Powered By Blogger

Saturday, November 19, 2022

தொடும் தூரத்தில் டிசம்பர் !

 நண்பர்களே,

வணக்கம். நடு நடுவே சில நாட்கள் புலரும் - காது வழியாய்....மூக்கு வழியாய் ...நவ துவாரங்களின் வழியாயும் வஜனங்கள் பிரவாகமெடுக்கும் பிரமைகளோடு ! அது போலான நாட்களே இந்த வாரத்தின் ஒவ்வொரு தினமும் ! தற்செயலாய்க் கொஞ்சம் ; தள்ளிப்போட்டுக் கொண்டே சென்றதன் காரணம் கொஞ்சம் - டிசம்பருக்கு 4 புக்ஸ் & நாலுமே black & white என்று அமைந்து போனது ! 

ஒரிஜினல் திட்டமிடலின்படி பார்த்தால், இம்மாதம் வரவுள்ள டெக்சின் "நிழல்களின் ராஜ்ஜியத்தில்" புக் நடப்பின் ஏப்ரலிலோ, மே மாதத்திலோ வந்திருக்க வேண்டியது ! ஆனால் இதற்கென பேனா பிடிக்கத் துவங்கியதொரு சகோதரியின் தாயார் கொரோனாவில் ரொம்பவே அல்லாடும்படியாகிப் போக, அவர் பத்தோ , இருபதோ பக்கங்களோடே கழன்று கொண்டார் ! இதுவோ வழக்கத்தையும் விடப் பெரிய சாகஸம் எனும் போது, அன்றைக்கு திடு திடுப்பென இதனுள் குதிக்க எனக்குத் தோதுப்படவில்லை ! And so 'அகஸ்டிலே போடலாம் ; அக்டொபரிலே போடலாம்' என்று இந்த ஆல்பத்தைச் சுற்றில் விட, இனி வருஷத்தில் மாசங்களே பாக்கி இல்லை என்றான பின்னே தான் இதனுள் புகுந்திட இயன்றுள்ளது ! இது மட்டும் தான் என்றில்லை ; டெட்வுட் டிக்குமே 2 மாதங்களுக்கு முன்னே ஆஜராகியிருக்க வேண்டிய மனுஷன் ; எனது வேலைப்பளு காரணமாய் 'ஆ..தள்ளு...தள்ளு..தள்ளு..' என்று டிசம்பர் வரைக்கும் தள்ளப்பட்டு விட்டார் ! 

So பாருங்களேன் - டிசம்பரில் காத்துள்ள 4 ரெகுலர் சந்தா இதழ்கள் அவசியமாக்கியுள்ள பக்க எண்ணிக்கையினை : 

TEX - 248 பக்கங்கள்

டெட்வுட் டிக் : 144  பக்கங்கள் 

மாடஸ்டி ஸ்பெஷல் - 120 பக்கங்கள் 

மர்ம மனிதன் மார்ட்டின் - 80 பக்கங்கள் 

கிட்டத்தட்ட 600 பக்கங்களைத் தொட்டு நிற்கிறது நம்பர் & இதனில் முதல் 2 இதழ்களுக்கும் முழுசாய்ப் பேனா பிடித்து விட்டு, அப்பாலிக்கா மீத 2 இதழ்களுக்கும் வஜனங்களை மாற்றியமைப்பதெனில், காது வழியாய் டயலாக்ஸ் பிரவாகம் எடுப்பதில் ஏது ஆச்சர்யம் ? Phewwwww ; has been one incredibly tough week & இன்னும் கிணற்றை முழுசுமாய்த் தாண்டிய பாடில்லை தான் ! காத்திருக்கும் அடுத்த 7 நாட்களுமே இதே மும்முரத்தில் பயணித்தால் மாத்திரமே, டிசம்பரிலாவது டிசம்பர் இதழ்களை உங்களிடம் ஒப்படைத்திட இயலும் ! புனித மனிடோ !!

காத்திருக்கும் டெக்ஸ் சாகஸம் - டீமின் நால்வருமே பங்கேற்குமொரு அதிரடி ! இரவுக் கழுகாரும், வெள்ளி முடியாரும் ஒரு அணியாகவும், இள ரத்தங்கள் இன்னொரு அணியாகவும் செயல்பட்டு, க்ளைமாக்சில் கரம் கோர்க்கிறார்கள் ! And இதன் கதாசிரியர் திரு மௌரோ போசெல்லி எனும் போதே, இங்கே புதிதாய் என்ன எதிர்பார்க்கலாம் ? என்ற கேள்வி உள்ளுக்குள் துளிர் விட்டது ! True to form - மனுஷன் பின்னியெடுத்துள்ளார் ரொம்பவே வித்தியாசமானதொரு பாணியில் !  வழக்கமானதொரு கதைக்கருவே தான் ; ஆனால் அதற்கென தந்துள்ள treatment ; கதை அரங்கேறும் backdrop ; கதையினை நகர்த்தியுள்ள விதம் ; முற்றிலும் புது ரகக் கதை மாந்தர்கள் - என ஜோஸ் பட்லர் ரேஞ்சுக்கு போசெல்லி சிக்ஸர்களாய் விளாசியுள்ளார் ! ரொம்பவே உள்ளே புகுந்து இந்தக் கதைக்கொரு preview தராது இருப்பதே இப்போதைக்கு நல்லதென்று  படுகிறது - வாசிப்பினில் அந்த த்ரில் உங்களுக்கும் கிட்டிடும் பொருட்டு ! நம்புங்கள் guys - ரொம்ப காலம் நினைவில் நிற்கப் போகும் 'தல' சாகசங்களுள் இதுவும் ஒன்றாக இருந்திடப் போகிறது ! And ரொம்பவே டைட்டாக நகரும் கதை என்பதால், வசனங்களில் வெள்ளிமுடியாரைக் கலாய்க்கும் பாணி இங்கு செட் ஆகாது என்பது ஆரம்பத்திலேயே புரிந்தது ! So சும்மாங்காட்டியும் கார்சனின் காலை வாருவது போலான டயலாகுகளுக்குப் பதிலாய், கதையோட்டத்தோடே மெல்லிய நகைச்சுவை இழையோடிச் செல்லச் செய்ய முயன்றுள்ளேன் ! இது சுகப்படும் பட்சத்தில், முன்செல்லும் நாட்களில் இதனையே நமது template ஆக்கிக்கொள்ளலாம் ! இதோ இந்த extra நீள ஆல்பத்தின் அட்டைப்பட preview & உட்பக்க முதற்பார்வை :

ஒரிஜினல் அட்டைப்படம், பின்னணி வர்ணச் சேர்க்கை மட்டுமே நமது கைவண்ணம் ! கதையினை முழுசுமாய்ப் படித்தான் பின்னே அட்டைப்படத்தை ஒருவாட்டி சாவகாசமாய்ப் பாருங்களேன் - 240 பக்கக் கதையின் முழுமையையுமே ராப்பரில், சித்திரங்களில் சொல்லியிருப்பது புரியும் ! போனெல்லி எனும் ஜாம்பவான்களின் விண்ணுயரத்திலான standard-களுக்கே இது ஒரு மிடறு கூடுதல் உசரம் என்பேன் ; இந்தாண்டின் 8 மாதங்களுக்கு முன்னேயே அச்சாகி விட்ட அட்டைப்படத்தை இதுவரைக்கும் ஒரு நூறு தடவைகளாவது ரசித்திருப்பேன் ! And இதோ - உட்பக்க டிரெய்லர்கள் : 


சற்றே மாறுபட்ட ஓவிய பாணி ; and கதையின் பெரும்பகுதியை black ஆக்கிரமிக்கவும் செய்கிறது தான் ! ஆனால் கதையின் இருண்ட மூடுக்கு இந்தச் சித்திர பாணியும், கலரிங்கும் செமத்தியாய் வலு சேர்க்கின்றது ! ரொம்பவே ஆவலாய்க் காத்திருப்போம் - ஆண்டின் இறுதி டெக்ஸ் சாகசத்துக்கு நீங்கள் போடவுள்ள மார்க்குகள் என்னவென்பதை அறிந்திட !

இம்மாதத்தின் அடுத்த highlight சந்தேகமின்றி நமது இளவரசியே !! ஒன்றுக்கு, இரண்டாய் சாகசங்கள் & இரண்டுமே வலுவான எதிராளிகளுடன் எனும் போது ஆட்டக்களம் தானாய் சூடேறி விடுகிறது ! நடு நடுவே "எதிர்காலம் எனதே' போன்ற சுமாரான கதைகளை மருத்துவர்களும், தொழிலதிபர்களும் கொண்டாடியிருந்தாலும், பரவலாய் அத்தகைய கதைகள் ஸ்கோர் செய்த மதிப்பெண்களைக் கொண்டு, அண்ணா யூனிவெர்சிட்டியில் ரெண்டாப்பு சீட் கூட வாங்க வழியிருந்திருக்காது ! ஆனால் இம்முறை காத்துள்ள 2 அதிரடிகளுமே, டாக்டர்களை மாத்திரமன்றி நம் போன்ற சாமான்யர்களையுமே குத்தாட்டம் போடச் செய்யும் என்று ஆரூடம் சொல்லுவேன் ! And இரண்டுமே ஓவியர் ரோமெராவின் சித்திரங்கள் என்பதால் - புக் நெடுக இளவரசி ஜொலிக்கிறார் ! கணிசமான கர்சீப்களைக் கைவசம் வைத்துக் கொண்டு, சமயம் பார்த்து கடைவாய்களைத் துடைத்துக் கொண்டே வாசிக்க முனைந்தால், வீட்டம்மாக்களின் விநோதப் பார்வைகளையும், பூரிக்கட்டைப் புலன்விசாரணைகளையும் தவிர்க்க இயலும் ! முன்கூட்டியே சொல்லிட்டேனுங்கோ ; அப்பாலிக்கா வீங்கிய கபாலங்களோடு என்மீது பழி போடாதீங்கோ ! இதோ - இந்தப் பருவநிலைக்குக் கொஞ்சமும் பொருந்தாததொரு உடுப்பில் நம்ம இளவரசியின் அட்டைப்படம் : 

ஒரிஜினல் சித்திரங்கள் ; வர்ணங்களில் வரைந்திருப்பவர் நமது சென்னை ஓவியர் & மெருகூட்டியிருப்பவர் கோகிலா ! And இதோ - உட்பக்க preview :

பேனா பிடித்திருப்பது நமது டீமுக்கு ஒரு சமீப வரவானதொரு சகோதரியே ! இன்னமும் அவராகவே முழுமையையும் கையாளும் வேளை புலர்ந்திருக்கவில்லை என்றாலும், வேகமாய் முன்னேறி வருகிறார் ! Of course - நிறைய திருத்தி ; மாற்றி எழுதியுள்ளேன் தான் & இரு கதைகளிலுமே நான் நோண்டியுள்ள இடங்கள் உங்களுக்குப் புலப்படாது போகாது தான்  ! ஆனால் தன் தோள்களிலேயே பணிகளை பக்குவமாய்ச் சுமக்க அவர் பழகிடும் நாள் not very far என்பேன் ! அடுத்த பதிவுக்கென டெட்வுட் டிக் & மார்ட்டினை வைத்துக் கொள்ளலாம் என்பதால், புத்தக விழா நியூஸ் பற்றி !

Nov 17 to 27 : விருதுநகரில் நமது ஸ்டால் # 27 

Nov.20 to 30 : சேலத்தில் நமது ஸ்டால் # 120 

சேலம் விழா நாளை துவங்கிடவிருக்க, அங்கிருந்து போட்டோக்களை அனுப்பியுள்ள நண்பர்களின் புண்ணியத்தில் அட்டகாசமான விழா ஏற்பாடுகளை தரிசிக்க முடிந்துள்ளது ! மிரட்டலான தோரண வாயில்களையும், நகாசு வேலைகளையும், சேலம் ஜனம் தம் வருகைகளோடு சிறப்பித்திட்டால் - இந்த விழா ஒரு அழகான அனுபவமாகி விடுமென்பது உறுதி ! PLEASE DROP IN ALL !!

And விருதுநகரிலுமே விறு விறு சேல்ஸ் ; கணிசமான பள்ளி மாணவர்கள் இங்கேயும் படையெடுக்க இன்றைக்கு விற்றுள்ளவை டெக்ஸும் ; கார்ட்டூன்களும் தான் ! அது என்ன மாயமோ தெரியலை ; ஸ்டாலில் இளம் தலைமுறை படையெடுத்து நிற்பதை பார்க்கும் போதெல்லாம் இருக்கும் சொற்ப கேசம் நட்டுக்கொண்டு விடுகின்றது ! 

மாடஸ்டியின் இரண்டாம் ஆல்பத்தோடு பழகிப் பார்க்கும் படலம் காத்திருப்பதாலும், டெட்வுட் டிக் இன்னொரு திசையிலிருந்து மிரட்டிக் கொண்டிருப்பதாலும், இப்போதைக்குக் கிளம்புகிறேன் guys ! கிளம்பும் முன்பாய் some updates :

1.லேட்டஸ்ட் caption போட்டியில் ஆளாளுக்கு பின்னிப் பெடல் எடுத்து வருவதை போன பதிவில் பார்க்க முடிந்தது ! திங்களன்று அதன் TOP 3 யாரென்பதை அறிவிக்கிறேன் guys !

2.சந்தாக்கள் செம விறு விறு ! ஜனவரியில் வரவுள்ள வேதாளர் ஸ்பெஷல்-2 (SUPREME '60ஸ் இதழ் # 1) அட்டைப்படம் அடுத்த வாரயிறுதியில் அச்சுக்குச் செல்கிறது ! So அதனில் இணைந்து கொள்ளவிருக்கும் நண்பர்களின் எண்ணிக்கை தெரிந்தால் தான் பிரிண்ட்ரன் நிர்ணயிக்க இயலும் ! So இன்னமும் சந்தாவினில் இணைந்திருக்கா நண்பர்கள் - இப்போதே அதற்கென நேரம் ஒத்துக்கிடலாமே ப்ளீஸ் ? Same goes for the ரெகுலர் சந்தாஸ் also !

3.அயல்நாட்டுச் சந்தாக்கள் குறித்து சின்னதொரு தகவலுமே : எவ்வளவு தான் கவனமாய்த் திட்டமிட்டாலும், மாதா மாதம் போஸ்ட்டாபீஸில் ஏர்மெயில் கட்டணங்கள் சார்ந்த பஞ்சாயத்துக்கள் ஓய்ந்த பாடில்லை ! And ஏற்கனவே ஏர்மெயில் கட்டணங்களும் எகிறி விட்டிருப்பதால், ஆண்டின் கடைசி மாதங்களில் புக்ஸ் அனுப்ப பணம் போதாமல் போய்விடவும் செய்கிறது ! இது முழுக்கவே நம் கட்டுப்பாட்டில் இம்மியும் இல்லாததொரு சமாச்சாரம் என்பதால் அயல்நாட்டுச் சந்தாக்களில் உள்ள நண்பர்களின் புரிதல் இங்கு அவசியமாகிடுகிறது ! நீங்கள் கட்டும் பணம் ஆண்டின் இறுதியில் மீதம் இருக்கும் போதெல்லாம் அவற்றை மறுஆண்டுக்கு முன்னெடுத்துச் செல்வதையே வழக்கமாக்கி வந்துள்ளோம் ! அதே போல ஆண்டின் இறுதியினில் பணம் பற்றாது போகும் பட்சங்களில், you just might need to make another payment ! இது குறித்த தர்க்கங்களில் நம்மாட்கள் குட்டுப்பட்டு வருவதை பார்க்க நேரிட்டதால் இந்த விளக்கம் ! So please note : அயல்நாட்டுச் சந்தாத் தொகைகள் குத்துமதிப்பான உத்தேசங்கள் மாத்திரமே !

Before I sign out, ஜனவரியில் சில பல செமத்தியான surprise சேதிகள் காத்துள்ளன என்பதை மட்டும் சொல்லிவிட்டு ஜூட் விடுகிறேன் !! Bye all....see you around ! Have a cool Sunday !



148 comments:

  1. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. பதிவை முழுவதுமாக படித்து விட்டு வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. துண்டை போட்டு வைச்சாச்சு :-)

      Delete
  4. அட அப்ப உயிரைத் தேடி கலரில் வருது...

    செம்ம செம்ம 🤗🥳👏👏

    ReplyDelete
  5. மாடஸ்டியோட அட்டைப் படம் சும்மா தெறி 🥰😍🥰😍

    ReplyDelete
  6. 1. Bruno Brazil - Must have Hero
    2. Zarroff- கல்(நெஞ்சு)க்குள் ஈரம் சொன்ன கதை. For me okay. But too much of violence can be edited.
    3. Thorgal- If it is selling then okay...
    4. Lonesome-Your wish
    5. Durango- Yes please
    6. double album for richochet- double album Classic Johnny, PLUS Johny 2.0
    7. கி நா = Yes, Please
    8. Stern - Why not? Must have hero
    9. New Western hero- மாதமொரு கௌபாய் என வருடம் 12 கௌபாய் கதைகள் போதும் எனக்கு

    ReplyDelete
  7. மாடஸ்டியோட அட்டைப்படம் செம ஸ்டைலிஸ்டாக உள்ளதே. இதற்காகவே இந்த புத்தகத்தை நிறைய பேர் வாங்குவாங்களே. மாடஸ்டி இந்த முறை இந்த அட்டடைப்படத்திற்காக சூப்பர் ஹிட் ஆகிவிடுவார்.

    ReplyDelete
  8. ஹய்யா.. உயிரைத் தேடி.. கலரில் :)

    ReplyDelete
  9. அடடே.. உயிரைத்தேடி முழு வண்ணத்தில்..!

    ReplyDelete
  10. டெக்ஸின் அட்டைப்படம் மிரட்டுகிறது அதுவும் நமது நால்வரும் அட்டைப்படத்தில் உள்ளது செம மாஸாக உள்ளது.

    ReplyDelete
  11. நிழல்களின் ராஜ்யத்தில் அட்டைப்படம் செம்ம மாஸ் ஆக உள்ளது.நால்வரின் தோற்றமும் புகைப்படம் எடுத்து சினிமா போஸ்டர் போல உள்ளது.அதிலும் கார்சன் இம்முறை டெக்ஸ்வில்லரைவிட முன்னிலை படுத்தப்பட்டது போல் உள்ளார்.

    ReplyDelete
  12. இன்று வாட்சப் காமிக்ஸ் குழுவில் இட்டப் பதிவு இங்கும். பதிவில் நான் குறிப்பிடும் இடங்கள் எல்லாம் நம் விஜயன் sir அவர்களால்தான் பரிட்சயம் என்ற பெருமிதத்துடன் இங்கு பதிகிறேன்.


    மெக்சிகோ என்றதும் இந்த வாரம் என் வீட்டில் நடந்த நிகழ்வு நினைவு வருகிறது.


    என் மனைவியின் சித்தி மகனுக்கு (மச்சினன்) மெக்சிகோவின் குடலஹாரா எனும் ஊரில் வேலை கிடைத்துள்ளது. வரும் ஏப்ரலில் செல்கிறான்.

    இந்த சேதியை என்னிடம் சொன்னதும்.. மெக்சிகோவில் ஸ்பானிஷ் தான் பிரதான மொழி, அங்குள்ள பணத்தின் பெயர் பெசோ.. மற்றும் அமெரிக்கா எல்லையில் அமைந்துள்ள பல மாகாணங்களான சிகுவாகுவா, டக்சன், டெக்சாஸ், கொலராடோ, யுடா என்று நமக்கு நன்கு பரிட்சயம் ஆன பெயர்களை கூறி இங்கெல்லாம் மானசீகமாக உலவி திரிந்துள்ளேன் எனக் கூறியதும் உண்மையில் வியந்து போனான்.

    "எப்படி மாமா அங்க இருக்கற பேர கரெக்ட்டா சொல்றிங்க?" என்று கேட்கவே.. நான் மட்டும் இல்லை என்னைப் போல் இப்படி உலகம் முழுக்க இருக்கும் நகரங்களைப் பற்றி பரிட்சயமாக சொல்ல இங்கு ஒரு வாசக நண்பர் குழாமே உள்ளது. நாங்கள் அங்கு செல்லப் போகிறோமோ இல்லையோ அந்தப் பிராந்தியங்களின் பெயர்கள் ஓரளவுக்கு அத்துப்படி என்றேன்.

    "அதான் எப்படி?" என்றான்.

    காமிக்ஸ் புத்தகங்கள் வழியாக.. என்று பீரோவை திறந்து தங்கக் கல்லறையை எடுத்து காண்பித்தேன். ஆவலுடன் வாங்கி புரட்டியவன்.. "வாவ் சூப்பர் மாமா, நான் இந்த புக்க எடுத்துட்டு போறேன் மாமா..." என்று கூறவும்.. எனக்கு பக் என்று ஆகி விட்டது. இவன் 2010 வாக்கில் என் வீட்டிலிருந்து கொண்டு போன ராணி காமிக்ஸ் புத்தகங்கள் பல திரும்பி வரவில்லை.

    "அது வந்து... இது என் புக் இல்ல, படிக்க வேறொருவர் கிட்டேயிருந்து வாங்கி வந்தேன் நைட் அவர்ட கொடுக்கனும்." என்றதும். உடனே அருகில் இருந்த மகன்.. "இந்த புக் ரொம்ப நாளா நம்ம பீரோவில் தானே இருக்கு" என்று நிலைமை புரியாது போட்டு கொடுத்து விட்டான். "அது வேற புக்குடா இது வேற" என்று டக்குனு புக்கை வாங்கி தள்ளி வைத்து விட்டு .. குடும்ப விஷயம் என்று பேச்சை மாற்றினேன். ஆனாலும் மச்சினன் ஹரியின் கண்கள் புத்தகத்தையே பார்த்து கொண்டிருந்தது.

    அவன் விடை பெற்று சென்றதும். "ஏன் அந்த புக்க ஹரிக்கு குடுத்தாதான் என்ன? சும்மா பீரோவில் தானே கிடக்கு?" என்று மனைவியும் மகளும் என்னை கரித்துக் கொட்டி விட்டனர்.

    அது என் தங்கத் தலைவர் டைகரின் தங்கக் கல்லறை ஆச்சே.. எங்கிட்ட ஒரு புக்கு தான் இருக்கு. மிகவும் மதிப்பு வாய்ந்ததுன்னு இவர்களுக்கு எப்படி புரியவைப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையே... சிறந்த கதை இது என்று சொல்லி பரிசளிக்கலாம், ஆனால் புக் ஸ்டாக்கில் இல்லையேனும் யார் தான் அதனை பரிசளிக்க முடியும்?

      Delete
    2. சார் ...எங்கோ தூரத்தில் உள்ள ஊர்களெல்லாம் நமக்கு உசிலம்பட்டி ; கொட்டாம்பட்டி ரேஞ்சுக்குப் பரிச்சயம் ஆகி இருப்பது நம்ம கௌபாய் நாயகர்களின் உபயத்தில் ! அது குறித்த மகிழ்ச்சியினை விடவும் ' நம்ம விஜயன் சார் ' என்ற வார்தைகளில் விரவிக்கிடக்கும் அன்னியோன்யம் தரும் மகிழ்ச்சி பன்மடங்கு அதிகம் !

      நன்றிகள் சார் !

      Delete
    3. அவங்க பாட்டுக்கு கடிச்சு கரிச்சு கொட்டட்டும்...ங்க.

      இங்கெருந்தே குடலஹாராக்கு காமிக்ஸ் அனுப்பீடுவாங்க மச்சான்...ஒரு எட்டாயிரம் ரூவால்லாம் ஒங்களுக்கு பெரிய தொகையான்னு ஆட்டையப் போட்டு சந்தா கட்டீருக்க வேண்டியது தானே...

      Delete
    4. அருமையான பகிர்வு ராஜ்குமார்

      Delete
    5. அருமையான பகிர்தல் @Rajkumar. சுவாரஸ்யமான எழுத்து நடை!! காமிக்ஸ் ரசிகர்களுக்கு பெருமையான சமாச்சாரம்!!

      Delete
  13. விருதுநகர் புத்தகதத் திருவிழா விற்பனை செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் கார்டூன் & டெக்ஸ் பக்கம் குழந்தைகள் நிறைய பேர் பழக விரும்பும் செய்தி சிறப்பு.

    ReplyDelete
  14. சேலம் புத்தகத் திருவிழாவில் நமது ஸ்டாலில் விற்பனை சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  15. கிட்: அங்கிள் துப்பாக்கியால சுடாமலே புகை வருதே எப்படி ❓

    கார்சன்: கனவுலகில புட்டியோடு மிதந்துகிட்டு இருக்க வேண்டிய என்னை இந்த நேரத்துல குட்டிச் சாத்தான் உன்னோடு விட்டுட்டு போயிருக்கானே அந்த பயல். அதனால ஏற்பட்ட வயித்தெறிச்சல் புகை தான் இப்படி பிஸ்டல் வழியாக போகுது.

    ReplyDelete
  16. // ஜனவரியில் சில பல செமத்தியான surprise சேதிகள் காத்துள்ளன என்பதை மட்டும் சொல்லிவிட்டு ஜூட் விடுகிறேன் !! //

    ஆகா ஆகா. அதனைப் பற்றி விரைவில் சொல்லுங்க சார். ஆவர்வத்தை அடக்க முடியவில்லை.

    வருடத்தின் முதல் மாதத்தில் கார்டூன் சிரிப்பு கதை எதாவது ஒன்று இருக்கும் படி கொடுங்கள் சார்.

    ReplyDelete
  17. சும்மாங்காட்டியும் கார்சனின் காலை வாருவது போலான டயலாகுகளுக்குப் பதிலாய், கதையோட்டத்தோடே மெல்லிய நகைச்சுவை இழையோடிச் செல்லச் செய்ய முயன்றுள்ளேன் ! இது சுகப்படும் பட்சத்தில், முன்செல்லும் நாட்களில் இதனையே நமது template ஆக்கிக்கொள்ளலாம் !//
    கார்சன் கதையில் இருப்பதும், உங்கள் நகைச்சுவை இழைதலும், ஒரு சேர work out ஆகட்டும் சார்.

    ReplyDelete
  18. @Editor sir.. top graphic novels of 2022. Please check anything workouts for us.

    https://www.washingtonpost.com/books/2022/11/17/best-graphic-novels/

    ReplyDelete
  19. மாடஸ்டி - இதழ் அட்டைப்படம் சூப்பர் சார்.. Tex-மாதிரியே - ஆங்கில டைட்டிலை வடிவமைத்தது அருமை சார்..

    ReplyDelete
  20. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  21. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  22. உயிரைத் தேடி வண்ணத்தில் வருகிறதா தலைவரே

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. Edi Sir..😍😘
    Me வந்தாச்சு..👍

    ReplyDelete
  25. கார்சன்:
    என்னடா கிட்டு..😘 நேத்து உங்க அப்பன் Tex நம்ப Editor அங்கிள பாக்கபோறேன், *உயிரைத்தேடி* கேக்கபோறேன்னு போனானே.. என்ன ஆச்சு?..😒 ஏதாவது சொன்னானா?..

    கிட் வில்லர்:
    😍அங்கிள் ..காதை கொண்டாங்க.. ஒரு ரகசியம் சொல்றேன்..😃
    யார்கிட்டேயும் சொல்லிடாதிங்க..

    வரும் 2023 புத்தாண்டு சர்ப்ரைஸா *உயிரைத்தேடி* கலர்ல வரப்போகுது..😍😘😃😀

    கார்சன்:
    செம்ம சூப்பர் செய்திடா கிட்டு..😃😍👍👏
    சர்ப்ரைஸ் தர்றதுல நம்ப எடிட்டர அடிச்சுக்க முடியாது..😍😘

    ReplyDelete
  26. வாவ்..டெக்ஸ் அட்டைப்படம் இந்த முறை பட்டையை கிளப்புகிறது சூப்பர் என்று ரசித்து நினைத்து கொண்டே கீழே வந்தால் இளவரசியின் அட்டைப்படம் அதைவிட அட்டகாசமாய் அமைந்து செமயாய் கலக்குகிறது...இந்த இரண்டு இதழ்களின் அட்டைப்படங்களுக்கே
    இதன் விற்பனை அள்ளும் என்பது உறுதி சார்..

    சூப்பரோ சூப்பர்

    ReplyDelete
  27. உயிரை தேடி



    கலரிலா சார்...



    கலக்குறீங்களே ....:-)

    ReplyDelete
  28. ஜனவரியில் பல சர்ப்ரைஸ்களா ...


    ஜனவரியே ஜல்தியா வா....

    ReplyDelete
  29. உயிரைத் தேடிக் கொண்டிருக்கிறோம் Sir, நீண்ட நாட்களாக

    ReplyDelete
  30. Colourla uyiraitedi semma surprise gift dear edi .. 😍😍

    Appalikka madasty akka intha dresslayum semma kalakkala irukkanga .. en kanne pattudumpola irukke .. 😉😉😆😆

    ReplyDelete
  31. கிட் வில்லர் : அங்கிள்.எப்டி உங்களால் முரட்டு சிங்கிளா காலம் கடந்த முடியுது...ஒரு கல்யாணம் காச்சிக்கெல்லாம்..ஆசை கீசை...

    கார்சன் : நாயன்மார் வரிசையில் அவதரித்த 64 ஆம் நாயன்மார் டெக்ஸ் வில்லரடிகள் சிங்கிள் முடராக பக்தி செய்யும் போது நாமெல்லாம் அவரை தொடர்வது தானே நியாயம்.

    ReplyDelete
    Replies
    1. கார்சன் : கிட்..பெம்மிகான் ரெடியா...

      கிட் வில்லர் : அங்கிள் சுக்கா ரோஸ்ட் - உருளைக் கிழங்கு ஞாபகம் வந்திடிச்சாக்கும்...இங்க நவஜோ ரிசர்வ்ல அது கெடையாது...பெம்மிகான் கெடைக்கிறதே பெரிய விஷயம்....

      Delete
    2. கார்சன் : " நிகழும் பார்த்தீப ஆண்டு ஆவணித் திங்கள் இருபதாம் நாள் திருவளர் செல்வன் கிட் கார்சனுக்கும் திருவாளர் செல்வி லீனாவுக்கும் நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து....(பாடுகிறார்).

      கிட் வில்லர் : திருவாளர் கிழவின்னு சொல்லணும்...எங்கப்பா இருக்குற வரைக்கும் எனக்கே கல்யாணம் ஆகப் போறதில்லை...

      Delete
    3. கிட் வில்லர் : யாருப்பா இது புதுசா தெரியுது...


      கார்சன் : யார் அப்பாவும் இல்லைங்க.நமக்கு இன்னும் கல்யாணம் ஆகலை ங்க..

      Delete
  32. கிட் வில்லர் : அங்கிள் இருபத்திமூன்றாம் புலிகேசி ஸ்டைல்ல மீசை சூப்பரா இருக்கு...

    கார்சன் : நான் லாம் பெரிய பழுவேட்டரையர் மாதிரி 64 வீர விழுப்புண் தழும்புகளோட இருக்கிறவனாச்சே...

    கிட் வில்லர்: உங்களுக்கெல்லாம் என்னக்கி குண்டு பட போகுது.ஒண்ணு தோள்பட்டய உரசிட்டு போகும் - இல்லாட்டி தலைமுடியை உரசிட்டு போகும் - வெறும் மயக்கம் போட்டுட்டு எந்திரிச்சு மறுபடியும் சுடுவீங்க.🤣🤣🤣...

    கார்சன் : மை டியர் கிட் - நாங்கள் லாம் சாகாவரம் பெற்ற மகேஷ் பாபு க்களாச்சே...அப்பத்தானே அட்டையை மட்டும்
    மாத்தி கிட்டு மாசா மாசம் வந்திட்டே இருப்போம்...

    கிட் வில்லர் : என்னாது மகேஷ் பாபுக்களா...

    கார்சன்: ஆமா... சிரஞ்சீவி க்கெல்லாம் வயசாயி கெழவனாயிட்டாரு. நாங்கள்லாம் அப்டியா... உனக்கு கூட வயசாயிடும். நாங்க இப்டியேத்தான் இருப்போம்.

    ReplyDelete
  33. ஆஹா! அப்படீன்னா 'உயிரைத் தேடி' கலர்ல வரப்போகுதாங் சார்?!!

    ReplyDelete
  34. கிட் :  அங்கிள்! என் தந்தைக்கு அதிர்ஷ்ட தேவதையின் துணை எப்போதும் உண்டு என்பீர்களே! எனக்கு எந்த தேவதையாவது துணை நிற்குமா?

    கார்ஸன்:  உன் தேவதையை உன் முயற்சியாலும்,உழைப்பாலும் நீதான் அடையவேண்டும்,கிட். இப்போதைக்கு காதல் தேவதையின் அருள் உனக்கு கிட்டினால் நலம் என்பேன்.

    Captionகள் முடிவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. தீயா கேப்சன் போடணும் குமாரூ...

      Delete
    2. Sir good sense of humor can be seen in your all captions... Nice

      Delete
  35. சார்.. டெக்ஸ் அட்டைப்படம் தலைப்புக்கேற்ப அட்டகாசமாய் அமைந்திருக்கிறது! சின்னதும் பெருசுமாய் நிறைய சித்திரங்கள் ஒரே அட்டைப்படத்தில் இடம்பெறுவது டெக்ஸுக்கு இதற்குமுன்பு அமைந்ததாய் ஞாபகம் இல்லை! கதையைப்பற்றி நீங்கள் கொடுத்துள்ள குறிப்புகள் ஆவலை ஏகத்துக்கும் எகிறச் செய்கின்றன!

    சட்டுபுட்டுனு டப்பியை அனுப்பி வையுங்க சார்!

    ReplyDelete
    Replies
    1. இ சி கொ ஈ இ...

      ஒங்க இரக்கத்துக்கு அளவே இல்லையா...

      என்ன புதுசா வந்திடபோகுது.
      பார்ச்சூன் பிரதர்ஸ் ஊரையடிச்சு உலைய்ல போடுவாங்கெ.ரேஞ்சர்ஸ் கமாண்ட்லருந்து ஆர்டர் வந்ததும் நம்மாளுங்க வீறு கொண்டு கிளம்புவாங்க. போற வழிய்ல மலை கணவாய்ல மேலருந்து அல்லக்கைங்க சுடுவாங்கெ.நம்ம ஜோடி மயிரிழையில் தப்பிச்சு பத்து பதினைந்து பேர சுட்டுக் கொல்லுவாங்க. அதுல ஒருத்தன குற்றுயிரா பிடிச்சி பார்ச்சூன் பிரதர்ஸ்ஸ பத்தி தெரிஞ்சிக்கணும்ல .அவன பெருந்தன்மையா மன்னிச்சு கனடா பக்கம் ஓடீடச் சொல்லுவாங்க.

      ஊருக்குள்ள தெனாவட்டா போவாங்க.பாருக்குள்ள போயி வீணா வம்பிழுப்பாங்க. அடிச்சி உடைச்சதுக்கு காசு குடுப்பாங்க.எல்லாருக்கும் ஓசிய்ல சரக்கு வாங்கி தருவாங்க.

      எல்லாம் முடிஞ்சு பெறகு சிரிப்பு ஷெரீப் வந்து அசடு வழிபாடு நடக்கும்.

      ரெஸ்ட்ரண்ட்ல ரோடு சைடு ரூம்ல தங்குவாங்க.நைட்டு ஒரு துப்பாக்கி சண்ட கண்டிப்பா நடக்கும்.

      காலைய்ல தெனாவட்டா பார்ச்சூன் பிரதர்ஸ் ஆபீஸ்ல போயி நாலு பேர போட்டுத் தள்ளுவாங்க.

      கடைசி கட்டம் ஆரம்பிக்கும்.

      என்ன திட்டம்னு கார்சன் கேப்பாரு. அவரு திட்டம் போட்டதே மில்லை இது வரைக்கும். டெக்ஸ் அதி சூட்சமமாக மதியூக திட்டம் போடுவாரூ.

      எல்லாரையும் சுட்டுக் தள்ளீட்டு பார்ச்சூன் பிரதர்ஸ்ஸ ஷெரீப்ட்ட ஒப்படைச்சிட்டு அரிசோனாவ பாக்க கெளம்புவாங்க...ஹிஹ்ஹி...

      Delete
    2. ஒரு யூகம் நிஜத்திலிருந்து எத்தனை யுகம் தள்ளி இருக்கக்கூடுமென்பதை இந்த இதழ் காட்டிடும் சார் !

      Delete
    3. Editor might have got good story. But people like us will be always in J'sir mindset...Tex is Tex and Tex should be Tex. He is a super hero, like Rajni. Can beat 70people @ 70yrs old :)

      Delete
  36. கிட் வில்லர் : நீங்க சுட்டதுல அந்த அல்லக்கைங்க தெரிச்சு ஓடீட்டாங்க...

    கார்சன் : பொறு அசால்ட் பொசிஸன்ல நின்னுக்கிறேன் உங்கப்பன் வர்றான்... துப்பாக்கிய்ல புகை வருதா...

    கிட் வில்லர் : அவரு உங்கள கண்டுக்கவே இல்லை.

    கார்சன் : அதெல்லாம் பார்த்திருப்பான்.இப்ப வந்து இருபத்தெட்டு வருஷத்துக்கு முந்தின ஒரு ஃபிளாஷ் பேக்க எடுத்து விடுவான் பாரு...அது அப்படியே அடுத்த மாசம் " மிஷினரி பயங்கரம்"ன்னு போட்டு வந்திடும்ல...



    ReplyDelete
  37. சார்..
    மாடஸ்டி இதழுக்கு அட்டைப்படம் அழகு!
    அட்டைப்படத்துக்கு மாடஸ்டியின் இதழ் அழகு!

    ReplyDelete
  38. கிட் வில்லர் : அங்கிள். எந்த ஊருக்கு போனாலும் அங்கிருக்கிற சோப்ளாங்கி ஷெரீப்புங்க உங்கள பார்த்ததும் " ஓஓ நீங்கள் தான் கீர்த்தி வாய்ந்த டெக்ஸ் - கார்சன் ஜோடியா"ன்னு புளிச்சு போன வசனம் பேசுறப்ப உங்களுக்கு எப்பிடி இருக்கும்...

    கார்சன் : "அய்யோடா"ன்னு இருக்கும். கூடவே நானும் " விட்டா நம்ம கால்லயே விழுந்திடுவான் போலருக்கு"ன்னு பின் பாட்டு வசனம் பேசணும் ப்பா...சச்சும்மா. பில்டப் குடுக்கணும்ல...

    ReplyDelete
  39. மாடஸ்டி மினிஸ்கர்ட்ல சூப்பரூ...

    ஆனா பின்னாடி தெரியிற மாடஸ்டி முகம் பாகுபலி ராஜ மாதா மாதிரி இருக்கே...

    ReplyDelete
  40. அது சரி‌...

    இந்த ஈரோடு விஜய்யி - இல்லாட்டி ப்ரியடெல்ஸ் டாக்டருங்களுக்கு மட்டும் எடிட்டரோட புதிய பதிவு ரெடின்னு எப்டி தெரியுதாம்...சம்திங் சம்திங்....புகை சமிக்ஞையோ நைட்ல...

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. (கேப்சன்கள் தொடர்ச்சி)

    கேப்சன் 15:
    கார்சன்:
    5800 ரூவா கொடுத்தா சாந்தாவைக் கட்டிக்கலாமாமே..நல்ல ஆபரா இருக்கேப்பா..கடைசில எனக்குலாம் கூட கலியாணம் நடந்திடும் போலயே.
    கிட்:
    ஐயோ அங்கிள் அது சாந்தா இல்ல,லயன் காமிக்சோட அடுத்த வருட சந்தா..உங்களை...


    கேப்சன் 16:
    கிட்:
    என்ன அங்கிள்..வேட்டையாடு விளையாடு கமல் மாதிரி எதிரிக்கிட்டப் போய்,
    "கண்ணு வேணுமுனு கேட்டியாமே'-னு கேட்டிங்களாமே..சூப்பர் அங்கிள்
    கார்சன்:
    நீ வேறப்பா வெந்த புண்ணுல வேலப் பாய்ச்சிக்கிட்டு...நான் பொண்ணு வேணுமுனுல கேட்டேன்...கல்யாண வயசுல அவனுக்கு ஒரு பொண்ணு இருக்குன்னாங்க அதான்...


    கேப்சன் 17:
    கார்சன்:
    கிட்,நான் சொன்ன மாதிரி நம்மள கலாய்ச்சத எல்லாம் கணக்கு எடுத்து வச்சுருக்கியா?
    கிட்:
    யெஸ் அங்கிள்..பல்ல வச்சு ஒரு பத்து,கொசுவர்த்திய வச்சு பதினைஞ்சு,சிவப்பு சொக்காயிக்கு முப்பது,வறுத்த கறியால நாற்பது,பேச்சுலர்னு ஒரு அறுவது அம்புட்டுதேன்..
    கார்சன்:
    இவங்க பண்றத எல்லாம் பார்த்தா பல நாள் பகை மாதிரில்ல தெரியுது.. ஹம்.. இருக்கட்டும் பார்த்துக்கலாம்


    கேப்சன் 18:
    கார்சன்:
    "காற்றே என் வாசல் வந்தாய்,மெதுவாக கதவு திறந்தாய்..."
    கிட்:
    அங்கிள் நீங்க சொல்றதப் பார்த்தா அது காற்றா இருக்க வாய்ப்பில்லை, எவனாவது கடன்காரனாத்தான் இருப்பான்...


    கேப்சன் 19:
    கிட்:
    ஒண்ணு கவனிச்சிங்களா அங்கிள்..இந்த கலாய்ப்புலயும் டாடி தப்பிச்சுட்டார்...
    கார்சன்:
    ஒத்தைக்கு ஒத்தை நிக்கறப்பவே உங்கப்பன் தோட்டாவுக்கு சிக்க மாட்டார்..இதுலயா சிக்கப் போறாரு...புனித மனிடோவோட நிரந்தர ஆசிர்வாதம் எப்பவும் அவருக்குதானாக்கும்..நாறதுல்லாம் நம்ம பொழப்புதான்...

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சகோதரரே
      சிரிச்சு முடியல

      Delete
  43. Climax ட்விஸ்ட் பலமா இருக்கே சார்

    கலரில் உயிரை தேடி கலரில்
    முன்பு அறிவித்த டிசம்பர் இல்லாமல் ஜனவரியில் வருகிறது

    சரியா சார்?

    ReplyDelete
    Replies
    1. அப்போ சென்னை புத்தக விழாவுக்கு இன்னும் இரண்டு 3 புத்தகங்கள் வருது என்று சொல்கிறீர்கள்.

      Delete
    2. @குமார்..உயிரைத் தேடி கலரில்் வந்து கூட 2 அல்லது 3 கதை வந்தா உங்களுக்கு அரைகிலோ சாக்லெட் 2024 ஈபுவியில்.

      Delete
    3. if CBF and Online Bookfair is planned then surely expect 2 more titles :-) January is gonna rock. 2 regulars + Phantom + 2 book fair entries + Uyirai Thedi ? :-)

      Delete
  44. மறைந்த நண்பர் வெற்றி அவர்களின் மகன் கௌசிக் எழுதியது:

    கிட்: அங்கிள் நீங்க தான் இப்ப யாரையும் சுடலையே அப்ப ஏன் உங்கள் துப்பாக்கில் இருந்து புகை வருது...?

    கார்சன் : அது வந்து நம்ம ஆடியன்ஸ் எல்லாம் நான் வந்து ஏதோ நூறு பேரை சுட்டு தள்ளுன மாதிரி நினைப்பாங்க...
    ஆனா...உண்மை என்னவென்றால் " கம்பியூட்டர் சாம்ரான்டி தான் துப்பாக்கி உள்ளே போட்டு வச்சிருக்கேன்... அதான் புகை வருது‌...

    கிட்: ஹா,ஹா, ஹா

    ReplyDelete
  45. Replies
    1. வாங்க பிரபு. ரொம்ப நாட்களாக ஆளையே காணோம்? பிஸியா?

      Delete
  46. டிசம்பரில் 600 பக்கங்கள் படிக்க வாய்ப்பது அதிர்ஷ்டம்.

    ReplyDelete
  47. நிழல்களின் ராஜ்யத்தில் அட்டையே எதிர்பார்ப்புகளை எகிற வைக்கின்றது. அதுவும் நால்வரையும் ஒரு சேர பார்ப்பது எவ்வளவு அழகு

    இள ரத்தங்கள் இன்னொரு அணியாகவும்.....
    ம்ம்ம்....பல ஆண்டுகளுக்கு முன் வந்த லிலித் பற்றிய கதை & சில ஆண்டுகளுக்கு முன் வந்த டைகர் ஜாக் origin கதை அடிப்படையில் கிட் பிறப்பதற்கு முன்பே 20 வயதுகளில் இருக்கிறார். கிட்டுக்கு இப்போது ஒரு 20 வயதென்றால் டைகருக்கு ஏறத்தாழ 40 வயது. 😵

    ஆக டைகருக்கும் டெக்ஸ் வில்லருக்கும் அதிக வயது வித்தியாசமில்லையே சார்.ர் 💁‍♂️ அப்படியென்றால் டெக்ஸும் (மகன் பிறந்தாலும் கூட) இன்னும் இள ரத்தம் தானே 😁😁😁

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, எங்க ஊரில "இள ரத்தம் ; இளைஞர் அணி" என்றால்லாம் அர்த்தமே வேறு !

      Delete
  48. Hmm - we missed a Bonnelli kadhamba gundu that could have come for december :-)

    ReplyDelete
  49. (உயிரைத் தேடி பிரமோசன் கேப்சன்கள்..)

    கேப்சன் 19:
    கிட்:
    உயிரைத் தேடி கதை எப்படி இருக்கும் அங்கிள்?
    கார்சன்:
    யாருக்குப்பா தெரியும்..அந்த தொடர் வந்தப்ப எனக்கு நாலு வயசுனு நினைக்கிறேன்
    கிட்:
    இந்த டகால்டிதானே வேணாங்கறது..கல்யாணம் பண்ணியிருந்தா நாலு புள்ளைக்கு அப்பா ஆகியிருக்க வேண்டிய நாற்பது வயசுல,உயிரைத் தேடிய படிச்சுட்டு,ராப்பூரா நீங்க நடுங்கிட்டுக் கிடந்ததிங்கனு டாடி ஏற்கனவே என்கிட்ட சொல்லிட்டார் அங்கிள்...


    கேப்சன் 20:
    கிட்:
    படிக்கறதுக்கு ஒண்ணு, பாதுகாக்கறதுக்கு ஒண்ணுனு உயிரைத்தேடிய ரெண்டா வாங்கப் போறேன் அங்கிள்..
    கார்சன்:
    நான்லாம் மூணா வாங்கப் போறேம்பா
    கிட்:
    அட மூணாவது எதுக்கு அங்கிள்?
    கார்சன்:
    ஹிஹி...பதுக்கி வச்சு பின்னாடி விற்கறதுக்கு ஒண்ணுப்பா..


    கேப்சன் 21:
    கார்சன்:
    ஜனவரி ரிலீஸ்,கலருனு எல்லா சர்ப்ரைசையும் கண்டுபிடிச்சுட்டோமுல..,
    நாங்கல்லாம் யாரு.
    கிட்:
    அட நீங்க வேற அங்கிள்.. இதையெல்லாம் நாம கண்டுபிடிச்சுடுவோமுனு அவருக்கும் தெரியும்..விஜயன் சார் சொல்லப் போற சர்ப்ரைசுலாம்...
    கார்சன்:
    சர்ப்ரைசுலாம்....??
    கிட்:
    அதுக்கும் மேல வகையா இருக்கப் போகுது அங்கிள்..

    (எடிட்டர் மைண்ட் வாய்ஸ்:
    ஆஹா..ரொம்ப ஓவராத்தான் எதிர்பார்க்கிறாங்களோ....இப்ப என்னத்தச் சொல்லி சமாளிக்கறதுனு தெரியலையே.. புனித மனிடோ தான் காப்பாத்தணும்...


    ReplyDelete
  50. /// மாடஸ்டி இதழுக்கு அட்டைப்படம் அழகு!
    அட்டைப்படத்துக்கு மாடஸ்டியின் இதழ் அழகு!///
    இதழில் கதை எழுதும் நேரமிது...

    ReplyDelete
  51. அட..உயிரைத் தேடி கலர்ல வருதா.😍

    ReplyDelete
  52. கிட்:-"என்ன பெருசு, டாடி அடிக்கடி காணாம போயிடறாரு? என்ன விசியம்?".

    கார்சன்:- ஆமாப்பா, நானே ராஜானு கெத்தா இருந்தாரு. இப்ப நெலம அப்டி இல்ல.இந்த வருசம் 12 ஸ்லாட்.
    அடுத்த வருசம் 10 ஸ்லாட்தா ஒதுக்கிருக்காங்க. புதுசு புதுசு எறங்கறானுக.
    முன்ன மாதிரி இருந்தா சரிப்படாது.
    அதான் ஆளு சுறுசுறுப்பா ஓடறாப்ல,
    இல்லனா சிலந்திக்கு ஆன கதிதா உங்கப்பனுக்கும். ஓரமா உக்கார வெச்சுருவாங்க.

    கிட்:- அதும் சரிதான்.

    ReplyDelete
  53. தி "ட்டு" டயலாக்!!!
    கிட்: என்ன அங்கிள்! எதுக்கு உங்க முகத்துல இந்த அசட்டு சிரிப்பு?
    கார்சன்: (பெருமிதம் பொங்க!!!) அடேய் கிட்டு!
    இந்த அங்கிள் உங்க அப்பன் கிட்ட லோல் பட்டு
    அசிங்கப்பட்டு
    அவமானப்பட்டு
    வெட்கப்பட்டு
    வேதனைப்பட்டு
    வாங்கியாச்சு பல ஷொட்டு!
    என் பிஞ்சு காதலை அவசரப்பட்டு
    மொட்டுலயே பிச்சி எரிஞ்ச உன் அப்பன் ஒரு வெத்து வேட்டு
    அதை எல்லாம் நோண்டிக் கிட்டு
    இருந்தா நீ தான் அடுத்த டார்கெட்டு
    அவனால என் அழகு லட்டு
    போயிட்டா இந்த இளம் அங்கிளை விட்டு
    என் துப்பாக்கி சுட்டு
    பலர் வாங்கிட்டாங்க மேல டிக்கெட்டு
    (டெக்ஸ் வரும் சத்தம் கேட்டு)
    உங்கப்பன் கிட்ட வாங்க வேணாம் குட்டு
    இந்த விஷயத்துல நீயும் அவனும் கூட்டு
    இப்போ இந்த அதிர்வேட்டு அங்கிள்
    உங்க அப்பன் வர்றதுக்கு முன்னாடி‌ சட்டு புட்டு ன்னு
    இந்த இடத்தை காலி பண்ணிட்டு
    ஆகப் போறாரு அப்பீட்டு
    இல்லன்னா உங்க அப்பன் போடுவான் மொக்கை பிட்டு
    அதை கேட்க வேணாம்ணா நீயும் என்னோட நடையை கட்டு!

    ReplyDelete
    Replies
    1. ayya neenga vasanakarthaavaa? superb

      Delete
    2. ஏய் டண்டனக்கா டனக்குடக்கா :-)

      Delete
    3. ஹா ஹா ஹா இல்லை நண்பரே கண்டிப்பாக இல்லை. நன்றி மக்களே 🙏

      Delete
  54. டெக்ஸ் அட்டைப்படம் டார்க் பின்னணியில் சுவாரஸ்யமாக உள்ளது.

    ReplyDelete
  55. மாடஸ்டியின் அட்டைப்படமும் ..மாடஸ்டியின் வதனமும் அழகு..பின்னாடி இருக்கும் பெண்தான் யாரெனத் தெரியவில்லை.
    :-)

    ReplyDelete
  56. சார். உயிரைத் தேடி கலரில் தானா? இன்ப அதிர்ச்சியா இருக்கு. ஆனா எப்படி கட்டுபடியாகும் என்னும் கேள்வியும் வருது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார். எவ்வளவு அதிகம் என்று சொன்னால் அந்த amount அனுப்பி விடலாம். என் பெயர் டைகர் போல கலர் மற்றும் கருப்பு வெள்ளையில் வந்தாலும் மதி.

      Delete
  57. @Edi Sir..😍😘

    எங்கள் பிரிய *உயிரைத்தேடி* கலரில் வருவது மிக்க சந்தோஷம்..😃👏👍

    ஆனால் முன்பதிவில் நாங்கள் செலுத்தியது வெறும் ரூ.200 மட்டுமே.😶

    எனவே கலரில் வரும்போது ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையை நண்பர்கள் நாங்கள் செலுத்த முழுமனதுடன் தயாராகஉள்ளோம்.🙏😍

    தங்களுடைய சுமையை பங்கு போட்டுகொள்ள எங்களை தயவுசெய்து அனுமதியுங்கள்.. 😍😃🙏💐

    ReplyDelete
    Replies
    1. // எனவே கலரில் வரும்போது ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையை நண்பர்கள் நாங்கள் செலுத்த முழுமனதுடன் தயாராகஉள்ளோம். //

      +1

      Delete
    2. உரிய நேரத்தில் அறிவிப்பு வரும் சார் !

      Delete
  58. சூப்பர் சார் ....டெக்ஸும் மாடஸ்டியும் போட்டி போடுது ஒன்று கூடுவதில்,....மற்றது குறைப்பதில்....ஆனா வசீகரம் அள்ளுவது வண்ணங்களும் டாப்....அதும் டெக்ஸின் நீல அட்டை......
    சொல்லாமல் அள்ளுது அந்தக் கடைசி வண்ணப் பக்கம்....இது வரை வந்த பக்கங்களை தூக்க்கி சாப்பிடுவது டன் பல நண்பர்களின் உற்சாகத்தை எகிறச் செய்துள்ளீர்கள்....


    வண்ண நிலவே வைகை நதியே....தேடிப் போவோமா உயிர்தனையே....
    மூலத்தில் இல்லாதது இவ்வழகே...
    நெனச்சுப் பாராதது வண்ணஉடையே

    ReplyDelete
  59. எப்பவும் வெளிப்படையா பேசும் நம்ம எடிட்டர் கடந்த ரெண்டு மூனு நாளா பூடகமாவே பேசிக்கிட்டிருக்கார் கவனிச்சீங்களா மக்களே?!!

    இருக்கட்டும்.. இருக்கட்டும்.. இதுகூட நல்லாத்தான் இருக்கு!

    பேசாம இந்தப் பதிவின் தலைப்பை 'ஒரு பூடகப் பதிவு'ன்னே வச்சிருக்கலாம்!

    ReplyDelete
  60. @Erode Vijay..😃😍

    இன்னைக்கு Caption result க்கு பதிவு போடறதா சொல்லியிருக்காரு..👍

    அதில் விடைகள் கிடைக்கலாம்..😍👏👍

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி! கேப்ஷன் போட்டியில வெற்றி பெற்றவர்களைப் பற்றிய விவரத்தையாவது பூடகமாச் சொல்லாம நேரடியாச் சொல்லுவாரான்னு பார்ப்போம் பாபு ஜி! ;)

      Delete
    2. இம்முறை வெற்றி பெற்றது மியாவியார் என்று நேரடியாகவே சொல்வார் போலயே சகோ?

      Delete
    3. @Erode VIJAY பூடகமாக சொல்வதானால் எப்பிடி சொல்வார் சகோ 😋😋😋

      Delete
    4. ///இம்முறை வெற்றி பெற்றது மியாவியார் என்று நேரடியாகவே சொல்வார் போலயே சகோ?//

      நான்தான் இந்தவாட்டி போட்டியிலயே இல்லீங்களே சகோ?!! (மக்களின் மைன்டுவாய்ஸ் : அப்படியே இருந்துட்டாலும்.. பரிசுகளையும், பதக்கங்களையும் அள்ளிட்டுத்தான் மறுவேலை!!)

      Delete
    5. ///பூடகமாக சொல்வதானால் எப்பிடி சொல்வார் சகோ///

      கிட்டத்தட்ட இப்படி இருக்குமோ என்னவோ சகோ :
      "எல்லா கேப்ஷன்களையும் இறுக்கமான முகத்துடன் இரண்டுமுறை படித்து முடித்தேன். இறுதியில், இப்போட்டியில் பங்கு கொள்ளாத அனைவருக்கும் பரிசளித்துக் கெளரவிப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்"

      Delete
    6. ஹி ஹி புதிய பதிவா? அக்கட மேலேச் சூடு என இந்த பதிவின் இறுதியில் வெற்றி பெற்றவர்களின் விபரத்தை மட்டும் ஆசிரியர் சேர்க்கப் போகிறார்:-)

      Delete
  61. கிட்: அங்கிள்... அங்கிள்... சூப்பர் நியூஸ்!
    கார்சனின் கடந்த காலம் போல, NBS போல இன்ப அதிர்ச்சியா, செம்ம குறைஞ்ச விலை "உயிரைத் தேடி" முழுவண்ணத்திலே வர்ற போறதா மக்கள் அரசல் புரசலா பேசிக்கிறாங்க....

    கார்சன்: ஆசை! தோசை!! அப்பளம்!!! வடை!!!!
    ஏன்பா, ஆறேழு வருசத்திற்கு முன்னே வெளிவந்த "என் பேர்ர் டைகர்ர்ர்ர்ர்" புக்கே BW வெர்ஷன் ரூபாய் 250/- கலர் EDITION ரூபாய் 450/-
    என்னை மாதிரி சின்ன பசங்க ஹீரோவா இருந்தா விலையைய சல்லிசா கேட்பீயோ?

    ReplyDelete
  62. டெக்ஸ் அட்டைப்படம் கலரிங் அருமையாக உள்ளது
    நிழல்களில் ராஜ்யத்தில் கொஞ்சம் மிரட்டும் தோனியில் உள்ளது
    ஆவலுடன் உள்ளேன்

    ReplyDelete
  63. சேலம் மற்றும் விருதுநகர் புத்தக விழாக்களில் நாம் சிறப்பிக்க வாழ்த்துக்கள்

    விருதுநகர் மற்றும் சேலத்தில் பங்காற்றிடும் நம் காமிக்ஸ் சகோதரர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்

    ReplyDelete
  64. வாவ்!! அருமையான கேப்ஷன் Propman சகோ! நல்லா பூடகமா எழுதியிருக்கீங்க. நிச்சயமாய் பரிசு உங்களுக்குத்தான்!

    ReplyDelete
  65. கார்சர்: எங்கப்பா காலைல இருந்து உங்கப்பாவை காணோம்...?
    கிட் வில்லர்: இன்டர்நெட் centre போயிருக்கார். சிலந்தி கதைகள் கைவசம் இருக்கையில் அன்றைக்கு 18000 பிரதிகள் விற்று தீர்த்த சிலந்தி அங்கிள் கிட்ட skypeல ஆலோசனை கேட்க போயிருக்கார்... டெக்ஸ் 75 ஆண்டில் அதில் ஒரு பத்து சதவீதமாவது நம்ம புக் விக்கணும்னு குறிக்கோளோடு இருக்கார்.

    ReplyDelete
  66. வரும் திங்களில் கேப்ஷன் போட்டியின் வெற்றியாளர்களை அறிவிப்பதாக எடிட்டர் சொல்லியிருப்பதிலும் பூடகங்கள் பொங்கி வழிவதாக இப்போது தோன்றுகிறது!

    'திங்கள்' என்றால் 'மாதம்' என்றொரு அர்த்தமும் இருக்கிறதே?!!

    ReplyDelete
    Replies
    1. 'திங்கட்கிழமை' முடிவடைய இன்னும் 30 நிமிடங்கள் தான் பாக்கி! ஹிஹி!!

      Delete
  67. எடிட்டருக்கும் அவரது துணைவியாருக்கும் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.🎇🌅🎉🎁💥🌹💐

    ReplyDelete
  68. @Edi Sir..😍😘
    Manymore Happy returns of the day Mr & Mrs Edi.💐🌷🌹👏👍🙏

    ReplyDelete
  69. சேலம் & விருதுநகர் புத்தகத்திருவிழா எப்படி உள்ளது நமது ஸ்டாலில் கூட்டம் எப்படி உள்ளது என புத்தகத் திருவிழாவிற்கு போன நண்பர்கள் சொல்ல முடியுமா ?

    ReplyDelete
  70. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் எடிட்டர் சார்💐💐💐💐💐💐

    ReplyDelete
  71. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ஆசரியர் சார்💐💐💐

    ReplyDelete
  72. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் எடிட்டர் சார் 🎉🎉

    ReplyDelete
  73. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ஆசிரியரே 💐💐💐💐💐

    ReplyDelete
  74. Wishing you Happy Wedding anniversary sir.

    ReplyDelete
  75. இனிய திருமணநாள் நல்வாழ்த்துகள் ஆசிரியர் சார்.

    ReplyDelete
  76. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் எடிட்டர் சார் 💐💐

    ReplyDelete
  77. இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்-எடிட்டர் சார்..

    ReplyDelete
  78. Many thanks all !!

    டெட்வுட் டிக்கோட பயணம் ஓடிட்டு இருக்கச்சே, வாயிலே வர்ற வார்த்தைங்க எல்லாமே ஒரு மார்க்கமா இருந்திடுமோங்கிற பயத்திலேயே ரெண்டு நாளா இங்க தலை காட்டலை ! வூட்டாண்ட கூட முடிஞ்சமட்டுக்கு பேச்ச குறைச்சே பேசிட்டிருக்கேன் ரெண்டு நாளா !! Be back on Thursday !

    ReplyDelete
    Replies
    1. For a Madrasi this is not a worrying factor sir - if you were in my place that is :-) Even voottaandai they understand and pat their own heads heavily and go :) Many Happy Returns !

      Delete
  79. கழுகு வேட்டையில் (1993?) திருமண அழைப்பிதழ் பார்த்தவுடன் சிவகாசி எங்க இருக்குன்னு மேப்பில் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்... ஸ்கூல் முடிஞ்சவுடன் சாயங்காலம் கல்யாணம் போலாம்ன்னு நினைச்சேன்... எப்படியும் போகணும்னு முடிவு பண்ணிட்டேன்...?? பிறகு தான் அது வெகுதூரம்ன்னு தெரிஞ்சது.... ஆனா சிவகாசி என்னால் போக முடிஞ்சது என்னமோ 2007ல் தான்.

    ReplyDelete
  80. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

    ReplyDelete