Powered By Blogger

Saturday, April 25, 2020

கலரில் ஒரு கனவு..!

நண்பர்களே,

வணக்கம். வீட்டிலிருந்து பணி செய்வோர் ; வீட்டம்மாவுக்கெனப்  பணி செய்வோர் ; நாட்டுக்கெனப் பணி செய்வோர் ; நாட்டு நடப்பைப் பேசியே நாக்குத் தள்ளச் செய்யும் பணி செய்வோர் ; மல்லாக்கப் படுத்து டிக்டாக் பார்த்திடும் பணி செய்வோர் ; வாசலில் அமர்ந்தே வாட்சப்பில் வடாம் காயப்போடும் பணி செய்வோர் ; இத்யாதி...இத்யாதி என்று இந்த லாக்டௌன் நாட்கள் பலதரப்பட்ட மனுஷாளை இந்தச் சமூகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறது ! நாமோ 'பொம்மை புக் புள்ளிங்கோ' என்ற அடையாளத்தையே மறந்தார்களாய் ஜாலியாய் அரட்டைகளுள் மூழ்கிக் கிடக்க, இந்த வாரத்திலாவது காமிக்ஸ் பக்கமாய் வண்டியைத் திருப்புவோமென்று நினைத்தேன் ! And கடந்த பதிவினில் சொன்னது போல, 2013-ல் வெளி வந்த நமது Hot & Cool ஸ்பெஷல் இதழை அலசுவது மாத்திரமன்றி, நண்பர் காமிக்லவர் ராகவன் suggest செய்த  இன்னொரு back in time & behind the scenes படலத்தினுள் குதித்திடவும் முயற்சிக்கலாம் ! அந்தப் பரிந்துரை இதுவே : //start with behind the scenes of Super Circus !//  இந்த ரிவர்ஸ் பெடல் போடும் படலங்கள் எல்லாமே நமக்கு மிர்ணா ரசிக மன்றத்தில் சேர்வதுக்கு இணையான குஷி மேட்டர் என்பதால் பின்னோக்கிய அந்தப் பயணத்தோடே ஆரம்பிப்போமே !  

1987 ஜனவரி !! கிழக்கிந்தியக் கம்பெனியின் சாம்ராஜ்யத்தை விரிவு செய்து கொண்டே சென்ற வெள்ளைக்கார துரைமார் கூட அந்நாட்களில் அத்தனை கெத்து காட்டியிருப்பார்களா ? என்பது சந்தேகமே !! ஆனால் இந்த 20 வயது தொழிலதிபர் cum எடிட்டர் அந்நாட்களில் ஆபீசுக்குப் பயணமாகும் சமயமெல்லாம், உள்ளுக்குள் 'ஒரேயொரு எடிட்டர் வரார் ; ஒரேயொரு எடிட்டர் வரார் !' என்ற சைரன் அலறாத குறை தான் ! ஏன் என்கிறீர்களா ? ஒன்றல்ல - இரண்டல்ல - மூன்றல்ல - மொத்தம் நான்கு இதழ்களை மாதா மாதம் வெளியிடும் வாய்ப்பு ஒரு குழந்தைப் பையனுக்குக் கிடைத்திட்டால், லோகமே ஒரு சுந்தர பூமியாய்த் தென்படாது போகுமா - என்ன ? அந்நாட்களில், நமது பிரின்டிங் பிரிவினில் 2 ஷிப்ட்களில் விடிய விடிய  வேலைகள் ஓடிக்கொண்டிருக்கும் என்பதால், ஞாயிறு மதியம் வரைக்கும் நமது அலுவலக ஷட்டர்கள் உசக்கேயே தான் நிலைகொண்டிருக்கும் ! நிறைய இரவுகளில் ஆர்டிஸ்ட்கள் ; அச்சுக் கோர்க்கும் பிரிவினருமே ஓவர்டைம் வேலை செய்து கொண்டிருப்பார்கள் என்பதால், சதா நேரமும் திருவிழாக்கோலத்திலிருக்கும் அந்த  ஆபிசிலிருந்து தூக்கம் சொக்கும் வரையிலும் கிளம்பவே மனம் வராது ! So ஒவ்வொரு நாளுமே ராக்கூத்துக்களை 2 மணி வரைக்கும் அடித்த பிற்பாடு தான் வீட்டுக்கே திரும்புவேன் ! அதன் பலனாய் காலைகளில் 11 மணி வரையிலும் கண் திறக்காது ! என் தம்பி, தங்கை எப்போதோ ஸ்கூலுக்குக் கிளம்பிப் போயிருக்க, அப்பாவும், தாத்தாவும் வெவ்வேறு நேரங்களில் ஆபீசுக்குக் கிளம்பியிருக்க, நானோ பிடாரியாட்டம் தூக்கத்தில் லயித்துக் கிடப்பேன் ! நமக்கோ வீட்டில் எப்போதுமே ராஜமரியாதை தான்  ; இரு பெண்பிள்ளைகளுக்குப் பின்னே பிறந்த ஆண் வாரிசு என்பதில் துவங்கி, அந்நாட்களில் இங்கிலீஷ் மீடியத்தில் படித்த முதல் புள்ளையாண்டான் என்பதில் தொடர்ந்து ; பள்ளியிலும் topper ஆக இருந்து வந்த கெத்தும் கைகோர்க்க  - என்றைக்குமே வீட்டில் நமக்கு மருவாதி ஒரு மிடறு ஜாஸ்தியே ! அதுவும் டூ டைம்ஸ் கடல் கடந்து பயணித்திருக்கும் எடிட்டர்ஜீ என்ற அடையாளமும் புதுசாய் ஒட்டிக்கொண்டிருக்கும் சமயம் கேட்கவும் வேண்டுமா - என்ன ? இடியே விழுந்தாலும் பகாசுரனாய்த் தூங்கும் புள்ளையின் தூக்கம் கெட்டு விடக்கூடாதென்று அந்த அறைக்கதவைச் சாற்றி வைத்தே வீட்டுக்குள் அம்மா மாத்திரம் வேலை செய்து கொண்டிருக்க, சாவகாசமாய்க் குளித்துக், கிளம்பி, நண்பகலுக்குக் கொஞ்சம் முன்னே ஆபீசுக்குள் என்ட்ரி ஆவது வழக்கம் !

ஆபீசே மின்சாரம் பாய்ந்தது போல் பரபரத்துக் கிடக்கும் அந்நேரத்துக்கு ! ஏஜெண்ட்கள் பொறுமையாய்க் காத்துக் கிடப்பர் - புதுசாய் மலர்ந்திருந்த ஜூனியர் லயன் & மினி லயனுக்கு டெபாசிட் கட்டி புக்குகளை வாங்கிச் செல்ல ! ஏற்கனவே ஏஜென்சி கொடுத்திருக்கும் நகர்களிலிருந்துமே போட்டி ஏஜெண்ட்கள் வந்திருப்பார் - 'நான் அவரை விட ஜாஸ்தி புக் வாங்கிக்குறேன் ; எனக்கு ஏஜென்சியை மாத்தி விடுங்க !' என்ற கோரிக்கையோடு ! மதுரையில் 1800 பிரதிகள் விற்றுக் கொண்டிருந்த நிலையில், புதுசாயொரு முகவர் வந்திருந்தார் அவ்விதமாய் ! நானோ குசும்புக்கு "ஏற்கனவே இருக்கிறவர் 2500 புக் எடுக்கிறார் சார் ; மாத்துறதா எண்ணமில்லை !" என்று அள்ளி விட்டேன் ! அவரோ துளியும் திகைக்காமல்,  "அதனாலென்ன ? நான் 3000 எடுக்குறேன் !" என்றபடிக்கே பைக்குள் கைவிட்டு, அதற்கான டெபாசிட் தொகையினை எடுத்து மேஜையில் வைத்ததெல்லாம் நேற்றைக்குப் போலுள்ளது !! மதுரை மாநகருக்கு மட்டுமே 3000 பிரதிகள் விற்ற நாட்களையெல்லாம் இன்றைக்கு நினைவு கூர்ந்தால், பெருமூச்சு ; சிறுமூச்சு ; நடுமூச்செல்லாமே விடத் தோன்றுகிறது !! Those were the days !!

4 இதழ்களை அந்த ஜனவரியில் கட்டவிழ்த்திருப்பினும், என்னைப் பொறுத்தவரைக்கும் அவற்றுள் சிகரமாய் எனக்குத் தென்பட்டது -  இரண்டே ரூபாய் விலையில் முழு வண்ணத்தில் வெளி வந்திருந்த ஜூனியர் லயன் காமிக்சின் முதல் இதழான லக்கி லூக்கின் "சூப்பர் சர்க்கஸ்" தான் ! லக்கி லூக்குடனான எனது முதல்ப் பரிச்சயமே - WESTERN CIRCUS என்ற பெயரில் 1970-களின் ஏதோவொரு பொழுதில் EGMONT என்ற பெரும் குழுமம் வெளியிட்ட ஆங்கில இதழ் தான் ! In fact லக்கியின் தொடருக்கு நாம் உரிமைகள் வாங்கிடும் வரையிலும் நான் படித்திருந்தே ஒரே லக்கி சாகசமும் அதுவே ! ஏதோவொரு வடநாட்டுப் பயணத்தின் போது, ஏதோவொரு பழைய புத்தகக் கடையில் என் தந்தை 1980-களில் வாங்கி வந்த புக் அது ! இன்றைய CINEBOOK ஆங்கிலப் பதிப்புகளில் மொழிபெயர்ப்பு அட்டகாசம் என்றால், அந்நாட்களின் EGMONT-ல் கொஞ்சமும் குறைவிலா அதகளம் தான் ! டெக்ஸ் வில்லரை ஒரு சீரியஸான ; ஆக்ஷன் கௌபாயாய்ப் பார்த்திருந்தவனுக்கு - கார்டூனில் கலக்கும் இந்த ஒல்லிக்குச்சிக் கௌபாய், செம கில்லியாய்த் தென்பட்டார் ! அந்த ஒரே புக்கை திரும்பத் திரும்பப் படித்தவனுக்கு அந்த வசனங்களெல்லாம் உறக்கத்தில் கூட நினைவிருக்கும் என்ற அளவுக்கு மனப்பாடம் ! அதிலும் சினம் கொண்ட அந்த சர்க்கஸ் யானை ஊருக்குள் அந்த வைரப்பல் வில்லனை விரட்டிப் போகும் sequences அசாத்தியமாய் உள்ளுக்குள் குடியேறியிருந்தன ! So பின்னாட்களில் எடிட்டர் எனும் குல்லாயும் சாத்தியமாகி ; பிரான்க்கோ-பெல்ஜியக் கதைக் கதவுகளும் நமக்குத் திறக்கும் வாய்ப்பும் கிட்டிய பின்னே, இந்த கார்ட்டூன் சூப்பர் ஸ்டாரை தமிழ் பேசச் செய்யும் ஆசை ஏகமாய் உள்ளுக்குள் பிரவாகமெடுத்தது !
ஆனால் மிட்டாய்க் கடைக்குள் புகுந்த பச்சைப் புள்ளையாய்  1985-ல் கண்ணில் பட்ட அத்தனை ஆக்ஷன் கதைகளுமே ஒன்றுக்கொன்று போட்டி போடுவதாய்த் தென்பட, கதைத்தேர்வுகளில் அவற்றிற்கே முன்னுரிமை தந்திடத் தோன்றியது - அந்த முதல் வருஷத்தில் ! And let's not forget : அந்த நாட்களில்  கபிஷ் ; விச்சு & கிச்சு ; ராமு & சோமு போன்ற பக்க நிரப்பிகள் மட்டுமே நமக்குக் கார்ட்டூன்களின் அடையாளங்கள் என்பதால் முதல் ஆண்டுக்கொள்முதலில் லக்கி லூக்குக்கு இடமிருக்கவில்லை ! இத்தனைக்கும் பாரிசில் தலைமையகம் கொண்டு செயல்பட்டு வந்த Dargaud Editeur நிறுவனமே லக்கியின் உரிமைகளை வைத்திருந்தனர் & அவர்களோடு ஏற்கனவே ஒப்பந்தங்கள் ஓடிக்கொண்டிருந்தன ! ஆனால் அவர்களிடம் நாம் செய்த முதல் கொள்முதல்களோ - XIII தொடர் + ஜாகஜ வீரர்  ரோஜரின் தொடர் ! So 1986-ல் இரண்டாவதுவாட்டி பொட்டிகளைத் தூக்கிக் கொண்டு பிராங்பர்ட் புறப்பட்ட சமயம் எனது இலக்குகளாய்ப் பிரதானமாய்த் தென்பட்ட நாயகர்கள் 4 பேர் !

*இரும்புக்கை உளவாளி வில்சன்
*BATMAN 
*கராத்தே டாக்டர் 
*லக்கி லூக்  

அந்நாட்களில் லக்கி லூக் ஹிந்தியிலும் வெளி வந்து கொண்டிருந்தார் - வண்ணத்தில் ; நமது தற்போதைய MAXI  சைசில் ! டில்லியில் இருந்த கோவர்ஸன்ஸ் பதிப்பகம் இதனைச் செய்து கொண்டிருந்ததால் - நாமும் அதே பாணியில், கலரில் முயற்சிக்கத் தயாரெனும் பட்சம் - லக்கி லூக்கைத் தமிழ் பேசச் செய்ய அனுமதி கிட்டிடும் என்பது பிராங்பர்ட் சந்திப்பின் போது புரிந்தது ! ஆனால் எனக்கோ அந்தப் பெரிய ஸைஸைப் பார்த்த மறுகணமே பேதி எடுக்காத குறை தான் - becos 1986-ல் திகில் காமிக்ஸின் முதல் 3 இதழ்களையும் அந்தப் பெரிய சைசில் போட்டு விட்டு, நான்  வாங்கிய சாத்துக்களை 'கைப்புள்ளை' கூட கட்டதுரையிடம் வாங்கியிருக்க முடியாது ! So பெரிய சைசுக்கு வாய்ப்பே இல்லை என்ற தீர்மானத்தில் அன்றைய இரவு ரூமில் அமர்ந்து லக்கியையும் பாக்கெட் சைசுக்குள் அடைக்க வழியுண்டா ? என்று தேடினேன் ! பின்னாட்களில் அந்தக் கொடுமைகளையும் ஓரிரு சந்தர்ப்பங்களில் நிகழ்த்தினோம் என்றாலும், அந்த முதல் ஆல்பத்துக்குப் பாக்கெட் சைஸ் என்ற திட்டமிடலோடு படைப்பாளிகளிடம் போய் நின்றால், பிய்ந்த விளக்குமாற்றால் தான் சாத்துவார்கள் என்று உள்ளுக்குள் உடுக்கையடித்தது ! So 'பெருசும் ஆகாது ; சிறுசும் சுகப்படாது ; விலையும் அந்நாட்களின் அந்த ரூ.2 என்ற வரம்பினைத் தாண்டிடக்கூடாதென்ற' நிர்ப்பந்தங்கள் இருக்க - ஏதோவொரு குருட்டுத்தனமான கணக்கைப் போட்டு அந்த மீடியம் சைசில் முழு வண்ணம் என்ற முயற்சிக்கு டிக் அடித்தேன் ! மறு நாள் மதியம் Dargaud ஸ்டாலுக்குப் போன சமயம், எனது திட்டமிடலைச் சொன்ன போது பொறுமையாய்க் கேட்டுக் கொண்டார்கள் ! அவர்கள் மட்டும், அந்த MAXI சைசில் தான் லக்கியை அனுமதிப்போமென்ற பிடிவாதம் காட்டியிருக்கும் பட்சத்தில் - 'ஊருக்குப் போய் கலந்து பேசி கடுதாசி போடுறேன்' என்று தான் நடையைக் கட்டியிருப்பேன் என்பது உறுதியே ! ஏனெனில் லக்கியின் மீதிருந்த மையலைக் காட்டிலும், பெரிய சைஸ் மீதிருந்த 'டர்' ஜாஸ்தி அப்போது  ! அந்நாட்களில் டார்கோ நிறுவனத்தின் உரிமைகள் விநியோகத் தலைமைப் பொறுப்பில் இருந்த திருமதி ஆந்த்தியா ஷாகிள்டன் நமது மார்க்கெட்டின் விசித்திர பாக்கெட் சைஸ் மோகம் பற்றியறிவார் ! So கொஞ்ச நேர சிந்தனைக்குப் பின்னே சம்மதமென்று சொன்னார் நமது கோரிக்கைக்கு ! ஒரு வேளை  முட்டைக்கண்ணன் மனசு -கினசு மாறியவனாய் மறு நாளைக்கு வந்து ஏதாச்சுமொரு மூக்குப் பொடிடப்பி சைசுக்குப் புக்கைப் போடட்டுமா ? என்று கேட்டு வைப்பதற்கு முன்பாய் இசைவைச் சொல்லி வைத்தால் தேவலாமென்று நினைத்திருப்பாரோ என்னவோ !! நான் செம குஷியாய் கைகுலுக்கி விட்டுக் கிளம்பினேன் !

ஆனால் ஸ்டாலில் இருந்து நாலு எட்டு வைப்பதற்குள் இன்னொரு விஷயம் மண்டைக்குள் உறைக்க, திரும்பவும் ஓடினேன் அவரிடம் ! முந்தைய வருடம் இப்படித் தான் XIII தொடரின் இரண்டாவது ஆல்பத்தைப் பார்த்து மெய் மறந்து போனவனாய், அதெல்லாம் ஒரு நெடும் தொடரின் பாகம் # 2 என்பதை  அறியாமலே, அதனிற்கு ஆர்டர் செய்திருந்தேன் ! ஆனால் 3 மாதங்கள் கழித்து "இரத்தப் படலம்" ஆல்பம் # 1-ன் போட்டோ பிரிண்ட்கள் ஏர்மெயிலில் வந்து சேர்ந்த போது பேய் முழி முழித்தது ; அப்புறமாய் தான் இது 13 பாகங்களாய்   ஓடவிருக்கும் மெகா தொடர் என்பதைக் கேட்டறிந்து வாய் பிளந்தது, என்று சகலமும் அப்போது நினைவுக்கு வந்தது ! So இம்முறையும் அப்படியே விட்டு, அவர்களும் லக்கி தொடரின் முதல் ஆல்பத்தைத் தூக்கி அனுப்பி வைத்தால் எனது WESTERN CIRCUS கனவு இதழ் சொதப்பிடுமே என்ற பயத்தில் -"I want WESTERN CIRCUS....only WESTERN CIRCUS !!" என்று திருமதி ஷாகிள்டனிடம் சொல்லி வைத்தேன் ! அவருமே புன்னகையோடு தலையசைக்க, அடுத்த பிட்டைப் போடும் வேலையையும் ஆரம்பித்தேன் - தயக்கத்தோடே !

"அது வந்து....பிராங்பர்ட் புத்தக விழா முடிஞ்ச பிற்பாடு நானும் பாரிசுக்கு வர்றதா இருக்கேன் ; அங்கே வச்சு  இந்தக் கதைக்கான ஒரிஜினல்களை நான் வாங்கிக்க  ஏதாச்சும் வழி பண்ண முடியுமா ?" என்று கேட்ட போது அவர் முகம் மாறிப் போனது !! கம்பியூட்டர் ஏதும் இல்லாத அந்த நாட்களில், அத்தனையுமே Manual Typing தான் எனும் போது, ஊர் திரும்பிய பின்னே அவர்களுக்கு குறுக்கைக் கழற்றும் அளவுக்கு வேலைகள் குவிந்திருக்கும் என்பது தெரியாதில்லை தான் ! அது மட்டுமன்றி, அந்நாட்களில் நமக்கு வழங்கப்படும் black & white பிரோமைட் போட்டோ பிரிண்ட்களை அவர்களது Archives பிரிவிலிருந்து வரவழைப்பதென்பது பொறுமையைச் சோதிக்கும் சமாச்சாரம் என்பதையும் அறிவேன் தான் ! புளியோதரையைக் கட்டிக் கொண்டு ஸ்டூடியோ வாசலில் தேவுடா காக்காத குறையாய்த் தான் அவற்றைச் சேகரிக்க வேண்டி வரும் !! இதில் கொடுமை என்னவெனில், அந்நாட்களில் இந்தக் கதைகளையெல்லாம் black & white-ல் வெளியிடத் தீர்மானித்த மாங்காய் மடையன் அநேகமாய் நான் மாத்திரமே ! இதர மொழிகளில் வெளியிடும், இதர தேசத்துப் பதிப்பகங்கள் அனைத்துக்குமே கலர் தான் template என்பதால், ஒரு பெரும் தொகையினை டெபாசிட்டாய் வாங்கி வைத்துக் கொண்டு அவர்கள் அனைவருக்குமே 4 கலர்களுக்கான  பாசிட்டிவ் பிலிம்களை அனுப்புவார்கள் பாரிஸிலிருந்து ! அந்தந்த தேசங்களில் அச்சுப் பணிகள் முடிவுற்ற பின்னே பிலிம்களை ரிட்டர்ன் செய்தும் விடுவார்கள் ! முறைப்படிப் பார்த்தால் - லக்கி லூக்கை கலரில் வெளியிடுவதென்ற தீர்மானம் எடுத்த பிற்பாடு, இந்த வழிமுறைகளைத் தான் நாமும் பின்பற்றியிருக்க வேண்டும் ! மற்ற எல்லோரையும் போல ஒரு வைப்புத் தொகையை டெபாசிட் செய்து விட்டு, Air Cargo-வில் Freight Collect-ல் வந்திடும் பாசிட்டிவ் பிலிம்களுக்கு வாடகை தந்து க்ளியர் செய்து, அச்சிட்ட பிற்பாடு, மறுக்கா வாடகை தந்து இங்கிருந்து அனுப்பியிருக்க வேண்டும் ! ஆனால் ஒரே கோவணத்தை துவைத்துக் காயப்போட்டு, மறுநாளைக்கும் அணியும் நமக்கெல்லாம் இதைக் கேட்ட போதே கேராகிப் போனது !!

 • டெபாசிட் கட்ட வசதி லேது !
 • Air Cargo கட்டணமென்றால் காதில் பிளட் வருது !
 • அச்சிட்ட பிற்பாடு பிலிம்களைத் திருப்பி அனுப்பிட  இரண்டாவது கட்டணமென்றால் பயத்தில் மூச்சா வருது !
 • எல்லாவற்றிற்கும் மேலாய் - அந்நாட்களில் பாசிட்டிவ் பிலிம்களிலிருந்து அச்சிடுவதெனில், அதற்குப் பயன்படுத்த வேண்டிய பிராசசிங் வழிமுறைகள் காஸ்ட்லீயான விஷயம் ! நாம் பயன்படுத்தியதோ நெகட்டீவ்களிலிருந்து ப்ராசஸிங் செய்திடும் சஸ்தாவான யுக்திகள்  ! So அந்த கூடுதல்  செலவை நினைத்தாலே வியர்த்துக் கொட்டுது !
என்பதை ஏற்கனவே அவர்களிடம் ஒப்பித்திருந்தேன் என்பதால், எனது கோரிக்கையைக் கேட்ட்டவர் உதட்டைப் பிதுக்கினார் ! "குறைந்த பட்சம் ஒரு வாரமாச்சும் ஆகுமே - bromide prints ஆர்டர் செய்து வரவழைக்க ! நாங்கள் ஊருக்குத் திரும்பும் மறுநாளே  நீயும் வந்து நின்று, பிரிண்ட் வேண்டுமென்றால் எப்படி முடியும் ?" என்ற போது எனக்கு முகம் தொங்கிப் போனது ! அந்நாட்களில் இந்த ஒரிஜினல்கள் கனமான பிலிம் டப்பிக்களில் பேக் செய்யப்பட்டு Sea Mail வாயிலாகத் தான் வந்திடும் - சாவகாசமாய் இரண்டரை மாதங்கள் கழித்து ! நானோ, 'ஊருக்குப் போறோம் ; அலப்பரையைக் குடுக்கிறோம் ; ஜனவரியில், கலரிலே புது வரிசையிலே லக்கியைக் களமிறக்குறோம் !' என்ற கனவில் இருந்தேன் !  இது போன்ற திரும்பிப்பார்க்கும் தருணங்களில் தான் புரிகிறது, அந்நாட்களில் நம்மைக் கைதூக்கி விட ஒவ்வொரு படைப்பாளி நிறுவனமும் எத்தனை பரிவைக் காட்டியுள்ளனர் என்பது !! என்ன நினைத்தாரோ, தெரியாது -  தரையை தொடும் நீளத்துக்குத் தொங்கிக் கிடந்த எனது முகரைக்கட்டையைப் பார்த்தவர், "அடுத்த வெள்ளி மாலைக்குள் எப்படியேனும் பிரிண்ட்களுக்கு ஏற்பாடு செய்து விடுகிறேன் ! சனிக்கிழமை நாங்கள் பணியாற்றுவதில்லை என்பதால் ஆபீசுக்கு வந்து அவற்றைச் சேகரித்துப் போக உனக்கு வசதிப்படாது  ; ஆனாலும் அவற்றைக் கையோடு வீட்டுக்கு எடுத்துப் போய் விட்டு, சனிக்கிழமை பகலில் உன்னை பாரிஸின் ஏதேனுமொரு இடத்தில் சந்தித்துத் தந்து விடுகிறேன் ! ஹாப்பியா ?" என்று கேட்டார் ! எனக்கோ தலீவர் படத்தின் முதல் நாள் ஷோவுக்கு டிக்கெட் கிடைத்த பீலிங்கு !! ஒரு நூறு நன்றிகளை சொல்லி விட்டு கிளம்பினேன் ! 

Looking back - அத்தனை மெனெக்கெடலுக்கு நாம் சத்தியமாய் ஓர்த்தே கிடையாது தான் - அவர்கள் வெறும் வியாபாரக் கண்ணோட்டத்தில் பார்த்திருக்கும் பட்சத்தில் என்பது புரிகிறது ! அவர்கள் நாட்டில் கொஞ்சம் பட்டாணிச் சுண்டலும், கொஞ்சம் பொறிகடலையும் வாங்கும் காசைத் தான் நாம் ராயல்டி என்ற பெயரில் எல்லாப் படைப்பாளிகளுக்குமே தந்து கொண்டிருந்தோம் ! தவிர, நம்மை விடவும் மெகா மெகாப் பதிப்பகங்களுக்கு ஒதுக்கிட வேண்டிய நேரங்களை எவ்வித சங்கடங்களையும் காட்டிடாது நமக்குத் தர ஒருத்தர் பாக்கியின்றி அத்தனை பேருமே முன்வந்தார்கள் ! அன்றைக்கு திருமதி.ஷாகிள்டனின்பார்வையில், கிடாவெட்டுக்குப் பறக்கும் இந்தக் கவுண்டரின் கொப்பளிக்கும் ஆர்வம் மட்டுமே பிரதானமாய்த் தெரிந்திருக்க வேண்டும் ; என்னால் நேர்ந்திட்ட சுமைகள் ஒரு பெரும் சிக்கலாய் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை !  'இல்லே...முறைப்படி அடுத்த ஒரு மாசத்துக்குள்ளாற தான் காண்டிராக்ட் ரெடி பண்ண முடியும் ; அதுக்குப் பின்னே நீ காசை அனுப்பிய பிற்பாடு தான் ஒரிஜினல்களை அனுப்ப வசதிப்படும் !' என்று அவர் கறாராய்ச் சொல்லியிருந்தால், நிச்சயமாய் அதனில் தவறேதும் இருந்திராது ! என்ன -  "1987 ஜனவரியில் ரிலீஸ்" என்ற எனது கலர் கனவுகள் மெய்யாகிடுவது மட்டும் ரொம்பவே தள்ளிப்போயிருக்கும் ! So நிறைய அலுவலகச் சம்பிரதாயங்களை byepass செய்து, நம் ஆர்வங்களுக்கு உதவிட அவர் அன்றைக்குக் காட்டிய பரிவே கார்ட்டூன் தடம் போட உதவிய முதல் தண்டவாளம் என்பேன் !

இந்த தயாளங்கள் இன்றளவிற்கும் தொடர்கதைகளே ! இதோ இந்த மார்ச் மாதத்தில் கூட அதற்கொரு 'பளிச்' நிரூபணம் கிட்டியது ! '5 நிமிட வாசிப்பு ; படித்த நொடியே என்னைக் கட்டுண்டு போகச்செய்ததொரு பொம்மை புக் ; மார்ச்சில் சர்ப்ரைஸாக வருகிறதென்று' நான் சொன்னது நினைவிருக்கலாம் ! அந்தப் புது ஆல்பம் என் கண்ணில் பட்டதே இந்த மார்ச் ஒன்பதாம் தேதி தான் ! அன்றைக்கே மின்னஞ்சலைத் தட்டி விட்டேன் - "இந்த ஒரு ஆல்பத்தை மட்டும் fasttrack செய்து உடனே கைக்குக் கிடைக்கச் செய்ய ஏதேனும் வாய்ப்புள்ளதா ?" என்ற கோரிக்கையோடு ! இந்த கொரோனா கொடூரம் ஐரோப்பாவில் நங்கூரமிடத் துவங்கி, ஒவ்வொரு தேசத்தையும் தெறிக்க விட்டுக் கொண்டிருந்த அந்தத் துவக்க நாட்களிலும், மார்ச் 10 தேதிக்கே மின்னஞ்சலில் காண்டிராக்ட் வந்தது ! மறு நாளே நாம் பணம் அனுப்பிட, அதிலிருந்து இரண்டாவது நாளில் டிஜிட்டல் கோப்புகள் மின்னஞ்சலில் காத்துக் கிடந்தன !! இந்த ஹை-டெக் யுகத்தில் கூட மொத்தமே மூன்றே நாட்களில் ஒரு புத்தம் புதுக் கதைக்கு ஒப்பந்தம் செய்து, வைரஸின் தாக்கத்துக்கு மத்தியிலும் கதையினை வரவழைப்பது என்பது nothing short of a miracle !! 

Exit பிராங்பர்ட், பாரிசுக்கு கிளம்பியது ; அந்தப் பயணத்தின் போது ஒரு பிரவுன் பூதத்திடம் சிக்கித் தெறித்தது ; தப்பிப் பிழைத்து ஓட்டமெடுத்தவன், மறு நாள் "கராத்தே டாக்டர்" ; "சூப்பர் பைலட் டைகர்" & "மறையும் மாயாவி ஜாக்" கதைகளை வெளியிட்டு வந்த Vaillant Miroir Sprint Publications எனும் நிறுவனத்தைச் சந்தித்தது ; அவர்களது ஆபீசில் கொக்கோ கோலா டின்னை ஸ்டைலாய்த் திறக்கிறேன் பேர்வழியென்று வெள்ளை நிறப் பேண்ட் முழுக்க ஊற்றிக் கொண்டது   ; அந்தத் தொடர்கள் மிதமான உப்மாக்களே என்பதை அறியாதவனாய் அவற்றிற்கு நமது சம்மதத்தைச் சொன்னது ; பெருசாய் எதையோ சாதித்த உற்சாகத்தில் ரயில் மூலமாய் ஸ்விட்சர்லாந்தின் தலைநகர் ஸ்யூரிக் நகருக்கு பராக்குப் பார்க்கப் புறப்பட்டுச் சென்றது ; அழகோவியமான அந்த பூமியில் வரிசை வரிசையாய் அணிவகுத்து நின்ற புகழ்பெற்ற சுவிஸ் பேங்குகளை தவிர்த்து அங்கே வேறு எதையும் காணோமே என்று விழித்தது ; 'ரைட்டு...நானும் பார்த்துட்டேன்லே சுவிச்சர்லாந்தை' என்று பீற்றிக் கொள்ளும் பொருட்டு, சிலபல போட்டோக்களை எடுத்து விட்டு, மறுபடியும் பாரிசுக்குத் திரும்ப ராத்திரி ரயிலைப் பிடித்தது - என்று எல்லாமே வேக வேகமாய் நடந்தேறிய நிகழ்வுகள் ! 

"வெள்ளியிரவு ரயில் ஏறினால், நடுச்சாமத்தில் ஏதோவொரு ஸ்டேஷனில் மாறி, சனி அதிகாலையில் பாரிஸ் ; அங்கே ஒரு ரூமைப் போட்டுப்புட்டுத் தங்கறோம் ; பகலிலே WESTERN CIRCUS ஒரிஜினல்களை திருமதி.ஷாகில்டனைச் சந்திச்சு வாங்கிடறோம் ; அப்பாலிக்கா ஊரில் இருப்போர்க்கு ஆளுக்கொரு பென்சில், ரப்பர், குச்சி முட்டாய் என்று ஏதேனும் souvenirs வாங்கிவிட்டால் மூட்டையைக் கட்டிவிட்டு, ஞாயிறு காலையில் இந்தியாவுக்குத் திரும்புறோம் !" என்ற திட்டமிடல் தலைக்குள் தெளிவாக இருந்தது ! ரயிலையும் பிடித்தேன் ; காலையில் ஆறரை மணிவாக்கில் பாரிஸின் Gare Du Lyon ஸ்டேஷனையும் எட்டிப் பிடித்தேன் ! அதிகாலையில் சிலு சிலுவென்ற காற்றோடு பாரிஸ் ரொம்பவே ரம்யமாகத் தென்பட்டது எனக்கு ! மூன்றே நாட்களுக்கு முன்னே, பூதத்துடனான இக்கட்டின் போது, அதே நகரத்தை தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளாலும் கழுவிக் கழுவி ஊத்தியிருந்தேன் தலைக்குள் ! ஆனால் காட்சிகள் மாறும் போது ; சூழல்கள் மாறும் போது, சிந்தனைகளும்  மாறிடும் என்பது புரிந்தது ! 'அன்பே வா' தலைவரைப் போல துள்ளிக் குதித்தபடிக்கே ஸ்டேஷனை விட்டு வெளியேறியவன் கண்ணில் "லாட்ஜ்" என்ற போர்டுகள் தென்படுகின்றனவா என்று பார்த்தேன் ! ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நகரிலும் ரயில் நிலையம் ஊருக்குள்ளே மையமாய் இருப்பது வாடிக்கை & அவற்றைச் சுற்றியே குறைச்சலான வாடகையிலான லாட்ஜ்களும் இருக்குமென்பதை இந்நேரத்துக்குத் தெரிந்து வைத்திருந்தவனாய் எதிரே போன தெருவினுள் விறு விறுவென்று நடக்க ஆரம்பித்தேன் ! சற்றைக்கெல்லாம் ரோட்டின் ரெண்டு பக்கங்களுமே தங்கும் விடுதிகள் கண்ணில் படத் துவங்கின !  

ரொம்பவே டப்ஸாவாகவும் தெரியாத, அதே சமயம் ரொம்பவே பாக்கெட்டுக்கு வெடி வைக்காத மாதிரியான ஹோட்டலைத் தேடியபடியே நடந்தவன் ஏதோ ஒன்றினுள் புகுந்தேன் ! மேஜைக்குப் பின்னே புல் மீல்ஸை ரெண்டாய் அடிக்கக்கூடிய தோரணையில் ஒரு தாட்டியமான பிரெஞ்சு ஆசாமி தூங்கி வழிந்து கொண்டிருந்தார் ! என் பின்னேயே ஒரு இளம் வெள்ளைக்கார ஜோடியும் ரூம் கேட்டு வர, அவர்கள் பிரெஞ்சில் கொடுத்த குரலுக்கு ரிசப்ஷனில் இருந்த மனுஷன் கண்விழித்துக் கொண்டார் ! முதலில் போனவன் நானே என்ற உரிமையில் 'ஒரு சிங்கிள் ரூம் வேண்டும்' என்று கேட்டேன் ! என்னை ஏற-இறங்கப் பார்த்தவர் எனக்குப் பின்னே நின்ற ஜோடியைக் கூப்பிட்டு மட மட வென புக்கிங் செய்து சாவியைக் கையில் தந்து அனுப்பி வைத்தார் ! ராவினில், ரயிலில் தொலைத்த தூக்கத்தை ரூமில் கொஞ்ச நேரமேனும் தொடரும் ஆசையில் இருந்த எனக்கோ எரிச்சலாய் இருந்தது ! மறுபடியும் கொஞ்சம் குரலை உசத்தி "ரூம் ?" என்று கேட்டேன் ! "பாசப்போர்ட் ?" என்று கையை நீட்டியவரிடம் தயாராகயிருந்த எனது பாஸ்போர்ட்டை தந்தேன் ! கையில் வாங்கிப் புரட்டி ,அங்குலம் அங்குலமாய் எழுத்துக்கூட்டி வாசிக்க ஆரம்பித்தவர் ஏனோ தெரியலை - என்னை நிமிர்ந்து பார்க்கவும், மறுபடியும் பாஸ்போர்ட்டினுள் மூழ்கவுமாய் இருந்தார் ! எனக்கு லைட்டாக நெருட ஆரம்பித்தது ! சர்வதேச டூரிஸ்ட்கள் மிகுந்ததொரு நகரே என்றாலும், பாரிசில் பிரெஞ்சு ஞானமின்றிக் குப்பை கொட்டுவது அத்தனை சுலபமல்ல என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்தேன் ! 'இந்த மொக்கைச்சாமி புதுசாய் என்ன கேட்கப் போகிறானோ ?' என்றபடிக்கே காத்திருந்தவனிடம் - "டமில் ?" என்று கேட்டான் ! 'அட..பரவாயில்லையே..... மொக்கைச்சாமியும், மூளைச்சாமி தான் போலும்' என்று நினைத்துக் கொண்டே "Yes ...from Tamilnad .." என்று பதில் சொன்னேன் ! டப்பென்று பாஸ்போர்ட்டை மூடி, கையில் தந்து விட்டு - "சாரி..நோ ரூம் !" என்று அவன் மொட்டைக்கட்டையாய்ச் சொன்ன போது எனக்கு செம கடுப்பாக இருந்தது ! 'உனக்கு என்ன தான்ப்பா பிரச்சனை ?' என்று நான் இங்கிலீஷில் கேட்க, அவன் இங்கிலீஷும், பிரெஞ்சும் கலந்த பாஷையில் ஏதோ பதில் சொல்ல சுத்தமாய் எதுவும் புரியவில்லை ! 'ஒரே ஒரு நாளுக்குத் தான் ரூம் வேணும் ; நாளை காலை கிளம்பிடுவேன்" என்று அவனிடம் வாதம் பண்ணிக்கொண்டிருந்த நேரத்துக்கு, எனக்குப் பின்னே வந்து, எனக்கு முன்னமாய்  ரூம் பெற்றுச் சென்றிருந்த ஜோடி நாஷ்டாவுக்கென கீழே இறங்கி வந்திருந்தனர் ! நாங்கள் பாஷை புரியாது போட்டுக்கொண்டிருந்த மல்யுத்தத்திற்கு தீர்வு காணும் விதமாய் அந்தப் பெண்மணி குறுக்கிட்டு ரிசப்ஷன் மொக்கையிடம் பேசிவிட்டு என்னிடம் அழகான மழலை இங்கிலீஷில் பேச ஆரம்பித்தாள் !

அப்புறம் தான் புரிந்தது சிக்கல் என்னவென்று ! 1983-ன் கலவரங்களைத் தொடர்ந்து  ஸ்ரீலங்காவிலிருந்து நம்மவர்கள் ஏகமாய்ப் புலம் பெயர்ந்து ஐரோப்பாவில் தஞ்சம் அடைய முயற்சித்தது வரலாறு ! 1986 வாக்கில் அவர்களில் ஒரு கணிசமான எண்ணிக்கை பிரான்சில்  ; குறிப்பாய் பாரிஸில்  குடியேற முயற்சித்துக் கொண்டிருந்துள்ளனர் போலும் ! கலவர மண்ணிலிருந்து வருவோரும் கலவரப் பார்ட்டிகளாகவே இருப்பர் என்பது அப்போதைய பிரெஞ்சுப் பிரஜைகளின் சிந்தனையாக இருந்திட, இந்த ரிசப்ஷன் பீம்பாயும் ஒத்த எண்ணத்துக்காரனாக இருந்திருக்கிறான் ! கோழி திருடியவனைப் போல அதிகாலையில் நான் முட்டைக் கண்களை உருட்டிக் கொண்டு நின்றது பற்றாதென,  எனது பாஸ்போர்ட்டில் "Tamilnadu" என்று எழுதியிருப்பதை பார்த்த அந்தச் சூரப்புலி, நானுமே புலம் பெயர்ந்திட முயற்சிக்கும் 'டமில்' மக்களுள் ஒருவன் என்று நினைத்து விட்டிருக்கிறான் ! அடுத்த வரியில் INDIA என்று எழுதியிருப்பதைக் கவனிக்கக் கூட விட்டிருக்கவில்லை - அவனுக்குள் குடியிருந்த துவேஷம் ! அந்தப் பெண்ணிடம் நான் நிலவரத்தை விளக்கிட, அவள் பிரெஞ்சில் அவனுக்குப் பாடம் எடுக்க, அப்படியும் அவனுக்கு முழுசாய்த் திருப்தி வந்த மாதிரித் தெரியலை ! அரை மனசாய் முனகிக் கொண்டே என் பாஸ்போர்ட்டை மறுபடியும் வாங்கிக் கொண்டவன் - "No Luggage ?" என்று கேட்டான் ! "இருக்கே..இதோ இருக்கே !"- என்று என் பெட்டியை முன்னே தள்ளினேன் ! "அதை இப்படிக் கொடு !" என்கிற மாதிரி அவன் ஏதோ சொல்ல, பெட்டியை நகற்றி வைத்தேன் ! சரி, லிப்ட் ஏதும் இல்லாத அந்தப் புறாக்கூட்டு ஹோட்டலின் மேல்தளத்துக்குப் பெட்டியைச் சுமந்து போக ஒத்தாசை செய்யப் போகிறான் போலும் என்று நான் நினைத்துக் கொண்டேயிருந்த நொடியில், அந்தக் குரங்கன் அப்படியே பெட்டியைத்  திறந்து தலைகீழாய் அங்கிருந்த மேஜை மீது கவிழ்த்தினான் ! வடிவேலு பாஷையில் சொல்வதானால் "அத்தினியையும்  அல்லா சல்லையாக்கிபுட்டானே நன்னாரிப்பய !!" என்று தான் கொதித்திருக்க வேண்டும் ! எனக்கு ரத்தம் தலைக்கேறி விட்டிருந்தது ; 'நீ ரூமும் தர வேண்டாம், புண்ணாக்கும் தர வேண்டாம் ! பெட்டியை திரும்ப அடுக்கிக் கொடு, நான் கிளம்புகிறேன் !" என்று கத்தினேன் ! ஆனால் அவனோ புரியாதது மாதிரி என் பெட்டிக்குள் பார்வையை ஓட விடுவதிலேயே குறியாய் இருந்தான் ! அந்தப் பட்டாணிக்கடலை மூளைக்குள் என்ன ஓடியிருக்குமோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் ; ஆனால் பெட்டிக்குள் ஏதேனும்  துப்பாக்கியோ  ; வெடி குண்டோ வைத்திருக்கிறேனா ? என்று தடியன் சோதனை செய்வதாக எனக்குப்பட்டது ! அவன் கையைப் பட்டென்று விலக்கி விட்டு,  வெளியே கிடந்த துணிமணி ; இத்யாதிகளை பர பரவென்று அள்ளி பெட்டிக்குள்ளே  திணித்த கையோடு, அவனிடமிருந்த பாஸ்போர்டையும் பிடுங்கி கொண்டே நடையைக் கட்டினேன் ! பாவப்பட்ட அந்தப் பெண்ணிடம் ஒரு தேங்க்ஸ் சொல்லக்கூட அந்த நொடியில் எனக்குத் தோன்றவில்லை !

வெளியே வந்தவனுக்கு அந்த நொடியில் யாரையாச்சும் செவிளோடு அறையணும் போலிருந்தது ! அரை அவருக்கு முன்னே வரையிலும் 'பாரிஸ்..பியூடிபியுல் பாரிஸ் !' என்று பாடத் தோன்றிய வாயிலோ இப்போது நுரை தள்ளாத குறை தான் ! அடுத்து எதிர்ப்பட்ட ஹோட்டலுக்குள் நுழைந்து ரூம் கேட்டேன் ; நிமிர்ந்து பார்த்தபடிக்கே உதட்டை மட்டும் பிதுக்கி விட்டுக் குனிந்து கொண்டார் அங்கிருந்த பெண்மணி ! அடுத்த 20 நிமிடங்களுக்கு இதுவே தொடர்கதையானது ; சொல்லி வைத்தார் போல அடுத்தடுத்த ஹோட்டல்கள் எல்லாமே full என்கிற மாதிரியான பதிலையே சொன்னர் ! ஆனால் எனக்கோ அந்தச் சிக்கலின் நதிமூலம் நம் தோலின் நிறம் என்பதாகவேபட்டது ! 'அடப் போங்கடா டேய்...!' என்றபடிக்கு பாரிஸின் YMCA விடுதியைத் தேடிப் போவோமா ? என்ற நினைப்பு உள்ளுக்குள் எழுந்தது ! ஆனால் விரல் நுனியில் கூகுள் இல்லாத அந்நாட்களில், பாஷை தெரியா புதியதொரு ஊரில், விசாரித்து, ஒரு இடத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதென்பது மொட்டைத்தலையில் முடி முளைக்கச் செய்வதற்குச் சமமான சிரம காரியம் ! மறுக்கா பெட்டியைத் தூக்கிக் கொண்டே Gare du Lyon ஸ்டேஷனுக்கு நடந்து  போய், அங்கே இருக்கக்கூடிய டூரிஸ்ட் ஆபீஸ் திறக்கும் வரைக் காத்திருந்து, அவர்களிடம் இடத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, அப்பாலிக்கா மெட்ரோ ரயிலேறி அங்கே போக வேண்டுமென்பதை நினைக்கும் போதே - ஸ்டீலின் கவிதை வரிகளை படிக்கப் போகும் பீதி உள்ளுக்குள் எழுந்தது ! 'ரைட்டு...ஆனது ஆச்சு , இங்கே  கண்ணில்படும் மிச்சசம்மீதி ஹோட்டல்களிலும் விசாரித்து விட்டு தீர்மானம் பண்ணலாம் !' என்றபடிக்கே நடக்க ஆரம்பித்தேன் !

ஒரு வழியாய் அடுத்த ஹோட்டலில் இருந்த புண்ணியவாளனுக்கு நான்  அவனது ஹோட்டலைத் தரைமட்டமாக்கிடப் போகும் டெர்ரர் பார்ட்டியாய்த் தென்படவில்லை போலும் ! 'ரூம் இருக்கு....ஆனாக்கா சுத்தம் பண்ணி ஒப்படைக்க ஒரு அவராச்சும் ஆகும் ; அது வரைக்கும் காத்திருக்கணும் !' என்றார் ! (அப்போல்லாம் இந்த 12 noon  செக் அவுட் வாடிக்கையெல்லாம் கிடையாது !!) அதைக் கேட்ட பிற்பாடு தான் தலைக்குப் போயிருந்த இரத்தம் சற்றே சமனப்பட்டது ! 'பரால்லே.....இந்த ஊரிலே இருக்கிற அத்தினி பேரும் டொமருங்க இல்லே தான் போலும்  !!' என்று தோன்றியது ! தம்மாத்துண்டு ரிசப்ஷன், அந்தப்பக்கமாய்ப் போனால் மாடிக்குப் போகும் படிக்கட்டு ; இந்தப் பக்கம் காலை பிரேக்பாஸ்ட் கூடம் என்றிருக்க, அக்கடாவென அமர்ந்து காத்திருக்க இடமேதும் இல்லை ! 'சரி, ஒரு மணி நேரத்தில் திரும்புகிறேன் !' என்றபடிக்கே வெளியே நடந்தவனுக்கு அடுத்த ஒற்றை மணி நேரத்தைக் கழிக்க எங்கே போவதென்று தெரியவில்லை ! அதே தெருவில் சற்றே தள்ளித்  தென்பட்டதொரு பெஞ்சில் திருவாளர் பொதுஜனத்தில் ஒருவர் சுருண்டு படுத்திருந்தார் ! ரைட்டு...ரொம்ப யோசிப்பது வேலைக்கு ஆகாதுடா சாமீ என்றபடிக்கே அவரது கால்பக்கமாய் மீதமிருந்த இடத்தில் அமர்ந்து கொண்டேன் ! அடுத்த ஒரு மணி நேரம் நகர்வேனா என்று அடம்பிடிக்க, எனக்கோ உள்ளுக்குள் லைட்டாய் வேறொரு  பயம் ! படுத்துக் கிடக்கும் உள்ளூர் பார்ட்டியின் அப்ரஸிட்டியாக என்னைப் பாவித்து சாலையில் போவோர்-வருவோர் சில்லறையைப் போட்டுப் போனால் மானக்கேடாகிடுமே என்று !! குனிந்த தலையை நிமிர்த்த திராணியின்றி, அடுத்த 60 நிமிடங்கள் கரைய அங்கேயே காத்திருந்தேன் ! ஒரு வழியாய் ரூம் கிடைத்த பிற்பாடு தான் திருமதி.ஷாகில்டனுக்கு போன் செய்திட ஜீவன் வந்தது ! உற்சாகமாய்ப் பேசியவர், பிரோமைட் பிரிண்ட்கள் முந்தைய இரவே வந்து விட்டதாகவும், நான்  எங்கே தங்கியிருக்கிறேனோ, அங்கேயே கொணர்ந்து ஒப்படைத்து விடுவதாகவும் சொன்ன போது தான், நான் தங்கியிருந்த புறாக்கூட்டின் பொருட்டு லைட்டாய் தர்மசங்கடமாய் இருந்தது ! ஆனால் வேறு வழி ? அட்ரஸையும், ஹோட்டல் பெயரையும் சொன்ன கையோடு அவசரம் அவசரமாய்க் குளித்து ரெடியாகிக் காத்திருந்தேன் !

அடுத்த 45 நிமிடங்களில் ஸ்நேகமான புன்னகையோடு ஹோட்டலின் வாசலில் ஆஜரானவரின்  மார்போடு அணைத்து நின்றது ஒரு ஆரஞ் நிறப் பெட்டி ! லக்கியின் black & white ப்ரிண்ட்ஸ் அவற்றுள் தான் சுடச் சுடக் காத்திருந்தன !! அதைக் கையில் தந்து விட்டு, "Good Luck ..Safe trip !!"  என்று கிளம்பியவரை அதன் பின்னே நான் பார்த்திடவே இல்லை ! அடுத்த எட்டுப் பத்து வருடங்களுக்கு மத்தியில் ஐரோப்பா செல்லும் அவசியங்களும் எழவில்லை & Dargaud நிறுவனம் இன்னொரு ஜாம்பவான் நிறுவனமான LOMBARD உடன் இணைந்த பிற்பாடு, முற்றிலும் புதுசாய் அதிகாரிகள் பொறுப்பேற்றனர் ! So திருமதி ஷாகிள்டன் பற்றி தகவல்கள் இல்லை !

ரூமுக்குத் திரும்பியவன், ஏதோ புதையலைப் பார்ப்பது போல அந்த ஆரஞ் பொட்டியைத் திறந்து black & white-ல் மினுமினுத்த ஒவ்வொரு பக்கத்தையும் அடுத்த அரை மணி நேரத்துக்கேனும் ரசித்துக் கொண்டிருந்தேன் ! ஊருக்குத் திரும்பியது ; இந்தக் கதையை நானே தான் மொழிபெயர்ப்பேன் என்று வைராக்கியமாக மொக்கைகளுக்கு மத்தியில் முயற்சித்தது ; black  & white பக்கங்களில் படு ஸ்பீடாய்த் தயாரான பக்கங்களை அப்புறமாய் 4 கலர்களுக்கான நெகட்டிவ்களாய் எடுத்து, அதனில் பிராசசிங் பணியாளர்கள் 10 நாட்களாய்ப் பணியாற்றிய பின்னர் ஒரு சுபயோக சுபதினத்தில் அச்சிடத் துவங்கியது - என்று எல்லாமே கலர் கனவுகளின் அங்கங்களாய் அமைந்து போயின ! அதன் மத்தியில் நமது ஓவியர் மாலையப்பனிடம் சொல்லி, ஒரிஜினல் டிசைனைப் போலவே ஒரு ஓவியத்தை,  colorful ஆகப் போட்டு வாங்கி, அட்டைப்படத்தையும் பிரிண்ட் செய்து மொத்தமாய்க் கையில் ஏந்திப் பார்த்த நொடியில் டென்சிங்காவது, இலெவென்சிங்காவது - இமய மலையை நான் ஓட்டமாகவே ஏறிப்பிடித்து கொடி நட்டியது போலான பீலிங்கு ! Yes of course - 6 மாதங்களுக்கு முன்பே 1986 கோடை மலரின் முதல் 64 பக்கங்கள் (?? maybe more / maybe less) முழு வண்ணத்தில் வெளியிட்டிருந்தோம் தான் ! ஆனால் இம்முறை புக்கே முழுசுமாய் கலர் என்பதோடு, முற்றிலுமே புதிதானதொரு ஜானரை அறிமுகம் செய்திடப்போகிறோம் என்ற குஷியும் இணைந்து கொள்ள - "சூப்பர் சர்க்கஸ்"  - சூப்பரோ சூப்பராகவே தென்பட்டது எனக்கு ! காமிக்ஸ் வாசிப்புகளுக்கோ ; ரசனைகளுக்கோ அப்பாலான எனது தாத்தா கூட, கலரிலான அந்த புக்கை ஆர்வத்தோடு புரட்டுவதைப் பார்த்த போது ரொம்பப் பெருமையாக இருந்தது ! And விற்பனையிலும் அந்த ஜனவரி 1987 ஒரு மைல்க்கல் மாதமாய் அமைந்து போக, எனது சந்தோஷங்களை விவரிக்கவும் வேணுமா ?

சிறுவயதுக் கனவு ; கண்முன்னே கலரில் மெய்யாகிக் கிடக்க ; லக்கி லூக் எனும் அந்த iconic character உங்களின் ஏகோபித்த பாராட்டுக்களையும் ஈட்டியிருக்க ; கார்ட்டூன் எனும் புதுத் தடமும் துவக்கம் கண்டிருக்க ;  icing on the cake ஆக - ரூ.2 விலையில் இந்தக் கனவு சாத்தியமாகியதில் மகிழாது இருக்க முடியுமா - என்ன ? அப்புறமாய் ஏதேதோ குட்டிக்கரணங்கள் ; குரங்கு பல்டிக்கள் ; ஆயிரம், ரெண்டாயிரம் விலைகளுக்கெல்லாம் கலர் மேளாக்கள் என்று நிறைய பார்த்து விட்டோம் தான் !

ஆனால் -

லோகத்திலேயே எந்தவொரு  பேமானிப் பதிப்பகமும் செய்ய நினைத்திருக்கா ஒரு குடாக்குச் செயலாக இரண்டு ரூபாய் விலையில் லக்கியை அறிமுகம் செய்திட சாத்தியமான அந்த நாட்களும், அந்த இதழும் very very dear to my heart !!

அதே போல -

பக்கம் பக்கமாய், பத்தி பத்தியாய் ஏதேதோ ஹாட்லைன்கள் ; காமிக்ஸ்டைம்கள் ; வலைப்பதிவுகள் என்றெல்லாம் எழுதிக் கிழித்துள்ளேன் தான் ! ஆனால் இருபது வயதில், பூமிக்கே (!!!!) ஒரு சேதி சொல்லும் வேகம் உள்ளுக்குள் துளிர் விட்டதன் பலனாக, இந்த இதழின் முதற்பக்கத்தில் நான் எழுதிய தலையங்கம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் ! அந்தச் சுள்ளான் வேளையில் எனக்கு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு அனுபவம் இருந்ததெல்லாம் நிஜமே ; ஆனால் எனது பேனாமுனை ரொம்ப ரொம்ப raw-ஆக இருந்த நாட்களவை ! (இன்றைக்கு என்ன வாழுதாம் ? என்று கேட்டால் 'ஹி..ஹி..' தான் பதிலுங்கோ !!) அன்றைய பொழுதில் என் மனதில் பட்டதை அழகாய்ச் சொன்னது போலொரு ஞாபகம் எனக்கு ! என்னிடம் இப்போது அந்த புக்கும் இல்லை ; அந்தத் தலையங்கமும் லேது ; but ரெண்டோ / மூணோ ஆண்டுகளுக்கு முன்னே தற்செயலாய் அந்த புக்கைப் புரட்ட வாய்ப்புக்கு கிட்டிய போது படித்தேன் & I felt good !!

Thus ends - நிறையாக காரணங்களின் பொருட்டு எனக்கு மறக்கவியலா இதழாகிப் போன அந்த சூப்பர் சர்க்கஸ் பற்றிய மலரும் நினைவுகள் ! Ufff !! ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குவது நமது ஸ்பெஷாலிட்டி என்று  கேள்விப்பட்டிருப்பீர்கள் ; ஆனால் இம்முறையோ ஒரு பெருச்சாளியையே மடியில் ஏற்றிவிட்டிருக்க, அது டைனோசராய் விஸ்வரூபம் எடுத்ததில் ஆச்சர்யமேது ? வேறு எதற்காக இந்த லாக்டௌனை அகற்றுகிறார்களோ, இல்லியோ : இந்த LIC  உசரத்துப் பதிவுகளிலிருந்து உங்களை மீட்கவாவது பணிகளை மறுக்கா துவக்கினால் தேவலாம் போலும் ! எனக்கே மிடிலே !!

அதற்கு மேலும் டைப்ப தெம்பு லேது என்பதால் - Hot & Cool ஸ்பெஷல் பற்றிய மீள்பார்வை அடுத்த பதிவினில் ! ஆங்காங்கே பலப்பல மைக்கேல் ஜாக்க்சன்களும், பிரபு தேவாக்களும் at a time ரெண்டு கால்களையும் உசத்திப் போடும் steps சகிதம் நடனப் போட்டிக்குத் தயாராகி வரும் வேளைகளுக்கு மத்தியில், இதற்குப் பதிவிடவும் முயற்சியுங்களேன் folks ?

1. சூப்பர் சர்க்கஸ் ஒரிஜினல் 1987 இதழை முதன்முறையாக நீங்கள் படித்த நாட்கள் நினைவுள்ளதா ? என்ன வயதுகளோ உங்களுக்கெல்லாம் அன்றைக்கு ?

2. இன்னமும் அந்த ஒரிஜினல் பிரதிகளை பத்திரமாய் வைத்திருப்போர் - உங்களுள் எத்தனை பேரோ ? உங்கள்வசம் அது இருப்பின், ஒரு selfie ப்ளீஸ் - with the book of course !!

3. முதல்வாட்டி படித்த போது அந்த கார்ட்டூன் ஜானர் ரசித்ததா ? அல்லது - ஆக்ஷனிலேயே வண்டியோட்டி வந்த அந்நாட்களில் இது ஏமாற்றத்தைத் தந்ததா  ?

And lastly :

4. லக்கியின் all time best TOP 3 ல் இந்த இதழ் இடம்பிடித்திடுமா - உங்களின் தேர்வுகளில் ?

Bye guys....see you around !! Stay Home & Stay Safe !!

P.S : சிங்கத்தின் சிறுவயதில் கட்டுரையினில் ஏதோவொரு பாகத்தில் XIII தொடரின் முதல் ஆல்பம் + லுக்கி லூக்கின் ஒரிஜினல் files சேர்ந்து வந்ததாய் எழுதியிருப்பேன் ! அது தவறு ; அன்றைக்கு வந்தவை XIII & ரோஜரின் மர்மக் கத்தி ஒரிஜினல்ஸ் ! 
1986-ல் ------ பாரிஸின் பிரசித்தி பெற்ற அம்மணியோடு ! 

315 comments:

 1. வாழ்த்துகள் மேனேசர் ஐயா💐💐💐💐💐

  ReplyDelete
 2. எம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆம்ம்ம்ம் பெரிய பதிவு....!!! இரண்டு நாளாக டைப்பினீர்களா எடிட்டர் சார்...????

  ReplyDelete
 3. வந்திட்டேன் சார் 🙏🏼
  .

  ReplyDelete
 4. வந்துட்டேன் சமையலைப் பாதியில் விட்டுவிட்டு.
  மிக நீளளளளளளளளளளளளளளளளளமான பதிவு.

  ReplyDelete
 5. இரவு வணக்கம் நண்பர்களே.

  ReplyDelete
 6. ஹைய்யா புதிய பதிவு.......

  ReplyDelete
 7. 1. எனக்கு மிக நன்றாக நினைவில் உள்ளது. அப்போது எனது வயது 8. எனக்கு கதையை விட நீங்கள் லக்கி க்கும் ஜாலி க்கும் கொடுத்த அறிமுகம் இன்னும் நினைவில் இருக்கிறது.
  2. அந்த பழைய புத்தகம் என்னிடம் இல்லை

  3. முதல் முறை படித்த போது ரசித்ததா வா அந்த வயதில் லக்கி ஏற்படுத்திய தாக்கத்தை மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு ஏற்படுத்தியது கேப்டன் டைகர் தான்.

  4. லக்கி இன் டாப் 3 இல் மட்டும் அல்ல எப்போதுமே முதல் இடம் என்னை பொருத்த வரை சூப்பர் சர்க்கஸ் க்கு தான்.

  ReplyDelete
  Replies
  1. இதில் இன்னொரு விசயம் என்னவென்றால் இந்த லக்கி கிளாசிக் reprint புத்தகம் நான் வாங்க வில்லை. நமது அலுவலகத்திலும் ஸ்டாக் இல்லை என்று சொல்லிவிட்டார்கள் வேறு வழியே இல்லாமல் Amazon il order செய்து Western circus புத்தகத்தை வாங்கினேன் ஆனால் அதை படிக்கவே முடியவில்லை. இந்த நேரத்தில் தான் போன வருட ஈரோடு புத்தக விழாவில் நமது சந்திப்புக்கு வந்த போது ஈரோடு விஜய் எனக்கு அன்பளிப்பாக அந்த புத்தகத்தை தந்தார். அவருக்கு எனது நன்றிகள். எனவே இந்த சூப்பர் சர்க்கஸ் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் தான்.

   Delete
  2. குமார் நீங்கெல்லாம் அப்பவே அப்படியா.......!!!

   Delete
  3. ஆமாம் அண்ணா. இரும்பு மனிதனில் ஆரம்பித்தது. 1984

   Delete
  4. 1.& 2.அப்ப எனக்கு மூன்று வயது. தவிர ஹைதராபாத்தில் இருந்ததால் ஆறு வயதிற்கு மேல் சென்னை வந்த பிறகுதான் தமிழ் படிக்க ஆரம்பித்தேன்.
   3. படிச்ச முதல் லக்கி சாகஸம் ஒரு கோச்சு வண்டியின் கதை. சூப்பர் சர்க்கஸ் மறுபதிப்பு படிச்சிருக்கேன்.ஜாலிக்கு சம அளவு ஹீரோ ஸ்கோப் தரும் கதை. ஜாலி கொடுக்கும் ட்ரைனிங் sessions தான் மெயின் highlight.
   4. தாராளமா டாப் 3 வரிசையில் சூப்பர் சர்க்கஸ் இடம் தரலாம்.

   Delete
  5. சூப்பர் அனு அருமையான நினைவுகள்.

   Delete
  6. அருமையான மலரும் நினைவுகள் நண்பர்களே.

   Delete
 8. கமெண்ட்டுக்கே டைப்ப கை வலிக்குது. இவ்வ்வ்ளோ நீள பதிவு டைப் பண்ண ஏதாவது பாட்டில் பூதம் பக்கத்துல assistant ஆக வச்சிருக்கிங்களா சார்?

  ReplyDelete
  Replies
  1. பாட்டில் பூதமே வேண்டுமா?

   பட்டணத்தில் பூதம்.
   பாரீன் பூதம்
   இதெல்லாம் வேண்டாமா.?

   Delete
 9. அம்மணி உங்களைப் பார்க்க நீங்க யாரையோ பார்த்துகிட்டு இருக்கிங்களே சார்.........

  ReplyDelete
 10. போட்டோவில் குரோதம் புகழ் பிரேம் போல இருக்கிறீர்கள் ஆசிரியரே

  ReplyDelete
  Replies
  1. என்னோட mind வாய்ஸ். எடி hairstyle யாரையோ remind பண்ணுதே என்று யோசிச்சேன்.

   Delete
  2. எடிட்டர் சார் இந்த லுக்குல நம்ம கேப்டன் நடிக்க வந்த புதுசுல இருந்த மாதிரியே இருக்கார் :-)

   Delete
 11. சார் மோனலிசா வுடன் நீங்கள் இருக்கும் ஃபோட்டோ அருமை. You look handsome Sir.

  ReplyDelete
 12. // 1. சூப்பர் சர்க்கஸ் ஒரிஜினல் 1987 இதழை முதன்முறையாக நீங்கள் படித்த நாட்கள் நினைவுள்ளதா ? என்ன வயதுகளோ உங்களுக்கெல்லாம் அன்றைக்கு ? //
  இந்த இதழ் வந்தப்ப நான் நாலாப்பு படிச்சிகிட்டு இருந்தேனுங்க,அது மட்டும் நினைவுல கீது......
  பார்ப்போம் யாராவது சீனியர் சிட்டிசன்ஸ் இதற்கு பதில் சொல்வாங்க.......

  ReplyDelete
  Replies
  1. நான் அப்போது 3 வது தான் அண்ணா ஆனால் நான் படித்து இருக்கிறேன். மேலே பாருங்கள்.

   Delete
 13. 87 ல் வந்த உடனே அந்தப்பபுத்தகத்த
  வாங்கிப்படித்து பாதுகாத்து பின்
  தொலைத்தவரை நினைவுள்ளது.
  அப்போதுதான் நான் காலேஜ் முடித்த
  கையோடு VO வா வேலை( வெட்டி ஆபீசர்)
  பாத்துக்கிட்டு இருந்தேன்.
  அது ஒரு நிலா(கனா)காலம்

  ReplyDelete
 14. நா வந்துட்டேன். கொழ கொழ உப்புமா ரெடி.

  ReplyDelete
  Replies
  1. அட அநியாயமே... நல்லா இருந்தாவே உப்புமாவை சாப்பிட முடியாது. இதில் கொழ கொழ உப்புமாவா :-) என்ன கொடுமை இது அனு :-)

   Delete
  2. எட்டு மணிக்கு மேல சாவகாசமா வந்து அனு கொஞ்சம் உப்புமா கிளரிவிடு என்று சொன்னால் பத்தி கிட்டு வந்தது. அதான் வயித்தெரிச்சலில் தண்ணீர் ஜாஸ்தி ஆகிடுச்ச. நோ ப்ராப்ளம். ஹி finished it.

   Delete
  3. அவருக்கு வேற வழி :-) சாப்பாடு வேணுமே... அதனால் சாப்பிட்டு முடித்து விட்டார். :-)

   Delete
  4. உப்புமாவை கண்டு பிடிச்சவங்களை வன்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஆர்னர் :-)

   Delete
  5. வயித்தெரிச்சலில் தண்ணீர் ஜாஸ்தி ஆகிடுச்ச.
   ஆத்துக்காருக்கு கண்ணீர் ஜாஸ்தி ஆகிடுச்சு.

   Delete
  6. டூ மச். ஒரு மனுஷி ஆறு மணியிலிருந்து எத்தனை தடவை தான் டிபன் பத்தி கேட்கிறேன், பதிலே காணோம். கொசுறு செய்தி உப்புமா என் கணவரின் தேசிய உணவு. நான் 4 போர்போன் பிஸ்கட்டுகளோடு எஸ்கேப்.

   Delete
  7. Tamilnadu Bachelor's nation food uppuma.

   Delete
  8. அனு மேம் உப்புமாவுல தண்ணி அதிகமா ஆண்டவா எம் தமிழ்நாட்டு சகோதரர்களை கோரோனாவிலிருந்து காப்பத்துறிங்களோ இல்லியோ இந்த உப்புமா கிட்ட இருந்து காப்பாத்துங்க

   Delete
  9. அவருக்கும் இதே பயம். சமர்த்தா ஆறு மணிக்கே எழுந்து நானே டிபன் சமைக்கிறேனு சொல்லி கிட்சன் குள்ள ஓடிட்டார். ஒரு வேலை மிச்சம்.

   Delete
  10. போற உசுரு கொரானோவுலயே போகட்டும் நோ உப்புமா....

   Delete
 15. ஒவ்வொரு கதை கொள்முதலின் பின்னேயும் உள்ள சுவாரஸ்யமான தகவல்கள், அந்த நினைவுகளும் கோடி பெறுமே.!

  ReplyDelete
 16. ஒரிஜினல் 'சூப்பர் சர்க்கஸ் ' எவ்வளவு முட்டிமோதியும் கிடைக்கவே இல்லை.முதன்முதலில் படித்தது மறுபதிப்பில் மட்டுமே.லக்கியின் கதைவரிசையில் மேலும் ஒரு நட்சத்திரம்.

  ReplyDelete
 17. போகிறபோக்கைப் பார்த்தால் ஊரடங்கு பிரச்சனைகள் முடிந்து இயல்பு நிலை திரும்புவதற்குள் தளத்தின் பார்வைகள் 50 இலட்சத்தைத் தொட்டுவிடும் போல.......

  ReplyDelete
  Replies
  1. நீங்க வேற. ஊரடங்கு போகிற போக்கை பார்த்தால் வெறும் பார்வைகள் மட்டும்தான் மிஞ்சும் போலிருக்கு.

   Delete
 18. முதன் முதலில் படித்த லக்கியின் கதை 'பயங்கரப் பாலம்.சின்னக் கதையாக இருந்தாலும், முழுநீள விருந்து வைத்த கதை.க்ளைமாக்ஸில் ஜாலி ஜம்பர் அந்த வாய்க்காலில் வழுக்கிக் கொண்டுவரும் இடம் விழிகள் விரிய ரசித்தது இன்னும் நினைவிலுள்ளது.

  ReplyDelete
 19. // கலரிலான அந்த புக்கை ஆர்வத்தோடு புரட்டுவதைப் பார்த்த போது ரொம்பப் பெருமையாக இருந்தது ! And விற்பனையிலும் அந்த ஜனவரி 1987 ஒரு மைல்க்கல் மாதமாய் அமைந்து போக, எனது சந்தோஷங்களை விவரிக்கவும் வேணுமா ? //
  ஒரு இதழை படித்து சில,பல மணித்துளிகளில் விமர்சனங்களை போகிற போக்கில் சர்வசாதரணமாக இட்டுவிட்டு செல்லும் மனப்போக்கு பொதுவில் இருக்கும்போது,நீங்கள் பட்ட அவதிகளையும்,அடித்த குட்டிக் கரணங்களையும் பார்க்கும்போது உண்மையில் வியப்பை ஏற்படுத்துகிறது சார்......
  உழைப்பின் பலன்கள் வியப்பூட்டுபவை.....

  ReplyDelete
  Replies
  1. //உழைப்பின் பலன்கள் வியப்பூட்டுபவை// நிச்சயமாக.
   ஒரு கடையில் மாதம் ரூபாய்.70 ஆயிரம் வியாபாரம் ஆக வேண்டுமென்றால், அதற்கு மாதம் operating cost, rotation மற்றும் overheads சேர்த்து குறைந்தது மூன்று லட்சம் ரூபாய் தேவை. அதை தவிர சிறந்த ஊழியர்கள், creativity, எனர்ஜி ஒருங்கிணைந்த பின்னர் தான் உழைப்பின் பலன் கிடைக்கும். டெக்னாலஜி அற்ற அந்த நாட்களில்... Whew... Hats off to எடி

   Delete
 20. அருமையான பதிவு எடிட்டர் சார்!! நிதானமாய், சுவாரஸ்யமாய் படித்து முடிக்க எனக்கு அரை மணி நேரத்துக்கும் மேல் ஆனது!!

  'சூப்பர் சர்க்கஸின் பின்னணி' குறித்து கேள்வி எழுப்பி உங்களை இப்பதிவுக்கு ஏற்பாடு செய்திட்ட காமிக்லவருக்கு என் நன்றிகள்!!

  ReplyDelete
 21. எனக்கு 1987ல் 10 வயது... லக்கி லூக் அறிமுகம் என் 14வது அல்லது 15வது வயதில் என்பதாக நினைவு. லக்கி புத்தகத்தை படித்தால் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்து விடுவேன் என்பதால் ஆள் அரவமற்ற பகுதிகளை தேடி அமர்ந்து படித்ததுண்டு. லக்கி லூக் என்றாலே டாப் தான் ஆகவே, சிறந்த 3 என்று எதுவுமில்லை சார். எனக்கு எல்லாமே டாப் தான்

  ReplyDelete
 22. அஞ்சாவது படிக்கும் போதே காமிக்ஸ் படிக்கும் தொழில்நுட்ப அறிவு நண்பர்களோடு சேர்ந்து பழகிவிட்டிருந்தது.


  ஆனால் லயன் காமிக்ஸ் அறிமுகமானது ஏழாவது முடித்த பின்பான ஓரு கோடை விடுமுறையில்தான்.

  கொத்தாக நிறைய காமிக்ஸ் மற்றும் இன்ன பிற கதை புத்தகங்களோடு அந்த நாட்கள் மிக இரம்மியமாக கழிந்தது.அதே விடுமுறையில் தான் சைக்கிள் ஓட்டவுமே கற்றுக்கொண்டதாக நினைவு.

  லக்கி லூக் மெய்மறக்கச் செய்த சாகசம் ஒரு கோச் வண்டியின் கதை.
  அப்பொழுதெல்லாம் பழைய புத்தக கடைகளில் அனைத்து வெளியீடுகளுமே எளிதில் கிடைக்கும்.
  லயன் காமிக்ஸ் மீது மட்டும் கூடுதல் ஈர்ப்பு எப்பொழுதும் உண்டு.அடுத்து சில வருடங்களிலேயே ஒட்டு மொத்த காமிக்ஸ்(லயன்-முத்து)வெளியீடுகளையும் முனைப்போடு சேகரித்து விடவும் முடிந்தது.
  சூப்பர் சர்க்கஸ் அதுபோன்ற முயற்சியில் முன்பின் அட்டை எதுவும் இன்றி கிடைக்கப்பெற்ற இதழ்தான்.

  இன்று வரையிலுமே லக்கி லூக் மட்டுமே தன்னிகரில்லா கதாநாயகன்.இரண்டாவதாக கேப்டன் டைகர்‌.
  சூப்பர் சர்க்கஸ்,புரட்சி தீ ஆல்டைம் ஃபேவரிட்.

  ReplyDelete
  Replies
  1. // லக்கி லூக் மட்டுமே தன்னிகரில்லா கதாநாயகன்.இரண்டாவதாக கேப்டன் டைகர்‌. // அப்படி சொல்லுங்க ஸ்ரீ

   Delete
  2. அருமையான நினைவுகள்!

   Delete
 23. சூப்பர் சர்க்கஸ் வெளிவரும்போது எனக்கு வயது இருபத்தி ஆறு!
  அன்றைக்கு வாங்கிய புத்தகத்தின் பிரதி இப்போதும் என்னிடம் உள்ளது.
  அன்றைக்கு இரண்டு ரூபாய்க்கு முழு வண்ணத்தில் நமது காமிக்ஸ் என்பது ஆச்சர்யமான விஷயம். இரண்டு ரூபாய் புத்தகத்தை ரூபாய் இரண்டு ஐம்பது கொடுத்து வாங்கினேன். காமிக்ஸ் ஒருசில கடைகளில்தான் கிடைக்கும் என்பதால் ஏகப்பட்ட கிராக்கி. கடைக்காரர் ஐம்பது காசு எக்ஸ்ட்ராவாக வாங்கிவிட்டார். புத்தகம் டிமாண்டாம்! அந்த ஐம்பது பைசாவுக்கு தண்டனையாக என்னுடன் வந்த என் நண்பன் அங்கு தொங்கிக் கொண்டிருந்த ஒரு மூன்று ரூபாய் கிளுகிளு இதழை ஆட்டையை போட்டுவிட்டான். அந்த புத்தகமும் என்னிடம் இன்றும் உள்ளது!
  கார்ட்டூன் கதைகள் இன்று பிடிக்காமல் போய்விட்டது. ஆனால் சூப்பர் சர்க்கஸ் வந்த சமயம் என்னை அதிக முறை படிக்க வைத்த இதழ் இது.

  ReplyDelete
  Replies
  1. அந்த யானையை ஜாலி ஜம்பர் விசித்திரமாக பார்க்கும் கட்டம்..ஹீஹீஹீ... ஆட்டையைப் போட்ட புக்கு..ஹாஹாஹா

   Delete
  2. போலீஸ்காரருக்கு இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு தான்

   Delete
  3. // ஆட்டையைப் போட்ட புக்கு //
   யுவர் ஆர்னர் இவரை எந்த விதிகளின் கீழ் தண்டிக்க போகிறோம். ஒரு காவல் துறை அதிகாரியே தவறு செய்வதை என்ன செய்ய. :-)

   Delete
 24. சூப்பர் சர்க்கஸ் வந்தபோது 10 வயது. அந்த மேட் ஃபினிஷ் அட்டையை பார்த்த போதே குஷியாகி வாசிக்க ஆரம்பித்து மறுக்கா மறுக்கா வென படித்து தள்ளினேன். சிரித்து மாளவில்லை. Simply fallen in love at first sight. பத்திரமா வைத்துள்ளேன். Selfie சான்ஸ் லேது!!
  கண்டிப்பாக என் லிஸ்ட்டில் top 3 ல் உள்ளது.

  Western circus புத்தகம் 2000 ம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக கிடைத்தது. அதைப் வாசித்தபின்பு எடிட்டர் அவர்களின் ரசனையின் மீதும், மொழிபெயர்ப்பின் மீதும் மரியாதை இன்னும் அதிகமானது.சூப்பர் சர்க்கஸின் காமெடி சதவீதம் western circus ai விட 100% அதிகம் என்பது என் மதிப்பீடு!
  நமது ரசனைக்கு ஏற்றார்போல மிகச் சிறப்பான மொழிபெயர்ப்பு!
  என் பால்யத்தின் நீங்கா நினைவுகளில் சூப்பர் சர்க்கஸ் புத்தகத்திற்கு ஒரு special இடம் எப்போதுமே உண்டு!

  ReplyDelete
  Replies
  1. // சூப்பர் சர்க்கஸின் காமெடி சதவீதம் western circus ai விட 100% அதிகம் என்பது என் மதிப்பீடு! // சந்தேகமின்றி எனது மதிப்பீடும்

   Delete
  2. அருமையான நினைவுகள்!

   Delete
  3. நன்றி நண்பரே!!

   Delete
 25. 1.சூப்பர் சர்க்கஸ் வெளிவந்தபோது எனது வயது 13.
  2.அந்த முதல் பிரதி என்னிடம் பத்திரமாக உள்ளது ஒரே ஒரு குறை அட்டைப்படம் மட்டும் காணாமல் போய்விட்டது.
  3.அந்த முதல் புத்தகத்திலேயே லக்கிலூக் எங்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டார். குறிப்பாக அந்த யானை துரத்திய காட்சி எனக்கு மிகவும் பிடித்தமான காட்சிதான்.
  4.லக்கியின் Top 3 சாகசத்தில் கண்டிப்பாக இடம் கொடுக்கலாம்.

  ReplyDelete
 26. அதுவும் அந்தசாரைப்பாம்பு சார்லியைநினைக்கும் பொழுதெல்லாம் கழுக் என்று சிரித்துக்கொண்டேஇருக்க பையன் ஒரு மாதிரி என்று பெயர் ஆரம்பித்துவிட்டது கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 27. சூப்பர் சர்க்கஸ் வெளியானபோது எனக்கு வயது ஒன்றோ இரண்டோ இருக்கலாம்.. ஞாபகமில்லை..!

  ஆனால் பின்னாட்களில் படித்தது நன்றாக நினைவில் இருக்கிறது.! ஆனால் அந்த புத்தகம் கைமில் இல்லை.!

  முதலில் படித்த லக்கி இதழ் ஒரு கோச்சு வண்டியின் கதை.! என்னுடைய டாப் லக்கி லிஸ்டில் முதல் இடம் கோச்சுவண்டியின் கதைக்கே..!

  சூப்பர் சர்க்கஸ் டாப் 3ல் மூன்றாவது கதை.! அந்த டாப் லிஸ்டில் இரண்டாவது கதை பூம் பூம் படலம்.!

  புரட்சித்தீ, கௌபாய் எக்ஸ்ப்ரஸ், பொடியன் பில்லி, ஜேன் இருக்க பயமேன், உத்தமபுத்திரன், பட்டாபோட்டி, மனதில் உறுதி வேண்டும், எதிர்வீட்டில் எதிரிகள், வில்லனுக்கொரு வேலி, ஜென்டில்மேனின் கதை...... ஷ்ஷ்ஷ்ஷ்ஷப்பா...

  போங்க சார் எல்லா லக்கிலூக் கதைகளுமே டாப் 3ல் தான் இருக்கின்றன.. எந்தக் கதையையும் குறைத்துக்கூற முடியவில்லை.!

  ReplyDelete
  Replies
  1. கண்ணன் உங்களுக்கு 34 வயசுதானா ஆனா மகி ஜி நீங்க திருவள்ளுவர் கூட ஒன்னா படிச்சவருன்னு சொன்னாரே

   Delete
  2. ங்ஙே.. அந்த கணக்குபடி 34 வருதா..!?
   அப்போ இன்னும் குறைச்சுக்குவோம்.. அதாவது சூப்பர் சர்க்கஸ் வந்தப்போ நான் பிறக்கவேயில்லை..!
   இப்போ பாருங்க செந்தில் சரியா இருக்கும்.!

   Delete
  3. க்கும்..திருவள்ளுவரே மிஸ்டர் கண்ணரை "அங்கிள் " ன்னு தான் கூப்புடுவாரு..:-)

   Delete
  4. // சூப்பர் சர்க்கஸ் வெளியானபோது எனக்கு வயது ஒன்றோ இரண்டோ இருக்கலாம்.. ஞாபகமில்லை..! //
   ம் அப்புறம்.....

   Delete
  5. தலைவரே கப்புனு பாயிண்டை பிடிச்சிங்க......

   Delete
  6. சூப்பர் சர்க்கஸ் வந்தப்போ நான் பிறக்கவேயில்லை..!
   இப்போ பாருங்க செந்தில் சரியா இருக்கும்.!

   அப்ப நீங்க எனக்கு கடைக்குட்டி தம்பி இனிமேல் நீங்க என்னை பெரியண்ணா ன்னுதான் கூப்பிடனும் 😄😄😄😄😄

   Delete
  7. அருமையான நினைவுகள் Kanna!

   Delete
 28. // மதுரை மாநகருக்கு மட்டுமே 3000 பிரதிகள் விற்ற நாட்களையெல்லாம் இன்றைக்கு நினைவு கூர்ந்தால், பெருமூச்சு ; சிறுமூச்சு ; நடுமூச்செல்லாமே விடத் தோன்றுகிறது !! //

  அடேங்கப்பா. வாவ். கேட்கவே இனிமையாக இருக்கிறது. இந்த நாட்கள் மீண்டும் திரும்ப வேண்டும், விற்பனையில் நமது காமிக்ஸ் மீண்டும் சாதனை செய்ய வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஒரு 5000 சந்தாதாரர்கள் வரும் 2021 நமக்கு கிடைத்து விட்டால் எப்படி இருக்கும். வருடம் தோறும் வரும் நமக்கு கிடைக்க இருக்கும் புத்தகங்கள் எண்ணிக்கை கூடும், புதிய கதைகள் மற்றும் புதிய நாயகர்கள் நமக்கு கிடைப்பார்கள், டின் டின் தமிழ் பேசுவார், இன்னும் என்ன என்னமோ செய்வார் நமது ஆசிரியர், சும்மா பல காமிக்ஸ் உலகத்திற்கு நமது ஆசிரியர் அழைத்து செல்வார். இந்த கனு நனவாகட்டும்.‌

   ஆசிரியர் மைண்ட் வாய்ஸ்... சாமி நமக்கு முதலில் ஒரு 1000-1500 சந்தாதாரர்கள் கிடைச்சா போதுமே புகுந்து விளையாடுவேனே எல்லா விளையாட்டு மைதானத்திலும். :-)

   நடக்கும் கனவுகள் விரைவில் நனவாகும்.

   Delete
  2. நிச்சயம் நடக்கும். இப்போது காமிக்ஸ் உலகின் சேலஞ்ச ஆங்கில +1st ரேங்க் obsessed parents. External challenges are very high. Tinkle படிக்கும் என் சொந்தகார பெண்ணை ஜில் ஜோர்டான் ட்ரை பண்ண சொன்னேன். அவள் அம்மா என் பொண்ணு இந்த லோக்கல் புக்கெல்லாம் படிக்காது என்று டயலாக் விட்டாள் (அம்மா படிச்சது 10வது, கஷ்டப்பட்டு எழுத்து கூட்டி வாரமலர் தவிர எதையும் படிப்பது இல்லை) 1st ரேங்க் பெண்ணோ இரண்டு வரி படிக்கிறதுக்குள்ள திணறி போய்ட்டாள். 7ஆம் கிளாஸ் வேறு. Different ah எதாவது படித்தால் ரேங்க் காது வழியா வெளிய போயிடும் என்று parents பயப்படறாங்க. இந்த cliche விலகினால், நம் காமிக்ஸ் மீண்டும் சாதனை நிலைக்கு செல்லும்.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. நமது மொழியில் உள்ளதை பல குழந்தைகள் படிக்க விருப்பபடுவதில்லை, அதற்கு ஒரு காரணம் பெற்றோர்கள் என நினைக்கிறேன். நீங்கள் சொல்வது சரிதான்.

   நமது சரவணன் (ஆசிரியர்) போல் இன்னும் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இருந்தால் நன்றாக இருக்கும், படிப்போது சேர்த்து காமிக்ஸ் சுவையையும் ஊட்டி விட.

   காமிக்ஸ் விலை அதிகம் என சிலர் சொல்லலாம். நான் பஸ்ஸில் பயணம் செய்யும் போது பல முறை குழந்தைகள் பெப்ஸி மற்றும் தின்பண்டங்கள் வாங்கி உண்ணுவதை கண்டு இருக்கிறேன். அவைகளின் மதிப்பு சுமார் ₹40-50 வரும். எனவே பெற்றோர்களால் காமிக்ஸ் வாங்கி கொடுக்க முடியும். ஆனால் குழந்தைகளிடம் புத்தகம் படிக்கும் ஆர்வம் இல்லை, அதனை பெற்றோர்கள் ஊக்குவிப்பு செய்ய வேண்டும்.

   Delete
 29. ரொம்ப பெரிய பதிவாக இருக்கிறது.. ஷிப்ட் போட்டு படிக்க போகிறேன். :-)

  ReplyDelete
 30. நானும் உள்ளேன் ஐயா !

  ReplyDelete
 31. This comment has been removed by the author.

  ReplyDelete
 32. .மோனாலிசா பக்கத்துல நீங்க நிக்குறப்போ மோனாலிசாவுக்கே ஒரு தனி லுக்கு வந்த மாதிரி இருக்கு

  எடிட்டர் மைண்ட் வாய்ஸ்: " ஏம்பா எல்லாம் நல்லாத்தானே போயிட்டிருந்தது "

  ReplyDelete
 33. எல்லாஞ் சரி.

  பாரிஸ்ல உங்க லாட்ஜத் தேடி வந்து குடுத்தது ஓகே.

  அனுப்புற செலவு மிச்சந்தானே ன்னு கணக்கு போட்றுப்பாங்கேளோ

  ReplyDelete
 34. ******** சூப்பர் சர்க்கஸும் ஒரு சுட்டி விஜயும் ******

  'சூ.ச' வெளியானபோது எனக்கு ரெண்டுங்கெட்டான் வயசு! அதாவது 9 வயசு!! ஈரோட்டில் நான் படித்த பள்ளியிலிருந்து கூப்பிடு தொலைவில் ஒரு மீசைக்காரத் தாத்தாவின் பேக்கரி கடை உண்டு. நம் காமிக்ஸ் உட்பட அப்போது வந்திட்ட கோகுலம், பூந்தளிர், அம்புலிமாமா, ராணி காமிக்ஸ் என்று அந்நாளைய எல்லா சிறுவர் இதழ்களுமே கைக்கு எட்டிய தூரத்தில் புத்தம்புதிதாய் கிடைக்குமிடம் என்னளவில் அதுதான்!! இரண்டு நாட்களுக்கு ஒருமுறையேனும் அந்தக் கடைக்கு ஒரு விசிட் அடித்து கலர்கலராய் தொங்கிக் கொண்டிருக்கும் புத்தகங்களின் அட்டைப்படங்களைப் பார்த்து ரசிப்பதில் அப்படியொரு பரவசம் எனக்கு!! கூடவே, புதிய புத்தகங்களிலிருந்து கிளம்பி, காற்றோடு கலந்துவந்து நாசிகளை எட்டிடும் அந்த மை வாசனையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

  அப்போதெல்லாம் பாக்கெட் மணியாக அப்பா தரும் 20 காசுகளை என் ஜோல்னா பையின் இரண்டு கீழ்ப்புற மூலைகளிலும் சேமித்து வைத்து காமிக்ஸ் வாங்குவது வழக்கம்! காசு கொடுத்து புதிய புத்தகம் வாங்கிடுவது என்றால் அது நம் லயன்/முத்து இதழ்களாக மட்டுமே இருந்திடும்! என் சேமிப்பின் பெரும்பகுதி(?!) பழைய புத்தகக் கடைகளில் நம் இதழ்களை வாங்கிடுவதற்கே செலவாகிவிடும் என்பதால், லக்கிலூக்கின் 'சூ.ச' வெளியானபோது அதை உடனடியாக வாங்குமளவுக்கு பையிருப்பில் என்னிடம் காசு இல்லை!! ஆனால் ஏனோ 'சூ.ச'ன் அட்டைப்படத்தைப் பார்த்த கணத்திலேயே அதன் மீது காதல் கொண்டேன் என்பதே உண்மை!! லக்கியும், ஜாலிஜம்பரும் வித்தைகாட்டிய அட்டைப் பட ஓவியமும்,அந்நாளைய சிறுவர்களை குஷிப்படுத்திடும் வார்த்தையான 'சர்க்கஸ்' என்ற சொல் தலைப்பிலேயே இடம்பெற்றிருந்ததும் என் இன்ஸ்டன்ட் காதலுக்கு முக்கியக் காரணங்களாக இருந்திருக்கக்கூடும்!!

  புத்தகங்கள் விற்றுத் தீர்வதற்குள் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற உந்துதலோடு வீட்டுக்கு விரைந்தவன், அம்மாவின் கடுகு டப்பாவுக்குள் கையைவிட்டு கொஞ்சம் சில்லறைகளைத் தேற்றினேன். 'கதை புக்கு வாங்க காசு வேணும்பா' என்று அப்பாவிடம் கேட்க மனசில்லாததால், அடுத்த தெருவிலிருந்த என் தாய்மாமாவின் வீட்டுக்கு ஓடினேன். அவருக்கு வெற்றிலை-பாக்கு வாங்கிக் கொடுத்து உதவினால் வாரம் ஒருமுறை அதிகபட்சமாக எட்டணா டிப்ஸ் கொடுப்பார்! அன்று அவரிடம் கெஞ்சிகேட்டு அந்த எட்டணாவைப் பெற்றுக் கொண்டேன்!
  அடுத்தநாள் காலையில் அப்பா தரப்போகும் இருபது பைசா கிடைத்தால் புக்கு வாங்கக் காசு ரெடி!! மனசுக்குள் குஷி! 'ஒருவேளை இந்நேரத்துக்கு புக்கு விற்றுத் தீர்ந்திருக்குமோ?!!' என்ற பயம் ஒருபுறம்! அன்றைய இரவு எனக்குத் தூக்கம்பிடிக்கவில்லை என்பதாகவே ஞாபகம்!

  விடிந்ததுமே அவசர அவசரமாக ஸ்கூலுக்கு ரெடியாகி விட்டேன். அப்பா ஸ்கூலில் என்னை இறக்கிவிட்டு பாக்கெட் மணியைக் கொடுத்ததுமே உள்ளுக்குள் ஒரு குபீர் சிலிர்ப்பு! உடனே ஓடிப்போய் வாங்கிவந்துவிடவேண்டுமென்ற உந்துதலோடு மனது கிடந்து தவித்தாலும், ஸ்கூல் வாசலிலேயே நின்றிருந்த டீச்சரிடம் சிக்கிக்கொள்ள விருப்பமின்றி மதிய உணவு விடுமுறை வரை காத்திருந்தேன் - திக்திக் தடக்தடக் இதயத்தோடு! மதியம் சத்துணவு முடிந்ததுமே கடையை நோக்கி எடுத்தேன் ஓட்டம்!! புத்தகத்தைக் கைப்பற்றியதும் நான் அடைந்த சந்தோசத்தை இன்று எந்த வார்த்தைகளாலும் வடித்துவிட முடியாது!!

  தொடரும் நாட்களில் எத்தனைமுறை சூ.ச'வைப் படித்துச் சிரித்திருப்பேன்.. அந்த கார்ட்டூன் ஓவியங்களை ரசித்திருப்பேன் என்ற கணக்கெல்லாம் இல்லை! அந்த சொரசொர மேட் ஃபினிஷிங் அட்டைப் படத்தை என் கன்னத்தில் வைத்துத் தடவி ரசித்தவைகளும் எண்ணிடலங்கா!! இரவு பகலாக எந்நேரமும் அந்தப் புத்தகத்தைச் சுமந்தபடியே சுற்றிவந்த நாட்களின் பரவசத்தை என்னால் இன்றும் கூட உணரமுடிகிறது!

  கால ஓட்டத்தில், என் அண்ணனின் பொறுப்பற்ற செயல்களால் அந்த புக் எப்படியோ என்னைப் பிரிந்துவிட்டது! மனதில் ஒரு நெருங்கிய நண்பனைப் பிரிந்த சோகத்தோடும், ஒருவித வேட்கையோடும் அதன் பிறகு பல பழைய புத்தகக் கடைகளில் தேடியும் கூட, அந்தப் புத்தகம் மட்டும் எங்கேயும் கிடைக்கவேயில்லை!!

  சிலவருடங்களுக்கு முன் சூ.ச மறுபதிப்பாக வந்தபோது அதே கதையை திரும்பப் படித்து ஆனந்தப்பட்டேன்தான்!! ஆனாலும் அதே பழைய நண்பனை சந்தித்திருந்தால் கிடைத்திருக்கும் ஆனந்தத்திற்கு ஈடாகவில்லை!!

  சூ.ச - எட்டு ஜென்மங்களுக்கு என்னால் மறக்க முடியாத ஒரு இதழ்!!!  ReplyDelete
  Replies
  1. //
   சூ.ச - எட்டு ஜென்மங்களுக்கு என்னால் மறக்க முடியாத ஒரு இதழ்!!! //
   அருமையாக சொன்னீர்கள் விஜய் நமது காமிக்ஸ் இல் ஒரு மைல் கல்.

   Delete
  2. எம்மாம் பெரிய பின்னூட்டம்... செம விஜய்.

   Delete
  3. அழகான நினைவுகள் செயலரே...:-)

   Delete
  4. ///சூ.ச - எட்டு ஜென்மங்களுக்கு என்னால் மறக்க முடியாத ஒரு இதழ்!!!////


   இந்த விசயம் ருக்குவுக்கு தெரியுமா.?

   Delete
  5. நீ....ள...மா..ன பதிவு. நீ.. ள... மா...ன பின்னூட்டம்..சபாஷ். சரியான போட்டி.

   Delete
  6. ///இந்த விசயம் ருக்குவுக்கு தெரியுமா.?///

   அவள் தம்பி மணிகண்டனுக்குத் தெரியும்!! ருக்குவுக்கு ரூட்டுப்போடும் பொருட்டு அவனுக்கு சில காமிக்ஸ் புத்தகங்கள் பரிசாகக் கொடுத்திருக்கிறேன்! ;)

   Delete
  7. ஹலோ விஜய் அண்ணா , வேலை ஜாஸ்தி இப்போ தான் ஆன்லைன் வர முடிஞ்சது. My experiences are also ditto. Same echo. 1994 முதல் 2001 வரை , நான் புக் வாங்க பட்ட பாடு இருக்கே!!!! இந்தியாவுக்கு பத்து தடவை சுதந்திரம் வாங்கி கொடுத்திருக்கலாம். குச்சி கிடைக்காம வடிவேலு துடிச்சா மாதிரி புது புக் வந்தா நான் துடிப்பேன். ஏற்கெனவே Tinkle slim issue, digest, Diamond comics, வாங்கி ரணகளம் பண்ணியது போதாம தமிழில் ராணி காமிக்ஸ் , முத்து , லயன் வேற அன்னைக்கு பைசா வாங்கி புக் வாங்க போனா வித்துப்போய்டும். Tinkle Holiday special, லயன் தீபாவளி மலர் எல்லாம் இப்படி தான் போச்சு இன்னைக்கு ஆன்லைன் ஆர்டர் பண்ற சுகமே தனி. வாங்கின புக்கை பதுக்கி பதுக்கி எதோ கள்ளச்சாராயம் கொண்டு வரா மாதிரி வந்து பழைய புக்ஸ் ஓட வச்சிடனும். இதுல DC காமிக்ஸ் வந்து வெச்ச வெத்துவேட்டு. எல்லா தமிழ் காமிக்ஸ்சும் சூப்பர் ஆக இருக்கனும் நினைச்சு ரூபா 30 கொடுத்து சூப்பர்மேன் வாங்கியது ரொம்ப கசப்பான அனுபவம் காறி துப்பின மாதிரி ஒரு Translation வாழ்க்கையில் மறக்கவே முடியாது.

   Delete
  8. ////எல்லா தமிழ் காமிக்ஸ்சும் சூப்பர் ஆக இருக்கனும் நினைச்சு ரூபா 30 கொடுத்து சூப்பர்மேன் வாங்கியது ரொம்ப கசப்பான அனுபவம் காறி துப்பின மாதிரி ஒரு Translation வாழ்க்கையில் மறக்கவே முடியாது.////

   ஹா ஹா ஹா! சத்தம்போட்டு சிரிச்சுட்டேன் சகோ!! :)))))))))

   Delete
 35. When I read the great great 'Super Circus', I was 10 sir. I even remember where the book was hung at the beeda stall .That beeda stall in our area in Salem city sold almost all newspapers and magazine. Now the shop is defunct. That time when I was reading the song sollitharavaa was played on radio. The background music of the song went well with vairappal Reagan's being chased by the elephant. Unfortunately I lost the original book. Fortunately it was reprinted. But the happiness from the newsprint colour print and innocent enjoyment at that age was unparalleled. To be frank , I don't like the change in dialogue in reprint. OK. REALLY UNFORGETTABLE sir. In my opinion, 'Super Circus' is the best of Lucky Luke.

  ReplyDelete
 36. அந்தக் குரங்கன் அப்படியே பெட்டியைத் திறந்து தலைகீழாய் அங்கிருந்த மேஜை மீது கவிழ்த்தினான் ! Sirithu sirithu vayiru punnaagivittadhu sir. I laughed like this long time after reading ,,'Puratchi Thee' (again Lucky Luke) Your frank expression of words in your mind. That fellow deserved it ....kazhuthaikku theriyuma karpoora vaasanai?

  ReplyDelete
 37. எங்க தலக்கு ஒரு செம பதிவ உங்களிடம் எதிர்பார்க்கிறோம் சார்... அவர்தான் XIII பேரக்கேட்டாலே சும்மா அதிருமில்ல...

  ReplyDelete
 38. கொரானாவுக்கு 'கொஞ்சம்' வயதானவர்களை ரொம்ம்ப புடிக்கும்னு தெரியாம என் வயச வேற போட்டு தொலச்சிட்டேனே!
  தளத்தில் நான் மட்டும்தான் மூத்த குடிமகன் போல இருக்கே! (ஒருவேளை கொரோனாவுக்கு பயந்து வயதை குறைத்து சொல்றாங்களோ!) கொரோனா கிட்ட நான் மட்டும்தான் மாட்டுவேன் போலிருக்கே! எச்சூஸ்மி...யாராவது ஃப்ரீயாக இருக்கீங்களா? கொரோனாவுடன் ஜாலியா பழக துணைக்கு யாராவது வர்ர்ர்ர்ர்ரீங்களா? கொரோனா பயத்தில் டர்ரானான விரல்கள் எத்தனை ர்ர்ர் ஐ போட்டுத்தள்ளுது பாருங்கோ.
  என்னுடைய பதிவு தப்பு...தப்பு...எடிட்டர் சார்!
  சூப்பர் சர்க்கஸ் வந்தபோது நான் பிறக்கவேயில்லை.

  ReplyDelete
  Replies
  1. கவலைப்படாதீங்க ஏடிஆர் சார்..இங்கே உண்மையிலியே சிறுவயது நபர்கள் யார் எனில் நானும் ,அகிலும் இருக்கலாம்...மற்றபடி அனைவரும் உங்கள்ள போன்றோரே...:-)

   Delete
  2. ஹிஹிஹி. ATR சார் எங்கள் எல்லாருக்கும் தெரியுமே இங்கே இருப்பவர்களில் ஜூனியர் நீங்கள் தான் என்று

   Delete
  3. தலீவரே....!
   இந்த 'சிறு' வயதில் நம் தளத்துக்கே தலீவரான உங்களை நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு!
   அப்புறம் ஒரு சந்தேகம் தலீவரே.
   நீங்கள் குடியிருக்கும் நாட்டில் ஐம்பது வயதில்தான் பள்ளியில் சேர்ப்பார்களாமே! அகில் இப்போது கல்லூரியில் படிக்கிறாரென்று நினைக்கிறேன். அப்படியானால் நீங்களும் கல்லூரியில்தான் படிக்கிறீர்களா? பள்ளியில் சேரும்போது
   உங்களுக்கு வயது ஐம்பது. இப்போது கல்லூரியில் படிக்கும் வயதையும் கூட்டிப்பார்த்தேன்.அண்ணே...கொரோனாவுக்கு என்னைவிட உங்களைத்தான்னே ரொம்ப பிடிக்கும்!
   நீங்கள் ரொம்ப கொடுத்து வச்சவர் தலீவரே!

   Delete
  4. ஆமாம் குமார். போன மாதம்தான் போலியோ சொட்டு மருந்து எனக்கு கொடுத்தார்கள். நான் வாயை திறக்கவில்லையென்பதால் எனது அம்மா என் இடுப்பில் நறுக் கென்று கிள்ளி நான் அழுவதற்கு வாயைதிறந்தவுடன் வாயில் சொட்டு மருந்து ஊற்றிவிட்டார்கள். கேட்கும் போது உங்களுக்கு அழுகை அழுகையாக வரவில்லை!

   Delete
  5. உங்க வாயில சொட்டு மருந்து விடும் போது அதை ஏங்க அவர் கேட்கப்போறார்.அது என்ன அவ்ளோ டேஸ்டாவா இருக்கும்.

   Delete
  6. ஆமாம் பத்து சார். கொஞ்சம் 'கிக்' காகவும் இருக்கும்.

   Delete
  7. அப்போ எனக்கு மூணு சொட்டு பார்சேல்ல்...

   Delete
  8. உங்களுக்கு மூணு சொட்டெல்லாம் பத்ததாது சார். ஒரு ஃபுல்லாவது தேவைப்படும். அவ்வளவுக்கு நான் எங்கே போவேன்!

   Delete
  9. விட்டா சொட்டு மருத்துக்கு சைடு டிஷ் கேட்பீங்க போல!!! ஒரு டவுட் சொட்டு மருந்து போட்ட குழந்தையின் வெயிட் எவளோ???

   Delete
  10. சொட்டு மருந்து போட்ட குழந்தைக்கு சைடு டிஷ் கொடுக்கவே ஆளில்லை. குழந்தை சைடு டிஷ் கேட்டு அழுது அழுது மட்டையாகி விட்டது. இந்த குழந்தை மட்டையாகிப்போச்சேன்னு யாரும் சட்டைகூட பண்ணவில்லை. வெயிட் யார் பார்ப்பார்கள் மேடம். ஒரு குத்து மதிப்பாக என்பது கிலோ இருக்கும்னு நெனக்கிறேன். கண்ணு வச்சிடாதீங்கோ...

   Delete
  11. ஆத்தி எண்பது கிலோ வா? 😲 பக்குனு ஆகிடுச்சு.மோர் குடிச்சிட்டு இருக்கர அப்பாவி பெண்ணை சுமங்கலியா மேல அனுப்ப பிளான் பண்றீங்க. ஒரு வேளை அழுது அழுது வீங்கிடீங்களா?

   Delete
  12. இதென்ன ப்ரமாதம் நானாச்சும் என்பது கிலோதான் மேடம். இதவிட ஸ்பெஷல் எனக்கு அடுத்ததாக இருந்த குழந்தை நூற்றி அறுபது கிலோ! எச்சூஸ்மி.யார் அந்த மோர் குடிக்கிற அப்பாவி பொண்ணு?

   Delete
  13. இட்ஸ் மீ..
   பை தி பை யாரும் கொரோனா வைரஸ்க்கு பயப்பட வேண்டாம். நம்ம ஃபிரிட்ஜில இரண்டு மாதங்கள் முன்பு மறந்து விட்ட சேமியா பாயசம் இருக்கு. கபசுரக் நீர் தேவை இல்லை. தளத்தில் இருக்கும் சீனியர் சிட்டிசன்களின் கை, கால் நடுக்கம் எல்லாம் பறந்துவிடும். இப்பொழுதே முன்பதிவு செய்யுங்கள்.

   Delete
  14. அந்த பாயாசத்தை சாப்பிட்ட அடுத்த நொடி கைலாசத்துக்கு(நித்யானந்தாகிட்ட இல்லீங்க) அதாவது பரலோகத்துக்கு பயணமாகப்போறோம். உயிரே இல்லாத உடம்புக்கு கை நடுக்கம் வந்தாலென்ன கால் நடுக்கம் வந்தாலென்ன...ம்ம்ம்!
   என்னா கொலவெறி!
   உங்க பாயாசத்துல சர்க்கரை, உப்பெல்லாம் சரியாக இருக்கான்னு டேஸ்ட் பண்ணி பாத்தப்புறம் என் பெயரை பதிவு பண்ணிக்கோங்க.

   Delete
 39. சூப்பர் சர்க்கஸ் இதழை எப்பொழுது எங்கு வாங்கி படித்தேன் என நினைவில்லை சார்..ஆனால் அந்த இதழ் எனது கைகளுக்கு கிடைத்த சமயம் அப்பா அப்படி ஓர் ஆனந்தம்..எத்துனை முறை மறுக்கா மறுக்கா படித்திருப்பேன் என்பது கணக்கே இல்லை..அதுவும் முதல்முறை படிக்கும் பொழுது சாரைப்பாம்பு சார்லியை கண்டு நானும் அச்சப்பட்டதும் ,அந்த வில்லன் யானையை கண்டு ஓடியதை பார்த்து வாய்விட்டு சிரித்ததையும் மறக்கவே முடியாது..அதே போல் எப்பொழுது அந்த இதழை படித்தாலும் தங்களின் ஹாட்லைனையும் மீண்டும் மீண்டும் படித்து ரசிப்பதும் உண்மை..அந்த இதழ் முதலே லக்கி மிக மிக ஆதர்ஷ ஹீரோ ஆகி போனதும் உண்மை..பல வருடங்களாக கையில் பத்திரமாக வைத்திருந்த ஒரிஜினல் இதழ் இப்பொழுது இல்லை எனும் பொழுது மறுபதிப்பு இதழ் இருந்த காரணத்தால் வராத வருத்தம் இப்பொழுது இந்த பதிவை படித்தவுடன் ஒரிஜினல் இதழ் இல்லையே என்ற வருத்தம் இப்பொழுது மேலோங்குகிறது..!

  ReplyDelete
  Replies
  1. // நானும் அச்சப்பட்டதும் ,அந்த வில்லன் யானையை கண்டு ஓடியதை பார்த்து வாய்விட்டு சிரித்ததையும் மறக்கவே முடியாது.. // அதே அதே செம்ம தலைவரே

   Delete
  2. அருமையான நினைவுகள் தலைவரே !

   Delete
 40. மதுரை மாநகருக்கு மட்டுமே 3000 பிரதிகள் விற்ற நாட்களையெல்லாம் இன்றைக்கு நினைவு கூர்ந்தால், பெருமூச்சு ; சிறுமூச்சு ; நடுமூச்செல்லாமே விடத் தோன்றுகிறது !!

  ######


  ஹா...மீண்டும் அக்காலம் வருமாயின்....நினைக்கவே ஆனந்தமாகிறது...!

  ReplyDelete
 41. சூப்பர் சர்க்கஸ் வந்த போது எனக்கு வயது 35. சந்தா கட்டியிருந்ததால் எனக்கு கொரியர் மூலம் வந்தது. இப்பொழுதும் அந்த புத்தகம் என்னிடம் உள்ளது.
  புரட்சி தீ, பொடியன் பில்லி, ஜெஸ்ஸி ஜேம்ஸ், ஒரு கோச்சு வண்டியின் கதை, டால்டன் நகரம், திசையெங்கும் திருடர்கள், எதிர்வீட்டில் எதிரிகள், மேடையில் ஒரு மன்மதன், ச்சூ மந்திரகாளி, லக்கி லூக்குக்கு கலியாணம், பயங்கரப் பாலம்.. எல்லாமே டாப் கதைகள் தான்..

  ReplyDelete
  Replies
  1. (ரீப்ரிண்டை கேட்கலை சாமீ..!)


   கத்தி முனையில் மாடஸ்டி வந்தப்போ எனக்கு வயது 55.. அப்போ நான் ஒரு தொழிலதிபரா இருந்தேன்.. பகுதி நேர மருத்துவராவும் வேலை பார்த்தேன்..

   இப்படியெல்லாம் பீலா விட்டிருந்தா மாடஜ்டியாச்சும் கன்சிடர் பண்ணியிருக்கும்..!

   Delete
  2. கத்திமுனையில் மாடஸ்டி ஏன் வந்தாங்க? உங்க வயச அவங்க ஏன் கேட்டாங்க? புரியலீங்கோவ் ?

   Delete
 42. ரம்மி சார். சூப்பர் சர்க்கஸ் 1987 ல் வந்தது. அப்போது உங்களுக்கு வயது 35 ஆ...!
  இப்பத்தான் நிம்மதியாச்சு! நம்மைவிட சீனியரெல்லாம் தளத்தில் இருக்கிறார்களென்று!

  ReplyDelete
  Replies
  1. எங்க ஊருக்கு பாரத் சர்க்கஸ்தான் வந்தது அப்போது என் வயது 12.

   Delete
  2. பாரத் சர்க்கஸ் உங்க ஊருக்கு வரும்போது காமராஜர்தானே முதலமைச்சராக இருந்தார்?

   Delete
  3. இல்லிங்கோ. கலைஞர் கருணாநிதிதான் அப்போ முதல்வர்.

   Delete
  4. அண்ணாவின் மறைவுக்கு பின்னர் கலைஞர் 1969 ல் முதல்வரானார். அப்போது உங்களுக்கு வயது 12 என்கிறீர்கள். போதும்...போதும்...உங்கள் வயது தெரிந்துவிட்டது! அய்யா நீங்கதான் இத்தளத்தின் மூத்த குடிமகன்! வாழ்த்துகள்.

   Delete
 43. எனக்கு நினைவில் உள்ளது. புரட்சித் தீ, கோச்சு வண்டியின் கதை, ஜேன் இருக்க பயமேன். மட்டுமே. இவை எனது all time favorit. சூப்பர் சர்க்கஸ் மறுபதிப்பில் மட்டுமே படித்தது.

  ReplyDelete
 44. எல்லோரும் பாராட்றிங்க.. நானும் பாத்துட்டு பாராட்டலாம்னு பாத்தா.. அந்த போட்டோவில் நம்ம எடிட்டர் எங்கே இருக்காருன்னே தெரியலையே..!!
  போட்டோவுக்குள்ள போட்டோவுல மோனோலிசா.. அப்புறம் ஒரு பாரிஸ் பாட்டி நிக்குறாங்க.. அப்புறம் சின்ன வயசு டாம் குரூஸ் இருக்காரு.. நம்ம எடிட்டர் எவிடே..!?

  ReplyDelete
 45. எனக்கு காமிக்ஸ் பழக்கமானது பக்கத்துக்கு வீட்டில் உள்ளவர்கள் மூலம்! எங்களது காம்பௌண்டில் வசித்து வந்த நண்பரின் தந்தை வேலை விஷயமாக வாரத்துக்கு இரெண்டு முறை லைன்னுக்கு (பக்கத்துக்கு ஊர் கடைகளில் போய் பருப்பு ஆர்டர் மற்றும் பணம் வசூல் செய்ய) செல்வார். அவர் லைனுக்கு சென்று திரும்பும் போது கிடைக்கும் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி வருவார், அதில் இந்திரஜால், லயன், முத்து, மற்றும் ரத்தனபாலா போன்றவை அடங்கும்! எனது நண்பன் அனைத்தையும் படித்த பின்தான் அவர்கள் வீட்டில் மற்றவர்களை படிக்க விடுவான். பொதுவாக புத்தகங்களை எனது வீட்டுக்கு எடுத்து செல்ல மாட்டேன், எனது தந்தை பாட புத்தகங்களை தவிர வேறு புத்தகங்களை படிக்க விட மாட்டார்! எனவே எனது தந்தை லாரி செட் சென்ற பின்னர் அவர்கள் வீட்டின் முன் பகுதில் உட்கார்ந்து படிப்பேன்! இப்படி படித்த கதைகள் பல பல! இரட்டை வேட்டையர்களின் ஆப்ரிக்க சதி பலமுறை படித்து இருக்கேன்! ஆர்ச்சி மற்றும் ஸ்பைடர் கதைகள் எத்தனை முறை படித்தேன் என கணக்கு இல்லை!

  அப்படி இருக்கும் போது ஒருநாள் எனது நண்பனின் தந்தை லக்கி-லூக் சூப்பர் சர்க்கஸ் புத்தகம் வாங்கி வந்தார், மேட் பினிஷ் அட்டை (என நினைக்கிறன்) மற்றும் வண்ணத்தில் கொள்ளை கொண்டது என்னை கட்டி போட்டது! நேரம் கிடைக்கும் போது அவர்கள் வீட்டுக்கு சென்று படிப்பேன்.

  சிறுவயதில் காமிக்ஸ் என்று வந்த அனைத்து புத்தகங்களையும் தேடி தேடி படித்து இருக்கேன்!

  ReplyDelete
  Replies
  1. ஒரிஜினல் சூப்பர் சர்க்கஸ் புத்தகம் என்னிடம் இல்லை என நினைக்கிறேன்! நமது மறுவருகைக்கு பின்னர் ரீ-பிரிண்ட் செய்த புத்தகம் என்னிடம் உள்ளது!

   லக்கி-லூக்கின் அனைத்து கதைகளும் எனக்கு பிடிக்கும்! மிகவும் பிடித்தது புரட்சி தீ; எதிர் வீட்டில் எதிரிகள், பரலோகத்திற்கு ஒரு பாலம், ஒரு கோச்சு வண்டியின் கதை, டால்டன் நகரம், திசையெங்கும் திருடர்கள், மேடையில் ஒரு மன்மதன், சசூ மந்திரகாளி எல்லாம் எனக்கு மிகவும் பிடித்த கதைகள்! அதுவும் நமது மறுவருகைக்கு பின்னர் ஆண்டு மலரில் வந்த அனைத்து லக்கி-லூக் கதைகள் அனைத்தும் செம!

   Delete
 46. நான் படிச்ச மொத கதயே "பூம் பூம் படலம்" தான்! ஹி! ஹி!!

  அது எந்த வருசம் வெளியானது???

  ReplyDelete
  Replies
  1. "பூம் பூம் படலம்" செம காமெடி கதை! மிகவும் ரசித்து சிரித்த கதை இது!!

   Delete
 47. // 3. முதல்வாட்டி படித்த போது அந்த கார்ட்டூன் ஜானர் ரசித்ததா ? //

  மிகவும் ரசித்தேன்!எல்லா வகையான காமிக்ஸ் கதைகளையும் படித்தேன் சிறுவயதில்! காமிக்ஸில் பிரித்து வகைபடுத்தி படித்தது இல்லை அன்று, இன்றும் நமது காமிக்ஸில் வரும் அனைத்து கதைகளையும் படித்து வருகிறேன்!

  ReplyDelete
 48. // 1. சூப்பர் சர்க்கஸ் ஒரிஜினல் 1987 இதழை முதன்முறையாக நீங்கள் படித்த நாட்கள் நினைவுள்ளதா ? என்ன வயதுகளோ உங்களுக்கெல்லாம் அன்றைக்கு ?

  புத்தகம் வெளியான அதே மாதத்தில் வாங்கி படித்திருக்கேன் சார் 😍

  டவுசருடன் சுற்றிய கானாக்காலமது சார் 🤷🏻‍♂️

  (டைகரின் ரசிக கண்மணிகளே பொங்கிடாதீங்க
  நானு என்னைச்சொன்னேன் )🙏🏼

  அப்போ எனக்கு பென்னியின் வயசு இல்லன்னா அதைவிட குறைவாக இருக்கலாமென்று நினைக்கிறேன் சார் 🙏🏼

  2. இன்னமும் அந்த ஒரிஜினல் பிரதிகளை பத்திரமாய் வைத்திருப்போர் - உங்களுள் எத்தனை பேரோ ? உங்கள்வசம் அது இருப்பின், ஒரு selfie ப்ளீஸ் - with the book of course !!

  அனுப்பிட்டேன் சார் 🙏🏼

  3. முதல்வாட்டி படித்த போது அந்த கார்ட்டூன் ஜானர் ரசித்ததா ? அல்லது - ஆக்ஷனிலேயே வண்டியோட்டி வந்த அந்நாட்களில் இது ஏமாற்றத்தைத் தந்ததா ?

  மிக மகிழ்வாக இருந்தது அப்போதைய பொழுதுபோக்கே அதானே சார் 🙏🏼

  And lastly :

  4. லக்கியின் all time best TOP 3 ல் இந்த இதழ் இடம்பிடித்திடுமா - உங்களின் தேர்வுகளில் ?

  கண்டிப்பாக
  இதுவும் புரட்சித்தீயும் ஆல் டைம் பேவரைட் சார் 😍😍😍
  .

  ReplyDelete
  Replies
  1. அப்படி சொல்லுங்க ஜி

   சூப்பர் சர்க்கஸ்
   அதிரடி பொடியன்
   புரட்சித் தீ

   எப்போதுமே இது தான் எனது டாப் 3

   Delete
 49. 1. சூப்பர் சர்க்கஸ் ஒரிஜினல் 1987 இதழை முதன்முறையாக நீங்கள் படித்த நாட்கள் நினைவுள்ளதா ? என்ன வயதுகளோ உங்களுக்கெல்லாம் அன்றைக்கு ?

  1987ல ஐயாம் 6ப்பு. ஆனா காமிக்ஸ் உலகில் நான் குதித்தது 1989ல். சோ சுடச்சுட படிக்கல. பிற்பாடு 1990கள்ல எல்லா புத்தகமும் ஓசியில் படித்தபோது சூப்பர் சர்க்கஸ்ம் படித்தேன். இதன் அட்டை படம் ஒருமாதிரி சொர சொல் பினிஷிங் இருந்தது மட்டுமே நினைவில் இருக்கு சார்.

  2. இன்னமும் அந்த ஒரிஜினல் பிரதிகளை பத்திரமாய் வைத்திருப்போர் - உங்களுள் எத்தனை பேரோ ? உங்கள்வசம் அது இருப்பின், ஒரு selfie ப்ளீஸ் - with the book of course !!

  சாரி...ஓசி முறையில் படித்தேன். ஒரிஜினல் புக் இல்லை.

  3. முதல்வாட்டி படித்த போது அந்த கார்ட்டூன் ஜானர் ரசித்ததா ? அல்லது - ஆக்ஷனிலேயே வண்டியோட்டி வந்த அந்நாட்களில் இது ஏமாற்றத்தைத் தந்ததா ?

  முதல் முறை ரொம்பவே பிடிச்சது. ஆனா மறுபதிப்புல ரொம்ப ரொம்பவே பிடிச்சது. காரணம் நம்ம தேடல் காலங்களில் உலவும் மந்திர சாவிகள் இவைகள் அல்லவா!!!

  And lastly :

  4. லக்கியின் all time best TOP 3 ல் இந்த இதழ் இடம்பிடித்திடுமா - உங்களின் தேர்வுகளில் ?

  ஆம் உண்டு எடிட்டர் சார். மை டாப்3 ஆப் லக்கி:-

  1.பூம் பூம் படலம்
  2.சூப்பர் சர்க்கஸ்
  3.பயங்கர பொடியன்

  ReplyDelete
 50. நான் முதன் முதலில் படித்த லக்கியின் கதை, 'பரலோகத்திற்கொரு பாலம்'. பத்து வயதாக இருக்கும் போது, இந்தப் புத்தகத்தைப் பாடசாலைக்குக் கொண்டுசென்று, நண்பர்கள் புடைசூழ அமர்ந்திருந்து வாசித்துச் சிரித்து மகிழ்ந்த நாட்கள் இன்றும் மனதில் பசுமையாகவுள்ளன. மிசிசிப்பி நதியின் மேலாகப் பாலமமைக்கும் முயற்சியில், லக்கிக்கும் கேய்மன் சகோதரர்களுக்கும் இடையே இடம்பெறும் தள்ளு முள்ளுகள் தொடர் சிரிப்புக்களைக் கொணரும். அதுமட்டுமல்லாது, தொடர்ந்து முயற்சி செய்தால் நாம் மனதிற்கொண்ட இலக்கினை வெற்றிகரமாக அடையும் நாளொன்று புலருமென்பதை அற்புதமாக எடுத்துக்காட்டும் கதை, இக்கதையை விட்டால் வேறொன்றில்லை எனலாம். சிறுவர்களுக்கு வாசித்துக் காட்டப்பட வேண்டியதொரு கதையிது.

  ReplyDelete
 51. 1. 1990 களின் இறுதியில் 7வது அரையாண்டு பரிட்சை லீவின் போது என் அப்பிச்சி வாங்கிக் கொடுத்ததாய் ஞாபகம் .. அப்போது எனக்கு 11 வயது ..

  2 . என்னிடம் உள்ளது ..
  போட்டோ உங்ளது வாட்ஸயிற்க்கு அனுப்பியாயிற்று சார்

  3 . அந்நாட்களில் சென்னை தொலைக்காட்சி டிவி யில் ஞாயிறன்று போடும் ஹீ மேன் / ஸ்பைடர் மேன் களை யே பார்த்து வந்த எனக்கு .. லக்கி லூக்கின் வித்யாசமானதொரு ஜானரில் படிக்க நேர்ந்த அந்த அனுபவங்கள் மிகச்சிறப்பு ..

  டெக்ஸ் வில்லர் ஸ்பைடர் ஒரு புறமிருந்தாலும். கார்ட்டூன் கதை யென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் மினி ஜூனியர் ல் வந்த லக்கி லூக் / சுஸ்கி விஸ்கி கதைகளை படிக்க எனக்கும் என் சகோதரிக்கும் யார் முதலில் படிப்பதென்ற போட்டியே நடக்கும் ( சுஸ்கி யின் பேரிக்காய் போராட்டம் எங்களுடைய பேவரைட் )

  4 . கண்டிப்பாக
  1. சூப்பர் சர்க்கஸ்
  2. அதிரடிப் பொடியன்
  3. பூம் பூம் படலம் / கோச் வண்டியின் கதை

  ReplyDelete
  Replies
  1. அருமையான நினைவுகள் Sampath !

   Delete
 52. 1. சூப்பர் சர்க்கஸ் ஒரிஜினல் 1987 இதழை நீங்கள் படித்த நாட்கள் நினைவுள்ளதா ? என்ன வயதுகளோ உங்களுக்கெல்லாம் அன்றைக்கு ?
  நினைவிருக்கிறது அட்டைப்படத்தையே ரொம்ப நேரம் ரசித்தேன் நான் 5 ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன் 3 ம் வகுப்பிலிருந்தே பூந்தளிர்.பாலமித்ரா. & காமிக்ஸ் படிக்க ஆரம்பித்துவிட்டேன் அப்போது வயது 9

  2. இன்னமும் அந்த ஒரிஜினல் பிரதிகளை பத்திரமாய் வைத்திருப்போர் - உங்களுள் எத்தனை பேரோ ? உங்கள்வசம் அது இருப்பின், ஒரு selfie ப்ளீஸ் - with the book of course !!
  புத்தகம் இல்லை விதியின் விளையாட்டு ஆசிரியரே

  3. முதல்வாட்டி படித்த போது அந்த கார்ட்டூன் ஜானர் ரசித்ததா ? அல்லது - ஆக்ஷனிலேயே வண்டியோட்டி வந்த அந்நாட்களில் இது ஏமாற்றத்தைத் தந்ததா ?
  இல்லை மிகுந்த சந்தோஷத்தையே கொடுத்தது ஸ்பைடர். ஆர்ச்சி.மாயாவி.லாரண்ஸ் & டேவிட் லிஸ்ட்டில் லக்கியும் ஸ்டாராங்காக இடம்பிடித்தார்


  4. லக்கியின் all time best TOP 3 ல் இந்த இதழ் இடம்பிடித்திடுமா - உங்களின் தேர்வுகளில் ?
  கண்டிப்பாக
  1.பயங்கரப்பாலம்
  2.சூப்பர் சர்க்கஸ்
  3.டால்டன் நகரம்  ReplyDelete
  Replies
  1. சத்யா சூப்பர் யா

   Delete
  2. சத்யா அருமையான நினைவுகள்!

   Delete
 53. அடடா.. அந்த மோனலிசா புள்ள மொகத்தில வெட்கத்தப் பாருங்க...

  ReplyDelete
  Replies
  1. :-)
   அப்படியே
   நம்ப ஆசிரியர் முகத்தில் உள்ள வெட்கத்தையும் நோட் பண்ணுங்க மக்களே :-)

   Delete
  2. என்னா ஒரு ர்ர்ரொமான்டிக் லுக்கு ..

   Delete
 54. 1.Super Circus 2.Puratchi Thee 3. Payankara Podiyan

  ReplyDelete
 55. விஜயன் சார்,
  "சூப்பர் சர்க்கஸ் " - மலரும் நினைவுகள் - சூப்பர் சார்_.

  அப்ப, காமிக்ஸ் - ல்லாம் இந்த லெவல்ல இருப்பதெல்லாம் தெரியாது சார்..
  16 வயசுல - "சூப்பர் சர்க்கஸ் " முழு வண்ண இதழை கையில் வைத்துக் கொண்டு அடைந்த பரவசத்திற்கு அளவே இல்லை.
  கார்டூன் பாணி கதை என்றாலே சுட்டிக் குரங்குக பிஷ், விச்சு & கிச்சு என்ற நினைப்பில் இருந்ததை முழுவதும் தகர்த்து
  46 பக்கங்களில் முழு நீளக் கதையாக படித்தது மறக்க முடியாத அனுபவம்.'
  டெக்ஸ் வில்லர் - படித்து செவ்விந்தியர் பற்றி சுமாராக தெரிந்திருந்ததால் - செவ்விந்தியர்களுக்காக ஒரு ஷோ - நடத்துவதும் - அதில் பபூன் முகச்சாயம் பூசி வருவதும் - அது போருக்கான அழைப்பு என்று செவ்விந்தியர்கள் சண்டையிடுவதும் சரியான
  நகைச்சுவை. மொத்தத்தில் கதை அடர்த்தியான கதைக்களம் கொண்டது.
  இப்பவும் தாங்கள் " லயன் Maxi"இதழில் வெளியிடலாம். அல்லது சிங்கிள் இதழாலாக வெளியிட்டால் ஒரு 20 காப்பி வாங்கி வைத்து தெரிந்த சின்ன பிள்ளைகளுக்கு கொடுக்க விருப்பமான இதழ்.

  ReplyDelete
 56. எடிட்டர் அவர்கள் கால இயந்திரத்தை பின்னோக்கி செலுத்தி விட்டார். எனக்கு பூந்தளிர், அம்புலி மாமா, பாலமித்ரா புத்தகங்கள் தான் முதலில் அறிமுகம். அப்புறம் ராணி காமிக்ஸ் நண்பனின் மூலமாக அறிமுகமாகியது தொடர்ந்து நமது லயன் மற்றும் முத்து காமிக்ஸ் கடலூர் பஸ் ஸ்டாண்டு கடைகளில் அந்த 1990 களில் நிறைய விற்கும். நானும் நண்பனும் சென்று வாங்கி படிப்போம். இப்பொழுது நினைத்தாலும் நெஞ்சமெல்லாம் இனிக்கிறது

  ReplyDelete
 57. லக்கி எப்பொழுதும் என் ஆல் டைம் பேவரிட். சூப்பர் சர்க்கஸ் மறுபிரதி தான் உள்ளது

  ReplyDelete
 58. 1990 களில் பழைய புத்தகக் கடைகளில் ஒரு புத்தகம் ஐம்பது பைசா. நம்ம லயன் முத்து காமிக்ஸ் அங்க தான் நிறைய வாங்கி படித்தேன். அதையெல்லாம் என்னுடைய பொக்கிஷங்களாக எண்ணி வைத்திருந்தேன். எங்கள் வீடு தீப்பிடித்து எரிந்து போனதில் எதுவுமே மிச்சமில்லாமல் போனது.

  ReplyDelete
 59. Dear Editor,

  Thanks for heeding to request and starting with Super Circus !

  1. சூப்பர் சர்க்கஸ் ஒரிஜினல் 1987 இதழை முதன்முறையாக நீங்கள் படித்த நாட்கள் நினைவுள்ளதா ? என்ன வயதுகளோ உங்களுக்கெல்லாம் அன்றைக்கு ?

  <<<<<>>>>> அடியேனுக்கு அப்போது 11  வயது. உங்கள் தாத்தாவைப் போலவே எங்கள் தாத்தா ஒரு காமராஜ் காங்கிரஸ்காரர். கண்ணதாசனுக்கு நண்பர். இரண்டு முறை Trichy Muncipality Vice -Chairman. திருச்சியில் மிகப் பெரிய Brand Name அப்போது Trichy X Rays ! இலவச மற்றும் மலிவு விலை (2 ரூ, 4 ரூ ) மருத்துவர். பலருக்கு அவரு மருந்துக்களை கொடுத்து கூடவே வீட்டுக்கு செல்ல காசு கொடுத்து பார்த்ததுண்டு. அடியேன் முதல் பேரன் என்பதால் செம செல்லம். 1986ல் இவர் இறந்தது - biggest shock for a 11 year old. 
  அந்த வைரப்பல் ஆசாமி (பல் அடிக்கடி விழுந்து ளகர உச்சரிப்பால் சிரியாய் சிரிக்க வைத்து என்னை துக்கத்திலிருந்து மீட்டெடுத்தார். 1987 தொடக்கத்தில் ஒரு 50 முறை படித்திருப்பேன். 

  2. இன்னமும் அந்த ஒரிஜினல் பிரதிகளை பத்திரமாய் வைத்திருப்போர் - உங்களுள் எத்தனை பேரோ ? உங்கள்வசம் அது இருப்பின், ஒரு selfie ப்ளீஸ் - with the book of course !!

  <<<<>>>> Not with me - but longing for one - for the same reason as above. Some things give an everlasting impression. Back then (as much as now) I was never a collector of anything.

  3. முதல்வாட்டி படித்த போது அந்த கார்ட்டூன் ஜானர் ரசித்ததா ? அல்லது - ஆக்ஷனிலேயே வண்டியோட்டி வந்த அந்நாட்களில் இது ஏமாற்றத்தைத் தந்ததா ?

  <<<<<>>>>> In fact cartoon was fun and Disney intro in Tamil made it even more fun - with Uncle Scrooge etc !

  And lastly :

  4. லக்கியின் all time best TOP 3 ல் இந்த இதழ் இடம்பிடித்திடுமா - உங்களின் தேர்வுகளில் ?

  <<<<>>>>> : Not now - not after BOOM BOOM PADALAM, ATHIRADI PODIYAN and CALAMITY JANE. But in Top 10 of around 80 LL albums !

  ReplyDelete
  Replies
  1. // அந்த வைரப்பல் ஆசாமி (பல் அடிக்கடி விழுந்து ளகர உச்சரிப்பால் சிரியாய் சிரிக்க வைத்து என்னை துக்கத்திலிருந்து மீட்டெடுத்தார். // காமிக்ஸ் நமது வாழ்வுடன் அப்போது இருந்தே இரண்டற கலந்து விட்டது.

   Delete
  2. சூப்பர் நினைவுகள் ராகவன்!!

   Delete
 60. // இதோ இந்த மார்ச் மாதத்தில் கூட அதற்கொரு 'பளிச்' நிரூபணம் கிட்டியது ! '5 நிமிட வாசிப்பு ; படித்த நொடியே என்னைக் கட்டுண்டு போகச்செய்ததொரு பொம்மை புக் ; மார்ச்சில் சர்ப்ரைஸாக வருகிறதென்று' நான் சொன்னது நினைவிருக்கலாம் ! // சார் ஆர்வம் தாங்க முடியவில்லை சார் அந்த பொம்மை புக் என்னவென்று சொல்லுங்களேன் பிளீஸ்

  ReplyDelete
  Replies
  1. // சார் ஆர்வம் தாங்க முடியவில்லை சார் அந்த பொம்மை புக் என்னவென்று சொல்லுங்களேன் பிளீஸ் //

   +1

   Delete
 61. பழைய கதைய கிளறி விட்டு| எல்லாரோட வயசையும் வெளியில வர வெச்சதுல , ஏதோ திட்டமிட்ட சதி இருக்குது. உஷார் மக்களே. அடிச்சுக்கேட்டாலும் வயச சொல்லீராதீங்க.

  ReplyDelete
  Replies
  1. பத்து சார் நீங்கள் ரொம்ப உஷாரா உங்கள் வயதை சொல்லாமல் இருந்ததையும் கவனித்தேன்.

   Delete
  2. ///பத்து சார் நீங்கள் ரொம்ப உஷாரா உங்கள் வயதை சொல்லாமல் இருந்ததையும் கவனித்தேன்.///

   அத அணைச்சா என்ன.. அணைக்காட்டி என்ன?!! :D

   Delete
  3. கொஞ்சம் மேலே பாருங்கள். பத்து சார் அவர் வயதை சொல்லியிருக்கிறார். 1969 ல் கலைஞர் முதல்வரானபோது தன் வயது 12 என்கிறார். இதைவிட எளிமையாக வேறு எப்படி சொல்வார்.

   Delete
  4. அய்யா.தப்பா சொல்றீங்க. கலைஞர் 1969, 1971, 1989, 1996, 2006 ஆகிய வருடங்களில் முதல்வராக இருந்தார். இதில் எந்த பீரியட்ல எனக்கு 12 வயசுன்னு நான் சொல்லவே இல்லியே..

   Delete
  5. கண்டிப்பா 89,96,2006 இல் உங்களுக்கு வயது 12 இல்லை. இப்படி வந்து சிக்கி விட்டீர்களே சார்.

   Delete
  6. பத்து சார் போற போக்கை பார்த்தால் கிட்டத்தட்ட கிறிஸ்து பிறக்கறதுக்கு முன்னாடி நீங்க பிறந்திருப்பீங்களோனு தோணுது...

   Delete
  7. இதில் சிக்கி கொள்வதற்கு ஒன்றுமே இல்லை குமார். என் பன்னிரண்டாவது வயதில் கலைஞர் தான் முதல்வர்.அது 1975 இல், நான் பிறந்தது 1963 ல்.

   Delete
  8. கடைசியாக உண்மை வெளிவந்து விட்டது.

   Delete
  9. எப்படியோ நாரதர் கலகம் நன்மையில் முடிஞ்சா சரி!

   Delete
  10. ஆசிரியர: யாருப்பா அது. கடைசி பெஞ்சுகுமாரு
   இங்க என்ன பாடம் நடக்குது. அங்க
   நீங்க மூணு பேரும் என்ன பண்றீங்க.
   கூட இந்த அனு பொண்ணு வேற
   சேர்ந்துகிச்சு.

   அதான் விஜய் முடிச்சிட்டாப்புல இல்ல.
   போதும். பாடத்த கவனிங்க.
   (சூனா பானா . எப்படியோ பஞ்சாயத்த கலைச்சாச்சு.)

   Delete
  11. புரட்சித் தலைவரே சொன்னப்றம் பஞ்சாயத்து நடக்குமாங்க?

   Delete
 62. When super circus came,I was 2 years old only (1985 birth year) so no chance.
  My first lucky luke comics was medaile oru manmadan and I still have it.
  1.cowboy express was best ever lucky comics for me

  ReplyDelete
 63. நமது தளத்தில் முன்பு ஒரு நண்பர்" திருக்குறள் " - + விளக்கம் எழுதினாரே..i
  விஜயன் சார்,
  இந்த Lockdown - நேரத்தில் - "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம். உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு" _ என்ற குரலுக்கு ஏற்ப தங்களை உயர்த்தி விட்டவர்களை சிறப்பாக நினைவு கூர்கிறீர்கள்.
  எங்களுக்கும் புதிய தகவல்கள் கிடைக்கின்றன. தங்களது நன்றி நவிலும் படலத்திற்கு நன்றிகள் சார்..ii

  ReplyDelete
 64. ம"ரயிலேறி அங்கே போக வேண்டுமென்பதை நினைக்கும் போதே - ஸ்டீலின் கவிதை வரிகளை படிக்கப் போகும் பீதி உள்ளுக்குள் எழுந்தது !
  'ரைட்டு...ஆனது ஆச்சு "
  இந்த வரிகளை படித்ததும் என்னையும் அறியாமல் சிரித்து விட்டேன்.

  ReplyDelete
 65. ஜரகண்டி ஜரகண்டி எனக்கு இப்ப ஓரு உண்மை தெரியனும். அந்த டான்ஸ் competition என்னாச்சு?

  ReplyDelete
  Replies
  1. 'ஒரு போட்டி நடத்தணும்னா, அதை நடத்துபவர்க்கு முதலில் அந்தத் தகுதி இருக்கணும்'னு யாராவது எடிட்டருக்கு அட்வைஸ் பண்ணியிருப்பாங்க போல! அதை சீரியஸா எடுத்துக்கிட்டு வீட்டுக்குள்ளேயே பம்பரமாய் சுற்றிவந்து டான்ஸ் ப்ராக்டீஸ் பண்ணிக்கிட்டிருக்காரோ என்னமோ?!! நேத்திக்கு இந்தப் பக்கமே எட்டிப்பார்க்கக் கூட நேரம் இல்லைன்னா பார்த்துக்கோங்களேன்!!!

   Delete
  2. எனக்கு என்னமோ எடிட்டர் ஏப்ரல் மற்றும் மே இதழ்களின் மொழிபெயர்ப்பில் பிஸி என தெரிகிறது.

   நமது காமிக்ஸ் அலுவலகத்தில் DTP வேலை பார்க்கும் நண்பர்கள் அனைவரையும் WFH சொல்லி அவர்களின் குடலை உருவ ஆரம்பித்துவிட்டாரோ? :-)

   Delete
  3. "நாடகத்தையே நடத்துபவன்,நடிக்க முடியுமாப்பா"

   (திருவிளையாடல் சிவாஜி)

   Delete
 66. எடிட்டர் சார்,

  Vantage Point படத்துல வர்ற மாதிரி உங்கள் ஐரோப்பா பயணத்தில் உங்ககிட்ட இருந்து ஒவ்வொரு தடவையும் ஒரு சுவாரஸ்யமான புதுக் கதை கிடைக்கிறது.

  90களின் ஆரம்பத்தில் முத்து காமிக்ஸ் சேகரிப்பதில் வெறித்தனமாக இருந்தேன். லயன் குழும காமிக்ஸ் பற்றி கேட்கறீர்களா? அதெல்லாம் இரும்பு மனிதனில் இருந்து தொடங்கிவிட்டேன். ஆகையால் லயன் குழும காமிக்ஸ் சேகரிப்பில் எந்த பிரச்னையும் இல்லை.

  அப்படி ஒரு நாளில், ஒரு பழைய புத்தக கடையில் ஒரே முத்து காமிக்ஸ்க்காக நானும் இன்னொரு நபரும் சண்டையிடாத குறைதான். பின்னாளில் அந்த நபர் நண்பராக மாறி (நண்பர் கலீல்) என் முத்து காமிக்ஸ் சேகரிப்பு முழுமை அடைய உதவினார்.

  அப்போதெல்லாம் அடிக்கடி நினைப்பதுண்டு, சிவகாசி முத்து காமிக்ஸ் ஆஃபிஸில் அனைத்து முத்து காமிக்ஸ்சும் இருக்கும். ஒரு முறையாவது அதை பார்த்துவிடவேண்டுமென்று. இப்போது நீங்கள் சூப்பர் சர்க்கஸ் முதல் பதிப்பு இல்லை என்று சொல்லும்பொது இதெல்லாம் நினைவுக்கு வருகிறது. என் கேள்வி சிறுபிள்ளைத்தனமாக இருந்தால் மன்னிக்கவும். நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு புத்தகத்தையும் மினிமம் ஒரு காப்பியாவது வைத்திருப்பீர்கள் தானே? முத்து காமிக்ஸ் அனைத்து முதல் பிரதியும் மற்றும் நமது லயன் குழும அனைத்து காமிக்ஸ்சும் உங்களிடம் உள்ளதா?

  ReplyDelete
  Replies
  1. ////நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு புத்தகத்தையும் மினிமம் ஒரு காப்பியாவது வைத்திருப்பீர்கள் தானே? முத்து காமிக்ஸ் அனைத்து முதல் பிரதியும் மற்றும் நமது லயன் குழும அனைத்து காமிக்ஸ்சும் உங்களிடம் உள்ளதா?////

   அப்படிக் கேளுங்க ரட்ஜா! சூ.ச பழைய இதழ் என்னிடம் இல்லையென்று எடிட்டர் எழுதியிருந்ததைப் படித்தபோது எனக்கும் இதே கேள்விதான் தோன்றியது!!

   Delete
 67. பொதுவாக அனைத்து பத்திரிகைகளும் தங்கள் வெளியிடுகளில் ஒரு பிரதி தங்களிடம் வைத்திருப்பார்கள் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  ReplyDelete