Powered By Blogger

Wednesday, May 20, 2020

கதை vs நாயகர் !


நண்பர்களே,

வணக்கம். ஒரு மாதிரியாய் கூரியர் பஞ்சாயத்து ஓய்ந்திருப்பதில் பெரியதொரு நிம்மதிப் பெருமூச்சு !! நாலு பேருக்கு புக் கிடைத்து அவர்கள் அதனை ரசித்துச் சுவைப்பதை, நாற்பது பேர் வாய் மட்டுமே பார்க்க முடிந்த புண்ணியத்தை DTDC பெயரைச் சொல்லி ஈட்டிவிட்டோம் !! Apologies !! தொடரும் மாதங்களில் சிறுகச் சிறுக சகஜ நிலை திரும்பிடும் ; இது போன்ற குளறுபடிக் கூத்துக்கள் இராதென்ற நம்பிக்கையில் இனி வண்டியை ஓட்டுவோம் !

Anyways - இம்மாத இதழ்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதத்தில் முத்திரை பதித்து வருவதைப் பார்த்திடும் போது - 'தெய்வமே...(இரும்பு நஹி ; நார்மல் தான் )...தலை தப்பிச்சது !' என்று உள்ளுக்குள் இருந்த சிறு பதட்டத்தைத் தணித்துக் கொள்ள முடிந்தது ! பெரியதொரு இடைவெளி ஏற்படுத்திய அயர்வு ; திரும்பும் திக்கெல்லாம் திணறடிக்கும் தகவல்களுடனான இறுக்கமான சூழல் ; யாரையாச்சும் நடு மூக்கில் ஓங்கிக் குத்த வேண்டுமென்ற நமைச்சல் - என்று இந்த லாக்டவுன் புண்ணியத்தில் ஓடிக்கொண்டிருந்த பொதுவான மூடிற்கு மத்தியினில், இம்முறை உருப்படியில்லாத புக்குகளாய்  வழங்கியிருப்பின், என் நிலமையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்களேன் ? So சிரம் காத்த புது இதழ்களுக்கொரு 'ஜே' என் சார்பில் !

இந்த மாதத்தில் 'கண்ணான கண்ணே' ஒரு விதமாகவும், சிகப்புச் சட்டைக்காரர் டிரெண்ட் இன்னொரு விதமாகவும் ; ஜம்போவின் 'பிரிவோம்..சந்திப்போம்' yet another விதமாகவும் செய்து வரும் அதிரடிகளின் மத்தியில் நம்ம 'தல' லைட்டாய்  ஓரங்கட்டப்பட்டிருப்பது போல் தெரிவது எனக்குத் தானா ? என்று தெரியலை !! இத்தாலிய முகமூடிக்காரரைக் கூட அட்டைப்படத்தையும், புது சைஸையும் சிலாகிக்கும் தருணங்களில் mention செய்துள்ள நண்பர்கள்  இதுவரைக்கும் இரவுக்கழுகாரைப் பெரிதாய் mention செய்திடக் காணோம் என்பதை - இம்மாதத்து கலர் இதழ்களின் வெற்றியாகப் பார்த்திடுகிறேன் ! Of course - தொடரும் நாட்களில் 'தல' நம் அலசல்களில் இடம் பெறாது போக மாட்டாரென்பது திண்ணமே ; ஆங்காங்கே பாயாசங்கள் தயாராகி வரும் வாசனையும் நாசியை எட்டுகிறது ! ஆனால் for a change - நாயகர்களை விடவும், கதைகள் ஒளிவட்டத்தைக் கைப்பற்றும் இந்தப் பாங்கு செம encouraging !! 
முன்னெப்போதையும் விட இன்றைய சூழலில் உங்களின் அலசல்களுக்கு வெயிட் ஜாஸ்தி என்பதால் - பாராட்டுக்களோ ; குமட்டில் குத்துக்களோ - அவற்றைப் பகிர்ந்திட கொஞ்சமாய் மெனக்கெடக் கோருகிறேன் folks !! ஆன்லைன் ஆர்டர்கள் மீண்டும் விறு விறுப்படைந்தால் தான் இன்றைய நெருக்கடிகளை சமாளிக்க நமக்கு ஆற்றல் பிறக்கும் என்பதில் ரகசியமேது ?  மதில் மேல் பூனைகளாக நின்றபடிக்கு - எதை வாங்குவது ? எதைத் தவிர்ப்பது ?  என்ற சிந்தனையுடனான pick & choose வாசகர்களை influence செய்திடக்கூடியது உங்களின் அலசல்களாகவே இருக்க முடியும் எனும் போது - நீங்கள் ஒவ்வொருவருமே இன்றைக்கு அலசல் தொப்பிகளைத் தலையில் சுறுசுறுப்பாய் மாட்டிக் கொண்டால் - இந்த எடிட்டர் குல்லாவை நான் கொஞ்சம் தெம்பாய் மாட்டிக் கொள்வேன் ! ஏறிக்கொண்டே போகும் முன்மண்டையையும் மறைத்தா மேரி இருக்குமில்லையா ? 

Bye guys ; keep those reviews going !! See you around !!
கும்பிட்ட்கிறேனுங்கோ : குறுக்கால இன்னொரு புது சேதி கிட்டியதாலே அதையும் இந்த உ.ப.விலே சேத்துக்கிறேனுங்கோ !

புத்தம் புது கதாசிரியர் சார்லீ ஹிக்ஸ்ன் (இவரொரு காமெடி நடிகர் + நாவல் எழுத்தாளர்) and ஓவியர் சார்லீ அட்லர்ட் கூட்டணியில் நமது இரும்புக்கையார் ஒரு புது மினி சாகஸத்தில் வரும் மே 27 தேதிக்கு golden oldies காமிக்ஸ் நேசிக்கும் இங்கிலாந்து மக்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறார் ! 5 பக்கக் குட்டி சாகசமே என்றாலும், முற்றிலும் புதுப் பாணியிலான artwork & கதையமைப்பு சுவாரஸ்யத்தைக் கிளறுகிறது ! பற்றாக்குறைக்கு நம்ம ஸ்பைடர் சார்வாளுமே ஒரு 5 பக்க புதிய மினி சாகஸத்தில் ரெடியாகி வருகிறார் ! நமது அந்நாட்களது ஜாம்பவான்களின் இந்நாட்களது புதுப் படைப்புகளை நாமும் சுவைத்துப் பார்க்கலாமா ? What say folks ?

284 comments:

  1. இரவு வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  2. ஹய்யா புது பதிவு!

    ReplyDelete
  3. டெக்ஸ் டெக்ஸ் தான் சார்... டெக்ஸின் இதழை அலச டெக்ஸின் மகா ரசிகர் ரம்மி வரும் வரை அனைவரும் காத்திருக்கிறார்கள்... ஹி... ஹி... ஹி...

    ReplyDelete
    Replies
    1. Surf excel ரெடி சார்.. இன்னிக்கு அடி மட்டம் வரை போயி அலாசிடுவோம்..

      Delete
    2. என்ன தான் நீங்க வெளு வெளுன்னு வெளுத்தாலும் மஞ்ச சட்ட சாயம் போவாது சார்.. உங்களுக்கு தெரியாததா.. ஹி... ஹி...

      Delete
  4. @ ALL : முந்தைய பதிவில் பின்னூட்டம் # 300-க்குப் பின்பான இடங்களில் உங்களின் reviews இடம் பிடித்திருப்பின் - அவற்றை இங்கேயும் பதிவிடலாமே - ப்ளீஸ் ?

    ReplyDelete
  5. ///இதுவரைக்கும் இரவுக்கழுகாரைப் பெரிதாய் mention செய்திடக் காணோம்///

    சிலரெல்லாம் வந்து நின்னு வித்தை காட்டி, வீடுகட்டி, சாகஸம் பண்ணி, சலம்பல் பண்ணாத்தான் அது - ஹிட்டு!

    ஆனா 'தல' ச்சும்மா தல காட்டினாலே அது ஹிட்டு சார்!

    ReplyDelete
  6. பிரிவோம் சந்திப்போம் அட்டைப்படமும் ஓவியங்களும் பென்னட்டும் நீண்டநாட்களுக்கு நினைவில் நின்றிடுவர்.Awesome.

    ReplyDelete
  7. ஐயா எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்...

    ///Erode VIJAY 20 May 2020 at 21:01:00 GMT+5:30
    ////இந்த புக்கை அதன் சித்திரங்களைக் கொண்டோ / சித்திர பாணிகளைக் கொண்டோ எடை போடாது, ஒரு நிசப்த வேளையினில், சரியாய் 5 நிமிடங்களை மட்டும் செலவிட்டுப் படித்திட முயற்சியுங்களேன் - ப்ளீஸ் ?! ////

    எடிட்டர் ஏன் '5 நிமிடங்களை மட்டும்'னு சொல்லணும்?!! வழக்கமாய் 'சற்றே நேரம் ஒதுக்கி நிதானமாய் வாசித்துவிட்டு உங்கள் எண்ணங்களைப் பதிவிடுங்களேன்'ன்னு தானே சொல்லுவாரு?!!

    ரொம்பக் கொயப்புதே!!!

    யாருக்காவது விடை தெரிஞ்சா சொல்லுங்களேன் ப்ளீஸ்?!!

    Replies

    செந்தில் சத்யா20 May 2020 at 21:17:00 GMT+5:30
    செயலாளரே மேலோட்டமாக உள்ளே நுழைந்தால் க்ரையான் ஓவியங்களும் சிறு பிள்ளையின் பார்வையில் கதையென யாரும் ஆர்வம் காட்டாமால் அப்புறமாக பார்க்கலாமென ஒதுக்கி வைத்துவிட வாய்ப்புண்டு அதனால்தான் 5 நிமிடங்கள் செலவிட்டு படித்தால் கதையின் ஆழம் மெலிதாக இழையோடிடும் சோகமும் கதையில் நாம் ஆழமாக ஊன்றி படித்திட கண்டிப்பாக வாய்ப்புண்டு அதனால்தான் அந்த 5 நிமிடங்களென நினைக்கிறேன்


    Erode VIJAY 20 May 2020 at 21:25:00 GMT+5:30
    அருமையானதொரு கணிப்புத்தான் செந்தில் சத்யா!! இப்படியிருக்கவும் அதிக வாய்ப்புகள் உண்டுதான்!

    ஆனால் "சித்திரங்களைத் தவிர்த்துவிட்டு வசனங்களை மட்டும் வேகமாகப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்" என்ற நோக்கில் ஒரு பொம்மைப் புத்தக எடிட்டர் சொல்வாரா என்று யோசிக்க வேண்டியிருக்கிறதே!!
    அப்படிச் சொன்னால் அதுவும் தவறான வழிகாட்டுதலாய் இருந்துவிடாதா?!!

    வேற ஏதோ ஒன்னு இருக்குன்னு தோனுதுங்க!

    ////

    ஐயா எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்...

    ReplyDelete
    Replies
    1. ஐ வாண்ட் மோர் எமோஷன்ஸ் புளீஜ் !

      Delete
    2. பட் வீ வாண்ட் ஓ.வா.உலகநாதன் சார்!

      'இக்ளியூண்டு மூளை வெடித்துச் சிதறி ஈரோட்டு வாலிபர் பலி'ன்னு நாளைக்கு தினத்தந்தியில வரணும்னு நினைக்கறீங்களா?!!

      Delete
    3. அட...வாலிபப் புள்ளீங்கோ பிரச்சனை நமக்கெதுக்கு ? மூவ் எங்கே கிடைக்குது ? அயோடெக்ஸ் எங்கே விக்குதுன்னு பார்த்திட்டு 'சிவனே'ன்னு போவோமே ?

      Delete
    4. Rajendran.A.T20 May 2020 at 21:18:00 GMT+5:30
      /// ஒரு நிசப்த வேளையினில், சரியாய் 5 நிமிடங்களை மட்டும் செலவிட்டுப் படித்திட முயற்சியுங்களேன் - ப்ளீஸ் ?! ////
      முயற்சி செய்யத்தான் ஐந்து நிமிடம்.படிக்க ஐந்து நிமிடம் போதாது.
      குழந்தை சொல்லும் கதையைக்கேட்க நாமும் உடலளவில் முடியாவிட்டாலும் கெட்டப்பை மாற்றி(ஜாக்கியுடன் இருக்கலாமா, பட்டாபட்டியே போதுமா அல்லது எதுவுமே வேண்டாமா என்று நாம் முடிவெடுக்க வேண்டாமா?) மனதளவில் தயாராக வேண்டுமல்லவா? அதனால்தான் அப்படி சொல்லியிருக்கிறார் ஈ.வி!

      Delete
    5. ///குழந்தை சொல்லும் கதையைக்கேட்க நாமும் உடலளவில் முடியாவிட்டாலும் கெட்டப்பை மாற்றி(ஜாக்கியுடன் இருக்கலாமா, பட்டாபட்டியே போதுமா அல்லது எதுவுமே வேண்டாமா என்று நாம் முடிவெடுக்க வேண்டாமா?) மனதளவில் தயாராக வேண்டுமல்லவா? ///

      என்டே ஈசுவரா.............

      Delete
  8. ****** பிரிவோம் சந்திப்போம் ******

    புதிய தொழில்நுட்பமும், வசதிவாய்ப்பும் பெருகிடும் காலகட்டத்தில், அந்த மாற்றம் சிலருக்காவது சோதனையாய் அமைந்துவிடுவதுதானே இப்புவி கண்ட வரலாறு?

    இங்கும் அப்படியே! சின்னஞ்சிறு நகரங்களிலும்கூட வளைந்து நெளிந்து ஊடுருவிய புதிய ரயில் பாதைகளின் பலனாய், மாடுகளை ரயில் பெட்டிகளில் அடைத்துச் சென்று வியாபாரம் செய்வது பண்ணை முதலாளிகளுக்கு ரொம்பவே எளிதாகிவிட, அத்தனைநாளும் மாடுகளை ஓட்டிச்செல்வதையே சிரத்தையாய் செய்துவந்த நூற்றுக்கணக்கான கெளபாய்கள் வேலையிழக்கிறார்கள்!

    இங்கும் சன்டேன்ஸ் என்ற கிராமத்தில் எப்படியாவது ஒரு ரயில்பாதையை கொண்டுவந்துவிடும் பொருட்டு, அந்தக் கிராமவாசிகளுக்கும், வேலையிழந்த சிலபல கெளபாய்களுக்கும் இடையேயான ஜீவமரணப் போராட்டமே கதைக்களம்!

    இங்கே யாருமே கெட்டவர்களும் இல்லை.. யாருமே நல்லவர்களும் இல்லை! எல்லோருமே தங்கள் வாழ்க்கையை ஸ்திரமாக்கிக்கொள்ள ஏதாவது செய்தாக வேண்டிய சூழ்நிலை - சிலசமயங்களில் கொலையும் செய்யுமளவுக்கு!!

    ஒரு ஒன்-ஷாட் கெளபாய் கதைக்கான எல்லா அம்சங்களையும் கொண்டு, அழுத்தமாகவும் விறுவிறுப்பாகவும், அவ்வப்வோது பரிதாபத்தோடும் பயணிக்கிறது கதை!!

    கதாபாத்திரங்கள் எல்லோருமே மனதில் நிற்கும்படி இருந்தாலும், தியாகமே உருவான அந்த டீச்சர் கதாபாத்திரமே மனதில் அழுத்தப் பதிகிறது!
    இறுதிப் பக்கங்கள் - வாழ்க்கையின் யதார்த்தத்தை எடுத்துரைக்கும் ஒரு கவிதையைப் போல நிறைவாய் உணரவைக்கிறது!!

    சித்திரங்களும் சரி.. வண்ணங்களும் சரி - அல்டிமேட்!!

    என்னுடைய ரேட்டிங் - 10/10

    ReplyDelete
    Replies
    1. // எல்லோருமே மனதில் நிற்கும்படி இருந்தாலும், தியாகமே உருவான அந்த டீச்சர் கதாபாத்திரமே மனதில் அழுத்தப் பதிகிறது! // உண்மைதான். பிரிவோம் சந்திப்போம் தலைப்பும் நாம் காமிக்ஸ் ஐ பிரிந்து 75 நாட்கள் கழித்து சந்தித்ததை நினைவு படுத்து கிறது. இந்த தலைப்பை எடிட்டர் தேர்வு செய்ததில் ஏதாவது குறியீடு இருக்குமோ?????????

      Delete
    2. மகிழ்ச்சி! நல்ல விமர்சனம்!

      Delete
  9. இந்த மாதம் டயபாலிக் மொத்ததில் சூப்பர்.

    ReplyDelete
  10. 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஜம்போ தொடங்கப்பட்ட போது சின்ன தல பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அன்று அவர் கொடுத்த வெற்றி துவக்கம் இப்பவும் தொடருது.

    ஜம்போவின் 13 வது இதழும் அதகளம் சார். 13 சிலருக்கு எப்படி வேணா இருக்கலாம். ஆனா நமக்கு 13ம் செட் ஆகும். 18ம் சேரும்.

    இம்மாத ஜம்போ சீசன்3ன் ஓப்பனர் மாஸ் ஹிட். முதல் கி.நா. 2012ல வைல்டு் வெஸ்ட் ஸ்பெசல்ல இடம் பெற்ற போது கொணர்ந்த வெற்றி+ ஆளை அடிக்கும் அசாதாரணமான உணர்ச்சி குவியல் இப்போது மீண்டும் பிரிவோம் சந்திப்போம் வாயிலாக உணர்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இந்த கதையை உள்வாங்கி கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு முறை திரும்ப படிக்கும் போதும் ஒரு புதிய விசயம் கண்ணில் படுகிறது. ஓவியங்கள் அபாரம்.

      Delete
  11. பிரிவோம் சந்திப்போம்"- பற்றி போன பதிவுல தலைவர் சொன்னது 100% சரிதான். 6மாத இதழ்கள் மட்டுமே வந்துள்ள போதும் ஆண்டின் டாப் இதான் என அடித்து சொல்லலாம். இதை அடித்து கொள்ள இனி வரக்கூடிய எதாலும் முடியாது என்றே தோணுது. ஆயினும் இப்பலாம் எடிட்டர் சாரின் தேர்வுகள் ஒன்றை ஒன்று விஞ்சும் விதமாக இருப்பதால் வெற்றிக்கோப்பை சுழல கேடயமாக மாறக்கூடிய வாய்ப்புகள் பிரகாசம். இன்று பிரிவோம் சந்திப்போம்-படித்து முடித்துட்டு 3 மணி நேரம் ஆச்சி நான் நார்மல் ஆக.... பிரமாண்ட படைப்பு! 2மாத இடைவெளிக்கு பிறகு படித்த முதல் இதழே பக்காவாக அமைந்து விட்டது. இனி எல்லாம் சுகமே!

    ReplyDelete
    Replies
    1. // 6மாத இதழ்கள் மட்டுமே வந்துள்ள போதும் // 6 அல்ல 5 மாதம்.

      Delete
  12. ***** Spoiler alert****

    வானவில்லுக்கு நிரமேது? Vs பிரிவோம் சந்திப்போம்

    - தனது குருவை impress செய்ய முற்பப்டும்பொது (கரடி தோல் / ரோஸ் குடை) ஏற்ப்படும் ஒரு accidental death’ஆல் சம்பவிக்கும் இன்னும் பல மரணங்க்ள், அதற்க்கு ஒருவகையில் காரணமாகும் எருதுக்ள்/காட்டெருது.

    - கதையில் முக்கிய அங்கமாய் இருக்கும் ஊழ்ல்வாதிக்ள்.

    - வளர்ப்பு மகனின் மரணத்தால் வாடும் தந்தை.

    - புது இரயில் பாதையால் அவதிக்குள்ளாகும் ஜீவன்கள்.

    - தெரிந்தெ சாவை எதிர்கொள்ளும் கதையின் main charachters ரஸ்ஸல்/ஜானி.

    - இரண்டு கதைகளிலும் கடைசி காட்சி ஒரு கல்லரை!

    ReplyDelete
    Replies
    1. அருமையான comparison. வித்தியாசமான பார்வை. நன்று.

      Delete
  13. அனைவருக்கும் இரவு வணக்கங்கள்.

    ReplyDelete
  14. ஹைய்யா புதிய பதிவு......

    ReplyDelete
  15. Erode vijay கொஞ்சொண்டு கிழிச்சுட்டேன்..ஒற்றை மட்டும் தேரிஞ்சுது அதான் ஈரோடு விளம்பரமான்னு கேட்டேன்.இதுக்கு மேல் கிழிச்சா கடைசி பேஜ் கோவிந்தா...இப்பவே டாப் ல டெக்ஸ் டயலாக் போய்டுச்சு....

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி!! 'இதையெல்லாம் படிச்சு என்னத்த கிழிச்ச?'னு இனி யாரும் கேட்கமாட்டாங்க பாருங்க! :)

      Delete
    2. அப்படி கேட்டாக்கூட பரலாலல்லியே குருநாயரே..

      எங்காத்துல.. இம்புட்டு நாளா இதைத்தான் படிச்சிக் கிழிச்சியா ன்னு கேப்பாகளே..!!

      Delete
    3. அதைத்தான் பசை போட்டு பச்சக்குனு ஒட்டியிருக்கோமே - கிழிப்பானேன் சார் ?

      Delete
    4. அதை ஓட்டியதன் காரணம் என்னவோ?????

      Delete
    5. என் புக் மட்டும் ஒட்டக்குச்சோன்னு நினைப்பு தான்...எங்கேயும் சொல்லலையோ இல்ல கவனிக்கலையோ...

      Delete
  16. தற்போது வாசிப்பில் 'வானவில்லுக்கு நிறமேது?'

    மொன.. மொன.. மொன..

    ReplyDelete
  17. // நம்ம 'தல' லைட்டாய் ஓரங்கட்டப்பட்டிருப்பது போல் தெரிவது எனக்குத் தானா ? //
    விமர்சனங்கள் வருகிறதோ இல்லையோ,விற்பனையில் எப்போதும் கலக்குபவர் தலைதானே சார்,
    அதே நேரத்தில்,புதிய கதைகளுக்கு கொஞ்சம் கூடுதல் கவனமும்,விமர்சனமும் இருந்தால் அதந் விற்பனைக்கும் உதவியாக இருக்கும்...

    ReplyDelete
  18. ம்ம்ம்ம்! எனக்கு இன்னும் பொட்டி வரலேயே சொக்கா சொக்கா

    ReplyDelete
    Replies
    1. எந்த ஊர் சார் ? உங்க சந்தா நம்பர் ப்ளீஸ் ?

      Delete
    2. சந்தா எண்-1059
      கோபிச்செட்டிப்பாளையம் சார்

      Delete
  19. ஆழ்கடலில் அதகளம் :

    ஒரு சொகுசுக் கப்பலில் பயணிக்கும் பயணிகளின் நகைகளை கொள்ளையடிக்க பயணிகளோடு பயணிககளாக டயபாலிக்கும் ஈவாவும் மாறுவேடத்தில் (இதில்தான் ட்விஸ்ட்டேவாம்) கலந்து பயணிக்கின்றனர்.!
    ஒரு நாளைக்கு ஒரு கேபினுன்னு டயபாலிக் டூப்ளிகேட் நகையை வைத்துவிட்டு ஒரிஜினலை ஆட்டை போட திட்டம் போடுகிறார் (சிரிக்காதிங்கப்பா).! ஆனால் ஒரு கும்பல் ஒட்டுமொத்தமாக எல்லாத்தையும் லவட்டிக்கிட்டு கப்பலையும் கவுத்துவிட்டுட்டு எஸ்கேப் ஆயிடுறாங்க.!
    யாரை மாதிரி வேண்டுமானாலும் முகம் மாறக்கூடிய டயபாலிக் நகைக்கடையிலேயே ஆட்டையப் போட்ருக்க முடியுமே.. அதைவிட்டுட்டு கப்பல்ல டிக்கெட் எடுத்து ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு கேபினுன்னு... எதுக்கு..!?? என்று கேட்கத் தோன்றினாலும் கேட்கவில்லை.!

    இங்கே என்ட்டர் ஆகிறார் நம்ம டெரிஃபிக் இன்ஸ்பெக்டர் ஜிங்கோ.! தமிழ் சினிமாவுல வரும் மாஸ் ஹீரோவை அவருடைய அல்லக்கையை விட எதிரி அதிகமா புகழ்வானே.. அதுமாதிரி ஈவாவும் டயபாலிக்கும் ஜிங்கோவுக்கு பில்ட்டப்பா குடுத்துக்கிட்டே இருக்காங்க.! நமக்கோ ஜிங்கோவைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் சிரிப்புதான் வருகிறது.!


    இத்தாலியில் - டேஞ்சர் டயபாலிக்

    இந்தியாவில் - டயபாலிக் இன் டேஞ்சர்

    ReplyDelete
    Replies
    1. அடடே! இந்தமாதம் கார்ட்டூன் இல்லாத குறையை டயபாலிக் தீர்த்துவைப்பார் போலிருக்கே?!! :D

      Delete
    2. அகில் கிட்டே சொல்லி உங்க ரவுண்டு பன்னிலே ஒரு டஜன் பேதி மாத்திரைகளைத் திணிக்கச் சொல்லணுமே !!

      Delete
    3. ஹிஹி... என்னோட ரவுண்ட் பன்னை வருசாவருசம் எம்பட குருநாயருக்கு காணிக்கையா செலுத்திடறது வழக்கம்.!! பார்ட்டி ஹெவிவெய்ட் சாம்யியன்றதால ரெண்டு டஜனா திணிச்சாக்கூட பர்ரால்ல சார்.! :-)

      Delete
    4. ரவுண்ட் பன்னு சாப்பிட்டா நாமளும் ரவுண்ட்டாயிடுவமா? 🤔

      Delete
    5. ////ரவுண்ட் பன்னு சாப்பிட்டா நாமளும் ரவுண்ட்டாயிடுவமா////

      உறுதியா தெரியலீங் ஷெரீப்! ஆனா பிச்சு பிச்சு சாப்பிடா பிச்சக்காரன் ஆகிட மாட்டோம்ன்றது மட்டும் உறுதி! :D

      Delete
    6. ரவிக்கண்ணர் சொன்னது போல டேஞ்சர் டயபாலிக் நம்மை பொறுத்தவரை டேஞ்சரே தான் போல...:-)

      Delete
    7. கண்ணா ஹிஹிஹி......

      Delete
  20. ///நம்ம 'தல' லைட்டாய் ஓரங்கட்டப்பட்டிருப்பது போல் தெரிவது எனக்குத் தானா ?///

    பந்தியில்.. சுவைமிகுந்த , பிடித்த பதார்த்தத்தை பெரும்பாலானோர் ரசித்து ருசித்து மெதுவாகத்தான் சாப்பிடுவார்கள்.!

    தவிரவும்

    சூரியன் இங்கே இருக்கிறது என்று யாரும் சொல்லாவிட்டாலும் கூட அந்த வெளிச்சம் அதன் இருப்பை காட்டிவிடுமல்லவா..!?

    (இங்கே வெளிச்சம் என்பதை விற்பனை என்றும் சூரியன் என்பதை டெக்ஸ் என்றும் கொள்க.. என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டுமா.?)

    ReplyDelete
    Replies
    1. இப்படிதான் முட்டு குடுக்கணும்....

      Delete
    2. கழண்டு துவண்டு விழுற கன்டிசன்ல இருக்குற கம்பத்துக்குதான் குமார் முட்டுக் குடுக்கணும். உதாரணத்துக்கு இப்போ யங் டவுசர் போடலாமா வேணாமான்னு ஒரு கேள்வி கேகக்றச்சயே அதோட கன்டிசன் கழண்டு பூடுச்சின்னு தெரிஞ்சிடுது இல்லையா..

      இப்பத்தான்..
      ஆஹா அப்படியாக்கும் ஓஹோ இப்படியாக்கும் அப்படீன்னு தாங்கிபிடிச்சி முட்டுக்குடுத்து சரிஞ்சிடாம பாத்துக்கணும்.!

      மலே இமயமலே க்கு முட்டு எதுக்கு சாரே.!?

      Delete
  21. கனவே கலையாதே :

    முதலில் ஓவியத்தைப் பற்றி..
    ட்ரெண்ட்டின் கதைகள் என்றாலே கண்களுக்கான விருந்து என்பது இம்முறையும் மெய்யாயிற்று.!
    ஓவியர் லியோவின் கைவண்ணத்தில் கனடாவின் இயற்கையழகு நெஞ்சை அள்ளுகிறது. அதுவும் லாங் ஷாட்டில் வரையப்பட்ட சின்ன சின்ன மடுக்கள், மரங்கள் அந்த பாதைகள்.. அப்பப்பா.. மிஸ்டர் லியோ வீ லவ் யூ சார்.!

    அடுத்து கதைக்கு வருவோம்..
    யதார்த்தத்துக்கு மிக நெருக்கமான கதையமைப்பே ட்ரெண்ட் வரிசையின் மிகப்பெரிய பலம்.( இவ்விடத்தில் கதாசிரியர் ருடால்ப்பிற்கு மிகப்பெரிய சல்யூட்.)
    வைல்ட் பில் என்ற ஈடிணையற்ற (நடுத்தர வயதைத்தாண்டிய) துப்பாக்கி வீரனுக்கு அடிக்கடி ஒரு கெட்ட சொப்பனம் வருவது வாடிக்கை.!
    ஒற்றைக்கு ஒற்றை சவாலில் தாடிவைத்த ஒரு இளைஞனிடம் தோற்று பில் செத்து விழுவதாகவே அக்கனவு இருக்கிறது.!

    ஒரு நாள் பில்லின் கனவு மெய்யாகும் வேளையும் வருகிறது. கனவில் கண்ட அதே இளைஞனுடன் ஒற்றைக்கு ஒற்றை மோதல்.!
    இந்தக் கதையில் ட்ரெண்ட்டுக்கு என்ன வேலை.? பில்லின் கனவு பலித்ததா அல்லலு பில் தப்பிவிடுகிறாரா?.. என்பதையெல்லாம் வண்ணப் புத்தகத்தில் காண்க.!
    க்ளைமாக்சில் வரும் ட்விஸ்ட் கௌபாய் கதைகளில் எளிதாக யூகிக்க முடியாத ஒன்று.!

    தத்ரூபமான சித்திரங்களும் தரமான கதைகளும் என ஒவ்வொருமுறையும் ட்ரெண்ட் நம் மனதில் இன்னும் இன்னும் ஆழமாக பதிந்துகொண்டே போகிறார்.!

    கனவே கலையாதே - கனவே பலிக்காதே

    ரேட்டிங் 10/10

    ReplyDelete
    Replies
    1. // தத்ரூபமான சித்திரங்களும் தரமான கதைகளும் என ஒவ்வொருமுறையும் ட்ரெண்ட் நம் மனதில் இன்னும் இன்னும் ஆழமாக பதிந்துகொண்டே போகிறார்.! // அதே அதே சபாபதே:-)))))

      Delete
  22. சென்ற பதிவில் எனது கண்ணான கண்ணே கண்ணான கண்ணே விமர்சனம்

    ஒரு சிறுமி மூலமாக சொல்ப்பட்ட ஆழமான கதைக்களம் இரண்டாம் பக்கத்திலிருந்தே நம் மனதில் பச்சக்கென ஒட்டிக்கொள்கிறாள் கிளாரா புத்தக்கத்தை படித்துக்கொண்டிருக்கும்போதே நிஜம் என்னை சுட்டது கண்ணில் கண்ணீர் தானாக வழிந்தது மனைவியில்லாமல் பெண் பிள்ளைகளை வளர்ப்பது பராமரிப்பது எவ்வளவு கடினம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அந்த வலி சற்று கூடுதலாக தெரியும் நானும் 8 மாதம் அனுபவத்திருக்கிறேன் அந்த வலியை இறுதியில் அழகான அற்புதமான உண்மையையும் விளக்கியிருக்கிறார்கள் நாம் பாசம் வைத்து நம்மை விட்டு இறந்து போனவர்களெல்லாம் நம்மை விட்டு போவதில்லை நம்முள்ளேதான் இருக்கிறார்கள் என்ன உணர்வுபூர்வமான உண்மை மிக்க நன்றி ஆசிரியரே இது போல் கதையை எங்களுக்கு கொடுத்ததற்க்கு
    கண்ணான கண்ணே மெலிதான சோகம் இழையோடினாலும் அற்புதமானா படைப்பு எனது மார்க் 10/10

    ReplyDelete
    Replies
    1. // நாம் பாசம் வைத்து நம்மை விட்டு இறந்து போனவர்களெல்லாம் நம்மை விட்டு போவதில்லை நம்முள்ளேதான் இருக்கிறார்கள் // +1000000000000

      Delete
  23. சென்ற பதிவில் 300 க்கு மேல் விமர்சனம் செய்த நண்பர்களும் தங்களது விமர்சனங்களை போடலாமே

    ReplyDelete
  24. வழக்கம்போலவே....


    இளவரசி வாழ்க!
    இளவரசி வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. டயானாவுமே இளவரசி தான் பாபு ! சூதானம் !!

      Delete
  25. @ ALL : கும்பிட்ட்கிறேனுங்கோ : குறுக்கால இன்னொரு புது சேதி கிட்டியதாலே அதையும் இந்த உ.ப.விலே சேத்துக்கிறேனுங்கோ !

    புத்தம் புது கதாசிரியர் சார்லீ ஹிக்ஸ்ன் (இவரொரு காமெடி நடிகர் + நாவல் எழுத்தாளர்) and ஓவியர் சார்லீ அட்லர்ட் கூட்டணியில் நமது இரும்புக்கையார் ஒரு புது மினி சாகஸத்தில் வரும் மே 27 தேதிக்கு golden oldies காமிக்ஸ் நேசிக்கும் இங்கிலாந்து மக்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறார் ! 5 பக்கக் குட்டி சாகசமே என்றாலும், முற்றிலும் புதுப் பாணியிலான artwork & கதையமைப்பு சுவாரஸ்யத்தைக் கிளறுகிறது ! பற்றாக்குறைக்கு நம்ம ஸ்பைடர் சார்வாளுமே ஒரு 5 பக்க புதிய மினி சாகஸத்தில் ரெடியாகி வருகிறார் ! நமது அந்நாட்களது ஜாம்பவான்களின் இந்நாட்களது புதுப் படைப்புகளை நாமும் சுவைத்துப் பார்க்கலாமா ? What say folks ?

    ReplyDelete
    Replies
    1. அய்யோ...இதென்ன கேள்வி?
      சுவைக்க நான் ரெடி. நீங்க சூடாக பரிமாறுங்கள் சார்.

      Delete
    2. வொய் நாட்..!!!!?


      Golden oldies எனில் மாயாவி, ஸ்பைடரோடு சேர்த்து
      அப்படியே லாரன்ஸ் டேவிட், ஸ்டெல்லா மற்றும் அவரது அஸிஸ்டென்ட் ஜானி நீரோ, ரிப் கிர்பி போன்றோரும் வெளியாகும் பட்சத்தில் நாம் இங்கே ஒரே புத்தகமாக ரசிக்க வாய்ப்பிருக்குமா சார்..!?

      Delete
    3. நான் ரெடி.. நாங்க ரெடியா??

      Delete
    4. 5 பக்க சாகஸம் தானேங் சார்.. 5 நிமிசத்துல படிச்சு முடிச்சுடலாம்! போட்டுவுடுங்க!

      Delete
    5. போட்டு விடுங்க சார்...

      Delete
    6. // சுவைக்க நான் ரெடி. நீங்க சூடாக பரிமாறுங்கள் சார். //

      +1

      Delete
    7. இதையெல்லாம் கேட்கனுமா சார்,போட்டு விடுங்க........

      Delete
    8. எப்ப சார் இந்த ஸ்பெஷல் வெளியிட போறீங்க ??

      Delete
  26. கண்ணான கண்ணே...!
    புத்தகத்தை வாசித்தேன் என்பதைவிட குட்டிப்பெண் க்ளாராவுடன் அவளுடைய சமவயது தோழனாக வாழ்ந்தேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். க்ளாரா மகிழ்ச்சியாய் இருக்கையில் நானும் மகிழ்ச்சியாய் உணர்கிறேன். அவள் தாய் மரணிக்கையில் என்னையும் அந்த பிரிவு, சோகம் எல்லாம் சட்டென தாக்குகிறது. கதையில் பொம்மிக்காவை தேடி க்ளாரா பயணிக்கிறாள் என்னையும் கூடவே சேர்த்துக்கொண்டு. பின் தாய்க்கு துணையாக பொம்மிக்காவையும் சேர்த்து புதைக்கையில் எனக்குள் சொல்லமுடியாத சோகம். பொம்மைக்கும் உயிர் இருப்பது போன்ற பிரமை. மெல்ல மெல்ல க்ளாராவாவுடன் ஐக்கியமாகிவிட்டேன். அவளுக்கு நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் நானும் அனுபவிப்பது போன்ற உணர்வு! பொதுவாக குழந்தைகள் எந்த உணர்வுகளையும் நம்மைப்போல நெஞ்சில் சுமந்து திரிவதில்லை. அந்தந்த சூழலுக்கேற்ப அவர்களின் மனநிலை சட்டென மாறுவதை கதாசிரியரும், ஓவியரும் அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஓவியரின் தூரிகை குழந்தைகளின் தூரிகையாகவே மாறியிருக்கிறது.அதற்காக ஒரு சல்யூட். இந்த கதையை நாலைந்து பாகமாக நீட்டியிருக்கலாம். ஆனால் குழந்தைகள் கதை சொல்கையில் நீட்டி முழக்கி சொல்வதில்லை. ஒரு பெருங்கதையை நான்கே வரிகளில் சொல்லி முடித்துவிடுவார்கள். கண்ணான கண்ணேவிலும் அதுதான் நடந்திருக்கிறது. வாசிப்புக்கென பலகதைகள் இருந்தாலும் நேசிப்புக்கென கதைகள் வருவது அபூர்வமான இந்நாளில் அந்தக்குறையை போக்கியிருக்கிறது இந்த புத்தகம். எங்கோ இருந்த க்ளாராவை தேடிப்பிடித்து தமிழ் பேச வைத்தமைக்காக நம் நிறுவனம் நிச்சயம் பெருமை பட்டுக்கொள்ளலாம். இன்னமும் இதுபோன்ற பல அனுபவங்களை நாம் பெற வேண்டுமானால் இந்தக் கதை வெற்றி பெறவேண்டியது அவசியம். இன்று புறக்கணித்துவிட்டு பல ஆண்டுகளுக்குப் பின்னர் இம்மாதிரியான நல்ல முயற்சிகளை பாராட்டுவதிலும், தேடுவதிலும் என்ன பலனிருக்க முடியும்?

    ReplyDelete
    Replies
    1. // ஆனால் குழந்தைகள் கதை சொல்கையில் நீட்டி முழக்கி சொல்வதில்லை. // மூத்த வாசகர் என்றால் சும்மாவா????? அருமை ATR சார் அருமை நான் மிகவும் ரசித்த விமர்சனங்களில் இதுவும் ஒன்று...

      Delete
  27. வானவில்லுக்கு நிறமேது:
    கடும் எச்சரிக்கை: கதை விவரிக்கப்பட்டு உள்ளது.
    கதை ஆரம்பிச்சாப்பிலிருந்து குருட்டு பூனை 🐱 விட்டத்திலே பாய்ஞ்சாப்பில யாராவது ஒருத்தர் யாரையாவது தொரியாமியோ இல்லை தெரிஞ்சோ சுட்டுக்கிட்டே இருக்காங்க.. ஆனா குறி மட்டும் தப்புறதே இல்லே.. இந்த கதையிலே அந்த அதிகாரிக்கு அம்மஞ் சல்லிக்கு சோலியே கெடையாது.. இருந்தாலும் முண்டாவை சுருட்டிட்டு கதை பூராவும் மனுசன் தெற்கேயும் வடக்கேயும் உலாவுறாப்புலே.. அதிகாரிக்கே இந்த நெலமைன்னா நம்மாளு நெலமை படுமோசம்.. கல் நெஞ்சம் புடிச்ச அந்த அதிகாரி நம்மாளுக்கு ஒரு சொட்டு பீரோ இல்ல சின்ன பீசு வறுத்த கறியோ கூட கண்ணிலே காட்டலை..
    கோசைஸ்ங்கிற அந்த பெரிய மனுசன பாவட்குமுதா ஹேப்பி அண்ணாச்சி மாதிரி பஞ்சாயத்து பண்ண உட்டுட்டாங்க.. பாவம் அவரும் எத்தனை நேரந்தான் சுகர் மாத்திரையை தேடுவாரு..
    அந்த காலத்து கருப்பு வெள்ளை ( தமிழ்ல பிளாக் அன்ட் வொயிட்) படத்திலே மாதிரி சின்ன வயிசிலியே பிரிஞ்சு போன அம்மாவும் பையனும் கதை வேறு.. படம் பூராவும் பக்கத்து பக்கத்திலயே இருந்தாலும் கண்டுபுடிக்க மாட்டாங்க.. படம் பூராவும் ஆடியன்சை கடுப்பை கிளப்பிட்டே இருப்பாங்க.. அந்த மாதிரி தான் ஒரு ஒரு நாப்பது பக்கம் படிக்கிறகுள்ளயே காலுக்கு அடியில் தேட ஆரம்பிச்சு படிச்சி முடிக்கிறக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு வாயிக்குள்ளே சுருட்டி போடறதுக்கு அந்த தொங்கி போன நாக்கை.. போதும்டா சாமி..
    வழக்கம் போலவே ஒரு நேர்மையான ஆபிசரை (இந்த கதையிலே செவ்விந்திய ஏஜென்ட்) அந்த அதிகாரி அதிகார வெறியிலே அடித்து நொறுக்கும் சம்பவமும் உண்டு..
    இதிலியும் ஒரு சந்தோசம் என்னன்னா.. நம்மாளு கார்சன் நான் சொல்றாப்பிலியே அதிகாரின்னு சொன்னது தான்..
    இத்தனை நாள் தனிமை படுத்தினாலும் அந்த அதிகாரி திருந்தின பாட்டை காணோம்..

    ReplyDelete
    Replies
    1. துயில்கொள்ளும் உயிரணு

      (டமில்ல ஸ்லீப்பர் செல்)

      Delete
    2. // இத்தனை நாள் தனிமை படுத்தினாலும் அந்த அதிகாரி திருந்தின பாட்டை காணோம்.. // ஹிஹிஹி

      Delete
    3. // இத்தனை நாள் தனிமை படுத்தினாலும் அந்த அதிகாரி திருந்தின பாட்டை காணோம்.. //

      செம :-)

      Delete
    4. //சந்தோசம் என்னன்னா.. நம்மாளு கார்சன் நான் சொல்றாப்பிலியே அதிகாரின்னு சொன்னது தான்..//

      பாயச நேசரோ ; வறுத்த கறி பிரியரோ ; அதிகாரியின் அதிகாரபூர்வமற்ற ஸ்லீப்பர் செல்லோ - 'மருவாதை' செய்தே தீரணுமல்லவா மஞ்சள் சொக்காயைப் பார்க்கும் நொடிதனில் !

      Delete
    5. எந்த இதழ் வந்தாலும் வறுத்து எடுக்கவாது முதல் இதழாக டெக்ஸே தேர்ந்தெடுக்கும் எங்கள் ஸ்லீப்பர்செல் வாழ்க ,வாழ்க..:-)

      Delete
    6. // மேலே அந்த ப்ரிவியூவில் நம்ம இரும்புக்கை மாயாவி ஸ்டைலா இளமையா இருக்கார்! //

      அது :-)

      Delete
  28. அடுத்த மாத அதிகாரியின் விளக்கு வாங்கும் படலம் 2.0 க்காக ஆவலுடன் வெயிட்டிங்..

    ReplyDelete
  29. இப்போது...

    பிரிவோம் சந்திப்போம்


    கடேசியா

    வாவில்லுக்கு நிறமேது.!

    குட்நைட்..!

    (க்கும்..அந்தாக்குல விடியவேப்போவுதாம்..! )

    ReplyDelete
  30. ஸ்பைடரையும் மாயாவியையும் இரு கைகூப்பி வரவேற்கின்றேன்.
    யார் யாரோ வந்துட்டாங்க ...நீங்க வந்தா என்னவாம்?!.
    நீங்க வாங்க;நாங்க வரவேற்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. // ஸ்பைடரையும் மாயாவியையும் இரு கைகூப்பி வரவேற்கின்றேன். //

      +1

      Delete
    2. இதுவரை மறுபதிப்பு ஆகாத கதைகள் எனில் வரவேற்கிறேன்.

      Delete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. என்னது கூரியர் பஞ்சாயத்து முடிந்துவிட்டதா?

    அதெப்படி அறந்தாங்கிக்கு இன்னும் சிக்னல் கிடைக்கலையே!😶

    ReplyDelete
  33. கண்ணான கண்ணே...!
    புத்தகத்தை வாசித்தேன் என்பதைவிட குட்டிப்பெண் க்ளாராவுடன் அவளுடைய சமவயது தோழனாக வாழ்ந்தேன் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். க்ளாரா மகிழ்ச்சியாய் இருக்கையில் நானும் மகிழ்ச்சியாய் உணர்கிறேன். அவள் தாய் மரணிக்கையில் என்னையும் அந்த பிரிவு, சோகம் எல்லாம் சட்டென தாக்குகிறது. கதையில் பொம்மிக்காவை தேடி க்ளாரா பயணிக்கிறாள் என்னையும் கூடவே சேர்த்துக்கொண்டு. பின் தாய்க்கு துணையாக பொம்மிக்காவையும் சேர்த்து புதைக்கையில் எனக்குள் சொல்லமுடியாத சோகம். பொம்மைக்கும் உயிர் இருப்பது போன்ற பிரமை. மெல்ல மெல்ல க்ளாராவாவுடன் ஐக்கியமாகிவிட்டேன். அவளுக்கு நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் நானும் அனுபவிப்பது போன்ற உணர்வு! பொதுவாக குழந்தைகள் எந்த உணர்வுகளையும் நம்மைப்போல நெஞ்சில் சுமந்து திரிவதில்லை. அந்தந்த சூழலுக்கேற்ப அவர்களின் மனநிலை சட்டென மாறுவதை கதாசிரியரும், ஓவியரும் அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஓவியரின் தூரிகை குழந்தைகளின் தூரிகையாகவே மாறியிருக்கிறது.அதற்காக ஒரு சல்யூட். இந்த கதையை நாலைந்து பாகமாக நீட்டியிருக்கலாம். ஆனால் குழந்தைகள் கதை சொல்கையில் நீட்டி முழக்கி சொல்வதில்லை. ஒரு பெருங்கதையை நான்கே வரிகளில் சொல்லி முடித்துவிடுவார்கள். கண்ணான கண்ணேவிலும் அதுதான் நடந்திருக்கிறது. வாசிப்புக்கென பலகதைகள் இருந்தாலும் நேசிப்புக்கென கதைகள் வருவது அபூர்வமான இந்நாளில் அந்தக்குறையை போக்கியிருக்கிறது இந்த புத்தகம். எங்கோ இருந்த க்ளாராவை தேடிப்பிடித்து தமிழ் பேச வைத்தமைக்காக நம் நிறுவனம் நிச்சயம் பெருமை பட்டுக்கொள்ளலாம். இன்னமும் இதுபோன்ற பல அனுபவங்களை நாம் பெற வேண்டுமானால் இந்தக் கதை வெற்றி பெறவேண்டியது அவசியம். இன்று புறக்கணித்துவிட்டு பல ஆண்டுகளுக்குப் பின்னர் இம்மாதிரியான நல்ல முயற்சிகளை பாராட்டுவதிலும், தேடுவதிலும் என்ன பலனிருக்க முடியும்?



    *நன்றி திரு ஏடிஆர் அவர்கள்*

    ReplyDelete
    Replies
    1. ஏடிஆர் @ அருமையான விமர்சனம்.

      Delete
  34. *பிரிவோம் சந்திப்போம்*

    தாய் ,தந்தையரை இழந்த மனநலன் பாதித்த தோழனின் சிறுவனை தனது மகன் போல வாழ வைக்க அவன் காட்டும் பரிவும் ,அவன் மறைவால் ஏற்படும் வலியையும் ,தன் நண்பன் மேல் அவன் கொண்ட நட்பூம்..அந்த நட்பின் பிரிவும் இறுதியில் யாருமே எதிர்பாராத மனதில் ஆழமாக பதிந்த அந்த அன்பின் பரிணாமமும் ஹா...கெளபாய் கதையிலா இவ்வளவு அழகான சம்பவங்கள்..

    கெளபாய் களத்தில் படித்து முடித்தவுடன் மனம் கனத்து போகுமா..இந்த கெளபாய் சாகத்தை படித்தவுடன் அப்படியே மனம் ஓர் பாரமாகி ஓர் பத்து நிமிடங்களுக்கு அப்படியே அசைவற்று அமர்ந்து இருந்தேன் எனில் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆனால் உண்மை.கதையின் ஆரம்பத்திலியே ஓர் நெகிழ்வான ஆரம்பமாக கதை நகர்ந்ததே கெளபாய் கதையில் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.ஆனால் இறுதி நான்கு ,ஐந்து பக்கங்கள் ஒரு கிராபிக் நாவலை ஆழமாக வாசித்து அதன் தாக்கத்தில் அசைவின்றி போவோமே அந்த நிலைப்பாடு இந்த பிரிவோம் சந்திப்போம் கதையில் சார்..நண்பர் குமார் மேலே சொல்லி இருந்தார் இந்த வருட சந்தா கண்ணான கண்ணே இதழுக்கே சரியாயிற்று என்று...இப்பொழுது அதையே நானும் சொல்கிறேன் .இந்த வருட சந்தாவிற்கு எனக்கு இந்த *பிரிவோம் சந்திப்போம்* இதழே சரியாய் போயிற்று.

    கதை தான் என்னை கட்டி போயிற்று என்றால் சித்திரங்கள் அந்த வன்மேற்கில் என்னை நிஜமாக உலவ செய்தது எனில் மிகை அல்ல. இந்த மாதம் வந்த டெக்ஸ் இதழில் வந்த அனைத்து மாந்தர்களுமே நினைவில் நிற்க கூடியவர்கள் என இருந்தேன்..ஆனால் இந்த பிரிவோம் சந்திப்போம் இதழிலோ அந்த நாயகன் ரஸ்ஸல் மட்டுமல்ல பென்னட் ,கிர்பி ,டாம் ,மிஸ் என அனைவருமே சில காலங்களுக்காவது நினைவில் நின்று கொண்டே இருப்பார்கள்.


    இந்த அளவிற்கு இந்த கதையின் தாக்கம் மனதில் ஆழமாக பதியுமாயின் அதன் காரணத்தில் அதன் மொழிஆக்கமும் ஒரு பங்கு தானே...மொழிப்பெயர்ப்பாளருக்கு பலமான பாராட்டுதல்களை தெரிவித்து கொள்கிறேன் .என்னை பொறுத்தவரை இந்த வருடத்தின் சிறந்த இதழ் இந்த "பிரிவோம் சந்திப்போம்" .பாதி வருடமே முடிந்துள்ளது தான் .இதை விட சிறந்த கதையையும் தாங்கள் இனி தேர்ந்தெடுக்கலாம் தான்.ஆனால் இரும்பு தெய்வம் சொல்வது போல் என்னை பொறுத்தவரை ,இதுவரையிலாவது வந்த இதழில் டாப் இதழ் பிரிவோம் சந்திப்போம்..கிராபிக் நாவலில் இந்த கதை வெளிவந்து இருக்குமாயின் கிராபிக் என்றால் அச்சமிடுவோர் கூட ஆசையாய் நெருங்கி வருவர்.


    வன்மேற்கு வாழ்க்கை இங்கு ரோஜாப் படுக்கை அல்லத்தான்.ஆனால் இந்த வன்மேற்கு இதழ் நெஞ்சில் சூட்டி க்கொள ளும் ஓர் அழகான ரோஜா மலர் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

    இந்த அழகான சிறு காவியத்திற்கு மதிப்பெண் இடுவது என்னை பொறுத்தவரை மதிப்பெண்ணிற்கு அழகு இல்லை என்பதால்

    பிரிவோம் சந்திப்போம்

    மனதில் பிரியாமலே அடிக்கடி சந்திக்கும் ஓர் இதழின் உச்ச மதிப்பெண் எதுவோ அதுவே இந்த இதழின் மதிப்பெண் .

    மீண்டும் ரஸ்ஸல் ,கிர்பி ,பென்னட் ,மிஸ் அவர்களின் ஆன்மா சாந்தி அடையவும் ,டாம் சிறந்த ஷெரிப் ஆகவும் பரிணமிக்க நான் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தலைவரே சும்மா பிரிச்சு மேய்ந்து விட்டீர்கள்......

      Delete
    2. நன்றி குமார்...ஆனால் பிரித்து மேய்ந்தது நான் அல்ல..

      பிரிவோம் சந்திப்போம் இதழ்..:-)

      Delete
  35. பரம பதத்தில் சர்ரென்று ஏறுவது போல இம்மாத இதழில் முதலிடம் பெறுவது


    பிரிவோம் சந்திப்போம்..


    பிரிவோம் சந்திப்போம்..


    பிரிவோம் சந்திப்போம்...

    மற்றும்


    இம்மாதம் வெளிவந்த கண்ணான கண்ணே ,வானவில்லுக்கு நிறமேது ,கனவே கலையாதே என அனைத்து இதழ்களும் அந்தந்த ஜானர்களில் மனதில் ஓர் தாக்கத்தை ஏற்படுத்திய அழகான இதழ்கள்..

    இந்த கொரானா காலத்தில் அதன் தாக்கத்தை தூர எறிந்து விட்டு நமது காமிக்ஸ் இதழ்கள் மூலம் அழகான தாக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள்..காமிக்ஸ் இதழ்களை ஏளனம் செய்வோர் மட்டுமல்ல படிக்காதவர்கள் கூட இம்மாத்த்தை பொறுத்தவரை மிகுந்த துரதிர்ஷ்ட சாலிகள்...

    ReplyDelete
    Replies
    1. //கண்ணான கண்ணே ,வானவில்லுக்கு நிறமேது ,கனவே கலையாதே என அனைத்து இதழ்களும் அந்தந்த ஜானர்களில் மனதில் ஓர் தாக்கத்தை ஏற்படுத்திய அழகான இதழ்கள்.//

      :-)

      Delete
  36. வானவில்லுக்கு நிறமேது..?

    நிறைய்ய நண்பர்களுக்கு இன்னும் இதழ் கிடைக்காத சூழலில் விரிவாக பேச இயலவில்லை...ஆனால் ஒன்றே ஒன்று டெக்ஸ் கதையில் கதையே இல்லை என்று "கதை " விடும் நண்பர்களுக்கு மீண்டும் ஓர் அழகான பதில் இந்த வானவில்லுக்கு நிறமேது..ஒருமணி நேரம் அல்ல சரியாக ஒண்ணேமுக்கால் நேரம் நினைத்தபடியே எந்த புறப்பிரச்சனைகளையும் நினைக்க வைக்காமல் தன்னுடனே பயணிக்க வைத்து விட்டார் டெக்ஸ்..இந்த முறை டெக்ஸ் கார்சன் மட்டுமல்ல கதையில் வரும் அனைத்து மாந்தர்களுமே நினைவில் நிற்கும் படி அழகான கதை அமைப்பு.கதைக்கு சித்திரங்கள் வலு சேர்க்கிறதா இல்லை சித்திரங்களுக்கு கதை வலு சேர்க்கிறதா என்று வேண்டுமானால் சிறு குழப்பம் நேர்ந்தது எனலாம்.அட்டைப்பட ஓவியம் பற்றி சொல்லவே வேண்டாம்..மொத்தத்தில் காமிக்ஸ் உலகில் என்றுமே தான் "கிங் " என்பதை மீண்டும் நிரூபித்த 🌈 க்கு நிறமேது இதழை பாரட்ட வார்த்தைகள் இல்லை...

    எனது மதிப்பெண் பத்துக்கு பத்து

    ReplyDelete
    Replies
    1. ரம்மி சார்... கேக்குதா?..

      Delete
    2. கண்ணு கேக்காது காது பேசாது வாய் தெரியாது.. இதுதான் நம்ம ரம்மியோட ஸ்டைலு.!

      Delete
    3. பாயசம் போட அலுப்பில் இருப்பார் அதிகாரி நேசர் !

      Delete
  37. கனவே கலையாதே....

    மீண்டும் அழகான சித்திரங்களோடு ,மீண்டும் அழகான கதை களத்தோடு அழகாக பயணிக்க வைத்த அழகான இதழ் இந்த கனவே கலையாதே..

    சாதாரண நபர் போல் ஓர் தோற்றம் ,ஆர்ப்பாட்டமில்லாத நடவடிக்கை என்று இருந்துமே ஏதோ ஒரு விதத்தில் நம்முடன் நெருக்கமாக பயணிக்கிறார் இந்த ட்ரெண்ட்.. திடீர் ட்விஸ்ட் கூட ஓர் அழகாக மனதில் பதிந்து போனது அருமை.

    ட்ரெண்ட் ஒரு விதத்தில் ட்ரெண்ட் ஆகி கொண்டே வருகிறார்.தொடர்ந்து அவரை தரிசிக்கவும் ஆவல் .

    கனவே கலையாதே ..அழகான கனவு.

    ReplyDelete
    Replies
    1. ///சாதாரண நபர் போல் ஓர் தோற்றம் ,ஆர்ப்பாட்டமில்லாத நடவடிக்கை என்று இருந்துமே ஏதோ ஒரு விதத்தில் நம்முடன் நெருக்கமாக பயணிக்கிறார் இந்த ட்ரெண்ட்.. திடீர் ட்விஸ்ட் கூட ஓர் அழகாக மனதில் பதிந்து போனது அருமை.///

      யெஸ் தலீவரே..!

      Delete
  38. ! நமது அந்நாட்களது ஜாம்பவான்களின் இந்நாட்களது புதுப் படைப்புகளை நாமும் சுவைத்துப் பார்க்கலாமா ? What say folks ?


    ஆக்‌ஷன் ஸ்பெஷலையே பார்த்துட்டோம்...ஏன் டேஞ்சர் டயபாலிக்கையே பாத்துட்டோம்..அஞ்சு பக்க இரும்புகையும் ,ஸ்பைடரும் தானே தாராளமா பார்க்கலாம் சார்...:-)

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் உங்க வீரம் நாளுக்கு நாள் புது உச்சங்களைத் தொட்டு வருகிறது தலீவரே !

      Delete
  39. // அந்நாட்களது ஜாம்பவான்களின் இந்நாட்களது புதுப் படைப்புகளை நாமும் சுவைத்துப் பார்க்கலாமா ? //

    Why not :-) Please proceed. Waiting.

    ReplyDelete
  40. எல்லாருக்கும் புக் வந்தாச்சா? அப்பாடி, காதில் புகை வராமல் விமர்சனம் போடலாம். Golden oldies reboot நான் வரவேற்கிறேன். முந்தானை முடிச்சு reboot வரும் போது, இவர்கள்தான் ஆற்றலில் குறைந்தவர்களா?

    கண்ணாண கண்ணே - a light tragedy. சென்டிமெண்ட் கதைகள் பற்றி மற்றவர்கள் விமர்சித்தது போக, நான் ஹைலைட் செய்யக்கூடியது ஒரு ஐந்து வயது குழந்தையிடம் மரணம் பற்றி எந்த வித புரிதல் இருக்கும். கிளாராவின் அப்பா புரிய வைக்க எப்படி கஷ்டப்படுகிறார் - இந்த practicality தான் கதையின் வலு.

    ReplyDelete
    Replies
    1. ///ஒரு ஐந்து வயது குழந்தையிடம் மரணம் பற்றி எந்த வித புரிதல் இருக்கும். கிளாராவின் அப்பா புரிய வைக்க எப்படி கஷ்டப்படுகிறார் -///

      கிளாராவின் அப்பா படும் கஷ்டத்தைக்காட்டிலும் கூடுதல் கஷ்டம் அந்த பொம்மிக்காவுக்கே! கைவிடப்பட்ட பொம்மைகளுக்கான தீவில் அந்த ஹை-பைட்ஸ் அரக்கனின் கையில பொம்மிக்கா சிக்கியிருந்தபோது, எங்கே அந்தப் பன்னிவாயன் பொம்மிக்காவை முழுங்கித் தொலைச்சுடுவானோன்னு பயந்துபோய்ட்டேன்!

      'மரணமும் பிரிவும் வாழ்க்கையின் ஒரு அங்கம் தான்.. அதைத் தாண்டி சந்தோச தருணங்களும் எதிர்காலத்தில் உண்டு'ன்னு க்ளாராவுக்கு புரிய வச்சு தன் கடமையை முடிச்சதுக்கப்புறம் 'மந்திரக் குகையை விட்டு வெளியேறியதும் இனி என்னால் பேசமுடியாது' என்று பொம்மிக்கா க்ளாராவிடம் சொல்வதும், அதை க்ளாரா புரிந்துகொண்டு 'தெரியும்' என்பதும் - mission successfully completed என்பதை அழகாக உணர்த்தும் தருணங்கள்!

      Delete
    2. இங்கு பதிவாகி வரும் "கண்ணான கண்ணே" அலசல்கள் சகலமும் ஓவியையின் பார்வைக்கும் பயணமாகின்றன !!

      Delete
    3. சார்.. நீங்க இப்படிச் சொன்னா நாங்க பயந்துக்கிடுவோம்னு நினைச்சீங்களாக்கும்?

      முன்னொரு சமயம் நம்ம வான் ஹாம் இந்தத் தளத்தைப் பார்வையிட்டுக்கிட்டிருந்தப்போ இரத்தப்படலம் பற்றி படு கேஷுவலா விமர்சனம் எழுதி அவரையே மிரளவச்ச ஆளுக நாங்க!

      ஓவிய மேடத்தை இங்கே கமெண்ட் போடச் சொல்லுங்க. அப்பத்தான் நம்புவோம்!

      Delete
    4. அப்படி இல்லாங்காட்டி சிவகாசி ரவுண்டு பன்னை காக்கா கடி கடிப்பது போல ஒரு போஸ் கொடுக்கச் சொல்லுங்க. அப்பவாச்சும் நம்புவோம்.

      Delete
  41. வானவில்லுக்கு நிறமேது - usual thala fanfare. Extraordinary சித்திரங்கள். சாதாரணமாக centerfold போல நடுப் பக்கம் முழுவதும் battlefield காட்சிகள் இருக்கும். ஆனால், இங்கே இரண்டு பேனல்களில் முழு போர்க்களம் மற்றும் பல திசைகளில் இருந்து வரும் படையினர். Truly magic. கதைக்கு நாயகன், டெக்ஸ் மட்டும் அல்ல, சித்திரங்களும் தான்.
    மற்ற புத்தகங்களைப் பற்றி ஒருமித்த கருத்து விமர்சனங்களை நண்பர்கள் ஏற்கனவே பதிவேற்றி விட்டதால்,ஐ ஹாவ் omitted them.

    ReplyDelete
    Replies
    1. பாயசப் பார்ட்டிக்கு கேக்குறா மாதிரி உரக்கச் சொல்லுங்கோ !!

      Delete
    2. நச் விமர்சனம்...சார்ட் அன்ட் சுவீட்!

      Delete
  42. Replies
    1. 'கதையும் அருமை' என்று சொல்லியிருப்ப்பின் இன்னும் மகிழ்ந்திருப்பேன் சார் !

      Delete

  43. பிரிவோம் சந்திப்போம்.....

    அட்டை படத்தை பார்த்த நொடி ஏதோ காதல் சினிமா டைட்டில் போல பெயர் இருக்கவும் நாயகன் ரொமான்ஸ் பண்ணுவனாக்கும் என தோணிற்று! டுபாக்கிய கையில் வைத்து உற்று பார்த்துட்டு இருக்கானே, சரிதான் வழக்கம் போல எவனோ ஒரு கெளபாய், அவனோட காதலியை கசாமுசா பண்ணினவனுகள வஞ்சம் தீர்க்க போறான் போல; மசாலா கதைனு உள்ளே புரட்டினேன்.....!!!

    ப்ளார்..ப்ளார்னு முகத்தில் அறைந்தது,துவக்கமே!
    "தன் தாய் இறந்துபோனதை உணர முடியாத சிறுவன்"--- நம்ம பரிதாபங்களை அள்ளிட்டு போயிடறான். மூளை வளர்ச்சி இல்லாத சிறுவன் பென்னட் மேல் ஒருவித பரிதாபம் பிறக்க கதை பயணிக்கிறது.

    ரயில் சேவை அமெரிக்கா முழுதும் விரிவாக்கப்பட்ட போது சாதாரண மக்களின் வாழ்க்கையை அது எப்படி புரட்டி போட்டது என 11ம் பக்கத்தில் பன்றிகளை பராமரிக்கும் பழைய கெளபாய் சோம்பேறி மாடன் "ஜாக்"கின் அவல நிலை காட்டுது. பேங்கராக இருக்கும் ஓர்ஸன் முன்னாள் பார்பர்! தொடர்ந்து அதிர்ச்சி வைத்தியம் தான் கதை நெடுகிலும்...

    பென்னட்டை ரட்சிக்கும் ரஸ்ஸிலின் கெளபாய் தொழிலுக்கு முடிவு வரும்போது நாம் பதறிப்போவது ஏன் என்று யோசித்து பார்த்தா கதாசிரியர் நம்மேல் செலுத்தும் ஆதிக்கம் புரிந்து கொள்ள இயலும்.

    ஒருவழியாக ரஸ்ஸல் சிறுபண்ணை ஒன்றை வாங்கி செட்டில் ஆக நினைக்கும்போது நாமும் சின்னதாய் பெருமூச்சு விடறோம். (ஆனா பின்னாடி இடி இடிக்கப்போவது அப்போது தெரில!)

    ஓதுக்குபுற மாகாணம் மான்டனாவை நோக்கி பயணிக்கும் வழில மூக்கை நுழைக்கும் போக்கிரிகள் நம்ம நிம்மதியிலும் மண் அள்ளி போடுகின்றனர். பென்னட்டுக்காக பரிதாபபடும் மனசை அதிகம் அல்லாட வைக்காமல், கிர்பி& ரஸ்ஸிலின் தற்காப்பு நடவடிக்கை செய்கிறது.



    ReplyDelete
    Replies

    1. மான்டனா போகும் வழியில் உள்ள குக்கிராமமான சன்டேன்ஸ், ரயில் தடத்தை பயன்படுத்தி முன்னேறத் துடிக்கிறது. நம்ம ரஸ்ஸிலின் கோஷ்டி சன்டேன்ஸ்ல உணவுப் பொருட்களை சேகரிக்க கால் வைக்கிறது. கூடவே குரூர விதியும் தான்!

      கிர்பியும் ரஸ்ஸலும் "ஜாலி" தேடப்போக, கடைவீதி செல்லும் பென்னட்டை விதி துறத்துகிறது. எதிர்பாரா விதமாக மாண்டு போகிறான் பென்னட். பென்னட்டின் அகால சாவு ரஸ்ஸலை ஆங்காரம் கொள்ளச் செய்கிறது. முன்பு தங்களது வழியில் குறிக்கிட்ட போக்கிரிகளை கூட்டு சேர்த்து கொண்டு பென்னட் சாவுக்கு சன்டேன்ஸ் கிராமவாசிகளை பழி தீர்க்க முயல்கிறான்.

      பென்னட் சாவுக்கு காரணம் யார்???
      சன்டேன்ஸ் கிராமாத்தின் எதிர்காலம் என்ன???
      ரஸ்ஸல் பழி தீர்த்தானா???
      எதிர்பாரா விதமாக இந்த பிரச்சனைல தலைநுழைக்கும் கிராமத்தின் ஸ்கூல் மிஸ் காலின்ஸ் என்னவானாள்??

      பரபரப்ப்பான, அதிர வைக்கும் பிற்பாதி கதை & க்ளைமாக்ஸ் எல்லா கேள்விக்கும் விடை தருகிறது! ஆனா கனத்துப் போகும் நம் மனதில் எழும் ஓராயிரம் கேள்விகளுக்கு விடை தரப்போவது யார்!!!!

      கதையோட்டத்துக்கு இணையாக போட்டி போடும் ஓவியங்கள் கதை நெடுக வலு சேர்க்கின்றன்.

      6ம் பக்கத்தின் "பிரிவு...புதுச் சந்திப்பு"- என இருக்கும் அகன்ற பேணலில் உள்ள ஓவியம் உச்சம்!

      13&15 ம் பக்கங்களில் உள்ள ரயில்வே ஸ்டேசன் & மந்தைகளின் ஓவியங்கள் அசாத்தியம். .

      17ம் பக்கத்து நிழல் விழும் பின்னனி ஓவியங்கள் மீண்டும் பார்க்க தூண்டுபவை.

      23ம் பக்கத்தில் மிஸ் காலின்ஸ் உடன் விளையாட்டில் ஈடுபடுவது சிறுவர்கள் மட்டுமல்ல, நாமும் தான்! தத்ரூபமான காட்சி படுத்தல்.

      உச்சகட்ட பரபரப்ப்பான பக்கங்கள் 50, 51, 52 லாம் கடகடனு திருப்பிடுவோம். நிதானமாக இன்னொரு முறை பார்க்கும் போது தான் ஓவியர் Paul Gastine னின் உழைப்பு புரிபடும்.

      பிரிவோம் சந்திப்போம்- ஒன் ஷாட் ஒன்டர்!

      Delete
    2. செமையாக ரசித்து படித்து இருக்கிறீங்க.

      Delete
    3. 6ம் பக்கத்தின் "பிரிவு...புதுச் சந்திப்பு"- என இருக்கும் அகன்ற பேணலில் உள்ள ஓவியம் உச்சம்!

      +1

      Delete
  44. Editor sir we are waiting for golden oldies series🤗🤗🤗🤔🤔🤔🤔

    ReplyDelete
  45. ட்ரெண்டின் 'கனவே கலையாதே...!' மேயர் ஒருத்தர் வருங்கால செனட்டர் கனவில் இருக்கிறார். அவருடைய தம்பி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகிவிட சட்டத்தின் முன் நிறுத்த அவனை அழைத்துக்கொண்டு ட்ரெண்ட் நெடுந்தூரம் பயணிக்கிறார். கூடவே நாமும் அவர்களுடன் பயணிக்கிறோம். தம்பியை நீதியின் முன் நிறுத்தினால் தன்னுடைய பதவி, எதிர்கால கனவு எல்லாம் பாழாகிவிடுமே என்று கைதியின் அண்ணன் ட்ரெண்ட்டை பணத்தாசை காட்டி பணியவைக்க முயல அது பலிக்காததால் தம்பியை பரலோக பயணம் அனுப்ப ரவுடிகளை ஏவுகிறார். இதன் நடுவே வைல்ட் பில் எனும் வாலிப வயோதிக அன்பரும், ஓட்டைவாய் உலக நாதனுமான ஒரு துப்பாக்கி வீரர் ட்ரெண்டுடன் இணைந்து கொள்ள ட்ரெண்ட் எதிரிகளை வீழ்த்தி தன் கடமையை நிறைவு செய்தாரா என்பதுதான் மீதிக் கதை. இதில் வைல்ட் பில்லுக்கென்று ஒரு மெல்லிய ட்விஸ்ட்டுடன் கூடிய கதையும் உண்டு. புத்தகத்தை வாசிப்பவர்களுக்கு குழப்பமில்லாத கதையும், அருமையான ஓவியங்களும், தேவையான இடங்களில் (மட்டும்) அதிரடிகள் என்று அமைதியான நதியில் ஆர்ப்பாட்டமில்லாத படகில் பயணம் செய்யும் அனுபவம் உறுதியென்பது நிச்சயம். ட்ரெண்ட் அனைவருக்கும் பிடித்த ஃப்ரண்ட்(friend) என்று மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்துள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. //வைல்ட் பில் எனும் வாலிப வயோதிக அன்பரும், ஓட்டைவாய் உலக நாதனுமான ஒரு துப்பாக்கி வீரர் ட்ரெண்டுடன் இணைந்து கொள்ள//

      அந்த ஆளு ..அந்த அடைமொழி ! இந்த ஆளு ..அதே அடைமொழி !

      ரெண்டுக்கும் மத்தியிலே ஏதாச்சும் ஒத்துமை இருக்குமோ ? ச்சே.. ச்சே.. இருக்காது.. இருக்காது !

      Delete
  46. /// அதைத்தான் பசை போட்டு பச்சக்குனு ஒட்டியிருக்கோமே - கிழிப்பானேன் சார் ///

    பார்வையில் படாமல் மறைக்கப்படுபவை மீது ஒருவித ஆர்வம் ஏற்படுவது இயல்பு தானே சார்.
    நான் அந்த பக்கத்தை லேசாக விலக்கிப் பார்த்தேன். ' 'ஒற்றை நொடி 'என்ற வரி மட்டும் தென்பட்டது.

    ReplyDelete
  47. பெங்களூரு பக்கம் பொட்டி வந்திருந்தால் கை தூக்கவும் ..
    பி கு.. பொட்டி இன்னும் வரல ..

    ReplyDelete
    Replies
    1. சந்தா நம்பர் சார் ?

      Delete
    2. நான் பொட்டியை அடுத்த மாதம் அனுப்புங்கள் என சொல்லி விட்டேன். பெங்களூரில் நீங்கள் எந்த ஏரியாவில் இருக்கீங்க?

      Delete
  48. மேலே அந்த ப்ரிவியூவில் நம்ம இரும்புக்கை மாயாவி ஸ்டைலா இளமையா இருக்கார்! வரையப்பட்ட ஸ்டைலில் நம்ம இரும்புக்கை நார்மனின் சித்தப்பா பையன் போல இருக்கிறார்!

    ReplyDelete
    Replies
    1. // மேலே அந்த ப்ரிவியூவில் நம்ம இரும்புக்கை மாயாவி ஸ்டைலா இளமையா இருக்கார்! //

      +1

      Delete
  49. வானவில்லுக்கு நிறமேது
    டெக்ஸ் அண்டர் பிளே செய்து ஜானி எனப்படும் அபாச்சே இளைஞ்சனை அடித்து ஆட அனுமதித்துள்ளார்.செவ்விந்த்திய இளைஞன் தன் ரத்தமே பெரிது என்று முடிவெடுக்கும் தருணம் எதிர்பாராதது.டெக்ஸ் மற்றும் கார்சன் இருவரும் செவ்விந்தியர்கள் மீது காட்டும் கரிசனமும்,கோசைஸின் விவேகமும் ,கதையின் அடிநாதமாக உள்ள தேடலும் இது சாதாரண கதை அல்ல என்று உணர்ந்து கொள்ள செய்கிறது.வாழ்க்கை வினோதமானது

    ReplyDelete
    Replies
    1. //டெக்ஸ் அண்டர் பிளே செய்து ஜானி எனப்படும் அபாச்சே இளைஞ்னை அடித்து ஆட அனுமதித்துள்ளார்.//

      அதிகாரிக்கு சுளுக்கு எடுக்கவும் தெரியும் ; சபையில் அரூபமாய் இருக்கவும் தெரியும் என்பதால் எல்லா சூழல்களிலும் மிளிர்கிறார் !

      Delete
    2. // டெக்ஸ் அண்டர் பிளே செய்து ஜானி எனப்படும் அபாச்சே இளைஞ்னை அடித்து ஆட அனுமதித்துள்ளார். //

      ரம்மி, அதிகாரிக்கு சைடு ரோல் என்பதை எவ்வளவு அழகாக சொல்லிஉள்ளார் என்பதை பார்த்தீங்களா :-)

      Delete
  50. கண்ணான கண்ணே கதையின் பாகம் முடிந்ததா இல்லை தொடருமா

    ReplyDelete
    Replies
    1. Nopes...இதற்கு மேல் தொடர்ந்தால் ஒரு அழகான சிறுகதை - மெகா சீரியல் ஆனது போலாகிடும் சார் !

      Delete
  51. கரும்பு தின்னக் கூலியா? வந்தவுடன் இரும்புக்கையார், சிலந்தியார் ரெண்டு பேரையும் களமிறக்குங்கள்...

    ReplyDelete
  52. **** வானவில்லுக்கு நிறமேது? *****

    அலெர்ட் : கதை கொஞ்சூண்டு மட்டும் விவரிக்கப்பட்டிருக்கிறது!

    அமெரிக்க ராணுவத்தினரின் தவறான ஒரு புரிதல் காரணமாகத் தன் பெற்றோரை இழக்கிறான் ஒரு அபாச்சே பாலகன்! தவறு செய்த அந்த ராணுவ அதிகாரியே தன் தவறுக்குப் பரிகாரம் செய்திடும்பொருட்டு அப்பாலகனை தத்தெடுத்து வளர்க்கிறார். உயர்கல்வியும், ராணுவப்பயிற்சியும் பெற்று இளைஞனாகிய அவனுக்கு மீண்டும் தன் மண்ணிற்குச் சென்று தன் உண்மைப் பெற்றோரைப் பார்த்துவிடும் ஆவல் எழுகிறது! அரிசோனாவில் காலடியெடுத்து வைக்கும் அவனுக்கு டெக்ஸ்-கார்சனின் அறிமுகமும், தற்காலிக செவ்விந்திய ஏஜென்ட்டாக பதவியும் கிடைக்கிறது! இதற்குமுன்பு அங்கே அந்தப் பதவியிலிருந்தவன் சில இராணுவத்தினரோடு கூட்டணியாக இணைந்து பயங்கர மோசடி வேலைகளில் ஈடுபட்டிருந்ததன் பலனாக, செவ்விந்தியருக்கு அமெரிக்க அரசாங்கத்தால் கிடைக்கவேண்டிய உணவுப் பொருட்கள் தடைபடுகின்றன!

    பசியால் வாடும் தன் செவ்விந்திய மக்களுக்கு நன்மை செய்வதற்காகவும், மோசடிகளில் ஈடுபட்டுவரும் இராணுவத்தினரை பழி வாங்குவதற்காகவும் அந்த மெத்தப் படித்த அபாச்சே இளைஞன் ஒரு போராளி அவதாரம் எடுத்து, வேறுசில துடிப்பான அபாச்சே இளைஞர்களோடு இணைந்து ஒரு புரட்சிப் படையை உருவாக்குகிறான்!
    இதனால் அபாச்சேக்களுக்கும் இராணுவத்தினருக்கும் போர் மூளும் சூழ்நிலை ஏற்படவே, இரத்த ஆறு ஓடாமலிருக்க நம் டெக்ஸும், கார்சனும் களமிறங்கி அதைத் தடுப்பதுதான் சுவாரஸ்யமான மீதக் கதை!

    220 பக்கங்களுக்கு தங்குதடையின்றி, பிசிறின்றி இக்கதையை உருவாக்கிய கதாசிரியர் பாஸ்க்கல் ருஜுவுக்கும், மிக மிக நேர்த்தியான சித்திரங்களை வரைந்து காட்சிகளைக் கண்முன் நிறுத்திய ஓவியர் யானிஸ் ஜினோசேட்டிஸுக்கும் ஒரு பலத்த கைதட்டலை தெரிவித்துக்கொள்ளலாம்!!

    கதையின் முன்பாதி - எக்ஸ்பிரஸ் வேகமென்றால், பின்பாதி - புல்லட் ரயில் வேகம்!!

    மிக நேர்த்தியான இக்கதையும் தலயின் வெற்றிக்கணக்கில் அழுத்தமான ஒரு எண்ணிக்கையைப் பதித்திடும் என்பது உறுதி!

    இத்தனை அருமையான கதையும், ஷார்ப்பான சித்திரங்களும் வண்ணத்தில் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்ற ஏக்கம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை!!

    கதையின் தலைப்புக்கான காரணம் கடைசிப் பக்கத்தில் கதையோடே விளக்கப்பட்டிருந்தாலும், எனக்கென்னவோ அது புரிஞ்சமாதிரி இல்லை!

    என்னுடைய ரேட்டிங் : 10/10

    ReplyDelete
    Replies
    1. கதாசிரியர் ருஜுவ் கட்டிடக்கலையில் டிகிரி வாங்கியவர் என்பதால் ஒரு கதையை அழகாய்
      கட்டி வளர்த்துச் செல்லும் ஆற்றலை பெற்றுள்ளார் போலும் !

      Delete
    2. விஜயன் சார், குசும்பு :-)

      Delete
  53. இம்மாதம் வந்த நான்கு புத்தகங்களும் அருமை (ஜம்போ சந்தா கட்டவில்லை அதனால் பிரிவோம் சந்திப்போம் படிக்கவில்லை) அதிலும் டயபாலிக் அருமை பெரிய சித்திரங்கள் கண்களுக்கு உறுத்தல் இல்லாமல் படிக்க முடிந்தது கதையும் நன்றாகவே இருந்தாது நம்பும்படியான முகமுடி மாற்றல்கள் இருந்தது அருமை அடுத்து வரப்போகின்ற D சந்தா புத்தகங்கள் இதே போல் பெரிய சைஸ் சித்திரங்களுடன் 50 விலையில் வந்தால் நலம்

    ReplyDelete
  54. பிரிவோம் சந்திப்போம் - வர்ற ஆத்திரத்துக்கு அந்த ஊரையே போட்டுத் தள்ளனும்னு ஆத்திரம் பத்திக்கிட்டு வருது.. கதை படித்து முடித்தவுடன் மனமெல்லாம் கனம்.. சித்திரங்களுக்காக இந்த மதிப்பெண்.. 9/10

    ReplyDelete
    Replies
    1. கதாசிரியரும், ஓவியரும், கலரிங் ஆர்டிஸ்டும், செமையாய்க் கைகோர்க்கும் தருணங்களில் எழக்கூடிய மாயாஜாலத்தின் மாதிரி இது !

      Delete
  55. அலைகடல் அதகளம்: நீண்ண்ண்ட இடைவெளியில் டயபாலிக் சாகசம். சிறப்பான, தரமான சம்பவம்..
    இந்த கதைக்கு தலைப்பே தவறு.. அலைகடல் அற்புதம் என்று தான் இதற்கு தலைப்பிட்டிருக்க வேண்டும்..
    ஒரே ஒரு குறிக்கோள், அதற்கான திட்டமிடல், திட்டத்தை நிறைவேற்ற தகுந்த உழைப்பு, உழைப்பினால் கிட்டிய வெற்றி 🏆 கையை தட்டி பறித்தாற் போல நழுவி போகும் சூழ்நிலை.
    தன் உழைப்பு பறி போன அதே நேரத்தில் தன் தொழிலுக்கு தேவையான உபகரணங்களும் அழிந்து போன துயரம்.. காலம் காலமாக தன் வளர்ச்சியை தடுக்க முயலும் நபர்களின் இடைவிடாத துரத்தல்கள்..தட்டிப் போன தனது உழைப்பினை மீட்டெடுக்க தனது உபகரணங்கள் இல்லாத துயரம்..இத்தனை இடர்களையும் தனது சமயோஜித புத்தியால் முறியடிக்கும் டயபாலிக்.. சபாஷ்..
    இத்தனை நாள் காத்திருப்புக்கு கிடைத்த சரியான தீனி.. நன்றிகள் எடிட்டர் சார்.
    இன்றைய பகற் பொழுதில் புத்தகம் படிக்பகும் போது என்னருகில் எனது ஒன்றாம் வகுப்பு படிக்க போகும் மகளும் இணைந்து கொண்டாள் வாசிக்க தெரியாத போதிலும் என்னை கதை சொல்லுமாறு அன்பு தொல்லை செய்தவாறே.. முழு கதையையும் படித்து சொன்ன போது அவள் சொன்னதும் எனக்கு தொன்றியதும் கீழே..
    1. மகள் சொன்னது: அப்பா.. இந்த கதையை பொறுத்த வரையில் டயபாலிக் எல்லா முகமூடியையும் இழந்த பின் தன் உழைப்பை அடைவதோடு மட்டுமல்லாமல் தப்பிப்பதையும் பார்த்தால் தோன்றுவது, தேனீக்களிடம் இருந்து தேனை வேண்டுமானால் திருடலாம்.. தேன் எடுக்கும் வித்தையை அல்ல..
    எனக்கு தோன்றியது : இத்தாலியிலிருந்து சிறப்பான கதைகளும் வரும் போல..
    அலைகடல் அதகளம் இந்த வருடத்தின் சிறப்பான தரமான கதை..

    ReplyDelete
    Replies
    1. கதையின் லயிப்பில் பாராட்ட மறந்து போன விசயங்கள்: அட்டைபடமும், புத்தக வடிவமைப்பும்.. அதிலேயும் சிவப்பு நிற பாயில் பிரின்ட் அள்ளுகிறது.. சூப்பர்..

      Delete
    2. //இத்தாலியிலிருந்து சிறப்பான கதைகளும் வரும் போல..//

      பாயசச் சட்டியில் பொங்கலும் கிண்டலாம் போல !

      Delete
    3. // அலைகடல் அதகளம் இந்த வருடத்தின் சிறப்பான தரமான கதை.. இத்தாலியிலிருந்து சிறப்பான கதைகளும் வரும் போல. //

      இது எல்லாம் ரொம்ப ஓவர்!

      Delete
    4. // தேனீக்களிடம் இருந்து தேனை வேண்டுமானால் திருடலாம்.. தேன் எடுக்கும் வித்தையை அல்ல. //

      இது நல்லா இருக்கே! நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்!!

      Delete
    5. பாயசச் சட்டியில் பொங்கலும் கிண்டலாம் போல !//
      சார்..இது பொங்கலோ , உப்புமாவோ இல்லை.. இது அல்வா..


      Delete
    6. வாயெல்லாம் ஒட்டுனப்போவே தெரிஞ்சது அல்வான்னு !

      Delete
    7. //அலைகடல் அதகளம் இந்த வருடத்தின் சிறப்பான தரமான கதை.//
      இது ஏதோ வஞ்சக புகழ்ச்சி போல தெரியுதே. :))

      Delete
    8. வஞ்சப் புகழ்ச்சி இல்லை சார்.. உண்மையை சொன்னேன்..

      Delete
    9. அப்ப உங்களுக்கு பாயாசம் மற்றும் பொங்கலை விட அல்வாதான் ரொம்ப பிடிக்கும் என்று சொல்லுங்கள் ரம்மி :-)

      Delete
  56. கண்ணான கண்ணே கதை எனக்கு மிகவும் பிடித்த ஒரு கதை சார் இது மாதிரியான கதைகளை தொடர்ந்து வெளியிடுங்கள் உங்களுக்கு நாங்கள் மிகுந்த நன்றி உடையவர்களாக இருப்போம் இன்னமும் என்னால் அந்தக் கதையின் பாதிப்பில் இருந்து வெளியே வர முடியவில்லை அந்த உணர்வுபூர்வமான கதைக்கும் அதை சரியாக தேர்வு செய்து வெளியிட்ட ஆசிரியருக்கும் கோடான கோடி நன்றிகள் இப்படியான கதைகளை நாங்கள் நிறைய நிறைய உங்களிடம் எதிர்பார்க்கிறோம் காமிக்ஸ் என்றால் ஹீரோயிஸம் உள்ள கதைக்கு தான் என்றும் வரவேற்பு இருக்கும் என்பதை தாண்டி ஆழமான கதைகளுக்கும் வரவேற்பு இருக்கும் என்பதை நாங்கள் வாசித்து நிருபிக்கிறோம் நீங்கள் தொடர்ந்து வெளியிடுங்கள் .

    ReplyDelete
    Replies
    1. // வரவேற்பு இருக்கும் என்பதை நாங்கள் வாசித்து நிருபிக்கிறோம்//

      Super sir....😀

      Delete
    2. @ Gururajendran

      அட்டகாசம் நண்பரே!!

      Delete
    3. // காமிக்ஸ் என்றால் ஹீரோயிஸம் உள்ள கதைக்கு தான் என்றும் வரவேற்பு இருக்கும் என்பதை தாண்டி ஆழமான கதைகளுக்கும் வரவேற்பு இருக்கும் என்பதை நாங்கள் வாசித்து நிருபிக்கிறோம் நீங்கள் தொடர்ந்து வெளியிடுங்கள் . //

      அப்படி சொல்லுங்க! சபாஷ்!

      Delete
    4. //காமிக்ஸ் என்றால் ஹீரோயிஸம் உள்ள கதைக்கு தான் என்றும் வரவேற்பு இருக்கும் என்பதை தாண்டி ஆழமான கதைகளுக்கும் வரவேற்பு இருக்கும் என்பதை நாங்கள் வாசித்து நிருபிக்கிறோம் நீங்கள் தொடர்ந்து வெளியிடுங்கள் //

      இதுவே எனது கருத்தும். மிகச் சரியாக கூறினீர்கள்.

      Delete
    5. //காமிக்ஸ் என்றால் ஹீரோயிஸம் உள்ள கதைக்கு தான் என்றும் வரவேற்பு இருக்கும் என்பதை தாண்டி ஆழமான கதைகளுக்கும் வரவேற்பு இருக்கும்.//

      +999

      Delete
  57. வானவில்லுக்கு நிறமேது :

    பாஸிட்டிவ் :

    * டெக்ஸ் & கார்ஸன்
    * அட்டைப் படம் டிசைன்
    * உள்பக்க நல்ல டீட்டைல்டு சித்திரங்கள்
    * விறுவிறுப்பான கதைக்களம்
    * கதையில் வரும் கேரக்டர்களின்
    வடிவமைப்பு
    * அதிக பக்கங்களை கொண்ட குண்டு புக்
    ஃபீல்
    * மொழிபெயர்ப்பு.

    நெகடிவ் :

    * அட்டை டூ அட்டை கதை மட்டுமே.
    அடுத்து வருகிறது போன்ற உள்
    பக்கங்களாவது இருந்திருக்கலாம்.
    * கடைசி பக்கம் உள் அட்டையுடன்
    ஒட்டியிருப்பது.
    * கதைக்களம் ஒரே இடத்தில் சுற்றி
    வருவது போன்ற அழற்சி.
    * வழக்கம்போல டெக்ஸை ஓவராக புகழும்
    வசனங்கள்.

    ஓவரால் ரேட்டிங் 9/10


    ReplyDelete
    Replies
    1. //கடைசி பக்கம் உள் அட்டையுடன்
      ஒட்டியிருப்பது.//

      காரணம் இல்லாமலா சார் ஒட்டியிருப்போம் ?

      Delete
    2. ஒட்டுங்க எஜமான் ஓட்டுங்க!! பெவிக்கால் தீரும் வரை ஒட்டுங்க!! :-) இந்த பெவிக்கால் ராமசாமியே இப்படித்தான் எஜமான்!!! :-)

      Delete
  58. SMASH என்று போட்டு ஸ்பைடர் மற்றும் மாயாவின் அட்டை படம் செமையா இருக்கு! மிகவும் ரசித்தேன்! விரைவில் முழு கதையையும் ருசிக்க ஆர்வமுடன் உள்ளேன்!

    ReplyDelete
    Replies
    1. 5 + 5 பக்கங்கள் தான் சார் - மாயாவிக்கும், ஸ்பைடருக்கும் !

      Delete
    2. இருக்கட்டும் சார்! சந்தோசமாக சுவைப்பேன்!

      Delete
    3. ஆனால் அந்த அட்டைப்படத்தில் மாயாவியை பேட்மேன் + வேதாளர் சாயலில் வரைந்தது கொஞ்சம் சரியில்லை!

      Delete
  59. This Week end Schedule :

    Friday Night : பிரிவோம் சந்திப்போம்
    Saturday Night; கண்ணான கண்ணே & ட்ரெண்ட்
    Sunday Morning: எடிட்டரின் புதிய பதிவு

    ReplyDelete
    Replies
    1. அடடே ! Weekend with comics !

      Delete
    2. யெஸ் சார். இனிமேல் அந்த நாட்களைப் போல் காமிக்ஸ் உடன் நேரத்தை செலவழிக்கலாம் என தீர்மானம். So, நீங்க வாரம் இரண்டு புத்தகம் மட்டும் அனுப்பிடுங்க. அது போதும். :)))

      Delete
  60. // அதைத்தான் பசை போட்டு பச்சக்குனு ஒட்டியிருக்கோமே - கிழிப்பானேன் சார் ? //

    அதை எதுக்கு சார் நீங்க பசை போட்டு ஒட்டுறீங்க :-) ஒட்டமா இருந்தா நாங்க ஏன் கிழிக்கிறோம் :-)

    ReplyDelete
    Replies
    1. Repeat:

      காரணம் இல்லாமலா சார் ஒட்டியிருப்போம் ?

      Delete
    2. நடக்கட்டும் நடக்கட்டும்! உங்களுக்கு பெவிகால் சப்ளை செய்கிற கடைக்காரருக்கு கூடிய சீக்கிரம் பாயசத்தை ரெடி பண்ணிவிட வேண்டியதுதான்!

      Delete
  61. ஐயா எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணுமுங்க...

    ஏன் சார் அந்த அஞ்சு நிமிஷம்? வொய் நாட் அம்பது நிமிஷம்?!!

    ReplyDelete
    Replies
    1. நம்ப எடிட்டருக்கு 5 நிமிடம் நமக்கு 50 நிமிடம் விஜய் :-)

      Delete
    2. ///நம்ப எடிட்டருக்கு 5 நிமிடம் நமக்கு 50 நிமிடம் விஜய்///

      ஒரு ரவுண்டு பன்னை கபளீகரம் பண்ண ஆகும் நேரத்தைச் சொல்றீங்களா PfB? ;)

      Delete
    3. அப்படி கூட எடுத்து கொள்ளலாம் :-)

      Delete
  62. நம்ம நேரம் பாருங்க!?

    மதுரைல ரண்டு நாள்,
    ஈரோட்ல ரண்டு நாள்,

    இப்போ கோபில ரண்டு நாள்!!!

    ரண்டு நாளா 100 வாட்டி கால் பண்ணிட்டேன்!

    In condolence sir..
    I'll call 2moro afternoon

    நேத்து மேஸேஜ் போட்டுட்டு கடைய சாத்திட்டாங்க! இன்னும் திறக்கல!

    எட்டுக்கு எட்டு ரூம்!
    ஒரு டேபிள் ஒரு சேர்!

    ஒரே ஒரு ஆளு!
    புக்கிங், டெலிவரி, கஸ்டமர் கேர் சகலமும் அவரே!

    இதுதான் கோபி DTDC!

    பக்கத்துல ஒரு டீக்கடை! அங்க சிலபல பார்சல் இருக்கு! ஆனா அதுல நம்ம பார்சல் இல்ல!

    ஆக மொத்தம் இன்னும் டீ வரலைங்க!

    ReplyDelete
    Replies
    1. விரைவில் புத்தகங்கள் உங்களுக்கு கிடைக்கட்டும்!

      Delete
    2. நேற்றைக்கு நம்மாட்கள் விசாரித்த போது புக் கோபிக்கு வந்து விட்டதாய்ச் சொன்னதால் சிக்கல் தீர்ந்திருக்கும் என்று நினைத்தோம் சார் ! நாளை மாற்று ஏற்பாடு செய்திடுவோம் !

      Delete
    3. சார்! புக் கோபி வந்தாச்சு!

      ஆக்கப் பொறுத்தவன்! ஆறப் பொறுக்கணும்னு சொல்லுவாங்க!

      நோ ப்ராப்ளம் சார்!

      கோபி DTDC நிலையை விளக்கவே பதிவிட்டேன்!

      Delete
  63. நமக்கு திருச்செந்தூர் காரர்னாதான் கொஞ்சம் பயந்துபயந்து வரும். மத்தபடிஒரிஜினல் இரும்புக்கையாரை ஆரவாரத்துடன் வரவேற்க்கிறோம் தங்கத்தலைவன் ஸ்பைடர் வருகை கொண்டாடப்படவேண்டிய சிறப்பான சம்பவம். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  64. 1. அலைகடல் அதகளம் ..

    முதலில் MAKING IS SUPERB sir .. SEMA .. ஆனால் முன்பு DIABOLIK வாங்கிய சாத்துகளால் இந்த முறை சாத்வீகமான DIABOLIK கதையை ஆசிரியர் SELECT பண்ணி உள்ளார்.. மொத்தமே 2 அடி தான் அடிக்கிறார்.. முன்னே வந்த அந்த வெறித்தனமான DIABOLIK கதைகளை ரசித்த அளவு இந்த கதை இல்லை .. அந்த அளவுக்கு இதில் DIABOLIK DANGER ஆக இல்லை ..
    7/10 ..

    2.'கண்ணான கண்ணே' ..

    நண்பர்கள் ஏற்கனவே விமர்சனங்கள் செய்து விட்டதால் புதிதாக சேர்க்க எதுவும் இல்லை ..

    ITS GOOD .. 8/10 ..

    3.டிரெண்ட் ..

    வழக்கமான SIMPLE ஆன நேர் கோட்டு கதை .. WILD BILL தான் ரியல் ஹீரோ .. தொடர் முடிவதற்கு உள்ளேயே ஆவது AGNES இடம் TRENT சொல்வாரா.. இதயம் முரளி ஏ தேவலாம் போலயே ..

    RATING :9.5/10 ..

    JUMBO AND தல இன்னும் படிக்கல .. தல எப்போதும் கடைசியா தான் படிக்கறது சார் ..

    ReplyDelete
  65. கண்களை மூடினாலே பின்வரும் காட்சிகளில் ஏதாவது ஒன்றோ, இரண்டோ அல்லது எல்லாமேவோ வந்து வந்து போகிறது!

    * காரின் பின் சீட்டில் அமர்ந்தபடி கண்ணடிக்கும் பொம்மிக்கா
    * அந்த பிக்-பைட் ராட்சதனும், அவனுடைய ஒல்லிப்பிச்சான் உதவியாளனும்
    * அடர்ந்த காட்டுக்குள் ஓடும் பொம்மிக்கா
    * இறுதி அஞ்சலிக்காக அலங்கரிக்கப்பட்ட க்ளாராவின் மம்மியின் முகம்
    * கடைசி பேனலில் க்ளாராவின் முகத்தில் தெரியும் நம்பிக்கையும், எதையோ புரிந்துகொண்டதைப் போன்ற திருப்தியும்!

    ச்சும்மா எதையாவது சொல்லி வைப்போமே என்பதற்காக இதைச் சொல்லவில்லை! அதன்பிறகு இரண்டு கதைகள் படித்த பிறகும் இன்னும் இந்த தாக்கம் குறையவில்லை!

    ReplyDelete
  66. 'கண்ணான கண்ணே'க்கான விமர்சனங்களை நண்பர்கள் - மிதுன், செனாஅனா, Sriram - ஆகிய அலசல் பேர்வழிகளிடமிருந்தும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

    ReplyDelete