Powered By Blogger

Saturday, May 16, 2020

ஒரு பார்வர்ட் கியர் !

நண்பர்களே,

வணக்கம். என்ன எழுதுவதென்று தெரியாது மண்டையைச் சொரிந்து வருகிறேன் ! ஒழுங்காய் இந்நேரத்துக்குக் கூரியர்கள் பட்டுவாடா ஆகியிருப்பின் - "ஒன்றுக்கு ஐந்தாய் புக்குகளை ஒப்படைத்தாச்சு ; இந்த ஞாயிறை உங்கள் அலசல்களில் ஓட்டலாம் folks !" என்று சொல்லி கம்பி நீட்டியிருப்பேன் ! அல்லது - 'the making of the books' என்று இம்மாத இதழ்களை பற்றி ஏதாச்சும் எழுதியிருப்பேன் ! ஆனால் DTDC புண்ணியத்தில் பெரும்பாலும் பிம்பிலாக்கி பிலாப்பிப் படலங்கள் தான் எனும் போது, அந்தப் பக்கமாய் வண்டியை விட்டால் பூரிக்கட்டைகளே பறக்கும் என்பது புரிகிறது ! சரி, லாக்டவுனின் மத்தியில் இருந்த நாட்களைப் போல வேலையே இன்றி விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்திருப்பின், நான் பூனைக்கு லங்கோடு வாங்கித் தந்த கதையையும், யானைக்கு மூக்குப்பொடி போட்டு விட்ட கதையையும் சொல்லி பொழுதைக் கடத்தியிருப்பேன் ! ஆனால் இவையோ அந்தளவிற்கு லாத்தலான நாட்களல்ல என்பதால் அதற்கும் வழி லேது ! வழக்கமாய் இதுபோன்ற தருணங்களில் ரிவர்ஸ் கியரைப் 'பச்சக்'க்கெனப் போட்டு, கோடை மலர் 1986 ; தீபாவளி மலர் 1984 என்று எங்கேனும் பயணம் போக முனைவதே வாடிக்கை ! ஆனால் for a change - டாப் கியரைப் போட்டு இந்நூற்றாண்டே பார்த்திரா ஒரு இக்கட்டில் பூமியே விழி பிதுங்கி நிற்கும் இந்த வேளையில், எதிர்வரும் நாட்கள் நமக்கு என்ன வழங்கக் காத்துள்ளனவோ என்று கணிக்க முயற்சிப்போமா ?

For starters, அடுத்த மாதத்து இதழ்களை எப்போது / எவ்விதம் தயார் செய்வதென்றே கேள்வி உடனடி பதில் கோரி நிற்கும் நம் முன்னே ! 'தோர்கல்' மெகா இதழை ஆண்டின் பிற்பகுதிக்கு நகற்றிடத் தீர்மானித்துள்ளதால் இப்போதைக்கு அடுத்த batch இதழ்களாய் நான் மனதுக்குள் உருவகப்படுத்தியிருப்பது இவற்றையே :

  • சந்தா A :  SODA - "திசை மாறிய தேவதை"
  • சந்தா B : TEX - "கைதியாய் டெக்ஸ் வில்லர்"
  • சந்தா C : ப்ளூ கோட் பட்டாளம் - "போர்முனையில் ஒரு பாலகன்"
  • சந்தா D : ஜேம்ஸ் பாண்ட் : "விண்ணில் ஒரு வேதாளம் "
மொத்தமாய் 4 இதழ்களைச் சேர்த்தாலே ரூ.265 தான் கிரயம் வருமென்பதால் ஓரளவுக்கு ஏஜெண்ட்கள் நம்மைக் கரை சேர்த்து விடுவர் என்ற நம்பிக்கை உள்ளது ! But அதற்கு முன்பாய் இம்மாதம் பிரதிகளை வாங்கியிருக்கும் முகவர்கட்கு கையைப் பிடிக்காது வியாபாரம் நடந்தாகிட வேண்டும் என்பது நிரம்பவே அவசியம் ! So சந்தாவில் இணைந்திராது - கடைகளில் வாங்கிடும் நண்பர்கள் உங்களது உள்ளூர் முகவருக்கொரு போன் அடித்து "புக் வந்திட்டா அண்ணாச்சி ? வந்து வாங்கிக்கிறேன் " என்று சொல்லி வைத்தால் அவர்களும் சற்றே நிம்மதியாய்ப் பெருமூச்சு விட்டுக்கொள்வர் ! And maybe இது வரையிலும் புக்குகளுக்கு ஆர்டர் செய்திருக்கா ஏஜெண்ட்கள் கூட உங்களின் விசாரிப்புகளைத் தொடர்ந்து நம்மைத் தொடர்பு கொள்ளத் தீர்மானிக்கக்கூடும் அல்லவா ? சிரமமான இந்நாட்களில் உங்களின் சப்போர்ட் அவர்களுக்கும் ; அவர்கள் மூலமாய் எங்களுக்கும் ரொம்பவே அத்தியாவசியம் folks ! Please !!

அடுத்து மண்டைக்குள் ஓடுவது புத்தக விழா சார்ந்த சிந்தனைகளும் ; the new normal உலகினில் அவற்றிற்கு நேர்ந்திடக்கூடிய மாற்றங்களும் தான் ! ஏழு கழுதையோ ; எழுகழுதையோ - அத்தினி வயதான பிற்பாடுமே நாமெல்லாம் ஏகப்பட்ட புது வார்த்தைகளைக் கடந்த 2 மாதங்களில் இந்த வைரஸின் புண்ணியத்தில் கற்றிடவொரு வாய்ப்புக் கிட்டியுள்ளது அல்லவா ? அவற்றுள் ரொம்பவே பிரதானமானதும் ; இனி வரும் காலங்களில் நம் வாழ்வுகளின் ஒரு இன்றியமையா  அங்கமாகவும் மாறிடவுள்ள வார்த்தை : 'சமூக இடைவெளி' என்பது தானே ?! கூட்டங்களுக்கும் இந்த 'ச.இ.' சமாச்சாரத்துக்கும் ஏழாம் பொருத்தம் எனும் போது - இனி வரக்கூடிய புத்தக விழாக்களை சற்றே கற்பனை செய்து பாருங்களேன் !! ஒரு ஸ்டாலுக்கும், அடுத்ததுக்கும் மத்தியில் கணிசமான gap ; அப்பாலிக்கா ஒவ்வொரு ஸ்டாலினுள்ளும் ஒரு நேரத்தில் இத்தினி பேர் தான் நிற்கக்கூடும் என்ற கட்டாயங்கள் ; வாசலிலேயே கிருமிநாசினியுடன் அண்ணாச்சி நிற்க, 'ஜரிகண்டி...ஜரிகண்டி' என்று வாடிக்கையாளர்களை ஜல்தியாய் பர்ச்சேஸ் முடித்துக்   கிளம்பிட நிர்ப்பந்திக்க இன்னொரு ஆசாமி ; வரையப்பட்டிருக்கும் கட்டங்களுக்குள் நின்று பில் போட்டு வாங்கிடவொரு வரிசை  - என்று புதுப் புதுக் காட்சிகள் கண்முன்னே ஓடுகின்றனவா ? வாடிக்கையான நமது மரத்தடி மீட்டிங்குகளை அடுத்ததாய் மனசுக்குள் ஓட்டிப் பாருங்களேன் - இன்னமும் ரகளையாய் இருக்கக்கூடும் ! நேக்கு வெண்கலத்தொண்டை என்பதால் சிக்கலில்லை ; நரம்பு புடைக்க குரல் கொடுத்தால் மரத்தடியிலிருந்து வாசல் வரைக்குமான தூரத்தில் சீரான இடைவெளிகளில் நிற்கக்கூடிய நண்பர்களுக்கும் கேட்டு விடும் ! ஆனால் நம்ம தலீவரோ ; நம்ம அறிவரசு ரவி சாரோ படக்கூடிய பாடுகளை சித்தே யோசித்துப் பாருங்களேன் ! 'புஸ்ஸு...புஸ்ஸு..' என்று அவர்கள் தரும் குரல்களை ஒலிபரப்ப மெகா போன்கள் தேவைப்படலாம் ! So ஊரிலிருந்து கிளம்பும் போதே பொட்டிகளுக்குள் ஆளுக்கொரு மெகா போனை முதல் ஐட்டமாய்ப் பேக் செய்ய வேண்டி வரலாம் ! என்ன ஒரே சிக்கல், ஒரு க்ரூப் போட்டோ எடுக்க வேண்டுமாயின் ஒரு எட்டுப்பத்து க்ளிக்குகளைப் பண்ணி, அவற்றை அப்புறமாய் ஒட்டுப் போட்டாக வேண்டும் ! தற்போதைய அந்த பனோரமா - மனோரமாவெல்லாம் பத்துப் பைசாவுக்கு உதவிடாது ! So ஊருக்குத் திரும்பிய பிற்பாடு வெளியே நின்றபடிக்கே, 'அண்டா காக்கஸூம் ; குண்டா காக்கஸூம் ; இந்த க்ரூப் போட்டோவைப் பாரடிப் பெண்ணே !!" என்று மந்திரத்தைப் போட்ட பிற்பாடே வாசல் கதவுகள் திறக்குமென்ற சூழலிலிருக்கும் நண்பர்கள், எதெற்கும் அக்குளுக்குள் ஒரு பாயையும், தலைகாணியையும் சுருட்டிக்கொண்டு தயார்நிலையில் இருத்தல் நலமென்பேன் ! 'இல்லியே...அந்த வலது கோடிலே நாலாவதுக்குப் பின்னாடி முறைச்சிட்டு நிக்கிறது நீங்க மெரி தெரிலியே ! யாருகிட்ட சத்தாய்கிறீங்க ? என்ற கிடுக்கிப்பிடிகள் போடப்பட்டால் கம்பெனி பொறுப்பாக முடியாதல்லவா ?

Further down the line - 'பொம்மை புக்குகளுக்கென' இனி நாம் திட்டமிடக்கூடிய யதார்த்த பட்ஜெட் பற்றிய சிந்தனைகள் ! கொடுமை என்னவெனில் 2021 -க்கான அட்டவணை மார்ச் மாதமே ரெடி ! லயனின் இதழ் # 400 ; முத்துவின் இதழ் # 450 என இரு மைல்கல்களுமே ஜனவரி 2021 க்கு அமைந்திட வாய்ப்புகள் ஜெக ஜோதியாய்த் தென்பட்டதால் அவற்றின் பொருட்டு ரகளை ; இன்னும் கொஞ்சப் புது வரவுகள் ; ரொம்பவே வித்தியாசமான black & white கதைத் தொடர்கள் ; தற்போதைய அழுகாச்சிகளுக்கு நேர் opposite ரகத்தில் சில ஜாலி கி.நா.க்கள் என்று வளைகாப்பு வீட்டுச் சாப்பாடைப் போல வெரைட்டியாய் ஒரு ப்ளூ பிரிண்ட் உள்ளுக்குள் தயாராகியிருந்தது ! ஆனால் கண்ணுக்குப் புலப்படா இந்த நுண்கிருமி, பொடதியில் போட்டிருக்கும் போட்டில் - காதெல்லாம் 'கொய்ங்க்க்க்' என்ற சத்தம் மட்டுமே கேட்கிறது ; ஜெயசித்ராவிடம் ஒரு அப்பு வாங்கி பட்டாபட்டி டிராயரோடு பம்மிக் கொண்டு அமர்ந்திருக்கும் கவுண்டரைப் போல ஒரு ஓரமாய் குந்தவே தோன்றுகிறது ! Yes of course - ஒரு வெளிச்ச உலகினில் இந்த வைரசுக்கொரு தடுப்பூசி நடப்பு ஆண்டின் இறுதிக்குளாகவே  தயாராகி, அத்தனை பேருமே அதைப் போட்டுக் கொண்ட தகிரியத்தில், 'இப்போ இன்னான்றே ?' என்று கொரோனாவைப் பார்த்துப் பழிப்புக் காட்டலாம் தான் ! ஆனால் சற்றே மந்தமான வெளிச்சம் விரவிடுமொரு உலகாய் இருப்பின் - சலூனுக்குப் போகக்கூடப் பயந்தபடிக்கே, நானெல்லாமே பங்க் ஸ்டைலில் கேசத்தை வளர்த்துத் திரிந்தால் அந்தக்கொடுமையை என்னென்பது ? அத்தகையதொரு உலகில், அட்டவணையினை அதிகாரிக்குப் போடும் பாயச அண்டா சைசுக்கு அமைப்பதா ? அல்லது கபசுரக்குடிநீர் காய்ச்சும் குடுவை சைசுக்கு அமைப்பதா ? Thinking !!

கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் & கிட்டத்தட்ட 300 + இதழ்கள் - என்ற அனுபவங்களெல்லாமே பல்குத்தக் கூட இனி பிரயோஜனப்படாது ; பிள்ளையார் சுழியிலிருந்து தான் ஆரம்பித்தாக வேண்டுமென்ற சூழல் உருவாகினும் ஆச்சர்யம் கொள்வதற்கில்லை ; மலைப்பதற்கில்லை என்ற புரிதல் இந்த 50 நாள் லாக்டவுனுக்கு மத்தியில் புலர்ந்துள்ளது ! நியாயப்படிப் பார்த்தால் - இதையெல்லாம் நினைத்து (வழக்கத்தை விடவும் ஜாஸ்தி) பேய்முழி முழித்தாக வேண்டும் தான் ! ஆனால் மேலிருப்பவரும் ஒரு காமிக்ஸ் ரசிகர் என்பதாலோ - என்னவோ, மனம் தளராது பார்த்துக் கொள்கிறார் ! 3 ஆண்டுகளுக்கு முன்னே நிறையவே முயற்சித்தும் பல்பே பலனாகிப் போனதொரு கௌபாய் கதைத்தொடரின் உரிமைகளை இன்றைக்கு அவர்களாகவே வழங்கிட முன்வருவதோ ;  கொசுறாய் இன்னொரு செம ஆக்ஷன் தொடரையும் சேர்த்தே தர சம்மதிப்பதோ ; இன்றைக்குக் கண்ணில்படும் புதுத் தொடர்கள் எல்லாமே ஒவ்வொரு விதத்தில் பட்டாசாய்த் தோன்றுவதோ, சிறு விலையிலான இந்த சந்தா D புக்குகளை நடப்பாண்டினில் போடும் ஞானோதயம் புலர்ந்ததோ - நிச்சயமாய் தற்செயல் நிகழ்வுகளல்ல என்றே தோன்றுகிறது ! தவிர, இடியே விழுந்தாலும் தோள் தர நாங்களிருக்கிறோமென்று திடமாய்ச் சூழ்ந்து நிற்கும் உங்களின் அன்பும், உற்சாகங்களும் இந்த 50 நாட்களில் அபரிமிதமான வெளிப்பாடு கண்டிருக்கும் நிலையில், எதையும் கடந்திடலாமென்ற நம்பிக்கை அலையடிக்கிறது உள்ளுக்குள் !

And இன்று மாலை நிகழ்ந்ததொரு அழகான விஷயம் அந்த நம்பிக்கைக்கு செட்டிநாடு சிமெண்ட் ; L&T சிமெண்ட் ; சங்கர் சிமெண்ட் என சகலத்தையும் கலந்தடித்துள்ளது என்பேன் ! கோவையில் வசிக்கும்  மூன்று தலைமுறைகளைக்  கொண்டதொரு அன்பான வாசக குடும்பத்தினர் நம்மோடு காலமாய்ப் பயணித்து வருபவர்கள் ! In fact - எழுபதுகளின் மத்தியினில் "மஞ்சள் பூ மர்மம்" இதழின் தமிழ் மொழியாக்கத்தைச் செய்தவரும் அக்குடும்பத்தின் தலைவரே ! பல வருஷ இடைவெளிக்குப் பின்பாய் இன்று பேசக்கிடைத்த அவகாசத்தினில்,  அவர்கள் ஒவ்வொருவரும் நம் மீதும், நமது இதழ்கள் மீதும் பொழிந்த ஆதர்ஷத்தை விவரிக்க முயற்சிப்பது just an impossibility !! கிராபிக் நாவல்களில் துவங்கி, டெக்ஸ் சாகசங்கள் ; பிஸ்டலுக்குப் பிரியாவிடை ; கார்ட்டூன்ஸ் ; "கண்ணான கண்ணே" etc etc என நமது சமீபத்து இதழ்கள் அனைத்தையும் ஆள் மாற்றி ஆள் சிலாகித்ததைக் கேட்ட பின்னரும் உள்ளுக்குள் எதிர்மறை சிந்தைகள் குடியிருக்கவாவது முடியுமா ? And the icing on the cake - என்று சொல்வதெனில் - அகவை 90 -ஐத் தொட்டு நிற்கும் போதிலும், மாதா மாதம் நமது கூரியர்களைக் கண்ட மாத்திரத்தில் பேத்தியுடன் போட்டியிட்டு இதழ்களை அள்ளிச் சென்று படிக்கும் அந்தத் தீவிர வாசகர் நமக்கு வழங்கிய பாராட்டுக்களும், ஆசிகளே !! சிரம் தாழ்ந்த நன்றிகள் சார் !!

And guess what ..? தாத்தாவுக்கும், அம்மாவுக்கும், பேத்திக்கும் எல்லா படைப்புகளுமே  பிடிக்கும் தான் ; ஆனால் ஒரேயொருத்தர் மட்டும் மூவருக்குமே ஸ்பெஷலோ ஸ்பெஷல் !! No prizes for guessing who that is.........!!

'தல TEX' - தலைமுறைகளை வென்றவர் நீர் என்பதை இன்று மறுபடியும் நிரூபித்து விட்டீர் !! போடுங்க பாயசத்தை - ரசித்துக் குடிக்க !

Bye folks...see you around ! உங்கள் அலசல்களோடு பயணிப்போமே - தொடரவுள்ள வார  நாட்களில் !

My questions to you :

1.பெரிய சைசில் டயபாலிக் எப்படித் தெரிகிறார் ? அநேகமாய் உலகின் முதல் முயற்சி இது - டயபாலிக்குக்கு இந்த format -ல் !

2.இம்மாதம் எந்த இதழிலிருந்து உங்கள் வாசிப்பைத் துவங்க நினைத்துள்ளீர்களோ ?


3.ஜம்போ சீசன் 3 : முதல் பார்வைக்கு உங்கள் ratings ப்ளீஸ் ? 


347 comments:

  1. Replies
    1. இது மல்லூர் மண்டபத்தில் புலவரிடம் எழுதி வாங்கி வந்தது மேரியே இருக்கே ?

      Delete
  2. இளவரசி வாழ்க!
    அதைத்தவிர வேறென்ன....??

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் தொழிலதிபர்கள்..?

      Delete
    2. அல்லது டாக்டர்கள்..?

      Delete
    3. தொழிலதிபர்கள் ஒழிக!

      Delete
    4. Sorry அண்ணா!
      இப்போதான் இதற்கு முந்தைய பதிவை மறுபடி எட்டிப் பார்த்தேன்.
      மறுபடியும் Sorry! மின்னஞ்சல் Level க்கு நான் ஒர்த் இல்லை.
      இங்க ஒருமுறை முகவரியை குறிப்பிட்டு விடுகிறேன்.
      Please accept!

      M.Babu
      88G, Sugunapuram East
      Kuniamuthur Post
      Coimbatore-641008.
      Ph:-7092525621.
      Only ST COURIER Available.

      Delete
    5. ஆசிரியர் சார்...

      :-)))))


      காலையிலேயே வாய்விட்டு
      சிரிக்க வைத்து விட்டீர்கள்..

      எனவே சங்கத்தின் சார்பாக அந்த சிவகாசி ரவுண்ட் பண்ணை ( ஒன்று மட்டும் ) பரிசாக வழங்குகிறோம் சார்..:-)

      Delete
  3. பத்துக்குள்....இரவு வணக்கம் நண்பர்களே💐💐☺️😊

    ReplyDelete
  4. சந்தேகமே வேண்டாம் சார். கண்ணே கலைமானேதான் என் முதல் சாய்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. திங்கட்கிழமையாவது பார்சலை கொண்டு வந்தார்களெனில் தேவலாம் சார் !

      Delete
    2. அந்தக் கவலையை போக்க கையில் லயன் செஞ்சுவரி ஸ்பெஷல் இருக்கு சார். நாளைக்கு லயன் டாப் டென் ஸ்பெஷல் வரப்போகிறது. இதைவைத்து ஓட்டிவிடுவேன் சார். புத்தகங்கள் வரும்போது வரட்டும் என அந்த நினைப்பை விட்டுவிட்டேன் சார்.

      Delete
  5. டயபாலிக்! டய - பாலிக்!! டயபா....லிக்க்க்...

    ReplyDelete
    Replies
    1. ஆளும் பேருமாய்க் கொஞ்சம் பார்த்து செய்யுங்கோ ; டெம்போலாம் வச்சு கூட்டிட்டு வந்திருக்கோம் முகமூடிக்காரரரை !

      Delete
    2. சார் அந்த டெம்போக்கு காத்தடிச்சு உசுப்பிவிட்ட க்ரூப்ல நாமும் இருக்கோம். ஆனா, இப்போதைக்கு நம்ம பக்கம் காத்தடிக்காது போல... அத்தியாவசிய தேவைகள் மட்டுமே இறக்குமதிக்கு அனுமதியாம். வாசிப்பு அத்தியாவசியமில்லீயாம்...

      Delete
    3. என்னிக்குமே வாசிப்பு கட்டக்கடாசியிலே தானே சார் - தர வரிசையினில் ! காலத்தின் கொடுமை !

      Delete
  6. ////3 ஆண்டுகளுக்கு முன்னே நிறையவே முயற்சித்தும் பல்பே பலனாகிப் போனதொரு கௌபாய் கதைத்தொடரின் உரிமைகளை இன்றைக்கு அவர்களாகவே வழங்கிட முன்வருவதோ ; கொசுறாய் இன்னொரு செம ஆக்ஷன் தொடரையும் சேர்த்தே தர சம்மதிப்பதோ ; இன்றைக்குக் கண்ணில்படும் புதுத் தொடர்கள் எல்லாமே ஒவ்வொரு விதத்தில் பட்டாசாய்த் தோன்றுவதோ, சிறு விலையிலான இந்த சந்தா D புக்குகளை நடப்பாண்டினில் போடும் ஞானோதயம் புலர்ந்ததோ - நிச்சயமாய் தற்செயல் நிகழ்வுகளல்ல என்றே தோன்றுகிறது ! /////

    ஆஹாஹா! என்ன தொடருங்க சார் அது? கேட்டவுடனே பதில் வரப்போவதில்லைன்னு தெரியும்! ஆனாலும் எங்களால கேட்காம இருக்க முடியலையே!!

    ///
    தவிர, இடியே விழுந்தாலும் தோள் தர நாங்களிருக்கிறோமென்று திடமாய்ச் சூழ்ந்து நிற்கும் உங்களின் அன்பும், உற்சாகங்களும் இந்த 50 நாட்களில் அபரிமிதமான வெளிப்பாடு கண்டிருக்கும் நிலையில், எதையும் கடந்திடலாமென்ற நம்பிக்கை அலையடிக்கிறது உள்ளுக்குள் !
    /////

    சூப்பர்!!

    ReplyDelete
    Replies
    1. "கண்ணுக்கு குளிர்ச்சியான" தொடர் என்று மட்டும் இப்போதைக்கு !

      Delete
    2. விஜய் @ நம்ப ஆசிரியருக்கு பெவிகால் சப்ளை செய்யும் அந்த கடைக்காரருக்கு முதலில் ஒரு பாயாசத்தை ரெடி பண்ணனும். :-) அப்புறம் எல்லாம் சரியாகிவிடும் :-)

      Delete
  7. ஆஹா! அந்த காமிக்ஸ் குடும்பத்தை தரிசிக்க கொடுத்து வைக்கவில்லையே. குறிப்பாக மஞ்சள் பூ மர்மத்தை மொழிபெயர்த்த அந்த பெரியவரின் முகத்தை பார்க்க ஆசை.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு என்னவோ வருடம் தவறாமல் குடும்பத்துடன் ஈரோடு புத்தக வாசகர் சந்திப்பிற்கு வருகை தரும் அழகான அவர்கள் தானோ என்று சந்தேகம்.

      சரியா சார்..:-)

      Delete
    2. தப்பு தலீவரே !

      Delete
    3. ஆஹா....வட போச்சே...:-(

      Delete
  8. அடுப்பு ரெடி.. சட்டியும் ரெடி.. ஆனா இன்னும் பார்சல் வரலையே.. வந்ததும் பத்த வெச்சிற வேண்டியது தான்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாயாசத்திற்கான பதில் ஆசிரியரின் பதிவிலியே உள்ளது மிஸ்டர் ஸ்லீப்பர்செல் சார்...:-)

      Delete
  9. Aahha 11 manikku parthappa post varalyae ana 11:18 kku vanthuruche...first 10 kulla vara mudiyala.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே புயல்சின்னம்லாம் ஏத்தி வச்சிருக்காங்க சார் துறைமுகத்தில் ; நீங்க பாட்டுக்கு இன்னும் ஜாஸ்தியாய் மழை கொட்ட வழி பண்ணிடுவீங்க போலிருக்கே !

      Delete
  10. So ஊருக்குத் திரும்பிய பிற்பாடு வெளியே நின்றபடிக்கே, 'அண்டா காக்கஸூம் ; குண்டா காக்கஸூம் ; இந்த க்ரூப் போட்டோவைப் பாரடிப் பெண்ணே !!" என்று மந்திரத்தைப் போட்ட பிற்பாடே வாசல் கதவுகள் திறக்குமென்ற சூழலிலிருக்கும் நண்பர்கள், எதெற்கும் அக்குளுக்குள் ஒரு பாயையும், தலைகாணியையும் சுருட்டிக்கொண்டு தயார்நிலையில் இருத்தல் நலமென்பேன் ! 'இல்லியே...அந்த வலது கோடிலே நாலாவதுக்குப் பின்னாடி முறைச்சிட்டு நிக்கிறது நீங்க மெரி தெரிலியே ! யாருகிட்ட சத்தாய்கிறீங்க ? என்ற கிடுக்கிப்பிடிகள் போடப்பட்டால் கம்பெனி பொறுப்பாக முடியாதல்லவா ?

    டெபனட்லி.. டெபனட்லி..
    சிரிச்சு மாளலை சார்..

    ReplyDelete
    Replies
    1. எத்தினி பர்பார்மன்ஸ் பண்ணி ஆளாளுக்கு தப்பிச்சு வர்றீங்கன்னு தெரியாதா - என்ன ?

      Delete
  11. புதிய பதிவு புத்தகம் கிடைக்காத ஏமாற்றத்தை போக்கியது நன்றி ஆசிரியரே

    ReplyDelete
    Replies
    1. ரெட் ஹில்ஸ் DTDC வச்சு செய்றாங்களே சத்யா !!

      Delete
  12. ////And guess what ..? தாத்தாவுக்கும், அம்மாவுக்கும், பேத்திக்கும் எல்லா படைப்புகளுமே பிடிக்கும் தான் ; ஆனால் ஒரேயொருத்தர் மட்டும் மூவருக்குமே ஸ்பெஷலோ ஸ்பெஷல் !! No prizes for guessing who that is.........!!

    'தல TEX' - தலைமுறைகளை வென்றவர் நீர் என்பதை இன்று மறுபடியும் நிரூபித்து விட்டீர் !! ////


    தல - காமிக்ஸ் உலகின் சூப்பர் ஸ்டார் சார்!

    ReplyDelete
    Replies
    1. "ஒரு துளி துரோகம்" ரொம்பவே பிடித்திருந்ததாகச் சொன்னார் !!

      Delete
  13. Sir,

    நீங்கள் நினைப்பது போல் coronaவிற்கு vaccine 2021க்குள் வந்துவிடாது... மிக மிக துரிதம் என்பதற்கே minimum 4 ஆண்டுகள் ஆகும் என்பது வல்லுனர்களின் prediction... நாம் மற்ற virusகளுடன் எப்படி வாழ பழகிக் கொண்டோமோ அதே போல் coronaவுடன் வாழப் பழகியே ஆக வேண்டும்... Book fair meet என்பது இந்த வருடம் இராதென்பதென் எண்ணம்... Maybe luck இருந்தால் சென்னை புத்தக விழா 2021ல் நடக்கலாம்... நீங்கள் சொல்லியது போல் சமூக இடைவெளி... நம்மை படுத்திதான் எடுக்கப் போகிறதென்பது திண்ணம்.. காமிக்ஸ் காதல்தான் எனது இறுக்கமான பணி சூழலை.. சற்றே தளர்த்தியிருக்கிறது... அடுத்த இரண்டு ஆண்டுகள் நமக்கு கண்டிப்பாக சவாலான பொழுதாகத் தான் இருக்கப் போகிறது... 2011க்கு பிறகு நமது comics second innings கண்டதென்றால்... 2021ல் அதற்கு சற்றும் tension குறையாத third inningsஐ விளையாட இருக்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. திகில் கதை படிக்கிற மாதிரி - கொஞ்சம் பயந்துதான் வருது!

      Delete
    2. சார்...நவம்பர் தேர்தலுக்கு முன்னமே vaccine வந்துவிட்டால் இந்தப் பக்கம் மக்களுக்கு அதைக் குத்தி விடலாம் ; அந்தப் பக்கம் அவர்கள் வோட்டை குத்தி விடுவார்கள் என்றொரு நம்பிக்கையோடு உலகின் பெரியண்ணன் சுற்றி வருகிறாரே - அந்த (உடான்ஸ்) நம்பிக்கையே தான் !!

      Delete
    3. அப்புறம்... எனக்கு இன்னமும்... டீ.. வரல...

      Delete
  14. ///1.பெரிய சைசில் டயபாலிக் எப்படித் தெரிகிறார் ? அநேகமாய் உலகின் முதல் முயற்சி இது - டயபாலிக்குக்கு இந்த format -ல் !

    2.இம்மாதம் எந்த இதழிலிருந்து உங்கள் வாசிப்பைத் துவங்க நினைத்துள்ளீர்களோ ?

    3.ஜம்போ சீசன் 3 : முதல் பார்வைக்கு உங்கள் ratings ப்ளீஸ் ? ////

    க்ர்ர்ர்ர்... இதெல்லாம் நியாயமுங்களா? எனக்கு வர்ற கோவத்துக்கு என் மூக்குலயே நச்சு நச்சுன்னு குத்திக்கணும் போல இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ///எனக்கு வர்ற கோவத்துக்கு என் மூக்குலயே நச்சு நச்சுன்னு குத்திக்கணும் போல இருக்கு.////

      ஏன் சார் வீண் சிரமமெல்லாம்..?!! அதையெல்லாம் வழக்கம்போல வீட்டம்மாட்டயே விட்டுடுங்க! :D

      Delete
    2. //எனக்கு வர்ற கோவத்துக்கு என் மூக்குலயே நச்சு நச்சுன்னு குத்திக்கணும் போல இருக்கு.//

      பத்து சார் நீங்க என் மூக்குல குத்துங்க நான் பதிலுக்கு என் பொண்டாட்டியை நினைச்சுகிட்டு தலையனையை குத்துறேன்

      Delete
  15. சாத்வீகமாய் ஒரு சிங்கம்.

    ReplyDelete
  16. ஆகஸ்ட் இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் கொரோனாவுக்கு தடுப்பு ஊசி வந்து விடும் என நம்புகிறேன்.

    எனவே அடுத்து வரும் புத்தகத் திருவிழாவில் நீங்கள் சொல்வது போல் போட்டா எடுக்க தேவையிராது என நம்புகிறேன் சார்.

    ReplyDelete
  17. //ரெட் ஹில்ஸ் DTDC வச்சு செய்றாங்களே சத்யா !!

    ஆசிரியரே எனக்கு வர ஆத்திரத்துல









    ஒன்னும் பன்ன போறதில்ல எனது அபிமான 007 ன் பட்டாம் பூச்சி படலத்தையும் அண்ணன் ஆர்ச்சியின் ஆர்ச்சி இருக்க பயமேன் எனது ஆசை இளவரசியின் எதிர்காலம் எனதே இம்மூன்றையும் மீண்டும் படித்து கோபத்தை தனிச்சுக்க போறேன்

    ReplyDelete
  18. புஸ்வாணம், சங்குசக்கரம், ஆனை வெடி, குருவி வெடி அப்டீங்கறாங்க. சத்தம் மட்டும்தான் கேக்குது. ஒண்ணையும் பாக்க முடியல.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஆகா ஆகா ப்ளுகோட் பட்டாளம் வரட்டும் சுமார் 70 நாட்கள் கழித்து ஒரு காமெடி கதை வரப்போகிறது. ஐ ஜாலி.

      அடுத்த மாதம் மொத்தம் 9 புத்தகங்கள் எனக்கு. படிக்க செம விருந்து தான் போடா உனக்கு பரணி :-)

      Delete
  20. விஜயன் சார், அடுத்த மாத புத்தகங்கள் வரும் நாள் ஜூன் 1ம் தேதியா அல்லது 10ம் தேதியா?

    ReplyDelete
  21. ஒரு வழியா நானும் வந்துட்டேன்

    ReplyDelete
  22. பெரிய அளவு புத்தக கொள்முதல் செய்யாத ஏஜென்ட் என்றாலும் அடுத்தமாத இதழ்கள் குறித்து நீங்கள் எடுத்த முடிவு எனக்கு ஆறுதல் அளிக்கிறது சார்..நன்றி...

    ReplyDelete
  23. எனது மகளின் சந்தா புண்ணியத்தில் பொட்டிய கைபத்தியாச்சு..டயபாலிக் பெரிய சைசில் பார்க்க 70mm சினிமா போல் உள்ளது...அருமை.. கண்ணான கண்ணே...அதிக எதிர்பார்ப்பில் உள்ளது ... பிரிவோம் சந்திப்போம் காலையில் முதல்வேலை அதைப்படிப்பதே...டிரெண்ட்..ஹிஹி..
    கடைசி...அதிகாரியபத்தி கவலைப்பட ஏதுமில்லை நிச்சயம் ஏமாற்ற மாட்டார்....

    ReplyDelete
  24. 1. டேஞ்சர் டயபாலிக் இந்த சைஸ் சும்மா நச்சென்று இருக்கிறது. பெரிய பெரிய சித்திரங்கள் பார்க்க அழகாக இருக்கிறது. பக்காவான எடிட்டிங் படைப்பாளிகளே இந்த சைஸ்க்கு மாறினால் ஆச்சரியம் இல்லை.

    2. க ....க ....தான். ரொம்ப எதிர்பார்ப்பில்லாமல் படித்ததால் அதிக சேதாரமில்லை. 50-50 ரியாக்ஷன். ஆனால் உங்களுக்கு ரொம்பதான் தெகிரியம் சார்.

    3. ஜம்போ வழக்கம் போல அதிரடி சரவெடி. கவ்பாய் கதைக்களம் மிரட்டும் சித்திரங்கள் என கண்டிப்பக்க தவறவிடக்கூடாத இதழ். ஓவ்வொரு சீசனிலும் ஆரம்ப இதழ்கள் எல்லாமே கவ்பாய் ஜானர் என்பது கொசுறு செய்தி. 10/10

    M H MOHIDEEN

    ReplyDelete
  25. டெக்ஸ் புத்தகத்தில் கடைசி பக்கத்தை பசைபோட்டு ஒட்டிய செய்திய ப்ளாக்குல ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம் சார்...நிறைய நண்பர்கள் தெரியாம கிழித்துவிட்டதாக கேள்விப்பட்டேன்...நானும் கிழிக்கதான் பாத்தேன் வர்ல விட்டுட்டேன் தப்பிச்சேன்...

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை ..

      நான் கிழிக்கவில்லை...:-)

      Delete
    2. // சார்...நிறைய நண்பர்கள் தெரியாம கிழித்துவிட்டதாக கேள்விப்பட்டேன்.//
      அடக் கொடுமையே,இந்த பிரச்சினை எல்லோருக்கும் இருக்கா?
      தெரியாமல் நான் கிழிச்சிட்டேனே.....

      Delete
  26. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. DTDC ல செவ்வாய்கிழமை தான் வரும்னு சொல்லிட்டாங்க!

      Delete
  27. ///கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் & கிட்டத்தட்ட 300 + இதழ்கள் - என்ற அனுபவங்களெல்லாமே பல்குத்தக் கூட இனி பிரயோஜனப்படாது///

    விமானம், சுற்றுலா, ஹோட்டல், சினிமா, மால்கள், கல்யாண மண்டபம்,

    இவைசார்ந்த டிக்கெட் புக்கிங், டிராவல் ஏஜென்சி, பஜ்ஜிசொஜ்ஜி பலகார, பொம்மை கடைகள், அச்சகம், போட்டோஸ் வீடியோஸ்,

    ஏற்றுமதி காலியானதால் திருப்பூர் பின்னலாடை மற்றும் அது சார்ந்த தொழில்கள்!

    நம்மால் இந்திகாரர்கள் என்று அன்போடு அழைக்கப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்த காரணத்தால் புலம்பும் முதலாளிகள் மற்றும் அவர்கள் சார்ந்த தொழில்கள்!

    பொருளாதாரச் சங்கிலியில் ஒரு பல்லை பிடிங்கி விட்டால் வண்டி கொஞ்ச நேரம் ஓடும்; ஆனால் ரொம்ப தூரம் ஓடாது! (50 நாள் லாக்டவுன் ஒரு பல்லை பிடிங்கிவிட்டது cashflow!)

    போதக்குறைக்கு நம்ம அரசாங்கம் வாங்கறவங்ககிட்ட பணமில்லை என்பதை மறந்து விற்கிறவர்களுக்கு சலுகை கொடுத்து ஊக்கப்படுத்தி ஆவதென்ன?

    என்னமோ போங்க!?

    நாஸ்ட்டர்டாம்ஸ் சொன்ன மேரி 2020 பிரச்சினை 27 வருஷம் நீடிக்காம இருந்தா சரி!!??

    ReplyDelete
    Replies
    1. 2047ஆ... டொய்ங்க்..

      Delete
    2. ///போதக்குறைக்கு நம்ம அரசாங்கம் வாங்கறவங்ககிட்ட பணமில்லை என்பதை மறந்து விற்கிறவர்களுக்கு சலுகை கொடுத்து ஊக்கப்படுத்தி ஆவதென்ன?///

      அருமை மிதுன். விக்கிறவங்களுக்கும் கடனாக மட்டுமே கொடுக்க பட்டுள்ளது. இதனால் பேங்கிற்கு வார கடன் அதிகமாகும்.(காமிக்ஸ் தளத்தில் பொருளாதாரம் பேச கூடாது. ஆனால் காமிக்ஸ் வாழவே பொருளாதாரம் முக்கியம். எதாவது அதிசயம் நிகழ்ந்து பொருளாதாரம் மேலே வந்தால் மகிழ்ச்சி).

      Delete
    3. மிதுன் அருமையான பார்வை. நிகழ்வை சரியாக சொன்னீர்கள்.

      Delete
  28. ஹைய்யா புதிய பதிவு.....

    ReplyDelete
  29. 1.பெரிய சைசில் டயபாலிக் எப்படித் தெரிகிறார் ? அநேகமாய் உலகின் முதல் முயற்சி இது - டயபாலிக்குக்கு இந்த format -ல் !

    அட்டைப்படமும்,புத்தக உருவாக்கமும் அசத்தல் சார்,தரமாகவும் உள்ளது......
    குறிப்பாக அட்டைப்படம் பார்ப்பவரை வாங்கத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது.....

    ReplyDelete
  30. 2.இம்மாதம் எந்த இதழிலிருந்து உங்கள் வாசிப்பைத் துவங்க நினைத்துள்ளீர்களோ ?

    கண்ணான கண்ணே முதலில்.......
    க.க முடிச்சிட்டு,அ.அ வை எட்டிப் பார்த்துட்டு,ட்ரெண்டின் க.க வை இரசிச்சிட்டு,ஜம்போவின் பி.ச வை பிரிச்சி மேய்ந்தாயிற்று சார்......
    அடுத்து தலயின் வா.நி வர்றியா இல்லையா நீன்னு வெயிட்டிங்........

    ReplyDelete
  31. 3.ஜம்போ சீசன் 3 : முதல் பார்வைக்கு உங்கள் ratings ப்ளீஸ் ?

    10/10,தாரளமாக தரலாம் சார்.......

    ReplyDelete
  32. ./ நம் வாழ்வுகளின் ஒரு இன்றியமையா அங்கமாகவும் மாறிடவுள்ள வார்த்தை : 'சமூக இடைவெளி' என்பது தானே ?! //
    "சமூக இடைவெளி" என்பதே தவறான பதம் என்று தோன்றுகிறது,
    "தனிமனித இடைவெளி " என்பதே சரியான பதம் என்று நினைக்கிறேன்....
    இந்த வார்த்தைகளை கையாள்வதை ஊடகங்களே தவறாக புரிந்து கொண்டுள்ளதோ என்னவோ???!!!

    ReplyDelete
  33. ஆரம்பத்தில் கொஞ்சம் வருத்தமான செய்திகள் ,பின்னர் மகிழ்ச்சியான செய்திகள்


    இன்றைய பதிவு...


    நல்லதே நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு...:-)

    ReplyDelete
  34. புத்தகங்கள் அனைத்தும் ரசித்தாயிற்றே தவிர வாசிக்க இன்று தான்...


    எனவே...:-)

    ReplyDelete
  35. 1.பெரிய சைசில் டயபாலிக் எப்படித் தெரிகிறார் ? அநேகமாய் உலகின் முதல் முயற்சி இது - டயபாலிக்குக்கு இந்த format -ல் !


    ######


    ஓகே சார்....எழுத்துருக்களும் இந்த முறை புரட்டிய வரை பொடி எழுத்துக்களை காணவில்லை போல ஓர் தோற்றம்..படிக்கும் பொழுதே முழுதாக அறிய வரும்...:-)

    ReplyDelete
  36. 2.இம்மாதம் எந்த இதழிலிருந்து உங்கள் வாசிப்பைத் துவங்க நினைத்துள்ளீர்களோ ?

    #####


    இன்று அலுவலகம் சென்று கண்ணான கண்ணே வில் இருந்து தொடங்கி மூன்று இதழ்களாவது படித்து முடித்து விடுவேன் என நினைக்கிறேன் சார்...

    பணியினை பொறுத்து...:-)

    ReplyDelete
  37. Dtdc கேட்டா ் புக்கிங்நம்பர் சொல்லுங்க ன்றாங் க St பூரியர் வந்தா சொல்றோமுங்கன்றாங்க கடவுளே அந்தகௌபாய் ஒருவெகுமதி வேட்டையர், பௌன்சரைப்போன்று சமகாலத்தில் சாகசம் புரிபவர்க என்று முன்பு நீங்கள் அறிவித்த johntiffanyதானே கரூர்ராஜ சேகரன்

    ReplyDelete
  38. 3.ஜம்போ சீசன் 3 : முதல் பார்வைக்கு உங்கள் ratings ப்ளீஸ் ?

    #######


    வழக்கம் போல் கலக்கல்...


    படித்துவிட்டு கதையும் கலக்கலா என்பது விரைவில் தெரியவரும் சார்..:-)

    ReplyDelete
  39. தூரத்தில் நின்று எட்டிப்பார்க்கும்செந்தில்சத்யா க்ளோசப்பில் ஆசிரியர் இந்த செல்பி இந்த வருட வைரம் டென் மில்லியன் பார்வைகள்கரூர்ராஜசேகரன்

    ReplyDelete
  40. /// அகவை 90 -ஐத் தொட்டு நிற்கும் போதிலும், மாதா மாதம் நமது கூரியர்களைக் கண்ட மாத்திரத்தில் பேத்தியுடன் போட்டியிட்டு இதழ்களை அள்ளிச் சென்று படிக்கும் அந்தத் தீவிர வாசகர் ///

    வரம் வாங்கி வந்தவருக்கு வாழ்த்துக்களுடன் வணக்கங்கள்...

    ReplyDelete
    Replies
    1. மொத்தக் குடும்பமும் ஒருவாட்டி EBFக்கு வந்தா நல்லா இருக்கும்!

      Delete
  41. ***நானெல்லாமே பங்க் ஸ்டைலில் கேசத்தை வளர்த்துத் திரிந்தால் அந்தக்கொடுமையை என்னென்பது ?***

    ஒரு வரியில் திகில் கதை..

    ஒரு ராக் ஸ்டார் உருவாகிறார்.

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி!

      சிம்மா!
      நரசிம்மா!!
      ஓமக்குஞ்சி நரசிம்மா!!!

      Delete
  42. மூன்று கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது சார்..

    ஏன்னா இன்னும் பார்சல் வரலை.😭😭

    ReplyDelete
    Replies
    1. வரவில்லை எனக்கும் 😭😭😭

      Delete
  43. ஞாயிறு காலை வணக்கம் சார் 🙏🏼மற்றும்

    நண்பர்களே 🙏🏼🙏🏼🙏🏼
    .

    ReplyDelete
  44. இன்று காலை விழித்தது இரண்டு ஆசிரியர்கள் பதிவில். நேற்று இரவு டெக்ஸ் படித்துக் கொண்டு இருந்ததினால் ஆன்லைன் வரவில்லை. முதல் பதிவு என் முன்னாள் ஆங்கில ஆசிரியரும், இன்னாள் தலைமை ஆசிரியர் அவர்களிடம் இருந்து வந்தது. "Whatsapp status பார்த்தேன் என்ன சின்ன புள்ள தனமா இன்னும் காமிக்ஸ் படிக்கிற? ஒழுங்கா distance education மூலம் சேர்ந்த MA ஆங்கில பாடத்தை படி என்று".
    இரண்டாவது பதிவு நம் ஆசிரியரிடம் இருந்து. முடிந்த வரை இரண்டு பேரையும் பேலன்ஸ் செய்யவே ஆசை. கேள்விக்கு பதில்.
    1.எனக்கு டாயபாலீக் ரொம்பவே பிடிக்கும். சமீபத்தில் ஆங்கிலத்தில் வந்த கிராபிக் நாவல், மிக அருமையாக இருந்தது. டாயபாலீக் பெரிய சைஸ் - யெஸ்.
    2. என்றைக்குமே டெக்ஸ் தான் பிள்ளையார் சுழி, நீங்க கிளப்பின ஆர்வத்தினால் கண்ணாண கண்ணே முதல் இதழ் ஆயிற்று, அப்புறம் ட்ரெண்ட், தற்போது back to தலைவர் டெக்ஸ்.
    3. ஜம்போ இதழ்கள் பற்றி, எல்லாவற்றையும் படித்து, முடித்த பின்னர்.
    ஹாப்பி weekend.

    ReplyDelete
    Replies
    1. ///இன்னாள் தலைமை ஆசிரியர் அவர்களிடம் இருந்து வந்தது. "Whatsapp status பார்த்தேன் என்ன சின்ன புள்ள தனமா இன்னும் காமிக்ஸ் படிக்கிற? ஒழுங்கா distance education மூலம் சேர்ந்த MA ஆங்கில பாடத்தை படி என்று".///

      உங்க ஆசிரியரின் அட்ரஸைக் கொஞ்சம் தரீங்களா சகோ?
      விலாசம் விலாசம்!

      Delete
    2. கண்டிப்பா தருகிறேன். என் ஸ்கூல் பெயர் கணேஷ் பாய் காலாடா, சவுக்கார்பேட்டை, மிண்ட் ஸ்ட்ரீடீல் உள்ளது. North மெட்ராஸ் zone.
      தற்போது headmistress திருமதி நிஷா அவர்கள். 2025 வரை அவர் தான் தலைமை ஆசிரியர். நீங்கள் எப்பொழுது வேண்டுமானால் lockdown பிறகு சொல்லலாம், ஆனால் பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளி, so beware!

      Delete
    3. // எனக்கு டாயபாலீக் ரொம்பவே பிடிக்கும் // எனக்கும் பிடிக்கும்

      Delete
    4. அடுத்த CBFக்கு உங்க ஆசிரியரையும் கூட்டிகிட்டு வாங்க சகோ! என் சார்பா அவங்களுக்கு ஒன்றிரண்டு கி.நா'க்களை பரிசளிச்சு "இதைப் படிச்சதுக்கப்புறமும் காமிக்ஸ் படிப்பது சின்னப்புள்ளதனமா தெரியுதான்னு சொல்லுங்களேன்?"ன்னு கோரிக்கை வைக்கலாமின்னு இருக்கேன்! அம்புட்டுதேங்!!

      Delete
    5. உங்கள் நல்ல மனதை பாராட்டுகிறேன் விஜய் அண்ணா, ஆனால் ஐந்து வருடத்தில் ரிடையர் ஆகக்கூடியவரை மாற்ற முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. முக்கிய காரணம் அவர்கள் படித்தது டின்கிள், அமர் சித்திர கதா, ஆர்ச்சி (நம் ரோபோ நண்பன் இல்லை) மட்டுமே. காமிக்ஸ் என்றால் லைட், casual ரீடிங் மற்றும் டீன்ஏஜ் வயதுக்குள் தான் என்று நினைக்கிறார்கள். இட்ஸ் வெரி difficult to change their fixation. ரொம்ப குஷ்டமப்பா.

      Delete
    6. // சமீபத்தில் ஆங்கிலத்தில் வந்த கிராபிக் நாவல், மிக அருமையாக இருந்தது // இந்த கதையா?

      Delete
    7. இல்லை, ஒரு வித்தியாசமான முயற்சியில் வெளி வந்த கிராபிக் நாவல் "diabolical summer".
      அமேரிக்காவில் ஏனோ டயபாலீக் எடுபடவில்லை. அதனால் IDW செய்த ஒரு sublime biography 1960's நடப்பது போல.

      Delete
  45. 1.Diabolic - double ok
    I don't know, why our people's not like him much.

    2. Start with Kanana kanne graphic novel

    3. Jumbo this month rating 8 / 10

    ReplyDelete
    Replies
    1. Diabolic - double ok அப்படி சொல்லுங்க சார்

      Delete
  46. நான் இப்போது பெங்களுரில் இல்லை. திருச்சியில் உள்ளேன்.
    என்னுடைய பெட்டி அனுப்ப பட்டு விட்டதா?.
    அனுப்பி இருக்கும் பட்சத்தில், எந்த இடத்தில் இருந்தாலும் இன்னும் 15 நாட்களுக்கு பிறகே என்னால் பெற முடியும்.

    ReplyDelete
    Replies
    1. கடந்த இரண்டு பதிவுகளை படியுங்கள் கணேஷ். நீங்கள் "அனுப்ப வேண்டாம்" என்று நமது அலுவலக whatsup எண்ணிற்கு சொல்லி இருந்தால் அனுப்பி இருக்க மாட்டார்கள், அப்படி நீங்கள் தகவல் சொல்ல வில்லை என்றால் அனுப்பி இருக்கலாம்.

      Delete
  47. அடுத்து வரவுள்ள டெக்ஸின் 'கைதியாய் டெக்ஸ் வில்லர்" வில்லன் ப்ராடியெஸ் :-) இதற்கு முன்னால் வந்த இந்த இருவரின் கதையை மிகவும் ரசித்தேன், டெக்ஸூக்கு அடிக்கடி கண்ணில் விரலை விட்டு ஆட்டிய வில்லன். அடுத்த மாதம் முதலில் படிக்க விரும்புவது டெக்ஸ் கதையே.

    ReplyDelete
  48. கண்ணான கண்ணே:
    குழந்தைத் தனம்,குழந்தைத் தன்மை இரண்டுக்குமான வித்தியாசங்கள் என்ன என்று ஒருமுறை நண்பரிடம் விவாதித்த நினைவுண்டு...
    க்ளாரா முதலில் குழந்தைத்தனத்துடனும்,கற்பனை உலகத்தில் சஞ்சரித்து வந்த பின்னர் குழந்தைத்தன்மையுடனும் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது...
    மென்சோகம் இழையோடும் களம்....
    எதிர்பார்ப்பில்லா வாசிப்பு நிறைவைத் தரும்...
    தூரிகை பாணியிலான ஓவியங்கள்,ஓவிய அமைப்புகள் சிறுவர்கதை பாணியை தோற்றுவிக்கிறது....
    வர்ணக் கலவைகள் மகிழ்ச்சியான மனநிலையைக் கொடுப்பதாக தோன்றுகிறது....
    க்ளாராவின் பார்வையில் கதை நகர்வதால் இழப்பின் வலியை க்ளாராவின் பார்வையில் பார்ப்பவர்களுக்கு புரிய வாய்ப்புண்டு...
    எமது மதிப்பெண்கள்-8/10.

    ReplyDelete
    Replies
    1. இதுமாதிரியான கதைகள் ஒவ்வொருவர் பார்வைக்கும் வித்தியாசப்படும்! என் பார்வையில் அந்த வித்தியாசத்தை உணர்ந்திட ஆவலோ ஆவல்!

      Delete
    2. // ஒவ்வொருவர் பார்வைக்கும் வித்தியாசப்படும்! // நானுமே உடன் படுகிறேன்.

      Delete
  49. கனவே கலையாதே..!
    வின்னிபெக் நகரை நோக்கி கைதியுடன் பயணிக்கும் நமது எதார்த்த நாயகர் ட்ரெண்ட்,ஆல்பெர்ட்டா கில்டர் எனும் சிறு நகர் வழியே செல்லும்போது அந்நகரில் ஓய்வெடுக்க முடிவெடுக்க,பின்வரும் நிகழ்வுகளில் அந்த கைதியை விடுவிக்க ட்ரெண்டிடம் பேரம் பேசப்படுகிறது,பேரத்தை மறுத்து கைதியுடன் மேற்கொள்ளும் பயணத்தில் மர்ம ஆசாமிகள் சிலரால் சுற்றி வளைக்கப்பட,அத்தருணத்தில் வின்னிபெக்கில் உள்ள காதலியை சந்திக்க பயணிக்கும் மேற்கின் கில்லாடி வைல்ட் பில் இதில் குறுக்கிட்டு ட்ரெண்டை காக்கிறார்....
    பின் குழுவாக பயணிக்கும் ட்ரெண்ட் பில்லுடன் நெருக்கமாக பில் தனக்கு வரும் தொடர்ச்சியான ஓர் தீக்கனவைப் பற்றி ட்ரெண்டிடம் விளக்குகிறார்....
    வழிப் பயணத்தினிடையே மீண்டும் மர்ம ஆசாமிகள் சிலரால் ட்ரெண்ட் சுற்றி வளைக்கப்பட,பில் ஒற்றைக்கு ஒற்றை சவாலை எதிர்கொள்ள நேரிடுகிறது....
    அடுத்தடுத்த திருப்பங்களில்,
    கைதியை தப்பிக்க வைக்க முயலும் குழுவினர் யார்?
    அவர்களின் நோக்கம் என்ன?
    பில் ஒற்றைக்கு ஒற்றை சவாலை வெற்றிக்கரமாக எதிர்கொண்டாரா?
    தீக்கனவு பலித்ததா?
    ட்ரெண்டின் பயண நோக்கம் கெலித்ததா?
    வாசியுங்கள் கனவே கலையாதே...
    வழக்கம்போல் அசத்தலான ஓவியங்கள்,நேர்கோட்டு பாணிகள்...
    முந்தைய ட்ரெண்ட் சாகஸங்களில் கதை நெடுக இழையோடும் காதல் உணர்வு இதில் குறைவு என்றே தோன்றுகிறது...
    நிறைவான வாசிப்பிற்கு உத்திரவாதம்......
    எமது மதிப்பெண்கள்-9/10.

    ReplyDelete
    Replies
    1. ட்ரெண்ட் - எப்போதுமே ஒரு இதமான வாசிப்பு அனுபவத்துக்கு உத்தரவாதம் தந்திடும் படைப்பாயிற்றே!!

      சீக்கிரமே படித்திட ஆவல்! ஆத்தா மனசு வைக்கணும்!

      Delete
    2. டிரெண்ட் எப்போதும் டிரெண்டில்.

      Delete
  50. அலைகடலில் அதகளம்,
    அட்டைப் படம் அசத்தல்,இதழின் தரமான தயாரிப்பு பாணி நம்மைக் கவர்கிறது......
    கரீமா கப்பலில் வரும் விலை மதிப்பற்ற நகைகளை ஆட்டையைப் போட போகும் டயபாலிக்கிற்கு ஆப்பு வைத்து விட்டு அவற்றை வேறு ஒரு தேட்டை கும்பல் ஆட்டையைப் போட்டுவிட்டு செல்ல,
    அடுத்து டயபாலிக் அந்த தேட்டை கும்பலுக்கு எப்படி கட்டையைப் போட்டு நகைகளை திரும்ப ஆட்டையைப் போடுகிறார் என்பதே கதைக் களம்....
    படிச்சி முடிச்ச வாட்டி,
    ஸ் யப்பா இப்பவே கண்ணக் கட்டுதே....
    என்னமோ போடா மாதவா....
    -இதுதான் தோணிச்சி.....
    எமது மதிப்பெண்கள்-ஹி,ஹி... இதுக்கு மார்க் தேவையா என்ன???

    ReplyDelete
    Replies
    1. என்னவொரு அற்புதமான கருத்துகளைக் கொண்ட கதைக்களம்!!!

      இதிலேயும் இன்ஸ்பெக்டர் ஜிங்கோ வருகிறாரா?!!

      Delete
    2. ரவி அண்ணா உங்களுக்கு பொறாமை !!!!!!!!

      Delete
    3. // ரவி அண்ணா உங்களுக்கு பொறாமை !!!!!!!! //
      அப்படி எல்லாம் இல்லை குமார்,முன்பொருமுறை வந்த கதையே பரவாயில்லை என்றே சொல்லி இருந்தேன்,மனதில் பட்ட கருத்துகளை பதிந்தேன் அவ்வளவே....
      மற்றபடி எந்த இதழ்களையும் தேவையில்லாமல் குறை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை...
      இதற்கான விளக்கங்களை நேரில் மீட்டும்போது விவாதிப்போம்.......

      Delete
    4. // எந்த இதழ்களையும் தேவையில்லாமல் குறை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை... // உண்மை தான் நீங்கள் எப்போதுமே அப்படிதான் என்று நான் உணர்ந்து இருக்கிறேன்

      Delete
    5. ///// எந்த இதழ்களையும் தேவையில்லாமல் குறை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை... //---- நைஸ் பாலீஸி!

      Delete
  51. பிரிவோம்...சந்திப்போம்..!
    வன்மேற்கில் கால்நடை மந்தை மூலம் பிழைப்பை ஈட்டும் கெளபாய் ரஸ்ஸல் காலச்சூழலில் தனிமைப்படுத்தப்படும் சிறுவன் பென்னட்டை தத்து புதல்வனாக்கி தனது குழுவில் இணைத்துக் கொள்ள,
    முந்தைய கெளபாய் ஜாக் என்பவனின் கஷ்டஜீவனப் பிழைப்பிலும்,ரஸ்ஸலின் நண்பன் ஓர்ஸன் என்பவனுடனான விவாதத்திலும் கெளபாய்கள் எதிர்காலத்தில் தொடர்ந்து ஜீவிப்பது சவலான விஷயம் என்பதை புரிந்து கொள்ளும் ரஸ்ஸல் பண்ணை நிலத்தை வாங்கி பிழைப்பை ஓட்ட முடிவெடுக்கிறார்.....
    தொடர் பயணத்தில் கிராமம் ஒன்றை கடந்து செல்ல நேரிட,அக்கிராமமோ காலமாற்றத்தில் நடக்கும் இரயில் சேவைகளை கருத்தில் கொண்டு அங்கே எப்படியாவது இரயில் நிறுத்தத்தை கொண்டுவர வேண்டும் என்று முனைப்புடன் இருக்க,இதற்கிடையே ஏற்படும் அசம்பாவிதம் ஒன்றில் பென்னட் இறக்க நேரிடுகிறது....
    இதைத் தொடர்ந்து ஏற்பட இரணகளங்களும்,இரத்தக் களரிகளும்,திடுக் திருப்பங்களுமே களத்தை ஆர்வத்துடன் தொடர வைக்கிறது....
    பென்னட் இறப்பின் மர்மம் என்ன?
    பென்னட் இழப்பில் துடிக்கும் ரஸ்ஸல் எடுக்கும் முடிவுகள் என்ன?
    கிராமத்திற்கு இரயில் நிறுத்தம் கிடைக்கும் வாய்ப்பு என்னவானது?
    -விடை காண வாசியுங்கள் பிரிவோம்...சந்திப்போம்....

    வாசிப்பின் முடிவில் தொக்கி நிற்கும் கேள்விகள்??? சில புரிதல்களும்,
    ஒரு சிறு குற்றச் சம்பவம் அனைத்தையும் புரட்டி போட்டு விட்டதே?
    சுயநலத்துடன் எடுக்கப்படும் சில முடிவுகள் ஒரு கண்ணோட்டத்தில் தவறாக பார்க்கப்பட்டாலும் மறு கண்ணொட்டத்தில் சரியாக பார்க்கப்படுவது எவ்வாறு சரியாகும்?
    பொறுப்பற்ற ஒரு செயல் பலரின் வாழ்க்கைகளை மாற்றி விடுகிறதே?
    சம்பவங்களில் தொடர்பில்லாத ஒருவர் நல்லவராகவே இருப்பினும் சம்பவங்களை மாற்ற முனைவதாலோ என்னவோ அதன் தொடர்ச்சியாக பலியாவது ஏனோ?
    அளவுகடந்த பாசம் எந்த முடிவையும் எடுக்க வைக்குமோ?

    உயிர்ப்பான ஓவிய பாணிகள்,
    நிறைவான கதையோட்டம்,
    தொடக்கத்தில் மெல்லிய ஓட்டமெடுக்கும் கதை பின்களத்தில் பல திருப்பங்களை கொடுப்பதால் நல்லதோர் வாசிப்புணர்வை ஏற்படுத்துகிறது....
    சற்றே மனதை கனக்க வைக்கும் முடிவு......
    எமது மதிப்பெண்கள்-10/10.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விமர்சனம் ஆவலை எகிறச் செய்கிறது அறிவரசு அவர்களே!

      Delete
    2. எனக்கும் எனக்கும். முதலில் கண்ணான கண்ணே அடுத்து பிரிவோம் சந்திப்போம்.

      Delete
  52. வாசிக்காத நண்பர்கள் பொறுத்தருள்க.....

    ReplyDelete
    Replies
    1. அண்ணா நான் அதிகம் எதி்பார்ப்பது உங்கள் விமர்சனமே. எனக்கு புத்தகம் இன்னும் வரவில்லை என்றாலும் உங்கள் விமர்சனம் ஒரு preview ஆக உள்ளது. எனவே தொடருங்கள்.

      Delete
    2. நன்னி குமார்.......

      Delete
  53. கண்ணான கண்ணே...


    அலுவலகம் கிளம்பும் முன்னரே பத்து நிமிட அவகாசம் இருந்த காரணத்தால் அந்த நேரத்தில் படித்து விடலாமே என்ற எண்ணத்தில் பொறுமையாகவே படித்து விட்டேன்.. படித்து முடிக்க சரியாக ஏழு நிமிடங்கள்..


    கதையும் சரி ,சித்திரங்களும் சரி கவனிக்கும் பொழுதே அதிக எதிர்பார்ப்பு ஏதும் வேண்டாமே என்ற எண்ணத்திலியே வாசிக்க ஆரம்பித்தது.ஒரு வித சோகமே என்றாலும் அந்த சோகத்தையும் எப்படி சொல்வது எனத்தெரியவில்லை ஆனால் மரண சோகத்தையும் ஒரு வித புரிதலோடு தாண்டி செல்ல ,அதுவும் விபரம் தெரியாத சிறுவர் ,சிறுமியர்க்கான அழகான ( குட்டி ) க்கதை எனலாம்.

    சிறுவயதில் பெற்றோரை இழந்து வாழும் அனுபவத்தை கண்டோருக்கு இந்த கதையின் வலிமை புரியும்..அதே சமயம் அதற்காக "ஆஹா..வெகுச்சிறப்பான கிராபிக் படைப்பு " என்றெல்லாம் ( என்னால் ) கூற இயலாது.ஆனால் ஆசிரியர் குறிப்பிட்ட எடு கடுதாசியை ,முகத்தில் குத்து ,ஆணியை பிடுங்கு,தேறாது என்பதற்கு எல்லாம் தேவையில்லாத ஒரு "பரவாயில்லை" ரகம் இந்த

    கண்ணான கண்ணே..

    இதன் கடைசிபக்கத்தில் ஓவிய ஆசிரியர் ஏதாவது வினாக்கள் இருப்பின் கேளுங்கள் ,பதில் அளிக்கிறேன் என தெரிவித்து உள்ளார் ( எனது புரிதலில் )அவ் வாறு நான் அவரிடம் வினவுவதாக இருப்பின் நான் வினவும் வினா..

    தாங்கள் இதே பாணியில் மட்டுமே சித்திரக்கதைகளுக்கும் சித்திரங்கள் வரைந்துள்ளீர்களா ,வேறு பாணியிலும் சித்திரங்கள் படைத்து உள்ளீர்களா..?

    இதே பாணியில் தான் என்றாலும் முழுநீள சித்திரக்கதைகளுக்கும் , வேறு பாணி அதாவது ( குழந்தைகளுக்கு என்றில்லாது ஆக்‌ஷன் ,சஸ்பென்ஸ் ) போன்ற படைப்புகளுக்கும் உங்கள் சித்திரம் படைக்கப்பட்டுள்ளதா ?


    கண்ணான கண்ணே எனது மதிப்பெண்

    7.5\10

    ReplyDelete
    Replies
    1. // படித்து முடிக்க சரியாக ஏழு நிமிடங்கள்..//
      எனக்கு 17 நிமிடங்கள் தலைவரே.....
      அதுக்கு காரணம் பின்னட்டையில் இருந்த வாசகம்....

      Delete
  54. "கைதியாய் டெக்ஸ் வில்லர்" தலைப்பை பார்க்கும்போது. தெய்வத்திருமகள் படத்தில் சாந்தானத்தின் டையலாக் ஞாயபகம் வருகிறது.
    **** புடுச்சு ஜெயில்ல போடுங்க சார் அவரை***

    ReplyDelete
  55. அடுத்த மாதம் வெளிவரும் நான்கு கதைகளுமே சின்ன சின்ன கதைகள் என்பதால் இன்னொன்னு கதையும் சேர்த்துக் கொள்ள முயற்சிக்கலாமே சார்! 200 ரூபாய்க்குள் அடங்குமாறு கதை இருப்பின் போட முயற்சிக்கலாமே! ஒரு மாத புத்தகம் இடைவெளி இருப்பதால் அப்பப்போ பில் பண்ணால் நல்லாயிருக்கும்!இம்மாதம் முதலில் படிக்கப் போவது டேஞ்சர் டயபாலிக் தான் கருப்பு வெள்ளையில் வித்தியாசமான சைஸில் அமர்க்களமாக உள்ளது! அப்புறம் எப்போ புக்ஸ் அனுப்பினாலும் Dtdc ல மட்டும் தயவு செய்து அனுப்பாதீங்க சார். ஒருநாள், ரெண்டு நாள் தாமதமானாலும் St கூரியர்லயே அனுப்ப பாருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. #####எப்போ புக்ஸ் அனுப்பினாலும் Dtdc ல மட்டும் தயவு செய்து அனுப்பாதீங்க சார். ஒருநாள், ரெண்டு நாள் தாமதமானாலும் St கூரியர்லயே அனுப்ப பாருங்கள்!####

      இந்தகருத்தில் நானும் உடன்படுகிறேன்..

      Delete
  56. சார் மே மாத புத்தகங்களை ஆன்லைனில் வாங்க ஆர்டர் செய்தால் கூரியர் செலவு 120 காட்டுகிறது. தளத்தில் ஏதாவது தவறாகிவிட்டதா.. அல்லது கூரியர் செலவு உண்மையாகவே 120 ரூபாய் தானா

    ReplyDelete
  57. இம்மாதம் வந்த அனைத்து காமிக்ஸ்களையும் படித்து முடித்துவிட்டேன்.

    நான் டெக்ஸ் வில்லரின் எதிரி ஆனாலும் இம்முறை நான் முதலில் படித்தது டெக்ஸ் வில்லர்
    இரண்டாவதாக அலைகடலில் அதகளம்
    மூன்றாவதாக கனவே கலையாதே
    நான்காவதாக பிரிவோம் சந்திப்போம்
    கடைசியாக கண்ணான கண்ணே!

    எனவே இம்மாத தரவரிசையும் இதே தான்.

    ஆனால் இதில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

    எனது மகன் தானே கண்ணானகண்ணே புத்தகத்தை எடுத்து சிரமப்பட்டு தமிழில் வாசித்துவிட்டு அது குறித்து என்னிடம் விவாதம் செய்தான். இது இந்த காமிக்ஸ்ஸூக்கு கிடைத்த வெற்றிக்கு சாட்சி

    பாக்கெட் சைஸில் பார்த்த டயபாலிக் இதில் அவ்வளவாக உவப்பாக இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ////எனது மகன் தானே கண்ணானகண்ணே புத்தகத்தை எடுத்து சிரமப்பட்டு தமிழில் வாசித்துவிட்டு அது குறித்து என்னிடம் விவாதம் செய்தான். இது இந்த காமிக்ஸ்ஸூக்கு கிடைத்த வெற்றிக்கு சாட்சி///

      சூப்பர்!!

      Delete
    2. // /எனது மகன் தானே கண்ணானகண்ணே புத்தகத்தை எடுத்து சிரமப்பட்டு தமிழில் வாசித்துவிட்டு அது குறித்து என்னிடம் விவாதம் செய்தான். இது இந்த காமிக்ஸ்ஸூக்கு கிடைத்த வெற்றிக்கு சாட்சி//

      இத இதைத்தான் எதிர்பார்த்தேன்.
      சூப்பர் செய்தி. மகிழ்ச்சி.

      Delete
  58. //நான் டெக்ஸ் வில்லரின் எதிரி//

    என்ன ஐயா சொல்றீய... அப்படியென்றால் டெக்ஸ் கதைகளைக் கட்டித் தொங்கவிட்டுச் சட்டென பிஸ்ரலை உருவிச் சுட்டுத் தள்ளுகிறீயளா ? இப்படிப்பட்ட எதிரி விளையாட்டுக்களை விட்டு அவற்றை அருமையான காமிக்ஸ் புத்தகங்கள் என்றெண்ணிப் படியுங்கள். புத்தகங்களிலும் எதிரிகள் வேண்டாமே.

    ReplyDelete
  59. ST கூரியர் முக்கால் வாசி எனக்கு தாமதமாகவே டெலிவரி செய்துள்ளது. மற்றவர்கள் கதைகளை படித்து முடித்து துவைத்த பின்னரே எனக்கு டெலிவரி கிட்டும். அந்த காத்திருக்கும் தருணத்தில் இந்த தளத்தின் பக்கம் வரவே பிடிக்காது.
    திங்கள் அன்று போன் செய்து "புக் அனுப்பிட்டுமா சார்? உங்கள் ஊரில் கூரியர் சர்வீஸ் இருக்கா ?" என்று கேட்டபோது, எனக்கு கூரியர் அனுப்பும் ஒரே ஜீவன் நீங்கள் மட்டும் தான் என்றேன். DTDCல தான் சார் அனுப்புறொம், பேட்ச் பேட்ச்சாதான் சார் அவர்கள் டெஸ்பேட்ச செய்வார்கள், அதனால் புக் வர ஒரு வாரத்திற்குமேல கூட ஆகலாம் என்றார்கள். எப்போதுமே நமக்கு தாமதமகதான் வரும், புக் வருவதே பெரும் அதிர்ஷ்டம் என்று சொல்லிக்கொண்டேன். நான்காவது நாள் வெள்ளிக்கிழமை ஒரு போன், "சார் DTDC courier, மெயின் வாசலில் உள்ளேன் உங்களுக்கு எதோ புக் வந்துள்ளது வந்து வாங்கிக்கோங்க என்றார். :) :) :)
    சென்னையில் STக்கு DTDC பரவாயில்லை என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  60. கொரோனா பீதிகளுக்கிடையே வெளியாகியுள்ள இதழ்களை இப்படி இரண்டாக பிரித்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன்...

    டேஞ்சர் டயபாலிக்-அலைகடலில் அதகளம்
    vs
    கண்ணான கண்ணே
    vs
    ட்ரெண்ட்-கனவே கலையாதே

    and

    டெக்ஸ்-வானவில்லுக்கு நிறமேது
    vs
    பிரிவோம் சந்திப்போம்

    முதல் மூன்று இதழ்கள் படித்து முடித்தாயிற்று. எனவே அவைகளை பற்றி மட்டும் ஒரு சின்ன விமர்சனம்.

    புத்தக வடிவமைப்பு :

    நிச்சயமாக டேஞ்சர் டயபாலிக் சும்மா பட்டைய கிளப்புது. அட்டைப் படத்திலும் சரி உள்பக்க சித்திரங்களும் சரி அற்புதமாக இருக்கிறது. எழுத்துக்கள் வாசிப்பதற்கு மிக இலகுவாக இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் மற்ற இரண்டு இதழ்களில் டேஞ்சர் முன்னணியில் இருக்கிறார். இதற்கு அடுத்து கனவே கலையாதே, கண்ணான கண்ணே என வரிசைப் படுத்தலாம்.

    கதைக்களம் :

    டேஞ்சர் எப்படி புத்தக வடிவமைப்பு, சித்திரங்கள் எனக் கவர்ந்ததோ அதற்கு நேர்மாறாக வட்டியும் முதலுமாக கதை என வரும்போது சும்மா வச்சி செஞ்சிட்டார். சிலருக்கு பிடிக்கலாம். என்னை பொறுத்த வரை விறுவிறுப்பில்லாத ரொம்பவே சுமாரான கதை.

    கண்ணான கண்ணே - ஒரு யாதார்த்தமான கதைக்களம். கதாசிரியரும் ஓவியரும் வாசகர்களை அந்த குட்டிப் பெண் க்ளாராவுடன், ஒருவித பச்சாதாபத்துடனும் பரிதாபத்துடனும் பயனிக்க வைக்கிறார். அதுதான் இக்கதையின் வெற்றி. ஒரு இழப்பில்தான் மற்றொன்று உருவாகும். அந்த இழப்பை நினைத்து வருந்திகொண்டிருந்தால் மனிதன் வாழ்வை கடத்த முடியாது என்ற தத்துவத்துடன் இக்கதையை முடிக்கிறார்கள். மொத்தத்தில் இது ஒரு கதையாக இல்லாமல் ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவமாக இருந்தது.

    கனவே கலையாதே : உண்மையில் கதை மற்றும் கலர் சித்திரங்கள் என அனைத்திலும் ஸ்கோர் செய்வது நம்ம ட்ரெண்ட்தான். ட்ரெண்டை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், கதாபாத்திரங்கள், எதிர்பாராத அமைதியான இறுதி பக்கங்கள் என எல்லாமே கவர்கின்றன. இதுவரை வந்த ட்ரெண்ட் தொடரில் இக்கதையே சுவராஸ்யமாக விறுவிறுப்பாக இருக்கிறது.

    மூன்று இதழ்களையும் படித்து முடித்த பிறகு என்னுடைய மார்க்...

    1. அலைகடலில் அதகளம் - 7/10 (அட்டைபட டிசைன் & புத்தக வடிவமைப்பு)

    2. கண்ணான கண்ணே - 8/10 (வித்தியாசமான வாசிப்பு அனுபவத்திற்காக)

    3. கனவே கலையாதே - 9/10 (காதல், பாசம், துரோகம், ஆக்‌ஷன் & அதிரடி)

    ReplyDelete
    Replies
    1. // வாசகர்களை அந்த குட்டிப் பெண் க்ளாராவுடன், ஒருவித பச்சாதாபத்துடனும் பரிதாபத்துடனும் பயனிக்க வைக்கிறார். அதுதான் இக்கதையின் வெற்றி. //
      சரியான கருத்து......

      Delete
    2. ///இதுவரை வந்த ட்ரெண்ட் தொடரில் இக்கதையே சுவராஸ்யமாக விறுவிறுப்பாக இருக்கிறது.///

      அடடே!! சூப்பர்!!

      Delete
    3. ட்ரெண்ட் 7வது கதை வரட்டும் பலசங்கங்கள் கலைக்கப்பட்டு புதிய பல சங்கங்கள் உருவாகும்! அந்த "இளமை" புயலின் பெயரும் "ஒடிசி"-ன் நாயகி பெயரும் ஒன்றேதான்!

      Delete
    4. ஆகா..சூப்பர்...

      Delete
  61. வானவில்லுக்கு நிறமேது..?

    நிறைய்ய நண்பர்களுக்கு இன்னும் இதழ் கிடைக்காத சூழலில் விரிவாக பேச இயலவில்லை...ஆனால் ஒன்றே ஒன்று டெக்ஸ் கதையில் கதையே இல்லை என்று "கதை " விடும் நண்பர்களுக்கு மீண்டும் ஓர் அழகான பதில் இந்த வானவில்லுக்கு நிறமேது..ஒருமணி நேரம் அல்ல சரியாக ஒண்ணேமுக்கால் நேரம் நினைத்தபடியே எந்த புறப்பிரச்சனைகளையும் நினைக்க வைக்காமல் தன்னுடனே பயணிக்க வைத்து விட்டார் டெக்ஸ்..இந்த முறை டெக்ஸ் கார்சன் மட்டுமல்ல கதையில் வரும் அனைத்து மாந்தர்களுமே நினைவில் நிற்கும் படி அழகான கதை அமைப்பு.கதைக்கு சித்திரங்கள் வலு சேர்க்கிறதா இல்லை சித்திரங்களுக்கு கதை வலு சேர்க்கிறதா என்று வேண்டுமானால் சிறு குழப்பம் நேர்ந்தது எனலாம்.அட்டைப்பட ஓவியம் பற்றி சொல்லவே வேண்டாம்..மொத்தத்தில் காமிக்ஸ் உலகில் என்றுமே தான் "கிங் " என்பதை மீண்டும் நிரூபித்த 🌈 க்கு நிறமேது இதழை பாரட்ட வார்த்தைகள் இல்லை...

    எனது மதிப்பெண் பத்துக்கு பத்து

    ReplyDelete
  62. புக்கா... என்ன புக்கு? ஒண்ணும் வரலே.

    ReplyDelete
  63. Leaving the blog temporarily.. Could only read editor's writing ..accentuating work load is to be blamed...shall come back after a while..

    ReplyDelete
    Replies
    1. மாடஸ்டியுடன் மீன் பிடிக்கச் செல்லும் செனாஅனாவின் பணி சிறக்க வாழ்த்துகள்!

      உங்களின் வருகைக்காக இத்தளம் காத்திருக்கும்!

      Delete
    2. Please take care and be safe Sir.

      Delete
    3. காத்திருக்கிறோம் செனா..!

      Delete
  64. புக்கா... என்ன புக்கு? ஒண்ணும் வரலே
    Same feeling

    ReplyDelete
  65. ///தல TEX' - தலைமுறைகளை வென்றவர் நீர் என்பதை இன்று மறுபடியும் நிரூபித்து விட்டீர்!///---.

    லாலே லாலி லா லா......,

    ஆஹா.... அடுத்த 6 மாதங்களுக்கு இந்த பாராட்டுகளை படித்து கொண்டு இருந்தாலே போதுமானது!

    ReplyDelete
    Replies
    1. :-)


      டெக்ஸ் பாராட்டுதல்களுக்கு அப்பாற்பட்டவர் டெக்ஸ்..:+)

      Delete
    2. உண்மை தான் தலைவரே! 90வயசு மூத்த ரசிகர் இடம் இருந்து பாராட்டுகள் வரவும் கொஞ்சமாக எக்ஸைட்மைனட் ஆகிட்டது!

      Delete
  66. சம்முவத்து கைக்கு மட்டும் பொஸ்தவம் கெடைக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. அம்சமா ஒரு பாயசத்தை போட்டுற மாட்டேன்..

    ReplyDelete
  67. ஒரு வழியாக புத்தகம் கிடைத்துவிட்டது. டெக்ஸின் 'பாலைவனப் பரலோகம்',
    'ஆர்ட்டிக்கில் ஆர்ச்சி',
    மாடஸ்டியின் 'மரண ஒப்பந்தம்',
    'மின்னல் மனிதன்',
    ரிப்போர்ட்டர் ஜானியின் ' கொலைக்கடிதம்',
    ஸ்பைடரின் ' எதிரிக்கு எதிரி',
    கேப்டன் பிரான்சின் 'நியூயார்க்கில் பார்னே',
    லக்கிலூக்கின் 'ஜாலியைத்தேடி'
    மின்னல் படையினரின் 'புரட்சிக்கொரு பயிற்சி'
    காரிகனின் 'மனைவி மரணம்',
    எப்படி சார் இப்படி? சூப்பர்.ஒரே புத்தகத்தில் இத்தனை கதைகள்!
    இலியானாவின் இடுப்பு போல புத்தக சைஸ்...!
    426 பக்கங்கள்!
    ஆஹா...ஓஹோ...
    பேஷ்...பேஷ்.....
    ரொம்ப நன்னாயிருப்பது நரசுஸ் காஃபி மட்டுமல்ல. நம்ப காமிக்ஸூம்தான்!

    ReplyDelete
  68. கேப்டன் பிரின்ஸ்.

    ReplyDelete
  69. டேஞ்சர் டயபாலிக்: கப்பல் பிரயாணிகளின் நகைகளை கொள்ளையடிக்க சக பிரயாணிகளைப் போல இரட்டை வேடத்துடன் கப்பலில் பயணிக்கிறது டயபாலிக் & ஈவா ஜோடி. பிரயாணிகளின் நகைகளுக்கு போலியை தயார் செய்து அவற்றைக் கொள்ளையடித்து தன் அறையில் பத்திரப் படுத்துகின்றனர். இந்தச் சூழ்நிலையில் எதிர்பாராதவிதமாக கொள்ளையன் யாங் தலைமையிலான கும்பல் கப்பலைக் கொள்ளை அடிக்கிறது. நமது ஹீரோ கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டு போலீசாரிடமிருந்தும் பல மாறுவேடங்களில் தப்பிப்பதுடன் கதை முடிகிறது. Regular ஹீரோக்களுக்கு மத்தியில் குற்றச் சக்கரவர்த்தியின் தேவையை டயபாலிக் anti hero நிவர்த்தி செய்து இருக்கிறது. டயபாலிக் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திருப்தியான கதைக்களம். நடப்பாண்டில் இரண்டு கதைகள். அடுத்த ஆண்டிலும் தொடரட்டும் டயபாலிக்கின் தேவை.

    ReplyDelete
  70. டயபாலிக் ...

    அழகான அட்டைப்படம் ,பெரிய அளவில் வந்த சித்திரங்கள் ,அதை விட முக்கியமாக இதுவரை வந்த இந்த ஜானர் இதழ்களில் எழுத்துருக்கள் மிக சிறிய அளவில் கண்களை உருட்டி ,சுருக்கி படிக்கும் நிலை இந்த இதழில் காணப்படவில்லை..இதழ் மிக சிறப்பு..


    கதை ...கதை ...அதை தான் தேடுகிறேன்...பாட்டியை கொல்வதால் மட்டுமே டயபாலிக்கை நண்பர்கள் கைவிட நேர்ந்தது என்பதை மறுக்க வைத்த மீண்டும் ஓர் டயபாலிக் சாகஸம்..

    ReplyDelete
  71. ///.பெரிய சைசில் டயபாலிக் எப்படித் தெரிகிறார் ? அநேகமாய் உலகின் முதல் முயற்சி இது - டயபாலிக்குக்கு இந்த format -ல் !///


    இந்த வரிசையில் வெளியான ஜேம்ஸ், ஆர்ச்சி, மாடஸ்டி இதழ்களில் இருந்த சில குறைகளும் இந்த இதழில் களையப்பட்டிருக்கிறது.!

    முக்ககியமாக தெளிவான எழுத்துருக்கள்.. தெளிவான படங்கள்.. இவையிரண்டும் முந்தைய இதழ்களில் மிஸ்ஸிங்.!

    இந்த ஃபார்மேட் டயபாலிக்குக்கு ஓ.கே சார்.!

    என்னுடைய பர்சனல் ஒப்பீனியன் (மட்டுமே).. டெக்ஸ் சைசிலேயே இந்த வரிசையும் வெளியானால் சிறப்பாக இருக்கும்.!
    வாய்ப்பில்லையென்றால் இம்மாதம் வந்திருக்கும் டயபாலிக் போன்றே தொடரலாம்.. அருமை.!

    ReplyDelete
  72. ///
    2.இம்மாதம் எந்த இதழிலிருந்து உங்கள் வாசிப்பைத் துவங்க நினைத்துள்ளீர்களோ ?///

    கண்ணான கண்ணே ..

    காரணம்.. புதுக்களம் என்ற எதிர்பார்ப்பு.!

    ReplyDelete
  73. முத்து 450 லயன் 400 ஒரு மெகாகிட் 2021 ல் காத்திருக்கு

    ReplyDelete
  74. ST யை விட எனக்கு DtDC much better. DTDC அனுப்பிய மறுநாள் வந்து விடுகிறது. எனவே DTDC மில் தொடர்ந்து அனுப்பவும்.

    ReplyDelete
  75. கண்ணான கண்ணே :

    வந்தது தெரியும் போவது எங்கே
    வாசல் நமக்கே தெரியாது..
    வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது..
    வாழ்க்கை என்பது வியாபாரம்
    அதில் ஜனனம் என்பது வரவாகும்
    வரும் மரணம் என்பது செலவாகும்..

    போனால் போகட்டும் போடா..!

    இதை ஒரு குழந்தையின் பார்வையில் சொல்லியிருக்கிறார்கள்..!
    கதை குழந்தையின் பார்வையில் நகர்வதால் சித்திரங்களும் க்ரையான் பென்சில்களால் வரையப்பட்டதைப் போன்று அமைந்துள்ளன என்று யூகிக்கிறேன்.!

    மனதில் பாரத்தை விதைத்த பாத்திரம் கிளாரா..
    லெமாயன் மற்றும் சிசிலிக்கு பாராட்டுகள்..!

    கண்ணான கண்ணே -ஆராரோ ஆரீரரோ

    ரேட்டிங் 7.5/10

    ReplyDelete
    Replies
    1. ///கதை குழந்தையின் பார்வையில் நகர்வதால் சித்திரங்களும் க்ரையான் பென்சில்களால் வரையப்பட்டதைப் போன்று அமைந்துள்ளன என்று யூகிக்கிறேன்.!///

      நல்லதொரு யூகம்!

      Delete
  76. கனவே கலையாதே....

    மீண்டும் அழகான சித்திரங்களோடு ,மீண்டும் அழகான கதை களத்தோடு அழகாக பயணிக்க வைத்த அழகான இதழ் இந்த கனவே கலையாதே..

    சாதாரண நபர் போல் ஓர் தோற்றம் ,ஆர்ப்பாட்டமில்லாத நடவடிக்கை என்று இருந்துமே ஏதோ ஒரு விதத்தில் நம்முடன் நெருக்கமாக பயணிக்கிறார் இந்த ட்ரெண்ட்.. திடீர் ட்விஸ்ட் கூட ஓர் அழகாக மனதில் பதிந்து போனது அருமை.

    ட்ரெண்ட் ஒரு விதத்தில் ட்ரெண்ட் ஆகி கொண்டே வருகிறார்.தொடர்ந்து அவரை தரிசிக்கவும் ஆவல் .

    கனவே கலையாதே ..அழகான கனவு.

    ReplyDelete
    Replies
    1. அழகான விமர்சனம் தலீவரே!

      Delete
    2. நன்றி செயலரே...:-)

      Delete
  77. இன்னும் வாசிக்க காத்திருக்கும் ஒரே இதழ் பிரிவோம் சந்திப்போம்..

    இதையும் உடனே படித்து விட்டால் அடுத்து ...? என்ற தயக்கம் பொறுமையாக படிக்கலாமே என்று நாளை வரை ஒத்தி வைக்கப்படுகிறது..


    இதுவரை படித்த நான்கு இதழ்களில் முதல் இடத்தை பிடிப்பது..


    வானவில்லுக்கு நிறமேது ...

    அடுத்து

    கனவே கலையாதே

    அடுத்து

    கண்ணான கண்ணே


    அடுத்து

    அலைகடலில் அதகளம்...


    பிரிவோம் சந்திப்போம் இதனிள் எந்த இடத்தில் நுழைய போகிறது என நானே நாளை வரை காத்திருக்க போகிறேன்..:-)

    ReplyDelete
  78. ஏன் நம்ம தல ஆடு திருடும் போது மாட்டுனா மாதிரி முழிக்கிறாரு??? 10 பேர் கன்னோட சுத்தி நின்னாலும் தல கெத்தா இருக்கிறா மாதிரி போஸ்டர் போடுங்க தலைவா..

    ReplyDelete
  79. புத்தகங்கள் படிக்கும் ஆசையே போய்விட்டது.

    ReplyDelete
    Replies
    1. இது மட்டும் என்றும் நடக்க கூடாது ஏடிஆர் சார்...


      சாந்தம்...சாந்தம்...:-)

      Delete
  80. ஹைய்யா இன்றும் DTDC திறக்கவில்லை அற்புதம் அபாரம் அருமை பாராட்ட வார்த்தைகளே இல்லை சாமி (ஆசிரியர்)வரம் கொடுத்தும் இந்த கேடு கெட்ட (DTDC)பூசாரிகள் தடுக்கிறார்களே

    ReplyDelete
  81. இன்றும் வரவில்லை இனியும் வரப்போவதில்லை.

    ReplyDelete
  82. புத்தகங்கள் சிவகாசி DTDC அலுவலகத்திலேயே பத்திரமாய் வைத்திருக்கிறார்களோ என்னவோ?

    ReplyDelete
  83. This comment has been removed by the author.

    ReplyDelete
  84. Pirivom santhippom - Superb one shot story with mixed emotions ; unllike many other cow boy stories, the major events happen on a single night and it get speeds up as the night progresses. Thoroughly enjoyed it - Editor sir, expecting more books in such a one shot sure winners. Since dont want to be a spoiler, I stop now, will put a detail review later - comics fan

    ReplyDelete
  85. 🕷🐞🐝🐜🐛🦀🦂🐍🐲🐯🦁🐂🐃🐆🐅🐘🐼🐑🐊

    மேலே உள்ள அத்தனையையும் விட்டு கடிக்க வைக்க வேண்டும் போலிருக்கிறது. இந்த சூப்பர் டீலக்ஸ் DTDC காரனை.
    சிவகாசியிலிருந்து நடந்து வரான் போலிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. உருண்டு வர்றதா வேண்டிக்கிட்டானோ என்னவோ

      Delete
  86. DTDCலேர்ந்து இன்னும் புக் வரல?

    ReplyDelete
  87. // அகவை 90 -ஐத் தொட்டு நிற்கும் போதிலும், மாதா மாதம் நமது கூரியர்களைக் கண்ட மாத்திரத்தில் பேத்தியுடன் போட்டியிட்டு இதழ்களை அள்ளிச் சென்று படிக்கும் அந்தத் தீவிர வாசகர் நமக்கு வழங்கிய பாராட்டுக்களும், ஆசிகளே !! சிரம் தாழ்ந்த நன்றிகள் சார் !! //

    சூப்பர். நீங்கள் சொல்வதை பார்த்தால் அந்த சீனியர் வாசகருடன் நடந்த உரையாடலை வைத்து ஒரு உ.ப போடும் அளவுக்கு விஷயங்கள் இருப்பதாக தெரிகிறது. விரைவில் எழுதுங்கள் சார்.

    ReplyDelete