நண்பர்களே,
வணக்கம். தினத்துக்குமொரு பதிவு என்று போட்டுத் தாக்கிய நாட்கள் நிறைவுக்கு வந்த பின்னே இங்கே ஒரு வாரமாய்த் தலைகாட்டக் கூட முடியாது போனதே யதார்த்தத்தின் இன்னொரு முகம் ! நிஜத்தைச் சொல்வதானால், எனக்கே என் எழுத்துக்களிலிருந்தொரு பிரேக் தேவைப்பட்டது ! ஆனால் இங்கே எழுதாது விட்டதையெல்லாம், 3 ஷிப்ட் போட்டு ; மூன்று வெவ்வேறு பணிகளில் எழுதிக் கொண்டிருப்பது செம முரண் தான் ! காலையில் "லக்கி லூக்கின் பேய் நகரம்" long size நோட் # 1-ல் ; மதியம் போல டெக்சின் "பிரளயப் பயணம்" இன்னொரு நோட்டில் ; மாலை முதலாய் முத்து காமிக்ஸ் ஆண்டுமலர் # 50-ன் முதல் கதை மீதான பணிகள் மூன்றாவது நோட்டில் - என்று இந்த வாரம் ஓட்டமெடுத்து வந்துள்ளது !
எனக்கே அலுத்துப் போகக்கூடிய எனது எழுத்துக்கள் உங்களுக்கும் ஒரு கட்டத்தில் அயர்ச்சியினை வரவழைக்காதிருக்க வேண்டியதன் அவசியம் புரிவதால், இடைப்பட்ட நேரங்களில் - மொழிபெயர்ப்புக்கென புதியவர்களைத் தேற்றும் பணியினில் ஈடுபட்டுமிருந்தேன் ! என்ன - "ஐ கேன் வாக் டமில்...டாக் டமில்" என்று இன்றைய தலைமுறை செய்திடும் ரவுசுகளுக்கு மத்தியினில் நிஜமான தமிழாற்றலை அடையாளம் காண்வதற்குள் நாக்குத் தொங்கிடும் போலிருக்கிறது ! ஆனாலும் இந்த சர்க்கஸில் ஒரு ஆதாயம் இல்லாதில்லை ! பசங்களும், புள்ளீங்களும் எழுதியிருக்கக்கூடிய கவிதைகளை (!!) வண்டி வண்டியாய் படிக்க முடிந்திருக்கிறது - இந்த ஒற்றை வாரத்தினில் ; so தொடரவுள்ள நமது இதழ்களில் கவிஞர் முத்துவிசயனார் 2.0 புது வீரியத்துடன் களமிறங்கும் வாய்ப்புகள் ரெம்போ பிரகாசம் !! Joking apart ஓரிரு பெண்கள் மெய்யான எழுத்துத்திறனுடன் கண்ணில்பட்டுள்ளனர் ! அதனில் ஏற்கனவே ஒரு தென்மாவட்டச் சகோதரி on board ! மீத இருவரின் பேனாக்களை நமது பணிகளுக்கு ஏற்ப mould செய்திட குட்டிக் கரணங்கள் அடித்து வருகிறேன் ! இந்த க்ளோனிங் விஞ்ஞானம் மாத்திரம் சாத்தியமெனில், நமது இள வயதுக் கருணையானந்தம் அவர்களை ஒரு ரெண்டு, மூணு நகலெடுத்து பணிகளை ஒப்படைத்து விட்டு, நான்பாட்டுக்கு இங்கே பிளாக்கில் வந்து அரட்டையடித்துக் கொண்டிருந்திருப்பேன் ; ச்சை..எனக்கிந்த விஞ்ஞானமே புடிக்கலை !!
On to practical stuff, ஜூன் இதழ்கள் மூன்றும் அச்சாகி விட்டன ! Yes , ஜுனுக்கான இதழ்கள் மூன்றே ; இன்னமும் கொங்கு மண்டலம், ஈரோடு, சேலம், நாகப்பட்டினம், மயிலை என நமக்கு விற்பனை அமைந்திடும் பல மாவட்டங்கள் லாக்டவுனில் தொடர்வதால், அங்குள்ள முகவர்கள் எவரும் கடைதிறக்க வழியில்லை ! So இம்மாத கோட்டாவை சற்றே மட்டுப்படுத்திட எண்ணி ஜேம்ஸ் & இளவரசி தோன்றும் B & B ஸ்பெஷலை ஜூலைக்கு நகர்த்தியுள்ளோம் ! As a result - நடப்பு மாதத்தின் மூன்று இதழ்களுமே வண்ணத்தில் தான் & அவை மூன்றுமே பைண்டிங்கில் உள்ளன ! அங்கும் பாதியாட்களைக் கொண்டே வேலை ஆகி வருவதால் செவ்வாயன்று டெஸ்பாட்ச் இருந்திடும் guys ! மறுக்கா மாதத்தின் 15 -ம் தேதி ஸ்லாட்டுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் ; இதனை சன்னம் சன்னமாய் சரி செய்ய இன்னமும் மூன்று மாதங்களாவது எடுக்கும் போலுள்ளது ! Phew !!
ஜூன் மாதத்தினில் :இரத்தப் படலம்" பணிகளும் துவக்கம் காண வேண்டும் என்பதும் நமது priority களில் பிரதானம் என்பதால் அட்டைப்பட டிசைனிங் ஆரம்பிச்சாச்சு ! பிழைத்திருத்தப் படலம் என்றைக்குப் பணிமுடித்து அனுப்புகிறதோ - அதன் மறுவாரத்தில் பிரின்டிங் துவங்கிடுவோம் ! And நேற்றைக்கு ஒரு மாதிரியாய் 'தம்' கட்டி அதற்கான பேப்பரையும் முழுசாய் வாங்கியாச்சூ ! சூப்பர் நியூஸ் என்னவெனில் - டன்னுக்கு நாற்பதாயிரம் வரை விலை ஏற்றியவர்கள் - இந்தப் பேரிடரில் கடைகளை பூட்டிக் கொண்டு வியாபாரங்களின்றிக் குந்திக் கிடக்க நேரிட்டதில் 'போனால் போகட்டும் என்று ஆறாயிரம் குறைத்துள்ளனர் !! So "முதலாளி...நீவிர் வாழ்க..நின் குளம், மூத்திரம் ..ச்சீ..ச்சீ..குலம் கோத்திரம் வாழ்க !!" என்ற புகழ்பாடியபடிக்கே நேற்றைக்கு பர்ச்சேஸ் முடிந்தது ! தொடரும் நாட்களில் production பணிகளே பாக்கி ! And இதோ - வெள்ளி காலை வரையிலுமான வாசக முன்பதிவுப் பட்டியல் :
NO |
NAME |
PLACE |
1 |
Mr.K.V.GANESH |
CHENNAI |
2 |
Mr.K.PARTHIBAN |
TRICHY |
3 |
Mr.V.HARIHARAN |
COIMBATORE |
4 |
Mr.S.SENTHIL KUMAR |
TIRUPUR |
5 |
Mr.KRISHNA MOORTHY |
DHARAPURAM |
6 |
Mr.ARUN KUMAR |
NAMAKKAL |
7 |
Mr.ARUN KUMAR |
NAMAKKAL |
8 |
Mr.M.BABU MOHAMED ALI |
SALEM |
9 |
Mr.T.SOUNDRA PANDIAN |
RAJAPALAYAM |
10 |
Mr.T.SOUNDRA PANDIAN |
RAJAPALAYAM |
11 |
Mr.R.ANBALAGAN |
GOBICHETTIPALAYAM |
12 |
Mr.R.ANBALAGAN |
GOBICHETTIPALAYAM |
13 |
Mr.R.GANESH |
MADURAI |
14 |
Mr.AUGUSTIN SAINTLYDOSS |
HOSUR |
15 |
Mr.A.D.BASKARAN |
CHENNAI |
16 |
Mr.SARAVANAN SUNDARAVEL |
NOIDA |
17 |
Mr.SARAVANAN VADIVEL |
NAGAPATTINAM |
18 |
Mr.MOHAMMED ARAFARTH |
MAYILADUTHURAI |
19 |
Mr.SURESH NATARAJAN |
AUSTRALIA |
20 |
Mr.SURESH NATARAJAN |
AUSTRALIA |
21 |
Mr.SURESH NATARAJAN |
AUSTRALIA |
22 |
Mr.SRINIVASARAGHAVAN RAMAN |
CHENNAI |
23 |
Mr.PRABHUDASS PALANI |
CUDDALORE |
24 |
Mr.MAHENDRAN PARAMASIVAM |
COIMBATORE |
25 |
Mr.A.SATHISH KUMAR |
VELLORE |
26 |
Mr.PRASANNA SRIDHAR |
COIMBATORE |
27 |
Mr.S.S.KARTHIK |
BANGALORE |
28 |
Mr.A.PALANIVEL |
TRICHY |
29 |
Mr.A.PALANIVEL |
TRICHY |
30 |
Mr.RAJ KUMAR SIVANANDI |
MADURAI |
|
|
|
32 |
Mr.MA.SENTHIL |
COIMBATORE |
33 |
Mr.MA.SENTHIL |
COIMBATORE |
34 |
Mr.SANKAR CHELLAPPAN |
CHENNAI |
35 |
Mr.V.RAJEEV |
COIMBATORE |
36 |
Mr.SELVAM ANNAMALAI |
ERODE |
37 |
Mr.S.ANANTHA SANKAR |
TIRUNELVELI |
38 |
Mr.R.SARAVANAN |
ERODE |
39 |
Dr.PRASANNA |
SRILANKA |
40 |
Dr.PRASANNA |
SRILANKA |
41 |
Dr.PRASANNA |
SRILANKA |
42 |
Mr.A.PALANIVEL |
TRICHY |
43 |
Mr.M.RAMKUMAR |
UNKNOWN |
44 |
Mr.V.V.KRISHNA |
CHENNAI |
45 |
Mr.N.SHANMUGAM |
TIRUCHENGODE |
46 |
Mr.MOHAMED RAFIQ RAJA |
BANGALORE |
47 |
Mr.MANI.MB |
CHENNAI |
48 |
Mr.MANI.MB |
CHENNAI |
49 |
Mr.MANI.MB |
CHENNAI |
50 |
Mr.MANI.MB |
CHENNAI |
51 |
Mr.MANI.MB |
CHENNAI |
52 |
Mr.SUBRAMANIAN |
CHIDAMBARAM |
53 |
Dr.A.K.K.RAJA |
KARUR |
54 |
Dr.A.K.K.RAJA |
KARUR |
55 |
Dr.A.K.K.RAJA |
KARUR |
56 |
Mr.K.V.GANESH |
CHENNAI |
57 |
Mr.YOGI SIVAKUMARAN |
SRILANKA |
58 |
Mr.SELVAM ANNAMALAI |
ERODE |
59 |
Mr.SELVAM ANNAMALAI |
ERODE |
60 |
Mr.S.BALA SUBRAMANIYAN |
BANGALORE |
61 |
Mr.VIJAY |
ERODE |
62 |
Mr.V.R.SRINIVASA RAGHAVAN |
CHENNAI |
63 |
Mr.V.R.SRINIVASA RAGHAVAN |
CHENNAI |
64 |
Mr.SUNDARALINGAM MATHINATH |
SRILANKA |
65 |
Mr.R.S.SHARMA |
SRILANKA |
66 |
Mr.VIMALAKANDHAN THANUSHAN |
SRILANKA |
67 |
Mr.VIMALAKANDHAN THANUSHAN |
SRILANKA |
68 |
Mr.A.S.SOUNDERA RAJ |
BANGALORE |
70 |
Mr.RAM KUMAR GOPALA KRISHNAN |
CHENNAI |
71 |
Mr.JEBARATHINAM ALEXANDER |
CHENNAI |
72 |
Mr.D.V.KANNAN |
CHENNAI |
73 |
Mr.M.ANANDAPPAN |
KARAIKAL |
74 |
Mr.SANKAR CHELLAPPAN |
CHENNAI |
75 |
Mr.L.BOOPATHI |
CHANDRAPUR |
76 |
Mr.R.GANESH |
MADURAI |
77 |
Mr.KUMARESAN PALANIVEL |
VIRUDHACHALAM |
78 |
Mr.A.JEGAAN DHARMENRA |
SRILANKA |
79 |
Mr.YOGANATHAN |
KODUMUDI |
80 |
Mr.M.KARTHIKEYAN |
PALAKKAD |
81 |
Mr.KUMAR |
SALEM |
82 |
Dr.RAJESH |
BANGALORE |
83 |
Dr.RAJESH |
BANGALORE |
84 |
Mr.BALAMURUGAN MARUTHAN |
TRICHY |
85 |
Mr.IGNATIUS LORAN |
KORBA |
86 |
Mr.M.KUMAR |
KANCHIPURAM |
87 |
Mr.THIRUCHELVAM PRAPANATH |
FRANCE |
88 |
Mr.A.M.CHANDRA KUMAR |
TIRUPUR |
89 |
Mr.SIVAKUMAR SUBRAMANIAN |
CHENNAI |
90 |
Mr.KARTHIGAI PANDIYAN |
COIMBATORE |
91 |
Mr.SURESH KUMAR |
MADURAI |
92 |
Mr.MUTHIAH PALANIAPPAN |
CHENNAI |
93 |
Mr.K.ELAVARASU |
BANGALORE |
94 |
Mr.R.MUJAHIRUDEEN |
CHENNAI |
95 |
Mr.PRAKASH BALA |
CHENNAI |
96 |
Dr.V.VIKRAM |
TRICHY |
97 |
Mr.S.SATHIYA MOORTHY |
TIRUPUR |
98 |
Mr.L.BOOPATHI |
CHENNAI |
99 |
Mr.MAHESH KUMARSELVARAJ |
CHENNAI |
100 |
Mr.SENTHIL SATHYA |
CHENNAI |
101 |
Ms.NARMADHA |
CHENNAI |
102 |
Mr.DALAXSHAN |
SRILANKA |
103 |
Ms.ELEZABETH ANTONY |
TRIVENDRUM |
104 |
Mr.BHAVANI SRIDHAR |
BANGALORE |
105 |
Mr.P.SARAVANAN |
CHINNAMANUR |
106 |
Mr.M.BOOBALACHANDER MANI |
CHENNAI |
107 |
Mr.RAJESH RANGANATHAN |
CHENNAI |
|
|
|
109 |
Mr.SURESH RANGASAMY |
AVINASHI |
110 |
Mr.SURESH RANGASAMY |
AVINASHI |
111 |
Mr.N.MANI KANDAN |
KULITHALAI |
112 |
Mr.J.SENTHI LKUMAR |
CUDDALORE |
113 |
Mr.M.KANISHK |
TRICHIRAPALLI |
114 |
Mr.M.KANISHK |
TRICHIRAPALLI |
115 |
Mr.M.VEL |
DHARMAPURI |
116 |
Mr.K.PARIMELALAGAN |
CHENNAI |
117 |
Mr.K.PARIMELALAGAN |
CHENNAI |
118 |
Mr.M.SELVAM |
THIRUVANNAMALAI |
119 |
Mr.B.MANIMARAN |
RANIPET |
120 |
Mr.S.MOHAN |
NAGAPATTINAM |
121 |
Mr.SARABESAN |
CHENNAI |
122 |
Mr.ARULDASS |
CHENNAI |
123 |
Mr.M.SELVAKUMAR |
PALANI |
124 |
Mrs.TAMILSELVI SARAVANAN |
KARAIKAL |
125 |
Mr.K.V.GANESH |
CHENNAI |
126 |
Mr.LUTHUFUR RAHMAN |
CHENNAI |
127 |
MR.SANTHIRAKUMAR ABIRAJ |
SRILANKA |
128 |
Mr.IGNATIUS LORAN |
TRICHY |
129 |
Mr.S.SURESH BABU |
CHENNAI |
130 |
Mr.D.ASLAM BASHA |
MADURAI |
131 |
Dr.P.KARUNANITHI |
PUDUKOTTAI |
132 |
Mr.JOSEPH JEYACHANDRAN |
ODDANCHATHIRAM |
133 |
Mr.JOSEPH JEYACHANDRAN |
ODDANCHATHIRAM |
134 |
Mr.A.PALANIVEL |
TRICHY |
135 |
Mr.V.THILAGAR |
MADURAI |
136 |
Mr.NIRUN SANTHANANTHAN |
SRILANKA |
137 |
Mr.V.JAWAHARLAL NEHRU |
MADURAI |
138 |
Mr.SRIVATHSAN |
BANGALORE |
139 |
Dr.PRASANNA |
SRILANKA |
140 |
Mr.N.KUMAR |
TIRUPUR |
141 |
Mr.K.DHANAULLAH |
GUDALUR |
142 |
Mr.M.SIVASAMY |
COIMBATORE |
145 |
Mr.SHANTHAKUMAR |
CHENNAI |
146 |
Mr.VEERA PANDIYAN |
TIRUNELVELI |
147 |
Mr.ILANGO |
MADURAI |
148 |
Mr.C.BASKARAN |
BANGALORE |
150 |
Mr.K.V.GANESH |
CHENNAI |
151 |
Mr.H.SURESH CHAND |
COIMBATORE |
152 |
Mr.G.RAJA SEKARAN |
CHENNAI |
153 |
Mr.R.MARIMUTHU |
ERODE |
154 |
Mr.RAJA RAJAN |
SALEM |
155 |
Mr.R.KUMAR |
DINDUGAL |
156 |
Mr.C.MARIMUTHU |
CHENNAI |
157 |
Mr.KANAGARAJ |
CHENNAI |
158 |
Mr.G.JEGADEESWARAN |
ARANTHANGI |
159 |
Mr.ELAVIJAY |
SALEM |
160 |
Mr.KARTHICK MOHANRAM |
U.S.A |
161 |
Mr.A.KALEEL |
PONDICHERRY |
162 |
Mr.A.KALEEL |
PONDICHERRY |
163 |
Mr.THARAN |
ARANTHANGI |
164 |
Mr.T.UDAYA KUMAR |
OOTY |
165 |
Mr.N.ARUL |
VADAMADIMANGALAM |
166 |
Mr.K.SENTHIL NATHAN |
CHENNAI |
167 |
Mr.MAHESWARAN |
KRISHNAGIRI |
168 |
Mr.T.OMKUMAR |
TANJORE |
169 |
Mr.SURESH RANGASAMY |
AVINASHI |
170 |
Mr.J.JAFARDEEN |
SALEM |
171 |
Mr.PRADEEPRUBAN |
ERODE |
172 |
Mr.LAKSHMANA PERUMAL |
RAJAPALAYAM |
173 |
Mr.S.SHATHACKATHULLA |
MADURAI |
174 |
Mr.S.PRASANNA |
ERODE |
175 |
Mr.M.JEGADISH |
ERODE |
176 |
Mr.M.BHUVAVA RAJAN |
ANDIPATTI |
177 |
Mr.A.SRINIVASA SEKHAR |
DHARMAPURI |
178 |
Mr.A.SATHISH KUMAR |
VELLORE |
179 |
Mr.A.SATHISH KUMAR |
VELLORE |
180 |
Baby.M.DHEEPTHA |
TIRUCHIRAPALLI |
181 |
Mr.M.VADIVELU |
CHENNAI |
182 |
Mr.KARTHIKEYAN KUMAR |
NAGERCOIL |
183 |
Mr.D.MAHENDRAN |
CUDDALORE |
184 |
Mr.BABU |
COIMBATORE |
185 |
Mr.V.K.VENKATRAMAN |
THURAIYUR |
186 |
Dr.M.ANAND KUMAR |
TIRUPUR |
187 |
Mr.SENTHILNATHAN |
PONDICHERRY |
188 |
Mr.M.HARIHARAN |
COIMBATORE |
189 |
Mr.C.GOKUL |
NAMAKKAL |
190 |
Mr.M.SIVAKUMAR |
TIRUPATTUR |
191 |
Mr.S.RAJ KUMAR |
BANGALORE |
192 |
Mr.T.SOUNDARA PANDIAN |
RAJAPALAYAM |
193 |
Ms.S.NIHARIKA |
VIRUTHUNAGAR |
194 |
Ms.S.NIHARIKA |
VIRUTHUNAGAR |
195 |
Mr.P.SUBRAMANIAN |
COIMBATORE |
196 |
Mr.SARAVANAKUMAR |
PALLADAM |
197 |
Mr.MURUGAN PERUMAL |
BANGALORE |
198 |
Mr.N.JOTHI |
CHENNAI |
199 |
Mr.DOMINIC HENDRY |
CHENNAI |
200 |
Mr.R.BALAJI |
SALEM |
201 |
Mr.R.BALAJI |
SALEM |
202 |
Mr.DINESH KUMAR |
NAMAKKAL |
203 |
Dr.P.KARUNANITHI |
PUDUKOTTAI |
204 |
Mr.SANKARALINGAM ULAGANATHAN |
CHENNAI |
205 |
Mr.P.K.SELVA KUMARAN |
PERUNDURAI |
206 |
Mr.SARAVANA RAMESH |
KARAIKAL |
207 |
Mr.SENTHAMIL SELVAN |
TIRUPUR |
208 |
Mr.A.SATHYA SAINATHAN |
VELLORE |
209 |
Mr.S.S.BALAJI |
CHENNAI |
210 |
Mr.ANDICHAMY GURUSAMY |
DINDIGUL |
|
261-270 |
ODDANCHATHIRAM |
211-212 |
Mr.R.SARAVANAN Mr.R.SARAVANAN |
ERODE ERODE |
213 |
Mr.R.SARAVANAN |
ERODE |
214 |
Mr.R.SARAVANAN |
ERODE |
215 |
Mr.B.SOUNDARA RAJAN |
MAYILADUTHURAI |
|
||
216 |
Mr.AUGUSTIN SAINTLYDOSS |
HOSUR |
217 |
Mr.L.BALA KRISHNAN |
SALEM |
|
||
218 |
Mr.LAKSHMANAN VISWANTHAN |
ERODE |
219 |
Mr.SENTHILNATHAN PERUMAL |
TIRUCHIRAPPALLI |
220 |
Mr.SURESH THANAPAL |
THIRUVANNAMALAI |
221 |
Mr.ANANTHA SANKAR |
TIRUNELVELI |
222 |
Mr.VENKATESHWARAN |
CHENNAI |
223 |
Dr.SURESH KUMAR |
PALANI |
224 |
Mr.K.SELVAKUMAR |
CHENNAI |
225 |
Mr.G.SIVA KUMAR |
TRICHY |
226 |
Mr.PATHY.RVC |
HOSUR |
227 |
Mr.K.SELVAKUMAR |
CHENNAI |
228 |
Mr.K.SELVAKUMAR |
CHENNAI |
229 |
Mr.PALANIKUMAR RAJASEKARAN |
SIVAGANGAI |
230 |
Mr.U.SENTHIL KUMAR |
ERODE |
231 |
Mr.ARUN KUMAR |
KUMBAKONAM |
232 |
Mr.M.MANOJ KUMAR |
MADURAI |
|
||
233 |
Mr.RAMA KARTHIGAI |
U.S.A |
234 |
Mr.SENTHIL VINAYAGAM |
PALAYAMKOTTAI |
235 |
Mr.SENTHIL VINAYAGAM |
PALAYAMKOTTAI |
236 |
Mr.SENTHIL VINAYAGAM |
PALAYAMKOTTAI |
237 |
Mr.S.PON RAJ |
COIMBATORE |
238 |
Mr.V.KUMAR |
COIMBATORE |
239 |
Mr.M.SENTHIL KUMAR |
GOBI |
240 |
Mr.M.SENTHIL KUMAR |
GOBI |
241 |
Mr.SATHYA BALAJI |
BANGALORE |
242 |
Mr.A.SHALLUM FERNANDAS |
THUCKALAY |
243 |
Mr.A.SHALLUM FERNANDAS |
THUCKALAY |
244 |
Mr.OM KUMAR |
TANJORE |
245 |
Mr.A.UDAYA KUMAR |
CHENNAI |
246 |
Mr.D.SIVA LINGAM |
CHENNAI |
247 |
Mr.C.POOVANNAN |
THRISSUR |
|
||
248 |
Mrs.TAMILSELVI SARAVANAN |
KARAIKAL |
249 |
Mr.SATHYAMOORTHY |
KANGEYAM |
250 |
Mr.GOPALA KRISHNAN |
-- |
251 |
Mr.GOPALA KRISHNAN |
-- |
252 |
Mr.GOPALA KRISHNAN |
-- |
253 |
Mr.V.K.RAMANATHAN |
CHENNAI |
254 |
Mr.V.K.RAMANATHAN |
CHENNAI |
255 |
Mr.V.K.RAMANATHAN |
CHENNAI |
|
||
256 |
Mr.N.BASKAR |
SIRKALI |
257 |
Mr.AMALRAJ ABRAHAM |
CHENNAI |
258 |
Mr.S.ANANDAN |
CHENNAI |
இதனில் விடுதல் ஏதேனும் இருப்பின், பதட்டம் அவசியமில்லை guys, ஒரேயொரு மின்னஞ்சல் மட்டும் அனுப்பினால் சரி செய்து விடுவார்கள் !
Further down the road, நடப்பாண்டின் சந்தா இதழ்களில் ஓரிரு மாற்றங்கள் செய்திட உத்தேசித்துள்ளேன் ! அதன் முதல் அத்தியாயமாய் - மார்ட்டின் & டைலன் இணைந்து ஜாகெஜம் செய்திடும் "உலகத்தின் கடைசி நாள்" ஆல்பத்தையும், CID ராபினின் "நள்ளிரவு வேட்டை" ஆல்பத்தையும் ஒன்றிணைத்து ஒரே புக்காக்கிடவுள்ளோம் ! முந்தையது ரூ.125 & ராபின் ரூ.75 ; so ஒன்றாக்கி ரூ.200 விலையில் ஒரே புக்காக வெளிவந்திடும் ! இது தவிர, இன்னொரு மாற்றமும் உண்டு ; ஆனால் அதுகுறித்த ஊர்ஜிதம் படைப்பாளிகளிடமிருந்து கிட்டிடக் காத்துள்ளேன் !
And 2022 சந்தா அட்டவணையுமே ரெடி ; கதைகளுக்குப் பெயர் வைக்க வேண்டிய வேலையே பாக்கி ! So ஒரு சாவகாச நாளில் "நெத்தம் ; குத்தம் ; யுத்தம்" என்றில்லாது - மங்களகரமான பெயர்களாய்த் தேடிப் பிடித்து வைக்கணும் ! யாராச்சும் விக்கிரமன் சாரின் படங்களின் பெயர் பட்டியலை வைச்சிருக்கீங்கப்பு ?
இப்போதெல்லாம் எங்கே சுற்றினாலும் மண்டை இறுதியாய் நிலைகொள்வது ஜனவரி 2022-ல் காத்துள்ள biggie-ன் பக்கமே ! And நான் சிலாகித்த புதுக் கதைத்தொடர்களின் உரிமைகளை வாங்கியாச்சு ; so கொஞ்சமாய் சத்துப் பிடித்துக் கொண்டால், பணமனுப்பி கதைகளை வரவழைச்சுடலாம் ! உங்களின் எதிர்பார்ப்புகளை ; ஆரவாரங்களை ஆதாரமாக்கி, நானாய் முதலில் போட்டு வைத்திருந்த சிக்கனக் கோடுகள் சகலத்தையும் அழித்துவிட்டு 'பப்பரக்கா'வென இப்போது கால்களை அகலமாய் விரிச்சாச்சு folks !! மொழிபெயர்ப்பினில் நான் விவரித்திருந்த சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு இப்போது முதலே வேலைகளையும் ஆரம்பிச்சாச்சு ! இந்தப் பேரிடர் பொழுதினில் இது ரொம்பவே ambitious ஆன முயற்சியாய்த் தென்படுகிறது தான் ; ஆனால் உசுப்பிவிடப்பட்ட கைப்புள்ளை அடங்க மாட்டானே இனி ! புனித மனிடோ காப்பீராக !! சின்னப் பசங்களின் ஸ்கூல் டயரின் அட்டவணையைப் போல - இன்றைக்கு முதல் January 2022 முடியத் தேவைப்படக்கூடிய கதைகளில் மொத்த இடியாப்பங்களையும் என் பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஒரு chart போட்டு வைத்துள்ளேன் ! "இன்ன இன்ன தேதி முதல், இன்ன இன்ன தேதிக்குள் - இன்ன இன்னக் கதைகளை முடிச்சாகனும் !!" என்று எழுதி பார்த்ததில் செப்டெம்பர் '21-க்குள் அனைத்தையும் முடித்து விடலாம் போல் தோணிங் !! பேப்பரில் பட்டியல் போடுவது சுலபம் ; அதனை நிறைவேற்றுவதன் நோவு பிட்டத்துக்கும், புஜத்துக்குமே தெரியும் என்றாலும் - நீங்க எனது சேருக்கு அடியில் பற்ற வைத்திருக்கும் திரியானது லேசுப்பட்டதில்லையே ?! So ஞான் குந்தியிருக்கும் சேரே ராக்கெட்டாகி ; என்னையும், என்னுடன் அந்தப் பணிகளையும் ஒருசேர விண்வெளிக்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையோடு எழுதிக் கொண்டிருக்கிறேன் ! அநேகமாய் செப்டெம்பருக்குள் தலீவரின் கடுதாசிக்கணை ரெக்கார்டுகளையெல்லாம் மூலை சேர்த்துப்புடுவேன் போல் தெரிகிறது ! தேவுடா !!!
Bye for now guys ; சொக்க வைக்குமொரு சொப்பன சுந்தரி கதை நெடுக மிரட்டும் ஜாகஜம் ஒன்று அழைப்பதால் நானிப்போது கிளம்புகிறேன் ! நீங்கள் இந்த மீம்ஸ் மேளாவினில் நனைந்திருங்களேன் in the meantime !!
லயன் காமிக்ஸ் பிளாக் தானா இது. எப்பவும் 200க்கு மேல் வரும் நான் முதன் முதலிலா...
ReplyDeleteஐயோ என்ன செய்வேன்.யார்ட்ட சொல்வேன்...ஷோக்கநாதா
நான் Reply செஞ்சு ரெண்டாவதா வந்துக்குறேன்..
Deleteநான் செகண்டு..
ReplyDeleteநானே மூணாவது..ஹைய்யா..
ReplyDelete🙏🙏
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteநான் 7
ReplyDeleteபத்துக்குள்ளே வந்த பராக்கிரமசாலி நானே!!!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteDear Editor Sir,
ReplyDeleteஎங்களைப் போன்ற Cartoon ரசிகர்களின் வறட்சியை போக்க சுஸ்கி விஸ்கியை கொண்டுவர முயற்சி எடுக்க இயலுமா Sir,
தேவைப்படின் வாசகர்களின் ஓட்டெடுப்பு கூட நடத்தலாம், 300 + ஆல்பம் உள்ள நமக்கு அறிமுகமான தொடர், தங்கள் கவனம் கோருகிறோம்
சுஸ்கி விஸ்கி வேண்டும்
Deleteசுஸ்கி விஸ்கி வேண்டும் சார்
DeleteYes, Absolutely.
Delete+1
Delete100%
Delete+1
Deleteஎங்களுக்கு ஆடலும் பாடலும் (சுஸ்கி விஸ்கி) போட்டே ஆகணும்.. ஆங்...
சுஸ்கி & விஸ்கி வேண்டும் சார்.
Delete//எங்களுக்கு ஆடலும் பாடலும் (சுஸ்கி விஸ்கி) போட்டே ஆகணும்.. ஆங்...//
Delete:)
+12345
DeleteVanakkam sir
ReplyDeleteமாடஸ்டி பிளைஸி
ReplyDeleteவாழ்க! வாழ்க!
Deleteஅதான் ஒரு தொகுதி கன்ஃபார்ம் ஆகிட்டது தானே!
DeleteThis comment has been removed by the author.
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteDear EDI,
ReplyDelete3 should be a good number. No worries in B&B special being pushed to next month. More important that it didn't take the place of Graphic Novel. The preview of which added more interest.
XIII preparedness might add cheer to those who missed the issue, but I only wish this remains the last reprint. Collectors should be given a breather.
No chance Rafiq - in 2026 folks will demand - 40 years of XIII - one single hard bound MAXI size edition in color with all covers as insets between the volumes - including the latest volumes up to date - and it will be announced - and we will buy :) :) :)
DeleteAnd in 2030 - 19 x Single Editions !!
Deleteகார்ட்டூன் சுஸ்கி & விஸ்கி வேண்டும்....
ReplyDeleteவேண்டும்!
வேண்டும்!!
வேண்டும்!!!
19th
ReplyDelete//சொக்க வைக்குமொரு சொப்பன சுந்தரி கதை நெடுக மிரட்டும் ஜாகஜம் ஒன்று அழைப்பதால் நானிப்போது கிளம்புகிறேன் !//
ReplyDeleteகவுண்டரிடம் சாத்து வாங்கியும் செந்திலாருக்கு நீண்ட நட்களாக விடை தெரீயாத கேள்விக்கு பதில் கிடைத்து விடும் போலயே!! -:)
ஐ ம் வெய்ட்டிங் டு மீட் த க்ரேட் சொப்பனசுந்தரி..
சுஸ்கிவிஸ்கிக்கு நம்மிடையே நிறைய ஃபேன்ஸ் இருக்கிறார்கள் சார்..
ReplyDeleteமுழுமையான சுஸ்கிவிஸ்கி தொகுப்பு வெளிவருமாயின் அதற்கு எங்களின் முழுமையான ஆதரவு நிச்சயம் உண்டு.
சுஸ்கிவிஸ்கி கதைகளை குழந்தைதனமானது என ஒதுக்கிட வேண்டாம் சார்...தற்போது காமிக்ஸ் படிப்பவர்கள் எல்லோருமே சற்றே வயது கூடிய குழந்தைகள்தான்..
மேலே பதிவான கேப்சன்,சுஸ்கி விஸ்கி வெறியர்களில் ஒருவரான நண்பர் உதய் வரைந்தது...இதுபோன்ற தீவிர(வாத) வாசகர்கள் இருக்கும்போது தொகுப்பை வெளியிட தயக்கமே வேண்டாம் சார்..
ஓட்டெடுப்பு என்றாலும் சொல்லுங்கள்.
கள்ள ஓட்டு போட்டாவது ஜெயிக்க வைத்து விடுகிறோம்...
நான் தயார்
Deleteமீ டூ,சகோஸ்
Delete+123456789
Deleteசிங்கத்தின் சிறுவயதில் புத்தகத்திற்கு உங்கள் ஆதரவு தேவை நண்பர்களே.
Delete+1+1
Deleteசுஸ்கி விஸ்கி.... கார்டூன் மேளாவில் லக்கி லூக், சிக் பில் கூட்டணிக்கு மிக அழகாக தோள் கொடுப்பார்கள் என நம்புகிறேன்... அதனால் என் ஓட்டு என்றும் சுஸ்கி விஸ்கிக்கு உண்டு.... !!!
ReplyDeleteஎன்ன ஒரே பயம்ன்னா... நான் கேட்ட எதுவும் வந்ததில்ல.. (உ.ம்... வலேரியன் & லாரலீன்)... at least சுஸ்கி விஸ்கிக்காவது மனசு வையுங்க சார்... !!!!
யெஸ் சார், சுஸ்கி விஸ்கிக்காக 30 வருடங்கள் காத்திருக்கிறோம் சார்
DeleteEnjoyed all memes today😀
ReplyDeleteFew yrs back, I have suggested the same, great stories, great translations, superb wrapper and quality. But titles are still kalki, sandilyan era.
Padalam, marmam, maranam, these words are rarely used nowadays.
You need young team to read stories and create catchy titles.
Muthu 50 enna stories ?
ReplyDelete27
ReplyDeleteபுதன் கிழமை புத்தகங்கள் கிடைக்கவிருப்பதில் மகிழ்ச்சி!
ReplyDeleteமீம்ஸ் எல்லாமே கெக்கபிக்கே வைக்கிறது! :)))))
மகிழ்ச்சியோ மகிழ்ச்சி
Delete***பெயர் சூட்டும் படலம்****
ReplyDeleteவாங்க சங்கத்த கூட்டுங்க, நிறையப் பெயர் வேணுமாம். நம்ம கர்ப்பணை குதிரைய தட்டி விடுங்க...
* மிரட்டும் மின்னல்
* அதிரடி அழகி
* சாவிற்க்கு ஒரு சவால்
* பாதை மாறிய படலம் ( அய்யா படலம் போட்டாச்சு)
வரும் தலைப்பில் ஆங்கில படம் வந்திருந்தால், அதற்கு கம்பேனி பொறுப்பாகாது.
- பாயும் புலி பதுங்கும் பாம்பு
- தனி மனிதனின் கோபம்
- கடின மரணம்
- கடின குறி
- கதைமுடிப்பவன்
- கப்..சிப்..(மூச்சு விடாதே)
சுஸ்கி விஸ்கி நினைத்தாலே... போதையேற்றும் நினைவுகள்...
ReplyDeleteசோடை போகாத அவர்களின் சாகசங்கள்
நின்று போனது விளங்கிடா மர்மம்...
அவர்களை மீட்டெடுத்து... மீள் பதிவின்
மூலம் எடிட்டர் எங்களை சந்தோசப் படுத்த
வேண்டும் என்பதை விட.... அடுத்த தலைமுறையினரை அந்த மாய உலகிற்கு
இட்டு சென்று சுற்றி காண்பிப்பதன் மூலம்
காமிக்ஸ் எனும் கானகம் வளர்த்தலாம்...
உங்களின் தயாள மனதை.... சுஸ்கி&விஸ்கியை திருப்பி தருவதன் மூலம்
காட்டுங்களேன் எடிட்டர் சார்....
ஒரு ஃப்ளாஷ்பேக் பதிவு!
ReplyDelete// கிளம்பும் முன்பாய் இன்னொரு கேள்வியுமே : முந்நூற்றிச் சொச்சம் கதைகள் கொண்ட "சுஸ்கி & விஸ்கி" கதைகளை மறுக்கா நம் அணிவகுப்புக்கு கொண்டு வந்தாலென்னவென்று ? நண்பர் மின்னஞ்சலில் வினவியிருந்தார் ! ஏற்கனவே Smurfs ; பென்னி ; மந்திரி ; லியனார்டோ போன்றோர் வெற்றிலை போடாமலே வாய் சிவந்து திரியும் வேளையினில், இந்தத் தொடரின் வெற்றி குறித்து எனக்கு உள்ள நம்பிக்கை குறைச்சலே என்று பதிலிட்டிருந்தேன் ! But still - இந்த தொகுப்பு concept-ல் சுஸ்கி & விஸ்கியை முயற்சிப்பதாயின் உங்களின் ஆதரவு ரேஞ் எவ்விதம் இருக்கக்கூடுமோ என்ற கேள்வி என்னுள் ! So இந்தத் தொடரினை ஏற்கனவே வாசித்திருக்கும் நண்பர்கள் ; அதனில் என்ன எதிர்பார்த்திடலாம் என்று அறிந்திருக்கும் நண்பர்கள் மட்டும் தங்கள் எண்ணங்களை இங்கு பகிர்ந்திடலாமே ? Nostalgia சார்ந்த தேடலாய் இதுவும் அமைந்திட்டால் ரொம்ப காலத்துக்கு வண்டி ஓடாதென்பதால் - கதைகளின் தன்மைக்கென உங்கள் ஓட்டுகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்களேன் ப்ளீஸ் ! - Editor S. Vijayan Sir, Wednesday, April 14, 2021 //
இன்னொரு ஃப்ளாஷ்பேக் பதிவு!
// அப்புறம் போன பதிவினில் "சுஸ்கி & விஸ்கி' இதழ்களுக்கு ஓரளவுக்கு encouraging results கண்ணில்பட்டது நிச்சயமாய் எனக்கு ஆச்சர்யமே ! ஆனால் இவர்களுக்கு மீள்வருகை தருவதாயிருப்பின், நான் ஏற்கனவே சொன்னது போல - ஒரு தொகுப்பாக்கி, "முன்பதிவுகளுக்கு மட்டுமே" - என்ற ரீதியில் தான் களமிறக்கியாக வேண்டும் ! ரெகுலர் கார்ட்டூன் தடத்தில் இந்தப் புள்ளீங்களை இறக்கி விட்டு விஷப் பரீட்சை செய்திடல் எனக்கு விவேகமாய்ப் படவில்லை ! - Editor S. Vijayan Sir, Saturday, April 17, 2021 //
சுஸ்கி விஸ்கி கதைகளை
இங்கு யாரும் விரும்பாமல் இல்லை.
ஓட்டெடுப்பு நடத்தினால் நிச்சயம் ஆதரவளிப்பார்கள்.
தொகுப்பு புத்தகம் என்றாலும் சம்மதமே!
புதிய கதைகளா? பழைய வெளியீடுகளின் மறுபதிப்புகளா? என்பதெல்லாம் உங்கள் தீர்மானத்தின்படியே!
எனது தனிப்பட்ட வேண்டுகோள் என்னவென்றால் ராஜா ராணி ஜாக்கி, பேரிக்காய் போராட்டம், பயங்கரப் பயணம் மற்றும் உங்கள் தேர்வில் புதிய கதைகள் ஒன்றோ இரண்டோ சேர்த்து ஒரு தொகுப்பு இதழாக முன்பதிவுகளுக்கு மட்டும் என்ற அறிவித்தால் மகிழ்ச்சி!
அதன்பிறகு இதழ் வெளிவருவது எங்களின் பங்களிப்பை பொறுத்தது!
கார்ட்டூன் இதழ்களை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பதில் இந்த இதழும் உதவி புரியும் என்றே நம்புகிறேன். காரணம் அன்றைக்கும் இன்றைக்கும் குழந்தைகள் எதிர்பார்ப்பது குழந்தைத் தனங்களையே தவிர தீமையை எதிர்த்து போராடும் நீதிக் கதைகளை அல்ல.
இன்றுவரை எங்கள் பகுதியில் உள்ள சிறுவர்கள் விருப்பப்பட்டு வாங்கிச் சென்ற இதழ்கள் அனைத்தும் ஸ்மர்ஃப் போன்ற விளையாட்டுத்தனமான கதைகளையே!
எனக்கு 300ம் வேண்டும், 3000மும் வேண்டும் என்றெல்லாம் ஆசை இல்லை.
சுஸ்கி விஸ்கி யை வெளியிடும் எண்ணம் இருப்பின் மேற்சொன்ன ஒரு தொகுப்பு இதழை முயற்சி செய்யலாம். எங்கள் தரப்பில் முழு ஆதரவும் கிடைக்கும் பட்சத்தில்.
இங்ஙனம்
சுஸ்கி விஸ்கி
சுட்டிப் படையின்
சுட்டிக் குழந்தை பாபு.
அருமை பாபு...
Deleteஇல்லாததைத் தேடும் முனைப்பில் இருப்பதை ஓரம் கட்டி வரும் நாட்களிவை பாபு ! "எனக்கு பேரிக்காய் படலம் வேணும்" எனும் போதே அங்கே தொனிப்பது nostalgia மட்டுமே !
Deleteநிஜத்தைச் சொல்வதனால் எனது புதிய தேடல்களில் இப்போதெல்லாம் நான் கார்ட்டூன்களை ஒரு அங்கமாக்கிடுவதே இல்லை ; ஒருத்தர் மாற்றி ஒருத்தராய் சிரிப்புப் பார்ட்டிகளை வழியனுப்பும் வேலையை நாம் சீரும் சிறப்புமாய் செய்து வரும் போது, இன்னும் புதுசு புதுசாக ஆட்களைத் தேடுவானேன் ? இப்போதெல்லாம் கையில டுப்பாக்கி இருந்தா ஒண்டி செலெக்ஷன் பட்டியலுக்கே தேறுகிறார்கள் ! So சுஸ்கி & விஸ்கியுமே கையில ஒரு பொம்ம துப்பாக்கியாவது ஏந்தும் நாளே நம்மிடையே பரவலாய் ஏற்றுக் கொள்ளப்படுவர் ! அது வரையிலும் "அடுத்த தலைமுறை ; குட்டீஸ்" என்றெல்லாம் நான் விட்டு வந்த அதே டயலாக்கை நீங்கள் எனக்குச் சொல்லலாம் ; அப்பாலிக்கா நான் repeat செய்திடலாம் !
அப்புறமா முன்பதிவில் இரத்தப் படலம் போல 300 பிரதிகளில் நாம கார்ட்டூனை வளர்த்திடலாமென்ற கனா கண்டால் sadly அதுவல்ல மார்க்கம் - வெகுஜனத்தைச் சென்றடைய !
வெறும் முன்பதிவினில் எந்த இதழும் வெற்றி கண்டிடுவதில்லை - இ.ப. உட்பட ! இதோ ஓண்ணேகால் வருஷத்தில் தொட்டுள்ள நம்பரோடு வியாபாரிகளின் ஆர்வமும், ஆர்டர்களும் கைகோர்க்கும் போதே எல்லைக்கோடு கண்ணில் படுகின்றது ! So தொட்டதுக்கெல்லாம் "முன்பதிவுக்கு மட்டுமே" என்ற போர்டு தீர்வாகிடாது நண்பரே ! அல்லது குறைந்த பட்சமாய் "800 to 1000 பிரதிகள்" என்ற இலக்கை நிர்ணயம் செய்ய வேண்டி வரும் ! சொல்லுங்களேன் நண்பரே அது சாத்தியப்படுமா என்று ?!
கடந்த ஒரு மாதத்து அலசல்களில் தெள்ளத் தெளிவாய் புரிந்த விஷயங்களுள் foremost :
Deleteலக்கி லூக் & சிக் பில் தாண்டி வேறு யாரையுமே கார்ட்டூன் கணக்கில் சேர்ப்பது போகாத ஊருக்கு வழி தேடுவதற்கு சமானம் !
எனக்கும் அதுதான் சார் புரிந்தது - கார்ட்டூன்களை பொறுத்த மட்டில். அதான் ஒரு முந்தைய பதிவில் கேட்டே விட்டேன்.
Deleteலக்கி லூக் மற்றும் சிக் பில் கதைகளையாவது அதிகப்படுத்துங்கள் சார் - தோராயமாக இன்னொரு 10 ஆண்டுகள் நீங்கள் காமிக்ஸ் வெளியிடுவீர்கள் என்று வைத்துக்கொண்டால் (touch wood) - அந்த 38-40 லக்கி மற்றும் அதே எண்ணிக்கையிலான சிக்-பில் கதைகளாவது வெளிவர வேண்டும் சார்.
//"எனக்கு பேரிக்காய் படலம் வேணும்" எனும் போதே அங்கே தொனிப்பது nostalgia மட்டுமே !//
DeleteAbsolutely, Sir.
I strongly vote for Susky & Wisky comeback.
Deleteப்ரெசன்ட் சார்
ReplyDeleteபடித்து விட்டு.
சுஸ்கி& விஸ்கி கதைகளை கொண்டு வர முயற்சி செய்யுங்கள் ஆசிரியரே.. மிக அழகான கார்ட்டூன் கதைகள் லக்கிலூக் சிக்பில் இவர்களுடன் சேர்ந்து சவாரி செய்ய மிக அருமையான கதை தொடர்... கார்ட்டூன் வேண்டவே வேண்டாம் என்று அடம் பிடிப்பவர்கள் கூட வாங்க மிக அழகான கதை தொடர். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவேதாளர்
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteமீம்ஸ்அனைத்தும் சூப்பர்
ReplyDeleteபெயரிலேயே கிக் வைத்திருக்கும் சுஸ்கி விஸ்கி வேண்டும்.
ReplyDeleteஇந்த வார மீம்ஸ்கள் அனைத்துமே வேறு ரகம் சார். சிரித்து சிரித்து மகிழ்ந்தேன். இவைகள் அனைத்தையும் புத்தகங்களில் வெளியிட்டால் என்ன? ஜோக் கார்னர் போல இருக்குமே...
ReplyDeleteஒரு மீள் பதிவு
ReplyDeleteசுஸ்கி & விஸ்கி கதைகள்
இவர்கள் எங்கேயாவது புது இடத்திற்கு செல்வார்கள் / இவர்களைத் தேடி யாராவது உதவி கேட்டு வருவார்கள். செல்லும் புது இடங்களில் யாருக்காவது உதவுவார்கள் அல்லது அங்கிருக்கும் மர்ம
முடிச்சுகளை அவிழ்ப்பார்கள். குழந்தைகளுக்குக் நேர்மறை சிந்தனைகளையும் மற்றவருக்கு உதவி செய்யும் எண்ணத்தை தூண்டும் வகையிலும் அனைத்து கதைகளும் இருக்கும்.
கண்டிப்பாக வெளியிடுங்கள் சார். இதுவரை ஆங்கிலத்தில் வெளிவராத நிறைய கதைகள் உண்டு (33 கதைகள் மட்டுமே ஆங்கிலத்தில் வந்துள்ளது). நாம் ஏன் ஆங்கிலத்திலும் வெளியிடக்கூடாது? உலகம் முழுவதும் சந்தைப்படுத்தலாம்.
+++
* நேர்மறை சிந்தனைக் கதைகள்
* அற்புதமான படங்கள்
* கண்கவர் வண்ணங்கள்
* புது புது இடங்கள்
* புது புது களங்கள்
---
* ஒரே மாதிரியான கதையோட்டம்
* இந்த கதைகள் குழந்தைத் தனமாக இருப்பதால் பெரியவர்களை கவருமா என தெரியாது. (46 வயதானாலும் என்னைப்போன்ற ஒரு சில விதி விலக்குகளும் உண்டு).
* வரவேற்பில்லாத கார்ட்டூன் ஜானர் (வருத்தமளிக்கும் உண்மை)
எப்படியோ கார்ட்டூன் கதைகள் தமிழில் வெளிவந்தால் மிக்க மகிழ்ச்சி. வெளிவந்தால் எனக்கெல்லாம் கொண்டாட்டம் தான். முன்கூட்டியே என்னுடைய நன்றிகள் சார்.
//நாம் ஏன் ஆங்கிலத்திலும் வெளியிடக்கூடாது? உலகம் முழுவதும் சந்தைப்படுத்தலாம்.//
Deleteசந்திரமுகியில் வடிவேலு கிட்ட தலைவர் சொல்ற டயலாக் தான் நினைவுக்கு வருது சார் ...! உள்ளூரிலேயே எழுந்து நிக்க நமக்கு தம் போறாது ; இந்த அழகில் உலகை அளக்க நினைப்பது சுகப்படுமா ?
//இவர்கள் எங்கேயாவது புது இடத்திற்கு செல்வார்கள் / இவர்களைத் தேடி யாராவது உதவி கேட்டு வருவார்கள். செல்லும் புது இடங்களில் யாருக்காவது உதவுவார்கள் அல்லது அங்கிருக்கும் மர்ம
Deleteமுடிச்சுகளை அவிழ்ப்பார்கள்//
ஆஹா போதுமே...வாங்கிட்டு வோம் 2025(6)ல
சுஸ்கி-விஸ்கி கதைகளை இதுவரையிலும் படித்ததில்லை. இப்பொழுது நிகழ்ந்து வரும் கார்ட்டூன் வறட்சியில், சு-வி கைகொடுத்தால் நலம். குண்டு புக்காக வந்தாலும், தனியாக வந்தாலும் வாங்கத் தயார் ஐயா!
ReplyDeleteவந்தாச்சுங். படிச்சாச்சுங். சிரிச்சாச்சுங்.
ReplyDeleteவந்தது வந்துட்டீங்க....
Deleteஇந்த பேரப்புள்ளைக்காண்டி சுஸ்கி விஸ்கி வேண்டும்னு சொல்லிட்டு போங்க தாத்தா....
அது போன தடவையே எடிட்டர் படிச்சுட்டு வாங்கன்னு சொன்னாரு. அதனால பழய கதைகளை எடுத்துப் படிச்சும் பாத்துட்டேன். பொறவு தான் அவரு சொன்னதுல இருந்த உண்மை புரிஞ்சுது். அதுனால 2022க்கு அப்புறம் பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்.
Deleteசுஸ்கி& விஸ்கி கதைகளை கொண்டு வர முயற்சி செய்யுங்கள் ஆசிரியரே.. மிக அழகான கார்ட்டூன் கதைகள் ராஜ ராணி ஜாக்கி நான் படித்தது பிடித்தது, என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது
ReplyDeleteசுஸ்கி-விஸ்கி@
ReplyDeleteஆரம்ப காலகட்டத்தில் ஓசியில் படிக்கும் போது சுஸ்கி-விஸ்கியின் பேரிக்காய் போராட்டம், ராஜா ராணி ஜாக்கி& பயங்கரப் பயணம் என ஓரு சில கதையை என் சீனியர் ரசிகர்கள் படிக்க கொடுத்தாங்க...!!!
பேரிக்காய்களுக்கு உயிர், அவர்களுக்கு என உலகம்,அதில் ராஜாவும் ராணியும் இருந்ததாக நினைவு, அந்த உலகில் ஒரு போராட்டம்....!! அந்த உலகுக்கு போக ஒரு பயணம் என விசித்திர கற்பனையாக கவர்ந்தது.
இப்போதும் கூட அந்த கதைகள் மறுபடியும் ரசிக்க இயலும்...!!!
நண்பர்கள் பெரும்பாலானோருக்கு நினைவிருக்கும்....!!!!
இப்போதைய கால கட்டத்தில் ஒவ்வொரு துறையும், நிறுவனமும், கடையும் சர்வைவல் என்பதை நோக்கியே நடைபோட வேண்டியது அவசியம்....!!!
அடுத்த இரு ஆண்டுகள் மிக மிக முக்கிய காலகட்டம். அவரவர் வேலையை காப்பாற்றி கொண்டு வாழ்க்கையில் ஸ்திரமாவது முக்கியம்.
இந்த இரு ஆண்டுகளில் சோதனை முயற்சிகளில் இறங்க எடிட்டர் சாருக்கு துளியும் வாய்ப்பிருக்காது என்பது நிதர்சனம்!
நார்மலான பொழுது புலரும் ஒரு தூரத்து நாளில் எங்களின் இந்த கோரிக்கைய பரிசீலித்து பாருங்கள் எடிட்டர் சார்.
கார்டூன் ரசினையில் மாற்றம் கண்டு, சுஸ்கி-விஸ்கிக்கென ஒரு சாளரக் கதவு திறக்கும் என்றாவது என நம்பிக்கை உள்ளது.......!!!
இந்த இரு ஆண்டுகளில் சோதனை முயற்சிகளில் இறங்க எடிட்டர் சாருக்கு துளியும் வாய்ப்பிருக்காது என்பது நிதர்சனம்! //
DeleteWell said!!!👌👏
நார்மலான பொழுது புலரும் ஒரு தூரத்து நாளில் எங்களின் இந்த கோரிக்கைய பரிசீலித்து பாருங்கள் எடிட்டர் சார்.//
+1. இந்த கோரிக்கையெல்லாம் அவரு மனசில ஒரு ஓரத்துல உக்காந்திருக்கும். வேளை வரும் போது வாய்ப்பும் வரும் என நம்புகிறேன்.
காலம் கனியும்...கனவு நனவாகும்...இந்த இடர் மிகு காலத்தில் வர உள்ள துள்ளளான கதைகளை நடந்தாவது வாங்கிடு வோம்...குதிரையில் ஏறி பறக்கும் காலம் வராமலா போகும்...சுஸ்கி அட்டகாசத்துக்கும் மேல்...காத்திருப்போம்
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete/"எனக்கு பேரிக்காய் படலம் வேணும்" எனும் போதே அங்கே தொனிப்பது nostalgia மட்டுமே !//
ReplyDeleteஆமாம் சார், சிற்சில கிளாசிக் கதைகளை reprint கேட்கும்போது, அது நிச்சயமாக அந்த நாஷ்டால்ஜியா உணர்வு தான் சார். என்னை பொறுத்தவரை ஒவ்வொரு கடந்த கால இதழுக்கும் ஒரு நினைவு உண்டு சார்.
காமிக்ஸ் சிறு பிள்ளைகள் சமாச்சாரம் என்று காலம் சென்ற என் தந்தை தமிழ் படிக்க தெரியாத எனக்கு தனக்கு கிடைத்த "நீதிக்காவலன் ஸ்பைடர்" காமிக்ஸ் கொடுத்தார்... அதே சமயம் காமிக்ஸ் என்னை அதிகமாக ஆட்கொண்டதை அறிந்த அவர், நான் காமிக்ஸ் படிப்பதை கண்டிக்கவும் செய்தார். "நல்ல கார்ட்டூன் கதைகளை படிடா போதும்", என்கிறார் என் தந்தை... அந்த சமயம் சுஸ்கி விஸ்கியின் "ராஜா ராணி ஜாக்கி" அறிவிப்பு வரவே, "இது கார்ட்டூன் புக் பா, 2 ரூபா தான்பா, வாங்கி குடுப்பா" என்கிறேன்... அந்த சமயம் தான் தாமதம் நமது காமிக்ஸில் தலைதூக்க ஆரம்பித்தது. அதனால் என் தந்தை புக் தேடி கடைக்கு சென்றால் மினி லயன் காமிக்ஸ் கிடைக்கவே கிடைக்காது. ஒருவழியாக ராஜா ராணி ஜாக்கி வந்தார்கள், எப்படியோ அப்பாவிடம் காசு வாங்கி கொண்டு கடைக்கு சென்று வாங்கி விடுகிறேன், சுஸ்கி விஸ்கி உள்ளதை கொள்ளை கொண்டார்கள். I remember those sweet memories of my father, in some of our comics.
இன்றைக்கும் ராஜா ராணி ஜாக்கி எக்கச்சக்க பிரீமியம் விலையில் கிடைக்கும் தான், உறுபாடியாக் செலவு செய்ய ஏகப்பட்ட செலவுகள் ஒரு பக்கம், அப்படியே நான் வாங்கினாலும் அது என்னை மட்டுமே சுற்றி வரும். லக்கி லூக்கா காமிக்ஸ் கொஞ்சமாவது படிக்க விருப்பம் காட்டும், என் சகோதரியின் பிள்ளைகள் நல்ல பெரிய சைஸில் முழு வண்ணம் தரமாக பேப்பர் இருந்தால் மட்டுமே தொடவே செய்கிறார்கள். பழைய காமிக்ஸ் புக்ஸ் படிக்கும் தலைமுறையை நாம் மட்டுமே என்பது தெளிவு.
சுஸ்கி விஸ்கி வெளிவந்து 30 வருடங்கள் மேலாகிறது... பல நண்பர்களின் பல வருட விருப்பம் இது. எனக்கும் அப்படியே... சுஸ்கி விஸ்கியின் எல்லா 300 கதைகளுமே வேண்டும் என்று கேட்கவில்லை... தரமான ரெண்டு அல்லது மூன்று டஜன் கதைகளை மட்டுமே கேட்கின்றோம் சார். வேறு யாரிடம் கேட்க முடியும் என்று தெரியவில்லை. இது நண்பர்களின் வற்புறுத்தலோ, கட்டாயப்படுத்தலோ என்று எண்ணாமல் வாசக நண்பர்களின் வேண்டுகோளாக மட்டுமே கருதி கொள்ளுங்கள், சார். வருடத்திற்கு ஒன்று வந்தாலும் போதும் என்கிறோம். மேலும் நீங்கள் வாக்கு கொடுத்து உள்ளீர்கள், இதற்கு மேல் சொல்வதற்கு ஏதுமில்லை.
//"பழசே செம !!" கட்சிக்காரர்களாய் நீங்களிருப்பின், நமது ரேடார்களைக் கீழ்க்காணும் நாயகர்களுக்கு மத்தியில் ஓடச் செய்யலாம் :
சாகச வீரர் ரோஜர் (அந்த "மர்மக் கத்தி" promise மறக்கவில்லை எனக்கு !)
சுஸ்கி & விஸ்கி
கூர்மண்டயர் (கொலைப்படை சைசில்..)
சார்ஜெண்ட் தாமஸ் / மின்னல்படை (யுத்த கதைகள்)
"சாவதற்கு நேரமில்லை " சைமன் !
மாயாவிகாரு - வண்ணத்தில் - கொரில்லா சாம்ராஜ்யம் / யார் அந்த மாயாவி ? etc.
- Sunday, July 02, 2017//
//அப்புறம் போன பதிவினில் "சுஸ்கி & விஸ்கி' இதழ்களுக்கு ஓரளவுக்கு encouraging results கண்ணில்பட்டது நிச்சயமாய் எனக்கு ஆச்சர்யமே ! ஆனால் இவர்களுக்கு மீள்வருகை தருவதாயிருப்பின், நான் ஏற்கனவே சொன்னது போல - ஒரு தொகுப்பாக்கி, "முன்பதிவுகளுக்கு மட்டுமே" - என்ற ரீதியில் தான் களமிறக்கியாக வேண்டும் ! ரெகுலர் கார்ட்டூன் தடத்தில் இந்தப் புள்ளீங்களை இறக்கி விட்டு விஷப் பரீட்சை செய்திடல் எனக்கு விவேகமாய்ப் படவில்லை ! - Saturday, April 17, 2021//
சிக்கலே அங்கே தான் நண்பரே ! குறைந்த பட்சமாய் ஒரு டீசெண்டான எண்ணிக்கையில் அல்லாது - "எனக்கு ரெண்டு போதும் ; முணு போதுமென்று" இன்றைக்கு கேட்க மார்க்கமே கிடையாது !
Deleteசரி,அரை டஜன் கதைகளை வாங்குகிறோமென்றே வைத்துக் கொள்ளுங்களேன் - அவற்றை 3 வருஷங்களாவது அடை காத்திடணும் ! And முதல் வருஷமே மக்கள் முகத்தைச் சுளித்தால் அத்தோடு மீதக் கதைகள் பணால் !
கடந்த ஒரு மாதத்தின் அலசல்களில் கிட்டியுள்ள ஞானம் (!!!) இனி கார்ட்டூன் சார்ந்த முயற்சிகளில் விஷப் பரீட்சைகளில் ஈடுபடும் தெம்பினை என்னிடமிருந்து முற்றிலுமாய் உரிந்து விட்டுள்ளன !
அபத்தமானதொரு விலையில் ,மிகச் சின்னதொரு முன்பதிவென்றால் மட்டுமே இனி இது போன்ற "நேயர் விருப்பங்கள்" சாத்தியமாகிடும் ! And 2022-ல் இதற்கு நிச்சயமாக வாய்ப்புக்கள் கிடையாது நண்பரே !
Simply becos கிட்டங்கியில் இடமில்லை and பைக்குள்ளும் பணமில்லை ! தெளிவற்றதொரு பேரிடர் காலத்தில் மட்டுமேனுமாவது ஜெயிக்கும் குதிரைகளை சார்ந்தே பயணித்திடல் அத்தியாவசியம் என்பதே யதார்த்தம்!
///தெளிவற்றதொரு பேரிடர் காலத்தில் மட்டுமேனுமாவது ஜெயிக்கும் குதிரைகளை சார்ந்தே பயணித்திடல் அத்தியாவசியம் என்பதே யதார்த்தம்!///
Deleteஉண்மைதான் சார்! ஓரிரு வருடங்களுப்பிறகு சுஸ்கி-விஸ்கியை மீண்டும் பரிசீலிக்கலாம்!
//சரி,அரை டஜன் கதைகளை வாங்குகிறோமென்றே வைத்துக் கொள்ளுங்களேன் - அவற்றை 3 வருஷங்களாவது அடை காத்திடணும் ! And முதல் வருஷமே மக்கள் முகத்தைச் சுளித்தால் அத்தோடு மீதக் கதைகள் பணால் !//
Delete6 கதைகளையம், ஒரே புக்காக கொடுங்கள், சார். இரத்தப்படலம் போல் புக்கிங் எண்ணிக்கை எத்தனைவேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள், நீங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கை புக்கிங் வந்த பின்னே சுஸ்கி விஸ்கியை வெளியிடலாம் சார்.
ஸ்பைடர், மாயாவி, மாடஸ்டி , சுஸ்கி விஸ்கி + ( நீண்ட நாள் விடுப்பில் உள்ள நாயகர்கள்) போன்ற உங்களுக்கு பயத்தை தரும் ஹீரோஸூக்கு என்றே தனி சந்தா கூட நீங்கள் நிர்ணயிக்கலாம் சார்... இன்னும் 6 மாதத்தில் நிச்சயம் நீங்கள் எதிர்ப்பார்க்கும் எண்ணிக்கை வராவிட்டால் அந்த சந்தாவினை நீங்கள் கைவிடவும் செய்யலாம். (அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்பது என் நம்பிக்கை).. உங்கள் கையில் எல்லாமே உள்ளது.
///
Deleteஸ்பைடர், மாயாவி, மாடஸ்டி , சுஸ்கி விஸ்கி + ( நீண்ட நாள் விடுப்பில் உள்ள நாயகர்கள்) போன்ற உங்களுக்கு பயத்தை தரும் ஹீரோஸூக்கு என்றே தனி சந்தா////
---நல்ல ஐடியா!
அவர்களின் பலமும் தெரிந்து போயிடும்...!!
நடைமுறை சிக்கல்கள் பக்கமாய் கவனங்களை திருப்பும் அவசியங்கள் உங்களுக்கு இராது போகலாம் நண்பரே ...ஆனால் நானுமே அவ்விதம் இருக்க இயலுமா ?
Deleteஒரு தொடருக்கு உரிமைகள் வாங்காது முன்பதிவை அறிவித்தால் என்னைக் கழுத்தைச் சேர்த்து சாத்துவார்கள் ! உரிமைகள் வாங்குவதாயின் - "நாங்க ஒரு வருஷத்துக்கு முன்பதிவுக்கு முயற்சிப்போமுங்க ; ஓகே ஆச்சுன்னா ரைட்ஸ் வாங்கிப்போம் ; இல்லாங்காட்டி வேணாம் !" என்று சொல்லவாவது முடியுமா ?
முட்டையை உடைக்காமல் ஆம்லெட் போட இன்னமும் வழி பிறக்கவில்லை நண்பரே ; இலட்சங்களில் முதலீடு செய்யாது இத்தகைய முயற்சிகளில் இறங்கவும் மார்க்கங்களில்லை ! கொஞ்ச காலத்துக்கு பறக்க நினைப்பதை விடுத்து நடக்க முயற்சிப்போமே !
சுஸ்கி விஸ்கிக்கு ஆதரவும், புத்தகம் வந்தால் வாங்கி கை கொடுப்போம்
Deleteஇதோ - கையில் உள்ள ஒவ்வொரு அணாவையும் 2022-ன் அத்தியாவசியங்களின் பொருட்டு ஒரு நூறுவாட்டி எண்ணி, எண்ணிச் செலவழித்து வருகின்றேன் ! முகவர்கள் மறுபடியும் நார்மலுக்கு திரும்ப எத்தனை காலமாகுமோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் ! அதுவரைக்கும் நிலுவைச் சிட்டகளை ஆசைக்குப் பார்த்துக்க வேணுமானால் செய்யலாம் !
Deleteஇதுவே அன்றாடம் என்ற நிலையில் - "இன்றைக்கே சுஸ்கி -விஸ்கியை படித்தால் தான் ஆச்சு ; மிச்சம் மீதத்தை அப்புறமாய்ப் பார்த்துக்கலாம்" என்ற உங்களின் நோஸ்டால்ஜியா உந்துதல்களுக்கு நானுமே தலையசைப்பதாயின் - அதானி நிறுவனத்தில் பங்குதாரராக இருந்திட வேண்டி வரும் நண்பரே !
A time for everything & everything in its time ! And 2022 isn't the time for wishful thinking for sure !
///ஸ்பைடர், மாயாவி, மாடஸ்டி , சுஸ்கி விஸ்கி + ( நீண்ட நாள் விடுப்பில் உள்ள நாயகர்கள்) போன்ற உங்களுக்கு பயத்தை தரும் ஹீரோஸூக்கு என்றே தனி சந்தா////
Deleteஎண்ட குருவாயூரப்பா ....மிடிலே !! சத்தியமாக மிடிலே !
Okay, நல்லது சார். டென்ஷன் ஆகிடல் வேண்டாம்.
Delete//A time for everything & everything in its time ! And 2022 isn't the time for wishful thinking for sure !// 💐
Deleteபருவத்தே பயிர் செய்வோம் நண்பர்களே
Deleteநடப்பு வருடத்தின் சந்தா மாற்றம் வரவேற்க தக்கது. ராபின், மார்டின், டைலன் ஒரே புத்தகத்தில் அட்டகாசம்.
ReplyDeleteஅந்த இன்னொரு மாற்றம் என்ன என்பதை அறிய ஆவல்.
அடுத்த வருட சந்தா அறிவிப்பு அக்டோபர் தானா சார்?? சற்று முன்பு வாய்ப்பு இல்லையா???
யார் சார் அந்த சொப்ப்பன சுந்தரி???
போர்களத்தில் தேவதைகள்????
Deleteஇல்லை இல்லை மாத்தா ஹாரி. பிடித்து விட்டேன்.
Deleteஅக்கா மாடஸ்டி
Delete// ஆரவாரங்களை ஆதாரமாக்கி, நானாய் முதலில் போட்டு வைத்திருந்த சிக்கனக் கோடுகள் சகலத்தையும் அழித்துவிட்டு 'பப்பரக்கா'வென இப்போது கால்களை அகலமாய் விரிச்சாச்சு folks // நான் எதிர்பார்த்தது இதைத்தான். சும்மா பட்டையை கிளப்பறோம்
ReplyDeleteசார் அருமை...அப்ப ஐம்பதாமாண்டு மலர் ஐயாயிரம் விலையிலா....
ReplyDeleteகுண்டு முக்கா டைலர்...ராபின்...மார்ட்டின் அருமை...
பாபி ஸ்பெசல் அடுத்த மாதம் தானா....அப்ப செப்டம்பர் மாதம் அடுத்த வருடத்தில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சி...உங்க உற்சாகம் நம்மையும் போட்டுத் தாக்குது
// அப்ப ஐம்பதாமாண்டு மலர் ஐயாயிரம் விலையிலா.... // ஐய்யா இப்போது தான் எடிட்டர் கொஞ்சம் மனம் இரங்கி வந்து இருக்கிறார். அதற்கு ஆப்பு வைத்து விடாதீர்கள்.
Delete//ஐம்பதாமாண்டு மலர் ஐயாயிரம் விலையிலா...//
DeleteStress Buster பதிவு நண்பரே உங்களுடையது... சிரிப்பை அடக்க முடியல
ஐயாயிரம் போதும் நண்பர்களே...அதுக்கு மேல ஒத்த ரூவா கூட்டுனாலும் நான் வாங்க மாட்டேன்...
Delete14567891011121315161819...மீம்ஸ் சூப்பர்...டாப் 5வது
ReplyDelete// மார்ட்டின் & டைலன் இணைந்து ஜாகெஜம் செய்திடும் "உலகத்தின் கடைசி நாள்" ஆல்பத்தையும், CID ராபினின் "நள்ளிரவு வேட்டை" ஆல்பத்தையும் ஒன்றிணைத்து ஒரே புக்காக்கிடவுள்ளோம் ! முந்தையது ரூ.125 & ராபின் ரூ.75 ; so ஒன்றாக்கி ரூ.200 விலையில் ஒரே புக்காக வெளிவந்திடும் ! இது தவிர, இன்னொரு மாற்றமும் உண்டு ; ஆனால் அதுகுறித்த ஊர்ஜிதம் படைப்பாளிகளிடமிருந்து கிட்டிடக் காத்துள்ளேன் ! //
ReplyDeleteசூப்பர் நியூஸ்.
அப்புறம் அந்த இன்னொரு மாற்றம் என்ன? சஸ்பென்ஷன் தாங்கவில்லை சார்.
// தெளிவற்றதொரு பேரிடர் காலத்தில் மட்டுமேனுமாவது ஜெயிக்கும் குதிரைகளை சார்ந்தே பயணித்திடல் அத்தியாவசியம் என்பதே யதார்த்தம்! //
ReplyDeleteஉங்களின் இந்த தெளிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது சார்.
மீம்ஸ் அனைத்தும் சூப்பர். பாராட்டுக்கள் நண்பர்களே.
ReplyDelete// நிஜத்தைச் சொல்வதனால் எனது புதிய தேடல்களில் இப்போதெல்லாம் நான் கார்ட்டூன்களை ஒரு அங்கமாக்கிடுவதே இல்லை ; ஒருத்தர் மாற்றி ஒருத்தராய் சிரிப்புப் பார்ட்டிகளை வழியனுப்பும் வேலையை நாம் சீரும் சிறப்புமாய் செய்து வரும் போது, இன்னும் புதுசு புதுசாக ஆட்களைத் தேடுவானேன் ? //
ReplyDeleteமிகவும் வருத்தமாக உள்ளது விஜயன் சார். மற்ற கதைகளுக்கு கொடுக்கும் அதே ஆதரவை இதற்கும் நண்பர்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
நீங்களும் எவ்வளவோ எழுதிவிட்டீர்கள் சார். ஆனால் நமது நண்பர்கள் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை.
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்ற நம்பிக்கையுடன் கார்டூன் கதைகளுக்காக காத்துக் கொண்டு இருப்பேன்.
மிகவும் வருத்தமாக உள்ளது விஜயன் சார். மற்ற கதைகளுக்கு கொடுக்கும் அதே ஆதரவை இதற்கும் நண்பர்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
Deleteநீங்களும் எவ்வளவோ எழுதிவிட்டீர்கள் சார். ஆனால் நமது நண்பர்கள் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை.
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் என்ற நம்பிக்கையுடன் கார்டூன் கதைகளுக்காக காத்துக் கொண்டு இருப்பேன்.
நன்றி : PfT
92nd
ReplyDeleteபிழைத்திருத்தப் படலம் என்றைக்குப் பணிமுடித்து அனுப்புகிறதோ//
ReplyDeleteநாளை சார்..
வாழ்த்துகள் பழனி சகோ & டீம்.
Deleteஎன்னுடைய வாழ்த்துகளும் பழனிவேல்!
Deleteஇ.ப - ஒரு டீசன்ட்டான புக்கிங் எண்ணிக்கையை அடைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - அதுவும் இப்படியொரு பெருந்தொற்று காலகட்டத்தில்!!
இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு 'ஒரே புக்காய் - மேக்ஸி சைஸில்' என்று போராட்டத்தைத் தொடர்வீர்களானால் என்னுடைய ஆதரவு உண்டு!! இப்பவே சொல்லிட்டேன்!!
இன்னும் இருபது வருடங்களுக்குப் பிறகு 'ஒரே புக்காய் - மேக்ஸி சைஸில்' என்று போராட்டத்தைத் தொடர்வீர்களானால் என்னுடைய ஆதரவு உண்டு!! இப்பவே சொல்லிட்டேன்!!//
Deleteசின்ன கரெக்சன் பண்ணினேன் செயலரே.
///இன்னும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு 'ஒரே புக்காய் - மேக்ஸி சைஸில்' என்று போராட்டத்தைத் தொடர்வீர்களானால் என்னுடைய ஆதரவு உண்டு!! இப்பவே சொல்லிட்டேன்!!/////
Deleteநானும் சின்னக் கரெக்சன் பண்ணியிருக்கேன் பாருங்க ஷெரீப்! :P
🤣🤣🤣
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Delete/இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகு 'ஒரே புக்காய் - மேக்ஸி சைஸில்' என்று போராட்டத்தைத் தொடர்வீர்களானால் என்னுடைய ஆதரவு உண்டு!! இப்பவே சொல்லிட்டேன்!!/////
Deleteஎச்சூஸ்மீ... நானும் சின்னக் கரெக்சன் பண்ணியிருக்கேன். என்னையும் ஆட்டத்துல சேத்துக்கோங்க ஈவி/மகி.
இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு 'ஒரே புக்காய் - மேக்ஸி சைஸில்' என்று போராட்டத்தைத் தொடர்வீர்களானால் என்னுடைய ஆதரவு உண்டு!! இப்பவே சொல்லிட்டேன்!!....புக்கிங்க இப்பவே துவக்கலாம்//
Deleteநானும்
சமூக இடைவெளிவிட்டு, ரெண்டு வருஷம் கேக்குறவங்கல்லாம் ஒரு லைன், ரெண்டு மாசம் கேக்குறவங்கல்லாம் ஒரு லைன், ரெண்டு நாள் கேக்குறவங்கல்லாம் ஒரு லைன்னு ஃபார்ம் பண்ணி நிக்கச் சொல்றாரு எடிட்டர்.
Delete(எடிட்டர் மைண்ட் வாய்ஸ்: இவரு ஃபுல் ஃபார்ம்ல இருக்காரு போல.)
ஹிஹி.. பத்து சார் 'இ.ப - தீவிரவாதிகள்' பட்டியலில் பத்தாவதாக இடம் பிடிக்க நீங்களும் தயார் ஆகிட்டீங்க! வாழ்த்துகள்!!:)
Deleteமுத்து 50 வது ஆண்டு மலர் கதைகளின் அறிவிப்பு + 2022 அட்டவணை ஆக இந்த இரண்டின் மீதும் இப்பொழுதில் இருந்தே எதிர்பார்ப்பு எகிறி அடித்து கொண்டிருக்கறது. 50 வது ஆண்டு மலருக்கென இருந்த விலை கட்டுப்பாடு நிலை மாறி விஸ்வரூபமெடுத்திருப்பது மகிழ்ச்சியே. தெறிக்க விடும் கதைக்களங்களுடன் முத்து 50 சிறக்கட்டும்.
ReplyDelete// தெறிக்க விடும் கதைக்களங்களுடன் முத்து 50 சிறக்கட்டும். // சும்மா தெரிக்கணும்
Deleteதெறிதான்
Delete100
ReplyDeleteமீம்ஸ் எல்லாம் கலக்கல். அதிலும் கவுண்டரின் கனவு - நிஜமாகிடதா என்று ஏக்கமாக உள்ளது. டெக்ஸ் என்றால் சின்னராச பிடிக்கவே முடியாது என்பது உண்மைதான்.
ReplyDeleteSUSKI WISKI வந்தால் சந்தோஷம்,,,,
ReplyDeleteMartin Mystere and Dylan dog more slots please..
சுஸ்கி விஸ்கி +1
Delete// // ஆரவாரங்களை ஆதாரமாக்கி, நானாய் முதலில் போட்டு வைத்திருந்த சிக்கனக் கோடுகள் சகலத்தையும் அழித்துவிட்டு 'பப்பரக்கா'வென இப்போது கால்களை அகலமாய் விரிச்சாச்சு folks //
ReplyDeleteஎன்ன சார். ஜனவரி வரைக்கும் முத்து 50 பற்றி எதுவும் சொல்ல மாட்டீங்க என நினைத்தால் :-) ஒருவேளை பேப்பரில் எழுதி பார்க்கிறேன் என்று அதனை இங்கே பதிவிட்டீங்களோ :-)
வாழ்க பெவிக்கால் ராமசாமி :-)
This comment has been removed by the author.
Deleteஎனக்கு உங்களின் இந்த புது அப்ரோச் ரொம்ப பிடித்து இருக்கிறது விஜயன் சார் :-)
Deleteஅது பெவிகால் பெரியசாமி,பரணி.
Deleteசரி செய்திடலாம் சரி செய்திடலாம் குமார். இப்ப பாருங்க..
Deleteஎனக்கு உங்களின் இந்த புது அப்ரோச் ரொம்ப பிடித்து இருக்கிறது பெவிகால் பெரியசாமி :-)
எல் தம்பி ஐயாயிரம்னு இப்ப சொல்லமாட்டாராம்...
Deleteஎடிட்டர் சார்..
ReplyDeleteஇ.ப - ஒரு டீசன்ட்டான புக்கிங் எண்ணிக்கையை அடைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - அதுவும் இப்படியொரு பெருந்தொற்று காலகட்டத்தில்!!
(யாருடைய தீவிரப் போராட்டத்தினாலோ) இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு 'ஒரே புக்காய் - மேக்ஸி சைஸில்' என்று நீங்கள் அறிவிப்பீர்களானால் பலத்த கரகோஷத்துடன் அதை ஆதரிப்பேனாக்கும்!! இப்பவே சொல்லிட்டேன்!!
அட...அதை எதுக்கு இன்னும் ரெண்டு வருஷத்துக்குத் தள்ளிப் போடுவானேன் ? இப்போவே இன்னொருக்கா அறிவிக்கிறோம் ; தட்டுறோம் ; தூக்குறோம் !
Deleteயார்லாம் ரெடியோ - சமூக இடைவெளி விட்டு லைனா வாங்கோ !
மேக்ஸி சைஸில் இ.ப.அறிவிப்பு வெளியிட்டால் உடனே புக்கிங் பண்ண நான் ரெடியாக்கும்.
Delete(ஏற்கெனவே எங்க மாவட்டமே சமூக இடைவெளியில்தான் இருக்கு, லாக்டவுன் தளர்வுகளில்,
///இப்போவே இன்னொருக்கா அறிவிக்கிறோம் ; தட்டுறோம் ; தூக்குறோம் !///
Deleteசூப்பருங்க சார்! அப்படீன்னா இன்னிக்கே ஒரு புதுப் பதிவுல அறிவிச்சுடுங்க. இன்னிக்கு தேதி கூட 13 தான்! இ.ப'க்கு உகந்த நாள்!
13வது புக்கிங் என்னுது!
// இப்போவே இன்னொருக்கா அறிவிக்கிறோம் ; தட்டுறோம் ; தூக்குறோம் ! //
Deleteமறுபடியும் மொதல்ல இருந்தா....!!!!
தலையில் லா போராளி சைசுல...எனக்குமொன்னு
Delete///இப்போவே இன்னொருக்கா அறிவிக்கிறோம் ; தட்டுறோம் ; தூக்குறோம் !///
Deleteஇப்போ வருமோ..??எப்போ வருமோ...?
2022 Titles
ReplyDeleteஅன்பான ரேஞ்சர்
பதுங்க குழியில் பாயும் புலி
மங்கள யுத்தம்
தூங்கிய மனம் வீங்கிய முகம்
படலத்திற்கு நிறமேது
// செவ்வாயன்று டெஸ்பாட்ச் இருந்திடும் guys ! //
ReplyDeleteஇன்றைய அருமையான செய்தி, இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே...
ஆஹா...அருமை
Delete"கார்ட்டூன் ஸ்லாட்டில் லக்கி, உட்சிடி அதிகப்படுத்தியாவது எண்ணிக்கையைக் கூட்டவேண்டும் என்பதே எனதுவேண்டுகோள்.(மறுபதிப்புஉள்பட) "கரூர் ராஜ சேகரன்.
ReplyDeleteநமது வலைப்பூ வரவர மெருகுக் கூடிக் கொண்டே செல்கிறது.
ReplyDeleteதங்களது வழக்கமான,வளமையான பதிவுகளுடன் வாசக நண்பர்களின் மீம்ஸ்களையும் களமிறக்கி கார்ட்டூன் இல்லாத குறையைக் தீர்த்து வைத்து விட்டீர்கள்.
இந்த வார மீம்ஸில் வாசகர்கள், எடிட்டர் சார்,நமது கதாநாயகர்கள்,நமது மாறுபட்ட,மாறாத இரசனைகள் அனைத்தையும் வழக்கம்போல வச்சு செய்திருக்கிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
நமது வலைதளத்தை தொடர்வதற்கு இன்னொரு வலுவான காரணமும் கிடைத்து விட்டது.வாசக நண்பர்கள் கூறியது போன்று இவையனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒவ்வொரு மாதமும் வரும் புத்தகங்களுடன் கொடுக்கலாமே எடிட்டர் சார்!(பல வருடங்களுக்கு முன்பு தாங்கள் செய்த காமிக்ஸ் எக்ஸ்பிரஸ் போன்று)கூடவே,தங்களது சிங்கத்தின் சிறு வயதிலும்!
செய்வீர்களா?
நன்றி.
///இப்போவே இன்னொருக்கா அறிவிக்கிறோம் ; தட்டுறோம் ; தூக்குறோம் !///
ReplyDeleteஎன்ன சார்.. லைட்டா மனச அலைபாயவைக்கிரிங்களே..!!
சூப்பருங்க சார்! அப்படீன்னா இன்னிக்கே ஒரு புதுப் பதிவுல அறிவிச்சுடுங்க. இன்னிக்கு தேதி கூட 13 தான்! இ.ப'க்கு உகந்த நாள்!
ReplyDelete13வது புக்கிங் என்னுது! ஆஹா அருமை..ஈவி..
அல்சர் பார்டிகளுக்கு கொஞ்சம் கேப் கொடுங்க......அவுங்களும் அடுத்த பாட்டில் ஜெலுசில் வாங்கனுமல்லோ....😉😉😉
Deleteநான் கேட்பது கிடைக்கும் என்பது கேள்விக்குறி தான்,, இருந்தாலும் கேட்டு வைக்கறேன்
ReplyDelete1. jeslong
2. Minnal padai
3. karate doctor
3. Jerome
4. Gundan Billi(Billi the bunter) special
5. Cisco kid
6. Blake and mortimer series
7. Julia
8. Inspector Danger crime quiz -New series
continue..
+1000
Deleteஹி...ஹி...ஹி.
Deleteமன்னிக்கனும்.
இதெல்லாம் வரச் சாத்தியங்கள் லேது என்று நான் நினைக்கின்றேன்.
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை
Delete//வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை//
DeleteMy understanding about our Editor, he will do someday not immediately.
150-150
ReplyDeleteஏற்கனவே 'நள்ளிரவு வேட்டை' என்ற பெயரில் ஒரு டெக்ஸ் கதை வந்ததாக ஞாபகம்.
ReplyDeleteSTV எங்கிருந்தாலும் பதில் சொல்லவும்
ஆமாம். வந்துள்ளது.
Deleteஆமா வந்துள்ளது...தீபாவளிமலர்,1996!
Deleteஅருமையான கதை!
தனித்திருக்கும் பண்ணைகளை மிரட்டியோ, உரிமையாளர்களை கொன்றோ எழுதி வாங்கும் கொள்ளையர்களை (குக்ளஸ்கிளான் போர்வையில்),
டெக்ஸ் முறியடிப்பார்... சரியான ஆக்சன்.. ஒரு பக்கம் கூட தொய்வு கிடையாது.... பரபரப்பான 10தவுசண்ட் வாலா...
STVR சார்.. Super. நீங்கள் நிஜமாகவே தமிழ் காமிக்ஸ் கூகுள் தான். தமிழ் காமிக்ஸ்பீடியா என்றால் கூட தவறில்லை. பாராட்டுக்கள்.
Deleteஇரத்த படலத்த பல பேர் பல விதமாக கேட்டுட்டாங்க. ஆனாக்க பாக்கெட் சைசில 19 புக்கா யாராவது கேட்டீங்களா? இல்ல, அதனால நானே கேட்கிறேன்
ReplyDeleteஆல்ரெடி பாகம்2 பாக்கெட் சைசில் வந்துள்ளது, நன்றாகவே இருந்தது.
Deleteஇது 2026க்கு இ.ப. வெளிவந்த 40வது ஆண்டு கொண்டாட்டத்திற்கு....!!!
@ editor, what did I tell you sir?
Deleteடியர் சார்,
ReplyDeleteX 111-மறு-மறு வண்ண பதிப்பு-தாங்கள் எதிர்பார்த்த இலக்கை, தொட்டுவிட்டதால்,
இப்படி ஒரு கேள்வியை முன்வைக்கிறேன்.
- என்னிடம் முதல் வண்ண மறுபதிப்பு (மூன்று தொகுதிகளாக) உள்ளது.
இருந்தாலும், யாருக்கேனும் படிக்கக் கொடுத்து (உஷாராக முதல் தொகுதி மட்டும்,) பறி ேபாய்விடு ேமா - என்ற பயம் வாட்டுவதால் இந்த ேகாரிக்கை.
தாங்கள், இரண்டு தொகுதிகளாக வெளியிடுவதால் - முதல் தொகுதி-10 பாகங்கள், இரண்டாவது தொகுதி - 9 பாகங்கள் என்று இருக்கும் என்று கருதுகிறேன்
எனக்கு முதல் தொகுதி மட்டும் விலை நிர்ணயம் செய்து கிடைக்க வாய்ப்பிருக்கிறதா.
என்னைப்ேபால் வேறு யாருக்ேகேனும் இந்த ேகாரிக்கை உள்ளதா.?i_
அல்லது-இதைப் படிக்கும் காமிக்ஸ் ஏஜெண்ட்-யாருக்கேனும் இப்படி பிரித்து விற்பனை செய்ய இயலுமா.
இது , பணத்தை மிச்சம் பிடிக்கும் ேகாரிக்கை அல்ல. அந்த மீதி பணத்தில். -ஸ்மார்ப், சிக்பில், லக்கிலூக் என்று பர்சேஸ் செய்து தம்பிகளின்_குட்டீஸ்-க்கு கொடுக்கும் எண்ணம்தான். எனவே, டியர் சார் தவறாக எண்ண ேவண்டாம். நன்றி..
இரண்டு தொகுதி அல்ல நண்பரே.. 3தொகுதிகள் என அறிவித்து மாதங்கள் 3ஆகிறது.....!!!
Delete2தொகுதிகள் என அறிவித்து மாதங்கள் 2ஆகிறது.....!!!
Deletehttp://lion-muthucomics.blogspot.com/2021/04/blog-post_17.html
This comment has been removed by the author.
Deleteசேலம் டெக்ஸ் விஜயராகவன் சார் ட்யூராங்கோ "ரெளத்திரம் கைவிடேல் " இதழில் வந்த XIII விளம்பரத்தில் இரண்டு தொகுப்புகள் என்று உள்ளதே ? எது உண்மை ?
Deleteசெந்தில் விநாயகம்@ முன்பதிவு விளம்பர போஸ்டரில் சிவப்பு பொடி எழுத்துக்கள்ல இருந்ததால் என் கண்ணில் படவில்லை...!!! 2தொகுதிகள் என்றே குறிப்பிட்டுள்ளார். அருமை!!!!
Deleteநண்பர்கள் இந்த செய்தியை முகநூல் பதிவுகளில் ஹைலைட் பண்ணி இருந்தார்களா???
சரவணாரே@ இரண்டு தொகுப்புகளில் தான்....!!
Deleteசிவப்பு பொடி எழுத்துக்கள் என் கண்ணில் படல... வயசாச்சினும் சொல்லலாம்...!!!
இன்னிக்கே இதை ஹைலைட் பண்ணி ஒரு பதிவு போட்டுபுடலாம்.
எல்லோரும். - X 111-Maxi Size என்ெறல்லாம் கோரிக்கை வைக்கிறார்கள்.
ReplyDeleteநான் அப்படியெல்லாம் உங்களை தொந்தரவு செய்வதாய் இல்லை.
இன்ெனாரு Set- வாங்கி வைப்ேபாமா- ேதவைதானா என்ற எண்ணம் மட்டும் ஒடிக்ெகாண்டே இருக்கிறது..
இளங்கோ@ தாமதிக்காமல் உடனடியாக புக்கிங் பண்ணிடுங்க.. இன்னும் ஓரிரு நாட்களே பாக்கியுள்ளன்...
Deleteகாமிக்ஸ் புத்தகங்க ஏதாச்சும் வாங்கி படிச்சீங்களா...
ReplyDeletesuske and wiske கதைகள் எல்லாம் இந்த காலத்திற்கு சரி வராது. சிறு குழந்தைகளுக்கு வேண்டுமானால் பிடிக்கலாம். இதற்க்கு பதில் எதாவது ஹாரர் , திரில்லர் கதைகளை பரிசீலிக்கலாம்.
ReplyDeleteகார்ட்டூன் கதைகள் எல்லாம் இப்ப படிக்க பிடிக்கவில்லை என்பதே உண்மை
Deleteசார் புத்தக பார்சல் கிளம்பியாச்சா
ReplyDeleteஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!
ReplyDeleteஎங்கேயோ இடிக்குதே. நம்மைப் பாத்தா தீவன சப்ளையர் மாதிரியா இருக்கு???
ReplyDelete