Friday, June 04, 2021

தீர்ப்பின் நேரமிது !

 நண்பர்களே,

வணக்கம். மீம்ஸ் தோரணங்களில் நேற்றைய பதிவு களைகட்டியது ஒருபக்கமெனில், "இளவரசி" சார்ந்த பதிவுக்குமே கணிசமான ஈர்ப்பு இருக்குமென்று நான் எதிர்பார்த்திருந்தது பொய்க்கவில்லை  ! And more than the numbers - ஒவ்வொரு பின்னூட்டத்தின் பின்னணியிலும் மிளிர்ந்த  காமிக்ஸ் காதல் ; ஆதங்கங்கள் ; விருப்பு-வெறுப்புகள் சொன்ன செய்திகள் ஏகம் ! பதிவான எண்ணங்களில் புரட்சிகரமான புதுமைகள் இல்லையென்றாலும், மௌனத்தின் பக்கமே நிலைகொண்டிருந்த புதியவர்களுமே நேற்றைக்கு மனம் திறந்திருந்தது செம ஜாலி  சமாச்சாரம் !  

ரைட்டு... 'மாடஸ்டியைக் கையைப் புடிச்சு இழுக்கலாமா - கூடாதா ?' என்ற பஞ்சாயத்தினில் ஊர் கூடி, வாதப் பிரதிவாதங்களை முன்வைச்ச பிற்பாடு - தீர்ப்பு என்று ஏதேனும் ஒன்றைச் சொல்லணுமில்லியா ? தோ - சொல்லிப்புடுவோம் ! என்ன கழுத -  அது "வருங்கால ஜனாதிபதி முருகேசன்' ரேஞ்சுக்கான தீர்ப்பா இருக்கப் போகுதா ?  இல்லாங்காட்டி சின்னக்கவுண்டர் ரேஞ்சுக்கான பைசலா  அமையுமா ? என்பதை next முட்டுச் சந்து treatment -ல் புரிந்து கொள்ளமுடியும் ! So here goes !!

நிறைய நேரங்களில் ஒரு விஷயத்தை அங்கீகரிக்க அவ்வளவாய் காரணங்களை நாம் தேடுவதே இல்லை ! பந்தியினில் விருந்து ரசித்திருக்கும் பட்சத்தில் - "நல்லா இருந்துச்சுப்பா..." என்றபடிக்கு ஒரு திவ்யமான ஏப்பத்தை விட்டபடிக்கே - "ஐஸ்க்ரீம் தர்றாங்களோ ?" என்று அந்தாண்டை பார்வைகளை ஓட விட்டிருப்போம்  ! ஆனால் - அதே விருந்து மட்டும் சுகப்பட்டிருக்கா பட்சத்தில் - "சாம்பாரா அது ? உப்பில்லை..உரைப்பில்லை ! கூட்டு வேகவே இல்லை தெரியுமா ? பாயாசமா அது - ஒரு முந்திரி இல்லை ? கிஸ்மிஸ் இல்லை ?"  என்று ஆரம்பித்து, சமையல்காரரின் பூர்வீகங்களில் துவங்கி, கண்ணால ஊட்டுக்காரங்களின் சிக்கனங்கள் வரைக்கும் துவைத்திட மாட்டோமா  ? So "இளவரசி ஏன் வேணும் ?" என்பதை விடவும், "ஏன் வேணாம் ?" என்ற அணியின் கருத்துக்களையே முதலில் கவனங்களுக்குக் கொணர்கிறேன் ! 

"ஏன் கூடாது ? "  

பிரதான நெருடல் இக்கதைவரிசையின் timeline தான் ! 1963-ல் துவங்கிய இந்தத் தொடரினில் நிறைய கிளாசிக் கதைகள் 1980 க்குள் உருவாக்கப்பட்டவை ! So அந்நாளைய Cold War சூழல்கள் ; 40  வருஷங்களுக்கு முந்தைய அரசியல்களின் பிரதிபலிப்பு ; பெல்பாட்டம் காலங்களின் உடுப்புகள் ; மியூசியத்தில் இன்றைக்குப் பார்த்திடும் கார்கள் என்று ஒரு வித புராதனம் இழையோடுவதை தவிர்க்க இயலாது தான் ! So சமகாலத்து லார்கோக்களையும் ; XIII-களையும் ; ஷெல்டன்களையும் படித்த கையோடு - இந்த vintage கதைகளினுள் குதிக்கும் போது, ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் கிடைக்கும் புளியோதரையின் பீலிங்கு எழுவது புரிந்து கொள்ள முடியும் தான் !

நெருடல் நம்பர் 2 - அந்த சித்திர பாணிகள் ! இவை உருவாக்கப்பட்டது முழுக்க முழுக்க தினசரி செய்தித்தாள்களின் strip-களுக்கு மட்டுமே எனும் போது, சின்னச் சின்னக் கட்டங்கள் ; நிறைய டயலாக் ; சின்னச் சின்னப் படங்கள் என்பது தவிர்க்க இயலாது போகிறது ! தவிர, இவற்றின் மத்தியில் 5 வெவ்வேறு ஓவியர்கள் பணியாற்றியுள்ளனர் எனும் போது, ஓவியத் தரம் can border between the sublime & the ridiculous !! அட்டகாச ஜிம் ஹோல்டவே ; ரோமெரோ பாணிகளில் லயித்து விட்டு, சற்றே மாறுபட்ட ஸ்டைல் கொண்ட மற்ற ஆர்டிஸ்ட்களின் ஆக்கங்களை பார்க்கும் போது புருவங்கள் உயர்ந்திடுவதும் சகஜமே !

நெருடல் # 3 - வாசிப்பின் உலகங்கள் விஸ்தீரணம் கண்டான பின்னே, இளவரசியின் கதைகள் சற்றே ஒற்றைப் பரிமாணத்தில் இருக்கும் சமாச்சாரம் நெருடிடலாம் தான் ! அதே சர் ஜெரார்டு டார்ரன்ட் ; அதே மீன்பிடி விடுமுறைகள் ; அதே தொழிலதிபர்கள் ; அதே டாக்டர்கள் - என்று மாடஸ்டி சுழல்வதாய் Gobackmodesty# அணியினர் கருத்திடுவது புரிகிறது ! 

நெருடல் # 4 - இன்றைய hi tech வண்ண இதழ்களின் மத்தியிலும் தாக்குப் பிடித்திடும் black & white இதழ்களுள் ஒற்றை விஷயம் பொதுவாக இருப்பதை நம்மில் யாரும் கவனித்திருப்பதாய் தோன்றவில்லை ! Of course - டெக்ஸ் வில்லரைப் பற்றி நான் குறிப்பிடவே இல்லை ; அந்த மனுஷன் வேறொரு லெவல் என்பதால், அவர் கருப்பு-வெள்ளையில் வந்தாலும் சரி, பஞ்சுமிட்டாய் பிங்கில் வந்தாலும் சரி - சாதித்துக் கொண்டே இருப்பார் ! அவர் நீங்கலான பாக்கி எல்லா black & white இதழ்களும் புஷ்டியாய் இருந்தால் மட்டுமே ஸ்கோர் செய்கின்றன ! சன்னமாய் ; சிங்கிளாய் வரும்  CID ராபின் ; 13 வது தளம் ; ஜூலியா ; மார்ட்டின் etc என்று எதுவுமே பெரியதொரு ஈர்ப்பை உருவாக்கிடுவதில்லை இப்போதெல்லாம் ! அவையே ஒரு தொகுப்பாகி, சற்றே போஷாக்காய் - சமீப 3 in 1 டிடெக்டிவ் ஸ்பெஷல் போலவாவது வரும் போது வண்டி ஓடி விடுகிறது ! So ஒண்டிப்புலியாய் வலம் வரும் மாடஸ்டியைக் கையில் ஏந்தும் முன்னமே ஒரு சன்ன disappointment குடி கொண்டிடவும் செய்யலாம் என்பது எனது யூகம் ! 

நெருடல் # 5 : சமீபமாய் ; ரொம்ப ரொம்ப சமீபமாய் இங்கே ஒரு வழுக்கையன் சொன்ன தீர்ப்பு : "பழம் பெருமைகளுக்கு மட்டுமே சொந்தம் கொண்டாடியபடிக்கே தொடரும் நாயக / நாயகியருக்கு இனி மனசில் மட்டுமே இடமுண்டு !!"


ரைட்டு..இனி மறு தரப்பின் பார்வை : 

பதிவிடப்பட்டிருக்கும் நெருடல் # 1 - நியாயமான ஆதங்கமே ! So வீம்புக்கு அதனை மறுதலிக்க முயற்சிக்கும் நேரத்துக்கு, அதற்கொரு தீர்வு உள்ளதா ? என்ற தேடலில் இறங்கிடலாமன்றோ ? அதைத் தான் நான் செய்ய முயன்றேன் - நடப்பாண்டில் அட்டவணையினில் இளவரசிக்கான கதைத் தேடலினைச் செய்ய அவசியமாகிய போது ! மாடஸ்டியின் தொடர் 2000 வரையிலும் நீண்டு சென்றது எனும் போது - அதன் பிற்பகுதியின் கதைகளில் நிச்சயமாய் ரொம்பப் புராதன நெடி இருக்க இயலாது தானே ? So இனி வரும் காலங்களில் சற்றே லேட்டஸ்ட்டான கதைகளையாகத் தேடிப் பிடித்திடும் பட்சத்தில் 'நாசியில் தூசி' என்ற புகார் எழும் வாய்ப்புகள் குறைந்திடுமல்லவா ? Of course - வரிசையில் பின்னே இருப்பதால் மட்டுமே, அவை hi tech ஆக இருந்திடுமென்ற உத்திரவாதமெல்லாம் கிடையாது தான் ; ஆனால் இங்கிலீஷில் தான் அத்தனை கதைகளுமே உள்ளன எனும் போது - படித்துப் பார்த்தே தேர்வு செய்து கொள்ளலாம் தானே ? And நான் இம்முறை செய்ததும் அதுவே ! 1989-ல் வெளியான கதை & குண்டுச் சட்டிக்குள் குருத ஓட்டும் பாணியில் அல்லாது - இத்தாலியின் வெனிஸில் நிகழும் சாகசம் ; படித்துப் பார்த்த போது செம crisp ஆகத் தோன்றிட, 'டிக்' செய்தேன் ! அதுவே நீங்கள் இம்மாதமோ, அடுத்த மாதமோ, படிக்கவுள்ள சாகசம் ! So இளவரசியைக் கையைப் பிடித்து இழுப்பது என்று தீர்மானமாகிடும் பட்சத்தினில், லேட்டஸ்ட் சாகசங்களில் பிரதானமாய்த் தேடிட்டால் problem ஓரளவுக்கேனும் solved !

அதே தீர்வே நெருடல் # 2-க்குமே ! கூடியமட்ட்டிலும் நமக்கு ரசிக்கும் ஓவியரின் லேட்டஸ்ட் கதைகளையாய் மட்டுமே தேர்வு செய்திட   முயற்சித்தால் நோவு தீர்ந்தது தானே ?

நெருடல் # 3 - தீர்வில்லா சிக்கலே அல்ல ! கதையின் மையப்புள்ளி ரசித்திடும் போது சில templates அலுக்காது தான் ! லார்கோவுக்கு ஒரே template தான் ; நிறைய லக்கி லூக் கதைகளுக்கும் அதே template தான் ; 'தல' கூட நிறைய முறை ஒரே வட்டத்தினுள்ளே தான் சில்லுமூக்குகளைச் சிதறச் செய்கிறார் ! Maybe இங்கே ஒரு பெண்பிள்ளை செய்யும் அதிரடிகளை ஜீரணிக்க நமக்கு முழுமனசாய் ஏற்பில்லையோ - என்னவோ ; துக்கடாக் காரணங்களைக் கூட ஊதிப் பெருசாக்குகிறோமோ ?  

நான்காம் நெருடல் நடைமுறையில் தொடர்ந்திட வேண்டாமே என்ற எண்ணத்தில் தான் இம்முறை பாண்டையும், பிளைசியையும் ஒன்றிணைத்து, சைஸையும் ரெகுலராக்கி - புஷ்டியாய் முன்வைக்க முனைந்துள்ளேன் ! இந்த முயற்சியின் வெற்றியோ-தோல்வியோ எனது தியரியை நிஜமென்றோ, டப்ஸா என்றோ நிரூபித்திடும் ! So lets wait & watch guys ?!

இறுதி நெருடல் நானாய் போட்டுக் கொண்ட கோடு தானெனும் போது - ஒரு கணிசமான வாசக அணியின் உணர்வுபூர்வமான வேண்டுகோளுக்கு அதனை அழித்திடும் ஆற்றல் நிச்சயமாய் இல்லாது போகாது ! பால்யங்களின் நினைவுகளுக்கு உரு கிட்டிட லோகத்திலேயே வழி இல்லை ! டேப்ரிக்கார்டர் ; கேசட் ; வீடியோ டெக் ; பெல்பாட்டம் பேண்ட் ; ஹிப்பி ஸ்டைல் கிருதாக்கள் ; பட்டை பெல்ட்கள் ; முதல் காதலின் பரவசங்கள் - என பால்யங்களின் எண்ணற்ற ஆதர்ஷ அடையாளங்கள் இன்றைக்கு என்ன விலை தந்தாலும் மீண்டு வர வாய்ப்பில்லை ! இன்றைய ஓட்டமாய் ஓடும் இந்த வாழ்க்கையின் மத்தியில் , ஏதோவொரு ரூபத்தில் நம் வட்டத்தின் ஒரு அணியினரையாவது காலத்தில் பின்னோக்கிய பயணத்தில் இட்டுச் செல்ல இளவரசி மாடஸ்டிக்கு ஆற்றல் இருக்குமெனில், அதை மறுக்க மனசு வரவில்லை எனக்கு ! Of course - இதே வாதம் ஒவ்வொரு புராதன அடையாளத்துக்கு எழும் தான் ! ஆனால் புராதனமெனும் போர்வையை உதறித்தள்ளிட  வாய்ப்பு கொண்டதொரு நாயகிக்கு மட்டுமாவது ஒரு விதிவிலக்கினை நல்குவதில் தப்பில்லையே ?!  

And இன்னொரு முக்கிய விஷயமும் இங்கு கவனத்துக்குரியது ! அதிர்ஷ்டவசமாக இங்கே நமக்கு தேவைக்கு ஏற்பக் கதைகளை மட்டுமே வாங்கி வெளியிடும் வசதியுள்ளது ; வேதாளன் ; ரிப் கிர்பி போல 'வருஷத்துக்கு இத்தனை போடணும் ; அத்தனை போடணும்' - என்ற கட்டாயங்கள் இங்கில்லை !  

To top it all, ஒரு ஐயாயிரம் ரூபாயின் ஆண்டுச் சந்தாவினில் வெறும் அறுபது ரூபாயினை மட்டுமே தனது இருப்பினை பதிவு செய்திட இளவரசி கோரி வருகிறார் ! அதைக் கூட மறுக்க இயலுமா நமது துவக்கப்புள்ளியை அலங்கரித்த நாயகிக்கு ? 

So முட்டுச் சந்தில் மொத்து வாங்கினாலும் இந்தத் தீர்ப்பினில் என்மட்டுக்கு கவலையிராது ! 

இனி தொடரவுள்ள ஒவ்வொரு ஆண்டிலும் முதல் டிக் இளவரசியின் பெயருக்கு நேராகவே இருந்திடும் !! என்றைக்கு அந்தக் கதைவரிசையினில் நாம் தேடும் அளவுகோல்களோடு கதைகள் மீதம் ஏதுமில்லை என்றாகிறதோ - அன்றைக்கு இளவரசி 'கார்வினே என் நண்பன் ; கார்வினே என் துணை' என்றபடிக்கு அஸ்தமனத்தினுள் கரைந்து விடுவார் ! 

May that day never dawn !! 

Bye all...See you around !!

P.S : கம்பெனியின் மீம்ஸ்களைக் கொண்டு இன்றைய பொழுதை ஓட்டுங்கள் guys ;  நண்பர்கள் அனுப்பியுள்ள ஒரு வண்டி புது memes கொஞ்ச நேரத்தில்  இங்கே இறக்குகிறேன் !

இவை அனைத்தும் நண்பர் MKS Ram கைவண்ணங்கள் : K.O.K.


ஈரோடு மாரிமுத்து விஷால் :126 comments:

 1. நானா?
  (என்னோட profile picture கொஞ்சம்...)

  ReplyDelete
 2. மாலை வணக்கம் நண்பர்களே

  ReplyDelete
 3. ஏற்கனவே உறுதியான ஒருஸ்லாட்டுக்கே இவ்வளவு பஞ்சாயத்து ஆயிருச்சே. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. அது தான் என் வருத்தமும் சகோ

   Delete
  2. பஞ்சாயத்துக்கு குடோன்ல இருக்கும் ஸ்டாக்தான் காரணம்... விற்றுபோனா ரெகுலராக போட தடையேது!!!!!


   இளவரசி ஆஹா, ஓஹோ என சொல்வதை தாண்டி இனியும் அவரது ரசிகர்கள் விமர்சனங்கள் பண்ணினா பரவாயில்லை...

   கோட்டா பிளேஸ் ஆக இல்லாமல் ஏர்ன்னுடு பிளேஸ் ஆக மாற்ற வேண்டியது உங்கள் கைகளில் தான் நண்பர்களே!!!


   கோட்டாவாவே இருந்தா என்னிக்கு வேணா பரிபோயிடும்..
   !!!

   அதே விற்பனையில் மாடஸ்தி சாதித்தது எனில்....................!!!

   Delete
  3. //அதே விற்பனையில் மாடஸ்தி சாதித்தது எனில்....................!!!//

   சமயத்தில் ரெகார்ட்டுகளை மறந்து விடுகிறீர்கள், சகோ.

   கழுகு மலைக்கோட்டை வண்ண மறுபதிப்பு வெளிவந்த சில நாட்களில் விற்று தீரவில்லையா சகோ?

   Delete
  4. கழுகு மலைக்கோட்டை சூப்பர்6ல கலரில் சுமார் 1200பேருக்குனு வந்தது.. அது புக்கிங் பண்ணியவர்களுக்கு போக, மீதியை ரசிகர்களே ஆளுக்கு 10,15, 25னு வாங்கிட்டாங்க... இதான் அது விற்ற ரகசியம் சகோ!!!!😉

   இப்ப தனியாக இருக்கும் மாடஸ்தி புக்கு சேல்ஸ் ஆனாத்தான் கெத்து... அதைவிடுத்து மொத ஹீரோ என்ற சலுகையில் ஸ்லாட் பெறுவது.........!!!

   இளவரசிக்கு அழகல்லவே!!!

   அதற்குத்தான் விற்பனையில் சாதிக்க ஏதாவது பண்ணுங்க என சொல்கிறேன்....!!!

   Delete
 4. அந்த மீம்ஸ் 'மாடஸ்டி அணி சிலம்பம் மாஸ்டர் வருகைக்கு அப்பாலிக்கா' 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 சிரிச்சு முடியலீங்க எடிட்டர் சார்!!

  ReplyDelete
  Replies
  1. யெஸ் யெஸ் யெஸ்

   Delete
  2. அந்த ஆடு...அந்த அருவா....
   இந்த சிலம்பம்...இந்த தீர்ப்பு...

   ரெண்டுக்கும் சம்பந்தமே கிடையாதுங்க மகா ஜனங்களே !!

   Delete
  3. சிலம்பத்த பார்த்து ஜகா வாங்கிட்டாருங்கோ.....!!!!
   😉😉😉

   Delete
  4. ஆங் புரியுதுங்க எடிட்டர் சார்..🤣🤣🤣🤣

   Delete
 5. அனைவருக்கும் வணக்கம்.

  ReplyDelete
 6. ஹி..ஹி..எடிட்டரும் வயதான தொழிலதிபர் எனும் போது தீர்ப்பு தெரிஞ்சது தானே 🤣🤣🤣🤣

  ReplyDelete
 7. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 8. அப்பாடி...
  இந்த தீர்ப்பை கேட்கத்தான் தவம் கிடந்ேதன்..

  ReplyDelete
 9. சார். B&. B ஸ்பெசல் எப்படி வந்திருக்கு. மாடஸ்ட்டி ஒரு பக்கப்ரிவ்யூ அடுத்த பதிவில். ப்ளீஸ் ஸார். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 10. மாடஸ்டிக்கு ஜே...! இதைத்தான் எதிர்பார்த்தோம் சார்

  ReplyDelete
 11. வெற்றி...வெற்றி...

  எங்கள் இளவரசிக்கே....
  இளவரசிக்கு ஜே..ஜே...ஜே!!!!

  ReplyDelete
 12. நல்ல தீர்ப்பு சார் 👍🏼🙏🏼

  அப்படீன்னு நினைக்கிறேன் 🙏🏼😇
  .

  ReplyDelete
 13. Lion இன் முதல் கதையின் நாயகிக்கு கண்டிப்பாக ஒரு slot இடம் உண்டு. (வாசகர்களின் இதயத்திலும் )

  ReplyDelete
 14. சிங்கத்தின் கம்பீர நடையை துவக்கி வைத்த பெண்சிங்கத்திற்கு வருடத்துக்கு ஒரு ஸ்லாட் கண்டிப்பாக தரலாம்.

  ReplyDelete
 15. ////இனி தொடரவுள்ள ஒவ்வொரு ஆண்டிலும் முதல் டிக் இளவரசியின் பெயருக்கு நேராகவே இருந்திடும் !!////


  நன்றிகள் பல சார்....

  ReplyDelete
 16. I love this decision, I love Modesty Blaise.... Hurray

  ReplyDelete
 17. இளவரசியின் மீது ஓரப் பார்வையும் ஈர மனமும் கொண்ட ஆசிரியர் இருக்க இனி கவலையில்லையே

  ReplyDelete
  Replies
  1. எடிட்டர் சாரை சுற்றியே பழத்தை வாங்கிட்டீங்க....!!!

   Delete
  2. எப்படியோ வெற்றிக்கனியை பறிச்சிட்டோம்

   Delete
 18. லாக் டவுனின் க(கொ)டுமையை சற்றே லேசாக்கி கொண்டிருக்கிறது உங்களின் தினசரி பதிவு நன்றி ஆசிரியரே

  ReplyDelete
 19. நாட்டாமை,

  தீர்ப்ப சூப்பரா சொன்னீங்க :-)))

  ReplyDelete
 20. Double album with 100 pages try pannalama sir

  ReplyDelete
 21. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 22. இளவரசியின் ஆதரவாளர்களின் குரல்கள் ஓங்கி ஒலித்ததால்.....

  போராட்டம் வெற்றி! வெற்றி!!வெற்றி!!!


  ReplyDelete
 23. அடுத்ததாக காரிகன் ஆதரவாளர்கள் ஒன்றினைந்து கிடுகிடுக்கும் போராட்டத்தினை நடத்திடுவோம்.

  காரிகனையும் கொண்டுவராமல் ஓயப்போவதில்லை......
  காரிகன் புகழ் ஓங்குக......

  ReplyDelete
  Replies
  1. விங் கமண்டார் ஜார்ஜ் ஐ மறந்து விட்டீர்களே, சார்!

   Delete
 24. கம்பேனி மீம்ஸ் சூப்பர்

  ReplyDelete
 25. இதுக்கு பேசாம அந்த புளிமூட்டை கொடௌன்லயே இருந்திருக்கலாம் 😁

  எப்படியும் இளவரசிக்கு ஒரு இடம் அப்ப இருக்கு.

  வாழ்த்துக்கள் இளவரசி அணிக்கு.

  ReplyDelete
  Replies
  1. 🤣🤣🤣. அது மட்டுமில்லாம மேஸ்ஸிவ் லீடிங்ல அம்மிணி ஜெயிச்சிருக்காங்க பாருங்க. வேணாம்னு சொன்னது நாம 2-3 பேருதான்.

   வாழ்த்துக்கள் இளவரசி அணிக்கு.//

   +1. அதுமில்லாம டைகரைத் தவிர கலாய்க்கறதுக்கு நமக்கு இன்னொருத்தரும் வேணுமில்லியா?

   Delete
  2. 🤣🤣🤣 ஆனால் டைகர் அணி சாதிக்க முடியாததை இளவரசி அணி சாதித்துவிட்டனர். இடம் உறுதி

   Delete
  3. ///🤣🤣🤣 ஆனால் டைகர் அணி சாதிக்க முடியாததை இளவரசி அணி சாதித்துவிட்டனர்//

   ஆமா..ஆமா...செம!

   ---யோவ் "பாயாஸம்" கேட்டுச்சா!!!!😜😜😜😜

   Delete
 26. இந்த தீர்ப்பிற்கு பிறகு இளவரசியின் அடுத்த fishing holiday யாருடன் என்று தெரிஞ்சி போச்சி ..

  ReplyDelete
 27. " இனி தொடரவுள்ள ஒவ்வொரு ஆண்டிலும் முதல் டிக் இளவரசியின் பெயருக்கு நேராகவே இருந்திடும் !! என்றைக்கு அந்தக் கதைவரிசையினில் நாம் தேடும் அளவுகோல்களோடு கதைகள் மீதம் ஏதுமில்லை என்றாகிறதோ - அன்றைக்கு இளவரசி 'கார்வினே என் நண்பன் ; கார்வினே என் துணை' என்றபடிக்கு அஸ்தமனத்தினுள் கரைந்து விடுவார் ! "

  பாராட்டுக்கள் Sir, விற்பனை நோக்கில் அல்லாமல் எங்களைப் போன்ற சிலருக்காக எடுத்த முடிவுதான் இது, உங்கள் நெருக்கடியும் புரிகிறது. நன்றி Sir

  ReplyDelete
 28. லயனின் முதல் நாயகி ..!
  வருஷத்தின் முதல் இடம்
  நன்றி ஆசிரியரே
  துணிக்கு பஞ்சம் உள்ள நாயகி ஸ்லாட்டுக்கும் பஞ்சம் வைத்திடுவாரோ என்று பயந்திருந்தேன்.!

  ReplyDelete
 29. அடுத்து யாரை பத்தி பஞ்சாயித்தோ..?

  ReplyDelete
 30. வலை மன்னன் - ஸ்பைடர் சாகசத்தில் வெளி வந்த சர்ப்பத்தின் சவால் கதை போன்று தனியாக அறிவித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்!

  நம் அலமாரியில் படிக்காத கதைகள் நிரம்பியிருந்தால் பிரச்சனை ஏதும் இல்லை - ஏதோ ஒரு நாள் படிப்பதற்கு உண்டான நேரத்தையும், சூழ்நிலையையும் ஏற்படுத்திக் கொள்ளலாம் - ஆனால் படிக்கவே முடியாத கதைகளை அலமாரியில் அடுக்கி வைத்து என்னதான் செய்வது?!

  ReplyDelete
 31. ஐயாயிரம் ரூபாயின் ஆண்டுச் சந்தாவினில் வெறும் அறுபது ரூபாய் பெரிய விஷயமே இல்லை தான் - பிடிக்குதோ, இல்லையோ எல்லாக் கதைகளையும் படிப்பவர்களுக்கு!

  தொங்கலில் உள்ள டைகரின் மீதமுள்ள கதைகள் அனைத்தையும் போட்டு விடலாமே?! குறைந்தபட்சம் அவரின் சகாப்தம் நிறைவுக்கு வந்தது போலவாவது இருக்கும்! அடுத்து வரும் ஐந்து வருட சந்தாக்களில் ரூபாய் 500+ என்பது பெரிய விஷயமாகவே தெரியாது :-)

  ReplyDelete
 32. அன்பு நண்பர்களுக்கு மாடஸ்தி யின் "கற்கால வேட்டை" "மரணக்கோட்டை"
  இவை வேண்டும் இருந்தால் சொல்லுங்கள்
  -நான் சர்மா 94 778484444 -நன்றி

  ReplyDelete
 33. //இனி தொடரவுள்ள ஒவ்வொரு ஆண்டிலும் முதல் டிக் இளவரசியின் பெயருக்கு நேராகவே இருந்திடும் !!////

  33 சதவீத கோட்டாவை நடைமுறைப்படுத்திட்டீங்க போலிருக்கே.

  ReplyDelete
  Replies
  1. டைமிங் பத்து சார்.. :))))

   Delete
 34. இனி தொடரவுள்ள ஒவ்வொரு ஆண்டிலும் முதல் டிக் இளவரசியின் பெயருக்கு நேராகவே இருந்திடும்//

  மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.. நன்றி ஆசானே....

  ReplyDelete
 35. ஒரு பக்கத்துக்கு மேல் டைப் அடித்து preview பார்க்கையில் அனைத்தும் பணால். Publish ஆகக்கூடாது என்பது காலத்தின் தீர்ப்போ.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் இதுபோல பலமுறை நடந்துள்ளது! ஒரே நேரத்தில் இரண்டுபேர் Publish பட்டனை அழுத்தும்போது கூட 'conflict error' என்று காட்டி மொத்தமும் பணால் ஆகிவிடும்! ஆனால் சொல்ல வரும் சேதி அவசியமென்று தோன்றினால் பெருமூச்சை ஒருக்கா இழுத்துவிட்டுக்கொண்டு மறுபடியும் டைப்படிக்க ஆரம்பித்துவிடுவேன் - ஆனால் ஞானம் பிறந்தவனாய் இம்முறை ஏதேனும் ஒரு text editorல்!! அப்புறமாய் அதை இங்கே காப்பி-பேஸ்ட்!!

   Delete
  2. அவசியம் என்பதால் முயற்சிக்கிறேன்.

   Delete
 36. ரொம்ப சந்தோஷம்... ❤❤❤❤❤

  ReplyDelete
 37. பரவால்ல சார்....வரட்டும்.....நீங்க தேர்வு செய்த அதிரடிக் கதைகள்ல என்பது ரூவா கதய தடுக்க வாய்ப்பில்லன்னா பாண்டும் இளவரசியும் வரட்டும்....அதாவது காலி ஸ்லாட் இருந்தாலும்.... .அனைத்து மீம்சுமே கலக்கல்ஸ்....வாழ்த்துக்கள் நண்பர்களே

  ReplyDelete
 38. ஆனா மேல் பாத்தா அனைவரும் இரு கரம் நீட்டி/ கூப்பி வரவேற்பத பாத்தா ஸ்லாட்டாவது ஒன்றாவது வரட்டும் தங்கு தடையின்றின்னுதான் தோனுது....வருக...வெல்க

  ReplyDelete
 39. ஆக Multiplex ல் மாடஸ்டிக்கு ஒரு show என்பது நிரந்தரமாகி விட்டது. ஒரு படைப்பின் சாதக/பாதகங்களை வெரும் 60 ரூபாய் கொடுத்து வாங்குவோரை விட அதை வெளியிடுவோருக்கே அதன் தன்மையை அதிகம் உணர முடியும். ஆகையால் ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது. அதை விமர்சனத்திற்கு உள்ளாக்குவது சரியல்ல. இளவரசியும் நமது காமிக்ஸின் ஒரு அங்கமே. இங்கே தனிப்பட்ட விறுப்பு/வெறுப்பு ஏதும் இல்லை. இளவரசியின் die hard ரசிகர்களுக்கு வாழ்த்துகள்.

  ஆனால் சமீப காலமாக என் மனதில் தோன்றியதை தங்களிடம் பகிர்ந்து கொள்ள ஒரு அவா. இது சரியான சமயமாகவும் படுகிறது. ஏன் கேள்வியாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு படி மேலே போய் நமது நாயகர்களான, இளம் டைகர், லேடி S, கமான்சே, ஸ்மர்ப், மேஜிக் விண்ட், ரின் டின் கேன், ஜூலியா, மந்திரி, டயபாலிக், சுட்டி பென், ஜில்ஜோர்டான், ரோஜர், முதளைப்படை etc தரப்பில் இருந்து கேட்கப்பட்டதாகவும் எடுத்துக் கொள்ளலாம். அவர்களின் மனக்குமுறலாக எடுத்துக் கொண்டு இனி வரும் கதையை படிக்கவும்..,

  //தொடங்குகிறது//

  தான் பெற்றெடுத்த பிள்ளைகளையே போட்டிகளில் சாதிக்க தவறியதால் மாமன்னர் நீதியின் பெயரை கொண்டு அவர்களை ஓரம் கட்டிவிட்டு, வலுவான ஒரு அணியை மறற திறமைசாலி குழந்தைகளை கொண்டு உருவாக்க முடிவு எடுத்தார். அதன் நீட்சியாய் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் ஆராய்ந்து உள்ளே/வெளியே யார் என்பதை முடிவு செய்தார்.

  போட்டியில் இருந்து நீக்கப்பட்ட சாதிக்க தவறிய குழந்தைகளும், அதன் அபிமானிகளும் "நாங்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை நாட்டின் வெற்றி தான் முக்கியம், எங்களைக் காட்டிலும் திறமைசாலிகள் இருப்பின் அவர்களை இட்டு மேலும் வலுவாக்கி கொள்ளுங்கள் எங்கள் முறை வரும் போது தவறாமல் எங்களை அழைப்பீர் என் கிற புரிதலோடு நாங்கள் விடைபெருகிறோம் என்று கூறி பிரியா மனதுடன் விடைபெற்று வெளியில் இருந்து ஒரு வித சோகத்துடன் ஆட்டத்தை காண்கிறார்கள்.

  அப்பொழுது தான் ஒரு உண்மை புலப்படுகிறது. யாதெனில், ஒரு குழந்தை எவ்வித தடையுமின்றி சாதிக்காவிட்டாலும் அனைத்து போட்டிகளிலும் தவறாது இடம் பெற்று விடுகிறது. இது குறித்து அரசவையில் கேள்விகளை எழுப்ப, மாமன்னரோ சிறிது யோசனைக்கு பின் அக்குழந்தை தன் முதல் குழந்தை என்பதாலும் அதன் மேல் தனக்கு தனிப்பாசம் உண்டு என்றும் மேலும் அதன் அபிமானிகள் தொடர்ந்து வலியுறுத்தவதாலும் வேறு வழியின்றி ஒவ்வொரு முறையும் தேர்வு செய்வதாக தன் நிலையை உணர்த்துகிறார்.

  இதைக்கேட்ட மன்னரின் சாதிக்காத குழந்தைகள் "தந்தையே முதலில் பிறக்காவிட்டாலும் நாங்களும் உங்கள் பிள்ளையே. அனைவரும் ஒரு தாய் மக்கள் தானே. மேலும் முதலில் பிறக்காதது எங்கள் தவறா. எதற்காக முதல் பிள்ளைக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி. பிறப்பில் முதலாமவனாக/ளாக இருந்து விடுவது மட்டும் ஒரு தகுதியாக கொண்டு எப்படி தேர்வு செய்ய முடியும். களத்தில் நின்று வெற்றி காண்பவருக்கே சிம்ம ஆசனத்திலும், போட்டியிலும் இடம் அளிக்க வேண்டும். இப்படி குறுக்கு வழியில் தேர்வாவது நமது அரசுக்கும், அக்குழந்தைக்கும் பெருமை சேர்க்குமா."

  ReplyDelete
 40. பொருமையுடன் கேட்டுக்கொண்ட மன்னர் "உங்கள் கூற்றிலும் நியாயம் இல்லாமல் இல்லை, ஆனால் இவ்வளவு பெரிய ஜாம்பவாண்கள் உள்ள அணியில், சிறு இடத்தையே முதல் குழந்தைக்கு அளித்துள்ளேன். மற்ற திறமைசாலிகள் அதை சுலபமாக சரிக்கட்டி விடுவர். மேலும் நம் சிம்ம ஆசனத்தின் மூத்த பிள்ளை அல்லவா, உங்களின் உடன் பிறப்புமாயிற்றே. ஏற்றுக்கொள்ள பழகுங்கள்" என்று முடித்தார்.

  தந்தையே சுலபமாக சொல்லி விட்டீர்கள் சிறிய இடம் தானென்று. அந்த இடம் கூட கிடைக்காதா என்று வெளியில் அமர்ந்து கிடப்பவர்களுக்கு தான் புரியும் உண்மையான வலியும், வேதனையும். மேலும் தாங்கள் செங்கோள் கொண்டு ஆட்சி புரிபவர். இங்கு குடும்ப பாசத்துக்கு இடமில்லை. நாங்களே ராஜாங்கம் தான் முக்கியம், வலுவான அணிதான் முக்கியம் என்று ஒருவாராக மனதை தேற்றிக்கொண்டு எங்கள் இடத்தை விட்டு வெளியேறினால், ஒரு சாதித்த/சாதிக்க போகும் திறமைசாலிக்கு அந்த இடத்தை கொடுக்காமல் எங்களை போலவே உள்ள சோப்பளாங்க்கிக்கு கொடுப்பது எவ்வித்தில் நியாயம் மன்னரே. உங்களுக்கே தெரியும் உங்களின் மூத்த பிள்ளையை விட இங்கே இருக்கும் பெரும்பான்மையினர் அதீத திறமைசாலிகள் என்று. தாங்களே இந்த இடர் காலத்தை சமாளிக்க மிக வலுவான ஒரு அணியை உறுவாக்க பெரும் பாடு படும் நேரத்தில், அணியில் உள்ள ஜாம்பவானுகளுக்கே சில சமயம் சறுக்கல் வந்து சிக்கலாகி விடும் ஆபத்து இருக்கையில், தெரிந்தே ஒரு பலவீனமான சிறு பகுதியை வலுக்கட்டாயமாக உள்ளே நுழைப்பானேன்.

  ஆகையால் தங்கள் கூற்றுக்கு மறுபேச்சின்றி ஒப்புக்கொண்டு வழி விட்ட உங்களின் மற்ற குழந்தைகளையும் கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள். எங்களின் தரப்பிலும் அபிமானிகள் போராட்டங்கள், செண்டிமெண்டுகள் உண்டு. ஆனால் அதைத் தான் இம்மாமன்றம் விரும்புகின்றதா. ஆளாளுக்கு போர்க்கொடி பிடித்து கொண்டு இருந்து விட்டால் எப்போது நாம் முன்னோக்கி போவது.

  ஆகையால் வலுவான அணிக்காக எங்களின் இடத்தை தாரை வார்த்த இந்த பிள்ளைகளையும் இனி வரும் காலங்களின் எண்ணி சாதித்தவருக்கே இடம் எங்கிற தீர்ப்பை கூறி எங்கள் தியாகத்திற்கு நியாயம் செய்வீராக.

  //முடிந்தது//

  மக்களின் மனதை வென்றதால் மட்டுமே பாகுபலிக்கு முடிசூட்ட ராஜமாதா முயற்சிக்கவில்லை. கூடவே காலக்கிறேயரையும் வென்று சாதித்தால் இப்பெருமை கிட்டியது. ஆகைவே விற்பனையில் சாதிக்கா விட்டால் டெக்ஸ் வில்லரை கூட எவ்வித நெருடலும்/தயக்கமும் இன்றி கழற்றி விட நாம் ஆசிரியருக்கு உறுதுனையாய் இருந்து இன்னும் காணக்கிடைக்காத பல புதிய படைப்புகளை கொண்டு வர உறுதுணையாய் இருப்போம்.

  அதிகபிரசங்கித்திதனமாக இருப்பின் அனைவரும் மன்னிப்பீராக.

  ReplyDelete
  Replies
  1. வாவ்!! கதையும் சரி; அதைச் சொன்ன விதமும் சரி - அட்டகாசம்!!

   நியாயமான ஆதங்கமே! பார்க்கலாம் - மன்னர் என்ன பதில் சொல்லப் போகிறாரென்று!!

   Delete
  2. Thirunavukkarasu Vazzukkupparai :

   அருமையான கதை ; ஆழமான கருத்து!

   நியாயம் என்பது எல்லா ஹீரோக்களுக்கும் ஒன்றாகத்தான் இருக்க முடியும்!

   இதில் ஹைலைட்டே உங்களின் கீழ்க்கண்ட வரிகள் தான் சார் -
   //ஆகவே விற்பனையில் சாதிக்கா விட்டால் டெக்ஸ் வில்லரை கூட எவ்வித நெருடலும்/தயக்கமும் இன்றி கழற்றி விட நாம் ஆசிரியருக்கு உறுதுனையாய் இருந்து இன்னும் காணக்கிடைக்காத பல புதிய படைப்புகளை கொண்டு வர உறுதுணையாய் இருப்போம்//

   நிச்சயம் நாங்கள் உறுதுணையாக இருப்போம் சார்!

   Delete
  3. அருமையான கதை திரு. கதையின் கருத்து மிகத் தெளிவு.

   Delete
  4. கதையில் விடுபட்ட பகுதி

   மன்னருக்கு குழப்பம் ஏற்பட தன்னுடைய பிரஜைகளிடம் கருத்து கேட்டாராம். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் முதல் பிள்ளை வேண்டும் என்று சொன்னார்களாம். இதனால்தான் மன்னர் தன் முதல் பிள்ளை இருந்து விட்டு போகட்டும் என்று தீர்ப்பளித்தாராம்.

   Delete
  5. வழிப்போக்கன்: ஹா.. ஹா.. தமிழகத்தின் சமகால அரசியலில் ஆர்வம் கொண்டவரா நீங்கள் ?!

   விடியல் கதைகள் !

   Delete
  6. வழிப்போக்கன்: ஹா.. ஹா.. தமிழகத்தின் சமகால அரசியலில் ஆர்வம் கொண்டவரா நீங்கள் ?!

   விடியல் கதைகள் !//
   நான் அவரில்லை
   ங்க. பெயர் பிடித்ததால் வைத்துக்கொண்டேன். மத்தபடி அப்படி ஒருத்தர் இருக்கறதே கொஞ்ச நாள் முன்ன தான் தெரிந்தது

   Delete
  7. நன்று திருநாவுக்கரசு.

   Delete
 41. இத இத இத த்தான் எதிர்பார்த்தேன்்சார். சபாஷ் நல்ல தீர்ப்பு. மீம்ஸ் எல்லாம் அருமை. அதுவும் அந்த Tiger Jack மீம்ஸ் கலக்கல் ரகம்

  ReplyDelete
 42. திருநாவுக்கரசு. வழுக்குப்பாறை சார். முதல் நாயகி என்பதற்காகமட்டும் மாடஸ்டிக்கு இடமளிக்கப்பட வில்லை காளகேயர்களை வென்றதனாலேயே(கழுகுமலைக்கோட்டை. மாபெரும்வெற்றி) இடமளிக்கப்பட்டுள்ளது. 90களில் தனி ஒருத்தியாய் பல வருடங்கள்நம்மை தாங்கி நின்றவரேஇளவரசி. அப்பொழுது காமிக்ஸ் என்றாலே இளவரசி மட்டுமே என்றே அறியப்பட்டது. (இது பழம் பெருமை மட்டுமே) அடுத்தமுறையாவது விற்பனையில் சாதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பிலேயே மாடஸ்டிக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தவிரநீங்கள் குறிப்பிட்டநாயகர்களுக்கும்நிச்சயம்ஆசிரியர் இடமளிப்பார்தக்கநேரம் வரும்போது. இளவரசி முதல்பிள்ளைமட்டுமல்ல ஒரே பெண்பிள்ளை என்பதும் ஒருகாரணம். மற்றபிள்ளைகளான லேடி எஸ். அமாயா வுடன்ஒப்பிட்டுப் பார்த்தே இடமளிக்கப்பட்டுள்ளது கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. //தொடர்ந்த நாட்களில் மாடஸ்டியின் உரிமையாக இருந்திருக்க வேண்டிய வெளிச்சவட்டத்தை நமது கூர்மண்டையர் ஸ்பைடர் & ஆர்ச்சி லபக்கி விட்டதால் இளவரசி அவ்வப்போது உப்பரிகைகளிலிருந்து கையசைக்கும் அளவிலேயே தொடர்ந்திட்டார் ! பின்னாட்களில் டெக்ஸ் வில்லர் எனும் சாகச அசுரனும் இணைந்து கொள்ள - தொடர்ந்திட்ட நிலவரங்கள் உங்களுக்கே தெரியும் ! Oh yes - நிறைய ஸ்பெஷல் இதழ்களில் மாடஸ்டிக்கும் ஒரு இடமிருந்திருக்கும் தான் ; ஆனால் அட்டைப்படத்தில் கெத்து காட்டும் வாய்ப்புகளோ இளிக்கும் ஸ்பைடருக்கும், தெறிக்கும் டெக்ஸுக்கும் தான் இருந்திருக்கும் ! So low profile தான் இளவரசிக்கு அன்றைக்கே !//

   Credit:

   Thursday, June 03, 2021 ஒரு இளவரசியின் கதை இது !

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
 43. மாடஸ்தி ஆண்டுக்கொரு முறை வருவதில் மகிழ்ச்சியே! அவரை விரும்பும் நண்பர்கள் முகத்தில் பூக்கும் புன்னகையை காணும்போது வரும் நம் மகிழ்ச்சிக்கு இணையில்லையே..!

  மேலும் இளவரசி விற்பனையிலும் சாதித்து தன் இடத்தை தக்கவைத்துக் கொள்வார் என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 44. செரினா வில்லியம்ஸ் சில வருடங்களுக்கு முன்பு வரை நம்பர் ஒன் வீராங்கனை.ஆனால் இப்போது இல்லை. இருப்பினும் தன்முயற்சியை விட்டு விடாமல் இன்று வரையிலும் முதல் இடத்தை பிடிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறார்.மாடஸ்தியும் அது போல தான் 😚😚😚😚. காலம் தான் பதில் சொல்லும்.

  ReplyDelete
  Replies
  1. செரினா வில்லியம்ஸ் உதாரணம் சரியாக இருக்குமா என்பதே ஒரு கேள்விக்குறி!

   அப்படி உதாரணம் காட்டியே ஆக வேண்டுமானால் Steffi Graf மட்டுமே Modesty Blaise க்கு சரியான உதாரணமாக இருக்கும்!

   Delete
  2. சரி நண்பரே. செரினா கொஞ்சம் வாட்ட சாட்டமா இருக்காங்க. அது தான் 🤭🤭🤭

   Delete
 45. You can release books in volumes containing more number of stories. I can see such volumes in other countries.

  ReplyDelete
 46. வணக்கம் நண்பர்களே.....

  ReplyDelete
 47. திங்களிலிருந்து ஆபிஸ் உண்டா ஆசிரியரே

  ReplyDelete
 48. எனக்கு எப்பவுமே இளலரசி தான் No\

  ReplyDelete
 49. சார் மீம்ஸ் லாம் சும்மா பட்டைய கிளப்புது.

  ReplyDelete
 50. நம்ம மேஜிக் விண்ட் வந்ருக்காக....நம்ம டைலன்/ர் வந்ருக்காக..நம்ம கெர்பி காரிகன் லா வந்ருக்காக...வாம்மா மாடஸ்டி

  ReplyDelete
 51. எல்லோரும் இளவரசி ஜெயிச்சத நம்ப சிவகாசி தொழிலதிபர் தலைமையில் டாக்டர்கள் முன்னிலையில் சிறப்பாக கொண்டாட போய்விட்டார்களோ? :-)

  ReplyDelete
  Replies
  1. @PfT

   மன்னர்னு சொன்னதை சீரியஸா எடுத்துக்கிட்டு மைதீனை கூட்டிக்கிட்டு வேட்டைக்குக் கிளம்பிட்டாரோ என்னவோ!!

   Delete
 52. This comment has been removed by the author.

  ReplyDelete
 53. Lady S - முத்து 400 - விடைகொடு ஷானியா!

  இப்பொழுது தான் படித்து முடித்தேன். பட்டி டிங்கரிங் செய்யப்பட்டு மிகவும் மேம்படுத்தப்பட்ட மாடஸ்டி ப்ளைஸி 2.0 கதைகள் போலவே இருக்கிறது!

  முதல் வாசிப்பில் - Lady S ன் ஒரு கதை 10 மாடஸ்டி ப்ளைசி கதைகளைப் படிப்பதற்கு சமமாக இருக்கிறது!

  இந்த கதைகளுக்கு ஏன் வரவேற்பு இல்லை?! பல வருடங்களாக ப்லாக்/Blog படிக்காததால் விவரம் எதுவுமே புரியவில்லை!

  வாழ்க Lady S

  ReplyDelete
  Replies
  1. லேடியிடம் இளவரசியை எதிர்பார்த்தது தான் பிரச்சினை என்று நினைக்கிறேன்.

   லேடி-S என்று கோட் நேம் வைத்து நிறைய ஆக்சன் சீக்வென்ஸ் எதிர்பார்க்க வைத்து விட்டார்கள்... எனக்கு பர்சனலாக மிகவும் பிடித்த சீரியஸ்... ஆனால் என் ராசியோ என்னவோ வழக்கம் போல நடுவில் நின்று விட்டது.

   நாடுகள், அவற்றின் தூதரக விவகாரங்கள், அவற்றின் அரசியல், உளவுத்துறை அட்டகாசங்கள், அந்த ரஷ்ய-அமெரிக்க பனிப்போருக்கு பிந்தைய களம் என கதை செமத்தியாக தொடர்கிறது, ஆனால் நாயகிதான் தேமேயென்று இருக்கிறார். நாயகியை சுற்றி ஓடினாலும் கதைதான் இங்கே எல்லாம். லார்கோ போல கதைநெடுக ஏகப்பட்ட தகவல்கள், தரவுகள் கொட்டிக்கிடந்தாலும் ஆக்சனை எதிர்பார்த்து உள்ளே வந்தவர்களுக்கு கொட்டாவிதான் வரும்.

   நல்ல கதையை எதிர்பார்த்து உள்ளே நுழைந்தால் லேடி-s உங்களை கவர்ந்து விடுவார், ஆனால் அவர் இன்னொரு மாடஸ்டி பிளைசியோ... லேடி ஜேம்ஸ்பாண்ட்டோ நிச்சயமாக இல்லை.

   Delete
  2. Saravanakumar:

   அற்புதம் நண்பரே! என்னுடைய விமர்சனத்திற்கு வேலை வைக்காமல் நீங்களே அனைத்தையும் அழகாக ; கோர்வையாக எடுத்து வைத்து விட்டீர்கள்! நான் எழுத நினைத்து இருந்தாலும் இப்படித் தான் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன்!

   Contd .,

   Delete
  3. ஷானியாவைப் பொறுத்தவரை இயல்பான ஹீரோயிசம் மிகுந்து காணப் படுகிறாள் ; சுயமாக முடிவு எடுப்பதில் தன்னிகரற்று திகழ்கிறாள் ; பாசம், பந்தம், காதல் என்று சொக்கிப் போனாலும் - தன்னை வஞ்சித்த இந்த உலகின் மீது சிறிதும் கோபம் இல்லை அவளுக்கு!

   தற்போது படித்து முடித்த இரண்டாவது கதையின் கிளைமாக்ஸில் நெஞ்சத்தை அப்படியே உருக்கி விடுகிறாள். கண்கள் இரண்டில் நீர் வராத குறை தான் நமக்கு!

   இன்னும் கூட நிறைய எழுதலாம் ஆனால் அடுத்த பதிவு வந்துவிட்டால் - இந்த கமெண்ட்டுகள் அனைத்தும் Lady S போன்ற கதையாக மாறிவிடும் ; உழைப்புகள் வியர்த்தமாகி விடும் !

   Delete
 54. ஜூனில் ஜூன் உண்டா சார் ???!!!

  ReplyDelete
  Replies
  1. எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டமே...!!!

   Delete
 55. விடை கொடு ஷானியா

  Lady s ன் இந்த கதையில் multilayered screen play முறை கையாளப்பட்டிருக்கும். பிரமாதமாக கதையமைப்பு. ஒரு அட்டகாசமான வாசிப்புக்கு உத்திரவாதம். சித்திரம் மற்றும் கலரிங் வேற லெவலில் இருக்கும். "சுடும் பனி" கதையும் சற்றும் சளைத்ததள்ள.

  ஒருமுறை படித்து பிடிக்காதவர்கள், மீள் வாசிப்பில் இக்கதைகளை தேர்ந்தெடுத்தால் நிச்சயம் கவராமல் போகாது. இந்த மாதிரி தரமான கதைகள் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

  நமது அணியில் மகளிர்க்கு இடம் வேண்டும் என்று நினைத்தால் lady S தான் அல்டிமேட் சாய்ஸ் ஆக இருக்க வேண்டும். நல்ல கதைகள் ஜெயிக்க வேண்டும்.

  கண்டிப்பாக கண்முன்னே தெரியும் நிஜத்தை ரொம்ப நாள் மூடி மறைக்க முடியாது. தரம் தான் நிரந்தரம்.
  # Come back lady S #


  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நல்ல தொடர்! வரவேற்பு இல்லாமல் போனதில் ரொம்பவே வருத்தம்...

   Delete
  2. Thirunavukkarasu Vazzukkupparai :

   சபாஷ் !

   உங்கள் பதிவுக்கு இது தான் சரியான பதிலாக இருக்கும்!

   Delete
  3. //கண்டிப்பாக கண்முன்னே தெரியும் நிஜத்தை ரொம்ப நாள் மூடி மறைக்க முடியாது. தரம் தான் நிரந்தரம்.//

   நிச்சயமான உண்மை. பல சமயங்களில் இங்கே கருத்துகள் திணிக்கப்படுகின்றன என்பதை Lady S மூலம் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்!

   Delete
 56. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

  ReplyDelete
 57. Lady S படத்துக்கு ஒரு ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

  ReplyDelete