நண்பர்களே,
வணக்கம். 'புதுப்படப் பொட்டி' புறப்பட்டாச்சு சிவகாசியிலிருந்து ! புத்தாண்டின் முதல் நாளன்று உங்களில் பலரும் விடுமுறையில் இருந்திடக் கூடுமென்பதால் கூரியர்களைச் சரிவரப் பெற்றிடுவதில் சிரமம் தோன்றக் கூடுமே என்ற மகா சிந்தனை உதித்த மறுகணமே பைண்டிங் ஆபீஸ் முற்றுகையைத் தொடங்கி விட்டோம் ! நமது பைண்டிங் நண்பரும் சிறுகச் சிறுக வளர்ந்து இன்று அத்தியாவசியமான இயந்திரங்கள் பலவற்றையும் வாங்கி வைத்துள்ளார் என்பதால் - 'இந்தாங்க..புடியுங்க !' என 4 இதழ்களையும் படு ஸ்பீடாய் பட்டுவாடா செய்து விட்டார் !! பின்னென்ன - நேற்று இரவு முதலாய் கைபார்க்கும் படலமும், பேக்கிங் பணிகளும் துவங்கிட - இன்று உங்கள் கூரியர்கள் சகலமும் கிளம்பி விட்டன ! So ஆண்டின் இறுதி நாளிலேயே புத்தாண்டின் புது வரவுகளை உங்களிடம் ஒப்படைத்த ஒரு குட்டித் திருப்தி எங்களுக்கு !
And இதோ ஜனவரியின் இதழ்களுள் நீங்கள் பார்த்திரா மாயாவியாரின் மறுபதிப்பின் அட்டைப்பட first look ! இம்மாதத்து ராப்பர்களின் பெரும்பகுதி bright red -ல் அமைந்துள்ளதொரு தற்செயலான ஒற்றுமையே....! இந்த டிசைனும் நமது ஓவியர் + டிசைனர் கூட்டணியின் தயாரிப்பு ! 45 ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்பானிஷ் மொழியில் மாயாவியின் "பாம்புத் தீவு" வெளியான சமயம் இதுவே தான் அவர்களது டிசைன் ! அதை பின்னணியாக்கி நமது ஓவியரைக் கொண்டு சிற்சிறு மாற்றங்களோடு புதிதாய் வரைந்து - அப்புறம் கம்பியூட்டரில் வர்ண மெருகூட்டல்களைச் செய்துள்ளோம் ! கதையின் புராதன பாணியிலேயே ஓவியமும் இருப்பதை கவனிக்கத் தவற மாட்டீர்கள் என்பது தெரியும் தான் ; but அதே இரும்புக்கையை ஒவ்வொரு ராப்பரிலும் முன்னிலைப்படுத்துவதை விட - அந்த ஈல் மீன் + மாயாவி action தேவலை என நினைத்தேன் ! Anyways - ராப்பர் அழகாகத் தோன்றினால் நம் ஓவியருக்குப் பாராட்டுச் சொல்லுங்கள் ; சுமாராகத் தோன்றிடும் பட்சத்தில் - என்னை எவ்விடம் எட்டிப் பிடிக்க வேண்டுமென்பது தான் தெரியுமே ?!!
ஜனவரியின் நால்வர் அணியோடு - உங்கள் டி-ஷர்ட்களை எதிர்பார்த்திட வேண்டாமே- ப்ளீஸ் ?! சந்தாக்களின் புதுப்பித்தல்கள் தினமும் நடந்து வரும் நிலையில் இன்னுமொரு 2 வாரங்கள் காத்திருந்து விட்டு - அதன் பின்னே சைஸ்வாரியாக மொத்த ஆர்டர்களைப் பிரித்துக் கொண்டு திருப்பூர் பயணத்தைத் துவக்குவதாக உள்ளோம் ! So 'திருநெல்வேலி ஐட்டத்தை ரெடி பண்ணிட்டான்டா டோய் !!' என்ற பீதிக்கு நிச்சயமாய் அவசியமில்லை ! இம்மாதத்து 4 இதழ்களுமே அழகாய் வந்துள்ளதாய் எனக்குப்பட்டது ; அது தாய் காக்கையின் அனுமானம் மட்டுமேவா ? அல்லது நிஜமும் தானா ? என்பதை நாளைய தினம் சொல்லிவிடுமென்பதால் - எப்போதும் போலவே மூச்சை இழுத்துப் பிடித்துக் காத்திருப்போம் ! அப்புறம் இன்னொரு முக்கிய தகவல் : DTDC கூரியரில் இன்றைய பார்சல் புக்கிங் திகுடுமுகுடாய் பிசியாக இருந்தபடியால் தமிழ்நாட்டுக்குள் அனுப்பிடும் கூரியர்களை ST கூரியரிலேயே புக் பண்ணியுள்ளோம் ! So காலையில் வழக்கம் போலவே உங்கள் நகரத்து STC கதவுகளைப் பதம் பார்த்திடும் சுதந்திரம் உங்களது !
அப்புறம் சில வாரங்களுக்கு முன்பாக ஜூனியர் எடிட்டரின் முயற்சியினில் ஒரு புது track உருவாகி வருவதாய் நான் எழுதி இருந்தது நினைவிருக்கலாம் ! அது பற்றிய அறிவிப்பினைச் செய்திடவும் இந்தக் குட்டிப் பதிவை பயன்படுத்திக் கொள்கிறேனே...!
ஒவ்வொரு புத்தக விழாவின் போதும் - ஏராளமான பெற்றோர்கள் விறுவிறு வென்று நமது ஸ்டாலுக்குள் நுழைந்து - 'ENGLISH COMICS ?? You have them ?" என்று கேட்பதும் - நாம் 'ஊஹூம் ' என்று உதட்டைப் பிதிக்கியதும் அதே வேகத்தில் நடையைக் கட்டுவதும் வாடிக்கை ! போன வருடம் ஈரோட்டுப் புத்தக விழாவினில் மட்டும் கொஞ்சமாய் ஆங்கில லக்கி லூக் இதழ்களை வைத்திருந்ததோம் ; and அவற்றின் பெரும்பான்மை அங்கேயே விற்றும் விட்டன ! வரும் நாட்களின் போது - நாமே ஆங்கில இதழ்களைக் கொஞ்சமாய் இறக்குமதி செய்து விற்றாலென்னவென்று ஜூ.எ. வினவிய பொழுது நான் ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை தான் ! ஆனால் காமிக்ஸ் எனும் ஒரு விஷயம் நமது மார்கெட்டில் எந்தவொரு ரூபத்தில் வளர்ச்சி கண்டாலும் கூட நெடும் பயணத்தில் நிச்சயம் நமக்கும் நன்மை தரக் கூடியதே என்ற சிந்தனை மனதின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டு நின்றது ! தொடர்ந்த நாட்களில் நமது பிராங்கோ - பெல்ஜிய கதைத் தொடர்களின் டாப் இதழ்களை அட்டகாசமாய் ஆங்கிலத்தில் வெளியிட்டு வரும் CINEBOOKS -ன் நமது collection -ஐ ஜூ.எ. பார்த்த பொழுது - "இவற்றையே சிறிதளவில் ஆரம்பத்தில் வரவழைத்துப் பார்ப்போமே ?" என்று திரும்பவும் கேட்டிட - 'வேண்டாம்' எனத் தடை சொல்லத் தோன்றவில்லை எனக்கு ! ஒவ்வொரு பெங்களூரு COMIC CON-க்கும் அதன் அமைப்பாளர்கள் நம்மை அழைப்பதும் - தமிழ் இதழ்களை மாத்திரமே வைத்துக் கொண்டு அங்கு சென்று என்ன செய்வதென்ற தயக்கத்தில் நான் மறுத்து வருவதையும் சுட்டிக் காட்டி - 'ஆங்கில இதழ்களும் நம்மிடம் ஸ்டாக் இருந்தால் COMIC CON களிலும் பங்கேற்கலாமல்லவா ?' என்று ஜூ.எ. கொக்கியைப் போட்ட பொழுது பச்சைக் கொடியை ஆட்டினேன் ! So அப்படித் தொடங்கியது தான் CINEBOOKS இறக்குமதிப் படலம் ! மலையளவு ரகங்களைக் கைவசம் வைத்துள்ள CB நிறுவனத்திடம் கெஞ்சிக் கூத்தாடி ஒரு மித அளவு ஆர்டரினை முன்வைத்து - அதனை நம் கிட்டங்கிக்குக் கொணர்ந்து சேர்க்க பணம் தந்தது மாத்திரமே நான் ; செயலாக்கியது ஜூ.எ. !
இவற்றை நம் மாநிலத்திலும், நம் வாசக நண்பர்கள் வசிக்கும் அண்டை மாநிலத்திலும் மாத்திரமே விற்றிட முனைந்திடாது - சிறுகச் சிறுக இந்தியாவின் முழுமைக்கும் பரப்பிடுவதே ஜூ.எ.வின் நோக்கம் ! So நமது ஆன்லைன் ஸ்டோரில் இதனை லிஸ்ட் பண்ணிடாது - www.comics4all.in என்றதொரு புதிய தளத்தில் லிஸ்ட் செய்திடவுள்ளோம் ! சுங்கவரி செலுத்தி இதழ்களை வரவழைக்கும் தலைநோவிலேயே நிறைய நேரம் ஓடி விட்டதால் - தளத்தைப் பூரணமாய் வடிவமைக்கும் பணிகள் இன்னமும் முழுமை அடையாது உள்ளன ! அடுத்த ஒன்றிரண்டு நாட்களுக்குள் அந்த வேலைகள் World Mart செய்து முடித்து விடும் ! இப்போதே நாம் வாங்கியுள்ள இதழ்கள் சகலமும் லிஸ்ட் ஆகி விட்டன ; அவற்றை நீங்கள் வாங்கிடவும் முடியும் தான் ! ஆனால் தளம் இன்னமும் கொத்த வேலை பூர்த்தியாகா கட்டுமானம் போலக் காட்சியளிப்பது தான் சிக்கலே ! http://comics4all.in/2850-english-comics என்ற லின்க்கில் இதழ்களின் லிஸ்டிங்கைப் பார்த்திட முடியும் ! வாங்கிடவும் முடியும் !
இதழ்களின் விலைகளைப் பார்க்கும் பொழுது தலைசுற்றல் வந்திடுமென்பது நிச்சயம் ; சகஜமாய் ரூ.500 / 600 / 700 என்றெல்லாம் விலைகள் உள்ளன ! ஆனால் ஐரோப்பிய விலைகள் இவையே எனும் பொழுது நாம் செய்திடக் கூடியது அதிகமிருக்கவில்லை ! இந்தியாவின் எல்லா இடங்களுக்கும் free shipping செய்திடவுள்ளோம் என்பது தான் லேசான ஆறுதல் ! நமது சந்தாதார நண்பர்களுக்கு 10% டிஸ்கவுண்ட் தந்திட உத்தேசித்துள்ளோம் ! அந்த சலுகையினை தளத்திலேயே implement செய்திட வழியில்லை என்பதால் உங்கள் ஆர்டர்களை மின்னஞ்சல் மூலம் நமக்கு அனுப்பி விட்டு - 10% கழித்து தொகையினை அனுப்பிடலாம் ! வரும் நாட்களில் தளத்தினை சற்றே செதுக்கிட அவகாசம் எடுத்துக் கொள்கிறோமே..!
இந்த விலையின் இதழ்களை நமது புத்தக விழாக்களிலும், ஆன்லைனிலும் விற்றுத் தீர்ப்பதென்பது நிச்சயமாய் விளையாட்டுக் காரியமே அல்ல என்பதை என்னை விடவும் ஜூ.எ. தெளிவாகவே உணர்ந்துள்ளார் ; And ஏற்கனவே இன்னும் சில ஆன்லைன் தளங்கள் CB-ன் இதழ்களை விற்பனை செய்து வருவதையும் நாம் அறிந்திடாதில்லை தான் ! But பத்தோடு பதினொன்றாய் காமிக்ஸ்களையும் விற்பனை செய்திடும் தளங்களுக்கும் - காமிக்ஸ் மட்டுமே மூச்சாய் செயல்படும் நம் போன்றோருக்கும் ஒரு குட்டியூண்டு வேறுபாடாவது இருக்குமென்ற நம்பிக்கை மனதின் ஒரு ஓரத்தில் புதைந்துள்ளது ! எங்கே சுற்றினாலும் நாம் திரும்புவது காமிக்ஸ் எனும் தாயின் மடிக்கே எனும் பொழுது - வெற்றியோ - புஸ்வாணமோ - அதனையும் ஒரு சந்தோஷப்பாடமாகவே எடுத்துக் கொள்வோம் ! சின்னதாய் எடுத்து வைக்கும் இந்த அடி - ஏதோ ஒரு தூரத்து நாளில் காமிக்ஸ் இதழ்களை மட்டுமே விற்பனை செய்திடும் மேலை நாடுகளின் COMICS STORES-கள் போன்றதொரு வாய்ப்புக்குக் கதவு திறந்து விடும் சாவியாக அமைந்தால் - we would be delighted !! புதியதொரு பாதையில் - சின்னதாயொரு பயண முயற்சியினை மேற்கொண்டுள்ளோம் - உங்களின் வாழ்த்துக்களுக்கும், ஆதரவுக்கும் ஆவலாய்க் காத்திருப்போம் !
அப்புறம் 52 வாரங்கள் கொண்டதொரு ஆண்டினில் 69 பதிவுகளைப் போட்டு கதிகலங்கச் செய்திருக்கிறேன் என்பதை Posts count சொல்கிறது !! எந்தவொரு ஆண்டிலும் இல்லா இந்த வேகத்தை இப்போது நிதானமாய் பரிசீலித்தால் "ஞே" என்ற குழப்பத் தோரணை தான் மிஞ்சுகிறது ! கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகிப் போனதொரு உணர்வு தலைதூக்குவது காரணமில்லாதில்லை என்பதும் புரிகிறது ! எனது ஆர்வக் கோளாறு - உங்கள் ஆர்வங்களில் கோளாறை எற்படுத்திடக் கூடாதென்பது தான் முக்கியமென்பதால் - 2015-ன் இந்த ரெக்கார்டை காலத்துக்கும் நிலைத்து நிற்குமொரு எண்ணிக்கையாய் பத்திரமாகப் பேணிக் காத்திடுவோமே !!
புது இதழ்கள் கைக்குக் கிடைத்தான பின்னே, உங்களின் முதல் அபிப்பிராயங்களைப் பற்றியும், கதைகளைத் துரிதமாய்ப் படிக்க முடிந்திடும் பட்சங்களில் - அவற்றின் விமர்சனங்களையும் ஆவலாய் எதிர்நோக்கியிருப்போம் ! So please do write folks !! மீண்டும் புத்தாண்டில் சந்திப்போம் ! அமர்க்களமான, அட்டகாசமான, சந்தோஷ ஆண்டாய் 2016 நம் எல்லோருக்கும் அமைய வேண்டிக் கொள்வோமே..! Bye for now !! See you around soon !
P.S. : ஜனவரி இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங் இங்கே : http://lioncomics.in/monthly-packs-december-2015/19863-january-2016-pack.html
அப்புறம் 52 வாரங்கள் கொண்டதொரு ஆண்டினில் 69 பதிவுகளைப் போட்டு கதிகலங்கச் செய்திருக்கிறேன் என்பதை Posts count சொல்கிறது !! எந்தவொரு ஆண்டிலும் இல்லா இந்த வேகத்தை இப்போது நிதானமாய் பரிசீலித்தால் "ஞே" என்ற குழப்பத் தோரணை தான் மிஞ்சுகிறது ! கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகிப் போனதொரு உணர்வு தலைதூக்குவது காரணமில்லாதில்லை என்பதும் புரிகிறது ! எனது ஆர்வக் கோளாறு - உங்கள் ஆர்வங்களில் கோளாறை எற்படுத்திடக் கூடாதென்பது தான் முக்கியமென்பதால் - 2015-ன் இந்த ரெக்கார்டை காலத்துக்கும் நிலைத்து நிற்குமொரு எண்ணிக்கையாய் பத்திரமாகப் பேணிக் காத்திடுவோமே !!
புது இதழ்கள் கைக்குக் கிடைத்தான பின்னே, உங்களின் முதல் அபிப்பிராயங்களைப் பற்றியும், கதைகளைத் துரிதமாய்ப் படிக்க முடிந்திடும் பட்சங்களில் - அவற்றின் விமர்சனங்களையும் ஆவலாய் எதிர்நோக்கியிருப்போம் ! So please do write folks !! மீண்டும் புத்தாண்டில் சந்திப்போம் ! அமர்க்களமான, அட்டகாசமான, சந்தோஷ ஆண்டாய் 2016 நம் எல்லோருக்கும் அமைய வேண்டிக் கொள்வோமே..! Bye for now !! See you around soon !
P.S. : ஜனவரி இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங் இங்கே : http://lioncomics.in/monthly-packs-december-2015/19863-january-2016-pack.html
Once again first....
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் சார்......
Deleteஅட .....மீண்டும் முதல் இடத்தை இரண்டாவது வாரமாக தக்க வைத்தமைக்கு வாழ்த்துக்கள்
Deleteவாழ்த்துக்கள் செல்வம் சார்...
Deleteஆங்கில இதழ்கள்.... அட்டகாசம்...!!!!!
ReplyDeleteலிஸ்ட்டை விரைவில் பார்க்கிறேன்...
சூப்பர்......
selvam abirami : இரவுக்கழுகுகளுக்கு ஒருபோதும் பஞ்சமிராது போலும் சார் !
DeleteDear Editor,
ReplyDeleteWas just wondering this evening - 'what comics to order for Jan and where to place the order?' :-)
Ordering right away :-) Who will miss a 10% discount and free delivery :-) :-)
Raghavan : அட...சுடச் சுடவொரு ஆர்டரா ? Thank you !
Deleteபார்சலே எங்களை இன்று மாலை தான் எட்டிடும் ; கிடைக்கப் பெற்ற உடனே கூரியரைப் போட்டுத் தாக்கி விடுவோம் !
சூப்பர்
ReplyDeleteWow!!!
ReplyDelete////// டியர் எடிட்டர் ///////
ReplyDeleteஆங்கில இதழ்கள் நமது லயன் முத்துவில் வந்த கதைகளா? இல்லை புதியவையா?
Mugunthan kumar : இரண்டுமே கலந்துள்ளன !!
Deleteஆங்கில இதழ்களின் விலை பட்டியலை பார்த்தவர்கள் இனிமேல் நமது இதழ் விலை அதிகம் என்று கூறமாட்டார்கள்.
ReplyDelete////// டியர் எடிட்டர் ///////
ReplyDeleteலேடி எஸ் படங்கள் மிரட்டலாக உள்ளது. தமிழில் முயற்சிக்கலாமே?
Mugunthan kumar : ஆங்கிலத்தின் சில பாகங்களைப் படித்துப் பாருங்கள் சார் ; கதையில் வான் ஹாம்மேவின் மாமூல் fire சற்றே மிஸ்ஸிங் என்பது எனது தனிப்பட்ட கருத்து !
Deleteலேடி எஸ் தமிழ் பேசாமல் போனதின் காரணம் இதுதானா....? ஓ.கே.சார்..
Deleteவிறுவிறுப்பு குறைச்சலான கதைகளை தவிர்ப்பது நல்லதுதான்...?
கோட் நேம் மின்னல் வெளிவராமல் போனதன் காரணமும் இதுதானா...?
அடடே! ஜூ.எடிட்டரின் ஆங்கிலப் புத்தக ஏற்பாட்டுக்கு வாழ்த்துகள்! ஏற்பாடுகள் அனைத்தையும் விக்ரமே கவனித்துக் கொண்டதும் ஆச்சயம்+மகிழ்ச்சியை அளிக்கிறது!
ReplyDeleteஆங்கில இதழ்கள் நமது ஸ்டால்களில் காணக்கிடைப்பதும், அவற்றோடு தரத்தில் போட்டிபோட்டுக்கொண்டு; ஆனால் படுபாதாள விலையில் நம் தமிழ் இதழ்கள் கிடைக்கவிருப்பது பல மடங்கு பலனளிக்கும் என்றே நினைக்கத் தோன்றுகிறது! ஆங்கில இதழ்களின் விற்பனை எப்படி இருக்குமோ இல்லையோ; அவற்றோடு ஒப்பிட்டாவது நமது தமிழ் இதழ்களின் விற்பனை எண்ணிக்கை ஏறுமுகம் காணப்போவது உறுதியிலும் உறுதி!
புலவிருக்கும் ஆங்கிலப் புத்தாண்டை இப்படி 'ஆங்கிலப் புத்தக ஆண்டாக' மாற்றிவிட்டீர்களே எடிட்டர்ஸ்!! :)
Erode VIJAY : //ஆங்கில இதழ்களின் விற்பனை எப்படி இருக்குமோ இல்லையோ; அவற்றோடு ஒப்பிட்டாவது நமது தமிழ் இதழ்களின் விற்பனை எண்ணிக்கை ஏறுமுகம் காணப்போவது உறுதியிலும் உறுதி!//
Deleteஇதுவும் கூட ஜூ.எ. என் சம்மதத்தைப் பெற முன்வைத்த வாதங்களுள் ஒன்று !
Btw - ஜூ.எ கூட ஒரு மியாவி காதலர் !!
நண்பர்களுக்கும்
ReplyDeleteஎடிட்டர்களுக்கும்
லயன் பணியாள தோழர்/தோழிகளுக்கும்
மற்றும் நம் உறவினர்களுக்கும்
ஈனா வினா'வின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! :)
12வது. ஹய்யா
ReplyDeleteநண்பர்களுக்கும், எடிட்டர்களுக்கும், மற்றும் லயன் பணியாள தோழர்/தோழிகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!
ReplyDeleteஎடிட்டர் சார்,
ReplyDeleteபுத்தாண்டில் புதிய பயணத்தை துவக்கும் உங்கள் முயற்சி வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்.
நேற்று தான் "தீபாவளி வித் டெக்ஸ் " படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு கதைகளுமே அட்டகாசமாக இருந்தன. ஆனாலும் எமனின் வாசலில் கதையின் சித்திரங்களும், கதை சொன்ன விதமும் அருமையாக இருந்தது.
டைனோசரின் பாதையில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை என்றாலும், இரண்டு கிளைக் கதைகள் ஒன்றோடு ஒன்று கடைசி வரை சேரவே இல்லை. இரண்டு தனி எபிசோடுகளாக முடிந்தது ஏமாற்றமளித்தது.
கடைசியாக ஒன்று, வாராதோ ஒரு விடியலே கதையில், எமனின் வாசலில் என்று வேறொரு கதையை விளம்பர படுத்தியிருந்தீர்கள். அது எந்தக் கதை? எப்போது வரும்?
Radja : கதைகள் அதுவே தான் நண்பரே...பெயர்கள் மாத்திரம் இறுதியாக - கதைக்கு ஏற்றார் போல் மாற்றப்பட்டன !
Deleteபாம்பு தீவின் அட்டை படம் சூப்பர். ஓவியருக்கு வாழ்த்துக்கள். ஜூனியர் எடிட்டரின் ஆங்கில புத்தக விற்பனை ஏற்பாடு சூப்பர். வாழ்த்துக்கள் ஸார். நிச்சயம் வெற்றி பெறும்.
ReplyDeleteஎடிட்டருக்கும், சீனியர் எடிட்டருக்கும், ஜூனியர் எடிட்டருக்கும் உங்கள்குடும்பத்தினருக்கும், அலுவலக பணியாளருக்கும் , அவர்தம் குடும்பங்களிற்கும் வரும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக.
Thiruchelvam Prapananth : ஜூ.எ.சார்பில் நன்றிகள் சார் !
Delete@ FRIENDS : நண்பர்கள் அனைவருக்கும்...அவர்தம் குடும்பங்களுக்கும் நமது உளமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் !
ReplyDeleteபுதிய வருடத்தில் புதுக் களையோடு நம் காமிக்ஸ் காதல் தொடர்ந்திட உங்களின் ஒவ்வொருவரது பங்களிப்பையும் ஆவலாய் எதிர்பார்த்திருப்போம் !!
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...!
ReplyDeleteஎடிட்டர்., சீனியர் எடிட்டர்., ஜீனியர் எடிட்டர் , லயன் முத்து குடும்ப அலுவலர்கள் மற்றும் அனைத்து வாசக நண்பர்களுக்கும் ஆர்டினின் அன்பு கலந்த புத்தாண்டு வணக்கங்கள்!!!
ReplyDeleteHappy new year to all
ReplyDeleteகாலை வணக்கம்
ReplyDeleteவிஜயன் சார் மற்றும் நண்பர்களே
புத்தாண்டு அனைவருக்கும் இனிதாக அமைய
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் /|\
.
Sir உங்களின் பதிவே வாசிக்கும் ஆர்வத்தை அதிகமாக்குகிறது...overdose feel வேண்டாமே.
ReplyDeletesagunthala sagunthala : நன்றிகள் பல ! எனக்கும் கூட உங்கள் ஒவ்வொருவரின் எழுத்துக்களையும் ரசித்திடும் ஆர்வமுண்டு ! மௌன மொழியினை மாதம் ஒரு முறையேனும் மறந்து விட்டு நம் தாய்மொழிக்குத் தாவினால் உற்சாகமாய் இருக்குமன்றோ ?
Delete//overdose feel வேண்டாமே.//
Delete+1
எடிட்டர்., சீனியர் எடிட்டர்., ஜீனியர் எடிட்டர் , லயன் முத்து குடும்ப அலுவலர்கள் மற்றும் அனைத்து வாசக நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteநமது இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 நிலைக்கு வந்தால் ஸ்பெசல் இதழ் வெளியிடுவதாக நீங்கள் சொன்னதாக ஞாபகம். இன்று நமது இந்திய அணி நம்பர் 1.(டெஸ்டில் மட்டுமே) எப்போ சார் ஸ்பெசல்????
ReplyDeleteஇந்தப் புத்தாண்டை ஆவலோடு எதிர் பார்க்கும் சிலரில் நானும் ஒருவன். அதுவும் புது சந்தா வாசகன் என்பதால்.மிகவும் எதிர் பார்ப்போடு. அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteபுத்தகங்கள் வந்துவிட்டது..
ReplyDelete:-)
DeleteWish you all very happy new year 2016,,,, yet to get the Jan issues,,,,
ReplyDeleteஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு காலை வணக்கம்..
ReplyDeleteMr.Editor,
ReplyDeleteMany thanks for advancing the post and dispatch of the books. Want to collect and read the books on New Year day.
Best wishes for your attempts with English tittles.
விஜயன் சார் மற்றும் நண்பர்களே ....
ReplyDeleteகாலை வணக்கம் _/\_
புத்தாண்டு அனைவருக்கும் இனிதாக அமைய ... எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் ... _/\_
முதல் முறையாக திருப்பூரில் எனது புத்தகத்தை வாங்க போகிறேன் :)
திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்
Present Sir
ReplyDeleteவணக்கம் சார்...
ReplyDeleteவணக்கம் நட்பூஸ்...
2016ன் முதல் மாத இதழ்கள்,2015ன் இறுதி நாளில்.... சூப்பர் சார்...
சாதித்து காட்டிய உங்கள் அணியினருக்கு நன்றிகள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்... ஶ்ரீ
டுமீல்..டுமூல்..கும்..கும்.. சத்..சத்..(நட்பூஸ்க்கு டெக்ஸின் புத்தாண்டு வாழ்த்துக்கள்)...
தங்களுக்கும் ..தங்கள் குடும்பத்தினருக்கும் ..தங்கள் அலுவலக பணியாளர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் ..முன்கூட்டியே பொங்கல் திருநாள் வாழ்த்துக்களும் ....
ReplyDeleteஇந்த வருட பதிவுகள் ஓவர் டோஸா ...###
ReplyDeleteஇந்த எண்ணம் தங்களுக்கு வந்தது தான் சார் ஓவர் டோஸாக தெரிகிறது .
வழக்கம் போலவே தொடர்ந்தால் நலம் ....
ஆங்கில புத்தாண்டு முதல் ஆங்கில காமிக்ஸ் முயற்சிக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கும் நேரத்தில் அதன் வெற்றியால் தமிழ் காமிக்ஸ் இதழ்களை பின்னிற்கு அனுப்பாமல் இருக்க வேண்டுகிறேன் ...
ReplyDeleteஅதே அதே
DeleteParanitharan K : தலீவரே...தோசை மாவுப் பாக்கெட்டை வீட்டுக்கு வாங்கி வந்து , வெங்காயம் போட்டு, சட்னி அரைத்து ; சாம்பார் செய்து ஊத்தப்பமாய் பரிமாறி வருகிறோம் தற்போது ! அந்த தோசையே ரெடிமேடாய் ; உயர்விலையில் ஆங்கில இதழ்களின் ரூபத்தில் கிடைத்துள்ள பொது அதனைப் பரிமாறுவது மட்டுமே நமது வேலையாக இருந்திடப் போகிறது ! அந்த ரக தோசை விரும்புவோர் அதனை வாங்கிடப் போகிறார்கள் ; நாம் நமக்குத் தெரிந்த சட்னிகளையும், சாம்பார்களையும் எப்போதும் போலக் கிளறிக் கொண்டிருக்கப் போகிறோம் ! So கவலை கொள்வானேன் ?
Deleteவயிற்றில் பாலை ச்சே தோசையை வார்த்தீர்கள் சார்....
Deleteநல்லா சத்தமா சொல்லுங்க சார், மாயாவியோ கொட்டாவியோ ,அந்த ஈரோ ரசிகர்கள் காதில் விழும்படி சொல்லுங்க சார்..
ஆசிரியர் அவர்களுக்கும் நமது வலைதள நண்பர்கள் அனைவருக்கும்
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஆசிரியர் அவர்களுக்கும் நமது வலைதள நண்பர்கள் அனைவருக்கும்
ReplyDeleteஇனிய
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு காலை வணக்கம்..
ReplyDeleteஏ..டன்டனக்கா..ஏ..டன்டனக்கா..
ReplyDeleteஏ..டனக்குனக்கா..தங்கம்..தங்கம்...
பழுப்பு தங்கம் கிடைச்சிடிச்சோய்...இங்கே'கிளிக்'
க்ர்ர்....டீ இன்னும் வர்ல சாப்...
Deleteஹீ..ஹீ.. ;)
Deleteஎனிக்கி கூரியர் கிட்டியான்பாடில்லா.!!!
Deleteசேட்டா..கொரியர் வண்டி லேட் சேட்டா...
Deleteஇன்னும் அரைமணியில் கிட்டும், இது நம்பூதிரி வாக்கு...ஹீ..ஹீ...
பாம்பு தீவு அட்டைபடம் முன் வந்த இ.மாயாவியின்கொலைக்கார குள்ளநரியை நிணைவுட்டினாலும், அந்த இரும்புக்கை-அதன் உள்ளங்கையில் ஸ்பிக்கர் வரைந்த விதம்-அட்டகாசம் போங்கள்..!
Delete'தல' படம் போட்ட இயர் காலண்டரும்,டெக்ஸ் தனி சந்தாவின் முதல் புக்லயும் ஒரு வித்தியாசம் தெரியுதே..ஏதோவொரு ஸ்பெஷல் தெரியுதே..கண்ணுக்கு ஒரு பளிச் தெரியுதேன்னு பாத்தா...
Deleteஅட...அந்த லோகோ...அது இத்தாலி போனோல்லி TEX லோகோ..! அந்த உலகபுகழ்பெற்ற அந்த லோகோ ஸும்மா அள்ளுது..! அப்படியே தரத்துல செம ரேன்ஞ் போங்க..!
mayavi.siva : அட்டைப்படம்..லோகோ...இத்யாதிகளைத் தாண்டி ஏதேனும் இதழ்களுக்குள் நுழைய நேரம் கிட்டியதா சார் ?
Delete@ திரு விஜயன்
Deleteநல்லா கேட்டிங்க போங்க..அவுக்...காலையில இருந்து புக்ஸ் மடியிலேயே இருக்கு, ஆனா அட்டையை தாண்டி உள்ள கதை பத்தி குறைஞ்சது ரெண்டு மூனு நாள் எதுவும் பேசப்படாதுன்னு ஒரு அக்ரிமென்ட் இருக்கமே..??? அதை இந்த புத்தாண்டில உடைச்சிடலாமா ஸார்..!!!
சொல்லுங்க ஸார்..சொல்லுங்க..!
நமக்கும் புத்தகங்கள் வந்தாச்சேய் :))
ReplyDelete.
நண்பர்களுக்கு மாடஸ்டி பிளைசி சார்பாக புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்
ReplyDeleteவந்துட்டதேய்....பார்சல்...
ReplyDeleteவழக்கமாக டெலிவரி தரும் கொரியர் பாய் டாட்டா காட்டி சென்ற பிறகு....1மணி கழித்து வேறு நபர் வந்தார் பார்சலுடன்...
வழக்கம் போலவே அடிபடாத அருமையான பேக்கிங்..
ReplyDeleteடெக்ஸ் அட்டடப்படம் நேரில் இன்னும் அசத்தல் சார்...
செல்டன் அட்டையும் டாப்தான், மற்ற2ம்....,ம் ஓகே ..
வெய்ன் உள்பக்கங்களில் ஜோர்,மந்திரி யும் தான் சார்...
டெக்ஸ் வித்தியாசமான ஓவிய பாணி,கவரும் விதத்தில் உள்ளது,பெரிய நிம்மதி சார்...
சேலம் Tex விஜயராகவன் : //டெக்ஸ் வித்தியாசமான ஓவிய பாணி,கவரும் விதத்தில் உள்ளது,பெரிய நிம்மதி//
Deleteசொன்னேன் அல்லவா ? :-)
ஹி..ஹி...சொன்னீங்க சார், ஆனால் இந்த கண்ணு 2ம் நேரில் பார்த்தால் தானே நம்புதுகள்...
Deleteநமக்கும் புத்தகங்கள் வந்தாச்சேய் :))
ReplyDeleteஆங்கில காமிக்ஸ் பற்றி விளம்பரங்கள் சூப்பர்....
ReplyDeleteஅடுத்த மாதம் கருப்பு வெள்ளை ஆதிக்கம்,மீண்டும் 20ஆண்டு பின்னோக்கி பார்க்க வாய்ப்பு...
நீஈஈஈஈஈஈண்ட காலம் எதிர்பார்த்த திகில் நகரில் டெக்ஸ் வருகிறது...உய் உய்...
அட MVசார்,ஒரே மாடஸ்தியும் அடுத்த மாதம் வருது போல...
விக்ரமின் www.comics4all.in முயற்சி வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteஅனைவருக்கும், இந்த புத்தாண்டு பல புதிய அனுபவத்தையும் சந்தோசத்தையும் அள்ளி வழங்கிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
நமது அலுவலக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
விஜயன் சார்,
ReplyDeleteஆங்கில தோர்கல் வாங்கலாம் என்று பார்த்தால் அதன் விலை தலையை சுற்ற வைத்துவிட்டது. முடியும் போது வாங்கிக்கொள்ள போகிறேன்!
இனி இந்த ஆங்கில இதழ்களை நாங்கள் படித்து விட்டு உங்களுக்கு தலைவலி அதிகம் கொடுப்போம், இப்பவே கோடாரி தைலம் இரண்டு பெட்டி நீங்கள் ஆர்டர் செய்வது நலம் :-)
Parani from Bangalore : கோடரியையே அவ்வப்போது அவுக்..அவுக்..செய்தெல்லாம் பழகியாச்சு..! தைலமெல்லாம் தேவையா என்ன நமக்கு ?
Delete
ReplyDeleteஅன்புள்ள எடிட்டருக்கும்,அவரது குடும்பத்தார்க்கும்,மற்றும் நமது காமிக்ஸ் நன்பர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
+1 million
Delete70th
ReplyDelete@ FRIENDS : ஜனவரி இதழ்களின் ஆன்லைன் லிஸ்டிங் இங்கே : http://lioncomics.in/monthly-packs-december-2015/19863-january-2016-pack.html
ReplyDeleteலோன் போட்டுதான் ஆங்கில காமிக்ஸ் வாங்கணும் போல இருக்கு. ஒழுங்கா சந்தா கட்டுங்கப்பு இல்லேனா ஆங்கில காமிக்ஸ் படிக்கிற மாதிரி ஆகிரப் போகுது.
ReplyDeleteA+B+C சந்தா கட்டியாச்சு. நான் கட்டுவதற்கு முன்னமே நீங்க கட்டிடீங்கன்னு ஒரு மெயில் நம்ம லயன் ஆபிசில் இருந்து. அட அடடே நமக்கும் சேர்த்து யாரோ ஒரு நல்லவன் கட்டீடாண்டொய்ன்னு நெனச்சு விசாரித்தால், ராஜ் முத்து ன்னு பேர்லதான் வந்திருக்கு சார் என்றார்கள். நான் கட்டலையே வேற ராஜ் முத்து வா இருக்கபோகுதுன்னு தப்பு பண்ணிடீங்கலேம்மான்னு சொல்லி A+B+C சந்தா கட்டினேன்.
யாருப்பா அந்த ராஜ் முத்து ?
Raj Muthu Kumar S : அட..லோன் போட்டு நாங்கள் வாங்கலியா சார் ? அதே ஜோதியில் நீங்களும் ஐக்கியம் ஆகிடலாமே !! குளு குளு AC ; அழகான ஆபீஸ் என்று இன்றைய பேங்குகள் கலக்குகின்றனவே..!
Deleteசார் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் .......
ReplyDeleteமாயாவி அட்டை தூள்
நான்கு அட்டைகள்ம் அருமை ....
ஆங்கிலத்தில் வந்த லேடி s ....the mystry of the great pyrates
கட்டாயம் தமிழ்ல போட்டே ஆகணும் ....z சந்தாவில் ....
எனக்கு இன்னும் வரலையே சார்
ReplyDeleteSir
ReplyDeleteஅப்படியே டெக்ஸ் ன் வெளிநாட்டு இதழ்களும் விற்பனையில் உண்டா
Tex Sampath : Nopes....ஆங்கிலத்தில் அல்லாத பிற மொழிப் பிரதிகளால் நமக்கென பிரயோஜனம் இருக்க முடியும் ?
Deleteஆங்கிலத்தில் வந்த டெக்ஸ் கதைகளை சொன்னேன் சார்
Deleteஆங்கிலத்தில் வந்த டெக்ஸ் கதைகளை சொன்னேன் சார்
Deleteஎங்கும் வெற்றி..எதிலும் வெற்றி ..நம்பிக்கையோடு புத்தாண்டைத் தொடங்குவோம்
ReplyDeleteஉழைக்கத்துடிக்கும் மனிதனுக்கு காலம் ஊக்கம் கொடுக்கிறது
உறங்கத்தவிக்கும் மனிதனுக்கு படுக்கை விரித்து கொடுக்கிறது
என்ன நினைத்து முனைகின்றோம்
அந்த முடிவை அடைகின்றோம்
நல்ல விதைகளைத் தூவிடு வோம்
நாளும் வளர உரமிடுவோம்
எண்ண ங்களாலே நீர் பாய்ச்சி இனிய பயனை அறுத்தெடுப்போம்
அன்பு நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
VETTUKILI VEERAIYAN : உத்வேகம் தரும் வரிகள்...!
Deleteவிஜயன் சார், தோர்கல் ஆங்கில புத்தகத்தில் பாகம் 3 வரை நாம் தமிழில் வெளி இட்டு இருக்கிறோம் என நினைக்கிறன்? சரியா தவறா?
ReplyDeleteஇந்த ஆங்கில புத்தக விளம்பரத்தில் எத்தனை பக்கம்கள் என்பதையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.
Parani from Bangalore : தோர்கலில் 6 கதைகளை நாம் கடந்துள்ளோம் ! அதாவது 6 x 44 பக்க ஆல்பங்களை..!
Deleteமாடஸ்டியின் ஆங்கில வண்ண இதழ்கள் கிடைக்குமா?
ReplyDeleteravanan iniyan : ஊஹூம் ! இப்போதைக்கு சான்ஸ் இல்லை சார் !
DeleteAdvance Happy New year Editor Sir & Friends!
ReplyDeleteDTDC courier இன்று காலை இம்மாதத்திற்கான புத்தகங்களை டெலிவரி செய்து விட்டனர் ! மிக்க நன்றி! 2016ன் துவக்கத்தை நம் காமிக்ஸோடு ஆரம்பிக்க உள்ளேன்!
ReplyDeleteCinebooks விற்பனை நல்ல முயற்சி!
ReplyDeleteMr.Editor,
ReplyDeleteThe illustration style of the Tex wilier tittle is very much similar to the illustrations on Corrigon's adventures like Dr. seven. Am I correct? I do not know the artist's name !
Loknath : Spot on !!
Deleteபுதிய வருட துவக்கத்தின் குதூகலம் ஆரம்பமாகி விட்டது! இது அற்புதமாய் வந்திருக்கிறது! புத்தகங்கள் நகர்ந்து,அங்கும் இங்கும் அலண்டு போகாதிருக்க,பாதுகாப்பு கவசமாய் உருளை வடிவ அட்டை!! இந்த அர்ப்பணிப்பு பிரம்மிக்க வைக்கிறது! வேறு எந்த பதிப்பகங்களும் இவ்வளவு தூரம் மெனக்கெட்டதில்லை என நினைக்கிறேன்.நன்றிகளும்,புத்தாண்டு வாழ்த்துக்களும் ஒருங்கே!
ReplyDeleteகுணா அதற்கு இந்த மந்திரம் சொல்கிறோம்....
Deleteசந்தா கட்டுங்க, சந்தோஷமா இருங்க..!
நம்பி கட்டுவோம்!நலமாய் இருப்போம்! புத்தாண்டு வாழ்த்துக்கள் மாயாஜி!
DeleteGuna Karur : ஆரம்பத்தில் பிரவுன் கவரில் பொட்டலம் கட்டி பிரதிகளை அனுப்பியவர்கள் தான் நாம் !! அப்படியும், இப்படியுமாய் நிறைய பாடங்கள் படித்துத் தான் பேக்கிங்கில் இன்றைக்கு ஒரு விதத் தரத்தினை எட்டிப் பிடித்துள்ளோம் !!
Deleteஇளவரசியார் ச்ச்சும்மா அள்ளுகிறாள் போங்கள்!அடுத்த மாத ஏக்கத்திற்கான மணித்துளிகள் எண்ணத் துவங்கப்பட்டு விட்டன...கடந்து போன வினாடி முதல்!!
ReplyDelete.
Guna karur : "தமிழக இளவரசி நற்பணி மன்றத் தலைவர்" மடிப்பாக்கத்தாரைக் காணோமே இந்தக் கொண்டாட்டத்தில் பங்கு கொள்ள ?!
Deleteஅதானே..!?
DeleteI received my books. I have to study tommorrow only.
ReplyDeleteஇந்த blog-ஐ சில காலமாக மௌனமாக படித்து வருகிறேன். என்னை காமிக்ஸ் ரசிகனாக மாற்றி விட்டது! இந்த புத்தாண்டில் இருந்து comments பதிவிடலாம் என இருக்கிறேன். Welcome this newbie folks!
ReplyDeleteஆசிரியர், பணியாளர்கள், காமிக்ஸ் lovers அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். லயன் முத்து காமிக்ஸ் இந்த வருடம் புதிய உயரங்களை தொட வாழ்த்துகிறேன்!!
நன்றி..
@ ஈரோடு விக்னேஷ்
Deleteஇந்த காமிக்ஸ் உலக வலைதளத்துக்கு, வருக வருக என வரவேற்கிறேன்..!
உங்க comanche post படிச்ச பிறகு தான் நம்ம online தளத்தில் comanche புக்ஸ் ஆர்டர் செஞ்சேன் Mayavi.siva அண்ணே! Really honored to be here..
DeleteBtw நான் வினேஷ்!!
Welcome priyatel!!!!!!
Deleteஅவுக்... ஒரு 'க்' சேர்ந்துபோச்சி அவுக்...! தவறுக்கு அவுக்..!
DeleteVinesh erode : More, the merrier...! கலக்குங்கள் நண்பரே !
Deleteநல்வரவு வினேஷ்! :)
Delete@mayavi.siva : smurfs ஸ்டைல் சூப்பர்!!
Deleteநன்றி ஆசிரியருக்கும் அனைவருக்கும்!
Aiyayo!!! non arokkonathula irrukken. Kaalayela irunthu blog-yum pakkala, veettukku innum courier-m pogala. Orukku poithan paakkanum!!!! Yellarum new year treat-udan irukkumpothu nan inge mattikitten!!!!!
ReplyDeleteGanesan (aka) Chattamethai : நாளையும் கூட கூரியர் பட்டுவாடாக்கள் உண்டு ..! நம்பிக்கையோடு முயற்சித்துப் பாருங்கள் !
Deleteஇளவரசி பிப்ரவரியிலேயே வருகிறார் என்று சந்தோஷப்படுவதா..? இல்லை மீண்டும் இளவரசியின் தரிசனத்துக்கு ஒரு வருடம் காத்துக்கொண்டிருக்க வேண்டியதை எண்ணி கவலைப்படுவதா....? ம.வெ.சார் நீங்க எங்க இருக்கீங்க...!
ReplyDeleteஜேடர்பாளையம் சரவணகுமார் : அட..பிரச்சனைகள் தான் எத்தனை ரூபங்களில் தலை காட்டுகின்றன !!
Deleteஎடிட்டர் சார்! குட்டியா இருந்தாலும் பரவாயில்ல; டாண்ணு மணி 12 அடிக்கும்போது ஒரு தகவல்/அறிவிப்பு/துணுக்கு/புள்ளி விவரங்கள்/சிந்தனைத் துளி - இப்படி ஏதாவது....
ReplyDeleteWish you all very happy new year 2016,,,, yet to get the Jan issues,,,,
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
ReplyDeleteகொரியர் பையனின் கடமை உணர்ச்சிக்கு ஆனந்த கண்ணீர் விடாத குறைதான் குறைதான் போங்கள்.
இரவு 9.30 மணிக்கு பார்சலை கொடுத்து போனார்கள். பார்சல் இன்னும் பிரிக்கவில்லை. பார்க்கலாம் நாளை.
அய்யோ நாளை ஆபீஸ் இருக்கே என்ன செய்ய.....
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
ReplyDeleteகொரியர் பையனின் கடமை உணர்ச்சிக்கு ஆனந்த கண்ணீர் விடாத குறைதான் குறைதான் போங்கள்.
இரவு 9.30 மணிக்கு பார்சலை கொடுத்து போனார்கள். பார்சல் இன்னும் பிரிக்கவில்லை. பார்க்கலாம் நாளை.
அய்யோ நாளை ஆபீஸ் இருக்கே என்ன செய்ய.....
ஆசிரியர் சார்& உங்கள் அணியினர்&அனைத்து நட்பூஸ்க்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ....
ReplyDeleteபுதிய பதிவு ரெடி...
ReplyDeleteபுத்தகங்கள் ஒரு வழியாய் நேற்றுதான் கிடைத்தது ஆசிரியரே,எல்லாமே கலக்கல் ரகம்,ஆண்டின் துவக்கம் அற்புதமாய் அமைந்துள்ளது மகிழ்ச்சி.
ReplyDeleteஜுனியர் எடிட்டரின் ஆங்கில இதழ்கள் விற்பனை முயற்சி வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள் ஆசிரியரே.
Deleteமூன்று புத்தகங்களை முடித்தாயிற்று,அலுவலக்ப் பணியால் டெக்ஸை இன்று தான் வாசிக்க வேண்டும்,காரப்பொரி + டெக்ஸ் கூட்டணியில் அமர்க்களமாய் துவங்கப்போகிறேன்.
ReplyDelete