Powered By Blogger

Sunday, January 21, 2018

சென்னையில் ஒரு சனிக்கிழமை !

நண்பர்களே,

வணக்கம். வியக்க வைக்கும்...வியர்க்கவும்  வைக்கும்...!! பறக்க வைக்கும்...பரக்க பரக்க விழிக்கவும் வைக்கும்...!! மிரள  வைக்கும் ..மிருதுவாய் அணைத்தும்  வைக்கும்......!! மயங்க வைக்கும்....மயக்கம் வரவும் வைக்கும்...!! சிரிக்க வைக்கும்...சிரிப்பாய் சிரித்துப் போகவும் வைக்கும்..! சில்லிட வைக்கும்....மேனி சிலிர்க்கவும் வைக்கும் ! ரசிக்க வைக்கும்.....ரகளை பண்ணவும் வைக்கும் ! பரபரப்பாய் இருக்கும்....பாந்தமாகவும் இருக்கும் ! என்னடா கவிதை ஆறாய் ஓடுதே என்று பார்க்கிறீர்களா ? சிங்காரச் சென்னையே என்னை இந்த சனியிரவில் திடீர் புலவனாக்கிப் பார்க்கிறது !! And வாசிப்பை நேசிக்கும் ஒரு அசாத்திய ஜனத்தின் ஒட்டு மொத்த முகத்தையும் 2 நாட்களாய் சென்னைப் புத்தக விழாவினில் பார்க்கும் போது நம்மையும் அறியாது நெஞ்சம் குதூகலிக்கிறது ! GST சிக்கல்கள் ; பணப் புழக்கத்தின் தட்டுப்பாடு ; இன்னமும் சந்தாவில் எட்டிப் பிடிக்க வேண்டிய தூரம் ; கிட்டங்கியின்பாரம் ; ஊருக்குத் திரும்பிய நொடியே காத்திருக்கும் அந்த மாமூலான பணிகள் - என எதுவுமே புத்தக விழாவில் காலூன்றி நிற்கும் தருணங்களில் ஒரு பொருட்டாகவே தோன்ற மறுக்கும் மாயம் என்னவோ தெரிய மாட்டேன்கிறது !!  ஒட்டு மொத்த அரங்குக்கே அழகாய் விற்பனை அரங்கேறும் அழகையும், வயது வேறுபாடுகளின்றி ஆண்களும், பெண்களும் ஒவ்வொரு ஸ்டாலிலும் அலைமோதுவதையும்  பார்க்கும் போது வாசிப்புக்கு தொய்விருக்கலாம் ; ஆனால் அஸ்தமனம் நிச்சயம் இராது என்பதை மாடி மேலேறி நின்று உரக்கக் கூவணும் போல் தோன்றுகிறது !! 

திட்டமிடல் ஏதுமின்றி, திடீரென அவசியமானதொரு பயணத்தின் பலனாய் புத்தக விழாவில் வெள்ளி மாலையையும், சனியின் முழுமையையும் செலவிட முடிந்தது ! வழக்கமான நண்பர்கள் கும்மியடி அரட்டை என்றில்லாது இம்முறை ரொம்பவே வித்தியாச அனுபவம் - அனைவருமே விற்பனைக்கு தத்தம் உதவிகளை செய்து காட்டும் முனைப்பில் இருந்ததால் !! So பல்லி போல ஒரு ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டு, என்னை அடையாளம் தெரிந்து புன்னகைக்கும் நண்பர்களைத் தவிர்த்து வேறு யாரையும் தொந்தரவு செய்யாது வேடிக்கை பார்க்க முடிந்த போது நிறையவே விஷயங்களை observe செய்ய சாத்தியமானது !!

விறு விறுவென்று ஸ்டாலுக்குள் நுழைந்த நொடியே "டெக்ஸ் வில்லர் ??" என்று கேட்ட சகோதரிக்கு என் வயதில் பாதி தானிருக்கும் ! வண்ணத்தில் இருந்த "டிராகன் நகரம்" புக்கைப் புரட்டிய நொடியில் அவரது முகத்தில் துளிர்விட்ட புன்னகைக்கு சத்தியமாய் வள்ளுவர் கோட்டத்தைப் பட்டா போட்டிருப்பேன் - மாநகராட்சிக்காரர்கள் புட்டாணியைக் கழற்றிவிடுவார்களே என்ற பயம் மட்டும் இல்லாதிருந்தால் !! 15 நிமிடத் தேடலுக்குப் பின்னே அவரது கைகளில் இருந்த 7 புக்குகளுமே நமது டெக்ஸாஸ் ரேஞ்சரது தான் !! போதாக்குறைக்கு பின்னாடியே வந்த ஒரு 12 வயதுக்கு மிகா சிறுவன் - தன தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டே !! அவரோ லக்கி லூக்கையும், மதியில்லா முந்திரியையும் புரட்டிக் கொண்டே -"இதை வாங்கிக்கோ தம்பி" என்று கெஞ்சிப் பார்க்க - "நோ டாடி..டெக்ஸ் வில்லர் தான் சூப்பரா இருக்கும் !" என்று ஒரே போடாகப் போட "கணவாய் யுத்தம்" போணியானது ! சுருங்கச் சொல்வதாயின், இந்தப் புத்தக விழாவின் (நம்) கதையே இரவுக் கழுகாரைச் சுற்றியான கதை தான் ! விற்பனை வேகங்களுக்கு நம்மவர் அந்நியரல்ல தான் ; இதுவரையிலான புத்தக விழாக்களின் புள்ளி விபரங்களை மேலோட்டமாய்ப் பார்த்தாலே டெக்ஸ் & கோ.வின் வீச்சு எத்தகையது என்பது புரியும் ! ஆனால் இம்முறையோ விற்பனையில் ஒரு பாதி டெக்ஸாஸ் பிரஜைகளின் உபயம் ; பாக்கிப் பாதிக்குள் மிச்சம் மீதியிருக்கும் அத்தனை நாயக / நாயகியரும் சேர்ந்து கும்மியடித்துள்ளனர் ! அந்த மீதிக் கும்மியில் ஒரு இருபது சதவிகிதமாவது மும்மூர்த்திகள் & இஸ்பய்டர் சார் இடம்பிடித்துள்ளனர் எனும் பொழுது இவர்கள் முன்னே துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்பது புரிகிறது ! So இன்று முதல் CID லாரென்சர் ; டேவிடர் ; ஜானி நீரர் ; மாயாவியார் ; இஸுபைடர் சார் என்று மரியாதையோடு இவர்களை விளிக்கப் பழகிக் கொள்வதாகவுள்ளேன் ! 

பெண்களும் எத்தனை ஆர்வமான காமிக்ஸ் வாசகர்கள் என்பதை இம்முறை அழுத்தமாய்ப் புரிந்து கொள்ள முடிந்தது ! Not that it was a secret - ஆனால் இம்முறை பெண்கள் துளியும் தயக்கமின்றி நமது இதழ்களை புரட்டவும், பரிசீலித்து வாங்கவும் முன்வந்த அழகை பார்க்கும் போது நிறைவாக இருந்தது ! சந்தா கூப்பனைக் கையில் வைத்துக் கொண்டு தமக்குள் ஆலோசித்துக் கொண்டிருந்த நடுவயதுத் தம்பதியருக்கு உதவுவோமே என்றபடிக்கு - A for Apple ; B for பிளாக் & ஒயிட் கதைகள் ; C for கார்ட்டூன்ஸ் என்று விளக்கியபடிக்கே - "வீட்டில் யார் படிக்க என்று சொல்லுங்க சார் ; எந்த சந்தா combination சுகப்படுமென்று சொல்கிறேன் !" என்ற நொடியில் அந்த இல்லத்தரசி என்னைப் பார்த்து முறைத்தார் !! "படிக்கப் போறது நான்தான் !!" என்று அவர் சொன்ன நொடியில் கை நிறைய ; பை நிறைய பல்ப் வாங்கினது போலொரு பீலிங்கு எனக்கு ! வழக்கமாய் கணவர்கள் நெளிந்து கொண்டே சந்தா கட்ட மனைவியரிடம் பெர்மிஷன் வாங்குவதை பார்த்துப் பழகியவனுக்கு - இம்முறை roles உல்டாவாகியிருப்பதை பார்த்த போது திகைப்பாய் இருந்தது ! நமது சின்ன வட்டத்தில் மகளிரணிக்கு ஒரு முக்கிய பங்குள்ளது guys ; தொடரும் காலங்களில் இந்த அணியின் ரசனைகளை அறிந்திடவும், அவற்றிற்கு நியாயம் செய்திடவும் நமக்கொரு கடமை காத்துள்ளது !! So அவர்களது கோணங்களிலும் இனி சிந்திக்க நாம் பழகிட வேண்டும் போலும் !! "30 நாட்களில் பெண்களின் வாசிப்பு ரசனைகளைத் தெரிந்து கொள்வது எப்படி ?" என்று எங்கேனும் புக் பார்த்தால் - one copy for me ப்ளீஸ் ! 

சனிக்கிழமை புலர்ந்த போதே நமது ஸ்டாலில் கணேஷ் kv சாரும் ; மாயாவிகாரு + இத்தாலிகாருவும் ஆஜராகியிருந்தனர் - விற்பனைகளுக்குள் லயித்தபடிக்கே ! இன்று கணேஷ் சாருக்கு DAY 4 - நமது ஸ்டாலில் & ஒவ்வொரு நாளும் மனுஷன் விற்பனைக்கு எடுக்கும் மெனக்கெடல்களை பார்த்தாலொழிய முழுமையாய்ப் புரிந்திட இயலாது ! இருநூறு ரூபாய்க்கு கொள்முதல் செய்ய நினைத்து வருபவர்களை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கச் செய்யும் அசாத்தியக் கலையைக் கரைத்துக் குடித்துள்ளதால் - ஸ்டாலுக்கு வந்த வாசகர்களும் பலர் புஜங்கள் கனக்கும் சுமைகளோடே வெளியேறியதை பார்க்க முடிந்தது ! நமது சேலத்து சூப்பர்மேன்  & ஈரோட்டின் எமகாதகரோ தத்தம் பங்குக்கு வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலும், அவர்களது தேடல்களுக்குப் பிரதிகளுமாய் வழங்கி அசத்திக் கொண்டிருந்தனர் ! ஒற்றை ஸ்டாலின் குறுகலான இடத்தினிலும் லாவகமாய்ப் புகுந்து எல்லோருக்கும் அவசியமான ஒத்தாசைகளை இந்த trio இன்றைக்கு செய்ததன் பலனை இரவின் விற்பனையினில் பார்த்திட முடிந்தது ! இந்தப் புத்தக விழாவினில் இதுவரையிலான top விற்பனை தினம் இன்றைய பொழுதே என்பது நிச்சயம் ஒரு தற்செயலான நிகழ்வல்ல !! காமிக்ஸ் அறிந்த நண்பர்கள் விற்பனைக்கு உதவிட இருக்கும் பட்சத்தில் என்ன மாயங்கள் நிகழ்கின்றன என்பதை நாள் முழுக்கப் பார்த்த நிறைவோடு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன் - நாளைய பொழுதையும் இந்த அணி சூறாவளியாக்கிடுமென்ற உறுதியோடு !! 

Of course - இடைப்பட்ட வேளைகளில் - "இது எப்போ ? அது வருமா ?..இது எப்படி விற்றது ?" என்ற கேள்விகளை தொடுக்கத் தான் செய்தனர் ! நானும் எப்போதும் போல் ஒரு மொக்கைச் சிரிப்பை உதிர்த்து விட்டு மழுப்பும் வேலையை கனகச்சிதமாய் செய்து வைத்தேன் ! இடையிடையே நண்பர்கள் நிறைய பேர் தலைகாட்ட, அவர்களோடும் லேசான அரட்டை ; போட்டோக்கள் என்று பொழுது ஓடியது ! ஸ்டாலுக்கு முன்னே நாம் இடைஞ்சலாய் நின்றிடக் கூடாது ; மற்ற கடைகளின் முகச்சுளிப்புகளுக்கு ஆளாகிடக்கூடாது என்ற முன்ஜாக்கிரதை நண்பர்கள்  அனைவருக்குமே இருந்தபடியால், கிடைத்த ஓரம் சாரங்களில் நின்றபடியே பொழுதை ஒட்டிட முடிந்தது ! 2016 & 2017-ல் வந்த புக்குகள் ஒட்டு மொத்தமாய் வேண்டும் என்று குடும்பத்தோடு வருகை தந்திருந்த நண்பர் கோர, பத்தே நிமிடங்களில் குவித்து விட்டார்கள் நமது sales மும்மூர்த்திகள் !! இவர்களின்றி, நமது பணியாளர்கள் மாத்திரமே ஸ்டாலில் இருந்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாய் பெப்பே பெப்பே தான் பதிலாகியிருக்கும் & அவர்களைக் கடிந்து கொள்வதிலும் அர்த்தம் இருந்திராது ! "முத்து காமிக்ஸ் & லயன் காமிக்ஸ் தான் எனது ஓவிய வாழ்க்கைக்கே அஸ்திவாரம்" என்று காதில் சொல்லிச் சென்ற பிரபல தினசரியின் கார்ட்டூனிஸ்ட் ; "க்ரீன் மேனர் ஏன் இரண்டுக்கு மேலே போடலை ?? Alan Moore கதைகள் வருமா - வராதா ? கிராபிக் நாவல்களில் அடுத்து என்ன ?" என்று மிஷின் கன் போல தாக்கிச் சென்ற இருபதே வயதான அடுத்த தலைமுறையின் பிரதிநிதி ; "ஆர்ச்சி வருமா - வராதா ?" என்ற blog நண்பர் ; "இங்கிலீஷ் புக்ஸ் ஏன் ஸ்டாலில் இல்லை ?" என்று மெல்லிய குரலில் கேட்ட ஆர்வலர் ; IT துறையில் கலக்கும் மகனுடன் வந்திருந்து அவர் காமிக்ஸ்களைத் தேர்வு செய்யும் ஆர்வத்தை ரசித்த தாய் ; "ஏம்மா..உனக்கு இன்னும் காமிக்ஸ் படிக்கிற வயசா -என்ன ?" என்று தாயாரைக் கேள்வி கேட்ட இன்றைய  யுவதி ; "இப்போ திருப்தியா ?" என்று கணவனிடம் பொறுமையாய்க் காத்திருந்தபடிக்கே கேட்கும் மனைவி - என்று நான் இன்று சந்தித்தது வாழ்க்கையின் வானவில்லின் பல பரிமாணங்களை !! 

விற்பனைப் புள்ளிவிபரங்கள் பற்றி தொடரும் நாட்களில் பேசலாம் guys ; ஆனால் இப்போதைக்கு இப்படி வைத்துக் கொள்ளுங்களேன் ரேங்க் பட்டியலை :

1 டெக்ஸ் வில்லர் & கோ.
2 மும்மூர்த்தீஸ் சார்கள்
3 லக்கி லூக் 
4 சிக் பில்
5 தோர்கல்

And "பிம்பிலிக்கா பிலாக்கி" awards பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன் guys  !! அதனில் இடம்பிடிக்கவும் நிறைய ஆட்கள் ரெடி !! 

நண்பர்களிடம் விடைபெற்றுக் கிளம்பிய போது, ஒரு நூறு அழகான நினைவுகளோடு கிளம்பும் நிறைவு என்னுள் ! இன்னமும் 365 நாட்கள் உள்ளன - சென்னையின் வாசிப்பின் பெருமுகத்தை மறுபடியும் தரிசிக்க என்ற எண்ணம் ஒரு ஏக்கப் பெருமூச்சைத் தரவும் செய்தது ! நடையைக் கட்டும் வேளையில் அன்றைய நாளின் நினைவுகள் மனதில் நிழலாடிக் கொண்டேயிருக்க, ஒற்றை விஷயம் சகலத்துக்கும் மேலோங்கி நிற்பது போல் பட்டது ! தெரிந்தவர்களோ ; முதன்முறையாக இன்றைக்குத் தான் பார்ப்பவர்களோ - அந்த வேறுபாடுகள் துளியுமின்றி என்னிடம் பேச முனைந்த ஒவ்வொரு வாசகருமே அன்போடு - "பையன் கல்யாணம்லாம் நல்ல நடந்துச்சா சார் ?"  என்று வினவியது உள்ளுக்குள் உருக்கிய நிகழ்வுகள் ! எங்கோ ஒரு தூரத்து சிறுநகரில் இந்த பொம்மைப் புத்தகப் பணியில் சுற்றி வரும் எங்களை அவரவர் குடும்பத்தில் ஒரு சிறு அங்கமாக்கிப் பார்க்கும் அந்த அன்புகளுக்கு   நான் எவ்விதம் நன்றி சொல்வதென்று சத்தியமாய்த் தெரியவில்லை, !!  இதற்காகவேணும் ஆற்றலும், ஆயுளும் கோருகிறேன் ஆண்டவனிடம் !! 

மீண்டும் சந்திப்போம் all !! Have a beautiful & blessed Sunday !! 
SUNDAY @ CHENNAI !!


AND A LAST DAY VISITOR !!

P.S :  Following is a Tweet from Ms.Kasthuri's Page :

My FAVORITE - முத்து காமிக்ஸ் . இரும்புக்கை மாயாவியையும் லக்கி லூக்கையும் மீண்டும் கிடைக்கபெற்றதில் ரொம்ம்ம்ப மகிழ்ச்சி !
லயன் காமிக்ஸ் / முத்து காமிக்ஸ் Classic English comics as well- Lucky luke ! Iznogoud ! Modesty Blaise!

206 comments:

 1. //"30 நாட்களில் பெண்களின் வாசிப்பு ரசனைகளைத் தெரிந்து கொள்வது எப்படி ?" என்று எங்கேனும் புக் பார்த்தல் - one copy for me ப்ளீஸ் ! // அந்த மிருகம் நம்மை நோக்கித்தான் வருது... ஓடுங்க...

  ReplyDelete
 2. I am 5 th வணக்கம் நண்பர்களே.
  வணக்கம் ஆசிரியர் அவர்களே

  ReplyDelete
 3. அட்டகாசம் சார். 2 வருடங்களாக வெளி நாட்டில் இருப்பதால் புத்தக கண் காட்சியை மிஸ் செய்கிறேன். உங்கள் மற்றும் நண்பர்களின் பதிவுகள் அங்கிருந்த உணர்வை தந்தன. விற்பனையில் உச்சம் தொட வாழ்த்துக்கள். அங்கு கலக்கிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. முடிந்தால் ஈரோட்டுக்கு வாருங்கள்.

   Delete
 4. சென்னை புத்தக கண்காட்சியில் நம் புத்தக விற்பனை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஜெய் டெக்ஸ் வில்லர் !தொடரட்டும் நம் புத்தகங்களின் விற்பனை மழை,

  ReplyDelete
 5. CBF விற்பனையில் சிறக்க வாழ்த்துக்கள் விஜயன் சார்.

  ReplyDelete
 6. பெண்களை அதிகம் கவர்நத கதைகள் டெக்ஸாகத்தான் இருக்கும். கடல்யாழ், ரமா கார்த்திகை போன்ற வாசகர்கள்கிட்ட கேட்ட இதுக்கான பதில் கிடைச்சுடும்.

  ReplyDelete
 7. காலை வணக்கம் சார் & நண்பர்களே _/|\_
  .

  ReplyDelete
 8. // So இன்று முதல் CID லாரென்சர் ; டேவிடர் ; ஜானி நீரர் ; மாயாவியார் ; இஸுபைடர் சார் என்று மரியாதையோடு இவர்களை விளிக்கப் பழகிக் கொள்வதாகவுள்ளேன் ! //

  ஹா ஹா ஹா

  அப்படியே ஆகட்டுங்க சார் _/|\_
  .

  ReplyDelete
 9. // இதுவரையிலான புத்தக விழாக்களின் புள்ளி விபரங்களை மேலோட்டமாய்ப் பார்த்தாலே டெக்ஸ் & கோ.வின் வீச்சு எத்தகையது என்பது புரியும் ! ஆனால் இம்முறையோ விற்பனையில் ஒரு பாதி டெக்ஸாஸ் பிரஜைகளின் உபயம் //

  சார் அப்படீன்னா (இதற்கு பிறகும் தாமதிக்காதீங்க யோசிக்காதீங்க )

  டெக்ஸ் 70 ம் ஆண்டுவிழா சிறப்பிதழ்

  700 பக்கத்துக்கு குறையாமல் கொடுக்க போறீங்கன்னு சொல்லுங்க

  இப்பவே ஈரோடு புத்தக திருவிழா வந்திடக்கூடாதான்னு ஒரு ஏக்கம்

  இறைவா . . . . . . . . _/|\_
  .

  ReplyDelete
  Replies
  1. நண்பரே, 1000 வாலா பட்டாசு மாதிரி.
   1000 பக்கங்கள் டெக்ஸ் Special வர வேண்டிய special year இந்த 70வது வருடம்.

   Delete
 10. // சனிக்கிழமை புலர்ந்த போதே நமது ஸ்டாலில் கணேஷ் kv சாரும் ; மாயாவிகாரு + இத்தாலிகாருவும் ஆஜராகியிருந்தனர் - விற்பனைகளுக்குள் லயித்தபடிக்கே ! இன்று கணேஷ் சாருக்கு DAY 4 - நமது ஸ்டாலில் & ஒவ்வொரு நாளும் மனுஷன் விற்பனைக்கு எடுக்கும் மெனக்கெடல்களை பார்த்தாலொழிய முழுமையாய்ப் புரிந்திட இயலாது ! இருநூறு ரூபாய்க்கு கொள்முதல் செய்ய நினைத்து வருபவர்களை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கச் செய்யும் அசாத்தியக் கலையைக் கரைத்துக் குடித்துள்ளதால் //

  வாவ் சூப்பரு சார்

  நண்பர்களின் பங்களிப்பு அசாத்தியமானது
  அதுவும் கணேஷ் சார் கடந்த வாரம் தனியாக கலக்கியது சான்சே இல்ல சார்

  நண்பர்களை வாழ்த்துமளவிற்கு வயது பற்றாத காரணத்தால் வணங்குகிறேன் _/|\_
  .

  ReplyDelete
 11. அனைவருக்கு அதிகாலை வணக்கம்.

  ReplyDelete
 12. / சனிக்கிழமை புலர்ந்த போதே நமது ஸ்டாலில் கணேஷ் kv சாரும் ; மாயாவிகாரு + இத்தாலிகாருவும் ஆஜராகியிருந்தனர் - விற்பனைகளுக்குள் லயித்தபடிக்கே ! இன்று கணேஷ் சாருக்கு DAY 4 - நமது ஸ்டாலில் & ஒவ்வொரு நாளும் மனுஷன் விற்பனைக்கு எடுக்கும் மெனக்கெடல்களை பார்த்தாலொழிய முழுமையாய்ப் புரிந்திட இயலாது ! இருநூறு ரூபாய்க்கு கொள்முதல் செய்ய நினைத்து வருபவர்களை ஆயிரம் ரூபாய்க்கு வாங்கச் செய்யும் அசாத்தியக் கலையைக் கரைத்துக் குடித்துள்ளதால் //

  சூப்பர். நமது அலுவலக நண்பர்களுக்கு கணேஷை வைத்து ஒரு training கொடுத்து விடலாம்.

  நன்றி சிவா & விஜய்.

  ReplyDelete
  Replies
  1. நமது கணேஷ் தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் கிடைக்கும் அனுபவத்தை நமது ஸ்டாலில் அவர் சரியாக பயன்படுத்தி உள்ளார்.

   அவர் ஒவ்வொரு நாளும் விற்பனையில் ஒரு target goal உடன் களம் இறங்கி சாதித்துக்காட்டி உள்ளார்.

   மீண்டும் ஒரு முறை எனது நன்றிகளும் பாராட்டுகளும்.

   Delete
 13. // So இன்று முதல் CID லாரென்சர் ; டேவிடர் ; ஜானி நீரர் ; மாயாவியார் ; இஸுபைடர் சார் என்று மரியாதையோடு இவர்களை விளிக்கப் பழகிக் கொள்வதாகவுள்ளேன் ! //

  அது மரியாதை.

  அதே போல் "இன்றைய காதில் பூ சுற்றல் நாளைய விஞ்ஞானம்" . இது நமது ஆர்ச்சி அண்ணாவுக்கும் பொருந்தும்.

  ReplyDelete
 14. இனிய காலை வணக்கம் நண்பர்களே!!@!!

  ReplyDelete
  Replies
  1. மார்கழி – தை வெளியீடு (ஜனவரி):

   க)நிஜங்களின் நிசப்தம்

   அட்டைப்படம்:

   அருமை

   சித்திரங்கள்:

   அருமை

   கதை:

   அழகாக சொல்லப்பட்டு உள்ளது

   விமர்சனம்:

   போரினால் மனிதர்களின் குணங்கள் மாறுவதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஒரு மனிதனின் வாக்குமூலமாக எனக்கு தெரிகிறது. படிக்கும் போது இலங்கை தமிழர்கள் நினைவுக்கு வந்தார்கள். அவர்களின் அனுபவம் நாவல்களாக பல வந்து உள்ளன.அவைகளை இதே மாதிரி கிராபிக் நாவலாக மாற்றினால்…நிறைய பேர் படிக்க முடியும். நாவலை விட சித்திரங்கள் அதிகம் உணர்வுகளை சிந்தையில் எழுப்ப முடியும்


   உ)கடவுளரின் தேசம்

   அட்டைப்படம்:

   அருமை

   சித்திரங்கள்:

   அருமை

   கதை:

   கதை சொன்ன விதம்…நிஜமாகவே அசத்தல்!!!

   விமர்சனம்:

   தோர்கல்…இந்த முறை நிஜமாக கதையுடன் ஒன்ற முடிந்தது. கதை இப்போது தான் வேகம் பிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. இனி மேல் நான்கு பாகங்களாக போடுவது தான் தோர்கல் கதையை விறுவிறுப்பு குறையாமல் வைத்து இருக்கும் என்று தோன்றுகிறது.

   ங)டெக்ஸ் வில்லர்

   அட்டைப்படம்:

   சுமார்

   சித்திரங்கள்:

   அருமை

   கதை:

   வழக்கமான கதை…வழக்கமான அதிரடி!!!

   விமர்சனம்:

   டெக்ஸ் கதைக்கு விமர்சனமா…தல வந்தாலே போதும்…வார்த்தைகள் எதற்கு?!!!!

   ச)சேற்றுக்குள் சடுகுடு

   அட்டைப்படம்:

   அருமை

   சித்திரங்கள்:

   அருமை

   கதை:

   தெரிந்த கதை…சொன்ன விதத்தில் கூட புதுமை இல்லை.

   விமர்சனம்:

   ஒரு பெண்ணால் நிகழம் நிகழ்ச்சிகளை சொன்ன விதம் அரத பழசு….இப்படியே போனால்…இதுக்கு லீவு(தற்காலிகமா….நிரந்தரமாக….ஆசிரியர் கையில்) கொடுப்பதை தவிர வேறு வழியில்லை.


   ரு) ஸ்பைடர்

   அட்டைப்படம்:

   அருமை

   சித்திரங்கள்:

   அருமை

   கதை:

   காதில் பூ சுற்றும் கதை தான்.

   விமர்சனம்:

   ஒரு விஞ்ஞானியின் சவால்களை சமாளித்து வெல்லும் கதை…இரண்டு மூன்று முறை ஓய்வு எடுத்து கொண்டு…படித்து முடித்தேன்.

   Delete
  2. // நான்கு பாகங்களாக போடுவது தான் தோர்கல் கதையை விறுவிறுப்பு குறையாமல் வைத்து இருக்கும் என்று தோன்றுகிறது //

   +1

   Delete
  3. ///இனி மேல் நான்கு பாகங்களாக போடுவது தான் தோர்கல் கதையை விறுவிறுப்பு குறையாமல் வைத்து இருக்கும் என்று தோன்றுகிறது.///

   +11111111

   Delete
 15. அருமையான பதிவு..

  ReplyDelete
 16. விஜயன் சார், அந்த மைக் உடன் உள்ள பேட்டி எந்த ஊடகத்திற்கு உரியது?

  ReplyDelete
  Replies
  1. பொதிகை தொலைக்காட்சி நண்பரே.

   Delete
  2. இதற்கு தான் நம்ப அறிவு தேவை. நன்றி அரசு.

   Delete
 17. விஜயன் சார்,

  // "வீட்டில் யார் படிக்க என்று சொல்லுங்க சார் ; எந்த சந்தா combination சுகப்படுமென்று சொல்கிறேன் !" //

  இவைகளை சமாளிக்க இனி வரும் புத்தகத் திருவிழாவில் காமிக்ஸ் நண்பர்கள் மற்றும் நமது அலுவலக நண்பர்கள் உபயோகப் படுத்தும் வகையில் "லயன் முத்து காமிக்ஸ்" முதல் வரிசையில்
  "May I help you" இரண்டாம் வரிசையில் வரும் படி , சில பல badge தயார் செய்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 18. /முத்து காமிக்ஸ் லயன் காமிக்ஸ் தான் எனது ஓவிய வாழ்க்கைக்கே அஸ்திவாரம் என்று காதில் சொல்லிச் சென்ற பிரபல தினசரியின் கார்ட்டூனிஸ்ட் /

  சார் பால்யத்தின் காமிக்ஸ் வாசிப்புதான் நிறைய பேரை கலை ஆர்வம் மிக்கவர்களாக மாற்றியிருக்கிறது..

  காமிக்ஸ் படங்களை வரைந்து பார்த்து சந்தோசப்பட்ட பால்ய நாட்கள்தான் வரையும் ஆர்வத்தை மனதில் பதித்தது என்பது நூறு சதவீத நிஜம்..
  அப்படி ஓவியம் கற்ற பலரில் நானும் ஒருவன்..
  இன்னும் கூட அந்த பழக்கம் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

  வாசிப்பு தான் கற்பனையை காட்டியது.கற்பனை தான் கவிதை ஓவியம் என கலைகளை காட்டியது.

  பால்யத்தில் வாசிப்பை நேசித்தவர்கள் நிதானம் நிறைந்த,பக்குவப்பட்ட மனிதனாய் சமூகத்தை,சக மனுசனை நேசிப்பவனாய் தான் வாழ்கிறார்கள்..

  வாசிக்க நேசிக்க கற்று கொடுத்த காமிக்ஸ்க்கு நன்றிகள்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அனுபவம் சூப்பர்.

   Delete
  2. வாசிப்பு தான் கற்பனையை காட்டியது.கற்பனை தான் கவிதை ஓவியம் என கலைகளை காட்டியது.

   பால்யத்தில் வாசிப்பை நேசித்தவர்கள் நிதானம் நிறைந்த,பக்குவப்பட்ட மனிதனாய் சமூகத்தை,சக மனுசனை நேசிப்பவனாய் தான் வாழ்கிறார்கள்..
   100% உண்மை என்வரையில்

   Delete
  3. ,நான் தேடிய சில கேள்விகளுக்கு விடைகள்....நன்றி....சூப்பர் நண்பரே....படிிக்க வைப்போம்👌

   Delete
  4. இப்படியொரு அழகான கமெண்ட்டை எப்படி கவனிக்காமல் விட்டேன்!!

   செம்ம!! :)

   Delete
 19. விற்பனையில் நண்பர்களின் பங்களிப்பு பாராட்டுக்குறியது,மகிழ்ச்சி.

  ReplyDelete
 20. பாராட்டுகள் நண்பர்களே ..!!

  👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐

  ReplyDelete
 21. விஜயன் சார், இந்த புத்தகத் திருவிழா நமக்கு நாம் இந்த வருடம் ஒடத் தேவையான எரிபொருளை கொடுத்துள்ளதா?

  ReplyDelete
 22. மிக மிக மகிழ்வான பதிவு.மிக்க மகிழ்ச்சி சார்.


  முதலில் கணேஷ் சார் அவர்களுக்கு மிக பெரிய பூங்கொத்து பாராட்டுகள் .வாழ்த்துகளுடன் காமிக்ஸ் நண்பர்கள் சார்பாக நன்றிகளும் உரித்தாகுக கணேஷ் சார்.

  அலைபேசியில் பேசும் பொழுதெல்லாம் இந்த முறை கண்டிப்பாக புத்தக விழாவில் எனது பங்களிப்பு இருக்கும் என கூறி வந்தார் .சொன்னதை செயல்படுத்தி காட்டிவிட்டார்.அதே போல் சென்னை அழைப்பிற்கும் பலமுறை அன்புடன் அழைத்தும் நான் உட்பட சில நண்பர்கள் வர முடியா சூழல் .அதற்காக அவரிடமும் ..ஆசிரியரிடமும் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் .அடுத்த முறை கண்டிப்பாக கலந்து கலக்குவோம் சார்...

  ReplyDelete
 23. லேட்டாக சென்றாலும் லேட்டஸ்ட்டாக சென்று கலக்கி கொண்டு இருக்கும் மாயாஜீ அவர்களையும் ...செயலர் அவர்களையும் வாழ்த்துகிறேன்.


  நேற்று போல் இன்று (ம்) கலக்குங்கள் தோழர்களுடன்.  பிறகு செயலர் அவர்களே...

  அடுத்த முறையாவது சி்.சி. வயதில் வரும் வாய்ப்பு உண்டா.?மறவாமல் நான் சொன்னது போல ஆசி்ரியரை பிராண்டி நீங்கள் அவர் கையில் வரி போட்டால் தான் அவர் சிறு வயதை மறக்க மாட்டார் என்ற திட்டம் என்னவாயிற்று என்பதையும் மறவாமல் தெரிவிக்கவும்...

  ReplyDelete
  Replies
  1. "பூனைவரிகள் இன்றி சிங்கத்தின் வரிகள் அமையாது "

   என்ற பழமொழியை மறந்துவிடவில்லைதானே...:-)

   Delete
  2. // "பூனைவரிகள் இன்றி சிங்கத்தின் வரிகள் அமையாது " //
   ஹா ஹா

   Delete
  3. ///ஆசி்ரியரை பிராண்டி நீங்கள் அவர் கையில் வரி போட்டால் ///

   கை?!!

   வொய் கை?!! :P

   Delete
  4. //கை?!!

   வொய் கை?!! :P//

   :-)))))

   Delete
 24. அடுத்த வருடம் மகிளி்ர ஓதுக்கீடு 33% போய்விடும் போலுள்ளதே...பரவாயில்லை....அவர்கள் டெக்ஸ் கூட்டணியில் இருக்கும் பொழுது 50% கூட தாராளமாக ஒதுக்கலாம்...:-)

  ReplyDelete
 25. ஒரு வழியாக நண்பர் பாலாஜி சுந்தர் அவர்களை நிழல் உலகில் இருந்து நிஜ உலகிற்கு காட்டியது மகிழ்ச்சி..

  ReplyDelete
  Replies
  1. அப்படியே உங்கள் படமும் இந்த பதிவில் இருந்தால் காண்பிக்கவும்.

   முடிந்தால் பாலாஜி சுந்தரையும்.

   Delete
 26. அட்டகாசமான... கவி...சார்....

  ReplyDelete
 27. ////வயது வேறுபாடுகளின்றி ஆண்களும், பெண்களும் ஒவ்வொரு ஸ்டாலிலும் அலைமோதுவதையும் பார்க்கும் போது வாசிப்புக்கு தொய்விருக்கலாம் ; ஆனால் அஸ்தமனம் நிச்சயம் இராது என்பதை மாடி மேலேறி நின்று உரக்கக் கூவணும் போல் தோன்றுகிறது !! ///

  சூப்பர் சார்!

  ////So இன்று முதல் CID லாரென்சர் ; டேவிடர் ; ஜானி நீரர் ; மாயாவியார் ; இஸுபைடர் சார் என்று மரியாதையோடு இவர்களை விளிக்கப் பழகிக் கொள்வதாகவுள்ளேன் ! ////

  இந்த 'சார்வாள்' லிஸ்டில் ஸ்டெல்லா மேடம்வாளை விட்டதற்காக அனைவரது சார்பாக எனது கண்டணங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்!


  ///எங்கோ ஒரு தூரத்து சிறுநகரில் இந்த பொம்மைப் புத்தகப் பணியில் சுற்றி வரும் எங்களை அவரவர் குடும்பத்தில் ஒரு சிறு அங்கமாக்கிப் பார்க்கும் அந்த அன்புகளுக்கு நான் எவ்விதம் நன்றி சொல்வதென்று சத்தியமாய்த் தெரியவில்லை, !! இதற்காகவேணும் ஆற்றலும், ஆயுளும் கோருகிறேன் ஆண்டவனிடம் !! ///

  _/\_ _/\_

  ReplyDelete
  Replies
  1. 🙏... விஜய் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் நம்ம சொந்த ஊர் லியா இருப்பது என்பது யாவாலு சந்தோசம் & மகிழ்ச்சி என்பது எங்களை போண்றோர் வெளிநாட்டில் இருக்கும் போதும் தான் உணர்கிறோம்...

   என்னால் மாதம் மாதம் வரும் காமிக்ஸ் புக்கை வாங்க முடிந்தும் படிக்க முடிய வில்லயே என்ற குறை என் மனதில்...

   நமது காமிக்ஸ் நண்பர்கள் வாரம் தோறும் எழுதும் காமிக்ஸ் விமர்சனம் தான் எங்களுக்கு சிறு ஆறுதலை தருகிறது...

   Delete
  2. இந்த முறை ஈரோடு வர முயற்சி செய்யுங்கள் கலாநிதி.

   Delete
  3. நிச்சயமாக வர முயற்ச்சி செய்கிறான் பரணி .. 🙏👍

   Delete
  4. @ Kalanithi from Erode

   PfB +1

   இந்த முறை ஈரோட்டுத் திருவிழாவுக்கு வந்து உங்கள் மனக்குறைக்கு மருந்தளியுங்கள் நண்பரே!

   சாதா விஜயாக இருந்த நான், ஸ்பெஷல் சாதா 'ஈரோடு' விஜய் ஆக இத்தளத்தில் அவதரித்த பின்புதான் பல அன்பு நண்பர்களின் நீங்கா நேசம் கிடைக்கப் பெற்றிருக்கிறேன்!

   என்ன தவம் செய்தனை!!

   _/\_ _/\_

   Delete
  5. நீங்கள் எப்போதும் ஸ்பெஷல் விஜய் தான் எங்களுக்கு... உங்கள் காமிக்ஸ் பணி தொடர என் வாழ்த்துக்கள் 👏...

   இந்த முறை EBF வந்து நமது எடிட்டர் சார் & நண்பர்கள் அனைவரும் காண ஆவல் ...

   Delete
  6. வணக்கம் நண்பரே!

   Kalanithi from Erode

   அப்ப நீங்க ஈரோடில் இல்லையா?

   காமிக்ஸ் ஆா்வலா்கள் அனைவருமே கொடுத்து வைத்தவா்கள் தான்!

   Delete
  7. இல்ல... நான் இப்ப துபாய் ல இருக்கேன்.. வணக்கம் மிதுன் 🙏...

   Delete
  8. ///இல்ல... நான் இப்ப துபாய் ல இருக்கேன்.. வணக்கம் ///

   துபாய் கூட, ஈரோடு பக்கம்னு வடிவேல் சொன்ன மாரி ஞாபகம்.😃😃😃😃

   Delete
  9. ஆஹா உங்ககிட்ட Passport & UAE 🇦🇪 Visa காட்டுன தான் நம்புவீங்க போல .... படத்துல சொல்லற மாதிரி நான் விவகாந்தர் சாலை இல் இல்ல...

   😎

   Delete
  10. @ மிதுன்

   ////அப்ப நீங்க ஈரோடில் இல்லையா?

   காமிக்ஸ் ஆா்வலா்கள் அனைவருமே கொடுத்து வைத்தவா்கள் தான்!////

   நல்லவேளையா இரண்டு வரிகளையும் பிரிச்சுப் போட்டீங்க! :D :P

   Delete
 28. வணக்கம் அனைவருக்கும் 🙏.. கணேஷ் சார் , விஜய் & சிவா உங்களின் பங்களிப்புக்கு வாழ்த்துக்கள் 👏👏👏.
  நிச்சயம் EBF க்கு வர முயற்ச்சி செய்கிறான்....

  ReplyDelete
 29. மேலே ஃபோட்டோக்களின் அணிவகுப்பில் முதலாவது இடத்தைப் பிடித்திருப்பது - 'விற்பனைப் புயல்' கே.வி.கணேஷுக்கு எடிட்டரால் அன்புப் பரிசு வழங்கியபோது எடுக்கப்பட்டது!

  மேலே சுற்றியிருந்த ராப்பர்களை சுக்குநூறாக கிழித்தான பின்னே உள்ளேயிருந்த அந்தப் பரிசுப் பொருள் - ஸ்தம்பிக்க வைத்தது!!

  அதுவொரு நன்றி சொல்லும் ஷீல்டு!
  * கே.வி.கணேஷின் புகைப்படம் அதில் அச்சிடப்பட்டு
  * ஒரு கைக்கடிகாரம் போன்ற வாட்ச் பதிக்கப்பட்டு
  * லயன் & முத்து லோகோக்களுடன்
  * 'THANK YOU' என்று செதுக்கப்பட்ட வார்தைகளால் அலங்கரிக்கப்பட்டு
  * எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக உள்ளன்போது எழுதப்பட்டிருந்த கீழ்கண்ட வாசகங்களைத் தாங்கி...

  குன்றா அன்பையும்...
  குறையா உழைப்பையும்...
  மாறாப் புன்னகையையும்...
  மாசற்ற காமிக்ஸ் காதலையும்...
  நாளும் காட்டிவரும் நல்இதயத்திற்கு
  எங்களது நன்றிகளின் அடையாளமிது!

  #லயன் காமிக்ஸ் #முத்து காமிக்ஸ்  கே.வி. கணேஷின் உழைப்புக்கும், காமிக்ஸ் நேசத்திற்கும் மிக மிக உரிய முறையில் எடிட்டரால் பெருமைப்படுத்தப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்சியளிக்கிறது!!

  அருமை அருமை அருமை!

  'விற்பனை புயலுக்கு' நம் மனமார்ந்த வாழ்த்துகளையும், உரியமுறையில் சிறப்பாக கெளரவித்த எடிட்டர் சமூகத்திற்கு நம் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! _/\_ _/\_

  அந்த நினைவுப் பரிசைக் காண "இங்கே க்ளிக்குங்க பாஸூ"  ReplyDelete
  Replies
  1. சிறப்பான முறையில் கௌரவப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

   Delete
 30. காலை வணக்கத்துடன்
  ஆசிரியரின் மனமார்ந்த அன்புக்கும்
  நல்லிதயங்கொண்ட நண்பர்கள்
  ஆதரவுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. பம்பரமாக சுழன்று இன்றைக்கு பட்டிதொட்டி எங்கும் புகழ்பெற்று விட்டார் கணேஷ் சார்.

   அது வந்து ... ம்... உங்களுக்கு வேற ஏதாச்சும் பேரு இருக்கோ?

   Delete
 31. Sir, sandha books not received for december and january. Called ur office last sunday also. Kindly check and revert.

  ReplyDelete
 32. சிறப்பாக சேவை செய்த கணேஷ் சார் அவர்களுக்கு ஆசிரியர் அழகான பரிசு அளித்து கெளரவபடுத்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள் சார் ..


  ********


  இம்மாத புதிய தலைமுறை இதழில் நமது ஆசிரியர் மற்றும் நமது இதழ் பற்றி அழகான,விரிவான கட்டுரையை படிக்க தவறாதீர்கள் நண்பர்களே..

  *****

  ReplyDelete
  Replies
  1. அதன் லிங் இங்கு கொடுக்க முடியுமா பரணி.

   Delete
  2. தலீவரே அந்த புத்தக அட்டை மற்றும்
   நம் காமிக்ஸ் சம்பந்தபட்ட பக்கங்களை
   வாட்ஸ்அப்பில் எனக்கு அனுப்புமாறு
   கேட்டுக்கொள்கிறேன்.

   Delete
 33. நேற்று புத்தகக் காட்சியில் நமது ஸ்டாலில் மிகக் குறைந்த நேரமே செலவிட முடிந்தது. நாட்கணக்கில் செலவிட்ட நண்பர்களின் அர்ப்பணிப்பு மகத்தானது. நேற்றைய நிகழ்வில் ஆசிரிருடன், இராதகிருஷ்ணன் அண்ணாச்சி, ஈரோடு விஜய், மாயாவி ஆகியோரை சந்தித்ததில் மகிழ்ச்சி!

  ReplyDelete
 34. ஒரு கணவாய் யுத்தம் ..........
  பொங்கல் போது கிடைத்த அவகாசத்தில் படிக்க விட்டு போன இதழ்களை எல்லாம் படிக்க துவங்கியபோது கணவாய் யுத்தம் எப்போதோ படித்த நினைவு கீற்றுகளை மேலே எழுப்பியது .
  வலையை ஆராய்ந்தபோது க.யுத்தம் 60% உண்மை சம்பவங்கள் + 40% கற்பனையை உள்ளடக்கியது என்பது புரிய வந்தது..


  https://en.wikipedia.org/wiki/Railroad_Wars

  https://en.wikipedia.org/wiki/Royal_Gorge_Route_Railroad  மேற்கண்ட இணைப்புகளில் இக்கதை பற்றிய அனைத்து தகவல்களும் உள்ளன. ஆர்வமுள்ளோர் படிக்கலாம் .
  ராயல் கார்ஜ் தொங்கு பாலம் சுற்றுலா பயணிகளை கவரும் அம்சமாக இன்றும் உள்ளதை இரண்டாவது லிங்க் மூலம் அறியலாம் ..
  நேரம் இருந்து இருப்பின் கதையோடு தொடர்புடைய முக்கிய தகவல்களை தமிழாக்கம் செய்து தந்து இருப்பேன்...ஆனால் ......

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஆராய்ச்சி தொடரட்டும் :-)
   அரிய தகவல்கள்.

   Delete
  2. லக்கியின் "பூம் பூம் படலம்" ஞாபகம் வருலீங்களா சாா்!?

   Delete
  3. @ பரணி !! நலமா ?

   @ மிதுன் ! பெரும்பாலான வரலாற்று சம்பவங்கள் கேப்டன் டைகர் ,லக்கி லூக் மற்றும் டெக்ஸ் கதைகளில் அவரவர்க்கே உரித்தான பாணியில் வெளியிடப்பட்டு வருகின்றன என்பது ஏற்கனெவே இங்கு பலமுறை பலரால் பதிவிடப்பட்டது என்பதால் பூம் பூம் படலம் பற்றி குறிப்பிடவில்லை ....அதாவது ஒரே சம்பவம் மூன்று பாணிகளில் ..

   டைகருக்கும் ரயில் தடம் அமைக்கும் பணியில் போட்டி கம்பனிகளுக்கும் தொடர்புடைய கதை தொடர் உலக பிரசித்தமானது என்பது நீங்களும் அறிவீர்கள்தானே ???

   Delete
  4. @ செனா அனா

   டெங்கு ஆராய்ச்சியெல்லாம் முடிச்சிக்கிட்டு ஒருவழியா நீங்க இங்ஙனக்குள்ள எட்டிப் பார்த்தது மகிழ்ச்சியளிக்கிறது செனாஅனா அவர்களே!

   ///நேரம் இருந்து இருப்பின் கதையோடு தொடர்புடைய முக்கிய தகவல்களை தமிழாக்கம் செய்து தந்து இருப்பேன்...ஆனால் ...... ///

   ஹூம்... உங்க வரலாற்று கட்டுரைகளைப் படிச்சு பலப்பல வருடங்கள் உருண்டோடிட்டமாதிரி இருக்கு!

   பேசாம நீங்க VRS வாங்கிடுங்களேன்? ஒரே நேரத்துல எங்களை சந்தோசப்படுத்தின மாதிரியும் இருக்கும்... நாட்டு மக்களுக்கும் நல்லது நடந்தாப்ல இருக்கும்! ன்னான்றீங்க? :D :P

   Delete
 35. எடிட்டர் தான் தூக்கமே வராம பாயை பெராண்டுற பார்ட்டின்னு சொன்னதா ஞாபகம்.
  ஆனாக்க இங்க reply போட நான் முதல் நீ முதலாவதான்னு நெறைய பேர் தூங்காம செல்போன பெராண்டிட்டு இருக்கவும் ஏற்பாடு பண்றார் .
  வாரா வாரம் இதான் நடக்கது.
  நடக்கட்டும் ... நடக்கட்டும்

  ReplyDelete
  Replies
  1. கணேஷ் ஐயா
   உங்களுக்கு வணக்கம்.
   ஊக்கம் தரும் உங்கள் ஆக்கம் பிரமிப்பு.

   Delete
  2. செந்தில் சத்யா மிஸ்ஸிங்

   Delete
  3. கௌபாய் தொப்பிகாரும்
   உயரமான நண்பரும் தெரிகிறார்கள்
   (பெயர் தெரியலை சாமி)

   Delete
  4. வேறு சென்னை காமிக்ஸ் நண்பர்கள்
   யாரும் தெரியவில்லை

   Delete
  5. °°°°°2016 & 2017-ல் வந்த புக்குகள் ஒட்டு மொத்தமாய் வேண்டும் என்று குடும்பத்தோடு வருகை தந்திருந்த நண்பர் கோர, பத்தே நிமிடங்களில் குவித்து விட்டார்கள் நமது sales மும்மூர்த்திகள் !! °°°°

   அர்பணிப்பு மட்டுமல்ல , என்னென்ன படிச்சோம்னு தெரிஞ்சிருந்தா மட்டும் போதாது. ஞாபகமா எடுத்து குடுக்கணும்ல....
   கண்ணீர் கசிகிறது நண்பர்களே
   உங்களை பெருமையாக நினைக்கிறேன்.

   அதுமட்டுமல்ல 2 வருஷ காமிக்ஸ்களையும் மொத்தமாக வாங்க வந்த நல் உள்ளத்தையும் மறக்க முடியலை.

   Delete
  6. ஜனா சார் நான் காணும் பொங்கலன்று ஸ்டாலில் இருந்தேன்

   Delete
 36. வணக்கம்!
  நான் மிகவும் miss பண்ணிய book fair. சரியான நேரத்தில் book fair detail கிடைக்காததாலும் சிலபல வேலைப்பழுவாலும் இயலாது போயிற்று. ஆனாலும் ஏறத்தாழ தினமும் கணேஷ் அண்ணனுடன் தொலைபேசி அழைப்பெடுத்து விற்பனை பற்றியும் XIII இன் bookings பற்றியும் live ஆக தெரிந்து கொண்டேன். ஏறத்தாழ 15 bookingsஐ அண்ணா ஏற்படுத்தியிருந்தார்.
  இதுபற்றி தெரியாதிருந்த பலரை on-line bookings செய்யும்படி பணித்திருந்தார். இரவு book fair முடிந்ததும் நடைபெற்ற சுவாரசியமான விடயங்களை தெரியப்படுத்துவார்.
  அற்புதமான மனிதர்!

  ReplyDelete
 37. @ all : Latest photos added to post....!!

  :-) :-)

  ReplyDelete
  Replies
  1. அந்தியில வானம்
   தந்தனத்தோம் போடும்
   அலையோட சிந்து படிக்கும்.....
   Sorry கஸ்தூரி படிக்கும்....

   Delete
  2. அதான் எடிட்டருக்கு ரெண்டு கன்னத்திலயும் curve விழுகுதோ...

   Delete
  3. Very nice to see her as a comics fan....

   Delete
  4. கௌபாய் தொப்பி நண்பர் கஸ்தூரியம்மா கூட selfie எடுத்து வைச்சுகிட்டாரோ
   படத்த ரிலீஸ் பண்ணுங்க பிரதர்.

   Delete
  5. j : நமக்கு விழுறதுக்குப் பெயர் "டொக்கு" சார் ; குழியல்ல !!

   Delete
  6. பிரபலங்கள் நமது காமிக்ஸ் வாசகர்கள் என்று தெரியவருபோது மகிழ்ச்சியாக இருக்கிறது ..!

   Delete
  7. ஹா...ஹா...
   anyhow டொக்கு also a representation of ஜொள்ளு சார்....
   ஹிஹிஹி
   (நானும் ஜொள்ளுபார்ட்டிதான்னு -ஜொள்ளி - ஒத்துக்கிறேன் சார்).

   Delete
  8. //பிரபலங்கள் நமது காமிக்ஸ் வாசகர்கள் என்று தெரியவருபோது மகிழ்ச்சியாக இருக்கிறது ..!//
   +1

   Delete
 38. நான் போன வருடம், கோடிசியாவில் நடந்த கோவை புத்தக விழாவிற்கு வந்து இருந்தேன், ஆனால் விஜயன் சார் வரவில்லை.

  லயனின் come back அப்புறம் நான் புத்தகம் பிரசுரித்த மாதமே படித்த முதல் கதை விசித்திர சவால் தான். ஏக் தம்மில் படித்து முடித்தேன். இந்த கதை நான் படிப்பது இது தான் முதல் முறை. அட்டகாசமான

  வழக்கமான ஸ்பைடர் கதை.

  எனக்கு பிடிக்காதது அந்த பாக்கெட் சைஸ். தயவு செய்து வழக்கமாக வெளியிடும் பெரிய சைஸிலேயே வெளியிடுங்கள். இது படிக்க கஷ்டமாக இருந்தது. சித்திரங்கள் நன்றாக இருந்தும், சிறியதாக

  இருந்ததினால், ரசிக்க முடியவில்லை.

  புதியது:

  1 விசித்திர சவால் - ஸ்பைடரின் அட்டகாசமான சாகசம்
  2 கடல் குதிரையின் முத்திரை - பழைய கதை, அதே டெக்ஸ் டெம்ப்ளட். சொல்லும்படியாக ஒன்றும் இல்லை.

  பழையது:

  1 ஒரு நாணய போராட்டம் - ஸ்க்ரூஜின் டக் மற்றும் டொனால்ட் டக் பட்டாளம் ஒரு அதிர்ஷ்ட நாணயத்தை மேஜிக்கா சூன்யக்காரியிடமிருந்து காப்பாற்ற போராடும் கதை. மிகவும் ரசித்தேன். இது கூடவே, பரட்டை தலை ராஜா, குண்டன் பில்லி, விச்சு கிச்சு, ஜோக்கர் மற்றும் பல கதைகள்

  2 பயங்கர பலம் - அண்ணாத்தே லக்கி லூக்கின் கதை. ஒரு மரம் வெட்டும் ஆள் தான் உருவாக்கிய பாலத்தை காப்பாற்ற லக்கி லூக்கின் உதவியை நாடுகிறான். இது கூட அங்கிள் ஸ்க்ரூஜின் மற்றொரு கதை. இதன் கூட குழலூதும் கண்ணன் கதையும் உண்டு.

  3 காமெடி கர்னல் - நமது கர்னலின் முதல் கதை என்று நினைக்கிறேன். ஒரு கொள்ளையனை பிடிக்க மாறு வேடத்தில் கொள்ளை கூட்டத்தினுடன் கலந்து சிரிக்க வைக்கின்ற கதை.

  4 இரத்த வெறி - இது நெறய கதைகளின் கதம்பம். அங்கிள் ஸ்க்ரூஜ, லக்கி லூக், குழலூதும் கண்ணன் மற்றும் பல செய்திகள் கொண்ட கதை. இதில் ரத்தத்தை உறைய செய்யும் மனிதனை வேட்டையாடும் சிங்கங்களின் கதையும் உண்டு.

  ReplyDelete
 39. XIII பற்றி ஒரு தகவல் வேண்டும்.

  1 விரியனின் விரோதி
  2 காலனின் கை கூலி
  3 கர்னல் ஆமோஸ்

  இந்த மூன்று கதைகளும், XIII கதைகளின் தொடர்ச்சியா ? அல்லது One - off கதைகளா ?

  என்னிடம் இப்பொழுது கர்னல் ஆமோஸ் மட்டும் உள்ளது. இன்னும் படிக்கவில்லை.

  2 XIII ஆகஸ்ட் மெகா ஸ்பெசலில், இந்த கதைகள் வருமா?

  3 இந்த 3 கதைகளும் தனி தனி கதைகள் எனில், XIII படிப்பதிருக்கு முன் படிக்க வேண்டுமா? அல்லது XIII படித்ததிற்கு அப்புறம் படிப்பது நல்லதா?

  நண்பர்களே guide பண்ணவும்.

  ReplyDelete
  Replies
  1. XIII தனி தொகுப்பு
   வி வி, கா கை, க ஆ - அந்தந்த பாத்திரங்களின் flashbacks related to XIII.
   13 முதலில் மூழ்கி முத்தெடுத்தால்தான்
   மற்றது புரியும்
   படிக்கவும் முடியும்
   இல்லாட்டி தலையும் தெரியாது காலும் புரியாது.......

   Delete
  2. @ Prabhu : நீங்கள் கூறிய மூன்றும் spin off கதைகள். Spin off இல் total 13 கதைகள். அவை XIII கதாபாத்திரங்களின் background story, plus அவை mainstream story உடன் தொடர்புபடும் விதத்தை அழகாக கூறுபவை.
   XIII mainstream story 24 volumes. 25 வது 2019 Or 2020 இல் கையில் கிடைக்கலாம் ( எடிட்டர் மனது வைத்தால்). இதிலும் 13 வது volume ஒரு investigation report- புலன்விசாரணை.
   இவ்வருடம் (அதுவும் எடிட்டரின் புண்ணியத்தில்) கையில் தவழும்.
   J கூறியதுபோல் mainstream storyயை நண்பர்களிடம் வாங்கிப்படித்துவிட்டு spin off இற்குச் செல்லுங்கள்.
   XIII இன் colour edition இற்கு online booking செய்துவிடுங்கள்.
   For more interesting information- join d club.
   Contact- Palani Vel.

   Delete
  3. Thanks Madhu,

   XIII சீரிஸ் வரிசையில் என்னிடம் இங்கொன்று அங்கொன்று என்று ஒரு 6 பார்ட் தான் இருக்கிறது. நான் டைரக்டாக கலர் எடிஷன் காத்து இருந்து வாங்கி படித்த பின் spin off படித்து கொள்கிறேன்.

   எந்த கிளப் பத்தி சொல்லுகிறீர்கள் ? பழனி வேல் சாரின் போன் நம்பர் கிடைக்குமா?

   Delete
  4. நேரம் கிடைத்தால் ஒரு போன் செய்யவும் நண்பரே விளக்கமாக கூருகிறேன் just missed call enough
   9789214198
   Palanivel

   Delete
  5. Join XIIIஇரத்தப்படலம்XIII whatsappgroup

   Delete
  6. நன்றி பழனிவேல், தற்போது செல் போன் ரிப்பேர் ஆகி விட்டது. புது போன் வாங்கியவுடன் உங்களுடன் தொடர்பு கொள்ளுகிறேன்.

   Delete
  7. XIII SPINOFF 4 பாகம் வந்துள்ளது
   1.விரியனின் விரோதி
   2.காலனின் கைக்கூலி
   3.பெட்டி பர்னோஷ்கி
   4.கர்னல் ஆமோஸ்
   ஆகிய 4 இதழ்கள் வந்துள்ளது மீதி 7 உள்ளது இந்த ஸ்பின்ஆப் தொடரில்

   Delete
  8. டைரக்டாக கலர் எடிஷன் காத்து இருந்து வாங்கிப்படித்தது

   ஒரு அற்புத அனுபவம் காத்துள்ளது உங்களுக்கு

   Delete
 40. Replies
  1. @parani மேலிருந்து இரண்டாவது படத்தில் நீல கோடுபொட்ட சட்டை தான் நண்பர் பாலாஜி.

   எனது profile படத்தில் இருப்பதே நான் தான் சார்.

   Delete
  2. Thank you Krishna. I never look your profile photo in detail. All these days I was thinking that it is உன்னை போல் ஒருவன் கமல்ஹாசன் என நினைத்தேன். இன்று நீங்கள் சொன்ன பிறகுதான் அதனை கவனித்து பார்த்த போது அது கமல்ஹாசன் கிடையாது நீங்கள் என்று புரிந்து கொண்டேன்.

   Delete
  3. :) கொஞ்சம் தாடி வச்சு பாத்தா அப்படியே கமல் மாதிரியே இருந்தேன் சரினு profile அ வச்சுட்டேன் 😊

   Delete
 41. கணேஷ் @ இந்த பெண் வி.ஐ.பியை நமது சந்தாதாரர்கள் குடும்பத்தில் இணைக்க முடிந்ததா?

  இரும்புக்கை மாயாவி தவிர வேறு நாயகர்கள் புத்தகங்கள் ஏதும் வாங்கினாரா?

  ReplyDelete
  Replies
  1. @ PfB

   ஏன்... எங்களைப் பார்த்து இந்தக் கேள்விகளைக் கேட்கமாட்டீங்களாக்கும்? கிர்ர்ர்ர்...

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 42. அதாகப்பட்டது .. எடிட்டர் சொன்னது போல புத்தக கண்காட்சியில் 1. Tex 2. நால்வரணி - அதிலும் மாயாவி மாமா தான் முதலில் - ஸ்பைடர் காருவுக்கும் மவுசு அதிகம் - இன்னொரு பக்கம் லக்கி லுக் விற்கிறது. மாக்ஸிமம் சேல்ஸ் என்றால் இவைதான்.

  மற்றதெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றும் தான். அடுத்தாண்டு முதல் சந்தா A மற்றும் C யை லிமிடெட் எடிஷன் ஆக்கிவிட்டு B மற்றும் D அதிக எண்ணிக்கை கொண்டுதான் கண்காட்சியை எதிர்நோக்குதல் நலம்.

  நுழையும் போதே இரும்புக்கை மாயாவி இருக்கா என்று கேட்டு அத்தனையும் அள்ளிக்கொள்பவர் அதிகம். ஒரு பக்கம் tex அடுக்கடுக்காக அள்ளிச்செல்வோர் உண்டு. மற்ற நாயகர்கள் மிதமோ மீதம். இன்று ஓரிருமணி நேரங்கள் நண்பர்களை சந்திக்க முடிந்தது மகிழ்வு!

  ஆங் .. அப்புறம் சாந்த ஒசத்த இன்னொரு வழி : ஒரு வருட சந்தா காட்டினால் நமது புதிய கலரிங் புக் இலவசமா குடுக்கலாம் .. சூப்பர்லே ?! (ஹி ஹி .. அதாங்க நிஜங்களின் நிசப்தம் ;-) )

  ReplyDelete
 43. ///நமது சின்ன வட்டத்தில் மகளிரணிக்கு ஒரு முக்கிய பங்குள்ளது guys ; தொடரும் காலங்களில் இந்த அணியின் ரசனைகளை அறிந்திடவும், அவற்றிற்கு நியாயம் செய்திடவும் நமக்கொரு கடமை காத்துள்ளது !!///

  நான் விசாரித்தறிந்த(!) வகையில், எல்லா மகளிரும் 'சிங்கத்தின் சிறுவயதில்' எனும் தொடரை விரும்பிப் படிக்கிறார்களாம் சார்!
  அவர்களது விருப்பத்தை நிறைவேற்றும் கடமை உங்களுக்கிருப்பதை இங்கே நான் எடுத்துக்கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்!

  என்னால அவ்வளவுதான் சொல்லமுடியும்!

  ReplyDelete
 44. காலை வணக்கம் நண்பர்களே
  ஆசிரியரே.
  சனி - ஞாயிறு உள்ளிட்ட ஐந்து நாள்
  காமிக்ஸ் கடலில் நீந்தி மகிழ்ந்து நேற்று
  இரவு ஈவி மாயாஜி மற்றும் நமது
  அண்ணாச்சியிடம் இருந்து கனத்த மனதுடன் பிரியி விடைபெற்ற போது
  கண்ணில் எட்டிப்பார்த்த கண்ணீரை
  ரகசியமாக துடைக்க வேண்டியிருந்தது.
  வெளி உலகமே தெரியாத அந்த ஐந்து
  நாட்கள் கல்வெட்டுபோல் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.பசியறிந்து
  உணவளிக்கும் அன்னைபோல் வாசகர்
  தேவை அறிந்து நம் புத்தகங்களை
  எடுத்துக்கொடுத்து அவர் முகத்தில்
  தெரிந்த மகிழ்ச்சியும் கணக்கிலடங்காது.
  ஆன் லைனில் சந்தா மற்றும்
  இரத்தப்படலம் முன்பதிவுகள் அதிகரித்திருக்கும் என்றும் நம்புகிறேன்.
  பல நண்பர்களின் உறுதிமொழி இது.
  ஈரோடு விஜய் மற்றும் மாயாஜி உடண்
  களத்தில் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி.
  அடுத்த சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்க்கும் GANESH. KV

  ReplyDelete
  Replies
  1. உங்களின் பங்களிப்பிற்கு நன்றிகள் கணேஷ்.

   Delete
 45. CBF-2018 இரண்டுநாள் கொண்டாட்டங்கள் இரண்டு நிமிடங்களில் பார்க்க...இங்கே'கிளிக்'

  ReplyDelete
 46. ******* CBF - 2018 ********

  * வாங்கும் திறனில் சென்னையை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. மக்கள் குறைவாகவே பேசுகிறார்கள்; ஆனால் நிறைய வாங்குகிறார்கள்!

  * 'இதெல்லாம் வேணாம். கெட்டுப் போயிடுவே' என்று சொல்லிவந்த நிலைமை மாறி, பெற்றோர்களே தங்கள் குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை / தமிழ் படிக்கக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தவேண்டி நம் ஸ்டால் தேடி வருவது கணிசமாக அதிகரித்திருக்கிறது. சாம்பிளுக்கு, கை நிறைய காமிக்ஸுடன் இந்த மாணவியின் முகத்தில் தெரியும் சந்தோசத்தை 'இங்கே க்ளிக்'கிப் பாருங்களேன்!


  தன் மகனுக்கு கைநிறைய காமிக்ஸ் வாங்கிக் கொடுத்த தந்தை : 'இங்கே க்ளிக்'குங்களேன்!  * இன்முகத்தோடு நம் வெளியீடுகளை பார்வையிடும் மகளிர் அணியைக் காண 'இங்கே க்ளிக்'குங்களேன்!

  * கடந்தவாரத்தில் 'இன்சொல்' என்ற அழகான தமிழ்பெயர் கொண்ட மாணவன் தன் பெற்றோருடன் வந்து 'லயன்-250' வாங்கி மூன்று நாட்களில் படித்துவிட்டு டெக்ஸ் வில்லரின் ரசிகனாகிவிட்டான். இந்த வாரம் மீண்டும் தன் பெற்றோருடன் வந்திருந்து டெக்ஸ் புத்தகங்களை வாங்கிச் சென்ற மாணவன் இன்சொல்லுக்கு இன்முகத்தோடு 'தலையில்லாப் போராளி'யை தன் பரிசாக அளித்த KVGயை 'இங்கே க்ளிக்'கிப் பாருங்களேன்!

  ReplyDelete
  Replies
  1. வாவ்!!! இளம் சிறார்கள்தம் மெல்லிய கைகளில் காமிக்ஸ் இதழ்களை காணுறும்போது இன்முறுவலும் இனம் புரியா உவகையும் ஊற்றெடுக்கிறது.!!!

   Delete
  2. ///வாவ்!!! இளம் சிறார்கள்தம் மெல்லிய கைகளில் காமிக்ஸ் இதழ்களை காணுறும்போது இன்முறுவலும் இனம் புரியா உவகையும் ஊற்றெடுக்கிறது.!!!///

   நான் நெனைச்சேன் நீங்க சொல்லீட்டுங்க!!

   Delete
  3. ///வாவ்!!! இளம் சிறார்கள்தம் மெல்லிய கைகளில் காமிக்ஸ் இதழ்களை காணுறும்போது இன்முறுவலும் இனம் புரியா உவகையும் ஊற்றெடுக்கிறது.!!!///

   Athey Athey !!

   Delete
 47. புத்தகத்திருவிழா கொண்டாட்டங்கள் கொள்ளை கொள்கின்றன மனதை ..அளப்பரிய காமிக்ஸ் காதலும் தொண்டுள்ளமும் கொண்டிருந்தால் மட்டுமே கணேஷ் போன்ற நண்பர்கள் சேவை செய்திட இயலும்..வாழ்க அவர்தம் தொண்டு ..பூனையாரும் மாயாவியாரும் நிரந்தர சூப்பர் ஸ்டார்ஸ் ..அத்தோடு போராட்டக் குழுவிற்கு ஒரு கொ .ப .செ வும் கிடைத்துவிட்டார் போல் தெரிகிறது ..கஸ்தூரி யை சொல்கின்றேன் ..ஒரு ஹீரோயினும் இரண்டு ஹீரோக்களும் ..செம போஸ் ..போட்டோவைப் பெரிது படுத்தி வீட்டம்மா கண்ணில் படும்படி மாட்டி வைக்கவும் ..ஏதோ நம்மால் ஆன சமூக சேவை ..

  ReplyDelete
  Replies
  1. @ rajasimman soma

   ///ஒரு ஹீரோயினும் இரண்டு ஹீரோக்களும் ..செம போஸ் ...///

   ஆஹா! இதுக்கு உங்களுக்கு ஒரு சந்தாவையே பரிசளிக்கலாம்.

   ///போட்டோவைப் பெரிது படுத்தி வீட்டம்மா கண்ணில் படும்படி மாட்டி வைக்கவும்///

   சந்தா கேன்சல்! :P

   Delete
 48. ******* CBF - 2018 *******

  இந்தக் கால சிறுவர்களின் கையில் நம் காமிக்ஸை பார்த்திடும்போது உள்ளுக்குள் ஒரு சந்தோசமும், பெருமிதமும், ஒருவகையான நிம்மதிப் பெருமூச்சும் எழுந்திடுவது உண்மைதான்!

  இதோ! செனாஅனா, மிதுன், PfB உள்ளிட்டோரின் வேண்டுகோளுக்கிணங்க, அப்படியாப்பட்ட க்ளிக்'குகள் இன்னும் சில!


  Anu sri

  ஜெய பிரணவ் வேல்


  கெளதம் - கார்ட்டூன் பிரியர்

  ஜெயந்த் - டிடெக்டிவ் கதைப் பிரியர் (இவர் கையிலிருப்பதைப் பாருங்களேன்,.ய்யீஈஈக்!!)


  ஷ்யாம் சரண் & ஜீவன் சரண்

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. செம! போட்டோ clarity super, except the last one.

   Delete
  3. ///செம! போட்டோ clarity super, except the last one.///

   சட்டைப்பையில் மொபைலை வைத்திருந்தபோது கேமரா லென்சில் ஏதாவது ஈரம் பட்டிருக்கக்கூடும். (பி.கு : இது அந்த நடிகை நம்ம ஸ்டாலுக்கு வந்துட்டுப் போனதுக்கப்புறம் எடுத்த படம் ஹிஹி)

   Delete
 49. அருமை,அனைவருக்கும் ஜாலியான உற்சாகமான அனுபவமாக அமைந்திருக்குமென்ற நம்பிக்கையில் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 50. புத்தக விழாக்களில் நம் நண்பர்களின் பங்களிப்பு அளப்பரியது. ஆனால் கை நிறைய புத்தகங்களை வாங்குபவர்களை பார்க்கும் போது, கைக்குழந்தையை பற்றிய கவிதை போல "தூக்கி வைத்தால் கை வலிக்கிறது, இறக்கி வைத்தால் மனது வலிக்கிறது" என்கிற ரீதியில் இருக்கிறது. இதனைப் போக்க நம்ம ஊரு ஜவுளி கடல்களின் பாணியில், ஆயிரத்திற்கு மேல் காமிக்ஸ் வாங்குபவர்களுக்கு நம் நிறுவனத்தின் விளம்பரம் தாங்கிய 'கட்டைப் பை' கொடுத்தால் என்ன...!? விழாவில் பங்குபெற்ற நண்பர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்யுங்களேன்.

  ReplyDelete
  Replies
  1. @ மேற்கிலிருந்து ம. ராஜவேல்.

   ///ஆயிரத்திற்கு மேல் காமிக்ஸ் வாங்குபவர்களுக்கு நம் நிறுவனத்தின் விளம்பரம் தாங்கிய 'கட்டைப் பை' கொடுத்தால் என்ன...!?///

   சூப்பர் ஐடியா நண்பரே!!! பொதுவாகவே கட்டைப்பைகள் பெண்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்றவை. நமது காமிக்ஸ் விளம்பரங்களைத் தாங்கி அந்தப் பை பல கடைவீதிகளில் வலம் வர வாய்ப்பிருக்கிறது!

   சிறப்பான யோசனையே! ஓவர் டூ எடிட்டர் சமூகம்!

   Delete
  2. கட்டைப் பை ஒரு ஐநூறு ஆ - ர் - ட -ரேய் !!!

   Delete
  3. லயன்-முத்து'விலிருந்து பிட் நோட்டீஸ் போட்டால்கூட பீரோவுக்குள் பதுக்கி(பத்திரப்படுத்தி)வைக்கும் நம் காமிக்ஸ் அன்பர்கள், இந்தப் பைக்காகவே சில ஆயிரங்களை எடுத்துகிட்டு வந்து நிற்க வாய்ப்பிருக்கிறது! :)

   அதுவும் அந்த 500 கட்டைப்பையில் கடைசி 10 பையை ஒருவரே வாங்கிப்போகவும் வாய்ப்பிருக்கிறது! ;)

   Delete
 51. @ALL : And இக்கடே சூடுங்கோ :

  https://mobile.twitter.com/KasthuriShankar

  ReplyDelete
  Replies
  1. ஒரு தூரத்துக் காதிலே புகை....மியாவ்வ்வ் !!!

   Delete
  2. P.S : Following is a Tweet from Ms.Kasthuri's Page :

   My FAVORITE - முத்து காமிக்ஸ் . இரும்புக்கை மாயாவியையும் லக்கி லூக்கையும் மீண்டும் கிடைக்கபெற்றதில் ரொம்ம்ம்ப மகிழ்ச்சி !

   லயன் காமிக்ஸ் / முத்து காமிக்ஸ்
   http://www.lioncomics.in
   Classic English comics as well- Lucky luke ! Iznogoud ! Modesty Blaise!
   #MuthuComics

   Delete
  3. ///ஒரு தூரத்துக் காதிலே புகை....மியாவ்வ்வ் !!!///

   "அந்த ஃபோட்டோல்லாம் வேணாம்... அப்புறம் தேவையில்லாத கிசுகிசுவைக் கிளப்பி பேஜார் பண்ணிப்புடுவாங்க"ன்னு நான்தான் தடுத்துட்டேன் சார்! நான் இப்படிச் சொன்னதுக்கப்புறம் வேறவழியில்லாம, கொஞ்சம் கனத்த மனதோடுதான் KVGயை ட்விட்டரில் போட்டாங்கன்னா பார்த்துக்கோங்களேன்!! :P

   Delete
 52. E-mail from Parimel Alagan >

  Shri. Ponvannan, Actor, Nadigarsangam Vice President visited our Muthu comics stall on the last day of today 22.01.2018.

  He spent more than one hour in our stall and take photo with various people visited our stall.

  He purchased various titles from our stall.

  Other stall officials call him to their stall, but he refused and say that today he came only for the purpose visiting Muthu Comics stall.

  The one thing I impressed that he said that முத்து-லயன் காமிக்ஸ் படிக்கும் பொழுது தன் தாயின் மடியில் படுத்து அனுபவிக்கும் உணர்வினை அடைவதாக அவர் கூறினார்.

  Photo sent !

  ReplyDelete
  Replies
  1. வாவ்! அருமையான செய்தி சார்!! நடிகர் பொன்வண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்!

   ///
   Other stall officials call him to their stall, but he refused and say that today he came only for the purpose visiting Muthu Comics stall.///

   அருமை அருமை!

   ///he said that முத்து-லயன் காமிக்ஸ் படிக்கும் பொழுது தன் தாயின் மடியில் படுத்து அனுபவிக்கும் உணர்வினை அடைவதாக அவர் கூறினார்.///

   அழகு அழகு!!

   P.S : 2020ல் நடக்கயிருக்கும் 'அகில உலக லயன்-முத்து காமிக்ஸ் மாநாட்டிற்கு' (எடிட்டரின் மைன்டு வாய்ஸ் : "இது எப்போ...?!! புதுஷ்ஷா இருக்கூ...?!!") நடிகர்/டைரக்டர் பொன்வண்ணன் அவர்களையே சீஃப் கெஸ்ட்டாக அழைத்துவிடலாம் என்பது எண்ணம்!

   Delete
 53. **** பாராட்டுப் பத்திரம் **** CBF-2018 ****

  இந்த வருடம் CBFல் அண்ணாச்சி இராதக்கிருஷ்ணன் இருந்தது ஒரு எதிர்பாராத சிறப்பான நிகழ்வென்றால், கூடவே இன்னொரு சிறப்பம்சத்தையும் குறிப்பிட்டாக வேண்டும்!

  பில்லிங்'கில் ஒரு சூறாவளி போல சுழற்றியடித்து வேலை செய்து, பார்கோடு ஸ்கேனரிலோ, பிரின்ட்டரிலோ, ஸ்வைப் மெஷினிலோ டெக்னிக்கல் மிஸ்டேக் வரும்போதெல்லாம் அதை லாவகமாகக் கையாண்டு, பில் போடுவதில் புயல்வேகம் காட்டி - கஸ்டமர்களின் பொறுமைக்கு சோதனை கொடுக்காத - மிக மிக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய - இன்ஜினீயரிங் மாணவன் குரு (எ) குரு சஞ்சய்க்கு நம் சிறப்பு வாழ்த்துகள்!

  இந்த அர்ப்பணிப்பு உணர்வு உனக்கு ஒரு மிகச் சிறப்பான எதிர்காலத்தைப் பெற்றுத்தரும் குரு!

  இதுபோல ஒரு திறமையான ஆளை தேடிப்பிடித்துப் பணியிலமர்த்திய சாமர்த்தியத்திற்கு எடிட்டர் சமூகத்திற்கு நம் பாராட்டுகள்!!

  ReplyDelete
 54. செயலாளர் & வேதாளர்
  இருவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் நீங்கள் சென்னை வந்திருந்தும் உங்களை வர வேற்க்க நானில்லை எனக்கு நேற்று லீவு கிடைத்தும் என் அண்ணன் ( பெரியம்மா மகன்) நாகேந்திரன் திடீரென இறந்து விட்டார் அதனால் என்னால் வர இயலவில்லை உங்களை நேரில் விரைவில் சந்திக்க முயற்ச்சிக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. மன்னிப்பெல்லாம் எதற்கு செந்தில் சத்யா? நாமெல்லோருமே சூழ்நிலையின் கைதிகள் தானே!

   துயரச் சம்பவத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்களும்.

   Delete
  2. கணனி பழுது பட்டதினால், பதிவிட முடியவில்லை . எனது ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பரே .

   Delete
 55. பிரபலங்களின் வருகை நமது காமிக்ஸ் உலகிற்கு பெருமையும் சந்தோசத்தை யும் தருகிறது..கட்டைப்பை ஐடியா சூப்பர் .

  ReplyDelete
 56. @ஈ.வி இந்த புகைப்படத்திற்கு பின்பு ட்விட்டரில் இணைந்ததாக தெரிகிறது.. உண்மையா?

  ReplyDelete
  Replies
  1. @Krishna VV

   இல்லை நண்பரே! ட்விட்டரில் வெளியாகியிருக்கும் படத்தை நடிகை கஸ்தூரி தன்னுடைய மொபைலில் எடுத்துக்கொண்டு பிறகு சாவகாசமாய் வெளியிட்டிருக்கிறார்!

   Delete
  2. ஆக இந்த படம் எடுக்கப்பட்டதற்கும் நீங்கள் ட்விட்டரில் இணைந்ததற்கும் சம்பந்தம் இல்லை 😊

   Delete
  3. @Krishna VV
   ஊப்ஸ்! நான் உங்களது கேள்வியை சரிவரப்புரிந்துகொள்ளாமல் வேறு பதில் அளித்துவிட்டேன் கிருஷ்ணா!

   இப்போது சொல்கிறேன்.. ஆம்! இந்தப் படம் எடுக்கப்பட்டபின்புதான் ட்விட்டரில் முதன்முறையாக இணைந்திருக்கிறேன்! ஹிஹி! ;)

   Delete
 57. This comment has been removed by the author.

  ReplyDelete
 58. "முத்து காமிக்ஸ் & லயன் காமிக்ஸ் தான் எனது ஓவிய வாழ்க்கைக்கே அஸ்திவாரம்" என்று காதில் சொல்லிச் சென்ற பிரபல தினசரியின் கார்ட்டூனிஸ்ட்.
  -- மிக்க நன்றி.

  ReplyDelete
 59. மான் நடிகை தற்போது லக்கிலூக் & மாடஸ்டி கதைகளின் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறாராம்!

  சற்று முன்பு ட்விட்டரில் :

  ///

  kasturi shankar
  @KasthuriShankar
  ·
  58m
  Replying to @VijayErodeVIJAY
  Likewise ! Happy to have met you ! Now I have to collect Lucky Luke and Modesty Blaise !

  ////

  ReplyDelete
  Replies
  1. "you can buy Lucky Luke directly through our online store.

   Regarding Modesty Blaise books, No worries!! please contact our friend 'kid Ordin Kannan' at Mecheri Metroplolitan city, He will send you all his Modesty books at once!"

   அப்படீன்னு reply tweet பண்ணலாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன். ஹிஹி!

   Delete
  2. யோசிக்கவே வேண்டாம் குருநாயரே..,
   தைரியமா ரிப்ளை பண்ணுங்கோ.!

   இதுவரைக்கும் எங்கிட்ட இருக்குற மாடஸ்டியோட, இனிமே வரப்போற மாடஸ்டீயையும் சேர்த்து அனுப்பிடுறேன்.! :-)

   Delete
 60. நடிகர்/இயக்குனர் திரு.பொன்வண்ணன் அவர்கள் நம் காமிக்ஸைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரிந்து கொள்ள இங்கே க்ளிக்குங்க நண்பர்களே!!!

  உங்கள் காமிக்ஸ் காதல் மெய்சிலிர்க்க வைக்கிறது! தலைவணங்குகிறோம் பொன்வண்ணன் சார்! _/\_ _/\_

  ReplyDelete
  Replies
  1. இதென்ன ஒரே கொழப்பமா இருக்கே.

   மாயாவியார், ஈ.வி யா மாறிட்டாரா?
   இல்ல

   ஈ.வியார் மாயாவி அவதாரம் எடுத்திட்டாரா?

   கன்ப்யுஷன்.

   Jokes apart,

   கிளிக் 'கியது கலக்குது சார்.

   Delete
  2. @ GP

   இரண்டுநாட்கள் ஒன்றாகவே சுற்றிக்கொண்டிருந்ததில் அவரது கெட்டபழக்கங்கள்(!) எனக்கும் ஒட்டிக்கிச்சோ என்னமோ?!!

   பதிலுக்கு, அவரும் இந்நேரம் யாரையாவது பிறாண்டிக் கொண்டிருக்கவும் வாய்ப்பிருக்கு! :)

   Delete
 61. காமிக்ஸை சுவாசிக்கும் நணஂபர் கணேசுக்கு சரியான ...முதல் பரிசு...பொருத்தமான ந(ப)ண்பர்....பாருங்க கடவுள் கஸ்தாரிய அனுப்பியும் பாராட்டிருக்கார்....தொடரட்டும் உங்கள் பணி....

  ReplyDelete
 62. சமீப இரு நாட்களாக இங்கே தலை காட்ட சிரம பட


  சிரம பட்டு இங்கே வருகை தந்தால்


  பல சந்தோசமான நிகழ்வுகள்..,


  பல சந்தோசமான புகைப்படங்கள்...,


  பல சந்தோசமான நண்பர்கள்....,


  பல சந்தோசமான செய்திகள்...,


  பல சந்தோசமான செயல்கள்....


  என கலந்து கட்டி ஆனந்தமும் மகிழ்வும் கலந்து கட்டி கும்மி அடிப்பதை காண மிக மகிழ்வாக உள்ளது....


  வாழ்க காமிக்ஸ்...வளர்க காமிக்ஸ் நேசம்....


  இயக்குநர் பொண்வன்னன் சார் அவர்களுக்கும் ...அந்தியிலே பூத்த கஸ்துரி மலர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ...

  ReplyDelete
 63. சமீப இரு நாட்களாக இங்கே தலை காட்ட சிரம பட


  சிரம பட்டு இங்கே வருகை தந்தால்


  பல சந்தோசமான நிகழ்வுகள்..,


  பல சந்தோசமான புகைப்படங்கள்...,


  பல சந்தோசமான நண்பர்கள்....,


  பல சந்தோசமான செய்திகள்...,


  பல சந்தோசமான செயல்கள்....


  என கலந்து கட்டி ஆனந்தமும் மகிழ்வும் கலந்து கட்டி கும்மி அடிப்பதை காண மிக மகிழ்வாக உள்ளது....


  வாழ்க காமிக்ஸ்...வளர்க காமிக்ஸ் நேசம்....


  இயக்குநர் பொண்வன்னன் சார் அவர்களுக்கும் ...அந்தியிலே பூத்த கஸ்துரி மலர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் ...

  ReplyDelete
 64. கணவாய் யுத்தம் செம்ம 👌👌👌👌


  (ஆஹா.. இவ்ளோ பெரிய்ய்ய்ய விமர்சனம் எழுதுறது இதான் மொதோ தபா ..!)

  ReplyDelete
 65. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 66. தோா்கல் 2018

  ஆரம்பமே அமா்க்களம்!

  இதிலும் வசனங்கள் பிரம்மாதம்!!

  ReplyDelete
 67. இன்று பதிவு வரும் நாள்!

  போடுற பதிவை கொஞ்சம் முன்னாடியே போட்டாக்க தூக்கம் கண்ணைக் கட்டுறதுக்கு முன்னாடியே இங்கே கொஞ்சம் களையும்கட்டும்!
  நண்பர்கள் பலரும் DTS சவுண்டில் குறட்டைவிட்டு, வீட்டுச் சுவரில் விரிசலை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் பதிவு போடுவது பாந்தமாக இருப்பதில்லை!
  கண்விழிக்கும் வேளையில் கசாப்புக் கடையில் காத்திருக்கும் வேலையும், இன்னபிற குடும்பக் குடைச்சல்களும் க்யூவில் நிற்க - ஞாயிறு ஒரே ஓட்டமாய் ஓடியே விடுகிறது!

  நின்று நிதானித்துப் பதிவு படித்து, பின்னூட்டங்களில் பிரித்துமேய - சனிக் கிழமை முன்னிரவுப் பொழுதே உகந்தது என்று அனைவராலும் நம்பப்படுகிறது!

  எடிட்டர் சமூகம் கவனிக்குமா?

  ReplyDelete
  Replies
  1. அப்படியே இந்த வருட சென்னை விற்பனை எப்படி? கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது? நமது சந்தா செலுத்தும் நண்பர்கள் அதிகரித்து உள்ளார்களா?

   Delete
  2. இரத்த படலம் முன்பதிவு இலக்கத்தை நாம் அடைந்துவிட்டோமா?

   Delete
  3. ///இரத்த படலம் முன்பதிவு இலக்கத்தை நாம் அடைந்துவிட்டோமா?///

   டோம்! இரத்தப்படல பணிகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாம்!!

   Delete
  4. சூப்பர்.

   ஏலே பழனிவேல் & ஸ்டீல் க்ளா மக்கா, ஈரோடு வரும் போது மத்தியானம் எனக்கு நல்ல கறிச்சாப்பாடு வாங்கி கொடுக்கோனும்ல.. ஆமா சொல்லிபுட்டேன்

   Delete
 68. பூனைக்கு ராத்திரி தூக்கமே வராதாம்.
  தெரியுமா.பகலெல்லாம் ( ஆபீசில்)
  தூங்கி இரவில் ( வீட்டில்) ஆட்டம்
  போடுமாம்.CBF க்கு பிறகு மான்கராத்தே
  பயில்வதாக கேள்வி.??😜😜😜😜

  ReplyDelete
  Replies
  1. மான் ஒன்று கண்டேன்
   மான் அங்கு இல்லை...
   ஏன் என்று ஞான் சொல்ல வேண்டுமோ?

   KVG ஜி...மேலே அந்த ஃபோட்டோவுல என்னாவொரு பவ்யம்!!!!

   Delete
 69. அடுத்த பதிவின் தலைப்பு "சனியிரவில் சிவகாசி" என்று இருக்குமோ?

  ReplyDelete
 70. சகுணம் பார்க்கிறதெல்லாம் சரிதான்... ஆனா அதுக்காக 'கூர்க்காவின் விசில் சத்தம் கேட்டாத்தான் பப்ளிஷ் பட்டனை அழுத்துவேன்'னு சொல்லி அடம்பிடிக்கிறதெல்லாம் கொஞ்சங்கூட நல்லாயில்லை எடிட்டர் சார்! ;)

  ReplyDelete