Powered By Blogger

Saturday, November 16, 2024

ஒரு மழைநாளின் நவம்பர் !

 நண்பர்களே,

ஒரு மழைநாள் மாலையின் வணக்கங்கள் ! அது இன்னா மாயமோ தெரியலை, மழை சொட்டும் அழகை ஜன்னல் வழியே ரசிக்கும் போது உலகுக்கே ஏதாச்சும் சேதி சொல்லணும் போலவே தோணுறது (எனக்கு) வழக்கம் ! அதுவும் அந்த rainy day ஒரு saturday-ல் அமைந்து போனால், உள்ளுக்குள் அடைபட்டுக் கிடக்கும் அரிஸ்ட்டாட்டிலும், சாக்ரடீசும் 'நானு..நீயு'ன்னு போட்டி போட்டுக்கினு வெளிப்பட முனைகிறார்கள் ! 'கொஞ்சம் அடங்குங்கப்பா...லோகத்துக்கு ஏற்கனவே கொள்ளை பேரு டிசைன் டிஸைனா சேதி சொல்லிப்புட்டாங்க - நாமளும் சேர்த்துப்புட்டா பூமி தாங்காது !' என்று கெஞ்சிக் கூத்தாடி அவர்களது வருகைகளுக்கு அணை கட்ட வேண்டியதாகிப் போச்சு ! 

வேறு ஒண்ணுமில்லீங்க - ஆண்டின் இறுதியினை நோக்கி உலகமே நடைபோட்டு வரும் இந்த வேளையினில், உலகெங்குமுள்ள காமிக்ஸ் பதிப்பகங்கள் 2025-க்கெனத் திட்டமிட்டுள்ள சிலபல அசாத்திய ஆல்பங்கள் கண்ணில் பட்டு வருகின்றன ! ஒவ்வொன்றும் ஒரு பாணியில், ஒரு ஜான்ராவில், ஒரு அழகில் மூச்சிரைக்கச் செய்து வர, மொழி தெரியாமலேயே அவற்றை ரசிக்கும் போதுமே இந்தப் பத்தியின் முதல் வரியானது நிஜமாகிட முனைகிறது !! இன்ன தான் ஒரு காமிக்ஸ் ஆக்கத்தின் வரம்பு என்றெல்லாம் இல்லாது, இப்போதெல்லாம் கதாசிரியர்கள் கையில் எடுக்கத் துவங்கியுள்ள களங்கள் மெய்யாலுமே மெர்சலூட்டுகின்றன !

காதலின் பற்பல பரிமாணங்களை தகிரியமாய் கையிலெடுத்து அலசுகிறார்கள் !! 

பிரபல புதினங்களைக் கையிலெடுத்து காமிக்ஸ் ஆல்பங்களாக்கி தெறிக்க விடுகிறார்கள் ! 

வரலாற்றுக்குள் புகுந்து செம்மையாய் ஒரு யு-டர்ன் போட்டு நாம் இதுகாரும் சிந்தைகளில் உருவகப்படுத்தி வைத்திருந்த சமாச்சாரங்களுக்கெல்லாம் புதுசாய் ஒரு கோணத்தில் விளக்கம் தர முற்படுகிறார்கள் ! 

சமகால உலக அரங்கில் அரங்கேறி வரும் அரசியல் சதுரங்கங்களை தோலுரித்து பட்டையைக் கிளப்புகிறார்கள் ! 

மருத்துவத்திற்கும் ஒரு காமிக்ஸ் பார்வையினை தந்து பார்க்கிறார்கள் ! 

கார்ட்டூன்களுக்கு புதுசாயொரு அர்த்தம் கற்பிக்கிறார்கள் !

அமானுஷ்யங்களை அசால்ட்டாக அரவணைக்கிறார்கள்...

And of course - நமக்குப் பிரியமான வெஸ்டர்ன் கதைகளையும் தடபுடலாக தாளித்துத் தள்ளுகிறார்கள் !!

So கடைவாயில் ஜொள்ளு ஒழுக இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது உள்ளுக்குள் கலவையாய் எண்ணங்கள் ஓட்டமெடுக்கின்றன !! பிரதானமானது - "நாம் இவுக உசரங்களுக்கு எண்ணிக்கைகளில், அளவீட்டில்  வளர முடியாங்காட்டியும், பன்முகத்தன்மையிலாச்சும் நெருங்கிட நினைத்தால் இன்னமும் எத்தனை ட்ரம் காம்பிளான் குடிக்க வேணும் ?" என்பதே !! 

இன்றைக்கெல்லாம் "அவை மேற்கத்திய ரசனைகள் !...நமக்கு ரசிக்காது !" என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்வது சரிப்படாது ! Netflix தளத்துக்குள் நுழைந்தால் அமெரிக்காவில் ஓடக்கூடிய டி-வி தொடர்கள் முதற்கொண்டு அணிவகுத்து நின்று சக்கை போடு போட்டு வருகின்றன ! So டாலர் தேசங்களும் சரி, யூரோ பூமிகளும் சரி, இன்றைக்கெல்லாம் ரசனைகளில் நமக்கு அந்நியமே அல்ல தான் ! யதார்த்தங்களும், மாறி வரும் பொழுதுபோக்கு பாணிகளும் புது ரூட்களில் சீறிப் பாய - நாம மட்டும் இன்னமும் "மாசிலா உண்மைக் காதலி !! மாறுமோ - செல்வம் வந்த போதிலே'ன்னு தலைவர் காலத்தின் மரங்களை சுற்றி டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறோமே ?!! அது why மக்கா ? எல்லாமே மாறி வரும் இந்த வேளைகளில் - ஒரு குட்டியூண்டு வட்டத்தின் காமிக்ஸ் வாசிப்புகள் மட்டும் ஒரு அகழி சூழப்பட்டதொரு இரும்புக்கோட்டையாய் ; பழசை ஆராதிக்கும் படையாய் ; மாற்றங்களை பகிஷ்கரிக்கும் பட்டாளமாய்த் தொடர்வது ஏனோ ? Why மக்கா ?

ஜன்னல் வழியே மழைத் தாண்டவங்களைப் பார்க்கும் போதே நமது ஜம்போ காமிக்ஸ் முயற்சியானது மனசில் 'ரா...ரா....சரசுக்கு ரா...ரா !!' என்று குதிக்கிறது ! ஜம்போ காமிக்ஸ் பின்னணியில் நாம் கொண்டிருந்தது - நாயக பிம்பங்களின் அவசியங்களின்றி, கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்திடும் one-shots இங்கு அணிவகுத்திட வேண்டும் என்ற அவாவே ! I agree - அங்கு நமது கதைத்தேர்வுகள் எல்லா தருணங்களிலும் bang on target இருந்திருக்கவில்லை  தான் ; but அதே சமயத்தில் அந்த தனித்தடமே மூணு, நாலு ஆண்டுகளில் மூலை சேர்ந்திட வேண்டிய அளவிற்கு டப்ஸாவாக இருக்கவுமில்லை தான் ! So why did it not click ? என்ற கேள்வியே இந்த நொடியில் என்னுள் !! 

சாப்பாட்டு பாணிகளில் மாற்றங்களை ஆர்வமாய் அரவணைத்திருக்கிறோம் ! நம்மூர் உணவுகளில் "பனீர்" எனும் ஐட்டத்தை நான்லாம் ஒரு 20 வயதான பிற்பாடு தான் பார்க்கவே செய்திருப்பேன் ! "ஷவர்மா' என்றால் ஷவரில் குளித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அம்மாவிடம் உணர்த்தும் வார்த்தையாக மட்டுமே என் காலத்தில் இருந்து வந்தது ! KFC ; Subway ; McDonalds ; Popeyes ; Dominos ; Pizzahut என்பனவெல்லாமே அமெரிக்கா போயிட்டுத் திரும்புவோரின் பீட்டர்களில் காணப்பட்டு வந்த பெயர்களாய் மாத்திரமே இருந்து வந்தன ! ஆனால் இன்றைக்கோ நிலவரம் என்ன சொல்லுங்களேன் ? நம் வீட்டு அரை டிக்கெட்கள் தாமாய் KFC-ல் ஆர்டர் போட முனைந்து வருகின்றன !!

பொழுதுபோக்கு வழிமுறைகளிலும் தான் எம்புட்டு மாற்றங்கள் ? தூர்தர்ஷனில் ராமாயணம் சீரியலைப் பார்க்க ஞாயிறு காலையில் தேசமே டிவி பெட்டிகளின் முன்னே குவிந்த காலங்களெல்லாம் இன்றைய OTT தலைமுறைக்கு என்னவென்று கூடத் தெரியாது தானே ? "கொரியன் சினிமா பிடிக்கும் ya ; I like Scorcese ; இரானியன் சினிமாக்கள் ரெம்போ different தெரியுமா ? என்ற சம்பாஷணைகள் இன்றைக்கு நார்மலே !! 

நமது விடுமுறைத்தல செலெக்ஷன்களில் ; நடையுடைகளில் ; ஓட்டும் வண்டிகளில் ; அரசியல் பார்வைகளில் - என சகலத்திலும் மாற்றம் நிரந்தரம் என்றாகி விட்டது ! பச்சே - ஈ பொம்ம பொஸ்தவ வாசிப்பில் மட்டும் கட்டுப்பட்டிகளாகவே நாம் தொடர்வது ஏனோ சேட்டா ? நூத்தியொன்றாவது தபாவாக இந்தக் கேள்வி என்னுள் ! I agree, கி.நா.க்கள் இன்று நமக்கு அந்நியமல்ல தான் ; XIIIதாத்தாஸ் / டெட்வுட் டிக் / நிஜங்களின் நிசப்தம் / கென்யா போன்ற செம offbeat கதைகளையும் இப்போதெல்லாம் ஏற்றுக் கொள்கிறோம் தான் ; but still நமது comfort zones மாயாவிகளோடும், ஸ்பைடர்களோடும், டெக்சோடும், டைகரோடும், லக்கி லூக்கோடும் ; ரிப்போர்ட்டர் ஜானிகளோடும் தானே பிரதானமாய் இருந்து வருகின்றன ? இந்த குட்டியூண்டு சமாச்சாரத்தினில் மட்டும் வெயிலடிச்சாலும், மழை பெய்ஞ்சாலும், புயல் வீசினாலும் நமது மைய ரசனைகள் இம்மியும் மாற்றம் காணாது தொடர்வதன் மாயம் தான் என்ன ? இது ஏற்கனவே நாம் பேசியுள்ள topic தான் என்றாலும், அகவைகளின் முன்னேற்றத்துடன் இதே கேள்வியினை மறுக்கா ஒருமுறை அணுகிப் பார்ப்பதில் தப்பில்லை என்றே தோன்றுகிறது ! 

இந்த வாரத்துக்கான கேள்வியாய் உங்களிடம் நான் முன்வைக்க விழைவது இதைத் தான் guys : என்றைக்கேனும் ஒரு கனவு ஆண்டினில் - ஒரு முழு வருஷச் சந்தாவிற்கும் big names இன்றி, புதியவர்களை ; புதுக் கதைகளை / தொடர்களை கொண்டு வெற்றிகரமாய் செதுக்கும் வாய்ப்பு அமையுமுங்களா ? அல்லாங்காட்டி - "வாய்ப்பில்லே ராஜா"ன்னு தான் நமக்கு நாமே சொல்லிக்கணுமா ? Your thoughts please ladies & gentlemen ?

ஆங்...மழை விட்டுப்புட, நமக்குள்ளான அந்த தத்துவ மேதைகளும் மண்டையை உள்ளுக்குள் இழுத்துக் கொள்ள, இதோ - டிசம்பரில் காத்துள்ள நமது fantasy நாயகர் தோர்கலின் பிரிவியூ !! In fact இந்த இதழ் போன வாரமே பிரிண்ட் ஆகி, பைண்டிங்கும் முடிந்து ரெடியாகி இருக்க - சும்மா அருண் ஐஸ்க்ரீமின் butterscotch 1 லிட்டர் bar போல புக் தகதகக்கிறது ! கருணையானந்தம் அங்கிளின் க்ளாஸிக் நடையில் இந்தக் கதையின் பணிகளை சுலபமாய் முடிக்க முடிந்ததால் - தோர்கல் இம்முறை ஜிலோவென்று ரெடியாகி விட்டார் ! இதோ - கெத்தாய் அம்மணி க்றிஸ் of வால்நார் காட்சி தரும் ஒரிஜினல் அட்டைப்படம் !! And உள்ளாற இந்த 2 அத்தியாய சாகசத்தில் கொஞ்சமே கொஞ்சமாய் 18+ சமாச்சாரங்களும் இடம்பெற்றுள்ளன ! No கத்திரி ; no எடிட்டிங் என படைப்பாளிகள் கறாராய் சொல்லிப்போட்டதால் உள்ளது உள்ளபடிக்கே !! எண்ட தெய்வமே !!  



தோர்கலின் இந்தக் குறிப்பிட்ட கதைச் சுற்று இன்னும் ஒரு ஆல்பத்தோடு நிறைவுறுகிறது ! So 2025-ன் துவக்க மாதங்களிலேயே அதனையும் வெளியிட்டு விடலாம் - கதை உங்களின் ஞாபகங்களில் இருக்கும் போதே ! அதையும் சேர்த்து 3 பாக ஆல்பமாய் இப்போதே போட்டிருக்கலாம் தான் - ஆனால் அவ்விதம் செய்திடும் பட்சத்தில் புக்கின் விலை ரூ.375 என்றாகியிருக்கும் ! And தோர்கலின் ஆல்பங்கள் அந்த விலைகளில் பெருசாய் ஸெல்ப் எடுப்பதே கிடையாது - என்பது தான் வார்னிஷ் இல்லாத நிஜம் ! 12 ஆண்டுகளுக்கு முன்பாய் துவங்கிய இத்தொடரின் சகல ஆல்பங்களும் இன்னமும் நம்மிடம் ஸ்டாக்கில் உள்ளன என்பதை நான் சொல்லவும் வேணுமா - என்ன ? So விற்பனை / வியாபார நோக்குகளும் உட்புகும் போது, கதைகளை பிரித்து வெளியிடுவதைத் தவிர்க்க இயலவில்லை guys !    உங்களின் புரிதல்களுக்கு முன்கூட்டிய நன்றிகள் !!

And இதோ - போன வாரம் போட விடுபட்டுப் போன இளம் டெக்சின் உட்பக்க preview !


Moving on, நவம்பரில் இறுதி வெள்ளியன்று சேலத்தில் புத்தக விழா துவங்கிடவுள்ளது என்பதால் அதற்கான முஸ்தீபுகளில் நம்மாட்கள் பிசி ! 

  • கபிஷ் ஸ்பெஷல் 1 - ரெடி !
  • க்ளாஸிக் சூப்பர்ஸ்டார்ஸ் ஸ்பெஷல் 3 - ரெடி !
  • ELECTRIC '80s - முதல் இதழான ஸ்பைடர் ஸ்பெஷல் - ரெடி ! 

தவிர, டிசம்பர் புக்ஸ் அனைத்துமே சேலத்தில் ஒன்றிரண்டு நாட்களிலேயே கிடைக்கும் என்பதால் அப்பகுதி நண்பர்களின் ஷாப்பிங்குக்கு நிறையவே புக்ஸ் இருக்கும் ! And இன்னமும் ELECTRIC 80's / சேலம் ஸ்பெஷல் இதழ்களுக்கு முன்பதிவு செய்திருக்கா நண்பர்கள் - இனியும் தாமதிக்க வேண்டாமே ப்ளீஸ் ? கபிஷ் ஸ்பெஷல் கலரில் சும்மா எகிறி அடிக்கிறது என்பது கொசுறுத் தகவல் !! 


And சேலம் முடிந்த சற்றைக்கெல்லாமே சென்னைப் புத்தக விழாவுமே இம்முறை டிசம்பரில் இறுதியிலேயே துவக்கம் காணக்கூடும் என்ற சூழலில், அதற்கான திட்டமிடல்களுக்கும் கணிசமாகவே நேரம் தர வேண்டியுள்ளது ! By now - சென்னையில் எது தேவை ? எது விற்கும் ? எது விற்காது ? என்பதெல்லாம் கொஞ்சமாய் புரிபட ஆரம்பித்திருப்பதால் அதற்கேற்ப யோசனைகள் ஓடிக்கொண்டுள்ளன !! So அதனைத் தொடர்ந்திட நான் கிளம்புகிறேன் folks ; இயன்றால் எனது துவக்கப்பத்திகளின் அனற்றலுக்கு உங்கள் பார்வைகளிலான பதில்களை பதிவிட கோருகிறேன் ! 

Bye all...see you around ! Have a cool weekend !


74 comments:

  1. நான் தான் இன்று முதலில்

    ReplyDelete
  2. அனைவருக்கும் வணக்கம்..

    ReplyDelete
  3. வணக்கம் காமிக்ஸ் உறவுகளே 🙏💜😉

    ReplyDelete
  4. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  5. Replies
    1. ஒரு மொச்சுக்கான்...
      ஒரு லவ்சு...
      ஒரு தம்ப்ஸ் அப்
      ஒரு பூங்கொத்து
      மறுக்கா ஒரு மொசுக்கான்!

      பின்றீங்க தல 💪

      Delete
  6. எவ்ளோ சீக்கிரம் பார்த்தாலும்
    முதல்ல வர முடியலையே மக்கா....

    ReplyDelete
  7. ன்றைக்கேனும் ஒரு கனவு ஆண்டினில் - ஒரு முழு வருஷச் சந்தாவிற்கும் big names இன்றி, புதியவர்களை ; புதுக் கதைகளை / தொடர்களை கொண்டு வெற்றிகரமாய் செதுக்கும் வாய்ப்பு அமையுமுங்களா ?//////

    இந்த ஆசையை நான் 2015லேயே இங்கே வெளியிட்டு இருந்தேன் சார்..!

    இப்போது அது வேறுமாதிரி தோன்றுகிறது சார்...

    ஒரு தனித்தடம் ... முற்றிலும் புதிய முயற்சிகளாக... 12 மாதங்களுக்கு 12 இதழ்கள்.. சிறுசு பெருசு எப்படி வேண்டுமானாலும்.. வண்ணம் க/வெ எந்த வடிவிலும்.. ஒரு முறை ஒரே ஒரு முறை அறிவியுங்கள் சார்..!

    முன்பதிவுக்கு மட்டும் என்று... வாக்கெடுப்பு வேண்டாம்.. கருத்துக்கேட்பு வேண்டாம்.. அறிவித்துவிடுங்கள்... என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..!!



    ReplyDelete
    Replies
    1. அது தானே சார் - ஜம்போ காமிக்ஸ்!

      12 க்குப் பதிலாக அங்கே 6 இருந்தது!

      Delete
    2. ஜம்போ போதாதுங்க சார்...

      12 கதைகளும் வெவ்வேறு ஜானர்களில் சும்மா எகிறி அடிக்கணும்..
      முடியும்
      உங்களால முடியும்.. 💪💪💪

      Delete
    3. ஜம்போ போதாதுங்க சார்...

      12 கதைகளும் வெவ்வேறு ஜானர்களில் சும்மா எகிறி அடிக்கணும்..
      முடியும்
      உங்களால முடியும்.. 💪💪💪

      Delete
    4. பாத்ரூம்லர்ந்து டைப் பண்றீங்களோ - எக்கோ அடிக்குது 😁

      Delete
  8. ///கபிஷ் ஸ்பெஷல் கலரில் சும்மா எகிறி அடிக்கிறது என்பது கொசுறுத் தகவல்///

    ச்சால ஆர்வங்கா வெயிட் சேசி உண்ணேணு...😍😍

    ReplyDelete
  9. @மக்களே.. 🥰😘😘

    இந்த தடவை தோர்கல் "ராவா" இருக்கும்போல.. 😘🥰🥰😍🤩🥰

    இப்பவே ஜிவ் ன்னு இருக்கு.. 🫣🫣

    ReplyDelete
    Replies
    1. கிரிஸ் of வல்னார் ட்ரெஸ்ஸிலே ஓரத்திலே கிழிஞ்சிருக்கது தான் தெரியுது!

      Delete
  10. நிச்சயமா புதியவர்களை வைத்து வாய்ப்பு அமைக்கலாம் சார்....அடுத்த வருடமே பன்னிரண்டு கதைகள் தனித்தடத்ல ஒன்ஷாட்ல விடலாமே....

    ReplyDelete
  11. ஸ்பைடர் அந்த கால சினிமா போஸ்டர்ல வெடிகள் வெடிப்த போல தூள் கெளப்புறார்

    ReplyDelete
  12. ஸ்பைடர் அந்த கால சினிமா போஸ்டர்ல வெடிகள் வெடிப்த போல தூள் கெளப்புறார்

    ReplyDelete
  13. Sir - Simply 80% of our readers are in here for nostalgia / memories. So radically new genres / off-beat stuff won't/don't work here. Rest of the world is different. we probably missed catching up with them since the early 2000s !!

    ReplyDelete
    Replies
    1. Nopes sir, we have never ever been anywhere close to them, at any point of time!

      Delete
    2. We were never with them sir - agreed - but the chance we had to become divergent in terms of genre - we should have tried 20 years ago is what I am saying. Now it's too late. Also things like romance are not cut out for comics - have read a couple of them. The sketches spoil the story compared to novels which leave the scene to our imagination.

      Delete
  14. வணக்கம் நண்பர்களே…..

    ReplyDelete
  15. கமீஸ்...ஸ்பைடர் ...இதான் தீபாவளி....இந்த உற்சாகம் அலாதியானது சார்....அதற்கு சற்றும் சளைக்காதது லார்கோ...ஷெல்டன்...ட்யூராங்கோ...வெட்டியான்....தாத்தா ...தோர்கள் கதைகளுமே ...மனச தொட்டா போதும் சார்

    ReplyDelete
  16. ஒரு வழியா தோர்கள ரிலீஸ் பண்ணலாம்னு தோணுச்சுதே அதுவே போதும்

    ReplyDelete
    Replies
    1. அட்டவணையில் தான் அறிவிச்சிருக்கோமே ப்ரோ - ஒரு வழியாவோ, ரெண்டு வழியாவோ வராம எங்கே போகும்?

      Delete
  17. தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹

    ReplyDelete
  18. வணக்கம் நண்பர்களே ...

    ReplyDelete
  19. ஆஹ்ஹா.. நீண்ட நாட்களுக்கு பிறகு என்னோட கமெண்ட் பதிவாகிடுச்சே..

    ReplyDelete
  20. வணக்கம் நண்பர்களே!!

    தோர்கலோடு டிசம்பர்!!

    ReplyDelete
    Replies
    1. டிசம்பர் மட்டும் இல்லை ஜனவரியும். சும்மா அடி தூள்

      Delete
  21. /என்றைக்கேனும் ஒரு கனவு ஆண்டினில் - ஒரு முழு வருஷச் சந்தாவிற்கும் big names இன்றி, புதியவர்களை ; புதுக் கதைகளை / தொடர்களை கொண்டு வெற்றிகரமாய் செதுக்கும் வாய்ப்பு அமையுமுங்களா/

    வாய்ப்புயில்லை ராசா.
    நாம பொம்மை புக் படிப்பதே
    பால்ய நினைவுகள் மீட்டெடுக்க தானே. என்டர்டெயின்மென்ட் க்கு எக்கச்சக்க ஆப்ஷன் இருக்கும் போது ஏன் பொம்மை புக் படிக்க போறோம்.

    அதனால் பழைய ஹீரோ இல்லை என்றால் புதிய ஹீரோக்கு வாய்ப்பு கிடைக்காது




    ReplyDelete
    Replies
    1. பிழையான வாதம் :

      பொழுதுபோக்குக்கு நிறைய options இருப்பதாலேயே காமிக்ஸ் பின்னுக்குப் போகணும் என்றியில்லையே! On it's own - காமிக்ஸ் எதற்கும் சளைத்ததல்ல!

      And மீண்டிட சாத்தியமற்ற பால்யங்களை தேடியே அனைவரும் காமிக்ஸ் படிப்பதான எண்ணமும் flawed on many counts!

      Delete
    2. பால்யங்களை பேசிபேசிதான் நமக்கு வயதாகிற உணர்வு அதிகமாகிறது.

      Delete
    3. விட மாட்டேன்கிறாங்களே மக்கள்!

      Delete
  22. தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹 தோர்கல் ♥️🌹

    நன்றி : திரு. AKK

    ReplyDelete
  23. // என்றைக்கேனும் ஒரு கனவு ஆண்டினில் - ஒரு முழு வருஷச் சந்தாவிற்கும் big names இன்றி, புதியவர்களை ; புதுக் கதைகளை / தொடர்களை கொண்டு வெற்றிகரமாய் செதுக்கும் வாய்ப்பு அமையுமுங்களா ? // இதே வாசகர் வட்டம் தொடரும் வரை அதற்கு வாய்ப்பு இல்லவே இல்லை சார்.

    Dot

    ReplyDelete
    Replies
    1. சிம்பிளா பஞ்சாயத்தை முடிச்சுப்புட்டீங்க சார்!

      Delete
    2. //இதே வாசகர் வட்டம் தொடரும் வரை அதற்கு வாய்ப்பு இல்லவே இல்லை சார்.// 100%

      Delete
  24. தோற்கல் சீக்கிரமே ( முதல் சுற்று ) முடிவுக்கு வர போகிறதா..... 🤔

    ReplyDelete
  25. புதுவரவுகளுக்கு வெல்கம் சார்..

    ReplyDelete
  26. 'வாய்ப்பில்லை ராஜா' தான் அனேகமாக பதிலாக இருக்கும் சார்🤗
    முன்னணி நாயகர்கள் குறைவு - புது நாயகர்கள் (or கதைகள்) அதிகம் என்ற condition க்கு வேண்டுமானால் வாய்ப்பு கொஞ்சூண்டு இருக்கு...

    முழுதும் புதுசுக்கு வாய்ப்பு இல்லைனு தோணுது சார்...

    ReplyDelete
  27. அனைவருக்கும் நல் இரவு வணக்கம்.

    ReplyDelete
  28. தோர்கல் வருகிறார் என்றாலே ஒரு வித ஆனந்தம் தான்...
    ஈடு இணையற்ற சீரிஸ் (இது வரைக்கும்)💥💥💥

    ஆனால் விற்பனை குறைவு என்பது தமிழ் காமிக்ஸ் உலகின் மிகப் பெரிய அதிசயம் (வருத்தம்)🙃

    ReplyDelete
    Replies
    1. அதிசயங்கள் கணிசமாய் கீது சார்!

      Delete
  29. இளம் டெக்ஸ் மாதம் ஒரு 64 பக்கம் தனி சந்தா

    கிநா மாதம் ஒன்று தனி சந்தா

    சும்மா போட்டு தாக்குங்க சார்...

    print on demand என்ற format நமக்கு செட்டாகுமா சார்

    ReplyDelete
  30. சென்னை‌ இப்போதைக்கு வாய்ப்பில்லை ராஜா. ஏன்னா பலத்த மழை ஊடு‌ கட்டி‌ அடிக்கும்.

    ReplyDelete
  31. சார், தோர்கல் அட்டைப்படம் சும்மா தெறிக்க விடுகிறது. கண்களைக் கவரும் வண்ணக் கலவையும் சூப்பர்.

    மீண்டும் ஜம்போ வர வேண்டிய அவசிய வேளையிது சார். ஒரு மாதம் விட்டு ஓரு மாதம் என்று 6 இதழ்கள் என்ற சந்தாவைப் போட்டுத் தாக்குங்கள், பார்த்துக்கலாம்.

    ReplyDelete
  32. Big Names இன்றி என்பது விஷப் பரீட்சை தான். தனி ட்ராக்கில் வேண்டுமானால் அந்த "செல்லங்கள்" தூக்கிகீனு வரலாம்.

    ReplyDelete