நண்பர்களே,
வணக்கம். மனைவாசம் இன்னமும் நீள்வது ஊர்ஜிதம் ஆயாச்சு ! நாள் என்ன ? கிழமை என்ன ? பொழுதென்ன ? என்ற கணக்கெல்லாம் மறந்தாச்சு ! பொழுது புலர்ந்து, பொழுது சாய்வதற்குள் ஓராயிரம் சிந்தனைகள் ; தடுமாற்றங்கள் ; குழப்பங்கள் என்று தலைமுடியில் மிச்சம் மீதியையும் பறிகொடுத்தாச்சு ! வாட்சப்பிலும், ட்விட்டரிலும், FB பக்கங்களிலும் அட்லாண்டா முதல் அமிஞ்சிக்கரை வரை லோகத்தின் அத்தனை மண்டலங்களின் சேதிகளையும் உள்வாங்குவதே அன்றாடம் என்று தலையெழுத்தாகிப் போச்சு ! ஆனால் நடப்பதெல்லாம் நம் நன்மைக்கே என்று அப்பட்டமாய்த் தெரிவதால், நாளைய இடுக்கண்களைத் தவிர்க்கும் பொருட்டு இன்றே சற்றே நகுகிக் கொள்வோமே ? கடந்த 3 வாரங்களாக இங்கே நாம் செய்து வருவது கூட அதையே தான் என்பதை இந்தத் தளத்தின் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன !! பகல் பொழுதில் நேற்றைக்கு "ரமணா" படம் பார்த்தவன் இதைக் கூடச் சொல்லாவிட்டால் கோலிவுட்டுக்கே இழுக்காகிடாதா ?
*பாரிசில் நான் ஒரு பிரவுன் பூதத்திடம் தப்பித்த கதையினைப் பதிவிட்ட தினத்தின் பார்வைகள் : 3190.
*கேப்ஷன் போட்டியும், தெற்கத்திய ஜட்ஜமார் அதற்கான தீர்ப்பையும் சொன்ன 2 பதிவுகள் வெளியான தினங்களின் பார்வைகள் தலா 2865 & 2754 !
*கவிதை இங்கு ஆறாய் ஓடிய பதிவும், ஸ்டீல் நம்மையெல்லாம் துவம்சம் செய்து கொண்டிருந்த வேளையினில் அசல்நாட்டு ஜட்ஜஐயாக்கள் குறுக்கே புகுந்து தீர்ப்புச் சொன்ன பதிவுகளும் வெளியான தினங்களின் பார்வைகள் again ஒரு high : 2843 & 2906 !
*போன வாரம் 'நான் சந்திக்கவிரும்பும் VIP " என்ற பதிவு வெளியாகிய தினம் ஈட்டியதும் ஒரு மெகா நம்பரிலான பார்வைகள் : 3219 !
*இரு தினங்களுக்கு முன்போ - "விடிய விடிய பேசிட விரும்பும் நபர்" என எனது தாத்தா பற்றிய பதிவின் ஞாயிறிலோ ஒரு peak : 3467 !!
Of course , இந்தப் பதிவு நம்பர்களின் ஒரு பாதிக்கு கவிஞர் பாணபத்திரரும், சேலத்து குமாரரும் பொறுப்பேற்பர் என்பது புரிகிறது ! ஆனால் அந்த எண்ணிக்கையை நீக்கிப் பார்த்தாலுமே, இந்த லாக்டௌன் தினங்களின் இறுக்கமான பொழுதுகளை சற்றே இலகுவாக்கிக் கொள்ள இங்கு நீங்கள் தலைகாட்டும் தருணங்கள் உதவிடுவது புரிகிறது ! So எப்போதையும் விட இப்போது நட்புக்களின் அண்மை ; மனதை இலகுவாக்கிடும் அரட்டைகள் ; ஒரு பாசிட்டிவ் சூழலின் ஆதர்ஷம், இத்யாதிகள், நமக்கெல்லாம் எத்தனை அவசியம் என்பது புரிகிறது ! எட்டரை ஆண்டுகளுக்கு முன்னே "blogging" என்ற விஷயத்தைக் கையில் எடுத்த போது - புத்தாண்டு வைராக்கியங்கள் போலவே இதன் ஆயுளும் மிஞ்சிப் போனால் சில வாரங்களுக்கோ / மாதங்களுக்கோ தானிருக்கும் என்றே நினைத்திருந்தேன் ! ஆனால் உங்கள் உற்சாகம் எனும் நீரோட்டம் எனது சோம்பல்களைக் கரைத்து, இந்தப் பதிவையும் சரி, அதன் பலனாய் நமது இதழ்களையும் சரி,இத்தனை நேர்த்தியாய் முன்னெடுத்துச் செல்லுமென்பது சத்தியமாய் நான் எதிர்பார்த்திரா ஒன்று ! Moreso today - காமிக்ஸ் பற்றிப் பெரிதாய் எதையும் எழுதாமலுமே, கடந்த மூன்று வாரங்களாய் இங்கே வண்டி ஓடுகிறதைப் பார்க்கும் போது, இங்கு துளிர்க்கும் நட்புக்களின் வலிமையை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை ! Take a bow all !
ரைட்டு...! காமிக்ஸ் பற்றிய previews தந்திட, அட்டைப்படங்களோ, உட்பக்கங்களோ கைவசமில்லை என்பதால், சமீப வழக்கத்தைத் தொடர்வதே வழி என்றாகிறது ! உலகைப் புரட்டிப் போடும் முக்கியத்துவம் வாய்ந்த சிலபல கேள்விகளை ஒரேயொரு குருக்களின், ஒரேயொரு உள்ளூர் சிஷ்யர் கேட்டிருந்தது ஐ.நா.சபை வரைக்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது நினைவிருக்கலாம் ! சபையினர் இப்போதைக்கு சித்தே பிசி என்பதால் அந்த மஹாப் பொறுப்பை நான் கையில் எடுத்துக் கொள்கிறேன் ! இதோ - காத்திருக்கும் கணைகள் :
* இன்னும் 24 மணிநேரத்தில் உலகம் அழிந்துவிடும் என்ற நிலையில் உங்களுக்கு ஒரே ஒரு புத்தகம் மட்டும் மறுவாசிப்புக்கு அனுமதிக்கப்பட்டால் உங்கள் தேர்வு எதுவாக இருந்திடும் ?
ஈரைப் பேனாக்கி ; பேனைப் பெருமாள் ஆக்குவதில் நம்ம கீர்த்தி எட்டுத் திக்கும் பிரசித்தம் என்பதால், மேற்படித் தம்மாத்துண்டுக் கேள்விக்கு, வணிகவியல் பரீட்சைக்கான answer sheets போல வண்டி நீளத்துக்கொரு பதில் கிட்டினால் என்னைத் திட்டாதீர்கள் - நம்ம டிசைனே அப்படியென்று வைத்துக் கொள்ளுங்களேன் !
கேள்வியிலேயே "மறுவாசிப்புக்கு" என்றிருப்பதால், அது ஏற்கனவே படித்ததொரு புக்காய் மட்டுமே இருக்க முடியும் என்றாகிறதல்லவா ? So யோசிக்கிறேன் ...இதுவரைக்கும் படித்ததில் செம ஸ்பெஷல் எதுவாக இருக்கக் கூடுமென்று ! நினைவு தெரிந்த நாள் முதலாய், எனது புத்தகத் துணைகளென்று பார்த்தால் - அவை வண்டி வண்டியாய் காமிக்ஸ் இதழ்களாகவே இருந்துள்ளன ! அமெரிக்காவில் அப்போது வெளியான Gold Key Comics எனும் அட்டகாச கார்ட்டூன் இதழ்கள் இறக்குமதி செய்யப்பட்டு, ஒற்றை ரூபாய்க்கோ ; இரண்டு ரூபாய்களுக்கோ (!!!) விற்பனையாகிடும் ! சென்னை ; மும்பை ; டில்லி ; கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் மட்டுமே இவை கிடைக்கும் என்பதால், தனது உள்நாட்டு ரவுண்டுகளின் போது, என் தந்தை மறக்காமல் கத்தை கத்தையாக வாங்கி வருவார் ! அவற்றினில் வெளியான கதைகள் / கார்ட்டூன் நாயகர்கள் / நாலுகாலர்கள் எல்லோருமே அந்நாட்களில் அமெரிக்க டி-வி.ஷோக்களின் ஹிட்ஸ் என்பது எனக்கு ரொம்பவே பின்னாட்களில் தான் தெரியும் ! Baby Snoots என்றொரு ப்ளூ கலர் யானை ; Chip & Dale எனும் 2 குட்டி அணில்கள் (chipmunks ) ; Beep Beep The Road Runner எனும் தீக்கோழி மாதிரியான 4 பறவைகள் ; Super Goof எனும் ஒரு மங்குனி சூப்பர் மேன் ; வால்ட் டிஸ்னியின் டொனால்டு டக் ; அங்கிள் ஸ்க்ரூஜ் ; அப்புறம் Beagle Boys எனும் 3 ஜெயில் பறவைகள் ; Porky Pig எனும் மொழுக் மொழுக் பன்றி ; Daffy Duck எனும் வாயாடி வாத்து ; Yosemite Sam எனும் ஆரஞ்சு தாடிக் கொள்ளைக்காரன் ; Tweety & Sylvester எனும் குருவி + பூனை ஜோடி ; Bugs Bunny எனும் சமர்த்து முசல் ; Gyro Gearloose எனும் லியனார்டோ மாதிரியான விஞ்ஞானிக் கொக்கு - என்று அதனில் அவர்கள் போட்டுத் தாக்கிய கதைவரிசைகளை இன்றைக்கு முழுவதும் சிலாகித்துக் கொண்டே போகலாம் ! இன்று நாம் பழகியுள்ள லக்கி லூக் பாணிகளோ ; smurfs பாணிகளோ இந்தக் கார்ட்டூன் தொடர்களில் கிடையாது ! ஆறோ / எட்டோ / பத்தோ பக்கங்கள் ஓடக்கூடிய செம ஜாலியான ; செம சிம்பிளான ; செம ரகளையான கதைகள் அவை ஒவ்வொன்றுமே ! காத்திருக்கும் நமது "வாண்டு ஸ்பெஷல்" இதழில் வெளியிட இவற்றுள் எந்தத் தொடருக்கு உரிமைகள் கிடைத்தாலுமே கும்பிடு போட்டு வாங்கிடுவேன் தான் ; ஆனால் இவை அனைத்துமே கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்பான சமாச்சாரங்கள் என்பதால் பெரும்பான்மைக்கு டிஜிட்டல் கோப்புகள் இல்லை ! எல்லாம் முறையாய் உள்ள வால்ட் டிஸ்னியின் உரிமைகளைப் பெற்றிடும் மார்க்கமோ நமக்கு சாத்தியமற்றது ! So எப்போதாவது அந்த இதழ்களை எண்ணி, கனவு கண்டு கொள்வதோடு சரி !
ரகளை செய்த எனது அந்நாட்களது காமிக்ஸ் சேகரிப்பினுள் இன்னொரு முக்கிய இடம் பிடித்திருந்தவை டெக்ஸ் வில்லரும் ; வேதாள மாயாத்மாவும் ; மாயாஜால மன்னன் மாண்டிரேக்கும் தான் ! டெக்சின் black & white சாகசங்கள் கொண்ட பத்தோ, பன்னிரண்டு இதழ்கள் ஒரு பக்கமும், வேதாளம் + மாண்டிரேக்கின் கலரிலான இந்திரஜால் காமிக்ஸ் இதழ்கள் இன்னொரு பக்கமும் குவிந்து கிடக்க நான் இங்கி-பிங்கி போட்டு எதை படிப்பதென்று தேர்வு செய்யாத குறை தான் ! அதிலும் டெக்சின் "டிராகன் நகரம்" ஆங்கில இதழை காது வழியே வெளியேறக்கூடிய அளவிற்கு இருநூறு முறையேனும் வாசித்திருப்பேன் ! அந்தக் கதை மட்டும் தான் என்றில்லை ; டெக்சின் திடரிலிருந்து முத்துக்களையாய்த் தேர்வு செய்து Topsellers எனும் பிரிட்டிஷ் பதிப்பகம் வெளியிட்டிருக்க, அவை சகலத்தையுமே மேயோ மேயென்று மேய்வது வாடிக்கை ! வேதாளனின் கதைகளோ இன்னொருபக்கம் எனக்குள்ளே 'பச்சக்' என ஒட்டியிருக்க, அவர் போட்டிருப்பது போலொரு தம்மாத்துண்டு ஜட்டியை மாட்டிக் கொண்டு, போகும் ஒவ்வொரு சித்திரைப் பொருட்காட்சிக் கடைகளிலும் அவர் வைத்திருப்பது போலான முத்திரை மோதிரம் கிடைக்குமாவென்று ஆவலாய்த் தேடியதும் அந்நாட்களது ஞாபகங்களுள் ஒன்று ! அந்நாட்களது இந்திரஜால் காமிக்ஸ் வாராவாரம் கலரில் பின்னியெடுப்பார்கள் எனும் போது வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் புஸ்தகக்கடையில் தவறாது அவற்றை வாங்கிடுவேன் ! ரிப் கிர்பி ; சார்லி போன்ற அமெரிக்க நாயகர்களோடு அறிமுகம் வளர்ந்தது அப்படித் தான் !
Growing up, காமிக்ஸ்களிலிருந்து துப்பறியும் சிறுவர் நாவல்கள் பக்கமாய் ஐந்தாப்போ என்னமோ படிக்கும் போது கவனங்கள் திரும்பியது - The Three Investigators எனும் 15 + கதைகள் கொண்ட தொடரின் உபயத்தில் ! மூன்று விடலைப் பசங்கள் ; அமெரிக்காவின் சான் டியேகோவில் (??) பள்ளிப்படிப்பின் மத்தியில் ரகளையான பல மர்மங்களை விடுவிப்பதே இந்தத் தொடர் ! ஒவ்வொன்றுமே அந்த வயதினரை கட்டுண்டு போகச் செய்யும் அதகளங்கள் !! அவற்றின் hardcover பதிப்புகள் அந்நாட்களது முத்து காமிக்ஸ் அலுவலகத்து மாடியின் லைப்ரரியில் கிடக்கும் ! ஒன்றுபாக்கியின்றி அத்தனையையும் வீட்டுக்கு லவட்டி வந்து வெறியோடு வாசிப்பேன் ! தொடர்ந்து The Hardy Boys எனும் 50 + கதைகள் கொண்ட கதை வரிசை என்னைப் பைத்தியமாக்கிய நாட்கள் !! ஒவ்வொரு வடஇந்திய டூருக்கு முன்னேயும் அந்தத் தொடரிலிருந்து எந்தெந்த புக்குகள் வேண்டமுமென்று ஒரு தாளில் நான் குறித்துக் கொடுத்தால், தவறாது அவற்றை வாங்கி வந்து விடுவார் தந்தை ! ரயிலிலிருந்து அவர் வீடு திரும்பும் போது கையிலிருக்கும் ரசகுல்லா டின்னையும், சூட்கேசில் மேல்வாக்கில் இருக்கும் Hardy Boys புக்குகளையும் எதிர்பார்த்தே முந்தைய ராத்திரியிலிருந்தே தூக்கம் பிடிக்காது பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கும் !! Enid Blyton எனும் பிரிட்டிஷ் பெண் எழுத்தாளரின் The Famous Five ; The Five Findouters போன்ற சிறார் நாவல்களும், அந்நாட்களில் பள்ளிக்கூட லைப்ரரியில் நிறைந்து கிடக்கும் ! அவற்றை எடுத்துக் போனால் ஒரே நாளில் வாசித்து விட்டு மறுநாள் அடுத்த புக்கைக் கோரி நின்றதுண்டு !
ஆனால் மறுக்கா காமிக்ஸ் பக்கம் உன்மத்தம் கொள்ளச் செய்தது எட்டாவது படிக்கும் சமயத்திலானதொரு பயணமே ! முழுப்பரீட்சை விடுமுறைகளின் போது, என் தந்தையின் டில்லி + மும்பை ட்ரிப்பில் என்னையும் அழைத்துப் போயிருந்தார் ! நாள் முழுக்க அவரது பணிகளைக் கவனிக்க இங்கும் அங்கும் ஓடும் போது என்னையும் உடன் அழைத்துப் போவார் ! "சீய்" என்றிருக்கும் - பழைய டில்லியின் சாந்தினி சவுக் சதுக்கத்தின் அழுக்குப் படிந்த சந்து பொந்துகளுக்குள் குந்திக் கிடக்கும் காலெண்டர் விற்பனையாளர்களை சந்திக்க விதியே என நானும் அப்பாவோடு போகும் போது ! இப்போது போல அன்றைக்கெல்லாம் ஒலாக்களும் லேது ; கொக்கோ கோலாக்களும் லேது என்பதால் லொட லொடக்கும் ஆட்டோக்களிலும், டாப் இல்லாத கைவண்டி ரிக் ஷாகளிலும் தான் பிளக்கும் அந்த மே மாதத்து வெயிலில் பவனி வந்தாக வேண்டும் ! நடுவாக்கில் எப்போதேனும் , ஏதேனும் புஸ்தகக் கடைக்கு கூட்டிப் போவார்கள் என்ற ஒற்றை கேரட் செழுமையாய் மூக்குக்கு முன்னே தொங்கிக்கொண்டிருக்க, நானும் கழுதையாய் ஓடிக் கொண்டிருப்பேன் ! ஒரு வழியாய் அந்தக் கேரட்டும் வாய்க்கு எட்டியது - Janpath பகுதியில் இருந்ததொரு செமையான புக் ஷாப்பில் ! அந்தக் கடை ஓனருக்கு என் தந்தை லேசாய்ப் பரிச்சயம் போல ; என்னை அங்கேயே கொஞ்ச நேரம் விட்டுச் செல்லலாமா ? என்று கேட்டதுக்கு ஓ.கே. சொன்னார் ! 'தோ..வந்துடறேன்..' .என்றபடிக்கு மாலை 4 மணிவாக்கில் கிளப்பியவர் திரும்ப வந்த போது மணி இரவு எட்டேமுக்கால் !! மூஞ்சி பெயர் தெரியாத புது ஊர் ; செல்போன் இல்லாத நாட்கள் ; தட்டுத் தடுமாறும் ஹிந்தி மட்டும் தெரிந்ததொரு பன்னிரெண்டோ / பதின்மூன்றோ வயதுப் பிள்ளையாண்டனை தகிரியமாய் ஏதோவொரு புக் ஷாப்பில் தனியாக விட்டுக் கிளம்பிட எப்படி முடிந்தது ? என்று இப்போது யோசித்துப் பார்க்கிறேன் நான் ! "சர்தான்...வீட்டில் தான் 5 உருப்படி உள்ளதுல ; ஒண்ணு குறைஞ்சாலும் 4 மிச்சமிருக்குமே !" என்ற தைரியமாகத் தானிருந்திருக்குமோ ? ஆனால் அந்த நாலரை மணி நேரத்திற்குள் கண்ணில்படும் காமிக்ஸையெல்லாம் தனியாய் அடுக்கி வைக்கத் துவங்கிய என்னைப் பார்த்து அந்த ஓனர் குஷியாகி விட்டாரோ, என்னவோ - "ஒரு mezzanine தளம் போலிருந்த மத்திமமான மாடியில் இன்னமும் நிறைய புக்ஸ் ஸ்டாக் உள்ளது ; போய்ப் பார்க்க இஷ்டமா ?" என்று கேட்டார் ! நம்ம 'ஆத்தா ஹை...ஜாத்தா ஹை' ஹிந்தி அங்கே கைகொடுக்க, ஒரு பணியாளோடு என்னை அந்தத் தளத்துக்கு ஏணியில் ஏற்றி அனுப்பி வைத்தார் ! உள்ளே நான் பார்த்ததொரு புத்தக சொர்க்கம் என்றே சொல்ல வேண்டும் ! விற்காது கிடந்த காமிக்ஸ் குவியலாய் ஒரு பக்கம் ; புதிதாய் வந்திருக்கும் காமிக்ஸ் இன்னமும் டப்பிகள் உடைக்காத நிலையில் இன்னொரு பக்கம் ; அட்டை கிழிந்து / முனைகள் கசங்கி - என்றிருந்த காமிக்ஸ் வேறொரு திக்கில் என்று இறைந்து கிடந்தன ! இன்னிக்குக் கிட்டங்கி குப்பை முழுசையும் இந்த முட்டைக்கண்ணனிடம் போணி பண்ணிடலாமென்று அந்த ஓனருக்குத் தோன்றியதோ, என்னவோ - ஐஸ் காபி ஒன்றை வரவழைத்துக் கொடுத்தார் ! அதைச் சப்பியபடியே நான் எடுத்து வைத்த புக்குகளின் எண்ணிக்கை அறுபதோ / எழுபதோ இருக்கும் !
Growing up, காமிக்ஸ்களிலிருந்து துப்பறியும் சிறுவர் நாவல்கள் பக்கமாய் ஐந்தாப்போ என்னமோ படிக்கும் போது கவனங்கள் திரும்பியது - The Three Investigators எனும் 15 + கதைகள் கொண்ட தொடரின் உபயத்தில் ! மூன்று விடலைப் பசங்கள் ; அமெரிக்காவின் சான் டியேகோவில் (??) பள்ளிப்படிப்பின் மத்தியில் ரகளையான பல மர்மங்களை விடுவிப்பதே இந்தத் தொடர் ! ஒவ்வொன்றுமே அந்த வயதினரை கட்டுண்டு போகச் செய்யும் அதகளங்கள் !! அவற்றின் hardcover பதிப்புகள் அந்நாட்களது முத்து காமிக்ஸ் அலுவலகத்து மாடியின் லைப்ரரியில் கிடக்கும் ! ஒன்றுபாக்கியின்றி அத்தனையையும் வீட்டுக்கு லவட்டி வந்து வெறியோடு வாசிப்பேன் ! தொடர்ந்து The Hardy Boys எனும் 50 + கதைகள் கொண்ட கதை வரிசை என்னைப் பைத்தியமாக்கிய நாட்கள் !! ஒவ்வொரு வடஇந்திய டூருக்கு முன்னேயும் அந்தத் தொடரிலிருந்து எந்தெந்த புக்குகள் வேண்டமுமென்று ஒரு தாளில் நான் குறித்துக் கொடுத்தால், தவறாது அவற்றை வாங்கி வந்து விடுவார் தந்தை ! ரயிலிலிருந்து அவர் வீடு திரும்பும் போது கையிலிருக்கும் ரசகுல்லா டின்னையும், சூட்கேசில் மேல்வாக்கில் இருக்கும் Hardy Boys புக்குகளையும் எதிர்பார்த்தே முந்தைய ராத்திரியிலிருந்தே தூக்கம் பிடிக்காது பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கும் !! Enid Blyton எனும் பிரிட்டிஷ் பெண் எழுத்தாளரின் The Famous Five ; The Five Findouters போன்ற சிறார் நாவல்களும், அந்நாட்களில் பள்ளிக்கூட லைப்ரரியில் நிறைந்து கிடக்கும் ! அவற்றை எடுத்துக் போனால் ஒரே நாளில் வாசித்து விட்டு மறுநாள் அடுத்த புக்கைக் கோரி நின்றதுண்டு !
ஆனால் மறுக்கா காமிக்ஸ் பக்கம் உன்மத்தம் கொள்ளச் செய்தது எட்டாவது படிக்கும் சமயத்திலானதொரு பயணமே ! முழுப்பரீட்சை விடுமுறைகளின் போது, என் தந்தையின் டில்லி + மும்பை ட்ரிப்பில் என்னையும் அழைத்துப் போயிருந்தார் ! நாள் முழுக்க அவரது பணிகளைக் கவனிக்க இங்கும் அங்கும் ஓடும் போது என்னையும் உடன் அழைத்துப் போவார் ! "சீய்" என்றிருக்கும் - பழைய டில்லியின் சாந்தினி சவுக் சதுக்கத்தின் அழுக்குப் படிந்த சந்து பொந்துகளுக்குள் குந்திக் கிடக்கும் காலெண்டர் விற்பனையாளர்களை சந்திக்க விதியே என நானும் அப்பாவோடு போகும் போது ! இப்போது போல அன்றைக்கெல்லாம் ஒலாக்களும் லேது ; கொக்கோ கோலாக்களும் லேது என்பதால் லொட லொடக்கும் ஆட்டோக்களிலும், டாப் இல்லாத கைவண்டி ரிக் ஷாகளிலும் தான் பிளக்கும் அந்த மே மாதத்து வெயிலில் பவனி வந்தாக வேண்டும் ! நடுவாக்கில் எப்போதேனும் , ஏதேனும் புஸ்தகக் கடைக்கு கூட்டிப் போவார்கள் என்ற ஒற்றை கேரட் செழுமையாய் மூக்குக்கு முன்னே தொங்கிக்கொண்டிருக்க, நானும் கழுதையாய் ஓடிக் கொண்டிருப்பேன் ! ஒரு வழியாய் அந்தக் கேரட்டும் வாய்க்கு எட்டியது - Janpath பகுதியில் இருந்ததொரு செமையான புக் ஷாப்பில் ! அந்தக் கடை ஓனருக்கு என் தந்தை லேசாய்ப் பரிச்சயம் போல ; என்னை அங்கேயே கொஞ்ச நேரம் விட்டுச் செல்லலாமா ? என்று கேட்டதுக்கு ஓ.கே. சொன்னார் ! 'தோ..வந்துடறேன்..' .என்றபடிக்கு மாலை 4 மணிவாக்கில் கிளப்பியவர் திரும்ப வந்த போது மணி இரவு எட்டேமுக்கால் !! மூஞ்சி பெயர் தெரியாத புது ஊர் ; செல்போன் இல்லாத நாட்கள் ; தட்டுத் தடுமாறும் ஹிந்தி மட்டும் தெரிந்ததொரு பன்னிரெண்டோ / பதின்மூன்றோ வயதுப் பிள்ளையாண்டனை தகிரியமாய் ஏதோவொரு புக் ஷாப்பில் தனியாக விட்டுக் கிளம்பிட எப்படி முடிந்தது ? என்று இப்போது யோசித்துப் பார்க்கிறேன் நான் ! "சர்தான்...வீட்டில் தான் 5 உருப்படி உள்ளதுல ; ஒண்ணு குறைஞ்சாலும் 4 மிச்சமிருக்குமே !" என்ற தைரியமாகத் தானிருந்திருக்குமோ ? ஆனால் அந்த நாலரை மணி நேரத்திற்குள் கண்ணில்படும் காமிக்ஸையெல்லாம் தனியாய் அடுக்கி வைக்கத் துவங்கிய என்னைப் பார்த்து அந்த ஓனர் குஷியாகி விட்டாரோ, என்னவோ - "ஒரு mezzanine தளம் போலிருந்த மத்திமமான மாடியில் இன்னமும் நிறைய புக்ஸ் ஸ்டாக் உள்ளது ; போய்ப் பார்க்க இஷ்டமா ?" என்று கேட்டார் ! நம்ம 'ஆத்தா ஹை...ஜாத்தா ஹை' ஹிந்தி அங்கே கைகொடுக்க, ஒரு பணியாளோடு என்னை அந்தத் தளத்துக்கு ஏணியில் ஏற்றி அனுப்பி வைத்தார் ! உள்ளே நான் பார்த்ததொரு புத்தக சொர்க்கம் என்றே சொல்ல வேண்டும் ! விற்காது கிடந்த காமிக்ஸ் குவியலாய் ஒரு பக்கம் ; புதிதாய் வந்திருக்கும் காமிக்ஸ் இன்னமும் டப்பிகள் உடைக்காத நிலையில் இன்னொரு பக்கம் ; அட்டை கிழிந்து / முனைகள் கசங்கி - என்றிருந்த காமிக்ஸ் வேறொரு திக்கில் என்று இறைந்து கிடந்தன ! இன்னிக்குக் கிட்டங்கி குப்பை முழுசையும் இந்த முட்டைக்கண்ணனிடம் போணி பண்ணிடலாமென்று அந்த ஓனருக்குத் தோன்றியதோ, என்னவோ - ஐஸ் காபி ஒன்றை வரவழைத்துக் கொடுத்தார் ! அதைச் சப்பியபடியே நான் எடுத்து வைத்த புக்குகளின் எண்ணிக்கை அறுபதோ / எழுபதோ இருக்கும் !
எட்டேமுக்காலுக்குத் திரும்பிய தந்தை எதுவுமே சொல்லாது, அத்தனைக்கும் பணம் கொடுக்க, மொத்தத்தையும் அள்ளிக் கொண்டு ரூமுக்குத் திரும்பிய போது அந்த சாந்தினி சவுக் அப்படியொன்றும் கலீஜாய்த் தெரியக் காணோம் எனக்கு ! அன்றைக்கும் சரி, பின்னாட்களில் தொழில் தள்ளாட்டம் கண்டு கிடந்த போதிலுமே சரி, புத்தகக் கொள்முதல்களில் ஒரு நாளும் தந்தை குறை வைத்ததே இல்லை ! எங்கு பயணம் போனாலுமே வீடு திரும்பும் போது ஒரு வண்டி புக்ஸ் சர்வ நிச்சயமாய் இருந்திடும் அவரது சூட்கேஸினுள் ! அன்றைக்கு நான் டில்லியில் அள்ளிப்போட்டிருந்த அந்தக் கத்தையில் இருந்த புக்குகளுள் TINTIN in TIBET - பிரான்க்கோ-பெல்ஜிய ஆல்பத்தின் ஆங்கிலப் பதிப்பும் இருந்தது ! அதற்கு முன்பாய் ஒரேயொரு TINTIN இதழை கண்ணில் பார்த்திருந்தேன் - மதுரையின் அந்நாட்களது திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டில் இருந்த புக் ஷாப்பில் ! Flight 731 என்ற அந்த ஆல்பத்தின் விலை அப்போதே எண்பது ரூபாய் ! அந்நாட்களில் அதெல்லாம் செம பெரிய தொகை என்பதால் மூன்று நாட்களாய் பேச்சுவார்த்தை நடத்தி, அம்மாவிடம் காசு வாங்கிப் போய் அதனை வாங்கியிருந்தேன் ! (அப்பா மதுரைக்கு வந்திருக்கவில்லை அப்போது) அந்த புக்கை ஐம்பது முறையேனும் வாசித்திருப்பேன் என்பதால் TINTIN மீது செம பைத்தியம் ! அதற்குப் பின்பாய் TINTIN கண்ணில்பட்டது அங்கே டில்லியில் தான் என்பதால் செம ஆசையாய் அந்த ஆல்பத்தை வாங்கியிருந்தேன் !
ரூமுக்குத் திரும்பிய பிற்பாடு, அவசரம் அவசரமாய் கட்டிலில் மொத்த புக்குகளையும் அடுக்கிய கையோடு அந்த டின்டின் சாகசத்தை வாசிக்க ஆரம்பித்தவன் மெய் மறந்து போனேன் ! ஹிமாலய சிகரங்களில் விபத்திற்கு உள்ளாகிடும் விமானத்தினில் தங்களுக்கு ரொம்பவே வேண்டப்பட்ட சாங் எனும் சீனப் பையன் உயிர் தப்பியிருப்பதாகவும், தன்னைக் காப்பாற்றும்படி மன்றாடுவதாகவும் டின்டின்னுக்கு திடீரென கனவில் தோன்றிட, கேரட் மண்டைக்கார ரிப்போர்ட்டர் டின்டின் திபெத்துக்குப் பயணமாகி, கேப்டன் ஹெடாக்கின் துணையோடு பனியில் தேடலைத் துவக்குவதே கதை !! இந்திய விஜயம் ; இமாலய சிகரங்களோடு அறிமுகம் ; நெடிதுயர்ந்த பனிமலைகளில் Yeti எனப்படும் ராட்சஸப் பனிமனிதனைப் பின்தொடர்தல் என்று இந்த 54 பக்க ஆல்பம் செய்த ஜாலங்கள் என்னை கட்டிப்போட்டது ! இறுதியில் சாங்கை அந்தப் பனிமனிதனிடமிருந்து மீட்டு அழைத்துப் போக, அது சோகத்தில் ஓலமிடுவது போல் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பார் கதாசிரியர் ஹெர்ஜ் ! ஒரு அற்புதமான ஆக்ஷன் த்ரில்லரை இத்தனை அழகாய் ; காமெடி கலந்து, மனதை உருக்கும் செண்டிமெண்ட் கொண்டு சொல்ல முடியும் என்பதை நான் உணர்ந்த முதல் தருணம் அதுவே ! அன்று இரவே அந்த புக்கை 2 வாட்டி படித்தும் எனக்குப் போதவில்லை ! டில்லியிலிருந்து மும்பை செல்லும் ரயிலில் மட்டுமே அரை டஜன்வாட்டியாவது படித்திருப்பேன் !
மின்சார ரயிலின் பிழிந்தெடுக்கும் கூட்டங்களைக் கண்டு மிரண்டபடிக்கே மும்பையிலும் அப்பாவோடு ஓட்டம் ; மாதுங்கா ; மாஹிம் ; தாதர் ; போர்ட் பகுதிகளில் இருந்த எண்ணற்ற பழைய புத்தகக் கடைகளில் வேட்டை என்று நாட்கள் ஓடினாலும், எக்கச்சக்க Gold Key Comics கிடைத்திருந்தாலும், எனக்குள்ளே ஜெகஜோதியாய் நிறைந்து நின்றது டின்டின்னின் அந்த சாகசமே ! மும்பையில் மேற்கொண்டு சில secondhand டின்டின் புக்குகளும் கிடைத்திட, அத்தனையையும் பொக்கிஷங்களாக்கி ஊர்திரும்பிய பின்னேயும் தினமும் பாராயணம் செய்யாத குறை தான் ! ஸ்கூல் லைப்ரரியில் ஆஸ்டெரிக்ஸ் கதைகளை வாய் பிளந்து வாசித்த நாட்கள் ; ஷெர்லாக் ஹோம்ஸ் நாவல்கள் ; பெரி மேசன் நாவல்கள் ; அப்புறமாய் அலிஸ்டர் மக்ளீன் த்ரில்லர்கள் ; ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள் ; தமிழில் துப்பறியும் சாம்பு ; சுஜாதாவின் அசாத்தியங்கள் என்று ஏதேதோ வாசிக்கும் பழக்கம் தொடர்ந்த போதிலும், டின்டின் என் நெஞ்சுக்கும், என் தலைமாட்டிற்கும் அருகிலேயே தான் தொடர்ந்தார் ! 1984 -ல் எடிட்டர் குல்லாவை மாட்டிய நாள் முதலாய் காமிக்ஸ் தவிர்த்து வேறெதுவும் பெருசாய் வாசிக்கும் நேரங்களும் கிட்டவில்லை ; அது சார்ந்த முனைப்பும் தோன்றிடவில்லை என்பது தான் நிஜமே ! கிடைக்கும் முதல் ஓய்வான தருணத்தில், புதுசாய் எந்த காமிக்சைப் போட்டுத் தாக்கி உங்களை மிரட்டலாம் ? என்ற எண்ணமே ஊற்றடிக்கும் ! So இலக்கியங்கள் ; இதிகாசங்கள் என்றெல்லாம் நம் நண்பர்களில் பலரைப் போல் கரைத்துக் குடிக்கும் ஆர்வம் எனக்குத் தோன்றியதே கிடையாது ! Maybe எவ்வித இலக்கிய பரிச்சயங்களும் கிடையாதென்பதாலோ, என்னவோ, இன்றைக்கும் எனது எழுத்து நடையில் குறிப்பிட்ட அந்த set of words நீங்கலாய்ப் புதுமைகள் எட்டிப் பார்ப்பதில்லை ! இன்றைய நாட்களிலோ கண்ணாடியை மாட்டிக் கொண்டு, குண்டாய் ஏதேனும் புக்கைக் கையில் தூக்க முனையும் பத்தாவது நிமிஷத்திலேயே எத்தனை தொலைவிலிருந்தாலும் செல்வி நித்திரா தேவி ஷேர் ஆட்டோவாச்சும் பிடித்து, திடு திடுவென ஓடியாந்து "வந்துட்டேன் மாமா !!" என்று அரவணைத்துக் கொள்கிறார் ! So இனி கொட்டப் போகும் குப்பையினுள், காமிக்ஸ் தவிர்த்து வேறேதேனும் இடம்பிடிப்பதாக இருப்பின், அது VRS க்குப் பின்னான நாட்களில் நடந்தால் தான் ஆயிற்று ! So ஒற்றை நாளில் லோகம் அழியப் போவது உறுதி என்றாகிப் போயிடும் பட்சத்தில், Tintin in Tibet இதழைத் தான் கையில் தூக்கிக் கிளம்புவேன் ; வெறித்தனமாய் வாசிப்பதோடு மட்டுமல்லாது - maybe அதனில் லயித்து காலனும் நம்மை ரட்சித்து விடுவாரென்ற நம்பிக்கையிலும் ! Without a doubt my all-time ; all-weather favorite !!
இந்தத் தருணத்தில் நீங்கள் ஒவ்வொருவருமே உங்களின் all time best புக் பற்றிப் பேசிடலாமே guys - சின்னதொரு மாற்றத்துடன் ? "ஒரேயொரு காமிக்ஸ் எடுத்துக்கலாம் ; அது போக வேறேதேனும் புக் ஒன்றையும் எடுத்துக்கலாம் !" என்ற நிலையில் உங்கள் தேர்வுகள் எவையாக இருக்குமோ ? எழுதுங்களேன் ப்ளீஸ் ?
அப்புறம் ஒரேயொரு குருக்களின் ஒரேயொரு சிஷ்யரின் இன்னொரு கேள்விக்குமே பதில் சொல்லிடலாமென்று நினைக்கிறேன் :
மின்சார ரயிலின் பிழிந்தெடுக்கும் கூட்டங்களைக் கண்டு மிரண்டபடிக்கே மும்பையிலும் அப்பாவோடு ஓட்டம் ; மாதுங்கா ; மாஹிம் ; தாதர் ; போர்ட் பகுதிகளில் இருந்த எண்ணற்ற பழைய புத்தகக் கடைகளில் வேட்டை என்று நாட்கள் ஓடினாலும், எக்கச்சக்க Gold Key Comics கிடைத்திருந்தாலும், எனக்குள்ளே ஜெகஜோதியாய் நிறைந்து நின்றது டின்டின்னின் அந்த சாகசமே ! மும்பையில் மேற்கொண்டு சில secondhand டின்டின் புக்குகளும் கிடைத்திட, அத்தனையையும் பொக்கிஷங்களாக்கி ஊர்திரும்பிய பின்னேயும் தினமும் பாராயணம் செய்யாத குறை தான் ! ஸ்கூல் லைப்ரரியில் ஆஸ்டெரிக்ஸ் கதைகளை வாய் பிளந்து வாசித்த நாட்கள் ; ஷெர்லாக் ஹோம்ஸ் நாவல்கள் ; பெரி மேசன் நாவல்கள் ; அப்புறமாய் அலிஸ்டர் மக்ளீன் த்ரில்லர்கள் ; ஜேம்ஸ் பாண்ட் நாவல்கள் ; தமிழில் துப்பறியும் சாம்பு ; சுஜாதாவின் அசாத்தியங்கள் என்று ஏதேதோ வாசிக்கும் பழக்கம் தொடர்ந்த போதிலும், டின்டின் என் நெஞ்சுக்கும், என் தலைமாட்டிற்கும் அருகிலேயே தான் தொடர்ந்தார் ! 1984 -ல் எடிட்டர் குல்லாவை மாட்டிய நாள் முதலாய் காமிக்ஸ் தவிர்த்து வேறெதுவும் பெருசாய் வாசிக்கும் நேரங்களும் கிட்டவில்லை ; அது சார்ந்த முனைப்பும் தோன்றிடவில்லை என்பது தான் நிஜமே ! கிடைக்கும் முதல் ஓய்வான தருணத்தில், புதுசாய் எந்த காமிக்சைப் போட்டுத் தாக்கி உங்களை மிரட்டலாம் ? என்ற எண்ணமே ஊற்றடிக்கும் ! So இலக்கியங்கள் ; இதிகாசங்கள் என்றெல்லாம் நம் நண்பர்களில் பலரைப் போல் கரைத்துக் குடிக்கும் ஆர்வம் எனக்குத் தோன்றியதே கிடையாது ! Maybe எவ்வித இலக்கிய பரிச்சயங்களும் கிடையாதென்பதாலோ, என்னவோ, இன்றைக்கும் எனது எழுத்து நடையில் குறிப்பிட்ட அந்த set of words நீங்கலாய்ப் புதுமைகள் எட்டிப் பார்ப்பதில்லை ! இன்றைய நாட்களிலோ கண்ணாடியை மாட்டிக் கொண்டு, குண்டாய் ஏதேனும் புக்கைக் கையில் தூக்க முனையும் பத்தாவது நிமிஷத்திலேயே எத்தனை தொலைவிலிருந்தாலும் செல்வி நித்திரா தேவி ஷேர் ஆட்டோவாச்சும் பிடித்து, திடு திடுவென ஓடியாந்து "வந்துட்டேன் மாமா !!" என்று அரவணைத்துக் கொள்கிறார் ! So இனி கொட்டப் போகும் குப்பையினுள், காமிக்ஸ் தவிர்த்து வேறேதேனும் இடம்பிடிப்பதாக இருப்பின், அது VRS க்குப் பின்னான நாட்களில் நடந்தால் தான் ஆயிற்று ! So ஒற்றை நாளில் லோகம் அழியப் போவது உறுதி என்றாகிப் போயிடும் பட்சத்தில், Tintin in Tibet இதழைத் தான் கையில் தூக்கிக் கிளம்புவேன் ; வெறித்தனமாய் வாசிப்பதோடு மட்டுமல்லாது - maybe அதனில் லயித்து காலனும் நம்மை ரட்சித்து விடுவாரென்ற நம்பிக்கையிலும் ! Without a doubt my all-time ; all-weather favorite !!
இந்தத் தருணத்தில் நீங்கள் ஒவ்வொருவருமே உங்களின் all time best புக் பற்றிப் பேசிடலாமே guys - சின்னதொரு மாற்றத்துடன் ? "ஒரேயொரு காமிக்ஸ் எடுத்துக்கலாம் ; அது போக வேறேதேனும் புக் ஒன்றையும் எடுத்துக்கலாம் !" என்ற நிலையில் உங்கள் தேர்வுகள் எவையாக இருக்குமோ ? எழுதுங்களேன் ப்ளீஸ் ?
அப்புறம் ஒரேயொரு குருக்களின் ஒரேயொரு சிஷ்யரின் இன்னொரு கேள்விக்குமே பதில் சொல்லிடலாமென்று நினைக்கிறேன் :
* இதுவரை நிறைவேறாத உங்கள் லட்சியம் ?
டின்டின்னை இதுவரையிலும் தமிழுக்கு கொணர முடிந்திடாது இருப்பதே "நிறைவேறா லட்சிய லிஸ்டின்" உச்சியினில் இருந்திடும் சமாச்சாரம் ! நிறையவே முயற்சித்திருக்கிறேன் ; முயற்சித்துக் கொண்டுமிருக்கிறேன் ! ஆனால் பெல்ஜியத்தின் அடையாளச் சின்னங்களுள் ஒன்றாய்க் கருதும் அளவுக்கு டின்டின் அங்கே வாழ்க்கையின் ஒரு அங்கம் எனும் போது - அவரைத் தாரை வார்த்துத் தர ரொம்பவே தயங்குகிறார்கள் ! வேதாளம் & விக்கிரமாதித்தன் கதையாய் தொடர்ந்து முயற்சிக்கணும் !! ஹ்ம்ம்ம்...!!
சிஷ்யகோடியின் இன்னும் சிலபல கேள்விகள் எஞ்சியிருப்பினும், அவற்றை டைப்படித்தே நாக்குத் தொங்கியிரா இன்னொரு வேளைக்கென ஒத்திப் போடுகிறேன் ! இப்போதைக்கு நடையைக் கட்டும் முன்பாய், புலர்ந்துள்ள இந்தத் தமிழ்ப் புத்தாண்டை இரு கரம் கூப்பி வரவேற்ற கையோடு - நம் மத்தியில் நடமாடும் எக்கச்சக்கக் கலைஞர்களிடம் ஊற்றெடுக்கும் லோடு லோடான திறமைகளை இறக்கி வைக்க ஒரு வழி தேடுவோமே என்றுபடுகிறது ! கொலைவெறி கொண்டதொரு அரசவைப் புலவரை அடையாளம் கண்டாயிற்று என்றான பின்னே - பாடல்களை பாடிட ஒரு கானக்குரலைத் தேடுவதன்றோ அடுத்த வேலை ? So 60 நொடிகளுக்கு மிகாதவாறு, உங்களுக்குப் பிடித்தமான பாடல் எதையேனும் பாடி ஒரு வீடியோ க்ளிப்பை அனுப்பினால், அவற்றை நமது YouTube சேனலில் upload செய்து கொரோனாவையே மிரட்டிடலாம் என்றுள்ளேன் ! ஹைட்ரொக்ளோரோக்வின் மருந்தெல்லாம் வேலை பார்க்குதோ இல்லியோ - ஸ்டீல் எழுதிய (!!!) பாட்டு ரேஞ்சுக்கு உங்களின் தொண்டைகளில் உதயமாகும் கானங்களும் இருப்பின், செத்தாண்டா கொரோனா சேகரு !!
அப்புறம் request # 3 : லாக் டவுன் நீடித்திருக்கும் இந்நிலையில் வீட்டில் கடமைகளை மிக சிறப்பாய்ச் செய்து வரும் நண்பர்கள் ஒரு selfie எடுத்து அனுப்பினால், அதனை இங்கே சரமாரியாக post செய்திடுவேன் ! அது சர்.ஜடேஜா வாளைக் கையாளும் லாவகத்தோடு நீங்கள் துடைப்பத்தைக் கையாளும் அழகாய் இருந்தாலும் சரி ; 'புசு புசு'வென உப்பும் பூரி போட்டுத் தரும் பொன்னான காட்சியாக இருந்தாலும் சரி ; 'உன்னைச் சொல்லிக் குற்றமில்லை !!" என்ற பாடலோடு பாத்திரம் துலக்கும் பண்பான படப்பிடிப்பாய் இருந்தாலும் சரி - you can send them all !! போட்டோக்கோசரம், வேலை செய்வது போல் பிம்பிலிக்கா பிலாக்கி காட்டும் போங்கு வேலைகள் இல்லாது - மெய்யாலுமே பணி செய்தால் மட்டுமே கம்பெனி விதிமுறைகளுக்கு உட்பட்டதாகிடும் ! lioncomics@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு "லாக் டௌன் நாட்கள்" என்ற header தந்து போட்டோக்களை அனுப்பிடலாம் ! கானக்குரலோன்களின் கச்சேரி கிளிப்களையுமே !!
அரசவைப் பாடகர் யாரென்பதை தேர்வு செய்திட 2 ஜட்ஜ்கள் as usual நியமனம் செய்யப்படுவர் ! ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு ஸ்டீல் பாடக்கூடிய பாடலுக்கு செவிகொடுக்கும் அந்த அனுபவத்தை சித்தே யோசித்துப் பாருங்களேன் - அடடடடாடா !!! யாருக்கு அந்தப் புளகாங்கிதங்களெல்லாம் காத்துள்ளனவோ - தெய்வமே !!
அனைவருக்கும் நமது தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் !! இன்னல்களுக்கு மொத்தமாய் விடைதந்து அனுப்பி வைக்கவொரு அருமருந்தாய் இந்த சார்வரி நமக்கெல்லாம் அமையட்டும் ! Bye all ! See you around !! Have an awesome day & a lovely year ahead !
சிஷ்யகோடியின் இன்னும் சிலபல கேள்விகள் எஞ்சியிருப்பினும், அவற்றை டைப்படித்தே நாக்குத் தொங்கியிரா இன்னொரு வேளைக்கென ஒத்திப் போடுகிறேன் ! இப்போதைக்கு நடையைக் கட்டும் முன்பாய், புலர்ந்துள்ள இந்தத் தமிழ்ப் புத்தாண்டை இரு கரம் கூப்பி வரவேற்ற கையோடு - நம் மத்தியில் நடமாடும் எக்கச்சக்கக் கலைஞர்களிடம் ஊற்றெடுக்கும் லோடு லோடான திறமைகளை இறக்கி வைக்க ஒரு வழி தேடுவோமே என்றுபடுகிறது ! கொலைவெறி கொண்டதொரு அரசவைப் புலவரை அடையாளம் கண்டாயிற்று என்றான பின்னே - பாடல்களை பாடிட ஒரு கானக்குரலைத் தேடுவதன்றோ அடுத்த வேலை ? So 60 நொடிகளுக்கு மிகாதவாறு, உங்களுக்குப் பிடித்தமான பாடல் எதையேனும் பாடி ஒரு வீடியோ க்ளிப்பை அனுப்பினால், அவற்றை நமது YouTube சேனலில் upload செய்து கொரோனாவையே மிரட்டிடலாம் என்றுள்ளேன் ! ஹைட்ரொக்ளோரோக்வின் மருந்தெல்லாம் வேலை பார்க்குதோ இல்லியோ - ஸ்டீல் எழுதிய (!!!) பாட்டு ரேஞ்சுக்கு உங்களின் தொண்டைகளில் உதயமாகும் கானங்களும் இருப்பின், செத்தாண்டா கொரோனா சேகரு !!
அப்புறம் request # 3 : லாக் டவுன் நீடித்திருக்கும் இந்நிலையில் வீட்டில் கடமைகளை மிக சிறப்பாய்ச் செய்து வரும் நண்பர்கள் ஒரு selfie எடுத்து அனுப்பினால், அதனை இங்கே சரமாரியாக post செய்திடுவேன் ! அது சர்.ஜடேஜா வாளைக் கையாளும் லாவகத்தோடு நீங்கள் துடைப்பத்தைக் கையாளும் அழகாய் இருந்தாலும் சரி ; 'புசு புசு'வென உப்பும் பூரி போட்டுத் தரும் பொன்னான காட்சியாக இருந்தாலும் சரி ; 'உன்னைச் சொல்லிக் குற்றமில்லை !!" என்ற பாடலோடு பாத்திரம் துலக்கும் பண்பான படப்பிடிப்பாய் இருந்தாலும் சரி - you can send them all !! போட்டோக்கோசரம், வேலை செய்வது போல் பிம்பிலிக்கா பிலாக்கி காட்டும் போங்கு வேலைகள் இல்லாது - மெய்யாலுமே பணி செய்தால் மட்டுமே கம்பெனி விதிமுறைகளுக்கு உட்பட்டதாகிடும் ! lioncomics@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கு "லாக் டௌன் நாட்கள்" என்ற header தந்து போட்டோக்களை அனுப்பிடலாம் ! கானக்குரலோன்களின் கச்சேரி கிளிப்களையுமே !!
அரசவைப் பாடகர் யாரென்பதை தேர்வு செய்திட 2 ஜட்ஜ்கள் as usual நியமனம் செய்யப்படுவர் ! ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு ஸ்டீல் பாடக்கூடிய பாடலுக்கு செவிகொடுக்கும் அந்த அனுபவத்தை சித்தே யோசித்துப் பாருங்களேன் - அடடடடாடா !!! யாருக்கு அந்தப் புளகாங்கிதங்களெல்லாம் காத்துள்ளனவோ - தெய்வமே !!
அனைவருக்கும் நமது தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் !! இன்னல்களுக்கு மொத்தமாய் விடைதந்து அனுப்பி வைக்கவொரு அருமருந்தாய் இந்த சார்வரி நமக்கெல்லாம் அமையட்டும் ! Bye all ! See you around !! Have an awesome day & a lovely year ahead !
பி.கு : தேர்வாகும் அரசவைக் கவிஞருக்கு கூடுதலாய் ஒரு ரவுண்ட் பன் என்பதோடு, அடுத்த வாசக சந்திப்பின் போது ஒரு பாட்டுப் பாடும் வாய்ப்பும் வழங்கப்படும் - ஒரு ஜம்போ சீசன் 3 சந்தாவோடு !
ஷப்பா..மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பாக்குறது என்னா சுகம் ?ஷல்லூம் பெர்னாண்டஸ் & பெபினா குட்டி !
இங்கே ஒரே பிஷி !!
திருப்பூர் ப்ளூபெர்ரி & ஜூனியர்
மூன்றெழுதில் என் மூச்சிருக்கும்...! "கடமை" அது...கடமை !!
சோதனைச் சாவடி ட்யூட்டியில் நண்பர் கணேஷ்குமார்
சட்னி மீது சட்னி வந்து என்னைச் சேரும் !
அதை ஆட்டித் தந்த பெருமையெல்லாம் தம்பி சிவாவைச் சேரும் !
.......திருப்பூர் சிவாவைச் சேரும் !
ரம்-பம்-பம்.....ஆ-ரம்-பம்.....அ-ரம்-பம்-பம்....பே-ரி-ன்-ப-ம் !!
ஏழு எட்டு வாரமாச்சு கண்ணே..சோறு வடிக்கப் படிக்கலைடி கண்ணே !!
கரூர் P.சரவணன்
அங்கே என்ன சத்தம்மா......... ?
சமையல் பண்ணிட்டிருக்கேன் மாமா !!
நண்பர் சிபி..திருப்பூர் !
'தல'...ஊன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க...ஊர்லேர்ந்து லாரி லாரியா ஆளுகளை இறக்கிப்புடலாம் !
கைப்புள்ளை கிட் ஆர்டின் & டெரர் ஜூனியர்ஸ்
THE LOCKDOWN DAYS !!!!
விடுகதையோஓஓஓஓ...இந்த வாழ்க்கை !!! தீர்ப்புச் சொன்ன டெக்சாஸ் ஜட்ஜய்யா - மகேந்திரன் பரமசிவம் !! |
ஊருக்கு உழைப்பவன் !! தம்பி செந்தில் சத்யா ! |
ஆங்...எடுத்தாச்சா ? எடுத்தாச்சா ? எடுத்தாச்சா ? சரவணன் குமார், சின்னமனுர் |
தீயா வேலை செய்யணும் கொமாரு !! | சேலம் டெக்ஸ் விஜயராகவன் |
இங்கே ஒரே பிஷி !!
திருப்பூர் ப்ளூபெர்ரி & ஜூனியர்
படாதே......தரையிலே தூசியே படாதே !! தரையில் தூசி படாதிருக்க லேட்டஸ்ட் டெக்னீக்கை பயன்படுத்தும் அதிகாரியின் அன்பர் ரம்மி ! |
மூன்றெழுதில் என் மூச்சிருக்கும்...! "கடமை" அது...கடமை !!
சோதனைச் சாவடி ட்யூட்டியில் நண்பர் கணேஷ்குமார்
சட்னி மீது சட்னி வந்து என்னைச் சேரும் !
அதை ஆட்டித் தந்த பெருமையெல்லாம் தம்பி சிவாவைச் சேரும் !
.......திருப்பூர் சிவாவைச் சேரும் !
ரம்-பம்-பம்.....ஆ-ரம்-பம்.....அ-ரம்-பம்-பம்....பே-ரி-ன்-ப-ம் !!
ஏழு எட்டு வாரமாச்சு கண்ணே..சோறு வடிக்கப் படிக்கலைடி கண்ணே !!
கரூர் P.சரவணன்
அங்கே என்ன சத்தம்மா......... ?
சமையல் பண்ணிட்டிருக்கேன் மாமா !!
நண்பர் சிபி..திருப்பூர் !
'தல'...ஊன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க...ஊர்லேர்ந்து லாரி லாரியா ஆளுகளை இறக்கிப்புடலாம் !
கைப்புள்ளை கிட் ஆர்டின் & டெரர் ஜூனியர்ஸ்
Me?
ReplyDeleteஆம்... வாழ்த்துகள்KS
Deleteநன்றி நண்பரே
Deleteவாழ்த்துக்கள் குமார்
Deleteநன்றி சத்யா
Delete2வது வணக்கம் சார்
ReplyDeleteஆசிரியருக்கும் ,அவர்தம் குடும்பத்தினர் ,பணியாளர்கள் ,இங கு வருகை தரும் அனைத்து நண்பர்கள் அவர்தம் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
ReplyDeleteநீளமான பதிவே படித்து விட்டு வருகிறேன் சார்..:-)
ReplyDeleteRatthapadalam and tex willer
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteபுதிய பதிவுக்கு நன்றி!!
ஆகா மீண்டும் போட்டியா! எடுடா கைபுள்ள!! ஓடுடா ஓட்டம்!!!
ஹைய்யா புதிய பதிவு......
ReplyDeleteIniya Tamil puthandu vaazthugal💐💐☘️☘️💮💮💮🏵️🏵️🏵️🌼🌼🌼🌼🌹🌹🌹🥀🥀🥀🌷🌷🌷🌷🌷
ReplyDeleteதமிழ் புத்தாண்டு வணக்கங்கள்.
ReplyDeleteஎடிட்டர் சார் back with a bang. வாய் விட்டு சிரிக்க வைத்த இடங்கள் பலப்பல. Simply superb.
ReplyDeleteஎடிட்டர் & குடும்பத்தார் மற்றும் காமிக்ஸ் ஜோதிகள் யாவருக்கும் இனிய சார்வரி புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநலமுடன் பல்லாண்டு சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ இறை பணியும்
அன்பன்
J
பிரகாஷ் பப்ளிஷர்ஸ் பணியன்பர்கள் யாவருக்கும் இனிய சார்வரி புத்தாண்டு வாழ்த்துக்கள்
Deleteவாழ்த்துகள் ஐயா!
Delete// Of course , இந்தப் பதிவு நம்பர்களின் ஒரு பாதிக்கு கவிஞர் பாணபத்திரரும், சேலத்து குமாரரும் பொறுப்பேற்பர் என்பது புரிகிறது ! //என்னை ரொம்ப புகழாதீர்கள் சார் எனக்கு வெக்கவெக்கமா வருது. நான் ரொம்ப shy type.
ReplyDelete// அவரைத் தாரை வார்த்துத் தர ரொம்பவே தயங்குகிறார்கள் ! வேதாளம் & விக்கிரமாதித்தன் கதையாய் தொடர்ந்து முயற்சிக்கணும் !! ஹ்ம்ம்ம்...!! // வாங்கிவிடலாம் சார். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி.
ReplyDeleteபாட்டு போட்டியில் வேற்றி பெற படை எடுக்க போகும் செயலரே..அட்டுவே...ஜேகேவே வாழ்க வளமுடன்...:-)
ReplyDeleteபாட்டு பாடி. அந்த வீடீயோ க்ளிப் அனுப்புறது கூட பெரிசில்லைங்க சார்.
ReplyDeleteஆனால்..
ஒருவேளை பாட்டு செலக்ட் ஆனா ஈபுவி யில் சபையேறனும்னு நினைச்சாலே குலைநடுங்குமே (நான் கேக்கிறவங்களைச் சொன்னேன்.):-)
நான் படிக்க வேண்டிய புத்தகம் மீண்டும் எது எனில்
ReplyDeleteஇரத்தப்படலமே சார்...
கூட ஒன்று எனில் டெக்ஸ் ன் ஏதாவது மிகப்பெரிய இதழ்...:-)
நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteஶ்ரீ சார்வரி ஆண்டு எல்லோருக்கும் நன்மைகள் நல்கட்டும்.
ReplyDeleteஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
காமிக்ஸ் சேகரிப்பினுள் இன்னொரு முக்கிய இடம் பிடித்திருந்தவை டெக்ஸ் வில்லரும் ; வேதாள மாயாத்மாவும் ; மாயாஜால மன்னன் மாண்டிரேக்கும் தான்
ReplyDelete######
மாயாத்மா தான் முடியவில்லை...மாண்ட்ரேக்கிற்கு ஒரு சான்ஸ் கொடுத்து பார்க்கலாமா சார்...அப்பொழுது இந்த மாயாஜால மன்னன் கொஞ்சம் சுமாராக தோன்றியது என்னவோ உண்மை தான்...இப்பொழுது ஏனோ ஒரு புது சாகஸத்தில் பார்த்து தான் பார்க்கலாமோ என்று ஓர் எண்ணம்..:-)
ஆமா இப்ப படிச்சா அட்டகாசமாருக்கே
Delete💐💐💐💐💐💐
ReplyDeleteசீனியர் எடிட்டர்,
எடிட்டர் சார்,
ஜூனியர் எடிட்டர்,
நண்பர்கள்,
காமிக்ஸ் ரசிகர்கள்,
லயன்-முத்து பணியாளர்கள்,
அனைவருக்கும்...
இனிய
இனிப்பான
இதயம் கனிந்த
புத்தாண்டு நல்வாழ்த்துகள்
💐💐💐💐💐💐💐
அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் 😊
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteவாழ்த்துகள் குருநாயரே.. ஜமாயுங்கள்..!💐💐
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் 🤝💐🙏🏼😊
ReplyDeleteஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீண்ட பதிவு...மனம் தொடும் பதிவு.
ReplyDeleteபாட்டுப் போட்டியில் வெல்லப்போகும் நண்பருக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.
ஏப்ரல் மாதம் டெக்ஸ்வில்லர் கதை வரவிருந்ததா?
ReplyDeleteஆம் என்றால் அந்த கதையின் அட்டைபடம் & உள் பக்கம் எந்த பதிவில் வந்துள்ளது.
வரவிருந்தது. அந்த கதையின் பிரிவியூ வருவதற்குள் கொரோன வந்து விட்டது நண்பரே. அதனால் இன்று வரை அந்த அட்டை உள் பக்கம் எந்த பதிவிலும் வரவில்லை
Deleteநன்றி நண்பரே...
Deleteஆசிரியருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நமது காமிக்ஸ் சொந்த உறவுகளுக்கும் எனது இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்....💐💐💐
ReplyDeleteஒரேயொரு காமிக்ஸ் எடுத்துக்கலாம் ; அது போக வேறேதேனும் புக் ஒன்றையும் எடுத்துக்கலாம் !"
ReplyDeleteஹிஹி இரத்தப்படலம் வண்ணத்தொகுப்பு+கருப்புவெள்ளை
மின்னும் மரணம்...
பு.வி.&ஸ்பின் ஆப்புகள கழட்டி விட்டு விட்டீங்களே???? ஞாயமா!!!
Deleteஅதுவே இபவோட ஒட்டிக்குமே
Deleteஅது தானா கணக்குல வந்திடும் தலைவரே..
Delete,சார் மீண்டும் அட்டகாசம் . காலையிலே பதிவ படிப்பதுக்குள்ளா வாய்க்கால்ல குளிக்க அந்த நாள் முதல் இந்த நாள் வரை பாடலை முனுமனுத்தபடி கிளம்ப...திரும்பைல உங்க பதிவ படித்த விளைவாய் என் தந்தை கடை சரக்குகளை விற்று விட்டு பழய புத்தக அதே கடைல வாங்கி வந்த ஃப்ளைட்731 அட்டைல ஃப்ளைட் சகிதமா (முத்து) நினைவில் வரவர ....வந்து பதிவ படிச்சா இங்கயும் நீங்க கண்ட முத்தா flight731அடடா முருகனின் கருணையை வியக்க
ReplyDeleteதிருச்செந்தூர் முருகா - ஒன்னுமே புரியலியே.'
Deleteஇனிய தமிழ் புத்தாண்டு - இல்ல இல்ல... இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்...iii
காலையில் பதிவ பார்த்தேன். படிப்பதற்கு முன் குளிக்க வாய்க்காலுக்கு சென்றேன் . வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை பாடலை பாடிய படி சைக்கிளில் சென்றேன் . திரும்பும் போது நேற்றய பதிவ பற்றி சிந்திச்சதால , பழய இரும்புக் கடை நடத்தி வந்த தந்தையார் , சரக்கை டவுனில் விற்றுத் திரும்பும் போது அப்பழய சரக்குக் கடைல வாங்கி வந்த ஃப்ளைட் 731 என் சந்தோசத்த
Deleteஎகிறச் செய்தது . ஏற்கனவே அட்டையில்லாம படித்த எனக்கு அந்த அட்டைல பறக்கும் அலுமினியப் பறவையும் , என் மனம் கவர் லாரன்ஸ் டேவிட்டும் ,அதிலும் அவர்களின் டாப் கதயா நான் கருதும் இவ்விதழும் தந்த சந்தோசத்த சொல்ல வார்த்தைகள் ஏது !
இங்க பதிவ படிச்சா ஆசிரியரும்FLIGHT731 பத்தி சிலாகிக்க இந்த ஓர் வார்த்தை இருவர் மனதில் எதிரெதிர் திசைல அதே சந்தோசத்த அளித்த செந்தூரான் அருள எண்ணி வியந்து டைப்புகிறேன் .இக்கதய அதாவது முத்து காமிக்ச படித்தது எண்ண எண்ணிக்கை தெரியவில்லை என எழுதினேன் நண்பரே...நமக்குநாமே திட்டம்..
இவ்ளவே நண்பரே... அவசரமா பதிவிட்டுட்டேன்...சாரி
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
அருமை நண்பரே.
Deleteமுதல் பதிவு இந்திரஜால் காமிக்ஸ் படித்தது போல் இருந்தது.
இரண்டாம் பதிவு அதே கதையை லயன் காமிக்ஸ் - யில் படித்தது போல் இருந்தது.
ஹஹஹஹ....உங்க வாசகர் கடிதம் அடிக்கடி படித்ததாய் நினைவு
Deleteஏ எப்பா க்ளா@ பெயரே ஒரு கமெண்ட் நீளம் இருக்கேய்யா!!
Deleteநல்லாருக்கே
Delete###நீங்கள் துடைப்பத்தைக் கையாளும் அழகாய் இருந்தாலும் சரி ; 'புசு புசு'வென உப்பும் பூரி போட்டுத் தரும் பொன்னான காட்சியாக இருந்தாலும் சரி ; 'உன்னைச் சொல்லிக் குற்றமில்லை !!" என்ற பாடலோடு பாத்திரம் துலக்கும் பண்பான படப்பிடிப்பாய் இருந்தாலும் சரி####
ReplyDeleteஎங்கள் வீட்டில் எப்போதும் ஆளுக்கொரு வேலை என பகிர்ந்தே செய்வோம் அதனால்
ரெகுலராக இந்த வேலையெல்லாம் வீட்டில் நானே செய்வேன் சார் அதனால் லாக்டவுன் நாட்களில் தற்போது எனக்கு ஒய்வு கொடுத்துள்ளார்கள் சார்..
இந்த பட்டியலில் துணி துவைப்பதை விட்டு விட்டீர்களே..!!!???
((ஒரேயொரு காமிக்ஸ் எடுத்துக்கலாம் ; அது போக வேறேதேனும் புக் ஒன்றையும் எடுத்துக்கலாம் !" என்ற நிலையில் உங்கள் தேர்வுகள் எவையாக இருக்குமோ ?
ReplyDeleteஇரத்தப்படலம் & ஆப்பிரிக்க சதி
காமிக்ஸ் ஒன்று மட்டும் தான் வேறு எதாவது என்றால் பட்டுக்கோட்டை பிரபாகரின் பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்
ஆஹா..90களில் வெளிவந்த அதிரடி நகைச்சுவை கதையாச்சே.பாறையில் அமர்ந்திருக்கும் சேட்டை கோபியின் முழங்கை இடித்துக்கொள்ள பாறாங்கல்லில் மின்சாரம் இருப்பதாய் நம்ம்பி அதகளம் செய்வான்.க்ளைமாக்ஸில் வேனில் தப்பிக்கும் வில்லன் கும்பலை பிடிக்க ஹெலிகாப்டர் முலம் துரத்தியபடி மெஷின்கன் மூலம் சுட்டுப்பிடிப்பார்கள்.
Deleteஎன்னைப்போலவே நீங்களும் ரசித்து படித்திருக்கிறீர்கள்
Deleteஎனது முதல் தேர்வு கீழ்த்திசை சூனியம் அண்ட் சூனியக்காரியின் சாம்ராஜ்யம் மற்றும் ஒரு புத்தகம் என்றால் கார்சனின் கடந்த காலம்.
ReplyDeleteகா க காலம் அட்டகாச தேர்வு...ஆனா சீக்கிரம் முடிஞ்சுறுமே
Deleteசார் ஒரே ஒரு புக் என்றால் " இரத்தப் படலம் - வண்ணத் தொகுப்பு " தான்.
ReplyDeleteஒரே ஒரு ஹிரோ (யினி) யின் கதைகள் என்றால் அது " மாட ஸ்டி" யின் கதைகள் தான்.'. நீங்களும் அழுக்குணி ஆட்டம் ஆடியது போல் தோன்றுகிறது.
என்ன. அப்பாவுடன் செய்த பயணத்தை மட்டும், விவரிக்கவில்லை எனில் , நிச்சயம் நான் நம்பி இருக்க மாட்டேன்.சார்.
நம்ம கட்சிக்கு இன்னொரு நண்பர் வாங்க சார்...
Deleteஎடிட்டருக்கும் நண்பர்களுக்கும் ஈவியின் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!!
ReplyDeleteடெல்லியில் பழைய புத்தகக் கடையில் எடிட்டரின் காமிக்ஸ் தேடல்கள் அருமை!! இதுவரை ஈடேறாத அந்த டின்டின் இலட்சியமும் விரைவில் ஈடேறியட என் பிரார்த்தனைகள்!!
போட்டியில் வெற்றி பெற்று அரசவைப் புலவராகப் பதவி பெறப் போகிற நண்பருக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள்!! நானும் என்னாலானதை முயற்சித்து அரசவையில் இடம்பெறும் முனைப்புடன் இருக்கிறேன்!!
மாறுகோ.. மாறுகோ.. மாறுகையீ!!
எனது வாழ்த்துக்கள் EV
Deleteஓஹோ...
Deleteஜோருங்கோ ஜோருங்கோ ஈவி...பத்து பொருத்தமும் பக்கா பாகவதரே
Deleteஸ்பைடர் இன் விண்வெளி பிசாசு...நிறைவேறாத ஆசை....
ReplyDeleteமின்னும் மரணம்....
காலன் சார் பிலீஸ் wait ஒரு நாள் பத்தாது....கொஞ்சம் எஸ்ட்டென்ஷன் ப்ளீஸ்...😊😊
விண்வெளிப் பிசாச எப்பாடு பட்டேனும் வாங்கிப்புடுவம் நண்பரே
Deleteஆமா ஆமா ஆமா
Delete###ஒரேயொரு காமிக்ஸ் எடுத்துக்கலாம் ; அது போக வேறேதேனும் புக் ஒன்றையும் எடுத்துக்கலாம் !" என்ற நிலையில் உங்கள் தேர்வுகள் எவையாக இருக்குமோ ? எழுதுங்களேன் ப்ளீஸ் ?####
ReplyDeleteஇரத்த படலம் & மகாபாரதம்
சிவா செம்ம....!
Deleteசார்.The roadrunner show, tweety& sylvester,bugs bunny இதையெல்லாம் குறிப்பிட்டு பழைய ஞாபகங்களை வரவைத்து விட்டீர்கள்.நீங்களும் நம்மாளா..?
ReplyDelete###ஒரேயொரு காமிக்ஸ் எடுத்துக்கலாம் ; அது போக வேறேதேனும் புக் ஒன்றையும் எடுத்துக்கலாம் !" என்ற நிலையில் உங்கள் தேர்வுகள் எவையாக இருக்குமோ ? எழுதுங்களேன் ப்ளீஸ் ?####
ReplyDeleteஇரத்தப்படலம் & சிவா முத்தொகுதி!
தலைவரே நிஜமாவா...? சூப்பர்...
Deleteநிச்சயமாக...!!! டெக்ஸ், டைகர் கதைகள்க்கு அடுத்த பேவரைட் வரிசையில் 3வது இரத்தப்படலம் தான். இரத்தப்படலம், மின்னும் மரணம்& தி லயன் 250-- 3ம் தான் டாப்3 புக்ஸ் என்னை பொறுத்து. 3மே தலா 33% சாய்ஸ்க்கு வந்துடுது. அந்த வெற்றிக்கு தேவையான 1% ஐ இரத்தப்படல கதையமைப்பு பெற்று தந்துடுது.
Deleteஇன்னும் சில ஆண்டுகள் கழித்து தோர்கல் எல்லா பாகமும் வெளிவந்து, இரத்தப்படல தொகுப்பு போல ஒரே தொகுப்பாக வந்தபின் 4ல் 1எனும்போது எதை தேர்ந்தெடுக்க என்றால் மிக மிக மிக சிரமமான நிலை!!!!
இந்த 4புக்குகளை அடிக்க இனிமே ஏதாவது வந்தா தான் உண்டு.
மே பி, எடிட்டர் சாரின் 1000வது புக், முத்து 500 அல்லது லயன் 500 வரும்போது சாய்ஸ்கள் மாறலாம்!
போலவே நான் வாசித்து உள்ள மிக நீண்ட நாவல்கள் பலவற்றில் இருந்து பெஸ்ட் பிக் பண்ணனும் எனும் போது இந்த "சிவா-முத்தொகுதி"----முன்னிலை வகிக்கிறது! கதை அமைப்பு மிரண்டு போகச் செய்யும் களம்! அத்தனை பக்கங்களை தொய்வு இன்றி படுவேகமாக கதாசிரியர் திரு அமீஷ் கொண்டு போகிறார். கதை நெடுக டுவிஸ்ட்கள்லாம் அசாதாரணமானவை!
Deleteஇனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமை உள்ளங்களே.. டியர் சார்.. லாக்டவுனில் என்ன பண்ணிட்டிருந்தேன் என மின்னஞ்சலில் காண்பித்துள்ளேன்.
ReplyDeleteகடேசியா எடுத்துட்டு போறதுன்னா..பைபிள் ப்ளஸ்
இரத்தப்படலம்...
ஜானி ஜி பைபிளுக்கு இணையாகவா நன்றி...
Deleteசார் வரி என கேட்டு வந்த புத்தாண்டு இனிமையாய் கனி/ழி/ளிய (ஆசிரியரும் நம்ம நண்பர்தான) நண்ர்கள் அனைவருக்கும் செந்தூரான் அருள வேண்டுகிறேன் .
ReplyDeleteசார் நீங்க சிறு வயதில் படித்த அக்கதைக கிடைக்காம போனது நட்டமே ...அதன் மேல் நீங்க சொன்ன பிறகு நாட்டமதிகமானதால அந்தக் கதைகளின் பக்கத்தில் ஒன்றை கண்ணில் காட்டலாமே .
நீண்ட சுமார் இருவது வருடங்களுக்கு பின்னர் அதே கோடை .அதே போல மாதம் பத்து நாள் விடுமுறை ....அதே போல ஊரை சுற்றி வருகிறேன்....அதே சில நண்பர்கள்...கோடை மலர்தாமில்லை...ஆனா நிதமும் பூக்குதே தளத்தோடே நம்ம சந்தோசமுமே மேவோட .
ஊருக்கு வரயில் நீங்க டின்டின்ன பாத்த அதே திருவள்ளுவர் நிலையத்ல வண்டி நின்னா நம்ம காமிக்ஸ் வந்திருக்கா என பதைபதைப்போட பாக்க இறங்கி ஓடுவது வழக்கம் . என் தாயார் இறங்காதன்னு கத்தினாலும் ஓடி புத்தகத்த தேடிய தாய் சொல்லைத் தட்டிய தனயன் நான் . அம்மதுரை தரும் பத்து நிமிட சந்தோசம் வேற லெவல் .
சார் நீங்க சிறுவர் நாவல் படிச்சீங்க . ஆனா எனக்கு காமிக்ச தாண்டி நாலாவது படிக்கயில் நா புடிச்ச மாயாஜால கதைகள் வேற லெவல் .அதனோடு அம்்புலிமாமா , பாலமித்ரா , இருவண்ண விண்வெளி விதியண்ணல் காமிக் தொடர் தாங்கி வந்த ரத்ன பாலா அதில் வந்த குமரனும் குட்டி யானையும் தொடர் நாவல்கள்...அதில் என்றோ வந்த மௌக்ளியின் சகோதரர்கள் தொடர் (பைண்டிங்கா தொகுப்பா எங்க பழய புத்தக கடைல கிடைத்தது ),பூந்தளிர் தந்த கபீஷ் , காளி , பைக்கோ கிளாசிக் பலே பாலு இவர்களுடன் , கோகுலத்தில் நீலன் எனும் மலைவாசி சிறுவன் தந்த சந்தோசம் அதகளமே . ஆறாப்பு நண்பன் தந்த இரண்டாம் பாகம் மட்டுமில்லாம படிச்ச பொன்னியின் செல்வன் ,பள்ளி நூலகத்ல கல்கி ஆண்டு மலர்ல தேடி படித்து வியந்த வாண்டுமாமா கதைகளுக்கும் , அதுல வந்த ரஹீம் எனும் பங்களாதேஷ் சிறுவன் , முக்தி வாகினி படக்கதை தந்த சந்தோசத்துக்கும் நன்றி சொன்னா போதுமா !
ReplyDeleteமாயாஜாலக் கதைகள்ல அணில்மாமா கதைகள் பழய புத்தகங்களோட எங்க கடைக்கு வரும்...அது வேற லெவல்...அதத்தேடி கடகடயா அலைந்து ஏமாந்தததிகம்...அணில்மாமா கிடைக்குமா என இன்று வர ஏங்குத் திரிகிறேன் .
Deleteஏழாப்ல மருத மலைல தந்தையாரிடம் கேட்டு வாங்கிய பஞ்ச தந்திரக் கதைகள் ,விக்கிரமாதித்தன் கதைகள் ,ரஷ்ய கதைத் தொகுப்பு ,மாயப் பென்சிலும் மந்திரத் திருகாணியும் வாங்கித் தந்து அறிவுப் பொக்கிசத்த தந்த தந்தை மேல் மதிப்பு எப்பவும் குறையாது இதற்காகவே . அவ்வளவு பணம் ஒரே நேரத்ல தந்த குபேரனல்லவா...நா என்ன செஞ்சாலும் சரியாக இருக்கும் என பெரும் நம்பிக்கை கொண்டவர் அவர்..
ReplyDeleteபண்டய உலகில் பறக்கும் பாப்பா என பல பாப்பா தந்த வாண்டுமாமா கொண்ட பள்ளி நூலகம்...அதிக புத்தகம் படித்த நபர் பரிச ஐயாவுக்கு தந்த எனது நூலகம் தந்த சந்தோசம் !
ReplyDeleteபள்ளிய தாண்டிய பின்னர் படித்த கானகத்தின் குரல் CALL OF THE WILDநாய் பக்கும் தாண்டர்னும் மறக்கவே இயலாது என்னா கத சார் பாசப்பிணைப்பில் அத அடிச்சிக்க ஏதும் கிடையாது ...காமிக்ஸ்ல விட்டா வாண்டு மலர்க்கு இதற்கிணையா கத கிடைக்காது...சிறுவர்கள ஈர்ப்பது திண்ணம்.....
ReplyDeleteஇன்னொன்னு கடலும் கிழவனும் ..போராட்டம் ...விடாக் குணம்...ஒருவர ஒருவர் வெல்லத் துடிக்கும் மீனும் கிழவனும் தரும் தன்னம்பிக்கய ஆயிரம் தன்னம்பிக்கை நூல்களும் தராது..உயிரை பிடித்து தப்பி வந்த கிழவன் அடுத்த நாள் ஒன்றும் நடவாதத போல வலய எடுத்து தோளில் போட்டு கடல்லஇறங்குவது யப்பா ...நீங்க அடுத்த மாத வெளியீடுக்குள் நுழைவத நிினைவு படுத்தும்
'கடலும் கிழவனும்' அருமையான நாவல் தான் அண்ணா.
Deleteவரிக்கு வரி ஈர்ப்பும் ,கிழவனின் புலம்பல் தன்னம்பிக்கயா மாறும்...அத படிச்சிட்டு அதிலிருந்து மீளவே முடியல தம்பி
DeleteCartoon ல் கலக்கிய the Popeye sailor man காமிக்ஸ் தொடர் எப்படிப்பட்டது? அதில் நண்பர்கள் மற்றும் ஆசிரியருக்கு ஆர்வம் உள்ளதா?
ReplyDeleteஅதில் ஐடியாக்கள் பிரம்மாதமா இருக்கும்...காமிக்சுக்கு எப்படியோ
Delete"ஒரேயொரு காமிக்ஸ் எடுத்துக்கலாம் ; அது போக வேறேதேனும் புக் ஒன்றையும் எடுத்துக்கலாம் !" என்ற நிலையில் உங்கள் தேர்வுகள் எவையாக இருக்குமோ ? எழுதுங்களேன் ப்ளீஸ் ?
ReplyDeleteடெக்ஸ் வில்லரின் மரண நடை மற்றும் பாலகுமாரனின் அப்பம் வடை தயிர்சாதம் அல்லது கிரேஸி மோகனின் கே.பி.டி. சிரிப்புராஜ சோழன்.
அருமை சகோதரி. இந்த புத்தகத்தை எடுத்து படிக்கிறேன் அடுத்த முறை.
Deleteபடிச்சி பாருங்கள் குமார். BTW இங்கே Jonathan Stroud ரசிகர்கள் யாராவது இருக்கிறார்களா? சிவா முத்தொகுதி மாதிரி ஒரு famous UK trilogy - bartimaeus என்று. நண்பர்கள் எல்லோருக்கும் கண்டிப்பாக பிடிக்கும். நக்கல், நையாண்டி டயலாக் பேசும் ஒரு பூதம்/பேய், கட்டளை இடும் எஜமானரை பயங்கரமா கலாய்த்து தள்ளும். ட்ரை பண்ணி பாருங்கள்.
DeleteWill try for sure. Thanks for the input sister.
Deleteமரணநடை---மினி டைனமைட்! அதிரடி சாய்ஸ் சகோ!
Deleteஇரத்தப்படலம் இந்த மந்திரச் சொல்லுக்கு மயங்காத காமிக்ஸ் ஆர்வலர் உள்ளாரெனில் அது இது வரை கிடைக்காதோரைத் தவிர வேறு யாரும் இருப்பாரோ ... அதிக விலைல வந்ததுமே காணாது போன சாதனைக்குச் சொந்தக் காரர்தாமே ...காணாம போன தம்மைத் தாமே தேடித் திரியும் நம்மவர் .
ReplyDeleteமுதல் கதை படித்த போது ரசித்திருப்பேனா என்பது சந்தேகமே .
இரண்டாவதோ மூனாவதோ படிக்கும் போதுதான் பரபரப்பு பற்றிக் கொண்டது . முதல் கத கிடச்சா கொலையாளி பற்றித் தெரியக் கூடும்...கருப்புக் கதிரவன் தினம் குறித்த மேலதிகத் தககவலப் பெறலாம்...அந்தப் பாழாப் போன...சாரி பழசா போன இதழ் கிடைக்கலியே என ஏங்கித் தூக்கத்த தொலைக்கும் நாட்கள் ஒவ்வோர் பாகம் வரும் போதும் தொடரும்...
+2முடித்த மூன்று நான்கு வருடங்களுக்குப் பின்னர் முருகன் கண் காட்டினான்..வாராது வந்த மாமனியாய் காணாது கண்ட கண் மனியாய் முதல் பாகம் உக்கடம் பழய மார்க்கெட் பகுதில கிடைக்க...
Deleteவாங்கி அந்த சைஸ் சித்திரங்கள்ல மயங்கி பாக்கட்ல திணித்தபடி ...ஒதுங்கு ஒதுங்கு ...ஒதுங்கு...டடட்டாடா..டிட்டிடிடிடி...வாங்கடா வாங்க என் வண்டிக்குப் பின்னாலன்னு பாடிய படி டிவிஎஸ்ஸ முருக்க
கம்பனி அருகே போய் பைய தடவ மனசெல்லாம் உடயுது...புத்தகத்த காணம்...சமாளிச்சு வைக்காத இடத்திலெல்லாம் துளாவ...வேலையாவது மண்ணாவதுன்னு வண்டிய திருப்ப ...கண்ட குப்பைத் தொட்டியெல்லாம் துளாவி..சென்ற தடங்களெல்லாம் அலசி ...வீட்டுக்கு போகவே பிடிக்கல...
Deleteஅதன் பிறகு ஐந்து வருடங்க கழிய ராஜா புக் ஹௌசுல கிடைத்தது...படித்து அசர...அந்த விடை கிடைக்கல...
நம்ம புத்தகங்க கிடைக்காத நிலைல முடிவறியா பயணம் தொடர...
ஒரு பாகம் ஆயிரம் விலைல கிடைக்கும் என அறிந்து ...கட்டுப்படியாகாதென மறுக்க
கம்பனி அருகே வந்து பைக்குள்ள கைய விட்டா ..முருகன் கை விட்டுட்டார்...புத்தகத்த காணலை...
Deleteவேலையாவது மண்ணாவது என திரும்பி ,...வந்த வழியெஊ்கும் தேடுறேன்...குப்பைத் தொட்டிகளை அலசினேன்...காங்கலியே...அன்று வீடு திரும்ப மனசில்லாம...என் சோக கதய கேளு தாய்க்குலமேன்னு கண்டவர்ளிடமெல்லாம் புலம்பியத போல எப்பயும் புலம்பியதில்லை
ஆசிரியர் மொத்தமா விடுவார்ன போது அடைந்த சந்தோசம் தாங்கள் அறியாததல்ல....புத்தகம் இங்க வராதுன்னு கணபதில சொன்னதுமே முதன் முறயா சிவகாசி பயணம். நண்பன் சுஸ்கி விஸ்கிக்கும் சேர்த்து இரு புத்தகங்கள வாங்கியபடி பஸ்ஸேறினேன்...புத்தகங்கள தடவியபடி...அந்த பிரம்மாண்ட மனங்கவர் சைசும் புத்தக முதுகும் தந்த சந்தோசம்...அடடா
Deleteஒரே இதழ்னா இரத்தப் படலம்தான்....
Deleteமீதமிருக்கும் புலன் விசாரணையும்...கிளைக் கதயும் விமிட்டெட்ல வந்தா ஜென்மசால்பமடைவோம்ல
ஏய் மக்கா.. கலக்குறயே...
Deleteஇபல்ல
Deleteவாசகர் 1 : நம்ம எடிட்டருக்கு ஒண்ணுமே தெரியில !!!
ReplyDeleteவாசகர் 2 : ஏன் அப்டி சொல்றே??
வாசகர் 1: வீட்ல நாமதான் எப்பவும் வேலை செஞ்சுட்டுதானே இருக்கோம் ..ஆபிஸ்ல வேலை செய்யிற மாதிரி போட்டோ கேட்டு இருந்தா நாம எங்க போறது ???
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
எடிட்டர் : என்ன சார் ? வீட்ல வேலை செய்யுற மாதிரி போட்டோ போடுங்கன்னு சொன்னா பிக்பாஸ் மாதிரி நேரம் காலை ஆறுமணி ,மதியம் இரண்டு மணி , இரவு ஏழு மணி அப்டின்னு மணிக்கொரு வாட்டி உங்க வீட்டுக்காரங்க சிரிச்சுட்டு இருக்கற குளோசப் போட்டோவை
Deleteவெவ்வேறு உங்க வீட்டு லொகேஷன்ல புடிச்சு அனுப்பியிருக்கீங்க ?
வாசகர் : நீங்கதான பேக் போட்டோ அனுப்பப்படாதுன்னு சொன்னீங்க ?
அவுக சிரிச்சுட்டு இருக்காங்கன்னா அந்த லொகேஷன் வேலைய நான் முடிச்சுட்டேன்னு அர்த்தம் ...
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
மோகன் காது ,மூக்கு தொண்டை மருத்துவமனையில் இருந்து வெளிவரும் இரு காமிக்ஸ் நண்பர்கள் ..
Deleteநண்பர் 1 : ( செல்போனில் வேகமாக டைப்படித்து காண்பிக்கிறார் ) ஏண்டா ?// உனக்கு அறிவிருக்கா ? டாக்டர் கிட்ட என் போன் நம்பரை கொடுத்து வர சொல்லியிருக்கே ....அவர் சொல்றாரு ...நீ உன் பொண்டாட்டி கிட்ட மாடி வீட்டு மாலினி உன்னை விட ரொம்ப அழகுன்னு சொல்லியிருக்கே .ஒரு சின்ன சத்தத்துக்கு அப்புறம் உன் வலது காது காலி...மறுபடியும் உன் பொண்டாட்டிகிட்ட பக்கத்து வீட்டு பார்வதி உன்னைவிட ரெண்டு மடங்கு அழகு அப்டின்னு சொல்லியிருக்கே ... ஒரு சின்ன சத்தத்துக்கு அப்புறம் உன் இடது காது காலி ....கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆவப் போவுது ..இதெல்லாம் கூட உனக்கு தெரியாதா ?
காதில் பஞ்சுடன் இருக்கும் வாசகர் 2: ( படித்துவிட்டு) எடிட்டர் என்னை பாட்டு போட்டிக்கு ஜட்ஜா போட்டுட்டாரு....என்னை வேற என்ன பண்ண சொல்ற?/ என் வைப்தான் உடனே காது கேக்காத மாதிரியும் ஒரே மாசத்துல காது சரியாகுற மாதிரியும் அடிப்பா ..அதான் ...
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
அடையாளம் தெரியாத நபர் : ( போனில் ) எங்களை பத்தி என்ன நினைச்சீங்க ? பொழுது போகாத சமயத்துல பெண்டகன் சர்வர் ,எம் ஐ சிக்ஸ் சர்வர்ல –ல்லாம் ஜாலியா உள்ளே நுழைஞ்சு வெளியே வருவோம் .டாப் டென் எத்திக்கல் ஹேக்கர்ஸ் –ங்க நாங்க ...பேரு ,விசினிட்டி –அதாங்க ஏரியா சொல்லுங்க ..அவங்க மொபைல் ,டெஸ்க்டாப் ,சிஸ்டம் எதில்லேர்ந் தும் அப்லோட் பண்ணமுடியாது...உங்க உயிருக்கு ஆபத்துங்கறது தெரிஞ்சதாலதான் பணம் கம்மி பண்ணிட்டோம் ..அமெரிக்காலேர்ந்து ஒருத்தர் டாலராவும் பிரான்ஸ்லேர்ந்து ஒருத்தர் யூரோவாவும் பணம் அனுப்பிட்டாங்க ..லாக்டவுன் –ங்கறதாலே அவங்க வேற வழியில யூடுயூப்,,பேஸ்புக் இப்படி எந்த வழியிலேயும் அனுப்ப முடியாது .பேரை சொல்லுங்க ..
Deleteஅடையாளம் தெரியாத இன்னொரு நபர் : ( போனில் ) ஈரோடு விஜய், மேச்சேரி கண்ணன் ..அட்ரஸ் ஈமெயில்ல அனுப்பறேன் ..
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
ஜூனியர் எடிட்டர் : என்னப்பா இது ? லாக்டவுன் நேரத்துல கவர்மென்ட் வண்டியில வந்து லெட்டர் கொடுத்துட்டு போறாங்க??? கவர் மேல COVID -1
Deleteஅப்டின்னு போட்டுருக்கு ??
எடிட்டர் : ( படித்துவிட்டு-பெருமூச்சு விட்டபடி ) COMPREHENSIVE OTALGIC VIOLENCE to INTERNATINAL DWELLERS-1 அப்டிங்கறதோட சுருக்கமாம் ..சர்வதேச மனித உரிமைகள் சங்கத்துலேர்ந்து சரக்கு விமானம் மூலமாலெட்டர் அனுப்பி நம்ம நடத்துற போட்டியை நிறுத்த முடியுமான்னு கேட்டு இருக்காங்க ...கொரோனா இருக்கறதால ஒரே நேரத்துல ரெண்டையும் சமாளிக்க முடியாதுன்னு கெஞ்சி இருக்காங்க
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
@செனாஅனா
Deleteஹா ஹா ஹா!! :))))))))))))))
'மரண பங்கம்'னு சொல்லுவாங்களே.. என்னையும், மேச்சேரி பாகவதரையும் நீங்க பண்ணியிருக்கறது அதைத்தான்! கவனிச்சிக்கிடறேன்!
செனா அனா எப்போதும் போல இப்போதும் அருமை அருமை. என்னமா எழுது கின்றீர்.
DeleteThis comment has been removed by the author.
DeleteSelvam Abirami @ எப்போதும் போல இப்போதும் அருமை :-) உங்கள் நகைச்சுவை துணுக்குகள் அருமை!
Deleteசெம.. செனா அனா...
DeleteThis comment has been removed by the author.
Deleteபொருளர் ஜி@ பின்னி பெடல் எடுத்துட்டீங்க... சிரிச்சி்சிரிச்சி வகுறே வலிக்கு! ஏதாவது மருந்து எழுதிதாங்க! காது டமாரம்-- சிம்ப்ளி கிரேட்! லெட்டர் டெலிவரி--ஹா...ஹா...!
Deleteஅன்பு ஆசிரியருக்கு,
ReplyDeleteஉங்களின் வாழ்க்கையை அருகே இருந்து பார்த்த உணர்வு. அங்கங்கே என்னுடைய தாத்தாவின் மடியில் அமர்ந்திருந்த ஞாபகங்கள் வந்தது. வாயில் வெற்றிலை சீவலும், நீளக்கை வைத்த கதர் சட்டையும் வேட்டியும், HMT வாட்சும், வலக்கையில் குடையும், இடக்கை சுட்டு விரலை பிடித்தபடி நானும் அந்த தெருவில் வலம் வந்த நாட்கள். 94'ல் தாத்தா இறந்த பின் பாட்டி அதே வீட்டில் யாருடைய துணையும் இல்லாமல் இருப்பார். பள்ளி முடிந்ததும் இரவு உணவு கொண்டு தருவேன், காலை மதியம் அவர் சமைத்துக்கொள்வார். இது 2-3 வருடங்கள் தொடர்ந்தது. அப்போது அடிக்கடி நிறைய பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. 2001-ல் அவரின் மரணத்தை அருகிருந்து பார்த்தேன். வாழ்வின் அடுத்த பக்கத்திற்கு கொண்டு சென்றது. அதன் பின் அந்த வீட்டை பூட்டி வைத்திருந்தோம். ஒருநாள் துப்புரவு செய்ய சென்ற போது எனக்கு ஏற்பட்ட அதே ஞாபகத்தை நீங்கள் அப்படியே அட்சரசுத்தமாய் எழுதியுள்ளீர்கள். நீங்கள் எழுதிய பதிவுகளில் 'உச்சம்' என அழுத்தமாய் சொல்லலாம். 'வரம் பெற்ற விரல்கள் உமது'.
வரம் பெற்ற மந்திர விரல்கள்
Delete80th
ReplyDeleteகாமிக்ஸ் "நிஜங்களின் நிசப்தம்"
ReplyDeleteவேற புக் "மிர்தாதின் புத்தகம்"
(The Book of Mirdad)
இரண்டாவதாக, "கலீல் ஜிப்ரான் - தீர்க்கதரிசி"
(The Prophet)
5 - 12 வயதுவரை :
Deleteகாமிக்ஸ், சிறுவர் மலர்
ராணி காமிக்ஸில் வெளியான முகமூடிவீரர் மாயாவியின் ஏராளமான கதைகள்! எப்படியாவது காசை பிரட்டி வாங்கிவிடுவேன்! அப்போதெல்லாம் லயன், முத்து காமிக்ஸ் எங்க கிராமத்தில் கிடைக்காது! கோபி போனால் தான் வாங்க முடியும் என்பதால் லயன், முத்து காமிக்ஸ் படிப்பவரெல்லாம் பெரும் பணக்காரர்களாய் நினைத்துக் கொண்டதுண்டு!
12 - 17 வயது வரை :
பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் என கல்கியின் கதைகளில் பித்துப் பிடித்து திரிந்த காலம்! அதோடு சாண்டில்யனின் யவனராணி, கடல் புறா, ராஜமுத்திரை, மு.மேத்தாவின் மகுடநிலா, கண்ணதாசனின் சேரமான் காதலி என சரித்திர நாவல்களில் மூழ்கிக் கிடந்த காலமது!
17 - 21 வயதுவரை :
பொருளாதார கப்பல் தள்ளாட துவங்கிய காரணத்தால் பள்ளிப் படிப்பு பாதியில் நின்று போக, பைபிள், பகவத் கீதை, குரான் என ஆரம்பித்து இறுதியில் ஓஸோவில் லயித்துக் கிடந்த காலமிது! விரக்தியோடிருந்த எனது வாழ்வை புரட்டி போட்ட மானசீக குருநாதர் ஓஸோ! நூற்றுக்கும் மேற்பட்ட ஓஷோவின் புத்தகங்களை வைத்திருந்தேன்!
21 - 24 வயதுவரை :
தத்துவம் படித்ததெல்லாம் போதும் என வயிறு கூப்பாடு போட்டு காரணத்தால் புத்தகம் படிப்பதே அறவே நின்று போன காலமிது!
24 - 27 வயதுவரை :
கோவை பயணம்! இசை படிக்க வேண்டி (பியானோ) என வாழ்க்கை திசை மாறிய காலமிது!
Western classical music pianoவில் 4 Grade முடித்திருந்த நிலையில் இனி இசை தான் வாழ்க்கை என்று நினைத்திருந்த நிலையில் வாழ்க்கை படகு மீண்டும் யூடேர்ன் அடித்து பங்கு வர்த்தகத்துக்குள்ளே தள்ளி ஒரு தொழில் முறை ஷேர் புரோக்கராக மாற்றி விட்டது!
மீண்டும் வாசிப்பு நெருக்கமானது இந்த காலகட்டத்தில் தான்! ஆனால் அது உலக அரசியல், வரலாறு, பொருளாதாரம் (அதோடு நமது காமிக்ஸ்) என மாறிப் போய்விட்டது!
கடந்த 15 ஆண்டுகளாக தொடரும் நிலை இதுதான்!
கோரோனா வாழ்க்கையை மீண்டும் வேறு திசைக்கு திருப்பிவிடும் போல் தெரிகிறது!
அருமை நண்பரே...நா பாட ஒரு ட்யூன் வேணுமே
Deleteமிதுன் அருமை நண்பரே அருமை. உங்கள் வாழ்க்கையை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
Deleteமிதுனரே தூள்! மனச திறந்து காட்டிட்டீங்க...!!! எடிட்டர் சாரின் பதிவு பலரது இதய பெட்டகங்களின் திறவுகோலாக மாறிட்டது நிதர்சனம்! இனிமே கி.மு. கி.பி கிடையாது; கொ.மு. கொ.பி. தான்!
Delete@மிதுன்
Delete///Western classical music pianoவில் 4 Grade முடித்திருந்த நிலையில் இனி இசை தான் வாழ்க்கை என்று நினைத்திருந்த நிலையில்///
அடடே!! முறைப்படி பியானோ வாசிக்கக் கற்றுக் கொண்டவரா நீங்கள்?!! சூப்பர்!!!
வாய்ப்புக் கிடைத்தால் உங்கள் விரல்கள் விசைப்பலகையில் காட்டவிருக்கும் ஜாலங்களில் லயித்துப்போக விரும்புகிறேன்!
ஒரே ஒரு காமிக்ஸ் : N B S.
ReplyDeleteஒரே ஒரு நாவல் : சி.ஐ.டி.சந்துரு. மலேயாவில் இருந்து தப்பி வந்து சென்னையில் இருக்கும் இரண்டு கள்ள நோட்டு கும்பல். அவர்களிடையே எழும் மோதல். இவர்களை கூண்டோடு வளைக்கும் சிஐடி சந்துருவின் அலட்டிக் கொள்ளாத நடவடிக்கைகள். படிக்கப்படிக்க விறுவிறுப்பான ,முன்னாள் விகடன் ஆசிரியர் தேவன் அவர்களின் அற்புதமான நாவல். 1950 - 60 காலகட்டத்தில் ஆனந்தவிகடனில் வந்தது. எனது All time favorite.
நானும் முயற்சிக்கிறேன் நண்பரே
Deleteபத்துசார்@ மீண்டும் 10/10
DeleteTintin in Tibet is an amazing tale ! Every frame where someone shouts CHANG! would be rib-tickling - that was the second Tintin I had purchased - in 1984 - priced INR 25 !!! First was King Ottakar's sceptre - same price - 25 bucks !! Hmmm - athellaam oru kaalam !!
ReplyDelete1958-ல் உருவாக்கப்பட்ட கதை சார் ! இத்தனை காலம் கழிந்தும் அது அற்புதமாய்த் தென்படுகிறதெனில் அசாத்தியப் படைப்பே !
Deleteஉண்மை தான் அந்த சீரிஸ் இல் வரும் எல்லா கதைகளுமே இப்போதும் அவுட் date ஆகவில்லை. வேற லெவல்
DeleteTintin in Tibet ,Flight 731 , சில ஆஸ்ட்ரிக்ஸ் கதைகள் நண்பன் சுஸ்கிவிஸ்கி கலெக்சன் எங்கூட்ல இருக்கு..படிக்க முயற்சித்தேன் முடியல...இனி கோவை வந்ததும் அத முயற்சிக்கப் போறேன்...
ReplyDeleteஆசிரியரின் முயற்ச்சி கைகூடி விரைவில் தமிழ் பேச தமிழர் திருநாள்ல செந்தூர் முருகப் பெருமான் அருள் தர வேண்டுகிறேன் .
தினமணில வந்த சூப்பர் தும்பி ஓர் பக்கத் தொடரும் எப்ப வரும்னு ஏங்க வச்சது...சிறுவர் மலர்ல வந்த உலக அழிவு கத...
ReplyDeleteSiruvarmalaril vantha kathain Peru uyirai thedi
Deleteநினைவுக்கு வந்தாச்சு நண்பரே...அட்டகாசகதை
Deleteபாட்டுக்கும் நமக்கும் ரொம்பதூரம்... பாடும் ஆசை இருந்தாலும் வீட்டில் விட மாட்டாங்க :-) அதனால் என் சார்பாக என்னோட ஜூனியர் பாடிய பாடலை அனுப்பி உள்ளேன் :-)
ReplyDeletehttps://www.youtube.com/channel/UC-q0nrt6l_F4tqAvjEiWbGg
கேட்டுட்டு வரன்ல
Deleteகேளுல ... வரம்தந்த சாமிக்கு சரியாக 55 sec ஒன்லி
Deleteபுரியலியல...சினிமா பாட்ட பாடச் சொல்லி போடுல...இல்லாட்டி நா எழுதுன ஒர் கவிதய பாடச் சொல்லுல மக்கா
Deleteவரம்தந்த சாமிக்கு சினிமா பாட்டுதான் மக்கா!இப்போதுதான் அதனை upload செய்தேன்; இப்போது கேட்டு விட்டு சொல்லுலே!! மற்றவை கர்நாடக சங்கீதம்!!
Deleteவாவ்!
Deleteஅருமை!
வாழ்த்துகள் தெரிவியுங்கள் அண்ணா!
நானும் இந்த பாடலை அதே குரலில் பாட அடிக்கடி முயற்சி செய்திருக்கிறேன்!
நன்றி பாபு
Deleteஅட்டகாசம்ல...அருமையான செலக்சன்...அந்த பாடல் வரிகள அழகா மாத்த கை பரபரக்குதுல ...வாழ்த்துக்கள தெரிவில ...கோவை வரைல கவனிப்பம்ல
Deleteசரிலே மக்கா :-)
Delete@ PfB
Deleteஉங்கள் மகனின் பாடலைக் கேட்டேன்!! அருமை அருமை!! நல்ல பாடும் திறமை இருக்கிறது.. நேர்ந்தியாகப் பாடியிருக்கிறான். தொடர்ந்து ஊக்கப்படுத்தி நிறையப் பாடவையுங்கள்! என் வாழ்த்துகள்!!
லாலி லாலி லாலி லாலி
Deleteலாலி லாலி லாலி லாலி
நான் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி விஜயனுக்கு தாத்தாவின் லாலி
நான் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி விஜயனுக்கு தாத்தாவின் லாலி
முட்டையான கண்ணனுக்கு ஹ ஹா ஹா
முட்டையான கண்ணனுக்கு சௌந்தர்ய லாலி
சித்திரம் விடும் பேரனுக்கு ஸ்பைடர்தான லாலி
நான் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி விஜயனுக்கு தாத்தாவின் லாலி
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
ஜாலிஜம்பருக்கு லக்கி நானே
ஜாலிஜம்பருக்கு லக்கி நானே
டெக்சாசு வீரனுக்கு போனல்லி நானே
டெக்சாசு வீரனுக்கு போனல்லி நானே
பேரா லயன் காமிக்சுக்கு
பேரா லயன் காமிக்சுக்கு காரணமும் நானே
பேரா லயன் காமிக்சுக்கு காரணமும் நானே
பார் போற்றும் ஜேசனுக்கு இரத்தப்படலம் நானே
பார் போற்றும் ஜேசனுக்கு ரத்தப்படலம் நானே
நான் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி விஜயனுக்கு தாத்தாவின் லாலி
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
அறிவான கண்ணனுக்கு ஃபைனான்சும்் நானே
அறிவான கண்ணனுக்கு ஃபைனான்சும் நானே
விஜயன பாட வந்த கந்த நாடன் நானே
விஜயன பாட வந்த கந்த நாடன் நானே
எம்பேரனுக்கு தாத்தாவும் நானே
எம்பேரனுக்கு தாத்தாவும்
நானே
சௌந்தரபாண்டி புதல்வனுக்கு தியாகய்யர் நானே
நான் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி விஜயனுக்கு தாத்தாவின் லாலி
முட்டையான கண்ணனுக்கு சௌந்தர்ய லாலி
சித்திரம் லிடும் பேரனுக்கு ஸ்பைடர்தான
லாலி
நான் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி விஜயனுக்கு தாத்தாவின் லாலி
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
பாடச் சொல்லுல...நல்லா வரட்டும்
Delete100
ReplyDelete100வது
ReplyDeleteஎனக்கு சிறு வயதிலேயே ஒரு லெண்டிங் லைப்ரரி யில் இருந்து எனது தந்தை புத்தகங்கள் வாங்கி வருவார். அப்போது அவர் கொண்டு வந்து படித்து காமித்தது தான் Tintin மற்றும் astrix அது மட்டும் இன்றி அந்த லைப்ரரியில் ஸ்டார் வார்ஸ் இன்னும் பல நாவல்கள் காமிக்ஸ் இருக்கும். ஆங்கிலம் தமிழ் புத்தகங்கள்.
ReplyDeleteஅவர் படித்து காண்பித்தது எனக்கு நெடு நாள் ஞாபகம் இருந்த Tintin கதை "Black island" than இரண்டு காரணங்கள்
1. அந்த கதையில் வரும் Gorilla அதற்கும் Tintin க்கு நடக்கும் மோதல். Snowy உடைய குரல் கேட்டு அந்த கொரில்லா பயந்து ஓடுவது
2. Tintin அணிந்து வரும் bagpiper dress.
எனது ஒரு காமிக்ஸ் கண்டிப்பாக அது தான் Black island
மற்ற புத்தகம் மகாபாரதம்.
பதிவை முழுவதும் படிக்க முடியவில்லை, காலையில் இருந்து ஆபீஸ் வேலை இதற்கு நடுவில் குடும்ப வேலைகள்... நள்ளிரவில் பதிவை படித்துவிட்டு வருகிறேன்!
ReplyDeleteசீனியர் எடிட்டர், எடிட்டர்,ஜூனியர் எடிட்டர், அவர்தம் குடும்பத்தினருக்கும், பணியாளர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்கள் , மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDelete
ReplyDeleteசீனியர் எடிட்டர், எடிட்டர், ஜூனியர் எடிட்டர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும்
பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும்
நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கும்
இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🏼💐💐💐
// இந்த லாக்டௌன் தினங்களின் இறுக்கமான பொழுதுகளை சற்றே இலகுவாக்கிக் கொள்ள இங்கு நீங்கள் தலைகாட்டும் தருணங்கள் உதவிடுவது புரிகிறது ! //
ReplyDeleteஉண்மையே சார்
.
ஒரேயொரு காமிக்ஸ்....
ReplyDeleteகறுப்பு வெள்ளையில் வெளிவந்த இரத்தக்கோட்டை தொடர்.
இது வெளியான காலத்தில் இது ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம்.
மிக அதிகமுறை வாசித்த கதை இதுவாகத்தான் இருக்கும்.
கூடுதலாக காமிக்ஸ்க்கு வாய்ப்பிருந்தால் சார்லியர் அவர்களுடைய டைகர் தொடர் அனைத்துமே.
எதிர்காலத்தில் (நான்கு ஆண்டுகளுக்கு பிறகு) என்றால் தோர்கல் தொடரின் அனைத்து கதைகளையும்.
அனேகமாக இத்தொகுப்பு ஒரே செட் பாக்ஸில், அனைத்து கதைகளுமே ஐந்து தொகுதிகளாக வெளிவரும் வாய்ப்புள்ளது.
ஒட்டுமொத்த தமிழ் காமிக்ஸ் இரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று; ஆசிரியர் குழு மிகப்பெரும் சிரமங்களுக்கிடையேயும் இன்முகத்தோடு இதை சாதித்திருப்பர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு,ஹிந்தி என்று பல்வேறு மொழிகளில் வெளிவந்து பலரையும் வியப்பில் ஆழ்த்தும் தருணமாக அது அமையும்.
அது போல் ஒரு பொற்காலம் உருவாக வேண்டும் என்பதுதான் ஒரு சாமான்ய காமிக்ஸ் இரசிகனுடைய வேண்டுதலாக இருக்கும்.
அதே காலகட்டத்தில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆசிரியர்களில் ஒருவராக பரிணமித்திருப்பார்.
பிஸ்டலுக்கு பிரியாவிடை க்ராபிக் நாவல் கூட சிறந்த மொழிப்பெயர்ப்புக்காக கௌரவிக்கப்பட வேண்டிய படைப்பு.
இதை அனைத்தையும் கடந்து வான்ஹம் அவர்கள் படைப்பிலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற கனவும் உண்டு.
நல்லாருக்கு..எல்லாமும் இருக்கு நண்பரே
Deleteஅட்டெண்டன்ஸ் கூட போடாம முழு பதிவையும் வேகமா படிச்சு முடிச்சாச்சு.
ReplyDeleteஒரே ஒரு காமிக்ஸ் தான் எடுத்துட்டு போகனும்னா: மின்னும் மரணம் கலெக்டர் ஸ்பெசல்.
கூட இன்னொரு காமிக்ஸ் அல்லாத புத்தகம்னா: பொன்னியின் செல்வன். காமிக்ஸ்னா: ரத்தப்படலம் கலர்
//
Deleteஒரே ஒரு காமிக்ஸ் தான் எடுத்துட்டு போகனும்னா: மின்னும் மரணம் கலெக்டர் ஸ்பெசல். // ஷெரீஃப் ஹிஹிஹி பீப்பீ ஊதும் சிப்பாய்
மின்னும் மரணம்-- கிரேட் காவியம்! பெஸ்ட் பிக்!
Deleteஎன்னது பாட்டுப் போட்டியா. இந்த மேச்சரி தீவிரவாதிங்க வர முன்னாடி ஓடிப் போயடுவோம். 🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️
ReplyDeleteபாவம்பா ஜட்ஜ்ங்க காதுகள்...!! இதுக்கு என்ன "காது"---கவிதை சொல்றாரு செயலர் னு பார்ப்போம்!
Deleteஎடிட்டர்&டீம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDelete"திருச்செந்தூரில்
ReplyDeleteகடலோரத்தில்
ஸ்டீலார் ஆடும் கரகாட்டம்!
ஓடி ஓடி ஒளிவோர்க்கெல்லாம்
தினமும் தொடரும் போராட்டம்!"
-முன்கூட்டிய வாழ்த்துகள் ஸ்டீல் அண்ணே!
நன்றி நண்பரே
Deleteஎன் காந்தர்வ குரலுக்குக் கட்டுப்பட்டு இங்க ஓர் அசைவும் இல்ல நண்பரே..திருவிளையாடல்ல அந்த பாட்ட பாத்தாப்ல இருக்கே
தேடித் தேடி வருவோர்க்கெல்லாம்
Deleteநிதமும் பாடுவேன் குயிலாட்டம்
:+)
Deleteசெத்தான் சேகரு....🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
Deleteஉங்க செல் போனை ரிப்பேர் பார்த்துத் தந்த கடைக்காரர் நம்பர், கிம்பர் ஏதாச்சும் இருக்கு ஸ்டீல் ?
Deleteஹா ஹா ஹா.. :))))))))
Deleteஜாலி ஜாலி ஜாலி ஜாலி
Deleteஜாலி ஜாலி ஜாலி ஜாலி
நான் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி விஜயனுக்கு தாத்தாவின் லாலி
நான் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி விஜயனுக்கு தாத்தாவின் லாலி
முட்டையான கண்ணனுக்கு ஹ ஹா ஹா
முட்டையான கண்ணனுக்கு சௌந்தர்ய லாலி
சித்திரம் விடும் பேரனுக்கு ஸ்பைடர்தான லாலி
நான் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி விஜயனுக்கு தாத்தாவின் லாலி
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
ஜாலிஜம்பருக்கு லக்கி நானே
ஜாலிஜம்பருக்கு லக்கி நானே
டெக்சாசு வீரனுக்கு போனல்லி நானே
டெக்சாசு வீரனுக்கு போனல்லி நானே
பேரா லயன் காமிக்சுக்கு
பேரா லயன் காமிக்சுக்கு காரணமும் நானே
பேரா லயன் காமிக்சுக்கு காரணமும் நானே
பார் போற்றும் ஜேசனுக்கு இரத்தப்படலம் நானே
பார் போற்றும் ஜேசனுக்கு ரத்தப்படலம் நானே
நான் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி விஜயனுக்கு தாத்தாவின் லாலி
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
அறிவான கண்ணனுக்கு ஃபைனான்சும்் நானே
அறிவான கண்ணனுக்கு ஃபைனான்சும் நானே
விஜயன பாட வந்த கந்த நாடன் நானே
விஜயன பாட வந்த கந்த நாடன் நானே
எம்பேரனுக்கு தாத்தாவும் நானே
எம்பேரனுக்கு தாத்தாவும்
நானே
சௌந்தரபாண்டி புதல்வனுக்கு தியாகய்யர் நானே
நான் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி விஜயனுக்கு தாத்தாவின் லாலி
முட்டையான கண்ணனுக்கு சுகமான லாலி
சித்திரம் லிடும் பேரனுக்கு ஸ்பைடர்தான
வகையான லாலி
நான் தந்த சாமிக்கு பதமான லாலி
ராஜாதி விஜயனுக்கு தாத்தாவின் லாலி
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
சித்திரம்
இந்த ரணகொடூரத்திலிருந்து மேலே போனவராச்சும் நிம்மதியாக இருந்துப் போகட்டும் சாமீ !
Deleteஎடிட்டர் சார் :-))))))))))
Deleteஆசரியர்சார்...:-)))
Deleteடொக்....
Deleteதிருத்திய பதிப்பு மேலே
Deleteநல்ல வேளை என் பையனுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது... கடவுள் இருக்கிறார் குமாரு :-)
Deleteவேதாளரின் "பூ விலங்கு".. இதெப்படி கீது ?
ReplyDeleteசமையல் ரெடி, பொறியல் ரெடி, குழம்பு ரெடி என நம்ம ஷெரீப் ஐயா சமைக்கும் காட்சிகள் மேலே எடிட்டர் சார்,பதிவுல அப்டேட் செய்து உள்ளார்....!!! எல்லாம் வாங்கப்பா போய் வயிறாற சாப்பிட்டு விட்டு வரலாம்.
ReplyDeleteஹா ஹா!! நண்பர்களின் லாக்-டவுன் டேஸ் ஃபோட்டோக்கள் கலக்கலாக இருக்கிறது!! பட்டையக் கிளப்புறீங்க நண்பர்களே!! :)))
ReplyDeleteSir Latest order by MHA allowing Postal service and Courier service without restriction. Will it be a good news for us?..
ReplyDeleteUntil we are permitted to work, how will the couriers be of help to us sir ?
Delete// Until we are permitted to work, how will the couriers be of help to us sir ? //
Delete+1
காமிக்ஸ் உலக குடிமக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteவிஜயன் சார், தங்களிடம் ஒரேயொரு மறுபதிப்புக் கோரிக்கையை முன்வைக்கலாமா ? நிஜங்களின் நிசப்தம் இலங்கைக்கு வரவில்லை சார். தங்களிடமே விற்று முடிந்ததாகக் கேள்விப்பட்டேன். மிகவும் ஆசையுடன் எதிர்பார்த்திருந்த அந்தப் புத்தகம் கிடைக்காமல் போனது, பெருத்த ஏமாற்றமாய் உள்ளது. இக்கதையை மீண்டும் குறைந்த பிரதிகளாக வெளியிட்டால் இலங்கை வாசகரும் பெறமுடியும். உடனே இல்லாவிடினும் காலவோட்டத்தின் அண்மித்த ஆண்டொன்றில் வெளியிடுவீர்களா ?
ReplyDeleteவாய்ப்புகள் மிகச் சொற்பம் நண்பரே ! இருநூற்றிச் சொச்சம் டைட்டில்களை கிட்டங்கி முழுக்க அடுக்கிக் காத்திருக்கும் சூழலில், இப்போதைக்குள் சமீப இதழ்கள் மறுபதிப்புக் காண்பது நடைமுறை சாத்தியமாகாது ! And குறைந்த பிரதிகள் அச்சிடுவதென்பதெல்லாம் அதை விடவும் சிரமம் !
DeleteSo யாரிடமேனும் இது விற்பனைக்குள்ளதா ? என்று அறிய முயற்சியுங்கள் - அதுவே யதார்த்தத் தீர்வாய் இருக்கும் !
Ok sir :)
Delete*FLASH NEWS*
ReplyDeleteஏப்ரல் 20 முதல் கொரீயர்கள் இயங்கலாம்.
நாங்க கதவைத் திறக்க அனுமதி வேணுமில்லீங்கோ தல ? இல்லாங்காட்டி ரவுண்ட் பன்னைத் தான் வாங்கி கூரியரில் அனுப்ப முடியும் !
Deleteபட், இந்த டீல் எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்குங் சார்! ;)
Deleteஙே...:-(
Deleteஅப்ப....மே..
Deleteஇவ்வளவு நாள் பொறுமை காத்த நாம் இன்னும் ஒரு 20 நாட்கள் பொறுமை காக்க மாட்டோமா என்ன! காத்திருக்கிறோம் மே வரை!
Deleteஆசிரியரே தம்பி செந்தில் சத்யா என நீங்கள் பதிவிட்டதற்க்கு நன்றி நன்றி மிக்க நன்றி
ReplyDeleteஎடிட்டர் சார் நீங்கள் லோட் செய்த ஃபோட்டோ எல்லாம் அருமை அருமை. ஹிஹிஹி
ReplyDeleteசெந்தில் சத்யா போட்டோ அமர்க்களம்!
ReplyDeleteஎங்க ஓனருக்கே அந்த பெருமை அவர்தான் நம்மிடம் இருக்கும் வேஸ்டாக உணவுகளை சமைத்து ஆதரவற்றவர்களுக்கு கொடுக்கலாமென சொன்னார் நான் வெறும் பங்களிப்பு மட்டுமே சகோதரரே
Deleteநல்ல மனம் வாழ்க.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅனுப்பியாச்சு..
ReplyDeleteஸ்டீல் அண்ணா, நீங்க வாங்கிய காமிக்ஸ் புத்தகங்களை பாதுகாக்கும் முறை பற்றிக் கொஞ்சம் கூறமுடியுமா ?
ReplyDeleteஆனாலும் திட மனசு நண்பரே உங்களுக்கு ! ஒரு டீயையும், பன்னையும் போட்ட கையோடு பாணபத்திரர் வந்து மொத்தப் பேரையும் வச்சு செய்வாரு பாருங்கோ !
Deleteஹிஹி!! ஹைய்யோ.. ஹைய்யோ!! :)))
Deleteஎடி சார்.. ;)
Deleteஒரே ஒரு புக் மின்னும் மரணம், கூடவே பிபிவி
ReplyDeleteநான் மீளப் படிக்க விரும்பும் புத்தகம் - சுஸ்கி விஸ்கியின் பேரிக்காய் போராட்டம், பயங்கரப் பயணம், வாண்டு மாமாவின் மலைக்குகை மர்மம்
ReplyDeleteநான் மறுவாட்டி பாக்க (?)/ படிக்க நினைக்கற புக் .
ReplyDelete1985-ல் வெளிவந்த பிரிட்டிஷ் டேப்லாய்ட்
"சன்"..அதும் காமிக்ஸ் மாதிரிதான் கொஞ்சம் எழுத்து நிறைய படம்( ப்ளேபாய் மாதிரின்னு வச்சுக்குங்களேன்;-) ]சமந்தா ஃபாக்ஸ் (samantha fox)அப்ப மூணாம் பக்கத்துல ரொம்ப ஃபேமஸ்..;-)
வேற புத்தகம் என்னா படிக்க நினைக்கறேங்கறத விட என்னா படிக்க முடியும்ங்கறதுதானே விஷயமே!!!
பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள்/ மதனகாமராஜன் சொன்ன மன்மத கதைகள்..:-)[ கண்ணுங்க அந்த நிலைமையில இருக்கு]
பி.கு..எல்லா பதிலுமே ஸீரியஸா இருக்கனும்னு கட்டாயம் இல்லதானே?
:-)
பாக்கற புக்கா கேட்டாங்க? நான்
Deleteபடிக்கற புக்குன்னு நினைச்சு கன்ப்யூஸ் ஆயிட்டேன் செனா.
நான் பாக்க நினைக்கற புக்கு என்னன்னா.....
வேண்டாம்..அப்புறம் வீட்ல முதுகு புண்ணாகிடும்.
ரம்மி தலைமேட்டில இருக்கற புக்கெல்லாம் டெக்ஸ் புக் மாதிரி இருக்கே?
ReplyDelete