Powered By Blogger

Wednesday, May 13, 2020

படப் பொட்டி ரெடி !

நண்பர்களே,

வணக்கம். பீடிகைகளின்றி சொல்ல வந்த விஷயத்துக்குள் நேராய்ப் புகுந்திடுகிறேனே - for once !! ஆண்டவன் புண்ணியத்தில், சிவகாசி நகரினில்  இதுவரைக்குமாவது பெரிதாய் கொரோனா தாக்கமில்லை என்பதால் மெது மெதுவாய் புது இதழ்களைத் தயார் செய்து விட்டோம் ! 5 புக்குகள் அடங்கிய டப்பிக்கள் இன்றைக்கு கூரியருக்குக் கிளம்பத் தயாராகி வருகின்றன ! இங்கே சின்னதொரு 'இக்கன்னா' இருப்பதால், அவசரமாய் இந்தப் பதிவு ! 

ST கூரியரில் பணியாட்களின் தட்டுப்பாடு இருப்பதால் அவர்களால் உங்கள் இல்லங்களைத் தேடிப் பிடித்து டெலிவரி செய்திட இந்த மாதத்துக்கு சாத்தியமாகாதாம் ; அவர்களது கிளைகளில் நீங்கள் தான் போய் வாங்கிட வேண்டி வருமாம் ! தவிர இங்கிருந்து நாங்கள் புக்கிங் செய்திடும் டப்பிகளையுமே கொஞ்சம் கொஞ்சமாய்த் தான் அனுப்பிட அவர்களுக்கு வசதிப்படுமாம் ! ஆனால் DTDC எவ்வித இடர்களுமின்றிப் பணி செய்யத் துவங்கிவிட்டுள்ளனர் ! பார்சல்களை எப்போதும் போலவே இல்லங்களில் பட்டுவாடா செய்திடல் அவர்களுக்கு ஓ.கே. !

So இந்த ஒற்றை மாதத்துக்கு மட்டும் DTDC கூரியரையே பயன்படுத்திடுவோமே - ப்ளீஸ் ? Of course - அவர்களுக்கு கிளைகள் இல்லாத ஊர்களுக்கு மட்டும் ST என்று வைத்துக் கொள்வோமே ?

உங்கள் புரிதல்களை முன்கூட்டிய நன்றிகள் ! Bye for now ! 
      ONLINE LISTING : http://lioncomics.in/monthly-packs/702-may-2020-pack-.html

P.S : யாருக்கேனும் DTDC கிளையினில் வாய்க்கால்-வரப்புத் தகராறு ஏதேனும் இருக்கும் பட்சத்தில் மட்டும், உடனே 98423 19755 என்ற நமது அலுவலக நம்பருக்கு அழைத்துச் சொல்லி விடுங்களேன் - ப்ளீஸ் ! 

111 comments:

  1. ஹைய்யா.. நானேதான்.

    ReplyDelete
  2. Thank you editor sir 👏👏👏👏👍👍👍👍

    ReplyDelete
  3. Replies
    1. அடிச்சு கேட்டனே சொல்லலியேல
      ,,(,ஃபோனடிச்சு)

      Delete
  4. நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்..
    வரும் வழி தோறும் உந்தன் முகம் பார்த்தேன்..
    காலம் கடந்தால் என்ன ராசா..
    காமிக்ஸ் கதைகள் கொடு ராசா...

    நாளை நாளை என்றிருந்தேன்..
    நல்ல நேரம் பார்த்து வந்தேன்..
    தத்தித் தத்தி ஓடிவந்து,
    முத்து காமிக்ஸ் கதைகளை தேடினேன்.
    அதை இங்கே கண்டேன்..

    ReplyDelete
    Replies
    1. எம்சியாரா,,,
      சிவாசியா

      Delete
  5. STஒ DCஒ பொட்டி வந்தா சந்தோஷம்தான்

    ReplyDelete
  6. ஆஹா..! பலநாள் கழித்து மறுபடி நம்ம பொக்கிஷ பார்சலை பிரித்து ஒவ்வொரு புத்தகங்களையும் ஆசையுடனும், ஆவலுடனும் முகர்ந்து பார்க்கவும், ரசித்துப் பார்க்கவும், பின் படித்து மகிழப்போகும் அந்த ஆனந்த நிமிடங்களுக்காக இப்போதிருந்தே வெயிட்டிங்...!

    ReplyDelete
    Replies
    1. நமக்
      கடுத்த
      வாரந்தா

      Delete
    2. ஒரு வருசம் காத்திருந்தா கையிலொரு பாப்பா...! இது புரட்சித் தலைவர் பாடியது.
      ஒரு வாரம் காத்திருந்தா கையில் கூரியர் டப்பா...!
      இது நம்ம ஸ்டீல் பாடப்போவது!

      Delete
  7. யாஹூஊஊஊஊஊ!! புக்கு வரப்போகுதேய்ய்ய்ய்ய்ய்...

    ReplyDelete
    Replies
    1. அஞ்சு புத்தகங்கள் அடங்கிய டப்பியா?!! அட்டகாசம் சார்!!!

      Delete
    2. அதிர்ஷ்டம்,,,
      கொட்டுற தெய்வம் கூரய

      Delete
  8. மதிய வணக்கங்கள் ஃப்ரெண்ட்ஸ்

    ReplyDelete
  9. டாஸ்மாக் கடையை திருப்பியும் ஓப்பன் பண்ணின அதே பீலிங்..
    கையெல்லாம் இப்பவே நடுங்ங்ங ஆர ம்பி க் குதே...

    ReplyDelete
    Replies
    1. எதுக்கு எது ஒப்பீடு? நம்மை மாதிரி குழந்தைகள் இருக்கும் தளத்தில் இப்படி எழுதலாமா? கன்னத்துல போட்டுக்கோங்கோ!

      Delete
    2. நெஞ்சமெல்லாம்
      விம்முது

      Delete
  10. நீண்ட நாட்கள் கழித்து மிக ,மிக ,மிக மகிழ்வான செய்தி சார்..


    மிக்க மிக்க நன்றி...


    அ..ஆனா அந்த க் அன்னா தான் பயந்து வருது ...எஸ்டி எங்கள் பக்கம் எந்த பிரச்சனையும் இல்லை...ஆனால் டிடிடிசி சாதாரண நாளே இங்கு அவர்களுக்கு கொரானா காலம் போல் செயல்படுவார்கள்...

    ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு காத்திருக்கிறேன் வேறுவழியில்லாமல்...:-(

    ReplyDelete
    Replies
    1. S DTDC னாலே அலர்ஜி தான்

      Delete
    2. நமக்கெதுவுஞ் சரி

      Delete
  11. இந்த நீண்ட இடைவெளியல் ஐந்து புத்தகங்கள் என்ன,என்னவென்று கூட மறந்து விட்டது...:-)

    ReplyDelete
  12. சார்...நீங்கள் குறிப்பிட்டு உள்ள எண்ணிற்கு அழைத்து முடிந்த அளவிற்கு எஸ்டி கொரியரில் அனுப்ப சொல்லி உள்ளேன் ..மேலும் எனது இல்லத்திற்கு அருகே தான் எஸ்டி கொரியர் என்பதால் நானே சென்று வாங்கி கொள்வேன்...

    ReplyDelete
  13. ஹைய்யா புதிய பதிவு.......

    ReplyDelete
  14. S.T.கொரியர் கொஞ்சம் பக்கமென்பதால் நான் நேரிலேயே வாங்கிக்கொள்வேன்

    ReplyDelete
  15. // So இந்த ஒற்றை மாதத்துக்கு மட்டும் DTDC கூரியரையே பயன்படுத்திடுவோமே
    //
    வழக்கமாக ST யில் பெரும்பாலும் நான்தான் சென்று வாங்குவேன்,இல்லையேல் தாமதம்தான்...
    இந்த முறை DIDC யில் அனுப்புங்க சார்,சரியாக வந்தால் அதிலேயே தொடர்ந்து பெற்றுக் கொள்கிறேன்.....

    ReplyDelete
  16. வாவ்
    சூப்பரான செய்தி சார் 🙏🏼💃🏻
    .

    ReplyDelete
  17. http://paradesiatnewyork.blogspot.com/2020/05/blog-post_11.html?m=1
    Tex பற்றி அருமையான விமர்சனம் படித்துப் பாருங்கள்

    ReplyDelete
  18. சார் வெளியூர் பார்ட்டிக்கு அஞ்சல்துறை தானே.

    ReplyDelete
  19. சூப்பர் நியூஸ் ஏடி சார். எனக்கு எல்லா கூரியர் ஆபிஸ்கள் பக்கம் தான். ST ஒரு கேவலமான கூரியர் நிறுவனம். முடிந்த வரை DTDC யில் அனுப்புங்கள். தாங்க்ஸ் ஃபார் தி பாசிடிவ் சார்ஜ். Kudos.

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதம் எந்தெந்த புத்தகங்கள் வாங்குவதாக பிளான் சகோதரி? டெக்ஸ் தவிர?

      Delete
    2. மே மாத லிஸ்டில் மொத்தமும். பொதுவாக கி.நா பக்கம் என் காத்து அடிக்காது, இருந்தாலும் இந்த வறட்சி நிறைந்த நாட்களில், எது வந்தாலும் ஜயகோஷம் கொடுக்க தயார். ஆர்டர் செய்துட்டேன்.

      Delete
    3. கிராஃபிக் நாவல் படிக்காமல் இருக்க காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?

      Delete
    4. நான் வம்பை விலைக்கு வாங்குறேன். நான் அழுகாச்சி கி. நா. கூடப் படிப்பேன் ஆனால்,இங்கு வரும் selection அவ்வளவு appealing ஆக இல்லை. கடைசியா வானமே எங்கள் வீதி தான் படித்தேன். திரும்ப ஒரு முறை சொல்லிட்டேன் இது என் கருத்து மட்டுமே. (பழைய கி.நா. குஸ்திகள் என் நினைவில் பசுமையாக உள்ளது) opinion differs அண்ணா.

      Delete
    5. Opinion differs சகோதரி அதில் சந்தேகமே இல்லை. எனக்கு பிடிக்கும் ஒரு ஜானர் பிறருக்கு பிடிக்காமல் போக காரணம் என்ன என்று அறிய ஆவல். மனம் திறந்து சொன்னதற்கு நன்றி.

      Delete
    6. தாங்க்ஸ் குமார். எனக்கு தேவையில்லாத சண்டை பிடிக்காது. ஒரு முறை சென்னையில் வருடாந்திர புத்தக விழாவில் (2014 என்று நினைவு) நம் லயன் ஸ்டாலில் காமிக்ஸ் வாங்கிய போது, ஒரு அன்பர் வந்து சந்தா பற்றி பேசினார். எனக்கு சந்தா சரிப்பட்டு வராது என்று சொல்லி உதாரணமாக நான் ஜானியை படிப்பதில்லை என்று சொன்னேன். பில் போட்டு கிளம்பும் வரை உங்களுக்கு ஏன் ஜானி பிடிக்காது, சை, ஜானியை பிடிக்காதா, ஏன் ஏன்? என்று வாட்டிவிட்டார். இதற்கு பயந்து தான் நான் genre பத்தி வாய்திறப்பதில்லை.

      Delete
    7. உங்களுக்கு தேவையில்லாத சண்டை பிடிக்காது எனக்கு தேவையான சண்டை கூட பிடிக்காது.

      Delete
    8. ///எனக்கு தேவையான சண்டை கூட பிடிக்காது.////

      ஏற்கனவே கேள்விப்பட்டோம்! வீட்டம்மா எத்தனை மிதி மிதிச்சாலும் ஒரு முக்கல் முனகல் கூட காட்டாம அப்படியே கல்லு மாதிரி உட்கார்ந்திருப்பீங்களாமே?!!

      சர்வைவல்! ம்? :D

      Delete
  20. ஐயா ஜாலி.... டெக்ஸ் ட்ரென்ட் டயபாலிக் மீதி யாரு....???? தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்...

    ReplyDelete
    Replies
    1. பிரிவோம் சந்திப்போம்-கெளபாய் ஒன் ஷாட்- ஜம்போசீசன்3ல்-1;

      கிராபிக் நாவல்-பனியில் ஒரு குருதிப்புனல்

      Delete
    2. பட்டியலில் பிழை !

      Delete
    3. கி.நா. தான் பிரீவியூ வர்லனு நினைக்கிறேன். சோ, கி.நா. இல்லை என எடுத்து கொள்ளலாமா சார்.??? 5 பக்க காமிக்ஸ் என தாங்கள் சொன்னீர்கள்! அது உண்டா???

      Delete
    4. அதேயதே,,,சபாபதே

      Delete
    5. 5 பக்க காமிக்ஸ் அல்ல. 5 நிமிட வாசிப்புக்கு ஒரு காமிக்ஸ் என்று சொன்னார்.

      Delete
  21. நிறுத்திக்கோங்க!!
    கொரியர் டப்பியை வாங்கியதுமே புத்தகங்களை கட்டிப் பிடிச்சு கொஞ்சுறது.. மை வாசத்தை மோப்பம் பிடிச்சு இழுக்கறது.. அட்டைப்படத்தை கன்னத்துல வச்சு பாலீஸ் போடுறது.. பச்சக் லொச்சக்னு உம்மா கொடுக்கறது..
    இதெல்லாத்தையும் இத்தோட நிறுத்திக்கோங்க!

    இது கொரோனா காலம்ன்றதை மறந்துடாதீங்க!! பீ கேர் புல்! (நான் என்னைச் சொன்னேன்)

    ReplyDelete
    Replies
    1. அப்படியே கழுவிட்டு தொடரலாமே,,,
      உதவிக்கரசாணை

      Delete
    2. நாம எல்லாருமே இதை செய்ய போகிறோம். நான் கண்டிப்பாக கண்ணீர் மல்க கூரியரை வாங்க போகிறேன். அது எவ்வளவு நாள் ஆகும் என்று தெரியாது. It will be an sign that everything has gone back to normalcy.

      Delete
    3. அட்டை, பேப்பர்ல கொரானா 24 மணி நேரத்துக்கு மேல தாங்காது. பேக்கேஜை ஓபன் பண்ணிட்டு புக்கைத்கை தொடாமா,,கையை சுத்தமா கழுவிட்டு புக்கை எடுத்து கொஞ்சுங்க

      Delete
    4. மஹி ஜி..
      நல்ல தகவல்!
      👌👌👌👌

      Delete
  22. Replies
    1. அடடா,,,,
      நானிங்கிருக்க
      புக் அங்கிருக்க
      துள்ளி வரும் வெள்ளலயே நீ போய்
      தூது சொல்ல மாட்டாயா
      ,,,,வீட்ல வாங்கிருவாவ நன்றிகள் சார்

      Delete
  23. டெக்ஸ் வயது 45
    டெக்ஸ் தமில்ல ரகுவரன்
    கார்சன் சத்யராஜ்
    கிட் 22
    டைகர் 35

    ReplyDelete
    Replies
    1. நானும் இந்த காம்பினேஷன் யோசிச்சேன்.

      Delete
  24. ஜூன் புத்தகமோ
    அல்லது தோர்களோ எது சரியோ அப்படியே வரட்டும் சார்
    காத்துக் கிடப்பதில் இன்பம் உண்டு
    காக்க வைப்பதில் சுகமுண்டு

    ReplyDelete
  25. புத்தகம் வரதால கடிதப் பாேட்டியை எல்லாேரும்
    மறந்துட்டாங்களாே....

    ReplyDelete
  26. @ ALL : Online Listing :

    http://lioncomics.in/monthly-packs/702-may-2020-pack-.html

    ReplyDelete
    Replies
    1. ஆர்டர் பண்ணியாச்சு சார்...

      Delete
  27. சார் DTDC அனைத்து ஊர்களிலும் சகஜ நிலையில் இருக்கிறதாம்? சென்னை கேட்டு சொல்லுங்கள் சார். அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பில் எனக்கு அனுப்பவேண்டாம் என்று கூறிவிட்டேன். வேறு நண்பர்கள் சென்னையில் இருந்தால் உங்கள் நிலை பற்றி கூறுங்களேன்

    ReplyDelete
    Replies
    1. சென்னை ரெட்ஹீல்ஸில் S.T.கொரியரே பரவாயில்லை நண்பர் ராஜசேகர் வேதிகா அனுப்பிய புத்தகம் கன் போல் வந்து சேர்ந்தது DTDC படு மோசம் இன்னும் திறக்கவில்லை

      Delete
  28. சார் இப்போதாவது அந்த கிராஃபிக் நாவல் பற்றி சொல்லுங்கள். " கண்ணான கண்ணே" எதை பற்றியது எந்த கிராஃபிக் நாவலுக்கு பதிலாக இது?

    ReplyDelete
  29. நீங்கள் சொன்ன 5 நிமிட/பக்க கதை கண்ணான கண்ணே கிராபிக்ஸ் நாவல் போல தெரிகிறது :-) அப்ப ஒரு கருப்பு கிழவி எஃபெக்ட் உறுதி போல் தெரிகிறது :-)

    ReplyDelete
    Replies
    1. இந்த மாதம் நான் படிக்கப்போகும் முதல் இதழ் இது தான்.

      Delete
    2. படிங்க குமார் படிங்க :+)

      Delete
  30. , பார்த்திபன் சார் போட்டியமட்டுமாகொரானாவையும் மறந்துட்டேன். வாராது வந்த மாமணியே வா என்று பாடத்தோணுதே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  31. Diabolik artwork seems to be good old type. Welcome

    ReplyDelete
  32. எனக்கு புத்தகங்கள் அடுத்த மாதம் அனுப்பினால் போதும் என்று சொல்லி விட்டேன் :-)

    ReplyDelete
  33. இந்த இக்கட்டான நேரங்களிலும் எங்கள் காமிக்ஸ் காதல் குறையாமல் இருக்கு நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் எனது பாராட்டு கலந்த நன்றி எடிட்டர் சார்🙏🏻

    ReplyDelete
  34. கோச்சுட்டு போன பொஞ்சாதி வருவாளா மாட்டாளான்னு வழி பாத்து பாத்து ஏங்கி ரொம்பவே சோகத்துல இருக்கும் போது..
    திடீர்னு ஒரு நாள் எதிர்ல வந்து நின்னு மச்சான் னு கூப்ட்டா எப்டீ இருக்கும்..
    அப்டி இருக்கு இப்போ..
    கண்ணு வேர்க்குது..
    எப்ப கண்ணுல பாப்பம்னு இருக்கு..

    ReplyDelete
  35. ஹலோ.. என்ன இது கண்ணான கண்ணே?? இது லிஸ்ட்லயே இல்லையே.. LKG ஸ்கூல் புக் எதுவும் மாத்தி அனுப்பிட்டாங்களா??

    ReplyDelete
    Replies
    1. லிஸ்டில் இல்லாதது தான் ; படித்துப் பாருங்களேன் - LKG சமாச்சாரம் தானா ? என்று உறுதி செய்து கொள்ள !

      Delete
  36. எதிர்பார்த்தேன்...அழைப்பு ஏதும் வரலியே!
    காரணம் என்னேன்னும் புரியலியே...!

    ReplyDelete
  37. காலை 10 மணிக்கு சேலம் DTDC கொரியர் ஆபீஸுக்குப் போனேன். திறக்கலை. திறப்பாங்களான்னு தெரியலை. ஏமாற்றத்தோடு ஆபீஸ் வந்துட்டேன்!

    இங்கே புத்தகங்கள் கிடைக்கப்பெற்றவர்கள் எவரேனும் உளரோ?!!

    ReplyDelete
    Replies
    1. 1 மணிக்கு ஒரு தடவை DTDC (விஜயா மருத்துவ மனை பக்கத்தில் உள்ள..) அலுவலகம் போய் பார்த்து வந்தேன். இன்னும் திறக்கல...!! அநேகமாக.....!! கொரியர் ஹப்பில் (நம்ம சேலம் ஹப் கந்தம்பட்டி பைபாஸ்ல இருக்கு) இருந்தே ஓரிரு நாளில் டெலிவரி பண்ணுவாங்க போல! வெயிட்டிங் கேம் தான்...!

      Delete
  38. Dear Edi,

    Warm Welcome to Our Comics Set Back Again. Also for our Comics blog to get back to its roots (much desired).

    Looking forward for the DTDC at doorstep.

    ReplyDelete
  39. கண்ணான கண்ணே ...! ஒரிஜினல் பெயர் கிளாரா. கதை Christophe Lemoine & ஓவியம் CECILE, இரு பெண்களின் படைப்பு. ITS LOOK LIKE SMURF, SO CHILDISH. முழு வண்ணத்தில் வாண்டு ஸ்பெஷல்-க்கு ஏற்ற இதழ். ஆனால் பனியில் ஒரு குருதிப்புனல் புக்கு மாற்றாகப் இப்போது ஏனோ..?

    ReplyDelete
    Replies
    1. //இரு பெண்களின் படைப்பு. ITS LOOK LIKE SMURF, SO CHILDISH. //

      சார் ...தகவலிலும் பிழை ; புரிதலிலும் பிழை ! கூகுளில் இன்னும் கொஞ்சம் பொறுமையாய்த் தேடி இருக்கலாமே ?

      //பனியில் ஒரு குருதிப்புனல் புக்கு மாற்றாகப் இப்போது ஏனோ..?//

      அது தானே ? ஏனோ இந்த இதழ் கி.நா.வரிசையில் ....?

      பொறுமை சார்... வாசிக்கும் வரைக்கும் !

      Delete
    2. அட்டைப்பட ஒவியத்தை வைத்து 'So childish'னு சொல்லிட்டார் போலிருக்கு! ஆனால் 'லயன் கி.நா'வில் வெளிவந்திருப்பதால், கி.நா'க்களுக்கே உரிய 'மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திடும்' கதையாக இருந்திடும் என்பதில் சந்தேகமே இல்லை!!

      Delete
    3. எடிட்டர் சொன்னது போல், கதையாசிரியர் Christophe Lemoine ஒரு ஆடவர். முன்பு நான் குறிப்பிட்டது போல் பெண்ணல்ல. தவறான தகவலுக்கு கையை பிசையும் படங்கள் நூறு..!

      @ ஈ. வி
      எப்படியும் கதையைப் படிக்கும் போது கண்களைத் துடைக்க ஒரு டர்கி டவல் அல்லது at least ஒரு கைகுட்டையாவது நிச்சயம் தேவைப்படும் .

      Delete
  40. புத்தக பார்சலின் உள்ளே இருக்கும் சஸ்பென்ஸை ஆசிரியர் போலவே நண்பர்களும் சொல்லாமல் மௌனம் காக்கலாமே. அவரவர் பிரித்ததும் கிடைக்கப்போகிற ஆனந்த அதிர்ச்சிகளை அவரவர் அனுபவிக்க உதவுங்களேன்.please...

    ReplyDelete
    Replies
    1. ATR sir@ உள்ளே இருக்க போகும் 4புத்தகங்கள் (டெக்ஸ், ட்ரெண்ட், டயபாலிக்& கெளபாய் ஒன் ஷாட் 4ம் இங்கே எடிட்டர் சாரால் முன்னோட்டம் தரப்பட்டவை....சோ,நோ ரகசியம்! அந்த 5வது புக்கு "கண்ணான கண்ணே"---- தான் புரியாத புதிர்...!!! அதை பற்றிய ரகசியத்தை நீங்கள் அனுபவித்தே புசிக்கலாம்....!!!வந்தவுடன் என்சாய் பண்ணுங்க! பார்சல் வந்தவங்களும் சாணிடைசர் அடித்து ஓரமாக வெச்சி இருக்காங்க....!!!

      Delete
    2. நான் சொல்லவந்ததும் கண்ணான கண்ணே பற்றிதான் டெக்ஸ் விஜய். எடிட்டர் அநியாயத்துக்கு மௌனம் காப்பதால் எழுந்த ( ஆனந்த) பதட்டம்தான் சார்.

      Delete
  41. இந்த பதிவின் தலைப்பை முதலில் பார்த்த போது என்னடா இது இப்படி "படாப்பட்டி ரெடி !" வைத்து இருக்கிறார் என நினைத்தேன். :-)

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. எடிட்டரின் புதிய பதிவு எப்பவோ ரெடி நண்பர்களே!

    ReplyDelete
  44. குறும்புக்கார சேட்டைக்கார விஷமக்கார குள்ளமான மனிதனாக இருந்தாலும்மனிதாபிமானத்தில் உயர்ந்தவரான ஸ்கூபியின் கேரக்டரை இந்த ஒருபக்கமே மிகத்தெளிவாகக் காட்டுகிறது. ப்ளூகோட்டிற்க்காக ஆவலுடன் வெய்ட்டிங். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete