Powered By Blogger

Monday, June 14, 2021

காத்திருக்குது கூத்து !

நண்பர்களே, 

வணக்கம். ஒரு நாள் முன்னதாகவே பைண்டிங்கில் பணிகள் நிறைவுற, இதோ இன்றைக்கே ஜூன் இதழ்களை அனுப்பியாச்சு ! கூரியர் நண்பர்களும் இதே விறுவிறுப்போடு பட்டுவாடாக்களை நாளையே செய்து விட்டால் - "ஜூன் நடுவே ஜூன் !! " என்றுசொல்லிக்கொள்ளலாம் ! 

And இதோ - இம்மாத முக்கூட்டணியினில் நீங்கள் இன்னமும் பார்த்திரா ராப்பரின் முதல்பார்வையுமே ! 

இம்மாதம் எனக்கு செம மண்டகப்படிகளையோ ; சிலாகிப்புகளையோ தரவுள்ள இதழ் இதுவே என்பதில் இம்மியும் சந்தேகம் நஹி ! வேகமாய் ஓடும் ஆக்ஷன் ; நடுமூக்கில் குத்தும் நாயகர்கள் ; கெத்தாய் பன்ச் பேசும் பார்ட்டிகள் .... இவையே உங்களின் காமிக்ஸ் தேடல்களின் அடையாளங்களெனில் - தெய்வங்களே - இந்த கிராபிக் நாவலை புரட்டக்கூட மெனெக்கெடாதீர்கள் ப்ளீஸ் ! இக்கட மாமூலான காமிக்ஸ் சார்ந்த விஷயங்கள் எதுவும் இராது என்பதை விட, இக்கட மாமூலான வாழ்க்கை விஷயங்கள் மாத்திரமே இருக்கும் என்பதே சமாச்சாரம் ! So ஒரு அறிமுகம் ; ஒரு கதையோட்டம் ; ஒரு க்ளைமாக்ஸ் ; அப்புறமொரு feel good உணர்வோ ; சோகத்தின் தாக்கமோ இருந்திடுமென்றெல்லாம் தயவு செய்து கற்பனை செய்தபடிக்கு இந்த 88 பக்கங்களுக்குள் மூழ்கிடாதீர்கள் guys ; சர்வ நிச்சயமாய் ஏமாற்றமே மிஞ்சிடும் ! 

அப்புறம் நீங்கள் அவசர வாசிப்புப் பார்ட்டிகளாக இருக்கும் பட்சத்தில், இதனையுமே வழக்கமான அந்த வேக வேட்டையினில் அங்கமாக்கிட வேணாமே ? முதல்வாட்டி வாசித்த பின்னே நிச்சயமாய் "சேது" விக்ரம் போலவே காட்சி தருவீர்கள் ; so மறுக்கா ஒருக்கா படிக்க அவகாசம்அவசியமாகிடும் ! So அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுங்களேன் folks ?! அட்டையைப் பார்த்து விட்டு, இதுவொரு sci-fi கதை என்று தீர்மானத்துக்கு குதித்திட அவசரம் கொள்ளவும் வேணாமே - simply becos இது "அது" அல்ல !! And last but not the least - கதையைப் படித்து விட்டு - "அபச்சாரம் ; கலாச்சார சீர்கேட்டுக்கு வித்திட்டு விட்டான் ; முச்சந்தியில் வைச்சு இவனையும், புக்கையும் கொளுத்தினாக்கா என்ன ?" என்ற வேகம் எழுந்திடும் பட்சங்களில் முன்னட்டையினில் பளீர் சிகப்பில் உள்ள அந்தப் பரிந்துரையை one time வாசிச்சூ ப்ளீஸ் ! இது சர்வ நிச்சயமாய் சரோஜா தேவி ரகமல்ல ; இங்கே ஆபாசம் கிடையாது தான் ; ஆனால் சிறார்களின் வாசிப்புகளுக்கு உகந்ததுமல்ல ! So parental discretion is the need of the hour all !! "வீட்டு ஹாலில் போட்டுவைச்சேன் ; பையன் இதைப் படிச்சிட்டு கேட்ட கேள்விகளுக்கு பதில்  சொல்ல முடியாமல் நெழிஞ்சேன் " என்று சொல்லிட வேணாமே ப்ளீஸ் ?! ஆக , முடிஞ்ச அத்தினி கேட்டிலும் தேவையென்று தோணிய அத்தினி எச்சரிக்கைகளையும் ஒட்டி விட்டாச்சு ! இனி கவனத்துடன் கால் வைப்பது உங்கள் பொறுப்புகள் people !! 

சென்றாண்டினில் இதைத் தேர்வு செய்திட என்னைத் தூண்டியது எதுவென்று இந்த நொடியினில் சொல்லத் தெரியவில்லை எனக்கு ; ஆனால் அந்தக் கோக்கு மாக்கான கற்பனையும், கார்ட்டூன் பாணிச் சித்திரங்களும், அந்த சைசும்- டிக் அடிக்க உதவிட பெரும் பங்கு வகித்தன என்று மட்டும் சொல்லுவேன் ! So ஒருஅக்மார்க் விஷப்பரீட்சை தான் ! ஓ.கே. ஆகினால் நம் வாசிப்புக்கு ஒரு புதுப் பரிமாணம் and மொத்தமாய் சொதப்பிடின் ரூ.100-க்கு பிடித்த கேடு ! ஆனால் அந்தக் கேடு உங்களதாகஇருந்திடாது guys - ஈடான விலைக்கு வேறு புக் ஏதாச்சும் இந்தச் சந்தாவினிலேயே ஏற்பாடு செய்திடாது நிச்சயம் ஓட்டம் பிடிக்க மாட்டேன் ! ஆகையால் "உன் போதைக்கு நாங்க ஊறுகாயா ?" என்ற உயரிய சிந்தனைகளுக்கு for sure அவசியமே இராதென்பதை காத்திருக்கும் நம்ம பகடி ஆர்வலர்களுக்கு சொல்லிய கையோடு கிளம்புகிறேன் guys !!

Deadwood Dick அழைக்கிறார் !

And இதோ ஆன்லைன் லிஸ்டிங் : 

https://lioncomics.in/product/2021-june-pack/

https://lion-muthucomics.com/home/838-2021-june-pack.html

Bye all...See you around !

321 comments:

 1. பதிவை சொன்னேன் சார் இவ்வளவு எச்சரிக்கைகளை கொண்ட முதல் இதழ் இதுவாக தான் இருக்கும் ..:-)


  பார்க்கலாம் நடபின் உறவை..:-)

  ReplyDelete
 2. கிராபிக் நாவலில் தாக்கத்திற்கு தயார் ஆக வேண்டியது தான்.!!

  ReplyDelete
  Replies
  1. நல்லாருக்கீங்களா போஸ்டல் சார்..ரொம்ப நாளாச்சு உங்களை இங்கே பாத்து..அடிக்கடி இங்கே வந்து கலந்துட்டு போங்க :-)

   Delete
 3. ஆனால் அந்தக் கேடு உங்களதாகஇருந்திடாது guys - ஈடான விலைக்கு வேறு புக் ஏதாச்சும் இந்தச் சந்தாவினிலேயேஏற்பாடு செய்திடாது நிச்சயம் ஓட்டம் பிடிக்க மாட்டேன்

  #####

  இங்கே தான் நீங்கள் நிற்கிறீர்கள் சார்..

  ReplyDelete
 4. ///வேகமாய் ஓடும் ஆக்ஷன் ; நடுமூக்கில் குத்தும் நாயகர்கள் ; கெத்தாய் பன்ச் பேசும் பார்ட்டிகள் .... இவையே உங்களின் காமிக்ஸ் தேடல்களின் அடையாளங்களெனில் - தெய்வங்களே - இந்த கிராபிக் நாவலை புரட்டக்கூட மெனெக்கெடாதீர்கள் ப்ளீஸ் ! இக்கட மாமூலான காமிக்ஸ் சார்ந்த விஷயங்கள் எதுவும் இராது என்பதை விட, இக்கட மாமூலான வாழ்க்கை விஷயங்கள் மாத்திரமே இருக்கும் என்பதே சமாச்சாரம் !//


  ஆக.. இம்மாத முதல் சாய்ஸ் இதுதான்..!!

  ReplyDelete
 5. ஆஹா இந்த மாசம் டெக்ஸ் கிடையாது போல...:-(

  ReplyDelete
 6. டியர் எடி,

  கிராபிக் நாவல் முன்னோட்டம் ஆவலை கிளப்புவது ஒருபுறம் என்றால், வித்தியாசமான கோணத்தில் அட்டைபடம் ஆரவத்தை ஏற்றுகிறது. ஜூன் மாத இதழ்களில்,முதல் வாசிப்பிற்கு தேர்வை எடுத்தாயிற்று.

  ReplyDelete
 7. சார்...

  ஆகா.... மிக மகழ்ச்சியான பதிவு...

  Soucoupes (Saucers) எனது favourite காமிக்ஸ்களில் ஒன்று.... இதை உங்கள் மொழிபெயர்ப்பில் படிக்க மிக மிக ஆவலாக உள்ளேன்... இந்த சித்திரக்கதை நமது வாசகர்களுக்கு ஒரு அற்புத களத்தின் திறவுகோலாக அமையும் என் மனப்பூர்வமாக நம்புகிறேன்..

  இந்த சித்திர விருந்து பெரும் வெற்றி பெற என் advance வாழ்த்துகள்...!!!!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்ல வருவது "ஒரு தோழனின் கதை"யவா சார் ?


   Delete
  2. அப்போ இந்த முறை விருந்துதான் என்று சொல்லுங்கள்

   Delete
 8. அனைவருக்கும் வணக்கம் சொல்வது சின்னமனூர் சரவணர்ங்க...

  ReplyDelete
 9. ஒரு தோழனின் கதை வரட்டும் பார்க்கலாம் ஒரு கை.

  ReplyDelete
 10. சார் இந்த அளவிற்கு ஒரு புத்தகத்திற்கு முன்னெச்சரிக்கை செய்தது இது தான் முதல் முறை என்று நினைக்கிறேன்.

  நாளை முதல் வாசிப்பு இதுதான் முடித்துவிட்டு வருகிறேன்

  ReplyDelete
  Replies
  1. எனது முதல் வாசிப்பும் கிராஃபிக் நாவல் தான். மிக ஆவலுடன்

   Delete
 11. திருவிழா ஆரம்பம்

  ReplyDelete
 12. //So ஒருஅக்மார்க் விஷப்பரீட்சை தான் !//

  நீங்கள் செய்யும் விஷப்பரீட்சைகள் பல நேரங்களில் வித்தியாசமான விருந்தாகவே இருந்துள்ளன... My emotion is "I WANT MORE" "I WANT MORE"

  ReplyDelete
  Replies
  1. நானும் எப்போதுமே இந்த மாதிரி விஷப் பரீட்சை களுக்கு ஃபேன்

   Delete
 13. நாளைக்குக் கச்சேரி களைகட்டும்.


  என்னா ஒன்னுனா நமக்குப் பிடிச்ச டெக்ஸ் ,மாடஸ்டி மற்றும் 007 ஆட்டக்காரங்க இல்ல.

  அது ஒன்னுதான் கொஞ்சம் சிறு வருத்தம்.

  இப்ப என்னா அடுத்த மாசம் ஜமாய்ச்சுப்புடுவோம்.

  ReplyDelete
  Replies
  1. அடுத்த மாதம் மாடஸ்டி, 007, லக்கி ஆண்டு மலர் அநேகமாக டெக்ஸ் இருக்கும்

   Delete
 14. அபாயம் 📢 எலும்புக்கூடு படம்தான் மிஸ்ஸிங் சார்... பயங்கரமான எச்சரிக்கை...எஸ் இதுபோல் ஒரு எச்சரிக்கையை இதுவரை பார்த்ததில்லை...சார்...

  ReplyDelete
 15. பாக்கெட் சைஸ்தானே சார்...??

  ReplyDelete
  Replies
  1. பழனி பிழை திருத்தம் முடிந்து விட்டதா?? இரத்த படலத்திற்கு???

   Delete
  2. முடித்து அனுப்பியாச்சு நண்பரே...பாவம் ஆசிரியர் நண்பரே...

   Delete
  3. Good job. பிழை திருத்தம் செய்ய உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்

   Delete
 16. ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள் காத்திருக்கிறோம் சித்திர விருந்திற்கு!

  ReplyDelete
 17. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 18. // இன்றைக்கே ஜூன் இதழ்களை அனுப்பியாச்சு ! //
  சூப்பரு...

  ReplyDelete
 19. 'ஒரு தோழனின் கதை' - ரொம்பவே ஆவலைக் கிளப்புகிறதே....

  ReplyDelete
 20. // காத்திருக்கும் நம்ம பகடி ஆர்வலர்களுக்கு சொல்லிய கையோடு கிளம்புகிறேன் guys !! //
  எல்லா கேள்விக்கும் முன்கூட்டியே பதில் சொல்லிட்டிங்க போல சார்,எந்தவகையிலும் இல்லாத புதுவகையாக இந்த இதழ் இருக்கும் போல,இதுவே ஆர்வத்தை கூட்டுகிறது...

  ReplyDelete
 21. இந்த மாதம் இரண்டு கார்ட்டூன் வருதுடோய்.... ஜாலி ஜாலி

  ReplyDelete
 22. விஜயன் சார்,
  ஆகா ஆகா நல்ல விஷயம்! ஒரே வாரத்தில் புத்தகங்களை தயார் செய்து அனுப்பிவைத்த வேகத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! நன்றி உங்களுக்கும் நமது அலுவலக நண்பர்களுக்கும்!

  நாளைதான் புத்தகங்கள் அனுப்பப்படும் என்று நினைத்து நாளை காலை நமது அலுவலகத்திற்கு போன் செய்து எனது புத்தகங்களை தூத்துக்குடிக்கு அனுப்ப சொல்ல வேண்டும் என நினைத்து இருந்தேன்! இப்போது புத்தங்கள் எந்த முகவரிக்கு அனுப்பி இருக்கிறார்களோ தெரியவல்லை :-) விருதுநகர் சென்று இருந்தால் வேலை சுலபம் ஆனால் பெங்களூரு சென்று இருந்தால் இப்போதைக்கு புத்தகங்களை படிக்க வாய்ப்பு இல்லை!

  எனிவே நாளை காலை நமது அலுவலகத்திற்கு போன் செய்து டௌட்டை clear செய்து விடலாம் :-)

  ReplyDelete
 23. முதல்வாட்டி வாசித்த பின்னே நிச்சயமாய் "சேது" விக்ரம் போலவே காட்சி தருவீர்கள் ; so மறுக்கா ஒருக்கா படிக்கும் போது காதல் பரத் மாதிரி ஆகி விடுவீங்க என ஒரு புளோவில் சொல்லுங்க சார்! - Just a joke!

  // so மறுக்கா ஒருக்கா படிக்க அவகாசம்அவசியமாகிடும் ! So அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளுங்களேன் folks ?! //

  எந்த கதை கிடைத்தாலும் சரியான நேரம் அமைந்தால்தான் இப்பொது எல்லாம் படிக்க முடிகிறது! வீட்டு வேலை மற்றும் ஆபீஸ் வேலை போட்டி போட்டு கொண்டு எனது நேரத்தை எடுத்து கொள்கிறது சார்.

  ReplyDelete
 24. // மொத்தமாய் சொதப்பிடின் ரூ.100-க்கு பிடித்த கேடு ! ஆனால் அந்தக் கேடு உங்களதாகஇருந்திடாது guys - ஈடான விலைக்கு வேறு புக் ஏதாச்சும் இந்தச் சந்தாவினிலேயே ஏற்பாடு செய்திடாது நிச்சயம் ஓட்டம் பிடிக்க மாட்டேன் ! //

  ஆனாலும் உங்கள் காமிக்ஸ் காதல் புல்லரிக்க வைக்கிறது! எங்களை புதிய கதை களங்களை தரிசிக்க வைக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் அடிக்கும் குட்டி கரணங்கள் கொஞ்சம் ஓவர் சார்!
  எனக்கு இந்த புத்தகமே போதும்! உங்கள் selection நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

  ReplyDelete
 25. விசித்திரமான உலோக உருவம்.. வாசிப்புக்கான யோசிப்பைத் தூண்டுவது உண்மைதான். கதையைப் படித்துப் பின் கதைக்கிற யோசனையில் இருக்கிறேன்..

  ReplyDelete
 26. ஆச்சரியமாக வேற்றுமொழி எழுத்துருக்களும் அட்டையில் எட்டிப் பார்த்திட விண்ணெங்கும் நட்சத்திர மினுமினுப்பில் தொலைதூரக் கட்டிடங்களின் அமைதி.. ஆர்வத்தைத் தூண்டும் அட்டை..

  ReplyDelete
 27. சார் அட்டைப்படம் அருமை....அடல்ட்ஸ் ஒன்லி தவிர மற்றதுக்கு ஜே...எதிர் பார்ப்பது அதிகரிக்குது சே...நல்லதா கெட்டதான்னு தோனுவத படித்தபின் அலசுவோம்

  ReplyDelete
  Replies
  1. நீங்க அதுக்கு ஈடு செய்யலாம்...நான்லாம் நீங்க தந்த சந்தோசத்துக்கு ஈடு செய்ய ஏலாதே...ஒரு வேளை பிடிக்காம போயிட்டா அதுக்கு ஈடாக தரும் புத்தகத்தை பணம் வாங்காமல் வாங்க மாட்டேன்

   Delete
 28. ஒரு ஏலியனுக்கும் ஒரு மனிதனுக்கும் இடையே ஏற்படும் நட்பை சித்தரிக்கும் கதையோ "ஒரு தோழனின் கதை".

  ReplyDelete
 29. எச்சரிக்கையுடன் படிக்க வேண்டிய புத்தகம் ....ம்ம்ம் எதுவும் சொல்வதற்கில்லை.

  ReplyDelete
  Replies
  1. அட...பிடிக்காத ஜானரெனில் படிக்காது ஒதுக்கிடலாம் ; இல்லாட்டி படிச்சு பார்த்துட்டு இப்டியோ - அப்படியோ கருத்து சொல்லலாம். அதை விடுத்து இப்போவே கன்னத்தில் கைவைப்பானேன் சார் ?

   Delete
 30. கொரானாவை முன்னிட்டு பார்சலை விரைவாக கைகளில் சேர்த்த எஸ்டி கொரியருக்கு நன்றி..என்ன பார்சல் தான் என்னை போலவே கனமில்லாமல் இருக்கிறது ..பார்சலை பிரித்தவுடனும் அதே எண்ணம் .ஆனாலும் இவ்வளவு சிரமமான கால சூழலில் இந்த இதழ் கனம் நமக்கு வந்து சேர்ந்ததில் மிக மிக மகிழ்ச்சியே..


  நேற்று ஆசிரியர் பலத்த எச்சரிக்கை மணி அடித்த கிராபிக் நாவல் நிலவொளியில் ஒரு நரபலி அளவில், வண்ணத்தில் , அட்டைப்படத்தில் பார்க்கவே அழகு..இனி படித்தவுடன் தான் எச்சரிக்கை ஓசையை அனுபவிக்க முடியும்..ப்ளூகோட் பட்டாளம் வழக்கம் போல் சிறப்பு ..என்னை பொறுத்த வரை இந்த பட்டாளம் என்றுமே என்னை ஏமாற்றியது இல்லை என்பதால் இனிதாகவே காத்திருக்கிறேன்..

  ஆனால் இதை விட முக்கியமான ஒன்று ரிப்போர்ட்டர் ஜானி தான்..அட்டைப்படத்தையே பல நிமிடங்களுக்கு ரசித்து பார்த்து கொண்டு இருக்கிறேன்.. அட்டைப்படமும் சரி ,ஜானியும் சரி அழகோ அழகு அவ்வளவு அருமை..ஓவியருக்கு பலமான கைதட்டல்கள் ..இனி அவசரமாக அலுவலகம் கிளம்புவதால் படித்து விட்டு...

  ReplyDelete
  Replies
  1. தலீவரே....மாசாமாசம் பார்சல்
   புஷுடீக்கா இருக்கணும்னு எனக்குமே ஆசை தான் ; ஆனாக்கா நடைமுறைகளில் உள்ள சிக்கல்கள் ஏகமில்லையா ?

   Delete
  2. உண்மைத்தான் சார்...:-(

   Delete
 31. பொட்டி வந்திடுச்சேய்......!!

  ReplyDelete
  Replies
  1. அதுக்குள்ளாறவா ??

   Delete
  2. சார்...தாரமங்கல நாட்டுக்கே வந்துருச்சு மேச்சேரி பஞ்சாயத்துக்கு வந்திருக்காதா என்ன..:-)

   Delete
  3. தல அப்படியே அடுத்த வெளியீடுகள் பற்றி சொல்லுங்கள்

   Delete
  4. அலுவலகத்தில் ..

   பொறுமை ப்ளீஸ்...:-)

   Delete
  5. வாட்ஸ்அப் பாருங்க குமார்.!

   Delete
  6. ///அதுக்குள்ளாறவா ??///

   மெட்ரோபாலிடன் சிட்டின்னா அப்படித்தான் சார்..!

   Delete
  7. அப்படியே அடுத்த வெளியீடுகள் பற்றி சொல்லுங்கள்

   ######


   லயன் ஜாலி ஆண்டு மலர் ..( இரண்டு லக்கி கதைகள் )

   டெக்ஸ் ன் ஒரு பிரளய பயணம்..

   மாடஸ்தி & பான்ட் ஸ்பெஷல்

   Delete
  8. பரவாயில்லையே..ii
   பாண்ட்..பின்னாடி ேபாய்-மாடஸ்டி முன்னாடி வந்துட்டாப்லேயே...
   எல்லாம் memes_செய்த மாயம்.

   Delete
 32. பகடி ஆர்வலர்களுக்கு கான பதிவா சார் இது இல்லை அந்த புக்கை பற்றி எதிர்மறையாக விமர்சனம் செய்ய கூடாது என்பதற்கான சுயவிமர்சனமா சார்.

  ReplyDelete
 33. இரண்டுமே அல்ல சார் ; உள்ளதைச் சொல்ல ஒரு காரணம் தேவையா என்ன ? நான் 4 வரிகளை எழுதி விட்டதற்காக விமர்சனங்களுக்கு கேட் போட்டு விடத் தான் முடியுமா ?

  And in any case - எதோவொரு விதத்தில் விமர்சிக்கப்பட்ட வேண்டிய இதழே இது !

  ReplyDelete
 34. இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் இனிய நண்பர் திரு .மேச்சேரி ரவிக்கண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

   Delete
  2. வாழ்த்துக்கள்!!

   Delete
 35. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும்


  கார்டூன் காதலரும் தனது பெயரிலேயே அவர்களை
  கொண்டவருமான


  கிட் ஆர்டின் கண்ணரய்யா


  அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 🙏🏼


  இன்று போல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼
  🎂🎂🎂🎂🎂
  💐💐💐💐💐
  🍫🍫🍫🍫🍫
  🍧🍧🍧🍧🍧
  .

  ReplyDelete
  Replies
  1. இனிய பிறந்தநாள நல்வாழ்த்துக்கள் ஜி.
   🎂🎁💐🌹🎊🎆💐🌈💥🎇🍰

   Delete
 36. ஒரு தோழனின் கதை பின் அட்டை படத்தில் chair போல் உள்ளது என்ன என யாராவது யூகிக்க முடிந்ததா ? :-)

  அப்புறம் நம்ப புக் பெங்களூர் போயி :-)

  ReplyDelete
  Replies
  1. Parani from Thoothukudi??

   Bangaluru??

   😀😀😀

   Delete
 37. புத்தகங்கள் கிடைக்க பெற்றேன்.

  ReplyDelete
 38. உற்சாகமின்னல் கிட்ஆர்டின் கண்ணருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 39. ஒரு தோழனின் கதை. சார் பயப்பட்டதுபோலில்லாமல், நமது காமிக்ஸ் பயணத்தின்அடுத்தகட்டமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. கரூர்ராஜ சேகரன்

  ReplyDelete
 40. நமது காமிகஸ் வாசகர் டெக்ஸ் சம்பத் அவர்களின் அன்னை மறைந்ததாக அறிந்தேன்.

  அன்னையை இழந்து வாடும் டெக்ஸ் சம்பத் அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  அன்னையின் ஆன்மா இறைவனின் நிழலில் இளைப்பாறட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வருத்தமான செய்தி. நண்பருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

   Delete
  2. மிக வருத்தமான செய்தி. ஆழ்ந்த இரங்கல்கள்

   Delete
  3. ஆழ்ந்த இரங்கல்கள் சம்பத்

   Delete
  4. கடந்த சில வாரங்களாக தாயாரின் உடல்நிலையால் நண்பர் மிகுந்த மனச்சோர்வடைந்திருந்தார் என்பதை அவரது முகநூல் பதிவுகளில் காணமுடிந்தது. தயார் மீண்டு வந்துவிடுவார் என்றே நம்பினோம்..... கொரோனா தரும் சோதனைகள் விரைவில் முடிவுக்கு வரவேண்டும்.
   ஆழ்ந்த இரங்கல்கள் நண்பருக்கும் குடும்பத்தினருக்கும்.

   Delete
  5. ஆழ்ந்த இரங்கல்கள் சம்பத்!

   Delete
  6. தங்கள் தாயார் மறைந்த செய்தி மனதிற்கு வருத்தமளிக்கிறது சம்பத் சார். என் ஆழ்ந்த இரங்கல்கள்.
   சமீபத்தில் கொரோனாவால் தூரத்து சொந்தங்கள் நால்வர். நெருங்கிய உறவுகள் இருவர் என என் உறவினர்களின் இறப்பு என்னை கலங்க வைத்ததில் இருந்து, கொரோனா மரணங்கள் என்னை மிகவும் வருந்தச் செய்கிறது. விரைவில் இந்த அவல நிலை விலகிட ஆண்டவன் அருளை வேண்டுகிறேன். நண்பர்கள் அனைவரும் முடிந்தவரை பாதுகாப்புடன் இருங்கள். நம்மை நம்பி ஒரு குடும்பம் இருக்கின்றது என்ற உணர்வுடன் தனிமனித இடைவெளியுடன் பணியாற்றுங்கள். நலமே திகழும்.

   Delete
  7. ஆழ்ந்த இரங்கல்கள.

   Delete
  8. ஆழ்ந்த இரங்கல் நண்பரே!

   Delete
  9. ஆழ்ந்த இரங்கல்கள் சம்பத்..😔

   Delete
  10. இழப்பின் வலியினை காலமும், கடவுளும் மட்டுமே மட்டுப்படுத்த முடியுமெனும் போது - இந்த ரணமான பொழுதுகளைக் கடந்திடும் சக்தியை சம்பத்துக்கு வழங்கிடக் கோரி வேண்டிக் கொள்வோம் ! போயுள்ள இடத்தில் அம்மா அமைதி காணட்டும் நண்பரே ! RIP !!

   Delete
  11. ஆழ்ந்த இரங்கல்கள் சம்பத் :-(

   Delete
  12. ஆழ்ந்த இரங்கல்கள் நண்பரே.
   காலம் உங்களின் மனப்புண்களை ஆற்றட்டும்.
   😰😰😰😰😰😰

   Delete
  13. ஆழ்ந்த இரங்கல்கள் சம்பத் நண்பரே!

   Delete
 41. புத்தகங்கள் கிட்டி...
  ஒரு தோழனின் கதை, முதல் பார்வை. அடக்கமான சைஸ், வித்தியாசமான சித்திரங்க்கள். font படிக்க கொஞ்சம் கஷ்டமா இருக்க்கு... வயசாகிடுச்சு போல

  ReplyDelete
 42. அதிதீவிர காமிக்ஸ் காதலரும்..
  மாடஸ்டியின் மானசீகக் காதலரும்..
  மேச்சேரி மெட்ரோபாலிட்டன் சிட்டியின் முதல் குடிமகனும்..
  தென்னகத்தின் தன்னிகரில்லா தொதிலதிபரும்..
  எதிர்கால டாக்டருமாகிய..

  குருவை மிஞ்சிடும் சிஷ்யபிள்ளை KOKக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. ஆப்பி பர்த்டே மச்சான்.

   Delete
  2. அப்புறம் மச்சான், இன்னிக்காவது குளிச்சியா?

   Delete
  3. நன்றிகள் பலப்பல..😍

   ///அப்புறம் மச்சான், இன்னிக்காவது குளிச்சியா?///

   உன்னை சந்திக்கிறதுக்கு முன்னாடிவரைக்கும் நல்லநாள் பண்டிகைநாள் எல்லாம் ரெகுலரா குளிச்சிட்டுதான் மச்சான் இருந்தேன்.!

   Delete
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் KiD ஆர்டின் KannaN!

   Delete
  5. பிறந்த நாள் வாழ்த்துகள் KOK நண்பரே!

   Delete
 43. ஆபீஸுக்குக் கிளம்பும் முன் கொரியர் டப்பியைக் கைப்பற்றி குதூகலமடைந்துவிடுவது என்ற நோக்கத்தில் காலை பத்து மணிக்கு கொரியர் ஆபீஸுக்குப் போய் நின்றேன்.. 'லோடு வந்துசேர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் சார்' என்றார்கள். வேறுவழியின்றி ஆபீஸுக்கு கிளம்பிவிட்டேன்.

  இப்ப வருமோ...? எப்ப வருமோ...? ஆசை பொறந்தா.. அப்ப வருமோ?!!

  ReplyDelete
 44. ஆழ்ந்த இரங்கல் சம்பத் சார்

  ReplyDelete
 45. //வேகமாய் ஓடும் ஆக்ஷன் ; நடுமூக்கில் குத்தும் நாயகர்கள் ; கெத்தாய் பன்ச் பேசும் பார்ட்டிகள் .... இவையே உங்களின் காமிக்ஸ் தேடல்களின் அடையாளங்களெனில் - தெய்வங்களே - இந்த கிராபிக் நாவலை புரட்டக்கூட மெனெக்கெடாதீர்கள் ப்ளீஸ்////

  சிப்பாயின் சுவடுகள்...பிரளயத்தின் பிள்ளைகள் கதைகளில் கூட , நீங்கள் மேலே கூறியுள்ளது போல் எதுவும் இல்லைங்க சார்..ஆனாலும் அதை நான் ரசித்தே படித்தேன்...ஆனால் " ஒரு தோழனின் கதை " என்னத்த சொல்ரது...

  ReplyDelete
  Replies
  1. தோணுறதை தானே சொல்லணும் ?!

   Delete
 46. ***** ஒரு தோழனின் கதை******
  எல்லாத்தையும் வெறுப்பாக பார்க்கும் ஒருவனுக்கு ஒரு வித்யாசமான நட்பு என்ன செய்கிறது என செல்லும் கதை.

  கிரிஸ்ட்டி நம்மில் ஒருவராகவும், அந்த ராக்கேட் மண்டையன் (ஒரு வசனம் கூட கிடையாது) மற்றும் பிர எலியன்கள் எல்லாம் காமிக்ஸாகவும் எடுத்துக்களாம். முதலில் சின்ன(*) விசயங்களுக்காக ரசிக்க ஆரம்பிக்கும் நாம். பின்பு விண்வெளிக்கு செல்வது போல பல விசயங்களை ஆழ்ந்து ரசிக்க ஆரம்பித்துள்ளொம்.

  விளக்கமான விமர்சனம் நேரம் கிடைக்கும் போது.....

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரமே நேரம் கிடைக்கட்டும் சார் !

   Delete
 47. இம்மாத புத்தகங்கள் வந்து சேர்ந்தன.அட்டைப் படங்கள் ஒவ்வொன்றும் வழக்கத்தைவிட செம பளபளப்பு. அதிலும் ஜானியின் அட்டைப்படம் டாப்..

  ReplyDelete
 48. "இனியெல்லாம் சுகமே" ஆரம்பமே அட்டகாசமாய் இருக்குங்க சார்


  ஜெனரல்: இதுக்குத்தான் அழகான ஆயாக்களை வேலைக்கு வைக்காதீங்கடான்னு தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன்...கேட்டானுங்களா..இதே இடத்தில என்னோட சம்சாரம் மட்டும் இருந்திருந்தா, தூக்கிட்டு போக வந்த தெற்கத்தியனுங்க துப்பாக்கியை கீழே போட்டுட்டு சரண்டர் ஆகியிருப்பானுங்க...


  ஸ்கூபி, சார்ர்ர்ஜ்ஜ்ஜ் னு கத்திதும் குண்டடி பட்டு படுத்துகிடக்கும் ஸ்டார்க், ய்யாஹி...டு்ர்டுர்..டட் டட்.. விடாதே அடி நொறுக்கு னு கத்திக்கிட்டே எந்திரிப்பதும்
  அதை பார்த்த டாக்டர் , குதிரைப் படையா..? னு கேட்க..
  எப்படி கண்டுபிடிச்சிங்க டாக்டர் னு ஸ்கூபி கேட்க...
  இப்படி ஏகப்பட்ட காமடி ..உண்மையிலேயே சூப்பர் சார்.....

  ReplyDelete
  Replies
  1. கார்ட்டூனுக்கு கொடி பிடிக்கப்படும் போதெல்லாம் ஒரு மிடறு கூடுதலாய் சந்தோஷம் தோன்றுகிறது யுவா !

   Delete
  2. ப்ளூகோட்ஸ் - வாழ்க!
   கார்டூன்ஸ் - வாழ்க வாழ்க!

   Delete
 49. இனியெல்லாம் சுகமே"

  ஓரூ அழுகாச்சி கிராஃபிக் நாவலை காமெடியாக தர முடியுமா ...முடியும் என்று நிரூபித்து உள்ளார்கள் படைப்பாளிகள்...போரின் கோர தாண்டவத்தை இவ்வளவு நேர்த்தயாக சொல்ல முடியுமா என தெரியவில்லை, கொஞ்சம் தடம் மாறினாலும் மொத்த கதையும் சோகராகம் வாசித்திருக்கும்....எப்போதோ கேட்ட கதையில் உடை முழுவதும் ரத்தக்கறையுடன் வந்த போர் வீரனை பார்த்து ஒரு பெண் கேட்பாள் ' எவ்வளவு எதிரிகளைக் கொன்றாய் ' என அதற்கு அந்த வீரன் எனக்கு என்று எதிரிகள் யாருமே இல்லை...என்னால் கொல்லப்பட்ட ர்களுக்கும் நான் எதிரி இல்லை...நான் கட்டளையை நிறைவேற்றும் கருவி மட்டுமே' என்பான்..கூர்ந்து கவனித்தால் யாரும் யாருக்குமே எதிரி இல்லை... அட்டகாசமான கதை எடிட்டர் சார்...கார்ட்டூன் காதலர்களுக்கு மட்டும் இல்லை அனைவாராலும் சிலாகிக்கப்பட வேண்டிய கதை ...

  ReplyDelete
  Replies
  1. அருமையான விமர்சனம்!

   Delete
 50. காற்றில் கரைந்த கலைஞன்

  அட்டகாசமான திரில்லர் ...ரொம்ப நாள் ஆச்சி இதுமாதிரி துப்பறியும் கதை படிச்சி.இந்த முறை வந்த கார்ட்டுனும் Super ...thriller ம் சூப்பர்.இரண்டு கதைகளும் நெத்தியடி selection sir.

  ReplyDelete
  Replies
  1. விற்பனையிலும் நெற்றியடி எனில் சூப்பராக இருக்கும் சார் !

   Delete
  2. நிச்சயமாக நடக்கும் சார் ...

   Delete
 51. இனியெல்லாம் சுகமே...

  பக்கத்திற்கு பக்கம் வெடிச்சிரிப்பை எதிர்பார்த்திடாமல் இவர்களின் லூட்டியை ரசித்தால் அழகான வாசிப்பு என ஆசிரியர் தெரிவித்து இருந்தார்..ஆனால் சில இடங்களில் என்னால் வெடிச்சிரிப்பை அடக்க முடியாமல் வாய்விட்டு சிரிக்க வைத்தனர் இந்த காமெடி ராணுவ பட்டாளம் .அதிலும் குறிப்பாக ராணுவ மருத்துவர் தனது அனுபவத்தை சொல்ல வாசிப்பதை நிறுத்தி விட்டு அவ்வளவு சிரிப்பு போலவே பிழைப்பாரா பிழைக்க மாட்டாரோ என இருக்கும் குதிரைப்படை தளபதியிடம் சார்ஜ் என்றவுடன் எகிறி எழும் காட்சிகளும்,கிணற்றில் தண்ணீர் எடுக்க பாடுபடும் காட்சிகளும் வாய்விட்டு சிரிக்க வைத்தன. க்ளைமேக்ஸ் நிகழ்வுகளோ இன்னும் செம ரகளையாய் .மொத்தத்தில் ஏற்கனவே சொன்னது போல இந்த ப்ளூகோட் பட்டாளம் என்னை ஏமாற்றியதே இல்லை இம்முறையும் அதை நிரூபித்து விட்டவர்கள் முன்னை விட ஒரு படி மேலே சென்று தனது கொடியை நிலைநாட்டி விட்டார்கள் ..தாராளமாய் இவர்களுக்கு வருடம் ஒருமுறையாவது இடம் கொடுப்பது கார்ட்டூன் நாயகர்களுக்கே கொடுக்க வேண்டிய மரியாதையே ..

  இனியெல்லாம் சுகமே ..

  வாசிக்க வாசிக்கவும் சுகமே..

  ReplyDelete
 52. ரிப்போர்ட்டர் ஜானியின் காற்றில் கரைந்த கலைஞன்..

  ஆரம்ப கால இதழ்களில் சில விமர்சன கடிதங்களில் ( என்னுடையதிலுமே) இதழின் விலை அட்டைப்படத்திற்கே சரியாகி விட்டது என்று அடிக்கடி வரும் ..அந்த விமர்சன வரிகள் கண்டிப்பாக இந்த ஜானி இதழுக்கு பொருந்தும் ..அவ்வளவு அழகு...அந்த அட்டைப்பட அழகையே பல நிமிடங்கள் ரசித்தவாறு கதையும் அவ்வாறு அழகானதா அமையிட்டும் என நினைத்தபடியே வாசித்தால் அதுவும் உண்மையே .வழக்கமான அதே விறுவிறு ஜானி நடை ..அதே மர்மம் ..க்ளைமேக்ஸில் அதே அதிரடி திருப்பம் எதிர்பார்த்த மாதிரியே எதிர்பாரா நபரே குற்றவாளியாக ..ஒரே மூச்சில் படிக்க வைத்த விறுவிறு த்ரில்லர் காற்றில் கரைந்த கலைஞன்..இந்த பழைய பாணி ஜானியின் மிகவும் விரும்புவதற்கு மற்றொரு காரணம் இவரின் சாகஸங்களின் அந்த தெளிவான சித்திர தரம் ..இதிலும் அவ்வாறே..

  ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படத்தை அரைமணி நேரத்தில் பார்த்த உணர்வு..


  காற்றில் கரைந்த கலைஞன் என்றுமே கரையாத கலைஞன் இந்த ரிப்போர்ட்டர் ஜானி என்பதை நிரூபித்த மீண்டும் ஓர் இதழ்

  ReplyDelete
 53. ஒரு தோழனின் கதை ...


  *நோ கமெண்ட்ஸ்*

  ReplyDelete
  Replies
  1. இப்படி பொசுக்குனு சொல்லிட்டா எப்படிங்க தலீவரே?!!

   Delete
 54. ஒரு தோழனின் கதை!

  மதியமே புத்தக பார்சலை கேட்ச் செய்து முதலில் ஒரு தோழனின் கதையை வாசித்து விட்டேன்.

  வாழ்க்கையை மிகவும் சலிப்போடும், வெறுப்போடும் வாழும் கிரிஸ்டியான் என்ற மனிதனை சுற்றி பிணைத்துள்ள மெல்லிய கதைதான் எனினும்.. மிக அழகாக கதை நகர்கிறது. சில இடங்களில் நம்மை புன்னகைக்க வைக்கிறது. எதன் மீதும் பிடிப்புகள் அற்ற ரசனைகளற்ற வாழ்க்கை ஒரு வெற்று வாழ்க்கை என்பதை மிக அழகாக சொல்கிறது இந்த கதை. சித்திரங்களும் மொழிபெயர்ப்பும் மிக சிறப்பாக உள்ளது. ரசித்து வாசிக்க ஏற்ற கதை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. போலவே புத்தகமும் குட்டியாக அழகாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் விமர்சனம் ஆவலை அதிகரிக்கிறது!

   Delete
  2. //எதன் மீதும் பிடிப்புகள் அற்ற ரசனைகளற்ற வாழ்க்கை ஒரு வெற்று வாழ்க்கை என்பதை மிக அழகாக சொல்கிறது இந்த கதை. //

   :-)

   Delete
 55. காற்றில் கரைந்த கலைஞன் & இனியெல்லாம் சுகமே இரண்டும். வண்ணத்தில் மிரட்டுகின்றன. ஜானி சித்திரங்கள் வெளிர் நிறத்தில் கலக்கல் என்றால், பின்னது அடர் வண்ணத்தில் கலக்கலோ கலக்கல்.

  அடுத்தது. முக்கியமானதும் கூட, ஒரு தோழனின் கதை! எதிர் பார்க்கல நிச்சயமாக உங்களிடமிருந்து இப்படி ஒரு இதழை எதிர்ப் பார்க்கல.

  இந்த சைஸ், கதை, வண்ணம், கார்ட்டூன் ஒரு ஓரமாகயிருக்கட்டும். இந்த சித்திரங்களில் வரும் அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரம் சற்று நெருடலாக உள்ளது. நமக்கு தேவையில்லாத பக்கத்தில் துணிந்து கரை ஒதிங்கிவிட்டதுப் போல் தெரிகிறது.

  இந்த லோகத்துல மத்தவா சொல்ற மாதிரி காமிக்ஸ் என்பது கொயந்தை புள்ளீங்கோ சமாச்சாரமாகவே இருந்து விட்டு போகட்டுமே! இந்த மாதிரி சித்திரக் கதையைப் போட்டு மெச்சூரிட்டியைக் காட்டுவானேன்.

  இதுவே முதலும், கடைசியாக இருக்கட்டும் சார். நமது கதை ரசனையின் முதிர்ச்சியை இதுப் போல சித்திரங்களில காட்ட வேண்டாமே!.

  அப்புறம், இந்த பலூன் Font படிக்க ரொம்ப சிரமமாக தெரிகிறது. ஒரிலினலில் உள்ளது போல் கையால் எழுதியதுப் போன்ற இந்த எழுத்துருக் கொண்ட தமிழ் Font கண்களை பதம் பார்க்கிறதே!

  ReplyDelete
  Replies
  1. ///நமக்கு தேவையில்லாத பக்கத்தில் துணிந்து கரை ஒதிங்கிவிட்டதுப் போல் தெரிகிறது.

   இந்த லோகத்துல மத்தவா சொல்ற மாதிரி காமிக்ஸ் என்பது கொயந்தை புள்ளீங்கோ சமாச்சாரமாகவே இருந்து விட்டு போகட்டுமே! இந்த மாதிரி சித்திரக் கதையைப் போட்டு மெச்சூரிட்டியைக் காட்டுவானேன்.///

   அருமையாச் சொன்னீங்க மொய்தீன் ஜி! நான் இன்னும் இந்தக் கதையைப் படிக்கலேன்னாலும் பொதுவான என்னோட கருத்தும் இதுவே!

   Delete
  2. ///நமக்கு தேவையில்லாத பக்கத்தில் துணிந்து கரை ஒதிங்கிவிட்டதுப் போல் தெரிகிறது.

   இந்த லோகத்துல மத்தவா சொல்ற மாதிரி காமிக்ஸ் என்பது கொயந்தை புள்ளீங்கோ சமாச்சாரமாகவே இருந்து விட்டு போகட்டுமே! இந்த மாதிரி சித்திரக் கதையைப் போட்டு மெச்சூரிட்டியைக் காட்டுவானேன்.///


   தவறான நிலைப்பாடு!

   இது மாற்றத்திற்கான நேரம்.

   எத்தனை குழந்தைகள் காமிக்ஸ் படிக்கிறது.???

   அவர்களுக்கு என வரும் லக்கி+ சிக்பிக் இருக்கும் எப்போதும்...!!

   காமிக்ஸ் குழந்தைகள் சமாச்சாரம்னு சொல்லி அதன் கழுத்தை திருகியது போதும்...

   அதன் போக்குல ஃப்ளோவா விடுவோம் நண்பரே!

   18+ னு போட்டு சரியான திசையில் எடிட்டர் காலடி எடுத்துக் வைத்துள்ளார்..
   தயவுசெய்து ஆதரவு கொடுங்க!

   Delete
  3. சித்திர அதகளங்கள் உள்ள எண்ணற்ற கதைகள் கொட்டிக் கிடக்கும் போது இப்போது அடல்ட்ஸ் பக்கம் தலை வைக்க வேண்டிய அவசியம் என்ன...?
   உண்மையைச் சொல்ல வேண்டுமானால், என்னவில் சகிக்கவில்லை. இந்த இதழ் கிடைக்கப் பெற்றவர்களுக்கு இந்த நாள் 'இருண்ட செவ்வாய்' என அமையாத வரை ok.

   Delete
  4. இன்னும் எத்தனை காலங்களுக்கு 18+ என்பதற்காக நல்ல கதைகளை நிறாகரிப்பது தவறு. எத்தனையொ நல்ல கதைகளை 18+என்பதால் நமக்கு கிடைக்காமல் உள்ளது. அவைகளை படிக்க வேண்டுமானால் 18+ ஆதரவு கண்டிப்பாக வேண்டும். 18+ என நினைத்திருந்தால் பாரகுடா கிடைத்திருக்காது.

   Delete
  5. நிச்சயமாக ரசனை அளவுகோல்கள் ஆளுக்கு ஆள் மாறிடும் என்பதில் மாற்றுக் கருத்துக்களே கிடையாது சார் ; ஆனால் விரச நோக்கமில்லா இதனை 'அடல்ட்ஸ் ஒன்லி' சமாச்சாரமாய்ப் பார்ப்பது குறித்து என்னளவில் no comments !

   Anyways ஒரு படைப்பை நியாயப்படுத்தும் வேலை என்னதல்ல சர் ; அதனைத் தேர்வு செய்வதில் மட்டுமே எனக்கொரு பங்கிருக்கிறது ! So உங்களின் எண்ணத்தோடு நான் முரண்பட்டாலும், அதனை விளக்கிட முனைந்து உங்களின் எரிச்சலை மேற்கொண்டும் சம்பாதிக்க மாட்டேன் !

   ஆனால் கொட்டிக் கிடக்கும் கடலளவினில் வலைகளை அகல வீசினால் தான் விலாங்கோ ; அயிரையோ கிடைக்கும் என்பது எனது நிலைப்பாடு ! வீட்டு மீன்தொட்டியின் கைப்பிடி நெட்டே போதுமெனில் - "ரைட்டு !" என்றபடிக்கு அதற்கேற்ப பழகிக் கொள்வதில் ஏது சிரமம் சார் ?

   Delete
  6. //18+ என நினைத்திருந்தால் பாரகுடா கிடைத்திருக்காது.//

   +1

   Delete
  7. ///18+ என நினைத்திருந்தால் பாரகுடா கிடைத்திருக்காது.///
   உண்மை சகோ!

   ---இன்னும் பெளன்சர், டியூராங்கோ, பிஸ்டலுக்குப் பிரியா விடை, டெமக்ளிஸ்....னு லிஸ்ட் நீண்டது!!!

   சில விசயங்களில் எடிட்டர் சாரை சுதந்திரமாக விடணும்.

   நமக்கு பிடிக்கலனா அது வரப்படாதுனு சொல்ல படாது....!!

   18+னு பார்த்து பார்த்து இன்னும் காமிக்ஸ்ல மேல் லேயர்லயே இருக்கோம்.

   இன்னும் என்னிக்கு தோளை உறித்து உள்ளிருக்கும் பலா சுளைகளை எடுக்க போறமோ???

   பலாவின் தோளை கீறும்போதே இப்படி சிந்திச்சாங்கனா கடைசிவரை அந்த மேல் தோளை தடவிட்டுப் போக வேண்டியது தான்!

   Delete
  8. //ஆனால் கொட்டிக் கிடக்கும் கடலளவினில் வலைகளை அகல வீசினால் தான் விலாங்கோ ; அயிரையோ கிடைக்கும் என்பது எனது நிலைப்பாடு ! வீட்டு மீன்தொட்டியின் கைப்பிடி நெட்டே போதுமெனில் - "ரைட்டு !" என்றபடிக்கு அதற்கேற்ப பழகிக் கொள்வதில் ஏது சிரமம் சார் ?//
   +1
   படித்து முடித்ததும் ஓர் அற்புத உணர்வைத் தூண்டக் கூடிய விசயங்கள் இருந்தால் அருமை
   ...பௌன்சர் கொஞ்சம் அதிகப்படிதான்....ஆனா பரகுடா...ட்யூரோ வேற...இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு...கதையின் வேகமும் வேற லெவல்

   Delete
  9. இன்னைக்கு கிடைச்சதும் மறு வேல...எந்த வேல வந்தாலும் உட்டுபுட்டு சட்டுனு தோழனோட பழகிப் பாப்பதுதான்

   Delete
  10. கதை விமர்சனங்களும் ; சார்பான பதிலடிகளும்!

   ஒரு வாசக நண்பர் ஒரு கதையைப் படித்துவிட்டு விமர்சனங்கள் எழுதும் போது அதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியமே இல்லையே !?

   அதற்கு பதிலாக கதையைப் படித்துவிட்டு தன் சார்பான எண்ணங்களை மட்டும் சிலாகிக்கிலாமே?!

   இது பொது விவாத மேடை தான் என்றாலும் கதை விமர்சனங்களைப் பொருத்தவரை அதற்கு எதிர் கருத்துகள் வைத்தால் உண்மையான விமர்சனங்கள் இங்கே அடிபட்டுப் போகும் ; எவரும் எழுதத் துணிய மாட்டார்கள்!

   எடிட்டரைப் பொறுத்தவரை தன் பக்க வாதங்களையும் ; நியாயங்களையும் - இரண்டு வாரங்கள் கழித்து தனிப்பதிவாக போடுவதே சிறந்தது என்பது என் கருத்து!

   ஜென் துறவி கதையெல்லாம் சரிதான் ; ஆனால் நாங்கள் துறவி அல்ல - காமிக்ஸ் படிக்கும் சிற்றின்ப வாசிகள் தானே?!

   Delete
 56. வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பர்களே..🙏🙏🙏

  ReplyDelete
  Replies
  1. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்

   Delete
  2. தாமதமான பிறந்த தின வாழ்த்துக்கள் சார் ! அடுத்த வருஷத்துக்கு ரொம்பவே முன்கூட்டிய வாழ்த்தாகவும் வைத்துக் கொள்ளுங்களேன் !!

   Delete
 57. உங்களுடைய பதிவினால் நான் முதலில் வாசித்தது ஒரு தோழனின் கதை தான்.

  உங்கள் பின்னுரை போல ஒரு கணம் என்ன நடந்தது என்ன யோசிக்க வைத்தது உண்மை தான் காரணம் திடீரென்று நிகழ்ந்த அந்த climax எதிர்பார்க்கவில்லை.

  நான் நினைத்தது சரி அவனை முழுவதும் தெரிந்து கொண்டு அவனாகவே மாறி அவன் வாழ்க்கையை அந்த வேற்று கிரக வாசி வாழ ஆரம்பித்துவிடும் என்றே நினைத்தேன். பின்னர் அது அதிகமான ஹாலிவுட் படம் பார்த்ததன் விளைவு என்று புரிந்தது 😀

  கதையின் கருவிற்கு அதிகப்படியான A காட்சிகள் தேவையா என்று தோன்றுகிறது.

  அவனது மனைவியின் மீதான வெறுப்பின் காரணம் இல்லை, அவன் தொழில் தோல்வியின் காரணம் இல்லை என அவனது வெறுப்பின் காரணம் எதுவும் இல்லாமல் வெகு நேரம் sex பற்றி மட்டுமே அவன் மற்றும் வாசி இருவரும் சிந்திப்பதாக காட்டியதாக தோன்றியது.

  அடுத்து பொதுவாக நீங்கள் வசனத்தில் காமெடி தேவை என்ற பொழுது லோகம் போன்ற பிராமண பாஷை பயன்படுத்துவீர்கள். இக்கதையில் ஹீரோ அவ்வாறு பேசியது சரியாக ஒட்டவில்லை அதனை தவிர்த்திருக்கலாம்.

  இருந்தும் இந்த கதை ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்ததை மறுக்கமுடியவில்லை.

  ReplyDelete
 58. இக்கதை நீங்கள் தேர்ந்தெடுத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே காரணம் உங்களது தேடல் எந்த அளவு விரிவடைந்துள்ளது என்று புரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. உண்மை கிருஷ் ஜி. இனி இதுபோன்ற ஜானர்கள் கையில் தான் காமிக்ஸ் எதிர்காலம் உள்ளது.

   இது மாற்றத்திற்கான நேரம்.

   Delete
  2. பற்ற வைத்த நெருப்பொன்று புகைய ஆரம்பித்துள்ளது. ஆரம்பத்திலேயே அணைக்காது விட்டால் விபரீதமே மேலோங்கும்.

   Delete
  3. கவலை வேண்டாம் மொய்தீன் சார் ; எனது கால்களும், காதுகளும் தரையோடு தானுள்ளன ! யதார்த்தங்களை உணராதோ ; கிரகிக்காதோ போக மாட்டேன் !

   பொம்ம புக்ஸ் - பொம்ம புக்சாகவே இருக்கட்டுமென்பதே பெரும்பான்மையின் அவாவெனில், எனக்கு வேலை செம ஈசி சார் ! எற்கனவே பேரிடர் பொழுதுகள் கமர்ஷியல் கதைகளின் பக்கமே நம்மை நகர்த்தி வருகின்றன ; and புதுசாய் ஆணிகள் பிடுங்க வேண்டாமென பெரும்பான்மை நண்பர்கள் தீர்மானிப்பின் எனது பணி செம straightforward ஆகிப் போகும் ! நிச்சயமாய் அதன் பொருட்டு நெருடல்கள் இருக்குமே தவிர, வருத்தங்கள இராது என்னில் !

   Delete
  4. //இக்கதை நீங்கள் தேர்ந்தெடுத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியே //

   தெரியலியே சார் ; இந்த ரீதியில் சிந்திக்கப் போவோர் எவ்வளவு பேர் என்பது தெரியவில்லையே ? Early days yet ...பார்ப்போம் எங்கே இட்டுச் செல்கிறதென்று !

   Delete
  5. இதுவரை எல்லாவித ஆணி பிடுங்களுக்கும் தலை சாய்த்தே வந்துள்ளேன். இந்த அட்ல்ட்ஸ் ஆணி மட்டும் வேண்டாமே என்கிறேன். அவ்வளவே.

   Delete
  6. ரைட்டுங்க சார் ; தேவையில்லையெனத் தோன்றும் ஆணியெனும் பட்சத்தில் பிடுங்காது விட்டுப்புடலாம் ! ஆனால் இம்மி விரச நோக்கமின்றி சொல்லப்பட்டிருக்கும் இந்தக் கதைக்கு முன்னெடுக்கும் அதே அளவுகோலல்லவா பராகுடாவுக்கும் பயன்பாட்டில் இருந்திருக்க வேண்டும் ?

   அது எவ்விதம் blockbuster ஹிட்டானது ?

   இரு கதைகளையும் ஒப்பிடும் நோக்கிலோ ; எதையும் நியாயப்படுத்தும் நோக்கிலோ இதை நான் கேட்கவில்லை சார் ; இந்த கார்ட்டூன் பாணிக்கே "கருப்பு செவ்வாய்" ; "வெள்ளை வெள்ளி" என்ற அடையாளங்களெனில் - ஒன்றுக்கு இரு பாகங்களான பராகுடாவுக்கு வாரத்தின் எந்த நாளை சூட்டுவது என்ற சந்தேகம் தான் !

   Delete
  7. வேணாமே சார் இந்த வேகம் ! நிதானமாய் அணுகுவோமே !

   Delete
  8. ஆபாசம் புத்தகத்துல் இல்லை ஐயாக்களா!!! அதை பார்க்கும் உங்க மனசில இருக்கு!!!


   ஜென் துறவிகள் இருவர் ஆற்றை கடக்கும் போது நீர் நிறைய போச்சுதாம். அவ்வழயே ஆற்றை கடக்க தடுமாறிட்டு இருந்த பொண்ணை தலைமை குரு தன் தோளில் தூக்கி சுமந்து ஆற்றை கடந்து அக்கறையில் இறக்கி விட்டாராம்.
   இரு துறவிகளும் கொஞ்ச தூரம் போனதும், இளைய துறவி கேட்டாராம்,,

   """குருவே பெண்களை நாம் தொடுவது பாபம் அல்லவா???""

   அதற்கு குருவின் புதிர்,

   "அந்த பெண்ணை ஆற்றின் கரையிலயே நான் இறக்கி விட்டுட்டேன்"


   --------


   Delete
  9. நல்ல அற்புதமான உதாரண கதை... அதை வைத்து மாற்றத்திற்கான கதை என்று நீங்கள் கொடி பிடிப்பது பொருத்தமற்ற ஒன்று, சகோ. எங்கே எப்படி இந்த அற்புத உவமை பொருத்தம் காணும் என்பதை யோசியுங்கள்.

   Delete
  10. இல்லை நண்பரே அற்புதமான கதையில் அந்த ஒரு பக்கத்த கடந்தால் அற்புதங்களை கிடைக்குமே என்பதே stvr கருத்து...ஆனா ஆசிரியர் நம்ம ஐதீகங்கள மீறும் பக்கங்கள் தர மாட்டார்...பௌன்சர் விவாதம் நினைவில் வருது...

   Delete
  11. கதை விமர்சனங்களும் ; சார்பான பதில் அடிகளும்!

   ஒரு வாசக நண்பர் ஒரு கதையைப் படித்துவிட்டு விமர்சனங்கள் எழுதும் போது அதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியமே இல்லையே !?

   அதற்கு பதிலாக கதையைப் படித்துவிட்டு தன் சார்பான எண்ணங்களை மட்டும் சிலாகிக்கிலாமே?!

   இது பொது விவாத மேடை தான் என்றாலும் கதை விமர்சனங்களைப் பொருத்தவரை அதற்கு எதிர் கருத்துகள் வைத்தால் உண்மையான விமர்சனங்கள் இங்கே அடிபட்டுப் போகும் ; எவரும் எழுதத் துணிய மாட்டார்கள்!

   எடிட்டரைப் பொறுத்தவரை தன் பக்க வாதங்களையும் ; நியாயங்களையும் - இரண்டு வாரங்கள் கழித்து தனிப்பதிவாக போடுவதே சிறந்தது என்பது என் கருத்து!

   ஜென் துறவி கதையெல்லாம் சரிதான் ; ஆனால் நாங்கள் துறவி அல்ல - காமிக்ஸ் படிக்கும் சிற்றின்ப வாசிகள் தானே?!

   Delete
  12. பராகுடா!

   பராகுடாவைப் பொறுத்தவரை - அந்த கதை நினைவுக்கு வரும் போதெல்லாம் எனக்கு குமட்டல் மட்டுமே வருகிறது - ஒருவேளை அந்த இரண்டு பக்கங்களை எடிட் செய்து விட்டு இருந்திருக்கலாமோ? என்னவோ?

   அந்த பக்கங்களை நான் கிழித்து எறிந்து விட்டு இருந்தாலும், தெரியாமல் நான் படித்து முடித்த பிறகே அது சாத்தியமானது!

   பராகுடா blockbuster hit என்பதெல்லாம் ஒரு தரப்பில் சரியாக இருக்கலாம் ;  என்னைப் பொறுத்தவரை முன்பே தெரிந்திருந்தால் வாங்காமல் தவிர்த்து இருப்பேன்!

   அவ்ளோ பெரிய கதையில் இரண்டு பக்கம் தான் ஞாபகம் இருக்கிறதா என்றால் - சாப்பாட்டில் இருந்த சிறு கல் தெரியாமல் பற்களைப் பதம் பார்ப்பது போன்ற உதாரணத்திற்கு ஒப்பானது!

   Delete
  13. லார்கோ வின்ச்!

   தொடக்கத்தில் பரவலாக கிடைத்த வரவேற்பும் ; வேகமும் - அப்படியே கடைசியில் காணாமல் போனதற்கும், லார்கோ வின்ச் தொடர் மீது ஈர்ப்பு பரவலாகக் குறைய காரணமாகவும் இருந்தது - ஒருவேளை தூக்கலாக இருந்த அந்த பெண் பைலட் ரசனையும் ஒரு காரணமாக இருக்கலாம் ; இல்லாமலும் இருக்கலாம்!

   Delete
  14. மொத்த பராகுடா ஆல்பத்தினில் இரண்டே பக்கங்கள் தான் உங்களை நெருடின எனின் உங்களுக்கு தயாளம் நிறையவே நண்பரே !

   And லார்கோ சார்ந்த உங்கள் assessment க்கு ரொம்ப மெனெக்கெட வேண்டாம் சார் - அது தவறானதொன்று ! ஈர்ப்பு குறைந்து போனதன் முதற் காரணம் அந்தத் தொடரில் தொடர்ந்திட்ட அதே பாணியிலான templates தான் என்பதை அனைவருமே அறிவர் !

   Delete
  15. //And லார்கோ சார்ந்த உங்கள் assessment க்கு ரொம்ப மெனெக்கெட வேண்டாம் சார் - அது தவறானதொன்று ! ஈர்ப்பு குறைந்து போனதன் முதற் காரணம் அந்தத் தொடரில் தொடர்ந்திட்ட அதே பாணியிலான templates தான் என்பதை அனைவருமே அறிவர் !//

   என் கருத்தை நான் கூறுவதற்குக் கூட ஒப்புதல் வேண்டுமோ?! அதற்குப் பெயர்தானே விமர்சனம் ; விவாதம் ?!

   Delete
 59. பிறகு உள்ளது உள்ளதுபடியான எனது விமர்சனத்தையும் பிளாகில் போடாது விரைவில் லயன் காமிக்ஸிற்கு ஈமெயில் அனுப்பிட உள்ளேன்.

  ReplyDelete
  Replies
  1. udhay artiste:

   உள்ளதைச் சொல்வதற்கு என்ன தயக்கம் நண்பரே?! உள்ளதை உள்ளபடி இங்கேயே எழுதுங்கள் அனைவரும் தெரிந்து கொள்ளட்டும் ; அதுவே உண்மையான புத்தக விமர்சனமாக இருக்கும்!

   Delete
  2. ஒரே ஒருவாட்டி இந்தப் பின்னூட்டங்களுக்கு மேலேயுள்ள பதிவைப் படியுங்களேண்ணா ? புக் கறுப்பா ? சிகப்பா ? யென்பதே யாருக்கும் தெரிவதற்கு முன்னமே எழுதப்பட்ட வரிகள் அவை ! விமர்சனங்களை ஈட்டப் போகும் இதழ் இது என்பதை அறியாதுமில்லை ; and விமர்சனங்களை தடுக்கும் எண்ணங்களும் எனக்கு லேதுங்கண்ணா !

   So எழுத நினைப்போர் - எங்கே ,?எவ்விதம் ? எழுதுவது என்பதையும் ....அவற்றிற்கு பதிலளிப்பது எங்கே ,எவ்விதம் ? என்பதையும் சம்பந்தப்பட்டோரே பார்த்துக் கொள்ளட்டுமுங்களே ?

   Delete
  3. ரொம்ப சிரமப்பட்டு கேட் போடுகிறீர்கள் சார் :-)

   //So எழுத நினைப்போர் - எங்கே ,?எவ்விதம் ? எழுதுவது என்பதையும் ....அவற்றிற்கு பதிலளிப்பது எங்கே ,எவ்விதம் ? என்பதையும் சம்பந்தப்பட்டோரே பார்த்துக் கொள்ளட்டுமுங்களே ?//

   ஜென் கதை‌ எழுதிய நண்பருக்கு இப்படி ஒரு பதில் அளித்து இருக்கலாமே?!

   Delete
  4. //மேலேயுள்ள பதிவைப் படியுங்களேண்ணா ? புக் கறுப்பா ? சிகப்பா ? யென்பதே யாருக்கும் தெரிவதற்கு முன்னமே எழுதப்பட்ட வரிகள் அவை !//

   அப்படி என்றால் ஒரு வாரம் கழித்து விமர்சனங்களைப் பதிவிட வேண்டும் என்று சொல்லாமே?

   நண்பர் கிருஷ்ணாவுக்கும் இது பொருந்துமா?!

   Delete
  5. தெய்வமே....missing the woods for the trees என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? என் மீதான எரிச்சலில் நீங்களும் அத்தவறை செய்கிறீர்கள் !

   Make no mistakes: நான் ரொம்பவே அலசல்களை எதிர்பார்க்கும் படைப்பிது ! ..யாரையுமே அமைதி காக்கச் சொல்வது என் நோக்கமல்ல !

   நண்பர் ஆதி மின்னஞ்சலில் விமர்சனங்களை அனுப்பப் பிரியம் கொள்ளும் போது அதனில் உங்கள் இடைச்செருகல் வேண்டாம் என்பதும் - பதில் சொல்ல ரெண்டு வார அவகாசம் எடுத்துக்கணுமா ? அப்போதே பதில் சொல்லணுமா ? என்பதனில் எனக்கு ஆலோசனை வேண்டாமே எனபதே நான் சொல்ல வந்தது ! இதில் கிருஷ்ணாவை இழுப்பானேன் ?

   Delete
  6. //பதில் சொல்ல ரெண்டு வார அவகாசம் எடுத்துக்கணுமா ? அப்போதே பதில் சொல்லணுமா ? என்பதனில் எனக்கு ஆலோசனை வேண்டாமே எனபதே நான் சொல்ல வந்தது !//

   தங்களுக்கு ஆலோசனை கூறும் அளவிற்கு எல்லாம் எனக்கு தகுதி இல்லை சார்! டிவியில் வரும் ஆபாசங்கள் சம்பந்தமாகவும் ; ஜென் கதை சம்பந்தமாகவும் ; 18+ பக்குவம் காரணமாகவும் கமெண்ட்கள் இங்கு வந்ததன் காரணமாகவே - நான் பதிவிட்டுள்ளேன்!

   புத்தகம் பிடித்தது என்ற விமர்சனத்திற்கு ஒருவிதமாகவும் ; புத்தகம் பிடிக்கவில்லை என்ற விமர்சனத்திற்கு இன்னொரு விதமாகவும் - பதில்கள் கிடைத்தால் என்ன செய்வது?!

   Delete
  7. Truth to many of us is what we seek ; not what we see !

   நண்பர் கிருஷ்ணாவும், நண்பர் ராஜ்குமாரும் தவிர இதுவரைக்கும் "புடிக்குறது " கட்சிக்கு யாருமே வோட்டுப் போடவில்லை என்பதையும் ; அவர்களது பின்னூட்டங்களுக்கு எனது பதில்களையும் படித்து விட்டு , அப்புறமும் உங்கள் குற்றச்சாட்டை தொடர்வதாயின் எனது முதல் வரி மெய்யாகிடும் !

   Delete
 60. "காற்றில் கரைந்த கலைஞன்" சூப்பர் ரிப்போர்ட்டர் ஜானியின் இரண்டாவது வருகையின் பின் வந்திட்ட கதைகள் ஒன்றும் சோடை போகவில்லை என்றாலும், இந்த கதை நம்மை எல்லாம் அந்த ஆரம்ப காலத்து திகில் காமிக்ஸ் போன்றே உள்ளத்தை கொள்ளை கொள்ள செய்கிறது... இன்னும் அதிக தரத்தோடு. வண்ண கலவையும் அச்சு நேர்த்தியும் பிரமாதம். அட்டைப்படம் அசத்தல். ஜானியின் இந்த ஆரம்ப காலத்து சித்திர பாணி எனக்கு சிறுவயதில் பெரிய இன்ஸ்பிரஷன். கதை படிக்கும் போதே ஏதாவது வரைய கை பரபரக்க ஆரம்பித்து விட்டது.

  திகில் காமிக்ஸின் அத்தனை ஹீரோஸ் களும் அபிமானவர்களே.
  இத்தனை நாள் இதனை ஆசிரியர் எங்கே ஒளித்து வைத்திருந்தாரோ....? சூப்பர் க்ரைம் கதை.... Don't miss it, நண்பர்களே.

  ReplyDelete
 61. என்னவில் மிகவும் திருப்தியான இதழ்கள் ஜானி ப்ளூகோட்...வழக்கத்தைவிட அருமையாக வந்துள்ளது... அந்த வழவழப்பான கண்ணாடி அட்டை...நல்ல கதையும் கூட... ஆனால் ஒரு தோழனின் கதை வந்திருக்க வேண்டிய அவசியம் இப்போ நமக்கு இல்லை சார்....தவறாக எண்ணவேண்டாம் சார்..

  ReplyDelete
  Replies
  1. வழவழப்பான கண்ணாடி அட்டை...கோடை மலர் விளம்பரம் நினைவுக்கு வருது மக்கா

   Delete
  2. ஆமால...மக்கா...அருமையா உள்ளது ஏனோ அந்த சொறசொற அட்டைமீது எனக்கு விருப்பமில்லை..

   Delete
  3. ரெண்டுமே நல்லாருக்கு எனக்கு மக்கா...லக்கி லூக் வரயில் அந்த அட்டை மேல் ஏக ஈர்ப்பு....காரணம் வித்தியாசம்...அழகு...இப்ப தொடரும் போது ஈர்த்தது...ஆனாலும் கண்ணாடி அட்டை பளிச்தான்...ஆனா சொரசொர அட்டையும் சில படங்களுக்கு நல்லாதா இருக்கு....கண்ணாடி அட்டை தனித்து வெகு அழகுதான்...கண்ணாடி கலந்த ஜிகுனா கூடிய இரத்தப்படல அட்டை அழகோ அழகுதான்...என்னத்த சொல்வேன் மக்கா...இதுவா அதுவா....எது வந்தாலும் முருகன் அருள்

   Delete
  4. கண்ணாடி கலந்த ஜிகுனா கூடிய இரத்தப்படல அட்டை அழகோ அழகுதான்.//

   அதுதான். மக்கா அழகே.. நிச்சயமா இந்தமுறை ஆசிரியர் இன்னும் சிறப்பாக கொடுப்பார் மக்கா...

   Delete
 62. 'ஒரு தோழனின் கதை' கிளப்பியிருக்கும் சர்ச்சை - கதையை உடனே வாசித்துவிட்டு என்னுடைய தீர்ப்பைச் சொல்லிடும் ஆவலை அதிகரிக்கிறது! நேற்று கொரியர் டப்பி வந்துசேரவில்லை. இன்றாவது வருகிறதா பார்ப்போம்!

  ReplyDelete
 63. கதை விமர்சனங்களும் ; சார்பான பதில் அடிகளும்!

  ஒரு வாசக நண்பர் ஒரு கதையைப் படித்துவிட்டு விமர்சனங்கள் எழுதும் போது அதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியமே இல்லையே !?

  அதற்கு பதிலாக கதையைப் படித்துவிட்டு தன் சார்பான எண்ணங்களை மட்டும் சிலாகிக்கிலாமே?!

  இது பொது விவாத மேடை தான் என்றாலும் கதை விமர்சனங்களைப் பொருத்தவரை அதற்கு எதிர் கருத்துகள் வைத்தால் உண்மையான விமர்சனங்கள் இங்கே அடிபட்டுப் போகும் ; எவரும் எழுதத் துணிய மாட்டார்கள்!

  எடிட்டரைப் பொறுத்தவரை தன் பக்க வாதங்களையும் ; நியாயங்களையும் - இரண்டு வாரங்கள் கழித்து தனிப்பதிவாக போடுவதே சிறந்தது என்பது என் கருத்து!

  ஜென் துறவி கதையெல்லாம் சரிதான் ; ஆனால் நாங்கள் துறவி அல்ல - காமிக்ஸ் படிக்கும் சிற்றின்ப வாசிகள் தானே?!

  ReplyDelete
  Replies
  1. நண்பரே கலந்துரையாடல் தானே இது...விவாதமும் விமர்சனத்துக்கு வலுதானே...உங்க கண்ணோட்டம் இதா ,இதோ எனது கண்ணோட்டம் இது...ஆனா கட்டாயமா ஏத்துக்கனுமென்றில்லை எனும் ரீதியான விமர்சனங்கள் அவசியமே...கார்ட்டூன் இப்படி பார்...பிடிக்கும் என்பது சில நண்பர்கள் வாதம்...சிம்பிளா சைக்கிள் தள்ளிப் பாரு...குரங்கு பெடல் அடி...இப்ப கால ஊனி ஓட்டு...இனி டக்கடி..சீட்ல ஏறு ஓட்டியாச்சே...ஆக விவாதங்கள் நான்தான்னு முன்னிலைபடுத்தாது பொதுவானால் சுகமே...ஒரு வேளை மாற்றுக் கருத்து உங்களதா இருந்து ஏற்றுக் கொள்ளும் விதமாக இருந்தா...ஏற்புடையதே

   Delete
  2. கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா:

   புத்தக விமர்சனத்தைப் பொருத்தவரை - முதல் ஒரு வாரம் விவாதம் இல்லாமல் ஃப்ரீயாக விட்டுவிட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு!

   கதையைப் படித்து ரசித்தவர்கள் ஒரு பக்கம் பதிவிடவும் ; பிடிக்காதவர்கள் இன்னொரு பக்கம் பதிவிடவும் - இந்த தளம் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில் எந்த இரசனை உண்மையாக ஜெயித்தது என்பது நமக்குப் புரியவரும் அல்லவா?!

   Delete
  3. நேரம் கிடைக்காது நண்பரே...விமர்சிக்கும் ஈடுபாடும் குறைந்திடும்...ஏன் பிடித்தது என கவனிக்கவும் கவனிப்போரில்லாம போய் விடும்...பின்னால் போய் பதிவ படிக்கும் பொறுமையும் இருக்குமா

   Delete

 64. அப்புறம், இந்த பலூன் Font படிக்க ரொம்ப சிரமமாக தெரிகிறது. ஒரிலினலில் உள்ளது போல் கையால் எழுதியதுப் போன்ற இந்த எழுத்துருக் கொண்ட தமிழ் Font கண்களை பதம் பார்க்கிறதே


  #####

  +1

  ReplyDelete
 65. +18 போன்ற பராகுடா கதைகளை நான் வரவேற்கிறேன் சார்..


  ஆனால் ஒரு தோழனின் கதை

  ......?  + 18 என்பதற்காக அல்ல..

  அந்த கார்ட்டூன் பாணி சித்திரம் மனதை கவரவில்லை..

  அந்த எழுத்துரு படிக்க சிரமத்தை அளிக்கிறது ..


  +18 சமாச்சாரங்களே அழகியல் சித்திரங்களும் மற்றும் கதைப்போக்கில் வரும் +18 சமாச்சாரங்களும் எந்த மனத்தாங்கலையும் ஏற்படுத்தாது ..ஆனால் தோழனின் கதையில் அழிகியல் தென்படவில்லை

  கதை ..?

  படித்து முடித்தாயிற்று தான் சார்..ஆனால் என்ன படித்தேன் என்பது இதுவரை எனக்கு தெரியவில்லை..

  +18 போன்ற மாற்றங்களான வித்தியாச படைப்பை ஆவலுடனே வாசிக்க காத்திருக்கிறேன சார்..ஆனால் என்ன வாசித்தோம் என்றே புரிபடாத மாற்றங்கள் என்னளவில் வருத்தத்தையே ஏற்படுத்துகறது சாரி சார்..

  ReplyDelete
  Replies
  1. தலீவரே...எதை இங்கே தேடாதீர்கள் என்று நான் தண்டோரா போடாத குறையாய் சொல்லியிருந்தேனோ - அதைத் தேடி விட்டுக் காணோம் என்றால் எப்படி ? மேலேயுள்ள பதிவின் வரிகளை படியுங்களேன் இன்னொருவாட்டி ?

   "கதைப்போக்கில் வரக்கூடிய 18 + சமாசாரங்கள் நெருடாது" என்றுள்ளீர்களே ; இந்தப் படைப்பினில் வந்துள்ளதை வேறெந்த நோக்கில் கதாசிரியர் படைத்துள்ளார் என்பீர்களோ ? பராகுடாவில் கிளர்ச்சி கொள்ளச் செய்வது(மே ) படைப்பாளியின் நோக்கம் ஆனால் இங்கே மருந்துக்காவது அந்நோக்கம் உண்டா ?

   9 times out of 10 இது பிடிக்காது போகுமென்பது புரியாதில்லை தலீவரே ; ஆனால் உங்கள் வரிகளில் உள்ள முரணையும் ,இவற்றை எதிர்பார்த்தே நான் முன்கூட்டியே எழுதியதையும் சுட்டிக்காட்டவே இது ! மற்றபடிக்கு படைப்பை நியாயப்படுத்தும் வேலை என்னதே அல்ல என்பதால் விமர்சனங்களை எப்போதும் போலவே பார்த்திடுகிறேன் !

   Delete
 66. நண்பர்களே 18+ என்றாலே ஆபாசம் என்று அர்த்தமல்ல. மோகமுள் நாவல் வெளிவந்த காலத்தில் சிலருக்கு ஆபாசமாக தோன்றி இருக்கலாம் ஆனால் இலக்கிய தரமானது என்று இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. எடிட்டர் இதுபற்றிய அறிவிப்பு வெளியிட்ட பின்னரும் சொல் அம்புகளால் துளைப்பது சரியன்று.

  ReplyDelete
 67. @ ALL : 2 தினங்களுக்கு முன்பான இந்தப் பதிவினை எழுதிய போதே இந்த இதழ் சார்ந்த பின்னூட்டங்களில் உஷ்ணங்களுக்குப் பஞ்சமிராது என்பதை நான் யூகித்திருந்தேன் !

  So இங்கொரு வேண்டுகோள் : தயை கூர்ந்து பாசிட்டிவ் கருத்துக்களுக்கோ ; நெகட்டிவ் கருத்துக்களுக்கோ - பதில் சொல்லும் வேலையை என்னிடமே விட்டு விடுங்கள் guys ! கருத்துக்கு எதிர் கருத்தென இறங்கினால் சங்கடங்களே பலனாகிடும் ! வேலைகளுக்கு மத்தியில் நேரம் கிடைக்கும் போதே நான் இங்கு எட்டிப் பார்க்க முடியும் என்பதால் பதிலிட கொஞ்சம் முன்ன பின்னே ஆகக்கூடும் ; ஆனால் நான் பார்த்துக் கொள்வேன் guys !

  So அவரவர் point of views இங்கே பதிவிடுவதனில் யாருக்கும் நெருடல்கள் தேவையிராது !

  ReplyDelete
  Replies
  1. ஆனால் I repeat - படைப்பினை நான் நியாயப்படுத்திட முனைந்திடவே மாட்டேன் & எற்கனவே சொல்லியுள்ள சமாச்சாரங்களை மறுஒலிபரப்பு செய்திடவும் முயற்சிக்க மாட்டேன் !

   So "கதையை காணோம் ; காட்சியைக் காணோம் " என்ற ரீதியிலான பதிவுகளுக்கு பதிலிட என்னிடம் புதிதாய் எதுவுமே இராது guys !

   Delete
 68. எனக்கு இன்னும் book வரவில்லையே??? இரத்த பூமி ஆகி கொண்டு இருக்கிறதோ???

  ReplyDelete
 69. கிளம்பும் எதிர்ப்புகளை கண்டு எனக்கு ஒரு பக்கம் ரொம்ப குஷியா இருக்கு...

  ஏன்னா,

  ஆல்ரெடி கார்டூன்களை குளோஸ் பண்ணியாச்சி..
  2லக்கியும் 2சிக்பில்லும் வரும்.

  ஒரு பாதிபேரு மும்மூர்த்திகள்,
  ஆர்ச்சி,ஸ்பைடர், & ஓல்டு வேணாம்னு சொல்லி ஆச்சி. அத்தோடு கைவசம் இருக்கும் ஸ்டாக்கும் அடுத்த 5ஆண்டுகளுக்கு வரும்.
  2வது அவற்றில் புதிய கதைகளும் இல்லைனு முத்து 50வது கதை செலக்சன் போது தெளிவாயிட்டு.

  கி.நா.வும் கெளபாயை தாண்டி இருக்க கூடாதுனு இப்ப தெரியுது.. ஏன்னா கொஞ்சம் முதிர்ச்சியானது இல்லைனா, வேறு யாரும் கெளபாயை பிடிச்சாத்தான் இனி!


  எல்லாத்தையும் கூட்டி கழிச்சி பார்த்தா இன்னும் 2 ஆண்டுகளில்

  "டெக்ஸ் வில்லர் காமிக்ஸ்" என ஆகிட போகுது...!!!

  48புக்கில் 8புக்கு மற்றதும், 40 டெக்ஸ்வில்லரும் வரப்போகுது.
  ஏன்னா நாம யாரும் புதிய ஜானர்களை வரவிடப்போவதில்லை.

  நான் எப்படி எப்படியோ கேட்டபோது கிடைக்காத டெக்ஸ் இனி ஃபுல்லா தடையின்றி கிடைக்கும் போகது...
  ஐ...ஜாலி...ஜாலி...!!


  ReplyDelete