Powered By Blogger

Monday, October 04, 2021

ஒரு புது வரவு !

 நண்பர்களே,

வணக்கம். நேத்திக்கு ராப்பொழுதின் ஆபரேஷனில் பின்னூட்ட எண்ணிக்கையினை எகிறச் செய்திருப்பதை இன்றைக்குத் தான் கவனிக்கிறேன் & here I am - உப பதிவோடு !! And ஏற்கனவே சொன்னது போல, "உலகத்தின் கடைசி நாள்" இதழின் இடத்தினில் உட்புகும் இதழ் எது என்பதே இந்த மினி பதிவின் சாரமாக இருந்திடவுள்ளது !

நின்ற நிற்பில் ஒரு இதழை மாற்றுவதென்பது எப்போதுமே சற்றே கொயப்பமான வேலை தான் ; moreso கையில் கணிசமான கதைகள் ஸ்டாக்கினில் இருக்கும் போது ! இது போன்ற தருணங்களில் தான் பீரோவுக்குள் சொகுசு கண்டு வரும் கதைகளின் எண்ணிக்கைகளையும் சரி பார்க்கவொரு சந்தர்ப்பம் கிட்டுகிறது !! So பீரோவில் அவசரம் அவசரமாய் உருட்டிய போது கணிசமான black & white கி.நா.க்கள் பொது பொதுவென கொட்டின & 'தல' சாகசங்களுமே "ஹாய்" என்று கையாட்டுவது தெரிந்தது ! இது தவிர, ரக ரகமான சில பிரெஞ்சு ஆல்பங்களும் வரிசையாய் அடுக்கி இருப்பது தென்பட்டது !

கி.நா.க்களுக்கெல்லாம் அண்ணன் கி.நா.வாக மார்ட்டின் சிலம்பம் சுத்துவதால் தான் மாற்றத்துக்கே அவசியம் நேர்ந்துள்ள இந்த நேரத்தில் இன்னொரு புது கி.நா.க்குள் மண்டையை நுழைக்க தம் தேறவில்லை ! So அவசரம் அவசரமாய் மறுபக்கம் மும்முரமானால் - டெக்ஸ் ??? என்ற கேள்வியினை மனசுக்குள் ஓட்டிப் பார்த்தேன் ! எனக்கே 'கொஞ்சம் ஓவர்' என்பதாகத் தோன்றவே பிரெஞ்சுக் குவியலினுள் உருட்டத் துவங்கினேன் !! குறைந்த பட்சமாய் பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிபெயர்ப்பாவது முடிந்து கையில் இருந்தால் தேவலாம் ; இல்லாங்காட்டி அதன் பொருட்டு மொக்கை போட வேண்டி வருமே என்று பட்டது ! So மேகி நூடுல்ஸாக ready to use ஆல்பமாய்த் தேடணும் ; தவிர, கொஞ்சமேனும் சுவாரஸ்யத்தை நம் மத்தியினில் துளிர் விடச் செய்யக்கூடிய ஆல்பமாய் இருக்க வேண்டும் என்று தேடிய போது கண்ணில் பட்டது தான் 2022  அட்டவணைக்கென தேர்வாகியிருந்ததொரு டபுள் ஆல்பம் !! பர பரவென புரட்டினேன் ; அட்டவணைக்கென ரெடியாக இருந்த விளம்பரப் பக்கத்தையும் லவட்டினேன் & here they are : 



DUKE !! பிள்ளை Yves H கதையெழுத, தந்தையும், ஓவியருமான ஹெர்மனின் சித்திர ஜாலத்தினில் உருவானதொரு புது கௌபாய் தொடர் !! செம ஆக்ஷன் & typical ஹெர்மன் ஸ்டைல் !! இது வரையிலும் 6 ஆல்பங்கள் கொண்ட இந்தத் தொடரின் உரிமைகளை கொரோனா லாக்டௌன் சமயத்தினிலேயே வாங்கியிருக்க, அதன் பிரெஞ்சு மொழிபெயர்ப்பும் ரெடியாக இருந்தது !! So நமக்கு ரொம்பவே பிரியமான wild west ; ரொம்பவே எதிர்பார்ப்பைத் தூண்டவல்லவொரு படைப்பாளி என்ற கூட்டணியிலான இந்த டபுள் ஆல்பத்தினை நவம்பரில் உங்களிடம் ஒப்படைக்க பணிகள் ஜரூராய்த் துவங்கியாச்சு !! "ஒரு முறை கொன்று விடு !" முழுவண்ணத்தினில், டபுள் ஆல்பமாய் !!

இதுவொரு ongoing தொடர் என்பதால், ஹெர்மன் இதனில் பிஸியாய் புதுக் கதைகளை உருவாக்கி வருகிறார் ! So தொடரும் நாட்களில் இந்தப் பரட்டை மண்டை பாணி கதை மாந்தர்களை நாம் ரசித்துக் கொண்டே இருப்போம் ! Hope you give DUKE the thumbs up guys !!

தொடருங்களேன் உங்களின் அலசல்களை ; நினைவலைகளை !! See you around !! Bye for now !!

250 comments:

  1. திரு ஜெகன் அவர்களின் இழப்பு தமிழ் காமிக்ஸ் நட்பு வட்டத்தில் ஈடு செய்ய இயலாத ஒன்று...

    AKK

    ReplyDelete
  2. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  3. Dear Edi, was expecting another Martin Mystery as a replacement.. disappointment from a Martin Fan! and regarding this new story when I read, I felt it was an average one. (am not speaking for all, it is just my opinion)

    ReplyDelete
    Replies
    1. சான்ஸே கிடையாது சார் ; ஒரு மெகா தலைசுற்றலிலிருந்து வெளியேறி maybe சற்றே குறைச்சலான சுற்றலுக்குள் புகுந்திட இது நேரமும் அல்ல ; அதற்கான நேரமும் இல்லை நம்மிடம் . ஜனவரி முடியும் வரைக்கும் வரிசை கட்டி நிற்கும் பணிகளின் மத்தியில் absolutely zero chances of any more விஷப் பரீட்சைகள் !

      Delete
  4. அருமையான மாற்று தேர்வு சார்...அதுவும் கெளபாய் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  6. புதிய கதையை வரவேற்கிறேன். மகிழ்ச்சி.

    ReplyDelete
  7. ஒரு முறை கொன்று விடு கவித்துவமான காதல் தலைப்பாக தெரிகிறது :-))

    ReplyDelete
  8. நண்பர்களுக்கு வணக்கமும் நன்றியும்.
    நன்றி... விழாமேடைக்கு அழைப்பு விடுத்தமைக்கு!
    ஈரோட்டு இளவரசருக்கு தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்.
    அப்புறம்--
    கொரோனா காலத்தில் நான் பதிவிட்ட நிகழ்வுகளை இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்கும் சேலம் குமார்! நானே அந்த சமயம் ரொம்ப ஓவராத்தான் போய்ட்டமோன்னு நெனச்சிட்டிருந்தேன். நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்கிறீர்கள்! மகிழ்ச்சி.
    இடையில் ஒரு இடைவெளி!
    கதைக்கு தலைப்பல்ல. என் பதிவுகளுக்குத்தான்.
    ஒரு வருத்தம்.
    ஆசிரியரின் மொழிபெயர்ப்பு தரம் தேய்ந்துபோனது போலான விமர்சனம் மெய்யாகவே வருத்தப்பட வைக்கிறது. பழைய நமது காமிக்ஸ்களின் மொழிபெயர்ப்புக்கும் தற்சமயம் மொழிபெயர்ப்பில் உள்ள எழுத்தாளுமையும், வசன நடையும் நிஜமாகவே நண்பர்களுக்கு தெரியவில்லையா?
    முன்பெல்லாம் வெறும் கதை சொல்லியாக மட்டுமே இருந்துவந்த ஆசிரியரின் எழுத்துநடையின் வசீகரம், வீரியம் இப்போது அதிகமாகி இருப்பது பளிச் சென்று புலப்படுமே. வாகான களம் அமையும் கதைகளிளெல்லாம்
    ஆசிரியரின் பேனா (குறிப்பாக க்ராஃபிக் நாவல்களில்) கைதேர்ந்த நாட்டியக்காரரின் லாவகத்துடன் நடனமாடுவது தெரியவில்லையா? அழகு தமிழில் எளிமையான வார்த்தைகளுக்குள் புதைந்துகிடக்கும் ஆழமான அர்த்தங்களும், டெக்ஸின் விஸ்ரூபத்துக்கு முதுகெலும்பான மொழிபெயர்ப்பும், கார்ட்டூன்களில் நக்கல்,நையாண்டி என்று கலந்துகட்டி அடிப்பதும் புலப்படுமே! பலப்பல கதைகளை உதாரமாக காட்டலாம்தான்! கண்ணை கட்டிக்கொண்டுதான் இருப்பேன் என்பவர்களிடம் இது இரவு, இது பகல் என்றெல்லாம் சொல்லவேண்டியது அவ்வளவு அவசியம் இல்லைதான்.
    அதுபோகட்டும். நம் சகோதரன் 'முத்து' வுக்கு ஐம்பதாவது பிறந்தநாள் கொண்டாட்டம்! 1972 ல் பிறந்த குழந்தை! என்னுடைய பதினோராவது வயதில் பிப்ரவரி மாதம் ஒரு ஞாயிறு காலை எனக்கு அறிமுகமான இதழ். ஐம்பதாண்டுகளாக என்னுடைய சுக துக்கம் அனைத்திலும் பங்கெடுத்து தோல்விகளில் என்னை துவள விடாமல் காத்து, என்னை வழி நடத்தி வரும் இளைய சகோதரர் நம் முத்து.
    நம் முத்து எழுபத்தைந்து ஆண்டுகள், நூறாண்டுகள் தாண்டி வெற்றிநடை போடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கு நண்பர்களுடன் சேர்ந்து என்னுடைய வாழ்த்துக்களும்.
    மீண்டும் வருவேன் பழைய நினைவுகளுடன்!

    ReplyDelete
    Replies
    1. காத்திருக்கிறேன் ஏடிஆர் சார்...

      Delete
    2. வணக்கம் திரு ATR சார்! தங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது!

      Delete
    3. அட டே.... வெல்கம் பேக் ATR sir💐

      முத்து 50்நினைவுகளை இங்கே போடுங்க... உங்க போட்டோவை எடிட்டர் சாருக்கு மெயில்ல அனுப்புங்க...!!

      Delete
    4. வாங்க சார் வாங்க பழைய பன்னீர்செல்வம் ஆக வாங்க. மகிழ்ச்சி சார் மிக்க மகிழ்ச்சி. உங்கள் நட்பு எப்போதுமே ஸ்பெஷல் தான் சார். உங்கள் பதிவை வெகு நாட்களுக்கு பிறகு பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி சார்

      Delete
    5. எடிட்டர் அவர்களுக்கும் தோழர்களுக்கும் நன்றி...நன்றி!
      டெக்ஸ் விஜய்.
      ஃபோட்டோவில் நேரில் பார்ப்பதைவிட கேவலமாக இருப்பேன். பர்ர்ரால்லிங்களா?

      Delete
    6. ATR sir.... அக அழகே நிரந்திரம் அல்லவா! சீனியர் ரசிகராக தங்களது அனுபவங்களுக்கு வெயிட்டிங்க.... 2018ல தங்களை நேரிலயே பார்த்தாச்சி...சோ, எந்த போட்டோவுக்கும் அசரமாட்டோம்....!!! சும்மா 2யும் தாக்கி விடுங்க....!!!

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. / வாகான களம் அமையும் கதைகளிளெல்லாம்
      ஆசிரியரின் பேனா (குறிப்பாக க்ராஃபிக் நாவல்களில்) கைதேர்ந்த நாட்டியக்காரரின் லாவகத்துடன் நடனமாடுவது தெரியவில்லையா? ///

      /// அழகு தமிழில் எளிமையான வார்த்தைகளுக்குள் புதைந்துகிடக்கும் ஆழமான அர்த்தங்களும், டெக்ஸின் விஸ்ரூபத்துக்கு முதுகெலும்பான மொழிபெயர்ப்பும், கார்ட்டூன்களில் நக்கல்,நையாண்டி என்று கலந்துகட்டி அடிப்பதும் புலப்படுமே ///
      நூற்றுக்கு நூறு உண்மை சார்.
      மீள் வருகைக்கு வாழ்த்துக்கள். கை வலி இப்போது சரியாகிவிட்டதா சார்

      Delete
    9. நன்றி பத்து சார்.
      சரியாகிவிட்டது சார்.

      Delete
  9. *லயன் முத்து காமிக்ஸ் நினைவலைகள்*


    என ஆசிரியர் தலைப்பு சொல்லி இருந்தால் சொல்ல ஆயிரம் கதைகள் உண்டு என்னிடம் ..ஏன் எனது வாழ்க்கையே ஒரு வழி பாதையில் செல்ல வைத்ததும் நமது லயன் முத்து காமிக்ஸ் தானே..சிலருக்கு சிறு வயதில் காமிக்ஸ் வழி நடத்தி இருக்கும்.. எனக்கோ சிறுவயதில் மட்டுமல்ல திருமண வயதில் கூட நமது காமிக்ஸ் மூலமே பல மாற்றங்கள் பல திருப்பங்கள் நிகழ்ந்துள்ளது திருப்பு முனை போல்.....ஒரு புத்தகத்தில் வாசித்த நினைவு ஏதோ ஒரு சாதாரண நிகழ்வு உங்கள் வாழ்க்கையில் "ஓர் டர்னிங் பாயிண்ட்" ஆக வாழ்க்கை பாதையவே மாற்றி அமைக்கும் என உண்மை தான் ...ஏன் 12 B என ஓர் திரைப்படம் கூட வெளிவந்ததே...அந்த பேருந்தை பிடித்தால் அவன் வாழ்க்கை எப்படி இருக்கும்...அந்த பேருந்தை பிடிக்காமல் போனால் அவன் வாழ்க்கை பாதை எப்படி போகும் என இரு பார்வையாக போகுமே ...அது போல் தான் எனது வாழ்க்கை எனது இப்பொழுதைய திருமண வாழ்க்கையை கூட "டர்னிங் பாயிண்ட்" ஆக மாற்றி என்னை வழிநடத்தி சென்றது நமது காமிக்ஸ் தான் ( எனவே தான் எனது திருமணத்திற்கு நமது ஆசிரியர் அவர்களுக்கு மட்டும் கடிதம் மூலம் தகவல் தெரிவித்தேன்..உடனடியாக ஆசரியரின் திருமண வாழ்த்து கடிதம் அன்றைய காலத்திலியே தனிப்பட்ட முறையில் வந்து சேர்ந்து மகிழ்ச்சியை கூட்டியது ( அந்த 20, 25 வருடங்களுக்கு முந்தைய அந்த ஆசரியரின் கடிதம் இன்றும் பத்திரமாக பொக்கிஷமாக பீரோவில் ) ...எனக்கு மட்டும் காமிக்ஸ் படிக்கும் ஆர்வம் இல்லாமல் இருப்பின் நூறு சதவீதம் எனது வாழ்க்கை வேறு விதத்தில் அமைந்து போயிருக்கும் ..( அது இதை விட சிறப்பாக அமைந்து இருக்குமா அல்லது தாழ்வாக அமைந்து இருக்குமா என்பது அந்த இயக்குநர் கடவுளே அறிவார்..)

    *ஆனால்*

    இது முத்து காமிக்ஸ் ன் நினைவலைகள் என்பதால் பெரிய அலை நினைவுகளை அகற்றி சிறு அலை நினைவுகளை யோசிக்கிறேன்.. ( முத்து காமிக்ஸை விட நான் பெரிய இளையவன் அல்லவா..)

    காமிக்ஸ் இதழ்களை அப்பொழுது எல்லாம் எனக்கு முழு விலை கொடுத்து வாங்கும் வசதியும் அல்ல..சுதந்திரமும் இல்லை....பழைய புத்தக கடைகளில்..பள்ளி நண்பர்களிடம்..பக்கத்து வீட்டு நண்பர்களிடம் என பழைய ,அப்பொழுதைய இதழ்களை அட்டை இல்லாமலும் பாதிவிலைக்கும் ,புத்தகத்தை மாற்றி மாற்றி படிக்கும் எக்சேஞ்ச் திட்டம் மூலம் அதில் தான் நமது லயன் முத்து இதழ்களை தரிசப்பதும் ,வாசிப்பதும்...அதன் மூலமே முத்து காமிக்ஸின் இரும்புக்கை மாயாவி,லாரன்ஸ் டேவிட் ,ஜானி நீரோ என மும்மூர்த்தி நாயகர்களும் இன்னும் பல நாயகர்களும் அறிமுகம்..சிறிது சிறிதாக பழைய புத்தக கடைகள் மூலம் பழைய இதழ்களாக சேர்க்க ஆரம்பிக்க அந்த சமயத்தில் தான் கோவை ரேஸ்கோர்ஸ் குடியிருப்பில் காமிக்ஸ் புத்தகம் மூலம் பழக்கமான நண்பன் ஒருவன் ஒரு புத்தகத்தை என்னிடம் காண்பிக்க என்றே வந்தான்..அன்று தான் வாங்கி வந்த அந்த முத்து காமிக்ஸ் புத்தம் புதிதாய் ..பளபளவென ..பாக்கெட் அளவில் அதுவும் அவ்வளவு பக்கங்களில் செம குண்டாய் திரைப்பட போஸ்டர் போல.. இரும்புக்கை யுடன் மெஷின் கன்னை பிடித்தவாறு இருந்த அந்த அட்டைப்படம் என் கண்களை விட்டு அகல மறுத்தது. அந்த இதழ் இரும்புக்கை மாயாவின் சைத்தான் சிறுவர்கள் என நினைவு .அப்படி ஒரு இதழை அதுவும் புத்தம் புதிதாக பளீச்சென இருந்த அந்த முத்து இதழை பார்த்தவுடன் உடனே வாங்கி தடவி பார்க்க வேண்டும் , உடனே படிக்க வேண்டும் என்று படபடப்பு ஆசை .ஆனால் அந்த நண்பனோ எங்க அப்பா இன்னிக்கு வாங்கி கொடுத்தாரே நல்லா பாத்துக்கோ என்றபடி அவனே கையில் வைத்து கொண்டு புரட்டி ,புரட்டி காட்டினானே தவிர என்னை தொடக்கூட விட வில்லை.அவன் சென்று விட எனக்கோ அன்று பகல் மட்டுமல்ல இரவும் அதே இரும்புக்கை மாயாவியின் அட்டையும் , இதழுமே மட்டுமே நினைவு இரவு உறங்கவும் முடியவில்லை..

    ReplyDelete
    Replies
    1. ..மனதோ ... ச்சே அவங்க அம்மா அப்பா நமக்கு இருந்து இருக்க கூடாதா அவங்களே அவனுக்கு காமிக்ஸ் புக்கு வாங்கி கொடுக்குறாங்க நம்ம அம்மா அப்பாவோ காமிக்ஸ் படிச்சாவே திட்றாங்க ..பயந்து பயந்து காமிக்ஸ் படிக்குறதா இருக்கு என மனதினுள் எனது தாய் தந்தையரை திட்டிக்கொண்டு இருந்தேன் ( இப்போ கன்னத்துல போட்டுக்கிறேன்.) .காலை எழுந்தவுடனும் அதே நினைப்பு...அன்று காலையே என்னிடம் உள்ள பழைய லயன் முத்து இதழ்களை இரண்டோ,மூன்றோ எடுத்து ட்ரெவ்சரில் சொருகி கொண்டு அவன் வசிக்கும் இடம் தேடி சென்றேன்..அப்பொழுது கோவை ரேஸ்கோர்ஸ் கோட்டர்ஸில் குடி இருப்பு..வரிசையாக ஒவ்வொரு அடுக்கு மாடி குடியிருப்பாக பல குடி இருப்புகளாக அப்பொழுதே இருக்கும் .ஒவ்வொரு அடுக்கு மாடியிலும் 12 வீடுகள்..இப்படி வரிசையாக பல மாடி வீடுகள்..அவனின் அடுக்கு மாடி இடம் சிறிது தொலைவில் அமைந்த அவன் வசிக்கும் பகுதி இந்த இரு அடுக்கு மாடியில் ஏதோ ஒன்று என தெரியுமே தவிர அவனின் இல்லம் தெரியாது...எப்படியும் வெளியே வருவான் பார்த்து கொள்ளலாம் என காலை முதலே அவர்கள் குடியிருப்பின் அருகிலியே ஒரு குத்துக்கல்லை போட்டு உட்கார்ந்து கொண்டு அவன் வெளியே வருவானா என காத்திருக்க ஆரம்பிக்க நல்ல வேளையாக ஒரு 12 மணி அளவில் வெளியே தலை காட்டினான்...அப்பாடா என்று துள்ளி குதித்து அவனிடம் ஓடி சென்று அந்த இதழை இங்கேயே இப்பொழுதே படித்து விட்டு தந்து விடுகிறேன் என கெஞ்சி கேட்டும் ம்ஹீம் எங்க அப்பா திட்டுவாரு என அவன் மறுக்க எனது பாக்கட்டில் இருந்த இரண்டு மூன்று லயன் முத்து காமிக்ஸ் இதழ்களை காட்டி இதை நீ சும்மாவே வைத்து கொள் ..நான் அந்த மாயாவி கதையை படித்து விட்டு தந்து விடுகிறேன் ப்ளீஸ்டா என்ற கெஞ்ச சிறிது நேரம் யோசித்தவாறு சரி என்றவாறே எனது இதழ்களை வாங்கி கொண்டவன் வீட்டிற்கு சென்று அந்த கனத்த புதிய இரும்புக்கை மாயாவி கதையை கொண்டு வந்து கொடுத்தான்..சரி படிச்சுட்டு கொடு ஆனா கரீட்டா நாலு மணிக்கு எல்லாம் வந்து நானே வாங்கிக்குவேன் புக்கு அழுக்காக கூடாது என கட்டளை இட இட எனக்கோ கைகளில் புத்தம் புதிதாய் எனது கைகளில் இருக்கும் மகிழ்ச்சி ஓகே ஓகே என்றபடியேங சந்தோசமாக அவனிடம் இருந்து இதழை வாங்கி கொண்டு எனது இல்லத்திற்கு ஓடோடி வந்தால் அப்பாவும் வீட்டில் ..அவர் முன்னாடி காமிக்ஸ் புக்கை படித்தால் லத்தியில் அடி விழுகும்..யோசித்தேன்..குடி இருப்பின் மொட்டை மாடிக்கு ஓடினேன் .. பல தண்ணீர் டேங்க் இருக்கும் அந்த பகுதியின் அடியில் சிறு சிறு பாதாள அறை போல் ஒவ்வொரு தண்ணீர் தொட்டி அடியிலும் இருக்கும் .. உள்ளே இறங்கி அங்கே போய் அமர்ந்து கொண்டு அப்பொழுதே அந்த இதழை முகர்த்து ,பிரித்து ,ரசித்து ..இவ்வளவு பெரிய குண்டு புக்கா என வியந்து புரட்டி புரட்டி பார்த்த பல நிமிடங்களுக்கு பிறகே படிக்க ஆரம்பித்தேன் ..படித்து முடித்தவுடன் தான் ஓர் நிம்மதி ..

      பிறகு அதே ட்ரெவ்ஸர் பாக்கெட்டில் அந்த குண்டான முத்து காமிக்ஸ் இதழை பத்திரமாக வைத்து கொண்டு கீழே இறங்கி வந்தேன் நேரமும் மீதம் இருக்க எனது காமிக்ஸ் பார்ட்னராய் இருக்கும் நெருங்கிய தோழியிடமும் அந்த இதழை காண்பித்து ஆச்சர்யப்படுத்தி சீக்கிரம் படித்து விட்டு கொடு என அவரிடம் கொடுத்து அவர் படித்து முடிக்கும் வரை அருகிலேயே இருந்து பத்திரமாக மீண்டும் வாங்கி பாக்கெட்டில் சொருகி கொண்டேன் ..பிறகு நேரம் செல்ல சரியாக சொன்னபடி நாலு மணிக்கு அந்த நண்பன் ஆஜரானான்..மகிழ்ச்சியுடன் கதை சூப்பரா இருந்துச்சுப்பா பாரு அழுக்காகலை நல்லா பாத்துக்கோ என்ற படி அவனிடம் திருப்பி தர அவனும் ஒரு முறை புரட்டி பார்த்து கொண்டு இதழை வாங்கி கொண்டு திரும்பி சென்றான்...

      மனதினுள் நானோ ...

      ஓஹோ.. புக்கை படிக்க கூட கொடுக்க மாட்டீயா ஒரு புக்கை படிக்க உனக்கு மூணு புக்கு சும்மா கொடுப்பாங்களா என்ற நினைத்த படி நாங்கள் இருவரும் படித்து முடித்தவுடன் தனியாக வந்து அந்த இதழின் தெரியாதவாறு நடுவில் கிழித்த அந்த இரண்டு பக்க தாளையும் பத்திரமாக நானும் எனது வீட்டிற்கு எடுத்து கொண்டு திரும்பி சென்றேன்..

      மறக்க முடியாத இதழ்..மறக்க முடியாத வாசிப்பு..
      மறக்க முடியாத பழிவாங்கல்..


      வருடங்கள் கழிந்த தாமதம் தான்

      ஆனாலும்


      சாரி நண்பா...

      Delete
    2. தலீவரே!! செம செம!!

      அந்த புது புத்தகத்தின் நடுவிலே கிழித்த பக்கங்களைப் பற்றி நீங்கள் இங்கே பகிராமல் கூட விட்டிருக்கலாம் தான் - ஆனா பகிர்ந்தீங்க பாருங்க.. அங்க நிக்கறீங்க நீங்க! அதான் தலீவர்!!

      Delete
    3. .//மனதோ ... ச்சே அவங்க அம்மா அப்பா நமக்கு இருந்து இருக்க கூடாதா அவங்களே அவனுக்கு காமிக்ஸ் புக்கு வாங்கி கொடுக்குறாங்க நம்ம அம்மா அப்பாவோ காமிக்ஸ் படிச்சாவே திட்றாங்க ..பயந்து பயந்து காமிக்ஸ் படிக்குறதா இருக்கு என மனதினுள் எனது தாய் தந்தையரை திட்டிக்கொண்டு இருந்தேன்//
      இதேதான் தலீவரே! இதேதான்!
      நானும் பலமுறை இப்படித்தான் நெனச்சிருக்கேன்!

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  10. DUKE?!!!

    ஹெர்மன்?!!!!


    ரொம்ப சந்தோசமுமில்லை! வருத்தமுமில்லை!!

    அந்தச் சித்திரங்கள் என்னவோ முழுமை பெறாததைப் போல - கொஞ்சம் கி.நா பாணியில் வித்தியாசமாய்!! கதை ஹெர்மனுடையது இல்லை என்பதில் ஏனோவொரு நிம்மதி!

    இந்தக் கதையில் கேப்டன் பிரின்ஸ், ஜின், பார்னே, கமான்ச்சே பொண்ணு, ரெட், ஜெரேமயா- உள்ளிடவர்களைப் பார்க்கயிருப்பதில் மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. ஆமா...ஆமா....ஹெர்மன் ஐயாவும், ஜிரோவ் ஐயாவும் ஓவிய டிபார்ட்மெண்ட் டோடு இருந்திருந்தால் எல்லாம் சுகமே!

      Delete
    2. கம்பேக் ஸ்பெஷலின் பிரின்ஸ் கதையினிலும் இதே அப்பா - பிள்ளை ஜோடி தான் & போன வருஷத்து "தனித்திரு...தணிந்திரு !" இதே கூட்டணி தான் !

      Delete
    3. ///போன வருஷத்து "தனித்திரு...தணிந்திரு !" இதே கூட்டணி தான் !///

      நன்றாக ஞாபகமிருக்கிறது சார்! அவ்வளவு எளிதில் மறந்துவிடுகிற கதையா அது? அப்பரது ஓவியப் பாணி நன்கு பழக்கப்பட்டதே எனினும் மகரது கதை சொல்லும் நேர்த்தியைப் பார்த்து ஆச்சரியப்பட்ட கதையாச்சே!

      இந்தக் கூட்டணி 'ட்யூக்' தொடரிலும் முத்திரை பதித்தால் சந்தோசமே!

      பார்ப்போம்!

      Delete
    4. /* ரொம்ப சந்தோசமுமில்லை! வருத்தமுமில்லை!! */

      Same here. The only issue I have found with Herman albums is that all characters have the same face - only the name and age seperates them. Fingers crossed !!

      A Lucky Luke would have helped sales better as well - a reprint !

      Delete
    5. There is already a Lucky Luke Double album for the same November'21 sir & that already has a reprint too !

      Delete
    6. ///The only issue I have found with Herman albums is that all characters have the same face - only the name and age seperates them///

      ஹெர்மனின் ஓவிய பாணியில் எனக்கும் இதுதான் பிடிக்காத அம்சம்! அமெரிக்க முகங்களைக்கூட மங்கோலியர் முகம் மாதிரியே வரைஞ்சு வைக்கிறார்!

      முன்னே கேப்டன் பிரின்ஸ் கதைகளின் சித்திரங்களில் பார்த்த நேர்த்தியும், டீடெய்ல்ஸும் இப்போ நிறைய மிஸ் ஆவது போலவும் ஒரு ஃபீலிங் எனக்கு! மேலே ப்ரிவீயூவில் இருக்கும் படங்களைப் பாருங்களேன் - ஏதோ அவசர அவரமாக வரையப்பட்டு - கேன்வாஸில் இன்னும் உலராத சித்திரங்களைப் போல!!

      ஒருவேளை இக்கதைத் தொடருக்கு இந்த பாணி ஓவியங்கள் பொருந்திப்போகலாம் தான்! கதை வெளியான பின்புதான் ஒரு முடிவுக்கு வர முடியும்!!

      Delete
    7. முன்னே கேப்டன் பிரின்ஸ் கதைகளின் சித்திரங்களில் பார்த்த நேர்த்தியும், டீடெய்ல்ஸும் இப்போ நிறைய மிஸ் ஆவது போலவும் ஒரு ஃபீலிங்//


      எனக்குமே....

      Delete
  11. Replies
    1. நாம கணக்கு பண்ணின எதுவும் இல்லாத புது மாதிரி....🤩

      Delete
    2. ஆமாம். எப்படியோ ஒரு புது கௌபாய். வெல்கம் Duke

      Delete
    3. 101கெளபாய் இருந்தாலும் 102வது கெளபாய் அறிவிப்பு பார்த்தா மனசு றெக்கை கட்டுது....

      இந்த குதிரை பையன்கள் ரொம்பவே ஆழ பதிஞ்சிட்டாங்க....!!!

      ஒருவேளை முன் ஜென்மத்தில் நாமெலாம் அங்கே பிறந்திருப்பமோ???

      Delete
    4. யோவ் க்ளா... டுமீல் டுமுக்கோல்னு சுட்டுட்டே குர்ரையில பறந்திருப்போம்...அந்த கியாபகந்தான் இப்பவும் டீவாளி டுபாக்கில கொள்ளு பட்டாசு சுடுறமோ???

      Delete
  12. ஆசிரியர் சார்@ இன்னிக்கு கோழி கூப்பிட, ஷெரீப்பு, குமார் சேலம் & மீ முவரும் ஒரு கலந்துரையாடல் போட்டோம்....

    டெக்ஸ் தான் அந்த ரீபிளேஸ்மன்ட் ஹீரோனு நானும், லக்கிதான்னு அவுங்க இருவரும் சொல்லி இருந்தாங்க....லக்கி ஏன் இடம்பெற வேணும் என்பதற்கு பொருத்தமான காரணங்களையும் அடுக்கினார்கள்...நான்கூட லக்கி வருவது சரிதோனோனு நினைச்சேன்...

    வழக்கம்போல எதிர்பாரா திசையில் வண்டியை வுட்டு சர்ப்ரைஸ் பண்ணிட்டீங்க....சிறப்பு சார்....

    அவர்கள் சொன்ன காரணங்கள்,

    1. 4 லக்கியை ஒண்ணா போட்டு ஒரு குண்டு புக்கு.

    2.லக்கி 75 ஆச்சே!.

    3.டெக்ஸ் அடுத்த மூணு மாதத்துக்கும் புக்கிருக்கு

    4.லக்கியும் வசூல் மன்னன்

    5.Save the kid specialம் டெக்ஸ்

    6.டெக்ஸ்னா ஓவர் டோசுன்னு முனகல் வரும். லக்கியை யாரும் குறை சொல்ல மாட்டாங்க.

    7.வெறுப்பவர்கள் இல்லாத ஒரே ஹீரோ

    ---இன்னும் கூட லக்கி சைடில் ப்ளஸ்கள் இருக்கும்... அடுத்த ஆண்டு லக்கி ஸ்லாட்டை கணிசமாக உயர்த்த வேண்டுகிறோம்....!!! கிட்டத்தட்ட மாதம் ஓரு கார்டூன் அளவுக்கு...!!!!

    ReplyDelete
    Replies
    1. //கிட்டத்தட்ட மாதம் ஓரு கார்டூன் அளவுக்கு...!!!! //

      கார்ட்டூன் பற்றிய காமெடி செம சார் !

      Delete
    2. WHAT AN EXPECTATION FOR CARTOON COMICS AS MONTHLY ONCE . YOUR HONOUR . KINDLY RENDER JUSTICE

      Delete
    3. At least 8 an year sir - 1 blue coats, 3 chik bill, 4 lucky

      Delete
  13. அருமை சார்....அட்டவணையில் ஒரு கதையாவது காட்டுங்கள் என கேட்கலாம் என நேற்று எண்ணினேன் என்பதை இன்று எண்ணி எழுதுகிறேன் மகிழ்வாய்...நான்கு மாதம் முன்னர்தான் அந்த நீக்ரோ கதை படித்து திக் பிரம்மை யில் ஆழ்ந்தேன்...மீண்டும் அருமை சார்

    ReplyDelete
    Replies
    1. பக்கங்கள் எமனின் திசை மேற்க்கை காட்டுகிறது...தீபாவளி ச்சும்மா வெடிச்சு தள்ளப் போவுது

      Delete
    2. அட ஆமாப்பா.... அந்த ஒற்றைக்கையன் "நெட்" கதை லுக்கேதான்.....!!!

      கவிஞருக்கு கண்ணும் கழுகுதான்..

      Delete

  14. காமிக்ஸ் எனக்கு அறிமுகமானது அறுபதுகளின் இறுதிவாக்கில்தான். அப்போது ஒன்பது வயதில் பள்ளியில் என்னுடன் படித்த லட்சுமி நாராயணன் என்பவர் மூலமே அறிமுகம். அது இந்திரஜால் காமிக்ஸ். வண்ணத்தில் பெரிய சைசில் பார்க்க பிரமிப்பாக இருக்கும். பார்க்க மட்டுமே! அதன் மொழி பெயர்ப்பு எனது முழியையும், மூளையையும் நிறையவே பதம் பார்க்கும். முழு புத்தகத்தையும் படித்திருப்பேன். ஆனால் கதை புரியாது. படங்களை வைத்து கதையை யூகிக்க வேண்டும். அதுகூட பரவாயில்லை. படிப்பதற்கு இரண்டு பைசா கட்டணம். விடுமுறை நாட்களில் பள்ளியினுள் போதி மரம் சாரி ஆல மரத்தின் அடியில் லட்சுமி நாராயணன் தரையில் அமர்ந்து கொள்ள இரண்டு பைசா கொடுத்த இருவர் அவரின் இரு பக்கமும் அமர்ந்து புத்தகத்தை படிக்கலாம். நாம் படிக்க படிக்க அவர் பக்கங்களை புரட்டுவார். இப்படித்தான் ஆரம்பமானது காமிக்ஸ் வாசிப்பு. எனது முதல் காமிக்ஸ் நாயகன் வேதாளர்தான். நண்பரோ இப்படி வசூல் பண்ணி பண்ணி அடுத்த அடுத்த இதழ்களாக வாங்கி விடுவார். விடுமுறை நாட்களில் அவரது பிஸினஸ் சூப்பராக நடக்கும். எனக்கோ அந்த அளவு முதலீடு! செய்து புத்தகம் வாங்க முடியாததால் இரண்டு பைசா கொடுத்துதான் காமிக்ஸ் படித்து வந்தேன். அந்த நண்பரை பள்ளி நாட்களுக்கு அப்புறம் பத்து வருடங்களுக்கு முன்னர் எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. பூதாகர தோற்றத்துடன் முக்கால் பிக்‌ஷோ கணக்காக காட்சியளிக்கிறார். நீண்ட நேரம் பழைய கதைகளெல்லாம் பரிமாறிக்(குறிப்பாக காமிக்ஸ் பற்றி) கொண்டோம். அவருக்கு காமிக்ஸ் ஆர்வமெல்லாம் கொஞ்சம்கூட இல்லை.நான் இப்போது என்ன செய்கிறாய் எனக் கேட்க அவர் ஜோதிடம் பார்க்கிறேன். தஞ்சாவூரில் இருக்கிறேன் என்றார். பழைய லட்சுமி நாராயணனுக்கும் இப்போது இருப்பவருக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா என நான் கேட்க அவர் நீயே சொல்லு. எனக்கு தெரியவில்லை என்று சொல்ல நான் அன்று காமிக்ஸ் படிப்பவர்களை பக்கத்தில் உட்கார வைத்தாய். இன்று ஜோசியம் பார்க்க வருபவர்களை எதிரில் உட்கார வைக்கிறாய் என்று சொல்ல அவர் என்னவோ உலகமகா ஜோக்கை கேட்டதுபோல் ஆறரை அடி உடம்பும் அதிர அதிர சிரிக்க.... அவரது தோற்றத்தையும் எங்களின் சிரிப்பையும் பார்த்தவர்கள் இது ஏதோ இரண்டு மறை கழண்ட கேஸ்கள் என்பதுபோல விலகிச் செல்ல நான் எஸ்கேப்!

    ReplyDelete
    Replies
    1. அருமையான அனுபவங்கள் திரு. ATR சார்!

      Delete
    2. அருமை நண்பரே...பத்து நண்பர்கள் பால்ய வயதில்...ஆனா நான் மட்டுமே படிப்பேன்

      Delete
    3. அட்டகாசம் சார். உங்கள் பதிவு சிரிப்பை கொண்டு வந்தது.

      Delete
  15. மார்டின் இடத்தில் வரும் duke மேல் பெரிதாக ஈர்ப்பு இல்லை. ஆரம்பகட்டத்தில் கவர தவறியதை வைத்து கதைக்குள் நுழைந்து பார்க்காமல் எந்த முடிவையும் எடுக்க முடியாது. Waiting without any excitement.

    ReplyDelete

  16. ஒருமுறை கொன்று விடு

    சித்திரமும் கொலைப் பழக்கம் கதைக்கான ஒரு வரி விமர்சனம் மாதிரி இருக்கு...:-)

    இவ்ளோ சொன்னாலும் சி.கொ.பழக்கம் படிப்பியா ? அந்த இடத்துல ஒரு புது லக்கி லூக் படிப்பியான்னு கேட்டா சி.கொலைப்பழக்கத்துக்குத்தான் ஓட்டுப் போடுவேன்..

    சி. கொலைப் பழக்கம் ரொம்ப புடிச்சதா வ.பாறை திரு உட்பட பல பேர் பதிவிட்டப்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு...ஆக எடிட்டர் சாரோட புது ஒன்ஷாட் கதைத் தேர்வுகள் பலபேரையும் சந்தோஷப்படுத்தியிருக்குங்கிறது மனசுக்கு நிறைவான விஷயம் ..அது அந்த மாதிரியான வகையறா கதைகள் ஜீவித்திருக்க பெரிசா உதவும்..

    புதுசா வர்ற கதைகளை பத்தி படிக்கறதுக்கு முன்னாடி எதுவும் எழுதறதில்ல...

    ஆனா இக்கதைகள் வர்றதுக்கு முன்னாடி வர்ற ஒரு இன்ப படபடப்புள்ள எதிர்பார்ப்பு கதைய படிக்கறப்போ கூட கிடைக்கறதில்ல..

    ( எதிர்பார்ப்பு அதிகமில்லாமல் வந்து இதய துடிப்பை எகிற வைத்த பி்.பி.விடை, சிகரங்களின் சாம்ராட் போன்றன விதிவிலக்கு)

    இந்த காரணத்தினாலேயே என்னவோ,(வேறு எந்த காரணமும் சேர்ந்ததோ) புதுசா ஒரு நாயகனோ , நாயகியோ ,கதைக்களமோ வர்றப்ப மனசு ரெக்கை கட்டி பறக்குது..மறுபதிப்புன்னு சொன்னா பொசுக்குன்னு போகுது ..

    இந்த காரணத்தாலேயே எப்பவாவது அபூர்வமா நிகழும் அறிமுக சொதப்பலை மனசு சங்கடப்படாம ஏத்துக்குது..

    இதுனாலாயே உலகத்தின் கடைசி நாளை அடுத்த வருஷ கடேசி நாளைக்குள்ள பதிப்பிக்க கேட்டுக்கறேன்..இவ்ளோ வருஷ அனுபவமுள்ள எடிட்டர் சாருக்கே கதை அன்னியப்படுதுன்னா அந்த அப்பாடக்கர் கதைய - எடிட்டர் சார் க்ரியேட்டிவ் ஹெட் - இன்டராக்டிவ் டீம் கிட்டேயே விளக்கம் கேட்டு போடறதா சொல்லியிருக்காரு- நாமளும் ஒருநா படிச்சே தீரணும்னு வேட்கை வருது...

    அந்தியும் அழகே மாதிரி வித்தியாசமான கதைக்களங்கள் அளவில்லாத ஆர்வத்தை ஏற்படுத்தத்தான் செய்யுது.

    (அந்தியும் அழகே அட்டைப்படமும் கலாட்டா வசனங்களும் "we are not senior citizens; we are recycled teenagers" என்ற வாசகம் பொறித்த டீஷர்ட் அணிந்து சிரித்தபடி செல்லும் வாலிபமான வயோதிகர்களையும் , Do not regret getting old; it's a privilege denied to many " என்ற பிரபல கருத்தையும் நினைவூட்டுகிறது)

    புதிய நாயகனான ட்யூக் வருகை புதியது என்ற ஒரு காரணத்தாலேயே மனதை களிக்கூத்தாட செய்கிறது..

    ஏன் சார் இதை மறுபதிப்பு செய்யறீங்க?

    டெக்ஸ் கூடவா மறுபதிப்பு போடறீங்க? அப்படின்னு எடிட்டர் சாரை இம்சித்தாலும் பொறுமையாக பல முறை எடிட்டர் சார் பதில் சொல்லியிருக்கிறார்..

    இருந்தாலும் சமீபமா வந்து ஒட்டிக்கிட்ட " புதிய மோகம்" ஆட்டிப் படைக்கிறது..

    முத்து 50 வர்ற நேரத்துல இத சொல்லப் படாதுதான்..

    வர்ற வருஷங்களில் நிறைய புதுப் புதுக் கதைகளும் ( துக்கிளியூண்டு ( நன்றி : இ.சி.ஈ.இளவரசர்) மறுபதிப்புகளும் வரட்டும்..

    [ ட்யூக் - வர வேண்டியதுக்கு பதிலா ஒரு புது டெக்ஸோ , லக்கியோ வந்திருந்தாக் கூட ஏமாற்றமா இருந்திருக்கும்..வணிக ரீதியா டெக்ஸ், லக்கியின் வெயிட்டேஜ் அதிகம் அப்டிங்கற யதார்த்த உண்மையை ஒரு வாசகனா இருந்து பாக்க முடியிலேங்கறது நிஜம்)

    ReplyDelete
    Replies
    1. யே..யப்பா!!! எவ்வளவு நிதானமான, தெளிவான, ஆழமான விளக்கம்!! அதுவும் மிட்நைட் தாண்டிய நேரத்துல!!!

      செனா அனா தூக்கத்தில் உளருவது கூட ரசிக்க வைக்குது!!

      Delete
    2. //we are not senior citizens; we are recycled teenagers//
      Lovely

      Delete
  17. மார்ட்டின் வரும் நாளை ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறேன்

    ReplyDelete
  18. டியர் எடி,

    இத்தாலிய மர்ம மனிதருக்கு பதில், பிரான்கோ பெல்ஜிய கலர் ஜாலம், அதுவும் ஒரு கவ்பாய் தொடர்... Always Welcome !

    என்ன, ஹெர்மேன் அவர் பிள்ளை கூட்டணியின் Track Record அவ்வளவு திருப்தியானவை அல்ல என்பதே ஒரு உதறல்.. இத்தொடர் அதை மாற்ற முனையலாம் என்பதால், Iam Waiting !

    ReplyDelete
  19. மார்ட்டின் & டிலானை ரொம்ப தள்ளி
    போடாதீங்க சார். PLEASE🙏

    ReplyDelete
  20. வலியில்லா வசந்தங்களா

    1974...

    காற்றில் கரைந்த கப்பல்கள்...

    அகொதீக...

    ப்ளான் துல்லியமாக போட்டு நேரக் கட்டுபாட்டோட மயக்கபனிப்புகைய விட்டு கப்பல்கள் பேர டக் டக்குன்னு மாத்தி கடத்துறதுமில்லாம அதுகள ஒழிச்சும் வைப்பாங்க...

    ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி அது மாதிரி படிச்சப்ப ...." ங்ஙே" தான்...

    அந்த புக் என் கைக்கு வந்தது தனிக்கதை...
    ராமவேலுன்னு பிரண்டு - ஜூனியரு- நம்மகிட்ட இருந்த மாண்ட்ரேக்கோட கலர் புக் ( மொத தடவையா) பாத்துட்டு படிக்க கேட்டான். எனக்கு ஏதாச்சும் புக் குடு - ன்னு காற்றில் கரைந்த கப்பல்கள தந்தான்...

    போனவன் அந்தர் தியானமாய்ட்டான்...

    நம்மட்ட கா க க தங்கீடுச்சி...ஏற்கனவே ஒண்ணு வச்சிருந்தேன்...

    ரெண்டையும் குடுத்து மாத்தி மாத்தி இந்திரஜால்ஸ் படிச்சி தள்னேன்...

    அப்பல்லாம் மாண்ட்ரேக் ஹீரோ...

    கேளுங்க...
    பரந்தாமன்னு ஒரு பிரண்டு (ஆறாப்பு) கா க க வாங்கீட்டு போனவன் திருப்பித் தரல...

    கேட்டா வேற ஊருக்கு ஏழாப்புக்கு போய்ட்டானுட்டாங்கெ...
    நான் நேரா தெற்குத்தெருல இருந்த அவனோட வீட்டுக்கு போனேன். அவனோட பாட்டியை பாத்து வெவரத்த சொல்லி , " இந்த மாதிரி படக்கதை புக்க பரந்தாமன் வாங்கீட்டு வந்தானா- திருப்பித் தரலன்னு சொன்னேன்...

    இரு தம்பி ன்னுட்டு உள்ள போன பாட்டி ஒரு மஞ்சப் பை நெறைய முத்து ப்ளஸ் இந்திரஜால் கொண்டாந்து குடுத்து வச்சுக்கன்னுட்டாங்க!!!

    "சும்மா கிழி". பன்னெண்டு புக்கு...

    அப்பறம் போறப்ப வர்றப்பல்லாம் அந்த பாட்டி ய பாப்பேன்.பரந்தாமன விசாரிப்பேன். பேசுவேன்.

    சோகம்...
    ஒரு நாள் திடீர்னு பாட்டி இறந்துட்டாங்கன்னுட்டு ஓடிப் போனேன்...தூக்கீட்டாங்க...ஆனா வீட்டுக்கு உள்ளாற பயமில்லாம போயீ பாட்டி படத்தை பாத்துட்டே இருந்தேன். எப்டி விசாரிக்கிறதூன்னு தெரியாத வயசு...பரந்தாமன் வந்திருந்தான்.வாடான்னு அவன தரதரன்னு இழுத்துட்டு போனேன்...
    அகமடியர் மகால் முக்குல சூடா வட போட்டுட்ருந்தாங்கெ. ஒரு ஆமை வடையை வாங்கி பாதி பிச்சி அவனுக்கு குடுத்தேன். காவைலருந்து சாப்டாம இருந்திருக்கலாம்... வடை சிக்கிகிடுச்சி காஞ்ச தொண்டைல...பித்தள குடத்துலருந்து சில்வர் டம்ளர்ல தண்ணிய மொண்டு திரும்புனேன்...சங்கிலி போட்டு கட்டி வச்சிருந்தாங்களா - டம்ளர் இழுவைல கீழ விழுந்திடிச்சி...இதுக்குள்ள கடைக்காரரே டீ கிளாஸ்ல தண்ணிய குடுத்துட்டாரூ...
    அப்பறம் ஒரு டீ வாங்கி ஒன் பை டூ போட்டு தந்தேன்...கண்ணீரோட குடிச்சான்...

    அப்பறமா ஆசுவாசப்பட்டவன்ட்ட பாட்டி குடுத்த மஞ்சப்பைய ச் சொன்னேன்...

    வேணாம்...நீயே வச்சுக்கன்னுட்டான்...

    அந்த காலம்

    அது அது அது அதூ

    முத்துக் காலம்...

    சமீபத்தில் மூன்று வருடங்களுக்கு முன் அவனைப் பார்த்தப்ப அவனது பேத்திக்கு கையிலிருந்த லக்கி லூக்க கொடுத்தேன்...அங்கிள் ஐயம் சாரீ...டமில் ஐ டோண்ட் நோ என்ற போது மனம் கனத்தது...

    வலியில்லா வசந்தங்கள் வாழ்க்கையில் ஏது?

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் j ji!!
      பரந்தாமனின் பாட்டியிடம் பை நிறைய காமிக்ஸ் வாங்கியது கெக்கபிக்கேன்னு சிரிக்கவச்சதுன்னா.. பாட்டி சிவனடி சேர்ந்தது - சோகம்!

      பரந்தாமனிடம் உண்மையைச் சொன்னது - உங்க நேர்மையான மனசைக் காட்டுது!

      Delete
    2. ஆமை வடை - அஞ்சு பைசா
      டீ - பதினைஞ்சு பைசா
      காபி - நாலணா

      Delete
  21. எடிட்டர் சார் ,
    நமது முத்து காமிக்ஸ் உடனான மூத்த வாசகர்களின் எண்ணங்களையும் அனுபவங்களையும் முத்து 50 ஆண்டு சிறப்பிதழிலில் வெளியிடுவது போல நமது சீனியர் எடிட்டரின் துவக்க நாட்களையும் எண்ணங்களையும் அனுபவங்களையும் இரண்டு மூன்று பக்கங்களில் வெளியிட வாய்ப்பு தாருங்களேன்
    இதுவரையில் அவரது அனுபவங்களை படித்ததில்லை நீங்களாவது சிங்கத்தின் சிறுவயதில் எழுதினீர்கள் .

    ReplyDelete
    Replies
    1. ///சீனியர் எடிட்டரின் துவக்க நாட்களையும் எண்ணங்களையும் அனுபவங்களையும் இரண்டு மூன்று பக்கங்களில் வெளியிட வாய்ப்பு தாருங்களேன்///

      அருமையான கோரிக்கை நண்பரே!
      அவசியமான கோரிக்கையும் கூட!

      @எடிட்டர் சார்

      நியாயமான எங்களுடைய இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் வெடிக்கும்! எங்கள் தலீவரின் தலீமையில் சிவகாசி அலுவலகம் முன்பு 'ஒற்றை வேப்பிலை' போராட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

      Delete
    2. லாக்டவுன்ல எல்லாம் 5வேள உண்டுட்டு புஷ்டியா இருக்காங்களே..ஒவ்வொருத்தருக்கும் ஒரு மரமேல்ல வேணும்...😜

      Delete
    3. சார் தலைமையாசிரியர் முதன்முதலில் வெளியிட தூண்டுதல் எது...முதல் கதை வந்ததும் மனநிலை...எதிர் பார்த்த வெற்றியா...பிடித்த நாயகர்கள்

      Delete
  22. நமது முத்து 50. தமிழ்வாசகர்களிடம்ஒரு எழுச்சியைஉண்டாக்கியுள்ளதுபோல்எனக்குத்தோன்றுகிறது. இந்நேரம் தேவை.பரவலான விளம்பரங்கள். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. அருமையா சொன்னீங்க ராஜசேகர் ஜி!

      Delete
  23. அப்போ... புக் இன்னிக்கும் வராதா?

    தேதி 5 ஆகிடுச்சே!

    ReplyDelete
  24. But Will miss Martin. I am a great fan

    அதுல என்ன விசேஷம்னா, ஜானி மற்றும் மார்ட்டின் கதைகளை ஆறு மாசம் கழிச்சு படிச்சா கூட புதுசா படிக்கிற மாதிரியே இருக்கும். நாம ஒன்னு நினைப்போம், கதை வேற ஆங்கிள்ல போகும். அதனால பொழுது போகலேனாலோ, காமிக்ஸ் கொரியர் வர லேட்டாகுதுனாலோ மார்ட்டின், ஜானி, ஜூலியாவை படிக்கலாம். எப்போதும் fresh.

    Its hard to write like that

    Tex Viller and other heroes, even if we read them after 2 or 3 years, we remember the story and easily guess climax.

    Tex-i read each book twice. after that i will leave a gap of 3-4 yrs to re-read.

    முதற்சங்க மும்மூர்த்தி தலைவர்கள்-not even a single read.

    all others i read atleast once or twice a year. maximum reread will be lucky, chickbill, tiger and other cartoons

    Graphic novels-one or two reads max

    ReplyDelete
    Replies
    1. ///Tex Viller and other heroes, even if we read them after 2 or 3 years, we remember the story and easily guess climax.///

      அதான் டெக்ஸ்! நல்லவங்களை அவர் என்னிக்குமே கஷ்டப்படுத்தமாட்டாரு!

      Delete
    2. ///maximum reread will be lucky, chickbill, tiger and other cartoons///

      ஹிஹி! இப்பல்லாம் டைகரையும் 'கார்ட்டூன்' லிஸ்ட்டுல சேர்த்துட்டாங்களா?!! 😝😝😝

      Delete
    3. EV,

      Ha Ha Ha .... EN PEYAR TIGER vandha apparamE avar cartoon dhaan :-) :-) :-)

      Delete
    4. அது 'யங் டைகர்'ங்க ராக் ஜி! மதியம் லஞ்ச்கப்புறம் ஆபீஸ் வேலைகள்ல உட்கார்ந்திருந்தா இப்படித்தான் மசமசன்னு இருக்கும்!😝😝😝

      Delete
    5. இந்த விஷயத்துல எனக்கு கொஞ்சம் கொடுப்பினை உண்டு. ஒரு கதை படிச்ச 3-4 மாசத்துல முழுக்க மறந்துருவேன் ! அப்புறம் மறுவாசிப்பு செய்தால் climax நெருங்கும் போது தான் ஞாபகம் வரும் (இந்த வரியை படிச்சா எனக்கே கொஞ்சம் adults only-யா இருக்கு. மன்னிச்சு !!).

      அடுத்து மறுவாசிப்பு செய்யவிருப்பது எப்பவோ ஒரு தீபாவளிக்கு வந்த அதிரடி சரவெடி " சர்வமும் நானே !" !!

      Delete
    6. ஈவி@ அது கிருதா நரைச்ச முத்தின டைகர்....!! மின்னும் மரணத்தில ஆட்டையை போட்ட துட்டை வெச்சிதான் அங்க டூம்ஸ்டோன்ல 5(நம்மூரில் அது 3) சீட்டாட போவாரு..

      Delete
    7. ராக் ஜி குறிப்பிடுவது 'யங் டைகரை' தான் STVR! ஒரு வேளை யங் டைகர் வெளியானால் அதையும் 'கார்ட்டூன் லிஸ்ட்'ல (அதாவது ஊரே சிரிப்பா சிரிக்குமாம்) சேர்த்த வேண்டியிருக்கும்னு சொல்ல வராரு!

      Delete
  25. அட்டவணை புக்லெட் கூட ரெடி போல சார்.. பக்கம் 18 இப்போ காலி அங்கே XIII ஸ்பின் ஆப் இட்டு நிரப்பலாமே சார்..அடுத்த வருடம் XIII இல்லாத குறையை போக்குமே...

    ReplyDelete
    Replies
    1. Ha Ha Ha Ha - that Black and White, Thick Paper, Single Collection 18 volumes also can be slided in :-) :-) :-)

      EV: Also 3D hard cover !!

      Delete
    2. ///Also 3D hard cover !!///

      ஆங்! இது பேச்சு! :)

      Delete
    3. எதிர்காலத்தில் எதுவும் சாத்தியமே சார்

      Delete
  26. ட்யூக் எதிர்பார்ப்பில் சார்...

    ReplyDelete
  27. நினைவலைகள்

    Comeback special...படிக்கிறேன்
    2 வண்ண கதை
    2 மாயாவி
    1 காரிகன்

    200 rs......

    😊😊😊😊😊

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப குட்டி எழுத்துருக்கள்....கண் வலிக்குது...

      Delete
    2. அது நாம வாலிப வயசுல இருந்தப்போ வந்த புத்தகம் மந்திரியாரே.! :-)

      Delete
    3. அப்பிடிங்கறீங்க.....😢😊

      Delete
    4. மந்திரியாரே...

      ரொம்ப காலமாவே நீங்க யார்ன்ற உண்மைய தெரிஞ்சுக்க முடியாம தவிச்சு கெடக்கேன்! 'முத்து-50'க்காண்டி உங்க நினைவலைகளை இங்கே போட்டு, போட்டோவை மெயிலில் அனுப்பி வச்சுட்டீங்கன்னா புக்குல உங்க முகம் பார்த்து பரவசப்படுவோமில்ல? என்ன சொல்றீங்க?!!

      Delete
  28. 1970 ல் நண்பன் லட்சுமி நாராயணனின் தந்தை காலமானதால் அவன் காமிக்ஸ் வாங்குவதில்லை. எனக்கும் இந்திரஜாலின் கதவுகள் அடைக்கப்பட்டது. அதன்பிறகு படங்கள் போட்ட எந்த புத்தகம், காகிதம் கிடைத்தாலும் விடுவதில்லை. பிறகு காமிக்ஸ் என்ற வார்த்தையும் மறந்து போனது.
    பின்னர் 1972 பிப்ரவரி மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை எனது தாயார் கடைத்தெருவுக்கு மளிகை பொருட்கள் வாங்க அனுப்ப கடைத்தெருவில் டீக்கடையும் புத்தக கடையும் இணைந்த கடை ஒன்று இருக்கும். அந்த பக்கம் போகும் போதெல்லாம் கடைவாசலில் நின்று வௌவால்கள் போலத் தொங்கும் புத்தகங்களை பார்ப்பது உண்டு. அண்ணன் தம்பி இருவர் கடையை வைத்திருந்தனர். அப்போதெல்லாம் விட்டலாச்சார்யா படங்களின் திரைப்பட போஸ்டர்கள் நிறைய சுவர்களில் ஒட்டியிருப்பார்கள். அந்த போஸ்டர்களிலெல்லாம் பெரிய கொம்புகளோடும், பெரிய மீசை, தொந்தியுடன் பூதங்கள் காட்சியளிக்கும். அந்த இரண்டு கடைக்காரர்களுக்கும் கொம்பு மட்டும் மைனஸ்! வழக்கம்போல அன்றும் அங்கே நின்று புத்தகங்களை பார்வையிட அப்போது கண்ணில் சிக்கியதுதான் ' இரும்புக்கை மாயாவி'.முத்துவின் முதல் இதழ். எனக்கோ ரொம்ப நாள் கழித்து காமிக்ஸ் என்ற வார்த்தையை கண்டதும் குஷி! ஆனால் புத்தகம் தொங்குவது உயரத்தில். விலை வேறு தொன்னூறு பைசா என்று மிரட்ட புத்தகத்தை பார்த்தேயாக வேண்டும் என்ற தவிப்பும் கடையில் இருக்கும் பூதங்களை பார்க்கையில் பயமும் சேர்ந்து கொள்ள நான் கடைக்கு வந்த வேலையும் மறந்து அட்டைப்படத்தில் உள்ள மாயாவியும் அவருடைய இரும்புக்கை மட்டுமே நினைவில் தங்கிவிட ரொம்ப நேரம் தயங்கி தயங்கி பெரிய பூதத்திடம் 'அது என்ன புத்தகம்?' என்று கேட்க, பூதத்துக்கோ என்னையும் என் டவுசரையும் பார்த்ததும் இது ஒரு வெட்டி கிராக்கி என்று தோன்றியது போலும் பதிலுக்கு 'ம்...ம்..கதை புத்தகம்' என்று சொல்லிவிட்டு சிரிக்க நானும் மறுபடி தயங்கி 'அதை பார்க்கலாமா' என்று கேட்க பூதமோ 'தாராளமா பாக்கலாம். தொன்னூறு பைசாவை கொடுத்துவிட்டு' என்று சொல்லிவிட்டு ரெண்டு பூதமும் சேர்ந்து சிரித்துவிட்டு 'டேய்.. ஒரு மணி நேரமா இங்க வந்து வியாபாரத்த கெடுத்துட்டு நிக்கிறியா? போடா அந்த பக்கம்னு' சொல்லும்போதே டீக்கடை பூதம் பாய்லரில் சுடுதண்ணீரை பிடித்து என்மேல் ஊற்றிவிட அவ்வளவு நேரம் இருந்த தைரியமெல்லாம் சுடு தண்ணீரில் கரைந்து போய்விட எடுத்தேன் ஓட்டம்!

    ReplyDelete
    Replies
    1. அருமையான மலரும் நினைவுகள்.

      // சுடுதண்ணீரை பிடித்து என்மேல் ஊற்றிவிட அவ்வளவு நேரம் இருந்த தைரியமெல்லாம் சுடு தண்ணீரில் கரைந்து போய்விட எடுத்தேன் ஓட்டம்! //

      அடப்பாவி டீக்கடைகாரா :-(

      Delete
    2. ஹா ஹா! அப்புறம் என்னாச்சுங்க திரு.ATR சார்?

      Delete
    3. வருகிறேன் ஈ.வி.
      அந்த 'திரு' வை தூக்கிவிடுங்கள் ஈ.வி.Please.

      Delete
    4. தொடருங்கள் தொடருங்கள்

      Delete
    5. அடப்பாவி டீக்கடைகாரா :-( சத்தியமா நானும் இப்படித்தான் நினைத்தேன்.

      Delete

    6. இரத்தக் கோட்டை நேற்று மறு மறுவாசிப்பு முடிந்து, இன்று மின்னும் மரணம் மறு,மறு,மறு,மறு வாசிப்பு இனிதே துவக்கம்.
      அது என்னமோ தெரியல. டைகர் கதைகள் எப்ப படிச்சாலும் புதுசாவே படிக்கற மாதிரி ஒரு ஃபீலிங். டைகரோஃபோபியாவா இருக்குமோன்னு ஒரு டவுட்டு. ஈரோட்டு டாக்டரைத்தான் கேக்கலாம்னு இருக்கேன்.
      மின்னும் மரணம் புத்தகத்தின கடைசி பக்கத்தில் செனா சாரின் கவிதை இங்கே.
      'மண்ணில் மரணம் தந்தால்
      மறலி வந்தானென
      மருள்வோர் பலரிருக்க,
      சிவகாசி செல்வர்
      தருகின்ற மரணத்தை
      முன்பதிவு செய்கின்ற
      விந்தை பாரீர்.'
      சூப்பர் செனா அனாஜி.

      Delete
    7. ///அந்த 'திரு' வை தூக்கிவிடுங்கள் ஈ.வி.Please.///

      இதோ உடனே தூக்கிடறேன் ATR சார்! 'திரு'ன்ற பேர்ல எங்க ஏரியாவுல ஒருத்தன் சுத்திக்கிட்டிருக்கான்.. அவனையும் சேர்த்துத் தூக்கிடறேன்!

      Delete
    8. ///மின்னும் மரணம் புத்தகத்தின கடைசி பக்கத்தில் செனா சாரின் கவிதை இங்கே.
      'மண்ணில் மரணம் தந்தால்
      மறலி வந்தானென
      மருள்வோர் பலரிருக்க,
      சிவகாசி செல்வர்
      தருகின்ற மரணத்தை
      முன்பதிவு செய்கின்ற
      விந்தை பாரீர்.'
      சூப்பர் செனா அனாஜி.///

      அட்டகாசம்!! அட்டகாசம்!!

      Delete
    9. வாவ்...! முதல் முத்துவுடனான அனுபவம்!! வெயிட்டிங் சார்!

      Delete
    10. @ ATR சார்..

      சூப்பர்..👌👌👌👌

      Delete
  29. சார் 

    சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் முழுவண்ண மறுபதிப்பு வருமுங்களா ? :-)

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. அப்டீனா அதில் உள்ள "மாதம் ஒரு வாசகர்"-ம் முழு வண்ண மறுமதிப்புல வருமே!
      நல்லதா கலர் போட்டோவை செலக்ட்டு பண்ணி வெச்சிகிடுவோம் எதற்கும்...😜

      Delete
    3. சூஹீசூஸ்...பாகம்2...புத்தம் புதிய கதைகள்...ஸ்பைடரின் சினிஸ்டர்செவனுடன் மெகா குண்டாய்....குண்டுலகில் இது வரை இத்தனை பக்கங்களா என ஆச்சரியமுறுவண்ணமாய் திண்ணமாய்

      Delete
    4. ஊம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க ... டிசம்பரிலே தெறிக்க விட்டுப்புடலாம் !

      Delete
    5. இ....இ...இங்கே சும்மா பேசிகிட்டு இருந்தோம் சார்...😉

      Delete
    6. சார்.. எனக்கு TC கொடுத்துடுங்க சார்.. நான் வேற ஏதாவது பாதுகாப்பான தளத்துல போய் சேர்ந்துக்கறேன்!😰😰

      Delete
    7. சார் வேணாம் சார் ஏற்கனவே வாங்கிய அடியே இந்த தலைமுறைக்கு தாங்கும்.

      Delete
    8. ஸ்டீல் ...கொஞ்சம் வந்து இன்னான்னு கேளுங்க ?

      Delete
    9. இன்னிக்கி பாட்டாலே சினிஸ்டர் செவேனே நீங்க சிலாகிக்கிறதிலே லண்டன் வெள்ளம் கூட கிடுகிடுத்திடணும் !

      Delete
    10. //ஊம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க ... டிசம்பரிலே தெறிக்க விட்டுப்புடலாம் !//
      இங்கே உள்ளவர்கள் கருத்து மட்டுமே கேட்காமல் ஹாட் லைன் னில் இதை பற்றிய புக்கிங் அறிவிப்பு செய்யுங்கள் சார். முழு ஒத்துழைப்பு நல்க நாங்கள் காத்து உள்ளோம்.

      Delete
    11. //நல்லதா கலர் போட்டோவை செலக்ட்டு பண்ணி வெச்சிகிடுவோம் எதற்கும்...😜//

      உங்களை ஸ்பைடர் போல உருவகப் படுத்தி HiRes ல் டிஜிட்டல் படம் உங்களுக்கு என் அன்பளிப்பாக தயார் செய்துள்ளேன், மறந்து விட்டீர்களா...? அந்த படம் வேண்டுமா நண்பரே, செம்ம பொருத்தமாக இருக்கும்.

      Delete
    12. ///ஊம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க ... டிசம்பரிலே தெறிக்க விட்டுப்புடலாம் !///

      முழு வண்ணத்தில் என்றால் எனக்கு மூன்று பிரதிகள்.!

      அத்தோடு ஹார்டு பவுன்டும் என்றால் எனக்கு மேலும் மூன்று பிரதிகள்..

      அதேதோடு மேக்ஸி சைசும் என்றால் மேலும் மூன்று பிரதிகள்.!



      சும்மானாச்சுக்கும் ஒரு பிரதி..!

      (ஆகமொத்தம் பத்து ஃபுல்லு..!!)

      Delete
    13. ///உங்களை ஸ்பைடர் போல உருவகப் படுத்தி HiRes ல் டிஜிட்டல் படம் உங்களுக்கு என் அன்பளிப்பாக தயார் செய்துள்ளேன், மறந்து விட்டீர்களா...? அந்த படம் வேண்டுமா நண்பரே, செம்ம பொருத்தமாக இருக்கும்.///

      அது நன்றாக நினைவில் இருக்கு நண்பரே உதய்...ஆம் அதையே அனுப்பி விடலாம்...!!!

      Delete
    14. ///சார்.. எனக்கு TC கொடுத்துடுங்க சார்.. நான் வேற ஏதாவது பாதுகாப்பான தளத்துல போய் சேர்ந்துக்கறேன்!😰😰///

      படிக்கிற பசங்களுக்குத்தான் TC குடுப்பாங்க குருநாயரே.! சத்துணவு கூடத்துல சமைக்கிற ஆயம்மாவுக்கு டிஸ்மிஸ் ஆர்டரோ, ட்ரான்ஸ்பரோத்தான் குடுப்பாங்க.!

      அநேகமா உங்களுக்கு ரிட்டயர்மென்ட் ஆர்டர்தான் கிடைக்கும்..!

      Delete
  30. முத்துகாமிக்ஸின் டாப் ஹீரோஸ் வேதாளர் மாண்ட்ரேக், ரிப்கிர்பி, காரிகன்ஆகியோருக்குமுத்து 50 யில்இடம். அதுபோல் எங்கள் சூப்பர் ஹீரோயினி மாடஸ்டிக்கும் ஒரு குண்டு புத்தகம் அடுத்த ஆண்டுஎங்காவது ஒரு கேப்பில்வெளிவரவாய்ப்புண்டுங்களாசார் முயற்சியுங்கள். ப்ளீஸ் சார். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. இது கிடுகிடுக்க வைக்கும் கோரிக்கை வாஆஆரம் !!

      Delete
    2. கொரனாவில்-இரவும் பகலும்
      சேவை செய்த டாக்டர்களின் பொருட்டாவது நீங்கள் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்யலாம்..

      Delete
  31. தீபாவளி ஸ்பெஷல் என்னங்க Edi sir..

    ReplyDelete
  32. சார். வணக்கம். நான் மனதில் நிஆசைப்பட்டகிர்பி, வேதாளர், மாண்ட்ரேக் போன்ற தொகுப்புகளோடுஎதிர்பாராதவகையில்காரிகனும் வருகிறது. அதுபோலவே இதுவும் எனது ஆசைமட்டுமே.கோரிக்கையாகக்கூட அல்ல. நிறைவேறினால்இளவரசின் பல ஸ்லீப்பர் செல்களும் தங்களை வெளிப்படுத்திக் கொண்டு சந்தோசம் கொண்டாடுவார்கள். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. கலர்ல கேளுங்க ராஜசேகரன் சார்.!

      Delete
  33. அந்திரிக்கி நமஸ்காரம்..!

    ReplyDelete
  34. ///ரொம்பவே எதிர்பார்ப்பைத் தூண்டவல்லவொரு படைப்பாளி என்ற கூட்டணியிலான இந்த டபுள் ஆல்பத்தினை நவம்பரில் உங்களிடம் ஒப்படைக்க பணிகள் ஜரூராய்த் துவங்கியாச்சு !! "ஒரு முறை கொன்று விடு !" முழுவண்ணத்தினில், டபுள் ஆல்பமாய் !!///

    இதே கூட்டணியில் உருவான தனித்திரு தணிந்திரு வித்தியாசமா இருந்துச்சி சார்.! ஆக.. இதுவும் அப்படியே இருக்கும்னு தோணுது.. வரவேற்கிறேன்.!


    ஹெர்மன் ரசிகர்கள் தாண்டிப்போகவும் ப்ளீஸ்..( நகைச்சுவைக்காகத்தான் என்றாலும் ஜம்ப் பண்ணிடுங்கோ ப்ளீஜ்..)

    ஓவியர் ஹெர்மன் மிகப்பெரிய ஜாம்பவான்.. உலகின் பல நாடுகளில் அவரின் திறமைக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்பதெல்லாம் உண்மை.!

    ஆனால் எல்லா கதைகளிலும் ரெட் டஸ்ட், பார்னே, பிரின்ஸ், ஜின், ஜெரெமயா போன்றோர் கெஸ்ட் ரோல் பண்ணுவதாய் தோன்றுவது எனக்கு மட்டும்தானா.!? :-)

    ReplyDelete
    Replies
    1. //எல்லா கதைகளிலும் ரெட் டஸ்ட், பார்னே, பிரின்ஸ், ஜின், ஜெரெமயா போன்றோர் கெஸ்ட் ரோல் பண்ணுவதாய் தோன்றுவது எனக்கு மட்டும்தானா.!? :-)//

      ;-)

      Delete
    2. ///ஆனால் எல்லா கதைகளிலும் ரெட் டஸ்ட், பார்னே, பிரின்ஸ், ஜின், ஜெரெமயா போன்றோர் கெஸ்ட் ரோல் பண்ணுவதாய் தோன்றுவது எனக்கு மட்டும்தானா.!? :-)///

      எனக்கும் தான்! மேலே சொல்லியிருக்கேன் - பாருங்க!

      Delete
    3. எனக்கும் தான்! Basically the same Idly face and eyes and mouth and nose with different stylings based on age, role etc :-D :-D :-D

      Delete
    4. சார் ...இப்புடி பாருங்களேன் ? மேடை ஏறுகிறார் யேசுதாஸ் ! காதல் பாட்டோ ; சோகப் பாட்டோ ; பக்திப் பாட்டோ - வெளிப்படும் அத்தனை ஜானர்களிலும் ஒரே கம்பீர குரல் தானே கேட்கின்றது ?

      இங்கே ஏசுதாஸ் இடத்தினில் ஹெர்மன் ஜி ! பாடல்களுக்குப் பதிலாய் சித்திரங்கள் ! Output -ல் ஒற்றுமை இருப்பதில் ஏது வியப்பு ?

      Delete
  35. Tex ஸ்பெஷல் வெளியீடு (for babu child) பற்றி அறிவிப்பு ஏதும் இல்லையா?
    This month

    ReplyDelete
  36. .....கல்லடிபட்ட நாய்போல கடைத் தெருவில் ஓட ஆரம்பித்து வீட்டுக்குப் போய் மறுபடி அம்மாவிடம் திட்டுவாங்கி மளிகை சாமான்களை வாங்க திரும்ப மறுபடி கடைக்குப் ஓடிப்போய்....!
    எல்லாம் முடிந்து ஒரு வழியாக ஓய்ந்து உட்காரலாமென்று பார்த்தால் மாயாவி என்னை 'வர்லாம்...வர்லாம்...வா' ன்னு கூப்பிட்டுக் கொண்டு இருந்தார். முதல் தடவையாக அம்மாவிடம் பொய்க்கணக்கு சொல்லி தொன்னூறு பைசாவை தயார் பண்ணிவிட்டேன்!
    கடைத்தெரு மூன்று கி.மீ.தூரத்தில் இருந்ததும், மறுபடி பூதங்களிடம் போய் புத்தகம் வாங்குவதையும் நினைத்தாலே கால்கள் இரண்டும் கதகளி ஆடியது. மாலை வந்ததும் நண்பன் ஒருவனை துணைக்கழைத்துக் கொண்டு(என் பாட்டியின் ஐடியா!) கடைத்தெருவுக்குப் போய் அவனிடம் விபரம் சொல்லி அவன் மூலம் புத்தகத்தை கைப்பற்றி அங்கேயே நின்று புரட்ட ஆரம்பித்தால்...! புரட்சித்தலைவரைப்போல புதிய வானம்...புதிய பூமி..ன்னு பாட்டு பாடவில்லை. அவ்வளவுதான்! ஊரே புதியதாகத் தெரிந்தது! தெருவில்ஓடிக் கொண்டிருக்கும் நாய்களையும் கட்டிப்பிடித்து கொஞ்சத் தோன்றியது! வாழ்க்கையில் முதன் முறை எனக்கே எனக்கென்று ஒரு காமிக்ஸ். அதுவும் சாகாவரம் பெற்ற இரும்புக்கை மாயாவி என்ற நாயகரின் முதல் இதழ் எனக்கு சொந்தமானது அன்று ஒருலட்சம் ரூபாய் பணத்தை என்னிடம் கொடுத்திருந்தால்கூட அந்தளவிற்கு ஆனந்தம் கிடைத்திருக்காது. தந்தைக்கு தெரியாமல் இடுப்பில் மறைக்கப்பட்ட புத்தகத்துடன் வீட்டின் உள்ளே சென்று( கேப்டனுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு! அதுபோல என் தந்தைக்கு பிடிக்காத வார்த்தை காமிக்ஸ்!) இரவு எல்லோரும் உறங்கியபின்னர் வாசலுக்கு வந்து அங்கிருந்த விளக்குகம்பத்தின் கீழே நின்று புத்தகத்தை படிக்கபடிக்க மாயாவியின் இரும்புக்கையின் முழு ஆற்றலும் எனக்கும் வந்த மாதிரியாக உணர்ந்தேன். மின்சாரத்தில் கைகளை செருகவில்லை. அவ்வளவுதான். நானே மாயாவியாகி அன்று இரவு முழுவதும் அந்த நினைப்பிலேயே புரண்டு கொண்டு தொடர்ந்த நாட்களில் பள்ளியில் இந்தக் கதையை சொல்லி்ச் சொல்லி மற்ற நண்பர்களின் காதில் புகையையும், வயிற்றில் எரிச்சலையும் ஒருசேர ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். நியாயமான விலை. தெளிவான படங்கள். எளிமையான மொழி பெயர்ப்பு. கொடுத்த பணத்துக்கும் மேலான மகிழ்ச்சியையும், திருப்தியையும் அள்ளித்தந்த முத்து காமிக்ஸை எனக்கு அறிமுகப்படுத்திய நம் சீனியர் எடிட்டர் அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன். பதினோறு வயதில் வறுமையின் பிடியில் சிக்கியிருந்த என் பால்ய காலத்தை வசந்தமாக்கியது நம் முத்து காமிக்ஸ். இன்றுவரை மட்டுமல்ல மீதமிருக்கும் என் ஆயுட்காலம் முழுக்க அந்த நினைப்பு என்னுள் இருக்கும்!
    மீண்டும்வருவேன்.

    ReplyDelete
    Replies
    1. ப்பா!! உங்கள் எழுத்துக்களைப் படிக்கும்போதே அதற்குள் குடிகொண்டிருக்கும் உற்சாகம் எங்களையும் தொற்றிக்கொள்கிறது ATR சார்!
      என்னவொரு காமிக்ஸ் அனுபவம்!!!

      Delete
    2. ///உங்கள் எழுத்துக்களைப் படிக்கும்போதே அதற்குள் குடிகொண்டிருக்கும் உற்சாகம் எங்களையும் தொற்றிக்கொள்கிறது ATR சார்!///

      கூட்டல்குறி ஒன்று

      Delete
    3. // பதினோறு வயதில் வறுமையின் பிடியில் சிக்கியிருந்த என் பால்ய காலத்தை வசந்தமாக்கியது நம் முத்து காமிக்ஸ் //

      Super. அழகாக சொன்னீங்க.

      Delete
    4. தோழர்களுக்கு நன்றி.

      Delete
    5. சார் அற்புதம் சார் இது போல எழுதத் தான் நீங்கள் வேண்டும்.

      Delete
    6. ஆங் ...உங்க போட்டோ ATR சார் !

      Delete
    7. அனுப்பிவிடுகிறேன் எடிட்டர் சார்.

      Delete
  37. பாட்டாலே ஸ்பைடர சொன்னார்
    பாட்டாலே கேக்கச் சொன்னார்

    பாட்டாலே ஸ்பைடர சொன்னார்
    பாட்டாலே கேக்கச் சொன்னார்
    சினிசெவனுக்கு நான் பாடுப்பட்டேன்
    அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்

    பாட்டாலே ஸ்பைடர சொன்னார்
    பாட்டாலே கேக்க சொன்னார்
    சினிசெவனுக்கு நான் பாடுப்பட்டேன்
    அந்த பாட்டுக்கள் பலவிதம் தான்

    இளவரசகள் காதல் கன்னியரை
    கவர்ந்திட கதைகள் கேட்டார்கள்
    டாக்டர்கள் மாடஸ்டி அடிமைகளாய்
    இருப்பதை பாடச் சொன்னார்கள்

    லயனோடு கேட்டிடும்
    டெக்சு தோட்டாவின்
    கதய போடசொன்னார்கள்
    என்பதோட சேர்ந்திட
    வேதாளர் ஆர்ச்சி கேட்டார்கள்

    நான் கேட்கும் கதைகள்
    அந்த ஏழு'கள்
    அதை படித்திட்டாலும் முடிந்திடாது



    பாட்டாலே ஸ்பைடர சொன்னார்
    பாட்டாலே கேக்கச் சொன்னார்
    சினிசெவனுக்கு நான் பாடுப்பட்டேன்
    அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்

    கதையினில் மாடஸ்டி கார்வின கேக்க சொல்லி
    அதுதான் நல்லதென்றார்கள்
    லயனின் முதல் கதையை கேக்க வைத்து
    அது நல்ல ராசி என்றார்கள்

    எத்தனையோ கதைகளை
    ஸ்பைடர் கதைகளாய்
    நான் கேட்டேன் இதுவரையில்
    அத்தனையும் நல்லவைதான் அவை
    நல்லவைதான் என அறிவேன் உண்மையிலே

    எனக்குதான் நண்பர்கள்
    என் ஆசிரியர்கள்
    அவர் கேட்கும் வரையில்
    கேட்டு வைப்பேன்

    பாட்டாலே ஸ்பைடர சொன்னார்
    பாட்டாலே கேக்க சொன்னார்
    சினிசெவனுக்கு நான் பாடுப்பட்டேன்
    அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்

    பாட்டாலே ஸ்பைடர சொன்னார்
    பாட்டாலே கேக்கச் சொன்னார்
    சினிசெவனுக்கு நான் பாடுப்பட்டேன்
    அந்த பாட்டுக்கள் பலவிதம்தான்

    ReplyDelete
    Replies
    1. ////டாக்டர்கள் மாடஸ்டி அடிமைகளாய்
      இருப்பதை பாடச் சொன்னார்கள்///

      🤣🤣🤣🤣 சிரிச்சு முடியலீங்க ஸ்டீல்!!

      Delete
    2. ஏதோ டயப்பர் மாத்துற பிசியிலே எங்க கவிஞர் இருக்கறதுனால ஒரே பாட்டோட நேத்திக்கு தப்புச்சீங்க !

      ஆங் ..இன்னிக்கி கோட்டாவா அந்த "விண்வெளிப் பிசாசு" பாட்ட எடுத்து விடுங்கோ !!

      Delete
    3. "வைதேகி காத்திருந்தாள் " படத்திலே நைட்டுக்கா நைட்டு கேப்டன் பாட்டு பாடுவாரில்லையா மலையுச்சிலேர்ந்து ?

      கேப்டனுக்கு முடியறது கவிஞருக்கு முடியாதா - என்ன ?

      Delete
    4. சார் உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி?? சும்மா இருந்த கவிஞரை இப்படி காலில் சலங்கை கட்டி மேடை ஏற்றி விட்டீர்களே?

      Delete
  38. Replies
    1. பார்த்துட்டேன்.. ஸ்டீல் நான் பார்த்துட்டேன்...

      Delete
    2. அப்படியே கொஞ்சம் திருந்திட்டு வந்தாலும் சரிதான்! :D

      Delete
    3. EV செம்ம டைமிங்

      Delete
  39. நம் முத்து காமிக்ஸில் உறைபனி மர்மம், நாச அலைகள், பாம்புத்தீவு என்று மாயாவி கலக்கிக் கொண்டிருக்க மாதாமாதம் காமிக்ஸ் வாங்க படாத பாடுபட்டு பணம் புரட்டுவதுமாக ஓடிக்கொண்டிருந்த நாட்கள் அவை. அடுத்த புத்தகம் வரும்வரை கையிருப்பில் உள்ள புத்தகங்களை எத்தனைமுறை படித்திருப்பேன் என்று கணக்கே இல்லை!
    பிறகு ஃப்ளைட் 731ல் லாரன்ஸ், டேவிட் இருவரும் வந்திறங்க அவசர அவசரமாக அவர்களுக்கும் உள்ளத்தில் இடம் ஒதுக்கி விட்டேன். மாயாவிக்கு முற்றிலும் மாறுபட்ட நாயகர்களான லாரன்ஸ்,டேவிட்! கதையில் விதவிதமான வில்லன்கள். நாயகர்கள் இருவரும் அவர்களை முறியடிக்கும் பரபரப்பான சம்பவங்கள் என்று போகும் கதை ஃப்ளைட் 731.
    காற்றில் கரைந்த கப்பல்கள் வரும்போது எங்கள் ஊரில் புயலடித்து நிறைய மரங்கள் வேரோடு சாய்ந்து எங்கள் வீட்டின் பின்னே இருந்த மரம் எங்கள் வீட்டின்மேலே விழுந்து வானமே கூரையாகி பலநாட்கள் அங்கேயே முடங்கி கிடந்தோம். மின்சாரமும் கிடையாது. வீட்டில் சமைக்கவும் வழியில்லை. மழை வீட்டையே அதகளபடுத்திவிட சொந்த ஊரிலேயே நாடோடிகள் போல வாழ்க்கை. பலருக்கும் இதே நிலைதான். உணவு கிடைக்கையில் சாப்பிட்டுக்கொண்டு பசியெடுக்கும் நேரமெல்லாம் நம் காமிக்ஸ்தான் உணவானது. இதை எழுதும்போதுகூட கண்ணீர் எட்டிப்பார்க்கிறது. அன்று உடனிருந்த அப்பா, அம்மா, எனக்கு உயிரான பாட்டி இவர்கள் யாரும் இன்றில்லையே என்று. அதன்பின்னர் உலகம் சுற்றும் வாலிபர் ஜானி நீரோ,ஸ்டெல்லா கொலைகாரக் கலைஞனில் அறிமுகம். கதையில் மெழுகு கண்காட்சியில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களும், கடைசி பக்கங்களில் சர்க்கஸ் கொட்டகையில் வில்லனை ஜானி வேட்டையாடுவதும் செம விறுவிறுப்பாக இருக்கும். இருந்தாலும் ஜானியைவிட ஸ்டெல்லாவை ரொம்ப பிடிக்கும். அமைதியான சுபாவம் ஆனால் ஜானிக்கு ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் புயலென சீறிப்பாய்வதும் ஸ்டெல்லா மீது தீராக்காதல் ஏற்பட காரணமாகிவிட்டது. அதன்பின் முத்து காமிக்ஸ் விளம்பரங்களிலும் உங்கள் அபிமான மும்மூர்த்திகள் என்று பெயர் தாங்கி வெவ்வேறு களங்களில் மாதாமாதம் பரபரப்பை எகிற வைத்துக் கொண்டிருந்தனர். இன்றைக்கு அவர்கள் மூவரும் பலருக்கு நையாண்டி நாயகர்களாக இருந்தாலும் எங்கள் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இன்றும் அவர்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இருப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் ரசிக்கும் படி உள்ளது உங்களின் மலரும் நினைவுகள்.

      Delete
    2. சார் ...மும்மூர்த்திகளை இன்றைய வாசகர்கள் பகடி செய்வதற்கு ஒருவிதத்தில் நாமுமே காரணம் தான் என்பேன் ! அவற்றை தொடர் மறுபதிப்புகள் செய்திருக்காது, பழைய கெத்தும் , பசுமையான நினைவுகளும் மட்டுமே தொடர்ந்திட இடம் தந்திருக்க வேண்டும் போலும் ! மிளிரும் புராதனம் முன்தலைமுறைக்கு எவ்வித நெருடல்களையும் ஏற்படுத்தியிராது தான் ; ஆனால் இன்றைய யுகத்தினரும் அதே பாணியில் எடுத்திடப் போவதில்லையெனும் போது 'ஹி ..ஹி ..க்கள் ' பலனாகியதில் வியப்பில்லை தான் !

      Delete
    3. நீங்கள் எழுதுவது அப்படியே ஒவ்வொரு வாசகரையும் அவரது பால்யத்துக்கு அழைத்து செல்லும் சார். You Continue

      Delete
    4. //உணவு கிடைக்கையில் சாப்பிட்டுக்கொண்டு பசியெடுக்கும் நேரமெல்லாம் நம் காமிக்ஸ்தான் உணவானது. //
      touching story... Cant ignore these kind of passion.

      //இன்றைக்கு அவர்கள் மூவரும் பலருக்கு நையாண்டி நாயகர்களாக இருந்தாலும் எங்கள் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இன்றும் அவர்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இருப்பார்கள்.//

      Well said Sir.

      Delete
    5. //அவற்றை தொடர் மறுபதிப்புகள் செய்திருக்காது, பழைய கெத்தும் , பசுமையான நினைவுகளும் மட்டுமே தொடர்ந்திட இடம் தந்திருக்க வேண்டும் போலும் ! மிளிரும் புராதனம் முன்தலைமுறைக்கு எவ்வித நெருடல்களையும் ஏற்படுத்தியிராது தான் ; ஆனால் இன்றைய யுகத்தினரும் அதே பாணியில் எடுத்திடப் போவதில்லையெனும் போது 'ஹி ..ஹி ..க்கள் ' பலனாகியதில் வியப்பில்லை தான் !//
      நீங்கள் செய்த மறுபதிப்புகளால்தான் இழந்து போன பல பொக்கிஷங்களை என்னைப் போன்றோர் மலிவுவிலையில் திரும்ப பெற முடிந்தது சார். வெளியே சந்தையில் ஒவ்வொன்றும் ஆயிரக் கணக்கில் விலை வைத்தல்லவா விற்றுக் கொண்டிருந்தனர்.அதனால் மறுபதிப்பு என்னைப்பொறுத்தவரை தவறில்லைதான்.
      இன்றைய யுகத்தில் சினிமா உள்பட எந்த ரசனையில் முன்னேற்றம் கண்டு விட்டனர் என்று தெரிவில்லை சார். கதாநாயக பிம்பம் பெரிய அளவில் கட்டவிழ்த்துக் கொண்டு விட்டது. முன்பிருந்த மாதிரியே பாலபிஷேகம் கட்அவுட்டுக்கு மாலை, கிராஃபிக்ஸ் உபயத்தில் வண்டியோட்டும் நாயகர்களுக்குள் மோதல்கள்,facebook, twitter ல் கீழ்த்தனமான பேச்சுக்கள், சபீதாபாபி காமிக்ஸ், காது கூசுமளவு பேசும் ஜி.பி.முத்து போன்ற நபர்களுக்கு லட்சக் கணக்கில் ரசிகர்கள் இன்னும் இதுபோன்ற நிகழ்வுகளைவிட மும்மூர்த்திகள் எந்தவிதத்திலும் குறைவானவர்கள் இல்லை சார்.
      இன்றைய யுகத்தில் கொண்டாடப்படும் காமிக்ஸ் நாயகர்களை எதிர்காலம் கிண்டலடிக்கும். கிண்டல், கேலி இதையெல்லாம் அப்படியே கடந்து போய்விடுவேன் சார். மகாத்மாவையே கிண்டலடிக்க ஆட்கள் இருக்கையில் மும்மூர்த்திகள் மட்டும் விதிவிலக்காக முடியாது சார்.

      Delete
    6. இங்கே உங்களின் தற்போதைய மீள்வருகைக்குப் பின்பான பின்னூட்டங்கள் அனைத்துமே செம புத்துணர்ச்சியுடன் இருப்பதை பார்க்க செமையாக உள்ளது சார் ; கலக்குங்கள் !

      Delete
    7. நன்றி சார்.
      எல்லா புகழும் எடிட்டருக்கே.

      Delete
    8. அட்டகாசமான நினைவலைகள் ATR சார்!! மிகச் சிரமமான காலகட்டத்திலும் நீங்கள் காமிக்ஸையும், காமிக்ஸ் உங்களையும் விட்டு நீங்காமல் ஒரு வாழ்க்கைத் தோழனாகவே இத்தனை காலமும் பயணம் செய்து வந்திருப்பதெல்லாம் நெகிழ்வான அம்சங்கள்!!

      Delete
    9. /// இன்றைக்கு அவர்கள் மூவரும் பலருக்கு நையாண்டி நாயகர்களாக இருந்தாலும் எங்கள் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இன்றும் அவர்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இருப்பார்கள்.///

      உண்மையான கருத்து சார்.

      Delete
    10. செடி தளிர் விட்டு வளர்ந்து மரமாகி, கிளைபரப்பி, பூத்து குலுங்கி, காய்த்து, கனிந்து நிற்பதற்கு காரணமே மண்ணில் ஆழத்தில் கண்ணுக்கு புலப்படாமல ஊன்றி நிற்கும் வேர்கள் தான். மும்மூர்த்திகள் காமிக்ஸ் எனும் படர்ந்த மரத்தின் வேர்கள் என்றால் மிகையில்லை.

      Delete
    11. அருமை atr...
      சார் இன்று வயதாகி அறிவாகலாம்...
      ஆனா பரபரப்பில்லாம என்பதுகள நினைவில் நிறுத்தி டவுசரோட படித்தா லிலையில்லா பயணம்

      Delete
    12. ////// இன்றைக்கு அவர்கள் மூவரும் பலருக்கு நையாண்டி நாயகர்களாக இருந்தாலும் எங்கள் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இன்றும் அவர்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இருப்பார்கள்.///


      உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன் சீனியர் நண்பர்களே! இனி மும்மூர்த்திகளை நையாண்டி* செய்ய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்!




      *விதிமுறைகளுக்கு உட்பட்டது. இந்தச் சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே.

      Delete
    13. This comment has been removed by the author.

      Delete
  40. கேட்ட உடனே பாட்டாவே பாடிட்டாரே கவிஞர் வாழ்த்துக்கள் கவிஞரே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  41. ATR சார் நலமா ?

    உங்கள் முத்து நினைவலைகள் என்னை அக்காலத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டன. சிறு வயதில் நானும் வறுமையின் கொடுமையை அனுபவித்து அதை மறக்க காமிக்ஸ் நாயகர்களே உதவினர்.மும்மூர்த்திகள் கதைகளே பால்யத்தில் என்னைப் பக்குவப்படுத்தின. மாயாவியின் பாம்புத்தீவு , லா -டேன் தலை கேட்ட தங்கப் புதையல் , ஜானியின் துருக்கியில் ஜானி நீரோ போன்றவைகளை எத்தனை தடவைப் படித்திருப்பேன் என்பதற்குக் கணக்கே இல்லை.நன்றி சார்.

    ReplyDelete
  42. Psaravananpsaravanan சார். நலம்தான் சார்.
    எனக்கெதற்கு சார் நன்றியெல்லாம்.ஐம்பதாண்டுகள் ஆனபோதும் இன்னும் நாமெல்லாம் அந்த நினைவுகளை ஆனந்தமாய் அசைபோட்டுக் கொண்டிருப்பதற்கு உதவிய முத்து காமிக்ஸின் சீனியர் எடிட்டருக்குத்தான் நாமெல்லாம் நன்றி சொல்ல கடமைபட்டவர்கள்.

    ReplyDelete
  43. பொட்டி கிளம்பி விட்டது. இன்று புதுப் பதிவு.
















    என்று ஆசிரியர் சொல்வாரா?



    அடுத்த வெள்ளி அட்டவணை ஆவலுடன் நான்.

    ReplyDelete
  44. வலைமன்னா உன்ன காணாத
    லயனு காத்தாடி போலாடுது
    வலைமன்னா உன்ன காணாத
    லயனு காத்தாடி போலாடுது

    வலைமன்னா உன்ன காணாத
    லயனு காத்தாடி போலாடுது
    வலைமன்னா உன்ன காணாத
    லயனு காத்தாடி போலாடுது

    வயதாகிப் போச்சு
    வெளியேத்த்தியாச்சு
    மனசு ஒன்னத் தேடுது

    வலைமன்னா உன்ன காணாத
    லயனு காத்தாடி போலாடுது

    லயனுக்கொரு முகவரி
    திகிலுக்கொரு இட நிரப்பி
    மினிலயனுக்கொருகொரு தஞ்சம் நீதானய்யா

    லயனுக்கொரு முகவரி
    திகிலுக்கொரு இட நிரப்பி
    மினிலயனுக்கொருகொரு தஞ்சம் நீதானய்யா

    தத்தித் தவழும் சிலந்திப் பயலே
    பொங்கிப்பெருகும் பொம்மைப் பயலே
    யுத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்

    டெக்சோடு இங்கு எனக்கென்ன பேச்சு
    நீதானே மன்னா நான் வாங்கும் மூச்சு
    படித்தாக வேண்டும் வாவா மன்னா

    வலைமன்னா உன்ன காணாத
    லயனு காத்தாடி போலாடுது



    வயதாகிப் போச்சு
    வெளியேத்த்தியாச்சு
    மனசு ஒன்னத் தேடுது
    வலைமன்னா உன்ன காணாத
    லயனு காத்தாடிபோலாடுது

    லயனில் ஒரு கதை என
    முத்தில் ஒரு வலை என
    கண்ணில் ஒரு உனது கதை
    பார்த்தால் என்ன



    டைகர் கதையோ டெக்சு கதையோ
    முத்தில் எதுவோ லயனில் எதுவோ
    சந்தித்ததும் சிந்தித்ததும் திகட்டிடட

    வலையய்யா நீதான் இல்லாத நானும்
    ஹெலிகாரில் பறந்து நீந்தாத வானம்
    தாங்காத ஏக்கம் போதும் போதும்

    வலைமன்னா உன்ன காணாத
    லயனு காத்தாடி போலாடுது
    வலைமன்னா உன்ன காணாத
    லயனு காத்தாடி போலாடுது

    வலைமன்னா உன்ன காணாத
    லயனு காத்தாடி போலாடுது

    ReplyDelete
    Replies
    1. ///தத்தித் தவழும் சிலந்திப் பயலே
      பொங்கிப்பெருகும் பொம்மைப் பயலே////
      🤣🤣🤣🤣
      ////டெக்சோடு இங்கு எனக்கென்ன பேச்சு
      நீதானே மன்னா நான் வாங்கும் மூச்சு///
      🤣🤣🤣🤣
      ///
      வலையய்யா நீதான் இல்லாத நானும்
      ஹெலிகாரில் பறந்து நீந்தாத வானம்////

      🤣🤣🤣🤣

      Delete
    2. ஸ்டீலின் இந்தப் பாடலைப் பாராட்டி சினிஸ்டர் செவனை வண்ணத்தில் இறக்கிடுங்க எடிட்டர் சார்!

      'இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
      இன்பத்தில் ஆடுது என் பற்களே
      வலைமன்னரின் இதழ் வர்தோ
      வண்ணப்பதிப்பாய் வெளிவர்தோ' - அப்படீன்னு எங்க ஸ்டீல் சீக்கிரமே பாடணும்!

      Delete
  45. /// உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன் சீனியர் நண்பர்களே! இனி மும்மூர்த்திகளை நையாண்டி* செய்ய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்!


    *விதிமுறைகளுக்கு உட்பட்டது. இந்தச் சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே.///

    Offer valid upto December 2022 only.

    Reply

    ReplyDelete