Powered By Blogger

Thursday, June 03, 2021

ஒரு இளவரசியின் கதை இது !

 நண்பர்களே,

வணக்கம். "இளவரசி" !! Princess ....!! கார்வினுக்கு மாத்திரமல்ல, நம்மில் பெரும்பான்மைக்குமே இவர் இன்னமும் இளவரசி தான் ! ஆனால் உலகெங்கும் ஒரிஜினலான மன்னர் பரம்பரைகளே ஓரமாய் அமர்ந்து மிக்ஸர் சாப்பிடும் பணிகளுக்கென ஒதுக்கப்பட்டு வரும் நிலைதனில், நமது 'பொம்ம புக்' இளவரசியின் பாடுமே கொஞ்சம் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதில் வியப்பில்லை தான் ! தானைத்தலைவர் கவுண்டரின் பாஷையில் சொல்வதானால் - கொஞ்சம் 'delicate பொஷிஷன்' ! இப்போதெல்லாம் ஒவ்வொரு ஆண்டிலும் "மாடஸ்டி தொடரலாமா ? வேணாமா ?" என்ற கேள்வி தொடர்வதே ஒரு விதத்தினில்  (பெரும்பான்மையின்) ரசனை மாற்றங்களுக்கொரு indicator ! Anyways - இதோ இந்த வருஷம் மாடஸ்டி ஆஜராகவுள்ள தருணத்தினில் அதே கேள்வி இன்னொருக்கா !!

மாடஸ்டி பிளைசி !! முதன்முதலில் கம்பீரமான இந்தப் பெயரைக் கேட்டது 1970-களின் இறுதியில் என்பது மட்டும் நினைவுள்ளது ! Fleetway கதைகள் ; அதன் பின்னே அமெரிக்க King Features கதைகள் (வேதாளன் ; மாண்ட்ரேக் ; ரிப் கிர்பி ; காரிகன் etc ) என்று இரட்டைக் குதிரைகள் மாத்திரமே உண்டு - அந்நாட்களின் முத்து காமிக்ஸின் சவாரிக்கு !  இரண்டுக்குமே இந்தியாவில் ஏஜெண்ட்கள் உண்டு & இருவரின் அலுவலகங்களுக்குமே ரொம்பச் சின்ன வயதிலேயே சீனியருடன் போயிருந்தேன் தான் ! பள பளவென டாலடிக்கும் ஆர்ட்பேப்பரில் பிரிண்ட் எடுக்கப்பட்ட கதைகளின் ஒரிஜினல்களை அங்கே வாங்கிடும் போது, அவற்றைத் தடவித் தடவிப் பார்ப்பது பால்யத்தின் ஜாலியான நினைவுகள் ! வாசிக்கும் விபரம் வாய்க்கப் பெற்ற வயதுக்குப் பின்பாய், முத்து காமிக்ஸில் வெளியான கதைகளின் முக்கால்வாசியை முதலில் வாசித்தவன் அநேகமாக நானாகத் தானிருப்பேன் !  அந்நாட்களில் ஊருக்குள் நான் படித்த இஸ்கூல்  மட்டுமே இங்கிலீஷ் மீடியம் & மூன்றாம் வகுப்பு முதலே ஹிந்தியும் கற்றுத் தந்தார்கள் என்பதால் - ஆபீசில் "சவுந்தர் அண்ணாச்சி பையன்" என்றாலே கொஞ்சம் 'பெசல் மருவாதி' தான் !! So எந்நேரமும் திருவிழாவாக காட்சி தரும் அச்சகம் + ஆபீசில் இண்டு இடுக்கு விடாமல் சுற்றும் வாய்ப்பும் சரி, அத்தனைப் பணியாட்களிடம் என்னமாச்சும் பேசிடும் பரிச்சயமும் இருந்தது எனக்கு !  So பெரியதொரு ஸ்பெஷல் கவரில், கதைகள் பதிவுத் தபாலில் முத்து காமிக்ஸ் ஆபீசுக்கு வந்திடும் போதுமே, அவற்றை  உடைத்து எனக்காக வைத்திருப்பார் அந்நாட்களின் MC மேலாளர் பாலசுப்ரமணியன் ! சாயந்திரமாய் ஸ்கூல் முடிந்து வீட்டுக்குப் போகும் வழியினில் தவறாது ஆபீசில் எட்டிப் பார்ப்பதுண்டு என்பதால் - அந்த classics கதைகளின் ஒவ்வொன்றையுமே, புரோட்டாவைச் சாத்தும் சூரியைப் போல 'லவக் லவக்கென்று' வாசித்துத் தள்ளிடுவேன் அங்கே வைத்தே ! 

அந்த routine-களின் மத்தியில் புதுசாய் ஒரு பார்சலில் வந்திருந்து கண்ணில் பட்டவர் தான் நமது இளவரசி ! அந்நாட்களில் மும்பையில் இன்னொரு நிறுவனம் காமிக்ஸ் கதைகளினை சந்தைப்படுத்திடும் முயற்சியில் இறங்கியிருந்ததும், அவர்கள் மூலமாக சீனியர் எடிட்டர் மாடஸ்டி பிளைசியின் கதையினை வாங்கியிருந்ததும் அப்புறமாய்த் தான் தெரிய வந்தது ! அந்தப் பார்சலில் இருந்ததே பின்னாட்களில் "கழுகுமலைக் கோட்டை" என்று களமிறங்கிய மாடஸ்டியின் debut கதை ! 

நிஜத்தைச் சொல்வதானால் எனக்கு அந்தக் கதையைப் படித்த போது சுத்தமாய்ப் பிடிக்கவே இல்லை !  சல்மான் கான் பாணியில் சொக்காயைக் கழற்றிப் போட்டபடிக்கே கதையின் ஒரு பகுதி முழுக்க அம்மணி காற்றோட்டமாய் உலா வந்ததை அந்நாட்களின் வயசும் சரி, ரசனையும் சரி அங்கீகரிக்கவே இல்லை ! தோராயமான 45 ஆண்டுகளுக்கு முன்னே - "காமிக்ஸ் பொம்மனாட்டிஸ்" என்றாலே  கண்ணியமான ஸ்டெல்லா ; வேதாளனின் கம்பீரமான பாரியாள் டயானா வாக்கர் ;  ரிப் கிர்பியின் கண்ணுக்கு இனிய தோழிகள் என்போரைத் தாண்டிப் பெரிதாய் யாரும் இருந்ததில்லை !  திடு திடுப்பென இளவரசி ஒரு "ஈரோயினி " வேஷத்தில் ஆஜரானதே ஒரு ஷாக் என்றால், வடாம் காயப்போட வீட்டில் துணி இல்லையென்றால் கூட நொடியில் சொக்காயை இரவல் தரும் 'பரந்த மனசோடு' அவர் வந்த உலாவை ஜீரணிக்கவே முடியலை எனக்கு ! கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் "விசித்திர வேந்தன்" என்ற பெயரில் ஒரு புது நாயகரும் (டாக்டர் கில்டெர்) ; "தீவை மீட்டிய தீரன்" (Ben Bolt ) என்ற பெயரில் ஒரு கதையும் முத்து காமிக்சில் வெளியாகியிருந்தன & அவையுமே எனக்குச் சுத்தமாகவே பிடிக்கலை ! So 'என்னமோ போடா மாதவா' என்றபடிக்கே தான் அப்போதைய MC இதழ்களைப் பார்த்து வந்தேன் ! ஆனால் "கழுகுமலைக் கோட்டை" நல்ல வரவேற்பைப் பெற்றுமே அப்புறமாய் முத்து காமிக்சில் தொடரவில்லை & அந்த 2 புது ஆசாமிகளுமே வந்த வேகத்திலேயே காணாதும் போய்விட்டனர் ! So மறுபடியும் மும்மூர்த்திகள் ; ரிப் கிர்பி ; மாண்ட்ரேக் என்று வண்டி பயணிக்கத் துவங்கியிருக்க, இளவரசி பற்றிய நினைப்புகள் யாருக்கும் எழுந்திருக்கவில்லை ! பின்னாட்களில் தான் தெரிந்தது - மாடஸ்டி கதைகளை சந்தைப்படுத்திய அந்த மும்பை புது நிறுவனம் கொஞ்ச காலத்திலேயே ஏஜென்சியினை கைவிட்டுவிட்டதென்று ! And முத்து காமிக்ஸ் சிறுகச் சிறுக தடுமாற்றம் கண்ட நாட்களுமே தொடர்ந்திட, அந்நேரம் தொற்றிக் கொண்ட வாரமலர் முயற்சியின் புண்ணியத்தில் மேற்கொண்டு ஒன்றரை ஆண்டுகளும் ஓட்டமெடுத்திருக்க, "மாடஸ்டி" ஒரு மறந்து போன பெயராகவே இருந்தது ! 

நாம் சோம்பிக் கிடந்திருப்பினும், மாடஸ்டியின் விற்பனை உரிமைகள் சோம்பியிருந்திருக்கவில்லை ! மும்பை நிறுவனம் கைவிட்ட ஏஜென்சியை Fleetway க்கு ஏஜெண்ட்களாக இருந்தோரே எடுத்திருந்திருக்கின்றனர் ! நான் 1984-ன் துவக்கத்தில் "பிரகாஷ் பப்ளீஷர்ஸ் " லெட்டர்பேடில் அவர்களுக்கு கடுதாசி ஒன்றினைத் தட்டி விட்ட போது - "இது-இதுலாம் இருக்கு...வேணுமா ?" என்று அவர்கள் போட்டிருந்த பதிலினில் தான் "மாடஸ்டி" என்ற பெயரை மறுபடியும் பார்க்க நேரிட்டது ! அந்நாட்களில் இங்கிலீஷில் SPECTRUM COMICS என்ற பெயரில் வெறும் நான்கே ரூபாய்க்கு டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் வெளியிட்டுக் கொண்டிருந்தது & அவர்களின் முதல் இதழே - நாம் "மரணக் கோட்டை" என்று ஏப்ரல் 1985-ல் வெளியிட்ட சாகசமே ! So அவர்களின் புண்ணியத்தில் மாடஸ்டி கதைகளைக் கொஞ்சமாய் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியிருந்தது & தமிழில் மாடஸ்டியினை நாம் வெளியிடும் தீர்மானம் ஆன பிற்பாடு, கதைத் தேர்வில் எனக்கு ஓரளவுக்கு உதவியது Spectrum Comics வெளியீடுகள் தான் ! மொத்தம் 100 கதைகள் உண்டு இளவரசியின் தொடரினில் !! (நமது IT அணிக்கு இன்றைய கோரிக்கை : நாம் இதுவரையிலும் வெளியிட்டுள்ளது எத்தினி ? என்ற கணக்குப் பார்த்திட முனைவது ப்ளீஸ் !!) And அந்நாட்களில் நெட்..கிட் என்று ஏதும் கிடையாதெனும் போது - ஒவ்வொன்றையும் வாசித்துப் பரிசீலிக்கும் வாய்ப்புகள் பூஜ்யமே ! So கதைப் பட்டியலில் இங்கி-பிங்கி போட்டுத் தான் முதல் இதழான "கத்தி முனையில் மாடஸ்டி" யைத் தேர்ந்தெடுத்திருந்தேன் ! திரும்பிப் பார்க்கும் போது - "The Vanishing Dollybirds" என்ற அந்தக் கதை அத்தனை பெரிய அம்மாடக்கர் இல்லை தான் ; இன்னும் கொஞ்சம் பெட்டராக தேர்வு செய்திருக்கலாம் என்றும் அடிக்கடித் தோன்றிடுவதுண்டு ! சொல்லப் போனால் இரண்டாம் கதையாக வெளிவந்த "மாடஸ்டி in இஸ்தான்புல்" ; பின்னே வந்த "மரணக் கோட்டை" கதைகள் much better என்பேன் ! ஆனால் புனித தேவன் மனிடோ நம் சார்பில் செய்த தேர்வில் பிசகிறாதென்று நினைத்துக் கொள்வேன் ! 

அந்த முதல் கதைக்குப் பணம் அனுப்பி, அது தபாலில் நிதானமாய் வந்து சேரும் வரையிலும் ஊட்டி ரயில் நிலையத்தில் "இன்னுமா ரயில் வரலை ?' என்று குடலை உருவும் பாக்யராஜ் போல எங்க ஏரியா போஸ்ட்மேனைப் பின்னியெடுக்காத குறை தான் ! ஒரு வழியாய் கதை கைக்கு வந்து சேர்ந்த போது இனம்புரியா உணர்வுகள் உள்ளுக்குள் ! அது நாள் வரையிலும் கதையை வாசிப்பதோடு சரி, அப்புறமாய் அதை புக்காய் ரசிக்கும்  வரைக்கும் பராக்குப் பார்ப்பது மட்டுமே எனது பொறுப்பாக இருந்திருக்கும் ! ஆனால் இப்போதோ - திரைக்கதை-வசனம்-டைரெக்ஷன்-பாடல்-ஆடல் என சகலமும் எனக்கே எனக்காய்க் காத்துள்ளன என்பது புரிந்த போது, உள்ளுக்குள் சொல்லி மாளா உதறல் !! மொழிபெயர்ப்பென்பது எனக்கு அந்நேரத்துக்கு அந்நியமல்ல தான் ; 'டிங் டாங் ' என்ற பெயரினில் திட்டமிட்டிருந்ததொரு சிறுவர் இதழுக்கென 1980 முதலே எதை எதையோ பேயனைப் போல பேனா பிடித்துக்  கொண்டிருந்தேன் ! அதனில் இடம்பிடிப்பதாக இருந்த வேதாளன் தொடர்கதைக்கும் ; ஈகிள்மேன் தொடருக்குமே தமிழாக்கங்கள் செய்ததும் நானே என்பதால் ஒரு "காமிக்ஸ் நடை" என்பது எனக்கு அத்தனை பெரிய கம்பு சுற்றும் கடினமாய்த் தென்படவில்லை தான் ! தவிர, வருஷங்களாய் முத்து காமிக்ஸ் உருவாக்கத்தினை அருகாமையிலிருந்தே பார்த்திருந்த அனுபவத்தில் மொழிபெயர்ப்பைச் சமாளித்து விடலாமென்ற நம்பிக்கை இருக்கவே செய்தது ! ஆனால் மாடஸ்டியின் கதைகளில் இழையோடும் dry british humor மொழிபெயர்ப்புக்கு முட்டியைப் பெயர்க்கும் சவாலென்பது போகப் போகவே புரிந்தது ! நாலு பக்கங்களை எழுதி முடிப்பதற்குள் நாலு A 4 பேப்பர்களைக் குதறிப் போடாத குறை தான் ! சின்ன ல'வா ? பெருசா ? குட்டி 'ர'வா ? பெருசா ? என்று நடு நடுவே எட்டிப் பார்த்த சந்தேகங்கள் இன்னொரு பக்கம் பிராணனை வாங்கின ! ஒரு மாதிரியாய் பத்து நாட்களில் உருண்டு, புரண்டு வேலையை முடித்த போது, ஏதோ அடுத்த தேசிய கீதத்தையே உருவாக்கி விட்டது போலொரு பீலிங்கு ! கொஞ்ச காலம் முன்னே லேசாய் உதறிய கையில் "கத்திமுனையில் மாடஸ்டி" முதல் இதழை ஏந்திப் பிடித்து, நடு நடுவே தென்பட்ட வரிகளை மறுக்காவும் வாசித்த போது - 'உப்பில்லை..காரமில்லை' - என்ற குறைகளை மீறியும் "நிச்சயம் சொதப்பலில்லை !" என்று மட்டும் நினைக்கச் செய்தது ! என்ன - அன்றைய நான் முக்கா கால் பேண்ட் போட்டிருந்தேனென்றால், அன்றைய நீங்கள் லங்கோட்டிகளோ ; அரை நிஜார்களோ தான் போட்டிருந்தீர்கள் என்பதால், பெரிய சேதாரமின்றித் தப்பித்து விட்டேன் ! தொடர்ந்த நாட்களில் மாடஸ்டியின் உரிமையாக இருந்திருக்க வேண்டிய வெளிச்சவட்டத்தை நமது கூர்மண்டையர் ஸ்பைடர் & ஆர்ச்சி லபக்கி விட்டதால் இளவரசி அவ்வப்போது உப்பரிகைகளிலிருந்து கையசைக்கும் அளவிலேயே தொடர்ந்திட்டார் ! பின்னாட்களில் டெக்ஸ் வில்லர் எனும் சாகச அசுரனும் இணைந்து கொள்ள - தொடர்ந்திட்ட நிலவரங்கள் உங்களுக்கே தெரியும் ! Oh yes - நிறைய ஸ்பெஷல் இதழ்களில் மாடஸ்டிக்கும் ஒரு இடமிருந்திருக்கும் தான் ; ஆனால் அட்டைப்படத்தில் கெத்து காட்டும் வாய்ப்புகளோ இளிக்கும் ஸ்பைடருக்கும், தெறிக்கும் டெக்ஸுக்கும் தான் இருந்திருக்கும் ! So low profile தான் இளவரசிக்கு அன்றைக்கே !

"ரைட்டு....இந்தப் புராணமெல்லாம் நல்லா தானிருக்கு ; ஆனாக்கா 'இளவரசி' அடுத்த வருஷமும் வர வாய்ப்புண்டா - இல்லியா ? ஒற்றை வரியில் பதில் சொல்லுப்பு !!" என்று நீங்கள் கண்சிவப்பது புரிகிறது ! 

எனது பதில் நாளைக்கு !! 

இப்போதைக்கு கம்பேனி பொழுது போகாம போட்டுப் பாத்த memes உங்க பார்வைக்கு ! 

And your chance to express crisply guys !! ஒற்றை வரி மட்டுமே அனைவருக்கும் தரப்படுகிறது இக்கட ! அந்த ஒற்றை வரியில் : 

"இளவரசி ஏன் தொடர்ந்திடணும் ?" 

என்றோ - 

"ஏன் தொடரக் கூடாது ?" 

என்றோ சொல்லுங்களேன் ப்ளீஸ் ? மனசு நோகும் விதமாய் உங்களின் பதிவுகள் இருந்திடாதென்பது எனக்குத் தெரியும் folks & அதற்கு முன்கூட்டிய நன்றிகளும் !! 

Before I sign out - 'கம்பெனி திடீரென்று memes போட்டுப் பாக்க ஆரம்பிச்சிடுச்சே ?' என்ற உங்களின் ரோசனைகளுக்கு விளக்கம் சொல்லி விடுகிறேனே ? நேற்று முதல் பிரவாகம் எடுத்து வரும் நம்மவர்களின் லூட்டிகளே என்னையும் தூண்டி விட்டன !! இக்கட தேக்கோ all !! AND ALL DOCTORS மன்னிச்சூ ப்ளீஸ் ! 

UDHAY :






MKS RAM :






DR.A.K.K.RAJA



லூட்டியை யாருக்கும் சளைத்தவர்களில்லை என்பதை நிரூபித்து வருகிறார்கள் நம்மவர்கள் ! Carry on guys ! See you around ! Bye for now ! 

203 comments:

  1. நாந்தே பர்ஸ்ட்டூ

    ReplyDelete
  2. கம்பேனிகாரவுகளோட மீம்சுல கடேசி வரிய படிக்கிறச்சே சிரிப்பா வந்துச்சி.. ஆனா இளவரசியோட கெய்த்தான் டாக்டர் ஒருத்தரை நினைச்சி சிரிப்பை அடக்கின்டுட்டேன்.!

    ReplyDelete
  3. இந்த கேள்விகளை திரும்பவும் சரி பார்க்கவும் சார்...

    இளவரசி மாதம் தோறும் வேண்டுமா...!? அல்லது quarterly ஒரு குண்டு இளவரசி புத்தகம் வேண்டுமா...!?

    அல்லது

    இளவரசி தனி சந்தா 2022லேயே ஆரம்பிக்க வேண்டுமா... இல்லை 2023ல் இருந்தா...!?


    இந்த கேள்விகளுக்கு எனது பதில்...

    இளவரசி என்றும்.... எப்போதும்.... நம்மோடு தொடர வேண்டுகிறேன்.....

    நன்றி சார்...

    ReplyDelete
    Replies
    1. ///இளவரசி மாதம் தோறும் வேண்டுமா...!? அல்லது quarterly ஒரு குண்டு இளவரசி புத்தகம் வேண்டுமா...!?///

      கோட்டைசாமி.. நின்னுக்கிட்டே தூங்காத கோட்டைசாமி.. முழிச்சிக்கோ.!

      ஜெய்ஹிந்த் படத்துல வர்ர இந்த காமெடியை வெச்சி நீங்களே ஒரு மீம்ஸ் போட்டுடுங்கோ டாக்டர்..😂

      Delete
  4. ///"இளவரசி ஏன் தொடர்ந்திடணும் ?" ///

    எனக்கு மிகவும் பிடித்த சில நண்பர்களுக்கு இளவரசியை பிடிக்கும் என்பதால்...

    இளவரசி தொடர்ந்திடணும்..!

    அத்தோட.. எப்பவாச்சும் ஏதாச்சும் ஒரு கதையை கலாய்க்கலாம்னு தேடுனா கையில சிக்குறதுக்குகாகவாச்சும் இளவரசி தொடர்ந்திடணும்..!

    ReplyDelete
  5. ஹாஹாஹா....


    ஒவ்வொன்றும் வாய்விட்டு சிரிக்க வைத்த மீம்ஸ்கள்..

    செம செம சார்...

    ReplyDelete
  6. நண்பர்கள் மீம்ஸ் அதகளப்படுத்துகிறது...

    சூப்பர் சூப்பர்..

    ReplyDelete
    Replies
    1. பின்னி பெடல் எடுத்துட்டாங்க தல...👌👌👌👌

      Delete
  7. என்னென்னாத்தையோ போட்டு கழுவி ஊத்திக்கிறீங்க...

    இளவரசிக்கென்ன கொறச்சலாம்...

    ReplyDelete
    Replies
    1. ///துணிமணி தான்///

      Timing ஹாஹாஹா!

      Delete
    2. ///துணிமணி தான்///

      வேறலெவல் டெக்ஸாஸ் மாமா....😆😆😆😆😆😆

      Delete
    3. ஷெரீப்.. செம டைமிங்!!😆😆😆😆😆😆

      Delete
    4. மிதுனன், இப்படியெல்லாம் யோசிக்க right brain செம்ம strong ஆக இருக்கணும் சகோ...

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இளவரசி ஏன் தொடர வேண்டும்...


      இளவரசி இதுவரை வாசிக்கும் பொழுது போரடிக்கஙோ ,ஆயாசப்படுத்தவோ இல்லை..எனவே இளவரசி தொடரவேண்டும்.

      Delete
    2. ///இளவரசி இதுவரை வாசிக்கும் பொழுது போரடிக்கஙோ ,ஆயாசப்படுத்தவோ இல்லை..///

      நீங்க சரியா வாசிச்சிருக்க மாட்டிங்க தலீவரே.!

      Delete
  9. இந்த லாக்டவுன் லார்கோவோடு தினம் ஒரு தொகுப்போடு பயணமாகி கொண்டு இருக்கிறது .இல்லத்திலியே போரடிக்கமால் உலகம் முழுவதும் தினம் ஒரு நாடாக சுற்றவைத்து கொண்டிருக்கும் லார்கோ குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்..

    ReplyDelete
  10. Under Taker இனைப் படம் எடுக்க இன்றும் அந்த மும்பரணாஸ் மெற்ரோ இற்கு போய் சல்லடை போட்டு தேடியும் காணாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றேன்.

    ReplyDelete
  11. சார்...

    உங்கள் பால்ய கால நினைவுகள் செம்ம...

    சீரியசாக சொல்ல வேண்டுமெனில்... எனக்கு இளவரசி முதல் அறிமுகம் நமது லயன்முத்து மூலம்தான் என்றாலும்... மிகவும் பிடிக்க ஆரம்பித்தது கல்லூரி காலங்களில் Peter O'Donnellன் நாவல்கள் படிக்க ஆரம்பித்த பின்தான்... எனக்கு இளவரசியின் ஆளுமை மிகவும் பிடிக்கும்... என்றும் எதற்கும் விட்டுக்கொடுக்காத வீரம் பிடிக்கும் (லயன் முத்து எல்லா heroesஉம் அப்படித்தான்... என எதிரணியினர் குரல் கேட்கத்தான் செய்கிறது..), இளவரசி-கார்வின் unbelievable/ultramodern நட்பு ரொம்பப் பிடிக்கும்...

    எதுவாயிருந்தாலும் expiry date உண்டு... இளவரசிக்கும் அப்படியுண்டென்று அறிவு சொன்னாலும்... மனதுக்கு புரியமறுக்கிறது...

    நமது சந்தா/விற்பனை இளவரசியால் பாதிப்படையும் தருணம் வரும்வரை அவரை நம்மோடு பயணம் செய்ய அனுமதியுங்கள்... சார்..

    அப்படியொரு காலம் விரைவில் வராது என நம்பிக்கையோடு இருக்கிறேன்...

    நன்றி சார்...

    ReplyDelete
    Replies
    1. சூப்பர்!
      சூப்பர்!!
      சூப்பர்!!!

      Delete
    2. அருமை i
      அருமை ii
      அருமை iii

      Delete
    3. வாவ்!! மனதை வருடும் எழுத்துக்கள்!!

      Delete
  12. Replies
    1. எல்லா மீம்சுகளும் செம்ம 😂😂😂

      Delete
    2. அதிலும் Sleeper Cell Editor... செம்ம சிரிச்சு முடியல.... வாவ்..

      Delete
  13. Special இதழ்களில் படத்துல ஒரு மாட ஸ் டி ok sir.

    ReplyDelete
  14. கிளவரசி கூட தொழில்அதிப்ஸ், மற்றும் டாக்டர்ஸ் எல்லாம் நிறய நேரம் செலவழிக்கனும்னு ஆசைப்படறாங்க. அதனால அந்த பாட்டிக்கு ஒரு வருசம் லீவு குடுத்தீங்கன்னா அவங்க எல்லாருக்கும் அந்த பாட்டி கூட மீன் பிடிக்க வாய்ப்பு கிடைக்கும்.

    ReplyDelete
  15. இளவரசி வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை

    ReplyDelete
  16. நமது சந்தா/விற்பனை இளவரசியால் பாதிப்படையும் தருணம் வரும்வரை அவரை நம்மோடு பயணம் செய்ய அனுமதியுங்கள்... சார்..//

    நிச்சயமா எனது கருத்தும் இதேதான் ஆசானே...!!

    ReplyDelete
  17. வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  18. இளவரசி கண்டிப்பாக தொடரத்தான் வேண்டும்
    என்னுடைய ஆசை... மாதத்திற்கு ஒன்று..

    ReplyDelete
  19. இளவரசி தொடரவேண்டுகின்றேன் சார்.

    ReplyDelete
  20. சந்தானம் : அடை! தே...னடை..!

    மீம்ஸ் சூப்பர்!

    😂😂😂

    ReplyDelete
  21. மாடஸ்டிக்கு ஜே.

    ReplyDelete
  22. மீம்ஸ் ஒவ்வொன்றும் செம.

    ReplyDelete
  23. ஏன்னா..வி லவ் இளவரசிஈஈஈஈ

    ReplyDelete
  24. இளவரசியைப் பற்றிய எதார்த்தபான பழைய நினைவுகள் சூப்பருங்க எடிட்டர்!!

    மீம்ஸ் - செம!!🤣🤣🤣🤣

    ReplyDelete
  25. லயனின் முதல் நாயகி என்பதாலே அந்த நினைவிற்காகவாது இளவரசி தொடர ஆசை ஆசிரியரே

    ReplyDelete
  26. /// வடாம் காயப்போட வீட்டில் துணி இல்லையென்றால் கூட நொடியில் சொக்காயை இரவல் தரும் 'பரந்த மனசோடு' அவர் வந்த உலாவை ///
    வடாம் போடுவோர் சங்கம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    ReplyDelete
  27. இளவரசி வேண்டும்.....
    வேண்டும்...
    டும்...
    ம்....

    ReplyDelete
  28. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  29. இளவரசி கண்டிப்பாக வேண்டும் சார். இல்லாவிட்டால் கார்வின் கோவிச்சுப்பார் ....

    ReplyDelete
  30. அடுத்த ஒரு வருடம் இளவரசிக்கு ஓய்வு கொடுக்கலாம் சார். அதற்கு பிறகு விற்பனையை வைத்து முடிவு செய்யலாம்

    ReplyDelete
  31. காமிக்ஸ் என்றாலேஆக்ஷன். ஒரு துப்பறிவாளர் அல்லது போலீஸ்கார்,. அவர்களுக்கு கொடுக்கப்படும் அசைன்மெண்ட், அல்லது அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை அதைபுத்திசாலித்தனமானபிளான்களோடும் பரபரப்பான சண்டைகளோடும்நிறைவு செய்வது என்றடெம்ப்ளேட்தான். இந்தவகைதான்நமதுஆரம்பகாலக்கதைகளில் நம்மைப் பெருமளவில்ஈர்த்தவை. இன்றுமாறுபட்ட பலரகங்களையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டோம். இந்த வகைக்கதைள்மாயாவி, லாரன்ஸ்&டேவிட், காரிகன், சார்லி, ரிப்போர்ட்டர்ஜானி, ப்ரூனேப்ரேசில், டிடெக்டிவ் சார்லி, கிர்பி, ஜானிநீரோ, ஜான்மாஸ்டர்,பாண்ட், கராத்தேடாக்டர், ராபின்என பலஹீரோக்கள் . ஒரேஹீரோயின்இளவரசிமட்டுமே.
    இளவரசியும் இல்லையென்றால்நமதுஅடையாளமான இந்தக்கதைகளே இல்லாமல்போய்விடும். எனவே இளவரசிவேண்டும். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. ஜான் மாஸ்டர்...மறந்தே போய்ட்டேன்..சதி வலை...மாஸ்கோவில் மாஸ்டர் மறக்கவியலா கதைகள்

      Delete
    2. இளவரசியே - லயன் காமிக்ஸின்" அடையாளம்"

      Delete
  32. எனக்கு மாடெஸ்டி கதைகள் பிடிக்கும், காரணம் சொல்ல தெரியவில்லை ஆனால் சத்தியமா நான் டாக்டரோ, தொழிலதிபரோ இல்லீங்கோ :-)

    ReplyDelete
    Replies
    1. லிஸ்ட்ல வயாசனவங்க அப்படின்னு ஒரு குரூப்பும் இருக்கே. மறந்துட்டீங்களா?

      Delete
    2. ஒரு சின்ன திருத்தம்..

      லிஸ்ட்ல இருக்குற எல்லோருமே வயசானவங்கதான்..!:-)

      மாடஸ்டிய புடிக்குதுன்னு சொன்னாவே.. அவங்க பெல்பாட்டம் யூத்ஸ்தானே மச்சான்..!?

      Delete
    3. கண்ணன் நீங்கள் சொன்னது பாதி தப்பு மீதி ரைட்டு பெல்பாட்டம் தப்பு யூத்ஸ் ரைட்டு

      Delete
    4. Yes, sathya, we are always sweet sixteen

      Delete
  33. மாடஸ்டி கண்டிப்பாக தொடர வேண்டும் சார்.

    ReplyDelete
  34. இளவரசி எப்பவுமே வேண்டும் சார்.
    நண்பர்கள் சொல்வது போல் உங்களுக்கு நஷ்டம் ஏற்படின் வேண்டாம் , ஒரு சிலாட் மட்டுமாவது try பண்ணுங்கள் .
    என்னோட ID unknown என்று காட்டுகிறது.
    நான்

    அருள் தாஸ்

    வினோ பவர் லாண்டரி மற்றும்
    Wash and care car service station.

    ReplyDelete
  35. சார் மீண்டுமோர் அட்டகாசப் பதிவு . நிசத்த சொல்லனும்னா ரசித்தேன்னுதா நினைக்கிறேன்மரணககோட்டைய. பாக்கெட் சைசுமில்ல...ராணி காமிக்ஸ் சைசுமல்ல...வித்தியாசமான சைசில் ....அதுவும் தலைப்பும் பரபரவென ஈர்க்க...நெசத்த சொல்லனும்னா அட்டைப்படம் இதுவரை வந்த மாடஸ்டி அட்டைகள்ள அதான் டாப்பா இருக்கும்....இரத்தச் சிவப்பில் அம்சமா இருந்த அட்டையும்......தலைப்பும் ஈர்க்க...நூறடி தொலைவில் இருந்த கடைல வாங்குனனா...இருநூறடி தொலைவுல இருந்த கடைல வாங்குனனா நினைவில்லை...வீட்டுக்கு ஐம்பதடி தொலைவில் கொட்டிய மணலில் பரபரவென பின்னைக் கடித்து உருவி வீசிட்டு படிக்க ஆரம்பித்தேன் பரபரப்பாய்...அட்டையில் மாறு வேடத்தில் சிலர்... கார்வின் குதிரையிலென நினைக்கிறேன்...ஆவலை அடக்க முடியலை...கதையோ பட்டாசு...மனித வேட்டை...பரபரப்பான சாகசம்...ஆனா மாடஸ்டி பெண் ஹீரோ என்பதால் ஆணை விட மேலா என பின்னர் ரசிக்கலை...நம்ம கத்தி முனையில் மூன்று வருடம் கழித்து ...எங்க சித்திய மருத்துவமனையை சேர்க்கையில் அங்கே ஓர் கடைல தொங்கிய இரும்பு மனிதனும் மீண்டுமோர் முறை கூட சேத்து வாங்கினேன்.அந்த மாடஸ்டி கதைய பக்கத்து வீட்ல ஒரு லூசுகிட்ட கொடுத்து இழந்ததால் படிக்கல...ஆனா கோடை மலர்ல வந்த கதைகள் நல்லாதா இருந்தது....ஸ்பைடர் ஆர்ச்சி டெக்ஸ் வெறி ரத்தத்ல ஊறி இருந்ததால பிற கதைகள்....காரிகன்...ரிப் ரசிக்காத போது மாடஸ்டி மட்டும் பிடிக்குமா என்ன...ஜான் ராம்போ.. இரட்டை வேட்டையர்...அதிரடிப்படை...இரும்புக்கை நார்மன்... கராத்தே டாக்டர்...ஓரிரு மன்னர் கால கதை...நடுங்கச் செய்யும் கதைகள் சொன்னா பரிசு என கால்கள இழந்தஒருவர் கதைகள் ...சிறுவர்கள் சாகச கதை மூன்றிருக்கலாம்...விளம்பரத்ல மட்டுமே பார்த்து ஏங்கிய ஸ்கார்ப்பியன்...அதிரடி வீரர் ஹெர்குலிஸ்...ஈகிள் மேன்...டயபாலிக்...ஜெட்...போன்ற கதைகள் ஆசிரியர் விடலன்னு அன்னைக்கு வலிச்ச வலி இப்பவும் தெரியுது...உண்மையைச் சொன்னா ஓய்வுல படிக்கயில்தான் ஆசிரியர் வெளியிடும் எந்தக் கதையும் அட்டகாசமாய் தானிருக்கும் எனப் புரியுது. நிச்சயமா நமது பிற்காலத் துணையா யாரில்லாட்டியும் இந்தப் பொம்மை புத்தகங்கள் துணையாய் இருந்து சந்தோசக் கீற்றுகள ஒளிச்சுகிட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை...ஆசிரியர் அதன்வாயிலா ஒலித்துக் கொண்டிருப்பார் இருப்பார் நம்மோடு எப்போதும்....ஜானி கதைகள் கூட சூப்பரோ சூப்பர்.வெடிக்க மறந்த வெடிகுண்டு ஒன்று மட்டும் நீங்க விட்டு படிக்கவியலா கதை முன்பு பல முறை முயன்றும் ...இப்ப படிக்க முடிதான்னு பாக்கனும்...உண்மையில் நீங்க தெய்வம் ஆசிரியரே...என் வாழ்க்கைல பல சந்தோசங்க இருக்கலாம்...ஆனா மின்னல் வேகத்ல கடந்த கால சந்தோசங்கள ஈட்டித் தருவது உங்க வெளியீடுகள் தாம் தெய்வமே...உங்கள விஜயன்னு பிரிச்சுப் பாக்க ஏலல... செந்தூரானாகவே பார்க்கிறேன் தெய்வமே...ஆனா மாடஸ்டிய இருவருடம் ஓய்வுல விட்டுட்டு நீங்க ரசிச்ச அதிரடிகள அந்த இடத்ல போடுங்க...

    ReplyDelete
  36. இளவரசியின் குணநலன்களோடுநம்மில் பல பெண்கள் வந்துவிட்டனர்.இளவரசியின்ஆக்சனுக்குத்தான்யாரையும் காணோம்(ஆண்களிலும்).
    ___ மனதில் நின்றவர்கள் மேஜர் ஜோன்ஸ் பெட்டி பார்னோவ்ஸ்க்கி. லேடிs. டெமக்லீசின்எல்லி. இவர்களில் தனித்து நிற்பதுஇளவரசிமட்டுமே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  37. "ஏன் தொடரக் கூடாது ?"

    Outdated, stale and an absolute waste of slot given our limited books.

    However: If it comes as a combo with James Bond like this year, that is acceptable though I may still not buy it.

    ReplyDelete
    Replies
    1. This is not to say I never liked Modesty. The Kazhugu Malai Kottai color issue still remains my favourite. There was a time when Modesty was appealing. No longer and we have so much to choose and read from.

      Delete
    2. // No longer and we have so much to choose and read from // good point

      Delete
  38. ஸ்டீல். அதிரடிவீரர் ஹெர்குலஸ் இன்னம் ஞாபகம் வச்சிருக்கீங்களா.(பக்கத்துவீட்ல ஒருலூசுகிட்டகொடுத்து இழந்துவிட்டேன்) நம்மளமாதிரிஆளுகளுக்குன்னே பக்கத்துவீட்ல லூசுகளா வருது பார்த்தீங்களா. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  39. ஆண் பெண் நட்பை இவ்வளவு கண்ணியமாக விவரித்த தங்களின் கதை சொல்லும் பாங்கு மாடஸ்டியின் வெற்றிக்கு காரணம் என்பேன்.. ஆண்கள் மட்டுமே அடித்து ஆடும் களத்தில் அசராமல் தன் தடம் பதித்த பெண் புலி.
    கண்டிப்பாக ஆண்டிற்கு இரண்டு முறை தந்தால் கூட சம்மந்தம்... சந்தோஷமே..

    ReplyDelete
    Replies
    1. 100 சதவீதம் நிச்சயமாக மாடஸ்டி கதைகள் வேறு எந்த பதிப்பகமும் இத்தனை சிறப்பாக வெளியிட்டது போல் தெரியவில்லை... எடிட்டரின் கைவண்ணத்தில் படிப்பதையே எப்போதும் விரும்புகிறேன்.

      Delete
  40. //ஏன் தொடரக் கூடாது ?"//

    மன்னிக்கவும்

    IMAX தியேட்டரில் "ஜக்கம்மா" படம் பார்ப்பது போல் உள்ளது.

    குறிப்பு: இங்கு IMAX theatre என்பது நமது லயன்/முத்து காமிக்ஸ் ஆகும். காலத்துக்கேற்ப தியேட்டரை மெருகூட்டிவிடோம். அதற்கு தகுந்த படங்களையே எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. டிஜிடல் ஜக்கம்மா !! 🤣🤣🤣

      ஆனாலும் நம்ம ஆளுங்க ரவுசிலே கவுண்டருக்கு சளைச்சவர்களில்லே தான் !

      Delete
    2. ஜக்கம்மா பற்றி எனக்கு தெரியவில்லை.... என்னைப் பொறுத்தவரை சித்திரக்கதைக்கு ஏது expiry date? ஸ்பைடர் மேன் திரைப்படம் வந்தபோது அதில் எல்லாமே பழங்காலத்து 1960,70 களின் பொருட்களே பிரதானப்படுத்தப்பட்டிருக்கும்... நோ செல்போன் too... இருந்தும் அந்த பழமையான காட்சியமைப்பு சிறியோர் முதல் பெரியோர் வரை கவர்ந்தது.... மாடஸ்டி கதைகள் அனுபவம் வாய்ந்த கதாசிரியர், மற்றும் உணர்ச்சிகளை தத்ரூபமாக காட்டும் திறமையான ஓவியர் வரைந்த கிளாஸ் தொடர். விஜயன் சார் மீதியிருக்கும் கதைகளில் நல்ல கதைகளை தேர்வு செய்து தாராளமாக கழுகு மலை கோட்டை போன்று பாக்கெட் சைஸில் வண்ணமில்லாமல் தாராளமாக வெளியிடலாம்... நிச்சயம் சோபிக்கும் என்பது என் திடமான நம்பிக்கை.

      Delete
  41. தங்களின் இளவரசி உடனான ஆட்டோகிராப்.. மிக மிக சூப்பர்..... ஆமாம் தங்களின் சிங்கத்தின் சிறுவயதில் தொடர்பு இருக்கிறதா இல்லையா

    ReplyDelete
  42. மாடஸ்டி கதைகளை போட்டே ஆகனுமான்னு கேட்டால், கண்டிப்பாக வேண்டும் என்பது என் பதிவு!

    வருடத்திற்கு ஒரு கதையை கொடுப்பதில் தப்பில்லை... 2 வந்தால் லக்கி... 3 வந்தால் போனஸ்!

    அம்புட்டுதேன்!

    ReplyDelete
  43. ///(நமது IT அணிக்கு இன்றைய கோரிக்கை : நாம் இதுவரையிலும் வெளியிட்டுள்ளது எத்தினி ? என்ற கணக்குப் பார்த்திட முனைவது ப்ளீஸ் !!)//--


    எடிட்டர் சார்@ நண்பர்களே @

    இளவரசி மன்ற நண்பர்களே@

    லயன்- முத்துவில் இதுவரையில் மாடஸ்தி ப்ளைசி சாகசங்கள் """40" ""
    இதழ்களில் வெளியாகி உள்ளது.

    இம்மாதம் வரப்போவது இளவரிசி இடம்பெற இருக்கும்..41வது இதழ்!!

    இந்த 40ல் முதல் கதை

    கழுகு மலைக்கோட்டை..முத்து-35-1975ல் வெளியானது.

    40இதழ்களில் வெளிவந்துள்ள மாடஸ்தி கதைகளில் ஒரேஒரு முறை மட்டுமே இருகதைகள் வெளியாகி உள்ளன....!!!

    இந்த 40ல் மறுபதிப்பு-3கதைகள் இடம்பெற்று உள்ளன.

    கதைகளின் முழு பட்டியல் சற்று நேரத்தில்....!!!

    ReplyDelete
  44. இளவரசியார் மறு வருகை தர வேண்டும்

    ReplyDelete
  45. இது என்னுடைய முதல் கமெண்ட்.

    தொடர்ந்து இந்த ப்ளாக் படிக்கிறேன்.. எனது 12 வயதில் இருந்து முத்து / லயன் காமிக்ஸ் வாசகன் (இப்போ 38ங்கோ).. ஒரு கடிதம் கூட இது வரை எழுதியதில்லை.

    எனக்கு பிடித்த சில நாயகர்கள் : டெக்ஸ், லக்கிலூக், டைகர், XIII (இதுக்கெல்லாம் என்ன காரணம்னு சொல்ல தேவையில்லை என்று நினைக்கிறேன். இவர்களை வெறுப்பவர்களும் இருக்க முடியுமா என்ன?) இவர்களோடு சேர்த்த்து --> மாடஸ்டி ப்ளைசி, மிஸ்ட்ரி மார்ட்டின், லார்கோ வின்ச், வேய்ன் ஷெல்டன், ரிப்போர்ட்டர் ஜானி & தோர்கல் பிடிக்கும். என்ன விலை கொடுத்தாவது இவர்களின் கதைகளை வாங்கி விடுவேன்.

    மற்றவர்கள் ( மிஸ்ட்ரி மார்ட்டின், லார்கோ வின்ச், வேய்ன் ஷெல்டன், ரிப்போர்ட்டர் ஜானி & தோர்கல் ) ஏன் பிடிக்கும் என்பது இந்த பதிவின் விவாதத்திற்கு அப்பாற்பட்டது.

    ஏன் மாடஸ்டி பிடிக்கும்? ஏன் அவர் தொடர வேண்டும்?

    முதல் காரணம் : விவரம் அறியாத வயதில் அவர் அடிதடிக்கு பயன்படுத்தும் ”காங்கோ” (என்று நீங்கள் கொடுத்த பெயர்) ஆயுதம் எனது கற்பனைகளை ஆக்கிரமித்துள்ளது. அதை தேடித் தேடித் தேடித் தேடி.. கடைசியில் அதன் உண்மையான பெயர் யாவாரா ஸ்டிக் (Yavara stick) என்பதை கண்டு பிடித்து, சொந்தமாக ஒன்றை செய்து, அதில் பயிற்சியும் பெற்றேன். (By the way I am 2n Dan karate black belt, Silambam master and Tamil Adimurai master)

    இரண்டாவது காரணம், ஒரு மெச்சூர்ட் ஆடியன்சை ஈர்க்கும் அதிரடி அம்மணியிடம் உண்டு (நான் திறந்த மனதைப் பற்றி சொல்லவில்லை).. Those fight sequences, Mr. Vijayan... I would die to get a girl friend like Modesty.

    மூன்றாவது, மாடஸ்டி ஈடுபடும் Investigation stories. அவர் சந்திக்கும் சவால்கள், உயிராபத்துகள்... ப்ளா, ப்ளா.. சண்டையிடும், புத்திசாலியான, சுதந்திரமான ஒரு பெண்ணை விரும்புகிறவர்கள் என்னைப் போல் நிறைய இருப்பார்கள் என நம்புகிறேன்.

    நான்காவது, கார்வின் & his Knife throwing skills. எத்தனை எத்தனை நாட்கள் மாடஸ்டி கதையை படிக்கும் போதே புக்கை மூடி வைத்து விட்டு கையில் kitchen Knifeஐ எடுத்து எங்கள் வீட்டு தென்னை மரத்தை நோக்கி வீசியிருப்பேன்? எங்கள் வீட்டு தென்னை மரம் பெற்ற அத்தனை விழுப்புண்களுக்கும் கார்வின் தான் காரணம் :)

    கடைசியாக.. இந்த ஜானரில் வேறு யாரும் இல்லையே சார்? மாடஸ்டியை விட்டுடுங்க.. வேணும்னா டைலன் டாக் மாதிரி மொக்கை ஆசாமிகளை போட்டு தாக்குங்க.. யார் வேணாம்னா?

    இன்னொரு நாள் எனக்கு ஏன் மிஸ்ட்ரி மார்ட்டின், லார்கோ வின்ச், வேய்ன் ஷெல்டன், ரிப்போர்ட்டர் ஜானி & தோர்கல் - இவர்களை பிடிக்கும் என்பதை விளக்கமாக எழுத ஆசை. நிச்சயம் எழுதுவேன்.

    தல டெக்ஸ் எப்படி ரெகுலரா வர்றாப்லயோ அதே மாதிரி இவர்களும் வர வேண்டும். ஆவண செய்யுங்க சார்.

    நன்றி,

    ராஜா கோவில்ராஜ்
    +91 9500052974

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு @rajavanaj நண்பரே!

      அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! முதல் பதிவே அட்டகாசம்!!

      @எடிட்டர் சார்

      நண்பர் ராஜா கராத்தே, சிலம்பத்துல எல்லாம் மாஸ்ட்டரா இருக்கார்.. மாடஸ்டி தொடரணும்னு வேற கேட்கறார்.. பார்த்து சூதானமா நடந்துக்கோங்க சொல்லிட்டேன்!

      Delete
    2. முதல் பதிவு ; முத்தானதுமே சார் ! சூப்பர் ! நேரம் கிடைக்கும் போது இங்கு தலைகாட்ட முயற்சியுங்களேன் ?

      அப்புறம் "காங்கோ " நாம் வைத்த கற்பனைப் பெயரே அல்ல சார் ; ஒரிஜினலாகவே கதாசிரியர் தந்துள்ள பெயரது ! And அதுவுமே கூட அவரது கற்பனை அல்ல !

      "யவரா " பற்றியும் KONGO பற்றியும் இங்கே பாருங்களேன் : http://southerncrossbujutsu.com.au/jujutsu/weapons-in-tjr-jujutsu/jujutsu-stick/small-hand-held-weapons.aspx

      Delete
    3. //பார்த்து சூதானமா நடந்துக்கோங்க சொல்லிட்டேன்!//

      நெம்ப கலாய்க்கிற உங்க சிஷ்யப் புள்ளை கிட்டேயும், அவரோட கடல் கடந்த மச்சான் கிட்டேயும் ஒரு வார்த்தை சொல்லிப் போடுங்க !

      Delete
    4. பே.பே.. பே.பே..பேபெபெபே..

      Delete
    5. எங்கள் மாடஸ்டி ஜோதியில் ஐக்கியமாகியிருக்கும் நண்பர் ராஜா அவர்களை வருக வருக என உளமாற வரவேற்கின்றேன்.

      Delete
    6. ஆஹா, அருமை. நண்பரே...
      இந்த பதிலில் நான்மாடஸ்டி -க்கு
      ஆதரவாக ஏதும் எழுதுவதாயில்லை.
      இன்னும், எத்தனை ேபர் ெவளியே
      வருகிறார்கள் என்று பார்ப்போம்..

      Delete
    7. வருக வருக நண்பரே....

      "இளவரசி அதிரடிப் படை"யின் தலைமை ஏற்க வேண்டுகிறேன்....

      Delete
    8. Super Raja! Warm welcome!

      // முதல் பதிவு ; முத்தானதுமே சார் ! சூப்பர் ! நேரம் கிடைக்கும் போது இங்கு தலைகாட்ட முயற்சியுங்களேன் ? //

      +1

      Delete
    9. // மூன்றாவது, மாடஸ்டி ஈடுபடும் Investigation stories. அவர் சந்திக்கும் சவால்கள், உயிராபத்துகள்... ப்ளா, ப்ளா.. சண்டையிடும், புத்திசாலியான, சுதந்திரமான ஒரு பெண்ணை விரும்புகிறவர்கள் என்னைப் போல் நிறைய இருப்பார்கள் என நம்புகிறேன்.

      நான்காவது, கார்வின் & his Knife throwing skills. எத்தனை எத்தனை நாட்கள் மாடஸ்டி கதையை படிக்கும் போதே புக்கை மூடி வைத்து விட்டு கையில் kitchen Knifeஐ எடுத்து எங்கள் வீட்டு தென்னை மரத்தை நோக்கி வீசியிருப்பேன்? எங்கள் வீட்டு தென்னை மரம் பெற்ற அத்தனை விழுப்புண்களுக்கும் கார்வின் தான் காரணம் :) //

      +1

      Delete
    10. தொடர்ந்து எழுதுங்கள் ராஜா.

      பி. கு.

      மடஸ்டியோட முக்கிய எதிரி மேச்சேரில இருக்காரு. முகவரி வேணும்னா சொல்லுங்க. அனுப்பி வைக்கறேன்.

      Delete
    11. யூ நோ.. ஆக்சுவலீ அயாம் இன் ஜெர்மன் நவ்..!!

      Delete
    12. //மடஸ்டியோட முக்கிய எதிரி மேச்சேரில இருக்காரு. முகவரி வேணும்னா சொல்லுங்க. அனுப்பி வைக்கறேன்.//

      ROFL :-))))

      Delete
    13. /// ஒரு மெச்சூர்ட் ஆடியன்சை ஈர்க்கும் அதிரடி அம்மணியிடம் உண்டு (நான் திறந்த மனதைப் பற்றி சொல்லவில்லை ///
      முதல் பதிவுலயே கலக்கறீங்க நண்பரே..
      வாழ்த்துக்களும், வரவேற்புகளும்.

      Delete
    14. // மடஸ்டியோட முக்கிய எதிரி மேச்சேரில இருக்காரு. முகவரி வேணும்னா சொல்லுங்க. அனுப்பி வைக்கறேன்.//

      நல்லவேளை கார்வின் பயன்படுத்தும் கத்தியையும் சேர்த்து அனுப்புகிறேன் என மகேந்திரன் சொல்லவில்லை என சந்தோசப்படுங்கள் கண்ணா :-)

      Delete
  46. இளவரசியின் துணிமணிகளில்
    குறைவைக்கலாம் ஆசிரியரே..!! கதைகளில்குறைவைக்கலாமா..?

    அம்மணியின் கதைகளில் அழுத்தம் குறைவுதான் ஆனால் ஆச்சரியங்களுக்கும், அதிரடிகளுக்கும் குறைவில்லை எனவே இளவரசி வரட்டும்
    எமது அன்பு நண்பர்களுக்காகவேனும்..

    ReplyDelete
  47. ஒரு இளவரசியின் (அறிமுகமான) கதை (சுருக்கம்):-

    1993 மே 1 ஆம் தேதி ராணிகாமிக்ஸில் கோடைமலராக வெளிவந்த "கை மாறிய பெட்டி!" கதையே நான் படித்த முதல் மாடஸ்டி கதை. வெளிவந்த நாளே (அதாவது 1993 ஏப்ரல் 30 வெள்ளிக்கிழமை) அதை வாங்கிப் படித்துவிட்டேன்.

    மாடஸ்டி உடன் இருக்கும் வெங் என்பவர் சம்பந்தப்பட்ட சாகஸக்கதை. நான் படித்த முதல் கதையிலேயே மாடஸ்டி மீது அபிமானம் கொள்ளச் செய்துவிட்ட அட்டகாசமான கதைக்களம்.

    தொடர்ந்து ராணிகாமிக்ஸில் வெளிவந்த மர்மப் பெட்டி, மாயச்சிலை கதைகளும் பிடித்திருந்தது.

    அதே காலகட்டத்தில் நண்பன் மூலம் அறிமுகமான லயன்காமிக்ஸ் மூலம் மாடஸ்டி கதைகளை அதிகம் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

    மாடஸ்டியைப் பற்றி அதிகளவில் அறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது. லயனில் Details அதிகம். 100% உண்மை இருந்தது.

    12 ரூபாய்களுக்கு வெளிவந்த கார்சனின் கடந்தகாலம் முதல் பாகத்தில் மினி ஹாட்லைனில் மாடஸ்டி பற்றி ஆசிரியர் எழுதியிருந்ததை படிக்க நேர்ந்தது. அதில் நான் தற்போதும் அதிகம் நேசிக்கும் ஒரு காமிக்ஸை பற்றி வருத்தப்பட்டு எழுதியிருந்தது இன்றும் நினைவுள்ளது.

    "Imitation is the best form of flattery" இதுவும் ஆசிரியர் அவர்கள் எழுதியிருந்த ஒரு மேற்கோள் வரி. இந்த வரிகள் காலம் அடிக்கடி நம் கண்முன்னே நிரூபித்துக்கொண்டே இருக்கும் வரிகள்தான்.

    மாடஸ்டியின் முழுமையான சரித்திரத்தை அறிய உதவியதே லயன்காமிக்ஸ் தான்.

    அறிமுகப்படுத்திய ராணிகாமிக்ஸ் தாய் என்றால் அதன் கடமை முடிந்துவிட்டது என்று ஆகிறது.
    அறிந்து கொள்ள உதவிய லயன்காமிக்ஸ் தந்தை என்றால் தந்தையின் கடமை வாழ்நாள் முழுமைக்கும் முடியப் போவதே இல்லை தானே?

    ஆண்டுக்கு ஒன்று (இரண்டாவது) வெளியிட ஆவன செய்யுங்கள் ஆசிரியரே....!!!!

    ReplyDelete
    Replies
    1. தாய்...தந்தை...ஆண்டுக்கொரு ரிலீஸ் ..!

      பாபு..... நம்மாளுங்க வண்டியை வேற ரூட்டிலே இஸ்த்துக்கினு போயிட போறாங்க ! உஷார்ர்ர்ர் !

      Delete
    2. That aagappattadu - every year one AANDUKKORU MURAI MALAR SIR :-) Featuring

      Modesty
      Old James Bond
      Steel Claw
      Flower Shorts Guy
      Lawerence David
      ISPAITAR

      Same book sir - one fat book sir - everyone happy sir ! :-D :-D :-D

      Delete
  48. மீம்ஸ் எல்லாம் கலக்கல். இளவரசியின் விதம் விதமான அதிரடி பிடிக்கும். இளவரசிக்கும் கார்வினுக்குமிடையான நட்பின் ஆழம் பிடிக்கும். மனத்தில் ஆரம்பகாலங்களில் பசுமரத்தாணி போல பதிந்து விட்டது காரணமாக இருக்கலாம். அல்லது இனம்புரியாத ஏதோ ஒரு ஈர்ப்பு.
    விற்பனை/ சந்தா இல் பிரச்சனை ஏற்படும் வரை இளவரசியை தொடருங்கோ அண்ணாச்சி. பிளீஸ்

    ReplyDelete
  49. இதுவரை இளவரசி வேண்டாம் எனக் கூறிய நண்பர்கள் ---- 4

    வேண்டும் எனக் கூறியவர்கள்... மற்ற அனைவருமே....

    ReplyDelete
    Replies
    1. பிறகென்ன செயந்தேன்...வாழ்த்துகள் டாக்டர்ஸ்💐💐💐💐💐


      அடுத்த மீட்ல பிரியாணி உண்டுதானே டாக்டர்!

      Delete
  50. ஆடவர்களின் ஆதரவு இளவரசிக்கு நிறையவே உண்டு போலும்..!!
    இளவரசி வருவதில் சிக்கல் என்றதும் பொங்கி விட்டார்கள்
    இன்னும் எத்தனை மௌனப் பார்வையாளர்கள் பொங்கப்போகிறார்களோ ஆசிரியரே உஷார்..??

    ReplyDelete
  51. @ Editor,

    Also simply sir - instead of a Modesty and Bond special worth 100 rupees I would prefer a 3 Lucky Luke album in July towards Lucky 75 (adding one more story to planned 2).

    PS: I am not suggesting for this year - given our tight budgets and limited slots I just would enjoy a passing milestone of a top hero with more stories rather than a stale outdated book for the heck of it.

    ReplyDelete
    Replies
    1. The Lucky Luke Aandumalar's cover has been printed awhile back sir...no changes possible now !

      Delete
  52. லயன்-முத்துவில் இளவரசி- மாடஸ்தி ப்ளைசி

    1.முத்து 035- கழுகு மலைக்கோட்டை- பிப்ரவரி1975

    2.முத்து 162- கழுகு மலைக்கோட்டை- மறுபதிப்பு

    3.லயன் 001- கத்தி முனையில் மாடஸ்தி- ஜூலை1984

    4.லயன் 002- மாடஸ்தி IN இஸ்தான்புல்- ஆகஸ்டு1984

    5.லயன் 011- மரணக் கோட்டை- ஏப்ரல்1985

    6.லயன் 028- மாடஸ்தியின் கதை(சிறுகதை) & பழிவாங்கும் புயல்- ஆகஸ்டு1986 (மர்ம எதிரி இதழில்)

    7.லயன் 031- மரண இயந்திரம் நவம்பர்1986 (தீபாவளிமலர்)

    8.லயன் 035- விசித்திர சகோதரர்கள்- மார்ச்1987 (மரண மாஸ்டர் இதழில்)

    9.லயன் 036- கார்வினின் யாத்திரைகள்- ஏப்ரல்1987 (கோடைமலர்)

    10.லயன் 040- மரணப் பிடி- ஆகஸ்டு1987 (பயங்கர நாடகம் இதழில்)

    11.லயன் 042- கொலை அரங்கம்- அக்டோபர்1987 (தீபாவளி மலர்- லயன் சூப்பர் ஸ்பெசல)

    12.லயன் 052- கானகத்தில் கண்ணாமூச்சி- ஜூலை 1988 (ஆண்டுமலர்)

    13.லயன் 054- கற்கால வேட்டை- செப்டம்பர் 1988

    14.லயன் 062- நடுக்கடலில் அடிமைகள்- ஜூலை1989 (ஆண்டுமலர்)

    15.லயன் 100- இரத்தச் சிலை- மே1994 (சென்சுரி ஸ்பெசல்)

    16.லயன் 102- மந்திர மண்ணில் மாடஸ்தி- ஜூலை1994 (ஆண்டுமலர்)

    17.லயன் 106- பச்சைவனப் பாவை- நவம்பர்1994

    18.லயன் 112- மரண ஒப்பந்தம்- மே1995 (டாப் 10 ஸ்பெசல்)

    19.லயன் 116- திகில் நகரம் டோக்கியோ- அக்டோபர் 1995

    20.லயன் 119- ஆவியின் பாதையில்- பிப்ரவரி 1996

    21.லயன் 124- புலி வருது- செப்டம்பர் 1996

    22.லயன் 127- பூமிக்கொரு ப்ளாக்மெயில்- டிசம்பர் 1996

    23.லயன் 135- தலை வாங்கும் தாரகை- செப்டம்பர் 1997

    24.லயன் 141- திகில் தீவு- மே1998

    25.லயன் 146- பறக்கும் பரலோகம்- டிசம்பர்1998

    26.லயன் 190- மிதக்கும் மண்டலம்- ஜனவரி2005

    27.லயன் 194- மரணத்தை முறியடிப்போம்- பிப்ரவரி2006

    28.லயன் 196- மரண மாமா- மே2006 (ஜாலி ஸ்பெசல்)

    29.லயன் 198- தேடிவந்த தூக்குக்கயிறு- ஜனவரி2007

    30.லயன் 201- காட்டேரிக் கானகம்- நவம்பர்2007

    31.லயன் 207- கொலை செய்ய விரும்பு- நவம்பர்2009

    32.முத்து 320- எதிரிகள் ஏராளம்- ஜனவரி2013 (NBS)

    33.முத்து 334- நிழலோடு நிஜ யுத்தம்- ஜனவரி 2015

    34.முத்து 362- மரணத்தின் முத்தம்- டிசம்பர்2015

    35.முத்து 365- சட்டமும் சுறுக்குக் கயிறும்- பிப்ரவரி2016

    36.முத்து 391- கழுகு மலைக்கோட்டை- மார்ச்2017 (வண்ண மறுபதிப்பு)

    37.லயன் 300- சிறையில் ஒரு சிட்டுக்குருவி- ஜூலை2017 (ஆண்டுமலர்)

    38.முத்து 422- ஒரு விடுமுறை வில்லங்கம்- செப்டம்பர்2018

    39.முத்து 436- பழிவாங்கும் புயல்- செப்டம்பர்2019 (மறுபதிப்பு)

    40.லயன் 375- எதிர்காலம் எனதே- மார்ச்2020


    குறிப்பு:- பட்டியலிடுதல் என்றுமே 100% சரியானதாக இருக்க இயலாது. இதில் திருத்தங்கள் இருந்தாலோ, ஏதேனும் கதை விட்டுப்போயிருந்தாலோ மாடஸ்தி அதிரடிப்படையினர் தெரிவிக்கலாம். திருத்தம் செய்து விடலாம்.

    ---STV



    ReplyDelete
    Replies
    1. சூப்பர் நண்பரே.!!

      Delete
    2. சூப்பர் தொகுப்பு நண்பரே.!

      Delete
    3. யோவ் மாமா..

      கடேசீல நீயும் இளவரசி பேனுதானா.!?

      Delete
    4. கண்ணா, அவர் இளவரசியின் ஸ்லீப்பர் செல் நம்பர் 2 என்றால் நீங்கள் இளவரசியின் ஸ்லீப்பர் செல் நம்பர் 1 :-)

      Delete
    5. மாமா@ நண்பர்களுக்காக காமிக்ஸ் தகவல்களை தேடி தருவது என் பணி!
      அதற்காக அந்த ஹீரோவின் ரசிகர் என்று ஆகிடாதே...!!

      பட்டியல் தயாரிப்பதுனா ஒரு குஷி....!!!

      Delete
    6. 2 மறுபதிப்புகளைக் கழித்து விட்டுப் பார்த்தால் - மொத்தம் 38 கதைகளை வெளியிட்டுள்ளோம் என்றாகிறது ! நூறில் 38 போக இன்னமும் 62 பாக்கியுள்ளன !

      Long distance to go...

      Delete
    7. அட்டகாசமான பட்டியல்!! நான் இன்னும் இளவரசியின் கதைகளில் சிலவற்றை படிக்காமல் இருக்கிறேன் என்பது பட்டியலைப் பார்க்கும்போது தெரிகிறது!

      Delete
    8. சூப்பர் சகோ!💐💐💐

      Delete
    9. சூப்பர்- நன்றி.
      என்னால் தனி இதழ்கள் மட்டுமே வரிசைப்படுத்த முடிந்தது. (ஸ்ெபஷல் இதழ்களை ேதட முடியவில்லை.) அவைகளையும் குறிப்பெடுக்க உதவியதற்கு நன்றி...
      40 இதழ்கள் - இன்னும் ஒரு 10 இதழ்களாவது ைகப்பற்றிவிடனும்..

      Delete
  53. "பலி வாங்கும் புயல்"லில் ஒரு காட்சி

    மாடெஸ்டியை கொன்றுவிட்டதாக வில்லியை நம்ப செய்து விடுவார்கள்.

    யார் சொல்வதையும் கேட்காமல் தற்கொலை தாக்குதல் நடத்த வில்லி கிளம்பி விடுவார். அது ஒரு ஆம்புஷ் என்று தெரிந்தும் அவர் girlfriend காலில் விழுந்து கெஞ்சியும் கூட.

    அது மாதிரி ஒரு relationship எந்த நாயகர்களிடமும் அதன் பின் படித்ததில் பார்க்க வில்லை.

    கழுகு மலை கோட்டை வாங்க முடியாமல் போனது எனக்கு மிக பெரிய வருத்தம்...

    Modesty Blaise மினிமம் ஒரு ஸ்லாட் வேண்டும் சார்.

    ReplyDelete
    Replies
    1. ///கழுகு மலை கோட்டை வாங்க முடியாமல் போனது எனக்கு மிக பெரிய வருத்தம்....//.

      -- வண்ணமறுபதிப்பா???

      Delete
    2. முதல் பதிப்பு என்னிடம் என்றுமே கிடையாது.

      மறு பதிப்பு லிமிடெட் எடிஷன் என்று நினைக்கிறன். வாங்கும் முன் சீக்கிரம் விற்று விட்டது நண்பரே.

      Delete
    3. முதல் பதிப்புலாம் யாராவது போட்டோ போட்டா பார்த்துகிடலாம்.

      வண்ண மறுபதிப்பு சூப்பர் 6ல் வந்தது. ஆம் அது லிமிடெட் எடிசன்தான்.

      பார்க்கலாம், ஏதாவது விற்பனை குழுக்கள்ல இந்த வண்ண மறுபதிப்பு கிடைக்கும்...!!!
      வந்தா உங்களுக்கு சொல்கிறேன்.

      Delete
    4. // யார் சொல்வதையும் கேட்காமல் தற்கொலை தாக்குதல் நடத்த வில்லி கிளம்பி விடுவார். அது ஒரு ஆம்புஷ் என்று தெரிந்தும் அவர் girlfriend காலில் விழுந்து கெஞ்சியும் கூட. //

      +1

      Delete
    5. நன்றி நண்பரே! - largoraj@gmail.com

      Delete
    6. ஞாபகம் வைத்துக் கொள்கிறேன்!

      Delete
    7. உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பி உள்ளேன் லார்கோராஜ்!

      Delete
    8. மிக்க நன்றி நண்பரே!!

      Delete
  54. Modesty stories are in different level. We can not afford to miss it.

    ReplyDelete
  55. அனைத்து memes களும் அருமை வயிறு வலி நிச்சயம்.

    இளவரசி வேண்டாம் காரணம் தற்பொழுது வாங்கிய கதைகளை இன்னும் படிக்கவில்லை.

    ReplyDelete
  56. என்னை பொருத்தவரை.. கிளாசிக் பாண்ட் கதைகளை விட இளவரசி கதைகள் சிறப்பு.. #வரட்டுமே இளவரசி.

    பாண்ட்

    ReplyDelete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
  58. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
    இளவரசி தொடரவேண்டும் என்பதற்கு என்னை பொறுத்து இரு காரணங்கள்
    1) வீட்டில் உள்ள இரு பெண் வாசகிகளுக்கும் பிடித்தமான நாயகி
    2) மாடஸ்ட்டி கதை இந்த வருஷம் இருக்கில்ல என்று கேட்ட பின்பே ஆண்டு சந்தா பணம் தரும் இல்லத்தரசி.(இந்த வருஷம் மாடஸ்ட்டி இல்லைன்னா பணம் தரமாட்டாங்களோன்னு பயந்து வருது)

    ReplyDelete
    Replies
    1. //வீட்டில் உள்ள இரு பெண் வாசகிகளுக்கும் பிடித்தமான நாயகி//

      அடடே !

      Delete
  59. விஜயன் சார், உங்களின் மாடஸ்ட்டி பற்றிய நினைவுகள் அருமை! மிகவும் சுவாரசியமாக இருந்தது! நன்றி!

    இளவரசி மற்றும் கார்வினை மிகவும் பிடிக்கும்! காரணம் அவர்களுக்கு இடையில் இருக்கும் நட்பு, அது சொல்லபட்ட விதம், கழுகு மலை கோட்டை இதற்கு சிறந்த எடுத்துகாட்டு. ஆனால் தற்போது வரும் கதைகளில் இது போன்ற சுவாரசியமான விஷயங்கள் இல்லை! இளவரசி என்ற வார்த்தை பிடிக்க ஆரம்பித்தது இந்த மாடஸ்ட்டி மற்றும் கார்வின் கதைகளை படிக்க ஆரம்பித்த பின்னர் தான்!

    நண்பர்கள் மீம்ஸ் தெறிக்கிறது! அனைவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பது இந்த மீம்ஸை எல்லாம் பார்க்கும் போது தெரிகிறது! நண்பர்கள் அனைவர்க்கும் பாராட்டுக்கள்! இனி வரும் பதிவுகளில் மீம்ஸ் என்பது தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகி விட்டது! சூப்பர் நண்பர்களே!

    ReplyDelete
  60. நான் சந்தாவில் இருப்பதுக்கு முக்கிய காரணமே இளவரசி கதை வருமென்ற காரணம் தான் .
    இளவரசி இல்லையெனில் சந்தா பற்றி யோசிக்கவேண்டும்.

    ReplyDelete
  61. இளவரசி ஆடை குறைந்தாலே ஆசிரியர் பதறிப்போய் ஆடை தருவார் இளவரசியின் சாகசத்தையா தராமல் போய்விடுவார் இளவரசியின் மீது ஆசிரியருக்கும் ஒரு மையல் உண்டு என்பதையும் மறந்து விட வேண்டாம்

    ReplyDelete
  62. மடேஸ்டியிடம் உள்ள கிக்....
    அவர் எதிரிகளுக்கு கொடுக்கும் கிக்.....


    வரட்டும் ...டும்

    ReplyDelete
  63. இவர்களின் கதை வரும் காலங்களில் ரெகுலாராக வரும் பொருட்டு ,,நான் சந்தா கட்ட ரெடி
    1, மார்டின் மைஸ்டிரி
    2, மாடஸ்டி
    3, டயலான் டாக்
    4, டயபாலிக்
    5, கமான்சே
    6, ராபின்
    7, ரிப்
    8, ஜெரோம்


    டெக்ஸ் ஸ்லாட் குறைத்து கொள்ளவும்,

    ReplyDelete
    Replies
    1. 9. ஜெம்ஸ் பாண்ட்

      Delete
    2. உங்களைப் போலவே இன்னுமொரு 499 பேர் கிடைத்து விட்டால் ஜமாய்த்து விடலாமே சார் !

      Delete
  64. A great yes to Modesty sir. Drawings of Romero still influence repeated readings.

    ReplyDelete
  65. இளவரசி வரட்டும் சார்...

    ஆண் பெண் நட்பு இளவரசி கதைகளைப் போல வேறு எந்தக் கதையிலும் பார்த்ததில்லை...

    இளவரசிக்கு என் ஓட்டு எப்போதும் உண்டு

    ReplyDelete
  66. இளவரசி 2010க்கு பின்வந்த இளவரசியின் கதைகள் அனைத்துமே நன்றாகவே இருந்தன. நிழலோடுநிஜயுத்தம், மரணத்தின்முத்தம், சட்டமும் சுருக்குக்கயிறும், ஒருவிடுமறைவில்லங்கம், கழுகுமலைக்கோட்டை(மறுபதிப்பு), பழிவாங்கும்புயல், (மறுபதிப்பு) (எதிர்காலம் எனதே, மட்டுமேகலவையானவிமர்சனங்களைப் பெற்றது) எனவேமாடஸ்டிபற்றியகேள்விக்கே இடமில்லை.மாடஸ்டி பற்றியவிமர்சனங்களின் போதுஏனோநண்பர்கள் ஒதுங்கியேஉள்ளனர். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  67. மாடஸ்டி - வருடத்திற்கு ஒன்று மட்டுமாவது வரட்டுமேங் சார்?! நல்ல கதையோடு கூடவே சித்திரத் தரமும் நன்றாக இருக்கும்படி பார்த்துக் கொண்டீர்களானால் மெத்த சுபமே!

    மாடஸ்டியைப் பிரிவதென்பது ஏனோ என் பள்ளித் தோழி என்னிடம் டூ விட்ட உணர்வை ஏற்படுத்துகிறது!

    ReplyDelete
    Replies
    1. அதுவும் முந்தைய பதிவில் அப்படியொரு அழகான இளவரசியை ரசிக்கவைத்து விட்டு...

      Delete
  68. The Princess should continue because it's timeless unlike her other British counterparts. Modesty Blaise combines decent action, suspense, 'the old feel good', mostly solid storylines,and well-defined characters. Modesty could be reproduced and published with modern artwork with same exact story and dialogues, and it'll hit the marks. I'll always stand with The Princess, one hundred percent.

    ReplyDelete
  69. *லார்கோ போட்டித் தொடரில் வெற்றிபெற்ற போட்டியாளர்கள்*

    *இரண்டு போட்டிகளிலும் கலந்துகொண்டு முதலிடம் பிடித்த நண்பர்கள்*

    மணிமாறன் சென்னை

    ராஜகணேஷ் அரியலூர்

    ஜெகதீஷ் ஈரோடு

    சரவணகுமார் பல்லடம்

    பிரபாகர் திருப்பூர்

    விஜயராகவன் சேலம்

    பாபு கோவை

    Dr. பார்த்தீபன் கரூர்

    சுரேஷ்குமார் சிதம்பரம்

    வெர்னர் கிருஷ்ணகிரி

    ஸ்ரீராம் சேலம்

    கோவிந்தராஜ் பெருமாள் ஈரோடு

    யோகநாதன் பல்லடம்

    சுசீந்தரகுமார் சேலம்

    *ஒரு போட்டியில் கலந்துகொண்டு இரண்டாமிடம் பிடித்த நண்பர்கள்*

    சிவக்குமார் திருப்பூர்

    பூபதி லஷ்மணன் நாக்பூர்

    மாரிமுத்து ஈரோடு

    *இவர்களுடன் கேள்விகளை தயாரித்துக்கொடுத்த நண்பர்*

    ஜனார்தனன் கும்பகோணம்

    ஆகியோர் பரிசு பெறுகிறார்கள்

    *நன்றி நண்பர்களே*

    *இந்தப் போட்டிக்கான பரிசுகளை வழங்கும் நண்பர் சேலம் குமார் அவர்களுக்கு நன்றிகள்.!*

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்கும் வாழ்த்துகள்.

      Delete
    2. Super friends! congratulation to everyone! and great job by ஜனார்தனன் & சேலம் குமார்!

      Delete
    3. வெற்றிபெற்ற நண்பர்களுக்கும், போட்டி நடத்திய நண்பர்களுக்கும், நடுவருக்கும், பரிசு வழங்கயிருப்பவருக்கும் என் வாழ்த்துகள்!

      Delete
    4. வெற்றி பெற்ற, போட்டி நடத்திய மற்றும் பரிசு வழங்கிய அனைவருக்கும் உளங்கனிந்த வாழ்த்துகள்.

      Delete
    5. வெற்றி பெற்ற, போட்டி நடத்திய மற்றும் பரிசு வழங்கிய அனைவருக்கும் வாழ்த்துகள்.
      💐💐💐💐💐

      Delete
    6. பரிசுகளை வழங்கிய சேலம் குமார் அவர்களை வாழ்த்துகின்றேன்.

      Delete
    7. பல்வேறு சூழல்களுக்கிடையில், மனதுக்குப் பிடித்த லார்கோவை மீண்டும் ஒருமுறை படிக்க வைத்த போட்டி இது! போட்டி முடிவடையும் நேரத்தில் கிடைத்த 1-2 நிமிடங்களில் யதேச்சையாக கேள்விகளை கவனிக்க நேர்ந்தது. அதற்கான விடைகளை தனிப்பதிவில் அனுப்ப வேண்டுமென தெரியாமல், குழுவில் அனுப்பி அழித்து, மீண்டும் ஒரு சிறு சலனத்துடனேயே 3 கேள்விகளுக்கான பதில்களை அனுப்பி இருந்தேன்.

      அதனையும் பரிசீலித்து வெற்றி பெற்றவர்களில் ஒருவராக, என்னுடைய பெயரை இங்கே வெளியிட்டுள்ளார் நண்பர்! காமிக்ஸ் என்னை கனவுலகத்திலும் சேர்த்து விட்டது!

      மிகவும் நன்றி நண்பர்களே!

      Delete
  70. S. T. V. R. Si அட்டவணையை இளவரசி மீதான உங்கள் பார்வையாகநினைக்காமல் காமிக்ஸ் பற்றிய உங்கள் ஆர்வமாகவே கருதுகிறோம். "ஆயிரத்தில் ஒருவன்" தலைவர்மட்டுமல்ல நீங்களும்தான். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  71. முதல் பதிவிலேயே கலக்குகிறார் ராஜா சார். வெல்கம்சார். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  72. //இந்தப் போட்டிக்கான பரிசுகளை வழங்கும் நண்பர் சேலம் குமார் அவர்களுக்கு நன்றிகள்.!*//

    குமார் ஜி தொடரட்டும் உங்கள் காமிக்ஸ் நேசம். மேலும் போட்டியை நடத்தியவர் களுக்கும், வினாக்களை தயாரித்தவருக்கும், பங்கேற்றவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  73. சிங்கிள் ஆல்பம் அதுவும் பிளாக் அண்ட் வொயிட் எனும்போது தோல்விக்கு முகாந்திரம் ஆகிறதோ?

    ReplyDelete
  74. சித்திரத் தரம் இப்போதைய கதைகளோடு ஒப்பிடும்போது சுமார்தான். டடியூராங்கோ வெர்சஸ் மாடஸ்டி

    ReplyDelete
  75. No to Modesty, because stories are in old style & drawings quality is not comparable with current trend.
    Though I enjoyed in my young age, now ...???

    ReplyDelete
  76. Always YES to Modesty... Pls Go ahead, Sir

    ReplyDelete
  77. அரசு ஆணையின்படி 30.% பெண்களுக்கு ஒதுக்கியே ஆகவேண்டும். எனவே மாடஸ்திக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ஸ்லீப்பர் செல் நண்பர்கள் சார்பாக வழக்கு போடவும் நான் தயாராக உள்ளேன் என தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  78. மாடஸ்டியின் கதைகள் தொடரட்டும் ஆசிரியரே. அவர் இளவரசிங்கற ஒரு காரணம் போதாதா?

    ReplyDelete
  79. நண்பர் சேலம் டெக்ஸ் விஜயராகவன் அவர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்.

    ""புள்ளி விவரப் புலி "" என்ற பட்டத்தையும் வழங்கி மகிழ்கின்றேன்.

    ReplyDelete
  80. ALL MEMES SIMPLY SUPERB.

    Congratulations guys.

    ReplyDelete
  81. இன்று பதிவு உண்டா ஆசானே ?!

    ReplyDelete