Powered By Blogger

Saturday, December 26, 2015

கச்சேரி களை கட்டட்டுமே !!

நண்பர்களே,

வணக்கம்சிட்டாய்ப் பறந்து விட்டன 48 மாதங்கள்! 2011-ன் ஒரு மார்கழி நாளில்  காத்திருந்த நமது மறுவருகையினை உங்களிடம் தெரியப்படுத்த வழி தேடி நான் விழி பிதுங்கிக் கொண்டிருந்ததொரு சமயம் அது! ‘அட... போங்க பாஸு... ஜனவரியிலேயே ஏப்ரல் ஃபூலா?‘ என்று நீங்கள் நிச்சயம் பரிகாசம் செய்வீர்களென்பதை நான் அறியாதில்லை ஆனாலும் இம்முறை we mean business என்ற தகவலை எப்பாடுபட்டேனும் உங்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற துடிப்பு என்னுள் நிறைந்திருந்தது! ‘வலைப்பதிவொன்றைத் துவக்கலாமே?‘ என ஜுனியர் சொன்ன யோசனையை அரைமனதோடு செயல்படுத்தியது தொடர்ந்த நாட்களில் அதுவே நம் எண்ணப் பரிமாற்றங்களுக்கு அட்டகாசமானதொரு பாலமானது இன்றைக்கு 260+ பதிவுகளோடும், 17 இலட்சம்பார்வைகளோடும் நம் பயணம் தொடர்வதெல்லாம் எவ்விதத் திட்டமிடலின் பலனுமல்ல! As always – ‘ஆண்டவன் நம்மை வழிநடத்துகிறார்துணையிருப்பது நீங்கள்!‘ என்ற நமது சுலபமான ஃபார்முலாவின் வெற்றி மட்டுமே! ‘அட போருமய்யா... இதை எழுதுவதே நீரல்ல! என்ற புள்ளியில் ஆரம்பித்து கதை பாணிகள்எழுத்து நடைகள்வெவ்வேறு நாயக/நாயகியரின் ப்ளஸ் மைனஸ்கள்மறுபதிப்புகள்புத்தக விழா அனுபவங்கள்படைப்பாளிகளுக்கான சந்திப்புகள்சந்தோஷ உச்சங்கள்சங்கடத்தின் பாதாளங்கள் என இங்கே நாம் பார்த்திடாத சமாச்சாரமேயிராது என்று சொல்லுமளவிற்கு இந்த வலைப்பதிவு ஒரு roller coaster ride ஆக இருந்துள்ளதுஆனால் சகலத்திற்குப் பின்பும்காமிகஸ் எனும் காதலோடு நம்மை இயங்கச் செய்திடுவதற்கு இந்தத் தளம் ஒரு மகத்தான க்ரியா ஊக்கி என்பதை மறுக்கவோ மறக்கவோ இயலாது! ‘அன்புக் கண்மணிகளே‘ என்று ஒன்றரைப் பக்கத்திற்கொரு ஹாட்லைனை எழுதியதைத் தாண்டி உங்களோடு interact செய்திட மெனக்கெடாது கிடந்த எனக்கு இந்தப் பதிவானது இப்போதெல்லாம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிப் போய் விட்டது போலொரு உணர்வு! And மௌனமாகவோஉரக்கவோ இங்கே சங்கமிக்கும் நண்பர்களுக்கும் அத்தகையதொரு சிந்தை சிறிதளவேணும் ஏற்பட்டிருப்பின்  I would count myself privileged! ஏதோவொரு வகையில் உங்களில் ஒவ்வொருவரும் இந்தத் தேரின் வடத்தைப் பற்றி இழுத்துள்ளீர்களெனும் போது  உங்கள் அத்தனை பேருக்கும் நமது உளமார்ந்த நன்றிகள் உரித்தாக்கிட வேண்டும்! Thanks ever so much folks!

2015-ன் ‘திரும்பிப் பார்க்கும் படலத்தின்‘ இறுதி அத்தியாயத்தை இன்றோடு மங்களம் பாடிடுவோமாஆகஸ்டில் ஈரோட்டுப் புத்தக விழா ஒரு அழகான உச்சமாக இருந்த பின்பு – தொடரும் மாதங்களும் அந்த விறுவிறுப்புக்கு ஈடு தரும் விதமாய் அமைந்திட வேண்டுமே என்ற ஆதங்கம் எங்களுள் நிறையவே இருந்ததுபௌன்சரின் “கறுப்பு விதவை” செப்டம்பரின் பட்டியலில் இருந்ததெனும் போது – அதகளத்திற்குப் பஞ்சமிராது என்ற நம்பிக்கை என்னிடம்ஆனால் – ஆல்பம் 6 & 7 இணைந்த இந்த பாகத்தினை எழுத உட்கார்ந்த போது – கம்பளிப் பூச்சிகளை மெத்தை முழுவதும் பரப்பிப் போட்டுக் கொண்டு அதன் மேலே சயனித்த உணர்வு தான் மேலோங்கியது! 1-5 வரையிலான ஆல்பங்களில் ‘அடல்ட்ஸ் ஒன்லி‘ சமாச்சாரங்கள் ஆங்காங்கே விரவிக் கிடந்த போதிலும் – கதையின் ஓட்டத்தோடு அவை பெரியளவிற்கு சம்பந்தப்பட்டிருக்கவில்லைவசனங்களை சற்றே நாசூக்காய் அமைப்பதன் மூலமும், சித்திரங்களை டிங்கரிங் செய்வதன் மூலமும் முதலிரண்டு இதழ்களை ஒப்பேற்ற முடிந்திருந்ததுஆனால் இந்த இறுதி ஆல்பத்திலோ – கதையின் மையப் புள்ளியிலேயே தவிர்க்க இயலா நெருடல்கள்கதை நெடுகிலும் சில்லிட வைக்கும் வன்முறைதிகைக்கச் செய்ய வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக அமைக்கப்பட்டிருந்த ‘கோக்கு-மாக்கான‘ கதாப்பாத்திரங்கள் என திரும்பிய திசையெல்லாம் தலைநோவுகள் தான் என் கண்ணுக்குப் புலப்பட்டன! ‘இந்த பாகத்தைப் போட்டே தான் தீரணுமாகல்தா கொடுத்து விடுவோமே?‘ என்ற எண்ணம் எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் தலையெடுக்கத் தொடங்கியது!! ‘முன்பதிவுகள்‘ – ‘கிராபிக் நாவலுக்கென பிரத்யேக சந்தா‘ என்றெல்லாம் அறிவித்தான பின்பு – இது போல பாதியில் அந்தர்பல்டி அடிப்பது என் முதுகின் ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல என்ற கவலை மட்டும் இன்னொருபுறம் எழுந்திருக்கா பட்சத்தில் – நிச்சயமாய் கறுப்பு விதவை‘ கல்தா கண்டிருக்கும்ஒரு மாதிரியாகத் தட்டுத் தடுமாறி மொழிபெயர்ப்பைத் துவக்கிய போது தான் பௌன்சரின் புதிரான ஈர்ப்பினுள் நானும் இன்னொரு முறை இழுத்துச் செல்லப்பட்டதை உணர்ந்திட முடிந்ததுலார்கோவின் கதைகளை எழுதும் சமயங்கள் பெண்டெல்லாம் கழன்று போயுள்ளது – அதன் நவீனபிசுனஸ் சார்ந்த கதைக் களங்களால் ; கிரீன் மேனர் முற்றிலும் வேறு விதமான சவாலை முன்வைத்துள்ளது ; ‘தேவ இரகசியம் தேடலுக்கல்ல; XIII-ன் spinoff கதைகளும் இன்னொரு மாதிரியான மெனக்கெடல்களை அவசியப்படுத்தியுள்ளன தான்ஆனால் பௌன்சரின் இந்தக் ‘கறுப்பு விதவை கதையினைச் சேதாரமின்றி தமிழாக்கம் செய்வதற்குள் திருவாளர் நாக்கார் தரையில் போர்வெல்லே போட்டு முடித்திருந்தார்நா கூசும் விரசமான ஆங்கில வசனங்களும்சித்திரங்களும் முன்னிருக்க – அந்த இடத்தினில் நார்மலான டயலாக்குகளை நுழைப்பதென்பது மார்கழியில் பச்சைத் தண்ணீரில் குளிப்பதற்கு நிகரான அனுபவம் என்பதை உணர்ந்திட முடிந்ததுஇறுதியில் பௌன்சரின் shock-factor-ன் முன்பாக பாக்கி எல்லா விஷயங்களும் முக்கியத்துவத்தை இழந்து நின்றதால் இந்த இதழும்எனது சிரமும் தப்பிப் பிழைத்தன என்று சொல்வேன்ஏகமாய் விமர்சனங்களையும்எக்கச்சக்க விவாதங்களையும் இது எழுப்பிய போதிலும் – பௌன்சரின் இனம் சொல்ல இயலா வசீகரம் தர்ம அடியிலிருந்து நம்மைக் காப்பாற்றியது என்று சொல்வேன்! 6/10 எனது பார்வையில்!

செப்டம்பரின் இதர இதழ்கள் எல்லாவுமே சத்தமிலா ஹிட்களாக அமைந்து போயினகமான்சே அமர்க்களமான அட்டைப்படத்துடன்ஆரவாரமிலா ‘சாத்வீகமாய் ஒரு சிங்கம்‘ ஆல்பத்தோடு ஸ்கோர் செய்திடசூப்பர் வண்ண மறுபதிப்பாக கேப்டன் பிரின்ஸின் ‘சைத்தான் துறைமுகம்‘ இன்னொரு பக்கம் மிளிர்ந்ததுஎன்றோ ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பாக black & white-ல் வெளியான இந்த கேப்டன் பிரின்ஸ் சாகஸம் முழுவண்ணத்தில் கலக்கலாகக் காட்சி தந்தது செப்டம்பரின் highlight! இரு இதழ்களுக்குமே 7/10 என்பேன்!

செப்டம்பரின் இன்னுமொரு surprise package – டைலன் டாக்கின் ‘வாராதோ ஓர் விடியலே?‘! Johnny Freak என்ற பெயரில் ஒரிஜினலாக வெளியான இந்த இத்தாலிய ஆல்பம் நம் மனங்களை நிச்சயம் இளகச் செய்திடுமென்ற எதிர்பார்ப்பு என்னுள் இருந்ததுதமிழ் சினிமாவுக்குச் சவால் விடும் விதமான சென்டிமெண்ட் சார்ந்த கதையமைப்பில் ஆங்காங்கே நிறைய லாஜிக் ஓட்டைகள் இருப்பினும் – படிக்கும் போது ஒரு மென்மையான உணர்வு கதைநெடுகிலும் இழையோடுவதை ரசிக்க முடிந்தது! And டைலன் டாக் கதைவரிசையில் இது போன்றதொரு ஆல்பம் நிஜமான surprise தான்6.5/10 தரலாமா?

திருப்தியான செப்டம்பருக்குப் பின்னே அக்டோபரும் ‘மோசமல்ல‘ என்ற ரகத்திலிருந்ததுதோர்கலின் ‘சாகாவரத்தின் சாவி‘ சந்தேகமின்றி centre stage எடுத்துக் கொள்ள – வான் ஹாம்மேவின் கதை சொல்லும் ஆற்றலை முழுவீச்சில் இந்த ஆல்பத்தில் உணர்ந்திட முடிந்ததுஅதுவரையிலும் ஒரு substitute ஆட்டக்காரரைப் போல பென்ச்சில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தோர்கலை – ஒரு டாப் லெவல் ஆட்டக்காரராகப் புரமோஷன் பெறச் செய் இதழிது என்று சொல்லலாம்! Fantasy கதைகளுக்கும் நம்மிடையே ஒரு உச்ச இடமுண்டு என்பதை நிரூபித்த இந்த இதழுக்கு என் பார்வையில் 8/10!

புயலுக்கொரு பள்ளிக்கூடம்” சுட்டி லக்கியின் இரண்டாவது சாகஸம் எனினும் நகைச்சுவை quotient குறைச்சலானதே! "நாக்கார் – மூக்கார்" என்று இதன் முதல் அத்தியாயத்தை நாம் 2013-ல் கரை சேர்த்திருப்பினும் – இம்முறை அது போன்ற டகுல்பாஜி வேலைகளுக்கு வாய்ப்பிருக்கவில்லை! So- ஒரு சராசரியான கதையை சீராய் – அழகான சித்திரங்களோடு சொன்ன இந்த இதழுக்கு 6/10 என் கணிப்பில்இதனோடு வெளியான ரிப்போர்ட்டர் ஜானியின் ‘காலனின் காலம்‘ did decently too! எப்போதும் போலவே ஒரு இடக்கு – முடக்கான கிராமத்தில் நடக்கும் சரமாரியான மர்மங்களை தன் டிரேட்மார்க் பாணியில் நம்மவர் முடிச்சவிழ்ப்பதை அட்டகாசமான வண்ணங்களோடு பார்ப்பது சந்தோஷ அனுபவமாகத் தானிருந்ததுஆனால் ராசி பலன்ஜோசியர் என்று ரொம்பவே வீக்கான கதையம்சத்தோடு பயணித்த இந்த இதழுக்கு 5.5/10 தான் சரியென்று தோன்றுகிறது!

நவம்பர் புலர்ந்த போதே – நமது இரவுக்கழுகாரின் ‘தீபாவளி மலர்‘ தொடர்பான எதிர்பார்ப்பும் எதிறியிருந்தது! “தீபாவளி with டெக்ஸ்” 576 பக்க black & white ‘குண்டூஸ்‘ என்பதால் – செமத்தியாக வேலை வாங்கியதுடைனோசரின் பாதையில்” அதிரடியில் சற்றே குறைச்சலான சாகஸம் என்ற போதிலும் – வித்தியாசமான கதைக்கரு எனக்குப் பிடித்திருந்ததுஆனால் டெக்ஸ் வில்லரை அவரது பெரியப்பா ஜாடையில் காட்டிய அந்த சித்திர பாணி தான் நெருடலாக இருந்ததுஆனால் அதை வட்டியும்முதலுமாய் ஈடு செய்ய எமனின் வாசலில்‘ படுநேர்த்தியான ஓவியங்களோடு ஆஜரானது saving grace! கதையைப் பொறுத்தவரை பெரியதொரு அசாத்தியங்கள் இதனில் இல்லாத போதும் – விறுவிறுப்பிற்குப் பஞ்சமிருக்கவில்லை என்றே நினைத்தேன்கூட்டிக் கழித்துப் பார்த்தால் இவை டிராகன் நகரங்களோதலைவாங்கிக் குரங்குகளோ இல்லையெனினும் – நிச்சயமாய் ‘தூங்கிப் போன டைம்பாமும்‘ அல்ல!! 7/10 என் கணக்கில்!

மஞ்சள் நிழல்‘ நவம்பரின் மதில் மேல் பூனைவிறுவிறுப்பான கதை... சித்திரங்களும் coolவர்ணங்கள் மட்டுமே சொதப்பல் என்று இதழ் வெளியான வேளையில் அபிப்பிராயங்களாக எழுந்த போது மகிழ்ந்திருந்தேன்ஆனால் கடந்த சில வாரங்களாய் இங்கும் சரிநமக்கு மின்னஞ்சலில் வந்திடும் review களிலும் சரி – ‘மஞ்சள் நிழல்‘ துவைத்துத் தொங்கப் போடப்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்ததுசென்றாண்டு காலத்தின் கால்சுவடுகளில்‘ மூலம் குருவிரொட்டி வாங்கியிருந்த ரோஜரார் இம்முறை குச்சி மிட்டாய் வாங்கியிருப்பதைப் பேந்தப் பேந்தத் தான் பார்க்க முடிகிறது! One last time – 2016-ல் ரோஜருக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்புக்கு அவர் நியாயம் செய்திடாது போயின் – VRS பட்டியலுக்குள் அவரை நுழைத்திடல் தவிர்க்க இயலாது போகும்என் பார்வைக்கு ‘மோசமில்லைஆனால் நிச்சயம் ஆஹா-ஓஹோவுமில்லை‘ என்ற மஞ்சள் நிழலுக்கு 5/10!

நவம்பரின் ஷெல்டன் சாகஸமான ‘வரலாறும்... வல்லூறும்‘ நிறையவே என்னை பஸ்கி எடுக்கச் செய்ததொரு இதழ்வரலாற்றுக் குறிப்புகளுள் எவை நிஜமோ – எவை உட்டாலக்கடியோ என்ற சந்தேகம் அவ்வப்போது தலைதூக்க – கூகுளுக்குள் அடிக்கொரு தடவை புதைந்து போக வேண்டி வந்ததுபரபரப்பான ஆக்ஷன்அழகான சித்திரங்கள்குளுமையான வர்ணங்கள் என்றெல்லாம் இருந்தாலும் – ‘கடவுள் பாதி – காதுல பூ பாதி‘ என்ற ரீதியில் பயணமான கதையின் முதுகெலும்பை சற்று பலவீனமானதாகவே தான் பார்த்திட முடிந்தது! ‘புனித ஈட்டியைக் கொண்டு ஹிட்லரை உயிர்பிப்பது‘ என்ற புஷ்பத்தை காதில் சுமந்து கொண்டே கதையை ரசிப்பது ஒரு 60 – 40 அனுபவமாகத் தானிருந்தது! So- 6/10 எனது மதிப்பீட்டில்!

And finally on to December – மீண்டும் ஒரு தோர்கல் அதகள மாதம்! And இன்னுமொரு கமான்சே மௌன சரவெடி!! எதிர்பார்த்தபடியே இவ்விரு இதழ்களும் அழகாய் ஸ்கோர் செய்திட – 7.5/10 (தலாதந்திட நினைத்தேன்! ‘சிக்‘கென்று பிரசன்னமான மாடஸ்டியும் சோடை போகவில்லையெனினும் – தேம்ஸ் நதியை பற்றி எரியச் செய்யவுமில்லை தான்சற்றே ஆழமான கதைக்கருக்கள்திட்டமிடல்கள் கொண்ட முழுநீள ஆல்பம்களாக சமீப ஆண்டுகளில் பழகியான பின்னர்மாடஸ்டி போன்ற strip தொடர்கள் ஒருவித ஆழமின்மையைப் பிரதிபலிப்பது போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானாவென்று தெரியவில்லை! But – 5/10 என் பார்வையில் இளவரசிக்கு! (sorry MV sir !!)

ஆண்டின் இறுதி இதழான ‘பாதைகளும்... பயணங்களும்..!‘ சீக்கிரமாய் மறக்க வேண்டியதொரு இதழ் என்பதில் ஐயமில்லைஇரண்டே பாகம் கொண்ட கதையாக அமைந்திடுமென்ற நம்பிக்கையில் நாம் முயற்சித்த கதையிதுஇரண்டு – மூன்றாக மாறிடமூன்றும் அடுத்த சுற்றுக்கு முன்னுரையாகி நிற்க – அரைவேக்காட்டில் குக்கரிலிருந்து வடித்த சாதத்தைப் போல இந்த இதழ் காட்சி தந்ததுநிச்சயமாய் முதலிரு பாகங்களின் tempo விற்கு நியாயம் செய்ய மறந்த இந்த மூன்றாம் பாகத்திற்கு 4.5/10 என் மார்க் ஷீட்டில்!

So- ரைட்டோதப்போ – எனது பாரபட்சமற்ற ஆண்டறிக்கை இதுவேஇதழ்கள் மொத்தமாய் பெற்ற மார்க்குகளைக் கொண்டு 2015-ன் நமது average score என்னவென்று கண்டுபிடிக்கும் பொறுப்பையெல்லாம் உங்களிடம் விட்டு விடுகிறேன்! But ஒட்டுமொத்தப் பார்வையில் எனது overall impressions இவையே:
 • 2015ன் மறக்க இயலா highlight நமது சிறப்பிதழ்களே!! ‘மின்னும் மரணம்‘ தொடங்கிலயன் 250முத்து 350 என ஒவ்வொரு ஸ்பெஷல் இதழும் மறக்க இயலா வெற்றிகளை ஈட்டித் தந்த அதிரடிகள் !!
 • சமீப ஆண்டுகளின் trend இன்னமும் தொடர்கிறது - கௌபாய்களின் ஆதிக்கத்தின் ரூபத்தில் ! டெக்ஸ் ; டைகர் ; பௌன்சர்   ; கமான்சே என score செய்துள்ளவர்களில் பெரும்பகுதியனர் "மாட்டுப் பையன்களே"!  
 • 2015-ன் most  talked about நாயகர் பௌன்சரே! சர்ச்சைகளோ;சந்தோஷங்களோ – அவர் உண்டாக்கித் தந்த சகலமும் விறுவிறுப்பின் உச்சமானவை!
 • 2015-ன் ஒரு சத்தமிலா நாயகன் நமது டிசைனர் பொன்னனும் கூட!இந்தாண்டின் அட்டைப்படத் தரங்களில் நிஜமாக நானொரு உயரே செல்லும் கிராபைப் பார்த்திட்டேன்பணிகளை முடித்து வாங்குவதற்குள்ஒவ்வொரு மாதமும் சந்நியாசம் ஒரு பிரமாதமான option ஆக நமக்குத் தோன்றத் தான் செய்தது என்றாலும் – ராப்பர்களைப் பார்க்கும் போது அந்த உஷ்ணம் மட்டுப்பட்டுப் போனது நிஜமே!
கதைத் தேர்வுகளில் எத்தனைக்கெத்தனை கவனம் எடுத்தாலும் – அத்தனைக்கத்தனை பள்ளங்களும் காத்திருக்குமென்பதை சிக் பில்லேடி Spitfire போன்றோர் நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தனர்! 2016-ல் A+B+C+D சந்தாக்களில் விஷப்பரீட்சைகள் ஏதுமில்லை எனும் போது – காத்திருக்கும் ஆண்டில் உங்களுக்கும்எங்களுக்கும் சோதனைகள் அதிகமிராதென்று நினைக்கிறேன்! Fingers crossed ! So- ஒரு பெருமூச்சோடு இந்தாண்டின் புராணத்தைப் பார்சல் பண்ணிவிட்டு – புத்தாண்டின் புதுவரவுகள் பக்கமாய் ஒளிவட்டத்தைத் திருப்புவோமாஇதோஜனவரியின் நாயகர்களின் கலக்கலான அட்டைப்படங்களின் முதல் பார்வைகள்..........
கம்பீரமான டெக்ஸ் நமது ஓவியரின் கைவண்ணம் ! பின்னணி வர்ணச் சேர்க்கைகள் நமது டிசைனரின் லீலை ! So இந்தக் கூட்டணியின் கைவரிசையோடு களம் காணும் ஆண்டின் முதல் இதழ் மிரட்டலாய் வந்திருப்பதாய் எனக்குப்பட்டது ! உங்களுக்கும் அவ்விதம் தோன்றிடும் பட்சத்தில் - would be a job well begun ! தொடரும் டெக்ஸ் இதழ்கள் அனைத்துமே இந்த template-ஐப் பின்பற்றியே இருந்திடும் என்பது கொசுறுத் தகவல் ! And அது மட்டுமன்றி - இப்போதே 5 'தல' ஓவியங்கள் தயாராகி நிற்கின்றன நம்மிடம் என்பதும் கூடுதல் தகவல் !! ஒரு "புயலின்" வருகைக்கு ஓரளவுக்காவது நாமாவது முன்கூட்டியே தயாராகிக் கொள்வோமே !!
தொடர்வது மீசைக்கரரின் ஆக்ஷன் spot ! இங்கே சந்தோஷச் செய்தி - இந்தக் கதைத்தொடரின் ஒரிஜினல் பிதாமகரான வான் ஹாம்மேவின் மறுவருகை ! இதோ அதன் அட்டைப்பட first look ! முன்னும், பின்னுமே ஒரிஜினல் சித்திரங்களே - நமது டிசைன் சேர்க்கைகளோடு !

Next in line - இன்னுமொரு மீசைக்காரரின் ஆல்பம் ! இவரோ நாலரையடி உயரத்தில் பாக்தாத்தில் கூத்தடிக்கும் வஸ்தாது ! Enter - மதியில்லா மந்திரி - முழு வண்ணத்தில் ; ஒரு முழு நீள ஆல்பத்தில் !! இம்முறையும் ஒரிஜினல் சித்திரங்களே இருபக்கத்து ராப்பர்களுக்கும் ! நிச்சயமாய் முத்திரை பதிப்பார் நம் மோடி மஸ்தான் என்ற நம்பிக்கை இந்தப் 'பளிச்' அட்டைப்படத்தின் பொருட்டு இன்னும் கூடுதலாகிறது எங்களுக்கு !!  
ஜனவரியின் இறுதி இதழான மாயாவிகாருவின் அட்டைப்படத்தினை மட்டும் இதழ் வெளியாகும் தினத்தன்று கண்ணில் காட்ட உத்தேசித்துள்ளேன் ! இது நமது ஓவியரின் தயாரிப்பே ! So - சில பல மாதங்களாய் வெறும் அறிவிப்புகளாய் மட்டுமே வட்டமடித்துக் கிடந்த 2016-ன் வெளியீடுகள் வெளிச்சத்தைப் பார்க்கும் வேளையும் புலர்ந்து விட்டது ! எங்கள் தரப்பினில் அச்சுப் பணிகளை முடித்து விட்டோம் ; பைண்டிங்கின் ஆண்டிறுதி rush-க்கு மத்தியில் வரும் வார இறுதிக்கு முன்பாக இதழ்களை முடித்து வாங்கி விடுவோம் ! So we are all set to rock guys !! இனி கச்சேரியைக்  களைகட்டச் செய்யும் பணி மாத்திரமே பாக்கி ! இதுவரையில் சந்தா செலுத்தியிருக்கா நண்பர்கள் இனிமேலும் தாமதிக்க வேண்டாமே - ப்ளீஸ் ? மீண்டும் சந்திப்போம் !! முன்கூட்டிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !! Enjoy the day & the festive season folks ! Bye for now !

184 comments:

 1. Replies
  1. After a long time..rushing to read the post..:-)

   Delete
  2. வாழ்த்துக்கள் செல்வம் ஜி....

   Delete
  3. வணங்கி வாழ்த்துகிறேன் sir. Happy New year.

   Delete
  4. Hearty wishes to all of lion Muthu Staffs , Readers & Family. Kulithalai N.Manikandan

   Delete
 2. Replies
  1. ஆனந்தம் ஆகா ரொம்ப நாளைக்கு பிறகு முன்னிரவு பதிவு... சூப்பர் சார்...அட்டைகள் அனைத்தும் அசத்தல் சார்...

   Delete
  2. ///வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதற்கு சமம்////--- உண்மையில் டெக்ஸை பிடிக்காத வசிஸ்டர்ஸ் பாராட்டனும் MV சார்,...

   Delete
  3. ஓ.கே.!ஓ.கே.தூக்க கலக்கத்தில் சாரி.உண்மையில் டெக்ஸ் அட்டைப்படம் அசத்தல்.! +1

   Delete
 3. இரவு வணக்கம். ஐந்தாவது நபராக பதிவை படிக்க போகிறேன்.

  ReplyDelete
 4. ஹய்.! முன்னதாகவே பதிவு.! சூப்பர் ! படித்துவிட்டுவருகிறேன்.!

  ReplyDelete
 5. டெக்ஸ் வில்லர் wrapper maxi பாணியில் இருப்பது excellent! இனிமேல் இப்படித்தான் என தலமேல சபதம் எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது!

  ReplyDelete
 6. விரைவான பதிவுக்கு நன்றி சார்.. நல்ல விமர்சனம்.. புது வருட இதழ்களின் செய்திகளும் அமர்க்களம் சார்.. இரவு வணக்கங்களுடன் விடைபெறும்..
  மு.பாபு
  கெங்கவல்லி,சேலம் மாவட்டம்..

  ReplyDelete
 7. வணக்கம் எடிட்டர் சார்...!
  வணக்கம் நண்பர்களே...!

  ReplyDelete
 8. அருமையான பதிவு.! தூக்க கலக்கத்தில் இங்கு வந்தேன்.உங்கள் பதிவை பார்த்தவுடன் தூக்கம் ஓடிப்போய்விட்டது.ஒரே மூச்சில் படித்துவிட்டேன்.எடிட்டரின் எழத்துக்களை அசைபோட்டவாறு தூங்கபோறேன்.காலை வருகிறேன்.இரவு வணக்கம்.!

  ReplyDelete
 9. வணக்கம் எடிட்டர் சார்...!
  வணக்கம் நண்பர்களே...!
  சற்றும் எதிர்பாரா பதிவு. சனி இரவு ஆகிவிட்டாலே குதூகலமாகி விடுவேன்.நள்ளிரவு 12 மணிக்கு மேல் அரை மணி நேரத்திற்கொருமுறை, பதிவு வந்து விட்டதா என, அரைத்தூக்கத்தில் செல்போனை எடுத்துப்பார்த்துக்கொண்டிருப்பேன். இன்று அந்த இனிய அவஸ்த்தை இல்லை.
  தலயின் அட்டைப்படம்...
  சூப்பர் ஸ்டார் சொல்வது போல
  தூள்.....டக்கர்மா....!

  ReplyDelete
 10. ஆர்டினின் அன்பு வணக்கம்!!!

  ReplyDelete
 11. அடக் கொடுமையே கியூ அதுக்குள்ள வளர்ந்து விட்டதா,சரி தூக்கம் வருது காத்தால வரேன்.
  கண்ணை சுழற்றும் படங்கள் நூறு.

  ReplyDelete
 12. அடடே...சனிக்கிழமை இரவு 11 மணிக்கு முன்னர் 10.15 pm க்கே பதிவா!!!

  ReplyDelete
 13. இனிய இரவு வணக்கங்கள் எடிட்டர் சார்!!!
  இனிய இரவு வணக்கங்கள் நண்பர்களே!!!

  ReplyDelete
 14. ரொம்ப சீக்கிரமா எடி வந்துட்டாரா!
  எடிக்கு வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் வணக்கம் ஜி!

   Delete
 15. 2016 க்கு நான் ரெடி... போன வருசம் சந்தா கட்டாததாலே என்ன நடக்குதுனே தெரியாமே ரத்தப்படலம் முதல் அத்தியாயம் மாதிரியே போயிடுச்சு.... இந்த வருசம் அந்த பிரச்சனை இல்லை....
  வெயிட்டிங் பார் தங்க தலைவன்...
  ஆயிரம் டெக்ஸ் மறைத்தாலும் டைகர் மறப்பதில்லை

  ReplyDelete
  Replies
  1. யாருங்க அது? தூங்குற நேரத்துக்கு வந்து காமெடி பண்றது???

   Delete
  2. 12மாதமும் டெக்ஸ் வருவார் ரமேஷ்,....
   ஆனால் ஆனால் 12மாதமும் முடிவதற்குள் டைகர் வருவாராஆஆஆஆஆஆஆ?????

   Delete
  3. @ ரம்மி
   உங்கள் டைகர் காதல் மெய்சிலிர்க்க வைக்கிறது...!
   @ டெக்ஸ் விஜய ராகவன்
   டைகர் ரசிகர்கள் நம்மைப்போல பேராசைக்காரர்கள் அல்ல....மாதம் ஒரு இதழ் கேட்பதற்கு...!
   மின்னும் மரணம் ஒன்றே போதும்.....!
   (கேட்டாலும் கிடைக்காதில்லையா...?)

   Delete
  4. யாரூ டைகர் ரசிகர்களா??? ..ஜேடராரே, வாரம் ஒரு இதழ் கேட்டவங்க அவுக.....கேட்பது தவறல்ல, ஆனால் கிடைப்பது நம் கையில் இல்லையே!!!!..

   Delete
  5. //ஆயிரம் டெக்ஸ் மறைத்தாலும் டைகர் மறப்பதில்லை//
   +1

   Delete
  6. //ஆயிரம் டெக்ஸ் மறைத்தாலும் டைகர் மறப்பதில்லை//
   +1

   Delete
 16. அதகள அட்டைப்படங்கள்!புத்தாண்டு கொண்டாட்டங்களை புறந்தள்ளச்செய்யும் அட்டைப்படங்கள்! எப்போது வருமோ அடுத்த வாரம்....! அப்போதுதானே தெரியும் ஐனவரி இதழ்களின் பிரசவ தேதி..!

  ReplyDelete
  Replies
  1. Guna Karur : புத்தாண்டின் முதல் தேதியில் உங்கள் கைகளில் இருந்திடும் !

   Delete
  2. இந்த பதில் தான் சார் புத்தாண்டு சரவெடி! கொண்டாட்டங்களுக்கு இப்போது தயாரராகி விட்டேன் சார்!சென்ற வார எனது அவசர குடுக்கைத்தனத்திற்கு மன்னியுங்கள் சார்!

   Delete
 17. ஆஹா...ஜனவரி மாத இதழ்கள் இப்பொழுதே ஆவலைத் தூண்டுகிறதே...

  வெல்கம் பேக் மதி மந்திரியாரே!!!

  'தல' டெக்ஸின் அட்டைப்படம் தூள்!!!
  அந்த அடர்த்தியான red color background செம எடிட்டர் சார்...

  என்ன ஒரு சின்ன suggestion, டெக்ஸ் முன் அட்டைப்படத்தில் மேலே அந்த வெள்ளை லைனில் வரும் 'வெளியீடு எண் மற்றும் விலையையும்' வேறு இடத்தில் போட்டால் நன்றாக இருக்கும்...

  சின்ன விஷயம் தான்...ஆனாலும் அங்கே 'டெக்ஸ்' மற்றும் நமது 'லயன்' லோகோ மட்டும் வந்தால் தான் நன்றாக இருக்கும்...

  ReplyDelete
 18. அதே போல் அது ' சூ மந்திர காலி'யா இல்லை பெயரே 'சூ மந்திரி காலி' யா சார்!!!

  ReplyDelete
  Replies

  1. சத்யா @
   அது சூ மந்திரி காலி தான்.!

   நீங்க நினைக்குற வார்த்தை "சூ மந்திரக்காளி " .!

   Delete
  2. @மேச்சேரி மாம்ஸ்:
   ஓ.கே.ஓ.கே. மாம்ஸ் :-)

   Delete
 19. அட்டைப் படங்கள் அட்டகாசம்.
  டாப் நம்ம மோடி மஸ்தான் அண்ணாச்சிதான். பட்டைய கெளப்புவாரு போல தெரியுது!!
  டெக்ஸ் அட்டையில் TEX வாசகம் சூப்பர். தொடரும் இதழ்களில் இதையே பின்பற்றலாமே சார்.
  ஷெல்டன்., சொல்லவே தேவையில்லை. கலக்குவார்னு நம்பிக்கை இருக்கு!
  புத்தாண்டின் இதழ்கள் எப்போ கிடைக்கும்னு சொல்லாமலே விட்டுட்டிங்களே சார்.! !!

  ReplyDelete
  Replies
  1. ///டெக்ஸ் அட்டையில் TEX வாசகம் சூப்பர். தொடரும் இதழ்களில் இதையே பின்பற்றலாமே சார். ///அதே அதே சார்.... ஒரு நொடி போனெல்லி வெளியீடோ என நினைக்க வைத்தது சார்... சூப்பர் சூப்பர் சூப்பர்...

   Delete
  2. @ FRIENDS : //தொடரும் டெக்ஸ் இதழ்கள் அனைத்துமே இந்த template-ஐப் பின்பற்றியே இருந்திடும் என்பது கொசுறுத் தகவல் ! //

   Delete
 20. எல்லோருக்கும் வணக்கம்.
  Good night to all

  ReplyDelete
 21. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு எனது
  அன்பு வணக்கங்களா

  ReplyDelete
 22. டெக்ஸ் வில்லர் மற்றும் மந்திரியார்
  இருவரின் அட்டை படங்களும் அசத்தல்
  ஆசிரியரே

  ReplyDelete
 23. ///! ‘புனித ஈட்டியைக் கொண்டு ஹிட்லரை உயிர்பிப்பது‘ என்ற புஷ்பத்தை காதில் சுமந்து கொண்டே கதையை ரசிப்பது ஒரு 60 – 40 அனுபவமாகத் தானிருந்தது! ///

  அதுவும் க்ளைமாக்ஸில் ஹிட்லரின் ப்ரேதத்தை நோக்கி ஈட்டியை நீட்டும் போது , ஷெல்டன் , ஏதோ ஒரு இனம்புரியாத சக்தியை உணர்ந்ததாக சொல்லும்போது., படித்துக் கொண்டிருந்த எனக்கும் சிலிர்த்து விட்டது.!
  கற்பனையோ காதுல பூவோ., எதுவாயினும் கதைக்கரு கவர்ச்சியான ஒன்றென்பது மறுக்க இயலா நிஜம்!

  ReplyDelete
 24. And லயன் காமிக்ஸின் ஆஸ்தான நாயகன் ' மதி மந்திரியார்' முத்து காமிக்ஸ் லோகோ விலா?!!!

  ReplyDelete
 25. ராஜாதி ராஜ,ராஜ மார்த்தாண்ட,ராஜ குல திலக,ராஜ குலோத்துங்க என் மணியான மந்திரி தனி இதழாக வருகிறார்...!பராக்..!பராக்..!! பராக்..!!!

  ReplyDelete
 26. ஆசிரியர் மற்றும் நண்பர்களுக்கு எனது
  இரவு வணக்கங்கள்..

  ReplyDelete
 27. ஆசிரியரே ஜீலியாவை கழற்றி விட்டு
  மாடஸ்டிக்கு கூடுதலாக ஒரு இடம்
  கொடுக்க கூடாதா எங்களின்
  ஒரே கணவு கண்னிக்கு ஒரே இடம்தானா
  தயவுசெய்து மறு பரிசீலனை செய்யுங்கள்

  ReplyDelete
  Replies
  1. எனக்கு., இதுக்குத்தான் அழுகாச்சி வருது!!!

   ப்பூவ்வ்வ்!!!!

   Delete
  2. நோ நோ ஜூலியாவும் வரட்டும் சார்... இருவரில் வெல்பவர் 2017ல் வரட்டும் சார்...

   Delete
 28. ///One last time – 2016-ல் ரோஜருக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்புக்கு அவர் நியாயம் செய்திடாது போயின் – VRS பட்டியலுக்குள் அவரை நுழைத்திடல் தவிர்க்க இயலாது போகும்! ///

  அய்யய்யோ!!
  இதென்ன விபரீத முடிவு !

  2017 ல் ரோஜர் இல்லையெனில் டாப் 3 மொக்கைகளுக்கு யாருடைய சாகசத்தை நாங்கள் தேர்வு செய்வது,??? :-)

  ReplyDelete
  Replies
  1. அப்டியெல்லாம் சொல்லப்படாது..!எனக்கு அழுவாச்சி வரும்..!

   Delete
  2. // 2017 ல் ரோஜர் இல்லையெனில் டாப் 3 மொக்கைகளுக்கு யாருடைய சாகசத்தை நாங்கள் தேர்வு செய்வது,??? :-) //
   குசும்பு! லொள்ளு!

   Delete
  3. 2017 ல் ரோஜர் இல்லையெனில் டாப் 3 மொக்கைகளுக்கு யாருடைய சாகசத்தை நாங்கள் தேர்வு செய்வது,??? :-) //

   இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம ஓவராத்தெரியலியா

   KiD ஆர்டின் KannaN

   அவர்களே :)
   .

   Delete
  4. 2017 ல் ரோஜர் இல்லையெனில் டாப் 3 மொக்கைகளுக்கு யாருடைய சாகசத்தை நாங்கள் தேர்வு செய்வது,??? :-) //

   இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம ஓவராத்தெரியலியா

   KiD ஆர்டின் KannaN

   அவர்களே :)
   .

   Delete
  5. ரோஜர் ஒன்றும் அவ்வளவு மொக்கையில்லையை.அதைவிட ஓரிரண்டு மொக்கை இருப்பதை கவணிக்கலாமே.

   Delete
 29. என்க்கு தூக்கம் வர்துபா..!காத்தாலங்காட்டி பாக்லாமா..!ஹாாாவ்வ்வ்..!

  ReplyDelete
 30. ///பௌன்சரின் இந்தக் ‘கறுப்பு விதவை‘ கதையினைச் சேதாரமின்றி தமிழாக்கம் செய்வதற்குள் திருவாளர் நாக்கார் தரையில் போர்வெல்லே போட்டு முடித்திருந்தார். ///

  ஹாஹாஹா!!!

  அடுத்த ஆல்பங்கள் 8&9 க்கு என்ன செய்யப் போறார்னு தெரியலயே!!! :-)

  ReplyDelete
  Replies
  1. அதிலும் அந்த கதைக்கரு , ஹூம் சற்றே சிரமம் தான்....

   Delete
 31. Dear Editor,

  ஜனவரி 2016 மாதத்து மூன்று அட்டைகளுமே சூப்பர் !

  படங்கள் (வண்ணக்கலவை ??) சொதப்பியிருந்தாலும் "மஞ்சள் நிழல்" கதை எனக்குப் பிடித்திருந்தது

  ReplyDelete
  Replies
  1. Periyar : எனக்கும் கூட "மஞ்சள் நிழல்" ஒ.கே.என்றுதான் பட்டது ; but பெரும்பான்மை நண்பர்களுக்கு அதனில் உடன்பாடில்லையே !

   Delete
  2. மஞ்சள் நிழல் கதையில் குறை இல்லை சார், இது தொடர் கதையின் ஒரு பகுதி என்ற எண்ணம் தான் இதன் தோல்விக்கு காரணம் எ.எ.க. .... ரோஜர் மேல் தவறில்லை...

   Delete
  3. உண்மை பாலா சார்! ரோஜருக்கு ஆதரவாக அணி திரள்வோம்!

   Delete
 32. டெக்ஸ் கம்பீரமாய் உள்ளார் ( 'சட்டத்திற்கொரு சவக்குழி ' தலைப்பும் நன்றாக உள்ளது, போஸ்டரும் நன்றாக உள்ளது). வசூலில் சாதனை படைப்பார் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 33. லயன் லோகோ கலரில் கொண்டு வந்ததற்கு நன்றி சார்.

  ReplyDelete
  Replies
  1. +1
   டெக்ஸூம் மஞ்சள் சட்டை....
   சிங்கக் குட்டியும் மஞ்சள் சட்டை.......

   Delete
  2. @ FRIENDS : இந்த வண்ண (லயன்) லோகோ சில ஆண்டுகளுக்கு முன்பாய் நம் நண்பர் ரமேஷ் குமார் செய்திருந்த மெருகூட்டலே !

   Delete
  3. +1
   டெக்ஸூம் மஞ்சள் சட்டை....
   சிங்கக் குட்டியும் மஞ்சள் சட்டை.......

   Delete
  4. +1
   டெக்ஸூம் மஞ்சள் சட்டை....
   சிங்கக் குட்டியும் மஞ்சள் சட்டை.......

   Delete
 34. Vijayan sir,
  Tex' wrapper cover is damn good, playing cards behind Tex, சும்மா அதிருதுல்ல!
  I hope (and wish) Tex will be rocking next year.
  Regards,
  Mahesh kumar Selvaraj

  ReplyDelete
  Replies
  1. Mahesh Kumar S : விரல்கள் வளைந்திருக்கும் படங்கள் ஒரு நூறு !

   Delete
 35. Tex அட்டை படம் அருமை.Tex லோகோ மிக அருமை.

  ReplyDelete
 36. டியர் எடிட்டர் ஸார்,
  முன்னிரவு பதிவு அட்டகாஷ். அட்டை படங்கள் சூப்பர். உங்கள் விமர்சனங்கள் எல்லாமே மிக மிக நன்று ஸார்.

  ReplyDelete
 37. எல்லோருக்கும் வணக்கம்.

  ReplyDelete
 38. அடடே! லயன் லோகோக்கள் மஞ்சள் நிறத்தைத் தாங்கியிருக்கின்றனவே!! ஆனால் நான் இன்னும் கொஞ்சம் யூத்தாக ( கலர்ஃபுல்லாக) எதிர்பார்த்தேன் சார்!

  டெக்ஸின் அட்டைப்படம் மிரட்டுகிறது! மாலையப்பரும், பொன்னரும் சேர்ந்து அட்டாகசப்படுத்தியிருக்கிறார்கள்!

  மார்க்குப் போடுவதில் இந்தமுறை வாத்தியார் ரொம்பவே கெடுபிடி!

  ReplyDelete
  Replies
  1. //மார்க்குப் போடுவதில் இந்தமுறை வாத்தியார் ரொம்பவே கெடுபிடி!//

   யெஸ்ஸு....எடிட்டராக இல்லாமல் ரசிகராக மார்க் போடுவதால் ஒன்றும் சொல்ல முடியவில்லை..:-)

   அட்டை,சைஸ்,சித்திரங்கள், கதையோட்டம் அனைத்திலும் சிறப்பாக இருந்த மரணத்தின் முத்தம் 5/10 என மதிப்பெண் பெற்றது ஆச்சர்யம் அளித்தது.

   பாதைகளும் பயணங்களும் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி ஏமாற்றம் அளித்த இதழ் எனினும் மதிப்பெண் குறைவே...

   பிற மதிப்பீடுகள் ரசிகன் என்ற பார்வையில் எடிட்டரின் கண்ணோட்டங்கள் படிக்க அற்புதமான அனுபவம்..

   ஈனா வினா....புதிய பொறுப்புகளில் வேலை சுமை அதிகமா???? We miss you a lot...

   Delete
  2. ஈரோடு விஜய்.!& செல்வம் அபிராமி.! வணக்கம்

   //மார்க் போடுவதில் வாத்தியார் ரொம்பவே கெடுபிடி.//

   உண்மை.!உண்மை.!:-((

   Delete
  3. @ FRIENDS : "மார்க் போடும் படலத்தை" ரசிகனாக மட்டுமே அணுகியிருப்பினும், மார்கழியின் பனி வேளையினில் அந்த எடிட்டர் குல்லா சத்தமின்றி சிரமேறி விடுவதைத் தவிர்க்க இயலவில்லை ! நிறைய எதிர்பார்ப்புகளோடு ஒரு கதையைத் தேர்வு செய்து விட்டு, அது சற்றே நொண்டியடிப்பதைப் பார்க்கும் போது ஏமாற்றத்தின் அளவுகோல்கள் ரசிகனை விட எடிட்டருக்கு ஜாஸ்தி என்று சொல்லத் தோன்றுகிறது !

   Delete
  4. நன்றி செனா அனா அவர்களே!
   'இங்ஙனக்குள்ளயே' ஓடியாடி குடித்தனம் பண்ணிக்கொண்டிருந்த எனக்கும் இப்படியொரு சூழ்நிலை அந்நியமாகவே உள்ளது! நமது நண்பர்களுடன் சிறிதுநேரம் பேசுவதற்குக்கூட இயலாத நிலை! ( மன்னிச்சூ நண்பர்களே)
   சென்றமாதப் புத்தகங்களில் டெக்ஸ் தவிர வேறெதுவும் படிக்கவில்லை. இந்தமாதப் புத்தகங்களில் இன்னும் எதுவும் படிக்கவில்லை.
   இன்னும் கொஞ்சநாளில் நிலைமை சீரடையலாம். காத்திருக்கிறேன்....

   வணக்கம் M.V சார்! அடுத்தவாரத்தின் இறுதியில், முடிந்தால் நேரில் சந்திப்போம்!

   Delete
  5. இதுவும் கடந்து போகும்

   விஜய் அவர்களே

   எல்லாம் கொஞ்ச நாடகளுக்குத்தான் :)
   .

   Delete
 39. புதிய வருடத்தின் முதல் வரவை நான் ஷெல்டனோடு கொண்டாடுவதில் எனக்கு பெருமிதமே.அட்டைபடமே அணல்பறக்கிறது.

  ReplyDelete
 40. டெக்ஸ் அட்டை படம் நம்ம ஓவியரின் தயாரிப்பா ?
  சும்மா பட்டைய கிலப்புது.

  நானும் சந்தா புதுப்பிச்சாச்சி, so waiting

  ReplyDelete
  Replies
  1. V Karthikeyan : Yes...நல்லதொரு black & white ஒரிஜினலைக் கொண்டு நமது ஓவியர் உருவாக்கிய சித்திரமே இது !

   Delete
 41. எனது ரசனையில் சாகாவரத்தின் சாவி மூன்றாம் உலகத்தை விட அதிகம் விருப்ப பட காரணம் அதன் (இயல்பான அதிக வசனம் இல்லாத) மொழி பெயர்ப்பு. மற்றபடி இரண்டு இதழ்களும் ஒன்றுகொன்று சளைத்தவை இல்லை.

  ReplyDelete
  Replies
  1. Parani from Bangalore : இயல்பாய் எழுதுவதற்கும் ; வசனம் மிகுந்திருப்பதற்கும் துளித் தொடர்பும் கிடையாது சார் ! இயல்பாய் எழுதுவது ஒரு பாணி ; வசன மிகுதி ஒரிஜினல்களைச் சார்ந்ததொரு விஷயம் ! ஒரிஜினலிலேயே வசனங்கள் மிகுந்திருக்கும் போது அவற்றை தமிழாக்கத்தில் கத்திரி போடுவதில்லை ! So "வசனம் மிகுந்திருப்பதும் " ; இல்லாதிருப்பதும் என்றைக்குமே நம் கைகளில் கிடையாது !

   Delete
 42. சூ மந்திரி காலி - அட்டை படம் வண்ணமயமாக உள்ளது. குழந்தைகளை இது போன்ற அட்டைபடம் கவரும். குழந்தையின் குதுகுலாதுடன் இவரை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன். புது வருடத்தில் ஆர்வமுடன் படிக்க உள்ள கதைகளில் முதல் இடம் நமது மந்திரிக்குதான்!

  ReplyDelete
 43. Mr. Editor,
  You saved my sleep last night by up updating your blog well in time. Many comics lovers are happy with your "welcome move". Keep it up! Welcome to New Year titles with Superb cover pages!

  ReplyDelete
  Replies
  1. Loknath : தப்பியது எனது தூக்கமும் கூட !!

   Delete
 44. மதிப்பெண்களை பார்க்கும் போது ஆண்டின் முதற் பாதியே உங்களுக்கு அதிகம் பிடித்துள்ளது போல சார்....
  டெக்ஸ் அட்டைப்படம் மிகப்பிரமாதம் சார்... சட்டத்திற்கொரு சவக்குழி- எக்ஸலன்ட் டைட்டில் சார் .. ஆனால் ஓவியங்கள் மீண்டும் அந்த பெரியப்பா டெக்ஸ் பாணியில் உள்ளதே, சற்று கலக்கத்தை தருகிறது சார்...
  நியூஇயர் ஸ்பெஷல் பதிவில்,இதழ்கள் வெளியாகும் தேதி அறிவீப்பீர்களா சார்??... மேக்ஸி சாகசம்னாலே ஏதாவதொரு வித்தியாசமான கவரும் அம்சம் இருக்கும், இதில் என்ன ? அது என ---இப்போதே பரபரப்பாக உள்ளது சார்!!!!!......

  ReplyDelete
  Replies
  1. சேலம் Tex விஜயராகவன் : கவலை வேண்டாம் - இந்த இதழின் சித்திரங்களில் டெக்ஸ் - டெக்சாகவே தோற்றம் தருவார் ! And புத்தாண்டுக்கு இதழ்கள் உங்கள் கைகளில் இருந்திடும் !

   Delete
  2. ///கவலை வேண்டாம் - இந்த இதழின் சித்திரங்களில் டெக்ஸ் - டெக்சாகவே தோற்றம் தருவார்///---கண்ணா லட்டு திண்ண ஆசையா...
   ///புத்தாண்டுக்கு இதழ்கள் உங்கள் கைகளில் இருந்திடும் !///---கண்ணா 2வதுலட்டும் திண்ண ஆசையா...
   சூப்பர் தகவல் சார், இப்பவே புத்தாண்டு வந்த மாதிரிதான் சார்...

   Delete
 45. இந்த வலைபதிவு உங்களுக்கு ஒரு அங்கமாகி போனது போன்றே எங்களுக்கும் அதே போன்று தான் எனில் கண்டிப்பாக மிகையில்லை சார் ....ஆரம்பத்தில் பல தினங்களில் பதிவு வரும் பொழுது ஒவ்வொரு நாளும் எழுந்தவுடன் புது பதிவு வந்து விட்டதா என்று ஆர்வத்துடன் தேடியது போல இப்போது ஞாயிறு தோறும் என்று மாறிய பின்னர் ஞாயிறு தோறும் எழுந்தவுடன் இந்த வலைபதிவை காண்பதே முதல் வேளையாகி போனது ஒன்றே போதுமானது இந்த வலைபக்கத்தின் தாக்கம் ...ஜூ .எடி அவர்களுக்கு மீண்டும் ஒரு நன்றிகள் .....

  ReplyDelete
 46. வாவ் ....டெக்ஸ் முதல் இதழ் அட்டைபடமே பட்டைய கிளப்புகிறது ...செம கலக்கல் ....அட்டைபடத்தின் மேலே இருக்கும் டெக்ஸ் என்ற பெரிய எழுத்து ஒவ்வொரு சந்தா B டெக்ஸ் கதைகளிலும் இருக்குமாறு அமையுங்கள் சார் ...காரணம் எங்களை பொறுத்தவரை அது டெக்ஸ் காமிக்ஸ் தான் ....

  ஷெல்டன் அட்டை படம் ...மதியில்லா மந்திரி அட்டை படங்களும் அருமை ...புத்தாண்டில் வரும் மூன்று +ஒன்று அனைத்து இதழ்களுமே ஆவலை தூண்ட கூடியவையாக உள்ளது ...தயவுசெய்து புத்தாண்டில் எங்கள் கைகளில் இருக்குமாறு செய்தால் புத்தாண்டு காமிக்ஸ் ரசிகர்களுக்கு புத்தாண்டாகவே காணப்படும் ...ஆவண செய்யுங்கள் சார் ....

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் மேலே பாரு கண்ணா....(சூப்பர் ஸஸ்டார் ஸ்டைலில் படிக்கவும்)

   Delete
 47. சார் 3 அட்டைபடங்களுமே அதகளம் ...டெக்ஸ் ,ஷெல்டன் யப்பா...புத்தாண்டு அருமையாக துவங்கப் போவது உறுதி. ௐரே வருத்தம் ஊதாப் பொடியர்கள் இல்லை என்ற கவருத்தம் தவிர குறையேதுமில்லை மறைமூர்த்தி கண்ணா....ஷெல்டனில் இறந்த ஒருவரின் மறுவருகையோ...

  ReplyDelete
 48. அட்டை படங்கள் அனைத்தும் அருமை ஆசிரியரே,எனக்கு தெரிந்து மதியில்லா மந்திரியார் இதுவரை சொதப்பியதாக தெரியவில்லை.இதுவும் அப்படியே அமையும்,கிச்சு கிச்சு மூட்டும் நகைச்சுவைக்கு ம.ம உத்திரவாதம் அளிப்பார்.

  ReplyDelete
 49. ஆண்டின் துவக்கம் அருமையான இதழ்களோடு அமைவது மகிழ்ச்சி.
  ஷெல்டன் வழக்கம்போல் அசத்துவார்,
  டெக்ஸ் பற்றி சொல்லவே தேவை இல்லை,எவர்கிரீன் நாயகர்,தல அட்டையில் அசத்துகிறார்.

  ReplyDelete
 50. இதழ்கள் பழுதில்லா வகையில் பார்த்து கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து அனுப்புவீர்கள் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 51. சென்னை பொங்கல் புத்தகத் திருவிழா 2016
  சென்னை பொங்கல் புத்தகத் திருவிழா 2016 வருகின்ற ஜனவரி 13 முதல் 24 வரை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 200க்கும் மேற்பட்ட அரங்கு அமைப்புடன் கருத்தரங்கம், கவியரங்க்ம், நூல் வெளியீடுகள், எழுத்தாளர் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடத்த தமிழ்நூல் மேம்பாட்டுக் குழுமம் முடிவு செய்துள்ளது.
  ///

  ReplyDelete
  Replies
  1. இந்த புத்தக திருவிழிவில் நமது லயன் காமிக்ஸ் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டா சார்

   Delete
  2. அப்ப ஏப்ரலில் புத்தக திருவிழா கிடையாதா நண்பரே.

   Delete
  3. அதுவும் உண்டு சார்

   Delete
 52. ஜூலியாவை வேண்டுமானால் காத்திருப்போர் பட்டியலில் போட்டு விட்டு,முடிந்தால் இளவரசிக்கு இன்னும் ஒரு வாய்ப்பை தரலாமே.

  ReplyDelete
  Replies
  1. அப்பாடா! அடுத்த தலைமுறைக்கு ஒரு தலைவர் கிடைத்துவிட்டார்.!
   +1

   Delete
  2. ஒவ்வொரு வாரமும் எம்.வி.சாரோடு ஒரே நகைச்சுவைதான் போங்கள்!

   Delete
 53. அந்த டெக்ஸ்சின் ஒரு நாயகன் ஒரு சகாப்தம் என்று நினைக்கிறேன்,அது என்னதான் ஆச்சி ஆசிரியரே?

  ReplyDelete
  Replies
  1. சந்தா zல் என ஏற்கனவே அறிவிப்பு வந்தது நண்பரே...

   Delete
  2. தகவலுக்கு நன்றி டெக்ஸ்.

   Delete
 54. 2015ன் மறக்க இயலா highlight நமது சிறப்பிதழ்களே!! ‘மின்னும் மரணம்‘ தொடங்கி; லயன் 250; முத்து 350 என ஒவ்வொரு ஸ்பெஷல் இதழும் மறக்க இயலா வெற்றிகளை ஈட்டித் தந்த அதிரடிகள் !!


  #########


  அப்படி இருந்தும் 2016ல் அப்படி பட்ட மலர் இதழ்கள் இல்லாது போவது வருத்தமே ....என்னதான் 250....350.....என்கிற சிறப்பு வெளியீட்டு எண்கள் இல்லை எனினும் கோடைமலர் ...தீபாவளி மலர் போன்ற சமயங்களில் இது போன்ற மெகா புத்தகங்களை இந்த முறையும் களம் இறக்கியிருந்தால் பட்டையை கிளப்பி இருக்கும் ....;-((

  ReplyDelete
  Replies
  1. கதம்ப குண்டு வேண்டும்

   Delete
 55. ஆசிரியர் சார் ....


  நீங்கள் குறைவான மதிப்பெண் அளித்த மாடஸ்தி ....ரோஜர் .....ரிப்போர்ட்டர் ஜானி ஆகியோரின் சாகஸங்கள் என்னை பொறுத்த வரை பாஸ் மார்க்கிற்கும் கொஞ்சம் அதிகமாகவே திருப்தி செய்துள்ளது ....;-((

  ReplyDelete
 56. அருமையான

  திரும்பி பார்க்க வைத்த

  அழகான விமரிசனங்கள்

  அதுவும் உங்களோட எழுத்தாற்றலுடன்

  பொசுக்குன்னு முடிச்சிட்டீங்களோன்னு தோணுது

  அசத்தல் விஜயன் சார் :)
  .

  ReplyDelete
 57. மஞ்சள் நிழல்
  மோசமென சொல்லுமளவுக்கு இல்லை

  ஒரு சில லாஜிக் மீறல்களை தவிர்த்து :)
  .

  ReplyDelete
 58. //And புத்தாண்டுக்கு இதழ்கள் உங்கள் கைகளில் இருந்திடும் !//

  சார், இந்த மாத இதழ்களை (மட்டும்) எனது திருப்பூர் முகவரிக்கு அனுப்ப இயலுமா ?

  ReplyDelete
 59. // 2015-ன் ஒரு சத்தமிலா நாயகன் நமது டிசைனர் பொன்னனும் கூட!இந்தாண்டின் அட்டைப்படத் தரங்களில் நிஜமாக நானொரு உயரே செல்லும் கிராபைப் பார்த்திட்டேன்! பணிகளை முடித்து வாங்குவதற்குள், ஒவ்வொரு மாதமும் சந்நியாசம் ஒரு பிரமாதமான option ஆக நமக்குத் தோன்றத் தான் செய்தது என்றாலும் – ராப்பர்களைப் பார்க்கும் போது அந்த உஷ்ணம் மட்டுப்பட்டுப் போனது நிஜமே!//


  உண்மை உண்மை எடிட் சார் !
  ஆனா (ஆவன்னா இல்ல ) நாம இந்த வருடம் mostly ஒரிஜினல் புத்தகத்தின் பட்டி டிங்கரிங் தான செய்தோம் ?இருபினும் கலர் combination border இல்லாத அட்டை படம் என கலக்கள் வருடம் தான் !

  ReplyDelete
 60. //Vijayan27 "மார்க் போடும் படலத்தை" ரசிகனாக மட்டுமே அணுகியிருப்பினும், மார்கழியின் பனி வேளையினில் அந்த எடிட்டர் குல்லா சத்தமின்றி சிரமேறி விடுவதைத் தவிர்க்க இயலவில்லை ! நிறைய எதிர்பார்ப்புகளோடு ஒரு கதையைத் தேர்வு செய்து விட்டு, அது சற்றே நொண்டியடிப்பதைப் பார்க்கும் போது ஏமாற்றத்தின் அளவுகோல்கள் ரசிகனை விட எடிட்டருக்கு ஜாஸ்தி என்று சொல்லத் தோன்றுகிறது ! //


  2015 பென்சர் தவிர்த்து மற்ற அணைத்து கி நா வும் என்னை, "என்ன எடிட் இப்படிபன்ரீங்களே .... " movementக்கு கொண்டு சென்றது.


  //ஆண்டின் இறுதி இதழான ‘பாதைகளும்... பயணங்களும்..!‘ சீக்கிரமாய் மறக்க வேண்டியதொரு இதழ் என்பதில் ஐயமில்லை! //

  காத்திருந்து பில்ட்ஆப் எல்லாம் (எனக்குள்ளையே ex : முதல் புத்தகத்தை மீண்டும் படித்து ) முடித்து 3ம் பாகத்தை படித்து ........... மீதி உங்களுக்கே தெரியும் எடிட் சார்.கதை சொதப்பி விட்டார்கள் அனால் நாமும் மொழிபெயர்ப்பில் மிகவும் சொதப்பி விட்டோமோ என்ற ஓரு தோன்றல் எனக்கு.

  ReplyDelete
 61. டெக்ஸ் அட்டைபடம் அசத்தல் ரகம். சார், டிசர்ட் உன்உதானே? வீட்டில் பெருமையாக சொல்லி வைத்துள்ளேன்! :)

  ReplyDelete
 62. டெக்ஸ்வில்லா் அட்னடபடம் அல்லுது. நான் சந்தா கட்டிவிட்டேன்.தல பொங்கலுக்கு காத்துள்ளோம்.
  சந்தா z எப்ப? ஆவலாக உள்ளது.

  ReplyDelete
 63. டெக்ஸ்வில்லா் அட்னடபடம் அல்லுது. நான் சந்தா கட்டிவிட்டேன்.தல பொங்கலுக்கு காத்துள்ளோம்.
  சந்தா z எப்ப? ஆவலாக உள்ளது.

  ReplyDelete
 64. ஒரு காமிக்ஸ் பண்றதுக்கு முன்னாடி, கதையை ஒரு ஸ்கிரிப்ட் எழுதுவாங்க..!

  அந்த ஸ்கிரிப்டை தமிழாக்கப்பட்டா எப்படியிருக்கும்...???

  அதுவும்கூட ஒரு கிராபிக்ஸ் நாவலுக்கு பண்ணினா...???

  அதுவும்கூட போர் சம்மந்தப்பட்ட கதைக்கு பண்ணினா...???

  அதுவும்கூட ஒரு சிப்பாயின் சுவடுகளுக்கு பண்ணினா...???

  அப்படி ஒரு முயற்சியை 'கோடையிடி' கிட் ஆர்ட்டின் கண்ணன் அவர்கள் பண்ணினா...???

  அதை பார்க்க இதோ...இங்கே'கிளிக்'

  ReplyDelete
 65. ‘கறுப்பு விதவை‘ கதையினைச் சேதாரமின்றி தமிழாக்கம் செய்வதற்குள் திருவாளர் நாக்கார் தரையில் போர்வெல்லே போட்டு முடித்திருந்தார்! நா கூசும் விரசமான ஆங்கில வசனங்களும்; சித்திரங்களும் முன்னிருக்க ...........

  திறமையான சிற்பி சார் நீங்கள் .....  ReplyDelete
 66. வர்ராருய்யா நிஜ மந்திரி ............வாவ்வ்வ்வ்

  ReplyDelete
 67. J k'ன் 2015
  டாப் 3:மிண்ணும் மரணம்,ஆதலினால் காதல் கொள்ளாதீர்,
  தோர்கல்.
  டாப் மொக்கை 3:நிழலோடு நிஜயுத்தம்,டாலர் ராஜ்ஜியம்,அம்பின் பாதையில்,
  பெஸ்ட் அட்டைப்படம்:ஏறத்தாழ அனைத்தும்
  வொர்ஸ்ட் அட்டைப்படம்;
  மிண்ணும்மரணம்.

  மரக்கஇயலாத்தருணம்:மிண்ணும்மரணம் வெளியீட்டு விழா.
  முத்திரை பதித்த நாயகர்:தோர்கல். பௌண்சர்.
  ஏமாற்றம்மளித்த இதழ்;மாறிப்போன மாப்பிள்ளை.
  கௌபாய்க்கதைகள்;O k
  பெஸ்ட் அறிமுகம்:பௌண்சர்.
  குறை:சிக்பில் கதை குறைவு.
  2015-ஓவர் ஆல் அனுபவம்:Good.

  ReplyDelete
 68. This comment has been removed by the author.

  ReplyDelete
 69. .புத்தாண்டு சிறப்பு பதிவு உண்டா சார்...?

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக .......   இருந்தால் கொண்டாட்டமாக இருக்கும் சார் ...

   மறவாமல் புத்தாண்டை கொண்டாட இங்கே வந்து விடுங்கள் சார் ...


   ப்ளீஸ் .....

   Delete
 70. எடி சார், தமிழ்நாடு நூல் விற்பனை மேம்பாட்டு கழகத்தின் சார்பாக புத்தக திருவிழா சென்னையில் ஜனவரி 13முதல் 24 வரை YMCA மைதானத்தில் நடைபெறுகிறது. கலந்து கொள்ள முடியுமா சார்

  ReplyDelete
 71. நண்பர்களே,
  'ஒரு சிப்பாயின் சுவடுகளில்' கி.நா பற்றிய லேட்டஸ்ட்(!) விமர்சனத்துடன் உங்களைச் சந்திக்க நமது கிட்ஆர்ட்டின் கண்ணனும், டெக்ஸ் விஜயராகவனும் "இங்கே" காத்திருக்கிறார்கள்... ஃப்ரீயா இருந்தா அப்படியே ஒரு விசிட் அடியுங்களேன்!
  ( சற்றே தாமதமான தகவலுக்கு மன்னிக்கவும் நண்பர்களே!)

  ReplyDelete
  Replies
  1. Erode VIJAY @ மாயாவி சிவா இது பற்றி நேற்று இங்கு லிங்க் கொடுத்துவிட்டார் (mayavi. siva28 December 2015 at 11:37:00 GMT+5:30). :-)

   Delete
  2. ஈரோடு விஜய்.!

   கிட் ஆர்ட்டின் கண்ணன் அவர்களின் ஒ.சி.சு.கதையின் கதை சுருக்கம் & விளக்கம் படித்தவுடன்.,வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கமல் , ஹாஸ்பிட்டலில் தாடி மீசையுடன் வருடக்கணக்கில் கோமோ ஸ்டேஜ்ஜில் உணர்ச்சிகள் அற்று இருக்கும் நபரை (சப்ஜக்ட்) க்ளைமேக்ஸில் தாடி மீசை &ஹேர்கட் செய்து டிப்டாப் ஆசாமியாக அடையாளமே தெரியாமல் ஆச்சர்யபடும்படி காட்டுவார்களே அதைப்போன்று இருந்தது.சுருக்கமாக சொல்வதென்றால் கறுத்துப்போன பித்தளை பாத்திரத்தை புளி தேய்த்து விலக்கியது போல் தற்போது பளபளவென்று கதையின் அழகு தெரிகிறது.மிக்க நன்றி.!

   Delete
  3. ///கறுத்துப்போன பித்தளை பாத்திரத்தை புளி தேய்த்து விலக்கியது போல் தற்போது பளபளவென்று ///

   பித்தளை பாத்திரம் மட்டுமல்ல., எவர்சில்வர் பாத்திரங்களையும் தினமும் விளக்கும் அனுபவமே இங்கு கைகொடுத்தது MV அவர்களே.!!! :)

   Delete
  4. ஹா...ஹா....ஹா.....:-))))))

   Delete
 72. ஈரோடு விஜய்.!

  நலமா.?நீங்கள் இல்லாமல் கலகலப்பே இல்லை.!இதே நிலை தொடருமா.? தற்காலிகமாகவா ?

  ReplyDelete
 73. ஒ.சி.சு.வெளியான சமயமே நண்பர் ப்ளேடு பீடியா கார்த்திக் இது சம்பந்தமான தொடர் பதிவுகளை அவருடைய தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்....!

  ReplyDelete
  Replies
  1. நண்பர் ஜேடராரே,இங்குள்ள பல நண்பர்களும் அதை அறிவோம், தொடர் பதிவுகள், பலப்பல கமெண்ட்ஸ்கள் என களை கட்டிய நாட்கள் அவை....
   மாயாவி சார்&நண்பர் பிளேடு கார்த்திக் ஆகியோர் எழதிய பதிவுகள் கி.நா.வை " படித்து ரசித்து மகிழ்ந்த" கி.நா.ரசிகர்களுக்கு மட்டும் எழதியது......
   இது என்னைப்போன்ற கி.நா.ரசிகர்கள் அல்லாதோர்கள்,குத்துமதிப்பா படித்தவர்கள், என்னைப்போல புரியவில்லை என சொன்னால் மேலும் கீழும் பார்ப்பார்களோ என மவுனமாக உள்ளவர்களுக்காக எழதியது..
   முக்கியமாக கி.நா புரியாதவங்களுக்குன்னே போட்ட பதிவி...ஹீ..ஹீ..

   Delete
 74. ஆசிரியர் சார்@ பெரும்பாலான நண்பர்களின் அலுவலகம் புத்தாண்டு அன்று விடுமுறையாக இருக்கும் சார்...
  இன்று புத்தகங்கள் அனுப்பினால் நாளை கிடைத்து விடும்,1ம்தேதி என்சாய் பண்ணுவோம் சாரா...
  வெள்ளி, சனி,ஞாயிறு பெரும்பாலும் விடுமுறை தான், நாளைக்கு அனுப்பினால் திங்கள் வரை காத்து இருக்கனும் சார்..
  ரெடியாக இருக்கும் பட்சத்தில் இன்றே அனுப்ப ஆவண செய்யுங்கள் சார்....

  ReplyDelete
  Replies
  1. மேலும் நாளை இரவு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆட்டம் போட்டு விட்டு, வெள்ளிக்கிழமை காலை,....எங்களை எழ வைக்க
   உங்கள் புத்தாண்டு பதிவால் மட்டுமே இயலும் சார்...

   Delete
  2. @சேலம் டெக்ஸ்

   பழுப்புதங்கம் பார்சலில் கிளம்பிவிட்டதாம்..! நாளை நம்மை வந்தடைந்துவிடும், கொண்டாடத்துக்கு தயாராகுங்கள் நண்பர்களே..!

   Delete
  3. வாவ்..வாவ்...சூப்பர் தகவலுக்கு 2016 நன்றிகள் மாயாவி சார்...
   Hai everybody wish u happy newuu year....என

   Delete
  4. ...என்ற கமல் பாட்டை கேட்டுக்கோங்க நண்பர்களே....

   Delete
 75. Mr. Editor,

  Special posting by 31st with announcement of books dispatch will make every body happy.
  if you could post today with the message all will be very happy to welcome the New Year with new titles.
  We expect special announcements too!

  ReplyDelete
 76. Hello Editor sir,
  I hope the Jan issues will be despatched only on tomorrow. So sad, I will be out of station for two days. Yenna koduma sir??!!!

  ReplyDelete
 77. புத்தாண்டு பதிவை ஆவலுடன் எதிர் பார்கிறேன்.. ஆர்வத்தின்மிகுதியில் நாளைய பதிவின் தலைப்பு என்னவாக இருக்கும் என யோசித்ததில் - பதிவில்லாத புத்தாண்டா / வருக புத்தாண்டே - 2016 / புத்தாண்டு அமர்க்களம்

  ReplyDelete
 78. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!!!! :)

  ReplyDelete