Powered By Blogger

Sunday, January 14, 2018

பொங்கலோ பொங்கல் !!

நண்பர்களே,

வணக்கம். பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! இல்லமெங்கும் சந்தோஷமும், வளமும் செழிக்கட்டும் ! கரும்பும், பொங்கலும், புதுப்படமுமாய் கலகலக்கும் ஜாலியான இந்நாளில் நமது காமிக்ஸ் இதழ்களுக்கும் ஒரு ஓரமாய் இடமிருப்பின் - சூப்பர் !! இந்த வேளையில் நொய்-நொய் என்று ப்ளேடு போடாமல் என்ன எழுதுவதென்று யோசிக்கிறேன் !! "பொங்கல்" என்றாலே "பொங்கல் மலரும்" மலர்ந்திடும் அந்நாட்களே மனதில் நிழலாடுகின்றன ! அதுவும் நமது லயனுக்கு "தலைப் பொங்கலாய்" அமைந்த "கொலைப்படை" இதழ் பற்றிய ஞாபகங்கள் as always பசுமையாய் தொடர்கின்றன தலைக்குள் ! அந்த இதழைப் பற்றியும், அதன் தயாரிப்புப் பின்னணி பற்றியும் ஏகமாய் எழுதி இருக்கிறேன் என்பதால் மறுக்கா அதே பாட்டைப் பாடப் போவதில்லை  ! 

மாறாக - "மாதம்தோறும் 4 இதழ்கள்" என்ற இன்றைய template-க்கு பிள்ளையார் சுழி போட்டுத் தந்த 1987-ன் தை மாதத்தை நோக்கி எண்ணக் குதிரைகளை ஓடச் செய்ய நினைக்கிறேன் !! இன்னும் எத்தனை தூரம் நாம் பயணம் போனாலும் சரி, எத்தனை புது உயரங்களை உணர்ந்தாலும் சரி - 20 வயதுக் கொயந்தை பைய்யனாய் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாய் இதே ஜனவரியில் அனுபவித்த ஒரு த்ரில்லை எட்டிப் பிடிக்க முடியாதென்றே சொல்லுவேன் !! அந்நேரத்துக்கு முத்து காமிக்ஸின் நிர்வாகம் என் கைகளுக்கு வந்திரா நிலையில் - அதுவுமே என் கண்களுக்கொரு போட்டிக் கம்பெனியே !! அச்சூழலில் - லயன் காமிக்ஸ் ; திகில் ; ஜுனியர் லயன் காமிக்ஸ் & மினி லயன் - என 4 இதழ்களோடு களமிறங்கத் துணிந்தது - அசட்டுத் தைரியத்திலா ? வெற்றிகளை உணர்ந்த குசும்பிலா ? அல்லது புதுசையெல்லாம் உங்களிடம் காட்ட புதுப் புது தடங்கள் வேண்டுமே என்ற ஆர்வக்கோளாறினாலா ? - சொல்லத் தெரியவில்லை இன்றளவிற்கும் !! எது எப்படியோ - அலிபாபாவின் பொக்கிஷக் குகையைத் திறந்து பார்த்தவனின் வாயைப் போல என்னதும் அகலமாய் விரிந்து கிடந்தது - பிரான்க்கோ-பெல்ஜியப் பேழையை மாத்திரமின்றி, இத்தாலிய கதைச் சுரங்கத்தினையும் திறக்க முடிந்திருந்த அக்கணங்களில் !! 

பற்றாக்குறைக்கு நமது 'தானைத் தலைவர் இஸ்பைடரின்' புதுப் புதுக் கதைகளையும், சட்டித் தலையனின் மெகா சாகசங்களையும் பொட்டலம் போட்டு வாங்கி வந்திருக்க -'ஐயோ..இந்த தெருவை வாங்கிப் போடவா ? இந்த ரோட்டை விலை பேசவா ? " என்ற கவுண்டரின் நமைச்சல் தான் எனக்குள்ளும் குடியிருந்தது ! மாதம் ஒன்றோ-ரெண்டோ தான் இதழ்கள் ; இதனில் குறைந்த பட்சமாய் 6 இடங்களை - ஸ்பைடர் + ஆர்ச்சி கூட்டணிக்குத் தந்தே தீர வேண்டிய கட்டாயம் எனும் போது எஞ்சிக் கிடைக்கும் 18 இதழ்களைக் கொண்டு நாம் அன்றைக்கு சீட் தர வேண்டியிருந்த கட்சித் தலைவர்களின் பட்டியல் பின்வருமாறு :

ரிப்போர்ட்டர் ஜானி
ப்ரூனோ பிரேசில்
கேப்டன் பிரின்ஸ்
ரெட்டை வேட்டையர்
லாரன்ஸ் & டேவிட் 
இரும்புக்கை நார்மன்
இரும்புக்கை உளவாளி
லக்கி லூக்
சிக் பில்
கராத்தே டாக்டர்
மறையும் மாயாவி ஜாக் ( ஹி..ஹி..ஞாபகம் இருக்கோ?)
சுஸ்கி & விஸ்கி 

இவர்கள் தவிர லெட்டர்பேட் கட்சிகள் ஏகமாய் இருக்கத் தான் செய்தன - ஸ்பைடர் குள்ளன் ; செக்ஸ்டன் பிளேக் ; மீட்போர் ஸ்தாபனம் etc etc என்று !! So ஒரு மெகா கூட்டணி ரெடி ; ஆனால் போட்டி போடும் களமோ மிகச் சொற்பமே என்ற நிலையில் துளியும் தயக்கம் தோன்றிடவில்லை - ஜுனியர் லயன் காமிக்ஸ் & மினி லயன் என 2 புது குட்டிகளை உலவ அனுமதிக்க !! அதுவரைக்கும் கலரில் நாம் முயற்சித்திருந்தது 1986 கோடை மலரில் - "ஈகில்மேன்" கதையினை மட்டும்தான் என்று ஞாபகம் ! பாக்கெட் சைசில், நியூஸ் பிரிண்டில் அந்த வர்ணங்களை இப்போது பார்க்கும் போது சிப்பு சிப்பாய் வந்தாலும், அதுவே அந்நாட்களில் நமக்கொரு அசாத்திய உயரம் என்பதை மறுப்பதற்கில்லை ! அந்த வண்ணப் பக்கங்களை புரட்டோ புரட்டென்று புரட்டுவதிலேயே என் விரல் ரேகைகள் தேய்ந்தது ஒருபக்கமெனில், "இந்த பாக்கெட் சைஸ் ; வண்ணம்" என்ற concept-ஐ நிரந்தரமாக்கினால் என்னவென்றே ஆர்வம் தலைதூக்கியது இன்னொரு பக்கம் !! 

அதிலும் எங்கோவொரு பழைய புத்தகக் கடையில் லுக்கி லூக்கின் WESTERN CIRCUS ஆங்கிலப் பதிப்பைப் படித்த நாள்முதலாய் அதனை தமிழில் வெளியிட்ட தீரும் ஆசை ஒரு வெறியாகவே தலைக்குள் உருமாறியிருந்தது ! விலையும் அந்நாட்களில் கட்டுக்குள் இருத்தல் அவசியமெனும் போது - ரொம்பவெல்லாம் யோசிக்க இடமிருக்கவில்லை ! "விலை ரூ.2 தான் ; முழு வண்ணம் தான் ; இதனில் எந்த compromise-ம் கிடையாது ; மிச்சம் மீதிக்கு நீ என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோடாப்பா !! என்று தலை சொல்லிவிட, ஒரு நூறு தடவை கீழிருந்து மேலாய் costing போட்டுக் கொண்டேயிருந்தேன் ! 25 % ஏஜெண்டுகள் கமிஷன் + இன்னுமொரு 5 % புத்தகங்களை அனுப்பும் சரக்கு கட்டண வகையில் எனும் போது - நமக்கு மிஞ்சுவது புக் ஒன்றுக்கு ரூ.1 -40 மட்டுமே எனும் போது ஆந்தை முழி - பிசாசு முழியானது தான் மிச்சம் ! அன்றைக்கெல்லாம் இப்போதைப் போல ஒரே நேரத்தில் 4 வர்ணங்களை அச்சிடும் இயந்திரங்களும் சரி, pre press செயல்முறைகளும் சரி, நம்மிடம் லேது எனும் போது ஒற்றை ஒற்றை கலராய் தான் அச்சிட்டாக வேண்டும் ! பொதுவாய்ப் பொறுமையெல்லாம் போயே விடும் மாத இறுதியில் 'லொடக்கு-லொடக்கு' என்று ஒவ்வொரு வர்ணமாய் அச்சாவதைப் பார்க்கும் போது ! ஆனால் ஜுனியர் லயனின் அந்த முதல் all color இதழை அச்சிடும் சமயங்களில், புதுசாய் போட்ட குட்டிகளை கண்ணிமைக்காது பார்த்துக் கொண்டிருக்கும் பூனையைப் போல மிஷின் ஹாலிலேயே கிடப்பேன் - ஒவ்வொரு கலரும் ஏறுவதை ரசித்துக் கொண்டே ! அதுமாத்திரமின்றி அப்போதுவரைக்கும்  கார்ட்டூன்கள் என்றால் மிஞ்சி மிஞ்சி விச்சு & கிச்சு ; கபிஷ் இத்யாதிகள் தான் கைதூக்கி நிற்கும் மொழிபெயர்ப்பு னுபவம் என்ற வகையில்  ! So முதல்தடவையாக ஒரு முழுநீள கார்ட்டூன் கதையை மொழிபெயர்த்ததும், அது எவ்விதம் அமைய போகிறதோ ? என்ற த்ரில்லுமே தலைக்குள் ததும்பிக் கிடந்தது ! அப்போதெல்லாம் பைண்டிங் பணிகள் நம்மிடத்திலேயே தான் நடைபெறும் என்பதால் அச்சு முடிந்த அரை மணிநேரத்துக்கெல்லாமே ஒரு மாதிரி இதழைத் தூக்கிக் கையில் ஏந்த சாத்தியமாகியது !! அதிலும் ஒரு நீளமான ஹாட்லைன் மாதிரி ஏதோவொன்றை முதல் பக்கத்தில் எழுதி வைத்திருக்க - அதை புதுசாய்ப் படிப்பது போல் வரி விடாது படித்துப் படித்துப் பார்த்துக் கொண்டேன் ! அட்டைப்படத்தில் ஏதாச்சும் வித்தியாசம் காட்ட வேண்டுமே என்று புள்ளிப் புள்ளியாய் நர்லிங் செய்ததும் சரி ; இதழை ஏகப் பெருமிதத்தோடு படைப்பாளிகளுக்கு அனுப்பியதும் சரி - lifetime memories !! அன்றைக்கே hardcover ; அட்டகாச தரம் என்ற கப்பலில் 'பூவாய்ங்' என்று ஹார்ன் அடித்தபடிக்கே பயணம் செய்தவர்களுக்கு அருகாமையில் ஒரு தம்மாத்துண்டு தோணியை  ஒட்டிக் கொண்டே - "எப்பூடி ?" என்று கேட்கிறோமே என்ற லஜ்ஜையெல்லாம் அன்றைக்கு எழவேயில்லை எனக்கு - simply becos நமக்கு அன்றைக்கு அந்தத் தோணியே ஒரு cruiser-க்கு சமானம் ! 

இந்தக் கூத்து ஒருபக்கமெனில் - அதனில் பாதி விலையில் "மினி-லயன்" என்ற பெயரில் இன்னொரு பாக்கெட் சைஸ் ஆக்ஷன் கதைவரிசை கச்சை கட்டி நின்றது ! ACTION லைப்ரரி என்றதரு fleetway வரிசையினில் வெளியான கதைகளை அங்கே களமிறக்கியிருந்தோம் ! வெற்றி-தோல்விகள் என்ற கணக்குகளுக்கெல்லாம் அப்பால் நின்று அந்த நாட்களை இன்றைக்கு நினைவுகூர்ந்தால் - இந்தப் பயணத்தில் நாமெல்லாம் ஒன்றிணைந்த இரகசியம் மெது மெதுவாய்ப் புரிந்த மாதிரியுள்ளது ! அன்றைக்கே கனவு காணும் உரிமைகளை எனக்குத் தந்துள்ளீர்கள் ; அந்தக் கனவுகள் உங்களது கனவுகளாகவும் உருமாற்றம் செய்து கொள்ளும் பெருந்தன்மை காட்டியுள்ளீர்கள் ; காலப்போக்கில் உங்கள் கனவுகளே என் கனவுகளாகவும் மாறிப் போகும் மாயாஜாலம் நிகழ்ந்துள்ளது ! இந்த மந்திர நிகழ்வுகளுக்கெல்லாம் துவக்கப் புள்ளி 30 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு தை மாதத்தின் நாட்களிலும் புதையுண்டு இருக்கக்கூடும் என்று நினைத்துப் பார்க்கும் போது சந்தோஷமாகவும், மலைப்பாகவும் உள்ளது - நாட்களது ஓட்டத்தை எண்ணி !! "மனித வேட்டை" என்று திகிலில் ஒரு த்ரில்லரும், "பழி வாங்கும் பாவை" எனும் TEX சாகசமும்  (அதுவும் பாக்கெட் சைசில் !!) அந்த மாதத்தை நிறைவு செய்திருக்க, மறக்க இயலா நாட்களாய் அமைந்து போயின அவை !! Phew !! 360 மாதங்கள் ஓடிவிட்டன !! 

Back to real time - இதோ காத்திருக்கும் அடுத்த 'தல' சாகஸத்தின் அட்டைப்பட preview ! மீண்டும் முன் + பின் - ஒரிஜினல் டிசைன்கள் - லேசான வர்ண மாற்றங்களோடு மட்டும் ! And உட்பக்கங்களில் சித்திர துல்லியம் தொடர்கிறது - இன்னுமொரு ஓவியரின் கைவண்ணத்தில் ! தெறிக்கச் செய்யும் ஆக்ஷன் காத்துள்ளது guys !! அது மட்டுமன்றி - பிப்ரவரியில் COLOR TEX பிரீ இதழும் உண்டு - ABCD சந்தா நண்பர்களுக்கு ! இப்போது வரைக்கும் சந்தாவில் இணைந்திருக்க நண்பர்கள் இனியும் தாமதிக்க வேண்டாமே - ப்ளீஸ் ? 
சென்னைப் புத்தக விழாவினில் ஆரம்ப 2 நாட்கள் நமக்கு விற்பனையில்  மிதமே என்றாலும்  நேற்றைக்கு அட்டகாச sales ! தொடரும் விடுமுறைகளிலும் விற்பனை களை கட்ட நமக்காக வேண்டிக் கொள்ளுங்களேன் guys - கிட்டங்கியின் சுமை ஆளை அசத்துகிறது !! Before I sign off - இதோ நம் ஆபீசில் இன்று காலை நம்மவர்கள் பொங்கல் வைத்து அசத்திய காட்சி ! இது எனக்கு 33 -வது வருஷம் பணியில் பொங்கல் கொண்டாடும் வகையில் ; ஆனால் முதன்முறை இது போலொரு அழகான பொங்கலை கொண்டாடுவதில் !! Lovely start to my day !! Bye all !! See you around !
 PHOTOS FROM CHENNAI BOOK FAIR - courtesy நண்பர் k v ganesh !!
267 comments:

 1. அனைவரின் மீதும் ஏக இறைவனின் அருள் பொழியட்டும்

  ReplyDelete
 2. என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் காமிக்ஸ் நண்பர்களுக்கு..

  ReplyDelete
  Replies
  1. என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் காமிக்ஸ் நண்பர்களுக்கு..

   Delete
 3. அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. காமிக்ஸ் நண்பர்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. பொங்கலோ பொங்கல்.

  ReplyDelete
 6. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே

  ReplyDelete
 7. பொங்கல் வாழ்த்துகள்..

  ReplyDelete
 8. விஜயன் சார், மலரும் நினைவுகள் அசத்தல்.

  நமது சகோதரிகளின் பொங்கல் கொண்டாட்ட படம். அருமை. இதுபோல் என்றும் ஆரோக்கியமும் சந்தோசமும் பொங்க எனது வாழ்த்துக்கள்.

  சென்னை புத்தக திருவிழாவில் வரும் நாட்களில் நமது ஸ்டாலில் விற்பனை சூடு பிடித்து நமது காமிக்ஸ் குடோன் முழுவதும் காலியாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  ReplyDelete
 9. டெக்ஸின் அட்டைப்படம் மற்றும் உட்பக்கங்களில் படங்கள் அருமையாக உள்ளது.

  ReplyDelete
 10. அனைத்து சொந்தங்களுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. // தெறிக்கச் செய்யும் ஆக்ஷன் காத்துள்ளது guys !! அது மட்டுமன்றி - பிப்ரவரியில் COLOR TEX பிரீ இதழும் உண்டு.//
  ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
 12. புத்தக கண்காட்சி குறிப்பாக நமது காமிக்ஸ் இதழ்கள் விற்பனை சிறக்க வாழ்த்துக்களும்,எமது வேண்டுதல்களும்.

  ReplyDelete
 13. நண்பர்கள் மற்றும் ஆசிரியருக்கு பொங்கல் வாழ்த்துக்கள்...!!!

  ReplyDelete
 14. நட்புக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 15. @ev
  ஊ ஊ ஊ

  ஹி ஹி ஹி கொஞ்சம் லேப்டாயிடுத்து

  ReplyDelete
  Replies
  1. கீழ போயி பாருங்கங்க ரின்டின்
   உங்க கத தான் ஓடுதுன்னு எடிட்டர் சொல்லிருக்காரு

   Delete
 16. 16:00 GMT+5:30
  அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  ReplyDelete
 17. Happy Pongal to all co-passengers in our comic Concord.

  ReplyDelete
 18. விஜயன் சார்,

  //
  லயன் காமிக்ஸ் ; திகில் ; ஜுனியர் லயன் காமிக்ஸ் & மினி லயன் - என 4 இதழ்களோடு களமிறங்கத் துணிந்தது - அசட்டுத் தைரியத்திலா ? வெற்றிகளை உணர்ந்த குசும்பிலா ? அல்லது புதுசையெல்லாம் உங்களிடம் காட்ட புதுப் புது தடங்கள் வேண்டுமே என்ற ஆர்வக்கோளாறினாலா ? //

  இது எல்லாம் ஆர்வக்கோளார்தான். மற்றோன்று நமது திறமையை பலர் பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

  ReplyDelete
 19. Dear Editor sir, I informed to my students about our stall. I told them both English and Tamil comics will be available. I found through them only Tamil and no English comics are available in our stall. May I know the reason sir for this decision ?

  ReplyDelete
  Replies
  1. Ours is a Tamil language stall sir ; we are supposed to display & sell just Tamil books here !

   Delete
  2. @ Navaneetha krishnan

   உங்க ஸ்டூண்ட்ஸ்ட்ட சொல்லி அப்படியே நம்ம ஆன்லைன் ஸ்டாலுக்கும் (lioncomics.in) ஒரு விசிட் அடிக்கச் சொல்லுங்கள் நண்பரே! அங்கே ஆங்கிலத்திலும் காமிக்ஸ் கிடைக்கும்!

   Delete
 20. 🍉குன்றா நலமும்
  🍎குறையா வளமும்
  🍓மங்கா புகழும்
  🍑மாசிலா செல்வமும்
  🍇அன்புடை சுற்றமும்
  🍍அறமறிந்த நட்பும்
  🍏பொங்கலோடு பொங்கி
  🍋பொங்கியது தங்கி
  🍌தங்கியது பெருகி
  🍐பெருகியது உதவி
  🌻உதவியது உவகை பெருக்கி
  🌸பெருகிய உவகை பொங்கி
  🌺பொங்கியது நிலைத்து
  🌷நீடூழி வாழ
  🌾இத் தை திருநாளில்
  🌅எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

  இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும். 🌞

  உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும். 🌝

  🙏அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!🙏

  ReplyDelete
 21. // அது மட்டுமன்றி - பிப்ரவரியில் COLOR TEX பிரீ இதழும் உண்டு - ABCD சந்தா நண்பர்களுக்கு !//

  சூப்பர். இதன் வெற்றி மிகவும் அவசியம்.
  ஆர்வத்துடன் படிக்க உள்ளேன் .

  ReplyDelete
 22. நலம்
  பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அலுவலக நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்

   Delete
  2. சிங்கத்தின் சிறு வயதில் டபுள் ஆக்ட் குடுத்தமாதிரி இருக்கே.

   Delete
  3. அல்லாரும் பொங்க சாப்ட்ட மயக்கத்துல இருக்காங்களோ.
   30 கமெண்ட்டோட இருக்கே.
   மக்களே எங்க இருக்கீங்க

   Delete
  4. ///அல்லாரும் பொங்க சாப்ட்ட மயக்கத்துல இருக்காங்களோ.///

   அவங்கவங்க வீட்ல செஞ்ச பொங்கல் ஒருபுறமிருக்க; எதிர்வீடு, சைடு வீடு, மேல் வீடு'ன்னு ஏகப்பட்ட இடங்கள்லேர்ந்து கிடைத்த ஓசி பொங்கலையெல்லாம் வழிச்சு வழிச்சு உள்ளே விட்டதுல நண்பர்கள் பலருக்கும் உண்டமயக்கம் எகிறியிருக்கும். பலபேர் இப்போ கனவுல க்ரிஸ் ஆப் வால்நாரிடம் வில்வித்தை கத்துக்கிட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்! :D

   Delete
  5. ஈரோடு விஜய் : இங்கே பொங்கல் பொழுது ஒரு VIP உடன் !! திருவாளர் ரின்டின் கேன்தான் எனது பகலை பளிச் ஆக்கிக் கொண்டிருக்கிறார் !!

   Delete
  6. பொங்கல் பண்டிகை ரின்டின்கேனுடனா!! கலக்குங்கள் சார்! பயலை நான் விசாரிச்சதாச் சொல்லுங்க. போஸ்டர் ஒட்டுற பசை இருந்தா அவனுக்கு கொஞ்சம் ஊட்டிவிடுங்க. பயல் அதைத்தான் பொங்கல்னு நினைச்சு அவுக் அவுக்னு சாப்பிடுவான்!

   Delete
  7. ஓவ் ஓவ் ஓவ் whah whah whah super super super
   இந்த மாமாவ பாத்து பாஞ்சு அப்டியே கட்டி பிடிச்ச நம்ப பாசத்த வெளிபடுத்திட்டோம்ல

   Delete
  8. அந்த கொலகார வில்லிட்ட வில் வித்த கத்துக்க போனா வீல் னு கத்த வச்சிட்டா
   பின்ன
   அவ அருவியில குளிக்கிறப்ப போயி
   About turn கிறிஸ்னு கத்தினே பாருங்க (அவகிட்ட ஒண்ணுமே இல்லங்கிற தைரியம்தான்)
   கல்லெடுத்து எறிஞ்சசட்டா.

   Delete
 23. அருமையான மலரும் நினைவுகள் பதிவு - எடிட்டர் சார்! இத்தோடு ரெண்டு மினி/ஜூனியர் லயன் அட்டைப்படங்களை இணைத்து அடுத்தமாத புத்தகங்களில் 'சி.சி.வ'எனும் பெயரில் அச்சேற்றியிருந்தீங்கன்னா போராட்டக்குழுவின் கனல் பார்வையிலிருந்து நீங்கள் தப்பித்திருக்கலாம். ஆனால் பதிவாகப் போட்டு அந்த வாய்ப்பை இழந்துவிட்டிருக்கிறீர்கள்! ச்சோ.. பாவம்!!

  அடுத்தமாத இதழ்களில் சி.சி.வ'வை பார்க்க முடியவில்லையெனில் - இப்போது நம் அலுவலக சகோக்கள் பொங்கல் வைத்திருக்கும் அதே இடத்தில் - தலீவரின் தலைமையில் போராட்டக்குழு அறைகுறையாகக் களமிறங்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஆடுகளை வைத்து மேயவிடும் உங்கள் திட்டத்திற்கும் நாங்கள் கவலைப்படுவதாய் இல்லை! வேப்பிலையை ஆடுகள் உண்ணாது என்பதையும் நாங்கள் அறிந்தே இருக்கிறோம்!

  'வெண்பனியில் செங்குருதி' அட்டைப்படம் அருமை!

  வார இறுதியில் நம் புத்தக விற்பனை CBFல் சூடுபிடித்திருப்பது மகிழ்ச்சி! அடுத்தவார இறுதிகளில் மாயாவிசிவாவும், நானும், இன்னும் சில நண்பர்களோடு வரத் திட்டமிட்டிருக்கிறோம். கே.வி.கணேஷ் உள்ளிட்ட நண்பர்களும் அங்கே களப்பணிக்குக் காத்திருக்க; நாங்களும் அவர்களோடு இணைந்திட ஆர்வமாய் உள்ளோம்! புதிய/பழைய சென்னைவாழ் நண்பர்களை நிறைய எண்ணிக்கையில் சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சியடைவோம்!

  ReplyDelete
  Replies
  1. சிவகாசியில ஆடுங்களுக்கு வேப்பெல பிரியமாம்ல.

   Delete
 24. ***** கடவுளரின் தேசம் ****

  கதையைப் படித்தேன் என்பதைவிட - வேறொரு உலகிற்கு பயணம் செய்துவந்தேன் என்பதே சரியான வார்த்தையாக இருக்கும்!

  கதாசிரியரையும், ஓவியரையும் நினைத்தால் பிரம்மிக்காமல் இருக்க முடியவில்லை!

  ஹார்டு கவரில், கண்கவர் வண்ணங்களில், 4 பாகங்கள் ஒன்றிணைந்த ஒரு மகத்தான படைப்பு இது! வருடத்தின் முதல் மாதமே சிக்ஸருடன் தொடங்கியிருப்பதில் குன்றாத குதூகலம் எங்களுக்கு!

  இந்த நான்கு பாகங்களில் மூழ்கிட இதற்கு முந்தைய பாகங்களை நினைவு வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை என்ற வகையில் இந்த இதழ் ஒரு தொடர் போல தோன்றிடாமல் ஒரு முழுநீள, நிறைவான வாசிப்பு அனுபவத்தைக் கொடுப்பதும் இந்த இதழின் சிறப்பாகக் கூறலாம்!

  இவ்வாண்டிற்கான தோர்கல் கோட்டா முடிந்துவிட்டதை நினைக்கும்போதுதான் மனதுக்குள்ளே ஒரு சோகம் எட்டிப் பார்க்கிறது. இதே போலொரு 4 பாகங்கள் சந்தா-Eல் இதே வருடத்தில் கிடைக்க வாய்ப்பிருக்குமா என்ற ஏக்கம் எழுகிறது!
  கிடைக்குமா?
  கிடைக்குமா?
  கிடைக்குமா?

  ( 'கிடைக்கும்'னு யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்?!)


  ReplyDelete
  Replies
  1. // தோர்கல் கோட்டா முடிந்துவிட்டதை நினைக்கும்போதுதான் மனதுக்குள்ளே ஒரு சோகம் எட்டிப் பார்க்கிறது. இதே போலொரு 4 பாகங்கள் சந்தா-Eல் இதே வருடத்தில் கிடைக்க வாய்ப்பிருக்குமா என்ற ஏக்கம் எழுகிறது! //

   எனக்கும் இதே ஏக்கம் தான்... நடக்க போவதில்லை. ஆனால்....
   அடுத்த வருடம் இதேபோல் தோர்கல் நான்கு கதைகள் கொண்ட ஒரு குண்டு புத்தகம் கண்டிப்பாக வேண்டும்.

   Delete
  2. கெடெக்கும் கெடெக்கும்
   சந்தா F போட்டா.....

   Delete
  3. // கிடைக்கும்'னு யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்?!)//
   கிடைக்கும் ஆனா கிடைக்காது,ஹி,ஹி,நம்ம சந்தோஷப்பட எத்தனை ஹார்ட் பைண்ட் கொடுத்தாலும் போதாது,
   படிக்க,படிக்க ஆசை,
   ஹார்ட் கலெக்‌ஷனுக்கு ஆசை,
   நல்ல கதைகள் சேகரிக்க ஆசை,
   தீரவே தீராது இந்த ஆசை.

   Delete
  4. //கதாசிரியரையும், ஓவியரையும் நினைத்தால் பிரம்மிக்காமல் இருக்க முடியவில்லை! //

   +101

   Delete
 25. நம் ஆசிரியருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. ஈகிள் மேன் கதை வெளிவந்த போது பக்கத்து வீட்டில் இரவல் வாங்கி படித்த ஞாபகம். ஆனால் கதை பற்றி தற்போது எதுவும் ஞாபகம் இல்லை. தற்போது அந்த புத்தகம் என்னிடம் இல்லை என்பது கூடுதல் தகவல் :-)

  ReplyDelete
  Replies
  1. உங்க விஷயமாச்சும் பரவாயில்லை
   என்ட்ட படிச்சிட்டு தந்துட்றேன்னு வாங்கிட்டு போன மகானு பாவங்கே ஒருத்தனும் தி ருப்பி தந்ததா ஞாபகம் இல்லே.

   எந்தரோ.... மகானு பாவூலூ...

   Delete
  2. ஆனால் நான் படித்த உடன் கொடுத்து விட்டேன் ஜி:-)

   Delete
 27. காணும் பொங்கலன்று முழுவதும் நம் ஸ்டாலில் இருக்கப் போகிறேன் நண்பர்களை எதிர் பார்க்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி செந்தில் சத்யா!

   20,21 தேதிகளில் நாங்கள் அங்கே இருந்திடுவோம். உங்கள் வேலைக்கு பாதிப்பில்லாத வகையில் நாம் அந்த நாட்களில் சந்திக்க வாய்ப்பிருந்தால் சந்திப்போம்!

   Delete
  2. சூப்பர் சத்யா. நமது காமிக்ஸ் விற்பனையில் சாதிக்க உதவுங்கள்.

   Delete
  3. கண்டிப்பாக நண்பர்களே

   Delete
 28. // பழி வாங்கும் பாவை" எனும் TEX சாகசமும் (அதுவும் பாக்கெட் சைசில் !!) //

  சென்னை ராமாவரம் பக்கத்தில் உள்ள ஒரு பழைய பேப்பர் கடையில் இந்த புத்தகத்தை 1997ல் வாங்கினேன் என நினைக்கிறேன். அன்று அந்த கடையில் நமது பழைய காமிக்ஸ் புத்தகங்கள் பல எனக்கு புதையலாகக் கிடைத்தது, ஒரு மறக்க முடியாத நாளாக அமைந்தது என்றால் மிகையில்லை.

  டெக்ஸின் இந்த கதையின் அட்டைப்படம் எனது ஆல் டைம் ஃப்வேரிட்.

  ReplyDelete
 29. கொலைப் படை : ஒரு குரங்கு மூஞ்சி மனிதனுடன் ஸ்பைடர் சண்டை போடும் கதை தானே? அதுவும் அந்த குரங்கு மனிதன் ஆங்காரமாக ஒரு கையில் வேகமாக சுற்றும் சக்கரத்துடன் சண்டை போடும் அந்த படம் மனதில் இன்னும் பசுமையாக உள்ளது.

  எப்போது சார் இந்த புத்தகம் மறுபதிப்பா வரப் போகிறது?

  ReplyDelete
  Replies
  1. சார்....உண்மையைச் சொல்லுங்கள்.....கோவையிலிருந்து உங்களுக்கு ஸ்பெஷலாய் ஏதாச்சும் கவனிப்பு வந்திருக்கணுமே ?

   Delete
  2. அந்த பய ஹல்வா நல்லா கிண்டுவான். ஆனா கொடுக்க மாட்டான்...

   தயவுசெய்து என்னை சார் என சொல்ல வேண்டாமே... கடந்த சில பதிவுகளில் இருந்து என்னை சார் என்று நீங்கள் அழைக்க ஆரம்பித்த மர்மம் புரியவில்லை :-)

   Delete
  3. அந்த பய ஹல்வா நல்லா கிண்டுவான். ஆனா கொடுக்க மாட்டான்.

   ####

   :-)))))

   சில பதிவுகளில் இருந்து என்னை சார் என்று நீங்கள் அழைக்க ஆரம்பித்த மர்மம் புரியவில்லை :-)

   ******


   உங்க வயசை கண்டுபிடிச்சுட்டாருன்னு நினைக்கிறேன் சார்..:-)

   Delete
 30. Editor sir &Editorial team Wish you happy pongal. Junior Editor sir Wish you happy thala pongal 🌺🌺🍓🍓🍍🍍🌻🌻🌼🌼🌸🌸🌹🌹🍅🍅🍆🍆🍇🍇🍊🍊🍉🍉🍑🍒🍍🍍

  ReplyDelete
 31. Wish you happy pongal to Editor &Editorial team. Wish you happy thala pongal to Junior Editor 🌸🌸🌼🌼🌻🌻🌹🌹🍒🍒🍍🍍🍇🍇🍊🍊🌹🌼🌼🌽🌽🌷🌷🌺🌺

  ReplyDelete
 32. நான் இன்று காலை முதல் நம் ஸ்டாலில்
  உள்ளேன்.
  ஒரு 13 முன் பதிவு மற்றும் 3சந்தா புக்
  செய்து நண்பர்களை சேர்த்துள்ளேன்.

  ReplyDelete
 33. நான் இன்று காலை முதல் நம் ஸ்டாலில்
  உள்ளேன்.
  ஒரு 13 முன் பதிவு மற்றும் 3சந்தா புக்
  செய்து நண்பர்களை சேர்த்துள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. @ ganesh kv

   அருமை ஜி! இது.. இது.. இதைத்தான் உங்களிடம் எதிர்பார்த்தேன்! தொடர்ந்து தூள் பண்ணுங்கள்!

   Delete
  2. ganesh kv : கலக்குங்கள் சார் !

   Delete
 34. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்.....
  காமிக்ஸ் குடும்பத்தாருக்கும் மற்றும் நமது எடிட்டர் சார் அவர்களுக்கும் அவரது குடும்பதாருக்கும்.....

  ReplyDelete
 35. ஆசிரியர், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள்..!

  ReplyDelete
 36. எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவர்க்கும் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் & ஜல்லிக்கட்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 37. *இன்று பிறக்கும் தை... நம். அனைவருக்கும்*

  *ஆரோக்கியத்....தை.....*
  *நலத்.....தை.....*
  *வளத்......தை.....*
  *சாந்தத்.....தை.....*
  *சமத்துவத்....தை.....*
  *நட்பில் இறுக்கத்....தை.....*
  *பந்தத்.....தை.....*
  *பாசத்....தை.....*
  *நேசத்.....தை.....*
  *இரக்கத்.....தை.....*
  *உற்சாகத்.....தை.....*
  *ஊக்கத்.....தை.....*
  *ஏற்றத்....தை.....*
  *சுபிட்சத்.....தை,*

  *கொடுத்து.....*

  பஞ்சத்.....தை
  வஞ்சத்......தை
  வன்மத்....தை
  துரோகத்....தை
  அலட்சியத்....தை
  அகங்காரத்.....தை
  ஆணவத்....தை
  கோபத்.....தை
  குரோதத்.....தை
  சுயநலத்.....தை

  எடுத்து.....

  தங்களுக்கும்..தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிதாய் வாழ இனிய தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இங்கு கூடும் அனைவருக்குமான இந்த மனமார்ந்த வாழ்த்துக்கள் எனதாக இருப்பினும் இந்த அழகிய வரிகள் பகிர பட்டவையே..

   (நல்ல நாள் எதுவுமா எதுக்கு வம்பு..:-)

   Delete
  2. பரணி சார்
   போன வருசம் நான் போட்ட ஸ்டேட்டஸ் இது.
   இந்த வருசம் பயங்கரமா எல்லா எடத்துலயும் உலாத்துது.

   Delete
  3. ///பரணி சார்
   போன வருசம் நான் போட்ட ஸ்டேட்டஸ் இது.
   இந்த வருசம் பயங்கரமா எல்லா எடத்துலயும் உலாத்துது///

   அடடே!! சூப்பர் j சார்!

   Delete
  4. J சார்...வாவ்..சூப்பர்..

   நமது வரிகள் நம்மிடமே பிறரால் வந்தடையும் பொழுது பெரு மகிழ்ச்சி தானே...

   மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்..

   Delete
  5. ஒரு வகையில் மகிழ்ச்சி என்றே தோன்றினாலும்....
   இன்னொருபுறம் ஏற்பட்டுள்ள சிந்தனை, கற்பனை வறட்சி என்பது வருத்தமே.
   ஒரு கருத்தை எடுத்தாள நினைத்தால் - நிலை ஏற்பட்டால் - அல்லது அந்நிலைக்கு தள்ளப்பட்டால் அதை நாசூக்காக வெளியே தெரியாமல் செய்யத் தெரிந்தாலன்றி நாம் தவிர்த்து விடுவது நன்று.
   வெறும் forwarding மட்டுமே இப்பொழுது எளிதாக உள்ளது.

   தமிழில் கற்பனைக்கு எல்லையே கிடையாது.


   Delete
  6. பரணி சார்
   எவ்வகையிலும் தங்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை.கூறவும் மாட்டேன்.தயவு கூர்ந்து பொதுக் கருத்தாக கருத வேண்டுகிறேன்

   Delete
  7. கண்டிப்பாக j சார்...

   உண்மையே...:-)

   Delete
 38. மலரும் நினைவுகளை ஆசிரியல் அழகாக சி.சி.வலையில் பகிரும் பொழுது புத்தகத்தில் சி.சி.வயதில் என பகிர மறுப்பதேன் ...ஏன்..ஏன்...ஏன்...?

  ReplyDelete
  Replies
  1. தலீவரே....ஆட்டைத் தூக்கி குட்டியோடு போட்டாலும்...குட்டியைத் தூக்கி ஆட்டோடு போட்டாலும் - கதை ஒண்ணு தானே ?

   Delete
 39. டெக்ஸ் அட்டைபடம் கலக்கலோ கலக்கல் சார்..அட்டகாசமாய் அமைந்து உள்ளது

  ReplyDelete
 40. Pongal nal valthugal to comics family.🐂🐺🐱

  ReplyDelete
 41. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 42. எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவர்க்கும் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 43. நம்ப விக்ரமின் தலைப்பொங்கல் எப்படி போய்க்கொண்டு இருக்கிறது :-) தம்பி கிட்ட ஜம்போ காமிக்ஸ்ஸ சீக்கிரம் களத்தில் விட சொல்லுங்கள்.

  ReplyDelete
 44. அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!!!

  ReplyDelete
 45. நண்பர்கள் அனைவருக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 46. நண்பர்கள் அனைவருக்கும்
  தமிழர் திருநாளாம்
  தைபொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்
   நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பிண்ணூட்டம். சந்தோஷமாக தொடர்ந்து பதிவிடுங்கள்.

   Delete
 47. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  ம(வ)ளரும் நினைவுகள் அருமை எடிட்டர் ஸார்.

  ReplyDelete
 48. இன்றையபொழுது இனிதெ ஸ்டாலில்
  தொடங்கியது. 13 முன் பதிவு மற்றும்
  சந்தா முன் பதிவு 5 அல்லது 6 செய்ய
  வைத்து புண்ணியம் தேடிக்கொண்டேன்
  அடுத்த இரண்டு நாளும் தொடரும்.
  வரும் சனி & ஞாயிறு தொடரும்.
  என் வாழ்நாளில் மகிழ்சியான தருணம்.
  நமது நட்பு வட்டாரத்தை விரிவாக்க
  என்னால் இயன்றது.இது தொடரும்.

  ReplyDelete
 49. இந்த மாத ரேட்டிங் ( இஸ்பைடர் தவிர்த்து - இன்னும் படிக்கலேங்க)

  கதையின் ஆழம்/அழுத்தம் அடிப்படையில் :
  1. தோர்கல் - கடவுளரின் தேசம்
  2. நிஜங்களின் நிசப்தம்
  3. ஒரு கணவாய் யுத்தம்
  4. சேற்றுக்குள் சடுகுடு

  புத்தக வடிவமைப்பின் அடிப்படையில்:
  1. தோர்கல்
  2. நி.நி
  3. விசித்திர சவால்
  4. ப்ளூகோட்ஸ்
  5. டெக்ஸ்

  'Best entertainer' - என்ற அடிப்படையில் :
  1. தோர்கல்
  2. டெக்ஸ்
  3.ப்ளூகோட்ஸ்
  4. நி.நி

  ReplyDelete
  Replies
  1. அட....ஆரிசியாவின் ஆத்துக்காரர் தான் எல்லா அளவுகோல்களிலுமே முதலிடத்திலா ?

   Delete
  2. 'தோர்கல்'னு சொல்லும்போதுகூட எதுவும் தோனலை... ஆனா 'ஆரிசியாவின் ஆத்துக்காரர்'னு சொல்றச்சே அப்படியே ஒரு கொலவெறி வருது பாருங்க... கிர்ர்ர்ர்...

   அப்புறம் இந்தப் பாகங்களில் ஆரிசியாவுக்கு கிராப்பு வெட்டப்பட்டதால் அவள் அழகு வதனம் சிதைக்கப்பட்டிருப்பதில் துளியூண்டு வருத்தம் எனக்கு! (தோர்கல் கூட அப்படியொன்னும் வருத்தப்படறாப்ல தெரியல)

   Delete
  3. கிறிஸ் அழகா தெரியிராப்ல இல்லே.

   Delete
 50. அடுத்த இரண்டு நாட்களும் நம் ஸ்டாலே
  கதி.பலர் இன்னும் சந்தா பற்றிய
  தகவல் இல்லாமல் இருக்கிறார்கள்.
  அவர்களை சந்தாவில் இணைப்பதே
  என் குறிக்கோள். மூத்த வாசகர்கள்
  பலர் மாயாவி மாண்ரேக் ரிப்கிர்பி
  ஜார்ஜ் பற்றி.விசாரித்தார்கள்.
  என் வாழ் நாளில் சிறப்பான நாட்கள்
  நம் ஸ்டாலில் இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. @ ganesh kv

   அருமை ஜி! தொடர்ந்து கலக்குங்கள்!!

   Delete
  2. சூப்பர் கணேஷ். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

   Delete
  3. உண்மை உண்மை
   இன்னும் நெறைய பேர் காமிக்ஸ் புக் வருதானானு கேக்கறாங்க.
   (நான் பஸ் ரயில் பயணங்களின் போது படிக்கும் காமிக்ஸ் படிப்பதை பார்த்து)

   Delete
  4. Guys - இன்றைக்கு தூள் கிளப்பியுள்ளார் கணேஷ் சார் !!

   எழுந்து நின்று கைதட்டும் படங்கள் ஒரு வண்டி !!

   Delete
  5. நன்றி சொல்லும் எண்ணங்கள் பல
   🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺🏺

   கணேஷ்......

   Delete
  6. நன்றி விஜயன் சார்.
   நன்றி நண்பர்களே.

   Delete
  7. நன்றி சார். இன்னும் 4 நாட்கள் உள்ளது.

   Delete
  8. சூப்பர் கணேஷ் ஜி .

   Delete
  9. உங்கள் பங்களிப்பு அருமை கணேஷ் ஜி.

   Delete
  10. சூப்பா் சாா்!

   Delete
 51. எடிட்டர் ஐயா,
  நமது காமிக்ஸ் வெளிவருவது தங்கத்தமிழில்.அந்த தமிழர்களுக்கு ஒரு பண்டிகை பொங்கல் திருநாள்.முத்தான மூன்றுநாள் கொண்டாட்டம்.இவ்வாறு மூண்று நான்கு நாள் விடுமுறை வேறெந்த நிகழ்வுகளுக்குமில்லை.அதனால் இந்த கொண்டாட்டத்திற்கு மேலும் ஸ்ருதி சேர்க்க அடுத்த ஆண்டில் இருந்து' பொங்கல் மலர் ' வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. Jaya Kumar : இந்தாண்டில் "இரத்தப் படலம்" எனும் மெகா மறுபதிப்பு project நிறைவு கண்டுவிட்டால் அப்புறமாய் பழைய இதழ்கள் பக்கமாய் நேரமோ ; கவனமோ ; முதலீடோ ஒதுக்கும் அவசியம் மட்டுப்படும் ! So அப்புறமாய் எல்லா மலர்களையும் போட்டுத் தாக்கி விடலாம் !

   Delete
  2. என்ன புண்ணியம் செய்தோம் சார்
   உங்களை ஆசிரியராய் பெற்றதற்கு

   Delete
  3. // அப்புறமாய் எல்லா மலர்களையும் போட்டுத் தாக்கி விடலாம் !//
   அதிகம் வேண்டாம் சார்,இரத்தப் படலம் விலைக்கு இணையா குண்டு ஸ்பெஷல்ஸை போட்டு தாக்கினால் அது போதும்.

   Delete
 52. அடுத்த இரண்டு நாட்களும் நம் ஸ்டாலே
  கதி.பலர் இன்னும் சந்தா பற்றிய
  தகவல் இல்லாமல் இருக்கிறார்கள்.
  அவர்களை சந்தாவில் இணைப்பதே
  என் குறிக்கோள். மூத்த வாசகர்கள்
  பலர் மாயாவி மாண்ரேக் ரிப்கிர்பி
  ஜார்ஜ் பற்றி.விசாரித்தார்கள்.
  என் வாழ் நாளில் சிறப்பான நாட்கள்
  நம் ஸ்டாலில் இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. சார்....இன்றைய விற்பனை அதிரடியிலேயே தெரிகிறது உங்களின் பங்களிப்பு !! அட்டகாசம் !!

   Delete
  2. மீண்டும் நன்றி மற்றும் எனது பாராட்டுக்கள்

   Delete
  3. நன்றி சார்.
   நான் அணில்.

   Delete
  4. வாழ்த்துக்கள் கணேஷ் 👏👏👏...

   Delete
  5. கணேஷ் சார்...சூப்பர்..கலக்குங்கள்..

   மனமார்ந்த பாராட்டுகள்..

   Delete
 53. இன்று புலி முருகன்னு ஒரு படம் போட்டாங்கே டீவியில

  நம்ப லார்கோ விஞ்ச் சோட கஞ்சா கத மாதிரி இருந்திச்சி

  ReplyDelete
  Replies
  1. மோகன்லால், லால் நடிச்ச படம்

   Delete
  2. கொடுத்து வைத்தவர் நீங்கள். டிவி பார்க்க அதுவும் படம் பார்க்க எல்லாம் முடியுது :-)

   Delete
  3. அய்யா, சாமி ,டீவி பாக்க கூட முடியாமல இருக்கீங்க.
   இப்ப தான் எல்லா channel லும் செல்போன்ல லைவ்வா வருதே.

   Delete
 54. டெக்ஸ் மற்றும் கிட் கார்சன் சட்டை பற்றி ஒரு கேள்வி.

  ReplyDelete
  Replies
  1. ரெண்டு பேரும் ரேஞ்சர்... ஆனால் டெக்ஸ்ஸுக்கு மட்டும் மஞ்சள் கலர், கார்சனுக்கு சிகப்பு/ஆரஞ்சு கலர் சட்டை.

   இதுக்கு விளக்கம் தேவை யுவர் ஆர்னர்.

   Delete
  2. அதாவது... முதுகுப்புறமிருந்து குறி வைக்கும் எதிரிகளுக்கு எது டெக்ஸ், எது கார்ஸன்னு குழப்பம் வந்திடக்கூடாதில்லையா? அதுக்குத்தான்! :P

   ம், அடுத்த கேள்வி?

   Delete
  3. அதாகப்பட்டது வறுத்தகறிக்கு மேட்சா சட்ட கலரு தெரியணுமில்ல,என்ன நான் சொல்றது.

   Delete
 55. அனைவர்க்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 56. சார அதேதான்....டெக்ஸ் அட்டைப்படம் இதுவரை வந்திலேயே ....வந்த டெக்ஸ் அட்டையில பெஸ்ட் ...அந்த நீல நிறமும் , இரத்தச்சிவப்பும் தலைப்புக்கு ஈடு தருகிறது...ஒரு பக்கம பட்டய கிளப்புது . ஜாக் லண்டனின் கால் ஆஃப் ஒயில்டை நினைவு படுத்துது . ஓவியம் அதகளம் .கொலைப்படை பின்னொரு நாளில் நண்பரிடம் இரவல் வாங்கிப் படித்த ிதழ்...எம்மாற்றமுமின்றி அதே போல வர வாய்ப்பிருக்குமா....இந்த இதழை மறுபதிப்பின் போது தகுந்த முறையில் அசத்துங்கள ...பொம்மைகளின் பேரரசர் காத்திருக்கிறார் . சூப்பர் சர்கஸ் நினைவுகள் ....இப்ப கூட அது போல முடியாது ..அட்டைப் படம் பழிவாங்கும் பாவைக்கும் அது போலத்தானே....மீண்டும் பொங்கல் வாழ்த்துகள்...

  ReplyDelete
 57. Replies
  1. வணக்கம். வரவு நல்வரவு ஆகட்டும். நமது காமிக்ஸ் பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே?

   Delete
 58. Replies
  1. ///


   ///

   இன்னும் கொஞ்சம் சத்தமா பேசுங்க நண்பரே... ஒன்னுமே கேட்கல! :)

   Delete
  2. ஒருவேளை .. ..வெளிநாட்டில் இருந்து பேசுறாரே என்னமோ ..!? :-)

   Delete
 59. காமிக்ஸ் சொந்தங்கள் அனைவருக்கும் காலை வணக்கங்கள உங்களூடன் இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

  ReplyDelete
 60. அனைத்து காமிக்ஸ் உறவுகளுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 61. January மாத ரேட்டிங் ...
  1. தோர்கல்
  2. டெக்ஸ்
  3.ப்ளூகோட்ஸ்
  4.நிஜங்களின் நிசப்தம்
  ஸ்பைடர் படித்ததே விசித்திர சவாலாக தான் இருந்தது ...

  ReplyDelete
  Replies
  1. ///ஸ்பைடர் படித்ததே விசித்திர சவாலாக தான் இருந்தது ...///

   ஹா ஹா ஹா! செம! :))))))

   Delete
  2. ஆனால் அவர் தான் இந்த மாத விற்பனையில் முதல் இடம் என்று பேசிக்கிறார்கள்.

   Delete
  3. ஒரு ஆசைக்கு வாங்கரதுதான்!
   அதுக்காக படிக்க சொன்னீங்கன்னா எப்புடி!

   Delete
 62. visited your stall.last month tex release was not available.oru kanavai yuddham.

  ReplyDelete
  Replies
  1. Good to hear that you have visited our stall. Kanavai Yuddham is January book, it seems it selling very fast

   Delete
  2. Sir,
   You can go for a subscription with our lion Muthu comics.

   Delete
 63. கலர் டெக்ஸ் பிரீ யாக.பிப்ரவரிக்காக காத்திருக்கிறேன்

  ReplyDelete
 64. இன்று 'விசித்திர சவால்' படிக்கயிருக்கிறேன்..... இது நானே சுயமாக எடுத்த முடிவுதான்... என்னை யாரும் தடுக்க வேண்டாமே ப்ளீஸ்!

  ReplyDelete
  Replies
  1. யாராவது ஒருத்தர் தடுத்தாக்கூட அப்படியே நிறுத்திடலாம்னு பாக்கறேன்... ரொம்ப நேரமாகியும் யாருமே வரலையே...!!

   'மனிதம் - மரித்துப்போய்விட்டது'ன்னு ஏதோவொரு கி.நா'ல படிச்சது ஞாபகத்துக்கு வருது. உண்மைதான்!

   Delete
  2. பொறுங்க. பொறுங்க.

   ஆங்.. சொல்ல மறந்திட்டேன்.

   படிச்சிட்டு மறக்காம விமர்சனம் பண்ணுங்க. 😃😃😃

   Delete
  3. என்னவொரு தங்கமான மனசு, நம்ம GP க்கு?!!

   Delete

  4. நம்ம கஷ்டத்தை ஷேர் பண்ணினா பாரம் குறையுமில்ல. அதுக்குதான்.

   Delete
  5. நண்பர்களே,
   எல்லோரும் நினைப்பது (விமர்சிப்பது) போல "விசித்திரச் சவால்"இது ஒன்றும் காதில் புஷ்பம் வகையல்ல... இலக்கிய படைப்பான "தி டைம் மெஷின்" போன்ற கதையினை கொஞ்சம் பான்டஸி எனும் spicy சேர்க்கப்பட்டிருக்கும்... அவ்வளவே தான்.

   1988ம் வருடம் ஒரு ஜுரம் அடித்த இரவில் ஜாலியாக இந்த சூப்பர் டூப்பர் ஹிட் கதையை படித்த அனுபவம் இன்றைக்கும் பசுமையாக நினைவிருக்கிறது.

   இந்த கதையில் சாகச தலைவன் ஸ்பைடர் பலசாலி ஜேசன் என்பவனிடம் ஒரு பஞ்ச் வசனம் பேசுவான் பாருங்கள்... கிளாஸ் ரகம்
   "நீ என்னை விட 100 மடங்கு பலசாலி ஸ்பைடர்! சந்தேகமேயில்லை.."
   "அப்படியில்லை அப்பனே! உன்னை விட நான் லட்சம் மடங்கு புத்திசாலி - அவ்வளவுதான்"
   லயன் சூப்பர் ஸ்பெஷலை சிறப்பித்த அற்புதமான படைப்பு இது.... dont miss it.

   Delete
  6. நண்பர்களே,
   எல்லோரும் நினைப்பது (விமர்சிப்பது) போல "விசித்திரச் சவால்"இது ஒன்றும் காதில் புஷ்பம் வகையல்ல... இலக்கிய படைப்பான "தி டைம் மெஷின்" போன்ற கதையினை கொஞ்சம் பான்டஸி எனும் spicy சேர்க்கப்பட்டிருக்கும்... அவ்வளவே தான்.

   1988ம் வருடம் ஒரு ஜுரம் அடித்த இரவில் ஜாலியாக இந்த சூப்பர் டூப்பர் ஹிட் கதையை படித்த அனுபவம் இன்றைக்கும் பசுமையாக நினைவிருக்கிறது.

   இந்த கதையில் சாகச தலைவன் ஸ்பைடர் பலசாலி ஜேசன் என்பவனிடம் ஒரு பஞ்ச் வசனம் பேசுவான் பாருங்கள்... கிளாஸ் ரகம்
   "நீ என்னை விட 100 மடங்கு பலசாலி ஸ்பைடர்! சந்தேகமேயில்லை.."
   "அப்படியில்லை அப்பனே! உன்னை விட நான் லட்சம் மடங்கு புத்திசாலி - அவ்வளவுதான்"
   லயன் சூப்பர் ஸ்பெஷலை சிறப்பித்த அற்புதமான படைப்பு இது.... dont miss it.

   Delete
  7. @ udhay

   உண்மைதான்! சிறுவயதில் ஸ்பைடர் என் கனவுக் கண்ணனாக இருந்தவர் தான்! நீங்கள் மேற்கூறிய வசனங்கள் உள்ளிட்ட பல ஃபிரேம்கள் என்றும் நெஞ்சில் நீங்காதவை ( பேய் வேடமிட்ட செவ்விந்தியன், பன்றி முகத்தானின் முகமும் பேச்சும், இன்னும் பல)!

   'அப்புறம் ஏன் இஸ்பைடரை இப்படி ஓட்டுறீங்க'ன்னு கேட்கறீங்களா...? இன்றைக்கு 'காதுல பூ' சாமாச்சாரங்களால் வாசிப்பிலிருந்து சற்றே ஒதுக்கிவைத்தாலும், பிடிச்சவங்களைத்தானே கலாய்க்கமுடியும்? :)

   ஐ லவ் இஸ்பைடர்!

   Delete
  8. உதய் @ எனது எண்ணமும் இதுவே.

   Delete
  9. @விஜய்,ஓகே ப்ரோ.ஆனா ஓட்டறதுக்கு ஒரு வியாக்கியானம் சொன்னீங்க பாருங்க,சூப்பர்.

   Delete
  10. @பரணி,நன்றி... ஸ்பைடர் பிரியர்கள் கேட்டால், ஆசிரியர் அந்த வெளியிடப்படா மெகா கதையை கொண்டு வருவாரா?

   Delete
  11. Oh I NEVER THOUGHT THERE WAS A spider family SERIOUSLY E.V

   Delete
  12. உதய் ஸ்பைடைரை பற்றிய உங்கள் விமர்சனம் அருமை

   Delete
  13. காதுல பூ சுற்றல் என்றால் நாம் தற்போது படிக்கும் எல்லா கதைகளும் அடங்கும்.

   Delete
 65. காமிக்ஸ் குடும்பத்தாருக்கும்
  மற்றும் நமது எடிட்டர் சார் அவர்களுக்கும்
  அவரது குடும்பதாருக்கும்
  அனைவருக்கும்
  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 66. நிஜங்களின் நிசப்தம் இப்போதுதான் படிக்க ஆரம்பிக்கிறேன்.

  வீட்டில் உள்ள அனைவரும் தூங்கியபின், நிசப்தமான இரவில் கொஞ்சம் த்ரில்லிங் எபெக்டில் படிப்பதே பொறுத்தமாக இருக்கும்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. குட்! இப்படியொரு தருணத்திற்காகக் காத்திருந்து படிப்பதே இதுபோல கி.நா'க்களுக்கு உகந்தது!

   ஹாப்பி ரீடிங்!

   என் கையில் இப்போது 'விசித்திர சவால்'. ஹாப்பி ரீடிங்! ( எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்)!

   Delete
  2. ///என் கையில் இப்போது 'விசித்திர சவால்'. ஹாப்பி ரீடிங்! ( எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்)!///

   ஏன்....நானும் சொல்றேனே ..!ஹாப்பீ ரீடிங் குருநாயரே.!

   (அடுத்தவங்க கஷ்டத்திலும் ஒரு ஆனந்தம் இருக்கத்தான் செய்யுது ..!
   உதாரணம் : நம்ம வைகைப்புயல் அடிவாங்குறதைப் பார்த்து நாம சிரிக்கிறதில்லையா?)

   Delete
 67. இன்றும் நம் ஸ்டால் களை கட்டியது.
  கொத்து கொத்தாக புத்தகத்தை அள்ளிய
  வாசகர்களை பார்த்து ஆனந்த கண்ணீர்
  தளும்பியது.7 முதல் 77க்கும்மேல் உள்ள
  பல் வேறு வாசசகர்களை சந்தித்தது
  சுகானுபவம்.மறுபதிப்பு கோரிக்கைகள்
  ஏகப்பட்டவை அதை அப்படியே ஆசிரியருக்கு பார்சேல்ல்.ப்ளீஸ் நோட்
  திஸ் பாய்ன்ட் யுவர் ஹானர்.பெண்கள்
  இளைஞிகள் பல புத்தகங்களை பார்சல்
  கட்டியதை பார்க்க முடிந்தது.மற்ற
  செய்திகள் நாளை.தகவல்களை உடனுக்குடனே தெரிந்து கொள்ள
  சன் தொலைக்காட்சியை மன்னிக்கவும்
  lion-muthucomics blogspot ஐ
  தவறாமல் பார்க்கவும்.

  ReplyDelete
 68. இன்றும் நம் ஸ்டால் களை கட்டியது.
  கொத்து கொத்தாக புத்தகத்தை அள்ளிய
  வாசகர்களை பார்த்து ஆனந்த கண்ணீர்
  தளும்பியது.7 முதல் 77க்கும்மேல் உள்ள
  பல் வேறு வாசசகர்களை சந்தித்தது
  சுகானுபவம்.மறுபதிப்பு கோரிக்கைகள்
  ஏகப்பட்டவை அதை அப்படியே ஆசிரியருக்கு பார்சேல்ல்.ப்ளீஸ் நோட்
  திஸ் பாய்ன்ட் யுவர் ஹானர்.பெண்கள்
  இளைஞிகள் பல புத்தகங்களை பார்சல்
  கட்டியதை பார்க்க முடிந்தது.மற்ற
  செய்திகள் நாளை.தகவல்களை உடனுக்குடனே தெரிந்து கொள்ள
  சன் தொலைக்காட்சியை மன்னிக்கவும்
  lion-muthucomics blogspot ஐ
  தவறாமல் பார்க்கவும்.

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் கணேஷ்.

   அப்படியே நடுநடுவே நம்ப தேவையும் சேர்த்து ஆசிரியருக்கு அனுப்பி வையுங்கள்.

   Delete
  2. பட்டையக் கிளப்புங்க கணேஷ் ஜி! பாராட்ட வார்த்தைகளே இல்லை!!

   இப்போதே ஓடிவந்து உங்களுடன் ஸ்டாலில் இணைந்துகொள்ள வேண்டும்போல் ஒரு அரிப்பெடுக்கிறது!

   அப்புறம்... புத்தகம் வாங்கிய பலரும் 'சி.சி.வ'வை காணாமல் கண்ணீர்விட்டுக் கதறிய சோகத்தை நீங்க எடிட்டர்ட்ட சொல்லீட்டீங்கதானே?!!

   Delete
  3. அப்புறம்... புத்தகம் வாங்கிய பலரும் 'சி.சி.வ'வை காணாமல் கண்ணீர்விட்டுக் கதறிய சோகத்தை நீங்க எடிட்டர்ட்ட சொல்லீட்டீங்கதானே?!!

   Delete
  4. அந்த சோகத்தை மறக்க ஆளுக்கொரு "விசித்திர சவால் " வாங்கிப் போன கதையையும் கணேஷ்ஜி சொன்னாரே !!

   Delete
 69. @ ALL : இன்றைக்கும் நண்பர் k v ganesh நமது ஸ்டாலில் சூறாவளியாய் செயல்பட்டுள்ளார் !!! தலை வணங்குகிறோம் சார் !!!!

  ReplyDelete
  Replies
  1. இரத்த படலம் முன்பதிவு 5 , சந்தா 2 முன்பதிவு என அவர் மூலம் கேள்வி பட்டேன்.

   உங்களின் ஈடுபாடு ஆச்சரியபடுத்துகிறது. தொடர்ந்து கலக்குங்க.

   Delete
  2. சென்ற CBFல் கணேஷ்ஜி யை முதன்முதலாக நம் ஸ்டாலில் சந்தித்தபோது "அடுத்த CBFல் நான் இன்னும் ஏதாவது செய்வேன் விஜய்" என்றார். அவர் சொல்லியதை இன்று செய்துகாட்டியுள்ளார்!

   மகிழ்ச்சி! மகிழ்ச்சி!

   Delete
  3. கலக்குங்க கணேஷ் அண்ணா

   Delete
  4. கணேஷ் சார்...வாழ்த்துகளுடன் பாராட்டுகள்...

   Delete
  5. பாராட்டுகள் பல கணேஷ்ஜி.!
   உங்களுடைய காமிக்ஸ் நேசமும் நட்பின் பாசமும் வாழ்வாங்கு வாழட்டும்.!
   உங்ளுடைய ஈடுபாட்டுக்கு தலைவணங்குகிறோம் சார்.!!

   Delete
  6. கணேஸ் சார்...

   நேரமும் ஆர்வமும் நிறய பேருக்கு இருந்தாலும் இந்த மாதிரி களத்தில இறங்கி வேலை செய்ய தனித்திறமை வேண்டும். அதாவது நான் சொல்லுவது people skills. திறம்பட அதனை நமது காமிக்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் அளிப்பதற்கு என்னைப் போன்ற நண்பர்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள் மற்றும் வணக்கங்கள். உங்களை ஆகஸ்ட் ஈபுவி ல் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

   அன்புடன்
   மகேந்திரன்.

   Delete
  7. நண்பர் K.V கணேஷுக்கு வாழ்த்துக்கள்..

   Delete
  8. வாழ்த்துகளும் நன்றிகளும் கணேஸ் சார்... கலக்குங்க..

   Delete
  9. தனி ஒருவராக கலக்கும் கணேஷ் ஜி,அருமை கலக்குங்க,வாழ்க ந(உ)ம் காமிக்ஸ் காதல்.

   Delete
  10. வாழ்த்துக்கள் கணேஷ் சார்.உங்கள் பணி மேலும் சிறக்கட்டும்.

   Delete
 70. கணேஷ் உங்களின் காமிக்ஸ் சேவை இக்கு பாராட்டுக்கள் 👏👌👏..

  ReplyDelete
 71. இன்றைய தினமலரில் சேற்றுக்குள் சடு குடு புத்தகம் பற்றி வந்துள்ளது.

  கடந்த வாரம் ஒரு கனவாய் யுத்தம் புத்தகம் பற்றி எழுதி இருந்தார்கள்.

  தகவலுக்கு நன்றி கணேஷ்.

  ReplyDelete
 72. அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்..!

  என்ன ... இன்னிக்கு அமாவாஸையாய் போயிடுச்சி ..!
  ப்ப்ப்பூபூபூபூவ்வ்....!😭😭😭

  ReplyDelete
  Replies
  1. பல பறப்பன தப்பிச்சது சாமி :-)

   Delete
  2. ம்ஹூம்! அவற்றின் வாழ்நாள் ஓரிருநாள் தள்ளிப்போயிருக்கிறது - அவ்வளவுதான்!

   Delete
  3. ஒரே நாள் ... Just oneday ஹிஹீ..!

   Delete
 73. பல புதிய புத்தகத் திருவிழா ஃபோட்டோகளை இந்த பதிவில் நமது ஆசிரியர் இணைத்துள்ளார் நண்பர்களே.

  ReplyDelete
  Replies
  1. சந்தோசம்கள் PfB!

   புத்தகத் திருவிழா ஃபோட்டோக்கள் அனைத்தும் அருமை! குறிப்பாக, இன்றைய தலைமுறையினரின் கைகளில் நம் காமிக்ஸைக் காண்பதில் - அலாதி குஷி!

   நன்றிகள் KVG!

   Delete