நண்பர்களே,
வணக்கம். சாயந்திரமாய் சேனலுக்கு சேனல் குதித்து, மொக்கையோ ; மத்திமமோ - கண்ணில்பட்ட அத்தனை படங்களையும் கொஞ்சமாய் பார்த்த கையோடு, வீதியெங்கும் விரவிக் கிடந்த இருளின் மத்தியில் 'டொம்மு...டொம்மு' என்று போட்டுத் தாக்கிய வாணவேடிக்கைகளைப் பார்த்து லைட்டாய் மண்டையைச் சொரிந்தபடியே இங்கு ஆஜரானால் பின்னூட்ட எண்ணிக்கை 341 !! ஆத்தாடியோவ்...இத்தினி புலமையை இத்தினி நாளாய் உள்ளுக்குள் அடக்கிக் கிடந்ததொரு கூட்டத்தை தமிழ் பேசும் தரணி கண்டுக்காமல் விட்டு விட்டதே என்ற ஆதங்கத்தோடு உள்ளுக்குள் புகுந்தால், நம்ம செந்தூர் கவிஞர் களமிறங்கத் தயாராக இருப்பது கண்ணில்பட்டது ! இனியும் தாமதித்தால் தீர்ந்தோம்டா சாமி !! என்ற புரிதலோடு போட்டியினில் வெற்றி கண்டோரைத் தீர்மானிக்கும் ஜட்ஜ்களை அறிவிக்கலாமென்ற அவசரத்தில் ஆஜராகியுள்ளேன் !
இம்முறையும் ஜட்ஜ்கள் இருவரே ! இருவருக்குமே காதுகள் கொஞ்சம் தாட்டியம் தான் ! And இருவருமே கடல்கடந்தோரே ! Welcome to the stage - Radja from பாரிஸ் & மகேந்திரன் பரமசிவம் from டெக்சாஸ் ! இதோ இந்த உப பதிவினில் "100" எனும் பின்னூட்ட எண்ணிக்கையை cut-off ஆகக் கருதி, மொத்தமான பின்னூட்டங்களுள், பட்டையைக் கிளப்பிய கவிதையைத் தேர்வு செய்திட நேரங்களை ஒதுக்கிட சாத்தியப்படுமா - ப்ளீஸ் ? இரு தேசங்களிலுமே இன்னமும் பல வணிகத்துறைகள் இயங்கியே வருவதால், நீவிர் இருவருமே எங்களைப் போல வெட்டி ஆபீசர்கள் அல்ல என்பது தெரிகிறது ; but still - ஓரிரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டேனும் இந்தப் பொறுப்பினை நிறைவேற்றிட முயற்சியுங்களேன் சார்ஸ் ? (அது SARS இல்லீங்கோ !!)
அப்புறம் ஜட்ஜ்களை "கரீட்" பண்ண பள்ளிப்பாளைய சிக்கென்களையோ ; இன்ன பிற கிடா வெட்டுக்களையோ யாரேனும் கையில் எடுக்க முனைந்ததாய்க் காற்றுவாக்கில் சேதி கசிந்தால் கூட - அடுத்த 14 நாட்களுக்கு ஸ்டீலின் "கவிதை"களுக்குப் பொழிப்புரை எழுதும் blog quarantine காத்துள்ளது என்பதை இங்கே கொசுறுச் செய்தியாக்கிய கையோடு கிளம்புகிறேன் ! Bye புலவர்ஸ் ! See you around ! Stay Safe !!
பி.கு. அடுத்த வாரயிறுதியில் கவிதைகளை பாடலாகப் பாடும் போட்டி அரங்கேறிடும் வாய்ப்புகள் பிரகாசம் ! So கானக் குரலோன்கள் இப்போவே சுக்கு..மிளகு..திப்பிலி...எல்லாம் வாங்கி வைத்து தொண்டைகளைத் தயார்படுத்திக்கலாமோ ?
பி.கு. அடுத்த வாரயிறுதியில் கவிதைகளை பாடலாகப் பாடும் போட்டி அரங்கேறிடும் வாய்ப்புகள் பிரகாசம் ! So கானக் குரலோன்கள் இப்போவே சுக்கு..மிளகு..திப்பிலி...எல்லாம் வாங்கி வைத்து தொண்டைகளைத் தயார்படுத்திக்கலாமோ ?
ஞான் 1st !
ReplyDeleteசெல்லாது செல்லாது
Deleteசெல்லவே செல்லாது 🤷🏻♂️
.
போங்காட்டம் சார்..!
Deleteரகுவரன் டயலாக்குதான் ஞாபகம் வருது..
இவரே பாம் வைப்பாராம்.. இவரே போய் எடுப்பாராம்..!
என்னா வில்லத்தனம்
Deleteபதிவையே கமெண்ட் சைஸுல தானே போட்டுருக்கீங்க.. அப்புறம் 'ஐ பஸ்ட்'னு கமெண்ட் வேற போடணுமா நீங்க?
Deleteஹாஹாஹா..அல்டிமேட் சாரே... மரண கலாய்ல டாக்டரேட் பட்டம் இன்னுமொன்று கூடுதலாக தரலாம் உங்களுக்கு...
DeleteHai good night
ReplyDeleteசனி & ஞாயிறு - 2 தினங்களுக்கான பார்வைகளின் எண்ணிக்கை 6329 !! And இது காற்றடிக்கப்படா, ஒரிஜினல் எண்ணிக்கை !
ReplyDeleteஇறுக்கமான இந்த நாட்களின் மத்தியில் ஆளுக்கொரு ஐந்தோ -பத்தோ நிமிடங்களை அக்கடாவென கழிக்க இக்கட சாத்தியமாகியிருப்பின், delighted !!
I'm also delighted.
DeleteI'm delighted
DeleteGood night friends
ReplyDeleteHi..
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு....
ReplyDeleteHi
ReplyDeleteஇரவு வணக்கம் சார் 🙏🏼
ReplyDelete.
/// பி.கு. அடுத்த வாரயிறுதியில் கவிதைகளை பாடலாகப் பாடும் போட்டி அரங்கேறிடும் வாய்ப்புகள் பிரகாசம் ! ///
ReplyDeleteஉங்களுக்கு ஆனாலும் ரொம்ப தைரியமான மனசு சார்...
// அப்புறம் ஜட்ஜ்களை "கரீட்" பண்ண பள்ளிப்பாளைய சிக்கென்களையோ ; இன்ன பிற கிடா வெட்டுக்களையோ யாரேனும் கையில் எடுக்க முனைந்ததாய்க் காற்றுவாக்கில் சேதி கசிந்தால் //
ReplyDeleteஇதனை படிக்கும் வரைக்கும் அப்படி ஒரு ஐடியா இல்லீங்கோ சாரே
ஆனாக்கா நீங்க சொல்லியமைக்கு மிக்க நன்றி 🙏🏼
.
அதற்கு தண்டனை என்ன தெரியுமா?
Deleteகவிதைப் போட்டிக்கான கால அவகாசம் முடிந்து விட்டதா?
ReplyDeleteஇந்தப் பதிவின் 100 கமெண்ட்ஸ் வரை அவகாசம் உள்ளது பாபு.!
Deleteஅய்யய்யோ!
Deleteகவிதை எழுதுவதற்குள் கமெண்ட்ஸ் கரையைக் கடந்து விடுமே??!!
ஸ்டீல் இருக்க பயமேன்.கமெண்ட்ஸ் எழுதுவதற்குள் கவிதைகள் கரையைக் கடந்து விடும்.
Delete///
ReplyDeleteபி.கு. அடுத்த வாரயிறுதியில் கவிதைகளை பாடலாகப் பாடும் போட்டி அரங்கேறிடும் வாய்ப்புகள் பிரகாசம் ! So கானக் குரலோன்கள் இப்போவே சுக்கு..மிளகு..திப்பிலி...எல்லாம் வாங்கி வைத்து தொண்டைகளைத் தயார்படுத்திக்கலாமோ ? ///
நாங்கோ டூயட் பாடித்தேன் பழக்கம்..
ஃபீமேல் சிங்ஙர்ஸும் உண்டுதானே...!? 😍
மாடஸ்டி + AXA
Deleteஅப்போ ஜூலியா? ஷானியா?
Deleteஅடக்கடவுளே!!!
ReplyDeleteஃபோட்டோவில் நண்பர் ரட்ஜாவுடன் அ..அந்த இடம்..!!!!
ஆனால், EBFல் ஷெரீப்புடன் தேமே என்று..!
(வெளிநாடுல புலி.. வீட்டுநாட்டுல எலி!)
நோட் பண்ணுங்க சீனியர் எடிட்டர் சார்!
அட.. அது சத்து டானிக் விக்கிற கடைதானே குருநாயரே..!
Delete😄😄😄😄
Deleteஆமாங் கிட்!! கபசுர குடிநீர்!!
Deleteஓ... அந்த பாட்டிலுக மேல அதைத்தான் ஃப்ரெஞ்சுல எழுதியிருக்காங்களா.!?
Deleteவிஜய் மற்றும் கண்ணா ஹிஹிஹி
Deleteஅடேடே ! நான் இப்போதான் ரெண்டு கவித (?!) எழுதினேன் !
ReplyDeleteசரி! இங்கயும் ஒரு கோப்பி பேஸ்ட்!
ReplyDeleteகவித போட்டி! அதுவும் ஆறு வரிக்குள்ள ?
ஹ்ம்ம்....
நல்லா யோசிங்க தம்பிபிபி....!
அங்க பொருளர், ஜே சார் போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் சீரியஸ்ஆ களம் எறங்கி இருங்காங்க !
நடுவுல நம்ம கவித உலக சக்கரவர்த்தி 'ஸ்பைடர்ல' புகழ் ஸ்டீல் பாஸுயும் வெறி கொண்டு களம் எறங்கி இருக்கார்!
சொல்றத சொல்லிட்டேன்..........அப்புறம் உன் இஷ்டம் !
அட! ஒரு வாட்டி ட்ரை பண்ணி பார்க்கலாமே ?
இட்லிக்கு
தேவ
கெட்டி சட்னி !
(வாவ்...வாவ்.....சூப்பர்... சூப்பர்! இப்போ மூணு வரி ஆச்சு...நெக்ஸ்ட் ஒருவாட்டி முழுசா சொல்லுப்பா....)
கவிதை ஒன்னு:
----------------------------
இட்லிக்கு
தேவ
கெட்டி சட்னி !
ஏய் கொரோனவே.......!
இத்தாலிக்கு
தேவையா நீ !!!
(சரி இப்போ நம்மளும் நெக்ஸ்ட்டு கொஞ்சம் சீரியஸ்ஆ ட்ரை பண்ணுவோம் )
கவிதை ரெண்டு:
------------------------------
கால்பந்து
நாடுகளை.....
....யே....
கால்பந்து
ஆடியதே......
கொரோனா!!!!
கவிதை மூணு :
--------------------------
கௌபாய்
தேசத்தில்.....
ஒரு
கிராபிக்
நாவல்.........
கொரோனா!!!!
👏👏👏👏
Deleteஹா ஹா ஹா!! பின்னிப் பெடலெடுக்கறீங்க சரவணன்! நடுநடுவே அந்த டயலாக்ஸ் எல்லாம்.. ஹா ஹா ஹா!! செம்ம! :)))))))
Deleteநன்றி சத்யா & செயலர் :-)
Deleteஹைக்கூக்களோ...
Deleteஅதேதான் ஜே சார் :-)
Delete3வது ஆஸம் பாஸ்!
Deleteநன்றி பாஸ்!
Deleteசரவணன் சும்மா சொல்லக்கூாது நல்லாவே எழுதரிங்க.
Deleteநன்றி குமார்!
Delete///அடுத்த வாரயிறுதியில் கவிதைகளை பாடலாகப் பாடும் போட்டி அரங்கேறிடும் வாய்ப்புகள் பிரகாசம்///
ReplyDeleteஸரிகமப கம பப
கமபத நிதபம கமப கமகரிஸ
ராகம்: மாயமாளவ கெளளா
தாளம்: ஆதி
செல்லாது! செல்லாது !
Deleteநீங்க எல்லா பாட்டையும் அந்த அகில உலக புகழ் பெற்ற நின்னு கோரி வர்ணம் ராகத்துல தான் பாடணும் ;-)
@Saravanan R
Deleteநாங்க எல்லா ராகத்தையுமே 'நின்னுக்கோரி' ஸ்டைல்லதான் பாடுவோம்!
ஒரிஜினல் நின்னுக்கோரி வர்ணம் பாடல் அமைந்த ராகம் -மோகனம்.
Deleteஆ ஆ ஆ ராகம் தாளம் பல்வலி சே சே பல்லவி செயலாளரே நாங்களும் உங்களுக்கு கோரஸ் பாடுறோம் சும்மா பிச்சி உதறுங்க
Delete/// எல்லா ராகத்தையுமே 'நின்னுக்கோரி' ஸ்டைல்லதான் பாடுவோம்! ///
Delete' நின்னு'க்கிட்டா. உக்காந்துக்கிட்டா.
// So கானக் குரலோன்கள் இப்போவே சுக்கு..மிளகு..திப்பிலி...எல்லாம் வாங்கி வைத்து தொண்டைகளைத் தயார்படுத்திக்கலாமோ ? //
ReplyDeleteமேச்சேரியில் இப்போதே பஞ்சு விற்பனை தூள் பறக்குதாம்.....
பஞ்சு - குரலை அவ்வளவு மென்மையாக்குதாக்கும்!
Deleteகிட்! அப்படீன்னா எனக்கும் ஒரு மூட்டை வாங்கிடுங்க!
பஞ்சை வாங்கி உங்களுக்கு கொடுக்கிறதுக்கு பதிலா ஜட்ஜுகளுக்கு கொடுத்திட்டா நான் ஈசியா ஜெயிச்சிடுவேனே குருநாயரே.!!
Deleteஅப்படியே ஆடியன்ஸுக்கும் ப்ளீஸ்.
Deleteஓகே மக்களே அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை மீட் பண்ணலாம். Good night.
ReplyDeleteஆமா ஆமா.
Deleteவெட்டிய காட்டில்
ReplyDeleteதேடியலைந்தான் புத்தன்
போதிமரம் எங்கேயென்று!
90'S கிட்ஸ் முதல்தலைமுறை
வாசகர்கள் நாங்கள் தேடியலைந்தோம்
மில்லேனியம் ஸ்பெஷல் எங்கே கிடைக்குமென்று?!!
நன்று சொன்னீர் நண்பரே! உங்க பெயர் படிக்கும் போதெல்லாம் ஜிலேபி தான் ஞாபகம் வரும். கவிதையும், பொதிந்து உள்ள ஏக்கமும் இனிக்கிறது!
Deleteதிருவிளையாடல் சிவாஜி-நாகேஷ் உரையாடல்
ReplyDeleteபோல் படிக்கவும்
வன்மேற்கிற்கு - டைகரும் டெக்சும்
அமானுஷ்யத்திற்கு - டைலனும் மார்ட்டினும்
குற்றத்திற்கு - டயபாலிக்கும் ஸ்பைடரும்
துப்பறிவிற்கு - ஜானியும் ஜேம்ஸ்பாண்டும்
நகைப்பிற்கு - டாக்புல்லும் டால்டன்களும்
தமிழ் காமிக்சிற்கு - அரியும் ஆனையும்
:-)
Deleteசெம்ம செம்ம
Deleteகவிதை 1. மனிதர்களுக்காக!
ReplyDeleteஅமைதியாய் இரு ; ஆகக்கூடியது அதுவே!
இல்லத்தில் இரு; ஈனமாய் வதந்தி பரப்பாதே!
உறவுகளோடு பேசு; ஊர் சுற்றாதே!
எண்ணம் போல் புசி; ஏழைக்கும் கொடு!
ஐயமின்றி நம்பு;தூய்மையே நன்மை என!
ஒன்றுபட்டு ஓய்வெடு;ஔடதம் அறியும் வரை!
(நன்றி!)
பாபு உயிர் எழுத்துக்கள் அனைத்தையும் உபயோகித்து ஒரு கவிதை செம்ம
Deleteபாபு@ நல்ல முயற்சி
Delete46th
ReplyDelete47
ReplyDeleteகொரனா வந்து சரணாகதியான உலகமே
ReplyDeleteஉன்னைப் பார்த்து கேட்குதே கேள்வியே கேள்வியொன்று
வீட்டுக்குள் சிறையானாய்
மீண்டும் நீ சிறுவனானாய்
மீண்டு நீ வர விரும்புகிறாயா
இயற்கை அன்னை உனக்காக காத்திருக்கிறாள்
பலகரம் நீட்டி தழுவ சுத்தமாய்
நீ இனியாவது புத்தனா உன்மத்தனா என தவழ விடை தருவாயா சத்தமாய்
51வது
ReplyDeleteஎங்க ஊரு விலங்கெல்லாம் சுத்தி பாக்குது
ReplyDeleteபஸ்ஸு இல்லா உலகம் கண்டு நடந்து பழகுது
எங்க ஊரு பறவையெல்லாம் பறந்து பாக்குது
உசுரு போன சாலைப் பாம்பின் முதுகை மிதிக்குது
எங்க ஊரு நதியெல்லாம் தளும்பி சிரிக்குது
மனிதனில்லா உலகம் கண்டு மீனைக் கழுவுது
எங்க ஊரு நோயெல்லாம் மரித்தே போனது
கொரனாவின் கோரப் பசிக்கு இரையாய் ஆனது
அருமை யாக உள்ளது.
Deleteவந்தனமய்யா வந்தனம்
ReplyDeleteஜட்ஜு இங்க குந்தனும்
என்னோட வாழ்த்தா சந்தனம்
பாதி பாதி சந்தான்னு
இலை மறையா சொல்லனும்
வாழ்த்துக்ள் பெரும் புலவர்களே
இக்கவிதய பாத்து பரிச தாருங்களேன்
வெள்ளிக்கிழைமை ராமசாமி.
Deleteவந்தாச்சுங்கோ. படிச்சு சொல்லிடறேங்கோ...
ReplyDeleteஷெரீஃப் சீக்கிரமே ஒரு தீர்ப்பு சொல்லி எங்களை காப்பாற்றும்.
Deleteகொஞ்சமா ஓரிரு நாள் பொறுத்தா கவித வெள்ளத்ல திக்குமுக்காட செய்திடுவேனே
Deleteஅதுவரைக்கும் ஆள் இருக்கணுமே.
Delete@ KS & பத்து
Delete:)))))))
@ ஸ்டீல்
ய்ய்யீஈஈஈஈக்க்...
KS+1!
Deleteவிரல் போன போக்கிலே விழுந்த கவிதைகள் கடல் கடந்த காதுகளுக்கு போய் சேர்ந்ததோ?
ReplyDeleteஒரே உலகம்..!
ReplyDeleteஒரே வைரஸ்..!
மஹி அண்ட் ரட்ஜா..வாழ்த்துக்கள்...
ReplyDeleteவெற்றிபெறுவது ஒருபுறமிருக்க பங்கேற்ற அத்தனை லயன்களுக்கும் வாழ்த்துக்கள்..
இந்த ஆறடி இடைவெளி
ReplyDeleteநமக்கு மட்டுமே பொருந்தாது
இளித்து கொண்டே சொன்னது
இரட்டை குழந்தையில் ஒன்று மற்றொன்றிடம்
பனிக்குட திரவத்தில் நீச்சலடித்தபடி.
Excellent ji🎈🎈🎈🎈🎈
Deleteவில்லன் கொரோனா.....
ReplyDeleteநீ சாகறதை நான்தான் முடிவு செய்வேன்.
நான் சாகுறதையும் நான்நான் முடிவு செய்வேன்..
------------------------------++----
காதலன் கொரொனா....
என்னோடு வா! வீடு வரைக்கும்..
என் வீட்டைப் பார்.!
என்னைப் பிடிக்கும்..!
அடடே அருமை
Deleteஎப்படியெல்லாம் யோசிக்கறாங்க!!
DeletePresent sir
ReplyDeleteவிசயமில்லே
ReplyDeleteவிசமமில்லே
விசேசமில்லே
விசுவாசமில்லே
சத்தமில்லே
சங்கடமில்லே
முத்தமிழே
இனி கவிதை யுத்தமில்லே
இடமுமில்லே
Deleteதிடமுமில்லே
உரமுமில்லே
இதுக்கு மேலே கேட்டாக்கா உசுருமில்லே
ஆகையாலே
அணை போடுலே !
ஹா ஹா ஹா!! :))))))))) ரணகளம்!! :)))))
Deleteசார் உங்க வேலையா....நான் கொரனா ரகசியம் பிடிபட்ருமேன்னு தின்னுடுச்சோன்னுல நெனச்சேன்....
Deleteஆசிரியரே செம்ம 😄😄😄😄
Deleteசே ! உலகத்துல எவ்ளோவ் போட்டி இருக்கும் போது நான் ஏன் கவித போட்டி வச்சேன்!
Delete(பாஸு!!!! நீங்க mind வாய்ஸ் னு நெனச்சு சத்தமா பேசிட்டு இருக்கீங்க ;-))
ஸ்டீல் !
இதுதான் த்ரில்லிங்கான நேரம் !
உங்களுக்கு எத்தனை ஸ்பைடர் வேணும் எத்தனை ஆர்ச்சி வேணும்னு தைரியமா கேளுங்க !
அநேகமா ஒரே ஒரு கண்டிஷன் ஓட 100% கிடைக்க வாய்ப்பிருக்கு ;-)
Saravanan R @ :-) sema!
Deleteஎடிட்டர் சார்@ இனிமே கவிதை போட்டி வைப்பீங்க...!!!😉😉😉😉
Deleteபாஸ் @ பின்னீட்டிங்க! செம! ஹா..ஹா...!
Delete//
Deleteஸ்டீல் !
இதுதான் த்ரில்லிங்கான நேரம் !
உங்களுக்கு எத்தனை ஸ்பைடர் வேணும் எத்தனை ஆர்ச்சி வேணும்னு தைரியமா கேளுங்க !
அநேகமா ஒரே ஒரு கண்டிஷன் ஓட 100% கிடைக்க வாய்ப்பிருக்கு ;-) //
உண்மை ஸ்டீல் தங்கமான வாய்ப்பு
கேட்டுருவமா...அந்த குண்ட போட்டுருவமா
Deleteநம்ம கே ஸ் சொன்ன மாதிரி அவருக்கு பரிசு கொடுக்கறதுதான் ஒரே வழி !
ReplyDelete(பிளாஷ் நியூஸ் ...................)
ஐயோ! நீங்க ஜெயிச்சுடீங்க!
நீங்க இருங்கீங்க தெரியாம இந்தியா வந்துட்டேன் !
சத்தியமா இனி இந்த பக்கமே வரமாட்டேன்!
-- கொரோனா கததததறல்!
ஹா ஹா ஹா! :))))))
Delete:-) ஹா ஹா ஹா!!
Deleteபாஸூ@ கேப்ஷன் போட்டி, கவிதை போட்டிக்கு பின்பாக வந்து இருந்தால் இது பரிசை தட்டி இருக்கும். செம!
Deleteசார் என்னோட பரிசில் பெறக்கூடிய கவிதய யாரோ லவட்டிட்டாவ
ReplyDeleteஅதனால?
Deleteஅதுக்குப் பதிலா இன்னும் ஏழெட்டு கவிதை எழுதப் போறீங்களா?!!
ய்ய்யீஈஈஈக்க்க்...
My deep condolences to that pitiable fellow
Deleteபத்து சார்.. :)))))
Deleteகாமன் ஸ்டீல்!
Deleteஉங்க கவிதா விலாசத்தை பார்த்து எல்லாருக்கும் பொறாமை!!!
உங்க கவித வெள்ளத்துல தொபுக்கடீர்ன்னு குதிக்க வந்தவங்கள ஏமாத்தறாதீங்க !
நான் செயலரோட புதிய பதிவு ரெடி பார்த்துட்டு திரும்பி வர்றன் !
அதுக்காக நீங்க நிறுத்திடாதீங்க !
உங்களுக்கு continue ஓ continue ;-)
One man army.
DeleteWhat a brave man.
Cheerup.
"கவிதை வெள்ளம் அணையுடைத்து
Deleteகொரனைவைத் துடைத் தொழிக்குமே"
சே! சே!
நாந்தான் அப்பவே சொன்னன்ல!
ஸ்டீல்லுக்கு கொரோனா மேலதான் அம்புட்டு கோவம் !
All. Be hope. When God closes one door, he opens another. அது வழியா ஓடிடலாம்.
Deleteஎன்னா அடி கைய மடக்கிட்டு குத்தினான் பார் குத்து. இனிமே இந்த பக்கம் வருவேன்?
Deleteசரவணா செம்ம செம்ம நீங்க EV range kku வந்து விட்டீர்கள்
DeleteKS@ ha...ha..ha...!!!
Deleteசரவணன் முத்து கெடச்சாச்சா
Deleteகடல்தாண்டி வந்தவர்தான்..
ReplyDeleteகூறுவது தீர்ப்பலைகள்.!
தீர்ப்பலையை எதிர்பாத்து..
தவித்திருக்கும் கவியலைகள்..
கவியலையின் நெஞ்சமெலாம்
சந்தாவின் நினைவலைகள்.
நினைவலைகள் நிஜம் பெறவே..
தாவி வரும் கடலலைகள்..!
இன்னும் 3 கமெண்ட் தான். Habba தப்பித்தேன்
Deleteமனவினைகள் யாருடனோ மாயவனின் விதி வலிது!
Deleteதாவி வரும் நீரலைகள்
Deleteஅதில் வாய் கொப்பளிக்கும் முன்னே
போட வேணும் வெற்றிலைகள்
100 இந்தா 100 முடிஞ்சது முடிஞ்சது. போட்டி முடிஞ்சுது
ReplyDelete@ ALL : ரெண்டாவது ஜட்ஜ் ஐயா இன்னமும் இக்கட எட்டிப் பார்க்காததால் கவிதைகளின் கட்-ஆப் 200 வரை நீட்டிக்கப்படுகிறது !
ReplyDelete-கம்பெனி-!
This comment has been removed by the author.
Deleteசார் உங்களுக்கு எங்கள் மேல் ஏன் இந்த கொலை வெறி? உங்ககிட்ட என்ன கேட்டோம் ஒரு பதிவு தானே கேட்டோம்?
Deleteநீங்கள் நேற்று போட்டியை அறிவிக்கும் போதே ஜட்ஜ் இருவரையும் அறிவித்து இருக்க வேண்டும். இப்போது காலம் கடந்து விட்டது. இன்று இன்னும் ஒரு 300 பதிவுகளை தாண்ட போகிறது.
செததான் சேகரு. ஏனுங்க இந்த ரணகளத்த பாத்ததுக்கு அப்புறமும் அவரு வருவாருங்களா? ஆனாலும் உங்களுக்கு இந்த குசும்பு ஆகாதுங்க.
Deleteசார் ரெண்டாவது ஜட்ஜ் ஐயாவுக்கு ட்ரங்க்-கால் புக் பண்ணிப் பேசியாவது இங்கே வரவைக்கிறோம் (அங்கேதான் எங்கயாவது ஈஃபில் டவர் பக்கத்துல ஏதாவது பழைய புத்தகக் கடையில நின்னுக்கிட்டிருப்பாரு).
Deleteஇப்படி கட்-ஆஃபை 200 வரைக்கும் நீட்டிக்கிறதெல்லாம் மாபாதகம்! கம்பேனிக்கு கொலைவெறி வந்துட்டாமாதிரி இருக்கே!!!!
எடிட்டர் சார்@ ஏன் ஏன் ஏன்....!
Deleteசார் அப்ப கொட்டட்டுமா....
Deleteஎல பரணி சித்த இங்ன வால
// மாபாதகம்! கம்பேனிக்கு கொலைவெறி வந்துட்டாமாதிரி இருக்கே!!!!
Delete//
Yes! Yes!! :-)
ஹாஹாஹாஹா...அகிலமே அரண்டுகிடக்குதுகொரோனாவப் பார்த்து..
Deleteஅனைத்து தரப்பும் ஆரவாரிக்குது இங்கே அட்டகாசமாய் ஒரு ஆசிரியரைப் பார்த்து..
சோதனையை கடக்கும் படகொன்றை கொடுத்தார்..
போட்டியென்ற பெயரில் கவிதையைத் தொடுத்தார்..
வீணாகாத சிந்தனைகளை மடை கட்டித் தடுத்தார்..
ஜாலியான போட்டி கொண்டு சோதனைகளை கடக்க செய்தார்..
கொண்டாடுவோம்..
கொரோனாவின் கோரமுகத்தை சற்றேனும் மறந்து...
ஸ்டீல் காட்டுல (கொரானா) கவித மழை. போடு டண்டணக்கா.. Lணக்கணக்கா..
ReplyDeleteபொறுமை பொறுமை எல்லாரும் நனயலாம்
Deleteஸ்டீல் இனி இது உங்கள் நேரம் continue o continue :)))))))
ReplyDeleteஎல்லாரும் வந்தாச்சாப்பா....அப்பறம் ஆசிரியர் படிக்றதுக்குள்ளயே தூக்கிட்டாருன்னு வருந்தாதிய மக்கா
Deleteகவிதை அரங்கேறும் நேரம்.
ReplyDelete(ரண கள) கணைகள் பாய்ந்து வரும் நேரம்.
இனி நாளும் கொலையாகும் ராகம்.
இந்த நினைவு சந்தேகமாகும்.
நாளுமினி சந்தோச ராகம்
Deleteவிஜயன் சார், நான் இலங்கை வாசகன். முதன் முதலில் நான் வாசித்த லயன் காமிக்ஸ் இதழ் டெக்ஸின் எரிந்த கடிதம். நான் டெக்ஸின் இரசிகனாக இருந்தாலும் இப்பொழுது வெளிவரும் கி.நாக்கள் அதிக விருப்பை ஏற்படுத்தியுள்ளன. முடியா இரவு, கனவுகளின் கதை, என் சித்தம் சாத்தானுக்கு, முடியா மூடுபனி, கதை சொல்லும் கானகம், இ. இ. கொல்லாதே, நி. ம. நியுயோர்க் என அனைத்தும் அருமை. அடுத்த ஆண்டு கி.நா சந்தாவில் புத்தகங்களை ஒன்பதாக உயர்த்த முடியுமா சார்?
ReplyDeleteஇதே தான் எனது கோரிக்கையும்
Deleteஅப்படிக்கேளுங்க நண்பரே!!
Deleteஇன்றைக்கு வாழ்க்கையே ஒரு கி. நா.வாகியிருக்கும் நிலையில் ஏதேனுமொரு சந்தாவுக்கு ஸ்லாட் கூட்ட வேண்டுமெனில் அது கார்ட்டூன் சந்தாவாகத் தானிருக்க வேண்டும் நண்பரே !
Deleteவாவ்.. எனது பின்னூட்டத்துக்கு எடியும் மூன்று நண்பர்களும் பதிலிட்டுள்ளனர். கார்டூன் கதைகளில் லக்கி, ஆர்டின், ஸ்மர்ப்ஸ் பிடிக்கும் சார். மகிழ்ச்சியுடன் தொடருங்கள்.
Deleteவாவ் எனக்கும் லக்கி கிட் ஸ்மர்ஃப் ரொம்ம ரொம்ப ரொம்ப........பிடிக்கும் ....தற்போதய மேக்&ஜாக் படித்தீர்களா...அதும் கலக்குமே
Delete// ஸ்லாட் கூட்ட வேண்டுமெனில் அது கார்ட்டூன் சந்தாவாகத் தானிருக்க வேண்டும் நண்பரே ! //
DeleteI Jolly! Super New!!!
ஆர்டினுக்கோர் ஸ்லாட்டை மறவாதீர்..
Delete200கமெண்ட் தானே, இருக்கவே இருக்கு நெம்பர் விளையாட்டு!
ReplyDeleteகம்பேனியின் அடுத்த அதிரடி!
ReplyDeleteவிரைவில் புதிய முழுநீளப் பதிவு - 'கம்பேனி கவிதைகள்!!'
(அ..அது நம்மை நோக்கி வேகமா வருது..)
ஸ்டீல் வாழ்த்துரை எழுத வேண்டியது மட்டுமே பாக்கி ! ஈரோட்டில் ரிலீஸ் !
Deleteமுதல் பிரதியை சேலம் குமார் வெளியிட ஈரோட்டு 'வாளி பர்" பெற்றுக்கொள்வார் !
Deleteசார் நான் பாவம் என்று உங்களுக்கு தோன்ற வில்லையா?
Delete///ஈரோட்டு 'வாளி பர்"///
Deleteகம்பேனி வேண்டுமென்றே ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்துள்ளதை எம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது!
சரி வாலி பர்ர்ர்
Delete
Delete/// முதல் பிரதியை சேலம் குமார் வெளியிட ஈரோட்டு 'வாளி பர்" பெற்றுக்கொள்வார் ///
''என்ன தவம் செய்தனை..யசோதா...
என்ன தவம் செய்தனை..''
கவிதை போட்டி:
ReplyDeleteஎன்றும் இவர்கள் கடவுள்களே,
ஆனால்,
இன்று உணர்கிறான் மனிதன்..
இரவு பகல் பாராமல்
உயிர் காக்க போராடும்,
உத்தமர்களை...
இன்று மற்றும் ஒரு வேதனையான சோதனையான நாள்...
ReplyDeleteசார் ஈமெயிலில் என் முகவரி அனுப்பிவிட்டேன்.
ReplyDeleteதமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில்....
ReplyDeleteபாதிக்கப்பட்டவர்கள் அதிகமாவது கண்டு மனம் கலங்குகிறது.
கவிதை போட்டி:
ReplyDeleteகவசங்கள் தரித்தாலும்
ஆயுதங்கள் இல்லாமல்,
கிடைத்ததை கையிலேந்தி
போராடும் கடவுள்களே...
மூடப்படாத கோவில்களாய்
என்றென்றும் எங்கள் இதயம்....
ஜெராமியாவின் ஆறு ஆல்பங்களையும் ஒன்றாகப் படித்து மகிழ்ந்தேன்.எதுவுமே இல்லாதது மாதிரியும் இருக்கிறது,ஏதோ ஒரு வசீகரமும் இருக்கத்தான் செய்கிறது.அது ஹெர்மனின் சித்திரஜாலமாக இருக்குமோ?
ReplyDelete:-)
Deleteஇன்னோர் முறை படிங்க ...கேள்விகள் தொக்கினாலும் கால் போன போக்கில் போகும் கதை யதார்த்த எதிர்காலத்த காட்டும்...
Deleteதோர்கல் தொகுப்புகள், லார்கோ வின்ச் ,டெக்ஸ் வில்லர் ,ஆர்டின் , ஜானி ,பராகுடா ,கல்கி சாண்டில்யன் நாவல்கள் என்று பொழுது ரம்யமாய்ப் போகின்றது.
ReplyDelete200 வரைக்கும் பாடி தாங்காது.. கம்பேனி ஏதாச்சும் நல்ல முடிவா எடுத்த தேவிலை..
ReplyDeleteஜட்ஜைக் காணோமே ; எந்த மருவை ஒட்டிக்கினு எந்த ஜார்க்கண்ட் ரயிலைப் புடிக்க முயற்சி பண்ணிட்டு இருக்காரோ - தெரிலியே !
Deleteநேற்று, தனியொருவன், வஞ்சம் மறப்பதில்லை. இன்று
ReplyDeleteஇரத்தப்படலம் 20, 21. going. மற்றும் எண்டமூரியின் மீண்டும் துளசி. starts.
Super sir !
Delete(கொ)டுஞ்செயல்கள் பல்கிப் பெருகிடின்
ReplyDelete(ரோ)கமும் மிகும்! இதுவே நியதி!
அத(னா)ல் நம்
(வை)யகம் நோயின்றி வாழ்வாங்கு வாழ
(ர)ட்சிப்போம் சக உயிர்களை! ஏனெனில் இப்புவி
(ஸ்)பீல்பெர்க் காவியம் அல்ல! இயற்கை அன்னையின் வண்ண ஓவியம்!
விதவிதமா யோசிக்கறீங்களே?!! செம்ம!!
Deleteரூம் போட்டு எல்லாம் யோசிக்கலை!!! உங்களை எல்லாம் பார்த்து கற்று கொண்டது தானே நண்பரே :)
Deleteதன்னடக்கம்!
Deleteநான்லாம் என்னிக்கு கவிதை எழுதினேன்?!! கொஞ்சநஞ்சம் இருந்த கவிதை ஞானமும் 'கிங் ஸ்பெஷல் - வல்லவர்கள் வீழ்வதில்லை'ல வந்த கவிதைகளைப் படிஞ்சதுக்கப்புறம் காணாமப் போய்டுச்சுங்க நண்பரே!
பொறாமே ....
DeleteMAXI லயன் எடிட்டர்கிட்டே சொல்லி அந்த கிங் ஸ்பெஷல் இதழை சீக்கிரமே கலரில், மேம்படுத்தப்பட்ட கவித தரத்துடன் வெளியிட ஏற்பாடு பண்ணனும் போலிருக்கே !
Deleteஹா ஹா ஹா உண்மை உண்மை... ஆமாம் நீங்க யாரு?
Deleteகாணாமல் போனது ஞானம் மட்டும் அல்ல ஞானும் தான் :)
Delete////MAXI லயன் எடிட்டர்கிட்டே சொல்லி அந்த கிங் ஸ்பெஷல் இதழை சீக்கிரமே கலரில், மேம்படுத்தப்பட்ட கவித தரத்துடன் வெளியிட ஏற்பாடு பண்ணனும் போலிருக்கே !///
Deleteமேக்ஸி-லயன் எடிட்டர் மனிதநேயம் மிக்கவர்! கவிதை இடம்பெறும் பகுதிகளை மட்டும் லாவகமாக எடிட் செய்து எங்களிடம் தன் இரக்கசிந்தையை நிரூபிப்பார்!!
:) definitely
Deleteஅருமை
Deleteசில பல படைப்புக்களை பார்த்து மிரண்டு ரிவெர்ஸ் கியர் அடிச்சிபுடலாம்னு ஜகா வாங்குனா எடிட்டர் deadline extend பண்ணிட்டார். அதனாலே தான் ஹீ ஹி ஹி
ReplyDelete///எடிட்டர் deadline extend பண்ணிட்டார்///
Deletecut-offஐ விட deadlineன்ற வார்த்தைப் பிரயோகம் தான் சரியாக இருக்கிறது - deadன்ற வார்த்தை வருதே!! :D
ஹா ஹா ஹா
Deleteசில பல ஆக்கங்கள் அதகளம் நண்பர்களே... ப்பா சான்சே இல்லாத படைப்புகள் _/\_
ReplyDeleteஉண்ம!
Deleteஆமாமா.. இனிமே இந்த கடிகாரத்தை யாரும் வாங்க மாட்டாங்க..
Deleteஸ்டீல் க்கு பூசணிக்காயை வைத்து திருஷ்டி சுத்தி போடணும் (தலையில் அல்ல!!!)... ஒன் மேன் ஆர்மி... ப்பா தெய்வமே _/\_
ReplyDeleteகொடிய கொரனா சிறை வைக்குது
ReplyDeleteகெட்ட ஆசை பூட்டுடைக்குது
சாபமான அலட்சியம் ஆட்டிப் பாக்குது
எனக்கேதுமாகாதெனும் தன்னம்பிக்கை தெருவில் இறங்குது
காக்கும் தெய்வமாய் காக்கிச் சட்டை லத்தி சுத்துது
கொரனாவே காப்பாத்துன்னு கதறுது வழியற்ற எமது சனம்
ReplyDeleteகொரனா குழம்பி நிக்குது
கொன்று காக்கவா
விலகி நின்று காக்கவா
அரசியல் வியாதிகளை விட
நானொன்றும் பெரிதன்றே என
கண்ணீராகி உருகுது
என்னுள்ளமும் கரையுது
கம்பு சுத்தும் கொரனாவினோடே
ReplyDeleteபட்டினியால் மானிடமும் கம்பு சுத்துது
ஆயிரம் தந்தாச்சுன்னு அரசியல் நடக்குது
துப்பில்லா நாக்குமித கேட்கத் தயங்குது
ஓப்பில்லா கரமிரண்டும் வாங்கத் துடிக்குது
தெம்பில்லா ஜனநாயகமும் சாகக் கடவது
கோடை மலரே கொரனா
ReplyDeleteகோடை தருவே கொரனா
கோடை கொடையே கொரனா
வாடை வருதே கொரனா
பாடை தருமே கொரனா
மேடை உலகே கொரனா
திருச்செந்தூர் ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்க்கு கவிதை போட்டியில் ஸ்பெஷல் பரிசு ஒன்று கொடுத்து விடுங்கள் ஆசிரியரே! இந்த அறிவிப்பை உடனே சொல்லிவிட்டால் எல்லா பிரச்னையும் உடனே சரியாகி விடும்! நண்பர்கள் எல்லாம் தப்பிக்க இதனைவிட சிறந்த ஐடியா வேறு எதுவும் தெரியவில்லை! :-)
ReplyDeleteஏலே மக்கா சிறப்பு பரிசா நான் உனக்கு சந்தா வேண்டும் என்றாலும் தருகிறேன்! நம்ப காமிக்ஸ் மக்களை விட்டு விடுல, வீட்டில் இருப்பதே கஷ்டம், வெளியேயும் செல்ல முடியாது; இந்த நேரத்தில் நீவேற கவிதை அருவியா "கொட்டு" ற! பாவம் மக்கா!! போ பையன பாரு!!! :-)
ஜட்ஜ் ஐயாக்களே சீக்கிரமா முடிவை அறிவிச்சி ஸ்டீலுகிட்ட இருந்து காப்பாத்துங்க பாடி தாங்காது
ReplyDeleteபரணி! எனக்கு என்னமோ இது மொபைல் Keypad problem மாதிரி தெரியலியே.
ReplyDeleteஅதே அதே
Deleteஸ்டீலய்யா ஸ்டீலய்யா நீ இப்போ யாரய்யா கடவுளா எமனா தெரியலயய்யா
ReplyDeleteபரணி. ரெண்டு ஜட்ஜ்களையும் நெனச்சா எனக்கு அந்த பலாப்பழ கமெண்ட்டு தான் ஞாபகத்துக்கு வருது.
ReplyDelete:-) Varatum Varatum :-)
Deleteதிருவிளையாடல் மாடுலேஷன் :
ReplyDeleteதமிழக அரசு தீர்க்க முடியாத பிரச்னையை தனியொரு புலவனாக நின்று (கொன்று) தீர்க்கும் தருமி (ஸ்டீல்)யே! நீவிர் வாழ்க!
ஆசிரியரே! தயவு செய்து, தாங்கள் அறிவித்தபடி பரிசினை இவர்க்கே அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இரும்புக்கை மாயாவி அடிக்கடி கரண்டுக்கம்பியப் புடிச்சு சார்ஜ் ஏத்திக்கிட்டு வந்து சாகஸம் பண்ணுவாரே.. அதே மாதிரி நம்ம ஸ்டீலும் அடிக்கடி எங்கோ போய் தன் கவிதைகளுக்கு சார்ஜ் ஏத்திகிட்டு வர்றார்னு தோனுது!!
ReplyDeleteதிடீர்னு வந்து ஒரு ஏழெட்டு கவிதைகளை டிப்பர் லாரியிருந்து மண்ணு கொட்டுற மாதிரி கொட்டிட்டு ஓடிடறார். அப்புறம் மறுக்க வரார்.. கொட்றார்...
நேத்திலேர்ந்து இதே க(வி)தையால்ல இருக்கு!
கவிதைப் பகாசுரன் பொன்ராஜ் வாழ்க..
Deleteஇன்றைய தனித்திருத்தல் ரீடிங்..களம்..நீரில்லை..நிலமில்லை..கதை சரியான குழப்பியடிக்கும் இரக பாணி கிராபிக் நாவல்தான்.. புயல் காற்றின் ஊழித் தாண்டவத்தினூடே மனித உயிர்களின் பலிகள் தொடர..சிறிது சிறிதாக முன் கதை சுருதி கூட்ட தனித்தீவில் கலங்கரை விளக்கத்தில் நாமும் சிக்கித் திணறுவதான மனப்பிரமை ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளவோ..புத்தகத்தை சற்றே மூடி வைத்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளவோ இடமே தராத தொடர்ச்சியான சஸ்பென்ஸ் கதை... அதிலும் ப்ளாஷ் பேக்கில் படகிலிருந்து கடலில் குதித்து பின் படகில் ஏற கயிற்றேணி போடாததை எண்ணி திகிலுறும் குழுவினர் படகினை பற்றி ஏற முடியாமல் கீறுவதை வசனம் வாயிலாகவே நமக்கு கடத்துவதை...அப்பப்பா..ஒரு சமயம் ஆளரவமற்ற நிலப்பரப்பில் பெரிய கிணறு ஒன்றினுள் பழகிய கிணறுதானே என்று இறங்கி விட்டேன். படிகளைத் தாண்டி கீழே ஒரு மீட்டரில் தண்ணீர்..ஆர்வமிகுதியில் குளிக்க துவங்கி நீச்சலடித்து களைத்துப் போய் ஏற முயன்றபோதே உரைத்தது..படியை எட்டிப் பிடித்து ஏறுவது சாத்தியமில்லை என்பது..நீர்மூழ்கி மோட்டார் பைப்பை பற்றி ஏற முயன்றால் வழுக்கி விட்டது.. திக்..திக்..திக்..நிமிடங்கள் சுமார் முப்பது கடந்ததும் தாய் மாமன் வடிவில் உதவி தேடி வந்தது.. கிடைத்த வடக்கயிறௌறை வைத்து மேலே ஏற வைத்தார்..இன்றைக்கும் அந்த வினாடிகள் மனப்பரப்பில் நிலவதிர்ச்சியை கடத்தும் நிகழ்வே...நீரில்லை நிலமில்லை.. அட்டகாசமான படைப்பு..
ReplyDeleteகொன்று தீர்க்கும்
ReplyDeleteகோரப் பசியை
கொண்டுதித்த
கொரோனாவே..
கபத்தை
சுரத்தை
வெல்லும்
வரத்தை
சித்தர் முன்பே
எழுதி வைத்தார்..
அறிவும்
ஆற்றலும்
கொண்டுனை
வதைத்து
விலக்கி
கொல்வோமே..
தனித்து
விலகி
தவமே
செய்த
மூத்ததெம்
தமிழ்க்குடியே..
தனித்திருத்தல்
புதிதல்ல
புதிருமல்ல
எம்மோர்க்கு
விரட்டியடிப்போம்..
விலகியே..
வீழவைப்போம்
உன்னையே..
தொட நினைக்காதே
எம் மண்ணையே..
கொன்றொழிப்போம்
உன்னையே..
-ஜானி சின்னப்பன்
உலகமே மிரண்டிடினும்
ReplyDeleteதேசமுழுதும் அலறினாலும்
சுத்தம் பழகிய கரங்களே..
அணுகாதும்மை
கொரோனாவின்
கொலைக்கரங்களே..
ஜானி
👌👌👌👌
Deleteநடுவர்களே லோட்மோர் ஆயிடுச்சி சீக்கிரமா வாங்க
ReplyDeleteஆண்டவா.. கொரோனாவை நான் பார்த்துக் கொள்கிறேன்.. கவிதைகளிடமிருந்து மட்டும் என்னை காப்பாற்று..
ReplyDelete