Powered By Blogger

Saturday, June 26, 2021

இன்னொரு சனி...இன்னொரு பதிவு !

 நண்பர்களே,

வணக்கம். நீங்கள் அலசி அதகளம் செய்ததில் அதிரிபுதிரி மாதமாகிப் போன ஜூன் - சிறுகச் சிறுக நிறைவை நோக்கி நகர்ந்திட, ஒரு மெய்யான அதிரடி மாதமே நம் முன்னே காத்து நிற்கின்றது ! நிஜத்தைச் சொல்வதானால் நடப்பு மாதத்தில் ரிப்போர்ட்டர் ஜானியின் சாகசம் பற்றி எனக்குத் துளியும் பயம் இருந்திருக்கவில்லை தான் ! ஆனால் ப்ளூகோட் பட்டாளம் லைட்டாகவும், கிராபிக் நாவல் செமையாகவும் புளியைக் கரைத்திருந்தன ! ப்ளூகோட் தொடரினில் இழையோடும் அந்த அவலச் சுவை இம்முறை கொஞ்சம் தூக்கல் என்பது எனது எண்ணம் ! So உங்களின் குத்துக்கள் மூக்கிலா ? தொப்பையிலா ? என்பதே எனது கேள்வியாயிருந்தது ! ஆனால் surprise ..surprise .. சிலாகிப்புகள் !! ஆனால் நமது நண்பரொருரவர் அனுப்பியிருந்த மின்னஞ்சல் எனது அனுமானத்தை ஒட்டியே இருந்தது :

=========================================================================

சார், நான் மிக மிக மிக மிக minorityயாக இருப்பேன் என்பது தெரியும்... இருந்தாலும் எனக்கு ஆச்சர்யமாக உள்ளது... இந்த புத்தகம் எப்படி முழு நகைச்சுவை என எல்லாராலும் கொண்டாடப்படுகிறதென்று... !!?

இனியெல்லாம் ரணமே... ஆரம்பம் முதல் நோய்வாய்ப்பட்ட வீரர்கள்... சாவின் விளிம்பில் படும் துயரங்கள்... ஏமாற்றும் ஜெனரல்கள்... தண்ணீருக்கு கூட துப்பாக்கி தாக்குதல் நடத்த வேண்டிய சூழல்... எரியும் குடியிருப்பு வீடுகள்... ஆகா பரவாயில்லை... அனைவரும் சேர்ந்து ஊரைச் சரி செய்கிறார்களே... மனிதம் பிழைக்கிறது என நினைக்கும் போதே அந்த வீடுகளை உடைத்து எரியும் குண்டுகள்... ஓடும் வயதான முதியவரின் புலம்பல்... "திரும்ப இந்த ஊரைக் கட்டுவது ரொம்ப ரொம்ப கஷ்டம்தான்..."...

இதில் என்னால் எந்த இடத்திலும் மனம் விட்டு சிரிக்கவே முடியவில்லை... சில இடங்களில் கவுண்டமணி/செந்தில் சண்டையை சற்றே நினைவு படுத்தி.. ஆங்காங்கு கஷ்ட புன்னகை வேண்டுமெனில் என்னால் செய்ய முடியும்...!

இது ஒரு அற்புதமான கிராபிக் நாவல் என்னளவில்... போரின் துயரங்களை இதைவிட ஒரு சித்திரக்கதையில் பட்டவர்த்தனமாக சித்திரிக்க முடியாது... !

என்னைப் பொருத்தவரை... "இனியெல்லாம் ரணமே" தான் இந்த மாதத்தின் மனதை உலுக்கும் கிராபிக் நாவல்...  !

=============================================================

நண்பரின் மின்னஞ்சலில் உள்ள கூற்றுக்களை மறுக்க பெரிதாய் முகாந்திரங்களில்லை ; moreso அடுத்த ஆண்டுக்கென நான் தேர்வு செய்து வைத்திருக்கும் இன்னொரு ப்ளூ கோட் ஆல்பத்தோடு ஒப்பிடுகையில் எனக்கே லைட்டாக நெருடத்தான் செய்தது ! Simply becos அடுத்தாண்டிற்கென காத்திருக்கும் ஆல்பமானது இதே போர்க்கள பின்னணியில் இருந்தாலும், வலி, சோகம்,ரணமென்று நகராது பக்கத்துக்குப் பக்கம் சிரிப்பு வெடி போடுகிறது ! Out & out காமெடியாக அது இருந்திடவுள்ளதைப் பார்க்கும் போது, இந்தத் தொடரினிலும் கதைகளை பொறுக்கிட நிறையவே மெனெக்கெடணும் போலும் என்பது புரிகிறது ! 'தேமே' என Cinebook தேர்வுகளுக்கு வால்பிடிப்பது இந்த ஒற்றைத் தொடரிலாவது இனி வேலைக்கு ஆகாதென்று தீர்மானித்துள்ளேன் ! So வரும் ஆண்டுகளில் ப்ளூவார் வருவர் ; ஆனால் இயன்றமட்டுக்கு போரின் இரத்த சகதிகள் தெறிக்காத விதமாய் ! 

Looking ahead - நமது ஆண்டுமலர் மாதத்தைக் கொண்டாட பெரியதொரு கேக்கும், மெழுகுவர்த்திகளுமாய், லயன் அண்ணாத்தே கால் விரித்துக் காத்திருக்கிறார் ! And இப்போதைய வாடிக்கைப்படி லக்கி லூக் அந்த ஸ்லாட்டைத் தனதாக்கியுள்ளதால் - இதோ "லயன் ஜாலி ஆண்டுமலர்" அட்டைப்பட முதல்பார்வை + உட்பக்க பிரிவியூ படலம் : 

As usual இம்முறையும் 2 லக்கி சாகசங்கள் ; ஒன்றினில் திருவாளர் ரின்டின் கேன் ஏகமாய் செய்திடும் அலப்பரைகளோடு ! I repeat - இது ரின்டின் கேன் கதையல்ல ;  ரின்டின் கேனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதொரு நார்மலான லக்கி லூக் கதையே ! ஒரு கோடீஸ்வர மனுஷன் தன் சொத்து பத்துக்களையெல்லாம் ரி.டி.கே.வுக்கு எழுதி வைக்க - அதுவும் செம பணக்கார ஞானசூன்யம் ஆகிப் போகிறது ! அதன் பாடிகார்டாய் ; கார்டியனாய் நம்மவர் நியமனம் காண, ஜாலி ஜம்பர் & டால்டன் சகோஸ் செய்யும் அட்டூழியம்ஸ் என்று கதை டாப் கியர் போட்டுத் தூக்குகிறது ! எப்போதும் போலவே இந்தக் கூட்டணியோடு கைகோர்ப்பது செம ஜாலி அனுபவமாய் இருந்தது தான் ; அந்த ஜாலியின் பிரதிபலிப்பு பேனா பிடித்ததில் தென்படின் ஹேப்பி அண்ணாச்சி ! 

And இங்கே கதை # 2 ஆக இடம்பிடித்திருக்கும் "பேய் நகரம்" கூட இன்னொரு க்ளாஸிக் ! டால்டன்கள் இல்லாத குறையை வேறொரு இரட்டையர் அணி நிரவல் செய்கிறது ! So சிரிப்புக்கு சிறப்பாய் உத்திரவாதம் தந்திடவுள்ள இந்த இதழ் ஏற்கனவே ரெடி நம்மளவினில் ! 

And ஏற்கனவே சொல்லியிருந்த விஷயமே - but still for those who might have forgotten  : இது ஹார்டகவர் இதழல்ல ! இனி வரும் நாட்களில், முந்நூறுக்கு மேற்பட்ட விலையிலான இதழ்கள் மட்டுமே (அதாவது மினிமமாக 3 பாகங்கள் / கதைகள் கொண்ட இதழ்கள்) ஹார்டகவர் option சுமந்து வந்திடும் ! இன்றைய சங்கை நசுக்கும் விலைவாசிகளின் மத்தியில் இந்தச் செலவினத்தை சிறு இதழ்களுக்குப் பொருத்திட இயலவே மாட்டேன்கிறது ! So புக் கையில் கிடைத்த உடன் என்னைச் சாத்த துடைப்பங்களைத் தேடாதீர்கள் - ப்ளீஸ் ! ஆனால் அட்டையினில் மினுமினுக்கும் எழுத்துக்கள் மெருகூட்டிடும் என்பது கொசுறுத் தகவல் ! 

நடப்பு மாதத்தினில் 15-ம் தேதி தான் இதழ்களை அனுப்பியுள்ளோம் என்பதால் ஜூலை இதழ்கள் கூட அதனை அனுசரித்தே வெளிவந்திடும் ! இன்னமும் நிறைய மாவட்டங்களில் கடைகள் / முகவர்கள் இயங்கத்துவங்கியிரா நிலையில் சித்தே GO SLOW அவசியமாகிப் போகிறது ! ஆனால் அதே பரிந்துரை எனக்கு எந்தவொரு விதத்திலும் சாத்தியமாகிடாது போலும் ! ஏதேதோ கதை பேசிக்கொண்டு - "ஆங்...அதுக்குத் தான் நேரம் கிடக்குல்லே ; இதைத் தான் அப்பாலிக்கா பாத்துக்கலாமில்லே ?" என்று பணிகளைப் புறம்தள்ள முடிந்த வரைக்கும் அடிவயிற்றைக் கலக்கவில்லை தான் ! ஆனால் 2 வாரங்களுக்கு முன்னொரு தினத்தினில், முன்னிற்கும் மெகா பணிகளினை தேதிவாரியாய் எழுதி, அவற்றிற்கு நாம் தயாராகிட வேண்டிய deadlines களையும் குறித்துப் பார்த்த போது மெய்யாலுமே உதறல் எடுத்து விட்டது ! 

*லயன் # 400  மெகா டெக்ஸ் புக்

* இரத்தப் படலம் வண்ணத்தொகுப்புகள் 

*2022 அட்டவணை இறுதிப்படுத்தல் ; அது சார்ந்த கதைகளுக்கு சகல ஏற்பாடுகளையும் செய்தல் ; and most importantly, அவற்றிற்கான 'டப்பை' தயார் செய்து அனுப்பிடல் !

*2022 கேட்லாக் ரெடி செய்தாக வேண்டும் ! 

*லயன் தீபாவளி மலர் with டெக்ஸ் 

* And the Daddy of them All : முத்து காமிக்ஸ் ஆண்டுமலர் # 50 !

இவை சகலமும் அக்டொபர் இறுதிக்குள் எங்கள்மட்டில் நூற்றுக்கு நூறு பணிநிறைவு கண்டிருக்க வேண்டும் !  முத்து காமிக்ஸ் ஆண்டுமலரை விரலுக்கேற்ற வீக்கமாய் நான் திட்டமிட்டிருந்ததை, உங்களின் அன்பான முட்டுச்சந்துப் பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து  அவசரமாய் மாற்றிக் கொள்ள நேரிட்டதால்,  புது ப்ளான்னிங் ; அதற்கான படைப்பாளிகள் ஒப்புதல் என்று ஏகமாய் நேரம் ஓடிவிட்டது ! And இதோ இந்தத் திங்கள் முதலே அதன் மீதான வேலைகளைத் துவக்கிட முடிந்துள்ளது ! 

இதன் மத்தியில் நார்மலான பணிகளிலேயே ஒரு கணிசம் என் திக்கில் திசை திரும்பிவிட்டுள்ளன - தவிர்க்க இயலா சில துரதிர்ஷ்ட சூழல்களின் பலனாய் ! நமக்குப் பேனா பிடிக்கக்  கொஞ்சம் கொஞ்சமாய்த் தயாராகி வந்ததொரு தென் மாவட்ட சகோதரி பற்றி சமீபமாய்ச் சொல்லியிருந்தேன் தானே...அவரது கணவர் கொரோனாவுக்கு பலியாகி விட்டிருக்க, இடிந்து போயுள்ளார் !! தகவல் கேட்ட போது எனக்கே தூக்கிவாரிப் போட்டதெனும் போது அவரது நிலையைப் பற்றி யோசிக்கவே மனம் கனக்கிறது ! And இந்த நேரத்தில் "பணியினை முடிச்சு அனுப்புறீங்களா ? புண்ணாக்கை எழுதறீங்களா ?" என்று கேட்கவே நா கூசுகிறது ! So தொடரும் மாதங்களின் சில ரெகுலர் பணிகளையும் ஒட்டு மொத்தமாய் மேஜையினில் குவித்து வைத்துள்ளேன் ! இன்னொரு பக்கமோ, நமது பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிபெயர்ப்பாளர் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையினை கோவையினில் செய்திருக்கிறார் and 2 மாதங்களாகியும் ரொம்பவே சிரமப்பட்டு வருகிறார் ! So அவருமே தாற்காலிகமாய்ப் பணியாற்ற இயலா நிலையினில் இருக்க, அங்கும் இங்குமாய் ஜூனியர் தேடியதில் 2 பிரெஞ்சு நாட்டவர்களை மாற்றாகப் பிடிக்க முடிந்துள்ளது ! என்ன ஒரே சிக்கல் - அவர்களின் பிரெஞ்சுப் புலமை A-1 என்ற போதிலும் அவர்களின் ஆங்கிலப் புலமை சற்றே சுமார் ! So அந்த ஆங்கில ஸ்கிரிப்டை தமிழாக்கம் செய்திடும் பொருட்டு நமது கருணையானந்தம் அவர்களுக்கு அனுப்பினால் அதனில் சிக்கல் ! ரைட்டு...கோவைக்கே அனுப்பி, அம்மையாருக்கு மூட்டுவலி சற்றே தேவலாமென்று ஆன பிற்பாடு இன்னொருவாட்டி மொழிபெயர்க்கச் சொல்லலாம் ; ஒருக்கால் அது லேட்டாகும் என்று தோன்றினால் - அந்த ஆல்பத்தினையும் தக்கி முக்கியாவது நானே எழுதிட எண்ணியுள்ளேன் ! So என் மேஜை ஒரு பக்கமாய் பள்ளமாகாத குறை தான் - குவிந்து கிடைக்கும் பிரிண்ட் அவுட்களின் பளுவினில் ! இக்கட ஒரு சுவாரஸ்ய இடைச்செருகலுமே :

Deadwood Dick என்றதொரு அறிமுக நாயகரின் சாகசம் "நரகத்துக்கு நடுவழியே" என்று வெளிவரவுள்ளதை கவனித்திருப்பீர்கள் ! போனெல்லியின் உருவாக்கமே இது & இந்த மனுஷனும் வன்மேற்கின் நாயகன் தான் ! ஆனால் கறுப்பினர் என்பது வேறுபாடு ! தற்போதைய எனது மேஜை நிரப்பிகளுள் இவரும் ஒருவர் ! இந்த நாயகரின் பணிகளுக்குள் நான் புகுந்த நேரம் தான் - இக்கட  "ஒரு தோழனின் கதை" கி.நா.வில் "பப்பி ஷேம் படங்களை நீ எப்புடிப் போடப் போச்சு ?" என்ற பஞ்சாயத்து செம வேகமாய் ஓடிக்கொண்டிருந்தது ! அங்கே பதில்களைப் போட்டு விட்டு, இங்கே மொழிபெயர்ப்புக்குள் புகுந்தால் சிரித்து மாளவில்லை ! விஷயம் என்னவென்றால் இந்தக் கறுப்பின நாயகரும், அவரது தோஸ்த்தும் கதையின் முற்பாதியினில் பேசிக் கொள்வது முழுக்கவே  செம கரடு முரடு பாஷையினில் / பாணியினில் !! சம்பாஷணைகள் மட்டுமன்றி, கதையோட்டத்தோடு கலந்து வரும் சில அறிமுகங்கள் நாம் இதுவரைக்கும் பரிச்சயம் கொண்டிரா பாணிகளில் உள்ளன ! இதுவொரு வீரியமான நாவலின் காமிக்ஸ் உருமாற்றம் எனும் போது - வரிகளை சற்றே நாசூக்காக்குகிறேன் பேர்வழி என்று நான் புறப்பட்டால் - கதாசிரியரின் / நாவலாசிரியரின் தலைக்குள்ளிருந்து துளிர்த்த ஹீரோவை நம் சவுகர்யத்துக்கு மாற்றிய பிழை செய்தவனாவேன் ! படங்களில் உள்ள சில அஜால் குஜால் விஷயங்களை பலூன்களின் பொருத்தலால் சமாளித்து விடலாம் தான் ; ஆனால் முக்கியக் கதாப்பாத்திரங்களின் அறிமுக முன்பாதியினில் நான் நோண்டினேன் எனில் - Deadwood Dick - திண்டுக்கல் Dick ஆகிடுவார் என்பதே பயம் ! அதே சமயம் இதுக்கொரு முட்டுச் சந்தை நீங்கள் ஆங்காங்கே ரெடி பண்ணிடுவீர்களே என்ற பயமும் இன்னொரு பக்கம் ! சொல்லுங்களேன் guys ? திண்டுக்கல் டிக் ok தானா ? இல்லாங்காட்டி முட்டுச் சந்தில் next மீட் பண்ணிப்போமா ? (ஆனாலும் இந்த முட்டுச் சந்து மச்சம் நமக்கு ரொம்ப ஸ்பெஷலு தானுங்க !!)

அப்புறம் 2022-ன் கதைகளை இறுதிப்படுத்திட மே லாக்டௌன் மாதத்து வினவல்கள் ரொம்பவே உதவின என்பதை நான் சொல்லியே தீரணும் ! தினம் தினம் கேள்வி கேட்டு குடலை உருவியது போலிருப்பினும், நிறையவே 'இப்டியா ? அப்டியா ?' கேள்விகளுக்கு விடை காண முடிந்திருந்தது ! Of course - உங்களின் பரிந்துரைகள் எல்லாமே நடைமுறை கண்டிருக்கும் என்றெல்லாம் இல்லை தான் ; நான்பாட்டுக்கு இண்டிகேட்டர்களை ஒட்டு மொத்தமாய்ப் போட்டு விட்டு மெட்ரோ ரயிலுக்குத் தோண்டுவதை போல பாதாளத்தில் தோண்டவும் செய்திருப்பேன் தான் ! ஆனால் in general உங்களின் உள்ளப்பகிரல்கள் நிறையவே உதவியுள்ளன ! So thanks on that again guys !! அப்புறம் இந்த வாரத்து புதனன்று "ஆத்தா...நான் பாஸாயிட்டேன் !" ; "பாப்பாத்தியம்மா மாடு பத்துனா !!" ; "என் ஆளோட செருப்பை காணோம் " என்ற ரீதியில் கவித்துவமான தலைப்புகளை தேற்றி உள்ளேன் - அடுத்தாண்டின் இதழ்களுக்குச் சூட்டி, கேட்லாக்கில் புகுத்திடும் பொருட்டு ! முடிந்த மட்டுக்கு சைவமாகவே பெயர்களை அமைக்க முற்பட்டுள்ளேன் ; அதை மீறியும் சித்தே காசிமேடு கவுச்சி மார்க்கெட் வாசம் வீசினால் - spare me guys : கதைகள் அந்த ரகத்தினில் இருந்திருக்கும் ! 

Moving on, இ.ப. பிழைத்திருத்தங்கள் ஓடிக்கொண்டுள்ளன ஆபீசில் ! Corrections போட்டுத் தந்திருந்த நண்பர்களில் சிலர் பிரமாதமாகவும், சிலர் ஆர்வ மிகுதியினில் பொங்கோ பொங்கென்று பொங்கவும் செய்திருப்பதால் - லைட்டாக சிண்டைப் பிய்க்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது எனக்கு ! தேவையான ஆணியெது ? தேவையில்லாத ஆணியெது ? பின்னே வரும் பாகங்களில் இடறிடாது பிடுங்கக் கூடிய ஆணியெது ? என்ற அலசல்களும் இப்போது எனது அட்டவணையில் இணைந்திருக்க, இந்நேரத்துக்கு அச்சுக்குச் சென்றிருக்க வேண்டிய நாம் - a week behind schedule !! இதன் மத்தியில் "ஜூலை 1 வரைக்குமாச்சும் முன்பதிவுத் தேதிகளை நீட்டிக்கப்படாதா ?" என்று நம்மாட்களிடம் நிறைய கண்சிவத்தல்கள் !! ஒன்றேகால் ஆண்டுகளின் அவகாசமும் நிறைவுக்கு வந்து தானே தீர வேண்டுமென்பதை அவர்களுக்குப் புரிய வைக்க நம்மவர்கள் படாத பாடு பட்டு வருகின்றனர் ! நம்மிடம் புக் செய்யவில்லை என்றாலுமே, நமது முகவர்களிடம் கூட வாங்கிக் கொள்ளலாமே guys ? இதோ சின்னமனூர் போன்ற சிறு ஊரின் முகவர் கூட 20 புக்ஸ் ஆர்டர் செய்துள்ளார் ! So இங்கே நாம்பாட்டுக்கு கல்லாவைத் திறந்து வைத்திருந்து, சிக்கும் சில்லறையை வாங்கிப் போட்டுக் கொண்டே போகும் பட்சங்களில், இந்தப் பேரிடர் நாட்களிலும் பெரும் ரிஸ்க் எடுக்கும் முகவர்கள் பாடு சிக்கலாக்கிடக்கூடும் அல்லவா ? So புக்கிங்ஸ் நம்மிடம் நிறைவுற்றதாகவே கருதிடுங்கள் guys ; இதழ் வெளியாகும் ஆகஸ்ட் இறுதியினில் முகவர்களின் சிறு பட்டியலையும் தந்து விடுகிறோம் ; தேவைப்படுவோர் அவர்களிடமிருந்தே நேரடியாய் வாங்கிக் கொள்ளலாம் ! 

ரைட்டுங்கோ...பதிவை நிறைவு செய்திடும் நேரமிது ! வீட்டிலுள்ள என் மேஜைக்கு மேலே ஒரு போர்டில் - உத்தேசமாய் ஒவ்வொரு பணிகளையும் நிறைவு செய்திட வேண்டிய தேதிகள் எவையெவை ? எந்தக் கதைக்கு அடுத்து எந்தக் கதை ? என்று நான் குறித்து வைத்திருக்கும் விபரங்கள்  - என்னை இந்த நொடியினில் கூட  முறைத்துக் கொண்டுள்ளன ! ஒரே ஆல்பத்தில் தொடர்ச்சியாய்ப் பணியாற்றுவது ரொம்பவே படுத்துவது போலிருப்பதால் - காலையில் Deadwood Dick ; மதியம் மேக் & ஜாக் கார்ட்டூன் ; மாலை : முத்து ஆண்டுமலர் பணிகளின் ஆக்ஷன் அதகளக் கதை # 1 என்று அட்டவணையினை குடாக்காட்டம் அமைத்துக் கொண்டுள்ளேன் ! ஒவ்வொன்றும் ஒரு விதம் என்பதால் - இது கூட ஒரு லூசுத்தனமான சுவாரஸ்ய அனுபவமாகயிருப்பதையும் உணர முடிகின்றது !  

இந்தக் கூத்துக்களுக்கு இடையிடையே இன்னொரு சத்தமில்லா முயற்சியும் ஓடி வருது ! அதனில் மட்டும் ஜெயம் கிட்டி - பட்டாப்பட்டியின் மீதமும் டார் டாராயிடும் என்பது மட்டும் புரிகிறது ! ஸ்டெல்லா கிட்டே சொல்லி, நம்ம ஜானி நீரோ தீவாளிக்கென வேங்கி வச்சிருக்கக்கூடிய பூப்போட்ட டிராயர் ஒன்றை முன்ஜாக்கிரதையாய் லவட்டியாகணும் போலும் !!

Bye all ...மறை கழன்ற எனது தினங்களைத் தொடர்ந்திடக்  கிளம்புகிறேன் ! See you around !! Have a safe weekend all !

MEMES 😄😄

MKS Ram :DR.A.K.K.Raja :


Dr.Partheeban, Karur :
250 comments:

 1. மீம்ஸ் சூப்பர்👌

  ReplyDelete
 2. AKK Raja என்பது all என வந்துவிட்டது.

  ReplyDelete
 3. Deadwood dick - no balloon hidings. APDIYE PRASURAM SEYYUNGAL !!

  ReplyDelete
  Replies
  1. எனது கருத்தும் இதுவே

   Delete
  2. கதையின் வீரியத்தை குறைக்க வேண்டாம் சார்.

   Delete
  3. +111

   ஹிஹிஹி!
   எதுக்கும் +1 போட்டு வைப்போம்!

   Delete
  4. யெஸ் ப்ளீஸ்... நோ ஹைடிங்ஸ், நோ கட்டிங்ஸ்...!!!

   Delete
 4. முத்து 50 ஆவலைத் தூண்டுகிறது👍

  ReplyDelete
 5. All memes are just hilarious - over the top :-) Editor is the Vadivelu of comic memes looks like :-D :-D :-D

  ReplyDelete
 6. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 7. பதிவை பற்றி பிறகு ..


  இந்த முறை மீம்ஸ் அனைத்துமே இப்பொழுது என்னை வாய்விட்டு சிரிக்க வைத்துள்ளது...


  செம நண்பர்களே...

  பலமான பாராட்டுதல்கள்...

  ReplyDelete
  Replies
  1. மீம்ஸ் அனைத்தும் அருமை. Great job Guys வாழ்த்துக்கள்.

   Delete
 8. லக்கி ஆண்டுமலர் அட்டை...


  ஒரே வரி இல்லை ஒரே வார்த்தை

  அழகு...

  ReplyDelete
 9. அவரது கணவர் கொரோனாவுக்கு பலியாகி விட்டிருக்க, இடிந்து போயுள்ளார் !! தகவல் கேட்ட போது எனக்கே தூக்கிவாரிப் போட்டதெனும் போது அவரது நிலையைப் பற்றி யோசிக்கவே மனம் கனக்கிறது

  #####

  வருத்தமான செய்தி சார்..ஆழ்ந்த இரங்கல்கள்..

  ReplyDelete
  Replies
  1. ஆழ்ந்த இரங்கல்

   Delete
  2. ஆழ்ந்த இரங்கல்கள்

   Delete
  3. வருத்தமான செய்தி. ஆழ்ந்த இரங்கல்கள்..

   Delete
  4. ஈடு செய்ய முடியாத இழப்பு ...சகோதரிக்கு எல்லாம் வல்ல இறை துணை இருக்கட்டும்.

   Delete
 10. சொல்லுங்களேன் guys ? திண்டுக்கல் டிக் ok தானா ? இல்லாங்காட்டி முட்டுச் சந்தில் next மீட் பண்ணிப்போமா

  ######

  ம்ஹீம் வாயை தொறக்க மாட்டேனே...மூச்..

  ReplyDelete
  Replies
  1. அட! தல பயந்துட்டாரு போல.

   Delete
  2. பயமா ...எனக்கா..   ஹீஹீ கொஞ்சூண்டு...

   Delete
 11. முத்து காமிக்ஸ் ஆண்டுமலரை விரலுக்கேற்ற வீக்கமாய் நான் திட்டமிட்டிருந்ததை, உங்களின் அன்பான முட்டுச்சந்துப் பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து அவசரமாய் மாற்றிக் கொள்ள நேரிட்டதால், புது ப்ளான்னிங் ; அதற்கான படைப்பாளிகள் ஒப்புதல் என்று ஏகமாய் நேரம் ஓடிவிட்டது


  ######


  வாவ்...சூப்பரான மகிழ்ச்சியான செய்தி சார்...:-)

  ReplyDelete
 12. 2022 கேட்லாக் ரெடி செய்தாக வேண்டும் !

  *லயன் தீபாவளி மலர் with டெக்ஸ்

  * And the Daddy of them All : முத்து காமிக்ஸ் ஆண்டுமலர் # 50 !  ஆவலுடன் வெயிட்டிங் சார்...:-)

  ReplyDelete
 13. அனைவருக்கும் மாலை வணக்கம் சொல்வது சின்னமனூர் சரவணர்ங்க.!!!

  ReplyDelete
 14. சார் Deadwood Dick பற்றிய எனது கருத்து.
  முடிந்தால் அதனை ஜம்போ அல்லது க்ராபிக் நாவல் என்று மாற்றி 18 வயதுக்கு மட்டும் என்று தெளிவாக முன்பே கூறி அனைவரையும் தயார் படுத்திவிட்டு படங்கள் மற்றும் வசனங்கள் எதுவும் மாற்றாமல் வெளியிட முடிந்தால் கொடுங்கள் சார் இல்லை என்றால் வேண்டாம்.

  ReplyDelete
  Replies
  1. Same here sir - please give it unedited or shelve it for now. We do not need compromised issues any longer please !

   Delete
 15. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 16. ##திண்டுக்கல் டிக் ok தானா ? இல்லாங்காட்டி முட்டுச் சந்தில் next மீட் பண்ணிப்போமா##


  இக்கட வாயைப் பெவிகால் போட்டு மூடியாச்சு.

  ReplyDelete
 17. ###லயன் # 400 மெகா டெக்ஸ் புக்

  * இரத்தப் படலம் வண்ணத்தொகுப்புகள்

  *2022 அட்டவணை இறுதிப்படுத்தல் ; அது சார்ந்த கதைகளுக்கு சகல ஏற்பாடுகளையும் செய்தல் ; and most importantly, அவற்றிற்கான 'டப்பை' தயார் செய்து அனுப்பிடல் !

  *லயன் தீபாவளி மலர் with டெக்ஸ்

  * And the Daddy of them All : முத்து காமிக்ஸ் ஆண்டுமலர் # 50 !###


  அனைத்தும் ஆவலைத் தூண்டும் வாயில் கடைவாயில் ஜொள்ளு நதியையே உருவாக்கிவிட்டன.

  ReplyDelete
 18. Deadwood Dickக்கு திண்டுக்கல் பூட்டு இந்த வருடம் மட்டும் போட்டு விடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. இப்படியே அறிவித்த கதைக்கு எல்லாம் செய்ய முடியாதே

   Delete
  2. முட்டு சந்து, அல்லது பிடிக்கவில்லை என்றால் வேறு ஒரு புத்தகம் என செய்வதற்கு வருடத்திற்கு ஒரு முட்டு சந்து போதும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே இது குமார்.

   அப்புறம் ஒரு தோழனின் கதை படிக்க எனக்கு இன்னும் சரியான சூழ்நிலை அமையவில்லை.

   Delete
 19. // அவரது கணவர் கொரோனாவுக்கு பலியாகி விட்டிருக்க, இடிந்து போயுள்ளார் //

  கடவுளே. மிகவும் வருத்தமான செய்தி.

  ReplyDelete
 20. எடிடட்டர் சார்.. வணக்கம்.
  நான் ஆர்டர் கொடுத்திருப்பது 35-இரத்தப்படலம்..குறைச்சுச் சொல்றீங்க....இன்னும் ஏஜன்ட்களுக்கு சப்போர்ட் செய்தா இதைவிட கூடுதலாகும். எல்லாம் உங்கள் கையில்....

  ReplyDelete
  Replies
  1. அடியேன் இதுவரை 36 இரத்தப்படலம் இன்னும் வரும் என எதிர்பார்க்கிறேன்...

   Delete
  2. வாழ்த்துகள் இருவருக்கும்.

   Delete
  3. @ நட்புக்காக & 13க்காக

   கலக்குகிறீர்கள் நண்பர்களே!! மகிழ்ச்சி மகிழ்ச்சி! இன்னும் சிறப்பாகச் செயல்பட என் வாழ்த்துகள்!!

   Delete
  4. ஜெகன் சார்& பழனி@ சிறப்பு... எல்லா புகழும் XIIIக்கே...

   Delete
  5. அட்டகாசம் ஜேம்ஸ் ஜெகன் மற்றும் பழனி. பாராட்டுக்கள்.

   Delete
 21. *லயன் # 400 மெகா டெக்ஸ் புக்

  * இரத்தப் படலம் வண்ணத்தொகுப்புகள்

  *2022 அட்டவணை இறுதிப்படுத்தல் ; அது சார்ந்த கதைகளுக்கு சகல ஏற்பாடுகளையும் செய்தல் ; and most importantly, அவற்றிற்கான 'டப்பை' தயார் செய்து அனுப்பிடல் !

  *2022 கேட்லாக் ரெடி செய்தாக வேண்டும் !

  *லயன் தீபாவளி மலர் with டெக்ஸ்

  * And the Daddy of them All : முத்து காமிக்ஸ் ஆண்டுமலர் # 50 !//

  ஆஹா படிக்க படிக்க ஆனந்தம்...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் பழனி. பேரானந்தம்

   Delete
  2. ///ஆஹா படிக்க படிக்க ஆனந்தம்.///

   உண்மைதான் பழனி. பேரானந்தம்

   Delete
  3. இல்லையா பின்னே....

   Delete
 22. // இந்தக் கூத்துக்களுக்கு இடையிடையே இன்னொரு சத்தமில்லா முயற்சியும் ஓடி வருது ! அதனில் மட்டும் ஜெயம் கிட்டி - பட்டாப்பட்டியின் மீதமும் டார் டாராயிடும் என்பது மட்டும் புரிகிறது ! // இவ்வளவுக்கு நடுவிலும் இன்னொரு முயற்சியா?? திருவிழா தான் என்று சொல்லுங்கள்.

  ReplyDelete
 23. ஹார்ட்கவர் இல்லாதது சற்று ஏமாற்றமே சார்..ஆனாலும் இப்போதைய சூழ்நிலையை புரிந்துகொண்டேன் சார்..

  ReplyDelete
 24. இ.ப. பிழைத்திருத்தங்கள் ஓடிக்கொண்டுள்ளன ஆபீசில் ! Corrections போட்டுத் தந்திருந்த நண்பர்களில் சிலர் பிரமாதமாகவும், சிலர் ஆர்வ மிகுதியினில் பொங்கோ பொங்கென்று பொங்கவும் செய்திருப்பதால் - லைட்டாக சிண்டைப் பிய்க்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது எனக்கு///

  ஹிஹி

  ReplyDelete
  Replies
  1. Ha ha... இந்த பிரச்சனையால் தான் ஆசை இருந்தாலும் நான் production உள்ளே வந்து இம்சிப்பது இல்லை

   Delete
 25. Deadwood Dick - ஒரிஜினலாகவே வரட்டும் சார். திண்டுக்கல் டிக் எல்லாம் வேண்டாம்.

  ReplyDelete
 26. ப்ளூகோட் பட்டாளம் எனக்கு மிகவும் பிடிக்கும்! இதனை சிரிப்பு கதை என்று சொன்னாலும் யுத்தத்தின் பின்னால் நடக்கும் கூத்துக்கள், தகிடு தத்தங்கள், இழப்பு, ஏமாற்றம் என பல வலி மிகுந்த பல விஷயங்கள் உள்ளன. நேரில் பார்க்காத விஷயங்களை இது போன்ற கதைகள் மூலம் கற்றுகொடுக்கும் விஷயங்கள் ஏராளம். ராணுவ வீரர்கள் மேல் உள்ள மரியாதையை கூடுகிறது!

  இதனை சிரிப்பு என்ற இனிப்பை கலந்து கொடுத்து இருக்கிறார்கள். சிரிப்பு இல்லாமல் இந்த கதையை கொடுத்து இருந்தார்கள் என்றால் ஒரு சில கதைகளை ரசித்து இருக்கலாம், ஆனால் முழு தொடரையும் அப்படி கொடுத்து இருந்தால் கண்டிப்பாக இப்போது சிந்தித்து சிரித்து ரசிக்கும் விஷயம் நடந்து இருக்க வாய்ப்புகள் குறைவு என்னளவில். எனக்கு இந்தக்கதை நமது சந்திரபாபு காமெடி போன்று, அவரின் காமெடி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்!

  ReplyDelete
  Replies
  1. இந்தமுறை வந்த கதை கார்ட்டூன் பாணியில் போரின் அவலங்களை உறுத்தாத வகையில் வெளிப்படுத்தியுள்ளது. சிரிப்பு ஜானரில் வந்ததினால் போர் தொடர்பான விபரங்கள் உறுத்தாமல் ரசிக்கக்கூடிய வகையில் உள்ளது. சிரிப்பு இல்லையென்று நினைக்கவேண்டாம் இடையிடை புன்னகை மலர்கிறது நாம் அறியாமலே.

   இதுமாதிரி கதைகள் தொடர்ந்தால் என்னளவில் நலமே!

   Delete
  2. ////இதனை சிரிப்பு என்ற இனிப்பை கலந்து கொடுத்து இருக்கிறார்கள்.////

   யெஸ்!

   Delete
 27. மீம்ஸ் சூப்பர் நண்பர்களே! பாராட்டுக்கள்!!

  ReplyDelete
 28. //இந்தக் கூத்துக்களுக்கு இடையிடையே இன்னொரு சத்தமில்லா முயற்சியும் ஓடி வருது ! அதனில் மட்டும் ஜெயம் கிட்டி - பட்டாப்பட்டியின் மீதமும் டார் டாராயிடும் என்பது மட்டும் புரிகிறது ! //

  இம்முயற்சியின் ரிசல்ட் எப்படி அமைந்தாலும் இறுதியில் பதிவிட்டு விடுங்கள் சார். தெரிந்து கொள்ளும் ஆவலை அடக்க முடியவில்லை.

  ReplyDelete
 29. // இந்தக் கூத்துக்களுக்கு இடையிடையே இன்னொரு சத்தமில்லா முயற்சியும் ஓடி வருது ! அதனில் மட்டும் ஜெயம் கிட்டி - பட்டாப்பட்டியின் மீதமும் டார் டாராயிடும் என்பது மட்டும் புரிகிறது ! //

  அது என்னவென்று கொஞ்சம் சொல்ல முடியுமா பெவிகால் பெரியசாமி :-) எடிட்டர் mind வாய்ஸ் (ஆ அஸுக்கு அது சொன்னா நீங்க இன்னொரு முட்டு சந்தை காண்பிக்கவா! எஸ்கேப் கோபால் :-0)

  ReplyDelete
 30. First meme is extremely super 😄😄😄😄😄😄😄

  எல்லா வார மீம்ஸ்களிலும் தொடர்ச்சியாக சுஸ்கி விஸ்கியும் இடம் பிடிப்பது எடிட்டருக்கு கடுப்பேற்றினாலும் எங்களுக்கு மகிழ்ச்சி

  ReplyDelete
 31. கௌ-பாய் எக்ஸ்பிரஸ்!

  மறு மறு வாசிப்பு!

  ஒரு விடுமுறை நாள் சிறப்பாகப் போச்சு!

  இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின்புலம் 150 ஆண்டுகளுக்கு முன்பாகவே போடப்பட்டு விட்டதை கட்டியம் கூறும் கதையிது!

  மறு மார்க் 10/10

  ReplyDelete
  Replies
  1. இதுவரை வாங்கிய அனைத்து காமிக்ஸ்களையும் படித்தாகிவிட்டது!

   பெண்டிங்கில் இருந்த அதிகாரி உட்பட!

   இனி வார இறுதியில் இரண்டு கதைகளையாவது மறுவாசிப்பு செய்ய திட்டமிட்டிருக்கிறேன்!

   ஃபோன் பயன்பாட்டை மட்டுப்படுத்தியதால் ஏகப்பட்ட நேரம் மிச்சம்!

   இயற்கையின் அருளால் ஜனவரி-1ல் ஆரம்பித்த நம்ம தொழில் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது! 75% கடன் வகையறாக்களை நேர் செய்தாகிவிட்டது! கொரானா மட்டும் கொஞ்சம் கருணை வைத்து இடைவெளி விட்டால் தம் புடிச்சரலாம்!

   பல நெருக்கடி நேரங்களில் யார் துணை நிற்கிறார்களோ இல்லையோ?? லக்கியும், சிக்பில்லும் கைவிடுவதில்லை!

   Delete
  2. எந்த அளவிற்கு ஆரோக்கியமான பொழுதுபோக்குக்கு இடம் கொடுக்கிறோமோ, அந்த அளவிற்கு வார வேளை நாட்கள் எளிதாகிறது!

   அதிலும் பங்குச் சந்தை சிண்டை பிய்க்கும் வேலை என்பதால் போன் பயன்பாட்டை குறைத்து காமிக்ஸ் படிக்க தொடங்கியது நல்ல பலனை கொடுக்கிறது என்னளவில்!

   Delete
  3. அருமை மிதுன் அருமை அருமை. வாழ்த்துக்கள் தொழில் நல்ல முறையில் போய்கொண்டு இருப்பதற்கு. நானும் இது விடயமாக தங்களிடம் பேச வேண்டும் call செய்கிறேன்.

   Delete
  4. // இயற்கையின் அருளால் ஜனவரி-1ல் ஆரம்பித்த நம்ம தொழில் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது! 75% கடன் வகையறாக்களை நேர் செய்தாகிவிட்டது! //

   மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் வெற்றி. வாழ்த்துக்கள் மிதுன்.

   Delete
  5. அருமை மிதுன்! மனதை இதமாக வைத்திருக்க கார்ட்டூன்கள் உதவுவது மகிழ்ச்சி! தொழில் சூடுபிடித்து சீக்கிரமே சிகரங்களைத் தொட என் வாழ்த்துகளும்!

   Delete
  6. நன்றி! நண்பர்களே!

   Delete
 32. காற்றில் கரைந்த கலைஞன்

  அதிரி புதிரி வேகம், attractive colouring & artwork. மொத்தத்தில் நிறைவான படைப்பு. கிளாசிக்கல் ஜானிக்கு ஒரு Thumps up.

  நண்பர்களிடம் ஒரு சில கேள்விகள்,

  1. கார் விபத்து தற்செயலானது இல்லை என்றால் அது எவ்வாறு நடந்தது. யார் செய்தது. அந்த விசிரி தான் காரணம் எனில் எவ்வாறு அதை நிகழ்த்தினாள். அதைப் பற்றி எங்கேயும் குறிப்பிடவில்லையே?

  2.போட்டோ எடுத்த நபர் க்ளைமாக்ஸில் ஜானியிடம் கூறும் போது "முதலில் விபத்து தான் என்று எண்ணியிருந்தேன் பின்பு தான் புரிந்தது, அதனால் தான் ஜானியிடம் சொல்ல வந்தேன்" என்கிறார். என்ன சொல்ல வந்தார் என்பதும் என்ன நடந்தது என்றும் தெரியப்படுத்தவில்லை.

  3. கையெழுத்து போலி என்று எதை வைத்து ஜானி அறிந்து கொள்கிறார். ஒருவேளை ஒரிஜினல் கையெழுத்து முந்தைய பக்கங்களில் இருந்ததா. அதை நாம் தான் கணித்து கொள்ள வேண்டுமா.

  ஒருவேளை இதற்கான பதில்கள் புத்தகத்தில் உள்ளனவா. நான் கவனிக்க தவறி விட்டேனா.

  ReplyDelete
  Replies
  1. 3.உங்கள் ஊகம் சரியே.போலி போட்ட கையெழுத்தையே ஜானி ஊகிக்கின்றார்.குற்றவாளியை கைது செய்கின்றார்.

   Delete
  2. எல்லா புதிருக்கான விடைகளும் இறுதிப் பக்கங்களில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறதே நண்பரே?!!

   Delete
  3. 2.கையெழுத்துப் புத்தகத்தில் ஒரிஜினல் நடிகரின் கையெழுத்திற்கும் போலி நடிகர் கையெழுத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசத்தையே புகைப்படக்காரர் ஜானியிடம் சொல்ல வருகின்றார்.

   Delete
 33. இந்தக் கூத்துக்களுக்கு இடையிடையே இன்னொரு சத்தமில்லா முயற்சியும் ஓடி வருது ! அதனில் மட்டும் ஜெயம் கிட்டி - பட்டாப்பட்டியின் மீதமும் டார் டாராயிடும் என்பது மட்டும் புரிகிறது ! ஸ்டெல்லா கிட்டே சொல்லி, நம்ம ஜானி நீரோ தீவாளிக்கென வேங்கி வச்சிருக்கக்கூடிய பூப்போட்ட டிராயர் ஒன்றை முன்ஜாக்கிரதையாய் லவட்டியாகணும் போலும் !!//////

  ஆஹா...ஆனந்தம்....ஆனந்தம்.... ஆனந்தமே !!!!.

  முயற்சி கெலிக்க வாழ்த்துகள்.

  ReplyDelete
 34. மீம்கள் 5ம் பஞ்சவர்ணம் (கலர்பா....)!!!

  ReplyDelete
 35. //// So வரும் ஆண்டுகளில் ப்ளூவார் வருவர் ; ஆனால் இயன்றமட்டுக்கு போரின் இரத்த சகதிகள் தெறிக்காத விதமாய் !////

  குட் நீயூஸ்.... கார்டூன்னுட்டு கி.நா.வா தந்தா இப்படி மெயில் வருவது இயல்புதானே சார்...!!!

  ReplyDelete
 36. ஆண்டுமலர் அட்டை அதகளம் சார்...

  ப்ளூ,
  பிங்,
  ரெட்,
  கோல்டு,
  கிளிபச்சை...

  என மீண்டும் ஒரு பஞ்சவர்ணக்கிளி....

  "லயன் ஜாலி ஆண்டுமலர்"--- எழுத்தாளர் ஸ்டைல் அழகு!

  சிங்கத்தின் சந்தோசத்தை பார்க்கும் போது நமக்கும் கேக் திங்கும் ஆசை எழுகிறது.

  ரின் டின் கேன் பின்னட்டையில் கலக்குது...!!

  ரின் டின் வரும் கதையெல்லாம் மை ஃபேவரைட்... வரும் மாதத்தில் இதான் பர்ஸ்ட் ரீடிங்!

  37 என்பதை 73 ஆக மாறுவதை பார்க்க ஆசை படுகிறது மனம்.....!!!

  ReplyDelete
 37. ///இது ஹார்டகவர் இதழல்ல !///

  ---நோ ப்ராப்ளம் சார். வழக்கம்போல தங்களது முடிவுக்கு எங்கள் ஆதரவு உண்டு...

  ReplyDelete
 38. ///அட்டையினில் மினுமினுக்கும் எழுத்துக்கள் மெருகூட்டிடும் என்பது கொசுறுத் தகவல் ! ///.

  பிரயாணினா லெக் பீஸ் இருப்பது இயல்பு தானே...!!!!

  ReplyDelete
 39. லக்கி அட்டைப்படம் அருமை. இரண்டு கதைகளின் டீசர் பக்கங்கள் சிரிப்புக்கு உத்திரவாதமான கதைகள் என சொல்கிறது.
  இரண்டு கதைகளையும் படிக்க மிகுந்த ஆர்வத்துடன் எனது குடும்பத்தினர் காத்துக்கொண்டு உள்ளனர்.

  ReplyDelete
  Replies
  1. நானும் நானும்

   Delete
  2. நானும் நானும் நானும்

   Delete
 40. //*லயன் # 400 மெகா டெக்ஸ் புக்///

  ---ஆஹா...


  //* இரத்தப் படலம் வண்ணத்தொகுப்புகள்///

  ---ஓஹோ..

  //*2022 அட்டவணை இறுதிப்படுத்தல் ; அது சார்ந்த கதைகளுக்கு சகல ஏற்பாடுகளையும் செய்தல்//

  ---பேஸ் பேஸ்..

  ///*2022 கேட்லாக் ரெடி செய்தாக வேண்டும் !///

  ---செம..செம...

  ///*லயன் தீபாவளி மலர் with டெக்ஸ்//

  ---யாஹீ...ஹீ...ஹீ....யா...யா..ஹீ..


  ///* And the Daddy of them All : முத்து காமிக்ஸ் ஆண்டுமலர் # 50 !///

  ----ஓஓஓஓஓஓஓ....வாவ்வ்வ்வ்வ்.....!!!

  வரிசை கட்டி அடிக்குது விருந்துகள்....😍😍😍😍😍😍😍

  ReplyDelete
 41. /// திண்டுக்கல் டிக் ok தானா ?///

  Nooooooooooooooooooooooooooooooooooooooooooooo...  ///இல்லாங்காட்டி முட்டுச் சந்தில் next மீட் பண்ணிப்போமா////

  ---நாம பார்க்காத முட்டுச்சந்தா????
  அப்படியே கொடுங்க சார்.....!!!!ப்ளீஸ்!

  ஒரிஜினாலிடியை உணரனும் ஒவ்வொரு முறையும்!!!

  ReplyDelete
  Replies
  1. ஒரிஜினாலிடியை உணரனும் ஒவ்வொரு முறையும்!!!

   +1000

   Delete
 42. //Corrections போட்டுத் தந்திருந்த நண்பர்களில் சிலர் பிரமாதமாகவும், சிலர் ஆர்வ மிகுதியினில் பொங்கோ பொங்கென்று பொங்கவும் செய்திருப்பதால் -////

  ---அட டா.. ஓவரா பொங்கிட்டாங்களோ!!!!

  ReplyDelete
 43. ///ஜெயம் கிட்டி - பட்டாப்பட்டியின் மீதமும் டார் டாராயிடும் என்பது மட்டும் புரிகிறது ! ///

  இது..இது..இதைத்தான் எதிர்பார்க்கிறோம்...!!!

  ReplyDelete
 44. சார் எங்கள் மகிழ்ச்சிக்காக உங்கள் ஆரோக்கியத்தை கெடுத்துக்கொள்ள வேண்டாம் கொஞ்சம் ஓய்வும் அவசியம் சார் - அன்போடு சர்மா

  ReplyDelete
  Replies
  1. எனது எண்ணமும் இதுவே சர்மா.
   +1

   Delete
 45. தனது துணைவரை... இழந்த மொழிபெயர்ப்பாளருக்கு எனது ஆழந்த இரங்கல்கள்... அவரும் அவரது குடும்பத்தினரும் இந்த துயரிலிருந்து விரைவில் மீண்டு வருவார்கள் என நம்புகிறேன்...

  ReplyDelete
 46. ####திண்டுக்கல் டிக் ok தானா####


  டபுள் ஒகே சார்..

  ReplyDelete
 47. சார் அருமை . இ ப க்காகவும்....அடுத்த வருட அட்டவணைக்காகவுமான ஏக்கத்த கூடுதல் படுத்தி விட்டீர்கள் .... லக்கி அட்டை அதகளம் வானவில்லின் வர்ணம் போல.... அனைத்து நிறமும் தெறிக்க...எழுத்துரு தனியே நேரடியாக ஈர்க்குது.ஜிகுனா துகள்களுக்காக அடுத்த மாதமும் ஆவலோட

  ReplyDelete
 48. டெட்வுட் ஒரிஜினலின் படியே வரட்டும் சார்!

  ReplyDelete
 49. தான் மட்டும் வாழாமல் பிறரும் வாழ வேண்டும் என்று நினைத்த தங்களின் பண்பிற்கு.. ❤❤❤❤❤ எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்( அதுதான் சார் இரத்த படலம் புக்கிங் நிறுத்தியது )

  ReplyDelete
 50. முத்து ஐம்பதாவது ஆண்டு மலர் சிக்கனம் எனும் சிறையில் தள்ளாமல் வானமே எல்லை என்று முடிவெடுத்த தங்களின் பொற்பாதங்களுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நானும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

   Delete
 51. என்னமோ திட்டம் இருக்கு...

  ReplyDelete
 52. //என்னைப் பொருத்தவரை... "இனியெல்லாம் ரணமே" தான் இந்த மாதத்தின் மனதை உலுக்கும் கிராபிக் நாவல்...//


  ப்ளூகோட்ஸ் வர ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டன..

  இன்னும் நம் நண்பர் ப்ளூகோட்ஸ் ப்ளாக் காமெடி (with strong emphasis on comedy) வகையில் வருவது என அறியாதிருப்பாரா என்ன?

  Taboo ஆன விஷயங்கள், embarrassing or painful to discuss போன்ற விஷயங்களை ஆடியன்ஸ் புன்னகைக்கும் வண்ணம் தருவதுதான் ப்ளாக் ஹியூமர் என யாவரும் அறிவர்..


  நினைவூட்டவே இது..


  ஆரம்பத்திலேயே எடிட்டர்சார் உட்பட எல்லாரும் எழுதியாகிவிட்டது..

  If one could not smile or laugh then its a failure of the concerned person or the failure of the creators to convince that particular reader to approach in that way..

  ReplyDelete
  Replies
  1. எது எப்படியோ, கடிதம் எழுதிய அந்த நண்பர் ஒரு இரக்க சிந்தையுள்ளவர் என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது!

   Delete
  2. நண்பர்களே பாழாய்ப் போன யுத்தம் எனும் வரிகளை விளக்க காட்சிகள்...யுத்தம் வேண்டாம்டா என எச்சரிக்கும் கதைதானே

   Delete
 53. ஆசிரியரே உங்களின் பணிச்சுமை அதிகரித்திருப்பது கவலை தருகிறது

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் செந்தில் சத்யா! வேலைப்பளுவைக் குறைப்பதற்கான மாற்று வழிகளை எடிட்டர் சீக்கிரமே அமைத்துக் கொள்ள வேண்டும்!

   Delete
  2. உண்மை தான் நண்பர்களே. சார் புத்தகங்கள் தயார் செய்வதில் தாமதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. உங்கள் உடல்நலம் மிகவும் முக்கியம்.

   Delete
  3. அதேதான் நண்பர்களே தங்கமுட்டை போடும் வாத்தை அறுத்துப்பார்த்த கதை நினைவுக்கு வருகிறது ஆசிரியரே தாமதமென்றாலும் பரவாயில்லை உங்கள் உடல்நலத்தில் கவனம் கொள்ளுங்கள் கொரோனா காலத்தில் எவ்வளவோ பார்த்துட்டோம் சகிச்சிகிட்டோம் தரமான பொக்கிஷங்களுக்காக தாமதத்தை தாங்கமாட்டோமா என்ன

   Delete
  4. உங்கள் உடல் நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள் ஆசானே!!!!

   Delete
 54. //திண்டுக்கல் டிக் ok தானா ? இல்லாங்காட்டி முட்டுச் சந்தில் next மீட் பண்ணிப்போமா ?//

  மார்பு துணி விலக்குகிறாள் ஒரு பெண்..

  அவள் பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டும தாயா

  அல்லது

  தெருமுனையில் நிற்கும் ஹூக்கரா என்பதை பொறுத்தே பார்வை கோணங்கள் மாறும்

  கட்ஃபீல் சொல்வதை செய்யுங்கள் ..

  விழுவது படைப்பா அல்லது பட்டுத்துண்டா என விமர்சனங்கள் முடிவு செய்யும்..

  ReplyDelete
  Replies
  1. சூப்பரா சொன்னீங்க செனா அனா!! ஏனோ இந்த விளக்கம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!!

   Delete
  2. செல்வம் அபிராமி @ நாம் பார்க்கும் பார்வைக்கு ஏற்ப காட்சிகள் மாறுபடும் என்பதை ஒத்துக்கொள்கிறேன்.

   Delete
  3. ஆனா பச்சை புள்ளைகளுக்கு அது தெரியாதே....18+ போட்டதால் நாம் ஒளிச்சி வச்சி படிக்க வேண்டியதுதான்...சிறந்த கதைகள் எப்படியோ வந்தா சரி...

   Delete
 55. ஆண்டு மலர் அட்டைப்படம் அசத்துகிறது சார்! நீண்டநாட்களுக்குப் பிறகு தொப்ளா செல்லம் ரின்டின்கேனின் அலப்பறைகளைக் காணயிருப்பதில் ஐயாம் ஏகக் குஷி!!

  ஆண்டு மலர் அமர்க்களப்படுத்தப்போவது உறுதி!!

  ReplyDelete
 56. மீம்ஸ் எல்லாமே காமெடி ரகளைகள்!!

  ReplyDelete
 57. Main theme of the blue coats stories is war how to neglect the impact of war... o don't know sir ...very good series after lucky and chikbill

  ReplyDelete
 58. -***** காற்றில் கரைந்த கலைஞன் *****

  முதல் பக்கத்தில் ஆரம்பிக்கும் விறுவிறுப்பு இம்மியும் குறையாமல் கடைசிப் பக்கம் வரை கொண்டு செல்லப்பட்டு, இறுதியில் ஒட்டுமொத்த புதிரின் முடிச்சுகளும் அட்டகாசமாக அவிழ்க்கப்பட்டிருக்கிறது!

  வண்ணக் கலவைகளும், அச்சுத் தரமும் - செம்ம்ம!!

  ஜானியையும், நாடீனையும் டீசன்ட்டாகப் பார்ப்பது மனதுக்கு நிம்மதியளிக்கிறது!

  ரிப்போர்ட்டர் ஜானி தனக்கான இடத்தை தெளிவாக உறுதி செய்துள்ளார்!

  என்னுடைய ரேட்டிங் : 10/10

  ReplyDelete
 59. ஆசிரியருக்கு இனிய காலை வணக்கம்.. lucky Luke ஆண்டு மலர் teaser பக்கங்களில் உள்ள ராமர் பச்சை நிறம் படிக்க உகந்ததாக தெரிய வில்லை.. அல்லது mobile இல் பார்க்க அப்படி தோன்றுகிறது என்று தெரியவில்லை.. font மற்றும் lucky Luke க்கும் இ‌ந்த நிறம் பயன் படுத்தபட்டுள்ளது.. சற்று கவனிக்கவும்.. நன்றி..
  மு பாபு
  Gangavalli
  சேலம் Dt

  ReplyDelete
  Replies
  1. // lucky Luke ஆண்டு மலர் teaser பக்கங்களில் உள்ள ராமர் பச்சை நிறம் படிக்க உகந்ததாக தெரிய வில்லை.. //

   +1

   நானும் படிக்க சிரமப்பட்டேன்.

   Delete
 60. ஆண்டு மலர்-"லக்கிலூக்" - ஆக ெசம சூப்பர் அட்டை டிசைனிங் சார்.. கலரிங் மிக அருமை.
  இந்த அட்டைப்படம்" ஹார்டு பவுண்ட்"-அட்டைக்கு செம சூப்பராக இருந்திருக்கும்.
  பரவாயில்லை சார்- இது நமது ஆண்டு மலர்தானே ii.
  விரைவில் வெளிவர இருக்கும்"லக்கிலூக்-சிறப்பு மலரை "(இரண்டு புதிய கதைகள்+ஒரு மறுபதிப்பு கதை) - ஹார்டு பவுண்ட்டில் சிறப்பித்துவிடலாமே சார்.. ii.

  ReplyDelete
  Replies
  1. வரவேற்கின்றேன்.ஆமோதிக்கின்றேன்.

   Delete
 61. லக்கி கதையின் டீசரில் சலூனுக்கு வந்த ரின் டின் கேன் முதலாளிக்கு டிரீங்ஸ் ஒரு நாய் குடிக்கும் பாத்திரத்தில், முதலாளி செலவில் அனைவருக்கும் டிரீங்ஸ் என்ற உடன் பார்மேன் பல நாய் குடிக்கும் பாத்திரத்தை எடுத்து டீரிக்ஸ் ஊற்றுவதை பாருங்கள். கவனமாக படத்தையும் வசனங்களையும் படித்தால் கண்டிப்பாக கார்டூன் கதைகளை ரசிக்கலாம்.

  ReplyDelete
 62. மிக மெதுவாகவே யூகித்திருக்கிறோம் சார். கலாமிட்டி ஜேன்இரண்டாம் பாகத்தின் பெயரும் பேய்நகரம் தான் என்பதை. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. ராஜசேகரன் @ எனக்கு பேய் நகரம் என்ற பெயரில் ஏற்கனவே ஒரு கதை வந்தது போல் ஞாபகம். ஆனால் உங்கள் ஞாபகசக்தி அபாரம்.

   Delete
  2. Was part of Never Before Special part 2.

   However this upcoming story is amazing - would be hilarious and people will roll over and laugh for sure - await a super comedy treat !!

   Delete
 63. இனியெல்லாம் ரணமே (சுகமே) :

  என்னை கேட்டால் இந்த மாதத்தின் மிகத்தரமான கிராபிக் நாவல் இனியெல்லாம் சுகமே தான்.

  பெயரைக் கூட மாற்றாமல், ரணமே என்றே விட்டிருக்கலாம்.

  பக்த்துக்கு பக்கம் போரின் அவலங்களையும் (கால் வைக்க இடம் இல்லையென்று சொல்லுமளவிற்கு காயம் பட்ட வீரர்களையும், சுயநினைவே இல்லாமல் இருந்தாலும், 'சார்ர்ர்ஜ்ஜ்ஜ்...' என குரல் கேட்டால் சைக்கோத்தனமாக வீறுகொண்டெழும் கேப்டனும், மருத்துவ பயிற்சியை காயமடைந்த வீரர்களிடம் பரிசோதனை முறையில் செய்து பார்க்கவே தேசிய சேவையில் இணைந்ததாக சொல்லும் மருத்துவரும், குடிக்க தண்ணீர் கிடைக்காமல் 2 பேரை காவல் வைத்து தண்ணீர் எடுக்கும் அந்த பேனலும்... இதெல்லாம் சாம்பிள் தான்),

  கேடுகெட்ட ஜெனரல்களின் சுயநல நரித்தனங்களையும் (அந்த ஜெனரல்களின் சுயநல நோக்கத்தை பார்க்கும் போது, நாட்டுக்காக சேவை செய்ய போகிறோம் என்ற நினைப்பே வராது!),

  தலைவர்களுக்கிடையில் மாட்டிக் கொண்டு வீடு வாசலற்று அல்லாடும் வெகுஜன மக்களின் இன்னல்களையும் சொல்லி உள்ள விதம் (தங்களுடைய போர் வீரர்கள் (கான்பெடரேட்ஸ்) வந்து சண்டை போட்டு, வடக்கு ராணுவத்தினரை விரட்டியடிப்பார்கள் என்ற நம்பிக்கையில் வாழிடத்தை விட்டு விலகி சென்ற மக்கள், ஊர் பற்றி எரிவது கண்டு திரும்ப வருகிறார்கள். அங்கேயும் ஒரு குரல் - உடம்பில் தெம்பிருந்தவர்கள் எல்லோரையும் ராணுவ சேவைக்கு அழைத்துச் சென்று விட்டார்கள் என்ற),

  ஆசிரியரின் அருமையான மொழிபெயர்ப்பில் அப்பப்பா ரணகளம், ரணம், ரவுத்திரம்...

  தயவு செய்து நீலம், நீளுமா என கேட்க இனியும் வேண்டாம், இவர்களுக்கு ஒரு ரெகுலர் ஸ்லாட் கொடுக்க வேண்டுமய்யா 🙏🏼🙏🏼🙏🏼💐🥰🥰🥰😩

  ReplyDelete
 64. ப்ளூகோட்ஸ் வருவார்கள் என்று நம்பிக்கை கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அவலச்சுவை தான் அந்த கதைகளின் அடிநாதம் எனும் போது, அதை அப்படியே கொடுப்பது நன்று. அவர்களிடம் லக்கிலூக் போலவே, சிக்பில் போலவோ காமெடிகளை எதிர்பார்க்காமல் வீரியமான களங்களை எதிர்பார்த்து இருந்தால் நன்றாகவே இரசிக்கும். இந்த மாதத்தில் வந்த கதை, போரின் அவலங்களை அழகாக, பிசகாமல் படம் பிடித்துக் காட்டியுள்ளது. இதுவரை வந்த ப்ளூகோட் கதைகளில், என்னிடம் நிறையவே தாக்கத்தை ஏற்படுத்திய கதை இது.

  இது தொடர வேண்டும்!

  ReplyDelete
 65. Deadwood dick ஐ சந்தாவில் சேர்க்காமல் அப்படியே Book fair (Online/offline) ஸ்பெசல் புக்கா கொடுத்தா இன்னும் சிறப்பு.

  ReplyDelete
 66. Ratha padalam bookings completed.....??

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் இன்னும் புக்கிங் செய்யவில்லை என்றால் நமது காமிக்ஸ் விற்பனை நண்பர்கள் பழனிவேல் அல்லது ஜேம்ஸ் ஜெகனிடம் வாங்கிக் கொள்ளலாம் நண்பரே.

   Delete
 67. Bluecoats பற்றிய நண்பரின் கணிப்பு மிகச்சரியே ..கதையின் தொடக்கத்தில் காட்டப்படும் போர்க்கள காட்சிகள் லேசாக மனதை பிசையும் ரகமே. ஊர் மக்கள் மீது பெரிதாக கரிசனம் வரவில்லை கதையில் அந்த ஊர் மக்கள் தான் ராணுவத்திற்கு உளவு சொல்லி Match பாக்குற மாதிரி மேட்டுப் பகுதியில் மொத்தமா சண்டையை பார்க்க ஒன்று கூடுவார்கள், அதற்கான பலனைஇறுதியில் அனுபவிப்பாற்கள். நெஞ்சைக்கிறும் கதைகள் என்றால் 'பழி வாங்கும் பாவை' கதையைப் பாருங்கள் ...எந்த முன்அறிவிப்புன் இன்றி ஒரு கிராமத்தை சூழந்து கொண்டு மொத்த கூட்டத்தையும் கொன்றழிக்கும் கர்னல்லோடு தான் கதை ஆரம்பிக்கும் ... கனவாய் யுத்தம் (Tex) இரும்புக்கை எத்தன் (டைகர்) இரண்டுமே Railway company போட்டியால் வெள்ளையர் கிராமங்களும் செவ்வந்திய கிராமங்களும் எவ்வாறு அலைக்கழிக்கப்பட்னர் என்பதை போகிற போக்கில் விவரிக்கும் கதை...இது போன்ற கதைகளை ஒப்பிடும் போது Bluecoats ஒன்றுமே இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.

  ReplyDelete
  Replies
  1. // ஊர் மக்கள் தான் ராணுவத்திற்கு உளவு சொல்லி Match பாக்குற மாதிரி மேட்டுப் பகுதியில் மொத்தமா சண்டையை பார்க்க ஒன்று கூடுவார்கள், அதற்கான பலனைஇறுதியில் அனுபவிப்பாற்கள். //

   சரியாக சொன்னீர்கள்.

   Delete
  2. சரியே....போரைத் தடுத்தா எல்லாரும் நல்லாருக்கும்....வந்தாத்தா தெரியும்...பட்டாத்தான் புரியுங்குறீங்களா....அதத்தான் இக்கதய பாத்து பட்டதால் தான் நண்பரின் பதில்....அவர் போரின் அவலங்கள் உணர்ந்துட்டார்

   Delete
 68. //ஆனால் ப்ளூகோட் பட்டாளம் லைட்டாகவும்,//

  ப்ளூகோட் பட்டாளம் is a 100% Satirical comedy... Sir! One of the best Bluecoat story sofar. Some criticism may come, due to the background of the story... But in depth 'Comic'al(நகைச்சுவை), is a basic name for that na.

  ReplyDelete
 69. //ப்ளூகோட்ஸ் வருவார்கள் என்று நம்பிக்கை கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. அவலச்சுவை தான் அந்த கதைகளின் அடிநாதம் எனும் போது, அதை அப்படியே கொடுப்பது நன்று. அவர்களிடம் லக்கிலூக் போலவே, சிக்பில் போலவோ காமெடிகளை எதிர்பார்க்காமல் வீரியமான களங்களை எதிர்பார்த்து இருந்தால் நன்றாகவே இரசிக்கும். இந்த மாதத்தில் வந்த கதை, போரின் அவலங்களை அழகாக, பிசகாமல் படம் பிடித்துக் காட்டியுள்ளது. இதுவரை வந்த ப்ளூகோட் கதைகளில், என்னிடம் நிறையவே தாக்கத்தை ஏற்படுத்திய கதை இது.

  இது தொடர வேண்டும்!//

  Well said Boopathy sago.
  I strongly agree with you...

  ReplyDelete
 70. காற்றில் கரைந்த கலைஞன்


  மிகவும் ரசித்துப் படித்தேன்... அருமையான த்ரில் கதை... கடைசிவரை உடையாத suspense... இடியாப்பச் சிக்கல் மிதமாகவே இருப்பது ஒரு பெரிய plus...

  அற்புத printing... அழகு colouring... Crispஆன மொழிபெயர்ப்பு...

  ஆண்டுக்கு 2-3 slotகள் ரிப்போர்ட்டர் ஜானிக்கு கிடைத்தால்... மிக மகிழ்ச்சியாக இருக்கும் சார்...

  என் மார்க்... 100/100

  ReplyDelete
  Replies
  1. // இடியாப்பச் சிக்கல் மிதமாகவே இருப்பது ஒரு பெரிய plus. //

   +1

   Delete
 71. //ஹார்ட்கவர் இல்லாதது சற்று ஏமாற்றமே சார்..ஆனாலும் இப்போதைய சூழ்நிலையை புரிந்துகொண்டேன் சார்..//

  I too disappointed.. But what to do if is not affordable...?

  ReplyDelete
 72. மின்னும் மரணம்!

  சிகுவாகுவா சில்க்!!

  மறு மறு மறு... வாசிப்பு!!!

  ReplyDelete
  Replies
  1. இப்புத்தகத்தை படிக்க கையில் எடுக்கும் போதெல்லாம் மனம் துள்ளல் போடுவதை தவிர்க்க இயலவில்லை!!!

   Delete
 73. உண்மையின் உரைகல் என்னையா கதையிது பக்கத்துக்கு பக்கம் சிரிப்பு வித்தியாசமான கதை வித்தியாசமான புதிர் அட்டகாசமான கிளைமாக்ஸ். செம எதிர்பாராத சூப்பர் கதை. மிகவும் ரசித்தேன்.

  டிடெக்டிவ் ஸ்பெஷல் அனைத்து கதைகளும் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. முத்துக்கள் மூன்றும் சூப்பர். அருமையான கதை தேர்வுகள்.

   Delete
 74. சமீப ஆண்டுகளாக நமது இதழ்களின் அட்டைப்பட வடிவமைப்பு மற்றும் ஃபாண்ட் தேர்வுகள் சிறப்பாக இருந்தன. ஆனால், ஜுன் மாத இதழ்களின் அட்டைப்பட வடிவமைப்பு, ஃபாண்ட் தேர்வுகள் சுமாருக்கும் கீழேதான்.

  ReplyDelete
 75. மார்ச் முதல் பல இதழ்களை படிக்க இயலவில்லை ..ஒவ்வொன்றாக படித்து வருகிறேன்

  நெஞ்சே எழு !

  கண்ணனும் ரம்மியும் பின்னே ஒரு தமிழாசிரியரும்

  தமிழாசிரியர் : இன்னைக்கு சில அணிகளை [ அணில்கள்னு படிச்சு புடாதீங்க!!!!EBலேர்ந்து வந்து அள்ளிகிட்டு போய்டுவாங்க] பத்தி பாக்க போறோம்!!!1 கண்ணன் ! நெஞ்சே எழுவை வச்சு ஒரு அணியப் பத்தி சொல்லு பாப்போம்

  கண்ணன் : நெஞ்சே எழுவை படிச்சபின்னாடி நான் என்ன உணர்வுக்கு ஆளானேன்னு சொல்றேன் ..
  உள்ளம் குளிர உரோமம் சிலிர்த்துரையும்
  தள்ளவிழி நீரரும்பத் தன்மறந்தேன்
  இது தன்மை நவிற்சி அணி அய்யா!!!
  தமிழாசிரியர்: அற்புதம் ! உள்ளதை உள்ளபடி சொல்றது இதுதான் .
  கதையை படிச்சுவுடனே கண்ணனுக்கு மனசு குளுந்து போச்சு, மயிர்க்கால் சிலிர்த்து போச்சு, கண்ணுல நீர் ததும்புது, வார்த்தைகளே வர்ல, தன்னையே மறக்கற நிலை வந்துச்சு
  உவமானம் , உவமேயம்,மிகைப்படுத்தறது ,இல்லாதது சொல்றது- இதெல்லாம் இல்லங்கிறதால இது தன்மை நவிற்சி அணி…

  ரம்மி ! நீ நெஞ்சே எழு –வில் ஒரு அணி சொல்லு பாக்கலாம் !!!

  ரம்மி : நெஞ்சே அழு –ங்கற இந்த..

  கண்ணன் : [ கடுப்புடன்] அது நெஞ்சே எழு
  ரம்மி : நெஞ்சே விழு –ங்கற இந்த..
  கண்ணன் : [ எரிச்சலுடன் ] அது நெஞ்சே எழு
  ரம்மி : நெஞ்சில் புழு –ங்கற இந்த..
  ,கண்ணன் : [ அலுப்புடன் ] அது நெஞ்சே எழு
  ReplyDelete
  Replies
  1. தமிழாசிரியர் : ரெண்டு பேரும் தெனாலி படத்தை இங்கே ஓட்டாதீங்க …..

   ரம்மி : ‘பஞ்சே பற ‘ங்கர இந்த புத்தகத்தை பத்தி வஞ்சப் புகழ்ச்சி அணி பாடலாம் ..
   புகழ்ச்சி யாராவது பாடட்டும்..
   வஞ்சம் நான் பாடறேன்..

   தோ .. அந்த பாடல்..   முன்னே கடிவாளம், மூன்று பேர் தொட்டு இழுக்கப்
   பின்னே இருந்து இரண்டு பேர் தள்ள – எந்நேரம்
   வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை
   மாதம் போம் காத வழி!

   தமிழாசிரியர் : கண்ணன்! அசத்தலான பாடல் …இதை நெஞ்சே எழுவுக்கான புகழ்ப்பாடலாக மாற்றுக!!!

   கண்ணன் :
   எல்லாருக்கும் பொதுவான நீதி என்பதை வேதம் எனக் கொண்ட டெக்ஸ் வில்லரின் -விகடராமன்- குதிரை –அதாவது நெஞ்சே எழு எனும் இக்கதை

   கதைக்களம்
   கதாமாந்தர் சித்தரிப்பு
   கதை சொல்லிய யுக்தி

   ஆகிய மூன்றால் முன் எடுத்து செல்லப்பட

   அதகள சித்திரங்கள்,
   விறுவிறுப்பான கதைப்போக்கு

   ஆகியவை பின்புலமாய் இருக்க

   இக்கதையாய் மீண்டும் மீண்டும் படிக்க

   இம்மாதம் போனதே தெரியவில்லை

   Delete
  2. தமிழாசிரியர் : ரம்மி ! இரட்டுற மொழிதலில் வஞ்சப்பகுதி சொல்லுக!   நியாயம்டா , நீதிடான்னு சொல்லிட்டு திரியிற [ அத்துவான காட்டுல இருந்த பார்மேனை உதவி செய்ய சொல்லிப்புட்டு ஆறடி குழியில புதைய வுடுறது என்ன நீதியோ , நாயமோ தெர்ல] அதிகாரியின் மற்றுமோர் நோஞ்சான் குதிரையாகிய நெஞ்சில் பளு எனும் இக்கதையை

   அதிகாரி
   கிட் வில்லர்
   கார்சன்

   ஆகிய மூன்று பேரும் சேர்ந்து முனாடி எடுத்து போக பார்க்க

   பின்னாடிலேர்ந்து

   டைகர் ஜாக்

   நவஹோக்கள்

   ரெண்டு பேரும் தள்ளப் பாக்க

   அதே பழைய பழி தீர்க்க பாக்குறது,
   தடம் மாறிய அபாச்சே கும்பல்
   ஒத்தைக்கு ஒத்தை
   போக்கிரி கும்பலை துரத்தறதுன்னு
   கதை நகராம சண்டித்தனம் பண்ணுது

   கஷ்டப்பட்டு படிக்க ஒரு மாசம் ஆயிப்போச்சு

   தமிழாசிரியர் : பலே ! பலே!

   Delete
  3. கண்ணன்! இக்கதையில் வேற்றுமை அணி காட்டமுடியுமா?

   கண்ணன்: முடியும் அய்யா!
   அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்கும்
   திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் - திங்கள் மறுவாற்றுஞ் சான்றோரஃது ஆற்றார்; தெருமந்து தேய்வர், ஒருமாசு உறின்.
   பக்கம் –ல் டெக்ஸ் வில்லர் சொல்லுகிறார்..
   சுயநலத்துக்காக என் துப்பாக்கி முழங்கும் நாள் என் இறந்த நாளாக இருக்குமென்று

   இங்கு வான்வெளியில் ஒளி கொடுக்கும் நிலவும் சமூக வெளியில் நீதி வெளிச்சம் கொடுக்கும் டெக்ஸு-ம் ஒன்றுதான்

   எனினும் நிலவு களங்கம் தாங்கி நிற்கும் .
   டெக்ஸ் களங்கமான செயல் செய்யும் நிலை ஏற்படின் உடலில் உயிர் இருக்காது என சொல்வதன் மூலம் நிலவை காட்டிலும் உயரே நிற்கிறார்..

   முதலில் ஒற்றுமை காட்டி பின் வேறுபடுத்தி காட்டுவதால் இது வேற்றுமை அணி ..

   Delete
  4. தமிழாசிரியர் : அபாரம்.. நேரம் முடிந்தது. யாவரும் செல்லலாம்..

   .ரம்மி : இக்கதையில் அணி இல்லாமல் ஒரு சிறுகுறிப்பு வரையலாமா அய்யா?

   தமிழாசிரியர் : ஓ ..தாராளமாக!!!!
   ரம்மி : டெக்ஸ் துப்பாக்கி ரவைகள்

   இதற்கென்ன இலக்கண குறிப்பு??/

   ரம்மி :

   இருந்தன
   இருக்கின்றன
   எப்போதும் இருக்கும்

   வினைத்தொகை அய்யா

   Delete
  5. செனா அனா....🤣🤣🤣🤣🤣🤣🤣

   ஆனா கண்ணனும், ரம்மியும் இவ்வளவு டீசன்ட்டா தன் வாத்தியாரிடம் பேசியிருப்பாங்கன்னா நினைக்கறீங்க?!! 😝😝😝😝

   Delete
  6. அட்டகாசம் செனா... கையாண்ட அழகிய வரிகளுக்கு வணக்கம்...தன் தமிழ் தேன் தான்

   Delete
  7. செனா அனா ஜீ செம :-)))))

   Delete
  8. "நெஞ்சே எழு"க்கு சிறப்பு--- சிறப்பு செய்தீர் ஐயனே!


   க்ளைமாக்ஸ்ல தைரியமாக சவால்விட்டு சூட் அவுட்ல நெஞ்சை நிமிர்த்தி நிற்பதால் தான்,

   " நெஞ்சே எழு"--- னு பெயர் பெற்றது??????

   Delete
  9. 🤣🤣🤣🤣. செம. விமர்சனம் படிக்கற சார்பில கொஞ்சம் தமிழும் கத்துகிட்டோம்.

   Delete
  10. ஏன் "நெஞ்சே எழு" என பெயர் வச்சாங்கன்னு தெருஞ்சுட்டதால... நான் ஆவியா சுத்தாம இருக்க ஒரு காரணம் கம்மி..

   Delete
  11. கிரி@ இன்னொரு அம்சம் கூட "நெஞ்சே எழு"- ல இருக்கு...

   3லோகன்களும் ஒரே அப்பாவால் ஜனித்தவர்கள்....மம்மீஸ் தான் வேற வேற!

   3 பாஸ்டர்,ரால்டன்,பெளன்சர் சகோதரர்கள் ஒரே அம்மாவிடம் பிறந்தவர்கள்..டாடீஸ் வேற வேற...

   இந்த 2சோடி அண்ணன் தம்பிகளும் மொள்ளமாறித்தனத்தில் எப்படினு நாம அறிவோம்....!!

   ஆனா பாசம்னு வந்துட்டா எந்த ஜோடி செயிக்கும்னே தெரியாது...!!!

   இவர்களை விஞ்சிய சோடிதான நம்ப டெக்ஸ் & கார்சன்... பாசத்தால் கார்சன் உயிரை விடவும் துணிவாரு ஒரு இடத்தில்...

   அதனாலும் நெஞ்சே எழு!!!

   Delete
 76. //இன்னொரு ப்ளூ கோட் ஆல்பத்தோடு ஒப்பிடுகையில் எனக்கே லைட்டாக நெருடத்தான் செய்தது //
  வடிவேலுவின் காமடிகளில் இல்லாத ரணமா??? பல மீம்ஸ்களும் இந்த ரகம்தானெ?? எனது 3வயது மகள் இந்த புக்கை ரசித்த விடியொ ஒன்றை Lioncomics@yahoo.com மற்றும் WA groupற்க்கும் அனுப்பியிரருந்தேன். காமடி ஒவியங்களின் ஈர்ப்பு இருந்தாலும் நமது சார்ஜண்ட் அடிபட்டு இரெத்தம் வருவது அவளுக்கு வருத்தமாக இருந்தது. வடிவேலுவை மாடு முட்டும் போதும் 'பாவம் அந்த அய்யா" என்றுதான் தோன்றும். காமடியை புரியாத குழந்தை மனது.

  ஆயிரம் மொழி பெயர்ப்புகள் செய்த உங்களுக்கு தெரியாதது இல்லை சார்...ஒவியத்தில் இருக்கும் காமடியை தாண்டி அதன் சோகமெ உங்களுக்கு தெரிந்தால், அது மொழி பெயர்ப்பிலும் தாக்கம் ஏரபடுத்தும்.
  "ஸ்கூபி: சார்ஜண்ட் ஏன் தக்காளி புதரர்ல விழுந்துட்டாரா? சட்டையெல்லாம் சிவப்பா இருக்கு?" என காமடியை தூவி விட்டு score செய்யலாமெ?.

  கதைகளை வடிகட்ட வேண்டாமே please. கார்ட்டூன்ஸ் வருவதே கம்மி.

  ReplyDelete
  Replies
  1. இங்கே ஸ்கோர் செய்ய வாய்ப்புகளுக்குப் பஞ்சம் லேது ; ஆனால் அந்தத் தேடலுக்கான அவசியமே இதனில் கிடையாது நண்பரே ....! சூழ்ந்திருக்கும் இரத்த வாடையின் மத்தியில், நான் வம்படியாய் ஜோக்கடிக்க முற்பட்டால் அது ரொம்பவே முரணாகிடும் ! கதையோட்டத்தோடே பயணிக்கும் நகைச்சுவை மட்டுமே நிலைக்கும் என்பதை உணராதவர்களா நாம் ?

   நான் குறிப்பிடும் அந்த ப்ளூகோட் ஆல்பம் அடுத்த வருஷம் வெளியான பின்னே இதற்கும் - அதற்குமான வேற்றுமை புரியும் சார் !

   Delete
 77. //வரிகளை சற்றே நாசூக்காக்குகிறேன் பேர்வழி என்று நான் புறப்பட்டால் - கதாசிரியரின் / நாவலாசிரியரின் தலைக்குள்ளிருந்து துளிர்த்த ஹீரோவை நம் சவுகர்யத்துக்கு மாற்றிய பிழை செய்தவனாவேன்//

  Deadwood dickல் Dick ஜோக்குகள் அதிகமாக இருக்குதோ???

  ReplyDelete
  Replies
  1. ஒரு வயசுக்கு பசங்க பேசிக்கிறதில்லியா சார் - கட்டாணியும்..புட்டாணியுமாய்...?! அந்த ரகம் !

   Delete
 78. செ. அ. சார் ஓராயிரம் கமெண்ட்கள் வரலாம் ஒன்றாவது உங்கள் கமெண்ட் போல் வருமா . கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 79. எடிட்டர் சார் 

  Deadwood Dick-னு பேரு வெச்சிக்கிட்டு அப்பறம் புராணக் கதையா சார் இருக்கும்? இருக்குறத அப்படியே பிரசுரம் பண்ணுங்க. பேர கூட டைரக்ட்டா மொழி மாற்றம் பண்ணிடுங்க. (பட்ட மர**ஞ்சு!). 

  ReplyDelete
  Replies
  1. /// பேர கூட டைரக்ட்டா மொழி மாற்றம் பண்ணிடுங்க. (பட்ட மர**ஞ்சு!). ///

   🤣🤣🤣🤣🤣🤣🤣

   Delete
  2. இப்போவாச்சும் மீம்ஸோடு விட்டுப்புடுறாங்க சார் ; போகிற போக்கைப் பார்த்தாக்கா - நெசமான முட்டுச் சந்து மேட்டராக்காமல் விட மாட்டீங்க போலிருக்கே ?

   Delete

 80. நித்தமும் உந்தன் நிழலில்..

  சோடா ..இதை எவ்வகை கதை என பிரித்தறிய இயலவில்லை...

  பேமிலி டிராமா, ஆக்‌ஷன் , காமெடி என கலந்து கட்டுகிறது...


  இதன் ஓவியர் Gazzotti ,Fabien vehlmann - உடன் இணைந்து மிக பிரபலமான SEULS கதைக்கும் வரைந்திருக்கிறார் என்பதை இப்போதுதான் படித்தேன்

  SEULS- ஆங்கில மொழிபெயர்ப்பில் ALONE என வெளியானது..

  (Alone -ஐ தமிழில் வெளியிட மரத்தடி மீட்டிங் ஒன்றில் எடிட்டரிடம்வேண்டுகோள் வைத்தது நினைவில் உள்ளது)


  ஆச்சரியமென்னவெனில் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் ( 1990-களில்) வெளியான

  இரத்தப்படல 6 -(ஜேஸன் ப்ளை படலம்) ம் பாகத்தை ஸோடாவின் இப்பகுதி ஒத்திருப்பதுதான்..


  ஸோடாவின் முதல் கதை 1986 - ல் வெளியானது..

  தற்செயலான ஒற்றுமை..


  9/10


  வந்த சூட்டில் படிக்க முடிந்திருக்குமாயின் இன்னும் நன்றாக இருந்திருக்கும்...

  ReplyDelete
  Replies
  1. நைஸ் ரிவியூ செனா அனா!!!

   க்ரீன்பால்ஸ் படலம் அருமையான பாகங்கள் இ.ப.வில்... பலதடவை படித்தாலும் இன்னொரு தடவை வாசிக்க தோணும்...

   நெஞ்சே எழு& சோடா 2லும் ஒரே மாதிரி வாகனங்கள் கூட இருந்தன....!!!

   நாமாகவே கற்பனை பண்ணிட்டு அந்த பூச்சாண்டியை எண்ணிப் பார்த்து பயப்பட வேணாமே என கார்சனும், வார்னும் பேசுகின்றனர்....!!!

   Delete
  2. பிரான்க்கோ-பெல்ஜியக் கதைவரிசைகளுள் Noir என்றழைக்கப்படும் இருண்ட / இறுக்கமான த்ரில்லர்களின் பட்டியலில் SODA வுக்கு ரொம்பவே சிலாகிப்பான இடமுண்டு சார் ! வத வதவென நிறையக் கதைகளெல்லாம் கிடையாது ; ஆனால் நிறைவைத் தரும் கதைகள் அவற்றுள் பெரும்பான்மை !

   எனது ஆசை - இந்தத் தொடரிலிருந்து 3 ஆல்பங்களை ஒன்றாய்ச் சேர்த்து ஒரு முரட்டு இதழாய் வெளியிட வேண்டுமென்பது ; ஆனால் நம்மவர்களிடம் இவர் இன்னும் 100 /100 வாங்கவில்லை என்பதால் 'ஒன்றே நன்று' பாலிசியில் வண்டி ஓடிங்ஸ் !

   Delete
  3. //எனது ஆசை - இந்தத் தொடரிலிருந்து 3 ஆல்பங்களை ஒன்றாய்ச் சேர்த்து ஒரு முரட்டு இதழாய் வெளியிட வேண்டுமென்பது ;//


   அதற்கு தகுதியான கதை வரிசையாகத்தான் தெரிகிறது சார்!!!

   நண்பர்களில் பெரும்பான்மையானவர்கள்

   சம்மதம் தெரிவித்தால் சாதகமான சூழ்நிலையில் செய்யலாம் சார்!!

   ஒருமாதிரி கலவையாக நல்லாவே போகுது

   கதை!!!

   Delete
  4. //எனது ஆசை - இந்தத் தொடரிலிருந்து 3 ஆல்பங்களை ஒன்றாய்ச் சேர்த்து ஒரு முரட்டு இதழாய் வெளியிட வேண்டுமென்பது ;//

   வைங்க சார் போலிங்கை... Yes or no!! நிச்சயமாக சோடா கெலிக்கும்.

   Delete
  5. // எனது ஆசை - இந்தத் தொடரிலிருந்து 3 ஆல்பங்களை ஒன்றாய்ச் சேர்த்து ஒரு முரட்டு இதழாய் வெளியிட வேண்டுமென்பது ; //

   +1 I like this idea! may 2023 you can plan like this sir.

   Delete
  6. // வைங்க சார் போலிங்கை... Yes or no!! நிச்சயமாக சோடா கெலிக்கும் //

   ஆமா ஆமா தோர்கல் போல சோடா வும் தொகுப்பாக வந்தால் பட்டசாக இருக்கும். +10000

   Delete
  7. @ Editor,

   இவ்வளவு பணிகள் குவிந்து இருந்தாலும் ஓ வா உலகநாதனுக்கு கட்டுப்பட்டிருக்க முடியாது இல்ல? நீங்களா wanted ஆ வந்து வண்டீல (3 புக் சோடா) ஏறி ... ஹா ஹா ஹா ஹா !!

   Delete
 81. 201....

  100, 200லாம் நாம வழக்கில் வைப்பது இல்லை...
  101, 201னு தான் மொய் நோட்ல எழுதுவாங்க....!!!!

  ReplyDelete