Powered By Blogger

Sunday, December 20, 2015

"தி.பா." படலம் - 2 !


நண்பர்களே,
            
வணக்கம். ‘The Year in Reviewஎன கடந்து சென்றுள்ள 2015-ன் வெளியீடுகளை நாமே ஒரு சுய விமர்சனம் செய்திடும் முயற்சி இது! கடந்த வாரமே இதன் முதல் பகுதி துவங்கியிருந்ததால் புதிதாய்ப் படிக்க நேரிடும் வாசகர்கள் (மட்டும்) அங்கிருந்து ஆரம்பித்திடக் கோருகிறேன்!

மின்னும் மரணம் பல வகைகளில் ஒரு நிச்சயிக்கப்பட்ட வெற்றி என்ற உறுதியிருப்பினும் எனக்குள்ளே அதன் பொருட்டு இருந்த கலக்கங்களும் ஏராளம்! 'தெரிந்த கதை தான் பல முறைகள் படித்தான சாகஸம் தான்' எனும் போது அத்தனை தடிமனான புத்தகத்தின் முழுமையையும் நீங்கள் மறுவாசிப்பு செய்திடத் தயாராக இருப்பீர்களா? அல்லது இது உங்களது புத்தக அலமாரிகளை நடுநாயகமாய் அலங்கரிக்கப் போகுமொரு காகிதப் பூவாக மாத்திரம் இருந்திடுமா? என்ற கலக்கம் பிரதானமெனில் Arizona Love’ பாகத்தில் டைகர் வாங்கும் பல்புகளை நீங்கள் எவ்விதம் ஏற்றுக் கொள்வீர்களோ ? என்ற கவலை இன்னொரு பக்கமிருந்தது! அப்புறம் தயாரிப்பில் அச்சில் அட்டைப்பட அமைப்பில் என எல்லா இடங்களிலுமே ‘ஸ்கோர்‘ செய்யாது போயின் ஏமாற்றங்கள் தலைதூக்கி விடுமே என்ற ஆதங்கமும்! Yes of course – அட்டைப்படம் பிடிக்கலை!‘ என்று சில நண்பர்களின் குரல் ஒலிக்காதில்லை; but கடவுள் புண்ணியத்தில் அந்த எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது! “வசனம் ஓவர்... படங்களை மறைத்துக் கொண்டு வண்டி வண்டியாய் எழுத்துக்கள்“ என்ற ரீதியில் சில random  எண்ணச் சிதறல்களும் இருந்த போதிலும் அவற்றில் காலணாவிற்கு merit கிடையாதென்பதை எழுதியிருந்த நண்பர்களே புரியாதிருக்க மாட்டார்கள்! ஒரிஜினலின் பிரதிகளை பிரெஞ்சிலோ; ஆங்கிலத்திலோ பார்த்திருக்கக் கூடிய அனைவருக்கும் ‘வசன மிகுதி‘ இந்த சாகஸத்தின் ஒரு தவிர்க்க இயலா அங்கமே என்று புரிந்திருக்கும்! So- ஒரு வழியாக ‘‘மின்னும் மரணம்‘‘ அரங்கேற்றம் கண்டான போது எனக்குள் சந்தோஷம் நிரம்பியிருந்ததை விட எங்களது சின்ன டீமின் ஆற்றலை எண்ணிய மலைப்பே ஓங்கி நின்றது! கிட்டத்தட்ட 6 பேரின் டைப்செட்டிங்கில் ஆரம்பித்து அச்சு பைண்டிங் அப்புறம் உங்கள் முன்பதிவுகளைக் கூரியர் செய்தது என எண்ணற்ற கைகள் வழியாகப் பயணித்த “மின்னும் மரணம்என் career ல் ஒரு மறக்க இயலா high !

ஏப்ரலின் புயல் வேகத்தை மே மாதம் நமது புஸ்வாணங்கள் சற்றே மட்டுப்படுத்தி விட்டன என்பதை இப்போது என்னால் புரிந்து கொள்ள முடிகிறது! மர்ம மனிதன் மார்ட்டினின்கனவின் குழந்தைகள் + புது அறிமுகமான Lady Spitfire-ன் “விண்ணில் ஒரு வேங்கை வெளியான வேளை அது! மார்ட்டினின் கதைகள் என் எழுத்துக்களைப் போலவே மூக்கை ஒரு மைல் சுற்றித் தொட்டுக் காட்டும் பாணியிலானவை என்பது தெரிந்ததே! சில கதைகளின் மையங்கள் நமக்குப் புரிபட சற்றே சுலபமாக இருக்கும் வேளைகளில் அந்த சாகஸங்கள் ‘ஹிட்‘டாகி விடுவது வாடிக்கை! And சில தருணங்களில் plot ரொம்பவே complex ஆக இருந்திடும் போது நமது தலைமுடியை கொத்துக் கொத்தாய்ப் பிடித்து வேர்களின் வலிமையை நாமே பரிசோதித்துப் பார்க்கும் வேட்கை உந்தித் தள்ளலாம்! கொத்துக் கொத்தாய்ப் பிடித்து tug of war நடத்திடும் வசதியெல்லாம் என் மண்டையில் கிடையாதென்ற போதிலும் இந்த ஆல்பத்தின் எடிட்டிங் பணிகளுக்குள் தலைநுழைத்த போது தலை ரங்கராட்டினம் சுற்றியது! இண்டர்நெட்டில் ஏதேதோ தேடல்களைச் செய்து கனவின் குழந்தைகளை புரிதலின் எல்லைகளுக்குள் கொணர நான் ‘தம்‘ கட்டியது நேற்றைக்குப் போலுள்ளது! “ம்ம்ம்... புரிஞ்சா மாதிரி தான் இருக்குது... அப்புறம் லைட்டா கிறுகிறுன்னு வர்ற மாதிரியும் இருக்குது...! என்ற உங்களின் விமர்சனங்கள் said it all! வழக்கமான மார்ட்டின் பாணியிலான சித்திரங்கள்; வழக்கம் போல history + science ன் கலவை கண்ட கதைக்களம் என்று இருப்பினும் என் பார்வையில் இதற்கு 5.5/10!

விண்ணில் ஒரு வேங்கையோ அடியேன் அநேக எதிர்பார்ப்புகளோடு களமிறக்கியதொரு அறிமுகம்! யுத்த பாணிக் கதைகளுக்கொரு welcome addition ஆக இது இருந்திடுமென்று ஆழமான நம்பிக்கையோடு ஜாலியாக இந்தக் கதையை மொழிபெயர்த்த ஞாபகம் இன்னமும் உள்ளது! ஆனால் நடுமண்டையில் ‘ணங்‘ என்று நீங்கள் வைத்த குட்டில் சித்த நேரம் எதுவும் புலப்படவில்லை! இந்தத் தொடர் நிச்சயம் வெற்றி காணுமென்று என் தலைக்குள் கிசுகிசுத்த குட்டிச் சாத்தான் எதுவோ தெரியாது அதன் நம்பிக்கையில் இந்தத் தொடரின் முதல் மூன்று கதைகளுக்கும் அப்போதே உரிமைகளை வாங்கியும் விட்டேன்! So இப்போது பாகம் 2 & 3 ‘அம்போ‘வென எனது அலமாரியில் நித்திரை கண்டு வருகின்றன! வித்தியாசமான சித்திர பாணி; dense & bright கலரிங் பாணிகள் என்ற காரணத்தினால் சற்றே வலு குறைவான கதைக்களத்தையும் மீறி 6/10 என்று மார்க் போடத் தோன்றுகிறது! Again – இது எனது பிரத்யேக அபிப்ராயம் மாத்திரமே!

மே மாதம் சுமாரான பிற்பாடு ஜுனிலும் பெரியதொரு எழுச்சிக்கு வழியில்லாது போனது! ப்ளுகோட் பட்டாளத்தின்தங்கம் தேடிய சிங்கம்+ ஜில் ஜோர்டனின் ‘துணைக்கு வந்த தொல்லை‘+ ‘விடுதலையே உன் விலையென்ன? என 3 புது இதழ்களும் வெளிவந்தன. ஜுன் 2015-ல்! ப்ளுகோட்ஸின் இந்த சாகஸமானது படைப்பாளிகளின் சிபாரிசுகளோடு வந்த கதை என்பதால் எனக்கு இதன் மீது ஏகமாய் எதிர்பார்ப்பிருந்தது! And கதையும் வழக்கமான யுத்தகள concept-லிருந்து விலகி கனடாவின் கானகத்தினுள் லயித்திருந்ததில் நிறையவே சந்தோஷம் எனக்கு! But அருமையானதொரு காமெடி அதகளத்திற்கு வாகான தளமும் கதாப்பாத்திரங்களும் இருந்தும் கூட கதையை out & out நகைச்சுவை விருந்தாக ஆக்கிடாது மெல்லிழையான சீரியஸ்னஸ் கலந்தே படைப்பாளிகள் நகற்றியிருப்பது போல எனக்குப் பட்டது! And உங்களில் பலரும் அதே எண்ணத்தைப் பிரதிபலித்திருந்தீர்கள்! But still – எனது பார்வையில் 7/10 பெற்ற சாகஸமிது! இன்னும் கொஞ்சம் முயன்றிருந்தால் இதுவொரு 10/10 கதையாகியிருக்கக் கூடுமே என்ற ஆதங்கம் தான் எனக்குள்!

ஜில் ஜோர்டனின்துணைக்கு வந்த தொல்லையும் ஒரு சிம்பிளான யோக்கியமான துப்பறியும் நாயகரின் ஆக்ஷன் த்ரில்லர் (!!!) என்பதில் ஐயமில்லை! But இங்கேயும் கூட நகைச்சுவையா? அதிரடியா? என்ற கேள்விக்குறியோடே படைப்பாளிகள் பயணித்திருப்பது போலப்பட்டது! இயன்ற இடங்களிலெல்லாம் காமெடி வசனங்களை நான் இடைச்செருகலாக்கினாலும் அடிப்படையில் இதுவொரு சிம்பிளான கதை என்பதை மாற்ற இயலாதென்பதை அனுபவத்தில் உணர்ந்தேன்! அழகான அச்சு; வர்ணங்கள் என்று இருந்தாலும் 5.5/10 தான் இதற்கொரு சரியான rating என்று நினைத்தேன்!
 கழுவிக் கழுவிக் காக்காய்க்கு ஊற்றப்பட்ட சாகஸமென பெயர் பெற்றது விடுதலையே உன் விலையென்ன? தான்! ‘விடுதலை‘ என்ற concept-ல் உருவாக்கப்பட்ட தொடரின் கதை # 7 இது! பிரெஞ்சு ஆல்பத்தின் முன்னோட்டத்தையும், கதைச் சுருக்கத்தையும் படிக்க முடிந்த போது இதுவொரு சூப்பர் டூப்பர் கிராபிக் நாவலாக அமைந்திடுமென்று எனக்குப் பட்டது! கதைக்களமும நாம் இதுவரை ரசித்திரா ரஷ்ய பனி மண்டலம் எனும் போது விறுவிறுப்பிற்குப் பஞ்சமேயிராது என்று நினைத்து வைத்தேன்! பற்றாக்குறைக்கு நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரிடம் ‘கதை எப்படியிருக்கு மேடம்?‘ என்று கேட்டிருந்த போது Quite decent!’ என்று சொல்லியிருந்ததில் எனக்குள் நிரம்ப நம்பிக்கை! ஆனால் கருணையானந்தம் அவர்கள் தமிழில் எழுதியிருந்த ஸ்கிரிப்டைக் கொண்டு டைப்செட்டிங் செய்தான பின்பு first copy என் மேஜைக்கு வந்த போது சின்ன வயதில் நாங்களாகச் செய்ய முயற்சித்த மைசூர்பாகு தான் நினைவுக்கு வந்தது! கட்டியும் ஆகாமல்; தண்ணீராகவும் இல்லாமல் தோராயமாய் கேப்பைக் களி போல காட்சி தந்த அந்த மைசூர்பாகு தான் என் மனக்கண்ணில் மாறி மாறி ஓடிக் கொண்டிருந்தது இந்த கிராபிக் நாவலைப் புரட்டப் புரட்ட! ‘டில்மான் ராசைன்‘ என்று ஒரு ராபின் ஹுட் மாதிரியான ஆசாமி க்ளைமேக்ஸில் ‘திடும்‘ பிரவேசம் செய்வான் போலும் என்ற நம்பிக்கையோடே நான் காத்திருக்க ‘சுபம்‘ என்று போட்டிருப்பதைப் பார்த்த போது என் வயிறு கலங்கித் தான் போனது! கதையின் புரிதலுக்கு உதவிட என்னாலான சகலத்தையும் செய்தான பின்பு கூட ‘விறுவிறுப்பு‘ என்ற விஷயம் வீசம்படிக்குக் கூடயில்லை என்பதை மறுக்க இயலவில்லை; And நீங்கள் மொத்தித் தள்ளிய போது ‘குத்துங்க எசமான்... குத்துங்க‘ என்று ஒத்துக் கொள்ளத் தான் தோன்றியது! 4.5/10!

ஜுனின் சொதப்பல்களை ஒற்றை நொடியில் பரணுக்கு அனுப்பிடும் புண்ணியம் நமது காமிக்ஸ் தலைமகன் டெக்ஸ் வில்லருக்கு மாத்திரமே சாத்தியமாகியிருக்கக் கூடும்! And அவர் அதைக் கனகச்சிதமாகச் செய்தும் தந்தார்! The Lion 250! அதிரடியாய் மூன்று வெவ்வேறு நீளங்களிலான வர்ண டெக்ஸ் சாகஸங்கள் ஒரு இதழில் என்பதை அறிவித்த சமயமே இது ஒரு winning குதிரை என்பதில் எனக்கு ஐயமிருக்கவில்லை! ஆனால் கதைளுக்குள் இயன்றளவு வேறுபாடு காட்ட வேண்டும் என்பதோடு முழுக்க முழுக்க வர்ணமயமான இதழ் எனும் போது புராதன டெக்ஸ் கதைகளையாகத் தேர்வு செய்திடாது புது யுக கலரிங் பாணிகளுடனான சாகஸங்களை மட்டுமே pick செய்திடுவதில் தீவிரமாக இருந்தேன்! ஓக்லஹோமா‘ கதைக்கு ‘டிக்‘ அடிப்பதில் அதிக நேரத்தை நான் வீண் பண்ணவில்லை – simply becos ‘மேக்ஸி‘ டெக்ஸ் கதைவரிசையின் பிள்ளையார்சுழியே இது தான்! So அதன் கதைக்களத்தில் நமக்கு நிச்சயமாய் திகட்டலிராது என்று நம்பினேன்! And முக்கியமாக – வர்ண பாணிகளும் அழகாக இருந்ததால் – thumbs up தந்திட சிரமம் இருக்கவில்லை! இரண்டாம் சாகஸமான ‘பிரம்மன் மறந்த பிரதேசம்‘ தான் என்னை நிறையவே தோண்டித், துருவச் செய்திருந்தது! இன்டர்நெட்டில் ஆராய்ச்சி; இத்தாலிய நண்பர்கள் சிலரிடம் கோரிப் பெற்ற சிபாரிசுகள் என்றெல்லாம் நிறைய நேரம் செலவிட்டான பின்னே இதனில் freeze ஆனேன்! தமிழ் சினிமாக்கள் பாணியிலான முக்கோணக் காதல் ஆங்கிள் நமது டெக்ஸ் கதைகளுக்குப் புதுசு என்றும் எனக்குப் பட்டது! ‘முகமில்லா மரணதூதன்‘ சிரமம் அதிகமில்லாது ‘டக்‘கென்று டிக்கான சாகஸம்! தற்போதை டெக்ஸ் எடிட்டர் திரு.மௌரோ போசெல்லியின் வெகு சமீபத்தைய படைப்பு என்பதோடு – தாட்டியனமானதொரு வில்லனும் இருந்ததால் இந்த 110 பக்கக் கதைக்கு இசைவு சொல்வதில் சிரமம் எழுந்திடவில்லை!

சொல்லப் போனால் – ‘The Lion 250’ ன் தயாரிப்பினில் எந்தவொரு கட்டத்திலும் பெரிதாய்  சிரமங்கள் அதிகம் தலைதூக்கவேயில்லை என்பது தான் நிஜம்! ‘பிரம்மன் மறந்த பிரதேசத்தினில்‘ டெக்ஸுக்கும், கார்சனுக்கும் ‘பன்ச்‘ டயலாக் எழுதிட ஏகமாய் வாய்ப்புகள் சிதறிக் கிடந்தபடியால் அவற்றிற்கு மட்டுமே சில பல இரவுகளில் கண்விழித்துப் பணி செய்தது நினைவுள்ளது! மற்றபடிக்கு இதழின் தயாரிப்பின் பெரும்பகுதிக்கு smooth sailing தான்! And அச்சிலும் அட்டகாசமாய்  பணியான பின்பு – இந்த இதழுக்கொரு சிகப்புக் கம்பள வரவேற்பு உத்தரவாதம் என்று பட்சி காதில் சொல்லியது! நெய்வேலி புத்தக விழாவினில் நமக்கு ஸ்டால் கிடைத்திருக்கும் பட்சத்தில் இந்த இதழின் வெளியீட்டை அங்கே கொண்டிருக்கலாம் என நான் எண்ணியிருந்தேன்! ஆனால் ‘ஸ்டால் நஹி! ஜாவ்... ஜாவ்...!‘ என்று நிலக்கரி நகரம் சொல்லியான பின்பு – அதிரடியானதொரு இதழ் சாதுவாய் கூரியர் பயணங்களைத் துவக்குவது தான் விதியானது! என் பார்வையில் 8.5/10 பெறும் இதழ்! And – வெளியான பின்பு உங்களிடம் அற்புத வரவேற்பு பெற்றது மட்டுமன்றி – ஆன்லைனில் சகட்டுமேனிக்கு விற்பனையும் கண்ட இதழிது! So- 2015-ன் மறக்க இயலா வேளைகளுள் ஜுலையும் முக்கிய இடம் கொண்டிருக்கும்!

ஆகஸ்ட் என்றாலே ‘அதகளம்‘ என்றாகிப் போய் விட்டது சமீப ஆண்டுகளில் – ஈரோட்டுப் புத்தகத் திருவிழாவின் காரணத்தினாலும்; அது சமயம் அரங்கேறும் நண்பர்கள் சந்திப்பின் காரணத்தினாலும்! And இம்முறை நமது முத்துவின் இதழ் # 350ம் CCC வடிவத்தில் வெளியாகிட – உற்சாகம் உச்சத்தைத் தொட்ட வேளையது! அட்டவணையில் அவசியமான பட்டி-டிங்கரிங்கின் பொருட்டு புதுமுகங்களாய் உள்ளே புக வாய்ப்புக் கிட்டியது நமது காமெடி கர்னலுக்கும், லியனார்டோ தாத்தாவுக்கும்!

·        கர்னல் க்ளிப்டன்
·        சிக் பில்
·        ஊதாப் பொடியர்கள்
·        லியனார்டோ

என்று நான்வகை காமெடி சூரர்கள் ஒரே மாதத்தில் – 4 தனித்தனி இதழ்களில் உங்களை சந்திக்கின்றனர் என்ற போது எனக்குள் ஏக குஷி! என்ன தான் லார்கோ – டெக்ஸ் – பௌன்சர் – டைகர் – XIII என்றெல்லாம் அழுத்தமான தடங்களில் வண்டி ஓட்டிச் சென்றாலும் – சுலபமான சாலையில் ஜாலியா சைக்கிள் மிதிப்பது போலான உணர்வு மேலோங்கிடும் – கார்ட்டூன் கதைகளின் வெளியீட்டு வேளைகளில்! And – 2016-ன் “கார்டூன் சந்தா” என் மண்டைக்குள் ஓரமாய் குந்திக் கிடந்த வேளையுமது! So- ஒரே மாதம் 4 கார்ட்டூன் இதழ்களைக் களமிறக்கும் போது உங்களின் response எவ்விதமிருக்குமென்பதை கண்டிட செம ஆர்வமாயிருந்தேன்! அதிலும் SMURFS high-profile அறிமுகமென்பதால் – அதற்கான வரவேற்பையும் அறிந்திட நிறைய interest என்னுள்! இவர்களது smurfy பாஷைக்கும் உங்களது reactions-ஐத் தெரிந்திடுவதில் ஆர்வமும் மேலோங்கியது!

7 நாட்களில் எமலோகம்‘ ஆட்டத்தைத் துவங்கி வைத்த சாகஸம் – நமது கேரட் மீசைக்காரரின் பெயரைச் சொல்லி! நீண்ட பெரும் இடைவெளிக்குப் பின்பாக கர்னல் க்ளிப்டன் மீள்வருகை செய்திடும் சாகஸமிது என்பதால் இதனை சுவையாக உங்களுக்குப் பரிமாறிட வேண்டுமென்ற வேகம் நிறையவே இருந்தது! And சினிபுக்ஸின் ஆங்கிலப் பதிப்பில் இதன் ஒரிஜினல் நமக்கு வழங்கப்பட்டிருந்ததால் தமிழ் மொழிபெயர்ப்புப் பணியை வேக வேகமாய் கையிலெடுத்துக் கொண்டேன்! And என்னவோ ஒரு அரைவேக்காட்டு ஆசை என்னை ஆட்டிப் படைக்க – ‘ஒரு கதையினை ஒரே நாளில் மொழிபெயர்த்திட சாத்தியமாகும் தான்!‘ என்று எனக்கு நானே நிரூபித்துக் காட்ட முயற்சித்துப் பார்த்தேன்! ஜுன் மாதத்து ஞாயிறின் காலையில் தொங்கி, அன்று மாலையே இந்த 46 பக்கக் கதையை முடித்திருந்த போது என் வலது கை விரல்கள் ஓய்ந்தே போயிருந்தன! மேலோட்டமாய் பார்க்கும் போது – கார்ட்டூன் கதைகளை எழுதுவது சுலபம் போலத் தோன்றலாம்; ஆனால் the sheer volume of the script is always huge! பக்கத்துக்கு சுமார் 12 படங்கள் – ஒவ்வொன்றிலும் ‘கெக்கே பிக்கே‘ என்று 3 பேராவது வசனம் பேசுவது எனும் போது – வண்டி வண்டியாய் பக்கங்கள் ஓடிவிடும் – மொழிபெயர்ப்பின் போது! அது மட்டுமன்றி - நகைச்சுவைக் கதைகளில், பிரேமுக்கு பிரேம் நீங்கள் சிரிப்பு வெடிகளை எதிர்பார்ப்பது இயல்பெனும் பொது எங்கேயும் லேசாக ஓய்வெடுக்க சாத்தியமிராது ! சதா நேரமும் 100% கவனத்தோடு கதையோடு ஒன்றிச் சென்றாக வேண்டியிருக்கும் ! சமீபமாய் – நமது மதியில்லா மந்திரியின் மொழிபெயர்ப்பில் இதை அனுபவ ரீதியா உணர முடிந்தது! 52 பக்கங்கள்; மொழிபெயர்க்கப்பட்ட பிற்பாடு சுமார் 58 பக்கங்கள் தேறின – புல்ஸ்கேப் பேப்பரில்! And கிளிப்டனின் கதையில் இன்னொரு சிக்கலும் கூட ! காரட் மீசைக்காரரின் கதை பாணியின் பின்னணியே பிரிட்டிஷ்காரர்களின் வறண்ட நகைச்சுவையுணர்வு  எனும் போது - அதைக் கையாள்வதும் மண்டை நோவே ! இப்போது கூட - "நில்..சிரி...திருடு.."   கதையின் 'மொழிபெயர்ப்பு மல்லுக்கட்டு; அரங்கேறி வருகிறது எனது மேஜையில் ! So கார்ட்டூன்களைக் கையாள்வது சுலபமே கிடையாது தான் – ஆனால் ஒவ்வொரு முறையும் கட்டி உருண்டேனும் அந்த சந்தோஷத்தை உணர்ந்திடுவது ஒரு அலாதி அனுபவமே!

Back on track – கர்னல் க்ளிப்டனின் கதை செம விறுவிறுப்பான plot கொண்டதென்றால் – நகைச்சுவை கலந்து சொல்லப்பட்ட பாணி உங்கள் அனைவருக்கும் பிடித்துப் போயிருந்தது! And அந்தக் குட்டிப் பூனையை நமது மீசைக்காரர் பாசத்தோடு க்ளைமேக்ஸ் வரை சுமந்து சென்ற சின்னஞ்சிறு சென்டிமெண்டும் work out ஆகிட – hit for sure! 8/10 என் பார்வையில்!

“இதுவொரு ஊதா உலகம் !” உலகப் பிரசித்தி பெற்ற Smurfs பொடியர்கள் நம் கரைகளுக்கு ஒதுங்கிட வாய்ப்புத் தந்த இதழ்! இதன் பொருட்டு நாம் தந்திருந்த பில்டப்பும் ஏகம்; படைப்பாளிகள் விதித்திருந்த நிபந்தனைகளும் அநேகம் எனும் போது – இதன் மீதான எதிர்பார்ப்புகளின் சுமை எனக்கு நன்றாகவே புலனானது! நாமும் இயன்ற நியாயங்களைச் செய்தாக வேண்டுமென்ற வேகத்தில் ஸ்மர்புகளுக்கான லோகோ டிசைனிங்மொழிபெயர்ப்பில் ஓராயிரம் முயற்சிகள் என்று தம் கட்டினோம்! இதழ் வெளியான போது நான் வெளிப் பார்வைக்கு confident ஆக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள்ளே உடுக்கடித்துக் கொண்டுதானிருந்தது! ஆனால் உங்கள் அனைவரது review களும் “அமர்க்களமான இதழ் / அறிமுகம்” என்று பறைசாற்றிய போது தான் உயிர் வந்தது எனக்கு! அதிலும் அந்த ஸ்மர்ப்களின் ‘அவுக்... அவுக்‘ அதிரடிகள் வீட்டின் குட்டீஸ்களை ரொம்பவே கவர்ந்ததாக நீங்கள் சொன்ன போது – வயிற்றில் பால் வார்த்தது போலிருந்தது! ‘இது ரொம்பவே குழந்தைத்தனமான தொடரோ?‘ என்ற கேள்வியை உங்களில் ஒரு சிலர் முன்வைத்த போதிலும் – அது ஒரு சுருக்கமான எண்ணிக்கையிலேயே தான் இருந்ததால் – 8/10 பெற்றிடும் இதழிது என் பார்வையில்!

லியனார்டோ தாத்தா – a collection of gags என்றான பிற்பாடு – அங்கும் மொழிபெயர்ப்பில் இயன்ற நகாசு வேலைகளைச் செய்து வலுவூட்ட ஆனமட்டிலும் முயன்றேன்! இது போன்ற ஒற்றைப் பக்க / இருபக்கக் குட்டிக் கார்ட்டூன்களின் தொகுப்பு நமக்கெல்லாம் புதுசு என்பதால் – லியனார்டோ நம்மை அதிரச் செய்யவுமில்லை; அழச் செய்யவுமி்ல்லை! 6/10 may be!

CCC-ன் நிச்சயிக்கப்பட்ட சொதப்பல் சிக் பில் தான் என்பதை “மாறிப் போன மாப்பிள்ளை”யை தமிழில் first copy-ல் படித்த போதே புரிந்து கொள்ள முடிந்தது! மிக average ஆன கதைக்களம்; பற்றாக்குறைக்கு பாதி நேரம் ஷெரீப் மண்டையார் நோயாளியாகக் கிடந்திடல் என கதை தள்ளாட்டம் காண்பதை கவலையோடு பார்க்கத் தான் முடிந்ததே தவிர – வேறு சிக் பில் கதைகளில் டிஜிட்டல் பைல்கள் தயாராகியிரா அந்தத் தருணத்தில் மாற்று மார்க்கம் தட்டுப்படவில்லை! அந்த நொடியில் சிக் பில்லை காவு கொடுத்து விட்டு மதியில்லா மந்திரியாரை உட்புகுத்தி விடுவோமா? என்ற எண்ணம் என்னுள் பலமாய் ஓடியது! ம.ம. கதைக்கான டிஜிட்டல் பைல்கள் அப்போதே நம்வசம் தயாராகயிருந்தன! ஆனால் – கடைசி நிமிடத்தில் இது போல மாற்றம் செய்தால் ‘அதெப்படி மாற்றப் போச்சு ?? இதை நான் மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன்!!!‘ என்ற உஷ்ணக் குரல்கள் வலையிலும், மின்னஞ்சல்களிலும் பொங்கிடும் என்பதால் – அமைதி காத்தல் தவிர வேறு option இருக்கவில்லை என் முன்னே! Sometimes – just sometimes எனது இது போன்ற தீர்மானங்கள் நன்மையின் பொருட்டே இருந்திடக்கூடும் என்ற புரிதல் நிலவிடின் ”மாறிப் போன மாப்பிள்ளையின் ரீதியிலான (தவிர்த்திடக் கூடிய) சங்கட அனுபவங்கள் தொடர்ந்திடாது! But – ”மாற்றம்” என்ற மறுகணம் நம்மில் பலருக்கும் கண்கள் சிவந்து போவது தான் சிக்கலே! And அது மட்டுமன்றி ஏற்கனவே லியனார்டோ ஆல்பமானது  - குட்டிக் குட்டிக் கதைகளின் தொகுப்பாய் இருக்கும் வேளையில், மதியில்லா மந்திரியாரின் அதே பாணியிலானதொரு ஆல்பத்தையும் களமிறக்கக் கொஞ்சம் தயக்கம் என்னுள்ளும் விரவிக் கிடந்தது என்பதும் fact! Anyways என் பார்வையில் 4/10 பெற்ற இதழிது!

முத்து காமிக்ஸின் 350-வது இதழிது என்பதால் - டப்பாவின் ஒரு பக்கம் முத்துவின் முத்திரை நாயகர்களைப் போட்டுத் தான் பார்ப்போமா ? என்று லேசாக ஒரு மகாசிந்தனை தலைக்குள் ஓடியதன் பலனிது ! ஆனால் மாயாவியாரை இந்தக் கோலத்தில் டப்பாவினில் பார்த்தால் இதனுள் மாயாவி கதையும் உண்டோ ? என்ற குஷி / பீதி தேவையின்றி வியாபித்த பிழைப்பாகிடுமே என்பதால் திட்டம் drop ஆனது ! 

Overall – CCC-ன் அனுபவமும், ஈரோட்டில் நண்பர்களைச் சந்தித்த உற்சாகமும் தான் இந்தாண்டின் சந்தா C + சந்தா B-ன் பின்புலன்கள்! அன்றைக்கு CCC ஏனோ தானோவென்று மாத்திரமே வரவேற்புப் பெற்றிருப்பின் – காத்திருக்கும் 2016-க்கு 12 கார்ட்டூன் இதழ்களை தயாரிக்கும் தைரியம் எனக்கு வந்திராது! And டெக்ஸின் விஸ்வரூபத்துக்கு தடம் அமைத்திட்ட புண்ணியம் இங்கு வலையிலும் சரி, மின்னஞ்சல்களிலும் சரி, ஈரோட்டுச் சந்திப்பின் சமயம் நேரிலும் சரி – நீங்கள் தந்த தொடர் கோரிக்கைகளே! அடுத்த வருஷம் இதே சமயம் 2016-ஐ நான் review செய்யும் வேளை புலரும் போது – முகம் முழுக்கப் பல்லாக நான் அமர்ந்திருப்பின் – இரு சந்தாக்களுமே இனிப்பான பலன்களை நல்கியிருப்பது நிச்சயம்! Fingers crossed big time!

தற்போதைய சந்தோஷம் என்னவெனில் சந்தாக்கள் வேகமாய் கிட்டி வருவது மட்டுமின்றி அவற்றின் 95% A+B+C+D என்ற 4 சந்தாக்களின் காம்பினேஷனுக்கே என்றிருப்பது தான் !!கார்ட்டூன் வேண்டாம்‘ என்று பத்து நண்பர்களும்; ‘தல‘ வேண்டாம் !' என்று ஒரு 4 நண்பர்களும் மட்டுமே ஒதுங்கி நிற்கப் பிரியப்பட்டுள்ளனர்! பாக்கி எல்லோருமே நம் பொருட்டு ஆங்கிலத்தின் முதல் 4 எழுத்துக்களின் மீது பரிவு காட்டியுள்ளனர்! Thanks ever so much all!

ஜனவரியின் பணிகள் ஜரூராய் நடந்து வருகின்றன! அதிலும் நமது இரவுக் கழுகாரின் அட்டைப்படம் நிச்சயம் ஒரு showstopper ஆக இருந்திடப் போவது உறுதி! நமது ஓவியருக்கு சரியானதொரு மாதிரியைக் கையில் கொடுத்து விட்டால் – அதகளம் உத்தரவாதம் என்பதை மீண்டுமொரு முறை பார்த்திடப் போகிறீர்கள்! Just wait till the coming Sunday !

And – 'செப்டம்பர் ’15 முதலான ஆண்டின் இறுதி quarter இதழ்களின் விமர்சனம் என்னாச்சு? என்ற கேள்வி கேட்கும் நண்பர்களுக்கு : சென்ற வாரம் 11 என்றால் – இந்த வாரம் 13.5 பக்கங்கள்!! நிஜமாய் இதற்கு மேல் விரல்களில் ஜீவனில்லை என்பதால் – last quarter's review- வரும் ஞாயிறுக்குக் கொண்டு செல்கிறேன்! மீண்டும் சந்திப்போம் guys! Advance Christmas Wishes! Bye for now! 

216 comments:

 1. Good Morning Everyone!
  Wow. I'm in Early today.

  ReplyDelete
 2. Advance Chrismas Wishes!
  Waiting for Thala'in "ShowStopper Sunday" :) !

  ReplyDelete
 3. வணக்கம் எடிட்டர் சார்...
  வணக்கம் நண்பர்களே......

  ReplyDelete
 4. என்னா பாஸ் இது!
  "அதுக்கும் மேல!"
  "அதுக்கும் மேல!"
  "அதுக்கும் மேல!" இன்னு
  full பாசிட்டிவா அடிக்கிட்டு கட்சியா 8.5/10 ஆஆஆஆஆஆஆ????!!!!!
  தல(லைன்) 250 பத்திதான் சொல்றன்!
  ஒன்னும் பிரியல பாஸு!

  அட்டை சூப்பர்! கதை சூப்பர்'ஒ சூப்பர்! விற்பனை டாப் 3 2015!(சூப்பர்'ஒஒஒஒ சூப்பர்)
  அப்போ எங்க போச்சு அந்த 1.5 ???
  சொல்லுங்க அண்ணே சொல்லுங்க!

  ஏப்பா நான் சரியாதான் பேசுறன :)

  ReplyDelete
  Replies
  1. ரொம்பச் சரி!

   லயன்-250க்கு மேலும் 1.25 மார்க்குகள் வழங்கிடுமாறு கனம் கோர்ட்டார் அவர்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

   Delete
  2. @ FRIENDS : "முகமில்லா மரண தூதன்" கொஞ்சமாய் ஏமாற்றம் தந்ததென நண்பர்களில் ஒரு சாரார் புகார் சொன்னது மறக்கவில்லை என்பதால் தான் கொஞ்சமே கொஞ்சமாய் மார்க் கட் !

   Delete
  3. நன்றி எடிட்டர் தல :)

   (disclaimer : எப்பா! Nothing serious ! just for fun !)

   (இப்போ மாற்றி யோசி :) )
   சரி!
   எப்போ பாரு!
   ஸ்பெஷல் இதழ் என்ற பெயரில் ஒரு கதைக்கு மூணு கதை!
   Maxi டெக்ஸ்! மினி டெக்ஸ்! இன்னும் பல பல டெக்ஸ்!
   போதாகுறைக்கு தனி டெக்ஸ் சந்தா வேற!
   ஏப்பா!
   அந்த மார்க்'ல மட்டும் ஏனப்பா குறை வச்சிக்கிட்டு....
   ஒரு 10'க்கு 100'நு (100/10) போட்டு விடுங்க!!!
   நாங்க எல்லாம் சொன்னா கேக்கவா போறீங்க....!
   (இப்படிக்கு டெக்ஸ் வேண்டாதோர் சங்கம்)

   Delete
  4. @ என்னை பொறுத்தவரை அட்டைபடம் சுமார். பார்க்கும் போது ஏதோ CD கவர் பார்த்த மாதிரி இன்றுவரை தோன்றுகிறது. கதையின் பெயர்களை முன் பக்கம் போடாதது :-)

   Delete
  5. எடிட்டர் சார்.!

   உங்களின் மதிப்பெண்களை., " வசிஸ்டர் வாயால் பிரம்மஸ்ரீ பட்டம் கிடைத்தது போல்.! " என்றுதான் கருதுகிறோம்.

   பிறகு சுதாரித்துக் கொண்டு எனக்கு நானே " கைப்புள்ள இது எடிட்டரின் தனிபட்ட ரசனை உரிமை என்று சமாதானம் ஆகிறோம்.(தீவிர ரசிகர்களுக்கு மாத்திரம் தில்லுமுல்லு படத்தில் தேங்காய் சீனிவாசன் இண்டர்வியூவில் ரஜினிக்கு மார்க் போடுவாரே 100 க்கு 990 மார்க் !, அதுமாதிரி போட்டால் ஹேப்பி அண்ணாச்சி.!

   Delete
 5. A New Silent Observer

  I was searching your posting since midnight.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வரவு நல்வரவாகுக !

   Delete
  2. குட் டே லோக் நாத். you are welcome!

   Delete
  3. Loknath : Welcome ! அடடா...இன்னிக்குப் பார்த்தா நான் சீக்கிரம் தூங்கித் தொலைவேன் ?!!

   Delete
 6. தல இதழ்கள் வேண்டாம் என 4 பேர்???

  ReplyDelete
  Replies
  1. //தல இதழ்கள் வேண்டாம்.//

   தலை மீது அம்புட்டு கோபம்!, கோபக்கார நண்பர்கள் !.

   Delete
 7. " கழுவிக் கழுவிக் காக்காய்க்கு ஊற்றப்பட்ட சாகஸமென பெயர் பெற்றது" ஹா ஹா ஹா சோகத்தைப் பிழியும் கதைகள் என்றாலே பயல்களுக்கு அலர்ஜி பாஸ். அதுதான் வீட்டிலேயே மெகா சீரியல்கள் அழுவாச்சி காவியத்தைக் கரைத்து கரைத்து எங்கள் வயிற்றில் புளியைக் கரைக்கின்றனவே?

  ReplyDelete
  Replies
  1. உண்மை நண்பரே.! வாழ்க்கையே சோகமாத்தான் உள்ளது . அதில் இதைவேறு படிக்கவேண்டுமா."? சந்தோசமா ரிலேக்ஸாக இருந்தால் நல்லது.!

   Delete
 8. எடி சார் மார்கழி என்பதால் அதிகாலை பதிவு?

  ReplyDelete
  Replies
  1. salemkelamaran@gmail.com : நைட் கண்ணிமைகளைத் திறந்திருக்க முடியாது போயினும், அதிகாலையில் மண்டைக்குள் அலாரம் அடித்து விட்டது சத்தமாய் ! So அதிகாலை 4-30 மணிக்கு தொடர்ந்தது "தி.பா."படலம் -2 !!

   அட...ஆமாம்ல...மார்கழியும் புலர்ந்து விட்டதல்லவா ?

   Delete
  2. ஆமாம் இல்லையா? ஒரு பொங்கல் சிறப்பிதழ் முயற்சிக்கலாமே ஐயா!

   Delete
  3. John Simon C : சுடச் சுட சக்கரைப் பொங்கல் சுலபமாய்க் கிடைக்கும் சார் - பஜனை ஊர்வலத்தில் சந்தோஷமாய்க் கலந்து கொண்டால் !! இப்போதைக்கு அந்தப் பொங்கல் போதுமே ?!

   Delete
  4. என்னது!
   சண்டே அதுவும்மா மிட் நைட்'ல எழுந்துருசின்ன்களா ?

   ஹ்ம்ம்.... எங்களுக்கு எல்லாம் பொங்கல் இல்லன்னு சொல்லிட்டாங்க!
   4:30 மணிக்கு எழுந்ததான் பொங்கலாம் :)

   சோ உங்கள் பொங்கல் சிறப்பிதழ் தான் ஒரே வழி!

   (அட! யாருப்பா அது ! இந்த நேரத்துல பொங்கலுக்கு ஆடு கேக்கறது :) )

   Delete
 9. "Mayaviyin idak kai irumbukkaiyaana marmam enna..?" ennum kelviyum thappiththathu sir..!

  ReplyDelete
  Replies
  1. Arun Kamal : பிலிமை ரிவர்சில் வைத்திருப்பதால் அப்படித் தோன்றுகிறது !! :-)

   Delete
 10. காலை வணக்கம் நண்பர்களே....!

  ReplyDelete
 11. டியர் சார்...
  ஒரு சராசரி வாசகனின் எண்ணங்களை அப்படியே பிரதிபலிக்கின்றன உங்கள் விமர்சன வரிகள்.!விண்ணில் ஒரு வேங்கை,விடுதலையே உன் விலை என்ன?,பாதைகளும் பயணங்களும் போன்ற கி.நா.க்கள் என் பொறுமையை ரொம்பவே சோதித்து விட்டன...!நம் காமிக்ஸ் ரசனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இதுபோன்ற கதைகள் வரவேற்பு பெறாததில் எனக்கு வருத்தமே என்ற உங்களின் மாமூல்வசனத்தை ஓரங்கட்டி நிதர்சனத்தை ஒத்துக்கொண்டதற்கு நன்றி.!டெகஸ்..டைகர்...லார்கோ..ஷெல்டன்....கமான்சே...ராபின்...போன்ற எண்ணற்ற ஜனரஞ்சகமான தொடர்களை எங்களுக்கு வழங்கிய நீங்கள் இது போன்ற கதைகளை எவ்விதத்தில் தேர்வு செய்கிறீர்கள் என்பதும் புரியவில்லை....!மேலும் இந்த கதைகளை கி.நா.பிராண்டில் வெளியிட்டிருந்தால் நான் இதைப்பற்றி வாயே திறந்திருக்க மாட்டேன...!சத்தமேயில்்லாமல் ரெகுலர் சந்தாவில் நுழைத்ததுதான் என் ஆதங்கத்திற்கு காரணம்..!இதில் வேடிக்கை என்னவென்றால் கி.நா.பிராண்டில் வந்த பௌன்சரும்,தோர்கலும் அதகளப்படுத்தி விட்டார்கள்...!

  ReplyDelete
  Replies
  1. ++++++++++++++++++++++++++++++++++++++111111111111111111111111111++++++++++++++++++++++++++++++++111111111111111111111111.......

   Delete
  2. ஜேடர்பாளையம் சரவணகுமார் : திரும்பிப் பார்க்கும் போது எல்லோருமே ஒரு ஜீனியஸ் தான் நண்பரே ; நான் மட்டும் அதற்கொரு விதிவிலக்கா - என்ன ?

   ஒவ்வொரு தேர்வின் போதும் ; ஒவ்வொரு அறிமுகத்தின் போதும் நிறையவே பின்னணி ஆராய்ச்சிகள் செய்யாதிருப்பதில்லை ! ஆனால் ஒரு கதையை முழுமையாய் நமக்கு வாகானதொரு மொழியில் படித்துணரும் அனுபவத்துக்கு வேறேதும் ஈடாகாது ! So உங்களுக்குக் கிடைக்கும் 'முழு இதழாகப் படித்துப் பார்க்கும் luxury ' எனக்கு இருப்பதில்லை பெரும்பாலும் ! கிராபிக் நாவல்கள் தான் என்றில்லை - சிக் பில்லின் "மாறிப் போன மாப்பிள்ளை" கூட இது போன்ற சங்கடங்களின் பலனே !

   இனி கிராபிக் நாவல்களை முயற்சிப்பதாயின் அவற்றை முழுமையாய் மொழிபெயர்த்துப் படித்துப் பார்க்காது செயல்படப் போவதில்லை என்ற தீர்மானம் எடுத்தது தான் இந்த சங்கடங்களில் நான் கற்றுள்ள பாடம் !

   Delete
  3. எடிட்டர் சார்.!

   கடினமான கி.நா.கதைகளுக்கு தெளிவான விரிவான கதை விமர்சனம் தேவை சார்.!கதையை சிதம்பர ரகசியம் போல் மூடிமறைப்பதை பார்த்தால்.,டால்ஸ்டாய் கதைதான் ஞாபகம் வருகிறது.!எனவே சப்பை கட்டு கட்டாமல் கதைவிளக்கம் அவசியம் ,வெளியிடவேண்டும்.!

   இதைப்பற்றி ஏற்கனவே உங்களுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி உள்ளேன்.

   ஆறு மாதங்களுக்கு முன் மூன்று காமிக்ஸ் நண்பர்களுடன் (நீண்டகாலம் காமிக்ஸ் படிக்கும் வாசகர்கள்.)காமிக்ஸ் பற்றி அரட்டை அடித்தோம்.அப்போது கி.நா.பற்றி பேச்சு அடிபட்டது.சில கதைகளைப்பற்றி விளக்கம் கேட்டதற்கு .,அவர்கள் சிரித்துக்கொண்டு யாரை பார்த்தாலும் இதைத்தான் கேட்கிறார்கள் என்றார்.மேலும் அவர்கள்.,எடிட்டருக்கே கதை தெரியாது .மொழிபெயர்ப்பு சிரமம் குறைவு ஆகவே சைக்ளோ
   ஸ்டையிலில் அடித்து கொடுக்கிறார். என்று அபாண்டமாக குற்றம் சாட்டினார்.நான் அதை உறுதியுடன் மறுத்தேன்.தற்போது கதையை பற்றி யாரும் மூச் விடமாட்டேன் என்கிறார்கள். ஒரு சில வாசகர்களுக்காக கதையை சுருக்கம் வெளியிட மறுப்பது வருத்தத்தை கொடுக்கிறது.! இல்லாவிட்டால் தனியாக ஈமெயிலில் அனுப்பினாலும் சந்தோசமே.!

   Delete
 12. நண்பர்களுக்கு வணக்கம்!எடிட்டருக்கும் வணக்கம்! 18-12-15 அன்று 2016-க்கான சந்தா தொகையை சன் ஷைன் லைப்ரரியின் வங்கிக்கணக்கில் செலுத்தியிருந்தேன்.தொகை தங்களை வந்தடைந்ததா? கிடைக்கப்பெற்றீரா? எனது சந்தா எண் எத்தனை? இதுபோன்ற விபரங்களை நான் தெரிந்து கொள்வது எவ்வாறு? தங்களின் வாட்சப்பிலும் இதுபற்றி விபரமாகச் சொல்லியிருந்தேன்.அதற்கும் எந்த பதிலும் இல்லை! அலுவலகத்திற்கும் தொடர்பு கொண்டு கேட்டேன்.SMS அனுப்புகிறேன் சார்,என்றார்கள்.ஆனால் இன்னும் எந்ததகவலும் வந்தபாடில்லை!! ஏன் சார்?!

  ReplyDelete
  Replies
  1. Guna karur : நீங்கள் பணம் அனுப்பிய மறு நாள் காலையில் தான் எங்களது வங்கிக் கணக்குகளின் statement சரிபார்க்கப்பட்டு ரசீதுகள் போடத் தொடங்குவார்கள் நம்மவர்கள் ! நேற்று பகல் பொழுது சிவகாசியில் மின்தடை என்பதால் பிற்பகல் வரை பணிசெய்ய இயலவில்லை ! திங்கட்கிழமை நிச்சயமாய் உங்களுக்கான தகவல்கள் வந்து சேரும் ! சற்றே பொறுமை ப்ளீஸ் !

   Delete
  2. தகவல் தொழில் நுட்பங்கள் தலை தெறிக்கும் வேகத்தில் இருக்கும்,தற்போதைய சூழலிலும் தகவல்கள் பரிமாற்றத்தில் ஏனிந்த தாமதம் என்பதே என் கேள்வியே ஒழிய,தங்களை சங்கடப்படுத்துவதல்ல என் நோக்கம்.சங்கடங்கள் ஏற்பட்டிருப்பின் மன்னிக்கவும்.!

   Delete
 13. காலை வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே.

  ReplyDelete
 14. // ஆனால் மாயாவியாரை இந்தக் கோலத்தில் டப்பாவினில் பார்த்தால் இதனுள் மாயாவி கதையும் உண்டோ ? என்ற குஷி / பீதி தேவையின்றி வியாபித்த பிழைப்பாகிடுமே என்பதால் திட்டம் drop ஆனது ! //

  மிகவும் சரியான முடிவு! பாராட்டுக்கள்!

  ReplyDelete
 15. இனிய காலை வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 16. இதுவொரு ஊதா உலகம் - கார்டூனில் மிக சிறந்த அறிமுகம். குறிப்பாக கார்டூன் கதைகளில் இது போன்ற வேகமாக நகரும் கதைகள் அமைவது கடினம். முதல் பக்கத்தை படித்தவுடன் புத்தகத்தை கீழே வைக்காமல் ஒரே மூச்சில் படித்த கதை.

  குறை: இந்த குட்டி மனிதர்கள் பேசும் பாசை. ஒரு இடத்தில் பொடியர்கள் பாசை மற்றும் ஒரு இடத்தில் Smurfs பாசை என கலந்து கட்டி அட்டித்தது. வரும் கதைகளில் ஏதாவது ஒரு ஸ்டைலில் இவர்களின் பாசையை அமைப்பது நலம்.

  லியனார்டோ தாத்தா - தாத்தா என்னை மிகவும் கவர்ந்து விட்டார். கதையின் தலைப்பு மிகவும் கச்சிதம். ஒவ்ஒரு கதையும்/ஆராய்ச்சியும் ரசிக்கும்படி சிந்திக்கும் படி இருந்தது இதன் சிறப்பு. வரும் காலம்களில் இவரது ஆராய்சி நடைமுறையில் காண நேரிட்டால் ஆச்சரியபடுவதற்கில்லை.

  கொஞ்சம் நேரம் ஒதுக்கி இதனை படித்தால் "தாத்தா" அனைவருக்கும் பிடிக்கும்.

  ReplyDelete
 17. // தற்போதைய சந்தோஷம் என்னவெனில் சந்தாக்கள் வேகமாய் கிட்டி வருவது மட்டுமின்றி அவற்றின் 95% A+B+C+D என்ற 4 சந்தாக்களின் காம்பினேஷனுக்கே என்றிருப்பது தான் ! //

  சந்தோசம். சந்தோசம். வரும் வருடம் தடையில்லா செல்லும் என்ற சந்தோசம்.
  சந்தோசம். சந்தோசம்.

  ReplyDelete
 18. Replies
  1. விஜயன் சார், கடந்த வாரத்தை தொடர்ந்து இந்த வாரமும் ஒரு நேர்மையான விமர்சன பதிவு. நன்றி.

   Delete
 19. விஜயன் சார், இந்தவருடம் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் என்றால் நமது packing, அட்டை பெட்டியில் வந்தது, தேவைபடும் போது கூடுதல் கவனம் செலுத்தியது (உதாரணம் மழை நேரத்தில் கூடுதல் பாலிதின் கவர்), புத்தகம் மடங்காமல் வர எடுத்த முயற்சிகள். அதிக சிரத்தை எடுத்து ஒவ்ஒரு முறையும் சரியாக packing செய்த நமது அலுவலக நண்பர்கள். நன்றி. நன்றி. நன்றி.

  ReplyDelete
 20. Replies
  1. டெக்ஸ் இந்த முறை பதிவிட
   ரொம்ப லேட் ஏன்

   Delete
 21. விஜயன் சார், என்னை பொறுத்தவரை இந்தவருட கதைகளில் அதிக மதிப்பெண் பெறுவது மின்னும் மரணம். பல வகையில் (கதை, வசனம், ஓவியம், வண்ணம், மனிதர்களின் மன வெளிப்பாடு, பழி வாங்கல், போராடும் குணம், பிரமிக்க செய்யும் காட்சி அமைப்புகள்) சிறப்பான இதழ்.

  ReplyDelete
 22. இனிய காலை வணக்கம் நண்பர்களே...

  ReplyDelete
 23. //– “கனவின் குழந்தைகளை” புரிதலின் எல்லைகளுக்குள் கொணர நான் ‘தம்‘ கட்டியது நேற்றைக்குப் போலுள்ளது! //
  இந்தக் கதை எனக்குள் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம். உணர்வுபூர்வமான கதை. வெறுமனே ஏலியன்களை வைத்து புனையப்பட்ட சிக்கலான கதையாக அதனைப் பார்க்க முடியாதளவுக்கு உங்கள் எழுத்துக்கள் இருந்தன. அவுஸ்திரேலிய பழங்குடி மக்கள், அவர்களது சிதைக்கப்பட்ட வரலாறு, அதன் பின்னணியிலும், முன்னணியிலும் செயற்படுபவர்கள். அவர்களுக்காக குரல் கொடுக்கும் சிலர் என்று அதன் அடிப்படையே வேறு தளம்! அருமையான கதை. இது ஒரு கிராபிக் நாவல் என்ற வரையறைக்குள் வரக்கூடியது என்றே கருதுகிறேன். இந்தக் கதையின் தாக்கத்தால் எழுந்த தேடல் தாகத்தில் தேடியதில் கிடைத்த ஆச்சரியத் தகவல்கள் ஏராளம். அந்தப் பழங்குடிகளின் மொழிப் பிரயோகத்தில் பண்டைய தமிழின் தாக்கமுள்ளது. அவர்களது தோற்றமும் பல வகைகளில் தமிழ்ச் சமூகத்தை ஒத்ததாகவே அமைந்துள்ளதும் ஆச்சரியம்.

  ReplyDelete
  Replies
  1. @பொடியன்

   [அப்படா 'கனவின் குழந்தைகள்'ரசித்த ஒருவர் சிக்கிட்டார்...நம்ம ரொம்பநாள் டவுட்டை இவர் கிட்ட கேட்டுட வேண்டியதுதான்..]

   அந்த கதையை நானும் ரொம்பவே ரசிச்சி படித்தேன், அதில் ஒரு புதிருக்கு மட்டும் எனக்கு விடை கிடைக்கவேயில்லை. அதைமட்டும் கொஞ்சம் விளக்கமுடியுமா...?

   20 வருடங்களுக்கு ஒருமுறை பூமிக்கு பறக்கும் தட்டில் வரும் 'குன்டேங்காஸ்' தெய்வங்கள் பாலைவனத்தில் வந்து கொஞ்சம் மணலை சேகரித்து போவார்கள்.அப்படி ஏலியன்ஸ் அந்த மணலை எடுத்து கொண்டு போய் என்னதான் செய்கிறார்கள்..? ஏன் அந்த மணலை சேகரிக்க வேண்டும்..? அதன் மகிமைதான் என்ன..?

   காரணத்தை கதையில் எங்கேனும் சொல்லப்படதா...விளக்கம் ப்ளிஸ்..

   [அவங்களுக்கு அது பிரசாதம்,அங்க அதுக்கு செம மொசு,எலியன்சுக்கு மணல் தங்கபஷ்பம், அவங்ககிட்டயே கேட்டுங்க மாயாவி...ஹீ..ஹீ..இப்படி இல்லாம சீரியஸ் பதில் ப்ளிஸ்]

   Delete
  2. அருமை நண்பரே...!மார்ட்டினின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை தருகின்றன்
   அமானுஷ்ய அலைவரிசை என்ற முதல் கதையிலேயே என்னை கவர்ந்து விட்டார்.அதில் மாயக்கண்ணாடிக்கும் டெலிவிஷனுக்கும் ஒப்பீடு செய்திருப்பார்கள் பாருங்கள்....செம....!
   அதுபோல வேற்று மண்டலத்திற்கான திறப்பு வாசல்.,ஒரு மண்டலத்திலிருந்து இன்னொரு மண்டலத்திற்கு செல்வது போன்ற அதீத கற்பனைகள் என பிரமிப்பில் ஆழ்த்தியது.அதன் பின்னர் வந்த சரித்திரத்தை சாகடிப்போம்...பேழையில் ஒரு வாள்..என ஒவவொன்றும் ஒவ்வொரு அனுபவம்.அதில் உச்சம் லயன் ஜாலி ஸ்பெஷலில் வந்த பழி வாங்கும் ரா..!
   பொதுவாகவே மார்ட்டின் கதைகள் முதல் முறை படிக்கும்போது மண்டை காய வைக்கும்..
   மறுவாசிப்பின்போதுதான் கதை பற்றிய புரிதல் உணடாகும்.....!
   பொன்னில் ஒரு பிணம் மட்டும்தான் நான்கைந்துமுறை படித்தும் 'ஙே' என்று முழித்துக்கொண்டிருக்கிறேன்...!
   கனவின் குழந்தைகளில் கூட மறுவாசிப்பில் கதையை கிரகித்துககொண்டாலும் செவ்வாய் கிரக வாசிகள் எதற்காக பாலைவன மணலை சேகரிக்கிறார்கள் என்பது புரியவில்லை....!
   இருந்தாலும் ஐ லவ் மார்ட்டின்....!

   Delete
  3. @ ஜே சரவணகுமார்

   அந்த மணல் மேட்டர் மொழிபெயர்ப்பில் விடுபட்ட விஷயமா..? இல்ல கி.நா. மாதிரி மறைந்திருக்கும் ரகசியமா..?

   ஆசிரியர் கூட ஏதும் விளக்கம் தெரிஞ்சா சொல்லாம்..!

   Delete
  4. அடடே! கனவின் குழந்தையை ரசித்த இரண்டுபேர் சிக்கிவிட்டார்கள்.!

   Delete
  5. எனக்கும் தான் கண்ணில் விழுந்த மண்துகள்களாய் உறுத்துகிறது,அந்த மணல் மேட்டர்!மர்மங்கள்,மர்மங்களாய் மட்டுமே இருக்க வேண்டுமோ என்னமோ!??

   Delete
  6. நானும் மார்டினின் ரசிகன் தான்.. 'கனவின் குழந்தைகள்' என்னுடைய இந்த வருடத்தின் favorite களில் ஒன்று...

   Delete
  7. I think aliens are doing REAL ESTATE business in their planet

   Delete
  8. ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் மணலில் இருந்து ஒரு வகையான, நமக்கு தெரியாத ஏலியன் டெக்னாலஜியில், எரிபொருள் தயாரித்து இருக்கலாம்... இப்போது கூட சீனா மற்றும் அமெரிக்காவில் டார்க் மேட்டரை பற்றிய ஆய்வு விண்வெளியில் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்...

   Delete
  9. மாயாவிஜி.....................எனக்கு தோன்றியவரை கனவின் குழந்தைகள் கதையில்
   அயல்கிரகவாசிகள் 20 ஆண்டுகளுக்கு ஏன் பாலைவன மணல் எடுக்க வேண்டும்?
   பதில்
   தேவை என்பதாகத்தான் இருக்க முடியும்.................
   பூமியின் மணல் என்பது
   பாறைகளின் தேய்மானத்தால் மட்டுமே உருவாகிறது....
   கடல் படுகை......(கடலுக்கு அடியிலும் மலைகள் உண்டு)
   ஆற்று படுகை(உருட்டி வரும் பாறை துண்டுகள்)
   எரிமலை படுகை...........
   பாலைவன மணல் அங்கு உருவானதல்ல.மேற்கூறிய இடங்களில் இருந்து காற்றினால் கொண்டு வரப்பட்டவை....
   மணல் சிலிக்கா(குவார்ட்ஸ்), மேக்னடைட்,இல்மனைட் உட்பட எண்ணற்ற தனிமங்கள், சேர்மங்கள்,ஐசோடோப்புகள் உள்ளடக்கியது......

   தங்கள் கிரகத்தில் விரைவில் தீர்ந்துபோகும் நிலையில் உள்ள ஆனால் மிகவும் அத்தியாவசியமான தனிமம் அல்லது சேர்மத்தின் மூல அணுபொருளை அங்கு கண்டுபிடித்து இருக்கலாம்.......

   இதே மூலபொருளை பிரபஞ்ச வெளியில் தேடும் பணியில் அயல்கிரகவாசிகளின் பல்வேறு குழுக்கள் ஈடுபட்டுஇருக்கலாம்...


   ஏன் இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை?????

   இதற்கான பதில் இரண்டு....
   1. அவர்கள் தேடும் சேர்மத்தின் half life……………..
   Self decay மூலம் அழியும் ஒரு இயற்கை சேர்மம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் வேறு தனிமம் அல்லது சேர்மம் என மாற கூடும்.

   உதாரணமாக

   உரேனியம் 238 காரீயம் 206 ஆக மாற 2.5 மில்லியன் ஆண்டுகள் பிடிக்கும்.

   இதனிடையே சுமார் 15 நிலையான தனிமங்கள், எண்ணற்ற நிலையற்ற தனிமங்கள் உருவாகின்றன...

   இதில் நமக்கு அறிமுகமான ரேடியம், ரேடான் காஸ் அடங்கும்.

   ரேடியம் ரேடான் காஸ் ஆக மாற 1600 ஆண்டுகள் பிடிக்கும்...


   நிலையற்ற சில தனிமங்களின் half life நானோ செகண்டுகளில் இருக்குமாயின் அந்த கால கட்டத்தில் அவை வேறு ஒரு தனிமம் என மாற கூடும்......

   இதில் எந்த வகை தனிமம் அயல்கிரகவாசிகளுக்கு தேவை என்பது பொறுத்து சிக்கல் அவர்களுக்கு அதிகமாகும்.....

   பூமியின் சூழ்நிலையில் அன்ஸ்டேபிலாக இருக்கும் தனிமம் அவர்கள் கிரகத்தில் நிலைதன்மையுடன் இருக்கலாம்......

   இயற்கை சேர்மங்களில் இருந்து செயற்கை தனிமமும் நாம் particle accelerator மூலம் நாம் பெறுகிறோம்......
   உரேனியத்தில்(238) இருந்து.........>>>> ப்ளுடோனியம்

   தோரியத்தில் இருந்து.........>>>> உரேனியம் 235

   ரூபிடியத்தில் இருந்து.........>>>> ஸ்ரோன்ஷியம்   இதுபோன்ற முயற்சிகளில் அவர்கள் ஈடுபட்டு இருக்கலாம்.....

   அந்த முயற்சிகளில் அவர்கள் வெற்றி அடையும்போது அவர்கள் வருவது நின்று போக கூடும்............................


   அவர்கள் தேடும் தனிமத்தின் half life இருபது ஆண்டுகள் என்ற கால கட்டத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்......

   2. இருபது ஆண்டுகள் என்பது நமக்கு....................
   அவர்களுக்கு???????????????????

   அவர்கள் வாழும் சூரிய குடும்பத்தின் தூரம், அவர்கள் கிரகம் தன்னை தானே சுழன்று கொள்ள எடுத்து கொள்ளும் நேரம் ,அவர்கள் பறக்கும் தட்டின் வேகம் ஆகியவற்றை பொறுத்து
   அவர்கள் அவர்கள் கணக்கில் வாரா வாரம் கூட எடிட்டர் பதிவு போல வந்து போகலாம்....
   அல்லது அவர்கள் கணக்கில் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கூட வந்து போகலாம்....


   Delete
  10. செல்வம் அபிராமி சார்.!

   வாவ்..........! எப்படி பால் போட்டாலும் விளாசுகிறீர்கள் சூப்பர்.! பன்மொழி புலமையில்தான் கெட்டிகாரர் என்று கருதினேன்.!இயற்பியலிலும் தூள் கிளப்புகின்றீர்களே.! அபாரம்.!

   உங்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள்,

   மாடஸ்டி கதையின் கதையாசிரியர் பற்றிய விபரங்கள் ஏதாவது உங்களுக்கு தெரியுமா.?
   இரண்டு நாள் கழித்து கூறினால் நன்றாக இருக்கும்.! நான் சேவ் செய்து கொள்வேன்.!

   Delete
  11. ஹா .........

   செல்வம் அபிராமி சார்....உண்மையை சொல்லுங்க....நீங்க யாரு ....இதுக்கு முன்னாடி பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க ...சொல்லுங்க நீங்க யாரு ....நீங்க யாரு ....நீங்க .....யாரு .....;-)...

   நாடி நரம்பு எல்லாத்திலியும் காமிக்ஸ் ரத்தம் ஓடறவங்க மட்டும் தான் இப்படி எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்வாங்க ன்னு டாக்டர் சொல்றாங்க ...அந்த டாக்டர்ங்களுக்கே இந்த டாக்டர் பத்தி தெரிலை ....சொல்லுங்க நீங்க யாரு .....

   Delete
  12. தலைவரே.! ஹாஹாஹாஹாஹா...................ஆமாம்,! ஆமாம்.!

   Delete
  13. @ செல்வம் அபிராமி

   ஸுப்பர்..! தொடர்ந்து எழுந்துநின்று ஒரு நிமிடங்கள் பலத்த கைதட்டல்கள்..! விஞ்ஞான ரீதியான அருமையான அலசல், சுஜாதா பாணியில் எளிய விளக்கங்கள். என்னிடம் உங்களை ஒத்த ஒரு விளக்கம் உள்ளது, க.கு.ஒரு விஞ்ஞானம் தாண்டி அமானுஷ்யம் மட்டுமல்ல...இந்த பிரபன்ஜ்சத்தில் பரவிக்கிடக்கும் நேசத்தையும் தெரிவிக்கும் ஒரு திரைகதை.கொஞ்சம் பொறுத்து சொல்கிறேன். இன்று ஜீனியர் மாயாவி பள்ளியில் [எம் மகன்தாங்க] ஸ்டுடண்ட்ஸ் நடத்தும் கண்காட்சி, அவன் ஸ்கவுட்டில் இருப்பதால்,முழுநாள் டியூட்டி..! எனக்கு அவனை அழைத்து வரவேண்டிய டியூட்டி, நிகழ்ச்சி முடிவில் நடந்த லக்கிபிரைசில் முதல் பரிசாக,பெரிய சைஸ் 3 burner stove ஒன்று பரிசு விழ..அதை தூக்கிட்டு வர்ற வேலைவேற..ஹீ..ஹீ..! அப்புறம் கொண்டாட டிரிட்ன்னு நாள் போயேபோச்சி, க.கு. பற்றி நாளை தொடர்கிறேன்..!

   Delete
  14. @ தலீவர்..........:-))

   @ ம.வெ ஸார்.........சார்! வேண்டுகோள் எல்லாம் வேண்டாம் சார்.....நீங்கள் உரிமையாய் அதட்டியே எழுத சொல்லலாம்..........
   இங்கு உங்கள் எழுத்துகளுக்கு உள்ள பல ரசிகர்களில் நானும் ஒருவன்.....

   மாடஸ்டி கதாசிரியர் பற்றி கூகுளில் உள்ளது மட்டுமன்றி விஸ்வா போன்ற ஜாம்பவான்களும் ஆங்கிலத்தில் எழுதி உள்ளார்கள்.....
   சுருக்கமாகவும் அவற்றை தமிழ் படுத்தியும் இங்கு பதிவிடுகிறேன்....

   பணி சுமை அதிகம் இருப்பதால் அடுத்த வாரம் பதிவிட முயல்கிறேன்.....

   @ மாயாவிஜி........நன்றிகள்.....ஜூனியர் மாயாவியின் ஸ்கவுட் பங்களிப்புக்கும் ,பரிசு விழுந்தமைக்கும் மகிழ்ச்சியும் பாராட்டுக்களும்......!!!!!!!!!!!!!!!!!!!

   Delete
  15. @ MV

   போனவாரம் கி.நா. பட்டியல் எனக்கு சரியா புரியாம போச்சே.....
   அந்த பண்மொழி புலவர் கார்த்திக் சோமாலிங்கா ன்னு இல்ல நினைச்சிட்டேன்...[முழிக்கும் படம் 1]

   அப்போ அந்த தொப்பைகாரர் யாருங்க...??? ஜே.சரவணகுமார் தானே..??? [சிரிக்கும் படம் 1]

   Delete
  16. தொப்பைகாரரா.? தொப்பி அணியும் தொப்பிக்காரர்.!

   எனது அப்பா திரு.தமிழ்வாணனின் தீவிர ரசிகர்.!நான் லேனா அவர்களின் தீவிர ரசிகன்.!

   சிறுவயதிலே இரவு தூங்கும் போது எனது அப்பா, வேதாளர் மற்றும் தமிழ்வாணனின் துப்பறியும் கதை சொல்வது வழக்கம்.ஆகவே தொப்பி அணிபவர்களை இயல்பிலே எனக்கு பிடிக்கும்.!

   இதைப்போலவே நான் எடிட்டர் விஜயன் அவர்களின் ரசிகன் என் மகன் ஜூ.எ.விக்ரம் ரசிகன் என்று இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.கடவுள் அருள் புரிய வேண்டும்.!

   Delete
  17. மாடஸ்டி மாதிரி கற்றுக்கொள்ள ,செய்தியை தெரிந்து ,அதற்குண்டான மரியாதை கொடுக்கவேண்டும்.!

   நானும் கதையாசிரியரை பற்றி கொஞ்சம் படித்துள்ளேன்.

   இருந்தாலும்.,பயன்படுத்த முடியாத ஹை வோல்டேஜ் மின்சாரத்தை டிரான்ஸ்பார்மர் எளிமையாக தேவையான மின்சாரம் மட்டும் வழங்கி வீட்டில் உபயோகிக்க பயன்படுவதை போன்று உங்கள் எழத்து உள்ளது.

   என்னதான் நெட்டில் மேய்ந்தாலும் அது சுவராசியமாக இல்லை.! நேரடியாக உட்கார்ந்து உங்களிடம் அரட்டை அடிப்பது போல் தோன்றுவதையே விரும்புகிறேன்.!

   Delete
  18. செல்வம் அபிராமி சார்.!@

   (என்று ஆரமிக்க மறந்துவிட்டேன்.! சாரி அதை முதலில் சேர்த்துக்கொள்ளவும்.!

   Delete
  19. மாயாவியாரே,,,!கர்ர்ர்..தொப்பைக்காரர்...கர்ர்ர்ர்....!!!!!

   Delete
 24. அருமை௰ானபதிவு சார்...ஸ்மர்ப் அந்த உலகம்....இந்த வயதிலும் பிரம்மிக்கும் ஈர்ப்பை ஏற்படுத்தியதில் ....மிகச்சிறந்த அறிமுகமிதுவே....அட்டைபடமும் இங்கே காட்டியது அருமை....

  ReplyDelete
 25. "மின்னும் மரணம்" பொருத்த வரை அப்படியொரு லாண்ட்மார்க் இதழுக்கு அந்த அட்டைப்படம் very poor. ஒரிஜினல் கவர் பல அழகழகாக இருந்தும் அப்படி ஒரு அட்டையா நம் இதழுக்கு?

  பின்னர் வந்த Commanche இதழ்கள் கவர்கள் அத்தனயும் கண்ணை கவரும் ரகம். என்ன கொடும சார்!

  ReplyDelete
 26. இப்போதெல்லாம், ஞாயிறு காலை என்றாலே, காபி வித் விஜயன், என்றாகிவிட்டது:-)

  காபியை குடித்துகொண்டே, உங்கள் பதிவை கண்களால், பருகுவது,சொல்ல வார்த்தையில்லை விஜயன் சார்.2015 ல் பல நல்ல கதைகளையும், ஒரே சில மொக்கைகளையும் வழங்கியுள்ளீர்கள்.
  எனக்கு தோன்றுவதெல்லாம், அந்த வெகு சில, மொக்கைகளை, ஒருமுறை படிக்கவே,வெகுவாக திணறுகிறோம். நீங்கள், மொழிபெயர்ப்பு செய்யும்போது,எத்தனைமுறை தண்டனை அனுபவித்திருப்பீர்கள், என நினைக்கும்போது, :-)
  ஆனால்,மொக்கைகள், ஆளாளுக்கு மாறுபடும் என்பதில் இருவேறு கருத்தில்லை:-)

  ReplyDelete
 27. கனவின் குழந்தைகளுக்கு 5.5மார்க் என்பது மிகவும் கம்மி சார்...குறைந்தது 7.5 மார்க் தரலாம் சார்....
  மார்ட்டின் கதை என்னைக்குமே சொதப்பியது கிடையாது சார்..நமது காமிக்ஸில் வரும் கதைகளிலேயே முற்றிலும் வித்தியாசமான&வேறுபட்ட கதைத்தொடர் மார்ட்டின் கதைத்தொடர் மட்டுமே சார்......

  ReplyDelete
  Replies
  1. அப்படி சொல்லுங்கஜி...!
   இன்னும் பலமா.....சத்தமா.....!

   Delete
  2. @ யுவா

   நீங்க மார்ட்டின் இரசிகரா...!!! சொல்லவேயில்லை, எத்தினிநாள் மல்லாக்க படுத்து காமிக்ஸ் பத்தி பேசியிருப்போம்....மார்ட்டின் பத்தின மேட்டரே வரலையே..! அடுத்த மீட்டிங் மர்மமனிதன் மார்ட்டின் பத்திதான்..!

   Delete
  3. ஒரு காமிக்ஸ் நண்பர் ,தன்னிடம் உள்ள 200 (10& 5 விலையுள்ள அண்மையில் வந்த வெளியீடுகள் )காமிக்ஸை எல்லோரும் படிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் நியாயமான விலையில் விற்பதாக அறிவித்தார் . 24 மணிநேரத்தில் பிரான்கா மீன் போல் நம் நண்பர்கள் பாய்ந்து பிடுங்கி விட்டனர்.அடுத்த நாள் மீதம் உள்ள சுமார் 20 புத்தகங்களை பட்டியலிட்டார்.! அதில் மர்மமனிதன் மார்டின் அனைத்து (10 ரூபாய் புத்தகங்கள் ) மாடஸ்டி கதை நான்கும் அதனுடன் தூங்கிப்போன டைம்பாம் கதை வேறு.ஹூம் மாடஸ்டிக்கு இந்த நிலமையா.? நொந்து போய்விட்டேன்.!நம்மிடைய எவ்வளவு விதவிதமான ரசனை.?

   Delete
  4. @ MV

   அருமை தம்பி யுவா கண்ணன் ஆறுமாதங்களா தேடும் டெக்ஸ் புத்தகம் ஒன்று, நீங்கள் குறிப்பிடும் பாண்டிசேரி நண்பர் மூலமாக நேற்று கிடைத்து.
   தனியே ஒரு வேங்கை-1
   கொடுரவனத்தில் டெக்ஸ்-2
   துரோகியின் முகம்-3 இதில் கொடூரவனத்தில் டெக்ஸ் மட்டும் அவரிடம் மிஸ்ஸிங், பாண்டி நண்பரிடம் யுவா ஒரு தீவிர டெக்ஸ் ரசிகர்,அவரின் காமிக்ஸ் காதல் சொல்ல வார்த்தையே இல்லை. "இந்த ஒரு புக் எப்பிடியேனும் வாங்கிகொடுங்க ஸார் ப்ளிஸ்.." ஆறு மாதங்களுக்கு முன் கேட்டார். நானும் பிரபல FB கறுப்பு சந்தையில் கேட்டேன்.

   "தனி புக் கிடையாது.செட் 750/- என சொல்வதும்,அதுவும் டிமாண்ட் என பீலா விட்டதை பார்த்து ஒரே ஓட்டம். மற்றொரு நண்பர் "ஸார் நீங்க கேட்டு தரமாட்டேனா...பிஸ்சாத்து பத்து ரூபா புக், EBFல கொண்டுவந்து கொட்டுறேன் ஸார்.." என சொன்னவர் ஈரோடில், அப்படி ஒரு சம்பாஷனை நடந்ததா என கிள்ளிபார்த்து கொள்ளும் அளவுக்கு அசத்தினார்.

   கடந்தவார மினி மீட்டிங்கில்,யுவா "ஸார் கொடுரவனத்தில் டெக்ஸ்..." என கேட்டபோது,ச்சே..ஒரு புக் புடிக்ககூட நாம லாயக்கில்லையே என வெட்கமாக போய்விட்டது. விஷயத்தை பாண்டி நண்பரிடம் சொன்னதும், அடுத்த நிமிடம் பேக் பண்ணிவிட்டார். நான் விண்ணப்பித்த ஒரு விஷயத்தையும் சேர்த்து அனுப்பியிருந்தரர்..! அதை பார்க்க..இங்கே'கிளிக்'

   யுவா எதை சட்டுன்னு கேட்காத சை டைப்ன்னா...நாம எதை சட்டுன்னு தூக்கி கொடுக்காத மை டைப்..ஒரு வழியா பஞ்சாயத்து முடிஞ்சது, இந்த பஞ்சாயத்தை ஏன் என்கிட்ட சொல்லலைன்னு 'திருப்பூர் ப்ளுபெர்ரி' வேற சத்தம் போட்டார்..ஹீ..ஹீ..! ;)

   Delete
  5. மிக்க நன்றி மாயாவி சார் ....

   Delete
  6. அந்த நண்பர் விற்பதாக அறிவித்ததும் , எல்லோரும் பாய்ந்து பிடுங்கி விட்டனர்.இரவு 12 மணிக்கு கூட தொந்தரவு கொடுத்தாக வருத்தப்பட்டார்.என்னிடம் இதுபோன்ற புத்தகங்கள் ஒவ்வொன்றிலும் முன்று உள்ளது.பிற்காலத்தில் எக்ஸ்சேஞ் க்கு உதவும் என்று வைத்துள்ளேன்.!

   Delete
 28. தினமணியில் வெளியான,அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கனவின் குழந்தைகள் விமர்சனம்(சிறு பகுதி) முத்து காமிக்ஸில் ஒரு புதிய முயற்சி எடுக்கப்படுகிறது. பொதுவாக வெளிவரும் கௌபாய், துப்பறியும் சாகசங்களுக்கு அப்பால் ஒரு காமிக்ஸ் ஹீரோ அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். ‘மர்ம மனிதன்’ மார்ட்டின். அகழ்வாராய்ச்சியாளர், பத்திரிகையாளர், துப்பறிகிறவர் இத்யாதி. இவரது களம் மர்மங்கள். பொதுவாக மேற்கில் சம்பிரதாயமான வரலாற்றுக்கு அப்பால் ஒரு ‘மாற்று’ வரலாறு – பறக்கும் தட்டுகள், பண்டைய விமானங்கள் இத்யாதி- என ஒன்று உண்டு. பிரமிடுகளை வேற்று கிரகவாசிகள் கட்டினார்கள்; மேரி மக்தலேனா மூலமாக ஏசுவின் சந்ததிகள்; அழிந்து போன அட்லாண்டிஸ் பண்பாடு இன்றைய அறிவியல் தொழில்நுட்பங்களை விஞ்சி நின்ற ஒன்று - இது போன்ற ஒருவித மாற்று வரலாறு. இவற்றுக்கு பெரிதாக ஆதாரங்கள் கிடையாது. அறிவியல் புனைகதை சுவாரசியமே இவற்றுக்கு உண்டு. ஆனால், கார்ல் சாகன் கூறுவது போல, இவை புனைகதை என புரிந்து கொண்டால் அவற்றைக் கொண்டு உண்மையான அறிவியல் மர்மங்களுக்கு பயணம் செய்ய முடியும். பண்டைய பண்பாடுகளில் ஒரு ஈடுபாட்டை உருவாக்க முடியும்.

  எப்போதும் மார்ட்டின் கதைகளில் ஒரு எதிரி உண்டு. கறுப்பு அங்கி மனிதர்கள் (Men in Black – டாமி லீ ஜோன்ஸ், வில் ஸ்மித் திரைப்படம் மூலம் பிரபலமான பெயர்.). ரகசியங்களை காப்பவர்கள். அவற்றை வெளிப்படையாக பேசுகிறவர்களை மௌனித்து போக வைப்பவர்கள். இவர்களும் ஒருவித புகைத் தோற்றங்கள்தான் – urban legends. ஆனால் இன்னொரு தளத்தில் பார்த்தால் புனை-மனம் உருவாக்கும் அதிகார வர்க்கத்தின் பகடித் தோற்றம் அல்லது அதீத தோற்றம், ஒருவித caricature என சொல்லலாம். உலகளாவிய ஒரு அரசு இயந்திரத்தின் இருட் பாகங்கள்.
  சரி இந்த முறை முத்து காமிக்ஸ்காரர்கள் வெளியிட்டிருக்கும் ‘மர்ம மனிதன்’ மார்ட்டின் சாகசம் ‘கனவின் குழந்தைகள்’. முத்து காமிக்ஸ் வெளியிட்டிருக்கும் இந்த சாகசக் கதை குறித்து இங்கு பேசப்போவதில்லை. ஆனால் ஒரே வரியில் சொன்னால் அண்டவெளி அயல் கிரக மனிதர்களைத் தாண்டி ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் மரபுகளில் கனவுகளின் முக்கியத்துவத்தையும் அப்பழங்குடி மக்களின் பண்பாட்டு-சமூக வாழ்க்கைக்கும் மேற்கத்திய ஆஸ்திரேலிய ஆக்கிரமிப்புக்கும் இன்னும் முடிந்திடாத ஒரு நுண்ணிய மோதலையும் இக்கதை சொல்கிறது. படிக்க வேண்டிய ஒன்று.நன்றி-தினமணி

  ReplyDelete
  Replies
  1. @ திருமாவளவன் P

   அருமையான மேற்கோள்கள் நண்பரே..! இப்படி வித்தியாசமான கதைகளங்களை தேடிபிடித்து சுவையாக காமிக்ஸாக உருவாக்கும் 68 வயது இள கதாசிரியர் ஆல்டபிரேடோ காச்டெல்லி [இங்கே'கிளிக்'] மூளையை பாராட்டாமல் இருக்கவே முடியவில்லை..! மனுஷன் என்னமா கொஞ்சம்கூட பிசீர் தட்டாமல் கதையை எழுதிதள்ளுகிறார் தெரியுமா..!!!கொஞ்சம் குள்ளமா இருக்கறவங்க பயங்கர கில்லாடிங்ககிறது சரியா இருக்கு..!

   நண்பர் குறிப்பிட்ட தினமணியில் வந்த கட்டுரை படிக்க...இங்கே'கிளிக்'

   Delete
  2. மார்ட்டினை பற்றிய அரிய தகவல்களை அள்ளி வழங்கிய நண்பர்களுக்கு நன்றிகள் பல.

   Delete
  3. ரவி@!,

   சில மாதங்களுக்கு முன் எடிட்டர் படைப்பாளிகளை சந்திக்க சென்றபோது ,அங்கு ம.ம.மா.கதையாசிரியரை சந்தித்ததாகவும் அவர் தமிழ்நாட்டில் மார்ட்டின் ரசிகர்களை கண்டு மிகவும் சந்தோசப்பட்டதாக கூறினார் என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார்.அதிலிருந்து நான் கதையாசிரியரின் ரசிகன்.

   நான் அடிப்படையில் லாஜிக் இல்லாத மாயாஜால கதை,ஏலியன் ,அமானுஷ்ய கதைகள் படிக்க மாட்டேன்.எனக்கு பிடிக்காது.எனவே மார்ட்டின் கதைகள் பிடிப்பது இல்லை.!ஆனால் கதையாசிரியரை ரொம்ப பிடிக்கும்.!

   Delete
 29. டியர் ஸார்...
  முன்பு பத்து ரூபாய் விலைகளில் நம் காமிக்ஸ்கள் வந்து கொண்டிருந்த சமயம் 'கோட் நேம் மின்னல்' என்ற கதை நிறைய இதழ்களில் விளம்பரம் வந்து கொண்டிருந்தது.
  அதன் இரண்டு பாகங்களுக்கான அட்டை படங்களும் தயாராகி,மொழிபெயர்ப்பும் முடிந்து உங்கள் டேபிளுக்கு வந்தபோது.......
  இது சரிப்படாது...நம் ரசனைகளுக்கு ஒத்து வராது..வாசகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்....
  என்று அந்த கதையை பரணுக்கு பார்சல் பண்ணியதாக ஏதோ ஒரு மாமாங்கத்தில் நீங்கள் கூறியதாக ஒரு ஞாபகம்...!
  அதே போல ஒரு ஜெஸ் லாங் கதைகூட க்ளைமாக்ஸ் ரொம்ப மொக்கையாகத்தோன்றியதால் அதுவும் கிடப்பில் போடப்பட்டதாக கூறியுள்ளீர்கள்....
  இவற்றை கருத்தில் கொண்டுதான் 'எவ்விதத்தில் தேர்வு செய்கிறீர்கள்' என்ற வரியை பதிவு செய்தேன்...!
  நிற்க...
  நம் ரசனைகள் கொஞ்சமேனும் மாற்றம் கண்டுள்ள இவ்வேளையில் 'கோட் நேம் மின்னல்' வருவதற்கான வாய்ப்பு உண்டா...?
  ஷான் வாம் ஹாமேவின் இன்னுமொரு படைப்பான 'லேடி எஸ்' இன்னும் தமிழ் பேசாதிருப்பதின் காரணம் என்ன?

  (நம்ம காமிக்ஸ்ல மகளிர் அணி ரொம்ப 'வீக்'கா இருக்குதுங்கஜி!)

  ReplyDelete
 30. // மார்ட்டின் கதைகள் என் எழத்துக்கள் போலவே...//


  தவறான ஒப்பீடு சார்.! சனிக்கிழமை நடு ஜாமத்தில் எழந்து பதிவு போட்டாச்சா.,பதிவு போட்டாச்சா என்று பார்த்து பதிவுபோடவில்லை என்றால்.,ஒருவேளை எடிட்டருக்கு உடம்பு முடியலில்லையோ என்று வருத்தப்பட்டு லேட்டாக பதிவு போட்டாலும் அப்பாடா என்று சுவராசியமாக ஒரே மூச்சில் படித்துவிட்டு சந்தோசத்துடன் தூங்கப்போவது வாரம் வாரம் நடக்கும் சங்கதி!.


  ஆனால்,மார்ட்டின் கதைகளோ.,பீஸா பர்கருடன் பழைய சோற்றுடன் கலந்துசாப்பிட்ட மாதிரி புதுமையும் பழமையும் கலந்த எது மாதிரியும் இல்லாத புது மாதிரி மொக்கை கதை.இதை படிக்கபோகும்போதெல்லாம் எனக்கு பிடிக்காத கணக்கு பாடம்தான் ஞாபகம் வரும்.!

  ReplyDelete
 31. மின்னும் மரணம் சிறந்த இதழ் என்பதில் எனக்கும் எந்த மாற்று கருத்தும் இல்லை ..ஆனால் இந்த வருட சிறந்த இதழ் மறுபதிப்பு இதழ் எப்படி தேர்வாகும் என்ற குழப்பம் எனக்கு ....

  மின்னும் மரணம் க.வெள்ளை வந்த ஆண்டே அதை சிறந்த இதழ்களில் ஒன்றாக அறிவித்தாகி விட்டது ..வண்ணம் என்பதற்காக இந்த ஆண்டும் அதை இணைக்க முடியுமா ...சார் ..

  உதாரணமாக

  வீரபாண்டிய கட்டபொம்மன் சிறந்த படம் அப்பொழுது வந்த ஆண்டில் அதை சிறந்த படமாக கூட தேர்ந்தெடுத்து இருக்கலாம் ...ஆனால் டிஜிட்டல் முறையில் போன ஆண்டு வந்த வீ.பா.கட்டபொம்மன் திரைப்படத்தை மீண்டும் சிறந்த படமாக (இருந்தாலும் ) தேர்ந்தெடுக்க முடியுமா ...ஒத்து கொள்வார்களா....;-((


  அடுத்த கல்லை போட்டாச்சு ....;-))

  ReplyDelete
  Replies
  1. தலைவரே.!

   ஹாஹாஹாஹா................மின்னும் மரணத்து பாராட்டும் போதெல்லாம்.ஏதோ ஒரு நெருடல் மனதினுள்......அது இதுதான் தலைவரே.!

   அரைச்ச மாவை அரைப்போமா.? துவைத்த துணியை துவைப்போமா.? மாதிரி
   இருந்தாலும் அம்புட்டு பெரிய புத்தகத்தை பார்க்கும்போது பரவசம் ஏற்படுகிறது.புதியதாய் ஏக் தம்மில் படிப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பதில் சந்தேகம் இல்லை.!

   " உண்மையில் பொக்கிஷமான புத்தகம்."

   Delete
 32. விண்ணில் ஒரு வேங்கை 6 மார்க்
  சிக்பில் மார்ட்டின் இருவருக்கும்
  மார்க்கை குறைத்து விட்டீர்களே
  இது நியாயமா ஆசிரியரே

  ReplyDelete
 33. 2016 ல் ஜூலியா விற்கு பதில்
  மாடஸ்டி க்கு இன்னொரு இடம்
  கொடுக்கலாமே ஆசிரியரே

  ReplyDelete
  Replies
  1. அடடே! சூப்பர்.! இதை நான் வழிமொழிகிறேன்.!

   Delete
  2. மடிப்பாக்கத்தாரே ஹா,ஹா.

   Delete
 34. இரட்டை வேட்டையர்கள் ஜார்ஜ் டிரேக் க்கு
  தயவுசெய்து ஒரு வாய்ப்பு கொடுங்கள்
  ஆசிரியரே

  ReplyDelete
 35. மாறிப் போன மாப்பிள்ளை - இது போன்ற சுமாரான சிக்-பில் கதைகளை தவிர்த்து காமெடிக்கு உத்திரவாதம் உள்ள கதைகளை மட்டும் வெள்யீட வேண்டும். நீங்கள் சில பதிவுகளுக்கு முன் சொன்னது போல அடுத்த வருடம் சிக்-பில் கதைகள் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை உடன் இருக்கிறேன்.

  ReplyDelete
 36. Mr. Editor and Comics lovers, I take liberty to suggest some positive steps to increase the readership and circulation.
  Try to send complimentary sample copies to the libraries of Tamil Sangams all over India and Globe.In fact they need such media to cultivate TAMIL reading habit of their kids.
  Similarly Nagrathar Sangams around the Globe can help to reach more readers.
  Try to appoint selling agents at Singapore/KulaLumpur/Colombo/Jaffna/ London/Toronto where more Tamil readers are spread over.Buying online is expensive and local agents will help to boost your Circulation.
  Comics readers can join the move by sending gift of Comics books to your friends and relatives living outside Tamilnadu. They may not be aware of the new Avtar of Lion and Muthu comics in yhe recent years.

  We all will be benefited by increased circulation which will lead to offer us increased pages and widen the Editor's search for the Best International Comics Albums for 2017.

  ReplyDelete
 37. இரவு முமுவதும் உங்கள் பதிவை எதிர்பாரத்திருந்து பின்புதான் தூங்கபோனேன் ஸார். காலையில் உங்கள் பதிவை கண்டவுடன்தான் என் முகத்தில்சிரிப்பே வந்தது. " மின்னும் மரணம்" சூப்பர்தான் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. ஆயினும் அது மறுபதிப்பு என்று நண்பர் மாயாவி ஸார் கூறினாரே. அதுதான் நான் அவ்விதழை ஆட்டத்தில் சேர்க்கவில்லை.
  ஒவ்வொரு இதழுக்கும் உங்கள் மதிப்பெண்கள் சூப்பர். நல்லாய் போய்க் கொண்டிருக்கும்போது , " பால் பொங்கும்போது தண்ணீர் ஊற்றியது போலே" தொடரும் என்று போட்டு விட்டீர்களே ஸார். ஒவ்வொரு இதழையும் பொக்கிஷம் போல கருதுகிறேன்.

  ReplyDelete
 38. @ பிருந்தாபன்

  //mayavi. siva5 December 2015 at 14:47:00 GMT+5:30
  @ ஜோடர்பாளையம் சரவணகுமார்

  லயன் காமிக்ஸில் வந்த டாப் கதை எதுவென கேட்டால் நீங்கள் சொல்வது சரி..! மொத்த காமிக்ஸில் டாப் எதுவென சொல்ல பெரிய ஆராய்ச்சி எல்லாம் வேண்டியதில்லை..! அந்த கதையின் உயரத்திற்கு எதுவுமே நெருங்கவே முடியாது..! விலையிலும் கூட..! விற்பனையிலும் கூட..! அந்த பளபள சாவு க்கு இன்னொன்று ஈடாகுமா என்ன..!!!//

  இப்படி சொன்னதுக்கு, அது மறுபதிப்புன்னு சொன்னவங்க பட்டியல்ல மாயாவி எங்க வந்தார்...? [ஒரே குயப்பம் போங்க]

  ReplyDelete
 39. லயன் காமிக்ஸ் டாப் பிகர் ........
  இதென்ன அபத்தம் ......
  அதுவும் இளவரசி தான் .......  டாப் 1௦ பிகர் யாருன்னு தானே போட்டி .....
  நான் தப்பா ஒன்னும் புரிஞ்சுகலியே

  ReplyDelete
 40. 2016 - ல் குண்ண்ண்டு புக் இல்லாதது வருத்தமே

  ReplyDelete
 41. இன்று தபாலில் எனக்கு டிசெம்பர் மாத பார்சல் வந்து கிடைத்தது. நன்றிகள் கோடி!

  ReplyDelete
  Replies
  1. இளவரசி கதையும் வந்து சேர்ந்து விட்டதா சார்.? படித்துவிட்டீர்களா.......?

   Delete
  2. இன்னும் இல்லை ஸார் நாளை எப்படியும் படித்து விடுவேன் ஸார். படித்துவிட்டு கட்டாயம் எழுதுவேன். அது வரை மன்னிச்சூ!

   Delete
 42. செல்வம் அபிராமி சார்.!

  தாங்கள் ப்ரீயா.?

  ReplyDelete
  Replies
  1. சார்...பெரும்பாலும் மதியம் 2.30-3.00 லஞ்ச் வரும்போது ப்ரீதான்.

   இரவு..10.30 க்கு பிறகு


   I work 7X24.....வீடு பணியிடம் மேலே என்பதாலும்,சுயதொழில் என்பதாலும் இந்த சிறிய சங்கடம்....

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 43. சந்தா 4100 அனுப்பிட்டேன்

  ReplyDelete
 44. Today i received a phone call from your office. A lady voice gently remembered about the renewal of subscription. A nice follow up. Good work sister, you done well. (By the way I have already renewed my subscription two weeks back)

  ReplyDelete
 45. திகில் காமிக்ஸ் பட்டியல் யாரேனும் இங்கே பதிவிட்டால் .......கொள்ளையாய் மகிழ்ந்து போவேன்

  ReplyDelete
  Replies
  1. நானும் ரொம்ம்ம்ம்மம்ம்ம்ப திரும்பி பார்க்க நினைக்கிறேன் ...............

   கழுத்து வலிக்குது ..........

   சீக்கிரமா மாயாவி சிவா(ஜி)....கிங் ஜி ..........

   Delete
  2. @ மதியுள்ள மந்திரி

   கொஞ்சம் பொறுங்கள்..! அழகுபடுத்தி கொடுக்கிறேனே..!

   எதற்கு கேட்கிறிர்கள் என புரிந்துவிட்டது..ஹா..ஹா..அந்த 2016 சந்தா ருபாய் அளவில, 200 புக்ஸ் பிடிச்ச விஷயமா தானே...!

   Delete
  3. @ சேலம் டெக்ஸ்

   பசிக்கு மட்டுமில்ல, ருசிக்கும் பக்குவம் தான் முக்கியம்..! அது வேண்டிய உங்க லிஸ்டில மட்டும் இருக்கே..!

   என்ன மதியுள்ள மந்திரி சரிதானே...!

   Delete
  4. செல்வம் அபிராமி சார்.!

   பிஸியான ஷெட்யூலிலும் பதில் கொடுத்தற்கு மிக்க நன்றி.!___/|\___.!


   டெக்ஸ் விஜயராகவன் லேட்டா வந்தாலும் லேட்டஸ் நியூஸ்.சூப்பர்.!

   டெக்ஸ் மார்க் கொஞ்சுண்டு குறைந்து போனதை பார்த்து மனசு உடைஞ்சு போய்ட்டீங்களோ என்று நினைத்துவிட்டேன்.!நான் கூட மாடஸ்டிக்கு வெறும் 4 மார்க் கிடைத்ததில் கொஞ்சம் ஜெர்க் ஆகிவிட்டது நிஜம்தான்.! பின் சுதாரித்துக்கொண்டேன்.

   எடிட்டர் மற்ற ஹீரோக்களின் கதைகளை அலசி ஆராய்ந்து மதிப்பெண் போடும்போது.,ஆகா சூப்பர் என்று பாராட்டி சந்தோசப்படும் நாம்.நமக்கு பிடித்த ஹீரோக்களின் மார்க் குறையும் போது கொஞ்சம் ஜெர்க் ஆகிறோம்.! எடிட்டரின் மதிப்பீடை நமது ரசனையின் அங்கிகாரம் போல் கருதுகிறோமா.? என்ற சந்தேகம் வருது.!

   நம் ஹீரோக்களுக்கு மட்டும் எடிட்டர் தில்லுமுல்லு படத்தில் ,தேங்காய் சீனிவாசன் ரஜினிக்கு இண்டர்வியூவில் 990/100 மார்க் போடுவாரே அதுபோல் போடவேண்டியதுதான்.!

   Delete
  5. திகிலில் சுமார் 20 புத்தகங்கள் என்னிடம் உள்ளது.!

   1989 வரை திகில் புத்தகங்கள் தொடர்ச்சியாக வாங்கினாலும் திகில் கதைகளில் ஆர்வம் இல்லாததால் அவற்றை பாதுகாக்க நினைக்கவில்லை.!

   Delete
  6. ///டெக்ஸ் மார்க் கொஞ்சுண்டு குறைந்து போனதை பார்த்து மனசு உடைஞ்சு போய்ட்டீங்களோ என்று நினைத்துவிட்டேன்.!////----- ஹி...ஹி..MV சார்....
   இதுவரை ஆசிரியர் டெக்ஸ் க்குதானே அதிக மதிப்பெண் தந்து உள்ளார்....
   மின்னும் மரணத்தை அடுத்த இடம் டெக்ஸ் கதைகளுக்கு தான் என்பது ஊர் அறிந்த ரகசியம் ஆயிற்றே ....
   இயர் என்ட் வேலைகள் அதிகம் , அதான் இங்கே எட்டி பார்க்கவில்லை MV சார்....

   Delete
  7. இறுதி சுற்றில் இளவரசி நிறைய மதிப்பெண் எடுப்பார் என்று நம்புகிறேன்.!

   எனது காமிக்ஸ் ஜாம்பவான் நண்பர் கூறியதாவது.!

   மாடஸ்டி கதைகளில் சூப்பரான கதைகள் + சித்திரங்கள் கொண்ட கதைகளை பெரும்பாலும் பொறுக்கி எடுத்து நமது எடிட்டர் வெளியிட்டுவிட்டார்.! எஞ்சிய சில நல்ல கதைகள் வேறு ஒரு பதிப்பகம் வெளியிட்டுவிட்டது. மிஞ்சி இருப்பது ஒரு சிலதான் ஏதோ தேறும்.!

   ......இந்த கூற்று உண்மையா.? விபரம் தெரிந்தவர்கள் தயவு செய்து உறுதி செய்யவும்.!அந்த செய்தி உண்மையாகும் பட்சத்தில் என்னிடம் முத்து & லயன் & வேறு பதிப்பகம் அனைத்து கதைகளும் என்னிடம் உள்ளது.! நான் ஏன் தேவையில்லாமல் எடிட்டரை சங்கடப்படுத்த வேண்டும்.?

   தலைவரே..........?

   Delete
  8. அன்பு நெஞ்சகளுக்கு மிக்க நன்றி .......
   இஸ்கூல் லீவு ......
   திகில் புத்தகம் அடுக்க மட்டுமே......கேட்டேன் ....

   அடுக்க மட்டுமே..... அடுக்க மட்டுமே..... அடுக்க மட்டுமே....

   அப்ப தானே காணா போன காமிக்ஸ் கிடைக்கும்

   எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ....
   ஆஹா பட்சி பேசிடுச்சா ......


   மாயாவியும்........... டெக்ஸ்சும்......ஒருவருக்குள் ஒருவர் தானா .........


   Delete
  9. அப்பிடியே ....முத்து....லயன் ....மினி ....ஜூனியர் ...மினி முத்து லிஸ்ட்களை நெட்டில் போட்டு விட்டால் ஜகத்தில் உள்ள எல்லோர்ரும் பயன் பெறுவார்கள் அல்லவா

   Delete
  10. உங்களை நன்கு தெரிந்த சேலம் நண்பரிடம் நான் யார் என கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் மந்திரி சார்..
   உங்கள் ...த்தூர் குசும்பு உங்கள் வார்த்தையில் தெரிகிறது....

   Delete
  11. போன பதிவில் தானே மாயாவி சிவா, சரவணன் சீனிவாசன், ஸ்ரீதர், நான், ரம்மி ஆகியோர் மின்னும் மரணம் -விழாவில் எடுத்து கொண்ட போட்டோவை இங்கே க்ளிக்கில் மாயாவி சிவா அவர்கள் போட்டார், மீண்டும் பாருங்கள் , மந்திரி சார்..

   Delete
  12. ///ஆஹா பட்சி பேசிடுச்சா ......


   மாயாவியும்........... டெக்ஸ்சும்......ஒருவருக்குள் ஒருவர் தானா ///

   கவனிச்சு படிங்க! நீங்களும் மாயாவியும் ஒன்றுக்குள் ஒன்றான நண்பர்கள் என்றான அர்த்தத்தில்தான் மந்திரியார் எழுதியிருக்கிறார்.! !

   காரம் சாப்பிடுறதை குறைங்கன்னு சொன்னா கேக்குறிங்களா மாம்ஸு.!!!

   இடம் தெரியாமே எல்லாரையும் ஒரே மாதிரியா புரிஞ்சிக்கிட்டு ……………………!!!!!!

   Delete
  13. ///மாயாவியும்........... டெக்ஸ்சும்......ஒருவருக்குள் ஒருவர் தானா ......... ////----ஓஹோ...இதற்கு அதான் அர்த்தம்?? நான் படித்த ஸ்கூல்ல தப்பா சொல்லி தந்து விட்டார்கள் போல......
   இரண்டு ஐடியும் ஒண்ணு தானா என இதை விட தெளிவாக கேட்க முடியாது ......
   ஓவ் நேற்று காலை முதலில் இருந்து தான் மந்திரி சார் ப்ளாக் வர்ரார் போல....

   Delete
  14. @ சேலம் டெக்ஸ்

   //மாயாவியும்........... டெக்ஸ்சும்......ஒருவருக்குள் ஒருவர் தானா .//

   உருவத்தில் வேறானாலும்...மாயாவியும்,டெக்ஸும் ஒன்றுபோல் குதிரையில் பாய்ந்து போராடும் வீரர்கள் என ஏன் பாஸிடிவாக எடுத்துக்கொள்ள கூடாது நண்பரே..!

   உதவி என்று அழைத்தால் யார்வேண்டுமானாலும் வரலாம். அவர் வேதளரா..? வில்லரா..? என்பது முக்கியமல்ல, குதிரை வீரரா என்பதே முக்கியம்..! இதற்கு பல அர்த்தம் உண்டு, அமைதியான நேரத்தில் யோசியுங்களேன்..!

   Delete
  15. உதவி என்று அழைத்தால் யார்வேண்டுமானாலும் வரலாம். அவர் வேதளரா..? வில்லரா..? என்பது முக்கியமல்ல, குதிரை வீரரா என்பதே முக்கியம்..!


   ஆஹா திவ்யம்

   Delete
  16. மந்திரிக்கு சிந்தனா சக்தி காணாது ...........


   பட்டியல் கொடுத்த குருதை வீரர் வாழ்க ......

   Delete
  17. டெக்ஸ் சார் தவறாக கொள்ள வேண்டாம் .....
   அவர் அழகாக அடுக்குகிறேன் என்பதற்குள் நீங்கள் லிஸ்ட் போட்டு விட்டீர்கள்.
   நீங்களும் மாயாவியும் அருகருகே உள்ளீர்கள் ---என்று நினைத்து விட்டேன்....
   அத்தனை நட்பா உங்கள் இருவரிடம் என்று வியந்து சுருக்கமாக பதிவிட்டதற்கு மன்னிக்க வேண்டும் .......


   Delete
  18. சே சே மன்னிப்பு நான் தான் கேட்க வேணும் மந்திரி சார்....
   கொஞ்சம் குதிரை வேகத்தில் உங்கள் கருத்தை தவறாக புரிந்து கொண்டு விட்டேன், ஹி...ஹி...சன்னமான சாரி, அந்த அடி பட்ட தாடையில் கொஞ்சம் மருந்து போட்டு கொள்ளுங்கள் சார்...
   டெக்ஸ் மாதிரியே, தாடை தென் பட்டால் கொஞ்சம் கை பர பரத்து விடுகிறது...
   கார்சன் அங்கிள் ச்சை கிட் அங்கிள் சொன்ன மாதிரி கொஞ்சம் காரத்தை குறைத்து கொள்கிறேன்....

   Delete
  19. திகில் காமிக்ஸ் பட்டியல் யாரேனும் இங்கே பதிவிட்டால் .......கொள்ளையாய் மகிழ்ந்து போவேன்//--- யாரேனும்-என நீங்கள் கேட்டதாலேயே நான் அந்த லிஸ்ட்டை இங்கே காப்பி ஆத்திட்டேன்... முதல் வேண்டுகோளே அவருக்கு என போட்டிருந்தால் நான் இந்த பக்கமே வந்திருக்க மாட்டேன் மந்திரி சார்...ஹி..ஹி..

   Delete
  20. இதுவும் கடந்து போவோம் ............
   கைய கொடுங்க.............

   Delete
 46. டெக்ஸ் விஜயராகவன்.!

  எனக்கு என்னவோ அடுத்த பதிவில் வரும் இதழில் இதைவிட சூப்பர் ஹிட் அடிக்க தீபாவளி மலர் காத்து உள்ளதோ என்று தோன்றுகிறது. ஓவியங்களை பார்த்து என் மனைவிகூட அசந்து போய்விட்டாள்.! ஓவியங்கள் சான்சே இல்லை.! இதை விட சிறந்த ஓவியங்கள் இதற்கு முன்னால் கண்டதுண்டா.? இருந்தால் குறிப்பிடவும்.!

  ReplyDelete
 47. /// இதை விட சிறந்த ஓவியங்கள் இதற்கு முன்னால் கண்டதுண்டா.? இருந்தால் குறிப்பிடவும்.!///

  நிழலோடு நிஜ யுத்தம்.

  (புதிய பாணி ஓவியங்கள்) :-)

  ReplyDelete
 48. கிட் ஆர்ட்டின் கண்ணன்.!
  மர்ம மனிதன் மார்ட்டின் உதவியாளர் போல்......

  கர்ர்ர்ர்...........

  அப்புறம்.,
  அண்ணா! டீ இன்னும் வரல.!

  ReplyDelete
  Replies
  1. டீ ரெடியாயிடுச்சி MV.!!!

   சுடச்சுட வரும் ஞாயிறு அல்லது திங்களில் உங்கள் டேபிளில் இருக்கும் பிஸ்கட்டுடன் .!

   Delete
  2. அண்ணா! ரொம்போ சந்தோசமண்ணா.! ஆவலுடன் உள்ளேன்.( உங்கள் ஸ்டையிலில்தானே.?)எனது ஈ மெயிலில் அனுப்புங்களேன்.!

   Delete
  3. இல்லை M V.

   அப்படியே கதையை மட்டும் விமர்சித்துள்ளேன்.! வரலாற்று பின்னனி., நையாண்டி எதுவும் இல்லாமல்.!

   Delete
  4. இல்லை M V.

   அப்படியே கதையை மட்டும் விமர்சித்துள்ளேன்.! வரலாற்று பின்னனி., நையாண்டி எதுவும் இல்லாமல்.!

   Delete
  5. ஒ.கே.ஒ.கே.!

   அதுபோதும்.! மிகவும் நன்றி.! எடிட்டரின் பதிவை தொடர்ந்து.,வாரத்தின் இறுதி இரண்டு நாட்கள் இங்கு கஞ்சன் வீட்டு பந்தி போல காற்றாடிக்கொண்டுதானே உள்ளது.!அப்போது வெளியிடலாமே.?(நன்றி.: பௌன்சர் கதை.!)

   Delete
 49. சந்தா கட்டுனவங்களுக்கு ஏதோ ரகசிய விருந்துனு சொன்னீங்க .....

  அத என்கிட்டே மட்டும் '''''''''''''''''ரகசியமா''''''''''''' இதே ப்ளாக் ல போட்டா போதுமே அசான் ..

  ReplyDelete
 50. கிட் ஆர்ட்டின் அண்ணா.!

  ஹலோ,! ஹலோ.! ஹல்லல்லல்லோ...........

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் முகமூடி அணிந்து எழதினால் கூட ., நி.நி.யு. கதையில் டூப் மாடஸ்டியை தூரத்தில் இருந்தாலும் பார்த்த உடனே கார்வின் கண்டுபிடிப்பது போல.,கத்திமுனையில் மாடஸ்டி கதையில் கார்வின் போல் பபூன் வேடமிட்டு கத்தி வீசும் எதிரிகளை சுலமாக அடையாளம் கண்டுபிடிக்கும் மாடஸ்டியை போல் நானும் பார்த்தவுடனே உங்கள் எழத்தை சுலபமாக கண்டுபிடித்து விடுவேன்.!

   Delete
 51. @ ALL : சீனியர் எடிட்டரின் பிறந்த நாளிது guys !!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கள் ....

   Delete
  2. Many more happy returns of the day to our beloved senior editor Mr. Soundara Pandian.

   Delete
  3. மதிப்பிற்க்குரிய சீனியர் எடிட்டர் அவர்களுக்கு பிறந்தநாள் வணக்கங்கள்.!!!

   Delete
  4. சீனியர் எடிட்டருக்கு,

   எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.!

   Delete
  5. சீனியர் எடிட்டர் அய்யா திரு செளந்திரபாண்டியன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ....
   மின்னும் மரணம் வெளியீடு அன்று கூட டெக்ஸ் படம் போட்ட பனியன் அணிந்திருந்த என்னை கூப்பிட்டு நீங்கதான் அந்த டெக்ஸ் அதிதீவிரனா??.... இப்படி பக்கத்தில் உக்காருங்கள்"- என சொல்லி 20நிமிடங்கள் உரையாடியது இன்றும் இனிக்கும் இனிய தருணம்...

   Delete
  6. Our beloved & berespected senior editor sir...our heartiest wishes on your birth day...!!!! :-)

   Delete
  7. நாம் போற்றும் பொக்கிஷங்களை படைத்த பிரம்மா,
   அய்யா திரு M.சௌந்திரபாண்டியன் அவர்களின் பிறந்தநாளுக்கு,
   வாழ்த்த வயதில்லை. வணங்கி ஒரு...இங்கே'கிளிக்'

   Delete
  8. Senior Editor Sir, My heartliest wishes to you.

   Delete
  9. @ மாயாவி
   உங்கள் கை வண்ணத்தின் மெருகூட்டலில் அட்டகாசமான போட்டோவை வழங்கியிருக்கிறீர்கள். நானும் அப்படியே சைக்கிள் கேப்பில் சீ. எ. -க்கு என் வாழ்த்துகளை 'தெ(றி)'ரிவித்துக் கொள்கிறேன்.

   Delete
  10. @ MH மொய்தீன்

   எண்ண அலைவரிசைக்கு ஒரு மிக சரியான உதாராணம் உங்கள் பதில் மொய்தீன். ஏன் தெரியுமா ? இந்த போட்டோவில், சீனியர் அருகில் நீங்கள் இருகிறிர்கள் என்பதே..! உங்களுக்கு நினைவிருகிறதா...? இரவு கிளிக்குகிறேன் உங்களுக்கு புரியும்...ஹா..ஹா..!

   Delete
  11. எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் ஐயா அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தாரின் மீதும் என்றென்றும் நின்று நிலவட்டுமாக....

   Delete
  12. அப்பிடியே அவர் பிறந்த நாள் ஸ்பெசலாக ஒரு புக்க்க்கு

   Delete
  13. நம்ம முத்து காமிக்ஸ் ஜேம்ஸ்பாண்டை சுற்றி ரசிகர்கள்...இங்கே'கிளிக்'
   [மொய்தீன் நினைவிருகிறதா..]

   Delete
  14. @ மாயாவி
   சீனியர் பக்கத்தில் நானிருக்கிறேன் ஓகே, ஆனால் எங்களிருவருக்கும் நடுவில் ஜூனியர் இருக்கிறாரே! கவனித்தீர்களா...அப்படி என்றால், எனது வலது புறத்தில் நம்ம எடிட்டர் இருக்க வேண்டுமே...? ஹா ஹா.....ஸ்வீட் மெமொரீஸ்-சை மீண்டுமொருமுறை தரிசிக்க உதவும் வழித்தடமாக இருப்பது இதுப் போன்ற நிழற்படங்களே! நினைவிருக்கிறதாவா...? என்ன அப்படி கேட்டு விட்டீர்கள், மறந்தால் தானே நினைப்பதற்கு...

   Delete
  15. இன்று தமிழ் நாட்டில் படித்த ஐம்பது வயது மதிக்கதக்க ஒருவரினடம் சென்று., காமிக்ஸ் என்ற வார்த்தையை கூறிவிட்டு கூர்ந்து கவனித்தால் ,அவர்கள் முகம் பிராகாசம் அடையும் கூடவே ஒரு சந்தோச சிரிப்புடன் இரும்புக்கை மாயாவி என்று ஆத்ம உணர்வுடன் கூறிவிட்டு மலரும் நினைவில் மூழ்கிவிடுவார்கள்......அதை நான் பார்க்கும்போதெல்லாம் சீனியர் எடிட்டர்தான் ஞாபகத்திற்கு வருவார்.!

   அந்த காலத்தில் மாத்தியோசி என்ற புது கான்செப்டில் படிக்கும் வர்கத்தினரிடம் காமிக்ஸை பிரபலமாக்கியவர்.

   நான் ஏழ எட்டு வயது சிறுவனாக இருந்தபோது கோடை பள்ளிவிடுமுறையின் போது மாணவர்கள் அனைவரும் காமிக்ஸ்சுடன்தான் அலைவார்கள்.கொஞ்சம் உஷாரான கடைக்காரர்கள் திடீர் சேவையாக காமிக்ஸை வாடகைக்கு விட்டு நல்லா கல்லா கட்டுவார்கள்.அந்த காலகட்டத்தில் ஒரு ரூபாய் என்பது படு காஸ்ட்லியான தொகை.! எல்லோராலும் வாங்க முடியாது.! என் அண்ணன்கள் தன் நண்பர்களுடன் காமிக்ஸ் படித்துக்கொண்டு. இந்த கதை நல்லா இருக்கு அந்த கதை சூப்பர் என்று ஜாலி கச்சேரி நடக்கும்.படித்த சில ஆண்டிகளும் ,அக்கா களும் என்னைப்போன்ற சிறுவர்களிடம் தூது அனுப்பி காமிக்ஸ் இரவல் கேட்பார்கள்.பெரிய அண்ணன்மார்களோ விழுந்து அடித்து காமிக்ஸ்களை வாரிக்கொடுத்து படிக்க கொடுத்து அனுப்பி விடுவார்கள்.அந்த கொரியர்பாய் வேலை எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும்.இப்படி மாணவர் வாழ்க்கையில் சந்தோசமான அங்கமாகிப்போன காமிக்ஸை உருவாக்கிய தமிழ் காமிக்ஸின் தந்தை திரு.சௌந்திரபாண்டியன் அவர்களுடன் நேரில் பார்த்து கை குழுக்கியபோது.எனக்கு பேச்சுவரவில்லை.!

   Delete
  16. மதியில்லா மந்திரி.!

   // சீனியர் எடிட்டரின் பிறந்த நாளில் ஸ்பெஷல் புக்.//

   சூப்பர் யோசனை.!

   Delete
  17. சீனியர் எடிட்டருக்கு சற்றே தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்!

   Delete
 52. தலைமை ஆசிரியருக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.!

  ReplyDelete
 53. சீனியர் ஆசிரியர் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ......


  போராட்ட குழுவின் சார்பாகவும் ....;-)

  ReplyDelete

 54. மந்திரி சார் ....

  நமது கலீல் சார் அவர்களின் முதலை பட்டாளம் என்ற அவரின் ப்ளாகில் லயன் முத்து திகில் ..மினிலயன் என அனைத்தும் வரிசைகிரகமாக பட்டியல் இனைத்துள்ளார் ..  மடிபாக்கம் மாடஸ்தி சார் ...

  அழகான சிறந்த ஓவியங்கள் கொண்ட மாடஸ்தி சித்திர கதைகள் ராணிகாமிக்ஸ் இதழில் வெளிவந்தது என்னவோ உண்மை தான் ....ஆனால் அந்த கதைகளே நமது இதழின் மொழிபெயர்ப்புடன் மீண்டும் வந்தால் தான் சிறப்பாக இருக்கும் ...எனவே ஆசிரியர் முடிந்தால் ராணி காமிக்ஸ் இதழில் வந்தவை என( முடிந்தால்) அதை தவிர்க்காமல் மீண்டும் வெளியிட்டாலும் நலமே .....

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழரே .....

   searchஇக்கொண்டு இருக்கிறேன் ......

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. நன்றி பரணி சார் ................சிரமமான பணி செய்து இருக்கிறார்

   Delete
 55. நாம் இப்போது திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கும் 2015 – ன் படலத்தை ஒரு வித்தியாசமான கோணத்தில் அணுகும் முயற்சி இது. எந்த நாயகர்கள் கலக்கினார்கள் ..? எந்த கதைகள் சொதப்பின ..? போன்றவைகளைப் பற்றியில்லாமல், இது ஒரு வித்தியாசமான ஒன்று. அது என்ன நீங்களே பாருங்களேன்!

  டெக்ஸ் வில்லர் / 5 கதைகள் / 1243 பக்கங்கள்
  கேப்டன் டைகர் / 13 கதைகள் / 638 பக்கங்கள்
  பௌன்சர் / 7 கதைகள் / 400 பக்கங்கள்
  தோர்கல் / 4 கதைகள் / 184 பக்கங்கள்
  வெய்ன் ஷெல்டன் / 3 கதைகள் / 142 பக்கங்கள்
  கிராபிக் நாவல் / 3 கதைகள் / 154 பக்கங்கள்
  ப்ளூ ஜீன்ஸ் பில்லியனர் லார்கோ / 2 கதைகள் / 92 பக்கங்கள்
  கமான்சே / 2 கதைகள் / 92 பக்கங்கள்
  XIII / 2 கதைகள் / 92 பக்கங்கள் பக்கங்கள்
  மாடஸ்டி பிளேஸ் / 2 கதைகள் / 133 பக்கங்கள்
  ப்ளூ கோட் / 2 கதைகள் / 88 பக்கங்கள்
  லக்கி லூக் / 1 கதை / 44 பக்கங்கள் /
  ஜில் ஜோர்டான் / 1 கதை / 44 பக்கங்கள்
  சுட்டி லக்கி / 1 கதை / 44 பக்கங்கள்
  சிக் பில் / 1 கதை / 44 பக்கங்கள்
  கர்னல் க்ளிப்டன் / 1 கதை / 44 பக்கங்கள்
  லியனார்டோ / 1 கதை / 44 பக்கங்கள்
  ஸ்மர்ஃப் / 44 பக்கங்கள்
  கேப்டன் பிரின்ஸ் / 1 கதை / 44 பக்கங்கள்
  ரிப்போர்டர் ஜானி / 1 கதை / 46 பக்கங்கள்
  சாகச வீரர் ரோஜர் / 1 கதை / 46 பக்கங்கள்
  மாஜிக் விண்ட் / 1 கதை / 96 பக்கங்கள்
  டைலன் டாக் / 1 கதை / 94 பக்கங்கள்
  ம. ம. மார்டின் / 1 கதை / 205 பக்கங்கள்
  சி.ஐ.டி. ராபின் / 1 கதை / 95 பக்கங்கள்
  மாயாவி / 3 கதைகள் / 360 பக்கங்கள்
  லாரன்ஸ & டேவிட் / 3 கதைகள் / 360 பக்கங்கள்
  ஜானி நீரோ / 3 கதைகள் / 359 பக்கங்கள்
  ஸ்பைடர் / 3 கதைகள் / 357 பக்கங்கள்


  (PS: லியனார்டோ / ஸ்மர்ஃப் துக்டா துக்டா கதைகளெல்லாம் ஒரே கதையாகவே அடக்கிவுள்ளேன்.)

  நம்மை மெய் மறக்கச் செய்த காமிக்ஸ்–ன் 2015 வருசத்தில் கொண்டு வந்தவை:
  மொத்தம் 5606 பக்கங்கள் (ஃபில்லர் f பேஜஸ் சேர்க்காமல்]
  மொத்தம் 48 இதழ்கள் (அதில் 2 வண்ண மறுபதிப்புக்கள் & 12 B/W க்ளாஸ்ஸிக் மறுபதிப்புக்கள்)
  மொத்தம் 72 கதைகள் [க்ளாஸ்ஸிக் மறுபதிப்பும் சேர்த்து]
  மொத்தம் 31 வண்ணயிதழ்கள்
  மொத்தம் 17 B/W இதழ்கள்

  பக்கங்களின் ஆக்கிரமிப்பில் சந்தேகமேயில்லாமல் 'தல' முதலிடத்தை தட்டி செல்கிறார். இரண்டாமிடமோ 'தளபதி'க்கு ‘மி. ம; புண்ணியத்தில், மூன்றாமிடத்திலோ ‘ஒற்றைக் கை’ பௌன்சர். இவர்கள் மூவர் மட்டுமே குத்தகைக்கு எடுத்துக் கொண்ட பக்கங்கள் 2281. வருஷத்தின் மொத்தப் பக்க எண்ணிக்கையில் 1/3 –க்கும் சற்றே அதிகம்.என்பதில் ஆச்சரியமில்லை. இந்த மூவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமையை நான் சொல்லாமலே உங்களுக்கு புரிந்திருக்குமே.?

  அடுத்தக் கோட்டாவில் வருபவரோ ‘மாயாலோகத்தின் மாவீரன்’ தோர்கல். சென்றாண்டு அமைதியாக உருவெடுத்து இந்தாண்டு விஸ்வரூபம் கண்டவர். வெறும் நான்கு கதைகள் போதாதென்றே சொல்லலாம். அடுத்தாண்டு Z பிரிவில் வரவிருக்கும் தோர்கல் அதே போன்று நான்கு கதைகள் மட்டுமா அல்லது இன்னும் கூடுதல் இடம் கிடைக்குமா, அதிலும் Z பிரிவில் முதல் கதையை தொடங்குபவர் இவரா ..? என்பது மில்லியன் டாலர் கேள்வி?

  இவருடன் Z பிரிவில் பௌன்சரும் இணைகிறார் + பதிய பாணிக் கதைகளின் வரிசை எனும் போது எதிப்பார்ப்புகள் எகிறி நிற்கின்றன. எப்படியும் ஏப்ரலில் முதல் இதழ் வரும் என்பதால் மார்ச் 2016-ல் சந்தா அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

  இந்த முறை கிராபிக் நாவலில் வந்த 3 கதைகளில் தான் பெருத்த ஏமாற்றம்.இதைப் பற்றி அதிகம் பார்த்தாகி விட்டபடியால், கடந்து செல்கிறேன். மற்றபடி 2 கதைகளாக இணைந்து வந்தவை மற்றும் தனி இதழாக வந்தவைகளை நாம் அதிகம் விமர்சித்து விட்டபடியால் அதைப் பற்றி அதிகம் சொல்லவில்லை.

  மேலே கூறியுள்ள டேட்டாவில் கூடுமானவரை சரியாகவே இருக்குமென்று நினைக்கிறேன். சற்று முன்னே பின்னே வித்தியாசங்கள் இருந்தாலும் அதை சேதாரங்களை கொண்டு வராது.

  ஓகே 2015 ஒரு சூப்பர் டூப்பர் என்ற சொல்லலாம். வர விருக்கும் 2016 –ன் அட்டவணையைப் பார்க்கும் போது அதையும் மிஞ்சும் என்பதில் சந்தேகமில்லை.

  ReplyDelete
  Replies
  1. மிலாடி நபி வாழ்த்துக்கள் தோழரே ...........அண்ட் தோழர்களே .....

   Delete
  2. மொய்தீன் சார்.!

   மிலாடி நபி வாழ்த்துக்கள்.!

   2015 புள்ளி விபரம் கொடுத்து ரமணா போல் அசத்திவிட்டீர்கள்.! பிரமாதம் .!உங்களை போல் , மாயாவி போல் , நமது சேலம் இரவு கழுகார் போல் நண்பர்கள் இருப்பதால் நாங்கள் எல்லாம் " நோகாமல் நோன்பு கும்பிடுகிறோம்.!"மிக்க நன்றி.!

   Delete
  3. @ ம. ம. (மா.மா. அல்ல) & M. V.
   வாழ்த்துகளுக்கு நன்றி நண்பர்களே..! டேட்டாபேசில் என்னுடனிருந்த விஷயங்களை உருவி இங்கே பகிர்ந்திருக்கிறேன். நோ. நோ. கு. ஒரு கலை. அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை, நீங்கள் அதிர்ஷசாலி!

   Delete
  4. MH Mohideen @ வித்தியாசமான முயற்சி! வாழ்த்துகள்!

   Delete
 56. சீனியர் எடிட்டர் அவர்களுக்கு என் மனங்கனிந்தபிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 57. Madipakkam Venkateswaran23 December 2015 at 22:37:00 GMT+5:30

  திகிலில் சுமார் 20 புத்தகங்கள் என்னிடம் உள்ளது.!

  1989 வரை திகில் புத்தகங்கள் தொடர்ச்சியாக வாங்கினாலும் திகில் கதைகளில் ஆர்வம் இல்லாததால் அவற்றை பாதுகாக்க நினைக்கவில்லை.!


  திகில் புக் காணா போச்சா M V சார் .....?

  ReplyDelete
  Replies
  1. மதியில்லா மந்திரி.!

   எனக்கு திகில் அமானுஷ்ய கதைகள் என்றால் அலர்ஜி.எனது மற்ற புத்கங்களை டிரங்க் பெட்டியில் போட்டு பூட்டி பத்திரபடுத்தி வைத்திருப்பேன்.இடநெருக்கடி காரணமாக திகில் காமிக்ஸ் வெளியே தான்.! இப்பவே எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி கதைகள் பிடிப்பதில்லை.அந்த காலத்தில் எப்படி பிடிக்கும்.?

   அன்றைய நாள்களில் திகில் கதைகளை யாரும் சீண்டமாட்டார்கள்.கடைகளில் கூட எல்லா காமிக்சும் விற்று தீர்ந்து திகில் மட்டுமே எஞ்சி அழுக்கடைந்து தொங்கும்.! என் காமிக்ஸ் வட்டத்தில் கூட ஒருசில நண்பர்கள் மட்டுமே விரும்பிபடிப்பார்கள்.! பேய் சித்திரங்ளை பார்த்தாலே ஒருமாதிரி அருவருப்பா பயமா இருக்கும்.! கருப்பு கிழவி கதை மட்டும் தற்போது பிடிக்கும்.! இது எனது தனிப்பட்ட கருத்து.ஒருவேளை சிறுவயதில் மற்றநண்பர்கள் பயந்து ஒதுக்கினார்களோ ? என்னவோ.?பிறகு பிரின்ஸ் போன்றோர் வந்தவுடன் சுறுசுறுப்படைந்தது.!

   Delete
 58. எடிட்டர் ஸார் அவர்களுக்கும் , சீனியர் எடிட்டர், ஜூனியர் எடிட்டர், அவர்களது குடும்பத்திற்கும், பணியாளர் அனைவருக்கும் அவர்தம் குடும்பங்களிற்கும், நண்பர்கள் அனைவரிற்கும், அவர்தம் குடும்பங்களிற்கும் என் மனங்கனிந்த கிறீஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 59. திருச்செல்வம் சார்.!
  உங்களுக்கு எனது கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்.!

  ReplyDelete
  Replies
  1. கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்.!saar

   Delete
 60. அநேகமாக நியூ இயர் க்கு காலண்டர் வருமோ .....சந்தாகாரங்களுக்கு

  ReplyDelete
  Replies
  1. காலண்டரா........?

   மந்திரியாரே ! இது சாத்தியமில்லை என்று எடிட்டர் கூறியாதாக ஞாபகம்.! காக்டெயில் ஹீரோக்களின் காலண்டர் படைப்பாளிகள் ஒத்துழைக்க மாட்டரர்கள் என்று காரணம் கூறினார்.!ஒரே ஹீரோ மட்டும் என்றால் மற்ற ரசிகர்களின் பஞ்சாயத்து பெரிய ஆகிவிடும்.!

   எனவே நான் ஒரு அருமையான ஐடியா கூறுகிறேன்.

   நம் காமிக்ஸில் , ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு.! இருக்கும் ஹீரோயினி.!

   நமது காமிக்ஸின் செல்லப்பெண்.!


   அகிலம்போற்றும் ஒரே பெண்.!

   மற்ற ஹீரோக்களை வீட்டினுள் மாட்டுவதா.? திருஷ்டி கழிய வெளியே மாட்டுவதா என்று குழம்பாமல் அசரவைக்கும் அழகுப்பெண்....................


   நமது மாடஸ்டி பிளைசி
   *************************   Delete
 61. /// நமது மாடஸ்டி பிளைசி ///

  இந்த காலண்டரை மாட்ட வேண்டிய இடமே வேற!!! :-)

  மாடஸ்டி காலண்டருக்கு ப்ரிண்டிங் செலவை விட கோடு போட்ட ட்ரெஸ்ஸோட தையக்கூலி சாஸ்தியா ஆயிடுமே அய்யா.!!! :-)

  ReplyDelete
 62. 2015ன் இறுதி நாட்களில் இருக்கிறோம். இப்போது என் கைகளில் தவழ்ந்து கொண்டிருப்பது "ஒரு ஜென்டில்மேனின் கதை ".

  வருடத்தை கலகலப்பாக துவக்கி வைத்த காமெடி கௌபாய் லக்கி லூக்கின் சாகசம்.!

  இந்த வருட டாப் 3 பட்டியலில் கவனக்குறைவாக இக்கதையை குறிப்பிட மறந்துவிட்டேன்.!!!

  மன்னிச்சூ மைடியர் லூக்!

  ReplyDelete