Powered By Blogger

Thursday, October 28, 2021

அக்டோபரில் நவம்பர் !!

 நண்பர்களே,

வணக்கம். சொன்னதைச் செய்து காட்டிட ஏக்கமாய்க் குட்டிக்கரணங்கள் அவசியமாகிப் போக, இக்கட தலை காட்டக் கூட நேரமில்லை !! அந்தக் காரண- காரியங்கள் பற்றி நீட்டி முழக்குவதையெல்லாம் அப்புறமேட்டுக்கு வைத்துக் கொள்ளலாம் என்பதால் - இதோ சேதி : "பொட்டிகள் கிளம்பியாச்சூ !" இன்று மதியம் நவம்பர் இதழ்களுடனான உங்களின் டப்பிக்கள் கூரியர் ஆபீஸ்களின் நெரிசல்களுக்குள் புகுந்து விட்டன & நாளை முதலாய் பட்டுவாடாக்கள் துவங்கிட வேணும் !! Fingers crossed !! 

இம்முறை தீபாவளியின் பரபரப்பு ஒரு வாரத்துக்கு முன்னமே ஊரை அரவணைத்திருப்பதால் - திரும்பின திக்கிலெல்லாம் நம்ம தானைத் தலைவர் கவுண்டரைப் போல - "இங்கே நான் ஒரே பிசி" டயலாக்கைத் தான் ஆளாளுக்கு அள்ளி விட்டுக்கொண்டுள்ளனர் ! பைண்டிங்கில் பிசி ; சரக்கை ஏற்றிப் போகும் லோடு ஆட்டோக்கள் கூட பிசி ; கூரியரில் பிசியோ பிசி ; லாரி ஷெட்களில் தெறிக்கும் பிசி !! So இந்த பிசிக்களின் மத்தியில் புறப்பட்டுள்ள கூரியர் பார்சல்கள் இவ்வாரயிறுதிக்குள்ளாய் உங்களை எட்டிட புனித மனிடோ அருள் பாலிப்பாராக !! 

ஊரே பிஸியாயிருக்கும் போது நாம மட்டும் இளப்பமா - என்ன ? சும்மா கடந்த 4 நாட்களாய் ஆபீசே on fire !!  காத்துள்ள பணிகளின் மொத்தத்தையும் ஒரு பட்டியலிட்டுப் பார்க்க போன வார இறுதியினில் முனைந்த போது - லைட்டாக வயிற்றுக்குள் கொட கொடவென சத்தம் !! 

அடுத்த 20 நாட்களுக்குள் பூர்த்தி கண்டிட எனது பொறுப்பினில் மட்டுமே காத்திருந்தவை இவை  :

*ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்கள்" - எஞ்சி நின்ற  138 பக்கங்கள் 

"டேங்கோ" - 62 பக்கங்கள்

"(புது) வெட்டியான் ஸ்டெர்ன்" - 78 பக்கங்கள்

அலாவுதீனும், ஒரு புலானாய்வுப் பூதமும்" - 54 பக்கங்கள்

இரத்தப் படலம் - "நினைவோ ஒரு பறவை - 46 பக்கங்கள் 

ஆக சுமார் 375 + பக்கங்களின் மொழிபெயர்ப்பு ; அப்புறமாய் ஒட்டு மொத்த 600 பக்கங்களின் எடிட்டிங் ; அப்புறமாய் அந்த மாயாவியார் + ஸ்பைடர் + செக்ஸ்டன் ப்ளேக் இதழின் பணிகள் + "எலியப்பா & கோ.தோன்றும் விலையில்லா இதழ் - என்று அடையார் அனந்த பவனின் மெனு போல நீளமாய் நிற்பதை எழுதிப் பார்த்த போது, கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது !! உத்தேசமாய் இவற்றை நிறைவு செய்திடத் தேவைப்படக்கூடிய அவகாசம் எவ்வளவென்று கணக்கிடவே கை நடுங்கியது !! வாய் கிழிய வாக்குறுதிகளை அள்ளிவிட்டாச்சு ; இனி சொதப்பினால் வெளியே தலை காட்ட முடியாதென்பது புரிந்த கணத்தில் எங்கிருந்தோ பிறந்த வெறித்தனமான உத்வேகம் என்னை மட்டுமன்றி, நமது DTP டீமையுமே தொற்றிக் கொண்டது ! 

4 நாட்களில் 178 பக்கங்கள் - இது எனது பேனாவின் output !! 

4 நாட்களில் 116 பக்கங்கள் - இது நமது DTP டீமின் output !! 

Phew ...நிறையவே பல்டிக்கள் அடித்துள்ளோம் கடந்த பத்தாண்டுகளில் ; ஆனால் this takes the cake !! அதிலும் - "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்கள்" மொழியாக்கம் ஒரு flow-வில் தெறிக்க ஆரம்பித்த போது - அதனை வெறெந்தக் காரணத்தின் பொருட்டும் பாழ் பண்ணிட வேண்டாமே என்ற எண்ணத்தில் blog பக்கமாய்க் கூட எட்டிப் பார்த்திட முனையவில்லை ! அதுவும் போன மார்ச்சில், லாக்டௌன் துவங்கும் முன்னே துவங்கிய பணியிது ;  கோர்வைகளில் பிசிறின்றி flow தொடர்ந்திட வேண்டுமெனில்,  மீதப்பக்கங்களை இனியொரு இடைவெளி இன்றி எழுதி முடிக்க  வேண்டுமென்று பட்டது ! 

ஒரு தினுசான மோன நிலையில் ஓட்டமெட்டிருந்த இந்த நாட்களின் மத்தியில்  காத்துள்ள 'தல' தீபாவளி மலரின் preview போடவோ ; ட்யூக்கின் அட்டைப்படம் + preview கண்ணில் காட்டவோ ; உங்களுக்கோர் அறிவிப்பைப் போட்டு வைக்கவோ கூட தோன்றவே இல்லை !! இதோ - இந்த நொடியினில் கூட என் மண்டை - வெட்டியான் ஸ்டெர்ன் & கோ. சகிதம் கேன்சஸ் சிட்டியில் தான் வேரூன்றிக் கிடக்கிறது ! புனித மனிடோ அருளியுள்ள இந்த ராக்கெட் fuel டேங்க்கில் மீதம் இருக்கும் போதே - மிச்சப் பணிகளையும் கபளீகரம் செய்து முடித்து விட்டால் - டிசம்பரில் டென்ஷனின்றி உலாற்ற இயலும் என்பதால் மறுக்கா அந்த ஓட்டத்தைத் தொடரக் கிளம்புகிறேன் guys !!

But அந்த previews போடாது கிளம்பிட மாட்டேன் தான் !! Here you go :

அட்டைப்படத்தின் சித்திரம் ஒரிஜினலே ; வர்ணங்கள் + மெருகூட்டல் மாத்திரமே நமது டிசைனர் பொன்னனின் உபயம் ! And புக்கை நேரில் பார்க்கும் போது தான் அந்த அட்டைப்பட நகாசு வேலைகள் ; மினுமினுப்புகள் புரிபடும் ! So இங்குள்ள டிசைன் நாங்கள் பணியாற்றிய base மாத்திரமே ; இதன் மீது ஒரு லோடு வேலைப்பாடுகள் நடந்துள்ளன ! 


And இதோ - ஓவியர் சிவிடெல்லியின் கைவண்ணத்தில் இளம் டெக்ஸ் + ரெகுலர் டெக்ஸ் + இளம் தேஷா + ரெகுலர் தேஷா ரகளை செய்திடும் கலர் ஆல்பத்தின் preview !!

And தொடர்வது - "பருந்துக்கொரு பரலோகம்" black & white அதிரடி மேளாவின் preview ! இந்த முறையுமே டெக்ஸ் & கிட் center stage எடுத்துக் கொள்ள பட்டாசாய்ப் பொரிகிறது ஆக்ஷன் ! 

Last but not the least - கலர் டெக்ஸ் சிறுகதை ! நிறையவே ???? களையும், !!!!!! களையும் கொணரவுள்ள இந்தச் சிறுகதையின் preview இதோ !! மீதத்தை வெள்ளித்திரையில் காண்க !

அம்சமாய், hardcover-ல் கலக்கிடும் இந்த இதழ், நமது பண்டிகை தினங்களை அதிரச்செய்திட்டால் - 'எல்லாப் புகழும் போனெல்லிக்கே !!'

Before I sign out - இதோ ட்யூக் :


என்றைக்கேனும் ஒரு தூரத்து நாளில் இந்த 'பொம்ம புக்' பெயரைச் சொல்லி அடிக்க நேர்ந்த கூத்துக்களையெல்லாம் சிறுகச் சிறுக  நினைவு கூர்ந்திட ஒரு சாவகாசப் பொழுது அமையுமாயின் - இந்நாட்களை நிச்சயமாய் வாய் பிளந்தே அசைபோடுவேன் ! Simply becos - இந்த நொடியில் எங்களணிக்குள் புகுந்திருப்பது நிச்சயமாய் ஏதோ ஒரு காஞ்சனாவோ ; முனியோ ; அரண்மனை ஆவியோ தான் !! அது எந்த ரகமாகயிருந்தாலும், சரி, அதன் முதுகில் சவாரி செய்தபடிக்கே ஒரு வண்டியோ வண்டி வேலைகளை நிறைவு செய்ததை நிச்சயமாய் ரொம்பவே ஸ்பெஷலாய் நினைவு கூர்ந்திடுவேன் !! இன்னும் பாதித் தொலைவுள்ளது guys - ஓட்டமெடுக்கிறேன் அதனுள் மீண்டும் ஐக்கியமாகிட !! Bye all...see you around !!

P.S : ஆன்லைன் லிஸ்டிங்குகள் காலையில் ரெடியாகிடும் !

அப்புறம் sorry guys - டப்பிக்குள் ரவுண்டு பன் நுழைக்க இடமில்லை !! Hardcover டெக்ஸ் திடமாயிருக்க, மீத 2 ஆல்பங்களுமே டபுள்ஸ் என்பதால் டப்பியில் திணிக்க இடமில்லை ! So சாக்லெட்டோடு இந்தவாட்டி ஒப்பேற்றிடுங்கள் - ப்ளீஸ் !!

317 comments:

  1. Replies
    1. நான் தான் அந்த unkown

      Delete
    2. ம்க்கும்...அது நானு

      Delete
    3. கோட்டை அழிச்சிட்டு மீண்டும் பதிவை போடுங்க சார், அப்ப பார்கலாம் யார் first என்று :-)

      Delete
    4. நம்ப தலைவருக்கு வேலை அதிகம் என்பதால் ஆள் வைத்து துண்டைப் போட்டு முதல் இடம் பிடிக்க சொன்னார் என பதுங்கு குழியில் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன :-)

      Delete
    5. முதல் கமெண்ட் நானே!
      வேறோரு அக்கவுண்டிலிருந்து பிளாக்கில் கமெண்ட் செய்ததால் பெயர் வரவில்லை.
      அப்புறம் டெக்ஸ் அட்டைப்படம் சூப்பர்.

      Delete
    6. இப்படிக்கி,

      தனபாலன், மதுரை எனும் ஈரோடு விஜய்

      (ஹிஹி)

      Delete
    7. அந்த UNKNOWN நான்தான்னு சொன்னா நம்பவா போறீங்க சகோ'ஸ் !???

      கணந்து போய்ட்டேன் ... 😍

      Delete
  2. இரவு வணக்கம் சார்.. மற்றும் நண்பர்களே.

    ReplyDelete
  3. நல்ல வேளை சார். புது பதிவு வந்ததோ, நாங்க தப்பிச்சோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்டீலு...

      இதுக்கும் ஒரூ பாட்டூண்டே...

      Delete
    2. ஆசிரியர் நம்மை காப்பாற்றி விட்டார் :-)

      Delete
  4. இரவு வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  5. என்னிக்காவது ஒரு நாள் மொதா கமென்ட் போடாமே விட மாட்டேன்.் இது அந்த வைத்தியர் மேல சத்தியம்...

    ReplyDelete
    Replies
    1. அது எந்த வைத்தியர் சாமி ?

      Delete
    2. வர வர உங்களுக்கு சத்தியம் கூட செய்யத் தெரியல ரம்மி :-)

      Delete
    3. //அது எந்த வைத்தியர் சாமி ?//

      மோகன்லால் பஜாஜ்+ கிர்தர்லால் பஜாஜ் கூட்டணியில் 1972-ல் உருவானவர்..ஓல்ட் மாங்க் இவர் சகோதரர்...

      யெஸ் ! DOCTOR RESERVE VSOP TAG - உடன் வருபவர்..

      ரம்மி குறிப்பிடும் வைத்தியர் இவர்தான் என நினைக்கிறேன்...:-)

      DOCTOR VSOP is a heritage brand Indian

      Brandy :) most consider it as medicinal brandy..

      ரம்மி நலமா? செ அ from different phone..

      Delete
    4. லுசெட்ட தெரியாத மொதலாளியா

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. டெக்ஸ் & ட்யூக் அட்டைப்படங்கள் அருமையாக உள்ளது. அதில் ட்யூக் அட்டைப்படம் செம கலக்கலாக உள்ளது.

    உங்கள் முன் உள்ள மலை போன்ற பணிகள் மலைக்க வைக்கிறது, அதே நேரம் இவை எப்போதும் ஆக்டிவாக வைக்க உதவுவது சந்தோஷத்தை தரும் அதே நேரத்தில் உங்கள் உடல் நலத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் சார்.

    நமது சிறு அணியினர் உங்களின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஒடி வருவது சிறப்பு. அவர்களுக்கு என நன்றிகள்.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. / டப்பிக்குள் ரவுண்டு பன் நுழைக்க இடமில்லை !! ///
    வட போச்சே..
    இளம் டெக்ஸ் பாக்கறதுக்கு நம்ம ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் மாதிரி இருக்கிறாரே..

    ReplyDelete
  10. வணக்கம் காமிக்ஸ் காதலர்களே....!!!

    ReplyDelete
  11. உள்ளேன் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  12. ஒவ்வொரு ப்ரிவியூவுமே அடுத்த வாரத்திலிருந்து குருவி குட்டியை பள்ளிக்கூடம் அனுப்பனுமே என்ற திகிலை விடவும் திகிலை கிளப்புகிறது.. இன்னொரு பக்கம் அப்பாடா என்ற நிம்மதியும் பிறக்கிறது..
    அதாவது எப்பிடின்னா.. அதிகாரிக்கு துப்பாக்கியிலே குண்டு தீர்ந்து போச்சுன்னா கீழே ஏற்கனவே சுட்ட தோட்டவை ( ரவையை) எடுத்து லோட் பண்ணி திருப்பி சுடுறா மாதிரி..(ரவை எனும் உப்புமாஙில் சாகாத மனிதன் யாரு??)..

    ReplyDelete
    Replies
    1. // ஒவ்வொரு ப்ரிவியூவுமே அடுத்த வாரத்திலிருந்து குருவி குட்டியை பள்ளிக்கூடம் அனுப்பனுமே என்ற திகிலை விடவும் திகிலை கிளப்புகிறது.. //

      :-))))

      Delete
    2. ஹா ஹா ரம்மி.. செம! :)))))

      Delete
  13. Replies
    1. ஆடியில காத்தடிச்சா
      ஐப்பசியில் மழையடிக்கும்
      ஆறுகுளம் நெறஞ்சிருக்கும்
      அன்பு மனமே..

      Delete
  14. // 4 நாட்களில் 178 பக்கங்கள் - இது எனது பேனாவின் output !!

    4 நாட்களில் 116 பக்கங்கள் - இது நமது DTP டீமின் output !! //

    கண்ணை கட்டுகிறது சார்! மகத்தான சாதனை, சிறப்பு! பாராட்டுக்கள்! Take care.

    ReplyDelete
  15. ஹேப்பீ தீபாவளி.....😍😍😍😍

    ReplyDelete
  16. //அப்புறம் sorry guys - டப்பிக்குள் ரவுண்டு பன் நுழைக்க இடமில்லை// பரவாயில்லை சார். அடுத்த மாத இதழ்களுடன் அப்பொழுது ஃப்ரெஷ்ஷாக ஆர்டர் செய்த பன்'னை அனுப்பிட்டால் போச்சு 😁😁😁... வாங்காம விட மாட்டோம்ல 😎😎😎

    ReplyDelete
    Replies
    1. இதுவரை வந்ததிலேயே இதான் பெஸ்ட்டு கமெண்ட்!!🤝🤝

      Delete
    2. ஹி ஹி நாம எல்லாரும் பன் விஷயத்தில் கன் பார்ட்டிங்க ஆச்சே 😁😁😁🤗

      Delete
    3. அப்படீன்னா பன்னு சேமியா மாதிரி நீளமா இருக்கும் பரவால்லயா

      Delete
    4. ஆங்ங்ங்ங்ங்!!!! அப்படின்னா ஒரு மாதிரி தினுசா பதவிசா அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா போச்சு சாரே... ஆனால் பன்னு ரொம்ப முக்கியம் சாரே :) :P

      Delete
  17. // டிசம்பரில் டென்ஷனின்றி உலாற்ற இயலும் என்பதால் மறுக்கா அந்த ஓட்டத்தைத் தொடரக் கிளம்புகிறேன் guys !! //

    பார்த்து ஓடுங்கள் சார்! உடம்புக்கு தேவையான ஓய்வை கொடுங்கள்! நன்றாக தூங்குங்கள்! நிறைய தண்ணீர் குடியுங்கள்! Take care!!

    ReplyDelete
  18. டெக்ஸ் போட்டோல பார்கறச்சயே கலக்குறாரு சார்

    நேரில் பட்டய கிளப்புவாரு போல 💃🏻💃🏻💃🏻
    .

    ReplyDelete
  19. கரடிகிட்ட அகப்பட்ட டெக்ஸ்... துப்பாக்கி வேற இல்லையே...

    ReplyDelete
  20. கலர் டெக்ஸ் சிறுகதை வண்ணமும் சரி சித்திரங்களும் சரி மிகவும் பளீர் என்று அழகாக உள்ளது; டெக்ஸ் மலை மேல் இருந்து கீழே வேறு விழுகிறார், என்ன ஆச்சு என தெரிந்துகொள்ள மனம் தவிக்கிறது. புத்தகம் கைகளில் கிடைத்த உடன் இந்த கதையை தான் இந்த முறை வாசிக்கவேண்டும்!

    ReplyDelete
  21. ஆசிரியரின் உழைப்பு என்னை ஆச்சரியப்படுத்துகிறது.இந்தப் பொம்ம புக்குகளின் மேல் உள்ள காதல் தான் அவரை இப்படி உற்சாகத்துடன் பணி புரியத் தூண்டுகிறது என்பதில் ஆச்சர்யமேது ?!.

    வாழ்க பொம்ம புக்குகள் !!@

    ReplyDelete
    Replies
    1. // பொம்ம புக்குகளின் மேல் உள்ள காதல் தான் அவரை இப்படி உற்சாகத்துடன் பணி புரியத் தூண்டுகிறது //

      அதே அதே.

      Delete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. எடிட்டர் சார்..

    வழக்கமாக அதிகாரியின் அதிரடியில் வெளியாகிடும் 'தீபாவளி மலர்' என்றால், அட்டைப்படத்தில் அவரை ஏதாவதொரு திசையில் துப்பாக்கியை முழங்க வைத்து, தீப்பொறி சகிதம் போஸ் கொடுக்க வைத்திருப்பீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் கதையோடு ஒன்றிவரும் சித்திரத்தையே அட்டைப்படமாக்கியதோடு, அதிகாரியை பின்னுக்குத் தள்ளி, அவரது மகனை முன்நிறுத்தியது மெய்யாலுமே ஆச்சரியம் தான்!! நாம் நிறைய மாறிட்டோம் என்பதை உணர்த்துகிறது இது! ஆனால் அதிகாரி போஸ் கொடுக்கும் அட்டைப்படமும் (இது போன்ற தீபாவளி குண்டுபுத்தகங்களுக்கு) தனி அழகுதான், கம்பீரம் தான்! அதையும் மறுப்பதற்கில்லை தான்!!

    'ஒருமுறை கொன்றுவிடு' அட்டைப்படம் - வாஆஆஆஆவ்!!! என்னவொரு கற்பனை.. என்னவொரு கலரிங்!!! மூச்சை இழுத்துப்பிடிக்க வைக்கிறது!!


    தீயாய் உழைத்து, குறித்த நேரத்தில் டப்பிகளை அனுப்பியிருக்கும் உங்களுக்கும், உங்கள் டீமுக்குக்கும் ஒருவாட்டி எழுந்து நின்று கைதட்டுகிறேன்!!

    டப்பிக்குள் ரவுண்டு பன் இல்லையென்பதை நினைக்கும்போது தான் பீறிட்டுவரும் அழுகையை அடக்கமுடியவில்லை!!

    ReplyDelete
    Replies
    1. // தீயாய் உழைத்து, குறித்த நேரத்தில் டப்பிகளை அனுப்பியிருக்கும் உங்களுக்கும், உங்கள் டீமுக்குக்கும் ஒருவாட்டி எழுந்து நின்று கைதட்டுகிறேன்!! //

      +1

      Delete
    2. //டப்பிக்குள் ரவுண்டு பன் இல்லையென்பதை நினைக்கும்போது தான் பீறிட்டுவரும் அழுகையை அடக்கமுடியவில்லை!!//

      அதே நிலை தான் 😥

      Delete
    3. கிருஷ்ணா..

      எப்போதாவது ஓரிருமுறை ரவுண்டு பன் சாப்பிட்ட உங்களுக்கே இத்தனை ஏமாற்றமென்றால் என்றால், ரவுண்டு பன்னிலேயே குழம்பு, ரசம், மோர் ஊற்றி சாப்பிட்டுப் பழகிய எனக்கு எம்புட்டு ஏமாற்றமாய் இருக்கும்?!!

      Delete
    4. கொஞ்சம் பெரீய்ய ரவுண்டு பன் போலிருக்கே...

      Delete
  24. ட்யூக் அட்டைப்படம் செம கலக்கல்...

    ReplyDelete
  25. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  26. அடடா பன்னு போச்சே.
    சரி சார் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம்.
    கலர் டெக்ஸ் ஓவியங்கள் வித்தியாசமாக இருக்கின்றன இறுதி நிலைப்பாடு படித்ததும்.
    கருப்பு வெள்ளை பக்கம் பட்டையை கிளப்புகிறது.
    Duke வெற்றி பெற வாழ்த்துக்கள் உங்களுக்கும் எங்களுக்கும்
    இம்முறை தீபாவளி பழனியில் என்பதால் புத்தகங்களை அங்கு அனுப்ப சொல்லி இருந்தேன் நாளை தெரிந்துவிடும்.
    ஞாயிறு சென்று தான் பார்க்க வேண்டும்.
    நண்பர்கள் தல தீபாவளியை முன்பே கொண்டாடுங்கள்

    ReplyDelete
  27. Sir,

    As long as you enjoy such tight deadlines we are fine - but when you feel stressed please take a break sir. It is OK if a few issues get put off to the following month - at your age your health is of paramount importace !

    Please .. please .. please take adequate rest sir !

    ReplyDelete
    Replies
    1. The Doctors in this site - please advise the Editor ! We need his services for the long haul !

      Delete
    2. இன்னுமொரு பத்து நாட்கள் மட்டுமே சார் ; டிசம்பர் & FFS இதழ்களின் பணிகளில் பெரும்பான்மை நிறைவுற்றிருக்கும் !

      அதன் பின்னான பணிகள் will be a walk in the park !

      Delete
    3. ///The Doctors in this site - please advise the Editor ! ///

      எனக்கென்னமோ டாக்டர்கள் சொல்வதை விட, அவர்கள் மீன் பிடிக்க துணைக்கு அழைத்துச் செல்லும் யுவதிகள் யாராவது சொன்னால் எடிட்டர் தட்டாமல் கேட்பார் என்று தோன்றுகிறது! :P

      Delete
    4. ஆசிரியரின் உற்ச்சாகமே இந்த எழுத்துக்கள் தானே ராகவரே...எழுத்தே மருந்து...இதுவே விருந்து...உறங்காத இரவுகளுக்கு உதவுனா சரி...உறக்கம் வந்தா எந்த நேரம்னாலும் உறங்கிடுங்க சார்

      Delete
  28. """""""தீபாவளிமலர்""""""

    இந்த ஆண்டின் தீபாவளி மலர் நாளை விடும். அதற்கான நேரம் நெருங்க நெருங்க இந்த தீபாவளி மலர் பற்றிய எதிர்பார்ப்பு சுமார் 20வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போலவே சற்றும் குறையாமல் இருக்கிறது..........

    முன்பெலாம் தீபாவளிமலர் பற்றிய முன்அறிவிப்புகளை ஒரு சில மாதங்களுக்கு முந்தைய இதழ்களில் இருந்தே வெளியிட்டு உற்சாக மீட்டரை தெறிக்க விடுவார் எடிட்டர் சார். அப்போது அவரது பெயர் மட்டுமே நம்மை காமிக்ஸ் உடன் இணைக்கும் பாலம்.

    2013ல் இருந்து முன்னோட்ட அட்டவணை நம்கையில் ஓராண்டுக்கு முன்னரே கிடைத்து விடுகிறது. அட்டவணை வெளிவரும் நாளில் அடுத்த ஆண்டின் தீபாவளிமலர் என்ன என்றே ஒவ்வொரு முறையும் மனசு தேடுகிறது. தீபாவளிமலர் அறிவிப்பை பார்த்து குதூகலித்த பின்னரே மற்ற இதழ்களை கண்கள் மேய்கின்றன!

    நம்ம மனசுகளை "மத்தாப்பாக" மலரச்செய்யும் தீபாவளிமலருக்கு வயது இப்போது 37!

    லயன் காமிக்ஸ்ஸின் முதல் தீபாவளி மலர், 1984 நவம்பரில் ரூபாய் 4க்கு இருவண்ணத்தில் பெரிய மெகா சைசில் "இரும்பு மனிதன்" வெளியானது. அன்று தொடங்கி இதுவரை 21தீபாவளிமலர்கள் வெளிவந்துள்ளன. இடையில் சூழல் காரணமாக தீபாவளிமலர் வெளிவராத ஆண்டுகளில் முந்தைய தீபாவளிமலர்களை புரட்டி பாரப்பது என் வழக்கம்!

    இன்றும் பழைய பெட்டியில் உள்ள தீபாவளிமலர்களை எடுத்து பார்த்தேன். ஒவ்வொரு அட்டைபடமாக பார்க்கும் போது உள்ளம் "பூந்தொட்டி"யாக சொரிகிறது.

    ஒவ்வொரு இதழாக எடுத்து கன்னத்தோடு வைத்து அழகு பார்க்கும் போது, உற்சாகம் "பொங்கு"கிறது.

    பாக்கெட் சைஸில் உள்ள தீபாவளிமலர் 1987-லயன் சூப்பர் ஸ்பெசலை கையில் இருந்து மீண்டும் பெட்டிக்குள் வைக்க முடியாத மனசு "சங்கு சக்கரம்" போல அதை சுற்றி சுற்றியே வருகிறது.

    இதுவரை வந்துள்ள தீபாவளிமலர்கள்....

    1.இரும்பு மனிதன்-1984

    2.தலைவாங்கி குரங்கு-1985

    3.தீபாவளிமலர்-1986

    4.லயன் சூப்பர் ஸ்பெசல்-1987

    5.இரத்தமுத்திரை-1988

    6.அதிரடிக் கணவாய்-1989

    7.மீண்டும் ஸ்பைடர்-1990

    8.கழுகு வேட்டை-1992

    9.நள்ளிரவு வேட்டை-1996

    10.இரத்தப்படலம் VII-1997

    11.இரத்தப்படலம் VIII-1998

    12.இரத்தநகரம்-1999

    13.மரண தூதர்கள்-2000

    14.சாத்தான் வேட்டை-2003

    15.தீபாவளிமலர்2013-நீதியின் நிழல்&மரண தேசம் மெக்ஸிகோ.

    16.இரவே இருளே கொல்லாதே-2014

    17.தீபாவளி வித் டெக்ஸ்-2015-டைனோசரின் பாதையில் & எமனின் வாசலில்.

    18.சர்வமும் நானே-2016

    19.ஒரு தலைவன் ஒரு சகாப்தம்-2017

    20.காதலும் கடந்து போகும்-2018

    21.தீபாவளி மலர்2019

    22.தீபாவளி with Tex2020-யுத்த பூமியில் டெக்ஸ் & பனிவனப் படலம்!

    நாளையோ நாளைமறுநாளோ கையில் தவழப்போகும் தீபாவளி மலரை எண்ணி மனம் "ராக்கெட் " ஆக ஜிவ்வுனு பறக்குது!

    எத்தனையோ சோதனைகளுக்கு மத்தியில் அரை டஜன் கதைகள் கொண்ட பெட்டியை ஓப்பன் பண்ணும்போது மகிழ்ச்சி ஒவ்வொரு இல்லத்திலும் "ஆயிரம் வாலா" வாக மலரப்போகிறது!

    இந்த மகிழ்ச்சியை விளைவிக்கும் சிவகாசி அணியினருக்கு முன்கூட்டிய தீபாவளி நல்வாழ்த்துகள்💐💐💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் நண்பரே...தீபாவளி வாழ்த்துகள்!

      Delete
    2. //முன்பெலாம் தீபாவளிமலர் பற்றிய முன்அறிவிப்புகளை ஒரு சில மாதங்களுக்கு முந்தைய இதழ்களில் இருந்தே வெளியிட்டு உற்சாக மீட்டரை தெறிக்க விடுவார் // இவ்வரிகளை படிக்கும் போதே இனம் புரியாத உற்ச்சாகம்...அந்த வழவழப்பான கண்ணாடி அட்டை...கோடை மலர்...தீபாவளி மலர்...வரிகள் பாக்க அந்த நாளின் ஏக்கம்...இன்றைய தீவாளி மலர் பதிவ பாக்க தொடருது...காலப்பயணம் எப்பவும் போல சாத்தியமே

      Delete
    3. அருமை விஜயராகவன்.

      Delete
    4. // மனசுகளை "மத்தாப்பாக" மலரச்செய்யும்,
      உள்ளம் "பூந்தொட்டி"யாக; மனசு "சங்கு சக்கரம்" போல // அட அட அட... அருமை சார். இதை படிக்கும் போது மனசு "ராக்கெட்" போல பறக்குது !!! பின்குறிப்பு: உங்களை பாராட்டி நம்ம ஸ்டீல் கவி பாடுவார் என்பது கொசுறு செய்தி...

      Delete
  29. வணக்கம் நண்பர்களே...

    சரவணகுமார்.

    ReplyDelete
  30. சார்..

    வேறு வழியில்லை!

    சிவகாசியில் ரவுண்டு பன்னுகள் விற்கும் அந்த coronation bakeryக்கு இந்தவருடத்திலிருந்நு சந்தாக் கட்ட முடிவெடுத்துவிட்டேன்! சந்தா Y-B-Y-K (எனது பன் - எனது கடுங்காப்பி)யை தேர்ந்தெடுக்க முடிவு செய்துவிட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. ////சிவகாசியில் ரவுண்டு பன்னுகள் விற்கும் அந்த coronation bakeryக்கு இந்தவருடத்திலிருந்நு சந்தாக் கட்ட முடிவெடுத்துவிட்டேன்! சந்தா Y-B-Y-K (எனது பன் - எனது கடுங்காப்பி)யை தேர்ந்தெடுக்க முடிவு செய்துவிட்டேன்////

      உங்க பசி தீர்ந்ததுக்கப்புறம்..சாப்பிடுற ஒவ்வொரு பன்னும் அடுத்தவங்களோடது..!
      :-)

      Delete
  31. அட்டை படங்கள் அருமை. இதம்முறை கிட் அட்டை படத்தின் முன்னால், அதுவும் தூக்கு கயிறோடு- ஆவலை அதிகப்படுத்துகின்றது. டியூக் இன் அட்டை படம் செம. கலர் டெக்ஸ் அசத்தல். கீழே விழும் டெக்ஸ் இற்கு என்ன நடக்குமோ என பயங்கலந்த ஆவல். ஆல்பங்களை காண குதூகலம்தான் சார். ஆயினும் தங்களின் உடல்நலத்தில் கவனம் எடுங்கள். அனுபவத்தில் கிடைத்த ஞானோதயம். இதில் எமது சுயநலம் கூட உள்ளது சார். தாமதத்தினால் ஒன்றும் கெடாது. Please take care.

    ReplyDelete
  32. சார் அட்டைப்படம் இப்படியே வந்தாலும் அள்ளுமே....அதுவும் வண்ணம் அட்டகாசமா முன்பக்கமும் பின்பக்கமும் பொருந்தியது போல என்னா அழகு....இதுல இன்னும் ஜிகுனாவும் சேந்தா...ஹார்டுபௌண்ட்ல வந்தா...இளம் டெக்சும் இருந்தா...வண்ணத்தக் கலந்தா அடேயப்பா....சத்தியமா இப்படியோரட்டை அமையும்னு நெனச்சிப் பாக்கல....இதுவரை வந்த இனியும் வர உள்ளதுல டாப் இதானங்ற வரிகளுக்குள் பாந்தமாய் அமையுது....
    புதையல் கதை புதையலாய்ங்றது உள்பக்க சேதி....இந்த முறை எந்த தீபாவளிக்கும் விடாத ராக்கட்ட கொளுத்திட்டீங்க போல...கதைகளும்...இலவச கதையும் செம...அவசரப்பட்டுட்டமோ...ட்யூக் அட்டை நம்ம வரலாற்றுல மைல் கல்லாக இருக்குமோ...ஆனா வண்ண டெக்ஸ் அட்டை...சரி...சரி...நேர்ல் பாத்து நாளைக்கே சொல்வோம்...
    இரத்தப்படலம் மறந்தே போச்சு...எதிர்பாரா இன்பமா தெரிது...ஸ்டெர்ன்...ஒநொஒதோ ...உங்க உற்சாக எழுத்துக்கள் இப்படியே தொடர செந்தூரான் அருளை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  33. எடிட்டர் சார்,

    ஒருமுறை கொன்றுவிடு! அட்டகாசமான தலைப்பு !!!

    ReplyDelete
  34. This comment has been removed by the author.

    ReplyDelete
  35. எடிட்டர் சார் அக்டோபர் மாதத்தின் புத்தகங்கள் நேற்று கிடைத்தது. நீங்கள் என்னதான் ரகரகமாய் காமிக்ஸ்கள் கொடுத்தாலும் நான் முதலில் படிப்பது என்னவோ நம்ம அதிகாரி கதையைத்தான்.

    கண்ணே கொலை மானே! கதை நன்றாக விறுவிறுப்பாக தான் சென்றது இருந்தாலும் ஏதோ ஒன்று குறைவது போல் இருக்கிறது. நம்ம வெள்ளி முடியார் இல்லாததாலும் இருக்கலாம்! கதையில் எல்லா சித்திரங்களையும் அருமையாக வரைந்த ஓவியருக்கு டெக்ஸ் வில்லர் மட்டும் சரியாக வரவில்லை. அதேபோல் கதையின் தலைப்பு நன்றாக இருந்தும் கதைக்கு சிறிதும் ஒட்டவில்லை.

    என்னுடைய ரேட்டிங் 8/10

    மற்ற கதைகளை இனிமேல்தான் ஒவ்வொன்றாக படிக்க வேண்டும் தீபாவளி மலர் வரும்வரை! ஆனால் இந்த தடவை தீபாவளி மலர் சீக்கிரமே என் கையில் கிடைத்துவிடும் என்று நம்புகிறேன். fingers crossed :-)

    ReplyDelete
    Replies
    1. \\ கதை நன்றாக விறுவிறுப்பாக தான் சென்றது இருந்தாலும் ஏதோ ஒன்று குறைவது போல் இருக்கிறது \\ கண்டிப்பாக சார். அதே பீலிங் தான் படித்ததும் வந்தது. இருக்கு!!! ஆனா இல்லை!!! வகை உணர்வு!!!!

      Delete
  36. /// இரத்தப் படலம் - "நினைவோ ஒரு பறவை - 46 பக்கங்கள் ///

    சூப்பர்சார். தலைப்பும் அருமை. இரத்தப்படலம் அங்கே ரிலீஸ் ஆகி விட்டதா? அப்படியானால் 2022ல் ஜேஸனும் தலை காட்டுகிறாரா? ஏனெனில் அக்டோபர் இறுதி யில் தான் அங்கே ரிலீஸ் ஆகிறது. அதன்பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அட்டவணை ரிலீஸ் பதிவில் சொல்லியிருந்தீர்கள். சிறப்பான தகவல். நன்றிகள் சார். (ஒரு வேளை ஃபெவிகால் டப்பா காலியாகிவிட்டதோ?)

    ReplyDelete
  37. Edi Sir.. தீபாவளி மலர் 2021 அட்டைபடமும் அதற்கான முன்னோட்டமுமே அசத்தல் என்றால் கதைகள் எல்லாம் ச்சும்மா அள்ளுமே.. I am eagarly waiting ..

    ReplyDelete
  38. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை சார்உங்கள் உழைப்பு. இந்தகைய முயற்சியில் இருப்பீர்கள் என்று தெரிந்தும் பதிவுசீக்கிரம் வேண்டும் என்றுஅடம் பிடித்த எனது மடமை உறுத்துகிறது. சேலத்துலமுப்பத்தேழு வருச தீபாவகளை க் கொண்டாடிக் கொண்டிருக்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  39. *தீபாவளி 2021* *அதிரடி -சரவெடி*

    1)பொக்கிஷம் தேடிய பயணம்

    2)பருந்துக்கொரு பரலோகம்

    3)கலர் Tex

    *3 in 1 - Hard cover*.

    *தல* தீபாவளி- *டாப் டக்கர்* தீபாவளி
    *

    ReplyDelete
  40. தீபாவளி டெக்ஸ் வண்ணப்பக்கங்கள் ஜோலிக்குது... தலையில்லா போராளி போல சித்திரத்தரம் அதுவும் வண்ணத்தில் செம்ம அதகளம்... வண்ண மினி டெக்ஸ் கண்களுக்கு விருந்து...பட்டைய கிளப்பப் போகிறார் என்பது நிச்சயம்... Waiting for the books.

    ReplyDelete
  41. இரத்தப்படலம் முதல் புத்தகத்தின் கடைசி பாகத்தைப் படிக்க...நீங்க நினைவோ ஒரு பறவைய எடுக்க....அடடா

    ReplyDelete
  42. இது வர வந்த அட்டைகளிலேயே இதுதான் டாப். படைக்கும் உங்களுக்கும் அலுக்கவில்லை. பாராட்டும் கவிஞருக்கும்அலுக்கவில்லை படிக்கும் எங்களுக்கும் அலுக்கவில்லை. அதே டெக்ஸ். அதே தீபாவளி.அதேஅதிரடி சரவெடி இந்த சந்தோசம் ஆண்டாண்டு டுகளுக்கு தொடர புனிதமானிடோ அருள வேண்டும். கரூர் ராஜ சேகரன்.

    ReplyDelete
    Replies
    1. அந்த அட்டய ரெண்டையும் பாருங்க....எப்படி சொல்லாம இருக்க முடியும்...யாரழகுன்னு போட்டியில் விக்கிரமாதித்தன் நிலைதான் நமக்கும்...நேர்ல பாப்போம் நண்பா

      Delete
  43. ஒரு. கையில் தீபாவளி தலையும் இன்னொரு. கையில். ரவுண்ட் பன். வைத்து. கொண்டாடலாம். என. நினைத்தேன் வடை. போட்சே. Dekshnamoorthy. Thiruvarur

    ReplyDelete
  44. வந்துட்டேன். ரொம்பவே லேட் ஆக வந்துட்டேன்.

    ReplyDelete
  45. தீபாவளி மலரை கைப்பற்றியாச்சே.......💪🏻

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னு யாரு முதல்ல சொல்றிங்கன்னு பாப்போம்.😇

      Delete
  46. டியர் எடி, பல நாள் பயணத்திற்கு பிறகு இப்போதுதான் வீடு திரும்பினேன்... மழை நீரில் நணைந்த சென்ற மாத காமிக்ஸ் டப்பா, திகிலுடன் வரவேற்த்தது.

    நல்லவேளை உள்ளே இருந்த பாலித்தீன் கவர் காப்பாத்திடுச்சி. வார இறுதிக்காக காத்திருக்கிறேன், இந்தியப் அழகொடு :)

    அதற்குள் அக்டோபரில் நவம்பர் கொண்டு வந்திட்டீங்க... ஒவ்வொண்ணா கருத்து பதிகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. முதலில், அந்தி அழகு... அப்படி அதில் என்னதான் இருக்குன்னு பார்க்கோணும்.... Wish me Luck. ��

      குழுவில் இதற்காக நண்பர்கள் மத்தியில் வெட்டு குத்து தான் நடக்கலை... அனைத்து விமர்சனங்களையும் சம்மாக மதிக்க கற்றுகொள்ளுங்கள் என்று எடுத்துரைத்ததுக்கு, நட்பு வட்டாரத்தில் ஒரு டிக்கெட் காலியானதுதான் மிச்சம் ��

      Delete
    2. ஹாஹா .. times we live ! அது சரி - பெரிய கர்ணன் துரியோதனன் நட்பு, விட்டு தள்ளுங்க. தலைவர் பேட்டல சொல்ற மாதிரி "கடந்து போவதுதானே வாழ்க்கை - ஹா ஹா ஹா ஹா "

      Delete
    3. //நட்பு வட்டாரத்தில் ஒரு டிக்கெட் காலியானதுதான் மிச்சம்//

      All is well bro, everything will be alright.. Stay cool...

      Delete
  47. Advance Happy diwali to all my comirades and editor and his whole crew

    ReplyDelete
  48. இன்னைக்கு ஒரு தீபாவளி.

    அடுத்த வாரம் ஒரு தீபாவளி..!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. சொல்லவேயில்ல... நடக்கட்டும்...!!!😉

      Delete
  49. டெக்ஸ்

    லக்கி

    ட்யூக்..

    சீக்கிரமா வாங்க..

    ReplyDelete
  50. இங்கு இருக்கும் ஒரு சிறு அணியின் மகிழ்ச்சிக்காக தங்களின் அயரா உழைப்பும், காமிக்ஸ் ஆர்வமும் கண்டு நெகிழ்கிறேன் சார்.
    Take care of your health also.

    ReplyDelete
  51. தல தரிசனம் பார்த்தாச்சி...

    ரஞ்சித் ஜி, வாத்தியார் "வெள்ளை இளவரசி " வாயிலாக...!!!

    டெக்ஸ் அட்டைகள் சும்மா தெறி....!!!!

    கருப்பு வெள்ளை டெக்ஸ் கலக்குதாம்..

    சரவணனின் முதல் விமர்சனம்....,

    ///டெக்ஸ் என்ற அந்த வசீகரம் அந்தப் புத்தகத்தை கீழே வைக்கவே எண்ணம் வரவில்லை என்ன ஒரு ஈர்ப்பு வேற லெவல் டெக்ஸ் இதில் வந்துள்ள கருப்பு-வெள்ளை டெக்ஸ் ஆரம்பமே அதிரடி சூப்பர் சூப்பர்///

    தல தீபாவளி ஆரம்பம்ம்ம்ம்ம்ம்ம்....!!!

    ReplyDelete
  52. இணையத்தை கடந்து இருக்கும் வாசகர்களுக்கு அட்டவணையை பார்க்கும் பொழுது எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்கிறேன்.


    இங்கு அனைவரும் கடந்த 2 வாரத்தில் பேசி முடிதாகிவிட்டது, இங்கு இருப்பவர்களுக்கு கண் தீபாவளி மலரில் தான்.

    அவர்கள் பார்த்துவிட்டு அலைபேசியிலோ அல்லது கடிதம் போட்டாலோ தெரிவியுங்கள் சார்.

    ஆனால் அப்படி இருப்பவர்களுக்கான சாத்தியங்கள் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. வித்தியாசமான சிந்தனை, கிருஷ்ணா!

      Delete
    2. /* இணையத்தை கடந்து இருக்கும் வாசகர்களுக்கு அட்டவணையை பார்க்கும் பொழுது எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்கிறேன். */

      Work from home-la over busy-aa Krishna ? ;-) :-)

      Delete
    3. @ஈ வி : 🙏🏼

      @Raghavan : UK Shift starts at 1PM so until thoughts 🤣

      Delete
  53. Wishing friends and Editor, Publisher and associated families all a very Happy Deepavali and a festive season again - our real Deepavali though is in Jan 22 ! :-)

    ReplyDelete
  54. புக்கு வந்திடுச்சேஏஏஏஏய்ய். எனக்கு தீபாவளி தொடங்கிடுச்சேஏஏஏய்ய்...

    ஆஹா!
    ஓஹோ!!
    பேஷ்! பேஷ்!!
    ரொம்ப நன்னாயிருக்கு!!!

    சூப்பர்!
    அருமை!!
    ஃபண்டாஸ்டிக்!!!

    (டெம்ப்ளேட் உதவி : அறந்தாங்கி அருமை வாசகர்)

    ReplyDelete
  55. தோழர்களுக்கு வணக்கம். அட்டணை வெளியான இரவில் சாலை விபத்தால் எங்கள் குடும்பத்தில் நடந்துவிட்ட ஒரு துயர நிகழ்வு அது சம்பந்தமான வேலைகள் என்று போய்விட்ட காரணத்தால் தளத்தின் பக்கம் வரஇயலவில்லை. இதன் நடுவே செனா அனா சாரின் பரிசைப் பற்றி நம் தளத்து நண்பர் சொல்லியிருந்தாலும் உடனடியாக பதிலளிக்க இயலவில்லை. மன்னியுங்கள் செனா அனா சார்.
    //முத்து 50 வெளிவரும் இப் பொன்னான தருணத்தில் மூத்த வாசகர்களில் தலையாய உங்களை ( முதல் மாயாவியை அதே ஆண்டில் அதே மாதத்தில் படித்தவரல்லவா) கனப்படுத்தும் விதத்தில் 2022 முழு சந்தா உங்களுக்கு பரிசாக அளிக்கவிருப்பதில் பெருமை கொள்ளவிருக்கிறேன்//
    செனா அனா சார். ஒரு பண்பாளர், அறிவுஜீவி, உயிர் காக்கும் உன்னத பணியில் இருக்கும் ஒரு நல்ல மனிதரிடமிருந்து இந்த பரிசினை பெறுவதில் நான் பெருமை கொள்வதுதான் சரியாக இருக்க முடியும்.
    அந்த பெருமையை எனக்களித்த உங்களுக்கு என்னுடைய நன்றியை கூறிக்கொள்கிறேன் சார்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ATR சார். துக்க நிகழ்விற்கு வருந்துகிறேன்.

      Delete
    2. நன்றி குமார் சார்

      Delete
    3. அருமையான மனிதரிடமிருந்து
      அருமையான மனிதருக்கு - இந்த
      அருமையான பொன்விழா தருணத்தில்
      அருமையான பரிசு கிடைத்திருக்கிறது!

      வாழ்த்துகள் - கொடுத்தவருக்கும்🌹, பெற்றவருக்கும்🌹!

      Delete
    4. ATR துக்க நிகழ்விற்கு வருந்துகிறேன்.

      Delete
    5. தோழர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete
    6. நன்றி மகி சார்.

      Delete
  56. தீபாவளி இதழ்களை கைப்பற்றியாகி விட்டது,தல தெறி இரகம்,அட்டைப்படத்தை கண்ணில் ஒத்திக்கலாம் போல இருக்கு,முன்னாடி சிகப்பும்,பின்னாடி பச்சையுமாக ப்பா என்னவொரு அசத்தல் மேக்கிங்....
    இந்த மேக்கிங்கிற்காகவே புக் விற்பனையில் அசத்தும் சார்,வழக்கம்போல் இதுவும் விற்பனையில் சாதனை படைக்கும் என்று நம்புகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ///இந்த மேக்கிங்கிற்காகவே புக் விற்பனையில் அசத்தும் சார்,வழக்கம்போல் இதுவும் விற்பனையில் சாதனை படைக்கும் என்று நம்புகிறேன்.///

      அருமை!! அப்படித்தான் நடக்கும்!

      Delete
    2. கொஞ்சம் sanitiser தடவி அப்புறமா கண்களில் ஒற்றிக்கொள்ளவும் - அப்டியே அவசரத்துல ஒற்றி அப்புறம் கண்ணுல கலரிங் வந்துர போவுது ! :-)

      Delete
    3. அதெல்லாம் நல்லா பட்டி,டிங்கரிங் பார்த்துதான் சார் அனுப்பியிருக்கார் ராக் ஜி...

      Delete
  57. புத்தகங்கள் வந்து விட்டது. இப்போது ஆபீஸில் இருப்பதால் மாலை தான் கையில் கிடைக்கும். அதற்கு பிறகு வருகிறேன்.

    ReplyDelete
  58. எல்லாரும் புக் வந்திருச்சின்னு போட்டு டென்ஷன் பண்றாங்க யுவர் ஆனர்...

    எனக்கு இன்னும் புக் வரல..

    ஓவர் ஓவர்...

    இவண்
    பாகிஸ்தானிடம் தோற்ற இந்திய கிரிக்கெட் அணி

    ReplyDelete
  59. கிடைச்சாச்ச100888

    ReplyDelete
  60. இப்பொழுது தான் பதிவையே படிக்கிறேன் ..அட்டைப்படம் அனைத்தும் அள்ளுகிறது சார்....

    இதழை விடுமுறையில் இன்று அள்ளி விடலாம் என்றால் கொரியர் ஏமாற்றி விட்டார்.

    காத்திருக்கிறேன்...:-)

    ReplyDelete
  61. பெட்டியை வாங்கியாச்சு. தூத்துக்குடியில் st courierரில் இருந்து பரணி ;-)

    ReplyDelete
  62. editor sir'kum comics nanbargal anaivarukkum vanakkam. deepavali malar buthagam kidaithadhu. inba athirchi. aanaal, sendra madhathu idhazhil tex kadhaiyai mattume padithullean. super kadhai. september idhazhgalil sithiramum kolaipazhakkam matrum mac & jack'in kadhaigalai mattume padithullen. mac&jack kadhai nandraaga irundhadhu. sigappaai oru siluvai'yum choo manthrakali'yum online'il vangi padithen. irandume attagasamana kadhaigal. irandaiyum irandu muraigal padithen. sigappaai oru siluvai 15 varudangalukku munbu padithadhuthaan. kadhai muzhukka marandhu vittadhaal adhu mudhal thadavai padippadhu polave irundhadhu. andha sigappaai oru siluvai kadhaiyai ingae azhagaaga vimarsikka vendum ena ninaithen. nerame kidaikkavillai. buthagangalai padikka neram kidaippadhillai. editor'in padhivugalai kooda avasaram avasaramaaga padikkiren. melum,

    *****************************************************************************************
    ENAKKU 2022'M VARUDA SANDHAAVAI ANBALIPPAAGA VAZHANGIYA SIR AVARGALUKKU MIKKA NANDRIGAL.
    *****************************************************************************************

    vijaya raghavan sirukkum enadhu nandrigal. saraswathi poojai thinathandru, attavanai padhivai parthu december'kul mudhal thavanaiyaga 3000 katta vendum ena ninaithen. andru madhiyam tex vijayaraghavan sir call seidhu thagavalai sonnaar. enakku ilavasa sandha kidaithulla vishayam enakkul sandhosham undakkinaalum, vazhangiyavarin peyar avar veliyida maruthadhu miga periya kavalaiyai undaakiyadhu. aanalum andha 3000 roobaiyai nalla vishayathirku payanpaduthi avarukku perumai serppen.

    ReplyDelete
  63. சப்தமின்றி சித்திரங்களை வைத்து கதை சொல்லி சாதித்துள்ளார் ஓநாய்கள் ஜாக்கிரதை கதாசிரியர் ! சூப்பர்! இதில் உள்ள சஸ்பென்ஸை புத்தகம் அனைவர்க்கும் கிடைக்கும் வரை சொல்லாமல் இருப்போம்! :-)

    ReplyDelete
  64. 2022 காமிக்ஸ் அட்டவணையை புத்தக வடிவில் பார்ப்பதே ஒரு அலாதியான சந்தோஷம்! புத்தக வடிவில் பார்க்கும் போதுதான் டேங்கோ & ஆல்பா & சிஸ்க்கோ அடுத்தவருடம் இரண்டு முறை தலை காட்டுகிறார்கள் என தெரிகிறது! சந்தோசம்! கோடைமலர் புதிய நாயகியின் சாகசம் அசத்தும் என நம்புகிறேன்! இந்த மாதம் இரெண்டு புத்தகங்கள் இலவசம் 1. அட்டவணை புத்தகம் & 2. டெக்ஸ் சிறுகதையும். நன்றி விஜயன் சார்.

    ReplyDelete
  65. நரகத்திற்கு நடுவழியே - அட்டகாசமான அறிமுகம்! செம ஜாலியான வித்தியாசமான நாயகன் மற்றும் கதை! வசனங்கள் இந்தக்கதைக்கு மிகப்பெரிய ப்ளஸ்!

    ReplyDelete
  66. This comment has been removed by the author.

    ReplyDelete
  67. புக்ஸ் வந்தாச்சு..
    டெக்ஸ் ஹார்டு பவுண்டு அட்டையில் வண்ணத்தில் அட்டகாசம் ...
    ஒருமுறை கொன்றுவிடு... தூள்..
    2022 அட்டவணை + கலர் டெக்ஸ்
    என எல்லாமே அசத்தல் ரகம்..
    கண்ணைப் பறிக்குது.


    இப்படியெல்லாம் சந்தோஷமா பதிவு போடணும்னு ஆவலாயிருந்தேன். ஆனா....ஆனா...
    பொட்டி வரவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
    அதனால் என்ன.
    நாளை நமதே..

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் கிடைக்கும். கவலை வேண்டாம்.

      Delete
    2. ஆத்தாவ வேண்டிக்கோங்க பத்து சார்.. நாளைக்கு உங்களிடம் கொரியர் டப்பியை ஒப்படைத்துவிட்டு, பத்து ரூபாயை உங்களிடமிருந்து டிப்ஸாக பெற்றுக் கொண்டு ஒரு புன்னகையோடு நடையைக்கட்டுவது - மாறுவேடத்தில் வந்த ஆத்தாவாகவும் இருக்கக்கூடும்!

      Delete
    3. என்னோட எதிர்பார்ப்பு முடிஞ்சது நண்பரே...உங்களுக்கு இன்பம் காத்திருக்கு...என்ஜாய்

      Delete
  68. நிதிக்கு தலைவணங்கு அட்டடை படத்தில் கவனித்தவை
    1. பீர் விலையை (கொஞ்சம் அதிகமாக தெரிகிறது)
    2. லக்கி குற்றவாளி அவர் உட்கார்ந்து இருப்பது பீர் பாரல்
    3. ஜாலி ஜம்பர் விட்னஸ்
    4. தொப்பி போட்டவர் code civil என்ற பத்தகத்தை தலைகீழாக வைத்து படிப்பது

    இன்னும் என்னவெல்லாம் கதையில் இருக்கப் போகிறதோ என கதைக்குள் செல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அட்டைப்படத்தையே இம்புட்டு ரசிக்கறீங்களே.. மிகப்பெரிய கலாரசிகருங்க நீங்க!

      Delete
    2. ராய் பீன் செம காமெடி ஜட்ஜ். எல்லாவற்றுக்கும் fine, புரட்சி தீ கதையை போல் பக்கத்துக்கு பக்கம் இல்ல பேனலுக்கு பேனல் காமெடி வசனங்கள் தெறிக்கிறது.

      Delete
    3. ஒரு வக்கீல் என்று சொல்லி கொள்ளை அடிக்கும் ராய் பீன் இதனை எப்படி லக்கி லூக் முறியடிக்கிறார் என்பதை செம ஜாலியாக சொல்லி இருக்கிறார்கள். சூப்பர்.

      Delete
    4. விரிவாக விமர்சனம் எழுத ஆசை ட்யூக் மற்றும் லக்கி கதைகளை. நண்பர்கள் எல்லோரும் படித்த பிறகு அடுத்த வாரம் எழுதுவது சரியாக இருக்கும் என்பதால் நடையை கட்டுகிறேன்.

      Delete
  69. புதிய அறிமுகம் 'டியூக்'கின் 'ஒரு முறை கொன்றுவிடு' கதையைப் படித்து முடித்தாயிற்று!

    விமர்சனம் - இன்றிரவு!

    ReplyDelete
  70. நாளை நமதே
    எனக்கும்

    ReplyDelete
  71. Got the books and thanks for the chocolate. Actually, coz of our editor's such small surprises like - book marks and chocolates and all, my kids always open the package and never wait for me to come. My daughter wanted to read lucky luke though. To ease it for her I got her the Ma Dalton English version from nearby lending library. Hoping that she should too pickup comics - cartoons.
    Thanks

    ReplyDelete
  72. சார் செந்தூரானுக்கு படைத்து செந்தூரான் துணையுடன் பார்சல் பிரித்தால்... துள்ளி வுழுது சாக்லேட்டு...என் மகன் புத்தகத்த பாக்காம அது தூக்கிக் கொண்டோட...துரத்தி புக்க திணிக்க...மகிழ்ச்சி...அட்டைப் படம் மூன்றுமே குழந்தைகளை கவரும் பளிச் வண்ணங்கள்...டெக்ஸ் பின்னூட்டய முன்னட்டையா போட்டா இன்னும் தூள் கிளம்பலாம் என்ற எண்ணம் தவிர்க்க இயலவில்லை...புத்தகம் ஹார்டுபௌண்டில் சிக்...சில்வர் டெக்ஸ் அழகூட்ட...பட்டாசுகள் இல்லாம தீபாவளி மலர் எழுத்துரு....கொஞ்சம் இதிலும் ஜிகுனா தூவிருக்கலாம்ருக்கலாம்....அட்டை சுவற்றை தடவிப் பாருங்க சுவர் போலவே நெருடும் ...லக்கி அட்டை பளிச்சிட...ஒரு முறை கொன்று விடு டாப் இடத்தை தக்க வைக்குது...இரண்டு லக்கி சொருகட்டை...முத்து அட்டவணை ஏகமாய் காத்திருக்க...குட்டி டெக்ச கீழ் விழுந்திருச்சோ என வீடு முழுக்கத் தேட....அப்புறம் ஞானோதயம்... கண்டேன் சீதையை சூப்பர் சார்....செமயாருக்கு சார்...மீண்டு வாரேன்....அதும் இந்த பரபரப்புக்கு மத்தில மீட்டாச்சு அக்டோபருக்குள் நவம்பர்....அர்ப்பணிப்புக்கு என்ன சொல்லி பாராட்ட ஏலும்

    ReplyDelete
  73. ஓநாய் ஜாக்கிரதை!

    ReplyDelete
  74. விதிக்கும் தலைவணங்கு புரண்ட முதல் பக்க சந்தா2022 விளம்பரம் அட்டகாசமா அள்ள சரண் கோவபடுத்திட்டமேன்னு ஆசிரியர் டெக்ச மொத கட்டத்துக்கு தள்ள...ஸ்பைடரில்லயேன்னு என்னத் தள்ள...நா தாளத்தள்ள...முத்து 50விளம்பரம் என்ன அள்ள...சூப்பர் சார்...ஒத்திக்கலாம் போல லக்கி பக்கங்கள்...கடசில விளம்பரம் XIII ...அடேயப்பா 300பக்க பக்கங்கள் குட்டி டெக்ஸ்...வெட்டியான்...ஷெர்லாக் என அடுத்த மாத வெளியீடுகள் அள்ளுது

    ReplyDelete
  75. ஹாட் லைன் தீபாவளி மலரில் அருமை சார்...வண்ணத்ல அதகளம்...வண்ணத்ல தலையில்லாப் போராளி வந்தா....கருப்பு வெள்ளயும் மிரட்டுது

    ReplyDelete
  76. இந்த தீபாவளியின் நிஜமான கொண்டாட்டமே இதுதான்!!! மிகவும் நன்றி .

    வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  77. டெக்ஸ் சிறுகதையை நடுவில் வைத்து கொடுத்தது உண்மையில் நல்ல யோசனை சார்,நான் கூட எங்கே காணோம்னு தேடிகிட்டு இருந்தேன்...
    சிறுகதை படிப்பவர்களுக்கு எதிர்பாரா சர்ப்ரைஸ் காத்திருக்கு போல...

    ReplyDelete
  78. எப்பவுமே முதலில் கார்ட்டூன்ஸ் அடுத்து கி.நா அல்லது புதிய அறிமுங்கள்.. கடைசியாக டெக்ஸ் கதைகளை ரசித்துப் படிப்பது.. இதுதான் எனது வாடிக்கை.!

    வேலையெல்லாம் முடித்துவிட்டு புக்ஸையெல்லாம் புரட்டிப்பார்க்கலாமே என்று கையிலெடுத்தால்...

    டெக்ஸ் தீபாவளி மலரைக் கையிலிருந்து கீழே வைக்கவே மனமில்லை..!

    எனவே வாடிக்கை மறந்ததும் ஏனோன்னு முதல்ல தீபாவளி மலரை படிக்கப்போறேன்..!

    ReplyDelete
  79. ***** ஒருமுறை கொன்று விடு! *****

    முதல் அத்தியாயம் :

    தனியார் தங்கச் சுரங்கத்தில் வேலை செய்யும் கருப்பின தொழிலாளிகளில் ஒருவன் தக்கணூண்டு தங்கத்தாதுவை ஆட்டையைப் போட்டு வீட்டில் ஒளித்துவைத்துவிட, சுரங்க முதலாளியின் அடியாட்கள் அத்தொழிலாளியின் வீட்டுக்கு வந்து தங்கத்துண்டுகளை மீட்டுச் செல்வதோடு, தண்டணையாக - அத்தொழிலாளியின் மனைவி, மகளைக் கொன்றுவிடுகிறார்கள் - என்பதாகத் தொடங்குகிறது கதை!
    சுரங்க முதலாளியே அந்நகரத்தில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் நிலையில், அவனது அடியாட்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரிக்க - அந்நகர மார்ஷலிடம் டெபுடி பதவியிலிருக்கும் ட்யூக் அநியாயத்தைக் கண்டு அளவோடு பொங்கியெழுவது மீதக் கதை!

    முதல் அத்தியாயத்தில் நாம் பெரிதாய் ஒரு கதையையோ, அதிரடி சண்டைகளையோ எதிர்பார்த்திட்டால் கொஞ்சம் ஏமாற்றமே மிஞ்சிடும்! வேண்டுமானால் இதை ஒரு அறிமுகப்படலமாக எடுத்துக்கொண்டுவிடலாம்!

    முதல் அத்தியாயத்தைப் பொருத்தவரையில், குறைகளே அதிகம் முன் நிற்கிறது!

    * ஓவியமும், கலரிங்கும் - ஏமாற்றத்தையே அளிக்கிறது! எல்லோருடைய முகங்களிலும் சேறு பூசியதைப் போல இருட்டாய், விகாரமாய், யார் கருப்பினத்தவர் - யார் வெள்ளையர் என்றே தெரியாத அளவுக்கு இருக்கிறது! பெரும்பாலான ஃபிரேம்கள் இன்னும் முழுமையாக முடிக்கப்படாத நீர்வண்ண ஓவியம் போல இருப்பதும் குறையே! இந்த பாணி ஓவியம் - இருண்ட கதைக்களம் கொண்ட கி.நா'க்களுக்கு வேண்டுமானால் செட் ஆகலாம்.. ஆனால் இதுபோன்ற நேர் கோட்டுக் கதைக்கு சற்று எரிச்சலையே ஏற்படுத்துகிறது! ஒருவேளை 'கமான்சே' தொடரிலிருந்து இதை வேறுபடுத்திக்காட்ட ஹெர்மன் இந்தமாதிரியான ஓவியப் பாணியைக் கையாண்டிருக்கிறாரோ என்னமோ?!!
    * வன்மேற்கில் அழகான, வடிவான உடலமைப்போடு கூடிய பெண்களே இருந்ததில்லை என்பதைப் போல, இக்கதையில் வரும் அனைத்துப் பெண்களுக்குமே விகாரமுகம் கொடுத்திருப்பது - ஓவியர் ஹெர்மன் செய்த மற்றொரு அநியாயம் என்றே சொல்வேன்! இயற்கையை அழகாக வரையத் தெரிந்த ஹெர்மனுக்கு - மனித முகங்களை அழகாக வரையத் தெரியாமல் போனது துரதிர்ஷ்டமே! மனிதனும் இயற்கையின் ஒரு அங்கம் தானே ஹெர்மன் சார்?!!
    * தோற்றத்திலும் சரி, செயல்பாடுகளிலும் சரி - ஒரு ஹீரோவுக்கான அடையாளமே இல்லாமல் வந்துபோகும் ட்யூக்கின் பாத்திரப்படைப்பும் குழப்பமானதாகவே இருக்கிறது! 'இதோ துப்பாக்கியை உருவப்போகிறார்' என்று நாம் எதிர்பார்த்திடும் தருணங்களில் ஐயா சாந்த சொரூபியாக நடையைக் கட்டிவிடுகிறார். அவரது மனக்காயங்களுக்கான காரணம் என்ன.. இதற்கு முன்பு அவர் மும்பையில் என்ன செய்து கொண்டிருந்தார் என்பது போன்ற சமாச்சாரங்களை படைப்பாளிகள் இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கலாம்! முதல் அத்தியாயத்தின் முடிவில் அவர் தனது டெபுடி வேலையை உதறிவிட்டு வேறு நகரத்திற்கு புலம் பெயரும்போது 'அப்படி நீ என்னதான்யா இந்தவூர்ல சாதிச்சுட்டன்னு பொட்டியக் கட்டுற?' என்று கேட்கத் தோனுகிறது!

    இரண்டாம் அத்தியாயம் :

    இங்கிருந்துதான் கதை சற்றே சூடுபிடிக்கிறது (அப்பாடா!!!).

    தொடர்ந்து அட்டூழியம் செய்துவரும் கொடூரமான கோச்சுவண்டிக் கொள்ளையர்களைத் தேடிப்பிடித்து கருவறுக்கும் சவாலான பணியின் பொருட்டு, வேலையை விட்டுவிட்டு வெளியூரில் செட்டிலாகிவிட்ட தன் பழைய சகா ட்யூக்கை அழைத்து வந்து மீண்டும் தற்காலிகப் பணியில் அமர்த்துகிறார் மார்ஷல்! அந்தப் பணியை ஏற்க முரண்டுபிடிக்கும் ட்யூக்; பிறகு ஏற்றுக் கொள்வதற்குப் பின்னணியிலுள்ள காரணங்கள் தெரியவரும்போது - 'அப்பாடா! கதாசிரியர் தன் மண்டைக்குக் கொஞ்சம் வேலை கொடுத்திருக்கார்தான் போல' என்ற நிம்மதி எழுகிறது!

    கோச் வண்டிக் கொள்ளையர்களைத் தேடும் பயணத்தில் இவர்கள் எதிர்கொள்ளும் சவால்களும்; வழிநெடுக வரும் இயற்கைக் காட்சிகளும் - முதல் அத்தியாயத்தில் ஏற்பட்ட சறுக்கலை நேர் செய்து, நமக்கும் கொஞ்சம் உற்சாகமூட்டுகின்றன!

    கடைசி பக்கத்தில் ட்யூக்கின் பழைய காதலி தன் காதலனின் கைகளாலேயே கொல்லப்பட்டு உயிர்பிரியும் வேளையில், கண்களில் அருவியாய் கொட்டும் கண்ணீரோடு பேசும் அந்த வசனம் - ப்பா!!! செம்ம்ம!!

    என்னளவில் 'ட்யூக்' இப்போது மதில்மேல் பூனை தான்! அடுத்து வரயிருக்கும் பாகங்களில் இன்னும் சற்று மெனக்கெட்டால் மட்டுமே இவர் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் (எ.எ.
    .க)!

    என்னுடைய ரேட்டிங்:
    முதல் அத்தியாயம் : 7/10
    இரண்டாவது அத்தியாயம் : 9/10

    ReplyDelete
    Replies
    1. @ ஈ. வி.
      பொதுவாய் அப்படி சொல்லி விட முடியாது. ஏனெனில் ஒவ்வொரு கதாசிரியருக்கும், ஒவியருக்கும் ஒரு ஸ்டைல், ஒரு பார்மெட் இருக்கும். நமக்குத் தெரிந்து ஹெர்மன் பாணி இதுதான். அதை உள்வாங்கிப் பார்த்தே மென்றால் அந்த நெருடலிராது எ. எ, க.

      Delete
    2. ///நமக்குத் தெரிந்து ஹெர்மன் பாணி இதுதான்///

      ஹெர்மனின் பாணி ஏற்கனவே நமக்கு பழக்கமான ஒன்று என்பதால் தான் இந்த ஏமாற்றம் மொய்தீன் சார்! கேப்டன் பிரின்ஸ் கதைகளில் வரும் சித்திரங்களை (மனித முகங்களை அல்ல) ரசித்து வளர்ந்தவர்கள் தானே நாமெல்லாம்!

      ஹெர்மன் தனது ஓவியப் பாணியை (குறிப்பாக கலரிங்கை) இந்தத் தொடருக்காக மாற்றிக் கொண்டிருக்கிறாரா.. அல்லது ஏதாவது காரணத்தால் (வயது?!) அதுவே மாறிவிட்டிருக்கிறதா என்பது தெ/புரியவில்லை!

      Delete
    3. பிரின்ஸ் & கமான்சே கதைகளில் ஹெர்மனின் சித்திரங்கள் பளிச் ரகம். லைட்டான கதைக்களங்கள். ஆனால் சமீபத்தில் வந்த தனித்திரு .... தணிந்திரு....கரடுமுரடான கதைக்களமென்பதால் வித்தியாசமான அடர்ந்த கலரிங். இந்த ட்யூக் முதல் புரட்டலில் பல இடங்களில் அடர்ந்த வர்ணமும், சில இடங்களில் பளிச் என்றும் உள்ளன. ஒரு வேளை கதைக்கேற்றவாறு கையாளப்பட்டிருக்கலாம் என்பது என்னுடைய அனுமானம்.

      Delete
    4. ///சமீபத்தில் வந்த தனித்திரு .... தணிந்திரு....கரடுமுரடான கதைக்களமென்பதால் வித்தியாசமான அடர்ந்த கலரிங்.///

      யெஸ்! அந்த இருண்ட கதைக்களத்துக்கு அந்த அடர் வண்ணம் மிகச் சரியாகப் பொருந்திப்போனது உண்மைதான்! ஆனால் இந்த லைட்-வெயிட் கதைக்கும் அதே மாதிரியான (கதாபாத்திரங்களின் முகத்தில் சேற்றை அப்பினாற் போன்ற) ஓவியபாணி தேவையா என்ற கேள்வி எழுகிறது! சில ஃபிரேம்களில் மனிதமுகங்களை (ட்யூக்கின் முகம் உட்பட) காணச் சகிக்கலை!

      Delete
  80. இன்னும் பதினைஞ்சு கமென்ட்ஸ் தான்.. ஐ ஏம் வெயிட்டிங் பார் சின்ராசு..

    ReplyDelete
  81. தீபாவளியென்றதும் அந்த உற்சாகமும், குதூகலமும் ஒருப்படி அதிகமாகவே இருக்கிறது. அதைப் பூர்த்தி செய்ததுப் போல் வத்திருக்கும் இந்த 3 இதழ்களும் மூன்று முத்துக்கள். டெக்ஸ் இதழ் என்னாவொரு அசத்தலான மேக்கிங். முதல் கதை வண்ணத்தில் டாலடிக்க, இரண்டாவது கதை படம் பார்த்து கதை சொல்ல, மூன்றாவது கதையோ கருப்பு வெள்ளையிலேயே கலக்குகிறது. அட்டைப்படம் சான்சேயில்ல, ரொம்பவே Brilliant டான வேலைப்பாடோடான மிரட்டல் ரகம்.
    லக்கி லூக் டபுள் ஆல்பமும் பளிச் வர்ணத்தில், அழகான அச்சில் கொள்ளைக் கொள்கிறது.
    Finally, ட்யூக் அட்டைப்படம் ஆஸம். உள்ளே வழக்கமான ஹெர்மன் ஸ்டைலில் வித்தியாசமான ஓவியம் + டார்க் ஷேடு கலரிங்.
    மூன்று இதழ்களும் Western என்பதால், இந்த தீபாவளி வன்மேற்கின் தீபாவளி.
    இப்போதே இப்படியென்றால், வரவிருக்கும் ஜனவரியில் முத்துவின் 50-யை நினைத்தாலே சும்மா ஜிவ்வென்று இருக்கிறது.

    ReplyDelete
  82. தீபாவளி வந்தாச்சே!!! தலையின் முத்தான மூன்று கதைகள். மூன்றையும் ஜெட் வேகத்தில் படிச்சாச்சு. பருந்துக்கொரு பரலோகம் மிக மிகச்சிறப்பு. 10/10 மார்க். ஓநாய் ஜாக்கிரதை மிரட்டலான ஓவியங்கள் கொண்ட சிறுகதை. 10/10 மார்க்.
    பொக்கிஷம் தேடிய பயணம் கதையில் ப்ளாஷ்பேக் மற்றும் சித்திரங்கள் அருமை. 9/10 மார்க். அட்டைப்படம் மிக மிக மிக மிக அருமை.
    நன்றி ஆசிரியரே !!!!

    ReplyDelete
  83. ட்யூக் - ஒருமுறை கொன்று விடு.

    வன்மேற்கு - ஒரு சர்வாதிகார சுரங்க முதலாளி மல்லின்ஸ், அவன் கீழ் செயல்படும் ஓர் கூலிப்படை தலைவனாக மெக்கால்கி, அந்த சுரங்கத்தை அண்டி பிழைக்கும் தொழிலாளர்கள், அங்கே சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் மார்ஷல் ஷார்ப் , அவரது டெபுடி துப்பாக்கியை அதிவேகமாக கையாளும் ட்யூக். அவனை காதலிக்கும் உள்ளூர் பார் நடனக்காரி பெக்.

    தங்கத்துகள்களை திருடி ஒளித்து வைக்கும் ஒரு கோழை சுரங்கத் தொழிலாளி கம்மிங்ஸ், அதற்கு தண்டனையாக தன் அப்பாவி மனைவியையும் மகளையும் பலி கொடுக்கிறான். அதைச் செய்தவன் யாரெனத் தெரிந்தும் தட்டிக் கேட்க இயலாமல் சுரங்கம் வேறு; நகரம் வேறுன்னு வெறுமனே வெற்று மிரட்டல் விடும் மார்சல், அதற்கு தன் டெபுடியை பயன்படுத்திக் கொள்கிறார்.

    பழிவாங்க எண்ணும் சக தொழிலாளர்களின் வற்புத்தலின் பேரில் மெக்கால்கியை தேடி வரும் கையிலாகாத கம்மிங்ஸ் தன்னைத்தானே சுட்டுக்கொள்கிறான். கூட வந்தவர்களை துரத்திச் செல்லும் மெக்கால்கியை தொடரும் டியூக் சாதிப்பது பெரிதாய் ஒன்றுமில்லை. அடிபட்டு தன் சகோதரனின் இருப்பிடத்தில் அவனது துனைவியால் காப்பாற்ற படுகிறான். திரும்பி நகருக்கு வந்தால் தன் காதலியை பணயமாக்கி பேரம் பேசும் மெக்கால்கியை ஏதோ ஒரு உத்தியை பயன்படுத்தி காயப்படுத்த அவனுடைய ஆட்களே அவனைப் போட்டுத்தள்ள, காதலி பெக் ஊரைக் காலி செய்துவிட்டு கிளம்பி விட... உஸ்... அப்பா... கதாசிரியர் என்னதான் சொல்ல வர்றார்?

    கடைசியில் யாரையோ கைது செய்ய போய் அங்கே மூன்று பேரை கொன்று விட்டு வெறுத்துப்போய் காதலியைத் தேடி போய் சேர்ந்து கொள்கிறான். அப்பாடா முதல் பாகம் முடிந்தது...

    இரண்டு வருடங்கள் கழித்து அந்த முதலாளி மல்லின்சுக்கு ஒரு பிரச்சனை... அந்த பகுதியில் சுற்றி வரும் ஒரு கொடூரக் கொள்ளைக் கும்பலால் தன் பணத்தை கொண்டு போக முடியாத சூழல்... மார்சலை அழைத்து டீல் பேசுகிறார். மார்சல் தன் பழைய டெபுடி ட்யூக்கின் சகோதரன் க்ளெம் மூலம் அவனுக்கு தகவல் தந்து உதவி கோருகிறார். ஏதோ ஒரு நோக்கத்தோடு திரும்ப வரும் டியூக் மல்லின்சுடன் டீல் போட்டுக்கொண்டு கொள்ளைக்கும்பலை தேடிப்போக அதன் தலைவியா இருப்பது அவனுடைய முன்னாள் காதலி ரோஸ்... அப்புறம் என்ன நடக்குது என்பதை படிச்சு தெரிந்து கொள்ளுங்க...

    "மரணத்தை விதைப்போர் எதார்த்த வாழ்க்கைக்கு ஒருபோதும் திரும்ப இயலாது"

    என்பது போன்ற சில வசனங்கள் தவிர்த்து பெரிதாய் என்னை கவரவில்லை... வன்மேற்கின் யதார்த்தம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

    இலக்கில்லா ஓட்டம், திருப்பம் என்ற பெயரில் புகுத்தப் பட்டது போன்ற சம்பவங்கள், தெளிவில்லாத முடிவு, கதையைப் போலவே ஓவியங்களும் ஒன்ற முடியலை...

    யதார்த்தமான வன்மேற்கில் வல்லான் வகுத்ததே சட்டம்! என்னுடைய ரேட்டிங்: 4/10

    #sk_விமர்சனம்
    #ட்யூக்

    ReplyDelete
    Replies
    1. ///வன்மேற்கின் யதார்த்தம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

      இலக்கில்லா ஓட்டம், திருப்பம் என்ற பெயரில் புகுத்தப் பட்டது போன்ற சம்பவங்கள், தெளிவில்லாத முடிவு, கதையைப் போலவே ஓவியங்களும் ஒன்ற முடியலை///

      +1 நச்!!

      Delete
  84. நரகத்தின் நடுவே - டிக் மற்றும் கல்லெகன் (?) கதையின் போக்கில் அவர்கள் நட்பு கொஞ்சம் கொஞ்சமாக சிறந்த நண்பர்களாக மாறுவதை காண்பித்த விதம் மற்றும் காட்சிகள் மற்றும் வசனங்கள் மிகவும் சிறப்பு. கல்லெகன் போன்ற கதாபாத்திரங்கள் நிஜவாழ்க்கையில் உண்டு, இவர் எனக்கு மிகவும் பிடித்து விட்டார்.

    டிக் வேற லெவல் ஆள். வசனங்கள் இந்த மனிதனுக்கு மற்றும் ஒரு ப்ளஸ் இயல்பாக இருந்தது, எந்த இடத்திலும் நெருடவில்லை; கல்லூரி நாட்களில் கிரிக்கெட் விளையாடும் எனது நண்பர்கள் மற்றும் பெங்களூரில் நண்பர்களுடனான பேச்சிலர் வாழ்க்கை வந்து சென்றது.

    டிக் கதை சொன்ன விதம் முன்னும் பின்னும் செல்வதாக இருந்தாலும் ஒரு இடத்தில் கதையை கோர்வையாக்கி இணைத்து அழகு


    ராணுவத்தில் மேலதிகாரியின் கதாபாத்திரம் அருமை.இவரின் மான்கறி ஆசைக்காக ராணுவத்தில் சிலரை செவ்வித்தியர்களிடம் இழந்தது வருத்தத்தை கொடுத்தது. இது போல் உண்மையில் இப்போதும் நடப்பது வேதனை.

    நரகத்தின் நடுவே சீக்கிரம் அடுத்த கதையை வெளியிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. விமர்சனம் - செம்ம!!

      ///நரகத்தின் நடுவே சீக்கிரம் அடுத்த கதையை வெளியிடுங்கள்.///

      பங்க்சுவேசன் மிக முக்கியம் அமைச்சரே! :D

      'நரகத்தின் நடுவே' - சீக்கிரம் அடுத்த கதையை வெளியிடுங்கள்.

      இப்ப சரியா இருக்கா?!! ;)

      Delete
  85. ஆத்தா இது நல்லால...

    நானும் ரெண்டு மாசமா பாக்குறேன் கூலு பாக்கி வச்சு இருக்குறவங்களுக்கெல்லாம் இப்ப எல்லாம் உடனே புக்கை அனுப்பி வச்சு அவுக படிச்சு முடிச்சு விமர்சனமும் போட வைக்குற..ஆனா எந்த கடனும் இல்லாத எந்த வேண்டுதலும் வைக்காத என்னை மாதிரி அப்பாவிகளுக்கு புக்கை கண்ணுல காட்ட மாட்டேங்கிற..

    இது சரியாப்படல ஆத்தா..

    :-(

    ReplyDelete