரசித்தி பெற்ற லியனார்டோ டா வின்ஸியின் 500-வது பிறந்த ஆண்டு என்பதால் அவரைப் பகடி செய்து உருவாக்கப்பட்ட லியனார்டோ கார்ட்டூன் தொடரினில் ஒரு ஸ்பெஷல் ஆல்பம் இந்த ஏப்ரலில் வெளிவந்துள்ளது  ! இது லியனார்டோ தொடரின் ஆல்பம் # 50 என்பதும் ஒரு coincidence ! இதன் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ள ஆல்பத்தின் pdf file-களை அனுப்பி ‘Any interest?’ என்ற கேள்வியோடு ஒரு மின்னஞ்சலைத் தட்டிவிட்டிருந்தனர் எனக்கு ! Given a choice “கதையை நீங்க வெளியிடற மாசத்திலேயே நாங்களும் வெளியிடறோம்!!” என்று பாய்ச்சலாய் பதில் போட்டிருப்பேன் தான் ! ஆனால் அப்புறமாய் "தாத்தா தாக்குதல் கழகத்தின்" கண் சிவத்தல்களுக்கு ஆளாகிடக் கூடுமோ என்ற பயத்தில் நமைச்சல் எடுத்த விரல்களை கீ-போர்ட்டிலிருந்து எடுத்து விட்டேன்! What say guys?  வழக்கமான 3-4 பக்கச் சிறுகதைகள் பாணியே இம்முறையும் ! தாத்தாவுக்கும், அல்லக்கை அசிஸ்டெண்டுக்கும் இன்னொரு வாய்ப்பு தரலாமா ? அல்லது மனதில் கொடுத்துள்ள இடமே போதுமா ?

சமீப மின்னஞ்சல்களில் #2 : சாகஸ வீரர் ரோஜர் சார்ந்தது! அவரது அந்நாட்களது க்ளாசிக் கதைகளுள் மூன்றைத் தேர்வு செய்து – சித்திரங்கள் & வண்ணங்களை remaster செய்து ஒரு 200+ பக்க ஸ்பெஷலை வெளியிட்டுள்ளார்கள்! இவற்றிலுமே நமக்கு ஆர்வம் இருக்குமா ? என்று கேட்டுள்ளார்கள் ! அட்டகாசச் சித்திரங்கள், ஆக்ஷன் கதைக்களங்கள் என்றிருந்தாலும் இன்றைய நமது வயதுகளுக்கும் / ரசனைகளுக்கும் இவை அவ்வளவாய் set ஆகவில்லையென்றே ரோஜரை வனவாசம் அனுப்பியிருந்தோம் ; இன்னும் சிறிது காலம் அவர் அங்கேயே தொடரட்டுமா ? அல்லது நம் கரைகளில் இன்னொரு தபா ஒதுங்கட்டுமா ? Maybe அவரது புது அவதார் கதைகளோடு ? ஜானி 2.0 போல; ரோஜர் 2.0 கதைகளும் doing reasonably well ! அவற்றைப் பரிசீலனை?

மின்னஞ்சல் # 3 – சில மாதங்களுக்கு முன்பே வந்ததொன்று! But அதுவுமே நமது பரிச்சய நாயகர் சார்ந்ததே! ப்ருனோ ப்ரேசிலின் முதலைப் பட்டாளம் ‘திகில்‘ காமிக்ஸில் வெளியான தருணங்களில் செம ஹிட்! அதிலும் இந்த “முகமற்ற கண்கள்” கன்னாபின்னாவென்று ஹிட்டடித்த ஆல்பம் ! மிகக் குறைச்சலான எண்ணிக்கை தான் இந்தத் தொடரில் & அதனில் ஒன்றேயொன்றைத் தவிர்த்து பாக்கி சகலத்தையும் போட்டு விட்டோம் என்பதே நிலவரம் ! ஆனால் நமது இந்த இரண்டாவது இன்னிங்ஸில் 1960-களில் உருவாக்கப்பட்ட இந்தத் தொடரின் கதைகள் பெருசாய் சோபிக்காது போய் விட்டன! “சாக மறந்த சுறா” வாங்கிய சாத்துக்கள் சன்னமா ? சும்மா பூந்து விளையாடி விட்டீர்களே ! So ‘கம்‘மென்று கிடந்தவனுக்கு சில மாதங்களுக்கு முந்தைய மின்னஞ்சலில் ஒரு ஜாலியான சேதி இருந்தது ! புத்தம்புது டீம் ஒன்றின் கைவண்ணத்தில் ஒரு ப்ரூனோ ப்ரேசில் black & white ஆல்பம் one-shot ஆகத் தயாராகி வருகிறது ! அதன் முதல் 20 பக்கங்களைப் பார்த்த போது மிரண்டே போய்விட்டேன் ; அத்தனை அட்டகாசம் ! முந்தைய ஆல்பங்களைப் படித்திராத வாசகர்களுக்குக் கூட இது ரசித்திடும் விதமாய் இருக்குமென்று சொல்லியிருந்தனர். அநேகமாய் இந்நேரத்துக்கு அந்தப் படைப்பு முழுமை பெற்று – இந்தாண்டின் இறுதிக்குள் வெளிவந்திடக்கூடுமென்று நினைக்கிறேன்! 2020-ன் பட்டியலில் இந்த முதலைப் பட்டாளம் 2.0க்கொரு புக்கிங் போட்டாலென்ன guys ? Your thoughts please ? 
Random Reads # 1 : பழகிய முகங்களைத் தாண்டி – புதுத் தேடல்களின் ஒரு அங்கமாய்ப் பரிசீலித்த நாயகர்களுள் இன்னொரு வெட்டியானும் அடக்கம் (!!!) ஏற்கனவே அண்டர்டேக்கர் கலக்கி வரும் அதே கௌபாய் உலகு தான் இந்த ஒல்லிப் பிச்சானின் களமும் கூட ! அடிதடி; ஆக்ஷன் என்று பெருசாய் மனுஷன் சாகஸமெல்லாம் செய்யும் ரகமல்ல ; மாறாக புத்தக வாசிப்பில் நாட்டமெலாம் கொண்ட ஒரு வித்தியாச வெட்டியான் ! இரண்டே ஆல்பங்கள் (இது வரையிலும்) உள்ள இந்தத் தொடர் சற்றே dark ஆன ரகம் ; but ஒரு ஜாலியான சித்திர பாணியுடன் ! கிராபிக் நாவல் சந்தாவில் இடம்பிடிக்க சாத்தியங்கள் கொண்டவர் ! Thinking....!

Random Reads # 2 : ஒரு பொதுஜனத் தேர்விலிருந்து வெற்றி காணும் ஒரு அதிர்ஷ்டசாலிக்கு விண்வெளி செல்லும் ராக்கெட்டில் இடம்பிடிக்கும் வாய்ப்பு கிட்டுகிறது ! ரஷ்ய விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மனுஷனுக்கு 8 மாதங்கள் பயிற்சி தரப்பட்டு, விண்ணிற்குச் செல்கிறார்! அவரது அனுபவங்களை கார்ட்டூன் பாணிச் சித்திரங்களில், ஜாலியாக, லைட்டாகச் சொல்கிறது ஒரு முழுநீள ஆல்பம்! “ஒரு சாமான்யனின் பார்வையில் விண்வெளிப் பயணம்” என்ற அந்தக் களம் எனக்கு ரொம்பவே சுவாரஸ்யமாய் பட்டது ; but இந்த டாகுமெண்டரி பாணிலாம் நமக்கு சுகப்படாது என்று சொல்வீர்கேளோ என்ற பயம் தான் ! Again thinking....!

Random Reads # 3 : அப்புறம் இன்னொரு ஆல்பம்... அதன் நாயகரோ ரொம்ப ரொம்ப ரொம்ப வித்தியாசமானவர்! ஆக்ஷன் ஹீரோவோ; கௌபாயோ ; டிடெக்டிவோ நஹி ! மாறாக சிமெண்டாலும், கம்பிகளாலும் செய்யப்பட்டதொரு பென்ச் ! Yes, ஒரு பப்ளிக் பூங்காவில் ‘தேமே‘ என ஒரு ஓரமாய் கிடக்கும் பென்ச்சின் பார்வையில் உலகைச் சித்தரித்துள்ளார் கதாசிரியர் !! திரும்பிப் பார்க்கக் கூட நேரமின்றி கடந்து செல்லும் மனுஷர்களை ; அமர்ந்து கதை பேசும் மாந்தர்களை; முகமிலா சாமான்யர்களை; தவறாது ஆஜராகி அமர்ந்து ஓய்வெடுக்கும் மனுஷாளை என்று அந்த பென்ச் மௌனமாய் சந்திக்கும் அனுபவங்களே இந்தத் தொடரின் ஆணிவேர் ! என்னைத் திகைக்கச் செய்த ஆல்பமிது...Maybe... இன்னும் சில காலம் பின்பாய் நமக்கு...? 

Random Reads # 4 : ஒரு வாள்சண்டை வீரன்... கிட்டத்தட்ட பராகுடாவில் நாம் சந்தித்த கேப்டன் ப்ளின் போல ! அந்தக் காலகட்டங்களின் புரட்சிகள்; ரத்தக் களரிகள் என்பதோடு காதல் லீலைகள் என்று அவரது சாகஸங்கள் மிரட்டலான சித்திரங்களில் பார்த்திட்ட போது பராகுடாவுக்கு சவால் விடும் என்று பட்டது ! But... but... அடல்ட்ஸ் ஒன்லி தூக்கலாய்...படு தூக்கலாய் இருப்பதால் thinking...! Artwork is simply breathtaking !!

Random Reads # 5 : 100 வருஷங்களுக்கு அப்பாலொரு தருணம்! பூமியின் வளங்களைச் சுரண்டிச் சுரண்டியே மனுஷன் நாசம் செய்திருக்க, வசதியான பசைப் பார்ட்டிகள் ஒரு 10,000 பேர் மட்டும் செவ்வாய் கிரகத்தில் குடியேறத் தீர்மானித்து கிளம்பும் முஸ்தீபுகளில் இறங்குகின்றனர் ! செவ்வாயிலும் ஜனம் ஜீவிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன ! இதற்கிடையே வெள்ளத்தாலும், நிலநடுக்கத்தாலும் சீரழிந்து கிடக்கும் நியூயார்க் நகரை எப்பாடுபட்டாவது பழைய மாதிரி மீட்டெடுக்க ஒரு போலீஸ்காரர் தீயாய் உழைத்து வர, அங்கு அரங்கேறும் ஒரு கொலை மனிதகுலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது ! Sci-fi ; adventure ; த்ரில் என்று தெறிக்கின்றன !! ஷப்பாாா!

பொதுவாய் இந்தக் கதை வாசிப்பு mode-க்குள் புகுந்திடும் போதெல்லாம் இரண்டு மாதிரியான உணர்வுகள் பிரவாகமெடுப்பது வழக்கம் ! இம்முறையும் அதற்கு விதிவிலக்கல்ல!

- உணர்வு # 1 : இவர்களுக்கெல்லாம் கற்பனை எனும் ஊற்று உள்ளூர் கொத்தவால் சாவடிகளில் சல்லிசாய் கிடைக்கிறதோ ? என்ன மாதிரியாய் பின்னி பெடல் எடுக்கிறார்கள் - year after brilliant year ?!!

- உணர்வு # 2 : “வரூம்ம்ம்.... ஆனா வராதுதுது.....syndrome !  களங்கள் ஒரு நூறு இருந்தாலும் நாம் இறுதியில் சுற்றி வரப் போவது சில பல குதிரைவாலாக்களின் டெக்சாஸ்களிலும் ; சில பல துப்பாக்கிவாலாக்களின் நியூயார்க்களிலுமே எனும் போது 'அண்ணனுக்கொரு ஊதப்பம்ம்ம்ம்ம்" தான் நினைவுக்கு வருகிறது !! நமது ரசனைகளில் பிழையில்லை என்பதுமே புரிகிறது ; மாறாய் அங்கே கொட்டிக்கிடக்கும் ஆல்ப மழையில் ஓரிரு துளிகளைத் தாண்டி ருசித்திட நமக்கு வாய்ப்புகள் லேதுவே என்பது சார்ந்த ஆதங்கமே எனது பெருமூச்சுகளுக்குக் காரணம் !! 

Bye all.... Have an awesome weekend !

மே மாத இதழ்களின் அலசல்கள் தொடரட்டுமே - please ?

P.S : ஒரு சிறு திருத்தம் : ப்ருனோ பிரேசில் 2.0 புது ஆல்பம் வண்ணத்திலேயே தயாராகி வருகிறது !! நவம்பர் 2019-ல் ரிலீஸ் என்று திட்டமிடல் உள்ளதாம் ! 

315 comments:

 1. இனிய காலை வணக்கம்.

  ReplyDelete
 2. கருர் ராஜா sekar an welcome தாத்தா. அப்ப ஈரோடு cartoon undu

  ReplyDelete
 3. தாத்தாவுக்கும், அல்லக்கை அசிஸ்டெண்டுக்கும் இன்னொரு வாய்ப்பு தரலாமா ? - கண்டிப்பாக தாத்தாவுக்கு வாய்ப்பு கொடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். கண்டிப்பாக கொடுக்கலாம்.

   Delete
  2. மனசார சிரிச்சி
   நாளாச்சி....

   போடுங்க....

   Delete
  3. + 10000 - I bat for the old man.

   Delete
 4. ப்ரூனோ பிரேசில் - ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்.

  ReplyDelete
 5. I would say yes to all the three Sir.
  1. Leonardo
  2. Roger
  3. Bruno Brasil

  ReplyDelete
  Replies
  1. 1. Leonardo - NO
   2. Roger - no
   3. Bruno - May be

   Delete
  2. அ) லியோனார்டோ....
   ஆ) ஆல்கை
   இ) லியோனார்டோ ஆல்கை...   Delete
 6. I would like to have a go at random reads 4 & 5. Nice post editor Sir. When u write about all the books u read, my expectations just increase each and every year. U always bring the best for us. This types of posts from you makes my day.

  ReplyDelete
 7. Regarding the may books. I'm yet to read them as books are in home and I'll get back to you as soon as I complete the books. All I need is a day to complete the entire bunch Sir.

  ReplyDelete
 8. காரணமே இல்லாம ரெண்டு வாரமா நானும் பிஸி...நம்புங்க ப்ளீஸ் :). இருந்தாலும் வேற வேற இடங்களில் அலசினதுல மூணு கதையுமே இந்த மாதம் ஹிட்டு தான் போல...பரகூடா, டியூராங்கோ, lone ரேஞ்சர் வேற வேற காரணங்களுக்காக பிடித்துள்ளது போல. lone ரேஞ்சர் ஒரு நல்ல அறிமுகமே. கதை இன்னும் போகப் போக நன்றாகவே சூடு பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. // lone ரேஞ்சர் ஒரு நல்ல அறிமுகமே. கதை இன்னும் போகப் போக நன்றாகவே சூடு பிடிக்கும்.//

   அதில் எனக்குத் துளியும் சந்தேகம் நஹி சார் !

   Delete
  2. அதாவது தோர்கல் போல...:-)

   Delete
 9. தாத்தா, ரோஜர் 2.0, முதலைப் பட்டாளம் 2.0 கண்டிப்பாக வாய்ப்பு கொடுக்கலாம்.

  Random Read 4 & 5 welcome. RR 1- பொழுது போக்கும் வகையில் இருந்தால் நல்லது. RR3 - Forrest Gump திரைப்படம் கூட ஒரு பெஞ்சின் பார்வையில் சொல்லமுடியும் :). அழுகாச்சி காவியமாக இல்லாமல் feel good ஆக இருந்தால் நலமே..

  ReplyDelete
  Replies
  1. ///அழுகாச்சி காவியமாக இல்லாமல் feel good ஆக இருந்தால் நலமே..///

   அழுகாச்சியாக இருக்க வாய்ப்புகள் குறைவே!!! இன்பாஃக்ட், பார்க் பெஞ்ச்னாலே ஒரு 'கிளுகிளுப்பு'தானே?!! ;)

   Delete
 10. முதலைப்பட்டாளம் 2.0 ok. ஒரு சின்ன கேள்வி? லார் கோவின் அடுத்த ஆல்பம் எப்போ?

  ReplyDelete
  Replies
  1. அங்கே வெளியான பிற்பாடு சார் ! இன்னும் அவர்களே வெளியிட்டிருக்கவில்லை !

   Delete
 11. அப்புறம். அந்த பெளன்சர் அடுத்த ஆல்பம் என்ன ஆச்சு?

  ReplyDelete
  Replies
  1. ஓவராய் அடல்ட்ஸ் ஒன்லி முத்திரை குத்த வேண்டியிருப்பதால் தாமதிக்கிறோம் !

   Delete
 12. அப்படியே . வான்ஹாம் மேயின் மரணம் மறந்த மனிதர்கள் ப்ளீஸ்...

  ReplyDelete
  Replies
  1. கதை அத்தனை சோபிக்கவில்லை சார் ; almost 40 ஆண்டுகளுக்கு முன்பான ஆக்கம் என்ற அடையாளங்கள் விரவிக் கிடக்கின்றன !

   Delete
 13. லியனார்டோ தாத்தா - ஹைய்யா!!! டபுள் ஓகே!!

  ஜாகஜ வீரர் ரோஜர்?!! ம்.. அது வந்து..

  ப்ரூனோ ப்ரேசில்??? புதூஊஊ அவதார்?!! - ஆங்! ஓகே!!

  Random reads பட்டியலில் #4ஐ தவிர மற்றவை சூப்பர் கதைக்களங்களாக இருக்கின்றன!! குறிப்பாய் அந்த பார்க் பெஞ்ச் கதை கண்டிப்பாய் வேண்டும்!!!

  விரைவில் ஆவனஞ் செய்யும்படி வாசகர் சமூகம் சார்பாக எடிட்டர் சமூகத்திடம் வேண்டுகோள் விடுக்கிறோம்!!

  ReplyDelete
  Replies
  1. அந்த அடல்ட்ஸ் ஒன்லி தூக்கல். உடனே பிளீஸ்.....

   ஈபிஎப் ல கூட போடலாம்.....ஹிஹ்ஹிஹ்ஹி...

   லிமிடெட் எடிசன்....


   அப்பறமா. மூ.திரிந்த ரசனைகளுக்கு மட்டும்னு.. . ..போட்டுக்குங்க ....

   Delete
 14. ரோஜர் ஓகே
  ப்ரூனோ ப்ரேசில் டபுள் ஓகே சார்

  ReplyDelete
 15. கடந்த சில நாட்களாக வேலைப் பளு, குடும்பப் பளு மற்றும் உடற்பளு(!?!) ஆகியவற்றின் காரணமாக நானும் கொஞ்சம் பிஸியே!!
  ஆனால் கையருகே நமக்கே நமக்கு மட்டும் பிடித்த - கலர்ஃபுல்லான காமிக்ஸ் புத்தகங்களை வைத்துக்கொண்டு - அதைப் புரட்டுவதற்கான ஒரு நேரத்திற்காகக் காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது!! கிடைக்கும் கேப்களில் எல்லாம் லாலிபாப்பைக் கண்ட கிட்ஆர்டின் போல நாக்கைத் தொங்கவிடுகிறேன்...

  தற்போதைய வாசிப்பில் - பராகுடா!! பிரம்மிப்பின் உச்சம்!!

  ReplyDelete
  Replies
  1. I m reading barracuda book#1, couldn’t really identify with any character the story goes here and there may be the climax book would bring some proper closure. But art work is really amazing.

   Delete
  2. // கிட்ஆர்டின் போல நாக்கைத் தொங்கவிடுகிறேன்... //

   //
   தற்போதைய வாசிப்பில் - பராகுடா!!//

   ரெண்டுக்குமிடையே ஏதோவொரு தொடர்பு இருக்கிறா மாதிரியே தோண்றது எனக்கு மட்டும் தானா ?

   Delete
  3. @ V Karthikeyan

   பராகுடா புக் #1 படிக்கும்போது எனக்குமே அப்படித்தான் இருந்துச்சு! ஆனா புக் #2வை படிக்கும்போதுதான் படைப்பாளிகளின் ஆற்றல் முழுசா புரிய வருது! நான் இன்னும் படிச்சு முடிக்கலை! ஆனா பிரம்மிப்பா இருக்கு!!

   Delete
  4. @ எடிட்டர் சார்..

   ஹிஹி!! எப்படித்தான் கண்டு பிடிக்கறீங்களோ!!! ஆனாலும் பராகுடா புக் #1 அளவுக்கு இதில் இல்லை - நல்லா தேடிப் பார்த்துட்டேன்! :D

   Delete
 16. Random Reads # 5 மட்டும் முயற்சி செய்யலாம்.

  ReplyDelete
 17. RR#3 - Bench story
  RR#5 - Mars story
  These 2 story lines are very interesting

  RR#2 - Documentary style nooo :)

  ReplyDelete
 18. 1, தாத்தா வா ???!!
  🏃🏃🏃🏃🏃🏃🏃 ஓட்டம் பிடிக்கும் படலம்

  2, ரோஜர்
  ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் 🎶🎶

  3, பிரேசில் டீம்
  கண்டிப்பாக வேண்டும் ❤💚💜💙💛

  ReplyDelete
 19. Regarding light read books - Yes even I start with them when the books arrive as I can finish quickly and they keep our mood upbeat.

  At the same time light reads doesn’t satisfy the comics fan inside me, only குண்டு books and graphic novel can give a satisfaction.

  ReplyDelete
 20. என்னதான் பீட்சா பர்க்கர்னு மாறினாலும் அதையே எப்போதும் சாப்பிட முடியாது. நம்மாளுங்க அயல்நாடு போனாலும் அங்கே தேடுவது இட்லியும் தோசையும் தான் அது போலத்தான் காமிக்ஸ் ரசனைகளும். என்னதான் புதிய கதைகள் புதிய நாயகர்கள்னு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தை கொண்டு வந்தாலும், அப்பப்போ பழைய நாயகர்களின் கதைகளை ஒன்றிரண்டு போட்டுட்டு வாங்க சார். அவர்கள் எல்லாம் படித்து படித்து ரத்தத்தில் ஊறிப் போனவர்கள் அவர்களை ஒரேடியாக மறப்பதென்பது ரொம்ப கடினம். விற்பனை பாதிப்பு இருக்குமானால் ஐந்து, ஆறு நாயகர்கள் கதைகளை ஒன்றிணைத்து ஒரு ஸ்பெஷல் ஆல்பமாக போட்டு பாருங்கள். ஸ்பெஷல் ஆல்பத்தை பொருத்தவரை விற்பனையிலும் சோடை போகாது. கொஞ்சம் பேரையும் திருப்திபடுத்திய மனநிறைவும் உங்களுக்கு கிடைக்கும். யோசித்து செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கையில் இதை சொல்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. // ஐந்து, ஆறு நாயகர்கள் கதைகளை ஒன்றிணைத்து ஒரு ஸ்பெஷல் ஆல்பமாக போட்டு பாருங்கள். //
   +1 for this idea

   Delete
  2. // ஐந்து, ஆறு நாயகர்கள் கதைகளை ஒன்றிணைத்து ஒரு ஸ்பெஷல் ஆல்பமாக போட்டு பாருங்கள் //

   +1

   அல்லது முன்பதிவுக்கு மட்டும் என்று தயார் செய்யலாம்.

   Delete
  3. Post NBS அடிக்கடி சொல்லி வரும் விஷயமே நண்பர்களே ; அந்நாட்களது கதம்பக் கூட்டணி ஸ்பெஷல் இதழ்கள் இனி ஒருபோதும் சாத்தியமே ஆகாது ! படைப்பாளிகள் அதற்கொரு strict no சொல்லி ஏக காலமாகிவிட்டது ! வேண்டுமெனில் போனெல்லியின் நாயகர்களை மட்டும் இணைத்து ஸ்பெஷல் இதழாக்கிடல் சாத்தியம் - நடப்பாண்டில் தீபாவளி மலரைப் போல !

   Delete
 21. தனியொருவன்: இவர் ரொம்ப நேர்மையாக இருக்கிறார். யாராவது ஏதாவது சொன்னால் அப்படியே நம்பி விடுகிறார். யாருடனாவது சண்டை என்றால் அவரை உயிருடன் பிடிக்கிறார், அவன் எவ்வளவு பெரிய கொலைகாரனாக இருந்தால் கூட; அவ்வளவு ஏன் நேரடி மோதலில் கூட எதிரியை கொல்லாமல் உயிருடன் கைது செய்யவே விரும்புகிறார். மிகவும் நேர்மையான ஒரு ரேஞ்சர்.

  எனது தற்போதைய ஆர்வம் எல்லாம் இவர் அடுத்த கதைகளில் எதிரியை தனது துப்பாக்கியால் கொல்வாரா? தனது முகமூடியை கழற்றுவாரா என்பதே.

  மிகவும் வித்தியாசமான திறமையான கௌபாய். விரைவில் இவரின் அடுத்த கதைகளை வெளியிடுங்கள் யுவர் ஆர்னர்.

  ReplyDelete
 22. டியுரங்கோ: வேட்டையாடு விளையாட்டு: வழக்கம் போல் அதகளம்.

  ReplyDelete
 23. I am catching up 6 months old books.
  Jeramaiah - சும்மா பட்டைய கிளப்பிடிச்சி. That too the story where people can stay young with a serum - simply awesome.
  Thorgal - Time travel story vera level, went back to old post to read other people reviews and to understand the story.
  All color Tex short stories - Short and sweet with an impact.
  Tex in Vikings island - முடியல்ல, தம்முகட்டி படிச்சி முடிச்சாச்சி.
  Mack and Jack (gorilla dance) - Ok, from editors buildup thought it will be rip roaring comedy but not bad. In fact I liked their first album (gorilla for rent) better than this one.
  Lucky Luke (மேடையில் மன்மதன்) - As usual good comedy and gave a relief.
  Currently reading Mr X - நல்லாதான் போகுது

  ReplyDelete
  Replies
  1. //Jeramaiah - சும்மா பட்டைய கிளப்பிடிச்சி. That too the story where people can stay young with a serum - simply awesome.// Editor sir one more person in the Jeremiah group.

   Delete
  2. குமார் @ yes. Good catch. One more Jeremiah comics lover.

   Delete
  3. //one more person in the Jeremiah group//

   இந்த க்ரூப்பின் எண்ணிக்கையானது ஒரு கையெழுத்துப் பத்திரிகையின் சர்குலேஷனுக்கு இசைவான நம்பராய் மாத்திரமே இருப்பதில் தானே சார் சிக்கலே ?!

   Delete
  4. நான் இன்னும் ஜெராமியா ஆதரவு பட்டியலில் தான் உள்ளேன்.

   Delete
 24. லியனார்டோ தாத்தா - டபுள் ஓகே..

  சாகச வீரர் ரோஜர் - 50:50

  ப்ரூனோ ப்ரேசில் 2.0 - டபுள் ஓகே

  Random Reads #1,2,3,4 - நீங்க பார்த்து எது செஞ்சாலும் ஓகே

  Random Reads #5 - ஓகே.. ஓகே..

  அப்புறம்..

  மே மாதத்து இதழ்கள் அனைத்துமே நன்றாக இருந்தன..

  பராகுடா - 10/10
  டியூரங்கோ - 10/10
  லோன் ரேஞ்சர் - 9/10
  டெக்ஸ் - 8/10 ( எங்க கார்சனை தம்பியை மாட்டி விட்டதுக்கு )

  ReplyDelete
  Replies
  1. கார்சன் உங்களுக்கு தம்பியா 😱

   அப்படீன்னா உங்களுக்கு என்ன வயசாகுது பாசு 🤷🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️
   .

   Delete
 25. காலை வணக்கம் சார் மற்றும் நண்பர்களே 🙏🏼

  பெரிய பதிவு படிச்சிட்டு அப்பாலிக்கா ஒஸ்தானு 🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️
  .

  ReplyDelete
  Replies
  1. அப்பாலிக்கா ஒஸ்தாந்த மாதிரித் தெரியக் காணோமே ? இன்னுமா படிச்சிட்டு சார் ?

   Delete
 26. ரோஜர் ஓகே..

  ப்ரூனோ பிரேசில் ஓகே..

  தாத்தா வேண்டாம்..

  எவ்வளவோ நாயகர்கள் உள்ளனர்.
  அவர்களின் கதைகளை ஒன்றிணைத்து ஸ்பெஷல் ஒன்று போட்டால் நன்றாயிருக்குமே....

  ReplyDelete
  Replies
  1. கூட்டணிகளுக்கு வாய்ப்புகளே லேது சார் ; படைப்பாளிகளின் சம்மதமில்லை அதற்கு !

   Delete
 27. ட்யுரங்கோ நேர்கோட்டு கதை. படித்து முடித்து விட்டேன். அட்டகாசம்.

  தனியொருவன்: நேர்கோட்டு கதை. நுணுக்கமாக பல விஷயங்கள் மற்றும் வசனங்கள் (அதுவும் முதல் கதை) மிகவும் ஈர்த்தது. எனவே படித்து முடிக்க நான்கு நாட்கள். இந்த வருடத்தின் அருமையான அறிமுகம்.

  பராகுடா: இந்த வார வாசிப்புக்கு.‌கண்டிப்பாக ஒருவாரம் இதனோடு தான்.

  ReplyDelete
  Replies
  1. இதனால் சொல்ல வருவது என்னவென்றால் கோடைமலர் தேவை. குண்டு புத்தகங்கள் தேவை; அவைகளை குறைத்து விட வேண்டாம்.

   Delete
  2. நான் குறைக்கிறேனோ இல்லையோ ; "இதையெல்லாம் படிக்க என்னத்தே நேரம் கிடைக்கப் போகுது ?" என்ற எண்ணத்தில் வாசகர்கள் தம் தேர்வுகளைக் குறைத்திடக் கூடாதே என்ற ஆதங்கம் தான் சார் !

   Delete
 28. தாத்தா ...

  மனதுகுள்ளேயே அவருக்கு இடம் கொடுப்பது தான் நாம் அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் சார்..:-)


  ரோஜர்....கதைகளனை பார்த்து விட்டு நீங்களே முடிவு செய்யுங்கள் சார்..


  ப்ரூனோ ப்ரேசில் 2.0 :

  வரவேற்கிறேன் சார்...

  ReplyDelete
  Replies
  1. தலீவரே..
   ஏனோ உங்க கழுத்தைப் பிடிச்சு நெறிக்கணும்போல ஆச ஆசையா வருதுங்க தலீவரே!!

   Delete
  2. //ஏனோ உங்க கழுத்தைப் பிடிச்சு நெறிக்கணும்போல ஆச ஆசையா வருதுங்க தலீவரே!!//

   +1

   Delete
  3. நம்ப செல்வம் அபிராமிய என்ன செய்யலாம்.... விஜய் :-)

   Delete
  4. ///நம்ப செல்வம் அபிராமிய என்ன செய்யலாம்.... விஜய் ///

   எத்தனை நாளைக்குத்தான் டாக்டராவே இருப்பார்.. கொஞ்சநாளைக்கு பேஷண்ட் ஆக்கிப்புடுவோம்!!

   Delete
  5. செயலர் அன்ட் பெங்களூர் பரணி அவர்களே ..

   வயதானவர்களை நடக்க வைத்து சிரம்படுவதை பார்த்து ரசித்து சிரிக்கும் அவ்வளவு கொடூரமானவர்களா நீங்கள்..

   அய்யகோ...!!

   Delete
  6. பொருளாளர் அவர்களே...

   கொஞ்ச நாளைக்கு உங்களுக்கும் "பதுங்கு குழி " தேவைப்படும் போல...

   நானிருக்க பயமேன்..

   எத்துனை மிரட்டல்கள் வந்தாலும் உண்மையை உரக்க சொல்வோம்..வாருங்கள்..

   ( வரும்பொழுது மறவா
   மல் கொஞ்சம் பேன்ட்ஏஜ் கொண்டுவந்து விடுங்கள் ஜீ.)

   Delete
  7. வயதானவர்களை நடக்க வைத்து குதிக்க வைத்து அவர்களின் குழந்தை பருவத்திற்கு அழைத்து
   அவர்களை மகிழ்விக்க விரும்புவர்கள் நாங்கள்.

   Delete
  8. மீண்டும் வேற "அய்யகோ..".:-)

   Delete
  9. என்னாது.....
   லியோனார்டோ வேணாமா.....


   தூக்குதொர.... ஸ்டார்ட் . ஆக் ஷன்....


   Delete
  10. ஆண்டவா இவருமா...

   பதுங்கு குழி இன்னும் ஆழமா தோண்டனும் போல..:-(

   Delete
 29. காலை வணக்கம் ஆசிரியரே,நண்பர்களே
  இன்றைய சென்னை தினமலர் பேப்பரில்
  படிக்கலாம் வாங்க பகுதியில் நமது
  டெக்ஸ் வில்லரின் புனித பள்ளத்தாக்கு
  படத்துடன் லயன் காமிக்ஸ் பற்றிய
  சிறு முன்னோட்டமும் பழைய கதாநாயகர்களை மறக்காமல் மறுபதிப்பு
  செய்யுமாறும் சிறிய செய்தி ஒன்று
  வெளியாகி உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. வாவ்..வாழ்த்துகள்..

   Delete
  2. Yes sir...போன வாரமே அவர்களது சப்-எடிட்டர்களுள் ஒருவர் போன் செய்து தகவலைப் பகிர்ந்து கொண்டார் ! தின மலருக்கு நமது கரம்கூப்பிய நன்றிகள் !

   Delete
 30. Bruno Brazil well well come come....Even reprints are welcome." Appolo Padalam".. Unforgettable artwork sir.

  ReplyDelete
  Replies
  1. Artwork வில்லியம் வான்ஸ் ஆச்சே சார்...சோடை போகுமா ?

   Delete
 31. லியனார்டோ...நோ..புதிய கார்ட்டூன் அறிமுகம் இயலுமா சார்?

  ரோஜர்..நோ..

  புருனோ ப்ரேசில் 2.0 ..புது கதை என்பதால் டபுள் ஓகே..

  ReplyDelete
  Replies
  1. புதுசுகளுமே smurfs ; பென்னி ; ரி.டி.கே ; லியனார்டோ தொடர்களை விட ஆகப் பிரமாதமாய் இருக்கும் வாய்ப்புகள் சொற்பமே சார் - maybe with the exceptions of Asterix ; Tintin ! நம்மவர்களின் கார்ட்டூன்களுக்கான அளவுகோல்கள் ரொம்ப ரொம்ப lofty எனும் போது ஒரு சதவிகிதம் குறைவானாலுமே கவுண்டரின் வேகத்தில்..."ஏய்..நீ ரிஜிட் !!" என்று முத்திரை போட்டு விடுகின்றனரே !

   Delete
 32. //இரண்டே ஆல்பங்கள் (இது வரையிலும்) உள்ள இந்தத் தொடர் சற்றே dark ஆன ரகம் ; but ஒரு ஜாலியான சித்திர பாணியுடன் !//

  மூன்றாவதும் இந்த வருடம் வந்துவிட்டது போல் தெரிகிறது சார்..!

  Stern 01 - The Undertaker, the Vagrant, and the Assassin
  Stern 02 - City of Savages
  Stern 03 - The Real West

  ReplyDelete
  Replies
  1. Yes sir...# 3 இந்த ஜனவரியில் வெளியாகியுள்ளது !

   Delete
 33. நீங்கள் அபிப்பிராயம் கேட்டு இருக்கும் அனைத்து காமிக்ஸ்களுக்கும் வர வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

  ReplyDelete
  Replies
  1. சிம்பிளா முடிச்சிட்டிங்களே சார் !

   Delete
 34. லியனார்டோ.. - யெஸ்ஸூந்தே.. நோவுந்தே..

  ரோஜர்.. - பெத்த நோ..

  ப்ரூனோ ப்ரேசில் - டபுள் ஓ.கே.!

  ReplyDelete
  Replies
  1. KOk....

   ஜும்மா ஜொள்ளூ வுட்டது போதும்....

   புது கதையில அவுரு பேச்சிலராம்ப்பா....

   அந்த பாப்கட்டிங்க் கார பொம்மனாட்டி இதுல நஹி....

   Delete
 35. நீங்கள் யூகித்த காரணம் கிட்டத்தட்ட எல்லோருக்கும் பொருந்தும் என தோன்றுகிறது.....


  இவ்வருட கோடைத்துவக்கம் முதலே குடும்பத்தின் மேல் அதிக அக்கறையும் நேரமும் செலுத்தவேண்டிய சூழ்நிலை..

  மினி டெக்ஸ் & தனியொருவனில் முதல் அத்தியாயம் படித்ததுடன் நிற்கிறது..

  வரும் வாரம் ப்ரீதான்..

  ReplyDelete
  Replies
  1. ///இவ்வருட கோடைத்துவக்கம் முதலே குடும்பத்தின் மேல் அதிக அக்கறையும் நேரமும் செலுத்தவேண்டிய சூழ்நிலை..///

   அப்படீன்னா இத்தனை நாளும்?!!! :D

   Delete
  2. அதுமட்டுமா குழந்தைகளை அதே பள்ளியில் படிக்க வைக்க வேண்டுமா ,வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டுமா ,அதே யூனிபார்மா ,வேறு யூனிபார்மா ,பள்ளி வாகனம் வேண்டுமா வேண்டாமா ,

   அலைச்சல் ,அலைச்சல்..அலைச்சல்..

   Delete
  3. தலீவரே....ஒன் டவுட் ...! ஒரு நேரம் Baranitharan K என்ற பெயரில் பின்னூட்டங்கள் ; அப்பாலிக்கா Paranitharan K என்றும் !! ரெண்டுமே நீங்க தானா ? அல்லது உங்களுக்கும் டபுள் ஆக்ட் அரங்கேறுதா ?

   Delete
  4. :-))))


   ரெண்டுமே நான் தான் சார்..ஒரு பத்து தினத்திற்கும் மேல் நோ இணையம்..நோ...போன்..

   இப்பொழுது மீண்டும் வந்து அந்த ஐடியை செயல்படுத்தினால் செயல்பாட்டுக்கு வரவில்லை சார்..எனவே புது ஐடி ஓப்பன் செய்தவுடன் paranitharan இப்பொழுது Baranitharan ஆகி விட்டார் ...


   எனக்கெல்லாம் "டூப்ளிகேட் " போடற அளவுக்கு இன்னும் வளரலை சார்..:-)

   Delete
 36. ///சிமெண்டாலும், கம்பிகளாலும் செய்யப்பட்டதொரு பென்ச் ! Yes, ஒரு பப்ளிக் பூங்காவில் ‘தேமே‘ என ஒரு ஓரமாய் கிடக்கும் பென்ச்சின் பார்வையில் உலகைச் சித்தரித்துள்ளார் கதாசிரியர் !!///

  நாலு வருசத்துக்கு முன்னுக்க நானு இஸ்கூல்ல படிச்சிட்டு இருதப்போ ..

  (சிரிக்கிறதுக்கு இடைவெளி)


  தென்னை தன் வரலாறு கூறுதல் ,ஆறு தன் வரலாறு கூறதல்னு துணைப்பாடத்துல படிச்ச ஞாபகம் இருக்குது..!
  இப்போ ஒரு பார்க் பெஞ்சு தன்னோட பார்வையில கதையை சொல்லுதுன்னா... நம்மளை மாதிரி இளசுகளுக்கு ஏதோ சேதி இருக்கும்னு தோணுது..
  ஆகையினால எடிட்டர் சார்...

  அந்த பெஞ்சு கதையை அடுத்த ஜம்போவுல சேத்திவிட்ருங்க சார்.. எங்களைப்போன்ற பதின்பருவத்தாரின் பாராட்டுகள் உங்களுக்கு ஏராளமாக கிடைக்கும்..!

  ReplyDelete
  Replies
  1. ///எங்களைப்போன்ற பதின்பருவத்தாரின் பாராட்டுகள் உங்களுக்கு ஏராளமாக கிடைக்கும்..! ///

   ஏராளமா கிடைக்க வாய்ப்பில்லை! நீங்க, நான் மற்றும் அகில் மட்டும்தான்! ;)

   Delete
  2. எனக்கு ஒரு சீட்டு போடுங்க செயலரே..

   Delete
  3. சைக்கிள் கேப்பில தலீவரும் கிடா வெட்டப் பாக்குறாரே ?

   Delete
  4. நான் அவுகளை விட சின்ன பையன் சார்...

   ஆனா ஒத்துக்க மாட்டாங்க..

   பொறாமை..:-)

   Delete
  5. எனக்கு சீட்டெல்லாம் வேண்டாம். ஏன்னா எனக்கு பஸ்லயே அரை டிக்கட் தான்.

   Delete
  6. என்னா தெகிரியம்...
   இங்கன நா ஒரு சின்னபையேன் இருக்குறதே தெரியலையா...

   Delete
  7. இப்பவும் நான் இடுப்புலதான்
   இருக்கிறதால பஸ்சுலஎனக்கு டிக்கட் நஹி.
   ஹிஹிஹி.
   யாரோடன்னு கேக்க கூடாது.

   Delete
  8. @ KVG ji

   ஹா ஹா ஹா!!! செம்ம்ம்ம!! :))))))))

   Delete
 37. வாரிசுகளிடம் காமிக்ஸ் ஆர்வம் வருவதற்கு என்று அவர்களிடம் காமிக்ஸ் புத்தகத்தை கொடுப்பது உண்டு.அவர்களும் சிறிது நேரம் புரட்டி பார்த்து படத்தை ரசித்து சிறிது நேரத்தில் வைத்து வி
  டுவதும் உண்டு.
  இப்பொழுது சிறிது சிறிதாக தமிழில் எழுத்து கூட்டி வாசிக்கும் பழக்கமும் வந்து விட்டது.

  போன வருடம் ஈரோடு புத்தக காட்சி சமயம் வருகை தந்த ஷெரீப் அவர்கள் டெக்ஸ் வில்லரின் அட்டகாச சிலையோடு கூடிய ஒரு இத்தாலி ஒரிஜினல் இதழை பரிசாக அளித்து இருந்தார்..அந்த டெக்ஸ் வில்லர் சிலையின் காரணமாக மகனும் டெக்ஸ் பற்றி வினவி டெக்ஸ் பரிச்சியமாகி விட்டார்.மேலும் டெக்ஸ் புத்தகங்களை ( மட்டும் ) எடுத்து அடிக்கடி புரட்டி பார்ப்பது உண்டு.இந்த மாதம் பார்சல் கைக்கு கிடைத்து பிரித்தவுடன் கைக்கு அடக்கமான அந்த மினி கலர் டெக்ஸ் இதழ் தலை காட்டியவுடன் ..ஐ..டெக்ஸ் புத்தகம் எனக்கு என முதலில் எடுத்து கொண்டான்.

  ஒரு நாள் முழுவதும் அந்த இதழ் அவனின் கைகளில் தான் தவழ்ந்து கொண்டு இருந்தது. நேற்று அவரின் அம்மா ஏதோ திட்டி விட கோபமாக படுத்து கொண்டவன் ..சிறிது நிமிடத்தில்
  வேகமாக இறங்கியவன் கட்டில்க்கு அடியில்..,சோபாவிற்கு அடியில் என குனிந்து தேட ஆரம்பிக்க சிறிது நேரம் கவனித்த நான் என்னடா தேடுற என வினவ என்னோட டெக்ஸ் புக்கு எங்கே என்றான்.மனதுக்குள் சிரித்தவாறே பீரோவில பாரு முன்னாடியே இருக்கும் என பதில் உரைத்தவுடன் பீரோவை திறந்து கலர் டெக்ஸை எடுத்தவுடன் நேராக படுக்கையில் படுத்தவாறு உண்மையாகவே டெக்ஸ் புக்கை நான் படிப்பது போலவே படிக்க ஆரம்பித்து விட்டான்.ஓரக்கண்ணால் அவனையே கவனிக்க ஒவ்வொரு பக்கமாக ,ஒவ்வொரு வரியாக எழுத்து கூட்டி படிப்பதை அறிய நேர்ந்தது. உண்மையிலே அந்த சமயம் எனக்குள் மனதிற்குள் அவ்வளவு சந்தோசம்...,மகிழ்ச்சி.
  ஆனால் அரைமணி நேரத்தில் நாலுபக்கம் தான் படித்து இருப்பான்.பிறகு என்னிடம் வந்து பேனா கேட்க ...பேனா எதுக்குடா என வி
  னவ இல்ல..இதுவரைக்கும் படிச்சுட்டேன்.இந்த பக்கத்துல குறிச்சு வைக்கனும்..மீதியை நாளைக்கு படிக்கனும் என்றான்.எனக்கு மட்டுமல்ல அவரின் அம்மாவிற்கும் சிரிப்பு தான்..

  நீங்கள் டெக்ஸை பற்றி இந்த பதிவில் எழுதியவுடன் நேற்று நடந்த இந்நிகழ்வை பகிர வேண்டும் என்று தோன்றியதால் இந்த பதிவு சார்..

  மேலும் எனக்கு தெரிந்த சில நண்பர்களின் இல்லத்திலும் பெண்களும் ( சில நண்பர்களின் மனைவி..சில நண்பர்களின் மகள் ) டெக்ஸை விரும்பி படிப்பது அறிந்தே உள்ளேன்.


  7 முதல் 77 வரை விரும்பும் ஒரு நாயகன் டெக்ஸ் என்பது மறுக்க முடியா நிஜமே சார்..

  ReplyDelete
  Replies
  1. குழந்தைகள் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்து சந்தோஷம்.

   Delete
  2. //அரைமணி நேரத்தில் நாலுபக்கம் தான் படித்து இருப்பான்.பிறகு என்னிடம் வந்து பேனா கேட்க ...பேனா எதுக்குடா என வினவ //

   தலீவரே....வாரிசும் பேனா கேட்கிறாராஆஆ ? ஒரு நிமிஷம் எனக்கு 'பக்கோ'ன்னு ஷாக் ஆயிடுத்து !!

   Delete
 38. லியனார்டோ - எஸ் எஸ் எஸ் எஸ் எஸ் எஸ் ப்ளீஸ் . லியனார்டோ வெறுக்கும் மக்களே, இதுலே என்னத்தையா குறையை கண்டீங்க ?

  சாகஸ வீரர் ரோஜர் - இவரு மொக்கை, ப்ளீஸ் வேண்டாம்.

  ப்ருனோ ப்ரேசில் - One ஷாட் ஒகே

  Random Reads

  1 ஸ்டெர்ன் - ரொம்ப இன்டெரெஸ்ட்டிங், கொண்டு வாங்க
  2 Space adventure - டாக்குமெண்டரி ஸ்டைல் வேண்டாம்
  3 பெஞ்ச் - கண்டிப்பாக வேண்டும்
  4 வாள்சண்டை வீரன் - வேண்டும் வேண்டும்
  5 Sci - fi , adventure - இது இந்த கேள்வி லிஸ்ட்லேயே வந்து இருக்க கூடாது, நீங்களே இதை டிக் பண்ணி இருக்கணும். விஜயன் சார், Sci - fi நாலே நீங்க குதி கால் பிடரில்ல அடிக்க தூரமா ஓடுவீங்க, நீங்களே கேட்டு இருக்கீங்க, அப்ப நல்லா தான் இருக்கும். வெறும் கௌ பாய் முட்டும் (75%) ஆட்சி செய்யும் நம்ம வறண்டு போன காமிக்ஸ் உலகில் சயின்ஸ் பிக்ஷன் கொண்டு வாங்க ப்ளீஸ்...

  ReplyDelete
  Replies
  1. //வெறும் கௌ பாய் முட்டும் (75%) ஆட்சி செய்யும் நம்ம வறண்டு போன காமிக்ஸ் உலகில் சயின்ஸ் பிக்ஷன் கொண்டு வாங்க ப்ளீஸ்...//

   கௌ பாய் களங்களிலும் நம்மவர்களின் ரசனைகள் ரொம்பவே pointed நண்பரே ; குதிரையில் ஏறுபவரெல்லாம் சாதிப்பதில்லையே ! So sci -fi என்றதொரு மெகா ஜம்புக்கு ஓரளவுக்கேனும் தயாராகிக் கொள்ளாது, "உப்புமூட்டை ஏறிக்கோங்க..ஒண்ணா எகிறிக் குதிப்போம்....அத்திரிபாச்சா !" என்று நான் முனைந்தால் விளைவுகள் 50 - 50 தான் சார் ! சில்லுமூக்கு ஏகமாய் சேதமாகிடலாம் ; அல்லது புது ரசனைக்கு டிக் விழவும் செய்யலாம் ! சிறுகச் சிறுகவே மாற்றங்களுக்கு நம்மவர்கள் உடன்படுவர் என்பதில் எது இரகசியம் sir ?

   Delete
 39. 1.தாத்தாவுக்கும், அல்லக்கை அசிஸ்டெண்டுக்கும் இன்னொரு வாய்ப்பு தரலாமா ?

  A BIG NO ...

  2.ரோஜர் 2.0 கதைகளும் doing reasonably well ! அவற்றைப் பரிசீலனை?

  உங்கள் விருப்பம் சார் ...

  3.இந்த முதலைப் பட்டாளம் 2.0க்கொரு புக்கிங் போட்டாலென்ன guys ?

  Try பண்ணலாம் சார் ..

  Random Reads # 4 and 5:

  One line கேக்கும் போது நல்லா இருக்கும்னு தோணுது சார் .. ur choice sir ..

  ReplyDelete
  Replies
  1. அடடே ...தாத்தாவை ரசிக்க முடியலையா சார் ?

   Delete
  2. தாத்தா கதை சொன்னா புடிக்குது சார்...

   அத்த தாத்தாவே கதைல வத்தாதான் கொஞ்சம் "
   டர்ர் " ஆகுது சார்..

   Delete
  3. சத்தியமா முடியல சார் ..

   Delete
  4. ஈ ரோஜருக்கும்...ஆயாள் .....புருனோவுக்கும்...மட்டும் ...16 வயசோ....எண்ட குருவாயூரப்பா.....

   Delete
 40. முடிவிலா மூடுபனி - நல்ல கதை, கிராபிக் நாவல் டெம்ப்ளட்டில் வந்த கதை. எனக்கு சில பகுதிகள் விளங்க வில்லை.

  1) மினிஸ்டருக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை. சரி தானே?
  2) இன்ஸ்பெக்டர் கொலை செய்யும் அந்த திருடன் தான் அவர் மனைவியை கொன்றவன். சரியா ?
  3) அந்த அப்பாவியாய் தெரிந்த மனிதன் தான் ஜெப்ராயினை கொன்றது. சரி தானா ?

  சிகரங்களின் சாம்ராட் - சொல்ல வார்த்தைகளே இல்லை, தோர்கள் என்றாலே சிகரம் தான்.

  நிழலும் நிஜமும் - ஜேம்ஸ் பாண்ட், செம ஹிட், version 2.௦, மாஸ் ஹிட்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுடைய அனுமானங்கள் அனைத்தும் சரியானவை. மினிஸ்டர் கொலைகாரன் இல்லை. அந்த திருடன் தான் இன்ஸ்பெக்டர் உடைய மனைவியைக் கொன்றவன்.

   Delete
 41. 1. குளிர்காலக் குற்றங்கள் - ஜானதன் கர்ட்லாண்ட், கதையும் பெரிய விசேஷம் இல்லை, ஆக்ஷன் காமெடி பெரிதாக இல்லை, ஆனால் மோசம் என்றும் சொல்ல முடியாது. ஒரு முறை படிக்கலாம்.

  2. பச்சோந்திப் பகைவன் - கதை பெரிய பரபரப்பு இல்லை, பச்சோந்தி பகைவன், ஒரு குள்ளநரி, மற்ற டெக்சின் எதிரிகள் போல பெரிய ஆள் இல்லை ஆனால், இவன் கழுவற மீன்ல நழுவற மீன்.

  3. மரண வைரங்கள் - கேப்டன் பிரின்ஸ் கதைகள் மட்டும் எப்படி இப்படி பரபரப்பாக இருக்கிறது. இதுவும் ஒரு டைனமைட். முதல் முறையாக படிப்பதினால் மிகவும் ரசித்தேன்.

  4. பரலோகத்திற்கொரு படகு - லக்கி லூக்கின் முக்கியமான கதை, 20 / 20 இல் 100 அடித்தது போல சூப்பர் ஹிட். வாய் விட்டு சிரித்த இடங்கள் பல.

  5. Tex கலர் மினி - பெரிய பெரிய குண்டு டெக்சில் கூட மொக்கை உண்டு ஆனால் இந்த மினி அணு குண்டை என்ன வென்று சொல்லுவது. இதுவரை நான் படித்த எல்லா டெக்ஸ் கதைகளை விட, இந்த சிறு கதைகள் தான் ரொம்ப புடித்து இருக்கிறது. விரட்டும் விதி மினி அண்ட் திஸ், தி பெஸ்ட். அண்ட் இந்த புக் சைஸ் format நன்றாக இருக்கிறது.

  1. மண்ணில் துயிலும் நட்சத்திரம் - மறைத்து வைத்த ஒரு ரகசியம் வெளி படுகிறது, அது எப்படி வெளிப்பட்டு அதை மூடி மறைத்தவரையே முடிக்கிறது என்பதே கதை.
  2. புனித பள்ளத்தாக்கு - அமானுஷ்ய பள்ளத்தாக்கு எப்படி டெக்சின் உயிரை பாதுகாத்து, துஷ்டர்களை அழிகிறது என்பது கதை.
  3 யார் அந்த மரண தூதன் - ஓஹோ வாவ் , டெக்சின் கதைகளிலே இது ஒரு வித்தியாசமான கதை, இது ஆங்கில படமான - The Hateful eight கதையை நினைவூட்டியது. ஒரு கோச்சில் 5 பயணிகள் - அதில் ஒரு கொலைகாரன், சரியான நேரத்திற்குள் கண்டு பிடிக்க வேண்டும். அதிரி புதிரி கதை

  ReplyDelete
  Replies
  1. // Tex கலர் மினி - பெரிய பெரிய குண்டு டெக்சில் கூட மொக்கை உண்டு ஆனால் இந்த மினி அணு குண்டை என்ன வென்று சொல்லுவது.//

   Very true...

   Delete
 42. அனைவருக்கும் வணக்கம் இம்மாத இதழ்கள் அனைத்தும் அருமை. ஒரு அதிரி புதிரியான மாதம் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த வருட ஈரோடு ஸ்பெஷல் அறிவிப்பு கடந்த ஆண்டுகள் போல் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணவில்லை என்றே நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Of course - 18 பாக இரத்தப் படல மெகா தொகுப்போடு போட்டி போட சான்ஸே இல்லை என்பது தெரிந்தது தானே ? But அதை ஈடு செய்திட இன்ன பிற திட்டமிடல்கள் கைவசமுள்ளன !

   Delete
  2. அப்படீன்னா ஒரு மூணு கதைகள்
   உள்ள ஸ்பின்ஆஃப் கதைகளை
   கண்ணைமூடிக்கிட்டு
   அறிவிச்சுடுங்க.ஈரோட்டுக்கு.

   Delete
 43. ரோஜர் 200பக்க ஸ்பெஷல் ஆல்பம் podalaame?
  முதலை பட்டாளமும் ஓகே
  தாத்தா வுக்கும் கடைசி வாய்ப்பு கொடுக்கலாம் 500வது birthday என்பதால்

  ReplyDelete
  Replies
  1. 500 வது பர்த்டே தாத்தாவுக்கு அல்ல சார் ; தாத்தாவின் role மாடலான இத்தாலிய ஞானிக்கு !

   Delete
  2. தா....
   தா....
   தா..
   தாத்தா...
   தாத்தா....
   தாத்தா..

   Delete
 44. 1. லியானார்டோ - கார்ட்டூன் எந்த வடிவத்தில் இருந்தாலும் எனக்கு ஓகே சார். புதிதாக யாரையாவது அறிமுகப்படுத்தினால் இன்னும் சந்தோஷம்...

  2. ரோஜரின் கதைகள் என்றாலே பயங்கர புராதானம்... 2.0 எப்படி என்று தெரியவில்லை... வேண்டாம் என்று நினைக்கிறேன்...

  3. ப்ரூனோ பிரேசில் கதைகள் நன்றாக இருந்தால் ஓகே.

  ReplyDelete
  Replies
  1. //புதிதாக யாரையாவது அறிமுகப்படுத்தினால் இன்னும் சந்தோஷம்...//

   Smurfs ; பென்னி ; லியனார்டோ ; ரின்டின் கேன் - பரண் சென்றுள்ள தொடர்கள் அனைத்துமே வெகு சமீபத்து அறிமுகங்கள் தானே சார் ?

   Delete
 45. //லக்கி லூக் போலான breezy cartoon reads இதற்கு சூப்பராய் சுகப்படும் என்பது போன மாதத்து முதல் வாரப் பின்னூட்டங்களை நினைவு கூர்ந்திடும் போது புரிகிறது//
  என்னதான் அட்டகாசமாக கதைகள் ஹிட் அடித்தாலும் கார்ட்டூன் ஒவ்வொரு மாதமும் கட்டாயம் வேண்டும்... வேண்டும்... வேண்டும்.... வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. வேண்டாம்..டாம்..டாம்...என்றும் சம வேகத்தில் குரல்கள் ஒலிப்பது தானே சிக்கலே ?

   Delete
 46. Chaboute's Park bench could be a great thing to happen to Tamil comics. But it could be another "Brodeck's Report" aka நிஜங்களின் நிசப்தம் if done now.

  ReplyDelete
  Replies
  1. நிஜங்களின் நிசப்தத்தின் அரைப் பங்கு வெற்றியை ஈட்டினாலுமே smash hit தானே ? All the more reason to consider it even more actively !!

   Delete
 47. // வன்மேற்கின் மிகைப்படுத்தப்பட்ட முகங்களே நம் மனதில் பதிந்து போய் விட்டதாலோ - என்னவோ , அதன் யதார்த்த மறுபக்கத்தை அவ்வளவாய் நம்மால் ரசிக்க முடியவில்லை போலும் ! கமான்சே ; கார்ட்லேண்ட் & இந்த LONE RANGER //

  பவுன்சர், கமான்சே, கார்ட்லேன்ட் ok சார்...


  தனி ஒருவன் ஒரு எதார்த்த ஹீரோ என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை சார்.... உயிரை எடுக்கும் எதிரிகளின் கைகளை மட்டுமே குறிவைக்கும், முகமூடி அணிந்த ஒரு கௌபாய் சூப்பர் ஹீரோவாகத்தான் அவரை கதாசிரியர் சிருஷ்டித்திருக்கிறார் என நினைக்கிறேன். சிறு குழந்தைகள் அவர் புகழ் பேசும் இடத்திலும், அவர் செல்லும் இடத்திள் எல்லாம் அவர் புகழ் பரவி இருப்பதை காணும் போதிலும் அதுவே வெளிப்படுகிறது. கூடவே அவரது செவ்விந்திய தோழன் வெளிப்படுத்தும் ஹீரோயிசமும் கண்டிப்பாக இது யதார்த்த கதை அல்ல சூப்பர் ஹீரோ story என்ற வகையில் நான் எடுத்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Not really sir....கதையோட்டம் இன்னும் pan out செய்திட அவகாசம் தந்து தான் பாருங்களேன்....உள்ளுக்குள் ரொம்பவே பயங்கள் ; குழப்பங்களோடு ஜீவித்து வரும் ஒரு இளம் நீதிக்காவலன் வெளிப்படுவான் ! And செவ்விந்திய சகா டோண்டோ LONE ரேஞ்சரை எவ்விதம் பரிணாம வளர்ச்சி காண உதவிடுகிறார் என்பதையும் பார்த்திடுவீர்கள் !

   Delete
  2. அவரோட பரிணாம வளர்ச்சி இருக்கட்டும்......


   நாம் எப்ப வளர்றது....
   என்றும் பதினாறு மாதிரி...
   குண்டு டெக்ஸ் சட்டிக்குள்ளயே எத்தனை காலம் குருதய ஓட்றது...

   Delete
  3. கட்டாயமாக சார்! Lone ரேஞ்சர் அடுத்த வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்...

   Delete
 48. I ordered may issues on 3rd may,,still not received,, tracking details pld

  ReplyDelete
 49. Dear Sir,

  //ஈரோடு புத்தகங்களின் விலை மாற்றம் சற்றே ஏமாற்றம் தான் சார்.

  24 மார்ச் பதிவில் முன் பதிவிற்கு 360 என்று கூறிவிட்டு போன பதிவில் அது ஈரோடு வந்தால் மட்டும் தான் என மாற்றிவிட்டீர்கள்.//

  Apologies if the question is answered, could you please tell me the reason for the sudden increase in price.
  The irony is those who not prebook and comes to any book fair can get the same for 540rs post discount.

  Hope I get an answer.

  Thanks in Advance.

  ReplyDelete
 50. தாத்தாவிற்கு பதில் பென்னிக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் சார்...

  என் வயது தோழன் வேறு...:-)

  ReplyDelete
  Replies
  1. அந்த மூக்கு சளிக் காரேன் வேணாம்பா....

   Delete
 51. ட்யூராங்கோ...

  பராகுடா ...


  இரண்டுமே வேற லெவல் சார்..

  பராகுடா இரு தொகுப்புகளையும் ஒட்டுமொத்தமாக படித்து முடித்தவுடன் ஏற்பட்ட ஓர் அனுபவம் விவரிக் முடியா ஒன்று...அட்டகாசம்..கதையில் தான் எத்துனை எத்துனை மாந்தர்கள் ..ஆனால் ஒவ்வொருவரும் மறக்க முடியா மாந்தர்கள்..அவர்கள் நல்லவர்களோ ,தீயவர்களோ அதகளபடுத்தி விட்டார்கள் ஒவ்வொருவருமே...

  பராகுடா சாகஸங்கள் இன்னமும் தொடர்கிறதா இல்லையா என தெரியவில்லை...ஆனால் இருப்பின் உடனடியாக களம் இறக்க பாருங்கள் சார்..

  ReplyDelete
 52. ட்யூராங்கோ...

  ஒரே வார்த்தை..


  இன்னொரு டெக்ஸ்...


  செம...

  ReplyDelete
  Replies
  1. யெஸ்....

   ஆனா டெக்ஸ் ஜம்பமா பேசியே கொல்லுவாரு.....

   Delete
 53. அன்பு ஆசிரியருக்கு வணக்கம் புதிய கதைகளைப் பற்றிய அறிவிப்புகள் படித்தவுடன் மிகவும் சந்தோஷம் அடைந்தேன். புது வரவுகளை முயற்சி செய்து பார்க்கும்போது பல்வேறு புதிய களங்களை காண முடியும்.
  அதே சமயம் நமக்கு ஏற்கனவே அறிமுகமான பல கதாநாயகிகள் கதாநாயகர்கள் கதைகள் நம் மனதுக்கு மிகவும் பிடித்தமாக இருந்தது அவர்களது கதைகளில் சிறந்த கதைகளை வெளியிட்டால் அனைவரும் மகிழ்ச்சி .அடைவர் இதில் மிக முக்கியமானது நம் அனைவரின் மனம் கவர்ந்தXIII
  Jason மட்டுமே. நினைவுகளை இழந்து தன்னைத் தானே தேடி அலையும் ஒரு கதாநாயகன் உலக அளவில் பல்வேறு காமிக்ஸ் உலகில் பல சாதனைகள் படைத்த அவரது கதைகள் மிகவும் கொஞ்சமே சுருக்கமாகச் சொன்னால் 30 அல்லது 35 புத்தகங்களே வந்துள்ளன.
  இதில் உள்ள கிளைக்கதைகள் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தனித்தன்மையை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல் அந்த கதையின் பல்வேறு வீச்சுகளை நமக்குத் தெரியப்படுத்துகிறது. முகம் தெரியாத புதிய கதாநாயகர்களை அறிமுகம் செய்யும் போது பலருக்கு பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது ஆனால் அனைவர் மனதையும் கவர்ந்த நமது 13 ன்
  கதைகளை வெளியிடுமாறு
  கேட்டுக்கொள்கிறேன்.
  புல்லுக்கும் பாயும் நீரில் கொஞ்சம் நெல்லுக்கும் பாய்ச்சுங்கள் .
  மீதமிருக்கும் கிளைக்கதைகள்
  அதிகபட்சம் 10 தான் இருக்கும்.
  வருடம் இரண்டாவது போட்டால் முன்பதிவுக்கு மட்டும் என்று சிறப்பாக இருக்கும். இது எனது தாழ்மையான வேண்டுகோள்.
  K.V.GANESH.
  இதற்கு ஒரிஜினல் ஆசிரியரிடம் இருந்து
  ஆவலுடன் பதிலை எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நான் இதை விழி..... சாரி வழி வழி வழின்னு
   வழுக்கி யெல்லாம் விழுந்து...

   மொழிந்து தள்றேன்....

   J

   Delete
  2. ஆசிரியர காணோமே.
   பதிலுக்கு காத்திருப்போம்.

   Delete
  3. கீழே போய்ட்டு வந்தால், மேலேயும் அதே வினா !! சிரமம் பாராது கொஞ்சமே கொஞ்சமாய்க் கீழே scroll செய்திடுங்களேன் சார் !

   ஒரேயொரு சிம்பிளான வியாபார அடிப்படை லாஜிக் பக்கமாய் உங்களின் கவனங்களையும் கோருகிறேனே ? ஜெயிக்கும் குதிரையை உதாசீனம் செய்ய எந்தவொரு வியாபாரிக்கும் மனசு வருமா - என்ன ? Die-hard ரசிகர்களைத் தாண்டி, இதர வாசகர்களுக்கு இந்த spin-offs மீது மையல் தொடர்ந்திட முகாந்திரங்களில்லை என்பதையே கைவைக்க ஆளின்றிக் குவிந்து கிடக்கும் ஸ்டாக் பறைசாற்றுகிறது !

   கமான்சே & XIII spin -offs : ஆன்லைனில் கூட சட்டை செய்யப்படா தொடர்கள் இந்த இரண்டு மட்டுமே !!

   வெறும் 1000 பிரதிகள் அச்சிட்டோம் கர்னல் ஆமோஸ் இதழினில்...அதில் இன்னும் பாதிக்கு மேல் கையிருப்பு உள்ளது !! இத்தனை மாதங்கள் கழிந்த பின்னரும் இதிலிருந்து விற்பனையாகா unsold பிரதிகளை முகவர்கள் இன்னமும் திருப்பி அனுப்பி வருகிறார்கள் ! இது தான் யதார்த்தம் எனும் போது, என்னிடத்திலிருந்து எனக்காக spin-offs புது இதழ்கள் பற்றியொரு தீர்மானம் எடுங்களேன் ப்ளீஸ் ?

   சில கசப்புகளை பொதுவெளிக்குக் கொண்டு வந்தால் உங்கள் மனங்கள் நோகுமே என்று தான் இதையெல்லாம் நாசூக்காய்த் தாண்டிச் செல்ல நான் முனைவேன் ; ஆனால் அதுவே உதாசீனத்துக்கு அடையாளமாய்ப் பார்க்கப்பட்டு சிலபல வாட்சப் குழுமங்களில் எனக்கு மண்டகப்படி மரியாதைகளை ஈட்டித் தருவதும் நான் அறியாததல்ல ! சொல்லுங்களேன் folks - என்னிடத்தில் நீங்களிருந்தால் என்ன தீர்மானிப்பீர்களென்று ?

   "முன்பதிவுக்கு மாத்திரம்" என்று போடலாமே ? என்று உடனே பதில் சொல்வீர்களென்பதை யூகிப்பதில் சிரமமில்லை ; ஆனால் அப்படிப் பார்த்தால் Smurfs அணிக்கொரு முன்பதிவு ; ஜெரேமியாவுக்கொரு முன்பதிவு ; கமான்சேவுக்கொரு மு.ப. ; லியனார்டோவுக்கொரு மு.ப. என்று போட்டுக் கொண்டே போகலாம் தானே ?

   தவிர, "முன்பதிவுக்கு மாத்திரமே" என்ற ஏற்பாட்டை மெயின்ஸ்ட்ரீமில் தோற்றுப் போன ஒவ்வொரு நாயகருக்கும் நல்குவதாயின் "மு.ப" என்ற கான்செப்டே விரைவில் தோற்றுப் போய் விடாதா ?

   உங்கள் ஆர்வங்களும், அதன் பலனான ஆதங்கங்களும் புரியாதில்லை ; ஆனால் பெரும்பான்மை ஏற்றுக் கொள்ளாத களங்களை நானே விரும்பினாலும் அரவணைப்பது இன்றைக்கு சாத்தியமாகா என்பது தான் reality ! இன்றைக்கும் இந்த மறுப்பின் பொருட்டு fresh ஆக அர்ச்சனைகள் ஆரம்பிக்குமென்பது புரிகிறது சார் ; but மனதில் உள்ளதை பகிர்வதற்கு 'மாலை ; மரியாதை' கிடைப்பதெல்லாமே எனக்கு வாடிக்கை தானே ?

   Delete
 54. 87ல் ஆரம்பித்த ரத்தப் படலம் 18 பாகமும் முடிவுற்நது 2011ல். மூன்று வருடங்களில், டியுராங்கோ பத்து பாகங்கள் வந்து விட்டது. பிரமிக்க வைக்கும் முன்னேற்றம் .பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அந்நாட்களில் பால்யமிருந்தது ; பொறுமையும் இருந்தது ! ஆனால் மாறியுள்ள இன்றைய உலகில் உங்கள் பொறுமைகளின் அளவுகோல்களை சோதிப்பதாய் இல்லை சார் ! 2021-ல் ட்யுரங்கோவை நிறைவு செய்திருப்போம் !

   Delete
 55. ///மஞ்சள் சொக்காயுடன் இத்தாலியின் ‘தல‘ நம்மிடையே களமிறங்கும் போது உருவாகும் சுவாரஸ்யங்ளுக்கும் இடையிலொரு ஒற்றுமை இருப்பது போலத் தோன்றுகிறது///

  ஆசிரியரின் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

  தற்போது தளத்திற்கு வருபவர்கள் பெரும்பாலும் டெக்ஸ் ரசிகர்கள் என்பதில் எந்தவித ஒளிவு மறைவும் கிடையாது.

  மாற்று ரசனை உடையவர்கள் 2015-2016 பிறகு தளத்திற்கு வருவதில்லை என்பதும் உண்மை.

  மேலும் டெக்ஸ் பற்றி போடும் போது ஆசிரியர் சில கேள்விகளையும் கேட்டு விடுவார்.
  அதற்கு நிறைய பேர் பதில் கூறுவதால் கமெண்ட் பக்ஸ் முழுவதும் நிரம்பி விடும்.

  மேலும் டொகஸ் கதை வரும்போது "எங்க தலை விக்ஸ் போல வருமா" என்று, பக்ஸ் பிரியர்கள் ஆளுக்கு மூன்று நான்கு கமெண்ட் தட்டி விடுவாதால் கமெண்ட் பாக்ஸ் நிரம்புகிறது.

  விடுமுறை என்ற காரணத்தால்தான் நிறைய பேர் காமிக்ஸ் படிக்க வில்லை என்று தான் நானும் நினைக்கிறேன்.

  முதல் நாளே அனைத்து காமிக்ஸையும் படித்து முடிக்கும் நான், இந்த முறை இன்னும் loan ranger படிக்க வில்லை.

  சில பேச்சாளர்கள் பேசும்போது ஆரம்பித்து உடனே விசில் பறக்க ஆராம்பித்து விடும். சில பேச்சாளர்கள் பேசம்போது போது அரங்கமே அமைதியாக இருக்கும். அனைவரும் அவர் பேச்சினால் கட்டுண்டு போய்விடுவார்கள். பேசி முடித்த உடன் ஆரவாரம் வின்னை பிளக்கும்.

  ட்ராய்கோவும், பரகுடாவும் இரண்டாவது ரகத்தை சேர்ந்தவர்கள். மேலும் இரண்டு கதைகளும் ஏற்கனவே வெற்றி ஈட்டிய காமிக்ஸ்.

  ReplyDelete
  Replies
  1. எதார்த்தமே....

   Delete
  2. //ஆசிரியரின் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.//

   அட...எனக்கு ஏன் ஆச்சர்யம் மேலோங்க மாட்டேன்கிறது ?

   Jokes apart - மஞ்சள் சட்டைக்காரர்கள் இருவரும் களமிறங்கும் போது பிரவாகமெடுக்கும் feel good factor ரொம்பவே பிரேத்யேகமானது !! நண்பர்களின் சிலாகிப்புகளுக்கும் அதுவே காரணமென்பேன் sir !

   Delete
 56. ஆசிரியர் அவர்களுக்கு தங்களது பார்வை இப்பொழுது பழைய ஹீரோக்கள் மேல் திரும்புவதால் ஒரு சிறிய வேண்டுகோள் ரத்தப் படலம் ஒரு மிகப்பெரிய வெற்றி அடைந்து சமீபத்தில் நம்மிடையே ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது அதேபோல் அதன் கிளை கதைகள் வருவதற்கு ஏற்ற நேரம் 2020 ஆக இருக்கும் என கருதுகிறோம் இப்பொழுது உங்களது ரேடாரை ரத்தப் படலம் கிளைக்கதைகள் மீது செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். நாம் வெளியிட்ட நான்கு கிளைக்கதைகள் போக மீதம் இருக்கும் 9 கிளை கதைகளில் மிகச் சிறந்த கதைகளை தேர்வு செய்து 2020இல் வாய்ப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
 57. அட ராமா என் போட்டோ வரமாட்டேங்குதே....

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் வந்தால் மட்டும் போதும்:-)

   Delete
  2. வந்துட்டேன் நண்பரே....👍

   Delete
 58. இந்த பதிவின் தலைப்புக்கூட எங்களுக்கு சாதகமா இருக்கு சார்....

  ReplyDelete
 59. அதிகம்வேண்டாம் சார் வெறும் இரண்டே இரண்டு கதை ஒரே புத்தகமாக ஈரோட்டில் முன்பதிவை துவக்குவோம் சென்னையில் வெளியிடுவோம் முன்பதிவு எண்ணிக்கையை பொறுத்து நீங்களே ஒரு நல்ல முடிவா எடுத்துக்குங்க

  ReplyDelete
  Replies
  1. கைவசமுள்ள குவியலுக்கு முதலில் ஒரு வழி பிறக்கட்டும் பழனி... !சமீபமாய்த் தான் ஆன்லைன் ஆர்டர்களின் நிலவரத்தைப் பார்த்தேன் ; கடைசி 6 மாதங்களில் spin-offs வரிசையில் மாத்திரமன்றி, மெயின் தொடரின் ஸ்டாக்கிலிருந்தும் ஒரேயொரு புக் கூட ஆர்டராகவில்லை !! ஒன்றே ஒன்று கூட !!!! இந்த நிலையில் அடுத்த திட்டமிடல் என்பதெல்லாம் ரொம்பவே farfetched !

   Delete
  2. சரிங்க சார் அந்த குவியலுக்கு ஒரு வழி பிறந்தால் புதியதற்க்கு வாய்புண்டா சார்..நெஜமாலுமே கேக்கிறேன்....

   Delete
  3. காசு யாரதாக இருந்தாலும், அது விரயமாவதில் எனக்கு உடன்பாடில்லை ! படிக்க நினைப்போர் வாங்கிப் படிப்பார்கள் ; யாரையும் திணித்துப் படிக்க வைப்பது ஆகாக் காரியம் ! So நீங்கள் மொத்தமாய் வாங்கி, ஓசியாய்க் கொடுத்தாலும் அதன் அடிப்படையில் "வாசக சுவாரஸ்யம்" இராது தானே ?

   பிரசவ வைராக்கியமெல்லாம் நமக்கு வேண்டாம் பழனி ! இன்றைய சிரம உலகில் ஒவ்வொரு ரூபாயும் முக்கியமே !

   Delete
  4. முன்பதிவு வரவேற்ப்பில்லை எனில் பார்ப்போமே சார்

   Delete
  5. கதையில் சுவாரசியம் இருந்தால் வீரியனின் விரோதி போல் வரவேற்பு கண்டிப்பாக கிடைக்கும்

   Delete
 60. இப்போது ரத்த படலத்தை படித்த நண்பர்கள் தங்களது கருத்துக்களையும் தளத்தில் பதிவு செய்தால் உதவிகரமாக இருக்கும்

  ReplyDelete
 61. ப்ரூனோ பிரேசில் மீது எப்பொழுதுமே ஒரு காதல் உண்டு ஏனென்றால் அதன் ஓவியர் william vance ஏனோ தெரியவில்லை அந்த கதைகளை படிக்கும் பொழுது எனது ஆதர்ச நாயகன் பார்ப்பது போல் உள்ளது எனவே எனது முழு ஆதரவு உண்டு ரோஜர் அவருக்கும் இதே பதில்தான்.ஆனால் தயவு செய்து தாத்தா வேண்டாம் .

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஆதர்ஷ நாயகனுக்கும், அன்றைய ப்ருனோ பிரேசிலுக்கும் ஒரே ஓவியர் ! இன்றைக்கு அவ்விதம் நஹி !

   Delete
  2. கடவுளே எந்தபக்கம் போனாலும் கேட்போடுறாங்களே....😢

   Delete
 62. இம்முறை ஸ்பின் அப் கதைகள் விற்பனையில் சொதப்பாது சார் நிறைய புதிய வாசகர்கள் இரத்தப்படலத்தை படித்திருப்பதால் கிளைக் கதைகளுக்கு கண்டிப்பாக ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் உங்களின் கடைக்கண் பார்வை பட ஓடினை வேண்டிக்கொள்கிறேன் ஆசிரியரே

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சத்யா கதைகளின் பெயர்களை சும்மா அறிவிச்சாலே போதும். கூடவே அட்டைப்படங்கள் வந்தால் வெற்றி நிச்சயம்

   Delete
  2. ஒரேயொரு நிமிடத்துக்கு முன்பாய் மேலேயொரு பதில் போட்டுள்ளேன் ; சித்தே படியுங்களேன்...?

   Delete
 63. ஒரு பப்ளிக் பூங்காவில் ‘தேமே‘ என ஒரு ஓரமாய் கிடக்கும் பென்ச்சின் பார்வையில் உலகைச் சித்தரித்துள்ளார் கதாசிரியர் !! \\\\

  இந்த காமிக்ஸ் நிச்சயம் வெற்றி பெரும் என்று நம்புகிறேன்.
  மாறுபட்ட ரசனைக்கு நம்மவர்கள் தற்போது ஒத்துழைப்பு கொடுக்கிறர்கள் எனபதை கி.நா வின் வெற்றி மூலமாக அறியமுடிகிறது.

  ReplyDelete
 64. டியர் எடி,

  லியனோர்டா'விடம் அவ்வளவு ஈர்ப்பு இல்லை. 3-4 பக்கங்களில் வாராந்திரிகளில் வெளியானவை, அவை வெளிவந்த கால வாசகர்களின் பால்ய சேகரிப்புகளுக்கு ஏதுவாக இருக்கலாம்... நமக்கு அந்த பரிச்சையமும் இல்லாமல், கதையில் வலுவே இல்லாத ஒரு soft-comedy நகைச்சுவை பாணி, சரிபடவில்லை. சமீபத்திய உதாரணம், ஒன் ஐ ஜாக்.

  ஆனால், 500 வது வருட கொண்டாட்டம் என்ற அடிப்படையில், மீண்டும் ஒற்றை இதழ் முயர்சித்து பார்த்துடலாம்.

  அதே போல,2.0 அனைத்திறகும் எனது டபுள ஓகே. ஐம்போவில், வருடம் இரண்டு வாய்ப்பு இவர்களுக்கு நல்கிடலாம். புதிய அவதாரத்தில், ப்ரூனோ, ரோஜர் கதைகளை மீண்டும் காண ஆவலடன் காத்திருப்பேன்.

  டெக்ஸ் மாதம் ஒன்று என்று வந்தே ஆக வேண்டும் என்ற கூட்டணியில் நானில்லை. பெரும்பான்மை வாசகர்களின் ரசனை மற்றும் விற்பனைக்கு உதவுகிறது என்ற அடிப்படையில், அதற்கு எனது ஓட்டு தொடரும்.

  நீங்கள் அடிகோட்டிய, கிராபிக் நாவல்களுக்காகவே, மீண்டும் கிராபிக் நாவல் தனி சந்தா 2020ல் இரு மாதத்திற்கு ஒன்று என்று இடம்பெற ஆவண செய்வீர்களா?!? 2019ல் exotica என்று E பிரிவை வகைபடுத்தியதில் எனக்கு வருத்தமே. அதற்கு தான் ஜம்போ வரிசை ஏற்கனவே உள்ளதே?! சந்தா E, இந்த பதிவில் இடம்பெற்ற நாவல் கதைகளை களம் இறக்க மட்டுமே உபயோகபடுத்தபட வேண்டும் என்பது என் கோரிக்கை.

  ஒரே கோரிக்கை, மவுன கிராபிக் நாவல்களில், எழுத்தகளை நிரப்பாமல், ஒரிஜினல் வடிவத்திலேயே வந்தால் சால சிறப்பு. நிசப்தம் கொடுத்த சப்தம், இன்னும் ஆறவில்லை.

  ReplyDelete
  Replies
  1. \\நிசப்தம் கொடுத்த சப்தம், இன்னும் ஆறவில்லை\\

   அருமை...

   Delete
  2. //ஒரே கோரிக்கை, மவுன கிராபிக் நாவல்களில், எழுத்தகளை நிரப்பாமல், ஒரிஜினல் வடிவத்திலேயே வந்தால் சால சிறப்பு. நிசப்தம் கொடுத்த சப்தம், இன்னும் ஆறவில்லை. //

   கிராபிக் நாவல்கள் புரியாதவர்களுக்கு உதவிடுவது என நீங்கள் நினைத்தால், இறுதியில் இரண்டு பக்கங்களில் தேவையான சித்திரங்களைப் போட்டு பக்கத்திலேயே விளக்கமும் போட்டிடுங்கள். தேவையற்ற வசனங்களை இணைக்கவோ புகுத்தவோ செய்யவேண்டாமே ப்ளீஸ்....

   Delete
  3. புரியவில்லை ; நிஜங்களின் நிசப்தத்தில் எவ்வித வசன சேர்ப்புகளும் செய்ததாய் சத்தியமாய் ஞாபகம் இல்லை ! As far as I remember it was an exact replica of the original !

   Delete
  4. Maybe டமால்-டுமீல்களைச் சொல்கிறீர்களென்றால் புரிகிறது !

   Delete
  5. @ Rafiq Raja : //2019ல் exotica என்று E பிரிவை வகைபடுத்தியதில் எனக்கு வருத்தமே. அதற்கு தான் ஜம்போ வரிசை ஏற்கனவே உள்ளதே?!//

   Nopes sir ; ஜம்போவில் எல்லா வயதினருக்கும் ஏற்பான ஜனரஞ்சகக் கதைகள் மாத்திரமே என்பது தான் template ! அங்கே முதிர்ந்த ரசனைகளுக்கோ ; மாறுபட்ட கதைக்களங்களுக்கோ இடமிராது !

   Jumbo will always strive to be a pure entertainer !

   Delete
 65. அடுத்த வருடம் ஸ்மர்பஸ் மற்றும் மந்திரி களம் இறக்குங்கள்.

  எவ்வளவு குறைவாக விற்பனை நடந்தாலும் பரவாயில்லை. மீதமுள்ள காமிக்ஸ்க்கு நான் பணம் கொடுத்து விடுகிறேன்.

  எஞ்சி இருக்கும் காமிக்ஸ்களை ஈரோடு புத்தக திருவிழாவின் போது ஆர்வம் இருக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக கொடுப்போம்.

  ReplyDelete
  Replies
  1. அருமை நண்பரே 👌

   Delete
  2. அட..இன்னிக்கு மேலே பதில் போட்டால், கீழேயும் அதே பதில் பொருந்துகிறதே & vice versa !! சித்தே மேலே பாருங்கள் ப்ளீஸ் !

   Delete
  3. அதை படித்து விட்டு தான் சொல்கிறேன் சார். விற்பனை ஆகவில்லை என்றால் மீதமுள்ள காமிக்ஸ்க்கு நான் பணம் கொடுத்து விடுகிறேன்.

   Delete
 66. //Smurfs ; பென்னி ; லியனார்டோ ; ரின்டின் கேன் - பரண் சென்றுள்ள தொடர்கள் அனைத்துமே வெகு சமீபத்து அறிமுகங்கள் தானே சார் ?//


  Smurfs ஐ பொருத்தவரை பொடி பாஷை தான் பிரச்சினை என நினைக்கிறேன். கடைசி ஆல்பமான 'காசு பணம் துட்டு'க்கு நல்ல வரவேற்பு தானே சார்..!

  அடுத்ததாக ரின் டின் கேன் ஐ பொருத்தவரை லக்கிலுக் ஆல்பத்தில் ஒரு துணை பாத்திரமாக மட்டுமே இருக்க தகுதியுள்ளது.

  பென்னி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும்... வருங்கால தலைமுறைக்கு ஓகே, ஆனால் நம் வாசகர்களுக்கு குழந்தைத்தனமாக தோன்றுகிறது.

  லியானார்டோ சிறு சிறுகதைகளாக இருப்பதுதான் தொய்வடைய செய்கிறது. என்னை பொருத்தவரை இதில் லியானர்டோ மற்றும் அல்லக்கை ஒரு காமெடி டிராக் என்றால் அந்தப் பூனையும் எலியும் இன்னொரு silent காமெடி டிராக். என் மகள் அந்தப் பூனை எலி டிராக்கை தனியாகவே கதை போல சொல்வாள்.

  லியானார்டோ மட்டும் பக்க நிரப்பியாக போடும் வாய்ப்பு இருந்தால் ஒவ்வொன்றும் சிரிப்பு தோரணமாக நிச்சயம் அமையும்.

  ReplyDelete