நண்பர்களே,
வணக்கம். இன்னமும் வைரசுக்கு டாட்டா காட்டிய பாடைக் காணோம் எனும் போது மேற்கொண்டும் நம் மனைவாசங்கள் தொடர்வது காலத்தின் கட்டாயமாகவே தெரிகிறது ! இரண்டு வாரங்களா ? மூன்று வாரங்களா ? என்ற கேள்வி தானே இப்போதைக்கு அனைவரின் மனங்களிலும் ?! So அரசின் தீர்மானம் எதுவாயிருப்பினும் அதற்கு முழுசாய் இசைவு சொன்ன கையோடு, புதுசாயொரு தம் கட்டிக்கொண்டு, பாத்திரம் கழுவும் படலம் 2-குத் தயாராகிக்கொள்வோமே ! ஆங்காங்கே பூரி போடும் நண்பர்களும், துவைத்துக் காயப்போடும் நண்பர்களும், துடைப்பங்களோடு வீறுநடை போடும் அன்பர்களும் சீக்கிரமே தத்தம் பொறுப்புகளை பூர்த்தி செய்த பூரிப்போடு, இங்கே எட்டிப்பார்த்தால் அவ்வப்போது ஜாலி மொக்கைகளைத் தொடர்ந்திடலாம் ! சூழ்ந்து நிற்கும் இறுக்கங்களிலிருந்து நண்பர்களின் சங்கமத்தின் புண்ணியத்தில் நிவாரணம் கிட்டிட்டால் சூப்பர் என்பேன் ! என்ன எழுதுவதென்ற என்னுள்ளான கேள்விக்கு பதிலாய், சில பல கேள்விகளே கைதூக்கி நிற்க, இதோ இந்த ஞாயிறை ஒப்பேற்ற முனைகிறேன் அவை சார்ந்த இன்னொரு பதிவோடு !
And before I go into it - சின்னதாயொரு வேண்டுகோள் ப்ளீஸ் :
Flashback mode-க்குள் புகுந்து துவக்க நாட்களை பற்றி நான் விவரிக்கும் போதெல்லாம் தடித்தாண்டவராயன் போல் நான் மாத்திரமே அதனுள் தென்படுவது தவிர்க்க இயலா சங்கடமாய் நெருடுகிறது எனக்கு ! நிறையப் பேரின் பங்களிப்புகளின்றி இந்தப் பயணம் சாத்தியமாகாது என்பதை பறைசாற்றும் முதல் ஆள் நானே ! So இதுபோன்ற பதிவுத்தருணங்கள் முழுசுமாய் என்னைச் சார்ந்த புராணங்களாகவே இருப்பது தர்மசங்கடத்தையே ஏற்படுத்துகிறது ! என்னைத் தெரிந்து வைத்திருக்கும் நண்பர்களுக்குப் பதிவின் ஓட்டத்தைத் தாண்டி வேறெதுவும் இடறிடாது போகலாம் ! ஆனால் தொலைவிலிருந்து வாசித்து விட்டு நடையைக் கட்டும் நண்பர்களுக்கும் சரி ; நம் மேல் "பாச மழை" பொழியும் அன்பர்களுக்கும் சரி, "ஓவராய் அலம்புராண்டோய் !" என்று தோன்றின், பிழை அவர்கள் மீதிராது தான் ! நிச்சயமாய் பீப்பீ smurf எனது favorite கிடையாது ; இந்த முந்தைய நினைவுப் பகிரல்கள் அனைத்துமே நமது காமிக்ஸ் சார்ந்தவைகள் என்ற விதத்தில், வாசிப்பினில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதால் மாத்திரமே நான் இந்த வாடகைச் சைக்கிள் படலத்தைக் கையிலெடுக்க நேரிடுகிறது அவ்வப்போது ! So please bear with me !!
ரைட்டு, பின்னாட்களில் கல்வெட்டுக்களில் பொறிக்கப்படவுள்ள கேள்வியும் ; அதற்கான எனது பதிலும் இதோ ! முந்தைய பதிவினைப் போல இதனில் காமிக்ஸ் சார்ந்த சமாச்சாரங்கள் சொற்பமே ; and நிறைய விதங்களில் இதுவொரு பெர்சனல் பதிவுமே ! ஆனால் சொல்ல வேண்டியதொரு கதையிது என்பதால் நீங்கள் புரிந்து கொள்வீர்களென்ற நம்பிக்கையோடு எழுதுகிறேன் ! நிறைய பொறுமை இருந்தால் மாத்திரமே படிக்க முனையுங்கள் ப்ளீஸ் :
* நீங்கள் விடிய விடிய பேசிட விரும்பும் நபர் யார்.....? (பேச்சு மட்டுமே ! ) :
இந்தக் கேள்விக்கு சற்றே கிளுகிளுப்பான பதிலை எதிர்பார்த்திருப்பின், நிச்சயமாய் ஏமாற்றமே மிஞ்சிடப் போகிறது ! Simply becos நான் விடிய விடியப் பேசிட எண்ணிடுபவர் இங்கு இப்போது இல்லை ! அவர் விண்ணுலகம் சென்று வருஷங்கள் 22 ஓடி விட்டன ! நிறையப் பேருக்கு எனது இந்தத் தேர்வு இந்தத் தருணத்தில் விநோதமாய்த் தோன்றிடலாம் தான் ; ஆனால் இதனை முழுசுமாய்ப் படிக்கும் பொறுமை உங்களுக்கு இருப்பின், பதிவின் இறுதியில் எனது தேர்வுக்கு 200 மார்க்குகள் போடுவீர்களென்பது உறுதி !
S.V.A.கந்தசாமி நாடார் என்பதே எனது தாய்வழித் தாத்தாவின் பெயர் ! அந்நாட்களில் ஜாதியினையும் பெயரோடு இணைத்துக் கொள்வது வழக்கமோ, என்னவோ - தெரியாது, ஆனால் அவரை நினைவுறும் போதெல்லாம் அந்தப் பெயரினை முழுசாய் உச்சரிக்கவே தோன்றிடும் ! அந்தக் கடைசிப் பகுதியினை நீக்கிவிட்டு அவரைக் குறிப்பிடுவது ஏதோ மரியாதைக் குறைவு என்பது போலொரு அபத்த சிந்தனை என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! தாத்தாவுக்கு என் தாயார் ஒரே பிள்ளை & சொந்த அக்காவின் மகனுக்கே அவரை மணமுடித்துக் கொடுத்ததால் மருமான் - மருமகப்பிள்ளையாகிப் போனார் ! ஒரே பிள்ளை என்பதால் தாத்தாவுக்கு உலகம் சுழன்றதே என் தாயாரைச் சுற்றியே !! So சிவகாசிக்கு அச்சுத் தொழில் துவங்கிடும் நோக்கில் சீனியர் எடிட்டர் குடிபெயர்ந்த போது, தாத்தா செய்த முதல் வேலை - அவரது வீட்டுக்கு நேர் எதிரிலிருந்ததொரு வீட்டை வாடகைக்குப் பிடித்து அங்கேயே குடியேறச் செய்தது ! எனது பால்ய நினைவுகள் முழுவதுமே நாங்கள் வசித்த அந்தச் சின்னஞ்சிறு வீட்டோடும், எதிர்க்கே குடியிருந்த தாத்தாவின் வீட்டோடுமே !! வீட்டில் நான் மூன்றாவது பிள்ளை ; எனக்கு முன்னே 2 சகோதரிகள் ! கொடுமை என்னவெனில் இரண்டே அறைகள் கொண்ட அந்த வாடகை வீட்டில் குடியிருந்தது நான் + அம்மா + அப்பா மட்டுமே ! சகோதரிகள் இருவருமே தாத்தாவின் வீட்டில் தான் முழுக்க முழுக்கக் குடியிருப்பர் ! எங்கள் வீட்டில் அத்தனை பேருக்கும் இடம் பற்றாதென்று அந்த ஏற்பாடா ? அல்லது தாத்தாவுக்கும், பாட்டிக்கும் துணையாய் சகோதரிகள் அங்கே இருந்தனரா ? என்பதெல்லாம் எனக்குத் தெரியாது ! ஆனால் நினைவு தெரிந்த நாள் முதலாய் சின்னஞ்சிறு குருவிக்கூடுகள் எதிர் எதிரே இருக்க, அதனுள் இங்கும் அங்குமாய் சந்தோஷங்களை பரிமாறி வளர்ந்தோம் நாங்கள் !
அப்போதெல்லாம் சீனியர் எடிட்டரின் அச்சுத் தொழில் பிசுனஸ் ஊருக்குள் TOP 3 என்றவிதத்தில் சும்மா தெறிக்க விட்டுக்கொண்டிருந்தது ! காலண்டர்கள் & ரெடிமேட் நோட்புக் ராப்பர்களின் உருவாக்கத்தில் வியாபாரம் திகுடுமுகுடாய் ஓடிக்கொண்டிருக்க, தந்தை + அவரது சகோதரர்கள் சினிமாவில் வரும் தொழிலதிபர்கள் ரேஞ்சுக்கு பிசியோ பிசி ! நூறு பேருக்கு குறையாது பணி செய்வார்கள் அந்நாட்களிலேயே என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் ! So அப்போதெல்லாம் ஆர்டர் ; வசூல் ; காலெண்டர்களுக்கான படம் வரையும் வடஇந்திய ஓவியர்களை சந்திக்கவென தந்தை டூர் கிளம்பிப் போனால் ஊர் திரும்ப சுத்தமாய் ஒரு மாசமோ, 40 நாட்களோ, ஆகி விடும் ! ஆனால் எதிர்வீட்டில் தாத்தா & பாட்டி குடியிருந்ததால் பயம் தெரியாது ; எங்கள் வண்டி அதுபாட்டுக்குப் பயணிக்கும் ! ரொம்பவே சிரமப்பட்டு வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர் என்ற முறையில் தாத்தா ரொம்பவே சிக்கனமானவர் ; ஆனால் ரொம்பவே தொலைநோக்குப் பார்வை கொண்டவர் ! அவசியமின்றி ஆடம்பரச் செலவுகள் செய்திட மாட்டார் ; ஆனால் பேரப்பிள்ளைகளுக்கென எதையும் செய்யத் தயாராக இருப்பார் ! விடுமுறைகளில் சென்னைக்குப் போனால் எங்களை அந்நாட்களது மூர் மார்க்கெட்டிலோ ; ஊருக்குள்ளேயே இருந்த zoo -விலோ இறக்கிவிட்ட கையோடு அப்பா கிளம்பிவிடுவார் - சென்னையிலுள்ள காலெண்டர் விற்பனையாளர்களைச் சந்திக்க ! பொழுது சாயும் நேரத்துக்குத் தான் திரும்புவார் என்றால் கூட முழுநேரமும் தாத்தா உடனிருப்பார் என்பதால் பயமின்றித் திரிவோம் ! So சின்ன வயதிலிருந்தே எங்களின் வாழ்க்கைகளில் தாத்தா ஒரு constant இருப்பாகவே தொடர்ந்திட்டார் !
சுதேசி காங்கிரஸ் அமைப்பில் அவருக்கு ஈடுபாடுண்டு என்பதாலோ என்னவோ, வெள்ளை வெளேர் கதர் வேஷ்டி & கதர் ஜிப்பா தான் தாத்தாவின் உடை எப்போதுமே ! நல்ல உயரம் ; ஆஜானுபாகுவான உருவம் ; நெற்றியில் குங்குமப் பொட்டு ; மீசையில்லா மழுமழு முகம் ; பிரமாதமான பேச்சாற்றல் ; அந்தக் கதராடை என்ற தோரணை - அவரைப் பார்த்த நொடியே, புதியவர்களிடம் கூட ஒருவித மரியாதையை உருவாக்கிடுவதை எண்ணற்ற முறைகள் நான் பார்த்திருக்கிறேன் ! அவருமே ஒரு சிறு அச்சகம் நடத்தி வந்த போதிலும், காலையில் கொஞ்ச நேரம் ஆபீசுக்குப் போய் விட்டுத் திரும்பிட்டால் - ஊருக்குள் உள்ள பொதுக்காரியங்களின் முன்னணியில் செயலாற்றிடுவார் ! பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உயர்பொறுப்பு ; பில்டிங் சொசைட்டியில் தலைவர் பதவி ; அச்சக சங்கத்தின் தலைவர் பொறுப்பென எதை எதையோ இழுத்துப் போட்டுக் கொண்டு பணியாற்றுவார் ! ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்த பொழுது, சிவகாசியிலிருந்து அச்சக சங்கத்து முக்கியஸ்தர்களை அழைத்துக் கொண்டு டில்லி சென்று பிரதமரைச் சந்தித்து எடுத்துக் கொண்ட போட்டோ தாத்தா வீட்டில் மெகா சைசில் சுவற்றில் தொங்குவது எனது ஆயுட்கால நினைவுகளுள் ஒன்று ! பொதுக்காரியங்களுக்கென நேரத்தை ஒதுக்கிய பிற்பாடு முழுக்க முழுக்க வீட்டில் எங்களோடு நேரம் செலவிடுவதே தாத்தாவின் ஆதர்ஷப் பொழுதுபோக்கு ! யாருக்கேனும் உடம்புக்கு முடியவில்லையா ? டாக்டரிடம் இட்டுப் போவது தாத்தாவாகத்தானிருக்கும் ! அவர் ரொம்பவே பயந்த சுபாவம் என்ற போதிலும், அந்தத் தோரணை அதை மறைத்து விடுவதுண்டு ! And எங்களுக்கும் தாத்தா ஒரு larger than life figure !
எல்லாமே மாறியது 1981-ன் இறுதியினில் ! சகோதரிகளுக்குத் திருமண வயதுகள் நெருங்கிடும் என்பதால் பெரியதாய் ஒரு சொந்த வீட்டைக் கட்ட 1978-ல் திட்டமிட்டார் தந்தை ! ஆனால் அந்த வீடு வளர்ந்த வேகத்தை விட தந்தையின் தொழிலினில் வளர்ந்த சிக்கல்கள் ஜாஸ்தி வீரியத்துடன் இருந்ததால், ஜவ்வாய் இழுத்து கிட்டத்தட்ட மூன்றரை ஆன்டுகளாயிற்று வீடு முடிவுற ! So நினைவு தெரிந்த நாள் முதலாய் எதிர் எதிர் வீட்டில் வசித்து வந்த நாங்கள் டிசம்பர் 1981-ல் மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு (அப்போது) ஊருக்கு வெளியே இருந்த வீட்டுக்கு குடி மாறினோம் - சகோதரிகளுடனும் ! So திடு திடுப்பென டவுணுக்குள் இருந்த தாத்தா & பாட்டிக்கு தனிமையும், வெறுமையுமே துணையாகிப் போயின ! வாரத்தில் பாதி நாட்கள் காலையில் கிளம்பி எங்கள் வீட்டுக்கு வந்து விட்டு, பொழுது சாயும் போது தான் டவுணுக்குத் திரும்புவார்கள் என்ற போதிலும், உள்ளங்கைக்குள் பேரப்பசங்களும், மகளும் வசித்த அந்த நாட்கள் திரும்பிடாது தானே ?!
பாட்டிக்கு என்றைக்குமே ஆரோக்கியம் துணை இருந்ததில்லை ! சர்க்கரை வியாதி ; ஆஸ்துமா ; சிறுநீரகப் பாதிப்பு என்று ஏதேதோ படுத்தி எடுக்கும் அவரை ! நாள்தோறும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ள அவர் ஆஸ்பத்திரிக்குப் போய்வருவது அப்போதே கஷ்டமாக இருக்கும் ; ஆனால் எதையும் காட்டிக் கொள்ளாது சிரித்த முகத்தோடு சுற்றி வருவார் ! பாட்டிக்கும் அம்மா மேல் வாஞ்சையுண்டு என்ற போதிலும், தாத்தாவைப் போல "anything for the daughter" ரகமெல்லாம் கிடையாது ! தாத்தாவின் ஆபீசில் பின்னே ஒரு ஏக்கரில் ஒரு பெரிய வயல்வெளி இருக்கும் ; அங்கே பால்மாடுகளும் வளர்த்திடுவார்கள் ! So தினமும் வீட்டுக்குப் பால் அங்கிருந்து வந்துவிடும் ! ஆனால் அதெல்லாம் பாட்டியின் டிபார்ட்மெண்ட் என்பதால் - லிட்டருக்கு இவ்வளவு என்ற கணக்குக்கேற்ப காசு கொடுத்துத் தான் நாங்களே வாங்கிக்கொண்டாக வேண்டும் ! தினசரி ஐம்பது காசோ என்னவோ (!!!) எடுத்துக் கொண்டு போய் எதிரே இருக்கும் பாட்டி வீட்டிலிருந்து பால் வாங்கி வருவேன் ! என்றைக்கேனும் காசு கொண்டு போகாது போனால், "அம்மாட்ட சொல்லி, நாளைக்கு சேர்த்து வாங்கிட்டு வந்திரனும் கண்ணா...சரியா ?!" என்று ஞாபகப்படுத்தி அனுப்புவார்கள் ! தாத்தா இந்தக் கூத்தைப் பார்த்துத் தலையிலடித்துக் கொண்டாலும் - 'தாயும் பிள்ளையுமா இருந்தாலும், வாயும் வயிறும் வேற !!' என்று இந்த ஒற்றைச் சமாச்சாரத்தில் பாட்டி பிரேக் போட்டுவிடுவார் ! சினிமா தியேட்டருக்குப் போனால் டிக்கெட் காசையும், கரீட்டாய்ப் பிரித்துக் கொள்வோம் !! ஹோட்டலுக்குப் போனாலும் அதே கதை தான் !
ஆனால் 1981-ல் நாங்கள் ஒட்டுமொத்தமாய் கிளம்பிப் போய்விட்டதில் பாட்டியும் எத்தனை சோர்வுற்றுப் போனார்கள் என்பதைத் தொடர்ந்த நாட்களில் பார்க்க முடிந்தது ! அடிக்கடி சுகவீனங்கள் ; ஆஸ்பத்திரிவாசங்கள் என்று பொழுதுகள் சென்றன ! நாங்கள் டவுணுக்குள் குடியிருந்த வீட்டின் மிக அருகில் தான் சிவகாசியில் செஸ் க்ளப் இருந்தது ! 1979-ல் எனக்குத் தொற்றிக்கொண்ட செஸ் பைத்தியம் அசாத்தியமானது ! ஒவ்வொரு ஞாயிறின் காலையிலும் அங்கே போனால், பொழுது சாயும் போது தான் வீடு திரும்புவேன் ! ஜூனியர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தால், கப்பில் முதலிலேயே என் பெயரைப் பொறித்து விடும் அளவுக்கு அய்யா பெரிய பிஸ்தா அப்போதெல்லாம் ! +2 பரீட்சைகளின் மத்தியில் கூட சத்தமில்லாது பக்கத்து ஊரான விருதுநகரில் நடந்துகொண்டிருந்த மாநில அளவிலான செஸ் போட்டியில் கலந்துகொள்ளும் அளவுக்கு அந்த craze முற்றியிருந்தது ! So 1981-ல் நாங்கள் தூரமாய்க் குடி போய்விட்டாலும் ஞாயிறு பிறந்துவிட்டால் காலை எட்டரை மணிக்கே நான் தாத்தா வீட்டில் ஆஜராகியிருப்பேன் ! சைக்கிளை ஸ்டான்ட் போட்டு நிறுத்தும் போதே அசைவ விருந்தின் வாசனை நாசியைத் துளைக்கும் ! தாத்தாவும் சரி, பாட்டியும் சரி, அந்த ஒற்றை நாளினில் என்னைக் கவனிக்கும் விதத்தினை, ப்ரூனே சுல்தானின் அரண்மனையில் கூட எதிர்பார்த்திட இயலாது ! சாப்பிட்ட மறுநிமிஷம் ஓட்டம் பிடிப்பவன், மறுக்கா மதியத்துக்குத் தான் வீட்டுக்குத் திரும்புவேன் - வயிற்றை ரொப்பிக் கொள்ள ! மாலை சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பும் முன்னே வேறெதாச்சும் ரெடியாக இருக்கும் ! வாரத்தின் அந்த ஒற்றை நாளை வேறெதெற்காகவும் தாத்தாவோ, பாட்டியோ செலவிட்டதாய் எனக்கு நினைவே இல்லை ! இந்நேரத்துக்கு வீட்டின் பிள்ளைகளுள் தாத்தாவுக்கும், பாட்டிக்கும் ரொம்பவே வேண்டப்பட்ட பேரப்பிள்ளையாய் நான் மாறியிருந்தேன் ! எப்போதும், எதெற்காகவும் அவர்களது கதவுகள் எனக்குத் திறக்காதிருந்ததில்லை !1983 -ன் பிப்ரவரியிலோ, மார்ச்சிலோ தட்டுத் தடுமாறி ஒரு மழை நாளிரவினில் அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டி நின்ற போது எனக்கு பள்ளியின் கடைசி மாதத்து fees கட்டப் பணமிருக்கவில்லை ! அறுபது ரூபாய்கள் monthly fees + exam fees என நூற்றிச்சில்லறை ரூபாய்களை புரட்டவே நாக்குத் தள்ளி, கையேந்தி நின்ற நாட்களவை ! தாத்தா அழுது நான் பார்த்த முதல் தருணம் அது தான் ! தொடர்ந்த நாட்களில் அந்தக் கண்ணீர் முகத்தை மீண்டும் பார்க்கும் துரதிர்ஷ்டம் நிகழ்ந்தது - பாட்டியின் மரணத்தைத் தொடர்ந்து !
All good things have a shelf life தானே ? 1983-ன் ஏப்ரலில் CBSE தேர்வுகள் முடிந்த கையோடு விடுமுறைகள் என்று சுற்றித் தெரிந்ததை விடவும், அடுத்து என்ன ? என்ற கேள்விக்கு விடை தேடிய நாட்களே ஜாஸ்தி ! சக மாணவர்கள் ஆங்காங்கே அப்ளிகேஷன் போட்டு காலேஜ்களில் சேரத்துவங்க, ஸ்கூல் topper ஆன நானோ திரு திருவென்று முழித்துக் கொண்டிருந்தேன் ! அந்நேரத்துக்கு எனது மூத்த சகோதரிகள் இருவருக்குமே திருமணமாகியிருக்க, சிக்கல்களில் விழி பிதுங்கியிருந்த தந்தையால் ஏதும் உதவிடும் சூழலில்லை ! "இருக்கும் மிஷின்களில் கொஞ்சத்தை விற்றுக் கடனடைத்த பிற்பாடு ஒரு மிஷினை மட்டும் சென்னைக்கு கொண்டு சென்று, அங்கே ஆபீஸ் போடப்போகிறோம் ; நீ அதைப் பார்த்துக் கொண்டே மாலை நேரக்கல்லூரியில் சேர்ந்து படித்துக் கொள்ளலாம் !" என்று தந்தை சொன்னபோது அதுவும் ஓ.கே. தானே என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன் ! ஆனால் கடனெனும் எமன் மிச்சம் மீதமின்றி அத்தனை மிஷின்களையும் வட்டியெனும் சித்திரகுப்தனின் துணையோடு இழுத்துப் போனது என் துரதிர்ஷ்டம் ! பாட்டிக்கும் உடல்நிலை மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையில், வீட்டுக்கும், மருத்துவமனைக்குமாய் அலைந்து கொண்டிருந்த தாத்தாவிடம் - "காலேஜில் என்னைச் சேர்த்து விடப் பணம் தர்றீங்களா ?" என்று கேட்க எனக்கு நா வரவில்லை ! ஏற்கனவே ஒருமுறை நான் கையேந்தி நின்றதைக் கண்டு கண்கலங்கிய மனுஷனை மறுபடியும் படுத்தியெடுக்க எனக்கு தில்லும் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! So எனக்குள் நானே புதையுண்டு போனவனாய் - "தொழில் பண்ணப் போறேன் ; புக் போடப் போறேன் !" என்று ஏதேதோ பெனாத்தித் திரிந்தேன் ! டிசம்பரில் பாட்டி காலமானார் - தாத்தாவின் தோள்களிலேயே !
சகோதரிகள் ஆளுக்கொரு ஊரில் செட்டில் ஆகியிருக்க, பாட்டியும் திடு திடுப்பென மறைந்திருக்க - பெரியதொரு குருவிக்கூடு திடீரென சூன்யமாய்த் தெரியத்துவங்கியது ! வெட்டி ஆபீசராய்ச் சுற்றித் திரிந்தவன் நானே என்பதால், பாட்டியின் வீட்டை ஒதுக்குவது ; தாத்தாவின் அச்சகப் பொறுப்புகளைக் கவனிப்பது என்று அந்த டிசம்பரை நகற்றிய நாட்கள் இன்னமும் நினைவில் நிற்கின்றன ! டவுணுக்குள் அந்தப் பூர்வீக வீட்டில் தாத்தா மட்டும் தனித்திருக்க வேண்டாமென்று தீர்மானித்து எங்கள் வீட்டுக்கு அவரை அழைத்து வந்தோம் ! எதெற்கென்று மறந்து விட்டது - ஆனால் டிசம்பரின் ஒரு இரவில், பூட்டிக் கிடந்த தாத்தாவின் வீட்டிலிருந்து எதையோ எடுத்து வரும் பொருட்டு என்னை அனுப்பினார்கள் ! நினைவு தெரிந்த நாள் முதலாய் அந்தச் சந்துக்குள் போகும் போதெல்லாம் மனம் நிறைந்திருக்கும் சந்தோஷம் அன்றைக்கு முற்றிலுமாய்க் காணாது போயிருந்தது ! நாங்கள் ஓராயிரம் நாட்கள் சிரித்து, மகிழ்ந்து, விளையாடிய அந்த முற்றமும், தாத்தாவின் அந்த வீடும் இருளில் மூழ்கிக் கிடப்பதைப் பார்த்து எனக்குள் பயமே மிஞ்சியது ! கதவைத் திறக்கும் போதே பாட்டியின் குரல் காதில் கேட்பது போலிருந்தது ; அவர் வழக்கமாய் அமர்ந்து காப்பி குடிக்கும் அந்த இடத்தில அவரைப் பார்ப்பது போலவே தெரிகிறது ! போனது எதெற்கென்றே மறந்து போய் தலை தெறிக்க வீடு திரும்பியவனுக்கு அன்றிரவு முதலாய் புதிதாயொரு அத்தியாயம் துவங்கியது - தாத்தாவின் அண்மையின் வடிவத்தில் !
பெரிய வீடே என்றாலும், இரண்டே படுக்கையறைகள் தான் அந்த விசித்திரத் திட்டமிடலில் ! So ஒரு அறையில் அப்பா, அம்மா, தங்கை & தம்பி தூங்கிட, இரண்டாவது அறையை ஆக்கிரமித்திருந்த என்னோடு தாத்தாவும் ஒரு மடக்குக் கட்டிலைப் போட்டுப் படுத்துக் கொண்டார் அன்று முதலாய் ! பாட்டியின் இழப்பு தந்த வலியினை தாத்தா மறைக்க முயன்றாலும், அந்த நிசப்த இரவுகளில், நான் தூங்கிவிட்டேனென்ற நினைப்பிலிருக்கும் தாத்தாவின் விசும்பல்கள் காட்டிக் கொடுத்திடும் ! நாட்கள் தான் எத்தனை பெரிய இழப்புகளையும் கபளீகரம் செய்து ஏப்பமிடும் சக்தியைத் தந்திடுமே ? சிறுகச் சிறுக பாட்டி நினைவுகளில் மாத்திரமே என்றாகிப் போக, கண்முன்னே தத்தளித்துக் கொண்டிருக்கும் மூத்த பேரனைக் கரைசேர்க்க முனைந்தார் ! எனது சென்னை குடிமாற்றலோ ; தந்தையின் சென்னைக் கிளையோ ; மாலைநேரக் கல்லூரிப் படிப்போ கானல்நீராய் மாத்திரமே இருந்திடவுள்ளதை புரிந்து கொண்டவராய் என்னை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைதூரப் படிப்புத் திட்டத்தில் சேர்த்து விட்டார் - B.Com படித்திட ! அதனில் சேரும் பொருட்டு, ஒரிஜினல் +2 மார்க் ஷீட் & TC-களில் பச்சை மசிக்கையெழுத்து வாங்கிடும் பொருட்டு, தாத்தாவுக்கு ரொம்பவே நெருங்கிய நண்பரான அரசுப் பள்ளியின் தலைமைஆசிரியரிடம் போன அந்த நாள் இன்னமும் நினைவுள்ளது ! நான் படித்தது வேறொரு பள்ளியில் தான் என்றாலும், எங்கள் பள்ளியின் சார்பில் நான் பேச்சுப் போட்டி ; கட்டுரைப் போட்டி என்று அத்தனையிலும் சுற்றி வருவதை அறிந்திருக்கிறார் அவர் ! "இவனை ஏன் காலேஜில் சேர்க்கவில்லை ? நன்றாகக் படிக்கும் பையனை தொழிலுக்குள் இழுத்து விட்டு இப்படிப் பாழாக்குகிறீர்களே !" என்று அவர் தாத்தாவிடம் ஒரு ருத்திரதாண்டவமே ஆடியது மறக்காது ! ஏதோ சொல்லிச் சமாளித்துக் கையெழுத்து வாங்கிவிட்டுக் கிளம்பிய போது தாத்தாவுக்கு என்னை எப்படியேனும் தூக்கி நிறுத்த வேண்டுமென்ற வைராக்கியம் கூடிப் போனது போலும் !
அன்று முதலாய் எங்களின் இரவு நேரங்கள் நள்ளிரவு வரையுமே ஏதேதோ பேசிடும் படலங்களாய் மாறிப் போயின ! தான் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் பற்றி ; அரசாங்க உத்தியோகத்தில் இருந்தது பற்றி ; குட்டிக்கர்ணமடித்து தொழில் துவங்கியது பற்றி ; தனது சகோதரிகளை, அவர்களது பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்கியது பற்றி, என்று ஏதேதோ பேசுவார் ! கல்லூரி படிக்க வாய்ப்புக் கிட்டாது போனது தான் எனக்கு - ஆனால் வாழ்க்கை எனும் பல்கலைக்கழகத்தில் எனக்கு ஒவ்வொரு இரவிலும் கிடைத்த பாடங்கள் அசாத்தியமானவை ! பேசுவோம்..பேசுவோம்..பேசுவோம்... தாத்தா தூக்கத்தில் அசரும் வரைப் பேசுவோம் ! இருளிருப்பின், சீக்கிரமே கதிரவனின் கதிர்கள் ஒளியையும் கொணர்வதே இயற்கையின் நியதியல்லவா ? "லயன் காமிக்ஸ்" எனும் ஒரு கனவு மெதுமெதுவாக உருவம் பெற்றிட, "காதலிக்க நேரமில்லை" நாகேஷ் போல திரிந்து வந்தேன் ! "கதை ரெடி...ஹீரோ / ஹீரோயின் ரெடி...பைனான்ஸ் மட்டுமே தேவை" என்ற நிலையில் அந்தக்குறையையும் நிவர்த்தி செய்தார் தாத்தா ! தடுமாற்றத்தோடு கிளம்பிய வண்டி, ஸ்பைடரெனும் புண்ணிய ஆத்மாவின் சகாயத்தில் டாப் கியரைத் தொட - வாழ்க்கையே திடீரென இளையராஜாவின் மெலடியாய் இனிக்கத் துவங்கியது ! எங்களது இரவு அளவளாவல்களோ இப்போது வேறொரு லெவெலில் தொடர்ந்தன ! தாதாவுக்குத் தொழில்ரீதியான technical stuff ஏதும் பரிச்சயம் கிடையாது ; அவை எல்லாமே சீனியர் எடிட்டரிடமும், அங்கே அந்நாட்களில் பணியாற்றிய பாலசுப்ரமணியன் எனும் மேலாளரிடமும் தான் கற்றுக்கொண்டேன் ! ஆனால் பணம் சார்ந்த விஷயங்களில் ; தொழிலை அணுக வேண்டிய விதங்களில் தாத்தாவின் அறிவுரைகள் அற்புதமானவை ! ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ராவினில் பேப்பரும் கையுமாய் அமர்ந்திருப்பேன் - Lion Comics கம்பெனியின் Balance sheet தனைப் போட்டுப் பார்க்க !! தாத்தா கொடுத்த 40,000 பணம் எந்த ரூபத்தில் கையில் உள்ளதென்பதை நான் எழுதிக் காட்டிட வேண்டும் ! அந்த நாற்பதாயிரம் பணமானது - பேப்பர் இருப்பாய் ; கதைக் கொள்முதலாய் ; புத்தக ஸ்டாக்காய் ; வங்கிக்கையிருப்பாய் இருப்பதை நான் பட்டியலிட்டு எழுதிக் காட்டி, ஒரு ஆயிரம், இரண்டாயிரமாவது லாபம் சம்பாதித்திருக்கிறேனா ? இல்லையா ? என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்ளாது தூங்க மாட்டார் ! ஒருமுறை தொள்ளாயிரம் ரூபாய்க்கு கணக்கு உதைக்கிறதென்று ராத்திரி ஒரு மணி வரைக்கும் இந்த இளம் அம்பானி உட்கார்ந்திருக்க நேரிட்டது என்றால் நம்புவீர்களா ? இறுதியில் அது எனக்கு புதிதாய் வாங்கிய ஹெர்குலிஸ் சைக்கிளுக்குச் செலவானதென்ற புரிதல் வந்த பின்தான் தூக்கம் பிடித்தது - எங்கள் இருவருக்குமே !
கதைக்கொள்முதல் செய்திட டில்லியில் இருந்த அப்போதைய Fleetway ஏஜெண்ட்களைச் சந்திக்கும் அவசியம் 1984-ன் இறுதியில் எழுந்த போது டிக்கெட் போட்டது, எங்கள் இருவருக்குமே ! அதுவரைக்கும் தமிழ்நாட்டைத் தாண்டியதில்லை எனும் போது "டில்லி வரைக்கும் தனியாவா ??? நானும் வாரேன் !!" என்று தாத்தா கூட வந்தார் ! வெளி மாநிலப் பயணம் என்றவுடன் தாத்தாவின் கெட்டப்பே மாறிடும் ! ஒரு இளம் மஞ்சள் நிற முழுக்கைச் சட்டையும் ; ஒரு பிரவுன் பேண்டும் போட்டுக் கொண்டு வரும் தாத்தாவோடு டில்லியில் சுற்றிய நாட்களில் எனக்கு கொஞ்சம் விநோதமாயிருக்கும் - அந்தக் காதரின் கம்பீரம் குறைகிறதே என்று !! ஆனால் horses for the courses என்று தெரிந்திருந்தார் ! ரயில் பயணத்தின் போது அரட்டை ; சிலுசிலுக்கும் டில்லியில் பேரனுக்கு ஸ்டைலாக ஸ்வெட்டர் வாங்கித் தந்த பின்னே அரட்டை ; கதைக்குவியலோடு ரூமுக்குத் திரும்பியவன் திறந்த வாய் மூடாது ஸ்பைடரையும், ஆர்ச்சியையும் சிலாகித்த போதும் அரட்டை - என்று தொடர்ந்தது கச்சேரி !
1985-ல் ஐரோப்பிய பயணம் ன்று தீர்மானமான பின்னே தாத்தாவுக்கு கொஞ்சம் பயம் ; கொஞ்சம் உற்சாகம் ! ஆயுசுக்கும் கடல்கடந்திரா ; விமானத்தை அண்ணாந்து கூடப் பார்க்கப் பிரியம் கொண்டிரா மனுஷனுக்கு - ஒரு 18 வயசுக்கோமாளியை 23 நாட்களுக்கு கண்ணுக்குத் தெரியா தேசங்களுக்கு அனுப்பவுள்ளதை எண்ணி பயம் ! அதே நேரம் தன் கற்பனைகளில் கூடச் சாத்தியப்படா ஒரு சமாச்சாரத்தினை பேராண்டி செய்ய முனைவதில் உற்சாகம் ! பதட்டத்தோடும், பரிவோடும் கலந்த அரட்டைகளில் அந்தச் சமயங்களின் ஒவ்வொரு ராத்திரியும் கடந்திட்டன ! ஒரு மாதிரியாய் பயணமும் கிளம்பி ; எல்லாம் ஒழுங்காய் நடந்தேறி ; மூன்று வாரங்களின் முடிவில், முழுசாய், ஒழுங்காய், வெள்ளைக்காரி யாரையும் கையோடு கூட்டி வராது, கதைகளை மட்டும் பேரன் கைபிடித்துக் கொண்டு வந்ததில் தாத்தா அடைந்த சந்தோஷம் தொடர்ந்த மாதம் முழுவதும் பிரதிபலித்தது எங்களின் அரட்டையில் ! முதல்வாட்டி பாரின் போய்விட்டு வரும் எவருக்கும், கதை கேட்க மட்டும் வாகாய் ஒரு ஆள் சிக்கினால், காதில் தக்காளிச் சட்னி கசியும் வரை போட்டுத் தாக்கும் ஆசை பொங்கோ பொங்கென்று பொங்கும் ! நான் மட்டுமென்ன விதிவிலக்கா ? "ஜெர்மனி எப்படி இருந்துச்சு தெரியுமா தாத்தா ? லண்டன் தெரியுமா ? ஸ்காட்லாந்து தெரியுமா ? பெல்ஜியம் தெரியுமா ?" என்று கொலையாய்க் கொல்ல, அத்தனையையும் சந்தோஷமாய்க் கேட்டுக் கொள்வார் ! அந்நாட்களில் கடுதாசித் தொடர்புகளே மார்க்கம் எனும் போது, வேலை சார்ந்த progress பற்றிய விஷயங்கள் அத்தனையையும் சீனியரிடம் பகிர்ந்திடுவேன் ; தாத்தாவிடமோ, பொதுவாய் ஷேம நலன்களை பற்றி மட்டுமே !
1984-ல் துவங்கிய இந்த ரணகள ராத்திரிகள் - 1987 வரைக் குறையின்றித் தொடர்ந்தன ! அந்நேரத்துக்குள் நமது தொழிலுமே சிரமங்கள் ஏகமாய்க் குடியேறியிருந்தன - தந்தையின் நிறுவனத்துக்கு 1986-ல் மூடுவிழா நடத்தியதைத் தொடர்ந்து, அவர் பங்குக்கு மிஞ்சியதொரு முரட்டுக் கடன்தொகையினால் ! அந்தக் கடன்களுக்கு வட்டி கட்டியே என் குறுக்கு கழன்று போகத்துவங்கிட, 1987 / 88 முதலே மொக்கைகளின் மத்தியில் தான் வண்டி ஓடத்துவங்கியது ! அந்நாட்களிலுமே எங்களின் இரவு அரட்டைகள் விடாது தொடர்ந்தன - சிக்கல்களிருந்து விடுபடும் வழிகள் தேடி ! ஆண்டுகள் நகர்ந்திட, ஆபீசில் சிக்கல்களோ குரல்வளையை நெறிக்கும் ரேஞ்சுக்கு முன்னேறியிருந்தன ! ஆனால் நான் அவற்றை முழுசுமாய்த் தாத்தாவிடம் சொல்லாது தவிர்த்தே வந்தேன் - அவர் நிம்மதியைக் கெடுப்பானேன் என்று !
1992 புலர்ந்தது ; and அந்தாண்டே தான் தாத்தாவுக்கு மாரடைப்பின் முதல் அத்தியாயத்தை அறிமுகமும் செய்து வைத்தது ! திடகாத்திரமாய் இருப்போருக்கு நோவே வராதென்ற அந்நாட்களது அசட்டுச் சிந்தனைகளா ? அல்லது பொதுவாய் அப்போதைய ஆயுட்காலங்கள் ஜாஸ்தி என்ற நிதரிசனத்தின் மீதான நம்பிக்கையா ? - சொல்லத்தெரியவில்லை ; ஆனால் எவ்வித மருத்துவ செக்கப்புகளும் செய்து கொள்ள அந்நாட்களில் தோன்றவேயில்லை யாருக்கும் ! So ஒரு கோட்டையின் சுவர்களில் விரிசல் விழுவதை ஆயுசில் முதன்முறையாகப் பார்க்க முடிந்தது ! மாரடைப்பு எத்தனை தாட்டியமான மனுஷாளையும் உலுக்கி விடுமென்பதை அந்நாட்களில் மௌனமாய் நான் பார்த்தேன் ! ஒய்வு அவசியம் ; தூக்கம் அவசியம் ; நிம்மதி அவசியம் என்றான பின்னே அந்த ராத்திரி அரட்டைகள் குறையத் துவங்கின ; மாத்திரைகளில், எதிர்காலம் சார்ந்த பயங்களிலும் கரையத் துவங்கின !இதற்கு மத்தியில் எனக்கு அந்த வருஷமே கல்யாணம் செய்து வைக்கத் தீர்மானித்தனர் ! ஆபீசை ஓட்டவே திணறும் அழகில், இப்போதைக்கு கல்யாணமா ? என்று நான் தயங்கினாலும், தாத்தா பிடிவாதமாய் இருந்தார் ! So ஒரு சுபயோக சுபதினத்தில் குடும்பஸ்தனானேன் !
1992 புலர்ந்தது ; and அந்தாண்டே தான் தாத்தாவுக்கு மாரடைப்பின் முதல் அத்தியாயத்தை அறிமுகமும் செய்து வைத்தது ! திடகாத்திரமாய் இருப்போருக்கு நோவே வராதென்ற அந்நாட்களது அசட்டுச் சிந்தனைகளா ? அல்லது பொதுவாய் அப்போதைய ஆயுட்காலங்கள் ஜாஸ்தி என்ற நிதரிசனத்தின் மீதான நம்பிக்கையா ? - சொல்லத்தெரியவில்லை ; ஆனால் எவ்வித மருத்துவ செக்கப்புகளும் செய்து கொள்ள அந்நாட்களில் தோன்றவேயில்லை யாருக்கும் ! So ஒரு கோட்டையின் சுவர்களில் விரிசல் விழுவதை ஆயுசில் முதன்முறையாகப் பார்க்க முடிந்தது ! மாரடைப்பு எத்தனை தாட்டியமான மனுஷாளையும் உலுக்கி விடுமென்பதை அந்நாட்களில் மௌனமாய் நான் பார்த்தேன் ! ஒய்வு அவசியம் ; தூக்கம் அவசியம் ; நிம்மதி அவசியம் என்றான பின்னே அந்த ராத்திரி அரட்டைகள் குறையத் துவங்கின ; மாத்திரைகளில், எதிர்காலம் சார்ந்த பயங்களிலும் கரையத் துவங்கின !இதற்கு மத்தியில் எனக்கு அந்த வருஷமே கல்யாணம் செய்து வைக்கத் தீர்மானித்தனர் ! ஆபீசை ஓட்டவே திணறும் அழகில், இப்போதைக்கு கல்யாணமா ? என்று நான் தயங்கினாலும், தாத்தா பிடிவாதமாய் இருந்தார் ! So ஒரு சுபயோக சுபதினத்தில் குடும்பஸ்தனானேன் !
மற்ற எல்லோரையும் விட, அவரோடு ஜாஸ்தி நேரம் செலவிட்டவன் நானே என்ற முறையில் தாத்தாவின் முடக்கம் உள்ளுக்குள் ஒரு இனமறியா பயத்தை உருவாக்கியிருந்தது ! நினைவு தெரிந்த நாள் முதலாய் தாத்தா உடம்புக்கு முடியாது படுத்ததாய் ஞாபகமே கிடையாதெனும் போது அவரொரு சூப்பர்மேன் என்று நான் நம்பியிருந்தேனோ - என்னவோ ; அவரைப் படுக்கையில் தளர்ந்து பார்ப்பது உள்ளுக்குள் பிசைந்தது ! அதுமட்டுமன்றி, சிக்கல் எதுவானாலும், ஒரு தைரியம் சொல்லவாச்சும் அவர் இருக்கிறாரே என்ற எனது அடிமனது நம்பிக்கை ஆட்டம் கண்டிருந்ததும் புரிந்தது ! நாட்கள் ஓடிட, தாத்தா கொஞ்சமாய்த் தேறியிருந்தார் ! அவரது பூர்வீக வீட்டுக்கே திரும்பிடத் தீர்மானித்தவராய் அங்கே அவர் இடம்மாறிய சமயம், நமது காமிக்ஸ் அலுவலகம் அங்கு தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது ! In fact - 1989 முதலே காமிக்ஸ் அலுவலகத்தை அங்கே மாற்றியிருந்தேன் ! நாள் முழுக்க அங்கே ஓவியர்கள் ; டைப்செட்டிங் ஆட்கள் ; டெஸ்பாட்ச் staff என்று ஜெ ஜெவென இருப்பதை ரொம்பவே ரசிப்பார் ! மையமாய் ஒரு சேரைப் போட்டு அமர்ந்து கொண்டு ஜாலியாய் ஒவ்வொருவருடனும் அரட்டையடிப்பதில் அவரது நாட்கள் உற்சாகம் காணும். நானோ பிரஸ் இருக்கும் இடத்தில பெரும்பான்மை நேரத்தைச் செலவிட்டு விட்டு அங்கே காமிக்ஸ் பணிகளைக் கவனிக்க வேளை கெட்ட வேளையில் போனாலும், தவறாது என்னோடு பேசிக்கொண்டிருப்பார் !
நான் வரும் போது என் முகரையில் தெரியும் சோர்வைக்கொண்டே கணித்து விடுவார் - தம்புடு பையில் தம்படி லேதுவென்று ! கடன்கள் சிறுகச் சிறுக அழுத்துவதை இயன்றமட்டும் வெளிக்காட்டிக் கொள்ளாது நான் சுற்றி வந்தாலும், எனது ஒவ்வொரு எட்டையும் உடனிருந்து பார்த்தவருக்குத் தெரியாதா - என் சிரமங்கள் பற்றி ? நிலைமை கொஞ்சம் கொஞ்சமாய்க் கைமீறத் துவங்கிய சமயம் அவரிடம் நிலவரத்தைச் சொல்லாது இருக்க முடியவில்லை ! என்ன நினைத்தாரோ தெரியாது - தொடர்ந்த 90 நாட்களுக்குள் அவர் வாங்கிப் போட்டிருந்த சொத்துக்களின் பெரும்பான்மையை விற்று, எனது தலைக்கு மேல் கத்தியாய்த் தொங்கிக்கொண்டிருந்த கடன் தொகையின் முழுமையையும் தீர்க்கும் பணத்தைப் புரட்டியிருந்தார் ! இருந்த கடன்கள் சகலத்தையும் 1994-ல் தீர்த்து முடித்த போது என்னுள் இருந்தது நிம்மதியா ? நன்றியுணர்வா ? ஒவ்வொரு பள்ளத்தில் கால்விடும் போதும் காப்பாற்றும் இவரின்றி வாழ்க்கைச் சக்கரங்கள் ஓடத்தான் செய்யுமா ? என்ற கேள்வியா ? - தெரிந்திருக்கவில்லை ! தொடர்ந்த நாட்களில் பிடுங்கல்கள் இல்லாது, தொழில் செய்யும் சுதந்திரத்தை ரசித்தவனாய், மிஷினரி இறக்குமதித் தொழிலுக்குள் மெதுவாய்க் கால்பதித்தேன் !
அதுநாள் வரைக்கும் அந்த ஆரம்பத்து 2 ஐரோப்பியப் பயணங்களுக்குப் பின்னே, கடல்கடந்து செல்லும் அவசியம் எழுந்திருக்கவில்லை ! ஆனால் இந்த இறக்குமதித் தொழிலின் நிமித்தமோ, உலக வரைபடத்தை அடிக்கடி பயணப்பட்டியலில் கொணர வேண்டிப் போன போது தாத்தாவுக்கு சொல்லி மாளா வியப்பு ! எங்கெங்கோ பயணங்கள் ; ஏதேதோ வியாபார முயற்சிகள் என்பதில் அளவிட இயலா மகிழ்ச்சி ! ஆனால் என்ன கூத்தடித்தாலும், தாத்தாவைப் பார்த்துப் பேசாது இருந்த நாட்கள் குறைவே ! 1998-ல் ஒரு டிசம்பரின் அதிகாலையில், ஏற்கனவே ஆஸ்பத்திரியில் இருந்தவரை மாரடைப்பின் மூன்றாம் அத்தியாயம் காலனிடம் காணிக்கையாக்கிய தகவல் வந்த போது நானும், என் தம்பியுமே அவரை வீட்டுக்கு கொண்டு வர ஓடினோம் ! சின்ன அந்த அறையின் தரையில் விழுந்து கிடந்தவரை தூக்கிப் படுக்க வைக்கக் கூட அங்கு யாருக்கும் தோன்றியிருக்கவில்லை ; மாரடைப்பு தாக்கிய நொடியில் கீழே விழுந்ததில் நெற்றிப்பொட்டில் இரத்தம் கட்டியிருக்க, தரையில் face down கிடந்தார் ! ஆயுளெல்லாம் எங்கள் ஒவ்வொருவரையும் தூக்கி நிறுத்துவதையே தன் லட்சியமாய்க் கொண்டிருந்தவரை அந்தக் காலையில் தரையிலிருந்து தூக்கிட வேண்டிப் போனது தான் விதியின் வினோதம் !
நான் வரும் போது என் முகரையில் தெரியும் சோர்வைக்கொண்டே கணித்து விடுவார் - தம்புடு பையில் தம்படி லேதுவென்று ! கடன்கள் சிறுகச் சிறுக அழுத்துவதை இயன்றமட்டும் வெளிக்காட்டிக் கொள்ளாது நான் சுற்றி வந்தாலும், எனது ஒவ்வொரு எட்டையும் உடனிருந்து பார்த்தவருக்குத் தெரியாதா - என் சிரமங்கள் பற்றி ? நிலைமை கொஞ்சம் கொஞ்சமாய்க் கைமீறத் துவங்கிய சமயம் அவரிடம் நிலவரத்தைச் சொல்லாது இருக்க முடியவில்லை ! என்ன நினைத்தாரோ தெரியாது - தொடர்ந்த 90 நாட்களுக்குள் அவர் வாங்கிப் போட்டிருந்த சொத்துக்களின் பெரும்பான்மையை விற்று, எனது தலைக்கு மேல் கத்தியாய்த் தொங்கிக்கொண்டிருந்த கடன் தொகையின் முழுமையையும் தீர்க்கும் பணத்தைப் புரட்டியிருந்தார் ! இருந்த கடன்கள் சகலத்தையும் 1994-ல் தீர்த்து முடித்த போது என்னுள் இருந்தது நிம்மதியா ? நன்றியுணர்வா ? ஒவ்வொரு பள்ளத்தில் கால்விடும் போதும் காப்பாற்றும் இவரின்றி வாழ்க்கைச் சக்கரங்கள் ஓடத்தான் செய்யுமா ? என்ற கேள்வியா ? - தெரிந்திருக்கவில்லை ! தொடர்ந்த நாட்களில் பிடுங்கல்கள் இல்லாது, தொழில் செய்யும் சுதந்திரத்தை ரசித்தவனாய், மிஷினரி இறக்குமதித் தொழிலுக்குள் மெதுவாய்க் கால்பதித்தேன் !
அதுநாள் வரைக்கும் அந்த ஆரம்பத்து 2 ஐரோப்பியப் பயணங்களுக்குப் பின்னே, கடல்கடந்து செல்லும் அவசியம் எழுந்திருக்கவில்லை ! ஆனால் இந்த இறக்குமதித் தொழிலின் நிமித்தமோ, உலக வரைபடத்தை அடிக்கடி பயணப்பட்டியலில் கொணர வேண்டிப் போன போது தாத்தாவுக்கு சொல்லி மாளா வியப்பு ! எங்கெங்கோ பயணங்கள் ; ஏதேதோ வியாபார முயற்சிகள் என்பதில் அளவிட இயலா மகிழ்ச்சி ! ஆனால் என்ன கூத்தடித்தாலும், தாத்தாவைப் பார்த்துப் பேசாது இருந்த நாட்கள் குறைவே ! 1998-ல் ஒரு டிசம்பரின் அதிகாலையில், ஏற்கனவே ஆஸ்பத்திரியில் இருந்தவரை மாரடைப்பின் மூன்றாம் அத்தியாயம் காலனிடம் காணிக்கையாக்கிய தகவல் வந்த போது நானும், என் தம்பியுமே அவரை வீட்டுக்கு கொண்டு வர ஓடினோம் ! சின்ன அந்த அறையின் தரையில் விழுந்து கிடந்தவரை தூக்கிப் படுக்க வைக்கக் கூட அங்கு யாருக்கும் தோன்றியிருக்கவில்லை ; மாரடைப்பு தாக்கிய நொடியில் கீழே விழுந்ததில் நெற்றிப்பொட்டில் இரத்தம் கட்டியிருக்க, தரையில் face down கிடந்தார் ! ஆயுளெல்லாம் எங்கள் ஒவ்வொருவரையும் தூக்கி நிறுத்துவதையே தன் லட்சியமாய்க் கொண்டிருந்தவரை அந்தக் காலையில் தரையிலிருந்து தூக்கிட வேண்டிப் போனது தான் விதியின் வினோதம் !
இன்றைக்கு ஆண்டுகள் 22 ஓடிவிட்டன ; தலைமுறைகள் மாறி விட்டன ; காலங்கள் மாறி விட்டன ; காட்சிகளும் மாறி விட்டன ; வாழ்க்கையின் ஏற்றங்களையும் பார்த்தாச்சு ; பள்ளங்களையும் உணர்ந்தாச்சு ! நிறைய விஷயங்கள் இன்றைக்கு மறந்தும் விட்டன ; நிறைய வலிகளைக் கடந்தும் விட்டாயிற்று ! யார் வாழ்வில் தான் இழப்புகளில்லை ? யாரிடம் தான் வலிகள் இல்லை ? அன்றைக்கு தூரத்துக் கனவாய்த் தோன்றிய பல விஷயங்கள் இப்போது சுலபமாய்த் தொட்டு விடும் தொலைவில் இருக்கின்றன தான் ! இன்றைய நமது காமிக்ஸ் முயற்சிகளும், இந்த வாசகச் சந்திப்புகளும், இந்த சந்தோஷங்களும், அவர் இருந்த நாட்களிலெல்லாம் சாத்தியப்பட்டிருப்பின், அவர் அடைந்திருக்கக்கூடிய குதூகலத்துக்கு எல்லைகளே இருந்திராது ! என்றைக்கேனும் ஏதேனும் மனதை நெருடிடும் சமயமெல்லாம் தாத்தாவுடன் கழித்த அந்த அரட்டை ராத்திரிகளைத் தான் நினைத்துக் கொள்வேன் ! இந்தப் பதிவின் துவக்கத்தில் என் முன்வைக்கப்பட்ட அந்தக் கேள்வியை வாசித்த போது - 900 ரூபாய்க்கென முக்கால் ராத்திரி முழித்திருந்த அந்த ஒற்றை வேளையை மட்டுமேனும் மறுக்கா வாழ்ந்து அனுபவிக்கும் பொருட்டு, தாத்தாவை கூப்பிட முடிந்தால் தப்பில்லையே என்று நினைத்தேன் ! சொல்லுங்களேன் guys - எனது தேர்வு ஓ.கே.வா ? என்று ?! இதை நான் டைப்படித்து முடிக்கும் போது மணி மூன்று !! கிட்டத்தட்ட அந்த இரவினைப் போலவே என்பதை நினைத்துக் கொண்டே தூங்கப் செல்கிறேன் !!
Bye all & thanks for reading this !! I know this has been one huge rambling....ஆனால் மனதில் பட்டத்தை எடிட் செய்ய முனையாது பகிர்ந்துள்ளதன் பலனிது ! ஓவராய் படுத்தியிருந்தேனெனில் sorry !! See you around !!
மாரடைப்புக்குப் பின்னான போட்டோ என்பதால் தாத்தாவின் சவரம் செய்திரா முகத்தில் தளர்ச்சி தென்படக்கூடும் ! 1992 ...நவம்பர்... என் திருமணத்துக்கு முந்தைய நாள் இரவினில் எடுத்த போட்டோ ! |
1
ReplyDeleteவாழ்த்துகள் நண்பரே💐
Deleteவாழ்த்துக்கள் ஜி
Deleteஐ செகண்ட்
ReplyDeleteThird
ReplyDeleteFourth
ReplyDeleteVery long time after , TOP 10 LST
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteயம்மாடி எவ்ளோ பெரிய பதிவு....!!!
ReplyDeleteSimply becos நான் விடிய விடியப் பேசிட எண்ணிடுபவர் இங்கு இப்போது இல்லை ! அவர் விண்ணுலகம் சென்று வருஷங்கள் 22 ஓடி விட்டன !
ReplyDeleteநீங்க வேணா ouija board try பண்ணி பாருங்களேன்
நல்ல யோசனை தான்,நம்பிக்கையும்,சரியான தொடர்பாளர்களும் இருக்க வேண்டும்....
DeleteHi all
ReplyDeleteமனதை வருடிய பதிவு சார்...! எப்போதும் சிரித்தமுகமுடனே உங்களைப் பார்த்துள்ளேன்.. சோகத்துடன் உங்க முகத்தை கற்பனைகூட செய்து பார்க்க விரும்பவில்லை சார்... உங்களை சோகத்துடன் என்றும் பார்க்க்கூடாது என ஆன்டவனை வேண்டுகிறேன் சார்...!! தாத்தா எனக்குமே ஒரு மந்திரச்சொல்...!
ReplyDeleteவாழ்க்கை ஒரு அசாத்திய ஆசான் பழனி ! இழப்புகளின் மூலம் தான் கிடைத்திருந்ததன் / கிடைத்துள்ளதன் அருமைகளை உணர்த்திடும் !
Deleteசார் , 500 மார்க்குகள் என்றாலும் தகும். கண்கள் வேர்க்க வைத்து , காலமான என் முதல் நண்பனுமாகிய தந்தைதையின் ஞாபகங்கங்களை மீட்ட உதவின தங்களின் வரிகள். மிக்கநன்றிகள் சார்!
ReplyDeleteநன்றிகளெல்லாம் எதற்கு சார் ?
Delete13
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு.....
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteவலியையும், வேதனையையும், சந்தோஷமோ தருணங்களையும் உற்ற நண்பர்களிடமும், குடும்பத்தாரிடமும் மட்டுமே பகிர்ந்திட முடியும். வாசகர்களாகிய எங்களையும் குடும்ப நண்பர்களாக நினைத்து, மனதில் பட்ட விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள்...
ReplyDelete:-)
Deleteநெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼
Deleteமிக நீண்ட பதிவு..
ReplyDeleteஈஸ்டர் தினவாழ்த்துகள் அனைவருக்கும்.
மனந்திறந்த பதிவு.உள்ளத்தில் உள்ளதை உரக்க உண்மையாய் வெளிப்படுத்திய ஆசிரியருக்கு ஒரு ராயல் சல்யூட்.
பகிர முடிந்ததில் எனக்கு சந்தோஷம் நண்பரே !
Deleteஅவரவர் வாழ்க்கையில்
ReplyDeleteஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில்
திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்.
அது ஒரு அழகியநிலாாக் காலம்
உறவுகள் சேர்த்து பூமியில் வாழ்ந்தது
அது ஒரு பொற்காலம்.
- இந்த பதிவிற்கு பொருத்தமான பாடல்.
True sir...
Deleteநெகிழ்ச்சியான பதிவு!
ReplyDeleteஅன்றைய பிரதமர் அவர்களோடு ஐயா அவர்கள் எடுத்துக் கொண்ட பொக்கிஷப் புகைப்படத்தை வரும் நாட்களில் ஐயா அவர்களது பிறந்த தினத்திலோ? அல்லது நினைவு நாள் அன்றோ? வெளிவரவிருக்கும் நமது வெளியீடு இதழ் ஒன்றில் இடம்பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
:-)
Deleteரொம்பவே நெகிழ்ச்சியான பநிவு சார்.!
ReplyDeleteஏதோ ஒரு இதழில் தாத்தா பாட்டியின் புகைப்படத்தை பார்த்த ஞாபகம் இருக்கிறது.!
ஒரு வகையில் பார்த்தால் நீங்கள் மிகவும் கொடுத்துவைத்தவர் என்றுகூட சொல்லலாம்.!
///
Deleteஏதோ ஒரு இதழில் தாத்தா பாட்டியின் புகைப்படத்தை பார்த்த ஞாபகம் இருக்கிறது.!///---ஆம். நானும் பார்த்து உள்ளேன். தேடி பிடித்து விடலாம்.
Black & White-ல், நியூஸ்பிரிண்ட்டில் மொசு மொசுவென்று வந்திருந்தது ஞாபகமுள்ளது சார் !
Deleteஎனக்கும் உங்கள் தாத்தா பாட்டியின் Black & White ஃபோட்டோ ஞாபகம் உள்ளது.
Deleteஅநேகமாக ரூ.5-6 விலையில் சிவக்காய் விளம்பரம் வந்த இதழ்கள் போல் ஞாபகம்...
DeleteThis comment has been removed by the author.
DeleteParakum pavai padalam����
DeleteParakum pavai padalam����
DeleteSorry 18th
ReplyDeleteநீங்கள் எழுதிய 600 சொச்சம் பதிவுகளில் மிகச்சிறந்த பதிவுகளில் ஒன்று. கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தும் பதிவு.
ReplyDeleteமரியாதை, நம்பிக்கை, பாசம், வலி என அனைத்து உணர்வுகளையும் கடந்து செல்லும் பதிவு.
உங்களுடைய தாத்தா வின் மீது ஏற்படும் நேசம், மரியாதை அபாரமானது.
மொத்த பதிவு ஒரு நெகிழ்வு ஏற்படுத்தினாலும் இடையே நீங்கள் கூறிய வெளிநாடு சென்று வந்த பின் அந்த நிகழ்வுகளை கூற ஆள் கிடைத்தால் போதும் என்று போட்டு தாக்குவதை சிரித்து கொண்டே ரசித்தேன்.
இந்த கொரோனா நாட்கள் உங்களின் இன்னொரு பக்கத்தையும் அறிந்து கொள்ள எங்களுக்கு வாய்ப்பு அளித்து உள்ளது.
உங்கள் மேல் நாங்கள் வைத்து இருக்கும் மரியாதை இதனால் பலமடங்கு பெருகி விட்டது சார்.
நன்றி நன்றி நன்றி.
This comment has been removed by the author.
Deleteஉங்கள் பதிவுக்கு நான் கொடுக்கும் மார்க் - 1000/100
Deleteரொம்ப நாளாகவே சொல்ல நினைத்த கதையிது....சந்தர்ப்பம் அமைந்தது இன்றைக்குத் தான் சார் !
Deleteவல்லவர்கள் வீழ்வதில்லை... நம் தாத்தாக்களைப் போல
ReplyDelete100%
Deleteஉள்ளேன் ஐயா
ReplyDelete// ஓவராய் படுத்தியிருந்தேனெனில் sorry !! See you around !! //
ReplyDeleteமிக நீண்ட பதிவு,டைப் செய்தே கைகள் பழுத்திருக்குமே சார்.....
முதல்வாட்டியாய் நோவு தெரியலை சார் விரல்களில் !!
Deleteபதிவின் வீரியம் அப்படி சார்,மனதிற்கு நெருக்கமானவர்களுக்காக ஒரு விஷயத்தை செய்யும் போது கஷ்டங்கள் நமக்கு தெரிவதில்லைதான்......
Deleteநெகிழ்ச்சியான பதிவு.கண்களில் கண்ணீரை வரவைத்து விட்டீர்கள்.உங்கள் மனக்குமுறல்களை எந்தவித போலி ஜால வார்த்தைகளில் எழுதாமல் உள்ளத்திலிருந்தே எழுதியது கூடுதல் நெகிழ்வைத் தந்தது.இந்தப் பதிவு என் மலரும் நினைவுகளை மீட்க உதவியது.நன்றிகள் பலகோடி சார்.
ReplyDelete// உங்கள் மனக்குமுறல்களை எந்தவித போலி ஜால வார்த்தைகளில் எழுதாமல் உள்ளத்திலிருந்தே எழுதியது கூடுதல் நெகிழ்வைத் தந்தது. //
Deleteஉண்மை.
நண்பர்கள் அனைவருக்கும் ஈஸ்டர் தினநல்வாழ்த்துகள்!!!.
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்!!!
DeleteHAPPY EASTER ALL !!
Deleteமிக நெகிழ்ச்சியான, மிகமிக சுவாரஸ்யமான பதிவு இது எடிட்டர் சார்!! ஒவ்வொரு வரியிலும் உங்களின் உணர்வுகளின் வெளிப்பாட்டைப் புரிந்துகொள்ள முடிந்தது!!
ReplyDelete///ஆயுளெல்லாம் எங்கள் ஒவ்வொருவரையும் தூக்கி நிறுத்துவதே தன் லட்சியமாய்க் கொண்டிருந்தவரை அந்தக் காலையில் தரையிலிருந்து தூக்கிட வேண்டிப் போனது தான் விதியின் வினோதம் !///
இந்த வரிகளை எழுதும்போது உங்களின் கண்களில் நீர் திரையிட்டிருக்கவேண்டும்! படிப்போரின் மனதையும் உருகச் செய்திடும் வரிகள் அவை!!
////நீங்கள் விடிய விடிய பேசிட விரும்பும் நபர் யார்.....? (பேச்சு மட்டுமே ! ///
என்ற கேள்விக்கு உங்களிடமிருந்து நிச்சயமாய் கிளுகிளுப்பான பதிலெல்லாம் வராதென்பது எளிதாகக் கணிக்கக்கூடிய ஒன்றே!! ஆனால் இத்தனை ஆத்மார்த்தமாய் ஒரு பதிவு வருமென்பதையும் சத்தியமாய் கணித்திருக்கவில்லை தான்!!
நம்ம KS சொன்னதுபோல உங்களின் 600+ பதிவுகளில் - மிகச் சிறந்த பதிவுகளில் ஒன்று!! எங்களையும் ஒரு குடும்ப நண்பர் போல பாவித்துப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல, எடிட்டர் சார்! இந்தப் பதிவு உங்கள் மீதான அன்பையும், மரியாதையையும் ஒரு மிடறு அதிகமாக்கிடுவது உண்மை!!
ஒரு சிறு கோரிக்கை : இந்தப் பதிவின் நாயகர் நிச்சயம் உங்கள் தாத்தாவே! எங்கள் அன்புக்குரிய எடிட்டரை தன் உயிருள்ள மட்டும் வாஞ்சையோடு கவனித்துக்கொண்ட அந்த தெய்வத்தின் முகம் காண விரும்புகிறோம். இயன்றிடும்பட்சத்தில், உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் அவரது புகைப்படத்தை இங்கே பகிரலாமே ப்ளீஸ்?
உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் அவரது புகைப்படத்தை இங்கே பகிரலாமே ப்ளீஸ்? பிளீஸ் சார்
Delete// உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் அவரது புகைப்படத்தை இங்கே பகிரலாமே ப்ளீஸ்? //
Deleteஅதே,அதே சார்......
// உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் அவரது புகைப்படத்தை இங்கே பகிரலாமே ப்ளீஸ்? //
Deleteநமது காமிக்ஸ் இதழ் ஒன்றில் அய்யா அவர்களது புகைப்படம் வந்துள்ளது. கம்பீரமாக கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருப்பார்..
நண்பர்கள் யாருக்கேனும் அது எந்த இதழ் எனத்தெரிந்தால் இங்கே தெரியப்படுத்தவும்...
இந்த பதிவுல அய்யா அவர்களது புகைப்படம் இணைக்கவும் சார்.
Deleteஇன்றைக்குத் தேடிப் பார்க்கிறேன் நண்பர்களே !
Deletenijam ondru nilal 2 .. KIT ORDIN STORY .. FIRST EDITION .. THATHA PHOTO IRUKU ..
Deleteசூப்பர் தம்பி
DeletePhoto uploaded !
Delete/// மூன்று வாரங்களின் முடிவில், முழுசாய், ஒழுங்காய், வெள்ளைக்காரி யாரையும் கையோடு கூட்டி வராது,///
ReplyDelete"மூன்று வாரத்தில் ".... இதுல்லாம் ஓவர் குசும்பு ..
அது இல்லாங்காட்டி நம்மளை யார் சார் மதிப்பாங்க ?
DeleteHi..
ReplyDeleteஅன்பு எடிட்டர் ,வீட்டின் பெரியவர்களின் அண்மையில் அனுபவிக்கும் சுகம் என்றென்றும் மறக்ககாது என்பதை அழுத்தமாக சொல்லும் இனிய பதிவு
ReplyDeleteநிஜம் தான் சார் !
Delete// சொல்லுங்களேன் guys - எனது தேர்வு ஓ.கே.வா ? //
ReplyDeleteஆகச் சிறந்த தேர்வு சார்........
// சகோதரிகள் ஆளுக்கொரு ஊரில் செட்டில் ஆகியிருக்க, பாட்டியும் திடு திடுப்பென மறைந்திருக்க - பெரியதொரு குருவிக்கூடு திடீரென சூன்யமாய்த் தெரியத்துவங்கியது ! //
ReplyDeleteநிறைய பேர் இதுபோன்ற அனுபவங்களை கடந்தே வந்திருப்போம்,பல்வேறு உணர்வுகளை கடத்தும் பதிவு சார்......
கடந்த காலத்தின் நினைவலைகளை அசைபோடுவதே மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் இனிய தருணம்தான்.......
கால நினைவுகள் மனதில் உறைந்து போய் கிடக்கிறது........
ஏதேதோ நினைவுகளை கிளறி விட்டு விட்டீர்களே சார்......
அய்யா S.V.A.கந்தசாமி நாடார் அவர்கள் உண்மையிலேயே ஒரு நிஜ நாயகன் தான் சார்......
// ஏதேதோ நினைவுகளை கிளறி விட்டு விட்டீர்களே சார்...... // நீங்கள் எழுதியது எங்களுடைய கடந்த கால நினைவுகளை ஞாபக படுத்தி விட்டது சார்.
Deleteகூட்டுக் குடும்பங்களின் சுகங்களை உணர்ந்த தலைமுறைக்கு மட்டுமே இந்தப் பதிவின் முழுமை புரியும் என்பேன் சார் !
Delete///அய்யா S.V.A.கந்தசாமி நாடார் அவர்கள் உண்மையிலேயே ஒரு நிஜ நாயகன் தான் சார்......//---101%
Delete// கூட்டுக் குடும்பங்களின் சுகங்களை உணர்ந்த தலைமுறைக்கு மட்டுமே இந்தப் பதிவின் முழுமை புரியும் என்பேன் சார் !//
Deleteபுரிகிறது சார்.....
ஞாயிறு காலை வணக்கம் சார் & நண்பர்களே 🙏🏼
ReplyDelete.
காலையிலேயே கண் கலங்க வைத்த பதிவு... _/\_
ReplyDeleteஅவர் இன்று உங்களுடன் இல்லாது போயினும், அவரது அன்பும் ஆசீர்வாதமும் உங்களுடன் தொடர்ந்து இருக்கும் என்பதில் ஐய்யமில்லை சார்...
// அவர் இன்று உங்களுடன் இல்லாது போயினும், அவரது அன்பும் ஆசீர்வாதமும் உங்களுடன் தொடர்ந்து இருக்கும் என்பதில் ஐய்யமில்லை சார்... // நூறு சதவீதம் உண்மை
Delete:-) :-)
Delete// ஒருமுறை தொள்ளாயிரம் ரூபாய்க்கு கணக்கு உதைக்கிறதென்று ராத்திரி ஒரு மணி வரைக்கும் இந்த இளம் அம்பானி உட்கார்ந்திருக்க நேரிட்டது என்றால் நம்புவீர்களா ? // நம்புகிறேன் சார்.
ReplyDeleteஎடிட்டரோடு வாசகர்களை இன்னமும் அதிகமாய் பிணைய வைக்கும் இன்னுமோர் பதிவு...
ReplyDeleteஎனக்கு மிகவும் பிடித்த பதிவுகளில் ஒன்றாக மாறிவிட்டது...
சனியிரவுகளில் லேப்டாப்புக்கும், விரல்களுக்கும் மத்தியில் ஏதோவொரு உடன்படிக்கை ஏற்பட்டு விடுகின்றது சார் ! பொழுது விடியும் போது இத்தனையையும் பகிர்ந்தது ; டைப்படித்தது நானே தானா ? என்ற மலைப்பு நிறையவாட்டி நேர்ந்துள்ளது !
Deleteஎனக்கும் பொருளர் ஜி. புக் மார்க் பண்ணிட்டேன்.
Delete// I know this has been one huge rambling....ஆனால் மனதில் பட்டத்தை எடிட் செய்ய முனையாது பகிர்ந்துள்ளதன் பலனிது ! ஓவராய் படுத்தியிருந்தேனெனில் sorry !!//
ReplyDeleteஇத் தளத்தில் இருக்கும் பெரும்பான்மையினர் உங்கள் style of writing க்கு fan சார் .. அதனால் நீங்கள் இப்படி கேட்பது தான் சங்கடமாய் உள்ளது .. never seen u emotional like this sir .. and எல்லார் வாழ்விலும் இப்படி ஒருவர் இருந்து இருப்பார் .. and ur writing have brought memories regarding that person to all ..
//மூன்று வாரங்களின் முடிவில், முழுசாய், ஒழுங்காய், வெள்ளைக்காரி யாரையும் கையோடு கூட்டி வராது,//
ஒரு வேலை கோவா பட பிரேம்ஜி மாறி அந்த ideavum இருந்திச்சோ ??
அப்படிக்கிப்படி ஒரு பிரான்க்கோ-பெல்ஜிய அம்மணியைக் கூட்டியாந்திருந்தால் இன்றைக்கு கதைத்தேர்வுகளுக்கும் ரொம்பவே உபயோகமாக இருந்திருக்குமோ ?
Deleteஎன்னமோ போ - மாதவா !!
//அப்படிக்கிப்படி ஒரு பிரான்க்கோ-பெல்ஜிய அம்மணியைக் கூட்டியாந்திருந்தால்.......////---
Deleteகடேசில உண்மை வந்திடுச்சி!
மிகச் சிறந்த தேர்வு தான் சார்.
ReplyDeleteஇதுவரை தாங்கள் பதிவிட்டதில் இதுவே மிக நெகிழ்ச்சியான பதிவு.
ReplyDeleteநெஞ்சம் நிறைந்த பதிவு ஆசிரியரே
ReplyDelete"நெகிழ்ச்சியோடு"-என சேர்த்து சொல்லுகிறேன்.
Deleteசிம்ப்ளி ஆண்டின் சிறந்த பதிவு இது எடிட்டர் சார்.
ReplyDeleteசில இடங்களில் உங்களோடு எமோஷனல் ஆக பயணம் செய்த உணர்வு. அவ்வப்போது கண்களை மறைக்க செய்த துளிகள் ஊடே 1980களில் ஓரிரு ஆண்டுகள் வாழ்ந்த அனுபவத்தை ஏற்படுத்தி விட்டது.
தங்களது வாழ்க்கை நடப்புபளை எங்களோடு பகிர்ந்து கொண்டுள்ளது பெரிய விசயம் சார்.
தங்களது மேல் உள்ள மரியாதை இன்னமும் கணிசமாக கூடுகிறது.
தங்களது தாத்தாவுக்கு பணிவான வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏
திரும்பிப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் சுகமும், சங்கடமும் நிறைந்த நினைவுகள் இருக்குமென்பதில் ஐயமில்லை சார் ! விசாலமாய் அதனைப் பதிவு செய்திடும் வாய்ப்பு எனக்குக் கொஞ்சம் தூக்கலாய்க் கிட்டியுள்ளது என்பேன் !
Deleteகாலையிலேயே கண் கலங்க வைத்த பதிவு... _/\_உங்களது மிக சிறந்த பதிவு இதுவே. இதை பகிர்ந்து கொள்ளும் அளவில் உங்களுக்கு குடும்ப சொந்தமாக நாங்கள் இருக்கிறோம் என்கிற எண்ணம் மகிழ்ச்சி அளிக்கிறது சார்.
ReplyDeleteஜாலியாய் ஏதாச்சும் எழுதவே நினைத்தேன் சார் ; ஆனால் சும்மாக்காச்சும் எழுதுவது நிச்சயமாய் சொதப்பிடும் என்பதால் ரூட் மாறிடத் தீர்மானித்தேன் !
Delete///ஆங்காங்கே பூரி போடும் நண்பர்களும், துவைத்துக் காயப்போடும் நண்பர்களும்////--- ஹா...ஹா! ஆனாலும் கூட, நெசந்தான் எடிட்டர் சார். இப்பலாம் வெங்காயம் கட் பண்ணி தர்றேன். வீடு கூட்டதல் கூட...!!!
ReplyDeleteகுழம்பு வைக்க ஒத்தாசை செய்ய நானே போறேன். அதுல ஒரு 2மணி நேரம் ஓடுமே என்ற சுயநலம் தான்.
பூசைலயும் தானாகவே போய் அமர்ந்து கொள்கிறேன்.
க்ரைன்டர்ல மாவு ஆட்ட ஒத்தாசை....என நேரம் ஓடுது. இன்னும் என்னென்ன காத்து இருக்கோ???
///பதிவின் இறுதியில் எனது தேர்வுக்கு 200 மார்க்குகள் போடுவீர்களென்பது உறுதி///---- 200என்ன 400மார்க் போடுகிறோம் சார்.
ReplyDelete///சிவகாசிக்கு அச்சுத் தொழில் துவங்கிடும் நோக்கில் சீனியர் எடிட்டர் குடிபெயர்ந்த போது,...///--- எங்கே இருந்துங் சார்??? தங்களது பூர்வீகம் சிவகாசி என்றே எண்ணி இருந்தோம்?
ReplyDeleteமதுரையிலிருந்து...!
Deleteஇல்லத்தரசிகளின் மைண்ட்.. இல்ல இல்ல.. open வாய்ஸ்:
ReplyDelete"வண்டி ஒரு நாள் ஒடத்தில் ஏறினால்,
ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்."
அந்த நாள் இதுதானோ?
////சுதேசி காங்கிரஸ் அமைப்பில் அவருக்கு ஈடுபாடுண்டு என்பதாலோ என்னவோ, வெள்ளை வெளேர் கதர் வேஷ்டி & கதர் ஜிப்பா தான் தாத்தாவின் உடை எப்போதுமே ! நல்ல உயரம் ; ஆஜானுபாகுவான உருவம் ; நெற்றியில் குங்குமப் பொட்டு ; மீசையில்லா மழுமழு முகம் ; பிரமாதமான பேச்சாற்றல் ; அந்தக் கதராடை என்ற தோரணை ///----நேர்த்தியான வர்ணனை சார். தங்களது மனதுக்கு எத்தனை நெருக்கமாக இருந்தவர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
ReplyDelete// பல விஷயங்கள் இப்போது சுலபமாய்த் தொட்டு விடும் தொலைவில் இருக்கின்றன தான் //
ReplyDeleteஉண்மைதான் சார்,ஆனாலும் குறைந்த காசுக்கு அப்போது கிடைத்த மனத் திருப்தி தற்போது கிடைக்கிறதா என்று சொல்லத் தோன்றவில்லை சார்....
ஒருவேளை அது பால்ய வயது,எதிர்பார்ப்பில்லாத வயது போன்ற காரணங்கள் கூட இருக்கலாம்...
மெய்யே சார் ! அன்றைக்கு இரண்டு ரூபாய்க்கு ஒரு டெய்ரி மில்க் சாக்லேட் பார் கிடைத்தால் அது கொண்டாட்ட வேளை ; இன்றைக்கு ?
Deleteஎனக்கு 5 ஸ்டார் சாக்லேட். அப்போது எல்லாம் அதை வாங்க கூட காசு இருக்காது.
Deleteஎன் மனதை தொட்ட அற்புதமான பதிவு இது.
ReplyDelete:-)
Deleteஇந்தப் பதிவை மீண்டும்,மீண்டும் வாசிக்கும் போது நிறைய வார்த்தைகள் தங்களின் இதயத்திலிருந்து வெளிவந்த வார்த்தைகளாக தோன்றுவது எனக்கு மட்டும் தானா என்று தெரியவில்லை......
ReplyDeleteஎது எப்படி இருப்பினும் பல்வேறு இடர்ப்பாடான சூழலில் இருந்து தங்களை மீட்டு கொண்டு வந்து எங்களிடம் பத்திரமாய் ஒப்படைத்த அய்யா அவர்கள் வணங்கப்பட வேண்டியவரே....
நண்பர்கள் சொன்னது போல் அய்யாவின் ஆசி எப்போதும் தங்களுக்கு இருக்கும் சார்...
காலத்தின் பின்னோக்கிய பயணத்தில் ஆர்ச்சியின் கால இயந்திரம் இல்லாமலேயே பயணிக்க இது போன்ற சிறந்த கட்டுரையால் மட்டுமே சாத்தியம் சார்....
//காலத்தின் பின்னோக்கிய பயணத்தில் ஆர்ச்சியின் கால இயந்திரம் இல்லாமலேயே பயணிக்க இது போன்ற சிறந்த கட்டுரையால் மட்டுமே சாத்தியம்//
Delete"கோட்டையில்" ஒரு சட்டித் தலையன் ; இங்கோ ஒரு சொட்டைத் தலையன் ! அதிலுமே ஒற்றுமையைப் பாருங்களேன் !!!
ஹா,ஹா,ஹா...இந்த ஹாஸ்ய உணர்வுதான் சார் நமக்கு பலமே......
Deleteகாலத்தின் பின்னோக்கிய பயணத்தில் ஆர்ச்சியின் கால இயந்திரம் இல்லாமலேயே பயணிக்க இது போன்ற சிறந்த கட்டுரையால் மட்டுமே சாத்தியம் ரவி அண்ணா அற்புதம்
Deleteவிஜயன் சார்,பதிவை படித்து விட்டு என்ன எழுதுவது என தெரியவில்லை. மனதை கட்டிப்போட்டு விட்டது. உணர்ச்சி பூர்வமான எழுத்துக்கள். உங்கள் சாய்ஸ் மிகவும் சரியானது.
ReplyDeleteபதிவை எனது படிக்கும் போது பல இடங்களில் எனது தாய் தந்தை ஞாபகம் வந்து செல்கிறது.
இரவின் நிசப்தத்தில் விரல்களும், எண்ணங்களும் எங்கெங்கோ இட்டுச் சென்றன சார் ! பகலில் இதே பதிவை முயற்சித்திருப்பின், இத்தனை மனம் திறந்திருப்பேனா ? என்பது சந்தேகமே !
Deleteஉண்மை தான் சார். இரவு நேரம் கொண்டு வரும் தாக்கம் எப்போதுமே மிக நெருக்கமான தொடர்பு உள்ளதாகவே இருக்கும். அந்த அமைதி தான் காரணமோ
Deleteநெகிழ்ச்சியான பதிவு
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநெகிழ்ச்சியான பதிவு.. உள்ளத்தில் உள்ள உணர்வுகளை வார்த்தைகள் மூலம் படம்பிடித்து காட்டியுள்ளீர்கள். நானுமே அந்த இரவு நேர உரையாடல்களை கேட்ட உணர்வு..
ReplyDeleteகீய்போர்டை தேய்த்துத் தள்ளியதற்கு பலன் இருந்தததில் மகிழ்ச்சி ரம்மி !
Deleteமென்சோகமிழையோடும் பதிவு சார். நாங்கள் பசுமரமென்றால் நம் தாத்தா பாட்டிமார் எல்லோருமே முதிர்ச்சி பெற்ற மரங்கள். அம்மரங்களின் ஒவ்வொரு கிளைகளிலும் பேரப்பிள்ளைகளுக்கென ஒதுக்கப்பட்ட அன்பும், ஆதரவும், கவனிப்பும், வழிகாட்டலும், உபசரிப்பும், நேசபாவமும், உற்சாகப்படுத்தலும் பரவி விரவி இருக்கும். அவர்கள் எப்போதுமே ஒரு குடும்பத்தின் வேர்கள் தான்.
ReplyDeleteVery true !!
Deleteசார் நான் பாலன் 1990 இருந்து எனது 10 வயது முதல் உங்க காமிக்ஸ் படிக்கிறேன் எனது பத்து வயதிலேயே கதைய முதலில் படிகாம உங்க ஹாட் லைனை முதலில் படிப்பேன் உங்களின் எழுத்தாற்றல் எழுத்து நடை வசிகரம் எனது பத்து வயதிலேயே என்னை கட்டி போட்டது
ReplyDeleteநீங்கள் 10 வயதில் இருந்து நான் 5 வயதில் இருந்தே.
Delete///5வயசுல இருந்தா.../// அடேங்கப்பா!செம... நாமெலாம் 13வயசுல தான் காமிக்ஸ் படிக்க வந்தோம்....!! 8வருடம் சீனியரான "KS" அண்ணாவுக்கு ஒரு ஸ்பெசல் வணக்கம்!
Deleteஅன்புக்கு நன்றிகள் நண்பர்களே !
Delete/// So திடு திடுப்பென டவுணுக்குள் இருந்த தாத்தா & பாட்டிக்கு தனிமையும், வெறுமையுமே துணையாகிப் போயின///---
ReplyDeleteஇந்த கட்டத்தை நம்மிள் பெரும்பாலோர் கடந்தே வந்துள்ளோம் சார். காலமும் சூழலும், இறக்கம் இல்லா இராட்சத பற்சக்கரம்.
நாங்கள் பிறந்து வளர்ந்த கிராமத்தில் உள்ள விவசாய காட்டுல தாத்தா & பாட்டி தான் வேளாண்மை செஞ்சாங்க.. நெல் விளைவிக்கும்போது சேற்றில் ஆடுவது. பரம்புல தாத்தா கூட தொத்திக்குவோம். வெள்ளரி சீசன் எப்பவும் கொண்டாட்டம், கரும்பு போடும் வருடம் வேற லெவல் ஆட்டம். கோடைல எங்க தாத்தாவுக்கு சொந்தமான மஞ்சவாடில (பாப்பிரெட்டிப்பட்டி வழி) இருந்து மாங்கா பழம் வந்துடும். ரொம்ப ஜாலியா இருந்த நாட்கள்.
எல்லாம் போனது, விவசாய நட்டத்துல...!!! காடெல்லாம் கடனுக்கு போனது. தாத்தாவும் பாட்டியும் மஞ்சவாடி தோப்புக்கே குடி மாறி போனார்கள்.
தாத்தா கூடவே இருந்த எனக்கு அவர் வாங்கித் தந்த சைக்கிளே ஆறுதல்.
வருடம் ஒருமுறை தான் சம்மர்ல மாந்தோப்புக்கு போய் அவுங்கள பார்க்க முடிஞ்சது. இருவரும் இறக்கும் வரை!
இப்பவும் மாந்தோப்புல(சித்தாப்பாக்கள் பாகம்போக) நம்ம பங்குல இருந்து வரும் மாம்பழங்கள் பார்க்கும் போது தாத்தாவை பார்ப்பது போலவே இருக்கும்.
என்னோட இறுதி காலத்தை அந்த மாமரங்களோடு கழிக்க எண்ணி உள்ளேன்.
தாத்தாவுக்கு பதிலாக நம்ம காமிக்ஸ்கள் துணை இருக்கும்.
I found it. தங்கள் தாத்தா, பாட்டி இருவரின் புகைப்படமும், தோற்றம், மறைவு தேதியுடன் டதாத்தா -8/12/97, பாட்டி -6/12/83) டிசம்பர்1999 ,சிக் பில் & கோவின் ' தேடி வந்த தங்கச்சுரங்கம்' இதழில் வெளிவந்துள்ளது.
ReplyDeleteஅருமை நண்பரே....👍👍👍
Deleteசூப்பர்! முடிஞ்சா ஒரு ஃபோட்டோ எடுத்து 'இங்கே கிளிக்' போடுங்க பத்து சார்!
Deleteஅருமை பத்து சார். எடிட்டர் சாரி் தாத்தா போட்டோ பார்த்தாச்சு. எடிட்டர் சார் எழுதியுள்ள வர்ணனை அப்படியே போட்டோவுல இருக்கு.
Deleteசூப்பர் பத்து சார்.
Deleteஎனக்கும் ஞாபகம் உள்ளது....
Deleteரொம்பவும் மனதை கனக்கச் செய்த பதிவு சார்.இந்த ஞாயிறு மறக்க முடியாத தினமாக அமைத்த பதிவு.படிக்கப் படிக்க ஏதேதோ நினைவுகள் மனதை ஆக்ரமித்து, சுழல்கிறது.
ReplyDeleteஏதேனும் டைம் மிஷின் கிடைக்கும் பட்சத்தில் தாத்தாவும், பேரனும் அளவளாவும் இரவுகளை உடனனிருந்து தரிசிக்கவே ஆசை.
//ஏதேதோ நினைவுகள் மனதை ஆக்ரமித்து, சுழல்கிறது.//
Deleteஉள்ளுக்குள் புதைந்து கிடப்பன நமது அன்றாட ஓட்டங்களில் மேலும் மேலும் உள்ளே அமிழ்ந்து போவதே நடைமுறை சார் ! இதுபோன்ற தருணங்களில் அவை மீண்டும் மேலோங்குவது தவிர்க்க இயலாது தானே ?
எப்படி செய்வது என்று தெரியவில்லை.
ReplyDeleteசிரமம் வேண்டாம் சார் ; பதிவினில் நானே upload செய்திருக்கிறேன் இப்போது !
Deleteநன்றிகள் பல எடிட்டர் சார்! மிடுக்குடன் இருக்கிறார் உங்கள் தாத்தா!!
Deleteஉங்கள் முகத்தில் தெரியும் அந்த கடைசிநேர பேச்சுலர் புன்னகையும் அருமை!!
///பேச்சுலர் புன்னகையும் அருமை/// ஆமா...ஆமா...ஈ.வி.
Delete/// லிட்டருக்கு இவ்வளவு என்ற கணக்குக்கேற்ப காசு கொடுத்துத் தான் நாங்களே வாங்கிக்கொண்டாக வேண்டும் ///--- பாட்டிகள் எப்பவும் கறார் தான்!
ReplyDeleteஎங்க தாத்தா 10வெள்ளரி பிச்சி தின்றால் கூட போதுமா என்பார். எங்க பாட்டி ஒற்றை வெள்ளிரில பாதிதான் உடைச்சு தரும்.
உண்மை தான் டெக்ஸ். நூற்றுக்கு நூறு உண்மை
Delete@ ALL : பதிவினில் போட்டோவினை சேர்த்துள்ளேன் guys !
ReplyDeleteபார்த்து விட்டேன் சார். நன்றி நன்றி. ஒரு சிலர் மட்டுமே நம்மை நம்பி பிற்காலத்தில் இவனும் ஒரு ஆளாக வருவான் என்று நம்புவார்கள், நமக்கும் அந்த நம்பிக்கையை விதைப்பார்கள். அப்படி பட்ட அந்த மனிதரை பற்றி தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு தந்தற்கு மீண்டும் எனது நன்றிகள் சார்.
Deleteஹய்யா! கண்ணால மாப்பிள்ளை போட்டோ! சூப்பர்!
Deleteசும்மா ஃபேசியல் பண்ணி தகதகனு முகம் ஜொலிக்குதுங் எடிட்டர் சார்..!
சற்றே தாமதமான வாழ்த்துகள் சார்💐💐💐💐💐
//சற்றே தாமதமான வாழ்த்துகள் //
Deleteஃபேசியல் பண்ணியதற்கா சார் ?
அப்புறம் அந்நாட்களில் இங்கு ஏது ஆண்களுக்கான பார்லர்கள் ? ஏது ஃபேசியல்கள் ? அப்படியொரு சமாச்சாரம் இருப்பதே தெரியாது அன்றைக்கெல்லாம் ! அதுமட்டுமன்றி ஏழு மணிக்கு மண்டபத்துக்குப் போகும் முன்னே, மாலை ஐந்தரைவாக்கில் ஒரு பழைய ட்ரெடில் மிஷினை (புராதன அச்சு இயந்திரம்) தொன்னூறாயிரம் ரூபாய்க்கு விற்று, அந்தப் பணத்தைக் கையில் கொண்டு செல்வதில் தான் முனைப்பே இருந்தது !
DeleteYes. I saw the photo! I think the photo is taken on your engagement day, the day before marriage evening function! thanks for sharing the photo!
Deleteடியர் விஜயன் சார், நினைவுகளை தாலாட்டும் பதிவு. விதைத்தவர் உறங்கலாம். ஆனால், விதைகள் உறங்குவதில்லை...
ReplyDeleteவிதைத்த தங்களின் பாட்டனார் உறங்கினாலும், அவர் விதைத்த விதை விருட்சமாக வளர்ந்துள்ளது சிறப்பு..
வெகு நாட்களுக்கு பிறகு தங்களின் பதிவை இரண்டாவது முறையாக படிக்கிறேன்...
எங்களின் பால்யத்தை மீட்க காமிக்ஸ் நினைவுகள்...
உங்களின் பால்யத்தை மீட்க தங்களின் பாட்டனார் நினைவுகள் போலும்..
அட டே! சுந்தரனா...!!!! தேர்வு பிஸிலயும் இங்கே எட்டி பார்த்தாச்சா! சூப்பர்!
Deleteதொடர்ந்து பிஸியாக இருக்கும் மருத்துவரையே கட்டி இழுத்து வந்து விட்டது நம் ஆசியரின் பதிவு......
Delete//விதைத்தவர் உறங்கலாம். ஆனால், விதைகள் உறங்குவதில்லை...//
Deleteவீரிய வரிகள் !
தங்கள் எழுத்து நடையின் மகிமையா அல்லது நமக்குப் பிடித்தவர்களின் சோகம் நம்மையும் தாக்கும் என்பதா? எப்படியாயினும்
ReplyDeleteமனதை கனக்க வைத்த பதிவு
கண்கள் வேர்த்தன
கை கூப்பும் படங்கள் நண்பரே !
Deleteபடிக்க படிக்க கண்களை கண்ணீர் குளமாக்கிய பதிவு..
ReplyDeleteஎனக்கு இப்படி ஒரு தாத்தா இல்லையே என ஏங்க வைத்த பதிவு..
இதுவும் கடந்து போகும் என சொல்ல முடியாத பதிவு..
உங்களின் பதிவுகளிலேயே ஆக சிறந்த பதிவு..
நன்றிகள் சிவா !
DeleteAwesome writing Edi Sir. Truly you are one of the most powerful and influential writers of present times.
ReplyDeleteநண்பரே...நிறைய rough edges கொண்ட ஒற்றைப் பரிமாண எழுத்து பாணி என்னது ! நான் தேர்வு செய்திடும் தலைப்புகளும், நெஞ்சிலிருந்து எழுத முனையும் பாணியும் உங்களை ரசிக்கச் செய்கின்றன என்பேன் ! Anyways thanks a ton for the kind words !!
DeleteI wonder, what would have happened if you were in to Novel writing.
ReplyDeleteஅதெல்லாம் ஜாம்பவான்களின் களம் நண்பரே ! நாம் ஆடுவதோ தெருமுனையில் ரப்பர் பந்து கிரிக்கெட் !
Deleteஉங்களின் மிகச்சிறந்த பதிவு இது...
ReplyDeleteபெருமதிப்பிற்குறிய உங்கள் தாத்தா வின் நினைவுகளில் நான் எனது தாத்தா செய்த உதவிகளையும் நினைவுகூர்ந்தேன்.
அது ஏனோ... தாத்தாகளுக்கு பேரன்களகளின் மீது இவ்வளவு பற்று...எனது தந்தையாரும் எனது மகனின் மீது அளவற்ற பாசம் கொண்டுள்ளார்...
பெற்றோர்கள் தன் குழந்தைகள் மூலம் தம் தாய் தந்தையரை காண்பர் ஆனால் பேரப்பிள்ளைகள் மூலம் தன்னையே காண்பர் என்று திரு. வைரமுத்து நாவலில் எழுதி இருப்பார்....
எனது அனுபவத்திலும் அது உண்மையே.
நன்றி.
//..எனது தந்தையாரும் எனது மகனின் மீது அளவற்ற பாசம் கொண்டுள்ளார்...//
Deleteயோகக்காரன் சார் உங்கள் பையன் !
நன்றி சார்..
Deleteஅடுத்தடுத்ததாக உணர்வுகள் ததும்பும் வெகுசிறப்பான பதிவுகள் இரண்டினைப் பகிர்ந்திருக்கிறீர்கள், மிக அருமை! நினைவு அடுக்குகளைத் தேக்கி வைத்து, அவற்றைத் தேய்ந்திடாமல் வெளிக்கொணரும் கலையினைப் பற்றியும் சற்று எழுதுங்களேன்?! ஓராண்டுக்கு முந்தைய நினைவுகளே, மங்கிக் கிடக்கின்றன மூளையின் ஏதோ ஓர் மூலையில்!
ReplyDelete//I know this has been one huge rambling//
உங்களுடைய பதிவு எழுதும் பாணியில் அயற்சியூட்டும் அம்சங்கள் எவையென்றால் - பதிவுக்கு முன்னரும் பின்னரும் நீங்கள் நீட்டி முழக்கும் சுய தெளிவுபடுத்தல்களும், ஒவ்வொருவருக்குமான விளக்கம் கொடுத்தல்களும், நானே கேள்வி நானே பதில் பாணியில் அனைத்து தரப்பினரின் எண்ணங்களுக்கும், எள்ளல்களுக்கும் முன்கூட்டியே பதில் அளித்தல்களும் தாம்! இவற்றை எல்லாம் தாண்டி, பதிவின் முக்கியமான பகுதிகளை, பலமுறை வழிதவறிக் கடந்திருக்கிறேன். அதனாலென்ன, அது என் பாடு.. நீங்கள் உங்கள் பாணியினை மாற்றிக் கொள்ள வேண்டாம்...!
அது சரி, இத்தனை உணர்வு பூர்வமான பதிவுக்கு வைக்க வேண்டிய தலைப்பா இது? கடவுளே! :)
// இத்தனை உணர்வு பூர்வமான பதிவுக்கு வைக்க வேண்டிய தலைப்பா இது? //
Deleteகடவுளே! கடவுளே!! கடவுளே!!! :-)
ஆமாம் எடிட்டர் சார்! கார்த்திக் சொன்னதுபோல தலைப்பு மட்டும் பொருந்திப் போகவில்லை!
Delete//பதிவுக்கு முன்னரும் பின்னரும் நீங்கள் நீட்டி முழக்கும் சுய தெளிவுபடுத்தல்களும், ஒவ்வொருவருக்குமான விளக்கம் கொடுத்தல்களும், நானே கேள்வி நானே பதில் பாணியில் அனைத்து தரப்பினரின் எண்ணங்களுக்கும், எள்ளல்களுக்கும் முன்கூட்டியே பதில் அளித்தல்களும் தாம்!//
Deleteஒரு முன்ஜாக்கிரதை முன்சாமி அவதாரென்று வைத்துக் கொள்ளுங்களேன் கார்த்திக் ! சமீபத்தில் கூட ஒரு நண்பர் - 'இத்தினி எக்ஸ்டரா நம்பர்களோடு பதிவுகளைப் போட்டால் எப்படிப் படிப்பதாம் ? ஒரு கதைச்சுருக்கம் போல இறுதியில் கொடுத்தால் - அதை மட்டும் படிச்சிட்டுப் போய்டுவோம்லே !' என்ற ரீதியில் இங்கு எழுதியிருந்தார் ! அது போல் எண்ணக்கூடியோர்க்கு சன்னமான சமாதானம் என்று வைத்துக் கொள்ளுங்களேன் !
அப்புறம் - ராத்திரி பதிவை முடித்த போது மணி 3-45 !! அந்நேரத்துக்கு தலைப்பிற்கென ரொம்ப மெனெக்கெட தம்மில்லை ! அந்தக் குறையை இப்போது நிவர்த்தி செய்தாச்சு !
Deleteமனதைக் கலைத்து கவர்ந்த பதிவு..
ReplyDeleteஎன்னுள்ளும் ஏக்கத்தை ஏங்க வைத்த பதிவு..
###ஆயுளெல்லாம் எங்கள் ஒவ்வொருவரையும் தூக்கி நிறுத்துவதே தன் லட்சியமாய்க் கொண்டிருந்தவரை அந்தக் காலையில் தரையிலிருந்து தூக்கிட வேண்டிப் போனது தான் விதியின் வினோதம் !####
ReplyDeleteஇந்த இடத்தில் சுத்தமாக உடைந்து விட்டேன்..
இழப்பின் வலியை வார்த்தைகளில் விவரித்திருக்கீறீர்கள்...
மறுக்க மறுக்க படித்து கொண்டிக்கிறேன் இந்த பதிவை நான்காவது முறையாக..
வாழ்க்கைப் பாடம் சிவா....இருக்கும் வரையிலும் தான் நமக்கிந்த அடையாளங்கள் எல்லாமே ! விழுந்து கிடக்கும் போது - முடிந்து போனதொரு புத்தகமே !
Deleteமிக நல்ல பதிவு.பெரும்பான்மையோர் விருப்பபடி இவற்றை சிங்கத்தின் சிறு வயதில் என்று தனி நூலாக வெளியிடலாம்
ReplyDeleteMaybe ஜூனியர் எடிட்டர் ரெகுலர் எடிட்டராகிடும் நாளில் அது பற்றி சிந்திக்கட்டும் சார் !
Deleteஇப்படி ஒரு தாத்தா கிடைத்தால் அனைவரும் சாதனை நாயகரே Sir
ReplyDelete+1
DeleteSir, எங்களுக்கு இத்தனை அருமையான Comics கிடைக்க உதவிய, எங்கள் குழந்தைப் பருவத்தை வசந்தமாக்கிய அந்த புண்ணியாத்மாவின் புகைப்படத்தை பகிரலாமே Sir,
ReplyDeleteபோட்டோ போட்டிருக்கிறேனே நண்பரே..?
Deleteநெகிழ்ந்தேன்.....
ReplyDeleteநெகிழ்ச்சியான பதிவு இது. தலைப்பையும் மாற்றிவிட்டீர்கள் - அது ஒரு மகுடமாகிவிட்டது. நீங்கள் அடிக்கடி சொல்வதுபோல என்றாவது ஒருநாள் ஓய்வாக படிக்கும்போது இந்தத் தலைப்பு ஒரு மகுடமாக இருக்கும்.
ReplyDeleteஏனோ இந்தப் பதிவு "காதலும் கடந்துபோகும்" காமிக்ஸில் ஆசிரியர் எழுதிய "காலம்தான் எல்லாவற்றுக்கும் மருந்து - எத்தனை பெரிய காயங்களைக்கூட ஆற்றிவிடுகிறது" என்ற உரையாடல் ஞாபகத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
ReplyDeleteநிஜம் தானே சார் ?
Deleteபதிவின் தலைப்பு இப்போ அருமை எடிட்டர் சார்!
ReplyDeleteஅந்தப் பழைய தலைப்பை பத்திரமாக வைத்திருங்கள் - ஈரோட்டில் ஒரு ஆகஸ்டு மாத இரவொன்றில் சிலபல கச்சேரிகளுக்குப் பிறகு நீங்கள் எழுதயிருக்கும் பதிவுக்கு வைத்துக் கொள்ளலாம் ஹிஹி!!
இன்றைய தளர்ந்து கிடக்கும் சூழ்நிலையில் ஒரு தன்னம்பிக்கை பதிவு. நெகிழ்ச்சியான விஷயங்களை நினைவுகூர்ந்து பேசும்போது, எழுதும்போது உணர்ச்சி வேகத்தில் தன்னையே மறந்துவிடுவோம். அதிலும் நாம் அதிகம் நேசிப்பவர்களை பற்றி கூறும்போது சொல்லவே வேண்டாம். நீங்கள் இதை எழுதி பதிவேற்றும் வரை உங்கள் மனநிலை எப்படி உணர்ச்சிவயப்பட்டிருக்கும் என்பதை ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. தங்களது வாழ்க்கை அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சார்.
ReplyDeleteநட்புக்களுக்குள் நன்றிகள் எதற்கு சார் ?
Deleteஆசிரியர் அவர்களை மனதளவில் மேலும் நெருக்கமாக உணர வைத்த பதிவு.
ReplyDeleteதுயரமான,கசப்பான நிகழ்வுகளையும் நாசூக்காக நகைச்சுவை கலந்து எழுதுவதுதான் ஆசிரியருடைய இயல்பு. ஆனால் இந்த பதிவு விஜயனாருடைய ஆன்ம தரிசனமாகவே அமைந்துவிட்டது.
பலமுறை தங்களுடைய தாய்வழி தாத்தாவை பற்றி பல இடங்களில் குறிப்பிட்டவர்தான்.ஆனால் அதனுடைய மொத்த பரிமாணமும் எத்தகையது என்பதை இன்றுதான் உணர முடிகிறது.
பதிவின் ஒட்டு மொத்த உணர்வுகளையும் அந்த புகைப்படத்தின் மூலமே உணர்ந்து கொள்ள முடிகிறது.பக்தனை போல் அத்தனை பரவசங்களையும் தாத்தாவின் முன் கண்மூடி நிற்பவரிடம் காண முடிகிறது.
ஒருவேளை இது புது மாப்பிளைக்கே உரிய "கல்யாண களை"யாக இருக்குமோ.
நெகிழச் செய்த தருணம்.
பதிவின் தலைப்பு இப்பொழுது பாந்தமாக பொருந்தியுள்ளது.
அன்று மாலை மண்டபத்துக்கு வரவே தாத்தா பட்ட சிரமங்கள் என்னவென்று தெரியும் சார் எனக்கு ! முழுக்கவே bedrest பரிந்துரைக்கப்பட்ட நாட்கள் அவை !
Deleteஅன்றாடம் ஷேவிங் ; மடிப்புக்கலையா கதராடை என்பதில் ஆயுளெல்லாம் கவனமாக இருந்தவர், மாரடைப்பின் தாக்கத்தில் தளர்ந்து ; பேரனின் கல்யாணத்தில் கலந்து கொண்டே தீர வேண்டுமென்ற ஒற்றை உந்துதலில் தட்டுத் தடுமாறி வந்திருந்தார் ! Phew !!
இவ்வளவு வெளிப்படையாக, திறந்த மனதுடன் பட்டவர்த்தனமாக மனதில் பட்டதை எழுதவும் முடியுமா??? கனத்த மனதுடன் Respect எடிட்டர் சார் 🙏🙏🙏
ReplyDeleteஅன்பு மட்டுமே பொது அடையாளமாய்க் கொண்ட இந்த நண்பர் குழாமின் மத்தியில் மனம் திறப்பதில் எனக்கு நெருடல்கள் இல்லை சார் !
Deleteகாலம் உங்கள் இதயத்து ரணங்களை ஆற்றட்டும் சார்.
ReplyDeleteஉங்களதைப் போலவே எனக்கு பாட்டியின் அரவணைப்பு.
2010ல் அவர் காலனை வென்றபோது 102.
இன்றைய எனது தொழில் வளர்ச்சி மற்றம் முன்னேற்றத்திற்கும் அவரே உதவி- ஊன்று கோல்.
பாட்டியின் நினைவுகளில் கண்ணீர் துளிகள் ஆறாய் ஓட , உங்கள் எழுத்துக்களில் தெறித்த ஆன்மபலமானது பிரபஞ்சத்தை மிஞ்சுவதான உணர்வு.
அருகில் இருந்திருந்தீர்கள் என்றால் கட்டியணைத்து கதறியிருப்பேன்.
வார்த்தைகளில்லை ஐயா...
வித்தியாசம் ஒன்றுமில்லை.
ஏறத்தாழ ரிடையர்மெண்டை நெருங்கிவிட்ட வாழ்க்கையில் மிச்சங்கள் நம் முன்னோரின் நினைவின் எச்சங்களே.
மீண்டும் ஒருமுறை பிறந்தாலும் இதே பிறவி...
இதே தோழர்கள்
இதே பெரியவர்கள்
இதே காமிக்ஸ்
இதே விஜயன்
வேண்டும் எம் இறையே...
வழங்கிடு...
கலங்குகிறேன்...
கண்ணீரில்
J.
அண்ணா அருமை அற்புதம் அட்டகாசம்.
Delete///மீண்டும் ஒருமுறை பிறந்தாலும் இதே பிறவி...
Deleteஇதே தோழர்கள்
இதே பெரியவர்கள்
இதே காமிக்ஸ்
இதே விஜயன்
வேண்டும் எம் இறையே...
வழங்கிடு...
கலங்குகிறேன்...
கண்ணீரில்
J.
////
நெகிழவைத்திடும் வரிகள் J ji!!
நிஜமாய் வரம் பெற்றவன் சார் நான் - இத்தனை அன்புக்கு மத்தியில் நின்றிட !! ஓராயிரம் நன்றிகள் !
Deleteபதிவு நெகிழ வைத்தது என்றால், ஒவ்வொரு கமெண்டுக்கும் ஆசிரியரின் உடனடி பதில் மகிழ வைத்தது.
ReplyDelete"அட்டைப்படம் அட்டகாசம் ; ஆக்ஷன் பிரமாதம்" - என்ற ரீதியிலான தினப்படிப் பின்னூட்டங்களில்லையே சார் இவை ஒவ்வொன்றுமே ?! ஒவ்வொருவருமே இதயத்தின் ஆழங்களிலிருந்து எழுதும் போது அவற்றை போற்றி நினைவுகளில் பத்திரப்படுத்துவது என் கடமையல்லவா ?
Deleteஎடிட்டர் சார்
ReplyDeleteமனதை மிகவும் நெகிழவைத்த பதிவு. தாத்தா உடனான அந்த நாட்கள், எங்களையும் உங்களுடன் இந்த நெகிழ்ச்சியான காலப் பயணத்தில் அழைத்து சென்று வந்துவிட்டீர்கள். பல இடங்களில் கண்கள் பனித்தன. சில பேருக்குதான் இப்படிப்பட்ட தாத்தா கிடைப்பார்கள்.
சி.சி.வ. குறித்து...
ReplyDeleteகடந்த ஆண்டு, மதுரை ஜெர்மானஸ் ஹோட்டலில் ஓர் நாள் தங்க நேரிட்டது. அங்கே, அதன் நிறுவனர் திரு.ஜெர்மானஸ் அவர்கள் தமது வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி எழுதிய நூலின் பிரதிகளை ஒவ்வொரு அறையிலும் வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். எனது ஆர்வங்களுக்கு அப்பாற்றப்பட்ட துறை, முழுவதும் படிக்க நேரமும் இல்லை எனினும், படித்த வரையில் ஈர்க்கவே செய்தது.
செய்யும் தொழில் சிறிதோ பெரிதோ, ஒவ்வொரு தொழிலதிபரின் பின்னாலும் ஒரு பெருங்கதை இருக்கத்தான் செய்கிறது. அவற்றை சுவைபட எழுதிப் பகிர்வோரும் சொற்பமே; நொடித்துப் போயிடாமல், தடைகளைத் தாண்டி தொடர் வெற்றி காண்போரும் மிகச் சொற்பமே.
எந்நேரமும் படபடப்பாக வைத்து, மனதையும் உடலையும் சோர்ந்து போகச் செய்யும் இந்த ஐ.டி. துறையை விடுத்து, வருமானம் குறைந்தாலும், மனத்திற்குப் பிடித்த ஏதோ ஒன்றை செய்ய வேண்டும் என்று அவ்வப்போது என்னில் எட்டிப் பார்க்கும் ஒரு அசட்டுத் தொழிலதிபரின் கண்களிற்கு, தற்போதைய முழு அடைப்பின் காரணமாக இக்கரையே பச்சை பசேலென்று தெரிகிறது.
இக் கொரோனா காலத்தில், தொழில் புரிவோர், அதில் பணி புரிவோர் நிலையில் என்னை இருத்திப் பார்க்கிறேன், பகீர் என்கிறது. இதில் இருந்து விரைவில் விடுபட்டு, மேலும் சில வெற்றிக் கதைகளை நீங்கள் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை மட்டும் இருக்கிறது!
தற்போதைய நிலையில், தமிழ் காமிக்ஸ் துறையை முறையான டிஜிட்டல் தடத்தில் பயணிக்கச் செய்யும் எண்ணமும், வாய்ப்பும் உண்டா?
இன்று காலையில் சில காரணங்களால் அலைபேசியை இப்பொழுது தான் எடுக்க முடிந்தது... எடுத்தவுடன் உங்களின் பதிவிற்கு ஓடோடி வந்தேன்..படிக்க ,படிக்க மனதினுள் எனக்கும் பலவித மாறுதல்கள் ,நெகிழ்வு ,ஏக்கம் ,ஆனந்தம் ,வருத்தம் ..என .
ReplyDeleteஆனால் படித்து முடித்தவுடன் சிறிது நேரம் ஒருவித மெளன நிலையிலையே என்ன கருத்தை பதிவிடுவது என தெரியாமலேயே ஒரு வித பாரம் . எனது வாழ்க்கையில் இடம் பெற்ற எனது தாத்தாவையும் ( அம்மாவின் தாய்மாமா) நினைவிற்கு கொண்டு வந்து விட்டீர்கள் சார்..
கூட்டு குடும்பம் என்பது எல்லாம் என்னளவில் நடந்தது கிடையாது..அதிக பட்சம் லக்கியை போல தனிமையே துணைவன் போல என்பது போல எமக்கு வாழ்க்கை அமைந்து இருந்த பொழுதே இந்த பதிவு என்னை ஏதேதோ நினைவுகளை ஏங்கச் செய்யும் பொழுது உங்களின் இந்த பதிவின் பொழுதும்..இதை தாங்கள் எழுதும் பொழுதும் உங்கள் மனதையும் முழுதாக புரிய வைக்கிறது சார்...மிகவும் சந்தோசமான சேதியை கூட தெரிந்தவர்களிடம் பகிர்ந்து விடலாம்.ஆனால் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்ந்த இந்த அற்புதமான ,நெகிழ்வான ,வருத்தமான சம்பவங்களை மிக மிக நெருக்கமானவர்களிடம் மட்டுமே பகிர தோன்றும் சார்..இந்த பதிவு வாசகர்களான எங்களை எந்த இடத்தில் வைத்து இருக்கிறீர்கள் என்பதை மீண்டும் உணர வைக்கிறது..இதுவரை தாங்கள் எழுதிய பதிவிகளில் ஆக மிகச் சிறந்த பதிவு சார்..இதை எழுதும் பொழுது கூட எனது மனதில் ஏதோ ஓர் உணர்வு ..ஆனால் இம்முறை அது என்னவகையானது என்று எனக்கே தெரியாத ஒரு வித நிலை.
திரு .SVA கந்தசாமி நாடார் அவர்கள் இப்பொழுதும் மேலிருந்து நீங்கள் எங்களை உங்கள் பணியின் மூலம் நாங்கள் பல வித இன்னல்களை சந்தித்தாலும். அதனை எல்லாம் தள்ளி வைத்து.., எங்களை வேறு ஒரு உலகில் எவ்வளவு மகிழ்ச்சி கடலில் திளைத்து வைத்து வருகிறீர்கள் என்பதை கவனித்துக் கொண்டும் ,உங்களை ஆசிர்வதித்துக் கொண்டும் தான் இருப்பார் சார்.இதோ இப்பொழுது இந்த பதிவினையும் எங்களோடு அவரும் வாசித்து கொண்டு ஆனந்தத்தில் திளைத்து கொண்டு இருப்பார்.அவருக்கும் எழுந்து நின்று எங்களது ஒரு சல்யூட் .
அருமையாக சொன்னீங்க பரணி.
Deleteவிஜயன் சார்,
ReplyDeleteஉண்மையான"சிங்கத்தின் சிறுவயதினிலே " Uதிவு.
உங்களுடைய வாழ்க்கையை "காமிக்ஸ் " யிடம் முழுசாக ஒப்படைத்தது போல்,
.எங்களிடமும் முழுதுமாக உங்கள் வாழ்க்கையில்-(குடும்ப விசயங்களை) நடந்தவைகளை ஒரு விசயம் கூட விடுபடாமல் பகிர்ந்து கொள்வது -எங்களை நீங்கள் எவ்வளவு மதிப்பில் வைத்திருக்கிறீர்கள் என உணர முடிகிறது. நன்றி சார்..i
எனக்கும், ஓப்பீடு நோக்கில் - SSLC தான் படித்தது.நல்ல மதிப்பெண் இருந்தும். ஆங்கிலத்தில் மீதிருந்த பயத்தால் ITI - fitter - Trade எடுத்து Uடித்தது. ஏனோ தனிமை விரும்பியா க இருந்ததில் புத்தகங்களே உலகம் என்றாகிவிட்டது.
யாரிடமும் பேச வே வராது. எனக்கு என் ஆச்சி(அம்மா ம்மா) மட்டுமே பிரியமானவர்.
அவரை தான் இன்று மிகவும் நினைவு கூர்ந்து விட்டீர்கள். . சார் .
வணக்கம் நண்பரே அடியேனும் FITTER ரே...
Deleteகணக்கு பாடத்துக்கு பயந்துதான் நான் ITI போனேன் காலக்கொடுமை அங்கு இரண்டு கணக்கு புத்தகம் செத்தான் பழனிவேல் என விதியை நொந்துகொண்டேன்....
Deleteஎடி,
ReplyDeleteமனதை கனக்க செய்த பதிவு.
சுஜாதாவின் கற்றதும் பெற்றதும் போல் இருந்தது.
உண்மை எப்போதும் ஒன்றே.
சார் அடுத்ததாக தங்களின் திருமண வைபோகத்தைப்பற்றி ஒரு பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் விரைவில்...
ReplyDeleteபெரும்பாலான ஆண்கள் தங்களின் கல்யாண ஆல்பத்தைக்கூட மறுமுறை பார்த்திட விரும்புவதில்லை என்பதே யதார்த்தமான உண்மை, பழனிவேல்!
Deleteஎடிட்டர் விதிவிலக்காக இருந்திடும் வாய்ப்புகளும் மிகக் குறைவே!
பழனிவேலின் மைன்ட்-வாய்ஸ் : 'சாமி வரம் கொடுத்தாலும்...'
ஆஹா வசமாக மாட்டிக்கொண்டீர்கள் ஈவிஅவர்களே ஈரோடு வரும்போது தங்கையை சந்தித்து நிறைய பேச வேண்டும்....
Deleteபதிவின் நிறைய இடங்கள் கண்ணீரை வரவழைத்தது நிஜம் ஆசிரியரே இப்படி ஒரு தாத்தாவிடம் பேசுவதற்க்கு ஓர் இரவு போதாது ஓராயிரம் இரவு வேண்டும் ஆசிரியரே
ReplyDeleteஇந்த பதிவுக்கு மார்க் போட முடியாது ஆசிரியரே மனதில் ஆழத்தில் உள்ள நினைவுகள் விலை மதிக்கமுடியாத பொக்கிஷங்கள் அதனை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி ஆசிரியரே விலை மதிக்க முடியாத பொக்கிஷம் இந்த பதிவு ஆசிரியரே
ReplyDeleteபதிவிற்கு மிகவும் பொருத்தமான தலைப்பு விஜயன் சார்.
ReplyDelete