நண்பர்களே,
வணக்கம். குகைப் பாதைக்குள் தவண்டு செல்லும் ரயிலுக்கு, தொலைவினில் லேசாய் வெளிச்சக் கீற்று தென்படுவதால் - இருட்குகைக்கொரு முடிவுரை சீக்கிரமே கண்ணில்படுமென்ற நம்பிக்கை பிறக்கிறது ! Yup ...இந்தப் பதிவை டைப்படிக்கும் வேளையினில் தமிழகத்தினுள்ளே கொரோனா பாதிப்புகளின் வேகம் சற்றே மட்டுப்பட்டுத் தென்படுகிறது ! அதன் பலனாய், வரும் 20-ம் தேதி முதலாய், பாதி ஆட்பலத்துடன், பஞ்சாயத்துப் பகுதிகளில் உள்ள தொழில் கூடங்கள் செயல்படலாம் என்பதால் - ஊருக்கு வெளியிலுள்ள நமது பைண்டிங் அலுவலகம் திங்கட்கிழமையிலிருந்து இயங்கத் துவங்குமென்ற நம்பிக்கை உள்ளது ! இன்னமும் 1 புக் அச்சிடும் பணிகள் பாக்கியுள்ளது & in any case டெஸ்பாட்ச்சின் பொருட்டு நாம் ஆபீஸைத் திறப்பதற்கும் அனுமதி கிடையாதென்பதால், ஏப்ரலின் இதழ்களை இந்த ஊரடங்கு நீட்டிப்பின் முடிவுரையின் நொடியினில் உங்களிடம் ஒப்படைத்து விடலாமென்று தோன்றுகிறது !! கடந்த 8 ஆண்டுகளாய், அடித்துப் பிடித்து, தாமதப் பேயைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் வாடிக்கையை கற்று வந்திருந்தோம் ! நாமெல்லாம் ஓவர் நல்ல பிள்ளைகள் ஆவதெல்லாம் இயற்கைக்கே கொஞ்சம் டூ டூ மச்சாய்த் தோன்றியது போலும் ; 'சித்தே ஓய்வெடுங்கோ மக்கா !' என அமரச் செய்து விட்டுள்ளது ! எல்லாம் அவர் செயல் எனும் போது go with the flow என்பதே நமக்கிருக்கும் மார்க்கம் !
எது எப்படியோ - கிட்டத்தட்ட மூன்றரை வாரங்களாக தின்ன ; தூங்க ; நெட்டை நோண்ட ; மறுக்கா தூங்க ; நெட்டை நோண்ட ; தின்ன என்று நாட்களைக் கடத்திய பிற்பாடு, பணிகளுக்குள் திங்கள் முதலாய் முனைப்போடு புகுந்திட எண்ணியுள்ளேன் ! துவக்க வாரத்தில் "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா" மொழியாக்கம் உச்சஸ்தாயியில் ஓடியது என்னவோ நிஜம் தான் ! இந்த ஆல்பத்தின் மொழியாக்கம் ஒரு செம சுவாரஸ்யச்சவாலாய் முன்னின்றதன் பலனாய், கவிஞர் பாணபத்திரரின் பின்னூட்ட வேகத்தில் முதல் 3 பாகங்களின் பணிகள் பிய்த்துப் பிடுங்கிச் சென்றன ! ஆனால் ஒருவித அசாதாரண சூழல் உலகெங்கும் நிலவும் நிலையில், குன்றா முனைப்போடு வேலைகளுக்குள் கவனம் செலுத்த இயலாதே போயிற்று ! பற்றாக்குறைக்கு நகராட்சியினர் ஒரு நாள் காலையில் வீட்டுக் கதவைத் தட்டி, "இக்கட வைரம் ஆனந்த் விஜயன் யாரு சார் ?" என்று கேட்க, அப்படி யாரும் இல்லியே சார் இங்கே" என்றேன் ! ஆனால் "விலாசம் இது தானென்று" உடன் வந்திருந்த நகராட்சி சுகாதார இன்ஸ்பெக்டர் சொல்ல, "விக்ரம் அரவிந்த் விஜயன் என்று தான் என் பையன் இருக்கிறான் !" என்று சொன்னேன் ! "அவர் எங்கேயும் இப்போதைக்கு பாரின் போயிட்டு வந்திருக்காரா ?" என்று கேட்டார்கள் ! "ஆமாம் சார் , பிப்ரவரி பத்தாம் தேதிவாக்கிலே ஐரோப்பா போயிட்டு வந்திருந்தான் !" என்று சொன்னேன் ! அப்புறம் பேசியதில் தான் தெரிய வந்தது - பிப்ரவரி 14-ம் தேதிக்கு இத்தாலியிலிருந்து டில்லி வழியாக ஜூனியர் ஊர் திரும்பியிருந்த தகவல், பிழையாய் மார்ச் 14 என்று உள்ளூர் அதிகாரிகளிடம் பதிவாகியிருந்த சமாச்சாரம் ! "இதோ பாருங்க சார் தேதிகளை ! விசாவே மார்ச் 8 க்கு முடிந்துள்ளது ; இதில் எப்புடி மார்ச் 14-க்கு அவன் திரும்பியிருக்க முடியுமென்று" விளக்கம் சொல்ல முயன்ற போதிலும் - "சாரி சார்...எங்களுக்கு வந்த தகவலின்படி home quarantine உங்களுக்கு " என்று சொல்லி, வாசலில் ஸ்டிக்கரை ஒட்டியும் விட்டார்கள் ! தேசத்துக்கே ஊரடங்கு என்பது சீக்கிரமே அறிவிக்கப்பட்ட நிலையில், ஸ்டிக்கர் இல்லாவிடினும் நாங்கள் எங்கேயும் போயிருக்க வாய்ப்பில்லை தான் ; இருந்தாலும், வாசலிலிருந்த ஸ்டிக்கர் நெருடலாகவே இருக்க, வேலைகளுக்குள் முழு மனசாய்ப் புகுந்திட இயலவில்லை ! பற்றாக்குறைக்கு தினத்துக்கும் கிரிக்கெட் ஸ்கோர் போல ஏறி வந்த தேசத்தின் / மாநிலத்தின் பாதிப்பு எண்ணிக்கையுமே புளியைக் கரைக்க, "வேலைகளை நேரம் வர்றச்சே பாத்துக்கலாம் !" என்று மண்டைக்குள் தோன்றியது ! So அதன் தொடர்ச்சியாய் இங்கே நமது வலைப்பதிவிலும் ஊர்க்கதை ; உலகக்கதை என்ற ஏதேதோ அரட்டைகள் சூடு பிடித்ததைத் தொடர்ந்து, இந்தக் கும்மிகளில் பங்கேற்பதிலேயே எனது பொழுதுகள் கரைந்து விட்டன !
நாட்களின் ஓட்டத்தோடு, ஏதோவொரு விடுமுறையில் இருப்பது போலாய் Eat..Sleep..Repeat என்ற வாடிக்கையே தொடர, அவ்வப்போது தொழிலின் எதிர்காலம் சார்ந்த கவலைகள் தலைதூக்கும் போதெல்லாம், அவற்றை மறக்க எதையேனும் வாய்க்குள் போட்டு ரைஸ் மில்லாய் அரைக்கத் துவங்கும் வழக்கம் தொற்றிக் கொண்டது ! எண்ணற்ற கடலை மிட்டாய்கள் ; ரவுண்டு பன்கள் ; வாழைப்பழங்கள் ; கேரட்கள் உள்ளுக்குள் போய் தொந்தியை சமன் செய்தது நிகழ்ந்திட, அதன் பலனாய் தற்காலிகமாய் உறக்கமும், அதன் பலனாய் பிடுங்கல் பற்றிய சிந்தனைகளிலிருந்து விடுதலையும் கிட்டியதென்னவோ நிஜமே ! ஆனால் காத்திருக்கும் 2 வாரங்களுக்குப் பின்னான திங்கட்கிழமை முதலாய், எத்தினி நொறுக்குத்தீனிகளை நொங்கியெடுத்தாலும் - no running away from reality என்பது புரிகிறது ! தொடர்ந்திடும் இந்த 40 நாள் முடக்கம் ஒட்டுமொத்தமாய் தேசத்தை ; லோகத்தை எத்தனை உலுக்கி எடுத்துள்ளதென்பது ஊருக்கே தெரியும் ! ஒவ்வொரு துறையினரிடமும் பேசும் போதெல்லாம் முந்திக் கொண்டு அவர்கள் வைக்கும் ஒப்பாரிகளில் ; புலம்பல்களில், காய்ந்து போகும் கபாலமானது, நாம் சொல்ல வந்ததையே மறந்து விடுகிறது ! So மறுபடியும் சீட்டில் அமர்ந்து பணிகளைத் துவக்கிட முற்படும் போது தான் இந்த இக்கட்டின் நிஜப் பரிமாணமும் புரிந்திடும் என்று தோன்றுகிறது ! 71 ரூபாயாக இருந்ததொரு அமெரிக்க டாலர் தற்சமயமாய் ரூ.77-ஐ தொட்டுப் பிடிக்க 'தம்' கட்டிக்கொண்டுள்ளது ! 77 ரூபாயாக இருந்த யூரோ இன்று ரூ.84 ! பேப்பர் கொள்முதலில் துவங்கி, அச்சிடும் உட்பொருட்கள் ; ராயல்டி பட்டுவாடாக்கள் என அத்தனையுமே இனி கழுத்தைச் சுற்றி எவ்விதம் இறுக்கக் காத்துள்ளன என்பதை மே 5 முதலாய் நெஞ்சைப் பிடித்துக் கொண்டே தான் கண்டுபிடித்தாக வேண்டும் ! அப்புறம் காத்திருப்பதோ - ஏஜெண்ட்களிடம் முன்பாக்கிகளை வசூல் செய்திட முற்படும் "செருப்புத் தேய்க்கும் படலங்கள்" ! இந்தப் பிரளயத்துக்குப் பின்னே எத்தனை பேர் தொழிலில் எஞ்சியிருக்கப் போகின்றனர் ? எஞ்சிடுவோரில் கடன்களை பைசல் செய்யும் சூழலில் எத்தனை பேர் இருக்கப் போகின்றனர் ? அவர்கள் நல்லெண்ணங்களோடு இருந்தாலுமே இந்தப் பணமுடை காலத்திலிருந்து விடுபட்டு, கொஞ்சமாய்ப் பணம் புரட்டியனுப்ப அவர்களுக்கு எத்தினி நாழி ஆகிடுமோ ? என்பதெல்லாம் anybody's guess ! And it's not like - "விலைவாசி ஏறிப்புடிச்சி மகா ஜனங்களே ; ஆகையால் விலை கூட்டணும் !" என்று ஒற்றை வரியை முதல்பக்க மேற்கோடியில் பதித்த கையோடு விலையேற்றிட முடியும் என்ற சூழல் இன்றைக்கு இல்லை - at least for us ! 'பொம்மை புக்' ரேஞ்சுக்கு நமது இன்றைய விலைகளே ஜாஸ்தி எனும் போது, இதற்கு மேலும் விலையினை இந்த நொடியில் உசத்தி, ஒட்டகத்தின் முதுகை முறித்த மடமையைச் செய்யத் துணிவில்லை ! So கடிப்போம் பற்களை ; தொந்திகளைச் சுற்றிக் கட்டத் தேடுவோம் தண்ணீரில் முக்கிய துண்டுகளை ; என்பதே இப்போதைக்கான watchwords ஆக இருந்திட முடியும் !
இதையெல்லாம் இங்கே நான் பஞ்சப்பாட்டாய்ப் பாடிடுவது உங்கள் ஜோப்பிகளை ஏதேனுமொரு ரூபத்தில் பஞ்சராக்கும் நோக்கில் அல்ல folks ! இன்றைய பொழுதில் யாரிடம் தானில்லை ஒரு பஞ்ச புராணம் ? டியூன்கள் மாறிடலாம் தான் ; சுதிகள் மாறிடக்கூடும் தான் ; ஆனால் எல்லோரது பாடல்களின் வரிகளிலும் புதைந்திருக்கக்கூடிய வலிகளில் மட்டும் இந்த நாட்களில் பெரிதாய் மாற்றங்கள் இராதென்பேன் ! On the contrary - இந்தச் சிரமப் பகிரல்களை உங்களிடம் ஒப்பிப்பதோ - ஓரிரு கோரிக்கைகளை முன்வைக்கும் முகாந்திரங்களாய் மட்டுமே :
1 நல்ல நாளைக்கே வாசிப்பினில் "அத்தியாவசியம்" என்ற சொகுசுகளெல்லாம் கிடையாது நமக்கு ! 'பொம்ம புக் ' என்ற அடையாளமும், அதன் பலனாய் 'அப்டிக்கா ஓரமாய் போயி விளையாண்டுக்கோ கண்ணு !' என்ற உபதேசங்களுமே நமக்கான gifts ! இந்தச் சூழலில் இந்தச் சின்னஞ்சிறு வாசக வட்டம் தொடர்ந்து தோள் கொடுப்பது மாத்திரம் இல்லாது போயின் - இந்நேரத்துக்குப் பஞ்சு மிட்டாய் தான் விற்றுக் கொண்டிருந்திருப்போம் - "லயன் மார்க் முட்டாய் " என்ற லேபிலில் இஸ்பைடரையோ ; சட்டிதலையனையோ போட்டபடிக்கு ! My request at this point of time is : சந்தாக்களில் சேர்ந்திட நிதிநிலைமை இடம் கொடுக்காது போயினும் - இந்த ஊரடங்கு அத்தியாயங்கள் முற்றுப் பெற்றான பின்னே, மாதம்தோறும் ஒன்றோ / இரண்டோ இதழ்களையாவது ஆன்லைனில், அல்லது உங்களுக்கு அருகாமையில் இருக்கக்கூடிய கடைகளில் தொடர்ந்து வாங்கிடுங்களேன் ப்ளீஸ் ? எல்லாமே ஒரு habit தான் எனும் போது - தொடர் வாசிப்பும் பழகிப் போய் விடும் ; அதனிலிருந்து விலகி நின்றோமெனில் அந்த வாடிக்கையுமே பழகிடும் ! காமிக்ஸ் வட்டத்தினுள் ஒரு சிறு அங்கமாகவேணும் நீங்கள் ஒவ்வொருவருமே தொடர்ந்திட வேண்டுமென்பதே எனது வேண்டுகோள் !
2 நிறைய பாக்கெட்டுகளுக்குள் தற்சமயம் நிறைய வெற்றிடம் இருப்பின் வியப்பேதும் நஹி அதன் பொருட்டு ! அதனாலென்ன guys - உங்களால் இன்றைய சூழலிலும் நமக்கு ஒத்தாசை செய்திட மார்க்கமுண்டு தான் ! நேரம் கிடைக்கும் போது உங்களின் வாட்சப் குழுக்களில் ; FB பக்கங்களில் ; ட்விட்டர் ; இன்ஸ்டாகிராம் கணக்குகளில் காமிக்ஸ் பற்றி ஏதேனும் எழுதலாமே - ப்ளீஸ் ? கைவசம் உள்ள முந்தைய இதழ்களைப் பற்றியோ ; நமது தற்போதைய நாயகர்களைப் பற்றியோ பதிவிட்டீர்களெனில், ஒவ்வொன்றும் ஒரேயொரு புது வாசகரை உருவாக்கித் தந்தாலுமே சிறப்பு தானே ? So பணமல்ல இங்கே அவசியமாகிடுவது ; மனமே !
3 இன்றைக்கு பூமிக்கே தேவை நம்பிக்கையும், பாசிட்டிவ் சிந்தனைகளும் தான் ! நிஜம் அதுவே எனும் போது, அந்த பூமியின் ஒரு தம்மாத்துண்டு மூலையில் ; ஒரு தம்மாத்துண்டு தொழிலில் அமர்ந்துள்ள நமக்கும் அவை தேவைப்படாது போயிடுமா - என்ன ? So நம் மீதான வருத்தங்கள் ; விமர்சனங்கள் ; நெருடல்கள் என்னவாயிருப்பினும் - அவற்றை பொதுவெளிகளில் அலசிக் காயப்போடும் routine-களுக்கொரு குட்டி பிரேக் ப்ளீஸ் ? மகிழ்ச்சியோ ; இகழ்ச்சியோ - அவை ராபின் நீலம் போலவே என்பேன் !! ஒற்றைச் சொட்டு விட்டால் ஒரு வாளித் தண்ணீரும் அதன் நிறமாகிப் போகும் தானே ? So பாசிட்டிவ் சொட்டு நீலம் கொஞ்ச காலத்துக்கேனும் ப்ளீஸ் ? 'ஓஹோ.....உன் போக்குக்கு ஜால்றா போட்டுக்கிட்டே வரச் சொல்றியாக்கும் ? என்ற கேள்வி எழலாம் தான் ! ஒவ்வொரு இதழிலும் குறைகளே இல்லை என்று நான் சொன்னால் அது எத்தனை பெரிய டூபாக்கூராய் இருக்குமோ, அத்தனை பெரிய பீலாவே - ஒவ்வொரு இதழிலும் நிறைகளே இல்லையென்று சொல்லிடும் பட்சத்திலும் ! So நான் தற்காலிகமாய்க் கோருவதெல்லாமே அந்த நிறைகளை focus செய்யுங்களேன் என்று மட்டுமே ! அப்புறம் திட்ட வேண்டிய விஷயங்கள் மறந்து போய்ட்டா என்ன பண்றது ? என்ற யோசனையா ? No worries....ஒரு 48 பக்க கோடு போட்ட நோட்டுப் போட்டு அதனில் எழுதி வைத்திருந்து ஞாபகமாய் அப்புறமாய்க் கூடத் திட்டிக் கொள்ளலாமில்லையா ?
4 .நிறைய தருணங்களில் அவற்றின் நெடும் காலப் பாதிப்பென்னவென்று அறியாமலே, ஆர்வக்கோளாறுகளில் கொஞ்சப் பேர் செய்திடும் இந்த back issues pdf விநியோகத்தை இந்தத் தருணத்திலாவது மூட்டை கட்டிடலாமே guys ? இரண்டு நாட்களுக்கு முன்னே கூட "மினி லயன் முதல் 2 இதழ்கள் " என்று பெருமையாய் ஸ்கேன் செய்து சுற்றில் விட்டுள்ளார் வாசகர் ஒருவர் ! அது நமது மறுபதிப்புப் பட்டியலில் உள்ள இதழ் எனும் போது ஒற்றை நொடியில் அதன் எதிர்காலத்தை துவம்சம் செய்த புண்ணியத்தை ஈட்டியுள்ளார் அந்த வாசகர் ! இன்றைய பொழுதில் விற்கும் ஒவ்வொரு புக்கும், இந்தப் பயணத்தின் ஆயுட்காலத்தை ஒவ்வொரு நிமிட அளவுக்கு நீட்டிக்கும் ஆற்றல் கொண்டதெனில் ; இது போன்ற "கடைத் தேங்காய்-தெருப் பிள்ளையார் முயற்சிகள்" அதே பயணத்தின் ஆயுளை ஒவ்வொரு மணி நேர அளவுக்கு நசுக்கும் திறன் கொண்டவை ! தெரிந்தே குரல்வளை மீது கால்வைக்கும் பழக்கங்களை இப்போதேனும் உதறிட முயற்சியுங்களேன் ப்ளீஸ் ? பழைய புக்குகளை கோடி ரூபாய் கூட சொல்லிக் கொள்ளுங்கள் ; அதனை வாங்கும் சக்தியோடு உங்களிடம் யாரேனும் சிக்கினால் அது உங்கள் இருவருக்கும் மட்டுமே பொதுவானதொரு சமாச்சாரமாகிடும் ! அதனில் தலைநுழைக்க யாருக்கும் உரிமை இராது ! ஆனால் pdf ஆக்கி ஊருக்கு விநியோகிக்கும் இந்த பரோபகாரம் வேண்டாமே ? You are making life more difficult for us !!
5 The next request : சற்றே தர்மசங்கடத்தை ஏற்படுத்துவது : உடனே இல்லையென்றாலும், வாய்ப்பு அமையும் போது ஆளாளுக்கு ஒரேயொரு முந்தைய இதழையேனும் வாங்கி உங்கள் நண்பர்களுக்கோ ; பள்ளிக்கூட / ஆபீஸ் / அபார்ட்மெண்ட் லைப்ரரிக்கோ பரிசாகத் தந்திடுவது பற்றி யோசித்துப் பாருங்களேன் - ப்ளீஸ் ? Each book that travels out from our stock will now mean more than it ever did !! யதார்த்தமாய்ப் பேசுவதெனில் இந்தாண்டின் புத்தக விழாக்களின் நிலவரம் எவ்விதமிருக்கும் ? அங்கே என்ன மாதிரியான விற்பனைகளை இந்தாண்டின் முழுமைக்கும் எதிர்பார்த்தல் சரிப்படும் ? என்பதெல்லாம் பதிப்பகத் துறையின் ஜாம்பவான்களையே தடுமாறச் செய்து வரும் கேள்விகள் ! அட, ரெகுலர் புத்தகக் கடைகளிலேயே கூட அடுத்த 6 மாதங்களுக்கு வியாபாரம் எவ்விதம் இருக்குமென்பதை யூகிக்க வழியில்லை ! So ஆன்லைன் விற்பனையின் வேகத்தை நாம் வளர்த்தல் எப்போதையும் விட இப்போது முக்கியத்துவம் பெற்று நிற்கின்றது ! Just a request guys !! அதற்காக, நாளையேவோ ; அல்லது ஊரடங்கு முடிவுற்ற மறு நாளேவோ, உங்கள் ஆர்டர்களை எதிர்பார்ப்போம் என்றெல்லாம் இல்லை !! வாழ்க்கையில் இந்த நொடியில் பொம்மை புக்குகளைத் தாண்டிய முக்கிய சமாச்சாரங்கள் ஒரு நூறு உண்டென்பதை ஏற்றுக் கொள்ளும் முதல் ஆசாமி நானே ! ஏதேனும் பிறந்த நாள்கள் ; திருமண நாட்கள்,பண்டிகைகள் போன்ற வேளைகளில் காமிக்ஸ்களை ஒரு பரிசாக்குவது பற்றிய சிந்தனைகள் எழுந்தாலுமே சூப்பர் !
6. சந்தாவின் லாயல்டி பாயிண்ட்ஸ் மீட்பதன் பொருட்டு, சட்டித் தலையன் ஆர்ச்சியின் வண்ண இதழ் மே மாதம் நம் அன்புடன் கிட்டிடும் என்று அறிவித்திருந்தேன் அல்லவா ? அதனை ஆண்டின் மூன்றாம் க்வாட்டருக்கு நகற்றிட எண்ணுகிறேன் ! நிச்சயமாய் அல்வா கிண்டும் முயற்சியல்ல இது ; கலரிங் செய்யப்பட்டு டிஜிட்டல் கோப்புகள் தயாரே ! ஆனால் குடலை வாய்க்குக் கொண்டு வரப்போகும் தற்போதைய பேப்பர் விலைகள் கொஞ்சமே கொஞ்சமாய் நிதானத்துக்குத் திரும்பினால் தேவலாமே என்றதொரு சிறு ஆசையே ! Hope you will be o.k. with it !
7.இடைப்பட்ட 40 நாட்கள் எதிர்பாரா விதத்தில் கபளீகரமாகிப் போவதால், ஒரு நாலைந்து இதழ்களை நடப்பாண்டில் இனிவரவுள்ள மாதங்களுக்குள் பகிர்ந்திட வேண்டி வரும் ! ஆகையால் நடப்பு மாதத்திலேயே 5 இதழ்கள் இருந்திடும் ! இது போன்ற மாதங்கள் இன்னும் சில இருந்திடும் நடப்பாண்டில் ! So - "overkill" என்ற விமர்சனங்கள் வேண்டாமே - ப்ளீஸ் ?
8. Last but not the least - சந்தா !! ரெகுலர் சந்தாவின் ஏப்ரல் to டிசம்பர் திட்டமிடலிலோ / ஜம்போவின் சீசன் 3 சந்தாவிலோ இணைந்திரா நண்பர்கள் வசதிப்படும் போது முயற்சிக்கலாமே - please ?
இவற்றையெல்லாம் சொல்லி, உங்களின் தலைகளுக்குள் ஏற்கனவே இருக்கும் நோவுகள் பற்றாதென, புதுசாய் ஒரு பாட்டத்தை ஏற்றிடுவதில் எனக்குப் பெரிதாய் ஆர்வம் இல்லை தான் ! கட்டையோ-நெட்டையோ, நாமாகவே சமாளிப்பதே உசிதமென்றிருந்தேன். ஆனால் நேற்றைக்கு காமிக்லவர் ராகவன் அனுப்பியதொரு அமெரிக்க பத்திரிகை செய்தியைப் படித்த போது, காமிக்ஸ் உலக ஜாம்பவான்களே என்னமாய் ஆட்டம் கண்டுள்ளனர் என்பது புரிந்தது ! அப்புறமே இந்தப் பதிவினை டைப் செய்யத் தீர்மானம் செய்தேன் ! அமெரிக்கா முழுசுக்கும் பிரதான காமிக்ஸ் இதழ்கள் சகலத்தையும் விநியோகிக்கும் Diamond Book Distributors நிறுவனமானது நிலைமை நார்மலாகும் வரை யாரும், எதையும் அனுப்ப வேண்டாமெனச் சொல்லி கேட்டை ஒட்டுமொத்தமாய்ப் போட்டு விட்டார்கள் - April 1 முதலாய் ! Dark Horse Comics திடு திடுப்பென வெளியீடுகளை நிறுத்திக் கொண்டுள்ளது ; IDW நிறுவனமுமே ! மார்வெல் காமிக்ஸ் மூன்றில் ஒரு பங்குக்குக் கத்திரி போடும் தீர்மானத்தை அறிவித்துள்ளது ! ஜூலையில் தவறாது அரங்கேறிடும் உலகின் நம்பர் 1 காமிக்ஸ் திருவிழாவான (அமெரிக்காவின்) San Diego காமிக் கான் இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது ! நியூயார்க்கில் நடைபெறும் BookExpo-வுக்கும் இந்தாண்டு பூட்டுப் போட்டு விட்டார்கள் ! ஏற்கனவே பாரிஸ் புத்தக விழா ; லண்டன் விழா & இத்தாலியின் போலோனியா விழாக்கள் காலி ! So உலகக் கோடீஸ்வரர்களுக்கே இந்த கதி எனும் போது, கர்சீப்பால் கோவணம் கட்டித் திரியும் நாமெல்லாம் எம்மாத்திரம் ?
ஆனால் இங்கொரு சின்ன வெள்ளிக்கீற்றுமே (அட...அது தான் silver lining-ங்க) உண்டென்பதை நான் சொல்லியாக வேண்டும் ! வெகுஜன விற்பனைக்கு உட்படும் mega இதழ்கள் பெரும்பாலும் யானைகள் போலென்று வைத்துக் கொள்ளுங்களேன் ; தடுமாறினால் எழுந்து கொள்வது சுலபமே அல்ல ! ஆனால் குண்டுச் சட்டிக்குள் 'குருதே' ஓட்டும் நம் போன்றோரெல்லாமே பூனைகள் மாதிரி ! மதிலில் இருந்தே பல்டியடித்தாலும் - 'வியாவ் !!' என்று ஒரு சவுண்டைக் கொடுத்து விட்டு நொண்டிக்கொண்டேனும் நடையைக் கட்டியிருப்போம் ! So பூமியில் ஆளுக்கொரு சவால் என்றான சூழலில், நம் முன்னே நிற்பதை எவ்விதம் சமாளிக்கவுள்ளோம் என்பதில் தான் இந்த எருமைக்கடா வயசுக்கான அனுபவம் கைகொடுக்கிறதா ? என்று பார்த்தாக வேண்டும் ! So the game's well & truly on !! ஜெய் பாகுபலி ! Wish us luck guys !!
And இந்த 'கொரோனாவுக்குப் பின்னே" என்ற காலகட்டத்தினில் நாம் முன்னெடுக்கக் கூடிய முயற்சிகள் பற்றிய ஆக்கபூர்வமான யோசனைகளும் வரவேற்கப்படுகின்றன!! "டிஜிட்டல் காமிக்ஸ்" என்பது நமக்குச் சாத்தியமல்ல என்பதால், அது சார்ந்த பரிந்துரைகள் நீங்கலாய் everything else under the sun is welcome indeed !! அப்புறம் இது ஜீவிக்க முனையும் ஒரு survival தருணம் என்பதால், "ரெண்டாயிரம் பக்கம் ; ரெண்டாயிரம் ரூபாய் ; ரெண்டு மெபிஸ்டோ கதைகள்" என்ற ரீதியிலான முன்மொழிவுகள் வேண்டாமே - ப்ளீஸ் ?
Moving on, ஒரு வழியாய் இதோ - காத்திருக்கும் 'தல' சாகஸ அட்டைப்படத்தில் முதல்பார்வை ! ஒரிஜினல் டிசைனே ; வர்ண மாற்றங்கள் மட்டுமே நமது உபயம் !
உட்பக்க கோப்புகள் கையில் இல்லை என்பதால் artwork பற்றித் தெரிந்து கொள்ள பின்னட்டையைப் பார்த்துக் கொள்ளுங்களேன் ? அட்டகாச சித்திர பாணியில் ஓவர் அலம்பல் இல்லாதொரு அதிகாரியின் தரிசனத்துடன் நேர்கோட்டில் ஓடும் சாகசமிது ! So சில பல பாயச விரும்பிகள் வேறொரு தருணத்துக்குக் காத்திருக்க வேண்டி வரலாம் !
அப்புறம் காலேஜ் வாசலின் பானிப்பூரிவாலாக்கள் போல், நம் மத்தியில் புலவர்களும், கவிஞர்களும் கணிசமோ, கணிசமாய் இருந்தாலும், பாடகர்களின் எண்ணிக்கையோ கொரோனா தடுப்புக்கான PPE கையிருப்பைப் போலவே சொற்பம் என்பது புரிகிறது ! நண்பர் மிதுனனும், நண்பர் மேச்சேரி ஜெயகுமாரும் தலைகாட்டியுள்ளது தவிர்த்து - குருவும், சிஷ்யரும் மட்டுமே செவிகளை மிரட்டியுள்ளனர் ! இதில் டூயட் வேறு !!! இந்த இசைமழையில் நனைந்து தீர்ப்புச் சொல்ல நானும் ஜட்ஜ்களை நியமித்து அவர்கள் யாருக்கேனும் ஜல்ப்புப் பிடித்துக் கொண்டால் வம்பாகிப் போய் விடுமென்பதால் நானே தீர்ப்புச் சொல்லி விடுகிறேன் - செயலர் வெற்றி பெற்றாரென்று ! ஆக இனி அரசவையில் ஸ்டீல் குந்தியிருக்கும் ஸ்டூலுக்குக் கிட்டக்கே இன்னொன்னை போட்ட கையோடு - அவர் இயற்றும் (!!!) பாடல்களை பாடும் பொறுப்பு சங்கத்துச் செயலருக்கே ! அந்த மட்டுக்கு இந்தப் போட்டியில் பாணபத்திரரே கலந்து கொள்ளாதது அந்தச் செந்தூர்வேலனின் கருணையே என்பேன் ! அரோகரா !! https://youtu.be/TnA_kb0-QvY : இந்த லிங்க்கை க்ளிக் செய்து ஒரு இசை மழையில் நனைய தயாராகும் முன்பாய் உங்கள் இஷ்ட தெய்வங்களை நினைத்துக் கொள்ளுங்களேன் folks !!
ரைட்டு...கவிதை இயற்ற புலவர்ஸ் ரெடி ; பாடிட வித்வானும் ரெடி ; இனி எழுத்தாணி பிடிக்கத் திறன் கொன்டோரைத் தேடுவதே அடுத்த பணி ! இதோ - சமீபத்தில் எனக்கு கிட்டிய பல நூறு வாட்சப் forward சேதிகளுள் இடம்பிடித்திருந்ததொரு சிம்பிள் ஆங்கிலக்கவிதை ! படிக்கும்போது இன்றைய யதார்த்தத்தை அழகாய், மிகையின்றிச் சொல்லியிருந்தது போலப்பட்டது ! உங்களது task : இதனை தமிழில் அழகாய் மொழிபெயர்த்துப் பதிவிட வேண்டியதே !
உங்களுக்குள் புதைந்து கிடக்கும் அந்த சிங்கத்தை கட்டவிழ்த்து விடுங்களேன் guys ! Full steam ahead !!
கிளம்பும் முன்பாய் சில உலக நடப்புகள் ; இன்றைய சூழலுக்கேற்ற சேதிகள் :
Bye all ; have an awesome weekend ! See you around !! STAY HOME & STAY SAFE !!

- சென்னையின் கண்ணகி நகரில் வசிக்கும் சிறார்களின் துணையோடு UNICEF அமைப்பு இந்த கொரோனா வைரஸ் பற்றியொரு 8 பக்க காமிக்ஸ் இதழை உருவாக்கியுள்ளது ! தமிழ் ; இங்கிலிஷ் & மலையாளத்தில் அது தயாராகியுள்ளது ! https://www.thehindu.com/news/cities/chennai/a-comic-book-on-covid-19-from-childrens-sketches/article31283642.ece
- ஏப்ரல் 13 முதல் இத்தாலியில் புத்தகக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் ! 'தல' துளி பாதிப்புமின்றித் தொடர்ந்து வருகிறார் - இந்தச் சிரம நாட்களுக்கு மத்தியிலும் !
- இங்கிலாந்திலும், ஐக்கிய அரபு தேசங்களிலும் ஆன்லைன் புத்தகவிழாக்கள் துவங்கவுள்ளன !! ஊரடங்கு நாட்களிலும் ஒரு புத்தக விழாவின் variety வாசகர்களுக்குக் கிடைக்கவுள்ளது ! Seems an awesome idea !!
- அமெரிக்காவில் ஏகப்பட்ட புக் ஸ்டோர்கள் தள்ளாட்டம் கண்டு கொண்டிருக்கும் நிலையில், ஆன்லைனில் crowd funding மூலமாய்ப் பணம் புரட்டும் முயற்சிகள் கைகொடுத்து வருகின்றன !
- சிறார் புக்ஸ் முன்னுரிமை பெறுகின்றன U.K. அமேசானின் பட்டுவாடாப் பட்டியலில் !
Bye all ; have an awesome weekend ! See you around !! STAY HOME & STAY SAFE !!
Hi
ReplyDeleteThanks for the new post sir!
ReplyDeleteWow
ReplyDelete3?
ReplyDeleteI'll take 4
Deleteஹைய்யா புதிய பதிவு......
ReplyDeleteவந்திட்டேன் சார் 🙏🏼
ReplyDelete.
இந்தா வந்துட்டோம்ல...
ReplyDelete// சாரி சார்...எங்களுக்கு வந்த தகவலின்படி 14 நாள் home quarantine உங்களுக்கு " என்று சொல்லி, வாசலில் ஸ்டிக்கரை ஒட்டியும் விட்டார்கள் ! //
ReplyDeleteகடமை வீரன் கந்த சாமிகள் :-( உண்மை என்ன என முழுவதும் தெரியாமல் வேலை செய்யும் இவர்களை என்ன சொல்ல!
10
ReplyDeleteரொம்ப பெரிய பதிவுதான்.
ReplyDeleteபுத்தகங்களை பரபரப்பு முடிந்தவுடன் மொத்தமாக அனுப்பி வையுங்கள். கூரியர் அலுவலகங்களின் பணியாளர் சரியாக வரவில்லையென்றால் புத்தகங்கள் தவறிவிடும். எனவே நிதானமாக அனுப்புங்கள் பாதகமில்லை.👍
சரியாக சொன்னீர்கள் அண்ணா. ஒன்றும் அவசரம் இல்லை. புத்தகங்களை சேர்த்து ஒன்றாக அனுப்புங்கள் சார்.
Deleteடியர் எடிட்டர்
Deleteஎன்னடா இப்படி சொல்கிறானே என்று தவறாய் நினைக்கவேண்டாம். இப்போது பரவிக்கொண்டிருக்கும் விஷக்கிருமியின் ஆடலுக்கு எதிராய் vaccine வந்து 50% சதவிகித மக்கள் அவற்றை உள்வாங்கும் வரை நிலவப்போவது ஒரு அசாதாரண சூழலே என்பது நிதர்சனம். திங்களன்று சிலவிடங்களில் திறக்கப்படும் 50% பிசினஸ் மற்றும் கூரியர் இத்யாதிகள் மீண்டும் பரவல் நிலை மிகுந்தால் இன்னொரு ஊரடங்கில் கொண்டே விடும். நல்ல நாட்களிலேயே விதிமீறல்கள் அதிகம் உள்ள நம் போன்ற தேசங்களில் 20ம் தேதிக்கு பின்னர் என்ன நடக்குமோ யாரறிவார்?
மேலும் pizza டெலிவரி நபர் ஒருவருக்கு வந்ததால் டெல்லியில் ஒரே நாளில் 30% pizza ஆர்டர்கள் குறைந்ததும், 75 குடும்பங்கள் trace செய்யப்பட்டதும் நாம் அறிந்ததே - நேற்று முன் தினம் வந்த சேதி.
எனவே ஊர் நலம் கருதி - இன்னும் சற்றே சில வாரங்கள் புத்தகங்கள் அனுப்பாமல் இருப்பது நலமே. நான் எனது புத்தகங்களை அகிலுக்கு அளித்து விட்டாலும் புதிய எனக்கு வேண்டிய புத்தகங்களை ஜனவரி சென்னை விழாவில் பார்த்து வாங்கிக்கொள்வதே தற்போதைய பிளான்.
Better safe than sorry !!
மாலை வணக்கங்கள் ஃப்ரெண்ட்ஸ்
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDelete// 'பொம்மை புக்' ரேஞ்சுக்கு நமது இன்றைய விலைகளே ஜாஸ்தி எனும் போது, இதற்கு மேலும் விலையினை இந்த நொடியில் உசத்தி, ஒட்டகத்தின் முதுகை முறித்த மடமையைச் செய்யத் துணிவில்லை ! //
ReplyDeleteஉங்களின் சூழ்நிலைநன்றாக புரிகிறது சார்! எங்களால் முடிந்த உதவியை செய்ய தயாராக உள்ளோம்!
// எங்களால் முடிந்த உதவியை செய்ய தயாராக உள்ளோம் // எப்போதுமே
Deleteகண்டிப்பாக உங்களோடு நிற்போம் ஆசிரியரே
Deleteஉள்ளேன் ஐயா..!! :-)
ReplyDelete// டியூன்கள் மாறிடலாம் தான் ; சுதிகள் மாறிடக்கூடும் தான் ; ஆனால் எல்லோரது பாடல்களின் வரிகளிலும் புதைந்திருக்கக்கூடிய வலிகளில் மட்டும் இந்த நாட்களில் பெரிதாய் மாற்றங்கள் இராதென்பேன் ! //
ReplyDeleteபுரிகிறது சார்! உங்கள் வலி நன்றாகவே புரிகிறது! தவறாக என்றும் எடுக்கமாட்டோம்!
வணக்கம் பதிவுக்கு நன்றி ஆசிரியரே
ReplyDelete// இரண்டு நாட்களுக்கு முன்னே கூட "மினி லயன் முதல் 2 இதழ்கள் " என்று பெருமையாய் ஸ்கேன் செய்து சுற்றில் விட்டுள்ளார் வாசகர் ஒருவர் ! அது நமது மறுபதிப்புப் பட்டியலில் உள்ள இதழ் எனும் போது ஒற்றை நொடியில் அதன் எதிர்காலத்தை துவம்சம் செய்த புண்ணியத்தை ஈட்டியுள்ளார் அந்த வாசகர் ! //
ReplyDeleteவருந்தத்தக்க விஷயம்! இன்னமும் சிலர் இதன் பாதிப்பை புரிந்து கொள்ளாமல் இருப்பது வருத்தமாக உள்ளது! அதே நேரம் இது கண்டிக்கதக்க விஷயம்!
// pdf ஆக்கி ஊருக்கு விநியோகிக்கும் இந்த பரோபகாரம் வேண்டாமே ? You are making life more difficult for us !! //
ReplyDeleteஇவர்கள் மேல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க முடியுமா? முடியும் என்றால் நீங்கள் அதனை தயங்காமல் செய்யலாமே சார்! போதுமான அளவு எடுத்து சொல்லி விட்டீர்கள்! போதுமான நேரமும் கொடுத்து விட்டீர்கள்!
இதனில் ஈடுபடுவோரின் பெரும்பான்மை நமக்கும் பரிச்சயமானவர்களே எனும் போது, அவர்களை இக்கட்டில் ஆழ்த்திட நெருடுகிறது மனசு ! இருக்கும் சிறுவட்டத்தையும் சிதறச் செய்தது போலாகிடுமே என்ற சங்கடமும் தான் !
Deleteஉண்மை சார்..:-(
Deleteஅனைவருக்கும் உங்களை போல மனம் இல்லையே சார். அது தானே பிரச்சினை
Deleteஉண்மை சார்..:-(
DeleteWay too much leniency !! Too much patience and lenience would lead to undoing of whatever is well established Sir! It is really time you take action. You have been harping about this for years and they are not stopping. Repeated requests are not going to stop them. Either take action or just let go Sir - inasmuch as it is difficult.
Deleteதவறான நோக்கம் உடையவர்களிடம் பரிவும் தாயையும் கூடாது !
டெக்ஸ் ஓவியங்கள்ந நன்றாக இருக்கிறது(பின் அட்டை)
ReplyDeleteஇத்தளத்தில் எதிர்மறையான கருத்துக்கள் வருவதில்லையே பின் ஏன் அதனை ஞாபகபடுத்துகிறீர்கள்.
இந்தத் தளம் மாத்திரமே காமிக்ஸ் சார்ந்த களம் என்றில்லையே சார் ?
Delete(("சாரி சார்...எங்களுக்கு வந்த தகவலின்படி 14 நாள் home quarantine உங்களுக்கு ))
ReplyDeleteகௌதமி வீட்டில் ஒட்ட வேண்டிய ஸ்டிக்கரை கமல் வீட்டில் ஒட்டியவர்கள் தானே நம்மவர்கள்
சத்யா ஹிஹிஹி
Deleteஇல்லை சத்யா ; அரசும், அரசு ஊழியர்களும் ; மருத்துவர்களும் இந்தப் பேரிடரை தங்கள் சக்திகளுக்கு உட்பட்டவரைக்கும் மிகப் பொறுப்போடு சமாளிக்க முயன்று வருகின்றனர் ! எங்கள் தெருவினில் இன்னொரு பாரின் ரிட்டன் உருப்படி இருந்ததைத் தொடர்ந்து, வீட்டுக்காவலை ஊர்ஜிதம் செய்திட தெருமுனையில் ஒரு கான்ஸ்டபிள் ; அவ்வப்போது வந்து விசாரித்துச் செல்லும் சுகாதாரத் துறையினர் ; எங்கள் தெருவில் இந்த 2 வீடுகளின் குப்பைகளை மட்டும் தனியாய் அப்புறப்படுத்தும் ஏற்பாடுகள் ; அதனை மேற்பார்வை செய்திட ஒரு அதிகாரி ; அவ்வப்போது கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடுகள் என்று ஒய்வு ஒழிச்சலின்றி அனைவருமே சுழன்று கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது !
Deleteஉண்மை...:-)
Delete// தெருமுனையில் ஒரு கான்ஸ்டபிள் ; அவ்வப்போது வந்து விசாரித்துச் செல்லும் சுகாதாரத் துறையினர் ; எங்கள் தெருவில் இந்த 2 வீடுகளின் குப்பைகளை மட்டும் தனியாய் அப்புறப்படுத்தும் ஏற்பாடுகள் ; அதனை மேற்பார்வை செய்திட ஒரு அதிகாரி ; அவ்வப்போது கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடுகள் என்று ஒய்வு ஒழிச்சலின்றி அனைவருமே சுழன்று கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது ! //
Deleteஅரசு அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்.
// 5 The next request : சற்றே தர்மசங்கடத்தை ஏற்படுத்துவது : உடனே இல்லையென்றாலும், வாய்ப்பு அமையும் போது ஆளாளுக்கு ஒரேயொரு முந்தைய இதழையேனும் வாங்கி உங்கள் நண்பர்களுக்கோ ; பள்ளிக்கூட / ஆபீஸ் / அபார்ட்மெண்ட் லைப்ரரிக்கோ பரிசாகத் தந்திடுவது பற்றி யோசித்துப் பாருங்களேன் - ப்ளீஸ் ? Each book that travels out from our stock will now mean more than it ever did !! //
ReplyDeleteகண்டிப்பாக செய்கிறேன்! மே முதல் வாரத்தில் கார்ட்டூன் புத்தகங்கள் வாங்கி ஒரு சில பள்ளி கூடங்களுக்கு கொடுக்கிறேன்!
எனக்கும் இதே ஐடியா தான் தோன்றியது.
Delete1க்கு 2 ஆகவே செஞ்சுடுவோம் சார்
Delete// 6. சந்தாவின் லாயல்டி பாயிண்ட்ஸ் மீட்பதன் பொருட்டு, சட்டித் தலையன் ஆர்ச்சியின் வண்ண இதழ் மே மாதம் நம் அன்புடன் கிட்டிடும் என்று அறிவித்திருந்தேன் அல்லவா ? அதனை ஆண்டின் மூன்றாம் க்வாட்டருக்கு நகற்றிட எண்ணுகிறேன் ! நிச்சயமாய் அல்வா கிண்டும் முயற்சியல்ல இது //
ReplyDeleteதாராளமாய் செய்யுங்கள் சார்!
// 5 The next request : சற்றே தர்மசங்கடத்தை ஏற்படுத்துவது : உடனே இல்லையென்றாலும், வாய்ப்பு அமையும் போது ஆளாளுக்கு ஒரேயொரு முந்தைய இதழையேனும் வாங்கி உங்கள் நண்பர்களுக்கோ ; பள்ளிக்கூட / ஆபீஸ் / அபார்ட்மெண்ட் லைப்ரரிக்கோ பரிசாகத் தந்திடுவது பற்றி யோசித்துப் பாருங்களேன் //
ReplyDeleteசிறிது சிறிதாக அந்த முயற்சியை மேற்க்கொண்டு வருகிறேன் ஆசிரியரே விரைவிலேயே பெரிதாக முயற்சி செய்கிறேன்
// 7.இடைப்பட்ட 40 நாட்கள் எதிர்பாரா விதத்தில் கபளீகரமாகிப் போவதால், ஒரு நாலைந்து இதழ்களை நடப்பாண்டில் இனிவரவுள்ள மாதங்களுக்குள் பகிர்ந்திட வேண்டி வரும் ! ஆகையால் நடப்பு மாதத்திலேயே 5 இதழ்கள் இருந்திடும் ! //
ReplyDeleteகரும்பு தின்ன கூலியா! ஆறு புத்தகங்கள் வந்தாலும் ஒகே! ஆனால் உங்களுக்கும் உங்கள் பணியாளர்களுக்கும் வேலை அதிகமாக இருக்கும் என்பதே எனது கவலை!
ஆறு அல்ல மொத்தமாக 10 புத்தகங்கள் அனுப்பினாலும் சந்தோஷமே.
Deleteஹா...பதிவு வந்து விட்டதா...?!
ReplyDeleteபடித்து விட்டு...:-)
தல அட்டை சான்ஸே இல்ல செம சூப்பர் ஆசிரியரே நீங்கள் அட்டைப்படத்துகென்று எடுத்துக்கொள்ளும் சிரத்தைகளுக்கு நன்றிகள்
ReplyDeleteஇந்த முறை டெக்ஸ் அட்டை அட்டகாசம் அற்புதம் அமர்க்களம். செம்ம classy.
Deleteஓவியங்களும் அருமை பின் அட்டையில்
(போட்டி அறிவித்தபோதே சொல்லியிற்றே😃😃)
ReplyDeleteவாழ்த்துகள் குருநாயரே..!!
👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐
உண்மை தான் கண்ணா.
Deleteவாழ்த்துகள் ஈ.வி........
Deleteதீர்க்கதரிசி சார் நீங்க.
Deleteபாட்டு போட்டியில் வெற்றிபெற்ற விஜய்க்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteமிகவும் பெரிய பதிவு, நீங்கள் பல கோணங்களில் யோசித்து எழுதி உள்ளீர்கள்! அதுவும் சரியான திசையில் சிந்தித்து எல்லா விஷயங்களையும் கவர் செய்து விட்டீர்கள் சார்!
ReplyDeleteAll the very best and good luck!
டெக்ஸ் கதையின் முன் அட்டைப்படம் அருமை, வண்ணக்கலவைகள் செம!
ReplyDeleteவெகு மாதங்களுக்கு பிறகு மனதை கனமாக்கிய பதிவு. உங்களுக்கு முடிந்த உதவிகளை செய்ய கடமை பட்டு இருக்கிறோம் சார்.
ReplyDeleteசெயலருக்கு எனது வாழ்த்துக்கள்.
எங்களால் முடிந்த உதவிகளை செய்ய அனுமதிக்க வேண்டுகிறேன்.
நன்றி.
Good evening friends
ReplyDeleteஅனைவருக்கும் இரவு வணக்கங்கள். கொரோனாவிற்கு மத்தியிலும், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் எங்கள் தொழிற்சாலை ஏப்ரல் 15 முதல் இயங்க துவங்கிவிட்டதால் பணிச்சுமை அதிகம். தளத்தில் அடிக்கடி எட்டிப் பார்க்க இயலவில்லை. மன்னிக்கவும். இதுவும் கடந்துபோகும். எதிர்காலம் எனதே என்று நம்பிக்கையுடன் இருந்தால் வாராதோ விடியலே.
ReplyDeleteவணக்கம் பத்து சார். எதுவுமே கடந்து போகும். பீனிக்ஸ் பறவை போல உயிர்த்து வரும் நமது தேசம்.
Delete@Padmanaban.R : Essentials பிரிவினில் உங்கள் தொழிற்சாலை வருகிறது போலும் சார் ! இங்குமே நீங்கள் Essential தானே ?!!
Deleteyes சார். எங்களது தமிழ்நாடு காகித ஆலை (TNPL) essential பிரிவில் வருவதால் ஆலை இயங்கத் துவங்கி விட்டது.
Delete/// இங்குமே நீங்கள் Essential தானே?!! ///
DeleteThanks for your credits sir.
லீவே குடுக்காம TNPL சிமெண்ட் ஆலையில் பாதுகாப்பு பணியில் உள்ளேன் நண்பரே....
Deleteபக்கமா தான் இருக்கிங்க.
Deleteஇப்பகூட ஷிப்லதான் ப்ரோ....
DeleteIam also
Deleteநானும் கூட...
Deleteவாழ்த்துகள் செயலரே. உங்க பாட்டைக் கேட்டுட்டு இது உங்க பிரண்டு பாடுன மாதிரியே இல்லை. ஒரிஜினல் பாடகர் மாதிரியே இருக்குன்னு வீட்டம்மா சொன்னாங்க. அவ்வளவு நல்லாருந்துச்சு. லயன் முத்து காமிக்குன்னு வரிகள் வந்தப்ப தான் சரி இது நீங்க பாடினதுன்னு ஒத்துகிட்டாங்க.
ReplyDeleteஷெரீஃப் சூப்பர் விமர்சனம் பாடலுக்கு
Delete// ஏப்ரல் 13 முதல் இத்தாலியில் புத்தகக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் ! 'தல' துளி பாதிப்புமின்றித் தொடர்ந்து வருகிறார் - இந்தச் சிரம நாட்களுக்கு மத்தியிலும் ! //
ReplyDeleteஅடடே,செம,செம......
/// பாட்டு போட்டியில் வெற்றிபெற்ற விஜய்க்கு வாழ்த்துக்கள்!!///
ReplyDeleteமறுக்கா இது மாதிரில்லாம் பாடக் கூடாது என்ற கண்டி ஷனோடு.
ஆன்லைன் ஆடியன்ஸ்ங்குறதால நிறைய பேர் தப்பிச்சாங்க.
உண்மைதான். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்.
Deleteதப்பான கருத்துக்கள் நண்பரே...சென்று பாருங்கள்..மிக அழகாக பாடியுள்ளார்...பிறகு ஈரோட்டில் சந்திக்கும் பொழுது நண்பர்களை நீங்களே பாட சொல்வீர்கள்...:-)
Deleteஆமாம் பத்து சார். செயலர் மற்றும் அவருடைய இசை வாரிசு அவருடைய மகள்: இரண்டு பேரும் நன்றாக பாடுவர்கள். கேட்டுப் பாருங்கள்.
DeleteMy comments are only just for fun. not to critisise others.
Delete///My comments are only just for fun. not to critisise others.///
Deleteஇதுமாதிரி விளக்கங்கள் எதற்கு பத்து சார்?!! உங்களைப் பற்றி நானும், மற்ற நண்பர்களும் நன்கறிவோம்!! நீங்க ஜாலியா ஓட்டுங்க!! :)
வாழ்த்துக்கள் ஈ.வி.
ReplyDeleteஎது எப்படியோ - கிட்டத்தட்ட மூன்றரை வாரங்களாக தின்ன ; தூங்க ; நெட்டை நோண்ட ; மறுக்கா தூங்க ; நெட்டை நோண்ட ; தின்ன என்று நாட்களைக் கடத்திய பிற்பாடு, பணிகளுக்குள் திங்கள் முதலாய் முனைப்போடு புகுந்திட எண்ணியுள்ளேன்
ReplyDelete######
மகிழ்வான விசயம் என்றாலும் தகுந்த பாதுகாப்புகளுடனே பணிகளை மேற்கொள்ளுங்கள் சார்..
தேசத்துக்கே ஊரடங்கு என்பது சீக்கிரமே அறிவிக்கப்பட்ட நிலையில், ஸ்டிக்கர் இல்லாவிடினும் நாங்கள் எங்கேயும் போயிருக்க வாய்ப்பில்லை தான் ; இருந்தாலும், வாசலிலிருந்த ஸ்டிக்கர் நெருடலாகவே இருக்க, வேலைகளுக்குள் முழு மனசாய்ப் புகுந்திட இயலவில்லை
ReplyDelete#####
உண்மை சார்...இதன் பாதிப்பை மனதினால் உணரமுடிகிறது..எ_\ இதுவும் நன்மைக்கே என எடுத்து கொள்ள வேண்டியது தான் சார்..:-(
Hi..
ReplyDelete! காமிக்ஸ் வட்டத்தினுள் ஒரு சிறு அங்கமாகவேணும் நீங்கள் ஒவ்வொருவருமே தொடர்ந்திட வேண்டுமென்பதே எனது வேண்டுகோள் !
ReplyDelete###
சார்...இந்த கொரானா காலத்தில் இதன் பாதிப்புகளை ,கவலைகளை மறக்க செய்து வருவதே உங்கள் காமிக்ஸ் தான்..அதுவும் பொறுமையாக ,அமைதியாக ,உள்வாங்கி காமிக்ஸ் இதழ்களை படித்து வருகிறோம் பலரும்..இதில் ஆச்சர்யமான விசயம் என்னவெனில் சுமாராக தோன்றியதாக இங்கே பதிவிட்ட இதழ்கள் கூட இப்பொழுது படிக்கும் பொழுது மிக சிறப்பாக இருக்கிறது சார்..உதாரணமாக லக்கி ஆண்டுமலரில் வெளிவந்த பாரீஸில் ஒரு கெளபாய் நான் உட்பட சிலர் சுமார் தான் என விமர்சித்து இருந்தோம்..ஆனால் இப்பொழுது மிக நன்றாக ரசிக்க முடிந்தது சார...அதே போல டெக்ஸ்ன் ஒரு தலைவன் ஒரு சகாப்தம் ..இன்று இதனை படித்த பொழுது அதுவும் செமயாக இருந்தது ..
இப்பொழுது தான் புரிகிறது குறை கதையிலோ ,இதழிலோ இல்லை..நாம் படிக்கும் சூழலும் ,அப்பொழுதைய மன ஓட்டத்தையும் பொறுத்தே அமைகிறது போலும்.
இந்த கொரானா காலத்தில் இதுவரை மீண்டும் படித்த " மறுபடிப்பு " கதைகள்...
1...தோர்கல் இதுவரை வந்த மொத்த தொகுப்புகளும்..
2..ஷெல்டன் இதுவரை வந்த அனைத்து கதைகளும்..
3.நெவர் பிவோர் ஸ்பெஷல்..
4. .நில் கவனி வேட்டையாடு
5.தி லக்கி ஆண்டுமலர்..(இரு கதைகளும்)
இதில் குறிப்பிட வேண்டியது " பாரிஸில் ஒரு கெளபாய் " முதன்முறை படித்த பொழுது சுமாராக தோன்றியது போல் ஓர் எண்ணம்...ஆனால் இப்பொழுது மீண்டும் பொறுமையாக இப்பொழுது படிக்கும் பொழுது மிக நன்றாக காணப்பட்டது ( எனில் குறை கதையில் அல்ல போல..)
6.ஒரு ஷெரீப்ன் சாஸணம்
7.எதிர்காலம் எனதே
8.நிலவொளியில் ஒரு நரபலி
9. லயன் கம்பேக் ஸ்பெஷல்..
10. டபுள் த்ரில் ஸ்பெஷல்..
11..கடற்குதிரையின் முத்திரை..
12. வில்லனுக்கொரு வேலி
13..ஒரு தலைவன் ,ஒரு சகாப்தம்.
மற்றும் கொஞ்சம் மறந்து போன இதழ்கள்...
என காமிக்ஸால் பாரத்தை மறந்து கொண்டு இருக்கிறோம் சார்..நாங்களாவது காமிக்ஸ் தேசத்தில் இருந்து விலகி செல்வதாவது...!?
இந்தப் பட்டியலுள் எனது favorite : "வில்லனுக்கொரு வேலி" !
Delete// சார்..நாங்களாவது காமிக்ஸ் தேசத்தில் இருந்து விலகி செல்வதாவது...!? // துரத்தி விட்டாலும் திரும்ப வருவோம்
Deleteதலைவர் மறுபடியும் ஃபார்ம் க்கு வந்து விட்டார். தலைவர் வாழ்க வாழ்க
Delete///இந்தப் பட்டியலுள் எனது favorite : "வில்லனுக்கொரு வேலி" !///
Deleteசூப்பர் சார்.. நான் நிறைய முறை படித்த கதைகளின் பட்டியலில் இதுவும் உண்டு..!
மட்டன் மர்டாக்
சுக்கா சாம்
சாப்ஸ் மர்பி
வறுவல் வால்டே
ரோஸ்ட் ராலிங்ஸ்
ஹாஹாஹாஹா... டக்கர் வில்லன்கள்..
அதேபோல அந்ந விவசாயி அவர் மனைவி ஆகியோரும் மறக்க முடியாத கேரக்டர்கள்.
ஒற்றை கண்ணுக்குட்டியை இழுத்துக்கொண்டு கால்நடை பண்ணை அதிபர்னு லக்கி ரகசிய கூட்டத்தில் ஊடுருவும் காமெடி..விவசாயி வீட்டை மாற்றி மாற்றி கட்டுவது.. சைவ சாப்பாட்டை வில்லன் கோஷ்டி ருசிபார்ப்பது .. பாதுகாப்பு வேலி என காமெடி குவியல் நிறைந்ததொரு நிறைவான இதழ்.!
///என காமிக்ஸால் பாரத்தை மறந்து கொண்டு இருக்கிறோம் சார்..நாங்களாவது காமிக்ஸ் தேசத்தில் இருந்து விலகி செல்வதாவது...!///
Deleteநன்னா சொன்னிங்கோ தலீவரே..!
Delete8.நிலவொளியில் ஒரு நரபலி
12. வில்லனுக்கொரு வேலி.
இரண்டும் எனது favourite.
சரியாக சொன்னீர்கள் பரணி.
மட்டன் மர்டாக்
Deleteசுக்கா சாம்
சாப்ஸ் மர்பி
வறுவல் வால்டே
ரோஸ்ட் ராலிங்ஸ்
மேற்படிப் பெயர்களை ஜாலியாய் வைத்த கையோடு பணிகளெல்லாம் முடிந்த பிற்பாடு லைட்டாய் நெருடியது - புலால் புசிக்கா நம் சைவ வாசகர்களுக்கு இது எவ்விதம் ரசிக்குமோவென்று ! அதிர்ஷ்டவசமாய் யாரும் பெரிதாய் முகம் சுளிக்கவில்லை !
இப்பொழுது படிக்கும் பொழுது அந்த பெயர்கள் இன்னும் ரசிக்க வைத்தது சார்..:-)
Deleteமறந்து விட்டேனே பதிவு வரும் சிலமணி நேரங்களுக்கு முன் படித்த கதை..
Deleteகவரிமான்களின் கதை..
அடேங்கப்பா மெக்ஸிகோ மண்ணில் டெக்ஸ் பட்டையை கிளப்புகிறார்...அதுவும் ஓவியம் செம கலக்கல்...நிஜ மெக்ஸிகோவில் சுற்றி வந்த்தான அனுபவம :-)
// பாரிஸில் ஒரு கெளபாய் " முதன்முறை படித்த பொழுது சுமாராக தோன்றியது போல் ஓர் எண்ணம்...ஆனால் இப்பொழுது மீண்டும் பொறுமையாக இப்பொழுது படிக்கும் பொழுது மிக நன்றாக காணப்பட்டது. //
Deleteஉண்மைதான் தலைவரே,நான் படிக்கும்போதும் இதையே உணர்ந்தேன்....
தாங்கள் மட்டுமல்ல ரவி ரவிகண்ணனும் இதையே சொன்னார....:-)
Deleteஆர்ச்சியின் வண்ண இதழ்...
ReplyDeleteநோ...ப்ராப்ளம் சார்...முடியும்பொழுது கொண்டு வாருங்கள்...
கையால் நடப்பு மாதத்திலேயே 5 இதழ்கள் இருந்திடும் ! இது போன்ற மாதங்கள் இன்னும் சில இருந்திடும் நடப்பாண்டில் ! So - "overkill" என்ற விமர்சனங்கள் வேண்டாமே - ப்ளீஸ் ?
ReplyDelete####
சார்..கரும்பு தின்ன கூலியா..உங்களுக்கு சிரமம் இல்லை எனில் ஒரு பத்து புக்கா சேத்தி அனுப்புங்க...:-)
அப்பா...புது புக்கு அட்டைப்படத்தை இங்கே பார்த்து எத்துனை நாட்களாயிற்று...
ReplyDeleteஅட்டைப்படம் செம கலக்கல் சார்..
நானே தீர்ப்புச் சொல்லி விடுகிறேன் - செயலர் வெற்றி பெற்றாரென்று !
ReplyDelete######
செயலரின் திறமை ஏற்கனவே அறிந்தவன் என்ற முறையில் ஏற்கனவே வாழ்த்து சொல்லிவிட்டாலும்...மீண்டும் பலமான வாழ்த்துக்கள் செயலரே...:-)
ஆனாலும் சங்கத்தில் ஒரு சங்கீத பூஷன் இருப்பதால் சங்கத்துக்குப் பெருமையா ? இல்லாங்காட்டி சங்கத்தால் பெருமையா பூஷனாருக்கு ? என்னிக்காச்சும் ஒரு பட்டிமன்றம் நடத்திப்புடலாம் தலீவரே !
Deleteகண்டிப்பாக சார்...சங்கத்துல செயலர் மட்டுமல்ல சார்..இன்னும் நிறைய பேரு இருக்காங்க..:-)
Deleteஇப்போ என்ன சொல்லிப்புட்டேன்னு என்னை பயங்காட்டுறீங்க தலீவரே ?
Deleteஹாஹா்....:-))))
Deleteஆகஸ்ட் மீட்ல நிறைய பாடகர்களை அடையாளம் காட்டுகிறேன் சார்...ஏன் அதல் நானும் ஒருவனாக கூட இருக்கலாம்...:-)
பரமா மரண பயத்த காட்டீட்டாரு தலீவர்.
DeleteRed alert EBF.
Deleteபரமா மரண பயத்த காட்டீட்டாரு தலீவர்
Delete*****
Red alert EBF.
******
ஹாஹாஹா...:-)))
அனைவருக்கும் வணக்கங்கள்.
ReplyDeleteஇனிய இரவு வணக்கங்கள் நண்பரே...:-)
Deleteஉங்களது task : இதனை தமிழில் அழகாய் மொழிபெயர்த்துப் பதிவிட வேண்டியதே !
ReplyDelete#######
சார்...என் திறைமையை வெளிக்கொணருமாறு ஒரு போட்டி வையுங்க..சார்..
இந்த பம்பரம் ஆடறது..கோலி குண்டு உருட்டறதுன்னு..:-)
சுகன்யா ரசிகர்னு சொன்னப்பவே கன்பார்ம் ஆயிடுச்சி தலீவரே.. உமக்கு தரையில பம்பரம் விடத்தெரியாதுன்னு..!
Deleteபோட்டி வேற வைக்கோணுமாக்கும்..!
உங்க தூக்க நேரத்துக்கு முன்னேயான பதிவெனும் போது, நீங்க வூடு கட்டியடிக்கும் அழகை all மக்காஸ் பார்த்துக் கொண்டேயுள்ளனர் தலீவரே !
Delete:-)))
Deleteகவலை வேண்டாம் சார்.காலம் மாறும்.மீண்டும் சகஜநிலை திரும்பும். நம்பிக்கையோடு எதிர்கொள்வோம்.
ReplyDelete//"டிஜிட்டல் காமிக்ஸ்" என்பது நமக்குச் சாத்தியமல்ல என்பதால் // எனக்கும் இஷ்டம் இல்லை சார் எப்போதுமே டிஜிட்டல் காமிக்ஸ் உடன் மனசு ஒன்றுவது இல்லை.
ReplyDeleteகரெக்ட் குமார்.
Deleteபுத்தகத்தை கையில் ஏந்தும் சுகம் டிஜிட்டலில் டோட்டலா மிஸ்ஸாயிடும்.!
புத்தகம்தான் எப்பவுமே பெஸ்ட்.
Deleteஉண்மை குமார் சார்..புத்தகத்தில் படிக்கும் சுவையே அலாதியானது..:-)
Delete// எப்போதுமே டிஜிட்டல் காமிக்ஸ் உடன் மனசு ஒன்றுவது இல்லை. //
Deleteசரியா சொன்னிங்க குமார்......
காமிக்ஸ் என்றில்லை. எந்த புத்தகமுமே digital ல் படிப்பதில் ரசிக்க முடியவில்லை. நான் அதை செய்வதும் இல்லை. அதனாலேயே ஜெயமோகன் அவர்களின் (மகாபாரதம்) வெண்முரசு நாவலை online ல் படிக்காமல் புத்தகமாக வெளிவந்ததும் வாங்கி படிக்கிறேன். புது புத்தகத்தின் பக்கங்களை புரட்டும் சுகமே அலாதியானது. இதனால்தான் புரட்சித் தலைவர்," புத்தம் புதிய புத்தகமே, உன்னை புரட்டிப்பார்க்கும் புலவன் நான்" என்று பாடினார். ( ஹி.. ஹி..)
Deleteஎனக்கு வாசிப்பு என்றால் அது புத்தக வடிவில் மட்டுமே! கைகளில் புத்தகங்களை ஏந்தி படிக்கும் அனுபவம் வேறு எதிலும் இல்லை!
Delete// கைகளில் புத்தகங்களை ஏந்தி படிக்கும் அனுபவம் வேறு எதிலும் இல்லை! // உண்மை உண்மை உண்மை.
DeleteEV யாரின் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் நீந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ReplyDelete:-)
Delete// டியூன்கள் மாறிடலாம் தான் ; சுதிகள் மாறிடக்கூடும் தான் ; ஆனால் எல்லோரது பாடல்களின் வரிகளிலும் புதைந்திருக்கக்கூடிய வலிகளில் மட்டும் இந்த நாட்களில் பெரிதாய் மாற்றங்கள் இராதென்பேன் ! //
ReplyDeleteஇன்னிக்கு ராத்திரிக்கும் சாப்பாடு உப்புமா
உமக்கு என்னிக்குமே உப்புமா தான் போய்யா...:-)
Deleteபரணி..இன்னிக்கு Full Form ல இருக்கீங்க போலிருக்கு..
Delete// ஏப்ரலின் இதழ்களை இந்த ஊரடங்கு நீட்டிப்பின் முடிவுரையின் நொடியினில் உங்களிடம் ஒப்படைத்து விடலாமென்று தோன்றுகிறது !! //
ReplyDeleteநல்லது சார்,இயல்பு நிலை திரும்பியவுடன் நிதானமாகவே அனுப்புங்கள் சார்....
நாங்கள் காத்திருக்கிறோம்....
வழிமொழிகிறேன்..:-)
Deleteஏப்ரல் 13 முதல் இத்தாலியில் புத்தகக் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் ! 'தல' துளி பாதிப்புமின்றித் தொடர்ந்து வருகிறார் - இந்தச் சிரம நாட்களுக்கு மத்தியிலும்
ReplyDelete#####
உப்புமா சாப்பிட்ட ஸ்லீப்பர் செல் அவர்களின் கனிவான கவனத்திற்கு்..:-)
பல நாடுகளில் பல புத்தக திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டாலும் நமது ஆகஸ்ட் புத்தக திருவிழா எந்த பாதிப்பும் இன்றி வழக்கம் போல நடைபெற வேண்டும் என இப்பொழுதே வேண்டிக்கொள்கிறேன்...
ReplyDelete// இது போன்ற மாதங்கள் இன்னும் சில இருந்திடும் நடப்பாண்டில் ! So - "overkill" என்ற விமர்சனங்கள் வேண்டாமே - ப்ளீஸ் ? //
ReplyDeleteநீங்க அனுப்புங்க சார்,நாங்க கொண்டாடுகிறோம்......
// பொம்மை புக்' ரேஞ்சுக்கு நமது இன்றைய விலைகளே ஜாஸ்தி எனும் போது, இதற்கு மேலும் விலையினை இந்த நொடியில் உசத்தி, ஒட்டகத்தின் முதுகை முறித்த மடமையைச் செய்யத் துணிவில்லை ! //
ReplyDeleteஇதுவும் கடந்து போகும்,சிரமங்களை தாண்டி சாதிப்போம் சார்......
இந்த பேரிடர் சூழ்நிலையில் நிறைய திடுக்கிடும் திருப்பங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது,வருங்காலம் வளமையைத் தரும் என்று நம்புவோமாக,புயலுக்கு பின்னே அமைதி என்பதுதானே இயல்பு........
Delete// இது போன்ற மாதங்கள் இன்னும் சில இருந்திடும் நடப்பாண்டில் ! So - "overkill" என்ற விமர்சனங்கள் வேண்டாமே - ப்ளீஸ் ? //
ReplyDeleteஇங்கே எல்லா மாடுமே காய்ஞ்சு தான் கிடக்கு சார்.. எதுக்கும் கொஞ்சம் பெரிய போராகவே அனுப்பிடுங்க..
🤣🤣🤣🤣
Deleteரம்மி....:-))))
Deleteசெயலாளரே வாழ்த்துக்கள்
ReplyDeleteஆளாளுக்கு ஒரேயொரு முந்தைய இதழையேனும் வாங்கி உங்கள் நண்பர்களுக்கோ ; பள்ளிக்கூட / ஆபீஸ் / அபார்ட்மெண்ட் லைப்ரரிக்கோ பரிசாகத் தந்திடுவது பற்றி யோசித்துப் பாருங்களேன் - ப்ளீஸ் // I bought 4 copies of Archie Irukka Bhayamen" and gifted 3 of them to my sister and my friends sir. I will do more
ReplyDeleteவிஜயன் சார், போட்டியாய் இல்லாவிடினும் ஒரு ஆறுதலுக்காக எழுதுகிறேன். 😊
ReplyDeleteஇந்தப் பூவுலகு இயங்க மறுத்து; விமானங்கள் பறக்க மறுத்து; மகிழுந்துகள் வீதிதனில் நகர மறுத்து; தொடருந்துகள் தண்டவாளங்களைத் தழுவ மறுக்கும் போதெல்லாம் இறந்தகாலம் நினைவினில் வரும்...
பாடசாலைகள் விடைகொடுத்து; இளஞ்சிட்டுக்கள் வீட்டுக்கதவின் நிழலில் மறையும் போதும், மருத்துவப் படையினர் கிருமியெனும் நெருப்புடன் அச்சமின்றி விளையாடும் போதும், கடந்த காலம் நினைவினில் நிழலாடும்...
மொட்டை மாடிகளில் தனிமையில் நின்று பாடும் மாந்தரின் குரல்கள் ஒவ்வொன்றும், மனங்களால் இணைந்து பெருங்கீதமாக வியாபிக்கும் போது வரலாறு நினைவுபடுத்தப்படும்...
மிகையாகச் செய்வதற்கு ஒன்றுமில்லை எனும் போதும், தமது வயோதிபர்களையும்; பாவப்பட்ட; பலவீனமானோரையும் காப்பாற்றப் போராடும் நல்லிதயங்களைக் காணும் போதும், போன காலம் மீட்டப்படும்...
கொடிய நோய்க்கிருமிகள் முற்றிலுமாய் அழிந்து மானிடர் புதுவிடியலைத் தருசிக்கும் போதும்; ஒருவரையொருவர் கட்டியணைத்து, அன்பு முத்தத்தில் புதுவிதி எழுதிடும் போதும் வரலாறு நினைவுபடுத்தப்படும்...
முந்நாட்களில் இருந்ததனை விடவும் கருணையுள்ள மக்களாவோம்...
அட்டகாசம் நண்பரே அருமை. தண்ணிலவன் சும்மா கிழி.
DeleteSuper தண்ணிலவன் அவர்களே. அருமை.
Delete(கொஞ்சம் வசன நடையா இருந்தாலும் புலவன்னு ஒத்துக்கிட்டு இருக்காங்க: தருமி , திருவிளையாடல்.)
கவிதை நடை இல்லாவிட்டாலும், எழுத்துக்களின் வீரியம் அட்டகாசம் தண்ணிலவன்!! பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
Deleteகவிதை நடை இல்லாவிட்டாலும், எழுத்துக்களின் வீரியம் அட்டகாசம் தண்ணிலவன்!! பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
DeleteThis comment has been removed by the author.
Deleteநன்று நண்பரே.......
Deleteவணக்கம்!
ReplyDeleteஎன்னுடைய நிலுவைத்தொகையினை கடந்த மாதமே செலுத்திவிட்டது சற்று நிம்மதியாக உள்ளது சார்...! நிச்சயமா ஒரு bulk order உடன் உங்களை சந்திக்கிறேன் சார்...
ReplyDeleteஅருமை பழனி உங்கள் நற்பணி தொடரவாழ்த்துகிறேன்.
Deleteஅருமை பழனி உங்கள் நற்பணி தொடரவாழ்த்துகிறேன்.
Deleteநன்றி நண்பர்களே....🙏🙏
Deleteதற்போதைய களேபரமான சூழலில் உங்களுடைய இவ்வார்த்தைகள் மிகுந்த ஆறுதலளிப்பவை பழனிவேல்!! உங்கள் களப்பணிக்கு என் வாழ்த்துகள்!!
Deleteஇம்மாத சம்பளம் வந்தவுடன் அடுத்த தவணை சந்தாவுக்கு.....!
Deleteதெய்வமே....இந்த மாசச் சம்பளத்தில் பசங்க ஸ்கூல் பீஸுக்கு ஒரு தொகையை முதலில் எடுத்து வைக்கப் பாருங்க !
Deleteபார்த்திருக்க ஜூன் பிறந்து விடும் !
Deleteஎல்லாம் மேல இருக்கரவன் பாத்துக்குவான் சார்...😊
Deleteசார், டெக்ஸின் அட்டைப்படம் மிகவும் அழகாக உள்ளது. Master Claudio Villa வின் கைவண்ணத்திலமைந்த அட்டைப்படத்தைப் பார்த்தாலே உடனே வாங்கத் தோன்றும். தலைப்பாக உள்ள எழுத்துக்களின் அழகு இன்னும் எடுப்பாக அமைந்துள்ளது.
ReplyDelete121
ReplyDeleteவாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் நண்பர்களே!! போட்டி அதிகமில்லாத சூழலில் வெற்றிவாகை(!) சூடியிருப்பது பெரியதொரு கொண்டாட்டத்தை அளிக்கவில்லை எனினும், அரசவைப் பாடகனாக (தற்காலிகமாகவாவது) இடம்பிடித்திருப்பதில் மகிழ்ச்சியே! (கூடுதலாக ஒரு பன் கிடைக்கப்போவதிலும் ஐயா செம குஷியாக்கும்!)
ReplyDeleteநடுவர்களுக்கு சிரமம் தர விரும்பாமல் தானே தீர்ப்பை அளித்த எடிட்டர் சாருக்கு என் நன்றிகள் பல!!
பல விசயங்களிலும் சிந்திக்க வேண்டிய பதிவாக இருக்கிறது இது! கண்ணுக்குத் தெரியாத கிருமி ஒன்றால் ஒட்டுமொத்த மனித குலமே நிலைகுலைந்து கிடப்பதும், அதன் விளைவாக எல்லா நாடுகளின் பொருளாதாரமும் அதள பாதாளத்திற்குச் சென்று கொண்டிருப்பதும் தொடர் அதிர்ச்சிகளை ஏற்படுத்துகிறது!!
எடிட்டரின் கவலை தோய்ந்த கருத்துக்கள் - சூழ்நிலையின் விபரீதத்தை கொஞ்சமேனும் உணர்த்துகின்றன! இனிவரும் நாட்களிலும் சூழ்நிலைகளின் பொருட்டு எடிட்டர் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்து இக்கஷ்ட காலத்தில் அவருக்கு ஆறுதலாய் இருந்திட உறுதிபூணுவோம் நண்பர்களே!
இதுவும் கடந்து போகும்!! வசந்தகாலம் மீண்டும் வரும்! _/\_
// இனிவரும் நாட்களிலும் சூழ்நிலைகளின் பொருட்டு எடிட்டர் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்து இக்கஷ்ட காலத்தில் அவருக்கு ஆறுதலாய் இருந்திட உறுதிபூணுவோம் நண்பர்களே! //
Deleteகண்டிப்பாக!
எடிட்டர் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்து இக்கஷ்ட காலத்தில் அவருக்கு ஆறுதலாய் இருந்திட உறுதிபூணுவோம் நண்பர்களே!//
Deleteநிச்சயமா நண்பரே .....
இதையும் செஞ்சிடுவோம் ஈவி
Deleteஎன்னுடைய நிபந்தனயற்ற ஆதரவு எடிட்டர் சாருக்கு எப்போதும் உண்டு
Deleteவழிமொழிகிறேன் செயலரே..
Delete// நண்பர் மிதுனனும், நண்பர் மேச்சேரி ஜெயகுமாரும் தலைகாட்டியுள்ளது தவிர்த்து - குருவும், சிஷ்யரும் மட்டுமே செவிகளை மிரட்டியுள்ளனர் ! இதில் டூயட் வேறு !!! இந்த இசைமழையில் நனைந்து தீர்ப்புச் சொல்ல நானும் ஜட்ஜ்களை நியமித்து அவர்கள் யாருக்கேனும் ஜல்ப்புப் பிடித்துக் கொண்டால் வம்பாகிப் போய் விடுமென்பதால் நானே தீர்ப்புச் சொல்லி விடுகிறேன் - செயலர் வெற்றி பெற்றாரென்று ! //
ReplyDeleteவாவ் சூப்பர் சார்👌🏼
கானம் பாடி ஆசிரியரை அசத்திட்டீங்க👍🏼
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்🙏🏼
ஈனா வினாண்ணே 🙏🏼💐💐💐
.
ஈவி ஈரோட்டுல ஒரு செமத்தியான கச்சேரி உண்டுபோல வாழ்த்துக்கள் நண்பரே....
ReplyDeleteசூப்பர்! வாழ்த்துக்கள் செயலரே!
ReplyDelete142வது
ReplyDelete@ ALL : வரலாற்றில் இடம்பிடிக்கப் போகும் ஒரு நிகழ்வின் youTube லிங்க் இதோ :
ReplyDeletehttps://youtu.be/TnA_kb0-QvY
உங்க வீட்டு சாய்....எங்க வீட்டு சாய்லாம் கிடையாது - என்சாய்ய்ய்ய் !
வாவ்!! மிதுன்!!!! அருமையா பாடியிருக்கீங்க!! இவ்வளவு நல்லா பாடுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை!! செம!!! (முகம் காட்டிப் பாடியிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்!!)
Deleteஇசைத்துறைக்கு நீங்க ஆத்தியுள்ள சேவையை நினைச்சா கண்ணு வேக்குதுங்க சார். 😭😭😭😭
Deleteபோட்டியில் பங்கு பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
Deleteவெற்றி பெற்ற நண்பர் EV kku வாழ்த்துக்கள்.
இப்போது தான் வீடியோ பார்த்தேன் சார். நண்பர்களின் வீடியோ நன்றாக இருந்தது. அருமை.
போட்டியில் பங்கு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Deleteபோட்டியில் பங்கு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Deleteநான்லாம் ஒரு தினக்கூலிக்காரன் தான் சார்.12 மணி நேரம் உழைத்தால் தான் 530 ரூபாயை கண்ணில் பார்க்க முடியும்.இருந்தாலும் உயிரா பணமா என்று வரும் போது உயிர் தானே முக்கியமாய்த் தெரிகின்றது.பல்லை இறுகக் கடித்துக் கொண்டு தான் இந்த ஊரடங்கு நாட்களை நகற்றி வருகின்றோம்.கொரோனாவும் கடந்து போகும் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றோம்.
ReplyDeleteசேம் ப்ளட்
Deleteஎல்லாமே ஆண்டவனின் சித்தம் ! சங்கடத்தைத் தந்தவர் நிவாரணத்தையும் தராது போக மாட்டார் என்று நம்புவோம் சகோஸ் !
Deleteஉண்மை நண்பரே...இதிவும் கடந்து போகும்...
Deleteவாழ்த்துக்கள் ஈவி
ReplyDelete��������
In todays post you have mentioned about increasing sales of books online. One drag for this is could be your charging the courier charge for each book ordered. Instead the courier charge should be for the cart value which will be much less if we have ordered multiple numbers. Further the courier charge should be waived if the cart value crosses a specific value say Rs 400/- Afterall if it has been sold through a dealer you would have paid the dealer commission which I am sure will not be less than 20%. Why not pass this on to the readers.This action I am sure will definitely boost your online sale.
ReplyDelete@tgopalakrishnan
Deleteநல்லதொரு ஆலோசனை!! cart value 499க்கு மேலிருந்தால் கொரியர் கட்டணத்திலிருந்து விலக்களிக்கலாம்!! ஆன்லைன் சேல்ஸை அதிகரிக்க இது கொஞ்சமேனும் உதவிடும்!
அருமையான ஐடியா நண்பரே
DeleteNever before special வாசித்து வருகிறேன். Largo winch மற்றும் Wayne Shelton கதைகளை படித்து முடித்து விட்டேன. கான்சாஸ் கொடூரன்க்கு முந்தைய பாகமான மரண நகரம் மிசூரி படித்துவருகிறேன். மீள்வாசிப்புக்கு தகுந்த காலகட்டமிது.
ReplyDeleteஉண்மை நண்பரே...இன்று கையில் எடுத்துள்ள இதழ்
Deleteலூட்டி வித் லக்கி
திசைக்கொரு தீருடன் :-)
Quarantine என்பது 28 நாட்களே...ஊரிலிருந்து வந்தது
ReplyDeleteபிப்ரவரி 14 எனில் உங்களுக்கு Quarantine வராது சார்.
தவறுதலாக மார்ச்14 என கொண்டிருந்தாலும் ஏப்ரல் 10 வரை மட்டுமே வரும்.
ஸ்டிக்கரை தாராளமாய் எடுத்து விடலாம் சார்.
இந்நேரம் Quarantine லிஸ்ட்டில் இருந்து உங்கள் பெயர் எடுத்திருப்பார்கள் சார்.
ஸ்டிக்கரை வந்து கிழிக்க மறந்திருப்பார்கள்.
கடினமான நேரத்திலும் தல டெக்ஸின் அட்டைப்படத்தை பார்த்ததும் மனதிற்கு ஒருவித சந்தோஷத்தை தருகிறது! என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும் அதையும் ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு செய்தால், பிரச்சனையின் தன்மை ஓரளவு காணாமல் போயிடும்! நீங்கள் வழக்கமாக சொல்லும் ஒரு டயலாக் மிஸ்ஸிங் சார். இதுவும் கடந்து போகும்! நிலைமை சீராகி பழையபடி இயல்பு நிலைக்கு எல்லாமே திரும்பும்! வாரந்தோறும் இந்த மாதிரி ஏதாச்சும் ஒரு புதிய அட்டைப்படத்தையும் அதைப்பற்றிய தகவல்களையும் சொல்லுங்கள்! நன்றி
ReplyDelete// நீங்கள் வழக்கமாக சொல்லும் ஒரு டயலாக் மிஸ்ஸிங் சார். இதுவும் கடந்து போகும்! நிலைமை சீராகி பழையபடி இயல்பு நிலைக்கு எல்லாமே திரும்பும்! //
Deleteமிகவும் சரி கலீல்.
ஆசிரியர் கவலை கொள்ள தேவையில்லை. இதுவும் கடந்து போகும்.
This comment has been removed by the author.
ReplyDelete180
ReplyDeleteநினைவுப் பறவை
ReplyDeleteபாதைகள் மறந்த இயந்திரப்பறவைகள்
பயணங்கள் துறந்த வாகனங்கள்
தூரங்கள் தவிர்த்த புகைவண்டிகள்
பாரங்களாய் நினைவுகளில்....
பள்ளிகள் விடுத்த மழலைகள்
பூட்டிய சுவர்களில் கைதிகள்
தீண்டிடும் தீ என தெரிந்தும்
விரைந்திட்ட மருத்துவம் நினைவுகளில்..
தனித்திருத்தலின் கீதம்
தவமென உணர்ந்த நேரம்
உடலால் பிரிந்து உணர்வால் இணைந்து
உரக்கப் பாடியதும் நினைவுகளில்...
நம்மை உணர்ந்தோம்
நம்மவர்களை காத்தோம்
எதுவும் செய்யாதிருத்தலே எல்லோரையும்
காக்கும் ஆயுதமென அறிந்தோம்...
வீடுகள் திறக்கையில்
வாசல் வருகையில்
அன்பும் ஆதரவும் முத்தமிட்டு அணைக்க
மீண்டும் மலர்ந்தது மானுடம்
முன் எப்போதையும் விட.....
நன்றி
@Partheeban
Deleteஅருமை அருமை அட்டகாசம்!!
This comment has been removed by the author.
Delete""The next request : சற்றே தர்மசங்கடத்தை ஏற்படுத்துவது : உடனே இல்லையென்றாலும், வாய்ப்பு அமையும் போது ஆளாளுக்கு ஒரேயொரு முந்தைய இதழையேனும் வாங்கி உங்கள் நண்பர்களுக்கோ ; பள்ளிக்கூட / ஆபீஸ் / அபார்ட்மெண்ட் லைப்ரரிக்கோ பரிசாகத் தந்திடுவது பற்றி யோசித்துப் பாருங்களேன்""
ReplyDeleteலைப்ரரிக்கோ அல்லது நண்பர்களுக்கோ பரிசாக தர 14 கார்டூன் கதைகளை ஆர்டர் செய்து விட்டேன்...
///14 கார்டூன் கதைகளை ஆர்டர் செய்து விட்டேன்...////
Deleteஅருமை அருமை!! பாராட்டுகள் நண்பரே!!
சிறப்பான செயல்.பாராட்டுக்கள் நண்பரே....
Deleteஅருமை அருமை!! பாராட்டுகள் சண்முகம்!!!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஈரோடு விஜய் பற்றி சில விஷயங்கள்: தமிழ் புத்தாண்டுக்கு முந்தைய தினம் ஒரு whatsup வீடியோ அனுப்பி இதனை கேளுங்கள் என சொன்னார். அது குங்கும சிமிழ் படத்தில் உள்ள நிலவு தூங்கும் நேரம் என்ற பாடல், முதல் சிலவரிகள் மட்டும் கேட்டு விட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல் என சொல்லினேன். அவர் இது அவர் பாடியது என்று சொன்னார், சரி நன்றாக இருக்கிறது என கைதட்டும் படங்கள் பல அனுப்பிவிட்டேன். முதல் சில வரிகள் மட்டும் கேட்ட எனக்கு இவர் சொல்வது உண்மையா என தெரியவில்லை, நம்மை வைத்து காமெடி செய்கிறாரோ என நினைத்தேன்! கடந்த வாரம் முழுவதும் அலுவலக வேலை மற்றும் குடும்பவேலை அதிகமான காரணத்தால் அவர் அனுப்பிய பாடலை முழுமையாக கேட்க சரியான நேரம் அமையவில்லை!
Deleteநேற்றைய புதிய பதிவில் விஜய்க்கு முதல் பரிசு என்ற பின்னர்தான் அவர் எனக்கு அனுப்பிய பாடல் ஞாபகம் வந்தது. நேற்று இரவு அவர் எனக்கு அனுப்பிய பாடலை முழுமையாக கேட்டேன். சும்மா சொல்ல கூடாது, மிகவும் அருமையாக பாடியுள்ளார், மிகவும் ரசித்து பாடியுள்ளார், அருமையான குரல்! வாழ்த்துக்கள் விஜய்! உங்களுடன் பாடிய உங்கள் மகளின் குரல் இனிமை, அதே நேரம் தெளிவானா உச்சரிப்பு மிகப்பெரிய ப்ளஸ்!! எனது வாழ்த்துக்கள் அந்த வளரும் இளம பாடகிக்கு!
இங்கு நீங்கள் போட்டிக்காக அனுப்பிய பாடலை கேட்டேன், awesome, excellent! மிகவும் energetic ஆக பாடியுள்ளீர்கள்! சரியான பாடல் தேர்வு, அற்புதமாக வரிகள் நமது காமிக்ஸ் பற்றி!!
இந்த பாடலின் வீடியோ capturingஐ மட்டும் இன்னும் கொஞ்சம் மெருகேற்றி facebook, youtube மற்றும் வாட்ஸுப்-இல் அனுப்பிவைக்கலாம்! நமது காமிக்ஸ்ஐ விளம்பரபடுத்த சிறந்த பாடல் உங்கள் குரலில்!!
சார் உங்கள கெஞ்ச வைத்த இது போன்ற பதிவுகள் வராம இருக்க நண்பர்கள்தாம் இனி உதவணும் .ஆசியரின் கழுத்தை அறுக்கும் கத்தி
ReplyDeleteபல உண்மையான நண்பர்கள் கைகளில் pdf ,வடிவில் இருப்பது வேதனையான விசயம் . அதை வேண்டிய நண்பர்களுக்குள் தாராளமாய் சுற்றில் விடுவதும் வருத்தபட வேண்டிய விசயம் .
சிரங்கு பிடித்த கை சொறியச் சொல்லும் .ஒரே வழி மனசார இப்பவே அந்த பீத்தகங்கள அழிக்கலாமே . ஆசிரியர் வேதனைய உணர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே .நம்ம தொழிலுக்கு பாதிப்பு வந்தா என்ன செய்வோமோ அதை செய்வோமே..மேலும் இது நமது காமிக்ஸ் அல்லவா ..நம்ம தொழில நாமே கெடுக்க தெரிஞ்சோ தெரியாமலோ நாமே உதவலாமா!
சில நண்பர்கள் புத்தகங்க சிதஞ்சு போனா இது உதவுமேன்னு ஆசைபட்டோ, ஆசை காட்டியதாலோ வைக்கலாம் . ஆசை காட்டுவதே சாத்தானின் வேலைதானே...நம்புங்கள் நல்லதெ நடக்குமென ...
ஒரே சிங்கத்த அழிக்க நாமும் காரணமாக வேண்டாமே...ப்ளீஷ்....don't publish pdf
எங்க ஆளு வந்திட்டார்.. :-)
Deleteஎல தம்பி நானும் பாடுன...அனுப்புனா போகல...
Delete(மனதுக்குள் நல்லவேளை சேகர் தப்பிச்சான்)
Deleteஎனக்கு சொல்லி இருக்கலாமே மக்கா... நான் உதவி இருப்பேன்ல. சரி விடு அடுத்த முறை பார்த்து கொள்ளலாம்.
கடந்த சில வாரங்கள் நடைபெற்ற போட்டிகளில் நான் மிகவும் ரசித்தது இந்த பாடல் போட்டியைத்தான். பங்கு பெற்ற நண்பர்கள் குறைவுதான் என்றாலும் அவர்கள் தேர்தெடுத்த பாடல்கள் மற்றும் அவர்கள் குரல் வளம் அருமை! விஜய் பாட்டை கேட்டவுடன் ஒரு புத்துணர்வு கிடைக்கிறது!
ReplyDeleteமிதுன் பாடிய பாடல் எனது மற்றும் ஒரு விருப்பமான பாடல். நேற்று அந்த பாடலை நான் பாடிக்கொண்டு இருந்த போது, வீட்டில் எனது குரலை கேட்டு கிண்டல் செய்து கொண்டு இருந்தார்கள்.
மேச்சேரி ஜெயக்குமார், அருமை உங்கள் வார்த்தை வரிகள் மற்றும் உங்கள் குரல்!
கண்ணா, உங்கள் குருவிடம் இன்னும் கொஞ்சம் கற்றுகொள்ளுங்கள் அடுத்தமுறை உங்களுக்கு பரிசு கிடைக்க வாய்ப்புகள் அதிகம்!
நண்பர் ஈவிக்கு வாழ்த்துக்கள்...நண்பர்களே எவ்வளவோ கடந்திருப்போம்...எல்லாம் சரியாகி விடும் ...பல போதனைகள சந்தோசத்த ...நம்ம கைல ஏதுமில்லைங்றத கொரனா நாட்கள் புகட்டி இருக்கும்...செந்தூரான் வழி நடத்துவான்...சந்தோசத்த ஃபில்டர் பன்னி சந்தோசமா இருங்க...இந்த பாதிப்பு நமக்கானது மட்டுமல்ல...பொதுவானதால நம்ம பலம் கூடும்...மனித குலம் மீளும்...ஆசிரியரிடமிருந்து உற்ச்சாக பதிவ எதிர்பார்ப்போம்....
ReplyDeleteவிமானங்கள் பறக்க மறந்ததை,
ReplyDeleteவாகனங்கள் தெருக்களில் முடங்கி போனதை,
தொடரிகள் ஓட மறந்ததை,
வையம் நின்று போனதை, வரலாறு நினைவு கூறுமே....
தீயை நோக்கி நடைபோட்ட மருத்துவ பணியாளர்கள்,
பயந்து ஓடி ஒளியவில்லையே,
குழந்தைகள் வீடுகளில் முடங்கி போயினர்,
கல்வி நிலையங்கள் மூடப்பட்டதால், வரலாறு நினைவு கூறுமே...
மாடங்களின் பாதுகாப்பில்,
தனித்திருந்து ஒன்றினைந்து,
வீரமிகு பாடலியற்றி,
மக்கள் பாடி மகிழ்ந்ததை, வரலாறு நினைவு கூறுமே...
எதுவும் செய்யாமல் முடங்கி நின்று,
முதியவர்களையும் பலமில்லாதவர்களையும்,
பாதிக்கப்பட கூடியவர்களை காத்து நிற்க,
மக்கள் போராடியதை, வரலாறு நினைவு கூறுமே...
வரலாறு நினைவு கூறுமே, வைரஸ் விலகி சென்றதை,
வீடுகளின் கதவுகள் திறந்து கொண்டதை,
மக்கள் வெளியில் வந்ததை,
கட்டிபிடித்து குதூகலித்ததை,
மீண்டும் எழுந்து நின்றதை...
முன்பை விட கருனையுடன்,
மீண்டும் எழுந்து நின்றதை,
வரலாறு நினைவு கூறுமே...
ஞாயிறு காலை எழுந்தவுடன் தளத்தில் புதிய பதிவு வந்துள்ளதா என பார்ப்பது அனிச்சை செயல் ஆகி விட்டதால், எழுந்தவுடன் கை தானாகஙே இங்கே வர சொடுக்குது, புக் மார்க்கை! ஆனாக்கா பதிவு நேற்று இரவே வந்துட்டது என்ற எண்ணம் ஒரு கால் நொடி தாமதமாக உதிக்க லேசான ஏமாற்றமானது எழுகிறது.... புதிய பதிவுனா காலைல இருக்கனும் என்ற ஆசை....!!! ஆசை மட்டுமே! புதிய பதிவு எப்போ போடுவீங்க எடிட்டர் சார்.
ReplyDeleteஇன்று மாலையில் உ.ப வர வாய்ப்புகள் அதிகம் :-)
Delete