Powered By Blogger

Tuesday, December 10, 2013

வண்ணத்தில் ஒரு விருந்து..!

நண்பர்களே,

வணக்கம்.  நம் நினைவுச் சுவடுகளின் பெரும் சேகரிப்பிற்குள் இந்த 'நாலு இதழ் டிசெம்பர் ' புதைந்து போகிடும் வேளையும் வேக வேகமாய்ப் புலர்ந்து வர, - புதியனவைகளை நோக்கி நம் பார்வை பாய்ந்திடும் சமயமும் வெகு அருகாமையினில் நிற்கின்றது ! 2014-ன் துவக்கத்திற்கு வெகு அத்யாவசியமான இரு வெவ்வேறு முயற்சிகளுக்கு நண்பர்களது creative திறன்களை நாம் எதிர்நோக்கி இருப்பது தெரிந்த விஷயம் தானே ?   சன்ஷைன் கிராபிக் நாவலின் லோகோ + KBGD - 2 (பயங்கரப் புயல் அட்டைப்பட டிசைனிங் போட்டி) இரண்டின் finalization தொடரும் சில நாட்களுக்குள் நடந்தாகிட வேண்டும் ! இதோ நண்பர்களது புதிய ஆக்கங்கள் !

LOGOS : 
L.Venkateswaran, Ayyampalayam & Chennai

S.Barani, BangaloreSome rough designs from Karthik Somalinga, Bangalore
Vinoj Kumar's creations..!
இவை தவிர, சென்ற பதிவினில் நாம் பிரசுரம் செய்திருந்த லோகோக்களையும் சேர்த்து ஒட்டு மொத்தமாய்க் கணக்கில் கொண்டால் - நமக்குப் பொருத்தமென நீங்கள் தேர்வு செய்வது எந்த லோகோவாக இருக்கும் ? சொல்லுங்கண்ணே..சொல்லுங்க ! 

KBGD-2 :
போட்டியினில் பங்கேற்ற நண்பர்களது எண்ணிக்கை சொற்பமே என்பதாலும், அனைவருமே துரிதமாய் தங்கள் ஆக்கங்களை அனுப்பி விட்டதாலும், எனது வேலை ரொம்பவே சுலபமாய்ப் போய் விட்டது ! இதோ நண்பர்களின் படைப்புகளின் அணிவகுப்பு :  
Designed by : Podiyan (S.Pradeep) Colombo
Designing by : L.Karnan, Salem.
Designed by : ஆதி தாமிரா, சென்னை


                                                                                            Designed by : Kanagarajan, Pollachi.                                                                                     
                                                                                   Designed by : Karthik Somalinga, Bangalore.

                                                                                    Designed by : arunachalam, Komarapalayam.

                                                                               L.Venkateswaran, Ayyampalayam & Chennai - Design # 1

                                                                                L.Venkateswaran, Ayyampalayam & Chennai - Design # 2

                                                                                   Designed by : ஆதி தாமிரா, சென்னை again

கண்ணைப் பறிக்கும் இந்த வண்ண அட்டைப்பட அணிவகுப்பினில் உங்கள் தேர்வு எதுவோ ? எனது தேர்வினை நான் ஏற்கனவே செய்தாகி விட்ட போதிலும், உங்களது ரசனையோடு எத்தனை தூரம் நான் ஒத்துப் போகிறேன் என்று அறிந்திட ஆவல்...so எனது அட்டைப்படத் தேர்வினை இன்றிரவு அறிவிக்கிறேன் ! அது வரை - உங்களின் அபிப்ராயங்களைப் பதிவிடலாமே ?!

லோகோவைப் பொறுத்த வரையிலும் உங்கள் vote எந்த டிசைனுக்கு ?  

Part 2 of this Post !! 

அண்ணன் மகளின் திருமணம் நாளைய தினம் !  இன்றே ஆபீசுக்கு மட்டம் போட்டுவிட்டபடியால் -  இங்கு தலை காட்டத் தாமதம் ஆகிப் போய் விட்டது ! Anyways அவ்வப்போது இங்குள்ள நிலவரத்தை கவனித்துக் கொண்டே தான் இருந்தேன் ! லோகோக்களைப் பொறுத்தவரை பார்த்த மறு கணம்  - YESS ! என்று சொல்லச் செய்யும் விதத்தில் எந்தவொரு டிசைனும் பொருந்தாமல் இருந்து வந்தது சின்ன நெருடலாய் எனக்குள் இருந்தது ! எனினும் இன்று காலை கார்த்திக் அனுப்பிய மின்னஞ்சலில் நண்பர் வினோஜ் குமாரின் படைப்புகளைப் பார்த்த போதே 'அடடே' என்று சொல்லத் தோன்றியது ! அதிலும் குறிப்பாய் லோகோ # 3 பிரமாதமாய் பட்டது எனக்கு ! எழுத்துகளின் ஸ்டைல் இன்னும் கொஞ்சம் மெருகூட்டப்பட்டால் இதுவே நம் லோகோவாகிடும் for sure ! Great skills Vinoj ! Welcome to the club !!

KBGD - 2 போட்டியின் அட்டைப்படத்தைப் பொறுத்த வரை - இம்முறை நிறையவித ஆக்கங்கள் இருந்த போதிலும், அவற்றில் ஒரு professional touch குறைவு என்பதே நிதர்சனம் ! கணினியின் திரையில் பரிணமிப்பதும் ; அச்சில் மிளிர்வதும் இரு வெவ்வேறு சங்கதிகள் என்பது 'பளிச்' என highlight ஆகித் தெரிகிறது ! YELLOW + CYAN (ப்ளூ) + MAJENTA (சிகப்பு) + BLACK என்ற நால்வண்ணக் கூட்டணியே அச்சின் முதுகெலும்பு எனும் போது - அதில் ஏதேனும் ஒரு வர்ணத்தின் பங்களிப்பு குறைந்து போனாலும் அச்சில் ஒரு விதக் குறைபாடு தலைதூக்கித் தெரியும். இம்முறை பெரும்பாலான படைப்புகளில் BLACK Texture ரொம்பவே குறைவாய் நண்பர்கள் பயன்படுத்தியுள்ளது தான் சிக்கலே ! BLACK சரியாய் பயன்படுத்தப்பட்டுள்ள டிசைன்களில் வேறு ஏதேனும் சிற்சிறு குறைகள் குடி இருப்பதால் அவை தேர்வாகுவதில் பிரச்னை ! So - இங்குள்ள படைப்புகளுள் எனது தேர்வு நண்பர் பிரதீப்பின் டிசைனே ! இதனிலும் இன்னும் கொஞ்சம் கறுப்பை அதிகப்படுத்தி மெருகூட்ட வேண்டிய அவசியம் உள்ளது தான் என்ற போதிலும், அந்த overall effect ரொம்பவே அழகாய் தோற்றம் தருவதே இதன் தேர்வின் பின்னணி !வாழ்த்துக்கள் பிரதீப் ! ஆண்டின் முதல் மறுபதிப்பில் உங்கள் டிசைன் வெளியாகவுள்ளது ! 

இங்கு நண்பர் ஆதி தாமிராவின் டிசைன் பற்றி நான் சொல்லியே தீர வேண்டும் ! அந்தப் பரபரப்பான புயல் பின்னணி ; பறக்கும் கிளியின் விஸ்தீரணம்  ; இருண்டு வண்ணங்கள் தெரிவிக்கும் mood என்று அனைத்துமே பிரமாதம் ! ஆனால் நண்பரிடம் உயர் resolution களில் பணியாற்ற சாப்ட்வேர் இல்லாத காரணத்தால் வெறும் 636 kb சைசிலான டிசைனை அனுப்பி உள்ளார் ! அந்த resolution ஆப்செட் அச்சிற்குத் துளியும் சரி வராதே என்பதால் அவரது படைப்பினை கருத்தில் கொள்ள இயலவில்லை ! So close!! 

As always, போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள் + வாழ்த்துக்கள் ! ஒரு காமிக்ஸ் காதல் உங்களை எத்தனை பெண்டு நிமிர்த்துகிறது என்பதையும் ; அதனை நீங்கள் இத்தனை மலர்ந்த முகங்களோடு செய்து வருவதையும் எண்ணி வியக்காது இருக்க முடியவில்லை ! You are all stars in your own rights ! Keep shining & keep rocking ! 

270 comments:

 1. தல சுத்துது ..............எத்தனை டிசைன் .......................

  ReplyDelete
  Replies
  1. இங்கி பிங்கி பாங்கி..............

   Delete
  2. அந்த அட்டைல உள்ள கிளிக்கு ஜோசியம் பார்க்க தெரிஞ்சா ..............அதையே தேர்ந்தெடுக்க சொல்லாலம்

   Delete
  3. பொடியன் அட்டை லயனின் அக்மார்க்

   Delete
  4. // பொடியன் அட்டை லயனின் அக்மார்க்//

   சரிதான்,மந்திரியரே! ஆனால் கதை சுருக்கம் + ஓவியர் அறிமுகம் இடம் பெற்றால் அதுவே என் தேர்வு ஆகும்.

   சன் ஷைன் லோகோவை பொறுத்த வரை -உங்களின் கிளி ஜோசிய ஐடியா தான் எனக்கும் தோன்றுகிறது!

   Delete
  5. கிழிஞ்சுது .................Siva Subramanian
   ஏற்கனவே நான் கிழக்கே போக சொன்னா மேற்கே போவேன் .............................
   கதை சுருக்கம் + ஓவியர் அறிமுகம் சேர்த்துட்ட போச்சு ...............
   எங்க இருந்தாலும் அந்த வண்ணம் பளிச்சுன்னு இழுக்குதே..............

   Delete
  6. // எங்க இருந்தாலும் அந்த வண்ணம் பளிச்சுன்னு இழுக்குதே..............// +1.

   Delete
 2. லோகோ பத்தி........................................
  உடன் பிறப்பே கழக உடன் பிறப்பே .........................
  சோதிப்பது............
  சோதனைக்கு உள்ளாக்குவது
  என்னால் செய்ய முடியாது..................
  எதற்கும் தெய்வீக லோகோவை பாதியா பிச்சு ............

  ReplyDelete
 3. எத்தனை டிசைன் வந்தாலும் புத்தகமாக நமக்கு வந்து சேரும் போது கசங்கி தானே வரப்போகுது.
  எடிட்டர் சார் இதை கொஞ்சம் கவனித்தால தேவல. உங்கள் பணியாளர்களை புத்தகத்தை கையாளும் போது குழந்தைகளை கையாள்வது போல கையாளச் சொல்லுங்கள்
  அப்பாடா நீண்ட நாட்களாக சொல்லநினைத்த விஷயத்தை இப்போ சொல்லிட்டேன்

  ReplyDelete
 4. நண்பர்கள் அனைவரின் அட்டைப்படங்களும் அருமை.

  1. கார்த்திக் சோமலிங்கா
  2.வெங்கடேஸ்வரன் அய்யம்பாளையம் டிசைன் -1
  3.ஆதி தாமிரா டிசைன் -2ம்
  4. கனகராஜன்
  5. பொடியன்
  6. அருணாசலம்
  7. கர்ணன்

  எனது தேர்வு கார்த்திக் சோமலிங்கா அவர்களின் கதை சுருக்கம் + திகில் காமிக்ஸ் பற்றிய குறிப்புடன் கூடிய அட்டைப்படம் தான். (பிரின்ஸ் முகத்தை மட்டும் ஓரமாக நகர்த்த முடிந்தால் சூப்பர்.)

  ReplyDelete
 5. super friends umm yennala mudiyalayeeeeee.....!

  ReplyDelete
 6. பொடியன் ஆதி தாமிரா டிசைன் நன்று

  ReplyDelete
 7. எதுக்கும் ''FLAMES'' போட்டு பார்த்துடலாம்

  ReplyDelete
 8. After a long time able to comment within 20 comments. Sir In ebay there is a listing under our store for Rs 10000. Is it correct? http://www.ebay.in/itm/CURRENT-TRADE-Package-/321271896352?pt=IN_Books_Magazines&hash=item4acd4c1920

  ReplyDelete
 9. i like Kanagarajan and arunachalam design super

  ReplyDelete
 10. foot print logo!!! . i like that foot print logo so much... i feel like it means something...!!!
  And cover design K.Nagarajan pollachi super....!!

  ReplyDelete
 11. logo டிசைன் : இந்த முறை எதுவும் சரியில்லை. வெங்கடேஸ்வரன் லோகோ கள் நன்றாக இருந்தாலும், கொஞ்சம் outdated ஆக தோன்றுகிறது. (என்னோட இன்னொரு டிசைன் வரவில்லை இந்த லிஸ்டில் http://irapeke.blogspot.in/2013/12/my-logo-designs-for-sunshine-graphic.html) ஹி ஹி ஹி ஒரு விளம்பரம்...

  கவர் டிசைன் : பொடியன் & கார்த்திக் tie..

  ReplyDelete
  Replies
  1. உங்க லோகோ சூப்பர் விஜய் ஓகே .................


   அட்ரஸ் தானே நோட் பண்ணிக்குங்க ...................
   எஸ்
   அதே அட்ரசுக்கு 1000 அன்பளிப்பு அனுப்பவும் .........   இப்படிக்கு பதவி மட்டுமே நாடும் .......மந்திரி
   தாக்பாத் மெயின் ரோடு
   தாக்பாத் குறுக்கு சந்து
   தாக்க்பாத்

   Delete
 12. cover - arunachalam, Komarapalayam,

  ReplyDelete
  Replies
  1. logo choise - கார்த்திக்கின், சிங்க முக லோகோ

   Delete
 13. attakaasamaana muyarchigal! anaivarukkum en vanakkangal!

  ReplyDelete
 14. ஹ்ம்ம்.. எவ்ளோ டிசைனு.. முடியல!!!

  ReplyDelete
 15. அடுத்த பதிவு எங்கேன்னு நண்பர்கள் கதறத்துவங்கும் முன்னமே பதிவு வந்துவிட்டதே! :-))))))

  அடேங்கப்பா.. எத்த்னீ அட்டைஸ்!! இந்த முறை எல்லாமே ரொம்ப நல்லாருக்கிற மாதிரியே தெரியுது. மீ எஸ்கேப்பூ!!

  (என் நாசிக்கு மட்டும் இப்போதே எங்கிருந்தோ வரும் தெள்ளியதோர் மண்மணம் கமழுது!!)

  லோகோ, சந்தேகத்துக்கிடமின்றி என் தேர்வு முந்தைய பதிவிலிருக்கும் கார்த்திக்கின், சிங்க முக லோகோதான்! ப்ளீஸ் ப்ளீஸ்!!

  ReplyDelete
  Replies
  1. // கார்த்திக்கின் சிங்க முக லோகோதான் //

   ஆமாங்க! எனக்கும் அப்படியே!

   Delete
 16. வண்ணத்தில் புகுந்து விளையாடியிருக்கிறார் நண்பர் பொடியன்.அடியேனின் தேர்வு பொடியனின் டிஷைன் !!!

  ReplyDelete
 17. I like podiyan's and arunachallam's, excellent work guys :)

  ReplyDelete
 18. andha nangaavadhu padathil iruppadhu lobo thane

  ReplyDelete
 19. வார்த்தையின் logo டிசைனில் yellow வை மேலே கொண்டு வந்து ash ஐ கீழே கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து

  ReplyDelete
  Replies
  1. வார்த்தையின் என்பதை கார்த்திக்கின் என படிக்கவும்

   Delete
 20. Logo my choices are below
  L.Venkateswaran, Ayyampalayam - V04 && Karthik Somalinga - 2nd one

  Cover design - Wow, all of them are excellent. Is it possible to combine podiyan's front cover and karthik's back cover :)

  ReplyDelete
 21. ஆதியின் அட்டை படம் அசத்தல்.

  ReplyDelete
 22. நண்பர் பொடியனின் அட்டை நன்றாக உள்ளது.

  நண்பர் கார்த்திக் அவர்களின் அட்டை அடுத்த இடத்தை பிடிக்கிறது

  நண்பர் கர்ணன் சேலம் மூன்றாம் இடம் ...

  ReplyDelete
 23. இந்த விளையாட்டுக்கு நான் வரல. ஒரு அட்டைக்கு ஆதரவு தெரிவித்து மற்ற திறமைசாலிகளை புறக்கணிக்க விரும்பவில்லை. அனைத்து அட்டைகளும் அருமை, அற்புதம்.....

  ReplyDelete
 24. logo design: என் தேர்வு V04. முத்து காமிக்ஸ் logo போன்று simple and attractive
  அட்டை படம்: பொடியன் & ஆதி தாமிரா (3rd design)

  ReplyDelete
 25. my choice for wrapper karnan,salem.this time packing bad pls rectify editor sir.

  ReplyDelete
 26. ம்ஹூம், நானும் இந்த விளையாட்டுக்கு வரலை! லோகோவை விடுங்க; அட்டைப் படம் ஒவ்வொன்னுமே கொள்ளை அழகு! எதை விட? எதைத் தொட? அட்டகாசம் பண்ணியிருக்கிறீர்கள் நண்பர்களே!! ஒவ்வொருவருக்கும் தலா 10 மதிப்பெண்கள். (உஸ்... அப்பாடா! தப்பிச்சாச்சு!)

  @ கார்த்திக்
  கதைச் சுருக்கம் அருமை! அந்த வரிகளைப் படிக்கும் யாருக்குமே புத்தகத்தை வாங்கத் தோன்றிடும். இவ்வழிமுறையை எல்லாப் புத்தகங்களுக்குமே கடைபிடிப்பது, புத்தகத் திருவிழா போன்ற சமயங்களில் காமிக்ஸை நாடிடும் புதியவர்களுக்கு தங்களின் ரசணைக்கேற்ற புத்தகத்தை தேர்வு செய்திட பேருதவியாய் இருக்கும்!

  அது சரி... பின்னட்டையில் கேப்டன் பிரின்ஸின் ஆவியை போட்டு வச்சிருக்கீங்களே?... ;)

  ReplyDelete
  Replies
  1. நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்நேரமே இரவுக்கழுகுகளுக்கு உகந்த நேரமென்பதால்... முடிவுகளை அறிவிக்க மதிப்பிற்குரிய நமது எடிட்டர் அவர்களை மேடைக்கு வருமாறு விழாக்குழு சார்பாக அன்புடன் அழைக்கிறோம்!

   Delete
  2. //@ கார்த்திக்
   கதைச் சுருக்கம் அருமை! அந்த வரிகளைப் படிக்கும் யாருக்குமே புத்தகத்தை வாங்கத் தோன்றிடும். இவ்வழிமுறையை எல்லாப் புத்தகங்களுக்குமே கடைபிடிப்பது, புத்தகத் திருவிழா போன்ற சமயங்களில் காமிக்ஸை நாடிடும் புதியவர்களுக்கு தங்களின் ரசணைக்கேற்ற புத்தகத்தை தேர்வு செய்திட பேருதவியாய் இருக்கும்! //

   +1

   Delete
 27. வாவ்! எத்தன அட்டகத்தி ஹீரோஸ் நம்ம வாசகர் வட்டத்துல இருக்காங்க! எல்லாமே நல்லாயிருக்கு. என் சாய்ஸ் கடைசி டிசைன் பை ஆதி! முழு கருப்பு நிற அட்டையில் இரு பக்கதிற்கும் சிறகை விரித்து பறக்கும் கிளிதான் அட்ராக்‌ஷனே! :) லோகோவை பொருத்தவரைக்கும் நான் டிசைன் பண்ணினதுதான் என் சாய்ஸ்ல! :)

  ReplyDelete
 28. இது ரொம்ப அநியாயம்! எல்லோருமே சூப்பராக டிசைன் பண்ணி இருக்கும்போது ஏதேனும் ஒருவருடையதை தேர்ந்தெடுக்க சொல்வது ரொம்ப கடினமாக உள்ளதே!

  ReplyDelete
 29. "ரிப்போர்ட்டர் ஜானி ஸ்பெஷல்" அட்டைப்படம் இந்த ஆண்டின் மிகச்சிறந்த அட்டைப்படம்
  என சொல்லும் அளவுக்கு கண்களில் ஒற்றிகொள்ளும் வண்ணத்தில் உள்ளது!
  நண்பர் ரமேஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ரமேஷ்குமார் ஒரு professional designer. அவருக்கு அச்சில் எது நன்றாக வரும் என்று தெரியும். எனவேதான் அவரே 'Sunshine Graphic Novel' லோகோவும் டிசைன் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

   Delete
 30. பொடியன் முதலிடம். ஓல்ட் காப்பர்... இல்லை இல்லை... துருப்பிடித்த காப்பர்... இல்லை இல்லை... பழைய தாமிரம்... இல்லை.. இல்லை... ஆதி தாமிரா (கரெக்டா?) இரண்டாமிடம்.

  ReplyDelete
 31. டியர் எடிட்டர் ,

  அட்டை பட டிசைன் எல்லாமே அருமை . கலக்கல் வண்ணங்கள் . எனது சொய்ஸ் நண்பர் பொடியனின் டிசைன் . மற்றும் அருணாசலம் அவர்களின் பின்னணி வண்ண சேர்க்கை அழகு சேர்க்கிறது . நண்பர் கார்த்திக் இன் கதை சுருக்க முறை சிறந்த விற்பனை உத்தி . லோகோ இல் எனது சொய்ஸ் சென்றைய பதிவில் உள்ள கார்த்திக் இன் சிங்க முக லோகோதான் .

  ReplyDelete
 32. சென்ற பதிவில் வெளியான கார்த்திக்கின் சிங்க லோகோ எனது விருப்பம்!

  சிங்கம் பிண்ணனில சூரிய வெளிச்சமும் இருக்கே?

  அல்லது...
  அந்த சன்ஷைனை தூக்கிட்டு "லயன் கிராஃபிக் நாவல்" னு பேர் வைச்சுடுங்க!
  பேரும் படமும் கச்சிதமா பொருந்துமே!

  ReplyDelete
  Replies
  1. கரெக்ட் பேர மாத்தினாலே போதும்

   Delete
 33. எடிட்டர் சார்
  வந்துள்ள அட்டைபட டிசைன் அனைத்தும் அருமையாக உள்ளது. இதில் எப்படியும் ஒன்றை மட்டும்தான் உங்களால் தேர்வு செய்ய முடியும். (ஒன்றை ஏற்கனவே தேர்வு செய்து விட்டதாக கூறியுள்ளீர்கள்)

  இதனால் வரும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள் என்பதை காண நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். காரசாரமான விவாதத்துக்கு நமது தளம் தயாராகி கொண்டிருக்கிறது.

  போன பதிவில் வந்த சிங்கமுக லோகோதான் அற்புதமாக உள்ளது.

  ReplyDelete
 34. 1 SS Graphic novel logo-Karthikmsomalinga lion last post
  2 KBGD- Adi Thamira 1st design

  ReplyDelete
 35. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. my friend had logged from my computer to chk his email and did not log out, without realising i posted my comment under his id, so deleted and reposted under my id.

   Delete
 36. i think edi choice = arunachalam

  Enna edi sir, correcta?


  My choice
  1.) முன் அட்டை பொடியன் + பின் அட்டை .Karnan
  2.) முன் அட்டை பொடியன் + பின் அட்டை கார்த்தி

  with some back ground colour synchronization

  பொடியனின் "அதிரடி அக்க்ஷன் முழு வன்னதில்" super design கட்டாயமாக அட்டையில்
  உபயோகிக்கவும்

  Logo: Venkateswaran logo4 is nice but my choice is Karthi original Singam- ஆட்டை காமிச்சாவுது நேரா பாக்க வைக்கனும் atleast left to right pakka vaikkanum  மறூபடியும் @ Edi

  Its not mandatory to use logo as designed by our friends.

  You can choose the logo and get it modified manually using your regular artist so that there are no copyright issues and above all we get what we want.

  adae madri "Lion Graphic Library" or "Lion Graphic Novel" arumaiyai ulladhu

  out of curiosity - நீங்கள் ஏன் "sunshine" என்று விடாபிடியாய் இருக்குரிர்கல் - ஏதாவுது ஜோசியர் சொன்னாரா, :-)

  ReplyDelete
  Replies
  1. //நீங்கள் ஏன் "sunshine" என்று விடாபிடியாய் இருக்குரிர்கல் - ஏதாவுது ஜோசியர் சொன்னாரா, :-) //..............
   பிரான்க்புர்ட்ல யாரவது குறி சொல்லி இருப்பாங்க ................

   Delete
  2. @ம.மந்திரி-> எனக்கு என்னவோ வீட்டம்மா சொல்லி இருப்பாங்கலோன்னு ஒரு டௌப்டு :-)

   Delete
  3. // My choice
   1.) முன் அட்டை பொடியன் + பின் அட்டை .Karnan
   2.) முன் அட்டை பொடியன் + பின் அட்டை கார்த்தி // +1.

   Delete
 37. வணக்கம் என்னுடைய விருப்பம் - அட்டை படத்தை பொறுத்தவரை podiyan & aadthi thamira..

  ReplyDelete
 38. திமுக , மதிமுக அதிமுக கலர்களாக இருப்பதால் Vo 1,2,5,6,7,8,12 ஐ தவிர்த்து விட்டேன். மீதி இருப்பவற்றில் Vo 3 ராஜா யோக தியானம் கொடி மாதிரி இருப்பதால் அதையும் கழித்து விடலாம். மீதி இருப்பவற்றில் vo 4, 10 ம் தான் எனக்கு பிடித்திருக்கின்றது. vo 4 தனித்தன்மையுடன் இருக்கிறது. Vo 10 பார்க்கும்போது ஒரு ரெப்ரெஷ்சிங் பீலிங் வருது. Vo 10க்கு ஒரு சதுர பார்டர் இருந்தால் இன்னமும் நன்றாக இருக்கும்.

  அட்டைப் படத்தில் எந்த படமும் சூப்பர் என்று சொல்ல முடியவில்லை.

  ReplyDelete
 39. This comment has been removed by the author.

  ReplyDelete
 40. சார் இன்னும் எனக்கு புத்தகம் வந்து சேர வில்லை. கைபேசி பழுதடைந்துள்ளதால், ஈமெயில் மூலம் நேற்று கேட்டிருந்தேன். இதுவரை பதில் இல்லை.

  ReplyDelete
 41. friends,
  my logo

  http://www.shutterstock.com/pic-123614305/stock-photo-silhouette-of-a-lion-against-the-african-sunset.html?src=el0x91RA-iEbTO2TVnjfKw-1-1

  பட்டி டின்கெர்ரிங்க் பார்கும் சாம்ர்தியம் என்னிடம் இல்லை.

  யார் விருப்பபட்டலும் modify seiyya உதவலாம், பரிசை சமமாக பகிர்ந்துகொள்ளளாம்

  ReplyDelete
 42. for cover podian is best ! for logo arunachalam and super vijay is a good one ! i am waiting?!

  ReplyDelete
 43. அனைத்து அட்டை படம்களும் சுமார்! ஓரளவு நன்றாக உள்ளது என்றால் கனகராஜன், பொள்ளாச்சி அவர்களது அட்டை படம்.

  என்னை பொறுத்தவரை லோகோ போட்டியில் கலந்து கொண்டவர்கள் (என்னையும் சேர்த்துதான்), நமது எடிட்டர் அவர்களின் தேவையை சரியாக புரிந்து கொள்ளவில்லை; "சன் ஷைன்" பெயருக்கு பொறுத்தமான லோகோ என பார்த்தால் எனது தேர்வு

  1.வெங்கடேசன் அவர்களின் 4 மற்றும் 10 (பார்டர் போட்டால் இன்னும் அருமையாக இருக்கும்)
  2. ஸ்ரீரங்கம் சிவா

  எடிட்டர் அவர்கள் லோகோ தேர்வு செய்யும் போது "சன் ஷைன்" பெயருக்கு பொறுத்தமான லோகோவை தேர்வு செய்யும்படி கேட்டு கொள்கிறேன்!

  PS: எனது லோகோ டிசைன் நேற்று அனுப்பிய பின் தான் எனது லோகோ "சன் ஷைன்" பெயருக்கு பொருத்தம் இல்லை என்பதை உணர்ந்தேன்!

  ReplyDelete
 44. டியர் விஜயன் சார்,

  நமது லயன் வாசகர் மற்றும் ஃபேஸ்புக் நண்பர் வினோஜ் குமார், எனது லோகோக்கள் பற்றி சில கருத்துக்களை தனியே பகிர்ந்திருந்தார்! உதாரணத்திற்கு சில லோகோக்களையும் அனுப்பி இருந்திருந்தார்! அவற்றைப் பார்த்ததும் அசந்து விட்டேன் - கண்களை உறுத்தாத இதமான வண்ணங்களில், அழகான டிஸைன்கள்! இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்ள அவருக்கு ஆர்வம் இல்லை என்றாலும், நல்ல லோகோக்கள் நண்பர்கள் பார்வையில் படமால் போகக் கூடாது என்பதால் அவற்றை இங்கே பகிர்கிறேன்.

  வினோஜின் லோகோ டிஸைன்கள்

  லோகோவைப் பொறுத்த வரையில், எனது சாய்ஸ் வினோஜின் லோகோக்களில் ஏதாவது ஒன்று! குறிப்பாக இரண்டாவது வரிசையில் உள்ள முதல் லோகோ (நட்சத்திரம் போன்ற லோகோ) - எந்த ஒரு அட்டை டிசைனிலும் / பின்னணி வண்ணத்திலும் இது அருமையாகப் பொருந்தும் - அளவில் சிறியதும் கூட!!

  நண்பர்களின் பயங்கரப் புயல் கவர் டிசைன்கள் அனைத்தும் அருமை! இந்தக் கவரை வடிவமைக்கையில் ஒரிஜினல் ஓவியங்களை முடிந்த அளவுக்கு மறைக்காமல், அதன் வண்ணங்களை மாற்றாமல் - அப்படியே விட்டிருந்தேன்! பின்னணி வண்ணங்களைப் பொறுத்த வரை, ஒரிஜினல் ஓவியத்தின் கலர் காம்பினேஷனுடன் செட் ஆகக் கூடிய வயலட் ஷேட்களை மட்டும் பயன்படுத்தி இருந்தேன். முன்னட்டையில் கதையின் தலைப்பு - அதன் பின்னணியில் இருக்கும் புயல் சின்னம் & சன்ஷைன் லோகோ - இவற்றிக்கு நிறைய இடம் ஒதுக்கியதால், பிரின்ஸ் நடுவில் பரிதாபமாக தொங்க நேர்ந்தது! :-D

  ஆனால், இப்போது யோசித்தால் அதுவே இந்த அட்டைக்கு டிராபேக் ஆகியிருப்பது புரிகிறது! நீங்கள் ஏற்கனவே உங்களுக்குப் பிடித்த அட்டையை தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என்றாலும், என்னுடைய திருப்திக்காக ப்ரின்ஸின் தலையை மேலே நகர்த்தி, மாற்றியமைத்த முன்னட்டை இதோ! வினோஜின் லோகோ எவ்வளவு அழகாக செட் ஆகி இருக்கிறது என்பதைக் கவனித்தீர்களா?!

  பயங்கரப் புயல் - மாற்றப் பட்ட முன்னட்டை - வினோஜின் லோகோவோவுடன்!

  புதிய வாசகர்கள் லாண்ட்மார்க் போன்ற புத்தகக் கடைகளை மேய்கையில், ஒரு புத்தகத்தை தேர்வு செய்ய கதைச் சுருக்கம் உதவக் கூடும் என்பதால் அதை இணைத்து இருந்தேன்! என்ன, கொஞ்சம் விரிவான கதைச் சுருக்கமாகப் போய் விட்டது! ;-) கைவசம் பயங்கரப் புயல் புத்தகம் இல்லாததால், இணையத்தில் இருந்து எடுத்த கதைச் சுருக்கம் அது! ஏதேனும் தவறு இருந்தால் கதையைப் படித்த வாசகர்கள் சொல்லலாமே?! திகில் காமிக்ஸ் லோகோ, ஒரு நாஸ்டால்ஜி எபெக்ட்டுக்காக! :)

  பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வினோஜ் குமாரின் முதல் 3 டிசைன்களுமே மனதை அள்ளுகின்றன. குறிப்பாக, புத்தகத் தாள்கள் பறந்து விலகி பேப்பராக மாறுவது - வாவ்! :)

   வாழ்த்துக்கள் வினோஜ்!

   @ கார்த்திக்
   நல்ல மனசுங்க உங்களுக்கு! :)

   Delete
  2. வினோஜின் 'பறக்கும் தாள்கள்' லோகோவும், கார்த்திக்கின் 'பிடறிச் சிங்கம்' லோகோவும் இப்போது என் தராசுத் தட்டினை சமநிலைப் படுத்துகின்றன.

   ஹூம்! நானும் சீக்கிரமே ஃபோட்டோ ஷாப், கோரல் ட்ரா எல்லாம் கத்துக்கிட்டு களத்துல இறங்கலாம்னு இருக்கேன். (எப்படியாச்சும் நம்ம 'நாட்டாமை'யை ஒரு அரசமரத்தடியில் சொம்புடன் உட்கார வச்சு நானே என் கையால மண்ணை அள்ளி அவர் வாய் நிறையப் பூசிவிடனும்) :)

   Delete
  3. எனக்கும் கூட வினோஜின் "பறக்கும் தாள்கள்" டிஸைன் மிகவும் பிடித்து உள்ளது! 'Perfect Binding செய்யாமல், சென்டர் பின்களை அடித்திருப்பதால் தான், தாள்கள் பறக்கின்றனவா?!' என்று, சாட்டில் ஈ.விஜய் குசும்பு கேள்வி கேட்டு இருந்தார் என்பதை இங்கே பொதுவில் போட்டு உடைப்பது சரியா என்று தெரியவில்லை! ;-) ஆனால், அந்த வயலட் & மஞ்சள் காம்பினேஷன் மட்டும் கொஞ்சம் உறுத்தலாகத் தெரிகிறது (எனக்கு)! 2-வது & 6-வது 'குட்டிப்பயல்' லோகோக்கள், கிராஃபிக் நாவல் வரிசைக்கு அவ்வளவாகப் பொருந்தாது எ.எ.க. :) மற்ற நான்கு டிசைன்களில் (1, 3, 4 & 5) எது தேர்வானாலும் மகிழ்ச்சியே! :)

   Delete
  4. ஆண்டவா! என் துயரங்களிலிருந்து என்னை நான் பாதுகாத்துக் கொள்கிறேன். என் நண்பர்களிடமிருந்து மட்டும் (குறிப்பாக அந்த பெங்களூருகாரரிடம்) என்னை நீ எப்படியாவது காப்பாற்று ப்ளீஸ்...

   Delete
  5. /புத்தகத் தாள்கள் பறந்து விலகி பேப்பராக மாறுவது - வாவ்!//

   பூனையாருக்கு கண்ணாடி போடவேண்டும் போலிருக்கிறதே! அது பேப்பர் இல்லை ஐயா, பறவை! :-))

   /நானே என் கையால மண்ணை அள்ளி அவர் வாய் நிறையப் பூசிவிடனும்//

   நல்ல நோக்கம்! :‍-))

   Delete
  6. @ஆதி தாமிரா:
   //பூனையாருக்கு கண்ணாடி போடவேண்டும் போலிருக்கிறதே! அது பேப்பர் இல்லை ஐயா, பறவை! :-))//
   ஹா ஹா... அவர் சென்டர் பின் பைண்டிங்கைத் தான் அப்படி இன்டைரக்டாக கலாய்த்து இருக்கிறார் ஜி! :-) தவிர, பூனை ஏற்கனவே கண்ணாடி மாட்டி இருக்கிறது! ஆனால், பவர் தான் கொஞ்சம் குறைச்சல்! ;)

   Delete
  7. @ ஆதி
   // புத்தகத் தாள்கள் பறந்து பேப்பராக மாறுவது //
   அட்டகாசமான டிசைனைப் பார்த்ததும் கொஞ்சம் ஓவரா உணர்ச்சி வசப்பட்டு டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு! ஹி ஹி! :)

   @ கார்த்திக்

   // அவர் சென்ட்டர் பின் பைன்டிங்கைத்தான் இன்டைரக்ட்டாக கலாய்த்து இருக்கிறார் //

   நீங்க என்னை காப்பாத்த முயற்சி முயற்சி பண்றீங்களா, கடாசிட முயற்சி பண்றீங்களான்னு சரியா புரியாததால இப்போதைக்கு லைட்டா ஒரு அசட்டு சிரிப்பை மட்டும் சிரிச்சு வைக்கிறேன். ஹி ஹி!

   Delete
 45. வினோஜ் குமாரின் அனைத்து லோகோகளும் அருமை, ஒன்றை ஒன்று மிஞ்சும்வகையில் உள்ளன! எனது தேர்வு முதல் வரிசையில் உள்ள முதல் லோகோ (இதில் ஊற்று நோக்கினால் (Sun Shine Graphic, என்பதன் முதல் எழுத்துகள் [SSG] தெரியும் எழுத்துக்கள் தெரியும்) முதல் வரிசையில் உள்ள மூன்றாவதும் அருமை.

  எனது இறுதி தேர்வு வரிசையாக
  1. வினோஜ் குமார்
  2. வெங்கடேசன்
  3. ஸ்ரீரங்கம் சிவா
  4. ரமேஷ் குமார்

  இந்த நால்வரும் தங்களின் கற்பனைதிறனில் உதித்தவைகளை அருமையான ஓவியமாக கொண்டு வந்துள்ளனர்! பாராட்டுகள் நண்பர்களே!

  நன்றி கார்த்திக், வினோத்தின் திறமையை இங்கு வெளிச்சம் போட்டு காட்டியதற்கு!

  ReplyDelete
 46. அட்டை கார்த்திக் ,ஆதியின் கடைசி,பொடியனின் முதல் முன்னட்டை,அருணாச்சலம் அட்டை அனைத்து பிற நண்பர்களின் அட்டைகளும் வண்ண சேர்க்கை அருமை ! தேர்ந்தெடுப்பது கடினமே!

  ReplyDelete
 47. தூக்குத் தண்டணைக்கு பயன்படுத்தப்பட்ட கயிறை பிரித்தெடுத்து தாயத்தாக அணிந்து கொள்ளும் வழக்கம் மேற்கத்திய நாடுகளில் கடைபிடிக்கப்பட்டதாக இந்தமாத ஃபில்லர் பேஜ் கதைகளில் ஒன்றான 'காலனின் கயிறு' லக்கி-லூக் கதையில் சொல்லப்பட்டிருக்கிறதே? இதைப் பற்றிய வரலாற்று சம்பவம் யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன் கேட்போம்?

  ReplyDelete
 48. http://irapeke.blogspot.in/2013/12/my-logo-designs-for-sunshine-graphic.html

  இது எப்படி இருக்கு ??

  ReplyDelete
 49. The wrapper design of L.Karnan, Salem looks clean - that's my favorite. However it is hard to decide without seeing full resolution version of all the designs. Looks like everyone who participated enjoyed with Photoshop and similar tools!

  ReplyDelete
 50. நண்பர் சுஸ்கி-விஸ்கிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது நண்பர்களே !

  ReplyDelete
  Replies
  1. வாவ்! பாரதியின் பிறந்த தினமான இன்று பிறந்திருக்கும் இன்னொரு காமிக்ஸ் பிரியரை அன்புடன் வரவேற்க்கிறேன்!

   வாழ்த்துக்கள் விஸ்கி-சுஸ்கி! :)

   Delete
  2. வாழ்த்துக்கள் விஸ்கி - சுஸ்கி!
   எல்லா வளங்களோடு ஆரோக்கியமான வாழ்வு பெற வாழ்த்துக்கள் அக்குழந்தைக்கு!

   Delete
  3. நண்பர் சுஸ்கி-விஸ்கிக்கும் ; புது வரவான ஜூனியர் சு.வி.யாருக்கும் நமது வாழ்த்துக்கள் !

   Delete
 51. லோகோவில் வெற்றி வாகை சூடியிருக்கும் நண்பர் வினோஜ் அவர்களுக்கும், அட்டைப்படத்தில் தேர்வாகியிருக்கும் நண்பர் பிரதீப் என்கிற பொடியன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! மற்ற நண்பர்களும் அமர்க்களப் படுத்தியிருக்கிறீர்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே!! :)

  ReplyDelete
  Replies
  1. மிக சரியான தேர்வு , வெற்றி பெற்ற நண்பர்களுக்கும் , விலக்க முடியாமல் அற்புதமாய் அனைத்து டிசைன்களையும் டிசைன் செய்து அனுப்பிய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் ! போட்டிகள் கடுமையாக இருக்க போகிறது வரும் காலங்களில் அட்டைப்படங்க தூள் கிளப்ப போவது உறுதி

   Delete
 52. 1) ///வினோஜ் குமாரின் படைப்புகளைப் பார்த்த போதே 'அடடே' என்று சொல்லத் தோன்றியது ! அதிலும் குறிப்பாய் லோகோ # 3 பிரமாதமாய் பட்டது எனக்கு ! எழுத்துகளின் ஸ்டைல் இன்னும் கொஞ்சம் மெருகூட்டப்பட்டால் இதுவே நம் லோகோவாகிடும் for sure ! Great skills Vinoj ! Welcome to the club !!//

  2) //இங்குள்ள படைப்புகளுள் எனது தேர்வு நண்பர் பிரதீப்பின் டிசைனே ! ... overall effect ரொம்பவே அழகாய் தோற்றம் தருவதே இதன் தேர்வின் பின்னணி !வாழ்த்துக்கள் பிரதீப் !//

  3) // நண்பர் சுஸ்கி-விஸ்கிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது நண்பர்களே ! //

  நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்! :)

  ReplyDelete
 53. @ ஆதி

  Low resolution டிசைனை அனுப்பிவச்சு ஒரு நல்ல வாய்ப்பை தவறவிட்டுட்டீங்களே ஆதி?! ச்சொ!

  சரி, இப்ப உங்களால பேச முடியாதுன்னு எனக்குத் தெரியும். நல்லா மென்னு சாப்பிடுங்க. கல்லையும் கரைக்கிற வயசுதானே? :)

  ReplyDelete
 54. வினோஜின் பறக்கும் தாள்கள் சிறப்பான ஒரு லோகோதான். ஆக, அது செலக்ட் ஆனதில் மகிழ்ச்சியே! இருப்பினும் கார்த்திக்கின் சிங்கம் என் மனதில் ஒரு துளி அதிக மதிப்பை இன்னும் பெற்றபடியேதான் இருக்கிறது.

  @ஈ.விஜய்,

  ஹிஹி! இந்த முறை நான் மண்கவ்வவேயில்லையே..!!

  அது எப்படி என்கிறீர்களா? நான் போட்டியில் இல்லை என்பது எனக்கே தெரியும். //ஆனால் நண்பரிடம் உயர் resolution களில் பணியாற்ற சாப்ட்வேர் இல்லாத காரணத்தால்// ஆசிரியர் சொல்வது போலல்லாமல், தவறுதலாக மிகக் குறைவான ரெஸல்யூஷனை தேர்வுசெய்துவிட்டேன். அதை நான் கவனிக்கவும் இல்லை. நான் ஒரு தேர்ந்த டிஸைனர் இல்லை என்பதை, அதை நான் வேலை செய்யும்போது கூட கவனிக்கவில்லை என்பதைக்கொண்டே அறியலாம். அவ்வ்வ்வ்வ்.. இருப்பினும், மூன்று மணி நேர உழைப்பை வீணாக்க மனமில்லாமல், ஒபீனியன் அறிவதற்காகவே மட்டுமே நிலை குறித்த ஒரு குறிப்புடன் அனுப்பிவைத்தேன். மற்ற டிஸைன்களுடன் என்னுடையவற்றுக்கும் பதிவில் இடம் தந்ததோடு, நல்ல ஒபீனியனும் தந்த ஆசிரியரின் பெருந்தன்மை பெரிது. அதற்கொரு நன்றி.

  மற்ற டிஸைன்களை கவனிக்கையில் இன்னும் என்னென்ன செய்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது. பி&ஒ டிஸைனில் நியாயமாக இருக்கவேண்டிய கான்ட்ராஸ்ட் என் படத்தில் மிகவும் குறைவாக இருப்பதாக தோன்றுகிறது. அந்தக்கிளியையும் நண்பர் அருணாச்சலம் டிஸைனில் இருப்பதைப்போல வண்ண அதிகரிப்பு செய்ய நினைத்தேன். ஆனால் செய்யத்தெரியவில்லை. ஹிஹி!

  வெற்றி பெற்ற பொடியனுக்கு வாழ்த்துகள். இருப்பவற்றில் அவருடையதே கண்கவர் டிஸைன் என்பதில் ஐயமில்லை.

  ஆமாம், இப்போதுதான் கவனிக்கிறேன். ஏன் ரமேஷ்குமார் கலந்து கொள்ளவில்லையாம்? பாவம் பார்த்திருப்பாரோ? :‍-)))))))))

  ReplyDelete
  Replies
  1. //ஏன் ரமேஷ்குமார் கலந்து கொள்ளவில்லையாம்?//

   ஹா ஹா! நானும் இந்தத் தபா KBGDல கலந்துக்கப்போறேன்னு அவர்கிட்ட சும்மானாச்சுக்கும் சொல்லியிருந்தேன். அதை நம்பிட்டார் போலிருக்கு! ஹா ஹா!

   Delete
  2. // பாவம் பார்த்திருப்பாரோ //

   அதெல்லாம் நான் பார்க்கறதில்லை.. :P 10-ஆம் தேதி நெருக்கத்தில் வெளியீர் பயணம் இருந்ததால் இதில் கலந்துகொள்வது கஷ்டம் என்று தெரிந்து முன்பே முடிவெடுத்துவிட்டேன்.

   Delete
 55. @Vijayan sir: //நண்பர் வினோஜ் குமாரின் படைப்புகளைப் பார்த்த போதே 'அடடே' என்று சொல்லத் தோன்றியது ! அதிலும் குறிப்பாய் லோகோ # 3 பிரமாதமாய் பட்டது எனக்கு ! எழுத்துகளின் ஸ்டைல் இன்னும் கொஞ்சம் மெருகூட்டப்பட்டால் இதுவே நம் லோகோவாகிடும் for sure ! //

  Vinoj's all the designs are great, creative as well as crisp. But the #3 looks like already familiar on google search (the flying paper/ birds stuff). So be sure to confirm with this. Currently I am on long travel and couldn't browse the exact link of that through my mobile.

  @Podiyan: Congrats Pradeep for the wrapper design!

  ReplyDelete
 56. லோகோ டிசைனில் வெற்றி பெற்ற வினோஜ் மற்றும் அட்டைப்பட டிசைன் போட்டியில் வெற்றி பெற்ற பொடியன் என்ற பிரதீப் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 57. "Lion Graphic Novel" is my Choice instead of Sunshine Graphic Novel!

  ReplyDelete
  Replies
  1. @ WillerFan@RajaG & மதியில்லா மந்திரி : குழந்தைக்குப் பெயர் சூட்டச் சிரமமாய் இருப்பதால் குழந்தையையே மாற்ற நினைப்பது சரி தானா ?

   Delete
 58. நண்பர் பிரதீப் -பொடியனின் அட்டை பட டிஸைன் தெரிவு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி .வாழ்த்துக்கள் பிரதீப் . புதிய மகவை பெற்றெடுத்த நண்பர் சுஸ்கி விஸ்கி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 59. டியர் சார்,

  வாசகர் வினோஜ் குமார் அவர்களின் லோகோ டிசைன்கள் இரண்டை தவிர அனைத்தும் அருமையாக இருக்கிறது ; அதிலும் உங்களின் தேர்வு அற்புதமாக இருக்கிறது. காமிக்ஸ் வாசகர் - திறமைசாலிகளில் பணிவும் அடக்கமும் கொண்ட வாசகர்களில் நண்பர் ரமேஷ் குமாருக்கு அடுத்து இரண்டாவதாக என் பார்வையில் வினோஜ் தெரிகிறார் !

  வாசக நண்பர் கார்த்திக் ன் சிங்கமுக ஆரஞ்சு வர்ண லோகோ மிகவும் அழகாக இருந்தது. ஆனாலும் உங்களின் இந்த தேர்வு பெயருக்கு மிகவும் பொருத்தமாக மிக மிக அழகாக இருக்கிறது. இதையே உங்கள் ரசனைப்படி மெருகூட்டச் செய்து லோகோ வாக அமைத்து விடுங்கள் !

  ReplyDelete
 60. இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடிடும் இனிய நண்பர் புதுவை செந்தில் அவர்களுக்கு ஈரோடு விஜயின் வாழ்த்துக்கள்! :)

  ReplyDelete
  Replies
  1. நானும் இணைந்து கொள்கிறேனே வாழ்த்துச் சொல்லிக் கொள்வதில் ! Wishing you a great year ahead Senthil !

   Delete
  2. விஜயன் சாரிடம் இருந்து பிறந்த நாள் வாழ்த்து கிடைத்திருக்கிறது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். மிக்க நன்றிகள் சார்!

   Delete
  3. உங்கள் வாழ்த்துக்களுக்கும் அன்புக்கு மிக்க நன்றி ஈரோடு விஜய்!

   Willer fan: உங்களுக்கும் என் நன்றிகள் நண்பரே

   Delete
  4. @கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்: உங்கள் அன்புக்கு மிக்க நன்றி நண்பரே!

   Delete
 61. Dear Vijayan Sir,
  I am
  P.Sevvel, M.Tech, (Ph.D.)
  Associate Professor,
  Head of the Department
  Department of Mechanical Engineering.
  I have attached along with this mail my Feedbacks about the Comics in the Year 2013. I started reading your comics from the year 1989 onwards through my Father (Advocate). I Owe u a lot for Muthu & Lion Comics because they shaped me into a man of high honors in this society. I & my father are still reading your comics and will do the same till we die. Iam the Head of the Department of Mechanical Engineering in a private self financing engineering college and have also introduced the habit of reading your comics to my students and now a total of 97 students are reading your comics. Iam maintaining a library in my home with more than 150 books and all of my students are reading them regularly.

  My feedback about your recent changes:-
  1. Time Management:- Excellent
  2. Size, Colour Issues:- Good
  3. Cost:- Ok
  4. Choice of Heroes & Books:- Sir, here I have an detailed feedback which all my friends, father & students feel:
  1. Please publish the Comics of Tex Willer written by Old Authors. Because you are publishing the latest Tex Willer issues which I really feel are very bad and not of the Quality we expect from Tex Willer Stories.
  2. Please avoid Largo stories, they are very boring, Adult based comics & are like a serial.
  3. The Danger Diabolik is an good selection of New Hero, but please publish his Issues from the Beginning so that we will get a continuity. Please do not stop him for high publishing cost.
  4. What happened to Mystery Martin Hero? An excellent Hero from our opinion. Please Compulsorily publish his books.
  5. Avoid comics like Manathil Mirugam Vendum stories, Steel Body Sherlock Homes & Blue Coat Army stories.

  In my opinion, you are the Only Publisher for Comics for the entire population of Tamil all over the world. We are expecting more from you. Please donot take my feedback as a harsh command. But try to avoid publishing new new heroes and leaving them after some issues.
  Please try to get the Copyrights for Mystery Martin. Old Tex Willer Stories - We will pay even Rs.80 for their Black & White Versions.
  The real & true fans of Muthu & Lion Comics will accept my feedback. Please improve the quality of Stories, the whole fans of Tamil Comics are awaiting the changes.
  Thanks a lot for reading my message.

  ReplyDelete
  Replies
  1. mechvelpandian : Thank you for the observations sir..much appreciated.

   Perspectives differ from person to person and I can understand this is yours..! However I disagree with your statement that " The real & true fans of Muthu & Lion Comics will accept my feedback." This seems to convey the impression that anybody who opines differently from you are not the "real & true fans" !

   Largo Winch that is boring to you rates amongst our topsellers ; and Bluecoats has again been a splendid success. So there are definitely differing tastes & points of views !

   This is a space with ample freedom for all to express their views ! Let's not try and force ours on our fellow readers please... !

   Delete
  2. //Largo Winch that is boring to you rates amongst our topsellers ; and Bluecoats has again been a splendid success. So there are definitely differing tastes & points of views !//
   லார்கோவுக்கும், ப்ளூ கோட்சுக்கும் பெரும் படையே உண்டு சார் !

   Delete
  3. நமது சமீபத்திய வரவுகளில் என்னை பொறுத்தவரை லார்கோ டாப்

   Delete
 62. டியர் எடிட்டர்...

  2014 க்கான சந்தா நிலவரம், எண்ணிக்கை தான் என்ன? தெரிந்து கொள்ளலாமா..

  ஏனெனில் தங்கள் பதில் சந்தா செலுத்திய எங்களுக்கு ஒரு சந்தோசமும், இன்னும் சந்தா செலுத்தாத நண்பர்களுக்கு ஒரு ஊக்கமும் தர இயலுமே...

  ReplyDelete
  Replies
  1. Muthu Kumaran : டிசெம்பருக்கு மேல் தான் சூடு பிடிக்கவே துவங்கியுள்ளது ! சந்தாக்களை அனுப்பி விட்ட நண்பர்களுக்கு ஒரு பெரிய THANK YOU !! இனி அனுப்பிடக் காத்திருக்கும் அன்பர்களுக்கு - THANKS IN ANTICIPATION !

   Delete
  2. // டிசெம்பருக்கு மேல் தான் சூடு பிடிக்கவே துவங்கியுள்ளது // நல்ல செய்தி... சார்.. உங்களுக்கும் ஒரு பெரிய Thank You.

   Delete
 63. லயன் – முத்து காமிக்ஸ்
  2013 – கொஞ்சம் அலசுவோமா?

  1. 2013ன் டாப் 3 இதழ்கள் என நீங்கள் கருதுவது?

  1. ஆல் நியூ ஸ்பெசல்
  2. நெவர் பிஃபோர் ஸ்பெசல்
  3. துரத்தும் தலைவிதி

  (மறுபதிப்புகளைக் கணக்கில் கொள்ளவில்லை)

  2. 2013ன் டாப் சொதப்பல்(கள்) எது?

  1. இரத்தத் தடம்
  2. நிலவொளியில் ஒரு நரபலி

  3. 2013ன் பெஸ்ட் அட்டைப்படம்?

  ஆகாயத்தில் அட்டகாசம் / ஜானி ஸ்பெசல்

  4. 2013ன் சுமாரான அட்டைப்படம்

  வேங்கையின் சீற்றம் / பூதவேட்டை

  5. 2013ன் பெஸ்ட் நாயகர்?

  வெய்ன் ஷெல்டன் (பயங்கர டஃப் கொடுப்பவர் லார்கோ)

  6. “வேண்டவே வேண்டாம்” ரக இதழ்கள்?

  அப்படி எதுவுமில்லை என்பது 2013ல் நிகழ்ந்த அற்புதம். சில நண்பர்கள் கிராபிக்ஸ் நாவல் என்று சொல்லக்கூடும். ஆனால் உண்மையில் இந்த வருடத்தில் நமது ஆசிரியர் கண்டெடுத்த பொக்கிசங்கள் கிராபிக் நாவல்களே என்பது என் கருத்து.

  7. கறுப்பு வெள்ளை புத்தகங்கள் பற்றி?

  கண்டிப்பாக வர வேண்டும். வாசிப்பவர்களின் படைப்பூக்கத்தை அதிகப்படுத்துபவை நிறைவைத் தருபவை கறுப்பு வெள்ளை கதைகளே. மர்ம மனிதன் மார்ட்டின் மாதிரியான நண்பர்களுக்கு அவ்வப்போது வாய்ப்பு தரலாமே?

  8. 2014ன் கதைத் தேர்வுகள்?

  புதிய நாயகர்கள் இன்னும் உள்ளே வந்தால் நன்றாயிருக்கும். டைலன் டாக் ஒருவர் தவிர்த்து 2014ல் வரும் நாயகர்கள் எல்லாமே நமக்கு அறிமுகமானவர்கள்தானே? குறிப்பாக ஜேசன் பிரைசின் கதையை வாசிக்க ஆர்வமாயிருக்கிறேன். அதன் அடிப்படை கரு நமக்கு சரிப்பட்டு வராது என ஆசிரியர் சொல்லிவிட்டாலும் ஏனோ அந்தப் பெயர் என்னை ரொம்பவே ஈர்த்து விட்டது.

  9. டெக்ஸ் வில்லர் 2013ல் ஓவர்டோசா?

  கண்டிப்பாக இல்லை. அவர் நமது எவர்கிரீன் ஹீரோ. அவர் போரடிப்பதாகச் சொல்வது சாத்தியமேயில்லை.

  10. இரத்தப்படலம் – 2ல் சுவாரஸ்யம் தொடர்கிறதா?

  நிச்சயமாக. ஆனால் ஒரே ஒரு சிக்கல். இரத்தப்படலம் தனி இதழ்களாக வந்தபோது நான் வாசிக்கவில்லை. ஜம்போ ஸ்பெசலை வாங்கி வந்த இரண்டு நாட்களில் தொடர்ச்சியாக வாசித்து முடித்தேன். அதில் ஒரு தொடர்ச்சியும் ஆர்வமும் இருந்தது. ஆனால் இந்த இரண்டாவது ஆட்டத்தில் மாதக்கணக்காய் / வருடக்கணக்கய் காத்திருக்க வேண்டும் என்பது தான் மண்டை காய வைக்கிறது.

  11. வேறு ஜானர்கள்?

  மாயாஜாலக் கதைகள் / எதிர்காலத்தில் நிகழும் கதைகள். குறிப்பாக அலெஹாந்த்ரோ ஹொடொர்ரொவெஸ்கியின் “இன்கால்” நமது காமிக்ஸில் வெளியானால் தன்யனாவேன்.

  12. 2013ல் நமது காமிக்ஸ் பற்றி?

  Awesome. Keep on Rocking..:-)))

  ReplyDelete
 64. வேங்கையின் சீற்றம் பிரிண்ட் தரம் மிக மிக அருமை!

  ஜானி ஸ்பெஷலின் சில பக்கங்களில் பிரிண்ட் சரியில்லாமல் சித்திரங்களை ரசிக்க முடியவில்லை.

  மாதா மாதம் இவ்வகையான பிரிண்டிங் குறைகள் தொடர்கதையாகி விட்டன!

  சற்று தாமதமானாலும் நல்ல அச்சுத்தரமுடன் வெளியிட வேண்டும்....

  ReplyDelete
 65. Operation சூறாவளி - கதை விமர்சனம் !

  ஒரு பயணத்தின் போது நீங்கள் இருவரும் அருகருகே அமர்ந்து பசுமை நினைவுகளை மீட்டெடுக்க - அழகாய் ஆரம்பிக்கும் உங்கள் வாக்கியத்திற்கு அவள் மலர் போன்ற இதழ்களால் லாவகமாய் எடுத்துக் கொடுக்க ; அவைகளை நீங்கள் வசமிழந்தவராய் வசியம் கொண்ட மலர் போல் தொடுக்க ; இதனிடையே இருவரும் தன் வசமிழந்து போன மெல்லிய காதல் உணர்வுகளையும் மீட்டெடுத்து ; நேரம் போவதே தெரியாமல் பயணித்தால் நிச்சயமாக நீங்கள் இருவரும் காதலர்கள் என்று சத்தியமே செய்வேன். ஏனெனில் இது போன்றதொரு உணர்வு கணவன் மனைவியிடம் ஏற்படுவதில்லை ; அப்படியே உங்களில் யாரவது ஒருவருக்கு வாய்த்திருந்தால், சொர்கத்தில் இடமில்லை என்று அதை உங்களுக்கு பூலோகத்தில் அமைத்துக் கொடுக்க நினைத்த இறைவன் உங்கள் மனைவி மூலமாக ஏற்பாடு செய்துள்ளான் என்று பெருமை பட்டுக்கொள்ளுங்கள் !

  அது போன்றதொரு உணர்வு பரிமாற்றத்தை தான், கதாசிரியர் மிகவும் மெய்மறந்து கிட்டத்தட்ட ஒன்பது பக்கங்களுக்கு மேல் விவரித்துள்ளார். இன்ஸ்பெக்டர் ஜிங்கோவும், மேட்டுக்குடி சீமாட்டி அல்டீ யும் சேர்ந்து ஒரு காதல் கதையை விவரித்து நம்மை டயபாலிக்கை விட்டு வெகுதூரம் உள்ள பெக்லெய்ட் ற்கே கூட்டிச் சென்று விடுகிறார்கள் !

  http://maramandaii.blogspot.in/2013/12/operation.html

  குற்றம் : குற்றம் என்றாலே அது தண்டிக்கப்பட வேண்டிய ஒரு செயல் ; தன் மனசாட்சியை அனுதினமும் குறுகுறுக்க வைக்கக் கூடிய அதர்மம் ; ஆனால் அந்த குற்றத்தை கூட ஒரு சாதனையாக செய்வதை ஒரு தொழிலாக கொண்டிருப்பது மட்டுமல்லாமல், தம் புத்திக்கூர்மையை நினைத்து பெருமிதம் கொள்ளும் மனோநிலை, மனித படைப்பின் இன்னொமொரு விசித்திரம் ! சத்தியமாக நான் ராஜாவை கூறவில்லை, அது கட்சி அரசியல் ; நான் கூறியது குற்றவியல் சக்கரவர்த்தியான இம்மாத டேஞ்சர் டயபாலிக் கை, இது காமிக்ஸ் அலசல் !

  எப்படி செய்தாலும் அது குற்றம் தான் ; எங்கு செய்தாலும் குற்றம் குற்றம் தான். ஆனால் கொள்ளைக்காரனிடம் இருந்துதானே நான் கொள்ளையிடுகிறேன் என்ற திடமான எண்ணவோட்டத்திற்கு உலகமெங்கும் உள்ள பாமர மக்களும், போலி பகுத்தறிவாதிகளும் காலம் தொட்டே அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர் .... .... ....

  ReplyDelete
 66. குழந்தை பிறந்துள்ள நண்பர் சுஸ்கி விஸ்கி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 67. எனது அட்டை வடிவமைப்பை தேர்ந்தெடுத்த ஆசிரியருக்கும் தங்களது கருத்துக்களால் ஆலோசனைகளை தெரிவித்துள்ள, வாழ்த்துக்கள் சொல்லியுள்ள அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி. போட்டியில் கலந்துகொண்ட அத்தனை நண்பர்களதும் வடிவமைப்புக்களும் மிகச்சிறப்பாகவே இருந்தன. ஒவ்வொருவரது வடிவமைப்பிலிருந்தும் பல புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ளமுடிவது சிறப்பு! ஆசிரியர் குறிப்பிட்டதுபோல கறுப்பு நிறத்தை அதிகப்படுத்தி அட்டையை மீண்டும் அனுப்பிவைத்திருக்கிறேன்.

  பிறந்தநாளைக் கொண்டாடும், கொண்டாடிய நண்பர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். சுஸ்கி விஸ்கி அவர்களுக்கு ஜூனியர் கிடைத்திருக்கும் அருமையான வேளையில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன்.

  ReplyDelete
 68. Thanks for you wishes friends.He is my second baby.With all your blessings he is doing fine.Thanks for you all once again.

  ReplyDelete
 69. டியர் விஜயன் சார்,

  நெடுநாட்களாய் நெஞ்சுக்குள் நெருடலாய் இருக்கும் ஒரு கருத்தை இங்கு பதிவிட விரும்புகிறேன் ; தவறாக இருந்தால் மன்னிக்கவும். ஒரு தமிழ் காமிக்ஸ் வாசகர் இங்கு ஆங்கிலத்தில் கமெண்ட் இடும் போது, அவருக்கான பதிலையும் ஆங்கிலத்தில் பதிவதையே நாம் வழக்கமாக கொண்டு உள்ளோம் ; இதில் மரபு என்று ஏதும் இருப்பதாக தெரியவில்லை !

  தமிழை அழகாக எழுதி அதை பதிவிட்டு, தமிழ் காமிக்ஸ் பதிவுகளை தமிழில் படித்து ரசித்து அனுபவிப்பதில் - தமிழ் காமிக்ஸ் வாசகர்களாகிய நம்மை தவிர வேறு எவருக்கு அதிக ஆர்வம் இருக்க முடியும்? அப்படியே ஒருவர் ஆங்கிலத்தில் பதிவிட்டால் அவரின் மொபைலில் தமிழில் பதிவிடக்கூடிய வசதி இல்லை என்று தானே அர்த்தம்..!

  எனவே அதற்கான பதிலை நீங்கள் ஆங்கிலத்தில் பதிவிடாமல், இனி இனிய தமிழில் பதிவிட்டால் பெருமகிழ்ச்சி அடைவேன் !

  ReplyDelete
  Replies
  1. இந்த கருத்தை நான் வழிமொழிகிறேன்.அடியேனுக்கு ABCD எத்தனை எழுத்து என்றே தெரியாது.ஹிஹி!!!

   Delete
  2. அடியேனுக்கு-ம் எத்தனை-க்கும் நடுவால என்னமோ கட்டம் கட்டமா போட்டிருக்கிறீர்களே அது இன்னாது

   Delete
  3. // அடியேனுக்கு-ம் எத்தனை-க்கும் நடுவால என்னமோ கட்டம் கட்டமா போட்டிருக்கிறீர்களே அது இன்னாது //

   1 ஆம் வகுப்பில் படிக்கவேண்டியதை ஒழுங்காகப் படிக்காமல் வாத்தியாருக்கு டீ வாங்கிக்கொடுத்து பாஸானால் இப்படிதான் ஆகும் :P

   Delete
  4. ///1 ஆம் வகுப்பில் படிக்கவேண்டியதை ஒழுங்காகப் படிக்காமல் வாத்தியாருக்கு டீ வாங்கிக்கொடுத்து பாஸானால் இப்படிதான் ஆகும் :ப///

   நாங்கல்லாம் LKG யிலேயே அரியர்ஸ் வச்சவங்க !!!எங்ககிட்ட மோதாதீங்க சூட்டு மாமோய் :-)

   Delete
  5. // நாங்கல்லாம் LKG யிலேயே அரியர்ஸ் வச்சவங்க !!!எங்ககிட்ட மோதாதீங்க சூட்டு மாமோய் :-) //

   நாங்கல்லாம் எல்லா Class-லையும் English-ல 35 மார்க் எடுத்து பாஸானவங்க...

   Delete
 70. நண்பர்கள் வினோஜ்குமாருக்கும் பொடியனுக்கும் என் வாழ்த்துக்கள். அப்படியே நண்பர் விஸ்கி சுஸ்கிக்கும்!

  ReplyDelete
  Replies
  1. பிறந்த நாள் கொண்டாட்டங்கள் எப்டி இருந்தது... செந்தில்..

   Delete
  2. இரண்டு நாட்கள் விடுமுறையில் சந்தோஷமாகவே சென்றது நண்பரே..!

   Delete
 71. This comment has been removed by the author.

  ReplyDelete
 72. இம்மாதம் வந்த ஜானி, லக்கிலூக், சிக்பில், கேப்டன் டைகர், கதைகள் மிக நன்றாக இருந்தன.  டயபாலிக்கை எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை,
  கொள்ளையடிப்பதும், கொலை செய்வதும், ஒரு "குட்டி"யுடன் உல்லாசம் அனுபவிப்பதும், தவிர இந்த ஹீரோவின கதைகளில் உருப்படியாக ஏதேனும் உள்ளதா?  திருட்டும் சுயநலமும்தான் இவரது கதைகள் கற்றுத்தரும் நீதியா?  இவன் ஹீரோ இல்லை வில்லன் என்ற வாதம் எழலாம், ஸ்பைடர் கூட வில்லன்தான் யாரையேனும் கொலை செய்துள்ளானா?  பில்லர் பக்கங்களில் வந்த கதைகளில் காலனின் கயிறும் திகில் சிறுகதையும் தவிர மற்ற இரண்டும் மிகவும் சுமாராக உள்ளது.  டிசம்பரின் மறுபதிப்பு இதழ்களில் பல இடங்களில் ஒருவர் பேச வேண்டிய வசனத்தை மற்றவரும், ஒரு கட்டத்தில் வர வேண்டிய வசனங்கள் மற்றொரு கட்டத்திலும், சூழ்நிலையை விவரிக்கும் வசனங்கள் பேசும் பலூன்களிலுமாக அச்சாகி குழப்பியடிக்கப் பட்டுள்ளது.  ப்ரூப் திருத்துவதில் இன்னும் கவனம் வேண்டும்!  காலம் காலமாக வாசித்துப் பாதுகாக்க விரும்பும் வாசகனுக்கு இப்படியான குழறுபடியான தயாரிப்புகள் நீதி செய்வதாகாது...

  ReplyDelete
  Replies
  1. ///டயபாலிக்கை எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை,
   கொள்ளையடிப்பதும், கொலை செய்வதும், ஒரு "குட்டி"யுடன் உல்லாசம் அனுபவிப்பதும், தவிர இந்த ஹீரோவின கதைகளில் உருப்படியாக ஏதேனும் உள்ளதா?///

   சாக்ரடீஸ் கிரேக்கர் என்பதால் ரோமானியரான டயபாலிக்கை "இன வெறுப்பு"டன் விமர்சித்துள்ளார்.கொள்ளையடிப்பது,கொலை செய்வது,குட்டிகளுடன் உல்லாசம் அனுபவிப்பது போன்றவற்றை ஜேம்ஸ் பாண்டுகளும்,வேயின் ஷெல்டன்களும் செய்யலாம்.டயபாலிக் செய்தால் மட்டும் குற்றமா...?

   நம்ம ஊரு பஞ்சாயத்து தலைவர்கள்கூட சர்வ சாதாரணமாக செய்யும் மேற்படி "சுப காரியங்களை" சமூக விரோதிகளால் வளர்க்கப்பட்ட டயபாலிக் செய்யக்கூடாது என்பது என்ன அய்யா நியாயம்...?

   //திருட்டும் சுயநலமும்தான் இவரது கதைகள் கற்றுத்தரும் நீதியா?//

   இது பெரியவர்களுக்கான காமிக்ஸ் கதைதான்.குழந்தைகளுக்கான நீதிபோதனா நூல் அல்ல!!!

   //இவன் ஹீரோ இல்லை வில்லன் என்ற வாதம் எழலாம், ஸ்பைடர் கூட வில்லன்தான் யாரையேனும் கொலை செய்துள்ளானா?//

   டயபாலிக் (இன்று வரை)MAFIA செல்வாக்கு மிகுந்த இத்தாலி தேச தயாரிப்பு.கொலை ,கொள்ளையெல்லாம் அங்கே சகஜம்.அந்த நாட்டின் முன்னாள் அதிபர் ஒருவர் ஊழல்,பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி கோர்ட்,கேஸ் என்று அலைவது சமீப காலத்தில் நடந்த கூத்து.

   ஆக,தவறு டயபாலிக்குடையது அல்ல!!!

   Delete
  2. ”காலம் காலமாக வாசித்துப் பாதுகாக்க விரும்பும் வாசகனுக்கு இப்படியான குழறுபடியான தயாரிப்புகள் நீதி செய்வதாகாது...”’

   சரியான கருத்து. வாதத்தில் நியாயம் உள்ளது.

   Delete
  3. // டிசம்பரின் மறுபதிப்பு இதழ்களில் பல இடங்களில் ஒருவர் பேச வேண்டிய வசனத்தை மற்றவரும், ஒரு கட்டத்தில் வர வேண்டிய வசனங்கள் மற்றொரு கட்டத்திலும், சூழ்நிலையை விவரிக்கும் வசனங்கள் பேசும் பலூன்களிலுமாக அச்சாகி குழப்பியடிக்கப் பட்டுள்ளது.

   ப்ரூப் திருத்துவதில் இன்னும் கவனம் வேண்டும்! //

   +1 மேலும் ஒட்டுமொத்த lettering department-டிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. பலூன் வடிவமைப்பில் நிச்சயம் ஒரு அவசரமே தெரிகிறது. பல இடங்களில் நீள்வட்டத்திற்கு பதிலாக அநாயாசமாக Rounded Rectangle போடப்பபடுவது, எழுத்துக்கும் பலூன் கோடுகளுக்கும் இடையில் போதுமான clearance space இல்லாமலிருப்பது போன்ற விஷயங்கள் வாசிப்பதை கடினப்படுத்திவிடுகின்றன. பழய வாசகர்களுக்கு இது adjust ஆகிவிடலாம் என்ற போதிலும், புதிய வாசகர்களுக்கு instant அயர்ச்சியை உண்டுபண்ணிவிடும்.

   ஒவ்வொரு கதைக்கும் lettering பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்பே வசனங்களின் நீளத்தையும் பலூன் space-ஐயும் கவனித்து ஒரு optimum font size-ஐ அனுமானித்து செயல்படுவதே சிறந்தது (சிறிதாக இருந்தாலும்). சில பலூன்களில் மட்டும் Font Size பெரிதாக இருப்பது, எந்தவகையிலும் Readability-க்கு உதவியாக இல்லை.

   Delete
 73. சென்னை புத்தகத் திருவிழாவில் நாம் பங்கேற்பது இன்னுமா உறுதியாகவில்லை?!

  ReplyDelete
 74. இம்மாத இதழ்கள் அனைத்தும் superb .....குறிப்பாக டயபாலிக் and ஜானி ....

  ReplyDelete
 75. இம்மாத இதழ்கள் அனைத்தும் superb .....குறிப்பாக டயபாலிக் and ஜானி ....

  ReplyDelete
 76. ஐயோ அம்மா .....ஊ ஊ ஊ ஊ ..................காமிக்ஸ் தீந்து போச்சே .............................நாலு புக்கையும் படிச்சு முடிச்சிட்டேன் ...................ஒரு மண்டை ஓடு,ரெண்டு நட்சத்திரம்,ஒரு சங்கு சக்கரம் ,அப்புறம் ஒரு கசமுசா.................................வேணும் வேணும் இன்னும் வேணும் ......................

  காமிக்ஸ் ஆசான்...............புரட்சி தீ ஆசிரியர் போல மாறுவது எப்போது.........?

  ReplyDelete
  Replies
  1. 1500 சந்தா சேர்ந்து விட்டால் புரட்சி தீ போன்று நமது காமிக்ஸ் வர தொடங்கிவிடும் என்று ஆசிரியர் ஏற்கனவே தெரிவித்து உள்ளார்.

   Delete
  2. எங்க இருக்கீங்க அந்த 300 பேர் ...........?

   Delete
 77. புனித சாத்தான் :

  நண்பரே!
  இத்தாலியில் குற்றங்கள் சகஜமாக இருக்கலாம்.

  நல்ல வேளையாக இங்கில்லை!

  அப்புறம் 7 to 77 னு ஒரு வசனம் கொஞ்ச நாளா ஓடிக்கிட்டு இருந்ததே கலாவதியாகி விட்டதா?
  :-)

  ReplyDelete
  Replies
  1. டியர் சாக்ரடீஸ் !!!

   //அப்புறம் 7 to 77 னு ஒரு வசனம் கொஞ்ச நாளா ஓடிக்கிட்டு இருந்ததே கலாவதியாகி விட்டதா?//

   அதைப்பற்றி ஒன்றும் தெரியாது.அடியேனுக்கு வயது 6 தான் ஆகிறது.ஹிஹி!!!

   Delete
 78. சென்னை புக்பேரில் நமது பங்கேற்பது உறுதியாகிவிட்டாதா?தனி ஸ்டாலா.என்பதை தெரிவிக்கவும்

  ReplyDelete
 79. பின் வருபவை ''தாயம்'' புத்தகத்தில் 51 , 52 ம் பக்கத்தில் ''மஹாத்ரயாரா' அவர்களின் அறிவுரைகள்.

  இப்போது என் கேள்வி இதுதான்; '' உங்களுடைய வாடிக்கையாளர்களில் ஏன் நீங்கள் ஒருசிலரைத் தூக்கி எறியக்கூடாது?'' உங்களுக்கு உண்மையுடன், நன்றியுடன் இருக்கும் பெரிய வாடிக்கையாளர்களுக்குச் செலவிடும் நேரம் , சக்தி , மற்றும் முயற்சியை நீங்கள் பிரச்சனைகளை ஏற்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் செலவிடுகிறீர்கள் என்பது உண்மைதானே ? நீங்கள் என்ன செய்தாலும் சரி , ஒருசிலரை உங்களால் திருப்திப்படுத்தவே முடியாது. நீங்கள் எவ்வளவு சிறப்பான சேவையை அளித்தாலும், அப்படிப்பட்டவர்கள் உங்கள் பொருட்களையும் சேவையையும் மோசமாக விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள் ,

  நியாயம் எப்போதும் வாடிக்கையாளர்கள் பக்கம்தான் இருக்கும், சரிதானே ? முற்றிலும் தவறு .

  வாடிக்கையாளர்தான் ராஜா , அப்படிதானே ? எப்போதும் அப்படி அல்ல. அது யார் வாடிக்கையாளர் என்பதைப் பொறுத்தது.

  தேடல் வெறும் வாடிக்கையாளர்களைப் பெறுவதாக இருக்கக்கூடாது. சிறந்த வாடிக்கையாளர்களைப் பெறுவதாக இருக்கவேண்டும். நல்ல வாடிக்கையாளர்களின் குறைகளை மட்டுமே தீர்த்து வைப்பவராக நீங்கள் மாற வேண்டும். அவர்கள் உங்கள் வளர்ச்சியில் பங்குதாரராக ஆவார்கள். இது உண்மையிலேயே உனக்கும் வெற்றி - எனக்கும் வெற்றி ' என்ற நிலை.

  ''தாயம்'' புத்தகத்தில் 51 , 52 ம் பக்கத்தில் ''மஹாத்ரயாரா' அவர்களின் அறிவுரைகள்.

  ReplyDelete
 80. சேலம் 'டெக்ஸ்' விஜயராகவனிடமிருந்து...

  டியர் எடி சார்,

  இந்த மாதப் புத்தகங்கள் அனைத்துமே அட்டகாசம்; ஏனோ டயபாலிக் மட்டும் என்னைக் கவரவில்லை என்பதைத் தவிர! 2014ல் டயபாலிக் இல்லை என்பது எஸ்கேப் உணர்வைத் தருகின்றது. 2013ல் புத்தகங்கள் மூலமாக நீங்கள் நிகழ்த்தியருக்கும் சாகஸங்களுக்கு மாபெரும் நன்றிகள் சார். 2014ல் இன்னும் அதிக சரவெடிகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

  நண்பர்களுக்கு...
  ரொம்ப, ரொம்ப சந்தோஷமான விசயம் ஒன்று நண்பர்களே! "என்னுடைய சந்தா எண் : 1124. அப்படியானால் எடிட்டர் சொல்லியிருந்த மேஜிக் நம்பரான '1000'ஐ கடந்துவிட்டோம் தானே?!". இதுவரை சந்தா கட்டாத நண்பர்கள் செயலில் இறங்கினால் இதை '2000' க்கு கொண்டு செல்ல முடியுமே! எடி இன்னும் பல சாகஸங்கள் புரிய இந்த எண்ணிக்கை நிச்சயம் தூண்டுகோலாக இருக்குமில்லையா?

  # சேலம் 'டெக்ஸ்' விஜயராகவன்

  ReplyDelete
  Replies
  1. நண்பரே..

   என்னுடைய Subscription no-3015....

   அப்படியெனில்....

   Delete
  2. ஹலோ.. விஜய்.. ஹலோ.. என்னாச்சு..

   டாக்டர்...

   Delete
  3. @ Ramesh Kumar: //3015?//

   ஹா... ஹா... ஹா,,,

   Delete
 81. இந்திய அணியின் 300வது வீரர் முகுந்தன் என்று சொன்னால் 300 பேருமே தற்போது அணியில் உள்ளனர் என்று அர்த்தம் இல்லை

  ReplyDelete
  Replies
  1. Super-like.....! :-) :-)

   We should have a like button in blogs :-)

   Delete
 82. Replies
  1. //இந்திய அணியின் 300வது வீரர் முகுந்தன் என்று சொன்னால் 300 பேருமே தற்போது அணியில் உள்ளனர் என்று அர்த்தம் இல்லை//

   :)

   Delete
 83. டயபாலிக் = வலியது வாழும் (அ) தகவுடையது தப்பிப் பிழைக்கும் !


  எரிக்காமல் தேன் அடை கிடைக்காது..
  உதைக்காமல் பந்து அது எழும்பாது..
  வலியது தான் உயிர் பிழைக்கும்..
  இதுவரையில் இயற்கையின் விதி அது தான்.. #Billa2

  ReplyDelete
  Replies
  1. // வலியது தான் உயிர் பிழைக்கும்..
   இதுவரையில் இயற்கையின் விதி அது தான்..

   #Billa2 //

   இது சினிமா quote ஆக இருப்பதனால் கொஞ்சம் கீழ்க்கண்ட (சம்பந்தமில்லாத) இடைச்செருகல் அவசியம் என்று நினைக்கிறேன். தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்... :)

   பரிணாமம் சம்பந்தமான கோட்பாடுகள் "வலியது பிழைக்கும்" என்ற புரிதலுக்கு மேலே எவ்வளவோ புதிய கண்டுபிடிப்புகளுள் நுழைந்து விட்டது; மேலும் வெவ்வேறு விதங்களிலும் முன்னேறிக் கொண்டிருக்கின்றன (உண்மையில் அதுவொரு விதியே அல்ல, கோட்பாடு). சினிமாக் காரர்கள் அவர்களுடைய கதை/Theme-க்காக ஏதோ அங்கே இங்கே என்று எல்லோருக்கும் "மங்கலாக" புரிந்த தியரிகளை உருவி வசனங்களை சேர்ப்பது - அவசியமில்லாமலேயே நம்முடைய வாழ்க்கை சம்பந்தமான புரிதல்களை திசை திருப்பிவிடுகின்றன.

   Delete
  2. தகுதி உடையன தப்பி பிழைக்கும் ! இப்போது சூழ்நிலைக்கேற்ப மாறக்கூடிய தகுதி/திறமை உடையவர்களும் அந்த இடத்தில் உண்டு!

   Delete
 84. To editor,it's very hard to say that books are not reached to some part of srilanka,is there any possible way to subscribe the books,how can we get the details of direct subscription .note there is only indian bank branches are here.

  ReplyDelete
 85. Hi Jude. I got all the books today from my book seller @ jaffna. Are you from Jaffna or..?

  ReplyDelete
 86. Replies
  1. ஸ்டீல்.. என்ன சொல்ல வர்றீங்க..

   Delete
  2. அடுத்த மாதம் சிங்கம் 3 வருகிறது நண்பரே அதான் ....

   Delete
  3. @ ஸ்டீல்:

   கமான்சே..?!?!

   Delete
  4. ரமேஷ் அத சிறுத்தையே கேக்க கூடாது !
   முத்து அதுவும் ஒன்று !

   Delete
  5. மேலும் விளக்க இப்போது பல் விளக்கி கொண்டிருக்கும் எனது பட்சியை ஏப்பம் விட்ட எல்லாம் அறிந்த "ஈ " விஜய் அவர்களை துனைக்கழைக்கிறேன் !

   Delete
  6. @ ஸ்டீல்

   முன்னாடியெல்லாம் பெரிசு பெரிசா கமெணுட் போடுவீங்க; அப்பவும் புரியல...
   இப்பல்லாம் சின்னச் சின்னதாத்தான் கமெண்ட் போடுறீங்க; இப்பவும் புரியல...

   எப்பத்தான் புரியுமோ!

   Delete
  7. புரியிறது புரியாம இருக்காது !
   புரியாதது புரியாது !

   Delete
  8. // புரியிறது புரியாம இருக்காது !
   புரியாதது புரியாது ! //

   இதுவரை புரிந்ததும் புரியாமல் போகக்கடவது.. க்ர்ர்ர்...

   Delete
  9. சிங்கம் தனது ரெண்டாவது இனிங்க்ஸ்ச 2012 ஆரம்பிச்சி 3-வது வருஷத்துல (2014) வெற்றிகரமா நுழைய போறததான் நம்ம ஸ்டீல் சொல்லுறாரு :-) சொல்லப்போன 2014 நம்ப சிங்கத்தோட 3-வது பிறந்தநாள்!

   ஸ்டீல், சொல்லுறத சரியா சொல்லிட்டனா .. என்ன நான் சொல்லுறது புரியுதா .... :-)

   Delete
  10. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீங்க பரணி ! ரொம்ப நாள் கழிச்சு வந்தீங்க , போட்ட கம்மண்டயும் , தூக்கிட்டீங்க !
   anyways welcome நண்பரே !

   Delete
  11. //இதுவரை புரிந்ததும் புரியாமல் போகக்கடவது.. க்ர்ர்ர்...//
   " // க்ர்ர்ர்.. // ஆஹா இந்த சப்தத்திலே அனைத்துமே விளங்கிடுமே நண்பரே !

   Delete
  12. புரிதல் என்பதே நண்பர்களை தெரிதல்தானே ! என்ன ஆசிரியர் சார் நாஞ்ச்சொல்றது சரிதானே !

   Delete
  13. நான் என்ன எழுதுனேன்னு எனக்கே புரியல ,ஆனா எனக்கே புரிய வைத்து விட்டார் பரணி !
   நண்பேன்டா !

   Delete
 87. இந்த மாத காமிக்ஸ் புத்தங்கள் எனது பார்வையில் வாசகர் கடிதமாக ..."காமிக்ஸ் கச்சேரி"

  " barani with comics .blogspot.com ."

  ReplyDelete
 88. eppa sir varum atutha pathivu .. kakka vaikathinka ...

  ReplyDelete
 89. ‘வேங்கையின் சீற்றம்’ பற்றி சில விஷயங்கள்!

  அட்டையில் டைகருக்கு கீழேயுள்ள குதிரையோட்டி ஓவியம் கமான்சே part-3-ல் உள்ளது! (கமான்சே-வின் ஓவியத்திற்கு டைகர் அட்டையில் என்ன வேலை என்று தானே கேட்கிறீர்கள், எனக்கும் அதேதான்!) ஒருவேளை. கமான்சே part-3 ஏற்கனவே ‘வெறிநாய் வேட்டை’யாக வெளிவந்துவிட்டதால் இப்போது omit செய்வும் வாய்ப்புகள் அதிகமுள்ளதால் இருக்குமோ? சரி, விஷயத்திற்கு வருவோம்,

  கதாசிரியர் ஜீன் மைக்கேல் சார்லியர் ( ஓவியர் காலின் வில்சன்) மூலம் ஆரம்பிக்கப்பட்ட இத்தொடர் The Missouri Demons – 1985 (மரண நகரம் மிசௌரி) தொடர்ச்சியாக Terror Over Kansas -1987 (கான்சாஸ் கொடூரன்), The Train from the Hell – 1987 (‘இருளில் ஒரு இரும்புக் குதிரை’) தொடர்ந்து, 5 வருடங்கள் கழித்து வெளியான The Merciless Pursuit – 1992 (வேங்கையின் சீற்றம்) (1989-ம் ஆண்டு சார்லியர் மறைவிற்கு பின்) புதிய கதாசிரியரான Corteggiani + காலின் வில்சன் அதே ஓவியரின் படைப்பில் வெளிவந்தது.

  அதை தொடர்ந்து இருவரது கூட்டணியில் Three Men from Atlanda – 1993 and The Price of the Blood – 1994 வெளிவந்து இத்தொடரை நிறைவு செய்தன. (இவையிரண்டும் நம் ‘முத்துவில்’ இந்தாண்டு ‘அட்லாண்டாவில் ஆக்ரோஷம்’ (போமேன் இதிலேயும் டைகரிடம் சிக்காமல் தப்பிச் செல்வது கதையின் hi-light) மற்றும் ‘உதிரத்தின் விலை’ யாக வெளிவர இருப்பவை.).
  பிறகு கதாசிரியர் Corteggiani + Michel Blanc-Dumont ஓவியருடன் இணைந்து 1998-2012 வரை 11 ஆல்பங்கள்!. (இந்தத் தொடர் நம் முத்துவில் வரும் பட்சத்தில் இன்னும் டைகரை சில காலம் பஞ்சமில்லா இந்த கதைத் தொடர் மூலம் வலம் வரச் செய்ய வாய்ப்புள்ளது! டைகரை இதுவரையில் ஓர் முரட்டுத்தனமான, ஆக்ரோஷமான, கச்சாமுச்சாவென பாணி சித்திரங்களில் பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு இந்த ஓவியர் (Michael Blanc-Dumont)மூலம் நாம் முரட்டுத்தனமாக மான்களை வேட்டையாடும் புலி, இப்போது பால் குடிக்கும் பாலகனாக அவதாரம் எடுத்துப் போன்ற ஒரு சாப்ட் கார்னெர் சித்திரத்தில் வித்தியாசமான டைகரை காட்டியுள்ளார்.

  இவைத் தவிர Jean Giraud+ william vance கூட்டணியில் Order By washington – 1991 and Mission shermann- 1993 இரு தனி பதிப்புகள்.

  ReplyDelete
  Replies
  1. இவை விறுவிறுப்பாய் இருக்குமா , பழைய டைகர் கதைகள் போன்றே ?

   Delete
 90. புத்தகங்களை சரியான நேரத்திற்கு அனுப்பிவிடும் எடிட்டர், இப்போதெல்லாம் பதிவு போடுவதில் தாமதிக்கிறாரே....

  வாரம் ஒரு பதிவாவது தவறாமல் போட்டுவிடுவது என்ற கொள்கையை இந்தப் புத்தாண்டில் ஒரு தீர்மானமாக எடுத்துக் கொள்வாரக....
  அதற்கு சிவகாசி தெய்வங்கள் துணையிருப்பதாக...

  ReplyDelete
 91. @Vijayan Sir,

  Expecting your reply on this. I believe you can reply on this, when you can reply on other usual time pass comments.

  1. All the 4 comics were bent in the sides and received.(This is been occuring almost every month.). Can the books be packaged in a better way ?

  2. In Johny's special , almost 6 pages were repeated. The actual pages were missing. It is really very disappointing to see these sort of issues. In this year, lot of our comics had issues like Ink Overflow, blurred pages, etc. Will I get a replacement?

  This happens in the books, which we were expecting so much and finally we receive like this, which is disappointing. When these issues will be sorted out?

  ReplyDelete
  Replies
  1. I am glad more people are pointing this out. I have had the exact same problem with 90% of the 2013 issues.

   XIII had so many ink overflow and double printed blurred pages, I had to trash the issue and order an extra copy (which I still have not received). This month's Lucky Luke and Johnny issues had the same problem (Johnny was a total loss), but fortunately the captain tiger issue was OK.

   I had emailed the editor so many times with scans but never heard back from him. I guess this is becoming a seller's market where the buyer's concerns are no longer heard.

   At least in the old B&W days these problems were not there.

   Delete
  2. “A customer is the most important visitor on our premises. He is not dependent on us. We are dependent on him. He is not an interruption in our work. He is the purpose of it. He is not an outsider in our business. He is part of it. We are not doing him a favor by serving him. He is doing us a favor by giving us an opportunity to do so.” ― Mahatma Gandhi

   உள்நோக்கம் அற்ற நேர்மையான வாடிக்கையாளர் என்பவர்கள் - சிறிய வாடிக்கையாளரானாலும் பெரிய வாடிக்கையளரானாலும் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். நம் பழைய சந்தாதாரர்களின் குறைகளை முதலில் களைந்தெறியும் போதுதான் - புதிய சந்தாதாரர்களுக்கான குறைகளற்ற சிறந்த சேவைக்கான வழி திறக்கப்படுகிறது. எனவே ஆசிரியர் நம் தற்போதைய வாசகர்களின் இதுபோன்ற கமெண்ட்களுக்கு குறைந்தபட்சம் அவர்கள் திருப்தி பெரும் வகையில் பதிலை இங்கு கமெண்ட் மூலமாகவோ அல்லது தனியாக அவர்களுக்கு ஈமெயில் மூலமாகவோ பதில் அளிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்..!

   1. இதுபோன்ற குறைகள் உள்ள புத்தகங்களை, அனுப்பும் முன்பே பரிசோதித்து தவிர்த்து விட வேண்டும் ; அப்படியும் தவறி சென்று விட்டால் அதற்கு மாற்று பிரதி அளித்தல் ஒன்றே சிறந்த உதாரணமாக இருக்கும்..!

   2.இனிவரும் காலங்களில், புத்தகங்களை கூரியர் மூலம் அனுப்பிட - ஸ்வீட் பாக்ஸ் போன்று சிறிய அளவிலான சாதாரணமான அட்டை பெட்டிகளை உபயோகப்படுத்தலாம். அதன்மூலம் புத்தகங்கள் முனை மடிந்தோ ; கிழிந்தோ கிடைப்பதை முழுவதுமாக தவிர்க்கலாம். அதற்கான செலவையும் கணக்கில் கொள்ளுதல் அவசியம்..!

   3.இவை எல்லாவற்றையும் நடைமுறை படுத்த - புத்தகங்கள் தயாராகும் அன்றைய தினமே அனுப்பாமல் இரண்டு நாட்கள் கழித்து அனுப்பினால் அனைத்தும் நாம் விரும்பியபடியும் ; நம் வாசகர்கள் விருப்பபடியும் நடந்தேறும் என்பது என் கருத்து..!

   தமிழில் உள்ளவையெல்லாம் - என் சொந்த கருத்து மட்டுமே ;
   அனைத்து வாசகர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப, மாற்றத்துக்கு உட்பட்டது..!


   இவண் ;

   - ஒரு காமிக்ஸ் வாசகன் !

   Delete
  3. இம்மாத 4 புத்தக பார்சலை Receive பண்ணும்போதே புரிந்துவிட்டது; Package செய்யும் பணியாளர்களுக்கு ஒரு சபாஷ் நிச்சயம் கிடைத்திருக்கும் - Tight-ஆன சிறிய உறையில் 4 புத்தகங்களை திணிக்க இயன்ற சாதனைக்கு. Sorry to say this but கஷ்டப்பட்டு செய்யும் சாதனைகள் எடுபடாது - especially when it comes to entertainment / luxury based products, services.

   Delete
 92. Dear Editor,
  Yesterday i got the 4 books by Register post on France. Superbe

  ReplyDelete
 93. Where are you sir?
  Please write Some thing . We are waiting for that. We knew you have much work load . But please spende Some Time for us in your Bussy sheduel .

  ReplyDelete
 94. பதிவை எதிர்பார்த்து நண்பர்கள் அனைவரும்!
  இன்று இரவாவது பதிவிடுங்கள்,விஜயன் சார். (10TH DAY)

  ReplyDelete
 95. நண்பர்களே ஆசிரியரின் புதிய பதிவு தயார்  நாளை !

  ReplyDelete
  Replies
  1. கிர்ர்ர்....

   ஸ்டீல்,
   உங்களைப் பழைய இரும்புக் கடையில போடாம விடமாட்டேன்...
   என்னிக்காச்சும்!

   Delete