நண்பர்களே,
வணக்கம். கொரோனா வைரசுக்குத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க முனையும் ஆய்வாளர்கள் கூட இத்தனை பரபரப்பாய் பணியாற்றிட வாய்ப்பில்லை என்பேன் ! இரு வேறு கண்டங்களில் அமர்ந்திருந்தாலும், விடிகாலையில் காத்திருக்கக்கூடிய பெரும் கண்டத்திலிருந்து நம்மையெல்லாம் காத்திடும் பொருட்டு ஜட்ஜார்கள் அவதி அவதியாய்த் தங்களின் தீர்ப்பினை அனுப்பியுள்ளமைக்கு இந்த காமிக்ஸ் சமுதாயமே கடமைப்பட்டுள்ளது என்பேன் ! கும்புட்டுகிறோம்ங்கண்ணா !!
முதன்முறையாக 2 ஜட்ஜ் கொண்ட பெஞ்ச் தீர்ப்பில் ஒரு split verdict ; அதாவது ஒன்றுக்கொன்று மாறுபட்ட தீர்ப்பு ! ஆகையால் மேற்முறையீட்டுக்கு அந்த இரும்பு மனுஷன் கவிதையாலேயே பெட்டிஷன் போட முனையும் முன்பாகவே வழக்குக்குத் தீர்ப்புச் சொல்லி, தள்ளுபடியும் செய்யவிருக்கிறேன் !!
------------------------------------------------------------------------------------------------------------
இதோ - டெக்சாஸ்காரவுகளின் தீர்ப்பு :
நண்பர் பிளைசி பாபு அனுப்பிய கீழ் கண்ட கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சந்தா பரிசுக்குரிய கவிதையாக இதைக் கருதுகிறேன்.
அமைதியாய் இரு ; ஆகக்கூடியது அதுவே!
இல்லத்தில் இரு; ஈனமாய் வதந்தி பரப்பாதே!
உறவுகளோடு பேசு; ஊர் சுற்றாதே!
எண்ணம் போல் புசி; ஏழைக்கும் கொடு!
ஐயமின்றி நம்பு;தூய்மையே நன்மை என!
ஒன்றுபட்டு ஓய்வெடு;ஔடதம் அறியும் வரை!
ஸ்டீல் க்ளா அடித்த லூட்டிகளுக்காக என்னுடைய அன்புப் பரிசாக அவருக்கு ஆகஸ்ட் சிறப்பிதழ்களை நான் வழங்கி விடுகிறேன்.
வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றிகள் சார்.
Thanks,
Mahendran
------------------------------------------------------------------------------------------------------------
And இது பாரிஸ்காரவுகளின் தீர்ப்பு :
எடிட்டர் சார்,
இரண்டு பதிவில் உள்ள அனைத்து கவிதை (?)களையும் படித்தப் பிறகு கம்பெனி ரூல்ஸ்சை மீறாமல் இருந்த கவிதைகளில் எனக்குப் பிடித்தது. (மகிஜி Blizybabu கவிதையை தேர்ந்தெடுத்தாகச் சொன்னார்)
நான் தேர்ந்தெடுத்தது இதுதான் :
KiD ஆர்டின் KannaN
செவ்வாயில் நீருண்டா
கண்டுவர சூத்திரம் சொன்னாய்..
ஒற்றை நொடியில் ஊரை அழிக்க ஓராயிரம் ஆயுதங் கண்டாய்..
அணுவைப்பிளந்து ஆயுதங்கொண்டு பகைமிரட்டும் பலங் கண்டாய்..
கண்ணுக்குத் தெரியாத கிருமியொன்று உன்னைப்பார்த்து எள்ளி நகையாடுகிறது இன்று..
இனியாவது உணர்வாயா எது முக்கியமென்று..
இரண்டில் ஒன்றை நீங்கள் முடிவு செய்யுங்கள்.
இரண்டாவதாக தேர்வானதற்கு எனது சார்பில் நீங்கள் அறிவித்த அதே பரிசை கொடுக்க விரும்புகிறேன் !
அன்புடன்
ராட்ஜா
------------------------------------------------------------------------------------------------------------
ஆக 2 நாட்களின் அதகளத்துக்கு ஒரு வழியாய் விடை கண்டு விட்டோம் ! ஜட்ஜ்களின் தீர்ப்புகளில் எது உசத்தி ; எது குறைச்சல் என்ற தேடலைச் செய்திடும் அவசியத்தை எனக்கு வைக்காது - அறிவிக்கப்பட்ட அதே பரிசினை ராட்ஜா இரண்டாவதாய்த் தேர்வாகும் கவிதைக்கும் (!!) வழங்க முன்வந்திருப்பதால் - அதே பெருந்தன்மையோடு 2 கவிதைகளையும் joint winners என்று தீர்மானிக்கிறேன் ! Of course இது சட்டப் புத்தகங்களை புரட்ட வேண்டியதொரு தருணமாயிருப்பின், எனது இந்தத் தீர்மானத்தினில் நெருடல்கள் இருக்கலாம் ! ஆனால் இதுவோ ரசனைசார் விஷயமெனும் போது "JOINT WINNERS " என்பதே இந்த கேசமில்லா நாட்டாமையின் தீர்ப்பு !! ஆக Blizybabu & Kid ஆர்டின் Kannan நமது சபையின் அதிகாரப்பூர்வப் புலவர்களாய்த் தேர்வு செய்யப்படுகிறார்கள் !!
And மகிஜியின் தயாளத்தின் உபயத்தில் இங்கே உருண்டு, புரண்டு ரணகளம் செய்த ஸ்டீலுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கிறது ; இனிமேல் அவர் "கவிஞர் பாணபத்திரர்" என்று அன்போடு அறியப்படுவராக !!
அப்புறம் வரும் காலங்களில் ஜட்ஜ் பொறுப்பேற்க வருவோரின் காதுகளுக்கு மாத்திரமன்றி, பாக்கெட்டுகளுக்கும் சேதாரம் இருக்கும் போலத் தெரிகிறது - இதுவரைக்குமான 2 + 2 ஜட்ஜ்களின் தயாள முன்னுதாரணங்களைக் கொண்டு பார்க்கும் போது !! Thanks a ton all !! எது எப்படியோ - கேப்ஷன் போட்டியின் புண்ணியத்திலும், இந்தக் 'கவித' போட்டியின் புண்ணியத்திலும், சில நாட்களேனும் குறைவான இறுக்கத்தோடு நமக்கு கழிந்திருப்பின் - awesome !! உற்சாகப் பங்கேற்ற நண்பர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய டாங் யூ !!
அப்புறம் வரும் காலங்களில் ஜட்ஜ் பொறுப்பேற்க வருவோரின் காதுகளுக்கு மாத்திரமன்றி, பாக்கெட்டுகளுக்கும் சேதாரம் இருக்கும் போலத் தெரிகிறது - இதுவரைக்குமான 2 + 2 ஜட்ஜ்களின் தயாள முன்னுதாரணங்களைக் கொண்டு பார்க்கும் போது !! Thanks a ton all !! எது எப்படியோ - கேப்ஷன் போட்டியின் புண்ணியத்திலும், இந்தக் 'கவித' போட்டியின் புண்ணியத்திலும், சில நாட்களேனும் குறைவான இறுக்கத்தோடு நமக்கு கழிந்திருப்பின் - awesome !! உற்சாகப் பங்கேற்ற நண்பர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய டாங் யூ !!
ரைட்டு...பஞ்சாயத்து இத்தோடு முற்றுப் பெறுகிறது ! 2 நாட்களாய் நான் கொத்துக் கொத்தாய்ப் பிய்த்துக் கொண்ட கேச இழைகளை மறுக்க ஓட்ட ஏதாச்சும் பெவிக்காலோ ; எர்வாமாட்டினோ கிடைக்குதா ? என்று கண்டறிய Zaroff அண்ணாச்சிக்கு போன் அடித்த கையோடு அமேசானுக்குப் புறப்படுகிறேன் ! அடுத்த ஆறு மாசம் கழிச்சு வரேனுங்கோ ! இப்போதைக்கு டாட்டா....பை..பை...காலையிலே காத்திருக்கும் கச்சேரிக்கு இப்போதே முன்வரிசையில் இடம் போட்றவங்கோ போட்டுக்கலாம் !
P.S : அடுத்த ஞாயிறு ஆடலோடு - பாடல் போட்டி !! ரெடியாகிக்கோங்க !! கைலாஸாவிலேர்ந்தாச்சும் போட்டியை நடத்திப்புடுவேன் ! அமேசானிலேர்ந்து பக்கம் தானாம் !
ஹைய்யா! 'மீ த லாஸ்ட்டு' !!
ReplyDelete1வது...!
ReplyDeleteலாஸ்டுக்கு பக்கம்!
Deleteஐ!
ReplyDeleteவெற்றிவாகை சூடிய நண்பர்கள்
ReplyDeleteபிளைசி பாபு
கிட்ஆர்டின் கண்ணன்
ஸ்டீல்
ஆகியோருக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!!
சிறப்பான தீர்ப்பு ஜட்ஜ் ஐயாக்களே!!
கும்புடுற சாமி
Deleteவெற்றி பெற்றோர்க்கு பாராட்டுகள்!!!
ReplyDeleteபங்கெடுத்தோர்க்கும் பாராட்டுகள்!!!!
நடுவர்களுக்கு நன்றி
ReplyDeleteBlizybabu & Kid ஆர்டின் Kannan @ வாழ்த்துக்கள் நண்பர்களே!
ReplyDeleteஏலே பொன்ராசு வாழ்த்துக்கள்லே மக்கா!!
நன்றில
Deleteஆர்வமுடன் பங்கெடுத்த நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்!!!!
ReplyDeleteசிறப்பான தீர்ப்பு ஜட்ஜ் ஐயாக்களே!!
ReplyDeleteசூப்பர்! வாழ்த்துக்கள் Blizybabu & Kid ஆர்டின் Kannan!
ReplyDeleteஸ்பெஷல் வாழ்த்துக்கள் ஸ்டீல் ! சாதிச்சுட்டாலே ;-)
உங்களால்தாம்ல...நன்றில
Deleteவாழ்த்துகள் தம்பி பாபு & கிட் மாம்ஸ்!💐💐💐💐💐💐💐💐💐
ReplyDeleteமஹி&ராட்ஜா@ பாராட்டுகள்🍫🍫🍫🍫🍫🍫
க்ளா@சின்ன வாழ்த்து💐
கடவுள் வாழ்த்தோ
Delete///விடிகாலையில் காத்திருக்கக்கூடிய பெரும் கண்டத்திலிருந்து நம்மையெல்லாம் காத்திடும் பொருட்டு ஜட்ஜார்கள் அவதி அவதியாய்த் தங்களின் தீர்ப்பினை அனுப்பியுள்ளமைக்கு இந்த காமிக்ஸ் சமுதாயமே கடமைப்பட்டுள்ளது என்பேன் ! கும்புட்டுகிறோம்ங்கண்ணா !!////
ReplyDelete:)))))))))
கண்டங்கத்திரிக்காய் சோறு போல
Deleteகண்டங்கத்தரிக்காய் சோறு போல
Deleteஅருமையான முடிவு... வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅடுத்த போட்டியை எதிர்நோக்கி நான்.
கிட் ஆர்ட்டின். பிளைசி பாபு.ஸ்டீல். மூன்று பேருக்கும் வாழ்த்துக்கள் கலக்கிட்டிங்க நண்பர்களே
ReplyDeleteநீங்கல்லாம் அடம்பிடிச்சதாலதான்...
Deleteஅப்புறம் வரும் காலங்களில் ஜட்ஜ் பொறுப்பேற்க வருவோரின் காதுகளுக்கு மாத்திரமன்றி, பாக்கெட்டுகளுக்கும் சேதாரம் இருக்கும் போலத் தெரிகிறது - இதுவரைக்குமான 2 + 2 ஜட்ஜ்களின் தயாள முன்னுதாரணங்களைக் கொண்டு பார்க்கும் போது !! Thanks a ton judges !!
ReplyDeleteகண்ணன் & பாபு
ReplyDeleteபொன்ராஜ்
சகோதரர்களுக்கு வாழ்த்துகள்..
எது எப்படியோ - கேப்ஷன் போட்டியின் புண்ணியத்திலும், இந்தக் 'கவித' போட்டியின் புண்ணியத்திலும், சில நாட்களேனும் குறைவான இறுக்கத்தோடு நமக்கு கழிந்திருப்பின் - awesome !!
ReplyDeleteஉற்சாகப் பங்கேற்ற நண்பர்கள் அனைவருக்கும் ஒரு பெரிய டாங் யூ !!
Had a great time sir 🙏🙏🙏. Still in Hang over😇😇😇
DeleteSometimes..just sometimes it can be fun to throw norms to the wind sir !
Deleteசார் உங்களால தாங்க இயலும் வரை கவிதை மழை பொழியக் கடமைப்பட்டுள்ளேன்...
Deleteஅதுக்காகத்தான் உங்களுக்கு சிறப்புப் பரிசு. (இனிமே எழுதுவியா?)
Deleteடைப் பன்னுவம்லா
Deleteகண்ணன் ஸ்டீல் மற்றும் பாபு ஆகியோர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும்..!
ReplyDeleteநன்றிகள் நண்பரே
Delete////அடுத்த ஞாயிறு ஆடலோடு - பாடல் போட்டி !!///
ReplyDeleteஆடலோடு பாடலா?!!!
எப்படி நடத்தப்போறீங்களாம் எடிட்டர் சார்? வீடியோ எடுத்து அனுப்பி வைக்கணுமா?!!!!
ஒரு சமூக இடைவெளி விட்டுப்புட்டு அடலாம்ங்கிற கண்டிஷனோட டான்ஸ் வீடியோக்களை அனுப்பிச்சாங்காட்டி நம்ம YouTube சேனலில் போட்டு world லெவெலுக்கு உசத்திட மாட்டோம் ?
Deleteஹைய்யா!! அப்படீன்னா ஹாலிவுட்-பாலிவுட்-கோலிவுட் நடிகைங்க எல்லாருமே என்னோட ஆடல்-பாடலுக்கு லைக் போடப்போறாங்களா சார்!!
Deleteஐயாம் வெரி ஹேப்பி!!
இல்லை ஈவி....யாராவது நடிகையோட ஆடனுமாம்...நா கீர்த்தி சுரேச தேர்வு செய்துட்டேன்...
Deleteஆடலுடன் பாடலை கேட்டால் வரும் வரும் வரும்
ஆசை தரும் கவிதைகள் வரும் வரும்
அவங்க தேர்வு செய்யணுமே!
Deleteஹெல்ப் பன்னுங்க புரட்சியாரே
Deleteதரிகிட தரிகிட தா
ReplyDeleteதித்தித் தரிகிட தா
தகதிமி தா
தகதிமி தா
-இதை கவிதைன்னு நினைச்சுகிட்டு பரிசு கிரிசு கொடுத்துடாதீங்க ஜட்ஜ் ஐயாஸ்!!
இது ஆடல் போட்டிக்கான ப்ராக்டீஸ்!!
ஒத்தையாவும் ஆடலாம் ; சோடியாவும் ஆடலாம் !
DeleteAntha social distancing maintain Panna sollunga sir😁. Pugaichal illa oru akkarai 😉
Delete////ஒத்தையாவும் ஆடலாம் ; சோடியாவும் ஆடலாம் !///
Deleteசார்.. நான் இப்ப இருக்கற சைஸுக்கு தனியா ஆடினாலே கூட்டமா ஆடற மாதிரியான எஃபெக்ட் தான் இருக்கும்!
//Pugaichal illa oru akkarai //
Deleteலைட்டா காதோரம் கொஞ்சமா புகை தெரிஞ்சதோ சார் ?
கண்ணனோட எங்கண்ணன் ஈவியுமா...அடடா அதகளம்
Delete/லைட்டா காதோரம் கொஞ்சமா புகை தெரிஞ்சதோ சார்/ கொஞ்சூண்டு லைட்டா மட்டுமே சார் 😁😁😁
Deleteவாழ்த்துக்கள் நண்பர்களே 💥🔥💥🔥. You guys definitely deserve it. For runners better luck next time 😁😁😁
ReplyDeleteஜிந்தாத்தா ஜிந்தா ஜிந்தா ஜிந்தாத்தாதாதா செயலாளர் போல இதுவும் ஒத்திகையே
ReplyDeleteதாத்தா பாவம் அருமை
Deleteஆடல்னா உதயநிதி ஸ்டாலின்.சசிகுமார்.ராமராஜன். இவர்களைபோல் ஆடலாமா
ReplyDeleteசெயலர் மாதிரிக்கூட ஆடலாமே !
Deleteஹிக்!!
Deleteஉலகத்திலேயே குஞ்சாயி டான்ஸை செயலாளர் மாதிரி ஆட முடியாது ஆசிரியரே
Deleteபாக்யராஜ் என்ன நன்மை செய்தாரோ
Deleteநம்ப முடியாத இன்ப அதிர்ச்சி!
ReplyDeleteஇதுவே எனது முதல் சமூக கவிதை!
இதற்கு பரிசு கிடைத்ததை நம்ப முடியவில்லை. காரணம் இங்கு இடம்பெற்ற சில சிறப்பான கவிதைகள் எனது நம்பிக்கையை சிதைத்து விட்டிருந்தது.
சிலரது கவிதைகள் என்னை தனித்தடத்தில் செல்ல கட்டாயப் படுத்தியது.
பொன்ராஜ் அண்ணன் வேற பயம் காட்டிட்டார்.
படைப்புகளுக்கு கிடைக்கும் பெரிய பரிசே உடனுக்குடன் கிடைக்கும் பாராட்டுகள் தான்.
நன்றி நண்பர்களே!
இதுவும் ஒரு கவிதை மாதிரி தான் இருங்குங்க பாபு!! :)
Deleteநல்ல எழுந்துத்திறமை, நகைச்சுவையுணர்வு, டைமிங் சென்ஸ் இருக்கு உங்ககிட்டே!
தொடர்ந்து கலக்குங்க!
*எழுத்துத் திறமை
Deleteபொன்னுராசு அண்ணாச்சி உங்கள மட்டுமா பயமுறுத்தினார் பாபு ? ஆளாளுக்கு விடியிறதுக்கு முன்னாடியே கமெண்ட் போட்டுப்புட்டு மூட்டை முடிச்சுகளைக் கட்டத் தயாராக இருப்பதைக் கவனிக்கலியா ? நடந்தே ஜார்கணடுக்கு கிளம்புறாங்களாம் !
Deleteநன்றிகள் விஜய் அண்ணா!
Deleteஹா ஹா அந்த பயம் இல்லை விஜயன் அண்ணா! அவரது கவிதைகளில் சில விசயங்கள் என்னை யோசிக்க வைத்தது. மேலும் அவற்றை நான் தனியாக சேமித்து வைத்து விட்டேன்.
Deleteவாழ்த்துக்கள் பாபு சார் !
Deleteஆசிரியரும் வாண்டு மலருக்காக சேமிச்சுட்டாராம்...வாழ்த்துக்கள் நண்பரே
Delete/// மேலும் அவற்றை நான் தனியாக சேமித்து வைத்து விட்டேன்.///
Deleteஅந்த முட்டுச் சந்துல கூட்டிட்டுப்போயி கும்மிட்டாங்க.யப்பா.. என்னா அடி..
42வது
ReplyDeleteவெற்றிவாகை சூடிய நண்பர்கள்
ReplyDeleteபிளைசி பாபு
கிட்ஆர்டின் கண்ணன்
ஸ்டீல்
ஆகியோருக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்!!
சிறப்பான தீர்ப்பு ஜட்ஜ் ஐயாக்களே!!
டைப்பிங் உதவி : டான்ஸ் மாஸ்ட்ரோ, காந்த குரலோன் - ஈ. வி
///டான்ஸ் மாஸ்ட்ரோ, காந்த குரலோன் - ஈ. வி///
Deleteஆஹா!!! நல்ல மனசு கொட்டிக்கிடக்குது உங்களிடம் - கரூர்கார்!
நன்றிகள் கரூராரே...
Delete((பொன்னுராசு அண்ணாச்சி உங்கள மட்டுமா பயமுறுத்தினார் பாபு ? ஆளாளுக்கு விடியிறதுக்கு முன்னாடியே கமெண்ட் போட்டுப்புட்டு மூட்டை முடிச்சுகளைக் கட்டத் தயாராக இருப்பதைக் கவனிக்கலியா ? நடந்தே ஜார்கணடுக்கு கிளம்புறாங்களாம் !)) சின்ன திருத்தம் ஆசிரியரே கைலாசா தீவுக்கே கிளம்பிட்டோம்
ReplyDeleteகவல வேணாம் மருகன் எனகக்காக மயிலனுப்புவார்....உங்களுக்காக உயிர் உள்ள வரை அதாவது என்னுயிர் உள்ளவரை பாடக் கடமைப்பட்டுள்ளேன்
Deleteமறுபடியும் மொதல்லேர்ந்தாஆஆ...
Deleteவெற்றியாளர்கள் பிளைசி பாபு, கிட்ஆரடின் கண்ணன், ஸ்டீல் ஆகிய நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஐட்ஜ் ஐயாக்களுக்கு நன்றிகள்.
ReplyDeleteநன்றி நண்பரே
Delete
ReplyDelete////அடுத்த ஞாயிறு ஆடலோடு - பாடல் போட்டி !!///
Tiktok ஆ இருக்குமோ??
போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாரட்டுக்கள். வெற்றி பெற்ற பாபு மற்றும் கண்ணனுக்கு எனது வாழ்த்துக்கள். சிறப்பு பரிசு பெற்ற நண்பர் பொன் ராசுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமின்னல் வேகத்தில் செயல் பட்ட ஜட்ஜ் இருவருக்கும் என் நன்றிகள் வாழ்த்துக்கள் இன்னும் என்னென்ன உண்டோ அது அத்தனையும்.
ஸ்டீல் எப்போதுமே நான் உங்கள் ரசிகன்.
நன்றி நன்றி நன்றி.
நன்றி நண்பரே ...சூடா ஒரு கவிதை போட்டா தாங்குவீங்களா...தேறிய பின் பாத்துக்குவமா
Deleteநிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, நேர இருந்த பெரும் சேதாரத்தை தடுக்கும் வகையில் மின்னல் வேகத்தில் செயல்பட்ட அந்த இரு ஜுரிகளுக்கும் கண்களில் குற்றாலமாய் வழியும் உவர் நீருடன் மரியாதை நிறைந்த வணக்கங்கள்🙏🙏🙏😁😁😁🤪😋😜
Delete// நன்றி நண்பரே ...சூடா ஒரு கவிதை போட்டா தாங்குவீங்களா...தேறிய பின் பாத்துக்குவமா // இன்னும் ஒரு மாசம் ஆகும் அதுக்கு அப்புறம் போட்டு தாக்குங்க
Deleteஆஹா ! ஒரு பெரிய புயல் அடிச்சு ஒஞ்ச மாதிரி இல்ல ;-)
ReplyDeleteஎன்னதான் நாம எல்லாம் கலந்துக்கிட்டு சிறப்பித்தாலும்...
ஒரு சாதாரண சாரல் மழையா தூவிட்டு இருந்த கவித மழை.... இப்படி புயலா உருமாறி ரெண்டு நாளா ஊரையே புரட்டி போட்டு பொங்க வச்சதுக்கு முக்கிய காரணம் நம்ம இரும்பு மனிதர் ஸ்டீல்னு சொன்னா யாருமே கோச்சிச்சிக்க மாட்டாங்க !
யாரு என்ன சொன்னாலும் அத காதுலயே வாங்காம, (ஹலோ செயலரே! ஒருவேளை போன போட்டியா மனசுல வச்சுட்டு நெசமாவே அவரு காத கடிச்சு துப்பிட்டீங்களா ;-)) எல்லாத்தையும் ஸ்போர்ட்டிவா, ஜாலியா, பெருந்தன்மையா எடுத்துகிட்டு, தன் பணி கவித பாடி கிடப்பதேனு சொல்லி சரி fun பண்ணிட்டாரு ;-)
எப்படி கடுதாசிக்கு ஒரு தலீவரோ,
அப்படி இனி கவிதக்கு தான் மட்டும்தான்னு...
Direct'ஆ நம்ம காதுகளுக்குளே கோணி ஊசி விட்டு, கொடாய்ந்து நிரூபித்தவர் நம்ம அண்ணன் Poet'u பொன்ராசு மஹான் தான் என்பதை கூறி கொண்டு....
மீண்டும் ஒருமுறை வெற்றி பெற்ற கண்ணருக்கும், blizy பாபு அவர்களுக்கும்,
தேர்வு செய்த மஹிஜி மற்றும் ரட்ஜ அவர்களுக்கும் வாழ்த்துக்களை கூறி கொண்டு...
Next போட்டில மீட் பண்ணுவோம்ல...
ஐ மீன் Poet'u ஜட்ஜ்ஆ ஆகற போட்டில மட்டும் தாம்ல ;-)
ஹஹஹஹஹ...காது இருக்காதுன்னு சொல்லிப் பாருங்க அதில் இரு காது இருக்குமாமா....ஓடத் தேவையில்லை....கவிதய ஆரம்பிக்கவேயில்லை
Delete/காதுகளுக்குளே கோணி ஊசி விட்டு, கொடாய்ந்து/ மிடில 😂😂😂😂😂
Deleteசரவணாரே 👌👌👌👌👌😄😄😄😄😄
DeleteHi..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletePrize வாங்கின கவிதைகள் ஆறுவரிதான் நண்பா
DeleteThis comment has been removed by the author.
Deleteகிட் ப்ளைசி வாழ்த்துக்கள்...
ReplyDeleteமகி ரட்ஜா நன்றி கலந்த வாழ்த்துக்கள்
மகி நன்றிகள்....அப்பரிசை தன்னிகரில்லா டாக்டர் செனாவுக்கு அளிக்க விரும்புகிறேன்...நன்றி நன்றி...நன்றி
ஏலே. நம்ம டாக்டருக்கு எப்ப வேணா குடுத்துக்கலாம்லே. ஆசையா அன்பா குடுக்கறதை வாங்கிக்காமா என்ன இது ?
Deleteநீங்க தாரது எனக்கூதான்....நா தாரது டாக்டருக்கு
Deleteஆசிரியரே புதுப்பதிவொன்ன போடுங்க...ஏதாவது வெளியீட்ட கண்ல காட்டுங்க
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு.....
ReplyDeleteவாழ்த்துகள் கண்னன்.
ReplyDelete🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎍🎍🎍🎍🎍🎍🎍🎍🎍🎍
வாழ்த்துகள் பாபு.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎍🎍🎍🎍🎍🎍🎍🎍🎍🎍
போற போக்கை பார்த்தால் தினம் ஒரு பதிவை போடனும் போல......
ReplyDeleteநாங்க எதிர் பார்ப்பது அதை தானே.
Deleteகிட் இரவிக்கண்ணன் , ஸ்டீல் மற்றும் தம்பி பாபு ஆகியோர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும்..!
ReplyDeleteநன்றிகள் ஃபீனிக்சாரே
Deleteநடுவர்களுக்கும வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும் சக வெற்றியாளர்களுக்கும் பரிசு வழங்கும் கம்பேனிகாரவுகளுக்கும்..
ReplyDeleteநெஞ்சார்ந்த நன்றிகள்..!
பின்குறிப்பு
நான் ஏற்கனவே சந்தாவில் இருப்பதால் (இப்பரிசை மனமாற ஏற்றுக்கொண்டு..)
உற்ற ந(ண்)பர் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு வழங்க விரும்புகிறேன்.!
நல்ல மனம் வாழ்க கண்ணா அருமை அருமை
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவெற்றி பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுக்கள்.கவிதைகள் மிக பிரமாதம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஸ்டீல்! மறுபடியும் மொதல்ல இருந்தா !
Deleteஉம்........Continue.....
சியர்ஸ் ;-)
திருத்தினேன்நண்பா...
Deleteஆசிரியர் ஒரிரு பக்கத்தயோ....ஹாட் லைனயோ கண்ல காட்டலன்னா
ஏப்ரல் மாத புத்தகமே
ReplyDeleteஉன்னைப்புரட்ட துடிக்கும் புலவன் நான்
சிவகாசி பெயர்த்த செந்தமிழே -
உன்னைப்பாட்டில் வடிக்கும் ரசிகன் நான்
கொரானா கொஂண்ட பள்ளியிலே
இன்று வராமல் நின்ற மாணவி நான்
தளத்தில் போடும் தாளத்தைப் படிக்கும்
விஜய புலவன் நாயகி நான்
ஏப்ரல் மாத புத்தகமே
உன்னைப்புரட்டத் துடிக்கும் புலவன் நான்
சிவகாசி பெயர்த்த செந்தமிழே -
உன்னைப்பாட்டில் வடிக்கும் ரசிகன் நான்
அஞ்சு விரல் பட்டாலென்ன
புத்தகத்தை தொட்டாலென்ன
தொட்ட சுகம் ஒன்றா என்ன
கொரனா வந்தா என்ன பன்ன
நோயி வரும் வந்தால் என்ன
வேண்டியமருந்து தந்தால் என்ன
கொத்து மலர் புக்கா என்ன
கொஞ்சும் ரசிகன் வண்டா என்ன
ஏப்ரல் மாத புத்தகமே
உன்னைப்புரட்டத் துடிக்கும் புலவன் நான்
சிவகாசி பெயர்த்த செந்தமிழே -
உன்னைப்பாட்டில் வடிக்கும் ரசிகன் நான்
பதிவிலாவது வந்தால் என்ன
பார்த்துரசித்து கொண்டால் என்ன
கொரனா நோயி என்றால் என்ன
சொர்க்கம் போக வழிதான் என்ன
ஒரு பக்கம் கண்டால் என்ன
தேனெடுத்து உண்டால் என்ன
இன்னும் கொஞ்சம் கேட்டால் என்ன
இன்பம் இன்பம் என்றால் என்ன
ஏப்ரல் மாத புத்தகமே
உன்னைப்புரட்டத் துடிக்கும் புலவன் நான்
சிவகாசி பெயர்த்த செந்தமிழே -
உன்னைப்பாட்டில் வடிக்கும் ரசிகன் நான்
அய்யா.! பொறுங்க.!
Deleteஆசிரியர் ஒன்..டூ..த்ரீ... ஜூட்னு சொல்வாரு. அப்பதான் ஆரம்பிக்கணும்.சரியா.
இப்பவே ஒரு லோடு சோடா குடிச்சாச்சி ஸ்டீல் கொஞ்சம் கேப் விட்டு அடிங்க
Deleteஎனக்கு சோடா
Deleteஇந்த இரண்டு நாளில் எங்க எல்லாத்தையும் சோடா குடிக்க வைச்சிங்களே ஸ்டீல் நாங்கள் எல்லோரும் குடிச்சிசதனால தமிழகமெங்கும் சோடா தட்டுப்பாடு
Deleteவிடுங்க தண்ணிய குடிப்பம்...தண்ணியாச்சும் காட்டலாமே
Deleteவெற்றிெற்ற B.B மற்றும் K.0.k இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteதேர்வு செய்த மகி, ரட்ஜா இருவருக்கும் பாராட்டுக்கள்.
இதற்கு தளம் அமைத்து வாய்ப்பு வழங்கிய ஆசிரியர்க்கு நன்றிகள்.
At last. நாங்கள் பலவிதங்களில் பகடி செய்த போதும், மனம்கோணாத அன்பு நெஞ்சன், நண்பர் ஸ்டீல் அவர்களுக்கு, என் நன்றிகள்.
// நாங்கள் பலவிதங்களில் பகடி செய்த போதும், மனம்கோணாத அன்பு நெஞ்சன், நண்பர் ஸ்டீல் அவர்களுக்கு, என் நன்றிகள். // எல்லாருக்கும் ஸ்டீல் மாதிரி மனசு இருந்தால் பிரச்சினையே இல்லை சார்.
Deleteபிளைசி பாபு
ReplyDeleteகிட் ஆர்டின் கண்ணன் இருவருக்கும் வாழ்த்துகள்.
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றிக்கு உதாரணமான அண்ணன் ஸ்டீலை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.
போட்டியில் கலந்து கொண்டு தளத்தை திக்குமுக்காட வைத்த அனைவருக்கும் பாராட்டுகள்.
கவிதைப் போட்டி என்ற மகா சிந்தனை உதித்த ஆசிரியருக்கு ஒரு மெகா கீரீடம் (மனசார தான்) .
போட்டி மேலும் மேலும் நீண்டு விடாமல் ஒரே இரவில் தீர்ப்பளித்த ஜட்ஜய்யா இருவருக்கும் வணக்கமுங்க.
பாராட்டுக்கள் சின்னவரே
Deleteநண்பர் ஸ்டீலுக்கும், ஏனைய வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துக்கள்... 😊✌
ReplyDeleteஉங்க பெயர் அட்டகாசம் நண்பரே
Deleteநன்றிகள்
வாழ்த்துக்கள் கண்ணன்,பாபு &பொன்ராஜ்
ReplyDelete💐💐💐💐💐💐💐💐
நன்றிகள் காவலரே
Deleteவெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவிஜயன் சார், கடந்த பதிவொன்றில் கதிரவன் கண்டிராக் கணவாய் என்று ஒரு திகில் திரில்லர் வரப்போவதாகச் சொன்னீர்களே. அது அடுத்த ஆண்டுக்குரியதா சார்?
ReplyDeleteநேத்து அடிச்ச புயலுக்கு, இன்னைக்கு அமைதியா இருக்கு.
ReplyDeleteபுயலுக்கு பின் அமைதி.
DeleteCongrats to winners, good selection sir
ReplyDeleteநன்றிகள் பல
ReplyDeleteசார் புத்தம் புதிய பதிவு வேண்டும்நித்தம் அதில் காமிக்ஸ் கொட்ட வேண்டும்
ReplyDeleteகவிதை போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் திரு .மாடஸ்தி ப்ளைசி அவர்களுக்கும் ,திரு .ரவிக்கண்ணர் அவர்களுக்கும்..திரு .ஸ்டீல்க்ளா அவர்களுக்கும் இந்த எளிய கவிஞனின் மனமார்ந்த பாரட்டுதல்களும் ,வாழ்த்துகளும்..:-)
ReplyDeleteதீர்ப்பையும் ,பரிசையும் அள்ளி வழங்கிய நடுவர்கள் திரு .ராட்ஜா அவர்களுக்கும் ,ஷெரீப் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்...
இது எப்போ???
Deleteவாழ்த்துக்கள் நண்பர்களே
நன்றிகள் கவியே
Deleteசார் மழை ஓஞ்ச மாதிரிக்குதே....
ReplyDeleteபுதுசா அட்டகாசமா பதிவ தயார் செய்ங்க...யாரயும் காங்கலயே
எல்லாருக்கும் சுயநினைவு திரும்பவே எப்பிடியும் ரெண்டு மூனு நாள் ஆகும் ஸ்டீல்..
Deleteஸ்டீல் ஆமா ஆமா புது பதிவு
Deleteரம்மி ஹிஹிஹி பழசு எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுமா இல்லையா?
ஆமா... சும்மா ரெண்டு வரில ஒரு புதிய பதிவை போட்டா போதும். புதிதாக தொடங்கலாம். இந்த பதிவுல "வாங்குன " அடிகள் ஞாபகம் வந்து கொண்டே தான் இருக்கும்.
Delete"ஆளாளுக்கு கிறங்கிப் போய்க் கிடக்காங்கன்னு" சொல்லக் கூடப் பயமா இருக்கு - அதையே புடிச்சு தொங்கிப்புட்டு 'என் கவித (!!!) செஞ்ச மாயம்னு' பழையபடிக்கு அஞ்சர பொட்டியை தட்ட ஆரம்பிச்சிடுவீங்கய்யா சாமீ ! அந்த வம்பே வேணாம் !!
Deleteயாமிருக்க பயமேன் நண்பர்களா....
Deleteநமது பிசியான நாட்கள கொரனா கவ.வும்...
கொரனாதனை நம் தள இயக்கம் கவ்வுமே
அல்லாரும் blog quarantine-லே இருக்காங்க ஸ்டீல் ! வெளியே தலையே காட்ட மாட்டாங்களே !!
Deleteசார் பதிவ போடுங்க பாப்பம்
Deleteசார் அடுத்த மாத புத்தகங்கள் தயயாரா
Delete134th
ReplyDeleteஇன்று பிறந்தநாள் காணும் இனிய நண்பர் சேலம் டெக்ஸ் விஜயராகவன் பல்லாண்டு நலமாக வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் STV!!!
Deleteபிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் !
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே
Deleteபிறந்தநாள் வாழ்த்துகள் STV!
DeleteHappy birthday Salem tex sir :)
ReplyDeleteHappy birthday Salem tex Vijay sir.
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் டெக்ஸ் விஜய்.என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஅனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றிகள்!
ReplyDeleteபிறந்தநாள் வாழ்த்துகள் வழங்கிய அன்பு நெஞ்சங்கள்,
ReplyDeleteஅன்பின் எடிட்டர் சார்@,
மரியாதைக்குரிய பொருளர் ஜி@,
இனிய நண்பர்கள்
சத்யா,
க்ளா,
ஈ.வி.,
தண்ணிலவன்,
Parvez &
மூத்த நண்பர் ATR &
மனதிற்குள் வாழ்த்திய அன்பர்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியான நன்றிகள்🙏🙏🙏🙏🙏
Many more happy returns of the day sir.
ReplyDeleteநன்றிகள் பத்து சார்...!!!
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்யா..!
ReplyDeleteஎடிட்டர் சார் மற்றும் நடுவர்கள் மஹி & ரட்ஜா அவர்ளுக்கு..
கவிதைப்போட்டியில் எனக்கு கிடைத்த ஏப்ரல் டூ டிசம்பர் 2020 சந்தா பரிசினை விஜயராகவனுக்கு வழங்குகிறேன்.!
நன்றிகள் பல..!!
சூப்பர் கண்ணன் 👏👏👏👏
Deleteபாராட்டுகள் கிட்!!
Deleteவாழ்த்துகள் TVR!! அழகான பிறந்தநாள் பரிசு!!
அருமை கண்ணா அருமை அருமை உங்கள் நல்ல மனம் வாழ்க.
Deleteநண்பர் சேலம் டெக்ஸ் விஜயராகவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இதை விட ஒரு சிறந்த பரிசு ஒரு காமிக்ஸ் ரசிகருக்கு வேறு என்ன இருக்க முடியும்?
I'm touched :-))))))
//// I'm touched :-)))))) /////
Deleteவிதி மீறல்!! சமூக விலகலை கடை பிடிக்கலைன்னு ஆகறது!
கண்கள் பணிகிறது;
Deleteஇதயம் பொங்குகிறது!
வார்த்தைகள் வரமறுக்கிறது!
44பிறந்த நாள்களில் எனக்கு கிடைத்த உயர்ந்த பரிசு, இதுவே!
மனதிற்கு பிடித்த காமிக்ஸ் நெருக்கமான நண்பர்களிடம் இருந்து கிடைக்கும் போது வரும் ஆனந்தம் அளவிட இயலாதது!
ஒரு ஆண்டு புத்தகங்களையே அன்புபரிசாக வழங்கி நெகிழவைத்து விட்டீக கிட் அங்கிள் மகிழ்ச்சி!!! ♥♥♥♥♥♥
///இதை விட ஒரு சிறந்த பரிசு ஒரு காமிக்ஸ் ரசிகருக்கு வேறு என்ன இருக்க முடியும்????// ஆம் குமார்...!! வேற எதுவும் இருக்க முடியாது!!!
Deleteவாழ்த்துகள் க்கு நன்றிகள் செயலர் & KS!
Delete// விதி மீறல்!! சமூக விலகலை கடை பிடிக்கலைன்னு ஆகறது! // என்னய்யா ஏன்?
Deleteபரிசினை வழங்கிய எடிட்டர் மற்றும் நடுவர் குழுவிற்க்குத்தான் நன்றி தெரிவிக்கவேண்டும்..!
Deleteநான் சும்மா அந்தண்ட வாங்கி இந்தண்ட கொடுத்திருக்கேன்.. அம்புட்டுதானே..!?
அருமை ...வாழ்த்துக்கள் நண்பர்களே
Deleteகுட்டியான வெளிநாட்டு/உள்நாட்டு/உள்ளூர்/பக்கத்துவீட்டு சம்பவங்கள் ஏதேனும் இருப்பின் ஒரு மினி பதிவாச்சும் போட்டுவிடுங்களேன் எடிட்டர் சார்..!!
ReplyDelete* நீங்கள் பார்த்து வியந்த மனிதர்கள்
* நீங்கள் சந்திக்க விரும்பும் மனிதர்கள்
* உங்களை ஆச்சரியப்படுத்திய பெண்மணி
* நீங்கள் ரொம்ப நேரம் சிரித்துக் கிடந்த ஒரு நிகழ்வு
* நீங்கள் செல்ல விரும்பும் நாடு
* இதுவரை நிறைவேறாத உங்கள் லட்சியம்
இப்படி ஏதாவது - அல்லது இவை எல்லாமேவும் & இன்னும் பலவும்!
EV சரியாக சொன்னீர்கள். ரொம்ப வெறுமையாக உள்ளது. அதனை உங்கள் பதிவால் மட்டுமே நிறைவு செய்ய முடியும்.
Deleteஎடிட்டர் சாருக்கு இன்னும் சில பாயிண்ட்ஸ் :
Delete* ஒரு ரம்மியமான மாலைப் பொழுதில் அதிக கூட்டமில்லாத ஒரு காபி ஷாப்பில் சூடாய் ஒரு கப் காபி சாப்பிடபடியே பேசிட நீங்கள் அழைப்பு விடுக்க நினைக்கும் VIP யாராக இருந்திடும்?
* நீங்கள் விடிய விடிய பேசிட விரும்பும் நபர் யார்? (பேச்சு மட்டுமே!)
* இன்னும் 24 மணிநேரத்தில் உலகம் அழிந்துவிடும் என்ற நிலையில் உங்களுக்கு ஒரே ஒரு புத்தகம் மட்டும் மறுவாசிப்புக்கு அனுமதிக்கப்பட்டால் உங்கள் தேர்வு எதுவாக இருந்திடும்?
// நீங்கள் விடிய விடிய பேசிட விரும்பும் நபர் யார்? (பேச்சு மட்டுமே!) // ஹிஹிஹி
Delete// இன்னும் 24 மணிநேரத்தில் உலகம் அழிந்துவிடும் என்ற நிலையில் உங்களுக்கு ஒரே ஒரு புத்தகம் மட்டும் மறுவாசிப்புக்கு அனுமதிக்கப்பட்டால் உங்கள் தேர்வு எதுவாக இருந்திடும்? // கடன் தீர்க்கும் நேரமிது
Delete///* ஒரு ரம்மியமான மாலைப் பொழுதில் அதிக கூட்டமில்லாத ஒரு காபி ஷாப்பில் சூடாய் ஒரு கப் காபி சாப்பிடபடியே பேசிட நீங்கள் அழைப்பு விடுக்க நினைக்கும் VIP யாராக இருந்திடும்?///
Deleteலேடி S என்கிற ஷானியா
///* நீங்கள் விடிய விடிய பேசிட விரும்பும் நபர் யார்? (பேச்சு மட்டுமே!)///
பெட்டி பார்னோவ்ஸ்கி
///* இன்னும் 24 மணிநேரத்தில் உலகம் அழிந்துவிடும் என்ற நிலையில் உங்களுக்கு ஒரே ஒரு புத்தகம் மட்டும் மறுவாசிப்புக்கு அனுமதிக்கப்பட்டால் உங்கள் தேர்வு எதுவாக இருந்திடும்?///
New look special
@கிட்
Deleteஎதிர்பார்த்ததுதான்!! ஆனால் அடைப்புக்குறிக்குள் நான் சொன்னதைப் பற்றியெல்லாம் அதிகம் கவலைப்பட மாட்டீர்களென்று எனக்குத் தெரியும்!
Delete* ஒரு ரம்மியமான மாலைப் பொழுதில் ////அதிக கூட்டமில்லாத ஒரு காபி ஷாப்பில் சூடாய் ஒரு கப் காபி சாப்பிடபடியே பேசிட நீங்கள் அழைப்பு விடுக்க நினைக்கும் VIP யாராக இருந்திடும்?//
அழைப்பு விடுத்தால் "வர்றேன்" னு சொல்ற யாரா இருந்தாலும்...
//* நீங்கள் விடிய விடிய பேசிட விரும்பும் நபர் யார்? (பேச்சு மட்டுமே)//
காதே கேட்காத யாரா இருந்தாலும்..( பின்ன? விடிய விடிய சாரே பேசிட்டு இருந்தா)
///* இன்னும் 24 மணிநேரத்தில் உலகம் அழிந்துவிடும் என்ற நிலையில் உங்களுக்கு ஒரே ஒரு புத்தகம் மட்டும் மறுவாசிப்புக்கு அனுமதிக்கப்பட்டால் உங்கள் தேர்வு எதுவாக இருந்திடும்?///
ஸ்டீல் க்ளாவின் கவிதைகள் தொகுப்பு?
செனாஅனா!
DeleteROFL :))))))))))
///அடைப்புக்குறிக்குள் நான் சொன்னதைப் பற்றியெல்லாம் அதிகம் கவலைப்பட மாட்டீர்களென்று எனக்குத் தெரியும்!///
Deleteபெட்டி க்குத்தான் தமிழ் தெரியாதே..ஹீஹீ..!!
///* இன்னும் 24 மணிநேரத்தில் உலகம் அழிந்துவிடும் என்ற நிலையில் உங்களுக்கு ஒரே ஒரு புத்தகம் மட்டும் மறுவாசிப்புக்கு அனுமதிக்கப்பட்டால் உங்கள் தேர்வு எதுவாக இருந்திடும்?///
Deleteஈ. வி சார், நான் முடிவிலா மூடுபனி வாசிப்பேன். அதில் இறுதி இரண்டு பக்கங்களிலும் அந்தப் பொலிஸ்காரர் தனது மனைவியுடன் இணைந்து கொள்ளப் போகிறேன் என்று அழுவாரே, அதைப்போல ஊழிக்கால நிறைவில் மனிதரனைவரும் தமது அன்புக்குரியவருடன் இணைய வேண்டிக்கொள்வேன்.
ஸ்டீல் கூட கிச்சு கிச்சு தாம்பாளம் ஆடி போர் அடிச்சு போச்சாக்கும் ? இப்போ அடுத்த கிடா வெட்டுக்கு ஆள் தேவைபடுதோ ? ரைட்டு. நாம பாக்காத முட்டுச் சந்தா ? மூத்திரப் பொந்தா ?
Deleteவிசாளக்கிழமை காலையிலே ஏதாச்சும் போட்டு தாக்கிடலாம் !
///இன்னும் 24 மணிநேரத்தில் உலகம் அழிந்துவிடும் என்ற நிலையில் உங்களுக்கு ஒரே ஒரு புத்தகம் மட்டும் மறுவாசிப்புக்கு அனுமதிக்கப்பட்டால் உங்கள் தேர்வு எதுவாக இருந்திடும்?///
Deleteகாமிக்ஸ்னா "நிஜங்களின் நிசப்தம்"
வேற புக்னா ஒரே சாய்ஸ் "மிர்தாதின் புத்தகம்"
Delete///* இன்னும் 24 மணிநேரத்தில் உலகம் அழிந்துவிடும் என்ற நிலையில் உங்களுக்கு ஒரே ஒரு புத்தகம் மட்டும் மறுவாசிப்புக்கு அனுமதிக்கப்பட்டால் உங்கள் தேர்வு எதுவாக இருந்திடும்?///
ஸ்டீல் க்ளாவின் கவிதைகள் தொகுப்பு?
போற உசிரு முன்னாடியே போகட்டும்னுதான் போல
////////* நீங்கள் விடிய விடிய பேசிட விரும்பும் நபர் யார்? (பேச்சு மட்டுமே!)///
Deleteபெட்டி பார்னோவ்ஸ்கி//////
---இந்த பெலிஸிடி, மார்த்தா, ஜூடித், ஐரினாலாம் வேணாமாயா.??
வாயெல்லா நம நமங்குது...கை பரபரக்குதே...கூட்டம் வேற கூடியாச்சு...எழுதிருவமா
Delete
Delete///* இன்னும் 24 மணிநேரத்தில் உலகம் அழிந்துவிடும் என்ற நிலையில் உங்களுக்கு ஒரே ஒரு புத்தகம் மட்டும் மறுவாசிப்புக்கு அனுமதிக்கப்பட்டால் உங்கள் தேர்வு எதுவாக இருந்திடும்?///ஆசிரியருக்கு கவித அனுப்பி பரிசா ஸ்பைடரோட குண்டுபுக்க வாங்கி படிப்பம்ல
// ////////* நீங்கள் விடிய விடிய பேசிட விரும்பும் நபர் யார்? (பேச்சு மட்டுமே!)///
Deleteபெட்டி பார்னோவ்ஸ்கி//////
---இந்த பெலிஸிடி, மார்த்தா, ஜூடித், ஐரினாலாம் வேணாமாயா.?? // அப்போ மார்கோ மார்கோ????
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விஜி.
ReplyDeleteமகிழ்ச்சி ஷெரீப்🙏🙏🙏🙏🙏
Delete///* இன்னும் 24 மணிநேரத்தில் உலகம் அழிந்துவிடும் என்ற நிலையில் உங்களுக்கு ஒரே ஒரு புத்தகம் மட்டும் மறுவாசிப்புக்கு அனுமதிக்கப்பட்டால் உங்கள் தேர்வு எதுவாக இருந்திடும்?///
ReplyDeleteதேவனின் சி.ஐ.டி.சந்துரு.
* இன்னும் 24 மணிநேரத்தில் உலகம் அழிந்துவிடும் என்ற நிலையில் உங்களுக்கு ஒரே ஒரு புத்தகம் மட்டும் மறுவாசிப்புக்கு அனுமதிக்கப்பட்டால் உங்கள் தேர்வு எதுவாக இருந்திடும்?
ReplyDelete"தல"யின் "சர்வமும் நானே"
* ஒரு ரம்மியமான மாலைப் பொழுதில் ////அதிக கூட்டமில்லாத ஒரு காபி ஷாப்பில் சூடாய் ஒரு கப் காபி சாப்பிடபடியே பேசிட நீங்கள் அழைப்பு விடுக்க நினைக்கும் VIP யாராக இருந்திடும்?///
ReplyDeleteஜெயமோகன். 6 வருடங்களாக தினமும் தொடர்ந்து எழுதி வரும் 'வெண்முரசு' நாவல் பற்றி. எப்படி உங்களால் முடிகிறது என்று கேட்கவும், பேசவும்.
செம்ம எனக்கு தெரிந்தே இரண்டு ஜெய மோகன் fans இருக்காங்க எனது தந்தை மற்றும் இந்த தளத்தில் எழுதும் கிரி நாராயணன். நாமும் படிக்க ஆரம்பிக்க வேண்டும்.
Delete///* ஒரு ரம்மியமான மாலைப் பொழுதில் அதிக கூட்டமில்லாத ஒரு காபி ஷாப்பில் சூடாய் ஒரு கப் காபி சாப்பிடபடியே பேசிட நீங்கள் அழைப்பு விடுக்க நினைக்கும் VIP யாராக இருந்திடும்?///
ReplyDeleteஜூலியா!
///* நீங்கள் விடிய விடிய பேசிட விரும்பும் நபர் யார்? (பேச்சு மட்டுமே!)///
ஆக்ஸா!
///* இன்னும் 24 மணிநேரத்தில் உலகம் அழிந்துவிடும் என்ற நிலையில் உங்களுக்கு ஒரே ஒரு புத்தகம் மட்டும் மறுவாசிப்புக்கு அனுமதிக்கப்பட்டால் உங்கள் தேர்வு எதுவாக இருந்திடும்?///
தி லயன் 250!
ReplyDelete//* நீங்கள் விடிய விடிய பேசிட விரும்பும் நபர் யார்? (பேச்சு மட்டுமே)//
யாருமில்லை. பத்து நிமிடம் தொடர்ந்து பேசினால் பொண்டாட்டி கூட போரடிக்கும் இதுல போயி ....
பொண்டாட்டின்னா பத்து நிமிஷமே ரொம்ப ஜாஸ்தி தான்!!
Deleteநான் கேட்டது வீட்டையும் தாண்டி! ;)
நான் ரொம்ப நல்ல பையன். வீட்டை (கோட்டை) தாண்டுவதில்லை. சந்தேகம்னா எங்க வீட்ல கேட்டுப் பாருங்க.
Delete// பொண்டாட்டின்னா பத்து நிமிஷமே ரொம்ப ஜாஸ்தி தான்!! // EV semma semma
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் STV.
ReplyDelete(பெயரை சுருக்கமாக குறிப்பிட்டதை தவறுதலாக புரிந்து கொள்ள வேண்டாம் சகோதரரே.)
தேங்யூ ஸ்ரீ! நண்பர்கள் சுருக்கமாக கூப்பிடும் அழகே தனிதான் சகோ! I like it!
Deleteஇன்று ரத்தப்படலம் இரண்டாம் சுற்று முடிந்தது. 5 பாகங்களும் சூப்பர். காம்பாக்ட் ஆக்ட், அட்வென்சர்ஸ். ப்யூரிட்டான்ஸ் என்று அமெரிக்க சரித்திரத்தில் சுற்றி சுழன்று விறுவிறுப்பாக முடிந்தது. ஆனால் முடிந்த மாதிரி தெரியவில்லை. 2132 மீட்டர் வந்தால் தான் தெரியும். நெக்ஸ்ட் எண்டமூரியின் துளசி தளம் going on.
ReplyDeleteபத்து சார் lockdown மிக சரியாக உங்களுக்கு உபயோகம் ஆகிறது. சூப்பர் சூப்பர்
Deleteஇரண்டாம் சுற்று தனித்தடம்....அத சுற்று மூனு ஷெல்டன் மனைவி பின்னிப் பெடலெடுப்பார்...அதான் ஆசிரியர் வெளியிட சம்மதித்துள்ளார்...அநேகமா அடுத்த மாத ரேடார்ல வரலாம்
Deleteரெண்டாம் சுற்று தனி பாதை...அட்டகாசமா எதிர்பார்ப்ப வாலி மனைவி சிம்மன்ஸ் மேல ஏத்தி போகும்...முதல் சுற்றுல ஒரே இடத்லயும் இரண்டாம் சுற்றுல ஓரிடத்லயும் தல காட்வார்னு நினைவு...ஏக எதிர்பாப்ல கிளம்பிய மூனாம் பாகம் பட்டயக் கிளப்னதாலயே ஆசிரியர் வெளியிட சம்மதிக்றார்...முடியக் கூடாத கதயா வந்துட்டேயிருக்கனும்...அடுத்த மாத ஆசிரியரின் இதழாருக்கும்னு பட்சி சொல்து...
Deleteவாலி வில்லன்னப்ப வந்த அதே அதிர்ச்சி...இரண்டே தடவ இரண்டுலயும் இரண்டுல பிட் சிம்மன்ஸ் தலைகாட்ன அதிர்ச்சி ஏக எதிர்பார்ப்ப வச்சா...மூனு எல்லாத்தயும் விஞ்ச வாய்ப்பதிகம்...அந்தாக்லதான் ஆசிரியரும் இத வெளியிடுகிறார்...அடுத்த மாதம்குது பட்சி...இப முடியவே கூடாது...தேடல் முடிஞ்சா வாழ்க்கைல சுவாரஷ்யம் போயிரும்னு என் குரு பாட்டெழுதிருக்காரே
Deleteஈரோடு விஜய் தூங்கி கிடந்த தளத்தை தட்டி எழுப்பி விட்டீர்கள் அருமை நண்பரே. அப்படி இப்படி பேசி எடிட்டர் சாரிடம் ஸ்பெஷல் பதிவும் வாங்கி விட்டீர் செம்ம செம்ம. செயலர் வாழ்க வாழ்க வாழ்க.
ReplyDeleteசெனா அனா உங்கள் பதில்கள் வேற லெவல் தரையில் உருண்டு புரண்டு சிரிக்கும் படங்கள் நூறு. அதுவும் ஸ்டீல் உடைய கவிதை தொகுப்பு ஹா ஹா ஹா .....
ReplyDeleteஆசிரியர் தயார்னா நானும் தயாரர்
Deleteதாமதமான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...டெக்ஸ்...
ReplyDeleteஇந்த பிறந்த நாளில் இனிய பரிசு கிடைத்தமைக்கும் வாழ்த்துக்கள்...
வழங்கிய நல் நண்பருக்கும் வாழ்த்துக்கள்..
///* ஒரு ரம்மியமான மாலைப் பொழுதில் அதிக கூட்டமில்லாத ஒரு காபி ஷாப்பில் சூடாய் ஒரு கப் காபி சாப்பிடபடியே பேசிட நீங்கள் அழைப்பு விடுக்க நினைக்கும் VIP யாராக இருந்திடும்?/
ReplyDeleteஷெல்டனின் தோழி ஹானஸ்டி..:-)
*****##
//* நீங்கள் விடிய விடிய பேசிட விரும்பும் நபர் யார்? (பேச்சு மட்டுமே)//
சொல்ல வந்தேன் ப்ரேக்கட்ல பாத்தவுன ஒண்ணும் தோணல செயலரே..நல்லா யோசிச்சா சேந்தம்பட்டி குழு ஈரோட்டு ரூமல் விடிய விடிய அவரவர் கற்பனை கதைகளை வாசித்தோமே தூங்காமல்..அப்படி வேண்டுமானால் குழுவோடு விடிய விடிய பேசலாம்..( நணபேன்டா..:-)
///* இன்னும் 24 மணிநேரத்தில் உலகம் அழிந்துவிடும் என்ற நிலையில் உங்களுக்கு ஒரே ஒரு புத்தகம் மட்டும் மறுவாசிப்புக்கு அனுமதிக்கப்பட்டால் உங்கள் தேர்வு எதுவாக இருந்திடும்?///
ReplyDeleteஇரத்த படலம் ...