Powered By Blogger

Monday, May 13, 2019

அண்ணன் தலையிலே ஒரு மத்தளம்ம்ம்ம்ம் !!

நண்பர்களே,

மீண்டும் வணக்கம் ! அநேகமாக லெமுரியா கண்டம் புவியிலொரு அங்கமாய் இருந்த வேளையினில் நிகழ்ந்ததொரு சமாச்சாரம் இன்றைக்கு repeat ஆகியுள்ளது ! Oh yes  - ஒற்றை நாளில் 310+ பின்னூட்டங்கள் - என நீங்கள் போட்டுத் தாக்கியுள்ளதைத் தான் குறிப்பிடுகிறேன்  ! ஏகப்பட்ட ஈயோட்டிய நாட்களுக்குப் பின்பான இந்த பிசி தருணத்தை உரியதொரு உப-பதிவோடு கௌரவிப்பது தானே நியாயம் ?! So here I am !! 

எங்கோ ஆரம்பித்த அலசல்கள் நடுவாக்கில் நண்பர்கள் சிலரின் ஆதங்கத்தினால் XIII spin-offs பக்கமாய் சித்த நேரம் பயணித்தது மாத்திரமன்றி - "500 பிரதிகளை வாங்கிக்கொள்ள  உத்திரவாதம் தந்தால் spin offs சாத்தியமா ?" என்ற கேள்வியும் என்னிடம் பின்மதியப் பொழுதில் மின்னஞ்சல் மூலமாய்க் கேட்கப்படுவதற்குக் காரணமாகிப் போனது !  ! "Sorry no ..நடைமுறை சாத்தியமிலா கோரிக்கை !" என்று மறுத்து விட்டேன் ! 

நான் மறுப்புச் சொன்னதற்கு இந்தத் தொடரின் விற்பனைத் தொய்வுகள் ஒரு காரணமெனில், இன்று மிகக் குறுகி நிற்கும் நமது பொறுமைகளின் சாளரங்களும் இன்னொரு முக்கிய காரணம் ! ஒரேயொரு மித ரக ஜானதன் கார்ட்லெண்ட் ஈட்டித் தந்த சாத்துக்களையும், அதன் பலனாய் நடப்பாண்டின் அதுவரையிலுமான clean report card-ம் துவம்சமாகி நிற்பதையும் நான் அத்தனை விரைவாய் மறந்திடத் தான் இயலுமா ? உலகமே கொண்டாடும் ஜெரெமியா -  'அப்பால நீ போவியா ?!" என்ற வரவேற்பையும், தீர்ப்பையும் துரிதமாய்ப் பெற்று நிற்கிறார்  நம்மிடையே ! SMURFS ? 'நீங்க லோகத்தில் எத்தனை பெரிய அப்பாடக்கர்களாக இருப்பினும்,   இங்கே நீங்க பிடுங்கின ஆணிகள் போதும் !' என்று தீர்ப்புச் சொல்லி விட்டார்கள் நண்பர்கள் ! அட...அவ்வளவு என் ? எனக்கு ரொம்பவே பிடித்திருந்த மேஜிக் விண்ட் தொடருக்கும் ; பென்சில் இடையழகி ஜூலியாவிற்குமே ஒற்றை இடம் பிடிக்க நான் தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்காத குறை தானே ?  இதோ - LONE ரேஞ்சர் போலொரு உத்தரவாதமான கமர்ஷியல் நாயகருமே உங்களின் அளவீடுகளில் தத்தளிப்பதைக் கண்கூடாய்ப் பார்த்திடுகிறோம் ! The bottomline is : PERFORM....OR PERISH !! திறந்தது நெற்றிக்கண்ணோ ; முட்டைக்கண்ணோ - குற்றம் - குற்றமே ! என்பது தான் நமது வாசக நக்கீரர்களின் இன்றைய நிலைப்பாடு எனும் போது -  "எனக்கு 500 பிரதிகள் ஏக் தம்மில் சுலபமாய் போணியாகின்றன ; மிச்சத்தை உங்க தலையிலே கட்டிடுறேன் folks ! லைட்டா அஜீஸ் பண்ணிக்கோங்க !" என்று சொல்வது சாத்தியம் தானா ? ஒரு துடைப்பத்தை வாயில் கவ்வக் கொடுத்து இன்னொன்றால் பின்னியெடுத்து விடமாட்டார்களா - என்ன ? 

ஒவ்வொரு ஆண்டிலும் அட்டவணையில் அனைவருக்கும் ஏற்புடையன இடம்பிடிக்கின்றனவோ இல்லையோ - முகச்சுளிப்புகளுக்கு இடம்தந்திடக் கூடிய ஆல்பங்கள் இருந்திடக் கூடாதென்பதே எனது முதல் ஆதங்கம் ! நிலவரம் அவ்விதமிருக்க, XIII இரண்டாம் சுற்றின் அந்த Mayflower சங்கிலியின் இதழ்களை உங்களிடம் ஒப்படைப்பதே அயரச் செய்யும்  ஒரு பொறுப்பாய் இருந்த நிலையில் up & down  ரக spin -offs களை எந்த தகிரியத்தில் உங்களிடம் நான் ஒப்படைப்பேனோ ? 

"சரி தான்....பிழைத்துப் போய்த் தொலை ! 500 book போணியாகுதே ; ஒரு புக்கைப் போட்டுக்கோ ! " என்று நீங்கள் பெருந்தன்மையாய் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றே வைத்துக் கொள்வோமே - இதே லாஜிக் பல நாள் கோரிக்கைப் பட்டியலில் இருக்கக்கூடிய ஸ்பைடரின் Sinister Seven கதைக்கும் பொருந்தும் அல்லவா ? கோவைக் கவிஞரோ ; சென்னையின் தீவிர ஸ்பைடர் மன்றத்தினரோ  நிச்சயமாய் இதனை sponsor செய்திடக்கூட்டும் அல்லவா ?! ஜெரெமியாவின் தொடரும் பாகங்களுக்கும் இதே லாஜிக் suit ஆகக்கூடும் & SMURFS மறுவருகைக்கும் இதே பார்முலாவை முன்மொழிய நண்பர் கணேஷ்குமார் தயார் எனும் போது - வரிசையாய் "நீங்கள் கேட்டவை" ஸ்பெஷல்களாய்ப் போடத் துவங்குவது  தான் எனது அடுத்த திட்டமிடலாய் இருக்க வேண்டி வரும் ! மேற்சொன்ன இதழ்களையும், XIII spin-off களையும், காத்திருக்கும் ஆண்டின் அட்டவணையில் ஒரு அங்கமாக்கினால்,  2020-ன் சந்தா நிலவரத்தின் கதிக்கு யாரேனும் கியாரண்டி தந்திட வாய்ப்பு தான் இருக்குமா ? அல்லது அந்த உத்திரவாதத்தை நான் கோரத் தான் முடியுமா ? "சரி...நீ அட்டவணைக்குத் தேர்வு பண்ணிக் கிழிக்கும்  அத்தனையும் ஹிட்டாகிட போகுதாக்கும்பு ?" என்ற கேள்வியும் காதில் விழாதில்லை ! நிச்சயமாய் அவற்றுள் சொதப்பல்களும் இருந்திடும் தான் ; ஆனால் அவை மிதமான கதைகளே  என்பது முன்கூட்டியே தெரிந்தே செய்யப்பட்ட தேர்வுகளாய் இராதென்பது மட்டும் சர்வ நிச்சயம் ! 

இன்றைக்கு ஒரு தோல்வி என்பது "ஆஹ்...அடுத்து பாத்துக்கலாம் !" என்றபடிக்கே துடைத்து விட்டு நகரும் சாமான்ய சிராய்ப்பாய் இருப்பதில்லை ; அவ்விதம் நான் அவற்றைப் பார்த்திடுவதுமில்லை ! மாறாக புத்தூரைத் தேடிப் போய் மாவுக்கட்டு போட அவசியமாக்கிடும் முறிவுகளாகவே இருந்திடுகின்றன ! அந்த எலும்பின் முறிவு, வாசக முதுகுகளை முறிக்கக்கூடிய இறுதிக் கட்டு வைக்கோல்போராய் அமைந்திடக்கூடாதே என்ற பயம் எனக்கு ஒவ்வொரு இதழின் பின்னணியிலும் உண்டு ! இதை படிக்கும் போது - "அக்காங்...ரொம்பத் தான் பீலா விட்றான் ; என்னமோ வானத்திலிருந்து குதிச்சு வந்தா மேரி !!" என்று சில பகடிகள் ஆங்காங்கே எழலாம் தான் ; ஆனால் believe it or  not - "ALL HITS ; NO FLOPS " என்றொரு முழுமையான திருப்தியான ஆண்டைத் தேடியே திரிந்து வருகிறேன் - தங்கக் கல்லறையின் லக்னரைப் போல ! அந்த பித்துப் பிடித்த வேட்கையினிடையே, நெற்றி முழுக்க "RISK"என்று எழுதி நிற்கும் கதைகளைக் கையாள மனசு ஒப்புமா - என்ன ? 

"சரி....இவற்றை நாங்க படிக்க என்னதான் வழி ?" என்று குரல்கள் மௌனத்தில் எழுவதும் கேட்பதால் - CINEBOOK தளத்துக்கு விரைந்தேன் - அவர்களாச்சும் இந்த spin-offs வரிசையினை கையில் வைத்திருந்தார்களெனில் இறக்குமதி செய்து கிரய விலைக்கே ஆங்கிலப் பதிப்புகளையாவது விற்றிடலாமே என்ற எண்ணத்தில் ! அவர்களோ "மங்கூஸ்" கதையோடு மேற்கொண்டு தொடரக் காணோம் !! "இங்கொரு சேதி உள்ளதோ நமக்கு ?" என்றபடிக்கே வாபஸ் ஆனேன் ! Maybe பின்னாட்களில் எஞ்சியுள்ள கதைகளை அவர்கள் வெளியிடும் பட்சத்தில் - தருவிக்க நிச்சயம் ஏற்பாடு செய்வேன் ! அதன் மத்தியில் - நாளையே  XIII இதழ்கள் அத்தனையையும் ஒரு ஸ்பெஷல் பேக்காக்கி - 25% தள்ளுபடி என ஆன்லைன் ஸ்டோரில் அறிவிக்கவும் செய்திடவுள்ளேன் ! ஒரு மாதிரியாய் கையிருப்பில் பாதி குறைந்தாலும், ஒன்றிரண்டு spin offs களைப் போட முனைகிறேன் ! இருக்கவே இருக்கின்றன Felicity Brown மற்றும் Judith Warner அம்மையார்களின் செழுமையான கதைக்களங்கள் !!  Peace until then people !!

பரோட்டா மாவைத் தப்புவதைப் போல எனது வழுக்கைத் தலையை தப்பியெடுக்க,   இந்தப் பதிவில் வாகாய் நிறைய மேட்டர்களைத் தந்துள்ளேன் என்பதால், CSK தோற்ற சோகத்தையுமே சேர்த்து நீங்கள் குமுறி எடுக்கலாம் நண்பர்களே ! அதற்காவது நான் பிரயோஜனப்படாது போனால் எப்படி ? The Hunting season's on...!!! Tally ho !!
அப்புறம் May இதழ்களை அல்சிடவும் செய்திடலாமே - ப்ளீஸ் ? Bye all...see you around !!

314 comments:

  1. நீண்ட நாட்களாக மனதில் இருந்த சில கேள்விகளுக்கு தெளிவாக பதில் கிடைத்திருக்கிறது

    ReplyDelete
  2. "பித்துப் பிடித்த வேட்கை.."
    Definition of passion! Hats off to you , sir!

    ReplyDelete
    Replies
    1. இந்தக் குல்லாவை மாட்டிக் கொண்டு திரிந்திட எஞ்சியிருக்கும் அவகாசம் குறைச்சலாகிக் கொண்டே போகப் போக - தேடல்களின் தீவிரமும் ஜாஸ்தியாகிக் கொண்டே செல்கிறது சார் ! யதார்த்தத்தின் புரிதல் #

      Delete
  3. இந்த வருட சந்தாவில் தான் எனக்கு பிடிக்காத ஹீரோ அல்லது ஜானரில் ஓரிரு கதைகளுக்கு மேல் இல்லை. பிடித்தவை நிறய மிஸ் ஆகுதான்னா அதுக்கும் பதில் ஆமாம் தான். கார்ட்டூன் குறைந்தது வருத்தமே. ஆனால் When going gets tough...Tough gets going. இது தான் உலக நியதி. காமிக்ஸ் மட்டும் அதற்கு விதிவிலக்காக முடியாதே.

    ரசிகர்கள் அனைவருக்கும் வானளாவிய பட்ஜட்டும் அனைத்து ஜானரும் பிடித்திருந்தாலும் நன்றாக இருந்திருக்கும். வருட சந்தாவுக்கே சொத்தை விக்க வேண்டிய சூழ்நிலை. இருக்கும் ஆயிரத்து சொச்சம் வாசகர்கள். அதில் மூவாயிரம் விதமான ரசனைகள். எனக்கு இது வேண்டாம் அது வேண்டாம் என்று ஒதுக்கும் பட்சத்தில் இது போல் தான் நடக்கும்.

    இது ஒரு சிறு குழு. இதை ஒரு கூட்டுறவாக கருதி அனைவரும் அனைத்து இதழ்களையும் வாங்கும் வரை இது தான் நடைமுறையாக இருக்கும். இதுவே தாமதமாக நிகழ்ந்திருக்கிறது. அதேசமயம் பட்ஜெட்டுகளும் ரசனைகளும் தடையாக இருக்கும் வரை வேறு வழியுமில்லை.


    ReplyDelete
    Replies
    1. //இது ஒரு சிறு குழு. இதை ஒரு கூட்டுறவாக கருதி அனைவரும் அனைத்து இதழ்களையும் வாங்கும் வரை இது தான் நடைமுறையாக இருக்கும். இதுவே தாமதமாக நிகழ்ந்திருக்கிறது. அதேசமயம் பட்ஜெட்டுகளும் ரசனைகளும் தடையாக இருக்கும் வரை வேறு வழியுமில்லை//

      Well said...!

      Delete
    2. அனைத்தையும் வழி மொழிகிறேன் மகேந்திரன் சார்.

      Delete
  4. ////"சரி...நீ அட்டவணைக்குத் தேர்வு பண்ணிக் கிழிக்கும் அத்தனையும் ஹிட்டாகிட போகுதாக்கும்பு ?" என்ற கேள்வியும் காதில் விழாதில்லை ! நிச்சயமாய் அவற்றுள் சொதப்பல்களும் இருந்திடும் தான் ; ஆனால் அவை மிதமான கதைகளே என்பது முன்கூட்டியே தெரிந்தே செய்யப்பட்ட தேர்வுகளாய் இராதென்பது மட்டும் சர்வ நிச்சயம் ! ///

    வேலிட் போயிண்ட்!! நச்!!!

    ReplyDelete
  5. எங்கே போகும் இந்த பாதை..

    ReplyDelete
  6. நானும் 500 இல் ஒருத்தன்

    நீங்கள் கேட்டவை ஒகே....

    ஸ்பைடர்....கதைகள் வரட்டும்....

    ரீபிரின்ட் வராத மாயாவி வரட்டும்...

    ரோஜர் வரட்டும்....

    ReplyDelete
  7. அமர் சித்ர கதைகள்.....எதையும் பொருட்படுத்துவது...இல்லை...

    விருப்பம் உள்ளவர்கள் வாங்கவே விரும்புவார்கள்...

    நீங்கள் கேட்டவை நல்லதொரு முடிவு...

    நாங்கள் கேட்டவை.....

    இன்னமும் ஸ்பைடர் கதைகளை பார்த்தாலே பரவசம்.....

    ReplyDelete
  8. //ஒரு மாதிரியாய் கையிருப்பில் பாதி குறைந்தாலும், ஒன்றிரண்டு spin offs களைப் போட முனைகிறேன் !//

    இதற்குப் பின்னர் XIII spin off வெளிவர செய்ய வேண்டியது என்ன?

    XIII கதையை முழுமையாக படிக்காத புதிய வாசகர்கள் (இப்போது படிக்கவும் வழியில்லை) spin off களை நிச்சயம் தவிர்க்கவே செய்வார்கள்...

    அப்படியே கிடைத்தாலும் 18 பாகங்களை இந்த அவசர யுகத்தில் பொறுமையாக படித்து முடித்து spin off களின் மேல் ஆர்வம் ஏற்பட்டு அவற்றை வாங்க முன்வருவார்களா?

    இதற்குப் பின்னர் XIII spin off வெளிவர 'நாம்' செய்ய வேண்டியது என்ன?

    உண்மையிலேயே பதில் தெரியாத கேள்வியாகவே இருக்கிறது.
    So Sad....

    ReplyDelete
  9. விஜயன் சார்,

    // "சரி...நீ அட்டவணைக்குத் தேர்வு பண்ணிக் கிழிக்கும் அத்தனையும் ஹிட்டாகிட போகுதாக்கும்பு ?" என்ற கேள்வியும் காதில் விழாதில்லை ! நிச்சயமாய் அவற்றுள் சொதப்பல்களும் இருந்திடும் தான் ; ஆனால் அவை மிதமான கதைகளே என்பது முன்கூட்டியே தெரிந்தே செய்யப்பட்ட தேர்வுகளாய் இராதென்பது மட்டும் சர்வ நிச்சயம் ! //

    Well said.

    ReplyDelete
  10. Wow wow. What a great news. Thank you so much editor. இரத்தப்படல இதழ்களின் விற்பனைக்கு நிச்சயம் உதவுவோம்.

    ReplyDelete
  11. 1. தாத்தா - NO
    2. ரோஜர் - may be new version
    3. ப்ரூனோ - Yes

    Yes for Random Read 4 & 5.

    ReplyDelete
  12. பழைய இதழ்களின் விற்பனைக்கும் புதிய இதழ் வருவதற்க்கும் எங்களது முழு ஒத்துழைப்பு உண்டு சார் நிச்சயமா....😊

    ReplyDelete
  13. எதிர்பாரா பதிவு.
    எதிர்பாரா முடிவு.
    எதிர்பார்த்த டிஸ்கவுன்ட் அறிவிப்பு.
    எதிர்பார்க்க வைக்கும் SPINOFF.
    மலைகளில் உயர்ந்தது எவரெஸ்ட்.
    காமிக்ஸ் எவரெஸ்ட் இரத்தபடலம்.
    விரைவில் அதன் மீதமுள்ள SPINOFF
    சிகரங்களை எட்டிப்பிடிக்க முயற்சி
    செய்யும் ஆசிரியருக்கு நன்றியும்
    வாழ்த்துக்களும் கூறிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  14. இரத்தப்படலம் ஸ்பின் ஆப் கதைளையும் வாசகர்கள் வாங்கி படிக்கும் காலம் (நேரம்) விரைவில் வருமென்றே நம்புவோம் சார். விற்பனை தோதாக அமையும் நேரம் வரும் போது போடுங்க சார். அதுவரை காத்திருக்கிறோம். அதுவரை பிறமொழிகளிலேயே இரினா,ஜோன்ஸ்,மார்த்தா,பெலிசிட்டியை ரசிச்சிட்டு இருக்கிறோம் 😝

    ReplyDelete
  15. நீண்ட நாட்கள் கழித்து உப பதிவை இட்ட ஆசிரியருக்கும் ,
    இட வைத்த நண்பர்களுக்கும் வாழ்த்துகளோ வாழ்த்துக்கள்...:-)

    ReplyDelete
  16. இரத்தப்படலம் ஸ்பின் ஆப் கதைகள் பற்றி நண்பர்கள் வினா எழுப்பிய பொழுதும் ,ஒரு நண்பர் வருத்தமின்றி விவாதிக்கலாமே என்ற பொழுதும் அமைதியாய் தாண்டி போக காரணம் மீண்டும் ஒரு " புலன் விசாரணை " வருத்தங்களோ,சச்சரவுகளோ நண்பர்களிடையே வந்துவிட கூடாது என்பதாலேயே...


    இப்போதைய ஆசிரியரின் உப பதிவு இதனை பற்றியே எனும் பொழுது எனது கருத்தை தயங்காமல் தெரிவிக்கலாம் என்றே நினைக்கிறேன்.


    போன பதிவில் ஸ்பின்ஆப் தோல்விகளுக்கு நண்பர் கோவிந்த்ராஜ் பெருமாள் சொன்ன கருத்து தான் 100 % நிஜமானது ...உண்மையானது...

    800 பக்கங்களை தாண்டிய அந்த இரத்தபடல காவியத்தை படிக்கும் பொழுது எந்தவித கேள்விகளோ ,சந்தேகங்களோ யாருக்கும் எழவில்லை.பின்பு ஸ்பின் ஆப் கதைகள் அறிவிப்பு வந்த பொழுது அனைவருமே அதனை இரு கை தட்டி வரவேற்றது தான் உண்மை.காரணம் இரத்தபடலத்தின் மகிமை மற்றுமல்ல இரத்த படலத்தின் சிறப்புகளையும் ,அல்லது எழாத சந்தேகங்களை எழுப்பி அந்த சந்தேகங்களை தீர்த்து வைக்க போகும் படைப்பு என கலக்க போகும் இதழ்கள் என நினைத்ததன் பலனே அந்த வரவேற்பு.ஆனால் நிஜத்தில் அந்த ஸ்பின்ஆப் படைப்புகள் அதனை நிவர்த்தி செய்யாமல் காமிக்ஸ் காவியமான இரத்தபடலத்தின் கதை போக்கை பற்றிய குழப்பங்களை ,தெளிவின்மையை தான் ஏற்படுத்தியது.இரத்த படலம் படித்த பொழுது வராத குழப்பங்கள் ஸ்பின்ஆப் வந்த பின் இரத்த படலத்திற்கு ஏற்படுத்தியது.மனதிற்குள் பூஜித்த இதழை அதன் பங்கு கதைகளை படித்து அதில் குழப்பத்தை கண்டுபிடிப்பதை விட எப்பொழுதும் போல அந்த இரத்தபடலம் மனதிற்குள்ளே பூஜிக்கவாது செய்யலாமே என்பதே பலரின் நிலைப்பாடு.

    அடுத்து இரத்தபடலம் படித்த நண்பர்களுக்கே இந்த நிலை எனில் இரத்தபடலம் படிக்காத நண்பர்களுக்கு ஸ்பின்ஆப் கதைகள் பற்றி சொல்லவே தேவையில்லை தான்.

    மேலும் இது வரை வந்த ஸ்பின்ஆப் கதைகளில் ஒன்றை தவிர மற்றவை அனைத்தும் தோல்வி முகத்தை அணிந்திருந்த நிலையில் மீண்டும் ஒரு ஸ்பின் ஆப் இதழ்களை பலரும் தவிர்க்கவே நினைப்பர் என்ற ஆசிரியரின் எண்ணமும் உண்மையே.

    மேலும் புலன்விசாரனையால் இங்கே நண்பர்கள் எத்தனை சச்சரவுகள்..குழப்பங்கள் ..ஆனால் ஆசிரியர் நண்பர்களுக்காக ,வாசகர்களுக்காக ,நண்பர்களின் உழைப்பிலும் வந்த அந்த இதழை இலவசமாக அளித்து பெருமைபடுத்தினார்.பட் கஷட்பட்டு இலவசமாகவே வந்த அந்த இதழ் எந்தவித புகழை பெற்றது என்றே தெரியவில்லை
    .( இதில் இன்னொரு கூத்து.ஒரு நண்பர் தளத்தில் வண்ண இரத்த படலம் இதழ் நான் வாங்க வில்லை.அதே சமயம் கறுப்புவெள்ளை இதழ் என்னிடம் உள்ளது.யாராவது புலன்விசாரனை தேவைப்படாதவர்கள் விலைக்கு கொடுக்க முடியுமா என கேட்டு கொண்டே இருந்தார்.நாம் தான் அதை படிக்க போவதில்லையே ( புரிய போவது இல்லையே என்று கூட எடுத்து கொள்ளலாம்..) என்ற எண்ணத்தில் அவரை தொடர்பு கொண்டு இவ்வளவு ஆர்வமாக உள்ளீர்கள் ..எனவே இலவசமாகவே நானும் உங்களுக்கு அனுப்பி விடுகிறேன் என அனுப்பி வைத்தேன்.என்னை போல
    சில நண்பர்கள் யாராவது உங்களுக்கு அனுப்பினாலும்
    சொல்லிவிடுங்கள் எனது பெயரை தெரிவிக்காமல் இதழ் கைக்கு வந்தவுடன் தளத்திலும் தெரிவித்து விடுங்கள் என அனுப்பி வைத்தேன்.ஆனால் இதழ் அவருக்கு சென்று சேர்ந்ததா என்று அறிய நானே தான் அவரை தொடர்பு கொள்ள நேர்ந்தது. அதன்பிறகு கிடைத்தது என்கிறார்.
    அதன்பிறகு அவர் பெயரை தளத்தில் இது வரை பார்க்கவில்லை.அஃலீஸ்ட் அவராவது புலன்விசாரனை பற்றி ஏதாவது விமர்சனம் எழுதி இருந்தால் மனம் ஆறுதலாக இருந்திருக்கும்.)


    இதை எதற்கு கூறுகிறேன் எனில்
    போராடி பெறும் பரிசுகள் அதற்கான பலனை பெற்றால் தான் அது அந்த பரிசுக்கும்,படைத்தவருக்கும் பெருமை சேர்க்கும் அதிலும் வெற்றி இருக்குமா என்றே சந்தேகத்திலியே வெளிவரும் இதழ்களுக்கு அந்த பலன் கிடைக்கவில்லை எனில் ....?!


    எனவே என்னை பொறுத்தவரை ஸ்பின் ஆப் இதழ்கள் வருகை தந்தாலும் மகிழ்ச்சி ..வருகை தராவிட்டாலும் மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. நானும் அப்படியே .வந்தால் பதிமூன்றோடு பதினொன்று. வராவிட்டால் வருத்தப்பட ஏதுமில்லை. மரணம் மறந்த மனிதர்கள் கதை அறிவிப்புடன் நின்றது நீண்ட நாட்களாக புரியாமல் இருந்தது. போன பதிவில் ஆசிரியரின் பதிலால் தெளிவானது. அது போல இதுவும் okதான்.

      Delete
    2. ஆழமாக அளசி உள்ளிர்கள். நூறு சதவீதம் உண்மை.

      Delete
    3. // போராடி பெறும் பரிசுகள் அதற்கான பலனை பெற்றால் தான் அது அந்த பரிசுக்கும்,படைத்தவருக்கும் பெருமை சேர்க்கும் அதிலும் வெற்றி இருக்குமா என்றே சந்தேகத்திலியே வெளிவரும் இதழ்களுக்கு அந்த பலன் கிடைக்கவில்லை எனில் . //

      +1

      Delete
  17. நீண்ட நாட்களுக்குப்பின் தளம் களைகட்டி இருப்பது கண்டு மகிழ்ச்சி.பெலிசிடி மற்றும் ஜூடித் அம்மையார்களின் செழுமையான கதைப்பிரதேசங்கள் சாரி கதைப்பிரவேசங்கள் விரைவில் நடைபெறுமாயின் நன்று.

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பா சார் ?

      Delete
  18. எழுத்துப்பிழை போல....

    ReplyDelete
  19. இரத்தப்படலம் கதையை வாசித்தவர்ளுக்கு அதில் வரும் கதாப்பாத்திரங்கள் எப்போதுமே மனதில் நிற்கும் வண்ணமாக அமையச் செய்தது கதாசிரியர் & ஓவியரின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக சொல்லலாம். 1987 ல தொடங்கிய ஓட்டம் ஒருவழியாக 2010 ல முடிவுக்கு வந்தது. அதன் பிறகு 2018 ல கனவு இதழாக வண்ண இதழாக வெளிவந்து வந்தவுடனே தீர்ந்து போய் சாதனையும் படைத்து விட்டது. இது யாவரும் அறிந்ததே! என்னதான் இரத்தப்படலம் கதையை படித்திருந்தாலும் அதில் வரும் கதாப்பாத்திரங்களின் முழுத்தன்மையை கதையில் முழுமையாக விவரித்து சொல்லப்படவில்லை. மங்கூஸ் விரியனின் விரோதி தனிக்கதையாக (ஸ்பின் ஆப்) வெளிவராத வரை எத்தனை பேருக்கு இவரைப்பற்றித் தெரியும்? அட இவருக்குள்ளே இப்படி ஒரு கதை இருக்குதான்னு கொண்டியவர்கள் எத்தனை பேரோ? (கொண்டாடியவர்களில் நானும் ஒருவன்) அந்த கதை ஏற்படுத்திய தாக்கம்தான் எல்லா ஸ்பின் ஆப் கதைகளையும் படிக்க ஆவலைத் தூண்டுகிறது. இன்னும் என்னென்ன மர்மங்கள் உள்ளதோன்னு. இதில் சில நெகடிவ் பாயிண்டுகளும் உள்ளதுதான் ஆனால், அதைவிட நிறைய பாஸிட்டீவ் பாயிண்டுகள் சொல்லப்பட்டுள்ளது. அதனால் படிக்கும் போது அந்த சில நெகடிவௌ பாயிண்டுகள் கண்களுக்குத் தெரியவில்லை. இந்த கதைகளும் ஒருநாள் விற்பனையில் சாதிக்கும் காலம் வரும் அதுவரை காத்திக்க (படிக்க) தயார். அடுத்த வருடம் வந்தாலும் மகிழ்ச்சிதான் இன்னும் ஐந்து வருடம் கழித்து வந்தாலும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி தான் இல்ல இன்னும்
    பல வருடங்கள் கழித்து வந்தாலும் மகிழ்ச்சி தான் 😝 இரத்தப்படலம் வண்ண இதழ் வெளிவருவதற்கே பல முட்டுக்கட்டைகள் அதையெல்லாம் சுக்குநூறாக உடைத்து கொண்டு வெளிவந்து சாதித்தும் விட்டது. அதே போல ஸ்பின் ஆப் கதைகளும் வெளிவரும் வந்து சாதிக்கவும் கூடும். நம்பிக்கை தான் வாழ்க்கை ... வாழ்க்கை தான் நம்பிக்கை 😊

    ReplyDelete
    Replies
    1. உண்மை நண்பரே
      கால்வின்வாக்ஸ்
      ஜானதன்ப்ளை
      மார்த்தா
      ஆலன்ஸ்மித்
      ஜுடித்
      இரினா
      ஜோன்ஸ்
      எல்லாம் வேற லெவல் ஜி
      ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு மர்ம முடிச்சு அவிழ்வது நிச்சயம்

      Delete
    2. உண்மை கலீல். எல்லாம் ஓர் ஆர்வம்தான். இதே காமிக்ஸ்கள் இங்கு வரமுதலே வேறு மொழிகளில் வெளியானவைதான். எனக்குத் தெரிந்து XIII மட்டுமே ஏறத்தாழ 30 மொழிகளுக்கு மேல் வெளியானது.... வெளியாகிக்கொண்டும் இருக்கின்றது.பிரெஞ்சு ஆங்கிலம் என எந்த மொழியில் படித்தாலும் அது தமிழ் மொழியைப்போல வருவதில்லை. பசியைப் போக்க எந்த உணவையும் உண்ணலாம் ஆனால் சோறு போல் சுவையாக இருப்பதில்லை போலவே அது. அதேபோல் எங்கு வேண்டுமென்றாலும் பசியாறினாலும் அம்மாவின் சாப்பாட்டில் கிடைக்கும் சுவை தனி அதுபோலத்தான் லயன் தமிழ். அதற்காகத்தானே இவ்வளவு கோரிக்கைகள். அந்த மொழி நடையை வேறெங்கே பெறமுடியும்? இங்குதான் இங்கு மட்டும்தானே?
      ஒரு கதை. அதன் தொடர், அவை அனைத்தும் இருக்கும்போதுதானே அது முழுமையாகிறது. இன்னும் எவ்வளவு காலம் நாம் உயிருடனிருப்போம் எனத் தெரியாது. இயன்ற வரை அனைத்தையும் இந்த சிங்கத் தமிழில் பார்த்துவிடவேண்டும் எனும் அவா. அது மட்டுமே காரணம் வேறொன்றுமில்லை.

      Delete
    3. சீக்கிரமே கைவசமுள்ள ஸ்பின் ஆப் கள் விற்றுத் தீர ஓடினை வேண்டுவோம் அப்போதுதான் மற்ற ஸ்பின் ஆப் களை போட்டு நம்ம சிங்கம் சிகரங்கள் எட்டுவதை பார்க்கலாம்

      Delete
    4. என்றேனும் ஒரு காலத்தில் பெலிஸிட்டி பிரவுன் & ஜூடித் வார்னர் கதைகளைப் போட்டு, சிங்கம் ஏறவிருக்கும் சிகரங்களையும் ; வாங்கவிருக்கும் "மாலை, மரியாதைகளையும் " பார்க்கத் தான் போகிறீர்கள் சத்யா ! ஏக விசேஷம் இந்த 2 ஆல்பங்களுமே என்பதால் நமக்கான வரவேற்பும் ஏகமோ ஏகமாய் தடபுடலாக இருக்கப் போகுது பாருங்க !!

      Delete
    5. //ஒவ்வொரு கதையின் முடிவிலும் ஒரு மர்ம முடிச்சு அவிழ்வது நிச்சயம்//

      ஜூடித் வார்னர் & ஜெஸ்ஸிகா மார்ட்டின் போட்டுக் கொள்ளும் (காதல்) மல்யுத்தத்தில் வேற மாதிரி முடிச்சுகளாய் அவிழ்கின்றனவே நண்பரே ?!!

      Delete
    6. அப்ப புக்க நீங்க கண்ணுல பாத்துட்டிங்க...?😍. சரிசரி சார் இனி ஆக வேண்டியத பாருங்க..😎😎.

      Delete
    7. ஒவ்வொரு பற்றியும் புலன்விசாரனையில் விரிவாக வந்துள்ளது என்பதையும் இவ்விடத்தில் கூறி கொள்கிறேன்.

      Delete
    8. //பிரெஞ்சு ஆங்கிலம் என எந்த மொழியில் படித்தாலும் அது தமிழ் மொழியைப்போல வருவதில்லை. பசியைப் போக்க எந்த உணவையும் உண்ணலாம் ஆனால் சோறு போல் சுவையாக இருப்பதில்லை போலவே அது// Prashenna very well said. We are so used to lion comics in Tamil no matter what language we read, it is never like reading a lion in Tamil. No one can replace our mother.

      Delete
    9. அன்பான வார்த்தைகளுக்கு நன்றிகள் நண்பர்களே ; ஆனால் அம்மாவின் சோற்றில் XIII என்ற பச்சை முத்திரை இருந்தால் மட்டும் தான் ரசிக்குமா - என்ன ? அது இல்லா ஆண்டின் இதர 45 + தருணங்களிலும் லயனின் அதே தமிழ் தானே தொடர்கிறது சார் ?

      Delete
  20. // எனவே என்னை பொறுத்தவரை ஸ்பின் ஆப் இதழ்கள் வருகை தந்தாலும் மகிழ்ச்சி ..வருகை தராவிட்டாலும் மகிழ்ச்சி//
    மிக்க நன்றி நண்பரே இதை தங்களது ஆதரவாகவே எடுத்துக்கொள்கிறேன் நண்பரே..

    ReplyDelete
  21. தாத்தா பிட் பிட்டாய் வரட்டும் ............
    ப்ருனோ வரட்டும் .........

    ReplyDelete
  22. டைகர் ஜாக்
    கிட் கார்ஸன்
    ரின்டின் கேன்

    ஆகியோரைப்போல் இவர்களும் ஜொலிப்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. இவர்களுக்கு வழங்கிய ஆதரவை நாம் இவர்களுக்கும் கொடுப்போமே....

      Delete
    2. கடைசி உதாரணம் சரியா என்று தெரியவில்லை நண்பா...:-)

      Delete
    3. கடைசி உதாரணம் சரியா என்று தெரியவில்லை நண்பா...:-)

      Delete
  23. அவெஞ்சர்ஸ் தொடரில் வந்த கதாபாத்திரங்களில் சிலவற்றுக்கு தனித்தனி தொடர்களை படைப்பாளிகள் திரைப்படங்களாகவே தந்திருந்தார்கள். அவை அந்த பிரதான அவெஞ்சர்ஸ் தொடரின் ஓட்டத்தை பாதிக்காமலும் அதனோடு தொடர்புடையதாகவும் அமைந்தன. ஆனாலும் அந்த தனித்தனித் திரைப்படங்கள் எல்லாமே வெற்றிபெற்றனவா என்றால், அதுவும் இல்லை. காமிக்ஸ் தொடரில் வந்த கதைகளை பெருமளவு மாற்றியமைத்து புதியதொரு தொடராகவே மார்வெல்லின் அவெஞ்சர்ஸ் தொடர் அமைந்திருந்தது. வெற்றிபெற்ற காமிக்ஸ் தொடரை திரைக்கதையாக்கி, அதன் துணைக் கதைகளையும் தனித்தனித் திரைப்படமாக்குவதில் சில அனுகூலங்கள் இருந்திருக்கும். ஆனால், நமது இரத்தப்படலம் தொடரோ, அது வெற்றி பெற்றபின்னர்தான் இந்த ஸ்பின் ஆஃப் கதைகளை புதிதாக உருவாக்கியது. ஆகவே, ஸ்பைடர் மேனுக்கும், ஹல்க்குக்கும் இன்னபிற ஹீரோக்களுக்கும் புதுப்புது கதாசிரியர்கள் புதுப்புது வடிவங்களை கொடுப்பதுபோல, இரத்தப்படலம் கிளைக் கதைகளுக்கும் புது வடிவம் கொடுக்கப்படுகிறது.

    எனவே, அது பிரதான தொடரோடு பல இடங்களில் முரண்பட நேர்கிறது, அல்லது சந்தேகங்களை கிளப்புகிறது. நாம் இரத்தப்படலத்தை மறந்துவிட்டு இந்த ஸ்பின் ஆஃப் கதைகளை வாசிக்கமுடிந்தால் மட்டுமே அவை சுவைக்கும், இல்லையெனில் கசக்கத்தான் செய்யும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை நண்பரே...அதே சமயம் இரத்த படலத்தை மறந்தால் அதன் பரிமாறல் புரிபடுமா என்பதும் சந்தேகமே...

      Delete
    2. சிக்கல்தான்! இரத்தப்படலத்தோடு ஊறிய ஒரு கதாசிரியருக்கு இந்த ஸ்பின் ஆஃப் இதழ்களை எழுதக்கொடுத்திருக்கலாம். மெயின் கதையோட்டத்தையும் பாதிக்காமல் தனிக் கதைகளுக்கும் ஒரு புதுப் பரிமாணம் கிடைத்திருக்கும். ஆனாலும், மங்கூஸ் கதை அட்டகாசம்! மற்றவை சராசரிக்கும் கீழே போனதுக்கு காரணத்தை படைப்பாளிகள் ஆராயவேண்டும்.

      Delete
    3. உண்மை....மங்கூஸ் ( மட்டும் ) எனக்கும் பிடித்த கதையே..

      Delete
    4. இதற்கான விடை காண்பது வெகு சுலபமே சார்...!

      இரத்தப் படலம் மெயின் தொடரை 13 -ம் பாகத்தோடு நிறைவு செய்வதே ஒரிஜினல் திட்டமிடல். ஆனால் தொடரின் வெற்றியைக் கண்டு லயித்த பதிப்பகத்தினர், பால் தரும் காமதேனுவை ஓரம் கட்டுவானேன் என்ற எண்ணத்தில் தொடரை மேற்கொண்டு 5 பாகங்களுக்கு நீட்டிக்கச் செய்தனர் ! ஒரு பேட்டியில் கதாசிரியர் வான் ஹாம் இது பற்றிப் பேசியிருந்தார் ! So வியாபார நோக்கம் புகுந்திடும் போதே கதாசிரியரின் ஒரிஜினல் திட்டமிடல் அடி வாங்கி விடுகிறது !

      பற்றாக்குறைக்கு 18 -ம் பாகத்தோடு மங்களம் பாடிய தொடரை இரண்டாம் சுற்று என நீட்டிக்க பதிப்பகத்தினர் முயற்சிக்கத் துவங்கிய போது - "நான் இந்த ஆட்டத்துக்கு வரலை !!" என்று வான் ஹாம் ஒதுங்கிக் கொண்டு விட்டார் !

      மெயின் தொடரின் வெற்றியை மேற்கொண்டு எவ்விதத்தில் சந்தைப்படுத்தலாமென யோசித்த வேளையில் பிறந்த ஞானம் தான் இந்த spin -offs படலம் ! கடைசி spin off (ஜூடித் வார்னர் ) நீங்கலாய் வேறெதிலும் வான் ஹாம் தலை நுழைக்க சம்மதிக்காத நிலையில் புதுசாய் கதாசிரியர்களைத் தேடும் நிர்ப்பந்தம் எழுந்தது ! அதுவும் ஒவ்வொரு கதைக்கும் ஒரு கதாசிரியர் என அமைந்து போகும் போது - ஏற்கனவே வான் ஹாம் எனும் ஜாம்பவான் செய்து வைத்த நள பாகத்தை ஒரு டஜன் புதியவர்கள் தங்கள் கைவண்ணத்தில் மெருகூட்ட முனைந்தது தான் நிகழ்ந்தது ! விளைவு எவ்விதமிருக்கும் என்று யூகிக்க லியனார்டோ தாத்தாவின் ஜீனியஸ்தனம் அவசியமா - என்ன ? ஏற்கனவே complex ஆனதொரு plot -ஐ அவரவரது புரிதலுக்கேற்ப கிளைக்கதைகளாக்கியதே மிச்சம் !

      இல்லை..இல்லை..பெருங்காய டப்பியின் மணமும் ஏற்புடையதே ; சாம்பார் அண்டாக்கு முன்னே அந்த டப்பியை இப்படியும்-அப்படியுமாய் ஆட்டிக் காட்டினாலே போதும், சுவை சுண்டியிழுக்கும் என்பது diehard ரசிகர்களின் நம்பிக்கை ! பந்தியின் பாக்கிப் பேர் ?

      Delete
    5. விஜயன் சார்,

      //
      இரத்தப் படலம் மெயின் தொடரை 13 -ம் பாகத்தோடு நிறைவு செய்வதே ஒரிஜினல் திட்டமிடல். ஆனால் தொடரின் வெற்றியைக் கண்டு லயித்த பதிப்பகத்தினர், பால் தரும் காமதேனுவை ஓரம் கட்டுவானேன் என்ற எண்ணத்தில் தொடரை மேற்கொண்டு 5 பாகங்களுக்கு நீட்டிக்கச் செய்தனர் ! //

      இது உண்மை தான்! இதனை படிக்கும் போது உணர்ந் தேன்; 13 பாகங்களுக்கு பிறகு கதை எப்போது முடியும் என்று பலமுறை தோன்றியது! அதுவும் அந்த வாட்சை சுற்றி நடக்கும் விஷயம் கொட்டாவியை தந்தது. சரியாக 13 பாகத்தில் இதனை முடித்து இருந்தால் இன்னும் ரசித்து இருக்கும்.

      மங்கூஸ் கதை அட்டகாசமாக இருந்தது ! அதனை தவிர மற்றவை மற்றவை அனைத்தும் சராசரிக்கும் கீழே, ஏதோ கதையை போடவேண்டும் கல்லா பார்க்கவேண்டும் என்ற விதத்தில் ஒரிஜினல் பதிப்பகத்தார் வெளி இட்டது போல இருந்தது.

      // மங்கூஸ் கதை அட்டகாசம்! மற்றவை சராசரிக்கும் கீழே போனதுக்கு காரணத்தை படைப்பாளிகள் ஆராயவேண்டும். //

      +1

      Delete
    6. இந்தத் தொடரை வான் ஹாம் துவக்கிய வேளையில் ஒவ்வொரு கதை மாந்தர்க்கும் இத்தனை பெரிய flashback அல்லது பின்னணியினைத் தரும் உத்தேசத்தில் நிச்சயமாய் இருந்திருக்க வாய்ப்பில்லை - simply becos 1982 -ல் துவங்கிய தொடரின் திட்டமிடல்களில் இந்த வெகு பின்னாட்களது spin offs சார்ந்த திட்டமிடல்கள் இடம்பிடித்திருக்கவே முடியாது ! So நாம் பார்த்த மங்கூசின் கதை வான் ஹாமின் கற்பனையாக இருக்க சான்ஸ் இல்லை ; அந்த அத்தியாயத்தின் பொறுப்பிலிருந்த பாபியன் ந்யூரியின் கைவண்ணமாகவே இருந்திட வேண்டும் ! இதர கதைகள் சொதப்பியதற்கு அது அதுவின் கதாசிரியர்கள் பக்கமே விரல் நீட்டத் தேவைப்படும் !

      Delete
    7. // இந்தத் தொடரை வான் ஹாம் துவக்கிய வேளையில் ஒவ்வொரு கதை மாந்தர்க்கும் இத்தனை பெரிய flashback அல்லது பின்னணியினைத் தரும் உத்தேசத்தில் நிச்சயமாய் இருந்திருக்க வாய்ப்பில்லை //

      Yes. I too echo the same.

      Delete
    8. உண்மைதான் நண்பரே அவரே நினைக்காத போது நாம எப்படி நினைப்பது....ஏற்கனவே நாம 4 விட்டாச்சு மீதியில் சிறந்ததை நமது ஆசிரியர் நிச்சயம் வெளியிடுவார் என நம்பிக்கை உள்ளது ....

      Delete
    9. ஆசிரியரின் முடிவை ஆமோதிக்கிறேன்.

      Delete
    10. XIII தொடரின் முதுகெலும்பென்னவென்று லேசாய் லாஜிக் கலந்து யோசிக்க முயன்றாலே சில யதார்த்தங்கள் புரிபடும் !

      வான் ஹாம் எனும் நிகரில்லா கதாசிரியர் !
      வில்லியம் வான்ஸ் எனும் வரம் வாங்கி வந்த ஓவியர் !

      இருவருமே ஒரு யுகத்துக்கொருமுறை ஜனிக்கும் அசாத்திய மனிதர்கள் ! இந்த இரு ஜாம்பவான்களின் கூட்டு முயற்சியில் பிடிக்கப்பட்ட ரம்யமான பிள்ளையார் தான் XIII என்ற நாயகர் !

      தற்போது அந்த ஜாம்பவான்கள் இருவருமே மொத்தமாய் missing ; மாறாக அவர்கள் உருவகப்படுத்திய ஒரு cult நாயகரின் நிழலுக்கொரு கதையை அர்ப்பணிக்க 12 வெவ்வேறு கதாசிரியர்களும், 12 வெவ்வேறு ஓவியர்களும் தம் சத்துக்கேற்ப முயற்சித்து வருகின்றனர் !

      ஆனால் இது அசல் பெருங்காயமே தான் ; சும்மா வாசனை கம கமன்னு தூக்கும் பாருங்களேன் !! என்று நண்பர் பழனி நம்மை நம்பச் செய்ய குட்டிக்கரணம் போட்டுவருகிறார் ! அந்தக் குட்டிக்கரணங்களின் சிரத்தை புரிகிறது ; பின்னுள்ள வியர்த்தம் புரிபட மாட்டேன்கிறது !

      பெலிசிட்டி ப்ரவுன் கதையின் உரிமைகளை வாங்கியும்,, மொழிபெயர்ப்பை செய்தும் ஆண்டுகள் 3 முடிந்துவிட்டன ! கிட்டத்தட்ட ஒரு நீலப்பட நாயகி ரேஞ்சுக்கு கதையில் வலம் வருகிறார் நாயகி !! இதைக் கண்ணில் காட்டப் பயந்தே "பணம் உறங்கினாலும் பரவாயில்லை போனால் போகிறது !" என உள்ளே வைத்துப் பூட்டியுள்ளேன் ! இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பழனிகுமாரா..?.என்று என்றோ ஒருநாள் பூட்டிய பீரோ கதவுகளைத் திறந்து தான் காட்டுவோம் !

      Delete
    11. ஓஹோ.. பேரிலே புரவுன் கலரை வச்சிக்கிட்டு ,நீலத்தை காட்டுகிறாரா ?

      Delete
    12. ஆனால் பராகுடாவின் புண்ணியத்தில் சிலபல கதவுகள் தகர்ந்திருக்க, பெலிசிட்டி இனிமேல் குடும்பக் குத்துவிளக்காய் நமக்குத் தென்படவும் வாய்ப்புகள் உண்டே !!

      Delete
    13. அப்போ விரைவிலே பவுன்சரின் இறுதிப்பாகங்களையும் எதிர்பார்க்கலாம்

      Delete
    14. //ஆனால் இது அசல் பெருங்காயமே தான் ; சும்மா வாசனை கம கமன்னு தூக்கும் பாருங்களேன் !! என்று நண்பர் பழனி நம்மை நம்பச் செய்ய குட்டிக்கரணம் போட்டுவருகிறார் ! //
      😊😊😊😊😊

      Delete


  24. இரத்தப் படலம் மெயின் தொடரை 13 -ம் பாகத்தோடு நிறைவு செய்வதே ஒரிஜினல் திட்டமிடல். ஆனால் தொடரின் வெற்றியைக் கண்டு லயித்த பதிப்பகத்தினர், பால் தரும் காமதேனுவை ஓரம் கட்டுவானேன் என்ற எண்ணத்தில் தொடரை மேற்கொண்டு 5 பாகங்களுக்கு நீட்டிக்கச் செய்தனர்

    #####


    அந்த பதினெட்டு பாக முழு தொகுப்பை படித்து முடித்தவுடன் மனதில் ஏற்படுத்திய தாக்கம்..வார்த்தைகளில் சொல்ல முடி
    யாது சார்.அதன் தாக்கத்திலியே ஒரு மணி நேரத்திற்கும் மேல் அமைதியாய் அமர்ந்து இருந்த்து இன்னமும் நினைவில்..ஸ்பின்ஆப்பை விடுங்கள் ..பதிமூன்றின் தொடர்ச்சி என ஒன்று வந்ததே... ம்ஹீம்..

    ReplyDelete
    Replies
    1. கவலையேபடாதீங்க...சுற்று # 3 கூட திட்டமிடலில் உள்ளது !

      Delete
    2. அய்யோ சாமீ....:-(

      Delete
    3. இன்று தேதி 13.
      XIII ஐ எல்லோரும் நினைக்கிறோம்

      Delete
  25. அண்ணன் தலையிலே ஒரு மத்தளம் எண்று titleஐப் போட்டுவிட்டு என்னாமாய்க் கலாய்க்கிறார் எடிட்டர்...

    ReplyDelete
    Replies
    1. //பெலிசிட்டி இனிமேல் குடும்பக் குத்துவிளக்காய் நமக்குத் தென்படவும் வாய்ப்புகள் உண்டே !!//
      100% உண்மை

      Delete
  26. எடுடா மேளம்
    அடிடா தாளம்
    இனிதான் கச்சேரி ஆரம்பம்.



    நான் சும்மா பாட்டு பாடுனேன்.

    ReplyDelete
    Replies
    1. //பெலிசிட்டி இனிமேல் குடும்பக் குத்துவிளக்காய்//
      கேட்டிங்களா...?

      Delete
  27. இப்போது தள்ளுபடி விலையில்....The இரத்தப் படலம் Pack !

    ஆன்லைனில் வாங்கிட : http://www.lion-muthucomics.com/xiii-rathap-padalam/400-xiii-ratha-padalam-pack-25-discount.html

    ReplyDelete
    Replies
    1. அலைகடலென வாரீர்...வாரீர்...!

      Delete
    2. இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப குசும்புதான்.. 😊😊😊

      Delete
  28. //வேற மாதிரி முடிச்சுகளாய் அவிழ்கின்றனவே நண்பரே ?!!//
    //பெலிசிட்டி இனிமேல் குடும்பக் குத்துவிளக்காய் நமக்குத் தென்படவும் வாய்ப்புகள் உண்டே !!//

    சிரிச்சு மாளலை. இணைத்தடத்தில் கார்ட்டூன் ஏதுக்கும் டயலாக் எழுதிட்டு இருக்கீங்களா?

    ReplyDelete
    Replies
    1. மஹி ஜி இவர் மட்டும் எல்லா புக்கையும் படிச்சிட்டார் பாத்திங்களா...??

      Delete
    2. படிச்சதனால் தானே அந்தத் திக்கில் தலைவைத்துப் படுக்கத் தயங்குகிறேன் ?

      Delete
    3. //சிரிச்சு மாளலை. இணைத்தடத்தில் கார்ட்டூன் ஏதுக்கும் டயலாக் எழுதிட்டு இருக்கீங்களா?//

      அட...ஆண்டுக்கு ஆறே புக் என்று அந்த சந்தோஷத்துக்குத் தான் தடா போட்டாச்சே சார் ? நமக்கும் சரி, நாளைய தலைமுறைக்கும் சரி, ரசிக்க ஏகமாய் சமாச்சாரங்கள் கொண்ட கார்ட்டூன்களுக்கு கல்தா தர நேரிட்ட பொழுதெல்லாம் அமைதி காத்த நண்பர் இப்போது 'அஞ்சரைக்குள்ளே வண்டி' ரேஞ்சிலான கதைக்காக 'ஆகா' போடுவதைப் பார்க்கும் பொழுது அழுவதா ? சிரிப்பதா ? என்று தெரியாத reaction என்று வைத்துக் கொள்ளுங்களேன் !

      Delete
    4. அதெல்லாம் தனிப்பட்ட கருத்தாக இருக்காது சார். ஒரு குழுவாக ஒரு முடிவெடுத்துவிட்டு அதில் பிடிவாதமாயிருந்து 'சாய்ச்சிட்டோம் பாத்தியா'ன்னு சிலர் சந்தோசப்படுவதை கடந்த சில வருடங்களில் இங்கே பார்த்திருக்கிறோமே? எனக்கு டாடின்னாத்தாங்க பயம், மற்றப்படி ஐ லவ்யுங்க... வகையறாக்கள்...

      Delete
    5. //எனக்கு டாடின்னாத்தாங்க பயம், மற்றப்படி ஐ லவ்யுங்க... வகையறாக்கள்...//

      :-))))))

      Delete
  29. விஜயன் சார் iii
    13ம் தேதி (X 111) அண்ணாத்தையின் தலையில் மத்தளம் வாசித்தது சுவராஸ்யமாகவே இருக்கிறது..
    என் பங்கிற்கு, "இரத்த படலம் "ஒன்றுதான் நம் அனைவராலும் தேசிய விருது கொடுக்கும் அளவிற்கு - சிறந்த கதை, சிறந்த ஓவியம்/சிறப்பான ஹுரோயிசம், மனதில் பதியும் துணை கதாபாத்திரங்கள் என்று _மொத்தத்தில் காமிக்ஸ் படிப்பது சிறுபிள்ளை சமாச்சாரம் என்பதை உடைத்த முதல் "கிராபிக்நாநாவல்" அல்லவா.iii
    எனவே, வண்ணத்தில் முழுமையான தொகுப்பாக வெளியிட்டதும் கடமை முடிந்தது என்று ஒதுங்குவது எப்படி சரியாகும்.
    தற்போது வண்ண டிஜிட்டல் கோப்புகள் தயாராக இருக்கும் நிலையில் முதல் இரண்டு பாகங்களை மட்டும் களத்தில் இறக்கி விட் டால் விளம்பரம் செய்ய நமது ஸ்டாலுக்கு ஒரு மாஸ் ஹீரோவும் கிடைப்பார்' அடுத்த ஸ்பின் ஆப் தொடர்க ளுக்கும் ஆதரவும் கிடைக்கும் அன்றோ.
    ஆசிரியர் பரிசீலிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //வண்ணத்தில் முழுமையான தொகுப்பாக வெளியிட்டதும் கடமை முடிந்தது என்று ஒதுங்குவது எப்படி சரியாகும்.//

      வாங்க நண்பரே சூப்பர் ...👌

      Delete
    2. //தற்போது வண்ண டிஜிட்டல் கோப்புகள் தயாராக இருக்கும் நிலையில் முதல் இரண்டு பாகங்களை மட்டும் களத்தில் இறக்கி விட் டால் விளம்பரம் செய்ய நமது ஸ்டாலுக்கு ஒரு மாஸ் ஹீரோவும் கிடைப்பார்' அடுத்த ஸ்பின் ஆப் தொடர்க ளுக்கும் ஆதரவும் கிடைக்கும் அன்றோ.//

      எனக்குப் புரியவில்லை சார் - முதலிரண்டு பாகங்கள் ; மாஸ் ஹீரோ ; வண்ண டிஜிட்டல் கோப்புகளென்று நீங்கள் எவற்றைக் குறிப்பிடுகிறீர்களென்று ? இரத்தப் படலம் மீண்டும் புதுசாய்த் தொடர்வதாய் தவறான அனுமானத்தில் உள்ளீர்களோ என்ற ஐயம் எனக்கு ! Nopes - இரத்தப் படலத்தில் இப்போதைக்காவது புதுக்கதைகளில்லை & அதன் இரண்டாம் Mayflower சுற்றில் கிறுகிறுத்துக் கிடப்போரைத் தட்டி எழுப்ப ஒரு லோடு பன்னீர் சோடா கூடப் பற்றாதெனும் பொழுது புதுக் கதைகளெனில் தெறித்து ஓடும் கூட்டமே அதிகமிருக்கும் !

      இங்கு தற்போதைய அலசல்கள் ஓடிடுவது ஸ்பின் offs பற்றியே & அவை எவற்றிலும் ஹீரோ என யாருமே கிடையாதே - யாரை முன்னிலைப்படுத்திடலாம் என அபிப்பிராயப்படுகிறீர்கள் ?

      Delete
    3. And அவை எல்லாமே one shots ! முதலிரண்டு பாகங்கள் ; தொடரும் பாகங்களென்றெல்லாம் எதுவும் கிடையாதே !

      Delete
    4. முக்கிய கதாபாத்திரங்களுக்கென தனி கதைகள்
      ஜோன்ஸ்
      இரினா
      மார்த்தா
      பெலிஸிட்டி
      பெட்டி
      ஜூடித்
      அமோஸ்
      ஸ்டீவ்ராலண்ட்
      பில்லி
      ஆலன்ஸ்மித்
      கால்வின்வாக்ஸ்
      ஜானதன்ப்ளை
      மங்கூஸ்

      என மொத்தம் 13 தனிபுத்தகங்கள் உள்ளது. அவற்றில் 4 வந்துவிட்டது இன்னும் 9 புத்தகங்கள் மட்டுமே..ஆசிரியர் மனது வைத்தால் வெறும் 3 ஆண்டுகளில் 3 ஸ்பெசல் புத்தகங்களில் வந்துவிடும்.😉😉

      Delete
    5. விஜயன் சார் i
      நான் கேட்பது -மறுபடியும் முதலிலிருந்தே தான். - கருப்புக் கதிரவனின் தினம் + செவ்விவிந்தியன் பாதையில் - என்று.
      முன்பு நான் எழுதிய கடிதங்களில் முழு தொகுப்பிற்கு பலமான எதிர்ப்பை தெரிவித்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
      என்னைனைப் பொறுத்தவரை இரத்த படலம் - 8வது பாகத்துடன் ஒரு முழுமை அடைகிறது
      எனவே இரண்டு இரண்டு பாகங்களாக 4 இதழ்கள் மட்டுமாவது வெளியிட வேண்டும் என்பதே எனது கோரிக்கை .
      இதை மறுபடியும் யார் வாங்குவார் என்பது- நானே வாங்குவேன் - மற்றவர்களுக்கு படிக்க கொடுப்பேன்.
      மேலும் தங்களது ஹார்டு கவர் பைண்டிங்-அட்டைப்பட டிசைன் புதிய வாசகர்களை உள்ளிளுக்கு மே-என்ற அனுமானம்தான்..
      (



      .

      Delete
    6. ஹை....!! கோட்டை அழிங்க...அழிங்க.........மறுக்கா பரோட்டா. சாப்பிடப் போறோம் !!

      Delete
  30. //பெலிசிட்டி ப்ரவுன் கதையின் உரிமைகளை வாங்கியும்,, மொழிபெயர்ப்பை செய்தும் ஆண்டுகள் 3 முடிந்துவிட்டன//
    ஆகா ....😻

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆனந்தம் புரிகிறது பழனிவேல்....அதைக் களமிறக்காது பத்திரமாய் அடைத்து வைத்திருப்பதன் நலனைப் பாராட்டுவதற்கு நன்றிகள் !

      Delete
    2. அனைத்து பாகங்களையும் எங்களுக்கு காட்டாமலே படித்து விட்டீர்கள் பரவாயில்லை.
      ஒரு லேடி ஒரு ஜென்ஸ்
      என கூட்டனி வைத்தால் நலம்
      *லேடீஸ்அணியில்*
      இரினா ஜோன்ஸ் ஜீடித் மார்த்தா
      *ஜென்ஸ் அணியில்*
      ஜானதன்ப்ளை கால்வின்வாக்ஸ் ஆலன்ஸ்மித் பில்லி என
      இரண்டையும் கலந்து ஒரு மாஸ்இதழை எதிர்பார்க்கிறோம் சார்..

      Delete
    3. அது சரி பழனி....ஒவ்வொரு பாகத்துக்கும் முடிச்சு முடிச்சாய் என்னென்னெமோ அவிழக் காத்திருப்பதாய் சிலாகித்தது எதைப் படித்தோ ?

      Delete
    4. பல மொழிகளில் பொம்மை பார்த்து கூகிலான்டவரின் துணையுடன் சார்.

      Delete
    5. படம் பார்த்து கதை புரிந்துகொள்ளும் வித்தையை கற்றுக்கொடுத்ததே நமது காமிக்ஸ்தான் அதிலும் XIII என்றால் சொல்லவும் வேண்டுமா சார்...😊

      Delete
    6. பெட்டி பார்னோவ்ஸ்கி போன்ற கதைகளைப் படித்துவிட்டு மலங்க மலங்க முழிப்பதைக் காட்டிலும் - "என்னமோ இருக்குது" என்ற நம்பிக்கையோடு காலத்தைத் தள்ளுவதிலாவது ஒரு சுகமிருக்கக்கூடும் !

      Delete
  31. //ஆண்டுக்கு ஆறே புக் என்று அந்த சந்தோஷத்துக்குத் தான் தடா போட்டாச்சே சார் ? நமக்கும் சரி, நாளைய தலைமுறைக்கும் சரி, ரசிக்க ஏகமாய் சமாச்சாரங்கள் கொண்ட கார்ட்டூன்களுக்கு ....//

    மாதம் ஒரு கார்ட்டூன் கட்டாயமாக வேண்டும் சார்... எல்லாரும் ஏதேதோ கேட்கும்போது நாமும் நமக்கு தேவையானதை கேட்டு வைப்போம்....
    ஏ டு இஸட் வரிசையிலே ஏதோ ஒன்றிலாவது சேர்த்துக்கோங்க...

    ReplyDelete
    Replies
    1. +1

      மாதம் ஒரு கார்ட்டூன் புத்தகம் எங்களுக்கு தேவை. அடுத்த வருடம் முதல் இதனை நடைமுறை படுத்துங்கள். 🙏🙏🙏🙏

      Delete
    2. நான் இன்னமும் கார்டூன் கதைகளை விரும்பும் மீசை வைத்த குழந்தை.:-)

      Delete
    3. அதானே..? இதுக்கோசரம் கொடி பிடிக்க ஆள் குறைந்தால் நானும் வர்றேன் !

      Delete
    4. Me too Sir. I'm a die hard cartoon fan

      Delete
  32. எனக்குத் தோர்கல் மொத்தமாக ஹார்ட் பவுண்டில் வேண்டும்.

    இப்பவே துண்டை போடுவோம்..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஹை....இது கூட செம கோரிக்கையா இருக்கே டாக்டர் சார் ?!! பற்றாக்குறைக்கு Young தோர்கல் தொடரும் உள்ளது !! பெரிய ஜமுக்காளமாய்ப் போட்டால் போச்சு !

      Delete
    3. எனக்குத் தோர்கல் மொத்தமாக ஹார்ட் பவுண்டில் வேண்டும்.

      இப்பவே துண்டை போடுவோம்..

      #₹₹₹₹

      ஹாஹாஹா..

      :-)))))

      Delete
    4. Yes yes yes. Super appu. Me too join the group and young thorgal.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  33. Once again my reads starts with Largo by reverse pattern. That means with 'piriyamudan piralayam'.really now it is interesting to read.

    ReplyDelete
  34. அந்த பெலிஸிட்டி புள்ளய மட்டும் ஏதாவது இடஒதுக்கீடு கொடுத்து ஜூன் மாதம் வரமாதிரி செய்யுங்கள் சார்.

    பெலிஸிட்டி வராததால் வருத்தத்தில் இருக்கும் வாலிபர் சங்கம் சார்பாக கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பெலிசிட்டி புள்ளைன்னா ஒரு லட்டு...

      ஜூடித் வார்னர்னாக்கா ரெண்டு லட்டு...(ஜூடித் + ஜெஸ்ஸிகா)

      இப்போச் சொல்லுங்க ...லட்டு தின்ன ஆசையா ? இன்னொரு லட்டு தின்ன ஆசையா ?

      Delete
    2. மூன்றையும் ஒன்றாக குண்டு புக்கா போட்டுடுங்களேன்...

      Delete
    3. ஆனா இந்த டீலிங் எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு சார் !

      Delete
    4. ஜோரா ஒரு கைதட்டல் கரூர்கார்

      Delete
  35. அந்த கஷார் வைரங்கள் (ஸ்பின் ஆப்கள்) ஆபத்தானவை.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் குடோனை விட உங்களுக்கு ரொம்ப பெர்ர்ரிய
      மனசு சார்....

      Delete
    2. ///உங்கள் குடோனை விட உங்களுக்கு ரொம்ப பெர்ர்ரிய
      மனசு சார்...///

      ஹா ஹா!! :))))))

      Delete
  36. லோன் ரேஞ்சர் படித்து விட்டேன். எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    ReplyDelete
    Replies
    1. ஷப்பா...யாராச்சும் அந்த பாவப்பட்டவரை நினைவூட்டுனீங்களே ; நன்றி !!

      Delete
  37. எடிட்டர் சார்.. அப்படியே இரட்டை வேட்டையர்கள் ...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மேஜிக் விண்ட் ப்ளீஸ் ?

      Delete
    2. எனக்கு கராத்தே டாக்டர் பெஞ்சமின் சார்..

      Delete
  38. ஜானதன் கார்ட்லேண்ட் வேண்டும்

    ReplyDelete
  39. தனி ஒருவனில் தன் தாயை இழந்த விட்ட, தந்தையால் வளர்க்கப்பட்ட கதாநாயகனின் நிலையை பறைசாற்றிட முதல் கதை,

    தன் தந்தையின் நட்சத்திரத்தை (பதவியை, நீதியை) மதிப்பு வாய்ந்ததாக கருத செய்வதற்கு இரண்டாவது கதை,

    என முதல் இரண்டு கதைகளும் கதாநாயகனின் தன்னிலை விளம்பும் சம்பவங்களாகவே உலாவருகின்றன.

    ReplyDelete
  40. I am ok for all books,
    Leonardo to XIII spinoffs...
    Thanks

    ReplyDelete
  41. விஜயன் சார், எனக்கு ஒரு யோசனை.

    ரத்த படலம் ஸ்பின் ஆப் கதைகளின் ஒரிஜினல் உங்களிடம் உள்ள அதே நேரம் நீங்கள் அதனை படித்து முடித்து விட்டீர்கள். ஈரோடு வாசகர் சந்திப்பு முடிந்த பின், மாலை நேர மரத்தடி மீட்டிங்கை, ஸ்பின் ஆப் கதை நேரமாக மாற்றினால் என்ன? அதாவது, அந்த ஒரிஜினல் கதை புத்தகத்தை கையில் வைத்து அல்லது புரஜெக்டர் மூலம் பெரிய திரையில் காண்பித்து, நீங்கள் கதை சொல்ல நாங்கள் எல்லாம் கேட்போமாம்! எப்படி! செலவே இல்லாமல் ஸ்பின் ஆப் கதைகளை வாசகர்களிடம் சேர்த்து விட்டாச்சு! இதே முறையை ஸ்பைடர், இரட்டை வேட்டையர், மேஜிக் விண்ட், தாத்தா, இன்னும் வெளி இட முடியாத கதைகளுக்கும் வரும்காலத்தில் பயன்படுத்தலாம்! :-)

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு பேசாம ஸ்பின்ஆப் கதைகள் வேணாம்னு சொல்லிடலாம் நீங்க. 😜

      Delete
    2. நம்ப ஆசிரியர் நன்றாக கதை சொல்லுவார் ஜி. நம்புங்கள்.

      Delete
    3. ஆக மொத்தம் மரத்தடியில் நிறையப் பேரை பிளைன் ராக் சிறைக்கூடத்து XIII போல நிற்கச் செய்து விடலாம் என்கிறீர்கள் ?!

      Delete
    4. //நம்ப ஆசிரியர் நன்றாக கதை சொல்லுவார் ஜி. நம்புங்கள்.//
      அது பிரச்னை இல்லீங்க பரணி. ஓரளவுக்கு அந்தக் கதைகளை பத்தித் தெரிஞ்சவங்க யாரும்பெருசா வேணும்னு சொல்ல மாட்டாங்க...Die Hard fans தவிர.

      Delete
    5. பாப்பா பாப்பா கதை கேளு.
      SPIN OFF கதை கேளு.
      விஜயன் சாரு ெசான்ன கதை.
      நாம எல்லாம் கேட்ட கதை.

      Delete
    6. :-)))))


      என்னப்பா இது காலைல இங்கே நிறைய தடவ ஆசரியர்ல இருந்து எல்லோரும் சிரிக்க வைக்குறாங்க..

      :-)

      Delete
    7. @PfB, MP. Edi, RP

      ஹா ஹா ஹா!! செம்ம!! :))))

      Delete
    8. ஈரோட்டில் சஸ்பென்ஸா ஒரு ஸ்பின்ஆப் ரிலீஸ் ஆகுதாம்....

      Delete
    9. கர்னல் ஆமோசை சஸ்பென்ஸா வெளியிடறேன்னு வாங்கின பல்பும் சரி ; விற்பனையில் வாங்கின சாத்தும் சரி - இன்னொரு எட்டுப் பத்து வருஷங்களுக்கு மறக்காது பழனி !

      Delete
  42. Loan Ranger definitive edition மாதிரி ஒன்னு போடலாம். ராகவன் மற்றும் என்னோட ஓட்டு இதுக்கு உண்டு.

    ReplyDelete
    Replies
    1. சிக்குறே பூத்திலேயெல்லாம் வோட்டு போட்டுகினே போறீங்களே சார் ? இன்னா மேட்டர் ?

      Delete
  43. இளம் ப்ளூபெர்ரி மொத்த தொகுப்பு தனி முன் பதிவுக்கு ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கோம். இத மட்டும் ரிலீஸ் பண்ணலன்னா ரிலீஸ் ஆகும்வரை ஆபிஸ் முன் தலீவரை உண்ணாவிரதம் இருக்க வைப்போம்.
    (இந்தத்தடவை எங்களை வாழைப்பூ வடை காமிச்சு ஏமாத்த மிடியாது. தலீவர் சாப்பிடறதை தடுக்க தலீவர் சுத்தி ரெண்டு மூனு பவுண்சர்களை நிறுத்திடுவோம்).

    ReplyDelete
    Replies
    1. க்கும்...இப்ப சிரிக்கிறதா ,அழுகிறதான்னு தெரியல்லையே..:-(

      Delete
    2. Sheriff ji yes complete the young blue berry series.

      Delete
    3. எந்த ஆபீஸின் முன்னே என்று சொல்ல மறந்துவிட்டீர்கள் சார் ; தலீவர் பாட்டுக்கு EB ஆபீஸ் முன்னே போய் உண்ணாவிரதம் இருக்கப் போறார் !

      Delete
  44. ஐயா எடிட்டர் சாமி,

    பொம்மை புத்தகத்தில் எதையாவது போட்டு குடுங்க, படிச்சுட்டு சந்தோசமா இருப்போம். இப்போதைக்கு இது மட்டும் தான் என்னோட நிலைமை.

    பிடித்த ஹீரோக்கள்-ஹீரோயின்கள் என மட்டுமே காமிக்ஸை பொறுத்த வரை என்னால் வகைப்படுத்த முடிகிறது.

    நதி போகும் வரை இந்த கப்பலும் போகும்...

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா!! சூப்பர்!! :))))

      Delete
    2. திரும்ப சிரிப்பு

      Delete
    3. Naanum Idhe than sola virumbugiren nanbare. Any bommai book is good enough for me.

      Delete
    4. //நதி போகும் வரை இந்த கப்பலும் போகும்... //

      சூப்பர் சார் ! அதிலும் போன மாதத்து லக்கி லூக் (மிஸிஸிப்பி) நதி சாகஸத்துக்குப் பின்னே இந்த வரி இன்னும் தூக்கலாய் பொருள்படுகிறது !!

      Delete
  45. ப்ரூனோ, ரோஜர், வாள்சண்டை மற்றும் sci-fi-க்கு டபுள் ஓகே.

    இன்னொரு வெட்டியான், செவ்வாய் பயணம், பூங்கா பெஞ்ச் மற்றும் விஞ்ஞானி தாத்தா வேண்டாம்... டாம்

    ReplyDelete
  46. எல்லோரும் ஏக குஷியா இருக்காப்ல இருக்கே.. எல்லாரோட வீட்டுக்காரம்மாக்களும் ஊருக்குப் போய்ட்டாங்களா?!! :D

    ReplyDelete
    Replies
    1. Yes EV after so so long people are this enthusiastic to post in our blog. I just love it. Keep at it guys.

      Delete
    2. சரியான தலைப்பு கிட்டி எஞ்சின் ஸ்டார்ட் ஆகி விட்டால் பிய்த்துப் பிடுங்கி ஓடும் தானே ?

      Delete
    3. மே மாச லீவ்க்கு மேப்ளவர் கப்பல்ல டூர் போயிட்டாங்க.

      Delete
  47. தனியொருவன்: 3-6
    இரண்டாம் பக்கத்திலேயே ரேஞ்சர் கழுத்தில் தூக்கு கயிறு, அவரை தூக்கில் போட ஒரு கும்பல் அதற்கு தலைமை ஒரு மார்ஷல் என இரண்டாம் பக்கத்திலேயே சஸ்பென்ஸ் உடன் ஆரம்பிக்கும் கதை, தட தட வேகத்தில் கடைசி பாகம் வரை ஓடும் கதை நம்மையும் அதனில் பயணிக்க செய்வது சிறப்பு.

    டோண்டோவின் flash backன் ஒரு பகுதியை சுருக்கமாக சொல்லிய விதம் அருமை; அதுவும் 6 பக்கங்கள் வசனங்கள் இல்லாமல், படங்கள் மூலம் சொல்லியதை ரசித்தேன்; இந்த sequenceல் background சித்திரங்கள் நன்றாக இருந்தது.

    குழந்தைகளுக்கு தனது தந்தை தான் முதல் சூப்பர் ஹீரோ என்பதை ரேஞ்சரின் குழந்தை பருவத்தில் நடந்த சில சம்பவங்கள் மூலம் சொல்லியதை வியந்தேன்; ரேஞ்சரின் அப்பா அந்த ரௌடியை மடக்கிய விதம்.

    கதையில் வரும் க்ளாடியா கதாபாத்திரம் சூப்பர். அவளுக்கு நேர்ந்த கொடுமை, அதற்கு அவள் எடுக்கும் முடிவு; அந்த நேரத்தில் கைதட்டி படித்தேன்.

    ஆபத்தில் இருக்கும் ரேஞ்சரை காப்பாற்ற எருமை கூட்டத்துடன் வரும் அந்த ஆக்சன் sequence கலக்கலாக இருந்தது; தூக்கு மேடை மேல் நடக்கும் சண்டை; இதற்கு வலுசேர்க்கும் விதத்தில் சித்திரங்கள் இருந்தது; தூக்கு மேடைக்கு கீழ் எருமைகள் ஓடுவதை top angleல் ஓவியர் அழகாக காண்பித்து இருப்பார்.

    எனக்கு பிடித்த விஷயங்களை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

    தனியொருவன் வித்தியாசமானவர்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல விமர்சனம்..:-)

      Delete
    2. //தூக்கு மேடைக்கு கீழ் எருமைகள் ஓடுவதை top angleல் ஓவியர் அழகாக காண்பித்து இருப்பார்.//

      நண்பர் ராஜ் முத்துக்குமார் இதனை அலசினால் பிரமாதமாக இருக்கும் !!

      Delete
  48. நடந்தாலும் நடக்கலாம் !!
    //////////////////////////////////////////////////////////////////////
    ஆகஸ்ட் 2019 ஈரோடு புத்தக திருவிழா
    ஒருவர் : அந்த காமிக்ஸ் ஸ்டால்ல என்ன ஒரே கூட்டம் ?
    மற்றொருவர் : அங்க ஒரு காமிக்ஸ் புக்கோட விலை ஒண்ணே முக்கால் லட்சமாம்
    ஒருவர் : ஆத்தாடி ! அப்படி என்ன விசேசம் அதுல ?
    மற்றொருவர் : ஒரு காமிக்ஸ் ரசிகருக்காக ஏதோ ஸ்பின் ஆப் புக்காம் .அவருக்கு மட்டும் ஒரே ஒரு காப்பி அடிச்சி எடிட்டர் கொடுத்து இருக்கிறாராம் ..
    ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    சிவகாசி பேருந்து நிலையம்
    ஒருவர் : என்னங்க இந்த பக்கம் ? இப்பத்தான் பொண்ணு கல்யாணம் முடிச்சீங்க ...
    மற்றொருவர் : என்ன மாதிரியே காமிக்ஸ் ரசிகருக்கு என் பொண்ணை கொடுத்தேன் ..தலை தீபாவளி வர போவுதுல்லே....
    ஒருவர் : தலை தீபாவளிக்கு மோதிரத்துக்கு பதிலா அஞ்சு பவுன் செயின் கேக்குறாரா மாப்பிள்ளை ?
    மற்றொருவர் : சேச்சே ..மாப்பிள்ளை தங்கமானவரு ...ஆனா தலை தீபாவளிக்கு தீபாவளி மலரா ஒரு ஸ்பின் ஆப் புத்தகம் வந்தாத்தான் தலைக்கு எண்ணெய் வச்சுப்பேன்னு அடம் புடிக்குறாரு ..அதான் எடிட்டரை பாக்க போய்ட்டு இருக்கேன் ..
    ////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    BCCI TAMILNADU CHAPTER சென்னை அலுவலக அறையில்
    செகரட்டரி ( காமிக்ஸ் ரசிகரிடம் ) சொன்னா புரிஞ்சுக்குங்க ....ஸ்பின்னுக்கு நாங்க ஆள் தேடறோம் –ன்னு சொன்னது உண்மைதான் ..ஆனா அது நீங்க நினைக்கிற மாதிரி ஸ்பின் ஆப் புக்குக்கு எல்லாம் கிடையாது ..ஸ்பின் பௌலிங் –க்கு...\
    /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா!! செம்ம்ம!! :))))))

      சிரிப்பு வைத்தியம்?! ;)

      Delete
    2. அதிகாலை 12.30 மணிக்கு வாய்விட்டு சிரிக்க வைச்சு திட்டு வாங்க வைக்கறீங்களே செனா. நியாயமா? அதுவும் அந்த கடைசி ஜோக்குல நான் க்ளீன் போல்ட்.

      Delete
    3. செனா அனாஜி.. செம.. இந்த வருச தீபாவளிக்கு செயல்படுத்திட வேண்டியது தான்.. என்ன தல தீவாவளிக்கு பதிலா, 20 வருச தியாகத்துக்கு நஷ்ட ஈடாக கேட்க வேண்டியது தான்...

      Delete
    4. ரண களத்திலும் குசும்பு !!!

      :-)))

      Delete
    5. மொத்த புத்தகங்களையும் "தூங்கிப் போன டைம்பாமா" குடுத்துடப் போறாங்கே.....

      ( மாப்பிளை 20 வருஷமா தூங்கீட்டு இப்ப தலைச்சீர் கேட்டா )

      Delete
  49. வணக்கம் சார்...
    ரொம்ப நாள் களித்து blog பக்கம் வந்துள்ளேன்...
    #finishing my +2 exam with 80% marks...
    #come_back

    ReplyDelete
    Replies
    1. Congrats! all the very best for your future!

      Delete
    2. Congrats! all the very best for your future!

      Delete
    3. வாழ்த்துகள் அகில்..

      Delete
    4. பெருமையுடன் வாழ்த்துக்கள் அகில்!

      Delete
    5. வாழ்த்துகள் அகில்

      Delete
    6. வாழ்த்துக்கள் அகில்

      Delete
    7. மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தம்பி உணக்கு பரிசாக நீ கேட்ட காமிக்ஸ் ஈரோடு கொண்டு வருகிறேன் நேரில் நீ பெற்றுக்கொள்வாய் என நம்புகிறேன்

      Delete
    8. வெரிகுட்..! வெரிகுட்..!

      வாழ்த்துகள் அகில்.

      Delete
    9. @parani from Bangalore அண்ணா
      @erode vijay அண்ணா
      @baranitharan அண்ணா
      @prashenna அண்ணா
      @rummi xiii அண்ணா
      @ganesh kumar 2635 அண்ணா
      @செந்தில் சத்திய அண்ணா
      @govindaraj perumal அண்ணா
      ஆனைவருகும் நன்றிகள்...

      Delete
    10. உணக்கு பரிசாக நீ கேட்ட காமிக்ஸ் ஈரோடு கொண்டு வருகிறேன் நேரில் நீ பெற்றுக்கொள்வாய் என நம்புகிறேன்...
      வாங்கி கொள்கிறேன் அண்ணா

      Delete
    11. அட்டகாசம் !! வாழ்த்துக்கள் அகில் !!

      Delete
  50. இரத்த படல ஸ்பின் ஆப் சிறந்த கதைகளுக்கு நானும் ஆதரவு தெரிவிக்கிறேன் 👍👍

    ReplyDelete
    Replies
    1. நானுமே தான் நண்பரே - சிறந்த கதைகள் இருந்தால் !

      Delete
    2. தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவருக்கே சக்ேேேேேதகம் போல?

      Delete
  51. போற்றுவார் போற்றலும்
    தூற்றுவார் தூற்றலும்
    போகட்டும் ஜேசனுக்கே.
    ஜேசனே சாதித்தான்.
    ஜேசனே வென்றான்.
    வாழ்க உன் புகழ்.
    என்றும் இனிய எண்13.
    உலகம் உள்ளவரை அதைக்கூறு.

    தலைவரின் பாடல்.

    அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
    அது ஆணவச்சிரிப்பு.
    உன் கதைகளை படிக்கும் எங்களுக்கு
    என்றும் புன்சிரிப்பு.

    ReplyDelete
  52. ஆசிரியர்க்கு,

    2012 க்கு பிறகு வந்த அனைத்து புத்தகங்களையும் படித்திருக்கிறேன். ஆனால் ஒரு சில கதைகள், அவ்வளவு சிறப்பில்லை எனும் அளவுக்கு இருந்ததே தவிர மோசம் என்று எதுவும் இல்லை.

    என் அம்மா ஒரு டெக்ஸ் ரசிகை. எப்போது சென்னை வந்தாலும் அனைத்து புது கதைகளையும் படித்து விடுவார். ஆனால் அவரே 'Bluecoat' மற்றும் 'Smurf' கதைகள் ஏன் வருவதில்லை என்று கேட்கிறார். அவரிடம் அனைத்து வாசகர்களின் ரசனைகளும் ஒத்து போவதில்லை என்றால், அவரால் அதை புரிந்து கொள்ள இயலவில்லை. வயதான நானே ரசிக்கிறேனே என்கிறார்.. விலை அதிகமாம், ஆசிரியரால் Royalty கட்ட முடியவில்லை, பின்னாளில் வரும் என்று சொல்லி இருக்கிறேன்.. வேறென்ன செய்ய..

    On Demand முறைப்படி புத்தகங்களை வெளியிடும் அளவுக்கு நம் வாசக வட்டம் இன்னும் வளரவில்லை. :(

    உங்கள் தேடலை தொடருங்கள் சார்.. உங்கள் முடிவுகளுக்கு நிச்சயம் நங்கள் துணை நிற்போம்..

    P.S : ஜோனதன் கார்ட்லேண்ட் எனக்கும் அம்மாவுக்கும் பிடித்திருக்கிறது..

    - சங்கர்

    ReplyDelete
    Replies
    1. // அவரே 'Bluecoat' மற்றும் 'Smurf' கதைகள் ஏன் வருவதில்லை என்று கேட்கிறார். அவரிடம் அனைத்து வாசகர்களின் ரசனைகளும் ஒத்து போவதில்லை என்றால், அவரால் அதை புரிந்து கொள்ள இயலவில்லை. வயதான நானே ரசிக்கிறேனே என்கிறார்.. விலை அதிகமாம், //

      ஒவ்வொரு மாத புத்தகங்கள் வரும்போதும் எனது குழந்தைகள் கேட்கும் கேள்வி இதுவே; ரின்டின் ஏன் இல்லை, சமர்ப் ஏன் இல்லை! ! உங்களை போல்தான் நானும் சமாளித்து வருகிறேன்!

      Delete
    2. அம்மாவும் ஒரு கார்ட்டூன் ரசிகை என்பது நிறைவூட்டும் செய்தி சார் ! Come what may - 2020 -ல் கார்ட்டூன்களுக்கு சம அந்தஸ்து திரும்பிடும் !!

      Smurfs இடம் பிடிப்பார்களா ? என்று சொல்லத் தெரியவில்லை ; ஆனால் கார்ட்டூன்கள் ரெகுலர் இதழ்களுக்கு இணையாகவே இனி பயணித்திடும் ! இந்தக் கரடு முரடான ஆசாமிகளோடே தொடர்ந்து பிரயாணம் செய்து கொண்டிருந்தால், சும்மாக்காச்சும் யார் மூக்கையாவது பங்ச்சர் பண்ணித் தொலைத்து விடுவோமோ என்று பயமாக உள்ளது !!

      Delete
  53. //... இதே லாஜிக் பல நாள் கோரிக்கைப் பட்டியலில் இருக்கக்கூடிய ஸ்பைடரின் Sinister Seven கதைக்கும் பொருந்தும் அல்லவா ? கோவைக் கவிஞரோ ; சென்னையின் தீவிர ஸ்பைடர் மன்றத்தினரோ நிச்சயமாய் இதனை sponsor செய்திடக்கூட்டும் அல்லவா ? ..//

    🤩😍 ஆஹா "Sinister Seven" .. அதுவும் இரு வண்ணத்தில் ..

    வருமா 🤔

    ReplyDelete
    Replies
    1. ஐயோ....தெய்வமே.....கடவுளே.....ஆண்டவா.....

      Delete
  54. Leonardo – no sir,
    Roger – yes sir, (with the expectation of getting to be mesmerized once
    again with the visuals of “Thavali Manidhanin Muthirai”)

    Bruno – with pleasure sir.

    Barracuda -- Thigil SeaThirller (for Summer Holiday “Tour”).
    Durango - Hero comes close to heart like Captain Tiger.
    Lone Ranger – Simply Superb with Stunning pictures and making.

    This month is really a mile stone in our comics Career, Sir.

    ReplyDelete
    Replies
    1. சாகச வீரர் ரோஜரின் சொற்பக் கதைகளுக்கே ஓவியர் வில்லியம் வான்ஸ் சித்திரங்கள் போட்டிருக்கிறார் சார் ; தற்போதைய தொகுப்பு அவரது கைவண்ணத்திலான கதைகளுடன் அல்ல !

      //This month is really a mile stone in our comics Career//

      வெற்றிகளை ; ஹிட்டடித்த இதழ்களை நமது ஒட்டுமொத்த வெற்றியாய்ப் பார்க்கும் உங்கள் பாங்குக்கு தலை வணங்குகிறேன் சார் !! Indeed it is a moment to cherish in our journey !

      Delete