நண்பர்களே,
வணக்கம். இன்று காலை கண்விழித்த போது கண்ணில்பட்ட மின்னஞ்சல் நமது ஜட்ஜ்களின் தாக்கீதே !! புண்ணியத்துக்கு அதன் "மொழிபெயர்க்கப்பட்ட' படிவம் எனக்கு அனுப்பப்பட்டுள்ளதால் நானும், நீங்களும் தப்பித்தோம் ! Anyways - இரட்டை பெஞ்சின் தீர்ப்பு இதோ :
========================================================================
========================================================================
Dear Vijayan sir,
நானும் ஸ்டீலும் சேர்த்து சிறந்த caption ஆக இந்த மூன்று நண்பர்கள் எழுதியதை தேர்வு செய்துள்ளோம்.
படம்1:
Puthagapriyan0
B & C. டேய் டைலன் ஓடாத நில்லு நில்லு!!!
A. (ஓடியவாறே) அடேய் கரோனா மண்டையனுங்களா, நம்ம கவர்மெண்ட் ரூல்ஸ் படி social distancing ஒரு மீட்டர் மெயின்டெய்ன் பண்ணிகிட்டே தொரத்துங்கடா... எஸ்கேப்...
படம்2:
saravanan
கேப்ஷன் இரண்டு;
டைகர்:ஏம்பா டெக்சு சாப்பிட ரவா உப்புமா வேணுமா ,கோதுமை உப்புமா வேணுமா?
டெக்ஸ்; ஹூம்...போற உயிர் கொரானாவாலே போகட்டும்!!
படம்3:
இவர் எழுதிய இந்த மூன்றும் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று போட்டி போடுவதாக இருந்தது!
Partheeban
A.ஆனாலும் இந்த எடிக்கு ரொம்ப தான் குசும்பு..
B.ஏன் நண்பா?
A.நான் பேசற டயலாக்குக்கு மட்டும் "A" போட்டு ரவுண்ட் பண்ணிருக்கார் பாரேன்.
A.நாம இருக்கறது எமனின் எல்லையிலா டெக்ஸ்?
B.எமனே எல்லைய தாண்டி வந்து பஞ்சராக்குனதுக்கப்புறம் இந்த பஞ்ச்செல்லாம் தேவைதானா
A.கொரோனாவுல இருந்து தப்பிக்க மக்களுக்கு அழகா ஒரே ஒரு வாக்கியத்துல ஏதாவது சொல்லு நண்பா
B.கரம் சிரம் புறம் நீட்டாதே
SPECIAL PRIZE CATEGORY:
எனக்கு இந்த இரண்டும் பிடித்து இருந்தது, ஆனால் பரிசு மூன்று பேருக்கு மட்டும்தான் என்பதால் இவர்கள் இருவருக்கும் தலா ஒரு ஜம்போ சந்தா எனது சார்பில் பரிசு அளிக்க விரும்புகிறேன்!
Govindaraj Perumal
படம்2:
டைகர் : நலந்தானா? நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா.?
டெக்ஸ் :உனக்கென்னப்பா வருஷத்துக்கு ஒரு வாட்டிதான் தலையைக் காட்டுவே.என் கதை அப்படியா? நான் மாச மாசம் வந்தேதான் ஆகணும்.அதான் திக் திக்னு இருக்கு.
Padmanaban.R
கேப்டன் :
டைகர் : டெக்ஸ். என்ன யோசிக்கிற.
டெக்ஸ் : கொரோனாவ பரவாம கட்டுப்படுத்த மாஸ்க் நிறையே வேணுமாம். நம்ம டயபாலிக்கோட கான்டாக்ட் நெம்பர கொடுக்கலாமான்னு யோசிக்கிறேன். அவருதான் நிமிசத்துல விதவிதமா மாஸ்க்கு ரெடி பண்ணிடுவாரே.
டைகர் : சூப்பரப்பு.
Thanks, Steel Claw & Parani from Bangalore
========================================================================
ஒரு வரலாற்றுச்சிறப்புமிக்க தீர்ப்பை (!!) வழங்கியதோடு நிறுத்திக் கொள்ளாது, மேற்கொண்டு பரிசுக்குரிய 2 தேர்வுகளையும் செய்துள்ளனர் நமது ஜட்ஜ் மக்கா !! அடுத்த சம்மருக்கு ஆளுக்கொரு நொங்கு பதனி எக்ஸ்டரா லே !!
And now - தேர்வு பெற்றிருக்கும் நண்பர்கள் தம் முகவரிகளை, செல் நம்பர்களை குறித்தொரு மின்னஞ்சலைத் தட்டி விட்டால் - ஜம்போவின் சீசன் 3 சந்தாப் பட்டியலில் இணைத்திட ஏதுவாயிருக்கும் ! Just in case இங்கே வெற்றி பெற்றுள்ள நண்பர்கள் ஏற்கனவே ஜம்போ சீசன் 3-க்கு சந்தா செலுத்தியிருப்பின், இந்தத் தொகையினை (ரூ.999) வேறெதெற்கேனும் முன்னெடுத்துச் சென்று கொள்ளலாம் ; அல்லது நண்பர்கள் வேறு யாருக்கேனும் சந்தா அன்பளிப்பாகவும் செய்திடலாம் ! அது குறித்தும் மின்னஞ்சலிலேயே கூட தகவல் சொன்னால் மதி !
And இதுவரையிலும் ஜம்போ சீசன் 3-ன் பயணத்திற்கும் சரி ; நடப்பாண்டின் ரெகுலர் சந்தாவிற்கும் சரி, enrol செய்திரா நண்பர்கள் இயலும் பட்சத்தில் இப்போது இணைந்திட முனைந்திடலாமே - ப்ளீஸ் ? ஏப்ரல் to டிசம்பர் 20 என ரெகுலர் சந்தாவில் புதிதாயொரு ஏற்பாடே செய்துள்ளோம் உங்கள் வசதிகளின் பொருட்டு ! http://lioncomics.in/2020-subscription/692-2019-abcde-tn.html
Bye guys....See you around ! Have a Safe weekend & more !! புதிய பதிவோடு ஞாயிறு காலை சந்திக்கிறேன் !
And now - தேர்வு பெற்றிருக்கும் நண்பர்கள் தம் முகவரிகளை, செல் நம்பர்களை குறித்தொரு மின்னஞ்சலைத் தட்டி விட்டால் - ஜம்போவின் சீசன் 3 சந்தாப் பட்டியலில் இணைத்திட ஏதுவாயிருக்கும் ! Just in case இங்கே வெற்றி பெற்றுள்ள நண்பர்கள் ஏற்கனவே ஜம்போ சீசன் 3-க்கு சந்தா செலுத்தியிருப்பின், இந்தத் தொகையினை (ரூ.999) வேறெதெற்கேனும் முன்னெடுத்துச் சென்று கொள்ளலாம் ; அல்லது நண்பர்கள் வேறு யாருக்கேனும் சந்தா அன்பளிப்பாகவும் செய்திடலாம் ! அது குறித்தும் மின்னஞ்சலிலேயே கூட தகவல் சொன்னால் மதி !
And இதுவரையிலும் ஜம்போ சீசன் 3-ன் பயணத்திற்கும் சரி ; நடப்பாண்டின் ரெகுலர் சந்தாவிற்கும் சரி, enrol செய்திரா நண்பர்கள் இயலும் பட்சத்தில் இப்போது இணைந்திட முனைந்திடலாமே - ப்ளீஸ் ? ஏப்ரல் to டிசம்பர் 20 என ரெகுலர் சந்தாவில் புதிதாயொரு ஏற்பாடே செய்துள்ளோம் உங்கள் வசதிகளின் பொருட்டு ! http://lioncomics.in/2020-subscription/692-2019-abcde-tn.html
Bye guys....See you around ! Have a Safe weekend & more !! புதிய பதிவோடு ஞாயிறு காலை சந்திக்கிறேன் !
வாழ்த்துக்கள் நண்பர்களே!
ReplyDeleteநன்றிகள் பல. பரணி & ஸ்டீல். என்னுடைய Captionம் தேர்வாகும் என்று சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை.Really Surprised. thanks to all.
ReplyDeleteஎதிர்பாரா புதயல்கள் இன்னமும் கிடைக்க செந்தூரான் அருளட்டும்
Deleteவாவ்... சூப்பர்... வாழ்த்துகள் பத்து சார்💐💐💐💐
DeleteReally sir. This is my First participation in competition.not only our blog. இது வரையில் நான் எந்த போட்டிகளிலும் கலந்துகொண்டது இல்லை. இதிலும் just like, as usual கமண்ட் மாதிரிதான் போட்டேன். தேர்வு செய்யப்படும் என்று நினைக்கவில்லை.
Deleteபத்து சார் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். என் மனம் கனிந்த வாழ்த்துக்கள். ஸ்டீல் சொன்னது போல இன்னும் பல வெற்றிகள் உங்களை தேடி வரட்டும்.
DeleteCaption results
ReplyDeleteVery disappointed.
Not fair results. Any way congratulations for winners.
தவறான எண்ணம் சார் ; ரசனைசார் விஷயங்களில் உங்களோடு ஒத்துப் போகா விஷயங்களை "not fair " என்று முத்திரை குத்துவது எவ்விதம் நியாயமாகிடும் ? இது அல்ஜீப்ரா இல்லையே - யார் கைவைத்தாலும் ஒரே விடை பலனாகிட ?
Deleteநண்பரே வண்ணங்கள் ஏழுமே அழகே....ஆனா கருப்பு கூட பலருக்கும் பிடிக்குது....அதனால விருப்பு வெறுப்பின்றி வாழ்த்துவோம் அனைவரையும்...வெற்றி
Delete"Not fair" வாக்கியத்தை உபயோகித்திருக்க கூடாதுதான். வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். But judges இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
Delete5
ReplyDeleteசார் புதிய பதிவு நாளைதானா....ஆ...ஆ...ஆ...
ReplyDeleteHi..
ReplyDeleteபங்கு பெற்ற...நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துகள் நண்பர்களே..
ReplyDeleteவாவ்!! சூப்பர்!!!
ReplyDeleteபோட்டியில் வெற்றிவாகை சூடி ஜம்போ-சீஸன்3ஐ பரிசாகப் பெறயிருக்கும் நண்பர்கள்
புத்தகப்பிரியன்
சரவணன்
பார்தீபன்
GP
பத்து
ஆகியோருக்கு கரகோஷத்துடன் கூடிய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!! அசத்துங்கள் நண்பர்களே!!
நன்றி.ஈ.வி.
Deleteநன்றி நண்ரே....
Delete-சாதா சரவணன்-
நன்றி ஈ.வி யாரே.!
Deleteமொத்தம் மூணு சந்தாதானே ஆசிரியர் அறிவித்தார்.ஆனால் வெற்றி பெற்றவர்கள் நான்குபேர்.
Deleteஅப்படியானால் நான்கு சந்தாவா?
ஆசிரியர் அறிவித்தது 3 எங்கள் சார்பில் 2 மொத்தம் 5 பரிசுகள் கோவிந்தராஜ்.
Deleteசாதா சரவணருக்கு வாழ்த்துக்கள்.
Deleteஅருமை பரணி சார் செம...!
Deleteபங்கு பெற்றோர்க்கு பாராட்டுகள்!!!
ReplyDeleteவெற்றி பெற்றோர்க்கு வாழ்த்துகள்!!!
வாழ்த்துக்கள் நண்பர்களே....
ReplyDeleteஎடிட்டர் சார்... நான் ஏப்ரல் to டிசம்பர் சந்தா ஆன்லயனில் கட்டிவிட்டேன்... எனக்கு எதேனும் சந்தா எண் கிடைக்குமா??
உள்ளேன் ஐயா..!!
ReplyDeleteவாழ்த்துகள் நண்பர்களே..!
பாராட்டுகள் நடுவர்களே..!!
வாழ்த்துகள் நடுவர்கள் & நண்பர்களே
ReplyDelete****தனக்கு சாதகமாக தீர்ப்புச் சொல்லாத நீதிபதிகளின் காதுகளைக் கடித்துத்துப்பி ஈரோட்டு வாலிபர் வெறிச்செயல் - பொதுமக்கள் அதிர்ச்சி!****
ReplyDelete(தினத்தந்தியில் ஆகஸ்டு மாதம் வெளியாக உள்ள செய்தியின் தலைப்பு இது!)
நடக்கும்லே.. கண்டிப்பா நடக்கும்!
செயலர்லே ! எனக்கு ஒரு காதுலே ;-)
Deleteகடிக்கிறதுக்கு முன்னாடி கொரோனா கன்ஃபார்ம் பண்ணிடுங்க. கொரோனா காதிலிருந்து வாய் வழியே பரவும் அபாயம் உண்டு.
Deleteவாலிபர்?????
Deleteகாதை கழற்றி வைத்து வருவோம்ல... இதுக்கு எல்லாம் பயப்பட மாட்டோம்ல விஜய் :-)
Delete///வாலிபர்?????///
Deleteமாலைமலர் :
***எடக்குமடக்காக கேள்வி கேட்ட மருத்துவரின் காதுகளைக் கடித்துத்துப்பி ஈரோட்டு வாலிபர் வெறிச்செயல் - பட்டப்பகலில் பயங்கரம்!!***
// ***எடக்குமடக்காக கேள்வி கேட்ட மருத்துவரின் காதுகளைக் கடித்துத்துப்பி ஈரோட்டு வாலிபர் வெறிச்செயல் - பட்டப்பகலில் பயங்கரம்!!*** //
Deleteகாதை மட்டும் தானே......!!!!!!
@Saravanan R
Delete///செயலர்லே ! எனக்கு ஒரு காதுலே ///
ஏங்க.. நாங்க என்ன கறிக்கடையா வச்சு நடத்திக்கிட்டிருக்கோம்? கிர்ர்ர்...
வாலி....பர்ர்ர்ர்....
Deleteவயோதிக வாலிபர்
Delete#தவறான எண்ணம் சார் ; ரசனைசார் விஷயங்களில் உங்களோடு ஒத்துப் போகா விஷயங்களை "not fair " என்று முத்திரை குத்துவது எவ்விதம் நியாயமாகிடும் ? இது அல்ஜீப்ரா இல்லையே - யார் கைவைத்தாலும் ஒரே விடை பலனாகிட ?#
ReplyDelete5-ல் 4 கேப்ஷன்கள் கொரோனா தொடர்புடையவை!தேர்வு செய்யப்பட்டவை கடந்த காலத்துக்கு உகந்ததாக இல்லாமல் நிகழ் காலத்துக்கு மட்டும், குறிப்பாக 2020க்கு மட்டும் பொருந்துவதாக உள்ளது.ஆசிரியர் கேப்ஷன்கள் கொரொனா தொடர்பாக இருக்க வேண்டாம் என ஒரு கட்டுப்பாடு விதித்திருந்தால் இயல்பான நல்ல கேப்ஷன்கள் கிடைத்திருக்கும்.இருப்பினும் நண்பர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வோம்.வெற்றி பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுக்கள்!
மகிழ்ச்சி நண்பர்களே...
ReplyDeleteதேர்வு செய்த நண்பர்களுக்கும் வாழ்த்திய நல் உள்ளங்களுக்கும்
ஸ்பெசலாய் நம் எடி சாருக்கும் நன்றிகள் கோடி...
வாழ்த்துக்கள் பார்த்தீபன் சார்.
Deleteஆ...சொக்கா எனக்குப் பரிசு கிடைத்துவிட்டதா ?
ReplyDeleteஇன்ப அதிர்ச்சியில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
தேர்ந்தெடுத்த நீதிபதிகளுக்கும் வாழ்த்திய நண்பர்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வாழ்த்துக்கள் சாதா சரவணன்
Deleteநன்றி குமார் சார்.
Deleteபங்குகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்🍫🍫🍫🍫🍫
ReplyDeleteவெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள்💐💐💐💐💐
சிரம்மான நடுவர் பணியாற்றிய க்ளா&பரணி பாராட்டுகள்🍧🍧🍧🍧🍧
நண்பர்கள் எழுதிய captions சுமார் 21 பக்கங்கள் வந்தன. சில நண்பர்கள் அதிகப்படியான கேப்ஷன் எழுதி இருந்தார்கள்.
ReplyDeleteஅனைவரும் சிறப்பாக எழுதி இருந்தார்கள். எதை தேர்ந்தெடுப்பது என மிகவும் கஷ்டமாக இருந்தது.
எனக்கு சக்தி இருந்தால் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் கொடுத்து சந்தோஷபடுத்தி பார்க்க ஆசை.
உங்களின் ஆர்வம் மிகவும் பாராட்டுக்குரியது. எங்களால் முடிந்தவரை சிறப்பாக செய்து இருக்கிறோம் என நம்புகிறேன்.
வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி சார்.
Deleteஇங்கு நாங்கள் தேர்வு செய்த நண்பர்களை இதுவரை நேரில் சந்தித்து இல்லை. உங்கள் அனைவரையும் ஈரோட்டில் சந்திக்க ஆர்வமுடன் உள்ளேன்.
Delete
Deleteபாராட்டுகள் பரணி..👏👏👏👏
அவசியம். பரணி. முதன்முறையாக.
Deleteசகோ முன்பு பிளாக்கில் போட்டிகளில் வித்யா என்ற பெயரில் வழக்கமாய் வநதவன் நானே....கண்டிப்பாக ஈரோட்டில் சந்திப்போம் சகோ
Deleteஞாபகம் உள்ளது பார்த்திபன் ஆனால் இதுவரை நான் உங்களை நேரில் சந்தித்ததாக ஞாபகம் இல்லை.
Deleteஈரோட்டில் காதுகள் இல்லா இரண்டு (அல்லது மூன்று) மனிதர்களை நீங்கள் சந்திக்க இருக்கிறீர்கள் நண்பர்களே!!
Deleteதலையில்லாமல் இருந்தால் தான் கஷ்டம்,காதுகள் இல்லாம இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்களாம்........
Delete///காதுகள் இல்லாம இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்களாம்.///
Deleteமகிழ்ச்சியான செய்தி!!
///எனக்கு சக்தி இருந்தால் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் கொடுத்து சந்தோஷபடுத்தி பார்க்க ஆசை///--நல்ல மனம் வாழ்க! வாழ்த்துகள் பரணி! உங்கள் அனுமதி உடன்,சத்தமாக....
Delete"நண்பேன்டா💪💪💪💪💪"
இதுவரை சந்தித்ததில்லை..ஏற்கனவே சில முறை கேப்சன் ஜெயித்துள்ளேன் நண்பா
Deleteகாது ....இருக்காது....
Delete...இருகாது....
இருக்காதுன்னாலே....இருகாது இருக்குதே...இருந்தாலும் இரு காது இருக்குமே
நானும் வெற்றி பெற்ற நண்பர்களை ஈரோட்டில் காண ஆவலாக உள்ளேன்.
Deleteகலந்து கொண்ட நண்பர்களுக்கு 👍
ReplyDeleteவெற்றியாளர்களுக்கு 💐🎂
முடிவெடுத்தவர்களுக்கு. 👏👏👏
ஹைய்யா புதிய பதிவு......
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.........
ReplyDeleteகாமெடி பண்றனு சொல்லி மொக்க போடறதா இனிமே கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கணும்ப்பா !
ReplyDeleteஆனாலும் நம்ம மனசு கஷ்டப்படக்கூடாதுனு சிரிச்சு வச்ச நம்ம செயலர் மற்றும் சேலம் பாஸ் ஒட மனதைரியத்துக்கு மீண்டும் ஒரு நன்றி ;-)
"கேப்சன்" சரவணன் பாஸ்@ நிறைய கேப்சன்கள் வாய்விட்டுச் சிரிக்கும்படி இருந்தது. போர் அடிக்கும் வாரத்தின் இடைபட்ட நாட்கள் இம்முறை கலகலக்கும் காமெடி வெடிகளோடு கடந்து போனது. வாய்ப்பு இருக்கும் ஒவ்வொரு முறையும் தொடர்ந்து கலக்குங்கள்! ரசிக்க நாங்கள் இங்கே காத்து இருக்கிறோம்.
Delete////ஆனாலும் நம்ம மனசு கஷ்டப்படக்கூடாதுனு சிரிச்சு வச்ச நம்ம செயலர் மற்றும் சேலம் பாஸ் ஒட மனதைரியத்துக்கு///
Deleteஹா ஹா!! :)))) ஹியூமர் - உங்களுக்கு இயல்பாவே வருது நண்பரே!! தொடர்ந்து கலக்குங்கள்!!
பேச்சுவாக்கிலான இயல்பான நகைச்சுவை வாய்விட்டு சிரிக்க வைத்தது நிஜம்தான் சார்.
Deleteதொடர்ந்து கலக்குங்கள்.!
// காமெடி பண்றனு சொல்லி மொக்க போடறதா இனிமே கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கணும்ப்பா ! //
Delete:-)
அட பாவம்மே! இதை சொன்னதான் பரணி சிரிப்பாருனு தெரியாம போச்சே !
Deleteகேப்ஷன்லயே இதை சொல்லியிருக்கலாமே! வட போச்சே ;-)
This comment has been removed by the author.
Deleteபோட்டாக்காண்டி அல்ல;
ReplyDeleteலூட்டிக்காண்டி மட்டுமே!
என எப்போதும் கலந்து கொள்ளும் ஈரோட்டு வாலிபரை(?????) வெறி கொள்ளச் செய்தது எதுவோ???
இருவரது காதைக் கடித்த மர்மம் என்னவோ???
---நடந்தது என்ன???
ஏற்கனவே ஜம்போ-சீசன்3்க்கு பணம் கட்டிவிட்ட நான், இப்போட்டியில் ஜெயித்தால் எனக்குக் கிடைக்கும் பரிசை இதுவரை ஜம்போவுக்கு பணம் செலுத்தாத நண்பர் கரூர் ராஜசேகருக்கு கொடுத்துவிட எண்ணியிருந்தேன்! அது மிஸ் ஆனதாலேயே இந்த வெறித்தனம்!! இந்த குரூரம்!! இந்தக் கோரத்தாண்டவம்!!
Deleteஓவ்...! அடுத்த போட்டியில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த சீசன்3 இதழ்களை வாங்கி தந்துட்டா போச்! சாந்தி!சாந்தி!
Deleteசூப்பர் செயலரே ! நான் கூட செந்தில் சத்தியாவுக்கு குடுக்கணும் நெனச்சேன் !
Delete///சூப்பர் செயலரே ! நான் கூட செந்தில் சத்தியாவுக்கு குடுக்கணும் நெனச்சேன்///
Deleteசூப்பர்!! உங்கள் நல்ல மனம் வாழ்க!
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்...:-)
ReplyDeleteகேப்சன் போட்டியில் என்னுடையதும் தேர்வானது மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது.நண்பர்களின் வாழ்த்துகள் மேலும் மேலும் எனர்ஜியைத் தருகிறது.
ReplyDeleteஅனைத்து நண்பர்களும் மிகச்சிறப்பான முறையிலே கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்துள்ளனர்.
எடிட்டர் சார்.
ReplyDeleteநான் ஏற்கெனவே ஜம்போ சீஸன் 3க்கு சந்தா செலுத்தி விட்டேன். எனவே நமது காமிக்ஸ் நண்பர்களில் தற்சமயம் சந்தா செலுத்த இயலாத நண்பர் யாருக்காவது இந்த பரிசினை அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றிகள் பல.
// நண்பர் கரூர் ராஜசேகருக்கு கொடுத்துவிட எண்ணியிருந்தேன்!//
Deleteஇவருக்கு கொடுக்கலாம் பத்மநாபன். Just a suggestion.
ராஜசேகருக்கு சிபாரிசு செய்தமைக்கு நன்றிகள் PfB!
Deleteநண்பர் ஈவியின் விருப்பமே என் விருப்பமும். கரூர் ராஜேசேகர் அவர்களுக்கு என் சார்பாக இந்த பரிசினை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
ReplyDeleteநன்றி பத்மநாபன். நல்ல மனம் வாழ்க.
Deleteஅருமை...வாழ்த்துக்கள் புரட்சியாரே
Deleteநன்றிகள் பல பத்து சார்!! உங்கள் நல்ல மனம் வாழ்க!!
Deleteகரூர் ராஜசேகர் நிச்சயம் மகிழ்வார்!
பத்து சார்@ ///*பகிர்தல் என்பது வாழ்வில் இன்றியமையாத ஒன்று! நாமும் நம்மிடம் எக்ஸ்ட்ராவாக இருக்கும் புத்தகங்களை அவற்றின் தேடல் இருப்பவருக்கு பகிர்ந்து கொள்ளுவோம். ஏனெனில் நம்மை விட, காமிக்ஸ் புக்கைவிட, காமிக்ஸ் நேசம் மிகப்பெரியது.///---போன பதிவுல நான் கேட்டு கொண்ட வேண்டுகோள். இருநாட்களில் ஒரு புத்தகம் அல்ல ஒரு சந்தாவையே பகிர்ந்து விட்டீர்கள் சார்.
Deleteயூ ஆர் ரியலி கிரேட்!!!
உங்கள் காமிக்ஸ் நேசத்திற்கு தலை வணங்குகிறேன்!
வாழ்த்துகள் கரூர் ராஜசேகரன் சார்💐💐💐💐
// கொண்ட வேண்டுகோள். இருநாட்களில் ஒரு புத்தகம் அல்ல ஒரு சந்தாவையே பகிர்ந்து விட்டீர்கள் சார்.
Deleteயூ ஆர் ரியலி கிரேட்!!! //
+1
பத்மநாதன் சார்..
Deleteதங்களின் நல்ல மனதிற்கு வாழ்த்துக்கள்..கரூர் ராஜசேகர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..:-)
ஏன் மொதலாளி கண் கலங்குறீங்க?
Deleteஇந்த blogல...எல்லாரும்ம் ...என்னிய ...ரொம்ம்ப்ப்ப... நல்லவன்னு சொல்லிட்டாங்ங்ங்க...
அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
Deleteபத்து சார் உங்கள் நல்ல செயலுக்கு எனது பாாட்டுக்களும் நன்றிகளும்
Deleteஎனது விருப்பமும், நோக்கமும் தேவையான இடத்தை சென்றடைய காரணமாக இருந்த நண்பர்கள் ஈ.வி. மற்றும் PFB க்கு என் நன்றியும், பாராட்டுக்களும்.
Deleteசூப்பர் பத்மநாபன் சார்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள் !
Deleteஅருமை பத்மநாபன் சார் நல்ல தரமான செயல் 👏👏👏👏
Deleteஒரு ரகசியம் சொல்லட்டுங்களா.ரெண்டு பேரும் ஒரே ஊர். அதான்.
ReplyDeleteஅடடே!! பரிசு பெற்றவர்களில் ஒருவரான நண்பர் பார்தீபனும் கரூர் என்றே நினைக்கிறேன்!!
Deleteபரிசு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஜட்ஜ் இருவருக்கும் என் நன்றிகள். இத்தனை caption களை படித்து யார் வெற்றி பெற்றவர் என்று சொல்வது மிக சிரமமான காரியமே. பரணி மற்றும் ஸ்டீல் அருமையான பணி சிறப்பு பரிசு அறிவித்தது உங்களது நல்ல மனதை காட்டுகிறது. செம்ம நண்பர்களே
Deleteதோல்வியுற்ற நண்பர்கள் துவளாமல் முயற்சிக்கவும்.
நானும் கரூர்தாங்க.அதாவது கரூருக்கு பக்கத்துல.சுமாரா ஒரு 60 கி.மீ பக்கத்துல..-)
DeleteGP வாழ்த்துக்கள்
Deleteநானும் கரூரே
Deleteமேலும் இந்த பரிசுகளை அறிவிக்க ஸ்பெஷல் பதிவு இட்ட ஆசிரியருக்கும் நன்றிகள். நான் இன்று இரவு பதிவில் தான் இந்த result வரும் என நினைத்தேன். இதற்காக மெனக்கெட்டு இன்று காலை பதிவு இடுவது தங்கள் நல்ல மனதை காட்டுகிறது.
ReplyDeleteஅட..எவ்ளோ நேரம் தான் மோட்டு வளையின் நீள-அகல-உயரப் பரிமாணங்களைக் கணக்கிடுவது சார் ?
Deleteநான் சிறிதும் நினைத்தே பார்க்கவில்லை 😇😇😇. தேர்வு செய்தமைக்கு மிக்க நன்றிகள் PFB and steel. 🙏🙏🙏 வாழ்த்துக்கள் கூறிய நண்பர்களுக்கு நேசத்துடன் நன்றிகள் பல பல🙏🙏🙏
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே
Deleteநன்றி நண்பரே 🙏
Delete@ ALL : விக்கிரமன் படத்து சீன்களை போல இங்கே நேசமும், நட்பும் கை கோர்த்து ஓடுவதை பார்க்கும் போது, எனக்கு பாட்டுப் பாடத் தோன்றுகிறது ! ஆனால் இங்குள்ள சிலபல பொறாமைக்கார "வாலிபர்கள்" கண் போட்டு விடக்கூடும் என்பதால், உள்ளே ஊற்றெடுக்கும் கவிதைகளுக்கு முக்காடைப் போட்டுப் படுக்க வைத்திருக்கிறேன் ! எங்கே எப்போது அது வெடித்துக் கிளம்புமோ தெரிலியே !!
ReplyDeleteபாட்டு வேண்டாம் சார்.ஸ்டீல் டன்டனங்கா டனக்குநக்கா என கிளம்பி வந்து விடுவான். பெரிய கம்பெளி போட்டு மூடி வையுங்கள் உங்கள் பாடலை. :-)
Deleteஎடிட்டர் சார்,
Deleteஉங்கள் பாடலை கேட்'காது'
என் விழிகள் தூங்'காது'
உயிர்மூச்சு வாங்'காது'
இனிமேலும் தாங்'காது'!
EV indha முறை ஈரோடு வரும் போது ஹெல்மெட் ஒன்று அணிந்து வருகிறேன். எதற்கும் இருக்கட்டுமே என்று. பூனை வெறி கொண்டு சுற்றி வருகிறது
Deleteகவிதை பாடு.. குயிலே.. குயிலே..
Deleteஇனி வசந்தமே..
இதயராகம் இதுவே...இதுவே..
மிக இனிமையே..
கவிதையே தெரியுமா...
Deleteஈவிக்தா ஆறு காதாமே
Deleteஹோ..ஹோ...! கடிச்சி எடுத்த இரு சோடி காதுகளை வெச்சி வாலிபர் இயற்றிய கவிதை நல்லாத்தான் இருக்கு!
Deleteநடக்கும் என்பார் நடக் காது..
Deleteநடக் காது என்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக் காது
கிடைக் காது என்பார் கிடைத்துவிடும்...
தோனுச்சு!
ஹா...ஹா...!!!
Deleteவிஜய் @ வாழைப்பூ வடை போயி ரவுண்டு பன்னும் போயி இப்ப காதுக்கு வந்துட்டீங்க போல :-)
Deleteஅடுத்து விரலு மூக்கு என ஆரம்பிக்க போகிறார் போல தெரிகிறது. இனிமேல் நாமெல்லாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கனும் நண்பர்களே விஜய் கிட்ட இருந்து ;-)
@ ALL : அதே போல இந்தத் தேர்வுகளை செய்திடும் பொறுப்பை நண்பர்களிடம் ஒப்படைத்திருக்காமல், நானே செய்திருக்கும் பட்சத்தில், இன்றைக்கு எத்தனை ரகத்தில் குதூகலக் கும்மிகள் அரங்கேறியிருக்கக்கூடுமோ என்பதையும் தோரயமாய்க் கணக்கிட முயற்சித்தேன் ; மிடிலே !!
ReplyDeleteஹிஹிஹி நான் இந்த முறை நீங்கள் தான் நடுவராக இருப்பீர்கள் என்று நினைத்தேன். ஜஸ்ட் மிஸ்
Deleteஎடிட்டர் மைண்ட்வாய்ஸ்: great escape ன்னு பத்மநாபன் முன்னாடியே கமெண்ட போட்டாரு..
Deleteஅடுத்த போட்டிக்கு நல்லா கொழுக்மொழுக்னு இருக்கற ஜட்ஜுகளா பாத்துப் போடுங்க எடிட்டர் சார்! குறிப்பா, காது நல்லா புடைப்பா இருக்கணும்!
Deleteஓ 'ஹாரா 'க்களோட காது மாதிரியா?
Deleteஇல்லங்க. ஜேம்ஸ் கேமரூன் அவதார் பட ஹீரோ மாதிரி (அவசியம்) காது இருக்கணும்.
Deleteதங்களது ராஜதந்திரம் வேற லெவல் எடிட்டர் சார்.
Deleteஆனாக்கா அடுத்த போட்டி நடுவர்களை நினைச்சா... ஹி...ஹி.
////ஜேம்ஸ் கேமரூன் அவதார் பட ஹீரோ மாதிரி (அவசியம்) காது இருக்கணும்.////
Deleteவாவ்!! ஸ்லர்ர்ப்.. ஸ்லர்ர்ர்ப்..
பரிசு கெடைக்காத வருத்தத்தை விட அது பெரிய வருத்தம் 😔
DeleteThis comment has been removed by the author.
Deleteஆசிரியருக்காக எதையும் வாங்க மற்றும் தாங்க நான் ரெடி.
Deleteஆனா கொஞ்சம் இதமா பதமா கடிங்க :-)
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.ஈரோட்டாரின் நகைச்சுவை மிகவும் ரசிக்க வைத்தது.
ReplyDeleteநன்றிகள் ஜெயக்குமார் சார்! _/\_
Delete
ReplyDeleteபங்கு பெற்றோர்க்கு பாராட்டுகள்!!!
வெற்றி பெற்றோர்க்கு வாழ்த்துகள்!!!
உப்ப ஒரு சந்தேகம் கடிபட்ட காதுகளுக்கு ஆரு ஜவாப்தாரி????😉😉😉😉
ReplyDelete@ ALL : அதே போல இந்தத் தேர்வுகளை செய்திடும் பொறுப்பை நண்பர்களிடம் ஒப்படைத்திருக்காமல், நானே செய்திருக்கும் பட்சத்தில், இன்றைக்கு எத்தனை ரகத்தில் குதூகலக் கும்மிகள் அரங்கேறியிருக்கக்கூடுமோ என்பதையும் தோரயமாய்க் கணக்கிட முயற்சித்தேன் ; மிடிலே
ReplyDelete#######
ச்ச்சும்மா கிழி ...:-)
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றிகள் சார்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஏற்கனவே நிற கமெண்ட்ஸ் படிக்காம விட்டுட்டேன். படிச்சிட்டு வந்துடறேன்.
ReplyDeleteபங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள். மேலும் சிறப்பாக செயல்படவும் ,இத்தருணம் உங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்பதை உணரமுடிகிறது.
தேர்வு குழுவுக்கும், வணக்கத்துக்குரிய ஆசிரியர் அவர்களுக்கும் நன்றி!!!.
நிறைய கேப்சன்கள் இன்னும் வாசிக்கவில்லை. பெரும்பாலும் "" கொரானாவை"" ஒட்டியே பலரது சிந்தனையும் அமைந்துள்ளது.
கொரோனாவை ஒட்டாத வரை ஷேமமே சார் 😁😁😁
ReplyDelete:-)))))
Deleteஆட்டு தலைய பொசுக்கர வேலை கொடுப்பங்க கெடா வெட்டுல ஒரே லாயம் சுடச்சுட காத நம்ம ருசிக்கலாம். ஈரோட்டுல யாருகாத ருசிக்கரதுண்ணு இங்கி பிங்கி பாங்கி போட வேண்டியதுதான்.....
ReplyDeleteஇந்த பதிவில் ஆசிரியர் போட்ட படத்தில் இரண்டு ஜட்ஜ் பேசும் வார்த்தைகளை கவனித்தீர்களா நண்பர்களே ? ஒருவர் ஸ்பைடர்லே எனவும் மற்றும் ஒருவர் ரின் டின் கேன்லே என பேசுவதாக உள்ளது! மொபைலில் பார்த்த போது ஏதோ பிரெஞ்சில் பேசுவதாக நினைத்தேன்!
ReplyDeleteCaption என்றால் சரவணன் மற்றும் வெட்டுக்கிளி வீரையன் என்ற நண்பர்கள் தான் முதலில் நினைவுக்கு வருவார்கள். அவர்களின் சரவணன் இங்கு வந்து வழக்கம் போல் கலக்கிவிட்டார். ஆனால் வீரையனை காணாதது வருத்தமாக உள்ளது. அவர் கடந்த சில மாதங்களாக இங்கு வருவது இல்லை. வெட்டுக்கிளி வீரையன் அவ்வப்போது வந்து இங்கு பின்னூட்டம் இடுங்கள்.
ReplyDeleteசகோதரரே உங்கள் எக்ஸ்ட்ரா பரிசுகள் அருமை தொடரட்டும் உங்கள் காமிக்ஸ் நேசம்
Deleteநன்றி பரணி ! உங்கள் எக்ஸ்ட்ரா பரிசுகளுக்கு வாழ்த்துக்கள் !
Deleteஆஹா! கன்டினியஸ் செகண்ட் டைம் ! மீண்டும் செயலர் சார்பாக ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே :-)
ReplyDelete145th
ReplyDelete