Powered By Blogger

Thursday, November 28, 2024

கொஞ்சம் ஊதிக்கவா பீப்பீயை ?

 நண்பர்களே,

வணக்கம். ஒவ்வொரு மாதமும் ரகரகமான புக்ஸ் கூட்டணி போட்டுத் தயாராகும் போதெல்லாம், அவற்றை உங்களிடம் ஒப்படைக்கும் ஆர்வம் அலையடிப்பது வாடிக்கை தான் ! But இந்த தபாவோ - அலையெல்லாம் நஹி ; சுனாமி ரேஞ்சுக்கு உள்ளுக்குள் ஆர்வம் ஊற்றடிக்குது !! ஆண்டின் இறுதி மாதமும் அதுவுமாய் - அட்டவணையிலிருந்து மாறுபடும் சில புக்ஸ் ; சில புத்தக விழா ஸ்பெஷல் இதழ்கள் ; ஒரு க்ளாஸிக் தடத்தின் முதல் ஆல்பம் - என கைகொள்ளா எண்ணிக்கையினில் புக்ஸ் ரெடி !! And அவை ஒவ்வொன்றுமே தத்தம் பாணிகளில் தெறி மிரட்டு மிரட்டுகின்றன !! பீப்பீ smurf ரேஞ்சுக்கு நானே பீப்பீ ஊதிப்பது அபச்சாரமாய் தோன்றிடலாம் தான் ; but ஏழேழு கழுதை வயசான எனக்கே இந்த மாதத்து அணிவகுப்பைப் பார்க்கும் போது, ஜிலோன்னு கீது ; so எச்சூஸ் தி பீப்பீ this one time ப்ளீஸ் மக்களே !!  

ஊதுறதுன்னு ஆன பிற்பாடு முழுசாய் ஊதிப்புடுவோமே - சரி தானுங்களா  ? இம்மாதத்தின் பிரதான highlight - "அச்சுத் தரம்" என்று சொன்னால் அது நிச்சயம் மிகையே நஹி என்பதை நாளைய பொழுதில் பார்சல்களை உடைத்துப் பார்க்கும் போதே உங்களுக்கும் புரியும் folks !! 

தோர்கல் ஒரு பக்கம் fire விட....

இன்னொரு பக்கம் கபிஷ் கலக்கியெடுக்க.....

புதுயுக கலரிங்கில் நம்ம தானைத் தலைவர் ஸ்பைடர் 2.0 மிரட்ட....

இவர்களுக்கெல்லாம் நடுவே நம்ம 'தல' The Magic Moments ஸ்பெஷல் இதழில் வண்ணத்தில் அடிக்கிறார் பாருங்கோ ஒரு சிக்ஸர் - அது முற்றிலுமாய் வேறொரு ரகம் !! 

அந்த இதழைக் கையில் ஏந்தும் நொடியினில் உள்ளுக்குள் பொங்கிய பெருமை இருக்கே - அதனை எழுத்தில் வடிப்பது உலகச் சிரமம் !!சத்தியமாய் இப்படியொரு ஆல்பத்தினை இந்தத் தரத்தில், இந்த விலையில், இன்றைய இந்த மார்க்கெட் சூழலில் வெளியிட, நம்ம லயனைத் தாண்டி வேற ஆருக்கும் சாத்தியமே லேது என்று கூவிட வேண்டும் போல இருந்தது !! Absolute தெறி !! 


And ELECTRIC '80s தனி தடத்தில் க்ளாஸிக் சாகசங்களுடன், நம்ம தலைவர் பவனி வரும் மெகா சைஸ் இதழைப் பார்க்கும் போது Phewwwwwwwww என்ற பெருமூச்சே சாத்தியமாகிறது !! இருநூறு ரூபாய்க்கு காலத்துக்கும் பத்திரப்படுத்தக் கூடியதொரு இதழை நீங்கள் ஆதரித்தால், இவற்றைத்  தூக்கிக்கினு தொள்ளாயிரம், ஆயிரம் என்று காமிக்ஸ் சேவை புரிய விழையும் ஆர்வலர்கள் சற்றே அடக்கி வாசிக்க வாய்ப்பிருக்கக்கூடும் ! This is a book you simply must have மக்கா !! 


நாளை காலை புக்ஸ் உங்கள் இல்லத்தினை எட்டிடும் தருணத்தில் மொத்த இதழ்களோடும் selfie-க்களைப் போட்டுத் தாக்கினால் - கடந்த 3 வாரங்களின் உழைப்பிற்கு எங்க டீம் மொத்தமாய் மகிழ்வுறும் !!! So கொஞ்சமே கொஞ்சமாய் நேரம் எடுத்துக் கொண்டு selfies ப்ளீஸ் !!

அப்புறம் சந்தா சார்ந்த குட்டியானதொரு நினைவூட்டலுமே folks : 


Before I sign out - இதோ நமது சேலம் புத்தக விழா சார்ந்த update :

நாளை துவங்கவுள்ள விழாவினில் ஸ்டால் நம்பர் 94-ல் உங்கள் வரவினை எதிர்நோக்கிக் காத்திருப்போம் !! Please do visit with family !!

அப்புறம் "பிரபல டாக்டர் சேலம் விசிட்" ரேஞ்சுக்கு இல்லாவிடினும்,  நம்ம சத்துக்கு ஏற்ப வரும் ஞாயிறன்று சேலத்தில் ஆஜராகிட எண்ணியுள்ளேன் !! Hope to see you there மக்களே !! Bye for now !! Happy Reading !!


229 comments:

  1. Replies
    1. ஊருக்கு போறேன்னு சொன்னீங்க நண்பா.. போகலையா.. மாதத்திற்கு ஒரு முறையாவது யோகம் தான்.

      வாழ்த்துக்கள் நண்பரே..

      Delete
    2. நன்றிகள் நண்பர்களே...

      Delete
    3. நன்றி ஸ்டீல், பரணி

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே.

    ReplyDelete
  4. வணக்கம் ஆசிரியர் சார்

    ReplyDelete
  5. பத்துக்குள்ள நானும் வந்துட்டேன்..

    ReplyDelete
  6. சார் ஞாயிறு சேலத்தில் சந்திப்போம்.

    ReplyDelete
  7. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  8. சென்னை புக் பேர் எப்போ சார்

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. இம்முறை மோதல் தலைக்கும் தோர்கலுக்கும் தான் போல

    ReplyDelete
  11. ஆஹா.. வார இடைப்பதிவு... புத்தகங்களை படிக்க/பார்க்க ஆவலைத் தூண்டுகின்றன.

    அடுத்த ஆண்டும் நம் இதழ்கள் தெறிக்க விடட்டும்..

    இப்பதிவின் மூலமாக ஸ்மர்ஃப்ஸ்-ஐ ஞாபகப்படுத்திவிட்டீர்கள். இவர்களது புதிய கதைகள் வரும் ஆண்டில் வெளிவர வாய்ப்புள்ளதா சார்?

    ReplyDelete
    Replies
    1. அங்க பீப்பின்ன தலைப்பு பார்த்ததுமே அதேதான் ....உள்ள ஆசிரியரும் ஸ்மர்ஃப்னு வார்த்தைய விட்டதால்....வருவது நிச்சயம்

      Delete
  12. வெயிட் for bottle பூதம்

    ReplyDelete
  13. வணக்கம் நண்பர்களே!!

    வெல்கம் தோர்கல்!!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா....நீண்ட நாட்களுக்கு பிறகு தோர்கல்🥳

      Delete
    2. எல்லாமே மாஸ் கிளப்புது 💥👏

      Delete
  14. தெறி.. 💥💥💥💥💥💥💥

    ReplyDelete
  15. பதிவை படிக்கும் போதே எதிர்பார்ப்பு மீட்டர் எகிறி அடிக்குது💥💥💥🎊🎊🎊

    Awesome Work by You and Team Sir 😍🤝👏👏👏👏👏

    ReplyDelete
  16. Waiting for receiving டப்பி 😍😍😍

    ReplyDelete
  17. சார் இந்த புத்தகம் கிளம்பிய பதிவை ஒவ்வொரு மாதமும் காணும் போது எல்லாம் அப்படி ஒரு சந்தோசம். அதும் நாளை புத்தகம் கையில் கிடைக்கும் போது அதை விட சந்தோசம்.

    சந்தா கட்டுவதன் சந்தோசம் ரொம்ப பெரிது.

    ReplyDelete
  18. // ஏழேழு கழுதை வயசான எனக்கே இந்த மாதத்து அணிவகுப்பைப் பார்க்கும் போது, ஜிலோன்னு கீது ; so எச்சூஸ் தி பீப்பீ this one time ப்ளீஸ் மக்களே !! //

    :-)
    Go ahead sir :-)

    ReplyDelete
  19. // நம்ம 'தல' The Magic Moments ஸ்பெஷல் இதழில் வண்ணத்தில் அடிக்கிறார் பாருங்கோ ஒரு சிக்ஸர் - அது முற்றிலுமாய் வேறொரு ரகம் !!

    அந்த இதழைக் கையில் ஏந்தும் நொடியினில் உள்ளுக்குள் பொங்கிய பெருமை இருக்கே - அதனை எழுத்தில் வடிப்பது உலகச் சிரமம் !!சத்தியமாய் இப்படியொரு ஆல்பத்தினை இந்தத் தரத்தில், இந்த விலையில், இன்றைய இந்த மார்க்கெட் சூழலில் வெளியிட, நம்ம லயனைத் தாண்டி வேற ஆருக்கும் சாத்தியமே லேது என்று கூவிட வேண்டும் போல இருந்தது !! Absolute தெறி !! //

    Super sir!! super!!

    ReplyDelete
  20. // This is a book you simply must have மக்கா !! //

    Okay மக்கா :-)

    ReplyDelete
  21. // அப்புறம் "பிரபல டாக்டர் சேலம் விசிட்" ரேஞ்சுக்கு இல்லாவிடினும், //

    சிவகாசி குசும்பு :-)

    ReplyDelete
  22. செம சார்...அந்த நாலு இம்மாத புத்தகங்களே தூக்கியடிக்க ...கபீசும்...ஸ்பைடரும் வந்தா கேக்கவா வேணும்...ரெண்டு பேரின் முன்நெற்றியும் கூர் மண்டை என்பதுடன்...ஸ்பைடரின் குரங்கு சேட்டையும்...கபீசின் மனித சேட்டையும் நாளைய பொழுதை கலர்ஃபுல்லாக்கட்டும்...கூடவே தோர்கள் ராஜ்ஜியமும்...வண்ண டெக்சும்...அதுவும் எடிட்டர் ஸ்பெசலெனும் போது...கபீச காட்டி ஆட்ரா ராமா...தாண்ட்ரா ராமா தான்...நாளைய பொழுது ஸ்டில்லாகிடுமோ

    ReplyDelete
  23. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  24. // சத்தியமாய் இப்படியொரு ஆல்பத்தினை இந்தத் தரத்தில், இந்த விலையில், இன்றைய இந்த மார்க்கெட் சூழலில் வெளியிட, நம்ம லயனைத் தாண்டி வேற ஆருக்கும் சாத்தியமே லேது என்று கூவிட வேண்டும் போல இருந்தது !! Absolute தெறி !! //
    கேட்கும்போதே மகிழ்ச்சியா இருக்கு சார்,அருமை,அருமை...

    ReplyDelete
  25. // நாளை காலை புக்ஸ் உங்கள் இல்லத்தினை எட்டிடும் தருணத்தில் மொத்த இதழ்களோடும் selfie-க்களைப் போட்டுத் தாக்கினால் //
    டிசம்பர் இதழ்கள் இன்னிக்கே கிளம்பிடுச்சா,அடடே,அருமை,அருமை.....

    ReplyDelete
  26. // நம்ம சத்துக்கு ஏற்ப வரும் ஞாயிறன்று சேலத்தில் ஆஜராகிட எண்ணியுள்ளேன் !! //
    மாங்கனி மாநகர் உங்களை அன்புடன் வரவேற்கிறது சார்...

    ReplyDelete
  27. டெக்ஸ் வருவதென்றாலே ஒரு வாரத்துக்கு முன்பே பரபரவென்றிருக்கும் . ஆனால் இம்மாத டெக்ஸ் பற்றிய உங்கள் முன்னறிவிப்பு உச்சபட்ச எதிர்பார்ப்பை கிளறிவிட்டுள்ளது. நாளை பார்சலை பிரிக்கும் போது ஹைய்யோ எப்படி கத்தப்போறோமோ. டெக்ஸ் டெக்ஸ் டெக்ஸ் டெக்ஸ் டெக்ஸ் டெக்ஸ்................

    ReplyDelete
  28. டெக்ஸ் ஸ்பைடர் கபிஷ் தோர்கல் டைலன்டாக் எல்லாமே தெறி ரக ஆல்பங்கள்.மாஸான ஒரு மாதத்தை கொடுத்துவிட்டு ஒண்ணுமில்லேனு சொல்றிங்களேங்க சார்

    ReplyDelete
  29. எடி Ji,
    கிளாசிக் சூப்பர் ஸ்டார் ஸ்பெஷல் பாகம் ஒன்னு ,ரெண்டு, மூணு, என்று தனித்தனியாக போடாமல் மொத்தமாக ஒரு புத்தகமாக போடலாம் அல்லவா.

    ReplyDelete
    Replies
    1. மூணு பாகமா அங்கே வந்ததை மூணு பாகமாவே இங்கேயும் போட்ருக்கோம் நண்பரே!

      Delete
  30. வாழ்த்துக்கள் sir... நன்றி.. ❤️👍🙏...

    ReplyDelete
  31. ROFL sir - Prabala doctor salem visit - adhula oru oththumai yennanna angayun A Set, B Set, C Set-nu pOttudhaan sir vippaanga :-)

    ReplyDelete
    Replies
    1. அத விட கொடுமை - தங்குறதுக்கு ஹோட்டல் தேடினா, சிவராஜ் ஹோட்டல்-ன்னு ஒண்ணு வந்து நிக்குது! 🥴🥴

      Delete
  32. சூப்பர், எங்க சேலம் ஊருக்கு வாங்க.. வரவேற்க ரெடி....

    ReplyDelete
    Replies
    1. ஆஹா சார் நீங்க வரிங்களா? நாம் இதற்கு முன்பு சந்தித்து இருக்கிறோமா?

      Delete
  33. அடுத்த வெளியீடுகள்
    1. கேப்டன் டைகர் முத்து 500
    2. டெக்ஸ் இளமை எனும் பூங்காற்று
    3. வேதாளர் V காமிக்ஸ்
    சூப்பர் சார் சூப்பர் சார்.

    சந்தா 2025 ஆரம்பம் அமர்க்களம்.

    ReplyDelete
  34. அதும் டிசம்பர் மாதம் 7 புத்தகங்கள் வாரே வா. சும்மா தெறிக்க விடறீங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. 4 சந்தா, 1 எலக்ட்ரிக் 80s, 2 சேலம் புத்தக விழா ஸ்பெஷல். ஆகா ஆகா

      Delete
  35. அலுவலகம் கிளம்புவதற்கு முன் இதழ்களை வாங்கி விட்டு தான் கிளம்ப வேண்டும் இல்லையேல் நாளை தரிசிக்க முடியும்..ஒரு மணி நேர தாமதத்திற்கு பர்மிஷன் போட வேண்டியது தான்..

    ReplyDelete
  36. ஈரோடுதான் இந்த முறை மிஸ்ஸாகி விட்டது..சேலத்திற்கு ஆவலுடன் வெயிட்டிங் சார்...

    ReplyDelete
  37. ஆண்டின் இறுதி மாதத்தை கலக்கி எடுக்குறீங்க சார்...சூப்பர்...:-)

    ReplyDelete
  38. 1. நில்... கவனி... வேட்டையாடு..!
    2. வேங்கை என்றும் உறங்காது..!


    ரோமப் பேரரசர் தத்துவவாதி
    மார்கஸ் ஆவ்ரேலியஸ், இவர் நேரடியான அரச வாரிசு இல்லை. ராஜகுடும்பத்தில் பத்தோடு பதினொன்றாய் பிறந்தவர். மூன்று வயதில் தந்தையை இழந்து தன் மாமாவால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர். ஒரு நெருக்கடி தருணத்தில் அவரது மாமா அன்டோனியஸ், ரோமப் பேரரசர் ஹாட்ரியனால் வாரிசாக தத்தெடுக்கப்பட அவர் வழியில் ஆட்சிக்கட்டிலுக்கு வந்தவர்.

    ஒரு மனிதனின் மேம்பட்ட பெருவாழ்வுக்கு நல்லொழுக்கம் மட்டுமே போதுமானது என்ற ஸ்டோயிக் தத்துவவியலை ஏற்ற இவர் அதனை ஒட்டியே தன் வாழ்க்கையை வாழ்ந்தவர். இவர் தனது கருத்துகளை தன்முனைப்புக்கான நோக்கில் ஒரு குறிப்பேட்டில் எழுதி வந்தார். அவ்விதம் அவர் எழுதியவையே 'தி மெடிடேஷன்ஸ்' என்ற நூலாக தொகுக்கப்பட்டுள்ளது.

    நமக்கு நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் இயற்கையின் நியதிப்படியே நடக்கிறது. அதற்கு நம் சுய ஒழுக்கமும் அது சார்ந்த நம் எண்ணங்களுமே மூல காரணம். அவற்றை நம் நல்லொழுக்கம் மூலம் சிறப்பாக கட்டமைத்துக் கொண்டால் பெருவாழ்வு வாழ முடியும். இன்னபிற அயல்காரணிகளான பணம், புகழ், அதிகாரம் போன்றவை எதுவும் அதில் மாற்றம் செய்ய இயலாது. எத்துணை துன்பமான சூழலிலும் ஒருவன் தன் ஒழுக்கத்தை கைவிடலாகாது என்பதையே ஸ்டோயிக் தத்துவவியல் கூறுகிறது.

    ஒரு வெறிகொண்ட மனித வேட்டைப் பிரியனுக்கு, மார்கஸ் ஆவ்ரேலியஸின் போதனைகள் எவ்விதம் ஊக்கத்தைத் தரும் காரணிகளாக இருந்திருக்கும் என்றே தேட விழைகிறேன்.

    ஸ்டோயிக் தத்துவப்படி இயற்கையின் நியதிக்கு உட்பட்டு அதன் வரையறையையொட்டி வாழ்வதே ஒழுக்கம். இயற்கையின் படைப்புகள் அனைத்தும் நல்லவைகளே. அங்கே தீயதென்று எதுவுமில்லை. அவற்றை நாம் ஏற்றுக்கொள்வதில்தான் நமக்கு முரண்பாடுகள் ஏற்படுகிறது. நமக்கு நல்லதென தோன்றுவது பிறருக்கு தீங்காய் இருப்பதும் அதன் மாறுதலையும் இவ்விதமே.

    ஒரு வேட்டையில் வேட்டையனும் இரையும் (Predator and Prey) இரு முனைகள். இரண்டும் வெற்றிபெற சமவாய்ப்பு உள்ளது. இதுவே இயற்கையின் நியதி. வெற்றி பெறுவோர் பிழைத்துக் கொள்வர். சர்வைவல் ஆப் தி பிட்டஸ்ட் என டார்வின் கூறியது போல இதுவே இயற்கைத் தேர்ந்தெடுப்பு. ஆனால் இதை வெறும் உணவுக்காக அன்றி முழு வாழ்வுக்கும் பொருத்தி பார்க்க இயலுமா?

    ஆம்... எல்லா சூழல்களிலும் தப்பி பிழைப்பதே வாழ்க்கை. அதற்கான வாய்ப்புகள் இயற்கையின் நியதிப்படி சமமாக பகிரந்தளிக்கப் படுமானால் அது ஒழுங்கிற்கு உட்பட்டதே. இதையே தீர்மானமாக ஏற்றுக் கொள்கிறார் நம் நாயகனான நிக்கோலாய்.

    *மீதி பிறிதொரு நாளில்...*

    ReplyDelete
    Replies
    1. வெறி கொண்டவனல்ல...

      வெற்றியைக் கொண்டவன்...

      அதற்கான யுக்திகளைக் கொண்டவன்...

      திட சித்தம் கொண்டவன்...

      துவளா அச்சிந்தை அசிரத்தையானதையும் ஒத்துக் கொண்டவன்...

      சுயத்தின்மேல் அபார தன்னம்பிக்கைக் கொண்டவன்...

      ஆடும் களத்திற்கேற்ப கவனம் கொண்டவன்...

      களத் தோல்விகளிலும் ,காதல் தோல்விகளிலும் நொடியினில் மீண்டவன்...

      Delete
    2. தோர்கலுக்கு சளைத்தவனல்ல...

      Delete
  39. சார், இந்த இதழ்கள் இன்னும் இணையத்தளத்தில் விற்பனைக்கு கிடைக்கவில்லை. உடனடியாக ஆவன செய்யவும்.

    ReplyDelete
    Replies
    1. காலையே போட்டாச்சு சார்!

      Delete
  40. இவர்களுக்கெல்லாம் நடுவே நம்ம 'தல' The Magic Moments ஸ்பெஷல் இதழில் வண்ணத்தில் அடிக்கிறார் பாருங்கோ ஒரு சிக்ஸர் - அது முற்றிலுமாய் வேறொரு ரகம் !! ஆஹா..டெக்ஸைத்தான் முதலில் படிக்கவிருக்கிறேன்..

    ReplyDelete
  41. *வி காமிக்ஸ்*

    *சட்டைப் பையில் சாவு*


    டைலன் டாக் நம்ப முடியா அமான்ஷ்ய சம்பவங்களை துப்பறியும் நாயகர்...தாயும் ,அவரின் புதல்வனும் வசிக்கும் இல்லத்தில் திடீர் அமான்ஷ்ய நிகழ்வுகள் நடைபெற அதை துப்பறிய டைலன் டாக் உள்நுழைய அதன்பிறகு நடக்கும் சம்பவங்களும் ,பாதிப்புகளும் ஓர் எதிர்பாரா முடிவையும் , அனுபவத்தையும் நமக்கு ஏற்படுத்துகிறது சட்டைப்பையில் சாவு...அட்டகாசமான ஒரு அமான்ஷ்ய த்ரில்லர் சாகஸம் ..கதையில் மட்டும் உள் உணர்ந்து வாசிக்கும் பொழுது இந்த கறுப்பு வெள்ளை சித்திரங்களே நம்மை அச்சத்தில் கொண்டு செல்கிறது..

    *அச்சமுற தயங்காதீர்கள்*

    ReplyDelete
  42. சும்மா பெரிய சைசு பார்சல் மட்டுமல்லாது கொஞ்சம் வெயிட்டான கைப்பற்றினார்...வீட்டுக்கு போய் மகன வச்சு பிரிச்சதும் வாரேன்...செம சார்

    ReplyDelete
    Replies
    1. மகனார் இன்னுமா பார்சல் பிரிக்கல கவிஞரே?

      Delete
  43. நா சொன்னது போலவே அலுவலகம் செல்வதற்கு முன் கண்டிப்பாக வரும் என்ற என் நம்பிக்கையின் படி எஸ்டி கொரியரில் இதழ்களை கைப்பற்றி விட்டு அப்படியே அலுவலகம் கிளம்பினேன்..அனைத்து இதழ்களையும் வழக்கம் போல் பொறுமையாக ரசிக்க காலை நேரத்தில் நேரம் இல்லாத காரணத்தால் டைலன் டாக் இதழை மட்டும் எடுத்து வைத்து வாசித்தும் ஆயிற்று..இப்பொழுது மதிய லஞ்ச் டைமில் ஒவ்வொரு இதழாக இப்பொழுது தான் எடுத்து ரசிக்கிறேன் ஒரு பைவ் ஸ்டார் இணிப்பை ருசித்து கொண்டே...

    முதலில் கனமான டெக்ஸ் இதழை கைகளில் ஏந்தும் பொழுதே அதன் பருமனும் ,கனமும் பெருமகிழ்ச்சியை அளித்தன..அதுவும் அட்டைப்பட சித்திரமும் ,வண்ணங்களும்..அச்சுத் தரமும் புரட்டி ,புரட்டி ரசிக்க வைத்தன..என்னத்தான் ஆசிரியர் வேலைப்பளு ,பலர் வாசிப்பதை தாமதிக்கிறார்கள் ,லைட் ரீடிங் என்றெல்லாம் சொன்னாலும் இது போல் கனமான இதழை கைகளில் ஏந்தும் பொழுதும் ,அதனை வாசிக்க குறிப்பிட்ட நேரத்தை தேர்ந்தெடுத்து அந்த இரண்டு மூன்று மணி நேரத்தில் அந்த உலகில் உலவுவதும் தான் உண்மையிலேயே மிக சிறப்பான மகிழ்ச்சியை அளிக்கிறது என்னை பொறுத்தவரை..

    அடுத்து டைலன் டாக் இதழும் ,இளம் டெக்ஸ் இதழும் கறுப்பு வெள்ளையில் கலக்கலாக சிறப்பான தரத்தில் அமைந்து உள்ளது..

    அடுத்து பெரிதான தோர்கல் இதழும்.., அட்டைப்படமும் வழக்கம்போல் அசத்த இன்னும் பெரிதான சூப்பர்ஸ்டார் ஸ்பைடர் இதழ் வாவ் என சொல்ல வைக்கிறது அட்டைப்படம் மாஸாக அமைய உள்ளே ஸ்பைடரின் சாகஸங்களை மெகா அளவில் அட்டகாசமாய் பளீரிடுகிறது ..மொத்தத்தில் மீண்டும் ஒரு புதையல் ஒவ்வொன்றாய் ரசிக்க காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  44. First look rating.

    1. texas rangers
    2. dylan dog
    3. magic moments special
    4. kabish
    5. thorgal
    6. classic superstars special 3
    7. the super stars specials

    ReplyDelete

  45. First time எந்த புக்க முதலில் படிக்க என்று குழம்பி போன தினம் இன்று.. கபிஷ் ஒரு பக்கம் இளம் டெகஸ் ஒரு பக்கம் MMS ஒரு பக்கம் Dylan ஒரு பக்கம்.. ஒரு மனுஷனை இப்படியெல்லாம் கொடுமை படுத்தக் கூடாது சார்

    ReplyDelete
    Replies
    1. கொடுமை நல்லது சார் 😁

      Delete
  46. டிசம்பர் இதழ்களை கைப்பற்றியாச்சி,இளம் டெக்ஸ் இளைச்சி துரும்பாய் தெரிகிறார்...
    அட்டைப்படம் நச்சுனு இருக்கு...
    MMS தரமாய் டாலடிக்குது,இவ்வளவு, சிறப்பான,கனமான ஒரு மைல்கல் இதழுக்கு சற்றே விலையைக் கூட்டி கூட கெட்டி அட்டை இட்டு தந்திருக்கலாமே சார்,மைல்கல் இதழுக்கு சன்ன அட்டை சற்றே உறுத்தலாய் தெரிகிறது...
    கபீஷை பார்த்தாலே மனம் உவகை உறுகிறது,மிக்க மகிழ்ச்சி...
    தோர்கல் ஆர்வத்தைக் கூட்டுகிறது...
    எலக்ட்ரிக் 80' ஸ்பைடர் மிரட்டுகிறார்...
    வாசிக்க ஆர்வமாய் உள்ளேன்...
    இந்த ஸ்பைஷல் இதழ் கெட்டி அட்டை இல்லை போல,நான் தான் இதுவரை அப்படி நம்பி விட்டேனோ ?!...😇😇😇

    ReplyDelete
    Replies
    1. கெட்டி அட்டை என்று எங்கும் நாம் அறிவிக்கவில்லை சார் ; so அங்கே நமது பிழை ஏதும் லேது!

      பிரதானமாய் ஆண்டின் இறுதிப் பொழுதில் பைண்டிங்குகளில் சொல்லி மாளா ரஷ் என்பதாலேயே அவ்விதம் திட்டமிடவில்லை!

      Hardcover பெட்ரோமேக்ஸ் லைட்டே தான் வேண்டுமென்று திட்டமிட்டிருந்தால் டிசம்பரின் நடுவாக்கில் தான் சாத்தியப்பட்டிருக்கும்!

      Delete
  47. 5Star எதற்கு சார்? சொல்லவே இல்லையே. நன்றிகள் சார் 🤗

    ReplyDelete
    Replies
    1. ஒரு இனிப்பான ஆண்டினை ஸ்வீட் எடுத்துக் கொண்டாடுவோம் சார் 😁

      Delete
    2. 7 இனிப்புகளுடன் 8வது இனிப்பு.. கைப்பற்றியாச்சு...

      Delete
  48. சற்று முன்பு புத்தகங்களை கைப்பற்றினேன்! 5 புத்தகங்கள் டப்பினுள்! தினுசு தினுசாய் - கலர் கலராய் - அட்டகாசமான வடிவமைப்புகளில் - கிட்டத்தட்ட எல்லா அட்டைப்படங்களுமே ஒன்றுக்கொன்று போட்டி போட்டன இம்முறை! பக்கங்களை புரட்டியபோது எல்லா புத்தகங்களின் சித்திரங்களுமே நேர்த்தியாக அசத்தின - ஸ்பைடர் புத்தகம் உட்பட!

    MMS -ஐ கையில் ஏந்திய போது அதன் தயாரிப்புத் தரமும், கனத்த வடிவமைப்பும், துள்ளியமான வண்ண அச்சுத்தரமும் - மூச்சை இழுத்துப் பிடிக்க வைத்தன! ஒரு மைல்கல் இதழ் - கைகளில் கல்போன்று கனத்துக்கிடப்பதுதெல்லாம் மெய்யாலுமே ஒரு பரவச அனுபவம்!!

    ஒரே மாதத்தில் 7 அசாத்திய தயாரிப்புகள் என்பதெல்லாம் நம் சிவகாசி டீமுக்கு எப்படித்தான் சாத்தியமாகிறதோ!! அசத்துகிறீர்கள் - டீம் சிவகாசி!!💐💐
    💐

    இத்தனை தித்திப்பான சமாச்சாரங்கள் போதாததென்று டப்பியினுள் ஒரு சாக்லேட் வேறு!

    இன்னும் இரண்டு புத்தகங்களை நாளை சேலம் புத்தக திருவிழாவில் வாங்கினால்தான் நிம்மதி!!

    ReplyDelete
    Replies
    1. //ஒரே மாதத்தில் 7 அசாத்திய தயாரிப்புகள் என்பதெல்லாம் நம் சிவகாசி டீமுக்கு எப்படித்தான் சாத்தியமாகிறதோ//

      இதென்ன பிரமாதம்? இதைவிட பெசல் ஐட்டம்ஸ் சென்னை புத்தக விழாவுக்கு பண்ணிடலாமே 👍👍

      Delete
    2. அடடே அப்போ சென்னை புத்தக விழா இன்னும் அருமையாக இருக்கப் போகிறது.

      Delete
    3. // ஒரே மாதத்தில் 7 அசாத்திய தயாரிப்புகள் என்பதெல்லாம் நம் சிவகாசி டீமுக்கு எப்படித்தான் சாத்தியமாகிறதோ!! அசத்துகிறீர்கள் - டீம் சிவகாசி!! //

      உண்மை 🙌

      Delete
  49. கபிஷின் தயாரிப்பு தரம் யாரும் நினைத்தே பார்த்திராத ஒன்றுங்க சார் .சத்தியமாய் நூறு ரூபாயில் இப்படி ஒரு உலகத் தரமான புத்தகத்தை எதிர்பார்க்கவே இல்லைங்க சார்.இந்தியாவிபல மொழிகளில் கபிஷ் வெளியாகியிருந்தாலும்எந்த மொழியின் பதிப்புமே இந்த தரத்தில் வந்திருக்காது.லயன் காமிக்ஸ் வாசகர் என்ற விதத்தில் லட்சத்து ஒன்றாவது முறையாக காலரை தூக்கிவிட்டுக்கொள்கிறேன் சார்

    ReplyDelete
    Replies
    1. கொடுமை என்னவெனில் நம்மவர்களில் கணிசமானோர் கபிஷ் வாங்கலை 🤕🤕!

      "No to cartoons" என்ற கொள்கையில் செம பிடிப்பு போலும்!

      Delete
    2. விடுங்கள் சார். புத்தக திருவிழாவில் புதிய இளம் தலைமுறை வாசகர்களை இது கண்டிப்பாக கவரும் சார்.

      Delete
    3. நாளை நேரில் வாங்க உள்ளோம் சார்...எப்போழுது புத்தக விழா வந்தாலும் இல்லத்திற்கே அனைத்து இதழ்களும் வந்து விட்டால் அங்கு வெறும் கை வீசி வருவது சரியில்லை என்ற எண்ணத்தால் நேரில் வாங்க திட்டம் சார்..:-)

      Delete
  50. க்ளாசிக் சூப்பர் ஸ்டார் ஸ்பெஷல்,கபீஷ் முடிச்சாச்சி...
    கபீஷ் நல்ல தரமான தயாரிப்பு,கபீஷை வாசித்தது கால இயந்திரந்தில் பின்னோக்கி ஒரு பயணம் போய்வந்த உணர்வு,அதுவொரு மேஜிக் மொமெண்ட்தான்...
    மகிழ்ச்சி,மகிழ்ச்சி,மகிழ்ச்சி...
    கபீஷ்-2 இதழுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  51. *அடிமையாய் தோர்கல்*

    முதலில் சித்திர தரத்திற்கும்...அச்சு தரத்திற்கும் ஓர் பலத்த கை தட்டல்...

    அதே போல் அட்டைப்படத்திற்குமே என்னடா தோர்கலை பின்னால் கொண்டு சென்று க்ரிஸ் ஆப் வல்நருக்கு முன்னட்டையில் அசத்தல் போஸ் என நினைத்தால் கதையை வாசித்து முடித்தவுடன் தான் நமக்கே
    தோன்றுகிறது இது அதற்கான அந்த நாயகி (?) க்கான மரியாதை என...

    தோர்கலை பொறுத்தவரை தொடர் சாகஸங்களாய் தொடர்ந்து வந்தாலும் ஒவ்வோரு தொகுப்பு வெளிவரும் பொழுதும் அதனை தனியாக வாசித்தாலும் கதை புரிதலிலும் எந்த குழப்பமும் இல்லை..தனி சாகஸத்திற்கான தீனிக்கும் பஞ்சம் இல்லை என்பதை இந்த அடிமையாய் தோர்கலும் உணர்த்துகிறது..

    தோர்கல் தனது குடும்பத்தினருடன் அடிமையாய் சிறையில் வாடுவதுடன் கதை தொடங்கியு் இறுதியில் குற்றுயிராய் தோர்கல் சாய்ந்து முடியும் தருவாயில் முடிவு அமைந்து இருந்தாலும் முதல் பக்கத்தில் இருந்து இறுதி பக்கம் வரை இரண்டு அத்தியாயங்களையும் ஒரே பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒரே மூச்சில் வாசிக்க வைத்து விட்டது...அதே சமயம் தோர்கலும் ,அவர் சார்ந்தோரும் இன்னல்களை அனுபவிக்கும் பொழுது இவர்கள் எப்படிப்பட்ட மனிதர்கள் இப்படி வந்து இங்கே அல்லாடி கொண்டு இருக்கிறார்களே என்ற பச்சாதாபம் தன்னால் என்னுள் எழுவதை தவிர்க்க முடியவில்லை..அதே சமயம் எதிராளிகளுக்கு தோர்கலின் அசாத்திய திறைமையையும் ,அவர் வாரசுகளின் திறைமையையும் காண்பிக்கும் சமயம் நமக்குள்ளும் ஒரு வெற்றி களிப்பு...இது போன்ற பேன்டஸி சாகஸங்களில் அதன் நம்பகத்தன்மைக்கும் , வெற்றிக்கும் மொழி ஆக்கத்திற்கு பெரும் பங்கு வேண்டும்...அதனை திறம்மட செய்த மொழி ஆக்கத்திற்கும் பலமான கைத்தட்டல்கள்..

    டைலன் ஓர் வித்தியாச அமான்ஷ்ய உலகில் உலவ விட்டார் எனில் தோர்கலோ அடிமை தேசங்களில் வேறு விதத்தில் உலவ வைத்து விட்டார்..

    அருமை அருமை அருமை..

    *அடிமையாய் தோர்கல்*- *வாசித்தவுடன் தோர்கலின் அடிமையாய் நான்*

    ReplyDelete
    Replies
    1. தலீவரே..... அடிமை ஆனாக்கா கிறிஸ் of வல்நார் மெரி ஏதாச்சும் இலவச இணைப்பு கிடைக்கும்னு கணக்கு போட்டுட்டீங்களோ 🤔

      Delete
    2. செம தல 😊 தலைக்கு இருட்டு கடை அல்லவா பார்சல் 😊

      Delete
    3. பார்சல் இருட்டுக் கடையேவா சார்? 🤔🤔 எதிலே புக் பண்ணுவீங்க?

      Delete
    4. 😊 உங்க மூலமாக தான் புக் பண்ணனும் 🤣

      Delete
  52. **** சட்டை பையில் சாவு! ****

    சும்மா புரட்டி பார்க்கலாம் என்று தான் புத்தகத்தை எடுத்தேன்.. ஆனால் மிரட்டலான உள் பக்க சித்திரங்கள் வெகுவாக கவர்ந்திழுக்கவே.. ' சரி நாலு பக்கம் படிச்சுருவோம்' என்று ஆரம்பித்தேன். விறு விறு அமானுஷ்ய காட்சிகளோடு கூடவே கொஞ்சம் அஜால்-குஜால் காட்சிகளும் சேர்ந்து கொள்ள - புல்லட் ரயில் வேகத்தில் தடதடத்தது கதையை படித்து முடித்துவிட்டுத்தான் கீழே வைத்தேன்.

    படித்து முடித்து இரண்டு நிமிடங்கள் நிதானமாக யோசித்த பின்னரே கதையின் முழுப் பரிமாணமும்; அந்த அதீத ஆமானுஷ்யங்களின் பின்புலமும் புரியவந்தது!
    கதையின் hypeபை ஏற்ற எழுத்தாளர் H. G. வெல்ஸையும் கதைக்குள் உலவவிட்டிருக்கிறார்கள். ஆனால் அது அதிகம் பலனளித்ததாகத் தெரியவில்லை.

    டைலன்டாக்கின் அழகான வாடிக்கையாளர்களையும்; அவர்களுக்கான டைலனின் சேவைகளையும் பார்க்கும் போது உலகின் எந்த மூலையில் 'அமானுஷ்ய டிடெக்ட்டிவ் கோர்ஸ்' இருந்தாலும் படித்து முடித்துவிட வேண்டுமென்ற வெறி ஏற்படுகிறது!😁

    ReplyDelete
    Replies
    1. சூடான சுவையான ரவுண்டு பண்ணு ஈரோடு இளவரசருக்கு பார்சல் 😊

      Delete
  53. 2025 ஜனவரியில் ஏதாவது கார்ட்டூன் கதை வந்தால் நன்றாக இருக்கும்; கார்ட்டூன் கதையின் புண்ணியத்தில் புன்னகையுடன் புதிய வருடத்தை வரவேற்றால் நன்றாக இருக்கும் சார்.பார்த்து செயுங்கள் சார் 🙏🏽

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வொரு மாதமும் ஒரு கார்ட்டூன் கதை வந்தால் நன்றாக இருக்கும். ஒவ்வொரு மாதத்தையும் புன்னகையுடன் வரவேற்கலாம்... ஹ்ம்ம் நம் வாசகர்கள் மனது வைக்க வேண்டும்...

      Delete
  54. சார்....புத்தக பார்சல கொரியர் ஆஃபீஸ்ல வாங்கும் போதே ஒரு ஜிவ்...அகலமான குண்டான வெயிட்டான அழகிய குழந்தையாய் மடியில் உருள ஆட்டோவில் நகர....கஷ்டப்பட்டு கபீச பையன்தான் பிரிக்கனும்னு நான் கூடுதல் சந்தோஷத்தோடு நகர....


    சாக்லெட் அவன்கையில் கபீசோடு ஐக்கியமாக...சின்னவர் கைல ஃபோட்டோவுக்காக தந்த வெயிட்டான டெக்ஸாஸ் இரவு உறங்கும் வரை பிரிய மறுக்க..ஒவ்வோர் பக்கமா படுத்துகிட்டே அவன் ரசிக்க...அழறானா சுடானானு அவன் அன்னையை கேள்விக் கணையாய் மழலை மழையால் நனைக்க..கபீஸ் கதை சொல்லுங்கப்பான்ன முன்னவரை மூனு கதைகளை சொல்லி

    ReplyDelete
    Replies
    1. தூங்க வைக்க....நான் கதை சொல்லும் முன்னரே வனத்துக்குள் தொலைந்து விட்டான்....குழந்தைகளோடு அழகான கானகத்தில் திரிய யாருக்கு கசக்கும்....கதையை விடுங்க சார் அந்த பச்சை நிறமும்...பல வண்ணங்களும் அந்த விலங்குகளும்.....போனஸாய் அட்டகாச கதைக்களமும் என்னையும் குழந்தையாக்க....இதோ சிறுவர்களை ஈர்க்க வாரான் வாகான இதழா.....

      நம்ம ஸ்பைடர் நல்லாருக்கு உலக யுத்தத்தை துவக்கிட்டாரோன்னு அட்டை அதகளப் படுத்த.....

      தூங்கி எழுந்து இப்ப நிசப்தமாக எடுக்க டைலன் ...அடேயப்பா அட் டைப்படம் அந்த மேட்ஃபினிசில் அந்த ஆவியோடு மனதை குதூகலப்படுத்த ...இது வரை வந்ததிலே டாப் பென அசால்ட்டா தட்டி தூக்க வண்ணமய அழகியட்டை....உள்ள போனா துவக்கமே அழகு ...மணல் வீடு சிறுவன்...மாறும் காட்சிகள் முதல்ல இதான் சார் படிக்க....


      அடுத்து காட்டப்பட்டது...கண்ணில் பட்டது தானைத்தலைவர்...உறங்கும் முன் பெரிதாய் தெரிந்த ஸ்பைடர்....நான்தான் டாப்புன்னு ஏதோ ஓராட்டமாடி பிரம்மாண்டமாய் விஸ்வரூபமெடுக்கிறார் அழகோடு போட்டி போட்டபடி அழகாய்.... புக்க நீங்களே மறுக்கா எடுத்து பாருங்க மறுக்க மாட்டீங்கன்னு மறுக்கா சொல்வேன் டாப் பென...அந்த மனதை கட்டிப்போடும் வலைமட்டுமல்லா நீல வானம் ...கடல்...ஆர்டினியோடு கருமேகப் பின்னணி மின்னல்... ஹெலிகார் பால்யத்தை காட்டி ஆர்டினி தனிமை வெறுமையாக்க....நோக்க நோக்க உற்று பாக்க ..அந்த உலகப்போரச்சத்தை தரும் வண்ணத்துக்காக தந்த வெடிப்புகளும் அட்டய வேற லெவலுக்கு பாய்ச்ச அந்த சைசுதான் இன்னுமோர் படி ஏத்துது இந்த வண்ணப்பிரம்மாண்டத்த....கார்சனின் கடந்த காலத்த ஈடு செய்யுமாங்ற ஏக்கம் போயே போச்சு....உள் பக்கங்கள் அடடா...இரு வண்ணத்ல வந்திருந்தான்னு சபலமேற்படுத்த....ஆனா வண்ணமையில்லண்ணாலும் நான்தான் டாப்புன்னு பக்கங்களில் விஸ்வரூபமெடுக்கும் ஓவியங்கள்....ஸ்பைடர்னு ....யப்பா டைலர் என்னத்தான் முதல்ல படிப்பார் தம்பின்னு அசத்த....அன்றய காலகட்ட கதைகளை நினைவு படுத்தும் அச்சுத் தரம் உயர்த்திப் பிடிக்க....


      பொடியன் தலைமாட்டிலெடுத்த ஆசிரியரின் பிரம்மாண்ட டெக்ஸ்....அட்டைப்படம் இதெல்லாம் தாண்டி ஏதோவோருணர்வு....அட வெயிட்டுதான்....சும்மா வேற லெவல் சார்....வெயிட்ட கூட ரசிக்க முடியுங்குறது இக்கதை புத்தகம்தான் ....இது வரை வந்ததிலே டாப் வெயிட்....ஈர்ப்பு...
      உள்ளட்டைல தந்த உங்க திருவிளையாடல் கதைகள் அட்டைகள் வண்ணத்ல தந்திருந்தா நச்சின்னிருந்திருக்கும் என எழுமுணர்வையும்...பரகுடாவுக்கோரிடம் தந்திருக்கலாமே பிஸ்டலுக்கு பிரியாவிடைக்கு ஏன் இத்தனையிடமெனும் கேள்வியுமெழ பதில் வருமென அடங்க....உங்க சாதனையிதழ் அனைத்தையும் பின்னுக்குத்தள்ளி மேஜிக் மொமண்டுக்கு ஏத்ததாய் ஓடியாட ....செம ஈர்ப்பு சார்....மொதல்ல இதையே படிக்கிறேன் ஏதேதோ செய்து எங்கள உற்சாகமா பால்யத்தோட வாழ வைக்கும் உங்களுக்காக...சூடான விமர்சனத்தோட நாளை வருகிறேன்...ஸ்பைடர் மன்னிக்க....ஒரே மைனஸ் அந்த அடுத்த மாத இதழ்கள் மூனேதானா ஜனவரிக்கு....பெரிய ப்ளஸ் டைகர் 500 வது இதழ் ஆனா குண்டாயில்லயே....இதுக்கு ஏதாவது துணையிதழ் குண்டா போட்டுதாக்குமென்னத்த மென்மையான புனித மனிடோ அருள்வாராக....



      தோர்கள் வெறென்ன சொல்ல...வண்ணத்தோரனந்தான்....பாட்டி கதைக்காலந்தான் ...அம்புலி மாமா மேல் தவழ்ந்தாலும் அதுக்கும் மேலதான்....உள்பக்கங்கள் வேற லெவல்ல இருந்தாலும்....
      சத்தியஞ்ஞெஞ்சதால மேஜிக் மொமண்ட்தா மொத....


      ஸ்பைடர் மினி வண்ணங்களை வித்தியாசமாக்கி...புரட்ட புரட்ட இதோர் வித்தியாச ஈர்ப்பு திணிக்க....அந்த உணர்விலே இதான் டாப்...சூப்பர் சார்....


      அந்த இளம் டெக்ஸ் சின்ன கடுகானாலும் ....டெக்ஸ் பின்ணணிக்கு நகர்ந்தாலும் அந்த அற்புத மணல் ரோடு வண்ணங்களையும்...வியாபித்த சிவப்பு வண்ணமும் இனம்புரியாத ஈர்ப்பத்தர அனைத்து அட்டைகளுக்கும் ஓர் டஃப்பை தருது முன்னணியில் விழுந்த அந்த வீரனின் ஓவியமும்


      கமீஸ் சொல்லாம விட முடியுமா...மூத்தவர்களை மாட்டிவிட்டு நல்லகாலம் கவனிக்க தாமதமோ...அல்லது ஏகப்பட்ட அட்டைகளின் அணிவகுப்பு திரளோ.....கபீசட்டை வேற லெவல் அது தொங்கும் மாம்பழக் கிளைகளை சொல்லுது சுவைய வேற லெவல் சார்....அந்த சுட்டிக்கு ரங்கு...கபீஸ் ஸ்பெசல் அட்டையின் அழகைத் திருடிக் செல்வதே குறை....ஆனா அந்த வார்த்தைகளே நிறை....


      மொத்தத்ல 1986 ஒரு வருடத்ல தந்த கதைகள் ஒரே மாதத்ல திரும்பியுள்ளது....வேற லெவல் மாதம் சார்....டாப் மாதம்...

      Delete
  55. Yesterday courier not came. waiting today

    ReplyDelete
  56. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  57. "Mms special."//டெக்ஸ் என்றாலே நேர்கோடு தான். இம்முறை யோ நேர் கோடு இல்லை . கதாசிரியர் .nizzi .கதையின் போக்கோ முழுக்க முழுக்க பிதாமகர் வான் ஹாமை ஞாபகப்படுத்துகிறது.சைமனை இரையாக பயன்படுத்தி(கொலை குற்றவாளியாக்கி) லார்கோவை கவிழ்க திட்டமிடுவதுபோலடெக்ஸை குற்றவாளியாக்கி மொண்டாலஸை கவிழ்க திட்டம் தீட்டப்படுகிறது.டெக்ஸ் சதி வலையிலிருந்து எப்படி தப்புகிறார் . இரண்டு மணிநேர mms ஆல்பத்தின் சுவாரஸ்யமான முடிச்சு இதுவே. வழக்கம்போல பட்டாசு.

    ReplyDelete
  58. சைமனின் ரோல் டெக்ஸுக்கு .சிறையில் சின்ன சின்ன எதிர்ப்பை காட்டி அடிக்கடி மயங்கி விழுகிறார்.மொண்டாலஸ் லார்கோவுமல்ல டெக்ஸூம் அல்ல .ஆகையால் கார்சன் டைகர் ஜாக் மற்றும் கிட் வில்லர். உதவியுடனே டெக்ஸை விடுவிக்கிறார்.

    ReplyDelete
  59. //கானகத்தின் கறுப்பு நிழல்//

    இறைவன் படைத்த ஜீவராசிகளில் மனிதனைத் தவிர மற்ற அனைத்து உயிர்களும் இயற்கை வரையறைக்கு உட்பட்டே வாழ்கின்றன.

    பசிக்கு மட்டுமே வேட்டையாடுவது, சுற்றுச் சூழல் பாதிக்கும் அளவு இயற்கை வளத்தை சூறையாடுதல் போன்ற எந்த முரணான செயல்களிலும் ஈடுபடாமல் வாழும் ஜீவராசிகளை, ஆராயும் சிலரும் அதனைக் கொன்று தனது வீரத்தை பறை சாற்ற நினைக்கும் சிலரும் உலகத்தில் பரவலாக உண்டு.

    அப்படி அமேசான் காடுகளில் வாழும் கறுஞ் சிறுத்தையை டாகுமெண்ட்ரி படம் எடுக்க போகும் லோலாவையும், அதே நேரத்தில் அங்கு வரும் வே தம்பதிகளில் மிஸ்டர் வே எனும் பணக்கார அப்பாவி தனது வீரத்தை வெளிக்காட்ட வேட்டையாடவும் முற்படுகின்றனர்.

    இதில் வேட்டையாடும் போது தப்பிக்கும் கரும்புலி இடையில் சிக்கும் சில மனிதர்களையும் வேட்டையாட அதனால் பாதிக்கப் படும் காட்டு வாசிகளும், இதற்கு நடுவில் எதிர்பாராவிதமாக லோலாவின் சகாவை கொன்று விடும் கரும் புலி மீது மிஸ்டர் நோ, காட்டுவாசிகள் கூட்டம், பணக்கார வேட்டையன் என மூன்று குழுவினரும் வேட்டையாட சூழ்கின்றனர்.

    இதில் யாருடைய வேட்டை வெற்றிகரமாக நடந்தது என்பதை 192 பக்கங்களில் அமேசான் காடுகளில் வலம் வந்தவாறு அங்கு இருக்கும் வன விலங்குகளை ரசிக்கும் வண்ணம் ஒரு சித்திர விருந்தை படைத்துள்ளனர்.

    ஆழமான, திடீர் திருப்பங்கள் கொண்ட கதையாக இல்லாமல் இருந்தாலும்

    இது வீட்டிலிருக்கும் குட்டீஸ்களுக்கு கதை சொல்ல சிறந்த கதையாக அமைந்திருக்கிறது.

    ReplyDelete
  60. 2025அட்டவணை வெளியிடுவதற்கு முன்பு கபிஷ் வந்திருந்தால் கார்ட்டூன் ஸ்லாட்டில் கபிஷின் கதைகள் அதிகம் வேண்டுமென கோரிக்கைகள் வந்திருக்கும் சார்.கபிஷ் புத்தகத்தின் தரத்தை பார்த்து நமது வாசகர்கள் அனைவரும் நிச்சயம் வாங்குவார்கள் சார் .

    ReplyDelete
  61. இருட்டு கடை , அல்வா ஸ்பெசலிஸ்ட் ஈரோடு இளவரசருக்கு அட்வான்ஸ் புக்கிங் கில் இருக்கிறதுங்க சார்.

    ReplyDelete
  62. Mms டெக்ஸ் . டெக்ஸ் சிறையில் இருந்து தப்பி விட்டார் சரி,சதிகாரர்கள் தண்டிக்கப்படவுமில்லை, பொதுவெளியில் அடையாளம் காட்டப்படவுமில்லை . இதன் தொடர்ச்சி இன்னும் உள்ளதாங்க சார்

    ReplyDelete
    Replies
    1. இருக்கே அது தான் அடுத்த 2025 தீபாவளி மலர் என்று நினைக்கிறேன். ஓவியங்கள் அப்படிதான் இருந்தது

      Delete
  63. Replies
    1. அதே தான் பரணி கொஞ்சம் மேலே பாருங்க.

      Delete
  64. // இதென்ன பிரமாதம்? இதைவிட பெசல் ஐட்டம்ஸ் சென்னை புத்தக விழாவுக்கு பண்ணிடலாமே 👍👍 //

    மாதம் மாதம் ஆசிரியர் நாங்கள் கேட்பதுக்கு மேலயே புத்தகங்கள் கொடுப்பதற்கு ரெடியாக இருக்கிறார் 🙏🏻 இறைவா இவைகளை வந்தவுடன் படித்து முடிக்க நேரத்தை கொடுங்கள் 🙏🏽

    ReplyDelete
  65. கனவுலகம் விமர்சன போட்டி

    சட்டைப் பையில் சாவு

    PSYCHOKINETIC சக்திகள், இந்த கதைக்கு ஆதாரமாக உள்ளது. சில பல உளவியல் காரணங்கள் இது போன்று சக்திகளை ஒரு மனிதனுக்கு ஏற்படுத்துகிறது என்று ஒரு வாதம் காலம் காலமாக நடந்துக் கொண்டே தான் இருக்கிறது. இது குறித்து சினிமா துறை பல்வேறு படங்களை எடுத்திருக்கிறது. ஆனால் இவை அனைத்தும் எதோ ஒரு அசாத்திய சக்தியை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு இருப்பதாகவே நினைக்கும் அளவுக்கு வெளிப்படுத்தப்படுகிறது.

    அதற்கு சிறிதும் விதிவிலக்கு இல்லாமல் இந்த கதையும் சும்மா புகுந்து விளையாடுகிறது. கதாசிரியருக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் ஓவியரும் விளையாடி இருக்கிறார். ஒவ்வொரு பேனலும் மிரட்டுகிறது. 

    போக்கர் ஆட்டத்தை ஏன் மிட்டாய் தட்டு என்று மொழிபெயர்த்தார்கள் என்ற குழப்பம் கதையை கொஞ்சம் புரிய வைக்க மறுக்கிறது. அந்த சிறுவனின் மனது ஒரு குழந்தையுடையது அல்ல, மாறாக வெகுவாக matured ஆன மனம் என்று புரிய வைக்கவே, கிரௌச்சோ மூலம் வெளிப்படுத்தும் காட்சிகள், அந்த கதையில் வைத்திருக்கிறார்கள். 

    ஏன் இந்த காட்சிகளை வைத்திருக்கிறார்கள் என்று யோசித்து, மூல புத்தகத்தில் இந்த ஆட்டத்தின் பெயர் என்ன என்று கண்டுபிடித்து போக்கர் என்று தெரிந்துக் கொண்ட பின் கதையில் இருந்த சில ஓட்டைகள் அடைக்கப்பட்டது. 

    18+ என்பதை அட்டையிலும் போட்டிருக்கலாம் என்ற கருத்து மட்டும் உறுத்திக் கொண்டே இருக்கிறது. 

    கதை 10/10

    ஓவியம் 11/10

    மேக்கிங் 9/10

    ReplyDelete
  66. கனவுலகம் விமர்சன போட்டி

    டெக்ஸாஸ் ரேஞ்சர்ஸ் 

    எப்பொழுதோ படித்த முன்கதையை மனதில் மீண்டும் கொண்டு வந்து (மீண்டும் அதை படிக்க பொறுமை இல்லை) கதையை தொடர்ந்தால், டெக்ஸ் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒரு ரேஞ்சர், டெக்ஸை நம்பாவிட்டாலும் தன் ரேஞ்சர் நண்பனை நம்பும் ஒரு ரேஞ்சர், பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைக்க பக்கங்கள் குதிரை வேகத்தில் பறக்கிறது 

    டைனமைட் அசத்தி எடுக்கும் அசாத்திய நண்பன் என்பதை நிரூபித்து, டெக்ஸ் ஒரு அசகாய சூரர் என்று காட்டும் அந்த காட்சி, ஒரு நல்ல திரைக்கதைக்கு உண்டான அற்புதமான பேனல். ஓவியர் மிரட்டி இருக்கிறார். 

    ஒரு வழியாய் 64 பக்கங்கள் முடிந்து அப்பாடா என்று சந்தோஷத்தில் அமர்ந்த பொழுது கதையை அசைபோட எதுவும் இல்லையே என்று வெறுமையை உணர்ந்தேன். தொடர் கதைகளுக்கு பழகும் மனதை நான் பெற இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ?

    இந்த கதையிலாவது கார்சனை டெக்ஸ் சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு கானல் நீராய் போன ஏமாற்றமாகவும் இருக்கலாம் 

    கதை 10/10

    ஓவியம் 11/10

    மேக்கிங் 10/10 

    ReplyDelete
    Replies
    1. இங்கும் அதே உணர்வுதான் சார். இந்த துரித நாட்களில் தொடர் கதைகள் ஒரு ஸ்பீட் பிரேக்கர் போன்ற அசௌகர்யத்தையே தருகின்றன :-(

      Delete
    2. நன்றி நண்பர்களே

      Delete
  67. ஆசிரியர் மைல் ஸ்டோன் துவக்கலாம்னு இருக்கைல ...கொஞ்ச பக்கந்தானன்னு ஸ்பைடர் கெஞ்சி கொஞ்ச....வண்ணங்களும் ...கதை சொல்லிய விதமும் ...ஸ்பைடர் பாடலும் நையாண்டி தனத்துடன் ஈர்க்க ...அமானுஷ்ய கொட்டத்தை அடக்கி மீண்டும் சிம்மாசனத்தில் ஸ்பைடர் கலக்கலாய் மரகதடாலருடன்...மொழி பெயர்ப்புமசத்த...வண்ணங்கள்...திடீரென குதிக்கும் போராளிகள் விறுவிறுப்பாக கதைய நகத்த...அடுத்த ஸ்பைடர் ஒரே இதழாக தந்திடுங்க....சூப்பர் சார்

    ReplyDelete
  68. கனவுலகம் விமர்சன போட்டி

    MMS 

    பாயாச பார்ட்டிகளுக்கு பிடித்தமான புத்தகம். டெக்ஸை முடக்கி போட்டு விட்டு, என்னடா டெக்ஸ் கதை என்று சலிப்பு தட்டினாலும், இதோ இப்ப வெளிய வந்துடுவார், இதோ வந்துட்டார்னு தோ கிலோமீட்டர் தோ கிலோமீட்டர்ன்னு சலிப்பில்லாமல் கடைசி பக்கத்துக்கே கொண்டு வந்துடுறாங்க. 

    கதை இன்னும் முடியல, தொடருது. கோன்சிட்டா என்ன ஆனாங்க? கோப்ரா தப்பிச்சாரா? பாதிரியார் மாட்டிகிட்டாரா? டெக்ஸும் கார்சனும் வந்த வேலை முடியலையே, வில்லன்களை என்ன பண்ண போறாங்க? இப்படி 1000 கேள்விகள் கதை முடிந்த உடன் மூளையை குடையுது. 

    பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செம நரித்தனமான வில்லன். அதற்கு இணையாக பழிவாங்க காத்திருக்கும் மூன்று வில்லன்கள் அட அட அட... 

    இதன் தொடர்ச்சியை சீக்கிரம் போட்டு விடுங்க சார்.

    கதை 10/10

    ஓவியம் 9.5/10

    மேக்கிங் 10/10

    ReplyDelete
    Replies
    1. What to do sir? காலத்தின் கட்டாயம். படிக்க தான் புத்தகம் அடுக்கி வைக்க வேண்டாம் என editor விருப்பப்படுறார். சில பெருந்தீனிகாரன்களான நமக்கு வயிறு நிறைய மாட்டேங்குது. அவருக்கு பலர் சாப்பிடாமலே இருக்கிறாங்களே என்ற கவலை.

      Delete
  69. இன்றாவது புத்தகங்கள் கிடைக்குமா 🤔

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ..தங்களுக்கே தாமதமா சார்...:-(

      Delete
    2. இதற்கு தான் எஸ் டி வேணும் என்பது..:-)

      Delete
    3. ST 2 வாரம் ஆகிவிடும். DTDC is always best 😊

      Delete
  70. Hmm mazhai vera book nethu varala innaiku chance aa illa..Monday Tuesday than pakkanum

    ReplyDelete
  71. டெக்சாஸ் ரேஞ்சர்ஸ்,
    ஓப்பன் பண்ணா முந்தைய தொடர்களின் தொடர்ச்சியா வேட்டைக் குழு "இளம் சிங்கத்தை" வேட்டையாடக் கிளம்புகிறது...
    இங்கே டேனும்,பக்கும் இளம் தல பற்றி தீவிரமா விவாதிச்சிக்கிட்டு இருக்க,இன்னொருபுறம் நம்ம தல கூலா உட்கார்ந்து டிபன் ரெடி பண்ணிகிட்டு இருக்காரு...
    வழக்கமான டெக்ஸ் கதைகளுக்கே உரிய வேகத்துடன் டெக்சாஸ் ரேஞ்சர்ஸ் பயணிக்கிறது...
    தலயின் நண்பனாய் வரும் ஜிம்மியின் கேரக்டரும்,டேன் பென்னியன் கேரக்டர்களும் கூடுதலாய் கவனிக்க வைக்கின்றன...
    தேடும் படலத்திற்கிடையே டெக்ஸ் டேன் பென்னியனை சந்திக்கும் காட்சியமைப்பு டெக்ஸின் தில்லான குணத்திற்கு சான்றான காட்சியாய் விளங்குகிறது...
    கடும் அயற்சியில் உறங்கும் டெக்ஸை வேட்டைக் குழு சுற்றி வளைக்க அடுத்தடுத்த காட்சியமைப்புகள் செம மாஸ்...

    டெக்சாஸ் ரேஞ்சர்ஸ்-தில்லுக்கு துட்டு...

    வாகான ஒரு நேரத்தில் கண்ணீருக்கு நேரமில்லை,பகைவருக்குப் பஞ்சமேது,டெக்சாஸ் ரேஞ்சர்ஸ் என செட்டாக எடுத்து வைத்துக் கொண்டு மீள்வாசிப்பை நிகழ்த்தனும்...

    ReplyDelete
  72. சட்டைப் பையில் சாவு,
    அமானுஷ்யம்,திகில் பிரியர்களுக்கு பிடித்தமான சாகசமிது...
    முக்கியப் பாத்திரத்தின் ஆற்றல்களுக்கான தொடக்கப் புள்ளி எங்கிருந்து முளைத்தது என்பதற்கான விளக்கம் சரியாக சொல்லப்படவில்லை எனத்தோன்றுகிறது...
    ஆண்டலெஸ்,வெல்ஸ் பிரபு பாத்திரப்படைப்புகள் சுவராஸ்யத்திற்கு வலு சேர்க்கிறது...
    பிரச்சனைக்கான புள்ளி எதுவென உணர்ந்த மீடியேட்டர் ஆண்டலெஸ்
    மீண்டும் உரிய இடத்திற்கு வருகை தர மறுப்பது கொஞ்சம் பில்டப்பிற்கான காட்சியாய் தோன்றியது...

    டைலனிடம் டேன்னியின் கேள்வி
    குழந்தைகளுக்கே உரியது...
    "நீங்கதான் ஆவிகளைப் போட்டுத் தள்ளுகிறவரா ?!"

    சட்டைப் பையில் சாவு என தலைப்பு வைத்ததற்காகவே ஷெல்லி மூலம் அந்த வசனம் வெளிவருகிறதா ?!

    கஜினி படத்தில் வரும் பாடல்வரிகள் ஏனோ நினைவுக்கு வந்தது,
    "சட்டை பையில் உன் படம் (சாவு)
    தொட்டு தொட்டு உரச
    என் இதயம் பற்றிக் கொல்லுதே"

    சட்டைப் பையில் சாவு-உளவியல் சிக்கலும்+மிரட்சியூட்டும் தீக்கனவும்...
    ஆங்காங்கே டைலனின் கில்மாவும்...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. // டைலனின் கில்மாவும். //

      டைலனும் கில்மாவும் உடன் பிறந்தவை 😊

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  73. புத்தகங்கள் இப்போது தான் கிடைத்தன. அடுத்த 20 நிமிடத்தில் எனது பால்யகால நண்பன் கபிஷ் கதையை படித்து முடித்து விட்டேன் 🤩

    ReplyDelete
  74. DtDC office க்கு கொரியர் மதியம் வந்துவிட்டது. கடும் மழை காரணமாக இன்னும் என் வீட்டிற்க்கு வந்து சேரவில்லை. |

    ReplyDelete
  75. MMS: சிறையில் ஒரு எரிமலை / சூழ்ச்சி வலையில் டெக்ஸ்

    கதை : கிளாடியோ நிஸ்ஸி
    ஓவியம்: புஸ்கோ பெர்னான்டோ

    கதை: கவர்னர் ஸ்மோரா, கர்னல் ஒலிவேரா & ஜெனரல் வெலாஸ்கோ. இந்த மூவரின் சதி திட்டத்தால் டெக்ஸின் நண்பர் மொண்டாலெங்க்கு ஆபத்து என வரும் தவறான தகவலால் காப்பாற்ற வரும் டெக்ஸை பிடித்து பாதாளச் சிறையில் அடைக்கிறார்கள். அவர்களுக்கும் டெக்ஸ்க்கும் என்ன சமபந்தம். டெக்ஸை சிறைப்பிடிக்க வேண்டிய காரணமென்ன? டெக்ஸின் கதியென்ன...? சிறையிலிருந்து தப்பித்தாரா...? அதில் டெக்ஸ் குழுவின் பங்கென்ன..? வில்லன்கள் ஒழிந்தார்களா..? இல்லையா...? என ஜெட் வேகத்தில் பறக்கும் இக்கதை பதில் சொல்லும்.

    கதை ஆரம்பம் முதல் இறுதிவரை சும்மா பட்டாசாக பறக்கிறது. ஒலிவேராவின் புத்திசாலிசமான அந்த சதி திட்டமாகட்டும், விசிட்டிங் அறையில் டெக்ஸ்வுடன் பேசும் அந்த உரையாடலை ஒட்டு கேட்பதாகட்டும், மரண தண்டனை கைதியாய டெக்ஸ் Firing Squad முன் நிற்கும் போது அதை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதாகட்டும் ஒலிவேரா வின் Brilliancy யைப் பார்க்க முடிகிறது. ஆனால் அதே சமயம் அந்த ஒட்டுக் கேட்கும் உரையாடலை வைத்து டெக்ஸ் குழு அவனுக்கே ஒரு முக்கிய கட்டத்தில் ஆப்பு வைப்பது செம்ம.

    முக்கால்வாசிக் கதை டெக்ஸை ஜெயில் உள்ளாரவே வைத்து ஓட்டிப்புட்டானுக. ஆனால் அடுத்து டெக்ஸ்க்கு என்ன நடக்கும் என படபடப்பு பற்றிக் கொள்கிறது. டெக்ஸை காப்பற்றுவதில் பங்கெடுக்கும் கோப்ரா கலின்டேஸ் என்ட்ரி அதகளம். மொன்டாலெஸ் தன் நண்பர் டெக்ஸைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளும், அவர் டெக்ஸின் மேல் வைத்திருக்கும் அன்பையும், விஸ்வாஸ் சத்தையும், மரியாதையும் காண முடிகிறது.

    ஆபத்திலிருக்கும் டெக்ஸை மீட்க அவரசத்தில் இருக்கும் கார்சன், மெக்ஸிகோ செல்லும் ரெயில் தாமதமாக, அதற்கு செய்யும் அலம்பலும் அலப்பறைகளும், டெக்ஸ் சிறையில் உள்ள சேதி அதிர்ந்து அதிர்வதும், துடிப்பதும், வேதனையும், படபடப்பும் அடைவதும் என ஒரு உண்மையான நண்பனை முன் நிறுத்துகிறார்.


    டெக்ஸ்க்கு எதிராக தன் சுண்டு விரலை தூக்கினாலே சின்னப்பின்னமாக்கி விடுவார். சிறையில் போட்ட அந்த 3 அயோக்கியர்களை சும்மா விடுவாரா...?
    ஆனால் இந்த 3 வில்லன்களுக்கு இந்தக் கதையின் முடிவில் அப்படியே தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு டெக்ஸ் எழுதும் முடிவுரையும், டெக்ஸை மீட்க முக்கிய பங்கு வகிக்கும் கோப்ரா, கோன்சிட்டா & ஃபாதர்க்கு பாதுகாப்பை நல்குமா மெக்ஸிகோ ......? என காண இதன் தொடர்ச்சியான இதே போன்ற 2 ஆல்பங்கள் வெளி வரும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

    கதையாசிரியர் நிஸ்ஸியின் தொய்வில்லாத கதை சொல்லல், அதற்கு பக்க பலமான ஓவியர் புஸ்கோவின் அதகளமான சித்திரங்கள்.
    கண்ணுக்கு இதமான வண்ணக் கலவை என இந்த இதழ் மெய்மறக்க செய்கிறது.

    புக் மேக்கிங் அட்டகாசம், அச்சு, கலரிங், பைண்டிங் என ஒரு நிறைவான இதழ்.

    ReplyDelete
  76. Completed Dylon, Texas Rangers and Magic Moments Special. One shots are good. But Magic moments is Theri Hit. One thing we feel bad is, the story doesn't ends. Even Texas Rangers also has the same problem. I'm not sure about others, but atleast for me, I'm not a fan of "Continues in next part". I can't get good connection with Young Tex (Texas Rangers) for this reason. If we read a story in a flow, we expect that to get completed while reading. If we need to wait for next book, there we feel like "Some thing is missing"

    ReplyDelete
    Replies
    1. டயலொன் டாக் , டெக்சாஸ் ரேஞ்சர்ஸ் மற்றும் மேஜிக் மொமெண்ட்ஸ் முடிவுற்றது. ஆனால் மேஜிக் மொமெண்ட்ஸ் தெறி ஹிட். நாம் மோசமாக உணரும் ஒரு விஷயம் என்னவென்றால், கதை முடிவடையவில்லை. டெக்சாஸ் ரேஞ்சர்ஸுக்கும் இதே பிரச்சனை உள்ளது. மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியவில்லை, ஆனால் குறைந்தபட்சம் என்னைப் பொறுத்தவரை, நான் "அடுத்த பகுதியில் தொடரும்" ரசிகன் அல்ல. இந்தக் காரணத்திற்காக யங் டெக்ஸ் (டெக்சாஸ் ரேஞ்சர்ஸ்) உடன் என்னால் நல்ல தொடர்பைப் பெற முடியவில்லை. ஒரு கதையை ஒரு ஓட்டத்தில் படித்தால், படிக்கும்போதே அது நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கிறோம். அடுத்த புத்தகத்திற்காக நாம் காத்திருக்க வேண்டியிருந்தால், "ஏதோ ஒன்று காணவில்லை" என்று உணர்கிறோம்.

      Delete
  77. என்னுடைய முந்தய பதிவு தவறான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்ள கூடாது என்பதற்கான பதிவு இது. உருவாக்கத்திலும் தரத்திலும் சிங்கம் என்றுமே சிங்கம்தான். சில எதிர்பார்ப்புகள் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்படும்போது ஏற்படும் சங்கடத்தையும் பதிவு பண்ண நினைத்தே முந்தய பதிவு. மற்றபடி என்றும் சிங்கத்தின் ரசிகனே :-)

    ReplyDelete
  78. தி சூப்பர் ஸ்பைடர் ஸ்பெஷல்,
    பாட்டில் பூதம்,
    நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போதுதான் மீள்வாசிப்பு...
    சினிமா டிஜிட்டல்மயமாவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் ஏதாவது ஒருவகையில் சர்ச்சைக்குரிய காட்சி அமைப்புகள் இருப்பின் அன்றே அடுத்தடுத்த காட்சிகளில் போய் பார்த்துடுங்கப்பா,அடுத்தநாள் அந்த காட்சியை கட் பண்ணிடுவாங்கன்னு செவிவழி செய்தியை சொல்லி பரபரப்புத் திரியை பற்ற வைப்பார்கள்...
    அதுமாதிரி விட்டுப்போன பகுதிகளை எல்லாம் இணைத்து இப்பதிப்பில் சேர்த்து வாசிப்பை ஆர்மாக்கிட்டிங்க சார்...
    தவிர்க்க முடியா நினைவில் தங்கிவிட்ட,மனதிற்கு பிடித்துவிட்ட இதழாய் அமைந்ததாலோ என்னவோ பாட்டில் பூதம் வாசிப்பு கொஞ்சம் கூட போரடிக்கவே இல்லை...
    உடன் இதுவரை வாசிக்கா சாகஸங்களாய் சிகப்பு தளபதியும்,வீனஸ் கல் மர்மமும் எக்ஸ்ட்ரா லட்டுகளாய் அமைய மகிழ்ச்சிக்கு சொல்லவா வேண்டும்...
    ஆங்காங்கே கொஞ்சம் காதில் புய்ப்ப வாசம் அடித்தாலும் வாசிப்பின் சுவராஸ்யம் அதையும் இரசிக்கவே செய்கிறது...
    ரொம்பநாளைக்கு அப்புறமா ஒரு மறுபதிப்பு ஒரே மூச்சில் வாசிச்சது இப்போதான்...
    பாட்டில் பூதம்-நினைவுப் பேழையில் தங்கிய இனியதொரு வாசிப்பு...

    ReplyDelete
  79. *மேஜீக் மூவ்மெண்ட்ஸ் ஸ்பெஷல்*

    அடேங்கப்பா சரியாக இரண்டரை மணி நேரம் அமெரிக்க எல்லையோரத்திலும் ,மெக்ஸிகோ நகரிலும்..அந்த சிறை கூடத்திலும் இருந்து நான் அலைந்து திரிந்து பின் அடைந்து கிடந்து பின் நண்பர்களின் உதவியால் நான் சாரி டெக்ஸ் தப்பித்து வருவதற்குள் ...

    அடேங்கப்பா...

    யாருப்பா அது.. முன்னர் டெக்ஸ் கதை அனைத்தும் ஒன்றே என்பவர்களுக்கு சமீப டெக்ஸ் இதழ்கள் சரியான பதில் அளித்து கொண்டிருக்க இப்பொழுது டெக்ஸ் வருவார் குண்டு தீராத துப்பாக்கியில் சுட்டு கொண்டே இருப்பார் என்ற விமர்சனத்திற்கும் சரியான பதிலுரையை இந்த சாகஸம் அளித்து விட்டது...

    எதிரிகளின் சூழ்ச்சியால் டெக்ஸ் மெக்ஸிகன் சிறையில் அடைந்து கிடக்க மற்ற கதாபாத்திரங்கள் அவரை காப்பாற்ற திட்டம் போடுவதிலும் ,செயலிலும் கலக்கி எடுத்து விடுகிறார்கள்..

    அதே போல் எப்பொழுதும் டெக்ஸ் எதிராளிகளை சூழ்ச்சி வலையில் சிக்க வைப்பார்கள் இங்கேயோ எதிரிகளின் சூழ்ச்சி வலையில் நாயக நண்பர்கள்...

    என ஒரு வித்தியாசமான ...பரபரவென ..விறுவிறுவென ..படப்படப்புடன் ஒரே மூச்சில் வாசிக்க வைத்த இந்த இதழ் இந்த சிறப்பிதழுக்கான சரியான தேர்ந்தெடுத்த கதை களம் ...கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அது வில்லன் குழுவோ ,நாயக குழுவை சேர்ந்தவர்களோ அனைவருமே கதைக்கு வழு கூட்டுகிறார்கள்..அதுவும் பாதர் கதாபாத்திரம் அட்டகாசம்...

    கதைதான் பட்டையை கிளப்புகிறது எனில் இதழின் தயாரிப்போ தரத்திலும்.. ,வண்ணத்திலும்..,சித்திரத்திலும் கண்ணை கவர்கிறது...கதை ஓர் தொகுப்பாக முடிவுற்று இருந்தாலும் இன்னமும் இந்த சாகஸம் தொடர்ந்து வரலாம்...அல்லது வந்து இருக்கலாம்..அப்படி வருகை தந்து இருந்தால் விரைவில் அந்த சாகஸத்தையும் வெளியிடுமாறு ஆசிரியரை கேட்டுக்கொள்கிறேன்..

    மீண்டும் ஓர் இரண்டரை மணி நேரத்தை அட்டகாசபடுத்திய ஆசிரியர் குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்..

    ReplyDelete
  80. *கபிஷ்*

    என்றோ பால்யத்தில் நான் படித்து ரசித்த கபிஷ் கதைகளை, என் குடும்பத்தாருக்கும், என் தோழர்களின் குடும்பத்துக்கும் அறிமுகப்படுத்த கிடைத்த பொக்கிஷம்

    நன்றி எடிட்டர் சார்.

    9 கதைகளில் முதல் கதையை மட்டுமே படித்த நனைவுள்ளது. மீதி எட்டுக் கதைகளை புதிதாக படிப்பது போல உணர்ந்தேன்.

    என் மனைவியும் படித்து முடித்து விட்டு ஆறு வயது குழந்தைகளுக்கு ஏற்ற புத்தகம் என்று சொல்லி விட்டு சென்றார்.

    ஒரு மழைக்கால நாள் எதிர்பாராமல் கொடுத்த நேரம், வீனாகப் போகாமல் வாசிக்க இத்தனை புத்தகங்களை அனுப்பியதற்கு நன்றிகள் பல..

    🙏🏾

    ReplyDelete
  81. After reading rating.

    1. dylan dog
    2. . texas rangers
    3. magic moments special
    4. Thorgal
    5. kabish
    6. classic superstars special 3
    7. the super stars specials( இன்னும் முடிக்கல, முடியல)

    ReplyDelete
  82. வீனஸ் கல் மர்மம் - முதல் முறை படிக்கிறேன். Short and sweet ஸ்பைடர் கதை- அருமை

    ReplyDelete
  83. எனக்கு டீ இன்னும் (புத்தகங்கள்) வர்ல..

    ReplyDelete
  84. சென்னையில் என்னைத்தவிர எல்லோருக்கும் பத்தகங்கள் வந்துலிட்டன.

    ReplyDelete
  85. இன்னும் எனக்கும் வரவில்லை😔

    ReplyDelete
  86. The super stars special:- முதல் இரண்டு பாகங்கள் நன்றாக இருந்தது, நேர்கோட்டு கதையாக இருந்தது, இந்த கதை சாரி. புரிவில்லை, இன்னும் முடியல்ல. கொஞ்சம் நேரம் எடுத்து நிதானமாக படித்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  87. மேஜிக் மொமெண்ட்ஸ் ஸ்பெஷல் முதன்முறையாக ஆரம்ப கால டைகர் கதைகளில் வருவது போன்றே எதிர்பாராத திருப்பங்களும், விவேகமான முடிச்சுகளும், அதை அவிழ்க்கும் மதி நுட்பமும் கலந்த நேர்த்தியான கதை பாணியில் டெக்ஸ் என்பதே ஆச்சர்யம் தான். கதை ஆரம்பித்ததில் இருந்து இறுதிவரை பட்டாசாக இருந்தது. இன்னும் இறுதி தெரியவில்லை. இருந்தாலும் இக்கதை முடித்திருக்கும் வரை எனச் சொல்லலாம். அடுத்த பாகங்கள் எப்போது வரும் என்று தெரியவில்லை. டெக்ஸ் அடிக்கடி அடி வாங்கியதை பார்த்த நாம் அவரின் பதிலடியை பார்க்க இன்னும் எத்தனை நாள் ஆகும் எனத் தெரியவில்லை.

    ReplyDelete
  88. "தி மேஜிக் மொமெண்ட் ஸ்பெஷல் "__
    ..ஐயோ... சொக்கா ..
    ஆயிரம் (பொற்காசுகளும்) காமிக்ஸ் - களும் எனக்கே கிடைச்சிடுச்சா.. ii.
    அப்பா... முதல்ல வீட்டுக்கு ஒரு பெரிய லாக்கர் வாங்கனும்..
    அப்றம் - எல்லா blog -யிலயும்
    அட்ரஸ மாத்தனும்..
    நானில்லை...
    நான் அவன் இல்லை ...
    இப்படி பொலம்ப வச்சிட்டாரே...
    எப்பா.. சொக்கா ...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா....இரத்தப் படலம்... காககா....மின்னும் மரணம்....தங்கக் கல்லறை...பரகுடாக்கிணை

      Delete
  89. வணக்கம். இந்த மாதம் கொரியர் பிரிக்கும் போது வந்த மகிழ்ச்சி வேற மாதிரி இருந்தது. எடுக்க எடுக்க புத்தகம் வந்து கொண்டே இருந்தது. நன்றி. என்ன mms புத்தகம் டெக்ஸ் கதைக்கு ஒரு நல்ல தலைப்பு வைத்திருக்கலாம். தலைப்பு இல்லாமல் எனக்கு கதையோடு ஒன்ற முடியவில்லை.

    ReplyDelete
  90. நேற்று காலை 10 மணிக்கு இங்கு, திருவண்ணாமலையில் பெய்ய ஆரம்பித்த மழை இடைவிடாமல் இன்றும், இன்னும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கொரியர் DTDC ஆபீஸ்க்கு வந்தும், இன்னும் என் வீட்டுக்கு வரவில்லை. நாளை தான் கிடைக்கும் போலிருக்கிறது.

    ReplyDelete
  91. தோர்கல் - காலையில் கையில் எடுத்த இதழை ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். கதைக்கு மிக பெரிய பலம் எளிதான மொழி பெயர்ப்பு. கிறிஸ் ஆப் வல்நார் என்ன ஒரு பாத்திர படைப்பு. முன் அட்டை படத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுத்தது மிகவும் சரியே 🙌

    ReplyDelete

  92. *சேலம் புத்தக விழா சந்திப்பு 2024*

    *இந்த நாள் நிறைவான நாள்*

    *இன்றைய நாள் இனிய நாள்.... காலை 11மணிக்கே ஸ்டால் வந்தது முதல் இப்போது 7மணிக்கு கிளம்பியது வரை சர்ரனு ஓடிட்டது.....*

    *காலையில் மழையில் நனைந்து கொண்டே ஸ்டால் சென்றபோது எனக்கு முன்பே ரகுவும் சுரேஷ்ம் ராஜசேகரனும் மட்டுமே இருந்தார்கள்...*

    *மழை பெய்தவண்ணமே இருந்தது... அரை மணி நேரம் ஓடிபோனது...12மணிக்கு கொஞ்சம் கலக்கமாக இருந்தது....*

    *மழையிலயே மீட்டிங்கை நடத்திடலாம்னு தப்பு கணக்கு போட்டமோனு கூட ஒரு கணம் யோசித்தேன்...*

    *ஆசிரியர் சாருக்கு போன் போட்டேன்....Red Taxi யில் ஏறிட்டேன் சார்...அடுத்த 5வது நிமிடத்தில் வந்திடுவேன் என கூறினார்*

    *ஆஹா ஆசிரியர் சார் வரும்போது நாலைஞ்சு பேர் கூட இல்லைனா என்ன பண்றதுனு அடாத மழையிலும் குப்புனு வேர்க்க ஆரம்பித்திட்டது...*

    *ஆனால் அடுத்த அரை மணியில் நடந்தது மேஜிக்....கோவை தோட்டம் சிவா, மேட்டூர் பூபதி, செந்தில் சத்யா, கடல்யாழ், பூனைகுட்டி தமிழய்யா என கடகடனு நண்பர்கள் வந்து சேர ஆரம்பித்தனர்...*

    *தலீவரும் பழனிசாமியும் அப்போதுதான் வந்திருந்த ஆசிரியர் சாரை வரவேற்று அழைத்து வந்தனர்...*

    *கோவையில் இருந்து பாபு, ஈரோடு நண்பர்கள் ஷாம்,ஹமீது சகோ, இரட்டையர்கள் GP, ஜேகதீஷ் என பஞ்ச பாண்டவர்கள் ஒரே காரில் வந்து ஐக்கியமாகினர்...ஹப்பாடா என பெருமூச்சு வந்தது...*

    *நண்பன் ரகுவின் குழந்தைகள் ஆசிரியர் சாரை பார்க்க என்றே அடம்பிடித்து கொட்டும் மழையில் ஆட்டோ பிடித்து வந்து சேர்ந்தனர்*

    *பிரியாணி ரெடியாகிட்டே இருக்கு மாம்ஸ், நீ சொல்லும்போது அங்கேயே வந்து தந்திடுவாங்க என பேபி (எ) சுசி போன் போட, போடு வெடியை என உற்சாகம் தொற்றி கொண்டது....*😋😋😋😋😋

    *ஸடாலில் சிலபல க்ளிக்குகளை எடுத்து கொண்டு கூட்டத்தை இனி தாங்காது நம் ஸ்டால்னு ஆன உடன் அருகேயிருந்த குறுக்கு நடை பாதைக்கு இடம் பெயர்ந்தோம்*

    *ஆசிரியர் சாரோடு நண்பர்கள் தெறிக்கும் உற்சாகத்தோடு உரையாட ஆரம்பித்தனர்*

    *3லட்சத்து 3ஆயிரத்து முன்னூற்றி முப்பத்தாறு தடவையாக கிளம்பிய கேள்விகளுக்கும், பல புதிய வினாக்களுக்கும் ஆசிரியர் இன்முகத்துடன் பதில் அளித்து கொண்டே வந்தார்*

    *சுவாரயஸ்யமான பேச்சில் ஆசிரியர் சார் இடை இடையே டைமிங் ஜோக் ஆக அடிக்க மழைக்கு இணையாக நம் உற்சாக வெள்ளத் கரைபுரள ஆரம்பித்தது..*

    *12.30க்கு மேல வேலையின் காரணமாக சுரேஷ் கிளம்பிட, அமெரிக்க ஃப்ளோரிடா வாழ் நண்பர் முகமது, தஞ்சாவூரில் இருந்து வந்து பர்சேஸ் செய்து கொண்டு கொண்டு இருந்தார்...ஆசிரியர் சாரை பார்த்துட்டு போங்கனு அழைத்தேன்...சட்டுனுஅவர் வர, ஆசிரியர் படபடனு அவரது சந்தா விவரங்களை சொல்ல ஆச்சர்யம்..டெக்ஸ் புக்ஸ் மட்டுமே ஃப்ளோரிடா வர வைக்கிறாராம் நண்பர் முகமது...*

    *.....நம்ம குழவில் உற்சாகத்துடன் அனைத்து உரையாடல்களில் பங்கு கொள்ளும் சேலம் நண்பர் பாலா @⁨~mbalababy⁩ தம் துணைவியாருடன் நம் ஸடாலில் கணிசமான பர்சேஸ் முடித்து கொண்டு நம்ம ஜோதியில் ஐக்கியமானர்*

    *சிக்ஸர் மன்னன் வினோத் தன் செல்லங்களுடன் வந்து சேர்ந்து ஆசிரியர் சாருடன் சில க்ளிக்குகளை எடுத்து கொள்ள....நேரம் 1.30ஐ நெருங்கிட.....என் போன் ஒலிக்க...."பிரியாணி கொண்டு வந்திருக்கம்ணா, புக்ஃபேர் நுழைவாயிலில் உள்ளோம்"--- னு பதில் வர.....சைடு நுழைவாயிலுக்கு வர சொல்லி நானும் தலீவரும் தலா 15பிரியாணி பொட்டலங்கள் அடுக்கப்பட்ட பைகளை ஆளுக்கொன்றாக வாங்கி கொண்டோம்...😋😋😋😋😋*

    *நண்பர் முகமது விடைபெற்று செல்ல நேரம் 2மணியாகிட Mr.வருண் சாரின் ராகத்துக்கு நம்ம வயிறுகளும் தாளம் போட ஆரம்பித்தன....*

    *நம் குழுவின் தொன்று தொட்டு வரும் சம்பிரதாயப்படி முதல் பிரியாணியை நம் பாசமிகு தலீவர் பரணிதரன் @⁨பரணிதரன் தலீவர்⁩ பெற்று கொள்ள அனைவரும் ஃபுட் கோர்டுக்கு நகர்ந்தோம்*

    ReplyDelete
    Replies

    1. *ஃபுட் கோர்ட்டில் barbeque வில் நம் அன்பின் ஆசிரியர் சார் சிக்கென் ஸ்னாக்ஸ் ஆர்டர் பண்ணிட, அமெரிக்க வாழ் கோவை மாப்பு மஹி@⁨மஹி மாப்பு⁩ யோட அன்பு கலந்த பிரியாணியை அனைவரும் உண்டு மகிழ்ந்தோம்...*

      *ஆசிரியர் சார் நம்மோடு இணைந்து பிரியாணி சுவைத்தது நம் அனைவருக்கும் நெகிழ்ச்சியான தருணம்*🥰🥰🥰🥰

      *"விஜயன்" என்ற பெயரை பார்த்தே வளர்ந்த நாம் அவரோடு உணவருந்தும் சமயம் எப்போதும் ஸ்பெசல் தருணமே*😍😍😍😍😍

      *சரியாக அப்போதுதான் வந்து சேர்ந்திருந்த கரூர் நண்பர்கள் சாமிநாதன், தங்கம் இருவரும் பிரியாணி விருந்தில் இணைந்து கொள்ள.....தொடர்ந்து சூடான சேகோ பாயசமும் ஆசிரியர் சார் அனைவருக்கும் வாங்கி தர இனிப்போடு நிறைந்தது வயிறுகள் மட்டுமல்ல நம் நெஞ்சங்களும்தான் என நான் சொல்லிடவும் வேணுமா...!!!!*🤩🤩🤩🤩

      *3மணிக்கு மேல் உள்ளூர் நண்பர்கள் குமார், யுவா, ஸ்ரீராம், டாக்டர் சுந்தர் இணைந்து கொள்ள மீண்டும் குறுக்கு கட்டிங்கில் காலியாக இருந்த ஸ்டாலில் தஞ்சமடைந்தோம்*

      *அப்போது தான் அந்த குழந்தையுள்ள நண்பர் மூத்த வாசகர் இடைப்பாடி@⁨~g.duraipandian⁩ துரைபாண்டியன் அண்ணன் வந்து சேர்ந்தார்....ஆசிரியர் சாரையும் நண்பர்களையும் பார்த்து அவர் துள்ளகுதித்த உற்சாகத்தில் பால்ய நண்பன் கபீஷனே ஆச்சர்யமாகிட்டான்....."கபீஷ்" புத்தகத்தில் அவர் ஆசிரியர் சாரின் கையொப்பம் பெற்று கொண்டு ஒலிம்பிக் தங்கத்திற்கு இணையாக அதை அணைத்து கொண்டது சிலிர்க்க வைத்து விட்டது🥰🥰🥰🥰🥰*
      *உரையடல்களுக்கு இடையிடையே சிறுதும் பெரிதுமான பர்சேஸ்களாக நண்பர்கள் போட்டு தாக்கிட நேரம் மாலை 4மணியாகியது....நீண்ட தூரத்தில் இருந்து வந்திருந்த நண்பர்கள் ஒவ்வொருவராக விடைபெற்று செல்ல ஆரம்பிக்க....டீ குடிக்காலம் வாங்க சார், அண்ணானு யுவா அழைத்து சென்றார் மீண்டும் ஃபுட் கோர்டுக்கு....*

      *கொஞ்சமும் இடைவெளி இன்றி குமுறிகொண்டே இருந்தார் வருண் சார்....வயிற்றில் கொஞ்சம் வெற்றிடம் தோன்றிட அதை சேகோ போண்டா வித் சட்னி, சுண்டல் கொண்டு டாப் அப் பண்ணிவிட்டனர் யுவாவும் ஆசிரியர் சாரும்☺️☺️☺️*

      *மழை ஓரு பக்கம் குமுறிட்டே இருக்க நம் அரட்டை கச்சேரிகளும் தொடர்ந்திட..... நாமக்கல் நண்பர் @⁨~thilagammedical2001@gmil⁩ திலகம் மெடிகல் குணசேகரன் தம் செல்வங்களுடன் வந்திருந்து ஆசிரியர் சாருடனும் நண்பர்கள் உடனும் போட்டோஸ் எடுத்து கொண்டார்...*

      *அடுத்தடுத்த திட்டங்கள், சென்னை புத்தக விழா ஏற்பாடுகள் என ஆசிரியர் சார் அடுத்த சில மாதங்களின் அவுட் லைனை தெரிவித்தார்*

      *மாலை 6.30ஆகிட அன்பின் ஆசிரியர் சார் கிளம்பிட, 6மணி நேரங்களுக்கு பிறகு உற்சாகம் அலையடிக்கும் மனதோடு அவரை ரெட் டாக்ஸியில் ஏற்றி அனுப்பிட்டு்...அனைவரிடமும் விடைபெற்று கொண்டு நானும் 7மணிக்கு கிளம்பினேன்....*🤩🤩🤩🤩🤩

      *கடும் வேலையின் நடுவே அமைந்த இந்த சந்திப்பு சந்திப்பு அனைத்து சில மாதங்களுக்கு மனதில் உற்சாகத்தை அலையடிக்கச் செய்யும் நண்பர்களே*🥰🥰🥰🥰🥰

      *அடாத மழையையும் பொருட்படுத்தாமல் சேலம் வந்திருந்து விழாவை சிறப்பித்து நம்மோடு உணவருந்தி சென்ற அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த அந்த ஒற்றை வார்த்தையை தெரிவித்து கொள்கிறேன்*

      *----நிறைவான நெகிழ்ச்சியுடன் STV🙏🙏🙏🙏🙏*

      Delete
    2. சேலம் புத்தகக் கண்காட்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் இப்படி துல்லியமாகவும், உற்சாகத்துடனும் பதிவு செய்திருக்கும் உங்கள் பதிவினை பார்த்து வெகு நாட்களாகிறது சார்... தொடர்ந்து தளத்திற்கு வாருங்கள்... படிக்கப் படிக்க கண்முன்னே காட்சிகள் விரிகிறது. நாங்களும் உடன் இருந்தது போல ஒரு உணர்வினை தருகிறது.

      Delete
    3. மிக்க மகிழ்ச்சி விஜயராகவன். நேற்றைய நிகழ்வை கண்முன் நிறுத்தியதற்கு நன்றி 🙏🏻

      Delete
  93. இதோ ஓர் அற்புதம்....கதையின் துவக்கமே கார்சன் இதே ஆயுத வியாபாரிகள்...ஆளுநர்கள் என போரடிக்கும் போல துவக்க...நமக்குள்ளேயும் அதே ஓட ...கதை நீண்ட பக்கங்களில் அனைத்துமே கப்சிப்....டெக்சுக்கு வேலையில்லை....சிறைக்குள்ளும் தலைவர் ஹீரோவாக வாழ....வழக்கம் போல அதிர்ஷ்ட தேவதை அணைப்பில்....அரவணைப்பில் அஞ்சாநெஞ்சனாய்....கதைக்கு தேவையான மாந்தர்களை அழகாய் கூட்டி வந்து கதையை நகர்த்தியிருக்கிறார் கதாசிரியர்....லார்கோ கண்களும் ஷெல்டன்களும் தூள் கிளப்பிய அதே களம்....ஆனா இங்க ஹீரோ யூகிப்பத வில்லனும்...வில்லனின் செயல்திட்டத்தை ஹீரோவும் கச்சிதமான சொல்லியபடி நகர்வது அழகு....அயர்ச்சியில்லாம நகர்த்துவது சாமர்த்தியமே...துப்பாக்கியால்தான் டெக்சும் டெக்ஸ் கதைகளும் பிழைக்குமென கூறும் அந்த 20 பேருக்குமோர் அதிர்ச்சி...டெக்சின் துப்பாக்கி குண்டை கக்கியது எத்தனை முறை என ஒரு கை விரல் விட்டு எண்ணிடக் கூடிய முதல்கதை...

    நம்ம ஆசிரியர் லயனுக்கு கிரீடத்தில் பொதித்த ரத்தினங்கள் ஏராளம்....தனது தலைக்கு ஓரழகிய கோகினூரை பதித்துக் கொண்டார்....கார்சனின் கடந்த காலம் போல...இதோ ஓர் நட்பு...காதல்...பழிவாங்கல் ...அழகிய திட்டமிடல்களால் நகர்வு...என அழகிய அதிரடி....காககா சற்றும் சளைத்ததல்ல கைதியை மீட்கும் இப்போராட்டம்....ரயிலை விரட்ட கார்சன் தடாலடியும்....காதலிக்காக தீவிரவாதிகள் தலைவனும் மனதில் பதிகிறார்கள்...செம சார்...முள்ளை முள்ளால் எடுத்த கதை ...வழக்கம் போல புனித மானிடோ உங்களுக்கு தந்த கொடை

    ReplyDelete
  94. மகனார் அந்த சீகலுடன் தண்ணீருக்குள் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருக்கிறார் நிதமும் தம்பியாண்டானோடு

    ReplyDelete