Powered By Blogger

Monday, April 20, 2020

லாக்டவுன் உ.ப.

நண்பர்களே,

வணக்கம். இன்றைக்கு நம்முள் எத்தனை பேர் பணிக்குத் திரும்பியுள்ளனரோ, தெரியலை - ஆனால் நாலே ஆட்களைக்கொண்டு பணியாற்ற முயன்ற நமது பைண்டிங் பிரிவினைப் பூட்டச் சொல்லி அதிகாரிகள் வலியுறுத்திவிட்டதால், இக்கட no பணி ! இன்னொரு 2 வாரங்களுக்கேனும்  வரிசையில் நின்று ரவுண்ட் பன்னை வாங்கும் போட்டிகளில் தான் பொழுதைக் கழித்தாக வேண்டும் போலும் ! நாட்களை நகர்த்துவது பெரும் பிரயத்தனமாய் இருக்கும் இந்த வேளையினில், ஆங்காங்கே நிறையவே பதிவுகளை பார்க்க முடிந்தது - காமிக்ஸ் வாசிப்பென்பது மெய்யானதொரு stress-buster ஆக உதவிடுவதாய் ! நமது தீவிர காமிக்ஸ் வாசகரும், முத்து நகரின் ஒரு மெகா தொழிலதிபருமானதொரு நெருங்கிய உறவினர் நேற்றைக்கு எனக்கு வாட்சப்பில் அனுப்பிய குறுந்தகவல் இது : 

"Annachi, I must have read at least 50 comics including Rathap Padalam in the lockdown. I have not read a single book otherwise ; no Sashi Tharoor ; no Bill Bryson ; no Frederick Forsyth. Thank you for keeping us us sane in this crazy time !"

ஆங்காங்கே FB -ல் ; வாட்சப் குழுக்களில் எதிரொலிக்கும் இது போன்ற பதிவுகளையும் சில நண்பர்கள் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருக்க - இந்த இருண்ட நாட்களிலும் ஒரு வெள்ளிக்கீற்றை இனம் காண முடிந்த சன்னமான மகிழ்ச்சி உள்ளுக்குள் ! "இவை என்றென்றும் சாஸ்வதமான சமாச்சாரங்களே ; என்றைக்கும் படிக்கவல்ல களங்களே"  - என்று நாம் அடிக்கடி  டமாரம் அடித்து வந்தாலுமே, நானே அதையெல்லாம்  - "உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக "  ரக விளம்பர யுக்திகளாகவே தான் பார்த்திடுவதுண்டு ! Yes of course - சில எவர்க்ரீன் கதைகளை நீங்கள் முச்சூடும் படிப்பதுண்டு என்பதில் ரகசியங்கள் இல்லை தான் ; ஆனால் இயந்திரகதியிலான நமது வாழ்க்கை ஓட்டங்களின் மத்தியில், வாசிப்புக்கென நேரம் ஒதுக்குவதே குதிரைக்கொம்பு ; இந்த அழகில், மீள்வாசிப்புக்கெல்லாம்  யாரிடம் இருக்கப் போகிறது நேரம் ? என்ற எண்ணமே மேலோங்கும் ! But lo behold - இதோ இந்த லாக்டௌன் நாட்கள் காமிக்ஸின் நிரந்தரத்தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டி வருவதை மகிழ்வோடு பார்த்திடும் போது, நமது காமிக்ஸ் தான் என்றில்லை - பொதுவாய் எந்தவொரு  'பொம்மை புக்' பரிச்சயமும்  இல்லாதோர் மீது அனுதாபமே தோன்றுகிறது ! எத்தனை ரம்யங்களை அவர்கள் நுகர்ந்திட இயலாதே போகிறது ? 

ரைட்டு....இந்த உ.ப.வின் முதல் கேள்வியானது : இந்த லாக் டௌன் நாட்களில் - ஜாலியான அரட்டை ; கும்மி, என்பதைத் தாண்டி, காமிக்ஸ் வாசிப்புக்கென உங்களுள் எத்தனை பேருக்கு நேரம் ஒதுக்க முடிந்துள்ளது guys ? இது சும்மா டைம்-பாஸ் கேள்வியே ; ஆகையால் பீலாக்களுக்கு அவசியமிராது ! Yes ; படித்தீர்களெனில் -

அதனுள் கார்ட்டூன்களுக்கு இருந்த இடம் கூடுதலா : கம்மியா ? 

அதிகாரிக்கென ஒதுக்கிய வாசிப்பு நேரம் கம்மியா ? கூடுதலா ?

என்னிடம் இன்னொரு கேள்வியுமே உண்டு :

இங்கு குழுமிடும் நீங்கள் சகலருமே காமிக்ஸ் ஆர்வலர்கள் ; 'பொம்ம புக் புரவலர்கள்' என்பதில் no doubts !! உங்கள் இல்லங்களில் ; உங்கள் நட்பு வட்டங்கள் மத்தியினில் உங்களது இந்த வாசிப்புப் பழக்கத்தை எவ்விதம் பார்த்திடுகிறார்களோ ? மாசா மாசம் கூரியரில் 'கொயந்த புள்ளே பொஸ்தவம்' வந்து சேரும் போது ; வாரயிறுதிகளின் ராப்பொழுதுகளில், பின்னூட்டமிட 'புளியாம்..புளியாம்' என்று போன் பொத்தான்களை அமுக்கிக் கிடக்கும் போது ; புத்தகவிழா நேரங்களில், ஈரோட்டு வாசக சந்திப்புத் தருணங்களில், மூட்டைகளைக் கட்டிக்கொண்டு 'ஜாலிலோ ஜிம்கானா' என்று நீங்கள் டாட்டா சொல்லிவிட்டுக் கிளம்பிட எத்தனிக்கும் போதெல்லாம் வீட்டில் கிட்டுவது என்னவாக இருக்கும் ?

Option A : கலாமிட்டி ஜேனின் #@*%&(@ பாணியில் 'அன்பான' குசல விசாரிப்புகள்  ?

Option B : " நான் ஒரேயொரு காக்ரா-சோளி கேட்டா அதுக்கு நொள்ளைன்னுட்டு இங்கே காசைக் கரியாக்க என்ன வேலைலாம் பாக்குது பாரேன் ?" என்ற முணுமுணுப்புஸ் ?

Option : C : 'இது பூட்ட கேஸ் ; என்னமோ பண்ணித் தொலைச்சுக்கட்டும் !'

Option D : "ஹை...புக் வந்துருச்சா ? வந்துருச்சா ? எனக்கு ஒண்ணு ?"


Option E : ச்சை...எனக்கு புக்கே பிடிக்காது ! 

தகிரியமாய்  நிஜமான பதில்கள் ப்ளீஸ் ?

Before I sign out - FB-ல் கண்ணில்பட்டதென தம்பி செந்தில் சத்யா அனுப்பியிருந்ததை இங்கே பகிர்ந்திடுகிறேனே :

Bye all...see you around !! Stay Home & Stay Safe !!

ஏ.பி.கு. (ஏக்கம்லாம் இல்லாத பின்குறிப்பு) 

போன பதிவில் தந்திருந்த அந்த 'இங்கிலீஷ் கவிதை' மொழிபெயர்ப்புப் போட்டிக்கு வியாழன் வரை டைம் உண்டு ! அது வரையிலும் முயற்சிக்கும் நண்பர்களின் ஆக்கங்களை ஜட்ஜ்  செய்திடாய் போகிறவரை, வியாழன் காலையில் நான் உங்களுக்கு அறிமுகம் செய்திடுவேன் !

அப்புறம் இனி வரும் இந்த லாக்டௌன் நாட்களின் ஒவ்வொரு பதிவிலும் ஜாலியாய் ஏதேனுமொரு backissue பற்றிய மீள்பார்வைகளை நடத்திடலாமா guys ? பொழுது போனது போலவும் இருக்கும் ; பழைய நினைவுகளை அசைபோட்டது போலவும் இருக்கும் ; அந்த இதழ்கள் வெளியான நாட்களில் இங்கே நம் வலைப்பதிவில் அரங்கேறிய லூட்டிகளை revisit செய்தது போலவும் இருக்கும் அல்லவா ? Hot & Cool ஸ்பெஷல் இதழ் நினைவுள்ளதா guys ? அதனிலிருந்து ஆரம்பிப்போமா அடுத்த பதிவு முதலாய் ? உங்களிடம் அந்த புக் இருக்கும் பட்சத்தில், தூசி தட்டி எடுத்து அதை இஷ்டைலாய் கையில் ஏந்தியபடிக்கு ஒரு selfie அனுப்புங்களேன் - அவற்றை post செய்த கையோடு அந்த இதழை மறுக்கா அலசிடலாம் !  

332 comments:

 1. வந்திட்டேன் சார் 🙏🏼
  .

  ReplyDelete
 2. நாங்களும் வந்துட்டோம்ல....பத்துக்குள்ள.

  ReplyDelete
 3. டைகரின் இரும்புகை எத்தன்...பரலோக பாதை ,இரத்த தடம் படித்து முடித்த கையோடு இங்கே வருகை தந்தால் புது புதிவு மகிழ்ச்சி சார்..:-)

  ReplyDelete
 4. பத்து, இன்னிக்கு +1

  ReplyDelete
 5. ஊரடங்கு மே 3வரை நீட்டிக்கப்பட்டு விட்டது சார்.மீண்டும் வீட்டிற்குள் குண்டுச்சட்டி தான் ஓட்டவேண்டும்.

  ReplyDelete
 6. Option F: என்ன கர்மத்தையாவது படிச்சுட்டு போங்க, ஆனா வூட்டுக்குள்ள இந்த பொம்ம புக்கு எதுவும் என் கண்ணுல படக்கூடாது.. ஆமாம், சொல்லிபுட்டேன்... கடையில வச்சு படிச்சுக்குங்க, வூட்டுல என் கண்ணுல பட்டுச்சு அடுப்புல போட்டுடுவேன்..

  ReplyDelete
 7. Option F காரணமாக வூட்டுல படிக்க முடியாதுங்ணா... எப்படியாவது ஊரடங்கு முடிச்சு வச்சா கடையில உக்காந்து பொம்ம புக் படிக்கலாம்...

  ReplyDelete
 8. காமிக்ஸ் வாசிப்புக்கென உங்களுள் எத்தனை பேருக்கு நேரம் ஒதுக்க முடிந்துள்ளது guys ?

  முதல் இரண்டு வாரங்களில் படிக்காத புத்தகங்களை படிக்க முடிந்தது..

  பிறகு இப்போது, கிடைக்கும் நேரங்களில் பழைய புத்தகங்களை மறு வாசிப்பு செய்து கொண்டு உள்ளேன்..

  ReplyDelete
 9. இன்னும் கொஞ்சம் பின்னாக்கி சென்று 2 ரூபாய் காமிக்ஸ் வந்த போது ரூபாய் 5 ல் கோடை மலர் தந்த காலத்தையும்,5 ரூபாய் வந்த போது 10 ரூ என்றும்.( ஸ்பெஷல்)அமர்க்களப் படுத்திய இதழ்களை பற்றி உரையாடியானால் நன்றாக இருக்கும் என்பது எண்ணம்....

  ReplyDelete
  Replies
  1. உண்மை நண்பரே...ஆனால் கைவசம் இருக்கும் இதழ்களை பற்றி நினைவுகள் இதழ்களின் விற்பனைக்கு உதவி ஆசிரியரின் கையிருப்பு இதழ்கள் குறைய உதவினால் மிகவும் நன்மை பயக்கும் அல்லவா...:-)

   Delete
  2. உண்மை தல! புக் இல்லாத பலரை ஏங்க வைக்கும் உரையாடல் ஆக இல்லாமல், ஓருவரேனும் வாங்கும் படி இருக்கட்டும்!

   Delete
 10. // இந்த லாக் டௌன் நாட்களில் - ஜாலியான அரட்டை ; கும்மி, என்பதைத் தாண்டி, காமிக்ஸ் வாசிப்புக்கென உங்களுள் எத்தனை பேருக்கு நேரம் ஒதுக்க முடிந்துள்ளது guys ? இது சும்மா டைம்-பாஸ் கேள்வியே ; ஆகையால் பீலாக்களுக்கு அவசியமிராது ! Yes ; படித்தீர்களெனில் -

  அதனுள் கார்ட்டூன்களுக்கு இருந்த இடம் கூடுதலா : கம்மியா ?

  அதிகாரிக்கென ஒதுக்கிய வாசிப்பு நேரம் கம்மியா ? கூடுதலா ? //

  அதிகாரிக்கே கூடுதல் நேரம் சார் 💪🏼🙏🏼

  கார்ட்டூன் கண்டிப்பாக இருக்கு சார் 👍🏼

  குரூப்பை ஆக்டிவாக வைத்திருப்பதே காமிக்ஸ்தானுங்க சார் என்பதை சொல்லிக்கொள்ள பெருமிதமாக இருக்கின்றது சார் 🙏🏼
  .

  ReplyDelete
  Replies
  1. குரூப்பை மட்டுமல்ல எங்களையும் சார்..:-)

   Delete
 11. ஆனால் நாலே ஆட்களைக்கொண்டு பணியாற்ற முயன்ற நமது பைண்டிங் பிரிவினைப் பூட்டச் சொல்லி அதிகாரிகள் வலியுறுத்திவிட்டதால், இக்கட no பணி

  #####


  ஆகா....:-(

  ReplyDelete
 12. அதனுள் கார்ட்டூன்களுக்கு இருந்த இடம் கூடுதலா : கம்மியா ?

  அதிகாரிக்கென ஒதுக்கிய வாசிப்பு நேரம் கம்மியா ? கூடுதலா ?

  பாகுபாடெல்லாம் கிடையாது.. அனைத்தையும் படித்துக் கொண்டு உள்ளேன்..

  உண்மையச் சொல்லனும்னா லக்கிலூக், சிக்பில் கதைகளே படிக்க தோன்றுகின்றன..

  சில பல காரணங்களுக்காக இன்று ஸ்மர்ப் கதைகள் படிக்கப் போகிறேன்..

  ReplyDelete
  Replies
  1. // சில பல காரணங்களுக்காக இன்று ஸ்மர்ப் கதைகள் படிக்கப் போகிறேன்..//
   சரோ ஹி,ஹி,ஹி......

   Delete
 13. இந்த கொரோனா தந்த விடுமுறையால் என்னிடம் இருந்த காமிக்ஸ்களை மறுக்கா மறுக்கா படிக்க முடிந்தது.
  ஜெராமியாவையே இரண்டு முறை இரண்டு ஆல்பங்களையும் மொத்தமாகப் படித்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
  கிட் ஆர்ட்டின்-டாக் புல் தொகுப்புகள் படித்து மனம் விட்டு சிரித்து உடலும் மனமும் குளிரப்பெற்றேன்.
  அப்புறம் என்னையலாம் வீட்ல தண்ணீ தெளிச்சு இது பூட்டகேசு என முடிவு பண்ணி இரண்டு மாமாங்களாச்சு.

  ReplyDelete
 14. கவிதை முழி பெயர்ப்பு , போட்டிக்குன்னு சொல்லவே இல்லியே?
  ஸ்டீல்.ரெடி..ஒன்...டூ...த்ரீ... Starts..
  மத்தவங்களும்... ரெடி.. Starts.. ஜூட்...

  ReplyDelete
 15. மகிழ்வோடு பார்த்திடும் போது, நமது காமிக்ஸ் தான் என்றில்லை - பொதுவாய் எந்தவொரு 'பொம்மை புக்' பரிச்சயமும் இல்லாதோர் மீது அனுதாபமே தோன்றுகிறது ! எத்தனை ரம்யங்களை அவர்கள் நுகர்ந்திட இயலாதே போகிறது

  ####

  உண்மை ..உண்மையோ உண்மை சார்..

  ReplyDelete
 16. போன பதிவில் நிறைய நண்பர்களுக்கு பதில் பேசலாம் என இருந்தேன் முக்கியமாய் செயஙருக்கு ( கிர்ர்ர்...) புது பதிவு வந்து விட்டதால் அமைதியாகி விடுகிறேன்.ழ

  ReplyDelete
 17. புத்தகவிழா நேரங்களில், ஈரோட்டு வாசக சந்திப்புத் தருணங்களில், மூட்டைகளைக் கட்டிக்கொண்டு 'ஜாலிலோ ஜிம்கானா' என்று நீங்கள் டாட்டா சொல்லிவிட்டுக் கிளம்பிட எத்தனிக்கும் போதெல்லாம் வீட்டில் கிட்டுவது என்னவாக இருக்கும் ?

  வருடத்தில் அந்த நாட்கள் ( வெள்ளி காலை to ஞாயிறு இரவு வரை ) தண்ணி தெளித்து விடப்பட்ட எனக்கான நாட்கள்..

  ReplyDelete
 18. // புத்தகவிழா நேரங்களில், ஈரோட்டு வாசக சந்திப்புத் தருணங்களில், மூட்டைகளைக் கட்டிக்கொண்டு 'ஜாலிலோ ஜிம்கானா' என்று நீங்கள் டாட்டா சொல்லிவிட்டுக் கிளம்பிட எத்தனிக்கும் போதெல்லாம் வீட்டில் கிட்டுவது என்னவாக இருக்கும் ? //

  சந்தோசமாக வழியனுப்பி வைப்பார்கள் சார்
  ஏனெனில் உங்களுக்கே தெரியும்

  காமிக்ஸில் ஆரம்பித்த புள்ளி

  காமிக்ஸ் நண்பர்களாக மாறி

  காமிக்ஸ் குடும்பமாக பரிணமிக்க ஆரம்பித்துவிட்டதால்


  மிக்க நன்றி சார் 🙏🏼
  .

  ReplyDelete
  Replies
  1. /// காமிக்ஸ் குடும்பமாக பரிணமிக்க ஆரம்பித்துவிட்டதால்..///

   👌🏼👌🏼👌🏼👏🏼👏🏼👏🏼

   எழுத வார்த்தைகள் இல்லை..

   Delete
  2. சிபியின் வார்த்தைகள் உண்மை,அதே,அதே.........

   Delete
  3. // எழுத வார்த்தைகள் இல்லை. //
   ஏனுங்கோ எழுத பேனா இல்லைங்களா.....!!!!!

   Delete
  4. // ஏனுங்கோ எழுத பேனா இல்லைங்களா.....!!!!! // அண்ணா ஹிஹிஹி

   Delete
  5. சூப்பர் சிபி அண்ணா

   Delete
 19. : இந்த லாக் டௌன் நாட்களில் - ஜாலியான அரட்டை ; கும்மி, என்பதைத் தாண்டி, காமிக்ஸ் வாசிப்புக்கென உங்களுள் எத்தனை பேருக்கு நேரம் ஒதுக்க முடிந்துள்ளது guys ?

  #####

  அதற்கு தான் அதிக நேரமே ஒதுக்கப்பட்டுள்ளது சார்..அதுமட்டுமில்லாமல் வாரம் இருமுறையாவது வாட்ஸ்அப் குழுவில் காமிக்ஸ் போட்டி நடந்து கொண்டே இருக்கிறது..நண்பர்கள் பலர் பரிசளிக்கவும் ,பரிசு பெறவும் செம ஜாலியாக போய் கொண்டு இருக்கிறது..நாளை கூட சமர்ப் கதைகளில் போட்டி என அறிவிப்பு சில மணி நேரங்களுக்கு முன்..:-)

  ReplyDelete
 20. // Hot & Cool ஸ்பெஷல் இதழ் நினைவுள்ளதா guys ? அதனிலிருந்து ஆரம்பிப்போமா அடுத்த பதிவு முதலாய் ? உங்களிடம் அந்த புக் இருக்கும் பட்சத்தில், தூசி தட்டி எடுத்து அதை இஷ்டைலாய் கையில் ஏந்தியபடிக்கு ஒரு selfie அனுப்புங்களேன் - அவற்றை post செய்த கையோடு அந்த இதழை மறுக்கா அலசிடலாம் ! //

  வாவ் சூப்பரு சார்

  இன்னம்முமே கொஞ்ச வருசம் பின்னோக்கி போயி அதனை

  சிங்கத்தின் சிறுவயதிலாக்கினீர்களென்றால்

  மிகவும் சிறப்பாக இருக்குமென்பது எனது
  தாழ்மையான கருத்து

  நன்றி சார் 🙏🏼
  .

  ReplyDelete
 21. அதனுள் கார்ட்டூன்களுக்கு இருந்த இடம் கூடுதலா : கம்மியா ?

  அதிகாரிக்கென ஒதுக்கிய வாசிப்பு நேரம் கம்மியா ? கூடுதலா

  ######

  அதிகாரியும் ,கார்ட்டூனும் தான் சம பங்காக இருக்கிறது சார்..கார்ட்டூன் இப்பொழுது மிக பொறுமையாக படிப்பதால் முன்பை விட நன்கு ரசிக்க முடீகிறது..இன்று ஒரு மாற்றம் வேண்டுமே என நினைத்து " புலியை " எடுத்து முடித்து விட்டேன்..ஆனால் மிக அதிகம் எனில் அதிகாரி தான்..காலை படிப்பு கூட பாலைவனத்தில் புலனாய்வு தான்..:-)

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. எங்க வூட்ல இந்த optionக்கு எல்லாம் வேலையே இல்ல. அம்மிணி, 'சிந்துபைரவி' சுலக்ஷணா. (புக்குல மட்டும்). மேலும் எங்கள் குடும்பத்தில் அனைவரும் புத்தக புழுக்கள்.என் தம்பி சிவா (late) நீங்கள் அறிவீர்கள்.என் தந்தை எழுத்தாளர் + நிருபர். என் அண்ணன் குருஜி வாசுதேவ் என்றபெயரிலும்.வேறு பெயர்களிலும் புத்தகங்கள் எழுதுபவர். திருவண்ணாமலையில் பத்திரிகையில் துணை ஆசிரியர். குடும்பமே புத்தகக் குடும்பம். So no restrictions for bookள்ள கome.

  ReplyDelete
  Replies
  1. வாவ்...அருமை நண்பரே..

   வாழ்த்துக்கள்..:-)

   Delete
  2. அடேயப்பா!! உங்க பின்னணி ஆச்சரியப்படுத்துது பத்து சார்!!

   Delete
  3. Really sir. Recent ஆக என் மனைவி போன வருடம் வாங்கிய புது ஸ்டீல் பீரோவை (41/2 அடி) காலி செய்து எனது புத்தகங்களுக்காக கொடுத்துவிட்டார்கள். பீரோ full. 2 Rack காமிக்ஸ். 2 Rack மற்ற நாவல்கள்.

   Delete
  4. பத்து சார்...👌👌👌👌👌👏👏👏👏

   Delete
  5. பத்து சார்...👌🏼👌🏼👌🏼💐💐💐👏🏼👏🏼👏🏼

   Delete
  6. another interesting one to share here. 1990களில் சென்னையில் என் அண்ணன், மற்றும் என் தம்பி (அவன் ஒரு காமிக்ஸ் வெறியன். எடிட்டரை ஒரு முறை சந்தித்து. அவன், திருச்சி விஜய், மற்றும் துபாய் ஹாஜா மூவரும் எடிட்டருடன் எடுத்துக்கொண்ட போட்டோ இன்னும் என்னிடம் உள்ளது) குடியிருந்த வீடு தீப்பற்றி எரிந்துவிட்டது.
   என் தம்பி ஆபிஸில் இருந்து ஓடி வந்து காமிக்ஸ் புக்குகளை முதலில் தேடினான். ஹவுஸ் ஓனர் கடுப்பாகி திட்டியது தனிக்கதை.
   அந்த அளவுக்கு நாங்கள் புத்தக பைத்தியங்கள்.எங்களுக்கு கையில் புக் இருந்தால் போதும்.வேறு எதுவும் தேவை இல்லை.
   அதனால் தான் lock down period எனக்கு சுலபமாக கழிந்தது.

   Delete
  7. அடடே,அருமை,அருமை.......

   Delete
  8. பத்து சார் அருமை அருமை. பல விசயங்கள் பகிர்ந்த தற்கு நன்றி. சுவையான நிகழ்வுகள்.

   Delete
  9. ஆஹா.‌செம பத்மநாபன். உங்கள் குடும்ப பின்னணி வியக்க வைக்கிறது.

   விஜய் @ எப்ப நம்ப பத்மநாபன் வீட்டில் உள்ள ஸ்டீல் பீரோவை தூக்கப்போகிறோம் ;-)

   Delete
  10. இந்த குறிப்பிட்ட போட்டோ போன மாதம்கூட பேஸ்புக்கில் வலம் வந்தது பத்து சார். போட்டோ பார்த்து உள்ளேன்

   Delete
  11. சின்னவரே என்னா வாழ்க்கை...இந்த உயிருக்கும் மேலான சிறு கூட்டத்ல நானும் என்பது தனிப் பெருமைதான்

   Delete
 24. உங்கள் இல்லங்களில் ; உங்கள் நட்பு வட்டங்கள் மத்தியினில் உங்களது இந்த வாசிப்புப் பழக்கத்தை எவ்விதம் பார்த்திடுகிறார்களோ ?


  முதல் மூன்று ஆப்ஷனுமே மாறி மாறி வரும் சார...:-(

  ReplyDelete
  Replies
  1. ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் இது சார்..ஆனால் இப்பொழுது மேலே நண்பர் சொன்னது போல வாட்டர் தெளித்து நாட்களாகி விட்டது சார்..:-)

   Delete
 25. சார்... எங்க வீட்ல் எப்பவும்... Option C தான்..

  ReplyDelete
 26. எங்கள் வீட்டின் Comment
  Option : C : 'இது பூட்ட கேஸ் ; என்னமோ பண்ணித் தொலைச்சுக்கட்டும் !' - சொல்வது என் கணவர், 1st டென்ஷன் party காரணம் பூக்குகள் கொண்டு வரும் கூரியர் பாய் அவரே. மின்னும் மரணம் பூக்கில் கூரியர்காரன் கத்தி போட்டு கிழித்ததை அடுத்து என் permanent டெலிவரி லொகேஷன் அவரது ஆபீஸ். 2nd டென்ஷன் party எனது மாமியார். "ஏம்மா காலேஜ் lecturer ஆக இருக்கே(மூன்று வருடங்களுக்கு முன்) இந்த பொம்ம சித்திர கதையெல்லாம் படிக்கிற? வயசுக்கு ஏத்த வேலையே செய்ய மாட்டியா?
  இதற்கு நடுவில், என் வீட்டில் வேலை செய்பவரின் பெண் வந்தால்
  Option D : "ஹை...புக் வந்துருச்சா ? வந்துருச்சா ? ஆண்ட்டி எனக்கு ஒண்ணு ?" (நாங்கள் இருவரும் Tex பைத்தியங்கள்)

  ReplyDelete
  Replies
  1. ///இதற்கு நடுவில், என் வீட்டில் வேலை செய்பவரின் பெண் வந்தால்
   Option D : "ஹை...புக் வந்துருச்சா ? வந்துருச்சா ? ஆண்ட்டி எனக்கு ஒண்ணு ?" (நாங்கள் இருவரும் Tex பைத்தியங்கள்)///

   ஹா ஹா!! செம சகோ!! :)

   Delete
  2. அழகாக சொன்னீர்கள் அனு. என்னால் உணர முடிகிறது. ஆப்ஷன் D ha ha ha

   Delete
  3. /// (நாங்கள் இருவரும் Tex பைத்தியங்கள்///---- ரியாலிட்டி சகோ. இங்கே 90% நம்ம கோஷ்டி தான்! கெத்தா நடங்க!

   Delete
 27. ////// புத்தகவிழா நேரங்களில், ஈரோட்டு வாசக சந்திப்புத் தருணங்களில், மூட்டைகளைக் கட்டிக்கொண்டு 'ஜாலிலோ ஜிம்கானா' என்று நீங்கள் டாட்டா சொல்லிவிட்டுக் கிளம்பிட எத்தனிக்கும் போதெல்லாம் வீட்டில் கிட்டுவது என்னவாக இருக்கும் ? /////

  வருடத்தில் ஒருமுறையோ/இருமுறையோ தான் என் முகத்தில் தெறிக்கும் அந்த உற்சாகத்தை என் வீட்டம்மா காணமுடியும் சார்! மற்ற நாட்களிலெல்லாம் குட்டியைத் தொலைத்த பூனையைப் போலவே முகத்தை கர்ர்ர்புர்ர் என்று வைத்துக் கொண்டிருப்பேன்! ஆகவே அந்த உற்சாகத்தை காண்பதற்காகவே 'ம்.. என்ஜாய் பண்ணுங்க'னு சொல்லி அனுப்பிவச்சுடுவாங்க!!

  வாழ்க்கையை வசந்தமாக்குவது குழந்தைகளின் அன்மையும், காமிக்ஸும், காமிக்ஸ் நண்பர்களும் தான்!! (அப்புறம் இக்கிளியூண்டு இசை!ஹிஹி!)

  நண்பர்கள் என்ற ரூபத்தில் நிறைய நல்ல மனிதர்களையும் அடையாளம் காட்டியிருப்பது நம் காமிக்ஸும், காமிக்ஸ் சந்திப்புகளுமே தான்!!

  நிச்சயமாய் ஏதோ ஒரு வகையில் நாமெல்லாம் புண்ணியம் செய்தவர்கள் தான்!!

  இந்தக் காமிக்ஸ் நேசம் நாளும் வாழ்க!! _/\_

  ReplyDelete
  Replies
  1. // நண்பர்கள் என்ற ரூபத்தில் நிறைய நல்ல மனிதர்களையும் அடையாளம் காட்டியிருப்பது நம் காமிக்ஸும், காமிக்ஸ் சந்திப்புகளுமே தான்!! // உண்மைதான் EV

   Delete
  2. // நிச்சயமாய் ஏதோ ஒரு வகையில் நாமெல்லாம் புண்ணியம் செய்தவர்கள் தான்!! //
   உண்மைதான் ஈ.வி,அவ்வப்போதான தருணங்களில் இதை உணர முடிந்துள்ளது......

   Delete
 28. இக்கட எங்க ஊரு (புதுச்சேரி) கொஞ்சமாக நார்மல் மோடுக்கு திரும்பியாச்சாக்கும் - நார்மலாகவே நாங்க எப்பவுமே ஸ்டெடி சாரே. வழக்கம்போல் இன்று ஆபிஸ் போயாச்சு. ஆச்சர்யம் என்னனா 70 சதவீதம் அட்டெண்டென்ஸ் (கவர்மெண்ட் ரூல் 33% தூக்கி தூரப்போடுங்க சார்).

  ReplyDelete
 29. எடிட்டர் சார் உங்களது கேள்விகளுக்கு எனது பதில்கள்
  1. காமிக்ஸ் எதுவும் படிக்க வில்லை ஏன் என்றால் புத்தகங்கள் எல்லாம் சேலத்தில் உள்ளன நான் கோவையில் சிக்கிக் கொண்டேன். நமது வளைதலமும் நமது நண்பர்களும் தான் இப்பொழுது எனது stress busters.
  2. ஊரில் இருந்து இருந்தால் கண்டிப்பாக எல்லா கார்ட்டூன் புத்தகங்களையும் படித்து இருப்பேன்.
  3. கண்டிப்பாக மின்னும் மரணம் , இரத்தப் படலம், தங்கக் கல்லறை, கிராஃபிக் நாவல்கள், கார் சனின் கடந்த காலம் இன்னும் பல புத்தகங்களை படித்து இருப்பேன்.

  4. ஈரோடு வரும் போது option C சார்.

  ReplyDelete
 30. எல்லா நண்பர்களும் இந்த லாக்-down நாட்களில் காமிக்ஸ் மற்றும் பிற கதைகளை மறுவாசிப்பு செய்வது மகிழ்ச்சி அளிக்கின்றது! சந்தோஷம் நண்பர்களே!

  லாக்-down நேரத்தில் வீட்டில் இருந்து வேலை பார்க்க வேண்டும் என்பதால் கடந்த 6 வாரங்களாக அலுவலக வேலை மற்றும் வீட்டு வேலை (வீட்டு வேலைக்கு வருபவரை லாக்-down பிறகு வாருங்கள் என சொல்லி விட்டோம்) பிழிந்து எடுக்கிறது ஆனால் சந்தோசமாக உள்ளது! ஆமாம் குழைந்தைகளுடன் இருப்பது குதூகுலமாக உள்ளது, bed-time ஸ்டோரி, சீட்டு, பரமபதம், கால் பந்து (வீட்டுக்கு முன்னால் உள்ள சிறிய இடத்தில்) செடிகள் நடுவது என வேலைக்கு நடுவில் எடுக்கும் சில பல பிரேக் சந்தோஷத்தை தருகிறது!
  தினமும் ஏதாவது ஒரு அனிமேஷன் படம், சமீபத்தில் மிகவும் ரசித்து சிரித்து உருண்ட படம் "Despicable Me"; க்ரூ மற்றும் வித்தியாசமான ஆயுதங்கள் மற்றும் நிலவை திருடும் ஐடியாவை மிகவும் ரசித்தேன்!

  எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரின் டின் கேன் மற்றும் smurfs நமது கார்ட்டூன் நாயகர்கள் சில காலமாக வரவில்லை என்பதால் அவர்களுக்கு ரின் டின் கேன் மற்றும் smurfs-இன் பழைய கதைகளை முடிந்த அளவு சொல்லி முடித்து விட்டேன்! எனவே தற்சமயம் அமர் சித்ரா கதைகள் ஓடிக்கொண்டு இருக்கிறது! ஹ்ம்ம் என்றைக்கு மீண்டும் ரின் டின் கேன் மற்றும் smurfs-இன் புதிய கதைகள் நமது காமிக்ஸில் வருமோ!

  குழந்தைகளுடன் குழந்தைகள் உலகத்தில் மீண்டும் வாழ கிடைத்த வர பிரசாதம் இந்த லாக் -down நாட்கள் :-)

  ReplyDelete
  Replies
  1. ///குழந்தைகளுடன் குழந்தைகள் உலகத்தில் மீண்டும் வாழ கிடைத்த வர பிரசாதம் இந்த லாக் -down நாட்கள் :-)///

   சூப்பர் PfB!

   Delete
 31. இந்த இக்கட்டான தருணத்தில் சகோதரர் பெங்களூர் பரணி எனக்கு ஒரு தொகையை அனுப்பினார் அவருக்கும் நம்மை போல் காமிக்ஸ் ரசிகர்களையும் ஒன்றினைத்த ஆசிரியருக்கும் மனதார்ந்த நன்றிகள் பரணி சகோதரரே இங்கே பகிர்ந்தது உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தால் மண்ணிக்கவும் 🙏🙏🙏🙏

  ReplyDelete
 32. // காமிக்ஸ் வாசிப்புக்கென உங்களுள் எத்தனை பேருக்கு நேரம் ஒதுக்க முடிந்துள்ளது guys ? //
  அவ்வப்போது இதற்கென ஒரு நேரத்தை ஒதுக்கி விடுகிறேன்,நண்பர்களுடன் காமிக்ஸ் விவாதம்,சுவராஸ்யமான போட்டி,பகிர்தல் இப்படி நேரங்கள் நகர்வதால்,தெரிந்தோ தெரியாமலோ பல இதழ்களை மீள் வாசிப்புக்கு உட்படுத்தியாயிற்று....

  ReplyDelete
 33. // காமிக்ஸ் வாசிப்புக்கென உங்களுள் எத்தனை பேருக்கு நேரம் ஒதுக்க முடிந்துள்ளது guys ? இது சும்மா டைம்-பாஸ் கேள்வியே ; ஆகையால் பீலாக்களுக்கு அவசியமிராது ! Yes ; படித்தீர்களெனில் - //

  காமிக்ஸ் படிக்க நேரம் குழந்தைகளுக்காக ஒதுக்கினேன்... அவர்களுக்கு படுக்கைக்கு செல்லும் முன் கதை சொல்ல ! அவற்றில் பலமுறை படித்தது ரின்-டின்-கேனின் நண்பேன்டா , மற்றும் பிரியமுடன் ஒரு பிணையகைதி! மேலும் smurfs-இன் விண்வெளி பொடியன் மற்றும் ஒரே ஒரு ஊரிலே! இவைகளை மட்டும் சில நாட்கள் படித்தோம். மற்ற காமிக்ஸ் நாயகர்கள் படிக்கவில்லை என்பதற்கு நேரமின்மை ஒரு முக்கிய காரணம்!

  We want more cartoon stories! Please do the needful!!!

  ReplyDelete
  Replies
  1. காதில் தக்காளிச் சட்னி கசியும் அளவுக்கு கார்டூன்களைப் பற்றிப் பேசிவிட்டோம் சார் ! எல்லாமே'அவர்கள்'கைகளில் தான் சார் !

   *அவர்கள் = கார்ட்டூனை வெறுப்போர் சங்கம் !

   Delete
  2. காலம் கனியும் வரை காத்திருப்போம்.

   இல்லை என்றால் ஆங்கிலத்தில் இவர்கள் கதைகள் வாங்கும் விலையில் கிடைத்தால் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்க வேண்டியதுதான்.

   Delete
  3. கார்ட்டுன்களை வெறுப்போர் சங்கத்து நண்பர்களே! எடிட்டர் போன பதிவில் கோரியதுபோல எதிர்மறை (கார்ட்டுன் எதிர்ப்பு) எண்ண வெளிப்பாடுகளை நிறுத்திவிட்டு, அவற்றை வாங்கி இளையவர்களுக்கு (பாடசாலைகள், நூலகங்கள், உறவுக்கார பயல்கள்) பரிசளிப்பீர்களாயின் கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே முன்னோக்கிப்போய் டின் டின், ஆஸ்டிரிக்ஸ் போன்றவற்றிலும் நமது காமிக்ஸ்கள் தடம் பதிக்கும் வாய்ப்பு ஏற்படும். உங்கள் நல்மனது இதை ஏற்றுக்கொள்ளுமென்று நம்புகிறேன்...!

   Delete
 34. // அதனுள் கார்ட்டூன்களுக்கு இருந்த இடம் கூடுதலா : கம்மியா ? //
  அவ்வப்போது.....

  // அதிகாரிக்கென ஒதுக்கிய வாசிப்பு நேரம் கம்மியா ? கூடுதலா ? //
  சந்தேகமே வேண்டாம்,கூடுதல்தான்.....அதிலும் குண்டுபுக் ஸ்பெஷல்னா....ஊம்....

  ReplyDelete
 35. எடிட்டர் சார், இந்த உள்ளிருப்புக் காலத்தில் சிறுவர்களது வாசிப்புமீதான ஆர்வம் கூடியிருக்கிறது. அதைத் தக்கவைப்பதற்கான புத்தகங்கள் தமிழில் மிகவும் குறைவு. பல பிரபல சஞ்சிகைகளே நின்றுவிட்டன. நீங்கள் திட்டமிட்டிருக்கும் வாண்டு ஸ்பெஷல்கள், ஜூனியர், மினி லயன் கதைகளின் மீள் பதிப்பு போன்றவை ரேடாரிலிருந்தால் அவற்றை நிலைமை சீராகி சில மாத இடைவெளிக்குள் வெளியிட முயற்சி செய்யுங்கள். நிச்சயம் பயனிருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. // வாண்டு ஸ்பெஷல்கள், ஜூனியர், மினி லயன் கதைகளின் மீள் பதிப்பு போன்றவை ரேடாரிலிருந்தால் அவற்றை நிலைமை சீராகி சில மாத இடைவெளிக்குள் வெளியிட முயற்சி செய்யுங்கள். நிச்சயம் பயனிருக்கும்! // நல்ல ஐடியா

   Delete
  2. நிலைமை சீராகட்டும் நண்பரே ; அப்புறமாய்த் திட்டமிடல்களை வைத்துக் கொள்வோம் !

   Delete
 36. பூட்டகேஸூ.......{

  ReplyDelete
 37. இப்பதான் மில்லெனியும் ஸ்பெஷல் டெக்ஸ்வில்லர் எல்லையில் ஒரு யுத்தம் படித்து முடித்தேன். இந்த கதையை அந்த புத்தகம் வெளிவந்த சமயத்தில் படித்தபோது நன்றாகத்தான் இருந்தது. இப்ப படிக்கும்போது இதைவிட வேற பெட்டர் டெக்ஸ் கதையைத் தேர்ந்தெடுத்து இருக்கலாமோ ஆசிரியர் என்று தோன்றுகிறது.
  இந்த நாட்களில் 1300 தொழிலாளர்களுக்கு சம்பளம் போடுவதற்காக அடிக்கடி கம்பெனிக்கு போக வேண்டிய வேலை இருந்ததால் நிறைய புத்தகங்கள் படிக்க முடியவில்லை. இருந்தாலும் கிடைத்த நேரத்தில் படித்த புத்தகங்கள் இரத்த படலம் மின்னும் மரணம் நெவர் பிஃபோர் ஸ்பெஷல் சில மாடஸ்டி கதைகள்
  அடுத்த பத்து நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது அதனால் நிறைய புத்தகம் படிக்க வாய்ப்பு இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. //அந்த புத்தகம் வெளிவந்த சமயத்தில் படித்தபோது நன்றாகத்தான் இருந்தது. இப்ப படிக்கும்போது இதைவிட வேற பெட்டர் டெக்ஸ் கதையைத் தேர்ந்தெடுத்து இருக்கலாமோ ஆசிரியர் என்று தோன்றுகிறது.//

   ரசனைகளின் முன்னேற்றமா ? என் தேர்வின் பிழையா ? கேள்விக்கு உங்கள் பின்னூட்டத்திலேயே பதிலும் உள்ளதே நண்பரே !

   Delete
  2. சார் ரசனங்றத விட வாகான சூழல் முக்கியம் . பலி கேேட்ட புலிகள அன்று படிக்கயில ஙேதான்...இன்று படிக்கயில அதாவது ரசனை முன்னேற்றத்துக்குப் பின்னர் பரவால்லை ரககம்...எல்லாக் கதயும் சூப்பர்தான் என உணரும் சூழல் வேண்டும்

   Delete
 38. Replies
  1. ஈரோடு புத்தகத் திருவிழா மற்றும் எந்த புத்தகத் திருவிழா செல்ல வேண்டும் என்றாலும் அவர்களும் வரவேண்டும் என அடம் பிடிப்பது.. தனியாக வீட்டில் இருப்பது பிடிக்காது என்பதே காரணம். :-)

   Delete
 39. Lion 300 special! கியூபா படலம்,கை சிவம்மா,சிறையில் ஒரு சிட்டுக்குருவி,பௌர்ணமி இரவில் காலன் வருவான்!
  ஏனோ ஜூலியாவின் பௌர்ணமி இரவில் காலன் வருவான் - என்னை மிகவும் பிடித்து போனது! இதன் இறுதியில் ஜூலியா கூறும் வசனத்தின் சரியான ஆங்கில வாக்கியம் தெரிந்தால் யாராவது சொல்ல முடியுமா?
  அடுத்தது ரோஜரின் மர்ம கத்தி படித்தேன்! இன்னும் முடிவு புரியவில்லை!!!
  ஆனாலும் மஞ்சள் நிழல் படித்தேன்! இப்போதோ காலத்தின் கால்தடதில் செல்கின்றேன்!

  ReplyDelete
  Replies
  1. //ஜூலியா கூறும் வசனத்தின் சரியான ஆங்கில வாக்கியம் தெரிந்தால் யாராவது சொல்ல முடியுமா? //

   ஜூலியா பேசுவது இத்தாலிய மொழியே ; so ஆங்கிலத்தில் தேடிப் புண்ணியம் இராது ! அந்தக் கதைக்குப் பேனா பிடித்தது நான் தான் ; அந்த வரியினை பதிவிடுங்கள் நண்பரே - ஒரிஜினலாக ஸ்கிரிப்ட்டில் இருந்ததா ? அல்லது நானாய் ஒட்டுச் சேர்த்ததா ? என்று நினைவுபடுத்திட முயற்சிக்கிறேன் !

   Delete
  2. ஜூலியா கூறும் வசனத்தின் சரியான ஆங்கில வாக்கியம் தெரிந்தால் யாராவது சொல்ல முடியுமா? //

   ஜூலியா பேசுவது இத்தாலிய மொழியே ; so ஆங்கிலத்தில் தேடிப் புண்ணியம் இராது ! அந்தக் கதைக்குப் பேனா பிடித்தது நான் தான் ; அந்த வரியினை பதிவிடுங்கள் நண்பரே - ஒரிஜினலாக ஸ்கிரிப்ட்டில் இருந்ததா ? அல்லது நானாய் ஒட்டுச் சேர்த்ததா ? என்று நினைவுபடுத்திட முயற்சிக்கிறேன் !

   இந்த கீழ் வரும் வரிகள் தாம் அவை,விஜயன் சார்!

   "மௌபாண்டின் அமர வரிகளை சொல்லிவிட்டு கிளம்புகிறேன்! "நெருக்கத்தில் பார்திடதாத வரையிலும் காதலிப்பது சுகமானது...சுலபமானது!நெருக்கம் புரிதலை கொண்டு வரும்.."புரிதல் வெறுப்பை உடனலைத்து வரும்!"

   நான் இப்போது எவரையும் மனதளவில் நெருங்க விட்டதில்லை!
   இதுவரையில் நான் அறிந்தது இது தான்! யார் ஒருவரை நாம் நம் இதயத்தில் நுழைய அனுமதிகின்றோமோ அவர்களே நம் இதயத்தை உடைக்க முடியும்!

   Delete
  3. ,சார் அட்டகாச மனித வாழ்வியல் தத்துவக் கதைகள் ...அருமை...முதல் கதை மட்டுமே படித்துள்ளேன்...பிற கதைகள் வெய்ட்டிங்....தொடரட்டும் இக்கதைக்கான பேனா உங்க கரங்களில்

   Delete
 40. வீட்டில் நானும் அம்மாவும் மட்டும் தான் என்பதால் எல்லாம் என் இஷ்டம் தான்! Option c!

  ReplyDelete
 41. என் மனைவி இன்றுவரை எதுவும் சொன்னதில்லை நான் புத்தகம் படிக்கும் போது டீ போட்டு கொடுப்பாங்களே தவிர என்னை போட்டு வெளுக்க மட்டாங்க ஜில் ஜோர்டனின் காவியில் ஒரு ஆவி கப்பலில் களோபரம் இரண்டு புக் படிச்சிருக்காங்க அவங்களுக்கு பிடித்தது ஜில் ஜோர்டனே காமிக்ஸ் விழாக்களுக்கு வரவேண்டுமேன்ற ஆர்வத்தில இருக்காங்க கூடிய விரைவில் குடும்பத்தோடு ஆசிரியரையும் நண்பர்களையும் சந்திக்கும் பொழுது புலரும்

  ReplyDelete
  Replies
  1. மூன்றோ / நான்கோ ஆண்டுகளுக்கு முந்தைய சென்னைப் புத்தக விழாவில் தான் உங்கள் மனைவியையும் குழந்தையையும் உடன் அழைத்து வந்திருந்தீர்களே சத்யா !

   Delete
  2. உங்களின் ஞாபகசக்தி ஆச்சரியப்பட வைக்கிறது விஜயன் சார்.

   Delete
 42. அதிகாரிக்கென ஒதுக்கிய வாசிப்பு நேரம் கம்மியா ? கூடுதலா

  அவுட் ஆஃப் சிலபஸ்..

  ReplyDelete
 43. லாக்டவுனில் நான் படித்தது ஸ்பைடர்.வில்லர்.டாக்புல் & கிட் ஆர்ட்டின் கதைகளே டாக்புல் & கிட் ஆர்ட்டின் CO மறுவாசிப்பில் செம்மையாக வயிற்றை பதம்பார்க்கிறார்கள்

  ReplyDelete
 44. அனைத்து நாட்களும் காமிக்ஸ் வாசிக்கிறேன், Cartoon comics உட்பட, டெக்ஸ் Always special ,

  வீட்டில் காமிக்ஸ் வாங்குவது குறித்து ஒன்றும் சொல்ல மாட்டார்கள், ஏனெனில் வேறு எதற்கும் தேவையின்றி செலவு செய்ய மாட்டேன் என்று அனைவருக்கும் தெரியும், என் மனைவியை Comics படிக்க பழக்கியுள்ளேன், கர்னல் க்ளிப்டன், லக்கிலூக் கேட்டு வாங்கி படிக்கிறார், மின்னும் மரணம் இரண்டு Book என்னிடம் உண்டு, இரண்டையும் நண்பர்களுக்கு கொடுத்துள்ளேன், புது வாசகர்களை உருவாக்குவதற்காக,

  ReplyDelete
  Replies
  1. இதுகூட நல்லவழி படிச்சதும் திருப்பி வாங்கிட்டு நெறய பேருக்கு கொடுக்கலாமே..அருமை கணேஂஷ்

   Delete
 45. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே Work from Home தான்! அவ்வப்போது கோவை, ஈரோடு என செல்வதோடு சரி! என்பதால் வழக்கமான வேலை, வழக்கமான பொழுதாகவே இருக்கிறது! எந்த மாற்றமும் இல்லை! எனவே படிப்பதற்கென தனித்த நேரம் இல்லை!

  இதில் வேடிக்கை என்னவென்றால் கொரானாவின் பின்விளைவாக இனி வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் உண்டாகியிருக்கிறது!

  பெரும்பான்மை வாடிக்கையாளர்கள் முதலீட்டை வெளியே எடுத்துக் கொண்டு விட்டதால் வந்த நெருக்கடி!

  ReplyDelete
  Replies
  1. அப்புறம் ஈ.வி. உங்க வாய்ஸ் சூப்பர்! வாழ்த்துக்கள்!!

   பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

   Delete
  2. நன்றி மிதுன்!

   Delete
 46. இந்த லாக் டெளன் நாட்களில் பழைய கதம்ப முத்துக்களுடன் ஜாலியாக கழிக்கிறேன். மன இறுக்கத்தை குறைக்கும் கார்ட்டூன்களுக்கு இடம் கம்மிதான். அதிகாரிதான் கூடுதலாக ஆக்கிரமிக்கின்றார்.

  Option C : இவர் உயிராபத்தான நிலையில் இருக்கும்போதே புத்தகம் எங்கே என்று கேட்ட ஆள். இது பூட்ட கேஸ். முத்திப் போச்சு. என்னமோ பண்ணிடுப் போகட்டும்.

  Hot & Cool ஸ்பெஷல் - “ஒரு ஒப்பந்தத்தின் கதை” தானே? அல்லது வேறா?

  ReplyDelete
 47. புத்தகத்தின் சைஸை குறைத்து 15% விலையை ஏற்றலாம் தலைவரே. ஆன்லைனில் ₹11000க்கு புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு நல்ல தரமான பேக்கிங்குடன் இலவச கொரியரில் அனுப்பலாம். முடியும் பட்சத்தில் 15% டிஸ்கவுண்ட் தரலாம் போணியாகத புத்தகங்களுக்கு . இரத்தபடலம் முழுவதும், மெபிஸ்டோ யுமா கதைகள் ஓற்றைகண் மர்மம் விண்வெளி பிசாசு, பாட்டில் பூதம் முக்கியமாக பிடிஎப்பில் வந்த கதைகளை தரமான பதிப்பில் குறைந்த பிரிண்ட் ரன்னாக போட்டு 25% அதிக பீரிமியம் விலையில் விற்கலாம். இப்போதைக்கு குடோனில் உள்ள புத்தகங்களை விற்று காசாக்கினால் நம்பிக்கையுடன் செயல்படலாம் வரும் நாட்களில். இது தன்னம்பிக்கையுடன் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து வியாபாரத்தை முன்னெடுக்கும் காலகட்டம்.

  ReplyDelete
  Replies
  1. ₹1000த்துக்கு மேல் புத்தகங்கள் வாங்குபவர்களுக்கு ₹11000 இல்லை. டைப்பிங் தவறுக்கு மன்னிக்கவும்.

   Delete
 48. /ஜூலியா கூறும் வசனத்தின் சரியான ஆங்கில வாக்கியம் தெரிந்தால் யாராவது சொல்ல முடியுமா? //

  ஜூலியா பேசுவது இத்தாலிய மொழியே ; so ஆங்கிலத்தில் தேடிப் புண்ணியம் இராது ! அந்தக் கதைக்குப் பேனா பிடித்தது நான் தான் ; அந்த வரியினை பதிவிடுங்கள் நண்பரே - ஒரிஜினலாக ஸ்கிரிப்ட்டில் இருந்ததா ? அல்லது நானாய் ஒட்டுச் சேர்த்ததா ? என்று நினைவுபடுத்திட முயற்சிக்கிறேன் !

  இந்த கீழ் வரும் வரிகள் தாம் அவை,விஜயன் சார்!

  "மௌபாண்டின் அமர வரிகளை சொல்லிவிட்டு கிளம்புகிறேன்! "நெருக்கத்தில் பார்திடதாத வரையிலும் காதலிப்பது சுகமானது...சுலபமானது!நெருக்கம் புரிதலை கொண்டு வரும்.."புரிதல் வெறுப்பை உடனலைத்து வரும்!"

  நான் இப்போது எவரையும் மனதளவில் நெருங்க விட்டதில்லை!
  இதுவரையில் நான் அறிந்தது இது தான்! யார் ஒருவரை நாம் நம் இதயத்தில் நுழைய அனுமதிகின்றோமோ அவர்களே நம் இதயத்தை உடைக்க முடியும்!

  ReplyDelete
  Replies
  1. ஜூலியா முதல்கதய தவிர படிக்கல...முதல் கதயே படு அட்டகாசமாக வந்தது...வாழ்வியலோடு செல்லும் டயலாக்குகள் நச்...
   மேலே நண்பர் காட்டிய வரிகளும் அட்டகாசம்...யாரிடமும் எதிர்பார்ப்பின்றி சுயநலமின்றி பழகினாலே இவ்வரிகளுக்கு அவசியம் நேராதே...மொழி பெயர்ப்பு அருமை நண்பரே ...வாழ்த்துக்களும் நன்றிகளும்

   Delete
  2. சாரி ஆசிரியரின் மொழி பெயர்ப்பு இக்கதைக்கு கூடுதல் அதகளம்...நேர்த்தியான வரிகளைத் தேடி பதிவிட்டமைக்கு நன்றிகள் நண்பரே

   Delete
 49. Replies
  1. சாரி ஆசிரியரின் மொழி பெயர்ப்பு இக்கதைக்கு கூடுதல் அதகளம்...நேர்த்தியான வரிகளைத் தேடி பதிவிட்டமைக்கு நன்றிகள் நண்பரே

   Delete
 50. புத்தகங்க ஒன்னு கூட கைல இல்லயே...
  நண்பர்கள் பெரிதா கண்டு கொள்வதில்லை...சில நண்பர்கள் நான் சிறுவயதுல தந்தத நினைவு கூர்வர் சந்தோசமாய்
  இன்னுமா படிக்கிற அல்லது இதயா படிக்கிறன்னு கேக்கயில பெருமையை இருக்கும் எனக்ககு
  வீட்ல என் சந்தோசத்தரசிப்பாவ...மத்தபடி இவன் இப்டிதான்

  ReplyDelete
 51. Hot &cool
  நன்றாக நினைவில் பசுமைாயாய் .
  நான் தந்த அட்டகாச தலைப்புகள எல்லாம் விட்டு போட்டு , பொடிப்பய பரணி தந்த சாதா தலைப்ப ஆசிரியர் தந்தத மறக்கத் தெம்புதான் ஏது..
  ஷெல்டனின் அட்டகாச கதையான nbs தொடர்ச்சியும் ...இன்னோர் கத கிட்டென நினைக்கிறேன்...ஷெல்டன விஞ்ச யார்,,,

  ReplyDelete
  Replies
  1. நான் தந்த அட்டகாச தலைப்புகள எல்லாம் விட்டு போட்டு , பொடிப்பய பரணி தந்த சாதா தலைப்ப ஆசிரியர் தந்தத மறக்கத் தெம்புதான் ஏது..


   #####3


   ஹாஹாஹா....:-)))))

   Delete
  2. ஏலே மக்கா ஆருலே பொடிப்பய? :-)

   Delete
  3. போலெ சுண்டைக்காய் பயலே :-)

   Delete
 52. வீட்டில் புத்தகம் படிக்கும் பழக்கமே கிடையாது..ஆயினும் நான் புத்தக பிரியன் என தெளிவாக உணர்ந்துள்ளதால் எந்த தடையும் இல்லை.புத்தக கண்காட்சி எல்லாவற்றிற்கும் கூட வந்து கோல சமையல் புத்தகம் வாங்கி ஓரமாய் அமர்ந்திருக்க நான் மூன்று நான்கென ரவுண்ட் போய் ஆற அமர வருவேன்.என் அப்பா அண்ணன் என எல்லோரும் நிறைய வாங்கும் டைப்...
  நவம்பரில் எங்கள் திருமண நாள்...
  ஒவ்வொரு வருடமும் அந்த நாளில் எனக்கு கிடைக்கும் ஆக சிறந்த பரிசு அடுத்த ஆண்டுக்கான சந்தாவே...
  ஏனெனில் எனக்கு எது பிடிக்குமென அவருக்குதானே தெரியும்...

  ReplyDelete
  Replies
  1. அருமை நண்பரே...:-)

   Delete
  2. அருமை. பார்த்திபன்.

   "நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி.
   நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி."

   Delete
 53. Replies
  1. ம்ஹீம்...அதெல்லாம் அப்ப...நாங்க எல்லாம் இருக்கும் மேடையிலேயே ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் அட்டகாசமானவர்கள்..நாங்கள் தான் கெத்து..:-)

   Delete
  2. அந்த குண்டு கத மட்டும் பாக்கட் சைசுல ஹார்டுபௌண்ட்ல வரட்டும் நண்பரே

   Delete
 54. ///Hot & Cool ஸ்பெஷல் இதழ் நினைவுள்ளதா guys ?////

  அதில் வெளியான ஷெல்டனின் 'hot' கதையை ஒரு முறை படித்ததோடு சரி!

  ஆனால் 'கூல்' கதையாக வெளியான கிட்ஆர்டினின் 'ஒரு கழுதையின் கதை' என்னை அதிகம் சிரிக்க வைத்த கதை!! குறைந்தபட்சம் 3 முறையாவது படித்திருப்பேன். தற்போது அது ஈரோட்டிலும், நான் சேலத்திலும் இருப்பதால் - ஆசையிருந்தும் - 4வது வாசிப்பு சாத்தியமில்லாமல் போகிறது!!

  ஷெரீப் டாக்புல்லின் விதவிதமான முகபாவங்களையும், தெறிக்கும் காமெடி வசனங்களையும் மீண்டும் படித்திட ஆசையோ ஆசை!!

  ReplyDelete
  Replies
  1. ஆனால் நான் ஷெரீடனின் அனைத்து கதைகளும் ஒரே மூச்சில் படித்த காரணத்தால் ஹாட்டை படித்து விட்டேன்..கூலை விட்டுவிட்டேன்..ஆசிரியரின் நினைவூட்டலின் காரணமாக இன்று கழுதையுடன் பயணம் அன்ட் சமர்ப்..:-)

   Delete
  2. "ஒரு கழுதையின் கதை" .... ஆர்டினுக்கும், ஷெரீப்புக்கும் வசனம் எழுதிய அந்த நாட்கள் இன்னமும் ஞாபகத்தில் உள்ளன ! அதிலும் நம்ம பூசணித்தலை டாக்புல் லானாவை கட்டிக்க ஆலாய்ப் பறக்கும் அந்த sequence - அப்டியே நம்ம கவுண்டர் தான் !!

   Delete
 55. Question 1: Comics. Ratha Padalam, Largo

  Question 2:
  Option F: மகன்: ஹை...கார்ட்டூன் இருக்கா?
  நான்: இருக்கு
  மகன்: இன்னைக்கு ராத்திரி இந்த கதை படிக்கலாம்

  மகன்: ஹை...கார்ட்டூன் இருக்கா?
  நான்: இல்லை
  மகன் mind voice: அதை நீயே வெச்சுக்கோ.

  ReplyDelete
 56. ஆப்சன் A மற்றும் C அவிங்க மூடுக்குத் தகுந்த மாதிரி வரும்

  ReplyDelete
 57. ரிவியூ எழுதவும், பழைய நினைவுகள் கிளறவும் புதுசு+பழசு என ஒருசில புத்தகங்களை மீள்வாசிப்பு செய்ய முடிந்தது சார்.

  பெரும்பாலும் ஸ்பெசல் இதழ்கள்!
  டைகரின் தோட்டோ தலைநகர்,
  பூம்பூம் படலம்,
  துவக்கத்தில் காமிக்ஸ்க்கு உள்ளே இழுத்த ராணி காமிக்ஸ் ன் சில இதழ்கள், குறிப்பாக என்னை கெளபாய் வெறியனாக மாற்றிய "வக்கீல் கொலை" என்ற கெளபாய் சாகசம். இந்த கதை நாயகன் கிட்டத்தட்ட ஒரு டெக்ஸே! முரட்டு கொலையாளி ஒருவனை தேடும் முயற்சியில் சகாக்கள் எல்லோரும் காலி இல்லது காயம்! தனியாக வேட்டை ஆட நாயகன் புறப்படும் பேணலில் ஏறக்குறைய டெக்‌ஸை உணரலாம்.

  ReplyDelete
  Replies
  1. அது மேஸ்திரி கொலை.?

   Delete
  2. பொங்கல் மலர்1988! 3கதைகள் இருக்கும். முதல் கதை பர்த்டே பார்ட்டில கொலை நடக்கும்; 2வது கதை ஜூலியின் புதையல் தேடும் கதை; 3வது தான் இந்த கெளபாய் கதை!

   Delete
 58. திருமணத்துக்கு முந்தைய நாட்களில் என் தாயார் நான் புத்தகம் படிப்பதை, அவற்றை ஒரு தகர பெட்டில வைத்து இருப்பதை, ஒவ்வொரு சம்மரிலும் அவற்றோடு படுத்து உறங்குவதை பார்த்து தன் பையனுக்கு லேசா மறை கழண்டு போச்சோ என நினைத்து இருப்பாங்க! 3தங்கைகள்ல கடைசி மட்டுமே காமிக்ஸ் படிப்பாள். எல்லா டெக்ஸ் கதைகளை அவளும் படித்து உள்ளாள்.

  கண்ணாலத்துக்கு பொறவு ஆப்சன் C தான்!

  எஅகும் வெளில போன தாங்களும் வந்தே தீருவோம்னு பெங்களூரு காமிக்கான், ஈரோடு 2013 வரை வந்தனர். பின்னர் KOK& Baby & நண்பர்கள் வந்தவுடன் எல்லோருடனும் பேசி பழகிய பின் தண்ணீர் தண்ணீர் தான்! ஹி...ஹி...!!!

  2018 இரத்தப்படலம் பெரிய விழா என்பதால் மீண்டும் என் இல்லாள் வந்தாள். எடிட்டர் சார்& நண்பர்கள் வரவேற்றது, பழகியது கண்டு திக்கு முக்காடிபோனாள். குறிப்பாக இலங்கை நண்பர் மதுபிரசன்னா என் விமர்சன எழுத்துக்களை மிகவும் விரும்பி படிப்பதாக சொன்ன போதும், நண்பர் ஸ்ரீராம் என்னிடம் வந்து ஆட்டோகிராப் வாங்கி கொண்டு போன போதும் (நிசம்தாம்பா நம்புங்க), நண்பர்கள் போட்டோ எடுத்து கொண்டபோது காட்டிய மகிழ்ச்சி & ஆர்வமும்& பைனலி அமெரிக்க மாப்பிள்ளை மஹி டெக்ஸ் சிலை பரிசளித்த போதும் ஸ்டின்னிங் ஆகிட்டாள். இப்போது கொஞ்சம் மரியாதைக்குரிய நபர்களாக நானும் பொம்மை புக்குகளும் அவளது பார்வையில் தெரிகிறோம்.

  சீனியர் எடிட்டர் சார் அழைத்து அருகே உட்கார வைத்து போட்டோ எடுத்து கொண்டபோதும், உங்க வீட்டுக்கார்ர் நிறைய எழுதுரார்மா சந்தோசம் என சொன்னபோதும் உறைந்தே போய் விட்டாள்!

  கொஞ்ச நேரம் இருந்து விட்டு புத்தக அரங்கு செல்ல இருந்தவள், சீனியர் சார், கருணையானந்தம் சார் எல்லாம் பேசியது கண்டும், மொழி பெயர்ப்பாளர்கள் இருவருக்குமே பரிசு தந்து எடிட்டர் கெளரவித்தது கண்டும், நண்பர்கள் ஆரவாரம்& மகிழ்ச்சி கண்டும் விழா முடியும் வரை எங்கும் நகரல!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் மனைவி ஆர்வத்தோடு கலந்து கொண்டர் இரத்தப்படலம் பரீட்சை முடிந்தவுடன் எல்லோரும் ஆசிரியர் சரியான பதில் சொல்ல சொல்ல அருமையாக (யாருடையது என நினைவில்லை)விடைத்தாளை திருத்தினார்கள் 👏👏👏👏👏

   Delete
  2. அட ஆமா சத்யா எனக்கு மறந்தே போச்.

   Delete
 59. Sir - start with behinds scenes of Super Circus !

  ReplyDelete
  Replies
  1. ஏற்கனவே "சூப்பர் சர்க்கஸ்" பின்னணி பற்றி "சிங்கத்தின் சிறுவயதில்" தொடரில் ஏதோ எழுதியுள்ள ஞாபகம் இருக்குது சார் ! பார்க்கலாமே - அதனில் பகிர்ந்துள்ளது in-depth -ஆ ? மேலோட்டமா ? என்று !

   Delete
 60. கவிதையெல்லாம் கிலோ எவ்வளவு என கேட்பேன். ஆனாலும் என்னுடைய சிறிய முயற்சி....


  உலகம் அசைவற்றிருக்கும் வேளைகளை
  விமானங்கள் தரையில் வீழ்ந்திருக்கும் வேளைகளை
  மகிழ்வுந்துகள் போக்கிடமில்லாதிருக்கும் வேளைகளை
  இரயில்கள் நகராத வேளைகளை
  வரலாறு நினைத்துப் பார்க்கும்

  பள்ளிகள் மூடப்பட்ட வேளைகளை
  குழந்தைகள் வீட்டிலிருக்கும் வேளைகளை
  மருத்துவர்கள் செந்தழலுடன் நடந்திருக்கும் வேளைகளை
  அவர்கள் மட்டும் ஓடாமலிருக்கும் வேளைகளை
  வரலாறு நினைத்துப் பார்க்கும்

  தங்கள் வீட்டு முற்றங்களிலும்,
  தனிமையிலும் மனிதர்கள் பாடிய வேளைகளை
  வீரம் செறிந்து, ஒற்றுமை தெறிக்கும் பொழுதுகளையும்
  வரலாறு நினைத்துப் பார்க்கும்

  தங்களுடைய முதியோர்களுக்கும், பலவீனர்களுக்குமாக
  தாக்கப்படக் கூடியவர்களுக்காகவும் எதையுமே
  செய்யாமல் மனிதர்கள் போராடிய வேளைகளையும்,
  வரலாறு நினைத்துப் பார்க்கும்

  வைரஸ் அழிந்து
  வீடுகள் திறந்ததையும்
  மக்கள் வெளியே வந்ததையும்
  ஒருவரையொருவர் அணைத்து, முத்தமிட்டதையும்
  மீண்டும் வாழத் தொடங்கியதையும்
  வரலாறு நினைத்துப் பார்க்கும்


  முன்னெப்போதையும் விட பாசத்தோடு

  ReplyDelete
 61. ஈரோடு கிளம்பும் போது ,அப்படியே கனா கண்டுக்கிட்டு (நான் படித்தது சிக்கய்ய நாயக்கர் கல்லூரி ஈரோடு)இருக்காம போனமா வந்தமான்னு இருக்கனும்.மறக்காம எடிட்டர்கிட்ட மாடஸ்டி புக் வருஷம் ரெண்டாவது கேளுங்க ..........சம்பளத்துல சந்தா பணம் கேட்டீங்க அப்புறம் நான் மனுசியா இருக்கமாட்டேன்(இப்ப மட்டும்),உங்க D.A அரியர் இல்ல சரண்டர் பணத்துல கட்ட பெர்மிஷன் தரேன் (கோபம் வந்து சம்பாதிக்கறது நான் தெரியுமில்ல ....ஹி ஹி மைண்ட் வாய்ஸ் மட்டுமே)....ஆபீஸுக்கு போன் வரும் "குரியர் வந்துடுச்சு வீட்டுக்கு வந்தவுடனே டெக்ஸ் எங்கேன்னு தேடக்கூடாது நான் படிக்க ஆரம்பிச்சாச்சு". ம்....ஆனா சந்தா மட்டும் என் பேர்லதான்!!!

  ReplyDelete
  Replies
  1. ஆனாலும் உங்களுக்கு செம தில் சார்....பொதுவில் இதை பகிர்ந்திடுவதற்கு ! அவுங்க கவனத்துக்கு இது போச்சுன்னா ...தெய்வமே !!

   Delete
  2. எடிட்டர் சார் ,...ஆமாமில்ல ஐயய்யோ

   Delete
  3. பிள்ளையயும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுறாறே

   Delete
 62. Lockdown காரணமாக வேலை குறைவு எனவே எப்போதும் லன்ஞ் பேக்ல ஏதாவது ஒரு டெக்ஸ் ,டெக்ஸ் மட்டுமே

  ReplyDelete
  Replies
  1. லஞ்ச்சே அது தானோ?

   Delete
  2. /// சம்பளத்துல சந்தா பணம் கேட்டீங்க அப்புறம் நான் மனுசியா இருக்கமாட்டேன்(இப்ப மட்டும்)///
   பேசாம, வருத்தப்படாத வாலிபர் சங்க மெம்பராவே இருந்திருக்கலாமோ?

   Delete
  3. அய்யா ,வருத்தப்படும் வாலிபர் சங்கத்துல மெம்பர் ஆகி இத்தனை வருஷம் கழிச்சு சொல்றீங்களே

   Delete
 63. /// வீட்டில் இருந்து வேலை பார்க்க வேண்டும் என்பதால் கடந்த 6 வாரங்களாக அலுவலக வேலை மற்றும் வீட்டு வேலை (வீட்டு வேலைக்கு வருபவரை லாக்-down பிறகு வாருங்கள் என சொல்லி விட்டோம்) பிழிந்து எடுக்கிறது ஆனால் சந்தோசமாக உள்ளது ///

  என்னா அடி.. நானும் எவ்ளோ நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஒய் பிளட் ? ஷேம் பிளட் ! ...சொல்ல நிறைய பேர் இருப்பது உறுதி !!

   Delete
 64. 32 வது ஆண்டு மலர்..‌

  ReplyDelete
 65. முகமற்ற கண்கள் - மதியுஸ் புருனோ உடன் ஷு வில் உள்ள ரேடியோவில் பேசுவதை பார்த்த உடன் கர்னல் கிளிப்டன் (யார் அந்த மிஸ்டர் x )ஷு ரேடியோவை ரிபேர் செய்யும் காட்சி தான் நினைவுக்கு வந்தது!

  புருனோ பிரேசில் கதைகளில் குள்ள நரிகளின் இரவு எனக்கு பிடித்த கதை!

  ReplyDelete
  Replies
  1. வெளியான 1987-ன் நாட்களில் "முகமற்ற கண்கள்" பின்னிப் பெடல் எடுத்த புக் என்பது நினைவுள்ளது ! ஆனால் மறுபதிப்பான 2017 (??) -ல் கிட்டிய வரவேற்பே வேறு விதம் !! காலம் தான் எத்தனை கடுமையான வாத்தி ?

   Delete
 66. மறுவாசிப்பில் லக்கிலுக்,சிக்பில் கதைகள் தான் ரசித்து படிக்க முடிகிறது மற்றும் டெக்ஸ்வில்லர் கதைகள்

  ReplyDelete
 67. This comment has been removed by the author.

  ReplyDelete
 68. உலகம் ஸ்தம்பித்து நின்றதை
  இயற்கை உயிர்த்து எழுந்ததை
  வாகனங்கள் ஓட மறந்ததை
  வானூர்திகள் தரையில் கிடந்ததை
  வரலாறு நினைவுறுமே

  பள்ளிகள் இன்றி வீட்டுச் சிறையில்
  சிறார்கள் இருந்ததை
  அச்சம் இன்றி மருத்துவ பணியாளர்கள்
  வேள்விக்கு வீரு நடை போட்டதை
  வரலாறு நினைவுறுமே

  தனித்திருந்த மக்கள்
  பெருங்குரல் எடுத்து
  ஒருங்கிணைந்த ஒத்த குரலில்
  முற்றங்களில் முழங்கியதை
  வரலாறு நினைவுறுமே

  முதியோரையும் எளியோ ரையும்
  எதிர்ப்பு ஆற்றல் அற்றோரையும்
  காக்க தனித்து இருந்த
  எங்களின் போராட்ட த்தை
  வரலாறு நினைவுறுமே

  கொடிய வைரஸ் ஒழிந்ததை கொண்டாட
  மக்கள் வெள்ளம் திரண்டதை
  ஆரத்தழுவி முத்தத்தால் நனைத்ததை
  எப்போதையும் விட கருணையுடன்

  புதுவாழ்வை துவங்கியதை
  வரலாறு நினைவுறுமே

  ReplyDelete
 69. உலகம் நின்றதை வரலாறு மறக்குமா?
  வானூர்திகள் தரையிலும், வாகணங்கள் முடங்கியும், ரயில்கள் சில வாரங்களாக நின்றதையும் வரலாறு மறக்குமா?

  பள்ளிகள் மூடியதையும், குழந்தைகள் வீட்டில் சிறைவாசம் இருப்பதும் யாரும் கண்டதுண்டா?
  மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் நெருப்பை நோக்கி நடந்ததை யாரேனும் இதுவரை பார்த்ததுண்டா?

  வீட்டு மொட்டைமாடியில், தனியாக ஆனால் ஊர் முழுதும் பாடியதை வரலாறு மறக்குமா? அவர்கள் தைரியத்தையும்.

  நாம் ஒன்றும் செய்யாமல் இருப்பதே நம் முதியோரை/ வலுவில்லாதோரை காக்கும் ஆயுதம் என வரலாறு எழுதட்டும்.

  கரோனா போன பின்னர், கதவுகள் திறக்கும், மக்கள் வெளியே வருவர். மறுபடி முதலில் இருந்து ஆரம்ப்பிப்பர்.

  இம்முறை அதிக கருணையுடன்.

  ReplyDelete
 70. வீடெல்லாம் காமிக்ஸ் மயம்.....

  Durango Overtakes Tex....

  ReplyDelete