நண்பர்களே,
வணக்கம். ‘தட‘ ‘தட‘வென சகலமும் fast forward-ல் ஓட்டம் எடுப்பது போலவே உள்ளது சமீப பொழுதுகளில்!
**செப்டம்பரில் 4 புக்ஸ்
**அக்டோபரில் 4
**நவம்பரில் தீபாவளி மலர்கள் x 3
**இதோ - காத்திருக்கும் டிசம்பருக்கென இன்னொரு 4
**அப்பாலிக்கா சேலம் ஸ்பெஷல்ஸ்;
**Electric '80s புக் # 1
என சமீபத்தைய நமது திட்டமிடல்களில் புல்லெட் டிரெயினின் வேகம்! And அதற்கு மெருகூட்ட இதோ வரும் வார வெள்ளியன்று சேலத்தில் புத்தக விழா & டிசம்பரின் இறுதியிலேயே சென்னைப் புத்தக விழா என்ற அட்டவணைகளுமே அறிவிக்கப்பட்டிருக்க, வாரிச் சுருட்டிக் கொண்டு அவற்றிற்கான முஸ்தீபுகளிலுமே மூழ்கிடல் அவசியமாகிறது! இரண்டே ஆண்டுகளில் (நமக்கு) விற்பனையில் Top 3-க்குள் இடம்பிடித்து விட்டிருக்கும் சேலமும் இப்போதெல்லாம் ‘பெத்த தலைக்கட்டு‘ என்பதால் துளியும் அசட்டையாக இருக்கலாகாது தானே folks? So ஒரு கல்யாண வீட்டுக்கு ரெடியாகும் உற்சாகக் களேபரத்தில் நாட்கள் ஓட்டமெடுத்து வருகின்றன!
இதற்கு மத்தியில் நடப்பாண்டின் இறுதி batch சந்தா இதழ்களைப் பூர்த்தி செய்திடலில் கோட்டை விடலாகாது என்பதால் அக்கடவுமே நமது கவனங்கள் மையம் கொண்டுள்ளன! இதில் கொடுமை என்னவென்றால் வழக்கமாய் பெரிய சைஸ் புக்ஸ் / கலர் இதழ்களில் தான் பணிகள் ஜவ்விழுக்கும்! Black & White புக்ஸ்களில்; அதுவும் நூறு பக்கங்களுக்கு உட்பட்ட அந்த crisp வாசிப்புக்களம் சார்ந்த புக்ஸ்களில் பெருசாய் சிக்கல்கள் எழுந்திடாது தான்! ஆனால் சகலத்துக்குமே ஒரு முதல் தபா உண்டு தானே? அந்த முதல் முறை இதோ இந்த நொடியில் என் கேசத்துக்கு ஆபத்தை விளைவித்து வருகின்றது!
- The Magic Moments ஸ்பெஷல் ரொம்பச் சீக்கிரமே ரெடி! ‘தல‘ சாகஸங்கள் என்றைக்குமே ஒரு எடிட்டருக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாகு போன்றவைகளே! சுவைகளிலும் சரி, சர்க்கரை வியாதிஸ்தனின் நாக்கில் வழுக்கிச் செல்லும் லாவகத்திலும் சரி, இரண்டுமே இணையற்றவை! So அக்கட துளியும் சிக்கலின்றி ரெடியாகி தற்போது புக் பைண்டிங்கில் உள்ளது!
- தோர்கலும் இந்த முறை இம்மி நோவுமின்றி ரெடியாகி, புக்காகி நம் ஆபீஸில் ஒரு வாரமாய் தேவுடா காத்து வருகிறது!
- Ditto for கபிஷ் ஸ்பெஷல் – 1! கலரில் கலக்கலாய் ரெடியாகி ஆபீஸில் பராக்கு பார்த்து நிற்கிறது!
- அதே போல க்ளாஸிக் சூப்பர் ஸ்டார்ஸ் ஸ்பெஷல் – 3 இதழுமே அச்சாகி, பைண்டாகி இன்னொரு திக்கில் குந்திங்க்ஸ்!
- Electric ‘80s – நம்ம ஸ்பைடரின் மெகா புக்கும் ரெடி!!
அத்திரி பாச்சா – சிக்கலான சமாச்சாரங்களெல்லாம் ரெடியாகியாச்சு; இனி சிம்பிளான வேலைகள் மட்டுமே பாக்கி என்றபடிக்கே -
இளம் டெக்ஸ் – டெக்சாஸ் ரேஞ்சர்ஸ்
&
V காமிக்ஸ் – எழுந்து வந்த எதிரி (ஏஜெண்ட் ராபின்)
கதைகளுக்குள் புகுந்தால் – சலூனின் நடுக்கூடத்தில் ‘தல‘கிட்டே ‘ணங்‘ என்று குத்து வாங்கியது போலவே ஒரு பீலிங்கு! மூக்கில் ஒழுகிய நெத்தத்தை கர்சீப்பில் துடைத்தபடிக்கே பார்த்தால் – இளம் டெக்ஸில் களம் செம அழுத்தம்! மாமூலாய் தாண்டிப் போகும் துரிதத்தில் இங்கே பணிகளை முடிக்க சாத்தியமாகாது; நிரம்பவே நேரம் தந்து தான் எடிட்டிங் செய்திட வேணுமென்பது புரிந்தது. பற்றாக்குறைக்கு இன்னிக்குக் காலையிலே போட்ட சொக்காய் எதுவென்று மதியமே மறந்து போயிருக்கும் எனும் போது, முந்தைய 2 இதழ்களின் கதை மாந்தர்கள்லாம் யாரென்று நமக்கு நினைவுக்கு வரவழைக்க செம பல்டி அவசியமாகிறது. So இளம் ‘தல‘ பணிகளை லாஸ்டாக முடிச்சுப்புடலாம் என்றபடிக்கே V காமிக்ஸின் ஏஜெண்ட் ராபினோடு பழகிப் பார்க்க புறப்பட்டேன்!
கதையை முழுசாய்ப் படித்துவிட்டு, மொழிபெயர்ப்பினை துவக்கிடும் பழக்கமே இல்லாது போனதன் கூமுட்டைத்தன பின்விளைவுகளை நிறையவே அனுபவித்துள்ளேன் தான்! & இது அதனது லேட்டஸ்ட் அத்தியாயம்!
செம விறுவிறுப்பாய் புதுசாய் ஒரு டீமோடு நமது ராபின் 2.0 இந்த hi-tech கதையில் களமாட, எனக்கோ செம உற்சாகம்! புதுயுக பாணியில் கம்ப்யூட்டர்கள்; செல்ஃபோன்கள் கொண்டு அரங்கேற்றப்படும் கொலைகள் தான் கதையின் அச்சாணி என்ற போது – “ஹை... காலத்துக்கு ஏற்ற கதை தான் போல்!” என்று குஷியாகிப் போனேன். கொஞ்சம் டெக்னிகலான பத்தியொன்று வந்த போது நம்ம கார்த்திக் கிட்டே அது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளவெல்லாம் செய்தேன்! அப்டிக்கா எழுதிக் கொண்டே போகப் போக, கதையின் மீதப் பக்கங்கள் சொற்பமாகிக் கொண்டே போக – “இன்னிக்கே முடிச்சுப்புடலாம் ; நாளை இளம் தல திக்கில் கவனத்தைத் திருப்பலாம்!” என்று மனசு கூவியது! ஆனால்... ஆனால்... பக்கங்கள் குறைந்து கொண்டே போனாலும், கதையின் முடிச்சு இன்னும் அவிழ்ந்த பாட்டைக் காணோமேடா என்று வயிற்றில் புளி கரைந்து கொண்டே போக – வேக வேகமாய் கடைசிப் பக்கத்துக்குப் போனால் – இருளில் ஒரு வில்லன் அமர்ந்து ‘கெக்கே பெக்கே‘ என்று சிரித்துக் கொண்டிருக்கிறான்! அவன் சிரிப்பது என்னைப் பார்த்தே என்பது போலவே இருக்க – அப்புறமாய் போனெலியில் விசாரித்தால் தான் தெரிய வந்தது – இது தொடரின் மத்தியிலுள்ளதொரு நெடும் சாகஸம் என்பது! ராபின் எப்போதுமே சிங்கிள் ஆல்பங்களில் தடதடத்து முடித்து விடுவார் எனும் போது; இப்படியொரு நெடும் த்ரில்லர் இருக்கும் சாத்தியம் மண்டையில் உறைத்திருக்கவே இல்லை!
அப்புறமென்ன – what next? இந்த இடத்தில் யாரைப் புகுத்தலாமென்று, V எடிட்டரும், நானும் பேந்தப் பேந்த யோசிக்கும் போது டைலன் டாகின் “சட்டைப்பையில் சாவு” ஆல்பத்தை V காமிக்ஸ் எடிட்டர் எடுத்து நீட்டியது பலனாகியது! இதற்கான ராப்பரும் ரெடியாகக் காத்திருக்க – இதோ இன்று காலை (சனி) முதலாய் மாங்கு மாங்கென்று எழுதிக் கொண்டிருக்கிறேன் இந்த 96 பக்க சாகஸத்தின் தமிழாக்கத்தை! இந்தவாட்டியோ முதல் காரியமாய் கடைசிப் பக்கத்துக்குப் போய் – அங்கே சுபம் போட்டிருக்கிறதா? என்று சரிபார்த்த பின்னரே பிள்ளையார் சுழியையே போட முனைந்தேன்! So இந்தப் பதிவை எழுத மட்டும் ப்ரேக் எடுத்துக் கொண்டு பள்ளி விடுமுறைகளின் கடைசி நாளில் assignment-களை மாங்கு மாங்கென்று ஒட்டுமொத்தமாய் எழுதும் புள்ளையாண்டனைப் போல டைலனை எழுதிக் கொண்டிருக்கிறேன்! எண்ட குருவாயூரப்பா!
And சும்மா சொல்லக் கூடாது தான் – கதை தாறுமாறு – தக்காளிச் சோறாய் பறக்கிறது! யூகிக்கக் கூடியதொரு கதைக்கரு தான் என்றாலும் அதனை கதாசிரியர் கையாண்டுள்ள விதம் செம தெறி! அதிலும் சித்திரங்களில் மிரட்டோ மிரட்டென்று மிரட்டியுள்ளார்கள்! இதோ – அட்டைப்பட preview & உட்பக்க ட்ரெய்லர்!
So இன்னிக்கு சாமக்கோடாங்கியாய் கூத்தடித்தால் நாளை காலைக்குள் நமது அமானுஷ்ய ஆய்வாளர் சாரை கரை சேர்த்து விடலாம்! அப்புறமாய் இளம் டெக்ஸோடு கைகுலுக்கக் கிளம்பிடும் பட்சத்தில் – காத்திருக்கும் வாரயிறுதிக்குள்ளாக டிசம்பர் புக்ஸை டெஸ்பாட்ச் செய்திட சாத்தியமாகிடும்! ஜெய் ராக்கோழி!
Moving on சென்னைப் புத்தக விழா சற்றே முன்கூட்டித் துவங்கி, பொங்கலுக்கு முன்பாகவே நிறைவும் பெறுவதால் அதற்கான திட்டமிடல்களையுமே இதே போல காலில் வென்னீர் ஊற்றியபடியே நாம் செய்திட வேண்டி வரும்! சென்னை முடிந்த சூட்டோடு சூடாகத் திருப்பூரும் வெயிட்டிங்காம்! So மறுபதிப்புகள்; புத்தக விழாக்களுக்கென்றான திட்டமிடல்கள் வேக வேகமாய் அரங்கேறி வருகின்றன!
- இரும்புக்கை மாயாவி ஏதோ ஒரு வடிவத்தில் கணிசமாய் இல்லாது இந்தப் புத்தக விழாக்களுக்குச் சென்றால் குமட்டிலேயே குத்துவார்கள் என்பது அனுபவப்பாடம் என்பதால் நமது மறுபதிப்புப் பட்டியலில் அவர் தவறாமல் இடம் பிடித்திடுவார்!
- இன்னொரு புத்தக விழா favourite ஆன லக்கி லூக்கின் ஏதாச்சுமொரு மறுபதிப்புமே புத்தக விழாவிற்கு அவசியமாகிடும்.
- And of course – CID ஜான் மாஸ்டரின் மறுபதிப்புமே ரேடாரில் உள்ளது!
- இவை தவிர, சிறார்களோடு நமது ஸ்டால்களுக்கு வருகை தரும் பெற்றோர்களின் கவனங்களை ஈர்க்கக்கூடிய சில இதழ்களையும் தயார் செய்திட உள்ளோம்! And இது முழுக்கவே ஜுனியர் எடிட்டரின் வைண்ணத்திலிருக்கும்!
So ஒரு வண்டி நிறைய புக்ஸோடு காத்திருக்கும் புத்தக விழாக்களில் சந்திப்போமா மக்களே?
சேலம் புத்தகவிழாவிற்கு முதல் சனி மாலை (30th நவம்பர்)அல்லது இரண்டாம் சனி (டிசம்பர் 8) மாலையில் ஆஜராகிடத் திட்டமிட்டுள்ளேன்! அடுத்த சில நாட்ளில் அதை உறுதிப்படுத்தி விட்டுச் சொல்கிறேன் – அப்பகுதி நண்பர்களைச் சந்தித்த திருப்தி கிட்டும் என்ற அவாவில் வெயிட்டிங் 🔥
Bye all! See you around! Have a lovely Sunday!
அனைவருக்கும் வணக்கம்
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ 💥🔥
Deleteநன்றி தோழரே...
DeleteCongrats sir👏👏👏
Deleteஆஜர்
ReplyDeleteவணக்கம் அண்ணா🙏😂
Deleteவணக்கம் செல்ல தம்பி
Delete2nd?
ReplyDelete3rd ☺️
Deleteவணக்கம் காமிக்ஸ் உறவுகளே 💐😍.....இளம் டெக்ஸ் எப்படி வேண்டுமானாலும் வரட்டும் நிறைய வர வேண்டும் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கிறேன் நன்றி வணக்கம் 🙏
ReplyDeleteவந்துட்டோம்.
ReplyDelete4th 😂
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம் நண்பர்களே
ReplyDelete6th
ReplyDeleteHi..
ReplyDeleteவணக்கம் sir !
ReplyDeleteஅதெப்பெடி ராபின் கதையை மாத்தலாம்...?? நெடுந்தொடரின் ஒரு பகுதின்னா மொத்தமா ஒரே குண்டு பொஸ்தவமா போட்டு முடித்திருக்கலாமே..?
ReplyDelete3 பாகங்கள் சேர்ந்த கதையை ராத்திரியோடு ராத்திரியாய் வரவழைக்கவும், மீதத்தை ஒரே நாளில் மொழிபெயர்க்கவும், DTP ரெடி பண்ணவும், அதுக்கான கூடுதல் கட்டணத்தை வசூலிக்கவும் ஒரு சூப்பர்மேனை தேடிப் பிடிக்க முடிஞ்சால் போட்றலாம் தான்!
DeleteHi
ReplyDeleteஒற்றைக்கண் மர்மமா ,,ஜான் மாஸ்டர் இரண்டு கதைகளையும் ஒரே ஸ்பெஷலாய் தரக்கூடாதா
ReplyDeleteAnd of course – CID ஜான் மாஸ்டரின் மறுபதிப்புமே ரேடாரில் உள்ளது!
ReplyDeleteஅப்போ இரட்டை வேட்டையர்கள் எப்போ
நானும் ஆவலுடன்..
ReplyDeleteஎடிட்டர் சாரின் சேலம் வரவு உற்சாகத்தை தருகிறது... அன்புடன் வரவேற்கிறேன் சார்..
ReplyDeleteசேலம் புத்தக விழாவில் நமது காமிக்ஸ் விற்பனை புதிய உச்சம் தொட வாழ்த்துக்கள் சார்💐💥🎊
ReplyDeleteஞானும் வந்துட்டேன்!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteவணக்கமுங்க
ReplyDelete🙏🙏
ReplyDelete// சேலம் புத்தகவிழாவிற்கு முதல் சனி மாலை (30th நவம்பர்)அல்லது இரண்டாம் சனி (டிசம்பர் 8) மாலையில் ஆஜராகிடத் திட்டமிட்டுள்ளேன்! //
ReplyDeleteடிசம்பர் 8 ஞாயிற்றுக்கிழமை அல்லவா??
வந்துட்டேன்.
ReplyDeleteடைலன் முன்கூட்டியே வருவதில் மகிழ்ச்சி.
ReplyDelete