Powered By Blogger

Saturday, October 02, 2021

புரிந்ததும்....புரியாததும்...!

நண்பர்களே,

வணக்கம். சிவகாசியில் குடியிருக்கும் எங்களுக்கு பொதுவாய் பட்டாசுகள் மீது அந்த வெறித்தனமான ஆசைகளெல்லாம் இருப்பதில்லை தான் ! ஆளாளுக்கு முன்னூறு, நானூறு மைல் தொலைவிலிருந்தெல்லாம் வண்டியைப் போட்டுக் கொண்டு வந்து, இங்கே ஹோல்சேல் விலைகளில் பட்டாசை அள்ளிக் கொண்டு, மலர்ந்த முகங்களோடு ஊர் திரும்புவதையெல்லாம் பார்க்கும் போது லைட்டாக வேடிக்கையாகத் தானிருக்கும். (மூணு தீபாவளிக்கு முன்னே வந்த gift box-ஐ கூட இன்னமும் பிரிக்காமல் பரணில் போட்டு வைச்சிருக்கும் சோம்பேறி மாடன் நான் !) அதே ஒப்பீடு தான் உங்களின் காமிக்ஸ் நேசங்களுக்கும் பொருந்தும் போலுமென்று தோன்றியது - போன பதிவில் நண்பர்கள் பலரும் தங்களின் ஆத்மார்த்தமான காமிக்ஸ் அனுபவங்களை பகிர்ந்திருப்பதை வாசித்த போது ! பொழுது விடிந்து, பொழுது அடையும் வரைக்கும் 'பொம்ம புக்' சவகாசமே வாழ்க்கை என்றாகிப் போனவனுக்கு - உங்களின் இந்த நேசிப்பின் ஆழங்களை பார்க்கும் போது பிரமிப்பாகவே உள்ளது !  "ஒரு மாதத்துப்  பணி" என்று எனக்குள் பதிவாகிடும் சமாச்சாரமோ, உங்கள் மட்டில் ஒரு ஆயுட்கால நினைவாய் இடம்பிடித்திடக்கூடிய அதிசயத்தினை அகன்ற விழிகள் மேலும் அகன்றிடப் பார்க்கிறேன் ; and நிஜத்தைச் சொல்வதானால், கொஞ்சம் 'டர்ராகக்' கூட உள்ளது ! இந்த அபிமானங்களை ஈட்டுவது ஒரு விஷயமெனில்,அதனைத் தக்க வைத்துக் கொள்வதும், தளைக்கச் செய்வதும் எத்தனை மெகா விஷயம் ? புனித மனிடோ....சொதப்பாது தொடர்ந்திட ஆசி  தாரீர் !!

அதன் முதல் தவணையாகவோ என்னவோ, நடப்பு மாதத்திலேயே பெரும் அருள் புரிந்துள்ளார் என்றே சொல்ல வேண்டும் ! இல்லையேல், நான் இங்கே இந்த வாரத்தினில் கிழித்த மாதிரியே நீங்களும் சட்டை, வேட்டிகளையெல்லாம் கிழிக்க இம்மாதம் ஒரு அட்டகாச வாய்ப்பு அமைந்திருந்தது ; ஜஸ்ட் மிஸ் !!! விஷயம் இது தான் :

3 இதழ்கள் கொண்ட இம்மாதத்தின் இதழ்களை 7-ம் தேதி வாக்கிலேயே அனுப்பிப் போடணும் ; so ஜரூராய் புக்ஸை ரெடி பண்ணனும் என்பதே திட்டமிடல் ! And கிளிப்டன் அச்சாகி ரெடியாகி விட்டார் & அடுத்த பணியாக 'தல'யின் "கண்ணே..கொலைமானே" வும் பர பரவென வேலையாகிடுச்சி தான் ! (இது வரையிலும் ரண்டே ரண்டு டெக்ஸ் சாகசங்கள் தான் என்னை பெண்டு நிமிர்த்தியுள்ளன ; "துயில் எழுந்த பிசாசு" முதல் பெண்டு நிமிர்ப்பான் & "ஒரு தலைவன்..ஒரு சகாப்தம்" # 2 !!) 220 பக்கங்களுக்குள் பணியாற்றுவது மட்டுமே அழுத்தமாய்த் தென்பட்டதே தவிர, பணியினில் as such நோவுகளே இருக்கவில்லை ! 'நீ கலக்கு தல !' என்று சொல்லியபடிக்கே, புதன்கிழமையே அதனை அச்சுக்கு பேக் அப் பண்ணி விட்டு அடுத்த வேலையாக நம்ம CID ராபினை எடுத்துக் கொண்டு அமர்ந்தேன் ! And இங்குமே "ஹை ஜாலி..." என்று சொல்லவே தோன்றியது ; becos ஒரு சுலப நேர்கோட்டு த்ரில்லரில் ராபின் சவாரி செய்திருந்தார் ! நியூ யார்க்கின் சென்ட்ரல் பார்க்கில் அரங்கேறும் தொடர் கொலைகளை மனுஷன் 126 பக்கங்களில் புலனாய்வு செய்வதை பெரும் மொக்கைகளின்றி எடிட்டிங் செய்தும் முடித்தேன் !! என்ன - கருணையானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பினில் குறுக்கேயும், நெடுக்கேயும் சடு குடு ஆடிய வழக்கில் இல்லா சொற்களை மாற்றிட மட்டுமே குறுக்கு லைட்டாய்க் கழன்றிருந்தது ! "ஆச்சு..இதையும் அச்சுக்கு ரெடி பண்ணிடுங்கோ" என்றபடிக்கே மேஜையினில் கிடந்த 160 பக்க கடைசிப் பணியினைப் பார்த்த போது வியாழன் மாலை ! 

And மார்டினும், டைலனும் இணைந்து மிரட்டும் "உலகத்தின் கடைசி நாள்" - அழகான சித்திரங்களோடு 'தேமே' என்று காற்றில் சலசலத்துக்  கொண்டிருந்தது ! இதுவும் கருணையானந்தம் அவர்களின் மொழிபெயர்ப்பே ; ஆனால் மார்டினின் சற்றே கிளாசிக்கல் கதை பாணிக்கு அவரது வார்த்தைப் பிரயோகங்கள் அவ்வளவாய் வெறிக்காதென்ற நினைப்பினில் எடுத்துக் கொண்டு பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தேன் - வெளியே பெய்து கொண்டிருந்த மழையை லைட்டாக ரசித்தபடிக்கே ! பஞ்சாயத்துக்கு புறப்பட்டு வந்த சங்கிலி முருகனாட்டம் அங்கவஸ்திரமெலாம் போட்டிருக்கவில்லை தான் ; ஆனாலும் டீஜெண்டாய் சொக்காய் ; நிஜாரென்றெல்லாம் போட்டிருந்தேன் தான் ! பக்கங்களை மெது மெதுவாய்ப் புரட்ட ஆரம்பித்தேன் ; லைட்டாக சட்டையின் மேல் பொத்தானை கழட்டிப்புடலாமோ ? என்று தோன்றியது ! இன்னும் கொஞ்சம் பயணம் பண்ணினேன் ; கழுத்துக்குள்ளே முத்து முத்தாய் வியர்ப்பது போலிருந்தது ! எழுந்து லைட்டாக ஒரு நடை போட்டு விட்டு, மறுக்கா குந்தி பணிக்குள் புகுந்திட்ட போது, பனியனுக்குள்ளாரேயும் புழுங்குவது போலிருந்தது !! "நான் சரியா தானே வேலை பண்றேன் ?" என்று என்னை நானே கேட்டுக் கொண்டவன், மறுபடியும் ஆரம்பத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தேன் ! இந்தவாட்டியோ, எடிட்டிங் ; புண்ணாக்கென்றெல்லாம் ஏதும் செய்திட முனையாது, வெறுமனே வாசித்துக் கொண்டே போக முனைந்தேன் ! ஊஹூம்...சட்டைலாம் வேலைக்கு ஆகாதென்று "பனியனோடு பணி " என்று முயற்சித்துப் பார்த்தேன் ! தோராயமாய் 70 பக்கங்களைத் தொட்டு நின்ற போது - என்னைப் பார்த்து எனக்கே சிரிப்பாய் வந்தது !! மாறுபட்ட இந்த சாகசத்தை ; ஒரு science fiction பாணியின் உச்சத்தை ; எழுபது பக்கங்கள் வரையிலும் தலை எது ? வால் எது ? என்று புரிபடாத இந்த ஆக்கத்தை - அடுத்த ஒன்னரை நாட்களில் நான் புரிந்து, உங்களுக்கும் புரியும் விதமாய் மாற்றியமைத்து இந்த மாசத்தைக் கரை சேர்க்க வேண்டுமென்பது புரிந்த போது - I am very happy என்று கவுண்டர் பாணியில் சிரிக்காது என்ன செய்வது ? To cut a long evening's story short - இயன்ற அத்தனை கோணங்களிலும் இந்தக் கதையினைப் புரிந்து கொள்ள நான் போடாத குட்டிக் கரணங்கள் லோகத்திலேயே கிடையாது ! அந்த நொடியில் தான் சில பல விஷயங்கள் புலனாயின !! 

  • *எனது அற்ப அறிவுக்கு ரொம்பவே தூரத்தில் ; ரொம்ப ரொம்ப ரொம்ப தூரத்தில் இந்தப் படைப்பு இருப்பது மட்டும் புரிந்தது ! 
  • *கதை புரியாமலே கருணையானந்தம் அவர்கள் நெட்டுக்கு மொழிபெயர்த்துச் சென்றிருப்பதும் புரிந்தது !! 
  • *And நல்ல நாளைக்கே நெட்டி வாங்கிடும் மார்டினை ; equally tough நாயகரான டைலனுடன் இணைத்திடும் சாகசத்துக்கு - முறையான preparation இன்றி களமிறக்க நினைத்த நான் பேமானி # 1 பட்டத்துக்கு சர்வ பொருத்தங்களும் வாய்க்கப் பெற்றவன் என்பதும் புரிந்தது ! 
  • *இந்தப் படைப்பை 'as is' உங்களிடம் ஒப்படைத்தால் என் குரல்வளைக்கு சத்தியமாய் உத்திரவாதம் நஹி என்றும் புரிந்தது !
  • *மார்டினின் பிதாமகர் ஆல்பிரேடோ காஸ்டெலினி - இந்தப் படைப்பின் ஒத்துழைப்பு டீமில் உள்ளார் எனும் போது, அவரிடமே நேரடியாய் எனது சந்தேகங்களைக் கேட்டு நிவர்த்தி செய்தாலொழிய இதற்கு நியாயம் செய்திட வாய்ப்பே இராதென்றும் புரிந்தது !
  • *And அடுத்த கொஞ்ச நாட்களுக்கேனும் இது போலான விஷப் பரீட்சைக் களங்களுக்கு விடுமுறை தருவது எனது மறைகள் நிலைகொண்டிருக்க பெரிதும் அவசியம் என்றுமே புரிந்தது !
  • *கதையினில் பணமுடக்கம் ; மொழிபெயர்ப்பு , டைப்செட்டிங்குக்கான பணம் + முயற்சி முடக்கம் ; அட்டைப்படத் தயாரிப்புச் செலவு, என வரிசை கட்டி இந்த இதழின் பின்னே பட்டியல் இருப்பினும், கதைத்தேர்வுக்கு உரிய சிரத்தை தராது போயின், இந்த "முடக்கப் பட்டியல்" தொடர்கதையாகவே தொடர்ந்திடும் என்பதுமே புரிந்தது !!
  • பற்றாக்குறைக்கு கிளிப்டனின் "காமிக்ஸ் டைம்" பக்கங்கள் ஏற்கனவே அச்சாகியிருப்பதால், அந்தப் 16 பக்கங்களை கடாசி விட்டு, புச்சாய் இன்னொருவாட்டி, மாற்றியமைக்கப்படும் திட்டமிடல்களோடு வேறொரு காமிக்ஸ் டைம் & வேறொரு "அடுத்த வெளியீடு" பக்கங்களை அச்சிடணும் என்பதுமே புரிந்தது !!
  • *And most importantly - 2022-ன் அட்டவணை அச்சுக்கு செல்லும் முன்பாய் இந்த போதிமரம் வாய்த்தமைக்கு புனித மனிடோவுக்கு நான் பெரும் கடன்பட்டிருப்பதும் புரிந்தது !
  • *இந்த ஆல்பத்துக்கு பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த நண்பர்களின் கடுப்புகளுக்கு தவறாது ஆஜராக வேண்டி வரும் என்பதும், குட்டுக்களில் சில டபுள் குட்டுக்களாக இருக்கவும் செய்யும் என்பதும் புரிந்தது ! 
  • *எட்டு எருமை வயசான பின்னேயும், இது போன்ற கத்துக்குட்டித்தன சொதப்பல்களுக்கு அந்த டபுள் குட்டுக்கள் & குத்துக்கள் தேவையே என்பதும் புரிந்தது !

So இத்தனையும் புரிந்த அந்த வியாழனின் இரவினில் - அடுத்து என்ன ? என்ற கேள்வி பூதமாய் எழுந்து நின்றது ! For sure இந்த இதழினை ரெகுலர் சாந்தாவின் ஒரு அங்கமாக்கிடல் சாத்தியமே ஆகாது ; இது 'கி.நா.களுக்கெல்லாம் அண்ணன் கி.நா.' என்பதால், சர்வ நிச்சயமாய் ஒரு bookfair special இதழாக மட்டுமே அணுகிட இயலுமென்பது புரிந்தது ! ரைட்டு...ஆனால் முதல் வேலையாக அக்டோபர் மாதத்தின் இதழ் # 3 க்கு என்ன செய்வது ? அப்புறம் அட்டவணையினில் "உலகத்தின் கடைசி நாள்" ஆல்பத்தின் ரூ.200 விலையிலான இடத்தினை வேறெந்த இதழுக்குத் தருவது ? என்ற கேள்விகள் எழுந்து நின்றன ! தெய்வச்செயலாய் நடப்பாண்டின் பாக்கி இதழ்கள் சகலத்தின் ஒரிஜினல் கோப்புகளுமே கைவசம் இருந்ததாலும்  ,டிசம்பர் முடிய அத்தனை இதழ்களுக்கும் ராப்பர்கள் அச்சாகி ரெடியாக உள்ளன என்பதாலும், அதற்கென விழி பிதுங்கி நிற்கும் அவசியம் எழவில்லை ! So  நவம்பரில் வரவிருந்த "அந்தியும் அழகே" இதழினை இம்மாதத்துக்கே fasttrack  செய்திடத் தீர்மானித்தேன் !! And வெள்ளி காலையில் பேனா பிடிக்க கதையைத் தூக்கிக் கொண்டு அமர்ந்தவன், 56 பக்கங்களுடனான அந்த ஆல்பத்தை சாமத்தை நெருங்கும் நேரத்தினில் முடித்திருந்த போது புஜம் கழன்றே போயிருந்தது !! 

நடப்பாண்டின் அட்டவணையினில் நான் நிரம்பவே எதிர்பார்த்துக் காத்திருந்த இதழ்களுள் முக்கியமான இடம் "அந்தியும் அழகே"-க்கு உண்டு ! "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" ஆல்பத்தின் கதாசிரியரான Wilfred Lupano தான் இந்த தாத்தாக்கள் கூட்டணியின் கதாசிரியருமே ! And ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னே இதன் ஆங்கில வார்ப்பைப் படித்த போதே மண்டைக்குள் குடையத் துவங்கிவிட்டிருந்தது - தாத்தாக்களைத் தமிழ் பேசச் செய்திட வேண்டுமேவென்று !! அப்போதே உரிமைகளையும் வாங்கி விட்டிருந்தாலும், இடைப்பட்ட பேரிடர் நாட்களில் தள்ளிப் போய்க் கொண்டே இருந்து விட்டது ! நேற்றைக்கு எதிர்பாரா விதமாய் பல் போன இந்த அணிக்கான ரூட் க்ளியர் ஆகிட, அடித்துப் பிடித்துப் பணிகளுக்குள் குதிக்க நேர்ந்த போது என்னிடம் அயர்ச்சி இருக்கவில்லை !! Maybe அந்த உற்சாகம் தான் புஜம் கழன்றிடும் நோவை மறந்தும் பணியாற்ற உதவியதோ என்னவோ ?!  சமீப மாதங்களில் வழக்கத்தை விடவும் கூடுதலாய் ; ரொம்பவே கூடுதலாய் நான் பேனா பிடிப்பது நிகழ்ந்து வருகிறது ! And அதன் பின்னணியினில் தினுசு தினுசான காரணங்கள் இருப்பினும் - நாம் முயற்சித்து வரும் தினுசு தினுசான கதைகளே அதன் பிரதான காரணி என்பது புரிகிறது ! புதுசுகளுக்கான பாணிகள் மாறிடும் தருணங்களில் - சூப்பரோ, சொதப்பலோ - அதனை நானே கையாள்வதென்று தீர்மானித்தேன் என்பதால் தான் சமீப மாதங்களில் எனது லொட லொடப்பு இதழ்களிலும் கணிசமாய்த் தொடர்கிறது ! போன மாசத்து டெட்வுட் டிக் ஒரு புது பாணியெனில், இதோ - இப்போது முயற்சிக்க அவசியப்பட்டிருக்கும் தாத்தாக்களின் தமிழாக்கம் இன்னொரு extreme !! And நேற்றைக்கு பேனா பிடித்த போது நான் உணர்ந்த குஷி...ஸ்பைடரின் "பாதாளப் போராட்டம்" இதழுக்கான குஷிக்குக் கொஞ்சமும் குறைவானதில்லை ! More on that a bit later !!

கதையைப் பொறுத்தவரையிலும் make no mistake - இதுவொரு அழகான கி.நா.தான் ! இங்கே நாயகர்களென்று ஒன்றுக்கு மூன்றாய் தாத்தாக்கள் உண்டெனினும், மெய்யான நாயகர் கதாசிரியரே என்பது எனது பார்வை ! இங்கே பெரும் கதையென்று எதுவுமோ ; தாத்தாக்கள் காமெடியில் பின்னி எடுப்பார்களென்ற எதிர்பார்ப்புகளோ இருந்திட இடமில்லை ! மாறாக, இது வாழ்க்கையின் அழகான அனுபவங்களை ஒரு செமத்தியான பகடியின் வாயிலாய் கதாசிரியர் Lupano சொல்லியிருப்பதாய் எனக்குப்பட்டது ! Of course - அந்தி not too far என்ற அகவையினில் இருப்பவனுக்கு இந்தக் கதையானது ரசித்த அதே அளவிற்கு யூத்தான உங்களுக்கும் (!!!!) ரசிக்குமா ? என்பது நூற்றி இருபத்தைந்து ரூபாய்க்கான கேள்வியே & 'இந்த ஆணில்லாம் பிடுங்கச் சொல்லி உன்ன யாரப்பா கேட்டது ?" என்ற குரல்கள் எழுந்தாலும் நான் ஆச்சர்யம் கொள்ள மாட்டேன் தான் ; ஆனால் காமிக்ஸ் எனும் பெரும்கடலில் இத்தகைய படைப்புகளுமே உண்டெனும் போது, நாலு  விளக்குமாற்றுச் சாத்துக்கள் வாங்கியாச்சும், முயற்சித்துப் பார்ப்பதில் தப்பில்லை என்று பட்டது !!  தற்செயலாய் நேற்றைக்குப் படித்ததொரு ராபர்ட் கென்னெடி quote இங்கே நினைவுக்கு வருகிறது : "பெருசாய் சொதப்பிடத் துணியாத பட்சத்தில், பெருசாய் ஜெயித்திட இயலாது !!" சும்மா இருக்கும் போதே மு.ச. & மூ.ச.க்களைப் பார்த்து வருபவனுக்கு, at least ஒரு முகாந்திரமாவது கிட்டிய மாதிரி இருக்குமல்லவா - இத்தகைய கத்தி மேல் நடக்கும் முயற்சிகளுக்குள் தலைநுழைப்பதென்பது ? So நிச்சயமாய் எது மாதிரியும் இல்லா, ஒரு புது மாதிரி அனுபவம் காத்துள்ளது உங்களுக்கு - இம்மாதத்தினில் ! And பெருசாய் சொதப்பினாலும் சரி, பெருசாய் சாதித்தாலும் சரி - இந்த ஆல்பத்திலிருந்தான எனது biggest takeaway இதன் மொழிபெயர்ப்பு அனுபவமாகவே இருக்கும் ! 

டெட்வுட் டிக்கில் பயன்படுத்தப்பட்ட கொச்சை நடை ஒரு விதமெனில், இங்கே இந்தப் பெருசுகளுக்கென பின்பற்ற அவசியப்பட்ட நடை not too different ! இங்கே போன வாரத்து ஒரு நிகழ்வினை ஜாலியாய்ப் பார்த்திடத் தோன்றுகிறது !! 

"முழியாங்கண்ணனுக்கு வயசாகிப்புடிச்சி ; இப்போல்லாம் பேனா புடிச்சு மொக்கை போடுறான் !" என்று நண்பரொருவர் இங்கு பதிவிட, சூட்டோடு சூடாய் இது சார்ந்ததொரு கருத்துக் கணிப்பு FB-ல் அரங்கேறி வருவதாய் நண்பர்கள் எனக்குத் தகவல் சொன்னார்கள் ! "புலவர் முத்துவிசயனாரின் மொழிபெயர்ப்பு தரம் கூடிருக்கா ? அப்டியே கீதா ? புட்டுக்குச்சா ?" என்பதே கேள்விகளாம் !! 'தோ பார்டா...சும்மாவே மொத்தியெடுக்க  துடைப்பங்களை பஜாருக்குப் போயி வாங்கிட்டு வர மக்க ஆர்வமா இருக்கச்சே , வான்டன்னா ஆளுக்கொரு குச்சி விளக்குமாற்றைக் கையிலே தந்து களமிறக்கி விட்டுப்புட்டீங்களே !!' என்று நினைத்துக் கொண்டேன் ! ஆனால் surprise ..surprise ...மொத்தியெடுத்தது சொற்பமேவாம்  ! ரிசல்ட் பற்றித் தோராயமாய்த் தெரிய வந்த வேளையில் நான் பெருசாயத் துள்ளிக் குதிக்கவெல்லாம் இல்லை ; simply becos இப்போதெல்லாம் எழுத்து சார்ந்த விமர்சனங்களை on merits மாத்திரமே எடுத்துக் கொள்கிறேன் ! 

பத்து வருஷங்களுக்கு முன்னே - "இது செரி இல்லே...அது செரி இல்லே !" என்ற ரீதிகளில் மொழிபெயர்ப்பு சார்ந்த விமர்சனங்கள் எழுந்திருக்கும் பட்சத்தில் - வரிந்து கட்டிக் கொண்டு எனது தரப்பு வாதங்களை முன்வைக்க முனைந்திருப்பேன் ! ஆனால் over a period of time - வயசு கூடியிருப்பதோடு மட்டுமன்றி எனக்கு இதனில் கொஞ்சம் தெளிவும் பிறந்துள்ளது !! நாம் முயற்சித்து வரும் கதைகளின் தொண்ணூறு சதவிகிதம் ஆங்கிலத்தினில் பார்க்க வாய்ப்பில்லாத படைப்புகளே ! Of course சினிபுக் ; யூரோப் காமிக்ஸ் ; காமிக்ஸாலஜி போன்ற தளங்களில் இங்கிலீஷில் கிட்டிடுவது நிறைய என்றாலும், in general நமது பெரும்பான்மை இத்தாலியனிலோ ; பிரெஞ்சிலோ ; வேறெதிலோ தான் இருந்திடும் ! So என் கையிலுள்ள ஒரிஜினலைப் பார்த்திரவோ, படித்திருக்கவோ வாய்ப்புகளில்லா நண்பர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் ஓரளவுக்கே சாரம் கொண்டதாக இருந்திட இயலும் அல்லவா ?! தவிர, இங்கோ ; க்ரூப்களிலோ ; FB யிலோ அழகாய் எழுதுவதென்பது வேறு ; முப்பதே நாள் அவகாசத்தினுள் தோராயமாய் நானூற்றிச் சொச்சம் பக்கங்களுக்கு & sometimes even more பக்கங்களுக்குப் பேனா பிடிப்பதென்பது முற்றிலும் வேறென்பதை விமர்சகர்கள் உணர்ந்திருக்கவும் சாத்தியங்கள் சொற்பமே என்பது எனக்குப் புரிகிறது ! அந்தச் சுமையும், அழுத்தமும், பொதி சுமந்திடும் வண்டி மாட்டுக்கு மாத்திரமே தெரியும் ! 

அது மட்டுமன்றி - நமது பணிகளின் பன்முகத்தன்மை !! ஒருத்தருக்கு ஹாஷ்ய நடை செமயாய் செட் ஆகிடலாம் ; சிலருக்கு சீரியஸ் நடை மடை திறந்து வெள்ளமாகிடலாம் ! ஆனால் இங்கோ, ஒரு ஆகக் குறுகிய காலகட்டத்துக்குள் கவுண்டமணியாகவும், நாசராகவும், பார்த்திபனாகவும், செந்திலாகவும் மாறி மாறிக் குரல் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டுமெனும் போது - ஆங்காங்கே லைட்டாய் குரலில் பிசிறு தட்டினால் வியப்பே இல்லை தானே ? And more than anything else - மொழிபெயர்ப்பென்பது - free writing-லிருந்து ரொம்பவே மாறுபட்டதென்பதை எக்கச்சக்க முறைகள் நான் பார்த்து விட்டேன் ! தனிப்பட்ட முறையினில் அட்டகாசமாய் எழுதக் கூடிய நமது நண்பர்களில் ஏகப்பட்ட பேர் கூட, translation என்று வரும் போது அதே நேர்த்தியுடன் எழுத சிரமப்படுவதை  பார்த்துள்ளேன் ! "வாய்ப்பு கிடைச்சாக்கா - இதை விட நான் அழகா எழுத்திடுவேன்ல" என்று தம் பொதுவான எழுத்தாற்றல் மீதான நம்பிக்கைகளில் நண்பர்களுக்குத் தோன்றுவது சகஜமே ; ஆனால் ஒரு வேற்று மொழியினில் ஒரிஜினல் + ஆங்கிலத்தில் சற்றே சுமாரான ஸ்கிரிப்ட் + தமிழில் ஏகமான எதிர்பார்ப்புகளும், விமர்சகர்களும் கொண்டதொரு சிறு வாசக வட்டம் என்ற சூழலில் களமிறங்கும் போது நிலவரம் வேறு மாதிரியிருப்பதை உணர்ந்திட இயலும் ! Of course, I'd love to be proved wrong : நண்பர்கள் யாரேனும் அழகும், நேர்த்தியுமாய் பேனா பிடிக்கும் திறனும், பொறுமையும் கொண்டிருப்பின் - நாளைக்கே அவர் வசம் பணிகளில் ஒரு பகுதியினை ஒப்படைக்க நான் ரெடி ! ஒரே கண்டிஷன் - அவற்றினில் நானொரு மறு பட்டி டிங்கரிங் பார்க்கும் அவசியங்களின்றி அமைந்திட வேண்டி வரும் ! நேரங்கள் விரயமாவதே - இந்த rewriting படலங்களில் தானெனும் போது அதனைத் தொடர்கதையாக்கிட மனதிலும், புஜத்திலும் தெம்பில்லையே !  

So யதார்த்தம் இதுவே என்பது புரிந்திருப்பதால், இப்போதெல்லாமே "மொழிபெயர்ப்பு சகிக்கலை ; கதையோட ஒன்றிப் படிக்க முடியலே !!" என்ற ரீதியிலான எண்ணங்களை - அவரவரது  அபிப்பிராயங்களாக மாத்திரமே பார்க்கப் பழகி விட்டேன் ! மாறாக, "இதனை - இன்ன காரணத்துக்காக - இன்ன மாதிரி எழுதாம மாத்தி எழுதி இருக்கலாம் !" என்ற ஆக்கபூர்வமான inputs ஆக இருப்பின், அதனைக் கருத்தில் கொள்ளத் தவறுவதில்லை ! "மொழிநடை சார்ந்த தேடல்" என்பது ஒரு முடிவில்லாத பயணம் ; இங்கே யாரும் கரை கண்ட அப்பாடக்கர் அல்ல ; and எல்லாத் தருணங்களிலும் எல்லோருமே a work in progress என்பது எனது ஸ்பஷ்டமான புரிதல் ! So சொற்ப  விமர்சனங்களால் என்னை நானே சந்தேகித்துக் கொள்வதோ ; கொஞ்சப் பாராட்டுக்களால் எனக்கு நானே சிலை வைத்துக் கொள்வதோ - கோமுட்டித்தனம் என்பது எப்போதோ புரிந்து விட்டுள்ளது  ! And இங்கொரு side track கூட :

சமீபத்தில் ட்விட்டரில் ஆஸ்திரேலிய சூழல் பந்து வீச்சு ஜாம்பவானும், இன்றைய கிரிக்கெட் விமர்சகருமான ஷேன் வார்ன் தனது followers-களிடம் கேள்வியொன்றைக் கேட்டிருந்தார் : கடந்த 30 ஆண்டுகளுக்குள்ளான TOP 10 கிரிக்கெட் வர்ணனையாளர்கள் யாரென்று தேர்வு செய்வதே அந்தக் கேள்வி ! ரொம்பவே சுவாரஸ்யமாய் அதற்கான பதில்களைப் பார்த்து வந்தேன் & இறுதியில் ஷேன் வார்னே தனது பெர்சனல் TOP 10 தேர்வினைச் சொல்லியிருந்தார் ! அந்தப் பட்டியலில் பாதிப் பேர் எனது தேர்விலும் இருந்தனர் ; மீதப் பேர் இல்லை ! கண் முன்னே விரிவது ஒரே கிரிக்கெட் மேட்ச் தான் ; அதன் ஆட்ட விதிகளும் காலம் காலமாய் அனைவருக்கும் ஒன்றே தான் ; and மேட்சை வர்ணனை செய்வோர் அமர்ந்திருக்கும் இடமும் ஒன்றே ! ஆனால் ஒவ்வொருவரிடமிருந்தும் வெளிப்படும் வர்ணனைகள் ; வார்த்தைகள் ; அனுபவங்கள் தானே ஒன்றிலிருந்து அடுத்ததை வேறுபடுத்திக் காட்டுகின்றன  ? மைக்கேல் அதர்டன் பார்ப்பதும், டேவிட் லாய்ட் பார்ப்பதும், நம்ம தினேஷ் கார்த்திக் பார்ப்பதும் ஒரே மேட்சாக இருந்தாலும், ஒவ்வொருவரிடமிருந்தும் பிரவாகமெடுக்கும் வர்ணனைகளில் தானே எத்தனை மாறுபட்ட அழகிருக்கிறது ?!! எனது பட்டியலில் உள்ள பாதிப் பேர் ஷேன் வார்னின் பட்டியலில் இல்லை என்பதற்காக அவர்களெல்லாம் மோசமான கமெண்டேடர்கள் என்று ஆகிடப் போவதில்லை தானே ? And vice versa too !!

அதுவே தானே இங்கே நமது மொழிபெயர்ப்புகள் சார்ந்த ஒப்பீட்டிலுமே நிஜம் ? கதை ஒன்றாகவே இருப்பினும், அதற்கு நான் எழுதுவது ஒரு மாதிரியும், கருணையானந்தம் அவர்கள் எழுதுவது வேறு மாதிரியும், நீங்கள் எழுதுவது இன்னொரு மாதிரியும் இருப்பதில் வியப்போ, வினோதமோ நஹி தானே ? So என்னிடமிருந்து வெளிப்படுவது எனது பாணியிலான மொழிநடை ; simple as that !! அது உங்களுக்குப் பிடித்திருப்பின் சூப்பர் ; பிடிக்காது போயிருப்பின், பிடிக்கும் வரையிலும் முயற்சிப்பேன் ; again as simple as that !! So இங்கே நான் கோச்சுக்கவோ ; காலரைத் தூக்கிக்கவோ பெரிதாய் அவசியங்கள் இருப்பதாய் இப்போதெல்லாம் எனக்குத் தோணுவதில்லை ! ஆகையால் "ஆந்தையனின் பேனா முனை இன்னும் மழுங்கிடலை" என்று வாக்களித்த பெருமக்களுக்கும் ; "முன்னையே விட இப்போ இன்னும் கூரா கீதுபா" என்று கருதிய பெருமக்களுக்கும் ; "அய்யே.." என்று பழிப்புக் காட்டிய பெருமக்களுக்கும் - கும்பிட்டுக்கிடுறேனுங்கோ சாமீ !! நல்லதோ - கெட்டதோ - இன்னிக்கு பொழுதுகளில் எனக்கோசரம் இத்தனை நேரம் செலவிட நீங்கள் முனைந்ததே எனக்கான முதல் அங்கீகாரம் ! எது எப்படியெனினும் - பேனா பிடிக்கும் பணியில் புஜ வலி மட்டுமே மிஞ்சுவதாய் எனக்குத் தோன்றும் முதல் நொடியில் நிச்சயமாய் நான் உங்கள் பொறுமைகளைச் சோதித்துக் கொண்டிருக்க மாட்டேன் என்ற மட்டுக்கு நீங்கள் நம்பலாம் folks !!

இப்போதைக்கு இதே பல்லவியை இன்னமும் இழுத்துப் பாடிக் கொண்டிருந்தால் மேற்படித் தவறை இங்கேயே செய்த குற்றத்துக்கு ஆளாவேன் என்பதால் நடையைக் கட்டுகிறேன் guys - லக்கியின் புது சாகசம் வெயிட்டிங் !! Before I sign out - இதோ - கொஞ்சமாய் பின்தள்ளிச் செல்லும் "உலகத்தின் கடைசி நாள்" இதழின் அட்டைப்படம் ! நமது சென்னை ஓவியரின் கைவண்ணமே - ஒரிஜினல் டிசைனை கொஞ்சமாய் மாற்றி !! 

எல்லாம் சரி....இந்த புக்குக்குப் பதிலா அட்டவணையில் வர்ற புது புக் என்னவென்கிறீர்களா ?? 

உப பதிவில் அது பற்றி !! 

Bye all...see you around ! Enjoy the long weekend !!

P.S : "முத்து காமிக்ஸ் மலரும் நினைவுகள்" தொடரட்டுமே folks !!





352 comments:

  1. ஏவ்வ்வ்வ்வ்வ்.....சாம்பார் சோறுக்கே இப்புடி ஏப்பம் வருதே ?

    ReplyDelete
    Replies
    1. சாம்பார் சாதம்னாலும் முருங்கைக்காய் சாம்பார்ன்றதுனால ஓகே சார்!

      Delete
  2. வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  3. உலகத்தின் கடைசிநாள் தள்ளிப்போவது ஏமாற்றமே சார்.மிகுந்த ஆர்வந்துடன் இருந்தேன்... அட்டவணை வெளிவரும் எனவும் எதிர்பார்த்தேன் அதுவும் வர்ல சார் செம பல்பு வாங்கிட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. அட்டவணை அக்டோபர் 15 க்கென நாலு மாசம் முன்னேவே சொன்ன பின்னேயும் பல்பு வாங்குனாக்கா பத்திரமா வைச்சுக்க வேண்டியது தான் பழநி ; பியூஸா போறப்போ மாத்திக்கணும் !

      Delete
    2. ஹிஹி மாத்திக்கலாம் சார்..

      Delete
    3. // பல்பு வாங்குனாக்கா பத்திரமா வைச்சுக்க வேண்டியது தான் பழநி ; பியூஸா போறப்போ மாத்திக்கணும் ! // ஹிஹிஹி செம்ம ரிப்ளை சார். வாய்விட்டு சிரித்து விட்டேன்.

      Delete
  4. அஞ்சாவது ஐய்யா!

    ReplyDelete
  5. அட்டவணை எப்போது சார்..??

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. அக்டோபர் 15 இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே.

      Delete
  6. // 3 இதழ்கள் கொண்ட இம்மாதத்தின் இதழ்களை 7-ம் தேதி வாக்கிலேயே அனுப்பிப் போடணும் //
    ஹைய்...!!!

    ReplyDelete
    Replies
    1. அதே அதே எப்படியும் 8 அல்லது 9 ஆம் தேதிகளில் புத்தகம் வந்து விடும். திருவிழா ஆரம்பம்.

      Delete
    2. சின்னண்ணே, பெரியண்ணே@ வணக்கமுங்கோ...

      Delete
  7. ///பெருசாய் சொதப்பிடத் துணியாத பட்சத்தில், பெருசாய் ஜெயித்திட இயலாது !///

    சூப்பர்! சூப்பர்!!

    எந்த பங்கில் வசமாக சிக்குகிறோமோ அதில் தான் அதிகப்படியான லாபமும் கிடைக்கிறது!
    - சொந்த அனுபவம்!

    Disclaimer : ஆழம் தெரியாமல் காலை விட்டால் மொத்தமும் போகும் வாய்ப்பு ஏராளமாய் உண்டு!

    ReplyDelete
  8. அறிந்ததும் அறியாததும் புரிந்ததும் புரியாததும் :-) சும்மா தலைப்புக்கு ஏற்றமாதிரி நம்ப பின்னூட்டமும் ரைமிக்கா இருக்கட்டும் என்று :-)

    ReplyDelete
  9. வந்து விட்டேன். சார் அந்த உப பதிவு எப்போது வரும்.

    ReplyDelete
  10. அந்தியும் அழகே முன்னால் வருவது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. கிராஃபிக் நாவலுக்கு ஜே ஜே. அப்போ இந்த மாதம் இன்னொரு பூஜை இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. சிறப்பா இருக்குது !!

      Delete
    2. விஜயன் சார், அப்ப நாலு அஞ்சு புது சட்டையோட நீங்க ரெடியா இருக்கீங்க என சொல்லுங்க :-)

      Delete
  11. அந்தியும் அழகே!

    கொரோனாவுக்கு முன்பே ஒரு மாதிரி தான் இருந்தோம் ; கொரோனாவுக்குப் பின்பு வேறு மாதிரி ஆகி விட்டோம்!

    சலிப்பு, சங்கடம், சஞ்சலம், கஷ்டம், நஷ்டம், அலைச்சல், மன உளைச்சல், விரக்தி, வேதனை, எரிச்சல், இயலாமை என - குட்டி முதல் பெருசு வரை இதே கதைதான்! கதைகள் மாறலாம் ; களம் ஒன்றுதானே!

    என்ன ஒன்று இன்னும் கூட நமக்குக் காலம் இருக்கிறது ; வாய்ப்பும் இருக்கிறது என்று நினைத்து ஆறுதல் அடைந்து வந்தோம்!

    ஏற்கனவே 'ஒரு தோழனின் கதை'யில் ஐம்பது வயதுக்கான மைண்ட்செட் வந்து விட்டது!

    அடுத்த மாதம் வரப்போகும் 'அந்தியும் அழகே' படித்து முடித்தப் பிறகு - தாத்தாக்களின் மைண்ட்செட் வராமல் இருந்தால் சரிதான் :))

    என்னமோ போடா மாதவா!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார் ..உங்க கோட்டா சூரிய ஒளியை பாய்ச்சியாச்சுங்களா ? விட்டமின் D-க்கு பஞ்சமே இருக்காதென்ற குஷி எனக்கு !

      இன்னும் நிறைய விட்டமின்கள் உண்டு சார் ; போட்டுத் தாக்குவோம் !

      Delete
    2. சார், என்னுடைய இந்தப் பதிவை‌, நீங்கள் சீரியசாக எடுத்துக் கொண்டீர்கள் என்றுப் புரிகிறது!

      ஒவ்வொரு வாசகனின் பார்வை கோணங்களும் மாறுபட்டு தான் இருக்கும்! இது என்னுடைய பார்வை மட்டுமே!

      எப்பொழுதும் போல் நான் உங்களைத் தாக்குவதாக நீங்கள் நினைத்திருப்பது புரிகிறது! அதற்குக் காரணம் என்னுடைய பெயர் மட்டும்தான் - இதே பதிவின் மேலே வேறு ஒரு ரெகுலர் வாசகரின் பெயர் இடம் பெற்றிருந்தால், இதை நீங்கள் ஜோக்காக நினைத்துச் சிரித்து விட்டு கடந்து சென்று இருப்பீர்கள்!

      Delete
    3. எந்தவொரு இடரிலும் கொஞ்சமெனும் வெளிச்சத்தைப் பார்க்க முனைவோமே என்பது இந்தத் தளத்தின் வாயிலான எனது முனைப்பு ! ஆனால் எந்தவொரு பதிவிலும் இல்லாததைத் தேடியே
      பின்னூட்டமிடுவது உங்க முனைப்பு !

      எனக்கு நண்பர் உதய் (artist) தெரியும் ; (சேலம்) குமார் தெரியும் ! இரண்டு பேரது பெயர்களும் இணைந்த அந்த உங்க பெயரிலே எனக்கென்ன பஞ்சாயத்து இருக்கக்கூடும்ணா ? இன்னும் சொல்லப்போனால் இங்கே பதிவிடும் நண்பர்களில் முக்கால்வாசிப் பேரை எனக்கு வெறும் பெயர்களாகவே பரிச்சயம் ! இதில் பெயர் ராசி பார்த்து நான் என்ன சாதிக்கப் போகிறேன் ?

      Granted - ஆளுக்கொரு பார்வைக் கோணம் இருக்கும் தான் ; ஆனால் அந்தக் கோணங்களில் positivity எப்போதாச்சும் தலைகாட்டினால் தப்பாகிடுமோ ?

      Delete
    4. //எனக்கு நண்பர் உதய் (artist) தெரியும் ; (சேலம்) குமார் தெரியும் ! இரண்டு பேரது பெயர்களும் இணைந்த அந்த உங்க பெயரிலே எனக்கென்ன பஞ்சாயத்து இருக்கக்கூடும்ணா ?//

      தங்களின் இது போன்ற நய்யாண்டிகள் எனக்குப் புதிதல்ல சார்! பலமுறை கலாய்த்து விட்டு period என்று முற்றும் போட்டு விடுவீர்கள்!

      //Granted - ஆளுக்கொரு பார்வைக் கோணம் இருக்கும் தான் ; ஆனால் அந்தக் கோணங்களில் positivity எப்போதாச்சும் தலைகாட்டினால் தப்பாகிடுமோ ?//

      இதற்கு என்னுடைய பழையப் பல பதிவுகளே சாட்சி! நான் சிலாகித்து எழுதிய புதிய வரவுகள்/கதைகள் ஏராளம்! டெக்ஸ் வில்லரின் - எதிரிகள் ஓராயிரம் கதையைக் கூட சிலாகித்து இங்கு எழுதி உள்ளேன்!

      //Positivity எப்போதாச்சும் தலைகாட்டினால் தப்பாகிடுமோ ?//

      தப்பே ஆகாது சார்! உதாரணத்திற்கு...

      1. UDAYAKUMAR 23 May 2021 at 20:46:00 GMT+5:30

      Option # 5 + (Plus)

      விஜயன் சார்,

      இதுவரை வெளிவந்துள்ள முத்து காமிக்ஸ் வெளியீடுகள் அனைத்தின் அட்டைப் படங்கள் 1+1

      அதாவது 1 = நம் முத்து காமிக்ஸில் வந்த அட்டைப் படங்கள் + 1 = ஒரிஜினல் அட்டைப்படங்கள் ; ஒற்றைத் தாளில் முன் பக்கம் பின் பக்கம் என ; வெளியீட்டு எண்களோடு ; மாதம் வருடம் முதற்கொண்டு ; ஆர்ட் பேப்பரில் ; முழு வண்ணத்தில் - ஒரு தொகுப்பாக ஹார்ட் பவுண்டிங்ல் போட்டால் எப்படி இருக்கும்?!

      Just an idea 🙏

      2. UDAYAKUMAR 23 May 2021 at 21:06:00 GMT+5:30

      Okay Sir!

      //And இதுவொரு memorabilia வாக மட்டுமே இருந்திடும் - வாசிப்பின் இடத்தை நிரவிடாது !//

      Option # 5

      //ஓ.கே. வெனில் கென்யா ; ROUTE 66 ; போன்ற தொடர்கள் ; ப்ளஸ் இன்னமும் நிறைய புது 3 பாக ஆல்பங்கள் வெயிட்டிங் !//

      Option 5 + (Plus Pro)

      இதுவரை வெளிவந்துள்ள முத்து காமிக்ஸ் வெளியீடுகள் அனைத்தின் அட்டைப் படங்கள் 1+1

      என்பதே என் கருத்து! படிப்பதற்கு ஒன்று ; கொண்டாடுவதற்கு ஒன்று!

      முத்து Comics Golden Jubilee ! 50 years of celebration!

      முடியாது என்று கூறிவிட்டீர்கள். புரிதலுக்காக மட்டுமே இந்த விளக்கம்!
      (copy paste)

      உதாரணங்கள் இன்னும் நிறைய இங்கேயே இருக்கிறது!

      Delete

    5. //And இதுவொரு memorabilia வாக மட்டுமே இருந்திடும் - வாசிப்பின் இடத்தை நிரவிடாது !//
      ஆசிரியர் தனக்கு பிடிக்கலைன்னாலும் மனம் மாறக் காரணம்....பல வாசகர்களின் நச்சரிப்பே என்பதும் அவ்வெளிச்சத்துக்கு காரணம்....மேலும் இதுபோன்ற கொண்டாட்ட தருணம்...இது போல் தொகுப்பு விடுவதாய் முன்பே....பல வருடங்களுக்கு முன்னரே அறிவித்து நிறுத்தி விட்டார் ஆசிரியர்....அதன் காப்பி பேஸ்ட் தான் நீங்க அதாவது 1 = நம் முத்து காமிக்ஸில் வந்த அட்டைப் படங்கள் + 1 = ஒரிஜினல் அட்டைப்படங்கள் ; ஒற்றைத் தாளில் முன் பக்கம் பின் பக்கம் என ; வெளியீட்டு எண்களோடு ; மாதம் வருடம் முதற்கொண்டு ; ஆர்ட் பேப்பரில் ; முழு வண்ணத்தில் - ஒரு தொகுப்பாக ஹார்ட் பவுண்டிங்ல் போட்டால் எப்படி இருக்கும்?!
      கேட்டது...
      கடவுளை சுமந்த குதிரை கதை தங்களுக்கான தெரியாமலிருக்கும்....சார் நண்பர் வைட்டமின் m கூட தருவார்

      Delete
    6. ஆசிரியர் முடியாதென சொல்லி ...பின்னர் விட்ட கதைகள் இரத்தப்படலம் போல ஆயிரம் உண்டல்லவா... அதைப் போல இங்க உள்ள ஒவ்வொரு நண்பரும் பாத்தியா நான் சொன்னது இப்ப போட்டன்னு கொண்டாட ஆயிரம் காரணம் உண்டே...நீங்களும் கொண்டாடுங்க தீவாளிய

      Delete
    7. 80 கள்ல கோடை மலர் இப்படி விடலாம்னு நீங்க ஆசிரியருக்கு அனுப்புன அஞ்சலட்டை இருந்தா ஒரு காப்பி குளோஸ் அப் ப்ளீஷ்

      Delete
    8. //எனக்கு நண்பர் உதய் (artist) தெரியும் ;//
      உங்கள் நினைவு கூறுதலுக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் சார்... நீங்கள் என்னை மறந்து விட்டீர்களோ என்று கூட எண்ணத் தோன்றியது எனக்கு.

      Delete
  12. சார் புக் Fair Special இதழ்கள் கூடிக் கொண்டே போகிறது. ஏற்கனவே மேகி காரிசன், இப்போது உலகின் கடைசி நாள், இன்னும் உயிரைத் தேடி இருக்கு. நீங்கள் இந்த முத்து 50 வேலையை முடித்த பிறகு இதெல்லாம் எப்போது என்று அறிவித்தால் போதும். கடைவாயில் நீர் ஒழுகும் படங்கள் 100.

    ReplyDelete
    Replies
    1. ஒரு லிஸ்ட் போட்டு வைச்சிருங்க சார் ; எனக்குத் தேவைப்படும் !

      Delete
    2. பிரளயம் விட்டுட்டீங்களே குமார்.

      Delete
    3. வெட்டியானும் கொல்லைக்கார பிசாசும் கொடுத்தாச்சு சார்

      Delete
    4. ஸாரி கொரில்லா சாம்ராஜ்யம்

      Delete
  13. ☹️☹️☹️☹️☹️☹️☹️☹️ ரொம்பவே எதிர்பார்த்த மார்ட்டின் & டிலான் கூட்டணி வரவில்லை 😭😭😭😭😭😭😭😭😭😭

    ஆனால் தாத்தாக்கள் வருவது சந்தோஷம்

    ReplyDelete
  14. இட்லி சாப்பிட்டு நல்லா இல்லைன்னு சொல்றது ஈசி, அனா அதுக்கு முன்னாடி சரியான அளவு அரிசி மற்றும் உளுந்தை, சரியான நேரத்துக்கு ஊறவச்சு, தனி தனியா அறச்சு, சரியான அளவு உப்பு போட்டு, அரிசி மாவும் உளுந்து மாவும் சரியா மிக்ஸ் ஆகி, சரியான் வெப்ப நிலையில, சரியான நேரம் புளிக்க விட்டு, இட்லி குண்டான்ல சரியான் அளவு தன்னி சுட வச்சு, சரியான அளவு கரண்டில எடுத்து, சிந்தாம சிதராம சரியான் அளவு இட்டி தட்டுல ஊத்து, அத சரியான நேரத்துக்கு வேக வச்சு, வெந்ததுக்கப்புரம், இட்லி துனிலெந்த்து ஒட்டாம் பிய்யாம சரியான அளவு தண்ணி தெளிச்சு, சரியான் வேகத்துல அந்த் இட்லி துனிய பிரித்து எடுத்தாதான் சரியான இட்லி கிடைக்கும். அதே மாதிரிதான் மொழி பெயர்ப்பும். 👏👏👏👍👍👍

    ReplyDelete
    Replies
    1. ஏ ..ஆத்தி ..இட்லி சுடறதிலே இத்தனை மேட்டர் இருக்குதா !

      Delete
    2. சில பல அந்தப்புர ரகசியங்கள் வெளியில வருதே.உங்க வீட்டுல நீங்க தான் இட்லி மாஸ்டர் போலிருக்கே, கிரி சார்.

      Delete
  15. அருமை சார் . அட்டைப் படங்கள் இரண்டும் அழகு. ராபின் டைலன் அட்டை இப்பவே பாக்கனும்னு பாம்பால கட்டிப் போடுது.

    ReplyDelete
  16. Dear Editor - how many bookings so far on smashing 70s sir?

    ReplyDelete
    Replies
    1. நம்ம கா.சோ.ரொம்ப நாளாவே சொல்லிட்டிருக்கிற விஷயம் ஒண்ணை நடைமுறைப்படுத்திப் பாக்கலாம்னு நினைக்கின்றேன் சார் ! அது தான் நம்பர்களை பொதுவெளியில் வெளியிட வேண்டாமே என்பதான பரிந்துரை !

      அகஸ்மாத்தாய் நண்பர்கள் கேட்டோ ; அல்லது நானேவோ முந்திக் கொண்டு - முன்பதிவு எண்ணிக்கைகள் ; சேல்ஸ் நம்பர்ஸ் ; பிரிண்ட்ரன் போன்ற தகவல்களைப் பகிர்ந்திடும் போது, க்ரே மார்க்கெட்டுக்கு அவை உபயோகமான inputs ஆகிப் போய்விடுகின்றன !

      Smashing 70's ஐப் பொறுத்த வரையிலும் we are on the right track என்றே தோன்றுகிறது ! இலக்கைத் தொட தூரமுள்ளது தான் சார் ; ஆனால் இன்னமும் 2 வாரங்கள் இருக்கும் நிலையில் - நிறையவே லாஸ்ட் மினிட் புக்கிங்ஸ் இருக்கக்கூடுமென்றே படுகின்றது ! Fingers crossed !

      Delete
    2. Good Idea sir ! Yes there can be many last minute bookings including my friends whom I have to remind !

      Delete
    3. அந்தியும் அழகே..மாதிரி, மார்க்கெட்டிங் போல சில விஷயங்களை பொதுவில் பகிராமல் தவிர்ப்பதும் அழகே.

      Delete
    4. // அந்தியும் அழகே..மாதிரி, மார்க்கெட்டிங் போல சில விஷயங்களை பொதுவில் பகிராமல் தவிர்ப்பதும் அழகே. //

      +1

      Delete
    5. நல்ல முடிவு தாங்க சார். சில சமயங்களில் டார்கெட்டை ரீச் பண்ணிட்டமான்னு தெரிஞ்சுக்கற ஆவலில் கேட்டாலும் உங்கள் முடிவின் நியாயம் புரிகிறது.

      Delete
  17. ///*கதையினில் பணமுடக்கம் ; மொழிபெயர்ப்பு , டைப்செட்டிங்குக்கான பணம் + முயற்சி முடக்கம் ; அட்டைப்படத் தயாரிப்புச் செலவு, என வரிசை கட்டி இந்த இதழின் பின்னே பட்டியல் இருப்பினும், கதைத்தேர்வுக்கு உரிய சிரத்தை தராது போயின், இந்த "முடக்கப் பட்டியல்" தொடர்கதையாகவே தொடர்ந்திடும் என்பதுமே புரிந்தது !!
    பற்றாக்குறைக்கு கிளிப்டனின் "காமிக்ஸ் டைம்" பக்கங்கள் ஏற்கனவே அச்சாகியிருப்பதால், அந்தப் 16 பக்கங்களை கடாசி விட்டு, புச்சாய் இன்னொருவாட்டி, மாற்றியமைக்கப்படும் திட்டமிடல்களோடு வேறொரு காமிக்ஸ் டைம் & வேறொரு "அடுத்த வெளியீடு" பக்கங்களை அச்சிடணும் என்பதுமே புரிந்தது !!///

    நிறையவே சிரமங்கள் தான் சார்!! சட்டை, வேஷ்டி என்று சகலத்தையும் கிழித்துக்கொண்டு நிற்கும் உங்களைப் பார்த்து 'உச்' கொட்ட மட்டுமே முடிகிறது!

    ஒரு விசயம் சொதப்பினா அதன் பின்னே எத்தனை சமாசாரங்கள் முடங்கிப்போகுது!!

    ReplyDelete
    Replies
    1. புத்திக் கொள்முதல்கள் எப்போதுமே சீப்பாக அமைவதில்லையே சார் !

      Delete
  18. S70 எவ்வளவு முன்பதிவு ஆயிருக்கு?

    ReplyDelete
  19. 'அந்தியும் அழகே' - அட்டைப்படம், டைட்டில், உள்பக்க ஓவியப்பாணி - என்று எல்லாமே ரசிக்க வைக்கிறது சார்! இந்தக் கதை நம் எல்லோர் மத்தியிலும் பரவலாகப் பேசப்படப்போகும் - அவ்வளவு எளிதில் மறந்துவிட இயலாத - இதழாக அமையப் போகிறதென்று எனக்குள்ளிருக்கும் ஏதோவொரு பறவையோ மிருகமோ ஆரூடம் சொல்கிறது!

    அப்புறம் அட்டைப்படத்திலிருக்கும் அந்த உருவங்களில் நம் நண்பர்களின் சாயலும் தெரிவது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை!! ஹிஹி!!

    ReplyDelete
    Replies
    1. தலீவர் தெரியறார் ...நீங்க தெரியறீங்க ; இன்னொருத்தர் ?

      Delete
    2. எவளோ தன்னடக்கம் சார் உங்களுக்கு,I like it very much.

      Delete
    3. இன்னொருத்தர்என்னோட மச்சான் மேச்சேரி மெபிஸ்டோ சார்

      Delete
  20. மார்ட்டின் & டைலான் அடுத்த வருடம் வருவார்களா...

    ReplyDelete
  21. // 'கி.நா.களுக்கெல்லாம் அண்ணன் கி.நா.' என்பதால், சர்வ நிச்சயமாய் ஒரு bookfair special இதழாக மட்டுமே அணுகிட இயலுமென்பது புரிந்தது //
    அடடே,மார்ட்டின் உங்களுடைய நாக்கார்,மூக்காரை எல்லாம் படுத்திட்டார் போல சார்...!!!

    ReplyDelete
  22. பதிப்பு சார்ந்த விஷயங்களை விவரங்களை பொதுவெளியில் பகிராதது நல்ல செயல் தான் சார்.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் கொஞ்சமாக படிச்சுப்போம் சார் !

      Delete
  23. // எது எப்படியெனினும் - பேனா பிடிக்கும் பணியில் புஜ வலி மட்டுமே மிஞ்சுவதாய் எனக்குத் தோன்றும் முதல் நொடியில் நிச்சயமாய் நான் உங்கள் பொறுமைகளைச் சோதித்துக் கொண்டிருக்க மாட்டேன் என்ற மட்டுக்கு நீங்கள் நம்பலாம் folks !! //
    யாரின் பொருட்டு இந்த வார்த்தைகளோ தெரியவில்லை சார்,ஆனால் குறைந்தபட்சம் என்னைப் பொறுத்தவரை உங்கள் பேனாவின் தரம் இன்னும் குறையவில்லை சார்...!!!
    போங்க சார் போய் வேலையைப் பாருங்க சார்...!!!

    ReplyDelete
    Replies
    1. லக்கியோட பயணம் ஓடிட்டு இருக்கு சார் !

      Delete
    2. // போங்க சார் போய் வேலையைப் பாருங்க சார்...!!! //

      ஆமாம் சார்.

      Delete
  24. அட்டவணை மாதம் வந்தாலே இந்த சின்ராச கையில பிடிக்க முடியாது ஐயம் ப்ளையிங்

    ReplyDelete
  25. எடிட்டர் அவர்களுக்கு, போன பதிவில் உங்கள் மொழிபெயர்ப்பின் சிறிய குறையை, சற்றே hard ஆக கூறிவிட்டேன்.

    முன்னர் ஒருமுறை வேறு சிலர் உங்களின் ஐயர் பாஷையைப் பற்றி கூறியதும், அதற்கு நீங்கள் கோபமடைந்ததும் Block ல் படித்திருந்தேன். எனக்கும் அச்சமயத்தில் அந்த எண்ணம் இருந்தது.

    இப்பொழுதும் சில கதைகளில் நீங்கள் கொங்கு பாஷையில் எழுதியது பிடிக்கவில்லை. உதாரணம் "ஆமாங்கோ" "சாரிங்கோ" போன்றவை

    ReplyDelete
  26. இப்பல்லாம் அட்டைப்படம் பளிச்-ன்னு இருக்கு சார்..அந்தியும் அழகே -யில் மஞ்சள் சிகப்பு,
    உலகத்தின் கடைசி நாளுக்கு-பச்சையும் மஞ்சளும் என்று அட்டைப்படங்கள் வேறு தோற்றத்தை தருகின்றது. சார்..

    ReplyDelete
  27. நீங்கள் கதாபாத்திரத்தின் பெயரை தமிழ் பெயராக மாற்றுவதில்லை. காரணம் அதன் quality மாறிவிடும் என்பதால், சரிதானே? அதைப் போல்தான், இவ்வாறான உரையாடல்கள். சிறிய நெருடலாய் அமைந்து விடுகிறது.

    நான் இப்பொழுதும் சொல்கிறேன், உங்களுக்குப் பிறகு லயன் காமிக்ஸ் நீடிப்பது பெரும் கடினம். மன்னிக்கவும்.

    வாண்டுமாமாவின் கற்பனைத் திறனை இரசித்த அளவு, உங்களையும் இரசிக்கிறேன். உங்களுக்கு அறிவுரை சொல்லும் தகுதி இங்கு யாருக்கும் இல்லை. You are a 1man show.

    உங்களிடம் நிறைகள் பல உண்டு, குறைகள் சில உண்டு. அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

    என்னைப் போன்றோர்க்கு உங்களிடம் நேரில் விவாதம் செய்யும் அளவு அறிவும் இல்லை, தைரியமும் இல்லை. அதனால் blog எளிதாக இருக்கிறது.

    உங்களின் சுய எள்ளலையும் சிறிது குறைத்துக் கொள்ளலாம். அதற்குத்தான் என்னைப் போன்றவர்கள் உள்ளனரே, உங்களை விமர்சிக்க :)

    ReplyDelete
    Replies
    1. அபிப்பிராயங்கள் பொதுவாய் அவரவர் வரையும் ஓவியங்களை போலானவை ; வரைந்தவருக்குக் கச்சிதமாயத் தோன்றினாலும் - அடுத்தவருக்கும் அதே அளவுக்கு அது ரசிக்குமா ? ரசிக்காதா ? என்பது கேள்விக்குறியே ! So நீங்கள் தெரிவித்ததும் / தெரிவித்திருப்பதும் உங்கள் மட்டிலான சிந்தனைகளே தவிர , எனது காலைகளையும், மாலைகளையும் மாற்றியமைக்கப் போகும் நியதிகளாகிடாது !

      எனக்குப் பின்னே லயனுக்கு எதிர்காலமே இல்லையெனின் கூட என்ன போச்சு நண்பரே ? நான் அதுவரையிலும் செய்து விட்டுச் சென்றிருக்கும் பணிகளுடனும், இக்கட்டெனில் தோள் கொடுக்க எஞ்சியிருக்கக்கூடிய அன்பான நண்பர் வட்டத்தினடமும் தானே என் பிள்ளையை விட்டுச் சென்றிருப்பேன் ? அந்த நிம்மதி போதாதா எனக்கு ?

      காமிக்ஸ் எனும் கலை, ஒற்றை ஆந்தை விழிக் குடும்பத்தினை எதிர்பார்த்து ஒருபோதும் இருந்திடாது நண்பரே ; அது இயற்கையின் படைப்பு !! நதி போல ஓடிக்கொண்டே இருக்கும் - irrespective of who's around & who isn't!

      Delete
    2. And விமர்சனம் என நீங்கள் எண்ணிக்கொள்ளும் சமாச்சாரங்கள் ஒரு போதும் என்னை தடுமாறச் செய்வதில்லை நண்பரே - simply becos எனது முதற் விமர்சகன் எனக்குள்ளேயே 37 ஆண்டுகளாய் உறைகின்றான் ! ஒரு முகமறியா அணிக்கு என்னை நானே நிரூபிப்பதைக் காட்டிலும், முகம் பார்க்கும் கண்ணாடியில் தினம் தினம் பார்த்து வரும் அந்த முகத்திற்கு நிரூபிக்கும் வேகம் எனக்குள் உண்டு ! So அந்த சுயஎள்ளல் இத்யாதிகளின் இலக்கு நீங்களே அல்ல ! Chill !!

      Delete
    3. உங்களின் 4 வரிப் பின்னூட்டத்திலேயே உங்களின் முரண் வெளிப்படுகிறதே நண்பரே !

      என்னிடம் குறைகள் உண்டென்கிறீர்கள் - ரைட்டு ... !

      அதனை நான் ஏற்றிட வேண்டுமென்றும் சொல்கிறீர்கள் - டபுள் ரைட்டு ... !

      ஆனால் அவற்றைச் சுட்டிக்காட்டி என்னை நானே பகடி செய்து கொள்ளும் போது , அதனை வேண்டாமென்கிறீர்கள் ?

      Confusion !!

      ஆனால் எனக்கல்ல !

      Delete
    4. சில விஷயங்களை
      சில எதார்த்தங்களை
      சில எதிர்ப்புகளை
      சில நையாண்டிகளை
      சில காதல்களை
      சில மோதல்களை
      பல நேரங்களில்
      எடிட்டர் என்ற முறையில் கடந்து செல்ல வேண்டும்...

      எல்லாமே காமிக்ஸ் மேல் அந்தந்த வாசகரின் அதீத possessiveness.

      வெளிப்படும் விதத்தால் வேறுபடும்...மாறுபடும்...

      வெட்டும் கத்தி தானே பதம் பார்க்கவும் செய்யும்...

      எடிட்டர் கத்தியல்ல...

      சாணைக்கல்.

      Delete
  28. "முத்துகாமிக்ஸ்" - மலரும் நினைவுகள்.. ii
    80-களில் மிக அருகில் விருதுநகரில்-தான் இருந்தோம்--
    அம்மாவிற்கு புத்தகம் படிக்கும் ஆர்வம் இருந்ததால் லேண்டிங் லைப்ரரி - மூலம் தினம் இரண்டு புத்தகங்கள் கொண்டுவருவார்.

    அவரை தொந்தரவு செய்து சிறுவர் புத்தகம் கேட்டதில் ரத்னபாலா-அம்புலிமாமா-என்று முத்துகாமிக்ஸ்-ம் அறிமுகம் கிடைத்தது-
    எனக்கு இ கை மாயாவியை விட "வேதாள மாயாத்மா"தான் நினைவில் நிற்கிறார்.
    அப்பா P.W.D.Eng. ஆனாலும், படிக்கிற பிள்ளைகள் கதை புத்தகம் படிக்கக் கூடாது என்று ரொம்ப கண்டிப்புடன் இருந்தார்.
    நான் ஏழாவது படிக்கும் போது காலில் (தொடைப்பகுதில்,) ஒரு கட்டி வந்து அலோபதி - பின் சித்தா - என்று வைத்தியம் பார்த்ததில்-அந்த டாக்டர் குடும்பம் வீட்டிற்கு அருகிலேயே இருந்தார்கள்.அவர்களுக்கு இரண்டு பசங்கள்.எங்கள் வயதுதான்.அவர்கள் வீட்டில் முத்துகாமிக்ஸ்-சொந்தமாக?i வாங்க அனுமதி.
    அவர்கள் படித்ததும் தருவார்கள்.நானும் அண்ணனும்-படித்துவிட்டு கொடுப்போம்.
    ஒரு நாள் - இரண்டுநாள் தான் கரெக்டாக வாங்கிச் சென்றுவிடுவார்கள்...
    ஒரு முறை - வேதாளரின் இரண்டு புத்தகங்கள் ராட்சச விலங்கு-ஜம் போ என்று நினைக்கிறேன்.அண்ணன் படித்துவிட்டான்.நான்தான் படிக்கும் போது அப்பா வந்துவிட்டதால் சட்டென்று எங்கோ ஒழித்து வைத்துவிட்டேன். வைத்த இடம் மறந்துவிட்டது. பின் அந்த பசங்கள் வந்து கேட்க புக்கை காணமல் வீடு முழுவதும் தேடுவதும் நாளை தருகிறேன். இன்னும் படிக்க வில்லை என்று கூறுவதும். அவர்கள் நம்பாமல் புக்கை ஆட்டையை போட்டுவிட்டோம் என்று கோபப்பட்டு பெரியவர்களிடம் பஞ்சாயத்து போனதும் ஒரு வாரம் கழித்து ஒரு ட்ரங் பெட்டியில் அம்மாவின் சேலைக்கடியில் வைத்திருந்ததை கண்டுபிடித்து திருப்பி கொடுத்ததும். - அதன் பின் அவர்களிடம் காமிக்ஸ் வாங்கிப் படிப்பது நின்றுவிட்டது.
    வெளியூர் போகும் போது அண்ணன் பஸ்ஸ்டாண்டில் - முத்துக் காமிக்ஸை பார்த்துவிட்டால் அம்மாவை நச்சரித்து-காசு வாங்கி இதழ்களை வாங்கிவிடுவான். ஒன்று இரண்டு-ரிப் கிர்பி கதைகள்,காரிகன் கதைகள் படித்த ஞாபகம் இருக்கிறது.
    ஆனால். - பரிதாபம் வாங்கிய காமிக்ஸ்களை அப்பாவிற்கு பயந்து-வீட்டில் வைத்துக்கொள்ளாமல் பக்கத்துவீட்டில் ஒரு அண்ணனிடம் கொடுத்து விடுவார்கள்.
    அவர்கள் பத்திரமாக ஒரு டிரங்க் பெட்டியில் சேர்த்து வைப்பார்கள்..
    அதன்பின் மறுபடி படிக்க ஆசைப்பட்டாலும் ரொம்ப கெஞ்சி கூத்தாடி வாங்கி படிக்கணும்.
    கோபமா வரும். ஏனோ வீட்டில் சேகரிக்க தைரியம் வரவில்லை.
    அதன் பின் அப்பாவிற்கு டிரான்ஸ்பரில் திருநெல்வேலி வந்து பின்தான் தைரியம் பெற்று ரத்னபாலா சேகரிக்க ஆரம்பித்தது-
    முத்துகாமிக்ஸும் - சரிவர வரவில்லை என்று நினைக்கிறேன்..(அந்த காலகட்டத்தில் சார் குடும்பத்தில் சில பிரச்சனைகள் என்று பதிவுகளில் எழுதியது ஞாபகம் உள்ளது)
    இடை இடையே வந்த- "திசைமாறிய கப்பல்கள்"-"கொலைகார குள்ளநரி"யும்தான் அண்ணன் வாங்கிக் கொடுத்து எனது முதல் முத்து"காமிக்ஸ்" சேகரிப்பு.
    அடுத்து - 60 பைசாவில் வெளிவந்த "முத்துகாமிக்ஸ் வாரமலர்" ஒரு மறக்கமுடியாத
    சே கரிப்பு.
    அதில் வந்த- "இன்ஸ்பெக்டர் கருடா"-என் விருப்பத்திற்கு உரியர். ஏனென்றால் நமது நாட்டின்-ரியாலிட்டியுடன்-வண்ணத்தில்-வாரவாரம் அடுத்து என்ன என்று ஆவலுடன் எதிர்பார்க்கும்படி-தொடரும்-அமைந்திருக்கும். ராமு-சோமு / அதிமேதை அப்பு..எல்லாம் நம்மையே அவர்களாக நினைத்து ரசித்த காலங்கள்-
    பின் பாக்கெட் சை ஸில் - வர ஆரம்பித்த-ஃப்ளைட் 731-(லாரன்ஸ்/ டேவிட் சாகஸம்)
    ஜானி நீரோவின் -மூளைத் திருடர்கள்.
    என்று எனது சேமிப்பு காசில் வாங்க ஆரம்பித்து முத்துகாமிக்ஸ் சேகரிக்க ஆரம்பித்து..அது "லயன் காமிக்ஸ்" - வாங்க தூண்டுதலாகி - யாரோ - எவரோ ஆரம்பித்திருக்கும் காமிக்ஸ் என்று நினைத்தால் - தந்தை எட்டடி பாய்ந்தால் -தனையன் பதினாறடி பாய்வேன் என்பதாக எங்களோடு இணைந்து தங்களது காமிக்ஸ் பயணமும் தொடர்கிறது..
    இந்த பயணம் தங்கள் மகன் மூலமாகவும் தொடர்வதில் மட்டற்ற மகிழ்ச்சியே.
    நானும் எனது பையனுக்கு நமது காமிக்ஸ்-களின் ஆங்கில பதிப்புகளை வாங்கி கொடுத்து வருகிறேன். (பார்ப்போம் ஆங்கிலத்திலிந்து தமிழுக்கு விரைவில் வந்துவிடுவான் என்று நம்புகிறேன் சார்.)
    நன்றி..ii

    ReplyDelete
    Replies
    1. அருமையான மலரும் நினைவுகள்!

      பக்கத்துவீட்டு அண்ணனிடம் கொடுத்து ட்ரங்க் பெட்டியில் வைத்திருந்த அந்தப் புத்தகங்களின் கதி என்னவாயிற்று நண்பரே?!!

      Delete
    2. அருமையான வாழ்க்கை...மகிழ்வான நம்மோடு கலந்த நினைவுகளை மீட்டெடுப்பது சுகம்தான்

      Delete
  29. .... லயன் காமிக்ஸ் நீடிப்பதுகடினம். சம்மட்டியில் அடித்தது போல வலிக்கிறது. எங்கும் யாரிடமும் உபயோகிக்கக்கூடாத வார்த்தைகள். கவனம் நண்பரே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா....ஜி.. பூனை(நம்ம செல்லப் பூனை அல்ல...) கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடப்போவதில்லையே... அது அந்த பூனையின் நினைப்பில் மட்டுமே....!!!

      அவர் கறுப்பு பூனையை குருட்டு கண்களுடன் இருட்டு அறையில் தேடி வர்றார்.....😉😉😉 தேடிட்டு போட்டும் விடுங்க...

      2014டு லயன் காமிக்ஸ் வராது---இது ஒருசிலர்

      2015டு் நின்னு போயிடும்...இது இன்னும் சிலர்...

      2016ல சந்தா குறைந்திட்டதுப்பா சோலி ஓவர்---இது ஓரு கோஷ்டி

      2017ல இழுத்து மூடிடுவாங்க---போற போக்கில் சிலர்

      2018ல இரத்தப்படலத்தோடு ஆட்டம் காலி எழுதி வெச்சிக்குங்க ---என நம் காதுபடவே சொல்லியவர்கள் இன்னும் கூட காமிக்ஸ் விமர்சனங்கள் போட்டு வர்றாங்க...

      இதெல்லாம் சிலரது மைண்ட்வாய்ஸ்.... தனக்கு தானே பேசுவதை சில நேரத்தில் ஓப்பனாக பேசிடுவாங்க....இந்த காதில் வாங்கிட்டு அந்த காதில் விட்டுறனும்...😉😉😉

      Delete
    2. உண்மை விஜயராகவன். கடந்து செல்வோம்.

      Delete
    3. தன் முதுகை பாக்காம பக்கத்து முதுகை சொறிஞ்சி சுகம் காணுவதே இன்பம்தானோ

      Delete
  30. பெரிசுங்க சின்னவயசுலசெமலூட்டியா இருந்திருப்பாங்கபோல. அப்படியே தாத்தாங்க ஸ்பின்ஆப் வந்தா அதுக்கும்ஒருசீட் போட்டிடலாம் இப்பவே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  31. விருதுநகரை - நினைக்கும் போதெல்லாம். எனக்கு அவர் ஞாபகம்தான் வரும். (அவர் பேர் கண்ணன்.) என் அண்ணன் வயது இருக்கும். (55-56). அந்த டிரங்க் பெட்டியை பாதுகாத்து வந்திருந்தால் - இப்போதும் நம் ரசிகராக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
    அல்லது கால ஓட்டத்தில் வேலை நிமித்தம்-அவர் மாறி இருந்தால் - பழைய புத்தகக்கடையில் சென்று-பல ரசிகர்களின் வீடுகளில் ஐக்கியமாகி இருக்கலாம்..எங்கிருந்தாலும் வாழ்க..வாழ்க...
    எப்படியும் அடுத்த வருடம் அவைகளில் சிலவற்றையே
    னும் கைப்பற்றிவிடுவேன்.என்று நினைக்கிறே ன்.
    அப்பவும் அவர் ஞாபகம்தான் வரும் இல்லையா? i.

    ReplyDelete
    Replies
    1. விருதுநகர் கண்ணன் அவர்கள் எங்கிருந்தாலும் முத்து-பொன்விழா மேடைக்கு வருமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்...

      Delete
    2. விருதுநகர் பரணி இருக்கிறேன் :-) ஓகேவா விஜய்.

      Delete
    3. ///
      விருதுநகர் பரணி இருக்கிறேன் :-) ஓகேவா விஜய்.///

      பழைய ட்ரங்க் பெட்டி; அதற்குள் பழங்காமிக்ஸ் இருந்தா பரணி, திருவாதிரை, புனர்பூசம்னு யார் வேணாலும் மேடை ஏறலாம்! ;)

      Delete
    4. பழைய டிரங்க் பெட்டி இருக்கிறது அதுக்குள்ள பழங்கால காமிக்ஸ் என்று எழுதிய பேப்பர் கூட இருக்கிறது :-)

      இளங்கோ நாளைக்கு தூத்துக்குடி வந்து அடிப்பதற்குள் பெங்களூர் ஓடிப்போய்விடனும் :-)

      Delete
  32. நமககெல்லாம் புத்தகம் இரவல் கூடவேண்டியதில்லை. புத்தகக்காரங்க படிச்சுக்கிட்டிருக்கும் பொது அப்படியேதலையைகொக்காட்டம்நீட்டி படிச்சரவேண்டியதுதான். புண்ணியத்துக்குக் கறக்கறமாட்டைபல்லப்புடிச்சு பதம்பார்க்கறமாதிரி இன்னமா படிக்கறீங்க அப்படிம்பேன். இந்தாபடிச்சுட்டுக் குடு என்று புத்தகத்தைக்குடுத்துட்டுப் போயிருவாங்க. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. அடடே!! செம டெக்னிக்கா இருக்கே ராஜசேகர் ஜி!! :):):)

      Delete
    2. ராஜசேகரன் சார் 🤣🤣🤣🤣

      Delete
    3. ராஜசேகரன் உண்மை. எனக்கும் இதுபோல் அனுபவம் உண்டு. எவ்வளவு சொல்லியும் கேட்கமாட்டார்கள், பொறுமையை சோதிப்பார்கள் ஒரு கட்டத்துக்கு பிறகு யாராவது தலை விட்டால் இந்தாங்க ஆபிசர் நீங்கள் முதல்ல படிங்க என கொடுத்து விட்டு போய் விடுவேன் ;-)

      Delete
  33. இந்த வருட அட்டவணையில் மிகவும் எதிர்பார்த்த கதை 'அந்தியும் அழகே'. இன்னும் சில நாட்களில் அது என் கைகளில், ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  34. Replies
    1. விஜயன் சார், உங்கள் மொழி பெயர்ப்பு பற்றி எழுதி இருக்கீங்க. எனக்கு உங்கள் எழுத்து நடை மிகவும் பிடித்து உள்ளது. அதுவும் கதைக் களங்களுகு ஏற்றமாதிரி நீங்கள் எழுதுவது மிகவும் பிடித்து இருக்கிறது

      Delete
  35. விஜயன் சார்,
    // லக்கியோட பயணம் ஓடிட்டு இருக்கு சார் ! //

    அப்படி என்றால் தீபாவளிக்கு லக்கி கதையுடன் ஐ ஜாலி. ரொம்ப நன்றி. இது போன்ற பண்டிகை நாட்களில் அதிர்வெடிகளுடன் சிரிப்பு சரவெடிகளும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள் சார் என்றும்.

    ReplyDelete

  36. ஒருவேளை நடந்திருக்குமோ?

    12- ம் நூற்றாண்டின் பிற்பகுதி

    சோழநாடு

    சடையப்ப வள்ளல் இல்லம்

    கம்பரை காணும் பொருட்டு அங்கு வருகிறார் கருப்பூர் மகேசன்..

    கம்பர்: எமைக் காண வந்தீரா ?

    கருப்பூர் மகேசன்: ஆம்! ஒண்பா நீர் எழுதும்விதம் நன்றாக உள்ளது .அதே சமயம் குறையுமுள்ளது..

    கம்பர்: நீவீர் புலவரா?

    க.மகேசன்: இல்லை! இலக்கியம் இலக்கணமறியேன் .ஆயினும் உமது ராமாயணப் பிரதியை பொற்காசுகள் கொடுத்து படித்தமையால் விமர்சிக்கும் உரிமை பெற்றவன்.

    கம்பர் : மேலே சொல்லுங்கள்.

    க.மகேசன் : நீர் கையாண்ட சில வார்த்தைகள் எமக்கு பிடிக்கவில்லை

    கம்பர்: உதாரணமாக ....?

    க.மகேசன் : அயோத்தியா காண்டத்தில் கங்கைப் படலத்தில்

    வெய்யோன் ஒளி தன்மேனியில் விரிசோதியின் மறையப்
    பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும், போனான்-
    “மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ,
    ஐயோ, இவன் வடிவு!” என்பதோர் அழியா அழகு உடையான்.

    என எழுதியுள்ளீர்..

    இதில் உள்ள ஐயோ எனும் சொற்ப்ரயோகம் தம்மிடம் சொல்வளம் இல்லை எனத் தெரிவிக்கிறது...அயோத்தி ராமனை வர்ணிக்க திணறுகிறீர்...அவலச் சுவை சொல்லை கையாண்டிருக்கிறீர். சொல் ஆளுமை தம்மிடம் இல்லை..

    கம்பர்: நீவிர் புலவராயிருந்திருப்பின் அவ்விடம் ராமனின் கட்டழகை வர்ணிக்க கவிஞரும் திணறுவர் என்ற பொருளை உணர இயலும்..

    க.மகேசன்: கழஞ்சு கொடுத்து கவிதை பிரதியை பெற்றமையால் கடுமையாக விமர்சிக்க யாம் உரிமை பெற்றோம் ..மொழிபெயர்ப்பில் முழுமையான ஜீவனில்லை எனச் சொல்லத் தலைப்பட்டோம்

    சடையப்ப வள்ளல்:( வந்தவாறு) வடமொழி நீர் அறிவீரா? அதில் பாண்டித்யம் பெற்று மூல வால்மீகி ராமாயணப் பிரதியை வாசித்தீரா?

    க.மகேசன்: இல்லை..அவசியமும் இல்லை ..
    சொல்லப்போனால் கம்பர் கவி ஆளுமை , மொழியாக்கம் அவரது அன்பர்களால் அவருக்காகமிகைப்படுத்தப்படுகிறது.அவருக்குப் பின் யாரும் இவர் ராமாயணத்தை வாசிக்கப் போவதில்லை ..

    சடையப்ப வள்ளல் :( புன்னகைத்து) காலம் அதற்கு பதிலளிக்கும் கருப்பூர் மகேசனாரே!


    ReplyDelete
    Replies
    1. 🤣🤣🤣🤣

      …but I feel that we are wasting time with vocal minority, who will complain no matter what; instead that time should be spend focussing on how to satisfy the majority of the readers.

      Delete
    2. எப்படிங்க சார், இப்பயெல்லாம் யோசிக்க உங்களால முடியுது.

      Delete
    3. இத..இத..இதைத்தான் எதிர்பார்த்தேன் செனா அனா ஜி! செம்ம செம்ம!!!

      ஆனால் உங்கள் சித்தரிப்புகளில் பிழையுள்ளது!
      எடிட்டரை சடையப்பவள்ளலாகச் சித்தரித்திருக்கிறீர்கள்!!

      'சடை'க்கும் எடிட்டருக்கும் என்ன சம்பந்தம் இருக்கமுடியும்னேன்?!! :P

      Delete
    4. மன்னிக்கனும் செனா அனா!! புரிதலில் தவறு செய்தவன் நானே!! சடையப்ப வள்ளலுக்கும், கம்பருக்குமிடையேயான நட்பைப் பற்றி யூட்யூப்பில் பார்த்து இப்பத்தான் கொஞ்சம்போல தெரிஞ்சுக்கிட்டேன்!

      இங்கே நீங்கள் சடையப்ப வள்ளலாகச் சித்தரித்திருப்பது உங்களைப் பற்றித்தான் - என்பதால் 'சடை' சரியானதே!!

      Delete
    5. //but I feel that we are wasting time with vocal minority, who will complain no matter what //

      Negativity breeds more negativity sir ! Just trying my bit to see if random shots in the dark do not end up being a habit !

      Delete
    6. /* ஆனால் அவற்றைச் சுட்டிக்காட்டி என்னை நானே பகடி செய்து கொள்ளும் போது , அதனை வேண்டாமென்கிறீர்கள் ? */

      Editor Sir,

      Looks to me that Mr Mahesh is a real fan of our comics - but wanted to critique a few things and ended up not knowing how to conclude it. Reading the comments from both sides - from your view point and his - this is what I can conclude.

      Let's move on sir.

      As with comics for future - mere 2 reprints per month of selected albums from already released volumes will keep the brand chugging beyond 2050 - this is the best we can look ahead right now :-) And in this time if Junior strikes a publication jackpot - who knows Sir - we might even look at 75 years of Lion to begin with !!

      There is much to publish and enjoy beyond the now !

      Delete
  37. எனக்கு காமிக்ஸை அறிமுகப்படுத்தியதே எனது தந்தைதான். அவர் ஒரு கணித ஆசிரியர். முத்து காமிக்ஸ் இன் சித்திரங்கள் தனி அழகு.
    என்னுடைய ஐந்தாம் வகுப்பு வரை ஊர் பாடசாலையில் கல்வி பயின்றேன். படத்தை பார்த்து முதலில் கதை சொல்லி பின் அதே இதழை பல முறை சொல்லும்போது அயர்ச்சியில் சிறிது மாற்றி கூறினாலும், விடமாட்டேன். பின்னர் பாடசாலைக்கு தின்பண்டங்களுக்கு என தரும் சிறு பணத்தை சிறுகச்சிறுக சேமித்து காமிக்ஸ் வாங்கி படிப்பேன். பின் அதை டிரங்கு பெட்டியில் பத்திரப்படுத்துவேன். என் தந்தை கண்டிப்பானவர். நான் சரிவர படிக்கவில்லை என்றால் பல முறை எச்சரித்து, இறுதியாக எனக்கு தண்டனையாக நான் பெரிதும் நேசிக்கும் காமிக்ஸை எடுத்து வரும்படி கூறி என்கையாலேயே எரிக்கும்படி கட்டளையிடுவார். அழுது கொண்டே, மனது வலிக்க அவருடைய கட்டளையினை நிறைவேற்றுவேன். பின்னர் அம்மாவிடம் காசு வாங்கி சிறுக சிறுக சேமித்து பழையபடி எப்படியும் வாங்கி விடுவேன். முதலில் பூனை குட்டிகளை வாயில் தூக்கிக் கொண்டு திரிவது போன்றே காமிக்ஸை தூக்கிக் கொண்டு அலைந்தேன். பின்னர் டிராங்கு பெட்டியில் காமிக்ஸை பத்திரப்படுத்தி, அதை போர்டிக்கோவின் மேலே ஏறி, கூரைக்கும் புகை கூண்டுக்குமிடையில் மறைத்து வைத்து, அப்பப்போ மேலே ஏறி படித்த மகிழ்வேன். “ திகிலூட்டும் நிமிடங்கள்”, “சிறைப்பறவைகள்”, “ ஜானி In லண்டன்”, பனித்தீவின் தேவதைகள்” என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். இராணுவ நடவடிக்கையினால் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இடம்பெயரவேண்டிய சூழ்நிலை. மேலே ஏறி காமிக்ஸ் புதையலை எடுக்க முடியாத சூழ்நிலை. எங்கும் எறிகணை வீச்சு. கந்தக நெடி.

    பின்னர் யாழ்ப்பாணத்திற்கு கல்வி கற்க போனபோது அப்போது யாழ் இல் பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு விசிட் அடித்தால் , முத்து லயன் என்று காமிக்ஸ் புதையல் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தை கண்டு துள்ளிக்குதிக்காத குறை. சுவீட் கடையினுள் புகுந்த சிறுவனின் மனநிலை. கடைவாயில் குற்றாலம். எதை எடுக்க, எதை விட , ஐயோ! எல்லாம் வேண்டுமே. பணமில்லையே. ஒவ்வொன்றாக எவ்லாவற்றை வாங்கி வாசித்து புளகாங்கிதம் அடைந்ததை மறக்க இயலாது.

    பிரான்ஸ் இனில் 2014 பிற்பகுதியில் உடல் நலம் பாதிப்படைந்து மருத்துவமனையில் கோமா இல் இருந்து மீண்ட பின்னர், மருத்துவமனை கட்டிலில் இருந்தவேளை, தொண்டையில் துளையிட்டதால் சிறிது காலம் பேசமுடிமுடியாது. அவ்வேளைகளில் முத்து லயன் காமிக்ஸ்களை என் உற்ற நண்பர்கள். அவ்வேளையில் MMS இற்கு முன்பணம் கட்ட முடியாத சூழல். என்னுடைய தவிப்பை பார்த்த என் துணைவியார் ஊரில் இருந்து பணம் கேட்டுப் பெற்று, முற்பணம் அனுப்பி MMS இதழை மருத்துவமனைக்கே கொண்டுவந்து தந்தது மறக்க முடியாது. எனது மூளையின் செயல்திறனை பரிசீலிக்க சித்திரங்களை குழப்பி தந்து, வரிசைக்கிரமம் ஆக அடுக்கும்படி கூறியபோது, காமிக்ஸ் படித்த எனக்கு ஜூயுபி ஆக தோன்றியது. அந்த கஷ்டமான காலத்தை கடந்து வர காமிக்ஸ் பெருந்துணையாக இருந்தன என்றால் மிகையாகாது.

    ReplyDelete
    Replies
    1. ****எனது மூளையின் செயல்திறனை பரிசீலிக்க சித்திரங்களை குழப்பி தந்து, வரிசைக்கிரமம் ஆக அடுக்கும்படி கூறியபோது, காமிக்ஸ் படித்த எனக்கு ஜூயுபி ஆக தோன்றியது. அந்த கஷ்டமான காலத்தை கடந்து வர காமிக்ஸ் பெருந்துணையாக இருந்தன என்றால் மிகையாகாது.****

      காமிக்ஸ் படிப்பது சாபமல்ல..
      வரம் என உரைத்த தருணங்கள்..

      Delete
    2. // எனது மூளையின் செயல்திறனை பரிசீலிக்க சித்திரங்களை குழப்பி தந்து, வரிசைக்கிரமம் ஆக அடுக்கும்படி கூறியபோது, காமிக்ஸ் படித்த எனக்கு ஜூயுபி ஆக தோன்றியது. // அப்பா எவ்வளவு பயங்கரமான நிலையிலும் நாம் படித்த காமிக்ஸ் கை கொடுக்கிறது. சூப்பர் சார் இந்த மாதிரி பகிர்வுகள் நமது காமிக்ஸ் மீதும் நண்பர்கள் மீதும் வைத்து உள்ள மரியாதையை பன் மடங்கு உயர்த்தி விடுகிறது.

      Delete
    3. பிரபானந்த் சார்..

      நீங்கள் உடல்நலமின்றி மருத்துவமனையில் வெகுநாட்கள் படுத்திருந்தபோது நமது காமிக்ஸ் இதழ்கள் எந்த அளவுக்கு உங்களுக்குத் துணையாய் இருந்துவந்தது என்பதை அன்றைய காலகட்டத்தில் உங்களுடைய பின்னூட்டங்களைப் படித்தவர்களுக்கு நன்றாகவே புரியும்!
      ஒரு ஆத்மநண்பனைவிடவும் மேலாக நம் காமிக்ஸை எந்த அளவுக்கு நேசித்துவருகிறீர்கள் என்பதை எண்ணி பலமுறை அன்று வியந்திருக்கிறேன்!

      காமிக்ஸுடனான உங்கள் நேசம் பற்றி நீங்கள் இங்கே எழுதியிருப்பதெல்லாம் ரொம்பவே குறைச்சல் என்பது என் தாழ்மையான கருத்து சார்!

      Delete
    4. சூப்பர் பிரபாநாத்.அருமையான நிகழ்வுகள்.

      Delete
    5. ///என் தந்தை கண்டிப்பானவர். நான் சரிவர படிக்கவில்லை என்றால் பல முறை எச்சரித்து, இறுதியாக எனக்கு தண்டனையாக நான் பெரிதும் நேசிக்கும் காமிக்ஸை எடுத்து வரும்படி கூறி என்கையாலேயே எரிக்கும்படி கட்டளையிடுவார். அழுது கொண்டே, மனது வலிக்க அவருடைய கட்டளையினை நிறைவேற்றுவேன்.////


      காமிக்ஸ் எரிவதைக் கண்களால் பார்த்துக் கொண்டிருப்பதைவிடவும் கொடிய தண்டனை வேறொன்று இருந்துவிடமுடியாது பிரபானந்த் சார்!

      எத்தனை துடிதுடித்திருப்பீர்கள்?!!!

      Delete
    6. திருச்செல்வம் சார் ; அசாத்தியம் உங்கள் காமிக்ஸ் காதல் ! உங்களின் போட்டோ ப்ளீஸ் ?

      Delete
    7. திருச்செல்வம் சார் @ அசாத்தியமான அனுபங்கள்... யுத்தம், அதன் கோரமுகங்கள், அதன் காரணமாக உங்கள் புதையலை இழந்த தவிப்பு...

      காமிக்ஸ் படிச்சதால் செயல்திறனை எளிதாக மீட்ட மூளை... உங்கள் சிகிச்சை சமயம் உங்க உடல்நிலை பற்றி அறிந்து தாங்கள் மீண்டது அறிந்தாலும், உங்க எழுத்துக்கள் அந்த அனுபவத்தை விவரிக்கையில் அதன் தாக்கம் வேறு லெவல்... உங்களை காமிக்ஸ் காதல் சிலீரிட வைக்கிறது... முத்து50ல் இடம் பிடித்ததற்கு வாழ்த்துகள் சார்.

      Delete
    8. காமிக்ஸ் உங்க நண்பரோ இல்லையோ...நீங்க அதன் சிறந்த நண்பர்....போராட்டமே வாழ்க்கை என மீண்டு வருகிறீர்களே... அருமை

      Delete
    9. ஆத்மார்த்தமான, நெகிழ்ச்சியான பாராட்டுக்கள் . மிக்க நன்றி நண்பர்களே. என்னுடைய பால்ய காலங்களில் மீண்டும் பயணிக்க வைத்து, சிரமமான அந்த தருணங்களை கலந்து வந்த அந்த வலி சுமந்த நினைவுகளை, கடந்து வர எமது காமிக்ஸ் எவ்வளவு உறுதுணை புரிந்தன என்று அசை மீட்டிட சந்தர்ப்பம் வழங்கிய எடிட்டர் இக்கு மிக்க நன்றிகள் .

      Delete
  38. திருச்செல்வன் பிரபாநாத். காமிக்ஸ் வாசிக்கும் நாமெல்லாரும் சுற்றியுள்ளவர்கள் நம்மைப்புரிந்து கொள்ளவில்லை, ஊக்கப்படுத்துவதில்லை.என்ற வருத்தத்திலேயேஇருக்கிறோம். ஆனால்நம்மைவிட நம்மைச்சுற்றியுள்ளவர்களே நமதுகாமிக்ஸ் நேசத்தைநன்கு புரிந்துகொண்டுள்ளனர் நமக்கு சுகவீனம் ஏற்படும்போதுநாமே எதிர்பாராதவகையில், நமக்குமருந்தாகவும் ஆறுதலாகவும் காமிக்ஸைவழங்குகின்றனர்நான் உடல்நலமின்றிஇருந்தபொழுது எனக்கு மருந்தாக காமிக்ஸையேயேபயன்படுத்தினர் ஆனால் கசப்புமருந்துபோல கமான்சேயின் 'ஓநாயின் சங்கீதம்' கொண்டுவந்து கொடுத்தனர். நான் ரசிக்கும் தொடர்என்றாலும்அன்றையமனநிலையில் லக்கி டெக்ஸ்வில்லரின் கதைகள்எடுத்துவாருங்கள் எனகேட்டேன். பிறகேதெளிவாக உள்ளார், இனிபிரச்சினை இல்லைஎனடாக்டர்கள் நம்பிக்அளித்தனர். காமிக்ஸ் என்பது இந்த சின்ன குழந்தைகள் கூட்டத்துக்குவரமே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. கண்டிப்பாக நமக்கு எல்லாம் காமிக்ஸ் வரமே ராஜசேகர் சார்

      Delete
    3. ///'ஓநாயின் சங்கீதம்' கொண்டுவந்து கொடுத்தனர். நான் ரசிக்கும் தொடர்என்றாலும்அன்றையமனநிலையில் லக்கி டெக்ஸ்வில்லரின் கதைகள்எடுத்துவாருங்கள் எனகேட்டேன். பிறகேதெளிவாக உள்ளார், இனிபிரச்சினை இல்லைஎனடாக்டர்கள் நம்பிக்அளித்தனர்.///

      ----ஃபெண்டாஸ்டிக் ஜி.... நிதர்சனம்.... நம்ம ஜீவன்கள் தெளிவாக இருக்கானு அறிய இதைவிட வேறு உதாரணம் உளதோ????

      Delete
    4. உண்மைதான் ஸார்! எம்மை விட சுற்றியுள்ளவர்களே நமக்காக, எமக்கு பிடித்த காமிக்ஸை பெற்று வழங்க எல்லா விதங்களிலும் முயற்சிக்கின்றனர். இதை முற்றிலும் உணர்ந்தவன். காமிக்ஸ் எமக்கு வரப்பிரசாதமே. அதன் சுவை பருகியவர்களுக்கு புரியும்.

      Delete
  39. அந்தியும் அழகே ஆர்ட் வொர்க் அட்டகாசமாக இருக்கிறது. பி. பி. வி கூட்டணி எனும் போது இன்னும் எதிர்பார்ப்பு கூடுகிறது. இந்த தொடரில் இன்னும் எத்தனை கதைகள் உள்ளன சார்?

    ReplyDelete
    Replies
    1. தொடரும் தொடர் சார் ! இது வரையிலும் 6 ஆல்பங்கள் வந்துள்ளன !

      Delete
    2. அட டே.... சமகாலத்தொடர்... அண்டர்டேக்கர்க்கு பிறகு சமகாலத்தொடரை வெளிவரும் காலத்திலயே ரசிக்கிறோம் செம....செம....

      Delete
  40. // இங்கோ ; க்ரூப்களிலோ ; FB யிலோ அழகாய் எழுதுவதென்பது வேறு ; முப்பதே நாள் அவகாசத்தினுள் தோராயமாய் நானூற்றிச் சொச்சம் பக்கங்களுக்கு & sometimes even more பக்கங்களுக்குப் பேனா பிடிப்பதென்பது முற்றிலும் வேறென்பதை விமர்சகர்கள் உணர்ந்திருக்கவும் சாத்தியங்கள் சொற்பமே என்பது எனக்குப் புரிகிறது ! // எனக்கும் புரிகிறது சார். மொழிபெயர்ப்பு என்பது சுலபம் அல்ல.

    ReplyDelete
  41. வாடிக்கையாளர்: பிரியாணில கொஞ்சம் மசாலா கம்மியா இருந்துருக்கலாம். அரிசி இன்னும் வெந்துருக்கலாம்.
    குக்: பிரியாணி செய்வது சுலபமில்லை சார்.

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருக்கதை - நல்லா இருக்குன்னு சொல்ல எங்களுக்கு ஒருநாளும் நேரமே இருக்காதுங்கண்ணா ! "சமைக்கிறது தானே உன் ஜோலி ? இதிலே பாராட்டு என்ன வேண்டிக் கிடக்குது கழுத ?"

      ஆனாக்கா, ஒரேயொருத்தர் உப்பில்லைன்னு சொல்லிடறப்போ - அது சரியா, தப்பான்னு பாக்க கூட மெனெக்கெடாம உவமானங்களோட நாங்க ஆஜராகிடுவோமேண்ணா கருத்து சொல்ல !

      நடுநிலை விமர்சக முகம் #

      Delete
    2. ///நடுநிலை விமர்சக முகம்////

      ---குறைகளைய உதவுகிறேன் பேர்வழினு இப்ப நிறையபேர் இல்லாத குறையை தேடி வர்றாங்க சார்....

      குறையை சொன்னாத்தான் அவுங்க நட்பு வட்டத்தில் கெத்துனு புக்கை எடுக்கும்போதே குறை எங்கே எங்கேனு தேடுவதே இப்ப வாடிக்கை... கதையோ, சித்திரங்களோ, சித்திரங்கள் வாயிலாக கதை நகரும் நுட்பங்களோ கண்ணில் படாதே.... குறை குறைனு தேடிட்டே இருப்பதால் நல்ல விசயங்கள் எதுவுமே மனதில் பதியாது.... காமிக்ஸ் படிப்பது இப்ப ஸ்பெல்லிங் திருத்தம் மாதிரி சிலருக்கு ஆகிட்டது...!!!

      ஒன்றி ரசிக்கும்போது ஓட்டத்தில் குறையை தானாகவே மனம் விளங்கி கொள்ளும் என்ற அடிப்படை பாலபாடமே மறந்துட்டது இந்த சமூகத்திற்கு....!!!!

      Delete
    3. Incidentally sir - this happens even at our homes. Seldom do we appreciate the fantastic food that is served on the table with precision cycle - day in and day out. The moment there is an ingredient missing, the critic within us comes to the fore !!

      This was my best realization during the "Work from home" days of the 2 year lock down sir.

      Delete
  42. Editor sir.... phanthom book ஓட Front and back cover photo வேற Level வரணும்....

    Cover photo va பாத்தாவே 90s kids come back for enjoying Bengalia forest folks stories...

    ReplyDelete
  43. ///நவம்பரில் வரவிருந்த "அந்தியும் அழகே" இதழினை இம்மாதத்துக்கே fasttrack செய்திடத் தீர்மானித்தேன் !! ///

    ---சந்தா அறிவிப்பின் போதே இதைப்பற்றி குறிப்பிட்டு இருந்தீர்கள் சார்...ஆவலுடன் வெயிட்டிங்....!!

    ReplyDelete
  44. //"பிஸ்டலுக்குப் பிரியாவிடை" ஆல்பத்தின் கதாசிரியரான Wilfred Lupano தான் இந்த தாத்தாக்கள் கூட்டணியின் கதாசிரியருமே///

    ---பி.பி.வி.லயே ஒரு பெஞ்ச்மார்க் செட் பண்ணிட்டாரு இந்த கதாசிரியர்... இம்முறையும் அதேபோன்ற நிறைவை தருவார்னு நம்பிக்கை இருக்கு... இந்த மாசம் First choice இதான்....!!!

    ReplyDelete
    Replies
    1. எவ்வித முன் எதிர்பார்ப்புகளும் இன்றி உள்ளே நுழைந்திட முயற்சியுங்கள் சார் !

      Delete
  45. ///நேற்றைக்கு பேனா பிடித்த போது நான் உணர்ந்த குஷி...ஸ்பைடரின் "பாதாளப் போராட்டம்" இதழுக்கான குஷிக்குக் கொஞ்சமும் குறைவானதில்லை ! More on that a bit later !!//

    ---உற்சாகம் கரைபுரண்டு ஓடுதே!!! நிஜமாவே ஜாக்பாட் தானோ????

    ReplyDelete
  46. பாதாளம் போராட்டக் குஷியா..
    .
    புதுக் குஷியாருக்கே...

    எதிர்பார்ப்புக் குஷி...

    மலரூம் நினைவுகளே குஷி தான்...

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. /அந்தியும் அழகே//
    தலைப்பே கவிதையாக உள்ளது... மாற்று இதழாக இந்த கதையை கொண்டு வந்ததில் எனக்கு மகிழ்ச்சியே... பிறகு, கறை நல்லது என்ற ஹமாம் சோப் விளம்பரம் போல நானும் நமது காமிக்ஸிக்கு தாமதம் நல்லது தான் என்று சொல்வேன்... எல்லா பத்திரிகை பதிப்புகளிலேயும் காமிக்ஸ் சிறப்பு கவனிப்பு தேவை தான்... தரத்தின் உங்களுக்கு திருப்தி வராமல், எந்த இதழும் வெளியிட வேண்டாம் சார். நீங்கள் விரும்பும் தரத்திற்கு தாமதம் ஈடு செய்யுமாயின் நிச்சயம் நாங்கள் எல்லோருமே காத்திருக்கலாம் தான்.

    ReplyDelete
  49. 2010.... எனது ஷேர் மார்க்கெட் தோழி ஒருவர் கூறிய கதை ....எனது ஏழு வயது மகள் சதா நேரமும் அவள் தோழிய பற்றியே கூறிக் கொண்டிருந்தாள் . இன்னைக்கு அவ சாக்லெட் தந்தாள்;இன்னைக்கு ஓடி விளையாடினோம்;இன்னைக்கு இந்த கதை சொன்னாள் என் ஓயாத புராணம் நாள் தவறாமல் . எனக்கும் அந்தக் குழந்தையைப் பாக்க ஆவல் அதிகரிக்க பள்ளிக்கு சென்றேன் . ஆசிரியர் கூறிய பதில் திக்கென்றது ! உங்க மகள் யாருடனும் பழகுவதில்லை .தனியாகவே இருக்கிறார் . நீங்கள் கூறிய பெயரில் யாரும் படிக்கவில்லை . தனக்குத் தானே தோழியை உருவாக்கி விளையாடி வந்திருக்கிறாள் போல தனிமையை விரட்டி! மருத்துவரிடம் செல்லுங்கள் என்றார் .
    2021 கடைசி ....லயனில் இல்லாத மகளை உருவாக்கி கொலைகாரர்களை வேட்டையாட காரணம் கற்பித்து வெற்றி பெரும் கதை.தனது செயல்கள நியாயப்படுத்த மனசாட்சியை கற்பனை மகளால் அடக்கி உலக வில்லன்களோட விளையாடும் ஹீரோ...கதை பக்கங்கள் சரளமான வேகத்தில் புரள கட்டிப் போடுது கால்கள கதை .கொடூரங்கள் கண்டு பயந்து நமக்கு நேர்ந்தால் என ஒரு பயம் வருமே , அத கற்பனையால் வலுவாக்கி வேட்டையாடும் ஹீரோ...தனக்கு கொலை செய்ய அதிர்ஷ்டம் இருப்பதாய் நம்புகிறார் . ஹெல்மெட் பாதுகாப்பு எனக் கூறி அதனூடே நுழைவதை கவன ஈர்ப்பாகிடாதா எனக் கேள்வி எழுந்தாலும்...இல்லாத மகளை கூறி பாயும் அவர் ...இல்லாத ஹெல்மட்ட மாட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு செல்லலாம் வதம்புரிய அல்லவா..ஏனென்றால் கதை சொல்லி அவரது மனம் தானே ...விறு விறுப்பான உளவியல் கதை ...அருமை

    ReplyDelete
  50. நான் இதே block'ல் எடிட்டரை பாராட்டியும் எழுதியுள்ளேன்.

    போதும். இனி குறை கூறி இங்கே எழுத மாட்டேன். 'எது' வென்று குறிப்பிடக் கூறினார். கூறியபின் negativity mind என்கிறார்.

    இது காமிக்ஸ் முழுதும் அறிந்த நண்பர்கள் மாத்திரம் எழுதும் Block. என்னைப் போன்ற அரைகுறை'கள் எழுதவே கூடாது.
    அரைகுறைகள் பாராட்டலாம், குறை கூறும் உரிமை இல்லை.

    இனியும் மெளன வாசகனாவே தொடர்ந்திடுவேன். உங்களால் அதைத் தடுக்க முடியுமா என்ன? இல்லை காமிக்ஸ் வாங்குவதை தடுக்க முடியுமா?

    லயன் காமிக்ஸ் நீடிக்காது என்று கூறியதற்கு மிகவும் வருந்துகிறேன். வேறொரு கோணத்தில் கூற முயன்று தவறாகி விட்டது.

    எல்லாவற்றையும் பாரட்டுவதும் சரியல்ல, எல்லாவற்றையும் விமர்சிப்பதும் சரியல்ல.
    முகஸ்துதியும் கூடாது, வெறுத்தலும் கூடாது. நான் நடுநிலையாக இருந்திட முனைகிறேன்.

    நான் எந்த (நீங்கள் குறிப்பிடும்) நட்பு வட்டத்திலும் இல்லை. தனியனாகவே இங்கே கருத்துக்களை கூறுகிறேன்.

    யாரும் திட்ட வேண்டும் என்றால் 8870826655 என்ற நம்பருக்கு வாட்சப் செய்யவும். போன் செய்ய வேண்டாம். பயந்து விடுவேன்.

    ReplyDelete
    Replies
    1. @மகேஷ் திருப்பூர்

      நண்பரே! முன்பு ஒரு முறை EBFக்கு வந்துவிட்டு எடிட்டர் உள்ளிட்ட யாரையும் நீங்கள் சந்திக்காமலேயே சென்றுவிட்டதாக என்னிடம் வாட்ஸ்அப்பில் சொன்னதாக ஞாபகம்!

      தயக்கங்களைக் களையுங்கள்! ஒருமுறை வந்து எடிட்டருடனும், நண்பர்களுடனும் சிறுது நேரம் செலவிட்டுப் பாருங்கள்! நேசம் மிக்க நண்பர்களின் அன்பும், அறிமுகமும் நிச்சயம் உங்களிடம் பாஸிட்டிவ் எனர்ஜியை விதைத்திடும்! சுருக்கமாகச் சொன்னால், உங்களையும் இக்குடும்பத்தில் ஒரு அங்கம் போல உணர்வீர்கள்!

      வாருங்கள் நண்பரே.. வரவேற்கக் காத்திருப்போம்!

      Delete
    2. செயலரே நல்ல அறிவுரை சம்பந்தப்பட்ட வர்கள் காது கொடுத்து கேட்டால் நல்லது

      Delete
    3. I always respect your words Vijay Anna. Thanks and will try

      Delete
  51. செனா அனா வின் தமிழ் அறிவும், இன்னும் பல ஆழ்ந்த சிந்தனைகளைப் பார்த்தும் வியக்கிறேன். என்னைப் பற்றி எழுதியது எனக்கு கோபமே வரவில்லை. மாறாக சங்கத் தமிழ் அறிவைக் கண்டு வியப்பாய் உள்ளது. நீர் வாழ்வாங்கு வாழ்க. உம் தமிழ் சிறக்க. .
    இன்னும் உங்கள் பதிவுகள் புரியுமளவிற்கு நான் வளரவே இல்லை

    ReplyDelete
  52. நான் பகடியை இரசிப்பவன். அது என்னைப் பற்றி என்றாலும்.. என்ன சிறிது வலிக்கும். But I like Black humor very much. It makes us to think a lot

    ReplyDelete
    Replies
    1. இங்கே முகஸ்துதி செய்து யாருமே எதையுமே என்னிடமிருந்து ஈட்டிச் செல்லும் அவசியங்களுடனும் இல்லை ; அள்ளித் தந்திடும் நிலையிலும் நானில்லை ! So இங்கு எனக்கு முதுகு சொரிந்து விட்டு யாருமே எதையுமே சாதிக்கப் போவதில்லை நண்பரே !

      வலிக்காமலும் பகடி செய்யலாம் ; வலிக்காமலும் கண்டிக்கலாம் ; வலிக்காமலும் வழி காட்டலாம் - இதோ செனா அனா சார் செய்துள்ளது போல ! அவரும் சரி, இங்கே அன்போடு உறவாடும் ஒவ்வொரு நண்பரும் சரி, தத்தம் விதங்களில் எனக்குமே எதோவொரு கற்பித்தலைத் தந்து கொண்டே தானுள்ளனர் !

      உங்களுக்கும் சரி, ஒரு எட்டு விலகி நிற்கும் நண்பர்களுக்கும் சரி, குறைகளைச் சுட்டிக் காட்டுவதனில் காரம் இருந்தாலே அது நடுநிலைமையின் அடையாளம் என்பதான ஒரு எண்ணம் ஆழமாய் வேரூன்றி விட்டது ! அதன் பலனே இங்கு நிகழ்வதெல்லாமே ஜால்றாக்களின் ஓசையாகத் தென்படுகிறது !

      தனிப்பட்ட விருப்பு விரோதங்களைத் தூக்கிப் போட்டு விட்டு கவனித்துப் பாருங்களேன் - அன்பால் ஒரு ஆசிரியனுக்கு வழி காட்டி நடத்திச் செல்லும் ஒரு அணியின் குஷி மட்டுமே தென்படும் !

      இல்லாததைத் தனிமையில் தேடுவதற்குப் பதிலாய் இருப்பதை இணைந்தபடிக்கே தேடும் சந்தோஷத்தை ஒருவாட்டி முயற்சித்துப் பார்க்கலாமே ?

      Delete
    2. ///தனிப்பட்ட விருப்பு விரோதங்களைத் தூக்கிப் போட்டு விட்டு கவனித்துப் பாருங்களேன் - அன்பால் ஒரு ஆசிரியனுக்கு வழி காட்டி நடத்திச் செல்லும் ஒரு அணியின் குஷி மட்டுமே தென்படும் !

      இல்லாததைத் தனிமையில் தேடுவதற்குப் பதிலாய் இருப்பதை இணைந்தபடிக்கே தேடும் சந்தோஷத்தை ஒருவாட்டி முயற்சித்துப் பார்க்கலாமே ?///

      +10000000001

      எழுந்து நின்று கைதட்டும் படங்கள் பல நூறு சார்!!

      Delete
    3. இதுக்கு மேலேயும் விளக்கப் படலத்தை நான் தொடர்ந்து கொண்டிருந்தால் காதுகளில் ஆங்காங்கே தக்காளிச் சட்னி வடிய ஆரம்பிக்கும் ; so good luck நண்பரே - உங்களின் தீர்மானம் எதுவாய் இருப்பினும் !

      Delete
    4. உங்கள் மெனக்கெடல் புரியாமலில்லை EDI அவர்களே.

      இங்கே எழுதவே கை வலிக்கிறது. நீங்கள் எவ்வளவு எழுதுகின்றீர்கள். அசாத்தியம்.. அதன் காரணம் பணம் மட்டுமே அல்ல. இதுவும் ஒரு கலை.

      நீங்கள் மிகவும் கஷ்டப்பட்டு எழுதிய வரிகளுக்கு பாராட்டு (அ) அங்கீகாரம் கிடைத்திடாதா என்று எவ்வளவு ஏங்கியிருப்பீர்கள்?

      இன்றும் சில graphics novelகளை திரும்ப திரும்ப படித்து வருகிறேன் - புரிந்து கொள்வதற்காக, உங்கள் எழுத்தை இரசிப்பதற்காக.

      இனி பிடித்த புத்தகங்களை, வாங்குவதும், பிடிக்காத புத்தகங்களை வாங்காமல் விடுவதோடு நிறுத்திக் கொள்கிறேன். நன்றி

      Delete
  53. படம் பார்ப்பவர்கள் பாமர மக்கள். படம் எடுப்பவர்கள் ஜாம்பவான்கள்.
    படம் ஜெயிப்பதும் தோற்பதும் பாமர மக்கள் கையில். பாமர மக்களுக்கு படம் எடுக்கத் தெரியுமா? குறை சொன்னால், பிடிக்காது என்று சொன்னால், " நீ வந்து படம் எடு" என்று கோபப்படலாமா?

    குறை கூறுபவனுக்கு அறிவு குறைவுதான். ஆனால் அதை காது கொடுத்து கேட்பதால் தவறும் இல்லை. நாம் இன்னும் சிறப்பாக படம் எடுக்க உதவலாம் .

    நான் English புத்தகங்கள் படிப்பதில்லை.
    நான் சிறந்த கதைகள் படித்ததும் இதே லயன் காமிக்ஸ் தான். XIII, டைகர் கதைகளைப் படித்து வியந்தது உண்டு. காமிக்ஸ் டைம் ற்காக ஏங்கியது உண்டு.

    Edi gave space for all to comment in this blog and it supposed got misused by guys like me.

    முற்றும்.

    ReplyDelete
    Replies
    1. //
      குறை கூறுபவனுக்கு அறிவு குறைவுதான். ஆனால் அதை காது கொடுத்து கேட்பதால் தவறும் இல்லை. நாம் இன்னும் சிறப்பாக படம் எடுக்க உதவலாம் .//
      அறிவு குறைவு என்பதுதான்...உங்களுக்கு பின்னால் நடக்காது என்று சொன்னதிலே தெரிதே...
      அறிவு குறைவானவர் ஆலோசனை பெறலாம்...ஆலோசனை தரலாமா

      Delete
    2. //அறிவு குறைவானவர் ஆலோசனை பெறலாம்...ஆலோசனை தரலாமா//
      செம்ம ஸ்டீல் நீங்க எங்கேயோ போயிட்டிங்க

      Delete
    3. Edi gave space for all to comment in this blog and it supposed got misused by guys like me.//

      @மகேஸ். என்னோட ஒத்த பைசா. பொதுவெளியில் கருத்து வெளியிடும் போது எதிர் கருத்துன்னு வருவது சகஜம். அதற்காக நீங்க நிறுத்திட்டீங்கன்னா உங்களை மத்தவங்களும் மத்தவங்களால் உங்களையும் புரிந்து கொள்ள முடியாது. Don’t leave with just one impression. இந்த தளத்துக்கு 2014 ல் வந்தப்ப வில்லர்களாக தென்பட்ட சிலர் இப்போது சிறந்த நண்பர்கள். எழுதுவதில் இருக்கும் சிக்கலே உண்மையான உணர்வுகளை கடத்துவதி்ல் சிறந்த தேர்ச்சி வேண்டும் என்பதே. அது நம்மை போன்ற பெரும்பாலோர்க்குக் கிடையாது.

      தொடர்ந்து விமர்சனங்களோ, வாத எதிர் வாதங்களோ தெரிய/புரிய வரும் போது தான் intention தெரிய வரும். சில விசயங்கள் ரசனை சார்ந்தது. அது பற்றிய கருத்துகள் வெளியிடும் போது எதிர் கருத்துகள் வரும் என்பதற்கு தயாராக இருந்து விட்டால் மட்டும் போதுமானது.

      உங்கள் கருத்து/விமர்சனங்களில் இருக்கும் உண்மையின் தன்மை, integrity பொறுத்து உங்கள் விமர்சனங்களுக்கான மதிப்பீடு அதிகரிக்கும்.

      உ-ம். சித்திரமும் கொலைப் பழக்கத்துக்கான விமர்சனங்களை கடந்த 2-3 பதிவுகளில் எடுத்துப் படியுங்கள். நீங்கள் சொன்ன கருத்துகளை விட கசப்பான உண்மைகள் எப்படி சக்கரை தடவப்பட்டு வந்துள்ளது அவை எப்படி எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது புரியும்.

      Delete
    4. நன்றி நண்பரே.. பதிவின் நெருடல்களை மறக்க சிறிது காலம் ஆகும். சிலர் செய்யும் தனிப்பட்ட எதிர்வினைகள் மற்றும் வார்த்தைப் பிரயோகங்கள் சிறிது மோசமாக உள்ளது.
      Let some days go...

      Delete
    5. @ ஷெரீப்

      அட்டகாசம்!! நண்பர் மகேஸுக்குத் தேவையான மிகச் சிறந்த வழிகாட்டல்கள்!! மகேஸின் மேல் எனக்கும் நிறைய நம்பிக்கை இருக்கிறது! நறுக்-சுறுக் வார்த்தைகளின்றி நிதானத்தோடு பதிவிடுவது எப்படி என்பதை மட்டும் கொஞ்சம் சிரமப்பட்டேனும் கற்றுக்கொண்டுவிட்டாரானால் இத்தளத்திற்கு மேலும் ஒரு ஆக்டிவான, நல்ல விமர்சகர் கிடைத்துவிடுவார் என்று உறுதியாக நம்புகிறேன்!

      Delete
  54. பேசப் பேச பிழை என்பார்கள்...

    எதார்த்தங்களை உணர வேண்டும்...

    வாதத்திற்கு எதிர்வாதம் என்பது பிடிவாதமே...

    வேண்டாம்...

    விட்டு வேலையைப் பாருங்களேன்...

    " காணாது கண்ட கம்பங் கூழ

    சிந்தாம குடிக்கணும் சில்லி
    மூக்கி"

    இது சொலவட மட்டுமே...

    ReplyDelete
    Replies
    1. ///" காணாது கண்ட கம்பங் கூழ

      சிந்தாம குடிக்கணும் சில்லி
      மூக்கி"///

      இது நான் ஆத்தாவிடம் அடிக்கடி சொல்லும் சொலவடையாச்சே?!! :D

      Delete
    2. ஆத்தா கம்பங்கூழ எங்க கண்டா.., சிந்தாம குடிக்க. அதுதான் அரியாஸ் மேல அரியர்ஸஸா போய்க் கிட்டே இருக்கே..ஈவி

      Delete
    3. மொதல்ல சிந்தாம சிதறாமக் குடிக்கக் கத்துக்கிடட்டும் பத்து சார்.. அப்புறமா எல்லா அரியரையும் கிளியர் பண்ணிப்புடுவோம்! :D

      Delete
    4. அதுக்கே முதல்ல கூழ கண்ணுல காட்டணுமே..அப்புறம் தானே, சிந்தாம சிதறாம குடிக்கிறதெல்லாம்.

      Delete
  55. ஸ்டீல் ஜீ+11111111111111111111111111111பரூர் ராஜ சேகரன்.

    ReplyDelete
  56. காமிக்ஸ் நினைவலைகள்

    முத்து பொன் விழா சிறப்பிதழுக்காக

    " இரும்பு கை மாயாவி கதைகளில் என்னை கவர்ந்த கதை " சைத்தான் சிறுவர்கள் " காரணம் வித்தியாசமானது, குரங்கு பெடல் அடிச்சு Cycle ஓட்னாலே பெரிய சாகசம்னு நினைச்ச அந்த பள்ளி நாட்களில் இக்கதையில் என் வயது சிறுவர்கள் Alien உடலில் புகுந்தவுடன் லாரியே ஓட்டுவார்கள், பெரியவர்களை தாக்குவார்கள்.( நம்ம மனசுக்குள்ள நப்பாசை என்னன்னா எனக்குள்ள அப்படி Alien வந்தா கணக்கு வாத்தியார கசக்கி பிழியலாம், Sciece teacher ஆ சங்க அறுக்கலாம், அப்புறமா நான் செய்யல, பேய் தான் செஞ்சதுன்னு மாயாவியே Support பன்னுவாருன்னு நினைப்பு) ஆனா கூட படிச்ச சரவணன் னு ஒரு கூமுட்டை படிக்க குடுக்கலன்னு போட்டுக் கொடுத்ததுல Current அடிக்காமலே நான் மாயாவி ஆய்ட்டேன், Book ஆ Teacher எடுத்துட்டு போய்ட்டாரு, அவருக்கு சைத்தான் Teacher னு பேர் வைச்சேன் ☺) அப்ப Miss பன்ன அப்புறம் கிடைக்கவே இல்லை, நண்பர்கள் மாயாவி Character க்குநான் பொருத்தமா இருப்பேன்னு சொன்னதுல சந்தோசம், First ராணி காமிக்ஸ் மாயாவியவா நம்மள சொல்ராங்கன்னு நினைச்சு Arms எல்லாம் பார்த்துட்டு இருந்தேன், So i accept, அந்த Book matter ஆ Teacher கிட்ட போட்டுக் கொடுத்த Friend சரவணன் பயபுள்ள என் சாபத்துனால இன்னைக்கு சைத்தான் Teacher ஆவே ஆய்டுச்சு, ( govt school teacher ஆய்ட்டான்) பின்குறிப்பு - நம்ம Comics நண்பர் சரவணன்னு ஒரு Teacher இருக்காரு அவர தப்பா நினைச்சுராதீங்க - இது எங்க ஊர் சரவணன், Recent ஆ அவன பார்த்தேன், பழைய கதை எல்லாம் பேசினப்ப சிரிக்காம சொன்னான் அந்த Book எந்த கடைல கிடைக்கும்னு சொல்லு மாப்ள இப்ப வாங்கித்தரேன்னு, உங்கிட்ட பிள்ளைக படிச்சு உருப்பட்ட மாதிரிதேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் "

    முத்து பொன்விழா நினைவு சிறப்பிதழில் எனது பதிவும் Editor ல் தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சியடைவேன்

    ReplyDelete
  57. இது எனது நண்பர்களுக்காக Whatsapp குழுவில் கடந்த வருடம் பதிவிட்டது

    ReplyDelete
  58. திசை மாறிய கப்பல்கள் அந்த நீக்ரோ குடும்பம் , டேவிட்ட கட்டுமிடத்தில் உதிரும் எலும்புக்கூடு , இன்றும் நினைவில் தங்கிய அகொதீகவின் சூப்பர் வில்லன் கேப்டன் போலிதோ என அசத்திய கதை...
    இரும்புக்கையார் உருவாகி திருடனாய் தோன்றி மறையும் நியூயார்க்கில் மாயாவி...
    எங்க கடைல கத்தை பைண்டில் கிடைத்த வேதாளனின் கூண்டில் தொங்கிய சர்வாதிகாரி கூட கிடைத்த ரத்ன பாலா மௌலியின் சகோதரர்கள் இன்னும் நினைவில் ...
    மாயாவதியின் இருவண்ண ப்ளாக் மெயில் மோரிசை வைத்து மாயாவிய மிரட்டும் சிறையிலிருந்து தப்பிய வில்லனின் ஆட்டம் ...என் பல கதைகள் சந்தோசத்தை வாரி வழங்க
    இவர்கள் கதைகள் இல்லாம ஏதோ என பிற நாயகர்கள் ஆடிக் கொண்டிருக்க...எல்லோருக்கும் போல என்னையும் சந்தோசத்தில் திளைக்க வைக்க வந்தது தங்கக் கல்லறை...

    ReplyDelete
    Replies
    1. உங்க போட்டோவை அனுப்பிடுங்க ஸ்டீல்! படிக்கத்தான் முடியாது - படமாவது பாத்துக்கிடறோம்!! ;)

      Delete
  59. முத்து காமிக்ஸ் நினைவலைகள் !!!

    எனக்கு முத்து காமிக்ஸ் அறிமுகம் ஆனது "தவளை மனிதர்கள்" மூலமாய் அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். வகுப்பில் ஒரு நண்பன் இந்த புத்தகத்தைப் பற்றி சிலாகித்து கூறி தன் காமிக்ஸ் படிப்பதை பெருமையாக கூறிக் கொண்டிருந்தான்.  படம் எல்லாம் ரொம்ப தெளிவாக இருக்கிறதே நாமும் வாங்கிப் படிப்போம் என நினைத்து வாங்கிய புத்தகம் தான் இந்த தவளை மனிதர்கள். இந்த கதையை படிக்க படிக்க அப்படி ஒரு பரவசம்!  லேபில் மாயாவி நுழையும் இடம் சும்மா திக் திக் என்று த்ரில்லர் படம் பார்ப்பது போல் இருந்தது, அப்போது.  மாயமாய் மறைந்து கை மட்டும் துப்பறியும் sequence தான் எப்போதுமே எனக்கு பிடித்தமான இடம்.  இதற்கு முன்பே 1972 முதல் முத்து காமிக்ஸின் முக்கிய முத்துக்களை வெளியீட்டு முடித்திருந்தனர்.  தவளை மனிதர்களுக்கு முன்பு வந்த சில கதைகள் தான் கடைகளில் சுலபமாக கிடைத்தன! சூதாடும் சீமாட்டி, கணவாய் கொள்ளையர் போன்ற சில கதைகள். எல்லா கதைகளும் சூப்பராக இருந்தது.  இனிமே இதை விடக்கூடாது என்று என் தேடுதல் வேட்டையை பழைய புத்தகக்கடையில் தொடங்கினேன்.  சிலர் பழைய புத்தகங்கள் கிடைக்கும் போதெல்லாம் அதில் கடைசி பக்கத்தில் "கைவசமுள்ள பிரதிகள்" என்ற பகுதியை பார்த்து ஏங்குவது உண்டு. "இரண்டாவது வைரக்கல் எங்கே", "வாரிசு வேட்டை", "வழிப்பறிக் கொள்ளை",  "கடலில் துவங்கிய பூதம்" என போட்டிருக்கும். இந்த புத்தகம் எல்லாம் இப்போது கிடைப்பதில்லையே என மனம் ஏங்கும். 

    பல கிடைக்காத புத்தகங்களை கண்ணில் காட்டிய பெருமை என் சிறுவயது நண்பன் ராஜ் மோகனையே சாரும். அவன் மூலமாக அறிமுகமாகிய கதைகள் "மஞ்சள் பூ மர்மம்", "மடாலய மர்மம்" போன்றவை.  முத்து காமிக்ஸ் படித்து தான் எனது geographic அறிவு வளர்ந்தது என்றால் அது பொருத்தமாக இருக்கும். பெய்ரூட்டில் ஜானி,  ஜானி in லண்டன் போன்ற கதைகள் எல்லாம் படித்த போது, இந்த நகரம் எல்லாம் எங்கு இருக்கின்றன என்று Atlasல்  தேடி தெரிந்து கொண்டேன். அதிலும் "திகிலூட்டும் நிமிடங்கள்" கதையில் ஒரு காட்சி : லாரன்ஸும் டேவிட்டும் சுதந்திர தேவி சிலையின் கையில் உள்ள டார்ச் மேலே சென்று பேசிக் கொண்டிருப்பார்கள்.  அதற்கு முன்னர் அது ஒரு சிலை என்று தான் தெரியும்,  அந்தக் கதையில்தான் அதனுள்ளே எல்லாம் செல்ல முடியும் என்று தெரிந்து கொண்டேன். அப்போது ஒரு குருட்டு லட்சியம்!  வாழ்க்கையில் என்றாவது ஒரு நாள் எப்படியாவது சுதந்திரதேவி  சிலையின் உள்ளே செல்ல வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டேன். 1998ல் பாண்டிச்சேரியில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு குடி பெயர்ந்த பிறகு ஒன்றைத் தெரிந்து கொண்டேன். அது என்னவென்றால் பிரெஞ்ச் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு அமெரிக்கா செல்ல விசா தேவையில்லை என்பதுதான். இந்தியாவில் இருக்கும் போது அமெரிக்கா செல்வது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும் ஆனால் இப்போது சுலபமாக ஆகிவிட்டது என்று நினைத்து அமெரிக்கா செல்லலாம் என்று நினைத்தால் வேலையில் லீவு கிடைக்கவில்லை. இருந்தாலும் போயே தீருவது என்று முடிவு செய்து வெள்ளிக்கிழமை மதியம் கிளம்பி சுதந்திர தேவி சிலையைப் பார்த்துவிட்டு திங்கட்கிழமை காலை Parisக்கு திரும்பி விட்டேன். இதெல்லாம் காமிக்ஸ் படித்ததால் தான்  வந்த உந்துதல் என்றால் அது மிகை ஆகாது.  

    To be continued...

    ReplyDelete
  60. Back to 1992: ஒருநாள் பாண்டிச்சேரி சண்டே மார்க்கெட்டில் வலம் வரும்போது நமது பழைய முத்து காமிக்ஸ் ஒரிஜினல் பாம்புத் தீவு அட்டைப்படத்துடன் புத்தம்புது காப்பியாக ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது. அதை பார்த்ததும் எனக்கு வந்த உற்சாகத்திற்கு அளவே இல்லை. அப்படியே மேலும் என்ன புத்தகங்கள் இருக்கின்றது என்று கடைக்காரரிடம் கேட்க அவர் உள்ளே உள்ளே சென்று எடுத்து வந்தார் பாருங்கள் அத்தனையும் எனக்கு பொக்கிஷம். கிட்டத்தட்ட ஒரு 30 பழைய முத்து காமிக்ஸ் அட்டைப் படத்துடன் கிடைத்தன. முகமூடி வேதாளன், ஜும்போ, சர்வாதிகாரி, கப்பல் கொள்ளையர்,என சூப்பராக 30 புத்தம் புதிய புத்தகங்கள்.அந்த கடையில் அறிமுகமான மற்றொரு முக்கியமான நபர் நண்பர் கலீல்.  அவர் மூலமாக, கலெக்ஷனில் விடுபட்ட சில முத்து காமிக்ஸ் கதைகளை கிடைக்கப்பெற்றேன். நன்றி கலீல்.  ஆனால் நான் செய்த தவறு என்னுடைய காமிக்ஸ் கலெக்ஷனை பத்திரமாக இருக்க வேண்டும் என்று 75% புத்தகத்தை பைண்டிங் செய்து விட்டது தான்.  புத்தகம் பாதுகாப்பாக இருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக இல்லை.என்னுடைய புத்தக கலெக்சன் பக்கம் போகும் போதெல்லாம் ஏதாவது ஒரு பழைய புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்து விடுவேன். அது அப்படியே என்னை என்னுடைய பால்ய காலத்திற்கு அழைத்துச் செல்லும். 

    எனக்கு பிடித்த புத்தகங்கள் முத்து காமிக்ஸில் :
    முகமூடி வேதாளன்
    ஜூம்போ
    நெப்போலியன் பொக்கிஷம்
    கையெழுத்து மோசடி
    விபரீத வித்தை
    பறக்கும் பிசாசு
    மடாலய மர்மம்
    பனியில் புதைந்த ரகசியம்
    யார் அந்த மாயாவி
    புதையல் வேட்டை

    எண்பதுகளின் துவக்கத்தில் பல போட்டி காமிக்ஸ்கள் வந்தாலும், தரத்தில் சிறந்து விளங்கியது முத்து காமிக்ஸ் தான். அந்த வட்டவடிவ "M" Logo பார்த்ததும் ஒரு பரவசம் தரும். சிறு வயதில் அதை பலமுறை வரைந்து அழகு பார்த்தேன்.
    இங்கு தன் நினைவலைகளை பகிர்ந்திருக்கும் சில நண்பர்களைப் போலவே, சிறுவயதில் (இப்போதும்) முத்து காமிக்ஸ் என் வாழ்க்கையின் ஒரு அங்கம்.

    ReplyDelete
    Replies
    1. @Radja

      செம செம செம!! ஏதோ பக்கத்து ஊருக்கு போற மாதிரி பாரீஸ்லேர்ந்து அமெரிக்கா போய் சுதந்திரதேவி சிலையைப் பார்த்துட்டு வந்ததெல்லாம் - வேற லெவல் காமிக்ஸ் ரசணை! (லாரன்ஸ்&டேவிட் நின்னு பேசிக்கிட்டிருந்த அதே இடத்துல நின்னு போட்டோ கீட்டோ எடுத்தீங்களா இல்லையா? ஒரு 'இங்கே க்ளிக்' போடறது?)

      Delete
  61. 300 பின்னூட்டங்கள் கடந்தால் தான் சிறப்பு உபபதிவு போடுவதாக ஆசிரியர் கூறியுள்ளார்.

    300ஐத் தாண்டுவோம்.உபபதிவைக் கொண்டாடுவோம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா! உப பதிவுல 'உலகத்தின் கடைசி நாள்'க்கு பதிலா எந்த கதை வரப்போகுதுன்னு சொல்றேன்னு வேற சொல்லியிருக்கார்!

      சீக்கிரம் ஆவட்டும்!

      Delete
    2. He is working on a Lucky Luke album he said - that UKN is 200 bucks. Andhiyum Azhage + Luky Luke can be 190 together !! Fingers crossed :-)

      Delete
  62. லக்கி லூக் 75யை கொண்டாட இப்படீல்லாம் நமக்கு சான்ஸ் கிடைக்குது என்ற அளவில் மகிழ்ச்சி !! உலகத்தின் கடைசீ நாள் வரும்போது அதுவும் மகிழிவிக்குரிய விஷயமே !!

    ReplyDelete