Powered By Blogger

Sunday, April 05, 2020

விரல் போன போக்கிலே...பதிவு போகலாமா ..?

நண்பர்களே,

வணக்கம். ஜிலோவென்று வீசும் காற்றானது சும்மா இருக்கும் காத்தாடிகளை விசையோடு சுற்றி வரச் செய்யும் போது மின்சாரம் உருவாவதை நாகர்கோவில் ; கன்னியாகுமரி பக்கம் பார்த்திருப்போம் !  G.D நாயுடுவின் சிஷ்யர் எவரேனும், கொஞ்சமே கொஞ்சமாய் மெனெக்கெட்டு, வீட்டுக்கு வீடு நாம் தற்சமயமாய் விட்டுத் தள்ளிக் கொண்டிருக்கும் குறட்டைகளையும், இன்ன பிற ஓசைகளையும் மின்சாரமாக்கிடவொரு வழி மட்டும் கண்டுபிடித்திடும் பட்சத்தில், அடுத்த நூறாண்டுகளுக்கு இங்கே மின்சாரத் தட்டுப்பாடென்ற பேச்சுக்கே இடமிராது என்பேன் ! அதுவும் மொச்சைப் பயிற்றுக் குழம்புகளும் ; தட்டான்பயிற்றுக் குழம்புகளும் சமைக்கப்படும் இல்லங்களுக்கு அருகாமையிலேயே மின்சாரத்தைத் தேக்கிப் பிடிக்கவொரு grid போட வேண்டிவந்தாலும் ஆச்சர்யப்பட மாட்டேன் ! ஷப்பா ...!! சோம்பிக்கிடப்பது தான் எத்தனை சிக்கலான சமாச்சாரம் ?! Anyways, 'இதுவும் கடந்து போகும்' என்று சொல்லிக் கொண்டே நாட்களை கடத்துவோம் - எல்லாம் நலமாகிடும் தருணத்தில் இருமடங்கு வீரியத்துடன் பணியாற்றுவோமென்ற உறுதியோடு ! 

ரைட்டு... ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக் கொண்டு 34 வருடங்களுக்கு பின்னே பயணம் போய், போன வாரத்தை ஒப்பேற்றியாச்சு ! இந்த வாரம் எதைப் பற்றி எழுதுவதென்று மண்டையைச் சொரிந்து கொண்டிருக்கிறேன் ! சீனியர் எடிட்டரோ, பீரோவுக்குள் அடைந்து கிடந்த அந்நாட்களது சில பல பிராங்கபர்ட் கடுதாசிகளைத் தூசி தட்டி எடுத்து எனக்கு அனுப்பி - 'இதைப் போடு ; அதைப் போடு !' என்ற suggestions சகிதம் அனுப்பியிருந்தார் ! சும்மா சும்மா அதே ரம்பத்தைப் போடுவதன் பலனாய் என் காதிலேயே தக்காளிச் சட்னி வழிந்தோடும் நிலையில், உங்களையும் அதே இம்சைக்கு ஆளாக்க மனசில்லை ! So அந்த மார்க்கம் நஹி இப்போதைக்காவது ! ஏப்ரலின் இதழ்களைப் பற்றி வழக்கம் போல முன்னோட்டம் ; பின்னோட்டம் ; சைடோட்டம் என்று எழுதுவோமா ? என்று யோசித்தால் மனம் ஒப்பவில்லை ! 'இறுக்கமே அன்றாடம்' என்றாகிப் போயிருக்கும் நிலையில், சும்மா ஜாலியாய், லைட்டாய் போடக்கூடிய மொக்கைகளே இன்றைய பொழுதிற்கு சுகப்படும் என்றுபட்டது ! So இஷ்டத்துக்கு விரல் போகும் unplugged பதிவிது guys !  

நெட்டுக்குள் புகுந்தால், இந்த ஊரடங்கின் போது படிக்க உருப்படியான டாப் நாவல்கள் ; டாப் இலக்கிய படைப்புகள் இத்யாதி என்ற பட்டியல்களாய்க் கண்ணில் பட்டன ! (நம்ம கண் இருக்கும் சைசில் ஏதும் தப்பாது தான் !!) இந்தச் சமாச்சாரங்களைப் படிக்க நமக்கு பொறுமை லேது எனும் போது, வேறொரு சிந்தனை தோன்றியது !! சும்மா கட்டையைக் கிடத்திக் கொண்டு  'பஜ்ஜி கிடைக்குமா ? பிரெட் ஆம்லெட் கிடைக்குமா ?' என்று ஆத்துக்காரியின் உசிரை வாங்கும் தருணங்களுக்கு மத்தியில் கண்ணுக்குச் சிக்கும் புது காமிக்ஸ்களையெல்லாம் வாசித்தாலென்னவென்று தோன்றியது ! அந்த வாசிப்பில் சிக்கிய சில சமாச்சாரங்கள் காத்திருக்கும் காலங்களில் நமக்கு செமையாய் உபயோகப்படக்கூடும் என்பதில் ஐயமில்லை எனக்கு ! அவை எல்லாமே  2021-லேயே களம் காணுமா ? என்பதை இந்த நொடியில் அறுதியிட்டுச் சொல்லத் தெரியவில்லை எனக்கு ! இப்படி வைத்துக் கொள்வோமே - நடப்பாண்டின் அட்டவணையின் இதழ்களை நடப்பாண்டிலேயே பூர்த்தி செய்யும் யோகத்தை பெரும் தேவன் அருளினால், நான் தற்போதைக்குக் கும்மியடித்து வரும் இந்தப் புதுச் சரக்கானது  2021-ல் தமிழ் கரையோரங்களில் நிச்சயமாய் ஒதுங்கிடும் !

வாசிப்பு 1:

செக்கு மாட்டை எங்கே அவிழ்த்து விட்டாலும் அது அந்த வட்டத்தை நாடியே வருமாம் ; அதே கதை தான் இங்கேயும்  ! 'வித்தியாசமாய்த் தேடணும்டோய் !' என்று முனைப்பாய்த் தேடி,  உருட்டித் திரிந்தால், சித்தே நேரத்தில் அந்த கௌபாய் உலகுக்குள்ளேயே என்னையும் அறியாது ஐக்கியமாகி நிற்பதே நிகழ்கிறது ! ஆனால் இம்முறையோ சின்ன மாற்றம் !! இதுவரையிலும் நான் புகுந்து குடைந்து வந்துள்ள சாகசங்கள் அனைத்துமே one shots !! And அவை சகலமுமே 90 to 130 பக்கங்களுக்குள்ளான கதைகள் ! So ஒரு அதிகாரியையோ ; பிகிலூதும் கண்ணனையோ ; சத்தமின்றி சங்கறுப்பவரையோ தேடாதும் கௌபாய் உலகுக்குள் உலாற்றுவதில் உங்களுக்கு  no ஆட்சேபணை எனும் பட்சத்தில், குறைந்த பட்சம் அரை டஜன் டிக்குகள் போட்டு விடுவேன் எனது கதைக்குறிப்பு டைரியில் !!

அதிலொன்று முழுக்க முழுக்க கௌகேர்ள்களுடன் தடதடக்கும் ஆல்பம் ! மா டால்டன் & கலாமிட்டி ஜேனைத் தாண்டி இதுவரைக்கும் வன்மேற்கில் நாம் dominant பொம்மனாட்டிகளை அவ்வளவாய்ப் பார்த்ததாய் எனக்கு நினைவில்லை ! இந்த ஆல்பத்தை நாம் தேர்வு செய்திடும் பட்சம் பூரிக்கட்டைகளை ஏந்தும் கரங்கள், பிஸ்டல்களையும் பிடிக்கும் லாவகத்தை ரசிக்கலாம் ! இன்னொரு ஆல்பமோ ஆரம்பிக்கும் போதே ஈரக்குலையை நடுங்கச் செய்கிறது - தெறிக்கும் வன்முறையோடு ! இந்தப் பக்கம் 2 குதிரைகள் ; அந்தப் பக்கம் 2 குதிரைகள் ....அவற்றின் நடுவே கைகளும், கால்களும் ஒவ்வொரு குதிரையோடு கட்டப்பட்டுக் கிடக்கும் வெள்ளையன் ! நொடிப்பொழுதில் குதிரைகளில் குந்தியிருக்கும் செவ்விந்தியர்கள் வெவ்வேறு திசைகளில் குதிரைகளை விரட்ட, அந்த ஆசாமி கண நேரத்தில் அக்கக்காய் பிய்ந்து விழுகிறான்பாலைவன மண்ணில் ! தொடரும் பக்கங்களில், "Wild West" என்ற பெயருக்குத் துளி கூட வஞ்சகம் செய்திடா விதத்தில் கதை காட்டுத்தனமாய்ப் பறக்கிறது ! Maybe இது தான் அந்நாட்களின் நிஜ முகமோ - என்னவோ ; இதனைப் படிக்க நமக்கு நிச்சயம் 'தில்' தேவை ! மூன்றாவதான தொடரோ, வன்மேற்கின் நிஜ மனிதர்களைக் கொண்டு மிக மெலிதான கற்பனைக் கலவையோடு உருவாகியுள்ள தொடர் ! இதுவரைக்கும் ஆங்காங்கே நம் (கடிபடா) காதுகளில் விழுந்திருக்கக்கூடிய பெயர்களுக்குரியவர்கள் அனைவரையுமே நிஜத்தில் சந்திக்கவொரு வாய்ப்பு இது ! What say folks ? கீழ்க்கண்ட மூன்றுள் நீங்கள் டிக் அடிப்பதாயின் எவற்றை விலக்குவீர்களோ ?

* முழுக்க கௌகேர்ள் ?
* தெறிக்கும் violence ?
* வன்மேற்கின் நிஜ மனிதர்கள் ?

வாசிப்பு 2 :

கையில் / கண்ணில் சிக்கிய அடுத்த தொகுப்போ - துணிகளோடு தீரா பகை கொண்டிருக்கும் AXA அம்மணியின் SAGA 1 !   முன்னே இருக்கும் கிளாஸை உறுத்துப் பார்த்தபடிக்கே - டீயைக் குடிப்பதா ? வாணாமா ? என்ற ரோசனையில் மூழ்கிக் கிடக்கும் செந்திலைப் போல, இவரது தொடரில் ஏற்கனவே ஒரு கதையை வாங்கி, கையில் வைத்துக் கொண்டு, நான் ரோசித்துக் கொண்டிருக்க, இந்த 196 பக்க ஆக்ஷன் அதிரடி ஆல்பமானது ரொம்பவே குழப்பி விட்டுள்ளது ! மாடஸ்டியின் பெரும்பான்மை சாகசங்களுக்குச் சித்திரம் போட்ட Enric Badia Romero-வின் கைவண்ணம் இங்கும் அட்டகாசம் செய்கிறது ! 'பச்சக் பச்சக்கென்று' மேலாடையைக் கிழித்துக் கொள்வதில் சல்மான் கானுக்கும், ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கும் செம tough தர இந்த பாப்பா தயார் என்பது தெரிந்த விஷயமே !  ஒரு நல்ல டெய்லராய் ஏற்பாடு செய்துவிட்டு, AXA-வை நமது சந்தா D தடத்தில் ஓட்டமெடுக்க வைக்கலாமா ? (இதற்கென நம் நண்பர்களுள் ஒருவர் ஏற்கனவே ஆர்வமும் தெரிவித்து கொஞ்சமாய் மாதிரிகளும் அனுப்பியிருந்தார் - தனது கலைநய டெய்லரிங் திறனுக்கு சாட்சியாக) அல்லது இது நமக்கு சரிப்படாத விஷயமாக பார்த்திடுவீர்களா ? இதனை ராணி காமிக்சில் எவ்விதம் கையாண்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை ; but நம்மளவில் இதனில் பணி செய்வதாயின் how to go about it என்பதில் லைட்டாய்க் குழப்பம் ! 'பட்'டென்று பதில் ப்ளீஸ் !

வாசிப்பு 3 :

படித்த / படம் பார்த்த அடுத்த அல்பமோ ஹிந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளியான PK போன்றதொன்று ! வெளிகிரஹத்திலிருந்து வரும் ஜீவனொன்று இங்குள்ள ஒரு சாமான்ய மனுஷனுடன் நட்பாகிப் போகிறது ! அடிக்கடி வந்து போகும் அந்த வேற்றுலகவாசிக்கு நம் லோகத்தின் கோமாளித்தனங்களை பார்க்கும் போது வியப்போ-வியப்பு ! வாழ்க்கையின் யதார்த்தங்களைக் கதாசிரியர் ஒரு வேறுபட்ட பார்வையில் பார்த்திட முனையும் இந்த முயற்சிக்கு, செம different சித்திர அமைப்பு ! If at all இதுவும் நம் வாசிப்புகளின் அங்கமாகிடுவதில் தப்பில்லை என்று நீங்கள் நினைத்தால், நான் ரெடி !!

வாசிப்பு 4 :

அப்புறம் ஜில் ஜோர்டன் பணியிலானதொரு டிடெக்டிவ் ! கொஞ்சம் ஹியூமர் ; நிறைய ஆக்ஷன் என்று பயணிக்கும் இந்த டிடெக்டிவின் கதைகளில் ஜில்லாரின் அளவுக்கு சுலபத்தனம் கிடையாது ! இந்தப் புது டிடெக்டிவ் கையாள நேரிடும் கேஸ்கள் அனைத்துமே ஜில் ஜோர்டனின் பணிகளை விடவும் சற்றே கூடுதலான லெவல் ! கடும் டிடெக்டிவ் வறட்சிக்கு மத்தியில் இருக்கும் நமக்கு இவர் சுகப்படுவாரா ? அல்லது out & out ஆக்ஷன் நாயகராய் இருக்கா எந்த ஆசாமியையும் நாம் டீ வாங்கி வரக்கூடப் பயன்படுத்த மாட்டோம் என்பீர்களா guys ? I repeat - இவர் சற்றே சீரியஸான ஜில்லார் எனலாம் ; நிச்சயமாய் CID ராபினோ ; ஜேம்ஸ் பாண்டோ கிடையாது ! ஓ.கே. எனும் பட்சத்தில் இவரது தொடரில் கணிசமாகவே கதைகள் உள்ளன ; அடுத்த 10 வருஷங்களுக்கேனும் இவரோடு குப்பை கொட்டலாம் ! What say ?

வாசிப்பு 5 :

முன்னெப்போதோ இது பற்றிப் பேசியுள்ளது நினைவிருக்கிறது தான் ; ஆனால் நமது ரசனைகள் என்பது தினப்படிக்கான  கொரோனா எண்ணிகையினைப் போல முன்னேறிக் கொண்டேயிருக்கும் ஒரு  fluid சமாச்சாரமாச்சே ?! So 'அது நேற்றைக்கு ; இது இன்றைக்கு !' என்று நீங்கள் சொல்லிடும் வாய்ப்புகள் இருந்திடக்கூடுமென்ற நம்பிக்கையில் இந்தக் கேள்வியினை மறுக்கா முன்வைக்கிறேன் ! ZOMBIE !!! மிருதன் ! ("லட்சுமி மேனன்" என்ற பெயரையும் சேர்த்து உச்சரித்தால் சிலபல "வாலிப" உள்ளங்களில், ஒரு ரசாயன மாற்றத்துடன், பிரகாச ஒளியுடன் கூடிய நினைவுகூர்தல் நிகழும் என்று நினைக்கிறேன் !!) செத்தும் , அதே உடலில் பிசாசாய் , காட்டேரியாய் வாழ்ந்திடும் இந்த திகில் பார்ட்டிக்களைக் கொண்டு தெறிக்கும் artwork கொண்டொரு நூற்றிச் சில்லரைப் பக்க ஆல்பம் மறுக்கா என் கண்ணில் பட்டது ! அந்த சித்திரங்களும், வர்ணக்கலவைகளும் வேறொரு லெவல் ! இந்தக் கதை பாணியினை நமது கிராபிக் நாவல் தடத்தில் பரிசீலிக்க நீங்கள் தயாரெனில் அடியேனும் ரெடி ! 'ஐயே...வேணாமே இந்தக் கண்றாவி !' என்று நீங்கள் ஓட்டமெடுப்பதாயின், மிருதன்களை அன்னம், தண்ணீரின்றி நமது நெடுஞ்சாலைகளில் நடக்க விட்டு விடலாம் ! இளைப்பாற இடம் தரலாமா ? இல்லாங்காட்டி நடராஜாவா ? Thoughts please ?

இந்த புத்தம்புது வாசிப்புப் படலங்களினூடே வீட்டில் கிடந்த நமது இதழ்களுள் ஒன்றிரண்டைப் புரட்டவும் அவகாசம் கிடைத்தது ! அவற்றுள் ஒன்று சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னே வெளியான "மில்லெனியம் சூப்பர் ஸ்பெஷல்" ! Maybe இதனை ஏதேனுமொரு பதிவில் ஏற்கனவே review செய்திருக்கலாம் தான் ; ஆனால் அது சார்ந்த ஞாபகமோ ; இந்த இதழ் குறித்து பெரிதாய் நினைவுகளோ இல்லாத நிலையினில், புக்கைப் புரட்டும் போது ரொம்பவே சுவாரஸ்யம் எழுந்தது என்னுள் !! உங்களில் எத்தனை பேரிடம் இந்த இதழ் இன்னமும் உள்ளதென்றறிய ஒரு சிறு ஆவல் !! அடுத்த பதிவினில் இந்த இதழையும், வீட்டில் கிடந்த இன்னொரு ஸ்பெஷல் இதழையும் பற்றிய மலரும் நினைவுகளோடு ஆஜராகிடுவேன் !
Before I sign out, ஒரு குட்டியான விஷயம் ! போன வாரம் SMURFS படைப்பாளிகளிடமிருந்து வந்ததொரு மின்னஞ்சலைப் பார்த்த போது, அதனிலிருந்த சித்திரங்கள் கண்ணையும், கருத்தையும் கவர்ந்தன ! And ஏற்கனவே நான் எச்சரித்திருந்த அந்த விஷயம் அந்த நொடியில் நிகழ்ந்தே விட்டது ; Oh yes ...எந்த நொடியும் பீறிட்டுப் புறப்படக்கூடிய கவிஞர் முத்துவிஜயனாரின் "கவிதை வெறி" அதற்கு மேலும்  கூடைக்குள் அடைந்து கிடக்க மறுத்தே விட்டது !  

மதியமே ஒரு மினி கவிதையுடன் (!!) அந்தச் சித்திரங்களை நமது FB பக்கத்தில் பதிவாக்கினேன் ! இப்போது விஷயம் அது தொடர்பானதே :

### கேப்ஷன் எழுதிய களைப்பு தீரும் முன்பாய், உங்களுக்குள் துடித்துக் கொண்டிருக்கும் மதன் கார்க்கிக்களையும், தாமரைகளையும் வெளியே உலவச் செய்ய இதுவொரு சந்தர்ப்பம் !

### ஆறே வரிகளுக்கு மிகுந்திடாது இன்றைய சூழலுக்கு ஏற்ற விதமான 'கவித' சொல்லும் போட்டியிது - உங்களுக்கு !

### எவ்விதத்திலும் , யாரையும் புண்படுத்திடா கவனத்துடன், தற்போதைய நிலவரத்தினைத் தழுவிடும் பாடல்களோடு புலவர்கள் களமிறங்கலாம் !

### இயன்றால் நமது காமிக்ஸ் நாயக / நாயகியரையும் உங்கள் கவிதைகளில் தொட்டுக்கொள்ளலாம் !

### மண்டபத்தில் யாரேனும் எழுதித் தரும் பாடல்களையோ  ; நெட்டிலிருந்து சுடச் சுடச் சுட்ட பாடல்களையோ  நமது பாணபத்திரஓணாண்டிகள் கொணர மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு இந்தப் போட்டி ஆரம்பிக்கிறது !

### இந்தப் போட்டியில் ஒரேயொரு விதிமுறை மாத்திரமே உண்டு : and அது திருச்செந்தூரில் உறையும் வாசகர்கட்கு மாத்திரமே பொருந்தும் : அந்தப் பெருந்தகையினர் உச்ச வரம்பாய் 2 கவிதைகளோடு நிறுத்திக் கொண்டாக வேண்டும் ! அதற்கு மேலெனில் பூமியும், நடுவர்களும் தாக்குப் பிடிப்பது சந்தேகமே !

### And தற்போதைய வழக்கப்படி, செழுமையான காதுகளுடனான 2 ஜட்ஜ்களை நானே தேர்வு செய்து அறிவிப்பேன் - கதவை இறுக்கமாய்த் தாழிட்ட பிற்பாடு ! எங்கேயும் தப்பியோட வழியின்றி, தம் கடைசி ஆசைகளை எங்கேனும் பதிவிட்ட பிற்பாடு, கவிதைகளை ரசித்து ; ருசித்து ; தீர்ப்பைச் சொல்வார்கள் அந்த ஜட்ஜார்கள் !

### வெற்றி பெறும் புலவருக்கு பொன்முடிப்போ ; காணி நிலமோ கிடையாது ; மாறாக ஒரு ஏப்ரல் to டிசம்பர் 2020 சந்தா நம் அன்புடன் உண்டு ! அதனை தாமே பயன்படுத்திக் கொள்ளவும் செய்யலாம் ; யாருக்கேனும் அன்பளிப்பாக்கிடவும் செய்யலாம் ; முன்னெடுத்துச் செல்லவும் செய்யலாம் ! So get cracking please - புலவர்ஸ் !

Bye all ; have a safe sunday !! See you around !

343 comments:

  1. அடேடே ! மறுபடியுமா ? என்னடா இது இதுல மட்டும் first வந்துகிட்டே இருக்க ;-)

    ReplyDelete
  2. படிச்சுட்டு வாரேன்...

    ReplyDelete
  3. மில்லெனியம் ஸ்பெசல்
    இந்த இதழுக்கான விளம்பரத்தை முதலில் கனவே கொல்லாதே டிக் டிரேசியின் இதழில் கண்ட போது துள்ளிக்குதித்தேன் காரணம் இரத்தப்படலம் பாகம் 10 இதில் வருவது. மற்றும் டெக்ஸ்வில்லர்..லக்கி வண்ணத்தில் சிக்பில் வாசக ஓவியர் காணிக்கைராஜ் அவர்களின் கைவண்ணத்தில் ஒரு சிறுகதை..நீதிதேவன் அதாங்க ஜட்ஜ் ட்ரெட் 2000AD அவரது அறிமுகம்...முதலில் படித்தது ஹிஹி இரத்தப்படலம் 10. அடுத்து டெக்ஸ்...பழனி பஸ் ஸ்டான்டில் உள்ள புத்தகக்கடையில் ரூ.25 கொடுத்து வாங்கியது இன்னும் நினைவில் உள்ளது...மெய்யாலுமே மில்லெனியத்தை முழுமையாக அனுபவித்து துவங்க வைத்த இதழ் இது...அந்த டைமில் வந்த பெரிய பட்ஜெட் படம் இதுவே....

    ReplyDelete
    Replies
    1. இப தா எனக்கும்....அப்புறம் நீண்டகாலம் கழித்த கதம்ப மலர்...ஆனா இதில் வந்த டெக்ஸ் பெரிதாய் ஈர்க்கல...புலிகள மட்டுமே அனுப்பி பலிகள கேட்டதாலோ என்னவோ

      Delete
    2. ஓய் க்ளா இது வேற! பலி கேட்கும் புலி -டாப்10ல. இதுல கள்ளநோட்டு கும்பலை தேடி மெக்ஸிகோ போவாங்க டெக்ஸ் & கார்சன். சரியான டாப்க்ளாஸ் கதை!

      Delete
    3. நானும் அது எந்த கதை என்று யோசித்து கொண்டு இருந்தேன் எங்க அண்ணன் புள்ளி விபர புலி வந்துடாரு இல்ல

      Delete
    4. எல்லையில் ஒரு யுத்தம்--னு டெக்ஸ் தனக்கு தானே தேடல்"- போஸ்டர் அடித்துகொண்டு கள்ளநோட்டு மேட்ரிக்ஸ்களை மீட்க போவாரு. நம்ம பாயாச பார்டிக்கு ரொம்பவே பிடித்த கதை இது!

      Delete
  4. இரத்தப்படல பத்தாம் பாகத்தில் எங்க தல ஸ்டண்ட்மேன் ஹெலிக்காப்டரை தாவிப்பிடிக்கும் காட்சி அடடா...ஒரே குறை அட்டைப்படத்தில் இல்லாதது....

    ReplyDelete
  5. //உங்களில் எத்தனை பேரிடம் இந்த இதழ் இன்னமும் உள்ளதென்றறிய ஒரு சிறு ஆவல் !!//

    அடியேனிடம் பத்திரமாக இரண்டு உள்ளது..சார்...

    ReplyDelete
  6. மில்லேனியம் சூப்பர் ஸ்பெசல் இன்னும் உள்ளது

    ReplyDelete
  7. நேற்று வீட்டில் எனது அறையை நோண்டியபோது "மில்லெனியம் சூப்பர் ஸ்பெஷல்" ! கையில் கிடைத்தது (கோ இன்சிடன்ட்!!!) அதன் அளவும் அட்டை ஓவியமும் எனக்கு மிகப் பிடித்தமானவை. உள்ளே வாசர் ஸ்பாட் லைட்! குறிப்பா காணிக்கை ராஜின் கலக்கல் படைப்பு மிகச்சிறப்பு!

    ReplyDelete
  8. வணக்கம் சார்...
    ஆரம்ப காலத்து மாடஸ்டி கதைகளை மொழிப்பெயர்ப்பிலும், கண்ணியமிக்க எடிட்டிங்களிலும் நீங்கள் செய்தது மாடஸ்டி கதைகள் எத்தனை வலிமை மிக்கவை என்பதை காட்டியது...
    ஆனால் axa கதைகளை பொறுத்தவரை ராணி காமிக்ஸ் அவளை ஒரு சுதந்திர பறவையாக காண்பித்து சுதந்திர தின சிறப்பிதழாக ஒரே ஒரு கதையை ஓரளவுக்கு எடிட்டிங் செய்தே வெளியிட்டது... கதை என்ன கதை, சும்மா ஒரு பெண்ணை சுதந்திரம் என்ற பெயரில் உலவ விடுவது அந்த நாடுகளுக்கு வேண்டுமானால் பொருந்தும்...
    எந்த வகையிலும் கதை வலிமையற்ற axa நமக்கு வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து... மற்றப்படிக்கு எல்லாம் உங்கள் விருப்பம்.

    ReplyDelete
    Replies
    1. நீண்ட நாட்களுக்கு பின் உங்களை காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி இரும்புக்கையாரே, உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி...

      Delete
  9. என்னிடமும் இந்த மில்லெனியம் சூப்பர் ஸ்பெஷல் இதழ் உண்டு. பழனி சொன்னது எனக்கும் ஞாபகம் இருக்கிறது. ஸ்டண்ட் மேன் தாவி ஹெலிகாப்டர் பிடிக்கும் காட்சி.

    ReplyDelete
  10. பிறகு மில்லெனியம் ஸ்பெஷல் என்னிடமும் உள்ளது...

    ReplyDelete
  11. வன்மேற்கின் நிஜ மனிதர்களுக்கு ஜே
    Axa உங்கள் இஷ்டம்
    ஏலியன் கதை க்கு ஜே
    Detective கதைக்கும் ஜே ஜே
    Zombies ஒரு முறை முயற்சி செய்யலாம் சார்.

    ReplyDelete
  12. கொளகேர்ள்ஸ் - டபுள் ஓகே- ஈவி இன் விசில் பறக்க போகிறது
    தெறிக்கும் violence இனையும் கொஞ்சம் சுவைப்போமே
    வன்மேற்கின் நிஜமனிதர்கள் - சிறிது பொறுப்போமே

    AXA அம்மணிக்கு துணி தைக்க நீங்கள் ரெடியென்றால் நாங்கள் மறுக்கவா போகிறோம் சார்

    PK போன்றதொரு அல்பம்- செம différent ஆக இருக்கும் - தப்பேயில்லை

    ஜில் ஜோர்டன் பாணியிலான ஆல்பம் - ஒரிண்டு ஆல்பங்கள் சுவைத்து பார்த்து பின் சுகப்படின், தொடரலாம் சார்

    “மிருத்தன்களை” ஒரு முறை வெளியிட்டு பார்ப்போம் - இருப்பினும் மனதுக்குள் ஜெர்க் அடிப்பதை மறுக்க முடியவில்லை

    மில்லேனியம் சூப்பர் ஸபெஷல் - காமிக்ஸ் நண்பர் ஒருவரின் புண்ணியத்தால் என்னிடம் உள்ள பொக்கிஷம் - பல முறை படித்தாலும் மறுபடியும் மறுவாசிப்புக்கு தூண்டும்

    ReplyDelete
  13. Detective என்றதும் ஞாபகம் வருவது ஷெர்லாக் ஹோம்ஸ் தான். இப்போதைய ஷெர்லாக் சீரிஸ் பிபிசி வெளியிடுவது தற்போதைய கால கட்டத்தில் ஷெர்லாக் இருந்தால் எப்படி இருக்கும் என்று. இதை டைட்டன் புக்ஸ் வெளியிட்டு உள்ளது ஆங்கிலத்தில் (மங்கா வாக) முதல் 3 சாகசங்களை. இதனை நமது லயன் காமிக்ஸ் க்கு கொண்டு வர வாய்ப்பு உள்ளதா சார்?

    ReplyDelete
  14. சார்,
    பைக்கோ கிளாசிக் கதைகளை உங்களின் மொழிப்பெயர்ப்பில் படிக்கும் வாய்ப்பு எங்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும், கிடைக்குமா?

    ReplyDelete
  15. தமிழர்களின் வணக்கத்தையும்

    சன்மார்க்க நெறியினையும்

    தனி மனித சுத்ததையும்

    தரணியின் தலையில் சம்மட்டியால் தாக்கி

    பௌன்சரின் வீரியத்துடன் விளக்கிய

    .............................கொரானா.

    அடடே நாங்களும் போட்டிக்கு வருவோம்.
    ஆனால் மேலே நான் எழுதி இருப்பது கவிதை தானா என்று தெரியவில்லையே???

    ReplyDelete
    Replies
    1. ககலக்குற குமாரு :-)

      Delete
    2. நன்றி சத்யா

      கவிஞரே நிஜமாகவே இது கவிதையா? ;)

      Delete
    3. முற்றுப்புள்ளி இல்லாமல் நா எழுதுறது எல்லாம் கவித தான் :-)

      Delete
    4. பார்டா!!!

      KS நிஜமாவே இது நீங்கதானா?!!

      அட்டகாசம் அட்டகாசம்!! அதுவும் இவ்வளவு இன்ஸ்டன்ட்டா!! க்ரேட்!!

      Delete
    5. பரணி சரியாக சொன்னீர்கள்.

      EV இது நானே தான். நன்றிகள்

      Delete
  16. Millennium special தற்போது கைவசம் இல்லை.

    ReplyDelete
  17. கவிதைப் போட்டியா?
    கலந்து கொள்ளலாம்னு தான் தோணுது.

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் எனக்கும் தோன்றியதே அடடே ஆச்சரியக்குறி!!!!!

      Delete
    2. கவிதை சொல்ல வந்த காமிக்ஸ் கவிகளோ???ம்ம்ம்ம்...!!ஆகட்டும்

      Delete
  18. கவிதையா காததூரம்.........

    எழுத மட்டுமல்ல படிக்கவும் சுகப்படாது நமக்கு.

    ReplyDelete
  19. இனிய காலை வணக்கம்.

    ReplyDelete
  20. ####* முழுக்க கௌகேர்ள் ?
    * தெறிக்கும் violence ?#####

    இரண்டுமே வெளியிடலாம் சார் ..


    ###ஒரு நல்ல டெய்லராய் ஏற்பாடு செய்துவிட்டு, AXA-வை நமது சந்தா D தடத்தில் ஓட்டமெடுக்க வைக்கலாமா ?###

    *வானத்தை போல* சட்டை மாதிரி தைக்காத டைலர் ன்னா ஒகே சார்..


    03 - நோ கமெண்ட்ஸ்..
    பெரும்பான்மை எதுவோ அதற்கு எனது ஆதரவு..



    ####ஜில் ஜோர்டன் பணியிலானதொரு டிடெக்டிவ் ####

    டிடெக்டிவ் ஸ்டோரி எனக்கு மிக பிடித்த ஜானர்..
    அதிலும் ஷெர்லாக் ஹோம்ஸ் ன் கதை வரிசையில் *டாக்டர் வாட்ஸன்* வந்திருக்கிறது கதை படித்து மீளவே எனக்கு இரு நாட்கள் ஆனது..
    அதை உங்கள் மொழி பெயர்ப்பில் படிக்க ஆவல் வெளியிடுங்கள் சார் ப்ளீஸ்.


    ****ZOMBIE***
    கதைக்களம் ஒரே மாதிரியான டெம்ப்ளேட் ல் போரடிக்கும் அதனால் வேண்டாம் சார்..


    மில்லினியம் ஸ்பெஷல் என்னிடம் உள்ளது சார்..

    ReplyDelete
  21. AXA வின் 196 பக்க ஜாலிக்கோ ஜீம்கானா கதையை லைட்டா பட்டி டிங்கரிங் பண்ணிட்டு அடல்ஸ் ஒன்லி 18பிளஸ் என்று போடலாம். அதுவும் கலரில் ஹார்ட் பவுண்டில் போட்டால் செம்மையாக இருக்கும். அப்படியே டெக்ஸ் மெபிஸ்டோ கதைகளுக்கு கொஞ்சம் கருணை காட்டுங்க. மெபிஸ்டோவின் மந்திர மண்டலத்தை கலரில் பார்க்க ஆசையாக உள்ளது. 2021 இல் சாத்திய படுமா ????

    ReplyDelete
  22. கீழ்க்கண்ட மூன்றுள் நீங்கள் டிக் அடிப்பதாயின் எவற்றை விலக்குவீர்களோ ?

    * முழுக்க கௌகேர்ள் ?
    * தெறிக்கும் violence ?
    * வன்மேற்கின் நிஜ மனிதர்கள் ?


    #########


    முதலும் ,இறுதியும்....:-)

    ReplyDelete
  23. AXA

    ****

    கையில் வைத்திருக்கும் அந்த அக்காவை முதலில் கண்ணில் காட்டி விடுங்கள் சார்..பிறகு அவரை ரசீக்கலாமா வேண்டாமா என்பதை தொடரலாமே...!?

    ReplyDelete
  24. வாழ்க்கையின் யதார்த்தங்களைக் கதாசிரியர் ஒரு வேறுபட்ட பார்வையில் பார்த்திட முனையும் இந்த முயற்சிக்கு, செம different சித்திர அமைப்பு !

    ####

    சித்திரங்கள் ரசிக்கும்படி இருப்பின் ஓகே சார்..:-)

    ReplyDelete
  25. டிடெக்டிவ் வறட்சிக்கு மத்தியில் இருக்கும் நமக்கு இவர் சுகப்படுவாரா ?

    ######

    கண்டிப்பாக....:-)

    ReplyDelete
  26. 1. வான்மேற்கின் Violence- Yes.
    2. AXA கொஞ்சம் தள்ளி நில்லும்மா, அம்மணிக்கு உடுப்பு தைக்க பொறுமையும் நஹி நேரமும் நஹி...!? அக்ஸா விற்கு துணிப் பஞ்சம் நமக்கு வேறு கதைக்கா பஞ்சம்.
    3. //வெளிகிரஹத்திலிருந்து வரும் ஜீவனொன்று இங்குள்ள ஒரு சாமான்ய மனுஷனுடன் நட்பாகிப் போகிறது ! அடிக்கடி வந்து போகும் அந்த வேற்றுலகவாசிக்கு நம் லோகத்தின் கோமாளித்தனங்களை பார்க்கும் போது வியப்போ-வியப்பு//

    கதையைப் படித்துவிட்டு நாம கோமாளியாக ஆகாமல் இருந்தால் சரி.
    4. டிடெக்ட்டிவ் - Yes
    5. Zombie - உவ்வே

    கவிதை:
    மனசு லேசாக படிங்க smurf
    துணி வெளுக்க போடுங்க surf அப்புறம்....அப்புறம்....இந்த வார்த்தை தான் வர மாட்டேங்குது..?

    மில்லெனியம் சூப்பர் Spl. Yes கைவசமுள்ளது.
    MH Mohideen

    ReplyDelete
  27. மிருதன்களை அன்னம், தண்ணீரின்றி நமது நெடுஞ்சாலைகளில் நடக்க விட்டு விடலாம் !


    ஆம் சரியான முடிவு சார்..அப்படியே விட்டு விடுங்கள்..:-)

    ReplyDelete
  28. கவிதை....


    என்று இருந்தாலே கண்பாராமல் ஓட்டமெடுப்பவன் என்பதால் ஓட்டமெடுக்கிறேன் இப்பொழுதே...:-)

    ReplyDelete
  29. பார் வேந்தே.. என்னைப் பார் வேந்தே!
    பாட்டுடன் வந்திருக்கும் தருமியின் வணக்கங்கள்!! _/\_

    ReplyDelete
  30. /// மொச்சைப் பயிற்றுக் குழம்புகளும் ; தட்டான்பயிற்றுக் குழம்புகளும் சமைக்கப்படும் இல்லங்களுக்கு அருகாமையிலேயே மின்சாரத்தைத் தேக்கிப் பிடிக்கவொரு grid போட வேண்டிவந்தாலும் ஆச்சர்யப்பட மாட்டேன் ///
    அப்படியே மூக்கை தேக்கிப் பிடிக்க ஒரு கர்சீப் grid ப்ளீஸ்.

    ReplyDelete
  31. ஹைய்யா புதிய பதிவு.....

    ReplyDelete
  32. பாரப்பா ...
    பழனியப்பா...
    பட்டணமாம் பட்டணமாம்...

    ஊரப்பா பாரப்பா...
    அமைதியா கெடக்கப்பா....

    ReplyDelete
  33. மில்லெனியம் சூப்பர் ஸ்பெஷல் என்னிடம் உள்ளது. அதில் உள்ள கதைகள் ஞாபகம் இல்லை. அடுத்த முறை தூத்துக்குடிக்கு செல்லும் போது இந்த புத்தகத்தை மறுவாசிப்பு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  34. மில்லெனியம் special பத்திரமாக உள்ளது சார்.

    Cow girls & AXA வேண்டாம் சார்.
    Zombie உங்கள் choice.
    மற்ற இரண்டு cowboy, pk type story, detective தேவை சார்.

    ReplyDelete
  35. இன்றைய பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியின் தலைப்புச் செய்தி:
    " மாவட்ட எல்லை தடுப்புகளையும், மாநில எல்லை தடுப்புகளையும் தாண்டி சிலர் ஒடினர். காவல்துறையினர் அவர்களை விரட்டியும் பிடிக்க இயலவில்லை. என்ன காரணம் என்பது தெரியவில்லை. தகவலறிந்த வட்டாரத்தில் விசாரித்ததில் காலையில் ஏதோ ஒரு Blogல் ஒரு பதிவு வந்ததாகவும், அது கொரோனாவை விட வீரியம் மிக்கது என்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. "

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. எதையும் சந்தோஷமாக ஏற்று சந்தோஷமாக செய்ய தயாராக உள்ளோம் பத்மநாபன். :-)

      Delete
    2. My comments are for only jolly and humerous. nobody can mistaken me.

      Delete
    3. அப்படி நான் தவறாக எடுக்கவில்லை பத்மநாபன்.

      Delete
  37. அன்று
    கூடி இருந்தால் கோடி நன்மை..

    இன்று
    தனித்திரு தள்ளியிரு‌ சுத்தமாயிரு..

    கூடி வாழலாம் மீண்டும்
    நாளை எனற நம்பிக்கையுடன்.. :)

    ReplyDelete
    Replies
    1. பரணி பின்னிடீங்க

      Delete
    2. நன்றி நண்பர்களே.

      Delete
    3. ஏலே போ போய் இன்னிக்கும் ஆத்துல கால்வாய்ல குளிக்க போ.... மவனே வீட்டுக்குள் இரு வெளியே தலை கிளை தெரிஞ்சது மண்டையில் கொட்டி விடுவேன்.

      Delete
    4. வாவ்!! சிம்ப்ளி சூப்பரப்பு, PfB!!

      Delete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. 1. தெறிக்கும் violence ?- YES .

    2. வன்மேற்கின் நிஜ மனிதர்கள் ? -YES ..

    3. AXA - உங்கள் விருப்பம் sir ..

    4.PK போன்றதொன்று - yes ..

    5. ஜில் ஜோர்டன் பாணியிலானதொரு டிடெக்டிவ் - YES ..

    6. ZOMBIE !!! மிருதன் - ட்ரை பண்ணி பார்க்கலாம் சார் .. once ..

    "மில்லெனியம் சூப்பர் ஸ்பெஷல்" - இருக்கு சார் ..

    ReplyDelete
  40. ஞாயிறு காலை வணக்கம் சார் மற்றும் நண்பர்களே 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  41. தெறிக்கும் violence ?- YES .
    வன்மேற்கின் நிஜ மனிதர்கள் ? -YES ..
    AXA - No
    PK போன்றதொன்று - No
    ஜில் ஜோர்டன் பாணியிலானதொரு டிடெக்டிவ் - ok
    ZOMBIE !!! No No No

    ReplyDelete
  42. // வீட்டுக்கு வீடு நாம் தற்சமயமாய் விட்டுத் தள்ளிக் கொண்டிருக்கும் குறட்டைகளையும், இன்ன பிற ஓசைகளையும் மின்சாரமாக்கிடவொரு வழி மட்டும் கண்டுபிடித்திடும் //


    Innovative idea sir.,:-)

    ReplyDelete
  43. வாசிப்பு 1:
    முழுக்க கௌகேர்ள்
    வன் மேற்கின் நிஜ மனிதர்கள்

    ReplyDelete
    Replies
    1. நமது காமிக்ஸ் மகளிர் நாயகிகள் குறைவு, எனவே கௌகேர்ள்க்கு வாய்ப்பு கொடுக்கலாமே.

      Delete
  44. " இருப்போம்.தனித்து,
    உடலால் சுத்தமாய் ..
    உடமையால் சுத்தமாய் ..
    இல்லையெனில்,
    கொரானா நம்மை,
    துடைத்திடும் மொத்தமாய்.."

    ReplyDelete
    Replies
    1. பத்து சார் சூப்பர்

      Delete
    2. 'சுத்தபத்தமா இல்லேன்னா கொரோனா கொன்னுபிடும்பா'னு எவ்வளவு அழகா சொல்லியிருக்காரு நம்ம பத்து சார்!!

      Delete
  45. வாசிப்பு 2:
    AXA-வை நமது சந்தா Dயில் தேவைப்படும் பட்டி டிங்கரிங் செய்து தாராளமாக களமிறக்குங்கள். சந்தா D. பலரும் வாங்க (பலரை சென்றடைய) ஆரம்பித்தது உள்ள இவர் படங்களில் கொஞ்சம் கவனம் கண்டிப்பாக தேவை.

    ReplyDelete
  46. வாசிப்பு 3: வேண்டாம் சார்.

    ReplyDelete
  47. வாசிப்பு 4: கண்டிப்பாக முயற்சி செய்யலாம் 2021க்கு. டிடெக்டிவ் வறட்சியை இவரால் போக்க முடியும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  48. வாசிப்பு 5: ZOMBIE !! வேண்டாம். மனித நாயகர்கள் மற்றும் நாயகிகளுடன் வரும் கதைகளே சந்தோஷமாக உள்ளது.

    ReplyDelete
  49. // உங்களில் எத்தனை பேரிடம் இந்த இதழ் இன்னமும் உள்ளதென்றறிய ஒரு சிறு ஆவல் ! //
    தவறவிட்ட இதழ்களில் இதுவும் ஒன்றாதலால் நினைவில் மட்டுமே உள்ளதாக நினைவு.....

    ReplyDelete
  50. 1. வன்மேற்கின் நிஜ மனிதர்கள் ? -முயற்சிக்கலாம்...

    2. AXA - உங்கள் விருப்பம் - முயற்சிக்கலாம் ...

    3.PK போன்றதொன்று - முயற்சிக்கலாம்...

    4. ஜில் ஜோர்டன் பாணியிலானதொரு டிடெக்டிவ் - முயற்சிக்கலாம்...

    5. ZOMBIE !!! மிருதன் - வேண்டாமே இப்போதைக்கு...

    ReplyDelete
  51. சார் சிறுவயதில் எப்போதுமே என் மனதில் ஓர் குறை நிழலாடிக் கொண்டேயிருப்பது வயக்கம் . ராணி காமிக்ஸ்ல மாததமொரு பாண்ட் தவிர்த்து ஏதேனும் ஒன் சாட் நெகிழ்வான கதைகள் பட்டயக் கியப்புவது வயக்கம் . நம்மட்ட மாதமிருமுறை இதழும் கிடயாது .ஒன் சாட் கௌகளும் கிடையாதே எனும் ஏக்கமே .அதைப் போக்க தேடி வந்த தூக்குக் கயிறோ , மரண மண்ணோ என தாங்கி தன் கழுத்துக்கான தூக்குக்கயிர தானே சுமந்தபடி தபாலக் கொண்டு வரும் நபரின் உணர்ச்சிகரமான கதையது . ஆகா நமக்கும் அதப்போல கத கெடச்சாச்சின்னிருந்தா அதன் பிறவு மூச்...இப்பதான் எமனின் திசை மேற்க்கு அதன் பிறகு அதாவது ஏழு வருடங்கள் குதிரையில் பறந்ந பின் பிரிவோம் சந்திப்போம்னு தொடர உள்ளது போல...நம்ம கதைகள எந்த காமிக்சும் நெருங்க ஏலாதெனும் வண்ணம் விரைந்து வரட்டும் அந்த கௌபாய்...உமன் ஒன்சாட் அனைத்தும்...

    ReplyDelete
    Replies
    1. டிடக்ட்டிவ் பயபுள்ளைக எடத்ல வேற கொத்து கொத்தான கதைக இருக்கும் போது அதெல்லாம் போட அவ்விடங்க காலியா இருந்தாலென்னன்னு தோணுது...மிக நல்லாருந்தா வரட்டுமிதுவுமே

      Delete
    2. ராணியில் வந்த புரட்சிப்பெண் ஷீலா சிறுவயதில் படிக்கயில் உடைகளாலோ ஏனோ பிடிக்கல...பின்னர் படிக்கயில் என்னவோர் உணர்ச்சிகரமான கதை கட்டாயம் வரட்டும் சார் டெய்லர் வைத்தாலும் சரி ...இல்லாட்டியும் சரி ...கட்டாயம் வேணும்...அவர்கள் விட்டது ஒரே கதைதாம்....அழிந்து போன உலகில் வாழத்துடிக்கும் மனிதர்கள நம்ம காமிக் லோகமும் வாழ ஓர் இடம் தரட்டுமே

      Delete
    3. அந்த விண்வெளி ஜீவன நம்ம வாண்டு மலர்ல திணிக்கலாமோ....அட்டகாசமான கதய தயாரா வாண்டு மலர்க்கு வச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்....அதால இதும் ரெகுலர்க்கே வரட்டுமே....ஆனா வாண்டு மலர்க்கு கட்டாயமா ஸ்மர்ஃபார்கள் வரணும்

      Delete
    4. மிருதன் ஓர் கதயய விட்டுத்தான் பாப்பமே...சித்திர வண்ணங்க வேற அதகளம்னு சொல்லுறிய....வருங்காலம் இந்த வரிசைல நாம கதைகள விடலன்னு புழுதி வாரி சோம்பிகள விட்டுத் தூற்றக் கூடாதே

      Delete
  52. கொரோனா:

    சமூக வலைத்தளங்களில் இருந்து
    தள்ளி இருப்போம்...
    வாட்ஸ் அப்பில் வருவதையும்
    புறந்தள்ளி வைப்போம்...
    நாம் டாக்டரும் அல்ல ஆராய்ச்சியாளரும்
    அல்ல...
    முன்னோர்கள் சொன்ன
    சுத்தம் சுகம் தரும் என்பதை மட்டும் கடைப்பிடிப்போம்...
    தொடர்ந்து சந்தோஷமாக பூமியில்
    பயணிப்போம் :-)

    ReplyDelete
    Replies
    1. கவிதை எழுதச் சொன்னா வெத்திலையக் குதப்பிக்கிட்டே அட்வைஸ் பண்ணிக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க? :)

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. அட இப்படி சொல்லிட்டீங்களே :-)

      அப்ப முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான் :-)

      நம்ப பார்த்தீபன் மாதிரி புதுமையாக எதாவது யோசிக்க போகிறேன். நாளைக்கு மீட் பண்ணலாம் :-)

      Delete
  53. அநியாயம் பாடத் திறரந்த நாவிலே சூடு போட்டு அளவாப் பாடச் சொன்னா ....அலை கடல நிப்பாட்ட ஏலாதே...சுனாமிக்கு பழகிக்கங்க

    ReplyDelete
    Replies
    1. ஸ்டீல் நான் போய்விட்டு நாளைக்கு வரேன்

      Delete
    2. ஏலே குமார ஏன் இப்படி பயமுறுத்துற:-)

      Delete
  54. இது கொரோனாவின் ஆட்சி....
    பூமி தன்னை புதுப்பித்து கொள்ள,
    இயற்கை புத்துணர்ச்சியுடன் மிளிர,
    மனிதன் ஓடி ஒளிந்து கொள்ள,
    விலங்குகள் உற்சாகமாய் ஓடித் திரிய,
    யார் விட்ட பிரம்மாஸ்திரமோ !!!
    கற்றுக்கொள்ள காலம் கொடுத்த அரிய வாய்ப்பு.......
    இது கொரொனாவின் ஆட்சி.....

    ReplyDelete
  55. வெற்றி கொண்ட கர்வம் கொண்டு நடைபயின்ற மானிடா...அகிலம் அளக்க கடலைக் கடக்க யுத்தம் நூறு செய்திட்டாய்.. பல தலைகள்..பல உயிர்கள் காவுகூட வாங்கினாய்..ஒற்றை கிருமி உந்தன் தேகம் துரத்தக் கண்டு ஓடினாய்..அடக்கியாளும் மனதை மாற்று.. சேவை செய்யும் இதயம் கைக்கொள்..மீண்டும் வாழ வாய்ப்பிருந்தால்..மீண்டு வா..வா..மனிதனாய்..

    ReplyDelete
    Replies
    1. ஜானி சார் சும்மாவே நீங்க பட்டையை கிளப்புவீங்க இப்ப கேட்கணுமா சும்மா கிழி.

      Delete
    2. @jscjohny

      வாவ்!! அட்டகாசம்!! அனலாய் ஒரு கவிதை!!
      கலக்கறீங்க நண்பரே!!

      Delete
  56. 1. தெறிக்கும் violence ?- YES .

    2. வன்மேற்கின் நிஜ மனிதர்கள் ? -YES ..

    3. AXA - இளைஞர்கள் என்ன சொல்லுவாங்கன்னு தெரியாதுங்களா ..

    4.PK போன்றதொன்று - தெரியலை..

    5. ஜில் ஜோர்டன் பாணியிலானதொரு டிடெக்டிவ் - YES ..

    6. ZOMBIE !!! மிருதன் - ட்ரை பண்ணி பார்க்கலாம் சார் .. once ..

    "மில்லெனியம் சூப்பர் ஸ்பெஷல்" - இருந்துச்சு சார் ..

    ReplyDelete
  57. 1. வன்மேற்கின் நிஜ மனிதர்கள் ? கண்டிப்பாக

    2. AXA - உங்கள் விருப்பம் - முயற்சிக்கலாம் ...

    3.PK போன்றதொன்று - ஓ..யெஸ்.

    4. ஜில் ஜோர்டன் பாணியிலானதொரு டிடெக்டிவ் - முயற்சிக்கலாம்...

    5. ZOMBIE !!! மிருதன் - வேண்டாமே..

    ReplyDelete
  58. விஞ்ஞானம் விழி பிதுங்கி நிற்கிறது,
    கடவுளர்கள் கருவறையில் உறங்குகின்றனர்,
    வல்லரசுகளும் திகைத்து நிற்கின்றனர்,
    மருத்துவர்களும்தான் என் செய்வர்,
    காமிக்ஸ் நாயகர்கள் நேரில் வந்தாலும்
    கொட்டுவர் நம் தலையில்,
    இயற்கை எச்சரிக்கிறது மனித இனத்தை,
    மானிடமே விழித்துக் கொள்......

    ReplyDelete
    Replies
    1. ரவிண்ணே!! உங்களுக்குள்ள இப்படியொரு கவிஞரா?!! அருமை அருமை!!

      Delete
    2. சில கவிஞர்களுக்கு அலம்பல் வராது ; ஒன்லி அருவியாய் வரிகள் !

      Delete
  59. என்னிடத்திலும் இருக்கிறது பழுப்பேரிய ஒரு மில்லெனியம் சூப்பர் ஸ்பெஷல்.


    லக்கிலூக்கின் தோட்டா வேகத்தில்
    வன்மேற்கின் வன்மத்துடன்
    ரப்பர் மண்டையன் ரிக்கி உருவில்
    பரவிவரும் ஒரு தொற்று...
    தனிமையே என் துணைவன் என்றிருந்தால்
    வறுத்தகறி திங்க தப்பிப் பிழைக்கலாம்!

    கவித.. கவித...

    ReplyDelete
    Replies
    1. அருப்புக்கோட்டையில் இருந்து சரவணன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு. வருக வருக.

      Delete
    2. நல்ல முயற்சி சார்.

      Delete
    3. @அருப்புக்கோட்டை சரவணன்

      அருமை!! ரொம்பவே ரசிக்க வைக்கிறது!!

      Delete
  60. 1.கெளகேர்ள்?-a bjg yesssss தெறிக்கும் violence ?- double YEeeeeS . நிஜ மனிதர்கள்-Nooooo!

    2.AXA - இளைஞன் aka வாலிபன் என்ற வகைல பூர்ண சம்மதம். போட்டு தாக்குங்கள்..

    3.PK போன்ற வித்தியாசமான ஒன்று..
    முயற்சி செய்யலாம்.

    4.டிடெக்டிவ் - காமிக்ஸ் ஆரம்பித்து வைத்தது 007எனும் நெ1 டிடெக்டிவ் தானே---சோ A பிக்YES ..

    5.ZOMBIE-குடல் குப்பிலாம் பிஞ்சு சரிந்து, வாயில் இருந்து சல்லு ஒழுகி, பார்க்கவே உவ்வே... எப்பவும் நோஓஓஓஓஓ!

    6."மில்லெனியம் சூப்பர் ஸ்பெஷல்"- இருக்கிறது பத்திரமாக சார்...இரண்டு காரணங்கள்- டெக்ஸின் எல்லையில் ஒரு யுத்தம் & இரத்தப்படலம் பாகம்10 இருக்கே!

    ReplyDelete
  61. கவிதை போட்டி:1
    (முதல் வாய்ப்பு)

    கொரோனா.


    "காலனின் கால்தடத்தி"ல்
    "ஆறாது சினத்து"டன் வந்த
    "திசை மாறிய தேவதை"...

    "தனியே தன்னந்தனியே"
    அனைவரும் இருந்தால்
    "எதிர்காலம் எனதே"!.. நமதே..!!

    (இந்த ஆறு வரிகளில் 2020ன்
    ஐந்து காமிக்ஸ்களின் தலைப்பு உள்ளது.
    ஆசிரியர் ஆறு வரி மட்டுமே என கையைக் கட்டி போட்டு விட்டதால் இது போட்டிக்கு...

    ஆனாலும் கவிதை நம் களமாயிற்றே சும்மா விட முடியுமா?
    2020ல் வந்த வரப்போகிற எல்லா காமிக்ஸ் பெயர்களையும் கொண்டு கொரோனா பற்றி ஒரு கவிதை எழுதினால் எப்படி இருக்கும்...
    போட்டிக்காக அந்த கவிதை இருக்கிறதோ இல்லையோ என் திருப்திக்காக,
    இதோ...)👇👇👇👇

    ReplyDelete
    Replies
    1. பார்த்தீபன் பட்டாசு !!!!!!

      Delete
    2. கொரோனா


      "அந்தியில் ஒரு அத்தியாயமா"ய்
      "காலனின் கால்தடத்தி"ல்
      'ஆறாது சினத்து"டன்
      "பந்தம் தேடிய பயணம்" வந்த இவள்,
      ஒரு "திசைமாறிய தேவதை"...
      "கானகமே காலடியில்"
      பூமியே ஆறடியில் என்பாள்....

      "யுத்த பூமி"யில் (டெக்ஸ்)
      "ஒரு துளி துரோகம்" கொண்டு,
      "நட்புடன் ஒரு எதிரி"யாய்
      "பனிவனப்படல"த்திலிருந்து வந்து
      "கதவை தட்டும் கேடி"....
      "கண்ணே கொலைமானே" என வந்து
      "பிழையில் மழலையை" வைப்பாள்...

      இது "கோழைகளின் பூமி",
      "இருளின் மைந்தர்களே"
      இங்கு இருப்பார்களெண்ணி
      "சதியின் மதி"கொண்டு
      "பிரளயம்" தர வந்த
      "ஒரு அழகிய அகதி"....
      இங்கே "வானவில்லுக்கு நிறமேது?"

      "பொன் தேடிய பயணத்தி"ல்
      "விண்ணில் ஒரு வேதாளமாய்" கிடைத்த
      "டாக்டருக்கு நோ" சொல்லாவிடில்,
      "கம்பி நீட்டிடும் இந்த குருவி" ஊரை விட்டு,
      நம் பூமியெனும் "பட்டாம்பூச்சி படலத்தை" விட்டு...
      மருத்துவ "ஆ(ர்ச்)ட்சி இருக்க பயமேன்..?"


      "இது தோட்டா தேசம்"...
      இங்கு உன்
      "துரோகம் ஒரு தொடர்கதை"யானால்
      "அலைகடலிலும் அதகளம்" பண்ணி
      "பனியில் குருதிப்புனல்" ஓட
      உன் "மு(க)த்திரை மர்மம்" கிழித்து
      இந்த கொரோனாவை அழிப்பது
      நலம் "ஆதாலால் கொலை செய்து"
      "வில்லனுக்கொரு கல்லறை" செய்வோம்..

      "எதிரிகள் ஓராயிரம்" முன்
      "போர் முனையில் ஒரு பாலகன்"
      போல் "கைதியாய்(டெக்ஸ்") நின்றாலும்
      "நில் கவனி வேட்டையாடு" என நகராமல்,
      "(2132)மீட்டர்" இடைவெளியில்
      "தனியே தன்னந்தனி"யே இருந்து
      "வேட்டையரை வேட்டையாடு.."

      "என் இனிய கனவா"ய் இது இருந்தாலும்
      "கனவே கலையாதே"...
      "எதிர்காலம் எனதே.."
      நம் எதிர்காலம் நமதே...
      (♥️1❗)



      (எங்கடா ஆர்டின் ஒரு ஆச்சர்யகுறிய காணாணு தேடாதிங்க.அதுதான் கடைசி வரி..ஆர்டின் னா ஹார்ட் தானே அதான் ஹி ஹி....)

      Delete
  62. // அதிலொன்று முழுக்க முழுக்க கௌகேர்ள்களுடன் தடதடக்கும் ஆல்பம் ! மா டால்டன் & கலாமிட்டி ஜேனைத் தாண்டி இதுவரைக்கும் வன்மேற்கில் நாம் dominant பொம்மனாட்டிகளை அவ்வளவாய்ப் பார்த்ததாய் எனக்கு நினைவில்லை ! இந்த ஆல்பத்தை நாம் தேர்வு செய்திடும் பட்சம் பூரிக்கட்டைகளை ஏந்தும் கரங்கள், பிஸ்டல்களையும் பிடிக்கும் லாவகத்தை ரசிக்கலாம் ! //

    அதுமட்டுமல்லாமல் இன்னமும் ரசிக்க நிறைய இருக்கே/இருக்கும்

    நீங்க கத்திரிய/கறுப்பு மசிய கையில் எடுக்காம இருந்தால்னு🤷🏻‍♂️

    நம்ம ஈனா வினாண்ணா சொல்ல சொன்னாருங்க சார் 🙏🏼😇😍
    .

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு மட்டுமா இல்ல AXA வுக்கும் சேர்த்து ?

      Delete
    2. பக்கத்து இலைக்குப் பாயாசமா சிபி சித்தரே?!! ம்.. கவனிச்சுக்கறேன்!!

      Delete
  63. கொரோனா


    "அந்தியில் ஒரு அத்தியாயமா"ய்
    "காலனின் கால்தடத்தி"ல்
    'ஆறாது சினத்து"டன்
    "பந்தம் தேடிய பயணம்" வந்த இவள்,
    ஒரு "திசைமாறிய தேவதை"...
    "கானகமே காலடியில்"
    பூமியே ஆறடியில் என்பாள்....

    "யுத்த பூமி"யில் (டெக்ஸ்)
    "ஒரு துளி துரோகம்" கொண்டு,
    "நட்புடன் ஒரு எதிரி"யாய்
    "பனிவனப்படல"த்திலிருந்து வந்து
    "கதவை தட்டும் கேடி"....
    "கண்ணே கொலைமானே" என வந்து
    "பிழையில் மழலையை" வைப்பாள்...

    இது "கோழைகளின் பூமி",
    "இருளின் மைந்தர்களே"
    இங்கு இருப்பார்களெண்ணி
    "சதியின் மதி"கொண்டு
    "பிரளயம்" தர வந்த
    "ஒரு அழகிய அகதி"....
    இங்கே "வானவில்லுக்கு நிறமேது?"

    "பொன் தேடிய பயணத்தி"ல்
    "விண்ணில் ஒரு வேதாளமாய்" கிடைத்த
    "டாக்டருக்கு நோ" சொல்லாவிடில்,
    "கம்பி நீட்டிடும் இந்த குருவி" ஊரை விட்டு,
    நம் பூமியெனும் "பட்டாம்பூச்சி படலத்தை" விட்டு...
    மருத்துவ "ஆ(ர்ச்)ட்சி இருக்க பயமேன்..?"


    "இது தோட்டா தேசம்"...
    இங்கு உன்
    "துரோகம் ஒரு தொடர்கதை"யானால்
    "அலைகடலிலும் அதகளம்" பண்ணி
    "பனியில் குருதிப்புனல்" ஓட
    உன் "மு(க)த்திரை மர்மம்" கிழித்து
    இந்த கொரோனாவை அழிப்பது
    நலம் "ஆதாலால் கொலை செய்து"
    "வில்லனுக்கொரு கல்லறை" செய்வோம்..

    "எதிரிகள் ஓராயிரம்" முன்
    "போர் முனையில் ஒரு பாலகன்"
    போல் "கைதியாய்(டெக்ஸ்") நின்றாலும்
    "நில் கவனி வேட்டையாடு" என நகராமல்,
    "(2132)மீட்டர்" இடைவெளியில்
    "தனியே தன்னந்தனி"யே இருந்து
    "வேட்டையரை வேட்டையாடு.."

    "என் இனிய கனவா"ய் இது இருந்தாலும்
    "கனவே கலையாதே"...
    "எதிர்காலம் எனதே.."
    நம் எதிர்காலம் நமதே...
    (♥️1❗)



    (எங்கடா ஆர்டின் ஒரு ஆச்சர்யகுறிய காணாணு தேடாதிங்க.அதுதான் கடைசி வரி..ஆர்டின் னா ஹார்ட் தானே அதான் ஹி ஹி....)

    ReplyDelete
    Replies
    1. சூப்பரு பாசு
      நன்னா இருக்கு பேஷ் பேஷ் 👍🏼💐
      .

      Delete
    2. செம்ம செம்ம என்னமா எழுதறார் நோட் பண்ணுங்க சார்

      Delete
    3. கெளம்பு! கெளம்பு!! போட்டி முடிஞ்சுது! இவரு ஜெயிச்சுட்டாரு! கெளம்பு! கெளம்பு!

      Delete
    4. @Partheeban

      அட்டகாசம்!! அபார உழைப்பு!! அருமையான க்ரியேட்டிவிட்டி!


      @மிதுன்
      ஹா ஹா! :)))))

      Delete
    5. ஆகா இன்னொரு ஸ்டீல் க்ளா.... தப்பிச்சு ஒடுடா பரணி :-)

      நல்ல முயற்சி.‌

      Delete
    6. எனக்கென்னமோ நம்ம ஸ்டீல் அருப்புக்கோட்டை பக்கமா ரவுண்ட் போயிருப்பாரோன்னு ஒரு டவுட் !

      Delete
    7. கரூர் பக்கம் என சொல்லுங்க சார். பார்த்தீபன் இருப்பது கரூரில் :-)

      Delete
    8. நன்றி நண்பர்களே...49 வரிகளில் 2020ன் 43 புத்தக தலைப்புகளும்...

      Delete
  64. // !! உங்களில் எத்தனை பேரிடம் இந்த இதழ் இன்னமும் உள்ளதென்றறிய ஒரு சிறு ஆவல் !! //

    இருக்கிறது சார் 🙏🏼
    .

    ReplyDelete
  65. போற வேகத்தை பார்த்தால் இன்னைக்கு சாயங்காலம் 300 confirm.

    ReplyDelete
    Replies
    1. சாமீ .பின்னூட்ட எண்ணிக்கை தானே ? இப்போல்லாம் நம்பர்களைக் கேட்டாலே பயந்து பயந்து வருது !

      Delete
    2. அதே தான் சார். ஏற்கனவே நான் பயந்து பயந்து கடக்கேன்.

      Delete
    3. அந்த பயம் இருக்கட்டும்... பயம் நல்லது :-)

      Delete
  66. I would prefer the option 3 or 4.
    Not interested in Zombies.

    Also on side note still have the millennium special.

    ReplyDelete
  67. முழுக்க கௌகேர்ள் ?

    👍👍👍ஜேஜே!!

    ReplyDelete
  68. ******* கவிதைப் போட்டி ******

    கன்ஃபார்முடு பரிசு பெறப்போகும் கவிதை இதோ! :

    ஊழியும் ஆழியும் வாழிய நலமென..
    தேடிய ஓடிய நாடிய வளமென..
    காலையும் மாலையும் ஓலையும் வரமென..
    பாடலும் தேடலும் கூடலும் நிலையென..
    நெஞ்சமும் மஞ்சமும் கொஞ்சிடும்

    கொரோனா!!


    ஈரோட்டு இளம் கவி - ஈவி


    ***பின்னணி தகவல் : ****
    கவிதைப் போட்டியில் கலந்துகொள்ளாவிட்டால் நடுவராகத் தேர்ந்தெடுக்கப்படும் பேரபாயம் இக்ளியூண்டாவது இருப்பதாக உள்மனசு சங்கூதியது! எனவே, மொக்கையாகவாவது கவிதை என்ற பெயரில் ஒரு நாலுவரியை எழுதிவிட்டால் அந்த அபாயத்திலிருந்து தப்பித்துக் கொண்டுவிடலாமில்லையா? ஹிஹி.. அதான்!

    ReplyDelete
    Replies
    1. //ஈரோட்டு இளம் கவி - ஈவி//

      யாருங்க இது
      (கவுண்டமணி மாடுலேஷன்!)

      Delete
    2. இது ஏதோ அரியலூருக்கு கிட்டக்க உள்ள மண்டபத்தில் வாங்கிட்டு வந்த கவித மேரி கீதே ?

      Delete
    3. இந்த கவிதை நீங்கள் எழுதியது என்றால் இதற்கு விளக்கம் கொடுத்தால் நமக்கு பின்னால் வரும் சந்ததியினர் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள முடியும் :-)

      Delete
    4. // போட்டியில் கலந்துகொள்ளாவிட்டால் நடுவராகத் தேர்ந்தெடுக்கப்படும் பேரபாயம் இக்ளியூண்டாவது இருப்பதாக உள்மனசு சங்கூதியது! //

      அப்ப உங்களையும் மேச்சேரி கண்ணையும் கோர்த்து விட்டு விடலாம்.. நின்றுக் கோரி வரனும் வரனும் :-)

      Delete
    5. ////இது ஏதோ அரியலூருக்கு கிட்டக்க உள்ள மண்டபத்தில் வாங்கிட்டு வந்த கவித மேரி கீதே ?///

      ஆஹா!! அம்புட்டு நல்லாவாங் சார் எழுதியிருக்கேன்..!! நானே ஜிந்திச்சதுதான்!!

      Delete
    6. ///இந்த கவிதை நீங்கள் எழுதியது என்றால் இதற்கு விளக்கம் கொடுத்தால் நமக்கு பின்னால் வரும் சந்ததியினர் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள முடியும் ///

      PfB.. இதை 'கவிதை' என்று நீங்கள் சொன்னதைப் பார்த்தே என் கண்கள் கலங்கிவிட்டன! நன்றி நன்றி!
      நமக்குப் பின்னால் வரும் சந்ததியினர் இதில் புதைந்துள்ள பல அற்புத விளக்கங்களை ஆய்வுக்கட்டுரைகள் மூலம் வெளிக்கொணர்ந்து டாக்டரேட் பட்டம் பெற்றுக்கொள்ளட்டுமே?!

      Delete
    7. இல்லீங்கோ.. அவுகள்லாம் பெரும் புலவர் முத்துவிசயனாரின் படைப்புகளில் ஆய்வு செய்தே டாக்டர் பட்டம் ; கம்பவுண்டர் பட்டம்லாம் வாங்கிக்கிறதா இருக்காங்களாம் !

      Delete
    8. ///பெரும்புலவர்///--- பதிவுல குறைந்த நகைச்சுவை இங்கே கமெண்ட்ட்ல தெறிக்குது!!! செம சார் ஹா..ஹா!

      Delete
    9. // கவிதைப் போட்டியில் கலந்துகொள்ளாவிட்டால் நடுவராகத் தேர்ந்தெடுக்கப்படும் பேரபாயம் இக்ளியூண்டாவது இருப்பதாக உள்மனசு சங்கூதியது! // ஹிஹிஹி நான் போட்டியில் கலந்து கொள்ள இது காரணம் அல்ல அல்ல அல்ல

      Delete
    10. //இந்த கவிதை நீங்கள் எழுதியது என்றால் இதற்கு விளக்கம் கொடுத்தால் நமக்கு பின்னால் வரும் சந்ததியினர் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள முடியும் ///
      எனக்கென்னவோ நீங்க குளவிக்கூட்டுல ைகை வெக்கிறமாதிரி தோணுது, பரணி. பாத்து.

      Delete
    11. கங சஞ
      டண த நப ம
      யரலவ
      ழ ள

      ன.
      நாங்களும் 'கவித' எழுதுவோம்.
      விளக்கம் வேண்டுவோர் தொடர்புகொள்ளலாம்.
      பத்மநாப பெருஞ்சாத்தனார்.

      Delete
    12. பத்மநாப புலவரே.!

      ஆனாலும் நீங்க ரெம்ப ஸ்ட்ரிக்டுங்க.புள்ளி வச்ச மாதிரி கரெக்டா ஆறு வரியில முடிச்சிட்டீங்க.!

      Delete
    13. ///அப்ப உங்களையும் மேச்சேரி கண்ணையும் கோர்த்து விட்டு விடலாம்.. நின்றுக் கோரி வரனும் வரனும் :///

      குருநாயரின் அதே அச்சம் எம்மையும் பீடித்ததால்
      இதோ எமது ஆக்கத்தையும் போட்டிக்கு அனுப்பி அச்சத்தை போக்கிக்கொண்டோம்..!

      Delete
  69. ##இன்னொரு ஆல்பமோ ஆரம்பிக்கும் போதே ஈரக்குலையை நடுங்கச் செய்கிறது - தெறிக்கும் வன்முறையோடு##

    இதை இப்போதே படிக்க வேண்டும் ஆர்வம் ஏற்படுகிறதே

    ReplyDelete
  70. விஜயன் சார், கெளகேர்ல் கதை, வேற்றுக்கிரகவாசியின் கதை, வன்மேற்கின் நிஜ மனிதர்களின் கதை ஆகியவற்றை வெளியிடுங்கள். தண்ணிலவன்,இலங்கை.

    ReplyDelete
  71. All are ok but not to zombie and detective

    ReplyDelete
  72. முதல் வரி புரிகையில்
    முகவரி தொலைந்திட..
    வாழ்வு துளிர்க்கையில்
    வைரஸ் அழித்திட...
    கண்ணீரில் மானுடம்....
    காலனுக்கோ ஏன் அடம்?

    ReplyDelete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. கார்த்திக் அருமை அருமை. ஆனால் என்னவென்றால் 6 வரியில் கவிதை வேண்டும். அது தான் rule. எனவே இன்னும் ஒரு 6 வரி கவிதை பிளீஸ்

      Delete
    2. அட டே! கார்த்திக், வாங்க..வாங்க நண்பரே!

      Delete
    3. போட்டிக்கெல்லாம் எழுதவில்லை, சும்மா எழுதினேன். மீண்டும் படித்துப் பார்க்கையில், இன்றைய சூழலுக்கு இது இன்சென்சிடிவாகத் தெரிவதால் அழித்து விட்டேன். டேக் கேர் நண்பர்களே!

      Delete
  74. // ஆறே வரிகளுக்கு மிகுந்திடாது //

    நிறைய நண்பர்கள் ஆசிரியர் கொடுத்த இந்த முக்கியமான விதியை மறந்த மாதிரி தெரிகிறது. எனவே இதனை நண்பர்கள் மனதில் வைத்து கவிதை எழுதி தங்களின் வெற்றி வாய்ப்பை அதிக படுத்திக் கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. நிறைய நண்பர்கள் அழகாக எழுதி உள்ளார்கள். ஆனால் ஆறு வரிக்கு மேல் உள்ளதால் இந்த நினைவூட்டல்.

      Delete
  75. ஆறு வரிகளுக்கு மிகுந்திடாது, இன்றைய சூழலுக்கு ஏற்ற.. சரி தான்.. எழுதிடுவோம்.
    அலைபேசிய நண்பன் குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது
    தமிழ்நாட்டில் ஐநூறை தொட்டுவிட்டதாம்..
    எனக்கும் துயரம் கவ்விக்கொண்டது
    கொரோனா பாதிப்பா என்று வினவினேன்..
    இல்லை நண்பா பிளாக்கில் ஒரு பாட்டிலின் விலை என்றான்..

    ReplyDelete
  76. பெருங்குடிமக்களின் ஆதங்கத்தை நிதர்சனமாக எடுத்துக்காட்டும் கவலை தோய்ந்த வரிகள்.
    இதனைக் கேட்டால் கொரோனாவும் கண் கலங்கும்.

    ReplyDelete
  77. செவ்வாயில் நீருண்டா
    கண்டுவர சூத்திரம் சொன்னாய்..

    ஒற்றை நொடியில் ஊரை அழிக்க ஓராயிரம் ஆயுதங் கண்டாய்..

    அணுவைப்பிளந்து ஆயுதங்கொண்டு பகைமிரட்டும் பலங் கண்டாய்..

    கண்ணுக்குத் தெரியாத கிருமியொன்று உன்னைப்பார்த்து எள்ளி நகையாடுகிறது இன்று..

    இனியாவது உணர்வாயா எது முக்கியமென்று..

    ReplyDelete
    Replies
    1. :-) நீங்கள் பாட்டுதான் பாடுவீங்க என கேள்வி பட்டேன் ஆனால் கவிதை எல்லாம் கூட எழுதி ஆல்ரவுண்டர் என பின்னுறீங்க :-)

      Delete
  78. பூமியின் நச்சுயிர்

    எங்கிருந்தோ வந்தாய், எதன்பொருட்டோ வளர்ந்தாய்;

    யாருமறியா இருப்பிடம் கொண்டு,
    பாருலகில் உனக்கிணை யாரென்றாய்;

    கல்லடி படாவண்ணம், இல்லடியில் இரையும் கண்டாய்;

    உயிர்களின் இடத்தை தனதாக்கி, இயற்கையின் பகையோடு குடி வளர்த்தாய்;

    உணர்ந்திடு பூமியின் நச்சுயிரே, விதைத்தவனே அறுப்பான்,
    உறைவிடம் கொடுத்தவனே எடுப்பான்.

    ReplyDelete