Powered By Blogger

Tuesday, April 28, 2020

கொஞ்சம் ஓவரோ ?

நண்பர்களே,

வணக்கம். "கொஞ்சம் ஓவராப் போயிட்டோமோ ? போவோம்ம்ம்ம் ..போயித் தான் பாப்போமே  !!" என்ற டயலாக் தான் நினைவுக்கு வருகிறது ! ஏனென்கிறீர்களா ? மார்ச்சின் ஒரு மாலைப் பொழுதில் ஆளாளுக்கு பால்கனிகளிலிருந்தும், வீதிகளில் அணிவகுத்தும், கரவொலி எழுப்பிய அந்த நாள் துவக்கம், இன்று வரையிலும் நாம் போட்டுத் தாக்கியிருக்கும் பதிவுகளின் எண்ணிக்கையினைப் பார்த்த பின்னே எழுந்த நினைப்புத் தான் - மேற்படி டயலாக் !! 

*மார்ச் 21 முதல் : 5 பதிவுகள் (மார்ச் மாதத்தினில்)

*ஏப்ரலில் இது வரைக்கும் : 11 பதிவுகள்

ஆக 37 நாட்களில் 16 பதிவுகளைப் போட்டுப் புரட்டி எடுத்திருக்கிறோம் blogger தளத்தை !! And இதோ இன்னும் கொஞ்சம் stats - உங்களின் லூட்டிகளை highlight செய்திட :

*இந்தப் 16 பதிவுகளுக்கென நீங்கள் இது வரையிலும் நல்கியுள்ள pageviews : 27499 !!

*இந்தப் 16 பதிவுகளுள் நீங்களும், நானும் செய்துள்ள பின்னூட்டங்களின் நம்பர் : 4558 !!

மேற்படி பின்னூட்ட எண்ணிக்கையில் நமது திருச்செந்தூர் பாணபத்திரர் ஒரு 300-க்குப் பொறுப்பேற்றிருக்கக் கூடும் ; அரசவைக்கு சமீபத்தில் தேர்வாகியுள்ள சேலத்துக் குமாரர் ஒரு 700-க்குப் பொறுப்பேற்கக்கூடும் ! பதில் சொல்கிறேன் பேர்வழி என்று நானொரு 500 பின்னூட்டங்கள் ? பாக்கி மூணாயிரத்தை ஆளும், பேருமாய்ச் சேர்ந்து லவட்டியுள்ளீர்கள் ! அதிலும் லேட்டாய் ஆஜராயினும், லேட்டஸ்ட்டாய் ரகளை செய்திடும் 'உப்மா' புகழ் sis ஒரு special mention பெற்றிடுகிறார்  ! 

ரைட்டு...இந்த லாக் டௌன் தொடருமா ? அல்லது தளருமா ? என்ற சஸ்பென்ஸுக்கு மத்தியினில் இந்த உ.ப.வில் பொழுதைப் போக்க இதோ சில கேள்விகள் உங்களிடம் :

1.ஒரேயொரு நாள் மட்டும் இந்த எடிட்டர் குல்லாயை உங்கள் தலைகளில் அணிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டினால் - நீங்கள் செய்திடக்கூடிய 3 செயல்கள் என்னவாக இருக்குமோ ? 

2.ஒரேயொரு சாகசத்தினில் மட்டும் TEX-ன் துணையாக கார்சனுக்குப் பதிலாய் வேறு நாயகர் / நாயகி யாரையேனும் தேர்வு செய்திடும் உரிமை உங்களுக்கு வாய்த்தால் - யாரைத் தேர்வு செய்வீர்கள் ? And ஏன் ? (நமது அணிவகுப்பின் மக்களில் இருந்து மட்டுமே தேர்வுகள் ப்ளீஸ் ) 

3.இந்த லாக் டௌனில் பூரி போட்ட நேரங்கள் நீங்கலாய் ; தோசை வார்த்த வேளைகள் நீங்கலாய் ; பாத்திரங்கள் துலக்கிய தருணங்கள் நீங்கலாய் (ஆண்குலம் தானுங்கோ ) - எதையேனும் வாசிப்பது ; எங்கேனும் குறட்டை விடுவது என்று நாட்கள் ஓடுகின்றன ! அதன் மத்தியில் போனில் உள்ள பட்டியலைப்  பார்த்து - யாரென்றே மறந்திருக்கக்கூடிய பெயர்களுக்கும் போன் அடித்துப் போடும் மொக்கைகளும் அடங்கும் தானே ? என் கேள்வி : கீழ்க்கண்ட நமது ஹீரோ / ஹீரோயினிக்களுக்கு போன் அடித்து  ஒரேயொரு கேள்வி கேட்கும் வாய்ப்புக் கிட்டினால் - இன்னா கேப்பீங்கோ  ? மறுமுனையில் இருப்போர் இவர்களாக இருக்கும் பட்சத்தில் : 

XIII
சிக் பில்
ஸ்பைடர் 
மாடஸ்டி 
ஸ்டெல்லா  (ஜானி நீரோவின் செகரட்டரி )
லார்கோ 

Bye guys...see you around !! Stay Safe !!

292 comments:

 1. ஆசிரியரே நீங்கள் கேட்டது அபாரமான கேள்விகள் யோசித்து பதிலளிக்கிறேன்

  ReplyDelete
 2. இது காலையா? மாலையா? ன்னு சரியா தெரியலை. பொதுவா ஒரு வணக்கத்தை அன்போடு சொல்லி வைக்கிறேன்!
  வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 3. ஹைய்யா புதிய பதிவு.......

  ReplyDelete
 4. நன்றிகள் எடிட்டர் சார். ஆடு மாடு, கோழின்னு நானும், ATR சாரும் போறதுக்குள்ள பதிவு போட்டு மக்கள காப்பாத்திட்டீங்க.
  குமார். நீங்க great escape.

  ReplyDelete
 5. முதல் கேள்விக்கு பதில்...

  1. ஆசை தீர நம் அலுவலகத்தை சுற்றி பார்க்க வேண்டும்.
  2. Editor வேலைய resign செய்ய வேண்டும்
  3. Editor பொறுப்பை உங்க கையில் கொடுத்துட்டு நீங்கள் செய்துள்ள அரும்பெரும் பணிகளுக்கு நன்றி சொல்லனும்

  ReplyDelete
 6. எக்ஸ்ட்ரா நம்பர் பின்னுடமெல்லாம் இல்லைங்களா சார்.?:-)

  ReplyDelete
  Replies
  1. இப்போதெல்லாம் வெகு அரிதாக தான் நம்பர் பின்னூட்டங்கள் GP

   Delete
 7. ///ஒரேயொரு நாள் மட்டும் இந்த எடிட்டர் குல்லாயை உங்கள் தலைகளில் அணிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டினால் - நீங்கள் செய்திடக்கூடிய 3 செயல்கள் என்னவாக இருக்குமோ ? ///

  முதல் காரியமா அந்த குல்லாயை கழட்டி வச்சிடுவேன்.

  குல்லாயை கழட்டினதுக்கப்புறம் ரெண்டாவது, மூணாவது வேலையே இல்லையே.

  ReplyDelete
  Replies
  1. :-)))


   இது கரீட்டூ...பீரச்சனையே இல்லை...:-)

   Delete
  2. :-)))


   இது கரீட்டூ...பீரச்சனையே இல்லை...:-)

   Delete
 8. நண்பர்களே,

  வணக்கம். "கொஞ்சம் ஓவராப் போயிட்டோமோ ? போவோம்ம்ம்ம் ..போயித் தான் பாப்போமே !


  ###₹₹₹₹


  போய்ட்டே இருப்போம் சார்....:-))))

  ReplyDelete
 9. 1.ஒரேயொரு நாள் மட்டும் இந்த எடிட்டர் குல்லாயை உங்கள் தலைகளில் அணிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டினால் - நீங்கள் செய்திடக்கூடிய 3 செயல்கள் என்னவாக இருக்குமோ ?

  #####

  இந்த வினாவிற்கு நன்கு யோசித்து தான் சொல்லவேண்டும் சார்...எனவே நன்கு யோசித்து நாளை....:-)

  ReplyDelete
 10. இரண்டாவது கேள்விக்கு பதில்

  Texக்கு துணையாக லக்கி லூக்

  ஏனெனில்

  வழக்கமாய் கார்சனை டெக்ஸ் ஒரண்ட இழுக்கிறதும், கார்சன் டெக்ஸை காலை வாருவதும் சகஜம்... லக்கி லூக் சேர்ந்தால் ஜாலி ஜம்பரின் டாப் கிளாஸ் மைண்ட் வாய்ஸ் டயலாக்குகள் எப்படி இருக்கும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியல...

  (டெக்ஸ் டைகர் காம்பினேஷன் சரியாக வராது என்று என் உள்ளுணர்வு சொல்லியதால் இந்த முடிவு மை லார்ட்)

  ReplyDelete
 11. ஒருநாள் எடிட்டரானால்
  1.அடுத்த மாத புத்தகத்துக்கு முதல் வாசகனாவேன்...
  2.நீண்ட நாள் விற்காத புத்தகங்களின் குடோனை பார்வை பார்த்து ஒரு பெருமூச்சு
  3.அங்கிருந்து கிளம்பும் முன் எடியிடம் மறக்காமல் ஒரு ஆட்டோகிராப்
  அவ்வளவே...

  டெக்சுடன் லக்கி சேர்ந்தால் நன்றாயிருக்கும்.
  இருவருமே நேர்மையின் பக்கம் நிற்கும் கௌபாய்ஸ்...இருவருக்கும் ஒரு சண்டை காட்சி வைத்து துப்பாக்கி கையாள்வதில் ஜெயிப்பது யார் என பார்க்க நிறைய ஆசை

  ஸ்பைடரிடம் கேட்க..
  "அண்ணே இந்த கொரோனா காலத்துல இப்ப எங்கணா பதுங்கி இருங்கிங்க?"


  ReplyDelete

 12. 2///.ஒரேயொரு சாகசத்தினில் மட்டும் TEX-ன் துணையாக கார்சனுக்குப் பதிலாய் வேறு நாயகர் / நாயகி யாரையேனும் தேர்வு செய்திடும் உரிமை உங்களுக்கு வாய்த்தால் - யாரைத் தேர்வு செய்வீர்கள் ? And ஏன் ? (நமது அணிவகுப்பின் மக்களில் இருந்து மட்டுமே தேர்வுகள் ப்ளீஸ் ) ///

  நாயகி என்றால் ஒரேயொரு சாய்ஸ் 'மாடஸ்டிதான் '
  (லிலித் ஆவி என்னை மன்னிக்க.)

  நாயகர் என்றால் மர்ம மனிதன் மார்டின்.

  (டெக்ஸ் வடக்கே போனால், மார்டின் தெற்கால இழுப்பாரு. ஒரே ஜாலியா இருக்கும்.)

  ReplyDelete
 13. அட்டகாசமான, ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள் எடிட்டர் சார்!! பல் வலி வந்தால் மண்டை செமயாய் வேலை செய்யும் போலிருக்கே?!! :)

  ReplyDelete
 14. 2.ஒரேயொரு சாகசத்தினில் மட்டும் TEX-ன் துணையாக கார்சனுக்குப் பதிலாய் வேறு நாயகர் / நாயகி யாரையேனும் தேர்வு செய்திடும் உரிமை உங்களுக்கு வாய்த்தால் - யாரைத் தேர்வு செய்வீர்கள் ?

  ######


  கேப்டன் டைகர்....


  ரஜினியும்...சேதுபதியும் இணைவதை விட ரஜினீயும் ,கமலும் இணைந்தால் அதன் மதிப்பே தனி.மேலும் இரு பெரும் போட்டி ரசிகர்களும் அதனால் கூட மற்றவர்களை ஆராதிக்க தொடங்கீவிடலாம்..அதுபோல டெக்ஸ் ,டைகர் இணைந்தால் அது காமிக்ஸ் வரலாற்றின் அட்டகாசமான நாளாயிற்றே...:-)

  ReplyDelete
 15. எடிட்டர் குல்லா
  1. மாதம் ஒரு கார்ட்டூன்.
  2. நமது ரெகுலர் இதழ்களில் இருந்து ஒரு ப்ரேக் எடுத்துக்கொண்டு ஒரு வருடத்திற்கு நீங்கள் பெண்டிங் வைத்து இருக்கும் 3, 4 , 5 பாக இதழ்களை மாதம் ஒன்றாக வெளியிட்டு ஒரு வருடத்தில் 12 புத்தகங்கள் மட்டுமே.
  3. ஸ்பைடர் இன் விண்வெளி பிசாசு ஹார்டு பவுண்ட் இதழாக
  (எடிட்டர் உடைய மைண்ட் வாய்ஸ் இதற்கு தான் எடிட்டர் குல்லாவை யாருக்கும் கொடுக்காமல் நானே வைத்து இருக்கிறேன்.). :)))))))

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. நமது ஹீரோ / ஹீரோயினிக்களுக்கு போன் அடித்து ஒரேயொரு கேள்வி கேட்கும் வாய்ப்புக் கிட்டினால் - இன்னா கேப்பீங்கோ


  #####

  பெண்களுக்கே சங்கத்தில் முன்னுரிமை...

  எனவே முதலில் ஸ்டெல்லா...


  ஹலோ ...ஸ்டெல்லா எனக்கு உடனடியா ஒரு செகரட்டரி தேவைப்படுகிறது ..உங்களை அப்பாய்மென்ட் பண்ணியாச்சு ..ஜானி நீரோ தருவதை விட ஆயிருவா சம்பளம் ஜாஸ்தி...அதே மாதிரி எந்த வெளிநாட்டுக்கு போனாலும் ஜானிநீரோ மாதிரி ஏமாத்தாம உன்னையும் பஸ்ஸுல கூட்டிட்டு போவேன் ..டீல் ஓகேவா...

  ReplyDelete
  Replies
  1. தலைவரே பிரமாதம் பிரமாதம். :)))))

   Delete
  2. செகரட்டரிங்களுக்கு கொஞ்சம் மவுசு அதிகம்தான்.

   Delete
 18. முதல் கேள்விக்கு பதில்
  1.வேதாளர் கதைகளை எப்பாடுபட்டாவது உள்ளே நுழைத்து விடுவேன்.
  2.ரிப் கிர்பி டைஜஸ்ட் கண்டிப்பா 1 போடுவேன்
  3.காரிகன் டைஜஸ்ட் 1 போடுவேன்.
  இரண்டாவது கேள்விக்கு பதில்
  டைகர் கதையில் வரும் ஜிம்மி ய அசிஸ்டன்ட்டா அனுப்புவேன். அப்பதான் வயசான கார்சன் அருமை புரியும்.
  மூன்றாவது கேள்விக்கு பதில்
  XIII - ஞாபகம் வருதே ஞாபகம் வருதே
  சிக் பில் - எப்பதான் நீங்கள் ஹீரோ ஆவிங்க
  ஸ்பைடர் - ஏன் உங்களுக்கு எந்தக் கதையிலும் ஹீரோயினே இல்லை
  மாடஸ்டி - உலகத்துல எல்லா
  வயசுலயும் பாய்பிரெண்ட் வைத்திருப்பது ஒரு கேர்ள் பிரண்ட் நீதான்
  ஸ்டெல்லா (ஜானி நீரோவின் செகரட்டரி ) - உண்மையான செகரட்டரி நீதானம்மா
  லார்கோ - ஐயா உங்க ஆபீஸ்ல ஏதாச்சும் வேலை இருக்குதா?

  ReplyDelete
  Replies
  1. /// டைகர் கதையில் வரும் ஜிம்மி ய அசிஸ்டன்ட்டா அனுப்புவேன். அப்பதான் வயசான கார்சன் அருமை புரியும்.///

   👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

   Delete
  2. @Trichy VIJAY : அனைத்துமே டாப் :-)))

   Delete
  3. @@Trichy VIJAY

   செம செம!! :))))

   Delete
 19. சிக்பில்...


  மிஸ்டர் சிக்...நீங்க ஹீரோவா ,ஹீரோ மாதிரயா...?!

  ReplyDelete
 20. வந்திட்டேன் சார் 🙏🏼
  .

  ReplyDelete
 21. 2.ஒரேயொரு சாகசத்தினில் மட்டும் TEX-ன் துணையாக கார்சனுக்குப் பதிலாய் வேறு நாயகர் / நாயகி யாரையேனும் தேர்வு செய்திடும் உரிமை உங்களுக்கு வாய்த்தால் - யாரைத் தேர்வு செய்வீர்கள் ??


  குற்றச் சக்கரவர்த்தி ஸ்பைடர்..

  ReplyDelete
 22. ஸ்பைடர்...


  ஸ்பைடர் சார்....நீங்க எவ்ளோவோ கஷ்டப்பட்டு எத்தனையோ வில்லன்களை புடிச்சு இருக்கீங்க...ஆனா மாசக் கணக்கா அந்த விண்வெளி பிசாசு கிட்ட நீங்க மாட்டி தப்பிச்ச கதையை எங்க ஆசிரியர் மொத்தமா கண்ணுல காட்டவே மாட்டேங்கிறார்..உங்க வலைல்ல அவரை கொண்டுவந்து கொஞ்சம் அதை எங்க கண்ணுல காட்ட சொல்லுங்க ஸ்பைடரு...அப்புறம் அப்படியே ஆர்ட்டினையும் ,பெல்ஹாமையும் கேட்டதா சொல்லுங்க :-)

  ReplyDelete
 23. மாடஸ்தி....


  இளவரசி ...மேச்சேரில உங்கள் பயங்கரமான எதிரி ஒருத்தர் இருக்காரு ...நான் காட்டி கொடுத்துருறேன்...உங்க ப்ரெண்ட் கிட்ட இருக்குற அந்த தங்க கோள்ல கொஞ்சம் சுரண்டி கொடுங்களேன்...

  ReplyDelete
 24. 3வது கேள்விக்கு..

  எல்லாருக்கும் ஒரேயோரு வார்த்தைதான்..,

  'பாத்து.,பத்திரமா இருங்க.'

  ReplyDelete
 25. விஜயன் சார், பதிவுகளில் கொஞ்சம் நமது காமிக்ஸ் படங்களையும் இணையுங்கள், ஒருவேளை டிஜிட்டல் கோப்புகள் ஆபீஸ்ஸில் இருந்தால் நள்ளிரவு நேரத்தில் ஜூனியர் உடன் பைக்கில் போய் எடுத்து வாங்க சார்!

  ReplyDelete
  Replies
  1. பைக்கை காவலர்கள் பிடுங்கிவிட்டால்...:-)

   Delete
  2. // நள்ளிரவு நேரத்தில் ஜூனியர் உடன் பைக்கில் போய் எடுத்து வாங்க சார்! // சாத்தியம் இல்லை பரணி தேவை இல்லாத ரிஸ்க்

   Delete
  3. Bikers allowed in sivakasi until 1pm with masks

   Delete
  4. இரு சக்கர வாகனங்களில் போவது பிரச்சனையாக இருக்காது என நினைக்கிறன்! இரு சக்கர வாகனத்தில் போக முடியவில்லை என்றால் நடராஜா வண்டிதான் :-)

   Delete
 26. லார்கோ...

  கடைசில சொதப்பிட்டீங்களே லார்கோ...திரும்ப எப்போ பழைய பன்னீர்செல்வமா வருவீங்க..?!

  ReplyDelete
 27. பதிமூன்று...#


  பதிமூணு சார்...பதினெட்டாவது மண்டலத்துல உங்க வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சதை நினைச்சு அவ்ளோ சந்தோசப்பட்டோம்...ஆனா உங்களை வச்சு இன்னமும் வச்சு செய்யுறாங்களே ரொம்ப கஷ்டமா இருக்குங்க ...

  ReplyDelete
  Replies
  1. /// ஆனா உங்களை வச்சு இன்னமும் வச்சு செய்யுறாங்களே ரொம்ப கஷ்டமா இருக்குங்க ...///

   👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

   Delete
 28. #####1.ஒரேயொரு நாள் மட்டும் இந்த எடிட்டர் குல்லாயை உங்கள் தலைகளில் அணிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டினால் - நீங்கள் செய்திடக்கூடிய 3 செயல்கள் என்னவாக இருக்குமோ ? ###

  1) 70 to 90s வந்த அத்தனை
  ஸ்பெஷல் காமிக்ஸ்களையும் அதே சைஸ் ல ஆனா விலையில் மட்டும் மாற்றம் வச்சு ரீபிரிண்ட் போடுவேன்.

  2) வருடத்துக்கு ஆறு குண்டு புக் போடுவேன் (அது கண்டிப்பாக கதம்ப ஸ்பெஷல் தான்)

  3) வாசகர் திறமையை வெளிக்காட்ட வாசகர் ஸ்பாட் லைட் மறுபடியும் ஆரம்பிப்பேன்..

  ReplyDelete
 29. Replies
  1. ஷெரீஃப் வேலை அதிகமா ? ஆளையே காணோம்?

   Delete
 30. 1.ஒரேயொரு நாள் மட்டும் இந்த எடிட்டர் குல்லாயை உங்கள் தலைகளில் அணிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டினால் - நீங்கள் செய்திடக்கூடிய 3 செயல்கள் என்னவாக இருக்குமோ ?

  A. நமது கோடௌனில் உள்ள புத்தகங்களை விற்பனை செய்ய முயற்சி செய்வேன்! கொஞ்சம் நஷ்டம் என்றாலும் இவைகளை விற்பனை செய்தால் பணம் கிடைக்கும் அதே நேரம் மனம் கொஞ்சம் அமைதியாகும்! தள்ளுபடி விபரம்
  10 வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த புத்தகங்களுக்கு 30-35% தள்ளுபடியில்
  5 வருடங்களுக்கு முன்னால் வந்த புத்தகங்களுக்கு 25% தள்ளுபடியில்

  விற்பனையில் சாதிக்க முடியாத கார்ட்டூன் நாயகர்கள் புத்தகங்களுக்கு எல்லாம் 30% தள்ளுபடி அறிவித்து எல்லா பள்ளிகளிலும் நமது காமிக்ஸ் ஸ்டால் போட்டு விற்பனை செய்வேன்! இதனுடன் tex மற்றும் ஆர்ச்சி கதைகளையும் இணைத்து கொள்வேன்! இப்படி செய்வதால் நமது காமிக்ஸ் குழந்தைகளை சென்று அடைய ஒரு விளம்பரமாக அதே நேரத்தில் கார்ட்டூன் நாயகர்கள் புத்தகங்களை விற்பனை செய்தது போல் இருக்கும்!

  வரும் காலங்களில் வாரத்துக்கு 3 பள்ளிக்கூடங்களில் இது போன்ற முயற்சியை செய்யலாம்! நீங்கள் சிவகாசியில் இருந்து ஆரம்பிக்கலாம்! பள்ளிக்கூடத்தில் இது போன்று குழந்தைகள் புத்தக கண்காட்சி இந்த தேதியில் நடைபெற உள்ளது என சொல்லாம் + நமது காமிக்ஸ் சார்பாக சிறிய நோட்டீஸ் அடித்து அந்த பள்ளி குழந்தைகளிடம் கொடுத்து விடலாம், அவர்கள் பெற்றோரிடம் காண்பித்தது போல இருக்கும் அவர்கள் இவர்களிடம் பணம் கொடுத்து விட வசதியாக இருக்கும். இந்த மாதிரி விற்பனை செய்ய செல்லும் போது காமிக்ஸ் காலண்டர் மற்றும் புத்தக லேபிள் அடித்து புத்தகம் வாங்கும் குழந்தைகளுக்கு அன்பளிப்பாக கொடுக்கலாம்!

  B. ஒரு வருடம் முழுவதும் புதிய கதைக்களங்கள் மற்றும் புதிய நாயகர்கள் கதையை வெளி இடுவேன்! நோ மறுபதிப்பு!

  C. கடந்த சில வருடங்களாக சந்தாதாரராக இருந்து விட்டு இப்போது சந்தாவில் இல்லாதவர்களை தொடர்பு கொண்டு காரணங்கள் தெரிந்து கொண்டு (அலுவலக நண்பர்கள் மூலம்) அவர்களை மீண்டும் சந்தாதாரராக கொண்டு வர முயற்சிப்பேன்! சந்தா ஒரே தவணையாக செலுத்தும் நண்பர்களுக்கு 10% தள்ளுபடி கொடுப்பேன்!

  நீங்கள் இவைகளை ஏற்கனே முயற்சி செய்து இருக்கலாம் அல்லது அதில் சில சிக்கல்கள் இருக்கலாம்! எனக்கு மனதில் தோன்றியதை எழுதி உள்ளேன். எனது சிந்தனைகள் தவறாக இருந்தால் மன்னிக்கவும்!

  ReplyDelete
  Replies
  1. D. லிமிடெட் எடிசன் என வெளியிடும் புத்தகங்கள் இனி ஒரு (நபர்) முன்பதிவுக்கு இரெண்டு பிரதிகளுக்கு மேல் கிடையாது, புத்தக ஏஜென்ட்களுக்கு இந்த விதிமுறை கிடையாது. :-)

   Delete
  2. 10 வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த புத்தகங்களுக்கு 30-35% தள்ளுபடியில்...

   10 வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த புத்தகங்கள் விலையே 10ரூபா தானுங்கோ!

   Delete
  3. @PfB

   எல்லாமே ஆக்கப்பூர்வமான ஐடியாக்கள்!! ஆனால், பெரும்பான்மை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டவையே!!

   Delete
  4. // 10 வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த புத்தகங்கள் விலையே 10ரூபா தானுங்கோ! //

   சரி. I forgot it.

   2011-2015 வரை வந்த புத்தகங்களுக்கு 30-35% என மாற்றக் கொள்கிறேன்.

   2016-2018ல் வந்த புத்தகங்களுக்கு 25% தள்ளுபடி.

   Delete
  5. விஜய் # பள்ளிக்கூடங்களில் அவ்வப்போது காமிக்ஸ் ஸ்டால் நடத்தினால் நன்றாக இருக்கும்.

   எனது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் வருடத்திற்கு 4-5 முறை புத்தகக் கண்காட்சி நடக்கும். ஒரு சிறிய ஸ்டால் தான் என்றாலும் குழந்தைகளுக்கு தேவையான புத்தகங்கள் எல்லாம் அங்கு கிடைக்கும்.

   Delete
 31. ###2.ஒரேயொரு சாகசத்தினில் மட்டும் TEX-ன் துணையாக கார்சனுக்குப் பதிலாய் வேறு நாயகர் / நாயகி யாரையேனும் தேர்வு செய்திடும் உரிமை உங்களுக்கு வாய்த்தால் - யாரைத் தேர்வு செய்வீர்கள் ? And ஏன் ? (நமது அணிவகுப்பின் மக்களில் இருந்து மட்டுமே தேர்வுகள் ப்ளீஸ் ) ###

  இந்த கேள்விகெல்லாம் ஆப்ஷனே இல்ல சார்..
  தல & தளபதி
  ஏன்னா போட்டி சரி சமமா இருக்கனும் இல்ல சார் ..

  ReplyDelete
 32. //ஒரேயொரு சாகசத்தினில் மட்டும் TEX-ன் துணையாக கார்சனுக்குப் பதிலாய் வேறு நாயகர் / நாயகி யாரையேனும் தேர்வு செய்திடும் உரிமை உங்களுக்கு வாய்த்தால் - யாரைத் தேர்வு செய்வீர்கள் ? And ஏன் ? (நமது அணிவகுப்பின் மக்களில் இருந்து மட்டுமே தேர்வுகள் ப்ளீஸ் )//

  TEX COMBO:

  நாயகன் என்றால்.. TEX + DIABOLIK .. ஒரு திருடன் போலீஸ் காம்போ ..

  நாயகி என்றால் .. TEX + modesty ..

  //நமது ஹீரோ / ஹீரோயினிக்களுக்கு போன் அடித்து ஒரேயொரு கேள்வி கேட்கும் வாய்ப்புக் கிட்டினால் - இன்னா கேப்பீங்கோ ?//

  1.சிக்பில்.. நீ இன்னுமாயா உன்ன hero nu நம்பிட்டு இருக்க .. ??

  2.மாடஸ்டி .. எங்க தலைவன் கார்வினுக்கும் ஒரு வாய்ப்பு குடுத்து பாரேன் மா ??

  3.XIII .. ஏற்கனவே கொலம்பி பொய் கெடக்குறான் மனுஷன் .. நம்ம வேறே எதுக்கு இன்னும் கொழப்பிக்கிட்டு ..

  //ஒரேயொரு நாள் மட்டும் இந்த எடிட்டர் குல்லாயை உங்கள் தலைகளில் அணிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டினால் //

  அதுல்லாம் வாணாம் சார் .. அதுக்கு தான் நீங்க இருக்கிங்களே ..

  ReplyDelete
 33. கடைசியில் உப்புமா புகழ் ஆகிட்டேன். ஒரு நாளைக்கு நிம்மதியா Swiggy இல் ஆர்டர் போட்டு, நல்ல தூக்கம் அனுபவிச்சு எழுந்து வரதுக்குள்ள புது பதிவு!!! அநியாயம். பயங்கர விவகாரமான ஆனால் விவரமான கேள்விகள். சித்த நேரம் கழித்து வரேன்.

  ReplyDelete
  Replies
  1. உப்புமா மட்டுமா பாயசம் அல்வா வும் உண்டு தானே அனு.

   Delete
  2. இருக்கு குமார் இருக்கு !!!

   Delete
 34. ////
  1.ஒரேயொரு நாள் மட்டும் இந்த எடிட்டர் குல்லாயை உங்கள் தலைகளில் அணிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டினால் - நீங்கள் செய்திடக்கூடிய 3 செயல்கள் என்னவாக இருக்குமோ ? ////

  1. 'சிங்கத்தின் சிறு வயதில்' தொடரும் என்று அறிவிப்பேன்! இதுவரை வந்த பாகங்கள் அனைத்தும் அடுத்த வருடம் புத்தகமாக வெளிவரும் என்று அறிவிப்பேன்!

  2. புத்தகத் திருவிழாக்களில் ராதாகிருஷ்ணன் அண்ணாச்சியுடன் இணைந்து பணியாற்ற தம்பி செல்வத்திற்குப் பதிலாக பொறுப்பான ஒரு ஆளை நியமிப்பேன்!

  3. நம்முடைய பழைய இதழ்களை ஸ்கேன் செய்து PDFஆக புழக்கத்தில் விட்டுவரும் சிலரின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து, அவர்கள் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டிடும்பட்சத்தில் வழக்கை வாபஸ் பெற்றிடுவேன்!

  ReplyDelete
  Replies
  1. // 3. நம்முடைய பழைய இதழ்களை ஸ்கேன் செய்து PDFஆக புழக்கத்தில் விட்டுவரும் சிலரின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து, அவர்கள் தன் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டிடும்பட்சத்தில் வழக்கை வாபஸ் பெற்றிடுவேன்! //

   +1

   Delete
  2. சிங்கத்தின் சிறு வயதில் +10000000

   Delete
 35. XIII: ஜூடித்துடன் ஒரு இன்ட்ரோ குடுக்க முடியுமா??
  சிக் பில்:அந்த ரெண்டு பேரையும் கூடவே வெச்சிட்டு எப்பிடிப்பா சமளாக்கிறே??
  ஸ்பைடர்: தலைவா நீ மறுபடியும் எப்போ வருவே??
  மாடஸ்டி: அரியலூர் மருத்துவரை ஏன் பிடிக்காமே போச்சு??
  ஸ்டெல்லா (ஜானி நீரோவின் செகரட்டரி ): இந்த கொரனோ ஊர் ஊரா பரவ நீ தான் டிக்கெட் போட்டு குடுத்தியா??
  லார்கோ:லாக்டவுன் முடிஞ்சப்புறம் W குழுமத்திலே ஏதாச்சும் வேலை கெடைக்குமா??

  ReplyDelete
 36. 1.ஒரேயொரு நாள் மட்டும் இந்த எடிட்டர் குல்லாயை உங்கள் தலைகளில் அணிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டினால் - நீங்கள் செய்திடக்கூடிய 3 செயல்கள் என்னவாக இருக்குமோ ?

  1) NBS போன்ற இன்னொரு முயற்சி
  2) திருப்பூரிலும் ஈரோடு போல புத்தக திருவிழா மீட்டிங்
  3) மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கருப்பு வெள்ளையில் ஒரு குண்டு புத்தகம்...

  ReplyDelete

 37. 1.ஒரேயொரு நாள் மட்டும் இந்த எடிட்டர் குல்லாயை உங்கள் தலைகளில் அணிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டினால் - நீங்கள் செய்திடக்கூடிய 3 செயல்கள் என்னவாக இருக்குமோ ?

  நமக்கு இந்த வேலை சரிப்பட்டு வராது..

  ReplyDelete
 38. கேள்வி 1: இந்த வருட இதழ்கள் அனைத்திலும் முதல் பக்கத்தில் happy reading. அன்புடன். R. பத்மநாபன் அப்படின்னு கையெழுத்த போட்டு விடுவேன்.(வரலாறு முக்கியம் அமைச்சரே) ஒரு நாள் ஆசிரியர்னாலும் ஒரு வருஷத்துக்கு நம்ம பெயர் சொல்லுமே.
  அப்புறம் பதிவு வாரம் இருமுறை, உ.ப.க்கான Sealing 200 கமெண்ட் ஆக குறைப்பு.
  மேக்ஸி சைசில் ரத்தப்படலம் 2 பாகமாய்.
  கடைசியாய், மறக்காமல் குல்லாயை கழட்டி கொடுத்துவிடுவேன்.

  ReplyDelete
  Replies
  1. பத்து சார்!! செம!!! குறிப்பா அந்த குல்லா மேட்டர் - ஹா ஹா ஹா! :))))))

   Delete
  2. // அப்புறம் பதிவு வாரம் இருமுறை, உ.ப.க்கான Sealing 200 கமெண்ட் ஆக குறைப்பு. // பத்து சார் சூப்பர் ஐடியா

   Delete
  3. // அப்புறம் பதிவு வாரம் இருமுறை, உ.ப.க்கான Sealing 200 கமெண்ட் ஆக குறைப்பு. //

   100 ஆக குறைக்கலாம் பத்மநாபன், நீங்கள் எடிட்டர் ஆக இருக்கும் அந்த ஒரே நாளில் நீங்கள் இரண்டு மூன்று பதிவுகள் போட ரெடியாகி கொள்ளுங்கள் :-)

   Delete
 39. ////2.ஒரேயொரு சாகசத்தினில் மட்டும் TEX-ன் துணையாக கார்சனுக்குப் பதிலாய் வேறு நாயகர் / நாயகி யாரையேனும் தேர்வு செய்திடும் உரிமை உங்களுக்கு வாய்த்தால் - யாரைத் தேர்வு செய்வீர்கள் ? And ஏன் ?////

  பார்னே!
  முதலில் தோன்றியது ட்யூராங்கோ தான்!! ஆனால் டெக்ஸ் என்ற ஆளுமையோடு இன்னொரு சீரியஸான மனிதனை களமிறக்கினால் இவர்களுக்குள் ஈகோ பிரச்சினை வர வாய்ப்புண்டு!!
  கொஞ்சம் காமெடியான, நண்பனுக்கு ஆபத்து என்று வரும்போது உயிரையும் துச்சமாக மதித்து அதிரடியாய் களமிறங்கிடும் ஒரு ஆள் எனில் - எனக்கு ஞாபகம் வருவது 'பார்னே'வே!!

  ReplyDelete
 40. கேள்வி 2: மாடஸ்டி ..
  டெக்ஸ் கூட குதிரையில் முன்னாடி மாடஸ்டி உட்கார்ந்து கிட்டு போனா..ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்... செம ரொமான்ஸ்..சும்மா ஜிலோர்ன்னு இருக்கும்..(excuse me கார்வின் சார்)

  ReplyDelete
  Replies
  1. கார்வின் க்கு எப்போதுமே பிரச்சினை இல்லையே பத்து சார்

   Delete
  2. டெக்ஸ் மிகவும் கண்ணியமான மனிதரெனும் போது, அடிக்கடி ஆண் நண்பர்களை மாற்றிக்கொள்ளும் மாடஸ்டியை முன்னால் இருத்தி இரசிக்கும் விபரீதமான எண்ணம் வேண்டாமே நண்பரே !

   Delete
  3. இது அநியாயம். கிட்டின் நிலைமை என்ன ஆகும். நெடு நெடு என்று வளர்ந்த பையனை வைத்துக் கொண்டு, டெக்ஸ் டூயட் பாடுவாரா. டூ மச்.

   Delete
  4. ஏங்க. எடிட்டர் நாற்காலியில் பத்மநாபன் உட்கார்ந்து கொள்ளும் போது. டெக்ஸ் உடன் மாடஸ்டி முன்னால் உட்காரக் கூடாதுங்களா? அப்படிப் பார்த்தால் அதுவுமே விபரீதமான நிலைமை தானே?

   Delete
  5. பல்லாண்டு வாழ்க படத்துல தலைவர் திருடர்களை திருத்தும் கடமை தவறாத கண்ணியமான போலீஸ் அதிகாரி.அவர் ஹீரோயின் கூட டூயட் பாடலீங்களா?ஹீரோயின் கனவுல. அது மாதிரி இது ஒரு கற்பனை.

   Delete
  6. பத்து சார், உங்கள் எடை எவ்வளவு? எடி நாற்காலியில் உட்கார போறது நீங்க ஒருத்தர் தான். குதிரையில் என்ன முன்சீட்டு? பாவம் அது. அப்படி பார்த்தா கார்சன் உட்காரட்டும். டெக்ஸ் எப்போ ஷாம்பு போட்டார், அஃப்டர் ஷவேவ் போடுறாரா? இதெல்லாம் தெரியாம மாடஸ்டி எப்படி குதிரையில் ஏற்றுவது? ஓரு நியாயம் வேணாமா?

   Delete
  7. யுவர் ஆனர். தளத்தில் எழும், எழக்கூடிய எதிர்ப்புகளை முன்வைத்து மாடஸ்டியை முன் சீட்டில் இருந்து பின்சீட்டுக்கு மாற்றிக்கொள்கிறேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

   Delete
  8. ஷாம்பூ, ஆப்ஃடர் ஷேவ் போடறது இருக்கட்டும் முதல்ல குளிக்க வேண்டாமா? என்ன கொடுமை சார் இது

   Delete
  9. முன் வச்ச காலை, பின் வைக்கக் கூடாது சார்.

   Delete
  10. ///ஷாம்பூ, ஆப்ஃடர் ஷேவ் போடறது இருக்கட்டும் முதல்ல குளிக்க வேண்டாமா? என்ன கொடுமை சார் இது///

   படு ரகசியமாக இருந்ததை இப்டி பப்ளிக்கா உடைச்சிட்டீங்களே.!

   Delete
  11. இந்த குளியல் கேள்வியை தான் டெக்ஸ்சிடம் கேட்க போகிறேன். என்ன சொல்லறாரு பார்க்கலாம். மாடஸ்டி பின் சீட்டில் உட்கார்வது நல்லது. கப்பு, கிப்பு அடித்தாலும் மூக்கை மூடிக்கலாம்.

   Delete
  12. /////பத்து சார், உங்கள் எடை எவ்வளவு? எடி நாற்காலியில் உட்கார போறது நீங்க ஒருத்தர் தான். குதிரையில் என்ன முன்சீட்டு? பாவம் அது. அப்படி பார்த்தா கார்சன் உட்காரட்டும். டெக்ஸ் எப்போ ஷாம்பு போட்டார், அஃப்டர் ஷவேவ் போடுறாரா? இதெல்லாம் தெரியாம மாடஸ்டி எப்படி குதிரையில் ஏற்றுவது? ஓரு நியாயம் வேணாமா?////

   ஹா ஹா ஹா!!! அட்டகாசம்!! :)))))))

   Delete
 41. 1) எடிட்டர் குல்லா - ஓ நோ.


  2) டெக்ஸ் & கார்வின் (கொடியவர்களிடம் இரக்கம் காட்ட மாட்டார்கள்)

  3) .........

  ReplyDelete
 42. உள்ளேன் ஐயா..!!

  ReplyDelete
 43. ஒரு நாள் நான் எடி ஆனால்.

  1. பழைய விற்காத கி.நா.புத்தகங்களை 50% தள்ளுபடி அறிவித்து தள்ளிவிடுவேன்.

  2. புதிய நாயகர், நாயகிகளை அறிமுகம் செய்வேன், ஆனால் பக்கா ஆடியன்ஸ் poll செய்து, தமிழில் அப்பீல் ஆகக் கூடியவர்களை மட்டும் தேர்வு செய்வேன். For starters, உலக மகா நக்கல் நாயகனான Dead Pool, சிரஞ்சீவி வேதாளர், பாண்டஸி ஆனால் குடும்ப சென்டிமெண்டில் ஹிட் அடித்த சாகா (இமேஜ் காமிக்ஸ் நிறுவன வெளியீடு)
  While dreams are many, budget is low என்ற ரியாலிட்டி புரிந்து, சில இதழ்களின் காப்பி ரைட்ஸை வாங்கி தமிழில் வெளியிடுவேன்.
  3. வாசகர்கள் பலரிடம் பழைய புத்தகங்கள் இல்லை. Demand அண்ட் pre ordering பயன்படுத்தி most wanted issues மட்டும் மறுபதிப்பு செய்வேன். பரணி சார் இப்போதைய பள்ளி மாணவ, மாணவியர்களிடம் எப்படி தமிழ்க் காமிக்ஸ் popularize செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார். லாண்ட்மார்க்கின் புண்ணியத்தில் cinebook பத்தி ஏராளமான பேருக்கு தெரியும். அவை நம் தாய்மொழியில் கிடைக்கும் என்ற சங்கதியை இயன்ற அளவுக்கு மார்க்கெட்டிங் செய்து, மற்றும் காமிக்ஸ் சம்பந்தமான மேற்சண்டிஸ் ஐட்டம்களை நம் இணைய தளத்தில் லிஸ்ட் பண்ணுவேன்.

  முடிஞ்ச வரைக்கும் எமோஷனல் அல்லாமல் லாஜிக்கல் அண்ட் நடக்கக்கூடிய விஷயங்களை பதிவு செய்துளேன், ஆனால் இதெல்லாம் குறைத்து மூன்று மாதங்கள் யாரும் ஆட்சியை காவுக்காமல் எடி பதவியில் உட்கார வைத்தால் possible. பைனலாக எடி நாற்காலியிடம் ஒரு சலூட் வைத்து ஓடி வந்துடுவேன் உப்புமா செய்ய.

  ReplyDelete
  Replies
  1. ஆடியன்ஸ் poll செய்து புது நாயகர் தேர்வு, பழைய புக்ஸ் டிமாண்ட் அண்ட் pre ordering இரண்டுமே நல்ல ஐடியா தான். சூப்பர் சகோதரி.

   Delete
  2. தேங்க்ஸ் குமார். ஆல்ரெடி இருக்கும் விஷயங்கள் தான். அவ்வளவாக யூஸ் செய்வதில்லை.

   Delete
  3. @ Anu

   சூப்பர் சகோ!! உங்கள் எண்ணங்களிலும் எழுத்துக்களிலும் தெறிக்கும் விஸ்தாரத்தன்மை வியக்க வைக்கிறது!! கடேசியாக உப்புமா செய்ய ஓடிவந்துவிடுவது - பக்கா ஹியூமர் சென்ஸ்!!! :))))))))

   Delete
 44. உப்புமாவுக்கு நீங்கதான் brand ambassadorங்களா?

  ReplyDelete
  Replies
  1. எஸ், இப்போதைக்கு ஊரடங்கு முடியும் வரை உப்புமாவே துணை. பை தி பை brand அம்பாசடர்கு payment தருவீங்களா? இப்பவே சொல்லிட்டேன் பழைய உப்புமா ஏற்றுக்கொள்ளப்படாது.

   Delete
  2. ரொம்பவே உஷாரா இருக்காங்களே

   Delete
  3. EBF ல் எல்லாருக்கும் ஒரு ரவுண்ட் பன் வாங்கி வரவும்.அதுதான் ஒரு நல்ல ப்ராண்ட் அம்பாசிடருக்கு அழகு.:-)

   Delete
  4. இல்லாவிட்டால் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பாகு

   Delete
  5. தேங்க்ஸ் சகோஸ். முதலில் கொஞ்சம் மைசூர் பாகு, அப்பறம் ஈரோடு ஸ்பெஷல் பன், கடைசியா அன்போடு ஒரு மசாலா டீ. இந்த dealing பிடிச்சிருக்கு. Oh எஸ், எல்லோருக்கும் இது ஓகே என்றால் வாங்கிடலாம்.

   Delete
  6. அதுல இருக்க உள்குத்த கவனிங்க. " EBF ல எல்லோருக்கும் " note that point.

   Delete
 45. All 3 questions are impossible hypotheses sir. May be the first one plausible (as done by Times of India)

  ReplyDelete
 46. 2.ஒரேயொரு சாகசத்தினில் மட்டும் TEX-ன் துணையாக கார்சனுக்குப் பதிலாய் வேறு நாயகர் / நாயகி யாரையேனும் தேர்வு செய்திடும் உரிமை உங்களுக்கு வாய்த்தால் - யாரைத் தேர்வு செய்வீர்கள் ? And ஏன் ? (நமது அணிவகுப்பின் மக்களில் இருந்து மட்டுமே தேர்வுகள் ப்ளீஸ் )
  தோர்கல் அண்ட் டெக்ஸ் அட்டகாசமான காம்பினேஷன். இந்த மார்வெல், டிசி crossover கதைகள் நிறைய படித்துவிட்டதால், medieval fantasy to wild wild west period crossover மிக விறுவிறுப்பாக இருக்கும் என்று நினைக்கிறன். டெக்ஸ் தோர்கலை ஓரு சிவப்பிந்தியன் என்று தப்பாக நினைத்து, பின்னர் மாயாஜாலமற்ற வன்மேற்க்கை அவருக்கு அறிமுகம் செய்வார். இருவரும் நிகரான பலசாலிகள். Jetsons-flintstones crossover போலவே இருக்கும். தோர்கலும் கொஞ்சம் நிம்மதியா இருப்பார். மனுஷனுக்குத்தான் எவளோ சோதனைகள்.

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே முக்காவாசி கதைகள் பூக்கூடைகளாகவும்,பூச்செடிகளாகவும் தானே இருக்கு.. நீங்க ஒரு பூமார்கெட்டுக்கே அடிப் போடறீங்க போல.. காதுகள் தாங்காது சாமீ...

   Delete
  2. சும்மா ஒரு ஐடியா தானே. கலவரப்படாதீங்க.

   Delete
  3. அனு சகோ...

   வித்தியாசமான சிந்தனை!! செம!! :)

   Delete
 47. அப்படியே எனக்கு சில crossover கதைகளை suggest செய்யவும்

  ReplyDelete
  Replies
  1. அதிகாரி கதைகள்லே மூனுக்கு ஒன்னு அப்பிடித் தானே இருக்குது.. ஏலியன்ஸ், டைனோசர், மம்மி இவுங்கதானே வில்லன்கள்..

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. இப்போ calamity jane கிராபிக் நாவல் படிச்சுக்கிட்டு இருக்கேன். முடிந்ததும் சில crossoverகள் suggest செய்கிறேன். மற்ற நண்பர்களும் கொஞ்சம் suggest செய்யலாம். தெரியாத நல்ல கதைகள் தெரியவரும்.

   Delete
 48. கீழ்வரும் பதிவு எடிட்டர் தொப்பி அணிந்த பரணிதரன் அவர்களின் பதிவு என்பதை அறிவித்து கொண்டு..

  *பாய்ந்து வரும் சிங்கம்*


  நண்பர்களே,

  வணக்கம்..நீண்ட நாட்களாக நமது வாழைப்பூ வடை வீரர்கள் போராடி கொண்ட இருந்த வேண்டுக்கோளுக்கு செவி சாய்க்கும் நேரம் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். என்ன புரியவில்லையா...?!

  எனது பயணம் ,எனது புராணம் ,ஏற்கனவே இதழில் படித்து தெரிந்தவை தான் இதை மீண்டும் ஒரு புத்தகமாக்கி நமது வாசகர்கள் தலையில் இட வேண்டுமா என்ற நினைப்பின் காரணமாகவே இதுவரை

  *சிங்கத்தின் சிறுவயதில்*

  தொகுப்பை பற்றி சிந்திக்காமல் இருந்தேன்.மட்டுமில்லாமல் ஒரு தொடர் முடிவடையாமலே அதனை தொகுப்பாக்குவது தான் எவ்வாறோ என்ற நினைப்பும் மண்டைக்குள் .ஆனால் இங்கேயும் சரி ,புத்தகவிழாக்களில் நேரிலும் சரி சிங்கத்தின் சிறுவயதில் தொகுப்ப்புக்கான வினா மட்டும் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருந்து வருகிறது.. சரி இதற்கு மேலும் நமது நண்பர்களை ஏமாற்றவேண்டாமே என்ற எண்ணம் சில தினங்களாக மனதினுள் உருவாகி கொண்டே வருவதால் அதற்கான வேலையும் புலர்ந்து விட்டதாக நினைக்கிறேன்..( ஆந்தை கண்ணரின் சுய புராணத்தை இங்கே பாடுவது போதாது என்று தொகுப்பு வேறா என்றும் சில நண்பர்கள் மனதினுள் நினைப்பதும் புரிகிறது ) ம்மே என்றாலுமே கூட பெரும்பான்மையின் எண்ணங்கள் படி இதுவரை வந்த சிங்கத்தின் சிறு வயதில் கட்டுரையையாவது தொகுப்பாக வெளிவரவேண்டும் என்பதாகவே இருப்பதால் விரைவில் *"சி.சி.வயதில்" புத்தகமாக வர இருக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்

  கட்டுரையை முழுமையாக தொடர்ந்து முடிந்த பின் தொகுப்பாக விடலாமே என்ற சிலரின் எண்ணமும் புரிந்துணர்ந்தாலும் காலதூர இடைவெளி இன்னமும் எத்துனை தூரம் பயணிக்க இருக்கிறதோ என்பது எனக்கே தெரியாத காரணத்தால் இதுவரை சமைத்த சமையலை முதலில் பறிமாறி பசியாற்றிவிடலாமே என்ற சிந்தனையின் காரணமாகவும் இந்த முதல் தொகுப்பு விரைவில் உங்கள் கைகளில் தவழ உள்ளது.பக்கங்கள் எத்துனை? கறுப்பு ,வெள்ளையா ,வண்ணமா ,விலை ,என்ன அளவு என்பதை எல்லாம் அறிந்து கொள்ள கொஞ்சமே கொஞ்சம் காத்திருங்கள் நண்பர்களே..

  அதே போல் இனிவரும் காலங்களில் முடிந்த அளவு மாதந்தோறும் வரும் இதழ்களில் சிங்கத்தின் சிறு வயதில் தொடர் தவறாமல் தொடர முயற்சிக்கிறேன்..

  மீண்டும் சந்திப்போம்..

  Bye ..guys ..See you around.

  ReplyDelete
  Replies
  1. தலீவரே...

   அட்டகாசம்!!! பின்னிப் பெடல்!!!

   அப்படியே எடிட்டரின் ஸ்டைலில் எழுதி கலக்கிப்புட்டீங்க போங்க! குறிப்பா அந்த சுய எள்ளல், கருப்பு-வெள்ளையா கலரான்னு ரகசியம் காப்பதுன்னு - செம செம!! :)))))

   Delete
 49. XIII - உங்களுக்கு என்னைக்கு தான் பழசெல்லாம் ஞாபகம் வரும்? சீக்கிரம் யோகா செஞ்சி வரவழிங்க. எதுவும் ஒர்க் அவுட் ஆகலை என்றால் என் கிட்ட வாங்க. ராஜராஜன் காலத்தில பண்ண புதினா சட்னி இருக்கு, முகர்ந்து பார்த்தா மூணு ஜென்மம் ஞாபகம் வரும்.

  சிக் பில் - சைடு ஹீரோவாகவே காலம் தள்ளுறீங்க, சீக்கிரம் ப்ரோமோஷன் வாங்குங்க.
  ஸ்பைடர் - கலர் சாகசங்களில் எப்போ வருவீங்க?
  மாடஸ்டி - வில்லி கார்வினை நீங்க வேண்டும் என்றே friendzone பண்ணுறீங்க?
  ஸ்டெல்லா (ஜானி நீரோவின் செகரட்டரி ) உங்க சம்பள உயர்வு பத்தி ஜானி கிட்ட பேசினீங்களா? கடைசியா என்ன சம்பளம் கொடுத்தார்?
  லார்கோ - தத்து எடுக்க வாட் இஸ் தி procedure? இவளோ தத்தியா இருக்கும் உஙகளுக்கு எதுக்கு இந்த சொத்து?

  கடைசியா டெக்ஸிடம் சில கேள்விகள் சமீபத்தில் எப்போ குளிச்சீங்க? அந்த மஞ்சள் சட்டையை எப்போ, எங்க துவைச்சீங்க? ஆதாரம் இருக்கா?

  ReplyDelete
  Replies
  1. ////சமீபத்தில் எப்போ குளிச்சீங்க? அந்த மஞ்சள் சட்டையை எப்போ, எங்க துவைச்சீங்க? ஆதாரம் இருக்கா?////

   ஹா ஹா ஹா!! :)))))))


   ////
   ராஜராஜன் காலத்தில பண்ண புதினா சட்னி இருக்கு, முகர்ந்து பார்த்தா மூணு ஜென்மம் ஞாபகம் வரும்.////

   செம செம!! :)))))))))

   Delete
 50. /// ராஜராஜன் காலத்தில பண்ண புதினா சட்னி இருக்கு, முகர்ந்து பார்த்தா மூணு ஜென்மம் ஞாபகம் வரும் ///

  கூடவே உங்க ஞாபகமும் வரும். கொலவெறியும் சேர்ந்து வரும்.
  எச்சூஸ்மீ. சாரோட பேரும், மொபைல் நம்பரும் ப்ளீஸ்.

  ReplyDelete
  Replies
  1. ஆத்துக்காரர் இன்னைக்கு பண்ண புளி - பீர்க்கங்காய் சட்னியில் மயங்கி எட்டு மணிக்கே தூங்கிட்டார். ஓரு வேளை எழுந்தால், நீங்க விசாரிச்சதா சொல்றேன்.

   Delete
 51. Replies
  1. Mistake பண்ணும் அளவிற்கு நீங்க ஒன்றும் சொல்லவில்லை. நான் உரிமையோடு செய்யும் நக்கலுக்கு பதில் போட்டிங்க.

   Delete
 52. 1.எடிட்டர் குல்லா???

  நோ கமெண்ட்ஸ்!

  2.டெக்ஸ் சோடி?

  சிக்பில்... டெக்ஸின் அதிரடி+ சிக்பில்லின் பொறுமை! இருவரும் அரிசோனாவின் மூலை முடுக்குகளை அறிந்தவர்கள்! காம்பினேசன் கலக்கும்.

  3.ஹலோ சிக்பில் டாக்புல்ல எப்படி கண்டும் காணாமலும் போறீங்க??? (மற்ற யாரிடம் கேட்டாலும் விவாதம் வரும்)

  ReplyDelete
 53. ///
  1.ஒரேயொரு நாள் மட்டும் இந்த எடிட்டர் குல்லாயை உங்கள் தலைகளில் அணிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டினால் - நீங்கள் செய்திடக்கூடிய 3 செயல்கள் என்னவாக இருக்குமோ ? ///

  1. நிரந்தர எடிட்டர் ஆகுறதுக்கு வாய்ப்பிருக்கான்னு பாக்குறது.. ஹிஹி..!

  2. மாடஸ்டிக்கும் ராமையாவுக்கும் கல்யாணம் பண்ணிவெச்சி , சீதனமா அந்த பென்டாட்டே கோஷ்டியையும் சேத்து திரும்பி வரமுடியாத இடத்துக்கு (ஒரு கதையில மதியில்லா மந்திரி போய் மாட்டிக்குவாரே) அனுப்பிட்டு .. இவங்களுக்கு எல்லாம் மனசுல மட்டும் இடம்னு சொல்லிடுறது.!

  3. இந்த நோட்டிஸை படித்தவுடன் ப்ரிண்ட் எடுத்து குறைந்தது நூநு பேருக்காவது அனுப்பாவிடில் துன்பம் வந்து சேரும்.. அனுப்பினால் நல்லது நடக்கும்னு பிட் நோட்டிஸ் குடுப்பாங்களே ..

  அது மாதிரி ..

  நம்ம காமிக்ஸிலயும ஒரு பக்கத்துல .. இந்தமேரி இந்தமேரி இந்த காமிக்ஸ் புத்தகத்தை ஒரு பத்து பேருக்காச்சும் வாங்கி குடுத்தா நல்லது நடக்கும் இல்லைன்னா அம்புட்டுதான்னு ஒரு மெரட்டல் கடுதாசிய போட்டுவுட்ற வேண்டியதுதான்..!


  ஜோக்ஸ் அப்பாலிக்கா...

  1. மாதம் ஒரு கார்ட்டூன்

  2. வருடம் ஒரு NBS ரக ஷ்பெசல்

  3. எப்படியாது ஆஸ்டெரிக்ஸ் அண்ட் ஒப்ளிக்ஸை தமிழ் பேசவைக்க முடியுமான்னு முயற்சிசெய்வது.

  ReplyDelete
 54. ///ஒரேயொரு சாகசத்தினில் மட்டும் TEX-ன் துணையாக கார்சனுக்குப் பதிலாய் வேறு நாயகர் / நாயகி யாரையேனும் தேர்வு செய்திடும் உரிமை உங்களுக்கு வாய்த்தால் - யாரைத் தேர்வு செய்வீர்கள் ? And ஏன் ? ///


  ஜாலி ஜம்பர்.

  டெக்ஸ் வில்லர் எத்தனையோ கதைகளில் தனிமையில் போகும்போது குதிரையுடன் பேசியிருக்கிறார். ஆனால் டைனமைட் பதில் பேசியதில்லை. ஜாலி ஜம்பர் இருந்தால் கார்சன் இல்லாத சோலோ சாகச கதைகளில் பேச்சுத்துணையாக இருக்குமே.!


  உண்மையான ஆசை என்னவெனில்..

  கேப்டன் டைகர்..

  ஒரு கதையிலாவது இருவரும் இணைந்து வந்திடவேண்டும்.. பட்டாஸ்..!!

  ReplyDelete
  Replies
  1. நரேந்திரன்-வைஜெயந்தி & பரத்-சுசீலா- ஒரு நாவலில் (தங்கமலர்னு நினைக்கிறேன்) இணைந்து துப்பறிஞ்சாங்களே, அதுபோல....!!! டெக்ஸ்-டைகர் இணைந்து மிரட்டனும்...!!!! நல்லாத்தான் இருக்கும்!

   Delete

 55. 1.ஒரேயொரு நாள் மட்டும் இந்த எடிட்டர் குல்லாயை உங்கள் தலைகளில் அணிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டினால் - நீங்கள் செய்திடக்கூடிய 3 செயல்கள் என்னவாக இருக்குமோ ?

  A.தமிழில் புதிதாக ஒரு தொடரை உருவாக்குவேன்.
  B.Crossover கதைகளைத் தேர்ந்தெடுப்பேன்.
  C.lion universe உருவாக்க முயல்வேன்.


  2.ஒரேயொரு சாகசத்தினில் மட்டும் TEX-ன் துணையாக கார்சனுக்குப் பதிலாய் வேறு நாயகர் / நாயகி யாரையேனும் தேர்வு செய்திடும் உரிமை உங்களுக்கு வாய்த்தால் - யாரைத் தேர்வு செய்வீர்கள் ? And ஏன் ? (நமது அணிவகுப்பின் மக்களில் இருந்து மட்டுமே தேர்வுகள் ப்ளீஸ் )

  ஒரு மாறுதலுக்கு நாம ஏன் எடிய அனுப்ப கூடாது?
  அவரும் பாரீஸ்படலம் நாயகர் தானே!

  3.கீழ்க்கண்ட நமது ஹீரோ / ஹீரோயினிக்களுக்கு போன் அடித்து ஒரேயொரு கேள்வி கேட்கும் வாய்ப்புக் கிட்டினால் - இன்னா கேப்பீங்கோ ? மறுமுனையில் இருப்போர் இவர்களாக இருக்கும் பட்சத்தில் :

  XIII - உங்களுக்கு மொத்தம் எத்தனை பெயர்கள்?
  சிக் பில் - டாக்புல்லுடன் குள்ளனையும் ஆர்டினையும் Exchange செய்ய விரும்புவீர்களா?
  ஸ்பைடர் - மாடஸ்டிய கடத்த முடியுமா?
  மாடஸ்டி - ஒரு சாகஸம் முழுக்க சேலைக் கட்டிவர முடியுமா?
  ஸ்டெல்லா (ஜானி நீரோவின் செகரட்டரி ) - உங்க செகரட்டரியா நான் வரலாமா?
  லார்கோ - Hello ஒரு ரூபாய்க்கு சில்லரை இருக்கா?

  ReplyDelete
  Replies
  1. // ஒரு மாறுதலுக்கு நாம ஏன் எடிய அனுப்ப கூடாது? //

   sema :-)

   Delete


 56. 1.ஒரேயொரு நாள் மட்டும் இந்த எடிட்டர் குல்லாயை உங்கள் தலைகளில் அணிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டினால் - நீங்கள் செய்திடக்கூடிய 3 செயல்கள் என்னவாக இருக்குமோ ?

  1. தலைக்கு மிலிட்டரி கட் செய்து முடியை குறைச்சுக்குவேன்..அப்பத்தான் குல்லாவை போட முடியும்

  2.உலகின் பிரபல காமிக்ஸ் நிறுவனங்களின் அழகிய ரிசப்னிஷ்ட் யுவதிகளின் ஈமெயில் முகவரியை பெறுவேன்

  3.அலுவலகத்தில் உள்ள டெய்லர் பணிபுரிபவர்கள் அனுப்பப்பட்டு கறுப்பு மசி,அதற்கான ப்ரஷ் போன்ற வஸ்துகள் அகற்றப்படும்..

  ( வேற உருப்படியா என்னா பண்ணமுடியும்ங்கறேன்..)

  ReplyDelete
  Replies

  1. //ஒரேயொரு சாகசத்தினில் மட்டும் TEX-ன் துணையாக கார்சனுக்குப் பதிலாய் வேறு நாயகர் / நாயகி யாரையேனும் தேர்வு செய்திடும் உரிமை உங்களுக்கு வாய்த்தால் - யாரைத் தேர்வு செய்வீர்கள் ? And ஏன் ? (நமது அணிவகுப்பின் மக்களில் இருந்து மட்டுமே தேர்வுகள் ப்ளீஸ் ) //

   ஆக்ஸா??

   கோச்சுக்காத தல!! ரொம்ப வறட்சியா இருக்கு!!! ஒரு கண்ணு உங்களுக்கு !!

   ஒரு கண்ணு ஆக்ஸாவுக்கு!!!


   Delete

  2. //இன்னா கேப்பீங்கோ ? மறுமுனையில் இருப்போர் இவர்களாக இருக்கும் பட்சத்தில் : //

   Xiii

   உங்களுக்கு போன் பண்ணி ஏதோ கேக்க நினச்சேன்..அது என்னான்னு இப்ப மறந்துபோச்சு!!!


   சிக் பில்

   அந்த இஸ்கூல் டீச்சர் இப்ப எங்க இருக்காங்க?


   ஸ்பைடர்

   முன்னாடி ஒருக்கா செஞ்ச மாதிரி இப்ப வாஷிங்டன் சிட்டியை ட்ரம்ப் அங்க இருக்கறச்சே எங்கனாச்சும் கடத்திட்டு போயிட முடியுமா? தாங்க முடியில!!!


   மாடஸ்டி

   32 கஜம் புடவை கட்டி ஒரு போஸ் கொடுத்துட்டு

   ஒரு பேப்பர் பாயோட டேட்டிங் போயி சில பேர் வாயை அடைச்சுட முயற்சி பண்ணமுடியுமா?

   ஸ்டெல்லா

   சொத்து நிறைய எம்பேர்ல எழுதிவச்சுட்டு எங்க பாட்டி இப்பத்தான் போய் சேர்ந்த்திச்சு..
   எனக்கு செகரட்டரியா வர முடியுமா?

   லார்கோ

   மார்கோன்னு படிச்சு தப்பா போன் பண்ணி தொலைச்சுட்டேன்...வைப்பா போனை..   Delete
  3. ///
   மாடஸ்டி

   32 கஜம் புடவை கட்டி ஒரு போஸ் கொடுத்துட்டு

   ஒரு பேப்பர் பாயோட டேட்டிங் போயி சில பேர் வாயை அடைச்சுட முயற்சி பண்ணமுடியுமா?///

   மாடஸ்டி ரிப்ளை : வாய்ப்பில்லை ராஜா.. கருவாடு ஒருநாளும் மீனாகாது..!


   ///மார்கோன்னு படிச்சு தப்பா போன் பண்ணி தொலைச்சுட்டேன்...வைப்பா போனை..///


   நானும் ஷனா ன்னு நினைச்சி போனை எடுத்துட்டேன்..போப்பா..!

   Delete
  4. செனா அனா, கண்ணா இது trolling la அடுத்த லெவல். இரவு 3.45 க்கு சத்தம் போட்டு சிரித்து விட்டேன். என்னா troll enna ஒரு டைமிங்.

   Delete
  5. @செனாஅனா

   மிலிட்டரி கட்'டில் ஆரம்பிச்ச சரவெடி சிரிப்பு மார்கோ வரை நிறுத்தவே முடியலை!! செம செம!! :)))))))))))))))

   Delete
  6. செனா அனா ஜீ...


   எடிட்டர் குல்லா....


   :-)))))))

   Delete
  7. செல்வம் அபிராமி @ email பதிலாக வாட்ஸ் அப் நம்பர் வாங்கிக்கோங்க. இது வாட்ஸ் அப் உலகம். :-)

   Delete
 57. ///கீழ்க்கண்ட நமது ஹீரோ / ஹீரோயினிக்களுக்கு போன் அடித்து ஒரேயொரு கேள்வி கேட்கும் வாய்ப்புக் கிட்டினால் - இன்னா கேப்பீங்கோ ? மறுமுனையில் இருப்போர் இவர்களாக இருக்கும் பட்சத்தில் :

  XIII
  சிக் பில்
  ஸ்பைடர்
  மாடஸ்டி
  ஸ்டெல்லா (ஜானி நீரோவின் செகரட்டரி )
  லார்கோ ///

  XIII - ஏனப்பா ஜேசனு.. எனக்கும் அந்த பெட்டி பார்னோவ்ஸ்கி புள்ளைக்கும் கன்னாலம் பண்ணிவெச்சியே.. தலையில அடிபட்டதுல அதைகூட மறந்திட்டியேப்பா.!? எப்படியாச்சும் இந்த இளஞ்சோடிய சேத்தி வெச்சிருப்பா.. புண்ணியமாப்போவும்.!

  சிக் பில் - என் செல்லாக்குட்டி கிட் ஆர்டினை பத்திரமா பாத்துக்கப்பா.. அப்படியே டாக்புல்லையும் பாத்துக்க..! ரெண்டுபேரும் எனக்கு ரெண்டு கண்ணு மாதிரி..! அப்புறம் அந்த லானா புள்ள வூடு எங்கிட்டு இருக்குன்னு தெரியுமா.. சும்மா ஜென்ரல் நாலேஜீக்காக கேக்குறேன்.!

  ஸ்பைடர்.- இம்புட்டு வலை வெச்சிருக்கியே.. அதைவெச்சி என்னிக்காச்சும் நாலு மீனு புடிச்சிருக்கியா..!?
  அப்புறம் இப்பதான் வேலைவெட்டி இல்லியே.. அந்த வலையில கொசுவலை பின்னி ஆர்டினியையும் பெல்ஹாமையும் சந்தை சந்தையா வித்துட்டு வரச் சொல்லலாமில்லியா.?

  மாடஸ்டி.. - இந்தாம்மே.. உனக்கெல்லாம் மனசாட்சியே கெடையாதா.. அந்த கார்வின் பய அப்படியென்னம்மா பாவம் பணிப்புட்டான்..?

  ஸ்டெல்லா - இனிமே எல்லா கதைகளிலேயும் ஸ்டெல்லா துப்பறியும்னு போடச்சொல்லும்மா.! பின்னே என்னவாம்.. பூரா வேலையும் பாக்குறது நீயி.. அந்தாளு சும்மா பூப்போட்ட அண்டடாயரப் போட்டுகிட்டு பேரு வாங்கீட்டு போயிடுறாப்ல.!

  லார்கோ - ஐயா.. ஐயால... ஒங்க ஆபீசுல எதுனா ப்யூன் வேலை அட்டென்டரு வேலைன்னு கெடைக்குமாங்கய்யா.. சம்பளம் முன்னபின்ன இருதாலும் செரிதான்.. ஜிலுஜிலுன்னு காலத்தை ஓட்டிக்குவேன் சாமீ..!

  ReplyDelete
  Replies
  1. KOK.. சிரிச்சு முடியலை! குறிப்பா மாடஸ்டி-கார்வின் - ஹாஹாஹா!! :))))))))))

   Delete
  2. கண்ணா, நல்ல கேள்விகள்.

   Delete
 58. 1 ,கலாமிட்டி ஜேனோட ஸ்பின் ஆப் ஒன்னு போட்டு ஸ்பின் ஆப்பு கேக்கறவங்களதிகைக்க வைப்பேன் 2டெக்ஸுக்கு துணையா டைகர் அனுப்பலாம் கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 59. இன்னும் ஒரு ஐடியா: நமது காமிக்ஸ் என ஒரு lion-muthu-comics App(ஆப்). அந்த Appல் நமது காமிக்ஸ் விற்பனை, வர உள்ள இதழ்களின் விளம்பரங்கள், முன்னோட்டம், அவ்வப்போது விற்பனை ஆகாத புத்தகங்களின் flash sale with நல்ல தள்ளுபடி விலையில் என இன்னும் பல ஆப்ஷன்களுடன்.

  ReplyDelete
 60. 1. அ)அனைத்து ஜீனியர், மினி, திகில் காமிக்ஸ்களும் அட்டகாசமான ரீப்ரின்ட்
  ஆ) சை-ஃபை கதைகள் உரிமை
  இ) மில்லினியம் ஸ்பெஷல் ரீப்ரிண்ட் கலரில் ( நான் வாங்கத் தவறி இன்றுவரை கண்ணாமூச்சி காட்டும் இதழ்)

  2. நம்ம லார்கோவின் ஃப்ரண்ட் சைமன் தம்பி. பெண் வாடையே படாத பரம யோக்கியர் & திருட்டு தில்லாலங்கடி ப்ளே பாய் தம்பி சேரும் காம்போ செமயா இருக்கும் :-))

  3. XIIII - உனக்கு எவன்ணே 13ஆம் நம்பரை பச்சை குத்தி விட்டான். 13ம் நம்பர் வீடு மாதிரியே உன் பொழப்பு ஆகிப் போச்சேண்ணே!!

  ReplyDelete
 61. 1.ஒரேயொரு நாள் மட்டும் இந்த எடிட்டர் குல்லாயை உங்கள் தலைகளில் அணிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டினால் - நீங்கள் செய்திடக்கூடிய 3 செயல்கள் என்னவாக இருக்குமோ ?

  உடனடியாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஆர்ச்சி, ஸ்பைடர் கதைகளை அடுத்தடுத்த மாதங்களுக்கு திட்டமிடுவது.... அப்படியே மரணமண்டலம் புத்தகத்தில் மறுபதிப்பு செய்வதாக குறிப்பிட்ட...குறிப்பிட்ட அந்த குண்டு புஸ்தகத்தை களமிறக்குவது (இன்னமும் இந்த பாக்கெட் சைஸ் குண்டு புக்கிற்கு, படு உற்சாகமான மார்க்கட் இருக்கிறது என்பதை நம்பித்தான் ஆக வேண்டும்)  2.ஒரேயொரு சாகசத்தினில் மட்டும் TEX-ன் துணையாக கார்சனுக்குப் பதிலாய் வேறு நாயகர் / நாயகி யாரையேனும் தேர்வு செய்திடும் உரிமை உங்களுக்கு வாய்த்தால் - யாரைத் தேர்வு செய்வீர்கள் ? and ஏன் ? (நமது அணிவகுப்பின் மக்களில் இருந்து மட்டுமே தேர்வுகள் ப்ளீஸ் )

  தானைத் தலைவன் டெக்ஸையும், தங்கத் தளபதி டைகரையும் வன்மேற்கின் களத்தில் இணையாக விட வேண்டுமென ஒரு அவா...


  3.இந்த லாக் டௌனில் பூரி போட்ட நேரங்கள் நீங்கலாய் ; தோசை வார்த்த வேளைகள் நீங்கலாய் ; பாத்திரங்கள் துலக்கிய தருணங்கள் நீங்கலாய் (ஆண்குலம் தானுங்கோ ) - எதையேனும் வாசிப்பது ; எங்கேனும் குறட்டை விடுவது என்று நாட்கள் ஓடுகின்றன ! அதன் மத்தியில் போனில் உள்ள பட்டியலைப் பார்த்து - யாரென்றே மறந்திருக்கக்கூடிய பெயர்களுக்கும் போன் அடித்துப் போடும் மொக்கைகளும் அடங்கும் தானே ? என் கேள்வி : கீழ்க்கண்ட நமது ஹீரோ ஃ ஹீரோயினிக்களுக்கு போன் அடித்து ஒரேயொரு கேள்வி கேட்கும் வாய்ப்புக் கிட்டினால் - இன்னா கேப்பீங்கோ ? மறுமுனையில் இருப்போர் இவர்களாக இருக்கும் பட்சத்தில் :

  XIII - பெலிஸிட்டியோட வாட்ஸ்அப் நம்பர் கிடைக்குமா ப்ரோ?

  சிக் பில் - எஷெரீப், ஆர்டினை விட அதிகமான பங்கு உங்களுக்கு இருக்கும் கதை ஏதாவது இருக்கா சிக்கி?

  ஸ்பைடர் - தலைவா, நீ எப்போ திரும்பி வருவ ராச? உன்னையும், பெல்ஹாமையும் காணம கண்ணு பூத்துப்போச்சு... நம்ம எடிட்டருக்கு ஒரு கடுதாசி போடுப்பா?

  மாடஸ்டி - வருஷத்துக்கு ஒருமுறை வந்தாலும் கூட, எடிட்டரோட முதல் காமிக்ஸ் நாயகியாக நீங்க இருக்கீங்க. கையில இருக்குற காங்கோவை கீழே வெச்சுட்டு இதுக்கு பதில் சொல்லுங்களேன்... உங்களுக்கு எத்தனை பாய் ப்ரண்ட்ஸ் இருக்காங்க அக்கா?

  ஸ்டெல்லா (ஜானி நீரோவின் செகரட்டரி ) - ஹாய் ஸ்வீட்டீ, நீயும் எத்தனையோ முறை பூப்போட்ட ஷார்ட்ஸ் போட்ட ஜானியை உஷார் பண்ண முயற்சி பண்ணிட்டே... ஒன்னும் நடக்கலை... அதனால் உனக்காகவே காத்திருக்கும் இந்த மாமனுக்கு ஒரு கடுதாசி போடுவியா?

  லார்கோ - தலையும், தளபதியும் உச்சத்தில் விளையாண்ட காலத்திலேயே, என் வழி தனி வழின்னு இருந்த புள்ளை நீ. உனக்கு மட்டும் பண மூட்டைகள்லாம் சுமையாக இருக்கு? டாலர் ராஜ்யத்தில் நீ மட்டும் தலைவனா இருக்குறியே, அதோட ரகசியம் இன்னா நைனா?

  நன்றி!

  ReplyDelete
 62. ஆக்சன் ஸ்பெஷல் வாசிப்பின் பின் மிஸ்டர் ஜெட் ஐ மீண்டும் வாசிக்க ஆவல் பிறக்கிறது சார். ஆவண செய்யுங்கள். மரணமண்டலம் கண்டிப்பாக ஒரு வாய்ப்பு தரலாம் சார்.

  பெண்டிங்கில் இருந்த இளவரசியார் கதைகள் படித்தாயிற்று அட ஓகே வாக தான் இருக்கிறது.

  ஐயோ ஒரு நாள் கூட உங்கள் குல்லாய் வேண்டாம் சார், அனைவரையும் திருப்தி படுத்த நம்மால் ஆகாது சார்.
  மேலும் நான் விரும்பும் அனைத்தையும் நீங்க கொடுக்கும் பொழுது புதிதாக என்ன செய்வது என்று தெரியவில்லை.

  உடைந்த மூக்காரை தலை கூட அனுப்பி பாடம் கற்றுக்கொள்ள சொல்லலாம்.

  ReplyDelete
 63. 1.ஒரேயொரு நாள் மட்டும் இந்த எடிட்டர் குல்லாயை உங்கள் தலைகளில் அணிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டினால் - நீங்கள் செய்திடக்கூடிய 3 செயல்கள் என்னவாக இருக்குமோ ?

  1.பிடித்த மறுபதிப்புகள் அனைத்தும் வெளியிட ஆசைப்படுவேன்
  2.நிலுவையிலுள்ள பாக்கி பணங்களை வசூல் செய்வேன்
  3.எடிட்டர் குல்லாவின் கணம் அறிந்து தங்களிடமே திருப்பி தந்து விடுவேன்

  2.ஒரேயொரு சாகசத்தினில் மட்டும் TEX-ன் துணையாக கார்சனுக்குப் பதிலாய் வேறு நாயகர் / நாயகி யாரையேனும் தேர்வு செய்திடும் உரிமை உங்களுக்கு வாய்த்தால் - யாரைத் தேர்வு செய்வீர்கள் ? and ஏன் ?

  டியுராங்கோவை தேர்வு செய்வேன் வலது கை இடது கை காம்பினேஷன் சூப்பராக இருக்கும்
  3.இந்த லாக் டௌனில் பூரி போட்ட நேரங்கள் நீங்கலாய் ; தோசை வார்த்த வேளைகள் நீங்கலாய் ; பாத்திரங்கள் துலக்கிய தருணங்கள் நீங்கலாய் (ஆண்குலம் தானுங்கோ ) - எதையேனும் வாசிப்பது ; எங்கேனும் குறட்டை விடுவது என்று நாட்கள் ஓடுகின்றன ! அதன் மத்தியில் போனில் உள்ள பட்டியலைப் பார்த்து - யாரென்றே மறந்திருக்கக்கூடிய பெயர்களுக்கும் போன் அடித்துப் போடும் மொக்கைகளும் அடங்கும் தானே ? என் கேள்வி : கீழ்க்கண்ட நமது ஹீரோ ஃ ஹீரோயினிக்களுக்கு போன் அடித்து ஒரேயொரு கேள்வி கேட்கும் வாய்ப்புக் கிட்டினால் - இன்னா கேப்பீங்கோ ?

  கண்டிப்பாக ஸ்டெல்லாவிடம் தான்
  ஸ்டெல்லா ஒவ்வொரு கதையிலும் உன்னை உதறிவிட்டு செல்கிற ஜானியை கடைசி நிமிடத்தில் ஓடிவந்து காப்பாற்றுகிறாயே என்ன காரணம் ஜானி மேல் காதலா அல்லது எஜமானன் விசுவாசமா  ReplyDelete
 64. நண்பர்களின் கவிஞர் மற்றும்பாடகர் அவதார் பார்த்தாச்சு எப்ப ங்க ்சார் உங்களில் யார் அடுத்த வில்லியம் வான்ஸ் போட்டி ஈரோட்டிலா கரூர்ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. பார்க்கலாம் சார் !

   Delete
 65. Dear Editor,

  I would like to answer this question though this is hypothetical.

  1.ஒரேயொரு நாள் மட்டும் இந்த எடிட்டர் குல்லாயை உங்கள் தலைகளில் அணிந்து கொள்ளும் வாய்ப்புக் கிட்டினால் - நீங்கள் செய்திடக்கூடிய 3 செயல்கள் என்னவாக இருக்குமோ ?

  a) Will work with Police IT wing and take definitive action on digital pirates of Lion/Muthu Comics. Will ensure such folks are severely punished and their names published in the blog as well as in our books so as to remain a lesson for the rest of them.

  b) Will streamline number of books to 2 a month plus one special edition every Quarterly plus two annuals for Lion and Muthu - elegancy and longevity over crowd of books !

  c) Will conduct a function for Mr.Maalaiappar and honor him with a fat purse for his contributions to our comic wrappers - same for Annachi also - will be done in public at a later date when situation is conducive to relaxation.

  ReplyDelete
  Replies
  1. மாலையப்பர் & அண்ணாச்சி கூட்டணியோடு இன்னும் இருவரைச் சேர்த்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் சார் !

   ஓவியர் சிகாமணி அதனில் ஒருவர் ! எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் நம்மிடம் பணியாற்றியவர் ; இடையில் ஒரு 6 மாசத்துக்கு மேத்தா காமிக்ஸுக்கு இடப்பெயர்ச்சி ஆனது நீங்கலாய் ! பின்னாட்களில் பிள்ளைகளைக் கரை சேர்க்கும் முயற்சியில் ஏதேதோ அல்லல்களைப் பட்டவர் ; வெகு சமீபம் வரையிலும் நமது அலுவலக மாடியிலேயே குடியிருந்த அசாத்தியத் திறமைசாலி !

   இன்னொருவர் அண்ணாச்சிக்கெல்லாம் சீனியரான பொன்னுச்சாமி ! 1987 முதலாய் முத்து காமிக்ஸ் எனது கைகளுக்கு வந்திட்ட வேலையினில் அங்கிருந்து மாற்றலாகி வந்தவர்களுள் இவரே சீனியர் ! அடுத்த 20 வருஷங்களுக்கேனும் ஆபீஸ் நிர்வாகத்தில், பண வசூலில், அரசுத் துறைகள் சார்ந்த பணிகளில் அசாத்தியமானதொரு தூணாய் நின்றவர் ! பெண்ணும், பையனும் சென்னையில் செட்டில் ஆன பிற்பாடு, அவர்களோடிருக்கும் பொருட்டு வேலையிலிருந்து விலகி விட்டார் ! ஆனால் விதியின் கோரம் - ஒரு சாலை விபத்தில் அந்தக் குருவிக்கூட்டில் பலியொன்றைக் கோரிட, இன்றைக்கு யாரோடும் ஒட்டுமின்றி, உறவுமின்றி தனிமையில் வாழ்ந்து வருகிறார் !

   Delete
  2. // விதியின் கோரம் - ஒரு சாலை விபத்தில் அந்தக் குருவிக்கூட்டில் பலியொன்றைக் கோரிட, இன்றைக்கு யாரோடும் ஒட்டுமின்றி, உறவுமின்றி தனிமையில் வாழ்ந்து வருகிறார் ! //

   :-( வருத்தமான விஷயம்! மனதிற்கு கஷ்டமாக உள்ளது!

   Delete
  3. வருந்தத்தக்க விஷயம் ஆசிரியரே நான் முதல்முதலில் லயன் ஆபிஸ் வரும்போது அட்ரஸ் தெரியாமல் நின்றேன் அப்போது என்னை தேடிவந்து அழைத்துச்சென்றவர் பொன்னுசாமி ஐயா தான் அவரின் நிலை மனதை கனக்க செய்கிறது

   Delete
  4. //
   c) Will conduct a function for Mr.Maalaiappar and honor him with a fat purse for his contributions to our comic wrappers - same for Annachi also - will be done in public at a later date when situation is conducive to relaxation. //

   நல்ல சிந்தனை. வரவேற்கிறேன் இந்த ஐடியாவை.

   Delete
 66. "மின்னும் மரணம்"-வர்ணஜால வானவில்லின் வயசு 5....!!!!

  #முத்து காமிக்ஸ்ல 25ரூ விலையில் "மின்னும் மரணம்"--வருகிறது என்ற அறிவிப்பே சிலபல லப்டப்களை எகிறச் செய்து இருந்தது. இருக்காதா பின்னே இந்த அறிவிப்புக்கு சில காலம் முன்பு வந்திரந்த கேப்டன் டைகரின் தங்க கல்லறை என்ற இருபாக அறிமுக சாகசம் வன்மேற்கின் மற்றொரு முகத்தை பிரதிபலித்து இருந்தது. இன்ஸ்டட் காபி போல இன்ஸ்டட் ஹிட் ஆனார் டைகர்.

  #தொடர்ந்து வெளியான இரும்புக்கை எத்தனை& பரலோகப்பாதை என்ற கதைகளை அந்தரத்தில் தொங்க விட்டிருந்தாலும் கூட மின்னும் மரணத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

  #25விலையில் மிக நீண்ட சாகசமாக மின்னும் மரணம் கருப்பு வெள்ளையில் மின்னிற்று. முதல் பக்கத்தில் தொடங்கும் டைகரின் ஓட்டம் கடேசி பேணல் வரை நீண்டது. ஆனாக்கா இணைய பரிச்சயம் இல்லாத அந்த நாட்களில் இந்த கதைக்கு இன்னும் மிக நீஈஈஈஈஈஈண்ட வால் இருப்பது அநேக ரசிகர்களுக்கு தெரியாது. தொடர்ந்த பாகங்கள் சிறையில் ஒரு புயல் & திசை திரும்பிய தோட்டா 2ம் எரிகிற தீயில் எண்ணெய் வார்த்தன.

  #இந்த சூழலில் வெளியான மெகா ட்ரீம் ஸ்பெசல்ல வந்த "காற்றில் கரைந்த கூட்டம்"-- என்ற தொடர்ந்த 3பாகங்கள் நம்மை எல்லாம் அரிசோனா-மெக்ஸிகோ எல்லைக்கே கூட்டிப்போனது. அத்தனை ரியாலிட்டி கதைக்களம். இப்படி போட்டிபோட்ட ஒவ்வொரு பாகமும் தோற்றுவித்த க்ளைமாக்ஸ் ஜீரத்தில் கடிபட்ட நகங்கள் கால் டன் தேறும்.

  #ஒருவழியாக முத்து 300 வது இதழிலான " புயல் தேடிய புதையல் "---மின்னும் மரணம் க்ளைமாக்ஸ் வெளியாகும் என்ற தகவல் பலரது வயிற்றில் பால் வார்த்தது. எதிர் பார்த்தது போலவே க்ளைமாக்ஸ் வேற லெவல். விளைவு..............,

  """""""""முத்துல ரொம்ப காலம் கோலோச்சிய இரும்புக்கை மாயாவிக்கு அடுத்து விற்பனை &வரவேற்பில் சாதித்து சொற்ப ஆண்டுகளிலேயே 2வது ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்ற நாயகரானார் டைகர்""""""""

  (டெக்ஸ் vs டைகர் என கெளபாய் ரசிகர்கள் அவ்வப்போது உரசிக்கொள்ளும் காரசாரமான விவாத மேடைகளும் தோன்றியது இதன் பிறகே).....

  ReplyDelete
  Replies
  1. #பொண்ணு பார்த்தாச்சி, நிச்சயம் பண்ணியாச்சி, ரிசப்சன் முடிஞ்சது, கண்ணாலமும் முடிஞ்சது; ஹனீமூன் எப்ப? எங்கே? என ஒலிக்கும் மாப்பிள்ளைகளின் ஏக்க குரலில் டைகரின் ரசிகர்கள் "தனித்தனியாக வந்த மின்னும் மரணம்- சில பாகங்கள் பலருக்கும் கிடைக்கல! ஒரே இதழாக இரத்தப்படலம் ஜம்போ போல போட்டே ஆகணும்!!!!"--என ஒலித்தன.

   #ஆண்டாண்டு காலமாக இந்த கோரிக்கையும் வலுப்பெற்று வந்தது.

   (மின்னும் மரணத்திற்கு இன்னுமொரு "ஜிலு ஜிலு" க்ளைமாக்ஸ் பாகம் Arizona love இருப்பது இணைய பரிச்சயம் பரவலான பின் எல்லோரும் தெரிய வந்தது) #2012கம்பேக்கிற்கு பின் கலரில் இதழ்கள் சக்கை போடு போட்டபின் "மின்னும் மரணம்" தொகுப்பும் கலரில் வேணும் வித் அரிசோனா லவ்-வுடன் என்ற கோசம் எடிட்டர் விஜயன் சாரின் காதுகளை வெகுவிரைவில் எட்டியது. இருப்பினும் கண்டும் காணாததுமாக கடந்து போய் கொண்டே இருந்தார் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்......!!!

   #மின்னும் மரணம் வந்தே ஆகணும் என டெக்ஸ் ரசிகர்களும் இணைந்து கொண்டனர் ஒரு கட்டத்தில்....! (உண்மைதான்பா நம்புங்க)

   #இந்த சூழலில் 2013 ஈரோடு புத்தகவிழாவில் 11-08-2013- ஞாயிறு அன்று மாலை4மணிக்கு குழுமி இருந்த சுமார் 15 நண்பர்கள் மின்னும் மரணம் முழுவண்ண தொகுப்புக்காக எடிட்டரை பிடிவாதத்துடன் நெருக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் மிடுக்குடன் மறுத்து வந்த அவரின் குரல் சற்றே தேய தொடங்கியதுடன் நண்பர்கள் சற்றே அழுத்தம் கொடுத்தனர். வந்ததே அந்த ஆனந்த அறிவிப்பு ,"2015ஜனவரியில் மின்னும் மரணம் இறுதி பாகத்துடன் சேர்ந்து வரும் ".......நண்பர்களின் உற்சாக ஆரவாரமும் கைதட்டல்களும் காதை பிளந்தன. மின்னும் மரணம் வெளிவர அஸ்திவாரம் போட்ட அந்த 15நண்பர்களில் நானும் ஒருவன் என்று கூறிக்கொள்வதில் காலரைத் தூக்கி விட்டு சற்றே பெருமிதம் கொள்கிறேன் ஃப்ரெண்ட்ஸ்!

   Delete
  2. #இத்தகைய பிரதித்திபெற்ற மின்னும் மரணம்- கலர் தொகுப்பு 2015 ஏப்ரல் 19ல் தமிழ் புத்தக சங்க விழாவில் இராயப்பேட்டை அரங்கில் வெளியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த்து.

   #மின்னும் மரணத்தின் வெளியீட்டு விழா எல்லா வகைல சிறப்பான ஒன்று! முதல் பிரமாண்ட தொகுப்பு; முதல் முதலாக தனித்த அரங்கில் வெளியிடப்பட்ட இதழ்! தமிழ் ரசிகர்கள் எல்லா இடங்களில் இருந்தும் வந்திருந்தனர்.

   #சீனியர் எடிட்டர் சார் வெளியிட இளைய தலைமுறை பிரதிநிதியாக ஜூனியர் எடிட்டர் பெற்று கொண்டார். முதல் சில பிரதிகளை டைகரின் தீவிர ரசிகர்கள் ரம்மி, புனித சாத்தான் மற்றும் பல டைகர் ரசிகர்கள் பெற்று கொண்டனர்.

   #தனிப்பட்ட முறையில் இதழை பார்த்து ஆனந்த ஆச்சரியத்தில் மூழ்கி போனேன் . உண்மையாகவே டெக்ஸ் கதைகள் கையில் ஏந்திய போது கிடைத்த மகிழ்ச்சியை விட பலமடங்கு அதிகம் திக்குமுக்காடிபோனேன். அன்றைய நாயகன் நிச்சயமாக டைகரா , இதழை அதகளப்படுத்தி இருந்த எடிட்டர் விஜயன் சாரா என்று என்னால் பிரித்து உணர இயலவில்லை நண்பர்களே!

   #அய்யா திரு செளந்திரபாண்டியன் அவர்களுடன் ஒரு கால்மணி நேரம் உரையாடியது அன்றைய தினத்தில் ஹைலைட் ., அய்யா அவர்கள் இப்போது நாம் ஒவ்வொரு ஹீராவிடமும் காட்டும் ஈர்ப்பு கண்டு வியந்து போனதாக தெரிவித்தார்கள்.

   #ஒன்னரை டன் தங்கத்தை சுமந்து 5ஆண்டுகள் ஓடிட்டது! எத்தனை காலமானாலும் நம்ம நினைவுகளில் வானவில்லாக ஜொலிக்கும் இந்த இதழ்!

   (இந்த வாரம் இந்த இதழுடன் மீண்டும் புதையல் எடுக்க போகிறேன்)

   Delete
  3. இப்படிப்பட்ட இந்த இதழ் என்னிடம் இல்லை... 😭😭😭

   Delete
 67. வினா 1

  நான் ஒரேயொருநாள்...

  1. ஏற்கனவே 'டைப் செட்' பண்ணப்பட்டிருக்கும் கதையொன்றின் காப்பியை வாங்கி, எடிட் பண்ண முயற்சிப்பேன்.

  2. நீண்ட நாட்களாக நண்பர்கள் கேட்டுக்கொண்டிருக்கும் (நீங்கள் இடமும் வலமுமாக தலையை ஆட்டிவரும்) சில பல கதைகளுக்கான ராயல்ட்டி விபரங்களைக் கேட்டு உத்தியோகபூர்வ மெய்ல் ஐடியிலிருந்து சில மின்னஞ்சல்களைப் பறக்கவிடுவேன். (வர்ற பதில்களை அடுத்த நாள் நீங்க வந்து படிச்சுக்குவீங்கதானே சார்?)

  3. ஒரேயொரு அடுத்த வெளியீட்டுக்கு ஒரேயொரு 'ஹாட் லைன்' எழுதிட ஆசை!
  கோகுலம்(ரேவதி), பூந்தளிர்(வாண்டு மாமா)னு ஆரம்பிச்சு உங்களோட 'ஹாட் லைன்' படிச்சே ஸ்கூல் லீவு லெட்டரைக்கூட சுவாரஸ்யமா எப்படி எழுதறதுன்னு ஓரளவுக்கு பழகிக்கிட்டவன் சார்!)
  ---------------------

  வினா 2

  1. டெக்ஸ்க்கு தோஸ்தாக இஸ்பைடரு : 'வலையில் சிக்கிய தலை' ன்னு டைட்டில் வைக்கலாம்!

  வினா 3

  டேஞ்சர் டயபாலிக்குக்கு: ''ஏன்யா நீ கெழவிகளைப் போட்டுத்தள்ளினே?'' (இப்பப்பாரு, ஒரேயொரு புக்கு வெளிவர வைக்கிறதுக்கு ஓராயிரம்தடவை கீழே விழுந்து விழுந்து கும்பிடவேண்டிக்கீது)

  ReplyDelete
 68. உண்மையில் மின்னும் மரணம் இதழை நான் கையில் வாங்கியவுடன் ஒரு கணம் அதிர்ந்து போனேன், எனக்கு மிகவும் பிடித்த நாயகர்களுள் ஒருவர் டைகர். அந்த இதழின் உருவாக்கம் வேற லெவல்.

  ReplyDelete
 69. நண்பர் பொடியனின் கீழ்கண்ட கமெண்ட் லேசாய் கற்பனையைக் கிளறிவிட, எடிட்டர் இஸ்கூல் படிக்கும்போது லீவு லெட்டர் எழுதியிருந்தால் எப்படியிருக்குமென்று யோசித்ததன் பலனாக :

  ////உங்களோட 'ஹாட் லைன்' படிச்சே ஸ்கூல் லீவு லெட்டரைக்கூட சுவாரஸ்யமா எப்படி எழுதறதுன்னு ஓரளவுக்கு பழகிக்கிட்டவன் சார்!///

  வாத்தியார்களே!

  வணக்கம்!! உலகமே ஒரு இனம் புரியாத காய்ச்சலின் பிடியில் சிக்கித் திணறிக்கொண்டிருக்க, எங்கள் ஊரிலோ இது பல்வலி காலம் போலும்!! இரண்டு நாளாகப் படுத்தியெடுக்கும் பல் வலியின் புண்ணியத்தில் - ரொமான்டிக் லுக்கு விடும் கவுண்டரைப் போல நான் வாயைக் கோணியபடிக்கே பால்கனியின் பக்கமாய் வந்து நிற்க, பக்கத்து வீட்டு பால்கனியிலிருந்தும் அதே கோணலான ரொமான்டிக் லுக்! அந்த யுவதிக்கும் கிட்டத்தட்ட அதே பல்லில் வலி என்பதை அவரது வாய் கோணலின் வாயிலாக ஸ்பஷ்டமாகவே உணரமுடிந்தது!! அந்தப் பெண்ணைப் பழித்துக்காட்டத்தான் முகத்தை அப்படி நான் அஷ்டகோணலாக வைத்திருப்பதாக அவர்கள் நினைத்துவிடக்கூடாதே என்ற பயத்தில் அவசரமாக வீட்டுக்குள் பாய்ந்தவன், அடுத்த நொடியே எழுத ஆரம்பித்ததுதான் இந்த லீவு லெட்டர், இத்யாதிகளெல்லாம்!! oh yes!! அடுத்த இரண்டு நாட்களுக்கு நான் பள்ளியின் பக்கமே எட்டிப்பார்க்கப் போவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள ஆக்ஸ்போர்டு யுனிவர்சிடியில்தான் நீங்கள் வாத்தியார் படிப்பை முடித்திருக்க வேண்டுமென்ற அவசியமெல்லாம் இல்லைதான்! இதுதான் நிஜமென்றிருக்க, இரண்டு நாட்கள் படுக்கையில் புரண்டபடிக்கே நான் Netflixல் படம் பார்க்கப்போவதாக நீங்கள் நினைத்துக்கொண்டால் நிச்சயம் அது என் குற்றமல்ல! Bye வாத்தீஸ் ....see you around !!

  ஏ.பி.கு : அந்தப் பக்கத்துவீட்டுப் பெண்ணின் பல்வலிக்கும் எனக்கும் யாதொரு சம்மந்தமும் நஹி ஹை!!

  இப்படிக்கு,
  தங்கள் கீழ்படிந்த மாணவன்,
  விஜயன்

  ReplyDelete
  Replies
  1. ///அந்தப் பக்கத்துவீட்டுப் பெண்ணின் பல்வலிக்கும் எனக்கும் யாதொரு சம்மந்தமும் நஹி ஹை///---- உட்குத்தோ???

   Delete
  2. நல்ல கற்பனை விஜய் அண்ணா. அந்த பக்கத்து வீடு சிட்டு யார்? விலாசம், விலாசம்.

   Delete
  3. ///அந்த பக்கத்து வீடு சிட்டு யார்? விலாசம், விலாசம்.///

   எடிட்டரின் விலாசம் கிடைச்சா போதும்! பக்கத்து வீட்டு பால்கனி தானே.. சுளுவா புடிச்சுடலாம்!! (ஆனால் இது நடந்ததெல்லாம் சற்றேறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு!)

   Delete
  4. ஹா...ஹா...! அவரே பல்வலினு இருக்காரு! உப்ப பட்டினி போடவும் ஐடியா பண்ணிட்டீங்களே சகோ!

   Delete
  5. EV நமது எடிட்டர் சாட்சாத் நமது எடிட்டர் எழுதியது போலவே இருந்தது. சூப்பர் சூப்பர்

   Delete
  6. எதற்கும் அந்த தெரு பெயர் சொல்லுங்க. ஓரு மீன் பாடி வண்டியில் போய் பார்த்திட்டு வரலாம்.

   Delete
 70. எனக்கு மின்னும் மரணம் ஓரு anti கிளைமாக்ஸ் இதழ். சூப்பர் புக். இந்த குண்டு புக் என்னிடம் தான் இருக்கு ஆனால் அது வந்த நிலை ரொம்ப சோகம். மின்னும் மரணம் புக்கை நான் முன்பதிவு செய்தாலும் கூரியர் டெலிவரி opt பண்ணது தவறாகிப் போனது. புக் சென்னையை வந்தடைந்த போது, flood
  எனக்கு மெயின் ஏரியா என்பதால் பெரிய கஷ்டம் எதுவும் இல்லை. நீர் வடிந்த பின் கூரியர் ஆஃபிஸில் இருந்து போன், நீங்களே வந்து பார்ஸலை வாங்குறது நல்லதுனு. போய் புக்கை வாங்கிய உடன் கண்ணீர் வந்திடுச்சு. கத்தியால் புக்கை கிழித்து உள்ள பணம் இருக்கானு பார்த்திருக்காங்க. ஹார்ட் பௌண்ட எடிஷன் so முதல் பக்கத்தை, கவர் கிழிச்சி, மேல டேமேஜ் பண்ண முடியல. கேப்டன் டைகர் செம்ம ஸ்டராங்.

  ReplyDelete
  Replies
  1. ////போய் புக்கை வாங்கிய உடன் கண்ணீர் வந்திடுச்சு. கத்தியால் புக்கை கிழித்து உள்ள பணம் இருக்கானு பார்த்திருக்காங்க. ஹார்ட் பௌண்ட எடிஷன் so முதல் பக்கத்தை, கவர் கிழிச்சி, மேல டேமேஜ் பண்ண முடியல. கேப்டன் டைகர் செம்ம ஸ்டராங்.///

   அட!! கொரியர் ஆபீஸில் இப்படியெல்லாம் கூட நடக்குதா?!!

   Delete
  2. மின்னும் மரணம் நமது காமிக்ஸ் இல் ஒரு மைல் கல். 4 இலக்க விலையில் வெளிவந்த முதல் இதழ். ஒரு பரபரப்பான வெஸ்டர்ன் படம் பார்த்த அனுபவம். நல்ல வேலை எனக்கு இந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை.

   Delete
  3. ஆமாம், Professional கூரியர் பெயர் அளவில் மட்டுமே. unfortunately, எனக்கு இரண்டு தடவை டெலிவரி செய்யாமல் மறந்து விட்டார்கள். புக்கு கிழிந்தது சைக்கிள் கேரியரில் பார்ஸலை வைத்ததாக பூ சுற்றினார்கள். அதனால் தான், 2016 முதல் எல்லா புக்ஸும் என் ஆத்துக்காரர் ஆபீஸ் போகும். கூரியர் டேமேஜ் ஆகிருந்தால் என் பர்சனல் ரவுடி நாசம் செய்திடுவார்.

   Delete
  4. // பர்சனல் ரவுடி நாசம் செய்திடுவார். // 🤭

   Delete
 71. அவர் கொஞ்சம் வேற மாதிரி. ஐய்யர்லயே ஒரு ரவுடி fellow (உப்புமாவை பார்த்தா மட்டும் நடுங்கும்).

  ReplyDelete
  Replies
  1. நீங்க இங்க ரவுண்ட் கட்றத பார்த்தா, நீங்களும் ஒரு ரவுடி ஃபெலோவோன்னு தோணுது ;)

   Delete
  2. // நீங்களும் ஒரு ரவுடி ஃபெலோவோன்னு தோணுது ;)// தோணுது இல்லை confirm :)

   Delete
  3. நாம எல்லாருமே ரவுடி பேபிஸ் தான். அய்யோ சங்கத்து ரகசியம் எல்லாம் வெளியே வருதே சூ சூ, 🤫

   Delete
 72. வணக்கம் பதிவிட்டு வருடங்கள் ஆகி விட்டது நிறைய இடைவெளிக்கு பிறகு
  1. A.கடல் சார்ந்த கதைகள் சிலவற்றை வெளியிட தேர்ந்து எடுப்பேன் பிரின்ஸ் கதைகளுக்கு பிறகு அது போல் எதுவும் பார்க்க முடியாததால்
  B. வேதாளர் கதைகள் கலரில்
  C. பழைய special இதழ்கள் போல கதம்ப ஸ்பெஷல் முத்து 50ஆம் ஆண்டு இதழுக்கு.

  2. Tex with tiger or magic wind
  Tex with tiger அதிரடி பிளஸ் அறிவார்ந்த கூட்டணி
  Tex with magic wind அதிரடி பிளஸ் அமானுஷ்யம்

  3.A.xiii - உங்க உண்மையான பெயர்
  என்ன
  B.சிக் பில்- என்னப்பா உன்னை ஹீரோவா போட்டுட்டு இப்போ டம்மி ஆகிட்டங்களே
  C.ஸ்பைடர்- அண்ணாச்சி உங்களுக்கு பிறக்கும் போதே காது இப்படித்தானா
  D. மாடஸ்டி- அம்மணி இனிமே நீ முழுக்க மூடிட்டே வாம்மா எப்படியோ இங்க சுவாமி விஜயனந்தா உனக்கு போர்த்தி தான் விட போறாரு
  E.stella- வயசானாலும் உன்னோட அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை
  F.largo- கடைசியா உண்மையிலேயே லவ் பண்ணிட்டியா அவ்ளோ தானா மெய்யாலுமே உன்னை நம்பலாமா இல்ல அடுத்த கதைல வேற பட்சியா சொல்லு

  ReplyDelete
  Replies
  1. Warm welcome back மஞ்சள் சட்டை மாவீரன்!

   Delete
  2. welcome back மாவீரரே!!

   Delete
 73. //Tex with magic wind அதிரடி பிளஸ் அமானுஷ்யம் // செம்ம combo

  //மாடஸ்டி- அம்மணி இனிமே நீ முழுக்க மூடிட்டே வாம்மா எப்படியோ இங்க சுவாமி விஜயனந்தா உனக்கு போர்த்தி தான் விட போறாரு// fact factu

  ReplyDelete
 74. தளம் ரொம்ப அமைதியாயிடுச்சு எல்லாரும் உப்புமா சாப்பிட்டுருப்பாங்களோ

  ReplyDelete
 75. இது அநியாயம் சத்யா சார். நானே ரொம்ப நாள் கழிச்சி இன்னைக்கு தான் இட்லி வெச்சேன்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு தெரியாத விஷயமில்லை சகோதரி இன்றைய இட்லி நாளைய உப்மா என்பது லா.மு (லாக்டவுன்க்கு முன்) லிருந்து வரும் தொன்மையான பழக்கமாகும்...

   Delete
  2. @Anu & Lighthouse~சரவணன்

   :))))))))

   Delete
  3. சரவணன் சார், இந்த வாரம் ஒன்லி சேமியா உப்புமா..

   Delete
 76. /// தோர்கலும் கொஞ்சம் நிம்மதியா இருப்பார். மனுஷனுக்குத்தான் எவ்ளோ சோதனைகள்.///

  உங்க உப்புமாவை விடவா?
  '
  /// கூரியர் டேமேஜ் ஆகிருந்தால் என் பர்சனல் ரவுடி நாசம் செய்திடுவார்///

  அப்படியும் மீறி ஆச்சுன்னா பெர்சனல் ரௌடியே டேமேஜ் ஆயிடுவார்..இல்லீங்களா?

  /// நானே ரொம்ப நாள் கழிச்சி இன்னைக்கு தான் இட்லி வெச்சேன்///

  /// இட்லி வெச்சீங்களா?. இல்லே இட்லின்னு பேர் வச்சிங்களா?///
  ஆத்துக்காரர்ைண்ட் வாய்ஸ். இந்த தளத்துல உள்ளவங்க எல்லாம் எவ்ளோ தைரியசாலிங்க. டக்கு டக்குன்னு உண்மைய போட்டு ஒடச்சுப்புடறாங்கோ.

  ReplyDelete
 77. அனு சகோ..

  இங்கிலீசுல கவிதைப் போட்டி வச்சிருந்தா உங்களுக்குத்தான் முதல் பரிசு கிடைக்க பிரகாசமான வாய்ப்புன்னு நேத்திக்கு உங்க இங்கிலீஸ் கவிதைகள் சிலவற்றை படிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன்!!
  ப்பா!! எவ்வளவு அருமையா எழுதியிருக்கீங்க!! செம்ம!!
  எனக்கு ஆங்கிலக் கவிதைகள் எல்லாம் அவ்வளவாக பரிட்சயமில்லை தான்.. ஆனாலும் நான் புரிந்துகொண்ட வகையில் உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றுமே ஒரு மெல்லிய அதிர்வலையை ஏற்படுத்தியதென்பது நிஜம்!!

  கலக்குங்க சகோ!!

  ReplyDelete
  Replies
  1. கவிதையா? எனக்கு தோசையே வட்டமா வராது...

   Delete
  2. ஒரு சில கவிதைகள் மட்டுமே படித்தேன்! அதில் 'The (c)hilly experience', 'Up up and away', 'My #1 lecturer' - இதெல்லாம் வேற லெவல்!!!

   Delete
 78. /// இன்றைய இட்லி நாளைய உப்மா என்பது லா.மு (லாக்டவுன்க்கு முன்) லிருந்து வரும் தொன்மையான பழக்கமாகும் ///
  இது திருவள்ளுவர் காலத்தில் இருந்தே வரும் வரலாறுங்க. திருவள்ளுவர் வாசுகி மேடம் செஞ்ச இட்லி உப்புமாவ சாப்பிடும் போது விக்கல் எடுத்து அவங்கள கூப்பிட, அவங்க கிணத்துல தண்ணி குடத்த கயிறோட விட்டுட்டு ஓடிவர, குடம் தண்ணியோட பாதி கிணத்துல கயித்தோட நிக்க, அந்த கதை வேர்ல்டு ஃபேமஸ் ஆச்சிங்களே?

  ReplyDelete