Powered By Blogger

Wednesday, June 02, 2021

நினைவுகளின் நம்பர் 007 !

 நண்பர்களே,

வணக்கம். திங்கள் முதல் தளர்வுகள் இருக்கக்கூடும் & பணிகளைத் தொடர முடியும் என்பது போல் தோன்றுவதால், ஜூன் இதழ்களின் இறுதிக்கட்டப் பணிகளை அவசரம் அவசரமாய் பூர்த்தி செய்திடும் முனைப்பில் இந்த வாரம் முழுக்க பிசி ! ஆபீஸைத் திறக்க முடிந்த பின்பாக இந்த வேலைகளை பார்க்க நினைத்தால் - precious நாட்கள் விரயமாகிடுமே ; அப்புறம் "ஜூலையில் ஜூன் ; ஆகஸ்டில் ஜூலை" என்று போன வருஷத்துக் கதையாகிடக்கூடுமே என்ற பயம் தான் ! So ஒரு க்ளாஸிக் பிரிட்டிஷ் ஜோடியோடு சால்சா ஆடி வருகின்றேன் ஞாயிறு முதலே !

இதோ அந்த ஜோடியின் டபுள் சாகச இதழின் அட்டைப்பட முதற்பார்வை : போன வருஷம் வரையிலும் நமக்குப் பணியாற்றி வந்த அமெரிக்க ஓவியையின் கைவண்ணமே - முன்னும் ; பின்னுமான அட்டைப்படங்கள் ! நெட்டில் கண்ணில்பட்டதொரு படம் - ஓவியையின் திறனில் தக தகப்பதாய் எனக்குத் தோன்றியது !!என்ன - ஒரிஜினலுக்கும், நமது வார்ப்புக்கும் இடையிலான வித்தியாசம் - ஒரு zippper கீழிறங்கி இருப்பதற்கும், மேலேறி இருப்பதற்கும் மத்தியிலான உசரம் மாத்திரமே ! So இளவரசியார் அழகாய்க் காட்சி தருவதாய்த் தோன்றும் பட்சத்தில், பாராட்டுக்களை ஓவியைக்கும் ; ஜிப்பின் இலக்கின் பொருட்டு யாரையேனும் மூக்கில் குத்தத் தோன்றும் பட்சத்தில், குத்துக்களை சிவகாசியில் திசையில் காற்றோடும் சேர்ப்பித்திடலாம் ! "மூக்கில் குத்த" E -பாஸ் வாங்க முடியாதுங்களே ? 

And of course, "நெற்றியிலே சுருள் முடி விழுந்து கிடைக்கும் ஜேம்ஸ் பாண்டை இந்தவாட்டியும் அட்டைப்படத்தில் காணோம் ??" என்ற விசனங்களின் பொருட்டான குத்துக்களையும் சேர்த்து ஒரே பார்சலில் அனுப்பி விட்டீர்களெனில் வேலை சுலபமாகிடும் ! ஓவியர் யாரோஸ்லாவ் ஹோராக்கின் அந்த அமர ஹீரோவை உட்பக்கங்களில் - b & w -ல் ரசிப்பது ஓ.கே. தான் ; ஆனால் அவரையே வண்ணத்தில், பெரிதாக்கி ; அட்டைப்படங்களில் பார்க்கும் போது ஒரு தினுசாய் தென்படுகிறார் என்பதே எனது சிக்கல் ! 


ஒருவித சதுர தாடை ; இறுகிய முக அமைப்பு என்பனவே -ஜேம்ஸ் பாண்டுக்கான ஓவியர் ஹோராக்கின் template எனும் போது அவற்றை ராப்பருக்குக் கொணரும் போது - பழகிய உங்களுக்கு ஹீரோவாகவே தென்படலாம் தான் ; ஆனால் புதுசாயப் பார்ப்போருக்குமே அவ்விதம் தெரியுமா ? என்பது எனது கேள்வி ! இந்தப் பஞ்சாயத்தைத் தவிர்க்கும் பொருட்டே நிறைய சர்வதேசப் பதிப்பகங்கள் ஜேம்ஸ் பாண்டுக்கு கருப்பு-வெள்ளையிலேயே அட்டைப்படங்களையும் டிசைன் செய்து விடுகிறார்கள் ! பாருங்களேன் : So தொடர்ச்சியாய் "கர்லிங் ஹேர் ஜேம்ஸை" அட்டையில் போடாதிருப்பதன் காரணம் இதுவே ! இருந்தாலும் சாத்தணும்னு நமைச்சலை அடக்க முடியாதோர் www.mookile-kuthu.com என்ற முகவரிக்கு மாமூலான அர்ச்சனைகளை அனுப்பிடலாம் ! 

And "பழக்கமான ஈயை ; பழக்கமான அதே பாணியிலடிச்சா தான் திருப்தி ! மாற்றங்கள் = எட்டிக்காய் !!" என்று தொடர்ந்து நீங்கள் வலியுறுத்தி வருவதால், இந்த இதழுக்கு NO பெரிய சைஸ் ! நீங்கள் பழகிய அதே ரெகுலர் சைசில் இம்முறை இருந்திடும் ! So இந்த மாற்றத்தின் பொருட்டு எனக்கு எங்காச்சும் ஒன்றோ, ரெண்டோ, அரை டஜன் சிலைகளோ வைப்பதாக இருப்பின், www.sottaiyanukku-silai.com என்ற முகவரிக்கு உங்களின் மாலை மரியாதைகளை அனுப்பிடலாம் !

பிரிட்டிஷ் செய்தித்தாள்களுக்கென உருவான இரு அதிரடி நாட்டாமைகள், முதன்முறையாக ஒரே இதழில் இணைகிறார்கள் ! எழுபதுகளிலும், எண்பதுகளிலும் சக்கை போடு போட்ட இவர்களை இன்றைக்கு ஊறுகாயாய் பயன்படுத்தும் நிலை ! 1983-ல் இந்த 2 தொடர்களுக்குமான உரிமைகளையும் கைப்பற்றிட நான் நாயாய்ப்-பேயாய் அலைந்தது இன்னமும் நினைவுள்ளது ! முத்து காமிக்ஸ் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாய் வனவாசம் போயிருந்த நிலையில் ஊடே ராணி காமிக்ஸ் களமிறங்கும் திட்டம் எனக்கு லேட்டாகவே தான் தெரிந்திருந்தது !  ஒரு "கொயந்த புள்ளையாண்டான்" காமிக்ஸ் பதிப்புலகினில் கால் பதிக்கத் திட்டமிட்டிருந்த அதே தருணத்தில் ஒரு ஜாம்பவான் பதிப்பகமும் நுழைந்திடவிருந்ததைக் கண்டு மிரண்டது ஒரு பக்கமெனில், அவர்கள் முந்திக்கொண்டு ஜேம்ஸ் பாண்டுக்கு துண்டு விரித்திருந்தது குறித்து ஷாக்கோ ஷாக் ! அந்நாட்களில் பிரான்ஸ்..பெல்ஜியம்..இத்தாலி - என்பனவெல்லாம் உசிலம்பட்டி, கொட்டாம்பட்டி, குஜிலிப்பட்டி போல வெறும் பெயர்களே என் மட்டிற்கு ! So அங்கிருந்தெல்லாம் வேறு கதைகள் வாங்கிக்கலாம் என்று என்னை நானே தேற்றிக் கொள்ள வழிகள் அன்றைக்கு இருந்திருக்கவில்லை ! சகலமும் பிரிட்டனே அன்றைக்கு ! So  ஜேம்ஸ் பாண்ட் & மாடஸ்டி கதைகளுக்கு இந்திய ஏஜெண்டாய் செயல்பட்டு வந்த நிறுவனத்தின் முதலாளிக்கு சீனியர் எடிட்டரை விட்டு போன் போட்டு காவடி எடுத்துப் பார்த்தேன் - தொடர்ச்சியாய் ஒரு மாசத்துக்கு ! அவர்களுக்கிடையே 10 ஆண்டுகளுக்கு மேலான பரிச்சயம் உண்டென்பதால், டெல்லி முதலாளி எப்படியாச்சும் பாண்டாரை நமக்குத் தாரை வார்த்து விடுவார் என்ற நம்பிக்கை எனக்குள் ! ஆனால் ராணி நிறுவனமோ கதைகளை எப்போதோ வாங்கியிருந்தனர் என்பதோ ; பணிகளை செம ஜரூராய் செய்யத் துவங்கியிருந்தனர் என்பது இந்த கொயந்த எடிட்டருக்குக் கொஞ்சமும் தெரிந்திருக்கவில்லை ! டெல்லி நிறுவன முதலாளியும்  நிஜ நிலவரத்தைச் சொல்லிட தர்ம சங்கடத்தில் தயங்கியவராய் - "ஆங்...பார்க்கலாமே ; அப்புறமாய் சொல்கிறேனே !!" என்று நாட்களைத் தள்ளிட, இங்கே நான் வேண்டாத சாமி கிடையாது ! இறுதியாய் தினத்தந்தியில் "ராணி காமிக்ஸ்" விளம்பரமும் 1984-ன் ஏதோவொரு மாதத்தில் வெளியான போது, குடியே முழுகிப் போய்விட்டதாய் ஒரு பீலிங்கு எனக்கு ! அப்பாலிக்கா தான் "லேடி ஜேம்ஸ் பாண்ட் " மார்க்கத்தில் எனது பார்வை திரும்பியது ! "ச்சீ..சீ..என்ன பெரிய ஜேம்ஸ் பாண்ட் ? சும்மா சும்மா ஏதாச்சுமொரு ஜலஜா கூட ஜல்சா பண்ணிட்டே திரியுறவரெல்லாம் ஹீரோவா ? உவ்வே ! நம்ம மாடஸ்டி எவ்ளோவோ தேவலாம் ; தங்கம்  !!" என்று உச்சி மோர்ந்து கொண்டேன் - அம்மணியின் அவ்வப்போதைய தொழிலதிபர்களுடனான மீன்பிடிப் படலங்களைக் கண்டும் காணாதவனாய் ! எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கொண்டு "கத்தி முனையில் மாடஸ்டி"க்குள் லயிக்கத் துவங்கினேன் ! And தொடர்ந்ததைத் தான் அறிவீர்களே நீங்கள் !! 

இடையிடையே ராணியின் இதழ்களில் 007-ஐப் பார்க்கும் போதெல்லாம் கண்ணீர் முட்டுவது போலிருக்கும் ; ஆனால் "ஸ்பைடர்" எனும் ஒரு ஜாம்பவான் அந்தக் கண்ணீரைத் துடைக்கும் ஆற்றல் பெற்றிருக்க, ஜாலியாய் சுதாரித்துக் கொள்வேன் ! 

17 வயசில் அவனவனுக்கு விடத் தோன்றும் ரூட்டுகள் வேறாக இருந்திருக்கும்  ; ஆனால் நானோ மாடஸ்டிக்கும், ஜேம்ஸ் பாண்டுக்கும், ஸ்பைடருக்கும், சட்டித்தலையனுக்கும் ரூட் விட்டுக் கொண்டிருந்தேன் ! ஒரு சராசரியான வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பு அந்த வயசினில் 'மிஸ்' ஆகிப் போனதை நினைத்து எப்போதாச்சும் உறுத்தும் தான் உள்ளுக்குள் ; ஆனால் ரொம்பச் சீக்கிரமே ஒரு தினுசான 'சுனா-பானா'வாய் அவதாரமெடுக்க அந்த உறுத்தல்களுமே உதவியதால் - 'அடுத்த வேலை ; அதற்கடுத்த வேலை'' - என என்னை நானே பிசியாக்கி கொண்டு நகர்ந்து கொண்டேயிருந்தேன் ! காலவோட்டத்தில் "சுருள்முடி ஜேம்ஸ்" ஒரு வழியாய் நம் கைக்குத் திரும்பிய பொழுதினில் இங்கே நிறையவே மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன ! ரசனைகளில் மாற்றங்கள் ; கடலளவிலான கதைகளின் தேர்வுச் சாத்தியங்கள்  - என்ற சூழலில் ஜேம்ஸ் அந்நாட்களில் அதே பசியை என்னுள் விதைக்கவில்லை தான் ; ஆனாலும் ஒருவித ஆறுதலைத் தராதுமில்லை தான் !

போன அட்டவணையில் 3 கதைகள் & இதோ இன்னொன்று ! இஷ்டப்பட்டால் நிறைய ; இன்னும் நிறைய வெளியிடலாம் தான் ; ஆனால் உள்ள ஸ்லாட்கள் குறைவே எனும் போது - தடுப்பூசி போட லைனில் நிற்போரைப் போல சுருள்முடி அண்ணனும் காத்திருக்க வேண்டிப் போகிறது ! But still - இந்த க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகளினில் பணியாற்றும் பொழுது பிரவாகமாய்ப் பழம் நினைவுகள் அலையடிப்பதைத் தவிர்க்க இயலவில்லை ! 36 ஆண்டுகளுக்கு முன்னே கனவிலும் நடமாடிய மனுஷனை அத்தனை சுலபத்தில் மறக்க முடியாதல்லவா ?

My question today is : புராதனம் இழையோடுகிறது இந்த க்ளாஸிக் கதைகளினில் ! அந்த black & white கோட்டோவியங்கள் இன்றைய பிராங்கோ-பெல்ஜிய அதகளங்கள் முன்னே அப்பாவியாய்க் காட்சி தருகின்றன தான் ! யதார்த்தம் இதுவே !

ஆனால் - 

"பாட்டியோட நலுங்குக்கு தாத்தா அந்தக்காலத்தில் கட்டின வேஷ்டி மாதிரி வருமா ?  இன்னிக்கும் அது தான் டாப் " என்று பழையனவற்றை கொண்டாடும் நமக்கு இந்த மைனஸ்கள் பெரிதாய் உறுத்திடாது என்றே தோன்றுகிறது ! But நிஜத்தைச் சொல்வதானால், பணியின் போது எனக்கு  எழும் கொட்டாவிகளின் எண்ணிக்கை - மாமூலைக் காட்டிலும் பன்மடங்கென்பதை ஒத்துக்க வேண்டும் தான் !  இதனில் உங்களின் நிலைப்பாடு என்னவோ folks ? கிளாசிக் ஜேம்ஸ் பாண்டை ரசிக்க முடிகிறதா இன்றைக்குமே ? 

உங்களின் பதில்களைப் பொறுத்தே 2022 அட்டவணையினில் 007-க்கு இடம் தருவதைத் தீர்மானிக்க வேண்டி வரும் ! அட்டவணையிலா ? மனசிலா ?

சொல்லுங்க சகோஸ்....நாளைக்கு இளவரசி பற்றிய பதிவுடன் திரும்புவேன் ! Bye for now !! See you around !!

இவை இப்போது சுடச் சுட வந்த memes !! உபாயம் : நண்பர் பார்த்தீபன், கரூர் !! 


இன்னிக்கு கரூர் ஸ்பெஷல் !! இது டாக்டர் AKK ராஜாவின் கைவண்ணம் ! 

185 comments:

 1. இன்னும் யாரையும் காணோம்!

  ReplyDelete
 2. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 3. வணக்கம். முதன் முறை 10க்குள்.

  ReplyDelete
 4. www.sottaiyanukku-silai.com & www.mookile-kuthu.com இது என்ன புதுவிதமான ஆட்டமா இருக்கு! தினுசு தினுசா யோசிக்கிறீங்க சாமி :-)

  ReplyDelete
 5. // கிளாசிக் ஜேம்ஸ் பாண்டை ரசிக்க முடிகிறதா இன்றைக்குமே ? //
  ஒருமுறை வாசிக்க ஏதுவான இதழ்களாகவே 007 உள்ளார் சார்...

  ReplyDelete
 6. // ஜூன் இதழ்களின் இறுதிக்கட்டப் பணிகளை அவசரம் அவசரமாய் பூர்த்தி செய்திடும் முனைப்பில் இந்த வாரம் முழுக்க பிசி ! //
  அருமை,அருமை...

  ReplyDelete
 7. கிளாசிக் ஜேம்ஸ் பாண்டை ரசிக்க முடிகிறதா இன்றைக்குமே ?
  முடிகிறது! டயபாலிக் கதைகளை விட நன்றாகவே உள்ளது!

  ஆனா பாருங்க அடுத்தவருடம் முத்து 50 ஆண்டு, அடுத்த வருடம் வரும் புத்தகங்கள் அனைத்தும் sure சூப்பர் ஹிட்டாக அமைய வேண்டும்! அதேநேரம் ஏதாவது ஸ்பெஷல் புத்தகங்களுக்கு வேறு கொஞ்சம் அதிகமாக பட்ஜெட் தேவைபடும்! எனவே இவரை அடுத்த வருடம் மட்டும் ஓய்வு எடுக்க சொல்லலாம்!

  ReplyDelete
  Replies
  1. // டயபாலிக் கதைகளை விட நன்றாகவே உள்ளது! //
   அதே,அதே...

   Delete
  2. 007 எனக்கு பிடிக்கும் பாண்ட் கதைகள் கிட்டத்தட்ட 100 கதைகளுக்கு மேல் படித்திருக்கிறேன் டயபாலிக் ஐந்தை தாண்டவில்லை அதனால் டயபாலிக் வேண்டும்

   Delete
 8. நாளைக்கு தீபாவளி தான்.

  ReplyDelete
 9. // நமைச்சலை அடக்க முடியாதோர் www.mookile-kuthu.com என்ற முகவரிக்கு மாமூலான அர்ச்சனைகளை அனுப்பிடலாம் ! //
  தலைவர் மாதிரியே Wanted ஆ வந்து வண்டியில் ஏறிகிட்டிங்களே சார்...!!!

  ReplyDelete
  Replies
  1. அந்த ஜவ்வு மிட்டாய் கலர் சொக்காய் மட்டுமே மிஸ்சிங் சார் !

   Delete
 10. வணக்கம் சார்.🙏

  ஹாய் ப்ரெண்ட்ஸ்😍

  ReplyDelete
 11. எங்கள் இளமைக்காலத்தை வண்ண மயமாக்க நீங்கள் செய்த தியாகத்துக்கு தலை வணங்குகிறோம் எடிட்டர்.

  007 னின் 2.0(நில் கவனி கொல்) ரசிக்கும்படியாக இருந்தது. கிளாசிக்சில் டாக்டர் நோ ஆவரேஜ் தான். ஆழமில்லா கதைகள் சில சமயம் ராணி காமிக்ஸ் ஐ ஞாபகப் படுத்துகிறது.

  ReplyDelete
  Replies
  1. தியாகமாச்சு...ஒண்ணாச்சு ! அன்றைக்கு எனக்கொரு திசையையும், இன்றைக்கொரு அடையாளத்தையும் காட்டியுள்ள துறை இது சார் ! இதெல்லாம் இல்லையெனில் எனது நண்பர்களின் எதோவொரு பட்டாசு ஆலையில் மேனேஜராக இன்றைக்கும் குந்தியிருந்திருப்பேன் தான் !

   Delete
  2. விஜயன் சார், அப்படி நீங்கள் எங்காவது மானேஜர் ஆக போய் இருந்தால் எங்களுக்கு இன்று கிடைக்கும் இந்த காமிக்ஸ் தொடர்ந்து கிடைத்து இருக்காது!

   Delete
 12. இளவரசியின் அட்டைப்படம் டாப் டக்கர்! ஓவியைக்கு பாராட்டுக்கள்!
  007 நன்றாக உள்ளது! அது என்ன சார் இவர் அட்டைப்படத்தில் எப்போது ஏதாவது ஒரு பெண் இது போல் நின்று கொண்டு இருக்கும் படி பார்த்து கொள்கிறீர்கள்! சினிமா பட போஸ்டரிலும் இது போன்று வடிவமைத்து இருப்பதை பார்த்து இருக்கிறேன்! 007 இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது எழுதபடாத விதியோ :-)

  ReplyDelete
  Replies
  1. ஜல்ஸாக்களை அட்டையில் காட்ட முடியாதெனும் போது ஜலஜாவையாச்சும் காட்டுவோமே என்று தான் சார் !

   Delete
  2. ///ஜலஜாவையாச்சும்///

   😆😆😆

   Delete
 13. அடுத்த வருடம் 007 க்கு ஓய்வு தரலாம்

  ReplyDelete
  Replies
  1. சம்பத் சார். அம்மா நலமாக இருக்கின்றார்களா?

   Delete
  2. KOnjam severe conditions than sago ..

   Delete
 14. கிளாசிக் ஜேம்ஸ் பாண்ட் லைட்டாக போர் தான். ஒருமுறை படிக்கலாம். But இந்த பழைய கதைக்களம் (Cold War, Soviet Spies) எனக்கு ரசிக்கவில்லை. ஒரு contemporary எதிரியாக இருந்தால் ரசிக்க எதுவாக இருக்கும். இப்போ வரும் புதிய கதைகள் (புது bond included), நீங்கள் வெளியிட்டவை + நெட்டில் சுட்டு நானாகப் படிப்பவை எல்லாம் classic Bond காட்டிலும் சுவாரசியமாக உள்ளன.
  So, என்னைப் பொறுத்தவரை பழைய nostalgia value உள்ள சரக்கை எல்லாம் 'Old is Gold' ரக ஸ்பெஷல் issue அப்பப்போ... Regular flowவில் புதியனவற்றை try பண்ணுங்கோ.

  ReplyDelete
  Replies
  1. // Regular flowவில் புதியனவற்றை try பண்ணுங்கோ //

   +1

   Delete
 15. //ஒரு zippper கீழிறங்கி இருப்பதற்கும், மேலேறி இருப்பதற்கும் மத்தியிலான உசரம் மாத்திரமே//
  முதல் அட்டைபடம் பார்த்தவுடனே தோன்றிய நினைப்பே அதான்...இப்படி இருக்க மாட்டாங்களே... சமீபத்தில் பொஸ்டர் டிசைன்காக் ஒரு நூறு இளவரசியின் படமாவது பார்த்திருப்பேன்.. தப்பா நினைக்க வேண்டாம் :D :D :D

  ReplyDelete
 16. // 17 வயசில் அவனவனுக்கு விடத் தோன்றும் ரூட்டுகள் வேறாக இருந்திருக்கும் ; ஆனால் நானோ மாடஸ்டிக்கும், ஜேம்ஸ் பாண்டுக்கும், ஸ்பைடருக்கும், சட்டித்தலையனுக்கும் ரூட் விட்டுக் கொண்டிருந்தேன் ! ஒரு சராசரியான வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பு அந்த வயசினில் 'மிஸ்' ஆகிப் போனதை நினைத்து எப்போதாச்சும் உறுத்தும் தான் உள்ளுக்குள் ; ஆனால் ரொம்பச் சீக்கிரமே ஒரு தினுசான 'சுனா-பானா'வாய் அவதாரமெடுக்க அந்த உறுத்தல்களுமே உதவியதால் - 'அடுத்த வேலை ; அதற்கடுத்த வேலை'' - என என்னை நானே பிசியாக்கி கொண்டு நகர்ந்து கொண்டேயிருந்தேன் ! //

  Interesting! ஆட்டோகிராப் நினைவுகள்!

  ReplyDelete
 17. தாத்தா 007 போதும் சார்

  ReplyDelete
 18. சரி சரி நம்ப ஆபீஸ் வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான்! :-) Have a bright and safe day friends!

  ReplyDelete
 19. வாவ்!!!!! இளவரசியை இதற்குமுன் இம்புட்டு அழகாய் பார்த்த ஞாபகம் இல்லை!! 'ஜிப்' எங்கேவேணா இருக்கட்டும் சார்.. அந்த வசீகரக் கண்களே ஒரு பானை கள் குடித்த எஃபெக்டைக் கொடுக்கிறதே! அந்த அமெரிக்க ஓவியைக்கு ஒரு விருது கொடுத்து கெளரவிக்கலாம் சார்.. வரைந்தவிதத்தில் அப்படியொரு மெனக்கெடல்!! மூக்கு நுனியில் அந்த மினுமினுப்பாகட்டும்; கைகளில் தெரியும் அந்த ரத்த நாளங்களாகட்டும் - மிக அருமையாக, ஃபோட்டோ எடுத்ததைப் போல வரைந்திருக்கிறார்!! கண்களில் மிக நேர்த்தியாகக் காட்டப்பட்டிருக்கும் ஒருவித எச்சரிக்கை உணர்வு - துப்பாக்கியை வெளியிலெடுத்து தயார் நிலைக்கு வரும் அபாய உணர்வை அருமையாக வெளிப்படுத்துகிறது!

  யார் சார் அந்த அமெரிக்க ஓவியை?!! எனக்கே பார்க்கணும் போல ஆசையக் கிளப்பிட்டாங்களே?!!!! (அடுத்த பதிவுலயோ, இந்தப் பதிவுலயோ ஒரு ஃபோட்டோ கீட்டோ....)

  ReplyDelete
  Replies
  1. இதே மாதிரி அட்டை பட விமர்சனத்தை வேறு ஏதாவது கதாநாயகர்களுக்கு நீங்கள் எழுதி இருக்கிறீங்களா விஜய் :-) இளவரசி & லேடி-S என்றால் மட்டும் படத்துக்கு உங்கள் விமர்சனம் அருவி மாதிரி கொட்டுது ;-)

   Delete
  2. கொட்டுறது விமர்சனம் மட்டுமா ?

   Delete
  3. @PfB

   ஹிஹி! :)

   கார்வினைத்தான் கொஞ்சம் Zombie ஸ்டைல்ல வரைஞ்சுவச்சிருக்காங்க! ஒருவேளை இளவரசி அழகாத் தெரியணும்றதுக்காகத்தான் கார்வினை அப்படி வரையறாங்களோ என்னமோ?!! (கடைசிவரைக்கும் கறிவேப்பிலையாவே காலம் ஓடிடும் போலிருக்கே கார்வினு?!!)

   Delete
  4. // கார்வினைத்தான் கொஞ்சம் Zombie ஸ்டைல்ல வரைஞ்சுவச்சிருக்காங்க! //

   உண்மை. கலரை கொஞ்சம் மாற்றி கொடுத்தால் நன்றாக இருக்கும்.

   Delete
 20. 007க்கு வரப்போவது எந்த கதை?

  ReplyDelete
 21. /// நம்ம மாடஸ்டி எவ்ளோவோ தேவலாம் ; தங்கம் !!" என்று உச்சி மோர்ந்து கொண்டேன் - அம்மணியின் அவ்வப்போதைய தொழிலதிபர்களுடனான மீன்பிடிப் படலங்களைக் கண்டும் காணாதவனாய்///

  நகைச்சுவை இழையோட எழுதுவது என்பது ஒரு கலை. அது உங்களுக்கு இயல்பாகவே வருகிறது சார்.

  ReplyDelete
  Replies
  1. ஜாலியான யதார்த்தங்கள் சார் ! அவற்றை ஜாலியாய் express செய்திட மட்டுமே முனைகின்றேன் !

   Delete
 22. /// ஜல்ஸாக்களை அட்டையில் காட்ட முடியாதெனும் போது ஜலஜாவையாச்சும் காட்டுவோமே என்று தான் சார் !///

  என்ன சார்..காலையிலேயே ஃபுல் ஃபார்ம்ல இருக்கீங்க
  போல.

  ReplyDelete
 23. ஜேம்ஸ்பாண்டின் அட்டைப்படமும் நன்றாகவே இருக்கிறது (ஆனாலும் ஒரிஜினல் சுருள்முடி ஜேம்சு இல்லாதது குறையே சார் - நீங்க என்னதான் காரணங்கள் கூறினாலும்!)

  சைடுவாக்கில் நின்று பரிதாபமாக லுக்கு விடும் அந்த அம்மணிக்கு பற்கள் சற்றே தூக்கல்!

  ReplyDelete
  Replies
  1. நம்ம சேலம் டென்டிஸ்ட் டாக்டர்கிட்டே சொல்லி க்ளிப் போட்டுப்புடலாம் !

   Delete
 24. கிளாசிக் ஜேம்ஸ்பாண்டை விட, ஜேம்ஸ்பாண்ட் 2.0 க்கே என் ஒட்டு.
  ஃப்ரேம் பை ஃப்ரேம் படம் பார்ப்பது போன்ற உணர்வு.
  இரண்டு நாட்களாக ஜேம்ஸ்பாண்ட் 2.0 மறு வாசிப்பு. மிரட்டலான சித்திரங்கள். கலரிங். செம்ம..

  ReplyDelete
 25. Classic ஜேம்ஸ் பாண்ட் - No sir

  ReplyDelete
 26. வந்திட்டேன் சார் 🙏🏼
  .

  ReplyDelete
 27. ////கிளாசிக் ஜேம்ஸ் பாண்டை ரசிக்க முடிகிறதா இன்றைக்குமே ? ///

  நான் ஏற்கனவே சொன்னது தான் சார்! ராணி காமிக்ஸில் அன்று இந்த கதைகளைப் படித்தபோது மொழிபெயர்ப்பும், வசனங்களும் எனக்குப் பிடித்தமானதாய் இல்லை! 'என்றாவது ஒருநாள் லயன்-முத்துவில் இந்தக் கதைகளைப் படித்திட மாட்டோமா' என்று பலமுறை ஏங்கியிருக்கிறேன். இன்று அந்த ஏக்கம் தணிந்திருப்பதில் உள்ளூர மகிழ்ச்சி எனக்கு! வேலைப்பளு காரணமாக கடைசியாக வந்த 'டாக்டர் நோ' பாதிவரை மட்டுமே படித்திருக்கிறேன். முழுவேகத்தில் லயித்துப் படிக்க இன்றைய சூழ்நிலைகள் இடம்கொடுக்காவிட்டாலும், நிச்சயமாக பணி ஓய்வுக்குப் பிறகான நாட்களில் (அதாவது இன்னும் 40 வருடங்களுக்குப் பிறகு) நிச்சயமாய் இவையெல்லாம் ஒரு பெருவிருந்தாய் அமைந்திடுமென்பது உறுதி!

  ஆக, என்னளவில் க்ளாசிக் பாணி ஜேம்ஸுக்கு எப்போதும் 'ஜே!' தான்!!

  ReplyDelete
  Replies
  1. //நிச்சயமாக பணி ஓய்வுக்குப் பிறகான நாட்களில் (அதாவது இன்னும் 40 வருடங்களுக்குப் பிறகு) நிச்சயமாய் இவையெல்லாம் ஒரு பெருவிருந்தாய் அமைந்திடுமென்பது உறுதி!// பிரிவோம் சந்திப்போம் மறுவாசிப்புல இன்னும் தூக்கலா பட்டய கிளப்புது...ஓய்வுக் காலத்துக்கு விருந்துதான்...அசைச்சுக்க முடியாத பொக்கிஷங்கள் காலப் பேழைல சேமிக்கிறோம் ஈவி

   Delete
  2. ///நிச்சயமாக பணி ஓய்வுக்குப் பிறகான நாட்களில் (அதாவது இன்னும் 40 வருடங்களுக்குப் பிறகு) நிச்சயமாய் இவையெல்லாம் ஒரு பெருவிருந்தாய் அமைந்திடுமென்பது உறுதி!///

   இன்னும் 4 வருடங்களுக்குப் பிறகுன்னு நீங்க டைப் பண்ணியது தவறுதலா 40 வருடங்கள்னு பப்ளிஷ் ஆயிருக்கு குருநாயரே... திருத்திடுங்க.!

   Delete
  3. // இன்னும் 4 வருடங்களுக்குப் பிறகுன்னு நீங்க டைப் பண்ணியது தவறுதலா 40 வருடங்கள்னு பப்ளிஷ் ஆயிருக்கு குருநாயரே... திருத்திடுங்க.! //

   அதே அதே :-)

   Delete
  4. கண்ணா @ குருநாயார் தவறு செய்த உடன் ஓடி வந்து சுட்டிகாட்டி திருத்த சொல்லும் உங்கள் கடமை உணர்ச்சியை பாராட்டுகிறேன் :-)

   Delete
  5. பேசாம சிஷ்யப்புள்ளைகளுக்கு இப்பவே டிஸ்மிஸ் ஆர்டர் கொடுத்துட்டு, சிக்குனு நாலு சிஷ்யைகளுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுத்துடலாம்னு இருக்கேன்!

   Delete
  6. ///சிக்குனு நாலு சிஷ்யைகளுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுத்துடலாம்னு இருக்கேன்!///


   குடுங்க.. குடுங்க.. உங்களுக்கு சிரமம் குடுக்காம நானே பத்திரமா பாத்துக்கிறேன்..!

   Delete
  7. // குடுங்க.. குடுங்க.. உங்களுக்கு சிரமம் குடுக்காம நானே பத்திரமா பாத்துக்கிறேன்..! //

   அதானே. உங்கள் மனசு வேறு யாருக்கு வரும். :-)

   Delete
 28. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
  Replies
  1. கிளாசிக் ஜேம்ஸ்க்கு தற்காலிகமாக ஒரு pause கொடுக்கலாம் சார்!

   Delete
 29. மாடஸ்ட்டி அட்டைப்படம் அருமை...

  ReplyDelete
  Replies
  1. அட்டைப்படம் மட்டுமா கதையும் தானே...:-)

   Delete
 30. அட்டைப்படம் இருபக்கமும் கலக்கல் சார்..அருமை...சுருள்முடி 007 அட்டையில் வராத காரணமும் ,நீங்கள் எடுத்து காட்டிய வண்ண சுருள் 007 அட்டைப்படமும் அதை உண்மை என நிரூபிக்கிறது..ஓகே..

  இதழ் நார்மலான சைசில் என்ற மாற்றத்திற்கும் பலத்த பாராட்டுகள் ..இதழ் இனி பார்ப்பதற்கும் குண்டாகவும் தெரியும் .

  மகிழ்ச்சி சார்..

  ReplyDelete
 31. பழைய 007 மிகுந்த ஆவல் என்றெல்லாம் சொல்ல முடியாது சார்..படிக்கும் பொழுது கொஞ்சம் ஸ்லோவாக தான் பயணமாகிறார்.எனவே அடுத்த வருடம் காணாமல் போனாலும் கவலைப்பட போவதில்லை..

  ReplyDelete
 32. எப்பூடி இரண்டுபேரையும் ஒரே அட்டையில கொண்டுவருவாரு நம்ம ஆசான்னு யோசிக்கும்போது போட்டிங்கபாரு ஒரு போடு செம ஆசானே...தங்களுக்கு நிகர் தங்களே...

  ReplyDelete
 33. அனைவருக்கும் வணக்கம்.

  ReplyDelete
 34. நார்மலான சைசுக்கு ஒரு அருமையான பாராட்டுக்கள் ஆசானே...

  ReplyDelete
 35. இரத்தப்படல முன்பதிவு பற்றி இனிப்பான செய்திகள் ஏதும் ஆசானே...??

  ReplyDelete
 36. கிளாஸிக் 007 தொடரவேண்டுகின்றேன் சார்.

  ReplyDelete
 37. ஜேம்ஸ் பாண்ட் கதைகளுக்கான அட்டைப் படங்களை தயவுசெய்து ஒரிஜினலாக என்ன உள்ளதோ அதை மட்டும் பயன்படுத்துங்கள் ரோஜர் மூர் அட்டைப் படங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் கதைகளை படிக்க மனம் மறுக்கிறது

  ReplyDelete
  Replies
  1. வெள்ளைத்தாளில் அட்டைப்படம் போதுமெனில் எனக்கு டபுள் ஒ.கே சார் ; செலவு மிச்சம் பாருங்க ! ஏன்னாக்கா ஒரிஜினலாய் இவற்றிற்கு அட்டைப்படங்களே கிடையாது ! ஒவ்வொரு பதிப்பகம் உருவாக்குவதும் அவரவரது மட்டுமே !

   Delete
 38. சார் அருமையான பதிவு. அன்னைக்கு ராணி காமிக்ஸ்ல மாதமொரு முறை பாண்ட் வருவார்...மாதமிருமுறை வருவதில் செவ்விந்தியர்கள்...ஒன் சாட் கதைகள்...தப்பியோடிய இளவரசி...முகமூடி வீரன்...கிட் கார்சன்...ஷெரீஃப்கள்...அறிவியல் கண்டுபிடிப்பு விசித்திர விமானம் போல கதைகள் தூள் கிளப்பும் முதல் தேதில வரும் பாண்ட் மட்டும் வாங்க மாட்டேன்.ஷேம் ஷேம்தா...நம்ம லயன் அன்று நெருக்கமாக காரணமே ஸ்பைடரும் ஆர்ச்சியுந்தா...பாண்ட் நமக்கு கெடச்சிருந்தா கண்டிப்பா வாங்கி இருக்க மாட்டேன். பாண்ட் இப்ப ரசிக்கிறேன் ...ரசனை அறியா வயது அது...இப்ப நவரசங்களயும் பிழிந்து எடுப்பதால் பாண்ட் நிச்சயம் வேணும்...ஆனா இளம் தலைமுறய கவரலன்னா...விற்பனைல சொதப்புனா இவரையும் இரண்டு வருசம் கடத்துவோம்...அந்த இடத்ல நீங்க ஆஹா ஓஹோன்னு தேடிப் பிடித்த கதைகள போடுவோம்.பெரிய சைச மாத்துனதுக்கு நான் எங்க குத்த...

  ReplyDelete
  Replies
  1. அட்டைப்படம் அருமை...அன்றைய ஓர் ஆண்டு மலர்ல குதிரை வீரன் ஆர்ச்சியும் சைத்தான் விஞ்ஞானியும் தலகீழா வந்தது ஞாபகப்படுத்துது...அட்டை சூப்பரா பொருந்திய சட்டை

   Delete
 39. கிளாஸிக் நாயகர்களில் இன்றும் கலக்குவது இளவரசிமட்டுமே. க்ளாசிக்பாண்ட்க்கென இன்றும் குறிப்பிட்ட சதம் ரசிகர்கள்உள்ளனர். வருடத்திற்கு ஒன்று தரலாம். மினிமம் பட்ஜெட் கதைகளில் ஆவரேஜ் மார்க்காவதுஎடுக்கிறார்பாண்ட். கலக்குவது இளவரசி மட்டுமே. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 40. கிளாசிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகள் ரசிக்க முடிகிறது

  ReplyDelete
 41. டெக்ஸ், tiger , சிக் பில் , லக்கி லூக் etc என நிறைய வைல்ட் வெஸ்ட்களுக்கு இடையில் 007 கிளாசிக் or modesty வந்தால்தான் ஒரு change இருக்கும் சார்.

  போன முறை வந்த Bond கதை தவிர இது வரை வந்த கதைகள் நன்றாக தான் உள்ளன. கொரில்லா சாம்ராஜ்யம் சைசில் வந்தால் இன்னும் betterஆ இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஏனுங்க சார் , இன்னுமே கீழே பாக்கெட் சைசுக்குப் போயிடலாமே ? எப்படியும் யாருக்கும் வாசிக்க முடியப் போறதில்லே அந்த தம்மாத்துண்டு font எழுத்துக்களை ; கம்பெனிக்காச்சும் இன்னும் செலவு மிச்சமாகுமில்லீங்களா ?

   Delete
  2. ஹாஹாஹா.

   சார் கொரில்லா சாம்ராஜ்யத்தை இன்னும் மறக்க முடியல. கியூட் சைஸ்.

   Delete
 42. என்ன ஆசிரியரே... நடுமூக்கில் குத்த ஒரு பிளாக்.... மாலை போட ஒரு பிளாக்... என்னவோ போங்க சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.. கலக்குங்க கலக்குங்க..

  ReplyDelete
 43. பெரிய சைஸ் விடுத்து எங்களின் விருப்பமான நார்மல் சைஸ் எடுத்து வந்த தங்களுக்கு எனது வாழ்த்துக்கள் நன்றிகள்... 🌹🌹🌹🌹

  ReplyDelete
 44. தற்போது ஜேம்ஸ் பாண்ட் கதைகள் எல்லாம் படிப்பதற்கு ஆர்வம் கிடையாது. ஆனால் தங்களின் கை பக்குவத்தில் வரும்போது அதை வாசிக்க மனசு துடிக்கிறது.. இது நெய் கலக்காத உண்மை..

  ReplyDelete
 45. அட்டைப்படத்துல மாடஸ்டிய வேற அழகா வரைஞ்சிருக்காங்க.. நம்ம கொள்கைக்கு பங்கம் வந்திடுமோன்னு பயந்து வருது..!

  ReplyDelete
 46. Replies
  1. ///தொடர்ச்சியாய் "கர்லிங் ஹேர் ஜேம்ஸை" அட்டையில் போடாதிருப்பதன் காரணம் இதுவே ! இருந்தாலும் சாத்தணும்னு நமைச்சலை அடக்க முடியாதோர் www.mookile-kuthu.com என்ற முகவரிக்கு மாமூலான அர்ச்சனைகளை அனுப்பிடலாம் ! ///

   This site can't be reached னு வருதுங் சார்..🏃🏃🏃🏃🏃

   Delete
  2. சிலை வைக்கிறேன்...மலை வைக்குறேன்னு ஆளாளுக்கு ஒரே நேரத்திலே கூட்டம் கூட்டமா கிளம்புனா சர்வர் தாங்குமா ?

   Delete
 47. ///கிளாசிக் ஜேம்ஸ் பாண்டை ரசிக்க முடிகிறதா இன்றைக்குமே ? ///

  Fifty Fifty

  ReplyDelete
  Replies
  1. செல்லாத ஓட்டு கணக்கில் எடுத்து கொள்ளலாம் இதை!

   Delete
  2. அப்படியில்லை இங்க ஒரு ஓட்டு அங்க ஒரு ஓட்டு pfb..

   Delete
 48. Classic: 2 ( cheap in price)and 2.0 :1(best)

  ReplyDelete
 49. எங்களையும் அந்தப் 17வயதில் இரும்புக்கை நார்மன், இரட்டை வேட்டையர் என்று அலையவிட்டீர்களே. இரண்டுகிலோமீட்டர் நடந்துபோய்புத்தகஅட்டையை மட்டும் பார்த்துவிட்டுவரும் சந்தோசநிமிடங்களிலேயே அந்த 17வயதுநாட்களைக்கடந்தோம் .கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. அடடா நினைத்தாலே இனிக்கும்...வராட்டியும் கடைல போய் மறுக்கா மறுக்கா கேட்ட சந்தோசம்...

   Delete
 50. க்ளாசிக் பாண்ட்

  சிக்கனமான விலை
  நல்ல தரமான மொழிபெயர்ப்பு
  தரமான புத்தக அமைப்பு
  அட்டகாசமான அட்டைப்படம் என அசத்தி வருகிறது..

  எனவே தொடரலாம் ஆசானே...

  ReplyDelete
 51. 007 ஜால்சா ஜாலியா அது பாட்டுக்கு வந்து கிட்டிருக்கு அதுக்கும் வைச்சிடாதீர்கள் சார் ஆப்பு..!!

  ReplyDelete
 52. //"இடையிடையே ராணியின் இதழ்களில் 007-ஐப் பார்க்கும் போதெல்லாம் கண்ணீர் முட்டுவது போலிருக்கும் ; ஆனால் "ஸ்பைடர்" எனும் ஒரு ஜாம்பவான் அந்தக் கண்ணீரைத் துடைக்கும் ஆற்றல் பெற்றிருக்க, ஜாலியாய் சுதாரித்துக் கொள்வேன் ! "//

  "பழைசை ஆசிரியர் எப்போதும் மறப்பதாக இல்லை. சோ, இஸ்பைடரை குறித்த உங்கள் எதிர்ப்பலைகளை சக வாசகர் (Yes you are not owner of Lion Comics, Sir) "சக வாசகர்" என்ற ரீதியில் மட்டுமே என்பதை உணர்ந்து அடக்கமாய் வாசியுங்கள் பெரியோர்களே..."

  ReplyDelete
  Replies
  1. Not at all நண்பரே... "உரிமையாளருக்கே விமர்சன உரிமை " என்றால் இன்றைக்கு நீங்களுமே ஜடாமுனி ஜாநதனையும் ; மிதமான லேடி S அம்மணியையும் ; சுமாரான பற்பல கதைகளையும் படித்துக் கொண்டிருப்பீர்கள் ! விமர்சனங்களே நமது திசைகாட்டிகள் ! So அவற்றிற்கு என்றைக்குமே கடிவாளமிடுவது உகந்ததாகிடாது !

   And in any case இந்த முயற்சி நம் அனைவரின் உடைமையுமே ! So chill நண்பரே !

   Delete
  2. I absolutely agree with you, Sir. பதில் தந்தமைக்கும் நன்றி சார்... விமர்சனத்திற்கு நானும் எதிரியல்ல சார்... எதிர் விமர்சனங்களை காது கொடுத்து பதில் தரும் உங்கள் ஸ்டைலே எங்களுக்கு எல்லாம் பெரும் இன்ஸ்பிரேஷன் சார். நீங்கள் சொன்ன பிறகு என்னிடம் பதில் பேச்சே கிடையாது.

   ஸ்பைடர் மட்டுமல்ல பால்யத்து நாயகர்களை இங்கே பலவாறு நையாண்டி செய்வதோடு வாசகர் என்ற உரிமையை தாண்டி பதிப்பகத்தார் போன்றே இங்கே பதிவு செய்கிறார்கள்... அப்படிப்பட்ட மற்றவர்கள் மனம் புண்படும்படி கருத்துகளை ஓயாமல் கூறி கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் கொஞ்சம் பதில் தாருங்கள் சார்... பிளாகில் ஒரு நீண்ட கால பிரச்சினை சார் இது.

   Delete
  3. நான் பார்க்காத பகடிகளையா நண்பரே - பழைய நாயகர்கள் பார்த்திடப் போகிறார்கள் ? என்னை விமர்சனம் செய்திடுவதற்கு மேலாகவா நாயகர்களைச் செய்திடப் போகிறார்கள் ? நானே எருமை மாடாட்டம் சுற்றி வரும் போது சூப்பர் ஹீரோக்கள் கண்டு கொள்ளவாவது செய்வார்களா சார் ?

   இதோ - பழமையினை ஆராதிக்கும் நண்பர் செய்துள்ள "து து து" விமர்சனம் போல நெருடாத வரைக்கும் ஜாலியாக எடுத்துக் கொள்ளப் பழகுவோமே ? டெக்ஸ் வில்லர் பார்க்காத பகடிகளா - டைகர் பார்க்காத விமர்சனங்களா ?

   Anything that's distasteful will be condemned !

   Delete
  4. பழமையினை ஆராதிக்கும் நண்பர் செய்துள்ள "து து து" விமர்சனம் போல நெருடாத வரைக்கும் ஜாலியாக எடுத்துக் கொள்ளப் பழகுவோமே ?//// "பழைமையை ஆராதிக்கும் நண்பர்" ஐயோ ! முத்திரையே குத்திட்டிங்களா

   Delete
 53. //17 வயசில் அவனவனுக்கு விடத் தோன்றும் ரூட்டுகள் வேறாக இருந்திருக்கும்  ; ஆனால் நானோ மாடஸ்டிக்கும், ஜேம்ஸ் பாண்டுக்கும், ஸ்பைடருக்கும், சட்டித்தலையனுக்கும் ரூட் விட்டுக் கொண்டிருந்தேன் ! ஒரு சராசரியான வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பு அந்த வயசினில் 'மிஸ்' ஆகிப் போனதை நினைத்து எப்போதாச்சும் உறுத்தும் தான் உள்ளுக்குள் ; ஆனால் ரொம்பச் சீக்கிரமே ஒரு தினுசான 'சுனா-பானா'வாய் அவதாரமெடுக்க அந்த உறுத்தல்களுமே உதவியதால் - 'அடுத்த வேலை ; அதற்கடுத்த வேலை'' - என என்னை நானே பிசியாக்கி கொண்டு நகர்ந்து கொண்டேயிருந்தேன் !//


  இதனைத்தான் இலட்சியம் கொண்டோருக்கு வழக்கம் போல நண்பர்கள் இருந்ததில்லை என்று இரத்தப்படலத்தில் எழுதியிருந்தீர்களா சார்?

  ReplyDelete
 54. 007 ஜேம்ஸ்பாண்ட் கண்டிப்பாக இருக்கட்டும் சார் அவரை 2022 slotலிருந்து எடுத்து விடாதீர்கள்

  ReplyDelete
 55. Classic is always classic sir, வேறு எதுவும் அதை ஈடு செய்ய முடியாது,

  பின்பு இத்தகைய கதைகளை விரும்பும் நபர்களை பழமை விரும்பி என்பதும், படித்தால் கொட்டாவி வருகிறது என்று கிண்டல் செய்வதையும் தவிர்க்கலாம்,

  டெக்ஸ் சாகசங்கள் கூட சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்தவைதான், எனவே பழமை என்று சொல்லி டெக்சை விட்டுவிட்டு அனைவரும் லார்கோ, ஷெல்டன் பின்பு சென்று விட்டார்களா,

  Old fleetway comics மற்றும் சில கதைகளை கோரும் காரணம் சித்திரத்தரமும் கதையம்சமுமே காரணம், வெறும் பழமைக்காக கோரவில்லை,

  அனைத்து புத்தக விழாக்களிலும் நல்ல விற்பனை காணும் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு போன்றவை எத்தனை Reprint கணக்கெடுக்க இயலுமா, மக்கள் பழமை விரும்பிகள் என்றால் அந்தக் காலத்தில் வந்த அனைத்து சரித்திர நாவல்களையும் கேட்கிறார்களா இல்லையே, காரணம் கதையமைப்பு மற்றும் தரம். இவையே எங்களைப் போன்ற சிலர் சுஸ்கி விஸ்கி மற்றும் சில கதைகளை மீண்டும் கேட்க காரணம், புரிதலுக்கு நன்றிகள்

  ReplyDelete
  Replies
  1. Super . என்னவோ சார் நம்பளை முட்டுக்கட்டையாகத்தான் பார்க்கிறார்கள்.நடைமுறை சாத்தியத்தை புரிய வைத்த துடன் விட்டிருக்கலாம்.

   Delete
  2. Missing the woods for the trees நண்பர்களே ?

   "பொன்னியின் செல்வன்"என்றில்லை - அதற்கும் முந்தைய படைப்புகள் கூட மறுபதிப்பு கண்டு கொண்டே செல்வதற்கு அவை விற்றுக்கொண்டே செல்வதன்றோ மெய்யான காரணம் ? மார்க்கெட்டின் விதிகளே ஒவ்வொரு பொருளின் தலையெழுத்தையும் நிர்ணயிக்கின்றன ! டிமாண்ட் உள்ளவரை சப்ளையும் இருந்திடும் - சகல துறைகளிலும் !

   கேள்விக்குறிகள் கிளம்புவதே டிமாண்ட் மட்டுப்படும் போது தானே ?

   And இங்கே நிகழ்வதும் அது தானெனும் போது அதன் பொருட்டு விசனங்கள் கொள்வானேன் சார்ஸ் ?

   Delete
  3. விற்றுக்கொண்டிருந்த வரைக்கும் கேள்விகளன்றி வெளியிட்டு வந்தோம் மாயாவிகளையும், ஸ்பைடர்களையும் ! இன்றைக்கோ புத்தம் புதிய ஸ்பைடர் சாகசமான " சர்ப்பத்துக்கொரு சவால் " கூட தரை தட்டுகிறதெனும் போது அங்கே தயக்கம் குடியேறுவதை 'சென்டிமெண்ட் ' என்ற ஒற்றை மருந்தால் சரி செய்ய வழி இல்லையே ? ரொம்பவே disappoint செய்த இதழ் அது ; ஆனால் யாரை நோவதோ நான் ?

   Delete
  4. "சர்ப்பத்துக்கொரு சவால்" நல்ல மொழிப்பெயர்ப்பு தரம். அற்புதமான அட்டைப்பட ஓவியம். இருந்தும் புத்தகம் ஸ்டாக்கில் தங்குவதை பார்த்தால் கஷ்டமாயிருக்கிறது. நிச்சயம் சீக்கிரமே எல்லா புக்ஸும் விற்று தீர வாழ்த்துகிறேன் சார்.

   Delete
  5. உண்மை Sir, business point of view ல் நான் யோசிக்கவில்லை, ஆனால் நல்ல கதைகளை வாசகர்களாகிய நாங்கள் வாசித்தால்தான் நீங்கள் வெளியிட முடியும் என்பது யதார்த்த நிலை,

   பல நல்ல கதைகளை ( இரட்டை வேட்டையர், கறுப்புக் கிழவி போன்றவைகளை) தொகுத்து Digest ஆக முன்பதிவுகளுக்கு மட்டும் விற்பனை என்று செய்ய இயலுமா Sir,

   Delete
  6. இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் !

   நல்ல மீன்கள் விற்கப்படும் !

   மீன்கள் விற்கப்படும் !

   விற்கப்படும் !

   !

   Delete
  7. ஒரு ஆகச் சிறிய வட்டத்தை மேற்கொண்டும் கூறு போட்டுக் கொண்டே சென்றால் - மேற்படியே நிலவரமாகிடும் சார் !

   Delete
  8. இனி விற்பனையே நிர்மானிக்கட்டும் நண்பர்களே...அதான் எல்லோருக்கும் நல்லது...கிளாசிக் வை காலம் வரும் போது கட்டாயம் கேட்போம்....சர்பத்தின் சவால் போன்ற விறுவிறுப்பான கதைகள் நெகட்டிவ் விமர்சனங்களாலும்....வருவதற்கு முன்னரே ...பிடிக்கலை என சிறப்பாக விமர்சிக்கக் கூடிய விமர்சன நண்பர்களாளும் ...மனரீதியான அடி வாங்குவது...அதுவும் ஒரு வகை பாதிப்பே...அந்நண்பர்களின் விமர்சனத்தை படித்து வாங்குவோருமுண்டு....

   Delete
 56. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. என்ன பண்றதுங்க சார் - கடந்த இரண்டரை ஆண்டுகளின் விற்பனையின் TOP 3-க்குள் இடம்பிடிப்பது அந்த 'து து து' புக்ஸ் தானே ? அவற்றை வாங்குவோரையும், வாசிப்போரையும் 'து து து' என்று வர்ணிக்கலாமுங்களா ?

   Delete
  2. கிளாசிக் ஜேம்ஸ்பாண்ட் தாக்குப்பிடிக்க ஓட்டெடுப்பை நம்ப வேண்டிய நிலைக்கு வந்த காரணத்தால் வந்த ஆதங்கம் சார். மற்றபடி புது சேம்ஸ்பாண்டு என்றில்லை எந்த கதை வரிசை விற்பனையில் ஜெயித்தாலும் எங்களுக்கு சந்தோஷமே

   Delete
  3. அப்புறம் து து சும்மா காமெடிக்கு

   Delete
 57. டியர் சார்,
  மாடஸ்டி - அட்டைப்படம் அருமை. முன்பு ஒரு இதழுக்கு இதே ேபால் வடிவமைத்திருந்தாலும் (மரணத்தின் முத்தம்), இதில் துப்பாக்கியுடன்-ஆக்ஷன் ஹு ேராயினாக அட்டகாசமாக இருக்கிறார். அதிலும்-(அனைவருக்கும்? i) விருப்பமான நார்மல் சைஸ் - என்பது மேலும் வசிகரிக்கும்.சார்.
  ேஜம்ஸ்பாண்ட் அட்டை - விளக்கம் ok தான். ஒரு விதத்தில் New Look தருகிறது.
  புத்தகத் திருவிழாக்களில்-இந்த இதழ் ஒரு சட்ெடன்று முடிவெடுத்து வாங்கும் இதழ்-ஆக அமையும் - என்று நம்புகிறேன்..சார்.
  ெபாதுவாக நம் ரசனை மேம்பட்டுவிட்டாலும் - இது ேபான்ற சுலப வாசிப்புகளங்களைத்தான்-மற்றவர்களுக்கு முதலில் படிக்க ெகாடுக்க முடியும்.
  இதை படித்து ரசித்த பிறகே "என்ெபயர் லார்கோ "வை படிக்கெn டுக்க முடியும்.
  நான் இரண்டு பேரை காமிக்ஸ் படிக்க ைவைத்துவிட்டேன்.
  என்றேனும அவர்களாகவே காமிக்ஸ் வாங்க ஆரம்பிக்க மாட்டார்களா? 1 என்ன.
  எனவே, இது ே பான்ற Classic_நாயகர்கள்-ஒன்று இரண்டு-Slot-யிலாவது தொடர்வது காலத்தின் கட்டாயம் என்றே கருதுகிறேன். சார்.

  ReplyDelete
 58. சார்...

  இந்த இளவரசி கார்வின் படத்தை நான் ஒரிரு வருடங்களுக்கு முன் DEVIANTARTல் இருந்து download செய்திருந்தேன்... அதே artistதான் இதை வரைந்துள்ளார்களா...!?

  ReplyDelete
  Replies
  1. No sir...அங்குள்ளோர் நம் சக்திகளுக்கு அப்பாற்பட்டோர் !

   Delete
  2. சார்... அதே படத்தை அடுத்தவர் வரைந்து publish செய்யலாமா...!? ஏனென்றால் அதேப் படந்தான் இது... இல்லை அந்தப் படம் open source முறையில் உள்ளதா..!?

   Delete
  3. அந்தக் குறிப்பிட்ட சித்திரத்துக்கு மட்டுமே அவர் உரிமை கொள்ளலாம் சார் ! மாடஸ்டி எனும் பாத்திரம் என்றைக்குமே அதன் படைப்பாளிகளின் உடமையே ! இது நாம் அதனைப் பார்த்து வரைந்துள்ளதே !

   And அந்த ஜேம்ஸ் பாண்ட் டிசைன் கூட இன்னொரு படைப்பில் inspire ஆனதே ஸார் !

   Delete
  4. தெளிவு படுத்தியமைக்கு நன்றி சார்...

   Delete
 59. CLASSIC 007 IS NOT BAD SIR .. GOOD FOR ONE TYM READ .. ஆனால் மறு வாசிப்புக்கு என் அளவிலாவது I PREFER பாண்ட் 2 .௦ .. IF GIVEN A CHOICE BETWEEN THE "TWO BONDS" I WOULD GO WITH 2.0 ..

  அட்டை படத்தில் ரோஜர் மூருக்கு பதில் வேறு பாண்ட் USE பண்ணலாமே சார் .. IF THERE IS NO COPYRIGHTS ISSUE .. MY CHOICE WOULD BE BROSNAN ..

  ReplyDelete
 60. விலை குறைவு பழைய நினைவுகள் தவிர வேறு இல்லை.

  அதன் 2 இடத்தை வேறு ஒரு நல்ல புதிய கதை/கதாநாயகனுக்கு கொடுக்க முடிந்தால் அதற்கே எனது ஓட்டு சார்.

  ReplyDelete
 61. //17 வயசில் அவனவனுக்கு விடத் தோன்றும் ரூட்டுகள் வேறாக இருந்திருக்கும் ; ஆனால் நானோ மாடஸ்டிக்கும், ஜேம்ஸ் பாண்டுக்கும், ஸ்பைடருக்கும், சட்டித்தலையனுக்கும் ரூட் விட்டுக் கொண்டிருந்தேன் !//

  Your dedication made us all more than readers level till this day

  ReplyDelete
 62. கிளாசிக் ஜேம்ஸ் பாண்டை ரசிக்க முடிகிறதா இன்றைக்குமே ?

  definetly yes, once in few months

  New JAmes bond - not ok for me

  ReplyDelete
 63. @ ALL : பதிவின் வால்பகுதியில் இப்போது புதிதாய் இணைத்துள்ள சில memes களைப் பாருங்க guys !! உபயம் : நண்பர் பார்த்தீபன், கரூர் !

  ReplyDelete
  Replies
  1. 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
   எல்லா மீம்ஸுமே கெக்கபிக்கே ரகம்!! கலக்கறீங்க பார்த்தீபன் சார்!!

   Delete
  2. Partheeban sago memes kalakal ragam as usual

   Delete
  3. மாடஸ்டி & பாண்ட் மீம்ஸ் 😂😂😂😂😂

   Delete
  4. இவ்ளோ சீக்கிரமாகவா...?
   நன்றி ஐயா....

   Delete
 64. மாடஸ்டி அட்டைப்படம் அவ்ளோ அழகு.விழியின் ஜாலம் விரல்களின் ஜாலம் உயிர்ப்புடன் இருக்கிறது.
  கத்தியுடன் கார்வின் கடுப்பில் இருப்பது நன்றாக இருந்தாலும், கலரை மாற்றாமல் இருந்திருக்கலாம்.

  க்ளாசிக் பாண்ட் மேலே எப்பவும் ஈர்ப்பு அதிகம்.அடுத்த அட்டவணையில் அதுக்கும் இடமிருக்கும்படி பாத்துக்குங்க சார்.அட்டைப் படத்தை பொருத்தவரை...

  பழைய டயலாக் தான் சார்.

  'கோட் சூட் போடாதவங்களை நாங்க ஜேம்ஸ் பாண்டா ஏத்துக்கிறது இல்லீங்க.'

  ReplyDelete
 65. ஆயாவுக்கும் அப்பாருக்கும் ஒரு வருடம் ஓய்வு குடுக்கலாம். விற்பனையை பொருத்து அப்பாரை மறுக்கா 2023 ல் கொண்டு வர யோசிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. 007 ஐ நாம வரப்போகும் இந்த ரெகுலர் அளவிலேயே ரசித்து மகிழ்ந்தோம்....!!

   பெரிய சைஸ் நம்மிடையே க்ளிக் ஆகலனு நினைக்கிறேன்.

   இம்மாத ரெகுலர் சைசில் 007க்கு கிடைக்கும் வரவேற்பு& விற்பனை பார்த்துட்டு முடிவு செய்யலாம் என்பது என் கருத்து.

   இம்முறை க்ளிக் ஆகும்னு க்ளாவின் பட்சி சொல்கிறது!😉

   குறிப்பு:-மற்றொரு ஹீரோயினி பற்றி நோ கமென்ட்ஸ்... இது ஒன்லி ஃபார் நம் உளம்கவர்ந்த 007க்கு மட்டுமே!

   Delete
 66. @ ALL : இன்னிக்கு கரூர் ஸ்பெஷல் !! கடைசி memes டாக்டர் AKK ராஜாவின் கைவண்ணம் !

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி சார் செம்ம மீம்ஸ்

   Delete
  2. இளவரசியைப் பற்றிப் பதிவு போட்டதுமே டாக்டர்ங்க எல்லாம் ஏக குஷியாகிட்டதைக் கவனிச்சீங்களா தொழிலதிபர் சார்?! ஸ்டோர் ரூமிலே இருக்கும் மீன் தூண்டிலையும் எடுத்துத் தயார் படுத்திக்குவாங்கன்னு நினைக்கறேன்!

   Delete
  3. என்னப்பா பண்றது.. விதி விளையாடிடுச்சி..!

   டாக்டர்.. 😂😂😂😂😂

   Delete
  4. கரூர் மாத்திரமல்ல.. இருவருமே டாக்டர்ஸும் கூட..👏👏👏👏👏

   Delete
 67. ஜேம்ஸ் பாண்ட்க்கு கட்டாய ஓய்வு கொடுத்து விடுவோம் சார்

  ReplyDelete
 68. மீம்ஸ் அனைத்தும் கலக்கல். வாழ்த்துக்கள் சகோதரர்களே. சரி மாடஸ்டிக்கு வர்வோம். மாடஸ்டியுடன் போட்டிக்கு இருக்கும் க்ளாசிக் நாயகர்கள்1. மாயாவி.சூப்பர்ஹீரோ. 2.ஜானிநீரோ.தொழில் அதிபர்(ரிடையர்டு) 3.லாரன்ஸ்&டேவிட் கிங்கோப்ராவில் மயங்கியவர்கள் இன்னும்எழவில்லை. 4.காரிகன்.(ரிடையர்டு) 5 இவரும் சூப்பர்ஹீரோ காதுல பூ ரகம். 5. மாண்ட்ரேக் இவரும்(ரிடையர்டு) 6.சார்லி இவரும்மாடஸ்டி ரகமே(துப்பறுவாளர்) ஏறக்குறைய மறந்தேவிட்டோம். இவரதுபாணியும்தற்போதையரசனைக் குஒத்துவராது. புதுயநாயகர்கள் லார்கோ, ஷெல்டன் கதைகள் முடிந்துவிட்டன டெக்ஸ் ஆக்ட்டிவா இருக்கிறார். டயபாலிக் தோல்வி முகம். டைகர்ஆக்ட்டிவ். மார்ட்டின்வேறு வகை டைலன் அமானுஷ்யம். ஜானிவாய்ப்புகள் வழங்கப்படுகிறது. பாண்ட் மற்றும் மாடஸ்டி இருவரில் மாடஸ்டியே பெஸ்ட் மாடஸ்டிக்கு ம் வருடத்தில் ஒருவாய்ப்பேவழங்கப்படுகிறது. எனினும் புத்தகம் வருவதற்கு முன்பே கழுவி ஊற்றப்படுகிறது. இது மாடஸ்டி க்ளாஸிக் என்ற ஒரே காரணத்தினாலா?. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 69. கரூர் டாக்டர்களின் மீம்ஸ் எல்லாமே செம.ராஜா சாரின் மீம்ஸ் ஒரு படி மேல.

  ReplyDelete
 70. செம செம மீம்ஸ். ராஜா மற்றும் பார்த்தீபன் வாழ்த்துக்கள். இருவர் பிடியுங்கள் பூங்கொத்தை.

  ReplyDelete
 71. கிளாசிக் ஜேம்ஸ் பாண்டை ரசிக்க முடிகிறதா இன்றைக்குமே ?


  காமிக்ஸின் பயணம் ஆரம்பித்தது 007உடனே..
  ஒவ்வொரு கதையும் நிழலாக நினைவிருக்கும் சார்.
  இன்றும் என்றும் 007 ஐ ரசிக்கலாம்....,

  007காதலிகளையும்😍


  ஆண்டுக்கு ஒரு ஸ்லாட் திண்ணம்!

  ReplyDelete
 72. கரூர் டாக்டர்ஸ் மீம்கள்லயும் கலக்கிட்டாக...!!!

  மீக்களுக்காகவே தினம் ஒரு பதிவு உறுதி😍😍😍

  வாழ்த்துகள் டாக்டர் AKK🌹🌹🌹🌹
  வாழ்த்துகள் டாக்டர் சகோ🌹🌹🌹

  ReplyDelete
 73. ஆல் மீம்ஸ் கலக்கல்ஸ்.

  ReplyDelete
 74. //17 வயசில் அவனவனுக்கு விடத் தோன்றும் ரூட்டுகள் வேறாக இருந்திருக்கும் ; ஆனால் நானோ மாடஸ்டிக்கும், ஜேம்ஸ் பாண்டுக்கும், ஸ்பைடருக்கும், சட்டித்தலையனுக்கும் ரூட் விட்டுக் கொண்டிருந்தேன் ! ஒரு சராசரியான வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் வாய்ப்பு அந்த வயசினில் 'மிஸ்' ஆகிப் போனதை நினைத்து எப்போதாச்சும் உறுத்தும் தான் உள்ளுக்குள் //

  Same Pinch. என்ன நீங்கள் 1980களில், அடியேன் 1990களில். நண்பர்கள் யாவரும் 12B பஸ்ஸூக்கு உப கண்டக்டர்களாக பயணம் செய்த போது, ஏதாவது ஒரு பழைய காமிக்ஸ் கண்ணில் கண்டிராதா என்று மூர்-மார்கெட்டிற்கும், பாரீஸ் கார்னருக்கும், ஃபக்ராப்ட்ஸ் ரோடிற்கும் சைக்கிள் மிதித்தது தான் மிச்சம். மலரும் நினைவுகளை கிண்டிவிட்டீர்கள்.

  புராதன நெடி அதிகம் அடித்தாலும் ஒரு nostalgia விற்காகவது இந்த சைஸில் 2-in-1 ஸ்பெஷலாக வருடத்திற்கு இரண்டு ஸ்லாட்டுகளாவது கொடுங்கள், எடி.

  அட்டைபடத்தை பொறுத்த வரை கலரில் டாலடித்தாலும், அந்த ஜேம்ஸ் அட்டைக்கு சாயம் பூசிய Mr.Old போலவும், மாடஸ்தி அட்டையில் 14 வயது பெண் போல காட்சி அளிப்பதும் எனக்கு மட்டும் தானா?

  ReplyDelete
  Replies
  1. Seriously .. we surrounded our beds full of comics at the wrong age and it darn still continues like that .. :) :) :)

   Delete
 75. ALL MEMES SUPER FRIENDS.

  பாராட்டுக்கள் டாக்டர் நண்பர்களுக்கு.

  ReplyDelete
 76. We can give retirement to classic James Sir... Midiyala :-)

  ReplyDelete
 77. மீம்ஸ்கள் -செமை . அதிலும் டாக்டரின் மீம்ஸ் பல முறை ரசித்தேன். அஜித் மீம்ஸ் -> எனது நிலைப்பாடும் அதுவேதன் சார். காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

  உண்மைதான் சார் கறுப்பு-வெள்ளை அட்டை படத்தில்தான் ஜேம்ஸ் மிடுக்கு. கலரில் ஒரு மாற்று குறைவு

  கிளாஸிக் ஜேம்ஸ்பாண்டை ரசிக்க முடிகிறது. முதலில் ஒருமுறை தரிசித்தாலும், கதை களம் இழுத்து செல்லும். மறுவாசிப்பில் ஜேம்ஸ் இல்லை.

  ஜேம்ஸ் பிளைசி ஸ்பெஷல் இதழுக்கான அட்டைபடம் நன்றாக வந்துள்ளது. பிளைசியினை வெளிச்சமாயும் கார்வினை இருட்டாகஙும் சித்தரித்துள்ளதுதான் நெருடுகிறது.
  அமெரிக்க ஓவியையின் திறமைக்கு கறுப்பு-வெள்ளை ஸ்கெட்ச் மட்டுமே சாட்சி.

  ReplyDelete
 78. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். க்ளாஸிக் ஜேம்ஸூக்கு என்ன குறைச்சல் ?.எவர் க்ரீன் ஹீரோவுக்கு எப்போதுமே மவுசு இல்லாமல் போகாது

  ReplyDelete
 79. 007 க்கு ஆண்டுக்கு 2 ஸ்லாட் கொடுக்கலாம்!

  ReplyDelete
 80. இதுவரை க்ளாசிக் 007 வாக்குகள்..

  007ஓகே, வரலாம், ஆண்டுக்கு ஒரு ஸ்லாட் என ஆதரவளித்து இருந்தவர்கள்

  ஆம்=21 வாக்குகள்..

  முடில, வேணாம், தள்ளிவைக்கலாம் என வாக்களித்தவர்கள்= 13 வாக்குகள்.

  ReplyDelete
 81. இதுவரை classic ஜேம்ஸ் பாண்ட்

  ஆதரவு - 19
  எதிர்ப்பு - 15

  ஏறக்குறைய கடும் போடடி இதுவரை

  ReplyDelete
 82. என் ஆதரவு Classic Jamesbondக்கே....

  ReplyDelete
 83. No to James bond .both classic and current also

  ReplyDelete
 84. This comment has been removed by the author.

  ReplyDelete
 85. Classic James Bond - Nope, படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கு. Plus most of the stories already came in Rani Comics.

  ReplyDelete
  Replies
  1. // Plus most of the stories already came in Rani Comics. //

   Ture!

   Delete
 86. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

  ReplyDelete