நண்பர்களே,
வணக்கம். திருப்பும் சேனல்கள் ஒன்று பாக்கியில்லாமல் கிலோக்கணக்கில் புளியைக் கரைப்பதும், வாசிக்கும் ஒவ்வொரு வாட்சப் தகவலும் டன் கணக்கிலான பேதி மாத்திரைகளாய் செயல்பட்டு வருவதும் , ட்விட்டரில் தாண்டவமாடும் குறுஞ்செய்திகள் ஒட்டுமொத்தமாய் 'சோலி முடிஞ்சது மாப்பு' ரகத்திலிருப்பதும் நடைமுறை என்றாகி விட்டுள்ளது ! இந்தச் சூழலில் நமது குட்டியூண்டு வட்டத்துக்காச்சும் - சன்னமானதொரு கபச்சுரக்குடிநீர் பந்தலாய் இருந்துவிட்டுப் போவோமே என்று தோன்றுகிறது எனக்கு ! Of course - "தாடி பற்றியெரிந்து கொண்டிருக்கும் போது கூட, உனக்கு புத்தி வராதாப்பா ?" என்ற கேள்வி எழக்கூடும் தான் ; ஆனால் 'நித்தமும் யுத்தம்' என்றாகிப் போன தினங்களில் - "எதிர்காலம் எனதே" என்று சொல்லிட முனைவதே நமது நிலைப்பாடாக இருந்திடும். So எப்போதும் போல ஜாலியாய் அரட்டை ; மொக்கை என்றே இந்த மினி-பதிவும் இருந்திடும் !
என்ன எழுதுவதென்ற கேள்வி எழும் போதே - நேற்றைக்குப் பின்னூட்டப் பகுதியினில் கேட்கப்பட்டிருந்த "உலகை உலுக்கிடும் ரக வினாக்கள்" கைதூக்கி நிற்பதைக் காண முடிந்தது ! போடப்போவது மொக்கை என்றான பின்னே, அது ஈரோட்டைச் சார்ந்ததா ? சிவகாசியைச் சார்ந்ததா ? என்பதில் பெருசாய் என்ன வேறுபாடு இருந்திடப்போகிறது ? So அவற்றிலிருந்தே ஆரம்பிப்போமே ?

* ஒரு ரம்மியமான மாலைப் பொழுதில் அதிக கூட்டமில்லாத ஒரு காபிஷாப்பில் சூடாய் ஒரு கப் காபி சாப்பிடபடியே பேசிட நீங்கள் அழைப்பு விடுக்க நினைக்கும் VIP யாராக இருந்திடும் ?
காபி-டீ குடிக்கும் பழக்கம் அறவே லேது என்பதால் சில பல VIP-க்கள் தப்பித்தார்கள் என்று சொல்வது எனது லேசான பதில் ! ஆனால் அதனில் ஏது சுவாரஸ்யம் ? So கொஞ்சமாய் யோசிக்கிறேன் - யாரை வரவழைத்துக் குடலை உருவலாமென்று !! "ட்ரம்பைக் கூப்பிட ஆசை ; பில் கேட்ஸைக் கூப்பிட ஆசை" என்ற ரீதியில் பீட்டர் விட்டால், நானே கெக்கே பிக்கே என்று சிரித்து வைத்து விடுவேன் ; so நிதானமாய் யோசிக்கிறேன் !
கழுதை கெட்டால் குட்டிச் சுவரு - நமக்கு அடையாளமே இந்த பொம்மை புக் லோகம் மாத்திரமே எனும் போது அதைத் தவிர்த்து வேறெங்கே சிந்தனைகள் ஓட்டமெடுக்கக்கூடும் ? வளையம் வளையமாய் அந்தக்காலத்து சினிமாக்களின் flashback பாணியில் எனது சிந்தனைகளும் பயணமாகிடும் போது ஒரு மலர்ந்த முகத்துப் பெண்மணியிடம் சென்று தஞ்சமடைந்து நிற்கின்றன !
வருஷம் 1985 ! பிராங்கபர்ட் புத்தக விழாவின் முதல்நாள் காலைப் பொழுது ! (செத்தாண்டா சேகரு..மறுபடிக்கும் அங்கே தான் !!) தக்கி முக்கி முந்தைய தினம் நகரத்தோடு லேசாயொரு பரிச்சயத்தை வளர்த்து வைத்திருக்க, பயணத்தின் மைய நோக்கங்கள் அரங்கேறிட வேண்டிய தருணம் புலர்ந்திருந்தது ! கோட்டையும், சூட்டையும் போட்டுக்கொண்டு , பர்மா பஜார் பிரீஃப் கேஸையும் தூக்கிக் கொண்டு, புத்தக விழா அரங்கிருக்கும் இலக்கிற்குச் செல்ல டிராமைப் பிடிக்கப் போன போது மூச்சு அடைக்காத குறை தான் - அங்கே நின்ற திருவிழாக் கூட்டத்தைப் பார்த்து ! (இன்றைக்கு அந்தப் பரபரப்பு கணிசமாகவே குன்றி விட்டுள்ளது தான் ; மின்னஞ்சல்களில் தொடர்பு கொண்டு ; skype-ல் பேசி வியாபாரங்களை முடிப்பதும் சாத்தியமே எனும் போது அத்தனை தூரம் பயணம் பண்ணி மெனெக்கெடவெல்லாம் முன்போல அவசியங்கள் இருப்பதில்லை !) ஆனால் எல்லாமே கடுதாசிப் போக்குவரத்தை மட்டுமே நம்பியிருந்த அந்நாட்களில், பதிப்புலகின் ஜீவநாடியே இது போன்ற நேரடிச் சந்திப்புகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் புத்தக விழாக்கள் தான் ! And அவற்றுள் தலையாயது, ஜெர்மனியின் இந்த விழா தான் எனும் போது சர்வதேசப் பதிப்புலகின் அத்தனை பேரும் அங்கே சங்கமிப்பது வாடிக்கை ! டிராம் ஸ்டாப்பில் நின்றிருந்த அத்தனை பேருமே industry professionals என்பது நெற்றியில் ஒட்டியிருக்காத குறை தான் ! ஏதோ முச்சூடும் இது போன்ற பயணங்களுக்கும், பணிகளுக்கும் நானுமே பழக்கப்பட்டவனைப் போல கூட்டத்தோடு கூட்டமாய் நின்று, அந்த டிராமுக்குள் முண்டியடித்து ஏறிய போது பெருமையாய் இருந்தது ! ஆனால் மைய ரயில்நிலையத்திலிருந்து மூணோ / நாலோ ஸ்டாப் தொலைவே எனும் போது ஐந்தே நிமிடங்களில் ஒரு பிரம்மாண்ட அரங்கின் முன்னே திபு திபுவென ஜனம் முழுக்க இறங்கிய போது தான் எனக்கு காத்திருந்த பணிகளின் முழுப் பரிமாணமும் ஜிலீரிடும் பீதியுடன் புரியத்துவங்கியது ! மொத்தம் 8 ராட்சச அரங்குகளில் , பதிப்பகங்களின் ஜானர்கள் அல்லது பதிப்பகங்களின் தேசங்கள் என்ற ரீதியில் பிரித்து பல்லாயிரக்கணக்கான ஸ்டால்களில், பல்லாயிரக்கணக்கான பதிப்பகப் பிரதிநிதிகள் செயல்பட்டு வருகின்றதை முன்தினமே கொள்முதல் செய்திருந்த கேட்லாக் வாயிலாகப் புரிந்து வைத்திருந்த போதிலும், அதன் அசாத்திய பிரம்மாண்டத்தை நேரில் , நிஜத்தில் பார்த்த போது மூச்சா வராத குறை தான் ! விட்டால் அப்படியே ஊரைப் பார்த்து ஓட்டம் பிடித்திருப்பேன் சர்வ நிச்சயமாய் ! ஆனால் பயணத்தின் பொருட்டு கிட்டத்தட்ட நாற்பத்திஐந்தாயிரம் ரூபாயை தாத்தா செலவிட்டிருந்தது தலைக்குள் ராட்சஸத்தனமாய் என்னை மிரட்டிக் கொண்டிருந்தது !
1984 ஜுனின் பத்தணாவிற்கு கூட நம்பிக்கையே இல்லாததொரு சூன்யமான காலையில் என் கையில் தாத்தா தந்த நாற்பதாயிரம் ரூபாய் பணம் தான் இன்றைய இந்த சகலத்துக்கும் விதைநெல் ! அந்த முதலீட்டில் தான் எனது கனவுகளின் அஸ்திவாரங்களே போடப்பட்டிருந்தன ! அவ்விதமிருக்க, சும்மா 2 வாரம் ஐரோப்பாவில் சுற்றித் திரியும் பொருட்டு வாழ்க்கையிலேயே விமானத்தினுள் காலடி கூட வைத்திருக்காத, சிக்கனமான, சிறுகச் சிறுக பணம் சம்பாதித்திருந்த தாத்தா அத்தனை காசை செலவிட்டிருந்தது என்னுள் ஒரு அரூப சுமையை ஏற்றிவிட்டிருந்தது ! இன்றைக்கும் 45,000 என்பது சிறு தொகையல்ல எனும் போது 35 ஆண்டுகளுக்கு முன்னே அதன் மதிப்பை யோசித்துத் தான் பாருங்களேன் ? ஒரு பம்பைத்தலை 18 வயதுப் பேராண்டியை நம்பி அத்தனை பணத்தை தூக்கித் தந்திருந்த அந்த முதியவரின் பொருட்டாவது எதையேனும் உருப்படியாய்ச் செய்து காட்ட வேண்டிய நெருக்கடி இருப்பதாய் எனக்குள் டர் ! தவிர, சொந்தக்காரர்களெல்லாம் மதுரை விமான நிலையம் வரைக்கும் வந்திருந்து மாலை-கீலையெல்லாம் போட்டு வழியனுப்பி வைத்திருக்க, ஊருக்குத் திரும்பும் போது உருப்படியாய் எதையேனும் சாதித்த திருப்தி இல்லாங்காட்டி கள்ளத்தோணியில் தான் ஊர் திரும்ப வேண்டியிருக்கும் என்ற பயமுமே சேர்ந்து கொண்டிருந்தது !
யார் யாரைச் சந்திப்பது ? என்று எனது டயரியில் முந்தைய நாளே கொஞ்சமாய்க் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்ததால், அதை கையில் வைத்துக் கொண்டு பரக்கப் பரக்க முழித்துக் கொண்டு ஏதோவொரு வரிசையின்முன்னே நின்றபடிக்கே எட்டிப் பார்த்தால் அந்த வரிசையில் அமெரிக்காவின் Marvel Comics நிறுவனத்தின் பிரமாண்டமான ஸ்டால் கண்ணில்பட்டது ! நம்மிடம் ஏற்கனவே இஸ்பய்டர் இருந்திருக்க, அவர்களிடமுள்ள SPIDERMAN தொடருக்கென பேசுவதாக திட்டமிட்டிருந்தேன் ! So விறு விறுவென அவர்களது ஸ்டால் முன் சென்று நின்ற போது திக்கென்றது ! காலை பத்தே கால் தானென்ற போதிலும், அவர்களது அரங்கினுள்ளோ, திருநெல்வேலி இருட்டுக்கடை முன்னே அல்வா வாங்க குவிந்திருக்கும் ஜனத்தைப் போலொரு திரள் ! அத்தனை பேரும் வெள்ளைக்கார மகராசர்கள் & மகராணியர் ! எனக்கோ உள்ளுக்குள் சொல்லி மாளா தயக்கமும், பயமும் ! சரி, 'கடவுள் விட்ட வழி' என்றபடிக்கே, எனது விசிட்டிங் கார்டை தூக்கிக் கொண்டு அவர்களது front desk மாதிரியான அமைப்பிலிருந்த பெண்மணியிடம் நீட்டியபடியே - "ஐ இந்தியா கமிங் ; ஸ்பைடர்மேன் டிஸ்கஷன் !" என்றேன் திக்கித் திணறி ! நிமிர்ந்து பார்த்தவர் - "do you have an appointment mister ?" என்று கேட்க - "நை..நை...நோ அப்பாய்ண்ட்மென்ட் ; நோ ஐஆயிண்ட்மென்ட் !" என்ற ரீதியில் ஏதோ சொல்லிய மறு கணம் அவர் முகம் அஷ்டகோணலானது ! வீட்டில் பூனை வளர்க்கும் போது,அது எப்போதாச்சும் பல்லியையோ, பாச்சானையோ பிடித்து கவ்வியபடிக்கே வீட்டுக்குள் நுழையும் போது "ஐயே" என்றொரு பார்வை பார்ப்போமே - அதுக்குச் சமானம் அந்தப் பார்வை ! "We are totally booked for the entire fair ; try & see us with an appointment next year !" என்று குனிந்து கொண்டார் தன் வேலைகளைக் கவனிக்க ! எனக்கு தலையே சுற்றாத குறை தான் ; இது தான் இங்கு பொதுவான நடைமுறையெனில், அத்தனை பதிப்பகங்களுமே இதையே தான் சொல்லப் போகிறார்களெனில் கதை கந்தல் என்று அழுகை அழுகையாய் வந்தது ! தலையைத் தொங்கப்போட்டபடிக்கே நடந்தவனுக்குள் காற்றுப் போன பலூன் போலானதொரு உணர்வு !
அடுத்து யாரைச் சந்திக்க முனைந்தேன் என்பது இன்றைக்கு நினைவில்லை ! ஆனால் அந்த முதல் நாள் சந்திப்பின் பிரதானமானது Editions Du Lombard S.A என்றதொரு ஜாம்பவான்ப் பதிப்பகமே ! பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகின் அசுரர்கள் ; இவர்களை சந்தித்தே தீர வேண்டுமென செம ஆசை இருந்திருந்தது உள்ளுக்குள் ! ஆனால் மார்வெல்லில் வாங்கியிருந்த பல்ப் இன்னமுமே ஜக ஜோதியாய் உள்ளுக்குள்ளே எரிந்துகொண்டிருக்க, அரைச் சீவனில் அவர்களது ஸ்டாலை நோக்கி நடந்தேன் ! மீண்டுமொரு பிரமாண்ட ஸ்டால் கண்ணில் பட்டது ; அங்குமே திருப்பதியில் லட்டு வாங்க நிற்பதைப் போலொரு கூட்டம் ! 'ரைட்டு...ஓரமா நின்னு பராக்குப் பாத்துப்புட்டு ஊரைப் பார்த்து ஓட வேண்டியது தான் ; இதுலாம் நம்ம சத்துக்கு மீறின சமாச்சாரமாத் தெரியுது !' என்று நினைத்துக் கொண்டு பூனை போல அவர்களின் ஸ்டாலுக்குள் நுழைந்து அவர்கள் display-க்களில் வைத்திருந்த கலர் கலரான ஆல்பங்களை 'ஆவென்று' பராக்குப் பார்த்து நின்றேன் ! அவர்களிடம் receptionist போல யாருமே இருக்கவில்லை என்பதால், யாரிடம் போய்ப் பேசுவது என்று கூட தெரிந்திருக்கவில்லை எனக்கு ! சும்மா புக்குகளைப் பராக்காவது பார்த்துக் கொள்வோமே என்றிருந்தேன் ! பிராங்கபர்ட்டின் கடைசி நாள் தவிர்த்து பாக்கி நாட்களில் தொழில்சாரா பொதுஜனத்துக்கு அனுமதி கிடையாது ! So உள்ளே சுற்றித் திரியும் எவரேனும் வெட்டி ஆபீசராய் இருக்க வாய்ப்பே கிடையாது ! அவ்விதமிருக்க, திருட்டு முழியோடு ஒரு பயல் உள்ளே நுழைந்து புக்குகளை வாய் பார்த்துக் கொண்டுள்ளானே ? என்று நினைத்தார்களோ - என்னவோ ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி என்னிடம் வந்து, பிரெஞ்சு மொழிக்கே உரித்தான அந்த சங்கீத உச்சரிப்போடு - "Hello ...looking for someone ?" என்று கேட்டார் ! என்னை விட குறைவான உசரம் ; நல்ல சிரித்த முகம் ; கண்களில் ஒரு உற்சாகம் என்று காட்சி தந்தவரிடம் தயங்கித் தயங்கி எனது விசிட்டிங் கார்டை நீட்டினேன் !
எனது விசிட்டிங் கார்டுக்கும், அந்நாட்களது லெட்டர் பேடுக்கும் ஒரு குட்டிப் பின்னணி உண்டு !! கம்பியூட்டர் டிசைனிங் ஏதும் சாத்தியமில்லாத அந்நாட்களில் மாமூலான எழுத்துருக்களில் மொக்கை மொக்கையாய் விசிட்டிங் கார்டுகளும், லெட்டர் பேடுகளும் இருப்பதே வாடிக்கை ! ஆனால் அந்நேரம் எனது தந்தையின் ஆபீசில் ஒரு பைபிள் அச்சுக்கென கோவையிலிருந்து வந்திருந்தார் ஒரு லெட்டெர்பிரெஸ் உரிமையாளர் ! பெயர் ஜெயபாண்டியன் ! கப்பல்படையில் பணியாற்றியிருந்தவர் ; ஓய்வுக்குப் பின்னே கோவையில் சின்னதாயொரு பிரெஸ் நிறுவி அதனில் சிற்சிறு பணிகளை மாத்திரம் செய்து வருவது ; பாக்கி பெரிய ஆர்டர்களுக்கு சிவகாசிக்கு பயணமாகி அச்சிட்டு வாங்கிச் செல்வது என்பதே அவரது நடைமுறை ! என்ன செய்வதென்ற புரிதல் துளியும் இல்லாது நான் 1984 -ன் துவக்கங்களில் சுற்றித் திரிந்த நாட்களில் தினமும் தந்தையின் ஆபீசுக்குப் போவது வழக்கம். அப்போது அறிமுகமானவர் தான் ஜெயபாண்டியன். நாசரேத்க்காரர் ; கோவையில் செட்டில் ஆனவர் ; ஆனால் கப்பல்படைப் பணிநிமித்தம் நிறைய சுற்றி வந்தவர் என்பதால் ரொம்பவே உலக அன்பவமும், அதற்கேற்ற பேச்சுத் திறமையும் உண்டு அவருக்கு ! கோவையில் அவர்களது அச்சகம் மிகச் சிறியது என்றாலும், அவர் செய்து வந்த பணிகள் ரொம்பவே பிரத்யேகமானவை ! சிவகாசிக்கு வரும் போது நாலைந்து நாட்கள் தங்கியிருந்து அச்சிட்டு வாங்கிப் போவார் என்பதால் தினமும் அடிக்கடி ஆபீசில் அவர் தலை தென்படும் ! பள்ளிநாட்களிலிருந்தே தந்தையின் ஆபீசுக்கு நான் ரெகுலராய் விசிட் அடிப்பதுண்டு என்பதால் அங்கு பணியாற்றும் எழுபது / எண்பது பணியார்களுக்கும் என்னை நன்றாகவே தெரியும். "சௌந்தர் அண்ணாச்சி பையன்" என்பதைத் தண்டி எனக்கு இன்னொரு அடையாளமும் உண்டு அவர்கள் மத்தியினில் ! அப்போதெல்லாம் ஊருக்குள் இருந்த பள்ளிகளின் பெரும்பான்மை தமிழ் மீடியம்களே என்ற நிலையில், லயன்ஸ் கிளப்பின் புண்ணியத்தில் துவக்கப்பட்ட முதல் இங்கிலீஷ் மீடியப்பள்ளியின் ஆரம்ப பேட்ச் நான் ! தவிர மூன்றாம் வகுப்பு முதலே ஹிந்தியும் உண்டு என்பதால் ரொம்பச் சீக்கிரமே தத்து பித்தென்றாவது ஹிந்தியும் பேச வரும் எனக்கு ! அப்போதெல்லாம் காலெண்டர் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த தந்தையின் ஆபீசில், இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் யாரையேனும் பார்க்க முடியும் ! காலெண்டர்கள் கொள்முதல் பண்ணிப் போக வட இந்தியாவின் அத்தனை மாநிலத்தவர்களும் வருகை தந்திருப்பார்கள் ! So ரொம்ப சின்ன வயசிலேயே அவர்களிடம் பேசும் வாய்ப்பு எனக்கிருக்கும் ; 'ஜாத்தா ஹை...ஆத்தா ஹை...பாத்தா ஹை.." என்று உளறினால் கூட ஆபீஸிலுள்ள பணியாட்களுக்கு வியப்பே மிஞ்சும் ஐயாவின் புலமையினைக் கண்டு ! So 'இங்கிலீஷ் மீடியம்" என்ற கெத்தும் உண்டு ஐயாவுக்கு ! ஆக நான் வெட்டி ஆபீசராய்ச் சுற்றி வந்த போதிலும் ஆபீசுக்கு வந்து-செல்லும் அத்தனை போரையும் அறிந்து வைத்திருந்தேன் ! அந்தப் பட்டியலில் ஜெயபாண்டியன் அவர்களும் இணைந்து கொள்ள, என்னிடம் ஜாலியாகப் பேசிக்கொண்டிருப்பார் ! ஒரு நாள் அவரது விசிட்டிங் கார்டைப் பார்த்த போது அதன் அட்டகாசத் தரத்தைக் கண்டு வாயடைத்துப் போனேன் ! அத்தனை நேர்த்தியாய் இருந்தது ! நான் "பிரகாஷ் பப்ளிஷர்ஸ்" என்றதொரு பெயரை மட்டும் தேங்காய்ச் சிரட்டையைப் போல கவ்விக் கொண்டு, பூந்தளிர் பாணியில் ஒரு இதழை உருவாக்கும் கனவில் இருந்த நாட்களவை ! என்னை நினைத்தாரோ தெரியாது, அடுத்தமுறை சிவகாசி வந்த பொழுது என்னிடம் ஒரு சின்ன டப்பியை நீட்டினார். உள்ளே பார்த்தால் செம ரசனையோடு சில்வர் + கருப்பு வர்ணங்களில் செம classy ஆகவொரு விசிட்டிங் கார்டு கத்தை இருந்தது - "S.VIJAYAN" என்ற பெயர் போட்டு ! அன்றைக்கு இரவு வீட்டுக்குப் போய் அத்தனை பேரும் உறங்கிய பிற்பாடு அந்த கார்டை எடுத்து வைத்து எத்தனை நேரம் அழகு பார்த்திருப்பேனோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் ! தொடர்ந்த பத்தாண்டுகளுக்கு நான் உபயோகித்து வந்தது அவர் அச்சிட்டுத் தந்த அந்த விசிட்டிங் கார்டுகளையே ! என்னைப் பார்த்து முழித்தவர்கள் கூட,நான் நீட்டும் விசிட்டிங் கார்டை இமை தட்டாது ரசிப்பதை எண்ணற்ற தருணங்களில் கவனித்திருக்கிறேன் !
Back to the story, எனது கார்டை வாங்கி பொறுமையாய் வாசித்தவர் - "Oh from India !!"என்று முகம் முழுக்க பூரிப்போடு சொன்ன போது எனக்குள் நம்பிக்கை வாணவேடிக்கை போடத் துவங்கியது ! அடுத்து என்னை கேட்பாரென்பதை இந்நேரத்துக்கு யூகிக்காது போக முடியுமா - என்னை ? முந்திக் கொண்டு - "திடீர் புரோக்ராமாய் கிளம்பி வந்துட்டேன் மேடம் ; என்னிடம் அப்பாயிண்ட்மெண்ட் ஏதும் இல்லை ! அடுத்த 5 நாட்களுக்குள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் எனக்கென கொஞ்சூண்டு நேரம் ஒதுக்க முடிஞ்சால், நீங்கள் சொல்லும் நேரத்துக்கே நான் ஓட்டமாய் ஓடி வந்து நிற்கிறேன் !" என்றேன் ! மாறாத புன்னகையோடு, தன்னருகே இருந்த இன்னொரு பெண்ணிடம் ஏதோ சொல்லியபடியே ஒரு planner போல இருந்த அட்டவணையை மேஜை மேலே போட்டு விட்டு ஏதோ பேசினார் அவரிடம் ! பிராங்கபர்ட்டில் அவர்கள் முன்கூட்டிய சந்திப்புகளுக்கென செய்து வைத்திருந்த ஏற்பாடுகள் அவை என்பதை புரிந்து கொள்ள முடிந்தது ! "கடையைப் பூட்டுறதுக்கு 5 நிமிஷங்களுக்கு முன்னே தான் பார்க்க முடியும் தம்பி !" என்று சொல்வாரென்ற எதிர்பார்ப்பில் நின்று கொண்டிருந்தவனின் ஆந்தைக் கண்களோ சுற்றிலும் குவிந்து கிடந்த காமிக்ஸ் சொர்கத்தின் மீது பசியோடு மேய்ந்து கொண்டிருந்தன ! அதுவரையிலும் அமெரிக்க / பிரிட்டிஷ் பதிப்பகங்களின் இங்கிலீஷ் காமிக்ஸ்களைத் தவிர்த்து நான் பார்த்திருந்தவை டின்டின் ; ஆஸ்டெரிக்ஸ் ; டெக்ஸ் வில்லர் & லக்கி லூக் மட்டுமே ! ஆனால் அவர்களிடம் குவிந்து கிடந்தது என்னவோ அலிபாபா குகையின் பொக்கிஷங்களை போலான சமாச்சாரங்கள் ! இவை அத்தனையையும் அள்ளிக் கொண்டு ஊருக்குப் போய் நின்றால் இந்தப் பயணத்துக்கென்ன, ஜென்மத்துக்கே ஒரு பாலன் கிட்டியிருக்குமே என்ற பரபரப்பில் உள்ளுக்குள் நெஞ்சு 'டம்மு டம்முவென்று' அடித்துக் கொண்டிருப்பதை உணர முடிந்தது ! சில நிமிடக் கலந்தாலோசனைக்குப் பின்னே என்னிடம் வந்தவர் சொன்னதைக் கேட்ட போது, றெக்கை முளைத்தது போலிருந்தது எனக்கு ! 'பிரேசிலில் இருந்தோர் பதிப்பகத்தாரை சந்திக்க காலையில் ஸ்லாட் தந்திருந்த்தாகவும், அவர்களை இதுவரைக்கும் காணோம் என்பதால், எனக்கு ஓ.கே.வெனில் இப்போதே பேசலாம்' என்றார் !!
எனக்கு ஓ.கே.வா ????????? பீட்சாவில் என்ன டாப்பிங் வேண்டுமென்று தேர்வு செய்யும் வாய்ப்பு ஒரு அன்னக்காவடிக்குக் கிடைத்தது போலிருந்தது !! பிசாசு நடமாடும் நள்ளிரவில் தான் நேரம் தர முடியும் என்று சொல்லியிருந்தாலுமே கொலைபட்டினியாகக் கூடக் காத்திருக்கத் தயாராக இருந்தவனுக்கு அந்த ஜாக்பாட்டை மறுக்கவாச்சும் தோன்றுமா ? வேக வேகமாய் சம்மதமென்று மண்டையை ஆட்ட, ஒரு ஓரத்திலிருந்த மேஜைக்கு என்னை இட்டுச் சென்று அதன் முன்னே அமரச் செய்தார் ! Display-ல் இருந்த ஆல்பங்களில் ஒரு அரை டஜனைக் கைகளில் ஏந்தியபடியே என்முன்னே குவித்தவர், மிட்டாய்க்கடைக்குள் புகுந்திருக்கும் பச்சைப் புள்ளை நான் என்பதைக் கணித்திருந்தார் ! நிதான ஆங்கிலத்தில் பேசத்துவங்கியவர் Lombard நிறுவனம் பற்றி ; அதன் பாரம்பர்யம் பற்றி விளக்கத் துவங்கினார் ! பெல்ஜிய தூதரகத்திலிருந்து சில மாதங்களுக்கு முன்னே கிட்டியிருந்த காமிக்ஸ் உருவாக்கங்கள் தொடர்பான புக்கில் Lombard நிறுவனத்தைப் பற்றி நான் ஏகமாய் வாசித்திருந்ததால், அவர் சொன்ன தகவல்கள் எல்லாமே எனக்கு மறுஒலிபரப்பாகவே இருந்தன ! மெது மெதுவாய் அவர் சொல்லத் தவறிய தகவல்களையும் நான் எடுத்துத் தந்த போது அவருக்கு ஆச்சர்யம் ! மெது மெதுவாய் நம் பின்னணி பற்றி ; பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகினைப் பற்றி நான் தெரிந்து கொண்ட விதம் ; ஏதோவொரு குருட்டு தைரியத்தில் ஐரோப்பிய பதிப்பகங்களை சந்திக்கத் திட்டமிட்டது பற்றியெல்லாம் நான் சொல்லிக்கொண்டே போக உற்சாகமாய்க் கேட்டுக் கொண்டிருந்தார் ! 'நமது வெளியீடுகள்' - என்று நான் பந்தாவாய்த் தூக்கி நீட்டிய பாக்கெட் சைஸ் இதழ்களையும் ஆவலோடு வாங்கிப் புரட்டி, தனது சகாவிடமும் காட்டி பிரெஞ்சில் ஏதோ சொன்ன போது எனக்கு உள்ளுக்குள் நிலாவில் கொடியை நட்டிய பெருமிதம் ! 'கடலைமுட்டாய் சைசில் தான் இவர்களது புக்கே உள்ளது - பாரேன் !' என்று அவர் சொல்லியிருக்கவுமே வாய்ப்பிருந்தது தான் ; ஆனால் லோகத்தில் இல்லாத எதையோ நாம் பாக்கெட் சைசில் சாதித்துக் கொண்டிருப்பதான utopia-வில் குடியிருந்த எனக்கு எவ்வித எதிர்மறை நினைப்புகளும் குறிக்கிடவே இல்லை ! சற்றைக்கெல்லாம் அவர்களது தொடர்கள் ; ஒவ்வொன்றின் ஜானர்கள் ; ஒவ்வொன்றின் வெற்றிகள் பற்றியெல்லாம் சொல்லத்துவங்க, நானோ அத்தனையையும் புரட்டு புரட்டென்று புரட்டிக் கொண்டிருந்தேன் ! அவை எல்லாமே நாம் டிடெக்டிவ்களோடு மட்டுமே காதல் கொண்டிருந்த நாட்கள் என்பதால் அதற்கேற்ற கதைகளையாய்க் கேட்டேன் ! ரிப்போர்ட்டர் ஜானி ; புருனோ பிரேசில் ; அப்புறம் இன்னொரு one shot - என கலர்கலரான ஆல்பங்களை என்முன்னே நீட்டினார் ! அப்போது கண்ணில்பட்ட கீச்சல் ஓவியங்களுடனான கேப்டன் பிரின்ஸ் ஆல்பங்களும் என்னை ஏதோவொரு விதத்தில் கொக்கி போட்டு இழுத்தன ! "எங்க ஊரில் செம popular கதாசிரியரும், ஓவியரும் இணைந்து உருவாக்கியுள்ள தொடர் இது..இதுவும் வேணுமா ?" என்று கேட்ட போது பூம் பூம் மாடாகினேன் ! நிதானமாய் நமது விலைகள் ; நமது விற்பனை எண்ணிக்கை ; நாம் தற்சமயம் Fleetway கதைகளுக்குத் தந்து கொண்டிருக்கும் ராயல்டி பற்றியெல்லாம் முகச்சுளிப்பின்றிக் கேட்டுக் கொண்டார் ! இன்னொரு அப்பாயிண்ட்மென்டில் மேற்கொண்டு பேசலாம் என்று குறிப்பெடுத்துக் கொண்டவர் மறு நாளுக்கோ என்னவோ ஒரு மதிய பொழுதினில் நேரம் ஒதுக்கியும் தந்தார் ! 'இந்த சாம்பிள்கள் எடுத்துக்கலாமா ?' என்று கோமாளியைப் போல நான் கேட்டேன் - ஆர்வமிகுதியில் ! விழாவின் முதல் நாளிலேயே அவர்கள் கொணர்ந்திருக்கும் சொற்ப மாதிரிகளை நான் வாங்கி கொண்டு போய் விட்டால், தொடரும் நாட்களில் அவர்களுக்கு சிரமமாகிப் போகுமே என்ற ஞானம் கூட அந்த உற்சாக நொடியில் இருக்கவில்லை எனக்கு ! சிரித்த முகத்தோடே - "ஏதேனும் ஒன்றை மட்டும் இப்போதைக்கு எடுத்துக் கொள் ! பாக்கியினை கடைசி தினத்தன்று வாங்கிக்கொள்ளலாம் !" என்றார் ! நான் அன்றைக்குச் சுமந்து சென்றது பின்னாட்களில் நாம் "பனிமண்டலக்கோட்டை" என்ற பெயரில் வெளியிட்ட கேப்டன் பிரின்ஸ் சாகசமே !
தொடர்ந்த நாட்களில் மறுபடியும் சந்திப்பு ; அப்புறம் கடைசி நாளன்றைக்கு மீத புக்குகளை வாங்கிகொள்ளச் சந்திப்பு என்று நிகழ்ந்த சமயத்துக்குள் ஒரு பட்டாம்பூச்சியின் பரிணாம வளர்ச்சியே என்னிடம் நடந்திருந்தது ! கூமுட்டையோ, நல்லமுட்டையோ என்றே தெரியா நிலையில் ஆஜராகி ; சிறுகச் சிறுக ஒரு larva வாக உருமாறி, 5 நாட்களின் இறுதியில் தம்மாத்துண்டு பட்டாம்பூச்சியாகவே நான் மாறியிருந்தேனெனில் அதற்கு பிரதான காரணம் அன்றைய Lombard நிறுவனத்தில் சர்வதேச உரிமைகள் சார்ந்த பொறுப்பினில் இருந்த திருமதி விவியன் ரூஸி தான் ! பிராங்கபர்டில் எனது காவடிகள் சகலத்துக்கும் அன்போடு அனுசரணை காட்டி, நமக்கும் எட்டாக்கனியாகிப் போயிடாது ; அவரது நிறுவனத்துக்கும் நஷ்டமாகிப் போயிடா விதமாய் ஒரு ராயல்டியினை நிர்ணயம் செய்ய உதவி - பிரான்க்கோ பெல்ஜிய உலகினுள் அடியெடுத்து வைக்க வாயிலைத் திறந்து விட்டவர் அவரே ! "சரி, ஊருக்குப் போய் காண்டிராக்ட் அனுப்புகிறோம் " என்றவரை அத்தோடு விடாது - "இல்லீங்க மேடம் ...நானும் வரும் திங்களன்று பெல்ஜியம் வர்றேன் ! நீங்க சம்மதித்தால் உங்கள் அலுவலகத்திற்கே வந்து கான்டிராக்ட்டில் கையெழுத்துப் போட்டு விடுகிறேனே ?" என்ற போது அவர் சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்து விட்டார் !! நானோ பேந்தப் பேந்த முழித்த வண்ணமிருக்க - எண் கையைக் குலுக்கியபடியே - "See you in Brussels then" என்று கிளம்பினார் ! பின்னாட்களில் தான் தெரிய வந்தது - ஒவ்வொரு புத்தக விழாவின் முடிவிலும் ஒட்டு மொத்த சந்திப்புகளுக்கும் பதில் போட்டு, அவரவர் கோரிக்கைகள் மீதான தீர்மானங்கள் எடுக்கவே ஒரு மாதம் சுமாருக்கு பிடிக்குமென்று ! அப்புறமாய்த் தான் அவர்களது legal department போய் வந்து காண்டிராக்ட், கத்திரிக்காய் எல்லாமே தயார் ஆகிடுமாம் ! நானோ 'காது குத்தியாச்சு ; ஆனைகிட்டேயும் ஆசீர்வாதம் வாங்கியாச்சு ; கிடாவை வெட்டிப்புடலாமே ?" என்று மாக்கானாய்ப் பறந்து தொலைத்திருக்கிறேன் ! எனக்கோசரம் அவர்களது அலுவல்கள் சகலத்தையும் தாமதப்படுத்திவிட்டு , ப்ரஸ்ஸல்சில் நான் திங்களன்று அவர்களது பிரம்மாண்டமான ஆபீசிற்குச் சென்ற வேளையில் கான்டிராக்டைத் தயாராக வைத்திருந்தார் ! ஆயுசில் நான் கையெழுத்திட்ட முதல் ஒப்பந்தம் - கேப்டன் பிரின்ஸ் தொடருக்கும் ; "Cannonball Carmody " என்ற பெயரில் வெளியாகியதொரு oneshot கதைக்குமே ! ("அதிரடிவீரர் ஹெர்குலஸ் " என்ற பெயரில் வெளியான சாகசம் அது)
So இன்றைக்கு, இத்தனை காலம் கழிந்த பின்னே யாரேனுமொரு VIP-ஐ நான் சந்திப்பதாயின் - எனது தேர்வு திருமதி.விவியன் ரூஸியாகவே இருந்திடும் ! அவரது தற்போதைய நிலவரம் பற்றி எனக்கு ஏதும் தெரியாது தான் ; Lombard நிறுவனம் Dargaud நிறுவனத்தோடு இணைந்த பின்னே முற்றிலும் புது டீம் பொறுப்பிலிருக்கத் துவங்கியது ! So காலவோட்டத்தில் அப்படியே மறந்தும் போய்விட்டது ! இன்றைக்கு அவரை மீண்டும் சந்திக்க மட்டும் வாய்ப்புக் கிட்டின் - எனது வாழ்க்கைப்பயணத்திற்கு ஒரு வழிகாட்டியாய் நின்றமைக்கு அன்று சொல்ல மறந்த நன்றிகளை சொல்லிட முனைவேன் ! அதே போல, 'எந்த நம்பிக்கையில் ஒன்றரையணா பெருமானமில்லா ஒரு சுள்ளானை நம்பி உங்கள் நேரங்களை அத்தனை செலவிட்டீர்களோ ?' என்ற கேள்வியும் கேட்க என்னுள் நிச்சயம் ஆர்வமிருக்கும் !
Yes of course - அவர் தவிர்த்து Dupuis நிறுவனத்தின் அன்பு ; Dargaud நிறுவனத்தின் ஆதரவு ; Fleetway-ன் பரிவு என என்னை அன்று தூக்கி நிறுத்திய விஷயங்கள் ஏராளம் தான் ! ஆனால் என்றென்றும் என்னுள்ளே திருமதி ரூசிக்கொரு உச்ச இடமிருக்கும் !! Maybe அன்றைக்கு அவருமே நம்மை நிராகரித்திருக்கும் பட்சத்தில், ரொம்பவே துவண்டு போயிருப்பேனோ - என்னவோ ; தெரியாது ! பறக்க உத்வேகம் தந்தது மாத்திரமன்றி, கனவு காண்பதில் தவறுமில்லை எனப் புரியச் செய்தவரும் அவரே எனும் விதத்தில் நான் சந்திக்க விரும்பும் VIP-யாக அவரே இடம் பிடித்திடுவார் !! ரைட்டு...எதைப் பேச ஆரம்பித்தாலும் அதைக் காலட்சேபம் ரேஞ்சுக்கு இழுக்கும் பாணி லேசுக்குள் விட்டுப் போகாதென்பது புரிகிறது ! இதற்கு மேல் இழுத்தால் ஸ்டீல் கவிதைத் தொகுப்புக்குப் போட்டியாகி விடுமென்பதால் நடையைக் கட்டுகிறேன் ! Bye all !! See you around !!
பி.கு; அவரவர் சந்திக்கவிரும்பும் VIP பற்றியும் இங்கே பகிரலாமே ? Work from Home என்றில்லாத வெட்டி ஆபீசர்கள் நாமெல்லாம் இந்நேரத்துக்கு பாத்திரங்களைக் கழுவித் தந்து, வீட்டையெல்லாம் பெருக்கி முடித்திருப்போம் தானே ?
* நீங்கள் விடிய விடிய பேசிட விரும்பும் நபர் யார்? (பேச்சு மட்டுமே!)

NEXT பதிவினில்...!
1 st
ReplyDeleteThanks Anna
Delete2வது
ReplyDeleteஓகே
ReplyDeleteஉள்ளேன் ஐயா🙏🏼
ReplyDelete.
பெர்ரிர்ரிய பதிவு
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு......
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteHi..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவந்துட்டேன்.
ReplyDeleteநானும் வந்துட்டேன்..!
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteமாலை வணக்கம் நண்பர்களே...
ReplyDeleteஆனால் பதிவும் சாதாரணம் தான்...
ReplyDeleteவேக வேகமா டைம் அடிச்சாரோ ...என்னமோ...
ReplyDeleteநெறைய எடத்துல துணை எழுத்தக் காணோம்...
வட்ட மேஜை மாநாடா ஹை....
Deleteஅச்சா ஹை...
ஈ பச்சா...
பெகுத் அச்சா...ஹை...
அட்டாகசமான பதிவு எடிட்டர் சார்!!
ReplyDeleteநீங்கள் மட்டுமல்ல- திருமதி.விவியன் ரூஸிக்கு ஒட்டு மொத்த தமிழ் காமிக்ஸ் உலகமே கடன்பட்டுக்கிடக்கிறது!!
உங்களுடைய அந்த விசிட்டிங் கார்டை பார்க்கும் எண்ணமும் மோலோங்குகிறது. வாய்ப்பிருந்தால் அடுத்த பதில் ஒரு போட்டோ போடுங்களேன்?!!
அதெல்லாம் கெடையாது...
Deleteகடன் பட்டிருப்பது எடிட்டரோட தாத்தாட்ட....
அந்த பெரியவங்க குடுக்காட்டி...
எப்பூடி வட்ட மேஜை மாநாடு நடந்துருக்குமாம்...
அப்பறம் வராமப் போன பிரேசில் காரவுக...
Delete///அதெல்லாம் கெடையாது...
Deleteகடன் பட்டிருப்பது எடிட்டரோட தாத்தாட்ட....
///
சரி, இப்படி வச்சுப்போம்!
உள்ளூர் கடன் - தாத்தாட்ட!
வெளிநாட்டு கடன் - திருமதி.விவிலியன் ரூஸிட்ட!
நான் பட்ட கடன் எத்தனையோ
Deleteபூமியில் பிறந்து
அடைபட்ட கடன் எதுவுமில்லை
ஆயிரம் இருந்தும்
- வாலி சாரோட சிச்சுவேஷன் Song
தாத்தனுக்கு ஜே...முன்னால சீறுது சௌந்தரனாரு காள...பபின்னால பாயுது விசயனாரு காள
DeleteGood evening to all
ReplyDelete////தவிர மூன்றாம் வகுப்பு முதலே ஹிந்தியும் உண்டு என்பதால் ரொம்பச் சீக்கிரமே தத்து பித்தென்றாவது ஹிந்தியும் பேச வரும் எனக்கு///
ReplyDeleteஅடடே!! இந்தி மாலும் ஹை?!! சூப்பர் ஹை!!
இதர் ர்+ஆவோ
Deleteஎம்மாம் பெரிய்ய்ய மாத்திர...
ReplyDelete///'நமது வெளியீடுகள்' - என்று நான் பந்தாவாய்த் தூக்கி நீட்டிய பாக்கெட் சைஸ் இதழ்களையும் ஆவலோடு வாங்கிப் புரட்டி, தனது சகாவிடமும் காட்டி பிரெஞ்சில் ஏதோ சொன்ன போது எனக்கு உள்ளுக்குள் நிலாவில் கொடியை நட்டிய பெருமிதம் ! 'கடலைமுட்டாய் சைசில் தான் இவர்களது புக்கே உள்ளது - பாரேன் !' என்று அவர் சொல்லியிருக்கவுமே வாய்ப்பிருந்தது தான் ;///
ReplyDeleteசத்தமா சிரிச்சு வச்சுட்டேன்! :)))))
தமிழ்நாட்ல நம்மட அடயாளமே அதான
Deleteபதிவை முழுமையாக படிப்பதற்கு முன் பதிவின் கடைசி பகுதியை படித்த பின்னர் தான் நிம்மதி. ஆமாம் போட்டி ஏதும் கிடையாது :-)
ReplyDeleteபதிவை முழுமையாக நிம்மதியாக படிக்க போகிறேன் :-)
அதான் அடுத்த போட்டி சனிக்கிழமைன்னு சொல்லிட்டாரே!! :)
Deleteததரின னன.. ஆ..அ..அ....
தந்நந்நம் நாதின தந்நந்நம் நாதின தந்நந்நம் நாதின தநந்நாநே...
DeleteIam only audiance.
Deleteசெம்ம பரணி. செம்ம நானும் ஆடியன்ஸ் தான் பத்து சார்.
Delete// அதான் அடுத்த போட்டி சனிக்கிழமைன்னு சொல்லிட்டாரே //
Deleteநான் சனிக்கிழமை தளத்திற்கு வரமாட்டேன் என ஆசிரியர்கிட்ட சொல்லிடுங்க விஜய் :-) அவரு என்னை தேடினாலும் என்கிட்டே சொல்ல வேண்டாம் :-)
இன்னும் ஒரு வாரத்துக்கு இந்த பக்கம் எட்டி பார்க்கமாட்டேன் போட்டி முடிஞ்சப்புறம் வர்றேங்க (உயிர் வாழனுமில்ல)
Deleteஅப்பாடி... தளத்தில் வாய்ஸ் மெசேஜ் போட இயலாது என்பதால் பாட்டு போட்டி எல்லோரும் கேட்கும்படி ஓப்பனாக இராதே...!!!!் ஒருவேளை ஜட்ஜ்களுக்கு வாட்ஸ்ஆப் ல அனுப்பி வைப்பாங்களோ??? பாவம் அந்த 2பேரும்....!!
Deleteசெத்தான் சேகரு.
Delete// நீங்கள் விடிய விடிய பேசிட விரும்பும் நபர் யார்? //
ReplyDeleteஆகஸ்ட் ல ஈரோட்டில் முயற்சிக்கிறேன்!
Read it. Really inspiring. I too have someone. His name is Mohan. He was working in Narayanan & Co CAs. He made me join in a good firm without he knowing me personally and i started my career from there. No contact of him for 25 years.
ReplyDeleteமிக சுவாரஸ்யமான பதிவு!!!!
ReplyDeleteபாட்டிகள்தான் எடிட்டருக்கு எட்டாம் பொருத்தம்
தாத்தாக்கள் எப்பவும் ஓகேதான் போல...!!!
// உள்ளே பார்த்தால் செம ரசனையோடு சில்வர் + கருப்பு வர்ணங்களில் செம classy ஆகவொரு விசிட்டிங் கார்டு கத்தை இருந்தது - "S.VIJAYAN" என்ற பெயர் போட்டு ! அன்றைக்கு இரவு வீட்டுக்குப் போய் அத்தனை பேரும் உறங்கிய பிற்பாடு அந்த கார்டை எடுத்து வைத்து எத்தனை நேரம் அழகு பார்த்திருப்பேனோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் ! //
ReplyDeleteஇது போன்ற தருணங்கள் எல்லோருக்கும் ஒருமுறை கிடைத்துவிடுகிறது.
அந்த விசிட்டிங் கார்டையோ?,
உங்களை அந்த வயதிலோ?,
கற்பனை செய்ய முடியவில்லை.
ஆனால் அந்த மகிழ்ச்சியை
உண்மையில்
உணர்வு பூர்வமாக உணர முடிகிறது!
உண்மை...பாத்து இரசிச்சது இப்ப தெரிதே கண்ல
Deleteபதிவில் குறிப்பிடப்பட்டிருந்த 45000 என்பது எதற்கான செலவு Sir?
ReplyDelete(இன்றைக்கும் என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தொகை என்பதால் தெரிந்து கொள்ள நினைக்கிறேன்.)
பயண செலவு! விமான டிக்கெட், தங்கும் செலவு, உணவு மற்றும் போக்குவரத்து என நினைக்கிறன்!
Deleteவிவியன் ரூஸி...
ReplyDeleteபஞ்சாப் காரம்மா மாதிரி கீதே...
'///..ஆத்தா ஹை...பாத்தா ஹை.." என்று உளறினால் கூட ஆபீஸிலுள்ள பணியாட்களுக்கு வியப்பே மிஞ்சும் ஐயாவின் புலமையினைக் கண்டு ! So 'இங்கிலீஷ் மீடியம்" என்ற கெத்தும் உண்டு ஐயாவுக்கு ///
ReplyDeleteகோவை சரளா மாதிரி," சின்னவரு என்னமா இங்கிலி பிசுல்லாம் பேசுராரு " என்று வியந்திருப்பார்கள்.
வட்டமேஜே துப்புகள்
ReplyDeleteரூஸி வலது கை மோதிர வெரல்ல வெள்ளி மோதிரம்.
ஆஸ்ட்ரே.
பேப்பர் கிளிப்.
ஏதோ போஸ்டர் சுருட்டி வச்சிருக்கு.
பாதி டம்ளர் தண்ணிய குடிச்சிருக்காரு சிவகாசி தொழிலதிபர்...
39
ReplyDeleteஅட்டகாசமான வாய் விட்டு சிரிக்க வைத்த பதிவு சார் சில இடங்களில் அப்படியே ஆச்சரிய படுத்தி அசரவும் வைத்த பதிவு. காலையில் இருந்து காத்து இருந்தது சற்றும் வீண் போகவில்லை என்று புரிய வைத்த பதிவு.
ReplyDeleteஒரே ஒரு கேள்விக்கு இவ்வளவு விஸ்தாரமாக பதில் தர முடியும் என்று புரிய வைத்த பதிவு.
உங்கள் ஃபிளாஷ் பேக் படிக்கும் போது எப்போதுமே அது உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணிப்பது போல ஒரு உணர்வு.
நீங்கள் சொன்னதை கேட்டதும் மேடம் விவியன் ரூசி மீது தோன்றும் மரியாதை மகத்தானது. பல இடங்களில் வியக்க வைத்த அவர்களது approach.
செம
Deleteசார் இதுவர வந்த அற்புதப் பதிவுகள்ல இதும் ஒன்று...ஈவிக்கு கடமைப்பட்டுள்ளோம்...
ReplyDeleteஎனது வியப்பு உங்க தாத்தா மேலதான்....எல்லா தாத்தாக்களும் நா பாத்த வரை அவங்க மகன் பணத்த ஊதாரித்தனமா செலவிட்டு விடுவார்களோஎன பேரன்கள பேயா பார்ப்பதே வழக்கம்...எங்க தாய் வழி தாத்தா பட்டாசு வாங்கியத பாத்து தன் மருமவன் சொத்தயே கரச்சத போல பேசியது நினைவில் நிழலாடுது...
எங்க அம்மாவழிதாத்தா, தீபாவளிக்கு 25 பைசா கொடுத்து பட்டாசு வாங்கிக்கொள்ள சொல்வார். என் சொந்த ஊர் திருவண்ணாமலை. வளர்ந்தது,படித்தது எல்லாம் அங்கே தான். கார்த்திகை தீபத்திற்கு தேர்க்காசு என்று 25 பைசா கொடுப்பார். அதைத் தாண்டி துட்டு நஹி.
Deleteதாத்தனுகள பிடிச்சி
Deleteஞாபகம் வந்துடுச்சு...ஆசையில் ஓடி வந்தேன்...
ReplyDeleteவராது போன பிரேஜில் பதிப்பகம்!
ReplyDeleteஉதவி புரிந்த திருமதி ரூஸி!
தொழில் துவக்கித் தந்த எடிட்டர் சாரின் தாத்தா என ஒவ்வொரு படியும் முக்கியமான ஒன்றே!
எவ்வாறு இருப்பினும் எடிட்டர் சார் போன்ற வீரிய வித்துக்கள் எல்லா தடையைம் தகர்த்து தங்களுக்கான பாதையில் வெற்றி கரமாக பயணத்து சாதித்து இருப்பார்கள் என்பது சாதனையாளர்கள் பலரது வாழ்க்கை உணர்த்தும் பாடம்!
தாத்தாக்கு ஜே போட்ட கையோட...அப்டியே பின்னோக்கி நானும் உங்க காலத்தொலை நோக்கில உங்க தலய இடிச்சித் தள்ளிட்டே பாத்தா....சென்னை தொலைக்காட்சி துவங்கிய காலமது...ஸ்பைடர் மேன் கார்ட்டூன நண்பர்களோட ரசித்த காலமது...கெத்தா நா நம்ம ஸ்பைடர பத்தி பீலா விடுவேன்...இவன்லா எங்க ஸ்பைடர் அண்ணாச்சியோட வலத்துப்பாக்கிக்கி கிட்டக்க கூட வர இயலாதுடா டுபுக்குன்னு ஹேஹே ன்னு ஸ்பைடரா மாறி சிரிப்பேன்...ஸ்பைடர் பித்தில் கிறங்கிக் கிடந்த காலமது
ReplyDeleteநல்லவேளை அந்த மேன் கெடக்காதது...கிடச்சா அந்த மேன் இந்த மேனா போயிருக்கும்...கசகச பிரின்ஸின் அடர்த்தியான ஓவிய பாணி அப்ப பிடிச்சதா தெரில...ஓவியத்த ரசிப்பது நம்ம பாணி இல்லயே..கத தூள்கிளப்ப மழ நாள்ல நண்பன் வீட்டுத் திண்ணைல ஒரே மூச்சா படித்தது நினைவில்...அந்த ஸ்பைடர் மேன் தராதவர பாத்து நன்றி சொல்வேன் நா சந்திக்க விரும்பும் நபரா தேர்வு செஞ்சு
Deleteநான் சந்திக்க விரும்பும் VIP நீங்கள் தான் எடிட்டர் சார். இது போன்ற உங்களது ஃபிளாஷ் பேக் உங்களை நேரில் சந்தித்து கேட்க ஆசை. எனக்கு இயல்பாகவே நண்பர்களின் உறவினர்களின் பழைய நினைவுகள் கேட்பது பிடிக்கும். அதுவும் உங்களிடம் நேரில் பேசுவது எனது நெடு நாள் ஆசைகளில் ஒன்று.
ReplyDelete@ KS
Deleteஎனக்கும் கூட ரொம்ப நாள் ஆசை ஒன்று உண்டு!
எடிட்டரை மரத்தடியில், மேடையிலெல்லாம் பேச வைத்துக் கேட்டாயிற்று..! ஆனால், ஒரு பால்நிலா காயும் மொட்டை மாடியில் குளுகுளு தென்றலினூடே தன் அனுபவங்களை எடிட்டர் சொல்லச் சொல்ல, அவரைச் சுற்றிலும் ஒரு மிதமான எண்ணிக்கையிலான நண்பர்கள் சகிதம் அமர்ந்து, சூடாய் கறுப்புக் காப்பியை உறிஞ்சியபடியே ரசித்து ரசித்து கேட்க வேண்டும்!!
வாராதோ ஒரு ராப்பொழுதே?!!
செம்ம EV அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
Deleteநிச்சயமா!! நீங்க இல்லாமலா?!!
Delete// So இன்றைக்கு, இத்தனை காலம் கழிந்த பின்னே யாரேனுமொரு VIP-ஐ நான் சந்திப்பதாயின் - எனது தேர்வு திருமதி.விவியன் ரூஸியாகவே இருந்திடும் ! //
ReplyDeleteதங்களது நினைவில் இருந்து அரியவகை தகவல்கள் அவ்வப்போது சிறகடித்து பறப்பது சிறப்பான ஒரு வாசிப்பனுவத்தை ஏற்படுத்துகிறது சார்.....
தங்களது நினைவுப் பேழை ஒரு பொக்கிஷம் சார்.......
+1
Deleteஏற்கனவே எங்கோ இதைச் சொன்ன / எழுதிய நினைவுள்ளது சார் : சந்தோஷ நினைவுகளின் ஆயுட்காலம் ஜாஸ்தி !
Deleteதிரும்ப திரும்ம சொன்னாலும் சில சுவாரஸ்ய நினைவுகள் சலிப்பதில்லயே.....இது ஒரு கோணம் மட்டுமின்றி ஈர்ப்பான எழுத்து நடை கூட
Deleteமிகவும் அருமையா சுவாரசியமான பதிவு! மிகவும் ரசித்தேன்! திருமதி ரூசி கண்டிப்பாக ஒரு VIP தான் சார்!! அவரை மீண்டும் சந்திக்க வாய்ப்புகள் கிடைக்கட்டும் விரைவில் !!!
ReplyDelete+1
Deleteசிறப்பான தரமான பதிவு சார்.. காலையிலிருந்து காத்திருந்து, போனை தேய்த்து தேய்த்து பார்த்ததை சற்றும் வீணாக்கவில்லை.
ReplyDelete+1
Delete+2
Deleteஆனால் காலையில் பதிவென்று சொல்லி காக்கோ காக்குன்னு காக்க வச்சுட்டாரு எடிட்டரு!! கிர்ர்ர்...
Deleteஇன்றைக்கு நெட் ரொம்பவே படுத்தி எடுத்துவிட்டது பகலில் !
Deleteஅழகான ,அருமையான பதிவு...மனதில் பதியும் பதிவு...மீண்டும் ஓர் சி்சிறுவயதில்..
ReplyDeleteநன்றி வினாக்களை தொடுத்த செயலருக்கும்..
என்னுடைய நன்றிகளும் செயலருக்கு!
Deleteசும்மா கேட்டு வைப்போமே என்று கேட்ட கேள்விகள் இத்தனை அழகான பதிவாக உருவெடுக்குமென்று நானுமே நினைத்துப் பார்க்கவில்லை!!
Deleteநன்றி செயலரே! (எனக்கு நானே! ஹிஹி)
நன்றி EV. அருமையான அனுபவமாக அனைவருக்குமே இருந்தது.
Deleteநன்றி விஜய். அருமையான அனுபவமாக இருந்தது.
Deleteவிஜயன் சார், நான் சந்திக்க விரும்பும் VIP நீங்களே தான். இதோ குட்டியாய்ச் சில கேள்விகள். ஒற்றை வார்த்தையில் பதிலளிப்பது உங்கள் விரும்பம்.
ReplyDeleteதந்தை விட்ட பாதையில் பயணிக்க ஆரம்பிக்கும் போது உங்களிடம் இருந்த தன்னம்பிக்கையின் வீதம் என்ன ?
இதுவரை தமிழில் வந்த டெக்ஸில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று எது ?
அதேபோல லக்கியில் ஒன்று ?
கி. நா வில் எது ?
கிட் ஆர்டினில் எது ?
மொழி பெயர்ப்பில் இன்பமூட்டும் சந்தா எது ?
எதிர்காலத்தில் ஐந்து Bonelli's le storie கதைகளை இணைத்துக் கி. நா ஸ்பெஷல் வெளியிடுவீர்களா ?
விக்ரம் சாரின் மொழிபெயர்ப்பில் அடுத்த வருடம் முழுநீளத் திரில்லர் ஒன்றை வெளியிடுவீர்களா ?
அவ்வளவு தான். தொடர்ந்து செயற்பட்டு நீடித்த காலம் காமிக்ஸ் வெளியிட வாழ்த்துக்கள் சார்.
அருமையான கேள்விகள் தண்ணிலவன்!
Deleteநீங்களும் டெக்ஸ் ரசிகரா?
ஆம் STV சார், டெக்ஸ் கதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை.
Deleteஆசிரியர் பதிவு நித்தமும் போடனும் போல
DeleteSteel Anna :)
Delete////ஆம் STV சார், டெக்ஸ் கதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை./////--- அட்ரா சக்கை.... மகிழ்ச்சி...!!!
Deleteபோகிற போக்கில் தினமும் ஒரு பதிவு அவசியமாகிடும் போலப் படுது ! Veetil Irukkum Paiyyan என்ற விதத்தில் வேண்டுமானால் அடியேன் அந்த VIP எனும் பெயருக்கு உகந்தவனாக இருக்கலாமே தவிர நிஜத்தினில் நானும் உங்களைப் போலொரு காமிக்ஸ் காதலன் மட்டுமே நண்பரே !
Delete//தந்தை விட்ட பாதையில் பயணிக்க ஆரம்பிக்கும் போது உங்களிடம் இருந்த தன்னம்பிக்கையின் வீதம் என்ன ? //
Deleteசதவிகிதக் கணக்கெல்லாம் பார்த்து எதனுள்ளும் நுழையும் சொகுசெல்லாம் எனக்கு வாய்க்கவில்லை என்பதே நிஜம் ! தண்ணீருக்குள் தூக்கி வீசப்பட்ட நிலையில் உசிர் தப்ப வேண்டுமெனில் நீந்தியே தீர வேண்டுமென்ற நெருக்கடி ! அதனில் அடித்தது கடப்பாரை நீச்சலோ ; பாக்ஸ்டரோக்கோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் !
இதுவரை தமிழில் வந்த டெக்ஸில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று எது ?
DeleteOur first Tex will always be my best TEX !
//அதேபோல லக்கியில் ஒன்று ? //
DeleteSame answer நண்பரே ! நமது முதல் லக்கியே எனது பெஸ்ட் லக்கி !
Thanks vijayan sir for your answers. God bless you always... :)
Deleteஹா எனது ஃபேவரைட் சூப்பர் சர்க்கஸ்.
Delete//கி. நா வில் எது ? //
Deleteஇதுவொரு சமீப ஜானர் என்பது மாத்திரமன்றி தினுசு தினுசான களங்களுக்குள் என்னை உலவச் செய்வதும் கூட என்பதால் இங்கே நிலையான டாப் தேர்வு என்று இருப்பதில்லை ! தற்போதைக்குக் கேட்டால் காத்துள்ளதொரு புது ஆல்பத்தைச் சொல்வேன் ! அதனில் பணியாற்றிய அனுபவம் இன்னமும் பசுமையாய் உள்ளது !
//கிட் ஆர்டினில் எது ? //
Deleteகதையென்று பார்த்தால் அத்தனை அட்டகாசம் என்று சொல்ல முடியாவிட்டாலும் அந்த 'ஆர்ஹியூ ' படலம் தான் எனது பெஸ்ட் ! எதுவென்று யோசியுங்களேன் !
//மொழி பெயர்ப்பில் இன்பமூட்டும் சந்தா எது ? //
DeleteCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCCC
//எதிர்காலத்தில் ஐந்து Bonelli's le storie கதைகளை இணைத்துக் கி. நா ஸ்பெஷல்வெளியிடுவீர்களா ? //
Deleteசின்னதாயொரு நிஜத்தைப் புரிந்து கொண்டிடல் இங்கே அவசியம் என்பேன் நண்பரே ! போனெல்லியின் அந்த கிராபிக் நாவல் தொகுப்பின் சகலமுமே நமக்கு ஏற்ற கதைகள் என்று எண்ணிடாதீர்கள் ! ஒற்றை ஆண்டுக்கு மூன்றோ நான்கோ கதைகளைத் தேர்வு செய்திடவே கிட்டத்தட்ட 25 இதழ்களை அலச வேண்டி வரும் ! ஆகையால் போட்டுத் தாக்குகிறேன் என்று ஒரேடியாய்ப் போட்டுத் தள்ளிடக் கூடாதில்லையா ?
சூப்பர் சார் அத்தனை கேள்விகளுக்கும் பதில் தந்து இருக்கிறீர்கள்.
DeleteLe storie கதைகள் தொடர்பிலான விளக்கத்திற்கும், ஏனைய பதில்களுக்கும் நன்றிகள் விஜயன் சார் :)
Delete//விக்ரம் சாரின் மொழிபெயர்ப்பில் அடுத்த வருடம் முழுநீளத் திரில்லர் ஒன்றை வெளியிடுவீர்களா undefined
Delete'என் பிள்ளை ' என்பதைத் தாண்டியும் தகுதிகளை ஜூனியர் வளர்த்துக் கொள்ளும் நாளில் பேனா பிடிக்கட்டும் நண்பரே ! இன்றைய நமது அளவுகோல்கள் நிற்கும் உசரங்களை இயன்றமட்டும் எட்டிடுவதே எனக்குப் பிரதானம் - இப்போதைக்காவது !
Having said that,ஒரு லக்கி லூக் ஆல்பம் ஜூனியரின் மொழியாக்கத்தில் நடப்பாண்டில் வரவுள்ளது !
Super sir, waiting for it. :)
Deleteஅருமை தண்ணிலவன்...சார் பின்னிட்டீங்க ...நமக்கும் முதல் டெக்ஸ் அட்டகாசம்...அத மறு பதிப்ல குதறிப்புட்டோம் சோதனை முயற்ச்சியின் போது...அந்த அட்டகாச கதய மேக்சில போட்டா தூள் கிளப்புமே...அந்த முதல் இதழ் தலைப்பும் சரி...அன்றய ரெகுலர்லர்ந்து மாறி வந்த சைசும் சரி...கதை தாங்கி வந்த கருவும் சரி...இதயத்த பாரமாக்ன கத முடிவும் சரி...அட்டப் படமுஞ் சரி...தீபாவளி மலர்எனும் வார்த்தயுஞ் சரி நெஞ்சம் மறப்பதில்லை
Deleteசார் விக்ரமுக்கு மீண்டும் வாழ்த்துகள்....
Deleteலக்கி முதல் வண்ண கார்ட்டூன்..அட்டகாச அட்டயும் சர்கஸ் மோரிசும் வைளப் பல் ரீகனும் நெல்சனும் சாரை சார்லியும்..முதன் முதலா லக்கி அந்த குதிரை லூட்டி சாகசமும் அடடா
கிட்டின் கிரிமுறி விழுந்து எழுந்து சிரிக்க வைத்த இதழ்
Deleteகிநான்னா பரகுடாதான்...இதுக்கீடா இதழா சந்தேகமே...சவால் விட்டு ஆசிரியரின் அவ்விதழுக்காய் காத்திருக்கிறேன்
நெகிழ வைத்த பதிவிது சார்.
ReplyDeleteநன்றிகள் சார் !
Deleteஆசிரியருடைய ஆரம்ப கட்டத்து நாட்கள் எத்தனை சவாலானது என்பதை ஒவ்வொரு முறையும் தெளிவாகவே உணர முடிகிறது.
ReplyDeleteடின்டின்,ஆஸ்ட்ரிக்ஸ்,பேட்மேன்,ஹல்க்,பென்டாஸ்டிக் 4,ஹல்க், போன்ற எண்ணற்ற கதைத் தொடர்களை நினைக்கும்போதே குதூகலமாக உள்ளது.மார்வல் மற்றும் D.C காமிக்ஸ் வெளியீடுகள் இன்றளவும் எட்ட இயலாத உயரம் என்பதுதான் நடைமுறை எதார்த்தம்.
திருமதி.விவியன் ரூஸி அவர்களை நினைவு கூர்ந்தது மிகவும் பொருத்தமாக உள்ளது.
பிரான்கோ-பெல்ஜியம் காமிக்ஸ் உலகில் நுழைவதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்ததில் முக்கிய பங்கு அவர்களுடையது.இதை ஆசிரியருடைய எழுத்து நடையில் வாசிப்பதே அலாதியானது.
எண்ணங்கள் மனம் திறக்கும் போது ஆரவாரமாக எழுத்துக்கள் பயணிப்பதை மீண்டும் ஒருமுறை சாதித்து காட்டுயுள்ளீர்கள்.
யெஸ் யெஸ் யெஸ்.
Deleteசும்மா டிக்டேட் செய்தாலே பிழைகளின்றி தமிழில் டைப்படித்து விடும் செயலி ஏதேனும் கிட்டினால் என் பிழைப்பு இன்னும் சுலபமாகிடும் சார் !
Deleteநீளமான பதிவுகளை டைப்பிடிக்கும் சோம்பலிலேயே தவிர்க்க முனையும் மனசு ! இப்போதோ முழுநேர வெட்டி ஆபீசர் என்பதால் தாக்குப் பிடிக்கிறது !
சார்.. நீங்க பேசி வாய்ஸ் நோட் போட்டுட்டு லிங்க் குடுத்திடுங்கேன்.. உங்க பேச்சு வழக்கிலே கேட்க இன்னும் சுவாரசியமாக இருக்கும்..
Deleteவொய் வாய்ஸ் நோட்? வொய் நாட் யூட்யூப் வீடியோ?
Deleteபின்னணியில் மிக மெல்லிய அளவில் இளையராஜாவின் BGMகளில் ஏதேனுமொன்று ஒலிக்க, எடிட்டர் நெற்றியைக் கீறிக்கொண்டே பழையதை நினைவு கூர்ந்திட்டால் செமையா இருக்காது?
// சும்மா டிக்டேட் செய்தாலே பிழைகளின்றி தமிழில் டைப்படித்து விடும் செயலி ஏதேனும் கிட்டினால் என் பிழைப்பு இன்னும் சுலபமாகிடும் சார் ! // உண்மை தான் சார் கூடிய விரைவில் அந்த நாளும் வந்து விடும்.
Deleteஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
Deleteநண்பனே நண்பனே.
// வொய் வாய்ஸ் நோட்? வொய் நாட் யூட்யூப் வீடியோ? // ஆமாம் ஆமாம் நாமும் ஒரு யூ ட்யூப் சேனல் ஆரம்பிக்கலாம் சார். நமது நண்பர் கிருஷ்ணா போல அருமையாக இருக்கும்
Delete@KS
Deleteயூ-ட்யூப் சேனல் தான் ஏற்கனவே இருக்கே?!!
இப்போது தான் கவனித்தேன். ஆனால் மாதம் ஒரு வீடியோ ஆவது வரவேண்டுமே கடைசியாக வீடியோ வந்தது வெகு நாட்களுக்கு முன்பு
Deleteநேரமிருப்பதில்லை சார் ! இது போன்ற வேலைகளில் நானே தலைநுழைக்காது, வேறு யாரையேனும் பணித்துச் செய்ய வைப்பதில் எனக்குப் பிடித்தம் நஹி !
Delete//நீங்க பேசி வாய்ஸ் நோட் போட்டுட்டு லிங்க் குடுத்திடுங்கேன்.. உங்க பேச்சு வழக்கிலே கேட்க இன்னும் சுவாரசியமாக இருக்கும்..//
Deleteபார்க்கலாம் சார் ; டைப்படிக்க தம் உள்ளவரை வண்டி இப்படியே ஓடட்டும் !
இவையெல்லாமேயும் ஒரு விதத்தில் நமது சந்தோஷ நாட்களின் அடையாளங்கள் தானே ? ஓய்வுக்குப் பின்னே வீட்டில் குந்திக் கிடக்கும் நாட்களில் நானே ஒவ்வொரு பதிவையும், பின்னூட்ட ரகளைகளையும், வாசித்து பழசை அசை போட்டுக் கொள்ளமுடியும் அல்லவா ?
உண்மை தான் சார். நான் இப்போது உங்களுடைய பழைய பதிவுகளை தான் படித்து கொண்டு இருக்கிறேன். 2011, 2012 இப்போது 2013 ஆகஸ்ட் மாத பதிவுகள். அருமையாக இருக்கிறது.
Deleteசார் எழுத்தில் படிப்பதே தனி சுகமல்லவா...குமார் மீண்டு வாழ்ந்த நாட்களவை மறுவரவினால்
Delete78th
ReplyDeleteஎடி,
ReplyDeleteஅந்த பம்பை முடி ஹிஹி
ஆமாம்! அதைப் படித்தபோது எனக்கும் சிரிப்பை அடக்க முடியலை! எப்படித்தான் அந்தமாதிரி வார்த்தைகள் வந்து விழுதோ!! :)))
Delete//பம்பை முடி//
Deleteஎங்கள் பக்கத்துப் பேச்சு வழக்கு sir !
நான் எழுதும் போது எப்போதுமே தலைக்குள் தோன்றிடும் முதல் வார்த்தையையே தேர்வு செய்வது வழக்கம் ! And எழுதும் போது வீட்டிலுள்ளோரிடம் பேசுவதாய் உருவகப்படுத்தியே எழுதுவது தான் எனக்கு சாத்தியம் எனும் போது - பேச்சு வழக்குச் சொற்கள் இடம்பிடித்து விடுகின்றன !
///And எழுதும் போது வீட்டிலுள்ளோரிடம் பேசுவதாய் உருவகப்படுத்தியே எழுதுவது தான் எனக்கு சாத்தியம் எனும் போது ///
Deleteஅடடே!! இதுவும் புதுத் தகவலாய் இருக்கே!!
நன்றிகள் எடிட்டர் சார்!
யாருக்கு எப்படியோ தெரியாது - ஆனால் என்னளவில் மனசில் அன்னியோன்யம் இல்லையேல், அதனை வார்த்தைகளுக்குள் கொணர்வது அசாத்தியமே சார் !
Deleteஇந்த ஒற்றைக் காரணத்தினால் தான் நான் வேறெங்குமே எழுதப் பிரியப்படுவதில்லை !
அம்மாடியோவ்!!!
Deleteநிறைய புதிர்களுக்கான விடைகள் இன்னிக்கு வெளியே வர்ற மாதிரி இருக்குங்க சார்!! அபாரம்!!
சரிதான் விஜய்.
Deleteமொழிபெயர்ப்பு எனது தொழில் என்பதால் எல்லாவிதக் கதைகளுக்கு ஏற்ப எழுதப் பழகிடல் அத்தியாவசியம் என்றாகிப் போகிறது ! கார்ட்டூன்களுக்கொரு ஸ்டைல் ; கி.நா.களுக்கொரு ஸ்டைல் ; டெக்ஸ் வில்லருக்கொரு ஜனரஞ்சக ஸ்டைல் ; லார்கோ , டெமக்ளீஸ் போன்ற நவீனக் கதைகளுக்கு சற்றே அடக்கி வாசிக்கும் ஸ்டைல் என்று சிற்சிறு மாற்றங்களை கொணர்ந்து கொள்ள வேண்டும் ! இதோ - தற்சமயத்து 'ஒற்றை நொடி - ஒன்பது தோட்டா ' கோரியுள்ளது முற்றிலுமாக புதியதொரு பாணி !
Deleteஆனால் ஹாட்லைனிலும் , இங்கும் பேனா பிடிப்பது முற்றிலுமாய் வேறொரு அனுபவம் ! நான் நானாக மாத்திரமே இங்கே ஒலிக்க பிரியம் எனக்கு ! டெக்ஸாகவோ ; கிட் ஆர்டினாகவோ ; ரின்டின் கேனாகவோ நான் ஒலிக்கும் அத்தியாவசியம் இங்கே இல்லையெனும் போது - it's just me ! So எவ்வித பாசாங்குகளுமின்றி நேர்பட எழுத முனைகிறேன் இங்கு மட்டும் !
/// ஆனால் என்னளவில் மனசில் அன்னியோன்யம் இல்லையேல், அதனை வார்த்தைகளுக்குள் கொணர்வது அசாத்தியமே சார் !
Delete///
அதனாலே தான் உங்களுக்கு யாரையுமே சரியா திட்டி எழுத வர மாட்டேங்குதுன்னு நெனைக்கிறேன்
// நான் நானாக மாத்திரமே இங்கே ஒலிக்க பிரியம் எனக்கு ! // மற்ற எல்லா பாணியை விட நீங்கள் நீங்களாக இருக்கும் பாணிதான் அனைவருக்கும் பிடித்து இருக்கிறது சார்.
Deleteஒற்றை நொடி ஒன்பது தோட்டா வின் புது பாணிக்கு வெயிட்டிங் சார்.
Delete//அதனாலே தான் உங்களுக்கு யாரையுமே சரியா திட்டி எழுத வர மாட்டேங்குதுன்னு நெனைக்கிறேன்//
Deleteஅட இந்தக் கொரோனாவுக்குப் பின்னரும் மனசில் யாருக்கு சார் வன்மம் தோன்றிடப் போகுது - திட்டும் முகாந்திரங்களை உருவாக்க ? இருக்கும் வரையிலும் நட்பாய் ஜாலியாய் இருந்து கொள்வோமே என்பதே இப்போதெல்லாம் தோன்றும் சிந்தனை !
நிறைய போதி மரங்களை இந்த வைரஸ் நட்டு வைத்துள்ளதென்பேன் !
உண்மையே!
Deleteகொஞ்சநஞ்ச
கோப உணர்வையும்
கொரோனா
கொன்றொழித்தது
உண்மையே!
சார் அருமை....
Deleteஒற்றை நொடி ஒன்பது தோட்டா இபவ தொட்டுப் போகும் கென்னடி போல எனும் போதும் ஐந்து பாகம் எனும் போதும் கூடிய ஆவல் ...இப்ப மேலும் கூடுது ...பரபரப்பான ஓர் பக்கத்த காட்லாமில்லியோ
//பம்பை முடி//
Deleteசிறுவயதில் விருதுநகர் செல்லும் போது எனது ஆச்சி (அம்மாவின் அம்மா) இப்படி அடிக்கடி சொல்வார்கள்.
இதனை நீங்கள் ஞாபகபடுத்தியதற்கு நன்றி சார்.
அப்பிடியே அந்த புத்தக திருவிழாவில் எடுக்கப்பட்ட தொழில் அதிபரின் ஒரு போட்டோவும் போட்டிருந்திருக்கலாம்..
ReplyDeleteஏன் - பதிவே சிரிப்பாத்தானே இருந்துச்சு?!! :D
Deleteஇது என்னமோ அவரா கேட்ட கேள்வி மேரி தெரிலியே .?
Deleteஹஹஹஹ..ஈவி ஹீரோவ பாத்து
Deleteகுருநாயரும் சிஷ்யபிள்ளையும் பாடுவதை இதுவரை கேட்டது இல்லை (நல்ல வேளை ஆண்டவன் காப்பாற்றினார் என சந்தோஷமாக உள்ளது). :-)
ReplyDeleteஆனால் நண்பர்கள் சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன், அவர்கள் பாடியதை கேட்டு மக்கள் ஊரையே காலி செய்து விட்டு போயிட்டாங்களாம் :-) வழக்கமாக தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கொடுப்பாங்க, இந்த ஊர் மக்கள் தங்களுக்கு தண்டனை கொடுத்து கொண்டார்கள் :-) ஆமாம் ஆரம்பத்திலேயே ஊரைவிட்டு துரத்தாது தங்கள் தவறு என்பதால் :-)
விஜயன் சார், பாட்டு போட்டி மட்டும் வச்சிடாதிங்க, உங்களுக்கு கோடி புண்ணிமா போகும்.கை கால் எல்லாம் பிடிச்சு கேட்டு கொள்கிறேன் :-)
(மைண்ட் வாய்ஸ் ஒரு வேளை ஆசிரியர் பாட்டு போட்டி நடத்தினால்? ஸ்டீலோட சுனாமியையே தாங்கிவிட்டோம் இத தாங்க மாட்டோமா :-))
பரணி ஆனாலும் உங்களுக்கு தைரியம் அதிகம்தான்.
Deleteலிஸ்டில் இன்னொருத்தரும் இருக்கார் - மேச்சேரி ஜெயக்குமார்! பன்மொழி பாடகர்!! சத்தமில்லாம ஸ்லீப்பர் செல் மாதிரி செயல்படறதுல கில்லாடி!
Deleteஅவர் மலையாளத்துலயும், தெலுங்குலயும் பாடறதையெல்லாம் கேட்டு ரசிக்க இரண்டு காதுகள் போதாது!!
அந்த அனுபவம் உங்களுக்கு விரைவிலேயே கிட்டிடக் கடவது!
விஜய் @ போன வாரம் தான் எங்கள் காதுகளை கடிச்சு கொதறி விட்டீங்க... அதனால் யாரு பாடினாலும் சந்தோஷமாக இருப்போம். நன்றி விஜய் எங்கள் காதுகளை கடித்து துப்பியதற்கு :-)
Deleteவிஜய் @ நன்றி ஸ்லீப்பர் செல் பாடகர் பற்றி சொன்னதற்கு. அவர்கிட்டேயும் இனி கவனமாக இருக்கிறேன் :-)
Deleteஅப்பிடியே அந்த அதிகாரியின் அறிமுக படலம் பத்தியும் சொன்னீங்கன்னா கொஞ்சம் வசதியா இருக்கும்..
ReplyDeleteஏன் - பாயாசத்துக்கு ஐட்டம் குறையுதோ ?
Deleteவெறும் சட்டியையே ரெண்டு வாரமா முறைச்சு பார்த்துட்டு இருக்க வேண்டியிதா இருக்கு.்்்்்்
Deleteவெறியை தணிக்க தினமும் ரெண்டு மூனு தடவை பச்சோந்தி பகைவனை படிச்சு மனசை சமனப் படுத்திட்டு இருக்கேன்.்
யாராச்சும் 'துயில் எழுந்த பிசாசு ' புக்கை ஒரு நடை கொண்டு போய் பாயாசக்காரப் பாசக்காரரிடம் ஒப்படைக்கப் பாருங்களேன் guys ?
Delete// யாராச்சும் 'துயில் எழுந்த பிசாசு ' புக்கை ஒரு நடை கொண்டு போய் பாயாசக்காரப் பாசக்காரரிடம் ஒப்படைக்கப் பாருங்களேன் guys //
Deleteஏன் சார் ஏன் இப்படி:-)
ரம்மி அப்புறம் துயில் எழுந்து விட்டார் தாங்க முடியாது :-)
ரம்மி எடுத்தார்னா டைகர்க்கு டயனோசரோட மோத தெம்பில்ன்னு நெனச்ச கதாசிரியர வறுத்தெடுத்து பாயாசத்ல போட்ற போறார்
Deleteஅடுத்த பதிவில் அப்படியே அந்த ஏப்ரல் மாத ஹாட்லைன் மற்றும் மே மாத இதழ்கள் என்ன என்று பகிரவும் சார். தோர்கல் தவிர வேறு என்ன இதழ்கள் என்று அறிய ஆவல்.
ReplyDeleteஇதை மறந்து விட்டேனே ஏப்ரல் மாத சர்ப்ரைஸ் இதழ் பற்றியும் சொல்லுங்கள் சார்.
இந்த பதிவில் பதில் அளித்தாலும் பரவாயில்லை.
நன்றி
குகையின் மறு முனையும் , வெளிச்சத்தின் கீற்றும் தெரியட்டும் சார் ! அப்புறமாய் அவற்றை ஏக் தம்மில் பார்த்துக் கொள்ளலாம் !
Deleteஅப்போ சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ் ஆகவே தொடர போகிறது. வெளிச்சத்திற்கு காத்து இருப்போம். இதுவும் கடந்து போகும்.
Deleteகுமார் நல்ல கோரிக்கை.
Deleteவிஜயன் சார்,
நம்பிக்கை தானே வாழ்க்கை சார் அதனால் ஏப்ரல் இதழ்களை மற்றும் கோடைமலர்கள் பற்றி அவ்வப்போது எழுதுங்கள் சார். அது எங்களை இன்னும் உற்சாகமாக (நோய் எதிர்ப்புச் சக்தியுடன்) வைத்து கொள்ள உதவும் சார்.
////கோடைமலர்கள் பற்றி அவ்வப்போது எழுதுங்கள் சார்.//// +123456689!
Deleteகோடைமலர் என்றாலே குதூகலம் தான் நண்பர்களே! வைகிங் தீவு மர்மத்தில இருந்த "கோடைமலர்"-என்ற வார்த்தைல ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்தது. தொடர்ந்து எல்லா கோடைமலர்களையும் தேடிப்பிடிக்கனும் என்ற ஆவலும் தான். ஒவ்வொரு
கோடைமலராக தேடிப்பிடிக்கும் போதும் மனசு துள்ளும் உற்சாகத்துடன்... பின்னாளில் கோடைமலர்கள் பற்றிய ஒரு கட்டுரை எழுதி சிறப்பிக்கவும் செய்தேன்.
இப்பவும் கோடைமலர் என்றதும் அதே உற்சாகத்துடன் துள்ளுகிறது உள்ளம்....!!!
எல்லாம் நல்லபடியாக க்ளியர் ஆகி கோடைமலர் எப்பவும் போல மே மாசத்தில் வெளிவரணும்னு மனசு துடிக்கிறது.
உண்மை தான் பள்ளி விடுமுறை நாட்கள் என்றாலே ஞாபகம் வருவது கோடை மலர்கள் தான். குண்டு புத்தகங்கள் பல்வேறு வகையான கதைகள். எமது பால்ய திற்கும் நமது புத்தகங்களுக்கும் எப்போதுமே ஒரு நெருக்கமான தொடர்பு உண்டு. STV சொன்னது போல கோடை மலர் என்று கேட்டாலே மனம் துள்ளி குதிக்கும்.
Deleteஇந்த வருடம் வரவுள்ள தோர்கல் கோடைமலரை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன். மற்றும் ஒரு காரணம் மேக்கிங் ஆஃப் த புக், பாக்ஸ் செட்டா அல்லது 5 (?) கதைகளும் ஒரு இதழாக குண்டு புத்தகமாகவா என்ற ஆர்வம் இதழ் கைகளில் வந்த பிறகும் குறையாது.
Deleteஆமா...கோடை மலர்னாலே அந்த ஸ்பைடர் தாங்கி வந்த பாக்கட் சைச மறக்க ஏலாதே....கோடை மலர்னாலே குதாகலம்..லீவும் தாங்கி வந்த நாட்கள் ...வழவழப்பான கண்ணாடி அட்டை...குண்டான பாக்கட் சைஸ்...அரைடஜன் கதைகள்....லீவுக்கான பொழுது ஈர்ப்பு...எல்லாத்துக்கும் மேல....அந்த கோடை மலர்ங்ற வார்த்தை...அது எப்படி உருவாச்சின்னு சொல்லுங்களேன் சார்
Deleteதோர்கள் பாக்ஸ்ல அல்லது ஹார்டு பௌண்டு அட்டைல...எல்லா கதைகளின் தலைகள அன்றய 86...87...ஆர்ச்சி ஸ்பைடர் மேன்...ஈகிள் மேன் போன்ற நாயகர்கள அட்டயெங்கும் நிரவினாற் போல தெளித்து வைத்தால் தூள்....எல தம்பி உருப்படியா ஆர்வத்த அடக்கமாட்டாம கேட்ருக்க...அருமைல
Deleteசார் ஹாட் லைனயாவது கண்ல காட்டலாமே
Delete140வது
ReplyDelete///நிறைய போதி மரங்களை இந்த வைரஸ் நட்டு வைத்துள்ளதென்பேன் !///
ReplyDeleteஆமாங்க சார்! நீண்ட வருடங்களுக்கு பிறகு மிக்கைல் நைமி, கலீல் ஜிப்ரான், ஜே.கே., ஓஸோவெல்லாம் படிப்பதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது!
இந்த வரிசையில் ஒரு காமிக்ஸ்ம் இடம் பிடித்துள்ளது!
(நி.நி.)!!!
ஆனாலும் அந்த குதிரைய தூக்கில போட்ட காட்சி சாகும் வரை மறக்கவே முடியாதுங்க சார்!
உலகெங்கும் பேதி மரங்களும்
Deleteத
நம் தளமெங்கும் போதி மரங்களும்
விஜயன் சார், பதிவுக்கு மிகவும் பொருத்தமான தலைப்பு "ஒரு பட்டாம்பூச்சியின் பரிணாமம்"!
ReplyDeleteவிஜயன் சார், நான் டெக்ஸின் இரசிகன் என்பது போல டைகரின் இரசிகனுமே. சிறுவயதில், இரத்தக்கோட்டையிலொரு பாகமான, மேற்கே ஒரு மின்னல் மட்டுமே படித்தேன். ஆனால் இரண்டு வருடத்திற்கு முன்பாக ஹார்ட் பைன்டில் முழு வண்ணத்தில் இரத்தக்கோட்டையை வாங்கி மகிழ்ந்தேன். டைகரின் மின்னும் மரணம், தங்கக் கல்லறை போன்ற அருமையான கதைகளைத் தவறவிட்ட எனக்கு இரத்தக்கோட்டை தெம்பூட்டியது. இதில் சித்திரங்களை விடவும் வசனங்களே அதீத பலமானவை. ஆழமான, இலக்கியத் தன்மையுள்ள, கலைநயமான, மனதிற் பதியக்கூடிய வசனங்கள் அவை. டைகர் - குரோ உரையாடல், செவ்விந்தியர்களின் வசீகரிக்கும் பேச்சுக்கள், ஒற்றைக்கண்ணனின் தந்திரங்கள், டைகரின் விவேகம் செறிந்த நகர்வுகள், குரோவின் ஒப்பற்ற தியாகம், படையதிகாரிகளின் அதிகார மோகம், அதிகாரத்துஷ்பிரயோகம், கோசைசின் பக்குவம், கிரேக்கின் கடைமையுணர்வு, இறுதியாக குவானாவின் வீழ்ச்சியுடன் மலரும் நிலையான சமாதானம் என்று மனதில் நிலைத்து நிற்கும் இக்கதையைக் கைப்பற்றியது ஒரு நல்ல அனுபவம் சார். அதேபோல தோட்டாத் தலைநகரமும் சிறப்பானதொரு கதை சார்.
ReplyDeleteஅருமையாக சொன்னீர்கள் நண்பரே. தோட்டா தலைநகரம் டைகர் உடைய under rated கதைகளில் ஒன்று. ஒரு அட்டகாசமான one shot.
Deleteஇதே போல மற்ற கதைகளையும் கொண்டு சென்று இருந்தால் இப்போதும் நாம் பல டைகர் கதைகளை படித்து கொண்டு இருப்போம்.
வடக்கு தெற்கு போரில் தொடர்ந்து சுற்றி வருவதே டைகர் உடைய குறை என்று நமது ஆசிரியரே கூறினார்.
சூப்பர் சர்க்கஸ், தங்க கல்லறை , கார்சனின் கடந்த காலம், மின்னும் மரணம் என்று பல சிறப்பான கௌபாய் சாகசங்களை படித்து இருந்தாலும் இன்னும் அதே ரக கதைகளை மனம் மீண்டும் மீண்டும் நாடுவது ஏனோ??
Cowboy காதலர்களாக இருப்பதால் தான் குமார் சார் :)
Deleteஅருமை தண்ணிலவன்...குமார் சிறுவயதில் நாம் பாரா புதிய செவ்விந்திய கலாச்சாரம்...குதிரைகள் பாலைவனங்க அப்டியே இன்று வர தொடருது...இதுல நம்ம டெக்சும் டைகரும் வேற லெவல்....கார்சனின் கடந்த காலம் வேற வேற லெவல்
Deleteநன்றி ஸ்டீல் அண்ணா, கார்சனின் க. காலம் வாசித்தேன். கார்சனின் நிறைவேறாக்காதல், நெருக்கமாக நண்பனின் துரோகம், டெக்ஸ் - கார்சன் நட்பு, அப்பாவிக் கும்பலின் அக்கிரமங்கள், இறுதியாக நட்புக்கும் குடும்பத்துக்குமாக உயிரை விடும் நண்பன் என்று, மறு மறு வாசிப்புக்கு உட்படுத்தக்கூடிய கதையது.
Deleteகோவிட்-19, லாக்டவுனும் நாசமா போக.
ReplyDeleteLess tension மாவீரர் கூல் டவுன்
Deleteஉண்மை மாவீரர்!
Deleteஇன்னும் 14 நாட்கள் லாக்டவுனை நீடிக்க மருத்துவர் குழு பரிந்துரை செய்து இருக்காங்க.
நடப்புகளை பாரத்தா...டென்சன் கூடிட்டே தான் போகுது!
நாம இன்னும் பல ஆயிரம் காமிக்ஸ் படிக்க இந்த லாக் டௌன் முக்கியம்.
Deleteகோபமோ டென்ஷனோ தேவையில்லை நண்பர்களே.
இப்பயே பாக்கனும்ல
Deleteபுரிகிறது மக்கா. தற்போது வேறு வழியில்லை. பொறுமையா இன்னும் கொஞ்ச காலம் இருப்போம்.
Deleteஹாட் லைனாவது
Deleteநான் சொன்னது லாக் டவுன் பற்றில.
Deleteஆசிரியர் அவ்வப்போது
வரவிருக்கும் இதழ்கள் மற்றும் ஹாட் லைன் பற்றி கண்டிப்பாக கண்களில் காண்பிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
எனது விருப்பமும்
Deleteவிருப்பமெல்லாம் சரி தான் சார் ; ஆனால் இந்த ஆபீஸ்...ஆபீஸ் என்பதிலுள்ள டிசைனர்களின் சிஸ்டங்களில் தான் எல்லா டிஜிட்டல் கோப்புகளும் உள்ளன ! திடு திடுப்பென பூட்டைப் போட்டுவிட்டு வந்திருக்கும் நிலையில், ஓட்டைப் பிரித்து ராவில் ஆபீசுக்குள் இறங்கி, file களை யாராச்சும் காப்பி பண்ணித் தந்தால் தான் உண்டு ! அதுவரைக்கும் ஹாட்லைன் ; கோல்ட்வட்டம் ; மிதசூட்டுச் சதுரம் எல்லாமே காத்திருக்கத் தான் வேணும் !
Deleteஏதாவது பார்த்து செய்யுங்கள் சார் :-)
Deleteடிஜிட்டல் கோப்புகள் தேவை இல்லை சார் உங்கள் நினைவில் இருப்பதை எழுதினால் போதும்
Deleteஅடுத்த மாத இதழ்கள் எனனன்னவது
Deleteசுரேஷ் சந்த் சாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDelete������������������
வாழ்த்துகள் சுரேஷ் சந்த் சார்.
Deleteஹூம்... கடைசீல இந்த சூனாபானா எதிர்காலம் எனதேல்லாம் படிக்க வேண்டியதாப் போச்சி.!!
ReplyDeleteயா.பெ.இ.பெ.இ.வை !
Deleteஅவரு படிக்க யார் காரணம்னு கேட்டு பாருங்கள்
Deleteஅருமையான, முக்கியமான பதிவு சார்.
ReplyDeleteஉங்களது ஆரம்ப கால முயற்சிகள் தெளிவாக பதிவு செய்து இருக்கிறீர்கள்..
பொழுது போகணுமே சார் - எனக்கும்..?!
Deleteலாக் டவுனை பயன்படுத்தி, புலன் விசாரணையை படிக்கிறேன்.
ReplyDeleteகாலத்தின் கட்டாயமோ ?
Deleteவிரைவில் பாகம் 2 ஐ எதிர் பார்க்கிறேன் சார்...
Deleteகாசா - பணமா ? எதிர்பார்ப்பு தானே பழனி ? அதிலென்ன தப்பு ?
Deleteஒருசிறியஅறிமுகத்திற்க்குப்பிறகுஅந்த அதிரடிவீரர் ஹெர்குலிஸ் இதழைமுதலிலும் நமதுதற்போதைய இதழ்களை பிறகும் விவியன் ரூஸிஅம்மையாரிடம்தாங்கள்கொடுக்கஅம்மையாரின் உணர்வுகளை அருகிலிருந்து பார்க்கஅஆசை கரூர்ராஜ சேகரன்
ReplyDeleteஅதிரடி வீரர் ஹெர்குலிஸ் பெரிய எதிர்பார்பில் நான் நாலாம் வகுப்பு படிக்கயில் வந்த கதை...மீன்று நாலு வருடங்களுக்கு முன்னர் கிடைத்தது...நல்ல நக்கலாக செல்லும் அதிரடிக் கதை
Deleteநான் சந்திக்க விரும்பும் VIP , விடிய விடிய இல்லாது விடினும், பத்து நிமிடங்கள் என்றாலும் மறுமுறை ஒரே ஒரு முறையேனும் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களை சந்தித்து உரையாடிட சந்தர்ப்பம் கிட்டின், என் ஜென்ம சாங்கல்யம் அடைவேன்.
ReplyDeleteபி.கு; அவரவர் சந்திக்கவிரும்பும் VIP பற்றியும் இங்கே பகிரலாமே ? Work from Home என்றில்லாத வெட்டி ஆபீசர்கள் நாமெல்லாம் இந்நேரத்துக்கு பாத்திரங்களைக் கழுவித் தந்து, வீட்டையெல்லாம் பெருக்கி முடித்திருப்போம் தானே ?//
ReplyDeleteநான் சந்திக்க விரும்பும் VIP "நீங்கள் தான் சார்".
Good morning to all.
ReplyDeleteநான் சந்திக்க விரும்பும் VIP இசைஞானி இளையராஜா.
ReplyDeleteஎனக்கொரு சான்ஸ் கேளுல
Deleteமுயற்ச்சிப்போம் 2021 சென்னைபுத்தகதிருவிழாவிற்க்கு வரும்போது....
Deleteஒரு முறை எப்படியாவது dargaud அலுவலகத்திற்க்கு சென்றுவரவேண்டும்.நண்பன் sriram இத்தாலியில் உள்ள நமது டெக்ஸ்வில்லர் அலுவலகம் சென்று ஓவியர்களை நேரில் சந்தித்து நமது இதழ்களில் அவர்களது கையெழுத்துக்களை வாங்கி எனக்கு பரிசளித்துள்ளார்...விரைவில் அங்கு செல்வதாக இருந்த நிவையில் இப்போது நிலவரமே தலைகீழ். சகஜநிலைக்கு திரும்பியதும் நிச்சயமாக எனது ஆதர்ஷ ஓவியர் வான்ஸ் அவர்களின் காலடிபட்ட அந்த அலுவலகத்திற்க்கு செல்ல வேண்டும்...இறைவன் அருள் இருந்தால் விரைவில்....
ReplyDelete