நண்பர்களே,
வணக்கம். ச்சை...இப்போல்லாம் சிகப்பே எனக்குப் புடிக்க மாட்டேங்குது !! அட்டைப்படங்களில் கண்ணைப் பறிக்கும் அந்த நிறமானது - வரைபடத்தில் அப்பி நிற்கும் போது அடிவயிற்றைக் கலக்குகிறது ! எங்கள் மாவட்டமோ அந்தப் பளீர் சிகப்பில் இப்போதைக்கு மினுமினுப்பதால் - 33% ஆட்பலத்துடன் இயங்கும் அனுமதி மட்டுமே நமக்குத் பொருந்திடுகிறது - at least இந்தப் பதிவை டைப்பத் துவங்கியுள்ள சனிக்கிழமை சாயந்திரம் வரையிலும் ! So ஏரோபிளேனிலிருந்து இறங்கவுள்ள காதலியைக் காணக்காத்திருக்கும் கோலிவுட் ஹீரோவைப் போல, அலையடிக்கும் ஆர்வத்தோடு ஆபீஸையும், எனது கேபினையும், மேஜையையும் மறுக்கா தரிசிக்க crossed fingers சகிதம் காத்திருக்கிறேன் ! நடுவாக்கில் புதிதாய் ஏதேனும் ஆப்புகள் அறிமுகமாகாத வரைக்கும் ஷேமமே !! மூன்றில் ஒரு பங்கு ஆட்பலமே சாத்தியம் என்பதால், காத்திருக்கும் 2 புக்குகளின் அச்சுப் பணிகளையும் மெது மெதுவாய் முடித்த கையோடு, மெது மெதுவாய் பைண்டிங்கையும் முடித்திடும் பட்சத்தில் மே 15-க்குள் ஏப்ரல் இதழ்களை உங்களிடம் ஒப்படைத்தது போலிருக்கும் ! Once the books are ready - நம்மவர்கள் உங்களை அழைத்து 'புக்குகளை அனுப்பிடலாமா ?' என்று கேட்டறிந்து கொள்வார்கள் ! இசைவு சொல்லும் நண்பர்களுக்கு மட்டும் கூரியர்கள் / பதிவுத் தபால்கள் அனுப்பிட ஏற்பாடு செய்திடவுள்ளோம் ! கொஞ்சம் தாமதித்துப் பெற்றுக்கொள்ள விரும்பும் நண்பர்களுக்கு இந்த Lockdown 3.0 முழுமை பெற்ற பின்னேயோ / அல்லது அவர்கள் விரும்பும் வேளைதனிலோ, டெஸ்பாட்ச் செய்திட உத்தேசித்திருக்கிறோம் !! புனித தேவன் மனிடோவே வழிகாட்டிட வேண்டும் - வரலாறு கண்டிரா இந்த இக்கட்டுகளிலிருந்து வெளிப்பட !! எது எப்படியோ - லீவு முடிஞ்சு பள்ளிக்கூடம் போகும் போது, உம்மணாம்மூஞ்சி smurf ஆக இல்லாது, பீப்பீ ஊதும் smurf ஆக அவதார் எடுப்பேனென்று சத்தியமாய் நினைத்துக் கூடப் பார்த்ததில்லைடா சாமீ ! காத்திருக்கும் வாரம் முதலாய் இயல்புநிலைமை சிறுகச் சிறுகத் திரும்பிடும் பட்சத்தில், நமது தளத்துக்குமே back to the normal comics routine என்பதைக் கொணர்ந்தாக வேண்டும் ! So அதற்கு முன்பாய் last of the freewheeling stuff - இப்போதும் சில வாரங்களுக்கு முன்னே முன்வைக்கப்பட்டதொரு கேள்வியினைக் கையில் எடுத்துக் கொண்டு ! And முன்கூட்டிய எச்சரிக்கை ப்ளீஸ் - தொடர்வதில் காமிக்ஸ் சார்ந்த தகவல்களை எதிர்பார்த்திடுவோராய் நீங்கள் இருந்திடும் பட்சத்தில் - best to give this a skip ! And ஆஞ்சநேய வால் ahead ! Caution advised !!
கேட்கப்பட்ட கேள்வி : //போக விரும்பும் நாடு எதுவோ ?//
வேறென்ன செய்துள்ளதோ, இல்லையோ - நமது சினிமாத்துறையானது நம் மண்டைகளில் நிறையவே cliche-க்களை ஆழமாய்ப் பதிவு செய்துள்ளது ! ஏனென்கிறீர்களா ? - இந்தப் பதிவின் இறுதியில் புரியும் பாருங்களேன் !
ரஷ்யா !! அந்நாட்களது அட்லஸ்களைத் திறந்து வைத்துப் பார்க்கும் போது, பச்சையும், பிரவுணும் கலந்த வர்ணத்தில் 'பப்பரக்கா' எனப் பரந்து விரிந்து கிடக்கும் ஒரு தேசம் U.S.S.R என்ற பெயரில் கம்பீரமாய்த் தோற்றம் தருவது 60's & 70's & 80's kids-களுக்கு (!!!) மட்டுமே தெரிந்திருக்கும் ! இன்றைக்குப் போல நெட்டும் கிடையாது ; உலகமயமாக்குதலும் கிடையாதெனும் போது - எப்போதாவது கண்ணில்படும் புக்குகளே புது நாடுகளுக்கான திறவுகோல்களாக இருப்பது அன்றைய வாடிக்கை ! மறைந்த குஷ்வந்த் சிங் அவர்கள் எடிட்டராக இருந்த The Illustrated Weekly of India பத்திரிகையினிலும் சரி, Sputnik என்றதொரு சோவியத் ஏட்டிலும் சரி, மிரட்டலான அந்த வல்லரசின் பெருநகரங்களை ; வாழ்க்கை முறைகளை ; இராணுவ அணிவகுப்புக்களை அட்டகாசமான black & white போட்டோக்களில் ரசித்த தலைமுறையினில் நானும் ஒருவன் ! தொண்ணூறுகள் புலர்ந்த சமயம், பிறந்த நாள் கேக்கைப் பசியோடிருக்கும் பசங்கள் கைகளில் ஒப்படைத்தால் என்ன நடக்குமோ - அதுவே U.S.S.R எனும் அந்த மெகா தேசத்துக்கு நிகழ்ந்தது ! ஒவ்வொரு மாநிலமும், திக்குக்கு ஒன்றாய்ப், புதுப் புதுப் பெயர்களுடனான புதுப் புது தேசங்களாய்ப் பரிமாணம் கண்டு கழன்று கொள்ள, மையமாய் ரஷ்யா என்றொரு துண்டு மட்டுமே எஞ்சியிருந்தது ! நான் போக நினைக்கும் தேசமும் அதுவே !
இதில் கொடுமை என்னவெனில், அந்த மண் எனக்குப் புதிதே அல்ல ; 15 ஆண்டுகளுக்கு முன்னமே சில பல தடவைகள் அங்கே குப்பை கொட்டியும் உள்ளேன் தான் ! அன்று கொட்டிய குப்பையின் மீதங்களையேனும் தேடும் பொருட்டாவது அங்கே மறுக்கா சென்றிட விழைகிறது மனசு ! புதிர்களும் போதும், பீடிகைகளும் போதும் என்று படுவதால் போன ஊருக்கே மறுக்காவும் போகும் ஆர்வத்தின் பின்னணியைப் பற்றிச் சொல்கிறேனே ?
தொண்ணூறுகளின் துவக்கம் முதலாய் கேபிள் டி-வியின் வருகை ; ஏராளமான தமிழ் சேனல்களின் துவக்கம், என்ற மின்னணு ஊடகத்தாக்கம் சுனாமியாய் துவங்கிய போது, நமது காமிக்ஸ் கண்ட தள்ளாட்டம் ரொம்பவே ஜாஸ்தி ! அச்சுத் தொழிலிலும் கைக்கும்-வாய்க்கும் சரியாக இருந்தாலே பெரும்பாடென்ற நிலையில் ஓடி வர , புதிதாய் ஏதேனும் தொழில் செய்தே தீர வேண்டுமென்ற இக்கட்டு எனக்கு ! எதை எதையோ குடாக்குத்தனமாய் முயற்சித்தவன், இறுதியில் நாம் சார்ந்திருக்கும் அச்சுத் தொழிலுக்குத் தேவையான secondhand மிஷினரி சமாச்சாரங்களை இறக்குமதி செய்து, இங்கு வைத்துச் சீர் செய்து, அப்புறமாய் விற்பனை செய்வதென்று தீர்மானித்து, கண்ணுக்குத் தெரிந்த திக்கில் எல்லாம் கற்களை வீச ஆரம்பித்தேன் ! 1995 முதலாகவே துவங்கிய இந்த முயற்சி ஒரு வருஷத்திற்குள் சூடு பிடிக்கத் துவங்கியது ! ஆரம்ப நாட்களில் தென் கொரியாவில் ஒரு விற்பனையாளரைப் பிடித்து அங்கிருந்து இறக்குமதி செய்யத் துவங்கினோம் ! நாளொன்றுக்கு மனுஷன் 20 வாட்டியாவது போன் போட்டு 'விற்பனைக்கு அது உள்ளது ; இது உள்ளதென்று; காதில் தக்காளிச் சட்னி வழியும் ரேஞ்சுக்கு ப்ளேடு போடுவார் ! So ஒரு சுபயோக சுபதினத்தில் நானும் சியோல் நகரில் போய் இறங்கி, அவரைச் சந்தித்த பிற்பாடு, ரயில்வண்டி நகரத் துவங்கியது ! சும்மா 'சர் சர்ரென்று' அடிக்கடி கொரியாவுக்குப் பறக்க ; அங்கே மிஷின்களைப் பார்வையிட்டு, விலை பேசி வைத்த கையோடு ஊருக்குத் திரும்பி, அவற்றை உள்ளூர் பிரஸ்களுக்குப் பேசிவிட்டு, இடையில் ஒரு கமிஷனை வைத்து வியாபாரம் பார்ப்பது - என்று பணிகள் சூப்பராய் ஓடிய போது - சும்மா 'ஜிலு ஜிலு' தென்றல் வீசும் வேளையினில் ரம்யமானதொரு நதியினில் படகுச் சவாரி போவது போலத் தென்பட்டது தான் ! ஆனால் அக்கட இருந்த வியாபாரியோ - பசுத்தோல் போர்த்திய கரட்டாண்டி என்பதை அவன் என்னை ஓட்டாண்டியாகிய வேளையில் உணர்ந்திட்ட போது - இ குஞ்சுகோபன் நாயர் சவாரி செஞ்சுக்கினு இருந்தது கூவமெனும் வல்லிய 'கம கம' நதியினில் என்பது புரிந்தது ! மொத்தமாய் ஓராண்டுக்கு செய்திருந்த வியாபாரத்திலான நமது கமிஷனை திவ்யமாய் 'ஏவ்வ்' என்று ஏப்பம் விட்ட கையோடு கழன்று கொண்டிருந்தான் ! தவிர, நேரில் போயிருந்த சமயம் காட்டிய பொருள் ஒன்றாகவும், வந்து சேரும் பொருள் வேறாகவும் அமைந்து போக - இங்கே வாடிக்கையாளர்களிடம் கலர் கலராய் BATA சப்பல்ஸ் மாலைகள் ஏகமாய் வாங்கிட நேர்ந்தது ! இந்தக் கூத்துக்களுக்கு மத்தியில் காமிக்ஸ் வெளியிடும் அந்தர்பல்டிக்களுமே அரங்கேறின தான் என்றாலும், கபாலத்தினுள் குடியிருந்த ஓராயிரம் பிக்கல் பிடுங்கல்கள் முன்னுரிமை பெற்று வந்தன !
மொத்தத்தையும் சமாளித்து முடித்திருந்த போது - இது நல்லதொரு தொழில் தான் ; ஆனால் மறுபக்கம் இருக்கக்கூடிய நமது பார்ட்னர் யோக்கியனாய் இருத்தல் தான் ரொம்ப ரொம்ப முக்கியம் என்ற ஞானோதயம் புலர்ந்திருந்தது ! என்ன - அந்த போதி மரத்தைத் தேடிப் பிடிக்க நான் தந்த விலை தான் நிறைய !! தொடர்ந்த நாட்களில் எனது நிழலைக் கூட நம்பப் பயமாக இருந்த நிலையில், ஐரோப்பா & அமெரிக்கா பக்கமாய்க் கவனங்கள் திரும்பின - - 'வெள்ளையா இருக்கிறவன் ஆட்டையைப் போட மாட்டான் !' என்ற சீரிய சிந்தனையில் ! இன்டர்நெட்டின் வருகையினைத் தொடர்ந்து ஆங்காங்கே நிறையவே புது தொழில்த் தொடர்புகள் கிட்டிட, ஒரு மாதிரியாய் நாட்கள் ஓட்டமெடுத்தன - கொஞ்சம் வரவுகளோடும், நிறைய செலவுகளோடும் ! ஒரு கட்டத்தில் யாரையும் நம்புவதில்லை என்ற தீர்மானத்தில், சுண்டைக்காய் வாங்குவதாய் இருந்தாலுமே, சுமைகூலியைப் பற்றிய தயக்ககளின்றி, அயனாவரம் போய்வரும் பாணியில் ஐரோப்பாவுக்கு, ஷண்டிங் அடிக்க வேண்டிப் போனது ! ஐரோப்பாவின் இண்டு இடுக்குகளையெல்லாம் சுற்றிய அந்தக் காலகட்டத்தில், கொஞ்சமாய்ப் பணத்தையும், நிறைய நட்புக்களையும், கணிசமாய் அனுபவங்களையும் ஈட்டியிருந்தேன் ! தில்லாலங்கடிகளுக்கு தேசிய எல்லைகள் கிடையாது ; கையில் கத்தியோடும், கிண்ணத்தில் தண்ணியோடும் , மழிக்க வாகான மண்டைகளைத் தேடி, உலகெங்கும் வியாபித்துக் கிடக்கும் சீரிய தொழில் முனைவர்கள் அவர்கள் என்பதையும் புரிந்து கொண்டேன் ! சும்மாவே நம்ம மண்டை டாலடிக்கும் & ஏற்கனவே கொரியாவில் ஒருத்தன் ஒரு பாதியை செம சுத்தமாய் மழித்திருந்தான் ! இந்த அழகில் மிச்சம் மீதியையும் இந்த வெள்ளைக்கார புண்ணியவான்களிடம் இழந்து நிற்கக்கூடாதே என்ற பயத்தை பொருட்களை வாங்கும் ஒவ்வொரு முறையும் அடிவயிற்றில் கட்டிக்கொண்டே சுற்றி வந்தேன் !
நாட்களும், வருடங்களும், நகன்றன ! 'நெல் எது ? உமி எது ?' என்று பகுத்தாய ஒரு மாதிரியாய்க் கண்டு கொண்டேன் என்ற நம்பிக்கையில் சக்கரங்கள் சுழன்று கொண்டிருந்தன ! 2004 வாக்கில் புதுசாயொரு வியாபாரத் தொடர்பு குதிர்ந்திருந்தது - முன்னாள் ரஷ்யக் கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றதொரு சின்ன தேசமான லாட்வியாவிலிருந்து ! அரண்டவன் கண்ணுக்குத் தான் ஒனிடா பூதம் கூட 'காஞ்சனா' பிசாசாய்த் தென்படுமே ? வழமை போலவே புது ஆசாமியைப் பற்றி நிறைய விசாரித்தேன் ; நிறைய பரீட்சைகளைப் பதுக்கி வைத்தேன் - எனது மின்னஞ்சல் கேள்விகளினுள்ளே ! சந்தேகம் எழும்விதமாய் அந்தப் புதுத் தொடர்பு நடந்து கொள்ளவில்லை ! போட்டோவுக்குப் போஸ் கொடுப்பவன் இழுத்துப் பிடித்த தொந்தியை மறுக்கா இயல்பு நிலைக்குத் திரும்ப அனுமதிக்கும் விதமாய் மூச்சை கொஞ்சம் தாராளமாய் விடுவானில்லையா ? அதே போல நானும் கொஞ்சம் சந்தேகங்களை உதறி விட்டு அவரிடம் விற்பனைக்கிருந்த மிஷினரி பற்றி விசாரிக்கத் துவங்கினேன் ! அந்நாட்களில் இந்தியாவில் முன்னாள் கிழக்கு ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட அச்சு மிஷின்களுக்கு நல்ல டிமாண்ட் உண்டு ! அவை தயாரிக்கப்பட்ட 1970 's & 1980 's களில் - பிரதானமாய் கம்யூனிச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன என்பதால் - அந்த பிராண்டில் secondhand மிஷின்களைத் தேடிட கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ; குறிப்பாய் ரஷ்யா ரொம்பவே வாகான இலக்கு என்பது தெரியும் எனக்கு ! ஆனால் ரஷ்யாவினுள் நுழைவதற்கான அந்நாட்களது விசா நடைமுறைகள் ரொம்பவே தலைநோவை உண்டு பண்ணுபவை ! தவிர, ரஷ்ய மிஷினரி டீலர்கள் அவ்வளவாய் இன்டர்நெட்டில் புழங்குவதில்லை என்பதால் இரும்புத்திரைக்குப் பின்சென்று மிஷின் தேடுவது ஒரு சிரமக்காரியமாகவே இருந்து வந்தது ! இந்தப் புது வரவோ, ரஷ்யாவிலிருந்து பிரிந்து சென்ற நாட்டவர் என்பதால், அங்கே சுலபமாய்ப் புகுந்து ; அவர்களது மொழி பேசி தொழில் செய்யக்கூடியவராய் இருக்க, சிறுகச் சிறுக எனது நம்பிக்கை கூடிப் போனது ! சரி, சின்னதாயொரு டிரையல் பார்ப்போமே என்று பணம் அனுப்பிய போது செம சுலபமாய் அந்த வியாபாரம் நடந்தேறியது ! சுளுவாய் மிஷினை அங்கிருந்து மனுஷன் ஏற்றி விட, அடுத்த முப்பதாவது நாளில் தூத்துக்குடி துறைமுகத்தில் மிஷினும் ஜோராய் வந்து நின்றது ! 'அட..சூப்பர் !' என்றபடிக்கே கொஞ்சம் கொஞ்சமாய் வியாபாரத்தைக் கூட்டினோம் ! வாரத்தில் இரண்டு முறைகளாவது ரஷ்யாவிலிருந்து போன் அடிக்கும் மனுஷன் அந்த ஊரின் மார்க்கெட்டை ஸ்பஷ்டமாய் அறிந்து வைத்திருப்பது புரிந்தது ! நாம் தேடிடக் கூடிய மிஷின்களையும் கர்ம சிரத்தையாய்த் தேடி, ரொம்ப நியாயமான விலைகளில் சொல்லச் சொல்ல - நமது ரெகுலர் சப்ளையர்கள் பட்டியலில் இடம் பிடிக்கத் துவங்கியிருந்தார் ! சன்னம் சன்னமாய் வியாபாரங்களின் கிரயங்கள் கூடின ! நாம் ஜவாப்த்தாரி என்பதால் இருபது லட்சம் ; முப்பது லட்சம் என்ற தொகைகளை கூட நமது வாடிக்கையாளர்கள் நேரடியாய் அனுப்பும் அளவுக்கு முன்னேறியிருந்தோம் ! வியாபாரத்தின் நம் கமிஷன்களை அந்த முனையில் வைக்கும் போது தானே சிக்கலே எழுகிறது ; மருவாதையாய் இங்கேயே வாங்குவதென்று தீர்மானித்திருந்ததால் - திகட்டல்கள் துளியுமின்றி எல்லாமே பயணித்தது ! So மறுக்கா குஞ்சாகோபன் ; மறுக்கா 'ஆலோலம்' பாடியபடிக்கே நதிப்பயண பீலிங்குகள் !
18 மாத சுமாருக்கு லயித்து ஓட்டமெடுத்த நாட்கள் ஒரு அசுபயோக மொக்கை தினத்தில் லைட்டாய்த் தரை தட்டத் துவங்கியிருந்தது ! இங்கிருந்து சீராய்ப் பணம் அனுப்பிட - சீக்கிரமே அதற்கான பொருள் அங்கிருந்து புறப்பட - என்ற வாடிக்கை முதல்முறையாக சொதப்பியிருந்தது ! கையில் பத்தாயிரம் டாலருக்கு ஈடான தொகையோடு ரஷ்யாவுக்குள் கொள்முதல் செய்யப் போன சமயம் ஏர்போர்ட் செக்கிங்கில் மாட்டிக் கொண்டதாகவும், பெரும் செலவும், பிரயத்தனமும் செய்த பின்னரே அதிலிருந்து மீள முடிந்ததாகவும் சொன்ன போது 'பக்'கென்றிருந்தது ! ஐரோப்பாவிலுமே கையில் அத்தனை பணத்தை எடுத்துப் போவது குற்றம் தான் என்பதால் மனுஷன் சொன்னதை சந்தேகிக்க நினைக்கவில்லை ! 'சீக்கிரமே பணம் ரெடி செய்து மிஷினை அனுப்பி விடுகிறேன் !' என்று சொன்னவர் அடுத்த 2 வாரங்களுக்கு தொடர்பில் இருக்கவே இல்லை ! நானாய் நினைவூட்டும் போதெல்லாம் - 'இந்தா அடுத்த வாரம் லோட் பண்ணிடுவேன் !' என்ற ரீதியிலேயே பதில் சொல்லி வர, எனக்கு லைட்டாய்ப் புளியைக் கரைக்க ஆரம்பித்தது !
பொதுவாய் இந்த secondhand மிஷினரி தொழிலில் ஆங்காங்கே ஈடுபட்டிருப்போர் எல்லோருமே 'நானே ராசா - நானே கூசா ' பாணியிலான நபர்களே ! ஒரு செல்போனும், ஒரு கம்பியூட்டரும் ; இந்தத் தொழில் சார்ந்த தொடர்புகளும் மட்டுமே அவர்களது மூலதனங்கள் ! நாம் அனுப்பும் பணத்திலேயே பொருளைக் கொள்முதல் செய்து கன்டைனரில் ஏற்றி அனுப்பிவிட்டு, லாபத்தை ஜோப்பியில் செருகிக் கொள்வது வாடிக்கை ! So நாம் வளர்த்துக் கொள்ளும் நட்புக்களும், நம்பிக்கைகளுமே இங்கே ஆகப் பிரதானம் ! இடைப்பட்ட 2 வாரங்களுக்கு மத்தியில் புதுசாய் இன்னொரு மிஷின் மார்க்கெட்டில் சுற்றிடுவதாய் மனுஷன் தகவல் அனுப்பிட, அதுவும் இங்கே போணியாகக்கூடிய சரக்காகவே இருந்தது ! விலையும் as usual சரியாக இருக்க, ஏகப்பட்ட சபலம் உள்ளுக்குள் ! ஏற்கனவே தூண்களில் நிற்கும் மிஷினையும், இந்த இரண்டாவது மிஷினையும் ஏக நேரத்தில் அனுப்பிடலாமென்று உறுதி தந்த போது நம்பவும் தகிரியமில்லை ; நம்பாது போகவும் தம்மில்லை ! ஏனெனில் - 'அந்த முதல் மிஷினை அனுப்புடாப்பா ; அப்பாலிக்கா அடுத்ததைப் பார்த்துக் கொள்ளலாம் !' என்றுநான் கறார் காட்டிடும் பட்சத்தில், அவன் கடுப்பாகி ஒதுங்கிட ஆரம்பித்தால், பணமும் கோவிந்தாவாகிப் போகும் ; இதுநாள்வரையிலும் அவனோடொரு வியாபாரப் பாலத்தை உருவாக்கிடப் பட்ட அல்லல்கள் சகலமும் வியர்த்தமாகியிருக்கும் ! இந்த மிஷினரி இறக்குமதித் தொழிலோ செம போட்டிகள் நிறைந்ததொரு துறை ; எவன் டிரவுசரை யார் உருவுவதென்ற பந்தயம் நடவாத குறை தான் இந்தியாவினில் ! So நாம் வேண்டாமென்று ஒரு அசல்நாட்டு வியாபாரியை ஒதுக்கினால், அவனை மடியில் ஏற்றிக் கொண்டு சீராட்டிப், பாராட்டித், தாலாட்டுப் பாடிட இங்கே ஒரு டஜன் போட்டியாளர்கள் காத்திருப்பர் - அவன் வண்டவாளங்கள் அம்பலமாகும் வரையிலுமாவது !! So காசு பணாலாகும் ஏழரை மட்டுமன்றி, கண்முன்னேயே நம் போட்டியாளர்களோடு பயபுள்ளை குலாவும் கொடுமைகளையும் சகிக்க வேண்டி வரும் ! So நிரம்ப யோஜனைகளுக்குப் பின்னே ஒரு மஹா சிந்தனை தோன்றியது ! இரண்டாவது மிஷினுக்கு ஒரு அட்வான்ஸை மட்டும் அனுப்பி விட்ட கையோடு ரஷ்யாவுக்குப் போகும் பட்சத்தில், பார்ட்டியை நேரில் பார்த்தது போலவும் இருக்கும் ; மிஷின்கள் இரண்டையுமே கண்ணில் பார்த்தது போலிருக்கும் ; தலைக்குள் அரிக்கத் துவங்கியிருந்த கரையான்களையும் களைந்து தள்ளியது போலிருக்குமென்று தீர்மானித்தேன் ! அதுநாள் வரையுமே நாங்கள் நேரில் பார்த்திருக்கவில்லை எனும் போது - எல்லாக் குளறுபடிகளும் தீர்ந்திட இதுவே மார்க்கம் என்று தீர்மானித்தேன் !

'ரைட்டு..புறப்பட்டு வா...ஒண்ணும் பிரச்சனையில்லை !' என்று மனுஷனும் ஒத்துக் கொள்ள - அட்வான்ஸைப் புரட்டி அனுப்பி விட்டு, இக்கட விசா எடுக்கும் முயற்சிகளில் பிசி ஆனேன் ! ஆசாமி இருப்பதோ லாத்வியாவில் ; ஆனால் நான் போக வேண்டியதோ மிஷின்கள் இருக்கும் ரஷ்யாவுக்கு ! ஒரு மாதிரியாய் விசாவுக்கான paperwork ; அங்கிருந்து போலீசிடம் முன்கூட்டிய அனுமதி என்று சகல தலைவலிகளையும் ஏற்றுக் கொள்ளும் டிராவல் ஏஜென்ஸியைத் தேடித் பிடித்தேன் மாஸ்கோவில் ! ஒரு கணிசமான கட்டணத்தை வாங்கிக்கொண்டு எட்டுப்பத்து நாட்களில் எல்லா ஏற்பாடுகளையும் செய்து, கூரியரில் அத்தனை காகிதங்களை நேரடியாய் சென்னையிலுள்ள ரஷ்யத் தூதரகத்துக்கு அனுப்பிட, 'லொஜக்' என எனக்கான விசா கிட்டியது ! அந்நேரத்துக்கு டிசம்பரின் மத்தியினை தொட்டிருந்தது தேதி ! கிருஸ்துமஸ் & புத்தாண்டின் விடுமுறைகள் கண்ணுக்கு எட்டும் தொலைவில் காத்திருப்பது பற்றாதென - ரஷ்யாவின் நடுங்கச் செய்யும் குளிர்காலம் பற்றிய நினைப்பும் அவ்வப்போது மனதில் நிழலாடியது ! ஆனால் சூட்டோடு சூடாய் வேலையைக் கவனிக்காது போனால், வம்பாகிப் போகுமே என்ற பயம் ஆட்கொள்ள - பாரத்தை ஆண்டவன் மீதும், டிக்கெட்டை எமிரேட்ஸ் விமான சர்வீஸிலும் போட்டேன் ! இந்தியாவிலிருந்து நேரடியாய் மாஸ்கோ சொல்வதாயின் டில்லி வழியாக ரஷ்ய விமான சர்வீஸான AEROFLOT-ல் பயணித்திருக்க வேண்டும் ! ஆனால் அவர்களது சர்வீசும் சரி, டில்லியின் அப்போதைய விமான நிலையமும் சரி - 'ஹி..ஹி..ஹி.' ரகங்களே எனும் போது துபாய் வழியாக பயணிப்பதே சாலச் சிறந்தது என்று பட்டது !
'எப்போ வர்றே ? ; எங்கே தங்குறேன்னு ? தகவல் அனுப்பு !' என்று சொல்லிவிட்டு ஆசாமி வாரயிறுதிக்குக் காணாது போய் விட, நெட்டில் உருட்டி உருப்படியாய்த் தெரிந்ததொரு ஹோட்டலில் ரூம் புக் செய்து விட்டு, அந்தத் தாக்கீதை மின்னஞ்சலில் போட்ட கையோடு கிளம்பினேன் நானும் ! சொகுசாய் துபாயை எட்டிப் பிடித்து அங்கிருந்து மாஸ்கோ செல்லும் விமானத்துக்கு மாறிய போதே லைட்டாய் நெருடியது ! பொதுவாய் ஐரோப்பியத் தலைநகர்களுக்குச் செல்லும் விமானங்களில் கணிசமான வெள்ளைக்காரர்களைப் பார்த்திட இயலும் ! அதிலும் துபாய் மார்க்கமாய்ப் பயணிக்கும் போது, ஷாப்பிங்குக்கோ ; விடுமுறைகளுக்கோ வந்துவிட்டு ஊர் திரும்பும் ஐரோப்பியக் கூட்டம் நிரம்ப தென்படுவது வாடிக்கை ! ஆனால் மாஸ்கோ போகும் பயணிகளில் பெரும்பான்மை இந்தியர்களாய் / ஆசியர்களாய்த் தான் தெரிந்தது ! 'ரைட்டு...நமக்கெதுக்கு இந்த ஆராய்ச்சி ?' என்றபடிக்கே ஒரு வெயிலில் வாட்டும் காலைப் பொழுதினில் மாஸ்கோ பிளைட்டினுள் ஏறி அமர்ந்தேன் ! ஐந்தோ ஆறு மணி நேரப் பயணமே ; மதியம் 1 மணிவாக்கில் மாஸ்கோவின் பிரதான விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஜன்னல் வழியாய்ப் பராக்குப் பார்த்தவனுக்கு பழைய காலத்து ஜேம்ஸ் பாண்ட் படங்களில் காட்டுவது போலானதொரு கான்க்ரீட் சதுக்கமே கண்ணில்பட்டது ! பற்றாக்குறைக்கு வானமும் ஒரு சோகமான க்ரே போர்வையைப் போர்த்திக் கிடந்தது போலிருந்தது ! புண்ணியத்துக்கு பனி விழக் காணோமே என்ற நினைப்போடு கீழே இறங்கியவன், பாஸ்போர்ட் சோதனைகளை சடுதியாய் முடித்த கையோடு பெட்டியை எடுத்துக் கொண்டு ஊருக்குள் போகும் வழியைப் பார்த்திடும் நினைப்பில் வெக்கு வெக்கென்று நடை போட்டேன் ! மாஸ்கோ விமான நிலையத்திலிருந்து ஊருக்குள் போகும் transport மார்க்கங்கள் படு டப்ஸா என்பதையும், நம்மூர் சென்ட்ரல் ஸ்டேஷன் வாசலின் ஆட்டோக்களை உத்தம பிள்ளைகளாக்கிடக்கூடிய ரேஞ்சுக்கு பகல்கொள்ளையர்கள் என்றும் வாசித்திருந்தேன் ! So சட்டுப் புட்டென்று குடியுரிமை சம்பிரதாயங்களை முடித்து விட்டால், நிதானமாய் பஸ் எதையாச்சும் பிடித்து ஊருக்குள் போய் விடவேண்டுமென்ற உந்துதல் உள்ளுக்குள் !
எஸ்கலேட்டரில் மேல்தளத்துக்குப் போனால் முழுதுமாய் க்ரே வர்ணம் பூசப்பட்டதொரு முரட்டு ஹால் மட்டுமே கண்ணில் பட்டது ! ஒரேயொரு சைடில் விட்டம் வரை உசரமான கண்ணாடி மதில் நிற்க, பாக்கி மூன்று பக்கங்களிலும் முழுசுமாய் மறைப்பு & அந்த ஈனஸ்வர க்ரே பெயிண்ட் ! ஆறரையாடி பீம்பாய்களாய் நாலைந்து ரஷ்யர்கள் சீருடையில் நிற்க, கவுண்ட்டர் எதையும் காணோமே ? என்ற பரக்கப் பரக்க முழித்தேன் ! "Passport Control ?" என்று நிதானமான இங்கிலீஷில் கொஞ்சமே சின்னதாய்த் தெரிந்ததொரு அதிகாரியிடம் கேட்டேன் ! கையை மட்டும் நீட்டினார் மனுஷன் ! பாஸ்போர்ட்டை அவர் முன்னே நான் நீட்ட, பக்கென்று அதை வாங்கி வைத்துக் கொண்டு, உரத்த குரலில் "ALL PASSPORTS GIVE " என்று கூவினார் ! அந்நேரத்துக்கு அந்த ஹாலில் பாதியை நிறைத்திருந்த நம்மாட்கள் - கோணார் கடையில் கறிதோசை வாங்கும் வேகத்தில், அடியும் பிடியுமாய் முன்வந்து தத்தம் பாஸ்போர்ட்களையும், காகிதங்களையும் நீட்டினர் ! அப்போது தான் புரிந்தது - என்னோடு விமானத்தில் வந்தோரின் 90% ரஷ்யாவினருகே உள்ளதொரு எண்ணெய் எடுக்கும் தீவிலிருந்து ஆழ்கடல் குழாய் பதிக்க வந்திருந்த தொழிலாளிகள் என்று ! மொத்தமாய் காண்டிராக்ட் பேசி, ஒரு அரேபிய நிறுவனம் அவர்களை இட்டு வந்திருப்பது புரிந்தது ! So அந்த ஜனதிரளுள் இங்கிலீஷ் தெரிந்தோரோ ; படிப்பறிவு இருந்தோரோ ரொம்பவே குறைவு என்பதை சீக்கிரமே புரிந்து கொள்ள முடிந்தது ! கத்தையாக பாஸ்போர்ட்களைக் கையில் வாங்கிக் கொண்ட அதிகாரிகள் அங்கிருந்ததொரு ஜன்னலே இல்லாததொரு ரூமுக்குள் சென்று மடாரென்று கதவைச் சாத்திக் கொண்டார்கள் ! சரி, விசாவைச் சரி பார்த்த கையோடு, சீலைக் குத்தி கையில் ஒப்படைத்து விடுவார்கள் ; அதுவரைக்கும் கண்ணாடி மதில் கிட்டே போய் நிற்கலாம் என்று நினைத்துக் கொண்டேன் ! நாங்கள் வந்திறங்கிய அந்த எமிரேட்ஸ் விமானம் கண்ணாடிக்கு மறுபக்கம் நின்று கொண்டிருக்க, சுத்தம் செய்யும் பணியில் மும்முரமாயிருந்தனர் !
மணியைப் பார்த்தேன் ; ஒன்றே முக்கால் ஆகியிருந்தது ! 'ச்சை...இங்கே லேட் ஆகிப்போனால், அப்புறமாய் வெளியே போய் பெட்டிகளை சேகரம் செய்து கொண்டு சுமார் 40 கிலோமீட்டர் தூரத்திலிருந்த ஹோட்டலுக்குப் போய்ச் சேருவதற்குள் இருட்டித் தொலைத்து விடுமே என்ற பயம் வயிற்றுக்குள் நெளிந்தது ! பனிக்காலங்களில் ஐரோப்பாவில் ரொம்பச் சீக்கிரமே இருட்டிவிடும் ; இதுவோ குளிர்காலத்து ரஷ்யா ; நாலரை மணிக்குள் இருட்டு மண்டிவிடும் என்பது தெரியும் ! குட்டி போட்ட பூனை போல அந்த அறைக்கதவின் மீது ஒன்றுக்கு இரண்டாய், முட்டைக்கண்களை பதித்தபடிக்கே நடை பயில, அந்தக் கதவோ அலிபாபாவின் குகை வாயிலைப் போல இறுக மூடியே கிடந்தது ! மணி இரண்டாகியது ; இரண்டரையும் ஆகியது ; சாத்திய கதவு சாகடித்துக் கொண்டிருந்தது ! இந்நேரத்துக்குள் இங்கே உள்ளுக்குள் டிசைன் டிசைனாய் சிந்தனைகள் ஓட ஆரம்பித்திருந்தன ! " நீ எங்க நாட்டிலே பிடுங்க வந்த ஆணிகள் எல்லாமே வேஸ்ட் தான் ; ஊரைப் பார்த்துத் திரும்பிப்போ !" என்று துரத்தி விடுவார்களோ ? என்ற எண்ணம் தலைகாட்ட, பைக்குள்ளிருந்த பிஸ்கெட்டைப் போட்டு பீதியை ஆற்றினேன் ! 'அண்டா காகசம்' மந்திரத்தை யாரேனும் சொன்னார்களோ, என்னவோ - இரண்டே முக்கால்வாக்கில் கதவு திறந்தது ! சாப்பாட்டுப் பொட்டலத்தை வாங்கிட ஹெலிகாப்டரின் பின்னே ஓட்டமெடுக்கும் பசியெடுத்தோர் பாணியில் அத்தனை பேரும் அங்கே திபு திபுவென்று ஒடிப்போனோம் ! வெளிப்பட்டவரின் கைகளில் தோராயமாக 30 பாஸ்போர்ட்கள் மட்டுமே தென்பட்டன எனும் போதே எனக்குக் கலக்கியது ! பள்ளிக்கூடத்தில் புராகிரஸ் கார்டை விநியோகிக்கும் மிஸ்ஸைப் போல அந்த 30 கடவுசீட்டுகளையும் கடாசிய கையோடு உள்ளே போனவர் மறுக்கா படாரென்று சாத்திக் கொண்டார் ! எனக்கோ காதலிக்க நேரமில்லை படத்தில் அமரர்கள் TS பாலையாவும், நாகேஷும் பேசிக் கொள்ளும் வசனம் தான் நினைவுக்கு வந்தது : 'படார்னு சாத்திட்டு தடார்னு போயிட்டாரே - அவர் தான் பெரிய மனுஷன் !!"
மணி மூன்று ஆகியது ; மூன்றரையும் ஆகியது ; இன்னொரு கதவு திறப்பு ; இன்னொரு காட்டெருமையோட்டம் ; இன்னொரு 30 + பாஸ்போர்ட்கள் விநியோகம் ; மறுக்காவொரு மடார் கதவு சாத்தல் அரங்கேறியது ! அந்த ஆபீசர் வெளிப்படும் போது குரலை உசத்தி பெயரைச் சொல்ல ஆளாளுக்கு முயற்சித்த போதெல்லாம் ஒரு பனிபடர்ந்த பார்வை மட்டுமே பதிலாகியது ! உள்ளுக்குள் அந்த ஹாலில் போன் சிக்னலும் இல்லை ; அந்நாட்களில் செங்கல்கட்டி மாதிரியான Nokia போன்களைத் தவிர்த்து Smartphones ஏதும் இல்லை என்பதால் சுவரைப் பிறாண்டாத குறை தான் - பொழுதைக் கழிக்க ! மணி நான்காகிடவிருந்த வேளையில் வெளியே வெளிச்சம் பச்சக்கென்று குன்றியதை போலிருந்தது ! உற்றுப் பார்த்தால் பனி விழத் துவங்கியிருந்தது ! எனது ஜெர்கினெல்லாம் பெட்டியில் இருக்க, பெட்டியோ இந்தக் குடியுரிமைப் பகுதிக்கு வெளியே இருக்கக்கூடுமென்று நினைக்கும் போதே குளிர் நடுக்க ஆரம்பித்தது போலிருந்தது ! பற்றாக்குறைக்கு நாங்கள் வந்திருந்த எமிரேட்ஸ் விமானமானது தனது துபாய் நோக்கிய ரிட்டன் பயணத்துக்கு ஆயுத்தமாகியிருந்தது ! நாலேகாலுக்கு அவர்களும் பெரிய மனிதர்கள் என்பதை நிரூபித்தார்கள் - 'மடாரென்று ' கதவைச் சாத்தி படாரென்று take off-க்குப் புறப்பட்ட போது !
இந்நேரத்துக்கு எனக்குள் ஒரு மாதிரி உறுதியாகியிருந்தது - சத்தியமாய் நம்மை திருப்பி அனுப்பத்தான் போகிறார்கள் என்று ! விசா இருப்பதால் மட்டுமே ஒரு நாட்டுக்குள் நுழைந்திட அது உத்திரவாதமாகாது ; நுழைவுப் புள்ளியில் இருக்கும் immigration அதிகாரிகளுக்கு ஏதேனும் காரணத்தின் பொருட்டு திருப்தியில்லை எனில், கேள்வி கேட்பாடின்றி நம்மை காத்தைச் சேர்த்து அடித்துத் துரத்தி விட முடியும் என்பது தெரிந்த சமாச்சாரம் தானே ?! So 'வந்த வழியைப் பார்த்தபடிக்கே போப்பா !' என்று தான் சொல்லப்போகிறார்கள் என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தவனுக்கு - எமிரேட்ஸ் வாபஸ் போய்விட்டதை பார்த்த போது பேதி உச்சத்தைத் தொட்டது ! "இனிமேல் திரும்பப் போவதாயினுமே நாளை இந்நேரம் வரை காத்திருக்கணுமே !!" என்ற குழப்பத்தில் மண்டை காய்ந்து போயிருந்தது ! பேச யாரும் கிடையாது ; விசாரிக்க நாதிகள் கிஞ்சித்தும் கிடையாது ; சாப்பிடவோ, குடிக்கவோ வாங்க அந்த ஹாலில் ஒரு புண்ணாக்கும் கிடையாதெனும் போது பையிலிருந்த பிஸ்கெட் - தங்க பிஸ்கெட்டுக்கு சமானமாய்த் தெரிந்தது ! மிஷின்களுக்குப் போட்ட அட்வான்சும் சேர்த்து கோவிந்தாவா ? பயணம் வந்த செலவும் போச்சா ? என்று உள்ளுக்குள்ளே குழப்பச் சைத்தான் தாண்டவமாடிக் கொண்டிருந்தது ! இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டே குந்தியிருந்த போது மீண்டும் திறந்த கதவு - வேறொரு அதிகாரியை வெளிக்காட்டியது ! 'சொன்றாபெண்டியான் வியயன்' என்று அவர் கூவிய போது - 'வாஸ்கொ டகாமா நிலப்பரப்பு கண்ணில்பட்ட சேதியைக் காதில் வாங்கிய வேளையில் என்னமாய் ஆர்ப்பரித்திருப்பாரென்று புரிந்து கொள்ள முடிந்தது !! ஒரே நிமிடத்தில் நிலவரம் உள்ளுக்குள் அந்தர்பல்டியடித்திருக்க - அந்த அதிகாரிக்கு ஒரு பிளையிங் கிஸ் கொடுத்தாலும் தப்பில்லை என்று தோன்றியது ! வேக வேகமாய் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு, பத்திருபது பேர் ஹாலின் மறுபக்கமிருந்த கதவை நோக்கி நடந்தோம் ! அந்தக் கதவும் திறந்து கொள்ள - "மாஸ்கோ உங்களை வரவேற்கிறது" என்ற போர்டு முன்நின்றது ! 'போங்கய்யா சாமிகளா - இதுக்கு என் மாமனார் தலை தீபாவளிக்கு வரவேற்ற லட்சணமே தேவலாம் !' என்று நினைத்துக் கொண்டே என் பெட்டியைத் தேடினேன் ! ஒன்றரை மணிக்கு வந்திறங்கி, 5 மணிக்கு வெளிப்பட்டு பெட்டியைத் தேடினால் தாவு தீராது என்ன செய்யும் ? அனாமத்தாய் ஒரு மூலையில் கிடந்த குவியலினுள் எனது பெட்டியை உருவி எடுத்துக் கொண்டு வாசலுக்கு நடந்தால் அங்கே கண்ணில்பட்ட காட்சி - மிச்சம் சொச்சம் இருந்த 'தம்'மையும் உறிஞ்சிடும் விதமிருந்தது !!

அது பற்றி : பாகம் 2-ல் !! இயன்றமட்டுக்கும் காலையில் சீக்கிரம் டைப்படித்து, நாளைக்கு மதியத்துக்குள் கண்ணில் காட்டிடுவேன் !
Uffffff !!! மிடிலே சாமி - எதையாச்சும் சொல்லுறேன் பேர்வழி என்று நான் புறப்படும் போதெல்லாம் அது இராமாயண நீளத்துக்கு நீண்டு செல்லும் கூத்தை சமாளிக்க !! 'அதுவும் அடுத்த பதிவினில் சித்தே அடக்கி வாசிப்போம் என்று நினைக்கும் போது தானா இந்த ரஷ்ய புராணத்தை எழுதத் தோணனும் ? தெரியாம யாராச்சும் இனிமேல் என்னிடம் 'மணி என்ன ?' என்று கூடக் கேட்டு வைக்காதீங்க தர்மவான்களே ; "in 1987-ன்னு" கிளம்பிடப் போறேன் நான்பாட்டுக்கு !
Bye all ! See you again soon !! STAY SAFE please !!
பி.கு : இது காமிக்ஸ் சார்ந்த களம் தானென்று எனக்கு நானே நினைவூட்டிக் கொள்ள - இதோ ஏப்ரலின் பட்டியலில் இடம் பிடித்திருக்க வேண்டிய இதழின் அட்டைப்படப் preview !! பிரிண்டாகி ரெடியாக உள்ளது ; பைண்டிங் தான் பாக்கி !

Me 3
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு.......
ReplyDeleteஉள்ளேன் ஐயா...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDelete// மெது மெதுவாய் பைண்டிங்கையும் முடித்திடும் பட்சத்தில் மே 15-க்குள் ஏப்ரல் இதழ்களை உங்களிடம் ஒப்படைத்தது போலிருக்கும். //
ReplyDeleteஇன்பத்தேன் வந்து பாயுது காதினிலே.....
நீண்டநாள் கழித்து ஒரு நல்ல செய்தி.....
அப்பாடி 10
ReplyDelete+1 அதாவது 11வது.:-)
ReplyDeleteவணக்கம்!
ReplyDeleteஓவரேதான்!
ReplyDeleteஇரவு வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்!
ReplyDeleteஅருமை சார்... ரஷ்யாவின் அனுபவங்கள் சுவாரசியமாக இருந்தது... பாகம் 2 காக வெய்டிங்...
ReplyDeleteநல்ல விஷயம் கம்பெனி வேலைகள் தொடங்கியுள்ளது.
இளவரசி வாழ்க!
ReplyDeleteஇளவரசி வாழ்க!
உடல் துணிமணிக்கு!
உயிர் இளவரசிக்கு!
என்னையும் உங்க கட்சில சேர்த்துங்கண்ணே.
Delete///ஐரோப்பாவின் இண்டு இடுக்குகளையெல்லாம் சுற்றிய அந்தக் காலகட்டத்தில், கொஞ்சமாய்ப் பணத்தையும், நிறைய நட்புக்களையும், கணிசமாய் அனுபவங்களையும் ஈட்டியிருந்தேன் !///
ReplyDeleteஉங்கள் அனுபவம் எங்களுக்கு பாடம்!!
////சொன்றாபெண்டியான் வியயன்' என்று அவர் கூவிய போது -////
ReplyDeleteஹாஹாஹா!!
இம்மாம் பெரிய்ய சுவீட் மாத்திரையா முழுங்கிட்டு வரேன் சார்...:-)
ReplyDelete18வது
ReplyDeleteபதிவுக்கு நன்றி சார்!
ReplyDeleteட்ரெண்ட் அட்டைப்படம் செம!! அவரு கூட உள்ள நண்பர் பார்வையில் வெறி செமயாக வரையப்பட்டுள்ளது!
// காத்திருக்கும் 2 புக்குகளின் அச்சுப் பணிகளையும் மெது மெதுவாய் முடித்த கையோடு, மெது மெதுவாய் பைண்டிங்கையும் முடித்திடும் பட்சத்தில் மே 15-க்குள் ஏப்ரல் இதழ்களை உங்களிடம் ஒப்படைத்தது போலிருக்கும் ! //
எனக்கு அவசரமில்லை! 3.0 பின்னால் அனுப்புங்கள்!
நீங்கள் மற்றும் அலுவலக நண்பர்கள் அனைவரும் கவனமாக வேலைக்கு சென்று வாருங்கள்!
// எனக்கு அவசரமில்லை! 3.0 பின்னால் அனுப்புங்கள்! // எனக்கு இரு மாத இதழ்கள் சேர்த்து ஒன்றாக அனுப்புங்கள் சார்.
Deleteஎடி சார், மணி என்ன?
ReplyDeleteIn 1987, (தொடரும்)
எப்படா lockdown முடியம்னு பொறுமையா காத்திருந்தா, கனவே கலையாதே அட்டை படத்தை காட்டி எப்படா lockdown முடியும்னு பாயை பிராண்ட வச்சிட்டீங்களே Boss.
ReplyDeleteவெளிநாட்டு வியாபாரங்கள் risk தான் என்று என் தந்தை அடிக்கடி சொல்லுவார். அன்றைய காலகட்டம் ஓகே. இன்றைய காலகட்டத்தில் இது போல் எத்தர்களை சமாளிக்க வழியேதும் இல்லையா எடி சார்
ReplyDelete// மெது மெதுவாய் பைண்டிங்கையும் முடித்திடும் பட்சத்தில் மே 15-க்குள் ஏப்ரல் இதழ்களை உங்களிடம் ஒப்படைத்தது போலிருக்கும். //
ReplyDeleteகாஆஆஆஆஆஆஆத்திருக்கிறேன் சார் ஆவலுடன்...
தலைவரே நடு சாமத்தில் இங்கே இருக்கிறீர்களே?
Deleteகொரானா என்னையும் மாற்றி விட்டது குமார் சார்..பகலில் உண்டு ஒரு குட்டி தூக்கம் போட்டு வந்தால் இரவு இமைகள் சேர தாமதமாகி கொண்டே போகிறதே..
Deleteஎன் செய்வேன்...?!
பயணக்கட்டுரை பதிவுகள் அனைத்தும்சிறப்பாக உள்ளது தனிப்புத்தகமாக வெளியிடலாம். காசி
ReplyDeleteஎங்கே சார் கேக்குறாரு...:-(
Deleteமழை பொழியும் அட்டைப்படம் அருமை...
ReplyDeleteஇதுவரை நமது இதழ்களில் மழையில் காட்சிகள் வருவது போல் அட்டைப்படம் இடம் பெற் று உள்ளதா என திடீர் சந்தேகம்...:-)
நிறைய இருக்கும் தலீவரே!
Deleteஇப்போது நான் படித்துக் கொண்டிருக்கும் பலி கேட்ட புதையல்( நமது பழைய லயன் காமிக்ஸ்) அட்டைப்படத்தில் கூட ரிப்கிர்பி மழையில்தான் நின்று கொண்டிருக்கிறார்.
அட...ஆமாம்ல...நன்றி ஏடிஆர் சார்...:-)
Deleteஉங்கள் பயண அனுபவங்கள் கண்டிப்பாக புதிதாய் புது இடங்களுக்கு புறப்படுவோர்களுக்கு ஒரு பாடமாய் பயன்பெறும் என்பது மறுக்க முடியா உண்மை...!
ReplyDeleteதாங்கள் மற்றும்அலுவலகநண்பர்கள்அனைவரும் கவனமாக வேலைக்குசென்று வாருங்கள் உடல் நலம் மிக முக்கியம் சார் கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஏடி சார், இந்த மண்டை பிளக்கும் வெயிலில் உங்களது நடுங்கும் பனியில் மாஸ்கோ படலமும், ட்ரெண்ட் கவர் பிரிவியூவும் கண்ணுக்கு குளிர்ச்சியான treat. As usual சஸ்பென்ஸ்சை பில்ட் அப் பண்ணிட்டு To be continued என்று எண்டு கார்டு போடுறது ஜனநாயகத்திற்கு எதிரான செயல்.
ReplyDeleteHi.
ReplyDeleteஇந்த பதிவுகள் நன்றாகவே இருக்கிறது. வீட்டிலிருந்து வேலை மற்றும் வீட்டு வேலைன்னு அதிக பிசியோ பிசியா இருக்கும் என்னை போன்றோருக்கு அதிகம் எழுத மிடிலன்னாலும் வந்து ரிலாக்ஸ் பண்ண உங்களின் பதிவுகளும் நண்பர்களுடன் அடிக்கும் பின்னூட்டக்கூத்துகளும் மிக உதவியாக உள்ளது.
ReplyDelete// வீட்டிலிருந்து வேலை மற்றும் வீட்டு வேலைன்னு அதிக பிசியோ பிசியா இருக்கும் // :+)
Delete34th
ReplyDeleteஎடிட்டர் சார்..
ReplyDeleteஉங்களின் பயணக் கட்டுரைகள் என்றுமே எங்களுக்கு சீட்டு நுணி சுவாரஸ்யத்தை அளிக்கத் தவறியதேயில்லை!! இந்தப் பதிவும் அப்படியே!!
கேட்கப்பட்ட கேள்வியோ 'நீங்கள் செல்ல விரும்பும் நாடு எது' என்பதே!! ஏற்கனவே நிறையத் தடவைகள் சென்று வந்த பின்னரும் கூட, மீண்டும் செல்லத்துடிக்கும் நாடாக நீங்கள் ரஷ்யாவைக் காட்டியிருப்பது 'அப்படி என்னதான் நடந்திருக்கும்?' என்ற எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிறச் செய்கிறது! கொஞ்சம் கொஞ்சமாக திக்திக்-தடக்தடக் அதிகரித்து ஒரு உச்சத்தை (டமால்?!!) தொடவிருந்த வேளையில் 'தொடரும்' போட்டுவிட்டீர்களே!! ஆனால் நல்லவேளையாய் மீதப் பகுதியும் இன்றே வெளியாக இருப்பதில் - ஈவி ஹேப்பி அண்ணாச்சி!!
இரண்டு மாதங்களுக்கும் மேலாய் நம் புதிய வெளியீடுகளைக் கண்ணிலேயே காணாதது - என்னவோ போல் இருக்கிறது!! விரைவிலேயே சகஜநிலை திரும்பப் போவதற்கான அறிகுறிகள் உங்கள் வார்த்தைகளிலேயே வெளிப்படுவதால் - ஈவி டபுள் ஹேப்பி அண்ணாச்சி!!
அட்டைப்படம் - அசத்தல் அசத்தல்!!
// உங்களின் பயணக் கட்டுரைகள் என்றுமே எங்களுக்கு சீட்டு நுணி சுவாரஸ்யத்தை அளிக்கத் தவறியதேயில்லை!! // அதே அதே
Deleteஆசிரியரே மாஸ்கோ பார்ட் 2 வாசித்திட ஆவலாக உள்ளேன் சுவராசியமாக இருந்ததால் பெரிய பதிவு தவ்ளுன்டுடாக தெரிந்ததுத எனக்கு மட்டும்தானா
ReplyDeleteஎனக்கும்
Deleteஎனக்குமே,,,
Deleteஎடிட்டர் சார் எனக்கு ஒரு டவுட்
ReplyDeleteஇந்த மாத ஆட்டத்தில் டிரெண்ட் இல்லவே இல்லை. ஆனால் இந்த அறிவிப்பு அருமை.
ஏப்ரல் மாத இதழ்கள் என நீங்கள் அறிவித்தது
1. வான வில்லுக்கு நிறம் ஏது? (டெக்ஸ்)
2. பனியில் ஒரு குருதிப்புனல் (கிராஃபிக் நாவல்)
3. அலைகடலில் அதகளம்(டையபாலிக்)
4. பிரிவோம் சந்திப்போம் ( ஜம்போ சீசன் 3)
இப்போது டிரெண்ட் எனவே 5 புத்தகங்கள் இது வரை அருமை அருமை.
நான் இந்த வருட தோர்கல் க்காக வெயிட்டிங்
அடுத்த மாதத்தில் உண்டு தானே?
நல்லா கேட்கறீங்க குமாரு - டீட்டெய்லு!!
Deleteபெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுங்களா?
Deleteஉண்டே
Delete//போங்கய்யா சாமிகளா - இதுக்கு என் மாமனார் தலை தீபாவளிக்கு வரவேற்ற லட்சணமே தேவலாம் !' என்று நினைத்துக் கொண்டே //
ReplyDeleteஎடிட்டர் சார், வீட்ல வாசிக்க மாட்டாங்கன்ற தைரியத்தில இப்படி ஏதாவது எழுதி கபாலத்துக்கும், பூரிக்கட்டைக்கும் கனெக்சன் ஆகிடப்போகுது. :-))
ஹா ஹா!! :)))))
Deleteஇதைத்தான் நானும் இப்ப நெனச்சேன். ஆனாலும் தெகிரியம் சாஸ்தி தான்.
Deleteஞாயிறு காலை வணக்கம் சார்🙏🏼
ReplyDeleteமற்றும் நண்பர்களே 🙏🏼
.
/// சொன்றாபெண்டியான் வியயன்'///
ReplyDeleteபெயர் நல்லாத்தானே சார் இருக்கு.
உலகம் சுற்றும் வாலிபன் படத்துல, தலைவர், தாய்லாந்து floating marketல நாகேஷ் கிட்ட சொல்லுவாரு. " தமிழே தெரியாதவங்க நம்ம மொழிய பேசுறத கேக்குறப்போ எவ்வளவு அழகா இருக்கு பாத்தியா" என்று. அது மாதிரி இருக்கு உங்கள் பெயரை அவர் கூப்பிட்ட விதம்.
////Uffffff !!! மிடிலே சாமி - எதையாச்சும் சொல்லுறேன் பேர்வழி என்று நான் புறப்படும் போதெல்லாம் அது இராமாயண நீளத்துக்கு நீண்டு செல்லும் கூத்தை சமாளிக்க !! 'அதுவும் அடுத்த பதிவினில் சித்தே அடக்கி வாசிப்போம் என்று நினைக்கும் போது தானா இந்த ரஷ்ய புராணத்தை எழுதத் தோணனும் ? தெரியாம யாராச்சும் இனிமேல் என்னிடம் 'மணி என்ன ?' என்று கூடக் கேட்டு வைக்காதீங்க தர்மவான்களே ; "in 1987-ன்னு" கிளம்பிடப் போறேன் நான்பாட்டுக்கு !////
ReplyDeleteநள்ளிரவு ஒரு மணிக்கும் கூட ஒரு முழுநீளப் பதிவை சுவாரஸ்யமாகப் படித்திட இயலுகிறதென்றால் - அது உங்களுடையதைத் தவிர வேறு யாருடைய பதிவாக இருந்துவிட முடியும் எடிட்டர் சார்?!!
BTW, இப்போ டைம் என்னாச்சுன்னு சொல்ல முடியும்ங்களா? :)
10.51
Delete1987 காலங்களில் வசந்தம்
Delete////// சொன்றாபெண்டியான் வியயன்'///
ReplyDeleteஎல்லோரும் தூங்கிய பின் பதிவைப் படிப்பதும் சில சமயங்களில் ஆபத்தான சங்கதியே!! சத்தம்போட்டு சிரித்துத் தொலைக்காமலிருக்க வேண்டுமே?!! :)))
மிக அழகான பயணக்கட்டூரை சார்
ReplyDeleteஉங்களுக்கு பாஸ்போர்ட் கிடைப்பதற்குகள் எங்களுக்கு
லப்புடப்பு அதிகமாகிடுச்சு சார்
ஆவலுடன் அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் பண்ண வைத்து விட்டீர்களே சார்
நன்றி 🙏🏼
.
வெநாடு போவோர்க்குத் தேவையான தகவல்கள்
DeleteYour travelogue is never boring sir. Please post your every trip.
ReplyDeleteஇது போன்ற நெடிய பதிவுகள் அருமை சார் ... படித்து இரசித்தேன்.
ReplyDeleteமகேஷ்.. இதிலே ஏதாச்சும் உள்குத்து கிள்குத்து... :D
Delete:-))))
Delete@erode vijay. கண்டிப்பாக இல்லை. சுயஎள்ளல் குறைவு. அதனால் நிறைவு. Overdose இல்லை
Deleteதொடராக காமிக்ஸ் வந்தாலும் பிடிப்பதில்லை, உங்கள் கட்டுரை வந்தாலும் பிடிப்பதில்லை,
ReplyDeleteதயவுசெய்து சீக்கிரம் இரண்டாவது பகுதியை பதிவிடுங்கள்.
ஆம்...ஞாயிறு மலர்ந்து விட்டது சார்...தொடர்ச்சி ..தொடர்ச்சி....
Deleteஆமா
Deleteபயணங்கள் போரடிப்பதில்லை. பயணக்கட்டுரைகள் கூடத்தான். அடுத்த பகுதிக்கு waiting.எங்கள் மாவட்டமான திருச்சிராப்பள்ளிorange zone ஆகிவிட்டதால் வழக்கம் போல் நாளை முதல் பணிகள் தொடர்கின்றன!
ReplyDeleteசி.சி.வ. அருமை சார்.
ReplyDeleteதொடருங்கள்.
// ஒன்றரை மணிக்கு வந்திறங்கி, 5 மணிக்கு வெளிப்பட்டு பெட்டியைத் தேடினால் தாவு தீராது என்ன செய்யும் ? //
ReplyDeleteஅனுபவங்கள் விலை மதிப்பற்றது சார்..........
என்ன அதற்கு கொடுக்கும் விலைதான்..........
தங்களின் பயண அனுபவக் கட்டுரைகள் ஆகச் சிறந்த சுவராஸ்யத்தையும்,விறுவிறுப்பையும் அளிக்கிறது சார்........
ReplyDeleteசிங்கத்தோட சிறுவயது கதையை இப்டி பதிவுலேயே முடிச்சிடிவீங்க போல.
ReplyDeleteஅதானே...:-(
Deleteஆமால்ல
Deleteஎங்கள் தல அடி வாங்காத நாடே கிடையாது போல இருக்கே !!சிறப்பான பயணக் கட்டுரை சார்...
ReplyDelete///எங்கள் தல அடி வாங்காத நாடே கிடையாது போல இருக்கே !!///
Delete:))))
பயண அனுபவங்கள், வாழ்க்கை அனுபவங்கள்,கொஞ்சம் திக் திக்,கொஞ்சம் சஸ்பென்ஸ், கொஞ்சம் ரஷ்ய குளிர், உங்களின் எழுத்து நடை எல்லாம் சேரும் போது சுவாரசியத்துக்கு கேட்கவா வேணும்..
ReplyDelete68
ReplyDeleteஸ்டீல்
அட்டையில் புத்தக எண் 376 என்று இருக்கிறதே? ஆனால் 376 இரவோடு யுத்தம், ஏற்கனவே வந்துவிட்டதே?
ReplyDeleteஅது பற்றி : பாகம் 2-ல் !! இயன்றமட்டுக்கும் காலையில் சீக்கிரம் டைப்படித்து, நாளைக்கு மதியத்துக்குள் கண்ணில் காட்டிடுவேன் !
ReplyDelete#####
தாரையில் மதிய வெயில் இப்பொழுதே கொளுத்துகிறது சார்..ரஷ்ய குளிருக்காக ஐயம் வெயிட்டிங்...:-)
சார் உங்க வாழ்க்கை வரலார படிக்கயில் பீதி கிளம்புது,,,எவ்ளோ சமாளிச்சிருக்கீங்க,,,தன்னம்பிக்கை வரலாற்றுப் பக்கத்ல தாராளமா உங்களுக்கு இடம் தரலாம்,,,சீக்கிரம் தொடர்க,,,,
ReplyDeleteட்ரெண்ட் அட்டைப்படம் இதுவர வந்ததிலேயே டாப்,,,,பின்னணி வண்ணமும், முன்னணி ஓவிய நபர்கள் பாவங்களும் அட்டகாசமே,,,
ஸ்டீல்
////// சொன்றாபெண்டியான் வியயன்'///
ReplyDelete// ஒன்றரை மணிக்கு வந்திறங்கி, 5 மணிக்கு வெளிப்பட்டு பெட்டியைத் தேடினால் தாவு தீராது என்ன செய்யும் ? //
உங்க பெயரையும், ஹேர் ஸ்டைலையும் வெச்சு நீங்க ஒரு இந்திய ethan huntனு அவங்களுக்கு சந்தேகம் வந்திருக்கும்.
மிஷன் இம்ப்பாசிபிள் II ஒடுதுங்களா வீட்ல.
Deleteதெரியலியே பத்து சார், நான் இன்னைக்கு டிவி ஆன் பண்ணவில்லை. ஆனால் ஏடி யின் பதிவு, MI 5 பார்டில் ஏரோபிளனின் வெளிய டாம் கிருஸ் தொங்கும் காட்சியை நினைவுறுத்தியது.
Delete***** ஒரு யூகப் போட்டி!! *****
ReplyDelete////அனாமத்தாய் ஒரு மூலையில் கிடந்த குவியலினுள் எனது பெட்டியை உருவி எடுத்துக் கொண்டு வாசலுக்கு நடந்தால் அங்கே கண்ணில்பட்ட காட்சி - மிச்சம் சொச்சம் இருந்த 'தம்'மையும் உறிஞ்சிடும் விதமிருந்தது !!////
இந்தப் பதிவில் 'தொடரும்' போடுவதற்கு முன்பு எடிட்டர் எழுதியிருப்பது மேலே உள்ளது.
கேள்வி : எடிட்டரின் கண்ணில் பட்ட அந்தக் காட்சி என்னாவாக இருந்திருக்கும்?!! சரியாக யூகித்து இங்கே பதில் அளிப்பவர்(களு)க்கு EBFன் போது ஒரு பழைய லயன் காமிக்ஸ் ஒன்றும், நமது பாரம்பரிய பன்னும் பரிசாக அளிக்கப்படும்!
யூகம் 1 ஊர் முழுக்கப் பாண்ட்ஸ் கொட்டினார் போல ஏழு அடிக்கு heavy ஸ்நொவ் அல்லது
Deleteயூகம் 2 The ஏர்போர்ட் இஸ் நொவ் கிளோஸ்ட் என்ற போர்டு போட்டிருக்கலாம்.
ஒன்லி for fun நாட் for பன்
Deleteபோட்டி விதிமுறைகள் : (கம்பேனி ரொம்ப ஸ்டிரிக்டாக்கும்!)
Delete* ஒருவருக்கு ஒரு யூகம் மட்டுமே!
* எடிட்டர் தன் பதிவை அப்டேட் செய்தபிறகு வரும் டப்ஸா யூகங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது
* பரிசுகளை VPPயிலோ, கொரியரிலோ அனுப்ப இயலாது. EBFல் மட்டுமே வழங்கப்படும்!
எடிட்டரை வரவேற்க மழை கொட்டிக்கொண்டு இருந்திருக்கும்!
Deleteகூட்டம் டாக்சிகளுக்கு முண்டியடித்துக் கொண்டிருக்கும் என்பதையும் சேர்க்கலாமென்றால் ஒருவருக்கு ஒரு பதிலென்று கண்டிஷன் வேறு! ம்..ம்.. பரிசுகள் இரண்டு என்பதால் பதிலும் இரண்டாக இருக்க கூடாதா விஜய். எதாவது பாத்து பண்ணுங்க! பதில் - லயன் காமிக்ஸூக்கு ஒண்ணு, பன்னுக்கு ஒண்ணு!
Deleteஒரே ஒரு பன் தானா? கொஞ்சம் ஜாம் கிடைக்குமா?
DeleteThis comment has been removed by the author.
Delete////கொஞ்சம் ஜாம் கிடைக்குமா?////
DeleteEBFக்கு நீங்க வரும் ஐடியா இருந்தால் ஜாம் ஜாம்'னு ஏற்பாடு பண்ணிடுவோம் சகோ!
ஒரு சிங்கிள் டீ அடித்துவிட்டு கொஞ்சம் ஐ திங்க் பண்ணிவிட்டு சொல்கிறேன்.
Delete// ஒரே ஒரு பன் தானா? கொஞ்சம் ஜாம் கிடைக்குமா? // சத்தியமாக நானும் இப்படித்தான் நினைத்தேன்.
Deleteஎதுமே இல்ல,,,ஆனா பிடுங்கித் தின்னும் டாக்சிக நின்னுருக்கும் வேற என்ன
Deleteபோட்டிக்காண்டி அல்ல சும்மா ஜாலிக்காண்டி :
ReplyDeleteஏர்போர்ட்டுக்கு வெளியே ஒரு ஈ காக்காயை கூட காணோம்
கூடவே பனிப்பொழிவும் அதிகமாக இருந்தது
அவன் என்னை ஓட்டாண்டியாகிய வேளையில் உணர்ந்திட்ட போது - இ குஞ்சுகோபன் நாயர் சவாரி செஞ்சுக்கினு இருந்தது கூவமெனும் வல்லிய 'கம கம' நதியினில் என்பது புரிந்தது !
ReplyDeleteசுண்டைக்காய் வாங்குவதாய் இருந்தாலுமே, சுமைகூலியைப் பற்றிய தயக்ககளின்றி, அயனாவரம் போய்வரும் பாணியில் ஐரோப்பாவுக்கு, ஷண்டிங் அடிக்க வேண்டிப் போனது !
நாட்களும், வருடங்களும், நகன்றன ! 'நெல் எது ? உமி எது ?' என்று பகுத்தாய ஒரு மாதிரியாய்க் கண்டு கொண்டேன் என்ற நம்பிக்கையில் சக்கரங்கள் சுழன்று கொண்டிருந்தன !
போட்டோவுக்குப் போஸ் கொடுப்பவன் இழுத்துப் பிடித்த தொந்தியை மறுக்கா இயல்பு நிலைக்குத் திரும்ப அனுமதிக்கும் விதமாய் மூச்சை கொஞ்சம் தாராளமாய் விடுவானில்லையா ? அதே போல நானும் கொஞ்சம் சந்தேகங்களை உதறி விட்டு..
$$$$$$$$$$$$
பாதிதான் படித்திருக்கிறேன்...
இன்னாரைப்போல் என்று அறுதியிட்டு கூறமுடியாத.. தனித்துவமான.. அழகான.. வாசிப்போரை கட்டிப்போடும்.. ஒருவித ஈர்க்கும் நடையிலான கட்டுரை..
மீதியையும் (சு)வாசித்துவிட்டு வருகிறேன்..!
பள்ளிக்கூடத்தில் புராகிரஸ் கார்டை விநியோகிக்கும் மிஸ்ஸைப் போல அந்த 30 கடவுசீட்டுகளையும் கடாசிய கையோடு உள்ளே போனவர் மறுக்கா படாரென்று சாத்திக் கொண்டார் ! எனக்கோ காதலிக்க நேரமில்லை படத்தில் அமரர்கள் TS பாலையாவும், நாகேஷும் பேசிக் கொள்ளும் வசனம் தான் நினைவுக்கு வந்தது : 'படார்னு சாத்திட்டு தடார்னு போயிட்டாரே - அவர் தான் பெரிய மனுஷன் !!"
ReplyDeleteமீண்டும் திறந்த கதவு - வேறொரு அதிகாரியை வெளிக்காட்டியது ! 'சொன்றாபெண்டியான் வியயன்' என்று அவர் கூவிய போது - 'வாஸ்கொ டகாமா நிலப்பரப்பு கண்ணில்பட்ட சேதியைக் காதில் வாங்கிய வேளையில் என்னமாய் ஆர்ப்பரித்திருப்பாரென்று புரிந்து கொள்ள முடிந்தது !!
வேக வேகமாய் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு, பத்திருபது பேர் ஹாலின் மறுபக்கமிருந்த கதவை நோக்கி நடந்தோம் ! அந்தக் கதவும் திறந்து கொள்ள - "மாஸ்கோ உங்களை வரவேற்கிறது" என்ற போர்டு முன்நின்றது ! 'போங்கய்யா சாமிகளா - இதுக்கு என் மாமனார் தலை தீபாவளிக்கு வரவேற்ற லட்சணமே தேவலாம் !' என்று நினைத்துக் கொண்டே என் பெட்டியைத் தேடினேன் !
You made my day sir...😂😂😂😂😂😂😂😂😂
Not only your day KOK but everyone of our day.
Deleteஎடி,
ReplyDeleteமாஸ்கோவில் மாஸ்டர் அப்படீனு
தலைப்பு வைத்திருக்கலாம்.
எடிட்டர் சார். படு காஷுவலாக வரும் உங்களுடைய humourous எழுத்து நடை நிஜமாகவே சூப்பர். எனக்கு ஒரு டவுட். நீங்க எப்பவுமே இப்படித்தானா, இல்லை இப்படித்தான் எப்பவுமேவா.
ReplyDeleteரசிக்க ரசிக்க எழுதுவதில் எடிட்டர் சாருக்கு ஈடு இணை இல்லை. அருமை அருமை.
ReplyDelete100 ஸ்டீல்
ReplyDelete100 ஸ்டீலா ஒரு ஸ்டீலையே சமாளிக்க முடியலையே சாமியே சரணம் ஐயப்பா
Deleteசத்யா சரியான டைமிங். எங்க தல ஸ்டீல் வந்து விட்டார். பிளீஸ் கிராண்ட் மி லீவ் ஃபார் ஒன் வீக்.
Deleteஅரோகரா
Deleteஅவரும் அதைத் தான் சொல்றார். leave me alone ன்னு
Deleteunknownன்னு வந்தாலும் மண்டைக்கு மேல கொண்டை காட்டிக் கொடுத்திடுது.
Deleteஆசிரியர் குல்லாய போட்டா
ReplyDelete1.லிமிட்டெட்ல நம்ம ஹெர்மன் கதைகள ஒரே தொகுப்பா இரு கதைகளயும் போடுவேன்
2, ஸ்பைடர் குண்டோட, மாடஸ்டி, ஆர்ச்சி,கெர்பி,டெக்ஸோட குண்டு மாந்ரீக கதை ,டயபாலிக் கலந்து லயன் ஸ்டீல் 1980 மலரும்
இரும்புக்கை, வேதாளர், ஜான்ஸ்டீல்,மான்ட்ரேக்,லாரன்ஸ்,காரிகன்,விங் கமான்டர் கலந்து ஸ்டீல் முத்து விழா மலரும் விடுவம்ல
3.கார்சனின் கடந்த காலம், தலைவாங்கிக் குரங்க சொதப்பாம பெரிய தலைவாங்கி சைஸ்ல ஹார்டு பௌண்ட்ல,,,
நம்ம இப வ ரசிகர்க ஓரளவு கேட்டா தலைவாங்கி சைசுல ஒரே தொகுப்பா புலன் விசாரணை 2 இலவச இணைப்பா, ஸ்பின் ஆஃப் கதைகளோட வெளியிட்டு குல்லாவ கழட்டி ஆசிரியரிடமே தரணும்
டெக்சோட சோடி ட்யூராங்கோதான், ,,அதிரடிக்கு அதிர் வெடியா
Delete//XIII
Deleteசிக் பில்
ஸ்பைடர்
மாடஸ்டி
ஸ்டெல்லா (ஜானி நீரோவின் செகரட்டரி )
லார்கோ //
எல்லாரும் ஒரே மலர்ல ௭ப்ப வருவிய
கேள்வி : எடிட்டரின் கண்ணில் பட்ட அந்தக் காட்சி என்னாவாக இருந்திருக்கும்???
ReplyDeleteஅந்நேரத்திற்கே கும்மென்று இருட்டியிருக்கும். வெளியே இவர்களைத் தவிர ஈ காக்கை கூட இருந்நநிருக்காது. நகருக்குள் போக பஸ் ஏதும் கிடைக்க வாய்ப்பே இல்லாமல் இருந்திருக்கலாம்.....
அதெல்லாம் ஒருபக்கம் கிடக்கட்டும்..
எடிட்டர் கொண்டு வரும் பன்னை எடுத்து வருசாவருசம் நீங்க பரிசுமழை பொழியிறிங்களே..
க்யா சமாச்சார் குர்நாயர்..!?
///எடிட்டர் கொண்டு வரும் பன்னை எடுத்து வருசாவருசம் நீங்க பரிசுமழை பொழியிறிங்களே..
Deleteக்யா சமாச்சார் குர்நாயர்..!?///
சீரும் சிறப்பும் வாய்ந்த சிவகாசி பன்னுகள் - தகுதியானவர்களின் வாய்க்கு டைரக்டாகச் சென்றடைய வேண்டுமென்ற உன்னதமான நோக்கமே காரணம்!
தென்னை மரம் இளநீரை தரும்..தோல் சீவி உறிஞ்சு குழாய் போட்டா தரும்?
Deleteதென்னைமரத்தின் மேல் உரிமையும் பாசமும் உள்ளவர் அல்லவா அப்பணி செய்வர்..
பிறர்க்கு வழங்குகையில் சில பல இளநீர்கள் வழங்குபவர் வயிறினை அடைவதும் தவறல்லவே?:-)
தென்னை போல் பன்னையும் அவ்விதமே காண்க!!!
ம்ஹூம்...!
Deleteநேக்கென்னவோ..
சாப் கோக்கனட்ட டுக்கு
வே புள்ளையாருக்கு டொக்கு ன்றதுதான் சரியா இருக்கும்னு தோண்றது.!
///பிறர்க்கு வழங்குகையில் சில பல இளநீர்கள் வழங்குபவர் வயிறினை அடைவதும் தவறல்லவே?///
Deleteஅப்படிக் கேளுங்க செனாஅனா! அப்படி லேசாகப் பசியாறுவதன் பொருட்டு போனதடவை நான் ஒரு பத்துபதினைந்து பன்னுகளை பார்சல் பன்னுவதைக் கண்ட அந்தத் தென்னை மரமே கடுப்பிலே ஒரு முறை முறைச்சது பாருங்க...!! ஆனா நான் அதையெல்லாம் கண்டுக்கவேயில்லை.. ஹிஹி!!
அடுத்த தபா அந்த தென்னைமரமே பெரிய இளநீராப் பாத்து உங்க உச்சாந்தலையில நச்சுன்னு போடப்போகுது பாருங்க..!
Deleteஎடிட்டர் சார் அந்த பார்ட் 2???? சாயங்காலம் ஆகி விட்டது
ReplyDeleteஅப்படிக் கேளுங்க KS!
Delete/////போங்கய்யா சாமிகளா - இதுக்கு என் மாமனார் தலை தீபாவளிக்கு வரவேற்ற லட்சணமே தேவலாம் !' என்று நினைத்துக் கொண்டே ////
ReplyDeleteவெளிநாட்டுப் பயணங்கள் மட்டும்தான்னு இல்லாம - உங்க உள்ளூர் பயணங்கள் கூட படு சுவாரஸ்யமாத்தான் இருக்கும் போலிருக்கே எடிட்டர் சார்?!! :D
ஏடி சார் நெல்லூர், ராஜமுந்திரி, ரேனிகுண்டா பக்கம் ஒருவேளை போயிருந்தால் ஏக்கர் கணக்கில் எத்தனை சி.சி.வ. பதிவுகள் போட்டாலும் பரவாயில்லை. வெரி இன்டெரெஸ்ட்டிங். எதையும் விட்டுடாதீங்க.
Deleteஇன்னும் பார்ட் 2 வரலியா?
ReplyDelete//கேள்வி : எடிட்டரின் கண்ணில் பட்ட அந்தக் காட்சி என்னாவாக இருந்திருக்கும்?!! //
ReplyDeleteகருங்குரங்கு ஒன்றினை கண்டது போல் செங்குரங்கு ஒன்றினை அங்க மொழியால் அறிந்திருக்கலாம்!!!
அல்லது
ஐரோப்பிய பயணமொன்றில் அறிமுகமாகி துஷ்யந்தன் சகுந்தலைக்கு செய்தது போல் செய்யப்பட்ட ஜெர்மானிய கன்னிகை ஒருத்தியின் அனல் கக்கும் திருமுகம் கண்டதால் உண்டான திண்டாட்டமாய் இருக்கலாம்.
அல்லது
தோர்கலுக்கு நிகழ்ந்தது போல் ஏதேனும் ஏற்பட்டு மாஸ்கோ வரவேற்கிறது பலகைக்கு பின் கொருக்குப்பேட்டையை கண்டு அதிர்ந்திருக்கலாம்..
அல்லது
இங்கு உ....மா மட்டுமே கிடைக்கும் என்ற தமிழ் பெயர்ப்பலகை கொண்ட உணவகம் கண்டு திக்குமுக்காடியிருக்கலாம்...
ReplyDeleteரிக் வேதத்தில் கபஞ்சல பறவை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது...
முதன்முதலில் இப்பறவையே பாடல் ஒன்றில் பாடப்பட்டது..
மழைநீரை மட்டுமே அருந்தி வாழும் அப்பறவை போலவே மனமுவகை அடைய செய்யும் பணியே எனினும் தொடர்ந்து மூச்சு முட்ட செய்யும் பணிச்சுமையின் பளுவை போக்க வல்ல மாரியின் நீர்த்திவலைகள் போலவே எடிட்டரின் எழுத்து சாரல்கள் கபஞ்சல காமிக்ஸ் பறவையாய் எமை மாற்றி அமைக்கின்றன.
///கபஞ்சல காமிக்ஸ் பறவையாய் எமை மாற்றி அமைக்கின்றன.///
Deleteகபஞ்சல வறுவல்
கபஞ்சல தந்தூரி
கபஞ்சல 65
கபஞ்சல பெப்பர் ஃப்ரை
கபஞ்சல லாலிபாப்
கபஞ்சல குருமா..
ஆமா கபஞ்சலம் முட்டை போடுமா..!?
அப்படின்னா..
கபஞ்சலாம்லேட்
கபஞ்சலாப்பாயில்
கபஞ்சலகலக்கி
கபஞ்சல பொடிமாஸ்
செனா அனா மைண்ட் வாய்ஸ் :
Deleteஒரு மனுசன் எம்புட்டு கஷ்டப்பட்டு ரிக் வேதத்துல இருந்தெல்லாம் மேற்கோள் காட்டி எழுதுறேன்.. கறிக்குவீங்குன பயலுக்கு புத்தி எப்புடி வேலை செய்யுது பாரு..! :-)
Delete//கபஞ்சல வறுவல்
கபஞ்சல தந்தூரி
கபஞ்சல 65
கபஞ்சல பெப்பர் ஃப்ரை
கபஞ்சல லாலிபாப்
கபஞ்சல குருமா..///
:-)))))))
///கறிக்குவீங்குன பயலுக்கு புத்தி எப்புடி வேலை செய்யுது பாரு.///
Deleteஹா ஹா :))))))
கபஞ்சல உப்புமா?
Delete//ஆமா கபஞ்சலம் முட்டை போடுமா..!?
Deleteஅப்படின்னா..
கபஞ்சலாம்லேட்
கபஞ்சலாப்பாயில்
கபஞ்சலகலக்கி
கபஞ்சல பொடிமாஸ்//
KiD ஆர்டின் KannaN : :-)))))) Super
கண்ணா செம்ம செம்ம :)))
Deleteஅனு :+)
சாதகப்பறவை தான் மழை நீரை மட்டுமே அருந்தி வாழும் என்று நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
Delete///கபஞ்சல உப்புமா?///
Deleteஅனு @
அந்த பறவையினம் ஏற்கனவே அழிஞ்சிபோச்சாம்.. விட்ருங்க பாவம்.!
//சாதகப்பறவை தான் மழை நீரை மட்டுமே அருந்தி வாழும் என்று நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்./
Deleteசரிதான்!!!
கபஞ்ஜல பட்சியே காளிதாசனின் மேகதூதத்தில் சாதகப் பட்சி எனவும்
புறநானூறில்
வடவக்கண் பேரிசாத்தனார் போன்ற புலவர்களால் துளி நசைப்புள் எனவும்
அழைக்கப் பெற்றது..
சகுனப் பறவை என அழைக்கப் பெறுவதும்
இதுவே!!
ஆசியரின் எழுத்து வன்மையை வான் சொரியும் மழைக்கு ஒப்பிட எண்ணியபோது
கபிஞ்ஜல பறவையை குறிப்பிடுவது அவசியம் என தோன்றியது!!!
புதிய தகவல். நன்றிகள் செனா அனா சார்.
DeletePart 2
ReplyDelete300 comment வந்தா தான் எழுதுவாரா?
Suspense தாங்கல ஜாமி
ஆமாங்க ஆமா.
Deleteஇன்னும் 4.30 மணி நேரத்துக்குள் எழுதிடுவார் எனும் நம்பிக்கை இருக்கு.. ஆனாலும் suspense is simply too much
Deleteஉண்மை தான் ச்சீ எனக்கு இந்த சஸ்பென்சே பிடிக்காது.
Deleteசார் மணி என்ன?
ReplyDeleteIn 1987
Deleteசூர்யா ஹிஹிஹி செம்ம செம்ம
Deleteசார் என்னாச்சு
ReplyDeleteஇது கொஞ்சம் ஓவர் டைம் தான் ஆயிடுச்சு
ReplyDeleteபல நண்பர்கள் இங்கேயே தான் பழி கிடக்கிறார்கள் போலவே
Deleteம்ஹூம்! இதுக்குமேலயும் என்னால பொறுமையா இருக்க முடியாது! எடிட்டர் தான்னு இல்ல - இந்தத் தளத்தில் ஆடிட்டர், ஆக்டர், டாக்டர், டைரக்டர்'னு யாராவது ('டர்'னு முடிஞ்சா போதும்) இருந்தாக்கூட நீங்க மாஸ்கோவுக்கு போய்ட்டு வந்திருந்தீங்கன்னா.. ஏர்போட்டை விட்டு வெளியே வரும்போது உங்க அனுபவம் என்னன்னு எழுதலாமே ப்ளீஸ்?!!
ReplyDeleteமாஸ்கோ பத்தி தெரியாது, சின்ன வயதில் சாப்பிட்ட கிளாக்ஸோ அனுபவம் ஞாபகம் வருது. அது ஓகே வா?
Deleteநான் இப்பவும் சாப்பிட்டுக்கிட்டிருக்கும் சமாச்சாரம் தான்!!
Deleteசரி, எதையாவது எழுதுங்க! ஏர்போர்ட்டை விட்டு வெளியே வரும்போது என்னாச்சுன்னு மட்டும் அதில கண்டிப்பா இருக்கணும்.. அவ்வளவுதான்!
Waiting for 2nd part
ReplyDeleteபாகுபலி 2 விற்கு கூட இவ்வளவு பேர் காத்திருக்கவில்லை. Tensions ஆஃப் தி சி.சி.வ
ReplyDeleteஅவர் இன்னைக்கு வரமாட்டார்! நம்பாதே :-)))
ReplyDeleteஆசிரியரின் 2.0 புதிய பதிவு ரெடி நண்பர்களே...
ReplyDelete( செயலரின் உத்தரவுப்படி...)